Powered By Blogger

Tuesday, May 15, 2018

RIP...!!

நண்பர்களே,

வணக்கம். ஒரு சகாப்தம் நேற்றோடு வரலாற்றின் ஒரு  நிரந்தர பக்கமாக உருமாறி விட்டது ! தனது ௮௨ -வது வயதில் ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் வான்ஸ் அமரராகி விட்டார் ! ௨௦௦௭ முதலே ஒய்வு நாடி பணிகள சகலத்துக்கும் விடை கொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் சிறியதொரு கிராமத்தில் குடியேறினார் ! பார்க்கின்சன் எனும் வயோதிகம் சார்ந்த சுகவீனம் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்திட - யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் ! நேற்றைக்கு கதவைத் தட்டியது காலன் எனும் போது அந்த அழைப்பை ஏற்காது போக முடியுமா - என்ன ?

பிரான்க்கோ பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின்  மறக்க முடியா இந்த மாமனிதரை நமக்கு ௧௯௮௬ முதற் பரிச்சயம் - இரத்தப் படலம் வாயிலாக !! பின்நாட்களில் சில ப்ரூனோ பிரேசில் ; ரோஜர் சாகஸங்கள் ; ஒன்றிரு மார்ஷல் டைகர் சாகஸங்கள் வாயிலாக திரு.வான்சின் ஒவிய ஜாலங்களை நாம் பார்த்திருப்பினும் - அந்த XIII தொடரின் அசாத்தியமே நமக்கெல்லாம் திரு.வான்ஸ் அவர்களின் நீங்கா நினைவுகளாய் அமைந்து போயின ! இன்னும் ஒரு நூறு வெற்றித் தொடர்கள் வெளிவந்து, ஒரு நூறு அட்டகாச ஓவியர்கள் நம் முன்னே அணிவகுத்தாலும் , திரு வான்ஸ் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்களின் உயரத்தை வேறு யாருமே தொட்டிட முடியுமென்று எனக்குத் தோன்றிடவில்லை !! நிம்மதியாய்த் துயிலுங்கள் சார் !!

உங்களின் நினைவை நம்மிடையே போற்றும்  விதமாய் உங்களின் படைப்புகளில், நாம் இதுவரை ரசித்திரா  ஏதேனும் ஒன்றை ௨௦௧௯-ல் நிச்சயமாக வெளியிடுவோம் !! 


65 comments:

 1. ஃபிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ் உலகில் மிக மிக பிரசித்தி பெற்ற ஓவியர் வில்லியம் வான்ஸ் ( 82 ) நேற்று மரணமடைந்தார்.

  காமிக்ஸ் வாசகர்களுக்கு இவரது மரணம் மிக பெரிய இழப்பு.

  சில ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயினால் அவதிப்பட்டுவந்த இந்த ஆற்றல் மிக்க மனிதர் அந்நோயுடனான தனது தொடர்பை இந்த மரணத்தின் மூலமாக துண்டித்துக் கொண்டுள்ளார்.

  அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 2. திரு.வில்லியம் வான்ஸ் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  தூரிகையால் கற்பனை பாத்திரங்களுக்கு உயிரூட்டிய மாபெரும் கலைஞன்.
  காமிக்ஸ் வாழுமட்டும் அன்னாரது பெயரும் நிலைத்து நிற்கும். காலன் தன் கடமையை சற்று தாமதமாக செய்திருந்தால் தன்னுடைய இரத்தப்படலம் படைப்பை பார்த்து பரவசபட்டிருப்பார்.அவரது ஆன்மா நிம்மதியாக துயிலட்டும்.

  ReplyDelete
 3. சித்திரங்களை ரகிக்கத தெரியாத, சித்திரக்காரர்களைப் பற்றி அறியாத 10 வயதில் இரத்தப் படலத்தின் ஓவியங்களைப் பார்த்து வியந்தது காமிக்ஸ் வாசிப்பின் மறக்க இயலா தருணங்களில் ஒன்று்

  ஏகாந்தமான கடலோரம், கடலலைகளிலிருத்து தெறிக்கும் நீர்த்திவலைகள், அந்த வீடு என கருப்பு வெள்ளையிலேயே அழிக்க இயலா அற்புதமான சித்திரங்களாக மனதில் பதிந்தவை.

  அவர் துயில் கொள்ளப் போகும் வெளி அவரின் சித்திரங்களைப் போல அழகிய ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.

  RIP திரு். வான்ஸ்.


  இந்த ஜாம்பவானை அறிமுகப் படுத்தியமதற்கு எடிட்டர் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த ஆண்டு அவரின் மாஸ்டர் பீஸ் மறு பதிப்பாக வண்ணத்தில் வருவது மிகப் பொருத்தமான ஒரு அஞ்சலியாக அமைந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. RIP திரு். வான்ஸ்.

   அவர் துயில் கொள்ளப் போகும் வெளி அவரின் சித்திரங்களைப் போல அழகிய ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.

   Delete
 4. ஈடு செய்ய முடியாத இழப்பு.

  ReplyDelete
 5. இறப்பென்பது இன்னொரு துயில் என்று சொல்வார்கள்... மீண்டும் எழுந்து வாருங்கள் திரு. வில்லியம் வான்ஸ்..!

  ReplyDelete
 6. RIP WILLIAM VANCE
  ONE OF HIS BEST THAVALAI MANTHAN MUTHIRAI

  ReplyDelete
 7. ஆழ்ந்த இரங்கல்கள் ..!!

  ReplyDelete
 8. இணையில்லாதவொரு கலைஞன்! என்றும் நம் மனதில் வாழ்ந்திடுவார்! இதயப்பூர்வமான அஞ்சலி!

  ReplyDelete
 9. RIP Mr. Vance...இனி செய்ய முடியா இழப்பு...
  துயரத்தில் வாழும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.....

  ReplyDelete
 10. எனது இதயப்பூர்வமான அஞ்சலி ஒரு மாமனிதனுக்கு!

  ReplyDelete
 11. மாமனிதா்களின் இழப்பு மனதில் இனம்புாியாத ஒரு உணா்வை உண்டாக்கவே செய்கிறது!

  ReplyDelete
 12. William vance ,in true sense ,could never perish as are great men before him..

  In everyone of the sketches drawn by him lies his heartbeat..

  His mortal remains might have been buried but the portrayals will remain as the imprints of his soul that are indestructible as they would never leave from the mind of the readers once they set theirs’ eyes upon them…

  His drawings will never age , never fade away from his fans’ minds ,and thus he will remain as an immortal..

  He poisoned the parchments with graphite through his lead pencils ,yet , the parchments come alive with his illustrations.

  He chooses 14th for his final exit as 13th shuns away from this planet ..

  Fans !! find solace among glorified drawings penciled by him ….

  ReplyDelete
 13. உம் மரணம் மாரணமய்யா

  ReplyDelete
 14. Thank you for giving a figure to my dream hero... Will be remembered forever. RIP

  ReplyDelete
 15. காமிக்ஸ்களை வெறும் பொம்மை புக்குகள் என்ற நிலையிலிருந்து உணர்வுப்பூர்வமாக சித்திரங்களால் சித்தரித்துக் காட்டிய ஜாம்பவான் - நிம்மதியாய் உறங்கட்டும் !

  ReplyDelete
 16. He is always a legend . His place in comics always empty. No one replace to him. RIP Sir.

  ReplyDelete
 17. எமன் ஒரு புது multi lingual comics project ஆரம்பித்திருக்கிராரோ?
  ஜாம்பவான் ஓவியரான திரு.வில்லியம் மற்றும் எழுத்தோவியர் திரு.பாலகுமாரன் அவர்களையும் ஒரே நாளில் அழைத்திருக்கிராரே!
  RIP both greats.

  ReplyDelete
 18. பொன்னியின் செல்வன் என்றாலே ஓவியர் மணியம் அவர்கள் நினைவுக்கு வருவது போல் ரத்தபடலம் என்றாலே வான்ஸ்ஸ் அவர்கள்தான் நினைவுக்கு.. . வருகிறார்

  ReplyDelete
 19. Willam Vance காமிக்ஸ் சரித்திரத்தில் தவிர்க்கமுடியாத பெயர்.
  இந்த பெல்ஜிய தூரிகை கலை உள்ளவரை என்றும் வாழும் !

  ReplyDelete
 20. காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்களின் ஒருவரான வான்ஸின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று

  ReplyDelete
 21. சித்திரக் கதை உலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு!! :(

  RIP dear william vance! _/\_

  ReplyDelete
 22. RIP Dear Vance Sir, We are missing you

  ReplyDelete
 23. சித்திரக் கதை உலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு!!

  RIP ....

  ReplyDelete
 24. RIP உலக ஓவியருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

  ReplyDelete
 25. போன பதிவில் போட வேண்டிய பதில். 2019 இல் வண்ணத்தைக் குறைக்க வேண்டாம். நான் தமிழ் காமிக்ஸ் வாங்குவதே அது உலகத்தரத்தில் வருகிறது என்பதால் தான். இல்லா விட்டால் ஆங்கிலத்திலேயே வாங்குவேனே? 24 இதழ்கள் போதும். அதனை விட ஒரு 3/4 ஸ்பெஷல் இதழ்கள் (300+ பக்கத்தில் ஒரு மூன்று, 600+ பக்கத்தில் - இரத்தப் படலம் போல ஒன்று). அது போதும். அந்த 24 இதழ்களில் 100 பக்க இதழ்கள் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம். இந்த ஒல்லிப்பிச்சான் centre stapler இதழ்கள் எனக்குப் பிடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. + 1 good suggestion if the numbers are as what is mentioned.

   Delete
  2. அதுவே தான் அடியேன் வேண்டுவது...

   Delete
 26. RIP William sir
  You done a great job for comics wored thanks a lot sir,...

  ReplyDelete
 27. மகத்தான ஓவியக் கலையின் மாமேதை வில்லியம் வான்ஸ்ன் கலை பங்களிப்பு வரைகதை உலகில் என்றும் நினைவு கூறும் சுவடுகளுடன் பதியப்பட்டிருக்கும்.ஆழ்ந்த வருத்தங்களும்,ஆத்மார்த்தமான அஞ்சலியும்.

  ReplyDelete
 28. மகத்தான ஓவியக் கலையின் மாமேதை வில்லியம் வான்ஸ்ன் கலை பங்களிப்பு வரைகதை உலகில் என்றும் நினைவு கூறும் சுவடுகளுடன் பதியப்பட்டிருக்கும்.ஆழ்ந்த வருத்தங்களும்,ஆத்மார்த்தமான அஞ்சலியும்.

  ReplyDelete
 29. டியர் எடிட்டர்

  3 மில்லியன் ஹிட்ஸ் நெருங்குகிறது. சென்ற மாதம் விடு பட்ட Tex WIller கதையினை - 3 மில்லியன் ஹிட் ஸ்பெஷல் ஆக வெளியிட்டால் என்ன ?

  ReplyDelete
  Replies
  1. 1.தேவரகசியம் தேடலுக்கல்ல 1M
   2.ஜெராமியா 2M
   3.************* 3M

   இந்த வரிசையில் இடம்பெற அந்த டெக்ஸ் கதை வெயிட் இல்லை ஜி.
   50ரூபாய்க்கு வரும் ஒரு சன்னமான இதழ் தான் அது.

   3M hitக்கு வெயிட்டா 3பக்கங்கள் கொண்டதாக அதாவது திரு வில்லியம் வான்ஸ்ஸின் கைவண்ணத்தில் உருவான3 பாக தொடரான Ringo மாதிரி, ஏன் இதையே போட நான் சிபாரிசு செய்கிறேன். ரொம்ப நாளா வெறும் விளம்பரத்தோடே இது இருக்க. சரியான ட்ரிபியூட் ஆகவும் இருக்கும்...

   Delete
 30. சித்திர நாயகருக்கு சித்திர ரசிகர்களின் சார்பாக அஞ்சலி

  ReplyDelete
 31. இரத்தப்படலம் பாகம் V

  முதன் முதலில் பெரிய சைஸில் வில்லியம் வான்ஸ் அவர்களின் சித்திர பிரம்மாண்டத்தை கண்ட நாள் முதல் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.

  விரைவில் வெளி வர இருக்கும் இரத்தப்படலம் வண்ண முழுத் தொகுப்பு அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கட்டும்.

  வாழ்க வான்ஸ் புகழ்

  ReplyDelete
 32. Rip william vance, his drawings will live forever,

  ReplyDelete
 33. RIP Mr. William Vance. I hope a tribute will appear in XIII ALBUM

  ReplyDelete
 34. சார் புது பதிவு ????

  ReplyDelete
 35. என்ன இன்னும் பதிவு வரலை.என்னாச்சு?
  தளத்தில் யாரும் கண்டுக்கவே இல்லை.

  ReplyDelete
 36. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete
 37. RIP. What is his age at time of death.Unable to decipher as it is not in arabic numerals.

  ReplyDelete