Powered By Blogger

Sunday, February 07, 2016

ஒரு 68-ம்....ஒரு 70-ம்...!

நண்பர்களே,

வணக்கம். ஒற்றைக் குருவியின் சந்தோஷ கானத்தை வசந்த காலத்தின் ஒட்டுமொத்த அறிவிப்பாய்ப் பார்த்திடக்கூடாது தான்; ஆனால் மகிழ்ச்சியான நாட்கள் ரொம்பத் தொலைவிலில்லை என்பதன் அறிகுறியாய் எடுத்துக் கொள்ளலாமல்லவா? புத்தாண்டு பிறந்து இரு மாதங்களது வெளியீடுகள் மட்டுமே நம் கைகளில் இருக்கும் வேளையில் பின்னிட்டோம்லே... தூள் சூப்பர் ஹிட்‘ என்ற கனவில் நான் சுற்றி வந்தால் மதிமந்திரியாரின் அல்லக்கை வேலைக்குக் கூட லாயக்காக மாட்டேனென்பது உறுதி! ஆனால் ஜனவரி & பிப்ரவரி இதழ்கள் as a whole அழகானதொரு வார்ப்பில் அமைந்து விட்டுள்ளதை ரசித்திடலில் தவறில்லைதானே? இதற்கு முன்னே தொடர்ச்சியாய் ‘ஹிட்‘ கதைகளைத் தாங்கி வந்த மாதங்கள் பல அமைந்துள்ளன தான் ; ஆனால் 2016 துவக்கம் முதலாகவே  'மாதமொரு டெக்ஸ்' + 'மாதமொரு கார்ட்டூன் மேளா' என்ற பார்முலா ரொம்பவே புத்துணர்ச்சியோடு எங்களைப் பணி செய்ய அனுமதிக்கின்றது என்பது அப்பட்டமாய் புரிகிறது! இதுவரையிலும், கனமான கதைகள் அமைந்திடும் வேளைகளில் அந்த சீரியஸ் தொனியினை சற்றே மட்டுப்படுத்திட கார்ட்டூன்களைப் பயன்படுத்தி வந்தோம்! ஆனால் இப்போதோ கார்ட்டூன்களே ஒரு தனித் தடம்; சிரிப்பின் நாயகர்களே ஒரு star attraction என்றான பிறகு ஒவ்வொரு மாதத்துப் package –ம் ரம்யமாகத் தெரிகின்றன ஆந்தை விழிகளுக்கு! இந்தாண்டின் tagline – ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை  என்பதே! அதன் துவக்கம் எங்கள் பக்கமிருந்து சரியாக அமைந்துள்ளதெனும் போது உங்கள் வதனங்களையும் அது அழகுபடுத்திடும் நாள் நிச்சயமாய் தூரத்தில் இல்லையென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!

பிப்ரவரி இதழ்கள் இப்போது தான் உங்களது நேரங்களையும், வாசிப்புகளையும் கோரி வரும் சூழலில் அது டாப்.... இது சூப்பர்‘ என்று நான் தீர்ப்பெழுதுவது ரொம்பவே முந்திரிக்கொட்டைத்தனமாக இருக்குமென்பது உறுதி! ஆனால் இதுவரையிலான உங்களது சிந்தனைச் சிதறல்களை ஒரு துவக்கமாக வைத்துப் பார்த்தோமெனில் 68-க்குச் சரியான போட்டியைத் தருகிறது 70 என்பது புரிகிறது ! தனது எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் லக்கி லூக் 68-வது அகவையில் பயணிக்கும் இரவுக்கழுகாரோடு தம் கட்டி மல்லுக்கு நிற்பதை உணர முடிகிறது ! So நம்மிடையே 1987 முதலாக ஜாலி ஜம்ப்பரோடு சுற்றித் திரிந்து வரும் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாய் மீதான ஒளிவட்டமே இவ்வாரத்துப் பதிவு! So here goes!

லக்கியாரை நான் முதன் முதலில் தரிசித்தது 1980-களின் துவக்கப் பொழுதினில்! “சூப்பர் சர்க்கஸ் & ஜெஸ்ஸி ஜெம்ஸ்“ ஆகிய இரு ஆல்பங்களையும் மும்பையில் ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து என் தந்தை வாங்கி வந்திருந்தார். ஆங்கிலத்தில், அழகான பெரிய சைஸில், வண்ணத்தில் நம்மாளைப் பார்த்த மறுகணமே அவரோடு ஐக்கியமாகி விட்டேன்! இன்டெர்நெட்டோ, வெளியுலகத் தொடர்புகளுக்கு சுலப வாசல்களோ இல்லா அந்நாட்களில் தொடரில் மேற்கொண்டு இதழ்களைச் சேகரிக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் பருப்பு வேகவில்லை! So அந்த இரு ஆல்பங்களையே புரட்டோ புரட்டென்று புரட்டி திருப்திப்பட்டுக் கொண்டேன்! 1985-ல் பிரான்க்பர்ட் செல்லும் தருணம் வந்த பொழுது லக்கியாரை எப்படியேனும் தமிழ் பேசச் செய்தே தீர வேண்டுமென்ற வேகம் எனக்குள் நிறைய குடியிருந்தது! 1985-ல் போடத் தொடங்கிய துண்டு நமக்கொரு சீட் பிடித்துத் தர ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டது! இங்கிருந்து நானொரு கடுதாசி போட்டால் அது வான்வழி மார்க்கமாய் சாவகாசமாய் 25 நாட்கள் கழித்துப் பாரிஸ் சென்றடைவதும், அவர்களது பதில் கடிதம் ஒரு மாதத்தை விழுங்கிக் கொண்டு நம்மை எட்டிப் பிடிப்பதும் வேறு எதற்குப் பயன்பட்டதோ இல்லையோ எனது பொறுமையின் அளவுகளை உயர்த்திக் கொள்ள ரொம்பவே உதவியது! 

ஒரு வழியாக லக்கியின் கான்டிராக்டும் 1986-ல் செப்டெம்பரில் கைக்குக் கிடைக்க, அதனில் எனது கையெழுத்தைக் கிறுக்கி வைத்து விட்டு மறுதபாலில் திருப்பி அனுப்பிடாமல் பத்திரமாகக் கையிலேயே வைத்துக் கொண்டேன். அக்டோபரில் பிரான்க்பர்ட் + பாரிஸ் பயணம் என்ற திட்டமிடல் இருந்ததால் இன்னுமொரு 25 நாட்களை கடுதாசிப் பயணங்களில் விரயம் செய்யத் தோன்றவில்லை ! நேரில் பார்க்கும் போது கையிலேயே ஒப்படைத்து விட்டு - கதைப் பக்கங்களை அப்படியே வாங்கி வந்து விடலாமென்பது எனது மகாசிந்தனை ! அதன்படியே பிரான்க்பர்டில் அவர்களது ஸ்டாலில் சந்தித்த வேளையில் பந்தாவாய் கான்டிராக்டை எடுத்து அவர்களிடம் கொடுக்க ‘சரி... பக்கங்களைத் தயார் செய்து தபாலில் அனுப்புகிறோம் !‘ என்று சொல்லி விட்டு அவர்கள் என்னை வழியனுப்பி வைக்க முனைந்தபோது  எனக்கோ தவிப்பு! திரும்பவும் ஒன்றரை மாதங்கள் காத்திருந்தாக வேண்டுமே; கையில் வாங்கிக் கொள்ள முடிந்தால் அலுப்பிருக்காதே என்ற நப்பாசையில், தயங்கித் தயங்கி எனது கோரிக்கையை முன்வைத்தேன்! “இவன் கொடுக்கவிருக்கும் ராயல்டியோ பொரி உருண்டை... இந்த அழகில் துரைக்கு உடனடி சர்வீஸ் கேட்குதாக்கும்?“ என்ற ரீதியில் அவர்கள் முகத்தைச் சுளித்திருந்தால் நான் எதுவும் சொல்லியிருக்க இயலாதுதான்; ஆனால் அவர்களோ முகமெல்லாம் புன்னகையோடு Bromide பிரிண்ட்கள் போட்டு வாங்க நாலைந்து நாட்களாவது ஆகுமே...?‘ என்று கேட்ட பொழுது - பிரான்பர்ட் கண்காட்சி முடிந்த கையோடு அடியேன் பாரிஸை போட்டுத் தாக்கவிருப்பதாகச் சொல்லி வைத்தேன்! இவன் நம் குடலை உருவாமல் ஊர் திரும்ப மாட்டான் போலும்! என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்தான் ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல், ‘பாரிஸ் வந்த பிற்பாடு போன் அடித்து விட்டு ஆபீசுக்கு வாருங்கள்!‘ என்று சொன்னார்கள்! இவ்வளவு சொன்னால் போதாதா? புத்தக விழா முடிந்த கையோடு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான பின்னே முதல் காரியமாகப் போன் போட்டேன்! 
ஒவ்வொரு பிராங்க்பர்ட் விழாவும் பெரிய பதிப்பகங்களுக்கு ஒரு யானைப்பொதி வேலையை உருவாக்கித் தரும் வேளை என்பதையோ; அத்தனை சுமைக்கு மத்தியில் நமது வேண்டுகோளுக்கு முக்கியத்துவம் தருவதும் சுலபமாகாது என்றெல்லாம் அன்றைக்கு எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை! ஒரு நிமிட மௌனத்துக்குப் பின்பாக “சாரி... வேலை மும்மரத்தில் இதைச் சுத்தமாக மறந்தே போய் விட்டேன்; இன்றைக்கு ஆர்டர் பண்ணினால் கூட, வெள்ளிக்கிழமை சாயத்திரத்துக்கு முன்னதாகக் கிடைத்திட வாய்ப்பேயில்லையே!“ என்று நிஜமான சங்கடத்தோடு சென்னார்! சனி, ஞாயிறு அவர்களது விடுமுறைகள் எனும் போது மறு திங்கட்கிழமைக்கு முன்பாக எதுவும் சாத்தியமாகாதே என்பது புரிந்தது! நானோ அந்த வாரயிறுதியினில் ஊர் திரும்புவதாகத் திட்டமும், டிக்கெட்டும்! 

இதற்கு மத்தியினில் 1985-ல் ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, என்று சுற்றித் திரிந்திருந்த என்னை- ‘இவ்வளவு தொலைவு போய்ட்டு ஸ்விட்சர்லாந்தைப் பாக்காமத் திரும்பிட்டியாக்கும்டா? சுத்த வேஸ்ட் போ!‘ என்று என் நண்பர்கள் உசுப்பி விட்டிருந்தனர். So- பிரான்க்பர்ட் + பாரீஸ் வேலைகளை முடித்த கையோடு இரண்டு நாட்களுக்கு ஸ்விட்சர்லாந்து செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன்! இந்தியாவுக்குத் திரும்பும் ரிட்டன் ப்ளைட் பாரிஸிலிருந்து தான் எனும் போது சனிக்கிழமை அதிகாலையில் நான் ஸ்யூரிக்கிலிருந்து பாரிஸ் வந்து சேர்வதாயிருந்தேன்! ஈனஸ்வரத்தில் சனிக்கிழமை உங்கள் விடுமுறையென்பதை அறிவேன் தான்; ஆனால் நான் நாடு திரும்பவிருப்பது சனி இரவில்.... அதற்கு முன்பாக உங்களை எங்கேயாவது சந்தித்து கதைப் பக்கங்களை collect பண்ணிக் கொள்ள இயலுமா?“ என்று கேட்டு வைத்தேன்! நிச்சயமாய் எரிச்சலில் மறுப்புச் சொல்லப் போகிறாரென்று எதிர்பார்த்திருந்த நிலையில் கலகலவென சிரிப்புக் குரல் தான் மறுமுனையிலிருந்து கேட்டது! “இத்தனை காதலோடு எங்களது கதைகளைப் பின்தொடரும் உங்களுக்கு இதைக் கூடவா செய்ய மாட்டோம்?“ என்று சொல்லிய கையோடு சனி காலை நானிருக்கும் ஹோட்டலுக்கே வந்து பக்கங்களை ஒப்படைப்பதாக வாக்குத் தந்தார்! நமக்குத் தான் “சிக்கனம் சோறு போடும்“ என்பதில் அசைக்க இயலா நம்பிக்கை உண்டாச்சே அன்றும் சரி, இன்றும் சரி பெரிய ஹோட்டல்கள் பக்கமெல்லாம் தலைவைத்துப் படுப்பது கிடையாதே! கண்ணில் படும் முதல் பட்ஜெட் ஹோட்டல் தான் ஜாகை எனும் போது சனிக்கிழமை காலை எனக்கு எந்தப் புண்ணியவான் ரூம் தருவானோ என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருக்க வழியேது? ஒருமாதிரியாக அசடுவழிந்து நான் சனிக்கிழமை போன் பண்ணிச் சொல்லட்டுமா மேடம்?“ என்று கேட்டேன்! செல்போன்கள் இல்லா அந்நாட்களில் சனிக்கிழமை அவரோடு தொடர்பு கொள்ள வேண்டுமெனில் அவர்தம் வீட்டு போன் நம்பரைப் பெற்றாக வேண்டுமென்ற விஷயம் அப்புறமாய்த்தான் மண்டைக்கு எட்டியது. எந்தப் பக்கம் பால் போட்டாலும், இவன் கோல் போடாமல் தீர மாட்டான் போலும் என்பதை மறுபடியும் நினைத்துக் கொண்டாரோ என்னமோ சின்னதொரு சிரிப்போடு தனது வீட்டு நம்பரையும் தந்தார்! நம்மூரில் இதுவொரு சமாச்சாரமே கிடையாது தான்; சிக்கியவர்கள் எல்லோருக்கும், எல்லா நம்பர்களையும் சகஜமாய்த் தந்து விடுவோம் - ஆனால் privacy-க்கு முக்கியத்துவம் தரும் ஒரு நாட்டில், இந்தக் குழந்தைப் பையனை நம்பி தனது பெர்சனல் நம்பரைத் தந்தவருக்கு நன்றிகள் சொல்லி விட்டு, ஸ்விட்சர்லாந்துக் கனாக்களுள் ஆழ்ந்து போனேன்!

ஸ்யூரிக் நகருக்கு இரு நாட்கள் சென்று திரும்பிய திசையெல்லாம் பேங்குகளும், அழகான லேக்குகளும் இருப்பதை மட்டுமே பராக்குப் பார்த்து விட்டு இரயிலைப் பிடித்து பாரிஸினுள் சனிக்கிழமை அதிகாலை 6 மணி சுமாருக்குப் போய்ச் சேர்ந்தேன்! பாரீஸ் நகரில் அரை டஜன் பிரதான இரயில்நிலையங்கள் உண்டென்பதோ; எனது இரயில் அதில் எந்த நிலையத்திற்குச் சென்று நிற்குமென்பதோ துளியும் தெரிந்திராது அரைத்தூக்கச் சொக்கில் பேந்தப் பேந்த இறங்கி நின்ற போது அந்த நிலையத்துக்கு கரே டி லியான் என்று பெயர் என்று பார்க்க முடிந்தது. சரி, எதுவானால் என்ன ? ; கட்டையைக் கொஞ்ச நேரம் கிடத்த இடம் தேடினால் போதுமே ! என்று பையைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு ஐரோப்பிய இரயில் நிலையத்தைச் சுற்றியும் குறைந்த கட்டண லாட்ஜ்கள் விரவிக் கிடப்பது வழக்கமென்பதால் ஒவ்வொன்றாய் ஏறி ரூம் கேட்கத் தொடங்கினேன்! உள்ளே நுழையும் முன்பாகவே ரூம் நஹி... இடத்தைக் காலி பண்ணு!‘ என்ற ரீதியில் பிரெஞ்சில் கசமுசாவென்று குரலெழுப்ப இது என்ன கூத்தடா சாமி? என்ற கேள்வி மண்டைக்குள் எழுந்தது! கிட்டத்தட்ட மூன்றோ-நான்கோ லாட்ஜ்களில் இதுவே routine ஆகிப் போன பின்னே, இது ஏதோ வேறுவிதமான சிக்கல் என்பது லேசாக உறைக்கத் தொடங்கியது! அடுத்து நுழைந்த ஹோட்டலினுள் ஒரு பெரியவர் அமர்ந்திருக்க தயங்கித் தயங்கி ரொம்பவே மரியாதையான குரலில் ரூம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் நீ இலங்கையைச் சார்ந்தவனா?“ என்று கேட்டார்! ‘இல்லை‘ என்பதாய் தலையை ஆட்டிய போதிலும் திருப்தி கொள்ளாமல் என் பாஸ்போர்ட்டைக் கேட்டார். அதை எடுத்து நீட்டியவுடன் கையில் வாங்கி எழுத்துக் கூட்டி ஆங்கிலத்தில் உள்ள விபரங்களைப் படிக்க முயற்சித்தார். 5 நிமிடங்களாவது அதை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் “show me your bag!” என்றார். நானும் என் பையைத் தூக்கிக் காட்ட, அதைத் திறக்கச் சொல்லி சைகை செய்தார். ஜிப்பைத் திறந்து காட்டிய மறுகணம், பையை அப்படியே மேஜை மீது சாய்த்தார் ! உள்ளே கிடந்த என் துணிமணிகள். புத்தகங்கள் என சகலமும் அந்தக் கறைபடிந்த மேஜையில் இரைந்து கிடக்க, பையை திரும்பவும் உற்று உற்றுப் பார்த்தார்! அவமானமாய், எரிச்சலாய் உணர்ந்த போதிலும் அந்த நேரத்தில் நிலைமையை வேறு மாதிரியாகக் கையாளத் தெரியாது மௌனமாகவே நின்றேன். அந்தப் பெரியவரின் மனைவி உள்ளேயிருந்து வர, இரண்டு பேரும் ஏதோ பேசிக் கொண்டனர். அன்றைக்கு அணிவதற்கென நான் பத்திரமாக வைத்திருந்த மடிப்புக் கலையா சட்டை‘பப்ரப்பா‘வென்று அலங்கோலமாய் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே நான் நின்று கொண்டிருக்கையில் அந்த மூதாட்டி டொக்கு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்!

இலங்கையினில் ஈழத்து விடுதலை தொடர்பான யுத்தம் தீவிரமடையத் துவங்கியிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து ஐரோப்பாவின் முக்கிய தேசங்களில் தஞ்சம் தேடிப் புகுந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதையும்; பாரிஸில் கணிசமான மக்கள் அடைக்கலமாகியிருந்ததையும் மேலோட்டமாகச் சொன்னார். அந்தப் பகுதியிலிருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றினில் முந்தைய நாள் இரவில் ஏதோ வன்முறைச் சம்பவம் நிகழ்ந்திருந்ததாகவும் அதனில் ஈடுபட்டிருந்தோர் அடைக்கலம் நாடி வந்திருந்த மக்களாக இருக்கக் கூடுமென்ற சந்தேகம் நிலவுவதால்தான் தற்காலிகமாக இந்த "பரிசோதனைகள்"என்று அந்தப் பாட்டி சொன்ன போது எனக்குச் சொல்ல முடியா எரிச்சல்! பார்த்தால் நானும் இலங்கையைச் சார்ந்தவன் போலத் தெரிவதால் தான் என் பையைச் சோதனை போட வேண்டியதானது என்றும் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே  சத்தமில்லாமல் எனது உடைமைகளை அள்ளித் தூக்கி மறுபடியும் பைக்குள் திணித்துக் கொண்டு மேஜை மீதிருந்த எனது பாஸ்போர்ட்டையும்  எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினேன். ‘ரூம் வேண்டாமா?‘ என்பது போல எதையோ அந்தத் தாத்தா என்னிடம் கேட்க பதிலேதும் பேசப் பிடிக்கவில்லை! சரி, இனி ரூம் தேடி அலைந்து பொழுதை வீணடிக்க வேண்டாம் என்ற கடுப்பில் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்தேன்! பாரிஸின் வீதிகளில் ஒரு கிலோமீட்டருக்கொரு புல்வெளியோ, பூங்காவோ இருக்கத் தவறுவதில்லை என்பதால் எதிர்க்கொண்ட முதல் பூங்காவில் தட்டுப்பட்ட காலி பெஞ்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டேன். தூக்கம் சுத்தமாய்ப் போயிருந்தது இந்த எரிச்சலான அனுபவத்தின் பொருட்டு! ‘என்ன ஊர்டா சாமி...? என்ன மாதிரியான மனுஷன்கள்?‘ என்ற ‘காண்டு‘ உள்ளுக்குள் குமைய, வெயில் வரத் தொடங்கும் வரை அங்கேயே அமர்ந்திருந்தேன்.வாரயிறுதி என்பதால் நான் ரூம் கேட்டுச் சென்றிருந்த ஆரம்பத்து ஹோட்டல்களில்  இடம் இல்லாமலும் இருந்திருக்கக் கூடும் ; அவர்கள் ஏதோ பிரெஞ்சில் சொல்லி என்னைத் திருப்பியனுப்பியது அதன் பொருட்டும் இருந்திருக்கலாம் என்பதை நிதானமாய் யோசித்திருந்தால் புரிந்திருக்கக்கூடும் ! ஆனால் அந்த நொடியின் அவமான உணர்வில் புத்தியானது செயல்படும் நிலைமையில் இருக்கவில்லை !  
லக்கி லூக் கதைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு போன் அடிக்க வேண்டுமேயென்ற நினைப்பு அப்போது தான் மண்டையி்ல் பொறி தட்ட கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை. மரியாதையானதொரு சூழலில் அந்தப் பெண்மணியை சந்திப்பதாயின் ஏதேனும் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் எடுப்பது மட்டுமே எஞ்சியிருந்த மார்க்கம் என்றாலும், எனது நிதி நிலைமை அதற்கெல்லாம் ஒ.கே. சொல்லவில்லை ! சரி, எவ்வளவோ தொந்தரவைத் தந்து விட்டோம் - இதையும் விட்டு வைப்பானேன் ? என்ற சிந்தனையோடு ‘விறுவிறு‘வென்று அதே இரயில் நிலையத்திற்குத் திரும்பவும் நடையைக் கட்டினேன் ! அங்கே கண்ணுக்குத் தெரிந்த முதல் டெலிபோன் பூத்திலிருந்து அவருக்கு ஃபோன் அடித்து, லியான் இரயில் நிலையத்தில் இருப்பதாகவும்; அங்கிருந்தபடிக்கே இரயிலைப் பிடித்து விமான நிலையம் செல்லவிருப்பதால் கோபித்துக் கொள்ளாமல் ஸ்டேஷனுக்கே கதையைக் கொணர்ந்து தந்து விட முடியுமா ? என்று கேட்டேன்! துளித் தயக்கமுமின்றி ஓ.கே. என்று சொல்லி விட்டு என்னை ஏதோவொரு இலக்கில் காத்திருக்கச் சொன்னார். சரியாக 20 நிமிடங்களில் ‘டக் டக்‘ என்று நடை போட்டு வந்தவர் முகம் நிறைந்த புன்னகையோடு ஒரு கனத்த பார்சலை என்னிடம் ஒப்படைத்து விடடு ‘good luck’ என்றபடிக்குத் திரும்பிச் சென்று விட்டார். பல் கூட விளக்காமல் பரட்டைத்தலைப் பக்கியாக நின்று கொண்டிருந்த எனக்கு அவர் துரிதமாய் விடைபெற்றுச் சென்று விட்டதில் நிம்மதி! நானிருந்த கோலத்தில் ரொம்ப நேரத்தை அவரோடு பேசிப் போக்கியிருந்தால் மானம் கப்பலேறியிருக்குமோ என்ற பயம்தான்! So- நமது ஒல்லிப் பிச்சான் கௌபாயின் முதல் சாகஸமான ‘சூப்பர் சர்க்கஸ்‘ நம்மை எட்டிப் பிடித்தது பல் கூட விளக்கியிராவொரு அக்டோபர் மாதத்து இளம் காலைப் பொழுதினில்! எப்படியோ ஏர்போர்ட் சென்றடைந்து அங்கே ஆக வேண்டிய சமாச்சாரங்களையெல்லாம் செய்து முடித்த பின்பு ஆசை ஆசையாய் பார்சலைப் பிரித்து ‘சொட சொட‘வென்றிருந்த கறுப்பு வெள்ளை போட்டோ பிரிண்ட்களை வருடிய போது சந்தோஷம் அலையடித்தது! ஊர் திரும்பிய பின்னே, செம ஆர்வமாய் மொழிபெயர்ப்பைச் செய்தது கலரில் தயார் செய்தது என்று வண்டி ஓடிட லக்கி லூக்கின் (தமிழ்) முதல் ஆல்பம் தயாராகியிருந்தது ஜனவரி 1987-ல்!

அதன் பின்பாய் இன்று வரை சுமார் 25 ஆல்பங்களை வெளியிட்டிருப்போம்... LLஎன்ற அடையாளமும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றும் விட்டது! ரசனை மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்திருந்தாலும் லக்கியும், டெக்ஸ்-ம் மாத்திரமே எல்லாக் காலகட்டங்களிலும் evergreen favourites ஆகத் தொடர்ந்து வருவது தான் நமக்கெல்லாம் தெரியுமே? And இந்த பிப்ரவரியில் அந்தக் கூட்டணி தொடரும் தருணத்தில் அதிரடிகளுக்குப் பஞ்சம் தான் இருக்க முடியுமா ? 

"சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் XIII & லக்கி கதைகளின் ஒரிஜினல்கள் ஒருசேர தபாலில் வந்து சேர்ந்ததாய் எழுதியிருந்தது நினைவுள்ளது ! லக்கியின் பின்னே இருந்த இந்த நீட்டல் முழக்கல்களை அங்கே அந்நேரம் எழுதிடத் தோன்றவில்லை ! பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் இது போல் சிற்சிறு சம்பவங்கள் நடப்பது இயல்பே எனும் போது அவற்றை பெரிதுபடுத்தல் வேண்டாமே என்று நினைத்தேன் ! இங்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் - ஆனால் நமக்குப் பற்பல வருடங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்து வந்த அந்தப் பெண்மணியான திருமதி ஆன்தியா ஷாக்கிள்டன் அவர்களை எங்கேனும் நினைவி கூர்ந்திடாது போய் விட்டோமே என்ற குறுகுறுப்பு தான் இதனை இன்று எழுதிடுவதன் பின்னணிக் காரணம் ! தவிர "சிங்கத்தின் சிறு வயதில்"கோரிக்கையோடு  "எட்றா வண்டியை ; அமுக்குடா ஹாரனை ! !" என்று கைபிள்ளையாய்த் தலீவர் கிளம்பியான போது - வாழைப்பூ சீசனும் இல்லையென்ற நிலையில் அவரை சாந்தப்படுத்தும் அவசியமும் தட்டுப்பட்டது ! அவர்பாட்டுக்கு இந்தியத் தபால்துறையின் சகாயத்தோடு தாக்குதலைத் தொடுக்கத் துவங்கினால் பூமி தாங்குமா ?
     
கூகுளைத் தட்டினால் லக்கி லூக்கின் ஜாதகமே கிடைத்து விடுமென்ற நிலையில் புள்ளி விபர ரமணா அவதாரத்தைக் கையில் பெரிதாய் எடுக்கத் தோன்றவில்லை ! நமது நாயகரின் பிறந்த நாள் டிசம்பர் 7,1946 ! இதோ பாருங்களேன் முதல் முதலாய் வெளியான லக்கி & ஜாலியின் சித்திரத்தை ! 
மாரிஸ் டி பிவியெர் என்பதே லக்கியின் படைப்பாளியின் நிஜப் பெயர். 'மோரிஸ்' என்ற சுருக்கமான பெயருடன் உலவி வந்தவர் 1955 வர தானே கதையும் எழுதி, சித்திரங்களும் போட்டு வந்தார். 1955-ல் கதாசிரியர் கோசினியுடன் கைகோர்க்க - அடுத்த 12 ஆண்டுகளுக்கு எக்கச்சக்க ஹிட் கதைகள் உருண்டோடி வந்தன ! 2001-ல் மோரிஸ் இயற்கை எய்திட - தற்போது Achde என்ற கதாசிரியரின் பராமரிப்பில் உள்ளார் நம்மாள்  ! இரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் லக்கி உலகெங்கும் வம் வந்திட - அவரது தொடரில் 2015 வரைக்கும் 82 கதைகள் உள்ளன ! (சுட்டி லக்கி & ரின் டின் கேன் சேர்க்காமல்) ! வாயில் துண்டு சிகரெட் சகிதம் பவனி வந்தவர் 1983 முதல் புகைக்கு எதிரியாகிப் போய் வாயில் புல்லை வைத்துக் கொண்டு "சைவமாய்" சுற்றி வரத் தொடங்கி விட்டார் ! 
70-வது பிறந்த நாளை நம்மவர் கொண்டாடும் இந்தாண்டில் பிரான்சில் நிறையவே கொண்டாட்டங்கள் இதன் பொருட்டு நடந்து வருகின்றன. சமீபமாய் நிறைவு பெற்ற அங்குலெம் காமிக்ஸ் விழாவில் ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் லக்கி லூக் சித்திரங்கள் ஒரு கண்காட்சியாக நடந்தது! And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள்! அவற்றுள் 3 நாம் பார்த்தான இதழ்களே! இதோ அந்தப் பட்டியல்:
§  ஜெஸ்ஸி ஜேம்ஸ்
§  மேடையில் ஒரு மன்மதன்
§  மேற்கே ஒரு மாமன்னர்
§  Canyon Apache
§  Le Grand Duke
 சந்தர்ப்பம் கிட்டும் போது மேற்படிப் பட்டியலின் இதழ்கள் # 4 & 5 ஐ நாம் தமிழில் நிச்சயமாய் வெளியிட்டு விடுவோம்! இதே போலொரு Top 5 தேர்வினை இது வரையிலான லக்கி லூக் தமிழ் ஆல்பங்களுள் செய்வதாயின் உங்கள் தேர்வுகள் என்னவாகயிருக்கும் folks?

மார்ச் மாதம்  லக்கி லூக்கின் ஒரு one shot ஆல்பத்தை நம்மைப் போலவே (!!!!)கறுப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் ஒரே சமயம் வெளியிடவுள்ளனர்! இதில் வேடிக்கை என்னவெனில் black & white பதிப்பு விலை கூடுதல்!! 60 பக்கங்கள் கொண்ட இந்த லக்கியின் கதையினைக் கோரியுள்ளேன் ; அழகான படைப்பாக அமைந்திடும் பட்சத்தில் நமது அட்டவணைக்குள் சீக்கிரமே நுழைக்கப் பார்ப்போம்! மே மாதம் இன்னுமொரு புது one shot இதழும் திட்டமிடலில் உள்ளதாம்! So- தனிமையே என் துணைவன்“ என்ற கவிதை வரிகள் (!!!) இந்தாண்டில் அடிக்கடி ஒலிக்கவிருக்கிறது பிரான்கோ-பெல்ஜிய வானில்!

நமது அட்டவணையில் இந்தாண்டே காத்திருக்கும் அடுத்த LL சாகஸமும் (திருடனும் திருந்துவான்!) ஒரு சிரிப்பு மேளா! இதனில் டால்டன்களும், ஜாலி ஜம்பரும் விலா எலும்புகளை நோவச் செய்தாலும் நிஜமான நாயகனென்னும் பெருமையைத் தட்டிச் செல்லக் காத்திருப்பது நமது அறிவுஜீவி ரின் டின் கேன் தான்! கதையின் முக்கிய தருணங்களில் தவறாமல் தலைகாட்டும் ரி.டி.கே.வுக்காக பன்ச்  டயலாக்குகளை (!!) எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன்! சந்தேகமின்றி இது  லக்கியின் இன்னுமொரு ‘ஹிட்‘!
நீ-ண்-டு செல்லும் பதிவை இத்தோடு முடித்துக் கொண்டு மேஜை நிறையக் குவிந்து கிடக்கும் பணிகளுக்குள் டைவ் அடிக்கப் புறப்படுகிறேன்! 
 • டெக்ஸின் அடுத்த சாகஸமான ‘விதி போடும் விடுகதை‘யில் ரொம்ப காலத்திற்குப் பின்னர் டெக்ஸ், கார்ஸன், கிட், டைகர் என நால்வரும் இணைந்து அற்புதமாய்க் கலக்குவதை ரசிப்பதா? அல்லது-
 • கேரட் மீசைக்காரரின் கலர்புல், ஜாலி த்ரில்லரின் மீதான எடிட்டிங்கை நிறைவு செய்வதா? அல்லது-
 • நீலப் பொடி மனுஷர்களின் உலகினுள் நுழைவதா? அல்லது-
 • நமது தளபதியின் 5 பாக சாகஸத்துள் முதல் 3 பாகங்கள் முழுமையாக முடிந்து மேஜையின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமித்து வருவதைப் பார்த்தாவதா? அல்லது
 • பக்கங்களைப் புரட்டும் போதே பேனா பிடிக்கக் கைவிரல்களில் நமைச்சலை ஏற்படுத்தும் ரின் டின் கேனின் “பிரியமுடன் ஒரு பிணைக் கைதி“க்குள் கட்டையைக் கிடத்துவதா? அல்லது
 • ப்ளுஜீன்ஸ் பில்லியனரின் “கடன் தீர்க்கும் வேளையிது“ பணிகளின் இறுதிக்கட்ட touches-ஐ கவனிப்பதா?


என்ற சந்தோஷக் குழப்பம்! விஞ்ஞானபூர்வமாய் 'இன்க்கி-பின்க்கி-பாங்க்கி' போடடுப் பார்த்து வேலைகளைச் செய்து விட்டு தூக்கத்தைத் தேடிப் புறப்படுகிறேன்! Enjoy the Sunday folks! மறவாமல் பிப்ரவரி இதழ்களின் விமர்சனங்களைத் தொடர்ந்திடுங்களேன்! Bye for now!
சில updates :

 • இம்மாத இதழ்களது ஆன்லைன் ஆர்டர்கள் செம வேகம் !! அதிலும் லக்கி    இதழ்களை gift -ஆக அனுப்பக் கோரிடும் ஆர்டர்களும் கணிசம் !
 • சந்தாவினில் இணையும் புது வாசகர்கள் சமீப வாரங்களில் நமக்கு சந்தோஷ ஆச்சர்யத்தைத் தந்து வருகின்றனர் ! FB -ல் கிடைக்கும் கூடுதல் reach இதன் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் முற்றிலும் புதியவர்கள் நம் குடும்பத்தினில் இணைவது ரொம்பவே நிறைவைத் தருகிறது !
 • "பாம்புத் தீவு" நிறைய ரெகார்ட்களை முறியடிக்கும் சாத்தியங்கள் ஏகம் ! "நயாகராவில் மாயாவி" ஏற்படுத்திய விற்பனை சாதனையை இது தாண்டி விடும் போல் தோன்றுகிறது !!
 • CINEBOOK இதழ்களும் கூட மெதுமெதுவாய் வேகம் பிடித்து வருகின்றன ! தோர்கல் ; LADY S - இரு தொடர்களுமே இந்த வாரத்தின் flavors !!
 • அட்டைப்பட டிசைனிங்கில் திறமைகளைக் காட்டிட எண்ணிடும் நண்பர்கள் நமக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விடலாமே ? 
 • 299 comments:

  1. Replies
   1. மஞ்சள் பூ மர்மம் - சிறு வயதில் படிக்கும் போது மிகவும் ரசித்து படித்த கதை. குறிப்பாக லாரன்ஸ் டேவிட் இருவரும் கால்களில் விசேச காலனி அணிந்து கொண்டு எட்டுகால் பூச்சி போல் சுவற்றில் ஏறுவதை கண்டு பலமுறை வியந்தது உண்டு. அதே போல் கர்னலின் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இருவரும் மாறுவேடம் புனைந்து சுனைதாவை சந்திக்க செல்லும் இடம், போன இடத்தில் டேவிடின் உள் மனதின் எச்சரிக்கையால் கோடாரி அவரை தாக்காமல் தப்பிப்பது... சொல்லி கொண்டே செல்லலாம். இன்றும் இந்த கதையை வாசிக்கும் போது அதே அனுபவம் கிடைத்தது. நன்றி.

    Delete
  2. இளவரசி & கார்வின்: இந்த மாத புத்தகம்களில் முதலில் படிக்க எடுத்தது ச.தூ.க. நேர் கோட்டில் செல்லலும் கதை, முதல் பக்கத்தில் வில்லன் தெரிந்து விட்டது, அந்த பெண் கைதியை மீட்க போகிறர்கள், கண்டிப்பாக மீட்டு விடுவார்கள் என முழுகதையை முதல் சில பக்கம்களில் தெரிந்து கொண்டாலும் சுவாரசியமான வாசிப்பை கொடுத்தது; விறுவிறுப்பு குறைவில்லாமல் சென்றது. மாடஸ்டி வழக்கமான திட்டம், அதனை யோசிக்காமல் செயல்படுத்தும் கார்வின் காரணம் மாடஸ்டி எது சொன்னாலும் ஏதாவது காரணம் இருக்கும் என்பது. பெண் கைதிதான் இருக்கும் இடத்தை தந்தி முறையில் அறிவிப்பது இதற்கு முன் ஏதோ ஒரு கதையில் படித்ததாக ஞாபகம்.

   பிரிண்டிங் அருமை, சித்திரம்கள் அருமை.
   மொத்தத்தில் இளவரசி இந்த முறையும் கவர்ந்து விட்டார்.

   ஹ்ம்ம் இளவரசியை சந்திக்க இன்னும் ஒரு வருடம் காத்துஇருக்க வேண்டும் :-(

   ReplyDelete
   Replies

   1. அதுதான் மிகப்பெரிய சோகம் மாடஸ்டியின் அருமை

    ஸோ ஸேட் ப்பா

    Delete
   2. உங்கள் சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் நண்பரே...!
    இப்படி ஆளாளுக்கு கண்ணை கசக்கினால்தான் அடுததவருடம் மாடஸ்டிக்கு கூடுதலாக இடம் வாங்கமுடியும்.....!

    Delete
   3. நான் ரெண்டு கண்ணையும் கசக்கி தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருக்கேங்க...

    Delete
   4. பரணி உங்களளுக்கு books வந்துடுச்சா? எனக்கு இன்னும் வரவில்லை.

    Delete
  3. Good Morning friends and editor sir
   This month all are super hits
   Modesty is highly action packed and tex willer is like crime thriller english movie
   Manjal malargal marubadium alagaha poothana
   We r LUCKY

   ReplyDelete
  4. விஜயன் சார், புத்தகம்கள் நீங்கள் அனுப்பிய மறுநாளே (வியாழன்) கைகளில் கிடைத்து விட்டு. DTDC கூரியர் சர்வீஸ் நன்றாக உள்ளது. புத்தகம்கள் அனுப்பியவுடன் நமது அலுவலகத்தில் இருந்து SMS இந்த முறையும் தவறாமல் வந்து.

   ReplyDelete
   Replies
   1. எங்களுக்கு எல்லாம் SMSம் வரல.. கூரியரும் அடுத்த நாளுதான் வந்தது....

    Delete
   2. DCTC நல்ல இருக்கா? எ பரனி என்ன வெறுப்புபேத்தூறிங்க?

    Delete
   3. இது வரை புக்கும் வரல...SMS -ம் வரல...இவ்வளவுக்கும் நான் சென்னை சிட்டி...தூக்கி தூர போடுங்க DTDC சர்விஸ

    Delete
  5. My favorite LL stories

   1. Oru kochu vandiyin kathai
   2. Boom boom padalam
   3. Jessy James
   4. Puratchi thee
   5. Super circus
   6. Bayangara Podiyan 1 &2

   ReplyDelete
  6. My LL favrite storys
   1 பயங்கர பொடியன் பார்ட் 1
   2 ஜெஸ்ஸி ஜேம்ஸ்
   3 கோச் வண்டியின் கதை
   4 சூப்பர் சர்க்கஸ்
   5 பயங்கர பாலம்
   6 புரட்சி தீ
   7 பயங்கர பாலம்
   8 பூம் பூம் படலம்
   9 பயங்கர பொடியன் பார்ட் 2
   10 %*#+*&%"'

   ReplyDelete
   Replies
   1. பயஙககர பாலத்தை விட முடியயாமல் 5 ஆர் 7 மை ஆல் டைம் பேவரைட்

    Delete
   2. பயஙககர பாலத்தை விட முடியயாமல் 5 ஆர் 7 மை ஆல் டைம் பேவரைட்

    Delete
  7. மாடஸ்டிக்கு பெரும் வரவேற்பு இப்போது உள்ள நிலையில் மேலும் ஒரு வாய்ப்பு இந்த ஆண்டில் வழங்கலாமே சார்

   ReplyDelete
   Replies
   1. ஆமாம் ஆசிரியரே தேவதையை இந்த வருடமே இன்னும் ஒரு முறை கொண்டு வரலாமே

    Delete
  8. என் காமிக்ஸ் உலக அண்ணா விஜயன் சாருக்கும் நண்பர்களுக்கும் என் வணக்கங்கள்

   ReplyDelete
  9. லக்கி லூக் மூலம் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய தங்களுக்கு அதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக
   மாறாத உங்கள் விடாமுயற்சிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

   ReplyDelete
  10. விஜயன் சார், LL கதையை கைப்பற்றிய விதம் பற்றிய உங்களின் இந்த பதிவுக்கு சுவாரசியமாக இருக்கிறது. நமது புத்தக விற்பனை,புதிய வாசகர்கள் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைவது, மற்றும் நமது வாசக வட்டம் விரிவடைவது என்பதை கேட்கும் போது சந்தோசமாக உள்ளது.

   Dial-Z (Zig Zag) சந்தா அறிவிப்பு எப்போது? சீக்கிரமா சொன்னா பணத்தை ரெடி பண்ண வசதியாக இருக்கும்.

   இந்த வருடத்தில் Lucky Luke கதைகள் சொன்னதை விட அதிகமாக வெளி இட போவதாக இருந்தால் அவை Dial-Z வருமா? இல்லை இப்பொது சந்தாவில் அறிவித்து உள்ள இதழ்களுக்கு பதிலாக மாற்று இதழாக வருமா?

   ReplyDelete
  11. ஜனவரி போலவே இம் மாதமும் நான்கு இதழ்களுமே டாப்போ டாப் சந்தேகமில்லாமல் இம்முறையும்
   டெக்ஸ் தான் முதல் இடம் திகில் நகரில் டெக்ஸ் சூப்பர் லக்கி லூக் ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான கதை முதல் இடத்தை ஜஸ்ட் மிஸ் பன்னி விட்டார் இருவருக்கும் சளைக்காமல் தேவதையும் கலக்கி விட்டாள் மறு பதிப்பானாலும் லாரண்ஸ் டேவிட் தூள் கிளப்பி விட்டார்கள் மொத்தத்தில் ஜனவரியை விட பிப்ரவரி ஒரு படி மேலே போய் விட்டது

   ReplyDelete
  12. லக்கி லூக் நம் தமிழ் காமிக்ஸ் உலகை அடைய இவ்வளவு சிரமப்பட்டுள்ளாரே!

   ReplyDelete
   Replies
   1. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!

    Delete
  13. எடிட்டருக்கும், நண்பர்களுக்கும் அதிகாலை வணக்கங்கள்....!

   ReplyDelete
  14. ஆசிரியரே திகில் நகரில் டெக்ஸை இவ்வளவு நாள் தாமதப்படுத்த எப்படிதான் மனசு வந்ததோ உங்களுக்கு ஈரோட்டில் திகில் நகரில் டெக்ஸ் வேண்டுமென நான் கேட்ட போது அது சுமாரான கதை என்று சொன்னீர்களே கதை உண்மையிலே நன்றாக இருந்தது திருப்தியாக உணர்கிறேன் ஆசிரியரே

   ReplyDelete
  15. நமது சமீப இதழ்களில் சி.சி.வ.இல்லாத குறையை இப்பதிவு தீர்த்துவிட்டது.தலைவரின் கடிதக்கணைகளுக்கு இவ்வளவு சக்தியா...? வாழ்துக்கள் தலைவரே...!

   ReplyDelete
  16. அருமையான பதிவு. நன்றி ஆசிரியரே!

   ReplyDelete
  17. லக்கி டாப் 5

   ஒரு கோச் வண்டியின் கதை& ஒரு வானவில்லைத்தேடி..!

   கௌ பாய் எக்ஸ்பிரஸ்

   ஜெஸ்ஸி ஜேம்ஸ்

   லக்கி லூக்கிற்கு கல்யாணம்

   பனியில் ஒரு கண்ணாமூச்சி

   மற்றும் பல...!

   ReplyDelete
  18. டியர் சார்...!

   நமது ஞாபக மறதிக்காரரின் சாகஸம் எப்போது...?

   ReplyDelete
  19. "சிங்கத்தின் சிறு வயதில் " படித்தது போல் வெகு சுவாரிசயமாக இருந்தது சார் .
   என்னுடைய பார்வையில் லக்கி லுக் இன் டாப் 5 இதழ்கள்
   1) சூப்பர் சர்க்கஸ்
   2) புரட்சி தீ
   3) பயங்கர பொடியன்
   4) ஜெஸ்ஸி ஜேம்ஸ்
   5) பூம் பூம் படலம்
   இலங்கையில் ஈழ விடுதலை தொடர்பான யுத்தம் உங்களையும் பாதித்த நினைவலைகள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிகள் சார் . அத்துடன் பாரிஸில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் சார் .
   "சிங்கத்தின் சிறு வயதில் " எமது இதழ்களில் தொடராக வந்து கொண்டு இருந்தது . அதுவும் இப்போது வருவது நின்று போய் விட்டது . அதை முன்பும் அணு அணுவாய் ரசித்தோம் . இனியும் ரசிப்போம் . தயவு செய்து மறுபடி அதனை வெளியிட ஆவன செய்யுங்கள் சார் .ப்ளீஸ் !!
   முன்பு போல் இல்லா விட்டாலும் சிறு கட்டுரையாவது எங்கள் கண்ணில் காட்டுங்கள் சார்.ப்ளீஸ் ! ப்ளீஸ்!ப்ளீஸ்!

   ReplyDelete
  20. ஆசிரியர்க்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள்...

   Reply

   ReplyDelete
  21. நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்

   ReplyDelete
  22. ஆசிரியா் அவா்களுக்கும், நேச நெஞ்சங்களுக்கும் வந்தனங்கள்!

   ReplyDelete
  23. லக்கியை தமிழ் பேச வைக்க இத்தனை கஷ்ட,நஷ்டங்களா..!உங்களையும்,உங்கள் ஆா்வத்தையும் புாிந்து கொண்ட அந்த நிறுவனத்தாாின் அன்பும், பெருந்தன்மையும் ஆச்சா்யப்பட வைக்கும் சங்கதிகள்! அவா்களுக்கு அன்பாா்ந்த நன்றிகள்! இத்தனைக் கஷ்டங்களும், மறந்து போயிருக்குமல்லவா..லக்கியாா் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விளாசிய போது..!

   ReplyDelete
  24. எடி ஸார், மாடஸ்டிக்கு கூடுதல் இட ஒதுக்கீடு தரும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். ஆண் நாயகர்களின் ஆதிக்க காமிக்ஸ் உலகில் ஒரே ஒரு பெண் நாயகரை ஒதுக்குவது நம்முள்ளேயே புதைநதிருக்கும் ஆணாதிக்க (!) எண்ணமா. வருடம் நான்கு கதைகளை wild card 😄 entry முறையில் தரும்படி கேட்டு கொள்கிறேன். இன்று சிறிது சீக்கிரமாகவே எழுந்து விட்டதால் முதல் 100க்குள் பதிவிட வாய்ப்பு 😊

   ReplyDelete
  25. இந்த மாதத்தை பொறுத்த வரை பட்டா போட்டி சூப்பர். மபூ மர்ம்ம, அட்டை ஓவியங்களில் முகங்களுக்கு கூடுதல் கவனம் வேண்டும் சார். அட்டையில், அந்த பெண் ஏறக்குறைய லாரனஸ்சுக்கு பெண் வேஷம் போட்டது போல உள்ளார். நமது அட்டை ஓவிய வடிவமைப்பில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் சார்

   ReplyDelete
  26. பத்திரமாக வைத்திருந்த மடிப்புக் கலையா சட்டை‘பப்பரப்பா‘வென்று அலங்கோலமாய் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே நான் நின்று கொண்டிருக்கையில் - உங்கள் sense of humor சூப்பர் சார்

   ReplyDelete
  27. அட்டகாசமான பதிவு எடிட்டர் சார்! நாங்களும் உங்களோடு சேர்ந்து பாரீஸ் நகர வீதிகளில் ( பல் தேய்க்காமல்) சுற்றியதைப் போல ஒரு உணர்வு!
   சமீபத்தில் காணாமல்ப்போய்விட்ட 'சி.சி.வ' தொடருக்கு இழப்பீடாக இப்பதிவை எழுதியிருப்பது எங்கள் போராட்டக்குழுத் தலீவரின் கடுதாசி ஆயுதத்தின் வலிமையைப் பறைசான்றுகின்றது ( ம்ம்ம்... அந்தப் பயம் இருக்கட்டும்...). இந்தப் பதிவின் தலைப்பைக்கூட 'ஒரு தற்காப்புப் பதிவு'னு வச்சிருக்கலாம் நீங்க! ;)

   ReplyDelete
   Replies
   1. திருத்தம் - 'பறைசாற்றுகின்றது'

    Delete

  28. 'திகில் நகரில் டெக்ஸ்'...

   (+) மாறுபட்ட கதைக்களம் ( மர்மம் + வழக்கமான 'தல' தாண்டவம்)
   (+) தொய்வில்லாத கதை நகர்வு
   (+) யூகிக்க முடியாத குற்றவாளி
   (+) டெக்ஸை கரடுமுரடாய்க் காட்டாத பழைய பாணி சித்திரங்கள்!
   (+) ரசிக்கவைத்திடும் நேர்த்தியான, இயல்பான வசனங்கள்

   (-) குற்றவாளி ஒரு சைக்கோ கில்லராக மாறியதற்குச் சொல்லப்பட்ட காரணத்தில் அழுத்தமில்லை!
   (-) கார்சன் இல்லாதது

   எனது ஸ்டார் ரேட்டிங் : 4.75/5

   செம! செம!

   Tex - இவர் எதிரிகளின் T-Rex

   ReplyDelete
   Replies

   1. நான் எதிரி யார்னு முதல்லியே யூகம் பண்ணிட்டேன்
    எத்தன காமிக்ஸ் படிச்சிருப்போம் நாங்க

    Delete
  29. எடிட்டர் மற்றும் காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம். கால இயந்திரத்தில் ஏறி எங்களையும் உங்களுடன் பயணிக்க வைத்ததற்கு நன்றி. சிலர் தம் அனுபவங்களை எழுதும்போது எனக்கு படிக்கும் எண்ணமே மேலோங்கி இருக்கும். ஆனால் நீங்கள் உங்களுடைய அனுபவங்களை எழுதும்போது படிக்கிறோம் என்பதைவிட உங்களுடன் பயணிக்கிறோம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தாங்கள் சிறுகதையோ அல்லது நாவலோ எழுத ஏன் முயற்சிக்கக்கூடாது ? எடிட்டர் சார். இருக்கின்ற வேலை பளுவில் இது தேவையா? என்று நினைக்கவேண்டாம். எப்போதாவது ஒரு முறை முயற்சிக்கலாமே? அப்புறம் இன்னொரு வேண்டுகோள். சீனியர் எடிட்டர் மும்மூர்த்திகளை தமிழ் பேச வைத்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். முத்து காமிக்ஸில் இதற்கென ஒரு பக்கம் ஒதுக்கி தொடர்ந்து எழுதினால் எங்களுக்கு இன்னும் சுவாரஸயமான பல அனுபவங்கள் கிடைக்கும். அவர்தம் அனுபவங்கள் இன்றுவரை எங்களை வந்து சேரவில்லை என்பது மிகப்பெரும் குறையாக உள்ளது. அவர்கூற நீங்கள் எழுதினால்கூட பரவாயில்லை. இது நிகழ வாய்ப்புள்ளதா சார். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே

   ReplyDelete
   Replies

   1. +10000000

    சீனியர் எடிட்டரின் அனுபவங்களைப் படித்திடப் பலரும் ஆவலாய் இருக்கிறோம். ஏற்கனவே நண்பர்கள் பலமுறை கோரிக்கை எழுப்பியும் ஏனோ இன்னும் செயல்படுத்தப் படாமலேயே இருக்கிறது. 'மி.ம' வெளியீட்டு விழாவின்போது சீ.எடிட்டர் தன் அனுபவங்களை நண்பர்களிடையே பகிர்ந்துகொண்ட விதத்தாலும், அப்போது அவரிடமிருந்து வெளிப்பட்ட உற்சாகத்தாலும் அவரது வயது கணிசமாகக் குறைந்துபோயிருந்ததைக் கண்கூடாகக் கண்டோம் நாங்கள்!

    அவரை எழுதவிடாமல் சும்மாகாச்சும் முடக்கி வைத்திருப்பதாக உங்கள் மீது குற்றம் சுமத்துகிறோம் எடிட்டர் சார்! போராட்டக்குழுவின் வலிமையை நீங்கள் அறியாதவரல்லவே?

    Delete
  30. ஒரு உலகபுகழ் ஒல்லிபிச்சான் காமெடியனை அறிமுகபடுத்துவதற்கு பின்னால் என்னவொரு தவிப்பான இளைஞரின் காமிக்ஸ் காதல் போராட்டம்..! சிங்கத்தின் சிறு வயதின் நினைவுகள் அருமை ஸார்..! இதை எழுத தூண்டிய தலீவருக்கு ஒரு தாங்க்ஸ்..!

   "இவரு ஒத்தைவரி கேட்டதுக்கு அவரு பொறுப்பா பக்கம் பக்கமா எழுதி பதிவு போடுறாரு... நாம பக்கம் பக்கமா பல மாசமா கேட்டதுக்கு ஒத்தை பதில் கூட சொல்லகானம்...இதெல்லாம் தெய்வத்துக்கே அடுக்காது.." ன்னு இன்னிக்கு நிறைய பேர் மனசுக்குள்ளேயே கரிச்சி கொட்டபோறாங்க..ஹாஹா..![பத்தவெச்சிட்டியே பரட்டை]

   திருமதி ஆன்தியா ஷாக்கிள்டன் அவர்களை திரும்பவும் சந்திக்க நேர்ந்தா இதுமாதிரி ஒரு போட்டோ போடுங்க ஸார்..இங்கே'கிளிக்'

   ReplyDelete
   Replies
   1. இதே மாதிரி நம்ம மடிப்பாக்கத்தார் மாடஸ்டியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாக வாய்ப்பிருக்கிறதா, மாயாவி அவர்களே? ;)

    Delete
   2. வொய் திஸ் கொலவெறி...? ஐ நோ வாட்டிஸ் யுவர் தனிவெறி..!!! [கண்ணடிக்கும் ஜானிநிரோவின் அசிஸ்டெண்ட் ஸ்டெல்லா படம் ஒன்று]

    Delete
  31. This month ratings
   1)lucky luke(best entertainment)
   2)all three books

   ReplyDelete
  32. BLACKE & MORTIMER போன திங்கட் கிழமை onlineல order செய்தேன். மேலும் இந்த மாதம் வர வேண்டிய சந்தா இதழ்களும் வரவில்லை. பெங்களூரில் ITPL தான் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா. இவ்வளவு தாமதம் ஆக வாய்ப்பு இல்லை. புத்தகம் dispatch ஆகிவிட்டது என்று online tracking காண்பிக்கிறது. ஆனால் இரண்டு ஆர்டர்களும் இன்னும் வரவில்லை. Dctc க்கு call செய்தால் யாரும் எடுக்க வில்லை. ஆசிரியர் எதவது செய்து திங்கள் அல்லது செவ்வாய் இரண்டு ஆர்டர் கிடைக்குமாறு செய்ய முடியுமா?. (வேலை அதிகமாக இருப்பதால் dctc அலுவலகம் செல்ல முடியவில்லை)

   ReplyDelete
   Replies
   1. Blacke & mt எவ்வாறு உள்ளது என்றும் , இந்த மாத டெக்ஸ வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறிய தால் அதை பற்றியும் எழுதலாம் என்று இருந்தேன். ஏமாற்றம் ஆகிவிட்டது.

    Delete
   2. குட் ...டியர் கணேஷ் முதல் கதையாக பட்டா போட்டியை முடித்து விட்டு,...
    திகில் நகரை படியுங்கள்.... டெக்ஸ்ன் மீதான உங்கள் பார்வை சற்றே மாறக்கூடும் நண்பரே...

    Delete
  33. Happy 70th birthday LL and your journey will countinues

   ReplyDelete
  34. \\\விஞ்ஞான முறையில் இங்கி பிங்கி \\
   இங்கி பிங்கி யை கண்டுபிடித்து இங்கலிஷ் காரண இருக்க லாம். ஆனால் அதுதான் முடிவெடுக்க விஞ்ஞானம் முறையில் சரியாக இருக்கும் என கண்டுபிடித்த ஆசிரியருக்கு வேதியியல், இயற்பியல், கனிதம், மற்றும் அறிவியல் ஆகிய அனைத்து பிரிவிலும் நோபல் பரிசு வழங்கிட இந்திய அரசு சிபாரிசு செய்ய வேண்டும்.(நம்மள இத்தனை வருடங்கள் கட்டி மேய்பதற்காகவே 6,7 அமைதிக்கான நோபல் பரிசு வேற pendingல இருக்கு)

   ReplyDelete
  35. கும்புட்டுகுறேனுங்க -/\-

   ReplyDelete
  36. அப்பாடி ....இரண்டு மூன்று மாதங்களாக புத்தகத்தின் அச்சில் பார்க்க முடியாத சி.சிறு வயதில் பகுதியை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி சார் ...அழகான பதிவு ....நகைச்சுவை கலைஞர்களின் வாழ்வில் சோகமே அதிகம் மேலோங்கியிருக்கும் என்பது போல நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கும் லக்கியின் வரலாறுக்கு பின்னால் இவ்வளவு பின்னனிகளா ....உங்கள் பிரச்சனைகளை விட உங்கள் ஆர்வத்தை மதித்து உடனடியாக ஒரிஜினல்களை வழங்கிய அந்த பெண்மனி அக்காவை மனதில் பாராட்ட சொல்கிறது சார் ...இதுவே நம்ம நாடா இருந்தா கமிஷன் வெட்டியிருந்தா கூட இப்படி அலைந்து கொடுக்க மாட்டார்கள் ....;-)

   ReplyDelete
  37. சார் st கொரியரில் அடுத்த நாளே புக் கிடைத்துவிடும்.ஆனால் இன்று வரை புக் கிடைக்கவில்லை.நாளை ஞாயிறு நிச்சயம் புக் வராது.தயவு செய்து எனக்கு st கொரியரிலேயே புக் அனுப்ப முடியுமா...நான் சென்னை சூளைமேட்டில் இருக்கேன்.

   ReplyDelete
  38. அப்படியே கையை பிடித்து கூட்டி சென்று காண்பித்தது போல இருக்கிறது

   மிக்க நன்றி விஜயன் சார் :))
   .

   ReplyDelete
  39. சார் st கொரியரில் அடுத்த நாளே புக் கிடைத்துவிடும்.ஆனால் இன்று வரை புக் கிடைக்கவில்லை.நாளை ஞாயிறு நிச்சயம் புக் வராது.தயவு செய்து எனக்கு st கொரியரிலேயே புக் அனுப்ப முடியுமா...நான் சென்னை சூளைமேட்டில் இருக்கேன்.

   ReplyDelete
  40. எடிட்டர்.மற்றும் நண்பர்களுக்கு காலை நமஸ்காரம்.

   ReplyDelete
  41. வார இறுதியில் புக் படிக்கும் சந்தோஷமே அலாதி தான்...இன்று வரை புக் வராதது வருத்தமாக இருக்கிறது.

   ReplyDelete
  42. When the lion 32 year specail book will come(i am waiting for roger)

   ReplyDelete
  43. எடிட்டர் ஸார், திருவாளர் லக்கிலூக் அவர்களை பிடித்துகொண்டு இந்தியா வருவதற்குள் உங்களை லக்கி பெண்டெடுத்து சுளுக்கெடுத்து டிங்கரிங் செய்து பட்டி பார்த்துவிட்டார் போலுல்லதே.

   ReplyDelete
  44. Lawrence & David - 10
   Modesty - 9
   LL - 8
   Tex - 7
   My personal feedback only & out of 10

   ReplyDelete
  45. Lawrence & David - 10
   Modesty - 9
   LL - 8
   Tex - 7
   My personal feedback only & out of 10

   ReplyDelete
  46. புதிய பதிவைக்காண tamilcomicseries.blogspot.com

   ReplyDelete

  47. காலையில் எழுந்து இந்த பதிவை படித்ததிலிருந்து லக்கிலூக்கிற்கு எதையாவது (Tribute) செய்யச்சொல்லி கேக்கோணும்னு என்ற மனசாட்சி சொல்ல முடியா வார்த்தைகளால் ஊனௌனை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யச்சொல்லி எடிட்டரை டார்ச்சர் செய்யலாம் என கேசத்தை பிய்த்து யோசித்ததில் ஒரு யோசனை கிடைத்திருக்கிறது . (கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்னு உங்க மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்கிறது)
   டீட்டெய்லா கொஞ்ச நேரத்துல வரேன்.!!!! :-)

   ReplyDelete
  48. ///70-வது பிறந்த நாளை நம்மவர் கொண்டாடும் இந்தாண்டில் பிரான்சில் நிறையவே கொண்டாட்டங்கள் இதன் பொருட்டு நடந்து வருகின்றன. சமீபமாய் நிறைவு பெற்ற அங்குலெம் காமிக்ஸ் விழாவில் ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் லக்கி லூக் சித்திரங்கள் ஒரு கண்காட்சியாக நடந்தது! And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள்! ///

   இதையே நாமும் செய்தலென்ன சார்?

   கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் நம்முடைய வாழ்க்கையில் பங்கு கொண்டிருக்கும் லக்கி லூக் நம்முள் ஏற்படுத்திய தாக்கங்கள் எண்ணிலடங்கா.!

   எத்தனையோ கவலைகளை., பிரச்சினைகளை மறக்கடித்து மனதை இலேசாக்கிய தருணங்களும் ஏராளம். வணங்குகிறோம் லக்கி அண்ணே! !!

   இப்படியாப்பட்ட ஒரு ஹீரோவிற்கு அவருடைய 70ஆவது பிறந்தநாள் சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டு நாமும் மற்ற தேசத்து ரசிகர்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்று நிருபிப்போமே?? (எடிட்டர் மனது வைத்தால்) !!!

   ReplyDelete
   Replies
   1. மறுபதிப்பு என்று வரும்போது டாப் கதைகள் தேவையல்லவா?
    இதோ என்னுடைய டாப் கதைகளின் லிஸ்ட் :-

    ஒரு கோச் வண்டியின் கதை

    மேடையில் ஒரு மன்மதன்

    பயங்கர பாலம்

    ஜேன் இருக்க பயமேன்

    கௌபாய் எக்ஸ்ப்ரஸ்

    முழுக்க முழுக்க மறுபதிப்புகளே வேண்டாமெனில் மூன்று மறுபதிப்புகளும்., இரண்டு புதிய கதைகளும் கலந்து பட்டாசாய் வெடிக்கலாம்.!!!
    எடிட்டர் சார்!,
    கேட்பது எமது உரிமை.
    நிறைவேற்றுவது தமது கடமை!!!!

    Delete
   2. நல்ல விண்ணப்பம் தனிதவில் வித்வான் அவர்களே..! இன்னும் கொஞ்சம் தவிலை பலமா தட்டி எடிட்டரை பொங்கவெச்சி..கறுப்புல ஒன்னு கலர்ல ஒண்ணுன்னு ரெண்டு கையையும் தூக்க வெச்சிடாதீங்க..ஆங்..!

    Delete
   3. வேதாள மாயாத்மாவே.,
    அன்னிக்கு சரியா சுதி சேராததால தாளம் தப்பிடுச்சி.!
    ஆனா அதுவும் நல்லாத்தனே இருக்கு நண்பரே?

    Delete
   4. அட போங்க வித்வான்...நீங்க சரியாதான் சுதி சேத்தினிங்க..!

    ஒரு சிலாட் வீணா போச்சிங்கிற வருத்தம் ஒவ்வொருதபா விளம்பரம் பாக்கும்போதும் வாட்டுது... ஒர்ஜினல் ரேஷன்கார்டுக்கு தான் அரிசி கிடைக்கும்,ஜெராக்ஸ்க்கு சிம்கார்டு தான் தருவாங்க..!

    Delete
   5. +1111111111111111111111111111111111111111111111111111111

    Delete
   6. ஒல்லி பிச்சான் கெளபாய்க்கு ஒரு தனி “குண்டு புக்” பார்சல்............

    Delete
  49. அனைத்து இதழ்களுமே படித்தாகி விட்டது சார் ...முதலில் லக்கி சாகஸம் அருமையோ அருமை ....நீங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடி சிரிப்பை எதிர்பார்க்க வேண்டாம் என முன்னோட்டம் கொடுத்து இருந்தாலும் மொக்கையன் வருகைக்கு பிறகு பல இடங்களில் சிரிக்க வைத்ததும் உண்மை ..அதே போல படித்து முடித்ததும் மீண்டும் இன்னொரு முறை படிக்கலாம் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது உண்மை ...எனக்கு பழைய சூப்பர் சர்க்கஸ் ..புரட்சி தீ ..பூம் பூம் படலம் ...வரிசையில் மிகவும் மனம் கவர்ந்த இதழாக ..கதையாக பட்டா போட்டியும் அமைந்து விட்டது ....

   டெக்ஸ் ....சொல்ல தேவை இல்லை ....வித்தியாசமான கதை களத்திலும் தனி ப்பட்ட சிஐடி பாணியிலும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதை கெளபாய் ஹீரோ நிரூபித்து விட்டார் ...இப்படி எல்லாம் வித விதமாக தனது சாகஸங்களை டெக்ஸ் நிரூபிக்கும் பொழுது ஒரு வருடம் என்ன பத்து வருடம் ஆனாலும் டெக்ஸ் சலிக்க மாட்டார் என்பதே உண்மை ....

   மாடஸ்தி ...
   பலருக்கு இதற்கு முன் வந்த சித்திர குறைபாட்டால் மாடஸ்தி கதையவே பின்னோக்கி பார்த்த பார்வை ஏற்பட்டது ..அதற்கு வட்டியும் முதலுமாக அழகான சித்திர தரத்தில் ....விறுவிறுப்பான கதை அம்சத்தில் மாடஸ்தியும் ...வில்லியும் கலக்கி விட்டார்கள் ..க்ளைமேக்ஸ் அழகான விதத்தில் மனதில் புன்சிரிப்பை ஏற்படும் படி அமைந்து இருந்தது ..இந்த முடிவையே அனைவராலும் ஏற்கும் படி அமைத்து இருப்பது தான் உங்கள் சிறப்பு ..இதுவே நமது இதழ்களில் மாடஸ்திகார்வின் வெற்றி கொடியை நாட்டும் சூஸ்திரம் ...இனி இளவரசியை காண ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்பதே கவலை ....


   மஞ்சள் பூ மர்மம் ....

   உண்மையில் இந்த இரட்டை நாயகர்கள் நேற்று எனக்கு சிறு பணத்தையும் ..பெரிய அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பார்கள் ..நல்ல வேளை தப்பித்து கொண்டேன் ..மறுபதிப்பு இதழ்களை பஸ் பயணத்திலேயே படித்து முடிப்பது வழக்கம் என்பதால் நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ஒரு மணி நேர பயணத்தில் மஞ்சள் மர்மத்தில் மூழ்க தொடங்கினேன் ..சி.சி.மூலம் ஏற்கனவே அறிந்த கதை தான் எனினும் அந்த அழகான சித்திர தரங்கள் ...பெரிய அளவில் ...அழகான பழமை நெடி வீசாத மொழி பெயர்ப்பு ...தரமான தாளில் அவர்களுடனே பயணம் செய்து முடித்து புத்தகத்தை மூடி நிஜ பயணத்தில் ஜன்னலை பார்த்தால் பேருந்து தாரை நகரை தாண்டி நகர ஆரம்பித்து விட்டது ....ஐயோ ..என்று அரக்க பரக்க ...பேருந்து நகர நகர இறங்கி விட்டேன் ...தப்பித்தேன் ...ஒரு புது சாகஸத்தை படித்த திருப்தி தந்த இதழ் ...

   மொத்ததில் போன மாதம் போலவே இந்த மாதமும் ஏன் அதற்கும் அதிகமாகவே திருப்தி தந்தன நான்கு இதழ்களுமே ...

   அதே போல இந்த நான்கில் எது முதல் இடங்கள் ..இரண்டாம் இடங்கள் என வரிசைபடுத்த நினைத்தால் சாரி சார் ....

   என்னை பொறுத்த வரை நான்கு இதழ்களுமே சம தளத்திலியே நிற்கிறது ...

   இனி அடுத்த மாத கொண்டாட்டத்திற்கு காத்திருக்கிறேன் ....ஆனால் அதற்குள் லக்கியை மீண்டும் இரண்டு முறையாவது படித்து விடுவேன் என நினைக்கிறேன் ...இம்முறை லக்கி அந்த அளவு கவர்ந்து விட்டார் ....

   ReplyDelete
  50. எனக்கு மிக மிக பிடித்த டாப் 5 லக்கி ...


   சூப்பர் சர்க்கஸ் ....


   புரட்சி தீ .....


   பூம் பூம் படலம் ....


   ஜெஸ்ஸி ஜேம்ஸ் .....


   ஒரு கோச் வண்டியின் கதை ...


   மற்றும்


   டாப் 5..A


   ஒரு பட்டா போட்டி .....

   ReplyDelete
  51. அப்பாடி ....இரண்டு மூன்று மாதங்களாக புத்தகத்தின் அச்சில் பார்க்க முடியாத சி.சிறு வயதில் பகுதியை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி சார் ...அழகான பதிவு ....நகைச்சுவை கலைஞர்களின் வாழ்வில் சோகமே அதிகம் மேலோங்கியிருக்கும் என்பது போல நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கும் லக்கியின் வரலாறுக்கு பின்னால் இவ்வளவு பின்னனிகளா ....உங்கள் பிரச்சனைகளை விட உங்கள் ஆர்வத்தை மதித்து உடனடியாக ஒரிஜினல்களை வழங்கிய அந்த பெண்மனி அக்காவை மனதில் பாராட்ட சொல்கிறது சார் ...இதுவே நம்ம நாடா இருந்தா கமிஷன் வெட்டியிருந்தா கூட இப்படி அலைந்து கொடுக்க மாட்டார்கள் ....;-)

   ReplyDelete
  52. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட பிரான்கோ பெலௌஜியன் நாயகர்களுக்கு நம்முடைய மரியாதையை தெரிவிக்கும் விதமாக ஆண்டொன்றிர்கு ஒரு நாயகரின் டைஜஸ்ட்டை வெளியிட்டு கொண்டாடுவோம் சார்!
   கடந்த ஈரோட்டுத் திருவிழாவின் போது இதை நீங்கள் முன்வைத்த நினைவு இருக்கிறது.
   இந்த வருடம் லக்கி.,
   அடுத்து ஆர்டின் (ஹிஹிஹி)
   பிரின்ஸ்
   ஜானி
   ஏன் மாடஸ்டி யக்காவிற்கு கூட மரியாதை செய்யலாமே????

   ReplyDelete
   Replies
   1. அப்பால வுன்னோரு முக்லீமான மேட்டரு.
    2 மில்லியன் கிட்ஸையும் இத்தையும் ஆரும் கன்பூஸ் பண்ணிகாதீங்கோ., சொல்லிப்புட்டேன் அக்காங்!! !

    Delete
   2. KiD ஆர்டின் KannaN : மாடஸ்டியார் எப்போது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை துறந்தாரோ - பிரான்கோ பெல்ஜிய குடியுரிமை பெற்றிட ?

    Delete
  53. I did not receive my February Books till now.

   ReplyDelete
  54. பிப்ரவரி இதழ்கள்....

   மனதை கொள்ளை கொண்ட "வேலன்டைன்" இதழ்....லக்கி லூக் ....


   பிற.....

   1.டெக்ஸ்....

   2.மாடஸ்டி

   3.ம.பூ.ம

   இத்தாலியின்" ௸ர்லக் ஹோம்ஸ்" என அவதாரம் எடுத்த டெக்ஸை மிகவே ரசிக்கலாம்......

   மாடஸ்டி...வழக்கம்போல விறுவிறுப்பு ..


   ReplyDelete
  55. லக்கி லூக் டாப் 5
   1.பயங்கரப் பாலம்
   2.டால்டன் நகரம்
   3.சூப்பர் சர்க்கஸ்
   4.பூம் பூம் படலம்
   5.கௌபாய் எக்ஸ்பிரஸ்

   ReplyDelete
  56. பெல்ஜியத்தில் அல்லாடியதை சென்ற ஆண்டு சென்னையில் பகிர்ந்து கொண்டது போல,பாரீஸ்ல் பட்ட பாட்டை இங்கே பதிவாக ஏற்றியது சூப்பர் சார்....
   உங்களுடன் நாங்களும் பயணித்து விட்டோம், வித் அவுட்டில்.....
   இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற மலரும் நினைவுகளை வலைஏற்றுங்கள் சார்....
   சீனியர் எடிட்டர் சாரின் இதுபோன்ற அனுபவங்களை படிக்க ஏதும் வழி செய்யுங்கள் சார்....

   ReplyDelete
  57. டெக்ஸின் டாப் 5எளிதாக செலக்ட் செய்ய முடிந்தது சார், ஆனால் லக்கியின் டாப் 5 செலக்ட் செய்வது அவ்வளவு லேசுப்பட்டதில்லை போலும் சார்.
   1.பூம்பூம் படலம்....
   2.பயங்கர பொடியன் பார்ட்2...
   3.சூப்பர் சர்க்கஸ்...
   4.ஜெஸ்ஸி ஜேம்ஸ்...
   5.புரட்சி தீ.....

   ReplyDelete
  58. 1.கி.நா.க்கள் அடங்கிய சந்தாZ..
   2.two மில்லியன் ஹிட்ஸ் special....
   3.1000பக்கங்கள் க.வெ.ஸ்பெஷல்..
   4.லக்கி 70வது பர்த்டே ஸ்பெஷல்...
   5.ப்ரான்கோ-பெல்ஜியம் டைஜஸ்ட்கள்...
   அடேங்கப்பா...நினைக்கும் போது இனிக்கும் போல....

   ReplyDelete
   Replies
   1. சேலம் Tex விஜயராகவன் : 3 மில்லியன் ; 4 மில்லியன் கூட அடுத்த சில பல ஆண்டுகளில் வரவிருக்கும் landmarks தானே நண்பரே ? பட்டியலில் போட்டுக் கொண்டால் இன்னமும் வெயிட்டாக இருக்குமல்லவா ? :-) :-)

    Delete
   2. ஆசிரியர் சார்@ ஹி...ஹி..
    இதெல்லாம் இந்த ஆண்டின் தங்க தருணங்கள் மட்டுமே சார்....
    உங்கள் அறிவுரைப்படி, அந்தந்த முக்கிய தருணங்களை அந்த அந்த சமயத்தில் நினைவில் கொள்கிறோம் சார்....
    நீங்கள் எப்படி சமீப மாதங்களை மட்டுமே கணக்கில் வைக்கிறீர்களோ,நாங்களும் அப்படியே சார்....
    மேற்கூறிய பட்டியலில் நமக்கு எது சரிப்பட்டு வரும் என உங்களுக்கு இப்போதே லேசான ப்ளுபிரிண்ட் தோன்றி இருக்கும் என்று மட்டும் உறுதியாக என்னால் கூற இயலும் சார்.....

    Delete
  59. மாடஸ்தி புக் வந்து2நாள் ஆச்சு...
   எங்கே நம்ம மடிப்பாக்கம் மாடஸ்தி சாரை காணோம்????....

   ReplyDelete
  60. // கதையின் முக்கிய தருணங்களில் தவறாமல் தலைகாட்டும் ரி.டி.கே.வுக்காக பன்ச் டயலாக்குகளை (!!) எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன்! சந்தேகமின்றி இது லக்கியின் இன்னுமொரு ‘ஹிட்‘! //

   சூப்பர்! ரின் டின் கேன் இடம்பெறும் லக்கி லூக் கதைகள் என் ஃபேவரிட்!

   ReplyDelete
   Replies
   1. ///சூப்பர்! ரின் டின் கேன் இடம்பெறும் லக்கி லூக் கதைகள் என் ஃபேவரிட்!///-......+123456

    Delete
   2. Ramesh Kumar & சேலம் Tex விஜயராகவன் : ரின் டின் கேனே சோலோவாய் தூள் கிளப்பும் சாகசம் ஜூனில்...!

    Delete
  61. Satha z have thorgal,bluecoats,gil jourdan,juliya(becuse ladies are less) and last but not least bruno brazil (it is my opinion)

   ReplyDelete
   Replies
   1. diabolik akkik : உங்கள் ஆதர்ஷ டயபாலிக்கின் வேகத்துக்கு ஷெரீப் டாக்புல்லின் சிஷ்யப் புள்ளையான நான் ஈடு கொடுக்க இயலாது அகில் ! So பொறுமை ப்ளீஸ் !

    Delete
  62. ஒரு பட்டாப் போட்டி - முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை சிரித்து சிந்தித்து படித்த கதை! இந்த கதையின் சிறப்பு இன்றைய நாட்டுநடப்புகளை கதையில் சிரிப்பு மிட்டாய் என்ற பெயரில் சொருகி இருந்தது. முதல் பக்கத்தில் இருந்தே சிரிப்பு, பல இடம்களில் வாய்விட்டுச்சிரித்தேன்.

   பக்கம் 7- சலூன் ஆரம்பிக்க உதவி செய்வதாக ஆரம்பித்து, சலூன்காரனை உள்ளே அடைத்துவிட்டு வெளிப்பக்கம் சிறைசாலை என எழுதுவது.

   பாஸ்மார்க் நடமாடும் விஸ்கி ஸ்டோர் - அதனை நடமாடும் சிறைசாலையாக மாற்றுவது

   அம்மாவாசை இரவில் உடலில் கருப்புமையை அப்பிக்கொண்டு எல்லையை கடக்கும் ஆசாமி, அவன் மேல் லக்கி-லூக் எதிர்பாராத விதமாக மோதி அவனை பிடிக்கும் இடத்தில் உள்ள காமெடி.

   வில்லன் கும்பல் அடிக்கும் கூத்து, குறிப்பாக மொக்கை. இந்த கதையின் நாயகன் என்னை பொறுத்தவரை இவர்தான். சரியான அப்பாவி. கடைசியில் இவர் மேயராவது, சொல்ல போனால் மக்கள் சரியான மேயரைதான் தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.

   இது போன்ற கதைகளில் வரும் வெட்டியான் எப்பவும் எனக்கு பிடிக்கும், இந்த முறையும் அப்படியே. இந்த கதையில் எங்க ஆளுக்கு கொஞ்சம் வாய்ப்பு குறைவு.

   மேயர் தேர்தலில் போட்டி இட அனைவரும் தயாராவது, அவர்களில் தேர்தல் வாக்குறுதி.

   போட்டி போட்டு இடத்தை பிடித்த பின் அவர்களில் இடம்களில் வைக்கபட்டு இருந்த போர்டுகள்.. அவற்றில் மிகவும் ரசித்தது "அத்துமீறுபவர்கள் அடங்கி விடுவார்கள் ஆறடி பள்ளத்திலே".

   லாயர் முன்னால் நிக்கும் கூட்டம்.. வக்கீல் மனதில் "சொர்கமே என்றாலும்.. அது ஒக்லகோமா போலாகுமா".

   விடியட்டும் மலரட்டும் - சமீப அரசியல் தலைவரின் நடைபயண tagline.

   தேர்தலில் வெற்றிபெற்றால் அனைவருக்கும் சூப் என்ற தேர்தல் வாக்குறுதி, அதனை தொடர்ந்து காய்கறிகளால் அடிவாங்கியபின் அவற்றை வீட்டுக்கு சூப் போட எடுத்து செல்வது.

   "துடிப்பான நிர்வாகதிற்கு மாவீரன் மேக்கில்" வீட்டை விட்டு பிரசாரம் செய்ய கிளம்பும் போது வீட்டில் கிடைக்கும் அர்ச்சனை...

   சொல்லிக்கொண்டே போகலாம்.

   இறுதியாக மிகவும் சரியான கதை தலைப்பை தேர்வு செய்த நண்பர் கார்த்திக் சொமலிங்கா வாழ்த்துகள்.

   ReplyDelete
   Replies
   1. 'ஒரு பட்டாப் போட்டி' நண்பர்கள் பலரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுவருவது மகிழ்ச்சியளிக்கிறது!

    Delete
   2. 2012- எமனின் திசை மேற்கு...
    2013- கான்க்ரீட் கானகம்-லார்கோ..
    2014- விரியனின் விரோதி...
    2015- பெளன்சர்....
    2016- ஒரு பட்டாப் போட்டி..??????

    Delete
   3. @ ALL : இன்னமும் இந்தாண்டில் 40 இதழ்கள் காத்துள்ளன ; so தீர்ப்பெழுத நிறைய அவகாசம் உள்ளதே ! But "ஒரு பட்டாப் போட்டி " லக்கியின் ஹிட் வரிசையில் உயர்வானதொரு இடம் பிடிப்பது புரிகிறது ! Thanks guys !!!

    Delete
  63. மாலை வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே.
   நல்ல பதிவு,உங்கள் அனுபவங்கள் ஆச்சிரியங்களை தருகின்றன.
   நேரமின்மையால் எந்த இதழையும் வாசிக்க இயல்வில்லை.
   முடிந்தால் விமர்சனங்கள் அடுத்த வாரம்.

   ReplyDelete
   Replies
   1. Arivarasu @ Ravi : வேலைக்கு முக்கியத்துவம் எப்போதுமே ...! அடுத்த வாரமும் விமர்சனக் கச்சேரிகள் ஓடிக்கொண்டு தானிருக்கும் ; படித்து விட்டு வாங்க சார் !

    Delete
  64. உண்மையை சொல்ல போனால் தி.நகரில் டெக்ஸ் கதையை பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல உள்ளது ....ஆனால் எப்படி தொடங்கினாலும் முடிவிற்கு வந்து விட்டால் புத்தகம் படிக்காத நண்பர்களுக்கு அந்த அதிரடி யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் பற்றி உளறி நண்பர்களின் சந்தோசத்தை கெடுக்க விரும்ப வில்லை ...

   ஆனால் இப்போது எல்லாம் டெக்ஸ் கதைகள் ஒரே மாதிரி ...தலைப்பு தான் வேறு வேறு என்பவர்களுக்கு அடிக்கடி டெக்ஸ் அவர்களே அமைதியாக வந்து பதில் சொல்லி விட்டு சென்று விடுகிறார் ....;-)

   ReplyDelete
   Replies
   1. Paranitharan K : தலீவரே...அடிச்சு கேட்டாலும் அந்த கிளைமாக்ஸ் விஷயத்தைச் சொல்லிடாதீங்கே !!

    Delete
   2. அய்யோ..இன்னுமொரு இருபது பக்கம் இருக்கு,பரபரப்பா படிச்சிட்டிருக்கேன். நீங்க ஏதும் விஷயத்தை சொல்லிடாதிங்க..அவுக்..அவுக்..!!!!

    Delete
  65. This month top covers
   1)LL
   2)modesty
   3)l and da (reprint)
   4)tex (because tex in fear so only last place)

   ReplyDelete
  66. டியர் எடிட்டர்,

   உங்களது வலைப்பூ, ஹாட்லைன் மட்டுமே காமிக்ஸ் சார்ந்த அறிமுகமாக கொண்டு இருப்பவர்கள் நிறைய பேர். அவர்கள் இதைத்தாண்டி வேறெங்கும் படிப்பதும் இல்லை, காமிக்ஸ் பற்றி பேசுவதும் இல்லை.(வெகு சிலரே இங்கே இருப்பதை கடந்து மற்ற விஷயங்களை தேடி படிக்கின்றனர்).

   அப்படி இருக்க, கடந்த 2 பதிவுகளாக நீங்கள் ஓவியர் என்ரிக் பால்டியா ரொமேரோவை தொடர்ந்து பீட்டர் ரொமேரோ என்றே குறிப்பிட்டு வருகிறீர்கள். இதை கிண்டலாகவும், சீரியசாகவும் நான் இரண்டு முறை கேட்டுவிட்டேன். அதற்கு நீங்கள் இதுவரையில் பதில் அளிக்கவில்லை. (ஆனால், அவதூரின் அடுத்த உருவமான மரமண்டை சிவா வம்புக்கிழுக்கிறார்).

   ஒருவேளை நான் கிண்டலாக கேட்டது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அல்லது அந்த தொணி பிடிக்கவில்லையா? என்று தெரியவில்லை. (தொடர்ந்து இரண்டு பதிவுகளிலும் வருவதால், அது டைப்போவாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவருக்கு பீட்டர் என்றொரு புனைப்பெயர் இருக்கலாம், அந்த பெனிஃபிட் ஆஃப் டவுட்டையும் உங்களுக்கு அளிக்கிறேன்).

   ஆனால், இங்கே நீங்கள் செய்யும் சிறிய தவறை சுட்டிக்காட்டி, நான் விளம்பரம் பெற்று பாரத ரத்னாவோ, பத்ம விபூஷனோ பெறப்போவதில்லை. உங்களுக்கு எதிராக கமெண்ட் போட்டு, மற்றவர்களின் பார்வையை என் மீது திருப்ப, எனக்கு (மற்றவர்களைபோல) சுயமோகமும் இல்லை, நான் என்ற அகங்காரமும் எனக்கில்லை. ஆனால், அந்த பீட்டர் ரொமேரோ என்ற வார்த்தை ஏன் உங்கள் பதிவில் வந்தது? என்பதை தெரிந்து கொள்ள ஜென்யூனாக விரும்புகிறேன்.

   உங்கள் சமீபகால மொழிமாற்றம் குறித்து எனக்கு காத்திரமான எதிர்பார்வை உண்டு, அதை உங்களுக்கே சொல்லி இருக்கிறேன். (மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன், என்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு இருக்கிறேன்). ஆனால், இவை அனைத்தையும் நான் என்னுடைய பெயரில், என்னுடைய ஐடியில் வந்துதான் சொல்கிறேன், போலியாக ஒரு ஐடி வைத்து சொல்லவில்லை, அந்த தேவை எனக்கும் இல்லை.


   உங்களைப்போல நான் ஒரு தொழில்முறை எழுத்தாளனல்ல. ஆகவே, சொல்ல வந்த விஷயத்தை அழகாக, Balanced ஆக, தேவைப்பட்டால் sugar coat செய்து எழுத எனக்கு எழுத வரவில்லை. ஆனால், உங்கள் புத்தகங்கள் மீதான அக்கறை உண்மையான ஒன்று என்பது deep down, both of us know.

   ஆகவே, மறுபடியும் ஒருமுறை கேட்கிறேன்.

   அவரது பெயர் பீட்டர் ரொமேரோவா? இல்லை, என்ரிக் பால்டியா ரொமேரோவா?
   தயவு செய்து விளக்கவும்.

   மற்ற நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஒருவர் எடிட்டரிடம் கேள்வி கேட்கிறார், ஒரு மாற்று கருத்தை வைக்கிறார் என்றால், உடனே அவரை விமர்சித்து கமெண்ட் போடுவது, அவரை கேலியாக கிண்டல் செய்வது, மறைமுகமாக பேசுவது போன்ற செயல்கள் நமக்கு அழகல்ல. இந்த தளம் நல்ல ஒரு கருத்து சார்ந்த விவாதத்தை ஏன் இழந்து வருகிறது என்றால், இதுபோன்ற செய்கைகளால் தான். இனிமேலாவது சற்று சிந்திப்போம்.

   ஒருவர் மாற்று கருத்து வைக்கிறார் என்றால், அவருக்கும் நம் காமிக்ஸ் மீது அக்கறை இருக்கிறது என்றுதான் பொருள். அவர் நமக்கு எதிரி அல்ல. நம் மீது அக்கறை கொண்டவர்கள் சொல்ல வரும் விஷயத்தை மட்டும் பாருங்கள், சொல்ல வந்த விதமோ, தொணியோ முக்கியம் அல்ல. Dot.

   ReplyDelete
   Replies
   1. இந்த பீட்டர் ரொமேரோ, என்ரிக் பால்டியா ரொமேரோ வெறும் சாதாரண டைப்போவாகவும் இருக்கலாம்.

    ஆனால், 4 வருடங்களுக்கு முன்பாக பண்ருட்டி செந்தில் என்பவர் நிழல் 1, நிஜம் 2 என்ற சிக்பில் கதையை பற்றி உங்கள் மீது ஒரு குற்ரம் சாட்ட, அதற்கு நீங்கள் மிகவும் அழகாக ஒரு பதிவை இட்டு இருந்தீர்கள். அதன்மூலம் தெரிய வந்த விஷயங்கள் பல்.

    அதைப்பொலவே இந்த பீட்டர் ரொமேரோ பெயரிலும் ஏதாவது ஒரு சங்கதி இருக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான் இதை தொடர்ந்து கேட்கிறேன். You can pass this question, Too; If you do not want answer.

    Delete
   2. டியர் அருண்..... நீங்கள் இதுவரை நம் நண்பர்கள் யாரையும் நேரில் சந்தித்து பழக வில்லை என்று நினைக்கிறேன்...... ஒரு முறை நேரில் சந்தித்து பழகிவிட்டால், பிறகு அவர்கள் செய்யும் கிண்டல் உங்கள் மனதை பாதிக்காது..... மாறாக மகிழ்ச்சியை தரும்.....

    மொழிபெயர்பை பொருத்தவரை சின்ன சின்ன தவறுகள் இருக்கத்தான் செய்கிறது.... சில நேரங்களில் எடிட்டர் பார்வைக்கே போகாமல் அச்சுக்கு போகிறதோ என்று எனக்கு சந்தேகம்.... அந்த கால ஜூனூன், கானூன் தொடர்களை தமிழில் பார்த்த உணர்வு.

    Delete
   3. குறைகளை நிச்சயம் சுட்டிகாட்ட வேண்டும் அருண்..... சில வெத்து வேட்டுகள் கத்துவதை காதில் போட்டுகொள்ளாதிர்கள். உங்கள் பாணியில் பதிவிட்டுகொண்டிருங்கள்

    இடித்து கூற ஆளில்லாத மன்னன், எதிரிகள் இல்லாவிட்டாலும் கெடுவானாம்.

    Delete
   4. Arun SowmyaNarayan,

    It is my humble opinion that your precious time is getting wasted in the way of justifying things to those who are pretending that they are asleep :-)

    While I have taken a direct approach similar to that of yours in the past (review from 2013, my comments here) the fact is that some people on this blog want things sugar coated and cannot withstand a direct dig at their ICON, the Editor himself, even if editor himself is used to taking brickbats these days - this is a plain and simple fact.

    What came in handy for me, is my other angle at the state of things - just mix some humor - when you point out things not right and be direct when you point out things that are right. This has been my approach for some time now on this blog.

    However I do not recommend this template for you or others.

    Over time, I have realized that the best way for me to handle this blog is to comment only when it is absolutely necessary - the rest of the times a direct email to Editor will do the job even if you do not get an immediate answer.

    Delete
   5. Thanks, Raghavan.

    I also do feel that any comment which is stating facts which are against the norms for this blog, is being treated severely harsh.

    For example, i posted a comment in the previous blog post and this Maramandai Siva came and started to do his STANDARD REGULAR work.

    That precisely is the reason that this blog has lost out a quality debate.

    Advice taken and will be trying to shy from this blog.

    Let others have their time in here and enjoy.

    Delete
   6. Stay cool dude :-) Here are some examples to keep this blog alive and be part of the party :-) :-)


    * மீ தி first .. (இது சுமார் 25th வரை போடலாம் ;-))

    * அட்டைப் படம் மிக அருமை சார் - நமது டீமுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் ;-) [அது rose உதட்டு சாயம் பூசிய 'கீரோ'வா இருந்தாலும் ...]

    * டைட்டில் மிகப் பொருத்தமான ஒன்று சார் - இதை சூட்டிய 'பிப்பிளிபாக்கம் பரோட்டாகுமாருக்கு' வாழ்த்துக்கள் நண்பரே

    * தமிழ் காமிக்ஸின் பிதாமாகர்களான உங்களை வணங்குகிறோம் சார் [இப்டியே ஒரு லைன் போட்டு வில்லியம் வான்சே-லிருந்து ஔவையார் வணக்கும் வணங்கலாம் :-)]

    * நமது நிறுவன மொழிபெயர்ப்புக்காகதான் சார் நான் தமிழே படிக்கிறேன் - இல்லேன்னா only Scandinavian is mice (!) language [mine-ஆ? mice-ஆ?]

    * ரெண்டாயிரம் பக்கங்களுக்கு ஒரு 'ஜகத்ஜம்போ' ஸ்பெஷல் கேட்டு போராட்டம் நடத்துவோம் சார் ;-)

    Delete
   7. ராகவன் சார்....! ரொம்ப அருமையா சொன்னிங்க

    Delete
   8. Arun Sowmyanarayan : சத்தியமாய் இதற்கு முன்பாய் நீங்கள் எழுப்பிய கேள்வியினை நான் பார்த்திருக்கவில்லை ; ஒரு factual error -ஐ எந்தத் தொனியில் சுட்டிக்காட்டியிருப்பினும் அதனைத் திருத்திடத் தயங்கியிருக்க மாட்டேன். பீட்டர் ஓ' டொன்னெல் & ரோமெரோ என்றிருக்கும் படைப்பாளிகளின் பெயர்கள் எழுதும் போது "பீட்டர் ரோமெரோ" என்றாகி விட்டது ! I stand corrected ! Apologies

    ஆனால் இதன் பொருட்டு போலி ஐடி..நிஜ ஐடி என்று எங்கெங்கோ செல்வானேன் ? இந்தத் தளம் தான் அவற்றையெல்லாம் திகட்டத் திகட்டப் பார்த்துக் கடந்தும் வந்து விட்டதே ? தயை கூர்ந்து அந்தப் பாதை பக்கமாய்ப் பார்வைகளைச் செலுத்த வேண்டாமே ?

    @ AS & Raghavan : இன்னொரு விஷயம் எனக்குப் புரியவில்லை . காமிக்ஸ் உலகினை தூக்கி நிறுத்த எத்தனிக்கும் பக்கமாக இந்தத் தளத்தை நான் ஒரு போதும் எண்ணியதுமில்லை ; விளம்பரப்படுத்தியதுமில்லையே ! நமது இதழ்கள் பற்றிய எண்ணப் பரிமாற்றங்களுக்கும், நண்பர்கள் சந்தித்துக் கொள்வதற்கொரு இடமாகவும் மாத்திரம் தானே இது day 1 முதல் செயல்பட்டு வருகிறது ? அவ்விதமிருக்க இது அறிவுஜீவிகளின் கூடாரமாய் இல்லது போய் விட்டது போல் வருத்தம் கொள்வானேன் ? Of course ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு எவரும் இங்கே எதிரிகள் அல்ல ; and அவற்றில் பங்கு கொள்ள ஆற்றலில் குறைந்தோர் யாரும் இலர்..! ஆனால் பதிவிடப்படும் எண்ணங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பாணிகளில் இல்லாது போயின் அவற்றை நையாண்டி செய்வானேன் ? ; கடந்து செல்லும் சுதந்திரம் நமக்கு என்றைக்கும் உள்ளது தானே ? ஆழமான எண்ணங்களோ ; casual ஆன பின்னூட்டங்களோ - இரண்டும் ஜீவிக்க இங்கு போதிய இடம் தான் உள்ளதே !

    Delete
   9. @ Arun Sowmyanarayan : ஆதாரங்களின்றி விரல் நீட்டிட வேண்டாமே - ப்ளீஸ் ? இந்தாண்டின் இலட்சியத்தை ஒவ்வொரு நிலையிலும் நிஜமாக்கிப் பார்க்க ரொம்பவே ஆர்வமாய் உள்ளோம் ; so சிற்சிறு மனக்கசப்புகள் எதுவாயினும் அவற்றைத் தாண்டிடுவோமே ப்ளீஸ் !

    Delete
   10. @ எடிட்டர்: நானும் அறிவு ஜீவி மணிரத்னம் இதெல்லாம் கிடையாது .. அப்டி யாரும் இல்லியேன்னு வருத்தமும் கிடையாது ..

    சில சமயம் உங்களை நோக்கி சொல்லப்படும் கருத்துக்களுக்கு இன்னொருவர் பகடியாய் இங்கே பதில் சொல்வது இங்கு சாத்தியம் எனில் .. அவ்வாறு சொல்பவர்களை நய்யாண்டி செய்வதும் சாத்தியமே .. fair game, right??

    இன்னும் இருக்கும் 30 வருடங்களில் அறிவு .. ஜீவி .. ஏவிஎம்னு சொல்லிக்கிட்டு .. ஹ்ம்ம் ..next question !!

    Delete
   11. Arun Sowmyanarayan : ரொம்பவே சுமாரான இன்டர்நெட் இணைப்போடு என்னால் அதிகம் செய்ய இயலவில்லை ; ஆனால் இதுவரைக்கும் அந்தப் பின்னூட்டத்தைப் பார்த்திராதவர்களும் இப்போது அதனைத் தேடிட இதுவொரு காரணமாக வேண்டாமே - ப்ளீஸ் ? நாளைய பொழுது அதை சரி செய்து விடுகிறேன்...and இனிமேல் தினமும் இரவு ஒருமுறையேனும் தலைகாட்டி, ஏதேனும் untoward எழுத்துக்கள் இருப்பின் அதனை சரி செய்திடுகிறேன் !

    Delete
   12. I can see that my comment's are deleted.

    But "THAT HONOURABLE GENTLEMAN'S" comments are still shining in the blog.

    I just don't know if this is how we are going to confront things. The CRIMINAL gets away scot free and the victim is shunned away.

    Anyway, i still believe in you and hope that you will take action against this HONOURABLE GENTLEMAN.

    Sent you the screenshots of the comments which are still shining there.

    P.S.: Dear sir, Just think and act, just think that, if someone accuses you as impotent in a public forum, what will you do?

    I just believe that only your action will redeem the faith in this blog.

    Delete
  67. எடிட்டர் சார்,

   இந்த வாரப் பதிவு சூப்பரோ சூப்பர். உங்களுடை வசிகரமான தமிழ் நடையில் "Behind the Scenes" அருமையாக இருந்தது. தேங்க்ஸ் indeed.

   இந்த மாத லக்கி லுக் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்பதை இங்கு பதிவிடும் பல நண்பர்களின் பின்னூட்டம் வழியாக அறிய முடிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தையும்/படங்களையும் ரசித்து பதிவிடுவதிலிருந்தே இந்தக் கதையை எப்படி ரசித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிரெஞ்சு மொழியில் ஏற்கனவே படித்திருந்தாலும் உங்களின் மொழிபெயர்ப்பில் இப்போதே படிக்க ஆவலை தூண்டுகிறது.

   ReplyDelete
   Replies
   1. Radja : வெள்ளிக்கிழமையே அனுப்பி விட்டார்கள் சார் ; சீக்கிரமே கிடைத்து விட வேண்டும் !

    Delete
  68. மஞ்சள் பூ மா்மம்..அழகு ஓவியங்கள்! மனதை அள்ளுகிறது..! பாம்புகளுக்கு மத்தியில் லாரன்ஸ் விழுந்து கிடக்கும் காட்சியையே அட்டைப்படமாகப் போட்டிருக்கலாம்!

   ReplyDelete
  69. மஞ்சள் பூ மா்மம்..அழகு ஓவியங்கள்! மனதை அள்ளுகிறது..! பாம்புகளுக்கு மத்தியில் லாரன்ஸ் விழுந்து கிடக்கும் காட்சியையே அட்டைப்படமாகப் போட்டிருக்கலாம்!

   ReplyDelete
  70. சட்டமும் சுருக்குக் கயிரும்...மனதை தொடும் அற்புதப் படைப்பு..! மாடஸ்டியின் கதைகளில் முதல் பத்தை தோ்வு செய்யும் பட்சத்தில்,முதலிடம் இக்கதைக்கு கட்டாயம் உண்டு..! மனம் குழைந்து மருகி விட்டது! டெக்ஸை இன்னும் வாசிக்கவில்லை..ஆகையினால் இம்மாத இதழ்களில் மாடஸ்டிக்கே முதலிடம்!

   ReplyDelete
  71. எங்கே எம்.வி.?! யாரேனும் கண்டுபிடித்துத் தாருங்களேன்..!!

   ReplyDelete
   Replies
   1. Guna Karur : DTDC சொதப்பி விட்டார்களோ - என்னவோ ?

    Delete
   2. இருப்பினும் தளத்திற்கு தவறாது வருகை புாிவாரே..!

    Delete
  72. ஒரு பட்டா போட்டி! வெங்காய ஊத்தப்பத்தின் மேல் விரவிக் கிடக்கிற மசாலா தூள் போல ஆங்காங்கே நகைச்சுவை வசன நெடி அற்புத மொழிபெயா்ப்பால் தூக்கியடிக்கிறது! நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான லக்கி சாகஸம்..மோா்கன் சிறையிலிருந்து தப்பிப்பதும், பிறகு தானே சிறை வந்து சோ்வதும்,"இவனுக சூட்சுமங்கள் புாியவே மாட்டேங்குதே.."என்று லக்கி புலம்புவதும்..ஹா ஹா ஹா..ஹா..ஹா..ஹாா...!!!!

   ReplyDelete
  73. ரமேஷ்குமார் போன்ற நல்ல இதயங்கள் , அருணுக்கு ஆதரவாக களத்தில் இறங்காததில் எனக்கு கொஞ்சம் வருத்தம்.

   ReplyDelete
   Replies
   1. sundaramoorthy j : கவலை வேண்டாம் சார் ; நண்பர் ரமேஷ் குமார் இன்றுகூட இங்கே பதிவிட்டுள்ளார் ! அவருக்கு ஏதேனும் சொல்ல அவசியமிருப்பின் நிச்சயமாய்த் தயங்காது சொல்லியிருப்பார் !

    Delete
   2. அய்யோ...! தலைவரே...! நான் சின்ன பையன். என்னை போய் சார் போட்டு கூப்பிட்டுகிட்டு... சும்மா சுந்தர்ன்னு கூப்பிடுங்க

    Delete
  74. டெக்ஸின் மாறுபட்ட சாகசம் சூப்பா். அடுத்த டெக்ஸ் சாகசத்தை ஆவலுடன் எதிா் பாா்க்கிறேன்

   ReplyDelete
  75. இளவரசி கதையும் அருமை

   ReplyDelete
  76. எடிட்டர் சார் நீங்கள் அனுப்பிய அடுத்த நாளே எனக்கு புத்தகம் கிடைத்ததில் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் பல தோழர்கள் புத்தகம் இன்றுவரை கூரியர் மூலம் கிடைக்கப்பெறவில்லை என்பதை அறியும்போது மனதுக்கு சங்கடமாக உள்ளது. சம்பந்தபட்ட கூரியர் நிறுவனத்திடம் நீங்கள் கேட்கலாமே? பக்கத்தில் உள்ளவர் பசியுடன் இருக்கையில் நான் வயிறு நிறைய சாப்பிட்டு சாப்பாட்டை புகழ்ந்துதள்ளினால் பசியுடன் இருப்பவர் மனம் என்ன பாடுபடும்.? இதே நிலை தொடருமானால் ஒரு கட்டத்தில் உங்கள் மீதுதான் வெறுப்பு வர வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் இடைவெளியென்றால் பரவாயில்லை. இடைவெளி மூன்று நாளையும்தாண்டினால்..... தோழர்கள் மாதாமாதம் காமிக்ஸ் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கையில் இந்த தாமதம் கண்டிப்பாக வரும்மாதங்களில் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஆறின கஞ்சி பழங் கஞ்சியாகிவிடக்கூடாது. பொருள் தரமானதாக இருப்பது மட்டும் போதாது. சரியான நேரத்தில் தோழர்களை சென்றடைவது மிக முக்கியமல்லவா? தவறு உங்கள் மீது இல்லாவிட்டாலும் வருத்தம் உங்கள் மீதுதானே வரும். என் கருத்தில் தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்

   ReplyDelete
   Replies
   1. உங்களின் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே..!இதில் தவறேதும் இல்லை..மன்னிப்பும் அவசியமில்லை.! இந்தத் தாமதம் கண்டிப்பாய் சாி செய்யப்பட வேண்டியது அவசியமும்,அத்தியாவசியமும் ஆகும்!ஏனோ எடிட்டா் இன்னும் எட்டிப்பாா்க்கவே இல்லை..அடுத்த மாத இதழ் தயாாிப்புகளில் முனைப்பாய் இறங்கி விட்டாரோ ?!

    Delete
   2. @ A.T.Rajendran & Guna Karur : வீட்டில் BSNL இன்டர்நெட் சதி செய்வதால் - கடந்த 2 நாட்களாய் AIRTEL Hotspot புண்ணியத்தில் தட்டுத் தடுமாறி தான் வண்டி ஓடுகிறது ! அதுவும் கூட பகலில் ரொம்பவே சுமார் என்பதால் இன்றைக்கு இங்கே எட்டிப் பார்க்க இயலவில்லை !

    முதல் மாதத்துப் படிப்பினைகள் தொடரும் மாதத்துச் செயல்பாட்டிற்கு நிச்சயமொரு வழிகாட்டியாக இருந்திடும் ! கவலை வேண்டாம் !

    Delete
  77. Replies
   1. இதை நானும் வழிமொழிகிறேன்..வாழ்த்துக்கள் தோழரே .....

    Delete
  78. டயபாலிக் அகிக் அவர்களே உங்களை போல் உள்ள இளம் வயது தோழர்கள் வீடியோகேம், இன்டர்நெட்டில் மூழ்கிகிடைக்கையில் நீங்களும் எங்களைப்போன்ற காமிக்ஸ் ரசிகராயிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் காமிக்ஸ் நேசம் இப்போதுள்ளதைபோல தொடரட்டும் என்றென்றும்

   ReplyDelete
   Replies
   1. இதை நானும் வழிமொழிகிறேன்..வாழ்த்துக்கள் தோழரே .....

    Delete
  79. திகில் நகரில் டெக்ஸ்.... கடைசி வரை சஸ்பென்ஸ், யார் யாரையோ சந்தேகப்பட்டேன்.... கடைசியில் எதிர்பாராத திருப்பம்.... கதை சூப்பர். மற்ற கதைகளையும் படித்துவிட்டு நாளை வருகிறேன்.

   ReplyDelete
  80. Editer sir,
   Still i didn't get ur statment. I hope u may speak.

   ReplyDelete
  81. Editer sir,
   Please take action sir
   Call to dtdc
   Somebody tell's they didn't get books

   ReplyDelete
  82. Editer sir,
   Please take action sir
   Call to dtdc
   Somebody tell's they didn't get books

   ReplyDelete
  83. // இந்தாண்டின் இலட்சியத்தை ஒவ்வொரு நிலையிலும் நிஜமாக்கிப் பார்க்க ரொம்பவே ஆர்வமாய் உள்ளோம் //

   அன்புள்ள விஜயன் சார்,

   உங்களுடைய கவனம் முழுக்க இதிலேயே இருக்க கூடிய சூழ்நிலை, மன நிலை மற்றும் உடல் நிலை தர வேண்டி எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன். இங்கு நடக்கும் சர்ச்சைக்குரிய பதிவுகளை களை எடுத்து விட்டு தயவு செய்து உங்கள் பணிகளை தொடரவும். ஒவ்வொரு சச்சரவுக்கும் பதில் அளித்து பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தால் உங்கள் இலட்சியத்தை (எங்கள் சந்தோசத்தை)நோக்கிய பயணம் வலுவிழந்து விடும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

   நண்பர்களுக்கு...

   2014 ஜூன் மாதம் முதல் இந்த தளத்திற்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். வந்த புதிதில் மூடர் கூடம் பட காட்சி இணைப்பு சம்பந்தமாக ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அப்பொழுது வந்த பதிவுகளால் அது தொடர்பாக ஒரு மூவர் மேல் நான் தவறான அபிப்ராயம் வைத்து இருந்தேன். நாளடைவில் அந்த தவறான அபிப்ராயம் தகர்ந்து அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் என்று புரிந்து கொண்டேன். அப்பொழுது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி இருந்தால் இப்பொழுது மிகவும் தர்ம சங்கடமாக இருக்கும். திறந்த மனதுடன் இருப்போம். சிறிய கசப்புணர்வுகளை தூக்கி போட்டு ஆசிரியருக்கு தோள் கொடுப்போம். EGO - Edging God Out என்பதை மனதில் நிறுத்துவோம்.

   பல வேறு காரணங்களால் நான் இழந்த கல்லுரி மற்றும் பள்ளி சந்தோசங்களை காமிக்ஸ், இந்த தளம், இதில் வருபவர்களின் பதிவுகள் இலவசமாக அளித்து வருகிறது. சந்தோசமாக இருக்க வேண்டிய தருணங்களை அப்படியே இருக்க விடுவோம்.

   Perfection வேண்டும் நண்பர்களுக்கு: உங்கள் எண்ணங்கள் புரிகிறது. நவஜோ என்று படித்து கொண்டிருக்கிறோம். அதன் சரியான உச்சரிப்பு நவஹோ. இது எனக்கு 1999 வரை தெரியாது. Alliance france, பெங்களூர் சேர்ந்த சுந்தர் என்பவர் சொல்லிக் கொடுத்தார். அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி இன்றும் நவஜோ என்று ஒவ்வொரு கதையில் படித்தாலும் எனக்கு படிப்பனுவ்தில் எந்த குறையும் ஏற்படவில்லை. என்னைப் போன்ற பலருக்கு இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. தமிழில் படிக்க நவஹோவை விட நவஜோவே எளிதாக இருக்கிறது.

   உங்களுக்கு பிடிக்காத குறைகளை சொல்லுங்கள். எனக்கென்னவோ ஆசிரியர் ஒவ்வொரு குறையாக நிவர்த்தி செய்கிறார் என்றே தோன்றுகிறது. அதே சமயம் பெரும்பாலான வாசகர்கள் குறைகளை சுட்டிக் காட்டுவதுல்லை என்பதும் ஏற்புடையதாக இல்லை. ரோஸ் நிற லாரன்ஸை போன பதிவிலேயே நிறைய நண்பர்கள் கழுவி ஊற்றி விட்டார்கள்.

   மாணவர்களுக்கு தலையில் கொட்டி கொட்டி சொல்லித் தரும் வாத்தியாரை விட தட்டி கொடுத்து சொல்லித் தரும் வாத்தியாரே சிறந்தவர். நாமும் அப்படியே இருப்போமே. விஜயன் சார் ஒரு வேலை வாசகர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் வரும் வம்போ என்னவோ..? அவருடைய சங்கடங்களையும் நாமும் கொஞ்சம் உணர முயற்சிப்போமே.

   ReplyDelete
   Replies
   1. அருமையாகச் சொல்லியிருக்கும் MP அவர்களின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு like!

    Delete
   2. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியும் நிஜம் சார்

    Delete
   3. அருமை. எம் மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளாக பதிவிட்டுள்ளீர்கள்.

    Delete
   4. ///2014 ஜூன் மாதம் முதல் இந்த தளத்திற்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். வந்த புதிதில் மூடர் கூடம் பட காட்சி இணைப்பு சம்பந்தமாக ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ///

    இப்படி எல்லாம் கூட நடந்துச்சா??

    யாருங்க அந்த மூணு பேரு?
    சொல்லுங்க சரி செஞ்சிடுவோம்! :-) (இறுக்கம் தளர்ந்து எப்பவும் போல சகஜமா இருங்க நண்பர்களே)

    Delete
   5. மஹி சார்@ அருமை.... பலத்த கைதட்டல்களுடன் உங்கள் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்...

    Delete
   6. //யாருங்க அந்த மூணு பேரு?
    சொல்லுங்க சரி செஞ்சிடுவோம்! :-) //
    அதுக்கு எதுனா உதவி [வேறன்ன கிளிக்கு] போடணும்ன்னா சொல்லிடுங்கோ...!

    [கோடையிடியார் எங்கயோ இறுக்கம்ன்னு நீங்க சொல்றதா அடிபட்டிச்சே..??? மெய்யாலுமா..!!!நல்லதா பிரண்ட்ஸ் நாலு விஷயம் சொல்றது தெளிவை இல்லதரும், இறுக்கம் எப்படி...அவுக்..]

    Delete
   7. Mahendran Paramasivam & friends : நண்பரே, அமைதியாய் பின்னணியில் இருக்கும் போதும், அவ்வப்போது அழகான சிந்தனைகளை முன்வைப்பதற்கு நன்றி !

    "விமர்சனங்கள் என்னை பாதிக்காது....அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே கிடையாதே !" என்று நான் புருடா விடமாட்டேன் ! எல்லோருக்கும் போலவே எனக்கும் அந்த முதல் கணத்தில் உஷ்ண வார்த்தைகளை ஜீரணிப்பதில் சிரமம் இருப்பதுண்டு தான் ! ஆனால் கிட்டத்தட்ட 4+ ஆண்டுகளாய் இங்கே பதிவுகள், நண்பர்களுடன் உரையாடல்கள் என்று பழகியான பின்பு, சுமைகளை முதுகில் ரொம்ப நேரம் தூக்கித் திரியாமலிருக்கப் பழகி விட்டேன் ! சொல்லப்படும் மாற்றுக் கருத்துக்காக ஒவ்வொரு முறையும் நான் உறக்கத்தைத் தொலைத்துக் கொள்வதாக இருப்பின், எனது பார்வை நிச்சயமாய் முன்னிருக்கும் பாதை மீது இருந்திடப் போவதில்லை ; and there can't be a better recipe for disaster than that !

    விஷயத்தில் சாரம் இருப்பதாய் எனக்குத் தோன்றினால் அதனை நினைவில் இருத்திக் கொள்வதும், "ஊஹூம்.." என்று தோன்றிடும் பட்சத்தில் தாண்டிச் செல்வதும் இப்போதெல்லாம் பழகிப் போய்விட்டதொரு routine ! "என்ன சொன்னாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல் நிற்கிறானே ?" என்று கருத்துச் சொல்பவர் நினைப்பதும் ; இடையில் சிக்கி நிற்கும் நண்பர்கள் என் பொருட்டு சங்கடப்படுவதும் ; இன்னும் சிலரோ எனது சாத்வீகத்தைக் கண்டு கடுப்பாவதும் தான் end results என்பதை நான் அறிந்தே இருக்கிறேன் !
    ஆனால் இந்தச் சலனங்களைத் தாண்டி பிரயோஜனமாய் ஏதேனும் செய்ய முனைவதில் தான் நிஜமான சவால் இருப்பதாய் நான் நினைக்கிறேன் !

    நமது முதல் இன்னிங்க்சில் துளியும் விமர்சனப் பார்வைகள் இருந்ததில்லை - அன்றைய நமது சூழல்கள், வயதுகள், ரசனைகள் எல்லாமே வேறு விதமாய் இருந்த காரணத்தினால் ! ஆனால் அன்றைக்கு உங்களது நம்பிக்கைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் நாம் முழு நியாயம் செய்யவில்லை என்ற உறுத்தல் எனக்குண்டு ! இந்த இரண்டாம் முயற்சியினிலிருந்து நான் விடைபெறும் தருணம் புலரும் சமயம் இது போன்ற உறுத்தலின்றி, என் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்தேன் என்ற நிறைவோடு நடையைக் கட்ட சாத்தியமாகிட வேண்டும் என்ற ஒற்றை லட்சியமே என்னை முடுக்கி வருகிறது !

    So இது போன்ற சிக்கல்கள் எழும் வேளைகளில் இயன்றளவுக்கு விரைவாய் அவற்றைச் செப்பனிட்டு விட்டு பணியினில் கவனங்களைக் காட்டுவதே need of the hour ! அதன் பொருட்டு நான் மன்னிப்புக் கோரிக் கொள்வதற்கோ, காரமான வார்த்தைகளை தாண்டிச் செல்வதற்கோ தயங்கிடப் போவதில்லை ! இது சரியான அணுகுமுறை தானா ? என்ற விவாதங்களுக்குள் தலைநுழைக்கும் ஆளில்லை நான் ; ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைக் கையாள ஒரு பிரத்யேக பாணி இருக்குமல்லவா - இதனை எனது பாணியாக பார்த்துக் கொள்ள வேண்டியது தான் !

    ஏற்கனவே சொல்லிய விஷயம் தான் எனினும், மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறேன் : என்றைக்குமே பாராட்டுக்களால் என் சிரமும், விமர்சனங்களால் என் கால்களும் சறுக்கிடாது ! ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பரீட்சை எழுதிட எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை ; ஆனால் அதனை ஆண்டவன் எனக்குத் தந்துள்ளார் ! So அந்தக் கருணைக்கு நன்றி சொல்வதும், கிடைத்துள்ள பாக்கியத்தினை இயன்றளவுக்கு சீராய்ச் செயல்படுத்துவதுமே எனக்குத் தலையாய இலட்சியங்கள் ! Peace !!

    Delete
   8. சலனங்களைத் தாண்டி பிரயோஜனமாய் ஏதேனும் செய்ய முனைவதில் தான் நிஜமான சவால் இருப்பதாய் நான் நினைக்கிறேன் !

    இந்த ஒற்றை வரியை மனதில் விதையாக நட்டு மரமாக்கி, என் சுற்றம் பயனடைய உறுதி எடுக்கிறேன் ஸார்..! விதைத்தமைக்கு நன்றிகள் ஸார்..!

    Delete
  84. சுய தணிக்கையே சுலபத் தீர்வு!
   -------------------------------

   நமக்குள் நடக்கக்கூடிய சில சச்சரவுகளும், வார்த்தை மோதல்களும் ஆசிரியருக்கு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளையும், சங்கடங்களையும் பற்றி எல்லோரும் மறுபடி ஒரு தடவை சிந்திப்பது நல்லது.

   யாராகவிருந்தாலும், அவர் பொருத்தமில்லா பின்னூட்டமொன்றை இட்டிருந்தாலும் - அவர்மீது காட்டமாக நடந்துகொள்வதென்பது ஆசிரியருக்கு சங்கடமானதாகவே இருக்கும் என்பதை புரிதல் அவசியம். அதையும்தாண்டி, சிலர் - அவரை டிமாண்ட் செய்வதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது.

   புத்தக வாசிப்பென்பது நமது தனிப்பட்ட விருப்பல்லவா? நமக்கு விருப்பமான புத்தகங்களை வாசிக்கிறோம். அதில் காமிக்ஸ்சும் ஒன்று. பிடித்தால் வாங்கி வாசிப்பதும், பிடிக்காவிட்டல் தவிர்த்துவிடுவதும் அவரவர் விருப்பம். அதுபோலவே, ஒவ்வொரு புத்தகம் சம்பந்தமான எண்ணங்களை வெளியிடுவதும் அவரவர் சுதந்திரம்.

   ஆனால், பொது வெளி ஒன்றில் எவ்வாறு கருத்துக்களை பதிவிடவேண்டும் என்கிற ஒரு கட்டுப்பாட்டை நாம்தான் கொண்டிருக்கவேண்டும். அதையும் ஆசிரியர் பார்த்து பார்த்து நீக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம் என்றும் எந்ந அளவுக்கு சாத்தியம் என்பதையும் கொஞ்சம் நிதானித்து எடைபோடவேண்டும்.

   ஆசிரியரை நோக்கி சில காட்டமான கருத்துக்களை நண்பர்கள் பதிவிடுவது அவ்வப்போது நடப்பதுதானே? அதற்கான பதிலை ஆசிரியர் அளிப்பார். அதில் வேறு நண்பர்கள் தலையிடும்போதுதான் பொதுவாக நமது தளத்தில் சச்சரவுகள் ஏற்பட்டு - இறுதியில் ஆசிரியரை தர்மசங்கட நிலைக்கு அவை தள்ளிவிடுகின்றன.

   இப்போது ஏற்பட்டிருக்கும் சங்கட நிலையைவிட, முதலில் ஆசிரியரை நோக்கி எழுதப்பட்ட வினாக்களும், விமர்சனங்களும் இயல்பானவையாகவே தோன்றுகின்றன.

   மாறி மாறி அநாகரிக வார்த்தைகளால் சண்டைபோட்டுவிட்டு, கடைசியில் அதற்குள் ஆசிரியரையும் இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்குத்தானே இழுக்கு?

   இங்கே சுயதணிக்கை என்பதை அண்மைய நாட்கள்போல மறுபடியும் அனைவரும் கடைப்பிடிக்க உங்கள் அனைவரதும் ஒரு சகோதரனாக பணிவோடு வேண்டுகிறேன்.

   ReplyDelete
   Replies
   1. நண்பர் பொடியன் அவர்களின் மேற்கூறிய கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்.

    Delete
   2. ///இங்கே சுயதணிக்கை என்பதை அண்மைய நாட்கள்போல மறுபடியும் அனைவரும் கடைப்பிடிக்க உங்கள் அனைவரதும் ஒரு சகோதரனாக பணிவோடு வேண்டுகிறேன்.///...+1..
    நானும் அவ்வாறே வேண்டுகிறேன் நண்பர்களே.....

    Delete
   3. பொடியன் அவர்களே...டைடிலே செம..! மத்ததை பத்தி சொல்லனுமா என்ன..!!!

    Delete
   4. வளர்ந்தும் குழந்தைகளாக இருப்பதே காரணம். கடந்து சென்றேன், கடந்து செல்கிறேன், கடந்து செல்வேன்.

    Delete
   5. சரி பொடியனாரே,

    உங்கள கருத்து சர். ஆனால், தனி மனித தாக்குதலில் இறங்கி ஆண்மையற்றவன் என்று சொல்லும் நபரை என்ன செய்வது? வழக்கம் போல அவரது வேலையை தொடர்ந்து செய்ய விடணுமா? அல்லது பாராட்டு பத்திரம் கொடுக்க வேண்டுமா?

    Delete
  85. சாந்தா Z இன் தொகை எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்

   ReplyDelete
  86. அருமையாகச் சொல்லியிருக்கும் MP அவர்களின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு like!

   நண்பர் பொடியன் அவர்களின் மேற்கூறிய கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்

   ///சாந்தா Z இன் தொகை எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும் ///

   இதையும் வழிமொழிகிறேன்!!!

   ReplyDelete
  87. @ திருப்பூர் பிரபாகர்,சம்பத்,குமார்

   நேற்றையதினம் நிறைவடைந்த புத்தகத்திருவிழா பற்றிய அப்டேட்ஸ் எதுவும் காணமே...???

   ReplyDelete
  88. இந்த தளம் எடிட்ட்டரின் கருத்துகளுக்கும், அவரது பதிவுக்குமான நமது பார்வையை, நமது விமர்சனத்தை எதிர்பார்த்து தொடங்கப்பட்டது.

   அப்படி இருக்க, இங்கே எதிர் விமர்சனம் வைப்பதே தறென்றும், அப்படி செய்தால் இப்படி கேவலப்படுத்துவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

   இதில் தங்களைப்பற்றிய அதீத சுயமோகம் கொண்டவர்கள் நாட்டாமையாக மாறி, கருத்து சொல்பவர்களை, விமர்சிப்பவர்களையே கேவலமாக வொமர்சிக்கிறார்கள்.

   ஆனால், ப்ளாகில் இருப்பவர்கள் அதை எதிர்த்து ஒரு கமெண்ட் , ஒரே ஒரு கமெண்ட் கூட போட மாட்டார்கள். ஆனால், பொதுவான அட்வைஸ் செய்ய மட்டும் ஆட்கள் வருவார்கள்.

   என்னே ஒரு உலக நியாயம்?

   ReplyDelete
   Replies
   1. Arun Sowmyanarayan : நண்பரே, சங்கடம் ஏற்படுத்திய பின்னூட்டங்களை நீக்கி விட்டேன் ; அவருமே அதன் பொருட்டு வருத்தம் பதிவிட்டுள்ளார் ! End of the day இங்கு நல்லதுக்கும், கெட்டதுக்கும் ஜவாப்தாரியான எனது சார்பிலும் apologies !

    தாண்டிச் செல்வோமே இந்த நொடியை ?

    Delete
   2. ஆக, அடுத்த முறை நான் யாரையாவது மிகவும் கேவலமாக ஏசிவிட்டு, வெறுமனே வருத்தம் தெரிவித்தால் போதும் என்று சொல்கிறீர்கள்.

    நன்று.

    அடுத்த முறை நான் செய்தால், அப்போதும் இதே “தாண்டிச் செல்வோமே இந்த நொடியை?” தான் வரும் என்று நம்புகிறேன்.

    அவமானங்கள் 18 மணி நேரம் ஆன்லைனில் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த தளம் எனக்கு நினைவுறுத்தியது.

    அதற்காகவே ஒரு ஸ்பெஷல் நன்றி சார்.

    Delete
   3. Arun SowmyaNarayan : ஒரு சூழலை எவ்விதம் கையாளலாமென்று சொல்லும் உரிமை மாத்திரமே எனக்குண்டு ; அதன் மீதான தீர்மானம் உங்களது ! Good luck !

    Delete
   4. இது தீர்மானம் அல்ல சார். do not mistake me.

    am just stating what's happened 0ver here.

    Delete
  89. எடிட்டர் சார் ,இம்மாத இதழ்களில் மாடஸ்டி பிளைசிக்கே முதலிடம், மார்டினின் கனவின் குழந்தைகள்,டைலனின் வராதோ ஒரு விடியலே போன்றவற்றிக்கு பிறகு ஒரு நிறைவான கதை,நன்றிகள் இது தொடரட்டும்...

   ReplyDelete
  90. Sir,
   Last year dylan dog and martin are super
   So give 2 chance to them

   ReplyDelete
  91. லக்கி லூக்கின் டாப் 5 பட்டியலை தொடரலாமே.. நண்பர்களே....!

   ReplyDelete
  92. திகில் நகரில் டெக்ஸ் படித்துக்கொண்டு இருக்கிறேன்.
   பத்தாவது பக்கத்தில் ஒரு சிறு (கொஞ்சம் பெரிய) பிழை இருக்கிறது. எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை.!
   கண்டு பிடிக்கும் நண்பர்கள் தங்கள் காலரை தூக்கிவிட்டு சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.!
   அட. , இதெல்லாம் ஒரு மேட்டரா எனும் நண்பர்கள் தயவு செய்து இந்த பின்னூட்டத்தை பொறுத்துக் கொள்ளவும்.!

   ReplyDelete
   Replies
   1. வலது பக்க மார்பில்..குண்டு துளைத்து...இதயம்..பூம்..பூம்.தானே.:-)...

    இதயம் இடது புறம்தானே இருக்கிறது..என சொல்ல போறீங்க..

    சமாளிக்கலாம்....:-)

    1.ballistics படி குளோஸ் ரேஞ்ச் கன்ஷாட்டில் entrance wound வலதுபுறமா இருந்து இதயத்தை புல்லட் துளைத்து exit wound இடது புறமாக இருக்கலாம்..
    உள்ளாற புல்லட் மாட்டிட்டு - அதாவது இதயத்தை துளைத்து வெளியே வராம ரிப்கேஜ் உள்ளார எக்ஸிட் காயம் இல்லாம இருக்கலாம்...

    2.அவருக்கு இதயமே வலது பக்கம் இருக்கலாம்...

    SITUS INVERSUS அப்டின்னு அதுக்கு பேரு......

    Delete
  93. @ ஹலோ மடிப்பாக்கம் சார்...!

   எங்க ரெண்டு நாளா ஆளையே காணோம்...?

   இளவரசி கதையோட ஐக்கியமாகிட்டீங்களோ...?

   உங்க விமர்சனத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன்.

   அப்படியே ஒல்லிப்பிச்சானோட உங்க டாப் 5 எதுங்கிறதையும் ஒரு லிஸ்ட் போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷம்...!

   ReplyDelete
  94. இன்னும் புக் வந்து சேரவில்லை.ஆபிஸ் போன் செய்தால் விசாரிக்கிறேன் என்கிறார்கள். DTDC சென்னை சூளைமேடு branch கண்டுபிடித்து விசாரித்தால் டெலிவரி ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். புக் டெலிவரி ஆகி இருந்தால் நான் ஏன் போய் விசாரிக்க வேண்டும்.மற்ற நண்பர்கள் எல்லாம் புக்கை பற்றி விமர்சனம் எழுதும் போது படு டென்ஷனாகிறது. அன்பு எடிட்டரே தயவு செய்து இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்...எனக்கு புக் வருமா வராதா..என் சந்தா id number 275

   ReplyDelete