நண்பர்களே,
வணக்கம். டிசம்பரில் மொத்தம் 5 வெளியீடுகள் எனும் போது பணிகள் இரயில்வண்டியின் பெட்டிகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து நிற்கின்றன !! தொடர்ச்சியாய் இது மூன்றாம் ஆண்டு - ஆண்டின் இறுதியை நமக்கு நாமே இடியாப்பமாக்கிக் கொள்ளும் நம் பாணிக்கு ! 2012-ன் கடைசி மாதம் NBS பரபரப்பில் ஒடியதெனில் ; 2013 டிசெம்பர் - சூப்பர் 6-ன் இறுதி இதழ்களுடனான மல்லுக்கட்டோடு ஓடியது ! காலண்டர்கள் ; டயரிகள் தயாரிப்பிற்கென எங்கள் ஊரும் இந்த வேளைகளில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழல்வது வழக்கமென்பதால் இந்த "பிசியோ பிசி "routine கூட ஒரு விதத்தில் ஜாலியாகத் தானுள்ளது ! ஜாலிக்கு மத்தியினில் இதழ்கள் வெளியாகும் வரிசைக்கிரமத்தில் மட்டும் சின்னதாய் ஒரு மாற்றம் அவசியமாகிறது ! 'தல'யின் KING SPECIAL தயாராகி விட்டது ; கிராபிக் நாவலான "வானமே எங்கள் வீதி'யும் ரெடி ! மூன்றாவது இதழான டைலனின் "நள்ளிரவு நங்கை"யில் மாத்திரமே நமது டிசைனிங் பிரிவில் சின்னதாய் ஒரு குளறுபடி நடந்து போய் விட்டது ! டைலனின் வண்ணப் பக்கங்களை நமது இத்தாலிய பாணி மீடியம் சைசில் செட் பண்ணுவதற்குப் பதிலாய் தவறுதலாய் பெரிய சைசில் அமைத்து விட்டார்கள் ! So அதனை சரி செய்திட இரண்டல்லது மூன்று நாட்கள் ஆகுமென்பதாலும் , அதன் பின்னே பிழை திருத்தங்கள் செய்து அச்சுக்குக் கொண்டு செல்வதில் ஒரு வாரம் ஓடிப் போய் விடும் என்பதாலும் - அதற்குப் பதிலாய் கையில் தயாராகியிருந்த மேஜிக் விண்டின் "உயரே ஒரு ஒற்றைக் கழுகை" களம் இறக்கிடல் தேவலை என்று தோன்றியது ! இரண்டும் ஒரே சைஸ் ; அமைப்பு ; விலை ;அதே இத்தாலிய நாட்டு இறக்குமதிகள் என்பதால் சின்னதான இந்த இடமாற்றம் பெரிதாய் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் மேஜிக் விண்டின் சாகசம் # 2 அடுத்த சில நாட்களில் உங்களை சந்திக்க வரவுள்ளது ! (டைலனின் "நள்ளிரவு நங்கை" டிசம்பரின் இறுதியில் டயபாலிக்கோடு இணைந்து வெளி வந்திடும் - 2014-கொரு சுபம் போட்டிட !)
மேஜிக் விண்டின் முதல் கதையானது ஒரு mild ஆன ஆக்க்ஷன் த்ரில்லர் + லேசான ஹாரர் பாணியில் அமைந்திருந்ததென்றால் - இப்போதைய சாகசம் - முற்றிலும் வேறுபட்டதொரு style ! கதையின் ஹீரோ தோர்கலோ ? என்ற சந்தேகத்தை உண்டு செய்யும் விதமாய் மாந்த்ரீகம் ; பாண்டஸி என ரவுண்ட் கட்டி அடிக்கும் இந்தக் கதைக்கு அச்சாணியே அந்நாட்களது செவ்விந்தியப் பழங்குடியினரின் மாந்த்ரீக நம்பிக்கைகளே ! அதை விட முக்கியமாய் அவர்களது மதகோட்பாடுகளுக்குள் கழுகுகளுக்கு எத்தனை பிரதானமான இடமிருந்தது என்பதை இக்கதையைப் படித்து முடிக்கும் போது உணர்ந்திட முடியும் ! "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" - அமெரிக்க மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கைகளுக்குள் ஒரு ஜனரஞ்சகமான பார்வை என்று சொல்லலாம்!
இதோ இந்த இதழுக்கான நமது அட்டைப்படமும் ; ஆங்கிலப் பதிப்பு + இத்தாலியப் படைப்புகளின் அட்டைப்படங்கள் ! As always - இங்கு தெரிவதை விட, இதழின் அட்டையில் வர்ணங்கள் இன்னும் அழுத்தமாய் இருந்திடும் ! இத்தாலியப் பதிப்பின் அட்டையை அப்படியே போட்டுக் கொள்ளும் வாய்ப்பிருந்த போதிலும், அவர்களது டிசைனில் அந்த beast-ன் குரூரம் கொஞ்சம் ஓவராய்த் தெரிந்ததால் அதனை பயன்படுத்தவில்லை ! Instead நமது ஓவியரைக் கொண்டு மேஜிக் விண்டுக்கும் அந்த ஜந்துவுக்கும் நடக்கும் மோதலை சற்றே க்ளோசப்பில் காட்ட முயற்சித்துள்ளோம் !
இதோ உள்பக்கங்களின் சில டீசர்ஸ் :
"ஆத்மாக்கள் அடங்குவதில்லை"யில் இருந்தது போலல்லாது அடர் வர்ணங்கள் இம்முறை அத்தனை ஜாஸ்தியில்லை என்பதால் கலரிங் பாணி கண்களுக்குக் குளிர்ச்சியாகவே உள்ளது ! வழக்கமானதொரு கௌபாய் கதையை எதிர்பார்த்திடாமல் fantasy கலந்ததொரு action episode -க்குத் தயாராகிக் கொள்ளுங்கள் - இரவுக் கழுகாரோடு வரவிருக்கும் வரும் இந்த ஒற்றைக் கழுகார் will not let you down ! கதை # 3 -ல் கதை பாணி திரும்பவும் கௌபாய் ஸ்டைலுக்குத் திரும்புவதால் - மேஜிக் விண்டின் முழு profile என்னவென்று நாம் அறிந்திட கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் தான் ! "கறுப்புக் காகிதங்கள்" மேஜிக் விண்டின் அடுத்த ஆல்பம் - 2015-ல் !
டிசம்பரின் முதல் ரவுண்டான 3 இதழ்களும் இங்கிருந்து டிசம்பர் 4-ம் தேதி கூரியரில் கிளம்பிடும் ! ஆண்டின் பரபரப்பான வேளையிது என்பதால் பைண்டிங்கில் கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை காட்டிடத் தேவையாகிறது ! இதர பார்டிகளின் வேலைகள் குவிந்து கிடப்பினும், நமக்கென கொஞ்சம் ஆட்களை ஒதுக்கி இருப்பதால் பெரிய சுணக்கமின்றி வேலைகள் ஆகி வருகின்றன என்பது சின்னதானதொரு சந்தோஷத்துக்கு இடம் தருகிறது !
அப்புறம் இம்மாதம் KING SPECIAL தடியான மீடியம் சைஸ் ; "வா.எ.வீ" -பெரிய சைஸ் ; "உ.ஒ.ஒற்றைகழுகு" - சன்னமான மீடியம் சைஸ் என்று விதவிதமாய் இருப்பதால் வழக்கமான பாணியில் pack செய்து அனுப்பிடும் பட்சத்தில் பார்சல்கள் உங்களை வந்து சேரும் போது பாழாகிட வாய்ப்புள்ளதென்பதை உணர்கிறேன் ! So இம்மாதம் முதலாய் LMS-க்குப் பயன்படுத்தியது போலான பிரௌன் அட்டை டப்பாவையே மாதந்தோறும் உபயோகம் செய்திடவிருக்கிறோம் ! 2015-க்கான சந்தாவில் கூரியர் தொகைக்கென பெரிதாய் கட்டணத்தை வசூலிக்காத போதிலும் , packing-ன் பொருட்டு ஒரு சிறு கட்டணத்தைக் கோரியது இதற்காகத் தான் ! So இனி வரும் நாட்களில் நம் இதழ்கள் கசங்காமல் ; முனைகள் மடங்காமல் உங்களை வந்து சேர்ந்திடும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது ! Thanks for putting up with these issues for this long !
பாண்டிச்சேரி புத்தக விழாவினில் நமக்கொரு (சின்ன) ஸ்டால் உறுதியாகியுள்ளதால் சக்கரங்களின் சுழற்சி நம்மை முதன்முறையாக இந்த முன்னாள் பிரெஞ்சு காலனிக்குக் கூட்டிச் செல்லவுள்ளது ! நம்மிடம் புதிதாய் பணியில் சேர்ந்திருக்கும் கணேஷ் நம் சார்பாய் ஸ்டாலில் இருப்பார் ! மார்கெடிங் பொறுப்பிலிருக்கும் இவர் ஒரு புது வரவெனில் ; டைப்செட்டிங் பிரிவினில் மிஸ்.கமலா கடந்த 2 மாதங்களாய் நமக்காகப் பணியாற்றி வருகிறார் ! சமீபமாய் தமிழில் பிழைகள் மிகுந்திராது வண்டி ஏதோ ஒரு மார்க்கமாய் ஓடுகிறதெனில் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் !
2015-ன் மொழிபெயர்ப்புப் பணிகள் ; டிசைனிங் ; அட்டைப்படங்கள் என அதுவொரு தனி ட்ராக்காக ஓடிவருகிறது சமீப வாரங்களில் ! சொல்லப் போனால் - இன்னமும் 5 கதைகள் மாத்திரமே பாக்கி - பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்கு ! இத்தாலிய மொழிபெயர்ப்பு மாத்திரம் சிரமங்களோடு தொடர்வதால் அதனில் நிறைய கவனமும், lead time-ம் கொடுக்கத் தேவையாகிறது ! 2015-ன் முதல் மாதத்து (புது இதழ்களின்) அட்டவணை இம்மாத இதழ்களில் உள்ள போதிலும் - இதோ ஒரு அட்வான்ஸ் preview :
லயன் காமிக்ஸ் - ஒரு ஜென்டில்மேனின் கதை ! (லக்கி லூக்) - ரூ.60
முத்து காமிக்ஸ் - "சிறைக்குள் ஒரு சடுகுடு..!" (ப்ளூகோட் பட்டாளம்) -ரூ.60
லயன் காமிக்ஸ் - "ரௌத்திரம் பழகு" (பௌன்சர்) - ரூ.125
முத்து காமிக்ஸ் - "நிழலோடு நிஜ யுத்தம் " (மாடஸ்டி ) - ரூ.35
இவை நீங்கலாய் ஜனவரியின் மத்தியினில் மறுபதிப்புகளும் எனும் போது இப்போது முதலே ஒன்றொன்றாய் அச்சிடும் முனைப்பினில் உள்ளோம் ! உங்களின் சந்தாக்களின் ரூபத்தில் வைட்டமின் டானிக் தொடர்ந்திட்டால் பெரும் உதவியாய் இருந்திடும் ! Please do remember to renew your subscriptions folks ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now !
சார் ரொம்ப நீநீநீளமா தொடர வேண்டாம் சார்.!
பயம்மா இருக்கு.!!
க்ரைம் த்ரில்லர்., ரொம்ப gap விட்டா புஸ்ஸுன்னு போயிடும்.!
அடுத்தடுத்து போட்டு முடிச்சிட்டா நல்லாருக்கும் சார்.!//