Wednesday, October 02, 2013

நீலச் சட்டைகளுக்கு சிகப்புக் கம்பளம்...!

நண்பர்களே,

வணக்கம். நீல நாயகர்களின் முழுநீள சாகசம் உங்களை எட்டிட இன்னும் சில நாட்களே பாக்கி உள்ளன ! அக்டோபர் 4-ஆம் தேதி ஐரோப்பாவில் இந்தத் தொடரின் ஆல்பம் # 57 வெளியாகும் அதே வேளையில்-  தமிழ் பேசும் நம் நல்லுலகிலும் ப்ளூகோட் பட்டாளத்தின் முதல் சாகசம் அறிமுகமாகிறது ! வெள்ளிக்கிழமை இங்கிருந்து அக்டோபர் மாதத்துப் புது இதழ்களான (லயன் காமிக்ஸ்) "இரத்தப் படலம்" + (சன்ஷைன் லைப்ரரி) "ஆகாயத்தில் அட்டகாசம் " டெஸ்பாட்ச் ஆகிடும் ! இதோ ஆ.அ-வின் அட்டைப்படம் + ஒரு preview page ! சென்றாண்டிலிருந்தே நம் நண்பர்களில் சிலர் இந்தத் தொடரை முயற்சிக்கும்படி அவ்வப்போது கோரிக்கை எழுப்பி வந்தது நிஜமே ! ஆனால் லக்கி லுக் ; சிக் பில் ; மதியில்லா மந்திரியார் ; பற்றாக்குறைக்கு ஸ்டீல்பாடியார் என்று காமெடி பிரிவு ஓரளவுக்கு ஒ.கே. யாக எனக்குத் தோன்றியது ! தவிரவும் இன்றைய நமது audience பெரும்பாலும் பால பருவங்களைப் பின்விட்டு வந்தவர்களே என்பதால் comedy quotient-ஐ இதற்கு மேல் அதிகரிக்க அவசியம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் ஈரோடு புத்தக விழாவின் விற்பனை அனுபவமும்  ; E-Bay -ல் ஓராண்டாய் தொடர்ந்திடும் விற்பனைகளின் ஆய்வும் ; சமீபமாய் தொடரும் LANDMARK Bookstores -களின் விற்பனை புள்ளிவிபரங்களும் - காமெடியின் பக்கம் தராசின் முள்ளை இன்னும் கொஞ்சமாய் திருப்புவதில் தப்பில்லை என்று புரியச் செய்தன !  So - புதிதாய் ஒரு முழு நீள கார்ட்டூன் தொடரை தேடிடும் போது BLUE COATS பிரதானமாய் கை தூக்கி நிற்பது நினைவுக்கு வர - பெல்ஜியத்திலிருந்து பொடி நடையாய் அவர்களைப் புறப்படச் செய்தோம் ! இவ்வார இறுதியில் உங்கள் இல்லங்களுக்கும் வருகை புரியக் காத்திருக்கும் இந்த சிப்பாய்களை நீங்கள் எவ்விதம் வரவேற்கக் காத்துள்ளீர்கள்   என்பதை அறிந்திட ஆவல் ! 

கூகிள் உள்ளவரை பெரியதொரு அறிமுகங்களோ ; பீடிகைகளோ அவசியமாகாது என்றாலும் - அந்த வேலையைச் செய்ய சோம்பலாய்   இருக்கும் நண்பர்களின் பொருட்டு குட்டியாய் ஒரு intro ! 1970-ல் சிறு கதைகளாய் பெல்ஜியத்தில் அறிமுகம் ஆகி இன்றளவும் தொடர்ந்திடும் LE TUNIQUES BLEU என்ற ப்ளூகோட் பட்டாளம் - ஐரோப்பாவின் டாப் 10 விற்பனை சாதனைப் பட்டியலுக்குள் ஆண்டுதோறும் இடம் பிடிக்கும் ஒரு கதை வரிசை ! துவக்கம் முதல் ஒரே கதாசிரியரின் பொறுப்பில் சீராய் சென்று கொண்டிருக்கும் இந்த ஆல்பம்கள் சராசரியாய் 1.75 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றனவாம் (ஒவ்வொரு இதழுக்கும் !!) ! புதிதாய் தயாராகி இருக்கும் ஆல்பம் # 57-க்கு என்ன printrun என்று இம்முறை நான் பதிப்பகத்தில் வினவிய போது சிறு புன்னகையோடு கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து மாத்திரமே காட்டினார் அந்தப் பெண்மணி ! அத்தனை அகலமாய் இல்லாவிடினும் - என்றேனும் ஒரு நாள் நாமும் கைகளை சற்றே விசாலமாக்கி சைகை செய்யும் வாய்ப்பை ப்ளூகோட் பட்டாளம் நமக்கு நல்கிடும் என்று நம்புவோமே ?! 

KBT - 3 க்கான பக்கங்களை வெள்ளியன்று டெஸ்பாட்ச் ஆகிடும் இதழ்களோடு - அதே கவரில் இணைத்து அனுப்பிடத் தயாராக வைத்துள்ளோம் ! (கூரியருக்கு அளக்கும் படியை கொஞ்சமேனும் மிச்சம் செய்த புண்ணியம் கிடைக்குமே என்ற சிறு ஆசை தான் - sorry  guys for this சிக்கன நடவடிக்கைஸ் !! Butஆண்டின் இறுதி நெருங்கும் சமயம் என்பதால் வங்கிக் கையிருப்புகள் ஹி..ஹி ..என்று அடிக்கடி பற்களை காட்டி வருகின்றன !) இம்முறை பங்கேற்கும் நண்பர்களின் எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கணிசம் என்பது கொசுறுச் சேதி ! 

KBT -3 -ன் வாலைப் பிடித்துக் கொண்டே இம்முறை சீரியசான "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?" போட்டியும் அரங்கேற வாய்ப்புள்ளது - இதற்கென நீங்கள் நேரம் செலவிடத் தயாராக இருப்பின் ! தொடரவிருக்கும் ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் இதழுக்கு அட்டைப்படம் தயாரிக்கும் பணி காத்துள்ளது ! ஒரிஜினலாய் பெல்ஜியத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த high resolution கலர் files-களை நாங்கள் அனுப்பி வைக்கும் பட்சத்தில் - கொஞ்சமாய் நகாசு வேலைகள் செய்து மெருகூட்டி நம் பாணிக்கு கொணர வேண்டும் ! தேர்வாகும் டிசைனே அந்த இதழின் ராப்பராக அரங்கேறும் என்பதால் - டிசைனிங்கில் ரசனை + ஆற்றல் கொண்ட நம் நண்பர்கள் பங்கேற்கலாம் ! What say guys ? சமீபமாய் நம் நண்பர்களின் creativity + skillsets அப்பட்டமாய்த் தெரியத் துவங்கி வருவதால் - அவற்றை நம் இதழ்களில் showcase செய்வது பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது ! சத்தியமாய் "கடிக்கும் பர்ஸ் படலம்" இந்த போட்டி பற்றிய சிந்தனையின் பின்னணியில் கிடையாது ! தொடரும் இரு மாதங்களில் நம் lineup -ல் காத்திருக்கும் இதழ்களின் எண்ணிக்கை ஏகம்....! தவிரவும் தீபாவளி + ஆண்டின் இறுதி நெருங்குவதால் நமது டிசைனர் பொன்னன் - காலெண்டர் ; டயரி இத்யாதிகளின் டிசைன் பணிகளில் பிஸி ஆகிடுவார் ! So அவர் கழுத்தில் ஏறி அமர்வதை சற்றே குறைத்தது போலவும் ஆச்சு ; நண்பர்களின் திறமைகளை highlight செய்தது போலவும் ஆச்சு என்று நினைத்தேன் ! 

Creativity ; talent பற்றிய பேச்சு வரும் சமயத்தில் -give this a look folks ?  தூத்துக்குடியில் எனது நெருங்கிய உறவினரின் மருமகன் ஒரு பிரபல தொழிலதிபர் + diehard காமிக்ஸ் ரசிகர் + புத்தக ஆர்வலர் + இனிய மனிதர் ! அவரது இன்னொரு plus ஓவியம் தீட்டுவதும் கூட என்பதை சமீபமாய்த் தான் நானும் தெரிந்து கொண்டேன் ! 


Artwork : திரு முரளி ராஜகோபாலன், தூத்துக்குடி ! 
இத்தனை ஆற்றலாளர்களால் சூழப்பட்டிருப்பது அற்புதமானதொரு உணர்வு !  Awesome guys - you all rock in your own ways ! Catch you soon ! 

70 comments:

  1. நாந்தான் பர்ஸ்ட் :)

    ReplyDelete
  2. சார்,

    எழுத்தாளரும், நண்பருமான பட்டுக்கோட்டை பிரபாகர் கோபித்துக்கொள்ள மாட்டார் என்றே நம்புகிறேன் (ஆகாயத்தில் ஆரம்பம் அவரது நாவல் தலைப்பு).

    சமீபத்தில் அவரது நாவல் தலைப்பை இன்னுமொரு நண்பர் சினிமாவுக்கு பெயராக சூட்ட, PKP நிஜம்மாகவே பொங்கி விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. மனிக்கவும்,

      நமது தலைப்பு - ஆகாயத்தில் அட்டகாசம்.

      இணையாத இமைகளின் பின்னிரவு போராட்டத்தால் இந்த தவறு.

      Delete
    2. //இணையாத இமைகளின் பின்னிரவு போராட்டத்தால் இந்த தவறு.// அட அட அட... கவித கவித!!!

      Delete
    3. //அட அட அட... கவித கவித!!//

      பாருங்க, இதைக்கூட கவிதா, கவிதா என்றே படிக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

      Delete
  3. Dear Sir,

    How are you? வேலைப்பளுவினால் முன்பு போல் இங்கு அடிக்கடி வர இயல்வதில்லை. (இப்போது கூட (1.30 AM) அலுவலகத்தில் இருந்தபடிதான் (Output அனுப்பும் இடைவெளியில்) இந்த கமெண்ட் :( :) )

    ப்ளூகோட் பட்டாளத்தின் அட்டைப்படம் அமர்க்களாமாக இருக்கிறது. ப்ளூகோட் வெற்றிபெற வாழ்த்துக்கள். Eagerly waiting for XIII too...

    சார் ஒரு சிறு கேள்வி: கேப்டன் டைகரின் "ஒரு வேங்கையின் சீற்றம்" (NBS உடன் வெளியான அட்டவணையில் "வருகிறது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது) எப்போது வெளிவரும்?

    http://4.bp.blogspot.com/-VSq2hdxBdcc/UO_DhlUx09I/AAAAAAAAG28/_rqUxkcQwNA/s1600/Muthu+Comics+Never+Before+Special+11.jpg

    ReplyDelete
  4. நல்ல பதிவு, XIII ஐ ஆவலாக எதிர்பார்கிறேன்... bluecoats நல்வரவாக அமையும்... நண்பர் வரைந்த ஓவியம் அருமை... தீபாவளிக்கு விருந்து தயரகிகொண்டிருகிறது என்ற தங்களின் சென்ற பதிவும் அருமை.. I am waiting....

    ReplyDelete
  5. young blueberry series ஐ முழுவதுமாக வெளியிட்டால் அருமையாக இருக்கும்!!! ஞாபக படுத்தியதற்கு நன்றி சி நா பா...

    ReplyDelete
  6. டியர் விஜயன் சார்,

    ஆகாயத்தில் 'அட்டைப்படம்' அட்டகாசம்! ப்ளுகோட் பட்டாளம் என்ற கெத்தான பெயரும் தான்! ஒவ்வொரு இதழின் spine பகுதியிலும், வெளியாகிக் கொண்டிருந்த கதையின் தலைப்பு, ஹீரோவின் பெயர் மற்றும் விலை போன்ற விவரங்கள் முதன் முறையாக இந்த இதழில் மிஸ் ஆகி விட்டன என்று நினைக்கிறேன்!

    //KBT - 3 க்கான பக்கங்களை வெள்ளியன்று டெஸ்பாட்ச் ஆகிடும் இதழ்களோடு - அதே கவரில் இணைத்து அனுப்பிடத் தயாராக வைத்துள்ளோம் ! sorry guys for this சிக்கன நடவடிக்கைஸ்//
    அட இதுல என்ன கூச்சம் சார்?! மொழிபெயர்த்த பிறகு, நாங்களும் அந்த பக்கங்களை உங்களுக்கு திருப்பி அனுப்பாமல், கூரியர் செலவு மிச்சம் பிடித்தால் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் அல்லவா?! ;) ஸ்க்ரிப்டை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு, அந்த பக்கங்களை Shredder-க்கு அனுப்பி விடுகிறோம்! :D

    //இம்முறை சீரியசான "KAUN BANEGA GRAPHIC DESIGNER ?" போட்டியும் அரங்கேற வாய்ப்புள்ளது - இதற்கென நீங்கள் நேரம் செலவிடத் தயாராக இருப்பின்//
    Why not? அப்படியே பரிசுத் தொகையையும் அறிவித்தால் நன்றாக இருக்கும்! :P தயவு செய்து Fleetway புத்தகங்கள் மட்டும் வேண்டாமே, ப்ளீஸ்?! ;) முடிந்தால் ஏதாவது பழைய லயன் / முத்து காமிக்ஸ் அல்லது குறைந்த பட்சம் நீங்கள் இந்த வருடம் பெங்களூர் காமிக் கானில் அள்ளிய சினிபுக் காமிக்ஸ்களில் இருந்து சிலவற்றையாவது பரிசாகத் தருவீர்கள்தானே?! 'ஊஹீம்.. அதெல்லாம் முடியாது' என்றால், பொன்னரிடம் சொல்லி அடுத்த வருட காலெண்டர் மற்றும் டயரியையாவது ஒரு பத்து செட் அனுப்பி வையுங்கள்! :)

    //ஒரிஜினலாய் பெல்ஜியத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த high resolution கலர் files-களை நாங்கள் அனுப்பி வைக்கும் பட்சத்தில்//
    மறக்காமல் high resolution லோகோவையும் (முத்து?) அனுப்பி வையுங்கள்!

    உங்கள் உறவினரின் கைவண்ணம் அருமை! KBGD-க்கு (ரஷ்ய KGB-க்கு அல்ல!) இன்னுமொரு போட்டியாளர் ரெடி போல?! :)

    லயன்-முத்து ஃபேஸ்புக் பக்கத்தின்,
    https://www.facebook.com/pages/Lion-Muthu-Comics/1388544204710093
    மேற்கண்ட கடினமான முகவரியை:

    எளிமையாக,

    https://www.facebook.com/LionMuthuComicsSivakasi

    மாற்றி இருப்பதை கவனித்தேன்! இனிவரும் புத்தகங்களில் இணைய முகவரிக்கு கீழே மறக்காமல் இதையும் இணைத்து விடுங்கள்!!!

    599970: ஆறு லட்சம் ஹிட்ஸ்களை இன்னும் ஒரு சில நிமிடங்களில் தொடப் போவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலுக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் விஜய்க்கும் வாழ்த்துக்கள்!

    பி.கு: வாழ்த்து அல்லது நன்றி சொல்லி பதிவை முடிக்கும் சம்பிரதாயம் இந்தப் பதிவிலும் தொடர்கிறது! ;)

    ReplyDelete
  7. டியர் எடிட்டர் ,
    ரிப்போர்டர் ஜானி இன் எல்லா கதை வரிசையும் எமது லயன் , திகில் காமிக்ஸில் வெளியாகி விட்டதா ? தொடர்ந்து ஜானி கதைகள் புதிதாக வெளியாகின்றனவா ?

    ReplyDelete
  8. ப்ளூ கோட் பட்டாளத்தின் "ஆகாயத்தில் அட்டகாசம் ", பிரெஞ்சு மொழியில் வாங்கி படித்து விட்டேன் .இருப்பினும் எமது லயனில் தங்களின் மொழிபெயர்ப்பில் தரிசிப்பது அலாதி சுகமே . காத்துள்ளேன் . கூடவே எனது அபிமான XIII இன் புதிய பாணி அதிரடியினயும்தான் .

    ReplyDelete
  9. எப்பொழுது சார் டெக்ஸ் இன் தீபாவளி பட்டாசு கதைகள் எமது கைகளில் கிடைக்கும்? லார்கோ விஞ்ச் இன் அடுத்த அதகளம் வெனிஸ் நகரில் என்று கூறிய நீங்கள் எப்போது வெளியீடு என்று கூறவில்லையே சார்?

    ReplyDelete
  10. சூப்பர், 6லட்சம் பார்வைகள்

    ReplyDelete
  11. புது ப்ளுகோட்ஸ் விரர்களை வரவோற்கிறோம்

    ReplyDelete
  12. 600000 பார்வைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
    வருகை தரும் ப்ளூகோட் பட்டாளத்திற்கு ஒரு ரெட் கார்பெட் வரவேற்பு.

    அட்டைபடம் அருமையாக வந்துள்ளது.
    ஒரிஜினலை அப்படியே பயன்படுத்தி உள்ளதை பார்த்து நண்பர் ராஜ்குமார் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

    நான் ஆங்கிலத்தில் படித்த 6 புத்தகங்களில் இருந்து எனக்கு தோன்றியது இவர்கள் நமது ஆர்டின் டாக்புல் கூட்டணிக்கு நல்லதொரு போட்டி தருவார்கள் என்பதுதான்.

    இரண்டு மாதங்களில் இன்னும் எத்தனை புத்தகங்கள் வர இருக்கின்றன சார்.
    (ஒரு சிறு குழப்பம் இவ்வருடமே மேலும் ஒரு கார்டூன் அறிமுகம் உள்ளதா அல்லது அது ப்ளூ கோட் தானா)

    Oct - 2
    Nov - டெக்ஸ்,சிக்பில்,சிப்பாயின் சுவடுகள்.
    Dec - ஜானி, +6,?

    ReplyDelete
  13. Welcome blutch.your translation is so good in that single page sir,waiting to read the whole book.who is the new comedy hero?

    ReplyDelete
  14. சார்,
    கூரியர் செலவை மிச்சபடுத்தத் தாங்கள் எடுத்த முடிவுக்கு ஏன் வெட்கப்படவேண்டும்!. ஓர் businessman - ன் brilliant செய்கையின் அட்டகாச ஆரம்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே!
    அப்புறம் ஆ. அ. perfect பைண்டிங்-ல் வராமல் சென்டர் பின் பைண்டிங்-ல் தானே வெளிவருகிறது?

    ReplyDelete
  15. எடி சார், இப்பொழுதே , அடுத்த ஆண்டு சந்தா தொகையை பற்றி ஏதும் எழுதினால், தீபாவளி முன்போ அல்லது அதன் பிறகோ பணம் அனுப்ப ஏதுவாக இருக்கும். இந்த சமயம் தொடங்கினால் தான் , இந்த ஆண்டு இறுதிக்குள், ஓரளவு சீராகும்.

    ReplyDelete
  16. Attaipadam attakasam. Rich aaga vanthirukirathu.

    ReplyDelete
  17. muthal muraiyaga ennakkum puthagam santha mulamaga varappoguthey..... santhosam santhosam..

    ReplyDelete
  18. வெள்ளிகிழமை எப்போ வரும்னு காத்துகிட்டு இருக்கேன்!! தல அப்டியே டெக்ஸ் புக் பத்தி கொஞ்சம் update செய்யுங்க!!
    நவம்பர் மாதம் நாலு புக்ஸ் தானே?? கரெக்டா ஒன்றாம் தேதி கிடைக்கிற அனுப்பிடுங்க ப்ளீஸ்!! ஏனா தீபாவளிக்கு ஊருக்கு போறதுக்கு முன்னாடி புக்ஸ் கிடைச்ச ரொம்ப சந்தோசம் படுவேன் தல..

    ReplyDelete
  19. Wonderful cover design for Bluecoats.
    Eagerly waiting for XIII and Bluecoats.
    Kaun banega graphic designer is a good opportunity for our Friends to show their Talent.

    ReplyDelete
  20. லக்கி லூக் அறிமுகம் ஆனபொழுது இருந்த அதே பரபரப்பையும் குதூகலத்தையும் உணர முடிகிறது....சனிக்கிழமை வரை காத்திருக்க எனக்கு பொறுமையில்லை.

    ReplyDelete
    Replies
    1. //லக்கி லூக் அறிமுகம் ஆனபொழுது இருந்த அதே... //

      Same here! and I guess you mean சுட்டி லக்கி!

      Delete
  21. அடுத்த ஆண்டு சந்தா விபரம் அறிவிக்க இம்மாதமே சரியான தருணம்!

    ReplyDelete
  22. சந்தா அறிவிக்கு முன்னரே Rs 3000 அனுப்பி ஒரு மாசமாச்சு.

    ReplyDelete
  23. 30 ஆவது ஆண்டு மலரில் 10 கதைகள் (500 விலையில்) வெளிஇடவும்
    1. பிசாசுப் பண்ணை-லக்கி லுக்
    2. நீலப்பேய் மர்மம்-சிக் பில்
    3. கொலைகார கானகம் - பிரின்ஸ்
    4. இரத்தக் காட்டேரி மர்மம் - ரிப்போட்டர் ஜானி
    5. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ்
    6. மினி லயன் ஹாலிடே ஸ்பெஷல்
    இதை தவிர வேறு கதைகளாக இருந்தாலும் சம்மதமே
    இதனுடன் மீதி 4 கதைகள் புது கதைகளாக இருக்கட்டுமே

    ReplyDelete
  24. அட என்னசார், சாரி பார் சிக்கன், ச்சே! சிக்கனநடவடிக்கைக்கு அது இதுன்னு!? ஆனானபட்ட அமெரிக்காவே தேசியபூங்காவையெல்லாம் 2மாசத்துக்கு பூட்டிவைக்க போறாங்களாம்!( இயற்க்கைக்கு பூட்டுபோட இவனுங்களுக்கு யாரு உரிமை கொடுத்தாங்கன்னுதான் தெரியல :) ) KGBக்கு நான் ஆவலாக காத்திருக்கேன்! ஆனா சன்மானம் அதுகேத்தாப்பல கெத்தாக இருக்கனும்! சொல்லிபுட்டேன்! இந்த fleetway,subwayலாம் வேணாம், அழகுதமிழ் காமிக்ஸ்களோ, சில பொற்காசுளோ போதும் இந்த காமிக்ஸ் தருமிக்கு:)

    ReplyDelete
  25. ரிப்போர்டர் போன்ற அரசியல் தொடர்புடைய இதழ்களில் நமது விளம்பரம் வெளியாவது எந்த வகையில் பயனளிக்கும் என்று தெரியவில்லை. இந்த இதழ்களில் 10 விளம்பரம் கொடுப்பதைவிட குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் 5 விளம்பரம் வெளியிடுவது மிகுந்த பயனளிக்கும் என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.தாய்க்குலங்களும் விளம்பரத்தை பார்க்க வாய்ப்புக்கள் அதிகம்.

      Delete
  26. மூன்று நாட்களில் இரண்டாவது பதிவு, super
    அட்டைப்படம் மிக அருமை.

    ReplyDelete
  27. ப்ளூகோட் 50 ரூபாய் விலையில் அளவான பக்கங்களுடன் இருப்பது சுட்டி லக்கியின் attractive format-ஐ நினைவுபடுத்துகிறது! Best wishes for ப்ளூகோட் பட்டாளம்!

    // டிசைனிங்கில் ரசனை + ஆற்றல் கொண்ட நம் நண்பர்கள் பங்கேற்கலாம் ! What say guys ? //
    +1 for this, and curious to participate! :)

    திரு முரளி ராஜகோபாலனின் artwork + workspace nice! அவசர யுகமாகிவிட்ட தற்காலத்தில் (புலம்பல் Count #108) Water Color படைப்புக்களை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது!

    ReplyDelete
  28. ஒரு அந்நிய தேசத்து நாயகர்களை அதுவும் சிப்பாய்களை காந்தி ஜெயந்தி அன்னைக்கு வரவேற்ப்பது எனக்கு ரொம்பவே நெருடலா இருந்ததால இன்னைக்கு மூனாம் தேதி அவங்கள வரவேற்று பின்னூட்டத்தில் அறிக்கை விடுகிறேன்! ; ). ( ஹி ஹி ஹி )

    அட்டையில் "உலக தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக அறிமுகம்" ன்னு ஒரு பிட்ட போட்டிருக்கலாம் பாஸ் ! இந்து ஏதோ பத்தோட ஒரு பதினொன்னா தெரியுது. அறிமுக புத்தகங்களுக்கு எப்பவும் ஒரு பில்ட் அப் இருந்தா நல்ல இருக்கும். அப்படியே இந்த மாதிரி கதை தொடர்களுக்கு அவற்றின் வரிசை எண்ணும் வந்த இன்னமும் சிறப்பு. ப்ளூ கோட்ஸ் உங்கள ரொம்ப இம்ப்ரெஸ் பண்ண மாதிரி தெரியல் சார்! ஏன் சொல்றேன்னா இன்னைக்கு இரவு பதிமூணுக்காக ஒரு எக்ஸ்க்ளுசிவே பதிவ போடுவீங்கன்னு GUESS பண்றேன்.I MAY BE WRONG! : ).

    வாசகர்களின் CREATIVITYயை ஊக்கப்படுத்தும் உங்க முயற்சி பா.....ராட்டப்படவேண்டிய ஒன்று!நாங்களும் அதைய எஞ்சாய் பண்றோம் சார்!

    திரு முரளி ராஜகோபாலன், தூத்துக்குடி AWESOME WORK!

    ReplyDelete
  29. Its a time for announcement of our next year subscription sir tell next post if possible we are all waiting eagarly...

    ReplyDelete
  30. is it one of +6 release sir?

    ReplyDelete
  31. விஸ்கி சுஸ்கி சார் போன பதிவில் தங்கள் பதிலுக்கும் ..,பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார் ..

    ReplyDelete


  32. புதிய காமெடி நாயகர்களை ஆவலோடு எதிர் பார்கிறேன் சார் ..என்னை பொறுத்தவரை "காமெடி "நாயகர்கள் மாதம் ஒரு முறை வந்தாலும் டபுள் ஓகே சார் ...

    ReplyDelete
  33. ஆசிரியர் அவர்களுக்கு ..,

    போன பதிவில் எனது சந்தேக களுக்கு பதில் அளிதததற்கு மிக்க நன்றி சார் .இங்கே காமிக்ஸ் பயணத்தில் அனைவரும் "பைபாஸ் "ரோட்டிலே போக நானோ இன்னமும் ஒத்தை அடி மண் சாலையில் பயணப்பதை என்னால் உணர முடிகிறது சார் .இருந்தாலும் என் மனதில் இருப்பதை உங்களிடம் கூற உடனே எழுதி விடுகிறேன் .அது "கிராபிக் நாவல் "பற்றியதாக இருந்தாலும் சரி ..,இப்படி "மறு பதிப்பு "பற்றியதாக இருந்தாலும் சரி .எனது கருத்துக்கு பெரும் பாலும் மாற்று கருத்து தான் வந்தாலும் எனது கருத்தை தங்களிடம் கூற மனது சொல்லி விடுகிறது .

    என் மீது வருத்தம் ஏதும் இல்லையே சார் ...?

    ReplyDelete
  34. Why don't you despatch the graphic novel also along with these two - since you have already told that book is ready?

    ReplyDelete
  35. சந்தா விபரம் அறிவிக்க சரியான தருணம்...........ஆனால் லயன் &முத்து காமிக்ஸ்RS-100 புக் பத்து + special புக் இரண்டு என்று ஒரே விலையாக(Fixed book price) இருத்தல் ஆண்டு சந்தா சரியாக இருக்கும் மற்ற விலையில் (Rs-25 /- Rs-50/-)வரும் புக் எல்லம் Sunshine Library வெளியீடுங்கள் சந்தா தொகையை அனுப்ப ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  36. சார்

    e-bay லிஸ்டிங்கில் பிரின்ஸ் காமிக்ஸ் இல்லையே சார்? மீண்டும் லிஸ்டிங்கில் வருமா சார் ?

    ReplyDelete
  37. E-bay லிஸ்டிங்கில் அக்டோபர் வெளியிடுகள் நாளை வருகின்றனவா?

    ReplyDelete
  38. எடிட்டர் சார் வேங்கை சிற்றம் டிசம்பரில்வருகிறாதா.

    ReplyDelete
  39. காமெடி கதையை எதிர் பார்த்து ஆவலோடு காத்திருக்கிறான் இந்த "கரடி "

    ReplyDelete
  40. ஆகாயத்தில் அட்டகாசம் அட்டை அருமையாக உள்ளது..

    ReplyDelete
  41. Anyone visited the Lion-Muthu website ? WOW! what a transformation and watch for the logos, Muthu logo in color...

    ReplyDelete
  42. நீல நாயகர்களை தமிழுக்கு வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  43. welcome to bluecoats. இந்த கதையை படித்திருக்கிறேன். நல்ல காமெடி

    ReplyDelete
  44. It is a very big honour to get my water colour painting here! Vijayan annachi is very magnanimous! I got his autograph in my copy of 'Raththap Padalam', and I will get his autograph in this painting, during my next visit to Sivakasi. Dont we all feel so thankful to him for bringing us world class comics!

    ReplyDelete
  45. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Luxurious hotel in chennai | Budget Hotels in Chennai | Centrally Located Hotels in Chennai

    ReplyDelete