Powered By Blogger

Sunday, April 10, 2016

இது கூட்டணிகளின் சீசன் !

நண்பர்களே,
            
வணக்கம். இவையெல்லாமே தென்மாவட்டங்களுக்கு மாத்திரமே சொந்தமா? என்று தெரியவில்லை – ஆனால் ஒவ்வொரு ஏப்ரலின் ஆரம்ப / இரண்டாவது வாரயிறுதிகள் இங்கு ஒவ்வொரு ஊரிலும் “பங்குனிப் பொங்கல்” திருவிழாக்களாகக் களைகட்டுவது இன்னமும் தொடர்கிறது! ஊரும், மக்களும் விழாக்கோலம் பூணும் போது – மண்டையைப் பிளக்கும் வெயில் கூட ஒரு விஷயமாகவே தெரிவதில்லை! திரும்பிய திசையெல்லாம் கலர் கலராய் சீரியல் செட் தோரணங்கள்; ராட்டினங்கள்; குச்சி ஐஸ் வண்டிகள் என கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மினுமினுப்பதை ரசிப்பதே ஒரு அழகான அனுபவம் என்பேன்! அதிலும் நமது அலுவலகம் இருப்பது அம்மன் கோவிலிலிருந்து கூப்பிடு தூரத்தில் எனும் போது – அந்த ஆரவாரம் நம்மையும் ஒட்டிக் கொள்வதில் வியப்பில்லை! ஞாயிறு தொடங்கி, திங்கள் & செவ்வாய் நம் அலுவலகத்திற்கு விடுமுறைகள் என்பதால் ஒரு வண்டி வேலைகளை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டு என் மேஜையை நிரப்பிப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

     மே மாதப் பணிகள் Almost Done என்ற நிலை! நரைமுடி ஷெல்டன் எடிட்டிங்கில் உள்ளார்! நமது நீலச் சுள்ளான் ஸ்மர்ப்ஃப்களோ முற்றிலுமாய் நிறைவு பெற்று – சீக்கிரமே அச்சுக்குச் செல்லக் காத்துள்ளனர்! Black & white வரிசையில் ஆண்டின் முதல் 110 பக்க டெக்ஸ் சாகஸமோ – மொழிபெயர்ப்பின் finetuning கட்டத்திலுள்ளது! இந்த விடுமுறை நாட்களில் அதனை நிறைவு செய்துவிட்டால், நம்மவர்கள் “டாக்டர் டெக்ஸ்” டைப்செட்டிங் பணிகளை மூன்றே நாட்களில் சாத்தி விடுவார்களென்பது உறுதி! இன்னொரு b&w இதழான “சதிகாரர் சங்கம்” இறுதிக்கட்டங்களில் உள்ளது – proof reading பணி மாத்திரமே பாக்கி என்ற நிலையில்! அது மட்டுமன்றி – முத்து மினி காமிக்ஸின் முதல் 3 இதழ்களும் proof reading-ன் பொருட்டு தயாராகக் காத்துள்ளன ! So இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின், கைதூக்கிடலாம்! But please note – குறைந்த பட்சம் மூன்று முறைகளாவது திரும்பத் திரும்ப அதே  பக்கங்களைப் படித்திட / பிழைகளைத் திருத்திட பொறுமை ரொம்பவே அவசியம் என்பதை நினைவூட்டுகிறேன்! நிச்சயமாய் ஒரே வாசிப்பில் சகலத்தையும் சரிபார்த்திடல் next to impossible!

     ஏப்ரல் இதழ்கள் பற்றிய Surf Excel சலவைகள் இன்னமும் நிறைவு பெற்றிரா நிலையில் மே மாதத்தின் மீது பார்வைகளை ரொம்பப் பதிக்க வேண்டாமே என்ற மகா சிந்தனையில் மே மாதத்து அட்டைப்படங்களை ; preview-களை அடுத்த ஞாயிறுக்கு வைத்துக் கொள்வோமென்று நினைத்தேன்! So- இந்த வாரத்துப் பதிவு ஏப்ரலின் 3 இதழ்கள் பற்றிய அலசலுக்கும், அவை மூன்றிற்குமிடையே நிலவும் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை மீது பார்வைகளைப் பதியச் செய்வதற்காகவும் மாத்திரமே! ஞாயிறு காலை சற்றே சாவகாசமாய் 11 மணி முதல் – மதியம் 1 மணி வரை இங்கே ஆஜராகினால் லார்கோவையும், இரவுக்கழுகாரையும், உட்சிட்டி ஆசாமிகளையும் பிரித்து மேய்ந்து விடலாம்! நீங்கள் ரெடியெனில்- நானும்!

     Without a doubt – ஏப்ரலின் அதிரடி “தலையில்லாப் போராளி” தான் என்றாலும் – சிறுகச் சிறுக ‘லார்கோ மேஜிக்‘கும் முன்னணிக்கு வருவதை உணர முடிகிறது! அந்தச் சித்திர அற்புதம், vibrant வர்ணங்களோடு கைசேர்க்கும் போது – பலனாகிடும் விருந்து எத்தனை சுவையானது என்பதை ”கடன் தீர்க்கும் நேரமிது” நிரூபித்துள்ளது! லார்கோவுக்கும், டெக்ஸுக்கும் மத்தியில் இம்முறை அழுத்தமாய் ஒரு ஒற்றுமை கண்ணில்பட்டது! அது தான் இருவருக்கும் இம்முறை சுற்றியிருந்துள்ள பக்கவாத்தியக் கோஷ்டி! லார்கோவின் சாகஸத்திலும் சரி, டெக்ஸின் அதிரடியிலும் சரி – இம்முறை அவரவரது முழு டீமும் கதை நெடுகிலும் active ஆக இடம்பிடித்துள்ளதைக் கவனித்தீர்களா? சல்லிவனில் தொடங்கி; நிர்வாகி கோக்ரென்; தோஸ்த் சைமன்; (லேடி) இன்ஸ்பெக்டர் மர்ஜானா; காரியதரிசி பென்னிவின்கில் ; பைலட் சில்க்கி என்று அத்தனை பேரும் ஆங்காங்கே தம் வேலைகளைச் செய்து வர, லார்கோவின் அதிரடிகள் வழக்கத்தை விட வீரியமாய் தோன்றியதாய் எனக்குத் தோன்றியது! அதே போல – டெக்ஸுடன், வெள்ளிமுடியார்; கிட்; டைகர் ஜாக் மட்டுமன்றி விஞ்ஞானி மோரிஸ்கோ & யூசெபியோவும் இணைந்திருக்க – கதை முழுவதிலும் ஒரு கல்யாண வீட்டுக் கலகலப்பு நிலவியது போல் பட்டது! சுடுகாடும், சவங்களும், தலையில்லாப் பிண்டங்களும் நிறைந்ததொரு கதையில் ‘கல்யாணவீட்டுக்‘ களையா? என்று நீங்கள் புருவத்தை உயர்த்திடலாம்! ஆனால் நான் mean பண்ணியதோ- கதை நெடுகிலும் ரேஞ்சர் டீமின் total presence இருந்த ஆரவாரமான கோணத்தில் தான்!

     Which brings us to the question – ‘சோலோ‘வாய் துவம்ஸம் செய்திடும் நாயகர்களை விடவும் heroes கூட்டமாய் பவனி வரும் கதைத் தொடர்கள் ஹிட்டடிக்கும் வாய்ப்புகள் அதிகமா ? என்பதே! அமெரிக்க காமிக்ஸ் மார்கெட்டில் போல சூப்பர் ஹீரோக்கள் மெகாக் கூட்டணிகள் அமைத்து ஒட்டுமொத்தமாய் ஒரே கதைக்குள் சாகஸம் செய்வதெல்லாம் நமக்கு ஒத்து வராது! ஆனால் ஹீரோவுக்கு ஒத்துக்குழல் ஊதிட தாட்டியமாய் பலர் வருகை தரும் போது- more the merrier என்று நாம் ஜாலியாய் ரசிக்கிறோம்! கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் – ‘ஜோடி‘ சேரும் நாயகர்களின் பட்டியல் கொஞ்சம் நீளம் தான் என்பது புரியும்!
 • ஸ்பைடருக்கொரு ஆர்டினி
 • ரிப் கிர்பிக்கொரு பட்லர் டெஸ்மாண்ட்
 • கேப்டன் டைகருக்கொரு ஜிம்மி
 • லார்கோவிற்கொரு சைமன்
 • லியனார்டோவுக்கொரு ஆல் லெகை!
 • டைலன் டாக்கிற்கொரு க்ரௌச்சோ
 • கேப்டன் பிரின்ஸிற்கொரு பார்னே!
 • ஜில் ஜோர்டனுக்கொரு அசிஸ்டெண்ட்! ((அட..பெயர் ஞாபகத்துக்கு வராது சண்டித்தனம் செய்கிறது!!)
 • சிக்பில் & குள்ளனுக்கு – ஷெரீப் & ஆர்டின்

     துணை தேடும் நாயகர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போவது நிச்சயம் – நமது முந்தைய வெளியீடுகளை இன்னும் பொறுமையாய் புரட்டினால்! CID லாரன்ஸுக்கு – ஜுடோ டேவிட்டையோ, ஜானி நீரோவுக்கு – ஸ்டெல்லாவையோ துணை என்று சொல்வது பொருத்தமாகாது என்பேன் – becos அடிப்படையிலேயே அந்த டீமே ஒரு கூட்டணி தான்! And ஒருத்தருக்குள்ள முக்கியத்துவம் அடுத்தவருக்கும் உண்டு தான்! ஆனால் மேற்கண்ட நமது பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆசாமிகள் சம பலத்தவர்களல்ல என்று சொல்லலாம்! சீரியஸான கேப்டன் பிரின்ஸை விட “தண்ணி வண்டி பார்னே” ஆற்றலில் ஒரு மாற்று குறைவு தான்- ஆனால் கதைக்களத்தின் இறுக்கத்தை சற்றே மட்டுப்படுத்திட இது போன்ற sidekicks ரொம்பவே தேவை தான்!
     நமது இரவுக் கழுகாரின் சகாவான வெள்ளிமுடியாரை sidekick என்று மட்டம் தட்டிவிட முடியாது / கூடாது தான்! ஆற்றலில், வேகத்தில், விவேகத்தில், வீரத்தில், ஒழுக்கத்தில், நட்பில், பரந்த சிந்தனையில் நமது ஆட்டுத்தாடிவாலா யாருக்கும் சளைத்தவரில்லை! அதே போல வெளித் தோற்றத்துக்கு ‘பெருசு‘; கிழ நண்பா‘; ‘கிழட்டு ஒட்டகமே‘ என்றெல்லாம் வாருவது டெக்ஸுக்குப் பொழுது போக்காக இருந்தாலும் – கார்சனை விட்டுக் கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார் என்பது அந்த நட்பின் உறுதியைப் பார்க்கும் போது புரிந்திடும்! ‘டெக்ஸ் வில்லர்‘ என்ற பெயரோடு மெய்யாகவே அந்நாளைய வன்மேற்கில் யாரும் குப்பையோ ; தோட்டாவோ கொட்டியதாகத் தெரியவில்லை; ஆனால் “கிட் கார்சன்” என்று நிஜமாகவே ஒரு ஆசாமி இருந்திருப்பதாக வரலாறும்; விக்கிபீடியாவும் சொல்கின்றன! 1809 முதல் 1868 வரை வாழ்ந்தவர் - ஒரு வேட்டையனாக, கானக கைடாக; செவ்விந்திய ஏஜெண்டாக; அமெரிக்க இராணுவ அதிகாரியாகப் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார்! எனினும் இவர் பெயரளவிற்கு மாத்திரமே நமது வெள்ளிமுடியாருக்கு நெருங்கியவர் என்று சொல்லலாம் ! கதையின் போக்கில்- ஒரிஜினல் கார்சனின் வாழ்க்கைக்கும், நமது வறுத்த கறிப் பிரியரின் character-க்கும் துளி கூட சம்பந்தம் கண்டிட இயலாது! 
இவர் தான் அந்த ஒரிஜினல் கிட் கார்சன் ! 
டெக்ஸின் ஒரு கணிசமான சாகஸங்களின் எண்ணிக்கை வரைக்கும் கார்சனும் ஒரு சீரியஸான ஆசாமியே! எப்போதாவது திருவாய் மலர்ந்து வறண்டதொரு நையாண்டியை உதிர்ப்பதைத் தாண்டி, பாக்கி நேரங்களிலெல்லாம் வின்செஸ்டரை முழக்குவதே இவரது முக்கிய வேலையாக இருந்து வந்தது! பின்நாட்களில், டெக்ஸின் தலைமைப் பொறுப்பை மௌரோ போசெல்லி ஏற்றுக் கொள்ளத் துவங்கியது முதலாய் – கார்சனுக்குச் சன்னமாதொரு ஜாலியான சாயம் பூசப்பட்டதென்று சொல்லலாம்! குறிப்பிட்டதொரு காலகட்டம் வரையிலும் தலைவரின் படங்களில் ஆக்ஷன் மசாலாக்கள் பெரும்பாலும் இடம்பிடித்தது போலவும்; பின்நாட்களில் காமெடி ஆசாமிகளின் ஒத்தாசையோடு தலைவரே நம்மைக் கிச்சுக்கிச்சு மூட்டியதும் தான் டெக்ஸுக்கு நல்கப்பட்ட treatment-ஐ நினைத்துப் பார்க்கும் போது ஞாபகம் வரும் எனக்கு! ‘சிகப்பாய் ஒரு சொப்பனம்‘ வாயிலாக டெக்ஸின் இரண்டாவது இன்னிங்சை 2013-ல் நாம் துவங்கிய சமயம் தான் இதனை சீரியஸாக(!!) நடைமுறைப்படுத்தத் தோன்றியது எனக்கு! வழக்கம் போல சீரியஸான பாணியிலேயே அந்தக் கதையின் தமிழாக்கத்தை கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க – ஒரு சாவகாசமான டிசம்பர் ஞாயிறு பிற்பகலில் மேஜராய் ஒரு பட்டி-டிங்கரிங் பார்க்க ஆரம்பித்தது நினைவில் உள்ளது! ஒரிஜினலிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்துத் தெளிவாய் படித்த போது – ஒரிஜினலில் மெலிதாய் இழையோடும் humor தட்டுப்பட்டது! சரி, அதனை ஏன் விட்டு வைப்பானேன் ? என்று அந்தக் கதையின் பெரும்பான்மையான டெக்ஸ்-கார்சன் interaction பகுதிகளை முற்றிலுமாய் மாற்றியமைத்தேன்! அந்த பாணி உங்களின் பாராட்டுக்களை ஏகமாகவே பெற்றுத் தந்ததால் தொடரும் நாட்களில் கார்சனின் banter-க்கு சற்றே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினேன்! தொடர்ந்திட்ட “பூத வேட்டை”யில் அதிக வாய்ப்புகள் இல்லாது போயினும், “நிலவொளியில் ஒரு நரபலி” யினை எழுதியதே நான்தான் என்பதால் துவக்கத்திலிருந்தே ஒரு light vein-ஐ தளமாக்கிட முயற்சித்திருந்தது நினைவுள்ளது! கார்சனை ஜாலியாக்கும் அதே மூச்சில், டெக்ஸின் வசனங்களில் அழுத்தமும், வீரியமும் அதிகமாக்குதல் பக்கமாகவும் கவனத்தைத் தந்தாக வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன்! இரவுக்கழுகார் ஒரு larger than life நாயகர் என்பதால் “ஓங்கியடிச்சா ஒன்னரை டன்” என்ற ரீதியில் மசாலாப்பூச்சோடு இவருக்கான நடையின் பாணி இல்லாவிட்டாலும் வழக்கமான பாணியிலிருந்து ஒரு படி உயரே இருந்தால் ரசிக்கும் விதமாகயிருக்குமென்று நினைத்தேன்! So 2013 முதற்கொண்டே இரவுக்கழுகாரின் கதைகளில் டயலாக்குகளுக்கு ஏகமாய் கவனம் தர அவசியமானது! இந்தாண்டின் கதைகளுள் மார்ச் & ஏப்ரல் சாகஸங்களில் full team ஆஜரானதைத் தொடர்ந்து – கதைகளிலும் ஒரு துள்ளல் இருந்ததாகத் தோன்றியது எனக்கு! 

So இந்த ஞாயிறுக்கான உங்கள் கேள்வி # 1 இது தான்:டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்? கேள்வி # 2: கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா? போனெல்லியில் அவர்களது ‘டெக்ஸ் டீமோடு‘ பேசக் கிடைத்த சொற்ப அவகாசத்தின் போது நான் கேட்டதெல்லாம் இது தான்: ‘கார்சனுக்குக் கால்கட்டு போடும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?‘ என்பதே! பேனாவால் பேசுவதையே அதிகம் விரும்பும் போசெல்லி மந்தகாசமாய் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார்! இதே போன்றதொரு நாயகர் மட்டும் நம்மூரில், நம் மசாலாத்தோய்ந்த கைகளில் சிக்கியிருந்தால் இந்நேரத்த்துக்கு ‘பகல் ஆந்தையார்‘ என்றதொரு அடைமொழியோடு கார்சனைத் தனித்தடத்தில் இறக்கி விட்டு ‘சும்மா அதிர‘ விட்டிருக்க மாட்டோமா? என்று நினைத்துக் கொண்டேன்!

     லார்கோவின் சாகஸங்களிலுமே சைமனின் வருகை எப்போதுமே ஒரு welcome relief என்று சொல்லலாம்! நியூயார்க்கின் மையத்தில் குடல் வாய்க்கு வரும் வேகத்தில் மோட்டார் பைக்கில் பல்லியைப் போல் தொற்றிக் கொண்டு திரிவதில் ஆகட்டும்; ‘சைமன் குட்டிப்பா‘வாக சுற்றி வரும் திரை நாயகன் அவதாரத்திலாகட்டும்; லிட்டர் லிட்டராய் ஜொள்ளை ஆம்ஸ்டர்டாமின் வீதிகளில் தெளித்துச் செல்லும் casanova ரூபங்களிலாகட்டும் – சைமன் வரும் கட்டங்களிலெல்லாம் voltage கூடுவது நிஜம் தானே? கோடீஸ்வரக் கோமானுக்கு தோஸ்தாக, ஒரு பிக்பாக்கெட் பக்கிரி என்பது கதாசிரியர் வான் ஹாம்மேவின் கற்பனை ஜாலவித்தையென்றால் – ஒரு சொங்கியான தோற்றத்தைத் தந்து அவன் மீது ஒரு விசித்திர வாஞ்சையை நாமெல்லாம் விதைக்கச் செய்யும் புண்ணியம் ஓவியர் பிலிப் ப்ரான்கைச் சாருமல்லவா? உயிரையே பணயம் வைத்து, நண்பனை மீட்கும் முயற்சியில் தன் சகலத்தையும் இழக்கத் துணிவது தான் லார்கோவின் கதாப்பாத்திரத்தின் வலிமை எனும்போது – அந்த நட்புக்கு அருகதையானவனாய் தனது “கோக்குமாக்கு பாணியிலேயே” சைமன் சுற்றித் திரிவது தான் highlight! ‘ஆ... நண்பா! என்னைக் காப்பாற்றி விட்டாயே... உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?‘ என்றெல்லாம் சைமனை வசனம் பேசச் செய்திருந்தால் இந்தக் கதாப்பாத்திரத்தை நாம் மறுமுறை திரும்பிப் பார்த்திருக்க மாட்டோம்! ஆனால் அந்த இக்கட்டுகளிலும் தெனாவட்டாய், நக்கலாய் பேசும் பாணி தானே சைமனின் அடையாளமே? ‘ஆதலினால் அதகளம் செய்வீர்‘ நட்பின் வலிமைக்கொரு மைல்கல் இதழ் என்று சொன்னால் மிகையாகாது! இங்கே தான் இவ்வாரத்தின் கேள்வி # 3 உங்களுக்கு : லார்கோ-சைமன் கூட்டணியில் இதுவரையிலான டாப் சாகஸம் எதுவென்று சொல்வீர்கள்?

     ஏப்ரலின் புது வரவுகளின் மூன்றாவது ஆல்பம் கூட இந்தக் கூட்டணிப் படலத்திற்கொரு extension எனலாம்! ஆரஞ்சு நிற மண்டையைப் படிய வாரி விட்டு வருவதும், கட்டம் போட்ட மஞ்சள் சொக்காயை தெருமுனை லாண்டிரியில் அயர்ன் பண்ணிப்போட்டு வருவதையும் மாத்திரமே கடமையாகக் கொண்ட சிக் பில்தான் அத்தொடரின் நாயகர் என்று சொன்னால் அவரது பாட்டி கூட ‘கெக்கே பிக்கே‘ என்று பல்லைக் காட்டி விடும் ! ஷெரீப் டாக்புல்லும்; அம்மாஞ்சி ஆர்டினும் இல்லாது போனால் இந்தத் தொடரே என்றைக்கோ காலாவதியாகியிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேது? ஒரிஜினல் கவுண்டர் + செந்தில் ஜோடி என்று இந்த நீதிக்காவலர்களைக் கைகாட்டினால் பொருத்தமாக இருக்குமல்லவா? சமீப ஆண்டுகளில் – இன்னும் குறிப்பாய் சொல்வதானால் ஏப்ரல் 2013 முதல் இந்த ஜோடிகளின் வசனநடைகளுள் இயன்றளவிற்கு நகைச்சுவைத் தூவலை ஜாஸ்தியாக்கிடலாம் என்பதை நான் தீர்மானித்தது “ஒரு கழுதையின் கதை”யிலிருந்தே! அழகி லானாவை மணமுடிக்க ஆர்டினும், மொட்டை பாஸ் டாக்புல்லும் அடிக்கும் லூட்டிகள் வகையான களமாக அமைந்த போது – என் வேலை சுலபமாகிப் போனது! இம்மாதம் கூட ஷெரீப்பும், ஆர்டினும் பேசிக் கொள்ளும் பகுதிகளை எழுதுவது ஒரு சூப்பர் ஜாலி அனுபவமாய் அமைந்திருந்தது! So கூட்டணியில் கரை சேரும் கட்சியெனில் அதில் பிரதானம் சிக் பில் கட்சிதான் என்று சொல்லலாம்! அந்நாட்களது சிக்பில் கதைகளைப் புரட்ட எப்போதாவது நேரம் கிடைக்கும் போது – அவற்றின் நகைச்சுவை quotient-ஐ இன்னமும் சிறப்பாக்கியிருக்கலாமோ என்று தோன்றும் ! நேரம் கிடைத்தால் மறுபதிப்புகளில் அதனைச் செய்திடலாம் என்றும் தோன்றும்.....but அந்த ‘நேரம்‘ தான் கடைகளில் வாங்கிடவே முடியாததொரு பொருளாகவே தொடர்கிறது! தற்போது பணியாற்றி வரும் ‘நிழல் 1... நிஜம் 2‘ கதையினில் கொஞ்சமாய் மாற்றங்கள் செய்ய விழைந்திடுகிறேன்!

     So இந்தக் கூட்டணி சீஸனில் நமது ஏப்ரல் கூட்டணிகள் பற்றிப் பார்த்த திருப்தியோடு புறப்படுகிறேன்! சந்தர்ப்பம் கிடைக்கும் இன்னொரு ஞாயிறின் போது – இன்னும் மீதமிருக்கும் கூட்டணி பார்டிகளைப் பற்றிப் பேசுவோமா?! குறிப்பாக மாடஸ்டி & கார்வின் கூட்டைப் பற்றி! ஒரு சன்னமான அணி இப்போதே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் ‘ஜிவ் ‘லென்று பேரணியைத் துவக்கியிருப்பது நிச்சயம் – மஞ்சள் கொடியை ஏந்திப் பிடித்தவாறே! அந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இப்போதே மனத்திரையில் ரசித்தபடிக்கே விடைபெறுகிறேன் all! See you around soon! Bye for now!

P.S : SELFIE with TEXதொடரட்டுமே !! மேற்கொண்டு வந்துள்ள செல்பிக்களை காலையில் upload செய்து விடுவேன் !! 

அப்புறம் சென்ற Caption writing போட்டிக்கான பரிசைப் பரணிலிருந்து தேடித் பிடித்து விட்டபடியால் இந்த வாரத்தில் - ஈரோடு நோக்கிப் பாய்ந்திடுவார் ஹெலிகாரில் !! அந்த சந்தோஷத்தோடு - இதோ இவ்வாரப் போட்டி !! 

356 comments:

 1. முதல்
  வணக்கம் நண்பர்களே ...!

  ReplyDelete
 2. வாங்க நாம கூட்டணி வெச்சுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. எப்பொழுதும் மாறாத கூட்டணி நம்ம காமிக்ஸ் கூட்டணி தானே ...!

   Delete
 3. ஜூப்ப்ப்ப்ப்ப்ப....ரே!!!

  ReplyDelete
 4. இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின் நான் ரெடி சார்

  ReplyDelete
 5. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் விடுமுறை நாள் வணக்கங்கள்

  ReplyDelete
 6. காமிக்ஸ் காதலர்களே தேவதைக்காக அணி திரள்வோம் மாடஸ்டிக்கு இவ்வருடமே இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் ஆசிரியரே மனது வையுங்கள் தேவதையை கண்ணில் காட்டுங்கள் இனி வருடம் தேவதைக்கு குறைந்தபட்சம் 3 வாய்ப்புகளாவது வழங்க வேண்டும் என ஆசிரியரிடம் ஒரு கோரிக்கை வையுங்கள் நண்பர்களே

  ReplyDelete
 7. கேள்வி எண் 1 இது தான்: “டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்?”

  60%

  கேள்வி # 2: கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா?

  சிலபல நேரங்களில் நரைமுடி தோழன் இல்லாதா கதைகளில் சுவராஸ்யங்கள் குறைவே . ஜோடி கதைகளே முண்ணணியில் உள்ளது நரைமுடியார் இல்லாகதைகள் போரடிக்கவே செய்கிறது. உதாரணம்
  த.வா.குரங்கு, பளிங்குசிலை மர்மம், டிராகன் நகரம், ரத்த முத்திரை, கழுகு வேட்டை, கா.க காலம், நில் கனி சுடு மந்திரமண்டல்லம், மரணதுதர்கள் இருவரும் ஜோடிகளாக அதகளம் செய்தகதைகளே

  தனி டேக்ஸ் /சில கதைகளை தவிர்த்து/ கதைகள் வழுவிழந்துவிடுகிறதே

  கேள்வி # 3 லார்கோ-சைமன் கூட்டணியில் இதுவரையிலான டாப் சாகஸம் எதுவென்று சொல்வீர்கள்?

  321 து இதழான துரத்தும் தலைவிதியும்
  323 து இதழான ஆதலினால் ஆதகளம் செய்விரும்

  ReplyDelete
 8. டெக்ஸ் கதைகளில் கார்சனின் பங்கு 50% லார்கோ-சைமன் கூட்டணியில் எனக்கு பிடித்தது துரத்தும் தலைவிதி!

  ReplyDelete
 9. என் பெயர் டைகர் எந்த அளவில் தயாராக உள்ளார்? June புத்தக திருவிழாவில் எதிர்பார்க்கலாமா?

  ReplyDelete
 10. ஆசிரியருக்கும், மற்றும் கா.கா. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இன்று ( ஞாயிறு) காலை என்னுடைய என்னுடைய மகனுடைய பெயர்சூட்டுவிழா. கிட்டத்தட்ட 1 மாதமாக பைரவரின் வேலையைக் குத்தகைக்கு எடுத்தது நாளை மாலையுடன் நிறைவுக்கு வரும் என நினைக்கிறேன். நேற்று மதியம் வரை வாட்டி வதைத்து வந்த வெயில் மாலையிலிருந்து காணாமல் போய் சில நேரம் தூறலுடன் சிலுசிலுவென்ற சூழல். அற்புதம். அதைப்போலவே கார்சன் உடன் வரும் கதைகள் கோடை வெயிலிலும் இது போன்ற சூழல் நிழவுவதைப்போல மனதில் ஒரு புன்னகையை நிச்சயம் பூக்கச் செய்யும்.தற்போது கர்சனின் பங்கை நீங்கள் கையாளும் விதம் அருமை

  ReplyDelete
 11. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள்..

  ReplyDelete
 12. “டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்?”என்னை பொறுத்த வரை 50 இற்கு 50% கார்சனுக்கு பங்கு உள்ளது என்றே உறுதியாக நம்புகிறேன். கார்சன் இல்லாத டெக்ஸ் இன் சாகசம் எல்லாமே ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றுவது மட்டும் நிஜம் "லார்கோ-சைமன் கூட்டணியில் இதுவரையிலான டாப் சாகஸம் எதுவென்று சொல்வீர்கள்?" என்னை பொறுத்த வரை "ஆதலால் அதகளம் செய்வீர் "

  ReplyDelete
 13. கார்சன் : இந்த வார கேப்ஷன் போட்டியில் வெற்றி பெற்றால் குளிர்ந்த பீரும் சூடான வறுத்த கறியும் பரிசு
  குதிரை : கொள்ளு புல்லு பரிசுன்னா நானே கூட கலந்துப்பேன். இந்த ஆள் சொல்றதை நம்பி கலந்து கிட்டு ஜெயிச்சாலும் வறுத்த கறியை மட்டும் தரமாட்டான்

  ReplyDelete
 14. கார்சன் : இந்த வார கேப்ஷன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு குளிர்ந்த மற்றும் சூடான பரிசு கண்டிப்பாக காத்திருக்கிறது
  குதிரை : முன்னெல்லாம் போட்டியிலே க லந்துகிட்டு ஜெயிக்கலன்னாலும் என்ன பரிசுன்னாவது சொன்னாங்க. அதில ஒரு திருப்தி கிடைச்சுது. இப்போவெல்லாம் போட்டியை அறிவிச்சுட்டு என்ன பரிசுன்னு சொல்ல மாட்றாங்க. அதான் கவலையா இருக்கு

  ReplyDelete
 15. காலை வணக்கம்....

  ReplyDelete
 16. காலை வணக்கம்....

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. எடிட்டர் சார்.வணக்கம் தலையில்லாபோராளி DTS Sound இல்லாமல் வீட்டிலிருந்தபடியே தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தை அளித்தது. ஆனால் Johnny depp நடித்த Sleepy Hollow வின் திகிலும் விறுவிறுப்பும் இதில் சற்று குறைவே. ஆரம்பத்தில் விசு படம் போல அதிகமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேச்சை சற்று குறைத்திருக்கலாம். இந்த சைஸ் இந்த கதைக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட். எப்போதும் உள்ள சைசில் வெளியிட்டிருந்தால் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்குமாவென தெரியவில்லை. ஆனால் இதே சைஸில் விதி போட்ட விடுகதையை வெளியிட்டிருந்தால் அது இன்னும் மாபெரும் வெற்றியடைந்திருக்கும்.இனி மேல் பழைய சைஸில் டெக்ஸை பார்க்கையில் சிறிய மனவருத்தம் கண்டிப்பாக வரும். எனவே அடுத்த ஆண்டு எல்லா டெக்ஸ் கதைகளையும் இதே சைசில் வெளியிட வாய்ப்புள்ளதா சார்?

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பத்தில் டெக்ஸ் கார்சன் உரயாடலும் என்னவோ போல

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. அல்லாருக்கும் காலை வணக்கமுங்கோ :))
  .

  ReplyDelete
 21. தோழர்களே இவ்வளவு நாள் நாம் ஆவலாய் காத்துக்கிடந்த நேரம் இதுதான். நம் தலைவி மாடஸ்டியின் கண்பார்வைக்கு நமது எடிட்டர் சற்றே மயங்க ஆரம்பித்துள்ளார். அந்த மயக்கத்திலிருந்து எடிட்டர் விடுபடுவதற்குள் ஒரே அமுக்காக அமுக்கி தலைவிக்கு அடுத்த ஆண்டு கூடுதல் இடமும் இந்த ஆண்டு வண்ணத்தில் மாடஸ்டி டைஜஸ்ட்டும் கேட்போம்.ஐந்தாண்டுகளாக எதிரெதிராக வசனம் பேசும் புண்ணியவான்கள் தேர்தல் வந்ததும் கூட்டணி வைத்துக்கொள்வது போல நமது எதிரணியினரும் நம்முடன் மா.ம.ந.கூ.வில்(மாடஸ்டி மக்கள் நலக் கூட்டணி) இணைய வாய்ப்புள்ளது.பழம் நழுவி பாலில் விழும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எதிரணியினர் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. எனது ஓட்டு மாடஸ்டி வண்ண டைஜெஸ்டுக்கே... இந்த வருடத்திலேயே வேண்டும்...

   Delete
  2. கலரில் வருவதால் ஊற்றெடுக்கும் குற்றாலத்துடன் இதற்கு ஓட்டளிக்கிறேன்.....

   Delete
  3. திரு.கரூர் சரவணன் உங்களது Profile picture ஐ பார்த்ததும் சற்றே ஆச்சர்யம். நான் எனது Profile picture க்காக நானே வரைந்து வைத்துள்ள படம் இந்த படத்தை பார்த்துதான் வரைந்து வைத்துள்ளேன். என்னுடையது இவ்வளவு அழகான மாடஸ்டியில்லையென்றாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சென்று வைத்திருந்தேன்.

   Delete
  4. ஜாவா தீவுகளின் அருகில் தோன்றிய சுனாமி, ஆழ்கடலில் அமைதியாக பயணித்து இந்திய கடற்கரையில் தன் ஆக்ரோசத்தை காட்டியதைபோல் மாடஸ்டி ஆதரவு இவ்வளவு நாள் ஆழ்கடல் பயணத்தை மேற்கொண்டு தற்போது கடற்கரையை தொட்டுவிட்டதை எடிட்டர் உணர்ந்து கொண்டார்.இனி எல்லாம் ஜெயம்.!

   Delete
  5. எங்களூரில் சுனாமி சுருட்டியது ஏராளமான விலை மதிப்பில்லா உயிர்களையும் உடமைகளையும். ஆனால் மாடஸ்டி என்ற சுனாமி சுருட்டப்போவது அனைவரின் இதயங்களையும் நண்பரே. சுனாமி வந்தால் கஷ்டம். ஆனால் மாடஸ்டி வந்தால் இஷ்டம்.

   Delete
 22. அனைவருக்கும் வணக்கம். கார்சன் டெக்ஸ் இருவரையும் பிரித்து பார்க்க இயலவில்லை. இருவரும் இணைந்த சாகசங்கள்தான் பட்டையை கிளப்பும். லார்கோ சாகசம் எல்லாமே பெஸ்ட்தான்.

  ReplyDelete
 23. அன்பு ஆசிரியரே...! பல நாட்களாக கேட்க/சொல்ல நினைக்கும் சில எண்ணங்கள்.!!!! 1.மாடஸ்டி வண்ணத்தில் கொண்டு வருவீர்களா?( ஒன்றே ஒன்றாவது). 2. மறுபதிப்புகளில் பழைய அட்டைப்படங்களையே பயன்படுத்தினால் பொருத்தமாகவும்,பழைய நினைவுகள் மீண்டும் மலர வாய்ப்பாக அமையுமே...! 3. மறுபதிப்புகளில் உங்கள் முன்னுரைகள் இடம் பெறாதது ஒரு பெரும் குறையாக அமைகிறது.அதை ஈடுசெய்யும் வகையில் அந்தந்த இதழ்கள் வெளியான தேதிகள், கால கட்டத்தையும், இதழ்பற்றியும் சின்னதாக எழுதலாமே...ப்ளீஸ். 4. அந்த கால கட்டத்தில் நம்முடன் பயணித்த,இப்பொழுது தொடர்பில் இல்லாத தீவிர வாசக நண்பர்களைப்பற்றி ஓரிரு வரிகள் எழுத முடிந்தால் அவர்களை பெருமைப்படுத்தியது போலவும்,மீள் வருகைக்கும் காரணியாக அமையும் என்பது என் தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டி வண்ணத்தில்? +1

   Delete
  2. //ந்த கால கட்டத்தில் நம்முடன் பயணித்த,இப்பொழுது தொடர்பில் இல்லாத தீவிர வாசக நண்பர்களைப்பற்றி ஓரிரு வரிகள் எழுத முடிந்தால் அவர்களை பெருமைப்படுத்தியது போலவும்//---+1

   Delete
  3. மாடஸ்டி வண்ணத்தில்.+1111111111111111111111111

   பாட்சா சார்! காலையிலே மக்கன்பேடா சாப்பிட்ட எபஃக்ட்..!

   Delete
  4. மாடஸ்டி வண்ணத்தில்......

   +100000000000000000000000

   Delete
 24. ஏனோ......நீதிகாவலன் போல...டிராகன் நகரம் போல சட்டென்று லார்கோ தலைப்புகள் கதையை ஞாபகம் படுத்தவிஇல்லை....

  சாரி சர்ர்ர்ர

  ReplyDelete
  Replies
  1. மதியில்லா மந்திரி : பால்யத்தின் நினைவாற்றலுக்கு நிகரேது மந்திரியாரே ?

   Delete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. மந்திரியாரே எங்கே போய் விடுகிறீர்கள் திடீர் திடீரென காணாமல் போய் விடுகிறீர்களே உங்களுடைய காமெடி கமெண்டுகளை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் வாரம் தவறாமல் கலக்குங்கள்

   Delete
  2. எங்ஙங்கத்த....காமிக்ஸ் exchange க்காக Facebook ல தவமா தவம் கிடந்து சுமார் எழுவது புக் சேகரம் பண்ணியாச்சு.
   .....அங்க பிசி...20 புக் மட்டும்தான் பெண்டிங்..
   ....அதுக்கு பிறவு இங்கதேங்...


   நன்றி நண்பரே

   Delete
 26. ///டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்? ///

  கதையின் வெற்றிக்கும், கார்சனுக்கும் சம்மந்தமிருப்பதாய் தெரியவில்லை எடிட்டர் சார்! ஆனால் டெக்ஸுடன் கார்ஸன் இருப்பது டெக்ஸின் பலத்தை அதிகரிப்பதுபோல் இருக்கிறது! டெக்ஸும் கார்சனும் இணைந்து எதிரிகளை நோக்கி துப்பாக்கி முழக்கும்போது எழுந்திடும் ராகமே தனிதான்!
  அதாவது, உங்கள் கேள்வி எண்:2 மிகமிகமிகமிகமிக உண்மை!

  ReplyDelete
 27. // இதழ்களும் proof reading-ன் பொருட்டு தயாராகக் காத்துள்ளன ! So இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின், கைதூக்கிடலாம்! But please note – குறைந்த பட்சம் மூன்று முறைகளாவது திரும்பத் திரும்ப அதே பக்கங்களைப் படித்திட / பிழைகளைத் திருத்திட பொறுமை ரொம்பவே அவசியம் என்பதை நினைவூட்டுகிறேன்! நிச்சயமாய் ஒரே வாசிப்பில் சகலத்தையும் சரிபார்த்திடல் next to impossible //
  I am ready to do this!!!!

  ReplyDelete
 28. 'டைகர் ஜாக்'

  உளவுபார்ப்பவனாகவும், காவல் காப்பவனாகவும், எதிரிகள் தப்பியோடாதவாறு தெருமுனையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுபவனாகவும், ஸ்கவுட்டாகவுமே பயன்படுத்தப்படும் டெக்ஸின் இந்த செவ்விந்திய சகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்படியான கதையொன்று வேண்டும் எடிட்டர் சார்! பாவம், டைகர் ஜாக்கிற்கு 'வோ' என்பதைத் தாண்டி டயலாக்குகள்கூட அதிகம் கிடைப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. இந்த கத ஆரம்பத்துல ிதயே நினைத்தபடி படித்தேன்....நல்ல வேள கிட்டோட விட்டதால வாய திறந்தார்..மனதுக்குள் பேசினார்

   Delete
  2. Erode VIJAY : டைகர் ஜாக்குக்கு மனசுக்குள் மருவாதை ஜாஸ்தியோ என்னவோ - இரவுக் கழுகார் மீதும், வெள்ளி முடியார் மீதும் ! அவர்கள் முன்னே "வோ" என்பதைத் தாண்டி கொட்டாவி விடக்கூட வாய் திறக்க மறுக்கிறார் !

   Delete
 29. /// இதே போன்றதொரு நாயகர் மட்டும் நம்மூரில், நம் மசாலாத்தோய்ந்த கைகளில் சிக்கியிருந்தால் இந்நேரத்த்துக்கு ‘பகல் ஆந்தையார்‘ என்றதொரு அடைமொழியோடு கார்சனைத் தனித்தடத்தில் இறக்கி விட்டு ‘சும்மா அதிர‘ விட்டிருக்க மாட்டோமா? ///


  இரவுக் கழுகார் & பகல் ஆந்தையார் - ஹாஹாஹா! :)))))

  ReplyDelete
 30. ///சென்ற Caption writing போட்டிக்கான பரிசைப் பரணிலிருந்து தேடித் பிடித்து விட்டபடியால் இந்த வாரத்தில் - ஈரோடு நோக்கிப் பாய்ந்திடுவார் ஹெலிகாரில் !! ///

  ஆஆஆஆஆஆ!

  சார்... அதே பரணில் பழைய டெக்ஸு புக்கு ஏதாச்சும் கிடக்குதானு பாருங்களேன்... போன மாசம் வந்த 'டாக்டர் டக்கர்'ஐயே இன்னும் முழுசாப் படிக்கலை!

  ஸ்பைடரையேஏஏஏஏ தான் அனுப்புவீங்களா? இதுக்கு பரிகாரம் கிரிகாரம் ஏதாவது.... :D

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் பிரச்சனை இல்ல விஜி... கூரியர்காரர்கிட்ட என் அட்ரஸ் கொடுத்து டெலிவரி பண்ண சொல்லுங்கள்... செலவு என்னோடது...

   Delete
  2. அது போ.கு.வோட சொத்தாம் ...
   வேறு ஆருக்கும் கிடையாதாம்...

   Delete
  3. இதற்கு எல்லாம் கண் கலங்கலாமா செயலாளர் அவர்களே ...ஒரே வார்த்தை ...பரணிதரன் ..தாரமங்கலம் ..சேலம் அப்படின்னு கவர்ல ஆசிரியரை எழுத சொல்லுங்க ...உங்கள் பாரத்தை எல்லாம் நான் சுமக்கிறேன் .....;-)

   Delete
  4. உங்க அட்ரச குடுங்க ...உங்க கை கூட நோகாம ுங்க வாசல்ல நின்னே கோரியர்ட்ட வாங்கிக்கிறேனே

   Delete
  5. சகோதரரே ஆசிரியரிடம் எனது முகவரியை தந்து விடுகிறேன்

   Delete
  6. @Erode Vijay
   பாருங்கள் சகோதரரே உங்களுக்கு தோல் குடுக்க நண்பர்கள் இருக்கும் பொது எதற்கு கவலை :)
   Mind Voice (Spider புக் வாங்குவதற்கு என்னவெல்லாம் மாயஜாலம் பண்ண வேண்டி இருக்கிறது)

   Delete
  7. //ஸ்பைடர் புக்கேதான் அனுப்புவீர்களா.//

   அதுக்காக மாடஸ்டி புத்தகமா தரமுடியும்.?
   அஸ்கு! புஸ்கு........! ஆசை தோசை அப்பள வடை.!

   Delete
  8. Erode VIJAY : பரிகாரங்கள் என்ன செய்தாலும் - பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வந்து சேரும் !!

   Delete
  9. //பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வந்து சேரும் !! //

   :D

   சகோதரருக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கும் அவர் "பெட்ரோமாக்ஸ் லைட்" பற்றி கவலை பட தேவை இல்லை சார்

   Delete
  10. விஜய் உங்க முகவரி தொலஞ்சிட்டது..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

   Delete
  11. //அதுக்காக மாடஸ்டி புத்தகமா தரமுடியும்.?
   அஸ்கு! புஸ்கு........! ஆசை தோசை அப்பள வடை.!//

   MV Sir : LOL. உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது :-)

   Delete
  12. @ All friends

   ஒரு போட்டியில ஜெயிச்சுட்டு நான் படும் பாடிருக்கே.... அய்யுய்யுய்யுய்யோ..,

   Delete
  13. @ நண்பர் ஈரோடு விஜய் அவர்களே.....!
   யார் என்ன சொன்னாலும், எது கேட்டாலும் காதுல போட்டுக்காதீங்க...! உங்ககிட்டே ஸ்பைடர் புக் முதல்ல கேட்டது நான்தான்.ஞாபகமிருக்கட்டும் ???!!!!!

   ஹீ...ஹீ.....ஹீ....!

   Delete
  14. பரணில் தேங்கி கிடக்கும் பழைய ஸ்பைடர் புத்தகங்களை காலி பண்ணுவதற்கு பெயர்தான் கேப்ஷன் போட்டி!!!!

   Delete
 31. விஜயன் சார்,
  லார்கோ - வழக்கமான கதை, இறுதியில் நமது ஹீரோ எல்லா பிரச்சனைகளையும் தனது அதிரடி மூலம் வெற்றி பெறுவது. லார்கோ கதாபாத்திரம் பிடிக்க காரணம் அவரை ஒரு இயல்பான நாயகனாக காட்டி இருப்பது.

  இந்த கதையில் உங்களின் மொழி பெயர்ப்பு ஹை-லைட், வில்லங்கமான வசனம்களை கூட நெருடல் இல்லாமல் படிக்கும்படி கொடுத்தது.

  லார்கோ கதை ஓவியம் (ரியலிஸ்டிக்) மற்றும் வண்ண சேர்கைகள் சிறப்பாக இருப்பதால் மற்ற வண்ண கதைகளை விட இது சிறப்பாக தோன்ற காரணம். இது டைகர் மற்றும் லக்கி-luke கதைகளுக்கும் பொருந்தும்.

  ReplyDelete
  Replies
  1. அந்த மே மாத சஸ்பென்ஸ் -நிழல் 1 நிஜம் 2-தான் போல...

   Delete
  2. Parani from Bangalore : //லார்கோ கதை ஓவியம் (ரியலிஸ்டிக்)//

   நிறைய sequences-களில்தென்படும் அந்தந்த ஊர்களின் சாலைகளை ; கட்டிடங்களை ; முக்கிய வீதிகளை ; skyline -களை ஓவியர் தானே நேரடியாகச் சென்று போட்டோக்களாய் எடுத்துக் கொண்டு அவற்றின் மீதே வரைகிறார் ! அதனால் தான் இந்த துல்லியம் சாத்தியமாகிறது !

   Delete
 32. //நகைச்சுவைத் தூவலை ஜாஸ்தியாக்கிடலாம் என்பதை நான் தீர்மானித்தது “ஒரு கழுதையின் கதை”யிலிருந்தே! அழகி லானாவை மணமுடிக்க ஆர்டினும், மொட்டை பாஸ் டாக்புல்லும் அடிக்கும் லூட்டிகள் வகையான களமாக அமைந்த போது ///

  ஒரே ஒரு கதையில் வந்த 'அழகி' லானாவின் பெயரெல்லாம் நம் எடிட்டருக்கு ஞாபகத்தில் இருக்குதாம்....

  ஆனால், ஜில்ஜோர்டனின் அஸிட்டென்டின் பெயரை மறந்துட்டாராம்...

  பாத்தீங்களா மக்களே! :P

  ReplyDelete
  Replies
  1. //ஒரே ஒரு கதையில் வந்த 'அழகி' லானாவின் பெயரெல்லாம் நம் எடிட்டருக்கு ஞாபகத்தில் இருக்குதாம்....////---- கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லப்படாது ...

   Delete
  2. @ ALL : ஒரிஜினல் டாக்டர் டக்கர் கூரியரில் கிளம்பவிருக்கும் தகவல் அறிந்த உடனேயே எதிரணித் தலைவர் என்னமாய் பொங்குகிறார் என்பதைக் கவனியுங்கள் மக்களே !!

   Delete
  3. மறுபடியும் டாக்டர் டக்கரேவா? (((((ய்ய்யீயீயீயீக்க்க்))))

   Delete
  4. அடங்கப்பா....! மறுபடியும் டக்கரா..? தூள் டக்கர்மா.....!

   விஜய் கஷ்டப்பட்டு மூளையை கசக்கி நீங்க எழுதுன கேப்ஷனுக்கு கிடைச்ச பரிசு...!

   என்ஜாய்...!

   (எங்கிட்ட மூனு டக்கர் இருக்கார்ங்கிறத யார்கிட்டயும் சொல்லிடாதீங்க....!!! )

   Delete
 33. கேள்வி எண் 1 இது தான்: “டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்?”

  கார்சன், பிரியாணியில் கூடவே வைக்கப்படும் பச்சடி போல சார் ..
  சுவைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையே...

  கேள்வி # 2: கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா?

  ஆம் சார் ,உங்களுக்கு மட்டுமே .அப்படியெல்லாம் இல்லை . சரித்திர நாவல் என்றால் ராஜராஜ சோழனை பற்றியே சுற்றி சுழல்வது போல , டெக்ஸ்சே பிரதானம். மகா அக்பர் போலவே 50ஆண்டுகளாக வெற்றிகரமாக கோலோச்சுவதற்கு காரணம் டெக்ஸின் ஆளுமையே ...

  கேள்வி # 3 லார்கோ-சைமன் கூட்டணியில் இதுவரையிலான டாப் சாகஸம் எதுவென்று சொல்வீர்கள்?

  கான்கிரீட் கானகம் நியூயார்க்

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : சமையலறையில் பிரியாணி 'தம்' போடும் மணம் அதற்குள் வீசத் தொடங்கி விட்டதோ ? :-) :-)

   Delete
  2. ஆகா.. இன்னிக்கு பிரியாணியா.. அது தெரியாம போச்சே... ஊர் ஊர்ரா விசேசம் விசேசமா அலைஞ்சுண்டு இருக்கேன்..

   Delete
 34. கேள்வி. 1 .65 க்கு 35.என சொல்லலாம் சார்
  தைத்தான் வேட்டை போன்ற ஒரு சில கதைகளில் டெக்ஸ்டைல் தனி ஒருவராக பட்டையை கிளப்பினாலும். எமனுடன் ஒரு யுத்தம். இரத்த நகரம் .போன்ற பல கதைகளில் கார்சனின் கூட்டணியே அருமை கார்சனின் துனை மிக அருமைதான்
  ஆனால் டெக்ஸ் என்ற சிங்கம் சிங்கிளாய் வந்தாலும் கலக்கும்
  3.துரத்தும் தலைவிதி

  ReplyDelete
 35. ஹலோ சார்,

  இந்த மாத புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் படித்து விட்டேன், ஆர்டினின் ஆயுதம் செம சிரிப்பு மழை 9/10.
  தலை இல்லா போராளி - இந்த புத்தகத்திற்கு இத்தனை hype தேவையா, சுவாரசியத்துடன் ஆரம்பித்து வசனங்களால் நிறைந்து சப்பென்று முடிந்து வெறுப்பேற்றியது. படிக்க ஆரம்பித்த போது, இருளின் மைந்தர்கள் மாதிரி அட்டகாசமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் சுமார் ரகம். பெரிய சைஸ், அழகான சித்திரங்கள் இவற்றை தவிர்த்து பார்த்தால், நகை இல்லா அழகான பெட்டிதான் நியாபகம் வந்தது - 4/10...

  ReplyDelete
  Replies
  1. Giridharan V : உங்களுக்கு ரசிக்காது போனது ஆச்சர்யம் தான் ! இதுவரை இந்த ஆல்பம் வெளியாகியுள்ள சகல மொழிகளிலும் இதுவொரு சூப்பர்-டூப்பர் ஹிட் !! அது மட்டுமின்றி, சமீப சமயங்களில் மிக அதிகம் பேசப்பட்ட TEX கதைகளுள் இது முக்கிய இடம் பிடித்துள்ளதாம் ! (நம்மூரைக் குறிப்பிடவில்லை நான் !)

   Delete
 36. சாரி டெக்ஸ் டெக்ஸ்டைல் என சொதப்பிவிட்டது

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Carson: -ஏம்பா டெக்ஸ் வறுத்த கறியும், பீரும் வாங்கி கொடுக்குறதுனா சொல்லு ஊருக்குள்ள வறேன்
   Horse: -இவன நாலு நாலா நாயா தூக்கிட்டு திரியுறோம், இதுவர பச்ச தண்ணி கூட கண்ணுல காட்டல, இவன என்ன பண்ணலாம்...

   Delete
 38. சாா்
  ரோஜா் மற்றும் பில் கூட்டணிஐ காணோம்
  1)காா்சன் இல்லத காவல் கழகு கதை மொக்கை

  ReplyDelete
 39. முதல் கட்டமே காமெடிய அள்ளித் தெளிக்க... உட்சிடியின் சாலைகள் வெறிச்சோடிப் போய்க்கிடந்ததொரு காலைப் பொழுது அது.எங்கும் அமைதியும் நிசப்தமும் நிலவிட மந்தை இடம் பெயரகாரணம்...அனைவரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டதுதான் ...அதில் தான் , படத்தில் ட்ரீட்ரீட்ரீ..ஹஹஹா.முடியல சார் சட்டத்தின் பிரதிநிதியோ தனது பிரத்யோக பாணியில் நீதிப் பரிபாலனத்தை கண்ணும் கருத்துமாய் நடத்திக் கொண்டிருந்தார்...
  அங்கே sherif தேsவை அல்ல என்பதை எவ்வளவு நகைச்சுவையுடன் வரிகள் சுற்றி வளைத்து வெளிப் படுத்துகின்றன வெறிச்சோடிய சாலையில்தான் சண்டயே வராதே....முதல் பேனலில் பறந்து வரும் ஆர்டினை காணோம்

  ReplyDelete
  Replies
  1. மந்தை இடம் பெயரகாரணம்...அனைவரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டதுதான் ...அதில் தான் , படத்தில் ட்ரீட்ரீட்ரீ..ஹஹஹா.முடியல சார்கிட் காதுல பஞ்ச வச்சிட்டு பண்ற நக்கல்...ஒரு மணி நேரம் கழித்த வாசிப்பு...காப்பி சூப்பர்..இனி நீங்களே போடுங்க பாஸ்..முக்கியமான விஷயம் காஃபி சூப்பர்னு ஷெரிப் தாஜாவ கண்டுக்காம போவது

   Delete
  2. கிறிமுறிகறமுறிறீறீறீ..கியாவ்வ்வ்வ்..வியாவ்வ்வ்வ்..வீவீவீவீ....கரிகிரிகிரி...ரீரீரீரீ...அனைத்து காமடி உரயைடலயும் தூக்கி சாப்பிட்ட ெளிமையான வரிகள் சார்...தலை கால் புரியாமல் உங்கள் ஆயுதமும் ஏக சந்தோசத்தை வாசித்த வரிகள் சார்...வசனங்களுக்கு கூடுதல் சிரிப்பு வலி சேர்த்த பக்க வாத்தியங்கள் இவை...பக்கத்திற்கு பக்கம் கிட் ..ஷெரிஃப்....திருடர்கள்...பொது ஜனம் முக பாவனைகள் சிற\ரிப்பு ஆயுதம்....உரயாடல் சான்சே இல்லை...இது வரை வந்த கார்ட்டூன் சிரிப்பு வெடிகளில் முதலிடம் இதற்குத்தான்...எப்படி சார் சாதாரணமான விஷயத்திலெ இப்படி ஒரு விருந்து..

   Delete
  3. இந்த மாதம் படிக்கும் முன்
   1.லார்கோ
   2.டெக்ஸ்
   3.மாயாவி
   4.சிக்பில்

   படித்த பின்னர்

   1.கிட் டாக் புல்
   2.லார்கோ
   3.டெக்ஸ்
   4.மாயாவி
   இந்த மாத கதைகளும் அனைத்துமே தூள் .ஆனால் ஆச்சரியம் லார்கோவை விட ார்டின் என்னை கவர்ந்தது....தொடருங்கள்

   Delete
 40. கார்சன் காரணமாக தான் வெற்றி என்பதை விட கார்சனின் காரணமாக கதை இன்னும் கொஞ்சம் சுவை கூட்டுகிறது என்பதே உண்மை என நான் நினைக்கிறேன் சார் ...

  லார்கோ சைமன் கூட்டணியில் எனது மனம் கவர்ந்த சாகஷம் பெயர் நினைவில்லை சார் ..ஆனால் லார்கோ குறித்த நேரத்தில் கையெழுத்து இட பைக்கில் பறந்து செல்வாரே அதுவும் கண்ணாடியை உடைத்து கொண்டு அறைக்குள் செல்லும் அந்த சாகஸம் புக்கை கீழே வைத்து விட்டு கையை தட்டியது மறக்க முடியுமா என்ன ...

  ReplyDelete
  Replies
  1. NBS ல் வெளிவந்த கான்கிரீட் கானகம் நியூயார்க் தான் அது,தலீவரே ....
   அந்த டைமிங் பலமாடி கட்டிட உச்சி மாடி கான்ப்ரன்ஸ் மீட்டில கிளைமாக்ஸ் டயலாக் -"கீழே பயங்கர கலவரம் ,இங்கே வாய்ப்பில்லை".... அந்த நொடியில் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு லார்கோ நுழையும் கட்டம் ...ரியல் ஸ்டன்னிங் ....

   Delete
  2. நேற்று மதியம் சாப்பாட்டு வேலைக்கு பிறகு நான் படித்தது அதுவே ... 'கான்கிரீட் கானகம்'

   :)

   Delete
  3. கஸ் பெனிமோரிடமே பேனா வாங்கி செக்கில்,லார்கோ கையெழுத்து போடும்போது ....பெனிமோரின் முகம் சொல்லும் கதையின் முடிவை,அந்த கிழவி லிச்சா லூசியும் பேபேபே என விழிக்கும் காட்சிகள் ,முத்தாய்ப்பாக அமைந்த ஓவியங்கள் ...

   Delete
  4. @ FRIENDS : நியூயார்க்கை நேரில் தரிசித்தால் கூட இத்தனை ரம்மியம் கண்ணில் படாது - ஓவியர் பிலிப் பிராங்கின் மாயாஜாலம் அத்தகையது !! கான்க்ரீட் கானகம் NY - மறக்க இயலா சாகசமே !

   Delete
  5. உண்மைதான் சார்..அந்த வண்ணச்சேர்க்கய கடவுளால கூட தரமுடியாதே\யுமா

   Delete
 41. என்னடா ..கூட்டணியில் இளவரசியை காணவில்லையே என்று நினைத்தேன் ...கூட்டத்தோடு கூட்டத்தில் இளவரசி கிடையாது ...அவர் தனிகாட்டு ராணி என்பதை நிரூபித்து விட்டீர்கள் .சார் ..;-)

  ReplyDelete
 42. ஜில் ஜோர்டனுக்கொரு அசிஸ்டெண்ட்
  லியனார்டோவுக்கொரு ஆல் லெகை!
  டைலன் டாக்கிற்கொரு க்ரௌச்சோ
  இந்த புது பக்கிஎல்லாம் ஞாபகம் இருக்கு ஆனா எங்க XIII+ஜோன்ஸ் மட்டும் ஞாபகம் இல்ல இதை வன்மையாக கண்டிக்கிறோம் எப்போ பார்த்தாலும் எங்கள மறந்து விடுகிறீர்கள் ஞாயமா ...?
  சும்மா ஜாலி ....!

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு துனண அதிகம் நன்பரே..நம்மயும் சேர்த்து

   Delete
  2. ஆயிரம் அழகிகள் XIIIக்கு உதவி செய்திருந்தாலும் ,அந்த மார்த்தா தான் டாப்...

   Delete
 43. டியர் எடிட்டர்,

  லார்கொ - சைமன் ஜோடி கதைகளில் டாப் கதை NBSல் வந்த 'கான்க்ரீட் கானகம் நியூ யார்க்' தான். அதை solo பதிப்பாய் கண்ணில் காட்டுங்களேன்.

  அப்புறம் அண்ணாச்சி, டீ ஷர்ட் என்னாச்சி ? ;-)

  ReplyDelete
  Replies
  1. 'கான்க்ரீட் கானகம் நியூ யார்க்' தான். அதை solo பதிப்பாய் கண்ணில் காட்டுங்களேன்.
   +123456

   Delete
  2. Raghavan : ஜூன் புத்தக விழாவின் costume நம் எல்லோருக்குமே அதுதானே அண்ணாச்சி !

   Delete
 44. விஜயன் சார்,
  கிட்-ஆர்ட்டின் - ஆள் மாறாட்டகதை. நகைசுவை குறைவு, ஆனால் நகைசுவைகான வாய்ப்புகள் அதிகம் இருந்த கதை நாம் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

  கிட்-ஆர்ட்டின் - பொதுவாக அனைத்து கதைகளிலும் முதல் 10 பக்கம்கள் சிரிப்பு அதிகமாக இருக்கும் அதன் பின்னர் திருடன்/வில்லனை கண்டுபிடிக்கும் பாணியில் இருக்கும்; அந்த இரண்டாம் பகுதியில் சிரிப்புக்கு முக்கியத்துவம் அல்லது வாய்ப்புகள் இருப்பது இல்லை! எனவே இவரது கதைகளை காமெடி கதைகள் என சொல்ல முடியவில்லை. இதன் காரணம்களால் நான் இதனை காமெடி கதை என்ற நினைத்து வாசிப்பது இல்லை, எனவே இந்த ligtht-weight காமெடி கலந்த துப்பறியும் கதைக்கு எனது மார்க் 4/5.

  ReplyDelete
 45. சார் திகில் சில மாதம் வாங்காத போது சைத்தான் சாம்ராஜ்யமும் மிஸ்...அடுத்து வந்த டெக்ஸ் கதைகளில் கார்சன் இல்லை...அடடா திகிலில் கார்சன கொன்னுட்டாங்க போலன்னு நானடைந்த சோகம்...
  கார்சன் டெக்ஸ் கூட்டனியில் இருளின் மைந்தர்களில் கார்சனின் பங்கீட்டை தவிர்த்து டெக்ஸ் தானே செல்ல கார்சனின் கோப புலம்பல்கள் நட்பின் பரிமாணத்தயும் நகைச்சுவயயும் ஒருங்கே அள்ளித் தெளிக்கும்...நீங்கள் மறந்திருந்தால் எடுத்து படித்து பாருங்கள் ..அத விட சிறப்பாய் படைக்க யாராலும் முடியாது....
  லார்கோ
  1.துரத்தும் தலை விதி
  2.என் பெயர் லார்கோ


  அத போல ஜார்ஜ் டிரேக்...லக்கி ஜாலி...சுஸ்கி விஸ்கி...ஜான் மாஸ்டரில் முதல் கதயில் நண்பன் இறந்ததும் வேற நண்பர் என கூட்டணி கலக்கல்கள்தாம்

  ReplyDelete
 46. கார்சன் & சைமன் இல்லாத கதைகள்,கூலிங் இல்லாமல் பெப்ஸி சாப்பிட்ட மாதிரிதான் இருக்கும்.!

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : சரியாகச் சொன்னீர்கள் ! உங்கள் பாணியிலேயே சொல்வதானால் - "காங்கோ இல்லாத மாடஸ்டி போல " என்றும் சொல்லலாம் !

   Delete
 47. ஆசிரியரே....
  ஆர்டினின் ஆயுதம் அட்டைப்படம் மிகவும் அழகாக உள்ளது.
  அப்புறம் சென்ற மாத "கமான்சே" அட்டைப்படம் நம் லயன் சரித்திரத்தில் ஒரு மைல் கல்.இவ்வளவு அட்டகாசமான அட்டை வேறு எந்த இதழிற்கும் அமைந்ததாக நினைவில்லை.வாழ்த்துக்கள் சார்....!

  ReplyDelete
  Replies
  1. AHMEDBASA TK : "சாத்வீகமாய் ஒரு சிங்கம்"....."சீற்றத்தின் நிறம் சிகப்பு....' 'சாத்தானின் உள்ளங்கையில்.." என சமீப கமான்சே அட்டைப்படங்கள் சகலமுமே classics !!

   Delete
 48. கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா?
  >> எனக்கும் தான்! கார்சன் & நண்பர்கள் இருந்தால் கதை இன்னும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் போரடிக்காமல் செல்கிறது.

  ReplyDelete
 49. Good Morning sir,
  Just now finished reading Tex story, definitely it's another master piece. All three stories published in this month are right at the top. The only thing missing so far in this year is stories like sippayin suvudugal, Deva ragasiyangal thedulukalla, green manor etc., these kind of off beat stories makes reading interesting. Maybe you should consider publishing one story every 2-3 months.

  When are you going to release tiger into fray sir. I'm going to send our selfie with Tex today.

  ReplyDelete
  Replies
  1. 1&2: Tex without karsan unimaginable.

   3: Simon is like a dessert in largo stories, largo is a solo performer.

   Delete
 50. ஆஹா பொடியர்கள் இந்த மாதமே தயாரா...சூப்பர்...சார் எல்லா ஒல்லி புத்தகங்கள்...போதாதே...ஷெல்டனும் ஒல்லி...டெக்ஸ் ஒல்லி...ஒல்லி...ஒல்லி...ஒன்லி...டைகர் தயாரா சார் இந்த கூட்டணியில்

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : கிட்டத்தட்ட தயார் தான் ; ஆனால் பொடியர்களோடு கூரியரில் இடம் பகிர்ந்திட மாட்டார் ட்சி-நா-பா !

   Delete
 51. தலை இல்லாபோராளி!!!! ஒரு சித்திர அற்புதம் .அதுவும் போரிஸ்கோவின் வீட்டில் நடக்கும் உரையாடல்களின்

  போது ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள டீடைல்கள் அடுத்த கட்டத்திலும் வேறொரு கோணத்திலும் தொடருவது

  பிரமிப்பை ஏற்ப்படுத்தியது.வண்ணத்துபூச்சிகள்,சிலந்திகள், வினோத சிற்பங்கள் ,பாடம்

  செய்யப்பட்டகழுகுகள் என ஒரு ஒவ்வொன்றும் தத்ரூபம் .கதையின் விருவிருப்பு தனிகதை.இதுவரை

  மூன்று முறை படித்து ரசித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. Senthil Madesh : Attention to details என்பது தான் ஒவ்வொரு ஓவியருக்குமுள்ள மகத்தான சவால் ! பெரும்பான்மை ஓவியர்கள் நாயகர்களை ; கதையின் மனுஷாளை கவனமாய் வரைந்துவிடுவர் ; ஆனால் அதே நுட்பத்தை பின்னணிகளிலும் கொண்டு வரும் மெனக்கெடல் மிகக் குறைவானோரிடமே இருந்திடும் ! ஓவியர் சிவிடெல்லி இரண்டாம் ரகத்தைச் சார்ந்தவர் !

   Delete
 52. கார்சன் இல்லாத டெக்ஸ் கூட பரவால்ல சார் ....சைமன் இல்லா லார்கோ நினைக்கவே பிடிக்கல..

  ReplyDelete
 53. மதிய வணக்கம் விஜயன் சார் :)
  மதிய வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே :)

  ReplyDelete
 54. எடிட்டர் சார்,

  //டெக்ஸ் வில்லர்‘ என்ற பெயரோடு மெய்யாகவே அந்நாளைய வன்மேற்கில் யாரும் குப்பையோ ; தோட்டாவோ கொட்டியதாகத் தெரியவில்லை; //

  இந்த வரியை படிக்கும்போது வாய்விட்டு சிரித்தேன். சூப்பர் சார்

  ReplyDelete
  Replies
  1. Radja : :-)

   அந்நாட்களது பெரிய புள்ளிகள் எவருக்கும் இத்தனை கம்பீரமான பெயரை வைத்துக் கொள்ள இயலாது போனது நிஜமாக ஆச்சர்யம் தரும் விஷயமே எனக்கு !

   Delete
 55. இந்த மாதம் லார்கோ புக் சின்னதாகிவிட்டது என்று என் அம்மா கூறினார்கள் சார்

  இரண்டு பாகம் கதையை சிறிதாக செய்ததில் எனக்கு சின்ன வருத்தம் சார் , கதை சிறிதாக இல்லை
  but book size has decreased lighter than usual Largo books

  ReplyDelete
  Replies
  1. SeaGuitar9 : வழக்கமான 100-க்குப் பதிலாய் 96 பக்கங்கள் என்பது மாத்திரம் தானே மாற்றம் ?

   Delete
  2. மற்றபடிக்கு அளவில் அட்சரசுத்தமாய் அதே வழக்கமான சைஸ் தான் !

   Delete
  3. @Vijayan Sir
   டெக்ஸ் புக் படிச்சப்புறம் லார்கோ புக் எடுத்தாங்க , அதனால் சின்னதா தெரிந்திருக்ககூடும்
   My Mother has become fan of LArgo..She likes LArgo stories than Tex

   Delete
  4. SeaGuitar9 : அம்மாவின் விமர்சனங்களை எழுதி வாங்கி இங்கே பதிவிடுங்கள் ரம்யா ; அல்லது கடிதமாய்க் கூட அனுப்பிடலாமே ! Would luv to hear from her !

   Delete
  5. @Vijayan Sir
   செய்து விடுகிறேன் Sir :)

   Delete
 56. கார்சன் இல்லாத டெக்ஸ்சின் சாகசங்கள் டெக்ஸ்சின் தனிப்பட்ட ஆளுமையை அற்புதமாக

  வெளிக்கொணர்கின்றன.(பலி கேட்ட புலிகள்,பழி வாங்கும் பாவை,.....)கார்சன் கூட்டணியில் ஒரு வித

  ஜாலி தூக்கலாக இருக்கும்.ஆளுமை பகிர்ந்தளிக்கப்படுவதால் சுவாரசியம் அதிகமாக இருக்கும்.ஆனால்

  டெக்ஸ் தனித்து செயல்படும் போது கார்சன் இல்லாமை உணரப்படுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. Senthil Madesh : "சிங்கிளாயொரு சிங்கம்" ! அடுத்த டைட்டில் ரெடி !!

   Delete
  2. //டெக்ஸ் தனித்து செயல்படும் போது கார்சன் இல்லாமை உணரப்படுவதில்லை.///

   -1

   சட்டத்திற்கொரு சவக்குழி'யில் டெக்ஸ் காட்டுக்குள் தனியே மறைந்து திரியும்போது கார்ஸன் அருகில் இல்லாதது அவருக்கு எப்படியிருந்ததோ என்னவோ, எனக்கு தனிமை வாட்டியது!

   Delete
  3. //"சிங்கிளாயொரு சிங்கம்" ! அடுத்த டைட்டில் ரெடி ///

   சூப்பர் டைட்டில்! டெக்ஸ் தனி ஆவர்த்தனம் செய்யும் ஒரு அதிரடிக் கதைக்கு இந்த டைட்டில் வைக்கலாம்!

   Delete
 57. // இதழ்களும் proof reading-ன் பொருட்டு தயாராகக் காத்துள்ளன ! So இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின், கைதூக்கிடலாம்!//

  எனது கையை தூக்கிட்டேன் Sir :)
  வாய்ப்பு கிடைத்தால் நன்றாக செய்வேன்
  வாய்ப்பு கிடைக்காவிட்டால் மகிழ்ச்சியுடன் IceCream சாப்பிடு கொண்டு "Proof Reading" செய்பவர்களை Encourage செய்வேன் :) :D

  ReplyDelete
  Replies
  1. SeaGuitar9 : ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக் கொண்டு , உங்களை encourage செய்யும் வேலையையும் நாங்களே செய்கிறோம் - நீங்கள் proof reading செய்திடுங்கள் ! ஒரு மின்னஞ்சலில் முகவரியை அனுப்புங்கள் க.யா.

   Delete
  2. @Vijayan Sir
   நன்றி ஆசிரியரே
   done Sir :)

   Delete
 58. //கதையின் பெரும்பான்மையான டெக்ஸ்-கார்சன் interaction பகுதிகளை முற்றிலுமாய் மாற்றியமைத்தேன்! அந்த பாணி உங்களின் பாராட்டுக்களை ஏகமாகவே பெற்றுத் தந்ததால் தொடரும் நாட்களில் கார்சனின் banter-க்கு சற்றே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினேன்! //

  எடிட்டர் சார்,

  முற்றிலும் உண்மை. சில பல டெக்ஸ் கதைகளை பிரெஞ்சு மொழியில் படித்திருப்பதால் இதை சொல்கிறேன். டெக்ஸ் கார்சன், அவர்கள் இருவர் உடனான அந்த நகைச்சுவையான உரையாடல், பிரெஞ்சு மொழியில் மிஸ்ஸிங் என்று தான் சொல்வேன். அதே மாதிரி தான் டெக்ஸ் வில்லருக்கான பஞ்ச் வசனங்களும். இரண்டு மொழிகளிலும் வித்யாசம் நன்றாகவே தெரியும். தமிழ்ல சும்மா நாம அதிர விடரோமில்ல. நம்ம தமிழ் டெக்ஸ் வில்லரை இத்தாலியில் மொழி பெயர்த்தால், போனெல்லி குழுவே நமது தமிழ் dialogue ஐ பார்த்து அசந்துபோவது உறுதி !!!

  ReplyDelete
  Replies
  1. //. நம்ம தமிழ் டெக்ஸ் வில்லரை இத்தாலியில் மொழி பெயர்த்தால், போனெல்லி குழுவே நமது தமிழ் dialogue ஐ பார்த்து அசந்துபோவது உறுதி ///

   உண்மை உண்மை! செம!

   Delete
  2. Radja : எல்லாவற்றையுமே வித்தியாசமாய்ச் செய்யும் ரசனை கொண்டவர்களல்லவா சார் நாமெல்லாம் ?

   ஒரு டைட்டில் சாங் ; ஒரு வண்டி பன்ச் டயலாக்குகள் ; ஒரு காமெடி ட்ராக் ; ஒரு செண்டிமெண்ட் பகுதி ; சிலபல தேசத்து மரங்களைச் சுற்றி ஓடியாடி ஆராய்ச்சி செய்யும் பாடல் sequences ; சங்கத் தமிழை வளர்த்திட ஒன்றிரண்டு குத்தோ குத்து கானங்கள் ; "ஊஒ...யா..ஏ..என்று தடிதடியான வில்லன் கும்பலை ஒற்றை ஆளாய் நாயகர் பறக்க விடும் சண்டைக் காட்சிகள் என்றெல்லாம் இருந்தால் தானே நமக்கொரு complete entertainment package -ஐப் பார்த்த திருப்தி கிடைக்கிறது ! அங்கேயோ அப்படியா ? - ஒன்றரை மணி நேரத்தில் நறுக்குத் தெரித்தாற்போல படம் எடுத்து முடித்து நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் !

   அவர்களுக்கு மசாலா அதிகம் சேர்த்துப் பழக்கமில்லை ! நமக்கு கரம் மசாலா புடிக்கும் ! அது தான் வேற்றுமையே !

   Delete
 59. இப்போது வரும் டெக்ஸ் கதைகளில் கார்சன் இல்லாத கதைகள் எனக்கு சுமாராக தான் தோன்றுகின்றன
  தலையில்லா போராளி கதையில் கூட எங்க அம்மா ரசித்தது கார்சனின் Dialogues
  நான் தான் 50 பக்கங்கள் கடந்து இருக்கிறேன்
  சுவாரசியமாக போய் கொண்டு இருக்கிறது

  "சதுப்பில் ஒரு சதிகார கும்பலில்" கார்சன் & டெக்ஸ் சேர்ந்து செய்யும் அடாவடித்தனம் பிடித்த ஒன்று
  டெக்ஸ்-சை நன்றாக புரிந்து இருப்பவர் கார்சன்
  Love the duo

  Largo+Simon is cool

  ReplyDelete
 60. விஜயன் சார், ஜூன் மாதம் வர இருக்கும் சென்னை புத்தக திருவிழாவிற்கு நீங்கள் வருவீங்களா? முடிந்தால் உங்கள் வருகை தேதி குறிப்பிட முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நிச்சயமாய் ! முதல் வாரத்து சனி & ஞாயிறு என்று இப்போதைக்குத் திட்டம் !

   Delete
 61. அன்பின் ஆசிரியருக்கு,

  வணக்கம். ஏப்ர்ல் இதழ்களில் சந்தேகமில்லாமல் முதலிடம் லார்கோவுக்குத்தான். இதற்கு முன்பு வெளியான மற்ற லார்கோ ஆல்பங்களையும் ஒருசேர வாசிக்கும்போது எத்தனை பிரம்மாண்டமானதொரு கதைக்களம் என்பது புரிகிறது. ஒரே pattern-ல் உள்ள கதைகளில் இத்தனை அதகளம் செய்ய முடிவதே ஆச்சரியம்தான். லார்கோவின் கதைகள் மொத்தமும் முடிந்தபின் (ஒருவேளை முடியுமாயின்) முழுமையானதொரு டைஜஸ்ட் கொண்டு வந்தால் அட்டகாசமாக இருக்கும். இரண்டாமிடம் டெக்ஸ்-க்கு. கதைக்காக அல்ல மாறாக சித்திரங்களுக்காகவும் வடிவமைப்புக்காகவும். தலையில்லா போராளி என்பது பொய்யாகத்தான் இருக்கும் என்று யூகிக்க முடிவதால் பெரிதாய் கதையோடு ஒன்ற முடியவில்லை. ஆனால் உயிரோட்டமான சித்திரங்களை இத்தனைத் தெளிவாகவும் பெரிதாகவும் பார்ப்பது நல்ல அனுபவம். கிட் ஆர்டின் எப்பவும் போல அங்கங்கே வாய்விட்டு சிரிக்க முடிந்தது. ஏற்கனவே பாக்கெட் சைஸில் பலமுறை அந்தக் கதையை வாசித்திருக்கிறேன் என்பதால் பாம்புத்தீவை வாசிக்க வேண்டும் என்பதில் இருந்த ஆர்வம் நாச அலைகளில் இல்லை. ஆக மொத்தல் ஏப்ரல் லார்கோவின் மாதம்.

  பிரியமுடன்,
  கார்த்திகைப் பாண்டியன்

  ReplyDelete
  Replies
  1. கார்த்திகைப் பாண்டியன் : அழகான விமர்சன வரிகள் !

   லார்கோவின் பின்னணியில் உள்ள உழைப்புப் பற்றியும், அதன் பொருட்டு கதாசிரியர் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் பற்றியும் DUPUIS நிறுவனத்தினர் என்னிடம் சொன்னது தான் இங்கே நினைவுக்கு வருகிறது ! வழக்கமாய் ஒவ்வொரு புது ஆல்பத்தின் பூர்வாங்கப் பணிகள் / திட்டமிடல்கள் துவங்கும் போதும் - கதாசிரியர் அந்த ஆல்பத்திற்கென தான் வடிவமைத்துள்ள கதைக் கருவை crisp ஆக சின்னதொரு அவுட்லைனாக வழங்குவது வழக்கமாம் ! ஆனால் வான் ஹாம்மே கிட்டத்தட்ட முழுக் கதையையுமே சிருஷ்டித்துத் தயாராய் வைத்திருப்பாராம் பிள்ளையார் சுழி போடும் தருவாயிலேயே !! அத்தனை ஆற்றல் கொண்ட படைப்பாளி !! அவர் ஓய்வை நாடிச் செல்லும் காலத்தின் கட்டாயம் காமிக்ஸ் காதலர்களுக்கொரு இழப்பே !

   Delete
  2. //அவர் ஓய்வை நாடிச் செல்லும் காலத்தின் கட்டாயம் காமிக்ஸ் காதலர்களுக்கொரு இழப்பே ! //

   +9

   will miss Jean Van Hamme

   Delete
  3. கார்த்திகை பாண்டியன் +1

   Delete
 62. கார்சன் இல்லாத கனதவதனினமயில் அனமந்த வெறுனம உள்ளது....

  ReplyDelete
 63. லார்கோ கதைகள் எல்லாமே தூள்
  ரொம்ப பிடித்தது என்றால் "துரத்தும் தலைவிதி"

  "கான்கிரீட் கானகம் நியூயார்க்" என்னிடம் இல்லை
  If possible like to have a solo print of it,,,,only if possible Sir
  அதுவும் மற்ற வாசகர்களும் விருப்பபட்டால்
  NBS வந்த போது என்னை போன்று வாங்காமல் விட்டவர்களுக்கு
  only if possible Sir...not pressuring on it

  ReplyDelete
  Replies
  1. SeaGuitar9 : தொடர் முழுவதுமாய் வெளியான பின்னொரு வேளையில் கா.கா.NY -க்கு தனியாய் ஒரு வாய்ப்பு வழங்கிடுவோம் !

   Delete
  2. சூப்பர் சார் அதே போல் கோடை மலர் தீபாவளி மலர் போன்ற இதழ்களில் வந்த ஸ்பைடர். ஆர்ச்சி லாரன்ஸ் &டேவிட் ஆகியோரின் கதைகளையும் தனியாக வெளியிட்டால் அருமையாக இருக்கும் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா

   Delete
 64. சார் ஒரே குறை....சிக்பில் வண்ணம் பல பக்கங்களில் மங்கலாய்...லார்கோவில் அவ்வாறு நேர்ந்திருந்தால்....ஐயகோ

  ReplyDelete
 65. எடிட்டர் சார்,

  'தலையில்லா போராளி'யில் வரும் நிக்கோலா ஒரு பாலைவனச் சோலை! அஹ்மத் பாட்ஷா தலைமையில் ஒரு ரசிகர் மன்றம் வைக்க தீவிரமாக யோசித்துவருகிறோம். நிக்கோலா தனி ஆவர்த்தனம் செய்யும் கதை ஏதாவத் இருந்தால் தேடிப் பிடித்து உரிமம் வாங்கிவிடுங்களேன்? எவ்வளவு ராயல்ட்டியாக இருந்தாலும் பரவாயில்லை! :P

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : விபரமான கூட்டணி தான் !! வாயோர ஜலத்தை மக்கன்பேடா ஏற்படுத்திய நீரூற்று என்று சொல்லி சமாளித்து விடலாமில்லையா ? !!

   Delete
  2. அப்படின்னா உடனடியா நிகோலா ரசிகர் மன்றம் ஆரம்பித்து விட வேண்டியது தான்.....!

   Delete
  3. நிக்கோலா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராவோர்க்கு நிக்கோலாவின் வசீகரமான படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டையோடு கூடவே ஒரு மக்கன்பேடாவும் வழங்கப்படும்!

   ஹிஹி! சீக்கிரமே மாடஸ்டி மன்றம் கலைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! ;)

   Delete
  4. மொத பேரா என்னய எழுதி கொள்ளுங்கள் ...

   Delete
  5. நிகிலா அழிந்து போகும் ஓவியம். மாடஸ்டி காலத்தால் அழியாத காவியம்.நிகிலா காகித தலைவி. மாடஸ்டி காவியதலைவி

   Delete
  6. // நிகிலா காகித தலைவி மாடஸ்டி காவிய தலைவி //

   ராவணன் சார்.!

   ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.!

   அருமையான டைமிங்.! அருமையான ரைமிங்.! சூப்பர்.! சூமபர்.!

   Delete
  7. @ M.V & ராவணன்

   சரி விடுங்க! அதான் இது 'கூட்டணிகளின் சீஸன்' ஆச்சே? 'மாடஸ்டி மற்றும் நிக்கோலா கூட்டணி ரசிகர் மன்றம்' அப்படீன்னு ஒன்னை ஆரம்பிப்போம்... உறுப்பினர் அடையாள அட்டையில்கூட ரெண்டுபேர் படமும் பிரின்ட் பண்ணிடலாம்! ( அட்டையை லேமினேட் பண்ணுவது அவசியம்! இல்லேன்னா நம்ம உறுப்பினர்கள் ஜொல் விட்டே நனைச்சுடுவாங்க) :D'

   Delete
  8. மாடஸ்டிக்கு எதிராக படை திரட்டும் போ.கு.செ.வை கண்டிக்கிக்கிறேன்... ஆயிரம் கைகள் சேர்ந்து நின்றாலும் எங்கள் மாடஸ்டி புகழை மறைக்க முடியாது... போ.கு.செ க்கு எதிராக புத்தகத் திருவிழாவில் மாபெரும் உண்ணும் விரத போராட்டம் மா.போ.குழு சார்பாக நடத்துவோம்..

   Delete
  9. 'மாடஸ்டி மற்றும் நிக்கோலா கூட்டணி ரசிகர் மன்றம்' ... ஹீ..ஹீ... எனக்கு ரெண்டு உறுப்பினர் கார்டு.. அதுவும் லைப்டைம் மெம்பர்சிப்..

   Delete
  10. //'மாடஸ்டி மற்றும் நிக்கோலா கூட்டணி ரசிகர் மன்றம்' அப்படீன்னு ஒன்னை ஆரம்பிப்போம்... ///-- நிக்கோலாவை டாப்ஹீரோயினியாக ஏற்று கொள்வோர் உடன் தான் கூட்டணி என ஆணித்தரமாக அடித்து கூறுகிறேன் . அதில் இந்த மாடஸ்தி மாதிரி 11ஓட்டுகள் ச்சே ரசிகர்கள் மட்டுமே உள்ள பெண் ஹீரோ லாம் வெயிட்டிங் லிஸ்ட்ல காத்திருக்கட்டும்..

   Delete
  11. மாடஸ்டி --> மாலைநேரத்தில் அருந்தும் டஸ்ட் டீ
   நிக்கோலா --> நின்னுகிட்டே குடிக்கும் கோக்கோ-கோலா

   ரெண்டுமே புத்துணர்ச்சி தருபவைதான்!

   இந்தக் கூட்டணியில் ஆருஷியாவையும், பெட்டி செல்லத்தையும் சேர்த்துக்கலாமான்னு சொல்லுங்க மன்ற கண்மணிகளே! :P

   Delete
  12. ஈரோடு விஜய்.!

   மாடஸ்டியை வைச்சு காமெடிகீமெடி பண்ணலயே.?

   அது என்னவோ தெரியலே மாடஸ்டியை ஏழுமலை படத்தில் வடிவேல் மாமூல் வாங்கவந்தவரை போண்டா மணியை வைச்சு அசிங்க படுத்துவாங்களே.?அதுமாதிரியே நிக்கோலா வைச்சு மாடஸ்டியை அசிங்கப்படுத்துறீங்களோ என்று தோனுது..............

   மாடஸ்டியை வைச்சு காமெடிகீமெடி பண்ணலயே.???????

   Delete
  13. ஒன்றை கவனித்தீர்களா நண்பர்களே. நம்மைவிட எதிரணியினர்தான் மாடஸ்டியின் பெயரைஅதிகமாக உச்சரித்துக் கொண்டுள்ளனர். இது ஒன்றே போதும்.வண்ணத்தில் மாடஸ்டியை பார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதற்கு. எதிரணியினருக்கும் ஆசைதான் வெளிக்காட்ட தயக்கம்.

   Delete
  14. ஹிஹிஹி.............எதிரிகளாக வேடமிட்டு இருப்பவர்களும் நம் அணிநண்பர்கள்தான் என்னும் கம்பெனியின் ரகசியத்தை யாரிடமும் கூறிவிடாதீர்கள்.!

   Delete
 66. ஒரு லட்டு சாப்பிட்டு விட்டு அடுத்த லட்டு சாப்பிடும் போது திகட்டும் ஆனால் ஏப்ரல் மாதத்தில் எல்லா லட்டுகளுமே திகட்ட வில்லையே சுவையும் அற்புதம் லட்டுன்னா லட்டு லயன் பிராண்ட் லட்டுகள் பேஷ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு

  ReplyDelete
 67. மே மாதம் உங்களுக்கு மிக கடினமான மாதமாக இருக்க போகிறது ஏனென்றால் ஏப்ரலில் நீங்கள் தந்த காமிக்ஸ் விருந்து மிக மிக சூப்பர் அதே போல் மீண்டும் அமைவது மிக கடினம்

  ReplyDelete
 68. ரெண்டே சான்ஸ்தான் ..ஒண்ணு இன்னும் கொஞ்ச நேரத்திலே இவ்விடம் நயம் வறுத்தகறி ஜில்லுன்னு பீரோடு கிடைக்கும்னு போர்டு கண்ணுக்கு தெரியணு ம் ..இல்லே ஒரு லாடம் இல்லாம நொண்டுற இந்த குதிரையை சுட்டு சூப் வச்சி குடிக்கணும்..அம்புட்டுதான் ..
  என்னா ஒரு வில்லத்தனம் ..சுட்டு சூப் வச்சிருவாராம்லே ..எங்க அப்பாரு அப்பவே சொன்னாரு ஆட்டுதாடி வச்ச கிழட்டுப்பயல என்னிக்கும் நம்பாதே அவன் தானும் திங்க மாட்டான் ..ஒன்னையும் திங்க விடமாட்டான்னு ..ஒருமாசமா கண்ணுக்கு குளிர்ச்சி யா ஒரு குதிரை கூட தென்படாத இந்த பாலைவனத்திலே இந்த மனுசனை சுமந்து வந்தது தப்பாப்போச்சு ..நம்ம முந்திக்க வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. @ வெட்டுக்கிளி

   :))))))
   வளமான கற்பனை!

   செம!

   Delete
 69. அவ்வப்போது கார்சன் இல்லா டெக்ஸ் சொலொ சாகசங்கள் ஒரு தேவைதான். ஆனால் கதைகளன் கனமானதாக இருந்திடல் அவசியம. சைத்தான் வேட்டை போன்று்

  ReplyDelete
 70. ஈரோடு விஜய்.!&பாட்சா & டெக்ஸ் விஜய ராகவன்.!

  அப்பாடா இவ்வருட நான்கு டெக்ஸ் கதைகளும் சூப்பர் ஹிட் அடித்ததற்கு காரணம் நான்கிலும் வந்த மனம் கவர்ந்த பெண் கதாபாத்திரங்களே என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.!

  முன்பு ஒரு குறும்பு வாசகர் ஒருவர் " டெக்ஸ புத்தகங்களை அட்டையை கிழித்து போட்டு படித்தால் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.!" என்று நக்கல் அடித்ததை மறக்க முடியாது.! ஆனால் சமீபத்திய இதழ்கள் ஒவ்வொன்றும் சம்பந்தம் இல்லாத கதைக்களம் ஆனால் அனைத்திலும் ஒரு முக்கியமான் அழமான பெண் கதாபாத்திரங்கள் கதையை மெருகேற்றியது என்று சொன்னால் மிகையாகாது.!

  // மாடஸ்டி மன்றம் கலைந்தாலும் ஆச்சர்ய படுவதற்குகில்லை .//

  "எங்கள் சங்கம் ராம்கோ சிமெண்டாலும் அம்மன் டிஆர் கம்பிபிகளால் கட்டப்பட்து.தரத்திலும் உறுதியிலும் யாராலும் அசைக்கமுடியாது.!


  ReplyDelete
  Replies
  1. //"எங்கள் சங்கம் ராம்கோ சிமெண்டாலும் அம்மன் டிஆர் கம்பிபிகளால் கட்டப்பட்து.தரத்திலும் உறுதியிலும் யாராலும் அசைக்கமுடியாது.!//

   +9

   Delete
 71. ///மேற்கொண்டு வந்துள்ள செல்பிக்களை காலையில் upload செய்து விடுவேன் !! ///

  காலை'னா விடிஞ்சதுக்கப்புறம் வருமே... அதானே சார்? :P

  ReplyDelete
 72. முத்து மினி 7 கதைகள் விளம்பரத்தில்
  வருகிறது ஆனால் 6 கதைகள் வெளிவரும் என்றீர்கள் (மொத்தம் 8 கதைகள் அல்லவா?)

  ReplyDelete
 73. ஏற்கனவே சொன்னது போல மாயாவி கதைகள் புதிய து என்பதால் அலுக்கவில்லை. ஆர்டினின் ஆயுதம் சூப்பர் கதை. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வந்த ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா மாதிரி இருந்தது. :) சார், Selfie with Tex அப்டேட் எப்போது? இலவச டி-சர்ட் வாக்குறுதி என்னாச்சு ? :)

  ReplyDelete
 74. எடிட்டர் சார்.!

  சமீபத்தில் சந்தித்த சில வாசகர்கள் இரண்டு வருடங்களில் நம்மோடு இணைந்த பழைய வாசகர்கள் .! அவர்கள் நிறைய சமீபத்திய இதழ்களையே சாய்சில் வாங்கி படிப்பவர்கள்,. இந்த சூழ்நிலையில்,.


  இந்த மாதத்து லார்கோ கதைகளில் முந்தைய இதழின் கதாபாத்திரங்களின் வரவு மற்ற இதழ்களை காட்டிலும் நிறையப்பேர் வருகின்றனர்.புதியதாக முதன்முதலில் இந்த இதழை படிப்பவர்களுக்கு புரியுமா.? கதையின் முக்கிய அம்சங்களை படித்து தெரிந்து கொண்டால் மட்டிலும் லார்கோ கதையின் வீரியம் புரியும்.அதாவது தாய் தந்தை யார் என்றே தெரியாத அனாதையா இவருக்கு அடித்த ஜாக்பாட்.சைமன் நட்பு போன்றவை........,


  இதே போல் ,மாடஸ்டி கதையிலும் அடிப்படை அம்சங்களான மாடஸ்டியின் இளமை கால வரலாறு,கார்வின் மாடஸ்டியின் மெல்லிய கோடு போன்ற வித்தியாசம் கொண்ட நட்பு போன்றவற்றை கொண்ட கதைகளை புரிந்து படித்துவிட்டு படித்தால் மட்டுமே மாடஸ்டி கதையின் முழு வீரியத்தையும் ரசித்து படிக்கமுடியும்.இவைகளை பற்றி தெரியாமல் மேலோட்டமாக படித்தால் "பொம்பளை" " ஓடுகாலி" "திருடி" "கொள்ளைக்காரி மாதிரிதான் தெரியும்.! இந்த சொல்களுக்கு மெல்லிய இழைபோல் வித்தியாசப்படுத்துவது ஆரம்ப கால கதைகளே.!


  மாடஸ்டி கதைகள் போல் ஆரம்பகால கதைகள் விற்று தீர்ந்ததுபோல் லார்கோ ஆரம்பகால கதைகளான என் பெயர் லார்கோ போன்றவை விற்று தீர்ந்தவுடன் இடையில் ஏதாவது கதையை படிக்கும் வாசகர்கள்.,லார்கோ கதையின் முழவீரியத்தையும் புரிந்து கொள்ளாமல் லார்கோவை பணப்பிசாசு,பொம்பள பொறுக்கி,சைமன் ஒரு தறுதலை,திருடன் என்று புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.! எனவே என் பெயர் லார்கோ முதல் அனைத்து கதைகளையும் ஒன்றாக தொகுத்து வெளியிட்டால் மட்டுமே கதையின் முழு வீரியத்தை ரசித்து படிக்க பிற்கால வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.!
  (ஹிஹிஹி........அப்படியே மாடஸ்டி கதைக்கும் ஒரு டைஜஸ்ட் போட்டுருங்க இந்த கால வாசகர்களும் முழுமையாக படித்து ரசிக்க உதவியாக இருக்கும்.!)

  ReplyDelete
  Replies
  1. @ M.V

   உண்மை உண்மை!

   Delete
  2. இரத்த படலம் வண்ணததுல வந்தாலே போதுமே..இவுகள பத்தி தெளிவாயிரலாம் mv

   Delete
 75. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்...!

  ReplyDelete
 76. This comment has been removed by the author.

  ReplyDelete
 77. @ ALL : SELFIE WITH TEX - இன்னும் நிறைய போட்டோக்கள் !! பாருங்களேன் all !! அதிலும் ஸ்ரீரங்கம் சிவகுமாரின் தந்தையைப் பாருங்களேன் - simply stunning !!

  ReplyDelete
 78. ஸ்ரீரங்கம் சிவா நான்தான். பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி சார். :) மெக்னாஸ் கோல்ட் பட காலத்திலிருந்தே என் தந்தை கௌபாய் ரசிகர். அவரை டெக்ஸ், டைகர் போன்ற கதாநாயகர்கள் ஈர்த்ததில் ஆச்சரியமேயில்லை. :)

  ReplyDelete
 79. கிட் கார்சன்:

  இந்த போட்டில ஜெய்ச்சா,
  ஒரு plate வறுத்த கறி with பிரெஞ்சு fries & கூல் பீர்......!
  அப்புறம்.....
  கூடவே "ஒரு" ஸ்பைடர் புக் !

  குதிரை(mind voice ):

  ஹிஹிஹிஹிஹிஹி....கிளைமாக்ஸ்'ல வச்சாரு பாரு ட்விஸ்ட்!
  உயிர் மேல ஆசை இருக்கற யாரவது இனி caption போட்டிக்கு வருவாங்களா என்ன!
  உஹும்!
  பாவம்! சும்மா லூட்டி காண்டி கலந்துகிட்ட புள்ள கூட இப்போ ஈரோட்ல இருந்து இத்தாலிக்கு பொடி நடையா கெளம்பிருச்சு !
  ஹிஹிஹிஹிஹிஹி!

  ReplyDelete
 80. அட இருங்கப்பா கரெக்டா சொல்றேன் ..முந்தாநாளு டெக்ஸ் வீட்டிலே விருந்து..மூக்கு முட்ட சாப்பிட்டேன் ஒத்துக்கிறேன் ..அப்புறம் மறுநாளு பண்ணை வீட்டிலே வேணாம் வேணாம்னாலும் கூப்பிட்டு வச்சி குடுத்தாங்க.. நீங்கன்னா வேனாம்னுடுவீங்களா ..நானும் அப்படித்தான் நேத்திக்கு முக்கு கடையிலே மூனே பரோட்டாதான் .கேட்டுபாருங்க ...நேத்திக்கு மறுநாள் பாருங்க ஒரே நினைப்பாவே இருக்குங்க ..எங்கே பார்த்தாலும் வறுத்த கறியும் பீருமா ..ஹிஹி ஒரே கானல் நீருங்க நம்பாதீங்க
  இந்த ஆளைத்தான் நம்பாதீங்க ..வறுத்த கறி பார்சல் மட்டும் பத்து எம் மேலே தொங்கு துங்க மக்கா அடுத்த ஜென்மத்திலே இந்த ஆளு குதிரையா பொறந்து நான் கிட கார்சனா பொறந்தேன் ..அப்புறம் இருக்குங்க வேடிக்கை

  ReplyDelete
 81. வருட துவக்கத்தின் மூன்று மாதங்களையும் தனதாக்கிக் கொண்ட இரவுக் கழுகாா்,இந் மாதம் மிகப் பலமாக பின்னோக்கித் தள்ளப்படுகிறாா்..! மெகா சைஸ்,உயிரோவியங்கள் என நிறைய கூட்டல்கள் இருந்தாலும் அசுர வேகத்தில் முன்னேறி,இம்மாத மகுடத்தை கைப்பற்றி இறுமாப்பு கொள்கிறான்....,
  கோடீஸ்வரக் கோமான்!!
  அதகளத்தில் அதிா்ந்த களம்!!!

  ReplyDelete
 82. வருட துவக்கத்தின் மூன்று மாதங்களையும் தனதாக்கிக் கொண்ட இரவுக் கழுகாா்,இந் மாதம் மிகப் பலமாக பின்னோக்கித் தள்ளப்படுகிறாா்..! மெகா சைஸ்,உயிரோவியங்கள் என நிறைய கூட்டல்கள் இருந்தாலும் அசுர வேகத்தில் முன்னேறி,இம்மாத மகுடத்தை கைப்பற்றி இறுமாப்பு கொள்கிறான்....,
  கோடீஸ்வரக் கோமான்!!
  அதகளத்தில் அதிா்ந்த களம்!!!

  ReplyDelete
 83. பொடி பாஷைக்காக இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டாள் என் செல்ல மகள்...! ஆனால்அது ரின் டின் கேனாக மாறி விட்டால் என்பாடு திண்டாட்டம் தான்...!!

  ReplyDelete
 84. ஆர்டினின் ஆயுதம் சூப்பர் காமெடிமேளா. தலைவாங்கும் தேசத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு மிகவும் சிரித்த சிக்பில் கதை இந்த ஆர்டினின் ஆயுதம்.
  கிட்டார் டின் - கிட் ஆர்டின் பெயர் குழப்பத்தில் நம் அம்மாஞ்சி ஆர்டினை சூரப்புலி என நினைத்து க்ரேசி கும்பல் பேசும் வசனங்கள் கலகலப்பு. ஆர்டினும் சளைக்காமல் கச்சேரி., ரகசிய ஆயுதம் என கிறிமுறி ட்ரிடிரி சத்தங்களோடு கதை முழுதும் ஒரு இசை மாமேதை என்னும் மமதையிலேயே பேசுவது செம கலாட்டா.
  ஷெரீப்டாக்புல் பேசும் "அவனுக்குகே அவன் பெயரை சரியாக எழுத வராது " வசனத்தை படித்ததும் வாய்விட்டே சிரித்துவிட்டேன்.
  சிக்பில் மரத்தில் மறைந்துகொண்டு க்ரேசி கும்பலை தாக்குவது நல்ல காமெடி. டொக். . . .டொக். . .டொக். . .ஹாஹா ஹாஹா ஹாஹா. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
  நிறைவான நகைச்சுவை படைப்பு.

  ReplyDelete
 85. 1)லார்கோ
  2)கார்ட்டூன்
  3)டெக்ஸ்
  4)மாயாவி
  பங்குனி வெயில நல்லாத்தேன் தகிக்க வச்சிருக்கீங்க. ம் எங்க. தளபதியும் வந்திருந்தா எப்பிடி இருந்திருக்கும்....ஹிம்ம் நாம கொடுத்து வச்சது அவ்வளவுதேன். வைகாசி வரை காக்க வச்சிட்டீங்களே ஆசிரியரே. தளபதி வைகாசியிலயாவது வருவாப்லயா?

  ReplyDelete