நண்பர்களே,
வணக்கம். வயசாவதை உணர்ந்து கொள்ள 10 சுலப வழிகளை பெரும் தேவன் மனிடோ நமக்கு அருளியிருக்கிறாரென்பேன்  :
1 .பகலில், பங்குனி வெயிலின் வெளிச்சத்தில் கூட பசுமாடு மொச மொசன்னு தெரிய ஆரம்பிக்கும் !!
2 .காலுக்குள் நூறு ஓவா நோட்டு கிடந்தாலும் குனிந்து அதையெடுக்க யாராச்சும் ஆள் சிக்குறாங்களான்னு பாக்கச் சொல்லி குறுக்கும் ; முட்டிங்காலும் யோசனை சொல்லும் !
3 .பஸ்ஸிலே, ரயிலிலே...டீனேஜ் பொண்ணுங்க கூட தயங்காம கிட்டக்க குந்த ஆரம்பிச்சா - 'அய்யகோ....லோகத்தின் கண்ணிலே நீ இனி அங்கிள் கூட நஹி....!! தாத்தா.....தாத்தா..... !!!" என்று தலைக்குள் stereo சவுண்ட் ஒடத் தொடங்கும் !!
4 .ஆமைவடையைப் பார்க்குறச்சே கூட கடிச்சுச் சாப்பிடும் முன்பாய்  ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி இந்தக் கடைவாய்க்கும், அந்தக் கடைவாய்க்குமாய் ஷிப்ட்டிங் செய்து "பல் டெஸ்டிங்..பல் டெஸ்டிங்..' படலம் நடந்திடும் !!
5 .இப்போல்லாம் எடுக்கிறே selfie க்கள் Faceapp இல்லாமலே 'ஒரு மார்க்கமா' தெரியத் தொடங்கினாக்கா - "சுத்தம் !! கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!"
6 .அத்திவரதரை சேவிக்க அலையடிக்கும் கூட்டங்களை வீட்டுக் கூடத்திலிருந்து டி-வி-யிலே பார்க்குறச்சேயே மூச்சு வாங்குச்சுன்னா - ஸ்ஸ்ஸ்ஸ் !!!
7 .லிப்ட் இல்லாத அபார்ட்மெண்டில் மூணாவது மாடியிலே வீட்ட வாங்கியிருக்கும் நண்பன், "வீட்லே ஆள் இல்லேடா மாப்பிளை...பிரீயா இருந்தா வாரியா ?" ன்னு கேட்குறச்சே கொலை காண்டு தலைக்குள் எழுந்தால் - டவுட்டே வேணாம்ஜி !
8 .சூப்பர்மார்க்கெட்டுக் போனாக்கா மண்டைக்கு சாயம் அடிக்கிற கருப்பு பெயிண்ட் குமிச்சு கிடக்குறே செக்ஷன நோக்கி அதுபாட்டுக்கு கால் போகுதா ? யோசிக்கத் தேவையே லேதுங்கோ !!
9 .மூக்குக் கண்ணாடியை மாட்டின அப்பாலிக்காவும் - "மாயாவி கராத்தே வெட்டு வெட்டினார் !" என்பதை - "மாயாவி காரட்டை வெட்டு வெட்டுன்னு வெட்டினார் !" என்று படிக்க முடிஞ்சாக்கா - சாரி பாஸ் !!
10 .மாமூலாய் ஊதித் தள்ளுற எடிட்டிங்க்லாம் இப்போ 'தஸ்ஸு-புஸ்ஸுன்னு' மூச்சு வாங்கச் செய்யுதுன்னா - confirmed சாரே !! ரெண்டே நாளிலே கண்ணை மூடிக்கினு தயார் பண்ணுறே புக்குக்கே இப்போ 10 நாள் ஜவ்விழுத்தாககா - 'காலம் செய்த கோலமடி ; கடவுள் செய்த குற்றமடி!!"!
ஆங்....கடாசியா சொல்ல வந்த ஒற்றை விஷயத்தை ஓபன் பண்றதுக்கோசரம் எவ்ளோ பில்டப்பு ??? ஆனா தலைகீழா நின்னுக்கிட்டே சிரசாசன SMS அனுப்புற நமக்குலாம் பில்டப் இல்லாட்டி பிழைப்பே லேதுவாச்சே ? விஷயம் இது தான் guys !! ஆண்டின் அட்டவணையை எத்தனை spaced out ஆகத் திட்டமிட்டாலும் சரி - அதன் முன்பாதியில் தான் முக்கிய இதழ்கள் சகலமும் குந்திவிடுகின்றன ! தோர்கல் ஸ்பெஷலா ? - சென்னை புத்தக விழா நேரத்துக்கு ; ட்யுரங்கோவா ? - கோடை மலருக்கு ; லக்கி ஸ்பெஷலா ? ஆண்டுமலருக்கு ; ஜம்போவின் டாப் இதழ்களா ? சுற்றின் துவக்கத் தருணங்களுக்கு...! என்று ஒருவித வேகத்தில் ஆண்டின் முதல் பாதியின் அட்டவணைக்குள் முக்கிய இதழ்களின் பெரும்பான்மை அடைக்கலம் கண்டுவிடுகின்றன ! பற்றாக்குறைக்கு ஆகஸ்டில் ஈரோடு நமக்கொரு ஸ்பெஷல் பொழுதாகி நின்றிட, அதற்குமே மிச்சம் மீதமுள்ள தம்மெல்லாம் திரட்டி - எதையாச்சும் வடையாக்கிச் சுட்டு வைப்பது வாடிக்கை என்றாகி விடுகிறது !! So ஜனவரியில் ஆரம்பிக்கும் ஒரு அரூப ரயிலானது நம்மைப் பொறுத்தவரைக்கும் ஆண்டின் முதல் 8 மாதங்களில் பயணிப்பதொரு மெகா தூரத்தை !! ஆக பயணம் துவங்கும் போது இறுகப் பிடித்துக் கொண்டே, தம் கட்டியபடிக்குக் காட்டத் துவங்கும் முனைப்பானது - intensity-ல் கூடிக் கொண்டே செல்வதும் வாடிக்கை என்றாகிடும் நிலையில் - எல்லைக்கோடு கண்ணில் தட்டுப்படும் தருணத்தில் இப்போதெல்லாம் வாங்கும் மூச்சு, சொல்லி மாள்வதில்லை !! அதைச் சொல்வதற்கே மூச்சிரைக்க முனைந்து வருகிறேன் இப்போது !!
No different this 2019 too !!
பராகுடா - டிக்
தி Lone ரேஞ்சர் - டிக்
தோர்கல் - டிக்
ட்யுரங்கோ-டிக்
ஆண்டு மலர் - டிக்
லயன் கிராபிக் நாவல் - tight ஆன கதைப்பணிகள் - டிக்
என்றபடிக்கே சீறிச் சென்ற வண்டி - தி ஈரோடு எக்ஸ்பிரஸ் பணியினுள்ளும் அதே முனைப்போடு புகுந்தது !! மெகா புக்கான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" நமது இக்ளியூண்டு மொழிபெயர்ப்பு டீமின் ஒரு புதுவரவின் சகாயத்தோடு துவக்கம் கண்டிருக்க - அதனை டைப்செட்டிங் செய்யும் முன்பாகவே எடிட் செய்துவிட இம்முறை தீர்மானித்தேன் ! நான் எழுதியிரா இதர ஸ்கிரிப்ட் சகலத்தையும் வழக்கமாய் முதலில் டைப்செட்டிங் செய்திடச் சொல்லிவிடுவேன்! மொத்தமாய் முடிந்த நிலையில் என் மேஜைக்கு அவை வந்த பிற்பாடு - அவற்றோடு மல்லுக்கட்டும் படலம் ஆரம்பமாகிடும் !! சிகப்பு மசிப் பேனாவால் நான் எடிட் செய்யும் முதல் படிவத்தைப் பார்த்தால் - சீஸனின் உச்சத்தின்போது குற்றாலத்தில் உள்ள கசாப்புக்கடைகளின் இரத்தக் களரி நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே இயலாது !! முழுசுமாய் மாற்றியெழுத வேண்டிய பகுதிகள் ; பிழை திருத்தங்கள் ; எடிட்டிங் - என்று ரக ரகமாயிருக்கும் அங்கே நான் கிறுக்கி வைத்திருக்கும் corrections !! அத்தனையும் பொறுமையாய் நம்மவர்கள் திருந்தங்களாய்ப் போட்டுத் தந்து, அதை மறுக்கா என்னிடம் ஒப்படைப்பது நடைமுறை ! அதனை மறுவாசிப்புப் போடும் போதே மேற்கொண்டும் சில மாற்றங்களை நடையில் செய்த பிற்பாடு - இரண்டாம் படிவம் ரெடியாகி, proof reading செய்திடும் பெண்ணிடம் போகும் !! ஆனால் இந்தவாட்டி கதையின் நீளமும் ஜாஸ்தி ; பேனா பிடித்திருப்பவரும் புச்சு ; நமக்கும் இளமை ஊஞ்சல்லே ஏறி ஆடோ, ஆடென்று ஆடி வருவதால் - நனைத்துச் சமைப்பதை சற்றே குறைக்கத் தீர்மானித்தேன் ! So செய்திட வேண்டிய major திருத்தங்களையெல்லாமே ஸ்கிரிப்டில் செய்திட இம்முறை முனைந்தேன் !!
கதை எனக்கு ரொம்பவே பிடித்தமானதொன்று என்பதோடு - ஒருவித free flowing பாணியில் சித்திரங்களும் இருப்பதால் சுறுசுறுப்பாய்ப் புகுந்தேன் பணிகளுக்குள் !! And இது இலக்கண சுத்தத் தமிழுடனான பயணமாக இருந்திடப் போவதில்லை என்பதை முதலிலேயே தீர்மானித்திருந்ததால் - கூடுதல் ஜாலியாகிவிட்டது !! ஏகப்பட்ட நாட்களுக்கு முன்பாகவே பணிகளைத் துவக்கி விட்டதன் புண்ணியத்தில் - சாம்பிள்... அதனில் திருத்தங்கள்.... இன்னொரு சாம்பிள் ...அதில் இன்னொரு வண்டித் திருத்தங்கள்....அப்பாலிக்கா இன்னுமொரு சாம்பிள்...அதுக்கப்பாலிக்கா இன்னமுமேயொரு வண்டித் திருத்தங்கள் என புது மொழிபெயர்ப்பாளரின் சிறுகுடல் ; பெருங்குடல் ; மத்திம குடல் ; முக்கிலேயுள்ள குடல் - என்று சகலத்தையும் உருவி, அலசிப் பார்க்க நேரமிருந்தது எனக்கு ! மனசுக்குள் எழுந்திருக்கக்கூடிய *@(%~**" ரீதியிலான நல்வாழ்த்துக்களையெல்லாம் விழுங்கிக்கொண்டே மனுஷனும் திருத்தம் ..திருத்தம் என்று போட்டனுப்பிய umpteenth நகலை கையில் வைத்துக் கொண்டே பணிகளை ஆரம்பித்தேன் !! இங்கொரு விளம்பர இடைச்செருகல் guys : நூற்றி மூணு தபா இதைச் சொல்லியிருப்பேன் தான் - இருந்தாலும் நூற்றி நாலாவது வாட்டியும் ஒப்பித்து விடுகிறேனே !! டிங் -டிங் -டிடிங்.....நமது வாசிப்புகளில் இதுவொரு landmark இதழாக அமையாது போயின் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் !! வெகு சொற்ப இதழ்களே அவற்றுள் பணியாற்றும் போது ஒரு சந்தோஷத்தைத் தாண்டி, ஒரு திருப்தியையும் தரும் சக்தி கொண்டிருந்திடும் ! This I would say is one such album !!! So இன்றே முன்பதிவு செய்திடத் தவறாதீர்கள் !! பணம் அனுப்ப வேண்டிய முகவரி : blah blah blah .....!! எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது !!டிங்..டிங்..டிடிங்...!!!
வெல்கம் after தி ஷார்ட் கமர்ஷியல் பிரேக் !!
நான்கு அத்தியாயங்கள் கொண்ட சாகசம் - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" !! "So மூச்சு விட அப்பப்போ...அங்கங்கே பிரேக் எடுத்துக்கிறோம் ; அத்தியாயம், அத்தியாயமா திருத்தங்களை போட்டு கழட்டுறோம்.. ; நாலே நாளிலே வேலையை முடிக்கிறோம் !!" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு வேலைக்குப் பிள்ளையார் சுழி போட்டேன் !! முதல் பாகம்..... திருத்தங்கள்... மறுதிருத்தங்கள் என சகல ஸ்பூன்லிங் ஆட்டங்களும் நடைபெற்றிருந்தது இதனிலேயே என்பதால் சர்ரென்று ஒரு மாதிரி வழுக்கிக் கொண்டு ஓடி விட்டது !! 'அட்றா சக்கை..அட்றா சக்கை' என்றபடிக்கே மறுநாளைக்கு மறு அத்தியாயத்தினுள் புகுந்தால் - கதைக்களத்திலும் சற்றே சீரியஸ்த்தன்மை ஏறியிருந்தது ; எழுத்துக்களிலுமே சற்றே up & down பாணி தென்பட்டது ! எழுதுவதில் மிகப்பெரிய சவாலே அதன் சுமாரான நாட்களை சமாளிப்பது தான் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் ! ஜாலியானதொரு நாளைக்கு பேனாவைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் - வரிகள் சும்மா "வாம்மா..மின்னல்...!" ரேஞ்சுக்கு சீறிக்கொண்டு பாய்ந்திடும் ! ஒவ்வொரு முக்கிய இடத்திலும் மும்மூன்று தெறிக்கும் டயலாக்குகளைக் கூட ரெடி பண்ணிடும் விதமாய் தலைக்குள் உதிக்கும் அத்தனையுமே classy வரிகளாய் அமைந்திடும் ! இன்னொரு மித நாளுக்கு அதே பேனாவைத் தூக்கிக் கொண்டு, அதே கதையின் மிச்சப் பக்கங்களையும் தூக்கிக்கொண்டு அதே மேஜையில் பிட்டத்தை அமர்த்தினால் - 'ஏக் காவ் மே ....ஏக் கிசான் ரகுத்தாத்தா !!" ரேஞ்சுக்குக் கூட வரிகள் வந்து சேராது !! முக்கு முக்கென்று முக்கினாலும், "பாலிருக்கி....பழமிருக்கி.....ஓஓஓஓஓ.." என்று தான் சங்கீதம் தேறும் !! ஆனால் முதல் நாளையும் ரசித்து ; இரண்டாம் நாளையும் சகித்து - நெருடல் கண்ணில்படா ஒரு output-ஐ உருவாக்குவதே ஒட்டுமொத்த பணியின் பாங்கு என்பதை நாட்களின் ஓட்டமே கற்றுத் தந்துள்ளது ! சுமார் 170+ பக்கங்களெனும் போது அதனுள் குறைந்த பட்சம் 30 பணிநாட்கள் இருந்திருக்கக்கூடும் !! அவற்றுள் பாதி "வாம்மா மின்னல்" ; மீதி..."பாலிருக்கி..." என்றிருப்பது இயல்பு தானே ?
So வழுக்கிக் கொண்டு முதல் பாகத்தினுள் ஓட்டமெடுத்தவன், பாகம் இரண்டினுள் - கனத்த மழைக்குள் பேண்ட்டை மடித்துக் கொண்டு நிதானமாய் நடந்து பார்க்கும் பாணியைக் கடைபிடித்தேன் !! தத்தா..புத்தா...வென்று ஒரு மாதிரியாய் அத்தியாயம் இரண்டுக்கு டாடா சொல்ல முடிந்த போது 5 நாட்கள் ஓடியிருந்தன !! And Part 3-க்குள் என்ட்ரி கொடுக்கும் போது கதையும் அடுத்த லெவலைத் தொட்டு நிற்க - சைக்கிளைத் தள்ளிக்கொண்டே மழைநீர் ஓடும் சாலையில் நடைபோடுபவனைப் போல நி-தா-ன-மே தாரக மந்திரமாகியிருந்தது !! ஒரு வாரம் இதற்குள் ஓடியிருக்க - "அண்ணாச்சி...டைப்செட்டிங்குக்கு வேலையில்லை...!" என்று நம்மவர்களின் முணுமுணுப்பு காதில் விழுந்தது !! கிளைமாக்ஸ் பாகம் - பக்க எண்ணிக்கையும் சற்றே ஜாஸ்தி & கதையோட்டத்தின் ஜீவநாடியுமே அது தான் என்பதால் - இன்னொரு வாரம் ஓடினாலும் பரவாயில்லை, no compromises என்றபடிக்கே 'தல'யின் இப்போதைய பேட்டிங் வேகத்திலேயே நானும் வண்டியை ஓட்டினேன் !! 'தல'யின் இப்போதைய வேகத்தைப் பார்த்து காதிலிருந்து புகை விடும் நம்மவர்களை போலவே - நம்மாட்களும் எரிச்சல்பட்டிருப்பது உறுதி ; ஆனால் 'தல'கிட்டே வாய் திறக்க முடியா செலெக்டர்ஸ் போல அவர்களும் மௌனமாயிருக்க - ஜவ்வாய் இழுத்து விட்டேன் பணியினை !! நடுவாக்கில் ஊர் சுற்றும் வேலையும் சேர்ந்து கொண்ட போது - பொறுப்பு பரமானந்தமாய் கதையையும் கையோடு தூக்கிச் சுமந்தேன் ! அதுவும் 'தேமே' என்று அமெரிக்காவைச் சுற்றிப்பார்த்த கையோடு பத்திரமாய் வீடும் திரும்பியது !! அதன் பின்பாய் அரக்க பரக்க வேலைக்குள் தலை நுழைக்க - மாற்றி எழுதும் வேலைகளை ஜரூராய்ப் பார்த்திட நமது உலகக்கோப்பைத் தோல்வி ரொம்பவே கைகொடுத்தது !! அது வரைக்கும் கிரிக்கெட் எனது நேரத்தை ஓரளவுக்கு விழுங்கி வந்தது ! ஆனால் நம்மாட்கள் சாத்து வாங்கத் துவங்கிய முதல் கணத்தில் வேலைக்குள் ஒரு வேகம் எடுத்துச்சு பாருங்க....."சுபம்" போடும் எல்லைக்கோட்டில் தான் நின்னுச்சு !! But பாகம் 4 -ன் மாற்றியெழுதும் படலம் ; எடிட்டிங் என ஒட்டு மொத்தமாய் 3 வாரங்களை நான் கபளீகரம் செய்தது தான் சிக்கலே !!
ரைட்டு....புக் # 2 பக்கமா வண்டியை விடலாமே ? என்று எண்ணினால் - இடையே TEX சஸ்பென்ஸ் இதழும், கார்டூனின் சஸ்பென்ஸ் ஆல்பமும் கை தூக்கி நிற்பது புரிந்தது !! ஹை...ஜாலி...ஜாலி....என்றபடிக்கே அவற்றுள் குதித்தால் - "தம்பி... எதுவும் லேசில்லே.....மேல் வலிக்காம... வளைக்காம.... நோன்புக்கஞ்சிலாம் குடிச்சிட்டு போமுடியாது...!! ஸ்பெஷல் இதழ்னா சும்மாவா ? பெண்டு கழட்ட தான் செய்யும் !!" என்று எங்கோவொரு அசரீரி கேட்டது !! அதுதான் மூப்பின் குரலென்பதை ஒரு டஜன் ஜண்டுபாம் வாங்க அவசியப்பட்ட போது தான் புரிந்து கொள்ள முடிந்தது !!! "ரைட்டு...உப்..உப்... ரெண்டாது புக்கும் ரெடி !! விடாதே.... புடி.... ஆங்... அக்காங்.... மூணாவது புக்கும் ரெடி....உப்...உப்..உப்..!!" என்றபடிக்கே நாள்காட்டியைப் பார்த்தால் ஜூலை 15 என்றது !!!
'செத்தேண்டா சாமி !!" என்றபடிக்கே ஈரோட்டின் புக் # 4 பக்கமாய்க் கவனத்தைத் திருப்பினால் - "நித்தமொரு யுத்தம்" ஒரு நேர்கோட்டுக் கதையோடு விறைப்பாய் நிற்பது புலனானது ! இதுவுமே புது எழுத்தாளரின் கைவண்ணமே என்பதால் - இக்கட என்ன எதிர்பார்ப்பதென்று தெரிந்திருக்கவில்லை எனக்கு ! இரண்டே அத்தியாயங்கள் - and CINEBOOK புண்ணியத்தில் இரண்டுமே ஆங்கிலத்தில் வாசிக்க சாத்தியப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி எனக்கு ! And உளுந்தூர்பேட்டைக்குப் போக துபாய் வரையிலும் வண்டியை விடும் அவசியங்கள் இலா சுலபமான கதைக்களம் என்பது கூடுதலாய் குஷிப்படுத்தியது !! But பணிக்குள் புகுந்த போது no cakewalks தம்பி !! என்று புரிந்தது !! "பி.பி.வி." கதையின் பணிக்குத் தந்திருந்த அதே அளவு அவகாசம் இம்முறை "நி.ஓ.யு"கதைக்குத் தந்திட சாத்தியமாகவில்லை என்பதால் ஸ்கிரிப்ட் ஆங்காங்கே raw-வாக இருப்பது புரிந்தது ! இங்கும் மூச்சு விட நிறைய அவகாசம் ; இங்கும் சிறுகுடல்... பெருங்குடல் ஆய்வுகளுக்குப் பொறுமை என்று எனக்கு இயன்றிருப்பின், output நிச்சயம் இதைவிட உயர்தரத்தில் இருந்திருக்குமென்பது புரிந்தது !! ஆனால் நமக்குத் தான் காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு ஒயிலாட்டம் ஆடுவதில் செம இஷ்டமாச்சே !!! To cut a long story short - 'தம்' கட்டி இரு பாகங்களையும் இன்று காலையில் தான் முடித்து நம்மவர்களிடம் ஒப்படைத்தேன் - ஒரு ராட்சஸப் பெருமூச்சோடு !!!
அந்தப் பெருமூச்சின் காரணம் - இன்று காலையில் நான் நிறைவு செய்த ஈரோட்டின் ஸ்பெஷல் இதழ்களின் சுப மங்களத்தின் பொருட்டு மாத்திரமல்ல - effective ஆக நடப்பாண்டின் உச்ச இதழ்களின் 90 சதவிகிதத்தை நிறைவு செய்த நிம்மதியின் பொருட்டுமே !! Oh yes - இன்னமும் 600 + பக்கங்களில் "தீபாவளி மலர்" காத்துள்ளது தான் - but அதன் தடிமனான பணிகளெல்லாம் முக்கால்வாசி முடிந்திருக்கும் நிலையில் - அதன் பொருட்டு தூக்கத்தைத் தொலைக்க முகாந்திரமிராது என்பது உறுதி !! So ஜனவரியில் கரி அள்ளித் தட்டி, பாய்லரை பொருத்தி...எஞ்சினை சிறுகச் சிறுகச் சூடாக்கி....koooo....kooo என்றபடிக்கே கிளம்பிய எஞ்சினுக்கு இனி ஈரோட்டில் உங்களை சந்தித்த கையோடு - அடுத்த ஒரு மாசத்துக்காவது மல்லாக்கப் படுத்து விட்டத்தை முறைக்கும் அதிமுக்கிய பணியே காத்துள்ளது !! 2020-ன் அட்டவணையும் almost ready ; சிகப்புச் சட்டைக்காரர் Trent-ன் நடப்பாண்டு performance-ஐப் பார்த்து அவரது ஸ்லாட்டைத் தீர்மானிப்பதே எஞ்சியிருக்கும் வேலை என்பதால் - அந்த ஜண்டு பாமை ஒரு குண்டாவுக்குள் பிதுக்கிய கையோடு அதற்குள் நானும் குதித்து விடலாம் என்றிருக்கிறேன் !! ஆத்தாடியோவ்....திரும்பின பக்கம்லாம் வலிக்குதுடோய் !!
Before I sign out - here you go !! ஆகஸ்டில் வரக்காத்துள்ள ஜானியின் வண்ண மறுபதிப்பு !! இத்தனை ஆண்டுகளாகியும், இதன் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன் நம்மிடம் பத்திரமாயிருக்க - அதனையே முன்னட்டைக்கு உபயோகப்படுத்தியுள்ளோம் !! பாருங்களேன் - இன்னமும் மிளிரும் அந்த வர்ணங்களின் வீரியத்தை !!
And உட்பக்கங்களுமே கலரில் சும்மா ஜெகஜோதியாய் மின்னுகின்றன !! எனக்கு சுத்தமாய் மறந்து போயிருந்தது இதன் கதைக்களம் ! உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கக்கூடுமோ - அவர்களுக்கெல்லாம் நண்பர் 'ஜெ' கிட்டே சொல்லி extra tough ஆக ஈரோட்டுக்கோசரம் கொஸ்டின் பேப்பர் தயார் செய்யச் சொல்ல ஆசை !!
அப்புறம் கோவையில் நேற்றுத் துவங்கிய புத்தக விழாவினில் நமக்கு அழகான துவக்கம் என்பதை உங்களிடம் பகிர்ந்திட ஆசை ! நெய்வேலியில் நம் விற்பனை நிலவரம் அத்தனை சுகமில்லை என்ற சூழலில் - கோவை ஆரம்பமே செம !! இதே பாங்கு தொடர்ந்திட மனிடோ அருள் புரிந்தால் தலை தப்பிடும் !!!! Folks ..please do drop in !!!
And இதோ - ஈரோட்டில் புக் பெற்றுக் கொள்ளப் பதிவு செய்துள்ளோரின் பட்டியல் - 2 நாட்களுக்கு முன்பு வரையிலும் ! கொஞ்சம் சரி பார்த்துச் சொல்லுங்களேன் ப்ளீஸ் guys ?
 
| 
ES2 | 
MR.S.BALASUBRAMANIAN 
BANGALORE-560066CELL
   NO:099005-15000 | 
ES4 | 
MR.V.KUMAR
               
SALEM-636008CELL
   NO:94431-44007 | 
| 
ES7 | 
DR.BALA
   SUBRAMANIYANSIVAKASI | 
ES8 | 
MR.SENTHIL
   KUMAR.R                
    
TRICHY-620001 
CELL
   NO:88074-51299 | 
| 
ES12 
540 | 
MR.
   MITHUN CHAKRAVARTHI 
ERODECELL:
   99408 61655 | 
ES16 | 
MR.
   CHEZHIAN BABU.S           
    
CHENNAI-600094 
CELL:94449-53552 | 
| 
ES21 | 
MR.
   ARUN KUMAR 
STATE
   BANK OF INDIA 
KARUR 
CELL:
    99764-12543 | 
ES22 | 
MR.SHANMUGAM 
THIRUCHENGODE-637211 
CELL
   NO:98427-45531    
    | 
| 
ES32 | 
MR.
   G.
   SAKTHIVEL, 
ERODE
   - 638 002. 
CELL
   : 95784-02580 
          
   95247 33700 | 
ES47 | 
MR.
   S.VENKATESWARAN                 
    
LIG
   51,13TH CROSS STREET,  
CHENNAI-
   600037CELL:9444479845 | 
| 
ES49 | 
MR.
   THIRUMAVALAVAN                
    
DTDC
   THIRUPPUVANAI BRANCH 
PONDICHERRY-605102CELL:9159819018 | 
ES50 | 
MR.
   P.K.SELVAKUMARAN                   
    
4/64A
   PALAKKARAI POST 
ERODE-638057 
CELL:9442639225 | 
| 
ES66 | 
BOOPATHI
   M 
    
LDC-9,MMC
   QUARTERS 
    
METTUR
   636401 
   CELL:
   8056287782 | 
ES73 | 
MR.
   KARTHIGAI PANDIAN  
    
KOVAIPUDUR, 
COIMBATORE
   - 641042 
CELL:9842171138 | 
| 
ES75 | 
MR.
   SELVAKUMARAN 
    
                                AMBIKAPATHY 
CHENNAI
   603 103CELL:
    9941872856 | 
ES76 | 
MR.ANBAZHAGAN.R
              
GOBICHETTIPALAYAM-638452CELL
   NO:94423-51413 | 
| 
ES80 
540 | 
MR.
   N.KUMAR,                                     
    
TIRUPPUR
   - 641602CELL;
   9655555556 | 
ES98 | 
MR.
   SENTHIL MADHESH   
    
COIMBATORE-641016CELL:99944
   96369 | 
| 
ES99 | 
MR.
   S.MANASA & YAZHINI              
    
TIRUPUR-641652 
CELL:80155-09994
   / 
   80155-09995 | 
ES102 | 
MR.
   P.PRAKASH                               
    
LINGARAJAPURAM 
BANGALORE 
CELL:9994394453
      
    | 
| 
ES103 | 
MR.A.RAJA
   SEKAR              
    
THANTHONIMALAI 
KARUR-639005CELL:9597876650 | 
ES114 | 
MR.
   RAMESH.R                                   
    
STATION
   MASTER 
DHARMAPURI-TK 
CELL:98941-25858 | 
| 
ES124 
540 | 
AUDITOR
   K.RAJA 
PALLIPALAYAM
   - 6380069976541077 | 
ES143 | 
MR.
   SARAVANA KUMAR RANGASAMY                       
    
PALLADAM-641664CELL:8344440600 | 
| 
ES151 | 
MR.GIRIDHARA
   SUDHARSHAN.T        
    
CHENNAI
   603103CELL:9840735410 | 
ES163 | 
MR.G.JAGADEESWARAN
                    
ARANTHANGI-614616 
CELL:9443259244 | 
| 
ES177 | 
MR.
   M.RAVI KANNAN           
    
SALEM-636451CELL:9626528528/9787222717 | 
ES178 | 
MR.
   D.RAVI                     
    
SALEM-636201 
CELL:9042006180 | 
| 
ES179 | HASSAN MOUGAMED | 
ES180 | 
MR.
   K.BHARANITHARAN        
    
SALEM-636502 
CELL:9942759238 | 
| 
ES181 | 
MR.
   P.VIJAY SEKAR                        
    
SALEM-636007CELL:9442225050 | 
ES182 | 
MS.SAHANA
   MAHENDRAN 
    
TIRUPPUR-641606 
CELL:8680863777 | 
| 
ES183 | 
MR.
   P.MAHENDRAN                     
    
COIMBATORE-641009CELL:9600836224 | 
ES184 | 
MR.
   P.MAHENDRAN                     
    
COIMBATORE-641009CELL:9600836224 | 
| 
ES185 | 
MR.
   S.KIRUBAKARAN           
    
(YUVA
   KANNAN) 
SALEM-636007 
CELL:9942677088 | 
ES186 | 
MR.
   NAGARAJAN SANTHAN 
    
TIRUPUR-641602CELL:9994773647 | 
| 
ES187 | 
MR.
   P.SARAVANAN                
    
 | 
ES188 | 
MR.
   A.SHALLUM FERNANDAS 
KANIYAKUMARI-629166 
CELL:9787402305 | 
| 
ES189 | 
MR.
   L.SUSEENDRA KUMAR  
    
SALEM-636007CELL:7358116652 | 
ES190 | 
MS.NIKETHA
   SHALINI     
    
TIRUPPUR-641606 
CELL:8680863777 | 
| 
ES191 | 
T.
   PRABAKAR 
SALEM 
CELL:8680863777 | 
ES192 | 
MR.
   T.JAYAKUMAR             
    
SALEM-636451CELL:9865111125 | 
| 
ES193 | 
Dr.
   SHANMUGA SUNDARAM. MDS 
SALEM-636501CELL:9865370153 | 
ES194 | 
MR.
   C.RAJA(POSTAL)             
    
MAYILADUTHURAI
   VIA-609309 
CELL:9443683832 | 
| 
ES195 | 
MR.
   P.RAMESH                   
    
TIRUPUR-641604CELL:7871922299 | 
ES196 | 
MR.
   V.SOMA SUNDARAM                  
    
ERODE
   – 638 006 
CELL:
   97912 62661 | 
| 
ES197 | 
BHARATHI
   NANDHISWARANERODE | 
ES198 | 
MR.
   C.BASKARAN                        DTDC 
SRI
   SHIVA SAKTHI ROADLINES, 
BANGALORE-560022 
CELL:09448043406 | 
| 
ES200 | 
Mr.
   PRABHU
   PALANIAPPAN 
COIMBATORE
   - 6410069900262905 | 
ES206 | 
MR.R.SARAVANAN
                            STC 
BLOCK
   RESOURCE TEACHERS 
    
                                  EDUCATOR 
ERODE
   DT-638051 
CELL-9788207335 | 
| 
ES207 | 
MR.R.SARAVANAN
                            
BLOCK
   RESOURCE TEACHERS 
    
                            EDUCATOR 
ERODE
   DT-638051CELL-9788207335 | 
ES209 | 
Mr.
   P.GOVINDARAJ 
KRUNGALPALAYAM 
ERODE
   638003 
9965705372 | 
| 
ES219 | 
MR.
   THIRUNAVUKKARASU R 
VALLUKKUPARAI 
COIMBATORECELL:
   9566524783 | 
ES228 | R.
   VEERA PANDIAN BALA CONSULTANTS 627002 PALAYAMKOTTAI 9025592679 | 
| 
ES116 | 
MR.
   K.SUBRAMANIAN                     
    
DHARMAPURI-636305 
CELL:
    94870376117200394456 | 
ES239 | 
Mr.
   S.DAKSHINA MURTHY          
    
30
   THIRUMANJANA VEETHY, 
THIRUVARUR-610002, 
CELL:
   94862-84360 | 
| 
ES240 | 
Mr.
   GOKUL. C | 
ES243 | 
Mr.
   P.KARTHIKEYAN, 
PLOT
   NO: 1, 
THIRIVENI
   NAGAR EXTN., 
V.MANAVELI, 
VILLIANUR
   COMMUNE, 
PONDICHERRY
   – 605 110CELL
   NO: 9994480031 | 
| 
ES244 | 
Mr.
   PRASANTH KARTHICK 
NO:
   8 , MADHA KOVIL STREET, 
MANNARGUDI
   – 614001CELL
   NO: 7845542833 | 
ES245 | 
 R.
   RAMYAASHRE, 
INTERNATION
   EVALUTION PVT. LTD., 
MODULE
   NO: 002/2, 
GROUND
   FLOOR, 
TIDELAND
   PARK LTD., 
    
ELCOSEZ,
   
COIMBATORE
   – 641 014CELL
   NO: 9489988445 | 
| 
ES246 | 
Mr.M.JEYARAMAN 
1/83,
   NAVITHAN KADU, 
PERANTHAGAMPO, 
VELAGOUNDANPATTI
   VIA, 
PARAMATHI
   VELUR TK, 
NAMAKKAL
   DISTRICT – 637 212CELL
   NO: 9600813880 | ||
Bye all...see you around !! Have a cool weekend !! 
P.S : Faceapp சேலஞ் போல - ஒரு Facequiz சேலஞ் என்று ஜாலியாய் வைத்துக் கொள்வோமே....? பதிவின் ஆரம்பத்தில் நான் எழுதியுள்ள "மூப்பின் 10 கட்டளைகளுள்" கடாசி ஐட்டம் நீங்கலாய் - பாக்கி ஒன்பதில்  எத்தனை ஆளாளுக்குப் பொருந்துதென்று பார்த்துச் சொல்லலாமே ? நிங்களுக்கும் பகலில் பசு மாடு மொச மொசன்னு தெரியுதா ? - மைனஸ் 1 பாய்ண்ட் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! மொத்தமாய் மைனஸ் எத்தனை உங்கள் ஸ்கோர் ? என்று கணக்கிட்டுப் பார்த்துச் சொல்றியளா அண்ணாச்சிஸ் ?

Hai
ReplyDeleteOh God fractions of seconds LA 2nd
ReplyDeleteஹைய்யா பதிவு வந்தாச்சி.
ReplyDeleteGood new.
ReplyDeleteFinally released...நன்றி
ReplyDelete// மொத்தமாய் மைனஸ் எத்தனை உங்கள் ஸ்கோர் ? //
ReplyDeleteஇது என்ன அய்யா புது விளையாட்டு....????
T.Parthipan(Jagadeeswaran), ARANTANGI. 9443259244. Booking No. ES 163.
ReplyDeletePresent sir
ReplyDeleteஆத்தாடி
ReplyDeleteஎம்மாம் பெரிய பதிவு 🙏🏼
.
பராகுடா:
ReplyDeleteஇந்த வாரம்தான் படிக்க முடிந்தது,எனக்கு பிடித்த ஹாலிவுட் படங்களின் வரிசையில் ஜானி டெப் நடித்த பைரேட்ஸ் ஆப் கரிபியனுக்கும் ஓரிடம் உண்டு,அந்தவகையில் பராகுடா மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
காக்டெயில் வகை என்று சொல்வோமே அதுபோல் எல்லாம் கலந்த களமிது,அற்புதமான கடற்சாகசப் பயணம் மேற்கொண்ட உணர்வு கிட்டியது,ஒரு கதையைப் படிக்கிறோம் என்ற உணர்வே எழவில்லை.
ஆறுபாகங்களும் எந்த இடத்திலும் சோடை போகாமல்,சுணக்கம் இல்லாமல் பயணித்தது,கதையின் வடிவமைப்பு அபாரம்,ப்யூர்டோ ப்ளாங்கோவிலேயே வசித்ததான உணர்வு,அடுத்து என்ன,அடுத்து என்னவென்று சுவாராஸ்யங்கள்,திருப்புமுனைகள் அடுக்கடுக்காய் போவது ஆச்சர்யம். களத்தின் போக்கில் நாம் செல்ல,செல்ல ஒவ்வொரு மாந்தர்களும் நல்லவர்களாகவும்,கெட்டவர்களாகவும் மாறிக் கொண்டே இருப்பதான ஓர் உணர்வு,எந்த வரையறைக்குள்ளும் அடங்காப் புதிய களமிது,பொதுவில் உலகில் சட்டதிட்டகளுக்கு உட்பட்டு பெரும்பாலான மனிதர்கள் இயங்குவதன் அடிப்படையில் ப்யூர்டோ ப்ளாங்கோ மாந்தர்கள் போல இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் எண்ணிப் பார்த்தாலே கதிகலங்குகிறது...
என்ன மாதிரியான ஓவிய பாணிகள் இவை,ஒவ்வொரு பிரேமும் செதுக்கி எடுத்தாற்போல் இருக்கிறதே...
இவ்வாண்டின் (2019) சிறந்த இதழில் முதலிடத்தை பராகுடா பெற்றால் அதில் வியப்பேதுமில்லை....
பராகுடா ஒரு வித்தியாசமான களம்,நீண்ட நாட்கள் நினைவில் நீடிக்கும்.
ஆசம்,ஆசம்,அருமை,அட்டகாசம்.....
எமது மதிப்பெண்கள்-10/10.
நல்ல விமர்சனம் ரவி. அட்டகாசம்.
Deleteஹை....லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாய் வர்றீங்களே சார் ?
Deleteவாவ்! என்ன ஒரு நகைச்சுவை உணர்வு மிளிரும் பதிவு!!!
ReplyDeleteஅப்பறம் அதை ஏன் மைனஸ் -னு சொல்வானேன்?
Steps towards wisdom னு பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ் -ஆ கேளுங்க!!
அப்பத்தான் பதில் வரும்னு நினைக்கிறேன்..
எனக்கு +9..:-)
இப்படிக் கேட்டாலும் வேற மாதிரி workout ஆகும் செனா அனா. காட்டிக்குடுக்கும் படலத்தை கீழே ஆரம்பிச்சு வைச்சிருக்கேன் பாருங்க. 🤣🤣🤣🤣
Deleteசும்மா, ஜாலியாய், பணிச்சுமைகள் நீங்கிய உற்சாகத்தின் வெளிப்பாடானதொரு பதிவு சார்....அவ்வளவே !!
Deleteஎன் பெயர் வரவில்லையே சார் ??!!
ReplyDeleteபோன வார பதிவிலியே தகவல் தெரிவித்திருந்தேன் சார்...
Vanthirukke brother
Deleteநண்பரே....போன பதிவிலும் விபரம் கேட்டிருந்தேன் - கவனிக்கவில்லையா ?
Deleteமன்னிக்கவும் ஆசிரியரே 🙏🙏
Deleteமுதல் முறை பார்க்கும் பொழுது என் பெயர் இல்லாத மாதிரி இருந்தது..
உத்தம புத்திரன்/பாரிசில் மாட்டுக்காரன்
ReplyDeleteவவுத்து வலி மாத்திரை வைச்சு அனுப்ப வேண்டிய புக்குக்கு அதுக்கு பதிலா சாக்லெட் வைச்சி அனுப்பினதால ஆசிரியருக்கு பொறுப்பே இல்லன்னு மனா பனா (மக்குப் பண்டாரம் அல்ல) தெரிவிச்சிக்கிறான்
கதை, ஓவியம், வசனம்னு எல்லாமே சிரிக்க வைச்சதுன்னு சொல்லிக்கிறான். கதைல வர செவ்விந்தியர் பேரு கூட வேற வாய் கிழிய சிரிக்க வைச்சதுன்னு மனா பனா சொல்லிக்கிறான்.
தொப்பை குலுங்க குலுங்க சிரிச்சதால பட்டன் பிஞ்சு போச்சுன்னும் மனா பனா சொல்லிக்கறான். அதனால பழய டீசர்ட் போட்டுட்டு படிக்கச் சொல்றான்.
உத்தம புத்திரன்ல பக்கம் 27 லிருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் பொது இடத்தில் படிக்க வேண்டாம்னு மனா பனா ஸ்ட்ரிக்டா சொல்லிக்கறான். அப்படி படிச்சு, பொறவு சிரிச்சு மென்டல் ஆசுபத்திரி வண்டி வந்து பிடிச்சிட்டு போனா சிவகாசி கம்பேனி பொறுப்பேத்துக்காதுன்னும் சொல்லிக்கறான்.
அதும் வீட்டம்மா முன்னாடி படிச்சு கார்ட்டூன் படிச்சா சிரிச்சு ஜாலியா இருக்கலாம்னு காட்டிக்க வேணாம்னு மன பனா கறாரா சொல்லிக்கறான். அப்படி மாட்டிக்கிட்டா சாக்லேட் குடுத்து தப்பிச்சிக்குங்கன்னும் சொல்லிக்கறான்.
ஷெரீப் ஹி,ஹி...செம,செம....
Deleteஉண்மையிலேயே செம்ம. நாம் உணர்ச்சிகளை வார்த்தையில் வெளிப்படுத்துவது மிக சிரமம். ஆனால் நீங்கள் சொல்வது மிக சரியாக இருக்கிறது நானே அனுபவிப்பது போல. அட்டகாசம் ,🤣
Deleteவார்த்தையில் வெளிப்படுத்துவது மிக சிரமம்.//
Deleteஇந்த விமர்சனத்தைக் கதையே எழுதிகிச்சிங்க குமார். ஆக்சுவலா புத்தக மேக்கிங், அட்டைப்படம் எல்லாமே அருமையா இருந்துச்சு. அதையெல்லாம் சிலாகிக்க விடாம கதை எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடிச்சு. ரெண்டு கதையையும் முடிச்சிட்டு இருந்த குஷில வேற எதையும் கைல எடுக்கத் தோணலை. அந்த சந்தோச உணர்வு போயிடுமோங்கற பயத்துல.
உண்மை தான் நீங்கள் சொல்வது. வெகு நாட்களுக்கு பிறகு இந்த கதையை படிக்கும் போது மிக நிறைவாக இருந்தது
Deleteமென்டல் ஆசுபத்திரி வண்டி வந்து பிடிச்சிட்டு போனா சிவகாசி கம்பேனி பொறுப்பேத்துக்காதுன்னும் சொல்லிக்கறான்\\\
Deleteசெம..
'உனா.புனா' கதையிலே செவ்விந்தியப் பெருந்தலைங்க ஒண்ணு கூடி மீட்டிங் போட்டு மொக்கை போடற சீனிலே இந்த ஆனா.வினா க்கு நம்மூர் கலக..சாரி..சாரி..கழகப் பொதுக்குழுக்கள் நினைவுக்கு வர்றான் ! ஆளுக்கொரு அடைமொழியோட இங்கே நம்ம அண்ணாச்சீஸ் அசால்ட்டா சுத்தி வர்றதும் நினைவுக்கு வர்றான் ! அதே பாணியை நம்ம செவ்விந்தியப் பார்டீஸுக்கு தந்தாக்கா எப்டி கீறும்னும் யோசிக்றான் ! அதன் பலன் தான் 'உனா.புனா' கதையின் சினா.மேனா !
Delete// ஆகஸ்டில் வரக்காத்துள்ள ஜானியின் வண்ண மறுபதிப்பு //
ReplyDeleteஆஹா,ஆஹா அட்டைப்படமும் அருமை,உட்பக்க முன்னோட்டமும் அருமை...கண்ணைப் பறிக்கும் வண்ணங்களுடன்.....மிக,மிக ஆவலுடன்.....
ஆங்....அந்த வோட்டு போடறச்சே ஆளுக்கு 26 குத்து குத்தினதிலே நீங்களும் சேர்த்தியோ சார் ?
Deleteஹி,ஹி,ஹி.....சார்...பப்ளிக்...பப்ளிக்...
Deleteஅதுல இந்த கணக்கு எல்லாம் வந்துச்சா..
Deleteஇரண்டு புத்தகங்களுக்கு பணம் அனுப்பியுள்ளேன். அதன் நகலும் தெரிவித்துள்ளேன். ஆனால் ஒரு புக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வரன் மற்றும் பார்த்திபன்(ஜெகதீஸ்வரன்) என இரண்டு புக் எனக்கு ஈரோட்டில் வேண்டும். கண்டிப்பாக வேண்டும். மெயிலும் அனுப்பியுள்ளேன். ஆனால் உங்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. ப்ளாக்கில் ஒன்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் அனுப்பிய விபரம் வாட்ஸ் அப்பில் அனுப்பி போனிலும் உறுதிபடுத்திக் கொண்டேன்
ReplyDeleteகொண்டு வந்திடுவோம் சார் ; கவலை வேண்டாம் !
Deleteஇன்னிக்கு காலைல ஆண்டுமலர் படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சா மாலை பதிவை படிச்சு சிரிச்சு முடியலை. என்ன வயசானாலும் நகைச்சுவை எழுத்து மட்டும் குறையாம அதிகமாயிட்டுத்தான் இருக்கு.
ReplyDelete1 டூ 10 ஏதும் எனக்கு பொருந்தவில்லை என்றாலும் என் நண்பர்கள் அனைவரும் இதில் ஏதோ ஒன்றில் பொருந்தி வருவதுதான் கொஞ்சம் டெர்ரராக இருக்கிறது. அதுவும் குறிப்பாக அந்த 8 ஆம் நம்பர் ஐட்டம். புத்தக விழா தேதி அறிவித்ததிலிருந்தே அங்கே பெருமளவு ஹேர் டை பதுக்கப்படுவதாக்க் கேள்வி.
ஹிஹ்ஹி
ReplyDeleteஅது வந்து.....
Deleteஅதாகப்பட்டது...
வந்துங்க...
மைனஸ் 9 ங்க....
செ அ மாதிரி +9ன்னும் சொல்லிக்க வேண்டியது தான்....
பி.கு: நான் ஹேர் டை உபயோகிப்பதில்லை.
நானும் உபயோகிப்பது இல்லை
DeleteFor the perusal of hair dye one must have hair!!! ;-)
Delete// மாலை பதிவை படிச்சு சிரிச்சு முடியலை. என்ன வயசானாலும் நகைச்சுவை எழுத்து மட்டும் குறையாம அதிகமாயிட்டுத்தான் இருக்கு. // இந்த நகைச்சுவை நடை அனைவருக்கும் கை கூடுவது இல்லை.
Delete//நானும் உபயோகிப்பது இல்லை//
Delete//For the perusal of hair dye one must have hair!!! //
Yes...yes...yes..!!
புது மொழிபெயர்ப்பாளரின் சிறுகுடல் ; பெருங்குடல் ; மத்திம குடல் ; முக்கிலேயுள்ள குடல் - என்று சகலத்தையும் உருவி, அலசிப் பார்க்க //
ReplyDeleteஇதைப்படிக்கும் போது ப்ரேவ் ஹார்ட் படத்தோட க்ளைமாக்ஸ்ல அந்த க்ளவுன் குடலை உருவுவதை demo செய்யும் காட்சி நினைவுக்கு வர சிரிச்சி சிரிச்சி புரையேறிடுச்சு.
என்னமோ தெரியல சார் 10 எனக்கு ஒத்துபோறமாதிரி தெறியுதே....
ReplyDeleteதலைமுறை எதிரியில் கொலையாளி பயன்படுத்தும் அந்த வில்-அம்பு செட்டப்பை பார்த்து மெய்மறந்து, அட்டைப் பெட்டி, எலாஸ்டிக்லாம் வச்சு கிட்டத்தட்ட அதே மாதிரி டம்மி செட்டப்லாம் செஞ்சு விளையாடியிருக்கோம். அந்த நாளிலேயே நாங்க அப்டி சார்! மறக்கவே முடியாத கதைக்களங்கள் - இது விண்வெளிப் படையெடுப்பு, ஊடு சூன்யம்லாம்!
ReplyDeleteஅருமை பொடியன் ஐயா
Deleteஎடிட்டர் சார், முன்பதிவு பட்டியலில் முழு முகவரியும் இருக்கிறது. ஃபோன் நம்பர் உட்பட. பெயர் மட்டும் போதுமே. உடனே மாற்றுங்கள். ப்ளீஸ்...
ReplyDeleteகார்த்திகேயன் @ கவலை வேண்டாம் பாண்டி பக்கம் நான் தற்சமயம் வருவதாக இல்லை:-)
Deleteமுதலில் நமது எடிட்டர் ஐயா விற்கு நன்றி சொல்லி கொள்கிறேன். முதலில் விளம்பர படுத்திய போது ஒன்றா இரண்டா அல்லது மூன்றா என்று கேட்டார். இப்போது நான்கு இதழ்களை அறிவித்து இருக்கிறார். ஒவொரு முறையும் எனது எதிர்பார்ப்பை விட அதிகமாகவே கொடுக்கிறார்.
ReplyDeleteபட்டியலில் எனது பெயர் உள்ளது. நன்றி. 4 ஸ்பெஷல் இதழ்கள் மற்றும் இன்றி 2 ரெகுலர் இதழ்களும் ஒரு மினி டெக்ஸ் உடன். இதற்கான உழைப்பினை எண்ணி பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.
ReplyDelete// 4 ஸ்பெஷல் இதழ்கள் மற்றும் இன்றி 2 ரெகுலர் இதழ்களும் ஒரு மினி டெக்ஸ் உடன். இதற்கான உழைப்பினை எண்ணி பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. //
Delete+1
அதுவும் ஒரு சிறிய டீம் வைத்துக்கொண்டு மிகச்சிறந்த தரத்தில் மாதம் தவறாமல். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி விஜயன் சார் & டீமிற்கு.
நீங்கள் நகைச்சுவையுடன் சொன்னாலும் அந்த age factor ஐ நான் ஏற்று கொள்கிறேன். சில விசயங்கள் இப்போது கடினமாக தான் இருக்கிறது.
ReplyDeleteஇயற்கையின் நியதி சார் !
Delete///மூப்பின் 10 கட்டளைகளுள்" கடாசி ஐட்டம் நீங்கலாய் - பாக்கி ஒன்பதில் எத்தனை ஆளாளுக்குப் பொருந்துதென்று பார்த்துச் சொல்லலாமே ///
ReplyDeleteஎன்ன ஒரு ஆச்சரியம்..
எனக்கு ஒண்ணுகூட பொருந்தலையே..!!:-)
அப்ப நீங்க பெருந்தலையே....
Deleteஅதாம்பா......தா_____தா....
கோடு போட்டு வாழ்ற தாதா ன்னு சொல்றிங்க.. அப்படித்தாதானே J ஜி.?
Deleteஏன் கண்ணன் பொய் சொல்லுறிங்க மாச மாசம்
Deleteஹேர்டை க்கே 5000 ஆகுதாமே
எனக்கு ஒண்ணுகூட பொருந்தலையே..!!:-)/
Deleteபொய் உருண்டை...புளுகு மூட்டை!
இங்க எட்டாவதா குறிப்பிட்ட சமாச்சாரம் மட்டுந்தே பயந்து வருது.
ReplyDeleteபித்த நரைய பாத்து நிறைய பேரு குழப்பமாவது உண்டு.
மத்த சமாச்சாரம் எல்லாம் எந்தவித அறிகுறியும் தெரியில.
இருந்தாலும் போன வாரம் அஞ்சாவது படிக்கிற பையன்"ஹாய் அங்கிள் .....என்ன உங்களை பாக்கவே முடியல...."னு கேட்டான்.
ஓங்கி நடு பண்டைத் கொட்டனும்னு அப்படி ஒரு கோபம்.
அந்த விசப்பூச்சி என்னைய கலங்கடிக்க திட்டமிட்டு தான் இப்படி பேசியிருப்பான்னு மனம் தேத்திக்கிட்ட.
ஆனா அவன் ரொம்ப சின்ன பையன் சூதுவாது அறியாத வயது.
அவன இப்படி பேச தூண்டிவிட்டது யாரா இருக்கும்னு வெவரமா விசாரிக்க வேண்டும். இந்த பொண்ணுங்களே இப்படித்தா எசமான்.
பித்த நரையோ - மொத்த நரையோ - கரிச்சட்டிக்குள்ளாற தலையை முக்கி எடுத்தாக்கா முடிஞ்சது தொல்லை !! யாருகிட்ட..?
Delete///உட்பக்கங்களுமே கலரில் சும்மா ஜெகஜோதியாய் மின்னுகின்றன !!///
ReplyDeleteநாங்களும் பலநூறு வருசமா கேட்டுக்கிட்டேதான் சார் இருக்கோம்.!
திகிலில் வெளியான ரிப்போர்ட்டர் ஜானியோட கதைகளை முழுவண்ணத்தில் தரிசிக்க முச்சைப் பிடிச்சிக்கிட்டுத் தவமாய் தவமிருக்கிறோம்னு..
அந்த ரத்தக் காட்டேரி மர்மம் இருக்கே..அடாஅடா..
நீங்கதான் மனசே இறங்குறதில்லை சார்.!
அந்த பெர்னார்டு பிரின்செல்லாம் வருசந்தவறாம வந்திடுறாப்ல..!:-)
பிரின்ஸ் vs ஜானி மறுபதிப்புக்கு இன்னாமா ஜனநாயக முறையிலே நம்மாட்கள் வோட்டு போட்டாங்கன்னு உலகுக்கே தெரியுமே ! அதைப் பார்த்த நொடியே வோட்டு போடற சிஸ்டத்தையே கடாசிப்புட்டாங்க blogger!!
Deleteஹீஹீஹீ
Deleteஅந்த பிரின்ஸ் குரூப்புதான் சார் கள்ளவோட்டு போட்டாங்க.. நாங்க நல்லவோட்டு மட்டும்தான் போட்டோம் ..!
Delete(யாராவது சிரிச்சிங்க... அம்புட்டுதேன்.):-)
அடுத்த வருடம் 2020 அட்டவணையில் ரிப்போட்டர் ஜானி ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட்டு அதிகம் வேண்டாம் இரண்டே இரண்டு கதைகள் பழைய திகிலில் இருந்து வெளியிட்டு வாசகர் சமூகத்தை மனம்குளிர செய்யுமாறு ஆசிரியரை அன்புடனும்,கனிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.....🙏🙏🙏🙏🙏🙏
Delete// யாராவது சிரிச்சிங்க... அம்புட்டுதேன்.):-) //
Deleteநான் மனசுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டேன்பா.....
யாராவது சிரிச்சிங்க... அம்புட்டுதேன்.):-)/////
Deleteநீங்கள் எவ்வளவு தான் சிரிப்பு மூட்டினாலும் சிரிக்க மாட்டேன்.
44th
ReplyDeleteஸ்கோர் ஆறுங்கோ..செம்ம சிரிப்புங்கோ.. ட்ரான்ஸ்லேஷன் திணறல்கள் சரியான நகைச்சுவைங்கோ...ஈரோட்டு புக்கு பார்டிங்கோ நல்லா பார்த்துக்கோங்கோ.. போய் செம்ம கலக்கு கலக்குங்கோ..
ReplyDelete49வது
ReplyDeleteஅந்த பத்து பொருத்தமும் நம்மட்ட ஒரு பத்தடி தள்ளியே நிக்குதுன்னா பாருங்களேன்.
ReplyDeleteபெரியவங்க எல்லாம் ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்காங்க நம்மள மாதிரி சின்ன பசங்க எல்லாம் ஒதுங்கி ஒரு ஓரமா கோலி குண்டு. கிட்டிப்புள் விளையாடலாம். யாரெல்லாம் வர்றீ ங்க.ம்.. ( எடிட்டேராட சேர்ந்து பயபுள்ள அத்தனையும் இல்ல வரிசைல நிக்குது.)
Deleteஎடிட்டேராட சேர்ந்து பயபுள்ள அத்தனையும் இல்ல வரிசைல நிக்குது.//
Deleteஅந்த வரிசையிலே நானில்லைங்க ஜி. என்னது மூக்குக்கண்ணாடி இல்லாததால சரியாத் தெரியலையா? நான் அக்கட்டால போய் புது வரிசை ஆரம்பிச்சிக்கறேன்.
என்னோடது ஒரிஜினல் கைப்புள்ள லைன்.
Deleteஅரைச் சதம். 50வது பதிவு.கடமை உணர்வுமிக்க ஆசிரியருக்கு வணக்கம் 🙏. ஆசிரியருக்கு எத்தனைப் பணிகள்.நினைக்கும் போதே தலைச்சுற்றுகிறது.இந்த ஆண்டு திட்டமிட்டது போல் இம்மாதம் வரை தடையின்றி வெளியிட்டு எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த, கோடானுகோடி நன்றி...ஆகஸ்ட் மாத இதழ்கள் மற்றும் ஈரோடு சிறப்பு இதழ்கள் பணி நிறைவு எனும் பதிவு ஆவலைத் தூண்டுகிறது. தல டெக்ஸ் புத்தகத்தை காட்டியிருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன்.ஆகஸ்ட் வரை தொடர்ந்து
ReplyDeleteடீசர்,டிரெய்லர்,சிங்கிள் டிராக் பதிவுகளை வெளியிடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி வணக்கம் 🙏.
//தல டெக்ஸ் புத்தகத்தை காட்டியிருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன்//
Deleteகாட்டாமல் எங்கு போகப்போகிறேன் சார் ? ஆகஸ்ட் 3 !!
அருமையான சிரிப்பு பதிவு.
ReplyDeleteநீரில்லை நிலமில்லை இந்த வாரம் எப்படியாவது படித்து முடித்து விட வேண்டும் என்று இரண்டு நாட்கள் முயற்சி செய்தேன் 10 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.. வரும் வாரத்தில் படிக்க வேண்டும்.
இதுவரை படித்த 35 பக்கங்களில் அழுத்தமான & மனதை கட்டிப்போடும் விஷயங்கள் எதுவும் இல்லை என்பதனால் இந்த கதையை படிக்க பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை என நினைக்கிறேன்.
10 பக்கங்களா ? 35 பக்கங்களா ? எவ்வளவு படித்திருக்கிறீர்கள் சார் ?
DeleteNote : இது போன்ற whodunit கதைகளை ஒரே மூச்சில் படித்தாலொழிய சுத்தமாய் ரசிக்காது !!
கடந்த வாரம் 25 பக்கங்கள் இந்த வாரம் 10 பக்கங்கள், தொடர்ந்து ஒரே மூச்சில் படிக்க முடியாத காரணம்
Delete// அழுத்தமான & மனதை கட்டிப்போடும் விஷயங்கள் எதுவும் இல்லை என்பதனால் இந்த கதையை படிக்க பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை என நினைக்கிறேன். //
அதே போல் பேசுகிறார் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். யார் தாமஸ் யார் அலெக்ஸ் என தெரியவில்லை, திடிரென பார்த்தால் இருவரின் முகமும் ஒன்று போல் எனக்கு தெரிகிறது. :-(
பரணி@. இந்த டெக்னிக் பாலோ பண்ணிப் பாருங்க. உபயோகமா இருக்கும்
Delete1. அலெக்ஸ்தங்க முடி. நேர்வகிடு. இது பெண்ணோங்கற குழப்பம் எனக்கு ஒரு ப்ரேமில் ஏற்பட்டது. காரணம் அவள்னு குறிப்பிட்டிருப்பதால். இவன் ஒரு கோழை. உண்மை பேச மாட்டான். இதை ஒரு ப்ரேமில் நடந்ததை அடுத்த ப்ரேமில் மாற்றி சொல்வான். அதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்
2. தாமஸ்- தங்க முடி. தான் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள எல்லாம் தெரிந்தது போல் பொய் செல்வான். கிரெடிட்டும் எடுத்துக் கொள்வான். இதையும் கதைப்போக்கில் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹெலனா- கறுப்பு முடி. க்ராப் வெட்டி இருப்பாள்.
ஈவா- நீளமான கறுப்பு முடி.
ஜூலி- நீளமான தங்க முடி.
திடிரென பார்த்தால் இருவரின் முகமும் ஒன்று போல் எனக்கு தெரிகிறது.//
Deleteகவலைப்படாதீங்க. இது தான் symtom #9.
மகேந்திரன் @ :-)
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteநீங்க சொன்ன 10 பாயிண்ட் ஒரு சாம்பிள் தான் சார் ! கீழே உள்ளவை யார் கணக்காம்?
1) மூக்கு கண்ணாடியை எங்கயோ வைத்துவிட்டு 'எங்க வெச்சேன்? யாராவது பாத்தீங்களா?' என்று வீட்டிலுள்ள அனைவரையும் தேட வைப்பது
2) ஊருக்கு போயிட்டு ஞாயிறு இரவு ரயில் பிடித்து திங்கள் காலை வந்தால் உடம்பு அலுப்பு தட்டி ஆபீசில் சுறுசுறுப்பு வர இறுதினங்கள் ஆவது ? (யப்பா .. இப்போவெல்லாம் மாதம் ஒரு முறை பயணம் என்பதால் பின்னுகிறது )
3) இருவதுகளிலும் முப்பதுகளில் மூன்று மட்டும் ஆறு மாதங்கள் அயல்நாடுகள் சென்று வந்த போதிலும் இரண்டே நாட்களில் பறந்த ஜெட் lag இப்போது ஒரு வாரம் சென்று வந்தாலும் recover ஆக ஒரு மாதம் ஆகிறது :-(
எடிட்டிங் பணிகள் எமக்கு இல்லையாதலால் 13க்கு 12 வாங்கிட்டோமுங்கோ !
--
இம்முறையும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சரியாக எங்கள் நிறுவனத்தில் ஒரு மெகா ப்ராஜெக்ட் தொடக்கம் பெறுவதால் ஈரோட்டுக்கு நோ - நோ :-( அமெரிக்க கஸ்டமர்கள் அதிகம் கொண்டதால் வருடத்தின் இரண்டாம் பகுதியின் ப்ராஜெக்ட்கள் கடந்த நான்கு வருடங்களாக ஆகஸ்ட் முதல் தேதி தொடக்கம் பெற்று நவம்பர் இறுதியில் Thanksgiving-ஐ ஒட்டி முடிவதால் படா பேஜாராகீது பா !!!
அடுத்த வருடமும் விக்ரமாதித்தன் போல முயல்வோம் ...!
சென்னைக்கு புத்தகங்கள் அனுப்பிட மீதித் தொகையினை திங்களன்று செலுத்தி விடுகிறேன் !
//அடுத்த வருடமும் விக்ரமாதித்தன் போல முயல்வோம் ...!//
Delete+1
Tex and cartoon special, included in subscription 2019?
ReplyDeleteNo Mahesh. Special issues for Erode. It will be available on web after release as usual.
DeleteThanks for the reply Raghavan Sir
Deleteமுதல் முறையாக பத்துக்கு பத்துவாங்கியதற்க்காக வருத்தப்படுவதை பதினொன்றாவதாக சேர்த்துவிடலாமே. வர்த்தகப் படாத வயோதிகர் சங்க விழாவிற்கு ஈரோடு வரும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்க்கும் உங்கள்🎇🎆. 🍑 கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நீங்கள் சுமாராக இருக்குமென்று எழுதிய நீரில்லை நில மில்லை. இதற்க்கு நிகர் எதுவுமில்லை என்ற ரேஞ்சிற்க்கு இருந்ததால் பிஸ்ட்டலுக்கு பிரியா விடை எதிர் பார்ப்பதைத் தூண்டுகிறது. கரூர் ராஜசேகரன்
ReplyDeleteபில்டப் எனது கடமை சார் ; "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" அந்த பில்டப்புக்கு அப்பாற்பட்டது சார் !
Deleteபில்டப் எனது கடமை சார் ;
Delete:-) :-)
படிப்பது எங்கள் கடமை :-)
படித்த பின்னர் விமர்சனம் எழுதுவதும் எங்கள் கடமை சார் :-)
டியர் எடி,
ReplyDeleteநல்ல வேளை, நீங்கள் இட்ட 10ல் ஒன்றின் பக்கமும் இன்னும் வண்டி ஜகா வாங்காமல் ஓடி கொண்டிருக்கிறது...
அங்கிள் பட்டம் ஒன்று மட்டுமே சற்று மனவருத்தமான விஷயம் :)
தலைமுறை எதிரியின் அக்கால ஒரிஜினல் அட்டை இன்றும் மிளிருகிறது.
அங்கெல்லாம் "அங்கிளுக்கே' மனவருத்தம் என்றால் - இக்கட "தாத்தா" என்ற வார்த்தையைக் கேட்ட சமயம் reaction எவ்விதம் இருந்ததென்று நினைக்கிறீர்கள் சார் ? அய்யகோ !! ஆத்தகோ !!
Deleteஅய்யகோ... நினைக்கவே பயங.கரமாக இருக்கிறதே... Father time is Cruel ��
Deleteஈரோட்டில் வெளியிடப்படும் இரண்டு சப்ரைஸ் இதழ்களை அன்றே மற்றவர்களும் பெறும்படி ஏதாவது செய்தால் நன்றாகத்தான் இருக்கும். அந்த இதழ்கள் என்னவென்று சொல்லாமல் அவற்றிற்கான கட்டணத்தை மட்டும் ஆன்லைனில் செலுத்த சொன்னால் நான் என்ன மாட்டேனென்றா சொல்லப்போகிறேன்? ஈரோட்டுக்கு வர முடியாவிட்டாலும் இதழ்களையாவது அதே நேரத்தில் பெற வாய்ப்பு இருக்கும் . ஹூம்....ஈரோட்டுக்கு வரவில்லை என்பதற்காக மேலும் சில நாள் வாசகர்களை காக்கவைப்பதில் ஆசிரியருக்கு மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதான்.
ReplyDeleteஇதனை நான் ஆமோதிக்கிகிறேன்.
Deleteஒரு தம்மாத்துண்டு லாஜிக்கை சிந்தைக்குக் கொண்டு வர சித்தே உதவிட அனுமதியுங்களேன் - ப்ளீஸ் ? விற்பனைக்கென்று வெளியாகும் ஒரு பொருளை - விற்பவனே நிதானமாய் விற்போமென்று எண்ணிடுவதன் பின்னே ஏதேனும் காரணம் இல்லாது போய் விடுமா - என்ன ?
Deleteகண்ணில் காட்டி ; தகவல் சொல்லி விற்கும் இதழ்களுக்கே அவ்வப்போது துடைப்பக்கட்டைச் சாத்து வாங்குபவன் நான் ; இந்த அழகில் "சசுபென்ஸு" என்று தகவலே சொல்லாமல் இரகசியமாய் வெளியிட எண்ணும் இதழ்களுக்கும் முன்கூட்டியே காசை வாங்கி விட்டு நிதானமாய் செருப்படி வாங்கிடச் சொல்கிறீர்களா நண்பரே ? 2 வாரங்கள் கழிந்த பிற்பாடு - என்னவென்று தெரிந்த பிற்பாடு விரும்பிடுவோர் வாங்கிடட்டும் என்பதே தொடரும் நம் நிலைப்பாடு !
உங்கள் லாஜிக் சரிதான் ஆசிரியரே. ஆனால் உங்கள் வெளியீடுகள் அனைத்தையும் யோசிக்காமல் வாங்கும் என் போன்றவர்களுக்கு ஏமாற்றமே. எப்படியும் வாங்க தயாராக இருப்பவர்தான் முன்பதிவு செய்ய போகிறார்கள். Feedback பார்த்துவிட்டு வாங்கிக்கொள்ள எண்ணுவோர் முன்பதிவு செய்ய போவதில்லை. பிறகு என்ன சிக்கல் என புரியவில்லை. எனினும் உங்கள் முடிவை வருத்தத்துடன் ஏற்கிறேன்.
Deleteஎடி, உங்கள் முடிவு இப்போது விளங்குகிறது. முன்பணம் கட்டி சில சாரார், அதிருப்தியை தெரிவிப்பதை விட, சர்பரைஸ் அவரவர் முடிவிற்கு ஏற்ப அறிவிப்பிற்குபின் தேரந்தெடுக்கபட்டே மற்றவர்களுக்கு கிடைக்கட்டும்.
Deleteவிஜயன் சார், உங்கள் நிலைப்பாடு சரியானதே. நன்றி.
Deleteஎப்படியும் ஈரோடு புத்தக விழா அன்னைக்கு இணைய தளத்தில் லிங்க் போட போறார். அப்போ மட்டும் புத்தகத்தை பத்தி நமக்கு நல்லா புரிந்திருக்குமோ? என்ன லாஜிக் பாஸ் இது?
Deleteசார். டெக்ஸ் மற்றும் கார்ட்டூன் விலை. ப்ளீஸ். பட்ஜெட். பட்ஜெட் பட்ஜெட். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசின்ன பட்ஜெட் தான் சார் !
Deleteஎனது பெயரும் விடுபட்டுள்ளது 😓
ReplyDeleteபணியிலிருந்த 2 பெண்களுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் விலகி விட்டுள்ளனர் என்பதால் front office -ல் நிறையவே சிரமங்கள் சார் ! வீட்டில் ஏதோ பிரச்னை என ஒரு பெண்ணும், திருமணம் ஏற்பாடாகியிருப்பதால் இன்னொரு பெண்ணும் நின்று விட்டனர் ; so அதன் பலனே இந்தக் குளறுபடிகள் !! தொடரும் நாட்களில் சரி செய்து விடுவோம் சார் !
DeleteEditor sir please inform the rate for tex and cartoon books.🤔🤔
ReplyDeleteயாராவது லயன் முத்துவின் account number பதிவிடுங்கள்.
ReplyDeleteSunshine library
Delete003150310875790
Deleteஅப்பாட ஒருவழியாக பணம் கட்டியாச்சு.
ஆகஸ்ட் மாத விழாவில் நான் நேரடியாக பெற்று கொள்கிறேன்.
நன்றி குமார்.
அன்பு எடிட்டர் ,நானும் ஈரோட்டில் புத்தகங்களை பெற்றுக்கொள்கிறேன் என்று அன்போட சொல்லிக்கொண்டு ,வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteசார்..முன்பதிவின் விபரம் ப்ளீஸ் ?
DeleteMy name missing sir
ReplyDeleteசார்...எந்தப் பெயரில்...எந்தத் தேதியில் பதிவு செய்தீர்களென்ற விபரங்களின்றி தேடல் எவ்விதம் சாத்தியப்படும் ? விபரங்கள் ப்ளீஸ் ?
DeleteKaliswaran Coimbatore 29.06.19
DeleteBooking number will helps a lot ji.
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteகடந்த பதிவில் ஈரோட்டில் புத்தகங்களை நேரில் பெற்று கொள்ள விருப்பம் தெரிவித்த நண்பர்கள். இதில் நண்பர்கள் பலர் தங்களின் ஈரோடு ஸ்பெஷல் புத்தகங்களின் முன்பதிவு என்னை குறிப்பிடவில்லை!
நண்பர்களே உங்களின் பெயரோடு முன்பதிவு எண்ணையும் இங்கே குறிப்பிட்டால் (அல்லது மின் அஞ்சல் மூலம் ஆசிரியருக்கு ) ஆசிரியருக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறன்!
1. அருண்குமார் from கரூர், நேரில் ஆஜராவேன்.
2. Veerapandian (முன்பதிவு எண். ES228)
3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )
4. Paranitharan.k
5. கரூவூர் சரவணன்
6. மகேந்திரன் பரமசிவம்
7. Jagadeeswaran, Arantangi.
8. Parthipan(Jagadeeswaran), Arantangi
9. Vigneswaran Willer
10. Kaleel
11. கரூர் ராஜ சேகரன்
12. Erode VIJAY
13. POSTAL PHOENIX
14. Kumar Salem
15. Sivakumar siva
16. Arivarasu @ Ravi
17. KiD ஆர்டின் KannaN
18. Rummi XIII
19. Nagarajan Santhan
20. N.சண்முகம்,திருச்செங்கோடு.
21. PrabakarT
22. R.P. அழகி சினேகா- சேலம்
23. Ganesh kumar
24. ரின் டின் கேன்
25. Karumandabam Senthil
26. P.Karthikeyan
27. KANNAN S YUVA
28. Govindaraj perumal
29. புன்னகை ஒளிர்
30. G. சக்திவேல், ஈரோடு. (முன் பதிவு பட்டியல் வரிசை எண். 32)
31. P.Karthikeyan
32. Selvam abirami
33. Prakash, Bengalore.
34. Prasanth Karthick
35. saran05thala
36. எம்.பூபதி,மேட்டூர் (முன் பதிவு பட்டியல் வரிசை எண். 66)
37. Thirunavukkarasu,Valkukkupparai, Coimbatore.
38. N.சண்முகம்,திருச்செங்கோடு.
39. Baskaran, Bangalore (முன் பதிவு பட்டியல் வரிசை எண். 198)
40. Prabhu, Bangalore (முன் பதிவு பட்டியல் வரிசை எண்.200)
41. Balasubramanian, S (Parani from Bangalore), Bangalore (முன் பதிவு பட்டியல் வரிசை எண்.2)
42. Kaliswaran Coimbatore (Yogi subi)
தற்போது தான் பணம் கட்டினேன். இதற்கென்று தனியாக முன்பதிவு எண் வருமா?.
Deleteஆமாம் கணேஷ். உங்களுக்கு நாளை வரலாம். வந்த உடன் ஆசிரியர் மற்றும் அலுவலகத்திற்கு தெரிவித்துவிடுங்கள்.
Deleteஅலுவலகத்தில் போன் செய்து விபரங்கள் தெரிவித்தேன். எனது பெயர் பட்டியலில் இருக்கிறது. மனமுவந்து உதவ வந்தமைக்கு நன்றிகள் சார்
Deleteநன்றி அண்ணா நினைவூட்டலுக்கு..
Deleteஎன் பெயர் பட்டியலில் வந்து விட்டது..
மகிழ்ச்சி.
ஐ! என் பேரு இருக்கு!!
ReplyDeleteஒரு வழியாக முதல் வாசிப்புக்கு ஒதுக்கி வைத்தவை படித்து முடித்தேன்.
ReplyDeleteஇம்மாத இரண்டு கனமான மிஸ்ட்ரி த்ரில்லர்களும் வெகுவாக சோபிக்கவில்லை. எதிர்பாராத முடிவுகள் மட்டுமே இலக்காக கொண்டு கதைகள் வடிவமைக்கபட்டிருப்பது தான் பிரச்சனை என்று தோன்றுகிறது.
நீரில்லை கதையில், மாறி மாறி அனவரும் பேசி குழப்பவுதை விட, பெரிய குழப்பம் யார் யாரை காதலிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதுதான் :). கதையின் க்ளைமேக்ஸ் நெருங்கும்போது, இதற்குதானா இத்தனை பில்டப் என்று அங்கலாய்க்க தோன்றுகிறது.
நித்திரையில், ஓவியங்களை லயித்து கதையில் ஒருவாறு ஒட்டிகொண்டே பிரயாணித்தபின், மொத்தத்தையும் கிழித்து போட்டபடியான முடிவு, எடுபடவில்லை.
மொத்தத்தில் நீரில்லை - ஆளமில்லை. நித்திரை - சுகமில்லை.
//எதிர்பாராத முடிவுகள் மட்டுமே இலக்காக கொண்டு கதைகள் வடிவமைக்கபட்டிருப்பது தான் பிரச்சனை என்று தோன்றுகிறது.//
DeletePoint to ponder !!
// பெரிய குழப்பம் யார் யாரை காதலிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதுதான் //
Deleteஎங்கே நண்பரே காதலிக்கறாங்க,அதைத்தவிர எல்லா வேலையும் பண்றாங்களே.....
அறிவு @ :-)
Deleteநித்திரை கதையில், கதை தொடங்கும் போதே, 1933 என்று கட்டம் கட்டியதும், 1930 களில் அமெரிக்காவில் பிரபலமான vaudeville அரங்கங்கள் அங்கங்கு தென்படுவதும் இது ஒரு கதைக்கான கால கட்டமாகவும், காலொடிந்த முதியவர் எப்போதும் 1968 காலண்டருடன் தனது அப்பார்ட்மன்டில் தெரிவது அதை நிகல் காலம் என்றும் ... கதாசிரியர் சுட்டி காட்ட முனைந்திருக்கிறார் என்று அர்த்தம் கொண்டாலும்...
Deleteகதைக்குள் கதை எழுதும் குழப்பம் - பக்கங்களை நிரப்புவதற்கான ஒரு சுலப வழிமுறை என்றே தென்படுவது தான் கதை சோடை போனதற்கான காரணி.
கதைக்குள் கதை எனும் பாணிக்கு நாம் அன்னியப்பட்டவர்கள் அல்லவே?
Deleteநமது காமிக்ஸ் என்றல்லாது பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளை படித்து வளர்ந்தவர்கள்தாமே நாம்?
கதைக்குள் கதை எழுதும் பாணி பக்கங்களை நிரப்ப வழி என்பது -forgive me- is to some extent "a rude expression"...
The comment has to be read in accordance to the plot of this story, not to be generalized.
Deleteமற்றபடி இடியாப்ப கதைகளனுக்கு நானும் ரசிகனே.
// கதைக்குள் கதை எழுதும் குழப்பம் //
Deleteசவாலான கதை பாணிகளில் இதுவும் ஒரு உத்திதான்,என்ன அதை புரிந்து கொள்வதற்கான பொறுமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் அவ்வளவே,கிறிஸ்டோபர் நோலனின் Inspection திரைப்படத்தில் இதே உத்திதான் கையாளப்பட்டது,கனவுக்குள் கனவு அதற்குள் ஒரு கனவு அடுக்கடுக்காய் திரைக்கதை விரியும்...
என்னைப் பொறுத்தவரை உலகளவிலான ஆகச்சிறந்த திரைக்கதைகளில் அதுவும் ஒன்று...
வாய்ப்பு அப்படத்தைப் பாருங்கள் நண்பரே,தமிழிலிலும் வந்துள்ளது...
@ Ravi ..inspection>>> inception !!
DeleteAutocorrect ஐ enable செய்வதில் இருக்கும் சங்கடம்..:)
But Mr Rafiq raja is one among the most respected among comic circle..
I rever him...i am bit jealous of his huge Tamil as well as English comics collection..
He stunned me when he displayed his " Modesty blaise" English collection..
Don't mistake me if i tell you "asking him to see inception is like asking a diehard sivaji fan whether he had seen Vasantha maligai."
// @ Ravi ..inspection>>> inception !! //
Deleteபிழைக்கு மன்னிச்சூ...திருத்தம் செய்ததற்கு நன்றிகள் செனா அனா,
ஆனாக்கா கீழே ரபிக்கிற்கு ஏதோ இந்தியில் சொல்லி இருக்கிங்களே,அதை மொழிபெயர்த்து சொல்லுங்கன்னு தலைவர் சொல்லச் சொன்னாருங்கோ.....
தலைவரே சொல்லிட்டேன்...ஹி,ஹி,ஹி...
சாரி ரவி!! கூடுமானவரை ஆங்கிலத்தில் டைப்புவதில்லை..அவசரத்துக்கு மட்டும்!!!
DeleteDear Editor,
DeleteIt is good that Nithirai Marantha Newyork appeared in Graphic Novels - the choice was with the reader whether to buy or not. Hope the other color story - not even remembering the name - had appeared in Graphic Novel or separate special edition like that of Erode books too.
Both of the did not live up to the pre-release hype. In fact both of them were such put-downers that I was really considering opting out of subscription for 2020 ! Still some time to go for that though ...
Lucky Luke was the best among July lot - loved it.
// Lucky Luke was the best among July lot - loved it. // I was gonna give the best of this year for lucky thus far no doubt.
Delete// எதிர்பாராத முடிவுகள் மட்டுமே இலக்காக கொண்டு கதைகள் வடிவமைக்கபட்டிருப்பது தான் பிரச்சனை என்று தோன்றுகிறது.//
ReplyDelete+1
இது போன்ற கதைகள் குறைவான பக்கங்களில் வந்தால் படிக்க நன்றாக/சுவாரசியமாக (விறு விறுப்பபாக) இருக்கும் என்பது எனது எண்ணம். நித்திரை மறந்த நியூயார்க் மிகவும் ரசித்தேன். ஒவ்வொரு பக்கமும் என்னை கட்டி இழுத்து சென்ற காரணம் விறுவிறுப்பு மற்றும் குறைவான பக்கங்கள்.
///நித்திரை மறந்த நியூயார்க் மிகவும் ரசித்தேன். ஒவ்வொரு பக்கமும் என்னை கட்டி இழுத்து சென்ற காரணம் விறுவிறுப்பு மற்றும் குறைவான பக்கங்கள்.///
Deleteஎதுக்கும் பக்கங்களெல்லாம் சரியா இருக்கான்னு ஒருதபா சரி பார்த்துக்கோங்க PfB! ;)
நித்திரை மறந்த நியூயார்க் - முதல் பக்கத்திலேயே அந்த அற்புதமான இரவில் நியூயார்க் எப்படி இருக்கும் என்று காட்டி விட்டார்கள். பக்கத்துக்கு பக்கம், நியூயார்க்கின் சந்து போந்து என்று கண் முன் நிறுத்தி நான் ஒரு black & White படம் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வே ஏற்பட்டது.
ReplyDeleteகிளைமாக்ஸ் எதிர்பார்க்காத ஒன்று.
எடிட்டர் சார், நீங்கள் ஒன்று கவனித்தீர்களா ... இது வரையில் வந்த 8 கிராபிக்ஸ் நாவல் அனைத்துமே, மெகா ஹிட், சூப்பர் ஹிட், ஹிட். (நிஜங்கள் நிசப்தத்தை குறை கூறுபவர்கள் அவர்கள் ரசனை வேறு அது மேட்ச் ஆகவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்) கிராபிக் நாவல் அனைத்தும் disturbance இல்லாத ஒரு saturday நைட் 10 மணிக்கு படியுங்கள். அப்பொழுது புரியும்.
நீரில்லை நிறமில்லை - இதுவும் ஒரு திரில்லர் படம் பார்த்த உணர்வை தந்தது. ஆனால் கதை தான் வெயிட் இல்லை. மொக்கையும் இல்லை, ஆனால் ஆராவாரிக்கவும் முடியாது.
இரவே இருளே கொல்லாதே மாதிரி ஒரு த்ரில்லரை beat பண்ணும் கதை இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
// எடிட்டர் சார், நீங்கள் ஒன்று கவனித்தீர்களா ... இது வரையில் வந்த 8 கிராபிக்ஸ் நாவல் அனைத்துமே, மெகா ஹிட், சூப்பர் ஹிட், ஹிட். //
Deleteஆமாம் அனைத்து கிராஃபிக் நாவல் களுமே ஹிட் தான் இதுவரை.
என்னை பொருத்த வரை இது வரை வந்த கிராஃபிக் நாவல்களில் சிறந்தது. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்.
Delete///என்னை பொருத்த வரை இது வரை வந்த கிராஃபிக் நாவல்களில் சிறந்தது. என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்.///
Deleteஅடடே!!
விஜயன் சார், ஈரோடு புத்தகங்கள் எடிட்டிங் முடிந்தது என்றால் அடுத்து அட்டைப்படம் பற்றிய குடலை உருவும் படலம் என சொல்லுங்கள். பாவம் நமது ஆபீஸ் நண்பர்கள்.
ReplyDeleteஎடிட்டர் சார்
ReplyDeleteஈரோடு ஸ்பெஷல் புத்தகங்களுக்கு பணம் அனுப்ப இறுதி நாள் எதுவென தெரிவியுங்கள் சார்.
This comment has been removed by the author.
ReplyDeleteநீரில்லை...நிலமில்லை
ReplyDeleteஅசாத்தியமான mystery thirller.
சில கதைகளும்,சினிமாக்களும் மட்டுமே கட்டாயம் உணர வேண்டிய படைப்புகளாக எஞ்சும்.
கேப்டன் டைகர் தொடர்கள்...
இரவே...இருளே...கொல்லாதே....
சிகரங்களில் சாம்ராட்
அடுத்ததாக நீரில்லை...நிலமில்லை க்ராபிக் நாவலும் அந்த வரிசையில் இடம் பெற தகுதியுடையது.
கதை முழுவதும் விரவியிருக்கும் அசாத்தியமான மர்மங்கள் பக்கத்துக்கு பக்கம் அதிகரிக்க;அந்த த்ரில் உணர்வு ஓவியங்களோடு ஒன்றிப்போகும் போது பலமடங்கு அதிகரிக்கிறது.
1. அந்த தீவில் நடந்தேறும் அனைத்து கலகங்களுக்கும் சூத்திரதாரி யார்....?
2.ஜான் யார்...?
3.அவனுக்கு என்ன நேர்ந்தது...?
போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியவாறு கதை நகரத்தொடங்கும் போது ஏற்படுத்தும் உணர்வுகளை இறுதி அத்தியாயம் வரை தக்கவைப்பது கதாசிரியருடைய ஆற்றல் மட்டுமே.
அலெக்ஸ் பாண்டியனின் குழுவில் ஆறாவது நபராக அறியப்படும் ஜானுக்காக ஏற்படுத்தப்படும் அந்த ஃப்ளாஷ்பேக் அத்தனை அழுத்தமாக கதையில் அமைக்கப்பட்டிருக்கும்.
எந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதுக்கு ஈடு செய்யும் விதமாக அத்துனை அழுத்தமாக ப்ளாஷ்பேக் தீம் இருக்கும்.
சில காட்சிகள் மட்டுமே வரும் ஜான் கதாபாத்திரத்தின் மரணம் நிச்சயம் வாசகர்களை உலுக்கும்.
இது போன்ற சித்திர(க்ராபிக் நாவல்)கதைகளில் ஓவியங்கள் தான் ஜீவனே.
அழுகை ,கோபம்,அச்சம், என்ற பலதரப்பட்ட உணர்வுகளையும் வாசகனுக்கு கடத்துவதில் ஓவியர் தனித்துவத்தோடு கவர்கிறார்.
கதையில் பல காட்சிகள் ஃப்ளாஷ்பேக் முறையில் பின்னோக்கி பயணிப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் உண்மையில் அவ்வாறு கதாசிரியர் படைத்திருக்க மாட்டார்.
கதையின் முதல் அத்தியாயம் தொடக்கம் பெறுவது 64
ம் பக்கத்தில் இருந்து 68 ம் பக்கம் வரையில் உள்ள காட்சிகளில்.
இரண்டாம் அத்தியாயம் 50 ம் பக்கத்தில் இருந்து 51 ம் பக்கம் வரை உள்ள காட்சிகளில்.
மூன்றாம் அத்தியாயம் 30 ம் பக்கத்தில் இருந்து 33 ம் பக்கம் வரையில் ...
நான்காவது அத்தியாயம் 14 ம் பக்கத்திலிருந்து 15 ந்து வரையில் அமைத்து ஐந்தாவது அத்தியாயத்தை கதைக்கு தொடக்க புள்ளியாக அமைத்திருப்பார்கள்.
இந்த கதையின் நிகழ்வுகளும் 50 ம் பக்கம் சுற்றுலாவுக்கு செல்லும் போது காலை நேரமாகவும்.
கடலில் குளிக்கும் போது மதிய வேளையிலும்....அடுத்த காட்சிகள் முன் இரவு பொழுதில் அமைக்கப்பட்டு... கரை. ஒதுங்கும் ஓர் இரவில் அத்தனை கொலைகளும் அரங்கேறுவதாக படைக்கப்பட்டிருக்கும்.கதையில் ஜானுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் அசாத்தியமான ப்ளாஷ் பேக் கதை மட்டுமே பின்னோக்கி நினைவு கூறப்படும்.மற்றவை கதாசிரியரின் மாறுபட்ட கதை சொல்லும் வடிவங்களின் வெளிப்பாடு.
ஒரு நாளின் பொழுதுகளில் ஏற்படும் நேர மாற்றங்களையும்;
கதிரவனுக்கும் கடலுக்குமான உறவின் நிற மாறுதல்களையும் ஓவியங்களின் வர்ண சேர்க்கையில் இரசிக்க முடியும்.இது போன்ற நவீன யுக கதைகளில் சில காட்சிகள் நெருடலாக அமைவது தவிர்க்க இயலாதது.பாலுணர்வு,நிர்வாணம் என்பது அவரவருடைய கண்ணோட்டங்களை பொறுத்து ஆளாளுக்கு மாறுபாடுடைய இயல்புகள்.
இந்த ஆண்டின் இதுவரையிலுமான வெளியீடுகளில் சிகரங்களின் சாம்ராட் டிற்கு பிறகு நீரில்லை .... நிலமில்லை என்று உறுதியாக கூற முடியும்.
என்ன ஒரு விமர்சனம் ஸ்ரீ . முற்றிலும் புதிய ஒளி பாய்ச்சி இருக்கிறீர்கள். மறுபடியும் ஒரு முறை வசித்து விட்டு வருகிறேன். ஆனால் சிகரங்களின் சாம்ராட் க்கு அடுத்து நீ. நி சிந்திக்க வேண்டிய விசயம்.
Deleteஆனால் உங்களது விமர்சனம் அட்டகாசம்.
Delete// இது போன்ற நவீன யுக கதைகளில் சில காட்சிகள் நெருடலாக அமைவது தவிர்க்க இயலாதது.//
Deleteநெருடல் எனும்போதே அவை காட்சியின் ஊடாக இயல்பாக அமையவில்லை என்றுதானே அர்த்தமாகும் நண்பரே...
நிறைய இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு உரிய விளக்கம் இல்லாதது போல் தோன்றுகிறது,
Deleteஉதாரணமாக,
1.கலங்கரை விளக்கித்தில் உள்ள ஓவியங்களில் எல்லாவற்றிலும் குறியீடாக நிலவு போன்ற அல்லது விளக்கு வெளிச்சம் போன்று ஏதோ வரைந்து வைத்திருப்பது, அதற்கு விளக்கம் கேட்கும்போது, ஓவியங்களை பதட்டமாக எடுத்துச் செல்வது.
2.உண்மையில் படகு எதார்த்தமாக கலங்கரை விளக்கத்தில் ஒதுங்குகிறதா?இல்லை திட்டமிடலா?
காட்சி அமைப்பில் இயற்கை தாண்டவத்தால் வருவது போல் இருப்பது.
3.படகு திடீரென காணாமல் போவதாக கூறுவது.
4.கதை இறுதியில் கலங்கரை விளக்கத்தின் பாதாள அறையில் மனித உறுப்புகளை எடுக்கும் தளமாக பயன்பட்டதாக கூறுவது ஏதோ போகிற போக்கில் சொல்வது போல் ஒட்டவேயில்லை...
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கதையை இன்னும் படிக்காம இருக்கேனே.. ஆண்டவா!!!
Deleteஒரு ஆசிரியரின் எழுத்து நடையிலேயே வாசகர்களும் எழுதுவது இங்குமட்டுமே நடைபெறும் அதிசயம். உதாரணம் ஜெ சார், அறிவு ரவி சார் மற்றும் மகி சார் ஆகியோர் பதிவுகள் அப்படியே ஆசிரியரின் எழுத்து நடை. தமிழறிஞர் செனாஅனா அனா ஜிவிதிவிலக்கு. சமீபமாக மகி ஜி யின் எழுத்தில் நகைச்சுவை மிளிர்கிறது. கரூர் ராஜசேகரன்
ReplyDeleteநண்பர் இராஜசேகர் அவர்களுக்கு,
Deleteதங்களது எழுத்து நடை முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது...
மற்றபடி வழக்கமாக களத்தில் அடித்து விளையாடும் கூட்டணியான நண்பர்கள் கண்ணனும்,ஈ.வி யும் பணிகள் காரணமாக சற்றே ஓய்வில் இருப்பதால் நம் வண்டி ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது...ஹி,ஹி,ஹி...
மஹியைப் பொறுத்தவரை நீங்கள் சொன்னது சரிதான்,தாயகம் திரும்பிய மகிழ்ச்சியில் உள்ள கூடுதல் திளைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்...
// மற்றபடி வழக்கமாக களத்தில் அடித்து விளையாடும் கூட்டணியான நண்பர்கள் கண்ணனும்,ஈ.வி யும் பணிகள் காரணமாக சற்றே ஓய்வில் இருப்பதால் நம் வண்டி ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது...// உண்மை உண்மை .
Delete@ Arivarasu @ Ravi & Kumar Salem
Deleteஉங்கள் பெருந்தன்மையின் வெளிப்பாடு இது!
ஆசிரியரே நீங்கள் குறிப்பிட்டவைகளில் ஒன்றை தவிர மற்றதெல்லாம் ஓரளவு பொருந்துகிறது பொருந்தாத ஒன்று நம்பர் 2 ஏனென்றால் கீழே காசை பாத்தா பத்து டைவ் அடிச்சி கூட காசை எடுத்திடுவேன் 😃😃😃
ReplyDeleteகீழே காசு விழுந்தா தானே பாக்குறதுக்கு. அதுக்கு முன்னாடியே புடிச்சுடுவோம்ல.
Deleteஅதெல்லாஞ் சரி.
Deleteபாக்கெட்லருந்தா தான் கீழ வீழும்.
நாமல்லாம் யாரூ
முன் ஜாக்ரதை முன்சாமிகளாச்சே...
பக்கத்தாலருக்றவேன் கீழ எப்படா போடுவான்னு கீழ குனிஞ்சு பாப்போம்.அப்பறமா பாகுபலி சொன்னாப்ல டைவ் அடிப்போம்...
தலைமுறை எதிரி அட்டைப்படம் மற்றும் கலரிங் பிரமாதப்படுத்துகிறது
ReplyDeleteபட்டியலில் எனது பெயர் உள்ளது. நன்றிகள் சார்
ReplyDeleteBest post of 2019. laughed out loud. Great creativity
ReplyDeleteசிங்கத்தின் சிறு வயதில்...
ReplyDeleteஇந்த வருடத்தின் சூப்பர்ஹிட் கதைகளில் முதன்மை இடத்தைப் பெறும் என்று நினைக்கிறேன். இந்தக்கதையைப் படிக்கும் போது ஒரு மிகப்பெரும் சாகசத்தில் நாமும் பங்கு பெறுவதாக உணர்வதும், படிக்க படிக்க உடலின் அட்ரினலின் அளவு கூடிக்கொண்டே போவதுமே கதையின் வெற்றிக்கு சாட்சி.
நறுக்குத் தெரித்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. படித்து முடித்த பிறகு ஒரு கேள்வி மற்றும் கோரிக்கை.
கேள்வி:
1. வயது என்பது நம்பர்னு வசனம் வருது. அதுக்கும் இந்த பதிவில் வரும் நம்பருக்கும் சம்பந்தம் உண்டா?
கோரிக்கை:
1. இந்தத் தொடர் வரிசையின் எண்ணிக்கையை அதிக்ப்படுத்தலாமே. ரெகுலர் தொடர் எண்ணிக்கையை எட்டி பிடிக்க முடியாவிட்டாலும் இவை சமீப வருடங்களில் தொடங்கப்பட்டது என்பதால் எளிதாக எட்டிப்பிடித்து விடலாமே?
// இந்தத் தொடர் வரிசையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே //
Deleteஆசிரியரின் மைண்ட் வாய்ஸ்:ம்க்கும் இருக்கற கதைகளுக்கே இடம் பத்தலையாம்,இதுல இன்னொரு தொடர் வரிசையா?
அவ்........
// நறுக்குத் தெரித்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன //
Deleteடெக்ஸை காப்பாற்றும் ஒரு பாத்திரம் வருமே,ப்ரிட்ஜர்னு நினைக்கிறேன் அந்த பாத்திரப் படைப்பு சிறப்பானதா இருக்குமே மஹி...
// 1. வயது என்பது நம்பர்னு வசனம் வருது. அதுக்கும் இந்த பதிவில் வரும் நம்பருக்கும் சம்பந்தம் உண்டா? // சரியான கேள்வி ஹிஹிஹி
Delete////இந்தத் தொடர் வரிசையின் எண்ணிக்கையை அதிக்ப்படுத்தலாமே. ரெகுலர் தொடர் எண்ணிக்கையை எட்டி பிடிக்க முடியாவிட்டாலும் இவை சமீப வருடங்களில் தொடங்கப்பட்டது என்பதால் எளிதாக எட்டிப்பிடித்து விடலாமே? ////
ReplyDeleteசீக்கிரம் இதுபற்றி எடிட்டர் சமூகம் முடிவெடுத்தால் எங்களுக்கும் 20, 30 வயது குறைந்த மாதிரி இருக்கும்..
அன்புள்ள விஜயன் சார்,
ReplyDeleteலயன் காமிக்ஸ் - ன் 35-வது ஆண்டு மலருக்கு எனது வாழ்த்துக்கள் . வாழ்த்திக் கொண்டே நானும் வளர்ந்து 35 ஆண்டுகள் ஓடிவிட்டன..
கூட 15 ஆண்டுகளை சேர்த்துக் கொண்டாலும் , 35 ஆண்டு காலமாக ஒரு நேசத்திற்குரிய நண்பனைப்போல் மனதிற்கு நெருக்கமாக வாழ்க்கையில் பயணித்து வந்தது லயன் காமிக்ஸ் தான். அல்லவா. ( ஸாரி. கடிதம் எழுத வேண்டும் என்ற ஆசையில் காலதாமதமாகிக் கொண்டே போகிறது. இங்கும் லேட்டாக வந்தால் Lo de more ஆகி விடுகிறது.) கண்டிப்பாக கடிதம் எழுதுகிறேன்.சார். கடிதம் எழுதி நீண்ட காலமாகி விட்டது. ( வரலாறு முக்கியம் அமைச்சரே ii)

////கண்டிப்பாக கடிதம் எழுதுகிறேன்.சார். கடிதம் எழுதி நீண்ட காலமாகி விட்டது. ( வரலாறு முக்கியம் அமைச்சரே ///
Deleteஅச்சச்சோ!! தலீவர் மட்டும் இந்த வரிகளைப் படிச்சார்னா அவருக்கும் கடுதாசி எழுதற மூடு வந்துடுமே? எடிட்டர் பாவம்ல? ;)
Sir, I bought the current month books in book fair and read them.
ReplyDeleteLuky Luke story – As usual. Vow!
“Nithirai Marantha New york” - reminds me of “Dark city”. Hmm!
“Neerilai Nilamillai” – Like a B grade Movie. Uuvvaeae! Not necessary to release under the banner of any one of our comics. This is my humble opinion. Thank you.
157th! for the first time in my life!:P
ReplyDelete157?? Who cares ? The sound "meow" is all that matters..:-)
Delete@ செனாஅனா
Delete'லொள்' ( அதாவது LOL) :) _/\_
எஸ் erode vijay வந்தால் போதுமே
Delete@Kumar Salem
Deleteஉங்கள் அன்புக்குக் கைமாறு செய்ய என்னிடம் என்ன இருக்கிறது - கடந்த EBFல் எடிட்டருக்குத் தெரியாமல் நான் ஆட்டையை போட்ட அந்த ரவுண்டு பன்னைத் தவிர?
ஈ.வி ஹா..ஹா..ஹா.. சிரிச்சி மாளலை.
Deleteஈ வி அதாச்சும் பரவாயில்ல ஆனா என்ன ட்ரெய்ன் ஏத்திவிட வந்த சாக்குல அதை என்ட்ட தள்ளிவிட பாத்தீர்ல....
Delete@ J ji
Deleteபாவம் ரொம்ப தூரப் பயணமாச்சே.. முதுகு வலிச்சா நாலு பன்னுகளை அடுக்கி அதுமேல சாய்ஞ்சிக்குவாரேன்னு பரிதாபப்பட்டுக் கொடுத்தா...
Editor Sir,
ReplyDeleteIf You List the price for special surprise books, I can transfer neft, so that i can get the books with other to special books which i already booked.
@ நண்பர் அறிவரசு ரவி அவர்களுக்கு
ReplyDeleteபொதுவில் ஜீவராசிகளில் ஆண் எதிர்பாலினத்தின் தேர்வுக்குரிய விதத்தில் இயற்கை அமைத்திருக்கும்.
மனித ஆண்களிலும் இரு வகையினர் இருப்பது இயல்பு.
ஆளுமைத்திறன் மிக்க Alpha male என்றும் ஆளுமைத்திறன் குறைவான ஆண்களாகவும் அறியலாம்.இன்னும் தெளிவாக ஆண் வகை ஜீவராசிகளுக்கென்றே பிரத்யேகமாக சுரக்கும் டெஸ்ட்ரோடன் எனும் சுரப்பியின் அளவுகளில் இதை புரிந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச ஆளுமை திறன் பெற்ற குணாதிசயம் உள்ள வகையில் தாமஸ் கதாபாத்திரம் புனையப்பட்டிருக்கும்.
இந்த வகையான ஆண்களின் செயல்பாடாக....
கோழைத்தனம் மிக்க எளிதில் அச்சப்பட கூடிய மனோ நிலையில் இருப்பர்.
நெருக்கடியான அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.
ஆபாச படங்களை கண்டு இரசிப்பதும் இதில் அடங்கும்.
தன்னுடைய உடல் வலிமையை பெண்கள் மீது தேவையற்ற விதத்தில் வெளிப்படுத்துவர்.தாமஸ் ஒரு இடத்தில் ஈவாவை அறைவது போல் ஓர் காட்சியில் (33 ம் பக்கம்) ஈவாவுடைய வசனத்தை கவனித்தால் விளங்கும்.அதற்கு அலெக்ஸ் சத்தமாக சிரிப்பது தாமஸின் ஆண்தன்மை யற்ற தனத்தை சுட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.
32 ம் பக்கம் ஹெலான நீரில் மூழ்கும் அசாரணமான சூழலில் அவளை காப்பாற்ற துளி அளவும் முயற்சிக்காது பயந்து ஒதுங்கும் அந்த ஒரு காட்சியே தாமஸ் உடைய கதை பாத்திரத்தை முழுமையாக உணர்த்திவிடும்.
ஆளுமைத் திறன் மிக்க Alpha male என்ற விதத்தில் அலெக்ஸ் கதைப்பாத்திரம் புனையப்பட்டிருக்கும்.
இத்தகைய திறன் பெற்றவர்களைத்தான் இயல்பாகவே எதிர்பாலினத்தவரின் தேர்வாக இருக்கும்.இவர்களோடு விருப்ப உறவில் இருக்கவே எதிர்பாலின ஜீவராசிகள் தேர்வு செய்யும்.
ஈவாவுக்கும் அலெக்ஸிக்கும் உள்ள நெருக்கம்...
ஹெலனாவுக்கும் அலெக்ஸிக்கும் உள்ள நெருக்கம் அந்த விதமாகத்தான் உணர்த்தப்பட்டிருக்கும்.
8 ம் பக்கம் ஹெலனா ஆபத்தில் இருக்கும் போது அலெக்ஸ் தோளில் சுமந்து செல்வது.
போன்ற ஒரு சில காட்சிகள் மூலமாகவே அலெக்ஸ் ஆளுமைத்திறன் மிக்க கதை பாத்திரமாக புனையப்பட்டிருக்கும்.கூடுதலாக விளக்க முற்பட்டால் விரசமாக அமைந்துவிடும்.
இதுபோல் லார்கோ வின்ச் கதை தொடரிலும் லார்கோவுக்கும் சைமனுக்கும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
பாகுபலி திரைப்படத்தில் பள்வால் தேவனுக்கும் பாகுபலிக்கும் உள்ள வேற்றுமைகள்.
பாரதியின் கவிதைகளில் சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு (படை பிரிவு) கூறுவது போல் அமைக்கப்பட்ட கவிதையிலும் இருவிதமான ஆண்களின் மரபு சுட்டுப் பட்டிருக்கும்.
நீரில்லை...நிலமில்லை க்ராபிக் நாவலிலும் சில காட்சிகள் ஆபாசமாக இருப்பினும் கதைக்கு வலுசேர்க்கும் விதமாக மட்டுமே கையாளப்பட்டிருக்கும்.
படைப்பு தரமானதாக இருக்கும் போது ஆபாச காட்சிகளை வைத்து கடை விரிக்கும் தேவை படைப்பாளிகளுக்கு ஏற்படுவது இல்லை என்பதே உண்மை.
///படைப்பு தரமானதாக இருக்கும் போது ஆபாச காட்சிகளை வைத்து கடை விரிக்கும் தேவை படைப்பாளிகளுக்கு ஏற்படுவது இல்லை என்பதே உண்மை.///
Deleteநச்!
நிறையப் படிப்பீர்கள் போலிருக்கே Sri ram!! மொபைல் ஃபோனே கதியென்று கிடக்கும் இக்காலகட்டங்களில், இதுபோன்ற நுட்பமான விசயங்களைப் படிப்பதற்கான நேரமும், ஈடுபாடும் உங்களுக்கு வாய்த்திருக்கிறதென்றால் வியந்து பாராட்டாமலிருக்கமுடியவில்லை! க்ரேட்!!
@sriram. செம.
Deleteநீரில்லை...நிலமில்லை...
Deleteகதையின் இறுதி கட்ட காட்சி மட்டும் கதையோடு ஒட்டாமல் ;திணிக்கப்பட்டது போல் தனித்து தெரிவதாக இருப்பது அனைவருக்கும் ஏற்படுவது(எனக்கும் அவ்வாறுதான்)இயல்பு.
இத்தகைய நெருடல் ஏற்படாமல் இருக்க...
படகு கலங்கரை விளக்கத்தை நெருங்காமல் இருக்க வேண்டி அந்த நேரத்தில் கலங்கரை விளக்கு அனைக்கப்பட்டதும்...
அதன் பின்னிரவில் விரும்பத்தகாத சட்ட விரோத செயல் இருப்பதையும்...
அங்கு நடக்கும் அசம்பாவிதங்களுக்கு தீவில் உள்ளவர்களும் காரணகர்த்தாவாக இருக்கலாம் என்பது போலவும் தான் கதை பயணிக்கும்.
சர்வ தேச சந்தையில் மனித உறுப்புகளுக்கு மாற்று அங்கங்கள்தான் பணம் கொலிக்கும் வியாபாரமாக உள்ளது.
இதற்காக உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பல் கிளை விரித்து செயல்படுகிறது.
சட்டப்படியாக அல்லது சட்டத்துக்கு புறம்பாக இந்த கொடுக்கல் வாங்கலில் அரங்கேறும் கொடூரங்கள் கற்பனையால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமானது.
இலங்கை இறுதி கட்ட போரின் போது அங்கு இன அழித்தொழிப்பும் மனித உரிமை மீறலும் நிகழ்த்தது கண்கூடாக அறிய முடியும்.
ஆனால் இப்பொழுது தோண்ட தோண்ட மனித எழும்பு கூடுகள் குவியல் குவியலாக காணப்படுவது;
மனித உறுப்புகளுக்காக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் சந்தேகமாக உள்ளது.
மலேசியா,சிங்கப்பூர்,நேபால்,துபாய்,தாய்லாந்து, ......,......,......,.....,
என்று பல தேசங்களில் பணக்குவியலோடு வாழ்ந்து வரும் பல பெரிய தலைகளுக்கும் இந்த வணிகத்தில் தொடர்பு இருக்கும்.
குறுகிய காலத்தில் நடுநிலையான நேர்மையான விசாரணையை ஐ.நா வின் மனித உரிமைகள் குழுவின் மூலம் விரைந்து முடுக்கி விட்டால் உலகம் இன்னொரு கோரமான மனித கொடூரங்களை தரிசிக்க வேண்டியதாக இருக்கலாம்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை சாதகமாக்கி கொண்டு அரசியல் ரீதியாக பயனடைந்தவர்கள் முகத்திரையை அகற்றியாக வேண்டும்.
நீரில்லை... நிலமில்லை க்ராபிக் நாவலுக்காக உருவாக்கப்பட்ட இறுதி காட்சி என்னளவிற்கு ஏற்புடையதே.
// கதையின் இறுதி கட்ட காட்சி மட்டும் கதையோடு ஒட்டாமல் ;திணிக்கப்பட்டது போல் தனித்து தெரிவதாக இருப்பது அனைவருக்கும் ஏற்படுவது(எனக்கும் அவ்வாறுதான்)இயல்பு. //
Deleteகதை இறுதியில் இதே உணர்வுதான் எனக்கும் ஏற்பட்டது,படைப்பாளிகள் எதையோ தவற விட்டுவிட்டது போல,ஏதோ முழுமை அடையாதது போல......
// படைப்பு தரமானதாக இருக்கும் போது ஆபாச காட்சிகளை வைத்து கடை விரிக்கும் தேவை படைப்பாளிகளுக்கு ஏற்படுவது இல்லை என்பதே உண்மை. //
Deleteஉண்மைதான்,படைப்பு தரமானதாக இருந்தால்......
// ஆளுமைத் திறன் மிக்க Alpha male என்ற விதத்தில் அலெக்ஸ் கதைப்பாத்திரம் புனையப்பட்டிருக்கும். //
Deleteவாசிப்பின் ஊடாக இந்த எண்ணம் எனக்கும் தோன்றியது ஸ்ரீராம்,
மணிரத்னம் அவர்களின் ஆயுத எழுத்து படத்தில் மாதவன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட இதே போன்ற குணாம்சம் கொண்டதுதான்,மாதவனுக்கு துணையாக வரும் மீரா ஜாஸ்மின் அவர்கள் மாதவனை ஒரு கட்டத்தில் வெறுப்பார்,ஒரு கட்டத்தில் விரும்புவார்,
முன்னும் பின்னுமான ஒரு முரண்பாடு....
இதில் அலெக்ஸ் பாத்திரமும் மாதவன் பாத்திரமும் ஒரே திசையில் இணைய வாய்ப்புண்டா ? எனது உதாரணம் சரியா ?
ஹி,ஹி,ஹி...எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்குது....
// பாரதியின் கவிதைகளில் சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு (படை பிரிவு) கூறுவது போல் அமைக்கப்பட்ட கவிதையிலும் இருவிதமான ஆண்களின் மரபு சுட்டுப் பட்டிருக்கும். //
Deleteவித்தியாசமான அவதானிப்பு,மாறுப்பட்ட பார்வை,மாறுபட்ட கோணம்...
ஏற்புடைய வாதம் ஸ்ரீராம்,உங்கள் பதில்களும்,விவாதங்களும் மகிழ்ச்சி அளிக்கிறது...
இயக்குனர் மணிரத்தினம் தான் உருவாக்கும் பாத்திர படைப்புகளோடு முன் கூட்டியே மனதளவில் வாழ்ந்து விடுவார்.அதன் பிறகுதான் அதை திரையிலேயே காட்சிகளாக உருவபடுத்த தொடங்குவார்.
Deleteஇத்தகைய சாத்திய கூறுகள் இருந்தால் மட்டுமே திரைத்துறையில்,எழுத்துலகில் , தனித்துவமாக செயல்பட முடியும்.
எடிட்டர் சார்,
ReplyDeleteவயசு, உடல் உபாதைகள் - இதெல்லாம் மனசை கஷ்டப்படுத்தறமாதிரியான விசயங்கள்தான்னாலும் அதையும் ரொம்ப ஹாஸ்யமாச் சொல்லி கெக்கபிக்கேன்னு சிரிக்க வச்சுட்டீங்க இந்தப் பதிவுல!
ஆனாப் பாருங்க, உங்களுக்கு வயசாவுது.. உடம்பு நோவுதுன்றதையெல்லாம் ஏனோ மனசு ஏத்துக்க மாட்டேன்றது! இப்பக் கிடைச்சுக்கிட்டிருக்கும் சொச்சம் எண்ணிகையிலான புத்தகங்களும் இனிவரும் காலங்கள்ல குறைஞ்சிடுமோன்னு ஒரு பயம் வருது! இந்தப் பதிவின் நோக்கமேகூட மனசலளவுல எங்களைத் தயார் படுத்தத்தானோன்னு நினைக்கத் தோனுது! சத்தமா 'மியாவ்'னு கத்த நினைச்சாக்கூட தொண்டையை எதுவோ வந்து அடைக்குது!
என்னதான் உங்க கணக்குன்றதை EBFல வச்சுப் பேசித் தீர்த்துக்கிடுவோம்.. அதனால அந்த ஃபெவிக்கால் பெரியசாமிய சிவகாசிலயே விட்டுட்டு வந்திடுங்க! மற்றவை நேரில்!
// இந்தப் பதிவின் நோக்கமேகூட மனசலளவுல எங்களைத் தயார் படுத்தத்தானோன்னு நினைக்கத் தோனுது! சத்தமா 'மியாவ்'னு கத்த நினைச்சாக்கூட தொண்டையை எதுவோ வந்து அடைக்குது! // சத்தியமா இதை படிச்சுட்டு எனக்கு தொண்டை அடைத்து விட்டது EV ,😭
Delete// என்னதான் உங்க கணக்குன்றதை EBFல வச்சுப் பேசித் தீர்த்துக்கிடுவோம்.. அதனால அந்த ஃபெவிக்கால் பெரியசாமிய சிவகாசிலயே விட்டுட்டு வந்திடுங்க! மற்றவை நேரில்!// இது பேச்சு
Deleteநிஜத்தைப் பேச நம்ம மஞ்சள்சட்டைக்காரருக்கொரு வாய்ப்புக் கிடைத்தால் - ஆகிருதியான அந்த மனுஷனுமே இதே பாணியில் தான் புலம்பியிருப்பார் !! என்ன - அவருக்கு திரு.போசெல்லியின் வரிகளையே பேசிட சாத்தியமாகும் ; நமக்கோ காது வரை நீளும் வாய் தானாய் லொட லொடக்கிறது !!
Deleteஎல்லாத்துக்குமே ஒரு shelf life உண்டு தானே சார் ?! ஆனானப்பட்ட 'தல'யே அதனைச் சரியாய் கணிக்க இயலாது இன்னிக்கு தடுமாற்றம் கண்டு நிற்கிறார் என்றால் - சுண்டைக்காய்களான நாமெல்லாம் முன்கூட்டியே ஒரு பாடம் படித்திட வேண்டாமா ? But நமக்கெல்லாம் ஓய்வுக்கு கணிசமாகவே நாட்களுள்ளன - அதனால் இப்போதைக்கு இவையெல்லாம் ஒரு வலித்த முதுகின் தற்காலிக முக்கல்ஸ் + முனகல்ஸ் மாத்திரமே !!
////But நமக்கெல்லாம் ஓய்வுக்கு கணிசமாகவே நாட்களுள்ளன - அதனால் இப்போதைக்கு இவையெல்லாம் ஒரு வலித்த முதுகின் தற்காலிக முக்கல்ஸ் + முனகல்ஸ் மாத்திரமே !!////
Deleteபுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... (பெருமூச்சு! ஸாரி, கொஞ்சம் புயல்காத்து ரேஞ்சுக்கு விட்டுட்டேன்!)
அப்பாடா!!!! இப்பத்தான் கொஞ்சம்போல நிம்மதியா இருக்கு!! நன்றிகள் பல, எடிட்டர் சார்!! (ஆனா அதுக்காண்டி அந்த ஃபெவிக்கால் பெரியசாமிய EBFக்கு கூட்டிட்டு வந்துடாதீங்க!)
ஆசிரியரே காமிக்ஸ் உலகத்தில் உங்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது நீங்களே நினைத்தாலும் உங்களை தடுக்க முடியாது எங்களுக்காக நீங்கள் படும் உடல் வலிகளும் உள்ளத்தில் படும் சிரமங்களுக்கும் கணக்கில்லா நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Deleteஎனக்கு ஒரு கேள்வி. நாம் அனைவருமே கார்ட்டூன் கதைகளை taken for granted ஆக எடுத்து கொள்கிறோமா?
ReplyDeleteஏன் என்றால் உத்தம புத்திரன் மிகச் சிறந்த கதை ஆனால் நாம் அதற்கு சிகரங்களின் சம்ரட் போலவோ பார குடா போலவோ அல்லது சிங்கத்தின் சிறு வயதில் போலவோ முக்கியத்துவம் kodukiroma?
ஒரு மாதத்திற்கு 3 அல்லது 4 புத்தகங்கள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு கார்ட்டூன் உள்ளது என்றால் அந்த கார்ட்டூன் நன்றாக இருந்தாலும் எத்தனை பேர் அதற்கு முதல் அல்லது இரண்டாம் இடம் தருகிறோம்? எனக்கு தெரிந்து அனைவருமே என்னையும் சேர்த்து 3 அல்லது 4 வது இடம் தான் தருகிறோம். ஏன் இப்படி நடக்கிறது? மி
ஸ்
மிகவும் stress நிறைந்த இந்த காலத்தில் அடுத்தவரை சிரிக்க வைப்பது எவ்வளவு சிரமம் என்று நாம் அனைவருமே அறிவோம். இருந்தும் நாம்மை வாய் விட்டு சிரிக்க வைக்கும் கார்டூன் க்கு ஏன் ஜே போட மறுக்கிறோம்.?
நேரம் இருக்கும் நண்பர்களும் ஆசிரியரும் இதற்கு பதில் அளித்தால் சந்தோச படுவேன்.
//கார்டூன் க்கு ஏன் ஜே போட மறுக்கிறோம்.?//
Delete"ஜே' மட்டுமென்ன சார் - நான் தான் ABCD -ன்னு சிக்கும் அத்தினி எழுத்துக்களாலும் கார்ட்டூன்களை சிலாகித்து வருகிறேனே ? நம்மவர்களில் ஒரு கணிசமான பகுதிக்கு, காமிக்ஸ்னா - ஆக்ஷன் கதைகள் (மட்டுமே) என்பது போலொரு mindset காலப்போக்கில் அமைந்து விட்டது !! So எத்தனை வீரியமான கார்டூன்களாக இருந்தாலுமே - 'அப்டிக்கா ஓரமாப் போயி விளையாடு கண்ணு !"என்று தான் அவர்கட்குத் தோன்றும் !!
ரசனைகளின் புதிர்தன்மைக்கொரு எடுத்துக்காட்டு சார் - அவ்வளவே !!
நல்ல பதில் சார். உண்மையும் கூட. இன்னும் நெடும் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
Deleteஇந்த மாதப் புத்தகங்களில் 'நித்திரை மறந்த நியூயார்க்' படித்து ரசித்த பிறகு, கிடைத்த கேப்களில் படித்து, ரசித்து, வயிறுவலிக்கச் சிரித்த கதை 'உத்தம புத்திரன்'!
ReplyDeleteஅடித்து விளையாடி ஸ்கோர் செய்ய ஏதுவான கதைக்களத்தை கதாசிரியரும், ஓவியரும் 100% பயன்பயத்திக் கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்க, நம் உள்ளூர் படைப்பாளியோ தன் அபாரமான நகைச்சுவை உணர்வு + அட்டகாசமான எழுத்துநடையால் அதை இன்னும் வீரியமாக்கி நமக்களித்து ஒரு மெகா நகைச்சுவை விருந்தே படைத்திருக்கிறார்!! எத்தனை வருடங்கள் கடந்தாலும் திரும்பத் திரும்பப் படித்துச் சிரிக்கத் தூண்டிடும் கதை வரிசைகளில் இதுவும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கும்!
முழுக்கதையையும் படித்துவிட்டு "ம்ஹூம்.. எனக்கு ஒருதபா கூட சிரிப்பே வரல சாமியோவ்" என்று யாராவது சொன்னார்களெனில், நிச்சயம் அவர்கள் டெட்பாடியாகத்தான் இருக்கவேண்டும்!!
இந்த ஆர்ப்பாட்டமான நகைச்சுவைக் கதைக்கு 'உத்தம புத்திரன்' என்ற தலைப்பு மட்டும் சாதாரணமாக/சுமாராக அமைந்துவிட்டிருக்கிறது!!
என்னுடைய ரேட்டிங் : 10/10
//இந்த ஆர்ப்பாட்டமான நகைச்சுவைக் கதைக்கு 'உத்தம புத்திரன்' என்ற தலைப்பு மட்டும் சாதாரணமாக/சுமாராக அமைந்துவிட்டிருக்கிறது!! //
ReplyDeleteஒரு பெயர்சூட்டும் படலம் ஆரம்பிப்போமா ? அடுத்த புத்தக விழாவுக்கு இப்போலேர்ந்தே guest of honor தேட ஆரம்பிச்ச மேரி இருக்கும்லே ?
///ஒரு பெயர்சூட்டும் படலம் ஆரம்பிப்போமா ? அடுத்த புத்தக விழாவுக்கு இப்போலேர்ந்தே guest of honor தேட ஆரம்பிச்ச மேரி இருக்கும்லே ?///
Deleteஇருங்க ஸ்டீல்க்ளாவைக் கூப்பிடுறேன்!
பராகுடா- ஒளிவேகத்தில் ஒரு கப்பல்
ReplyDeleteமாற்றங்கள் தான் என்னும் மாறாதது. இந்த வருடம் இதுவரை வந்த கதைகளில் முதன்மையானது சிங்கத்தின் சிறு வயதில் என்று எழுதிய பேனாவை ( symbolic) வீசி விட்டு புது தீர்ப்பு எழத வேண்டியாதாகி விட்டது. சி. சி. வ பராகுடாவை விட விற்பனையில் சாதிக்கலாம் ஆனால் என்னுடைய பட்டியலில் முதலிடம் ப்ளிஸ்டரிங் பார்னக்கிள்ஸ் பராகுடாவிற்கே.
ஓவியங்கள் அழகா அல்லது அதைவிட ஓவியங்களில் வரும் பெண்கள் அழகா? கதை வேகமா அல்லது கதைகளில் வரும் வசனங்கள் வேகமானதா என்று பல பரிமாணங்களில் சிறந்த இடத்தை பெற கடும் போட்டி. தெளிவாகத் திட்டமிடப்பட்டு கோர்க்கப்பட்ட சம்பவங்கள். அடுத்தது என்ன என்பதை யோசிக்க விடாத வேகத்தில் கதை நகர்நதாலும் எதிர்பார்க்காத விதத்திலே சம்பவங்கள் தொடர்கின்றன.
வசனங்கள் கச்சிதமாகவும் கேரக்டர்களுடன் அருமையாக பொருந்தி உள்ளது. சிறு சிறு கேரக்டர்களும் கூட அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.
காற்றையும் நீரையும் கிழித்துக்கொண்டு நமது மனக்கடலில் ஒளி வேகத்தில் செல்கிறது பராகுடா. இக்கதை காமிக்ஸை தமிழ் பேசும் நல்லுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது எனத் தைரியமாக சொல்லலாம்.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
பி. கு. இந்த ஜானர் எல்லாருக்கும் பிடிப்பதற்கு வாய்ப்புமில்லை. ஒரு சில ப்ரேம்கள் 18+. அது ஒவ்வாத 40+ கள் தவிர்த்து விடவும்.
மகி ஜி செமையான விமர்சனம் 👏👏👏👏👏
Deleteசமீபமாக விமர்சனங்கள் எழுதும் விதத்தில் - குறிப்பாக வார்த்தைப் பிரயோகங்களில் - பின்னிப்பெடலெடுக்கறீங்க ஷெரீப்!!
Deleteஎனக்கும் பாரகுடா மிகவும் பிடித்திருந்தது..
Delete..
உங்கள் விமர்சனம் அருமையாக உள்ளது 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
// இக்கதை காமிக்ஸை தமிழ் பேசும் நல்லுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது எனத் தைரியமாக சொல்லலாம். //
Deleteஉண்மை,இனி வரும் காலங்களில் நமது ஆசிரியர் தேர்வு செய்யும் நிறைய களங்களுக்கு இதே சொல்லாடலை நாம் கையாள வேண்டி வரும் என்று தோன்றுகிறது,குறிப்பாக கி.நா களங்களுக்கு.....