Powered By Blogger

Sunday, June 08, 2014

முப்பது நாட்களில் பாலே நடனம் !

நண்பர்களே,

வணக்கம். பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ஏதேதோ எழுதியுள்ள போதிலும், என்னை நான் ஒரு எழுத்தாளனாய் என்றைக்குமே பார்த்துக் கொண்டதில்லை ! ஆனால் முதன்முறையாக ஒரு புத்தகத்தை எழுதும் தேர்ச்சி எனக்கு வந்து விட்டதாய் கடந்த சில-பல வாரங்களாய் எனக்குள் ஒரு நம்பிக்கை ! சரி...அந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் சூட்டலாம் ? என்று யோசித்த போது பொல பொல வென்று பெயர்களை உதித்தன தலைக்குள் ! "முப்பது நாட்களில் பாலே நடனம் பயில்வது எப்படி ?" " வாய் நிறைய கொழுக்கட்டையை வைத்துக் கொண்டே சாதாரணமாய்ப் பேசுவது எப்படி ?" ; " விழிகள் பிதுங்கினாலும் வீராப்பாய் நடை போடுவது எப்படி ?" என்பன தான் அந்தப் பெயர் தேர்வுகள் !! ஒற்றைக்காலை ஒயிலாய் தூக்கிக் கொண்டு இங்கும் அங்கும் நளினமாய் நகரும் பாலே கலையை நிச்சயம் நான் கற்றுத் தேர்ந்திடவில்லை தான் ; ஆனால் வழக்கமான கட்டைவிரலை மாத்திரமின்றி கணுக்காலையும் சேர்த்து தொண்டைக்குள் இம்முறை  திணித்துக் கொண்டு ஒற்றைக் காலிலேயே உலா வரும் சாகசத்தை கடந்த 4 வாரங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் படித்து வருவதால் ஒரு விதமான "பாலே பாண்டி" ஆகி விட்டதாக உணர்கிறேன் ! 

நமது லயனின் 30-வது ஆண்டுமலரை பிரம்மாண்டமாய் அறிவித்த போதே எங்கள் முன்னே நிற்கும் பணிகளின் பரிமாணத்தை நான் உணராமல் இல்லை ! ஆனால் 2013-ன் NBS வேலைகளை படபடப்போடு ; ஆனால் பெரியதொரு சிரமமின்றிச் செய்து முடித்த அனுபவத்தில் எனக்குள் ஒரு மெல்லிய தெனாவட்டு குடிகொண்டிருந்தது என்பதை இப்போது உணர்கிறேன் ! நான் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியதொரு விஷயம் சமீப நாட்களில் என் முன்னே "கெக்கே - பிக்கே ' சிரிப்போடு நர்த்தனம் ஆடி வருகிறது ! NBS ன் வெளியீட்டிற்கு முந்தைய மாதங்களில் பெரியதொரு பணிக்கு அவசியம் தரும் வெளியீடுகள் ஏதும் இருந்திருக்கவில்லை ! நவம்பர் 2012-ல் (மறு பதிப்பு) தங்கக் கல்லறை வெளியான பின்னே ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" (ரூ.10) மட்டுமே காத்திருந்ததால் - செப்டெம்பர் 2012 முதலே NBS -ல் பிரத்யேகக் கவனம் செலுத்துவது சாத்தியமானது ! ஆனால் இம்முறையோ நிலைமையே தலைகீழ் அல்லவா ? 2014-ன் துவக்கம் தொட்டு ஒவ்வொரு மாதமும் 3 அல்லது 4 இதழ்கள் ; அதிலும் ஜூலையில் SUPER 6 -ன் முதல் தவணையான BOOKFAIR SPECIAL இதழ்களும் அட்டவணைக்குள் இருப்பதால் கிறுகிறுக்காத குறை தான் ! இது போதாதென்று இடைப்பட்ட லார்கோ இதழுக்கு எடுத்துக் கொண்ட அவகாசமும் நிரம்பவே ஜாஸ்தி ! So கூட்டிக் கழித்துப் பார்த்தால் LMS ன் பணி அசுரத்தனமாய்த் தோற்றம் தருவதைத் தவிர்க்க இயலவில்லை ! 

மந்திரித்து விட்ட கோழியைப் போல் 'திரு திரு' விழியோடு சுற்றித் திரிகிறேன் என்றால் அது தலைக்குள் ஓடி வரும் non stop பெல்ஜிய + இத்தாலிய காமிக்ஸ் மேளாவின் உபயமே ! ஷவருக்கு அடியே நிற்கும் போது - 'அட..லக்கி கதையில் அந்த வசனத்தை இப்படிப் போட்டிருக்கலாமே ?!' என்ற சிந்தனை ! அண்டை வீட்டாரின் திருமணத்துக்கு மனைவியோடு போனால் என் கண்ணுக்கு பெண்ணோ - மாப்பிள்ளையோ தெரியக் காணோம் - டைலன் டாக்கும், அந்தி மண்டலத்தில் உலவும் பிறவிகளுமே எனக்குக் காட்சி தருகிறார்கள் ! ஆபீசில் பிற பணிகளுக்காக என்னை சந்திக்கும் நபர்களிடம் என் உதடுகள் ஏதோ பேசினாலும், என் தலைக்குள்ளே டெக்சும், கார்சனும் பேசும் டயலாக் வெள்ளோட்டம் தான் ஓடுகின்றது ! என் மேஜையில் உள்ள டயரியில் பணிகளது வரிசைக்கிரமத்தைக் குறித்து வைத்து விட்டு, அவை முடிய, முடிய நான் 'டிக்' அடிக்கும் வேகத்தை விட - அந்தப் பட்டியல் நீண்டு செல்லும் துரிதம் ஜாஸ்தியாக உள்ளது !  "சட்டம் அறிந்திரா சமவெளியை " (224 பக்கங்கள்) ஒரு மார்க்கமாய் நான் கடந்து முடிப்பதற்குள் விரியனின் விரோதிகளும், அடங்க மறுக்கும் ஆத்மாக்களும் குறுக்கே வண்டிகளை நுழைப்பதால் மஞ்சள் சட்டை மாவீரரை சற்றே ஆறப் போட்டு விட்டு ஜூலைப் பணிகளைக் கையில் எடுத்தேன் ! XIII மர்மம் வரிசையில் முதல் இதழான "விரியனின் விரோதி" ஒரு மாறுபட்ட கதையாய் இருந்ததால் அதனைப் பூர்த்தி செய்வது பெரும் கடினமாக இருக்கவில்லை ! இக்கதையை முதன்முறையாகப் படிக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன preview  மாத்திரம் : இந்த இதழைப் படித்தான பின்னர் கூர்மண்டையர் மங்கூசை நாம் சன்னமாய் ரசிக்காதிருப்பது சிரமமே ! 

பணி # 2 ஆகக் கையில் எடுத்தது மேஜிக் விண்டின் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" இதழையே ! இதன் பரபரப்பான வேகம் எழுதும் போதே என்னைத் தொற்றிக் கொண்டிருந்ததால் 96 பக்கக் கதையை இரண்டு நாட்களிலேயே எழுதி முடிக்க முடிந்திருந்தது ! So - எடிட்டிங் + இன்ன பிற வேலைகளுக்கும் அதிகமாய் நேரம் அவசியப்படவில்லை ! இதோ - அந்த இதழுக்கு நமது ஓவியர் போட்டுள்ள சித்திரத்தின் முதல் பார்வை ! 

சமீப முறைகளைப் போலவே - இந்த டிசைனைப் பார்த்த இரண்டாம் நிமிடம் ஒரே ஒரு smiley மட்டும் பதிலாகக் கிட்டியது நமக்கு - போனெல்லி நிறுவனத்திலிருந்து ! ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்களின் ரசிகர் மன்ற' நண்பர்கள் - "புதிதாய் டிசைன் போட வேண்டியதன் அவசியமென்ன ?" என்ற கேள்வியை எழுப்பும் முன்பாக அதன் விடையோடு நான் முந்திக் கொள்கிறேனே ? இத்தாலிய ஒரிஜினல் அட்டைப்படம் மிதமான பார்வையோடு மாத்திரமே இருந்ததாகப்பட்டதால் அதனை முன்னட்டைக்குப் பயன்படுத்த முனையவில்லை ! ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியான இதழின் ராப்பர் அற்புதமாய் இருந்த போதிலும், அது அங்குள்ள பதிப்பகம் தயாரித்திருந்த பிரத்யேக டிசைன் என்பதால் அதனை அப்படியே பயன்படுத்த நமக்கு உரிமை கிடையாது ! So - அதனை ஒரு inspiration ஆக வைத்துக் கொண்டு நமது மாலையப்பன் உருவாக்கிய டிசைனே முன்னட்டை ! உங்களது பார்வைகளில் இது பெறக் காத்திருக்கும் மார்க்குகள் என்னவாக இருக்குமென்று அறிந்திட நானும், நமது ஓவியரும் ஆவலாய் இருப்போம் ! தொடர்வது உட்பக்கத்தின் preview -ம் கூட ! 

இத்தருணத்தில் சின்னதாய் ஒரு இடைச்செருகலும் கூட ! கடந்த மாதம் முதல் நமது இதழ்களில் ஒரு copyright notice புதிதாய் இடம்பிடிப்பதைக் கவனித்திருப்பீர்கள் ! இணையதளம் நம் உலகை ரொம்பவே சிறிதாக்கி விட்டபடியால் - இங்கு நாம் தும்முவதும் கூட சில சமயங்களில் ஐரோப்பாவில் கேட்கிறது ! நண்பர்கள் அவ்வப்போது தங்களது வலைப்பதிவுகளில்  ஆர்வமிகுதியில் நமது இதழ்களின் பக்கங்களை ஸ்கேன் செய்து வெளியிட்டு வருவது அங்குள்ள படைப்பாளிகளின் புருவங்கள் உயரக் காரணம் ஆக வாய்ப்புள்ளது ! நாம் கருப்பு-வெள்ளையில் குப்பை கொட்டி வந்த நாட்களில் நம்மை அவர்கள் பெரிதாய் எடுத்துக் கொண்டதுமில்லை ; அன்றைய நாட்களில் வலையின் தாக்கமும் அத்தனை பெரிதாய் இருந்திருக்கவில்லை ! ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ் ! அட்டைபடத்திலிருந்து, உட்பக்கங்களில் இடம் பிடிக்கும் filler pages வரை அவர்களது approval அவசியம் ! அது மட்டுமல்லாது இணையதளக் கண்காணிப்பிற்கென ஒரு தனிப்பட்ட பிரிவை உருவாக்கி வலையில் தங்களது படைப்புகள் தேவைக்கு அதிகமாய் பயன்படுத்தப்படுவதை சீர் செய்ய சமீப வாரங்களாய் முயன்று வருகின்றனர் ! So முடிந்த மட்டிலும், நம்மால் அவர்களுக்கு தொல்லை நேராது பார்த்துக் கொள்வோமே guys - ப்ளீஸ் ? அட்டைப்படம் ; உட்பக்கத்தின் ஏதாவது ஒன்றிரண்டு என சிக்கனமாய் review-களுக்குப் பயன்படுத்திக் கொண்டால் நம் பொருட்டு பெரியதொரு நெருடல்கள் நேராது அல்லவா  ? 
மேஜிக் விண்ட் கதை ஒரிஜினலாய் உருவாக்கப்பட்டது முழுக்க-முழுக்க black & white பாணியினை மனதில் கொண்டே என்பதாலும் ; கதையின் பெரும்பான்மை நிகழ்வது இருளுக்குள் என்பதாலும், பொதுவாகவே கதைக்கு ஒரு இறுக்கம் அவசியமாவதாலும் இதன் வர்ணக் கலவை பெரும்பாலும் dark shades-ல் தான் உள்ளது ! ஆகையால் 'பளிச்' ஆர்ட் பேப்பரில் படிக்க நேரிடும் போது "வர்ணங்கள் அப்பியுள்ளன !" என்ற சிந்தனையை லேசாகப் புறம் தள்ளிடல் அவசியமாகும். டெக்ஸ் வில்லர் கதைகள் கூட முழுக்க முழுக்க b&w ஆக்கங்களே என்ற போதிலும், அவரது கதைகளிலேயே ஒரு மெல்லிய positiveness + கலகலப்பு இழையோடுவதால் background-களில் அடர்கருப்பு அவசியப்படுவதில்லை ! தவிர டெக்சின் மஞ்சள் சட்டை + ப்ளூ பேன்ட் combination பக்கத்துக்குப் பக்கம் டாலடிக்க - இந்தக் கதை வரிசையில் வர்ணத்தில் வேறுபாடு தெரிவதில்லை ! 

மேஜிக் விண்ட் பணிகளும் முடிந்து விட்ட நிலையில் "பூம்-பூம் படலம்" அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை - மறுபதிப்பு என்ற காரணத்தினால் ! சில மாதங்களுக்கு முன்பாக இந்தக் கதைக்கு வாசகர்கள் ஒரு புது மொழியாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கலாமே ? என்று நான் அபிப்ராயப்பட்டிருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் அதற்குப் பெரியதொரு சுவாரஸ்யம் காட்டி நண்பர்கள் முன்வரவில்லை என்பதோடு - நம்மிடையே நிலவும் அந்தப் "பழமையைப் போற்றுவோம் ; பழமையே பொன்னானது!"  கோட்பாடுகள் தலைதூக்கியதால் 'புது மொழிபெயர்ப்பு' என்ற எனது எண்ணம் கோவிந்தாவாகிப் போனது ! போதாக்குறைக்கு மின்னஞ்சல்களிலும், கடிதங்களிலும் நண்பர்களில் சிலர் - 'அந்த மறுபதிப்புக்கு புது மொழியாக்கம் என்ற சிந்தனை எழாதது ஏனோ ? ; இதற்கு மட்டும் அப்படி என்ன அவசியம் ? ; நாங்கள் 'சிவனே' என்று படித்துச் சென்றிருப்போம் - நீங்களாய் நினைவுபடுத்தி மொழிபெயர்ப்பில் உள்ள நெருடல்களை சுட்டிக் காட்டுவது இப்போது அவசியம் தானா ?" என்ற ரீதியில் கேள்விக்கணைகள் தொடுத்திருந்தனர் ! காமிக்ஸ் வாசிப்புக்கு என்று வரும் போது மட்டும் 'மாற்றங்கள் என்றாலே விரோதமானவையே !' என்ற அந்தப் பரவலான அபிப்ராயம் தழைத்து வருவது ஏன் ? என்பது இன்றளவுக்கும் எனக்குப் புரியாததொரு புதிரே ! ஏற்கனவே படித்த கதையை ; அதே அன்றைய மொழிபெயர்ப்போடு மீண்டும் படிப்பதை விட - காலத்துக்கேற்ற மாற்றங்கள் + முன்னேற்றங்களோடு படிப்பதில் சுவாரஸ்யம் கூடிடாதா ? Nostalgia நம்மைக் கட்டிப்போடுவதெல்லாம் சரி தான் ; ஆனால் அதுவே காலைக் கட்டிக்கொண்டே சாக்கு ரேசில் ஓடும் அளவிற்கு வளர்ந்திட இடம் தருவது தேவை தானா ? தலையைச் சொரியத் தான் முடிகிறது இவ்விஷயத்தில் ! 

Getting back to LMS - டெக்சின் முழு நீள சாகசத்தின் பணிகளும் ; டைலன் டாக்கின் பணிகளும் ; ராபினின் கதை + லக்கி லுக்கின் கதையும் கிட்டத்தட்ட தயாராகி விட்டன ! டெக்சின் கதையின் அடித்தளத்தை எழுதியவர் நமது கருணையானந்தம் அவர்கள்  ; டெக்ஸ் - கார்சன்-டைகர் - கிட் கூட்டணியின் வசனங்கள் + finishing touches எனது பொறுப்பு என்பதால் - இந்தக் கதையில் நான் பணி செய்த நாட்கள் முழுவதுக்கும் ஒரு சண்டியரைப் போலவே விறைப்பாகச் சுற்றித் திரிந்தேன் என்றே சொல்லலாம் ! 'ஏன் ?' என்றால் உதை '; எதற்கென்றால் குத்து ! 'ஐயோ என்றால் மொத்து ! 'என்பது தான் இக்கதையின் முழுமைக்கும் டெக்சின் தாரக மந்திரம் ! மனுஷன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டை போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகசமோ - என்னவோ - ஓங்கிய முஷ்டியானது 224 பக்கங்களுக்கும் இறங்கிய பாட்டைக் காணோம் ! எழுதி முடித்த போது விரல்கள் வலித்ததை விட, வில்லன்கள் வாங்கிய உதைகளை கிட்டே இருந்து பார்த்தது போல் என் தாடை தான் வலித்தது ! ஆக்ஷன் ருத்ரதாண்டவம் தான் ! 

டைலன் டாக் உங்களை ஒரு வித மெஸ்மெரிச வசியத்தில் ஆழ்த்தப் போவது உறுதி ! இந்த ஹீரோவின் கதைகளுக்குப் புதியவர்களுக்கு சின்னதாய் ஒரு சேதி : இவரை ஒரு மாமூலான டிடெக்டிவாகவோ ; இந்தக் கதைகளை பேய்-பிசாசு-ஆவிகளின் கலவையாக இருக்குமென்றோ எதிர்பார்க்காதீர்கள் ! மாறாக - எதிர்பாரா எல்லாவற்றையும் இவரிடம் எதிர்பாருங்கள் ! "அந்தி மண்டலத்தை" எடிட் செய்து முடித்த கையேடு இந்தப் பதிவை எழுதுகிறேன் ; இன்னமும் அந்தக் கதையின் தாக்கம் என்னுள் ப்ரெஷ் ஆக உள்ளது ! 

லக்கி லூக், கலாமிட்டி ஜேனோடு இணைந்து அடிக்கும் கூத்துக்கள் தான் "பேய் நகரம்" கதைக்களம் ! ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிரிப்பு வெடிகள் சிறிதும் சோர்வைத் தராமல் பேனா பிடிக்க உதவியது என்று தான் சொல்ல வேண்டும் ! ஒரு நாள் பயணமாய் இரவு ரயிலில் பெங்களுரு செல்ல ஏறி அமர்ந்த போது upper berth-ல் சாய்ந்து கொண்டே லக்கியை நான் எழுதிச் சென்றதை எதிர் பெர்த்தில் இருந்த பெண்மணி வினோதமாய்ப் பார்த்து வந்தார் ! என் கையிலிருந்த ஜெராக்சின் முகப்பில் லக்கியின் முகத்தைப் பார்த்த போது ஆவலாய் என்னிடம் பேச்சுக் கொடுத்தார் ! அவர் தமிழ் பேசுபவரல்ல என்பதையும், லக்கி லுக்கின் ரசிகை என்பதையும் அறிந்து கொண்டேன் ! ஜெராக்ஸ் பக்கங்களை என்னிடம் இரவல் வாங்க அவர் சந்கோஜப்படுவதை உணர முடிந்தது ! 'படித்து விட்டுத் தாங்களேன்.." என்று நானாகக் கொடுத்த போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசம் - காமிக்ஸ் எனும் இந்த அற்புதம் பரப்பிடும் சந்தோஷத்தை மீண்டுமொருமுறை நிதர்சனமாய் பார்க்கும் தருணமாகிப் போனது ! அந்த சந்தோஷத்தை ஏதோ ஒரு சிறு விதத்தில் பகிரவும், பரப்பவும் நாமெல்லாம் இங்கு கூடுவதை அப்போது நினைவு கூர்ந்த போது என் முகத்திலும் ஒரு ஒளிவட்டம் ! ஒற்றைக் கால் நாட்டியங்கள் கூட ரசிக்கும் விஷயங்களே என்ற புரிதலோடு - அந்த ஒளிவட்டத்தோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன் - ரின் டின் கேன் அவர்களோடு கரம் கோர்க்க ! மீண்டும் இடைப்பட்டதொரு தருணத்தில் சந்திப்போம் folks ! Bye for now !

P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள்  ஏதேனும் கேள்விகளை  எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ? 

346 comments:

  1. Replies
    1. appao naanthan nanbare 2!!! hee hee hee

      Delete
    2. கண்ணாடிய விட்டு கொஞ்சம் தள்ளி நில்லுங்க ! hee hee hee இப்போ நீங்க ஒன்னு !

      Delete
  2. Within first ten for first time.

    ReplyDelete
  3. Magic wind seems promising. When I watched Cowboys VS Aliens, I wondered why not cowboys vs demons. Now u r satisfying my curiosity. Thanks in advance

    ReplyDelete
  4. நண்பர்காள்!

    இன்றைய தி ஹிந்து (தமிழ்) தினசரியில் எட்டாவது பக்கத்தில் நமது காமிக்ஸ் ஹீரோ லக்கிலூக் பற்றிய ஒரு கட்டுரை பிரசுரம் ஆகி இருக்கிறது.

    படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் பகிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. (நண்பர்களின் பார்வைக்காக ஒரு மீள் பதிவு)

      'தி ஹிந்து' நாளிதழைப் பார்த்தேன். லக்கி-லூக் பற்றிய ஒரு சிறு கட்டுரையை 'டெக்ஸ் வில்லர்' என்ற புனைப்பெயரில் (அநண்பர் சுவையாக விவரித்துள்ளார். இதில் லக்கியின் வாழ்க்கை(!) குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, சிகரெட்டின் தீமையை உலகுக்கு உணர்த்த லக்கி சிகரெட்டுக்குப் பதிலாக குச்சியை வாயில் கவ்விக் கொண்ட சேதி நாம் அறிந்ததுதான் என்றாலும், இந்த 'மாற்றத்திற்காக' அதன் படைப்பாளி மோரீஸுக்கு விருது கிடைத்திருப்பது ஆச்சர்யப்படவைக்கும் உண்மை!

      இரண்டாவது கட்டுரையை நண்பர் கிங்-விஸ்வா எழுதியிருக்கிறார். தமிழ் காமிக்ஸ் உலகில் சாதனை நிகழ்த்திய 'முல்லை தங்கராசன்' அவர்களைப் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளையும், தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அவரது பேரனுக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு நெகிழ்வான சம்பவத்தையும் சிக்கனமாக விவரித்திருக்கிறார்.

      தமிழ் காமிக்ஸின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்றதைச் செய்துவரும் நண்பர்களுக்கு நம் வாழ்த்துகளும், நன்றிகளும்!

      பின்குறிப்பு: வாசகர்கள் தங்களது வாழ்க்கையில் பொக்கிஷமாகக் கருதும் (காமிக்ஸ் படித்தது உள்ளிட்ட) எந்தவொரு நிகழ்வையும் editpage@thehindutamil.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவை பிரசுரிக்கப்படுமாம். நண்பர்கள் முயற்சிக்கலாமே?

      Delete
    2. Comrade! தங்களின் கட்டுரைக்கு link கொடுத்தால் நலமாக இருக்கும்! ஆங்கில hindu subscribe செய்ததால் தமிழ் ஹிந்துவில் படிக்க இயலவில்லை

      Delete
    3. கிங் விஸ்வா சூப்பரப்பு

      Delete
  5. கலாமிட்டி ஜேன் பதிலாக அடிதடி ஜேன் என்ேற பயன்படுத்தவும் ...

    ReplyDelete
  6. Replies
    1. Mks Ramm : நோ ! Calamity ஜேன் ஒரு சரித்திர நிஜம் ! So அவரது அடைமொழியை மொழிமாற்றம் செய்வது முறையாகாது !

      http://en.wikipedia.org/wiki/Calamity_Jane

      Delete
  7. டியர் எடிட்டர்ஜீ!!!

    முப்பது நாட்களில் பாலே நடனம் என்ன...பரதம்,குச்சுப்புடி,கதகளி,ஒடிஸி,கதக்,
    அப்புறம் நம்மூரு கரகாட்டம் கூட உங்களால் கற்றுக்கொண்டு ஆடமுடியும் ஸார்...! இந்த ஏ.பி.டி.பார்சல் சர்வீஸ் வண்டில சஞ்சீவி மலைய கையில தூக்கி வச்சிகிட்டு பறப்பாரே ...அவரு பேரு என்ன..? ஆங்...ஆஞ்சனேயரு அவரு மாதிரி ஸார் நீங்க.உங்க பவர் உங்களுக்கே தெரியாது.நீங்க ஓங்கி அடிச்சா ஒன்றரை மில்லியன் கிலோ வெயிட்டு.

    ஆத்மாக்கள் அடங்குவதில்லை அட்டைப்படத்தில் மேஜிக் விண்ட் உடலிலிருந்து ரத்தம் வழிய வழிய இடம்பெறும் படம் அவசியம் தானா...? நமது சமீபத்திய அட்டைகளில் ( விரியனின் விரோதி பின்னட்டை) அளவுக்கதிகமாய் குருதி வழிந்திடுவது ஏனோ..? வன்முறையின் அப்பட்டமான அடையாளம்- ரத்தம்.இனிவரும் இதழ்களில் இம்மாதிரியான படங்களை தவிருங்களேன் ப்ளீஸ்.

    அடியேனுக்கு ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும்.இது என்ன வகையான அலர்ஜியோ தெரியவில்லை.சிறுவயதில் நிறைய முறை மயங்கி விழுந்திருக்கிறேன்.அதனால்தான் இந்த கோரிக்கை.ஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. saint satan : சாத்தான்ஜி...."விரியனின் விரோதி " + மேஜிக் விண்ட் கதைகளை கிட்டே ஒரு நண்பரை வைத்துக் கொண்டே நீங்கள் படிப்பது சாலச் சிறந்தது !

      Delete
    2. எடிட்டர் சொன்ன 'கிட்டே ஒரு நண்பராய்' நான் வேணும்னா இருக்கட்டுமா சாத்தான்ஜி? நீங்க மயங்கி விழும்போது அந்தப் புத்தகத்தை தூக்கிட்டு ஓடிட வசதியாய் இருக்குமில்லையா? ;)
      (நானாக இருந்தால் ஒரு அழகான நர்ஸை பக்கத்தில் வச்சுக்கிட்டு படிப்பேன் ஹி ஹி!)

      Delete
    3. @ விஜய்

      உங்களுக்கு விரைவில் ஒரு டாக்டரின்(ஆண்) அண்மை கிட்ட வாய்பிருக்கிறது (உங்கள்

      இல்லத்தரசியின் தயவில்)

      Delete
    4. இவர் எல்லா கதைகளையும் , கமெண்ட்களையும் யாரையாவது பக்கத்தில் வைத்துக்கொண்டு படிப்பது நல்லதுன்னு தோணுது!!! #2 பதிவுகளுக்கு முன்னால் ( கோமானும் கோமாளிகளும் ) எனக்கு அளித்த REPLY!!!

      Delete
    5. சாத்தான் அங்கிள்,

      //உங்களுக்காகவே ஒரு கிளுகிளு காமிக்ஸ் பதிவு இங்கே//

      இந்த மாதிரியான லின்க் கொடுக்கும்போது தயவு செய்து 18+ என்று குறிபிட்டுவிடுங்கள்.

      இல்லை எனில் என்னை மாதிரியான சிறார்கள் “அந்த” பதிவை பார்த்துவிடும் அபாயம் உண்டு.

      Delete
    6. டியர் விஸ்வா!!!

      இனி அந்த அபாயம் இராது.நல்ல வேலையாக எடிட்டர் அந்த "லிங்"கை தூக்கிவிட்டார்.இல்லையேல் உங்களை போன்ற "சிறார்கள்" என்னை தூக்கிவிட்டிருப்பார்கள் ;-)

      Delete
  8. கதைகளை கதைகளாய் பார்க்கும் போது இரத்தம் ஒரு பொருட்டல்ல. take it easy friend.

    ReplyDelete
  9. மொழி பெயர்ப்பில் எந்த கதைகள் மிகவும் கஷ்டமாக இருக்கும் , மொழி பெயர்த்து கை விட்ட கதைகள் எத்தனை (எங்களுக்கு பிடிக்காது என்று ), அப்படி வெளி இட்டும் வெற்றி பெற்ற கதைகள் சிலவற்றை கூறவும்

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : இன்னுமொரு ஏழெட்டு ஆண்டுகள் பயணித்தால் என் பேரப்பிள்ளை பள்ளியில் சந்திக்க வேண்டியிருக்கும் கேள்விகளின் பாணியில் உள்ளதொரு கேள்வித்தாள் !!

      மொழிபெயர்ப்பில் சுலபம் ; கடினம் என்பதை நிர்ணயம் செய்யவே இயலாது என்பது தான் யதார்த்தம் ! "பிரமாதமாய் வந்துள்ளது !" என்று நானே எனக்கு செண்டாப் பிடித்துக் கொள்ளும் ஒரு ஆக்கத்தை - நாலைந்து நாட்கள் கழித்து மறுவாசிப்பு செய்தால் ஒரு வண்டி மாற்றங்கள் சாத்தியம் என்பது புலனாகும் ! தமிழின் வளமை நம் முன்னே ஒப்படைக்கும் combinations & permutations அசாத்தியமானவை ! So மொழிபெயர்ப்பில் கரை கண்டு விட்டோமென இறுமாப்புக் கொள்வதோ ; 'இவை எனது best' என்று சொல்லுவதோ இயலாக் காரியம் !

      சரி...பெஸ்ட்டை தேர்வு செய்வது தான் கஷ்டம், 'worst' எதுவென்று சுலபமாய் இனம் காட்டி விடலாம் என நினைப்பின், அதுவும் கூடத் தவறே ! அங்கேயும் நிறைய பிரதிநிதிகள் கைதூக்கி நிற்பர் !

      இது நிச்சயமாய் அவையடக்கம் அல்ல - யதார்த்தம் !

      Delete
  10. To: Editor,
    இந்தப் பதிவு பல விடயங்களை தாங்கி வந்திருக்கிறது. படிக்கும்போது 10, 15 பக்க கட்டுரையைப் படித்ததுபோன்ற உணர்வு. உங்கள் எக்ஸ்ப்ரஸ் எழுத்து நடைதான் நமது காமிக்ஸ்களின் முக்கிய பலம் சார். வாழ்த்துக்களும் நன்றியும்.

    மாலையப்பன் அவர்களுடைய ரசிகன் நான் என்றாலும், மேஜிக் விண்ட் இன் அட்டை கொஞ்சம் அதிகமாகவே ஆர்ட்டிஃபிஷியலாக இருப்பது போல தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் ரியாலிட்டி கலந்திருக்கலாம். பின்னட்டை டிசைன் நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //..மேஜிக் விண்ட் இன் அட்டை கொஞ்சம் அதிகமாகவே ஆர்ட்டிஃபிஷியலாக இருப்பது போல தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் ரியாலிட்டி கலந்திருக்கலாம். பின்னட்டை டிசைன் நன்றாக உள்ளது...//

      +1

      Delete
    2. Podiyan : //படிக்கும்போது 10, 15 பக்க கட்டுரையைப் படித்ததுபோன்ற உணர்வு. //

      எழுதும் போதும் எனக்கு அவ்விதம் தோன்றியது !! Same blood...

      Delete
  11. அன்புள்ள ஆசிரியருக்கு,

    பாலே நடனத்தின் சங்கதிகளை படிக்கும் போது எனக்கு ஒரு கழிவிரக்கம் ஏற்படுகிறது. நீங்கள் இப்படி பறந்து பறந்து இதழ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறீர்கள்... ஆனால் நான் போன மாதத்தின் டெக்ஸ் + தோர்கல் இதழ்களையே இன்னும் படிக்கவில்லை. எனக்கு புத்தகம் வழங்க வேண்டிய கர்ணன் அவர்கள், அவரது சொந்த வேலைப்பளுவின் காரணமாக நேற்றுதான் லார்கோ + சிக்பில் புத்தகங்களை மட்டும் வழங்கி விட்டு இன்னும் 3 நாட்கள் கழித்து டெக்ஸ் + தோர்கல் இதழ்களை வழங்குவதாக அறிவிப்பு செய்து விட்டு, சேலம் டெக்ஸ் விஜயராகவன் மற்றும் சிரீதர் (இந்த ஒரிஜினல் 'சிரீ' அடிப்பது எப்படி?) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். சுவையாக 2 மணி நேரம் கழிந்தது. அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது ஒரு பதிவிற்கான சமாச்சாரம்...

    எனது காலதாமதமான கமெண்ட்....

    லார்கோ சற்று சொதப்பல்.... விறுவிறுப்பைக் காணோம்.

    பைங்கிளிப் படலம் நன்றாக இருந்தது.... முடிவைத் தவிர!

    P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள் ஏதேனும் கேள்விகளை எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ?"

    சார் போன பதிவில் டாப் சிக்ஸ் இதழ்கள் பற்றி நிறைய பேர் நிறைய பட்டியல் தந்துள்ளனர். அவ்வளவும் நீங்கள் பார்ப்பீர்கள்... அடுத்த பதிவில் அதுபற்றி பதிவிடுவீர்கள் என்று... ஆனால் நீங்கள் இப்படி கூறுகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. S.V.Venkateshwaran : திரும்பவும் எனது P.S -ஐப் படித்துப் பாருங்களேன் நண்பரே...! சென்ற பதிவின் பின்னூட்டங்களில் இருந்து கேள்விகள் மாத்திரமே இங்கு மீள்வருகை செய்தால் நலம் எனக் கோரியுள்ளேன் ! நண்பர்களது TOP 6 தேர்வுகள் ஏற்கனவே print out எடுக்கப்பட்டு பைலில் காத்துள்ளன ; அப்பக்கத் தயாரிப்பு துவங்கும் வேளையில் நிச்சயமாய் அவை என் முன்னே இருக்கும் !

      Delete
    2. ஓஹ்... ஸாரி ஸார்...

      Delete
  12. Pinnattai nandraka uladhu
    Mun attaiyil Magic Windai mattum pottu irukkalam

    ReplyDelete
  13. சீசா பலகையில் நின்று கொண்டே அம்பெய்துவது எப்படி
    என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் உண்டுங்களா சார்

    ReplyDelete
    Replies
    1. R.Anbu : ஒரு அத்தியாயத்தைக் கூட்டினால் போச்சு !

      Delete
  14. chennai stallkalil books kidaikka ethavathu yerpadu seyyalame vijayan sir? Ingu oru periya rasigar koottame ullathu thangalum arinthathuthane?!!!!

    ReplyDelete
    Replies
    1. Siva Lingam : சிறிது சிறிதாய் ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன நண்பரே ! இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் !

      Delete
    2. /* இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் ! */

      டியர் எடிட்டர்,

      எப்போதோ கூறிய யோசனை - இன்னும் சில நண்பர்களும் தான் - காலம் இப்போது கணிந்திருப்பதில் மகிழ்ச்சி. இது போல வரும் காலங்களில் review committee-யும், இன்னும் பொலிவுடன் வெளியீடுகளும் வந்திட வாழ்த்துக்கள் !

      Comic Lover

      Delete
    3. you may get the comics in "Discovery book palace" ,K.K nagar, Chennai .. I have visited recently and they said the recent books are not yet arrived.Better call them , get a confirmation.

      thx

      Delete
  15. எடிட்டர் சார்,

    நீங்கள் ஆடும் பாலே நடனம் எங்களுக்குப் பிடித்தமான ஒன்று! நீங்கள் வருடம் முழுவதும் ஆடிக்கொண்டே... இருக்கவேண்டும்; நாங்கள் வருடம் முழுக்க அதை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டே... இருக்க வேண்டும்!
    மேஜிக்விண்ட் அட்டைப்படம் அசத்தலாய் இருக்கிறது! 'ஹீரோ இமேஜ்-அது-இது' என்றெல்லாம் பார்க்காமல், அறிமுகமாகும் முதல் அட்டைப்படத்திலேயே உடலில் வழியும் தக்காளிச் சட்னியுடன் (சாத்தான்ஜிக்கு மயக்கம் வராதில்லையா!) காட்சி தரவும் ஒரு தில் தேவைப்படும்தான்!

    // மனுசன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டைப் போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகஸமோ - என்னவோ //

    ஹா ஹா ஹா!

    ReplyDelete
    Replies
    1. டியர் ஈரோடு விஜய்!!!

      அட...மேஜிக் விண்ட் உடலில் வழிவது தக்காளி சட்னியா...? நான் அதை ரத்தம் என்று நினைத்து அனாவசியமாக பயந்துவிட்டேன் :-)

      அதுசரி ...ஓட்டலில் ஆனியன் ஊத்தாப்பத்திற்க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அது வர தாமதமானதால் டேபிளில் இருந்த தக்காளி சட்னியை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டிருப்பாரோ..? யார் கண்டது.அவர பாத்தாலே ஒரு மாதிரியாத்தான் தெரியறாரு.

      Delete
    2. Erode VIJAY : "சட்டம் அறிந்திரா சமவெளி" -யில் தலைவர் தயாரிக்கும் தக்காளிச் சட்னி ஒரு கல்யாண வீட்டுக்கே சரி வரும் ! பந்திக்குப் போகும் வேளையில் ஞாபகமாய் சாத்தான்ஜியின் பக்கத்தில் துண்டைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் ...!

      அவருக்குத் துணையாக இருந்தது போலவும் ஆச்சு ; கடவாய் ஓரமாய் வற்றாது பொங்கியோடும் ஜல பிரவாகத்தை அவ்வப்போது நாசூக்காய் துடைத்துக் கொண்டது போலவும் ஆகுமல்லவா ?

      Delete
  16. sir..neengal palay nadanam kasttapattu aaduvathai kandu naangal anatha nadanam aadugirom.
    ps: neengal pona padivil 150 commentskku piragau padikkavillai endrathil magilchi adiyum muthal all naan than

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : எனது நாட்டியத்தை விட, தமிழும் ஆங்கிலமும் கலந்தடிக்கும் உங்கள் நடனம் அதகளம் !

      Delete
  17. @ எடிட்டர்

    உங்கள் கால் முழங்கால் வரை தொண்டைக்குள் சென்றால் கூட நல்லதுதான் எங்களுக்கு...

    மேஜிக் விண்ட், டைலன் கதைகளின் அமானுஷ்யம் கலந்த கதைக்களம் எதிர்பார்ப்பை எகிறச்செய்கிறது

    எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த மாதிரி விறுவிறுப்பாக இருந்தால் சரிதான்..

    கலாமிட்டி ஜேன் பெயரே அன்னியமாக தெரிகிறது .... முந்தைய கதையில் ஜேன் அடிதடிஜேன் என்றுதான்

    அழைக்கப்பட்டார் என்று ஜாபகம்..

    ReplyDelete
    Replies
    1. Senthil Madesh : விபரம் தெரிந்த பின்னராவது ஒரு நிஜ வாழ்க்கைப் பெயரை அப்படியே பயன்படுத்துவது தானே முறையாக இருக்கும் ?

      பெயர்களையும் அடைமொழிகளையும் மொழிபெயர்க்கத் துவங்கிடும் பட்சத்தில் "அதிர்ஷ்ட லூக்கும் " ; "குஷியான ஜம்பரும் அல்லவா நம் முன்னே நிற்பர் ?

      Delete
    2. அருமையான பதில்....

      Delete
  18. sir...tex saagasathin ungal trailarai padikum poluthu ippolutay ever mugathil aavathu oongi kutha wayndum pola ullathu.

    enathu sinna kai than valikum endra pothilum...

    ReplyDelete
  19. டியர் எடிட்டர் ,
    "ஆத்மாக்கள் அடங்குவதில்லை " இன் அட்டை படம் அருமையாக வந்துள்ளது . ஒரிஜினல் இனை விட தெளிவாகவும் , வர்ணக்கலவை பொருத்தமாகவும் உள்ளது . Magic Vinds இன் புதிய வரவு குறைந்த பட்சம் 3 வருடங்கள் ஆவது தொடரும் வகையில் வரவேற்பு பெறுவது உறுதி . "மனுஷன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டை போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகசமோ - என்னவோ - ஓங்கிய முஷ்டியானது 224 பக்கங்களுக்கும் இறங்கிய பாட்டைக் காணோம் "- இதைத்தானே எதிர்பார்த்தோம் சார் ; "வேட்டை நகரம் வெனீஸ் " இல் லார்கோ விஞ்ச் இன் சாகசம் தூள் ! சைமன் இல்லாத ஒரு அக்மார்க் லார்கோ அதகளம் . "பைங்கிளி படலம் " ரசிக்க வைத்தது . இருப்பினும் முடிவினை முன் கூடியே , ஊகிக்க முடிந்ததினால் உடனேயே முடிந்தது போல் உள்ளது . பிரெஞ்சு மொழியில் "விரியனின் விரோதியினை " படித்து விட்டாலும் , உங்களின் தங்கமான மொழிபெயர்ப்பில் பருக ஆவலாக உள்ளேன் . "லைடன் டாக் " இன் இரு சாகசங்களினை வாங்கி படித்து வருகிறேன் . நிச்சயம் எமது வாசகர்களின் எதிர்பார்ப்பினை பொய்யாக்க மாட்டார் .

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : //லைடன் டாக் " இன் இரு சாகசங்களினை வாங்கி படித்து வருகிறேன் . நிச்சயம் எமது வாசகர்களின் எதிர்பார்ப்பினை பொய்யாக்க மாட்டார் .//

      பாரிசுக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல்ல்ல்!!

      Delete
  20. அன்புள்ள எடிட்டர்,

    LMS +அதன் தயாரிப்பு பற்றிய preview அருமை. மேஜிக் விண்ட் பக்கங்கள் வண்ணத்தில் அருமையாகவே உள்ளன.. பதிப்பில்/புத்தகத்தில் அப்படியே வருமென்று நம்புகிறேன்

    போன மாதத்திய இதழில் வந்த கார்சனின் கடந்த காலம் விளம்பரத்தில், வண்ணத்தில் என்று குறிப்பிடவில்லை என்றாலும், அப்புத்தகம் நிச்சயமாக வண்ணத்தில் வருமென்று நம்புகிறேன்.

    இத்தாலியன் LMS புத்தகத்தின் அட்டை நிச்சயமாக டெக்ஸ்-ன் படத்துடன் தான் வரும் என்று தெரியும். இருந்தாலும் நீங்கள் அதை உறுதிப்படுத்திவிட்டால் மிக்க மகிழ்ச்சி :)

    Franco-Belgian LMS புத்தகத்தின் அட்டையில் லக்கி லூக் இருந்தால் மகிழ்ச்சி :)

    ReplyDelete
    Replies
    1. Periyar : குதிரை வீரர்களே - இரு இதழ்களின் முன்னட்டைகளிலும் !!

      Delete
    2. //..குதிரை வீரர்களே - இரு இதழ்களின் முன்னட்டைகளிலும் !! ..// சூப்பர்

      அப்படியே கார்சனின் கடந்த காலம் கலர்-லே வருதுன்னு confirm பண்ணிட்டீங்கன்னா, இன்னைக்கு நிம்மதியாத் தூங்கலாம் :)

      Delete
  21. மேஜிக் விண்ட் கதையில வர்ற தாத்தாவ பாத்தா என்னோட ஒண்ணுவிட்ட கொள்ளுத்தாத்தா எடக்குமொடக்கு பிசாசு மாதிரியே இருக்காரு.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு டொக்கு பிசாசு மாதிரி தோணுது!!!

      Delete
    2. டியர் ரம்மி!!!

      டொக்கு பிசாசு யாரு...உங்க ஒண்ணுவிட்ட கொள்ளு மாமாவா...?

      Delete
  22. அட்டைப்படம் மிக அருமை. Double இமேஜ் அட்டைப்படம் பார்த்ததும் கவரும் விதத்தில் இருக்கின்றது...மேல் பாதி mixed கலரிலும், கீழ் பாதி இரவின் background லும் வித்தியாசமாய், கதையின் பெயருக்கு ஏற்ப கச்சிதமாக உள்ளது...

    ReplyDelete
  23. அட்டைப்படம் அட்டகாசம்!!! போனெல்லி நிறுவனதாரே பொறாமைபட்டிருக்க கூடும்!!!
    அப்புறம் பாலே மட்டும் அல்ல ... உங்களுக்குள் இன்னும் ஏகப்பட்டது ஒளிந்து கொண்டுள்ளது!!!
    ஒரு பாதியாவது வெளியே வந்தால் தங்க தலைவனின் ரத்த கோட்டை முழு வண்ண மறுபதிப்பு இந்த ஆண்டே கிடைக்கும் என்று தோன்றுகிறது!!

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : //அப்புறம் பாலே மட்டும் அல்ல ... உங்களுக்குள் இன்னும் ஏகப்பட்டது ஒளிந்து கொண்டுள்ளது!!!//

      நானே கொஞ்ச காலம் ஒளிந்து கொள்ளும் திறமையும் அவசியமாகும் போலுள்ளதே !

      Delete
  24. //கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள் ஏதேனும் கேள்விகளை எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ?"//

    நல்ல வேல 150+ மேல நீங்க பாக்கல

    ReplyDelete
    Replies
    1. Mahesh : ப்ரீயா விடுங்க நண்பரே..! அவரவர் கண்ணோட்டங்கள் அவரவருக்கு ! இதில் நாம் விசனப்பட என்ன உள்ளது ?

      Delete
  25. // மனுசன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டைப் போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகஸமோ - என்னவோ / தலையின் அதகளம் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது என ஆருடம் சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிங் சார். தலைக்கு 2ம் திருமணம் நடந்து உள்ளது என தங்கள் வரிகள் உறுதி படுத்துகின்றன சார். மிக்க மகிழ்ச்சி. ஏன்னா நாங்கள்ளாம் தலைவர் வழி நடப்பவர்கள் சார். நேற்று நண்பர்கள் S.V.வெங்கடேஷ்வரன் மற்றும் ஸ்பைடர் ஶ்ரீதர் உடன் ஒரு 2மணி நேர கலாய்த்ல் என்னுடைய கடையில் நடந்தது , மகிழ்ச்சியான நேரங்கள். இடை இடையே பில் போட நான் எஸ்காப் , பொறுத்து கொண்ட நண்பர்களுக்கு சன்னமான நன்றி.

    ReplyDelete
  26. வணக்கம் வாத்யாரே,

    P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள் ஏதேனும் கேள்விகளை எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ?

    அல்லாராட்டம் நானும் நமக்கு புட்ச்ச மொத ஆறு புக் இன்னான்னு ரோசனை பண்ணேன்... ஆனா ஒரே பேஜாரா பூட்ச்சு வாத்யாரே

    கதெல்லாம் ஞாவகத்துல கீது... ஆனா பேரெல்லாம் மண்டைக்ககுள்ள வரமாட்னுது தல...
    அத்தொட்டு நான் இன்னா முடிவு பண்ணிக்கீறேன்னா நமக்கு ஞாவகத்துல இருக்கறத ஸொல்வோம்... அத்தொட்டு அது இன்னா கதைன்னு வாதயாரே ஸொல்லுட்டும்...

    வாத்யார் ஸொல்ரதுக்குள்ளார யார்னா ஸொல்ட்டா அவிங்களுக்கு எஞ்சார்பா வாத்யார் பிரைஸ் தர்வார்...
    இன்னாமா கன்னுங்களா சர்தானா?

    மொதல்ல - தலவாங்கி கொரங்கு

    ரெண்டாவது - ஒரு மொட்ட பாஸ் வில்லன், அவனுக்ககு காதும் கேக்காது, வாயும் பேசாது... ஆனா பார்ட்டி படா கில்லாடி... யார்னா பேசுனா அவங்க ஒதடு அசயறத வச்சே, பார்ட்டி பலானது பேசுதுன்னு கண்டுபுட்ச்சு ஆள போட்டுறுவான் - கதைல பைனாகுலர்ல பாத்து ஆள் பேசறத கண்டுபுடிப்பான்பா...இது என்னா கதெ?

    3 வது - எம்மாம்பெரிய டிரக் ஒண்ண எட்த்துக்கின்னு ரெண்டு தோஸ்த்துங்க, அவிங்களோட இன்னோர் தோஸ்த்த போட்டுதள்னவன போடறதுக்கு கௌம்புவாங்க - இது என்னா கதெ?

    4 வது - நம்ம கிழவாடி கார்ரசனோட கயந்த காலம்பா

    5வது - நம்ம சருக்கு மண்ட பட்லர் டெஸ்மாண்டு புத்சா ஒரு லவ் மேட்டர்ல மாட்டி, அப்பால நம்ம பாசு ரிப்பு போய் காப்பாத்திகிட்டு இட்டுன்னு வருவாரு டெஸ்மாண்ட - இது என்னா கதெ?

    6வது - பிளைட் 731

    ReplyDelete
    Replies
    1. ஜாலி ஜம்ப்பர் : சின்னதொரு திருத்தம் : தேர்வு லயனின் வெளியீடுகளுக்குள் இருந்து மாத்திரமே !

      Delete
  27. பில் ஹிக்காக் ஞாபகமிருக்கல்லவா, அவர் உண்மையில் வாழ்ந்த ஒரு அமெரிக்க ஹீரோ. துப்பாக்கி வீரர், அவரின் காமிக்ஸ் கதைகள் அமெரிக்காவில் பிரசித்தம். அதை தமிழுக்கு கொண்டுவருவதில் நீங்கள் முயற்சிக்கலாம் அல்லவா.? அதை போன்றே ஜெசி ஜாம்ஸ் அவர் ஒரு கொள்ளைக்கரர். அவரை பற்றியும் நிறைய கதைகள் உண்டு. அவரையும் முயற்சிக்கலாaam

    ReplyDelete
  28. ஆத்மாக்கள் அடங்குவதில்லை என்பதை விட காமிக்ஸ் ஆசைகள் அடங்குவதில்லை என்பதே நிதர்சன உண்மை தங்கள் பதிவில் புலனாகிறது

    ReplyDelete
    Replies
    1. //ஆத்மாக்கள் அடங்குவதில்லை என்பதை விட காமிக்ஸ் ஆசைகள் அடங்குவதில்லை என்பதே நிதர்சன உண்மை தங்கள் பதிவில் புலனாகிறது//
      +1111

      Delete
  29. டியர் விஜயன் சார்,

    உங்களின் பதிவு அட்டகாசம். ஏகப்பட்ட விஷயங்களை ஒரே பதிவிற்குள் அடக்கி விட்டீர்கள். இதையே இரண்டு மூன்று பதிவுகளாக எங்களுக்கு அளித்திருக்கலாம். பதிவை படித்து முடித்தப்பின், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடி வந்து மூச்சிரைப்பது போல் இருக்கிறது. எத்தனை விஷயங்களை நீங்கள் ஒரே பதிவில் பதிவிட்டாலும், அடுத்த 4 நாட்கள் கடந்து விட்டால் மீண்டும் உங்களின் புதிய பதிவை எதிர்பார்த்து மனம் ஏங்கி நிற்பதே எங்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

    என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை ; எந்த புத்தகத்தை பாராட்டுவது என்றும் புரியவில்லை.

    1.சட்டம் அறிந்திரா சமவெளி
    2.விரியனின் விரோதி
    3.ஆத்மாக்கள் அடங்குவதில்லை
    4.பூம்-பூம் படலம்
    5.அந்தி மண்டலம்
    6.பேய் நகரம்

    என இந்த பதிவில் உள்ள விஷயங்களையே வைத்து மொத்தம் ஆறு பதிவுகளை எங்களுக்கு 4 நாட்கள் இடைவெளியில் அளித்திருக்கலாமே சார். நெஞ்சுக்குள் இதுபோன்ற படபடப்பு ஏற்படும் போதெல்லாம் பின்னூட்டமிட வார்த்தைகளும் ; இலகுவான மனநிலையும் ஏற்படுவதே இல்லை. சுருக்கமாக சொல்வதானால் மனதில் ஏற்படும் காமிக்ஸ் உணர்வுகள் அடங்க வெகுநேரம் பிடிக்கிறது. நன்றி சார்.

    ReplyDelete
  30. ///// Vijayan8 June 2014 19:12:00 GMT+5:30
    Periyar : குதிரை வீரர்களே - இரு இதழ்களின் முன்னட்டைகளிலும் !! ////

    எடிட்டர் சார்
    தங்க தலைவன் தானே????

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மேக்னம் ஸ்பெசல் ரெண்டு புக்குளையும் முன்னட்டையில எங்க தல டைகரு. பின்னட்டையில ராமராஜன் மாறி மஞ்ச சொக்கா போட்டுக்கிட்டு குதுரையில ஏறிட்டு டமால் டுமீல்-ன்னு அப்பாவி சமூக விரோதிகள சுட்டு கொல்லுவாரே அந்த இத்தாலிகாரரு படத்த போடலாம்.பெல்ஜியம்காரரு முன்னால.இத்தாலிகாரரு பின்னால.இளைஞரு முன்னால.பெருசு பின்னால.இன்னா...டீலிங் ஓ.கே.வா...?

      Delete
    3. தங்க தலைவன்னாலே டைகர் தானே!!

      Delete
    4. தங்க தலைவன்னாலே டைகர் தானே!!

      அதிலென்ன சந்தேகம்

      Delete
  31. "அந்தி மண்டலம்"

    இந்த தலைப்பை படிக்கும் போது ஏற்படும் இனம் புரியா உணர்வுகள் எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை ?! என் மனதில் தோன்றும் அந்த அமானுஷ்ய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்றும் புரியவில்லை. ஏதோ என்னால் முடிந்தளவு விவரிக்க முற்படுகிறேன். ஆனால் இது உண்மையான உணர்வுகள் என்பது மட்டும் உண்மை.

    சுகமான மனதிற்கு இதமான பொழுதில், மயிர்க்கால்கள் யாவும் குத்திட்டு நிற்க, அமானுஷ்ய அலைகள் நம்மீது குளிர் தென்றலென ஜில்லிட, அந்தி மாலையில் மருளும் பார்வை கொண்டு, எங்கோ தூரத்தில் சுழலும் சூன்யத்தை நோக்கி காட்சிகள் விரிந்தோட, காலநிலை யாவும் மறந்து, நிற்கும் இடம் கூட தொலைந்து, மேலே மேலே லேசாகி பறக்கும் உணர்வு கொண்டு, அதலபாதாளத்தில் விழுகின்ற பரிதவிப்பில் ஏற்படும் உணர்வுகளில் சகலமும் அடங்கி, உயிர் நாடியும் ஒடுங்கி மெல்ல மெல்ல அந்த மணடலத்தில் கரைந்து விடும் உணர்வையே எனக்கு இந்த அந்தி மண்டலம் தருகிறது.

    இதுபோன்ற உணர்வுகளை 'டைலன் டாக்' கதைக்களம் தருவதாக அமைந்துவிட்டால், உண்மையாகவே எனக்கு இது ஒரு காமிக்ஸ் பொக்கிஷம் தான். ஆசிரியருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். டைலன் டாக் அட்டைப்படத்தில் - வாய்க்குள்ளிருந்து வெளிவரும் புழு, பாம்பு போன்றோ, முகத்தின் சதைகள் உருகி வழியும் அகோர காட்சிகளோ இல்லாமல் பார்த்துக் கொண்டால் மிகவும் நலமாக இருக்கும். அதாவது ஹாரர் காட்சிகள் முன்னட்டையில் வராமல் இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

    அந்தி மண்டலம் - ஒரு சூப்பர் தலைப்பு விஜயன் சார் !

    ReplyDelete
  32. விஜயன் சார்,
    1. நமது தளத்தில் தற்போது கமென்ட் எண்ணிக்கை குறைந்தாலும் புதியவர்களின் வரவு அதிகரித்து உள்ளது.
    2. நமது நண்பர்கள் தேவையான கமென்ட் மற்றும் இடுகிறார்கள், யாரிடமும் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் இடுபடுவதில்லை.
    3. கமென்ட்களின் எண்ணிக்கை குறையும் போழுது அனைத்து கமென்ட்களையும் நீங்கள் அனைத்தையும் படிக்கும் வாய்புகள் அதிகம், மிஸ் செய்ய வாய்புகள் குறைவு :-) புதியவர்கள் கமென்ட் இட வாய்புகள் அதிகம்.
    4. நமது தளத்தில் கமென்ட் எண்ணிக்கை குறைந்தாலும் நமது பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என நம்புகிறேன்.

    எனவே இதனை பற்றி அதிகம் கவலை படத்தேவையில்லை என்பது எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. பரணி சார்,

      //கமென்ட்களின் எண்ணிக்கை குறையும் போழுது அனைத்து கமென்ட்களையும் நீங்கள் அனைத்தையும் படிக்கும் வாய்புகள் அதிகம், மிஸ் செய்ய வாய்புகள் குறைவு :-) புதியவர்கள் கமென்ட் இட வாய்புகள் அதிகம். //

      இது ரொம்ப மொக்கையான விவாதமாக எனக்கு படுகிறது. நீங்கள் ப்ளாக் பதிவு எதையாவது இட்டு இருக்கிறீர்களா என்று தெரியவில்லை, ஆனால் ப்ளாக்கர் அந்த பதிவர் இடும் பதிவுகளின் கமெண்ட்டுகள் அனைத்தையுமே தனியாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறது. அப்படி இருக்க எடிட்டர் அதை எப்படி மிஸ் செய்வார்?

      அதைப்போலவே ப்ளாக்கரில் எத்தனை கமெண்ட் வேண்டுமென்றாலும் இடலாம். இதற்க்கு ஒரு லிமிட் கிடையாது. அப்படி இருக்க மத்தவங்க கமெண்ட் குறைஞ்சாதான் புதியவங்க கமெண்ட் இட முடியும் என்பது எப்படி சரியாகும்?

      இதில் இர்ண்டே விஷயம் தான்: ஒண்ணு உங்களுக்கு ப்ளாக்கிங் பற்றி சரியாக தெரியாமல் இப்படி கமெண்ட் இடுகிறீர்கள்

      அல்லது

      ஏற்கனவே அதிகமாக கமெண்ட் இடுபவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி இப்படி எழுத தூண்டுகிறது (கவனிக்கவும், இது என் ஊகம் மட்டுமே, தறாக இருக்க 50% வாய்ப்பு உண்டு).

      //எனவே இதனை பற்றி அதிகம் கவலை படத்தேவையில்லை என்பது எனது கருத்து//

      அப்படியா? எடிட்டர் கவலைப்படுவதாக சொன்னாரா? நீங்களாகவே ஏன் உங்கள் கருத்தை திணிக்கிறீர்கள்/

      மற்றபடி உங்கள் நேர்மையான பதிவுகளுக்கு அடியேன் ஒரு ரசிகன். என்னை தவறாக புரிந்துகொள்ளமல் கருத்தை, கருத்தாகவே பாருங்கள், ப்ளீஸ்.

      Delete
    2. அருண் @ தங்களின் விளக்கத்திற்கு மற்றும் தவறான புரிதல்களுக்கு நன்றி.

      உங்களின் நக்கல் எனக்கு பிடிக்கவில்லை நண்பரே.

      Delete
    3. நண்பரே,

      // அப்படியா? எடிட்டர் கவலைப்படுவதாக சொன்னாரா? நீங்களாகவே ஏன் உங்கள் கருத்தை திணிக்கிறீர்கள்//

      எடிட்டர் அவர்களின் கடந்த சில பதிவுகளை படித்தபோது என் மனதில் பட்டது, இதற்கு நீங்கள் விசனபடுவது எதனால். இதனை ஆசிரியர் புரிந்து கொண்டால் போதும்.

      // ஆனால் ப்ளாக்கர் அந்த பதிவர் இடும் பதிவுகளின் கமெண்ட்டுகள் அனைத்தையுமே தனியாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறது. அப்படி இருக்க எடிட்டர் அதை எப்படி மிஸ் செய்வார்?//

      இந்த பதிவு மற்றும் முன்பு சில பதிவுகளில் ஆசிரியர் "சென்ற பதிவுகளில் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை, முக்கியமான கருத்துகள் இருந்தால் மீண்டும்" பதிவிட சொல்லி உள்ளதை கவனிதீர்களா நண்பரே.

      எனக்கு இங்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பது என்னை பற்றி நன்கு அறிந்த நண்பர்களுக்கு தெரியும்.

      Delete
    4. மன்னிக்கவும் பரணி (ஃப்ரம் பெங்களூரு) சார்.

      //என்னை பற்றி நன்கு அறிந்த நண்பர்களுக்கு தெரியும்.//

      நான் உங்களை நன்கு அறிந்தவனும் அல்ல, (இப்பொதைக்கு) உங்கள் நண்பனும் அல்ல.

      ஆகையால் உங்கள் கருத்துக்களை படிக்கும்போது தோன்றி எண்ணங்களைத்தான் எழுதினேன்.

      Delete
  33. "ஆத்மாக்கள் அடங்குவதில்லை"

    ஆஹா மீண்டும் ஒரு அற்புதமான தலைப்பு. உண்மைதான் சார், ஆத்மாக்கள் அடங்குவதே இல்லை. அதேநேரம் அது ஆவேசம் கொள்ளும் போது நம் உயிர் நமக்கு சொந்தமாக இருப்பதில்லை என்பதே யதார்த்தம். அமானுஷ்ய கதைக்கான தலைப்பைக் கொண்டு வெளிவரும் மேஜிக் விண்ட் ன் முதல் கதை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

    கதையின் வீரியத்தை விட இரண்டு மடங்கு வீரியம் கொண்டதாக தலைப்பை அமைத்துள்ளீர்கள் என்று கருதுகிறேன். அருமையான தலைப்பு. அட்டைப்படத்தை பொறுத்தவரை முதல் அரைப்பாகம் மட்டும் ஒரு மாற்று குறைவாக தெரிகிறது. மற்றபடி மீதி ஒன்றரைப் பக்க அட்டைப்படம் பிரமாதமாக காட்சியளிக்கிறது. முதல் கதை என்பதாலும் ; மாறுபட்ட கதைக்களம் என்பதாலும் இந்த புத்தகமும் - என் கையில் கிடைக்கும் வரை என் கற்பனையின் ஒரு பங்கை நிரந்தரமாக ஆக்கிரமித்துக் கொள்ளுவதாக அமைந்திருக்கிறது.

    ஆத்மாக்கள் அடங்குவதில்லை - இதயத் துடிப்பை ஒடுங்க வைக்கும் தலைப்பு சார் !

    ReplyDelete
  34. "சட்டம் அறிந்திரா சமவெளி"

    பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல - என்று சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு படத்தில் கூறுவார். அது போலவே தலைப்பைக் கேட்கும் போதே சும்மா அதிருது. ஒரு காமிக்ஸின் தலைப்பும் ; கதைக்களமும் ; கதையும் ; அதன் நாயகனும் அட்சர சுத்தமாக பொருந்தி வருவது என்பது அபூர்வம். ஆனால் இங்கு அது போன்ற ஒரு அற்புத கூட்டணி நமக்காக காத்திருக்கிறது என்று நினைக்கும் போதே கால் விரல்களின் நுனிகள் பொசு பொசு வென்று கூசுகின்றன.

    சென்ற டெக்ஸ் வில்லர் கதையான 'நில் கவனி சுடு' படித்து முடித்தவுடன் மீண்டும் நான், டெக்ஸ் வில்லரின் பரம ரசிகனாக மாறி விட்டேன். இவருக்கு முன்னால் இனி வரும் டைகர் கதைகள் அனைத்தும் சற்று சுவாரசியம் குறைவாகத் தான் தோன்றும் போலிருக்கிறது. அப்படி ஒரு வேகம் ; அப்படி ஒரு சுவாரசியம் ; அப்படி ஒரு wild west கதைகள்.

    சட்டம் அறிந்திரா சமவெளி - பெயரே கதைச் சொல்லும் !

    ReplyDelete
    Replies
    1. டைகர் கதையின் சூட்சுமங்களும், அழுத்தமான கதைக்களமும் அவரது ப்ளஸ். டெக்ஸ் கதையில் தெளிவான கதையும், அழகான படங்களும் ப்ளஸ். அவர் கமல், இவர் ரஜினி. இருவர் கதைகளையும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை நண்பரே.

      Delete
  35. விஜயன் சார், உங்களின் ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடன் இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். நமது இதழ்கள் மாதம் தவறாமல் சொன்ன தேதியில் வர நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி; தொடரட்டும் இது நமது காமிக்ஸ் வளர்சிக்கு மிக முக்கியம்.

    நமது மாத இதழ்கள் சிறிது தாமதமானாலும் நமது ஆண்டு மலரை சொன்ன தேதியில் வெளி வருமாறு பார்த்து கொள்ளவும்.

    magic wind-in முதல் கதையை படிக்க ஆர்வமாககாத்து இருக்கிறேன். அட்டை படம் சுமார்... நேரில் பார்த்தால் ஒரு வேளை நன்றாக இருக்கலாம் என நினைக்கிறன்.

    book fair special-1 என்பதற்கு பதில் தமிழில் ஒரு பெயரில் வெளி இட்டால் நன்றாக இருக்கும், வரகூடிய மீதம் உள்ள சூப்பர்-6 இதழ்களுக்கு முடிந்தால் இதனை செய்யவும்.

    நண்பர்கள் தற்போது நமது தளத்தில் அறிவுக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க வேலை பளு மற்றும் இதற்கு முன்னால் அறிவித்த சில போட்டி/வாசகர் படைப்புகளில் தங்களின் இறுதி முடிவிற்கு சரியான விளக்கம் கொடுக்காததும் ஒரு காரணம் என நான் நினைக்கிறன்.

    ReplyDelete
  36. மீள்வருகை
    ==========
    விஜயன் சார், லார்கோ கதை இதுவரை வந்த லார்கோ கதைகளில் வெகுசுமார், முன் அட்டையில் குறிபிட்டது போல் ஆக்சன் கதை ஒன்றும் இல்லை; லார்கோவின் ஆக்சன் எங்கு உள்ளது என தேடவேண்டி உள்ளது. எல்லா கதாபாத்திரம்களும் பேசி கொண்டே உள்ளன.. காமிக்ஸ் கதைக்கு பதில் ஏதோ நாவல் படித்த உணர்வு.

    நண்பர்கள் அச்சுதரம் பற்றி கடந்த சில மாதம்களாக நண்பர்கள் கூறிவருவது போல் நாம் அவற்றை களைவது நல்லது. நமது காமெடி நாயகர்கள் கதைகளில் வண்ண கலவைகள் குறைவு என்பதால் அவைகளின் அச்சு தரம் நன்றாக உள்ளது. ஆனால் வண்ண கலவைகள் அதிகம் உள்ள லார்கோ, டைகர், மற்றும் தோர்கல் போன்ற கதைகளில் வண்ணம்கள் பல இடம்களில் சிதறி உள்ளன, உதரணமாக சில இடம்களில் கதை பாத்திரம்களின் முகம்களில் அதன் பின்னால் உள்ள (backdrop) பொருள்களின் வண்ணம் பிரதிபலிக்கின்றன. நீங்கள் இதனை களைவதற்கு முயற்சி செய்வது அறிந்ததே, நமது LMS வரும் வேளையில் இதனை உடன் சரிசெய்வது நன்று.

    இந்த அச்சு குறைபாடுகள் சற்று கவனித்து பார்த்தால் தான் தெரியும், இந்த முறைதான் இவைகளை என்னால் கவனிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. பரணி சார்,

      ஒவ்வொரு முறையும் உங்கள் கமென்ட்டுகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு தோன்றி கேள்வியை இப்போது கெட்காமல் இருக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

      //நண்பர்கள் அச்சுதரம் பற்றி கடந்த சில மாதம்களாக நண்பர்கள் கூறிவருவது போல் நாம் அவற்றை களைவது நல்லது//

      இது என்ன குறைபாடு என்பதை specific ஆக சொன்னால் நல்லது. எனென்றால் நீங்கள் இதையே கூறி வருகிறீர்கள். ஆனால் எனக்கு வரும் புத்தகங்களில் எந்தவிதமான குரையையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

      அதைப்போலவே நண்பர்கள் சொல்கிறார்கள், நண்பர்கள் சொல்கிறார்கள் என்று சொல்வதைவிட அந்த நண்பர்கள் யார் என்பதையோ, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையோ சொல்லாமல் அச்சுத்தரம் குறைவு, அச்சுத்தரம் குறைவு என்று ஒரே வாய்ப்பாட்டை மாதா மாதம் சொல்வதௌபோல படுவது எனக்குமட்டும்தானா இல்லை இங்கே அமைதியாக இருக்கும் மௌனப் பார்வையாளர்கள் அனைவருக்குமா?

      தயவு செய்து பொதுவில் ஒரு குறையை வைக்கும்போது அதனை தெளிவாக சொல்லுவது எங்களைப்போல புதியவர்களுக்கு நல்லது. இல்லையெனில் லயன் முத்து காமிக்ஸ் என்றாலே எதோ குறைபாடான பொருளை நம் தலையில் கட்டும் பதிப்பகம் என்று இங்கே புதியதாக படிக்க வருபவர்கள் நினைக்க வாய்ப்பு அதிகம்.

      //உதரணமாக சில இடம்களில் கதை பாத்திரம்களின் முகம்களில் அதன் பின்னால் உள்ள (backdrop) பொருள்களின் வண்ணம் பிரதிபலிக்கின்றன.//

      அந்த சில இடம் எது சார்? நீங்கள் போன பதிவிலேயே ஸ்டீள் கிளா கேட்டத்தற்க்கு பஸ்சில் பயனிப்பதாகவும், இறங்கியவுடன் தெரிவிப்பதாகவும் கமெண்ட் இட்டு இருந்தீர்கள். என்ன ஆயிற்று சார்? இன்னமும் பஸ்சை விட்டு இறங்கவே இல்லையா என்ன?

      அப்படி இறங்கி இருந்தால் அந்த முகத்தில் வண்ணம் பிரதிபலிக்கும் இடங்கள் எது என்று சொல்லலாமே? என்னை போன்ற புதியவர்களுக்கு கொஞ்சமாவது புத்தியில் உறைக்கும்.

      //விஜயன் சார், லார்கோ கதை இதுவரை வந்த லார்கோ கதைகளில் வெகுசுமார், முன் அட்டையில் குறிபிட்டது போல் ஆக்சன் கதை ஒன்றும் இல்லை; லார்கோவின் ஆக்சன் எங்கு உள்ளது என தேடவேண்டி உள்ளது. எல்லா கதாபாத்திரம்களும் பேசி கொண்டே உள்ளன.. காமிக்ஸ் கதைக்கு பதில் ஏதோ நாவல் படித்த உணர்வு//

      உங்களின் நேர்மையான விமர்சனம் இது. சூப்பர்.

      இதைப்போலவே நான் கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டுகிறேன்.

      நன்றி பரணி சார்.

      Delete
    2. Arun SowmyaNarayan @ அலுவலகம் செல்லும் அவசரத்தில் உள்ளத்தால் பக்கம்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன், இன்று இரவு விரிவாக எழுதுகிறேன்,

      பக்கம்-52
      முதல் வரிசை முதல் படம் 1-1
      இரண்டாம் வரிசை முதல் படம் 2-1
      மூன்றாம் வரிசை முதல் படம் 3-1

      பக்கம்-64
      இரண்டாம் வரிசை முதல் படம் 2-1

      பக்கம்-68
      முதல் வரிசை முதல் படம் 1-1
      இரண்டாம் வரிசை முதல் படம் 2-1
      மூன்றாம் வரிசை இரண்டாம் படம் 3-2

      நண்பர் ஸ்டீல் இரண்டு நாள் தனது திருச்செந்தூர் பயணத்தை முடித்துவிட்டு வந்து விட்டார், எனது வேலை பளு காரணமாக பேச முடியவில்லை, கடந்த இரவு எனது அழைப்பை ஏற்கவில்லை. எனக்கு எழுதுவதை விட அலைபேசியில் விவரிப்பது எளிது.

      எனக்கு குறை என்று தோன்றும் போது மட்டும் அவைகளை பற்றி இங்கு எழுதுவேன்.

      Delete
  37. விஜயன் சார் & ஈரோடு விஜய்,
    ஈரோடு புத்தக திருவிழா தேதி பற்றி தெரிந்தால் அறிவிக்கவும், ரயில்-ல் முன் பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. டியர் பரணி!!!

      சம்மன் இல்லாமல் ஆஜராவதற்கு மன்னிக்கவும்.

      ஈரோடு புத்தக கண்காட்சி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்குகிறது.அன்று வெள்ளிக்கிழமை.எடிட்டர் மறுநாள் சனிக்கிழமை 2ஆம் தேதி வருவதாக முன்பு எழுதியிருந்தார்.
      ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 என்பதால் அன்றைய தினம் எடிட்டர் வந்தால் நலம் என்பது எங்கள் விருப்பம்.இன்னும் 50 நாட்கள் இருப்பதால் எடிட்டர் தன் முடிவை அறிவிக்க நிறைய அவகாசம் இருக்கிறது.

      Delete
    2. இந்த தகவல் நினைவில் உள்ளது நண்பா! மேற்கொண்டு ஏதாவது தகவல் இருக்குமா என அறியவே பதிவிட்டேன்.

      Delete
  38. சார், நமது மாதஇதழ்களில் ஒன்று இரண்டு குறைந்தாலும்
    பரவாயில்லை. ஆண்டுமலரில் குறைகளில்லாமல் நிறைவாக வெளியிடுங்கள். குறுகிய கால அவகாசம் படைப்புகளில் முழுமையின்மையை கொணர்ந்து விடக்கூடாது என்பதுதான் எனது பயம். உங்களின் ஒவ்வொரு காமிக்ஸம் மாஸ்டர் பீஸாக அமைந்தால் அருமை.

    ReplyDelete
  39. டியர் விஜயன் சார்,

    ஆத்மாக்கள் அடங்குவதில்லை - துவக்க கால ராணி காமிக்ஸ் அட்டைகளை நினைவுறுத்துகிறது (இரண்டு பேனல் டிஸைன்). பழைய லயன் / முத்து காமிக்ஸ்கள் அட்டைகளைப் போல "பளிச்" என்று கண்ணைப் பறிக்கின்றது! :P

    வெளியீட்டு தொடர்பான "The Book Fair Special 1" என்ற தகவல், பின்னட்டையில் மட்டும் இருக்கட்டுமே? "Magic Wind"-ன் பெயரை முன்னட்டையில் ஹைலைட் செய்யலாமே?

    ReplyDelete
    Replies
    1. // வெளியீட்டு தொடர்பான "The Book Fair Special 1" என்ற தகவல், பின்னட்டையில் மட்டும் இருக்கட்டுமே? "Magic Wind"-ன் பெயரை முன்னட்டையில் ஹைலைட் செய்யலாமே?// +1.

      Delete
  40. பூம்-பூம் படலம் - மறுபதிப்பு !

    டியர் விஜயன் சார்,

    பூம்-பூம் படலம் மறுபதிப்பு பற்றிய தங்களின் அபிப்ராயமே கிட்டத்தட்ட 13 வரிகளை முழுமையாக்கியும் கூட தங்களின் ஆதங்கம் குறையவில்லையோ என்று தோன்றுகிறது. copy paste செய்து என் கருத்தை தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அது மிகப் பெரிய கருத்துச் சுரங்கமாக இருப்பதால் இயலவில்லை. எனவே வாசகர்கள் மீண்டும் ஒரு முறை இந்த பதிவில் உள்ள பூம்-பூம் படலம் பற்றிய ஆசிரியரின் கருத்தை படிக்க வேண்டுகிறேன்.

    //காமிக்ஸ் வாசிப்புக்கு என்று வரும் போது மட்டும் 'மாற்றங்கள் என்றாலே விரோதமானவையே !' என்ற அந்தப் பரவலான அபிப்ராயம் தழைத்து வருவது ஏன் ? என்பது இன்றளவுக்கும் எனக்குப் புரியாததொரு புதிரே !//

    என்னைப் பொறுத்தவரை மறுபதிப்பு என்பது - தற்போதைய தரத்தில், அன்றைய மொழி ஆக்கத்தில் வருவதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு காமிக்ஸ் படைப்பு என்பது பல்வேறு காரணங்களுக்காக மறுபதிப்பு செய்யப்படுகிறது. நம் வாசகர்களைப் பொறுத்தவரை பிரதான காரணம் அந்த காலக்கட்டத்தில் படிக்க தவறியது ஒன்றாக விளங்குவதால் அதே மொழியாக்கத்தோடு வருவதே பெரும் திருப்தியை தருவதாக அமையும். இரண்டாவது தலையாய காரணமாக விளங்குவது இன்றைய தரம் மற்றும் முழு வண்ண காமிக்ஸ் காட்சி விருந்து. எனவே எப்படிப் பார்த்தாலும் மறுபதிப்பை பொறுத்தவரை பழைய மொழிபெயர்ப்பே இங்கு கதாநாயகனாக காட்சியளிப்பதால் அதில் மாற்றம் ஏற்படுவதை யாரும் அதிகமாக விரும்புவதில்லை என்றே தோன்றுகிறது. ஒரு உதாரணத்திற்கு...

    ReplyDelete
    Replies
    1. பூம்-பூம் படலம் - மறுபதிப்பு (2)

      //ஏற்கனவே படித்த கதையை ; அதே அன்றைய மொழிபெயர்ப்போடு மீண்டும் படிப்பதை விட - காலத்துக்கேற்ற மாற்றங்கள் + முன்னேற்றங்களோடு படிப்பதில் சுவாரஸ்யம் கூடிடாதா ? Nostalgia நம்மைக் கட்டிப்போடுவதெல்லாம் சரி தான் ; ஆனால் அதுவே காலைக் கட்டிக்கொண்டே சாக்கு ரேசில் ஓடும் அளவிற்கு வளர்ந்திட இடம் தருவது தேவை தானா ?//

      Nostalgia மட்டுமே இதற்கு காரணமாக இருக்க இயலாது என்பது என் கருத்து. அன்று படிக்க தவறவிட்டவர்களுக்கு இன்று மறுபதிப்பு ஒரு கிடைப்பதற்கரிய காமதேனு வாக காட்சியளிக்கிறது என்பதே உண்மையாக இருக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் இன்றைய மொழியாக்கம் வேறு ஒரு கதையை படிப்பதான உணர்வை தரும் என்பதால் வாசகர்களின் எதிர்ப்பிலும் சற்று அர்த்தம் இருப்பதாக அல்லவா தோன்றுகிறது?

      ஒரு உதாரணத்திற்கு, காலத்துக்கேற்ற மாற்றங்களோடு + முன்னேற்றங்களோடு ஒரு மறுபதிப்பு வருகிறது என்று வைத்துக் கொண்டாலும் - அந்த கதை தன் புதுமையை எத்தனை நாட்கள் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும்? இன்னும் 5 ஆண்டுகள் சென்று விட்டால் இன்றைய மொழியாக்கம் பழைய பாணியாகி விடாதா? அப்படியே எல்லாவற்றிலும் மாற்றம் என்று வரும் போது ''பூம்-பூம் படலம்'' என்ற தலைப்பு கூட பழைய பாணியில் இருப்பதால் அதையும் இன்றைய ஷார்ப்பான தலைப்புக்கு மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சிலராவது நினைப்பார்கள் அல்லவா?

      எனவே மறுபதிப்புகள் அனைத்தையும் அப்படியே பழைய மொழிபெயர்ப்பில் மட்டுமே வெளியிட்டு, தங்களின் விலைமதிக்க முடியாத நேரத்தை மற்ற புதிய ஆக்கங்களுக்கு பயன்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்து. வாசகர்களின் 'பழசா புதுசா எது சிறந்தது' என்ற பட்டிமன்றமும் தவிர்க்கப் பட்டு அவர்களின் விமர்சனமும் புதிய பாதையில் ; ஆக்கப் பூர்வமான வழியில் பயன்படும் அல்லவா?

      பின்குறிப்பு: என் பதிவில் தொக்கி நிற்கும் கேள்விக்குறிகள் தவறுதலாக ஏதும் தவாறன அபிப்ராயத்தை தங்களுக்கு ஏற்படுத்துமானால், அதற்காக முன்கூட்டியே மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன் சார் !

      Delete
  41. மேஜிக் விண்ட் - அட்டைபடம் மிக நன்றாக உள்ளது. ஓவியர் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்,விஜயன் சார்.

    ReplyDelete
  42. எனக்கு ஒன்னுமே தோனமாட்டேன்குதே..................

    ReplyDelete
  43. (கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள் ஏதேனும் கேள்விகளை எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா ப்ளீஸ்?)
    இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.
    இதில் இருந்து எதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் ஆசைபடுகிறார் என்றால் 100 அல்லது 150 பதிவுக்கு மேல் போடாதீர்கள், அதுக்கு மேல் பதிவிட்டால் என்னால் படிக்க முடியாது. நான் ரொம்ப பிஸி.......

    ("முப்பது நாட்களில் பாலே நடனம் பயில்வது எப்படி ?" " வாய் நிறைய கொழுக்கட்டையை வைத்துக் கொண்டே சாதாரணமாய்ப் பேசுவது எப்படி ?" ; " விழிகள் பிதுங்கினாலும் வீராப்பாய் நடை போடுவது எப்படி ?")
    இது மட்டுமல்ல ஆசிரியரே இன்னும் சில புத்தகங்கள் எழுத உங்களுக்கு தகுதி உள்ளது. அதன் பட்டியல்.
    1) குப்புற விழுந்தாலும் மீசையில் ஒட்டாத மாதிரி நடிப்பது எப்படி?
    2) செய்யும் தவறுகள் ஊராறால் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒன்றும் நடக்காததுபோல் சாதாரணமாய் பேசுவது எப்படி?
    3) நியாயமான குறைகளை சொல்பவர்களை புறக்கணித்துவிட்டு ................ ஆதரிப்பது எப்படி?
    4) தான் பிடித்த முயலுக்கு 3 கால்தான் என்று சொல்லி மற்றவர்களையும் நம்பவைக்க முயற்சிப்பது எப்படி?
    5) இன்னும் இந்த ஊர் நம்மை நம்புது என்ற ரீதியில் வீராப்பாய் நடப்பது எப்படி?

    காமிக்சில் உள்ள சில ஜீரணிக்க முடியாத நியாயமான குறைபாடுகளை பற்றி யார் கூறினாலும் உடனே ஆவேசமாக எதிர்தாக்குதல் நடத்தும், ஒருசில வாசக நண்பர்களே உங்களிடம் எனது வேண்டுகோள்.....
    1) பெயர் மற்றும் லோகோ போட்டி என்று வைத்துவிட்டு வாசகர்களை ஏமாற்றுவது ஏன்?
    2) அச்சுத்தரம் சரியில்லை என்று கூறினால், எங்களுக்கு எல்லாம் நல்லாதான் வந்திருக்கு, எது குறைபாடு என்று தெரியவில்லை என்று சில நண்பர்கள் கூறுவதால், எங்களுக்கு மட்டும் (சந்தாவிலோ, கடையிலோ) ஆசிரியர் குறைபாடுள்ள புத்தகங்களை கிடைப்பதுபோல் செய்வது ஏன்?
    3) ஒவ்வொரு தனி புத்தகத்திற்கும் பார்சல் செலவும் சேர்த்துதான் சந்தா தொகை உள்ளது. 3 அல்லது 4 புத்தகங்களை ஒரு சின்ன கவரில் வைத்து கசக்கி, கிழித்து அனுப்புவது ஏன்?
    இந்த நியாயமான கோரிக்கைகளை ஆசிரியரை பார்த்து ஆவேசமாகவும், ஆக்ரோசமாககூட கேட்க வேண்டாம், பவ்யமாக கேட்டு உங்களால் பதில் வாங்கி தர முடியுமா நண்பர்களே?

    போலி குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி செல்வது வேண்டுமானால் நாகரீகமாக மற்றவர்களால் கருதப்படும்.
    ஆனால் நியாயமான குற்றச்சாட்டுகளை புறந்தள்ளினால்..................

    அடுத்த ஆசிரியரின் பதிவில் கடைசி குறிப்பு இப்படித்தான் இருக்கும். போன பதிவில் 75 கமெண்ட்டுக்கு மேல் நான் படிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் மறுபடியும் இதில் அதை போடவும்.

    (((((மேஜிக்விண்ட் அட்டை சிறப்பாக வந்துள்ளது. முன் அட்டை பழைய பாணியிலான உணர்வை ஏற்படுத்துகிறது))))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கு பதில் வாங்குவது தான் என்றால், ஒரு மின்னஞ்சலில் கேட்டிருக்கலாம். நீங்கள் திரும்பத் திரும்ப இங்கு கேட்பது ஏனோ?

      Delete
    2. என் வரையில் வரும் புத்தகங்களின் தரம் திருப்தி தான். அச்சுத் தரமும் பார்சல் தரமும் இன்னும் உயரலாம் தான். அதற்காக இப்போது இருப்பது மகா மட்டம் என்று சொல்ல மாட்டேன். எனக்குத் திருப்தியே. இதற்காக சில பேர் என்னை சொம்பு என்று சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும்.

      Delete
    3. பாதிக்கப்படுவது நான் மட்டுமல்லவே. அனைவரும்தானே.......
      இதனால் அனைத்து வாசகர்களின் பிரதிநிதி என்று என்னை நான் கூற வரவில்லை.
      யாராவது ஒருவர் கேட்கலாமே என்ற எண்ணத்தினால்தான்.

      Delete
    4. ஒரே கமெண்டில் பதில் கிடைத்திருந்தால் ஏன் நான் திரும்ப திரும்ப கேட்க போகிறேன்.

      Delete
    5. நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமாக இருந்தாலும் நீங்கள் கேட்கும் தொனி கொஞ்சம் அளவுக்கு மீறிச் சூடாக இருக்கிறது. கொஞ்சம் குத்திக் காட்டும் தொனியிலும் உள்ளது. அதனால் ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப் போகிறார்களோ என்னவோ :-|
      [என் தனிப்பட்ட கருத்து] ஆனால் பொதுவாகவே ஆசிரியர் இந்தக் குற்றச் சாட்டுகளை மௌனமாகவே கடந்து போவது வழக்கம். அதற்காக அவர் இவற்றுக்குச் செவி மடுப்பதில்லை என்று சொல்ல முடியாது. அச்சுத் தரம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்புத் தான் இல்லையா? அப்படி எல்லாம் படிப்படியாக உயரும் என்று நம்புகிறேன்.

      Delete
    6. இங்கேதான் நீங்கள், என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
      150 பதிவுக்கு மேல் படிக்கவில்லை என்று ஆசிரியர் கூறுவதை நீங்கள் நம்புகிறீர்களா?
      என்னைபோல் பக்கம் பக்கமாக பதில் கூற சொல்லவில்லையே, நான் கேட்ட 3 கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்றால் அதற்கு தகுந்தாற்போல் நாம் செயல்பட ஏதுவாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருக்கிறேன்.
      நன்றாக உள்ளது என்று யார் கூறினாலும் அதற்கு ஒரு பதில் உடனடியாக வந்துவிடுகிறது. விமர்சிப்பவர்களை புறக்கணிப்பது ஏன். எல்லாம் நன்றாக இருந்தால் எனக்கும் மிகமிக மகிழ்ச்சியே.
      இந்த பெயர் வைக்கும் போட்டி, லோகோ போட்டி என்று வந்தவுடனேதானே நான் கமெண்ட் இடவே ஆரம்பித்துள்ளேன். அதற்கு முன்பு நான் கமெண்ட் இட்டதை நீங்கள் என்றாவது பார்த்ததுண்டா?

      வாசகர்கள் அனைவரும் ஒரு வாசகர்களாக இங்கே வருவதில்லை, காதலர்களாகத்தான் இங்கே வருகிறார்கள். அவர்களை பகடை காய்களாக யாரும் நினைத்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான். மற்றபடி எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

      Delete
    7. /முன்குறிப்பு: என் பதிவில் தொக்கி நிற்கும் கேள்விக்குறிகள் தவறுதலாக ஏதும் தவாறன அபிப்ராயத்தை தங்களுக்கு ஏற்படுத்துமானால், அதற்காக முன்கூட்டியே மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன் ஆசானே !/
      1. /P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள் ஏதேனும் கேள்விகளை எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ? /
      /Mahesh : ப்ரீயா விடுங்க நண்பரே..! அவரவர் கண்ணோட்டங்கள் அவரவருக்கு ! இதில் நாம் விசனப்பட என்ன உள்ளது ?/ ஐ... அப்போ நீங்க படிச்சிடீங்க தானே ஆசானே... ஹய்யா பூனை வெளிய வந்துடுச்சு... :P
      2. /Mahesh : ப்ரீயா விடுங்க நண்பரே..! அவரவர் கண்ணோட்டங்கள் அவரவருக்கு ! இதில் நாம் விசனப்பட என்ன உள்ளது ?/ என்னிக்கு தான் எங்கள் கருத்துக்களை பார்த்து வெசனப்பட்டு இருக்கீங்க ஆசானே??? இன்னிக்கு நேத்திக்கா உங்களை பாக்குறோம்??? ஹ்ம்ம்ம்ம் :(
      3. /So அவரது அடைமொழியை மொழிமாற்றம் செய்வது முறையாகாது !/ இது என்ன ஆசானே புதுசா??? நம்ம ப்ளுபெர்ரி ஒளிஞ்சி இருக்கும் போது நம்ம ஊருல ஒரு புலிய பாத்துட்டு தானே அவரு பேரு தன்னை டைகர் னு சொல்லிகிட்டார்??? நல்ல வேலை அவரு பன்னிய பாத்து இருந்தால்... நெனைக்கவே நெஞ்சம் பதறுகிறது ஆசானே!!! (http://en.wikipedia.org/wiki/List_of_Blueberry_characters) மத்தவங்க புள்ளைங்க பேர மாத்துறது ஒரு ஜாலி தானே... :)
      4. /மேஜிக் விண்ட் பணிகளும் முடிந்து விட்ட நிலையில் "பூம்-பூம் படலம்" அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை - மறுபதிப்பு என்ற காரணத்தினால் ! சில மாதங்களுக்கு முன்பாக இந்தக் கதைக்கு வாசகர்கள் ஒரு புது மொழியாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கலாமே ? என்று நான் அபிப்ராயப்பட்டிருந்தது நினைவிருக்கலாம் !/ நெறைய பேரு இந்த மறு பதிப்பே வேணாம்னு அபிப்ராயப்பட்டிருந்தது நினைவிருக்கா அன்பின் ஆசானே???
      5. /ஆனால் அதற்குப் பெரியதொரு சுவாரஸ்யம் காட்டி நண்பர்கள் முன்வரவில்லை என்பதோடு - நம்மிடையே நிலவும் அந்தப் "பழமையைப் போற்றுவோம் ; பழமையே பொன்னானது!" கோட்பாடுகள் தலைதூக்கியதால் 'புது மொழிபெயர்ப்பு' என்ற எனது எண்ணம் கோவிந்தாவாகிப் போனது !/ இது போலவே தான் எங்களின் பல எண்ணங்களும்!!! :(
      6. /saint satan : சாத்தான்ஜி...."விரியனின் விரோதி " + மேஜிக் விண்ட் கதைகளை கிட்டே ஒரு நண்பரை வைத்துக் கொண்டே நீங்கள் படிப்பது சாலச் சிறந்தது !/ சரியா சொன்னிங்க ஆசானே... இப்ப வந்த ஒரு லார்கோ நாவலுக்கு கூட ஒரு தமிழ் பண்டிட்டை வைத்து தான் படித்தோம்... ஆனால் உங்கள் தமிழ் பெருக்கெடுத்து ஓடுகிறது...
      7. /மொழிபெயர்ப்பில் சுலபம் ; கடினம் என்பதை நிர்ணயம் செய்யவே இயலாது என்பது தான் யதார்த்தம் ! "பிரமாதமாய் வந்துள்ளது !" என்று நானே எனக்கு செண்டாப் பிடித்துக் கொள்ளும் ஒரு ஆக்கத்தை - நாலைந்து நாட்கள் கழித்து மறுவாசிப்பு செய்தால் ஒரு வண்டி மாற்றங்கள் சாத்தியம் என்பது புலனாகும் ! தமிழின் வளமை நம் முன்னே ஒப்படைக்கும் combinations & permutations அசாத்தியமானவை ! So மொழிபெயர்ப்பில் கரை கண்டு விட்டோமென இறுமாப்புக் கொள்வதோ ; 'இவை எனது best' என்று சொல்லுவதோ இயலாக் காரியம் ! / ச்சே ச்சே மனசாட்சி இருந்தால் எவராலும் அப்படி எல்லாம் சொல்லிட மட்டுமல்ல நினைக்க கூட இயலாது அல்லவே!!! :P
      8. /Siva Lingam : சிறிது சிறிதாய் ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன நண்பரே ! இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் !/ ஒரு சிரம் புறம் தாழ்ந்த வேண்டுகோள். அவர்கள் இருவரையும் ப்ரூப் திருத்த முதலில் சொல்லலாமே ஆசானே...

      Delete
    8. 9. //* இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் ! */
      டியர் எடிட்டர்,
      எப்போதோ கூறிய யோசனை - இன்னும் சில நண்பர்களும் தான் - காலம் இப்போது கணிந்திருப்பதில் மகிழ்ச்சி. / ஆமாம்... மத்தவங்க சொல்லும் போதுலாம் நாங்க செய்ய மாட்டோம். நாங்களாக தான் லேட்டா அத பண்ணுவோம்... அது கதை தேர்வாக இருந்தாலும் சரி, எதுவாக இருப்பினும் நாங்கள் தான் நிர்ணயம் செய்வோம்... பல பேரு கரடிய கி.மு ல இருந்தே தொர்கல் (ரபிக்), வேற ப்ளூ கோட்ஸ் (ப்ளேடு கார்த்திக்) போடுங்கனு சொன்னதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் ஆன கதை தான் தெரியுமே...
      10. /ஆனால் பொதுவாகவே ஆசிரியர் இந்தக் குற்றச் சாட்டுகளை மௌனமாகவே கடந்து போவது வழக்கம். அதற்காக அவர் இவற்றுக்குச் செவி மடுப்பதில்லை என்று சொல்ல முடியாது. அச்சுத் தரம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்புத் தான் இல்லையா? அப்படி எல்லாம் படிப்படியாக உயரும் என்று நம்புகிறேன்./ சத்திய சோதனை பாஸ்... இன்னமுமா இந்த உலகம் நம்மள நம்புது??? :P
      11. /இங்கேதான் நீங்கள், என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். 150 பதிவுக்கு மேல் படிக்கவில்லை என்று ஆசிரியர் கூறுவதை நீங்கள் நம்புகிறீர்களா? / விடுங்க பாஸ்... எல்லோரும் நம்புறாங்க இல்ல, நாமளும் நம்பிடுவோம்... நம்பிக்கை தானே பாஸ் வாழ்க்கை...
      12. /ஒரு நாள் பயணமாய் இரவு ரயிலில் பெங்களுரு செல்ல ஏறி அமர்ந்த போது upper berth-ல் சாய்ந்து கொண்டே லக்கியை நான் எழுதிச் சென்றதை எதிர் பெர்த்தில் இருந்த பெண்மணி வினோதமாய்ப் பார்த்து வந்தார் ! என் கையிலிருந்த ஜெராக்சின் முகப்பில் லக்கியின் முகத்தைப் பார்த்த போது ஆவலாய் என்னிடம் பேச்சுக் கொடுத்தார் ! அவர் தமிழ் பேசுபவரல்ல என்பதையும், லக்கி லுக்கின் ரசிகை என்பதையும் அறிந்து கொண்டேன் ! ஜெராக்ஸ் பக்கங்களை என்னிடம் இரவல் வாங்க அவர் சந்கோஜப்படுவதை உணர முடிந்தது ! 'படித்து விட்டுத் தாங்களேன்.." என்று நானாகக் கொடுத்த போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசம் - காமிக்ஸ் எனும் இந்த அற்புதம் பரப்பிடும் சந்தோஷத்தை மீண்டுமொருமுறை நிதர்சனமாய் பார்க்கும் தருணமாகிப் போனது !/ அவர் பயண இறுதியில் எத்தனை சந்தா கட்டினார் என அறிய ஆவல்...
      13. முன்னால கூட இப்படி தான்... எமனின் ஏஜெண்ட் தலைப்ப பாத்தால் பச்சை குழந்தைகள் பயந்து மூச்சா போய்டும் னு சொல்லி சொப்பனம் னு மாத்தி வந்துச்சு. ஆனா அடுத்த தலைப்பு "நிலஒளியில் ஒரு நரபலி" னு வந்துச்சு, ஆத்மா அடங்காது, அந்தி மண்டலம் இத்யாதி... இத்யாதி எல்லாம் இப்போ வருது . இதுல உண்மை என்னன்னா நம்ம பசங்களுக்கு அதுக்குள்ள தைரியம் வந்துடுச்சோன்னு நெனைப்பு தான் வருது ??? இத படிச்சு யாரவது பாராட்டா தமிழ்நாட்டின் சிறார்க்கு வீரம் புகட்டும் ஆசான் ன்னு புகழ போறாங்களோன்னு பயம்மா இருக்கே... :P
      14. /ஆத்மாக்கள் அடங்குவதில்லை - இதயத் துடிப்பை ஒடுங்க வைக்கும் தலைப்பு சார் !/ பாத்து பாஸ், நிப்பாட்டிட போகுது... :P
      15. /ஜாலி ஜம்ப்பர் : சின்னதொரு திருத்தம் : தேர்வு லயனின் வெளியீடுகளுக்குள் இருந்து மாத்திரமே !/ தம்பி... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்... புரிஞ்சுதா???
      16. ஒரு வலி... பழைய சந்தாதாரர் களுக்கும் சேர்த்து அந்த மியாவி (ப்ரீ) அனுப்பி இருக்கலாம் அல்லவா? நாங்கள் என்ன ஆசானே தவறு செய்தோம்??? +6 அனுப்பியவர்கள் மட்டும் என்ன விதத்தில் உசத்தி???

      Delete
    9. திரு மனோகர் பழனிசாமி !
      உங்கள் அணுகுமுறையில் மாற்றம்
      தெரிகிறது .பாராட்டுக்கள் .

      மதியில்லா மந்திரியாரிடம் "நான் பாட்டு
      கத்தி கொண்டு இருக்கிறேன் ,நீ சிரிப்பு
      மூட்டி கொண்டு இருக்கிறாய் " போன்ற
      தடாலடி பாணியில் இருந்து இறங்கி
      வந்து உள்ளீர்கள் .

      முதலில் உங்களை குப்பை போன்ற வார்த்தைகளால் விமர்சனம் செய்தமைக்காக எனது கண்டணங்கள .

      பொது இடத்தில் நாகரீக வரம்புக்குட்பட்ட
      வகையில் உங்கள் பதிவுகள் அமையா
      விடில் உங்கள் கருத்தோடு உடன்படுவோரும் விலகி நிற்பர் .

      வெகு ஜனங்கள் கண்ணியம் அற்ற வழியில் நல்ல கருத்து வந்தாலும்
      ஏற்று கொள்வது இல்லை .

      தொடர்ந்து எழுதுங்க ! குறை
      யோ,நிறையோ .
      ஆனால்.....

      யாரும் முகம் சுளிக்கா வண்ணம் .









      Delete
    10. ஆரம்பத்தில் நான் சில வாசகர்களை நோக்கி சற்று கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியது நிஜமே. அதேபோல் சில வாசகர்களை கேலி கிண்டல் செய்ததும் உண்மைதான். அதற்கு அந்த பதிவிலே நான் உடனடியாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

      Delete
  44. /முன்குறிப்பு: என் பதிவில் தொக்கி நிற்கும் கேள்விக்குறிகள் தவறுதலாக ஏதும் தவாறன அபிப்ராயத்தை தங்களுக்கு ஏற்படுத்துமானால், அதற்காக முன்கூட்டியே மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன் ஆசானே !/
    1. /P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள் ஏதேனும் கேள்விகளை எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ? /
    /Mahesh : ப்ரீயா விடுங்க நண்பரே..! அவரவர் கண்ணோட்டங்கள் அவரவருக்கு ! இதில் நாம் விசனப்பட என்ன உள்ளது ?/ ஐ... அப்போ நீங்க படிச்சிடீங்க தானே ஆசானே... ஹய்யா பூனை வெளிய வந்துடுச்சு... :P
    2. /Mahesh : ப்ரீயா விடுங்க நண்பரே..! அவரவர் கண்ணோட்டங்கள் அவரவருக்கு ! இதில் நாம் விசனப்பட என்ன உள்ளது ?/ என்னிக்கு தான் எங்கள் கருத்துக்களை பார்த்து வெசனப்பட்டு இருக்கீங்க ஆசானே??? இன்னிக்கு நேத்திக்கா உங்களை பாக்குறோம்??? ஹ்ம்ம்ம்ம் :(
    3. /So அவரது அடைமொழியை மொழிமாற்றம் செய்வது முறையாகாது !/ இது என்ன ஆசானே புதுசா??? நம்ம ப்ளுபெர்ரி ஒளிஞ்சி இருக்கும் போது நம்ம ஊருல ஒரு புலிய பாத்துட்டு தானே அவரு பேரு தன்னை டைகர் னு சொல்லிகிட்டார்??? நல்ல வேலை அவரு பன்னிய பாத்து இருந்தால்... நெனைக்கவே நெஞ்சம் பதறுகிறது ஆசானே!!! (http://en.wikipedia.org/wiki/List_of_Blueberry_characters) மத்தவங்க புள்ளைங்க பேர மாத்துறது ஒரு ஜாலி தானே... :)
    4. /மேஜிக் விண்ட் பணிகளும் முடிந்து விட்ட நிலையில் "பூம்-பூம் படலம்" அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை - மறுபதிப்பு என்ற காரணத்தினால் ! சில மாதங்களுக்கு முன்பாக இந்தக் கதைக்கு வாசகர்கள் ஒரு புது மொழியாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கலாமே ? என்று நான் அபிப்ராயப்பட்டிருந்தது நினைவிருக்கலாம் !/ நெறைய பேரு இந்த மறு பதிப்பே வேணாம்னு அபிப்ராயப்பட்டிருந்தது நினைவிருக்கா அன்பின் ஆசானே???
    5. /ஆனால் அதற்குப் பெரியதொரு சுவாரஸ்யம் காட்டி நண்பர்கள் முன்வரவில்லை என்பதோடு - நம்மிடையே நிலவும் அந்தப் "பழமையைப் போற்றுவோம் ; பழமையே பொன்னானது!" கோட்பாடுகள் தலைதூக்கியதால் 'புது மொழிபெயர்ப்பு' என்ற எனது எண்ணம் கோவிந்தாவாகிப் போனது !/ இது போலவே தான் எங்களின் பல எண்ணங்களும்!!! :(
    6. /saint satan : சாத்தான்ஜி...."விரியனின் விரோதி " + மேஜிக் விண்ட் கதைகளை கிட்டே ஒரு நண்பரை வைத்துக் கொண்டே நீங்கள் படிப்பது சாலச் சிறந்தது !/ சரியா சொன்னிங்க ஆசானே... இப்ப வந்த ஒரு லார்கோ நாவலுக்கு கூட ஒரு தமிழ் பண்டிட்டை வைத்து தான் படித்தோம்... ஆனால் உங்கள் தமிழ் பெருக்கெடுத்து ஓடுகிறது...
    7. /மொழிபெயர்ப்பில் சுலபம் ; கடினம் என்பதை நிர்ணயம் செய்யவே இயலாது என்பது தான் யதார்த்தம் ! "பிரமாதமாய் வந்துள்ளது !" என்று நானே எனக்கு செண்டாப் பிடித்துக் கொள்ளும் ஒரு ஆக்கத்தை - நாலைந்து நாட்கள் கழித்து மறுவாசிப்பு செய்தால் ஒரு வண்டி மாற்றங்கள் சாத்தியம் என்பது புலனாகும் ! தமிழின் வளமை நம் முன்னே ஒப்படைக்கும் combinations & permutations அசாத்தியமானவை ! So மொழிபெயர்ப்பில் கரை கண்டு விட்டோமென இறுமாப்புக் கொள்வதோ ; 'இவை எனது best' என்று சொல்லுவதோ இயலாக் காரியம் ! / ச்சே ச்சே மனசாட்சி இருந்தால் எவராலும் அப்படி எல்லாம் சொல்லிட மட்டுமல்ல நினைக்க கூட இயலாது அல்லவே!!! :P
    8. /Siva Lingam : சிறிது சிறிதாய் ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன நண்பரே ! இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் !/ ஒரு சிரம் புறம் தாழ்ந்த வேண்டுகோள். அவர்கள் இருவரையும் ப்ரூப் திருத்த முதலில் சொல்லலாமே ஆசானே...

    ReplyDelete
  45. 9. //* இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் ! */
    டியர் எடிட்டர்,
    எப்போதோ கூறிய யோசனை - இன்னும் சில நண்பர்களும் தான் - காலம் இப்போது கணிந்திருப்பதில் மகிழ்ச்சி. / ஆமாம்... மத்தவங்க சொல்லும் போதுலாம் நாங்க செய்ய மாட்டோம். நாங்களாக தான் லேட்டா அத பண்ணுவோம்... அது கதை தேர்வாக இருந்தாலும் சரி, எதுவாக இருப்பினும் நாங்கள் தான் நிர்ணயம் செய்வோம்... பல பேரு கரடிய கி.மு ல இருந்தே தொர்கல் (ரபிக்), வேற ப்ளூ கோட்ஸ் (ப்ளேடு கார்த்திக்) போடுங்கனு சொன்னதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் ஆன கதை தான் தெரியுமே...
    10. /ஆனால் பொதுவாகவே ஆசிரியர் இந்தக் குற்றச் சாட்டுகளை மௌனமாகவே கடந்து போவது வழக்கம். அதற்காக அவர் இவற்றுக்குச் செவி மடுப்பதில்லை என்று சொல்ல முடியாது. அச்சுத் தரம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்புத் தான் இல்லையா? அப்படி எல்லாம் படிப்படியாக உயரும் என்று நம்புகிறேன்./ சத்திய சோதனை பாஸ்... இன்னமுமா இந்த உலகம் நம்மள நம்புது??? :P
    11. /இங்கேதான் நீங்கள், என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். 150 பதிவுக்கு மேல் படிக்கவில்லை என்று ஆசிரியர் கூறுவதை நீங்கள் நம்புகிறீர்களா? / விடுங்க பாஸ்... எல்லோரும் நம்புறாங்க இல்ல, நாமளும் நம்பிடுவோம்... நம்பிக்கை தானே பாஸ் வாழ்க்கை...
    12. /ஒரு நாள் பயணமாய் இரவு ரயிலில் பெங்களுரு செல்ல ஏறி அமர்ந்த போது upper berth-ல் சாய்ந்து கொண்டே லக்கியை நான் எழுதிச் சென்றதை எதிர் பெர்த்தில் இருந்த பெண்மணி வினோதமாய்ப் பார்த்து வந்தார் ! என் கையிலிருந்த ஜெராக்சின் முகப்பில் லக்கியின் முகத்தைப் பார்த்த போது ஆவலாய் என்னிடம் பேச்சுக் கொடுத்தார் ! அவர் தமிழ் பேசுபவரல்ல என்பதையும், லக்கி லுக்கின் ரசிகை என்பதையும் அறிந்து கொண்டேன் ! ஜெராக்ஸ் பக்கங்களை என்னிடம் இரவல் வாங்க அவர் சந்கோஜப்படுவதை உணர முடிந்தது ! 'படித்து விட்டுத் தாங்களேன்.." என்று நானாகக் கொடுத்த போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசம் - காமிக்ஸ் எனும் இந்த அற்புதம் பரப்பிடும் சந்தோஷத்தை மீண்டுமொருமுறை நிதர்சனமாய் பார்க்கும் தருணமாகிப் போனது !/ அவர் பயண இறுதியில் எத்தனை சந்தா கட்டினார் என அறிய ஆவல்...
    13. முன்னால கூட இப்படி தான்... எமனின் ஏஜெண்ட் தலைப்ப பாத்தால் பச்சை குழந்தைகள் பயந்து மூச்சா போய்டும் னு சொல்லி சொப்பனம் னு மாத்தி வந்துச்சு. ஆனா அடுத்த தலைப்பு "நிலஒளியில் ஒரு நரபலி" னு வந்துச்சு, ஆத்மா அடங்காது, அந்தி மண்டலம் இத்யாதி... இத்யாதி எல்லாம் இப்போ வருது . இதுல உண்மை என்னன்னா நம்ம பசங்களுக்கு அதுக்குள்ள தைரியம் வந்துடுச்சோன்னு நெனைப்பு தான் வருது ??? இத படிச்சு யாரவது பாராட்டா தமிழ்நாட்டின் சிறார்க்கு வீரம் புகட்டும் ஆசான் ன்னு புகழ போறாங்களோன்னு பயம்மா இருக்கே... :P
    14. /ஆத்மாக்கள் அடங்குவதில்லை - இதயத் துடிப்பை ஒடுங்க வைக்கும் தலைப்பு சார் !/ பாத்து பாஸ், நிப்பாட்டிட போகுது... :P
    15. /ஜாலி ஜம்ப்பர் : சின்னதொரு திருத்தம் : தேர்வு லயனின் வெளியீடுகளுக்குள் இருந்து மாத்திரமே !/ தம்பி... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்... புரிஞ்சுதா???
    16. ஒரு வலி... பழைய சந்தாதாரர் களுக்கும் சேர்த்து அந்த மியாவி (ப்ரீ) அனுப்பி இருக்கலாம் அல்லவா? நாங்கள் என்ன ஆசானே தவறு செய்தோம்??? +6 அனுப்பியவர்கள் மட்டும் என்ன விதத்தில் உசத்தி???
    ஆசானே... இதையாவது நீங்கள் படிப்பீர்களா படிப்பீர்களா படிப்பீர்களா???

    ReplyDelete
    Replies
    1. படிப்பேன்...... படிப்பேன்...... படிப்பேன்.....
      படிக்காத மாதிரி
      நடிப்பேன்..... நடிப்பேன்...... நடிப்பேன்......

      உடனே உண்மை ஒத்துக்கிட்டா இவ்வளவு பப்ளிகுட்டி கிடைக்காதுல்ல......

      Delete
    2. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனோகர் அவர்களே .....
      காட்டு கத்தலை கத்தி கொண்டிருக்கும் நவீன வள்ளுவரே ....
      1. நீங்கள் என்ன பாராட்டியா எழுதி இருப்பீர்கள் , இவளவு அழகாய் எழுதும் அவருக்கு தெரியாதா ; அதை நீங்கள் படிக்கவில்லை என்று கூறியதும் வேதாளங்கள் சில வந்து சும்மா நிக்காதீங்க நான் சொல்லும் படி வைக்கொனுங்க என்று பாடுவது நீர்தாம் என்று .

      2.இன்னிக்கு நேத்திக்கா உங்களை பாக்குறோம்??? ஹ்ம்ம்ம்ம் :

      3.இப்போதான் கணினி கையில் இருக்கே . பெயர் மாற்றம் வேண்டாம் என்ற எதிர்ப்பும் , ஆசிரியரிடம் பதிப்பகத்தார் வைத்த கோரிக்கைகளும் இருக்கே ! ப்ளூ பெர்ரி மாற்றம் லயனின் கி மு வில் ! அப்போது ரபிக் போன்றவர்களோ பிறரோ கிடையாதே .

      4.யாருப்பா அந்த நெறைய வேறு .

      5.உங்களை ஆதரித்து யாருமே இல்லையே ! புரிதா அண்ணாத்தே இது போலதான் இங்கே பலர் எண்ணங்களும் ! இன்று பொய் நாளை மெய் ! ஐயோ சார் உம்மை போல யாரும் இல்லை என புகழ்வீர்கள் முகமூடி கலட்டி கொண்டு !

      6.உங்களுக்கு வாழ்த்துக்கள் , உங்கள் தமிழ் ஆர்வத்தால் அந்த தமிழ் மேதை போல நீங்களும் சிறிது கஸ்டபட்டால் , நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு ; இரண்டு பேர் இருப்பீர்களா அவர்களுக்கும் கற்று தரலாம் .

      7.திமிராய் பேசி விடவில்லையே என சுட்டு விட்டதல்லவா . ஆமாம் மன சாட்சிக்கு மட்டுமே பய படுவீர்கள் அல்லவோ !

      8.அது உங்கள் வேலை அல்லவே . ஆசிரியருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் . இந்த பய புள்ளிகளை கண்டு பிடிக்க அந்த இரண்டு பேரை முதலில் அனுப்புங்கள் .

      வளரும் !




      Delete
    3. நவீன வள்ளுவன்:

      //ஆத்மா அடங்காது, அந்தி மண்டலம் இத்யாதி... இத்யாதி எல்லாம் இப்போ வருது . இதுல உண்மை என்னன்னா நம்ம பசங்களுக்கு அதுக்குள்ள தைரியம் வந்துடுச்சோன்னு நெனைப்பு தான் வருது//

      நான் பாராட்டி பதிவிட்டுள்ள தலைப்புகளை நீங்கள் நக்கலடித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. அப்படியே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை சரியான காரணம் கொண்டு தானே இங்கு பதிவிட்டிருக்க வேண்டும்? ஏன் அதை விமர்சித்தீர்கள் என்று நீங்கள் குறிப்பிட வேண்டும் அல்லவா? அதாவது..

      1.உங்களுக்கு பயமாயிருக்கிறது என்றோ ;
      2.உங்களுக்கு தைரியம் இல்லை என்றோ ;
      3. உங்களுக்கு நடுக்கம் எடுக்கிறது என்றோ ;

      ஏதோ ஒரு காரணம் கூறி பதிவிடுவதே முறை. அதையெல்லாம் புறந் தள்ளிவிட்டு பெங்களூரிலிருந்து தோர்கல் அண்ணன் ரஃபிக் அவர்களே, ப்ளூ கோட்ஸ் அண்ணன் பிளேடு கார்த்திக் அவர்களே என்று அரசியல் பிரச்சாரம் செய்கிறீர்கள். மேலும் அவர்கள் அனைவரும் நெல் விவசாயம் செய்தார்கள். அப்போது அவர்கள் இறைத்த நீர் விழலுக்கு சென்றது என்று அந்த நண்பர்களையும் வம்புக்கு இழுக்கிறீர்கள் ;)

      Delete
    4. 9. உங்கள் கருத்துக்களை கொடுங்கள் . ஆசிரியருக்கு சிந்தக்கவே தெரியாது அல்லவா .

      10.அச்சுதரம் என ஒரே கருத்தை சொல்லி அடிக்கும் வள்ளுவா ,அதனை ஸ்கேன் செய்து போடப்பா !

      11. உங்களை எல்லாம் மதித்து வாருங்கள் நண்பர்களே என அழைக்கிறாரே ! நம்பிக்கைதானேப்பா வாழ்கை . இன்னுமா உங்களை எல்லாம் நம்புகிறார் .

      12.உங்கள் கைபேசி எண்ணை தரலாமே . உங்களிடம் தனியாக சொல்லிவிடுவார் .

      13.ஐயோ ! பயந்துட்டீங்களா ! இனிமேல் உங்களை எல்லாம் கேட்காமல் அவரே பெயர் தயார் செய்து விடுவார் . உங்களை போன்றவர்கள் குழப்பி விட்டு கும்மி அடிப்பதால்தானே இவை எல்லாம் .

      14. உங்களுக்கு பிரச்சினை இல்லை . இதயம்தான் இல்லையே !

      15. ஆமாமா ! இவருக்கு பூர்வ ஜென்ம நியாபகம் எல்லாம் வரும் . அதை எல்லாம் தேடி கொண்டு வரவேண்டும் . கடுப்பை கிளப்பாதீங்க பாஸ் .

      16.இது +6 முன்பதிவை ஊக்குவிக்க ஐயா ! போதுமா. இன்னும் வேண்டுமென்றால் சந்தா கட்டுங்கள் . ஆனா நீங்க கட்டி இருப்பீங்க . பிறரை குழப்பதானே இந்த பொங்கிய அவதாரங்கள் எல்லாமே .

      Delete
  46. சார் , அட்டை படம் இரண்டுமே தூள் ! டாப் டக்கர் ! மாலையப்பன் அவர்களுக்கு ஒரு மாலை சூட்டுங்கள் . இந்த அட்டை படத்தை பார்த்தாலே அள்ளி கொள்வார்கள் ! விற்பனை உயர புக் ஃபேர் ஸ்பெசலுக்கு சரியான அட்டை படம் ! வண்ணங்களும் அருமை மனதினை ஈர்க்கின்றனவே ! ஒரு பக்கம் காட்டும் விஷயம் , அருமையான கதை , அற்புதமான உணர்வு காத்திருக்கிறது என்ற எண்ணமே ! இந்த அடர் வண்ணங்கள் அருமை !

    அப்போ சட்டம் அறியா சமவெளியில் ,நமது பழைய ட்ராகன் நகரம் டேக்ஸ்சை பார்க்கவிருக்கிறோம் என்று சொல்லுங்கள் ! மீண்டும் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னாள் அழைத்து செல்ல போகிறீர்கள் என நினைக்கிறேன் ! இன்னும் இரண்டு மாதங்களில் முன்னோக்கி பயணித்தால் இருபது வருடங்கள் பின்னோக்கலாம் ...ஆஹ்ஜா .... அற்புதமான உணர்வுகளை தீட்ட வார்த்தைகளால் இயலுமா !


    நல்ல வேலை பூம் பூம் படலம் நண்பர்களிடையே வெடிக்க வாய்ப்பில்லாமல் போனது ! என்னதான் இருந்தாலும் old is gold என்பது உண்மைதானே !
    விரியனின் விரோதிக்காக விரிந்த விழிகளுடன் காத்திருக்கிறேன் !






    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே மேலே ஆத்மாக்கள் அடங்குவதில்லை பின்னட்டையில் அங்கிள் டெர்ரி யாருக்கேனும் தெரிகிறாரா ?

      Delete
    2. டியர் ஸ்டீல் க்ளா!!!

      அந்த நாள் ( மேத்தா காமிக்ஸ்) ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே !!!

      Delete
    3. அந்த புத்தகம் உங்களிடம் இருந்தால் தந்துதவினால் மகிழ்வேன் நண்பனே நண்பனே !

      Delete
  47. ஒரு நல்ல மனிதரும் கொடுந்தேளும் ! (1)

    பெரிய மனிதர் ஒருவர் ஒரு குளக்கரையில் குளித்துவிட்டு மேலே படியேறும் போது, கருந்தேள் ஒன்று தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே மனம் பதறிய அவர், அத்தேளை தன் இரு கைகளைக் கொண்டு அள்ளி எடுத்தார். ஆனால் அவரை அந்த கருந்தேள் தன் கொடுக்கால் கொட்டி விட்டது. கடுமையான வலியில் கைகளை உதறியப் போது மீண்டும் தண்ணீருக்குள் அந்த கருந்தேள் விழுந்து உயிருக்குப் போராடியது. மனசு கேட்காமல் மீண்டும் கைகளால் அள்ளி எடுத்தார். ஆனால் அந்த கருந்தேள் மீண்டும் இவர் கைகளில் கொட்டிவிட, மறுபடியும் தண்ணீருக்குள் தேள் விழுந்து தத்தளித்தது. தேள் தன் கொடுக்கால் கொட்டிய வலியில் துடித்துப் போயிருந்தாலும் அந்த பெரிய மனிதர், மீண்டும் அந்த கொடுந்தேளை காப்பாற்ற எத்தனித்தார்.

    இதை அருகிலிருந்த பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த பெரிய மனிதரிடம், அந்த தேள்தான் உங்களை இரண்டு முறை கொட்டி விட்டதே, மீண்டும் ஏன் அதை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நல்ல மனிதரோ - கொட்டுவது கொடுந்தேளின் பிறவிக் குணம் ; உயிருக்கு போராடும் ஜீவனை காப்பாற்றத் துடிப்பதோ என்னுடைய பிறவிக் குணம் என்றாராம்.

    அதைப் போலத் தான் இங்கு Manogar Palanisamy யும், நவீன வள்ளுவனும் தன் பதிவுகளில் கொடுஞ் சொற்களைப் பயன்படுத்தி, கொடுக்கில் தெறிக்கும் விஷமாய் கருந்தேள் போல் ஆசிரியரை கொட்டுகின்றனர். எனினும் உங்கள் கேள்விகளுக்கான பதிலை ஒரு காமிக்ஸ் வாசகன் என்ற முறையில் இங்கு பதிலளிக்க கடமைப் பட்டுள்ளேன். என் பதிவுகள் முடிந்தப் பின்தான் நீங்கள் புதிய வாதத்தை இங்கு வைக்க வேண்டும் என்பது எங்கும் நடைமுறை என்பதால் அதுவரை பொறுத்திருந்து பதிலளிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Manogar Palanisamy & நவீன வள்ளுவன் (2)

      //P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை// - //இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு// - //ஐ... அப்போ நீங்க படிச்சிடீங்க தானே ஆசானே...//

      பதில்: ஒருவேளை சென்ற பதிவில் 150 க்கு மேற்பட்ட பின்னூட்டங்களின் மூலம் உங்கள் இருவரின் உண்மையான முகமும் ; ஒரிஜினல் id யும் ஆசிரியருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் உங்கள் இருவரையும் நண்பராக கருதுவதால் படிக்கவேயில்லை என்றும் கூட கூறியிருக்கலாம். ஏனெனில் உங்கள் இருவரையும் நேரிலோ அல்லது புத்தகக் கண்காட்சியிலோ சந்தித்து உரையாடும் போது உங்களுக்குள் நெருடல் நெருஞ்சிமுள்ளாக குத்தாமல் இருக்க ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா? வாசகர்கள் மேல் ஆசிரியருக்கு இருக்கும் மரியாதை மற்றும் அன்பின் அளவுகோல் இதுவென்பதைத் தவிர, இதை வேறு என்னவாக கணிக்க முடியும்?

      பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
      நன்மை பயக்கும் எனின்.

      Delete
    2. அப்ப உங்கள் உண்மையான முகமும், ஒரிஜினல் ஐடியும் ஆசிரியரிக்கு தெரிந்திருப்பதாலும்,
      இங்கே ஆசிரியருக்கு ஆதரவாக பேசுவது போல நடிக்கும் தாங்கள்,
      உங்கள் பிளாக்கில் தாறுமாறக விமர்சிப்பதாலும்தான் உங்கள் கமெண்டுக்கு ஆசிரியர்
      பதிலளிக்காமல் தவிர்க்கிறாறோ......
      உங்கள் தேள் கதை என் பார்வையில் இப்படி தோன்றுகிறது. வாசகர்களை போட்டி வைத்து அலைகழித்து ஏமாற்றும் ஆசிரியரை தேளாகவும், கொட்டு வாங்கும் மனிதர் வாசகர்களாகவும்தான் தெரிகிறார்கள்.

      நல்லவனா வாழுவது எளிது, நடிப்பது கடினம் மரமண்டை...........
      நீங்கள் எவ்வளவு நடித்தாலும் உங்களை யாரும் நம்ப மாட்டார்கள்..........

      நேற்றுகூட நம் இருவருக்கும் பொதுவான நண்பரிடம் ஆசிரியரின் தவறுகளை மனோகர் தோலுறித்து காட்டுகிறார் என்று பெருமை பொங்க பேசியது யார்...... தாங்கள் தானே......

      Delete
    3. Manogar Palanisamy & நவீன வள்ளுவன் (3)

      //ஒவ்வொரு தனி புத்தகத்திற்கும் பார்சல் செலவும் சேர்த்துதான் சந்தா தொகை உள்ளது. 3 அல்லது 4 புத்தகங்களை ஒரு சின்ன கவரில் வைத்து கசக்கி, கிழித்து அனுப்புவது ஏன்?//

      சந்தா கட்டணம் நிர்ணயிக்கும் போதே ஒரு மாத வெளியீடுகளுக்கான அனைத்து புத்தகங்களுக்கும் ஒரே ஒரு கூரியர் சார்ஜ் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு நிர்ணயம் செய்துள்ளார். அப்படி இல்லாத பட்சத்தில் நமக்கு மாதம் மூன்று முறை, புத்தகங்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்திருப்பார். இதுபோல் சில புத்தகங்கள் ரெடியானப் பின்பும் கையில் வைத்திருந்து, மாதத்திற்கு ஒரு முறை கூரியர் செய்ய மாட்டார். எனவே அந்தந்த மாத வெளியீடுகள் அனைத்தும் ஒரே பார்சலாகத் தான் கூரியரில் ஒப்படைக்கப்படும் என்பது முன்பே நாமறிந்த உண்மை.

      மேலும், சந்தா நிர்ணயிக்கும் போது இருந்த கூரியர் சார்ஜ் தற்போது இரண்டு மடங்காகி விட்டது ; அடுத்த மாநிலத்திற்கு அதற்கும் மேலே அதிகமாகி விட்டது என்று ஆசிரியர் சில மாதங்கள் முன்பாகவே இங்கு பதிவிட்டிருந்தார்.

      இரண்டு சந்தா எனும் போது தனித்தனியாக இரண்டு கூரியர் பார்சல் மூலமாகத் தான் எங்களுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. சந்தேகம் இருந்தால் வேறு எவரிடமாவது விசாரித்துப் பார்க்கவும். இதுவரை புத்தகம் கிழிந்தோ ; அல்லது கூரியரால் பாதிக்கப்பட்டோ எனக்கு வந்ததில்லை. தவறி வந்தாலும் அதற்கு மாற்றுப் பிரதி அளிக்கும் நிறுவனமாக விஜயனின் காமிக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. எனவே அரைவேக்காட்டுத் தனமாகவும், இங்கு பார்வையிடும் வாசகர்களுக்கு தவறான அவதூறு கருத்தைப் பரப்புவதையும் முதலில் நீங்கள் இருவரும் நிறுத்த வேண்டும்.

      Delete
    4. Manogar Palanisamy & நவீன வள்ளுவன் (4)

      //அச்சுத்தரம் சரியில்லை என்று கூறினால், எங்களுக்கு எல்லாம் நல்லாதான் வந்திருக்கு, எது குறைபாடு என்று தெரியவில்லை என்று சில நண்பர்கள் கூறுவதால், எங்களுக்கு மட்டும் (சந்தாவிலோ, கடையிலோ) ஆசிரியர் குறைபாடுள்ள புத்தகங்களை கிடைப்பதுபோல் செய்வது ஏன்? //

      இதற்கு ஆசிரியர் முன்பே ஒரு முறை பதிலளித்து விட்டார். பிரிண்டிங் செய்யும் போது முதலில் வரும் 500, 600 ஷீட்கள் சற்று அச்சுக் குறைபாடோடு தான் வரும் என்றும் ; அந்தப் பிரதிகளை பைண்டிங் செய்ய கொடுக்க வேண்டாமென்றும் தன் பணியாளர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தி உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். அப்படியும் பணியாளர்களின் கவனக்குறைவால் ஏதும் தவறு நிகழ்ந்து விட்டால் அதற்கு மாற்றுப் பிரதியும் தாராளமாக தருகிறார். இதற்கு மேல் வேறு என்ன தான் செய்ய முடியும்? அதனால் தான் அனைவருக்கும் நல்லவிதமாக ; அச்சுக் குறைபாடற்று கிடைக்கும் புத்தகங்கள் ஏதோ எங்கோ ஒருவருக்கு குறையுடன் கிடைக்கிறது. அதற்கு மாற்றுப் பிரதி வாங்க ஒரே ஒரு ஃபோன் கால் போதும் என்ற நிலையில் இங்கு வந்து அபஸ்வரம் வாசிக்கிறீர்கள். அதுவுமல்லாமல் சென்ற மாத லார்கோ வின்ச் - அச்சுக் குறைபாடு என்பதே இல்லாமல் வந்தது. அதில் உள்ள கலரிங் பாணி தெரியாத காரணத்தினால் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே வண்ணம் வியாபித்துக் கிடப்பதாக கூச்சலிட்டனர் என்பது தனிக் கதை. இரவில் நடப்பதை நீல நிறத்தில் காட்டியதை அச்சுக் குறைப்பாடு என்று கூறியவர்களை என்னவென்று கூறுவது?

      முக்கிய குறிப்பு: இந்த பதில்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதும் சங்கு போன்ற முயற்சியல்ல. இங்கு பார்வையிடும் புதிய வாசகர்கள் யாரும் நமது ஆசிரியரைத் தப்பாக நினைத்து விடக் கூடாதே என்ற நோக்கத்தில் தான் பதிவிடுகிறேன்.

      Delete
    5. //இரண்டு சந்தா எனும் போது தனித்தனியாக இரண்டு கூரியர் பார்சல் மூலமாகத் தான் எங்களுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. சந்தேகம் இருந்தால் வேறு எவரிடமாவது விசாரித்துப் பார்க்கவும். இதுவரை புத்தகம் கிழிந்தோ ; அல்லது கூரியரால் பாதிக்கப்பட்டோ எனக்கு வந்ததில்லை. தவறி வந்தாலும் அதற்கு மாற்றுப் பிரதி அளிக்கும் நிறுவனமாக விஜயனின் காமிக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. எனவே அரைவேக்காட்டுத் தனமாகவும், இங்கு பார்வையிடும் வாசகர்களுக்கு தவறான அவதூறு கருத்தைப் பரப்புவதையும் முதலில் நீங்கள் இருவரும் நிறுத்த வேண்டும். //

      அட்டகாசம் பண்றப்பா மரமண்டை !

      Delete
    6. உங்கள் பிளாக்கில் போய் பழைய பதிவுகளை படித்தார்கள் என்றால், அனைத்து வாசகர்களும் ஆசிரியரை பற்றி தப்பாக நினைத்து விடுவார்களே......

      Delete
    7. //இரண்டு சந்தா எனும் போது தனித்தனியாக இரண்டு கூரியர் பார்சல் மூலமாகத் தான் எங்களுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. சந்தேகம் இருந்தால் வேறு எவரிடமாவது விசாரித்துப் பார்க்கவும். இதுவரை புத்தகம் கிழிந்தோ ; அல்லது கூரியரால் பாதிக்கப்பட்டோ எனக்கு வந்ததில்லை. தவறி வந்தாலும் அதற்கு மாற்றுப் பிரதி அளிக்கும் நிறுவனமாக விஜயனின் காமிக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. எனவே அரைவேக்காட்டுத் தனமாகவும், இங்கு பார்வையிடும் வாசகர்களுக்கு தவறான அவதூறு கருத்தைப் பரப்புவதையும் முதலில் நீங்கள் இருவரும் நிறுத்த வேண்டும். //

      அந்த சின்ன கவர் ஒரு புத்தகத்துக்குத்தான் சரியா இருக்கும். இந்த அழகில் இரண்டு சந்தாவுமா......

      இந்த பதில்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதும் சங்கு போன்ற முயற்சியல்ல

      இந்த குற்றச்சாட்டு நீங்கள் மறைமுகமாக ஆசிரியரை குறிப்பிடுவதுபோல் அல்லவா உள்ளது.

      Delete
    8. //முக்கிய குறிப்பு: இந்த பதில்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதும் சங்கு போன்ற முயற்சியல்ல. இங்கு பார்வையிடும் புதிய வாசகர்கள் யாரும் நமது ஆசிரியரைத் தப்பாக நினைத்து விடக் கூடாதே என்ற நோக்கத்தில் தான் பதிவிடுகிறேன்.//

      என்ன சொன்னாலும் புரியுற மாதிரி தெரிது , ஆனா புரிஞ்சுக்காதன்னு என் மனம் கூப்பாடு போடுதே என்ன செய்ய என்று ஒருவர் நவீன குரல் எழுப்புவாறே , மன்னியுங்கள் எழுதுவாரே ! நாங்க கணக்கு பாடம் படிக்கும் போது புரிஞ்ச மாதிரியே இருக்கும் , வீட்டுக்கு வந்தா எல்லாம் மறந்துரும் . வாத்திகிட்ட அடி வாங்கி கத்துகிட்ட எங்கள இங்கே விஜயன் எதிர்க்காமல் இருந்தால் உறைக்காதா . ஏதாவது திட்டினால் குளிர் காய்வோமே அதனையும் எரித்து .ஆசிரியர் எவ்வளவு சொன்னாலும் இன்னும் இன்னும் சொன்னால்தானே என கேட்டால் இங்கே இந்த தளத்தின் மேல் வெறுப்பை வளர்த்து . மூடிட்டாங்கப்பா நம்ம தளத்துக்கு பய புள்ளிக வரட்டும்னு சந்தோஷ பட முடியும் . அதானே . அட அதேதான் .

      Delete
    9. //அந்த சின்ன கவர் ஒரு புத்தகத்துக்குத்தான் சரியா இருக்கும். //
      மனோகரா உங்களுக்கு மட்டும் சின்ன கவரோ அல்லது பெரிய புத்தகமோ அனுப்பி வைக்கிறார் ! ஆசானே ,எங்களுக்கு அனுப்புவது போல இவர்களுக்கு ஒரு பெரிய கவரோ , இவர்களுக்கு அனுப்புவது போல எங்களுக்கு பெரிய புத்தகமோ ஒரு பார்சல் !

      Delete
    10. Manogar Palanisamy :

      படிச்சுப் படிச்சு சொன்னாத்தான் உங்களுக்கு புரியாதுன்னு எழுதியே சொல்லிட்டேன். என் பதில்கள் முடியும் வரை உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமையில்லையா? சும்மா குறுக்க குறுக்க வந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்ன கொடுமை சார் இது? காலையில் பதிவிட்ட உங்கள் பதிவுகளுக்கு நியாயமான விளக்கம் உங்களுக்கு தேவைப்படவில்லையா?!

      //உங்கள் பிளாக்கில் போய் பழைய பதிவுகளை படித்தார்கள் என்றால், அனைத்து வாசகர்களும் ஆசிரியரை பற்றி தப்பாக நினைத்து விடுவார்களே......//இந்த குற்றச்சாட்டு நீங்கள் மறைமுகமாக ஆசிரியரை குறிப்பிடுவதுபோல் அல்லவா உள்ளது//

      அட பாருடா, இந்த பயப் புள்ள எவ்வளவு உஷாரா இருக்கு ;) போன வாரம் செய்தது போல் மீண்டும் ஒரு முறை copy paste செய்து இங்கு போடுங்களேன். ஆசிரியர் உட்பட அனைவருக்கும் உண்மை தெரியட்டுமே. எனக்கே தெரியாத விஷயமெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கிற நீங்கள் படா கில்லாடி தான் போங்கள் ;) மேலும் உங்கள் தற்போதைய பதிவுகளைப் பார்க்கும் போது வைகைப் புயல் வடிவேலு ஞாபகத்தில் வருவதை தவிர்க்க முடியவில்லை ;) ஆடு திருடி பஞ்சாயத்தைக் கலாய்க்கும் வடிவேலுவுக்கும் உங்களுக்கும் மொத்தம் ஆறு வித்தியாசம் மட்டுமே உள்ளது ;)

      Delete
    11. நாங்க யார் தெரியுமா . நாங்க இல்லாட்டி ஆசிரியர் புத்தகமே வெளி விட்டிருக்க மாட்டார் . நாங்கள் கூறிய கருத்துக்களை , கதைகளை அப்பப்போ வெளி விட்டுதான் சம்பாதிக்கிறார் . ஏன் இந்த ப்ளாக்குகளே நாங்க கண்டு பிடிச்சதுதான் தெரியுமா . ஆசிரியர் நேற்று வந்து இந்த ஆட்டம் போடுறார் . கருத்துக்கள் குவியுது . எழுதாதீங்கன்னு நல்ல படியா சொன்ன எழுதுறாங்கன்னு பாத்தாச்சு . திட்டியும் பாத்தாச்சு . ஈ ஓட்டும் எங்க ப்லாக்குகளுக்கும் வந்து பாருங்கப்பா ! நாங்க சும்மா யோசிச்சு சொல்லுவோம் . அத ஆசிரியர் செஞ்சா சந்தோசம் இல்லனா இப்பிடித்தான் ஆ !

      Delete
  48. Vijayan8 June 2014 20:22:00 GMT+5:30
    ஜாலி ஜம்ப்பர் : சின்னதொரு திருத்தம் : தேர்வு லயனின் வெளியீடுகளுக்குள் இருந்து மாத்திரமே !


    இன்னா வாத்யாரே நீயி... முத்து, லயனுன்னு நான் இன்னாத்த கண்டேன் .... நமக்கு தெரிஞ்சதல்லாம் துன்றதுக்கு கொல்லு, படிக்றதுக்கு காமிக்கு அவ்ளோதான்... நீயி பதிலு சொல்லாங்காட்டி ஆளாளுக்கு நம்பள இன்னாமா டபாய்க்கறாங்கன்னு நீயே பாரு தல.... அத்தொட்டு இன்னா பண்றதுன்னு நீயே ஸொல்லு வாத்யாரே


    --- கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்31 May 2014 19:45:00 GMT+5:30
    3 பயங்கர நகரம்


    ஜாலி ஜம்ப்பர்1 June 2014 10:52:00 GMT+5:30
    டாங்சு அண்ணாத்த...

    அப்ப ரண்டாதும், அஞ்சாதும் ?

    Delete

    மதியில்லா மந்திரி1 June 2014 11:07:00 GMT+5:30
    அப்ப ரண்டாதும், அஞ்சாதும் ?...........சாய்ஸ்ல உட வேண்டியது தான்


    மிஸ்டர் மரமண்டை1 June 2014 20:57:00 GMT+5:30
    ஜாலி ஜம்ப்பர் :

    மிஸ்டர் ஜாலி ஜம்பருக்கு, நீங்கள் இங்கு பதிவிட்டிற்கும் புதிர் கேள்விகளுக்கு கடந்த 30 மணி நேரமாக யாரும் சரியான விடை அளிக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் தான் நான் இங்கு விடையளிக்க நேர்ந்தது. எனவே கிடைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அல்லது கொடுக்க நினைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அதை உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன். நன்றி.

    1.//மொதல்ல - தலவாங்கி கொரங்கு// சரியான விடை = King Kong

    2.//ரெண்டாவது - அவனுக்கு காதும் கேக்காது, வாயும் பேசாது... ஆனா பார்ட்டி படா கில்லாடி... யார்னா பேசுனா அவங்க ஒதடு அசயறத வச்சே, பார்ட்டி பலானது பேசுதுன்னு கண்டுபுட்ச்சு ஆள போட்டுறுவான்// சரியான விடை = வாலி - வில்லனாக வரும் அண்ணன் அஜித்திற்கு காதும் கேட்காது வாயும் பேசாது. ஆனால் படா கில்லாடி. அவங்க உதடு அசைவதை வைத்தே அடுத்தவர் பேசுவதை கண்டுப் பிடித்து விடுவான்.

    3.//எம்மாம்பெரிய டிரக் ஒண்ண எட்த்துக்கின்னு ரெண்டு தோஸ்த்துங்க, அவிங்களோட இன்னோர் தோஸ்த்த போட்டுதள்னவன போடறதுக்கு கௌம்புவாங்க - இது என்னா கதெ?// சரியான விடை = இணைந்த கரங்கள் - ராம்கியும், அருண் பாண்டியனும் ஒருடேங்கர் லாரியில் பாகிஸ்தான் சென்று பழி வாங்குவார்கள்.

    4.//நம்ம கிழவாடி கார்ரசனோட கயந்த காலம்பா// சரியான விடை = சேரனின் - ஆட்டோகிராப்

    5.//நம்ம பட்லர் டெஸ்மாண்டு புத்சா ஒரு லவ் மேட்டர்ல மாட்டி, அப்பால நம்ம பாசு ரிப்பு போய் காப்பாத்திகிட்டு இட்டுன்னு வருவாரு டெஸ்மாண்ட - இது என்னா கதெ?// சரியான விடை = காதல் கோட்டை - ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாமல் காதலிப்பார்கள். பார்க்காமலே காதல்.


    selvam abirami : மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி நண்பரே !


    SIV2 June 2014 13:37:00 GMT+5:30
    5 - காசில்லா கோடீஸ்வரன்? ?

    ஜாலி ஜம்ப்பர்2 June 2014 17:09:00 GMT+5:30
    மிஸ்டர் மரமண்டை :

    "மிஸ்டர் ஜாலி ஜம்பருக்கு, நீங்கள் இங்கு பதிவிட்டிற்கும் புதிர் கேள்விகளுக்கு கடந்த 30 மணி நேரமாக யாரும் சரியான விடை அளிக்கவில்லை"

    அக்காங்.. தல... ஆர சொல்லி இன்னாவுது பாரு? நானு ஒரு குத்ரையா போனதாங்காட்டி என்னிய ஒத்தரும்

    கண்டுக்க தாவல... அதே இத்தொட்டு ஜாலி ஜம்பருன்ற பேர்ல நியூஒர்லியன்சுல கீற செம்பட்ட தலகாரிதா நான்னு

    ஸொல்லிட்டுருந்தேன் வச்சுக்க... கண்டி இம்மாந்நேர்த்துக்கு நம்ம வாத்தியாருக்கு கூட பதில் ஸொல்ல ஒரு

    கமெண்டு ஒத்த ஆள் போட்ருக்க மாடடாங்க...

    அல்லாத்தையும் வுடு தல... சகஜம்... ஆனா நம்ம வாத்யாருகூட என்னிய கண்டுக்கலயே தொர...

    இவந்திங்கறது கொல்லு... நாம இன்னாத்துக்கு சொல்லணம் இவனுக்கு பதிலுன்னு நம்ம வாத்தியார் கூட என்னிய

    பகுள்ல மடிச்சு பீடாவா போட்னுடாரே...

    இதுல பிரைசு நீ வாங்கனா இன்னா, நான் வாங்னா இன்னா?

    ஸெரி தல....

    King Kong, வாலி, இணைந்த கரங்கள், ஆட்டோகிராப், காதல் கோட்டை - இதெல்லாம் இன்னாதிது? நக்கலு !!

    இதுக்கல்லாம் உன்க்கு நாஞ்சொல்ல மாட்டேன் பதிலு... எங்க பாசு, ஜாம்பஜார் ஜக்கு - அதான்பா நம்ம வாத்தியாரு

    ஸொல்வாரு கரீக்டா பதிலு....
    கண்டி உனக்கு அப்ப கீது எங்கைல

    ReplyDelete
    Replies

    மிஸ்டர் மரமண்டை2 June 2014 19:23:00 GMT+5:30
    சோக ஜம்ப்பர் :

    மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுவதில் நீங்கள் அந்த ஒரிஜினல் ஜாலி ஜம்பரையே மிஞ்சிட்டீங்க சார். உங்கள் ஆசை புரியுது, அதற்கான மூலக் காரணமும் தெரியுது. அதற்காக நீங்கள் சோக ஜம்பரா பதிவிடுவது மட்டுமே மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. கவலைப்படாதீங்க சார் உங்களுக்காக சில டிப்ஸ் கீழே ;

    //ஆர சொல்லி இன்னாவுது பாரு? நானு ஒரு குத்ரையா போனதாங்காட்டி என்னிய ஒத்தரும் கண்டுக்க தாவல//
    //இவந்திங்கறது கொல்லு... நாம இன்னாத்துக்கு சொல்லணம் இவனுக்கு பதிலு//

    *மிஸ்டர் ஜம்பர், நீங்கள் யானை இல்லை குதிரை, விழுந்தாலும் உடனே எழுந்து விடுவீர்கள்*
    *இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு*

    உங்கள் பாஸ் ஜாம்பஜார் ஜக்கு வை மிகவும் கேட்டதாக கூறவும். நன்றி

    ReplyDelete
  49. நான் கூறும் குற்றச்சாட்டுகள் ஆசிரியரை நோக்கி உள்ளது என்பதை தெரிந்து, அதற்கு ஆசிரியரே பதிலளிக்கட்டும் என்று மற்ற வாசகர்கள் அனைவரும் நாகரீகமாக ஒதுங்கியுள்ளார்கள்.

    ஒரு சிலர் மட்டும் சம்பந்தமில்லாமல் தேள் கதை, அது, இது என்று ஏன் ஆஜராகிறீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. என் மனதில் தோன்றிய சந்தேகங்களை ஆசிரியரிடம்தானே கேட்டுள்ளேன். உங்களிடம் அல்லவே? இல்லை காமிக்ஸ் வாசகன் என்ற முறையில் பதிலளிக்க வருவேன் என்றால்,
    முதலில் நான் கேட்ட 3 நியாயமான சந்தேகங்களுக்கு ஆசிரியரிடம் பதில் வாங்கி வாருங்கள்.
    நீங்கள் உண்மையான காமிக்ஸ் வாசகர்தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

    ஆசிரியர் என்னுடைய 3 சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வரை ஒவ்வொரு பதிவிலும் எனது நியாயமான கோரிக்கையை வைத்துக் கொண்டே இருப்பேன். இனி வேறு யாருக்கும் பதிலளிக்கும் நிலையில் நான் இல்லை.தயவு செய்து வாசகர்கள் வேறு யாரும் என்னை தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது, அதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றவுடன், அந்த குற்றச்சாட்டை கைவிடுவது தவறல்லவா? அதனால்தான் உண்மை என்னவென்று தெரியவரும் வரை எனது போராட்டம் தொடரும்.

    ஆசிரியருக்கு ஆதரவாக ஆக்ரோசமாக என்னிடம் சண்டையிட வரும் வாசகர்கள், 100 சதவீதமும் என்னை மட்டும் குற்றவாளியாக பார்க்காமல், ஒரு 5 சதவீதம் மட்டும் என் கோரிக்கைகளின் பக்கமும் உள்ள நியாயத்தை சிறிது ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் பல உண்மைகள் விளங்கும் என்பது நிச்சயம். நான் கோரிக்கை வைப்பது எனக்கு மட்டுமல்ல..... அனைத்து வாசகர்களுக்கும் சேர்த்தும்தான் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
    ................................................................................நன்றி............................................................................

    ReplyDelete
    Replies
    1. Manogar Palanisamy:

      //நான் கூறும் குற்றச்சாட்டுகள் ஆசிரியரை நோக்கி உள்ளது என்பதை தெரிந்து, அதற்கு ஆசிரியரே பதிலளிக்கட்டும் என்று மற்ற வாசகர்கள் அனைவரும் நாகரீகமாக ஒதுங்கியுள்ளார்கள்.ஒரு சிலர் மட்டும் சம்பந்தமில்லாமல் தேள் கதை,அது, இது என்று ஏன் ஆஜராகிறீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை//

      விஸ்கி - சுஸ்கி என்ற நண்பர் ஏற்கனவே இங்கு கூறியுள்ளது உங்களுக்கும் பொருந்தும். உங்களுடைய பதிவு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமானால் நீங்கள் அதை தனியே ஆசிரியருக்கு ஈமெயில் செய்வது நலம். அப்படியில்லை அனைவரின் விவாதத்திற்கும் உட்பட்ட பொது தளத்தில் தான் பதிவிடுவேன் எனும் போது, அது வாசகர்களின் கருத்து பரிமாற்றத்திற்கும் ; வாசகர்களின் அபிப்ராயத்திற்கும் உட்பட்டதாக மாறுதல் பெறுகிறது.

      மேலும், உங்களின் பதிவில் நீங்கள் பெரும்பான்மையான வாசகர்களின் சார்பாக பதிவிடுவதாகவும், அவர்களின் குறையை முன்னிறுத்துவதாகவும் பதிவிட்டுள்ளீர்கள். எனவே வாசகன் என்ற உரிமை இங்கு உள்ள அனைவருக்கும் இருப்பதால் எங்களுக்கு தெரிந்த நியாயத்தை முன்வைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, உங்களின் மூன்று சந்தேகங்களை இங்கு தனியாகப் பதிவிட்டால் அதற்குண்டான பதிலும் கிடைக்க வழிப்பிறக்கும் அல்லவா?

      Delete
    2. மனோகர் பழனிசாமி
      சில சமயம் ஆக்ரோசமான தடலடியான ஆசாமியாய் தோன்றுகிறீர்கள். சில சமயம் மிகவும் பக்குவபட்ட மனிதராய் காட்சியளிக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் 2ம் நிலையிலேயே இருங்கள் அதுதான் உங்களுக்கு நற்பெயரை வாங்கித்தரும். உங்கள் கோரிக்கைகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. அறவழியில் உங்கள் போராட்டம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

      Delete
    3. மனோகர் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருந்தாலும், நீங்கள் எடுத்த இந்த முடிவை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நீங்கள் ஆசிரியரை நோக்கி ஒருமுறைதான் குற்றவாளி என கூறினீர்கள். சிலரின் வளவள கொளகொள பதிவினால் ஆசிரியர் பலமுறை குற்றவாளி என் உச்சரிக்கப்பட்டு விட்டார். எனவே இதை இத்துடன் விட்டுவிடுங்கள்.
      ஆசிரியரிடம் யாராவது கேள்வி கேட்டால் அதை ஆசிரியரே பதிலளிக்க விட்டுவிடுவதுதான் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. மனோகரின் கேள்விகளுக்கு ஆசிரியரே பதிலளிக்கட்டும் என்று விட்டிருந்தால் பிரச்சினை பெரிதாக மாறி இருக்காது.
      சண்டைகளும், சச்சரவுகளும் டெக்ஸ் பார்த்துக் கொள்ளட்டும் நாம் அமைதியாக இருப்போம்.

      Delete
    4. RamKumar Ram:

      டியர் ராம்குமார், உங்களுக்கு ஆடத்தெரியாத காரணத்தினால் மேடை கோணல் என்று மீண்டும் ஒரு முறை இங்கு கூறிட வேண்டாமே. கேள்வி கேட்பது என்பது வேறு ; ஒருவரின் மனதை திட்டமிட்டு புண்படுத்துவது என்பது வேறு. குறைகளை கூறுவது என்பது வேறு ; நீ குற்றவாளி என்று ஆட்காட்டி விரலை நீட்டுவது என்பது வேறு. எனவே முதலில் இந்த விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டு பதிவிட்டிருக்க வேண்டும். அது என்ன ''சிலரின் வளவள கொளகொள பதிவினால்'' ? அடுத்த முறை சற்று கவனத்தோடு பதிவிடுங்கள்.


      //*என்ற அற்ப எண்ணம் உள்ள தாங்கள்..
      *தயவு செய்து அடுத்தவர்களின் மனதை புண்படுத்தி ரசிக்கும் குருர எண்ணத்தை கைவிடுங்கள்..
      *இந்த பதிவை இடுவதுகூட இதை படித்து நீங்கள் திருந்துவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல..
      *வாசகர்கள் விசயத்தில், நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் முட்டாள்கள் என்ற ரீதியில்தான் *வைத்துள்ளீர்கள்..
      *இந்த உண்மையே உங்கள் மனதை சுட்டிருக்கும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்..
      *குப்புற விழுந்தாலும் மீசையில் ஒட்டாத மாதிரி நடிப்பது எப்படி?..
      *செய்யும் தவறுகள் ஊராறால் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒன்றும் நடக்காததுபோல்..
      *இன்னும் இந்த ஊர் நம்மை நம்புது என்ற ரீதியில் வீராப்பாய் நடப்பது எப்படி?..//

      மேலே உள்ளது அனைத்தும், மனோகர் பழனிசாமி ஆசிரியருக்கு எழுதிய பதிவில் இருந்து உதாரணதிற்காக வெட்டி எடுக்கப்பட்டவை. இந்த வாக்கியங்கள் உங்களுக்கு கேள்வியாக தெரிந்தால் உங்களின் அறியாமையை என்னவென்று கூறுவது? ஆசிரியரை குற்றவாளி என்று ஒருவர் கூறும்போது உங்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம். ஆனால் எங்களுக்கு மிகவும் வருத்தமாக மட்டுமல்ல ; மிகவும் கோபமாக இருக்கிறது. மீண்டும் கூறுகிறேன் அடுத்த முறை சற்று அதிக கவனத்தோடு பதிவிடவும் - எல்லா விஷயத்திலும் !

      Delete
    5. // ஆசிரியரிடம் யாராவது கேள்வி கேட்டால் அதை ஆசிரியரே பதிலளிக்க விட்டுவிடுவதுதான் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. மனோகரின் கேள்விகளுக்கு ஆசிரியரே பதிலளிக்கட்டும் என்று விட்டிருந்தால் பிரச்சினை பெரிதாக மாறி இருக்காது.//
      +1

      Delete
    6. Parani from Bangalore:

      மிஸ்டர் பரணி, உங்கள் பதிவுக்கு மேலேயுள்ள என் பதிவை படித்து விட்டுத் தான் இந்த + 1 ஐ போட்டீர்களா?

      Delete
    7. //முதலில் நான் கேட்ட 3 நியாயமான சந்தேகங்களுக்கு ஆசிரியரிடம் பதில் வாங்கி வாருங்கள்.
      நீங்கள் உண்மையான காமிக்ஸ் வாசகர்தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.//
      நண்பர் மனோகரன் பழனிச்சாமி அவர்களே இவை அனைத்துமே ஆசிரியர் ஆங்காங்கே சில முறை அளித்த பதில்களே அவற்றை நீங்கள் உங்கள் முறையில் கேட்டீர்கள் , இவர்கள் தங்கள் முறையில் பதிலளித்துள்ளார்கள் . ஒரு மண்டையில் பூ பூத்திருக்கிறது அழகாய் . புதிய குற்றச்சாட்டு ஏதேனும் இருந்தால் கூறுங்கள் நண்பர்களே , ரசிக்க இன்னும் ஏராளம் உண்டு போலும் .

      Delete
    8. சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இவர்கள் கூறும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என் கண்களுக்கு தெரிவதில்லை பாதி படிக்கும் போதே அந்த வரிகளை யூகிப்பது காரணமாய் இருக்கலாம் . நான் எழுத்து பிழை இல்லாமல் எழுதுகிறேன் என்றால் அன்று படித்த எழுத்து பிழை இல்லாத உங்கள் கதைகளே . தமிழை கற்க சில சிறுவர்களுக்கு வாங்கி கொடுக்கும் நண்பர்களும் உண்டு . ஆகவே இந்த விசயத்தில் சற்று கூடுதல் கவனம் எடுக்கவும் .

      Delete
    9. //Parani from Bangalore9 June 2014 18:17:00 GMT+5:30

      // ஆசிரியரிடம் யாராவது கேள்வி கேட்டால் அதை ஆசிரியரே பதிலளிக்க விட்டுவிடுவதுதான் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. மனோகரின் கேள்விகளுக்கு ஆசிரியரே பதிலளிக்கட்டும் என்று விட்டிருந்தால் பிரச்சினை பெரிதாக மாறி இருக்காது.//
      +1//

      சூப்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு) சார்.

      Delete
    10. அருண் அய்யா, இது உங்களுக்கும் பொருந்தும்!

      Delete
  50. நண்பர் மனோகர் பழனிசாமி அவர்களுக்கு...

    1) பெயர் மற்றும் லோகோ போட்டி என்று வைத்துவிட்டு வாசகர்களை ஏமாற்றுவது ஏன்?

    போட்டி வைத்தார். சரி. ஆனால் இதில் என்ன ஏமாற்று வேலை உள்ளது? இறுதி முடிவு என்பது ஆசிரியர் என்பவருக்கான தனி உரிமை அல்லவா?

    2) அச்சுத்தரம் சரியில்லை என்று கூறினால், எங்களுக்கு எல்லாம் நல்லாதான் வந்திருக்கு, எது குறைபாடு என்று தெரியவில்லை என்று சில நண்பர்கள் கூறுவதால், எங்களுக்கு மட்டும் (சந்தாவிலோ, கடையிலோ) ஆசிரியர் குறைபாடுள்ள புத்தகங்களை கிடைப்பதுபோல் செய்வது ஏன்?

    அச்சகத்துறையில் சிறிதளவு அனுபவம் உள்ளது என்பதன் அடிப்படையில் கூறுகிறேன். இவைகளெல்லாம் குறைகளே அல்ல. அப்படியும் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் வேறு பிரதிகள் கேட்டு, அவை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் தானே குற்றம் கூற முடியும்?

    3) ஒவ்வொரு தனி புத்தகத்திற்கும் பார்சல் செலவும் சேர்த்துதான் சந்தா தொகை உள்ளது. 3 அல்லது 4 புத்தகங்களை ஒரு சின்ன கவரில் வைத்து கசக்கி, கிழித்து அனுப்புவது ஏன்?

    புத்தகங்கள் கிழிந்து, கசங்கி என்பது உங்கள் முதல் கவலை அல்ல... தனி புத்தக பார்சல் செலவை மீதி செய்கிறார்கள் என்பதுதான் அல்லவா?

    தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தமிழ் காமிக்ஸ் பதிப்பாளர்களாக பல பேர் களம் கண்டார்கள். ஆனால் எஞ்சியவர் நமது ஆசிரியர் மட்டுமே. மற்றவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. என்ன காரணம்? ஒன்றே தான். கையைக் கடிக்கும் லாப விகிதம் மட்டுமதான். அப்படியானால் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்சுக்கு மட்டும் என்ன லாபம் கொட்டியதா? சமீப காலமாக மட்டும் என்றால் சிறிதளவு லாபம் வந்திருக்கலாம். முன்பு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா?
    வெளி நாட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய உரிமைத்தொகைகள், பயணச் செலவுகள் போன்றவற்றை எல்லாம் எதில் இருந்து சார் பெற்றிருப்பார் அவர்? சில சமயங்களில் அவைகள் எல்லாம் புத்திகொள்முதல் ஆக இருந்திருக்குமே? அதற்கெல்லாம் வைக்கவா சார் முடியும் விலை?

    சார் உரிமையுடன் கோருகிறேன்... இவைகளெல்லாம் சின்னஞ்சிறு குறைகள்.... காமிக்ஸ் என்னும் கலர் கண்ணாடிகளை கொண்டு பாருங்கள்... ஆசிரியரின் காமிக்ஸ் மீதான காதல் தெரியும்...

    ReplyDelete
  51. லார்கோ கதையில் அச்சில் நான் குறை என நினைப்பது, நண்பர்கள் பார்வைக்கும் நமது ஆசிரியர் கவனத்திற்கும்

    பக்கம்-52
    1. வரிசை 1 படம் 1
    ஜன்னல் அருகே தெரியும் செடியில் நீளவாக்கில் முட்டை வடிவில் வண்ணத்தில் தெரியும் வித்தியாசம் (அந்த இடம் மட்டும் வெளீர் பச்சை நிறத்தில் தெரிவதை கவனிக்கவும்)
    2. வரிசை-2 படம்-1
    லார்கோ அருகே உள்ள நண்பரின் கோட்டில் கை பகுதியில் தெரியும் நீள் முட்டை வடிவில் தெரியும் வண்ண மாற்றம்.
    3. வரிசை-3 படம்-1
    நீரின் நடுவில் நீள் முட்டை வடிவில் தெரியும் வண்ண மாற்றம், அந்த இடம் மற்றும் கிளி பச்சை நிறத்தில் தெரிகிறது.

    பக்கம்-52
    4.வரிசை-3 படம்-2
    லார்கோவின் இடுப்பு பகுதியில் (இடை பெல்ட் அருகே) பாத்-டப் கலரில் தெரிவதை கவனிக்கவும்.

    பக்கம்-64
    5.வரிசை-1 படம்-1
    இன்ஸ்பெக்டர் முதுகில் தெரியும் வண்ண மாற்றம்.
    6.வரிசை-1 படம்-2
    உயர் போலீஸ் அதிகாரியின் பின் பக்க கோர்ட்டில் நடுவில் தெரியும் திரைசேலையின் வண்ணம்.
    7.வரிசை-2 படம்-1
    லார்கோ முடியின் பின் பகுதியில், பின்னால் உள்ள ஜன்னலின் மர சட்டத்தின் கலரை தெரிகிறது.
    இந்த பக்கத்தில் (64-65) மேலும் பல இடம்களில் வண்ணம்கள் சிதறி உள்ளதை பார்க்கலாம்.

    பக்கம்-68
    8.வரிசை-2 படம்-1
    லார்கோ அமர்ந்து இருக்கும் நாற்காலின் பின்புறம் இரண்டு வண்ணத்தில் தெரிவதை பார்க்கலாம்.
    9.வரிசை-3 படம்-2
    குஸ்தாவ் கோர்டின் தோள்பட்டை வரை ஒரு கலரும் கீழ் பகுதி வேறு வண்ணத்தில் தெரிவதை காணலாம்.

    இதனை பற்றி மேலும் இங்கு வாதிட விரும்பவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் கூறிய குறைகள் ஏதும் எனது புத்தகத்தில் இல்லை ! ஆனால்
      //9.வரிசை-3 படம்-2
      குஸ்தாவ் கோர்டின் தோள்பட்டை வரை ஒரு கலரும் கீழ் பகுதி வேறு வண்ணத்தில் தெரிவதை காணலாம்.//
      அந்த கட்டம் முழுவதும் பாருங்கள் அது நிழலின் விளையாட்டு ! ஓவியரின் கை வண்ணம் என நினைக்கிறேன் . இதே வரிசையில் முதல் படத்தில் தோல் பட்டை அருகே ஜாம் கொட்டிய வண்ணத்தில் போல ஒரு சிறிய திலகம் போல மாற்றம் மட்டுமே உள்ளது ! காலையில் பேசுவோம் !

      Delete
    2. அந்த நாற்காலியின் இரு வண்ணம் லார்கோவின் பின் தலை பாருங்கள் இதுவும் கூட ...ஏதோ உணர்த்துகிறது . பிழை போல தெரியவில்லை !

      Delete
    3. You are right Parani from Bangalore....
      These things should be sort out immediately..

      Delete
    4. பரணி ஃப்ரம் பெங்களூருவின் குறைகள் (அதாவது அவர் கண்டுபிடித்த குறைகள் - நண்பர் பரணி எடிட்டர் விஜயன் அவர்களின் ப்ளாக்கில் எழுதிய கமெண்ட்)

      ஒருவரை பற்றி குறை கூறும்போது / குற்றம் சாட்டும்போது அந்த குறையோ / குற்றமோ உண்மையானதுதானா? நாம் சொல்வது சரிதானா? என்று ஒருமுறைக்கு இருமுறை சரியாக செக் செய்தபின்னரே பொதுவில் அவற்றை வைக்கவேண்டும்.

      ஆனால் நண்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு) இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை. அவர்பாட்டுக்கு ஏதோ என் புருஷனும் சண்டைக்கு போனான் என்பதைப்போல இந்த கதையின் ஒரிஜினலில் இதே போல இருக்கிறதா இல்லை நம்ம எடிட்டர்தான் தவறாக ப்ரிண்ட் செய்துவிட்டாரா? என்றெல்லாம் கொஞ்சம் கூட யொசிக்கவே இல்லை.

      உடனடியாக அவரை குற்றவாளி கூண்டில் ஏற்றி விட்டார். அடுக்கு மொழியில் அடுத்தடுத்த பதிவுகளில் இவர் ப்ரிண்டிங் சரி இல்லை, ப்ரிண்டிங் சரி இல்லை என்று சொல்லிகொண்டே வந்தார்.

      ஆனால் எந்த இடத்தில் இது சரி இல்லை என்பதை அவர் சொல்வதே இல்லை. பொத்தாம் பொதுவாக அச்சுத்தரம் சரி இல்லை, அச்சுத்தரம் சரி இல்லை என்பதே இவருடைய கமெண்ட் ஆக இருக்கும். இதைப்பார்த்த என்னுடைய அலுவலக நண்பர் “ என்னப்பா, உங்க காமிக்ஸ் எடிட்டர், தப்பும் தவருமாக ப்ரிண்ட் செய்கிறாரா?” என்றெல்லம் என்னை கிண்டல் செய்தார்.

      அந்த கடுப்பில் நேற்று இரவு பரணி (ஃப்ரம் பெங்களூரு) சாரிடம் (கொஞ்சம் சூடாகவே) ஒரு கேள்வி கேட்டேன். அதாவது குறிப்பாக எந்தெந்த இடங்களில் ப்ரிண்டிங் சரி இல்லை என்பதை சொல்லுங்கள் என்று.

      (பஸ்சில் இருந்து இறங்கிய) பரணி (ஃப்ரம் பெங்களூரு) சார் உடனே இந்த கமெண்ட்டை இட்டார்.


      //லார்கோ கதையில் அச்சில் நான் குறை என நினைப்பது, நண்பர்கள் பார்வைக்கும் நமது ஆசிரியர் கவனத்திற்கும்

      பக்கம்-52
      1. வரிசை 1 படம் 1
      ஜன்னல் அருகே தெரியும் செடியில் நீளவாக்கில் முட்டை வடிவில் வண்ணத்தில் தெரியும் வித்தியாசம் (அந்த இடம் மட்டும் வெளீர் பச்சை நிறத்தில் தெரிவதை கவனிக்கவும்)
      2. வரிசை-2 படம்-1
      லார்கோ அருகே உள்ள நண்பரின் கோட்டில் கை பகுதியில் தெரியும் நீள் முட்டை வடிவில் தெரியும் வண்ண மாற்றம்.
      3. வரிசை-3 படம்-1
      நீரின் நடுவில் நீள் முட்டை வடிவில் தெரியும் வண்ண மாற்றம், அந்த இடம் மற்றும் கிளி பச்சை நிறத்தில் தெரிகிறது.

      பக்கம்-52
      4.வரிசை-3 படம்-2
      லார்கோவின் இடுப்பு பகுதியில் (இடை பெல்ட் அருகே) பாத்-டப் கலரில் தெரிவதை கவனிக்கவும்.

      பக்கம்-64
      5.வரிசை-1 படம்-1
      இன்ஸ்பெக்டர் முதுகில் தெரியும் வண்ண மாற்றம்.
      6.வரிசை-1 படம்-2
      உயர் போலீஸ் அதிகாரியின் பின் பக்க கோர்ட்டில் நடுவில் தெரியும் திரைசேலையின் வண்ணம்.
      7.வரிசை-2 படம்-1
      லார்கோ முடியின் பின் பகுதியில், பின்னால் உள்ள ஜன்னலின் மர சட்டத்தின் கலரை தெரிகிறது.
      இந்த பக்கத்தில் (64-65) மேலும் பல இடம்களில் வண்ணம்கள் சிதறி உள்ளதை பார்க்கலாம்.

      பக்கம்-68
      8.வரிசை-2 படம்-1
      லார்கோ அமர்ந்து இருக்கும் நாற்காலின் பின்புறம் இரண்டு வண்ணத்தில் தெரிவதை பார்க்கலாம்.
      9.வரிசை-3 படம்-2
      குஸ்தாவ் கோர்டின் தோள்பட்டை வரை ஒரு கலரும் கீழ் பகுதி வேறு வண்ணத்தில் தெரிவதை காணலாம்.

      இதனை பற்றி மேலும் இங்கு வாதிட விரும்பவில்லை. //

      இதில் இருக்கும் எல்லா கட்டங்களையும் பொறுமையாக சோதித்து விட்டேன்.

      அதாவது சினிபுக் இதழில் இருக்கும் பக்கங்கள் + நமது லயன் காமிக்ஸ் இதழிலிருக்கும் பக்கங்கள் (என்னுடைய செல்போனில் எடுக்கப்பட்ட படங்கள், ஸ்கான்னர் இல்லை, மன்னிக்கவும்) இரண்டையும் அருகில் வைத்துக்கொண்டு.

      எல்லா படங்களையும் இடாமல் இரண்டே இரண்டு படங்களை மற்றும் இங்கே

      பக்கம்-64
      5.வரிசை-1 படம்-1
      இன்ஸ்பெக்டர் முதுகில் தெரியும் வண்ண மாற்றம்
      .





      பக்கம்-68
      9.வரிசை-3 படம்-2
      குஸ்தாவ் கோர்டின் தோள்பட்டை வரை ஒரு கலரும் கீழ் பகுதி வேறு வண்ணத்தில் தெரிவதை காணலாம்.


      அதாவது ஒரிஜினல் கதையிலேயே ஒவியர் + வண்ணம் சேர்க்கும் கலைஞர் செய்து இருப்பதை ஒரளவுக்கு அப்படியே ப்ரிண்ட் செய்யும் எடிட்டர் விஜயன் அவர்கள் இனிமேல் இதையேல்லாம் கூட பரணி (ஃப்ரம் பெங்களூரு) சாரிடம் கேட்டுக்கொண்டு இந்த “குறைகளை” சரி செய்வது “ நல்லது”.

      இதுதான் பரணி (ஃப்ரம் பெங்களூரு) சாரின் “கண்டுபிடிப்புகள்”.

      வாழ்துக்கள் பரணி (ஃப்ரம் ப்ரம் பெங்களூரு) சார்.

      //இதனை பற்றி மேலும் இங்கு வாதிட விரும்பவில்லை. //

      அதுசரி.

      Delete
    5. இந்த பதிவில் சரியாக காண முடியாதவர்கள் என்னுடைய இந்த வலைதள பதிவில் சென்று பாருங்கள்.

      லின்க்: அருண் ப்ளாக்

      நண்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு) பொதுவில் இப்படி எல்லாம் எழுதுவதற்க்கு என்னை மன்னிக்கவும். இருந்தாலும் இது இங்கே பதிவிடல் அவசியம்.

      ஏனென்றால் உங்கள் கருத்தை படிக்கும் என்னைபோன்ற மௌன பார்வையாளர்கள் 30 வருடங்களாக அச்சுத்துறையில் இருக்கும் எடிட்டர்தான் எதோ தவறாக அச்சிடுவதாகவும், உங்களைப்போன்ற “எக்ஸ்பெர்ட்கள்” என்னதான் எடுத்து சொன்னாலும் அதை சரி செய்யாத “திமிர்” பிடித்தவராகவும் தெரிகிறார்.

      ஆனால் உண்மை என்ன? ஒரிஜினல் கதையில் எப்படி வண்ணம் இருக்கிறதோ அப்படித்தானே ப்ரிண்ட் செய்ய முடியும்? அதைத்தானே எடிட்டர் செய்கிறார்? அது எப்படி தவறாகும்?

      பின்குறிப்பு: நண்பர் அஹ்மத் பாஷா:

      //AHMEDBASHA TK10 June 2014 00:44:00 GMT+5:30

      You are right Parani from Bangalore....
      These things should be sort out immediately..//

      உங்க ஊர்க்காரர் என்ன சொன்னாலும் சரிதானா? அதை கொஞ்சம் கவனித்து விட்டு ஆமாம் சாமி போடக்கூடாதா சார்?

      Delete
    6. ஏற்கனவே ஒரு முறை (பண்ருட்டி செந்தில்) என்பவர் நிழல் 1 நிஜம் 2 என்ற சிக்பில் கதையை நமது ஆசிரியரே வரைந்து வெளியிட்டதாக குற்றம் சாட்டினார். அதற்க்கு தன்னிடம் ஆதாரம் வேறு இருப்பதாக கூறியது தனி காமெடி.

      பின்னர் என்ன நடந்தது என்பதைத்தான் நாம் எல்லோருமே அறிவோமே? ( நிழலும் ஒன்றே...நிஜமும் ஒன்றே...! ).

      அப்போது எடிட்டர் விஜயன் சார் சொன்னது இதுதான்: //எந்த ஒரு விஷயத்துக்கும் இரு பக்கங்கள் இருக்க வாய்ப்புண்டு என்ற consideration நண்பருக்கு இல்லாததும் ; என் தரப்பு நிஜங்களை முன்வைக்க சந்தர்ப்பம் தராமலே "உண்மை என்ன ?" என்று கேள்வி எழுப்புவதும் - தீர்ப்பை முதலிலேயே எழுதி முடித்து விட்டு சம்பிரதாயத்துக்காக வாதங்களைக் கேட்பது போல் உள்ளது !//

      கிட்டதட்ட இதையேத்தான் நண்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு)யும் செய்துள்ளார். அச்சுத்தரம் குறை, அச்சுத்தரம் குறை என்று கூறினாரே தவிர அதனை ஒருமுறை உண்மையிலேயே குறைதானா என்பதை சரிசெய்துக்கொள்ள அவருக்கு தோணவில்லை.

      இப்படி அவசரப்பட்டு வார்த்த்தைகளை விடவேண்டிய அவசரம் என்ன என்பதுதான் எனக்கு புரியவில்லை.

      நாம் அவசரமாக ரோட்டில் போய்க்கொண்டு இருக்கும்போது, பின்னால் சந்து ஒருவர் நம்மை இடித்துவிட்டால், உடனடியாக அவரை கொபத்துடன் திட்ட திரும்புகிறோம். ஆனால் அவர் நமக்கு தெரிந்த நபர் என்றால் அந்த கோபம் உடனே காணாமல் போய் “என்ன சார்? பார்த்து வரக்கூடாதா?” என்று கேட்கிறோம்.

      குறைந்தபட்சம் அந்த அளவுக்கான கன்சிடரேஷன் கூட நம் எடிட்டரிடம் காட்டாதது ஏனோ பரணி (ஃப்ரம் பெங்களூரு) சார்?

      ஒரெ ஒரு முறை குற்றம் சாட்டுவதற்க்கு முன்பாக அது சரிதானா? உண்மையிலேயே அது குறைதானா என்பதையெல்லாம் சரிபார்க்ககூடாதா?

      ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுபவர்கள் மீது அவதூறு வழக்கை போடலாம் என்பது இந்திய சட்ட அமைப்பு நமக்கு அளித்துள்ள வசதி.

      இருந்தாலும் நண்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு) நமது காமிக்ஸ் நண்பர் என்பதால் அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே: இன்மேலாவது ஒருவரை குற்றம் சாட்டும்போத் அது சரிதானா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள் சார்.

      நான் சொல்லி இருந்தது உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஜீரணிக்க சற்று கஷ்டமாகவே இருக்கும் (சில இடங்களில் கடின சொற்களை உபயொகப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்), ஆனால் இந்த பதிவுக்கு, உங்கள் குற்றச்சாட்டுக்கு அவை அத்யாவசியம்.

      Delete
    7. நாம் எல்லோருமே அறிந்த தெனாலிராமன் கதை ஒன்று உள்ளது.

      மன்னருக்கு ஜோசியம் பார்த்த ஜோசியரை மன்னர் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுவார்.

      காரணம்? ஜோசியர் சொன்ன விஷயம்: ”மன்னரே, உங்கள் க்ண்முன்னேயே உங்கள் வாரிசுகள் அனைவருமே இறந்துவிடுவார்கள்”.

      இதைகேள்விப்பட்ட தெனாலிராமன், அவரும் ஒரு ஜோசியர் போல வெடமிட்டு மன்னரிடம் செல்வார். அவர் “ மன்னரே, உங்கள் ஆயுள் மிகவும் அதிகம். உங்கள் பரம்பரையிலேயே உங்களுக்குத்தான் ஆயுசு அதிகம். இவ்வளவு ஏன்? உங்கள் வாரிசுகளைவிட உங்களுக்குத்தான் ஆயுள் அதிகம்” என்பார்.

      மன்னர் அகம் மகிழ்ந்து, என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, தெனாலிராமன் வேடத்தை கலைந்து, இதற்க்கு முன்பாக ஜோசியம் சொன்னவரை விடுதலை செய்ய கோருவார். ஏனென்றால் அந்த ஜோசியர் சொன்னதும், தெனாலிராமன் சொன்னதும் ஒரே விஷயம்தான். ஆனால் சொன்ன விதம்தான் வேறு.

      அதைப்பொலவே, தீர்ப்பை ஏற்கனவே எழுதாமல், “எடிட்டர் சார், என்னிடம் இருக்கும் புத்தகத்தில் இப்படி சில படங்கள் உள்ளது, அவை ஒரிஜினலிலேயே அப்படித்தானா? அல்லது ப்ரிண்டிங் குறைபாடா?” என்றும் கூட கேட்டு இருக்கலாம்.

      அதைவிட்டு விட்டு, அச்சுத்தரம் குறை, அச்சுத்தரம் குறை என்று சொல்லிக்கொண்டே போவது, அது குறைதானா என்பதுகூட தெரியாமலே இங்கே வந்து பொதுவில் குற்றம் சாட்டுவது, அதனை கேட்டால் “ இதற்க்குமேல் இதனை விவாதிக்க விருப்பம் இல்லை” என்று சொல்லிவிட்டு போவது...... கொஞ்சம் யோசித்து பாருங்கள் பரணி (ஃப்ரம் பெங்களூரு) சார்.

      நமது நாட்டில் தீர்ப்பு சொல்லும் நீதிபதிக்கூட இருதரப்பு வாதங்களை விசாரித்துவிட்டுதான் முடிவே எடுப்பார். அப்படி இருக்க, இரண்டாவது தரப்பின் விவாதங்களை கேட்காமலேயே ஒருவர் தீர்ப்பு சொல்வதும், அதனை அவரது நண்பர்கள் எல்லாம் +1 போட்டு ஆதரிப்பதும், ...........

      கடுப்பேத்துராங்க.. மை லார்ட்.

      Delete
    8. அருமையான அணுகுமுறை நண்பரே..
      ரசித்தேன்..
      ஆனால் பிரின்டிங் தரம் 2010 போல் இல்லை என்று புலம்ப ஆரம்பித்தவனே அடியேன் தான் என்றிருக்கும் பொழுது நான் ஆமாம் சாமி போட்டதாக நீங்கள் நினைத்து விட்டது சரிதானா?

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. வாதப்பிரதிவாதங்களால் மறந்தே போனேன். கார்சனை கட்டி வைத்திருக்கும் அந்த கார்சனின் கடந்த காலம் விளம்பரம் பிரமாதம்...

    ReplyDelete
  54. //வழக்கமான கட்டைவிரலை மாத்திரமின்றி கணுக்காலையும் சேர்த்து தொண்டைக்குள் இம்முறை திணித்துக் கொண்டு ஒற்றைக் காலிலேயே உலா வரும் சாகசத்தை கடந்த 4 வாரங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் படித்து வருவதால் ஒரு விதமான "பாலே பாண்டி" ஆகி விட்டதாக உணர்கிறேன் //

    வணக்கம் சார்! விரைவில் "முப்பது நாட்களில் இறக்கையில்லாமல் பறப்பது எப்படி" என்று ஒரு புத்தகம் எழுதவேண்டி வரலாம். அதனால் "ஒற்றை காலில் பாலே நடனம் ஆடுவதேல்லாம் ஒரு மேட்டரா??" என நாங்கள் LMS சுக்கு அப்புறம் எப்படியும் நாங்கள் ஆரம்பித்து விடுவோம். இப்போதே மாதத்துக்கு ஒரு சாகசம் செய்ய தயாராகவும். :-)))!

    // ஷவருக்கு அடியே நிற்கும் போது - 'அட..லக்கி கதையில் அந்த வசனத்தை இப்படிப் போட்டிருக்கலாமே ?!' என்ற சிந்தனை ! அண்டை வீட்டாரின் திருமணத்துக்கு மனைவியோடு போனால் என் கண்ணுக்கு பெண்ணோ - மாப்பிள்ளையோ தெரியக் காணோம் - டைலன் டாக்கும், அந்தி மண்டலத்தில் உலவும் பிறவிகளுமே எனக்குக் காட்சி தருகிறார்கள் ! ஆபீசில் பிற பணிகளுக்காக என்னை சந்திக்கும் நபர்களிடம் என் உதடுகள் ஏதோ பேசினாலும், என் தலைக்குள்ளே டெக்சும், கார்சனும் பேசும் டயலாக் வெள்ளோட்டம் தான் ஓடுகின்றது//

    உங்கள் ஒருவருக்கு இந்த தொல்லை என்றால் எங்கள் ஆயிரம் பேருக்கு LMS அறிவித்ததிலிருந்தே காணும் இடமெல்லாம் காமிக்சே எனும்படியாக மந்திரித்து விட்டது போல நாங்கள் சுற்றிக்க்கொண்டிருப்பதற்கு ஒரு மருந்து எங்களுக்கு வேண்டாமா? உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் ஒரே மருந்து LMS தானே?? இப்படி தொட்டு தொட்டு விளையாடுவது செமயாக இருக்கு சார்! :-)))!

    // இதோ - அந்த இதழுக்கு நமது ஓவியர் போட்டுள்ள சித்திரத்தின் முதல் பார்வை ! //

    அட்டை அருமையாக இருக்கிறது. கார்த்திக் சுட்டிக்காட்டியது போல இரு பேனல் டிசைன் ரசிச்சு பல ஆண்டுகள் ஆச்சு. முன்னட்டையில் புக் FAIR ஸ்பெசல் ன்னு போடறதுக்கு பதில் மேஜிக் வின்ட் அறிமுகம் அப்படின்னு பெருசா போட்ட அருமைய இருக்கும். புக் FAIR ரை விட மேஜிக் வின்ட் அறிமுகம் எனபது SENSATIONAL விஷயம் இல்லையா??

    //அமெரிக்காவில் வெளியான இதழின் ராப்பர் அற்புதமாய் இருந்த போதிலும்//

    அதை இங்கே வெளியிட்டால் அனைவரும் ரசிக்கலாமே சார்!

    ReplyDelete
  55. திரு கிங் விஸ்வா அவர்களின் கட்டுரையை
    படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

    பொதுவாக பத்திரிகைகள் பிராந்திய வாரியாக
    பதிப்பிக்கபடுவதால் இப்பகுதியில் கட்டுரை
    வெளியாகி உள்ளதா என தெரியவில்லை .

    ஏஜெண்ட்டிடம் 8-ம் தேதி நாளிதழ் கேட்டு
    இருக்கிறேன் .அப்படி இருந்தால் கட்டுரை
    பகுதியை இங்கு காப்பி செய்ய விஸ்வா விடம்
    அனுமதி கோருகிறேன் .(அப்படி செய்வது
    பத்திரிகை சட்டங்களுக்கு எதிரானதா ?)

    ReplyDelete
  56. எடிட்டரின் செயல்பாடுகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதைச் சுட்டிக்காட்டிட இங்கே தடையேதுமில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான மெளனப்பார்வையாளர்கள் நாள்தோறும் பார்வையிடும் இத்தளத்தில் எடிட்டரை அற்ப எண்ணம் கொண்டவராகவும், குரூர எண்ணம் கொண்டவராகவும் சித்தரிக்கப்படுவதை துளியும் சகித்துக்கொள்ள முடியாது. அற்பக் குறைகளுக்கு காழ்ப்புணர்வை காட்டும்படியான வார்த்தைப் பிரயோகங்கள் ரொம்பவே அதிகப்படியானவை.

    குறைகூறும் நண்பர்கள் வார்த்தைகளில் கண்ணியம் காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். :(

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் சார்:

      //எடிட்டரின் செயல்பாடுகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதைச் சுட்டிக்காட்டிட இங்கே தடையேதுமில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான மெளனப்பார்வையாளர்கள் நாள்தோறும் பார்வையிடும் இத்தளத்தில் எடிட்டரை அற்ப எண்ணம் கொண்டவராகவும், குரூர எண்ணம் கொண்டவராகவும் சித்தரிக்கப்படுவதை துளியும் சகித்துக்கொள்ள முடியாது. அற்பக் குறைகளுக்கு காழ்ப்புணர்வை காட்டும்படியான வார்த்தைப் பிரயோகங்கள் ரொம்பவே அதிகப்படியானவை//

      இதை சொன்னால் நம்மை கூஜாக்கள், சொம்பு தூக்கிகள், ஜால்ராக்கள் என்று வசைபாட ஆரம்பித்து விடுவார்கள்.

      Delete
    2. இப்படிதான் அந்த சொம்பு தூக்கிகள் பிதற்றுவார்கள் ! பதிலடி அவ்வப்போது கொடுப்போம் ! கண்ணியம் காருங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்காதீர்கள். வழக்கம் போல உற்ச்சாக பதிவுகளை தெளியுங்கள் விஜய்.

      Delete
    3. சித்தரிக்கப்படுபவை அனைத்தும் எப்போதும் உண்மையல்ல விஜய் . மௌனப்பார்வையாளர்கள்

      அனைவரும் உண்மையை நன்கு அறிவார்கள்.

      Delete
  57. இன்றைய சமூகம்:

    சம்பவம் 1: மார்கழி குளிரில் நடுங்கி கொண்டிருந்த ஒருவனிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது " போர்த்திக் கொள்ள கம்பளி வேண்டும்" என்று சொன்னான்.

    சம்பவம் 2: ஏப்ரல் மே மாத கோடை வெய்யில் பின்னி பெடலெடுக்கும் தருணத்தில் அதே இரண்டு பேர். மறுபடியும் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்ட போது "இளைப்பாற நிழல் வேண்டும்" என்று சொன்னான்.

    அந்த பதிலால் கோபமுற்ற அந்த இரண்டாவது மனிதன் "என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறது? அப்போது கேட்டால் கம்பளி வேண்டும் என்று சொன்னாய்? இப்போது என்னவோ நிழல் வேண்டும், ஐஸ் வாட்டர் வேண்டும் என்று மாத்தி மாத்தி பேசுகிறாய்? சரி, போனாப்போகுது - பக்கத்து தெருவில் ஒரு கடை இருக்கிறது, அங்கே கம்பளி 20% கோடை சிறப்பு தள்ளுபடியில் விற்கிறார்கள். என் பேரை சொன்னால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடி உண்டு. போய் வாங்கிக்கொள்" என்று சொன்னானாம்.

    இதில் கூர்ந்தது படித்தால் "ஐஸ் வாட்டர்" என்பது இரண்டாவது ஆள் ஏத்தி விட்ட கதை என்பது புரியும்.

    இந்த இரண்டாவது ஆள் ஒரு சூழ்நிலை தெரியாத பார்வையாளனாக மட்டுமே இருந்து இருக்கிறான். அதுவும் வெயிலில் வாடும் ஒருவனிடம் கம்பளிக்கு 5% எக்ஸ்ட்ரா டிஸ்கவுன்ட் வாங்கித்தரும் அளவுக்கு கொடூர மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்கிறான்.

    இப்படிப்பட்ட சமூகத்தில் இப்படி ஒரு பின்னூட்டம்:

    நவீன வள்ளுவன்9 June 2014 12:24:00 GMT+5:30

    9. //* இதற்கென நம்மவர்கள் இருவர் தமிழகம் முழுவதும் சுற்றத் துவங்கியுள்ளனர் ! */
    டியர் எடிட்டர்,
    எப்போதோ கூறிய யோசனை - இன்னும் சில நண்பர்களும் தான் - காலம் இப்போது கணிந்திருப்பதில் மகிழ்ச்சி. / ஆமாம்... மத்தவங்க சொல்லும் போதுலாம் நாங்க செய்ய மாட்டோம். நாங்களாக தான் லேட்டா அத பண்ணுவோம்... அது கதை தேர்வாக இருந்தாலும் சரி, எதுவாக இருப்பினும் நாங்கள் தான் நிர்ணயம் செய்வோம்... பல பேரு கரடிய கி.மு ல இருந்தே தொர்கல் (ரபிக்), வேற ப்ளூ கோட்ஸ் (ப்ளேடு கார்த்திக்) போடுங்கனு சொன்னதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் ஆன கதை தான் தெரியுமே...//

    அதாவது மேலே குறிப்பிட்ட அந்த பிரபல பதிவர்கள் எல்லாம் ஜட்டிபோட்டுக்கொண்டு நடக்க கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது இத்தனை ஹீரோக்களை நமக்கு அறிமுகம் செய்த எடிட்டருக்கு இந்த கதா பாத்திரங்கள் எல்லாம் தெரியாதாம்.

    ஆனலைனில் (பெரும்பாலும் இல்லீகல் ஆக) காமிக்ஸ் கதைகளை படித்துவிட்டு (ரபிக் அல்ல, அவர் இந்த புத்தகங்களை எல்லாம் ரெகுலர் ஆக வாங்குபவர், கார்த்தி இப்போது வாங்க ஆரம்பித்துவிட்டார்) இந்த பேச்சு பேசுரோமே, இந்த கதாசிரியர்கள், பதிப்பக உரிமையாளர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசும் எடிட்டர் என்ன பேச்சு பேச வேண்டும்?

    மேற்குறிப்பிட்ட அந்த கதைகளை பிரசுரிக்க அப்போதைய சூழலில் முடியவில்லை. உதாரணமாக ப்ளூகோட்ஸ் கதை ரொம்ப சின்ன பசங்களுக்கு தான், நமக்கு இல்லை என்பதை எடிட்டர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை புரிந்து கொள்ளாமல் கம்பளி + குளிர் போல பேசுவது எப்படி இருக்கு தெரியுமா?

    கல்யாணத்து போய் மாப்பிள்ளைக்கு அவர் சின்ன வயசில் போட்ட சைசுக்கு ஒரு ட்ரெஸ்ஸை பரிசாக கொடுக்கும் குரூர மனம் படைத்த சொந்தக்காரன் போல (என்னப்பா இது? கொஞ்சம் பணம் வந்தவுடனே ஆளே மாறிட்டான்? 20 வருஷத்துக்கு முன்னாடி இதே போல ட்ரெஸ் எடுத்து கொடுத்தேன், சந்தோஷமா வாங்கிக்கொண்டவன், இப்போது அதை மறுக்கிறானே? என்பதைப்பொல.

    ReplyDelete
  58. அப்புறம் இன்னொரு விஷயம்:

    எல்லா விஷயங்களுகும் நேரம், காலம் என்று பல கனிந்து வந்தால் தான் அவற்றை செய்ய இயலும். சும்மா நாம சொல்லீட்டொமே என்பதற்க்காக எல்லாம் எதையும் செய்துவிடமுடியாது.

    அப்படி காலம் கனிந்து வரும்போது “ நாந்தான் இதை அப்பவே சொன்னேனே, இப்போதான் செய்யமுடிஞ்சுதா?” என்று நொட்டை, நொள்ளை கமெண்ட் இடுவதை பார்க்க ரொம்பவும் கடுப்பாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இதற்க்கு முன்னர் அவர் அல்ல , இவர் அல்ல என்று போட்டீர்களே ; இவை எல்லாம் அந்த பிரபலங்கள் இங்கே வந்து பிரயோகித்த வார்த்தைகள்தாம் அருண் .

      Delete
  59. இந்த தளம் சமீப காலமாக தூங்கி வழிந்துகொண்டிருந்தது என்ற நிலை மாறி சூடான விவாதங்கள்(!) நடக்கும் களமாக மாறியுள்ளது பார்பதற்கு நன்றாக உள்ளது(THANKS TO SOME TERRIFIC ENTERTAINERS) என்றாலும், அதற்காக ஒரு சிலரை பலியாக்குவது,தவறாக ஒரு விஷயத்தை புரிந்துகொண்டு நண்பர்களின் விளக்கங்களுக்கு பிறகும் தொடர்ந்து விவாதிப்பது போன்ற அணுகுமுறை சரியல்ல.சிறிது நேரத்தில் சலிப்பு தட்டிவிடும்.

    எனது பங்குக்கும் ஜோதியில் ஐக்கியமாக வேண்டாமா?? HERE GOES...:-))!

    அச்சு குறைபாடு,கொரியர் குறைபாடு, ஆக்கங்களில் சிறு பிழைகள் ETC...ETC ...போன்றவற்றுக்கு இந்த தளத்தில் பல முறை ஆசிரியர் பதிலளித்து விட்டார். கேளிவியெளுப்பும் நண்பர்கள்,அன்பர்கள் உங்களது கேள்வியின் நோக்கம் genuine ஆகா இருக்கும் போது தயவுசெய்து முந்தய பதிவுகளை படித்துவிட்டு பிறகு குற்றம் கூறவும். ஒரு முறை அச்சு குறைபாடுக்காக UNCONDITIONAL APOLOGY கூட கேட்டுள்ளார். இதை முழுமையாக களைவதற்கு தனியே TECHNICAL ஆட்களையும் நியமித்துள்ளார்.

    இது போன்ற நடைமுறை சிக்கல்கள் நமது வாழ்கையின் ஒரு அங்கம் அல்லவா?? காமிக்ஸ் என்றால் நடைமுறை குறை / குற்றங்களுக்கு அப்பாற்பட்டது எனும் சிந்தனை நகைப்புக்குரியது.

    நான் வாங்கிய குமுதத்தில் அச்சுகுறைபாடு உள்ளது என்பதற்கா கடிதம் எழுதினால் பதில் கூட கிடைப்பதில்லை.(தமிழ் பதிப்பகங்களின் மாத வார தினசரி இதழ்கள் அனைத்திலும் அச்சுகுறைபாடு உள்ளது/ அரசின் சமசீர் கல்வி புத்தகத்தில் கூட குறைகள் உள்ளது பாஸ்) ஏன் மாற்றுப்புத்தகம் கூட கிடைக்காது. எதில் தான் இல்லை குறைபாடுகள்?? எனது குடும்ப அட்டைக்கு இந்த மாதம் சக்கரை வழங்க மறுக்கிறார்கள் என்பதற்காக எனக்கு குடும்ப அட்டையே வேண்டாம் என யாரவாது சொல்லட்டும் பார்க்கலாம்.

    இங்கே நாம் பார்க்க விரும்புவது ஒன்றே. குறைகளை acknowledge செய்வதற்கான தைரியமும், அவற்றை முழுமையாக களைய முடியாவிட்டாலும், குறைப்பதற்கு நமது ஆசிரியர் எடுக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெறுகிறதா என்பது மட்டுமே.

    எனக்கு ஆசிரியர் எடுக்கும் முயற்சியில் முழு திருப்தி உள்ளது. நான் புத்தகம் வாங்கும் காசுக்கு பல சதவீதம் கூடுதலாக அவரது உழைப்பு இங்கே செலவிடப்படுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. டியர் சுஸ்கி-விஸ்கி !!!

      சரியாக சொன்னீர்கள் ஸார். குமுதம் பத்தாண்டுகளுக்கு மேலாக மோசமான அச்சுத்தரத்தில்தான் வந்துகொண்டிருக்கிறது.பெரும்பாலும் OUT OF FOCUS -ஆகவே அதன் அச்சுத்தரம் (!) உள்ளது.

      Delete
    2. சார், அது OUT OF FOCUS அல்ல. அவர்கள் 3டி பிரிண்ட் செய்கிறார்கள். ஆனால் அந்த அட்டை கண்ணாடியை மட்டும்தான் கொடுக்க மறந்து விட்டார்கள்.

      Delete
    3. //எனக்கு ஆசிரியர் எடுக்கும் முயற்சியில் முழு திருப்தி உள்ளது. நான் புத்தகம் வாங்கும் காசுக்கு பல சதவீதம் கூடுதலாக அவரது உழைப்பு இங்கே செலவிடப்படுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.//

      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      Delete
  60. டியர் விஜயன் சார்,

    இந்தப் பதிவில் எனது பெயர் சில நாட்களாகவே "அடிபடுவதைக்" கண்டேன்! குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒரு சிறிய விளக்கம்: இது வரை Bluecoats மட்டுமல்ல, Cinebook வெளியிட்ட எந்த ஒரு தொடரையும் இந்தத் தளத்தில் பரிந்துரைத்தது கிடையாது! நன்றி! :)

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக்,

      அதனால்தான் மேலே உள்ள எனது கமெண்ட்டில் //இதில் கூர்ந்தது படித்தால் "ஐஸ் வாட்டர்" என்பது இரண்டாவது ஆள் ஏத்தி விட்ட கதை என்பது புரியும்.// என்று சொல்லி இருக்கிறேன்.

      Delete
  61. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி.
    விரைவில் ஒரு பிரபல பத்திரிகை நிறுவனம் தமிழில் காமிக்ஸ் வெளியிடப்போவதாக தகவல் வந்துள்ளது.
    டிங்கிள் சைஸ், சுமார் 200 பக்கங்களுடன், மல்டி கலரில் மாதமிருமுறை வெளிவர உள்ளது.
    விலை என்ன நிர்ணயம் செய்துள்ளார்கள் என்பது மட்டும் தெரியவில்லை.
    தை முதல் தேதியில் முதல் வெளியீடு இருக்கும் என்று நினைக்கிறேன்.
    விரைவில் அதே பத்திரிகையில் இது தொடர்பான விளம்பரங்கள் வரலாம்.
    மேற்கொண்டு இது தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைத்தால் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.
    அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனது நண்பரின் தயவால் இந்த உள்ளம் மகிழும் செய்தி கிடைத்துள்ளது.
    இனி வாசகர்களுக்கு காமிக்ஸ் பஞ்சம் என்றும் ஏற்படாது.

    ReplyDelete
    Replies
    1. அடப்போங்க சார்....

      இதுபோல பல கிசுகிசுக்களை இந்த தளம் பார்த்துள்ளது.

      இப்போது ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன்: நீங்கள் சொல்லும் “கதை” நடைமுறையில் சாத்தியமில்லா ஒன்று. முடிந்தால் அது எந்த நிறுவனம் என்றாவது சொல்லுங்கள் பார்க்கலாம்?

      Delete
    2. புதுசா ஒரு காமிக்ஸ் ஆரம்பிக்கிறாங்களா?!! வரட்டும் வரட்டும்! "லோகோ போட்டி, பெயர் வைக்கும் போட்டியெல்லாம் வைக்கிறாங்களாம்... அந்த புதுக் கம்பெனி வெப்-சைட் பக்கமா ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க கண்ணுங்களா"னு இங்கே உலவித்திரியும் நம்ம Trollகளை அங்கே அனுப்பி வச்சுட்டாப் போதும். புதுக் கம்பெனி து.கா.து.கா னு ஓடிடும். trollகளின் எடக்குமடக்கான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாம தப்பிச்சு ஒரு காமிக்ஸை நடத்தறதெல்லாம் அவ்வளவு சுளுவானதுன்னு நெனச்சுட்டாங்களா என்ன? ;)

      Delete
  62. நண்பர்களே .....இங்கே இப்பொழுது எல்லாம் விவாதம் சூடாக நடத்த சிலர் வருகிறார்கள் .அவர்களுக்கு பதில் சொல்லி " பிரச்சனைகளை " பெரிதாக்க வேண்டாம் என்பதால் தான் என்னை போன்ற பலரின் நிலை .ஆனால் புதிதாக வரும் சில பார்வையாளர்கள் ஆசிரியர் மே ல் தவறான அபிப்ராயம் ஏற்படக்கூடாது என்பதினால் எனது கருத்து இங்கே .

    நவீன வள்ளுவர் க்கு நாம் பதில் சொல்ல தேவை இல்லை .காரணம் இங்கு " குழப்பம் " வருவதற்கு என்றே புனை பெ யரில் வருபவர் அவர். நாம் மட்டுமல்ல ஆசிரியரே அவர்க்கு ஒரு தெளிவான பதிலை சொன்னால் கூட அதற்க்கும் "குதர்க்கம் " வினாக்களை வினவுவார் .எனவே வள்ளுவரை தாண்டி சென்று விடுவது நல்லது .

    நண்பர் பெங்களூர் பரணி அவர்கள் எப்பொழுதும் இங்கே அதிகம் "குறை " சொல்பவர் அல்ல .சில சமயம் .அதுவும் அவரே அறியாமல் கூறுகிறார் .சார் ..லார்கோ கதையை பொறுத்த வரை ஆசிரியர் தவறு ஏதும் அதில் இல்லை என்பது தான் உண்மை .ஓவியங்களே ...,பாணிகளே.... அப்படிதான் .உங்களுக்கு ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன் .தயவு செய்து நாம் நமது காமிக்ஸ்களை படிக்கும் பொழுது " குறைகளை " தே டி பிடித்து படித்தால் கதையின் சுவையும் ...சித்திரமும் நம்மை மயக்காது. மற்ற படி எனது பெ யரை கொண்ட தங்களை ஈரோடு புத்தக காட்சியில் காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் .

    மனோகர் பழனி சாமி அவர்களே உங்கள் சந்தேகம் நிவர்த்தி ஆக வேண்டுமெனில் சரியான முறையில் வினாக்களை தொடுக்க வேண்டும் .இல்லையெனில் நண்பர்கள் பதில் அளிக்க தான் வருவார்கள் .வினவும் முறை என்று உள்ளது .ஆனால் நீங்கள் தான் " வள்ளுவரா " என்று தோன்றும் அளவிற்கு உங்கள் வார்த்தைகள் உள்ளது .உங்கள் வினாக்களை எனது பாணியில் நான் வினவி ஆசிரியர் இடம் பதில் வாங்க முடியும் .உங்களை போண்டர் முறையில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு முறை அல்ல நூறு முறை இட்டாலும் பதில் ஆசிரியர் இடம் இருந்து வாராது .உங்களுக்கு அவசரமாக " டைம் " தெரிய வேண்டும் என்றால் நீங்கள் வினவும் முறையில் கைகளில் கடிகாரம் இல்லாதவர் கூட உங்களுக்கு மற்றவரிடம் வினவி உங்களுக்கு பதிலை சொல்லுவார் .அடாவடியாக வினவினால் கைகளில் "கடிகாரம் " கட்டி இருப்பவர் கூட உங்களுக்கு பதில் சொல்ல மாட்டார் .

    உங்கள் கொரியர் கவர் வினாவில் ஆசிரியர் ஏதோ அதில் மாதம் 50,000 .., 1,00,000 லட்சம் மீதி பண்ணுவதாக நினைகிறேர்களா ....என்ன கொடுமை இது ..அப்படி பார்த்தால் ஆசிரியர் இப்பொழுது மௌனம் கடைபிடிப்பதை விட ...இதற்க்கு முன் புத்தகத்திற்கு எந்த பாலிதீன் கவரும் போடாமல் ..வெறும் சாதா காக்கி தாளில் நூல் கட்டி அனுப்பி கொண்டு இருந்தாரே அப்பொழுது அவர் மௌனம்மாக இருந்தால் எத்துனை " கோடி " லாபம் பார்த்து இருப்பார் இல்லையா நண்பரே ..ஆசிரியர் அவர்களே இப்படி வாசக நண்பர்களுக்காக ஏமாந்து விட்டேர்களே...மனோகர் பழனி சாமி அவர்களே கவரில் ஒரு புத்தகம் அனுப்பினாலும் கொரியர் புண்ணியத்திலும் கசங்கி வரலாம் .
    கால சூழ் நிலை அடிகடி மாறும் .ஒரு புத்தகம் தயாரித்து வெளி இடும் ஒருவருக்கு தான் அதன் சாதக ..பாதக அம்சம் புரியும் .அதை எல்லாம் சொல்லி நம்மிடம் அவர் புலம்ப தேவை இல்லை .புரிந்து கொள்ளுங்கள் .அவர் வெளி இடும் புத்தகத்தில் அவர் விருப்ப படி வெளி இடுவது தவறு அல்ல .

    பணி அழைப்பதால் இன்னும் விரிவாக உரையாட முடிய வில்லை .சாரி...

    ReplyDelete
    Replies
    1. தாரமங்கலம் பரணிதரன் சார்,

      //உங்கள் வினாக்களை எனது பாணியில் நான் வினவி ஆசிரியர் இடம் பதில் வாங்க முடியும் .உங்களை போண்டர் முறையில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு முறை அல்ல நூறு முறை இட்டாலும் பதில் ஆசிரியர் இடம் இருந்து வாராது .உங்களுக்கு அவசரமாக " டைம் " தெரிய வேண்டும் என்றால் நீங்கள் வினவும் முறையில் கைகளில் கடிகாரம் இல்லாதவர் கூட உங்களுக்கு மற்றவரிடம் வினவி உங்களுக்கு பதிலை சொல்லுவார் .அடாவடியாக வினவினால் கைகளில் "கடிகாரம் " கட்டி இருப்பவர் கூட உங்களுக்கு பதில் சொல்ல மாட்டார் .//

      அட்டகாசமான உதாரணம்.

      Delete
    2. parani நீங்கள் எல்லாம் போனால் போகட்டும் என விட்டதால்தானே இவர்கள் துள்ளினார்கள் . இன்னும் நேரம் கிடைத்தால் எழுதுங்கள் .

      Delete
    3. @ பரணிதரன்

      உங்களது 'கடிகார' உதாரணம் அருமை! 'கேட்கும் விதம்' பற்றிய இந்த எளிமையான உதாரணம் இதில் தொடர்புடைய நண்பர்களுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே அவசியமான ஒன்றுதான்!

      Delete
    4. @ பரணிதரன்

      நயமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்று சொல்லி,சொல்லி அலுத்து போய்விட்டது. இன்னும்

      பலப்பல உதாரணங்களை நீங்கள் அடுக்கினால் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் .... ஏனெனில்

      அவர்களின் நோக்கம் புண்படுத்துவது மட்டுமே.. பதில் பெறுவது அல்ல

      எடிட்டர் சொன்னது போல அவரவர் கண்ணோட்டம்,அவரவர் விமர்சனம் என்று விட்டுவிடுங்கள்

      150 க்குமேலுள்ள பின்னுட்டங்களை நல்லவேளை நீங்கள் பார்க்கவில்லை என்று ஒரு நண்பர்

      எடிட்டரிடம் சொல்லும்போதே, SOMETHING IS THERE என்று அனைவருக்கும்

      தெரிந்துவிடுகிறது ... அந்த பின்னுட்டங்களை கடந்து செல்லுங்கள் என்று எடிட்டர் பதில்

      சொல்கிறார்... ஆனால் நீங்கள் 150+ பின்னுட்டங்களை படித்துவிட்டுதானே இவ்விதம் பதில்

      சொல்கிறீர்கள் என்று கேட்கும் (பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது!!) நண்பர்களை என்ன

      சொல்லுவது ...எடிட்டரின் பக்குவம் நமக்கும் வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களின்

      பின்னுட்டங்களை படித்துவிட்டு கடந்து செல்லுங்கள். பதிலளிக்க முற்படாதீர்கள்

      Delete
  63. அண்ணே நவீன வள்ளுவன்:

    //Karthik Somalinga10 June 2014 07:43:00 GMT+5:30

    டியர் விஜயன் சார்,

    இந்தப் பதிவில் எனது பெயர் சில நாட்களாகவே "அடிபடுவதைக்" கண்டேன்! குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒரு சிறிய விளக்கம்: இது வரை Bluecoats மட்டுமல்ல, Cinebook வெளியிட்ட எந்த ஒரு தொடரையும் இந்தத் தளத்தில் பரிந்துரைத்தது கிடையாது! நன்றி! :)//

    இப்போ எங்கே போவீங்க? இப்போ எங்கே போவீங்க?

    ஒருத்தர் சொல்லாத ஒரு விஷயத்தை வைத்தே (அவர் சொல்லியதாக) எடிட்டர்மீது குற்றம் சாட்டியதற்க்கு உங்களிடம் என்ன பதில் இருக்கு?

    ReplyDelete
  64. சாப்பிடும் போதும் படிக்கும், படிக்கும் போதும் சாப்பிடும்.... ஆஹ்... அது ஒரு அருமையான சமாச்சாரம் லட்சுமி நாராயணன் சார்... எங்கே உங்களைக் காணவில்லை?

    ReplyDelete
  65. @ஸ்டீல் கிளா -

    கோவையில் நமது காமிக்ஸ் எங்கு கிடைக்கிறது என்பதை சொல்லுங்களேன்/\?

    ReplyDelete