Powered By Blogger

Sunday, March 01, 2015

பயங்கரப் பன்னிரண்டு !

நண்பர்களே,

வணக்கம். "சண்டே எக்ஸ்பிரஸ்" தொடர்கிறது - நமது மார்ச் பட்டியலின் இறுதி இதழின் டீசரோடு ! (காலையில் தான் இரயிலில் சென்னை வந்து இறங்கினேன் என்பதாலும், கொஞ்சம் background தேடலுக்கு அவசியம் ஏற்படுத்திய பதிவிது என்பதாலும்  நமது ரயில் இந்தவாட்டி கொஞ்சம் லேட் !! )  இரு தடிமனான, வண்ண பிரான்கோ-பெல்ஜியக் கௌபாய் இதழ்களுக்கு மத்தியில் பல்லி போல் ஒட்டிக் கொண்டு வரக் காத்திருக்கும் கறுப்பு-வெள்ளை இத்தாலிய டிடெக்டிவ் ராபினின் சாகசம் தான் அது ! "எத்தர்களின் எல்லை" - ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்னதாக வெளி வரும் CID ராபினின் பிரத்யேக இதழ் ! வழக்கமான நமது black & white சைசில்,அழகான சித்திரங்களோடு , ஒரு சிம்பிளான ஆக்ஷன் கதையோடு இம்முறை களம் காணும் ராபின், நம் உலகக் கோப்பை அணியில் அஜிங்கிய ரஹானே போன்றவர் என்று சொல்லலாம் ! எப்போதுமே பெருந்தலைகளை ஒளிவட்டத்தை ஏற்றுக் கொள்ள அனுமதித்து விட்டு, ஓசையின்றி தன் பங்குக்கு வெளுத்துக் கட்டி விடும் ரஹானேவின் பாணியில் ராபின் இம்முறை செயல்பட்டிருப்பதாய் எனக்குப் பட்டது ! இதோ இதழின் அட்டைப்படம்+ உட்பக்க டிரைலர்கள் ! 



மாலையப்பனின் டிசைன் + நமது டிசைனரின் பட்டி-டிங்கரிங் அட்டைப்படத்தின் உருவாக்கப் பின்னணி ! இது டெக்சாஸ் - மெக்சிக எல்லையில் நடந்தேறும் ஒரு சாகசம் என்பதால் கதையின் மனிதர்கள் மண்டையில் stetson தொப்பிகளோடு அவ்வப்போது திரிவதைக்  காணலாம்! அதே போல இது வரையிலும் வந்த ராபின் கதைகளுக்கு இல்லாத ஒரு புது (அழகு) பாணியில் சித்திரங்கள் இருப்பதையும் பார்த்திட முடியும் ! முடிச்சுகள் ; சிக்கல்கள் என பொறுமையைத் துளியும் சோதிக்காது சீராக - நேர்கோட்டில் செல்லும் ராபினின் பாணியை ரசிக்க முடிந்தது எனக்கு ! 2016-ல் மனுஷனுக்கு கணிசமான வாய்ப்புகள் தந்தே தீருவது என்ற எண்ணத்தையும் எனக்குள் வலுவாக விதைத்துள்ளது ! மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதானால் - the coming year will see more of this detective ! "டிடெக்டிவ்" என்ற தலைப்பில் நாம் உலாற்றும் இந்த வேளையில் கொஞ்சமாய்த் திரும்பிப் பார்த்து, இது வரையிலும் நாம் சந்தித்துள்ள (காமிக்ஸ்) துப்பறியும் சாம்புக்களைப் பட்டியல் போட்டுப்  பார்த்தாலென்னவென்று தோன்றியது ! அதன் பலனே - இந்த ஞாயிறின் பதிவு ! 

நமது காமிக்ஸ் பிள்ளையார் சுழி மும்மூர்த்திகள் வாயிலாகப்  போடப்பட்டது  என்பதை நாமறிவோம் ; அந்த மூவருமே தத்தம் பாணிகளில் துப்பறிவாளர்களும் கூட என்பதால் நமது பட்டியலின் முதல் 3 பெயர்களும் அவர்களதே ! இரும்புக்கை மாயாவி நிழல்படையின் ஏஜெண்ட் என்ற முறையிலும், லாரன்ஸ்& டேவிட் ஜோடியும் ஏதோ ஒரு வகை அரசு உளவாளிகள் என்பதாகவும், ஜானி நீரோ இங்கிலாந்தின் MI 6 உளவுப் பிரிவின் முன்னாள் ஏஜெண்ட் என்ற ரீதியிலும் இந்தத் "துப்பறிவாளர்" தொப்பிகளுக்கு தகுதி கொண்டவர்களாகின்றனர் ! மாயாவியின் கதைகள் - adventure + கொஞ்சம் fantasy என்ற ரீதியில் பெரும்பாலும் இருப்பினும், ஒவ்வொரு முறையுமொரு இருட்டு அறைக்குள் குந்தியிருக்கும் நிழல் 1 என்ற பாஸ் அவருக்கு உத்தரவுகள் வழங்கிட, இவரும் அதை நிறைவேற்றக் கிளம்புவது ஒரு உருப்படியான ஏஜெண்டின் ஜாடை அங்கே தெரிவது மாமூல் ! அதே போல லாரன்சும், மொட்டை டேவிட்டும் ஒரு குற்றத்தைத் துப்புத் துலக்கும் அக்மார்க் டிடெக்டிவ் ரகத்துக்குள் அடைபடுவதில்லை - ஒரு பெரும் சிக்கல் ; ஆபத்து ; பிரச்சனை என எழும் நேரங்களில் அவற்றை வேரறுக்க புறப்படும் (முதிய) புலிகள் இவர்கள் ! ஜானி நீரோவின் கதையும் கூட இதைப் போலவே தான் -லட்சணமான அந்தக் காரியதரிசியோடு உலகைச் சுற்றி வரும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி ஆசாமி என்று சொல்லலாம் ! 

பட்டியலின் முதல் 'அக்மார்க்' டிடெக்டிவ் என்று சொல்வதானால் அது நம் கண்ணாடிக்கார ஆசாமி தான் ! "புதையல் வேட்டை" இதழின் மூலம் அறிமுகமான ரிப் கிர்பி ஒரு தொழில்முறை துப்பறிவாளர் என்பதால் ஒவ்வொரு முறையும் அவரது கதைகளில் ஒரு குற்ற முடிச்சு (சின்னதோ-பெரிதோ) இருப்பது வாடிக்கை ! 1946-ல் உருவாக்கப்பட்டவர் எனும் போது இவர் டெக்ஸ் வில்லருக்கே கூட சீனியர் தான் ! அலெக்ஸ் ரெமண்ட் என்ற அமெரிக்கப் படைப்பாளியின் கைவண்ணத்தில் துவங்கிய ரிப் - தினசரி செய்தித்தாட்களில் சக்கை போடு போட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் அவரது சாகசங்கள் அறிமுகமாயின ! 1999 வரைத் தொடர்ந்த இந்த ஜென்டில்மேன் டிடெக்டிவ் மொத்தம் 197 சாகசங்களில் இடம் பிடித்துள்ளார் ! புது யுகக் கதைகளின் வருகையைத் தொடர்ந்து நம் இதழ்களில் VRS வழங்கப்பட்ட இவருக்கு இன்னமும் ஆங்காங்கே ரசிகர்கள் இருப்பது நிச்சயம் ! அது சரி - நாம் இது வரை வெளியிட்டுள்ள ரிப் கதைகள் எத்தனையோ ? சரியாக விடை சொல்லும் முதல் நண்பருக்கு ஒரு குட்டியான ரிப் கிர்பி அமெரிக்க (வண்ண) இதழ் நம் அன்பளிப்பாய் இருந்திடும் ! 

பட்டியலின் அடுத்த இடம் பிடிப்பவர் விங் - கமாண்டர் ஜார்ஜ் ! Johnny Hazard என்பது இவரது ஒரிஜினல் பெயர் ! இவரும் அமெரிக்க தினசரி செய்தித்தாட்களின் நாயகரே ; இவரும் கூட ஒரு புராதன ஹீரோவே ! துவக்கத்தில் அமெரிக்க விமானப்படையின் பைலட்டாக அறிமுகம் காண்பவர் பின்னாட்களில் ஒரு இரகசிய ஏஜெண்டாக செயல்படுகிறார் ! 1944-ல் துவங்கிய ஜார்ஜ் 1977 வரையிலும் சாகசம் செய்தான பின்னே ஒய்வு கண்டவர் ! இவரது கதைகளை நினைகூர்ந்திடும் போதெல்லாம் "நெப்போலியன் பொக்கிஷம்" நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது எனக்கு ! சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பான நமது முத்து காமிக்ஸில் வெளிவந்த இதழ் அது என்று நினைக்கிறேன் ! 

பட்டியலின் ஆறாவது இதழுக்குச் சொந்தக்காரார் ஒரு சூப்பர் டிடெக்டிவ் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது ! இவரும் அமெரிக்கரே ! ரிப் கிர்பியின் படைப்பாளரான அலெக்ஸ் ரெமண்ட் இங்கும் ஒரு முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் ! துவக்க நாட்களில் சீக்ரெட் ஏஜெண்ட் X -9 என்று அறிமுகமானவர் பின்னாட்களில் நாமறிந்த பிலிப் காரிகன் என்ற அவதாரம் கண்டார் ! 1934-ல் துவங்கியவர் என்ற வகையில் நம் நாயகர்களின் சூப்பர் சீனியராக இவரைச் சொல்லலாம் ! 1996 வரைத் தொடர்ந்த காரிகனுக்கு adventure + துப்பறியும் பாணி என இரு முகங்கள் உண்டு என்பதாலோ என்னவோ - அவரது கதைகள் இங்குமன்றி ; அங்குமன்றி இருப்பது போலொரு உணர்வுக்கு இடமளித்தன ! பலன் ? சுமார் 60 ஆண்டுகள் ஒடியதெனினும் "ஆதர்ஷ நாயகர் என்ற பெயரை ஈட்ட அவருக்கு சிரமாகவே இருந்து வந்துள்ளது ! "வைரஸ் X " ; "கடலில் தூங்கிய பூதம்" போன்ற அதிரடிகளால் நம் ஞாபகங்களில் காரிகன் இடம்பிடிப்பினும் ஒரு mass hero என்ற நிலையை எட்டினாரா என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை ! What say folks ?

அடுத்த துப்பறிவாளர் Fleetway -ன் ஜான் சில்வர் ! இவரும் கூட ஒரு விமானியே எனினும் அவரைப் பதவி நீக்கம் செய்து விட்டு, அதையே பகடைக் காயாகப் பயன்படுத்தி வேலை வாங்கும் உளவுத் துறையும் இங்கு தலைகாட்டுவதால் ஜான் சில்வரும் இங்கே இடம்பிடிக்கிறார் ! ஒரிஜினலாய் இவரும் கூட ஒரு JH தான் ; இவரது ஒரிஜினல் பெயர் JOHN HAVOC ! இவரது கதைகள் முத்து காமிக்ஸில் கொஞ்சமும், பின்னாட்களில் மேத்தா காமிக்ஸில் நிறையவும் வெளியாகின என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பான "வரலாற்றுக் குறிப்புகள்" !! 

முத்து காமிக்ஸின் முதல் பிரான்கோ-பெல்ஜிய நாயகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் தான் நமது லிஸ்டின் அடுத்த நபர் ! 1969-ல் உருவாக்கப்பட்ட ஜெஸ் ஒரு போலீஸ்காரர் என்ற முறையில் துப்பறியும் களப் பணிகளில் ஈடுபடும் ஒரு அமைதியான ஆசாமி ! வாயில் பைப் ; மேலே ஒரு ஓவர்கோட் என்பதே இவரின் அடையாளங்கள் ! (ரிப் கிர்பியை அவ்வப்போது நினைவுபடுத்துவது நிஜமே !!) ஜில் ஜோர்டான் கதைகளுக்கு சித்திரங்கள் போட்ட மாரிஸ் டிலோ தான் இந்தத் தொடரின் துவக்கக் கதைகளுக்கும் ஓவியங்கள் போட்டவர் ! 1996 தான் இவருக்கும் ஒய்வு வழங்கப்பட்ட ஆண்டு ! (அது என்ன - நிறைய டிடெக்டிவ் கதைகள் 1990-களின் மத்தியில் 'மங்களம்' கண்டுள்ளன ?? புது பாணிகளுக்கு ஈடு தர இயலாமையா ??)  
JESS LONG

இரகசிய ஏஜெண்ட்கள் பற்றிய பட்டியலானது - எஜென்ட்களுக்கெல்லாம் 'தல' யான 007-ஐ சேர்த்திடாது முழுமை பெறுமா - என்ன ? Yes ; 1970-களின் அசைக்க இயலா டாப் நாயகராய் உலகெங்கும் உலவிய ஜேம்ஸ் பாண்ட் தான் நமது பட்டியலில் அடுத்தவர் ! பிரிட்டிஷ் உளவுத்துறையின் தலைசிறந்த ஏஜெண்ட் ; "கொல்லும் லைசன்ஸ்'-க்குச் சொந்தக்காரராகிய இவர் நம்மிடம் செய்த சாகசங்களை விட ராணி காமிக்ஸில் செய்த அதிரடிகள் ஜாஸ்தி ! அதனாலேயே என்னவோ - அன்னார் மீது எனக்கொரு லைட்டான கடுப்பு உண்டு ! தினசரிகளில் தொடராய் ; முழுநீளக் கதைகளாய் ; திரைப்படங்களின் தழுவல்களாய் 007-ன் சாகசங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ள போதிலும், நமது மார்கெட்டில் தினசரிகளின் தொகுப்புகளே பெரும்பாலும் வெளியாகியுள்ளன ! திரையின் மாயத்தை காமிக்ஸில் 007 கொண்டு வருவதில் வெற்றி கண்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியே ! 

பட்டியலில்  பத்தாவது  இடம்  ஒரு  பேய் வீரருக்கே ! சொல்லப் போனால் இந்த ஆசாமியின் உருவாக்கம் 18-ஆம் நூற்றாண்டில் என்ற விதத்தில் இவருக்கே பேயாகப் புளிய மரங்களில் உறையும் வயசு தான் !! இங்கிலாந்தில் 1893-ல் துவங்கியவை செக்ஸ்டன் பிளேக்கின் சாகசங்கள். ஆரம்பத்தில் நாவல்களை அறிமுகம் கண்டவர் மிகப் பிரபல்யமானதைத் தொடர்ந்து காமிக் நாயகராகவும் புரமோஷன் கண்டார் ! Fleetway இவரது கதைகளை தொடர்களாய் வாரம்தோறும் வெளியிட, நாம் அவற்றில் சிலவற்றை '80 களின் இறுதிகளில் வெளியிட்டோம் ! பின்னாட்களில் "விக்டர் டிராகோ" என்ற பெயரோடு தொடர்ந்த இவரது கதைகள் நிஜமான டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் என்று சொல்லலாம் ! திரைப்படங்களாகவும் ; நிறைய டி.வி. சீரியல்களாகவும் களமிறங்கியுள்ள செக்ச்டனை நாம் போதிய அளவு பயன்படுத்திடவில்லை என்பதே நிஜம் ! 

தொடரும் ஆசாமியும் Fleetway-ன் குழந்தையே ! ஏஜென்ட் ஜான் ஸ்டீல் இரண்டாம் உலக யுத்தப் பின்னணியில் சாகசம் செய்யத் துவங்கிய மனுஷன்; பின்னாட்களில் ஒரு தனியார் துப்பறிவாளராய்  அவதாரம் கண்டார் ! பக்கத்துக்கு இரண்டே கட்டங்கள் என்ற அந்த classic பாணியில் அழகான சித்திரங்களோடு Thriller Library என்றதொரு கதைவரிசையில் நயமாக இவரது கதைகள் இங்கிலாந்தில் வெளியாகின. SPY 13 என்ற பெயரில் தொடங்கி, பின்னாட்களில் ஜான் ஸ்டீல் என மாற்றம் கண்டு ; பச்சக் என என்றோ ஒரு சமயம் ஜான் ஹேவக் என்ற பெயரையும் தாங்கிக் கொண்டு நடமாடத் தொடங்கியவர் இவர் ! முத்து காமிக்ஸில் இவரை நாம் அவ்வப்போதும், திகிலில் ஒரு முறையும் சந்தித்துள்ளதாய் ஞாபகம் ! லயனில் கூட 1990's-ல் எட்டிப் பார்த்திருப்பார் ! 

டிடெக்டிவ்களின் பிதாமகரே இன்றைய பயங்கரப் பன்னிரண்டு பட்டியலின் இறுதி ஆசாமி ! சர். ஆர்தர் கொனன் டாயிலின் அமர படைப்பான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தான் இந்த வாரப் பதிவை நிறைவு செய்யும் துப்பறிவாளர் ! நாவல்களை உலகை இன்று வரை மெய்மறக்கச் செய்து வரும் ஷெர்லாக் கதைகளும் தினசரி ஸ்ட்ரிப்களாய் ; முழுநீளக் கதைகளாய் ;கிராபிக் நாவல்களாய் உலகெங்கும் பிரசித்தம் கண்டுள்ளன ! நாம்'90 களில் வெளியிட்டவை தினசரிகளின் தொகுப்புகளே ! ஒரிஜினல் டிடெக்டிவ் என்ற பட்டத்துக்கு 100% பொருத்தமான இவரது ஆல்பங்கள் பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளின் கைவன்னங்களிலும் அட்டகாசமாய் வெளிவந்துள்ளன ! உங்களுக்கு ஆர்வமிருப்பின் அவற்றையும் நாம் முயற்சிக்க முயற்சிக்கலாம் ! What say all ?

இன்னமும் ஒரு டஜன் துப்பறிவாளர்கள் நமது காமிக்ஸ் பட்டியலில் காத்திருப்பினும், கர்ஜிக்கும் என் வயிறு அவர்களை அடுத்த ஞாயிறுக்கு ஒத்திப் போடச் சொல்லி ஏகமனதாய் தீர்மானம் போட்டுள்ளது ! So - 'பயங்கரப் பன்னிரண்டு' படலம் அடுத்த வாரமும் தொடரும் ! அது வரையிலும் இன்றைய இந்தப் பதிவில் ஆங்காங்கே நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உங்களின் அபிபிராயங்களை / பதில்களைப் பகிர்ந்தால் சந்தோஷமே !

மார்ச்சின் புது இதழ்கள் மூன்றும் பைண்டிங்கில் உள்ளன ! மேலோட்டமாய் அவற்றை சரி பார்க்கவும்  ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு புதனன்று கூரியரில் மொத்தமாய் அனுப்பிடவுள்ளோம் ! So வியாழன்று ஒற்றைக்கையரையும். தளபதியையும் சந்திக்கலாம் ! அது வரை bye folks ! See you around ! 

243 comments:

  1. Replies
    1. மீதிய படிச்சிட்டு வந்து சொல்லுறேன்.

      Delete
  2. இனிய காலை வணக்கம் விஜயன் Sir :)
    இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. அனைவரையும் வரவேற்க சித்தமாக உள்ளோம்

    ReplyDelete
  4. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    சார் இப்படி நம்ம 'முன்னாள்' தலைகளையெல்லாம் ஞாபகப்படுத்தி கடுப்பேத்துறீங்களே? எப்ப சார் அவர்களின் அடுத்த இன்னிங்சுக்கு வாய்ப்பு கொடுக்கப்போறீங்க? அதிலும், ஜெஸ்லாங், ஜான் சில்வர் கதைகள் என்றால் சோறு தண்ணி தேவையில்லாம வாசிச்சுக்கெடந்திருக்கோம். ஜெஸ் லாங் கதைகள் எத்தனை தரம் படித்தாலும் அதன் த்ரில் கொஞ்சமும் குறையாது - முடிவு தெரிந்துவிட்ட பின்னரும் கூட. ஷெர்லாக் ஹோம்ஸ் நமக்கு தெய்வம் மாதிரி. இன்னும் கோயில் கட்டவில்லை - அவ்வளவுதான்! அதே போல ஜான் சில்வருடைய அலட்டலில்லாத பாணி... யம்மம்மா.... யுவர் ஆனர், நம்ம எடிட்டர் காலங்கார்த்தாலயே கடுப்பெத்தறார்...

    ReplyDelete
    Replies
    1. ஜான் சில்வருடைய அலட்டலில்லாத பாணி... யம்மம்மா.... யுவர் ஆனர், நம்ம எடிட்டர் காலங்கார்த்தாலயே கடுப்பெத்தறார்...

      முதல் நான்கு பக்கம் ...தம்பி ஜான் டிரைவிங் லைசென்ஸ் தரோம் ...........கடைசி நான்கு பக்கம் ....தம்பி ஜான் டிரைவிங் லைசென்ஸ் தரமாட்டோம் ......

      Delete
  5. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.பதிவை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  6. காலை வணக்கம் சார் . நண்பர்களே நலமா? . பதிவை படித்து விட்டு வருகிறேன் . இன்றும் பாகிஸ்தான் காலி?

    ReplyDelete
    Replies
    1. //இன்றும் பாகிஸ்தான் காலி?//
      @டெக்ஸ் மாம்ஸ்:
      உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்...அவர்கள் ஒழிய வேண்டும்....!!!

      Delete
  7. அருமையான பதிவு. அப்படியே வேதாளர், சிஸ்கோ கிட் பற்றியும் பதிவிடவும்

    ReplyDelete
  8. காரிகன் மீண்டும் வருவாரா ????

    ReplyDelete
  9. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    நீண்ட நேரம் காத்திருந்து படிக்கும் பதிவு இது....படித்துவிட்டு வருகிறேன்....

    ReplyDelete
  10. அதிகாலை 4 மணி முதல் பதிவுக்காகக் காத்திருந்த 'ஈரோடு விஜய்' அண்ணனை இன்னும் காணவில்லையே....!!!
    அன்பு பூனையார் அவர்களே தூங்கிவிட்டீர்களோ....ஹலோ....!!!

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தம்பி சத்யா,

      ஓய்வாவது உறக்கமாவது! அடுத்த முறை நீங்கள் ஈரோடு வரும்போது அங்கேயும் ஒரு 'ஙஙஙங' சவுண்டு கேட்க அதிக வாய்ப்பிருக்கிறது...

      Delete
    2. //ஓய்வாவது உறக்கமாவது!//
      நலலாச் சொன்னீங்க போங்க...

      //அடுத்த முறை நீங்கள் ஈரோடு வரும்போது அங்கேயும் ஒரு 'ஙஙஙங' சவுண்டு கேட்க அதிக வாய்ப்பிருக்கிறது...//
      ஹா ஹா :):):)

      Delete
  11. ஆசிரியர் விஜயனுக்கு,

    பதிவை படிக்க..படிக்க...என்னோட மனநிலை...

    1.இரும்புகமாயாவி
    2.ஸ்பைடர்
    3.லாரன்ஸ் & டேவிட்
    4.ஜானிநீரோ
    5.ரிப் கெர்பி
    6.விங் கமாண்டர் ஜார்ஜ்
    7.பிலிப் காரிகன்
    8.ஜான் சில்வர்
    9.ஜெஸ்
    10.விக்டர் டிராகோ
    11.ஜான் ஸ்டீல்
    12.டிடெக்டிவ்களின் பிதாமகர் ஷெர்லாக் ஹோல்ம்ஸ்

    பட்டியல் கவித...கவித மாதிரி...
    நியாபகம் வருதே...நியாபகம் வருதே...
    நா என்ன சொல்ல....ஏதேதோ தோணுதே...
    ஒரு வேளை..ஒரு வேளை...அட கடவுளே...
    பிதாமகன் திரும்ப...திரும்ப வரப்போறார்...
    நிறைய பட்டாம்பூச்சி...சுத்துதே...நா..நா..திரும்ப வர்றேன்...

    ReplyDelete
  12. எடிட்டர் சார்,

    * டிடெக்டிவ் ராபினுக்கு அடுத்த வருடம் அதிக வாய்ப்பளிப்பதாக நீங்கள் முடிவெடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ராபின் கதையையும் படித்துமுடிக்கும்போது (உளவியல் சார்ந்த இயல்பான குற்றப் பின்ணணிகள் என்பதாலோ என்னவோ) ஒருவித திருப்தி கிடைக்கிறது.

    * ஷெர்லக்ஹோம்ஸ் கதைகளுக்கும் ஒரு ஜே! மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரென்றால் மிகுந்த மகிழ்ச்சியே! ( அப்படியே நம்ம 'ஹெர்லக் ஷோம்ஸ்' கதைகளும் ஏதாவது தட்டுப்படுகிறதாவெனப் பாருங்களேன் சார். அந்நாட்களில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியுமா?)

    * ராபினின் முன்னட்டைப் படத்தில் காணப்படும் 3 கைகளின் அளவீடுகள் தவிர அட்டைப்படம் அசத்தலாய் வந்திருக்கிறது!

    ReplyDelete
  13. Dear Vijayan sir,

    I vote for Mega Detective Special (B/W) with Al 12 characters under single binding.

    what say folks?

    ReplyDelete
  14. ராபினின் முன் அட்டைப்படம் தூள்!!!!
    ஜேம்ஸ்பாண்ட், ரிப் கிர்பி,விங் - கமாண்டர் ஜார்ஜ் etc.அனைவரின் ரீ-என்ட்ரி ஆவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி...ஹிப்பீபீபீ....!!!!

    ReplyDelete
  15. Hi guys very good morning .

    By sham1881@ erode

    ReplyDelete
  16. ரொம்பப் பழைய நெடியடிக்கும், ரொம்ப மெதுவாக நகரும் டிடெக்டிவ் கதைகளுக்கு ஓய்வு கொடுத்துவிடலாம் என்பது தாழ்மையான கருத்து! குறிப்பாக, சித்திரத் தரம் சுமாரானதாக இருக்கும் கதைகளை(அது மாடஸ்டியாகவே இருந்தாலும்) கண்ணை மூடிக்கொண்டு கடாசிவிடலாம் எ.எ.க!

    ReplyDelete
    Replies
    1. //ரொம்பப் பழைய நெடியடிக்கும், ரொம்ப மெதுவாக நகரும் டிடெக்டிவ் கதைகளுக்கு ஓய்வு கொடுத்துவிடலாம் //
      +1

      Delete
  17. நம்மிடம் உள்ள டைட் ஷெட்யூலில் இவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியுமா.?

    இந்த பயங்கர பனிரெண்டில் என்னை அதிகம் கவர்ந்தவர் ஜானி ஹஸார்ட் என்கிற விங் கமாண்டர் ஜார்ஜ்.
    அந்த தட்டையான உருவ ஓவிய்ங்களில் ஒரு கவர்ச்சி இருக்கும். கதையும் யதார்த்தம் நிறைந்த விறுவிறுப்பான விமான சாகசங்களுடன் இருக்கும்.
    இவர்களுக்கு வாய்ப்பளிக்க நினைத்தால் நம்ம ஜார்ஜையும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் சார்.!

    ReplyDelete
  18. //மேலோட்டமாய் அவற்றை சரி பார்க்கவும் ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு புதனன்று கூரியரில் மொத்தமாய் அனுப்பிடவுள்ளோம் ! //
    நன்று!!!

    //So வியாழனன்று ஒற்றைக்கையரையும். தளபதியையும் சந்திக்கலாம் !//
    அப்போ 'ராபின்' ?!!!
    உட்பக்க ட்ரைலரே பட்டையைக் கிளப்புகிறது எடிட்டர் சார்...ஆகையால் ராபினையும்,ஒற்றைக்கையரையுடனும். தளபதி யுடனும் சேர்த்து அனுப்பி விடுங்கள் சார்!!!

    ReplyDelete
  19. You can start a new series in 2016 - Dashing Detectives Series or Dangerous detectives - 12 Books x 40/50 Rs. I hope lot of readers will welcome that...

    ReplyDelete
  20. அடுத்த இடம் நம்ம கண்ணாடிக்கார அண்ணாச்சி கிர்பிக்கு.
    இவரோட பட்லர் டெஸ்மாண்ட் ஒரு அருமையான பேர்வழி.! இந்த வயசுலயும் ஜொள்ளு வுட்டு நெறைய கதைகள்ல சிக்கலில் மாட்டிக்குவாப்ல. நம்ம கிர்பி இவரை காப்பாத்த போயி அப்படியே வில்லன்களையும் கேட்ச் பண்ணுவாப்ல.
    இவரோட கதைகளும் சித்திரம் மற்றும் யதார்த்தம் என பட்டைய கெளப்பும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. +1
      ரிப் கிர்பி-அலட்டிக்காமல் அசால்ட்டாக துப்பறியும் இவர் பாணி ('கார்ட்டூன் கொலைகள்' or 'கம்ப்யூட்டர் கொலைகள்' ?!) அடியேனுக்கும் ஃபேவரிட்டே!!!

      Delete
  21. என்னுடைய சாய்ஸ்:
    1. லயன் 250 வது இதழ்
    2. முத்து 350 வது இதழ்
    3. லயன் கார்ட்டூன் ஸ்பெஷல்
    4. டிடெக்டிவ் ஸ்பஷல்-1
    5. டிடெக்டிவ் ஸ்பஷல்-2
    அனைத்துக்கும் தனியாக ஒரு சந்தா....

    ReplyDelete
    Replies
    1. இப்படி சாந்தாக்கு கணக்கு பண்ணிணா காசு பணம் துட்டு மணி மணிக்கு எங்கே போரது?

      Delete
  22. Or else -- only one Book - 12 Stories - Annual Detective Special - 12 Heroes and 12 stories

    ReplyDelete
  23. இந்த பதிவின் மூலம் நான் மிக ,,மிக ,,,விரும்பும் நாயகர்கள் ஆன விங் கமாண்டர் ஜார்ஜ்....ரிப் கெர்பி..மற்றும் மேத்தா ஜானி மூவரும் மறு வருகை புரிந்தால் மிக மிக சந்தோசம் சார் ....

    ReplyDelete
  24. நானும் ராபினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் .......

    ReplyDelete
    Replies
    1. //உட்பக்க ட்ரைலரே பட்டையைக் கிளப்புகிறது எடிட்டர் சார்...ஆகையால் ராபினையும்,ஒற்றைக்கையரையுடனும். தளபதி யுடனும் சேர்த்து அனுப்பி விடுங்கள் சார்!!!//

      //நானும் ராபினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் .......//
      கவலையே படாதீங்க தலைவரே....உங்களுக்காகத்தான் இந்த கோரிக்கையே....

      Delete
    2. நன்றி சத்யா அவர்களே ...:)

      Delete
    3. போராட்டக்குழுத் தலைவரே...உங்கள் தொண்டனுக்கு எதுக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு :D

      Delete
  25. ராபினின் இந்த அட்டைபடம் நன்றாக உள்ளது சார் .ஓவியருக்கு பாராட்டுகள் ..

    ReplyDelete
  26. ஜான் சில்வர்,ஆகாயக்கல்லறை யில் தோன்றிய நினைவு..மேத்தா காமிக்ஸின் பிரதான ஹீரோ ..
    விங் கமாண்டர் ஜார்ஜ் ..பனி யில் புதைந்த ரகசியம் அவருடைய மாஸ்டர் பீஸ் ..மறுபதிப்பில் இவர்களின் உலா
    நமக்கு கிடைக்குமா

    ReplyDelete
  27. அனைவருக்கும் வணக்கம். டிடெக்டிவ்களை அட்டவனைப் படுத்த எடிட்டர் ஒரு டிடெக்டிவாக மாறியிருப்பார் என நினைக்கிறேன். அடுத்த வருடம் கண்டிப்பாக சந்தாவில் Option D """""டிடெக்டிவ் சந்தா"''" உண்டு தானே.

    ReplyDelete
  28. அனைத்டு டிடெக்டிவ்களுக்கும் வரவேற்பு தர நாங்கள் தயாராகி விட்டோம். பேய் வீரரின் கதைகள் கூடுதல் சுவாரஸ்யம் மிகுந்தவை எனவே அவருக்கு கூடுதல் வாய்ப்பு தரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete
  29. இன்றைய பதிவில் நம் ஜூ.எடிட்டரின் தயாரிப்பில் வெளிவரயிருக்கும் 'கார்ட்டூன் ஸ்பெஷல்' பற்றிய அறிவிப்பு (கதைகள் பற்றிய விவரங்களுடன்) இருக்குமென்று எதிர்பார்த்திருந்த எங்களை இப்படி ஏமாத்திப்புட்டீங்களே எடிட்டர் சார்...

    ReplyDelete
  30. இரட்டை வேட்டயரின் உண்மையான பெயர் என்ன சார்...?

    ReplyDelete
    Replies
    1. ஜார்ஜ் &டிரேக்

      உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் ஜீ :)

      Delete
    2. நோ .....ஆங்கிலத்தில் கேட்டேன்

      Delete
    3. எனக்கு தெரிந்து "கறுப்பு பாதிரி மர்மம் " கதையில் வரும் இரட்டையர்.
      ஜோ மற்றும் சாண்டி.

      Delete
    4. THE HUNTERS...இவர்களை இணையத்தில் எப்படி தேடுவதுவது ...........உதவி ........

      Delete
    5. @ FRIENDS : "கறுப்பு பாதிரி மர்மம் " கதையில் வரும் இரட்டையர்களும் Fleetway தயாரிப்புகளே - ஆனால் அவர்களது பெயர் THE SPEED KINGS !

      Delete
  31. எடிட்டர் சார்.!
    கடந்த தேர்தலின் போது தாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றிவிட்டு தற்சமயம் அதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறீர்கள்.
    வாக்குறுதியானது.:-
    ரோஜா மாளிகை ரகசியம்
    சிறைமீட்டிய சித்திர கதை
    வைரஸ் x
    நெப்போலியன் பொக்கிஷம்.
    அனைத்தும் இணைந்த டிடெக்டிவ் ஷ்பெஷல் வெளிவரும் என்பதே.!

    இப்போதாவது அத்தகைய சிறப்பிதழுக்கு வாய்ப்புகள் இருக்கா சார்.???

    ReplyDelete
    Replies
    1. இதை நான் வழிமொழிகிறேன் கண்ணன் அவர்களே :)

      Delete
    2. யெஸ்,டிடெக்டிவ் ஸ்பெஷல் வேண்டும்.

      Delete
    3. KiD ஆர்டின் KannaN & Paranitharan K : கடந்த "தேர்தலில்" மிகப் பெரிய ஏமாற்றம் கண்டவன் அடியேனே என்பதை மறந்து விட்டீர்களே..! அட்டைப்படங்களை தயார் செய்து விட்டு, விளம்பரங்களையும் வெளியிட்டு விட்டு, "தொலவுலெ தெரியுறது மறுபதிப்பு சந்தா தானேடா தம்பி ?" என வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து டெபாசிட் இழந்த ஐந்தாறு மாதங்கள் - 'அய்யகோ மாதங்கள்' ! So கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன் பேர்வழி என நான் அன்றைக்குப் புறப்பட்டிருக்கும் பட்சத்தில் மறுபதிப்புகளுக்கே வாய்க்கரிசி போடும் நிலை எழுந்திருக்கக் கூடும் ! இப்போது தான் கொஞ்சமாய் அந்த மறுபதிப்புத் தண்டவாளமானது set ஆகத் தொடங்கியுள்ளது ! So கொஞ்சம், கொஞ்சமாய் முன்னேறுவோமே ?

      தவிர, மறுபதிப்புகளுக்கு கொஞ்சமாகவேனும் மொழியாக்கங்களில் மாற்றங்கள் கொண்டு வரா பட்சங்களில் வேலைக்கு ஆகாது என்பதும் இப்போது தெளிவு ! இந்த நிலையில் பழசுக்குப் பாலிஷ் போடும் வேலைக்குள் ஓவராக இறங்கிடும் பட்சத்தில் - புதுசுகளின் தேடல்கள் பின்னிருக்கைக்குச் சென்றுவிடும் ஆபத்துண்டு ! எக்காரணம் கொண்டும் அந்தத் தப்பைச் செய்வதாக இல்லை என்பதால் - slow n' steady will be our slogan !

      Delete
    4. மறுபதிப்பு வேலைக்கு ஆகாது

      Delete
  32. குட்டீஸ் காமிக்ஸ் என்னாச்சு saar

    ReplyDelete
  33. W .A. M......அழிவு கொள்ளை தீமை .............எப்படி பொருத்துவது ...?

    ReplyDelete
    Replies
    1. W - அ
      A - கொ
      M -தீ

      இப்படித்தேன் பொருத்தோணும்.

      Delete
    2. ஓஹோ நீர் தான் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்த காரனமானவரோ ...........

      Delete
  34. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் இன்றும் அட்டகாசமான கதை நாயகன் சார்! அவரையும் ஜேம்ஸ்பாண்ட் கதைகளையும் நமது இதழில் மீண்டும் உலவ விடலாம் சார்! மொத்தத்தில் இந்தப் பதிவே பட்டையைக் கிளப்பிவிட்டது சார்! பன்னிரண்டு நாயகர்களையும் ஆழமாக விவரித்துள்ளீர்கள்! காரிகனும் மறவ இயலா நாயகரே சாரே!

    ReplyDelete
    Replies
    1. // ஷெர்லாக் ஹோல்ம்ஸ் இன்றும் அட்டகாசமான கதை நாயகன் சார்! அவரையும் ஜேம்ஸ்பாண்ட் கதைகளையும் நமது இதழில் மீண்டும் உலவ விடலாம் சார்! // +1.

      Delete
  35. கடைசி அட்டைப்படத்தில் சில எழுத்து பிழைகள் உள்ளன.

    ராசித்திடலாம் - ரசித்திடலாம்
    இத்தாயின் - இத்தாலியின்

    ReplyDelete
    Replies
    1. Mohammed Roseleen : அவை ஒரிஜினலில் திருத்தப்பட்டு விட்டன நண்பரே..இது என்னிடமிருந்த pre correction design !

      Delete
  36. //2016-ல் மனுஷனுக்கு கணிசமான வாய்ப்புகள் தந்தே தீருவது என்ற எண்ணத்தையும் எனக்குள் வலுவாக விதைத்துள்ளது //

    அருமையான முடிவு விஜயன் சார்

    மேலும் சித்திரங்களை பார்க்கும் பொழுது
    சமீபத்தில் வரும் டெக்ஸ் வில்லர் கதைச் சித்திரங்கள் மனதில் தோன்றுகிறது

    மிக அருமையான சித்திரங்கள் சார்
    அப்ப ராபின் கலக்குவார் என்று சொல்லுங்கள் :))
    .

    ReplyDelete
  37. // நாம் இது வரை வெளியிட்டுள்ள ரிப் கதைகள் எத்தனையோ ? சரியாக விடை சொல்லும் முதல் நண்பருக்கு ஒரு குட்டியான ரிப் கிர்பி அமெரிக்க (வண்ண) இதழ் நம் அன்பளிப்பாய் இருந்திடும் ! //

    ஆஹா அப்ப இது

    " பரண் உருட்டும் படலமா " சார் :))
    .

    ReplyDelete
  38. என்னதான் ஆக்சன் கதைகளை படித்தாலும், துப்பறியும் கதைகளை படிப்பதின் சுகமே அலாதி தான்.

    முடிச்சு எப்படி ஆரம்பிக்கும், முடிச்சு எப்படி அவிழும் என்ற எதிர்பார்ப்பில் துப்பறியும் கதைகளை படிப்பது எனக்கு பிடித்த ஒன்று.

    அதுவும் ரிப்போர்டர் ஜானி கதைகளில் வரும் சிக்கலான முடிச்சுகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. \\அதுவும் ரிப்போர்டர் ஜானி கதைகளில் வரும் சிக்கலான முடிச்சுகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.\\
      +1

      Delete
  39. // 'பயங்கரப் பன்னிரண்டு' படலம் அடுத்த வாரமும் தொடரும் ! //
    எடி சார்,அப்படின்னா,இந்த வார பயங்கரப் பனிரெண்டுக்கு ஒரு டிடெக்டிவ் ஸ்பெஷல்,அடுத்த வார பயங்கரப் பனிரெண்டுக்கு ஒரு டிடெக்டிவ் ஸ்பெஷல், ஆக மொத்தம் இரண்டு டிடெக்டிவ் ஸ்பெஷல் 2016 ல விட்டுடுங்க டீல் O.K வா.

    ReplyDelete
    Replies
    1. 2015லயே வந்தா வேண்டாம்னு சொல்லிடுவிங்களா ரவி.,??

      Delete
    2. வாவ், "கண்ணா லட்டு திங்க ஆசையா", "கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா" எனக்கு ஓகே, ஆசானுக்கு ஓகே வான்னு கேட்டு சொல்லுங்க கண்ணன் சொல்லுங்க.

      Delete
  40. // 1.ரிப் கெர்பி,
    2. விங் கமாண்டர் ஜார்ஜ்,
    3.பிலிப் காரிகன்,
    4 .ஜான் சில்வர்,
    5. ஜெஸ் லாங்,
    6. ஜான் ஸ்டீல்
    7. டிடெக்டிவ்களின் பிதாமகர் ஷெர்லாக் ஹோம்ஸ்,
    இவர்கள் அனைவரும் எனக்கு பிடித்தமனவர்களே,இவர்களின் ஒருசில கதைகளை வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
    ஆனால், விக்டர் டிராகோ யார் என்று தெரியவில்லை.படித்த நினைவும் இல்லை.
    டிடெக்டிவ் ஸ்பெஷலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    உண்மையாகவே இது சர்ப்பரைஸ் பதிவு எடி சார்.

    ReplyDelete
  41. ஆகக் கூடி என்ன சொல்ல வர்றேன்னா

    "டிடக்டிவ் டைஜஸட் "உறுதி

    அதானே விஜயன் சார் :))
    .

    ReplyDelete
  42. காரிகன் மீண்டும் வருவாரா ????

    ReplyDelete
  43. we all badly want Sherlock Holmes return ..

    ReplyDelete
  44. விஜயன் சார், நமது காமிக்ஸில் வந்துள்ள ரிப் கெர்பி கதைகள். நன்றி முதலை பட்டாளம் கலீல்!

    வாரிசு யார்?
    புதையல் வேட்டை
    கொலை வழக்கு மர்மம்
    பகல் கொள்ளை
    மூன்று தூண் மர்மம்
    ரோஜா மாளிகை ரகசியம்
    பட்லர் படுகொலை
    கள்ள நோட்டுக் கும்பல்
    விசித்திர குரங்கு
    பிரமிட் ரகசியம்
    கற்கோட்டை புதையல்
    காணாமல் போன வாரிசுகள்
    சூரிய சாம்ராஜ்யம்
    கையெழுத்து மோசடி
    யார் அந்த கொலையாளி
    மரணக்குகை
    நாலூகால் திருடன்
    வழிப்பறிக் கொள்ளை
    பொக்கிஷம் தேடிய பிசாசு
    operation அலாவுதீன்
    மரண மாளிகை
    பாலைவன சொர்க்கம்
    பனியில் ஒரு நாடகம்
    கானகக் கோட்டை
    பலி கேட்ட புதையல்
    வேங்கை வேட்டை
    இரத்தக்கரம்
    கம்ப்யூட்டர் கொலைகள்


    ReplyDelete
    Replies
    1. minilion
      1 . mayajala mosadi
      2.kasilla kodisvaran

      Delete
    2. நல்ல உழைப்பு ...இதில் சூரிய சாம்ராஜ்யம் கொஞ்சம் வித்தியாசமான படைப்பு..வாழ்த்துக்கள் பரணி ....
      மற்றும் முதலைப்பட்டாளம் கலீல் ...

      Delete
    3. VETTUKILI VEERAIYAN @
      // நல்ல உழைப்பு .. // என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலியே!

      எல்லா வாழ்த்துகளும் முதலைப்பட்டாளம் கலீலலை சாரும்! அவரின் தளத்தில் நமது காமிக்ஸ் பற்றி இல்லாத விசயம்களே இல்லை!

      விடுபட்ட இரண்டு புத்தகம்களை இங்கு குறிப்பிட்டதற்கு, நன்றி நரேஷ் குமார்!

      Delete
  45. விஜயன் சார், இந்த பதிவ படிக்க ஆரம்பிச்ச உடன், டிடெக்டிவ் வார்த்தையை படித்தவுடன் நம்ப ஆசிரியர் அடுத்த வருடம் டிடெக்டிவ் டைஜெஸ்ட் விட போறார் போல எனத்தான் முதலில் தோன்றியது!

    ReplyDelete
  46. Sherlock holmes s return will be a good addition for our comics ... V can also try all the above heroe's classic stories in our
    re - print sir ...especially bond , carigan , charlie ...

    ReplyDelete
  47. அடுத்த வருட காமிக்ஸ் பட்டியலில் டிடெக்டிவ் ராபினை சேர்த்தால் இரண்டு டெக்ஸ் வில்லர் கதைகளை கழட்டி விடவும். :-)

    ReplyDelete
  48. Total number of Rip Kirby stories published in Muthu, Lion and Minilion are : 40

    ReplyDelete
  49. மினி லயன் 2
    லயன் 13
    முத்து 18

    மொத்தம் 33 கதைகள் ஓகேவா சார் :))
    .

    ReplyDelete
  50. Vijayan sir, should I have to give the 40 stories list?

    ReplyDelete
  51. டிடக்டிவ் ஸ்பெசல் அவசியம் வெளியிட வேண்டுகிறேன்

    ReplyDelete
  52. நமது கதாநாயகர்களின்கதைகள் பெரும்பாலும் நிறைவடைவதால் துப்பறிவாளர்களை நாம் அதிகமாக பயன்படுத்தவேண்டும் !Arthur Canon's Shelock Holmes அவர்களை நாம் களத்தில் இறக்கலாமே?

    ReplyDelete
  53. டியர் எடிட்டர் சர்ர்,
    ர்ரபின் வருவது அருமை. சித்திரங்கள் அதை விட அருமை. 12 துப்பறிவரளரும் VRS வரங்கி விட்டது கொடுமை. எப்படியும் மறுபடி ஒரு ரவுண்டு வருவர்ர்களர? ஷெர்லக் கொம்ஸ் மறுபடி வருவர்ரர? எனக்கு அவரை பிடித்துள்ளது.

    ReplyDelete
  54. நீங்கள் போட்ட நரயகர்கள் ஒரிரண்டு மட்டுமே என்னிடமிள்ளது. ஆகவே கருத்து சொல்வது சரியில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  55. விஜயன் சார்,
    // சரியாக விடை சொல்லும் முதல் நண்பருக்கு ஒரு குட்டியான ரிப் கிர்பி அமெரிக்க (வண்ண) இதழ் நம் அன்பளிப்பாய் இருந்திடும் ! //

    நீங்க சொல்லுறத பார்த்தா அடுத்த வருடம் ரிப் கிர்பி வண்ணத்தில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் போல தெரிகிறது! ரிப் கிர்பி மீண்டும் வருவதை வரவேற்கிறேன்!

    ReplyDelete
  56. சூப்பர் கம்ப்யுட்டர் டோனி
    டிடக்ட்டிவ் டிரேசி -கனவே கொல்லாதே..

    ReplyDelete
    Replies
    1. \\டிடக்ட்டிவ் டிரேசி -கனவே கொல்லாதே..\\
      +1

      Delete
  57. டிரேசி ...கனவே கொல்லாதே ...எனக்கு ரொம்ப புடிச்ச கத ....

    ReplyDelete
    Replies
    1. ஆனா அந்த கதையில் நிறைய படங்கள் ரிபீட் ஆகியிருக்கும் .............

      Delete
  58. ரிப் கெர்பி திரும்பி வந்த வுடனே மந்திரியார் ,மாயாவிஜி இவங்கல்லாம் அவங்க காமிக்ஸ் புக்ஸ் எல்லாத்தையும் எங்க பதுக்கி வச்சு இருக்காங்கன்னு துப்பறிய சொல்லோனும் ....:-)

    ReplyDelete
    Replies
    1. மாயாவி விலாசம் ப்ளீஸ் ...........

      Delete
    2. முகமூடி மாயாவி,S/O 21 வது வேதாளர்
      வேதாளர் குகை வீடு,
      ஆற்றுவழி பாதை,
      லேண்டு மார்க்: நீர்விழ்ச்சி பின்புறம்
      பெங்காலி காடு போஸ்டர்,
      பெங்காலி.

      Delete
    3. அப்பாடி .............இது தெரியாம போச்சே ...........

      Delete
  59. பழைய கதைகள் நிறைய படிக்கல ..அதனால பதில் எழுத முடியல ..இல்லாட்டி பக்கம் பக்கமாக எழுதி இருப்போம்ல ..(ப்ளாக்ல இருக்கறவங்க தப்பிச்சீங்க )
    டிடக்டிவ் ஸ்பெஷல் வந்தா அள்ளிபுடுவோம் அள்ளி

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் 39 ரிப் கெர்பி கதைகள் வந்துள்ளன. அதாவது...முத்து,லயன்,மினி லயன் இவற்றில் மட்டும்..!
      வெளியீடு எண்களுடன் எடிட்டருக்கு மெயில் போட்டுள்ளேன்.பரிசு யாருக்கு என வரும் வாரம் தெரிந்து
      விடும்..! பரிசு பெரும் நண்பருக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்..!
      பரிசு என் கைக்கு கிடைத்தால் நண்பர்கள் பார்வைக்கு (முதலில் செல்வம் அபிராமி உங்களுக்கு) அனுப்பபடும்..!

      Delete
    2. சிவா, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்! என்னா உங்ககிட்டதான் நமது காமிக்ஸ்ல வந்த வராத எல்லா புத்தகமும் இருக்கு!

      Delete
    3. பாட்டில் பூதம்
      கழுகு வேட்டை
      லயன் சென்சுவரி ஸ்பெஷல்
      கடலோரக் கொலைகள்
      தலைகீழாய் ஒரு தினம்
      மரணத்தை முறியடிப்போம்
      சுல்தானுக்கொரு சவால்
      லயன் ஜாலி ஸ்பெஷல்....ஆகிய புத்தகங்களில் இரண்டாம் கதையாக ரிப்கெர்பியின் கதைகள் வந்துள்ளன..!
      மினி லயனில் கூட இரண்டு கதைகள் வந்துள்ளன பரணி...! உங்க பட்டியல்ல இதையும் சேர்த்தால் கணக்கு சரியாயிடும்..!

      Delete
    4. அப்புறம்...சாத்தானின் தூதன் டாக்டர் செவன்...இதில் இரண்டாவது கதை சேர்த்துக்கோங்க...39 வரும்,,,!
      வந்தவைகள் மட்டும் தான் போட்டிருக்கிறேன் பரணி..! என்னை சந்தேகப்படதீங்க..வராததெல்லாம் என்கிட்ட அப்படி எதுவும்மில்லை..ஹாஹா..! ரிப்கெர்பிக்கு ஒரு 'கிளிக்' வேண்ணா போடலாம்..!

      Delete
    5. மாயாவி ஜி

      அசத்திட்டீங்க அருமை அருமை

      அப்ப அந்த புத்தகம் உங்களுக்குத்தானா

      எனக்கு இல்லையா :(
      .

      Delete
    6. எனக்கு கிடைச்சா உங்களுக்கு....
      உங்களுக்கு கிடைச்சா எனக்கு...
      ஜென்டில்மேன் அக்ரிமென்ட் ஓகேவா...சிபி.. :))

      Delete
    7. இது உங்க பெரிய மனச காட்டுது மாயாவி ஜி நன்றி :))
      .

      Delete
  60. Expecting Sherlock & John Silver again...
    You forgot Detective Charlie & Detective Drake sir...

    ReplyDelete
  61. Detective Drake is awesome in story base sir... you can count him again

    ReplyDelete
  62. ராபின் கதையின் டீசர் கதையை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது! அட்டை படம் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  63. Lioncomics.in ல் தங்க கல்லறை ஆர்டர் 27.02.15மாலை கொடுத்தேன் ..இன்று காலை புக் வந்துவிட்டது ..நடுவில் ஞாயிறு வேறு ..சூப்பர் பாஸ்ட் ..சர்வீஸ் ..க்ளாப் ..க்ளாப் ....

    புத்தகம் சொக்க வைக்கிறது ....

    ReplyDelete
  64. புத்தகம் சொக்க வைக்கிறது ..................அப்பிடியே தூங்கிடாதீங்க .............

    ReplyDelete
  65. விஜயன் சார்,
    // திரைப்படங்களாகவும் ; நிறைய டி.வி. சீரியல்களாகவும் களமிறங்கியுள்ள செக்ச்டனை நாம் போதிய அளவு பயன்படுத்திடவில்லை என்பதே நிஜம் ! //

    ஒன்றும் பிரச்சனை இல்லை! அடுத்த வருடம் இவரை மீண்டும் களத்தில் இறக்கி விட்டால்போச்சு! இவரின் கதைகளை நான் இது வரை படித்தது இல்லை என்பது கொசுறு செய்தி :-)

    ReplyDelete
  66. தலைவர் ஹோம்ஸின் "The Hound Of Baskervilles-Graphic Novel"ஐ போடுங்க நிச்சியமா 'hit' அடிக்கும்..!

    ReplyDelete
  67. முடிவா என்ன சொல்றிங்க சார் வருமா வராதா ..?

    ReplyDelete
  68. இப்போ எதுக்கு உசுப்பெற்றுகிரீகள்

    ReplyDelete
  69. அம்பின் பாதையில்....

    கிட்டத்தட்ட நான்கு பாகங்களாக வந்திருக்க வேண்டிய கதை. XIII-ஐ ஒட்டியே பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் கட்டங்களில் நிரப்பப்பட்ட எழுத்துருக்களால் கதை செல்கிறது. ஹீரோவாக XIII இல்லாமல், ஒரு ஒன் ஷாட் கதைத்தொடர் ஆக மே ப்ளவர் - ஐ (கிராபிக்?) படைத்திருந்தால் ஒரு முழுச்சாப்பாடு திருப்தி கிடைத்திருக்கும்...

    அப்புறம்... அம்பின் பாதையில் நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியிருக்கிறது...

    கதை சொல்லப்பட்ட விதமும், சித்திரத்தரமும் (இதனை பெரிதாக எடுத்துக்கொள்பவனல்ல நான்...) பிடித்திருந்தது.

    XIII ன் நினைவுகளில் வரும் காட்சிகளும், பெட்டி, நேரில் அதே காட்சிகளில் ஆஜராவதும் சுவாரஸ்யத்தை கூட்டின...

    எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை... கவனித்தவர்கள் அல்லது விஷயமறிந்த பார்ட்டிகள் ஏதாவது விளக்கம் கொடுத்தால் தேவலை.... அதாவது வந்து, ஒரு ரெஸ்டாரண்டின் பெயர் No Men No Bra !

    ReplyDelete
    Replies
    1. டெஸ்மாண்டை சுற்றி நிகழ்வதாக எழுதப்பட்ட ரிப்கெர்பியின் கதை ஒன்றில் வரும் ரெஸ்டாரண்டின் பெயர் “ LOUI'S THE LOST"

      Delete
  70. //XIII ன் நினைவுகளில் வரும் காட்சிகளும், பெட்டி, நேரில் அதே காட்சிகளில் ஆஜராவதும் சுவாரஸ்யத்தை கூட்டின...//
    +1

    ReplyDelete
  71. I got தங்க கல்லறை too best of best from Tiger,thanks for reprinting Edit sir! :)

    Edit sir,plz give a good thought on bringing Sherlock Holmes, this will fall into genre where you can cover young and adults(YA ,Y and A)!
    and its my personal fav too!

    ReplyDelete
  72. டிடெக்டிவ் பற்றிய பதிவாதாலால்.-
    ஜேம்ஸ் பாண்டின்
    பறக்கும் பாவை படலம் நினைவுக்கு வந்தது. நீண்ட நாட்களுக்கு முன் படித்த கதை. மீண்டும் படிக்கலாமே என்று இரண்டு நாட்களாக தேடி ஒருவழியாக கண்டுபிடித்து விட்டேன்.
    இப்போதைய வெளியீடுகளை தரமான பேப்பரில் படித்துவிட்டு., அன்றைய பேப்பர் குவாலிட்டியை மீண்டும் பார்க்க நேரிட்டபோது என் மனதில் தோன்றியது.
    "எப்படி இருந்த நாம
    இப்படி ஆயிட்டோம்."
    அதுவும் பறக்கும் பாவை படலம் ரொம்பவும் சுமாரான பேப்பர். கையில் எடுத்ததும் முதலில் அட்டை கையோடு வந்து விட்டது. ஒட்ட வைத்துவிட்டு படித்தேன்.
    முன்னரே பலமுறை படித்து இருந்தாலும் இம்முறையும் ஒரே மூச்சில் படிக்க வைத்தது.
    ஃபிகர் ஃபிகர் மேலும் ஃபிகர் என்பது பாண்ட் கதைகளுக்கு புதிதல்ல எனினும் இந்த சாகசம் பாவையரை மையமாக கொண்டே புனையப்பட்டது.
    புராணத்தையும் நவீனத்தையும் மிக்ஸ் செய்து வில்லனை நெருங்குவது ரசித்த காட்சிகளில் ஒன்று.
    க்ளைமாக்ஸில் ஜேம்ஸ் வில்லனின் மகளுடன் தப்பிக்கும் யுக்தியும் அருமை. இன்னும் நிறைய சொல்லீக் கொண்டே போகலாம். ஆனால் போரடிக்க கூடும் என்பதால்
    படித்துவிட்டு பாவையரை மீண்டும் பரணுக்கே அனுப்பிவிட்டேன்.

    ReplyDelete
  73. ஷெர்லாக் ஹோம்ஸின் கதை ஒன்று "சிகப்புத் தலை சாகசம் " என்று நினைக்கிறேன். கதை நினைவில்லை.,ஆனால் ஆமை வேக கதை என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. அதெல்லாம் இன்றைய ரசனைக்கு சத்தியமாக சரிபட்டு வராது என்பது என் கருத்து.
    அப்புறம்,
    டிடெக்டிவ் ஜூலியன் கதை ஒன்று. பெயர் நினைவில்லை. தேடி எடுக்கவும் பொறுமை இல்லை.
    வில்லன் குரூப் ஒரு புதிர் போட்டி நடத்துவார்கள். கேள்விகள் சிறிய புத்தக வடிவில் இருக்கும். ஒரு புக்கின் விலை ஒரு டாலர் என கோடிக்கணக்கில் புத்தகம் விற்று சம்பாதித்துவிட்டு, போட்டிக்கான பரிசுத் தொகையை கள்ளநோட்டாக தருவார்கள் என நினைக்கிறேன். (நினைக்கிறேன்)
    அந்தப் போட்டியில் ஜூலியனின் கேர்ள் ஃப்ரண்ட் வெற்றி பெறுவார். கள்ள நோட்டு விவகாரம் வெளிவராமல் தடுக்க வில்லன்கோஷ்டி ஜூலியனின் லவ்வரை போட்டுத்தள்ள முயற்சி செய்வார்கள். ஜூலியன் லவ்வரை காப்பாற்றி கள்ளநோட்டு கும்பலையும் கைது செய்வார். கதை இனிதே முடியும். பாழாய்ப் போன பெயர்தான் நினைவில் இல்லை. பரணில் ஏறவும் நேரம் போதவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சிவப்பு தலை சாகசம் ...சிறுகதை ,காமிக்ஸ் ,டிவி சீரியல் என எல்லா வகையிலுமே சக்கைப்போடு போட்டது ...
      ஆமை வேகம் என்றெல்லாம் சொல்ல முடியாது ...
      இதையும் மற்றொரு முறை படித்து பாருங்களேன் ..
      கதை வேகமாக செல்வதுதான் ..

      கவாஸ்கர் முதல் ஒன்டே மேட்சில் ஓப்பனராக இறங்கி 60ஓவரில் 33 சொச்சம் ரன்கள் எடுத்து நாட்அவுட் பேட்ஸ்மேன் ஆக இருந்த ரேஞ்சுக்கு ஷெர்லக்கை கொண்டு வந்து விட்டீர்களே ..:-)

      Delete
    2. @KiD ஆர்டின் KannaN

      அந்த கதையின் பெயர் 'பாரலோகப்பரிசு ! ' லயன்காமிக்ஸ் 158. அதில் இரண்டு குட்டியான லக்கிலுக் கதைகள் கூட இருவண்ணத்தில் வந்தது ஓகேவா..!

      Delete
    3. கரீட்டு கரீட்டு.!
      போட்டு தாக்கு (ங்க) தல.!!!

      Delete
    4. ஆனா, பாரலோக பரிசு இல்லையே.!
      பரலோக பரிசு தானே.
      ஹிஹிஹி.!!!

      Delete
    5. \\அதெல்லாம் இன்றைய ரசனைக்கு சத்தியமாக சரிபட்டு வராது என்பது என் கருத்து.\\
      +1

      Delete
  74. எடிட்டர் சார் ...ரொம்பவே லேட்டுதான் ...இருந்தாலும் சொல்லாம இருக்க முடியல ...

    தங்க கல்லறை அட்டகாசம் சார் ....ஆர்ட் பேப்பர்ல ஜொலிக்குது .....

    இந்த மாச புக்ஸ் அனுப்பியாச்சா சார் ?

    ஆவலுடன் காத்து கிடக்கேன் ....

    ReplyDelete
    Replies
    1. @ செல்வம் அபிராமி

      இன்று கூரியரில் மொத்தமாய் அனுப்பிட நாளை தளபதியும், பௌன்சரும் ரணகளம் செய்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை...என் தவிப்பெல்லாம் ஏப்ரலில் முன்றாம் வாரம் (ஞாயிறு) துவங்கி பத்து நாட்கள் பெரியார் திடலில் நடக்கும் புத்தக திருவிழா பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பதே..!

      மின்னும் மரணம் ஏப்ரலில் வெளிவருவது உறுதியாகிவிட்ட நிலையில் 'ஏப்ரல்19 to 27' வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நம் காமிக்ஸ் பங்களிப்பும், மி.ம வெளியிட்டு விழா பற்றியும் எடிட்டர் தகவல் தெரிவித்தால்...திட்டமிடலை துவக்கிவிடலாம்..!

      எடிட்டரும் சென்னையில்தான் இருப்பதாக தெரிகிறது, செல்வம் அபிராமி நீங்களும் சென்னைவாசி தானே, புத்தக கண்காட்சி பற்றிய தகவல் தெரிந்தால் இங்கு பகிரலாமே...!

      Delete
    2. தேதி கூடஉறுதியாக தெரியவில்லை...நண்பர்கள் கூறிய தகவல் முன்றாம் வாரம் என்பது மட்டுமே..!

      Delete
  75. ஆனால், மிம வெளியீடு ஏப்ரல் 15 என்று நித்தமும் குற்றம் கடைசி பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது...

    ReplyDelete
    Replies
    1. S.V.VENKATESHH @ ஏப்ரல்15 என்பது ஏப்ரல் 2015 என்பது! அது வெளி ஈடும் வருடம்!

      Delete

    2. @ SVV அவர்களே நான் குறிப்பிடுவது மி.ம. வெளிவருவதையல்ல. வெளியிடப்படும் புத்தககண்காட்சி பற்றியது. சென்னை தினத்தந்தி ஆபிஸுக்கு எதிரில் உள்ள பெரியார் திடலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த புத்தககண்காட்சியில் மி.ம. வெளியிடுவது என்பது கடந்த டிசம்பரில் எடிட்டர் சொன்ன அறிவிப்பு..!
      மார்ச் முதல் வாரத்தில் தான் அந்த அமைப்பாளர்கள் புத்தககண்காட்சி பற்றிய அறிவிப்பை முறையாக அறிவிப்பார்கள் என்பது சென்னையில் உள்ள முக்கிய நண்பர் சொன்ன தகவல். அவர்கள் அறிவிப்புக்கு பின், அப்படி ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை துவங்கும் கண்காட்சியில் நாமும் பங்கு கொண்டு, 18- ம் தேதி சனிக்கிழமை அன்று தனி ஒரு ஹாலில் காமிக்ஸ் காதலர்கள் புடைசூழ 'மின்னும் மரணம்' புத்தகத்தை வெளியிடப்படும் எனில்...அதற்கு இன்னும் 45 நாட்களே உள்ளன.
      அந்த புத்தககண்காட்சி தேதி பற்றிய தகவல்கள் நண்பரிடமிருந்தும் இல்லை,எடிட்டரிடமிருந்தும் இல்லை..! இதை தான் SSLC ரிசல்ட் போல எதிர்பார்கிறேன்..! நான் மட்டுமல்ல, காமிக்ஸ் உலகம் அறிந்த
      இன்னொருவர் என்னை விட ஆர்வமாய் இருக்கிறார். அவர் யாரென்று பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
  76. டிங்கில் தமிழில் வந்துள்ளது .....இன்று தான் வாங்கி படிதேன் .......மீண்டும் ஒரு பூந்தளிர் ........குழந்தைகளுக்கு விருந்து தான்

    ReplyDelete
  77. அம்பின் பாதையில்.......

    சித்திரங்களின் தரத்திற்கு ஒரு மிக பெரிய அப்ளாஸ். கதை ....? புஸ்.... மொழிபெயர்ப்பு..? மிக பெரிய புஸ்.

    இரண்டு முறை படித்து விட்டேன், மே ப்ளவரில் பயணித்த குழுவில் எது நல்ல குழு, எது கெட்ட குழு. யாரிடம் யார் பத்திரம் எழுதி கொடுத்தார்கள். யாரின் வம்சாவளி நம்ம கதாநாயகன்...? ஒன்னும் புரியல......

    அந்த அம்பை எடுத்து என் கழுத்தில் சொருகிகொள்ளலாம் போல் தோன்றியது.

    SVV...... நெஞ்சை தொட்டு சொல்லுங்க , நிசமாவே உங்களுக்கு புடிச்சுருக்கா....?

    ReplyDelete
    Replies
    1. sundaramoorthy j @ // அந்த அம்பை எடுத்து என் கழுத்தில் சொருகிகொள்ளலாம் போல் தோன்றியது //
      ha ha :-) உங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருக்குன்னு தோணுதுங்க.

      Delete
    2. வெறுப்பேத்தாதிங்க பரணி.....! சத்தியமா எனக்கு கதை புரியவில்லை.

      Delete
  78. வணக்கம் சார் . இம்மாத புத்தகங்கள 3ம் அருமையான பார்சலில் வந்து , முனைகள் மடங்காமல் கிடைத்தன சார் . அட்டை படங்களில் எதிரி தான் டாப் சார் . சர்ப்பங்களின் சாபம் நீண்டட்டட்டட்டட்ட கதை . அட்டையும் அருமை சார் . பெஸ்ட் ஆஃப் த மன்த் முதல் புரட்டலில் நிச்சயமாக ராபினின் எத்தர்களின் எல்லையில் சார் . டெக்ஸின் கதையை பார்ப்பது போலவே உள்ளது சார் . அதுவும் அந்த முதல் ஃப்ரேம் அசத்தல் சார் . தலையின் கதையில் ஒரு கார் புகுந்து போற மாதிரி நேச்சுரல் ஆக உள்ளது சார் . ஒவ்வொரு முறையும் முனை மழுங்காமல் - என குறிப்பிட காரணம் உங்கள் பணியாளர்கள் முயற்சிகளை மற்ற சந்தா கட்டாத நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சார் .

    ReplyDelete
  79. முதல் முறையாக மின்னும் மரணம் இதழின் விலை ரூபாய் 1000, முமுன்பதிவக்கு மட்டும் 900என குறிப்பிட்டுள்ளார்கள் சார் -இதை முன்பே செய்திருந்தால் 1000முன்பதிவுகள் என்ற இலக்கு எப்போதோ அமைந்திருக்கலாம் சார் . கடையில் ( புத்தக விழாவில் )வாங்கி ரூபாய் 100தள்ளுபடி பெறலாம் எஎன்று நினைத்து சில பல நண்பர்கள் புக்கிங்கை தவிர்த்து இருக்க கூடும் சார்

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : அது தான் இந்த புராஜெக்டை அறிவித்த முதல் பதிவிலேயே சொல்லி விட்டோமே சார் ?

      தவிர, இன்னமும் நாம் முன்பதிவை முடித்துக் கொள்ளவில்லை எனும் போது still not too late தானே ?

      Delete
  80. புதையல் கெடைச்சிருச்சு..... புதையல் கெடைச்சிருச்சு.....

    ReplyDelete
    Replies
    1. Muthu Kumaran : படிக்கத் துவங்கியாச்சா நண்பரே ?

      Delete
  81. எனக்கும் ஹோலி பண்டிகை பரிசு கிடைத்துவிட்டது...
    படிக்கதுவங்கிவிட்டேன் 'சர்ப்பங்களின் சாபம்! ' முதலில்...

    ReplyDelete
    Replies
    1. "மரணதேவனின் வளளப்பான பூலோக பிரதிநிதி கொடூரமான தனது விஷப்பற்களை இரையின் கழுத்தில் பதித்தது. "

      "ஜூரிடவுனின் தூக்குக் கயிறுகள் வருஷம் முழுவதும் புதுபுதுக் கழுத்துக்களோடு உறவாடும் அனுபவசாலி. "

      " சாவின் நெடி வீசும் அந்த ரொட்டி என் தொண்டை குழியைத்தாண்டது. "

      " உன்னிடத்தில் நானிருந்தால் நாற்றமடிக்கும் அந்த சுருட்டை தவிர வேறெதையும் பற்ற வைப்பது பற்றி கனவில்கூட நினைக்க மாட்டேன் குண்டு பையா ! "

      " அவர்களது கொழுத்த பின்பக்கங்களுக்கு தெருவை அறிமுகம் செய்து வையுங்கள் ! "

      கதையின் துவக்கமே இப்படி அனல் பறக்கும் வசனங்களுடன் கதை சுடுபிடித்துவிட்டது ....பௌன்சரின் கதைபோகும் வேகத்தில் வெட்டிய வலதுகை அடுத்த பக்கத்தில் இடது கையாகிவிட்டது....ஹா...ஹா....மறுபடியும் வருகிறேன் ....!

      Delete
    2. அசத்தல் வரிகள் இல்லையா மாயாவி ஜி :))
      .

      Delete
    3. yes..சிபி...முதல் பாகம் முடிந்தது...சும்மா ராகெட் வேகம்...ஹாலிவுட் படம் போல எகிறிகுதிச்சி கத ஓடுது..!
      இரண்டாம் பாகம் முடிச்சிட்டு வர்றேன்..!

      Delete
    4. என்னோட ஆர்வமே....அந்த மூனுகால் ஜீவன் திரும்ப திரும்ப வர்றதும், பௌன்சர் பின்னாடியே போறதும் பாத்தா அதுக்கு மெயின் ரோல் இருக்கும் போல...

      Delete
    5. " இந்த பூமியில் எதுவுமே நிரந்தரமில்லை ! எல்லாமே காலப்போக்கில் நினைவுப் பேழையிலிருந்து வெளியேறி விடும்"

      " உங்கள் இழப்பின் வலியை உணராதிருக்க மறதி மட்டுமே எனக்கு உதவியது ! "

      "தண்ணீர் ஆண்டவனின் அருட்கொடை! நம் உடலைத் தூய்மையாக்கும் மந்திரம் "

      "கரையை தேடி அலைகள் வர முடியாது போனால் கரையே இனி அலையடிக்கும் இடத்துக்கு வரும்"

      "நீங்கள் தடவிக்கொடுப்பது அந்த நாலுகால் பிராணியை அல்ல...அந்த பெண்னை மனதளவில் ஸ்பரிசம் செய்கிறீர்கள்."
      ...இப்படி மனதில் நிற்கும் வரிகளும், வரிகளை சுற்றி அமைக்கப்பட்ட சுழலும் அபாரம்! பொதுவாகவே கௌபாய் கதைகளின் மனமும் உடலும் முதிர்ந்த,நடுவயது பாத்திரங்களின் ரௌத்திரம் தான் தூக்கலாக இருக்கும்.!
      ஆனால்..பௌன்சரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் வாழ்வின் துவக்கபகுதி & முடியும் பகுதி போராட்டத்தை ஆழமாகவே சொல்வது, சுருக்கென்று செதுக்கியருப்பது, பௌன்சர் வெற்றிக்கு பின்னால் மறைத்திருக்கும் மந்திரம்..!
      இரண்டாம் பாகம் முடிந்தது, அடுத்து மூன்றாம் பாகம் முடித்துவிட்டு வருகிறேன்..!

      Delete
    6. mayavi. siva : வீரியமானதொரு ஸ்கிரிப்ட் கிடைக்கும் போது வார்த்தைகள் தானாய் அமைவது சுலபம் என்பதை இம்முறையும் உணர்ந்தேன் ! So - இதன் பெரும் பங்கு கிரெடிட் ஒரிஜினல் script writer-க்குச் சாரும் !

      தவிர, இது போன்ற கதைக்களங்கள் நாமாக சற்றே improvise செய்திடவும் இடம்தருவதுண்டு ! கதையின் mood -க்கு ஏற்ப சில வரிகளை ஆங்காங்கே நுழைத்தும் இருப்பேன் !

      'எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொன்னேனா ?' என்ற ரீதியில் சில நண்பர்கள் இதனைக் கருதலாம் தான் ; ஆனால் வாசிக்கும் அனுபவத்தில் ஒரு குட்டியான முன்னேற்றம் தருவதே அதன் நோக்கம் !

      அது சரி..மூன்றாம் பாகத்தையும் முடித்து விட்டீர்களா ?

      Delete
  82. சும்மா புரட்டி பார்க்கும்போதே புக்குகளின் தரம் ..

    ......அற்புதம் .........!!!!!!!!!!!!

    ReplyDelete
  83. Hi All ! மின்னும் மரணம் பணிகள் பெண்டை நிமிர்த்துவதால் மார்ச் இதழ்களின் டெஸ்பாட்ச் விபரங்களை அறிவிக்கக் கூட இங்கே தலைகாட்ட இயலவில்லை ! நேற்று காலையிலேயே சகல இதழ்களையும் கூரியர் / பதிவுத் தபால்களில் அனுப்பி விட்டதால் இன்று அவை உங்களை எட்டிடுவது நிச்சயம் ! இயன்றளவு நம்மவர்கள் நேர்த்தியாக பணி செய்துள்ளதாய் மனதுக்குப் பட்டது ....! Happy Reading !!

    Online listing செய்தும் விட்டோம் ; அயல்நாட்டுச் சந்தாக்களுக்கும் பிரதிகளை அனுப்பியாச்சு ! So hopefully not too long a wait for our overseas readers !

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் இம்மாத இதழில் நமது T.R சாரும் இடம்பிடித்துள்ளார்..! நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன்..! :-)

      Delete
    2. @ FRIENDS : Nopes....இதழ்களை முழுவதுமாய்ப் புரட்டுங்களேன்...புரியும் !

      Delete
  84. ராபின் அசத்துறார் விஜயன் சார்

    ஆரம்பமே சிக்ஸர் அடிச்சு ஆட்டத்த ஆரம்பிக்கிறார்

    அதேபோல சித்திரங்களும் அருமையாக இருக்கிறது சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : இந்த ராபின் சாகசத்தை நாம் ஒரிஜினலாய் வெளியிட எண்ணியிருந்தது 1998-ல் !! இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு எப்படியோ மேஜைக்குள் கிடந்தே போய் விட்டது ! So ரொம்பவே லேட்டாக வந்திருப்பினும், விட்டதைப் பிடித்து விட்டார் என்ற மட்டில் சந்தோஷமே !

      தவிர, absence makes the heart grow fonder என்று சொல்வார்கள் ! பெரிய இடைவெளிக்குப் பின்னே வருவதும் ராபினை நாம் ரசிப்பதற்கொரு காரணமோ ?

      Delete
  85. BOUNCER சர்ப்பங்களின் சாபம் படித்துவிஇட்டேஇன். முதல் பாகத்தைவிட மிகவும் அருமயாக உள்ளது.
    CLIMAX எதிர் பார்க்காத திருப்பம். BOUNCER அப்பா character_ரைஸேன் மிகவும் அருமை. ஓவ்வொரு
    character_க்களும் படைக்படவில்லை செதுக்க பட்டிருக்கிறது. சோகமான முடிவு என்றாலும் ரசிக்குபடி உள்ளது. சர்ப்பங்களின் சாபம் நமக்கு கிடைத்த
    வரம்.

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : பௌன்சரின் பொருட்டு நிறைய நேரமும், பணமும் செலவிட்டிருந்தாலும் - அவை வீணாகவில்லை என்பதை உணரும் பொழுது மகிழ்வாய் உள்ளது !

      Delete
  86. தங்க கல்லறை மறுபதிப்பை முதல் முறையாக படிக்கபோகிறேன். மறுபதிப்புக்கு வெளியிட்டஆசிறியற்கு நன்றி.

    ReplyDelete
  87. விஜயன் சார்

    வேங்கைக்கு முடிவுரையா & எத்தர்களின் எல்லை

    இரண்டிலுமே வெளியீடு எண் 338 என இருக்கிறது

    நன்றி :)
    .

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சிபி...இதில் எதை 338 என எடுத்துக்கொள்வது ?
      கடந்த மாதத்திலேயே 'வேங்கைக்கு முடிவுரையா?' அடுத்த வெளியீடு என வந்துவிட்டதால்...'எத்தர்களின் எல்லையில்..!' கடந்தவாரம்தான் அறிவிக்கப்பட்டதாலும், காமிக்ஸ் டைம் பகுதியில் # 3 cid ராபின் கதை என குறிப்பிட்டுள்ளதாலும்...டைகர்-338 cid ராபின்-339 என கணக்கிட்டு கொள்வோமா..சிபி..?

      Delete
    2. Prabakar T : Oops....தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் ! ராபின் தான் இதழ் # 339. அடுத்த இதழின் நம்பரை 340 என அமைத்து வரிசையை சரி செய்து விடுவோம் !

      Delete
  88. எதிர்வீட்டுக் கதவு தட்டி
    எதையெதையோ கொடுத்துப்போகும் கொரியர் தம்பி - உனக்கு
    என் வீடு தெரியலியோ...

    கத்தை கத்தையாய் கடுதாசி வச்சிருக்கும் தம்பி உனக்கு - என்
    பொஸ்தகத்தை கொண்டுவர மனசில்லையோ...

    தம்பித்தம்பி அது பொஸ்தகமில்ல - இந்தப்
    பூனைக்கது புதையலுன்னும் புரியலியோ...

    ReplyDelete
    Replies
    1. மிடியில பூனையாரே :(

      Delete
    2. யாருப்பா அது நம்ம பூனையார பொலம்ப வச்சது ;-)

      அந்த பொலம்பலிலும் ஏகப்பட்ட சரக்க வச்சிருக்காரு :))
      .

      Delete
    3. Erode VIJAY : அஹா...ST கூரியரில் இந்தப் பாடலை ஒரு புகாராய்ப் பதிவு செய்து விடுங்களேன்..! காலையிலேயே ஒப்படைக்கப்பட்டன பிரதிகள் சகலமும் !

      Delete
  89. Dear Editor விஜயன் sir….

    வணக்கம்.
    தற்போதைய வெளியீடுகளில், புது புத்தகங்களுக்கு மத்தியில், மறு பதிப்புகள் வெளிவருவது மகிழ்ச்சி தரும் விஷயம்.

    பல நாடுகளிலும் இந்த Trend தற்சமயம் இருக்கிறது . உதாரணமாய் மாயாவி கதைகள் (The Phantom – Ghost who walks- by Hermes Press)… Batman, Superman etc கதைகள் (DC, Marvel 1960’s, 70’s, 80’s) ஆகியவை வெளிவருகின்றன.

    பல நேரங்களில் இது வரை வெளிவந்துள்ள நமது இதழ்களின் பட்டியலை நீங்கள் பிரசுரிக்கும் போது, அனைவரும் பரவலாகக் கேள்விப் பட்டிருக்கும் கதைகளைத் தவிரவும், வேறு பல கதாநாயகர்களின் கதைகள், அழகிய தலைப்புகளோடு அந்தப் பட்டியலில் இருக்கும்.

    அவற்றில் பல கதைகளை, பல்வேறு தருணங்களில், நீங்களும், சிலாகித்து, பாராட்டி எழுதியிருக்கிறீர்கள். அந்த ஆரம்ப கால கதைகளில், பல கதைகள் பலரும் இதுவரை படித்திராததாய் இருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக, கடந்த 10- 15 வருடங்களில் நமது காமிக்ஸ் இதழ்களைப் படிக்கத் துவங்கி இருக்கும் வாசகர்கள் அவற்றை வாசித்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

    இந்நாட்களில், சிறப்பாய் மறுபதிப்புகள் வெளியிடும் பணியை நீங்கள் செய்து வரும் போது... "இரும்புக்கை மாயாவி", "லாரன்ஸ் & டேவிட்", "ஜானி நீரோ & ஸ்டெல்லா" முதலிய கதைகளையும் தாண்டி, நமது காமிக்ஸ் வெளியீடுகளின் வரலாற்றில் பல வேளைகளில் முத்திரைப் பதித்த வேறு பல ஆரம்ப கால நாயகர்களின் கதைகளையும் { Example…. ஒரு பனிமலைப் பயங்கரம், தவளை மனிதனின் முத்திரை, ஆபரேஷன் அலாவுதீன், மரண முள் , மர்மக் கத்தி, சாகசத் தலைவி.., வாரிசு வேட்டை, etc etc..}… மற்றும் ... சிறு கதைகளாய் வெளியான "கறுப்புக் கிழவியின் கதைகள்" போன்றவற்றைத் தொகுத்தும் மறு பதிப்பு செய்யலாம்.

    பௌன்சர் ... லார்கோ விஞ்ச்.. போன்ற கதைகள், வயதில் பெரியவர்களும், காமிக்ஸ் Connoisseurs- ம் ஆன வாசகர்களுக்கு, ரசனையான வாசிப்பாக அமைந்தாலும் கூட... .. இளைய தலைமுறை வாசகர்களை.. குறிப்பாகச் சிறுவர்களை, அவை ஈர்க்குமா என்று யோசித்தால் அதற்கான வாய்ப்பு குறைவே !

    இத்தகைய கதைகள் தொடர்ந்து வெளியாகும் போது, மேற்குறிப்பிட்ட வகையான மறுபதிப்புகள், அனைவருக்கும் ஒரு breather ஆக இருந்து, சிறிய வாசகர்களை ஈர்க்கும் என்று நான் கருதுகிறேன்.
    எனவே.. இவற்றையும் மறுபதிப்புகளில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    Charles,
    Chennai.

    ReplyDelete
    Replies
    1. CFC : மும்மூர்த்திகள் முதல் (காமிக்ஸ்) தலைமுறையின் ஆதர்ஷ நாயகர்கள் ; நீங்கள் பட்டியலிட்டுள்ள கதைகள் அனைத்தும் late '80 s & early '90 s களின் படைப்புகள் என்பதை கவனிக்கும் போதே நீங்கள் இரண்டாம் தலைமுறையின் பிரதிநிதி என்பது புரிகிறது !

      முதல் தலைமுறையின் மறுபதிப்பு அவாக்களை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திட இப்போது தான் துவங்கியுள்ளோம் ; இன்னும் கொஞ்சம் சீராய் (மறுபதிப்பு) வண்டி ஓடத் துவங்கிய பின்னே அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்போம் !

      தவிர, இன்றைய தலைமுறை ரசிக்கக் கூடிய கதைகளும் இன்று உருவாக்கப்பட்டே வருகின்றன எனும் போது, அவர்கள் கவனங்களை ஈர்த்திட புராதனங்கள் அவசியம் தானா ? ஒரேடியாய் பழசைப் புரட்டும் பணிக்குள் மூழ்கிடலில் சுவாரஸ்ய மீட்டர் தப்பான திசையில் திரும்பிடும் அபாயம் உண்டன்றோ ?

      Let's do reprints ; but not at the cost of slackening on the newer ones !

      Delete
  90. நோ ஸ்பாய்லர் ......

    எத்தர்களின் எல்லை .....ஆரம்பிக்கும்போதே கதை டாப் கியரில் எகிறுகிறது ....
    கொஞ்சம் படித்து நிறுத்தி விடலாம் என பார்த்தால் முடியவில்லை .....
    தெளிவான படங்கள் .....
    ரியோ கிராண்டே நதியோட்டம் போலவே வேகமாய் சீராய் கதை செல்லுகிறது ...
    ராபின் .....எடுத்தால் முடிக்காமல் வைக்க மாட்டீர்கள் ...

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : நேற்று என்னை சந்தித்ததொரு நண்பரிடம் நான் சொன்னது கூட இதுவே தான் ! இம்மாதம் 'தளபதி'..'ஒற்றைக்கையார்' என பெரிய புள்ளிகள் களத்தில் இருப்பினும், ஓசையின்றி ராபின் கலக்கிடுவார் என்றே எதிர்பார்த்தேன் !

      Delete
  91. ராபினையும், பௌன்ஸரையும் ஒரே மூச்சில் முடித்து விட்டேன் .
    அப்புறம் என்ன LMS இரண்டாம் புக்கை தேடுகிறேன்
    முதல் பாகத்தை படிக்க

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : படித்தது சரி....பிடித்தது ?

      Delete
  92. சார்,

    இந்த மாத மூன்று இதழ்களுமே அட்டகாசமாக வந்துள்ளன. அதிலும் துக்கடாவான ராபின் இதழ் சும்மா சோக்கா கீது. சித்திரங்கள் அட்டகாசம் செய்கிறது. ஒரு கௌபாய் சித்திரப்பின்னணியில் ஒரு டிடெக்டிவ் கதை என்று பிரம்மிக்க வைக்கிறது. மற்ற இதழ்களைப் போல் இதில் கதையாசிரியருக்கும், ஓவியருக்கும் கிரெடிட் கொடுக்கப்படாததேனோ...?

    வேங்கைக்கு முடிவுரையா....? (என்ன சின்னபுள்ளதனமா) பக்கத்திற்கு பக்கம் தளபதி handsome - மாக ஒரு கலக்கல் தான் போங்கள். தளபதி, 'தலை' யாக முடியுமா என்ன.....? இவரு 'அதுக்கும்' மேல?

    மினி குண்டு புக் 'பௌன்சர்' சூப்பரோ சூப்பர்.

    கார்டூன் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தேன்! லயன் வெ. என்.250-யை மே மாதம் தக்கவைக்கும் பொருட்டு, ஏப்ரல் மாதம் முழுவதும் முத்துவின் ஆக்கிரமிப்பா...? ம்ம்ம் நடக்கட்டும்,நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : //கார்டூன் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!//

      "மின்னும் மரணம்".....அப்புறம் லயனின் இதழ் # 250 ....என இரு சிகரங்களை முதலில் கடந்து கொள்வோமே சார் ! வருடத்தில் தான் இன்னமும் ஏராளமாய் மாதங்கள் நமக்காக மிச்சம் உள்ளனவே..!

      Delete
  93. Bouncer is really good and quality of all three books are very good...

    ReplyDelete
  94. மூன்று இதழ்களும் கிடைக்க பெற்றன சார் ...அட்டைபடம் ராபினும் ..டைகரும் கலக்குகிறார்கள் ...அதிலும் டைகர் அட்டைபடம் மிக அருமை .ஆனாலும் முதலில் படித்தது ராபின் சாகசமே ...வெரி சூப்பர் சார்....கதை ..சித்திர தரம் என ராபின் கலக்கி விட்டார் .அவரை ஆவலோடு மீண்டும் எதிர் பார்க்க வைத்து விட்டார் என்பது உண்மை ...

    பௌன்ஷர் சாகசம் இன்று தான் படிக்க வேண்டும் .டைகரை உள்ளே சித்திர தரத்தை ..சுமாராக புரட்டும் போது என பார்க்கும் போது இந்த முறை ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்...ஆனாலும் முதல் பாகத்தில் இருந்து படித்தால் இன்னும் சுவையாக இருக்கலாம் என்ற முடிவால் முதல் பாகமும் இப்போது கைகளில்...

    லார்கோ விளம்பரத்தை பார்த்தவுடன் ஒரு துள்ளல் உற்சாகம் வந்ததும் .....அடுத்த மாத வெளியீட்டு விளம்பரம் அந்த உற்சாகத்தை கொஞ்சம் குறைத்ததும் மறுக்க முடியாத நிஜம் .

    சிங்கத்தின் சிறு வயதில் தொடர் ஒரு திருப்பு முனை கட்டத்தில் நிற்பதும் ...அடுத்த பாகம் எப்போது வரும் என ஏங்க வைக்கிறது......

    மொத்தத்தில் பத்து நாட்களாக எந்த காமிக்ஸ் இதழையும் தொட முடியாத காரணத்தால் சோர்ந்திருந்த மனது இப்பொழுது மிகுந்த உற்சாகத்தில் ......

    மிக்க நன்றி சார் ....

    ReplyDelete