நண்பர்களே,
வணக்கம். தீபாவளியும் முடிந்து ; விடுமுறைகளும் முடிந்து ; பலகாரங்களை விழுங்கியதன் பலனான புளிச்ச ஏப்பங்களையும் மறந்து, பணிகளுக்குத் திரும்பிய நிலையில் நமது நவம்பர் இதழ்களும் உங்களின் அலமாரிகளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தஞ்சம் புகத் துவங்கியிருக்கும் என்று நினைக்கிறேன் ! Maybe இன்னமும் "குண்டு புக்" பக்கமாய் முழுசும் நேரத்தைத் தந்திட இயலா நண்பர்கள் கூட "அமாயா" அம்மிணியினையும் ; கால வேட்டையரின் ரவுசு பார்ட்டிகளையும் "கண்டுக்காது " போயிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன் ! Anyways - நம்மைப் பொறுத்தவரைக்கும் சக்கரங்கள் நின்று நிதானிக்க என்றைக்குமே நேரம் லேது என்பதால் டிசம்பரின் கத்தைக்குள் மண்டையை நுழைத்துக் கிடக்கிறோம் ! ஆனால் இந்த வாரத்துப் பதிவு டிசம்பரின் முன்னோட்டம் பற்றியானது அல்ல ; மாறாக சில கேள்விகள் + சில பல புது வருகைகள் (வரவுகளல்ல !!) பற்றியது !
புது அட்டவணையினை அறிவித்த கையோடு, உங்களின் சந்தாத் தொகைகளை கிடைக்கப் பெற்ற பொழுதே கதைகளுக்கான கோரிக்கைகளை அனுப்பும் பணியில் ஜரூராகி விட்டேன் ! இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புகள் & கதைகளின் கோப்புகள் கைக்குக் கிட்டுவதில் நிறையவே சுணக்கங்கள் நேர்ந்து வருகின்றன - simply becos ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சிலும், இத்தாலியிலும் கொரோனாவின் இரண்டாம் அலை போட்டுத் தாக்கி வருகிறது ! ஆகையால் நமது பதிப்பகங்களின் பெரும்பான்மை & இத்தாலிய மொழிபெயர்ப்பாளர்கள் இன்னொரு லாக்டௌனில் உள்ளனர் ! So இயன்றமட்டுக்குச் சீக்கிரமாய்க் கோப்புகளை வரவழைத்து விட்டால், முன்கூட்டியே அட்டைப்பட டிசைனிங் ; மொழிபெயர்ப்பு போன்ற வேலைகளைத் தூங்கி விடலாமல்லவா ? அந்த முயற்சிகளுக்கு உதவியுள்ள நமது first batch சந்தா நண்பர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி !! ஏற்கனவே இவற்றின் முன்னோட்டங்களைப் பார்த்தே கதைத்தேர்வுகளைச் செய்திருந்தேன் என்றாலுமே, முழுசாய் கதைகளை ஒருசேரப் பார்க்கும் போது - கண்ணாடிக் குடுவை நிறைய சோன்பப்டியை நிரப்பிக் கொண்டு 'டிங் .டிங்' என்று மணியடித்தபடிக்கே தெருவுக்குள் போகும் வண்டியை ஒரு 45 வருஷங்களுக்கு முன்னே பார்த்த அதே குஷி கிளம்புகிறது ! அவற்றிலிருந்து சில சுவாரஸ்யங்களே இவ்வாரத்து highlights :
நமது மறதிக்காரரே பட்டியலில் முதல்வர் ! பத்து நாட்களுக்கு முன்பே கோப்புகள் முழுசாய் வந்திருப்பினும், தீபாவளி பணிகள் + விடுமுறைகளின் மும்முரத்தில் இதனுள் ரொம்பவே தலை நுழைக்க முடியவில்லை ! இந்த வாரத்தில் சாவகாசமாய் அவற்றைப் புரட்டினால் - ஆக்ஷன் + சித்திர அதகளம் பிரித்து மேய்வதைப் பார்த்திட முடிந்தது ! செம இக்கட்டான கட்டத்தில் "தொடரும்" போட்டிருந்த 2132 மீட்டர் இதழுக்குச் சந்தனமும் சளைத்ததில்லை போலும் இந்த பாகம் 27 ! And எனக்கு மனசுக்குப் படுவது - சித்திர தரங்களில் இந்த இரண்டாம் சுற்றின் தயாரிப்புத்தரம் பிதாமகர் வில்லியம் வான்ஸையே தூக்கிச் சாப்பிட்டு விட்டுள்ளது என்பதே ! Of course - 'அபச்சாரம் ; வான்சோடு ஒப்பிடுவதா ?' என்று புருவங்கள் உயரும் என்பது புரியாதில்லை - ஆனால் இங்கு நான் குறிப்பிடுவது வெறும் சித்திரங்களின் தர அளவுகோல்களை மனதில் கொண்டு அல்ல ! ஒவ்வொரு பிரேமுக்கும் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது அமைக்க உத்தேசித்திடும் ஷாட்களே அந்த ஆல்பத்தின் ஒட்டுமொத்த flow + தரத்தை நிர்ணயிப்பவை ! அந்த விதத்தில் பார்த்தால் புதியவர்கள் 16 அடி பாய்ந்துள்ளனர் என்பது கண்கூடு ! பாருங்களேன் இந்தச் சித்திர அதகளங்களை !! And எல்லாவற்றையும் விட ஒரு செம ட்விஸ்ட் இந்த ஆல்பத்தின் இறுதியில் காத்துள்ளது ! So இந்த இரண்டாம் சுற்று இத்தோடு முற்றுப் பெறுவதாகவெல்லாம் இல்லை ; டாப்கியரில் ஆல்பம் 28-ம் அடுத்த டிசம்பரில் வரும் போலும் !!
பார்ட்டி # 3 கூட நமது சமீபத்தைய தோஸ்த்தே ! அவர் வேறு யாருமில்லை - நமது திடகாத்திர அண்டர்டேக்கர் தான் ! ஏற்கனவே வெளிவந்து விட்டுள்ள ஆல்பம் # 5-ன் முழுமையையும், அதன் க்ளைமாக்ஸ் பாகம் பற்றிய குறிப்புகளையும் அனுப்பியுள்ளனர் ! As always - கதைக்களமும், சித்திரங்களும் மெர்சலாக்குகின்றன ! அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் க்ளைமாக்ஸ் ஆல்பமும் ரெடியாகிடும் என்று தெரிவதால் 2021-ல் மனுஷன் மறுக்கா நம்மிடையே களம்காண்பதில் சந்தேகங்களில்லை ! இங்குமே கூட black & white-ல் அனல் பறக்கிறது பாருங்களேன் !! இந்தச் சித்திரங்களது கறுப்பு-வெள்ளை ஒரிஜினல்கள் இந்த வாரம் ஏதோவொரு நற்காரியத்துக்கென ஏலத்திற்கு வந்துள்ளது போலும் ! பெரிய விலைகள் கிட்டியிருக்குமென்று நினைக்கிறேன் !!
தொடர்வதோ - நமது ஆதர்ஷ 'தல' சார்ந்த சேதி ! Or rather - 'தல' டெக்சின் சகோதரர் சார்ந்த சேதி ! இரவுக்கழுகாரின் குடும்பமே படுகொலை செய்யப்பட்டது பற்றியெல்லாம் இளம் டெக்சின் கதையிட்டங்களில் குறிப்புகளைப் பார்த்திருப்போம் நாம் ! And "சிங்கத்தின் சிறுவயதில்" இதழில் இது பற்றி கொஞ்சம் நிறையவே குறிப்புகளிருந்தன ! இப்போதோ ஒரு படி மேலே சென்றுள்ளனர் போனெல்லியில் - டெக்சின் சகோதரருக்கென ஒரு ஆல்பம் ஒதுக்கியுள்ள வகையினில் ! பாருங்களேன் - அதன் டிரெய்லரை !! "வில்லர்" குடும்பத்துப் பிரதிநிதி எனும் போது நிச்சயமாய் இவர் சோடை போக மாட்டாரென்று தைரியம் கொள்ளலாம் !
MY QUESTION # 2 IS : தொடரும் மாதங்களில் இவரையும் நம் அணிவகுப்பினில் இணைத்திடலாமா என்பதே ! What say people ?
Next in line - இன்னொரு ஜாம்பவானே !! நமது evergreen மாயாவியாரே !! பிப்ரவரியில் மாயாவியின் ஒரு black & white தொகுப்பினை இங்கிலாந்தில் அழகாய் மறுபதிப்பிடவுள்ளனர் ! 40 பக்கங்கள் + 40 பக்கங்கள் + 22 பக்கங்கள் + 8 பக்கங்கள் + 8 பக்கங்கள் - என 118 பக்கங்களுடனான ஆல்பமாக இது இருந்திடவுள்ளது ! இதோ - அதற்கென அவர்கள் தயார் செய்துள்ள அட்டைப்படமும் !
MY QUESTION # 3 IS : மறுபதிப்புகளே என்றாலும் - சூட்டோடு சூடாய் நாமும் இங்கே துண்டை விரித்திடலாமா folks ? என்பதே !
அடுத்த வரவும் பிரிடிஷ்காரரே & இவரும் நாம் அறிந்தவரே !! என்ன ஒரே வித்தியாசம் - மனுஷன் இப்போது கலரில் மறுபதிப்பு காண்கிறார் ! யெஸ் - ரகசிய ஏஜென்ட் ஜான் ஸ்டீல் போன மாதம் முழுவண்ணத்தில் - 2 சாகசங்கள் கொண்டதொரு ஆல்பத்தோடு வெளிவந்துள்ளார் ! அவற்றுள் ஒரு கதை நாம் ஏற்கனவே திகில் காமிக்ஸில் படித்தது & இன்னொன்று புதுசு ! என் மட்டிற்கு இவர் ஒரு favorite நாயகரே ; ஆனால் நிங்கள் என்ன நினைச்சூ ? என்பதே ஐநூறு டாலர் கேள்வி !
MY QUESTION # 4 IS : இந்த பஸ்ஸிலும் ஒரு சீட் போட்டு விடலாமா ? இல்லாங்காட்டி நாங்க நடந்தே வந்துடறோமே ?' என்று சொல்லி விடலாமா ?
அதே போல - நமது துவக்க நாட்களது திகில் காமிக்ஸில் வெளியான அந்தத் திகில் சிறுகதைகள் அனைத்துமே அந்நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த MISTY எனும் fleetway வாராந்திர இதழினில் வெளியானவைகளே ! கடந்த 2 ஆண்டுகளாகவே அதனில் வந்த தொடர்கதைகளை black & white -ல் மறுபதிப்பு செய்து வருகின்றனர் படைப்பாளிகள் ! இந்தாண்டு வண்ணத்தில், நாம் இதுவரையிலும் கண்ணில் பார்த்திரா 2 திகில் கதைகளோடு ஒரு வின்டர் ஸ்பெஷல் வெளியிடுகின்றனர் ! இதோ அவற்றின் previews :
MY QUESTIONS # 5 & 6 ARE :
செக்ஸ்டன் ப்ளேக்குக்கு 'ஜே' போட்றதா ? தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதா ?
மிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ?
இந்த ஞாயிறுக்கு உங்கள் பதில்களே உரமூட்டவுள்ளன என்பதால் - கொசுறாய் ஒரு கேள்வியையும் கேட்டு வைத்து விட்டு நடையைக் கட்டுகிறேனே : அது அம்மிணி அமாயா பற்றியது ! ஏற்கனவே ராணி காமிக்ஸின் உபயத்தினில் உங்களில் பலருக்குப் பரிச்சயமான கதையே என்பதால், கொஞ்சம் தகிரியமாய் இந்தப் புரட்சிப் பெண்ணை (ஹி..ஹி..பில்டப் முக்கியமில்லீங்களா ?) உலவ விட்டேன் ! கோகிலாவின் உபயத்தில் சித்திர சென்சாரும் ; ஏவாஞ்செலின் உபயத்தில் முதல்நாள் 'தளபதி' படப்போஸ்டர்களைப் போல 'சப்பக்..சப்பக்' என வசன பலூன்களை strategic இலக்குகளில் ஓட்ட முடிந்ததாலும் சேதாரமுமின்றி சிரம் தப்பித்த மாதிரியொரு பிரமை எனக்கு ! பற்றாக்குறைக்கு உள்ளாற இருந்த வசனங்களின் பெரும்பான்மையினை, ஒரிஜினலின் ஜாடைகளிலேயே வர அனுமதித்திருப்பின் செவுளில் நிச்சயம் சத்துக்கள் இறங்காது போயிராதென்பேன் ! ஆனா..வூனா..என்றால் 'உன்னைய கூட்டிட்டுப் பொய் பிள்ளை பெத்துக்க வைக்கப் போறேன் ; இது புல்லை பெத்துக்கும் சென்ட்டர் ; நான் பிள்ளை பெத்துக்கும் மிஷின் இல்லே ' என்ற ரீதியிலேயே இருந்த வசனங்களை படித்த போது ஏதோ பிரசவ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த பீலிங்கே வந்தது எனக்கு ! அவற்றை வேறு தினுசாய் மாற்ற என்ன செய்யலாமென்று மண்டையைச் சொரிந்த போது தோன்றியது தான் - பெண்ணியம் பேசச்செய்யும் அந்த வரிகள் ! அவற்றைப் பாராட்டி ஆங்காங்கே ஓரிரு பின்னூட்டங்களை பார்த்த போது 'ஹை' என்றிருந்தது !
MY QUESTION # 7 IS : அம்மணி அமாயாவை தொடர்வதா ? Waiting லிஸ்டில் போட்டு வைப்பதா ?என்பதே !
2021-ன் நிறைவு வரையிலும் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் - ஒற்றை நாள் ராவினில் இந்தக் கேள்விகளின் பதில்களைக் கொண்டு இந்த நாயக / நாயகியரை உள்ளே எக்கட புகுத்துவதாம் ? என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றிடலாம் தான் ! Simply put - திட்டமிடல்கள் ஒரு தொடர்கதையே எனும் போது - எவை உங்களுக்கு ரசிக்கின்றன ? ; எவை no no ? என்ற புரிதல் எனக்கிருந்தாலே போதுமானது ; அவற்றை நுழைக்கும் தருணங்களை நான் சந்தர்ப்பங்களுக்கேற்பத் திட்டமிட்டுக் கொள்வேன் !
So கேள்விகள் கணிசமான இந்த ஞாயிறை உங்கள் பதில்களோடு தெறிக்க விடுங்கள் ! நான் "கோழைகளின் பூமி" கிராபிக் நாவலுக்குப் பேனா பிடிக்கப் புறப்படுகிறேன் !
Bye all ! See you around ! Have a chill Sunday !!
முதலாவதாக....
ReplyDeleteபோட்டுதாக்கு 2 வது
ReplyDeleteNo 3👏👏👏👏👏
ReplyDeleteஎல்லாவற்றையும் விட ஒரு செம ட்விஸ்ட் இந்த ஆல்பத்தின் இறுதியில் காத்துள்ளது ! So இந்த இரண்டாம் சுற்று இத்தோடு முற்றுப் பெறுவதாகவெல்லாம் இல்லை ; டாப்கியரில் ஆல்பம் 28-ம் அடுத்த டிசம்பரில் வரும் போலும் !! //
ReplyDeleteஅட்டகாசமான செய்தி சார்...எப்படியோ வருஷம் ஒருமுறை எங்க தலய தரிசிக்க வைத்த உங்களுக்கு நன்றி சார்...
ஆசானே நிங்ஙள் என்ன கேட்டுக்கிட்டு.அனைத்தையும் போட்டுத் தாக்குங்கள்.என் ஆதரவு உண்டு.
ReplyDeleteXIII மீண்டும் தொடருதா ?!.
ReplyDeleteதொடரட்டும்.வெல்லட்டும்.
ஸ்வீட் எடு கொண்டாடு தருணம் நண்பரே....இதுவே எங்களுக்கு உண்மையான தீபாவளிபரிசு...அப்படியே mystery க்கும் ஒரு வழி பிறந்தால் இன்னும் செம....
Deletehi new post
ReplyDeleteப்ரேசில்
ReplyDeleteசெக்ஸ்டன்
மாயாவி
டெக்ஸோட அண்ணாத்த
ஜான் ஸ்டீல்
அந்த அருமையான பழைய காலத்திற்க்கு புதிய பேருந்தில் கூட்டிப்போக கேள்வியே தேவையில்லை சார்.. நிச்சயமா செய்யுங்க... அப்படியே நம்ம அமாயாவ கலரில்....
அமாயா தொடரட்டும்.ஆனால் பக்கத்திற்கு 12 பேனல்கள் வருவதை விரும்பவில்லை
ReplyDelete.சித்திரங்கள் நெருக்கியடித்துக் கொண்டு ரசிக்க வைக்கவில்லை.
// இன்னா பண்ணலாம் இந்தப் புதுப் படைப்புகளை ? இந்த உட்பக்க preview-களைப் பார்த்தபடிக்கே யோசிச்சுச் சொல்லுங்களேன் ! போடலாமே ! என்றால் கலரிலா ? ப்ளாக் & ஒயிட்டிலா ? முதல் பக்கத்தைப் பாருங்களேன் - b&w-ல் கூட தெறிக்கின்றது ! //
ReplyDeleteBlack & White Please :-)
// ப்ருனோ ப்ரேஸிலும் // -> Black & White Please :-)
Deleteஇல்லை நண்பரே இப்போவந்த ரோஜர் கவெ விட வண்ணத்தில் வந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் வந்தது அதுபோல் பிறகு நினைக்கும் படி வேண்டாம்மே...வண்ணமே எனது தேர்வு....
DeletePalanivel arumugam @ Budget :-)
Delete30 ரூபாய் நண்பரே...பேப்பர்தரம் வண்ணம் எனும் போது பரவாயில்லை நண்பரே....
Delete4 இட்லி 30 ரூபாய்...😢😢😢
// அண்டர்டேக்கர் //
ReplyDeleteColor Please!
ப்ருனோ ப்ரேசில்
ReplyDeleteமாயாவிகாரு
செக்ஸ்டன் பிளேக்
சாம் வில்லர்
அமாயா
அனைவரையும் இருகரம் கூப்பி பணிவுடன் வரவேற்கக் காத்திருக்கின்றேன்.
வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDeleteஐய்யோ ..பட்டியலில் ஜான் ஸ்டீலை சேர்க்க மறந்துவிட்டேனே.அவரையும் வரவேற்கின்றேன்.
ReplyDelete// ஒவ்வொரு பிரேமுக்கும் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது அமைக்க உத்தேசித்திடும் ஷாட்களே அந்த ஆல்பத்தின் ஒட்டுமொத்த flow + தரத்தை நிர்ணயிப்பவை ! அந்த விதத்தில் பார்த்தால் புதியவர்கள் 16 அடி பாய்ந்துள்ளனர் என்பது கண்கூடு ! பாருங்களேன் இந்தச் சித்திர அதகளங்களை !! And எல்லாவற்றையும் விட ஒரு செம ட்விஸ்ட் இந்த ஆல்பத்தின் இறுதியில் காத்துள்ளது ! //
ReplyDeleteInteresting! Waiting :-)
ட்ரோன்கள் வெள்ளைமாளிகையை தெறிங்கவிடுது.. சொக்கா. நம்ம நண்பருக்கு 2021 ல் எந்த மாத இடம்கிடைச்சிருக்குனு தெரியலயே....சார்...ஹலோ ஹலோ...
ReplyDeleteகொலை அரங்கம் -ஜான் ஸ்டீல் தானே சார்?
ReplyDelete// ரகளையான ஆக்ஷன் ; கிட்டத்தட்ட அதே மாதிரியான ப்ருனோ ; புராதனமில்லா கதைக்களம் என்று மினுமினுத்ததால் - சூட்டோடு சூடாய் அவற்றை நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன் ! "ஏகமாய் ஆக்ஷன் ; its alright as an adventure story !!" //
ReplyDeleteWelcome! Welcome!! Most Welcome!!!
🙏🙏
ReplyDeleteCompleted reading Amaya and Tex. Amaya was good. Story background in apocalyptic world.
ReplyDeleteTex 2nd story was good. First one not so good.
This comment has been removed by the author.
ReplyDeleteVijayan Sir, ப்ருனோ - Do you have color page teaser of this story?
DeleteCompleted reading Amaya and Tex. Amaya was good. Story background in apocalyptic world.
ReplyDeleteTex 2nd story was good. First one not so good.
Completed reading Amaya and Tex. Amaya was good. Story background in apocalyptic world.
ReplyDeleteTex 2nd story was good. First one not so good.
மிஸ்டி வண்ணக்கதைகள் வந்தால் மிக மகிழ்வேன்.வரட்டுமே ஆசானே.
ReplyDeleteப்ரூனோ கலரில் அசத்துகிறார் ஆசிரியரே
ReplyDeleteஅவருக்கு ஒரு இடம் கண்டிப்பாக தரலாம் இன்னொரு அப்பல்லோ படலம் தராமலா போய்விடுவார்
// "வில்லர்" குடும்பத்துப் பிரதிநிதி எனும் போது நிச்சயமாய் இவர் சோடை போக மாட்டாரென்று தைரியம் கொள்ளலாம் !
ReplyDeleteMY QUESTION # 2 IS : தொடரும் மாதங்களில் இவரையும் நம் அணிவகுப்பினில் இணைத்திடலாமா என்பதே ! What say people ? //
O Yes.
செக்ஸ்டன் பிளேக் 3 கதைகள் வந்ததாக நினைவு வழிப்பறி பிசாசு டாப் பாக இருக்கும்
ReplyDelete// நமது evergreen மாயாவியாரே !! பிப்ரவரியில் மாயாவியின் ஒரு black & white தொகுப்பினை இங்கிலாந்தில் அழகாய் மறுபதிப்பிடவுள்ளனர் ! 40 பக்கங்கள் + 40 பக்கங்கள் + 22 பக்கங்கள் + 8 பக்கங்கள் + 8 பக்கங்கள் - என 118 பக்கங்களுடனான ஆல்பமாக இது இருந்திடவுள்ளது ! இதோ - அதற்கென அவர்கள் தயார் செய்துள்ள அட்டைப்படமும் ! //
ReplyDeleteWhy not! Please release in tamil soon :-)
செக்ஸ்டன் பிளேக்கிற்க்கு தாரளமாக இடம் தரலாம்
ReplyDeleteமாயாவியை பற்றிய கேள்விக்கு பதில் கரும்பு தின்ன கூலீயா உடனே களமிருக்குங்கள்
ReplyDeleteவெட்டியானுக்கு ஆல்வேஸ் வெல்கம்
ReplyDelete// அம்மணி அமாயாவை தொடர்வதா ? Waiting லிஸ்டில் போட்டு வைப்பதா //
ReplyDeleteWaiting list please!
பெரிய வில்லரை காண ஆவலாய்
ReplyDeleteஅமாயாக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் ஆசிரியரே
ReplyDelete// மிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ? //
ReplyDeleteபடங்கள் வண்ணத்தில் எனக்கு திருப்தியாக இல்லை! கதை நன்றாக இருந்தால் முயற்சிக்கலாம்.
கலரிலேயே போடலாம் ஆசிரியரே
ReplyDeleteFrom April to November books are on the way...
ReplyDelete// செக்ஸ்டன் ப்ளேக் //
ReplyDelete// ஏஜென்ட் ஜான் ஸ்டீல் //
இவர்கள் கதைகளை நான் படித்ததாக ஞாபகம் இல்லை!
ஆசிரியர் அவர்களுக்கு. ....2
ReplyDelete2021 அட்டவணை பார்த்த நண்பர்கள் ஆஹா.. .ஓஹோ என்ற சொன்ன போது (நான் உட்பட)..ஒரு சின்ன வருத்தம். ...தளபதி தீபாவளிக்கு பதில்(தீபாவளியை தான் நம்ம தல ப1ழகாக பார்த்து கொள்கிறாரே)..2022 ல் வரப் போசுய் முத்து 50 வது ஆண்டு மலரில் லார்கோ தான் இல்லை ..நம்ம டைகராவது இருந்தால் நன்றாக இருக்குமே என்ற நப்பாசை...
தீபாவளி. With டெக்ஸ்....குண்டுபுக். எல்லாருக்குமே தீபாவளி விருந்தாக அமைகிறது என்பதில் எள்ளளவு ஐயமில்லை..அப்படியிருக்க 2021. தீபாவளி மலரை சுருக்கியது ஏனோ!!!!!.
2020 வரவேண்டிய கண்ணே கொலைமானே(டெக்ஸ்)2021 க்கு என்றால் அந்த கதைக்கு இந்த வருடம் என்ன மாற்றம். .
Fleetway - கதைகள் இந்த காலத்திற்கு ஏற்றபடி/ரசிக்கும் படி இருந்தால் முயற்சிக்கலாம்! இல்லை என்றால் Fleetway டாப் கதாநாயகர்கள் கதையுடன் நிறுத்திகொள்ளலாம் என்பது எனது எண்ணம் !
ReplyDeleteஇரும்புகை மாயாவி, John steel and setonblake அவசியம் வேண்டும். Undertaker, புருனோ பிரேஸில் b&wl வெளியடலாம்.மற்றவை உங்கள் எண்ணம்பொள் வெளியிடுங்கள் சார்!
ReplyDelete1)ப்ரூனோ - கறுப்பு வெள்ளை
ReplyDelete2) அண்ணாத்தே கொஞ்சம் பொறுமையாக வரட்டுமே
( கதை எப்படி ன்னு ஒரு அவுட் லைன் ப்ளிஸ் சார்)
3) மாயாவி - சர்ப்ரைஸ் இதழாக வெளியிடலாம்
4) ஒரு சீட் தாராளமாக போடலாம் சார்
5) ஒரு சீட் கன்பார்ம் பண்ணலாம் சார்..
& 6 ) நம்மளுக்கும் ஒரு வின்டர் ஸ்பெஷல் கிடைச்சாச்சு.
7) வெயிட்டிங் லிஸ்ட் ல வைக்கலாம் சார்.
###நமது மறதிக்காரரே பட்டியலில் முதல்வர் ####
ReplyDeleteநிரந்தரமான முதலிடம்.
இந்த பதிவுக்கு என் பதில்:::::
ReplyDelete1.ப்ரூனே ..நான் ரசித்த நாயகர்களில் ஒருவர். .பழைய நெடி அடிப்பதால் தூக்கி பரணில் போட்டதாக சொன்னீர்கள்...இப்போ 2.0 வில் வருகிறார் என்றால் சிவப்பு கம்பளம் விரிக்கலாம்.கலர் , கறுப்ு வெள்ளை உங்களின் பட்ஜெட் க்கே விட்டு விடுகிறோம்....
2.இத்தாலி மக்களின் ரசனைக்கும் நமகேகும் சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது...அவர்கள் மாதய் டெக்ஸ் உடன் காடு மேடு பாலைவனம் சுற்றுவது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது..ஆனால் இங்கோ சிலருக்கு வேப்பங்காய் போல்க கசக்கிறது .(டெக்ஸின் அட்டைகளின் தொகுப்பை வேண்டாம் என்று சொன்னவர்கள் தானே நாங்கள்).டெக்ஸின் சகோதரே ஆனாலும். .டெக்ஸின் ஈர்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே...அதிலும் இறந்தவர் கதை என்பதால் !!!!!..ஒரு கதை என்றால் முயற்சிக்கலாம். ....நமக்கு தல கதையை முழுவதும் வெளியிடவே நேரமில்லை....ஏத2 பார்த்து செய்யுங்கள். ..
3.கண்டிப்பாக...அங்கு வெளியிடுய் அதே நேரத்தில் இங்கும் வந்நால் பேரானந்தம்...
4.வரவேற்கிறேன்.
5....இருக்கரம் கூப்பி வரவேற்கிறேன். .
6.வெளியிடலாம் சார்...
7.அமாலியாக்கு மனதில் மட்டும் இடம் கொடுக்கலாம்....ராணி காமிக்ஸில் படித்த போதே..அவர்களே ஈர்1கதையோடு ஒதிங்கி விட்டார்கள்..நாமுய் ஒதிங்கி விடுவோய் சார்...
கடைசியாக ஒரு வேண்டுக்கோள்....மேலே குறிப்பிட்ட ப்ருனே,ஜான்,செக்ஸ்டன் ப்ளேக் etc.போற்றவர்களை தனித்தனியாக போடாமல் கதம்பமாக கொடுக்க முடிந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுக்கோள்....(உங்களின் முடிவில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். .இது என் தனி பட்ட கருத்து மட்டுமே )...வாழ்க தமிழ் காமிக்ஸ்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
// ஜான்,செக்ஸ்டன் ப்ளேக் etc.போற்றவர்களை தனித்தனியாக போடாமல் கதம்பமாக கொடுக்க முடிந்தால் மிக நன்றாக இருக்கும் //
Delete+1 If possible you can try this sir!
52வது
ReplyDelete1-6
ReplyDeleteஅத்தனைக்கும் ஆசைப்படு மகேந்திரா.
7
இன்னும் பாக்கலை. பாத்துட்டு சொல்றேன்.
// 7
Deleteஇன்னும் பாக்கலை. பாத்துட்டு சொல்றேன். //
பார்த்து விட்டு சொல்வது என்றால் இங்கே உள்ள அமாயா கதையின் படத்தை பார்த்து சொல்லலாமே :-)
ட்ரைலரை வைச்சு சினிமாவை எடை போடக்கூடாது. கவரை வைச்சு புக்கை எடை போடக் கூடாது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா?
Deleteஅத்தனைக்கும் ஆசைப்படு மகேந்திரா +10000
Deleteஅதே அதே
அப்ப பார்த்து படித்து சொல்றேன்னு சொல்லுங்கள் :-)
Delete//
ட்ரைலரை வைச்சு சினிமாவை எடை போடக்கூடாது. கவரை வைச்சு புக்கை எடை போடக் கூடாது. //
மீ டூ.
கால வேட்டையர்கள் - முதல் பாகம் படித்து விட்டேன்! பரபரப்பாக அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக சென்றது! கதையில் வரும் சம்பவங்கள் இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வைக்காமல் ஜெட் வேகத்தில் கதையை நகர்த்திய விதம் அருமை. கதையில் இயல்பான மனிதர்கள் வேற்றுகிரக மனிதர்களுடன் சண்டையிடுவது மிகவும் இயல்பாக ரசிக்கும் படி இருந்தது. கதையை படித்து முடித்த பின்னர் ஒரு நல்ல ஹாலிவுட் science fiction படம் பார்த்த உணர்வை கொடுத்தது.
ReplyDeleteஇன்றைய உலகில் நாம் எப்போதும் பரபரவென்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். நமக்கு என்று ஒரு நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை, வேலை, கடன் சுமை, மற்றும் டிராபிக் நமது நேரத்தை (காலத்தை) நம்மை அறியாமல் விழுங்கி கொண்டுள்ளது!
கருப்பு வெள்ளை சித்திரம் அருமை! சொல்ல போனால் கதைக்கு இது ஒரு பிளஸ்! கதையின் வசனங்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது சிறப்பு, அதற்கு உங்களுக்கு ஒரு பாராட்டு! A, B, C என எல்லா சென்டரிலும் ஹிட் அடிக்கும் வகையில் உள்ளது.
கால வேட்டையர்கள் - சரியான கதை தேர்வு இன்றைய சூழ்நிலைக்கு!
///A, B, C என எல்லா சென்டரிலும் ஹிட் அடிக்கும் வகையில் உள்ளது///
Deleteஇதுக்கு முன்னாடி சினிமாக்கு விமர்சனம் எழுதிக்கிட்டிருந்தீங்களா PfB?!! ;)
அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்பதை சொன்னேன் :-)
Deleteஒழுங்காக நாலு வரி கோர்வையாக எழுத தெரியாது எனக்கு. இதில் நான் சினிமா விமர்சனம் எழுவதா :-)
பணம் மிக முக்கியமான விஷயம் என்பது போல் ஆகிவிட்டது. அது நமது நேரத்தை விழுங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது..
Deleteப்ரூனோ ப்ரேசில்2.0 - வரட்டும் சார்! பாசமுள்ள டாடியாக வேற வர்றாரு. சித்திரங்கள் வேற பட்டையக் கிளப்புது! கலர்லனாலும் சரி; க&வெ'ன்னாலும் சரி!
ReplyDeleteஇரவு அண்ணா கழுகு? - வொய் நாட்?!!
ஸ்டீல் க்ளா? - வொய்?!!!
ஜான் ஸ்டீல்? - வொய்ய்ய்?!!!!
செக்ஸ்டன் ப்ளேக் - நோ ஐடியா!
மிஸ்டி திகில் கதைகள் - டெபனட்லி டெபனட்லி!
அமாயா - 'வானம் வசப்படும்' படிச்சுட்டு (அல்லது பார்த்துட்டு)த்தான் எதையும் சொல்ல முடியும் சார்!
// இரவு அண்ணா கழுகு? - வொய் நாட்?!!
Deleteஸ்டீல் க்ளா? - வொய்?!!!
ஜான் ஸ்டீல்? - வொய்ய்ய்?!!!! //
என்ன சொல்ல வர்றீங்க வொய்ய்ய் :-)
// (பார்த்துட்டு)த்தான் எதையும் சொல்ல முடியும் சார்! //
Deleteஐயா இது காமிக்ஸ் கதை. அதனால் கொஞ்சம் கதையை படித்து விட்டு ஜொல்லுங்ள் :-)
கரும்பு தின்ன கூலியா சார்.
ReplyDelete1) மறதிக்கார நண்பரின் ஆல்பம் - கட்டாயம் வேண்டும்
முதலை பட்டாளம் + புரூனோ பிரேசில் - மறுபடி களம் காணும் என்றால் கேட்கவும் வேண்டுமா?
2) வெட்டியான் - வேண்டும் வேண்டும்
ரெக்ஸின் சகோதரர் - வரட்டுமே + இரவுக்கழுகாரின் முன்கதையை கொஞ்சம் நாமும் அறிவோமே
3) மாயாவிகாரு இன் தொகுப்பினை அதுவும் குண்டு புக் இனை வேண்டாம் என்பதா? நெவர்
4) ஜான் ஸ்டீல் இன் ஆல்பத்தை நாமும் கலரில் ரசிப்போமே
5) செஸ்டன் பிளேக் உடன் அவ்வளவாக பரிட்சியமில்லை
6) மிஸ்டி வண்ண கதைகள் - வெளியிட்டு பார்க்கலாமே
7) அம்மிணி அமாயா இன் ஆல்பத்தை இன்னும் தரிசிக்கவில்லை. ஆனால் அம்மிணியின் தாராளம்இனை ராணி காமிக்ஸ் இல் தரிசித்துள்ளேன். தொடரலாமே சார்
***சர்பத்தின் சவால் ***
ReplyDeleteஸபைடரின் மெழுகு சிலைன கலக்க்ஷனில் இடம்பெற தகுந்த எதிரி. சிலந்தியாக மாறிய ஸபைடரை பார்க்கையில்... ஹா.. ஹா.. ஹா.. சர்பத்தின் சவால், வெயில் காலங்களில் குடிக்கும் சர்பத்தை போல சேம கூல்
செம
Delete***பனிவனப் படலம் ****
ReplyDeleteஇன்றுமெ அலஸ்கா பிரதேசத்தில் பயணம் என்பது சவாலான ஒன்று(பத்து வருடத்திற்கு முன்னான என் பயண அனுபவங்களை பிறகு பகிர்கிறேன்).
அருமையான சித்திரங்கள், விறுவிறுப்பான கதை. action sequence எல்லாம் நேரில் பார்த்தது போல இருந்தது. மற்ற நண்பர்கள்மாரி நானும் 9.5/10 மார்க். அந்த 0.5 மார்க் குறைக்க காரணம், வடிவேல் கேட்ட ஊத்தப்பம் மாதிரி ஆங்காங்கே மழைச்சாரல் போல மர்மங்களை தூவியிருந்தாலும் கிளைமாக்ஸ் ஒரு சாதா ஊத்தப்பம் மாதிரி எனக்கு ஒரு ப்பீல்.
***கால வேட்டையர் ***
ReplyDeleteபெயரை பார்த்து இது time travel கதையாக இருக்கும் என எதிர்பார்த்த எனக்கு ஒரு SciFi விருந்தாக இது எமாற்றவில்லை. இரும்புக்கையார் மற்றும் ஸபைடரின் கோல்டன் டைமில் வந்திருந்தால் செம ஹிட் அடித்திருக்கும் . சித்திரங்கள் கலர் பென்சிலை கையில் எடுத்து கலர் சேய்ய தூண்டுகிறது, அவ்வளவு தெளிவு. 8/10
*** வானமும்... வசப்படும்...***
ReplyDeleteஅம்மணி அமையாவை சிறுவயதில் படித்தபோது விகாரிகள், பெருச்சாளிகள் துக்கத்தை கெடுத்தன. இன்றும் அவை நினைவில் இருப்பது இதன் வெற்றியோ ???
அமையா எந்த ஒரு கட்டுபாட்டுக்கும் அடங்காத சுதந்திரம் வேண்டுமென்ற பெண் என்பதால் அவரது "*பேசன்*" உறுத்தவில்லை. இதற்கு எடிட்டர் ஒரிஜினல் வசன நடையை மற்றியதும் ஒரூ காரணமாக இருக்கலாம், Hats off sir.
இது ஒரு ஆரிஜின் கதை என்பதால் O.K. இன்னொரு வாய்ப்பு தரலாம்
//முதல்நாள் 'தளபதி' படப்போஸ்டர்களைப் போல 'சப்பக்..சப்பக்' என வசன பலூன்களை strategic இலக்குகளில் ஓட்ட முடிந்ததாலும் சேதாரமுமின்றி சிரம் தப்பித்த மாதிரியொரு பிரமை எனக்கு//
Deleteஎங்கள் புரட்சி புயல், சுதந்திர வேங்கையின் கொள்கைகளை பலூன்கள் போட்டு மறைத்த எடிட்டருக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்துவோம்
Amaya - Waiting list
ReplyDeleteமறு விமர்சனம்...
ReplyDeleteகால வேட்டையர்....
அனல் பறக்கும் ஆக்ஷன் த்ரில்லர் என்ற அட்டையின் முன்னோட்டம் 100% உண்மை.
காலவேட்டையர் இதழை பொறுத்தவரை எனக்கு இருவித எதிர்பார்ப்புகள் இருந்தது என்பது உண்மை.ஒன்று இதுவரை நான் படித்த குறுகிய சயின்ஸ்பிக்ஷன் கதை எதுவுமே என்னை கவர்ந்தது இல்லை என்பதோடு கதையுமே புரியவில்லை என்பதுமே உண்மை.எனவே தான் புதிதாக சயின்ஸ்பிக்ஷன் கதை என்று ஆசிரியர் எடுக்கும் சமயம் எல்லாம் "ஐயோ " என்ற எண்ணம் தான் மேலோங்கும்..அதே சமயம் பாதி எண்ணவோட்டம் நமது நிறுவன மொழிப்பெயர்ப்பில் கண்டிப்பாக கதைகள் சுகப்படும் என்பதும் சுகமே படவில்லை என்றாலும் கூட கண்டிப்பாக கதையையாவது புரிய வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தான்..எனது எண்ணவோட்டம் சரியாக போய் விட்டது.செனாஅனாஜீ மற்றும் திறமையான நண்பர்கள் இந்த காலவேட்டையரை படித்தவுடன் நிறைய்ய உதாரணங்களுடன் விளக்கங்களுடன் இந்த இதழை பாராட்டி விமர்சனங்களை படைப்பார்கள் என்பது உண்மை..ஆனால் எனக்கு அந்த அளவிற்கு ஆற்றல் எல்லாம் கிடையாது என்பதால் சயின்ஸ்பிக்ஷன் கதை என்றாலுமே கமர்ஷியலாகவே வழக்கம் போல் சொல்லி விடுகிறேன் சார்...
"செம ...செம...செம அட்டகாசமான ,விறுவிறுப்பான ,பட்டாசான ,ஆக்ஷன் கதை இந்த காலவேட்டையர் என்பது மட்டுமில்லாமல் இதுவரை நான் படித்த சயின்ஸ்பிக்ஷன் கதையில் புரிந்த என்பது மட்டுமில்லாமல் மனதை கவர்ந்த முதல் கதையும் இதுவே .
அதுவும் ஆரம்பத்தில் படிக்கும் பொழுது இரு அத்தியாயம் என்பதால் முதல் தொகுதியை மட்டும் முதலில் படித்து விட்டு பிறகு தொடரலாம் என்றே இருந்தேன் .ஆனால் கதையின் விறுவிறுப்பும் ,சஸ்பென்ஸ்ம் இதழை முழுவதுமாக படித்து முடித்தவுடன் கீழே வைக்க வைத்தது.நமது மொழிப்பெயர்ப்பின் தரம் சோடை போகாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி விட்டது.பெரிய அளவில் ,அழகான வெள்ளைத்தாளில் அசத்தலான சித்திரங்கள் கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது.படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய எண்ணம் இரண்டு.
ஒன்று...கையை கொடுங்கள் சார் சயின்ஸ்பிக்ஷன் கதையவே என்னை பிடிக்கவைத்து விட்டீர்களே என்பது...
இரண்டு .
இவர்களின் சாகஸம் மீண்டும் எப்பொழுது கண்ணில் காட்டுவீர்கள் என்பதும் தாம்..
கால வேட்டையர் மனதை திருடிய வேட்டையர்
Super.
Deleteநீங்கள் சொன்ன எல்லா கதைகளுமையே (நாயகர்களை) தாராளமாக கொண்டு வரலாம் சார்! கலரில் இருக்கும் நாயகர்களின் கதைகளை முடிந்தளவு கலர்லயே போடப் பாருங்கள்! இருபது முப்பது ரூபாய் குறைச்சலாக வரும் என்பதற்காக கருப்பு வெள்ளையில் போட்டால் சித்திரங்களை (கதையையும்) ரசிக்க முடியாமல் போய் விடுகிறது! உதாணம் நேற்றைய நகரம் கதையும் சித்திரங்களும் நல்லாயிருந்தும் வண்ணத்தில் வெளிவராதத மிகப்பெரிய குறையாகி விட்டது! இந்த கதையெல்லாம் மீண்டும் ரீபிரிண்ட் வருவது சாத்தியமேயில்லாத போது போடும் போதே கலரில் போட்டு விட்டால் நல்லாயிருக்கும்! அமயா ஒருமுறை கலரில் போட்டு அதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறதென்பதை பொருத்து நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் தொடருவதா? வேண்டாமா என்று? மாயாவிகாரு வந்தவுடனே சந்தர்ப்பம் கிடைக்கும் போட்டுத் தாக்கினால் மகிழ்ச்சிதான்! அதே போல செக்ஸ்டன் பிளேக் & ஜான் ஸ்டீல் இரண்டு நாயகர்களுமே எந்த நேரத்தில் வந்தாலும் சோடை போக மாட்டார்கள்! செக்ஸ்டன் பிளேக் கதை வந்து நீண்ட வருடமாகி விட்டது! இவர்களெல்லாம் தொடர்ந்து அணிவகுத்து வந்தால் நமது காமிக்ஸிற்கு ஒரு தனி அடையாளத்தை வழங்குவார்களென நம்புகிறேன்!கடைசியாக ப்ரூனோ பிரேசிலை கருப்பு வெள்ளையில் மட்டும் போட்டு விடாதீர்கள்! அதற்கு பதில் புராணநெடி அடிக்குதுன்னே அவரை பரண்லயே போட்டு விடலாம்!அதே போல வெட்டியானும் கலரில் மட்டுமே வேண்டும் நோ பி/ஒ 😊
ReplyDelete// நீங்கள் சொன்ன எல்லா கதைகளுமையே (நாயகர்களை) தாராளமாக கொண்டு வரலாம் சார்! கலரில் இருக்கும் நாயகர்களின் கதைகளை கலர்லயே போடுங்கள் // அவ்வளவு தான் சார். Simple
Deleteமறுவிமர்சனம் 2
ReplyDeleteவானமும் வசப்படும்....
சுத்தமான சிறைச்சாலை ஒன்று ,பாதி பாதிப்பால் பாதிக்கப்பட்ட பழுதடைந்த சிறைச்சாலை ,முழுவதுமாக சீரழிந்து போன சிறைச்சாலை இந்த மூன்று சிறைச்சாலைகளில் எதில் இருந்து , எந்த சிறைச்சாலையில் இருந்து எந்த சிறைச்சாலையில்
இந்த புரட்சி பெண் தனது சுதந்திரத்தை தேடி செல்கிறாள்.சுதந்திரம் கிடைத்ததா ,கிடைத்தாலும் அந்த சுதந்திர உலகில் அவள் கனவு மெய்ப்பட்டதா கண்டறிய படியுங்கள் வானமும் வசப்படும்..பெரிய அளவில் அழகான சித்திரங்கள் கதையை விறுவிறுப்போடு படிக்கவைக்கிறது...என்ன சித்திரத்தின் அளவுகள் இன்னும் பெரிதாக இருந்தால் செயலர் இன்னும் ஊன்றி கலைநயங்களை நன்கு ரசித்து படிப்பார்..( பக்கத்து இலை பாயசம் இல்லை) ..முன் கதை சுருக்கம் மட்டும் கொஞ்சம் கண்களை உருட்டி படிக்க நேர்ந்தது மற்றபடி உட்பக்கங்கள் ஓகே...
தனது அறிமுக சாகஸத்தில் அமாயா அழகாக ஓகேவாகி விட்டார் ..இனி தனது சாகஸ தொடர்களின் மூலம் இளவரசியிடம் போட்டியிட வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
வானமும் வசப்படும் ...எனக்கு வானம் வசப்படுகிறதோ இல்லையோ அமாயா என்னை வசப்படுத்திவிட்டாள்.
நியூ விமர்சனம் பார்ட் 1
ReplyDeleteதீபாவளி வித் டெக்ஸ்...
யுத்த பூமியில் டெக்ஸ்...
முதலில் இவ்வளவு பெரிய்ய்ய குண்டு புத்தகத்திற்கும் ,அட்டகாசமான அட்டைப்படத்திற்கும் ஒரு வந்தனங்கள்..
டெக்ஸை பற்றி சில விமர்சனங்கள் அவ்வப்பொழுது எழும்..ஆனால் அவற்றை எல்லாம் எப்பொழுதோ அதை அந்த நாயகர் நிவர்த்தி செய்து விட்டு வீறுநடை போட்டு கொண்டுத்தான் வருகிறார்..அது போல் ஒரு விமர்சனம் டெக்ஸ் மட்டும் ரேஞ்சர் பதவியில் இல்லாமல் இருந்தால் அவ்ளோத்தான் என்ற விமர்சனத்தையும் சில காலங்களுக்கு முன் கண்டுள்ளேன்..அதற்கு பல காலங்களுக்கு பின் டெக்ஸ் இந்த முறை பதில் சொல்லி விட்டார் அதுவும் எங்கே ...? யுத்த பூமியில்.
தீபாவளி மலர் முன்னரே கிடைத்து விட்டாலும்
தீபாவளி பண்டிகை ,ஊர்சுற்றுதல் ,நெருங்கிய உறவினரின் திருமணம் ,நண்பர்கள் சந்திப்பு என நாள்கள் படு பிஸியாக இருந்து விட இடையில் அலுவலகமும் சென்று வர நேற்று மதியம் தான் தீபாவளி டெக்ஸையே கைகளில் ஏந்தி படிக்க ஆரம்பித்தேன்.யுத்த கதை ,வடக்கு தெற்கு உள்நாட்டு யுத்தம் ,அதற்கான முன்னோட்டங்கள் என ஆரம்பமானவுடனே என்னடா இது மற்றொரு பிரபல ஹீரோவே இப்படிப்பட்ட கதையில் வந்து தானே இப்பொழுது இதய ஹீரோவாக மட்டும் திகழ்கிறார் அடுத்து இந்த கதையில் இவரா என மனதில் நினைத்து கொண்டே படிக்க ஆரம்பித்தால் மூன்று அத்தியாயங்களையும் படித்து முடித்த பின்னரே இதழை கீழே வைக்க விட்டார்.. யுத்தம் ,உள்நாட்டு போர் ,ராணுவம் என்றாலுமே கூட அதையும் ஒரு கமர்ஷியல் மாஸாக கொண்டு சென்றதில் தான் போனலியின் தொடரும் வெற்றியின் காரணம் புரிகிறது.செம விறுவிறுப்பான ,அட்டகாசமான படைப்பு .கார்சன் இல்லாத குறையை மொட்டை நண்பர் டிக் தீர்த்து வைக்கிறார்.எனவே அதிலும் எந்த குறையும் இல்லை.அதேபோல் "பதுங்கு குழியுமே " கூட ஒரு வீரமான திட்டமே என்பதை டெக்ஸ் மூலம் அறியவருவது இன்னமும் பெரு மகிழ்ச்சி.மொத்தத்தில் எந்த களம் என்றாலும் டெக்ஸ் இஸ் ராக்ஸ் என்பதை மீண்டும் நிரூபித்த இதழ்..
இன்று பனிவனப்படலத்தில் புகலாம் என்றால் " பந்தக்கடா வெட்டும் படலம் " நாளாக இன்று கழிந்து விடுமாதலால் நாளையே குளிர் பிரதேசத்தில் புக வேண்டும்..பாலைவனத்திலியே பட்டாசு வெடிப்பவர் குளிர் பிரதேசத்தில் மட்டும் திரியையா கிள்ளி கொண்டு இருக்க போகிறார் ? அங்கேயும் வெடி பலமாக வெடிக்கும் என்பதை அறியாமலா இருக்கிறோம்.
2020 தீபாவளி வித் டெக்ஸ் ..
2000 வாலா சரவெடி என்பதை முதல் கதையிலேயே நிரூபித்து விட்டார் நாயகர்..
"தீபாவளியை மிஸ் செய்தாலும் இந்த தீபாவளி மலரை மிஸ் செய்துவிட்டால் பிறகு வருந்த போவது காமிக்ஸ் நேசர்களே "
மதிப்பெண் 11.5 பத்திற்கு...
கூடுதல் போனஸ் மதிப்பெண் டெக்ஸ்ற்காக அல்ல டெக்ஸ் இதழின் தரத்திற்காக...:-)
அருமை தல.
Deleteதலைவரே செம,உங்க பாணியில் கலக்கலான விமர்சனம்...
Deleteடக்கர் விமர்சனம் தல....!!!!
Deleteப்ரேசில் ,அண்டர்டேக்கர் ,டெக்ஸ் சகோதர்ர் கதையை யோசிக்காமல் வெளியிடலாம் பலத்த ஆதரவும் ,வெற்றியும் உறுதி சார்..
ReplyDeleteஆனால் அண்டர்டேக்கர் கண்டிப்பாக வண்ணத்தில் தான் வருகை தரவேண்டும்...:-)
அமாயா வரலாம் அடுத்த முறை
ReplyDeleteமுடிந்தால் வண்ணத்தில் கொண்டு வர முடியுமா என பாருங்கள் சார்..
Hi..
ReplyDeleteஅமாயா in color
ReplyDeleteஎடிட்டா் சார்,
ReplyDeleteபழைய கதைநாயகர்ளை மீண்டும் சந்திப்பதில் மகழ்ச்சியே!! ஆனால் புராதன நெடி அடிக்கும் கதைகளின் எனில் சற்று தவிர்க்கலாம். வாசித்து பார்த்து மகிழ புதிய கதைகளே நிறைய உள்ளது தானே!!
ஹைய்யா புதிய பதிவு....
ReplyDelete13 இரண்டு பேர் வ்யூபார்ப்பதை நாம் பார்க்கும்வ்யூ அசத்தல். படைப்பாளிகளின் உழைப்பு, மற்றும் ஈடுபாடு இந்த ஒரு பக்கத்திலேயேபிரமிக்கவைக்கிறது. அண்டர் டேக்கர் கலரிலேயே தொடருவதே நல்லது. அமாயா, மற்றும் ப்ரூனோப்ரேசில்கலர் நன்றாக இருக்கும் அமாயா இளவரசியின் ஸ்லாட்டுக்கு இடைஞ்சல்தராதவகையில் என்றால்மட்டுமே ஓ. கே. ரைட்டு கால் கட்டைவிரலை கையில் எடுத்துட்டீங்க இனி எங்கபாடுகொண்டாட்டந்தான் சாம் வில்லர் ரொம்ப நல்லவரானடெக்ஸ் போலன் சிலபலகட்டுப்பாடுகளில்அடங்கமாட்டார்என்பதால் கதை நிச்சயமாகநமக்கு புதிய ஒரு வித்தியாசமானஅனுபவத்தைக்கொடுக்கும். மாயாவி மறுவருகையை கைதட்டி வரவேற்கிறேன்.கரூர் ராஜ சேகரன்.
ReplyDeleteஇன்று தனது திருமணநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது விஜயன் சார் அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDeleteஇன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🎂🎂🎂🍧🍧🍧🍫🍫🍫
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்.
Delete💐💐💐💐💐இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் ஆசிரியர் சார்.
Deleteஇனிய திருமணநாள் வாழ்த்துகள் ஆசிரியரே,வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்...
Delete80
ReplyDeleteகாலவேட்டையர் ஒரு சயன்ஸ் பிக்சன் கதை புரியும்படி ரசிக்கும்படி இருப்பது அகிலஅஉலகத்திலும் இதுவே முதல்முறை. மொழிபெயர்ப்புக்கு பிடியுங்கள் ஒரு பூங்கொத்து. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிஸ்ட்டி, அமாயா தவிர்த்து, அனைவருக்கும் ok சார். மறதிக்காரரும், ப்ருனோ வும் கண்டிப்பாக வேண்டும் sir.
ReplyDeleteஅனைத்து நாயக, நாயகியரையும் இருகரம் கூப்பி வருவருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். தங்கள் அனைவரின் வரவும் காமிக்ஸ் உலகிற்கு நல்வரவாகட்டும்.
ReplyDeletemany more happy returns of the day editor Sir.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteஇனிய திருமணநாள் வாழ்த்துகள் சார்..💐💐
ReplyDeleteப்ருனோ கலர் ல தான் சார் வேணும். அண்டர்டேக்கர் உம் அப்படியே.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார். May god bless you 💐💐💐
ReplyDeleteஇதுவரை வந்ததில்லை டாப்....
ReplyDeleteசத்தியமா இத எழுத்தில் படிக்கயில/எழுதயில்/ சோன் பப்டிக்காரன் உங்க நெனப்புல வந்தா....ஞான் சுகந்தலை குட்டத்ல நண்பர்களோடு குதூகல ஆட்டம் நினைவில்...நினைத்து பாக்கயில் கூட அதே வண்ணத்த அதே இன்பத்தை தந்தருளும் செந்தூரானுக்கு நன்றி...
சார் இருந்தாலும் ஓவியங்களும் வண்ணச் சேர்க்கைகளும் இரண்டாம் சுற்றிலிருந்து நன்கு அதகளப்படுத்துது வான்ச மிஞ்சும் வண்ணமே...மறதிக்காரர் இல்லாமே காமிக்சா....தாயகத்தில் தொடரும் போட்டிருப்பது மகிழ்ச்சீய்ய்ய்...
ப்ரூனோ வண்ணப்பக்கத்தை காட்டலயே...கலீல் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியலை...ஆனா கருப்பு வெள்ளை சும்மா அதிருதே...இரண்டும் வரட்டும் எனப்படுது...
நம்ம இரும்பார் சூப்பர்...
செக்ஸ்டன் ப்ளேக் பேர் மட்டும் நினைவில்...சொல்லத் தெரில
டெக்ஸ் குடும்பம் ...என்னக் கேள்வி...டெக்ச விடத் தெறிக்க விடும் காவியமாத்தான் அமைத்திருப்பர் போனலில்ல...
கருப்பி கெய்வி...வண்ணத்ல ஒன்னாவது பாப்பேய்...
அண்டர் டேங்கர் கேக்கவே வேணாம்...அடி தூள்...லார்கோ இடத்த அதற்கிணையாவே நிரப்புவது இப்பத்தைக்கு ட்யூரோவும் இவியலுந்தே என்பதில் மறுப்பேது...
சார்...சார்...அமாலியா சார்....அதுவும் வண்ணத்ல சார்...பெண்கள் முன்னேற்றத்துக்காக சற்று உடை தரித்து கட்டாயம் வேனும்
ஜான் ஸ்டீல் கதைல நல்லாருந்தா வண்ணத்லயும் வரட்டுமே...அதயுமோர் கை பாப்பம்
Deleteநீங்கள் எழுதியதை படிக்கும் போது அப்படியே உங்களது உற்சாகம் எங்களுக்கும் தொற்றி கொள்கிறது ஸ்டீல்.
Deleteஉங்களை பாக்கயில எனக்குமே குமார்
DeleteHappy wedding anniversary day sir!
ReplyDeleteஆசிரியர் மற்றும் அவரது துணையாருக்கும் எண்ணத்தில் உள்ள வண்ணத்தில் மனமார்ந்த உற்ச்சாக வாழ்த்துகள்...அதான் அய்யா பதிவு இன்று தூக்கலோ
ReplyDeleteமாயாவி, புருனோ ..எஸ்...(மாயாவி வண்ணத்தில் சார்?)
ReplyDeleteசெக்ஸ்டன்,ஸ்டீல்- நோ
அமாயா,திகில் - வெயிட்டிங் லிஸ்ட்
டெக்ஸ் அண்ணாத்த - அப்ப என்ன நடந்ததுன்னு நல்லா தெரிஞ்சுக்கவாவது வேணும்தான் ..
( பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர்க்கு ஒரு ஸ்பின் ஆஃப் வர்ற மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான்)
அண்டர்டேக்கர் ..இவரு வண்ணத்தில் கம்பெனி டிபால்ட் செட்டிங்ல எப்பவும் இருக்கருவருன்னுல்ல நினைச்சுட்டுருக்கேன்..
///மாயாவி, புருனோ ..எஸ்...(மாயாவி வண்ணத்தில் சார்?)///
Deleteஆஹான்...
///( பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர்க்கு ஒரு ஸ்பின் ஆஃப் வர்ற மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான்)///
Deleteஆதித்த கரிகாலன் னு சொல்வதே பொருத்தமாக இருக்கும் செனா..!
ஒப்பிட்டுப் பாருங்களேன்.. :-)
// மாயாவி, புருனோ ..எஸ்...(மாயாவி வண்ணத்தில் சார்?) //
Delete+1
//ஆதித்த கரிகாலன் னு சொல்வதே பொருத்தமாக இருக்கும்//
Deleteஅட...!!
//ஆதித்த கரிகாலன் னு சொல்வதே பொருத்தமாக இருக்கும்//--- சூப்பர்!
Deleteகால வேட்டையர் :
ReplyDeleteஒரு ஹனிமூன் ஜோடியின் போட்டோசூட்டில் குறுக்கிடுகிறது ஒரு குள்ளர் கும்பல்!
அந்த குள்ளர் கும்பலிடம் இருந்து ஒரு பத்திரிக்கையாளரை காப்பாற்றுகிறது இந்த ஹனிமூன் ஜோடி..!
அந்த பத்திரிக்கையாளர் யார், அந்த குள்ளர்கள் யார்.. இவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று ஆராயும்போது கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஊட்டுகின்றன.!
ஏலியன்ஸ்.. காலத் திருட்டு.. யூனிவர்சல் போலிஸ்.. என அறிவியல் புனைவு கலந்த கற்பனையில் பின்னியிருக்கிறார்கள்.!
சித்திங்கள் அட்டகாசம்.. கருப்புவெள்ளையில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கின்றன. (இம்மாதம் அனைத்து கதைகளிளுமே சித்திரங்கள் நேர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பு. )
காலத்திருட்டு எப்படி சாத்தியம் என்பதைப்பற்றி கதையின் நடுவில் கொடுக்கப்பட்ட விளக்கம்., நமக்கு இக்கதையில் கூடுதல் ஒட்டுதலை ஏற்படுத்துகிறது!
இக்கதையில் மர்ம மனிதன் மார்ட்டின் போன்ற ஸ்டார் வேல்யூ உள்ள யாராவது தோன்றி இருந்தால் செம்ம ஹிட்டடித்து இருக்குமோ என்னவோ.!?
லௌரி, ஆன்ட்டீ கேடா , பிரபஞ்ச போலிஸ் யுலா .. அப்புறம்.. (போனாப்போகுது) கிரிஸ், லூக் ஆகியோரின் பங்களிப்பு கதையில் நிறைவாக இருக்கிறது.!
இடையில் சில பக்கங்கள் (சில மட்டுமே) தொய்வாய் போவதாய் தோன்றினாலும், மொத்தத்தில் ரசிக்க முடிந்த கதைதான் இந்த காலவேட்டையர்.!
ரேட்டீங் 8/10
இன்னும் படிக்கல.... அப்பாலிக்கா இதை படித்து கொள்கிறேன்.
Delete// இக்கதையில் மர்ம மனிதன் மார்ட்டின் போன்ற ஸ்டார் வேல்யூ உள்ள யாராவது தோன்றி இருந்தால் செம்ம ஹிட்டடித்து இருக்குமோ என்னவோ.!?//
Deleteஸ்டார் வேல்யு இல்லாமல் இருப்பது கூட இந்த கதைக்கு ஒரு ப்ளஸ் என நினைக்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்து கதைகளும் தாராளமாக (வண்ணத்திலேயே) வரட்டுமே சார்... கருப்பு வெள்ளை வேண்டவே வேண்டாம்.உங்கள் தேர்வு என்றும் சோடை போகாது என்ற நம்பிக்கை இன்றும் உண்டு... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார். 🎉🎊🎉🎊🎉🎊
ReplyDeleteஅனைத்து கதைகளும் வரட்டும் வண்ணத்தில். உங்கள் தேர்வு என்றும் சோடை போகது என்ற நம்பிக்கை இன்று மட்டும் அல்ல என்றுமே உண்டு.
Deleteஜான் ஸ்டீல் கதைகள் முத்துவில் தான் வந்த ஞாபகம் சார். மாண்டு போன நகரம் இன்றும் நினைவில் நிற்கும் கதை. செக்ஸ்டன் ப்ளேக் த்ரில்லர் கதைகள் வழிப்பறிப் பிசாசு போன்றவை வாவ் ரகம்...
Delete105th
ReplyDeleteஆசிரியருக்கும் அவரது திருமதியாருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
ReplyDelete//1.இன்னா பண்ணலாம் இந்தப் புதுப் படைப்புகளை ? இந்த உட்பக்க preview-களைப் பார்த்தபடிக்கே யோசிச்சுச் சொல்லுங்களேன் ! போடலாமே ! என்றால் கலரிலா ? ப்ளாக் & ஒயிட்டிலா ? முதல் பக்கத்தைப் பாருங்களேன் - b&w-ல் கூட தெறிக்கின்றது ! //
ReplyDeleteBRUNO in color .. UNDERTAKER EITHER COLOR OR B/W .. FOR ME அந்த அண்டர்டேக்கர் பேனல் ஐ B/W பார்க்கும் பொழுது IT LOOKS கிளாசிக்..
//2.தொடரும் மாதங்களில் இவரையும் நம் அணிவகுப்பினில் இணைத்திடலாமா என்பதே ! What say people ?//
தலையும் கூட வருவார் என்றால் அண்ணன் கதையும் வரட்டும் சார் ..
//3.மறுபதிப்புகளே என்றாலும் - சூட்டோடு சூடாய் நாமும் இங்கே துண்டை விரித்திடலாமா folks ? என்பதே !//
UR WISH SIR ..
// 4.இந்த பஸ்ஸிலும் ஒரு சீட் போட்டு விடலாமா ? இல்லாங்காட்டி நாங்க நடந்தே வந்துடறோமே ?' என்று சொல்லி விடலாமா ?//
நடந்தே வந்துரலாம் சார்
//MY QUESTIONS # 5 & 6 ARE :
செக்ஸ்டன் ப்ளேக்குக்கு 'ஜே' போட்றதா ? தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதா ?
மிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ? //
செக்ஸ்டன் ப்ளேக் படித்ததில்லை .. SO UR WISH SIR .. மிஸ்ட்டி ஓகே சார் ..
//7.அம்மணி அமாயாவை தொடர்வதா ? Waiting லிஸ்டில் போட்டு வைப்பதா?//
அமாயா இன்னும் படிக்கவில்லை .. SO NO COMMENTS ..
// கண்ணாடிக் குடுவை நிறைய சோன்பப்டியை நிரப்பிக் கொண்டு 'டிங் .டிங்' என்று மணியடித்தபடிக்கே தெருவுக்குள் போகும் வண்டியை ஒரு 45 வருஷங்களுக்கு முன்னே பார்த்த அதே குஷி கிளம்புகிறது ! // இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இதை பற்றி நினைத்து கொண்டு இருந்தேன். இப்போது நீங்கள் எழுதியதை பார்த்து அப்படி ஒரு சந்தோசம். நீங்க வேற லெவல் சார்.
ReplyDelete///- டெக்சின் சகோதரருக்கென ஒரு ஆல்பம் ஒதுக்கியுள்ள வகையினில் ! பாருங்களேன் - அதன் டிரெய்லரை !! "வில்லர்" குடும்பத்துப் பிரதிநிதி எனும் போது நிச்சயமாய் இவர் சோடை போக மாட்டாரென்று தைரியம் கொள்ளலாம் ! ///
ReplyDeleteSam Willerஐ கோலாகலாமாக வரவேற்கிறேன்.!
Yes, I am appreciate.
Deleteஆமா...ஆமா... ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்.
Deleteடியர் எடி,
ReplyDeleteஇத்தனை தொடர்கள் நம்மிடம் இன்னும் காத்திருக்கின்றன என்பதே ஒரு அலாதி திருப்தி. ஒவ்வொன்றாக களம் இறக்கிவிடுங்கள், அனைவரையும் வரவேற்கிறோம்.
ஜான் ஸ்டீல், இரும்புக்கை, மிஷ்டி திகிழ், செக்ஸ்டன் ப்ளேக் போன்ற கதைகள் என்றும் சோடை போனதில்லை, எனவே டபுள் ஓகே. 2 மாதங்களுக்கு ஒன்று என்று நமது பாண்ட், மாடஸ்தி கிளாசிக் பதிப்புகளுடன் அணி சேர்க்கலாம்.
பழையவர்களுடன் புதிய கூட்டணி வேண்டாம் என்று சொல்வோமா... ஜானி, ரோஜர், ப்ரூனோ 2.0 கதைகள் தொடர வேண்டும்.
ஆனால், வண்ண கதைகளான ஆக்ஸா, ப்ரூனோ, ரோஜர், மற்றும் மிஸ்டி திகிழ் முடிந்த வரை வண்ணத்திலேயே, வருடம் இரண்டு மூன்று என்றாலும் காலம் தாழ்த்தியே வெளியிடுங்கள். சமீபத்திய ரோஜர் - ஆக்ஸா இதழ் போல, மீண்டும் கருப்பு வெள்ளை சித்திரங்கள்,நமக்கு வேண்டாம்.
டெக்ஸ் வில்லர் குடும்பத்தில் இன்னொரு தொடர் உண்டா என்ற என்னுடைய முந்தைய கால கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது, பேஷாக அணி சேர்க்கலாம், 2022 என்றாலும் சரியே.
அப்புறம் ஒரு கேள்வி, 2021 சந்தா பற்றி. நண்பர்கள் கவனித்தார்களா, இல்லை நீங்கள் பதில் அளித்தீர்களா என்று தெரியவில்லை.
வழக்கமாக வருட சந்தா இரு தவணைகளில் வாங்கும் அதே முறை தான்... டிசம்பருக்குள் முதல், மார்ச்சுக்குள் இரண்டாம்.
ஆனால், 2021 ல் சந்தா ஆரம்பிப்பதே ஏப்ரல் எண்ணும்போது, அதே சந்தா தவணைகள் சரிதானா ?! 3 மாதங்கள் தவணைகள் தள்ளி போடலாமே??
செக்ஸ்டன் ப்ளேக்குக்கு 'ஜே' போட்றதா ? தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதா ?
ReplyDeleteமிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ?
செக்ஸ்டன் ப்ளேக் - ஜனங்க தீர்ப்பு ஜே என்றால் நானும் ஜே.. ஜனங்க தொடர்பு எல்லைக்கு அப்பால் ஓடினால் நானும் அப்பால்.!
மிஸ்டி - கலரில் வித்தியாசமான ஒரு ஈர்ப்பை தருகிறது.. ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.!
இரும்புக்கை மாயாவி - ஜே
Deleteஜான் ஸ்டீல். - அயாம் எஸ்கேப் டூ தொடர்பு எல்லைக்கு அப்பால்.
புருனோ பிரேசில் - ஜே.ஜே.
அமாயா - ஒரு ஆல்பத்தை வைத்து எதுவும் சொல்லத்தெரியவில்லை சார்.! இதையுமே ஜனங்க தீர்ப்புக்கும் ஜட்ஜ் ஐயா தீர்ப்புக்கும் விட்டுவிடலாமென உத்தேசம்.!:-)
// ஜனங்க தீர்ப்புக்கும் ஜட்ஜ் ஐயா தீர்ப்புக்கும் விட்டுவிடலாமென உத்தேசம்.!:-) //
Deleteமேச்சேரி ஜனங்க என்ன சொல்றாங்க ஐயா ? :-)
///மேச்சேரி ஜனங்க என்ன சொல்றாங்க ஐயா ? :-)///
Deleteதென்னமரத்துல ஒரு குத்து..
ஏணியில ஒரு குத்து..
நாம பொதுவாப் போயிடுறதுதான்..!
// தென்னமரத்துல ஒரு குத்து..
Deleteஏணியில ஒரு குத்து.. //
சாரி. இந்த ஒட்டு செல்லாது.
ஏப்ரல் to மார்ச் ஃபினான்ஷியல் இயர் என்றிருப்பது போல், ஏப்ரல் to மார்ச் காமிக்ஸ் இயர் என்று மாற்றிவிடலாமே சார்.
ReplyDeleteசுவாரஸ்யமான விஷயங்களை அடுக்கிவிட்டு, அட்டகாசமான சித்திரங்களின் ப்ரிவியூக்களை கண்களுக்கு விருந்தாக்கிவிட்டு, போடலாமா.., வேண்டாமா? என்று தர்மசங்கடமான கேள்விகள் கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வதாம். லாலிபாப் கவரை பிரித்து, வாய் அருகே நீட்டி வேனுமா வேனாமா என்று கேட்கிறது மாதிரி இருக்கு சார். :-)) அந்த நேரத்தில் சுகர் பேஷண்ட் கூட லபக்னு கவ்விப்பாங்க சார் ;))
ReplyDeleteஅதிலும் ஏற்கனவே பரிச்சயமான, மிகவும் விருப்பமான ஹீரோக்கள் வேனாம்னா சொல்லப் போறோம். வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் போட்டு தாக்குங்க சார். வரவேற்க தயாராகவே இருக்கிறோம்.
என்னளவில் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே. கூடுமானவரை கலரில், முடிந்த வரை ஒரிஜினல் சித்திரங்கள் சிதையாமல் வெளியிட வேண்டும் என்பதே.
அதிலும், எஸ்பெசல்லி மாயாவி வண்ணத்தில்... டைப்பும்ே தேகையில மின்சாரம் பாயுற மாதிரி ஒரு பீலிங்கு..
Deleteதனது திருமணநாளை தைரியத்தோடும் துணிச்சலோடும் முக்கியமாக புண்ணகையோடு கொண்டாடிவரும் ஆசிரியருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
ReplyDelete(எனக்கெல்லாம் திருமணநாளை நினைச்சாலே பயந்து வருது குளிர் ஜீரமும் கூடவே வருது)
/// எனக்கெல்லாம் திருமணநாளை நினைச்சாலே பயந்து வருது குளிர் ஜீரமும் கூடவே வருது///
Delete...தவறு என்பது தவறி செய்வது
'தப்பு' என்பது தெரிந்து செய்வது
தவறு செய்பவன் திருந்த பார்க்கணும்
'தப்பு' செய்தவன் வருந்தி ஆகணும்...
நம்ம தலைவர் பாட்டு.
ஜான் ஸ்டீல் வந்த காலக்கட்டத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது. திரும்ப வந்தால் நல்லா இருக்கும். டெக்ஸ் குடும்பத்தினர்க்கு இங்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு ரொம்ப வருஷமா இருக்கு. டெக்ஸை பெறுத்தவரை கண்டிப்பா இடம் குடுக்கணும். மற்றவை பொதுஜனத்தின் சாய்ஸ்.
ReplyDeleteப்ரூனோ ப்ரேசில்2.0 - எனது எண்ணத்தை மாற்றி விட்டேன். இவர் வந்தால் வண்ணத்தில் மட்டும் வரட்டும். இது புதிய வாசகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி பழனிவேல். ப்ரூனோ கதையின் உட்பக்கம் வண்ணத்தில் செம அழகு.
Deleteஅமாயா -
ReplyDeleteஅக்கா யாரை பார்த்தாலும் காதலில் வழிவது அல்லது இவரை பார்த்தவுடன் மற்றவர்கள் காதலில் விழுந்தது நன்றாக இல்லை. இந்த அக்காவிற்கு லேடி-s பரவாயில்லை என நினைக்க வைத்து விட்டது கதையை படித்து முடித்த பின்னர்.
இந்த அக்கா கதைக்கு பதில் புதிய கதைகளங்கள் / நாயகர்களின் அல்லது இன்னும் ஒரு டெக்ஸ் கதையை கொடுக்கலாம்.
அல்லது பராகுடா போன்ற கதைகள் கிடைத்தால் அதனை கொடுக்கலாமே சார்.
///அக்கா யாரை பார்த்தாலும் காதலில் வழிவது அல்லது இவரை பார்த்தவுடன் மற்றவர்கள் காதலில் விழுந்தது நன்றாக இல்லை. ///
ReplyDeleteஏம்ணே.. இதையவேத்தான அந்த மாடஸ்டியெக்காவும் பண்ணுதாக.. அவியளமாத்திரம் கலர்ல கேக்கீக..!?;-)
அவிய அவியதான்...இவிய இவியதான்
Deleteஇந்த கேள்வி வரும் என தெரியும். மாடஸ்டி மீன் பிடிக்கும் நேரம் ஒரு சில படங்களே. மீதி நேரம் செம ஆக்சன்.அதே போல் அவரின் கதை ஜேம்ஸ் பாண்ட் கதை போன்று தெரிக்கும் ஆக்சனுடன் இருக்கும்.
Deleteஅப்புறம் மாடஸ்டி டாக்டர்கள் கூட மட்டும் மீன் பிடிக்க போவது உங்கள் கூட மீன் பிடிக்க வரவில்லை என்ற ஆதங்கம் புரிகிறது :-)
///அப்புறம் மாடஸ்டி டாக்டர்கள் கூட மட்டும் மீன் பிடிக்க போவது உங்கள் கூட மீன் பிடிக்க வரவில்லை என்ற ஆதங்கம் புரிகிறது :-)///
Deleteஇருக்காதே பின்னே..நானும் ஒரு தொழிலதிபர்தானே.? :-)
// இருக்காதே பின்னே..நானும் ஒரு தொழிலதிபர்தானே.? :-) //
Delete:-)
சார் ஸ்பைடர்2.0 குறித்து ஏதுமில்லயே
ReplyDeleteயுத்த களத்தில் டெக்ஸ்:
ReplyDeleteகார்ஸன் இல்லாத குறையை பூம்பூம் டிக் தீர்க்கிறார்,அழகாய் கார்ஸனின் இடத்தை ஆக்ரமிக்கும் டிக்,அந்த புலம்பும் பணியையும் தன்வசம் வைத்துக் கொள்கிறார்...
யுத்தக் களத்தின் ஊடாக ஓர் பயணம் மேற்கொண்டதான உணர்வை நமக்குத் தருவது கதாசிரியரின் வெற்றி...
டெக்ஸ் & டிக்கை பிரியும் நண்பன் ராட்டின் மரணமும்,யுத்தத்தின் கோரமுகமும் நம்மனதை சற்று அசைத்துதான் பார்க்கிறது...
டெக்ஸ் ஆசையாய் கேட்டுப் பெற்ற ஹென்றி ரைபிளை உடைத்து ராட்டின் நினைவுச் சின்னமாக மண்ணில் ஊன்றுவது,போரின் மீதான வெறுப்பையும்,நட்பின் மீதான அன்பையும் புரிந்து கொள்ளலாம்...
"மனிதனை மிருகங்களை விடக் கொடியவர்களாக்கிடும் இந்த யுத்தம் நாசமாய் போக !"
"மனித குலத்திற்கே யுத்தம் ஒரு சாபக்கேடு !"
-நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் வசனங்களாக்கப்பட்டுள்ளது....
வடக்கத்தியற்களோ,தெற்கத்தியர்களோ சாதாரண இராணுவ சிப்பாய்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது,நிம்மதியாய் உறங்கக் கூட முடியாமல் திடீர்,திடீரென்று தாக்குதல் தொடுப்பது...யப்பா சாமி,என்ன பிழைப்புடா இது என்று தோன்றுகிறது...
வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்தில் படம் நெடுக தரப்பட்டிருக்கும் விவரங்கள் வியப்பளிக்கும்,கதையுடன் ஒன்றச் செய்வதற்காக ஒவ்வொரு காட்சியமையிப்பிலும் நிறைய தரவுகள் தரப்பட்டிருக்கும்...
அதுபோல யுத்தக்களத்தில் டெக்ஸில் போர் சார்ந்த விவரணைகள்,வடக்கு,தெற்கு சார்ந்த மாகணங்களின் பூகோள அமைப்பிலான படங்கள்,ஹென்றி ரிபீட்டர் ரைபிள் பற்றிய விவரங்கள் ஆகியவை நம்மை வியப்பிற்குள்ளாக்குகின்றன...
இதழ் தயாரிப்புத் தரம் அசரடிக்கிறது...
வண்ணத்தில் இந்த சாகஸங்கள் களமிறங்கியிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாய் இருந்திருக்குமோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை...
இந்த மாத இதழ்களை வாசித்ததில் யாம் கண்டுகொண்டது என்னவெனில் டெக்ஸ் இதழ் மட்டுமே கதையுடன் பயணிப்பதான உணர்வை நல்கியது...
ஒரு கதை நம்மை கதையின் களத்தோடு பயணிக்கச் செய்தாலே அது கதையின் வெற்றிதானே...
உண்மையைச் சொல்வதனால் இதை கதை என்பதை விட வரலாற்றைத் புரட்டிப் பார்ப்பதான நிகழ்வு என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
எமது மதிப்பெண்கள்-10/10.
சூப்பர்
Deleteஅருமையான விமர்சனம் நன்று ரவி!
Delete"யுத்தம் அதகளம்!"
அப்படியே பக்கத்துக்கு பக்கம், பேணலுக்கு பேணல் ரசித்து உணர வேண்டிய கதை!
வரலாற்று பயணம் தான். சரியாக சொன்னீர்கள்!
டீட்டெயிலிங் எல்லாம் நம்மை சிவில் வார் காலகட்டத்தில் கொண்டு சேர்க்கிறது!
ஊன்றி படித்து உள்ளீர்கள்! செம!
சில சந்தேகங்கள்....
Deleteக்ராண்ட் இருக்கும் கெய்ரோவுக்கு தெற்கே சுமார் 400மைல் தொலைவில் ஜாக்சன் நகரத்தை நோக்கி போகும் தெற்கு படை இரண்டே நாளில் கெய்ரோ அருகே இருக்கும் பஃபிங்டனில் தாக்குவது எப்படி???
டென்னசி ஆற்றின் வடக்கே ஹென்றி கோட்டை இருப்பதாக மேப்பில் (பக்கம் 170னு நினைக்கிறேன்) உள்ளது. ஆனா டெக்ஸ் & டிக் கோட்டைக்கு போகும் போது ஆற்றை கடப்பதாக தெரியக் காணோம்???
தெற்கத்திய ராணுவமும் முறையான ராணுவமே! போர் திட்டங்கள், யுக்திகள் போன்றவற்றால் தோற்றுப் போகுது. ஆனா அவர்களை ஏதோ கொள்ளக்காரர்கள் போல நிறைய இடங்களில் சித்தரித்து இருப்பது ஏனோ???? கதாசிரயருக்கு "கான்ஃபெடரேட்ஸ்" மேல் என்ன கோபமோ???
(தோல்விக்கு பிறகே தண்டனை பயத்தில் சிறு சிறு குழுக்களாக தெற்கு ராணுவம் சிதறி ஓடி கொள்ளை,வழிப்பறி,அடாவடி செய்வது போல "மின்னும் மரணம்"-பின்லே& கிம்பால் குழு &
பெளன்சர்-பார்ட்1 போன்ற கதைகளில் பார்த்து உள்ளோம்)
// ஆனா அவர்களை ஏதோ கொள்ளக்காரர்கள் போல நிறைய இடங்களில் சித்தரித்து இருப்பது ஏனோ???? //
Deleteஅவர்களின் தன்மையற்ற அணுகுமுறை காரணமாக இருக்கலாம்...
அல்லது எதிர்மறை சித்தரிப்பு சற்றே கூடுதலாக இருந்தால் நம் நாயகரின் போராட்டம் வாசிப்பருக்கு நியாயமாக தோன்ற இதுபோன்ற உத்தியை கடைபிடித்திருக்கலாம்...
புனைவும்,வரலாறும் கலந்து கட்டியிருப்பதால் ஏதேனும் தகவல்கள் சற்றே மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம்...
மற்ற சந்தேகங்களை மீள்வாசிப்பில்தான் கவனிக்க வேண்டும்...
Deleteதீபாவளி வித் டெக்ஸில் பக்கம் 640 ல் பக்க எண் மாறி 340 என பிரிண்ட் ஆகியுள்ளது,இது எல்லா இதழ்களிலும் மாறி உள்ளதா எனத் தெரியவில்லை ?!
Deleteஇருக்கட்டுமே,தீபாவளி வித் டெக்ஸின் அருமையான,தரமான படைப்பிற்கு சிறு கண் திருஷ்டியாக....!!!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்...💐💐💐
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்...💐💐💐
ReplyDelete"இந்த இரண்டாம் சுற்று இத்தோடு முற்றுப் பெறுவதாகவெல்லாம் இல்லை"
ReplyDeleteமறதிக்காரரின் மீதான தங்களின் மனமாற்றத்திற்கு வரவேற்புக்கள்...
Now I am very much addicted to comics. You can make plenty of plans whatsoever.
ReplyDeleteசார் நீங்க இப்ப தான் addicted நாங்க 35 வருசமா அட்டிக்டட். வாங்க வந்து லைன் ல நில்லுங்க.
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete1) ப்ரூனோ 2.0 வண்ணத்தில்
Delete2) சாம் வில்லரின் கதை கட்டாயம் வேண்டும், டெக்ஸ் வில்லரின் ப்ளாஷ்பேக் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
3) இரும்புக்கை மாயாவி @ புத்தக விழா சர்ப்ரைஸ்
4) ஜான் ஸ்டீல் - நோ.
5) சேக்ஸ்டன் பிளாக் - நோ.
6) மிஸ்டி வண்ணத்தில் - கதைகளைப் பொறுத்து.
7) அமாயா - வண்ணத்தில் ஒரு வாய்ப்பு.
Welcome to Tex + Bro.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்!
ReplyDelete💐💐💐💐💐
///நான் "கோழைகளின் பூமி" கிராபிக் நாவலுக்குப் பேனா பிடிக்கப் புறப்படுகிறேன் !///
குறிப்பால் உணர்த்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் எடிட்டர் சார்!!😝😝😝😝😝
EV மற்றும் ஒரு அட்டகாச டைமிங் ROFL
Deleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள் ஆசிரியரே!
Delete///நான் "கோழைகளின் பூமி" கிராபிக் நாவலுக்குப் பேனா பிடிக்கப் புறப்படுகிறேன் !///
//குறிப்பால் உணர்த்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் எடிட்டர் சார்!//
ROFL.
ஈ.வி. உங்களுக்கு இணை நீங்கள் தான்.
//குறிப்பால் உணர்த்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் எடிட்டர் சார்!!😝😝😝😝😝//
Delete:-)))))))))))))))
நல்ல காலத்துக்கு 'கசையின் கதை' பத்தி வாயைத் தொறக்கலே நான் ' !!
Delete😂😂😂😂 சிரிச்சு மாளல
Delete//குறிப்பால் உணர்த்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் எடிட்டர் சார்!!😝😝😝😝😝//
Delete:-)
அப்புறம் போன வாரம் யுத்த பூமி இந்த வாரம் கோழைகளின் பூமி. எப்படி சார் உங்களால் முடிகிறது :-)
//நல்ல காலத்துக்கு 'கசையின் கதை' பத்தி வாயைத் தொறக்கலே நான் '//
DeleteElectoral roll duty camp ல உக்காந்துட்டு ’கெக்கே... பிக்கே...’ ன்னு சிரிச்சுட்டு இருக்கேன் நான்... முடியல...
// நல்ல காலத்துக்கு 'கசையின் கதை' பத்தி வாயைத் தொறக்கலே நான் '//
Deleteஆகா. இது தான் நீங்கள் கதைக்கு சரியான தலைப்பை தேர்வு செய்யும் ரகசியமா :-)
நீங்கள் வாய் திறந்தால் இங்கே ஏகப்பட்ட மௌன ராகங்கள் கானம் பாடும்..
Delete///நீங்கள் வாய் திறந்தால் இங்கே ஏகப்பட்ட மௌன ராகங்கள் கானம் பாடும்..///
Deleteலைட்டா!!!!
லைட்டா, ஹெவியாங்கிறது ராகங்கள் வாசிக்கப்பட்ட விதம், மற்றும் வருடங்களை பொறுத்தது.
Delete//லைட்டா, ஹெவியாங்கிறது ராகங்கள் வாசிக்கப்பட்ட விதம், மற்றும் வருடங்களை பொறுத்தது.//
Deleteஉட்காரவே முடியல இங்கே... இன்னிக்கு எல்லாரும் செம பார்ம்ல இருக்காங்க போல...
Dear எடி,
ReplyDeleteநீங்கள் என்ன செய்வீர்கள் ஏது செய்வீர்களா, 2021ல் நீங்கள் இன்று ரிவ்யூ செய்த அனைத்து சாகச வீரர்களும் வேண்டும் , மாயாவி திகில் கதைகள் உட்பட.
ஆசை காட்டி ஏமாற்றி விடாதீர்கள்
1.இன்னா பண்ணலாம் இந்தப் புதுப் படைப்புகளை ? இந்த உட்பக்க preview-களைப் பார்த்தபடிக்கே யோசிச்சுச் சொல்லுங்களேன் ! போடலாமே ! என்றால் கலரிலா ? ப்ளாக் & ஒயிட்டிலா ? முதல் பக்கத்தைப் பாருங்களேன் - b&w-ல் கூட தெறிக்கின்றது !
ReplyDeleteகலரில் பர்ஸ்ட் சாய்ஸ்! பட்ஜெட் காரணமாக கருப்பு வெள்ள எனில் ஓகே தான்! கலரை விட ஏராளமான காமிக்ஸ் படிப்பதே என் தேர்வு; என் தேர்வு மட்டுமே!
2.தொடரும் மாதங்களில் இவரையும் நம் அணிவகுப்பினில் இணைத்திடலாமா என்பதே ! What say people ?
கரும்பு தின்ன கூலியா???? போட்டு தாக்குங்கள் சார். ஆட்டுகறியில் தொடைகறி, ஈரல், போட்டி, தலைகறி, கால்குழம்புனு எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிக்கிறோமே!!!! சன்டே பாருங்க!
3.மறுபதிப்புகளே என்றாலும் - சூட்டோடு சூடாய் நாமும் இங்கே துண்டை விரித்திடலாமா folks ?
வாகான வாய்ப்பு இருந்தா ரசிப்போம் சார்.
4.இந்த பஸ்ஸிலும் ஒரு சீட் போட்டு விடலாமா ? இல்லாங்காட்டி நாங்க நடந்தே வந்துடறோமே ?' என்று சொல்லி விடலாமா?
நடராஜா சர்வீஸ் பெஸ்ட் ஆக்கும் சம்டைம்!
MY QUESTIONS # 5 & 6 ARE :
செக்ஸ்டன் ப்ளேக்குக்கு 'ஜே' போட்றதா ? தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதா ?
மிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ?
எகெய்ன் நடை பயிற்சி உடம்புக்கு நல்லதே!
7.அம்மணி அமாயாவை தொடர்வதா ? Waiting லிஸ்டில் போட்டு வைப்பதா?
அமாயா வேணாம் சார். போதும் ஒரு பாகத்தோடு நிறுத்திக் கொள்வோம்.
இலக்கில்லாத கதையோட்டம்.
ஒரு கலா ரசிகனாக மனசை தேற்றிக் கொண்டு சொல்கிறேன்!
//ஆட்டுகறியில் தொடைகறி, ஈரல், போட்டி, தலைகறி, கால்குழம்புனு எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிக்கிறோமே!!!! சன்டே பாருங்க!//
Deleteஅட்டகாசமான ரசிகர் நீங்கள்... STV நண்பரே!
// இலக்கில்லாத கதையோட்டம். //
Deleteபாயிண்ட்...
// இலக்கில்லாத கதையோட்டம். //
Deleteஅதே அதே +1
// இலக்கில்லாத கதையோட்டம். //
Deleteஆர்ஜின் ஸ்டோரி தானே... வரும் ஆல்பங்கள் எப்படி இருக்குன்னு பாக்கலாமே! அப்புறம் சுதந்திரம் தானே இலக்கு...! எது சுதந்திரம் என்பதிலேதான் இருக்கு ???
///சுதந்திரம் தானே இலக்கு...!///---- ஆமா! பாயிண்டை பிடிச்சிட்டீங்க! ஆனாக்கா அமாயாவே கண்ணாடி நகரத்தை விட்டு தான் வெளியே வந்தது தவறோனு அடிக்கடி ஃபீல் பண்ணுது! இங்கதான் நமக்கும் கதையோடு இணைய முடியாத நிலை!
Delete////எது சுதந்திரம் என்பதிலேதான் இருக்கு ???///---இங்கதான் கொஞ்சம் இடிக்கிறது. மிரட்டலாக எல்லையை தாண்டியதாக தெரிகிறது!
நண்பர்கள் எல்லோரது கருத்துக்களையும் பரா்த்து விடலாம்.
// இங்கதான் கொஞ்சம் இடிக்கிறது. மிரட்டலாக எல்லையை தாண்டியதாக தெரிகிறது! //
Deleteஎஸ். உண்மை.
எடிட்டர் சார்,
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள் !
திகில், மாயாவி, புருனோ பிரேசில் மட்டும் எனக்கு ஓகே :-)
sunshine லைப்ரரியை extend செய்து முன்னறிவிப்பு + மின்-கொள்முதல் என்று இவைகளை தனி ட்ராக்ல தெறிக்க விடுங்கள் சார் !
ReplyDeleteஅதாவது சர்ப்பத்தின் சவால் பாணியில் அறிவிப்பு செய்து 3 மாதங்களில் 2 ஸ்பெஷல் புக்குகள் என்று வெளியிடுவது
Deleteஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள் !
இனிய திருமண தின நல்வாழ்த்துகள் விஜயன் சார்....
ReplyDelete1. Bruno Brazil கண்டிப்பாக வேண்டும்... கண்டிப்பாக கலரில் வேண்டும்...
2. Tex brother.... Waiting list
3. சூட்டோடு சூடாய்... மாயாவிகாருக்கு துண்டு விரித்திடலாம்...
4.Agent John Steel எந்த ஐடியாவும் இல்லை... உங்களுக்கு OK என்றால் எனக்கும் OK...
5. Sexton Blake... கண்டிப்பாக வேண்டும்... அற்புதமான கதை வரிசைகள்...
6. Misty.... Waiting list
7. அமாயா... கலரில் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்...
நவம்பர் இதழ்கள் நறுக் சுருக் விமர்சனம்:
ReplyDelete1.கால வேட்டையர்-வித்தியாசமான களம்,மாறுபட்ட சிந்தனை,இப்படி எல்லாம் கூட நடக்க வாய்ப்புண்டா என்ற சிந்தனையை எழ வைக்கிறது,கோட்பாடு,பகுப்பாய்வு,காஸ்மிக் துடிப்பு,மெய்நிகர் போர்வைன்னு என்னென்னமோ சொல்றாங்க...
எல்லாமே தூங்கி முழிச்சவாட்டி மறந்து போயிடுச்சி...கதையை வாசிக்கும் போது வில் ஸ்மித் நடித்த மென் இன் பிளாக் போன்ற படங்கள் நினைவில் வந்து போனது...
எமது மதிப்பெண்கள்-08/10.
2.வானமும் வசப்படும்-விற்கும் விலைவாசியில் ஏனுங்கோ துணி எல்லாம் போட்டுகிட்டு...!!! சிக்கனமா இருங்கோ,பிரீயா இருங்கோன்னு புரட்சி பண்ற அமாயா எங்கெங்கியோ போறாங்க,மூணு உலகத்திலும் இருக்கறவங்க எல்லாம் ஜொள்ற மாதிரி பிரீயா சுத்தறாங்கோ...அப்பப்போ கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கோ...!!!!
ஆனாக்கா கதையை மட்டும் என்னான்னு சொல்ல மாட்டேங்கறாங்கோ...
கொசகொச பேனல்களையும்,எழுத்துருவின் குறைவான அளவையும் பார்க்கும்போது,தலைவரின் நிலைமையை நினைச்சி சிப்பு,சிப்பா வருது...
தலைவரே ஹி,ஹி,ஹி....
எமது மதிப்பெண்கள்-புரட்சிக்கு எல்லாம் மார்க் போடனுமா என்ன...!!!
3.தி விண்டர் ஸ்பெஷல்- பிரஷ் டைப்பிலான ஓவியங்கள் கவர்கின்றன...
நாடுகள் மாறினாலும்,கலாச்சாரங்கள் மாறினாலும்,மனிதர்கள் மாறினாலும் சில பழக்க வழக்கங்களும்,எண்ணங்களும் மாறிடுவதில்லை....
கதையின் முடிவு நச் நமது மண்ணின் வாசனையை நுகர்ந்து போல ஓர் உணர்வு.....
எமது மதிப்பெண்கள்-09/10.
4.சர்ப்பத்தின் சவால்-காலத்தை வென்ற நாயகன்,கதை இருக்கோ இல்லையோ நாயகன் மீதான ஈர்ப்பு நம்மை எதிர்பார்க்க வைக்கிறது,முந்தைய ஸ்பைடர் சாகஸங்கள் அளவுக்கு இல்லை எனினும் ஒருமுறை வாசிக்கலாம்,கொஞ்சம் சிரிப்பும் அப்பப்ப வருது,கதைப் பாத்திரங்கள் பயன்படுத்தும் கருவிகள் கற்பனையின் உச்சம்...ஜேம்ஸ்பாண்ட் கதையில் மட்டும்தான் நவீன கருவிகள் வரனுமா என்ன...!!!
என்ன ஆங்காங்கெ கொஞ்சம் கொட்டாவியும் கூட வருது...ஸ்பைடர் வில்லனை காப்பாற்ற,வில்லன் ஸ்பைடரை மறுக்கா,மறுக்கா காப்பாற்ற யப்பாடி வில்லனா ?! ஹீரோவா ?! நண்பனா ?! இல்லேன்னா மல்டி ரோலை எடுத்து பண்ணிட்டாரோ...!!!
ஸ்பைடர் ஆங்காங்கே சவடால் விட்டு சலம்பி கொண்டே இருக்கிறார்,பர்பாமென்ஸ் என்னவோ எதிர் அணிக்குதான் வருது.....
எமது மதிப்பெண்கள்-07/10.
//எல்லாமே தூங்கி முழிச்சவாட்டி மறந்து போயிடுச்சி//
Deleteஅப்புறம் என்ன? புதுக்கதைன்னு மறுபடியும் படிக்க வேண்டியதுதானே நண்பரே?
மறுபடியும் முதல்ல இருந்தா....!!!
Delete//மறுபடியும் முதல்ல இருந்தா....!!! //
Deleteஆமா... போட்ட கோட்டையெல்லாம் அழிங்க.
//1.இன்னா பண்ணலாம் இந்தப் புதுப் படைப்புகளை ? இந்த உட்பக்க preview-களைப் பார்த்தபடிக்கே யோசிச்சுச் சொல்லுங்களேன் ! போடலாமே ! என்றால் கலரிலா ? ப்ளாக் & ஒயிட்டிலா ? முதல் பக்கத்தைப் பாருங்களேன் - b&w-ல் கூட தெறிக்கின்றது ! //
ReplyDeleteரோஜர் 2.0 மற்றும் முதலைப் பட்டாளம் 2.0 ஆகியவை தற்போதைக்கு அவசரமில்லை,இருப்பில் உள்ள மறுபதிப்பை கரைத்து விட்டு பின்னர் இவர்களை களமிறக்கலாம்,அது 2022 ஆகவும் இருக்கலாம்,2023 ஆகவும் இருக்கலாம்,மேலும் விலைகளை கருத்தில் கொண்டு இவற்றை வண்ணத்தில் வெளியிடுவது உசிதமான செயல் ஆகாது என்பது எனது கருத்து.
அண்டர்டேக்கரை பொறுத்தமட்டில் வண்ணத்தில் வெளிவருவதே சிறப்பு சார்...
//2.தொடரும் மாதங்களில் இவரையும் நம் அணிவகுப்பினில் இணைத்திடலாமா என்பதே ! What say people ?//
சாம் வில்லரை வரவேற்போம் சார்...
//3.மறுபதிப்புகளே என்றாலும் - சூட்டோடு சூடாய் நாமும் இங்கே துண்டை விரித்திடலாமா folks ? என்பதே !//
இதற்குமான பதில் முதல் கேள்விக்குண்டான பதிலே...
// 4.இந்த பஸ்ஸிலும் ஒரு சீட் போட்டு விடலாமா ? இல்லாங்காட்டி நாங்க நடந்தே வந்துடறோமே ?' என்று சொல்லி விடலாமா ?//
பொறுமையா நடந்தே வந்துரலாம் சார்...
//MY QUESTIONS # 5 & 6 ARE :
செக்ஸ்டன் ப்ளேக்குக்கு 'ஜே' போட்றதா ? தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதா ?
மிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ? //
செக்ஸ்டன் ப்ளேக் படித்ததில்லை, மிஸ்ட்டியும் படித்ததில்லை, அதனால என்ன சொல்றதுன்னு தெரியலை,நல்லா இருந்தா இதுல ஒன்னு,அதுல ஒன்னுன்னு முயற்சிப் பண்ணி பார்க்கலாம்னு தோணுது சார்...
//7.அம்மணி அமாயாவை தொடர்வதா ? Waiting லிஸ்டில் போட்டு வைப்பதா?//
தாரளமாக Waiting லிஸ்டில் போட்டு வைக்கலாம் சார்...
///விலைகளை கருத்தில் கொண்டு இவற்றை வண்ணத்தில் வெளியிடுவது உசிதமான செயல் ஆகாது என்பது எனது கருத்து.///---- அதே அதே!!!
Delete///அண்டர்டேக்கரை பொறுத்தமட்டில் வண்ணத்தில் வெளிவருவதே சிறப்பு சார்....///
---ஆமா வண்ணத்தில் தான் அவரு பட்டையை கிளப்புவாரு...
அண்டர்டேக்கர் நிச்சயம் வண்ணத்தில்தான் வெளிவரும்... ஆசிரியர் குறிப்பிட்டது அதன் க/வெ ஒரிஜினல்களின் விற்பனை குறித்தேயன்றி நமது வெளியீட்டினைப் பற்றி அல்ல என்று நினைக்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete