Powered By Blogger

Sunday, November 13, 2016

கிட்டத்தட்டவொரு ஜாம்பவானும்...ஒரு நிஜ ஜாம்பவானும்..!

நண்பர்களே,
            
வணக்கம். ஊர்ஜனமெல்லாம் வங்கி வாசல்களிலும், ATM மிஷின்களின் முன்னேயும் தவம் கிடக்கும் பொழுதினில் நான் வழக்கம் போல 'உசிலம்பட்டி முதல் உகாண்டா வரை' உலகம் சுற்றும் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்வது ஒரு சிலருக்குக் கடுப்போ கடுப்பாகத் தோன்றிடலாம் தான் ! அவர்கள் மட்டும் இந்த வாரப் பதிவுக்கு விடுமுறை நல்கிட்டால் தவறில்லை என்பேன் !

காலத்தை வென்ற (நமது காமிக்ஸ்) ஜாம்பவான்கள்‘ பட்டியலினை போன வாரம் நமது இரும்புக்கரத்தார் துவக்கி வைத்திருந்ததில் நிச்சயமாய் யாருக்கும் அபிப்ராய பேதங்கள் இருந்திருக்காது ! So அந்தப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கப் போகும் ஆசாமி யாரென்று பார்ப்போமா ? (இது கால வரிசையிலானதொரு பட்டியலே தவிர, தரவரிசைப் பட்டியலல்ல என்ற புரிதலோடு படித்தால் – ‘அவருக்கு இவர் சோடையாக்கும்? இவரை விட அவர் பெரிய அப்பாடக்கராக்கும்?‘ என்ற கேள்விகள் எழாது !) So here goes : 

மாயாவிக்கு 4 மாதங்கள் ஜுனியர்களாய் நமது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகமான சாகஸ ஜோடியான C.I.D. லாரன்ஸ் & டேவிட் துவக்கம் முதலாகவே போட்டதென்னவோ டாப் கியர் தான் ! “ப்ளைட் 731” வெளியான காலங்களில் – அனல்தெறிக்கும் ஹிட்டாக இருந்திருக்குமென்பதை யூகிப்பதில் சிரமமில்லை ! கண்டம் விட்டு கண்டம் பறந்து ; கண்டம் to கண்டம் தாண்டித் தாண்டிச் செல்வதை அந்நாட்களில் நாம் திறந்த வாய் மூடாது ரசித்திருப்பது உறுதி ! இந்தக் கதையானது அப்போதொரு மலையாளப் பதிப்பாகவும் வெளிவந்தது என்பது கொசுறுச் சேதி ! அதனை 45 ஆண்டுகள் கழித்தும் சிலாகியோ- சிலாகி என்று சிலாகித்திட திருவனந்தபுரத்தில் சில மூத்த வாசகர்கள் உள்ளனர் ! சொல்லப் போனால் அவர்களது காமிக்ஸ் உலகமானது துவங்குவது flight 731-ல் & முற்றுப் பெறுவது "மஞ்சள்பூ மர்மத்தில்" !! இவையிரண்டையும் உச்சி மோர்ந்து அவர்கள் நெட்டில் ஆங்காங்கே ஆண்டாண்டு காலமாய்ப் பதிவிட்டு வருகின்றனர் !! இவற்றை மட்டுமாவது மலையாளத்தில் மறுபதிப்பு செய்யுங்களேன் என்றும் எண்ணற்றமுறை கோரிக்கை வைத்துள்ளனர் என்றால் இவர்களது "லா.டே." அபிமானம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் !!  So மாயாவியின் சம கால சாகஸ வீரர்கள் ; ஏராளமான ‘ஹிட்‘ நாயகர்கள் என்ற பெருமை இந்த ஜோடிக்கு உண்டெனினும் – ‘ஜாம்பவான்கள்" என்ற அடைமொழிக்கு தகுதியானவர்களா ? என்பதொரு கேள்விக்குறியே - at least என்னைப் பொறுத்தவரையிலுமாவது ! 

நமது ‘டிசைனர் டிரவுஸர்‘ புகழ் ஜானி நீரோவும் இதே படகில் சவாரி செய்யும் ஒரு  சமவயது ஹீரோ ! ‘கொலைகாரக் கலைஞன் ‘ மூலமாய் அறிமுகம் கண்டு – தொடர்ந்த மாதங்களில் / ஆண்டுகளில் பல memorable கதைகளை வழங்கிய ஜானி நிச்சயமாய் popularity chart-களில் உயரமானதொரு இடத்துக்குச் சொந்தக்காரரே ! ஆனால் அவரை ‘ஜாம்பவான்‘ என்பதெல்லாம் சற்றே ஓவராகத்தானிருக்கும் ! Wouldn't you agree ?

ரசனைசார்ந்த தேர்வுகளில் இது போன்ற ‘எடுத்தோம்-கவிழ்த்தோம் ‘ தீர்ப்புகள் எனது சொந்தக் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவே இருக்க முடியும் என்றாலும் – தற்போது இரண்டாண்டுகளாய் அரங்கேறிடும் மறுபதிப்புப் படலத்தின் விற்பனை அளவுகோல்களையும் இங்கே நான் நுழைத்துப் பார்க்கவே செய்கிறேன் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ - தலா 10 பிரதிகள் விற்கும் நேரத்திற்குள் மின்சாரப் பகாசுரர் மாயாவி 50 பிரதிகளை விற்றுத் தந்து விடுகிறார் நமக்கு ! So இந்தத் தீர்ப்புகள் என்னது மாத்திரமல்ல – வாசகர்கள் cum வாடிக்கையாளர்களான உங்களதுமே என்று எடுத்துக் கொள்ளலாம் !

முத்து காமிக்ஸில் Fleetway இதழ்கள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுத்திருந்த நிலையில் - துவக்கத்தின் அதே tempo-வைத் தொடர்ந்திட அந்நாட்களில் சீரியஸான (வெளித்) தடங்கல்கள் ஏதுமிருந்திருக்கக் கூடாது தான் ! பொன்னி காமிக்ஸ் ; வாசு காமிக்ஸ் ; ரத்னபாலா  போன்ற இதழ்கள் வந்து கொண்டிருந்த போதிலும், அவை எதுவுமே ஒரு மெகாப் பதிப்பகக் குழுமத்தின் படைப்புகளல்ல என்பதால் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்படுத்தியிருக்க இயன்றிருக்காது ! ஆனாலும் அந்த ஆரம்பத்து அதிரடியிலிருந்து சற்றே மித வேகத்திற்கு முத்து காமிக்சின்  கியர் மாறியதற்கு maybe என் தந்தையின் சகோதரர்கள் மத்தியிலான முதல் பிரிவினை ஒரு காரணமாக இருந்திருக்கலாமென்பது எனது யூகம் ! என் தந்தைக்கு மொத்தம் 3 மூத்த சகோதரர்கள் & 1 இளவல் ! முதலிரண்டு சகோதரர்கள் 1974 / 75 வாக்கில் பிரித்துக் கொண்டு விலகி விட்டனர் ! So ஒருக்கால் அதன் விளைவாய், சின்னதொரு தொய்வு நிகழ்ந்ததோ – என்னவோ ?! எது எப்படியிருப்பினும், Fleetway-ன் அந்த ஆரம்ப நாட்களது மாயாவி & Co. பட்டாளத்தைத் தாண்டி, புதிதாயொரு நாயகர் அணியை உருவாக்க யாரும் சிரத்தை எடுத்ததாய் எனக்குத் தோன்றவில்லை ! 13 மாயாவி; 13 லா & டே; 13 ஜா. நீ. கதைகளுக்குப் பின்பாய் எவற்றைக் களமிறக்குவது ? என்று மண்டையை உருட்ட சீனியருக்கு அந்நாட்களில் அவகாசம் இல்லாது போயிருக்கலாம் ! So ஒரு வெற்றிடம் உருவாகி வந்த தருணத்தில் அதனை நிரப்பப் புகுந்ததவை தான் அமெரிக்கத் துருப்புக்கள் ! 

King Features Syndicate என்ற அமெரிக்கக் குழுமத்திற்கு உலகமெங்கும் காமிக்ஸ் கதைகளை விநியோகம் செய்வதே தொழில் ! அவர்களது மும்பை ஏஜெண்ட்கள் வாயிலாக ரிப் கிர்பி ; காரிகன் ; விங்-கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ; சிஸ்கோ கிட் ; வேதாளன் ; மாண்ட்ரேக் ; டாக்டர் கில்டேர் என்று ஒரு கும்பலாய் ஹீரோக்களை அள்ளிக் கொண்டு முத்து காமிக்ஸிற்குள் அணிவகுக்கச் செய்தார் சீனியர் !  இங்கே இந்தியாவினுள்ளேயே ஏஜெண்ட்கள் இருந்தபடியாலும், இந்த நாயகர்கள் சகலரின் கதைகளும் நேர்கோட்டு clean பாணியிலானவை என்பதாலும் - பெரியதொரு மெனக்கெடல்களின்றி இவர்களது கதைகளை வாங்கிடல் ஓ.கே.வானது. (அந்நாட்களது கடிதப் போக்குவரத்து files சகலமும் இன்னமும் என்வசம் உள்ளன என்பதால், அந்நாளைய நடப்புகளை அருகிலிருந்து பார்த்த புரிதல் சாத்தியமாகிறது !

‘மொதுமொது‘வென புது நாயகர்கள் ஆஜராகிட Fleetway ன் தாக்கம் லேசாய் குறைந்து- KFS-ன் கை ஓங்கியது நமது இதழ்களுள் ! இவை சகலமுமே அந்நாட்களது அமெரிக்க தினசரிகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஸ்ட்ரிப்களின் தொகுப்புகள் என்பதால் Fleetway-ஐப் போலொரு நிரந்தரக் கதைநீளம் ; கதைபாணிகள் கொண்டிருக்கவில்லை ! இவை வெளியாகத் தொடங்கிய வேளைகளில் நான் ஆங்கில ஒரிஜினல்களைப் படிக்குமளவிற்குத் தேறிவிட்டிருந்தேன் என்பதால் - எந்தவொரு கதையும் என் பார்வைக்குத் தப்பாது ! நீளநீளமான வழு வழு ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு வரும் அந்த ஒரிஜினல்களை முத்து காமிக்ஸின் ஆபீஸில் உட்கார்ந்தே படித்துத் தள்ளுவேன் ! அவற்றுள் ரொம்பவே ஸ்பெஷலாய் நான் ரசித்தது ஒரு முகமூடி மனிதரை ! Yes- வேதாள மாயாத்மா தான் அந்நாளைய எனது ஆல்-இன்-ஆல் அழகு நாயகர் !

The Illustrated Weekly of India என்றதொரு (மும்பை) வாரயிதழில் அரைப் பக்கத் தொடராய் வேதாளர் கதைகள் வருவதுண்டு ! அவற்றைக் கத்தரித்து சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கெனில் - இந்திரஜால் காமிக்ஸின் முழுநீளக் கதைகளை செம ஆர்வமாய்ப் படிப்பதும் இன்னொரு பக்கம் ! அந்த அரை நிஜார் வயதில் எனக்கிருந்த மானசீக சூப்பர் ஹீரோக்கள் இருவரே ! முதலாமவர் நமது முதல்வரும் கூட ! Yes- நமது புரட்சித் தலைவர் M.G.R. அவர்கள் தான் தலையாய சூப்பர் ஸ்டார் எனக்கு ! அதிலும் அந்நாட்களில் நீரும்..நெருப்பும்" என்றதொரு படம் வெளியாகியிருந்தது ! தலைவர் அதனில் டபுள் ஆக்ட்; சிகப்பு உடுப்பு M.G.R. நல்லவர் & கறுப்பு outfit-காரர் கெட்டவர் ! ஆக சிகப்பு நிறம் தான் "நல்லது சார்ந்த நிறம்" என்ற எண்ணம் அந்நாட்களில் மனதில் பதிந்து கிடந்தது ! சூப்பர் ஹீரோ # 2 நமது வேதாளர் ! 1972-ன் அயல்நாட்டுப் பயணத்தின் போது வேதாளர் பாணியிலான ஒரு டிராயரை என் தந்தை வாங்கித் தந்திருக்க, அதை சதாகாலமும் மாட்டித் திரிவேன் ! So வேதாளர் கதைகளை வெளியிடும் வேளை முத்து காமிக்ஸிற்குப் பின்னாட்களில்  பிறந்த போது - அந்தப் புதுப் புதுக் கதைகளைப் பிரமாதமாய் ரசித்தேன் ! எட்டாம் வகுப்பு விடுமுறையின் போது என் தந்தை என்னை மும்பைக்கு கூட்டிச் சென்றிருந்த சமயம், KFS கதைகளைத் தருவித்து தந்த ஏஜெண்ட்களின் அலுவலகத்திற்கும் இட்டுச் சென்றிருந்தார் ! பரபரப்பான மும்பையின் வியாபாரப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரர் காலத்துக் கட்டிடத்தில் இருந்த அந்த ஆபீஸினில் கத்தை கத்தையாய் கதைகள் ஸ்டாக்கில் கிடந்தது இன்னமும் நினைவுள்ளது. அத்தனையையும் வாங்க முடியாது என்பது புரிந்தாலும், ‘ஆ... லட்டு! ஆ... பூந்தி... ஐயோ... மைசூர்பாகு !' என்று எனக்கு ஜொள் பிரவாகமெடுக்காத குறைதான் ! அந்த விடுமுறைகளின் பிந்தைய சமயத்தில் ‘டிங்-டாங்‘ என்ற புதிய சிறுவர் மாதமிருமுறைக்கான பணிகளை விளையாட்டாய்த் தொடங்கிய போது, அதனுள் மும்பையில்  நான் தேர்வு செய்திருந்த வேதாளர் கதையொன்றின்  முதல் 4 பக்கங்களையும் இணைத்திருந்தேன் ! சரியாக நினைவில்லை ; ஆனால் நான் மொழிபெயர்த்த முதல் காமிக்ஸ் பக்கங்கள் அந்த நான்கு பக்கங்களாகத் தானிருக்க வேண்டும் !

முத்து காமிக்ஸில் வேதாளர் ஒரு பிரத்யேக முத்திரை பதித்திருந்தார் என்பதில் ஐயமில்லை ! ‘முகமூடி வேதாளன்‘; ஜும்போ; ‘சிறையில் தொங்கிய சர்வாதிகாரி‘; ‘கீழ்த்திசை சூன்யம்‘ போன்ற  இதழ்கள் மட்டும் எனக்கு நினைவில் தங்கியுள்ளன ! ஆனால்- மொத்தத்தில் ஒன்றரை டஜன் கதைகள் வெளிவந்திருக்கும் என்பது எனது எண்ணம் ! Maybe more... maybe less ! இன்னும் கூடுதலாய் சாகஸங்களில் அவர் இடம்பிடித்திருக்கும் பட்சத்தில், நிச்சயமாய் ஒரு “ஜாம்பவான்” பதாகையை நமது காமிக்ஸ் அளவிலாவது அவருக்கு வழங்கி இருக்கலாம் தான் ; ஆனால் விதி வேறு விதமாய் அமைந்து போனது - ‘மாலைமதி காமிக்ஸின்‘ ரூபத்தில்! ‘குமுதம்‘ என்ற மகா சக்தி காமிக்ஸ் துறைக்குள் கால்பதிக்கத் தீர்மானித்த கணமே அவர்களது வாங்கும் திறன்களுக்கு ஈடுகொடுக்க முத்து காமிக்ஸிற்குச் சாத்தியமாகிடவில்லை ! ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் என ஏகமாய் King Features படைப்புகளை அவர்கள் ஒரே நாளில் லவட்டி விட ஆட்டம் கண்டு போனோம் ! ஏற்கனவே தாமதம் ; விற்பனை மந்தம் என்று சிரமங்கள் நிலைகொண்டிருந்த வேளையில் கதைகள் கைமாறியதும் ஒரு பெரிய setback ஆக அமைந்து போனது. அப்புறமாய் ‘முத்து காமிக்ஸ் வாரமலர்‘ என்ற முயற்சி ; அதன் அகால காலாவதி என்று நாட்கள் தொடர்ந்த போது வேதாளர் ஒரு மறக்கப்பட்ட நாயகராகிப் போனார் ! So ஒரு ஆற்றலான நாயகரை அவருக்குரிய வாய்ப்புகளோடு ஆராதித்திருந்தால் இந்தப் பட்டியலில் இரண்டாமிடம் அவரதாகியிருக்கும் - சந்தேகமின்றி !

பின்நாட்களில் முத்து காமிக்ஸின் நிர்வாகம் என் கைக்கு வந்தான பின்பு - நிறைய fleetway மறுவருகைகள் ; சிறுகச் சிறுக பிரான்கோ-பெல்ஜிய அறிமுகங்கள் ; King features நாயகர்களின் வீடு திரும்பல்கள் என்று அரங்கேறிய போதும் வேதாளரை மட்டும் நம் அட்டவணைக்குள் ஐக்கியமாக்கிட எனக்குச் சாத்தியப்படவேயில்லை ! இம்முறையோ ‘ராணி காமிக்ஸ்‘ ரூபத்தில் ஒரு அசைக்க இயலா சக்தி முட்டுக்கட்டையாக நின்றது ! “மாயாவி” என்ற பெயரில் அவர்கள் சகட்டுமேனிக்கு PHANTOM கதைகளை வெளியிட்டது நமக்குத் தெரியும் ! ஆனால் ‘போட்டிக் கம்பெனியின் பொன் கூட எனக்குப் பித்தளையே!‘ என்று வேதாளரோடு ‘காய்‘ விட்டுவிட்டேன் ! So ஒரு ஜாம்பவானுக்குரிய சர்வ லட்சணங்களும் பொருந்தியவரை அந்தப் பதவியில் அமர்த்த இயலாது போன கதையே இந்த வாரத்தின் கதை ! 

ஆனால் சிறிதும் எதிர்பாராத் திசையிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் நாயகராகிடுவதற்கு எவ்விதத் தகுதியும் இல்லாதது போல் தோற்றம் தந்தே - அதகளம் செய்த நாயகர் நமக்குக் கிட்டியது தான் விதியின் விளையாட்டென்பேன்!

உடைந்த மூக்கார்... ட்ஸி-நா-பா; ப்ளுபெர்ரி... டைகர்.... என்றெல்லாம் நான் hints தந்திடவும் வேண்டுமா என்ன - அவரை நாம் அடையாளம் தெரிந்து கொள்ள ?!! 1995-ல் “தங்கக் கல்லறை”யில் நமக்குப் பரிச்சயமான இந்த அழுக்குக் கௌ-பாய் - கதைகளின் வலிமையில் ; வீரியத்தில், அசாத்திய உச்சங்களை நமக்குக் காட்டியவர் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது ! நமது காமிக்ஸ் பயணத்தின் ஒரு Magnum Opus ஆக ‘மின்னும் மரணம்‘ இன்றும், என்றும் தொடர்ந்திடும் தானே ? இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும், "தங்கக் கல்லறை" & "மின்னும் மரணம்" மறுபதிப்புகளிலும் பட்டையைக் கிளப்புவது கேப்டன் டைகரின் சாஸ்வதத்திற்கொரு சான்று என்பேன் ! அந்த இளவயதுக் கதைகள் பெரியதொரு இலக்கின்றி இங்கும் அங்குமாய் சுற்றித் திரிந்தது மட்டுமே இவரது தொடருக்கொரு திருஷ்டிப் பரிகாரம் ! ஆனால் அவரது ஒரிஜினல் சிருஷ்டிகர்த்தாக்கள் இருந்த வரையிலும் உருவாகிய LT.BLUEBERRY கதைகளுக்கு நிகராய் வேறொரு கௌ-பாய் தொடரைச் சுட்டிக் காட்டுவது அசாத்தியம் என்பேன் ! இவரது சாகஸங்களை நாம் வெளியிட்ட அந்நாட்களில் தாமதப் போய் அகோரத் தாண்டவமாடியது தான் ; நியூஸ் பிரிண்டில் சுமாரான அச்சில் ஒப்பேற்றியிருந்தோம் தான் ; ஒரு பாகத்திற்கும் அடுத்த பாகத்திற்குமிடையே மாதக்கணக்கில் / ஆண்டுக்கணக்கில் இடைவெளி விட்டிருந்தோம் தான் ! ஆனால் இதற்கெல்லாம் மீறியும் டைகரின் சாகஸங்கள் பதித்த முத்திரை - அவருக்கு “ஜாம்பவான்” தகுதியை ஈட்டித் தரும் பிரதம  காரணி ! Maybe அந்நாட்களில் இவரது ஆல்பங்கள் சகலத்தையும் வண்ணத்தில், பெரிய சைஸில், ஆர்ட் பேப்பரில், தொடர்ச்சியாய் இப்போது போல வெளியிட்டிருப்பின் மனுஷன் இன்றைக்கு துபாயின் புர்ஜ் கலீபா கட்டிட உயரத்தில் வீற்றிருக்கவும் கூடும் நம் மனங்களில் ! Salute the inimitable Lt.Blueberry a.k.a கேப்டன் டைகர் ! கௌபாய்  காமிக்ஸ் ரசனைகளை (நம்மளவிற்காவது) ஒரு புது உயரத்துக்கு இட்டுச் சென்ற இவரது பங்களிப்பு நம் பசுமையான நினைவுகளின் பிரதானமொரு அங்கமல்லவா ? எத்தனை கமான்சேக்கள் வந்தாலும் ; ட்யூராங்கோக்கள் தலைகாட்டினாலும் – அந்த சவரம் செய்யப்படா சப்பை மூக்கு சாகஸக்காரரை நமது நெஞ்சங்களிலிருந்து கிளப்பி விட முடியாதல்லவா ? 

So ஜாம்பவான் # 2 & ஜாம்பவான் forever – கேப்டன் டைகர் !

O.k.....பழங்கதைகளுக்கு சலாம் போட்டுவிட்டு - நடப்புக்குள் புகுந்திடுவோமா ? இதோ இம்மாதக் கலர் கோட்டாவின் இன்னுமொரு பிரதிநிதி - நமது நீலப் பொடியர்களின் ரூபத்தில் ! எப்போதும் போலவே - இந்த SMURF ஆல்பத்திற்குமே அவர்களது ஒரிஜினல் டிசைனேயே பிரயோகித்துள்ளோம் - இம்மி கூட மாற்றமின்றி ! (மாற்ற விட மாட்டேன்கிறார்கள் என்பது வேறு கதை !!)  வழக்கமாய் சிரிப்பு வெடிகளை மட்டுமே வீசிட முயற்சிக்கும் நமது குட்டிப் பார்ட்டிகள் இம்முறை நெஞ்சைத் தொடுமொரு அழகான கதையோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளனர் ! நான் ரொம்பவே ரசித்த SMURF ஆல்பமிது - உங்களிடமும் அதே மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தின, ஆண்டின் இறுதி மாதத்தை ரம்யமாக நிறைவு செய்த திருப்தி எனதாகிடும் ! பார்க்கலாமே !!
டிசம்பர் "பெட்டியில்" - சூப்பர் 6-ன் முதல் இதழும் உண்டென்பதால் இம்மாதம் :
 • 1  ஜேசன் ப்ரைஸ் 
 • 1  TEX 
 • 1 SMURF 
 • 1 லக்கி லூக் கிளாசிக்ஸ்

என்ற combo  இருந்திடும் ! தீபாவளி இதழை சீக்கிரமே தயார் செய்த காரணத்தால் - டிசம்பரின்ஆல்பம்களும் சூட்டோடு சூடாகவே தயாராகி வருகின்றன  ! SUPER 6 அச்சுப் பணிகள் நிறைவுற்று விட்டன ; ஜேசன் ப்ரைஸ் பாதி முடிந்து விட்டது & அதன் மீதி + SMURF இரண்டுமே புதன்கிழமைக்குள் முடிந்துவிடும். So நமது இரவுக்கு கழுகாரின் black & white இதழ் மாத்திரமே பாக்கியிருக்கும் !! இம்முறையும் புது மாதம் ( டிசம்பர்) பிறக்கும் முன்பே இதழ்கள் உங்கள் கைகளில் இருக்கப் போவது உறுதி.

And finally - இதோ : 2  ஞாயிறுகளுக்கு முன்பான caption போட்டியின் முடிவுகள் !! நண்பர் வெட்டுக்கிளியாரின் இந்த 2 முயற்சிகளுமே சிறப்பாக இருந்ததாய் எனக்குத் தோன்றியது ! So வாழ்த்துக்கள் வெ.வீ. சார் !!

அப்புறம் போன வாரத்து "மீன் கழுவும் TEX" கேப்ஷன் போட்டிக்கான முடிவினை அடுத்த ஞாயிறுக்கு வைத்துக் கொள்வோமே ! Bye for now !! See you around !! 


VETTUKILI VEERAIYAN :

C இந்த தரம் தலே பயங்கரமான ஆசாமியை சந்திச்சுட்டார் போல ..!
B மாந்த்ரீகருக்கு இரவுக் கழுகின் வணக்கங்கள் !!
A வோ !
B குடிமக்கள் அனைவரும் நலம்தானே ?
A வோ !
B சென்ற முறை சந்தித்ததை விட உடல் நலம் கூடியிருப்பது கண்டு மகிழ்ச்சி !
A வோ !
B அபாச்சேக்கள் தொந்தரவு ஏதுமில்லைதானே ?
A வோ !
B சொல்ல மறந்து விட்டேன் ! உங்களுக்காக சுத்தமான பாட்டில் ஒன்று கொண்டு வந்திருக்கின்றேன் ! கொடுக்கவா ?
A ஓ ..!

VETTUKILI VEERAIYAN:

B சாமி என் பையனுக்கு கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு நீங்க நல்ல பரிகாரம் சொல்வீங்கன்னு கார்சன் சொன்னான் வந்தேன் ..!!
A பரிகாரம்தானே..? வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள் ! நல்ல வெள்ளாட்டுக்கிடா வாங்கி குல தெய்வத்துக்கு பலி குடுத்துட்டு முக்கியமா கறியை வறுத்து நண்பர்களுக்கு விருந்து வைங்க !! மறந்துடாதீங்க... நண்பர்களுக்கு விருந்து ..!!
C. ஹி ஹி ..!! நேத்து அவசர அவசரமா கார்சன் இங்கே வந்துட்டு போனது இதுக்குத்தானா ..?

245 comments:

 1. விஜயன் சார், VETTUKILI VEERAIYAN : அவர்களின் உண்மையான பெயரை தெரிவிக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நாளை அவரே சொல்லி விடுவாரே !!

   எங்களுக்கு அருகிலுள்ள நகரத்தில் வசிக்குமொரு நெடு நாள் வாசகர் !

   Delete
  2. இதுவரை அவர் சொல்லவில்லை, எனவே உங்களிடம் கேட்கிறேன்!

   Delete
  3. வாழ்த்துக்கள் வெட்டுகிளி

   Delete
  4. Vijayan @ அவரும் சொல்லமாட்டார் நீங்களும் சொல்லமாட்டீர்கள் என்பதுதான் எதார்த்தம்! இந்த கேள்வியை நான் கேட்டு இருக்ககூடாது, தவறு என்னதுதான்!

   Delete
  5. Parani from Bangalore : பெயர் ; ஊர் ; மின்னஞ்சல் முகவரி ; செலபோன் நம்பர் என்று சகலத்தையும் அவரே இங்கு தான் பதிவிட்டு இருக்கிறாரே ?

   கேள்வியும் நானே..பதிலும் நானே...என்ற அவசர அவசர நிலைப்பாடு ஏனோ ?

   Delete
  6. எடிட்டர் சார்,

   நண்பர் வெட்டுக்கிளி தன் பதிவைத் தூக்கிவிட்டார் போலிருக்கிறதே!

   @ PfB

   பின்னூட்டங்களை mail subscription மூலம் பார்வையிடும் பழக்கமிருந்தால் வெட்டுக்கிளியாரின் பின்னூட்டத்தை ஒரு ரவுண்டு பாருங்களேன்!

   Delete
  7. E.vijay. Thanks. I don't have the habit. No issues. Please leave it.

   Delete
  8. Vijayan sir, I have not seen that hence asked. Please leave it.

   Delete
 2. Saravamu naane book replaced.Thanks Team

  ReplyDelete
 3. Sir, Regal Publishers said that they are going to print Phantom soon. Is there any chance in Tamil?

  https://www.facebook.com/regalpublishers/

  ReplyDelete
  Replies
  1. Raj Muthu Kumar S : அவை (malayalam) காமிக்ஸ் அல்ல என்பது என் யூகம் சார் !

   தமிழில் வேதாளரைக் கொணர இதுவரையிலும் சீரியஸாக நாம் முயற்சிக்கவில்லை ; 2018 -ன் பொழுதில் FLEETWAY மறுபதிப்புகளின் தொண்ணூறு சதவிகிதம் நிறைவுற்றிருக்கும் பட்சத்தில் - மீண்டுமொரு மொத்த ராயல்டி முதலீட்டுக்குத் தயாராகிக் கொண்டு முயற்சிகளை ஆரம்பிக்கலாம் !

   Delete
 4. விஜயன் சார், அடுத்த மாதம் வரவுள்ள கருப்பு வெள்ளை மறுபதிப்பு கதை எது?

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதம் மறுபதிப்பு இல்லை நண்பரே.
   பரணி அந்த சென்ற மாத லக்கி லூக் கதை திருடனும் திருந்துவான் ஹாட்லைன்ல படியுங்கள்....
   ஏன் மறுபதிப்பு டிசம்பரில் இல்லைனு பதில் இருக்கும்...

   Delete
  2. இப்ப எல்லாம் நான் ஹாட்லைன் படிக்கிறது இல்லை விஜயராகவன்!

   Delete
 5. விஜயன் சார், இந்த வருடம் தோர்கல் வரவில்லை சில பல காரணம்களால்! அவரை அடுத்த வருடம் முதல் மாதம் கண்களில் காட்டுவதாக சொன்ன ஞாபகம்! அடுத்த வருடம் ஜனவரி மாதம் தோர்கலை தரிசிக்க முடியமா?

  ReplyDelete
  Replies
  1. நானும் எதிர்பார்கிறேன்.

   Delete
  2. கதைகள் தயாராக உள்ளன - 2 மாதங்களாகவே ! But ஜனவரி - முத்து காமிக்ஸின் ஆண்டுமலர் மாதமல்லவா ?

   Delete
  3. அதற்காக இவரை தள்ளி போடுவது நன்றாக இல்லை சார்! எத்தனை மாதம்கள் காத்துகொண்டு இருப்பது சார்! பொறுமையை சொதிக்காதிர்கள்!

   Delete
  4. Parani from Bangalore : ஆண்டுமலரைத் தள்ளிப் போடவோ ; இடையே இன்னொரு மாதத்தை நுழைக்கவோ வாய்ப்போ ; வழியோ இருந்தால் சொல்லுங்களேன் - தெரிந்து கொண்ட மாதிரி இருக்குமே ?!

   Delete
  5. போங்க சார், ஏதாவது காரணம் சொல்லி அமைதி ஆக்கிவிடுறீங்க!

   Delete
 6. //King Features Syndicate என்ற அமெரிக்கக் குழுமத்திற்கு உலகமெங்கும் காமிக்ஸ் கதைகளை விநியோகம் செய்வதே தொழில் ! அவர்களது மும்பை ஏஜெண்ட்கள் வாயிலாக ரிப் கிர்பி ; காரிகன் ; விங்-கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ; சிஸ்கோ கிட் ; வேதாளன் ; மாண்ட்ரேக் ; டாக்டர் கில்டேர் என்று ஒரு கும்பலாய் ஹீரோக்களை அள்ளிக் கொண்டு முத்து காமிக்ஸிற்குள் அணிவகுக்கச் செய்தார் சீனியர் ! //

  கையடக்கமான மினி சைஸில் வந்த ரிப் கிர்பி கதைகளை பின்னாளில் படிக்கக்கிடைத்தது. லேசாக மடக்கினாலும் உதிர்ந்திடும் காகிதத்தை கையாள்வதே பெரும் பொறுப்பாயிருக்கும். அந்நாட்களிலேயே வேதாளரை இரண்டு கலரில் (கறுப்பு ப்ளஸ் நீலம், பின்க், பச்சை...) வெளியிடும் நோக்கம் எப்படி வந்ததாம் சீனியருக்கு? கேட்டுச் சொல்லுங்களேன்....?

  ReplyDelete
  Replies
  1. Podiyan : அந்நாட்களில் B & W கதைகளுக்கு முழு வண்ணம் என்பதெல்லாம் பிராசஸிங்கிலும் சரி ; அச்சிலும் சரி - ரொம்ப ரொம்பச் சிக்கலான பணிகள் ! So B & W -லிருந்து சிறிதேனும் மாற்றம் காட்ட நினைக்கும் பட்சத்தில் 2 வண்ணம் என்பது தான் ஒரே தீர்வு ! பச்சை ; பிங்க் என்று கைக்குச் சிக்கும் கலர்களில் அச்சிடுவது வாடிக்கை !

   பிளஸ் - அந்நாட்களில் ஒரே சமயத்தில் 4 கலர்களை அச்சிடும் இயந்திரங்கள் சிவகாசியில் எங்குமே கிடையாது ! 2 கலர் மிஷின்கள் மட்டுமே !

   Delete
  2. ஓவ்.... பின்னாளில் இரும்புக்கை மாயாவியையே 4 வர்ணத்தில் அச்சிட்டிருந்தீர்கள் இல்லையா சார்? மாயாவி ஆங்கிலத்தில் வர்ணத்தில் வந்திருக்கிறாரா? இல்லை அதன் அத்தனை செயல்வடிவமும் உங்களதுதானா?

   Delete
  3. Podiyan : மாயாவியின் ஒரிஜினல்கள் வண்ணத்திலானவை அல்ல - எல்லாமே அந்நாட்களது technicians பொறுமையாய் வாரக்கணக்கில் செய்த வேலைகளின் பலன்கள். பிரின்டிங் இரண்டு-இரண்டு வர்ணங்களாய் நடந்திடும் !

   முன்பு எப்போதோ - கொள்ளைக்கார மாயாவியின் ஆக்கம் பற்றி இங்கே பதிவு கூடப் போட்டுள்ளதாக ஞாபகம் உள்ளது !

   Delete
 7. விஜயன் சார், லாரன்ஸ்-டேவிட் கதைகளில் மனதில் பசுமையாக உள்ள கதை, பெரிய படிக்கட்டுகளில் பாறைகளை உருட்டி புதையல் எடுக்கும் காட்சி, தலை கேட்ட தங்க புதையல் என நினைக்கிறேன்.

  அதே போல் மற்றும் ஒருகதையில் டேவிட் முழுவதும் எண்ணெய் தடவிய இரும்பு உருளையில் சட்டையில்லாமல் செல்வார், கீழே கொடிய விலங்குகளான சிங்கம் புலி இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிட்ட கதையை ரசிதவர்கலிள் நானும் ஒருவன்.

   Delete
 8. Million and More Hits Special இந்தவருடமே எங்கள் கைகளில் தவழ்ந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்! டிசம்பர் மாதம் கைகளில் தவழுமா? 2 Million கமெண்ட் இந்த வருடம்தான் கடந்தது என்பதால் இந்த ஆசை!!

  ReplyDelete
 9. விஜயன் சார், நீங்கள் வேதாளர் பற்றி சொல்லுறதை கேட்டால் 2018 வேதாளர் digest உறுதி என்பது தெரிகிறது! காத்துகொண்டுஇருப்பேன்!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : சார்..உரத்த சிந்தனைகளை திட்டமிடல்களோடு குழப்பிக் கொள்ள வேண்டாமே ? அப்படிப் பார்த்தால் இந்தப் பதிவின் மையமே கேப்டன் டைகர் தான் ! அவரது புதுக் கதைகளும் உண்டென்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?

   Delete
  2. கேப்டன் டைகர் இவரை போதுமான வரை ரசித்தாகிவிட்டது. நமது காமிக்ஸில் வந்த வேதாளர் கதைகளை இதுவரை படித்து இல்லையே சார் :-(

   Delete
  3. டெக்ஸ் கூட தேவையான அளவு ரசித்தாகிவிட்டது.....

   Delete
  4. Ganeshkumar Kumar @ கேப்டன் டைகர் கதைகள் வந்தால் இன்றும் வந்தால் யாரும் வேண்டாம் என சொல்ல போவது இல்லை, அதே போல் யாரும் படிக்காமல் இருக்க போவது இல்லை! ஆனால் அவரின் மீதமுள்ள கதைகள் மிக குறைவு, என்பதுதான் யதார்த்தம்! டெக்ஸ் பற்றி யாராவது சொன்னால் நீங்கள் உங்கள் வெறுப்பை காண்பிப்பது நியமாக தெரியவில்லை! காமிக்ஸ் ஹீரோ எல்லோரும் ஒன்றுதான்! இதில் தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் ஏதும் இல்லை என்பதுதான் எதார்த்தம்!

   Delete
 10. நள்ளிரவு வணக்கம் ஆசிரியரே

  ReplyDelete
 11. உள்ளேன் உள்ளேன். வாழ்த்துக்கள் வே.வீ. ஆசிரியருக்கு, "ஆமா.... இந்த போட்டியெல்லாம் எப்போ நடந்துச்சு" moment.

  ReplyDelete
 12. வேதாளர் கதைகள் (Total: 15) : வெளிவந்த ஒழுங்கில் - கலீல் அவர்களது முதலைப் பட்டாளம் வலைப்பதிவிலிருந்து எடுத்தது.

  முகமூடி வேதாளன், ஜும்போ, விண்வெளி வீரன் எங்கே?, விசித்திரக் கடற் கொள்ளையர், ராட்சத விலங்கு
  முகமூடிக் கள்வர்கள், முத்திரை மோதிரம், வேதாளனின் சொர்க்கம், சூனியக்காரியின் சாம்ராஜ்யம், கப்பல் கொள்ளையர், கீழ்த்திசை சூனியம், பூ விலங்கு, சர்வாதிகாரி, கானகக் கள்வர்கள், கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி.

  ReplyDelete
  Replies
  1. பொடியன் சார்...! சூப்பர்!
   என்ன...இதெல்லாம் கண்ணுல காட்டமாட்டேங்கறாரே நம்ம எடி...!
   ஹூம்...!

   Delete
 13. ஆசிரியருக்கு நல்லிரவு வணக்கம். இரவு9.30 முதல் 5 நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டிருந்த போதும் 10 இடத்திற்குள் வரமுடியவில்லையே என்னசெய்வேன் புனித மானிடோ😭😭😭😭😭😭 காலை வருகிறேன். அரட்டையில் பங்கு கொள்ள bye

  ReplyDelete
 14. பொதுவாக, ஒரு நிறுவனத்தின் கதைகளை வாங்கி வேறொரு மொழியில் ஒரு நிறுவனம் வெளியிடும்போது - இன்னொரு நிறுவனமும் அதே மொழி - அதே நாட்டிலிருந்து தொடர்புகொண்டால் - முதல் நிறுவனத்துக்கு அது தொடர்பில் தெரிவித்து, அதன் பின்னர் அவர்களது சம்மதத்தோடேதான் உரிமைகளை கொடுப்பார்களா? இல்லை, யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார்களா? மாடஸ்டி, ரிப் கெர்பி, வேதாளன் போன்ற கதைகள் முத்துவில், லயனில் வந்தன. பின்னர் ராணி காமிக்ஸ் இலும் வந்தன. அதற்கு முன்னர் இந்திரஜால் தமிழில் வெளியிட்டது. அதேபோல ராணியில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் கதை - பின்னர் லயனில் வெளிவந்தது. இதுபோல மாலைமதி, மேகலா, குமுதத்தில்கூட ஒவ்வொரு பக்கமாக தொடர் காமிக்ஸ்கள் வந்துள்ளன. எனவேதான் இப்படியொரு கேள்வி எழுகிறது. ஒரே கதையை ஒரே நாட்டில், ஒரே மொழியில் வெளியிட வேறு வேறு நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறார்களே.... அதுவும் குறுகிய கால இடைவெளியில்....

  ReplyDelete
  Replies
  1. //ராணியில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் கதை - பின்னர் லயனில் வெளிவந்தது// லயனில் அல்ல முத்துவில்!

   Delete
  2. Podiyan : "கம்பியூட்டர்களுக்கு முன்" & "பின்" என்று தொழில் பழக்கங்களை பாகுபடுத்திடலாம் ! நீங்கள் குறிப்பிடும் கைமாற்றங்கள், குளறுபடிகள் எல்லாமே "க.மு." யுகத்தின் சிக்கல்கள் !

   Delete
 15. முத்துவில் வெளிவந்த வேதாளர் கதைகளின் மொழிபெயர்ப்பும், அச்சுப் பதிப்பும் - அந்தக் கையடக்கமான அளவும் - பளிச் வெண் தாள்களும் - அட்டைப்படங்களும், சூப்பரான ஃபில்லர் பக்கங்களும் - அடடா.. அடடா... எதை சிலாகிப்பது? எதை விடுவது...? பூ விலங்கு கதையில் - டால்பின் சவாரியின்போது - ஒரிஜினலில் வேதளரின் முகத்தை மறைத்திருப்பார்கள், ஆனால் முத்துவில் லே-அவுட் பண்ணியபோது முகத்துக்கு கண் மூக்கு வாய் வைத்து ஒரு வழி பண்ணியிருப்பார்கள்...ஹி..ஹி...
  அன்றைய அத்தனை ஷார்ப்பான பிரிண்டிங்கிற்கு என்ன காரணம்?

  ReplyDelete
  Replies
  1. என்னதான் டுராங்கோ ஜெராமியா என்று போனாலும் இந்தமாதிரி கதைகளில் உள்ள ஒருவித ஈர்ப்பு லயிப்பு..... கிட்டவே கிட்டாது...!
   வேதாளனை தூசு தட்டுங்களேன் எடி...
   ப்ளீஸ்...ப்ளீஸ்...!

   Delete
  2. Podiyan : //அன்றைய அத்தனை ஷார்ப்பான பிரிண்டிங்கிற்கு என்ன காரணம்?//

   அந்த 'பளிச்' வெண் தாள்கள் பற்றிய கதை என்றேனும் இன்னொரு நாளைக்கு !!

   Delete
 16. 'செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
  ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து'

  ReplyDelete
  Replies
  1. விளக்கம் கூற முடியுமா?

   Delete
  2. இயல் வகை
   பால் வகை

   செல்க: முகப்பு |

   குறள் எண் 0413   செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
   ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
   (அதிகாரம்:கேள்வி குறள் எண்:413)

   பொழிப்பு: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.

   மணக்குடவர் உரை: செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

   பரிமேலழகர் உரை: செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
   (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)

   இரா சாரங்கபாணி உரை: செவியுணவாகிய கேள்வியுடையவர் இவ்வுலகத்தவராயினும் அவியுணவினைக் கொள்ளும் தேவரோடு ஒப்பர்.

   Delete
  3. இணையத்திலிருந்து பெற்றது.
   நன்றி இணையத்திற்கு.

   Delete
  4. நன்றி மிஸ்டர் ராஜன்.

   திருக்குரள்- மக்கள் மறக்க கூடாது என்று இதனை பதிவிட்டிருந்தேன். இவ்வளவு விளக்கம் அளித்தது மகிழ்சியாக உள்ளது. நன்றி! நன்றி!! நன்றி!!!

   Delete
  5. நண்பர்களே உங்கள் மூலம் இன்று ஒரு குறளின் அர்த்தத்தை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   Delete
 17. வாழ்த்துக்கள் வெட்டுக்கிளி சார். அட்டைபடம் அருமை சார். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. இனிய காலை வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 19. அன்புள்ளள ஆசிரியர் அவர்களுக்கு, நீங்கள் ஒரு சமயம் சொன்ன அந்த 554 பக்க TeX கதையை விளம்பரத்தில் பார்தெய்ன் வண்ணத்தில் மிக அருமையாக உள்ளது தயங்காமல் அவற்றை வரும் ஜனவரியில் ச்பெசல் இதழாக வெளியிட தகுதியான இதழ்.please sir.விற்பனையில் பட்டையைய் கிளப்பும்.please sir!

  ReplyDelete
  Replies
  1. Sridhar & friends : சார்...டெக்ஸ் கதைகளுக்குப் பேனா பிடிப்பதாலேயே நானும் அவரது ஆற்றல்களைக் கடன் வாங்கி கொள்ள முடியுமா - என்ன ?

   ஒரு 550 + பக்கக் கதையினை 'ஜஸ்ட் லைக் தாட்' தயாரித்து, ஒன்றரை மாதத்தில் வெளியிடுவதெல்லாம் நடைமுறை சாத்தியமாகுமா ?

   ஒவ்வொரு இதழுக்கும் பின்னே சிலபல மாதங்களின் திட்டமிடல்கள், உழைப்புகள் மறைந்திருக்கின்றன நண்பரே ! அதனில் compromise செய்தால் உத்தரவாதமான சொதப்பல் பலனாகும் !

   Delete
  2. Ok ஆசிரியரே .ஆனால் காலம் எடுத்துக் கொண்டு இந்த வருடத்தில் ஏதேனும் spl யாக தரலாமே!!!!!!

   Delete
  3. சாமி இப்போது வருகிற டெக்ஸ் கதைகளே போதும்! மத்தகதைகளுக்கும் வாய்ப்புகள் கொடுங்கள்!

   Delete
 20. அருமையான பதிவு...

  ReplyDelete
 21. என் அப்பா ஒரு வேதாளர் ரசிகர்.மே மாதங்களில் ஈரோடு புதன்கிழமை வார மார்க்கெட்டிற்கு சென்று திரும்பும்போது ,,அங்கு வாங்கிய மாம்பல மணதோடு புத்தம் புதிய வேதாளர் புத்தகத்தின் அச்சு மணமும் கலந்து வீசும் ரம்யமான நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.!

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கங்கள் எம்.வி. சார்..!
   ஏன் எடி அறிவித்த கனவு இதழ்வேதாளனின் 15 கதைகளையும் தாங்கி வரும் ஒரு முழுமையான தொகுப்பாக இருக்கக்க கூடாது...?!

   Delete
  2. வணக்கங்கள் "வேதாள" வெங்கடேசரே...

   Delete
 22. எல்லோருக்கும் காலை வணக்கம். மேலே போய் படித்து விட்டு வருகிறேன்

  ReplyDelete
 23. எடிட்டர்,மற்றும் எனது காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும்,good morning.

  ReplyDelete
 24. என்னாது. கேப்டனை ஜாம்பவான்னு சொல்லி புராதன பொருளாக்க பாக்குறீங்களே சார். அவரோட புதுகதைகள் இன்னும் வெளிவராமல் இருக்கே?.. மறுபடியும் ஒரு ரவுன்ட் வருவார் தளபதி.:)வெற்றி நமதே.

  ReplyDelete
  Replies
  1. வெற்றி எல்லாம் அப்பார்பட்டவர் டைகர்....

   Delete
  2. cap tiger : புதுக் கதைகள் உள்ளன தான்....உள்ளன தான்...!!

   Delete
 25. Good morning to editor and all friends

  ReplyDelete
 26. மீண்டும் ஓர் காலப்பயணம்...
  செம்ம பதிவு சார்...
  இம்முறை முத்துவின் 2ம் ஜாம்பவான் நம்ம டைகர் என்பது ஆச்சர்யமான சர்ப்ரைஸ் சார்...
  சூப்பர்.. டைகர் அறிமுகமான நாள் முதல் இன்று வரை நேரலையாக காமிக்ஸ் உலகில் இருந்ததால் இதை எளிதில் உணரமுடிகிறது சார்.ஒரு ஹூரோ ஜாம்பவனாக இருக்க என்ன சாதித்து இருக்கனும் என்ற அளவுகோல் இப்போது எனக்கு கூட லைட்டா தூரத்தில் ஒரு புள்ளியாக தெரிகிறது சார்.

  எத்தனையோ மூத்த நாயகர்கள் இருந்தாலும் நாம் பார்த்து வளர்ந்த ஒரு நபர்(நண்பர்) ஹிட் அடுத்து இருப்பது மகிழ்ச்சி, ஒரு கெளபாய் ரசிகன் என்ற வகையில் நெகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என் மதிப்பிற்குரிய டைகர் வெறிய கண்மனிகளே....

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : //நாம் பார்த்து வளர்ந்த ஒரு நபர்(நண்பர்) ஹிட் அடுத்து இருப்பது மகிழ்ச்சி,//

   Thumbs up !!

   Delete
 27. A : வோ! வெற்றிபெற்ற வெட்டுக்கிளியாருக்கு வாழ்த்துகள்!

  B : என்னுடைய வாழ்த்துகளும்!

  C : பேசாம வெற்றிக்கிளியார்'னு பேரை மாத்திவச்சுக்கச் சொல்லுங்க அவர்கிட்ட!

  (ஹிஹி! சமீப காலமா இப்படி A,B னு பின்னூட்டம் போட்டே பழகிடுச்சு!)

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா...
   வாழ்த்துக்கள் கிளியாரே...

   Delete
 28. 'வேதாள வேட்டை' அருமையான க்ரைம் ஸ்டோரி. பார்ப்பவரை சீட் நுனிக்கு கொண்டு செல்லும் திரைப்படம் போல படிப்பவரின் உணர்வுகளை ஊசி முனைக்கு கொண்டு செல்லும் கதையோட்டம். (சத்தியமாக இந்த கதைக்கு குறை சொல்ல மனமே வரவில்லை. ஆனாலும்......) வேதாள வேட்டை என்ற இந்த கதையின் தலைப்பு ஒரு சொதப்பலோ சொதப்பல். வேறு ஏதாவது அட்டகாசமான தலைப்பு வைத்திருக்கலாம். கதை ஆரம்பிக்கும் முதல் பக்கம் ஸோம்பி (ZOMBIE) என்ற ஒருவன் வருகிறான். கதையின் ஆரம்பத்தில் மனம் ஒன்றிவிடுவது இந்த பெயரில்தான். தலைப்புக்கு ஏற்ப இவன்தான் வில்லன் என நினைக்க தோன்றுகிறது. கதையின் மூன்றாம் பக்கம் ராபின் வருகிறார். நான்காம் பக்கம் அவனை மடக்குகிறார். ஐந்தாம் பக்கம் என்கவுன்டர் நடக்கிறது. ஆறாம் பக்கம் ஸோம்பி இறந்து விடுகிறான். அப்போது ராபின் "முடிந்தது ஸோம்பியின் கதை. இம்முறை 'வேதாளம் மீண்ட வினோதம்' அரங்கேறாது" என்கிறார். அடுத்து வரும் விறுவிறுப்பான 90 பக்க க்ரைம் கதையில் ஸோம்பி வருவதே இல்லை. ஸோம்பிக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்மந்தமே இல்லை. 'வேதாள வேட்டை' என்று பெயர் வைத்துவிட்டு ஸோம்பிக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படவில்லை??

  ReplyDelete
  Replies
  1. +1

   இந்த முறை கதை தலைப்புக்கும் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை!

   Delete
 29. எடிட்டர் சார்,

  ஸ்மர்ஃப் அட்டைப்படம் அதன் பின்னணி வண்ணக்கலவையினால் மனதை அள்ளுகிறது! ஒரு குழந்தை-ஸ்மர்ஃபை மையப்படுத்தி கதை இருக்கப்போவதாகத் தோன்றுவதால், நிச்சயம் ஒரு குழந்தையைப் பராமரிப்பதிலுள்ள சிரமங்களை ரகளையான வழியில் சொல்லி படைப்பாளிகள் பின்னிப் பெடலெடுத்திருப்பார்களென்பது உறுதி! நீங்களும் அனுபவித்துச் செய்திருப்பதால் ஒரு அருமையான வாசிப்பு அனுபவம் எங்களுக்காகக் காத்திருப்பதை ஆரவாரமாக உணரமுடிகிறது!

  சூப்பர் சிக்ஸின் முதல் இதழ் வெளிவரயிருப்பது கூடுதல் குதூகலமளிக்கிறது!

  சூப்பர் சிக்ஸின் முதல் இதழ் வெளிவரயிருப்பது குதூகலமளிக்கிறது! சமீபகாலங்களில் படித்த கதைகள்தான் எனினும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வசனங்களுடன் மீண்டும் ஒருமுறை படிக்க நேர்வது கொஞ்சமாயினும் புது அனுபவத்தைத் தரக்கூடும்!

  காத்திருக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : மேலை நாடுகளில் - "சேகரிப்புகளுக்கோசரம்" என்ற ரீதியில் சில தொகுப்புகள் வெளியாவதுண்டு ! அழகாய் ஷோ கேசில் அடுக்கி வைத்து, ஆசையாய் அவ்வப்பொழுது எடுத்துப் புரட்டி மகிழ்ந்துவிட்டு, அவற்றை மீண்டும் பத்திரப்படுத்திட அங்கு ஒரு அணியுண்டு ! ரொம்ப காலமாகவே அத்தகைய முயற்சிகளுக்குள் லேசாகவேனும் கால் பதித்திடும் அவா எனக்குண்டு ! அதன் பிரதிபலிப்பே தற்போதைய லக்கி லூக் கிளாசிக்ஸ் !

   SUPER 6 இதழ்கள் நிஜமான கலெக்டர்ஸ் ஆல்பமாய் இருக்குமென்று நம்புகிறேன் !

   Delete
  2. Classic 6 முதல் ரவுண்டில் எந்த கதையுமே படித்தது இல்லை அதனால் இது எனக்கு jackpot தான்.

   Delete
  3. ///மேலை நாடுகளில் - "சேகரிப்புகளுக்கோசரம்" என்ற ரீதியில் சில தொகுப்புகள் வெளியாவதுண்டு ! அழகாய் ஷோ கேசில் அடுக்கி வைத்து, ஆசையாய் அவ்வப்பொழுது எடுத்துப் புரட்டி மகிழ்ந்துவிட்டு, அவற்றை மீண்டும் பத்திரப்படுத்திட அங்கு ஒரு அணியுண்டு !///

   என்ன சார் இப்படி கேட்டுப்புட்டீங்க!! நாங்களும் அழகாய் ட்ரங்க் பொட்டியில் போட்டுப் பதுக்கிவச்சு, அவ்வப்போது எடுத்துப் பார்த்து, உச்சிமோந்து, நுகர்ந்து, கன்னத்தில் வைத்துக் குளிர்ச்சி கண்டு, தடவிப்பார்த்து, அதுக்கப்புறமா படிச்சுவேற பார்த்து பத்திரப்பதுக்கும்(!) ஆளுங்களாக்கும்!
   அந்த மேலைநாட்டுப் பயபுள்ளைகளை எங்களைப் பார்த்து கத்துக்கச் சொல்லுங்க! ;)

   Delete
 30.        "முத்துவின் 2ம் ஜாம்பவான் டைகருக்குப் புகழாரம்"

    *கெளபாய் ஹீரோஸ் என்றாலே லயன் &முத்து காமிக்ஸில் வெற்றிகொடி நாட்டிய டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் மற்றும் லக்கிலூக் தான் ஞாபகம் வரும். இந்த மூவரில் டைகருக்கு இருக்கும் தனிச்சிறப்பு முத்து காமிக்ஸ்ஸின் "தி பெஸ்ட் இதழ்"ஆன "மின்னும் மரணம் " - இதழின் நாயகன் இவரே . ரூபாய் 1000விழாவில் வந்த ஒரே ஹூரோவும் இவரே.....
    
           *கெளபாய் ஒன் சாட் கதைகள் கோலோச்சி வந்த வேளையில் அவற்றிற்கு போட்டியாக , முத்துவில் 1990களின் மத்தியில் ஆசிரியர் திரு S.விஜயன் அவர்களால் களம் இறக்கப்பட்டார் டைகர். தங்ககல்லறை என்ற இரு பாக சாகசம் வாயிலாக புயலென புறப்பட்டவர் . தொடர்ந்து வெளிவந்த இரத்தகோட்டை, இரும்புக் கை எத்தன் , மின்னும் மரணம் போன்ற அட்டகாசமான கதைகள் இவரை புகழ் ஏணியின் உச்சத்தில் அமர்த்தின .

         *டாப் கெளபாய் ஹூரோ என்ற இடத்தை தனதாக்கிக் கொண்டார் . சிலகாலம் அதை தக்க வைத்தும் கொண்டார் . இவரின் சாகசங்களின் தனித்தன்மையே பிரம்மாண்டமான கதைக்களமே . ஏனைய கெளபாய்களின் ஒன் சாட் சீரியஸ்களை மட்டுமே ரசித்து வந்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்,டைகரின் ஆழமான மற்றும் பிரம்மாண்டமான கதைக்களத்தின் முன் வாயைப்பிளந்து திக்குமுக்காடி சொக்கிப் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தான் .

          *டைகரின் மற்றொரு ஆச்சரியமான விசயம் அவரின் கதைகள் அனைத்தும் ஒரே சீரியஸ் போல அமைக்கப்பட்டதே . ராணுவ லெப்டினண்ட் டைகராக ஒரு நீண்ட சீரியஸ்ஸும் , இளம் டைகர் கதைகளை கொண்ட யங் டைகர் சீரியஸ்ஸும் என இரண்டு பிரம்மாண்டமான தொடர்களாக இவர் கதைகள் வெளிவந்துள்ளன .
  குடிகார கிழவன் ஜிம்மி  மற்றும் வயது முதிர்ந்த தோழன் ரெட் உல்லி இவர்களே இவரின் கூட்டாளிகள் என்ற போதிலும் சிறப்பான தொடராக அமைய என்ன காரணம் ????....

          *ஒன்னறை நூற்றாண்டுக்கு முந்தைய வன்மேற்கின் ஆடுகளங்களில் இவரின் சாகசங்கள் அணல் பறத்தின. அசாதாரண வில்லன்கள் , அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் டைகரின் சமயோசித யுக்திகள் , திடீர் திருப்பங்கள்,டைகரின் பிடிவாதங்கள் சாதிக்கும் அசாத்திய வெற்றிகள்- என பல அம்சங்கள் இவரின் சாகசங்களின் ப்ளஸ் பாயிண்ட்கள்.

        *இரத்த கோட்டையில் இவருக்கு உதவும் கோஸைஸின் அபாச்சேக்களுக்கு , மின்னும் மரணத்தில் டைகர் உதவி புரிந்து இருப்பார் . அதேபோல் , இரும்புக்கை எத்தன் கதையின் வில்லன் ஜெனரல் அலிஸ்டைரை மின்னும் மரண கிளைமாக்சில் தான் டைகர் போட்டுத் தள்ளுவார். இப்படி இவரின் கதைகள் அனைத்தும் ஒன்றோடொன்று வலைப்பின்னல் போல அமைக்கப்பட்டதே இவரின் வெற்றிக்கு முழு முதற்காரணம்.

  *இந்த வெற்றியே இன்று இவரை ஜாம்பவான்2 ஆக்கியிருக்கிறது. காலத்தை வென்ற நாயகன் டைகர். இன்னுமும் பல ஆண்டுகள் கழித்தும் இவரின் சாகசங்கள் புதிய ரசிகர்களை தன் வசப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  *செவ்விந்தியர்களின் நட்பு இவருக்கு இருந்தாலும் ,மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிந்து ஆயிரக்கணக்கான செவ்விந்தியர்கள் மடிவதற்கு காரணமாக டைகர் இருப்பது மிகப்பெரிய மைனஸ்.....

       டெக்ஸ், லக்கிலூக் போன்ற ஏனைய கெளபாய்களுக்கு கிடைத்தது போல வலுவான அணி இவருக்கு அமைந்திருந்தால் இந்த  தொடர் இன்னும் பல புதிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கும்.

  --------சேலம் Tex விஜயராகவன்-------

  ReplyDelete
  Replies
  1. அது முடியாது சேலம் Tex. நிறைய திறமைசாளிகள் உள்ளனர் ஆனால் சார்லி & ஜிரோவ் போன்ற அசாத்திய திறமைளிகள் ஓரு நூற்றாண்டுகளில் ஓருவர் பிறப்பதே அரிது....

   Delete
  2. சேலம் Tex விஜயராகவன் : டெக்ஸ் முகாமிலிருந்து டைகருக்குப் புகழாரமா ? Awesome !! ஆரோக்கியமான முன்மாதிரி !!

   என்னைப் பொறுத்தவரையில், டைகரின் வெற்றிகளுக்குப் பின்னணி அந்த carefree பாத்திரப்படைப்பே ! டெக்ஸ் வில்லர் ஒரு இரும்பு மனிதர் ; அசைக்க முடியா சக்தி என்பதாக முன்னிறுத்தப்படுபவர் ! So அவருக்கு நாம் தருவது ஒரு சூப்பர் ஹீரோவுக்கான ஆராதிப்பையும், மரியாதையையும் !

   ஆனால் டைகரோ - ஒரு சராசரி ஆசாமி ! சூதாடி ; சரக்குப் பிரியர் ; ஏக் தம்மில் எட்டுப் பேரைத் தூக்கிப் பந்தாடும் பலசாலியெல்லாம் கிடையாது ! கம்பி எண்ண நேரிட்டாலும் கலங்கப் போவதில்லை ; வதைப்பட்டாலும் மனம் தளர போவதில்லை ! அப்போதும் கூட மனுஷனிடம் ஒரு மெல்லிய எகத்தாளமும், 'முடிந்ததை பார்த்துக்கோயேன்' என்ற தோரணையும் தட்டுப்படும் ! உச்சமாய் அவரது மதியூகமும், வீரமும் !

   So ரொம்பவே முரணான இந்தக் கலவை டைகரை கௌபாய் காமிக்ஸ் உலகினில் ஒரு தனித்துவத்தோடு உலவச் செய்கிறது என்று சொல்வேன் !

   A free spirited soul !!

   Delete
  3. @ டெக்ஸ் விஜய்

   பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையைப்போன்ற நேர்த்தியுடன் எழுதியிருக்கிறீர்கள்! உங்கள் எழுத்துத்திறன் நாளுக்குநாள் கூடிவருவது மகிழ்ச்சியளிக்கிறது! வாழ்த்துகள்!

   Delete
 31. அன்புள்ள ஆசிரியருக்கு

  முப்பது நாட்கள் இடைவெளி என்பது மிக அதிகமாக உள்ளது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை புத்தகங்களை வெளியிடுவதற்கு ஏதாவது வழி உள்ளதா? முயற்சி செய்யலாமா?(வாரத்திற்கு இரண்டு புக் வீதம்)

  ஜூனியர் விகடன் தற்பொழுது வாரம் இருமுறை வருகிறது. மாதம் இருமுறை வந்த துக்ளக் கூட தற்பொழுது வாரத்திற்கு ஒருமுறை வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. பலமுறை நமது ஆசிரியர் இது பற்றி (பாதகம்களை) விளக்கமாக சொன்ன பின்பும் நாம் அதை மறந்துவிட்டு அதே கேள்வியை கேட்பது சரி இல்லை நண்பரே!

   இடைவெளியை குறைக்க யோசனை, இது உங்களால் முடியும்: முயற்சிக்கலாமே: நீங்க முதல் 2 புத்தகம்களை முதல் ரெண்டு வாரத்தில் படிங்க, கடைசி ரெண்டுவாரம் மீதம் உள்ள ரெண்டு புத்தகம்களை படிக்கலாமே!

   Delete
  2. Jegang Atq : நீங்கள் குறிப்பிடும் வெகுஜனப் பத்திரிகைகள் சகலமும் கடைகளில் கிடைக்கும் விஷயங்கள் எனும் போது, கூரியர் செலவென்ற நந்தி தேவர் குறுக்கே கிடையாதல்லவா ? நமக்கோ கிட்டத்தட்ட ஒரு புக்கின் முக்கால் பங்கு விலை கூரியருக்கென ஒதுக்க அவசியமாகிடும் பொழுது "மாதமிருமுறை" என்பது தண்ட செலவாகிடாதா ?

   Delete
  3. அப்ப கூரியர் செலவையும் நீங்களே எத்துகிட்டு எங்களுக்கு காமிக்ஸ் மட்டும் அனுப்புங்கள்...so simple

   Delete
  4. ஆசிரியர் அவர்களுக்கு

   எனது கட்டு படுத்த இயலா ஆர்வத்தினை வெளிப்படுத்தினேன். கூரியர் செலவினை எத்தனை பேரால் தாங்க இயலும்?

   Delete
  5. // அப்போ கூரியர் செலவையும் நீஙிகளே ஏத்துக்கிட்டு //

   ஒரு ஐந்தாயிரம் சந்தா கிடைத்தால் ஒருவேளை சாத்தியமாகலாம்.

   Delete
 32. நேத்து இரவு தான் "மிண்ணும் மரணம்" படிக்க அரம்பித்ததேன் படுக்க அதிகாலை மூன்று ஆகி விட்டது.
  டைகர் கதைகளில் பலமே அவருடைய வில்லன்கள் தான். மி.மி யில் கிம்பால் & பின்லே ஒவ்வொரு முறையும் புத்திசாலி தனமாக டைகரை மடக்குவது பின்னர் டைகர் அவர்களுடைய திட்டத்தை தன் அசாத்திய திறமையால் தவிடுபொடியாக்குவது போன்றும் மேலும் அந்த கவர்னர் பாத்திரம். டைகர் உண்மை யை சொல்லி விடுகிறேன் என்று கூறிய பிறகும் டைகரை கொடுமை செய்வதும். "நான் உண்மை முன்பே கூறிவிடுகிறேன் சொன்னேன்" "நீ முன்பு பொய்தான் கூறுவாய" என்று டைகருக்யே மிரள வைப்பதும். கடைசியாக அவர் வழியில் தங்கம் பற்றி உண்மையை டைகரை வைத்தே தெரிந்து கொள்வது புத்திசாலிதனத்தின் உச்சம்.

  சில்க் பத்தி சொல்லவே வேனாம். அழகு அறிவு சுயநலம் செயல்திறன் ஒருங்கே பெற்ற பெண்ணாக வரும் பாத்திரம். சில்க் கதையில் almost வில்லிதான். டைகர் கையால் அடி கூட வாங்குகிறார். ஆனால் டைகர் மிது இனம் புரியாத மையல்(டைகர் மாதிரி ஆளை எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது?). ஆனால் பெரும்பாலும் தன் வசிகரத்தால் தான் காரியம் சாதிப்பார்.

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar ://டைகர் மாதிரி ஆளை எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது?//

   அட...நீங்க பாட்டுக்கு பிட்டைப் போட்டுவிட்டுப் போய் விட்டீர்கள் சார் ; நம்மாட்கள் இன்று முதல் சவரம் செய்யாமல் ; குளிக்காமல் சுற்றத் தொடங்கி விடப் போகிறார்கள் !!

   அதிலும் ஈரோட்டில் இப்போவே ரேசரும் , சோப்புக் கட்டியும் ஜன்னல் வழியே பறந்ததாகத் தகவல்கள் கசிகின்றன !!

   Delete
  2. ///அதிலும் ஈரோட்டில் இப்போவே ரேசரும் , சோப்புக் கட்டியும் ஜன்னல் வழியே பறந்ததாகத் தகவல்கள் கசிகின்றன ///

   கரண்ட்டு கம்பத்துல நங்கு நங்குனு முட்டியே மூக்கை உடைச்சுக்கிட்ட தகவலும் உங்களுக்குக் கசிஞ்சிருக்கணுமே எடிட்டர் சார்?

   Delete
 33. எங்கள் பொன்மனச்செம்மல்
  இதய தெய்வம் புரட்சித்தலைவர்
  DR.MGRஅவர்களே தங்கள் தலைவர்
  என்று அறிந்த போது நான் மகிழ்ச்சி
  அடைந்தேன்

  ReplyDelete
  Replies
  1. ganesh kv : அட..ஒரு தலைமுறைக்கே அவர் தலைவராச்சே !!

   Delete
  2. எம்ஜிஆர்- மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
   முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்

   Delete
  3. எம்ஜிஆர்- மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
   முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்

   Delete
  4. எம்ஜிஆர்- மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
   முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்

   Delete
 34. மேலும் மி.ம President படலம். நேத்து நைட்டு அந்த பிளேக் குருப் சிப்பாய்களை மட்டும் இல்லை என்னையும் சேர்ந்து தூங்க விடலை.அசாத்தியமான திட்டம் ஒவ்வொரு விஷயத்தையும் கன கச்சிதமாக செயல் படுத்தும் விதம். அதுவும் அந்த ரயில் நிலைய ஓவியம்(B&W ல் பிரம்மாண்ட மாக இருக்கும் மறுபதிப்பில் செதபிடுச்சு) அப்பா என்ன பிரம்மாண்டம்.அந்த வயதான கிழவி கொஞ்ச நேரம் வந்தாலும் நக்கல் சும்மா அல்லும்( அவரோட பொண்ணு கூட ஹி ஹி ரொம்ப அழகககக இருக்கும்). குபி செத்த பிறகு தனி மனிதனாக அவர்களுடைய திட்டத்தை தகர்பது Hollywood படமே மி.ம ஓரு படி கிழதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்.உண்மையில் நான் நிரம்பவும் ரசித்த பாகம் அது.அந்த water tank அதை மறந்து விட்டீர்கள்.

   Delete
 35. மி.ம பிரம்மாண்ட வெற்றிக்கு அதன் காட்சி அமைப்பு மற்றும் ஓவியம் என்றால் மிகையாகாது. அதுவும் அந்த கழுகை டைகர் பிடிக்க முயற்சி செய்யும் போது top to low angle, low to top angle, perspective view மேலும் அந்த கழுகின் ஓவியம் அப்பப்பா.
  Tom & jerry ஆரம்ப காலத்தில் ரொம்ப நன்றாக இருக்கும் டைரக்டர் William hanna இறந்த பிறகு அவர் எடுத்த மாதிரி எடுக்க எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள் ஆனால் முடிய வில்லை. ஏனென்றால் William Hannah இயற்கை கொடுத்து வரம் அது. அதே போல சார்லி & ஜிரோவ் போல் இனிமேல் டைகர் கதையை யாராலும் உருவாக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar : தற்போதைய டைகர் கதைகளின் தள்ளாட்டத்துக்குக் காரணமே - அதன் பிதாமகர்கள் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ள இமாலய உயரத்திலான தர எதிர்பார்ப்புகள் தானே ? அந்த அசாத்திய அளவுகோல்களுக்கு தற்போதைய கதாசிரியர்களால் நியாயம் செய்ய முடியவில்லை என்பது கண்கூடு !

   Delete
 36. சுவாரசியமான பதிவு.

  ReplyDelete
 37. ஒரு யோசனை .. இதை 2015 லியே ஈரோடு புத்தக திருவிழாவில் சொன்னதாக நியாபகம்..

  மறுபதிப்புகள் விற்பனை சிறப்பாக இருப்பதாகவும் , பழைய வாசகர்கள் உடனே வாங்கும் புத்தகமுமாக இருப்பதாக அவ்வப்போது சொல்லி வருகிறீர்கள்.

  இதை ஏன் ஒரு விளம்பர படுத்தும் வாய்ப்பாக எடுத்து கொள்ள கூடாது??

  இந்த மறுபதிப்புகளில் நமது இதர சம கால நாயகர்களை பற்றி ஒரு சுவாரசியமான தகவல்களையோ அல்லது ஒரு அறிமுக படலத்தையோ , ஒரு கதைசுருக்கத்தையோ போடலாமே...

  இலவசமாய் ஒரு விளம்பரம் கிடைக்க வாய்ப்பு உள்ளதே .

  இது வரை வந்த மறுபதிப்புகளில் வருகிறது விளம்பரங்களிலும் மறுபதிப்பு பற்றிய விளம்பரங்களே உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. Rummi XIII : போட்டால் போச்சு !! எனக்கும் அந்த பில்லர் pages தயாரிக்கும் பணி மிச்சமாகிடும் ! ஆனால் அந்த "மாயாவிக் காதலர்கள்" பட்டை போட்ட குதிரைகளாய் - பழையனவற்றைத் தாண்டி இதர சமாச்சாரங்கள் மீது பார்வைகளை ஓட விடவும் தயங்குவதே நடைமுறை ! புத்தக விழாக்களிலும் சரி, நமது ஆன்லைன் விற்பனை முயற்சிகளிலும் சரி - இதனை நிறைய பார்த்துள்ளோம்.

   But still - முயற்சிப்பதில் தப்பில்லை தான் !!

   Delete
  2. ரம்மி @

   நல்ல யோசனை.! சென்ற பதிவை மாயாவி கதையிலும்,இந்த பதிவை லாரன்ஸ் கதையிலும் வெளியிட்டால் , பதிவு குவியலில் காலவெள்ளத்தில் அமிழ்ந்து போகும் இந்த பதிவை புத்தகத்தில் அனைவரும் அடிக்கடி படித்து மகிழலாம்.!வலைதளத்திற்கு அப்பால் இருக்கும் வாசகர்களும் ஹேப்பி அண்ணாச்சி.!

   Delete
 38. எடிட்டர் கிளாசிக் சூப்பர் ஹீரோக்ள் பற்றி அவருடைய பார்வையில் சுவராசியமாக இருந்தது.


  தொடர்ந்து ஆண் கிளாசிக் ஹீரோக்களை மட்டுமே பாராட்டி சீராட்டி கௌரவபடுத்தினால் பெண் வாசகிகளும் மௌனமாக நம் தளத்தினை பார்வையிடும் இல்லத்தரசிகளும் ஆணாதிக்க சமூகம் என்று தூற்றாதா.?

  அடுத்த பதிவில் கிளாசிக் " பழைய முத்து காமிக்ஸில் வந்த ஹீரோயினையும் உங்கள் பார்வையில் கௌரவபடுத்தினால் எல்லா தரப்பு வாசகி வாசகர்களும் சந்தோசப்படுவார்கள்.!

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். //பெண் வாசகிகளும் மௌனமாக நம் தளத்தினை பார்வையிடும் இல்லத்தரசிகளும் ஆணாதிக்க சமூகம் என்று தூற்றாதா.? //

   பாயசம் ....அடுத்த இலைக்குப் பாயசம் ப்ளீஸ் !!

   Delete
  2. மத்த hero எல்லாம் பிளாக்ல இடம் கொடுத்து இருக்காரு. ஆனா இளவரசிக்கு மட்டும் ஆசிரியர் இதயத்துல இடம் கொடுத்து நிறைய இடம் கொடுத்து இருக்காரு...

   Delete
  3. Ganeshkumar Kumar : தப்பிச்சேன் !!

   Delete
  4. சரியாக சொன்னீர்கள் வெங்கடேஸ்வரன் சார்.

   Delete
  5. இனியன் சார்.!


   " வசிஸ்டர் வாயால் பிரம்மஸ்ரீ பட்டம் " என்ன ஒரு பெருமை எனக்கு.!

   Delete
 39. தங்க தலைவனைப் பற்றிய சிறப்பு பதிவில் தங்க தலைவன் என்ற அடைமொழியை மறந்ததை கண்டிக்கும் அதே வேளையில் ..
  ரத்த கோட்டை மறுப்பதிப்பை பற்றிய ஏதேனும் புது தகவல்கள் உண்டா என்று சொன்னால் அந்த கண்டிப்பு சற்றே குறைய வாய்ப்பு உள்ளது.

  ReplyDelete
 40. Dear editor sir,please refer 554 pages TeX album.

  ReplyDelete
  Replies
  1. Sridhar : Please refer to my reply somewhere up here as well !

   Delete
 41. TeX vijay sir,erode vijay sir மற்றும் தலைவர் செயலாளர் காமிக்ஸ் நண்பர்கள், சகோதரர்கள் சகோதரிகள் என அனைவரும் ஆதரவு தாருங்கள்.we want TeX 554! தல 554!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீ@ இந்த சாகசத்தை பற்றி இம்முறையும் ஈரோட்டில் ஆசிரியர் சாரிடம் வினவினோம்...
   டெக்ஸின் சூப்பர் ஹீரோ அந்தஸ்துக்கு சற்றும் நியாயம் செய்யாத ஒன்றாம் இது....
   அந்த மந்திரவாதி மெபிஸ்டோவுடன் மோதும் பயங்கர பூச்சுற்றல் கொண்ட கதைக்களம் , பல பக்கங்களில் கொட்டாவி கிளம்ப செய்யும். தங்க முட்டைபோடும் வாத்தை அறுத்த கதையாக ஆகிடும். எனவே இதை இப்போதைக்கு போடும் வாய்ப்பு இல்லை என கூறி விட்டார். எனவே நாங்களும் டெக்ஸின் பர்சானாலிட்டிக்கு ஆப்பு வைக்கும் விபரீதம் வேணாம் சார் என ஒப்புக்கொண்டு விட்டோம். எனவே இப்போதைக்கு தலயின் சூப்பர் ஹீரோ அந்தஸ்து க்கு ஏற்ற கதையாகவே எதிர்பார்ப்போமே நண்பரே...
   பக்க எண்ணிக்கை முக்கியமல்ல நமக்கு, கதை சற்றும் நம்பும்படி இருக்க வேண்டுயது அவசியமன்றோ...!!!
   யதார்தங்களை பிரதிபலிக்கா தொடர்கள் தோற்பதும்,
   யதார்த்த தொடர்கள் வெல்வதும் இப்போதைய நடைமுறை...நாமும் அதையொட்டியே பயணப்போம்...

   Delete
  2. Salam text,
   Namakku athu meyyerre ellai. We love that.

   Delete
  3. Sorry. I have lost my tamil bond. We have to see, that one. That is not to be perfect. V love that. That's our pleasure.

   Delete
  4. சேலம் Tex விஜயராகவன் @ // பக்க எண்ணிக்கை முக்கியமல்ல நமக்கு, கதை சற்றும் நம்பும்படி இருக்க வேண்டுயது அவசியமன்றோ...!!! //

   ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம்!

   Delete
  5. மந்திர மண்டலத்தை விடவா மொக்கை.?

   Delete
  6. @ sridhar

   தல'க்காண்டி உங்கள் போராட்டத்தை நான் பாராட்டுகிறேன்! ஆனால் டெக்ஸ் விஜய் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது! அந்த 554ஐ நாம கேட்காம விடப்போறதில்லை; அவரும் போடாம விடப்போறதில்லை! நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தல'யின் தனித்தாண்டவம் பிசகின்றிச் செல்ல நம் விருப்பம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதே காரணம்!
   பூச்சுற்றல்கள் இல்லாத அழுத்தமான கதை என்று உறுதியாகத் தெரிந்தால் சொல்லுங்கள், கொஞ்சமாய் அலசி ஆராய்ந்துவிட்டுப் போராட்டத்தில் குதித்துவிடலாம்!

   Delete
  7. //பூச்சுற்றல்கள் இல்லாத அழுத்தமான கதை///

   மெபிஸ்டோ வந்தால் நிச்சயமாக புய்ப சரங்கள் காதுகளில் சுற்றப்படுவது நிச்சயம்...

   MV sir@இந்த பூச்சுற்றல், புய்பசரம் ஸ்பைடரின் பரம்பரை சொத்து. என்னுடைய ஆல் டைம் பேவரைட் "கடத்தல் குமிழிகள்" & "மீண்டும் ஸ்பைடர்" & டாக்டர் ஆரோவின் "விசித்திர சவால்" போன்ற கதைகளில் இந்த ஃபேன்டசி, ஹிப்னாடிசம், காலப்பயணம் போன்ற புய்ப கூடைகள் ரசிக்க முடிகிறது.
   ஆனால் டெக்ஸ் மாதிரியான ஒரு சூப்பர் ஹூரோ இந்த கதைகளில் தலை காட்டினால் கொஞ்சம் தலையை சொரிய வேண்டியுள்ளது. ஆசிரியர் சாரும் அதனாலேயே இந்த மெபிஸ்ட்டுகளை தவிர்க்கிறார் போல.
   டெக்ஸின் கெத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இவைகளை சற்றே தள்ளி வைத்து விடுவோமே. அங்கே இன்னும் பல ஆண்டுகளுக்கு தேவையான முறுக்கான சரக்கு இருக்கு...

   Delete
 42. O.k. sir. I'm your obedient student. But l'm waiting for your announcement. Thank you sir.

  ReplyDelete
 43. மீண்டும் ஒரு சி.சிறு வயதில் படித்த திருப்தி ..இந்த மேலுள்ள பதிவை மறவாமல் சி.சி. வயதில் தொகுப்பாக வரும் பொழுது கண்டிப்பாக அனைத்து வெளியிடுங்கள் சார் ...

  ReplyDelete
  Replies
  1. சாரி ..இனைத்து என படிக்கவும் சார்...:-(

   Delete
  2. நான் 'இணைத்து' ன்னு படிக்கவா தலீவரே

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 44. உங்கள் பதிவை படித்தவுடன் புது வேதாளர் கூட வேண்டாம் சார்...நமது முத்துவில் வந்த வேதாளர் கதைகளை மட்டுமாவது கண்களில். காட்ட பாருங்கள். சார் ...ப்ளீஸ் ...

  ReplyDelete
 45. Replies
  1. வாழ்த்துக்கள் அருப்பு கோட்டையாரே.!மதுரையை தாண்டி செல்லும்போதெல்லாம் பந்தல் குடியில் அருமையான டி சாப்பிட்டு விட்டுதான் போவோம்.!

   Delete
  2. வெட்டுக்கிளிக்கு ரெக்கை முளைத்துடுத்து... பரிசை வாங்கிட்டு பறந்ந்ந்து போய்டுத்து...

   Delete
  3. // பரிசை வாங்கிட்டு பறந்ந்ந்து போய்டுத்து...// 4நாளில் முதல் முறை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்... செம்ம விஜய்...

   Delete
  4. காலையில் எழுந்தவுடன் கல்யாணப்பரிசு தங்கவேலுவாக மாறி,கட்டுசோறு காப்பி பிளாஸ்க் சகிதம் பத்துமணிபேங்கிற்கு எட்டு மணிக்கே வரிசையில் நிற்கப் போனால் அங்கே மூட்டை முடிச்சோடு ஒரு முப்பது பேர் ஏற்கனவே ஆஜர்.ஒருத்தர் பாய் தலையணையோடு அங்கேயே படுத்திருந்தார்.மெல்ல மெல்ல வரிசை கூட வெயிலும் அடிக்க,சொகுசாக வளர்ந்த உடம்பு சோர்ந்து போக சோறு தண்ணி வேண்டுமென்றால் காசோடு வா என்று சொந்த வீட்டிலேயே எச்சரிக்கை குரல் கொடுத்தது நினைவிற்கு வர தெம்பாக,கம்பாக நில்லும் நேரத்தில் ஒன்றிரண்டு பேர் இடையில் நுழைய பார்க்க ஓங்கி குரல் குடுக்க வழியின்றி வெறும் காத்துதாங்க வருது டயலாக் வர ஒரு வழியாக பேங்கிற்குள் நுழைந்து வெற்றி வீரனாக ஒரு நாலாயிரம் ரூபாயைக் கண்ணில் பார்க்கும் போது மணி பன்னிரண்டு ..இது எத்தனை நாளைக்கு..எனவேதான் செண்டிமெண்ட் செட் ஆகவில்லை என்று எடுக்கப் பட்டு விட்டது.

   Delete
  5. @ வெட்டுக்கிளி

   இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பாங்க?!! அப்படிப்பார்த்தா இங்கே நேத்து பின்னூட்டமிட்டவர்களில் பாதிப்பேராவது ஏதாவதொரு பேங்க்கிலிருந்துதான் போட்டிருப்பாங்க! அவ்வளவு ஏன்.. நேற்றைய பதிவைக்கூட சிங்கமுத்து வாத்தியார் சிவகாசியின் ஒரு பேங்க் வாசலில் நின்னுக்கிட்டுத்தான் போட்டாராம்.. ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க! ;)

   சட்டுபுட்டுனு உங்களைப் பற்றி 'பளபளபளா'னு ஒரு சிறுகுறிப்பு வரையுங்க வெட்டுக்கிளியாரே... நண்பர்கள் பலரும் ஆர்வமா இருக்காங்கல்ல? :)

   Delete
  6. // ஒன்றிரண்டு பேர் இடையில் நுழைய பார்க்க ஓங்கி குரல் குடுக்க வழியின்றி வெறும் காத்துதாங்க வருது டயலாக் வர ஒரு வழியாக பேங்கிற்குள் நுழைந்து வெற்றி வீரனாக ஒரு நாலாயிரம் ரூபாயைக் கண்ணில் பார்க்கும் போது மணி பன்னிரண்டு . //
   இதே அனுபவம் நேற்று எனக்கும்!

   Delete
  7. @ வெட்டுக்கிளி

   இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பாங்க?!! அப்படிப்பார்த்தா இங்கே நேத்து பின்னூட்டமிட்டவர்களில் பாதிப்பேராவது ஏதாவதொரு பேங்க்கிலிருந்துதான் போட்டிருப்பாங்க! அவ்வளவு ஏன்.. நேற்றைய பதிவைக்கூட சிங்கமுத்து வாத்தியார் சிவகாசியின் ஒரு பேங்க் வாசலில் நின்னுக்கிட்டுத்தான் போட்டாராம்.. ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க! ;)

   சட்டுபுட்டுனு உங்களைப் பற்றி 'பளபளபளா'னு ஒரு சிறுகுறிப்பு வரையுங்க வெட்டுக்கிளியாரே... நண்பர்கள் பலரும் ஆர்வமா இருக்காங்கல்ல? :)

   Delete
  8. பளா பளா ..பெயர்-செல்வராஜன் ,ஊர் -அருப்புக்கோட்டை, தொழில்-ஊர் சுற்றுதல்,காமிக்ஸ் படித்தல்,வருமானம்-வயதைச்சொன்னால் புரிந்து கொள்வீர்கள்.. வயது?- ஹி ஹி நம்ம சிங்க முத்து வாத்தியாருக்கும் மேலே ..வெட்டுக்கிளி வீரையன் என்கிற பேர்?- அது என் பேரனை நான் செல்லமாக அழைக்கின்ற பேர் ..selva 1rajan @gmail .com ல் சந்திக்கலாம் .

   Delete
  9. @ வெட்டுக்கிளி சார்

   வணக்கமுங்! மன்னிச்சிக்கோங்க சார்! துடிப்பான, நக்கலான உங்க கேப்சனுகளை வச்சு நீங்களும் என்னியமாரியே சின்னப்பையன்னு (ஹிஹி) நினைச்சு சிலசமயங்கள்ல 'வெட்டுக்கிளி.. வெட்டுக்கிளி'னு கூப்பிட்டுப்புட்டேனுங்க. துடிப்பான எழுத்துகளுக்கு வயசு ஒரு தடையே அல்ல'னு நெத்திப் பொட்டுல அடிச்சுப் புரியவச்சிருக்கீங்க. உங்களோட சரவெடி எழுத்துகளுக்கும், அழகான சிந்தனைகளும் தலைவணங்குறேனுங்க!

   அப்புறம்... 'கேப்ஷன் போட்டி வச்சா மட்டும்தான் கமெண்ட்டு போடுவேனாக்கும்'னு இல்லாம உங்களுக்கு டயம் கிடைக்கும்போதெல்லாம் ( ஊர் சுத்துற வேலைதானே ஹிஹி) இங்கே வந்து உங்க பங்களிப்பைப் கொடுக்கோணுமுங்க!

   பேரனுக்கு 'வெட்டுக்கிளி வீரையன்'னு செல்லப் பெயர் வச்சா மாதிரி பேத்திக்கு 'குச்சிப்பூச்சி குருவம்மா'னு கீது வச்சுப்புடாதீங்கோவ்! :D

   கும்புடறேனுங்க! _/\_ :)

   Delete
  10. ஈரோடு விஜய்.என் பேத்தியின் செல்லப் பெயர் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம்தான்..இது கிளி என்றால் அது புறா ...

   Delete
  11. அடடே!! கலர் கலராய் கவிதைகள் படைத்திடும் அந்த 'வண்ணப்புறா' உங்கள் பேத்திதானோ?!!!!!!!!

   Delete
 46. Super-6 ,காமிக்ஸ் மற்றவர்களுக்கு மறுபதிப்பாக இருந்தாலும், என்னை பொறுத்தவரையுழும்,இதில் எதையும் இதுவரைக்கும் நான் படிக்காததால் எனக்கு SUPER LUCK தான்.இதன் வரவை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
 47. எடிட்டர் சார்

  இதுவரை வந்துள்ள டைகர் கதைகளில் ஒவ்வொரு தொடர்களின் கதைகளின்பெயர்களை வரிசைவாரியாக தொகுத்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  இதை நமது நண்பர்கள் தீர்த்து வைத்தாலும் மிக்க நன்றே

  ReplyDelete
  Replies
  1. நானும் இதற்கான பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   Delete
  2. லெப்டினென்ட் ப்ளுபெர்ரி வரிசை (தமிழில் கேப்டன் டைகர் வரிசை)

   இந்த வரிசை தான் ஒரிஜினல் கதாசிரியர் சார்லியர்& ஓவியர் ஜிரோவ்  கூட்டணியில் முதலில் உருவாக்கப்பட்ட தொடர்.1965ல் ஃப்ரென்ச்லும்,1978ல் அதாவது நம்மில் பல பேர் இந்த உலகத்திற்கு விசிட் செய்வதற்கு முன்பாகவே வெளிவந்தது. இந்த தொடர் பெருவெற்றி பெற,டைகர் லெப்டினன்ட் ஆகும் முன்பு என்னா செய்தாரு , எப்டி இவ்ள எகத்தாளம் கொண்ட மனுசனா மாறினார்னு யோசிக்க உதிச்சது தான் யங் டைகர் சீரியஸ். 

   ஜெராக்ஸ் காப்பியை வைத்து ஜெராக்ஸ், அந்த ஜெராக்ஸை வைத்து மறுபடி ஜெராக்ஸ். அப்டியே எடுத்து கொண்டே போனால் ஒரிஜினல் க்கும் 4வது காப்பிக்கும் குவாலிட்டி வேறுபாடு வருவது தவிர்க்க முடியாதது.அதான் இந்த யங் டைகர் சீரியஸ்லயும் நடந்தது.

   லெப்டினன்ட் டைகர்:-
   1.இரத்த கோட்டை (5பாகங்கள்)
   2.மேற்கே ஒரு மின்னல்
   3.தனியே ஒரு கழுகு
   4.மெக்ஸிகோ பயணம்
   5.செங்குருதிப் பாதை
   6.தோட்டா தலைநகரம்(ஒற்றை பாக சாகசம்)
   7.இரும்புக்கை எத்தன்(4பாகங்கள்)
   8.பரலோகப் பாதை
   9.இரத்த தடம்
   10.தலைகேட்ட தங்கத்தலைவன்.
   11.தங்ககல்லறை-1
   12.தங்ககல்லறை-2
   13.மின்னும் மரணம்-1(சிகுவாகுவா சில்க்)-(11பாகங்கள்)
   14.மின்னும் மரணம்-2(அரை மில்லியன் மனிதன்)
   15.மின்னும் மரணம்-3 (ஈயசவப்பெட்டி)
   16.சிறையில் ஒரு புயல்
   17.திசை திரும்பிய தோட்டா
   18.உடைந்த மூக்கர்(காற்றில் கரைந்த கூட்டம்-என3பாகமாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வந்தது)
   19.நீண்ட பயணம்
   20.காற்றில் கரைந்த கூட்டம்
   21.புயல் தேடிய புயல்-1(முத்து300)
   22.புயல் தேடிய புயல்-2
   23.கானலாய் ஒரு காதல்
   24.என்பெயர் டைகர்-1(5பாகங்கள்)
   25.என் பெயர் டைகர்-2
   26.என் பெயர் டைகர்-3
   27.என் பெயர் டைகர்-4
   28.என் பெயர் டைகர்-5
   (29.அபாச்சேஸ் -என ஒரு பாகம் அதில் ஜெரோனிமோ பிடிபடுவாரா அல்லது பணத்துடன் தப்பித்த பேங்கர் ஸ்ட்ராபோல்டு கைதாவானா?)
   மார்சல் டைகர்
   30.மார்சல் டைகர்(2014LMS-ல் முதல் பாகம்)
   31.வேங்கைக்கு முடிவுரையா???-1
   32.வேங்கைக்கு முடிவுரையா???-2
   -----------------------------******---------------------

   இளம்டைகர்:-(சார்லியர்-ஜிரோவ்)
   1. இளமையில் கொல்-1 (லயன் மெகாட்ரீம் ஸ்பெசலில் வந்த 3பாக சாகசம்)
   2.இளமையில் கொல்-2
   3.இளமையில் கொல்-3(இது3ம் ஒரு சாகசம்)
   சார்லியர்-வில்சன்
   4. மரணநகரம் மிசெளி( 2012ல் wild west special)
   5.கான்சாஸ் கொடூரன்(2013NBS-இவை இரண்டும் ஒரு பாகம்)
   6.இருளில் ஒரு இரும்புக்குதிரை (NBS-ல் தொடக்கம்)
   கார்ட்டஜீனி-வில்சன்
   7.வேங்கையின் சீற்றம்- 2013டிசம்பர்(6&7ஒரு கதை)
   8.அட்லாண்டிவில் ஆக்ரோசம்
   9.உதிரத்தின் விலை...
   ஆக மொத்தம் 9பாகங்கள் வந்துள்ளன....
   கார்ட்டஜீனி-டுமான்ட்
   10.முதல்21.வரை 12பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. கதைகள் எதில் தொடங்கி எதில் முடிவதைப் பொறுத்து 2அல்லது 3புத்தகங்களில் போடப்படலாம்.
   (ஏதும் தவறு இருந்தால் சரிசெய்யுங்கள் நண்பர்களே).

   Delete
  3. *லெப்டினன்ட் வரிசையில் 13,14,15ம் மின்னும் மரணம்-என்ற ஒரே குண்டு புக்காக வந்தது.
   *21,22-புயல் தேடிய புதையல்-முத்து300

   Delete
  4. @ டெக்ஸ் விஜய்

   அருமையான தொகுப்பு! உங்கள் உழைப்பிற்கு என் தம்ஸ்-அப்!

   இதுபோன்ற விவரங்களை மறக்காமல் உங்கள் வலைப்பூவில் பதிவேற்றி பாதுகாக்க முயற்சியுங்களேன்? எக்காலத்துக்கும் உதவுமில்லையா?

   Delete
  5. டெக்ஸ்....

   திருத்தம்...


   லெப்டினண்ட் டைகர்....
   ///18.உடைந்த மூக்கர்(காற்றில் கரைந்த கூட்டம்-என3பாகமாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வந்தது)/////

   இது லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷலில் வந்தது....


   போலவே...


   ---------------------------******---------------------

   இளம்டைகர்:-(சார்லியர்-ஜிரோவ்)
   ////1. இளமையில் கொல்-1 (லயன் மெகாட்ரீம் ஸ்பெசலில் வந்த 3பாக சாகசம்)////


   இதுதான் லயன் கௌபாய் ஸ்பெஷலில் வந்தது....


   (ஐசிஐசிஐ ஏடிஎம் வாசலிலிருந்து செல்வம் அபிராமி...:-)}

   Delete
  6. சூப்பர்... நன்றிகள் செல்வம் ஜி..
   இந்த இரண்டு 100ரூபாய் புத்தகங்களில் வந்தது என ஞாபகம் உள்ளது.எது எதில் வந்தது என்பது கொஞ்சம் குழப்பி விட்டது. பெட்டியில் அடுக்கி வைத்து இருப்பதால் எடுத்து சரிபார்க்க இப்போது இயலவில்லை. என்று வீட்காரி அவுங்க அம்மா வீட்டுக்கு போறாளோ அன்றுதான் புத்தகங்களை எடுத்து பார்க்க இயலும்...
   திருத்தத்தை செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...
   இன்னும் ஒரு தடவை சரிபார்த்து சொல்லி விடுங்கள் ஜி...

   Delete
  7. வாங்க பொருளாளர் சார்... உங்க உற்சாகமான யகாரி DP மற்றும் உங்கள் பதிவுகளும் இல்லாமல் என்னவே போல் இருந்தது...Welcome Back

   Delete
  8. அப்பாடா.! பொருளாலரை வரவெச்சுட்டாங்கோ..!

   வருக.! வருக.!

   " சின்னஞ்சிறிய வண்ணப்பறவை......என்று பாடி, சிவாஜி பட பாணியில் டெக்ஸ் விஜய ராகவன் செனா அனா வை களமிறக்கி விட்டுவிட்டார்.!


   Delete
  9. ஹை! ஒருவழியா பொருளாளர் வந்திட்டார்!

   தலீவரே, நம்ம பொருளாளர் மாதிரியே நீங்களும் ( 'தலீவர்'ன்ற வீராப்புக்காவது) ஏதாவது ஒரு பேங்க் வாசல்ல நிக்கறது புரியுது... ஆனா நல்லா பாருங்க தலீவரே.. அது ப்ளட்-பேங்க்! :D (நன்றி:FB)

   Delete
  10. நன்றி திரு. சேலம் டெக்‌ஸ் விஜயராகவன் அவர்களுக்கு....

   Delete
 48. அட்டையை மாத்தி சைஸை மாத்தி கலர்ல போட்டு மத்த டெக்ஸ் கதை போல மாத்தி முட்டு கொடுத்தாலும் புட்டுக்கும் என்ற ஆசிரியரின் தொலைநோக்கை பாராட்டுகிறோம். டெக்ஸ் கதை என்றதும் அட்டையை பார்த்து மட்டும் ஆகா ஓகோ என்பவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள் சார். அவர்களுக்கே தெரியும் டெக்ஸ் கதையில் அட்டையை எடுத்து விட்டால் எல்லாம் ஒரே கதை தான் என்று. மன்னிக்கவும் . திகட்ட போவதை டெக்ஸ் கதைகள் நெருங்கி விட்டன. டைகர் | கதைகள் அளவு சாப்பாடு. டெக்ஸ் அன் லிமிடெட் ஆகி வருகிறது.இந்த வருடம் வந்த டெக்ஸ் கதைகளில் பழிவாங்கும் புயல் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. மற்ற பொது வாசகர்களுக்கு எப்படி?

  ReplyDelete
  Replies
  1. அப்படியே. சர்வமும் நானே கூட நீங்கள் சொல்வது போல தான் ஆனால் நடந்தது என்ன? நவம்பர் hit சர்வமும் TeX.மற்ற ஹீரோக்கள் heroine மாதிரி ஆனால் TeX MGR Rajini மாதிரி இறந்த பொழுதும் இருக்கும் பொழுதும் விரும்பபடுபவர்.

   Delete
  2. ravanan iniyan : சார்...ஆங்கிலத்தில் ஒரு ரொம்பப் பழைய சொற்றொடர் உண்டு : "THE PROOF OF THE PUDDING IS IN THE EATING " என்று ! "ஒரு விஷயத்தின் நிஜத்தன்மைக்கு / தரத்துக்கு நிஜமான சான்று - அதனை நாமே அனுபவித்துப் பார்ப்பது தான்" என்பது மாதிரியான அர்த்தம் என்று வைத்துக் கொள்ளலாம் !

   2012 முதலாய் நமது மறுவருகை தொடர்கிறது ; இந்த 4 + ஆண்டுகளில் maximum வெளியீடுகள் டெக்சினதே என்பதை நாமறிவோம் ! இன்றைய ஸ்டாக் நிலைமை என்னவென்று நமது பட்டியலைப் பாருங்களேன் :

   மறுபதிப்பு செய்யப்பட்ட "நிலவொளியில் நரபலி " & "நில்..கவனி..சூடு.." நீங்கலாய் நடப்பாண்டின் இதழ்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. சென்றாண்டின் லயன் 250 ; "தீபாவளி வித் TEX " போன்ற விலைகூடுதலான இதழ்களில் சொற்பமான பிரதிகளே இருக்கின்றன ! So மறுபதிப்புகளுக்கு அடுத்தபடியாக விற்பனையில் முதலிடம் டெக்ஸுக்கே - 2012 ; 2013 ; 2014 & 2015 & 2016 என தொடர்ச்சியாய் !!

   அவரை நான் தூக்கிப் பிடிப்பதாலோ ; அவரது ரசிகர்கள் இங்கும், இதர இடங்களிலும் சிலாகிப்பதாலோ - ஒரு மாதம் வண்டி ஓட்டலாம் ; ஆறு மாதங்கள் கூட ஓட்டலாம் ; அட - ஒரு வருஷத்தையே ஒப்பேற்றலாம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! ஆனால் 5 வருஷங்களை நம்பர் 1 இடத்தினில் தொடர்ந்து ஆக்கிரமிப்பதற்கு - வீரியமான அட்டைப்படங்களும், ஒரு எடிட்டரின் பீலாக்களுமே போதுமென்று நிச்சயம் உங்கள் உள்மனது கூடச் சொல்லாது என்பது எனக்குத் தெரியும் !

   ஒரு இளவரசியைத் தூக்கிப் பிடிக்க, ஒரு சக்கரவர்த்தியை இருட்டடிப்பு செய்தால் தான் என்றில்லையே சார் ?

   Delete
  3. எடிட்டர் +1000000

   இப்பல்லாம் தல தன்னோட அனுபவத்துக்கும் வயசுக்கும் தகுந்தமாதிரியே கேரக்டர் ரோல், கெஸ்ட் ரோல், சிக்கன் ரோல் எல்லாம் பண்ணிக் கலக்கிட்டிருக்கறதை உலகமே அறியும்!

   இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் மங்காத புகழோடு சிங்கமென வீற்றிருப்பார் எங்கள் தல! இது உறுதி உறுதி உறுதி!

   Delete
  4. ஆ உ னா எடிட்டர்காரு விற்பனையை சொல்லியே வாயை அடைச்சுடறாரு.? நின்ஜா அட்டோரிக்கு தவளையை கண்டாலே அலர்ஜி.பென்னிக்கு சளி பிடித்தால் அலர்ஜி.எங்கள் இளவரசிக்கு ஸ்டாக் என்றாலே அலர்ஜி.ஹும் என்னமோ போடா மாதவா.!

   Delete
  5. விற்பனையை விடுங்க MV sir...
   அட்டையை எடுத்துட்டா எல்லாம் ஒன்றா???. இதை நீங்கள் சரியான கருத்து என ஏற்றுக் கொள்கிறீர்களா???.

   Delete
  6. //மற்ற பொது வாசகர்களுக்கு எப்படி?//

   முதலில் படிப்பது டெக்ஸ். இந்த வருடம் மட்டுமல்ல போன வருடம் படித்ததும் நினைவில் இருக்கிறது. அதுவும் இந்த வருட டெக்ஸ் கதைகள் ரொம்பவே ஸ்பெஷல். ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. எனக்கு அனைத்துமே பிடித்து இருந்தது. இத்தனைக்கும் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் பட்டியலில் இருப்பது முதல் மூன்று கதைகளுக்கு சொந்தமானவர் உடைந்த மூக்கார்.

   Delete
  7. //THE PROOF OF THE PUDDING IS IN THE EATING// -- சட்னி நல்லா இருந்தா எட்டு இட்லி கூட உள்ளே போகும்னு எங்க வீட்டுத்தலைவி சொல்வாங்க

   Delete
  8. இன்றைய தி ஹிந்து தமிழ் இதழில் டெக்ஸ் இன் சர்வமும் நானே புத்தகம் பற்றி எழுதி உள்ளார்கள் ....

   Delete
  9. Business brand டெக்ஸ் சக்கரவர்த்தி வாழ்க வாழ்க!இதயக்கனி இளவரசி நீடூழி வாழ்க.கேப்சன் போட்டியில் இளவரசிக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.அமைதி காத்த டெக்ஸின் முரட்டு பக்தர்களுக்கு நன்றி

   Delete
 49. லியனார்டோ தாத்தா வின் ஜீனியஸ் உறங்குவதில்லை மிக அற்புதமான காமெடி தோரணம்.பல் வலிக்கு மருந்து தடவி விட அது மிகப் பெரிதாக வளர்ந்து,கடைசியில் இரத்தக் காட்டேரியாக உரு மாறுவது கண்டு
  சிரிப்பை அடக்க முடியவில்லை..நான்கைந்து நாட்களாக இருந்து வரும் ஒரு இறுக்கமான சூழல் தாத்தாவின் சேட்டைகளை மீண்டும் மீண்டும் படிப்பதால் மாறுகிறது இது போன்ற கதை பொக்கிஷங்களைஅள்ளித் தருகின்ற எடிட்டருக்கு ஜே !

  ReplyDelete
 50. தலீவரே, நம்ம பொருளாளர் மாதிரியே நீங்களும் ( 'தலீவர்'ன்ற வீராப்புக்காவது) ஏதாவது ஒரு பேங்க் வாசல்ல நிக்கறது புரியுது... ஆனா நல்லா பாருங்க தலீவரே.. அது ப்ளட்-பேங்க்! :D (நன்றி:FB)

  #####

  செயலாளரே .... பேப்பர்...டிவீல எல்லாம் லைன்ல நின்னு வெளியே வர்றவங க ஒண்ணா பணத்தோடு வர்றாங்க ...இல்லைன்னா ஏதாவது சலான் உடன் வர்றாங்க...நாம நிக்குற க்யூவுல மட்டும் வெளியே வர்றவங்க எல்லாம் கைல ஆரஞ்சு பழமும் ...ஜூஸுமா வர்றாங்களேன்னு மைன்டா அப்போதே டவுட் வந்தது...உதவிக்கு நன்றி செயலாளர் அவர்களே..

  ( நன்றி ..BB..)

  ReplyDelete
  Replies
  1. ///நாம நிக்குற க்யூவுல மட்டும் வெளியே வர்றவங்க எல்லாம் கைல ஆரஞ்சு பழமும் ...ஜூஸுமா வர்றாங்களேன்னு மைன்டா அப்போதே டவுட் வந்தது///

   நல்லவேளையா நீங்க 'ஆயிரம் ரூவா பணம் - அஞ்சுகிலோ அரிசி' கொடுத்தனுப்புற க்யூவுல நிக்கலை தலீவரே! :D

   Delete
  2. ஏய்யா ஏன் நல்லாதானே போய்ட்டு இருக்கு ......

   Delete
 51. இன்றைய தி ஹிந்து தமிழ் இதழில் டெக்ஸ் இன் சர்வமும் நானே புத்தகம் பற்றி எழுதி உள்ளார்கள் ....

  ReplyDelete
  Replies
  1. சிலவரிகளே என்றாலும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது!
   தகவலுக்கு நன்றி ப்ளூ!

   Delete
 52. அடுத்த ஆண்டிற்கான சந்தா கட்டி ஆகிவிட்டது(2017 ரூ.4500/= பதிவு அஞ்சல் மூலமாக வாங்குவதற்கு, சந்தா gold)......
  இப்போது தான் திருப்தியாக உள்ளது.....
  அடுத்த ஆண்டு பயணத்திற்கு நான் ரெடி.....

  ReplyDelete
  Replies
  1. அதே.! அதே.! சந்தா கட்டிய பின் அவர்கள் அனுப்பும் மின்னஞ்சலையும் சந்தா எண்ணையும் அலுப்பு தட்டாமல் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை குதூகலத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.!


   அந்த மகிழ்ச்சி சிறுவயதில் எல்லோரும் பொறாமையுடன் பார்க்க கிடைத்த காஸ்ட்லியான பொம்மை கிடைத்தால் மனம் எவ்வளவு குதுகலம் கொள்ளுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.


   " ஆத்தா நான் பாஸாயிட்டேன்.!"

   மாதிரி......


   " ஆத்தா .....! நான் சந்தா கட்டிட்டேன்.!"

   நானும் ஹேப்பி அண்ணாச்சி.!

   Delete
 53. சார் அட்டை படம் தூள்....சும்மா கோசாபழத்த வெட்டி வச்ச மாதிரி அட்டகாசம்...

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் கைக்கு கிடைச்சவுடனே கடிச்சு முழுங்கிடாதீங்க ஸ்டீல்! ;)

   Delete
 54. வெட்டுக்கிளிக்கு வாழ்த்துகள்....
  சார் ஜாம்பவான் 2 என்னைப் பொருத்தவரை லாரன்ஸ் டேவிட்தான்....டைகர ஒப்பிட முடியாதே...

  ReplyDelete
 55. //....ஆனால் 5 வருஷங்களை நம்பர் 1 இடத்தினில் தொடர்ந்து ஆக்கிரமிப்பதற்கு - வீரியமான அட்டைப்படங்களும், ஒரு எடிட்டரின் பீலாக்களுமே போதுமென்று நிச்சயம் உங்கள் உள்மனது கூடச் சொல்லாது என்பது எனக்குத் தெரியும் ! //

  உண்மைதான் எடிட்டர் சார். டெக்ஸின் இந்த ஓட்டத்திற்கு டெக்ஸ் கதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பது முதல் காரணம் என்று கருதுகிறேன். மற்ற கதைகள் படிக்க சற்றாவது சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

  டெக்ஸ் வில்லர் எதிரிகளை மட்டும் அடக்கி வைக்கவில்லை... அவரது கதைகளின் வெற்றி காரணமாக கிராபிக் நாவல்கள் என்ற கழுத்தறுப்புகளையும் முடக்கி வைத்திருப்பதால்... என்னைப் பொறுத்த வரையிலுமாவது அண்ணாச்சி ஹேப்பிதான்...

  ReplyDelete
 56. பேச்சு வாக்குல எல்லாரும் "இரத்தப்படலம் முழு வண்ண மறுபதிப்பை" மறந்துட்டிங்க.............

  ReplyDelete
 57. இப்பவே ஞாபகப்படுத்தினாதான் அடுத்த தீபாவளிக்காவது காரியம் நடக்கும்

  ReplyDelete
 58. Dear Edi,

  So glad to see Blueberry featuring as #2 in your legends list, next only to Steel Claw. Muthu's early years predates my existence, so the fan following Steel Claw generated among our senior readers, was never felt by me.

  But, the introduction of Blueberry was right in the time I had started reading back issues of Lion in 90s... and he was an instant star immediately. The storyline and art was mesmerising enough even in those low quality papers and black white prints.

  I had to warm up to the Tex stories over a period of time, but Blueberry would forever be our Legend for Cowboy stories. Period.

  ReplyDelete
 59. மாயாவியை ஏன் லயன் காமிக்சிற்க்கு கொண்டு வர இயலாது, நண்பர்களே..

  ReplyDelete