நண்பர்களே,
வணக்கம். 1582-ல் பதிமூன்றாம் போப் க்ரெகரி வடிவமைத்த ஆண்டுக் காலெண்டரைத் தான் லோகம் முழுக்க இன்றுவரைக்கும் நாமெல்லாம் பயன்படுத்தி வருகிறோம் ! கனகச்சிதமான இந்தக் கண்டுபிடிப்பில் என்னளவுக்கு ஒரேயொரு குறை தான் : பிப்ரவரிக்கு மட்டும் நாட்களை சுருக்கமாய் அமைத்து விட்டாரே என்று !! அதன் நோவுகளை இந்த வாரம் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியுள்ளது எனக்கு ! சகோதரி இல்லத்துத் திருமணம் மாத்திரமன்றி தொடர்ந்த விருந்துகளிலும், அப்புறமாய் ரிஷப்ஷனிலும், பந்தியில் தொந்தியை நிரப்பிக் கொள்வதிலேயே வாரத்தின் 5 நாட்கள் செலவாகிப் போயிருக்க - காலண்டரில் நான்கே நாட்களே எஞ்சி நிற்கின்றன - மார்ச் உதித்திடும் முன்பாய் !! "ச்சை...எனக்கு இந்த 28 தேதி கொண்ட பிப்ரவரியே புடிக்காது !!" என்று பழிப்புக் காட்டியபடிக்கே எஞ்சி நிற்கும் black & white இதழ்களின் பணிகளுக்குள் அரக்கப் பரக்க மூழ்கிட இந்த ஞாயிறை முழுசாய்ச் செலவிட்டாலொழிய கதை கந்தலாகிப் போய் விடும் !! So பதிவிட்ட கையோடு, பாலைவனப் பயணத்தைக் தொடர்ந்திட வேண்டி வரும் - நமது ஆதர்ஷ ரேஞ்சர்களோடு !!
And இது கொஞ்சம் ரேஞ்சர் புராணமாய் அமைந்திடவுள்ள பதிவுமே என்பதால் - "ச்சை...எனக்கு இரவில் பறக்கும் கழுகுகளையே புடிக்காது !!" என்றிடக்கூடிய (சொற்ப) நண்பர்கள் பதிவின் பிற்பகுதிக்கு நேராய் வண்டியை விடல் நலமென்பேன் !!
ஒரு க்ளாஸிக் சித்திர பாணி ; டாப் கதாசிரியரான கிளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் ஒரு 260 பக்க அதிரடி ; கதை நெடுக அடித்துக்கொண்டும் - பிடித்துக்கொண்டும் பயணிக்கும் இரவுக் கழுகார் + வெள்ளிமுடியார் கூட்டணி !! இந்த மூன்றும் கலவையானால் கிடைப்பது என்னவாக இருக்குமென்று நான் சொல்லித் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா - என்ன ? ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்பாய் பட்டையைக் கிளப்புமொரு நீள சாகசத்தில் நம்மவர்களை பார்க்கும் போது ஒரு இனம்சொல்ல இயலா த்ரில் உள்ளுக்குள் !! வறண்ட பாலைவன சாகசம் என்றாலும், நெடுக ரவுசு விட்டுத் திரியும் கார்சனின் புண்ணியத்தில் கதையோட்டத்தினில் வறட்சி லேது !! ஒரு கட்டத்தில் வெள்ளிமுடியார் அதட்டி உருட்ட - இரவுக்கழுகாரே தன மனதை மாற்றிக் கொள்ளும் அதிசயமும் இங்கே அரங்கேறுகிறது ! தற்போதைய டெக்ஸ் எடிட்டராய் மௌரோ போசெல்லி அசைத்தது துவங்கிய வரைக்கும், கதாசிரியர் நிஸ்ஸியே டெக்சின் டாப் நவீனப் படைப்பாளியாக இருந்து வந்தார் ! அந்தக் காலகட்டத்தில் உருவான சாகசமிது என்பதால், செம சுதந்திரமாய் வித்தியாசமான plot ஒன்றைக் கையில் எடுத்துள்ளார் !! So எதிர்பாராததை எதிர்பார்த்திடலாம் "பாலைவனத்தில் ஒரு கப்பல்" ஆல்பத்தில் ! இதோ அதன் அட்டைப்பட preview - ஒரிஜினல் ராப்பரின் தழுவலாய் : And உட்பக்க preview கூட தொடர்கிறது - மிரட்டலான கதைக்கும், சித்திர பாணிக்கும் டிரைலராய் அமைந்திடும் பொருட்டு !!
இன்னும் சில நாட்களில் இந்த ஆல்பத்தை நாம் ரசிக்கலாம் தான் ! ஆனால் இத்தாலியில் தட தடத்து வரும் அந்த "டெக்ஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலின் தடத்தையாவது நாம் பின்பற்றிட நினைத்தால் - முகத்தில் அந்தக் கரி எஞ்சின் ஊதித் தள்ளிடும் புகையைக் கூட உணர முடியாது போலும் !! சும்மா "இருளில்ஒரு இரும்புக்குதிரை" சாகசத்தில் வருவதை போல, டெக்ஸ் எக்ஸ்பிரஸ் தெறிக்கும் வேகத்தில் பயணித்து வருகிறது ! சென்றாண்டு இரவுக்கழுகாரின் 70 -வது பிறந்தநாள் ஆண்டென்றால் - நடப்பாண்டு அவரது சாகசம் # 700 வெளியாகி அதகளம் செய்திடும் பொழுது !! மௌரோ போசெல்லியின் கதைக்கு அட்டகாச ஓவியர் சிவிடெல்லி சித்திரங்கள் தீட்ட "பாண்நீ புதையல்" என்றதொரு முழுவண்ண - முழுநீள சாகசம் இந்த மாதம் வெளியாகியுள்ளது !! பாருங்களேன் அதன் முன்னோட்டத்தை !!
மாமூலான மஞ்சள் சொக்காய்க்கு விடுப்புத் தந்து, இம்முறை சிகப்பில் ஜொலிக்கும் ரேஞ்சரைப் பார்த்து பெருமூச்சைப் பெருசாய் விட்டுக்கொள்கிறேன்!! மாட்டுவண்டியில் ஒரு ரயிலைத் துரத்திப் பிடிக்க ஏதேனும் வழியுண்டா என்று யாராச்சும் அகுடியா சொல்லுங்களேன் ப்ளீஸ் ? நாம் ஆண்டுக்கு 12 டெக்ஸ் என்று பந்தாவாய் அறிவித்தால், அவர்கள் ஆண்டுக்கு 50 ஆல்பங்களை போட்டுத் தாக்கிடுவார்கள் போலுள்ளதே !! Phewwwwww !!!
எனது பெருமூச்சுகள் சற்றே மிகையென்று யாருக்கேனும் தோன்றினால் - nopes guys ! நிச்சயம் அதற்கொரு கூடுதல் காரணமும் உண்டென்பேன் !! மாதா மாதம் ரெகுலர் டெக்ஸ் வெளியாவது ஒருபக்கமெனில், க்ளாஸிக் டெக்ஸ் என்னும்தடத்தில் மறுபதிப்புகள் ஓடிவருகின்றன ! மூன்றாவதாயொரு தடத்திலோ கலர் டெக்ஸ் கதைகள் உருவாகி கலக்கியும் வருவது பற்றாதென வெகு சமீபத்திலிருந்து "போக்கிரி டெக்ஸ்" என்றதொரு பிரத்யேக பாதையைப் போட்டு அதகளம் செய்து வருகிறார்கள் ! டெக்சின் துவக்க நாட்களை சித்தரிக்கும் "இளம் டெக்ஸ்" கதைகளின் வெற்றியைத் தொடர்ந்து - அவரது "போக்கிரி நாட்களுக்கென" ஒரு exclusive வரிசையை உருவாக்கி பின்னிப் பெடலெடுக்கும் வெற்றிகளை சந்தித்து வருகின்றனர் !! பாருங்களேன் அந்த வரிசையில் இதுவரைக்கும் வெளியாகியுள்ள 3 ஆல்பங்களின் முன்னோட்டங்களை :
Album # 1 |
Album # 2 |
Album # 3 |
இவர்கள் மனுஷர்களா ? அல்லது வரம் வாங்கி வந்த தெய்வப் பிறவிகளா ? என்று மலைக்கச் செய்கிறது இவர்களின் படைப்புலக ஆற்றல்களைப் பார்க்கும் போது !! கதையொன்றை உருவாக்க மினிமம் 8 மாதங்கள் தேவைப்படுகிறது என்று என்னிடம் மௌரோ போசெல்லி அவர்கள் சொன்னதை இங்கே நினைவு கூர்ந்து பார்த்தால் - இன்றைக்கு நாம் கண்ணில் பார்த்திடும் சரக்குகளெல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்னே ஜனிக்கத் துவங்கியவை என்பது புரிகிறது !! "ஆஆ...எழுநூறா ?" என்று நாம் வாய் பிளந்து நிற்கும் இந்த நொடியில் அவர்கள் அநேகமாய் 725-ன் திட்டமிடலில் குந்தியிருக்கக்கூடும் !!! Amazingly awesome !!!! And extremely inspiring !!!
கவ்பாய் காமிக்ஸ் உலகினில் ஒவ்வொரு மைல்கல்லாய் முறியடித்து வரும் இந்த அசாத்திய நாயகரின் தனிப்பட்ட மைல்கல் தருணங்களின் அட்டைப்படங்களையும் பாருங்களேன் !! வரிசையாய் 100 ; 200 ; 300 என்று :
அந்த TEX 200 ராப்பரைப் பார்க்கும் போது நிறையவே flashbacks எனக்குள் !! நாம் நியூஸ்பிரிண்டில் புக் வெளியிடுவதே பெரும் சமாச்சாரமாய் இருந்து வந்த அந்த late '80s & early '90s காலகட்டத்தில் இத்தாலியின் ரோம் நகர ரயில்வே நிலையத்தில் இந்த வண்ண இதழை முதன்முறையாகப் பார்க்க முடிந்தது - ஒரு பழைய புத்தகக் கடையில் ! அதைக் கடையென்று சொல்வதைவிட - "பழைய புத்தக வண்டி" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் !! அந்நாட்களில் நம்மூர்களில் குச்சி ஐஸ்களை ஒரு சக்கரம் போட்ட மர தள்ளுவண்டியில் விற்றுக் கொண்டு வருவதை இங்குள்ள சில veterans (!!!) பார்த்திருக்கக்கூடும் ! அது மாதிரியொரு தள்ளுவண்டிக்குள் ஒரு வண்டி டெக்ஸ் இதழ்களை மட்டுமே குவித்து வைத்து ரோமின் ரயில்நிலையத்தில் விற்பனை செய்வார் புஷ்டியானதொரு ஆசாமி ! முதன்முறையாக நான் அவரிடம் டெக்ஸ் இதழ்களை அள்ளிய போது - நேக்கு இத்தாலிய பாஷை தெரியும் போலும் என்ற நினைப்பில் மனுஷன் கிக்ரி-பக்ரீ என்று ஏதோ சொல்ல முயன்றார் !! "இத்தாலியன் நோ-நோ...ஒன்லி இங்கிலீஷ் !!" என்று நான் பதில் சொல்ல - "பின்னே இதை எதுக்கு அள்ளிட்டு போறேலே ?" என்ற ரீதியில் மறுக்கா ஏதோ சொன்னார் !! ஆனால் காமிக்ஸ் வாசகர்களுக்கு "சேகரிப்பு" எனும் ஒரு சங்கதியும் உடன்பிறந்ததே என்பதைப் புரிந்தவராய் - அவருக்கு வந்த துக்கனூண்டு இங்கிலீஷில் பேச முயன்றார் !! நம்ம முழியையும், மூஞ்சியையும் பார்த்தவர் - "இந்தியா ? பாகிஸ்தான் ? பங்களாதேஷி ?" என்று கேட்க - "இந்தியா...இந்தியா !!" என்றவுடன் புரிந்தது போல் மண்டையை ஆட்டியபடிக்கே, வண்டியின் அடிப்பகுதியிலிருந்து மேலும் ஒரு கத்தை டெக்ஸ் இதழ்களைத் தூக்கி மேலே அடுக்கி வைக்க - அதனுள் டாலடித்தது டெக்ஸ் 200 வண்ண இதழ் !! அப்போதெல்லாம் "கலர்" என்றால் எங்கள் ஊர்த் திருவிழாக்களில் குடிக்கக்கூடிய பாட்டில்களில் வரும் திரவம் மட்டுமே ஞாபகம் வரக் கூடிய நாட்கள் ! அட...போனெல்லிக்கே வண்ணம் என்பதெல்லாம் ஒரு குறிஞ்சிப்பூ மாதிரியான மேட்டரே அந்நாட்களில் ! So 'ஆஆவென்று' வாயைப் பிளந்தபடிக்கே அந்த TEX 200-ன் வண்ணப் பக்கங்களை புரட்டியது இன்றைக்கும் நினைவுள்ளது ! சொல்லப்போனால் அந்த புக் இன்னமும் எனது பீரோவுக்குள் கிடக்கிறது என்றே நினைக்கிறேன் ! காலம் இன்றைக்கு ஏகமாய் மாறியிருக்க,,,"நாங்களும் பரட்டை தானே !! எங்ககிட்டேயும் சீப்பு இருக்குல்லே !!" என்று இல்லாத கேசத்தை சிலிப்பிக் கொள்வதாய் மனதுக்குள் பிரமை !! எது எப்படியோ - ஒரு காமிக்ஸ் சகாப்தத்தின் பயணத்தில் ஒரு கடைக்கோடியில் தொங்கிக்கொண்டேனும் நாமும் இடம்பிடித்திருப்பதில் நிரம்பவே சந்தோஷம் !! And அதை சாத்தியமாக்கியுள்ள டெக்ஸ் ரசிகர்களுக்கும், ரசிக்காதது போலவே ரசிக்கும் நண்பர்களுக்கும் எனது THANKS !!!
Moving on, மார்ச்சில் கார்ட்டூன் கோட்டா சந்தா C சார்பில் இல்லையெனினும், மறுபதிப்புச் சந்தா D-ன் புண்ணியத்தில் இலகு வாசிப்புக்கொரு இதழ் ஆஜர் !! இதோ துப்பறியும் மாமேதை ஹெர்லாக் ஷோம்சின் 2 மறுபதிப்பு சாகசங்கள் அடங்கிய வண்ண இதழின் அட்டைப்பட preview :
ஏற்கனவே மினி-லயனில் (?) வெளியான இந்தக் கதைகளை வண்ணத்தில், பெரிய சைசில், டாலடிக்கும் கலரில் பார்க்கும் போது சும்மா ஜில்லென்று உள்ளது !! புதிதாய்ப் படிப்போருக்கு சரி ; மறுக்கா வாசிக்கவுள்ளோரும் சரி - இந்த ரம்யத்தில் மயங்கிடாது போயின் ஆச்சர்யம் கொள்வேன் !! ஏதேதோ கட்சிகளெல்லாம் வோட்டு கேட்டு வரக்காத்துள்ள இவ்வேளையில் அடியேனின் கோரிக்கையோ - "கார்ட்டூன் சின்னத்துக்கும் சித்தே வோட்டு போடுங்களேன் புளீஸ்ஸ்ஸ்ஸ் !!" என்பதாகத் தானிருக்கும் !! அதுக்கோசரம் தந்திட நம்மளிடம் இரண்டாயிரம், மூன்றாயிரமெல்லாம் லேது ; மாதமொரு இக்கிளியூண்டு டெய்ரி மில்க் சாக்லேட் வேண்டுமானால் சாத்தியம் ! டீலா ? நோ டீலா ?
காத்துக் கிடைக்கும் பணிகளுக்குள் புகுந்திட இப்போது புறப்படுகிறேன் guys !! அதற்கு முன்பாய் இன்னொரு கேள்வியுமே !! "இந்த டெக்ஸ்...அந்த டெக்ஸ்...என்று நாவிலே ஜலம் ஊர ஜாலம் செய்துவிட்டு நடையைக் கட்டாது - அதற்கென ஏதாச்சும் செய்திடத் தான் முனைவோமா ? போக்கிரி டெக்ஸ்..........!!!! தெறிக்க விடலாமா ? Bye all....see you around !! And have a lovely Sunday !!
P.S : போன வாரத்துப் பதிவினில் கேட்டிருந்த அந்த "அமெரிக்க போலீஸ் புலனாய்வு" கதைக்கு உங்களின் thumbsup கணிசமாய்க் கிடைத்திருக்க - அதன் உரிமைகளுக்கு கோரிக்கை அனுப்பிடவுள்ளோம் அடுத்த சில நாட்களில் !! And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ? அடிச்சுக் கேட்டாலும் அவர் பெயரை மட்டும் நான் சொல்லவே மாட்டேனாக்கும் !!
மீ!!
ReplyDeleteயாவ்வ்வா
Deleteமீயாவ்வ்வா :)
DeleteMe too?
ReplyDeleteகாலை வண்ணம் வணக்கம் நண்பர்களே...
ReplyDelete///காலை ஒன்பதுக்கு வாருங்களேன் ப்ளீஸ் !!///
ReplyDeleteஹிஹிஹி! நான்தான் சொன்னேன்ல?
அதானே...அப்ப உண்மையாலுமே அத ஆசிரியர் தான் சொன்னாரா...:-(
Delete7. Magical number.
ReplyDeleteஅமெரிக்க மாப்பிள்ளை
Deleteபரகூடா
ReplyDeleteநம்ம தமிழ் காமிக்ஸுக்கு முற்றிலும் புதிய களம். தோர்கல் கலாட்டான்னாலே அவ்வளவா பேசப்படாம போயிட்டதோன்னு தோணுது. இந்த மாதிரி கதைகளை ஒரே மாதத்தில் வருவதை தவிர்க்கலாமோ என்றும்தோன்ற வைத்து விட்டது.
கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் ப்ளஸ் கடற் கொள்ளையரின் தலைவரின் மகன் ஒரு தீவில் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. அந்த தீவின் சட்ட திட்டங்கள் நமக்கு அறிமுகமான சட்ட திட்டங்கள் எல்லாம் இல்லாமல் வேறு மாதிரியானவை.
இவர்களை சுற்றி வித விதமான கேரக்டர்கள். அரச குடும்பம், கடற் கொள்ளையர், மத போதகர், அடிமை விற்பன்னர், சட்டத்திற்கு தப்பி தீவில் வாழும் கேப்டன், விலை மாது என எண்ணற்ற கேரக்டர்கள். அனைத்தும் குழப்பமில்லாமல் செல்கிறது. பல் பரிமாண மொழிபெயர்ப்பு கதையை வேறு லெவலுக்கு எடுத்து செல்கிறது.
கதை படிக்க படிக்க அப்படியே நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. கதையின் போக்கை பாதிக்காத அளவிலான சென்சார். ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. ஹிஸ்பானிக் கட்டிடக் கலை, தீவின் அழகு, கடலின் ஆழம், கப்பல்களின் பிரமாண்டம் , பெண்மையின் அழகு, வன்முறையின் கோரம், பாத்திரங்களின் உணர்வுகள் அனைத்தையும் ஓவியங்கள் அருமையாக சித்தரிக்கின்றன. பாராட்ட வார்த்தைகளே இல்லை.
பல தடவை மறுவாசிப்புக்கும், ஓவியங்களை ரசிக்கவும் வைக்கும் இதழ்.
ஏக்கம்: கடின அட்டையுடன் வந்திருந்தால் இன்னும் வேற லெவலா இருந்துருக்கும். இந்த உணர்வு தோர்கலை கையில் ஏந்தும் போதும் தோன்றியது.
10/10.
சொல்லி வாயை மூடலை...இருந்தாலும் இப்படி மனசுல இருக்குறதை படிக்க கூடாதுப்பா...:-(
Deleteஇப்ப நான் விமர்சனத்தை படிச்சுட்டு வரேன்..:-(
பரகூடா
Deleteநம்ம தமிழ் காமிக்ஸுக்கு முற்றிலும் புதிய களம். தோர்கல் கலாட்டான்னாலே அவ்வளவா பேசப்படாம போயிட்டதோன்னு தோணுது. இந்த மாதிரி கதைகளை ஒரே மாதத்தில் வருவதை தவிர்க்கலாமோ என்றும்தோன்ற வைத்து விட்டது.
######
உண்மையே....பராகுடா பட்டாசு...:-)
மெய்யே சார் ; தோர்கல் செய்த ரகளையில் பராகுடா லைட்டாக பின்சீட்டுக்குத் தள்ளப்பட்டது நிஜமே ! ஆண்டின் துவக்கமே களை கட்டட்டுமே என்ற எண்ணத்தில் தான் 2 பெரிய இதழ்களையும் மோதிக் கொள்ள அனுமதித்தேன் !!
DeleteAnd yes - நமக்கு முற்றிலும் புதுமையான களமே இது !! அந்த ஓவியங்கள் ஒரு அசாத்திய உச்சமெனில், கலரிங் இன்னொரு லெவல் !! மொழிபெயர்ப்பில் நாக்குத் தொங்கிப் போனதென்னமோ நிஜம் தான் ; ஆனால் இறுதி வார்ப்பைப் படித்த போது, போட்ட மொக்கைக்கு கொஞ்சமேனும் பலன் கிட்டியது போல் தோன்றியது ! And இதோ பராகுடாவின் 3 கிளைமாக்ஸ் பாகங்களைக் கையில் வைத்துக் கொண்டு - எழுத ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் !! தேவுடா !!!
கடின அட்டையுடன் வந்திருந்தால் இன்னும் வேற லெவலா இருந்துருக்கும்.////
Deleteஆமாம்.
விமர்சனம் நன்றாக உள்ளது M.P
Deleteபராகுடா.. மொத்தமாக படிக்கலாம் என்று வைத்திருந்தாலும், சென்ற வாரம் எடுத்து படித்து விட்டேன்... நாமே கடற்பிரயாணம் செய்தது போல் இருந்தது.. அடுத்த மூன்று பாகங்கள் எப்போது வரும் என ஏங்க வைத்துள்ளது..
Deleteஆசிரியர் வர்ற வரைக்கும் போரடிக்கும் ஷெரீப்...அதனால் நீங்க படிச்ச சமீப புத்தகங்களின் விமர்சனத்தை போடுங்க்..
ReplyDeleteமனசை தேத்திக்குறோம்...:-)
காசு...பணம் ... துட்டு.
ReplyDeleteநார்மலா வர ஸ்மர்ப் கதைகளிலிருந்து சற்றே மாறுபட்ட கதை. ஒரு கனமான தீமை எளிதா, சுவராஸ்யமா நச்சுன்னு சொல்லிருக்காங்க.
வசனங்கள் எங்கியுமே திணிக்கப்பட்ட மாதிரியான ஒரு உணர்வைத் தராமல், நேரடித் தமிழ் கதை போல் தெளிந்த நீரோடை போல செல்கிறது. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின் புலத்துக்கும் தகுந்த மாதிரி வசனங்கள் மாறுபடுவதும் ஒரு ப்ளஸ்.
கதை படிக்கும் போது முழுக்க பைனான்ஸ் பொடியனின் செயல்பாடுகள், பணத்தின் அறிமுகத்தினால் ஏற்படும் குழப்பங்கள் எனது முகத்தில் ஒரு புன்முறுவலை ஏற்படுத்திய வண்ணமே செல்ல கார்கமெல் வந்த பிறகு சில இடங்களில் வாய் விட்டும் சிரிக்க வைத்தது.
11/10
பத்துக்கு பதினொன்னா...
Deleteஅமெரிக்கா ஸ்கூல்ல இப்படி தான் மார்க் போடுவாங்கன்னு தெரிஞ்சு இருந்தா நான் அமெரிக்க யூனிவர்சிட்டியிலேயே படிச்சு இருப்பேனே..:-(
நான் படிச்சுது கோவைல ராம்நகர் மான்யத் துவக்கப் பள்ளி தல.
Deleteநான் படிச்சது கோவைல நரசிம்மலுநாயுடு உயர்நிலைபள்ளியிலே...:-)
Delete///நான் படிச்சது கோவைல நரசிம்மலுநாயுடு உயர்நிலைபள்ளியிலே...:///
Deleteஅங்கேதான் மூனாங்கிளாஸ் வரைக்கும் படிச்சீங்களா தலீவரே! :)
ஹலோ செயலரே...
Deleteநான் எட்டாவது பாஸ்...நீங்க...?!
இந்த விசாரணையிலே பல உண்மைகள் வெளிவரும் போல தோணுதே !!
Deleteஉங்களுக்கு எழுந்து நின்று பெரிய கிளாப்ஸ் M.P.
Deleteஉண்மையில் பணத்தின் மதிப்பு எவ்வாறு கணக்கிடபடுகிறது என்பது, ராக்கெட் சயின்ஸை விட சிக்கலானது.
ஆனால் மனித இனத்தின் பணப்புழக்கம் எவ்வாறு ஆரம்பித்து இருக்கலாம் என்பதை எந்த வித குழப்பமும் இல்லாமல் அழகாக விவரித்து உள்ளனர்.
கதை படிப்பதற்கு எளிதாக இருந்தாலும், இந்த கதையை எழுதிய கதாசிரியர் ஒரு மேதாவி.
பணத்தால் ஏற்படும் ஒரேயொரு நன்மை தூங்குமுஞ்சி ஸ்மர்ப் வேலை செய்வது தான்.
அரசியல்,பகடி பாசம் ஒற்றுமை என அனைத்து விஷயங்களை கொண்ட ஸ்மர்பை வெளியிடாமல் இருப்பது, தமிழ் காமிக்ஸ் தான் இழப்பு என்பதை பணம் கொடுக்கலே சொல்கிறேன்.
இதேபோல் "டாக்டர் ஸ்மர்ப்" விமர்சனம் செய்யுங்களேன் M.P.(இது எனது வேண்டுகோள்)
@GK ஓ பண்ணிடலாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சது. இன்னொருக்கா பொரட்டிட்டா எழுதிடலாம்.
Deleteசைத்தான் சாம்ராஜ்யம்:
ReplyDeleteவர வர தயாரிப்புத் தரம், வண்ணக்கலவை இதையெல்லாம் எழுத போரடிக்குது. ஏன்னா அதுலயெல்லாம் அற்புதமா முன்னேறிட்டோம். யார் கண்ணும் படாம இருக்கனும். வருங்காலத்துல க்ளேர் அடிக்காத காகிதத்துல வண்ண இதழ்கள் வர ஆரம்பிச்சா இன்னும் அசத்தலா இருக்கும்.
கதை ஏற்கனவே படிச்சது தான். மறு பதிப்பு. இதுல வை. தீ. மர்மம் மாதிரி நெருடலான வசனங்கள் ஏதும் தென்படலை. வழக்கம் போல டெக்ஸ் அன் கோ. கார்சன் இல்லாததால அவ்வளவா காமெடி இல்லைன்னாலும் கதை வேக வேகமா நகருது. மாஷை தான் வில்லின்னு நினைச்சா அதுக்கப்புறம் வருது ஒரு ட்விஸ்டு. சித்திரங்கள் எல்லாம் அற்புதம். பாதாள நகரத்தை அப்படியே முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது ஓவியங்கள்.
லாஜிக்கெல்லாம் தூக்கி வீசிட்டு எஞ்சாய் பண்ண வேண்டிய கதை.
8/10.
பி. கு 1:
இந்த விமர்சனத்தை எழுதிட்டு அய்யய்யோ இந்த கதையை கணேஸ்குமார் வந்து கலாய்ப்பாரே. நம்ம டவுசர் கழண்டுறுமேன்னு நினைச்சா இப்பவே வயத்தை கலக்குது.
பி. கு. 2.
அப்புறம் தான் இது போன வருசம் வந்த புக்கு. போன வருசம் டெக்ஸுக்குத்தான் அவரு சந்தா கட்டலைனு நினைவுக்கு வந்தது. அதனாலே அவரு சார்பா நானே எழுதிட்டேன்.
சைத்தான் சாம்ராஜ்யம் விமர்சனம். *GK version:*
சுய புத்தி தான் இல்லன்னா சொல் புத்தியும் இல்லாத டொக்ஸு வில்லர். டைகர் ஜாக் சொன்ன பேச்சை கேட்டிருந்தா பாதாள உலகத்துல இருந்த ஆதிவாசிகளாவது உயிரோட இருந்துருப்பாங்க. மனுசன் கீழே போயி யாரையும் காப்பாத்தலை. போரடிச்சுதுன்னு சும்மா சுட்டுக் கொல்லவே போனாரோ என்னவோ.
சும்மா சும்மா டெக்ஸு சுடும் போது வில்லனுகளை தள்ளி விட்டு கதாசிரியருக்கே போரடிச்சுடுச்சு போல. அதனால சேஞ்சுக்கு டைனசரு ராட்சஸ பாம்பு, பல்லின்னு சுட்டுட்டே இருக்காரு. அந்த டுபுக்கு ரைபிளுக்கு நெஞ்சைக் காட்டிட்டு வந்து தற்கொலை பண்ணிக்கற ராட்சஸ விலங்குகளை நினைச்சு ரத்தக்கண்ணீர் விட்டது தான் மிச்சம்.
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
///சைத்தான் சாம்ராஜ்யம் விமர்சனம். *GK version:*///
Deleteஹா ஹா ஹா!! செம!! :))
///அந்த டுபுக்கு ரைபிளுக்கு நெஞ்சைக் காட்டிட்டு வந்து தற்கொலை பண்ணிக்கற ராட்சஸ விலங்குகளை நினைச்சு ரத்தக்கண்ணீர் விட்டது தான் மிச்சம். ///
Delete:)))))))
எனக்கென்னவோ இதை உங்க ஐடில கணேஷ்குமாரே வந்து எழுதியிருப்பாரோன்னு தோனறது!
பி. கு 1:
Deleteஇந்த விமர்சனத்தை எழுதிட்டு அய்யய்யோ இந்த கதையை கணேஸ்குமார் வந்து கலாய்ப்பாரே. நம்ம டவுசர் கழண்டுறுமேன்னு நினைச்சா இப்பவே வயத்தை கலக்குது.
:-))))))
வர வர தயாரிப்புத் தரம், வண்ணக்கலவை இதையெல்லாம் எழுத போரடிக்குது. ஏன்னா அதுலயெல்லாம் அற்புதமா முன்னேறிட்டோம்
Deleteசத்தியமான உண்மை..!
வர வர தயாரிப்புத் தரம், வண்ணக்கலவை இதையெல்லாம் எழுத போரடிக்குது.
Delete#######
சத்தியமான உண்மை..
தலீவரே..நீங்க ஒருக்கா சத்தியம் பண்ணினாலே நம்பிடுவேனே...மறுக்காவும் எதுக்கு ?
Delete///சுய புத்தி தான் இல்லன்னா சொல் புத்தியும் இல்லாத டொக்ஸு வில்லர். டைகர் ஜாக் சொன்ன பேச்சை கேட்டிருந்தா பாதாள உலகத்துல இருந்த ஆதிவாசிகளாவது உயிரோட இருந்துருப்பாங்க. மனுசன் கீழே போயி யாரையும் காப்பாத்தலை. போரடிச்சுதுன்னு சும்மா சுட்டுக் கொல்லவே போனாரோ என்னவோ. ///
Deleteஇது அநியாயம், அக்கிரமம். டெக்ஸ் கிண்டல் பன்னும் காப்பி ரைட்ஸ் என்னிடம் மட்டும் தான் இருக்கிறது.
நீங்கள் டெக்ஸஸை பகடி செய்ய வேண்டும் என்றால் டெ.வி.எ.ச சங்கத்தில் சந்தா கட்டி உறுப்பினராக சேர வேண்டும்.
தற்போது தலைவர் பதவி தவிர , அனைத்து பதவிக்கும் தகுதியான நபர்களின் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் apply செய்யலாம். படிப்பு கல்வி தகுதி தேவையில்லை.
குறிப்பு:-முதலில் வருபவருக்கே முன்னிறுமை.
"சைத்தான் சாம்ராஜ்யத்துக்கே" இந்தப் பாடென்றால் - "துயிலெழுந்த பிசாசை" வண்ணத்தில் ரீபிரிண்ட் செய்தால் ? ஆத்தாடி...கண்ணைக் கட்டுது !!
Deleteஅப்புறம் தான் இது போன வருசம் வந்த புக்கு. போன வருசம் டெக்ஸுக்குத்தான் அவரு சந்தா கட்டலைனு நினைவுக்கு வந்தது. அதனாலே அவரு சார்பா நானே எழுதிட்டேன். //////
Deleteடெக்ஸ் மறுபதிப்பு போன முறை சந்தா D ல் வந்தது.
சைத்தானுக்கு நான் செய்த அர்ச்சனை யில், அனைத்து டெக்ஸ் ரசிகர்களும் மனித வெடிகுண்டா மாறி, சுத்தி நின்னு என்னை சுட்டு தள்ளிட்டாங்க.
ஆனாலும் நான் சாகல..
எனக்கு FOUNDER பதவி வேணும்..
Deleteகோபிச்செட்டிபாளையத்திலேர்ந்து கூட ஒரு விண்ணப்பம் சீக்கிரமே வருமே ? ஒரு போஸ்ட் காலியா இருக்கட்டும் சங்கத்தார்ஸ் !!
Delete////கோபிச்செட்டிபாளையத்திலேர்ந்து கூட ஒரு விண்ணப்பம் சீக்கிரமே வருமே ? ஒரு போஸ்ட் காலியா இருக்கட்டும் சங்கத்தார்ஸ் !!////
Deleteஆமாமா!! யாரப்பா அது கோபிலேர்ந்து விண்ணப்பம் போட்டது!!?? 😂😂😂
பள்ளிக்கான போட்டு உடச்சிட்டீங்களே எடிட்டர்!! 😀😀
///பள்ளிக்கான///
Deleteபப்ளிக்காக என மாற்றி படிக்கவும்
// சைத்தானுக்கு நான் செய்த அர்ச்சனை யில், அனைத்து டெக்ஸ் ரசிகர்களும் மனித வெடிகுண்டா மாறி, சுத்தி நின்னு என்னை சுட்டு தள்ளிட்டாங்க.
Deleteஆனாலும் நான் சாகல.. // 😙😁😄😆🤣😂 கணேஷ் ஜி எனக்கும் ஒரு posting இந்த சங்கத்தில்.
Editor sir Salem la இருந்தும் ஒரு application
Delete///"சைத்தான் சாம்ராஜ்யத்துக்கே" இந்தப் பாடென்றால் - "துயிலெழுந்த பிசாசை" வண்ணத்தில் ரீபிரிண்ட் செய்தால் ? ஆத்தாடி...கண்ணைக் கட்டுது !!///
Deleteஎடிட்டர் சார் சமூகத்திற்கு..
சில காலம் ரீபிரிண்ட் வகையறாக்களுக்கு மூட்டை கட்டிட்டு புதுபுக்கெல்லாம் கொஞ்சம் கண்ணுல காட்டுணா நல்லா இருக்கும்.. நாமலும் கொஞ்சம் எட்டிப் புடிச்ச மாதிரி இருக்கும்..
அப்ப இதெல்லாம் நான் மறுபடி புது பதிவுலயும் காப்பி பேஸ்ட் பண்ணுவேன். 🕺🕺🕺🕺
ReplyDeleteதேவையில்ல ஷெரீப்..ஆசிரியரே இந்த பதிவிலேயே புது பதிவை காப்பி ,பேஸ்ட்..பிரஸ் எல்லாமே பண்ணிருவாருன்னு என்னோட எட்டாவது அறிவு சொல்லுது..:-)
Deleteவந்தாச்சி.
ReplyDelete31ஆவது
ReplyDeleteFriends undertake book
ReplyDeleteஇதுவரை எத்தனை புக் வந்துள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்
ஒரிஜினலில் இது வரையிலும் 2 + 2 (இரு பாகங்களாய் இரு ஆல்பங்கள்) ! நடப்பாண்டில் ஒரு one shot திட்டமிடலில் உள்ளது !
Deleteநம்மைப் பொறுத்தவரை முதல் இதழ் வெளிவந்துவிட்டது ; சாகசம் # 2 இந்தாண்டின் ஜுனில் என்று நினைக்கிறேன் !
நன்றி நண்பர்களே
Deleteநான் இரண்டு புத்தகம் என்று என் காமிக்ஸ் பீரோவை நேற்று ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டேன். ஒரு புத்தகம் தவறி விட்டதோ என்று பதறி விட்டேன். நன்றி
Deleteவராது பதிவுக்கு வணக்கம்!!!
ReplyDeleteவந்துட்ட பதிவோடு பதில் வணக்கம் !
Deleteஎடிட்டரின் முழூ பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDeleteதிரும்பவும் வரனுமா?
ReplyDelete///And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ///
ReplyDeleteவாவ்!! வாழ்த்துகள் MP அவர்களே!! பட்டையக் கிளப்புங்க!! :)
///And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ///
Deleteவாவ்..!! வாழ்த்துகள் ஷெரீப்..!! பட்டையக் கிளப்புங்க..!! :)
///And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ///
Deleteஅமெரிக்க மாப்பிள்ளையை வரவேற்கிறேன்.எதிர்பார்க்கிறேன்.பூத்தூவுகிறேன்.
அருமை,அருமை..! இதயப்பூர்வமான வாழ்த்துகள் ஷெரீப்..!! பட்டையக் கிளப்புங்க..!! :)
Delete🙏🙏🙏🙏
Deleteஅருமை,அருமை..! இதயப்பூர்வமான வாழ்த்துகள் ஷெரீப்..!! பட்டையக் கிளப்புங்க..!! :)
Delete////வெகு சமீபத்திலிருந்து "போக்கிரி டெக்ஸ்" என்றதொரு பிரத்யேக பாதையைப் போட்டு அதகளம் செய்து வருகிறார்கள் ! டெக்சின் துவக்க நாட்களை சித்தரிக்கும் "இளம் டெக்ஸ்" கதைகளின் வெற்றியைத் தொடர்ந்து - அவரது "போக்கிரி நாட்களுக்கென" ஒரு exclusive வரிசையை உருவாக்கி பின்னிப் பெடலெடுக்கும் வெற்றிகளை சந்தித்து வருகின்றனர் !! ///
ReplyDeleteவீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
இம்மீடியட்லி!!
I AM WAITING.
Deleteசார்...சார்...கண்டிப்பாக உறுதியாக ,,விரைவாக அந்த படவா போக்கிரி டெக்ஸை கண்ணுல காட்டுங்க்..சார்..
Deleteமாசம் ஒரு தனி போக்கிரி சந்தானாலும் ஓகே...
ஏன்..சார்..ஏன்...
Deleteமுடிஞ்சா ஈரோட்ல இந்த வருசமே கொண்டு வந்துருங்க..:-)
@ GK : ஹி...ஹி...ஹி..!
Deleteஅப்போ அடுத்தது சுட்டி டெக்ஸா??
Delete@ Rummi : ஹி...ஹி...ஹி..!
Deleteரம்மி...:-))))
DeleteWe want all tex.
DeleteWe want all tex.
சிரித்து சிரித்து எம்மை சிறையிலிட்டீர். உள்ளம் இனிக்க இனிக்க டெக்ஸ் கதை கொடுப்பீர். (கண்ணதாசன் மன்னிப்பாராக)
Deleteவீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
Deleteவீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
வீ வாண்ட் போக்கிரி டெக்ஸ்
இப்படிக்கு,
ஈனா வினா ஆர்மீஸ்
///
Deleteஈனா வினா ஆர்மீஸ்///
ஆர்மீ'னாலே இப்போல்லாம் பயமாயிருக்குங்க கரூர்கார்! எப்பவேணாலும் மனிதவெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளாகவேண்டியதிருக்குமே!!
தவிர, ஏற்கனவே மாடஸ்டி ஆர்மி'ன்ற பேர்ல இங்கே வந்துக்கிட்டிருந்த சிலர் அந்த மாடஸ்டி கதை வெளியானப்போக்கூட ஒரு விமர்சனம் கூட எழுதாம மாயமாகிப்போன கதையும் இங்கே நடந்திருக்கே!
அதனால,
ஈனாவினா போலீஸ் டீம்
ஈனாவினா ஊர்க்காவல்படை டீம்
ஈனாவினா கூர்க்கா டீம்
இப்படி ஏதாச்சும் வச்சுக்குவோமே?
///And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ///
ReplyDeleteவாவ....வாழ்த்துகள் ஷெரீப்... பட்டையை கிளப்புங்க...
வாழ்த்துக்கள் மகி ஜி பின்னி பெடலெடுக்க போகிறீர்கள் ஐயம் வெயிட்டிங்
Deleteஅமெரிக்க முழிபெயர்ப்பாளர் என்ற போதே பட்சி சொன்னது. இவர்தான்னு. வாழ்த்துக்கள் சார்.
Deleteஅமெரிக்க முழிபெயர்ப்பாளர் என்ற போதே பட்சி சொன்னது. இவர்தான்னு. வாழ்த்துக்கள் சார்.
Delete:-)
🙏🙏🙏🙏
Deleteஜானி 2.0:: அழகான சித்திரங்கள், கவிதைத்துனமான, கம்யுனிச வசனங்களுக்கு இடையில் நடக்கும் கொலைகள் அதனை துப்பறியும் ஜானி.
ReplyDeleteவழக்கமாக கொலையாளி இவர்தான் என்பதை ஜானி எப்படி கண்டுபிடித்தார் என்பதை சொல்லி இருக்கிறார்கள் இதில் அது இல்லை, ஒரு வேளை நான் அதை சரியாக கவனிக்கவில்லையோ? அதேபோல் நிக்டலோப் யார் இறுதியில் என்னதான்? ஜானியை பூங்காவில் உள்ள கிளாஸ் ஹவூஸில் வைத்து முதல் முறையாக ஷெரில் முத்தமிடும் போது அவளின் குறலை கேட்கும் ஜானி அந்த மூவர் அணி வீட்டுக்கு செல்லும் போது அவளின் குறலை வைத்துதான் இவள்தான் கொலையாளி என அடையாளம் கண்டு கொண்டாரா?
வழக்கமாக ஜானி கதைகளில் தேவையில்லாத விஷயம்கள் இல்லாமல் விறுவிறுப்பாக செல்லும் இந்த கதையில் அது மிஸ்ஸிங்.
ஜானி 2.0 எளிதான வாசிப்புக்கு.
ஜெரெமயா:
ReplyDeleteதேவனே துணை கதையின் ஆரம்பத்தில் கதாசிரியர் கதைகளில் நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டது அதனை விரிவாக சொல்ல முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு ஜெரெமயா கதைகளை படித்தால் அனைவருக்கும் பிடிக்கும் என்பது எனது நம்பிக்கை.
அய்யா ஏய்யா...:-)
Deleteபரணிதரன்
Deleteஎப்போதுமே பெங்களூர் பரணி அப்படிதான். எல்லோரும் கிழக்கால போனா இவர் மட்டும் மேற்கால போவாரு
நீங்க குறுக்கால போவிங்களா
DeleteAnd அதை சாத்தியமாக்கியுள்ள டெக்ஸ் ரசிகர்களுக்கும், ரசிக்காதது போலவே ரசிக்கும் நண்பர்களுக்கும் எனது THANKS
ReplyDeleteஇந்த சத்தியமான வரியை மிகவும் ரசித்தேன் சார்..:-)
சார்....எந்த கட்சிக்கும் போட்டி போடாம இத்தாலி டெக்ஸ் கட்சியோட மட்டும் போட்டி போடலாமா....புகையை புடிக்கிறது என்ன கடைசி பெட்டியைவே புடிச்சரலாம்...
ReplyDeleteஒண்ணாம் தேதி ஒரு டெக்ஸ்...15 ம் தேதி ஒரு டெக்ஸ்..:-)
@ G.K : சார்..உங்களுக்கு நிறையவே வேலை வரும் போல் தெரியுதே ?!!
Deleteரவுடி டெக்ஸ் ன்னா G K வே O K சொல்லிருவார் சார்..:-)
Deleteகாமெடி ஷெர்லக் ன் அட்டைபடமும் ,உட்பக்க சித்திரங்களும் "டாலடிக்கிறது *
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேவனே துணை: செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகளில் இருந்து கதையை உருவாக்கி உள்ளார் கதாசிரியர். நார்மன் என்ற ஒரு செல்வந்தர் குடும்பத்துடன் நமது நண்பர்கள் மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் பயணம் ஆரம்பிக்கிறது. அதேநேரம் பக்கத்து ஊரில் இரண்டு நண்பர்கள் வீடு வீடாக சென்று ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புகிறார்கள்; இதனை விரும்பாத ஒரு குடும்பத் தலைவர் அவர்களை விரட்டியடிக்க முயற்சிக்கிறார், அடுத்த நொடி அவர் கொலையாகிறார். நமது ஜெரெமயா நண்பர்கள் தொடரும் பயணத்தில் அவர்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாயமாகிறார், அதேநேரம் ஒரு வெடி குண்டு ஸ்பெஷஸிட் அவர்களுடன் இணைகிறார்.
Deleteஇவர்களின் பயணத்தில் எதிர்ப்பட்ட பிரச்சினை என்ன எப்படி அதனை சமாளித்தார்கள் என்பதை அழகிய சித்திரம், எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் யதார்த்தமான ஆக்சனுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.
க்ளைமாக்ஸ் படபடப்புடன் நகர்ந்தது அதுவும் இருளில் திகிலூட்டும் பொம்மைகள் நடுவில் நடக்கும் சண்டை; இதில் சித்திரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
சார்..இம்மாத டெக்ஸ் அட்டைப்படம் ஏற்கனவே வந்த இதழின் அட்டைப்படம் போலவே தோன்றுவது எனக்கு மட்டும் தானா..?!
ReplyDeleteபழி வாங்கும் புயல் மறுபதிப்பு தலைவரே
Deleteஹாங்...கரெட் சத்யா..:-)
Deleteஇல்லீங்க சார்..!இது டைனமைட் ஸ்பெஷ லுக்காக ஆடிசனுக்கு வந்த போஸ்..☺☺☺
Deleteபழி வாங்கும் புயலுக்கு கொடுத்தது இன்னொரு லுக்கு..!😉😉😉😉
Deleteஹாங்...கரெட் சத்யா..:-)
DeleteI thought rayil vantha puthayal..Tex with train
Deleteபழிப்புக் காட்டியபடிக்கே எஞ்சி நிற்கும் black & white இதழ்களின் பணிகளுக்குள் அரக்கப் பரக்க மூழ்கிட இந்த ஞாயிறை முழுசாய்ச் செலவிட்டாலொழிய கதை கந்தலாகிப் போய் விடும் !! So பதிவிட்ட கையோடு, பாலைவனப் பயணத்தைக் தொடர்ந்திட வேண்டி வரும் - நமது ஆதர்ஷ ரேஞ்சர்களோடு !!
ReplyDelete#######
ஒண்ணாம் தேதி எங்களுக்கு புக்கு வர்ற மாதிரி பாருங்க சார்..:-)
அதற்கு முன்பாய் இன்னொரு கேள்வியுமே !! "இந்த டெக்ஸ்...அந்த டெக்ஸ்...என்று நாவிலே ஜலம் ஊர ஜாலம் செய்துவிட்டு நடையைக் கட்டாது - அதற்கென ஏதாச்சும் செய்திடத் தான் முனைவோமா ? போக்கிரி டெக்ஸ்..........!!!! தெறிக்க விடலாமா ?+12334455677789
ReplyDeleteபோக்கிரி பொங்கல் நல்லாருக்கும் போல.அந்தப் பொங்கலை ஈரோட்ல பரிமாற முடியுமானு பாருங்களேன்.ஏன்னா ஈரோட்டு விழாவானது நமக்கு ரெம்ப நெருக்கமானவங்க ,பிரியமானவங்க, பழக்கமானவங்களாலதான் (டைகர், டெக்ஸ் ,XIII ) உச்சகட்ட பரபரபோடும் ,படபடப்போடும் எதிர்பார்க்க வைத்தது என்பது வரலாறு..!
ReplyDeleteஆகையால்..,
ஆகையால்
Deleteநானும் வழிமொழிகிறேன...
விஜயன் சார், பாண்நீ புதையல் ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் இதழாக இதனை வெளியிட முடியுமா? ப்ளீஸ்.
ReplyDeleteயோசிப்போம் சார் ; ஏற்கனவே சில திட்டமிடல்களும் காத்திருப்பில் உள்ளன !!
Deleteவிஜயன் சார், பாண்நீ புதையல் ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் இதழாக இதனை வெளியிட முடியுமா? ப்ளீஸ்.
ReplyDeleteயோசிப்போம் சார் ; ஏற்கனவே சில திட்டமிடல்களும் காத்திருப்பில் உள்ளன !!
Deleteஅதே போல் போக்கிரி டெக்ஸ் ஜம்போவில் சேர்க்கலாம் சார்.please.
ReplyDeleteசிகப்பு சட்டை டெக்ஸ் தரிசிக்க ஆவலாக உள்ளது சார் ஆவன செய்யவும்.
ReplyDelete700டெக்ஸ் வந்த்தே ஆகனும் சார் சொல்லிபுட்டேன்.
ReplyDelete600 டெக்ஸ் கலரில் வந்த முதல் டெக்ஸ் நமக்கு.
ReplyDeleteஅது போல 700 முழுமையாக வண்ணத்தில் த போ சைசில் வெளியீடுங்கள் சார்.
இது நல்ல ஐடியா. நான் வழிமொழிகிறேன். கலரில் த.போ.ைஸைஸில் டெக்ஸ்.நினைத்தாலே இனிக்கும்.
Deleteடெக்ஸ் எக்ஸ்பிரஸ் தமிழ் நாட்டிற்கு ஒரு டிராக் போட்டுடலாம் சார்.
ReplyDeleteகரெட்..சார்..
Deleteடெக்ஸ் எக்ஸ்பிரஸ் மட்டும் வந்துச்சு...இந்த மெட்ரோ ..எலக்ட்ரிக் எல்லாம் ஓடி போய் ஒளிஞ்சுகனும்...
ப்ளீஸ் சார்...மனசு வையுங்க..
// போக்கிரி டெக்ஸ்..........!!!! தெறிக்க விடலாமா?//
ReplyDeleteதாரளமாக தெறிக்க விடலாம் சார்,ஆவலுடன் காத்திருகிறோம்....
கரும்பு தின்ன கசக்குமா என்ன???
அதானே.....
Delete// மாதா மாதம் ரெகுலர் டெக்ஸ் வெளியாவது ஒருபக்கமெனில், க்ளாஸிக் டெக்ஸ் என்னும்தடத்தில் மறுபதிப்புகள் ஓடிவருகின்றன.//
ReplyDeleteநமக்கும் இது சாத்தியமானால் மகிழ்ச்சியே,ஆனால் இப்போதைக்கு ஏக்கப் பெருமூச்சு மட்டுமே சாத்தியம்,வரும் காலங்களில் க்ளாசிக் தனித்தடத்திற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்று எனக்கு தோன்றுகிறது,ஆனால் எப்போது என்பதுதான் விடை தெரியாத ஒரு கேள்வி......
டெக்ஸ் வில்லர் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளது,டெ.வி என்னும் சுரங்கத்தை தோண்ட,தோண்ட புதையல்கள் கிடைத்துக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி.
ReplyDeleteஅலாதியான ஒரு பதிவு.
///"இந்த டெக்ஸ்...அந்த டெக்ஸ்...என்று நாவிலே ஜலம் ஊர ஜாலம் செய்துவிட்டு நடையைக் கட்டாது - அதற்கென ஏதாச்சும் செய்திடத் தான் முனைவோமா ? போக்கிரி டெக்ஸ்..........!!!! தெறிக்க விடலாமா ? ///
ReplyDeleteபோக்கிரின்னு சொல்லாதப்பவே போக்கிரியாய் பல கதைகளில் தெறிக்கவிட்ட டெக்ஸ் .. போக்கிரி டெக்ஸ்ன்னு பேரோடேவே வரும்போது ... பக்கத்து பேனல்ல இருக்கூறவங்க சில்லுமூக்கும் சேர்ந்து சிதறுமே ..!
வாங்கோ போக்கிரிடெக்ஸ் வாங்கோ..!
`முதல் 3 கதைகளும் முரட்டு வெற்றிகள் என்கிறார்கள் !! பார்க்க வேண்டும் சார் !
Deleteஓ..!முரட்டுப் போக்கிரியா? அப்ப முட்டிப் பாத்திட வேண்டியதுதான்..!
Deleteநான் மார்ச் இதழ்களில் எதிர் பார்ப்பது herlock sholems மற்றும் கிராஃபிக் நாவல் . டெக்ஸ் comes last in my list.
ReplyDeleteஅட !!
Delete/// - "கார்ட்டூன் சின்னத்துக்கும் சித்தே வோட்டு போடுங்களேன் புளீஸ்ஸ்ஸ்ஸ் !!" என்பதாகத் தானிருக்கும் !! அதுக்கோசரம் தந்திட நம்மளிடம் இரண்டாயிரம், மூன்றாயிரமெல்லாம் லேது ; மாதமொரு இக்கிளியூண்டு டெய்ரி மில்க் சாக்லேட் வேண்டுமானால் சாத்தியம் ! டீலா ? நோ டீலா ?///
ReplyDeleteசாக்லேட்டே இல்லேன்னாலும் பர்ர்ரால்லே சார்.. டபுள் டீல்..!
கார்ட்டூன் கட்சி தனியா நின்னாலும் சரி..ரெண்டுமூணு கார்ட்டூன்ஸ் சேர்ந்து மெகாகூட்டணியாகவோ காமிக்ஸ் நல கூட்டணியாகவோ நின்றாலும் சரி .. என்னோட நல்ல வோட்டு கள்ளவோட்டு எல்லாமே கார்ட்டூனுக்குத்தான்..!!
மகாகத(த்)பந்தன்...
Delete///போனெல்லிக்கே வண்ணம் என்பதெல்லாம் ஒரு குறிஞ்சிப்பூ மாதிரியான மேட்டரே அந்நாட்களில் ! So 'ஆஆவென்று' வாயைப் பிளந்தபடிக்கே அந்த TEX 200-ன் வண்ணப் பக்கங்களை புரட்டியது இன்றைக்கும் நினைவுள்ளது ///
ReplyDeleteகலரில் டெக்ஸை பார்க்கும் சுகமே தனி சார்.! நீங்கதான் மனைசே வைக்க மாட்டேன்றிங்க ..! வருசம் ஒரு மூணுநாலு கதையாச்சும் கலர் டெக்ஸ் போடுங்கோ சார்...ப்ளீஜ்ஜ்ஜ்..!!
அது வருசம் அல்ல அய்யா மாசம்னு சொல்லுங்க..:+)
Delete// "கார்ட்டூன் சின்னத்துக்கும் சித்தே வோட்டு போடுங்களேன் புளீஸ்ஸ்ஸ்ஸ் !!" என்பதாகத் தானிருக்கும் !! அதுக்கோசரம் தந்திட நம்மளிடம் இரண்டாயிரம், மூன்றாயிரமெல்லாம் லேது ; மாதமொரு இக்கிளியூண்டு டெய்ரி மில்க் சாக்லேட் வேண்டுமானால் சாத்தியம் ! டீலா ? நோ டீலா ? // KOK just miss. double deal Editor sir.
ReplyDeleteKumar Salem
Delete:)))))))))
103rd
ReplyDelete
ReplyDeleteParani from Bangalore24 February 2019 at 09:04:00 GMT+5:30
ஜெரெமயா:
தேவனே துணை கதையின் ஆரம்பத்தில் கதாசிரியர் கதைகளில் நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டது அதனை விரிவாக சொல்ல முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு ஜெரெமயா கதைகளை படித்தால் அனைவருக்கும் பிடிக்கும் என்பது எனது நம்பிக்கை.
+++1111111111
நிச்சயமாக, பிடிக்கும்.
Reply
ஜெரமையா தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஉங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா...
Deleteஜெரமியா நம்ம எடிட்டரோட செல்லமாக்கும் ...
டெக்ஸ் 700 ல் இளம் டெக்ஸின் சாகஸம் போல.
ReplyDeleteவேறொரு கோணத்தில் இது ஒரு போக்கிரியின் ருத்ர தாண்டவம் போலவே தெரிகிறது.
ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணம், வண்ணத்தைக் காட்டிலும் கருப்பு வெள்ளையிலேயே ஸ்கோர் செய்கிறது.
//ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணம், வண்ணத்தைக் காட்டிலும் கருப்பு வெள்ளையிலேயே ஸ்கோர் செய்கிறது.//
Delete+1
காத்திருக்கும் "சூது கொல்லும்" - சிவிடெல்லியின் ஆக்கமே !
///காத்திருக்கும் "சூது கொல்லும்" - சிவிடெல்லியின் ஆக்கமே///
Deleteஅடடா..!அடடா..!
எது எப்படியோ - ஒரு காமிக்ஸ் சகாப்தத்தின் பயணத்தில் ஒரு கடைக்கோடியில் தொங்கிக்கொண்டேனும் நாமும் இடம்பிடித்திருப்பதில் நிரம்பவே சந்தோஷம் !! And அதை சாத்தியமாக்கியுள்ள டெக்ஸ் ரசிகர்களுக்கும், ரசிக்காதது போலவே ரசிக்கும் நண்பர்களுக்கும் எனது THANKS !!!
ReplyDeleteஅந்த ரசிகர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன் சார் மறந்துடாதீங்க் சார்.
மறப்போமா சார் ?
Deleteடெக்ஸ் சித்திரங்கள் ஒவ்வொன்றும் A class ரகம் சார். போட்டு தாக்குங்கள்.
ReplyDeleteஇத்தனை அறிவிப்புகள் வந்தும் டெக்ஸ் விஜய இன்னும் காணலியே!
ஃபோன் கூட எடுக்க மாட்டேங்கிறார் சார்
Delete///
ReplyDeleteகவ்பாய் காமிக்ஸ் உலகினில் ஒவ்வொரு மைல்கல்லாய் முறியடித்து வரும் இந்த அசாத்திய நாயகரின் தனிப்பட்ட மைல்கல் தருணங்களின் அட்டைப்படங்களையும் பாருங்களேன் !! வரிசையாய் 100 ; 200 ; 300 என்று :///
ஆறிலும் எனக்கு பெஸ்ட்டாக தோன்றுவது டெக்ஸ் 500 ஆவது அட்டைப்படமே..!
என்னதான் தனியொருவன் என்று ஆர்ப்பரித்தாலும் டெக்ஸ் & கோ தோன்றும் கதைகள் ஒரு படி மேலேதான்..!
அதுக்குதான் கூட்டணி வைக்கிறது.!😉😉😉😉
Deleteஅந்த கூட்டணியும் டெக்ஸ் கார்ஸன் கூட்டணி மாதிரி இருக்கனும்.சார்...இல்ல..எத்தனை கூட்டணி வச்சாலும் அது பொருந்தா கூட்டணியா போச்சு எல்லா தொகுதியும் போச்..
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteமற்ற கதைத் தொடர் களை பற்றி வெளியிடலாமா என்று கேட்பதும் றீங்கள் தான்.TeX , Tex என்று ஒரே ரயில் வண்டியை ஓட்ட நினைப்பதும் நீங்கள் தான்.. (கடந்த பதிவில் பதிவிட்டது Load more _ யினால் பதியவில்லை.)
அமெரிக்க குற்ற புலணாய்வு தொடருக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.
ஏற்கனவே CI Dராபின் தொடர் என்று விருப்பத்திற்குரியது எனினும், தாங்கள் முன்பு 10 ரூ இதழாக வெளியிட்ட கதைகளுக்கு ஈடாக தற்போது வெளியிடுவதில்லை. (சித்திரமும் கொல்லுதடி, ஜன்னலோரம் ஒரு சடலம்' வீடியோவில் ஒரு வெடிகுண்டு). எனவே வாசகர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை
ஏற்படுத்தவில்லை.
அடுத்து, என்க்குக்கு மிகவும் பிடித்த கிரிமினாலஜி ஜூலியா தொடர் . (மூன்றாவது கதை கிரிமினாலஜி காதலன் விசயத்தில் ஏமாந்ததாலோ , என்னவோ நிறைய பேருக்கு ஜூலியாவும் பிடிக்காமல் போய்விட்டது. ( முதல் இரண்டு கதைகளும் மிகவும் சிறப்பாகவும் குற்றப் புலனாய்வு என்ற விதத்தில் ஒரு நாவல் படித்த அனுபவத்தை தந்தது.
எனவே , துப்பறியும் கதை என்றாலே ரிப் கிர்பி , லாரன்ஸ் & டேவிட் என்ற அடுத்த தாத்திற்கு கொண்டு செல்லும் அமெரிக்க குற்ற புலனாய்வு என்னும் தொடருக்கு என்றுறும் எனது ஆதரவுகள்.
இந்த தொடராவது வாசகர்களின் ஆதரவைப் பெற்றால் மிகவும் சந்தோசம் அடைவேன்.
.
///ஏற்கனவே CI Dராபின் தொடர் என்று விருப்பத்திற்குரியது எனினும், தாங்கள் முன்பு 10 ரூ இதழாக வெளியிட்ட கதைகளுக்கு ஈடாக தற்போது வெளியிடுவதில்லை. (சித்திரமும் கொல்லுதடி, ஜன்னலோரம் ஒரு சடலம்' வீடியோவில் ஒரு வெடிகுண்டு). எனவே வாசகர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை
Deleteஏற்படுத்தவில்லை.///
உண்ம!
மற்ற கதைத் தொடர் களை பற்றி வெளியிடலாமா என்று கேட்பதும் றீங்கள் தான்.TeX , Tex என்று ஒரே ரயில் வண்டியை ஓட்ட நினைப்பதும் நீங்கள் தான்\\\\
Deleteஇந்த கேள்வி ஏற்கனவே ஓராயிரம் தடவை கேட்ட கேள்வி தான்.
ஒரு கட்சி தான் நான் ஓட்டு போடுவேன் என்பது போன்ற பழமையான சிந்தனை உள்ளம் கொண்டவர்கள் நம் காமிக்ஸ் ரசிகர்கள்.
வித்தியாசமான கதைகளங்கள் இங்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் போன்றே பயன்படுத்தப்படுகிறது.
டெக்ஸ் கதை நல்ல இல்லை என்று கூறுவதற்கு கூட இங்கு டெக்ஸ் ரசிகர்கள் மனம் நோகமல் சொல்ல வேண்டும்.
2014 ல் இருந்த மாற்ற கதை ரசிகர்கள் (குறிப்பாக டைகர்) யாரும் தற்போது தளத்திற்கு வருவதே இல்லை.
வருடத்திற்கு 12 வந்தாலும் இன்னொரு டெக்ஸ் போடலாமா என்று கேட்டால் உடனே அதற்கு ஆதாவாக கொடி பிடித்தது கொண்டு நிறைய பேர் வந்து விடுவார்கள்.
ஈரோடு விழா என்பது பொதுவான விழா, அங்கு புதிய தரமான(அன்டர்டேக்கர் மாதிரி) புதிய நாயாகர்களை வெளியிவது தான் நியாயம்.
ஆனால் டெக்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்தினால் போதும் என்ற மனநிலை ஆசிரியருக்கே வந்துவிட்டது.
கேட்டால் காமிக்ஸ் என்னும் விளக்கு டெக்ஸ் என்ற எண்ணெய் தான் எரிகிறது என்று ஆசிரியர் விளக்கம் கொடுப்பார்.
கனேஷ் ஜி ஒரு மூன்று மாதம் டெக்ஸ் இல்லாமல் காமிக்ஸ் வரட்டும் அப்புறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
Deleteஉங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் கேளுங்கள் நல்லா இருந்தால் நாங்கள் உங்களுக்கு கொடி பிடிக்கிரோம்.
///டெக்ஸ் கதை நல்ல இல்லை என்று கூறுவதற்கு கூட இங்கு டெக்ஸ் ரசிகர்கள் மனம் நோகமல் சொல்ல வேண்டும்.///
Deleteஅப்படியெல்லாம் ரூல்ஸ் எதுவுமில்லையே கணேஷ்குமார்.!
உங்கள் பகடியை பதில் பகடி செய்திருப்போமே தவிர நல்லா இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு யாரும் (குறைந்தபட்சம் நான்) சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.!
உங்கள் மனதுக்கு தோன்றும் விமர்சனத்தை தாராளமாக எழுதுங்கள்.! ஜாலியாக விவாதிப்போம். .! :-)
உங்கள் மனதுக்கு தோன்றும் விமர்சனத்தை தாராளமாக எழுதுங்கள்.! ஜாலியாக விவாதிப்போம். .! :-)\\\\
Deleteதராளமாக கண்ணண்.
என்னை பொறுத்தவரை டெக்ஸ் காமிக்ஸ் வெளியிட கருத்துக்களை எதற்காக ஆசிரியர் கேட்க வேண்டும்?.
எதிர் கட்சிக்கு டெபாசிட் போகும் என்று சொன்னால் கூட எலெக்ஷன் நடத்தலாம். ஆனால் எதிர் கட்சியே இல்லை.
அப்புறம் ரவுடி டெக்ஸ் வேண்டுமா வேண்டாமா என்கிற கருத்து கேட்கும் பஞ்சாயத்து. ஈரோட்டில் ரவுடி டெக்ஸ் வெளியிட போகிறோம், அதன் விலை இவ்வளவுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.
//கேட்டால் காமிக்ஸ் என்னும் விளக்கு டெக்ஸ் என்ற எண்ணெய் தான் எரிகிறது என்று ஆசிரியர் விளக்கம் கொடுப்பார்//
Deleteநூற்றியொன்றாவது தபாவாய் நான் தம் கட்டி விளக்க அவசியமில்லாது செய்ததற்கு டாங்ஸ் சார் ! ஒரே வரியில் நிதர்சனத்தை உணர்த்தி விட்டீர்கள் !!
@ Elango Dcw : ராபின் கதைகளுள் ஒரு சீரான தரம் நிலவுவதில்லை சார் ! அன்றைக்கு ஹிட் கதைகளை வெளியிட்டதிலும் என் பங்கு பூஜ்யமே ; இன்றைக்கு சில மிதக் கதைகள் வெளியாகியதிலும் என் பங்கு சைபர் தான் ! பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளுக்கு நெட்டில் விமர்சனங்கள் ; அலசல்கள் கிடைப்பது போல் இத்தாலிய கதை வரிசைகளுக்கு (டெக்ஸ் நீங்கலாய் ; மார்ட்டின் நீங்கலாய்) அத்தனை inputs கிடைப்பது அரிதே ! So இன்க்கி-பின்க்கி-பாங்க்கி தான் தேர்வுமுறைகள் ! Having said that - சமீபத்து "தெய்வம் நின்று கொல்லும்" ; "கை சீவம்மா கை சீவு" - decent கதைகள் தானே சார் ?
Deleteவணக்கம். ..படித்தவுடன் வேலைகளை சற்று தள்ளி வைத்து விட்டு உடனே ஏதாவது எழுத தோன்றுகிறது என்றால் அது டெக்ஸ் எனும் அந்த மந்திர சொல்..டெக்ஸ் புராணம் எடுத்தாலே வண்டியை ரிவர்ஸில் எடுக்கும் சில அரிதான அபூர்வமான ரசிகர்கள் இருக்கும் இந்த யுகத்திலும் டெக்ஸ் புக் கண்டவுடன் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை 100 க்கு 90 பேர் உணர்வார்கள் என்பது நிதர்சனம்...(1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் (டெக்ஸ் புகழ்)மறைவதில்லை. ..
ReplyDeleteடெக்ஸை பற்றிய புராணமாக இருக்கும் இந்த நேரத்தில் எனது மனதில் இருப்பதை தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன். ..சிலருக்கு தர்ம சங்கடத்தையும் வியப்பையும் தந்தால் .அது டெக்ஸுக்கே...
1.தலையில்லா போராளியை கையில் ஏந்திய அந்த தருணம் மிரண்டு தான் போனேன் சைஸை கண்டு.ஆனால் அடுத்த நொடியே இந்த விலைக்கு நார்மல் சைஸில் வந்து இருந்தால் 2 கதைகளை ருசித்து இருப்பேனே...ஆசிரியர் ஒரு பதிவில் சொன்னது...சிறுவன் ஒருவன் 100 ரூபாய் எடுத்து கொண்டு புத்தகம் வாங்க அலுவலகம் வந்து . etc.....சிவி வரைந்த கதைகளை படித்திருக்கிறோம்...இன்னும் படிக்க இருக்கிறோம்.த.போராளி சைஸுக்கு ஒரு டெக்ஸ் புக் வெளியிட ஆசை இருந்தால் .அதற்கு என்னுடைய தகுதியாக பார்ப்பது ஒரு கதைக்காக 7 வருடங்களாக சித்திரங்களை செதுக்கிய அந்த சிற்பின் எமனின் வாசலாக இருக்கும்..இன்னும் நிைய இருக்கிறது. .வேலை அழைப்பதால்.தொடரும். .....நன்றி
விஜயன் சார்,
ReplyDelete// மௌரோ போசெல்லியின் கதைக்கு அட்டகாச ஓவியர் சிவிடெல்லி சித்திரங்கள் தீட்ட "பாண்நீ புதையல்" என்றதொரு முழுவண்ண - முழுநீள சாகசம் இந்த மாதம் வெளியாகியுள்ளது //
ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் புத்தகமாக இந்த புத்தகத்தை வெளியிடப் போவதை காலம் தாழ்த்தாமல் உடனே அறிவிக்க வேண்டுகிறேன்.
இதை நான் வழிமொழிகிறேன்.
Deleteடெக்ஸ் மறுபதிப்புக்களிற்கு பதில் வேறு புதிய காமிக்ஸ்கள் முயற்சிக்கலாம்.
ReplyDeleteடெக்ஸ் மறுபதிப்புகள் தான் தொடர்ச்சியாய் விற்பனையில் நம்பர் 1 இடம் பிடித்து வருகின்றன சார் ! டிராகன் நகரம் காலி ; பவளச் சிலை மர்மம் காலி ; சைத்தான் சாம்ராஜ்யம் almost காலி ; பழி வாங்கும் புயலும் almost காலி !! விரட்டும் விதி காலி !!
Deleteடெக்ஸ் புக் கண்டவுடன் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை 100 க்கு 90 பேர் உணர்வார்கள் என்பது நிதர்சனம்...(1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் (டெக்ஸ் புகழ்)மறைவதில்லை. ..
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள் நண்பா!
மறைக்கிறதே ஒன்று இரண்டு கைகள் தானுங்கோ
Deleteஅவையும் சல்லடைகள் போல் விரிந்து நிற்கும் கைகளே !!
Deleteடியர் எடிட்டர்
ReplyDeleteஇப்படி எல்லாம் கலர் கலராய் tex படம் போட்டுவிட்டு 8-9 புக்கு மட்டும் கண்ணில் காட்டுவது அநியாயமுங்கோ ! Milestone Tex என்று ஒரு மினி சீரிஸ் ஆரம்பிச்சு 50, 100,150, 200, 250, 300,350, 400,450, 500,550, 600,650, 700 ஆகியவற்றை நாலு மாசத்துக்கு ஒரு தபா வண்ணத்தில் போடுவீங்களாம் .. நாங்க வாங்கி படிப்போமாம் :-D :-) 5 வருஷம் ஓடும் இந்த சீரிஸ் .. ஏற்கவனவே BW-ல் கதை வந்திருந்தால் பர்வாநஹீ . அதை வண்ணப்படுத்திடுங்கோ ... !!
அப்புறம் அந்த மே, ஜூலை, செப்டம்பர், நவம்பருக்கான நாலு கார்ட்டூன் புக்ஸ் என்னாச்சு சார் ?
ஒரு smurf , ஒரு benny, ஒரு லியோனார்டோ (பார்றா இவனை ?!), ஒரு சிக் பில் ... அல்லது சுட்டி லக்கி ... அல்லது புதிய லக்கி லூக் ..
ஒரு smurf , ஒரு benny, ஒரு லியோனார்டோ.
Deleteஇந்த கதை தொகுப்பில் சிக் பில் வேண்டாம், சுமாராகவே கடந்த சில இதழ்கள் உள்ளன.
///Milestone Tex என்று ஒரு மினி சீரிஸ் ஆரம்பிச்சு 50, 100,150, 200, 250, 300,350, 400,450, 500,550, 600,650, 700 ஆகியவற்றை நாலு மாசத்துக்கு ஒரு தபா வண்ணத்தில் போடுவீங்களாம் .. நாங்க வாங்கி படிப்போமாம் ///
Deleteநாங்க இதுக்கு 10000 லைக்ஸ் போடுவோமாம்!
///அப்புறம் அந்த மே, ஜூலை, செப்டம்பர், நவம்பருக்கான நாலு கார்ட்டூன் புக்ஸ் என்னாச்சு சார் ?
Deleteஒரு smurf , ஒரு benny, ஒரு லியோனார்டோ (பார்றா இவனை ?!), ஒரு சிக் பில் ... அல்லது சுட்டி லக்கி ... அல்லது புதிய லக்கி லூக் ..///
அப்டி கேளுங்க ராகவன் ஜி.! ஆனா அந்த தாத்தாவ்ஸ் மாத்திரம் வாணாமே..!;-)
நேக்குமே டெக்சின் ஜெகஜோதியைப் பார்க்கும் போது கிறுகிறுக்கத் தான் செய்கிறது ; வாய் பார்த்தே நமக்கு வயசாகிடுமோவென்று !! ஏதாச்சும் செய்வோம்ம்ம்ம்ம் !!
DeleteDitto - கார்ட்டூன் கோரிக்கைக்குமே !!
///ஒரு smurf , ஒரு benny, ஒரு லியோனார்டோ (பார்றா இவனை ?!), ஒரு சிக் பில் ... அல்லது சுட்டி லக்கி ... அல்லது புதிய லக்கி லூக் ..///
Deleteஇதுல பென்னி மட்டும் இல்லேன்னா நேக்கு ஓக்கே..!
ஏ... அடியும் ஒதையும் கலந்து வச்சு
ReplyDeleteவிடிய விடிய விருந்து வச்சா..
போக்கிரி டெக்ஸு போக்கிரி டெக்ஸு
இடுப்பு எலும்ப ஒடுச்சுவச்சு
அடுப்பில்லாம எரியவச்சா
போக்கிரி டெக்ஸு போக்கிரி டெக்ஸு
அடுத்த ட்ரெண்ட் கதைக்கு புலவர் சிவகாசி சௌ.ஸ்ரீ.மு.வி அவர்களுக்கு ஒரு உதவிக் கவிஞர் தேவையாம். ஈரோட்டு கவிஞர் ஈ.வியார் அப்ளை பண்ணவும் :-)
Deleteஅஸ்கு..பிஸ்க்கு...!! GK வசம் "வாரும் காப்பி ரைட்ஸ் " என்றால், அடியேன் வசம் "கவிதை காப்பி ரைட்ஸ் " !!
Deleteபோக்கிரி டெக்ஸ் பாட்டு சூப்பர் ஈ.வி.
ReplyDelete'பாலைவனத்தில் ஒரு கப்பல்' அட்டைப்படம் சூப்பர்! பேக்ரவுண்டில் அந்தக் கப்பலும், மலைமுகட்டின் பின்னே பளீரிடும் சூரிய கதிர்களும் அருமை!! அங்கஹீனங்கள் எதுவுமின்றி தல'யும் கம்பீரமாய்!
ReplyDeleteஉள்பக்க டீசரில் மீண்டும் டெக்ஸின் பெரியப்பா!
அங்கஹீனங்கள் எதுவுமின்றி தல'யும் கம்பீரமாய்.
Delete😁😀
உள்பக்க டீசரில் மீண்டும் டெக்ஸின் பெரியப்பா
😂😁
'தல'க்கு லேசாய் நெற்றி ஏறுகிறது !! So பெரிப்பா ஜாடை இயல்பே !!
Delete2023 ல்டெக்ஸின் 75 வது வருடம் வருது.
ReplyDeleteபோக்கிரி டெக்ஸ், கலர் டெக்ஸ் இது எல்லாம் மத்த இதழ்களுக்கான ஸ்லாட்டுகளை பாதிக்கா வண்ணம் கொண்டு வந்துடுங்க.
ஏற்கனவே வந்த ஒரு தலைவன் ஒரு சகாப்தம் தொடரில் வந்த மீதக் கதைகள் பட்டய கிளப்பபுவதா கேள்வி.
இன்னும் சில மறுபதிப்புகள் தவிர டெக்ஸ்ல மறுபதிப்பு கோரிக்கை அதிகம் இருக்காதுன்னு நினைக்கிறேன். இரண்டு அல்லது மூன்று கதைகளை ஒரே மறுபதிப்பு ஸ்பெசலா தனி முன்பதிவுக்கு போட்டு முடிச்சுடுங்க. அப்ப புது கதைகளுக்கு ரூட் க்ளியர் ஆயிடும்.
// தலைவன் ஒரு சகாப்தம் //
Deleteஇந்த கதையை இன்னும் படித்து முடிக்கவில்லை. இது மற்றும் ஒரு தூங்கிப் போன டைம் தான்.. அதை படிக்க ஆரம்பிக்கும் போது எல்லாம் தூக்கம் வரும்... தலைவன் ஒரு சகாப்தத்திற்கும் இதே கதைதான் :-)
என் எதிர்பார்ப்பெல்லாம் கார்சனுக்கொரு ஸ்பெஷல் தடத்தை போனெல்லி ஏற்படுத்திட மாட்டார்களா என்பதிலேயே !! இம்மாத இதழில் கார்சனோடு பயணித்து முடித்த கையோடு சொல்கிறேன் guys - பின்றார் தாடிவாலா !!
Deleteஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..
Deleteதலைவன் ஒரு சகாப்தத்திற்கும் இதே கதைதான் :-)//
Deleteஅதனுடைய தொடர்ச்சியான ஆல்பங்கள் எல்லாம் ஹிட்டுங்க பரணி. ஓவியங்கள் எல்லாம் அள்ளுது.
///என் எதிர்பார்ப்பெல்லாம் கார்சனுக்கொரு ஸ்பெஷல் தடத்தை போனெல்லி ஏற்படுத்திட மாட்டார்களா என்பதிலேயே !! ///
Deleteஜே..!ஜே..!
///என் எதிர்பார்ப்பெல்லாம் கார்சனுக்கொரு ஸ்பெஷல் தடத்தை போனெல்லி ஏற்படுத்திட மாட்டார்களா என்பதிலேயே !! இம்மாத இதழில் கார்சனோடு பயணித்து முடித்த கையோடு சொல்கிறேன் guys - பின்றார் தாடிவாலா !!////
Deleteடெக்ஸ் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் தாடிவாலாவின் திறமை பன்மடங்கு எகிறியடிக்குமே! இந்தமுறையும் டெக்ஸுக்கு சிக்கலோ என்னமோ?!!
///என் எதிர்பார்ப்பெல்லாம் கார்சனுக்கொரு ஸ்பெஷல் தடத்தை போனெல்லி ஏற்படுத்திட மாட்டார்களா என்பதிலேயே !! இம்மாத இதழில் கார்சனோடு பயணித்து முடித்த கையோடு சொல்கிறேன் guys - பின்றார் தாடிவாலா !!///
Deleteகார்சனின் கடந்தகாலம் போல இன்னொரு சாகசம் கிடைத்தால்.... அடடா... அடடா....ஏங்குகிறேன் நான்.!
வைக்கிங் தீவு மர்மம் கதையில் கடைசி பக்கத்தில் கார்சன் பேசும் வெற்றிகரமான தோல்வி டயலாக் சமீபத்தில் யாரோ.. சொன்ன மாதிரி லேசா அரசியல் நெடி அடிப்பது எனக்கு மட்டும்தானா?..
ReplyDeletePadmanaban Sir. When the story came then itself our editor explained he had the current political situation in the mind and wrote it. 😀
Deleteஅதனில் நெடியடிக்காது போயிருந்தால் தான் சார் பிரச்னையே !!
Delete.ஒரு சிறிய வேண்டுகோள்.. பொதுவாகவே நமது தமிழாக்கத்தில் சில இடங்களில் ன, ண மற்றும் ர, ற வரும் இடங்களில் தவறு ஏற்படுகிறது. Proof reading ல் அவசியம் கவனிக்கவும்.
ReplyDeleteடெக்ஸ் கதைகள் ஓ கே...
ReplyDeleteஆனால் மற்ற லார்கோ ,ஷெல்டன் ,பதிமூணு , டைகர் மாதிரி வேறு பல கதைகளை முயற்சியுங்கள் ஐயா...
காமிக்ஸ் ஒரு கடல்.
எல்லாரும் கப்பல்ல போய்ட்ருக்காங்க...
நாமல்லாமே படகுலகூட ஏறவே மாட்டோமான்னு தோணுது ஐயா...
கட்டுமரத்தையே பிடிச்சிட்டு விடமாட்டேங்கிறோமோன்னு சந்தேகம் வருது..
லியனார்டோ கோவிந்தா
ஸ்மர்ப்ஸ் காலி
ஜில் ஜோர்டன் அம்போ
ஜூலியா அம்புட்டுதேன்
மதிமுகி டக் அவுட்
கான்டெம்பரரி ரக லார்கோ போன்ற கதைகளே கிடைக்கவில்லையா..
இந்த வருஷம் தீபாவளியே ஜூலியாவோட தானே.!
Deleteசார் , டெக்ஸ் 100, 200,300,400 என்று எல்லாம் காட்டி , எமது கடைவாயில் நீர்பிரவாகத்தை வரவழைத்து விட்டு , சும்மா இருந்தால் எப்படி? எதாவது ஒரு புது தடத்தில் அல்லது பழைய தடத்தில் ஆவது வரவழைக்க அவனை செய்யுங்கள் சார். போக்கிரி டெக்ஸ், எமக்கு ரொம்பவே புதுசு . தெறிக்க விட எனக்கு டபுள் ஓகே . எப்போதும் காமிக்ஸ் தடத்துகே எனது முழு ஓட்டு. டெய்ரி மில்க் டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. டீலுக்கு டபுள் ஓகே சார்.
ReplyDeleteஒரு தடதடக்கும் டெக்ஸ் எக்ஸ்பிரஸ் !!!
ReplyDeleteSir இந்த பதிவு பார்த்ததுமே டெக்ஸ் பயர்
பத்திகிச்சு கமெண்ட் போடாம இருக்க முடியல.
கனவுகள் கூட டெக்ஸ் தான் வரப்போகுது.
டியர் சார்,
ReplyDeleteஅப்றம் விறுவிறுப்பான கார்டூன் தொடர்கள், பற்றி_ தாங்கள் ஜூனியர் & மினி லயன் மற்றும் தற்போது கார்டூன் சந்தா என்று பலரை அறிமுகப்படுத்தியதில் All time ஃபேவரைட் ஆக மனதில் இடம் பிடித்தவர்கள் - லக்கிலுக் மற்றும் சிக் பில் மட்டும் தான்.
எனவே, மற்ற தொடர்கள் எனும் போது சூப்பராக ஏதேனும் தொடர் இருக்குமோ என்ற சபலம் உண்டு தானே? i
என்னைப் பொறுத்தவரை ஒரு சில தொடர்கள் சேர்த்தாகி விட்டது. ( உ-ம்) ஸ் மர்ப்ஸ், ப்ளுளுகோட் பட்டாளம், மதியில்லா மந்திரி போன்று . ---நான்கைந்து ஆல்பங்கள் சேர்த்தாச்சு. பெரும்பான்மை வாசகர்கள் விரும்பாமல் விற்பனையில் தொய்வு ஏற்பட்டு இனிமேல் வெளியிடாவிட்டாலும் என்ன மாதிரியான கதையமைப்பு என்று தெரிந்துவிட்டதால் ஒன்றும் வருத்தமில்லை. (விரும்பும்போது மறுபடி எடுத்து படித்துக் கொள்ளளலாம்.)
தற்போது மேக் & ஜாக் பட்டைய கிளப்புகிறது.
இது போன்றுறு இன்னும் பல தொடர்களை பரிசீலனை பண்ண புதிது புதிதாய் அறிமுகம் செய்யவேண்டுகிறேன்.
நன்றி iii
காமிக்ஸ் நண்பர்களே,
ReplyDeleteஎல்லோரும் பட்ஜெட் போட்டுடுத்தான் செலவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் Tex, Tex என்று ஆராதிப்பது டெக்ஸ் தவிர வேறு கதைத் தொடர்ககளை வாங்க பணம் செலவு செய்ய மாட்டிர்கள் என்றே கருதுகிறேன்
விற்பனை குறையக் குறைய தொடர்கள் நிறுத்தப்படுவது என்பதுடன் விலையேற்றம் என்பதும் தவிர்க்க இயலாததாகிவிடும்.
பழைய நியூஸ் பிரிண்ட்காகாகிதத்தில் வெளிவந்த டெக்ஸ் இதழ்கள் ஒவ்வொன்றையும் எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கு கணக் கே இல்லை. ஆனால் தற்போது தரத்தில் என்னால் மறுவாசிப்புக்குகு உகந்ததாக ஒன்று இரண்டுடு கதைகளைத் தான் குறிப்பிட முடியும்
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால். டெக்ஸ் _ தொடரில் 700 கதைகள் இருந்து விட்டுப் போகட்டும்' .
ஆசிரியர் அதில் மிகவும் சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கால அவகாசம் கொடுத்து விட்டு மற்ற கதைத் தொடர்களும் இருந்தால் தான் சந்தா பிரிவு களை கட்டும் .
சந்தா B -யில் தீபாவளி மலர் என்று என் அபிமான ஹீரோக்கள் இடம் பெறவில்லை எனில் - சந்தா Bயை தவிர்த்திருப்பேன். (என்ன செய்ய டெக்ஸ் ஆல்பங்கள் நிறைய சேர்த்தாச்சுசு. மீண்டும் மீண்டும் டெக்ஸை படிக்க இருப்பவைகளே போதும் என்பதே என் நிலை. மன்னிக்க . )
நிச்சயமாக ஜி நான் டெக்ஸ் மட்டுமே வாங்குகிறேன்.
Deleteபட்ஜட் தான் காரணம்.
இன்னும் வைகிங் தீவு வாங்கவில்லை அடுத்த மாத பட்ஜட்ல் வாங்குவேன் அதுவரை கடையில் ஸ்டாக் இருந்தால்.
10ரூபாய் விற்றபோது அனைத்தும் வாங்கி படித்தேன்.
ஆனால் குடும்பம் என்று ஆனபிறகு
காமிக்ஸ் தாகத்தை சற்று அடக்கி தானே ஆக வேண்டும்.
ஆனால் ஆசிரியரின் இது போன்ற பதிவுகள் குறிப்பாக டெக்ஸ் பதிவுகள் உடனே வாங்க தூண்டுகிறது என்ன செய்ய?
டியர் சார்,
ReplyDeleteஅப்றம் விறுவிறுப்பான கார்டூன் தொடர்கள், பற்றி_ தாங்கள் ஜூனியர் & மினி லயன் மற்றும் தற்போது கார்டூன் சந்தா என்று பலரை அறிமுகப்படுத்தியதில் All time ஃபேவரைட் ஆக மனதில் இடம் பிடித்தவர்கள் - லக்கிலுக் மற்றும் சிக் பில் மட்டும் தான்.
எனவே, மற்ற தொடர்கள் எனும் போது சூப்பராக ஏதேனும் தொடர் இருக்குமோ என்ற சபலம் உண்டு தானே? i
என்னைப் பொறுத்தவரை ஒரு சில தொடர்கள் சேர்த்தாகி விட்டது. ( உ-ம்) ஸ் மர்ப்ஸ், ப்ளுளுகோட் பட்டாளம், மதியில்லா மந்திரி போன்று . ---நான்கைந்து ஆல்பங்கள் சேர்த்தாச்சு. பெரும்பான்மை வாசகர்கள் விரும்பாமல் விற்பனையில் தொய்வு ஏற்பட்டு இனிமேல் வெளியிடாவிட்டாலும் என்ன மாதிரியான கதையமைப்பு என்று தெரிந்துவிட்டதால் ஒன்றும் வருத்தமில்லை. (விரும்பும்போது மறுபடி எடுத்து படித்துக் கொள்ளளலாம்.)
தற்போது மேக் & ஜாக் பட்டைய கிளப்புகிறது.
இது போன்றுறு இன்னும் பல தொடர்களை பரிசீலனை பண்ண புதிது புதிதாய் அறிமுகம் செய்யவேண்டுகிறேன்.
நன்றி iii
/And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ///
ReplyDeleteவாவ்..!! வாழ்த்துகள் ஷெரீப்..!! பட்டையக் கிளப்புங்க..!! :)
70 வருடங்களாகத் தன் ராசியான மஞ்சள் சொக்காயை மாற்றாத டெக்ஸ் - இன்னு 'பாண்நீ புதையல்' கதையில் சிவப்புச் சொக்காய் சகிதம் வலம் வருகிறார் என்றால்.. அதன் பின்புலத்தில் ஒரு அர்த்தமிருக்காமல் போகாது!
ReplyDeleteஅப்படியென்ன நிர்பந்தம் வந்தது டெக்ஸுக்கு?!! அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!
இதன் ஓவிய நேர்த்தியும் ஆவல் மீட்டரை ஏகத்துக்கும் எகிறச் செய்கிறது! ஒரு சதுப்புநில புள்வெளியில் கூட்டமாய் குதிரைகளில் விரைந்துவரும் ஒரு குழுவை, இருளின் பின்னணியில் இதைவிடவும் நேர்த்தியாய் வரைந்துவிட முடியாது - ச்சும்மா மிரட்டுது போங்க!!
Deleteஎன்று காண்பேனோ என்ற ஏக்கப் பெருமூச்சு எனக்குள்!! எடிட்டர் சார், எப்பப்போட்டாலும் தயவுசெய்து வண்ணத்திலேயே போடுங்கள்!
சிகப்பு சொக்காய் மர்மம்
Delete//மாமூலான மஞ்சள் சொக்காய்க்கு விடுப்புத் தந்து, இம்முறை சிகப்பில் ஜொலிக்கும் ரேஞ்சரைப் பார்த்து பெருமூச்சைப் பெருசாய் விட்டுக்கொள்கிறேன்!!மாட்டுவண்டியில் ஒரு ரயிலைத் துரத்திப் பிடிக்க ஏதேனும் வழியுண்டா என்று யாராச்சும் அகுடியா சொல்லுங்களேன் ப்ளீஸ் ?//
ReplyDeleteசார்...இப்போதே நீங்கள் திட்டமிட்டு புறப்பட்டால், ஆகஸ்டில் கிளம்பும் ஈரோடு எக்ஸ்பிரஸை பிடித்து விடலாம் 🙏🙏🙏🙏🙏
ஆமாங் சார்.. ஏதாவது ரயில் மறியல் பண்ணியாவது உங்க மாட்டுவண்டி வர்றவரைக்கும் ரயிலை நிறுத்தி வைக்கிறோம் சார்!
Deleteஒருவேளை போனெல்லியில் கார்சனுக்கு தனித்தடம் உருவாக்கி ,அதை தமிழிலும் வெளியிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம் ..!
ReplyDeleteஅந்த கதைகளின் தலைப்பு எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை...
வறுத்தக்கறியும் ஒரு வல்லூறும்
தனியே ஒரு தாடி
வெள்ளிமுடி வேங்கை
சர்வமும் சாப்பாடே
பீருடன் ஒரு புயல்
ஆட்டுதாடி அன்லிமிட்டேட்
சலூனில் ஒரு ஒப்பந்தம்
பாலைவனத்தில் ஒரு பெருசு
கொடூரவனத்தில் குஸ்கா ....
இன்னும் வரும்...
KOK.,
Delete:)))))))) செம்ம செம்ம!
'கொடூர வனத்தில் குஸ்கா' - :)))))))
Me the 200 again ..
ReplyDeleteVaiking theevu paper quality is different and mate finish..am I correct...I like verymuch this quality sir...
ReplyDelete