Powered By Blogger

Thursday, June 28, 2018

கரம் கொடுப்போமே - ப்ளீஸ் ?

நண்பர்களே!

வணக்கம் !! சில மாதங்களுக்கு முன்னே நமது நண்பர் கரூர் ராஜசேகருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நம் நண்பர்களில் பலரும் அவருடைய சிகிச்சைக்கு தம்மால் இயன்ற நிதியுதவி +  அக்கறையான விசாரிப்பு + பிரார்த்தனைகளைச் செய்து நேசக்கரம் நீட்டியது நாமறிந்ததே!  அதன் பலனாய் இன்று அவருடைய உடல்நலம் வெகுவாகத் தேறியிருப்பதாக நமக்கு செய்திகள் வரும்போது இந்த "பொம்மை புக் " நட்பு வட்டத்தின் மகத்தான ஆற்றலை எண்ணி ஆயிரத்துஒன்றாவது தடவையாக வியக்காமல் இருக்கமுடியவில்லை!! சென்றமுறை ஈரோடு புத்தகவிழாவில் நாம் சந்தித்த அதே பழைய ராஜசேகராக மீண்டும் தன் உற்சாகப் பங்களிப்பை எதிர்வரும் நாட்களிலும் நண்பர் செய்யவார் என்று உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

நண்பர்கள் தம் நேசக்கரத்தை மீண்டும் ஒருமுறை நீட்டிடும் வேளை இதுவென்று தோன்றுகிறது! ஆனால், இம்முறை அது நம் நண்பர்களில் வேறொருவருக்கானது!

கோவையைச் சேர்ந்த நண்பர் 'ப்ளைஸி பாபு'வை உங்களில் பலரும் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்...!  சில நாட்களுக்கு முன்பு நண்பருக்கொரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு  குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்  அந்தக் குழந்தையின் இருதயத்தில் பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்! டாக்டருடைய பரிந்துரையின்பேரில் சிகிச்சைக்காக இன்று திருவனந்தபுரத்திலுள்ள SCT hospital-க்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கிறார்கள் ! அங்கே குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வெள்ளியன்று வருகை புரியவிருக்கும் சிறப்பு மருத்துவர் குழுவுக்காகக் காத்திருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்களாம்!!

நண்பர் கரூர் குணா மூலமாக இந்தச் செய்தியை கேள்விப்பட்ட நம் நண்பர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை ஏற்கனவே செய்யத் தொடங்கிவிட்டதாக செய்தி வந்திருக்கிறது! நமது தளத்தில் இந்தச் செய்தி பரிமாறப்படுமானால் இன்னும் கூடுதலாக அவருக்கு உதவிகள் கிடைக்கக்கூடுமே என்று தோன்றியதாலேயே இந்தப் பதிவு!!

நண்பரின் குழந்தைக்கு நல்லமுறையில் சிகிச்சை பெற்று பூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திப்போம்!

நண்பருக்கு உதவிட நினைப்பவர்கள் பின்வரும் வாட்ஸ்அப் எண்களில் தொடர்புகொண்டு அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றிடலாமே ! 

கரூர் குணா : 9786822001
ஈரோடு விஜய் : 7598325050
கிட்ஆர்டின் கண்ணன் : 9787222717

சிறு துளியும் பெரு வெள்ளமாகிடக்கூடும் தானே folks ? நண்பரின் இந்த இக்கட்டான தருணத்தில், நம்மால் இயன்றதைச் செய்திட முயற்சிப்போமே ?  நிதியில் உதவிடும் நிலையில் இல்லாதோர், தத்தம் பிரார்த்தனைகளில் அந்த மழலையை கொணர்ந்தாலும் கூட அதுவுமே   நிச்சயம்  உதவிடும் என்பது எனது நம்பிக்கை ! கரம் கொடுப்போமே - ப்ளீஸ் ? 

61 comments:

 1. Replies
  1. /// Sorry ///

   அவசியமில்லை! குழந்தைக்கான முதல் பிரார்த்தனை உங்களுடையதாக எடுத்துக் கொள்ளலாம்!

   Delete
 2. எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு குழந்தை நலம்பெற வேண்டுகிறேன்!

  ReplyDelete
 3. நண்பர் ப்ளைசி பாபுவின் குழந்தை சீக்கிரமே பூரண சுகம் பெற்றுத் திரும்ப எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 4. கண்டிப்பாக கரம் கொடுப்போம். அவரின் குழந்தை பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  அவரை நமது விக்ரம் கல்யாண விழாவில் சந்தித்தேன்.

  ReplyDelete
 5. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 6. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 7. நண்பர் ப்ளைசி பாபுவின் குழந்தை சீக்கிரமே பூரண சுகம் பெற்றுத் திரும்ப எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கிறேன்..!!

  ReplyDelete
 8. கண்டிப்பாக கரம் கொடுப்போம். அவரின் குழந்தை பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.எவ்வித உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்

  ReplyDelete
 9. பிளைசி பாபு வின் குழந்தை கடவுள் அருளினால் நீண்ட காலம் இப் புவியில் வாழ்வாங்கு வாழும்

  ReplyDelete
  Replies
  1. திரு. செந்தில் சத்யா உங்கள் வாயுரை நின்று நிலைக்கட்டும். முகமறியா இளம் மலருக்கு நம் அன்பும்,இறைவனின் அருளும் நிறையட்டும்.

   Delete
  2. திரு. செந்தில் சத்யா உங்கள் வாயுரை நின்று நிலைக்கட்டும். முகமறியா இளம் மலருக்கு நம் அன்பும்,இறைவனின் அருளும் நிறையட்டும்.

   Delete
  3. நண்பரே என் வாயுரை பலித்தால் மிக மிக அளவில்லாத சந்தோஷமே

   Delete
 10. Sree Chitra Tirunal - மிகவும் நல்ல ஆஸ்பத்திரி, அதுவும் இதய சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த சிகிச்சை கொடுப்பார்கள்.

  ReplyDelete
 11. எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் பரிபூரணமாக நலம் பெற வேண்டுகிறேன்.

  ReplyDelete
 12. குடுத்துட்ட போச்சு

  ReplyDelete
 13. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 14. நண்பர் ப்ளைசி பாபுவின் குழந்தை சீக்கிரமே பூரண சுகம் பெற்றுத் திரும்ப எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 15. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 16. murugan arulal kuzhathai viraivil poorana nalam perum.

  Kindly share the a/c details here ...

  ReplyDelete
 17. நண்பர் பாபுவின் குழந்தை நீடூழி நிலமிருக்கும்வரை வாழட்டும்

  ReplyDelete
 18. நண்பர் ப்ளைசி பாபு அவர்களின் குழந்தை எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளோடு பூரண நலம் பெற்று வாழ நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றோம்,உதவிகளை செய்ய ஆவலுடன் உள்ளோம்.

  ReplyDelete
 19. நண்பர் ப்ளைசி பாபுவின் குழந்தை சீக்கிரமே பூரண சுகம் பெற்றுத் திரும்ப எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கிறேன்..!!

  ReplyDelete
 20. பாபு அவர்களின் குழந்தை நலம் பெற இறைவன் துணைபுரிவாராக...

  ReplyDelete
 21. நண்பர் பாபுவின் குழந்தை நலம்பெற ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்...

  ReplyDelete
 22. பாபு அண்ணாவின் குழந்தை நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன்
  ஓம் சாயி ராம்

  ReplyDelete
 23. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 24. பிரார்த்தனை மிகப்ரெிய பலம்சேர்க்கும்!
  பிரார்த்தியுங்கள் நண்பர்களே..!
  சிசு நலமோடு வீடு திரும்பட்டும்!

  ReplyDelete
 25. நண்பரின் குழந்தை பரிபுரணாமாக குணமாக இறைவனை பிரார்த்திகிறோம்!

  ReplyDelete
 26. .எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான்

  ReplyDelete
 27. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 28. குழந்தை விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்..

  ReplyDelete

 29. நண்பர் பாபு அவர்களின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 30. திரு.ப்ளைசி பாபுவும், அவர்தம் துணைவியாரும் தைரியமாக இருக்க வேண்டிய நேரம் இது.
  நிச்சயம் நல்லதே நடக்கும்.
  குழந்தை மிக விரைவில் பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 31. சகோதரர் பாபு அவர்களின் குழந்தை நலம் பெற வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 32. நண்பரின் குழந்தை நலம் பெற பிரார்த்திக்கிறேன் !!!

  ReplyDelete
 33. பாபுவின் குழந்தை பூரணகுணம் அடைய இறைவன் அருள் புரிவாராக...!

  ReplyDelete
 34. நண்பர் பாபுவின் குழந்தை விரைவில் குணமடைந்து பல்லாண்டு வாழவும் பாபுவிறகும்அவரது குடும்பத்திற்கும் இந்த சிக்கலான தருணத்தைக கடக்க எல்லாவித உதவிகளும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 35. Pray for the speedy recovery of baby of babu..!

  ReplyDelete
 36. I pray God for speedy recovery of baby's health.

  ReplyDelete
 37. குழந்தை பூரண குணமடைய திருச்செந்தூர் முருகன் அருளை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 38. நண்பர் பாபுவின் குழந்தை விரைவில் குணமடைந்து பல்லாண்டு வாழவும் பாபுவிறகும்அவரது குடும்பத்திற்கும் இந்த சிக்கலான தருணத்தைக கடக்க எல்லாவித உதவிகளும் கிடைக்க என்னுடைய மனமார்ந்த பிரார்தனைகள் .

  ReplyDelete
 39. நண்பர் பாபுவின் அழகான குழந்தை பூரண குணமடைந்து, நீண்ட நாட்கள் வளமுடனும்,நலமுடனும் வாழ்க,வாழ்கவென வாழ்த்துகிறென்.ஆண்டவன் அருள் குழந்தைக்கு பூரணமாக உண்டு...

  ReplyDelete
 40. விரைவாக குணமடைய ஆண்டவனை
  வேண்டுகிறேன்

  ReplyDelete
 41. நண்பர் பாபுவின் குழந்தை விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கின்றேன்.

  ReplyDelete
 42. நண்பரின் குழந்தை பரிபுரணாமாக குணமாக இறைவனை பிரார்த்திகிறோம்!

  ReplyDelete
 43. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete
 44. நண்பர் பாபுவின் குழந்தை விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 45. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
  இன்னும் மூன்று வாரங்கள் கழித்தே அறுவை சிகிச்சை பற்றி முடிவு செய்யப்படுமென்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
  நண்பர்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு நாட்கள் என்னால் சமாளித்திருக்க முடியாது.
  தனிச் செய்தியிலும், தொலைபேசி அழைப்பிலும் விசாரித்தவர்களுக்கு மட்டுமே நான் பதில் தந்திருந்தேன்.
  Lioncomics blogspot ல் என்னால் Comments போட முடியவில்லை.
  கரம் கொடுத்த நண்பர்களையும், முகமறியா நண்பர்களின் அக்கறையான நலவிசாரிப்புகளையும், முகவரி கூட தெரியாத நண்பர்களின் பிரார்த்தனைகளையும் பெற்றுத் தந்த விஜயன் சார் அவர்களுக்கு நன்றிகள்.
  சமூக வலைத்தளங்களில் நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகளை படித்து காட்டியே என் மனைவிக்கு தைரியம் சொல்கிறேன்.
  முன்பு என்னால் மனவருத்தத்தோடு விலகிச் சென்ற நண்பர்களையும், என் மனவருத்தம் போக்குவதற்கு உதவச் செய்த அன்புக்கு நன்றிகள் கோடி.
  நண்பர்களின் பிரார்த்தனைகள் மென்மேலும் என் குழந்தைக்கு தேவை என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  நன்றிகள் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையோடு இருங்கள் நண்பரே,நல்லதே நடக்கும்.

   Delete
  2. தங்கள் குழந்தையின் நலனுக்கான வேண்டுதல் எங்களின் பிரார்த்தனையில் தினமும். எல்லாம் வல்ல இறை அருள் புரியும்.

   Delete
 46. கண்டிப்பாக கரம் கொடுப்போம். அவரின் குழந்தை பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.எவ்வித உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்

  ReplyDelete
 47. நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! கடவுளின் அருளாலும் உங்களின் ஆதரவாலும் குழந்தையின் உடல்நலம் முன்னேற்றப் பாதையில்! நவம்பர் மாத இறுதியில் பரிசோதனைக்கு செல்லவிருக்கிறோம். உங்கள் பிரார்த்தனைகள் மூலம் நலம்பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள்!

  ReplyDelete
 48. நன்றிகள் நண்பர்களே!

  ReplyDelete
 49. Enayum enda pratanaiyil enaitu kongiren kastatil piraruku udavum manamey kadavul

  ReplyDelete