Powered By Blogger

Sunday, June 26, 2016

ஒரு "குட்டி" (!!) மாற்றம்..!

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் விதியின் humour sense-ஐக் கண்டு வாயடைத்துப் போகத் தான் வேண்டி வருகிறது! 2015-ன் சந்தாவினில் தென்பட்ட சில ‘மொக்கைகளுக்கு‘ மருந்தாய் சிக் பில்லின் – ”நிழல் 1... நிஜம் 2..!” தயாராகும் அதே தருணத்தில்- நடப்பாண்டின் ஒரு ‘ம.மொ.‘ கண்ணில் கச்சிதமாயத் தட்டுப்படுவதை பின்னே எவ்விதம் விவரிப்பதென்றே புரியவில்லை! 

அடுத்த சில நாட்களில் இன்னொரு பயணம் காத்திருக்கக்கூடும் என்பதால் ஜுலையின் இதழ்களைக் காலில் சுடுநீர் ஊற்றாத குறையாய் கவனித்து வருவதைக் கடந்த (குட்டிப்) பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும்! இம்மாதத்து highlight ஆன லயன் 32-வது ஆண்டுமலர் தான் எனது பிரதான கவனத்தை ஈர்த்து வந்தது! சரி- 3 பெல்ஜிய நாயகர்கள்; 1986 முதலாய் நம்மிடையே வலம் வரும் பரிச்சயமான முகங்கள் தானே? ...மட மடவென்று எடிட்டிங்கை முடித்து விடலாமென்று இந்த வாரத் துவக்கத்தில் பிஸியானேன்! எப்போதுமே சிண்டைப் பிய்க்கச் செய்பவர் நமது ரிப்போர்ட்டர் சார் தான் என்பதால் நான் முதலில் தலை நுழைத்தது ஜானியின் “நேற்றும்... இன்றும்” சாகஸத்தினுள்! இந்தக் கதையை 2015-ல் தேர்வு செய்த போதே இதன் one liner ஐத் தெரிந்து கொண்டிருந்தேன்! வழக்கம் போலவே ஒரு சிறு கிராமத்தில் நடைபெறும் மர்மங்களை- கடைசிப் பக்கம் வரை தாண்டவமாட அனுமதித்து விட்டு இறுதிப் பக்கத்தில் போட்டுத் தாக்கும் அதே பாணி; சுவாரஸ்யமான plot என்பதோடு மட்டுமன்றி - இந்த சாகஸத்தில் ஜானியின் தந்தை தனது இளமைப் பருவத்தில் துப்பறிய முயற்சிக்கும் சிக்கலொன்றை ஒரு தலைமுறைக்குப் பின்பாக ஜானி வந்து தீர்த்து வைப்பதே highlight! So கதையின் ஆரம்பம் 1938-ல்! அச்சாய் ஜானியைப் போலவே தோற்றம் தரும் அவரது டாடி கதையைத் துவக்கி வைத்து விட்டு சற்றைக்கெல்லாம் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டே ஊர் திரும்புவதை ரசிக்க முடிந்தது! And எப்போதும் போலவே இவர் குற்றவாளியா? அவர் குற்றவாளியா? என்ற அலப்பரையும் இருந்த போதிலும், சுவராஸ்யமாய் கதை தடதடத்ததால் நான் எதிர்பார்த்ததை விடவும் விரைவாகவே இதன் பணிகளை நிறைவு செய்திட முடிந்தது! ‘ஹை... ஜாலி... கஷ்டமான பரீட்சையை ஊதித் தள்ளியாச்சே!‘ என்ற குஷியில் நமது "கடல்களின் காதலர்" பக்கமாய் கவனத்தைக் கொண்டு சென்றேன்! 

கேப்டன் பிரின்ஸ் தொடரினில் நாம் வெளியிட்டிரா இரு ஆல்பம்கள் உள்ளன! அவற்றில் ஒன்றுக்கான உரிமை மாத்திரம் ஒரு புது முயற்சியாகத் துவக்கப்பட்டதொரு பதிப்பகத்திடம் உள்ளது! ஆரம்பித்த சூட்டிலேயே அது கடையை மூடி விட்டதால்- அதன் உரிமைகளை trace செய்வது இன்றைக்குப் படு சிக்கல்! எஞ்சியிருக்கும் இன்னொரு ஆல்பமோ- கேப்டன் பிரின்ஸின் சிறுகதைகளின் தொகுப்புகள்! ஆரம்பத்தில் இன்டர்போலில் இன்ஸ்பெக்டராகப் பணி புரியும் பிரின்ஸின் 4 & 6 & 8 பக்கக் கதைகள்; பொடியன் ஜின்னை சுவீகாரம் செய்து செய்து கொண்ட பின்னணி; ‘கழுகு‘ அவரது உடைமையான நிகழ்வுகள் என்று செல்பவை இந்தத் தொகுப்பின் கதைகள்! இவற்றில் சிலவற்றை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த போதிலும்- அழகாய், வண்ணத்தில், பெரிய சைஸில் பார்ப்பது மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்பதால்- அவற்றையும் இணைத்துள்ளோம்! ரொம்பவே சுமாராய் இருந்த ஒரு சில மினி சாகஸங்களுக்கு மட்டும் கல்தா தந்து விட்டு, பாக்கிக் கதைகளைத் திட்டமிடலில் சேர்த்துள்ளோம்! (ஒரிஜினல் பிரெஞ்ச் ஆல்பத்தில் உள்ள இதை- இதையெல்லாம் விழுங்கி விட்டீர்களா? என்ற கேள்வியை எங்காவது எழுப்பிடத் தயாராகிடும் நண்பர்களின் பொருட்டு; ஓரம் கட்டியுள்ள சிறுகதைகள் சகலமுமே அக்மார்க் உப்மாக்கள்! So அவற்றைப் போடலியா? என்று பொரிந்து தள்ளுவது அரையணா பிரயோஜனம் நல்கிடாது! கதைத் தொகுப்பின் முழுமையையும் கொள்முதல் செய்திருந்தாலும்- ஓரம்கட்டப்பட்ட அந்தப் பக்கங்கள் எப்போதாவது, எங்காவது filler pages-களுக்குப் பயன்பட்டால் படட்டும்; இல்லையேல் மூலை சேர்வதில் தப்பில்லை‘ என்று தீர்மானித்தேன்).

So- சிற்சிறுக் கதைகள் and அவையும் பிரின்ஸின் சுலப பாணிகளில் என்பதால் பெருசாய் மூச்சிரைக்காமல் வேலைகளை முடிக்க 2 நாட்களுக்கு முன்பாய் சாத்தியமானது! ‘ஆஹா... 2 down.... 1 to go!’ என்ற குஷியில் அடுத்தவரை கச்சேரி செய்ய மேடைக்கு அழைக்கலாமென்று ஆயத்தமானேன்! And நமது சாகஸ வீரர் ரோஜரும் அமர்க்களமாய் மேடையேறினார்! இதுவும் நான் எழுதியிரா ஆல்பம் என்பதால்; மேலோட்டமாய் சித்திரங்களைப் பார்த்தே சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்! 2016-ன் டைம்-டேபிளில் ஒரிஜினலாய் அறிவிக்கப்பட்டிருந்த ரோஜர் சாகஸமோ- “எழுந்து வந்த மம்மி”. இன்டர்நெட் ஆராய்ச்சியினில் "இந்தக் கதை நல்ல ஸ்பீடு" என்ற வாக்கில் விமர்சனங்கள் இருந்தபடியால் ‘டிக்‘ அடித்திருந்தேன்! ஆனால் பின்நாட்களில் நமது பெல்ஜிய ஆலோசகரைக் கதைச்சுருக்கம் அனுப்பக் கோரியிருந்த போது பேஸ்தடித்துப் போனேன்! ஜாலியாய் அருங்காட்சியகத்திலிருந்து வாக்கிங் புறப்படும் மம்மி, எந்தவொரு பெரிய லாஜிக்குமே இல்லாது சுற்றி வந்து விட்டு அடங்கி விடுவது போலாகக் கதை உள்ளதென்று படித்துப் பார்த்த போது- அவசரம் அவசரமாய் மாற்றுக் கதை தேடினேன்! சரி... அமானுஷ்யங்கள்; ஆட்டுக் குட்டிகள் என்று போனால் தானே காதில் 'புய்ப்பம்' சூட நேரிடுகிறது... ‘சிவனே‘ என்று தரையில் சாகஸம் செய்யும் இரண்டு கால் வில்லனோடு மோதும் ரகமாய்க் கதையைத் தேர்வு செய்வோமே என்ற ஆர்வத்தில், படைப்பாளிகளிடமே அபிப்பிராயம் கேட்டேன்! அவர்களது suggestion தான் “நேற்றைய நகரம்”! சரி... படைப்பாளிகளே சொல்லி விட்டார்களே; இதைத் திரும்பவும் அலசுவானேன்? என்ற சோம்பலில் இந்தக் கதைக்கும் ஆர்டர் போட்டு விட்டோம்! ஏப்ரல் இறுதியில் கதையும் வந்திட- ‘மட மட‘வென்று மொழிபெயர்ப்புகள் நடந்திருந்தன!

எனக்கு எப்போதுமே ஒரு சிறு நெருடல் நமது மொழிபெயர்ப்பு டீமிடம் உண்டு! அந்தந்தக் கதைகள் பற்றிய feedback எதுவும் எனக்கு வழங்குவதில்லை என்ற வருத்தமே அது! 'ஓ.கே.யோ- சுமாரோ'- எழுதியனுப்பி விடுவார்கள்! அந்த ரகத்தில் இப்போதும் பணிகள் நிறைவு பெற்றிருக்க- நானும் ஒரு சுபயோக, சுப தினத்தில் கதைக்குள் மூழ்கினேன்! அட்டகாசமான சித்திரங்கள்; வழக்கம் போலவே கானகம்... தேடல்... மாயன் கலாச்சாரம் என்று கதை நகர, நானும் ஈடு கொடுத்துக் கொண்டே சென்றேன்! ஆனால் பாதிக் கதை வரையும் எட்டிப் பிடித்தான பின்பும் கதையில் உப்போ- சப்போ இருப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை! அட... இங்கே கதை take off ஆகி விடும் ; அடுத்த கட்டத்தில் விறுவிறுப்புக் கூடி விடும் என்று நான் நம்பிக்கையோடு தொடர, நயம் மஸ்கோத் அல்வாவை வாய் நிறையத் திணித்துக் கொண்டது போலவே உணர முடிந்தது! 30 பக்கங்களைத் தொட்டிருந்த தருணத்தில் என்னால் பாண்டியராஜனைப் போல விழிப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்ய முடியவில்லை! கதையை நான் எப்போதுமே பணியாற்றும் வேகத்தில் படிப்பது தான் வழக்கம் ; ‘சடக்‘கென்று பக்கங்களைப் புரட்டி க்ளைமேக்ஸ் என்னவென்று எட்டிப் பார்ப்பதெல்லாம் கிடையாது! ஆனால் இம்முறையோ நேராகக் கடைசி 4 பக்கங்களைப் புரட்டினால்- கதை பரம சாதுவாக நிறைவு பெறுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது! ஒரு லட்சணமான தென்னமெரிக்கப் பெண்ணை ரோஜர் லைட்டாக ‘சைட்‘ அடிப்பதை வேண்டுமானால் இந்த சாகஸத்தின் (???) highlight என்று சொல்லிட முடியும் போலத் தோன்றியது!

ஒரு நாள் முழுக்க விளக்கெண்ணெய் குடித்த மாதிரியே சுற்றி வந்தேன்- ஏதேனும் பல்டியடித்து இந்தக் கதையை விறுவிறுப்பாக்க முடியுமாவென்று யோசித்தபடியே..! அப்புறம் இன்னொரு அரை நாளைச் செலவிட்டுப் பார்த்தேன்- தீவிர ரோஜர் ரசிகர்கள் இதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதா ? என்ற கோணத்தில் யோசிக்க ! எப்படிப் பார்த்தாலும் பறக்கும் துடைப்பம்களும்; காற்றைக் கிழித்து வரும் கலர் கலரான காலணிகளுமே மனக்கண்ணில் தோன்றி மறைந்தன! இதற்கும் மேல் யோசித்தால் 32-வது ஆண்டுமலர் தப்பான காரணங்களுக்காக நினைவில் நிற்குமொரு இதழாகி விடக் கூடுமென்ற கிலி தொற்றிக் கொள்ள- அவசரம் அவசரடாய் ஒரு மாற்றுக் கதையை தலைக்குள் தட தடவென்று பரிசீலிக்கத் தொடங்கினேன்! இதைப் போடலாமா?- அதைப் போடலாமா? என்ற சிந்தனைகள் நாலா திசைகளிலும் இறக்கை கட்ட- நான் ஊருக்குப் புறப்படும் தருணத்தில் இன்னொரு முழுக் கதையையும் எழுதி முடிப்பது இயலாக் காரியம் என்பது புரிந்தது தெளிவாக ! அப்போதுதான் என் மனக்கண்ணில் அந்த  “ஆபத்பாந்தவி” ஆஜரானார்! 

ஈரோட்டுப் புத்தக விழாவின் போது ஒரு "குட்டி" surprise ஆக வெளியிடலாமே என்ற அவாவில் XIII மர்மத்தின் தொடரின் டாப் கதைகளுள் ஒன்றான “பெட்டி பார்னோவ்ஸ்கி” யின் டிஜிட்டல் பைல்களை ஆர்டர் செய்து வந்திருந்தேன்! அதற்கான மொழிபெயர்ப்பு சென்றாண்டே தயார் என்பதால்- அடித்துப் பிடித்து, “பைங்கிளி பெட்டியை” நமது ஆண்டுமலரின் ஒரு அங்கமாக்கிட தீர்மானித்தேன் சனிக்கிழமை காலையினில் ! துவங்கியுள்ள டைப்செட்டிங் பணிகளை,செவ்வாய்க் காலைக்குள்  நிறைவுறச் செய்திடலாமென்ற நம்பிக்கை எனக்குள்ளது! So- "2 ஜாம்பவான்களும்; ஒரு சின்னப் பிள்ளையும்" என்ற combination தான் தொடரவிருக்கும் இதழுக்கு! கிராபிக் நாவல் ரகத்தில் இல்லாது சரளமாய் பயணம் செய்யும் XIII Mystery கதையிது என்பதால் நண்பர்களுக்கு இதனில் பெரியதொரு முகம் சுளிப்புக்கான முகாந்திரமிராது என்றே நம்புகிறேன்! இருந்தாலும்- ‘எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொன்னேனா?‘ என்ற வினவல்களும் எழுந்திடாது போகாது என்பதை உணா்ந்தே உள்ளேன்! ஆனால் எனக்கே படிக்க இயலாததொரு கதையை உங்கள் மீது சுமத்துவதை விட- மாற்றத்தைச் செய்து விட்டு அதன் பொருட்டு சாத்துக்கள் வாங்குவதில் தப்பில்லை என்று தோன்றியது! And நமக்குத் தான் சாத்துக்கள் சாகுபடி செய்வது சாத்துக்குடி ஜுஸ் சாப்பிடுவது போலான விஷயம் எனும் பொழுது- அதிகமாய் யோசிப்பதில் பொழுதைச் செலவிடவில்லை! 

இங்கே தோர்கலின் ஆல்பம் ஒன்றினையோ ; XIII -ன் இறுதிப் பாகத்தையோ ; ஜேசன் ப்ரைஸின் ஒரு கதையையோ இணைக்கும் வாய்ப்பும்; சிந்தனையும் எழத்தான் செய்தது! ஆனால் அவை எல்லாமே  தொடர்களின் பாகங்கள் என்பதால் அவற்றின்  ஒற்றை ஆல்பத்தை இது போன்ற compilation-க்குள் நுழைக்க வேண்டாமே என்று நினைத்தேன்! இதுவோ one-shot; இதனைத் தனியாகப் படித்தாலும் சரி; ஒரு தொகுப்பில் படித்தாலும் சரி- பெரியதொரு வேறுபாடுயிராது என்று மனதுக்குப் பட்டது! So- ‘மாற்றம் நல்லதே!‘ என்ற நண்பர்கள் காந்தக் கண்ணழகியை வரவேற்கத் தயாராகிடலாம்; ‘மாற்றம் பாதகமே‘ அணியினர் துடைப்பங்களைத்  தூசி தட்டிடலாம்!

And இதோ- ஆண்டுமலரின் அட்டைப்பட preview! அச்சுக்குத் தயாராகயிருந்த ராப்பர்களை இறுதி நிமிடத்தில் ‘பிரேக்‘ போட்டு நிறுத்தி- மாற்றங்களைச் செய்து மறுபடியும் தயாராகி வருகிறோம்! எல்லாமே ஒரிஜினல் டிசைன்களே; துளியும் மாற்றங்களின்றி! அழகாய் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது! உங்களுக்கும் அவ்விதமே தோன்றின்- சூப்பர்!

என்னவிதமான திட்டமிடல் இது?‘; ‘அட்டவணையில் மாற்றமெனில் அட்டவணையே ஏன்?‘ என்ற ரக விசாரணைகளை வாஞ்சையாய்ச் செய்திட நண்பர்கள் சிலர் தயாராகிடுவார்களென்பதில் ஐயமில்லை! ஆனால் ஒளிவு மறைவின்றி எனது இக்கட்டை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டேன்! One man editorial என்ற கயிற்றைக் கால்களில் கட்டிக் கொண்டு சாக்கு ரேஸை 48 இதழ்களின் தூரத்துக்கு ஓட முற்படும் போது நேர்ந்திடும் இடர்களும், இடறல்களும் இவை! தவிர்க்க ஆனமட்டிலும் முயற்சிக்கத் தான் செய்கிறேன்- ஆனால் சங்கடங்கள் எதிர்பாரா ரூபங்களில் துளிர் விடுவதைத் தடுக்க சில தருணங்களில் முடிய மாட்டேன்கிறது! Apologies all!

And இதோ- நம்மவர் ஜானியின் கதையிலிருந்து ஒரு பக்கப் preview! வழக்கம் போலான taut த்ரில்லர் இது!
இது பெட்டி பார்னோவ்ஸ்கியின் உட்பக்கச் சித்திரங்கள்..! செம மிரட்டல் என்று சொல்வேன் !! (ஹ்ம்ம்ம்...ஈரோடு சஸ்பென்ஸ் இதழ் போச்சா ?!!)
அப்புறம்- நமது (மறுபதிப்பு) மருந்தின் அட்டைப்படம் இதோ! முற்றிலும் புதிய ஓவியங்கள்; முழுவதுமாய் புது வசனங்கள் என இந்த இதழில் புராதன நெடி துளியுமிராது என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு! சென்றாண்டின் சில கசப்புகளை மறக்கச் செய்ய இந்த மிட்டாய் உதவின்- எங்கள் டீமுக்கே மகிழ்ச்சி! 
Still to do minor corrections....unfinished first look ! 
மீண்டும் சந்திப்போம் guys! எனது பயணம் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகக் கூடுமென்பதால் ஞாயிறு முழுவதும் மாயாவியின் எடிட்டிங்கிலும்; இரவுக் கழுகாரின் எடிட்டிங்கிலும் செலவிட்டாக வேண்டும்! So bye for now!

P.S : கிடைக்கும் தருணத்தில் நமது ஆண்டுமலர்கள் பற்றிய flash back -க்குள் மூழ்கிட வாய்ப்புள்ளதா ? - என்றும் பாருங்களேன் ? "The best Annual yet " என்று வோட்டளிப்பதாயின் உங்களது TOP 3 தேர்வுகள் எவையாக இருந்திடக்கூடும் ? லயன் ஆண்டுமலர்களுள் மாத்திரமே உங்கள் தேர்வுகள் ப்ளீஸ் ? 

332 comments:

 1. Replies
  1. சே.ஜஸ்ட் மிஸ்.அதனாலென்ன.ஈ.வி.தானே

   Delete
 2. வேதாள உலகிலிருந்து வணக்கங்கள், சார்! ஆண்டுமலருக்கு நன்றி!!

  ReplyDelete
 3. மாற்றம் ஏமாற்றமாக இல்லாமல் இனிய மாற்ற மாக இருக்கிறது நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 4. பிரின்ஸ் இல்ல.ரோஜர் லேது. அப்போ அப்போ சி.சி.வயதில் கன்பர்மா?!

  ReplyDelete
 5. Edi, please create an option for prebooking the classic reprints from our LIONCOMICS.in webportal.

  ReplyDelete
 6. அதுக்குள்ள இம்புட்டு பேரா?எப்படியோ பத்துக்குள்ள வந்தா சரி, விடியலில் பார்ப்போம்.

  ReplyDelete
 7. எடிட்டர் சார்,

  "குட்டி" மாற்றத்தில் பெட்டியை கொண்டு வந்ததற்கு, கிட் ஆர்ட்டின் கண்ணன் சார்பாக நன்றிகள்.
  காலையில் அவரும் இங்கு வந்து தனது நன்றியையும் மட்டில்லா மகிழ்ச்சியையும் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். :-))

  ReplyDelete
  Replies
  1. காலையில் இங்கே ஒரு குத்தாட்டம் நிச்சயம்! ;)

   Delete
  2. கூட ஆடப் போறது யாரு?

   Delete
  3. தோ வந்திட்ட்ட்ட்டேன்.!!!

   ///கூட ஆடப் போறது யாரு?.///

   வேற யாரு (பெட்டி)டார்லிங் டம்பக்கு தான்.! :-)

   Delete
  4. ///"குட்டி" மாற்றத்தில் பெட்டியை கொண்டு வந்ததற்கு, கிட் ஆர்ட்டின் கண்ணன் சார்பாக நன்றிகள்.///

   இங்க, பக்கத்துல இருக்குற இலைக்கு பாயாசம் வேணுமாம் பாருங்க!!!

   Radja @ :-)

   Delete
 8. சமீபத்திய ரோஜர் கதைகள் எதுவும் உருப்படவில்லை என்பது கவலையளிக்கும் உண்மை! இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது!!

  அட்டைப்படம் - ஓ.கே ரகம்! மூச்சுவிட மறந்துவிடுமளவுக்கு இயற்கையை அழகாக வரையத் தெரிந்த ஹெர்மனுக்கு இந்த மனித முகங்களின் மீதுதான் அப்படியென்ன கடுப்போ!!!

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. ஆசிரியருக்கு,

  சட்டென்று நீங்கள் மாற்றிய compilation ஐ வைத்து பார்க்கும்போது, கடந்த காலங்களில் இப்படியான compilation களை வெளியிட அனுமதி தர வெளியீட்டாளர்கள் போட்டுவந்த முட்டுக்கட்டைகள் மெல்ல விலகுவது தெரிகிறது. எனவே. இனிவரும் ஸ்பெஷல் இதழ்களில் நாம் எதிர்பாராத பல compilation களை - எதிர்பார்க்கலாம் போலுள்ளதே?

  ReplyDelete
  Replies
  1. Podiyan : Nopes....அந்தக் கூட்டணி நாட்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி வந்து விட்டுள்ளோம் ; maybe எப்போதாவது போனெல்லி நாயகர்கள் மட்டுமே ஒரு compilation -ல் இடம்பிடிக்கக் கூடும் ! So மெகாக் கூட்டாஞ்சோறுகள் நினைவுகளில் மாத்திரமே தொடர்ந்திடும் !

   Delete
  2. முத்து, 45ஆவது ஆண்டு மலர்...
   50வது ஆண்டு மலர்...

   லயன் 35,40,வது ஆண்டு மலர் போன்ற மெகா இதழ்களுக்கு கூட கூட்டாஞ்சோறு கிடையாது சார் ????

   Delete
 12. பிரின்ஸ் சிறுகதைகளை கூட பில்லர் பக்கங்களுக்கு பயன்படுத் திக் கொண்டு ஆண்டு மலருக்கு மற்றொரு முழு நீள கதை சேர்த்திருக்கலாம் சார்

  ReplyDelete
 13. பார்வையாளராக இருந்தவன் முதன் முதலாக கோதாவில் இறங்குகிறேன். இப்படிக்கு சவூதியில் இருந்து சாட்டையை சுழற்றும் டெக்ஸ் சரண்... ஹஹஹ...

  ReplyDelete
 14. xiii one shot album இனிப்பான மாற்றம் தான்.

  ReplyDelete
 15. தலையில்லா போராளி இப்போது. தான் கிடைத்தது. அட்டையில் tex நிழல் விழ வாய்ப்பு உள்ளதா? மற்றப்படி புத்தகத்தை. பற்றி என்ன சொல்ல இது வேற level வாவ் இது போல் எல்லா tex கதையும் வர வாய்ப்பு உள்ளதா sir

  ReplyDelete
 16. Replies
  1. ///, “பைங்கிளி பெட்டியை” நமது ஆண்டுமலரின் ஒரு அங்கமாக்கிட தீர்மானித்தேன் .///

   ய்ய்ய்ய்யாயாயாயா ஹூஹூஹூஹூ!!!!

   டார்லிங் வந்திடுச்சே!
   டார்லிங் வந்திடுச்சே! ஒருவழியா
   டார்லிங் வந்திடுச்சே!

   டன்டன் டனுக்கு டக்கர
   டன்டன் டனுக்கு டக்கர
   டன் டன் டன் டனுக்கு டக்கர டனுக்கு டக்கர டனுக்கு டக்கர.!!!

   Delete
  2. BREAKING NEWS......

   மேச்சேரி அருகே அதிகாலை நான்கு மணியளவில் ரிக்டர் அளவு 7.5 என நில அதிர்வு ஏற்பட்டது...மக்கள் மத்தியில் பீதி.....காரணம் அறிய முற்பட்டபோது தனி நபர் ஒருவரின் ஆக்ரோஷமான குத்தாட்டமே என தெரிய வந்தது...

   விசாரிக்க காவல் துறையினர் சென்றபோது '' ஒரு பொம்பளை புள்ளைக்காக காலங்காத்தால இப்படி ஒரு ஆட்டமா'' என வீட்டின் மற்றுமோர் முக்கிய நபர் தன் கைவண்ணத்தை காட்டியதில் அவர் கை கால் அசைக்க முடியாமல் படுத்து இருப்பதை கண்டு வெறுங்கையுடன் - ஆனால் மனதிருப்தியுடன்- திரும்பினர்.......

   Delete
  3. @selvam abirami
   LOLZ

   @KiD ஆர்டின் KannaN
   குத்தாட்டம் செம்ம சகோதரரே :D

   Delete
  4. @ செனா அனா

   :D செம!

   விசாரிக்கப் போன காவல்துறையினரும் கடவாயிலயே ரெண்டு குத்து குத்தியிருந்தாங்கன்னா இன்னும் சந்தோசப் பட்டிருப்பேன்! ;)

   Delete
  5. selvam abirami @ செம!! ஹா ஹா!

   Delete
  6. செல்வம் அபிராமி சார் செம சிரிப்ப அடக்கமுடியல...சூப்பர் சார்;););)

   Delete
  7. செனா அனா,
   குணமானதும் குத்தாட்டம் தொடருமென தனிநபர் சூளுரைத்திருப்பதாக தகவல்! (மனதுக்குள்ளேயே அடுத்த ரவுண்டு ஆட்டத்திற்கான ஒத்திகைகளை பார்த்துக் கொண்டிருப்பதும் கொசுறு தகவல்)

   /// கடவாயிலயே ரெண்டு குத்து குத்தியிருந்தாங்கன்னா இன்னும் சந்தோசப் பட்டிருப்பேன்! ;)///

   வொய் குருநாயரே ! வொய் திஸ் கொலவெறி!!!

   Delete
  8. செல்வம் அபிராமி ஜி,செம,செம.

   Delete
  9. என்னையும் கூட்டிட்டு போயிருந்தால் என் பங்குக்கு நானும் கடவாயில் குத்தியிருப்பேன்.

   Delete
  10. குத்துவதற்க்கு மட்டும் கூட்டம் சேர்கிறதே கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்

   Delete
 17. 'குட்டி'மாற்றம் ஏற்க தக்கது தான்.
  ஈரோட்டில் இளவரசிக்கு வாய்ப்பு தரலாமே!

  ReplyDelete
  Replies
  1. //ஈரோட்டில் இளவரசிக்கு வாய்ப்பு தரலாமே!//

   +1

   Delete
  2. இளவரசியை வேண்டுபவர்களைவிட வேண்டாம் என்பவர்களே அதிகமாக உள்ள சூழ்நிலையில்..........???? கழுகு மலைக்கோட்டை வெளியீட்டிற்கு பின்னரே அவருக்கான இடம் நமது காமிக்ஸில் உறுதியாகும். அதுவரை இளவரசிக்கு அவருக்கு நம்போன்ற ரசிகர்களின் இதயத்தில் மட்டுமே இடம் !! (ஒரு பத்து கதைகள் கொண்ட இளவரசி டைஜஸ்ட் வந்தால்.... நினைக்கும்போதே இனிக்கிறதே! )

   Delete
 18. பெட்டி ok.நம்ம தla tex கதை என்ன என்று சொல்லவே இல்லை.

  ReplyDelete

 19. குற்றம் பார்க்கின்,..!

  ReplyDelete
 20. அனைவருக்கும் வணக்கம். ஆண்டு மலரில் ப்ரின்சின் சிறு கதைகள்தான் சற்று நெருடலாக உள்ளது. முழுநீளக் கதை எதையாவது இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்புறம் சிவகாசியிலிருந்து புத்தகங்கள் புறப்படப் போகும் நாளை சொல்லவே இல்லையே!!

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவில் நான் புரிந்து கொண்டது, ஏற்கனவே அறிவித்த பிரின்ஸ் கதையுடன் இந்த சிறு கதை தொகுப்பும் சேர்ந்து வருகிறது என்று நான் நினைக்கிறன்!

   விஜயன் சார், இதனை தெளிவுபடுத்த முடியுமா?

   Delete
  2. பரணி @ ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டதே இந்த துக்கடா கதைகள் தானே !!!

   Delete
  3. சேலம் Tex விஜயராகவன் @ அப்படியா? எனக்கு தெரியாது :-(

   Delete
  4. ஆம் நண்பரே...
   அனைத்து பிரின்ஸ் முழு நீள சாகசங்களை வெளியிட்டாச்சு, இனி சிறுகதைகள் தான் பாக்கி என ஆசிரியர் கேட்க, பரவாயில்லை அதையாவது தாருங்கள் என்றனர் நண்பர்கள்...
   எதற்கும் ஆசிரியர் சாரே உறுதி செய்யட்டும் நண்பர!!!

   Delete
 21. இந்த மாற்றத்தைப் பற்றி என்ன ஜொள்ளுவதென்றே தெரியவில்லை.... தேங்சுன்னு ஜொள்ளவா இல்ல நன்றின்னு ஜொள்ளவா...

  ReplyDelete
  Replies
  1. Rummi XIII @ நீங்கள் "ஜோள்ளுவதில்" இருந்து நன்றாகவே புரிந்து கொண்டேன் :-)

   Delete
 22. பைங்கிளி பெட்டி வருகை அற்புதம்.

  ReplyDelete
 23. அட்டை படம் அழகு ....

  மாற்றம் ஓகே ...சார் ...ஆனால் எனக்கென்னவோ நாயகனின் பலதர பட்ட சாகஸங்களாக வராமல் அந்தந்த நாயகன் வில்லனின் ஒரே ஒரு தனிப்பட்ட சாகஸ கதைகளில் (வரலாறுகளில் )..ஆரவம் கொஞ்சம் குறைவு தான் ...;-)

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. ரோஜரின், வருடத்தின் ஒரு ஸ்லாட்டை தக்க வைப்பதற்கு, இத்தனை சிரமங்களும், தடுமாற்றங்களும் எதிர்பார்க்காதவை.! இனி ரோஜரின் கதி அதோ கதிதானா...? 70+ உள்ள ரோஜரின் கதைகளில், இனி ஒன்று தேறுவதற்கே சந்தேகம்னு தோணுது.. ரோஜர் இல்லாததனால் ஏற்பட்ட காயங்களுக்கு “பெட்டி பார்னோவ்ஸ்கி" சற்று சரியான மருந்துதான். என்ன, முதன்முறையாக மூன்று பெல்ஜிய நாயக ஜாம்பவான்களின் கூட்டணி 'பணால்' ஆனதில்தான் சற்று ஏமாற்றம்.

  By the way, ஈரோட்டில் வெளியிடுவதற்கு ஒரு மாற்றிதழை தயார் செய்ய மறந்துடாதீங்கோ...அண்ட் 32வது ஆண்டு மலர் அட்டையப்படம் நன்றாகவே வந்திருக்கிறது.

  ReplyDelete
 26. பிரினஸ் கதைகள் சிறுகதைகள் தாம் எனினும் அவர் காவல்துறை அதிகாரியாக ...கப்பல் கேப்டனாக அவதாரம் எடுக்கும் சூழல் ...பொடியனை எவ்வாறு குழுவில் இனைந்தான் என்பதை பற்றி ...பார்னே எப்படி தோழனானார் என்பதை பற்றி எல்லாம் அறிய மிகுந்த ஆவலே ....;-)

  ReplyDelete
 27. இந்த மாற்றம் எனக்கு பிடிக்கவில்லை ரோஜா் ஆண்டுக்கு ஒன்று தான் வறுகிறது அதையும் ஏன் இப்படி???
  ரோஜா் பின்பு எப்போது வெளியிடுவீா்கள்....
  எதையவது reprint போடலாமே (நடக்கும் சிலை மா்மம்,மா்ம கத்தி)

  ReplyDelete
  Replies
  1. நடக்கும் சிலை மா்மம்,மா்ம கத்தி, நெப்போலியன் பொக்கிஷம்!
   எனது ஆதரவு இதற்கு உண்டு!!

   Delete
 28. சொதப்பல் ரோஜர் பணாலா ..பலே பலே ..எத்தனை பேர்தான் காந்த கண்ணழகிகளோ ...வரவேற்போம்

  ReplyDelete
 29. /XIII மர்மத்தின் தொடரின் டாப் கதைகளுள் ஒன்றான “பெட்டி பார்னோவ்ஸ்கி” யின் டிஜிட்டல் பைல்களை ஆர்டர் செய்து வந்திருந்தேன்! அதற்கான மொழிபெயர்ப்பு சென்றாண்டே தயார் என்பதால்- அடித்துப் பிடித்து, “பைங்கிளி பெட்டியை” நமது ஆண்டுமலரின் ஒரு அங்கமாக்கிட தீர்மானித்தேன் சனிக்கிழமை காலையினில்///--
  ஆண்டின் சிறந்த மூவ்களில் ஒன்றாக இருக்கும் சார்...
  பெட்டி பார்னோவ்ஸ்கி-- எத்தனை ஆண்டு தவம் இருக்கனுமோ என ஏங்கி இருந்த போது , பார் பார் என உடனடியாக என ஜென்ம சாபல்யம் அடைய வைத்தமைக்கு கோடி நன்றிகள் ஜொள்ளிக் கொள்கிறேன் சார்...
  அதகளமான ஆண்டு மலராக அமைய போவதை "பார்"க்கலாம் அனைவரும் சார்...

  ReplyDelete
 30. பதம் தப்பிய உணவுக்கு பதில் தரமான உணவு தருவது எப்போதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதில் சாத்து எப்படி விழும்

  ReplyDelete
 31. சந்தா நண்பர்களுக்கு இந்த மாதம் விலையில்லா...காமிக்ஸ் வழங்கும் தங்களுக்கு காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் சார் ....

  இந்திய பதிப்பக துறை வரலாற்றிலியே முதல்முறையாக ...சாரி உலக பதிப்பக துறை வரலாற்றிலியே ஒரு கதை மொக்கையாக அளித்து விட்டேன் ....எனவே அதற்கு பதிலாக ஒரு அழகான வண்ண மறுபதிப்பு இதழ் இலவசம் என செயல்படுத்துவது தாங்கள் ஒருவராக தான் இருப்பீர்கள் சார் ...காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன் ...

  ஒரு பின் குத்து ....சாரி குறிப்பு .....

  தாங்கள் எதை செய்தாலும் அதை குறை கூறி கிண்டல் அடிக்கும் நண்பர்கள் இந்த செயலுக்கும் எவ்வாறு கிண்டல் அடிப்பார்கள் என்பதை காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ..;-)

  ReplyDelete
  Replies
  1. எதுக்கும் பதுங்கு குழிய ரெடியா வெச்சிருங்க.

   Delete
 32. /// முற்றிலும் புதிய ஓவியங்கள்; முழுவதுமாய் புது வசனங்கள் என இந்த இதழில் புராதன நெடி துளியுமிராது.///

  மகிழ்ச்சி யான செய்தி சார். நி.ஒன்று நி.ரெண்டு,, அப்போது வந்த இதழில் ஓவியங்கள் ரொம்பவே சுமாராக இருந்தன. வசனங்களிலும் மாற்றம் எனும்போது இலவச இதழ் பட்டையை கிளப்பப்போவது. . . கன்ஃபார்முடுங்க!!! :-)

  ReplyDelete
  Replies
  1. // மகிழ்ச்சி யான செய்தி சார். நி.ஒன்று நி.ரெண்டு,, அப்போது வந்த இதழில் ஓவியங்கள் ரொம்பவே சுமாராக இருந்தன. வசனங்களிலும் மாற்றம் எனும்போது இலவச இதழ் பட்டையை கிளப்பப்போவது. . . கன்ஃபார்முடுங்க!!! :-) //

   என் மனதில் உள்ளதும் இதுவே! இந்த காரணத்திற்காகதான் இதனை கடந்த முறை வேண்டாம் என்றேன். பார்போம் இந்த முறை நம்மை கவர்கிறதா என்று!!!

   Delete
 33. ரோஜரை இழந்தது வேதனைக்குரியது...!
  ஹூம்ம்...!
  😈😈😈
  😔😔😔
  😖😖😖

  ReplyDelete
 34. விஜயன் சார்,

  // ஆரம்பத்தில் இன்டர்போலில் இன்ஸ்பெக்டராகப் பணி புரியும் பிரின்ஸின் 4 & 6 & 8 பக்கக் கதைகள்; பொடியன் ஜின்னை சுவீகாரம் செய்து செய்து கொண்ட பின்னணி; ‘கழுகு‘ அவரது உடைமையான நிகழ்வுகள் என்று செல்பவை இந்தத் தொகுப்பின் கதைகள்! இவற்றில் சிலவற்றை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த போதிலும்- அழகாய், வண்ணத்தில், பெரிய சைஸில் பார்ப்பது மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்பதால்- அவற்றையும் இணைத்துள்ளோம்! //

  நன்றி! இவைகளை இதற்கு முன் படித்து இல்லை. இதனை வரவேற்கிறேன்!

  அதே போல் (மிகவும் சுமாரான) ரோஜர் கதைக்கு பதில் XIII கதையை இணைத்தது சரியான முடிவு. இல்லை என்றால் இந்த ஆண்டு மலர் வேறு ஒரு விதத்தில் மறக்க முடியாத இதழாகி இருக்கும். ரோஜரின் சிறந்த கதை எதாவது அமைந்தால் இந்த வருட இறுதியில் வெளி இடவும், இது அவரின் ரசிகர்களை திருப்பதிபடுத்தும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாக. சொன்னீர்கள் சபாஷ்

   Delete
  2. சரியாக. சொன்னீர்கள் சபாஷ்

   Delete
 35. ரோஜா் இழந்த வேதனை 13 மா்மம் இடுகட்டது எனக்கு என் பள்ளி எல்லோறிடமும் கெத்தாக என் தல ரோஜா் அடுத்த மாதம் வந்து mega hit கொடுப்பாா் என்று சீன் போட்டேன் இப்போது என்னவேன்று சொல்வேன்??!!!

  ReplyDelete
  Replies
  1. தலைக்கு பதில் தலைவி வருகிறார் என சொல்லி சமாளிக்கபார் தம்பி!

   Delete
  2. என் பள்ளி காமிக்ஸ் படிப்போா் அனைவறும் டெக்ஸ் விசிரி நான் ஒறுவன் மட்டும் எப்போதும் வித்தியசமானவன் இப்படி மட்டும் சொன்னால் கின்டல் செய்தே திம்ஸ் கட்டிவடுவாா்கள்

   Delete
  3. இப்போ தலைவி ரசிகன் என்று வித்தியாசபடுத்திகோ! எனது தலைவி எப்போதும் மாடஸ்ட்டி என்பது வேற விஷயம்!

   Delete
  4. டயபாலிக் அகிக் ரோஜர் கதைக்கு ராயல்டி அதிகமாக கேட்பதால் அவ்வளவு விலை கொடுத்து நம்ம எடிட்டரால் வெளியிட முடியவில்லை என சமாளிக்க வேண்டியதுதானே!!!!

   Delete
  5. அகிக் ஒரு சிறிய வேண்டுகோள். இந்த வயதில் இவ்வளவு தீவிர காமிக்ஸ் ரசிகராக இருப்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் இந்த தீவிரமான ரசனை உமது படிப்பை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.

   Delete
  6. அகிக் எனக்கும் ஏமாற்றம்தான். ரோஜர் வந்து தோற்றுப் போவதைவிட வராமலே இருந்து போகட்டும். பந்தாவாவது மிச்சமிருக்கும்.

   Delete
  7. தல எல்லோரூக்கும் டெக்ஸ் தான்

   Delete
  8. @atr sunday only i am free
   பிறகு பள்ளியில் காலை தோ்வு,மாலை தோ்வு ஆதானல் எனக்கு படிப்பில் எந்த பிரச்சனை வரப்போவதில்லை

   Delete
  9. @saran selvi அப்படிஇல்லை எனக்கு டையபாலிக்,ரோஜரை பிடிக்கும் அதனல் நான் தலை என்கிறேன் உங்களுக்கு டெக்ஸை பிடிக்கு அதனால் நீங்கள் டெக்ஸை தல என்கிறிகள் அவ்ளோதான் ம்ம்ம்...

   Delete
  10. காமிக்ஸ் படிப்பதால் எதிர்காலத்தில்பொ து அறிவுவில் அகில் கில்லியாக இருப்பான் என்பது எனது கணிப்பு. மேலும் லார்கோ வின்ச் கதைகள் Bussiness பற்றிய படிப்புக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

   Delete
  11. அகிக் தவறாக எண்ணவேண்டாம். படிப்புக்கு முதலிடமும், நமது காமிக்ஸூக்கு இரண்டாவது இடமும் கொடுத்தாலே போதும். நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வயது இது.அதனால்தான் சொன்னேன்.

   Delete
 36. விஜயன் சார்,

  ஆண்டு மலர் அட்டை படம் அருமை. அதில் குறிப்பாக "32வது ஆண்டு மலர்" டிசைன் அருமையாக பலரையும் கவரும் விதத்தில் உள்ளது. விளம்பர நோக்கில் இது மிகவும் முக்கியம். வரும் காலம்களில் ஆண்டு மலர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், அட்டையில் இடம் பெரும் "ஆண்டு மலர்" என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.

  ReplyDelete
 37. ரோஜர் கதைக்கு ராயல்ட்டி எல்லாம் கட்டியிருப்பாரு நம்ம வாத்தியாரு! பாவம்! இப்ப ராமசாமிக்கு கொடுத்த கடன் மாதிரி ஊ..ஊ..ஊஊஊ...

  ReplyDelete
  Replies
  1. hmmmmmmmmm....மாற்று ஆலோசானைகள் தரலாமே சகோதரரே

   Delete
  2. @Vijan Sir
   ரோஜர் கதையினை தனி இதழாக வரும் மாதங்களில் வெளியிடலாமே சார்

   Delete
  3. உப்பு சப்பில்லாத பத்திய சோறு கூட்டத்தோடு கூட்டமாக கூட பரிமாறி முடியலனா , தனி டிஸ் ஆக எப்படி தர முடியும்???...
   உப்பில்லா பண்டம்.........!!!!!

   Delete
  4. ஆனால் சில வேளைகளில் பத்திய சோறு நல்லது தானே சகோதரரே :)
   ராயல்ட்டி கட்டிருப்பதால் என்னாலான ஒரு சிறு Suggestion சகோதரரே

   Delete
  5. Erode VIJAY : நிறைய ராமசாமிகளுக்கு இந்த பாணியில் கடன் கொடுத்துள்ளோம் !

   லேடி SPITFIRE என்றொரு அம்மணி நினைவுள்ளதா ? - அவரது கதைகளில் இன்னமும் 2 கும்பகர்ண தூக்கத்தில்....! அப்புறம் THE INSIDERS என்ற புதிய தொடரின் முதல் 2 கதைகள் ; 2 ஜெஸ் லாங் பப்படங்கள் ; மொத்தம் 8 (காரிகன் ; ரிப் கிர்பி ; விங் கமாண்டர் ஜார்ஜ் கூட்டணி) STRIP கதைகள் என்று நிறைய ஆசாமிகள் வருஷங்களாய்க் குடி இருந்துவருகின்றனர் ! அவர்களுக்குத் துணைக்கு இப்போது ரோஜர் !

   ஏதாச்சும் வாடகை வசூல் செய்யணும் போலும் !

   Delete
  6. உண்மையான மொக்கை கூட்டாஞ்சோறு spl தரலாமே

   Delete
  7. @ Saran Selvi

   உங்களை இந்ததளத்தில் முதல்முறையாக சந்திப்பதால்...என் வரவேற்ப்பும் வணக்கங்களும்..!

   Delete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. விஜயன் சார்,
   தற்போது வெளிஇடாமல் போன ரோஜர் கதைக்கு பதில் கீழே உள்ள கதைகளில் ஏதாவது ஒன்றை மறுபதிப்பாக இந்த வருட இறுதியில் வெளி இடமுடியுமா? இது கண்டிப்பாக ரோஜர் ரசிகர்களை திருப்திபடுத்தும், அதே போல் இந்த கதைகளை இதுவரை படிக்காத என்னை போன்ற பலரையும்தான் :-)

   நடக்கும் சிலை மா்மம்,மா்ம கத்தி, நெப்போலியன் பொக்கிஷம்! - நன்றி அக்கி.

   Delete
  2. நெப்போலியன் பொக்கிஷம் விங் கமாண்டர் ஜார்ஜின் சாகசம் நண்பரே!!!

   Delete
  3. KiD ஆர்டின் KannaN @ ooops. thanks for correcting me.

   Delete
 39. இனிய காலை வணக்கங்கள் விஜயன் சார் :)
  இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

  ReplyDelete
 40. விஜயன் சார், கடந்த இரண்டு மாதம்களாக வந்த டெக்ஸ் அட்டை படம் ஒரே மாதிரியாக உள்ளது, டெக்ஸ் துப்பாக்கியுடன், அட்டையின் கீழ் பக்க டிசைன், அவரே பிராதனமாக தெரிகிறார்; இந்த இரண்டு கதைகளை அட்டைபடம்களை மட்டும் பார்த்தால் (கதையின் தலைப்பை படிக்காமல்) ஒரே புத்தகம்தானோ என தோன்றுகிறது!

  சொல்ல வந்தது: மாதம் ஒரு டெக்ஸ் கதைகளை வெளி இடுவதால் இவரின் அட்டை படத்தில் வித்தியாசம் காண்பிக்கவும். எல்லா நாட்களிலும் இவர் அட்டையை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்வது நன்றாக இல்லை.

  ReplyDelete
 41. அடுத்த tex என்னெவென்ரு சச்பென்சாக இருக்கிரது.

  ReplyDelete
 42. பின்னிட்டிங்க சார்!!!!!
  நானும் கவலையில் இருந்தேன். "என்னடா இது??? 32-வது ஆண்டு மலரில் ரோஜரின் கதையை போட்டிருக்காங்களே. ஏற்கனவே வந்திருந்த 'மஞ்சள் நிழல்', 'காலத்தின் கால் சுவடுகளில்' செம போர். அடுத்த மாதம் இப்படி ஆயிருச்சே!" -என்று கவலையில் இருந்தேன். இப்போதான் எனக்கு திருப்தியா இருக்கு. அந்த பெட்டி பார்னோவ்ஸ்கியின் விளம்பரம் பார்த்ததில் இருந்து, கதை எப்போது வருமோ என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தவன் நான். எனக்கு இந்த பதிவு உற்சாகம் அளித்துவிட்டது.

  💙💙I LUV 32-வது ஆண்டு மலர்.💜💜

  அது எப்படியும் 8-ஆம் தேதிதான் கடைக்கு வரும். ஆனால், இப்பவே எதிர்பார்க்க வைத்துவிட்டது.

  ReplyDelete
 43. பெட்டி பார்னோவ்ஸ்கி வருவதில் மகிழ்ச்சியே சார் :)
  தைரியசாலி மற்றும் சாதுவான அழகு பெண் பெட்டி

  பெட்டி எப்போ வருவார் என்று காத்து கொண்டு இருந்தேன்
  சர்ப்ரைஸ் இதழலாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
  சர்ப்ரைஸ் இதழ் போச்சே :( .....well no problemo
  சர்ப்ரைஸ் இதழலுக்கு வேற ஏதேனும் திட்டம் போட்டு உள்ளீர்களா எடிட்டர் சார்

  ReplyDelete
  Replies
  1. கடல்யாழ்9 : ஜூலை இதழ்களைக் கரைசேர்த்தான பின்னே அது பற்றி யோசிக்கலாம் என்று விட்டிருக்கிறேன்...!

   Delete
  2. தங்களிடம் தேங்கியுள்ள அத்தனை இதழ்களையும் சேர்த்து ஒரே குண்டு புத்தகம். மலிவுப் பதிப்பில் ! ஆஹா!!! உங்க மேசை காலியாச்சி. எங்க மனசு நிரம்பியாச்சு. உங்கள் மேஜை காலியாகி குடோன் நிரம்பிவிடுமே! அத நெனச்சி எங்க மனசு பாரமாச்சி. யோசிச்சி யோசிச்சி மண்டை சூடாச்சி. இத்தோட வாய மூடியாச்சி.

   Delete
 44. Captain Prince and reporter jhonny erukku , my expectations intha 2 stories than so Enakku athu happy than.

  ReplyDelete
 45. அனைவறும் ரோஜா் மீது இவ்வுளவோ கண்டனம் தெரிவிப்பது என்னை கவலையடைய செய்கிறாது நேற்று இரவு வரைக்கு சந்தோசம் என் முகத்தில் ஆண்டுமலா்ன் அட்டைபடப் preview மற்றும் ரோஜா்ன் உட்பக்க preview பாா்க்கபோகிறோம் என்ற உற்ச்சகத்தில் ஆனால் இந்த பதிவு எனக்கு வேதனை அளிக்கிறது கடுப்பாகவும் உள்ளது 13 வறுவது நான் எற்றுகோள்ள முடியவில்லை ஆனால் நண்பா்களின் சந்தோசம் ரோஜா்ரை கவுவங்குவது தான் என்றால்...........??!!

  ReplyDelete
  Replies
  1. அகில்!
   ரோஜருக்கும் நம் நண்பர்களுக்கும் பங்காளி பகையா என்ன? 'ரோஜர்' என்ற பெயரின் பொருட்டு மொக்கையான கதைகளை களமிறக்கி (எடிட்டர்) ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக்கொள்வதைவிட, இது போன்ற அதிரடி மாற்றங்கள் நல்லதே!

   எடிட்டரின் முடிவு நன்மையே பயக்கும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்! ரோஜர் ஒரு நல்ல கதையுடன் நிச்சயம் வருவார்!

   Delete
  2. அதே அதே....
   அகிக்@ மொக்கையான கதையாக இருப்பது யார் குற்றம்...
   ரோஜரின் மஞ்சள் நிழல் என்ற மரண மொக்கையை தந்ததற்காக தானே இந்த ஆண்டு காம்பன்சேசன் தர்ரார் ஆசிரியர்....
   அந்த அளவு மொக்கை கதைகயை தெரிந்தே வெளியிட்டு மீண்டும் சாத்து வாங்கனுமா???...
   நல்ல கதை இருந்தால் எந்த ஹூரோவா இருந்தால் என்ன???...
   கதை சரியில்லை எனில் யாராயினும் வரவேற்பை பெற முடியாதே...
   மொக்கைதான் இருக்குனா அந்த ஹூரோ யாராக இருப்பினும் பரண் படுக்கை காத்திருக்கு...

   Delete
  3. @ friends : ஏனோ தெரியவில்லை ; சித்திரங்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை கதையின் பொருட்டு தர முனையவில்லை - ரோஜரின் படைப்பாளிகள் ! என்னிடம் தற்போது சுமார் 10 ரோஜர் கதைகளின் விரிவான விமர்சனங்கள் உள்ளன ; அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்வதே பெரும்பாடாகிப் போகும் என்றே தோன்றுகிறது !

   Delete
  4. சித்திரங்கள் 40%...
   கதை 60% காம்பினேசன் தான் பிடிக்கும் என்னைப்பொறுத்து சார்...
   தயவுசெய்து சொதப்பலான கதைகள் எந்த ஹீரோவானாலும், நண்பர்கள் கவனிக்க டெக்ஸ்சே என்றாலும்கூட தேர்வு செய்ய வேணாம் சார்

   Delete
 46. எடிட்டர் அவர்களே,ஏன் தலயின் இதழ் பற்றிய முன்னோட்டம் தரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கழுகு : இதழ்கள் கிளம்பிடும் தினைத்துப் பதிவினில் வரும்..!

   Delete
  2. முடிந்தளவு வெள்ளிக்கிழமைக்குள் இந்த மாத இதழ்கள் கிடைக்க செய்யுங்கள் ஆசிரியரே, வார விடுமுறையில் படிக்க செளகர்யமாக இருக்கும்.

   Delete
 47. எடி சார் நீங்கள் ரோஜர், டயபாலிக், இன்னும் உங்கள் மேஜையில் உறங்கிக் கொண்டுள்ள ரிப்கெர்பி, காரிகன் இது போன்ற நாயகர்களை வெளியிடாமல் ஓரங்கட்டுவதற்கு பதிலாக தற்போது வெளிவந்த முத்துமினி காமிக்ஸ் போல சற்று குறைந்த விலையில் black and white ல் வெளியிடலாமே! இது என்னைப்போன்ற பலருக்கும் உள்ள ஏமாற்றத்தை தவிர்க்கும்.

  ReplyDelete
  Replies
  1. விஜயன் சார், இதில் உள்ள சாதக பாதகமான விஷயம்களை யோசித்து நடைமுறைபடுத்த முடிந்தால், செய்யவும்.

   Delete
  2. AT Rajan : வெளியிடலாம் தான் சார்....முன்னூறு / நானூறு பிரதிகள் விற்பனையாகவும் செய்யும் தான்.....அப்புறமாய் மீதங்களைக் காலி செய்ய மறுபடியும் ஒன்றரை+ ஆண்டுகள் தேவுடா காக்க வேண்டி வருமே ?

   Delete
  3. If it comes within rs.30-40, sale may increase i believe.

   Delete
  4. @ FRIENDS : கனவுலக சஞ்சாரங்களை நம் நாயகர்கள் செய்துவிட்டுப் போகட்டுமே - நாமும் செய்வானேன் folks ? விலை குறைத்தால் விற்பனை அள்ளிக் கொண்டு போகுமென்பது ஒரு மகா மாயை !

   தற்போதைய முத்து மினி காமிக்ஸ் எவ்வளவே விற்பனையாகி இருக்குமென்று யூகிக்க முயற்சித்துப் பாருங்களேன்..?

   500-க்கும் கீழே என்பது தான் யதார்த்தம் !

   விற்பனையை நிர்ணயம் செய்வது கதைகளின் சுவாரஸ்யங்கள் மாத்திரமே ; விலைகள் இரண்டாம் பட்சங்களே ! So விலையைக் குறைத்து இதழ்களை உருவாக்கினால் புதுசாய் ஒரு வட்டம் உருவாகிடும் என்பதில் 25% மட்டுமே நிஜம் இருக்கலாம் !

   Delete
  5. விலை குறைவான 10ரூபாய் புத்தகங்கள் தோல்வியை தழுவியது ஏனென்று நண்பர்கள் சிந்தித்து பாருங்கள்...

   Delete
 48. என்னுடையது ஒரு வேண்டுகோள் மட்டுமே சார்.கேள்வி எழுப்புவது எனக்கு எளிது. ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சமாளிப்பவர் நீங்கள்தான் என்பதால் இதற்கான சாதகமான சூழ்நிலை அமையுமானால் அப்போது செயல்படுத்துங்கள் சார்.

  ReplyDelete
 49. நேற்றுதான் ஜுலியா கதை படித்தேன். அப்பப்பா பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பக்கமும் விறுவிறுப்பு. அடுத்து என்ன நடக்கும் என்ற பீதியில் அப்படியே உறைந்து போய்விட்டேன். வித்தியாசமான கதைகளம். இந்த கதையின் மர்ம முடிச்சுகளை இறுதியில் ஜுலியா அவிழ்க்கும்விதம் அருமை. என் வாழ்நாளில் இதுபோன்ற கதையை நான் கேட்டதும் இல்லை, படித்ததும் இல்லை. இதை எங்களுக்கு வழங்கிய ஆசிரியரான உங்களுக்கு கோடானு கோடி நன்றி. இந்த விமர்சனத்தை படித்து எங்களுக்கு டெக்ஸ்போல் மாதம் ஒருமுறை ஜுலியாவை தரிசிக்க செய்தால் மகிழ்ச்சியே.
  ரோஜர் கதையை படித்து பார்த்தேன். சரியான மொக்கை அதனால் போடவில்லை என்று தாங்கள் எடுத்து முடிவு சூப்பர். இதுபோன்று அனைத்து கதைகளையும் தாங்கள் படித்து அதன்பின்னர் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அப்புறம் ஒரு அன்பான வேண்டுகோள் வெளியிடுவதற்கு முன்பு தாங்கள் ஜுலியா கதையை படித்த அனுபவத்தையும் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  இந்த தோர்கல் என்னும் ஒரு நபர் கௌபாயோ, டிடெக்டிவோ, கார்டுனோ என்று நினைக்கிறேன் ரொம்ப நாள் ஆச்சு ஆள பார்த்து. கதை பயங்கர மொக்கதான் இருந்தாலும் கொஞ்சம் எங்கள் மீது இரக்கம் கொண்டு ஏதாவது ஒன்னு, இரண்டு போடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. Sundar Raj : நிச்சயமாய் நண்பரே.....தனிச் சந்தாவில் ஜூலியாவை உங்களுக்கு மட்டுமேனும் பிரேத்யேகமாய் கண்ணில் காட்ட வழியுள்ளதா என்பதைப் பற்றி ஆழமாய்...அகலமாய் யோசிக்காது விடமாட்டேன் !

   Delete
  2. அப்படியே எனக்கும் ஒரு தனி சந்தா

   Delete
 50. சார் ...இதழ்கள் எந்த தேதியில் கிடைக்கும் என்ற அறிவிப்பை காணவில்லையே ...மாத இறுதியில் கிடைத்து விடுமா ..?

  ReplyDelete
  Replies
  1. சொல்கிறேன் தலீவரே...! பொறுமை !

   Delete
 51. விஜயன் சார், இதுவரை உங்கள் மேஜையின் மேல் உறங்கி கொண்டு இருக்கும் கதைகளை ஒரு தொகுப்பாக "Editor Collection Special" என வெளி இடலாமே!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : ஐயோ...சாமி....! தமிழ் காமிக்ஸ் உலகம் பாவம் ! அதனை நான் அவ்வப்போது தெரியாது தண்டித்து வருவது போதாதா ?

   Delete
  2. Sir, send them for proof reading, will get chance to read them. :-)

   Delete
  3. //Sir, send them for proof reading, will get chance to read them.//

   I like this suggestion +9 :D

   Delete
  4. எடி சார் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   Delete
 52. காந்த கண்ணழகிக்காக காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 53. லயனின் 32ஆவது ஆண்டு மலரின் அட்டை படம் அருமை சார் :)
  பெட்டி ரத்த காயத்துடன் வருகிறார், ஜானி தலைகீழாக விழுகிறார்
  பிரின்ஸ் ஆழ்ந்த சிந்தனையுடன் துப்பாக்கியை கெட்டியாக பிடித்து கொண்டு மறைத்து வைத்திருக்கிறார்
  எதனால் நம் ஹீரோஸ்-களின் அனைவரின் சூழ்நிலைகள் இக்கட்டில் உள்ளது, அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகின்றன

  ReplyDelete
 54. டியர் விஜயன் சார், நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும், ரோஜர் வெளிவராதது வேதனைகுறியதே.சிலமுறை ப்ளாக்கில் பிடிக்கவில்லை என்று கூறும் சில நண்பர்களுக்காக மட்டும் முடிவெடுக்கிறீர்களோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.மற்ற மௌன வாசகர்களையும் கருத்தில் கொண்டால் பரவாயில்லை சார்.இப்படித்தான் ஒரு வில்லன் கதாபாத்திரமான டேஞ்சர் டயபாலிக் ,ரொம்ப வில்லத்தனம் செய்கிறார் என்று சில நண்பர்கள் ப்ளாக்கில் சொன்னதற்காக, ஒரு நல்ல அருமையான தொடர் நிறுத்தப்பட்டது.தங்களின் ரோஜருக்கு மாற்று,முடிவில் எனக்கு உடன்பாடில்லை சார்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்னவோ நம்ம அகில் கூட எதிர்காலத்துல ஒரு டாக்டரா வர வாய்ப்பிருக்குன்னு தோனுது! ;)

   Delete
  2. டேஞ்சர் டயபாலிக் எனக்கும் பிடித்திருந்தது.

   Delete
  3. எனக்கும் கூட டயபாலிக் பிடித்திருந்தது.ம்ம்ம்....என்ன செய்வது? அகிக்கும் நானும் ரூம் போட்டு அழமட்டுமே முடியும் போலிருக்கிறது.

   Delete
  4. Dr.Sundar, Salem : ரசனை சார்ந்த விஷயங்களில் ஆளுக்கொரு சிந்தனை இருப்பதில் தவறில்லை ! ஆனால் ஒரு நூறு முறைகள் பதிவிட்ட hard facts களை மறந்துவிடுவது சரியல்ல !

   டயபாலிக் கல்தா கண்டதன் முழு முதற் காரணம் இங்கு பதிவில் வந்த நெகட்டிவ் பின்னூட்டங்கள் அல்ல ; ஆண்டின் இறுதியில் நான் கோரியிருந்த அபிப்பிராய படிவங்களில் வலைக்கு அப்பாலுள்ள வாசகர்கள் பொங்கித் தீர்த்திருந்ததே ! அந்த மாதத்துக்கு கூரியரில் புக்குகளோடு ஒரு படிவத்தையும் அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம் !

   இங்குள்ள எண்ணச் சிதறல்களே என் தீர்மானங்களை நிர்ணயிக்கின்றன என்பது உங்களது கற்பனையே ! அது நிஜமெனும் பட்சத்தில் இந்நேரத்துக்கு மாடஸ்திக்கொரு தனிச் சந்தா வந்திருக்க வேண்டுமல்லவா ?

   பல்லாயிரங்கள் செலவிட்டு கதையினை வாங்கி, பணிகளும் முடித்து, நாளை அச்சுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் அதனை நிறுத்த நான் நினைப்பின் அதன் பின்னணி காரணம் - சுவாரஸ்யமின்மை தவிர வேறாக இருக்க இயலுமா ? அதுவும் நாளை நான் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதொரு அவசரத்தில் ?? இங்குள்ளோரின் நெகட்டிவ் கமெண்டுகளின் பொருட்டு ரோஜருக்குக் கல்தா கொடுப்பதாயின் அதன் பொருட்டு இத்தனை பணத்தை விரயம் செய்யத் தான் தோன்றுமா ?

   சிம்பிளானதொரு விஷயத்துக்கு விஸ்தீரணமாய்க் காரணங்கள் தேடத தான் வேண்டுமெனில் நான் சொல்லும் விளக்கங்கள் எல்லாமே in effect பொய் என்று தோன்றத்தான் செய்யும் !

   'சிவனே' என்று அறிவித்த கதையையே போட்டு விட்டு, நான்பாட்டுக்கு நிம்மதியாய்க் கிளம்பியிருக்கலாம் - "இது படைப்பாளிகளின் தயாரிப்புத் தானே ? நான் என்ன செய்ய முடியும் ? " என்ற சமாதானத்தை சொல்லிக்கொள்வோமே என்ற நம்பிக்கையில் !பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது !

   Delete
 55. ஆசிரியருக்கு,
  சென்ற வார பதிவில், பின்பு புது நாயகர்கள் பற்றிய அறிவிப்புக்கள் இருக்கும் என்றீர்கள்.அது எப்பொழுது.

  ReplyDelete
 56. சந்தா -சி'யில் வரும் புத்தகம் பற்றிய அறிவிப்பு இல்லை. எடிட்டர் சார் அது எது என்று சொல்ல முடியுமா.

  ReplyDelete
  Replies
  1. Shinesmile Foundation : சிக் பில் & கோ. !

   கோடியும்...ஒரு கேடியும்...

   Delete
  2. அப்போ..... "நிழல் 1 நிஜம் 2...?

   இதற்கு முந்தைய பதிவவில் நீங்கள் காட்டிய இமயத்தில் மாயாவி..?

   Delete
 57. சேலம் டெக்ஸ் சார்,
  மடிப்பாக்கம் சார் என்ன செய்கிறார். ஞாயிறு அன்றுமா கோர்ட் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா...
   இல்லை நண்பரே.அவரின் மகளுக்கு பள்ளியில் சேர்க்கை விசயமாக சற்றே பிஸியாக இருக்கார். அட்மிஷன் முடிந்ததும் இங்கே ஆஜர் ஆகிடுவார்.(சென்னையில் லட்டு வாங்கி தராமல் அல்வா கொடுத்தார் என்பதை ஏதோ சொல்லனும்னு தோணுச்சு)

   Delete
 58. காலை வணக்கங்கள் நண்பர்களே..!

  "உங்களை முன்னிலைபடுத்திக்க நிறையவே 'கிளிக்' ரெடிபண்ணி போடுறமாதிரி எனக்கொரு பீல்... இதே காமிக்ஸ் வளர்ச்சிக்கு,விற்பனைக்கு,காமிக்ஸ் வருவதை அறிமுகம்படித்தற மாதிரி உதவும்படி கொஞ்சமேனும் ஏதும் செய்ய முடியுமா..? ஒருகாலத்தில் என்னை போல காமிக்ஸ்படித்த வாசகர்கள் இப்போது அவை வருவது தெரியாமல் இருக்காங்க...அவங்களுக்கு தெரியறமாதிரி ஏதும் செய்யுங்களேன் மாயாவி தம்பி..."

  இது...காமிக்ஸ் வருவது சமீபத்தில்தெரிந்து, கடந்த வருடம் முதல் வாங்கித்தொடரும் ஒரு மூத்த அறுபதைத்தாண்டிய வாசகரின் வேண்டுகோள்..!

  அட அப்படி நினைச்சி நாம செய்யலையே...சரி அவர் சொல்ற இதையும் முயற்சித்துதான் பார்ப்போமே என ஒரு சின்ன முயற்சி..! முடிந்தமட்டும் வாரம் ஒரு wallpaper டிஸைன் பண்ணி இங்கு பதிவிடுகிறேன், அதை உங்கள் நண்பர்கள் வாட்ஸ்ஆப்,facebook மூலமாக பகிர்ந்து கொஞ்சம் உதவக்கைகொடுங்களேன்..!

  //வெறும் புத்தகாலயம்-சந்தாதாரர் எனும் உறவையும் தாண்டி குட்டிக்குட்டி புரவலர்களாக நாம் செயல்படும் நிகழ்வு இருக்கிறது. நமது அந்தச் செயல்தான் இந்த காமிக்ஸ் வண்டி சத்தமின்றி ஓட சக்கரத்து மையாக இருக்கிறது என நம்பலாம். வண்டி ஓடுவதால் பலன் நமக்கும்தானே! // என்ற மந்திரத்தின்படி பலன்களை நோக்கி ஒரு அடி முன்னேற இந்த wallpaperகளை தெறிக்க விடுங்களேன்..!

  இதோ இந்த வார wallpaper பார்க்க...இங்கே'கிளிக்'

  ReplyDelete
  Replies
  1. ஏன் என் போட்டோவ காணோம் மாயாத்மா

   Delete
  2. @ ரின் டின் கேன்

   ஒரு தடவை 'ஐ'செக்கப் செஞ்ச்சிக்கலாமே..!

   Delete
  3. @ மாயாவி

   சிம்ப்ளி செம! உங்கள் முயற்சி பலனளிக்க வாழ்த்துகள்!!

   Delete
  4. வேதாளரே, அருமையான முயற்சி. பாராட்டுகள்.

   ஆன்லைனுடன் லயன் ஆபீஸ் அட்ரஸும் போன் நம்பரும் கொடுத்திருந்தீர்களெனில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் கருதுகிறேன்.!!!

   Delete
 59. சேலம் டெக்ஸ் உங்களோடு இருப்பவர்?

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஆசிரியரோடு இருப்பது நான்...சென்னையில் அரங்கத்தின் உள்ளே அனல் அடித்ததால்,மரத்தடி ஏசியில் நின்று உரையாடி மகிழ்ந்தோம். அப்போது க்ளிக் யது...நம் ஸ்டால் அருகே எமர்ஜன்சி எக்ஸிட்ம் ,அருகேயே இயற்கை ஏசி மரங்கள் இருந்ததும் நாம் செய்த புண்ணியம்...

   Delete
  2. ஹா..ஹா..ஹா.....SHINESMILE FOUNDATION @ உங்கள் கேள்வியை படித்ததும் ரஜினி-அமிதாப்-போப் ஜோக் நினைவில் வருகிறது.....:-)

   Delete
  3. அபி சார்,
   படம் சிறிதாய் இருந்ததால் சற்று சந்தேகமாகிவிட்டது. அப்புறம் அந்த ஜோக்கை சொல்வது நல்லது.நானும் தெரிந்து கொள்கிறேன்.அதோடு சென்னை புத்தக கண்காட்சியில் எடுக்கப்பட்ட படம் என்பதால், நான் வேறு யாராவது இருக்குமோ என்று யோசித்து கொண்டிருந்தேன்.எனது Display ' படம் மிகவும் சிறிதாய் தெரிவதால் ஏற்பட்ட சந்தேகம்.

   Delete
 60. Cinebook இதழ்களை பற்றி தேடிய போது Cédric என்னும் சிறுவனை மையமாக வைத்து வெளிவரும் கதைகளை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.சிறுவயதில் Cedric கார்ட்டூன்களை நான் பார்த்திருக்கிறேன்.மிகவும் ஜாலியாக செல்லும் ஒரு தொடர் இது.பிரான்கோ பெல்ஜிய கதைகளை அலசும் போது Cédric பையனையும் ஒரு தடவை பார்வையிடலாமே..!

  ReplyDelete
 61. @எடிட்டர்:

  "குட்டி மாற்றம்", "துடைப்பம்களும்", "காலணிகளும்", "பேஸ்தடித்து (என்ன அர்த்தம்?)"

  நல்ல தேர்ந்தெடுத்த வார்த்தை உபயோகங்கள்.

  ReplyDelete
 62. ஆண்டுமலர் அட்டைப்பட மிக சிறப்பாக வந்துள்ளது. இவ்வாரே கேப்டன் டைகர் இதழ்களும் கம்பீரமான ஒரிஜினல் சித்திரங்களுடன் மட்டும் வந்திருந்தால்.. ஹூம்ம்!!!

  really looking forward to Johnny and Betty Barnowsky.

  ReplyDelete
 63. சார் ரோஜரின் மர்மக் கத்தி மொக்கையில் சேர்க்க இயலாதே. தயவு செய்து வாய்ப்பு கிடைக்கையில் அதனை வண்ணத்தில் வெளியிடலாமே.

  ReplyDelete
 64. நமது திட்டமிட்டலில் கணிக்க முடியாதது குறித்து,...... குத்துமதிப்பாக தான் திட்டமிடமுடியும் என்பதை உணர்கிறேன் ...படைப்பாளிகளே கவுத்தா... என் செய்வது.........

  இத்தகைய சூழலில் மாற்றம் நல்லது, மொக்கை கதையை தயாரிப்பில் ஓரம் கட்ட என்றும் thumbs up !,...

  //பிரினஸ் கதைகள்//
  Year புக் இல் வரும் பிரினஸ் எத்தனை பக்க தொகுப்பு எடிட்...

  நாம் அறிவித்த ABC பிரினஸ்ஐ நான் ஒரு 120பக்க புத்தகத்தை எதிர் பார்க்கிறேன், ABC பிரினஸ் திட்டமிடலில் உள்ள கதை அத்தகைய கதை தானா எடிட் சார் ....

  ReplyDelete
  Replies
  1. //ABC பிரினஸ்ஐ நான் ஒரு 120பக்க புத்தகத்தை எதிர் பார்க்கிறேன்//

   got it 96 pages ..

   Delete
 65. சாா் எப்போது தான் ரோஜரை வெளியிடுவீா்கள் பீளிஸ் ஏதோ நல்ல கதை இந்த தொடாிலும் இறுக்கு அள்ளவா அதை வெளியிடலாமே(!!)

  ReplyDelete
 66. Cinebook இல் நமது தளம் official Indian online store என அழைக்க கண்டேன் எடிட் ஆனால் நமது தளம் down ஆக இருப்பதையும் கண்டேன் http://comics4all.in/ தொடர்கிறதா ...........

  ReplyDelete
 67. வணக்கம் சார். ரோஜர் கதையை தவிர்க்க உங்கள் பக்க விளக்கம் ஏற்க கூடியதாகவே இருந்தாலும், பிரின்ஸ், ஜானி, பெட்டி காம்பினேஷன் எங்கயோ இடிப்பது போலுள்ளது

  ReplyDelete
  Replies
  1. ரோஜா் இல்லாமல் தான் காம்பினேஷன் இடிப்பது போலுள்ளது எனக்கு மிக பொிய வறுத்தம் ரோஜா் எப்போது வறும்(!!!!)

   Delete
  2. அகிக்.காம்பினேஷன் இடித்தால் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டால் இடிக்காது!!!!

   Delete
 68. classic reprint எங்கே பணம் கட்ட வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. என் அக்கௌன்ட்ல கூட நீங்கள் பணம் கட்டலாம் கணேஷ்!! :-)

   sunshine லைப்ரரி accountக்கு பணம் செலுத்தனும்!

   Delete
 69. ரோஜா் வறும் என்று எதிர்பா்த்தேன் ஏமற்றம்
  ரோஜா் இந்த ஆண்டு எப்போது வறும்(!!/??)

  ReplyDelete
 70. வர்ரூரூரூம்....ஆனா..வராதூதூதூ.....!!!

  ReplyDelete