Powered By Blogger

Sunday, August 07, 2016

ஈரோட்டில் குற்றாலம் !!!!

நண்பர்களே,

வணக்கம். "திக்குமுக்காடிப் போனோம்" ; "திணறிப் போனோம்" ; "ஆனந்த அதிர்ச்சி " ; "திண்டாடிப் போனோம்" ்இத்யாதி..இத்யாதி என்ற cliche-கள் தேய்ந்து துரும்பாகிப் போனவை என்று தெரிந்தாலும் அவற்றை விடாப்பிடியாய் ஏன் பயன்படுத்திடுகிறோம் என்பதன் அர்த்தத்தை நேற்றைய பொழுது (சனி) நன்றாகவே வெளிச்சமிட்டுக் காட்டியது ! ஈரோடு புத்தக  விழா ; ஈரோட்டில் இத்தாலி ஸ்பெஷல் வெளியீடு ; புத்தக ரிலீஸ் ; சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் சொக்கன் அவர்கள் ; வாசகர் சந்திப்பு என்று ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் நிறையவே காத்திருந்ததால் இந்த வாரம் முழுவதுமே எனக்குள் ஒரு சன்னமான பரபரப்பு ! And தயாரிப்புப் பணிகளின் இறுதிக்கட்டம் எனும் பொழுது சின்னச் சின்ன நகாசு வேலைகளில் கூட குறை நேர்ந்திடக் கூடாதே என்ற பயத்தோடு எங்களது டீமை 'உண்டு-இல்லை' எனப் பதம் பார்த்துக் கொண்டிருந்தேன் ! திடீரென்று மார்ட்டின் கதைக்கு dust ஜாக்கெட் என்ற மகா சிந்தனை உதயமாகி - மறுபடியும் ஒரு ராப்பர் டிசைன் பண்ணச்  சொன்ன போது - 'மனுஷனுக்கு எந்த தர்காவில் மந்திரித்துத் தாயத்துக் கட்டணுமோ ?' என்ற சந்தேகம்  மைதீனுக்கும் , நமது டிசைன் பெண்களுக்கும் நிச்சயம் எழுந்திருக்கும் !  ஆனால் மறு பேச்சின்றி பணிகள் அரங்கேற - வியாழனன்று எல்லாப் பிரதிகளும் என் கைகளில் இருந்தன ! சில இதழ்கள் முதல்பார்வையிலேயே வசீகரிக்கும் ; ஒரு சிலவோ பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கத் துவங்கும். "ஈரோட்டில் இத்தாலி" - "கண்டதும் காதல்" ரகத்தில் இருப்பதாய் எனக்குத் தோன்றினாலும் - உங்களது கண்ணோட்டம் எவ்விதமிருக்குமோ என்றதொரு  சிறு சந்தேகமும் இல்லாதில்லை ! So இதழ்கள் அனைத்தோடும் ஈரோட்டுக்கு வெள்ளி நள்ளிரவு வந்து சேர்ந்தோம் - படபடப்பும், நம்பிக்கையும் சரிசமக் கலவையாய் உள்ளுக்குள் குடியிருக்க ! 

புத்தக விழா நடக்கும் VOC பார்க்கின் வாசலில் உள்ள ஹோட்டலில் சென்றாண்டை விடவும் சற்றே பெரியதொரு அரங்கை நண்பர்கள் புக் செய்திருக்க, 'பாதி அரங்கு காலியாகத் தானிருக்கப் போகிறது' என்ற பயமும் எனக்குள் இருந்தது. அதே போல 11-00 மணி முதல் 2-00 மணி வரை காலை ஏற்பாடு செய்திடச் சொன்னவனே நான்தான் என்றாலும், அப்புறமாய்    - "மூன்று மணி நேரங்களை   தொய்வின்றிக் கடத்துவது சாத்தியமாகுமா ? ; ஒவ்வொரு வாரமும் ஒப்பிக்கும் அதே விஷயங்களை மறு ஒலிபரப்பு செய்தது போலாகிவிடக் கூடாதே !" என்ற உதறல் உள்ளுக்குள் ரொம்பவே இருந்தது. பற்றாக்குறைக்கு,  நமது நண்பர்கள் சந்திப்பினில்  முதல்முறையாக ஒரு பிரபலமும் கலந்து கொள்வதாக ஏற்பாடாகி இருக்க - அவர்முன்னே சொதப்பி வைத்திடக்கூடாதே என்ற பேஸ்மெண்ட் பெல்லி டான்சும் இன்னொரு பக்கம் சேர்ந்து கொண்டது !

எப்போதும் இல்லாத நடைமுறையாய் -  என்ன பேசுவது ? நண்பர்களை எவ்விதம் சுவாரஸ்யத்தைத் தொலையாது இருக்கச் செய்வது ? என்றெல்லாம் ஈரோடு வரும் வழியினில் கொஞ்சமாய் திட்டமிட்டிருந்தேன். So அந்தத் தெம்புடன் 10-45 சுமாருக்கு அரங்குக்குள் எட்டிப் பார்த்தால் - நண்பர்கள் ஒரு முப்பது-நாற்பது பேர் அதற்குள் ஆஜராகி உற்சாகத்தின் மறுவடிவாய் கலக்கிக் கொண்டிருக்க -  திரு. சொக்கன் அவர்களோ , மெல்லிய புன்சிரிப்போடு கவனித்துக் கொண்டிருந்தார். 11 மணி சுமாருக்கு சீனியர் எடிட்டர் அரங்குக்கு வந்த நேரம் அரங்கின் ஜனத் தொகை 80+ !! நாற்காலிகள் பற்றுமா ? உட்கார இடமிருக்குமா ? என்ற சந்தேகம் சீரியஸாகத் தோன்றத் தொடங்கியது எனக்கு - நொடிக்கு நொடி உள்ளே அணி வகுக்கும் நண்பர்களின் திரளை பார்த்த பொழுது !  பதினொன்றேகாலுக்கு மேடைக்கு சொக்கன் சாரை அழைத்து அமரச் செய்த போது சென்சுவரி போட்டிருந்தது வருகையாளர் பட்டியல் ! நல்ல நாளில் 10 நண்பர்கள் ஒன்று திரண்டாலே அந்த இடம் அதகளமாகிடும் ; 100 பேர் குழுமிடும் பட்சத்தில் அந்த அதிர்வு எவ்விதமிருக்குமென்று விவரிக்கவும் வேண்டுமா ? ஒன்று மட்டும் நிச்சயம் - அந்த அறைக்கு நேற்று இரும்புக்கை மாயாவி என்ட்ரி தந்திருந்தால் - எந்த மின்சார துவாரத்துக்குள்ளும் விரல் திணிக்கும் அவசியமே இல்லாது - அரூபமாகிப் போயிருப்பார் ! நண்பர்களிடையே ஜுரமாய் பாய்ந்து கொண்டிருந்த உற்சாகத்தின் வோல்டேஜ் அத்தனை ஜாஸ்தி ! சிறப்பு விருந்தினரை நண்பர்கள் கெளரவிக்க, மைக்கை கையில் ஒப்படைத்து விட்டார்கள் !

எழுதி வைத்துக் கொண்டு பேசுவதெல்லாம் நமக்கு என்றைக்குமே ஒத்து வராச் சமாச்சாரம் என்பதால் - மெதுவாய் ; மனதில் பட்டதை பேச அரம்பித்த போதே எனக்குள்ளிருந்த பட படப்பு தணியத்   தொடங்கி இருந்தது ! நானே மைக்கைக் குத்தகைக்கு எடுத்திருக்கப் போவதில்லை - நண்பர்களையும் பேசச் செய்ய வேண்டுமென்பதில் தீர்மானமாய் இருந்தது மாத்திரமின்றி - முதன்முறையாக சந்திக்கும் நிறைய புது நண்பர்களுக்கும்  அரங்கினில் அறிமுகமாகிக் கொள்ளும் வாய்ப்பைத்   தருவதே பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. So சொக்கன் சாரிலிருந்து துவங்கி அனைவருமே ஒரு சின்ன சுய அறிமுகம் செய்து கொள்ளும் விதமாய் மைக்கை ரவுண்டில் விட்டோம் ! மெலிதான தயக்கத்தோடு ஆரம்பித்த நண்பர்கள் நொடிக்கு நொடி உற்சாகம் கொப்பளிக்க தம்மை அறிமுகம் செய்து கொண்டதோடு - தங்கள் ஆர்வங்கள் ; ஆசைகள் ; எதிர்பார்ப்புகள் என்று குற்றாலமாய்க் கொட்டத் துவங்கினார்கள் ! முதன்முறையாக நேற்றைய சந்திப்பில் மகளிரணியும் ஆஜராகி இருந்தது ரொம்பவே ஒரு pleasant surprise  !! கோவையிலிருந்து "கடல்யாழ்" ரம்யா தனது தோழி விஷ்ணுப்ரியாவோடு வந்திருந்தது மாத்திரமின்றி - அவரையும் கூட ஒரு தீவிர TEX ரசிகையாய் மாற்றி இருந்தது செம highlight ! இருவருமே தயக்கமின்றிப் பேசியது நொடிப் பொழுதில்   நம் நண்பர்கள் அனைவருக்கும் கூடுதல் பூஸ்ட் தந்ததைக்  கண்கூடாய்ப்  பார்த்திட முடிந்தது ! இதை விட நண்பர் திருப்பூர் சிபிஜியின் புதல்வி நிகிதா லேசான தயக்கத்தோடு மைக்கைக் கையில் வாங்கிய பின்னே பேசிய அழகினை அரங்கமே ரசித்துப் பாராட்டியது ! நண்பர் கரூர் குணாவின் ஜுனியரும் மைக்கில் பேச - முதல்முறையாக நம் நண்பர்களுள் ஒரு இளம் தலைமுறையின் வருகையை உணர முடிந்தது ! திருப்பூரிலிருந்தும், தாராபுரத்திலிருந்தும் ஒரு இளைஞர் படையும் வந்திருந்தது - காமிக்ஸ் என்பது நம் நாட்களோடு காலாவதியாகிப் போகும் சமாச்சாரமல்ல என்பதை உணர்த்துவதை போல ! ஒவ்வொருவரும் மைக்கில் தங்கு தடையின்றிப் பேசிட - கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஓடியே தடமே தெரியவில்லை ! கடல் கடந்திருந்தாலும் இந்த காமிக்ஸ் தினத்தைத் தவற விடக்கூடாதென்ற ஆர்வத்தில் பங்கேற்று இருந்த நண்பர்களும் நேற்றைய பொழுதை தக தகக்கச் செய்ய உதவிய கூடுதல் காரணிகள்  என்பேன் ! பிரான்சிலிருந்து நண்பர்கள் ராட்ஜா   ; ஹாசன் ; அமெரிக்காவிலிருந்து நண்பர்கள் மகேந்திரன் பரமசிவம் ; R சரவணன் ; V கார்த்திகேயன் என்று இதுநாள் வரை ஐ.டி.களாய் மட்டுமே நமக்குத் பரிச்சயமாகியிருந்தவர்களை நேரில் பார்க்கும் பொழுது - காலமாய் பேசிப் பழகிய உணர்வே மேலோங்கியது ! பேசிய 90+ நண்பர்களின் சுவாசங்களை நிரப்பிக் கிடந்தது TEX >>>>TEX >>>>TEX என்ற ஒற்றைப் பெயரே ! நமது இரவுக் கழுகாரின்கீர்த்திக்கு புதிதாய் நான் அச்சாரம் போடத்   தேவையில்லைதான் ; ஆனால் நேற்றைக்கு அரங்கமே அந்தப் பெயரை உச்சரிப்பதை பார்த்த பொழுது புல்லரித்துப் போனது ! ஆனாலொரு ஆச்சர்ய highlight என்னவெனில் இளம் ரசிகர்களில் நிறைய பேர் கேப்டன் டைகரையும் அட்டகாசமாய் சிலாகித்தது தான் !!  மின்னும் மரணம் தொகுப்பையும் சரி ; அந்தக் கதையின் வீரியத்தையும் சரி நண்பர்கள் நினைவு கூர்ந்த தருணங்கள் ரொம்பவே ஸ்பெஷல் !! அது மட்டுமன்றி - இளம் வருகையாளர்கள் கிராபிக் நாவல் பற்றியும் ; sci -fi ரகக் கதைகள் பற்றியும் ரசித்துப் பேசியது என் கவனத்தைக் கோரியதொரு விஷயம் !!

தொடர்ந்த  ஒன்றரை மணி நேரத்தில் சொக்கன் சார் ; சீனியர் எடிட்டர் அப்புறம் மீண்டும்நண்பர்கள் என்று பேசிட - அரங்கம் முழுதும் காமிக்ஸ் வெள்ளம் கரைபுரண்டோடியது ! நம் சிறப்பு விருந்தினருக்கு பேச கூடுதலாய்  அவகாசம் வழங்க இயலாது போனது மாத்திரமே நேற்றைய காலையின் குறைபாடென்பென் ! குறைவான நேரமே  கிட்டிய  பொழுதும் அற்புதமாய்ப் பேசியவர் - க்ரீன் மேனர் கதைகள் பற்றி என்னிடம் தன்சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார் ! 3 மணி நேரங்களை ஒப்பேற்றுவது எவ்விதமோ என்று தயங்கியதெல்லாம் அபத்தமென்று புரிந்தது மணி இரண்டான போது ! நண்பர்களுக்கென நான் தயார் செய்து கொண்டு வந்திருந்த "பரீட்சைப் பேப்பரை" வெளியே எடுக்கக் கூட அவகாசமின்றி கலைப் பொழுது பறந்தோடிப் போயிருந்தது !! அடித்துத் தாக்கிய போட்டோ படலம் துவங்கிட - யார் யாரது கேமராக்கள் எந்தத் திசையிலிருந்து பளீரிடுகின்றன என்பதே தெரியா விதமாய் கலக்கித் தள்ளிட - இரண்டரை மணிக்கு அரங்கிலிருந்து வெளியேறிய பொழுது யாருக்குமே கிளம்ப மனமில்லை என்பது புரிந்தது ! ஒரு அசாத்தியக் காலைப் பொழுது  கற்பனை செய்திரா ஒரு வெற்றியோடு நிறைவான மகிழ்ச்சி எனக்குள் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது ! பதிவின் ஆரம்ப வரிகளில் நான் குறிப்பிட்ட அந்த cliche க்கள் ஒன்று பாக்கியில்லாது எனக்குள் குதியாட்டம் போட்டதை நான் உணர்ந்த தருணமிது ! நண்பர்கள் ஒட்டு மொத்தமாய்க் குழுமி அதகளம் செய்து விட்ட சந்தோஷம் ஒருபுறமெனில் - வரும் நாட்களில் இத்தகைய சந்திப்புகள் மேலும் மேலும் high voltage சமாச்சாரங்களாகிடும் வாய்ப்புகளுக்கு இதுவொரு ஆரம்பப் புள்ளியே என்ற புரிதலும் ஜிவ்வென்ற உற்சாகத்தை ஊட்டியது !

அவகாசம் பற்றாது போய் விட, திடு திடுப்பென்று கூட்டத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டிப் போனதால் - நம் சிறப்பு விருந்தினருக்கோ ; ஏற்பாடுகளை தம் வீட்டு விசேஷம் போல் செய்திருந்த சேர்ந்தம்பட்டிக் குழுவினருக்கோ ; எங்கெங்கிருந்தோ இதற்கென மெனக்கெட்டு வந்திருந்த நண்பர்களுக்கோ நன்றி சொல்லிட எனக்கு நேரமிருக்கவில்லை ! அந்தத் தவறை சரி செய்துகொள்ள இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன் folks !! ஒரு கனவு நாளைக் கண்முன்னே நிஜமாக்கிக் காட்டி அளப்பரிய சாதனை செய்துள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களால் "நன்றி" என்ற ஒற்றை வார்த்தையையும் ; வரும் நாட்களில் இன்னமும் உத்வேகத்தோடு   செயல்படுவோமென்ற உறுதியையும் மட்டுமே வழங்கிட இப்போதைக்கு முடிகின்றது ! இந்த நாளை மறக்க இயலா ஒன்றாய் மாற்றிய உங்களை எங்களுக்குத் தெரிந்த ஒரே விதத்தில் மகிழ்விக்க விரைவிலேயே ஒரு வழி தேடிப் பிடிப்பேன் என்பது உறுதி ! Take a bow guys...you have been massively awesome !!!!!!

PS : இன்னும் என்னென்னவோ எழுதிட எண்ணினாலும், நேற்றைய பொழுதின் உணர்வுகளை வார்த்தைகளுக்குள் கொணர திணறுகிறது ! So அந்த மின்சாரக் காலையை விவரிக்க நமது ஒளி ஓவியர்கள் போட்டுத் தாக்கிய போட்டோ மழை தான் சரிப்படும் ! அந்த போட்டோ  மழை இன்னும் சிறிது நேரத்தில் இங்கே துவங்கும் என்ற செய்தியோடு - இப்போதைக்கு கிளம்புகிறேன் !

12-00 சுமாருக்கு இன்று காலையும் நமது ஸ்டாலில்      ஆஜராகியிருப்பேன் ! And  நேற்றைய தினம் புத்தக விழாவில் விற்பனை அட்டகாசம் என்பது icing on the cake !! Simply superb day !!






























































322 comments:

  1. // இன்னும் என்னென்னவோ எழுதிட எண்ணினாலும், நேற்றைய பொழுதின் உணர்வுகளை வார்த்தைகளுக்குள் கொணர திணறுகிறது ! So அந்த மின்சாரக் காலையை விவரிக்க நமது ஒளி ஓவியர்கள் போட்டுத் தாக்கிய போட்டோ மழை தான் சரிப்படும் ! அந்த போட்டோ மழை இன்னும் சிறிது நேரத்தில் இங்கே துவங்கும் என்ற செய்தியோடு - இப்போதைக்கு கிளம்புகிறேன் !//

    :)

    ReplyDelete
  2. Vanakkam. Happy friendship day. Top 3

    ReplyDelete
  3. //குறைவான நேரமே கிட்டிய பொழுதும் அற்புதமாய்ப் பேசியவர் - க்ரீன் மேனர் கதைகள் பற்றி என்னிடம் தன்சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார் !//
    :)

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்☺
    இனிய காலை வணக்கம் நண்பர்களே☺

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே :)

    ReplyDelete
  6. அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் 'இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்'🎈🎇🎉🎊🎈

    ReplyDelete
  7. வணக்கம் எடிட்டர் சார்....!
    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  8. ஈரோட்டில் நேற்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியை தவிர்த்து வேறொன்றும் இல்லை

    ReplyDelete
  9. ஆசிரிய.ா் மற்றும் அணைத்து நன்ப.ா்கள்கும் இனிய நன்ப.ா்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. நேற்று மகிழ்ச்சி கடலில் கலந்து கொண்ட தோழிகள் கடல் யாழ் விஷ்ணு பிரியா இருவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் நேரில் வந்தது மிகவும் மகிழ்ச்சி எங்களுள் இருந்த உற்சாகம் உங்களுக்கும் இருந்தது கண்கூடாக தெரிந்தது சிறு சலிப்பு கூட உங்கள் இருவரிடமும் தெரியவில்லை உண்மையான சந்தோஷத்துடன் கலந்து கொண்டதற்கு நன்றி தோழிகளே இத்துடன் நின்று விடாமல் இனியும் உங்கள் பங்களிப்பு தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. சகோ கடல்யாழிடம் நேற்று ஓரிரு வார்த்தைகள் கூட பேச முடியாமல் போனதில் வருத்தமே! மீட்டிங் முடிந்த பிறகு பேசலாமென்றிருந்தால் திடீரென்று காணாமல் போய்விட்டீர்களே... உங்கள் தோழி விஷ்ணு பிரியாவின் அறிமுக உரை அட்டகாசம்! என் வாழ்த்துகளைச் சொல்லி விடுங்களேன்!

      Delete
    2. @Senthil Sathya
      தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தோழரே :)
      காமிக்ஸ் மீட்டிங்கில் அதிக நேரம் போனதால் அவ்வளவாக பேச முடிய வில்லை
      அடுத்த தடவை சந்திக்கும் போது தங்களது புதல்வியை சந்திக்க ஆவலுடன் இருக்கேன்

      Delete
    3. @Erode Vijay
      தங்களுடன் பேச முடியாமல் போனதில் வருத்தமே சகோதரரே
      எனது தோழியும் ஜாப்பனீஸ் மங்கா படிப்பவர்
      அதனால் அவரை நம் தமிழ் காமிக்ஸ் உலகத்தை அறிமுக படுத்தலாம் என்ற ஆசை ஒட்டி கொண்டது
      என் தோழியை காமிக்ஸ் உலகத்திற்கு எப்பிடி கொண்டு வருவது என்று யோசித்தேன்
      டெக்ஸ் கண்டிப்பாக clean bold செய்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது
      அப்புறம் தோர்கல் அவர்க்கு பிடித்து போய் விட்டது

      Delete
  11. அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் ஏதாவதொரு மாநகரத்தின் பெரியதொரு கல்யாண மண்டபத்தில் ஒரு பிரம்மாண்ட காமிக்ஸ் மாநாடு நடைபெற வேண்டும் எடிட்டர் சார்! இந்திய காமிக்ஸ் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யும் விதத்தில் அது அமைய வேண்டும்!
    அந்த பிரம்மாண்டக் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருந்திட வேண்டும்!
    மண்டபத்தின் ஒரு மூலையில் நம் காமிக்ஸ் விற்பனையும் நடந்திடவேண்டும்!
    மண்டபம் முழுக்க நமது ஹீரோ/ஹீரோயின்களது போஸ்டர்களும், திரு.மாலையப்பன் அவர்களின் ஓவியக் கண்காட்சியும் இடம்பெற வேண்டும்!
    ஒரு புத்தகம் உருவாவதின் பின்னணி வேலைகள் வீடியோ க்ளிப்பாகக் காட்டப்பட வேண்டும்!

    இன்னும்... இன்னும்... நிறைய்ய்ய...

    ReplyDelete
  12. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. முதல் முறையாக காமிக்ஸ் கலந்துரையாடலுக்கு வந்திருந்தேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வலைத்தள நண்பர்களை நேரில் இப்போது தான் பார்த்தேன். நண்பர்களின் உபசரிப்பும் அந்த சூழலும் இன்னும் கண்முன் ற்கிறது. இன்று காலை நமது ஸ்டாலில் சந்திப்போம். நன்றி! மகிழ்ச்சி!!

    ReplyDelete
  14. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி ஆசிரியரே :)))))))))
    பூமியில் கால்கள் இருந்தாலும் ஆகாயத்தில் மனம் பறந்து கொண்டு இருந்தது
    நான் அவ்வளவாக பேசு வில்லை, பயமோ கோச்சோமோ இல்லை , சந்தோஷத்தில் வார்த்தைகள் வர வில்லை
    நம்மளுடைய வெகு நாள் கனவு, எதிர் பார்ப்பு எல்லாம் இன்று நிறைவேறி உள்ளது
    அதை என்னால் அப்போது வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை

    அனைத்து சகோதரர்களும் ஏற்று கொள்வார்களா
    என்ற தயக்கம் கொஞ்சம் இருந்தது
    ஆனால் அனைவரும் மிக நன்றாக பேசினார்கள், காமிக்ஸ் சொந்தமாய் என்னையும் எனது தோழியும் பார்த்தார்கள்,
    சொந்தங்களை திருவிழாவில் சந்திக்கும் சந்தோசம் ஏற்பட்டது , பல நாட்கள் பழகிய அன்பு இருந்தது

    ReplyDelete
    Replies
    1. ///நான் அவ்வளவாக பேசு வில்லை, பயமோ கோச்சோமோ இல்லை , சந்தோஷத்தில் வார்த்தைகள் வர வில்லை
      நம்மளுடைய வெகு நாள் கனவு, எதிர் பார்ப்பு எல்லாம் இன்று நிறைவேறி உள்ளது
      அதை என்னால் அப்போது வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை ////

      உண்மை உண்மை!

      Delete
    2. கடல்யாழ் உங்களுக்கும் சேர்த்து உங்கள் தோழி விஷ்ணுப்ரியா கலக்கலாக பேசினார் ரொம்ப நாட்களாக பழகிய நண்பர்களோடு உரையாடுவது போல் சகஜமாக உரையாடினார்

      Delete
  16. ஆர்டினின் அன்பு வணக்கங்கள்!!!

    ReplyDelete
  17. Good morning Editor.

    Really it was an awesome feeling to be with such a huge gathering. The thing is room was small. If it were to be an outdoor gathering then it might have turned to be an unmatched event. Hope in future shall plan for an outdoor gathering without time limits..

    Hats off for the preparation done by our friends..

    ReplyDelete
  18. அனைவருக்கும் வணக்கம்.
    நேற்றைய பொழுது ஈரோடு.
    மகிழ்ச்சி
    நெகிழ்ச்சி
    சந்தோசம்.

    ReplyDelete
  19. வணக்கம் எடி் சார்... நேற்றைய தினம் அருமையான தினம்... பல நண்பர்களின் ரசனையையும் , கதைகளப்பற்றிய genre விருப்பங்களையும் அறியமுடிந்த்து. Especially இளம் வாசகர்களின் green manor, sci-fi, apocalypse genre க்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.

    ReplyDelete
  20. வணக்கம் எடி் சார்... நேற்றைய தினம் அருமையான தினம்... பல நண்பர்களின் ரசனையையும் , கதைகளப்பற்றிய genre விருப்பங்களையும் அறியமுடிந்த்து. Especially இளம் வாசகர்களின் green manor, sci-fi, apocalypse genre க்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நேற்று உங்களிடம் பேசினேன். கடைசியில் விடை பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது. டெலிபோன் நம்பரை
      கூட பெறவில்லை.அனுப்பவும்

      Delete
  21. ஈரோட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு எதுவும் உண்டா....? நண்பர்கள் யாராவது தகவல் தாருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. @yazhisai selva
      இரத்தக்கோட்டை எடிஷன் அடுத்த ஈரோடு புத்தக விழாவிற்கு வெளியிட ஆசிரியர் அறிவித்து உள்ளார் சகோதரரே :)

      Delete
    2. Ssssssuuuuuppppeeeerrrrr.........!!!!!??

      Delete
    3. + ஒரு குண்டு டெக்ஸ் புக்

      Delete
    4. ஒவ்வொரு இன்ப அதிர்ச்சியாக வெளிப்படுகிறதே!!! இன்னும் என்னென்ன காத்திருகிறதோ?

      Delete
    5. இது எப்போ சொன்னாரு சம்பத் அண்ணா..

      Delete
    6. + ஒரு குண்டு டெக்ஸ் புக்

      + Twins Tex kathai book vara mudinthaal nanraaga irukkum :)

      Delete
    7. சகோ அப்ப இதெல்லாம் ஆசிரியரின் அறிவிப்புகள் இல்லையா? நேயர்விருப்பமா?? குத்தாட்டம் போட்ட மனசு சுருண்டு விழுந்துவிட்டது!!

      Delete
    8. AT Rajan ஜி

      எடிட்டர் டெக்ஸ் குண்டு புக் தருவாதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்
      இத்தகவலை கூறியதே நமது நண்பர் புனித சாத்தான் தான்

      Delete
    9. நன்றி திரு.சம்பத்.

      Delete
  22. இங்கே வருகை புரியும் பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும் ..ஆசிரியர் அவர்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..நாடு மதம் இனம் மொழி என்று எந்த வித வேறுபாடும் இன்றி ஒரே காமிக்ஸ் குடையின் கீழ் நம் அனைவரையும் ஒன்றினைத்த நமது ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    இச்சமயத்தில் ஆசிரியர் அவர்களையோ ..இங்கே கூடும் நண்பர்களையோ எனது கருத்தின் மூலம் ஏதாவது மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் (நண்பர்களுக்குள் மன்னிப்பு தேவையில்லை எனினும் ) மனதார மன்னிப்பை வேண்டி கொள்கிறேன் ..

    அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களிடம் இருந்து கடலை மிட்டாய் வரவில்லை சகோதரரே :D

      Delete
    2. சகோ நேற்று மதியம் தங்களுக்காக கடலை மிட்டாய் காத்து கொண்டு தான் இருந்தது ...ஆனால் அவசர அலைபேசி அழைப்பின் காரணமாக பலரிடமும் சொல்லி கொள்ளாமல் கூட செல்லும் சூழல் ஏற்பட்டு விட்டது ...இன்று வருவீர்கள் தானே ...கடலை மிட்டாய் பாக்கெட்டையை அளித்து விடுகிறேன் ..சங்கம் அபராதத்தில் ஓடினாலும் இப்பொழுது கடலை மிட்டாய் வாங்கும் அளவிற்கு தேறி விட்டதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ...:-)

      Delete
    3. மன்னிக்கவும் சகோதரரே
      இன்றும் ஈரோட்டுக்கு வர வீட்டுல அனுமதி குடுக்க வில்லை, வர வேண்டும் என்று ரொம்ப ஆசை, முடியவில்லை
      ஆகையால் கடலை மிட்டாய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழவும் :)
      தங்களை காண முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி தலீவரே

      Delete
    4. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!!

      Delete
    5. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!!

      Delete
  23. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்
    சகோதரர் ஸ்டீல் களா வரவில்லை என்பது கொஞ்சம் ஆதங்கமாக இருந்தது
    என்னை தூங்காமல் வாருங்கள் என்று சொல்லி விட்டு தாங்கள் வர வில்லை
    சகோதரரே தங்கள் மீது எனக்கு வருத்தம்
    எங்கே உங்களை காணோம் என்று எண்ணி கொண்டு இருக்கும் போது ஆசிரியர் மற்றவர்களிடம் தாங்கள் எங்கே, எப்போது வருவார் என்று கேட்டார்
    அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் பொது தாங்கள் என் வரவில்லை

    ReplyDelete
    Replies
    1. சாரி கடல்....கொஞ்சம் வரமுடியாத வேலைப்பளு.....நிச்சயம் அடுத்த விழாவில் பங்குபெறுவேன் ...என்ன நேர்ந்தாலும்...ஆனா இது இழப்பே..

      Delete
    2. கோவையில் புத்தக fair-ரில் நம்ம லயன் புக் ஸ்டாலும் இருக்குமாம் அங்கு வருகை தாருங்கள் சகோதரரே
      சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் :)

      Delete
    3. இது எப்ப?
      உண்மையாகவா?
      முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் சகோதரி!

      Delete
    4. @Blizy Babu
      ஈரோடு புத்தக விழா முடிந்து மூன்று நாட்களுக்கு பின்னர் கோவையில் என்று கூறினார் நண்பரே
      அது முன்பு ஒரு தடவை கோவையில் புக் போட்டால் ஸ்டாலை பார்த்து கொள்வேன் என்று வாக்கு கொடுத்திருந்தேன் ,ஆகையால் ஆசிரியர் என்னிடம் இத்தகவலை கூறினார் :)

      Delete
    5. அப்படியென்றால் இராமநாதபுரத்தில் இந்த ஆண்டு லயன் காமிக்ஸ் ஸ்டால் போட்டே ஆகணும்.
      நாங்களும் பொறுப்பு எடுப்போம்ல.பின்னே
      சென்ற ஆண்டு நடந்த புத்தக கண்காட்சியில் அனைத்து நாட்களும் அங்கிருந்தேன்.நமது ஸ்டால் அங்கு இல்லாதது பெரும் மன வருத்தத்தை உருவாக்கியது.நாட்டாமை தீர்ப்பை உடனே சொல்லுங்க

      Delete
    6. கோவை புக் Fair கொடிசியாவில்

      Delete
  24. நேற்று மதிய பொழுதிற்கு பின் அவசர சூழல் காரணமாக விரைவாக சென்று விட்டதன் காரணமாக இன்று விரைவாக புத்தக காட்சிக்கு வந்துவிட்டேன் ...யார் யார் எங்கே உள்ளீர்கள் நண்பர்களே ...

    ReplyDelete
  25. நேற்று சீனியர் ஆசிரியருடன் ஆசிரியர் தனது தாயாரையும் அழைத்து வந்ததில் மகிழ்ச்சி சார் ..நமது சந்திப்பை தங்கள் தாயார் மிகுந்த ஆனந்த்துடன் பார்வையிட்டு கொண்டு இருந்த்தை அறிய முடிந்த்து சார் ..

    தவறாமல் அடுத்த வருடமும் அழைத்து வாருங்கள் சார்...

    ReplyDelete
  26. Sir martin mystry is super awesome kindly bring this kind of books more

    ReplyDelete
  27. அருமை.....மகிழ்ச்சி...பென்னிய புரட்டிக் கொண்டிருக்கிறேன் ...அது தரும் தாக்கம்....அற்புதம் ...விரைவில் பகிர்கிறேன் ..அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ஏன் ஈரோட்டுக்கு வரல
      அதுக்கு முதல பதில சொல்லுங்க சகோதரரே

      Delete
    2. ஹாஹாஹா ... அப்படிக் கேளுங்க சகோ! விடாதீங்க!
      ஈரோட்டு விழாவுக்கு வராம எஸ்கேப் ஆகிட்டு இங்கே வந்து 'பென்னியை புரட்டிக் கொண்டிருக்கிறேன்... பன்னியை புரட்டிக்கொண்டிருக்கிறேன்'னு சமாளிஃபிகேஷன் பண்ணிக்கிட்டிருக்கார்... :D

      Delete
    3. EV :D

      //ஈரோட்டு விழாவுக்கு வராம எஸ்கேப் ஆகிட்டு //
      என்ன ஸ்டீல் போகலயா ?

      Delete
    4. /// என்ன ஸ்டீல் போகலயா? ///

      இதைத் தான் கோயம்புத்தூர் குசும்புனு சொல்லுவாங்க... கிர்ர்ர்ர்...

      Delete
    5. இல்லைங்க நான் வரலைன்னு சொல்லிட்டேன் அவரு போவேன்னு சொன்னாரே அது தான் கேட்டேன்

      Delete
  28. உற்சாகம் கொப்பளிக்கும் சூழல்....


    அருமை....அருமை.....


    இளம் காமிரேடுகள் பங்கேற்பு பற்றி படிக்கும்போதே மகிழ்வு பீறிடுகிறது...

    பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப் குரூப்களிலும் வெளியாகி கொண்டிருக்கும் வீடியோக்கள்,போட்டோக்கள் கொண்டாட்ட தருணங்களை புலப்படுத்தி கொண்டுதான் இருக்கின்றன....

    அறிவிப்புகள் ,நிகழ்வுகள் குறித்து உங்கள்,நண்பர்களின் அப்டேட்டுகள் குறித்த எதிர்பார்ப்புகளுடன்........!!!!!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை செனா அனா அவர்களே... 'அவர் வரமாட்டார்'னு ஒரு மாய+ஆவி சத்தியம் பண்ணாத குறையாக சொன்னப்போ நான் நம்பலை. ஆனா மாய+ஆவி சொன்னது சரிதான்னு நிருபிச்சுட்டீங்க... மகிழ்ச்சி!!! கிர்ர்ர்ர்...

      Delete
    2. @selvam abirami
      சகோதரரே உங்க கூட "do"

      Delete
    3. //அறிவிப்புகள் ,நிகழ்வுகள் குறித்து உங்கள்,நண்பர்களின் அப்டேட்டுகள் குறித்த எதிர்பார்ப்புகளுடன்........!!!!!//

      me too..!

      Delete
    4. @ ஈவி....

      உச்சஸ்தாயில் ஒலிக்கும் உங்கள் கிர்ர்ர்ர்....நீங்கள் பரிபூரண உடல்நலம் மீண்டும் பெற்றுவிட்டதை உணர்த்துகிறது...மிகவும் மகிழ்கிறேன்....

      அடுத்த முறை சந்திக்கையில் இம்முறை வராது விட்டதற்காக இஷ்டத்திற்கு பூரிக் கொள்ளவும்..( cat scratch feverக்கான மருந்துகளுடன் வந்து விடுகிறேன்..)


      :-)

      கடல்யாழ் @...

      அன்பு சகோதரி....!!! சகோதரி விஷ்ணுப்ரியாவுடன் நீங்கள் கலந்து கொண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி....மகளிர் காமிக்ஸ் ஈடுபாடு குறித்த ஒரு மிகப்பெரும் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்....எல்லையில்லா பேரானந்தம் தரும் நிகழ்விது...

      நீங்கள்" டூ" விட்டாலும் நான்

      ப்ரூட்(டூ) தான்....:-)

      Delete
  29. To: Editor,

    இங்கே அதகள மோதல்கள் நடக்கும்போதும், எதிர்பார்த்த சில கதைகள் வரவேற்புப் பெறாதபோதும், சில முயற்சிகள் சுவரிலடித்த பந்துகளாய் திரும்பிவரும்போதும், இன்னும் சில சந்தர்ப்பங்களிலும் - மிகுந்த வேதனையோடு நீங்கள் சில பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டிருக்கிறீர்கள்.

    அப்போதெல்லாம் - உங்களை உற்சாகமூட்ட நண்பர்கள் ஆறுதல் வார்த்தைகளையும், நம்பிக்கை கருத்துக்களையும் பதிவிடுவார்கள்.

    சில புதிய முயற்சிகளை, புதிய ஜோனர்களின் பக்கமான நகர்வுகளை மேற்கொள்ளச் சொல்லி நாம் கோரும்போதெல்லாம், அது தொடர்பான எதிர் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களது தயக்கங்களையும் வெளிப்படையாகவே பேசியுள்ளீர்கள்.

    ஆனால், இனி அவை எவற்றுக்குமே அவசியம் இராது என்பதை ஈரோடு - விழா தெளிவாக்கிவிட்டது.

    கூடிய நண்பர்கள் மத்தியிலிருந்து தெளிவானதொரு 'ஸ்டேட்மென்ட்டை' நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

    எதைச் செய்யவேண்டும், எவை அவசியமில்லை என்பதற்கான இப்போதைய ஒரு திட்டமிடலுக்கும் வந்திருக்கக்கூடும். அது உங்களது வார்த்தைகளில் தொனிக்கும் உற்சாகத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

    Note: ஈரோடு விழாவை பிரமாதப்படுத்தி, ஆசிரியரை உற்சாக டானிக் அருந்தவைத்த அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தினத்தில் வாழ்த்துகளோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் - மகிழ்ச்சி!

    ReplyDelete
  30. திருப்பூர் Gang Tex Sampath, அவருடைய நண்பர்கள் Sivakumar, Kumar, Blaze Babu, அப்புறம் இன்னும் மூன்று பேர் , பெயர் உடனடியாக நினைவுக்கு வர வில்லை மன்னிக்கவும் (இப்பொழுது எனக்கும் என் தோழிக்கும் நண்பர்கள்) தங்கள் அனைவரையும் சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி
    உங்கள் அனைவருடன் நேரம் பகிர்ந்து கொண்டதில் சந்தோசம் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழியே!
      நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

      Delete
    2. சரவணண் ,
      சந்தான குமார்,
      இம்மானுவேல் குமார்

      Delete
    3. கழுகு வேட்டை படித்தீர்களா ?
      உங்கள் பார்வையில் கதை எப்படி ?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை சம்பத்
      ஞாயிறு அன்று தான் படிக்க முடியும்
      அம்மாவிடம் காண்பித்தேன்
      ஆரம்ப கால டெக்ஸ் கதைகள் ரொம்ப பிடிக்கும்
      சந்தோச கடலில் ஆழ்த்தியத்திற்கு நன்றிகள் சம்பத் :)

      Delete
  31. //ஆனாலொரு ஆச்சர்ய highlight என்னவெனில் இளம் ரசிகர்களில் நிறைய பேர் கேப்டன் டைகரையும் அட்டகாசமாய் சிலாகித்தது தான் !! மின்னும் மரணம் தொகுப்பையும் சரி ; அந்தக் கதையின் வீரியத்தையும் சரி நண்பர்கள் நினைவு கூர்ந்த தருணங்கள் ரொம்பவே ஸ்பெஷல் !! அது மட்டுமன்றி - இளம் வருகையாளர்கள் கிராபிக் நாவல் பற்றியும் ; sci -fi ரகக் கதைகள் பற்றியும் ரசித்துப் பேசியது என் கவனத்தைக் கோரியதொரு விஷயம் !!//

    எல்லாமே வேண்டும்னு எல்லாரும் சொல்லறது புரியுது எடிட்...! :)

    ReplyDelete
  32. மூன்று தலைமுறை காமிக்ஸ் எடிட்டர்களையும், சீனியர் எடிட்டரின் துணைவியார் அவர்களையும் ஒரே நேரத்தில் சந்தித்தும், வாழ்த்துக்கள் பெற்றதும் மகிழ்ச்சி.தமிழகம் முழுவதும்,பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டுவாழ் வாசகர்களை சந்தித்தது மகிழ்ச்சி. நிறைய பேரிடம் அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை.இந்த நிகழ்ச்சி நடத்தியதற்கு காமிக்ஸ் குடும்பத்தின் சார்பில் நன்றி.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  33. நேற்றைய தினம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிய நாள்!நேற்றைய தின மகிழ்ச்சி தினத்தை வழங்கிய எடிடருக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாயாவி சிவா நன்றி கலந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. சகோதரர்கள் சேலம் சுசி , சேலம் Tex விஜயராகவன் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி
    ரொம்ப ஜாலியாக பேசினீர்கள் , உற்சாமாக இருந்தது, உற்சாக Tonic Group தாங்கள்

    சகோதரர் KiD ஆர்டின் KannaN எல்லாரையும் பயங்கரமாய் கலாய்த்தார்

    திருப்பூர் Blueberry என்னை விட டைகரின் மிக பெரிய ரசிகர் அவர், தங்களை சந்தித்ததில் டைகரின் ரசிகையாக ரொம்பவே மகிழ்ச்சி :)
    தங்கள் அணியின் இரத்தக்கோட்டை கோரிக்கைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் (நானும் அப்ப இந்த பக்கமாய் கொஞ்சம் சத்தமாய் இரத்த கோட்டை என்று சொல்லி கொண்டு இருந்தேன், அவ்வளவாக en voice கேட்கல :P)

    குணா கரூர் அவ்ரகளுடன் பேச முடியவில்லை, அடுத்த தடவை கண்டிப்பாக பேச ஆவலில் உள்ளேன்
    அவரை திருப்பூர் ஆசிரியர் பேசுகிறேன் என்று கலாய்த்தது ரொம்பவே higlight

    ReplyDelete
    Replies
    1. பத்து வயதிலிருந்து பத்து வருசமாய் காமிக்ஸ் படித்து கொண்டிருக்கும் Postal Phoenix சகோதரரே தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி :)

      Delete
    2. //திருப்பூர் Blueberry என்னை விட டைகரின் மிக பெரிய ரசிகர் அவர், //
      :)

      //தங்கள் அணியின் இரத்தக்கோட்டை கோரிக்கைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் (நானும் அப்ப இந்த பக்கமாய் கொஞ்சம் சத்தமாய் இரத்த கோட்டை என்று சொல்லி கொண்டு இருந்தேன், அவ்வளவாக en voice கேட்கல //


      :):):)

      Delete
    3. @கடல்யாழ்9 : தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே ...

      @Satishkumar S: நீங்கள் நேற்று வந்து இருந்தீர்களா நண்பரே ?

      Delete
    4. இல்லை தலைவரே.

      சில தவிர்க்கமுடியாத குடும்ப சூழலால் வரமுடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அடுத்த ஏதாவது சந்திப்பில் நிச்சயம் சந்திப்போம் தலைவரே.

      Delete
    5. அன்புத் தங்கை கடல் யாழுக்கு அன்பு வணக்கங்கள்!
      அடுத்தடுத்து நிகழவிருக்கும் சந்திப்புகளின் போது மேலும் பல சகோதரிகளின் நட்பும் நமக்கு கிட்ட வேண்டும் என வேண்டுவதோடு மட்டுமல்லாமல்,
      மகளிர் அணித் தலைவியாகவும் உம்மை நியமித்து இந்த மாபெரும் காமிக்ஸ் நல்லுலகத்திற்கு சிறப்புகள்பல செய்து வாழ்வாங்கு வாழ இம் மன்றம் ஆணை பிறப்பித்து உத்ரதவிடுகிறது...!!
      😇😇😇

      Delete
  35. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. போராட்டக்குழுவின் உக்கிரமான பல நடவடிக்கைகளை தாக்குப்பிடிக்க இயலாமல், பலப்பல மாசங்களுக்கப்புறம் தற்போது 'சி.சி.வயதில்' வெளியிட்டிருக்கும் எடிட்டர் சமூகத்திற்கு போ.கு'வின் மெல்லிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...
    திகில் லைப்ரரி - உருவான விதம் பற்றிய தங்களது கட்டுரை சுவாரஸ்யமாய் இருந்தது! ஆனால் கட்டுரையின் நடுநடுவே தாங்கள் 'ஊப்ங்ங்ற்ஜ்ஹஹ்' என்று வினோதமாக முனகியிருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை!!!!!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஆஹா....தமிழ் எழுத்துருக்களுக்கு மத்தியில் ஆங்கில வார்த்தை ஏதேனும் வந்திருக்கும் ; டைப் பண்ணும் பொழுது அதனை ஆங்கிலத்திலேயே தொடரச் செய்ய மறந்திருப்பார்கள் நம்மவர்கள் ! அதனால்தான் சில்க் ஸ்மிதா sound effect எழுந்திருக்கும் !

      Delete
    2. பரவாயில்லை எடிட்டர் சார்... அந்த முக்கல்-முனகல் எஃபெக்ட் கூட, படிக்கும்போது கொஞ்சம் கிளுகிளுப்பாகவே இருந்தது ஹிஹி :D

      Delete
  37. **** மேஜிக் விண்ட்டின் 'பூமிக்குள் ஒரு பிரளயம்' *******

    இரண்டு செவ்விந்திய தாக்குதல்களும், கடைசியாய் ஒரு ராட்ஸச மண்புழு தாக்குதலும் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக வேறெதுவும் இல்லாத கதை! வெள்ளையர்களில் ஒரு பிரிவினரான 'மோர்மன்'கள் பற்றிச் சிறிதளவு சொல்லப்பட்டிருந்தாலும் கதையிலோ; நம் மனதிலோ பெரிதாய் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை!
    கதையும், கதை நகர்வும் சுமாருக்குக் கொஞ்சம் மேலேயும், சூப்பருக்கு நிறையவே கீழேயும் இருக்கிறது!
    மேஜிக்விண்ட் - ஒரு கெளபாய் தொடரா? ஆக்ஷன் தொடரா? அமானுஷ்ய ரகமா? - என்று ஒவ்வொரு முறையுமே கொஞ்ச நேரமாவது சிந்திக்கும்படி செய்கிறது! இப்பவும் அப்படித்தான்!

    எனது ரேட்டிங் : 7.5/10

    ReplyDelete
  38. வணக்கம் நட்பூஸ்...
    லைவ் ஃப்ரம் ஸ்டால்...
    ஆசிரியருக்கு ஏதேனும் கேள்விகள் உண்டா நணபர்களே???

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் படம் கிடைக்கலை.

      Delete
  39. வணக்கம் நண்பர்களே!!
    சற்று நீண்ண்ண்ட...இடைவெளி!!!
    அந்த வருத்தத்தை இன்றைய ஆசிரியர் பதிவு கொஞ்சமாக நீக்கியதில் மகிழ்ச்சி.பதிவுகளால் பழக்கப்பட்ட உறவுகளை நிஜத்தில், நேரில் சந்தித்த நிகழ்வுகளை பார்க்கையில் நாமும் ஈரோட்டில் பிறந்திருக்கக்கூடாதா என்ற வருத்தம் மேலோங்குகிறது. உறவுகள் யார் யார் என பெயர் தெரியாவிட்டாலும் கண்ணில் மின்னும் அந்த சந்தோஷம் ஒன்று போதுமே. காமிக்ஸ் என்ற மந்திரச்சொல் நம் அனைவருக்குள்ளும் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை.
    இம்மாதிரியான கொண்டாட்டங்கள் நிகழ காரணமான நமது எடிட்டருக்கும் அவருடன் கூடவே பயணிக்கும் ஜூனியர் எடிட்டருக்கும் அதற்கும் மேலாக காமிக்ஸ் என்ற நான்கெழுத்து மந்திரச்சொல் இன்று மரம்போல் வளர்ந்திருந்தாலும் அதற்கு முதல் வித்திட்ட நமது அனைவரின் மகாகுருவான சீனியர் எடிட்டர் அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.
    (ஈரோடு விஜய் தங்கள் திருக்கரங்களால் எனக்கு அளிக்கவிருந்த "கொட்டினை" வாங்க சந்தர்ப்பம் வராமல் போகாது!! )
    ஸ்டீல் க்ளா. கடல் அவர்களே ஈரோட்டுக்கு சென்றிருக்கிறார்கள்!! இரும்புக்கரத்தாரான நீங்கள் ஏன் போகவில்லை? ?

    ReplyDelete
    Replies
    1. @ உயர்திரு. ATR

      ///ஈரோடு விஜய் தங்கள் திருக்கரங்களால் எனக்கு அளிக்கவிருந்த "கொட்டினை" வாங்க சந்தர்ப்பம் வராமல் போகாது!! ///

      சே..சே! நான் ஏன் சார் உங்களைக் குட்டப் போகிறேன்? வேணுமின்னா அடுத்த தபா பார்க்கும் போது என் நடு மண்டையில ணங் ணங் ணங்'னு நீங்க குட்டுங்க சார்... 'ஐயோ அம்மா'னு கத்த மாட்டேன்; ஒரு முக்கல்-முனகல் கூட இருக்காது! பெரியவங்க கைல குட்டுப்படறது பெருமால் கையால குட்டுப்படற மாதிரியோல்லியோ!

      அப்புறம், கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கிய உங்கள் மகனிடம் என் அன்பைத் தெரிவிக்கவும்!

      Delete
    2. திரு.ஈரோடு விஜய் பழைய பதிவுகளை இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உடம்பு சரியாகி விட்டதா? முகத்தில் சென்னை புத்தகவிழா புகைப்படத்தில் இருந்த பூரிப்பில் கொஞ்சம் மைனஸ். அதனால்தான் கேட்டேன்.அப்புறம் நீங்கள் மறுத்தாலும் உங்கள் கையால் கொட்டினை வாங்காமல் விடுவதாயில்லை.என் மகனுடன் ஈரோடு வருவதாக திட்டமிட்டிருந்தேன். ஆனால்.....
      வழக்கம்போல் சொதப்பிவிட்டது. வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு பின் தம் விருப்பப்படி நடக்க சிலருக்குத்தான் அதிர்ஷ்டம் வாய்க்கும் போலிருக்கிறது. புத்தகவிழாவிற்கு ஈரோட்டுக்கு வர சென்ற மாதம் ஆரம்பத்திலிருந்தே பரபரப்பாக இருந்தேன். அனைத்தும் ஒரு "மியாவ்" வினால் தடைபட்டுவிட்டது.
      அப்புறம் என் மகன் எனக்கு நேரெதிர். கோபமே வராது. பேசுவதுகூட மெதுவாகத்தான் இருக்கும். சண்டை என்று சொன்னதெல்லாம் விளையாட்டுக்குத்தான். சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற எண்ணத்தில்தான்.எல்லோருடனும் இப்படி பேச முடியாதல்லவா? விழாவிற்கு உங்களது வீட்டு குட்டிபாப்பாவை(பெயர் ரம்யா சரிதானே) அழைத்துப் போகவில்லையா? சகோ. கடல் மகிழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக எனது மகன் வந்தபின் உங்களது விசாரிப்பினை தெரிவிக்கிறேன்.நன்றி

      Delete
    3. திரு.விஜய் "உயர்திரு" இதற்கு தகுதியானவர் நம் அனைவருக்கும் ஆசானான சீனியர் எடிட்டர் அவர்கள்தான். எனக்கெல்லாம் "திருதிரு" வென விழிக்கும் என்ற பட்டமே போதும்.

      Delete
  40. நேரமின்மையால் கொண்டாட்டம் மிஸ் பண்ணிவிட்டேன்...
    கலந்துக்கொண்டு கலக்கும் நண்பர்களுக்கு நற...நற...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. // கலந்துகொண்டு கலக்கும் நண்பர்களுக்கு நற...நற...வாழ்த்துக்கள்.!//

      +1

      மர்ம மனிதன் மார்ட்டின் உதவியாளர் ஜாவா மாதிரி .,


      கர்ர்ர்.....கர்ர்ர்.........!

      Delete
  41. இரத்தப் படலம் வண்ணத்தில் எப்போது? என்று தோழர்கள் ஆசிரியரிடம் கேட்டு பதிவிட இயலுமா? நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 2017 ல் இரத்த கோட்டைவர உள்ளதால். 2018 கேட்டாவில் கண்டிப்பாக இருக்கும் என நம்பலாம்.
      இரத்த படலம் பற்றி எழுப்பிய கேள்விக்கு ஆசிரியர் பதில் "ஓரு புத்தகமாக இல்லாமல் மூன்று பாகம் வருவதுதான் சாத்தியம் என்று கூறினார்."
      அவர் பதிலில் இருந்து இரத்த படலம் 2018 ல் வர வாய்பிறுக்கிறது. இல்லாவிட்டால் 2019 கண்டிப்பாக வந்து விடும்.
      வான் ஹம்மே தனக்கு என்று பிரத்யேக இரத்த படலம் வாங்கி உள்ளார் என்ற தகவலையும் தெரிவித்தார். ஏனெனில் ஆங்கில தில் கூட ஓரே பதிப்பு பாக வரவில்லையாம். அந்த பெருமை LIONMUTHU மட்டுமிடமே உள்ளது.

      Delete
    2. 1.6 எபிசோட் கொண்ட 3 பெரிய புத்தகங்களாக
      Or
      3 எபிசோட் கொண்ட 6 புத்தகங்களாக
      2 வது என்றால் இந்த ஆண்டு இறுதியில் நாம் முதல் தொகுப்பை பெறலாம்.

      Delete
    3. இரத்தப்படலம் தொகுப்பு

      2020 ல் என எடிட்டர் ஒரு பதிவில் கூறியதாக நினைவு

      Delete
  42. அடுத்த முறை நானும் கொள்ள இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  43. இம்மாதம் எத்தனை புத்தகங்கள். கைப்பற்றிய நண்பர்கள் தெரிவியுங்கள்.Please

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் முதல் பதிவில் விபரம் உள்ளது.

      Delete
  44. சீனியர் ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும், ஜூனியர் ஆசிரியருக்கும் , நணபர்கள் அனைவருக்கும் நண்பிகளுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
    சேலம் Tex விஜயராகவன் சார் " திகில்" எப்போது வெளிவரும் என்று தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. திகில் " அவ்வப்போது கலந்து வரக்கூடும் சார்...தனியாக தனிதிகில்சந்தா வாய்ப்பு குறைவு போல தெரிகிறது சார்..

      Delete
    2. 2017 ல் திகில் கண்டிப்பாக உள்ளது. விழாவில் ஆசிரியர் தெரிவித்தார்.
      ஸ்டாலில் நான் அவரோடு உரையாடல் போதும் அடுத்த வருடம் திகில் உள்ளது என்று தெரிவித்தார்.

      Delete
    3. அடுத்த வருடம் சந்தா V - ல் கருப்பிகிழவி கதைகள் வரப்போகிறது என்று *V*ijayan சார் அறிவிப்பு :)

      Delete
    4. Ganeshkumar Kumar : சார்...ஒரு சின்ன குழப்பம் நிகழ்ந்துள்ளது ! திகில் கதைகள் 2017-ல் உண்டு என்பதுதான் நான் சொல்ல வந்த விஷயம் ; "திகில்" லேபில் மீண்டும் வருகிறதென்றல்ல ! லயன் காமிக்ஸ் + முத்து காமிக்ஸ் லேபிள்களுக்குள்ளேயே இனி நமது பயணங்கள் இருந்திடும் !

      Delete
    5. Tex Sampath : 2 திருத்தங்கள் : முதலில் புதுக் சந்தாவுக்கு "V " என்பதல்ல பெயர் !

      அப்புறம் கறுப்புக் கிழவி கதைகள் மீண்டும் முயற்சிக்கலாம் என்று நான் சொன்னது நிஜமே - ஆனால் அது 2017-க்குள் சாத்யமாவது சந்தேகமே ! அதன் உரிமைகளைக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பதிப்பகத்தின் ஒப்புதல் வாங்கிட நிறையவே அவகாசம் அவசியம் ! So அடுத்த முறை அமெரிக்க செல்லும் வேளையில் நேரில் பார்த்து கோரிக்கையை முன்வைத்து பேசிப் பார்க்கும் போது தான் நிலவரம் தெரிய வரும். கிழவியை வரவழைத்திடலாம் - but கொஞ்சம் கூடுதல் நேரம் தேவைப்படலாம் !

      Delete
    6. கூடுதலா ரெண்டு மாசம் கூட எடுத்துக்கங்க சார் ஆனா ஆயா வந்தாகணும் சார்ர்ர்ர்

      சந்தா V ச்சும்மா காமடிக்காக போட்டதுங்க எடி சார் :)

      Delete
  45. நண்பர்கள் யாரேனும் Youtube_ல் video-க்களை upload செய்திடுங்களேன்.

    ReplyDelete
  46. இரத்தக் கோட்டை... 2017

    மகிழ்ச்சி

    ReplyDelete
  47. ஆசிரியரின் மேல் நாம் கொண்ட அன்பை நேரில் பார்த்த ஆசிரியரின் தாயார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் ஒரு ரகசியமும் சொன்னார் நமது ஆசிரியர் சிறு வயதில் மாணட்ரேக்கின் கதையை தினமும் படித்து கதை சொல்லச் சொல்லி ரசிப்பாராம்

    ReplyDelete
    Replies
    1. அந்த கதையை என்னிடம் தான் முதலில் கூறினார் , நீங்கள் அதற்கு பின்னர் நீங்கள் வந்ததும் உங்களிடம் கூறினார்
      எனக்கு முன்னர் முந்தி கொண்டீர்கள் தோழரே :/
      ஒரு suspense யோட கூறலாம் என்று இருந்தேன்.....hmmmmmm

      Delete
  48. ஈரோடு சிறப்பின சில துளிகள் ...

    இந்த மாபெரும் கொண்டாட்டம் மிக பெரிய வெற்றி என்பதை ஆசிரியர் அவர்களின் பதிவின் மூலமும் ...நண்பர்களின் திரளான வருகையின் மூலமும் ...கடல் கடந்த நண்பர்களின் வருகையின் மூலமும் ..சகோதரிகளின் வருகை மூலமும் ...குடும்பமாக வந்த நண்பர்களின் மூலமும் ..தன்னால் வர முடியா சூழல் ஏற்பட்டாலும் தனது மனைவி குழந்தைகளை அனுப்பிய நண்பரின் மூலமாகவும் ..தனது உடல்நிலை சிறிது குறைவாக இருப்பினும் பொருட்படுத்தாமல் விழாவில் கலந்து கொண்ட செயலாளர் மூலமும் அறிந்து விடலாம் ..

    *********

    சீனியர் ஆசிரியரின் சிறிய சீரிய உரை மனதை நெகிழ செய்தது உண்மை ...


    *********

    சகோ கடல்யாழ் ..அவரது தோழி ...சிபிஜீ அவர்களின் புதல்வி ..மாணவர்களின் சிறிய ஆனால் தயக்கமில்லா அழகான உரையாடல்கள் அவர்களுக்கு எல்லாம் பதுங்கு குழி என்பது தேவைபடாத ஒன்று என்பது நன்றாகவே புரிபடுகிறது (செயலாளர் கவனிக்க )


    ************

    எனது வசமும் மைக் வந்தது ..ஒன்றுமே பேச வில்லையே என்று சிலர் கருதினாலும் ( மகிழ்ச்சியடைந்தாலும் ) அது எனது குறை அல்லவே ...தாளை கொடுத்து உரையாற்ற சொன்னால் உரையாடலாம் ..மைக்கை கொடுத்தால் எப்படி உரையாடுவது ....மத்தபடி ஐயம் வீரமான ஆளு தாங்க ...

    ********

    அடுத்த அறிவிப்பு இரத்த கோட்டை தொகுப்பு வண்ணத்தில் முழுதாக ...அடுத்த வருட ஈரோடு புத்தக காட்சியில் ...

    அதன் பிறகே இரத்த படலம் தொகுப்பு வண்ணத்தில் .உறுதியாக ஆனால் கொஞ்சம் தாமதமாக

    என்ற முக்கிய அறிவிப்புகள் கரகோசத்தை அள்ளியது ....

    *************

    நண்பர்களின் அறிவியல் புனைகதைகள் ..கிராபிக் நாவல்கள் பற்றிய பார்வைகள் கண்டிப்பாக ஆசிரியர் அடுத்த வருடம் அவைகளுக்கு இடம் கொடுப்பார் என உறுதிபட தெரிகிறது ...பலதரபட்ட நண்பர்களின் ஆவலை கண்டிப்பாக நான் மற்றும் மடிப்பாக்கம் மற்றும் சிலர் எனும் ஆகியோர் கண்டிப்பாக குறுக்கே நிற்க மாட்டோம் ..அதே சமயம் படித்து முடித்து கதை நன்றாக இல்லை எனில் கண்டிப்பாக உண்மையை உரக்க சொல்வோம் ..அதற்காக நாலு பக்கம் கூட படிக்க முடியவில்லை என்றெல்லாம் அறிவிக்க மாட்டேன் ..கண்டிப்பாக முழுதும் படித்தவுடனே எனது எண்ணங்களை அறிவிப்பேன் ...அவை சிறப்பாக இருந்தாலும் ...

    ReplyDelete
    Replies
    1. //நண்பர்களின் அறிவியல் புனைகதைகள் ..கிராபிக் நாவல்கள் பற்றிய பார்வைகள் கண்டிப்பாக ஆசிரியர் அடுத்த வருடம் அவைகளுக்கு இடம் கொடுப்பார் என உறுதிபட தெரிகிறது ...பலதரபட்ட நண்பர்களின் ஆவலை கண்டிப்பாக நான் மற்றும் மடிப்பாக்கம் மற்றும் சிலர் எனும் ஆகியோர் கண்டிப்பாக குறுக்கே நிற்க மாட்டோம் ..அதே சமயம் படித்து முடித்து கதை நன்றாக இல்லை எனில் கண்டிப்பாக உண்மையை உரக்க சொல்வோம் ..அதற்காக நாலு பக்கம் கூட படிக்க முடியவில்லை என்றெல்லாம் அறிவிக்க மாட்டேன் ..கண்டிப்பாக முழுதும் படித்தவுடனே எனது எண்ணங்களை அறிவிப்பேன் ...அவை சிறப்பாக இருந்தாலும் ...//
      :) தலைவரே பின்னீட்டீங்க....!

      Delete
    2. திரு.பரணிதரன் இரத்தப்படலம் வண்ணத்தில்....!! தகவலுக்கு நன்றி சார். ஆசிரியர் லேட்டாக கொடுத்தாலும் லேட்டஸ்டாகவே கொடுப்பார். சூப்பரான செய்தி சார்.

      Delete
    3. இன்னும் பூஜையே போடலை
      அதுக்குள்ள க்ளைமாக்ஸ் பற்றி விமர்சனமா.
      திருந்துங்கப்பு...
      என்னமோ போடா மாதவா

      Delete
  49. படிக்க மகிழ்ச்சியாக உள்ளது.அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. நேற்று ஈரோட்டில் மகிழ்ச்சி கூட்டத்தில் பங்கு பெற்றதில் வயதில் மிக சிறியவரான எங்கள் வாழும் வள்ளல் சிபிஜீ அவர்களின் புதல்வி தயக்கம் இல்லாமல் மிகச் சரளமாக பேசி எங்கள் எல்லோரையும் அசத்தினார் காமிக்ஸ் வருங்காலம் வாழ்க

    ReplyDelete
  51. கிராபிக் மற்றும் அறிவியல் புன்ன கனதகள் படிக்க ஆவலாக உள்ளது....
    பார்ப்போம்....

    ReplyDelete

  52. ஈரோடு நிகழ்சி சிறப்பாக அமைந்துள்ளது. குடும்பத்தினருடன் ஆசிரியர் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது. V.விக்ரம் அரவிந்த் திருமண விழாவில் நாங்களும் குடும்பத்தோடு கலந்து கொள்ள ஆவல்.

    இந்த மாத புத்தகங்கள் அனைத்துமே அளவில், வடிவமைபில் போட்டி போடுவதுபோல் உள்ளது. வென்றது “ஈரோட்டில் இத்தாலி” தான்.

    எப்பொழுதும் போல முதலில் படிப்பது மறுபதிப்பு கதைதான். பொம்மை வாத்தின் கண்ணாடிக் கண்கள் பக்கவாட்டில் உருளும் பொழுது முன்பு ஏற்பட்ட திகில் முழுவதும் ஏற்படா விட்டாலும், இப்பொழுதும் சிறிது சலனம் ஏற்பட்டது உண்மை.

    அடுத்து படிக்க இருப்பது மர்ம மனிதன் மார்டின் தான். ஒரிஜினல் அட்டை முந்தைய முத்து காமிக்ஸ். டஸ்ட் கவர் புதிய முத்து காமிக்ஸ் இன் பரிணாமம்.

    ReplyDelete
    Replies
    1. parimel : சார்...சொந்தங்களின்றி விக்ரமின் திருமணம் நடந்திடுமா என்ன ? உங்கள் ஒவ்வொருவரையும் அந்நேரம் குடும்ப சகிதம் சந்திப்பது எங்களது வரமாகிடும் !!

      Delete
  53. அடுத்து ஆசிரயரின் சில சந்தேகங்களுக்கு அங்கே நண்பர்களின் கருத்தை அறிய காத்திருந்தார் ..ஈரோட்டில் கலந்து கொள்ளா நண்பர்களும் இங்கே பதிவில் பகிரலாம் ..இப்பொழுது என்னை போலவே ...( அங்கே உரையாட தாள் இல்லாத காரணத்தால் எனது பதிலும் இங்கே...)

    மாதம் ஒரு டெக்ஸ் ஓவர்டோஸாக நினைக்கிறீர்களா ...சரி என்று நினைக்கிறீர்களா ...

    இந்த வினாவை மீண்டும் மீண்டும் ஆசிரியர் கேட்பதன் காரணம் தெரியவில்லை ..டைகர் ரசிகர் ப்ளூபெர்ரி (எ) நாக்ஜீ அவர்களே சொல்லிவிட்டார் டெக்ஸ் இன்னும் கூட இனைக்கலாம் ...கண்டிப்பாக ஓவர்டோஸ் கிடையாது என்று ...இது ஒரு சோறு பதம் அல்லவா சார் ...

    மேலும் இன்னொன்று ....

    தாங்கள் மாதம் ஐந்து இமழ்கள் வெளியிடுகிறீர்கள் எனில் மற்ற இதழ்களை ஆவலுடன் படிப்பதை மறுப்பதற்கு இல்லை சார் ...ஆனால் அது டெக்ஸ் இதழை விட சிறப்பாக இருக்கிறதா ..அல்லது சுமாராக உள்ளதா இல்லை மொக்கையாகி விட்டதா என்று படித்து முடித்தவுடன் அறிகிறோம் படிக்கும் முன் ..அந்த ஆரம்ப நிலை ஒரு புது காமிக்ஸ் இதழை படிக்க இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியுடன் தான் ஆரம்பிக்கிறோம் ...ஆனால் டெக்ஸ் இதழ் எனும் போது மாதம் இரண்டாக இருந்தாலும் சரி... அந்த கதை மொக்கையாக இருந்தாலும் சரி ..( இதுவரை அப்படி ஒன்று வரவில்லை என்பது வேறு ..சில கதைகள் சுமாராக இருக்கலாம் ) டெக்ஸ் இதழை கையில் ஏந்தி படிக்க ஆரம்பிக்க போகிறோம் என்றவுடனே மனதில் எழும் ஒரு துள்ளல் உணர்வு ..உற்சாகம் ...இந்த இதழை படித்து முடிக்கும் வரை எவரும் எந்த குறுக்கீடும் பண்ண வர கூடாதே என்ற ஆதங்கம் போன்றவைகளை எந்த ஹீரோ சார் கொடுப்பார் ...

    டெக்ஸ் ........

    என்ன சொல்றது


    டெக்ஸ் ......தான் சார் .....வேற ஒண்ணும் சொல்ல தோணலை....


    எனவே இனி தாங்கள் இந்த கேள்வியை எழுப்பாமல் இருக்க வேண்டுகிறேன் ....மீண்டும் இந்த வினா தங்களிடம் எழுந்தால் இத்தாலிக்கு எனது கடிதம் செல்வதை தவிர்க்க இயலாது சார்...:-)


    *********

    அடுத்த வினா ....

    2012 ல் இருந்து சிற்சில மாற்றங்கள் இருந்தாலும் ஒரே அலைவரிசையில் செல்வதை போல ஒரு தோற்றம் ...2020 இல் ஆவது ஏதாவது மாற்றங்கள் செய்ய முற்படலாமா .....

    எந்த மாற்றங்களை வேண்டுமானாலும் ஏற்படுத்துங்கள் சார்... ஆனால்
    2020 இல் இல்லை ...2220 ஆனாலும் சரி....மாதம். ஒரு டெக்ஸ் என்ற மாற்றத்தை மறந்து விடாதீர்கள் ....

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் புத்தகம் மாதம் 2 வேண்டும் என்று டெக்ஸ் ரசிகர்களாகிய நீங்கள் சொல்லக்கூடாது.
      பிற தலையின் ரசிகர்களே இயம்ப வேண்டும்.அப்படியெனில் தளபதி ரசிகனாகிய நான் என் சொல்வது.
      எடிட்டர் சார்
      டெக்ஸ்க்கு மாதத்திற்கு 2 அழகாய் வெளியிடலாம். முதலில் இந்த ஆண்டே ஒரு ட்ரெயல் பார்க்கலாமா

      Delete
  54. ***** காலை எழுந்தவுடன் கொலை *****

    நூற்றுக்கு நூறு வாங்கிய 'வாராதோ ஓர் விடியலே'க்குப் பிறகு வெளிவரும் டைலனின் சாகஸம் என்பதால், இது சோடை போய்விடக் கூடாதே என்ற வேண்டுதல்களுடன் பக்கங்களைப் பரட்டினேன்... அட!! முதல் பக்கத்திலேயே பரபரப்பு, விறுவிறுப்பு!
    கதைக் களம் அப்படியொன்றும் புதிதல்ல எனினும், விறுவிறுப்பாக பக்கங்களைப் புரட்ட வைப்பதில் துளியும் குறை வைக்கவில்லை.
    க்ளைமாக்ஸ் - அட்டகாசம்!
    வண்ணங்கள் - பளிச் பளிச்!
    வழக்கமாகத் தன் கடி ஜோக்குகளால் நம்மை பயமுறுத்தும் க்ளெச்சோ - இம்முறை கதை நெடுக வந்து ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருப்பது ஒரு ஆச்சர்யம்! எடிட்டரின் ஹோம்-வொர்க் நன்றாகவே பலனளித்திருக்கிறது! செம!
    தலைப்பு மட்டும் இன்னும் சற்று பொருத்தமாய் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது!

    எனது ரேட்டிங் : 8/10

    ReplyDelete
  55. ஆசிரியரின் அடுத்த சந்தேகம் ....

    ப்ளாகிலும் சரி ...நேரிலும் சரி ....இதழ்கள் வருவதற்கு முன் ஒரு பரபரப்பை ஆர்வத்தை பார்க்க முடிகிறது ....ஆனால் இதழ் வந்தவுடன் அந்த இதழ்களை பற்றி அதிகம் பாதகமோ ..சாதகமோ ...ஆனால் கருத்துக்கள் குறைவாகவே வருகிறது ...இதழ்கள் கைக்கு கிடைத்தவுடன் அந்த உற்சாகம் குறைந்து விடுகிறதா .....காரணம் என்ன ....

    இது உண்மை தான் ...சார்....ஆனால் அது கண்டிப்பாக உற்சாக குறைவால் ஆன கோட்பாடு கிடையாது ....

    உடனடியாக இதழ்கள் கைக்கு கிடைத்தவுடன் படிக்கும் நண்பர்கள் சிலரே ..அவர்களும் இங்கே அந்த வாரத்தில் இதழ்களை பற்றி விமர்சனம் இடலாம் என்றால் கிடைக்காத...படிக்காத நண்பர்களின் ஆர்வத்தை குறைப்பதாக இருப்பதாக எண்ணி தவிர்பது ஒரு காரணம் .. ....கதை பற்றி விமர்சனம் எனில் கண்டிப்பாக முழுதாக சொல்ல வில்லை என்றாலும் சில் குறிப்பிட்ட பகுதிகளை சொல்ல முற்பட்டாலும் கூட கதையை சொல்லாதீங்க எனும் நண்பர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அமைதியாகி விடுவது ...சும்மா பேச்சுக்கு எந்த ஒரு கருத்தையும் விவரிக்காமல் நல்லாருக்கு ...நல்லாலை என்று ஒரு வரி எழுதுவது எதற்கு போ ...என விட்டுவிடுவது ....இதுவே உடனடியாக படிப்பவர்களை தனது எண்ணத்தை பதிவிடாமல் போக காரணம் ...

    எனில் .....

    புத்தகத்தை தாமதமாக படித்தோரும் எந்தவித கருத்தையும் சொல்ல வில்லையே ..அந்த மாத கடைசி பகுதியில் ஆவது அனைவரும் தான் படித்து இருப்பார்களே ..அவர்கள் ஏன் கருத்தை தெரிவிப்பதில்லை என்ற சந்தேகம் எழ கூடும் ...

    அதற்கு காரணம் நாமே தான் சார்.... இப்பொழுது மாதம் நான்கு இதழ்களை நாம் வெளியிடுகிறோம் எனில் இதழ் அனுப்பும் சமயத்தில் அதற்கான பதிவை இட்டவுடன் அடுத்த நமது மூன்று பதிவுகளும் வாரத்திற்கு ஒன்றாக அடுத்த மாத இதழ்.களின் அட்டைபடம் ....ட்ரையலர்.. எனும் அடுத்த மாத இழ்களை முன்னிறுத்தும் பொழுது அவர்களின் கருத்துகள் அந்த இதழ்களின் அட்டைபடம் ...பற்றிய பார்வைகள் ...நிறை குறைகள் ...கதை...சித்திர தரம் பற்றிய பார்வைகளாக மாறிவிடுகிறது...அப்பொழுது படித்த இதழ்கள் பழைய இதழ்களாக நண்பர்களுக்கு தோன்றி விடுகிறது ஒரே வாரத்தில் ...அனைவரும் படித்து கருத்தை ஏற்கனவே அறிவித்து இருப்பார்கள் ..இனி நாம் சொல்வதற்கு என்ன உள்ளது என அமைதியாகி விடுகிறார்கள் ...மேலும் கையில் உள்ள பழாபழத்தை விட கைக்கு கிடைக்காத நெல்லிகனிக்கு. ஆசை படுவது தானே ஒவ்வொரு மனிதனின் இயல்பு ...:-)

    ReplyDelete
    Replies
    1. //ப்ளாகிலும் சரி ...நேரிலும் சரி ....இதழ்கள் வருவதற்கு முன் ஒரு பரபரப்பை ஆர்வத்தை பார்க்க முடிகிறது ....ஆனால் இதழ் வந்தவுடன் அந்த இதழ்களை பற்றி அதிகம் பாதகமோ ..சாதகமோ ...ஆனால் கருத்துக்கள் குறைவாகவே வருகிறது ...இதழ்கள் கைக்கு கிடைத்தவுடன் அந்த உற்சாகம் குறைந்து விடுகிறதா .....காரணம் என்ன ....//

      பலகாரணம் இருக்கலாம் ஒரு காரணம் நாம் படிப்பது தொடர்கதை அல்ல என்பதும்.புத்தகத்தை எடுக்கும் போது தொடர்கதை மட்டும் தான் கொடுக்கமுடியும்.ஒவ்வொரு கதைக்கும் ஒரு சுவாரஸ்ய கமா வோடு முடியும் ஒரு விறுவிறுப்பான(விறுவிறுப்பான- இதை BOLD CAPS இல் படிக்கவும்) தொடர்கதை மாதம் ஒன்று என்று(CONTINUESஆகா ஒரு மூன்று மாதம் மட்டும்) முயற்சி செய்து வரவேற்பை பார்க்கலாம்.

      Delete
  56. நேரில் கலந்து கொள்ள இயலவில்லை எனினும் பார்க்க படிக்க மகிழ்ச்சி ..ரத்தக்கோட்டை வண்ணத்தில் வருவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ..இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்க வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றியோ நன்றி

    ReplyDelete
  57. இரண்டு தினங்களாய் ஈரோட்டில் காமிக்ஸ் காமிக்ஸ் என்று கூவித்திரிந்த இந்த சேந்தம்பட்டி குழுவின் கடைக்கோடி குயில் கனத்த இதயத்துடனும் ( கனத்த பையுடனும்) கூட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது.

    ReplyDelete
  58. சுட்டி பயல் பென்னி ......

    சார் .....அருமை .....பென்னி கண்டிப்பாக பாஸ் மார்க் மேலாக வாங்கி விட்டார. ...ஒரு துப்பறியும் நகைசுவை கதை போல அருமை....சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் ...சில் இடங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாகிறார் ..சில இடங்களில் நார்மல் மனிதனாகிறார என வித்தியாச படுத்தி அட்டாகாச படுத்திவிட்டான் பெட்டி ....வில்லன் ஒவ்வொரு நிமிடத்திலும் டிரைவரின் பெயரை மாற்றி மாற்றி உச்சரிக்கும் சமயத்திலும் ...இன்ஸ்பெக்டர் இந்த சின்ன பையன்களே இப்படி தான் ...ஏதாவது காமிக்ஸ் கதையை படித்து விட்டு ஹீரோவாக நினைத்து கோள்வது என கேலி செய்து விட்டு அறைக்கு சென்று சமர்ப் இதழை படிப்பது ...பூங்காவில் பென்னி தப்பிக்கும் இடங்களில் அடிக்கும் லூட்டி ....ஓவ்வொரு டாக்ஸி காரையும் விதவிதமாக மடக்கி பிடிப்பது என வாய் விட்டு சிரிக்க வைத்த இடங்கள் அதிகம் ...

    மேலும் இந்த இதழின் அட்டைபடம் ...பிறகு வழக்கம் போல அல்லாமல் இந்த முறை புத்தகம் கனமாக வழக்கமான பக்கங்களை விட அதிக பக்கங்களுடன் இருந்தது ....உள்ளே அச்சுதரம் ...சித்திர தரங்கள் என எந்த குறையும் இல்லாத அருமையான இதழ்..புது கார்டூன் வரவில் சமர்ப் ஏமாற்றியது என்றால் பென்னி ஒரே கதையில் அவனை போலவே ஓரே ஜம்பில் மனதில் ஏறி குதித்து கொண்டார் ...

    அருமை....அருமை ..அருமை ....

    மதிப்பெண் அளிக்க வேண்டுமென்றால் எத்துனை மதிப்பெண் குறைத்தாலும் அதற்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே ....அப்படி ஏதும் சொல்வதற்கு இல்லை எனும் போது எனது மதிப்பெண் பத்துக்கு பத்து ...

    ReplyDelete
    Replies
    1. :)

      சாமி கார்ட்டூன்னுக்கு 2016ல் தலைவர் பாஸ் மார்க் போட்டுட்டார் சாமீய்ய்ய்ய்ய்ய்ய் .................!;P

      Delete
    2. ஆஹா ...சதிஷ் ஜீ ...நான் எப்பொழுது கார்டூனுக்கு எதிரியானேன் ...டெக்ஸ் அடுத்து எனது சாய்ஸ் கார்டூனே ....என்ன உண்மையாகவே சமர்ப் என்னை ஏமாற்றியதன் காரணமாகவே அதன் மதிப்பெண்ணை குறைத்தது ...:-)

      என்னை பொறுத்தவரை கார்டூன் கதை பிடிக்க வில்லை எனினும் வெளிபடுத்துவேன் ....கிராபிக் நாவல் சிறப்பாக் இருந்தாலும் வெளிபடுத்துவேன் ....:-)

      Delete
    3. :) தலைவரே பாஸ் மார்க் போட்டுட்டார்ந அது ஜெனரஞ்சகம் தான் அதைத்தான் அந்த காமிக்ஸ் சாமிகிட்ட சொன்னேன் தலைவரே.

      Delete
    4. அப்புறம் காமிக்ஸ் மீட் பத்தி சொல்லறதை நிறுத்தி நீங்களும் விமர்சனத்தை ஆரம்பிச்சுடீங்களே தலைவரே சந்திப்பை பற்றி போட்டு தாக்குங்கள் plz

      Delete
  59. மதியம் வேலை வந்து விட்டதால் தொடர முடிய வில்லை
    இப்போது தொடர்கிறேன்

    கேப்ஷன் போட்டியில் ஜெயித்த சரவணன் சகோதரர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்
    கேப்ஷன் போட்டிக்காக காமெடி வெடிகளை போடுபவர் என்னிடம் வந்து பேசியது ரொம்ப பூரிப்பாக இருந்தது, Happy சகோதரரே :)

    Shallum n பிரெண்ட்ஸும் வந்து பேசினார், ஓரிரு வார்த்தைகளினாலும் மகிழ்ச்சியை தந்தது :)
    thanks brother :)

    ReplyDelete
  60. சகோதரர் Parani from Bangalore தங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி
    Feel warm whenever Talking to U

    என் தோழியை தோர்கல் பக்கமும் இழுத்து விட்டேன்
    தோர்களுக்கு கூடுதல் சப்போர்ட் கிடைத்து விட்டது :)

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் நிறைய கிளிக்-கல் சலிக்காமல் செய்தீர்கள்....so energetic brother :)

      Delete
  61. என் வாழ்க்கையில் சில சந்தோஷ நாட்களை தவறவிட்டு இருக்கிறேன் (மகனின் பிறந்த நாள், திருமண நாள்)இந்த பதிவை படித்து, படம் பார்த்த பின் அப்படி ஒரு தவிப்பு.

    ReplyDelete
  62. நண்பர்கள் அனைவருக்கும் இரவு வணக்கங்கள்..!

    விழாவிற்கு வந்த அனைத்து நண்பர்களும் கொண்டாடத்தை முடித்துக்கொண்டு நலமாக வீடுசேர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.பதிவை படித்துவிட்டு வருகிறேன்..~!

    ReplyDelete
    Replies
    1. ஒரு அவசர தேவை மாயாவி சார் வீடியோ வை பதிவித்து இங்கே கிளிக் ....?

      Delete
    2. முதல்ல 'க்ளிக்' காவாலி

      Delete
    3. வரலாற்று சிறப்பு மிக்க இந்த குட்டி காமிக்ஸ் வாசகநண்பர்கள் மாநாட்டில் மொத்தம் 950 போட்டோகள்+ 3மணி நேர வீடியோக்கள்..! மொத்தம் பத்து GB டேட்டாபேஸ்..நண்பர் ஒருவர் கேட்க அதை தந்ததில் ஒரு சின்ன தவறு நிகழ்ந்துவிட்டது, அவர் copy செய்யாமல் cut பண்ணி மொத்தத்தையும் தன் போனுக்கு மாற்றிக்கொண்டு 400 கிலோமீட்டர்கள்தாண்டிவிட்டார். அந்த டேட்டா தன் போனிலும் இல்லை என்பது..அவுக்..அவுக்...நான் டேட்டா ரெக்கவரி சாப்டுவேர் மூலமாக எடுக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும்..ப்ளிஸ்...

      Delete
    4. இதையெல்லாம் ஏத்துக்க முடியாதப்பா. தப்பு செஞ்சதுக்கு தண்டனையா 'க்ளிக்' லாஞ்ச் ஆவாலி

      Delete
  63. Tax willer thani ithalaga velida vendugren combovil the hi illatha kathaikalai vangavendi ullathu sir tharpothu nan tax Margo Martin mature vangugiren budget egiruvathal.sorry.

    ReplyDelete
  64. சகோதரர் மாயாவி சிவா பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும், சில நேரங்களில் மனதில் பட்டத்தை சிடுசிடுவென்று பேசி விடுவார், கொஞ்சம் வருத்தமாக இருக்கும்
    ஆனால் பாராட்டு என்று வந்து விட்டால் ரொம்பவே சிறப்பாக பாராட்டி விடுவார்

    வாசலில் இருந்து அனைவருக்கும் தன் தொப்பியுடன் காணப்பட்டார் (நான் தங்களை பார்த்தது தான் இடத்தை கண்டு பிடித்தேன் )
    தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி சகோதரரே
    Videos வளைத்து வளைத்து எடுத்தார்
    Upload செய்த உடன் சொல்லவும் சகோதரரே :)

    சென்னை புக் Fair videos தாங்கள் upload செய்து போட்டது ஈரோட்டுக்கு வர கொஞ்சம் தூண்டுகோலாக இருந்தது
    நன்றி சகோதரரே

    அப்பிடியே கொஞ்சம் என்னை மன்னித்து விடுங்கள்
    தங்களிடம் முதலில் இரண்டு நாளும் வருவேன் என்று சொல்லி இருந்தேன்
    ஆனால் வீட்டில் ஒரு நாளைக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது....ஆகையால் தான்

    ReplyDelete
  65. காமிக்ஸ் வந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் என் நன்றிகள்
    நானும் எனது தோழியும் பேசும் பொது உற்சாகத்தை தந்தீர்கள்
    அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி

    ஒரு சகோதரர் Spider வேண்டும் என்று கேட்டதும் Spider எவ்வளவு பெரிய ஆள் என்று தெரிந்தது

    நிறைய பேரிடம் பேச முடிய வில்லை
    தவறாக என்ன வேண்டாம்
    அதிகம் பழக்கம் இல்லதாதல் பேச எனக்கு வர வில்லை
    கூட்டத்தில் பேச கூச்சம் இல்லை , ஆனால் நேரில் புதிதாக பேச கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் கூச்சம், கொஞ்சம் பயம்
    அடுத்த மீட்டில் காமிக்ஸ் சகோதரர்கள் நிறைய பேரை சந்திக்க ஆவலாக உள்ளேன் :)

    ReplyDelete
    Replies
    1. சாண்டில்யன் கதையை படித்திருக்கிறீர்களா.
      உங்கள் பெயரை காணும் பொழுதெல்லாம் அவர் ஞாபகம் தான். இந்த வலைப்பக்கத்தில் கம்பீரமான பெயர் தான். ஆனால் ஓர் காலம் முன்பு என்னை கிண்டல் செய்தது, உறுத்தலாய் இருக்கிறது. அதை நான் கடந்து நான் வருவேன் என்று முழுமையாய் நம்புகிறேன்.

      Delete
    2. சகோதரி..!
      ஸ்பைடர் பெரிய ஆள்தான்.ஸ்பைடரை சிலாகித்த,கலரில் கேட்ட நண்பர் ஸ்பைடர் ஸ்ரீதரைப்போலவே நானும் என் சகோதரன் கரூர் குணாவும் தீவிர ஸ்பைடர் ரசிகர்கள்தான்.இன்று டெக்ஸ்,ப்ளூ பெர்ரி,லார்கோ, பௌன்சர், டைலன், மார்ட்டின்,கிராபிக் நாவல்கள் என்று நம் வாசிப்பின் களம் வெகுவாக முன்னேறி இருக்கிறதென்றாலும்..., காமிக்ஸ் வாசிப்புக்கான முதல் துவக்கப்புள்ளி தானைத்தலைவர் ஸ்பைடர்தான். குற்றசக்ரவர்த்தியின் புகழ் ஓங்குக....!!!

      Delete
    3. ...பெயர் உங்களது தான்.ஆனால்...

      Delete
    4. ///ஒரு சகோதரர் Spider வேண்டும் என்று கேட்டதும் Spider எவ்வளவு பெரிய ஆள் என்று தெரிந்தது.///

      ஸ்பைடரை கலரில் கேட்டபோது, எனக்கும் அப்படித்தான் தோன்றியது சகோ! ..:-)

      Delete
    5. ஆனா ஆா்ச்சிய கேக்க ஆளில்லாமல் போச்சே...
      ஒரு காலத்துல கனவுல கூட வந்து தொல்லை பண்ணுவான் சட்டி தலையன் ஹம்ம்ம்...

      Delete
    6. ஞாயிறன்று நான் கேட்டேன் ஆசிரியரிடமிருந்து கிண்டலாக ஒரு சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது

      Delete
    7. ஜே.பா.சரவணகுமார் ஜீ ஸ்பைடர் ரசிகர்களில் என் பெயரை விட்டு விட்டீர்களே ஆசிரியரை மறுபதிப்பில் குற்றச்சக்கரவர்த்தி கேட்டிருக்கிறேன் அடுத்த ரவுண்டில் பார்க்கலாம் என்று சொன்னார்

      Delete
  66. மாடஸ்டியின் அதி தீவிர ரசிகரான சகோதரர் வருவார் என்று எதிர் பார்த்தேன்
    தங்களையும் மற்றும் மாடஸ்டியின் அதி தீவிர ரசிகரான சென்னை மடிப்பாக்கம் சகோதரரையும் காண முடியாததால் வருத்தமே

    ReplyDelete
  67. மாயாவி அண்ணே எங்கே க்ளிக்???

    ReplyDelete
  68. ஈரோடு புத்தகவிழாவிற்கு சென்ற அனைத்து தோழர்கள், சகோதரிகள் வாழ்வில் மறக்க இயலா நினைவுகளை சுமந்து கொண்டு பத்திரமாக தமது இல்லம் சென்றிருப்பார்கள் என நம்புகிறேன். இந்த இனிய நிகழ்வுகள் உங்கள் மனதைவிட்டு அவ்வளவு எளிதில் அகலாது.தவறவிட்ட என்னைப் போன்றோர்கள் தோழர்களின் "க்ளிக்" குகளுக்காகவும், வீடியோக்களுக்காகவும் காத்திருப்போம். அதற்கென முன்கூட்டிய நன்றிகள்.

    ReplyDelete
  69. அரங்கில் இருந்த 100+நபர்கள் மட்டுமே அடைந்த ஆனந்ததத்தை இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொரு வாசகர் நெஞ்சிலும் கொண்டு வந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  70. என் வாழ்க்கையில் சில சந்தோஷ நாட்களை தவறவிட்டு இருக்கிறேன் (மகனின் பிறந்த நாள், திருமண நாள்)இந்த பதிவை படித்து, படம் பார்த்த பின் அப்படி ஒரு தவிப்பு.

    ReplyDelete
  71. இரு நாட்களாக காமிக்ஸ் கடலில் மூழ்கி,புரண்டு எழுந்து வந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  72. இரு தினங்களின் நண்பர்களின் சந்திப்பு தேனும்,தினை மாவும் கலந்து உண்ட உண்ர்வை ஏற்படுத்தியது.
    அறிமுகமான காமிக்ஸ் அறிமுகமில்லா நல் உள்ளங்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ///நண்பர்களின் சந்திப்பு தேனும்,தினை மாவும் கலந்து உண்ட உண்ர்வை ஏற்படுத்தியது..///

      அடா! அடா! ரவி!
      என்ன ஒரு உவமானம்.! பிச்சிட்டிங்க போங்க.!!

      கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்னு சொல்லுவாங்களே,

      அது உண்மைதான் போல. :-)

      Delete
    2. நன்றி கண்ணன்,ஏதோ உங்க அளவுக்கு இல்லாவிடினும் அப்பப்ப கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டியதுதான்.

      Delete
    3. அறிவரசு (எ) ரவி@ இம்முறை , நண்பர் ராஜசேகரன்திகாவுடன் இணந்து , நண்பர்களுக்கு கமெர்கெட் கொடுத்து அசத்தி விட்டீர்களே...சூப்பர்...
      நண்பர் ராஜசேகரன் வேதிகாவின் காராசேவும் ,உங்களின் கமெர்கட்டும் செம்ம காம்பினேசன் , பிரமாதம்..உங்கள் இருவருக்கும் ஒட்டுமொத்த காமிக்ஸ் நண்பர்களும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்...

      ////நண்பர்களின் சந்திப்பு தேனும்,தினை மாவும் கலந்து உண்ட உண்ர்வை ஏற்படுத்தியது..///-- அடுத்த ஈரோடு சந்திப்புக்கு இதையே எங்களுக்கும் வழங்கி விடுங்களேன்...

      Delete
    4. Arivarasu @ Rav
      கமெர்கெட்டுக்கு Super சகோதரரே :)
      தங்களை தங்கள் Trademark Camera-உடன் சந்தித்ததில் மகிழ்ச்சி

      Delete
  73. ஈரோட்டில் இத்தாலி :-

    முடிச்சிட்டேன்.!

    ஒரு மணி நேரத்துலயே முடிச்சிட்டேன்.!

    அட்டைப்படத்தையும், வில்லரின் கெத்தான ஸ்டில்லையும், புக்கை திருப்பி திருப்பி பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணத்தில் டாலடிக்கும் "ஈரோட்டில் இத்தாலி " எழுத்துக்களையும். . . .

    ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான்., ஒரே ஒரூ மணிநேரத்தில் பாத்து முடிச்சிட்டேன்.!

    இந்த வருடத்தின் டாப் அட்டை ஈரோட்டில் இத்தாலி என்பதை அண்ணன் மாயாவி சிவா அவர்களின் தொப்பி மேல் சத்தியம் செய்து சொல்வேன்.!!

    ReplyDelete
  74. காமிக்ஸ் திருவிழாவிற்கு வரமுடியாதது வருத்தமளித்தாலும், வெற்றி கரமாக நடந்தது மகிழ்ச்சி. லார்கோ இதழ் ஆசிரியர் எப்போதும் நம் கோரி்க்கைகளை தமக்குள் வைத்திருந்து வேளை வரும்போது நிறைவேற்றுவார் என்பதற்கு சான்று. நண்பர்கள் யாராவது உரையாடலின் சுருக்கத்தை இங்கே தாருங்களேன். ஈரோட்டில் இத்தாலி இதழின் தரம் உலகத்தரம். மார்ட்டின் இதழின் dust jacket க்கு ஒரு சல்யூட் ஆசிரியருக்கு

    ReplyDelete
  75. எடிட்டருக்கு,
    அனைவரும் தாய் வீட்டுக்கு வரும் வண்ணமாக சிவகாசியில் நவம்பரில்
    ஒரு நாள் Get to gather நடத்தலாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல நிகழ்ச்சிகளை நடத்தலாம். என்ன சரிதானா தோழர்களே

    ReplyDelete
  76. விழாவின் பாதியில் உள்நுழைந்தேன்.அதன் பின் புத்தகங்களை நமது ஸ்டாலில் பெற்றுக்கொண்டு ஈரோடு பஸ்Staண்டு எதிர்புறம் உள்ள ஹோட்டலில் உணவு உண்டு விட்டு நான் கிளம்பி விட்டேன். அடுத்தமுறை மாலை வரை நிகழ்ச்சியை வடிவமைத்தால் மிகவும்
    நலமாய் இருக்கும்

    ReplyDelete
  77. காமிக்ஸ் எனும் புள்ளியில் பல்வேறு குணநலன்கள்,இயல்புகளை கொண்ட பலரும் இணைவது உண்மையில் வியப்பான ஒன்று தான்.இது வரமாக இருக்கும் வரை மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
  78. காமிக்ஸ் திருவிழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பத்திரமாக ஊர் திரும்பி விட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  79. சுட்டி புயல் பென்னி - பிரமாதம்!

    பார்சலை பிரித்தததும் கையில் எடுத்ததது ஈரோட்டில் இத்தாலி தான்! (இப்பொழுது வரை அட்டைப்படம்,உள் படம் என படம் மட்டுமே பார்த்திருக்கிறேன் - என்பது வேறு விஷயம்!)

    எப்போதும் முதலில் படிப்பது கிளாஸ்சிக்ஸ் தான். அனால் நேற்று உடனே படிக்கச் தோன்றியது "பென்னி" தான்!(ஏனென்று தெரிய வில்லை ).
    சூப்பர் ஹீரோ பவர் கூட ஒரு வித சுமை தான் என்ற படியே அறிமுகம் ஆன பென்னி தொடர்ந்த பக்கங்களில் என் மனதின் உள்ளும் "சொய்ங்" என்று குதித்தார்!

    அருமையான அறிமுகம் - சுட்டி புயல் "பென்னி".

    ReplyDelete
  80. ஒவ்வொரு முக்கிய காரியங்களும் பிள்ளையார் வணக்கத்துடனேயே தொடங்கப்படுமாமே !?

    (எங்க சேந்தம்பட்டி குழுவிலோ இவரை வைத்துதான் தொடங்குவோம்)

    ஈரோட்டுத் திருவிழாவின் கொண்டாட்டத் தருணங்களின் ஜாலிப் பகிர்வுகளின் பிள்ளையார் சுழியைக்காண. . .இங்கே ஹி.! ஹி.ஹி.!

    ReplyDelete
    Replies
    1. செனா அனா உள்ளிட்ட சமூகத்திற்கு,
      Open ஆகுதான்னு சொல்லுங்க!

      Delete
    2. ஹிஹிஹி!!

      வேதாளரே, எப்பவுமே முதல்ல உங்களைத்தானே 'வெச்சி செய்வோம். ' .

      ஸாரி ஸாரி,

      உங்களை முதல்ல வெச்சித்தானே எல்லாமும் செய்வோம்னு சொல்ல வந்தேன். :-)

      Delete
  81. சனிக்கிழமை மீட்டிங்ல சில எதிர்பாராத ஆச்சர்ய நிகழ்வுகள்....

         *சில நாட்களுக்கு முன் ஆசிரியர் ஒரு சர்ப்ரைஸ் வி.ஐ.பி. நம் விழாவிற்கு வர இருக்கிறார் என அறிவித்து இருந்தார், நண்பர்களும் பலவேறு கணிப்புகளை சொல்லி இருந்தனர். யார் அவர்?? என நானும் யோசித்து கொண்டே சென்றேன். நண்பர்களை வரவேற்ற வண்ணம் மீட்டிங் ஹால் உள்ளே சென்று மேடையருகே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த தம்பதியினர் இருவரை பார்த்த உடன் தான் என் மூளையில் மின்னல் வெட்டியது. அந்த சஸ்பென்ஸ் வி.ஐ.பி. நம் ஆசிரியர் அவர்களின் தாயார் என அந்த கணம் தெரிந்தது. ஆசிரியரின் மேல் நான் வைத்து இருக்கும் மரியாதை இன்னும் ஒருபடி கூடிவிட்டது நண்பர்களே....

    ---- இந்த உலகத்தை  நம் ஒவ்வொருவருக்கும்  அறிமுகப்படுத்தி அதில் ஜீவித்திருக்கும் வாய்ப்பை அளித்த அவரவர் தாயாரை விடவும் இந்த உலகத்தில் பெரிய வி.ஐ.பி. உண்டா நண்பர்களே??????.....

         *நண்பர்களால் நிரம்பி வழிந்தும், நண்பர்கள் உற்சாகத்துடனும் ஆசிரியரிடம் உரிமையுடனும், தோழமையுடனும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டும்  மீட்டிங் நடந்து கொண்டு இருந்ததையும், ஆசிரியரின் தாயார் திகைப்புடன் கவனித்து கொண்டே இருந்தார்கள்....தன் மகன்  காமிக்ஸ் புத்தகங்கள் வெளியிட்டு வருவதும் , அவ்வப்போது மீட்டிங் என போவதும் அவருக்கு வழக்கமாக இருந்தாலும் , மீட்டிங் என்றவுடன் ஏதோ ஒரு கம்பெனி மீட்டிங் போல பேசுவாங்க என பார்த்திருந்த அவருக்கு........
    ------ நண்பர்கள் ஆரவாரத்துடன் இங்கே அங்கே வளைய வந்து ஒவ்வொன்றும் செய்வதும், நண்பர்களுக்குள் நிகழ்ந்த ஆரப்பாட்ட உரையாடல்கள், உற்சாக ஆரவாரங்கள், ஆசிரியருடன் ஒவ்வொரு காமிக்ஸ் ஹூரோ பற்றியும் தத்தம் பழைய நினைவுகளை ஆர்வம் பொங்க விவரித்ததையும் , புத்தகங்கள் வாங்கிய நினைவுகளை பகிர்ந்த்ததையும்,  பார்த்து முதலில் திகைப்பு கூடிக்கொண்டே போனது.

            * இந்த காமிக்ஸ் என்னும் சுவையை நமக்கு தந்ததுடன் மற்றவர்களுக்கு கிடைக்காத பல்வேறு வகையான காமிக்ஸ் ஹீரோக்களை அளித்ததற்கும் , வாழ்வை அர்த்தம் ஆக்கியதற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆசிரியருக்கு நண்பர்கள் வாரியிறைத்தது கண்ட அவரது திகைப்பு , பெருமிதமாக மாறியது. ஆசிரியருக்கு சிறுவயதில் சாப்பாடு ஊட்டும்போது  அந்த ஒரே மான்டரேக் கதையை  பல நூறு முறைகள் சொல்லி அவரை வளர்த்த நிகழ்வுகளை , சகோ கடல்யாழிடம் பெருமிதம் பொங்க தாயார் அவர்கள் விவரித்து கொண்டு இருந்ததை, நண்பர்களை வரவேற்றுக்கொண்டே அவ்வப்போது நானும் கவனித்து கொண்டே வந்தேன். விழா முடிந்து ஆசிரியரின் தாயாருடன் பேசும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ஆசரியர் மேல் நாம் வைத்திருக்கும் அன்புகலந்த மரியாதை கண்டு திக்குமுக்காடி போய்விட்டதாக தெரிவித்தார்கள்.
    தன் மகனை பெற்றதற்காக "ஈன்ற பொழுதில் அடையாத ஆனந்தத்தை இப்போது அடைந்து விட்டதாகவும் , அந்த குழந்தை விஜயன் மேல் அவர் காட்டிய அன்புக்கு , இப்போது ஆசிரியர்மேல் நாம் அனைவரும் பொழியும் அன்பு மழை சற்றும் சளைத்ததல்ல என நா தழுதழுக்க தெரிவித்தார்கள். இந்த நம்முடைய அன்பும் அரவணைப்பும் ஆசிரியர் மேல் மென்மேலும் தொடரவேணும் என கண்ணில் நீர் மழ்க தாயார் அவர்கள் கேட்டு கொண்டார்கள். அவரின் கரத்தை பற்றிக்கொண்டு இதை இன்னும் சிறப்பாக செய்வோம் அம்மா என நான் சொன்னபோது , எதற்கும் அசறா இந்த இரும்புநகர் கழுகானின் இரும்பு இதயமும் உருகி , கண்களில் கண்ணீராக பெருக்கெடுத்தது என நான் சொல்லவும் வேண்டுமோ நண்பர்களே......

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் டெக்ஸ் ஆசிரியரின் அன்னையைப் பற்றி நான் என்ன எழுத நினைத்தேனோ அதை அருமையாக எழுதி அசத்தி விட்டீர்கள்

      Delete
  82. Dear Friends, I will upload the video tonight and send the links.

    ReplyDelete
  83. சுட்டி பையன் பென்னி
    Mark - 8.2
    இதன் தொடர் இதழ்களும் இந்த விறுவிறுப்பு கொடுக்குமா?

    ReplyDelete
  84. குற்றம் பார்க்கின்
    Mark 9.5
    இந்த கதை இது வரை வந்த அனைத்து டெக்ஸ் கதைகளுக்கும் இணையானது. ஒரே குறைபாடு டெக்ஸ்-ன் முகம் மாறுபட்டு இருந்தது,ஆனால் ஓவியங்கள் அற்புதம் தான்.
    1.க்ளிண்ட்-வசம் டெக்ஸ் துப்பாக்கி தருவது
    2.க்ளிண்டை காப்பாற்றுவதற்காய் கௌபாய்ஸ் கும்பலை புரட்டி எடுப்பது
    3.கௌபாய் முதுகில் சுடாமல் டெக்ஸ் கண்ணியமாய் இருப்பது
    4.முட்டாள் கௌபாய்ஸ்-I கொல்ல டெக்ஸ் யோசிப்பது
    5.லான்ஸ்-யிடம் க்ளிண்ட்-உடன் அவருடைய மருமகளோடு தங்க அனுமதிப்பது பற்றி டெக்ஸ் பேசுவது
    இவை அனைத்தும் டெக்ஸ் பற்றி பேசுபவை

    ReplyDelete

  85. குற்றம் பார்க்கின்
    Mark 9.5

    ReplyDelete