Wednesday, April 17, 2013

ஹலோ பெங்களூரு ...!


நண்பர்களே,

வணக்கம். சகோதரியின் வீட்டிலொரு சுப காரியம் எனது வார இறுதியினையும், தொடர்ந்திட்ட திங்களையும் ஆக்ரமித்துக் கொண்டது. நேற்றைய தினம் சிவகாசி திரும்பிய பின்னே இங்கும் அங்குமாய் சிதறிக் கிடந்த பணிகளின் வால்களைத் தேடித் பிடிப்பதிலேயே பொழுது ஓடி விட்டதால் வலைப்பதிவின் பக்கம் தலை காட்ட இயலவில்லை. (In fact சனிக்கிழமை முதலாய் இங்கே பதிவாகியுள்ள பின்னூட்டங்களைக் கூட இனி மேல் தான் படிக்க வேண்டும் !

ஏப்ரலின் இரு வெளியீடுகளும் உங்களிடையே பெற்ற வரவேற்பு அமோகம் என்றால், E -Bay  இணைய விற்பனை - அனல் பறக்கும் அமர்க்களம் என்று தான் சொல்ல வேண்டும் ! இதில் ஒரு கொசுறுத் தகவல் : ஹாட் n ' கூல் ஸ்பெஷல் விற்பனையை விட - "டைகர் ஸ்பெஷல்" விற்பனை எண்ணம் அதிகம் !! டைகர் + வண்ணம் + ஹிட் அடித்ததொரு கதை என்ற கூட்டணியின் வலுவிற்கு இதுவொரு பறைசாற்று ! இந்த உற்சாகம் ஒரு பக்கமிருக்க, இந்த சுவை ; தரம் - இன்னும் நிறையப் பேரை சென்றடைவது சாத்தியமானால் எத்தனை அற்புதமாக இருக்குமென்ற ஆதங்கமும் இல்லாதில்லை ! தினமும் கூடி வரும் சந்தா எண்ணிக்கைகள் தெம்பூட்டும் சங்கதி என்ற போதிலும், சென்ற ஆண்டின் 650 என்ற எண்ணிக்கையைத் தொட இவ்வாண்டு இன்னமும் சொற்ப தூரம் பாக்கியுள்ளது என்பது சற்றே உறுத்தல் தந்திடும் ஒரு நிஜம் ! சந்தேகத்திற்கு இடமின்றி சென்றாண்டை விட, இவ்வாண்டு நமது தரத்தில் ஏராள முன்னேற்றம் என்பது கண்கூடு - but we still have a fair distance to travel...! So இது நாள் வரை சந்தாக்களைப் புதிப்பிக்காது இருந்து வரும் நண்பர்கள் - சற்றே இதுக்கென நேரம் ஒதுக்கிடக் கோருகிறேன் - ப்ளீஸ் ! அதே போல் - உங்களது பள்ளிகளுக்கோ ; கல்லூரிகளுக்கோ நமது இதழ்களின் சந்தாக்களை சின்னதொரு gift ஆக நீங்கள் வழங்கிட  விரும்பும் பட்சத்தில் - அவற்றிற்கு 10% discount தந்திடலாம். Give it a thought folks...! இதே ரீதியில் தொடர்ந்தால் இந்தப் பதிவு FM ரேடியோவின் விளம்பர ஒளிபரப்பைப் போல் உங்களுக்கு தோன்றிடக் கூடுமென்பதால் - அடுத்த topic -க்குத் தாவிடுவோமே ?!

நமது அடுத்த இதழான டைகரின் "இரத்தத் தடம்" ஜரூராகத் தயாராகி வருகிறது - மே முதல் தேதிக்கு உங்களின் கைகளில் நிச்சயம் இருந்திட வேண்டுமென்ற வேகத்தில் ! இப்போதைக்கு நமது பார்வை லயித்திருப்பதோ திடுமென ஜூன் முதல் இரு தேதிகளில் பெங்களூருவில் பிரசன்னமாகவிருக்கும் COMIC CON 2013 நிகழ்வின் மீதே ! சென்றாண்டு செப்டம்பரில் மெல்ல மெல்ல தென்னிந்தியாவிற்குள் அடி வைத்திட்ட COMIC CON திருவிழா இங்கே ஈட்டிய அதிரடி முதல் வெற்றி அவர்களே எதிர்பார்த்திரா ஒரு ஆச்சர்ய அனுபவம் ! So இம்முறை - சற்றே சீக்கிரமே ; கூடுதல் உத்வேகத்தோடு 2013-க்கான COMIC CON அதிரடியை அரங்கேற்றத் தயாராகி விட்டார்கள் ! (கூடுதல் உத்வேகம் கொணரும் கூடுதல் ஸ்டால் கட்டணங்கள் நம் பாக்கெட்டை பதம் பார்ப்பது ஒரு தனிக் கதை !)


ஆனால் காமிக்ஸ் என்றாலே 'கன்னித்தீவு சிந்துபாத் தானே ? ' என்ற பரவலான சிந்தனை கொண்ட நம் மாந்தர்களின் மத்தியினில் இது போன்றதொரு பிரத்யேகமான காமிக்ஸ் உற்சவத்தைத் தைரியமாக அரங்கேற்றும் ஆற்றலைக் கண்டு வியக்காது ; அதற்கு குட்டியாகவேனும் ஒரு தோள் கொடுக்காது இருப்பது நிச்சயம் பாதகம் என்பதால் - நமது ஸ்டாலுக்கு முன்பதிவு செய்தாகி விட்டோம் ! So ஸ்டால்  எண் B -11 நமது ஜாகை - வரும் ஜூன் 1 & 2 தேதிகளுக்கு

சென்றாண்டு நமது ஸ்டால்
சென்றாண்டைப் போலவே கோரமங்களா உள்ளரங்கு விளையாட்டுத்   திடலில் நடைபெறும் இந்த இரு நாள் காமிக்ஸ் திருவிழாவிற்கு இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான காமிக்ஸ் பதிப்பகங்களும் , விற்பனையாளர்களும் வருகை தருவது மட்டுமல்லாது ,அற்புதமான ஐரோப்பியக் காமிக்ஸ் தொடர்களில் அநேகத்தை ஆங்கிலத்தில் அசத்தலாக வெளியிட்டு வரும் CINEBOOKS  நிறுவனத்தின் விற்பனைப் பிரிவினரும் வரவிருப்பது highlight ! லக்கி லூக் ; லார்கோ ; XIII ; மதியில்லா மந்திரி ; ஷெல்டன் ; blake & mortimer இத்யாதி..இத்யாதி என அவர்களது மூச்சு வாங்கச் செய்யும் வரிசையினிலிருந்து எக்கச்சக்கமாய் ஆங்கிலப் பிரதிகள் விற்பனைக்குக் கொணர்கிறார்கள் ! ஒரு காமிக்ஸ் புதையல் காத்திருப்பது நிச்சயம் என்பதால் கனத்த பர்சோ ; வலிமையான பிளாஸ்டிக் அட்டைகளோ நிரம்பிய பாக்கெட்களோடு வந்திடல் நலம் ! 


பக்கத்து வீட்டில் கல்யாணப் பந்தியே பரிமாறப்படவிருப்பினும், நம் வீட்டுச் சமையல் கூடமும் நம் சக்திகளுக்கு உட்பட்ட சுவைகளை வழங்கிடத் தயாராகி வருகிறது ! டெக்ஸ் வில்லர் ; டயபாலிக் தலா ஒரு சாகசத்தோடு உங்களை ஜூன் 1-ல் சந்திக்கவிருப்பது ஒரு பக்கமிருக்க, சன்ஷைன் லைப்ரரியின் ரிலீஸ்  # 2 - "லக்கி ஸ்பெஷல்" கூட ஜூன் 1 தேதிக்குத் தயாராகிடும். லக்கி லூக்கின் எவர்க்ரீன் classics ஆன - "சூப்பர் சர்கஸ்" + "பொடியன் பில்லி" கதைகளைக் கொண்ட இந்த combo இதழ் வழக்கம் போல் முழு வண்ணத்தில் - ரூ.100 விலையினில் வந்திடவுள்ளது ! 

இது தவிர +6 முயற்சியின் பிள்ளையார் சுழியும் கூட இந்த Comic Con 2013-ல் போட்டிட உத்தேசம் ! அது என்னவென்பது இப்போதைக்கு சஸ்பென்சாக இருக்கட்டுமே ?! So ஒரே நேரத்தில் 4 இதழ்கள் எனும் போது பாரம் பணிகளில் மாத்திரமல்லாது ;  பணத்திலும் இருந்திடும் என்பது இப்போதே புரிகிறது ! எண்ணற்ற சவால்களின் பட்டியலில் இதுவும் ஒன்று(பெரிய ஒன்று !!!)என்ற புரிதலோடு தொடர்கிறோம்! இந்த multiple இதழ்களின் வெளியீட்டினைத் தாண்டி - உங்களுக்கொரு சந்தோஷமான ஆச்சர்யமும் COMIC CON -ல்  காத்துள்ளது என்பது மாத்திரம் இப்போதைக்கு கொசுறுச் சேதி. 


ஜூன் 1 (சனிக்கிழமை ) பெரும்பான்மையும்  ; ஜூன் 2 -ன் காலைப் பொழுதினிலும் நானும், விக்ரமும் நமது ஸ்டாலில் உங்களை வரவேற்கக் காத்திருப்போம். Please do drop in folks ...! We would be delighted to see you ! 

அப்புறம் சமீபத்திய KBT - சீசன் 2 மொழிபெயர்ப்புப் போட்டியினைப் பற்றி எழுதிடும் நேரமிது ! 36 நண்பர்கள் விண்ணப்பித்து ; அதனில் முகவரி தந்திடாது போன சிலரைத் தவிர்த்து மீதம் அனைவருக்கும் போட்டியின் பக்கங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் மொழிபெயர்ப்போடு நமக்குத் திரும்ப வந்தவையோ பாதிக்கும் குறைவே ! நேரமின்மையா ; சிரமமா ; வேறேதும் காரணங்களா தெரியவில்லை - நிறைய நண்பர்கள் மௌனமாகவே இருந்து விட்டனர். ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாய் - இது வரை வந்துள்ள மொழிபெயர்ப்புகளின் பெரும்பான்மை சூப்பர் என்ற ரகமே ! 'சென்ற முறை விட்டதை இம்முறை பிடித்தே தீருவது' என்ற வேட்கையோடு கிட்டத்தட்ட அனைத்துப் போட்டியாளர்களும் பட்டையைக் கிளப்பியுள்ளனர் ! 
ஜூலை மாதத்து லயன் ALL NEW SPECIAL இதழில் இடம் பெறவிருக்கும் GREEN MANOR கதையினில் ஒரு அங்கமான இந்த 7 பக்க சிறுகதை - இம்முறை வாசக மொழிபெயர்ப்போடு முழு வண்ணத்தில் வந்திடவுள்ளது. வெற்றி பெறும் நண்பர் யாரென்ற விபரத்தை முன்பு போலவே - இதழ் வெளியாகும் நாளன்றே அறிவிக்க உள்ளேன் - so கொஞ்சம் கூ...டு...த..லா..ன பொறுமை அவசியம் இம்முறை ! Anyways, awesome work guys ! இன்னுமொரு பதிவோடு சீக்கிரம் சந்திக்கிறேன்... அது வரை adios amigos !


349 comments:

  1. சாத்தானுக்கு முதலிடம் !!!

    ReplyDelete
  2. வாவ் .. நான்கு புத்தகங்கள் on 01-June-2013 .... அப்படியே காமிக்ஸ் கிளாச்சிக் digest ஏதாவது?

    ReplyDelete
    Replies
    1. Periyar : tongue இதுக்கே தொங்கிங்க்ஸ்...!!

      Delete

    2. I hate to come to this blog these days after the editor made false promises regarding these digests so many times and finally dashed our hopes due to the pressure from the 'anti-classics' readers.

      When I saw that he has made a new posting on the Bengaluru comic con, I decided to visit here to see if he is going to release the digest at least this time because these books sell very well in these book fair type events. So there is no economic reason this time to disappoint us again this time.

      It is not as if this requires a lot of editorial effort. All I want is a carbon copy of the old issue reprinted with no changes. How difficult is that?

      Anyway, I came back after a long interval to see if there will be any good news. I may not be visiting again.

      I am considering cancelling my 12 year long subscription to all the comics coming from Prakash Publishers since the editor obviously does not care for his oldest and the most loyal readers.

      Delete
  3. டியர் எடிட்டர்ஜீ !!!
    ///சகோதரியின் வீட்டிலொரு சுப காரியம் எனது வார இறுதியினையும், தொடர்ந்திட்ட திங்களையும் ஆக்ரமித்துக் கொண்டது.///
    உங்களுக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டேன்.இப்போது பரவாயில்லையா ஸார் ?

    ReplyDelete
    Replies
    1. saint satan : கோடையில் ஜூரத்தில் படுப்பது கொடுமையின் உச்சம் என்பேன் ! நம்பியாரை மிமிக்ரி செய்வது போல் குரல் வளம் (!!!) ஒலிப்பதைத் தாண்டி இப்போதைக்கு நான் நலமே ! Thanks !!

      Delete
    2. Dear Editor:

      Sorry to hear that you are not well. I hope you feel better soon.

      Thank you for giving me the pleasure of comics all these years. Take care and wish you all the best. Bye.

      Delete
    3. hi BN USA ,

      I can understand your feeling very well as i am also one of the disappointed fans when editor closed the door for Classic heroes . Still i have faith in our editor that somehow he might release these classic digest very soon . May be in Chennai book fair in 2014 or some time before . Hence i request you to be patient for some more time and continuing enjoying the comics with new heroes as well.

      Delete
  4. //... சந்தோஷமான ஆச்சர்யமும் COMIC CON -ல் காத்துள்ளது என்பது மாத்திரம் இப்போதைக்கு கொசுறுச் சேதி. .. //

    நாலு புத்தகம்.. அதுக்கும் மேலே சந்தோஷமான ஆச்சர்யமும் காத்துள்ளதா? Super!

    ReplyDelete
  5. ஆஹா சார் !இவ்வளவு நாள் தவிக்க விட்டு விட்டீர்கள் !சந்தோசமாய் இருக்கிறது உங்களை பார்க்க !இனி படித்து விட்டு வருகிறேன் !

    ReplyDelete
  6. பெங்களூர் காமிக்ஸ் காண் நான் வர எண்ணி இருந்தேன், இப்பொழுது கண்டிப்பாக வருகின்றேன். 4 புத்தகங்கள்! அட்டகாசம். இன்னும் இரு கதைகள் சேர்த்துகொள்ளுங்கள். அட்டகாசமான நாளாக இருக்கும். KBT - சீசன் 2 வென்றவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. டியர் எடிட்டர்,

    //பக்கத்து வீட்டில் கல்யாணப் பந்தியே பரிமாறப்படவிருப்பினும், நம் வீட்டுச் சமையல் கூடமும் நம் சக்திகளுக்கு உட்பட்ட சுவைகளை வழங்கிடத் தயாராகி வருகிறது //

    சூப்பரான அறிவிப்பு சார், நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல,
    PIZZA மற்றும் burger போல எவ்வளவுதான் விதவிதமான தின்பண்டங்கள் வந்தாலும் நமது பாரம்பரியமான உணவுகளுக்கு என்றுமே நல்ல சுவை உண்டு. :)
    நமது பந்தியில் கிடைக்கும் வகை வேறெங்குமே கிடையாது ( டெக்ஸ், டைகர் , ஸ்பைடர் :) )

    சுரேஷ்

    ReplyDelete
  8. உங்கள் ஜீரத்திக்கான காரணம் அந்த குளிரூட்டிய கதிரவனா சார்?! ;) தற்போது நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்பது இந்தப் பதிவைப் பார்க்கையில் தெரிகிறது! இந்த வருடம் பெங்களூரில் காமிக்ஸ் ஜீரம் கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : கதிரவன் குளிரூட்டியதோ இல்லையா - பச்சை நிற தர்பூசணி போட்டுத் தாக்கி விட்டது !

      "ஜூரத்தின் நிறம் பச்சை " ! சந்தடி சாக்கில் ஒரு டைட்டில் தயார் !

      Delete
    2. "பச்சையாய் ஒரு ஜுரம்" என்பது தானே நமது பாணி? :)

      Delete
    3. Prunthaban : டெக்ஸ் வில்லரின் விண்வெளி எதிரியை நினைவுபடுத்திப் பாருங்கள்..! பொருந்தி வரும் !

      Delete
  9. ஒரே நேரத்தில் நான்கா ! ? அடி பின்னுங்க . . .

    ReplyDelete
  10. சார் அருமையான சந்தோசத்தை கிளப்பும் அறிவிப்பு !காமிக்கான் மே மாதம் துவங்கி இருக்க கூடாதா என்ற சற்றே பெரிய ஏக்கம் வந்து விட்டது !நான்கு புத்தகங்கள் ஒரே மாதத்தில் இதனை விட பேரின்பம் என்ன வேண்டும் என மனது குதூகலிக்கிறது சந்தோசத்தில் !மா பெரும் நன்றி சார் !
    வெற்றி பெற மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் !+6 ம் அறிமுகம் இப்போதே எதனை வெளியிடுவீர்களோ என உற்ச்சாக எதிர்பார்ப்புகள் !லக்கி ஸ்பெசல் ,+6,இரண்டு கருப்பு வெள்ளை நீண்ட.....மிக நீண்ட நாள் கழிந்து வரும் குற்றவியல் நாயகன் ,டெக்ஸ் என அசத்தல் !ஆஹா!
    கோடை விடை பெற ,வாடையாய் அடுத்த இரண்டு மாதங்களும் திருவிழா என்றால் மிகை அல்லவே !ஆல் நியூ ஸ்பெசல் அடுத்த உற்ச்சாக அதிரடி !வாவ் !

    ReplyDelete
  11. Great news happy to hear we get four books ...

    ReplyDelete
  12. அப்புறம் நினைவிருக்கட்டும் ரத்த தடம் மே ஒன்றுக்கு முன்னே கைகளில் தவழும் என ஏற்கனவே வாக்களித்துள்ளீர்கள் !
    மே ஒன்றின் நிறமும் ரத்த சிவப்பே !பூக்கும் சிவப்பு வாடாச்சி மலர்களால் இயற்கையும் சிவப்பை தழுவி அணைக்கும் நாள் !தொழிலால வர்க்கங்களும் சிவப்பை வழி பட்ட/படும் நாள் !
    ரத்த தடம் என நாமும் சிவப்பை எதிர் நோக்கும் நாள் !இது தற்செயலான ஒற்றுமைதானா அல்லது ,சிந்தனை செய்து சரியான தருணத்திற்கு பொருத்தமாய் வெளியிடுகிறீர்களா !

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : காமிக்ஸ் தலைப்புகளில் பாந்தமாய்த் தெரியும் இந்த "இரத்த" சமாச்சாரங்கள் நிஜ வாழ்வில் நினைவூட்டுவது பதறச் செய்யும் பக்கங்களை அன்றோ ?! மே தின சிகப்பை நினைவூட்ட ஆப்பிளின் சந்தோஷச் சிகப்பை மனதுக்குக் கொணர்வது தேவலை என்று சொல்வேன் !

      Delete
    2. ஏற்று கொள்கிறேன் சார் !உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

      Delete
  13. மே 1-ல் "இரத்த தடம்" ஜூன் 1-ல் 4 இதழ்கள்... இதைவிட சிறந்த அறிவிப்பு எதுவும் இல்லையே!!! அதை தொடர்ந்து ஆண்டு மலரில் "Green Manor" நச்சுனு ஒரு அறிவிப்பு, நாலு கால் பாய்ச்சலில் ஓட்டம், நிதானமான சிந்தனை, இன்னும் இது போன்ற வேறு சில வார்த்தைகள் எல்லாம் சொல்லும் தாரக மந்திரம் "Prakash Publishers ". பணி சிறக்க வாழ்த்துக்கள்!


    இந்த வருடம் தகுந்த முன்னேற்பாடுகளுடன் ஒரு சஸ்பென்சையும் கொண்டு வரும் விஷயம் என்னவென்று அறிய ஆவல்!

    Old Monk : நினைவிருக்கிறது செப்டம்பர் 8-ம் நாள் கோரமங்கள ஹாலில் லயன், முத்துவின் இதழ்களை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்துவிட்டு இரவே 9:00 மணிக்கு கேரளா செல்லும் ட்ரெயினில் ஓடி பொய் தொற்றிகொண்ட அந்த நாள்! அந்த "Comic Con " திருவிழாவை பார்பதர்க்காகவே சென்னை-டூ-கோழிக்கோடு-க்கு பதிலாக என் பயணத்தை சென்னை-டூ-பெங்களூர்-டூ-கோழிக்கோடு என்று மாற்றிய நினைவுகள் இன்றும் பசுமை தான்!

    ReplyDelete
    Replies
    1. discoverboo : சென்னைக்கும் COMIC CON வருகை பதியும் நாளொன்று வந்தால் - மூக்கைச் சுற்றி வாயைத் தொடும் ரகப் பயணங்களை தவிர்த்தல் சாத்தியமாகும்... fingers crossed !

      Delete
    2. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

      Delete
  14. காமிக் கான் திருவிழாவில் நான்கு புத்தங்களா? அருமை சார். அப்படியே தாங்கள் முன்பு அறிவித்த மாதிரி டிடெக்டிவ் ஸ்பெஷல் மற்றும் கேப்டன் பிரின்ஸ் கதைகளான நரகத்தின் எல்லையில் & பற்றி எரியும் பாலைவனம் வண்ண மறுபதிப்பையும் வெளியிட்டால் இன்னும் அதிக சந்தோஷத்திற்கு ஆளாவோம்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரூனோ ப்ரேசில் : தட்டுத் தடுமாறி நடை பயின்று வருகிறோம்.....நிதானம் நம் தலையாயத் தேவை !

      Delete
  15. // ஆனால் மொழிபெயர்ப்போடு நமக்குத் திரும்ப வந்தவையோ பாதிக்கும் குறைவே ! நேரமின்மையா ; சிரமமா ; வேறேதும் காரணங்களா தெரியவில்லை //

    நேரமில்லை என்பதுதான் எனது காரணம் சார் .. மன்னிக்கவும் ... நீங்கள் போட்டியை ஆரம்பித்த உடனே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் விண்ணப்பித்தேன். நேரம் சரியாக அமைய வில்லை.

    வெற்றி பெற போகும் நண்பருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...

    +6 எவ்வளவு சந்தா என்று சொன்னால் நாங்கள் உடனே பணம் அனுப்ப வசதியாயிருக்கும் அல்லவா சார் ?

    ReplyDelete
  16. வாவ், 4x கொண்டாட்டம்

    ReplyDelete
  17. டியர் எடிட்டர்,

    நீங்கள் விரைவில் குணமடைந்தது பெரு மகிழ்ச்சியளிக்கிறது!

    உடல் நலமின்மையால் பதிவிட சற்று தாமதமானாலும், ஓய்வெடுக்கும் வேளையிலும் படுத்துக்கொண்டே கட்டைவிரலைப் பற்றி யோசிக்கும் உங்கள் பழக்கத்தின் விளைவாக நல்ல சேதி ஒன்று விரைவில் பதிவாகும் என்று காத்திருந்த என் நம்பிக்கை வீண்போகவில்லை!

    இதோ வந்துவிட்டது காமிக் கானும், ஒரே மாதத்தில் நான்கு புத்தகங்களும், +6 பற்றிய ஆரம்ப அறிகுறிகளும், காமிக் கானில் காத்திருக்கும் உற்சாக அறிவிப்பும்!

    காமிக் கானில், நமது தரமான வண்ணப் புத்தகங்களின் அணிவகுப்பு சென்ற வருடத்தைவிட இம்முறை கூடுதலானது என்பதால், 'பாருங்கப்பா எங்க காமிக்ஸை' என்று பெருமை பொங்க களத்தில் நின்றிடும் அந்தத் தருணங்கள் நிச்சயம் நம் எல்லோருக்கும் குதூகலத்தை கொண்டுவரப்போவது உறுதி!

    தொடரட்டும் இந்த வெற்றிகள்! என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. "காமிக் கானில், நமது தரமான வண்ணப் புத்தகங்களின் அணிவகுப்பு சென்ற வருடத்தைவிட இம்முறை கூடுதலானது என்பதால், 'பாருங்கப்பா எங்க காமிக்ஸை' என்று பெருமை பொங்க களத்தில் நின்றிடும் அந்தத் தருணங்கள் நிச்சயம் நம் எல்லோருக்கும் குதூகலத்தை கொண்டுவரப்போவது உறுதி!"

      நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ரபிக். இந்த முறை சென்னை புத்தக காட்சியில் கலக்கினதை விட தாக்கம் சற்று கூடுதலாயிருக்கும் போல.

      Delete
  18. காமிக் கானில் காத்திருக்கும் அந்த சந்தோஷ அறிவிப்பு என்னவாக இருக்கும் என குப்புறப் படுத்து யோசித்ததில்...

    'லயன் 30வது ஆண்டு மலர்' பற்றிய ஒரு மெகா அறிவிப்பாக இருந்திடுமென்று உள்மனசு உரக்கச் சொல்கிறதே! ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : என்ன தான் குப்புறப்படுத்து யோசித்தாலும், ஏறத்தாழ 14 மாதத் தொலைவினிலிருக்கும் ஒரு சங்கதியை இப்போதே கிளப்பி விடுவது கொஞ்சம் ஓவராய் தோணலியா ?

      Delete
  19. WOOOOOOOOOOOOOOOOOOW! SUPER ANNOUNCEMENTS! THANK YOU SIR!

    ReplyDelete
  20. //ஒரு காமிக்ஸ் புதையல் காத்திருப்பது நிச்சயம் என்பதால் கனத்த பர்சோ ; வலிமையான பிளாஸ்டிக் அட்டைகளோ நிரம்பிய பாக்கெட்களோடு வந்திடல் நலம்!//

    வீட்ல நுழைந்தவுடன் வரவேற்க பெரிய 'டின்' காத்திருக்குமே இருக்குமே பரவாயில்லையா?

    ஜூன் மாதம் 4 இதழ்கள் என்பதற்கு பதிலாக காமிக்ஸ் வறட்சியாக தோன்றும் மே மாதம் 'சும்மர் surprise ஸ்பெஷல்' என்று 2 இதழ்களை இணைத்து வெளியிட்டால் என்ன?

    கோடையின் கொடையெல்லாம் பார்த்து எத்தனையாண்டுகள் ஆகிவிட்டன!

    ReplyDelete
  21. அந்த ஸ்பெஷல் நியூஸ் லயன் 30 ஆண்டு மலர் or +6 as a new comic line for குட்டீஸ் in Sunshine Library banner ? அப்போ +6 முதல் இதழ் சுட்டி லக்கியா ?

    GreenManor போட்டியில் பங்குபெற்றவர் அனைவரின் பெயரும் Honorable mention என்று பெயர் மட்டும் அந்த வெற்றிபெற்ற இதழில் வெளியிடவேண்டும் (எனது மொழிபெயர்ப்பு தேர்வாகாது என்பதால்.) கிரீன் மனோர்க்கு என்ன தலைப்பு செலக்ட் பண்ணியிருகிங்கனாவது சொல்லலாமே?

    ReplyDelete
  22. 2011 இல் சிவகாசி போனேன், என்னடா பல வருஷமா லயன் கண்ணுலேயே காணோமேனு, (பிரசவத்திற்கு மனைவி அம்மா விட்டிற்கு போய்விட்டதால்) சும்மா இருந்த ஒரு weekend மைசூர்ல இருந்து மைசூர் எக்ஸ்பிரஸ்ல general கம்பர்ட்மெண்ட்ல போய், தூங்கியதால் கோவில்பட்டில இறங்கி ரயில்வே ஸ்டேஷன்லே குளிச்சு கிளம்பி சிவகாசி போனா ஆசிரியர் ஊர்ல இல்லைனு சொன்ன அண்ணாச்சி குடோனுக்கு கூட்டிட்டு போனாறு. இருந்த எல்லாத்துலயும் ஒன்ன எடுத்துகிட்டு மறுபடியும் காமிக்ஸ் கனவுலே லூசு மாதிரி கோவில்பட்டி போய்டேன் (விருதுநகர் போயிருக்கவேண்டும்). எப்படியோ அதே டிரைன்ன புடிச்சு விட்டுக்கு வந்தா, போன்ல ஒரே சண்ட, நிஜமாவே காமிக்ஸ் வங்கதான் சிவகாசி போனிங்களானு...(அந்த செலவ compensate பண்ண சிகரட் விட்டுடறேன்னு சொல்லி சமாதானம் பண்ணி அது நிஜமாகி போனது தனிகதை)
    2012 - பெங்களூர் காமிக்ஸ் கான் வருதுன்னு ஒரு மாசமாவே குஜால இருந்த என் கனவுல மண் அள்ளிபோட்ட வாசன் eyecare டாக்டர் ரொம்ப நல்ல இருக்கனும். சனி கிழமை, ஞாயித்து கிழமைனு குளறுபடி பண்ணி என் அம்மாவின் catarat surgery ஐ ஒருவழியா முடிச்சு அனுப்பிய வுடன் அடிச்சு புடிச்சு எல்லாத்தையும் விடல விட்டுட்டு இத வந்துடறேன்னு சொல்லிட்டு கார எடுத்துகிட்டு மைசூரு ல இருந்து கோரமங்களாவ தேடிப்பிடிச்சு வந்தா அண்ணாச்சி மட்டும் தான் இருந்தாரு (Modesty blaise பேர்ல ப்ளாக் வர ஒரு பங்காளி மட்டும் இருந்தாரு.) WWS வாங்கிட்டு எல்லா ஸ்டால்ளையும் ரவுண்டு அடிச்சுட்டு மறுபடியும் நம்ம ஸ்டாலுக்கு வந்து கொஞ்ச நேரம் நின்னுட்டு கிளம்பி போய் கார் எடுக்கும் போது நம்ம ஸ்டால்ல இருந்த ஒருத்தர் பின்னாடியே வந்து சார் பில் காமிங்கனாறு.. சந்தடி இல்லாம கிளம்பினனால சுட்டுட்டு வந்துட்டேனு நினச்சுடாரு போல.. அவருக்கு தெரியுமா 100rs புக் வாங்க 2000rs பெட்ரோல் செலவு பண்ணி 300km travel பண்ணவன் நான்னு.. ராத்திரி 12மணிக்கு விட்டுக்கு போனா ஒரே களோபரம். அப்ப தான் போன் சுவிட்ச் ஆப் ஆனதே ஞாபகம் வருது.
    2013: ஒருவழியா பெங்களூருக்கு ஜாகை மாறியாச்சு, கோரமங்களா கூப்பிடு தூரம், ஐயா பிறந்த நாள் (2)வேற, எவ்ளோ வாங்குனாலும் வீட்ல அடிவிழாது.. இந்த வாட்டியாவது எடிட்டர பாத்து +6 ல ஆட்டோகிராப், ஒரு போட்டோ, முடியுமானு பார்போம்..

    ReplyDelete
    Replies
    1. Looks like you have moved to Bangalore just because of "Our Comics"!!

      Advance birthday wishes!!

      2013: ஒருவழியா பெங்களூருக்கு ஜாகை மாறியாச்சு, கோரமங்களா கூப்பிடு தூரம், ஐயா பிறந்த நாள் (2)வேற, எவ்ளோ வாங்குனாலும் வீட்ல அடிவிழாது.
      >> அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது :-)

      Delete
    2. Great Friend. Advanced Birthday Wishes.

      Delete
    3. சுமார் மூஞ்சி குமார் : ஒரு COMIC CON ன் கதை என்று தலைப்பிடலாம் உங்கள் அனுபவங்களை !

      Delete
    4. ரெண்டு மாசத்துக்கு பின்னாடி வர போற பிறந்த நாளுக்கு இப்போவே அட்வான்ஸ் வாழ்த்துக்களா.. நன்றி.. Comic conல எல்லோரையும் மீட் பண்ண முடிந்தால் ஒரு மறக்க முடியாத பிறந்தநாளாக இருக்கும்...

      "ஒரு COMIC CON ன் கதை " LOL....

      Delete
  23. உற்சாகம் துள்ளும் உங்கள் பதிவை படிக்கையில் எங்கள் உள்ளமும் உவகை கொள்கிறது.

    சந்தா எண்ணிக்கை மெதுவாக உயருவதற்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கட்டணம் சற்று கூடுதல் என்பதும் காரணமாக இருக்கலாம். விரைவில் சென்ற ஆண்டின் எண்ணிக்கையை கடந்து விடுவோம் என்பதில் சற்றும் ஐயமில்லை.

    GIFT SUBSCRIPTION க்கு 10% DISCOUNT அருமையான ஐடியா. இன்னமும் சினிமா புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் இறைந்து கிடக்கும் பெரும்பாலான புத்தகக்கடைகளில் நமது புத்தகங்கள் கிடைப்பதில்லை. இதில் நாம் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும் அல்லவா?? புதிய வாசகர்களை EMBRACE செய்ய இதை விட்டால் வேறு என்ன சிறப்பான வழியிருக்க முடியும்???
    PLEASE INJECT A LITTLE BOOSTER DOSE FOR THIS SEGMENT.

    "ஒரே மாதத்தில் நான்கு லட்டுகளா???" கலக்குங்க சார்...தாங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்!!!

    தங்களுடன் COMICON க்கு நமது சீனியர் எடிட்டர் வரவில்லையா சார் ???அவர் வராமல் COMICON எப்படி முழுமை பெரும்...???

    CINIBOOKS, COMICON க்கு வருவது ஒரு விதத்தில் சந்தோசப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் இங்கே நமது மக்களின் உற்சாகத்தை பார்த்துவிட்டு "நாங்களே தமிழில் விடபோகிறோம்" என்று குட்டையை குழப்பாமல் இருந்தால் சரி. முன்பு ஒரு பதிப்பகம் வால்ட் டிஸ்னி யின் கதாப்பத்திரங்களை தமிழில் விடுகிறேன் பேர்வழி என்று சில புத்தகங்களை மோசமான மொழிபெயர்ப்பில் விட்டு அதன் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச ஈர்ப்பும் தொலைந்துபோக செய்தது தான் மிச்சம்.
    எனக்கு என்னமோ CINIBOOKS நேரடியாக இங்கே களம் இறங்குவது அவ்வளவு சரியாக படவில்லை. ANYWAY WHO ARE WE TO CONTROL THEM ???

    சந்தோசமான ஆச்சர்யம்....தெரிந்துவிட்டது....விக்ரமின் கட்டைவிரலுக்கு வேலை தரும் வேளை அது ... : )

    KBT-2 வில் நண்பர்கள் பட்டையை கிளப்பியிருப்பது சந்தோசமான செய்தி.கடந்த நாற்பது வருடங்களாக ஒரே வகுப்பில் (காமிக்ஸ்) படித்துக்கொண்டிருக்கும் நாங்கள் கடைசியாக பரிட்சையில் தேறிவிட்டோம் அல்லவா ??? CONGRATS நண்பர்களே... : ).

    ReplyDelete
    Replies
    1. //இன்னமும் சினிமா புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் இறைந்து கிடக்கும் பெரும்பாலான புத்தகக்கடைகளில் நமது புத்தகங்கள் கிடைப்பதில்லை. இதில் நாம் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும் அல்லவா?? புதிய வாசகர்களை EMBRACE செய்ய இதை விட்டால் வேறு என்ன சிறப்பான வழியிருக்க முடியும்???
      //

      உண்மை.சீரியஸாக யோசிக்க வேண்டிய விஷயம்.

      Delete
    2. விஸ்கி-சுஸ்கி : ///சினிமா புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் இறைந்து கிடக்கும் பெரும்பாலான புத்தகக்கடைகளில் நமது புத்தகங்கள் கிடைப்பதில்லை. இதில் நாம் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும் அல்லவா??///

      கடன் அன்பை மாத்திரமல்லாது நிறைய பதிப்பகங்களின் முதுகையும் முறிக்கிறது என்பதே யதார்த்தம் ! ரூ.100 விலையிலான காமிக்ஸ்களை முன்பணம் அனுப்பி வாங்கிடத் தயாராக இருக்கும் விற்பனையாளர்களின் எண்ணம் வெகு சொற்பமே ; அதனையும் மீறி "பெரிய பெயர்களை " நம்பி நாங்கள் கடனுக்கு பிரதிகளை அனுப்பிவிட்டு மொட்டு வளையத்தைப் பார்த்திடும் கதை இப்போதும் கூட அரங்கேறாதில்லை ! It's tough out there !

      Delete
  24. * சார் ..உங்கள் உடல் நிலை சரியானதில் மிகுந்த மகிழ்ச்சி சார் ..

    *தமிழ் புத்தாண்டு அன்று உங்கள் அதிரடியான புதிய அறிவிப்பு கண்டிப்பாக உண்டு என்று உறுதியாக நம்பி இருந்தேன் .நம்பிக்கை வீண் போக வில்லை .
    "லேட்டா வந்தாலும் ........ ....... "

    *சிறு சந்தேகம் சார் ..மே மாதம் வரும் கூடுதல் புத்தங்களுக்கு சந்தாவில் அனுப்பி கழித்து விடுவீர்களா ?அல்லது தனியாக பணம் அனுப்ப வேண்டுமா ? தனியாக பணம் அனுப்ப வேண்டுமனில் எவ்வளவு அனுப்ப வேண்டும் .விரைவில் பதில் கூறினால் பணம் அனுப்ப வசதி யாக இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K ///தனியாக பணம் அனுப்ப வேண்டுமனில் எவ்வளவு அனுப்ப வேண்டும் .விரைவில் பதில் கூறினால் பணம் அனுப்ப வசதி யாக இருக்கும் .///

      விரைவில் அறிவிப்பு வரும் ...!

      Delete
  25. விஜயன் சார்,

    நீங்கள் குணம் அடைந்து பணிக்கு திருப்பியதுக்கு கடவுள்க்கு நன்றி!!!

    சூப்பர் நியூஸ்! சூப்பரப்பு!! ஜூன் 1 & 2 உங்களை மீண்டும் சந்திப்பதுக்கு ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கிறேன்!! கடந்த வருடம் உங்கள் அனைவரையும் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்!!

    முடிந்தால் ஜூன்-1 பெங்களூர் நண்பர்கள் அனைவருடன் இணைந்து (மதிய அல்லது) இரவு உணவு அருந்த வாருங்கள்! பெங்களூர் நண்பர்கள் அனைவரும் இதனை விரும்புவார்கள் (எங்களின் கனவு) !! கோரமங்களாவில் அருமையான உணவகம்கள் பல உள்ளன!

    ReplyDelete
  26. டியர் எடிட்,

    பெங்களூர் காமிக் கானில் இனி லயன் முத்து எப்போதும் அங்கம் வகிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக, மீண்டும் உங்கள் பங்கேற்பு உறுதியாகி இருப்பதில் மகிழ்ச்சியே. சென்னையில் காமிக் கான் இல்லையா, என்ற வருத்தம் எப்போதும் இருந்தாலும், சென்னையை விட காமிக்ஸ் மீது அதிக காதல் கொண்ட பல்வேறு ரக வாசகர்களும் ஒன்றுகூடும் வாய்ப்புகள் பெங்களூரிலேயே அதிகம் என்பதால் தற்போது அமைப்பாளர்கள் சென்னையை விட்டு தூர இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.

    ப்ரஞ்சு புத்தகங்களின் அருமையை எனக்கு உணர்த்திய லயன்/முத்து வும், அதன் ஆழத்தை மூல கதையோடு முகர வழி ஏற்படுத்திய சினிபுக் நிறுவனம், ஒரே கண்காட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு வாய்ப்பை ஒரு வழியாக நேரில் காண போகிறேன் என்று நினைத்தாலே சந்தோஷம் பீறிக்கொண்டு வருகிறது. நமது வாசகர்கள் மற்றும் உங்களை மீண்டும் ஒரு முறை காண ஆவலுடன் இருக்கிறேன். கூடவே 4 இதழ்கள் என்ற போனஸ் வேறு.

    காமிக் கான் சிறப்புற வாழ்த்துகள்.

    பி.கு.:
    BN USA வின் ஆதங்கம், கிளாசிக் வாசகர்கள் பக்கம் இருந்து பார்க்கையில் நியாயமாகவே தோன்றுகிறது. பெங்களூர் காமிக் கானில் கலர் இதழ்களை வரவேற்கும் அதே சமயத்தில், ஒரு கிளாசிக் இதழையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாமோ ?

    கிளாசிக் இதழ் ரீபிரிண்டுகளை, சந்தாக்களின் மீது நம்பாமல், இப்படி கண்காட்சிகளின் போது தான் செயல்படுத்த முடியும் என்பது நாம் ஏற்கனவே விவாதித்து ஓரளவிற்கு ஒப்புக்கொண்ட விடயம் என்பதால் கேட்க தோன்றிற்று.

    ReplyDelete
    Replies
    1. //... கிளாசிக் இதழ் ரீபிரிண்டுகளை, சந்தாக்களின் மீது நம்பாமல், இப்படி கண்காட்சிகளின் போது தான் செயல்படுத்த முடியும் என்பது நாம் ஏற்கனவே விவாதித்து ஓரளவிற்கு ஒப்புக்கொண்ட விடயம் என்பதால் கேட்க தோன்றிற்று...//

      சரியாகச் சொன்னீர்கள். BN USA பொறுமை இழந்து விட்டார். ஆனால் என்னைப்போன்ற பலர் இன்னும் கிளாசிக் இதழ்கள் மறுபதிப்புக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எடிட்டர் மனது வைப்பாராக.

      Delete
    2. Count me in also for that Periyar . It might be the Surprise package in Comic con

      Delete
    3. Agreed.Expecting some old classics in comic con...

      Delete
    4. One more time me alsi♧♣☆★♡♡♥♥¤¤

      Delete
    5. At least please reprint the Detective Digest...

      Delete
    6. @ friends : சின்னதாய் ஒரே ஒரு கணக்கு இங்கே பகிரங்கப்படுத்தப் படுவது தேவலை என்று நினைக்கத் தோன்றுகிறது...!

      ஒரு சராசரியாய் மாதந்தோறும் நாம் தயாரிக்கும் இதழ்களில் 30% மாத்திரமே முதல் 30 நாட்களுக்குள் விற்பனை ஆகிடும் எண்ணம் ! சந்தாக்கள் ; முன்பணம் செலுத்தி வாங்கிடும் ஏஜென்ட்களின் பங்களிப்பு ;E -Bay விற்பனை என இந்த 30%க்குள் சகலமும் ஐக்கியம்.

      பாக்கி 70% பிரதிகள் விற்றுத் தீர்ந்திட சராசரியாய் 10 மாதங்களும், ஒரு அதிரடியான சென்னைப் புத்தகத் திருவிழாவும் அவசியப்படுகின்றன என்பதே யதார்த்தம் ! So - இந்தத் துவக்க 30% பிரதிகளாவது சுணக்கமின்றி விற்றுத் தீர்ந்தால் தவிர - நமது சக்கரம் சுழல்வதில் அசாத்தியச் சிக்கல் நேர்ந்திடுகிறது.

      காமிக்ஸ் க்ளாசிக்சின் வண்ண அவதாரின் அறிவிப்பு வரும் முன்னே சந்தாக்கள் பரிதாபமாய் வெறும் 72-ல் நின்றிட்ட போது, உள்ளங்கையைப் பிசைந்து கொண்டே லஜ்ஜை பார்க்காது உங்களிடம் நான் நிஜத்தை பகிர்ந்திட நேர்ந்தது அந்த அசாத்தியச் சிக்கலினூடே தான் !

      தொடர்ந்த நாட்களில் வண்ணத்தின் வருகை கொணர்ந்த தொடர் சந்தாக்களையும், இப்போது டைகர் ஸ்பெஷல் இணைய விற்பனையில் தந்திடும் உத்வேகத்தையும் - முதலீடு செய்திடும் ஒரு வியாபாரியாய் மாத்திரம் பார்த்திட்டால் - நிஜத்தை ; நிதர்சனத்தை உணர அதிக நேரம் பிடிக்காது ! மாயாவிக்களுக்கும் ; லாரன்ஸ் டேவிட்களுக்கும் நானுமொரு ரசிகனே ; ஆனால் மாதாந்திர வரவு-செலவுக் கணக்குகள் - ரசிகனுக்கென சலுகைகள் ஏதும் காட்டுவதில்லையே !! 'இந்த மாதம் இவ்வளவு பள்ளம் ' என்பதை மாத்திரம் சலனமின்றி சொல்லுகின்றன !

      'அதெல்லாம் சரி ; விற்பது 30% தான் என்றால் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையைக் கணிசமாய்க் குறைத்துக் கொள்வது தானே ?' என்ற சிந்தனை உங்களில் எழுவதும் சகஜமே. ஆனால் புத்தகத் தயாரிப்பு economics ன் வினோதமே - தயாரிப்புச் செலவுகளில் பேப்பர் கொள்முதல் + பைண்டிங் கூலி தவிர்த்து கிட்டத்தட்ட இதர செலவினங்கள் அனைத்துமே நிலையாய் இருந்து போவது ! 1 பிரதி தயாரிப்போ ; 5000 தயாரிப்போ - எங்களது ராயல்டி கட்டணங்கள் ஒரு minimum guarantee -க்கு உட்பட்டவை ; டிசைனிங் ; ப்ராசசிங் செலவுகள் - நிலையானவையே - அச்சிடப்படும் பிரதிகள் எவ்வளவாக இருப்பினும் !

      அச்சுக் கூலிகள் கூட 5,000 பிரதிகளைத் தாண்டும் போது தான் மாற்றம் கண்டிடும் ; 500 தாள்களை அச்சிடவாகும் கட்டணமே 5000 தாள்களுக்கும் எனும் போது - நமது printrun -ஐ குறைப்பதன் மூலம் பெரிதாய் சாதிக்க ஏதும் வழி கிடையாது. தவிரவும் ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கையிலான பிரதிகளின் தயாரிப்பை முன்னிறுத்தியே விலை நிர்ணயமும் செய்கிறோம். So - அச்சின் எண்ணிக்கை குறைந்தால் - விலை எகிறும்.

      Contd..

      Delete
    7. Part # 2 : இந்தாண்டு ஏற்கனவே எக்கச்சக்கமாய் திட்டமிட்டு - சிறுகச் சிறுக செயலாற்றி வருகிறோம். இன்னமும் பாக்கியுள்ள 4 வண்ண மறுபதிப்புகள் ; +6 வரிசை என இன்னமும் 10 பிரதிகள் நமது மாதாந்திர லயன்-முத்து வைத் தாண்டிக் காத்துள்ளன ! இந்நிலையில் back to black & white reprints எனும் போது விற்பனையும் சரி; budget -ம் சரி - சண்டித்தனம் செய்திடுவது சர்வ நிச்சயம் !

      முன்பெல்லாம் பத்தாண்டுகளில் நம்மிடம் தேங்கிய பிரதிகளின் கிரயமும், இப்போதெல்லாம் ஓராண்டில் தேங்கிடும் பிரதிகளின் கிரயமும் கிட்டத்தட்ட ஒன்றே எனும் போது நமது "தாக்குப் பிடிக்கும் திறன்" கூடிட வேண்டியது தலையாயது. அதற்குத் தயாராகியே இருக்கிறோம் என்ற போதிலும், நிதர்சனமாய் nostalgia value என்பதைத் தாண்டி commercial value வெகு சொற்பமாய்க் கொண்டிருக்கும் iஇதழ்களில் சக்தியை முடக்குவது சரி தானா ?

      'இந்தக் கணக்கு வழக்குகளெல்லாம் சொல்லி உங்கள் உற்சாகத்தைக் கெடுப்பானேன்' என்று தான் இவற்றை பரணிலே பார்கிங் செய்து வைத்திருப்பேன். இன்று உங்களின் வினவல்கள் அவற்றை தரை இறக்கி விடும் அவசியத்தை ஏற்படுத்தியதால் - வேறு வழியின்றி போனது ! Facts of life folks..!

      Delete
    8. சார் வருந்துவதற்குரிய உண்மை !சிறந்த தயாரிப்புகள் வெளி வர உள்ளன !இந்த காமிகான் கூடுதல் நண்பர்களை நம்மிடையே கொண்டு வந்து சேர்ப்பது நிச்சயம் !இப்போது நாம் கொள்ளும் சந்தோசமான தருணங்கள் அன்று கூட கிடையாது !நீண்ட காலம் நாம் நிம்மதியாய் வாழ சில தற்காலிக சந்தோசங்களை இழந்திருப்போமே அதுபோல இப்போதும் நாம் அதிக தேவைக்கே முக்கியத்துவம் அளிப்போம் !நண்பர்கள் சிலர் டைகர் கதைகள் இரண்டுக்கு மேல் நிறைய பேர் வாங்கியதை கூறி உள்ளனர்!
      டைகரின் வெற்றி குறித்து தாங்களும் கூறியதிலிருந்து உணர முடிகிறது !மின்னும் மரணம் போன்ற இதழ்களை வெளியிடுங்கள் !ஒருவரே இரண்டு என வாங்குவது வளர்ச்சியை தராது !மேலும் மீண்டும் கடனுக்கு விடுவது நமது நிலைமையை மோசமாக்கும் !தயவு செய்து முன்னணி நிறுவன செய்திதாள்களில் விளம்பர படுத்துங்கள் !இந்த காமிகான் நமக்கு அடுத்த விளம்பரத்தையும் ,மாபெரும் நண்பர்கள் பட்டாளத்தையும் தரட்டும் !

      Delete
    9. உடனடி விற்பனை 30 சத்தம்தான் என்பது இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம் !இனி அது வேண்டும் இது வேண்டும் என நான் தொல்லை கொடுக்க மாட்டேன் !நன்கு விற்பனையாகும் புத்தகங்களில் கவனம் செலுத்துங்கள் !அது ஒன்றே நாம் தடங்கலின்றி பயணிக்க எதுவாக இருக்கும் !+6 சந்தா எவ்வளவு என சீக்கிரமாக அறிவியுங்கள் !நிச்சயம்மாக இப்போது வரும் கதைகளை விட தரத்தில் ,கதையில் சிறந்த கதைகள் இருக்குமா என தெரியவில்லை !

      Delete
    10. இயலும் எனும் நிலையில் உள்ள நண்பர்கள் பின்னர் வந்தால் பார்த்து கொள்ளலாம் என தயங்காது, சந்தா செலுத்துங்கள் உடனடியாக !அது ஒன்றே உற்ச்சாகத்தை பாய்ச்சும் !தரமான கதைகள் வெளி வர நாம் செலுத்தும் இந்த சந்தாக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம் !இப்போது வரும் புத்தக விலை பிற இதே போன்ற தரமான புத்தகங்கள் மேலும் கதைகளின் தரம் பொறுத்து நானூறுக்கும் அதிகம்தான் என்பது அனைவருக்கும் தெரியும் !ஆனால் எனக்கு பிடித்த கதைகள்தாம் வாங்குவேன் ,ebay வில் வரட்டும் என எண்ணாமல் முழு சந்தாவும் செலுத்துங்கள் !ஏதேனும் ஒன்றிரண்டு கதைகள் சோடை போகலாம் !அதுவும் இந்த வருடம் செலக்டிவான கதைகள் ஒன்று கூட சோடை போகவில்லை என்பதும் நாம் அறிந்த ஒன்றுதானே !சந்தா தொகை உயர்வது நம் கைகளிலும் உண்டு !

      Delete
    11. Dear Vijayan Sir, you can come back on comics-classic digest when you feel comfortable. I hope we will be in good position from 2014 onward.

      Delete
    12. நாம் எவ்வளவு புத்தகம் வேண்டுமானலும் கேட்கலாம்.ஆசிரியர் தான் விற்பனையை கருத்தில் கொண்டு கடைசி முடிவை எடுக்க வேண்டும்..ஆசிரியர் சொன்னது போல..இந்த வருடம் இல்லாவிட்டாலும் தொடரும் வருடங்களில் புத்தக விற்பனை உயரும் போது comics-classics reprint செய்வார் என நம்புகிறேன்..

      Delete
    13. உண்மை ஆசிரியரும் demand எது என உணர ஏதுவாக இருக்கும் ,ஆனால் நமது கோபம் .....ஆனால் நண்பர்களின் கேள்வி உண்மையை உணர்த்த உதவியது குறித்து சந்தோசம் !

      Delete
    14. டியர் எடிட்,

      நீண்ட ஒரு பதிலளிப்பிற்கு நன்றி. கிளாசிக் இதழ்களின் ரீபிரிண்டுகளை பற்றிய உங்கள் தற்போதைய நிலைபாடை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.

      பழம்பெரும் ரசிகர்கள் தங்கள் பால்ய கால நினைவுகளை தாங்கி வலம் வந்த Yesteryear கதாநாயகர்கள் மீது கொண்ட அதே ஈர்ப்பை, தற்போது பெரும்பான்மையாக இருக்கும் புதிய வாசகர் படை எதிர்பார்ப்பது சந்தேகத்திற்குறிய விடயம் தான்.

      புதிய கதைகளங்கள், வண்ணங்களில் பிரகாசித்தி கொண்டிருக்கும்போது, நிலையான சந்தா வாசகர்கள் இல்லாமல், திரும்பவும் கடந்து வந்த பாதையை நின்று நிதானித்து பார்த்து கொண்டிருப்பது, எதிரே இருக்கும் புதிய எல்லைகோடுகளை நெருங்க விடாமல் செய்து விடும். அதுவும், பிரஞ்சு இத்தாலி கதை களங்களில் இன்னும் நாம் 10 சதவிகிதத்தை கூட எட்டவில்லை எண்ணும் போது,

      வருடத்திற்கு நூற்றுக்கணக்கில் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் இந்த காமிக்ஸ் உலகங்களை விட்டு, தற்போது தங்களது சொந்த மண்ணில் கூட ரீபிரிண்டுகளில் கூட தலைகாட்டாத பிரிட்டீஸ் காமிக்ஸ் வரிசைகளை நாம் பிடித்து தொங்கி கொண்டிருப்பது பொருளாதார ரீதியாக தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை என்பதை நீங்கள் கூறி அறிந்து கொள்வதற்கு முன்பே, அதன் வரவேற்பை சமீப காலங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

      சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அறிவிப்பின் போதே, அது தற்போதைய கலர் இதழ்குளுக்கு நடுவில் ஒரு Break போல தோன்றி விடும் என்று ஒருமுறை குறிப்பிட்டு இருந்தேன். எதிர்பார்த்தபடியே, ஓட்டெடுப்பில் படு சுமாரான இதழ் என்று அது தேர்ந்தெடுக்கபட்டதே பெரிய ஒரு உதாரணம்.

      தற்போது வருடத்திற்கு இத்தனை புத்தகங்கள் என்ற கட்டுபாடை ஒவ்வொரு வருடமும் எடிட் தாண்டி செல்ல முயல்வது, சில வருட காலத்தில், கிளாசிக் கருப்பு/வெள்ளை கதைகளை ரீபிரிண்டுகளாக அவ்வப்போது தரும் ஒரு நிலையில் மாறும் நிலை கண்டிப்பாக கைகூடும். அது வரை கலர் கிராபிக் நாவல்கள் என்ற புதிய களங்களுக்கு நாமும் பழகி கொள்வது காலத்தின் கட்டாயம். பழைய வாசகர்களுக்கு அது சற்று பழகிய வட்டத்தில் இருந்து பெரிய மாற்றுதல்கள் கொண்ட உலகம் என்றாலும், காமிக்ஸ் மீது கொண்ட காதலை இவ்வழியாக புதிய கோணத்தில் செலுத்த அவர்களும் முயல வேண்டும் என்பதே என் அவா.

      Delete
    15. //பிரஞ்சு இத்தாலி கதை களங்களில் இன்னும் நாம் 10 சதவிகிதத்தை கூட எட்டவில்லை எண்ணும் போது, //
      அப்போ செம விருந்து காத்திருக்கிறது !

      Delete
  27. டியர் விஜயன் சார்,

    காமிக் கானிற்கு நான் மட்டுமல்லாது நமக்கு மிகவும் பிடித்த ஒரு நால்வர் குழுவும் வருகிறார்கள்...

    So I hope lots of fun over there.. and I still love the atmosphere of comic con as its comics comics and comics only... hope would be there ahead of time to invite our comics heros...

    Shriram.

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் எல்லாம் தயார் என கூறினீர்கள்,ஆனா அந்த குதிரைய மறந்துடாதீங்க !

      Delete
  28. யப்பா யப்பா இன்னா ஒரு குட் நியுஸ்! ஒடம்பு எப்டி வாத்யரே இருக்குது? ஒடம்ப பாத்துக்க வாத்யாரே.வுங்களுக்கு ஒடம்பு சரியில்லேன்னு ஒரே பீலிங்கு வாத்யாரே,அப்பாலிக்கா நம்ம பேட்டயாண்ட வா வாத்யாரே கலக்கல் கஷாயம் தரேன் அல்லாம் சரியா பூடும்.

    ReplyDelete
  29. அல்லாம் சரி வாத்யாரே ஆனா இந்த மே மாசம் பூராவும் ஒரு புக்கு கூட வராதா வாத்யாரே?

    ReplyDelete
  30. லாங் கேப்பா கீதே ? ஒரு மாசமா 1 புக்கு கூட இல்லாம எப்டிப்பா வாழ்றது? அதனாலங்காட்டி மே மாசம் சென்டர்ல ஒரு புக்க ரீலிஸ் பண்ணுங்க வாத்யாரே. ஒ.கே ...

    ReplyDelete
  31. போனதடவை போலவே நிறைய புது வாசகர்களை கவர வாழ்த்துக்கள். ஒரே நேரத்தில் 4 கதையா ? சூப்பர்.

    //"டைகர் ஸ்பெஷல்" விற்பனை எண்ணம் அதிகம் !! டைகர் + வண்ணம் + ஹிட் அடித்ததொரு கதை என்ற கூட்டணியின் வலுவிற்கு இதுவொரு பறைசாற்று ! //

    வீரவேல் வெற்றி வேல். எதிலும் ஜெயிப்பார் டைகர்.

    பெங்களூர் வர ஆசைதான் ஆனா திரும்ப சென்னை பக்கம் தலை வைக்க முடியாது. :D பெங்களூர் நண்பர்களே அசத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. Muthu, how about saying that gathering with MCA friends in Bangalore and visit the comic-con :-)

      Delete
  32. To:Editor

    "தமிழில் ஆரம்ப நாட்களில் வெளியான பெரும்பான்மை காமிக்ஸ் புத்தகங்கள் ப்ளீட்அவே பதிப்பக வெளியீடுகளே. இங்கிலாந்தில் பரபரப்பான விற்பனையான இந்த காமிக்ஸ் புத்தகங்களின் உரிமையை முறையாக வாங்கி அந்த சித்திரங்களையும் முகப்பு அட்டைகளையும் அப்படியே பயன்படுத்தி கொண்டு அதை சரியாக தமிழுக்கு உருமாற்றம் செய்தார்கள். அந்த பணியை மேற்கொண்டவர் முல்லை தங்கராசு.

    அவர் தான் முத்துகாமிக்ஸின் பொறுப்பாசிரியராக இருந்தார்.காமிக்ஸ் புத்தங்களுக்கு என்றே ஒரு தனிதமிழை அவர் உருவாக்கினார். வில்லன்கள் விடும் சவாலும், அதற்கு மாயாவி தரும் பதிலடியும் வியக்கவைக்குமளவு தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்தது.

    அவை இன்னொரு மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவை என்ற பேதம் அறியாதபடி கதை மிக அழகாக விவரிக்கபட்டிருந்தது. மாறுபட்ட கலாச்சாரம், கதைக்களம் யாவும் அந்நியமாக இருந்தபோதும் அதை உணர முடியாதபடியே தமிழ் மொழிபெயர்ப்பின் சரளம் உள்ளுர் காமிக்ஸ் ஒன்றை வாசிப்பதை போல உணர செய்தது.''
    More: http://www.sramakrishnan.com/?p=585
    ---------------------------------------------------------------------
    இது திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது கட்டுரையின் ஒரு பகுதி. இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தோடு ஆசிரியரது பதிவுகள் முரண்பட்டிருந்தன.

    திரு.முல்லை தங்கராசன் அவர்கள் தனது பெயரை முன்பக்கத்தில் பொறித்துக்கொண்டாரே தவிர மொழிபெயர்ப்பு, இதழ் வடிவமைப்பு போன்றவற்றில் அவரது பங்களிப்பு என்ன? என்று ஆசிரியர் வினா எழுப்பியிருந்தார்.

    அந்த நாட்களில் வெளிவந்த பல சிறுவர் புத்தகங்கள், கதைகள், சித்திரக் கதைகள் காமிக்ஸ்களில் திரு.முல்லை தங்கராசனுடய பெயர் இருக்கும். இலங்கையிலேயே அவரது பெயர் அந்த நாள் சிறுவர் மத்தியில் பிரபலம்.

    ஆனால், ஆசிரியர் குறிப்பிடுவதுபோல அவரது உண்மையான பங்களிப்பு முத்துகாமிக்ஸ் வார இதழ், முத்து காமிக்ஸ் போன்றவற்றில் எவ்வாறாக இருந்தது என்பதை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையெனில் திரு.இராமகிருஷ்ணன் போன்றவர்கள் மட்டுமல்லாது, பல காமிக்ஸ் பதிவர்களும் திரு.முல்லை தங்கராசனை முத்து காமிக்ஸ்இல் முதன்மைப்படுத்தி எழுதிவருவதே நிஜதான வரலாறும் ஆகிவிடும்.

    அத்தோடு திறமையான சிறுவர் கதை எழுத்தாளராக அறியப்பட்ட திரு.முல்லை தங்கராசன் மீதான சந்தேகப் பார்வையும் நிலைபெற்றுவிடும். ஆசிரியரது விரிவான விளக்கமொன்றை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஏற்கனவே நிறைய முறைகள் இது பற்றிய உண்மை நிலையை நான் ஆங்காங்கே எழுதியுள்ளேன். திரும்பவும் அவற்றைத் தூசி தட்டி பரணிலிருந்து இறக்குவது அவசியமற்றதாகவே பார்த்திடுகிறேன். முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு ஒரு sales co -ordinator என்ற நிலையைத் தாண்டி அவரது பங்களிப்பு பூஜ்யமே என்பது எனக்கும் சரி, ஆரம்பம் முதல் பணியாற்றிய ஊழியர்களுக்கும் சரி, நன்றாகவே தெரியும்..

      Anyways என்றோ மீளா நித்திரையில் ஆழ்ந்திட்டதொரு மனிதரின் தலையை இப்போது உருட்டுவதில் நாம் சாதிக்கப் போவது ஏதும் கிடையாதே ?! Let's move on...

      Delete
  33. First thanks to Erode Vijay for letting us know about the new post.

    Very good announcements and this year is going to be blast for us. Subscriptions number little less than last year is a small concern, i will try to do a bit from my side by talking to my comics fan relatives...

    ReplyDelete
  34. பத்து ரூபாய் இதழையே பல மாசத்துக்கு ஒரு தபா வெளியிட்ட நம்ம லயனா இது? சுத்திப் போடுங்க சார்..எங்க கண்ணே கொள்ளிக்கண்ணு…

    ReplyDelete
  35. மார்க்கெட்டிங் திறமை கொண்டவர்களோடு கலந்தாலோசித்தால் <650 சந்தா விரைவில் >6500 ஆகும் வாயுப்புகள் உண்டு.பல வருட கொள்கைகளை சற்றே மாற்றி சில வியாபார தந்திரங்களை மேற்கொள்வது இன்றைய நேரத்தில் மிக்க பலனளிக்கக் கூடும்.

    ReplyDelete
  36. டியர் எடிட்டர்,

    காமிக்ஸ் கிளாசிக்ஸ் பழைய வெளியீடுகளில் சிறப்பானவற்றை மட்டுமாவது மறுவெளியீடு செய்திடல் ஓரளவு அவசியம். ஒரு regular interval-இல்.

    எனக்குத் தெரிந்து இன்னும் - இந்நாளிலும் - நமது பழைய இதழ்கள் antiquity value என்ற போர்வையில் சிலரால் அளவிற்கு அதிகமான அநியாய விலைகளில் விற்கப்படுகிறது.

    நமது ஒரிஜினல் ரீப்ரின்ட்ஸ் வந்தால் இவைகளில் சிலவற்றையாவது தடுக்கலாம். ஓரிரு இதழ்கள் வந்தால் அடுத்த bookfair வரை இருந்தாலும் விற்றுவிடும்.

    ReplyDelete
  37. டியர் எடிட்டர்ஜீ !!!
    ரீப்ரிண்ட் கோரிக்கைகள் மீண்டும் எழ ஆரம்பித்திருக்கிறது.இவற்றை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என அறிய ஆவலாக இருக்கிறோம்.அடியேனுடைய தனிப்பட்ட விருப்பம் ரீப்ரிண்ட்ஸ் தற்போது வேண்டாம் என்பதே.ஐரோப்பிய காமிக்ஸ் உலகம் அற்புதமான பல கிராபிக் நாவல்களால் நிரம்பிவழிகிறது.அவற்றை அண்டா அண்டாவாக கூட வேண்டாம்,ஒரு சின்ன டம்ளரில் எடுத்தாவது எங்களுக்கு ஊற்றினால் புண்ணியம்.க்ளாஸிக் மறுவெளியீடு என்ற "விபரீத விளையாட்டு"நமது சந்தா எண்ணிக்கை குறைந்தது 1000-மாக அதிகரிக்கும்போது வைத்துகொண்டால் உங்களுக்கும் சௌகரியப்படுமே.மற்றபடி,கிராபிக் நாவல்களே நமது எதிர்கால இலக்காய் அமைந்திட்டால் உங்கள் அனைவரையும் போலவே அடியேனும் மிக மகிழ்வேன்.
    (ஒன்றுமில்லை.எமனின் திசை மேற்கு -இப்போதுதான் இருபதாவது தடவையாக படித்து முடித்தேன்.ஹிஹி!!!)

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா நீங்க,
      இப்படித்தான் திடீரென விபரீத கோரிக்கையெல்லாம் வைப்பதா?

      சந்தா இல்லாமல் விருப்பம் போல காமிக்ஸ் வாங்கலாம் என்று புதிய சிந்தனையில் உதித்த sunshine லைப்ரரியில் நம் சூப்பர் ஹிட் கதைகள் வரும் வேளையில் மீண்டும் ரீப்ரிண்ட் வேண்டாம் என்ற அதே பல்லவியை நீங்களே முணுமுணுக்கலாமா...

      ரீப்ரிண்ட் கதைகளில் எடிட்டர் புதிய கதைகளை போல கவனம் செலுத்த வேண்டியதில்லை என முன்பே பதிவிட்டிருந்தாரே. மறந்து விட்டீரா புனிதரே?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. It looks like sanit satan, got the books which he likes hence he started saying no "re-print"
      :-) especially after the two tiger stories :-) :-)

      Delete
  38. சார்,
    முதல் முறையாக 4 இதழ்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனை செய்திட அடியேனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ஆனால் சுட்டி லக்கியை மட்டுமாவாது சிறுபிள்ளைகள் விடுமுறையில் இருக்கும் போதே வெளியிட்டால் பொருத்தமாக இருக்குமே.

    மேலும் கோடை விடுமுறையில் லக்கி காமிக்ஸ் பொது விற்பனைக்கும் அனுப்பிட்டால் விற்பனையும் அமோகமாக இருந்திட வாய்ப்பிருக்கிறதல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான ஆலோசனை !நேரம் போதுமா என ஆசிரியர்தாம் சொல்ல வேண்டும் !

      Delete
    2. good idea...Vijayan sir consider this..because May month no issues..as Tiger special comes on april month end.

      Delete
  39. புது பொலிவுடன் காமிக்ஸ் வருவது குறித்து மகிழ்ச்சி. அப்பாடா பதிவு செய்திட்டேன்

    ReplyDelete
  40. எனக்கு ரீ-ப்ரிண்ட் பெஸ்ட் என்பேன். nan parththey illai

    ReplyDelete
  41. பெங்களூரை அதிரடித்து வெற்றிமாலை சூடி வீரத்திருமகனாய் இன்னும் பூஸ்ட்டினை மனதில் ஏற்றிக்கொண்டு அசாத்திய உயரங்களையும் அள்ளி முடிந்துவர வாசகனாய் வாழ்த்துதல்கள் சாரே! அவிட பொட்டானிகல் கார்டனுண்டு! நோக்கி களித்து வர ஞான் வேண்டுகிறேன்! ஸ்ரீராம் ப்ளஸ் நண்பர்களது அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்துக்கும் சல்யூட்!

    ReplyDelete
  42. ஒவ்வொரு வெளியீட்டிலும் விற்பனைபோக, 70 சதவீத புத்தகங்கள் மாதக் கணக்கில் கிடங்குகளில் தூங்கிக் கொண்டிருப்பதும், இந்த பொருளாதார முடக்கத்தையும் தாண்டி ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் என வெளியிட்டு நம்மை சந்தோஷப்படுத்திவரும் எடிட்டரிடம் இனிமேல் 'தலையணை சைசில் வேண்டும்', 'தீபாவளி மலர் வேண்டும்', 'லயன் 30வது ஆண்டு மலர் ஒவ்வொரு வருஷமும் வேண்டும்' - என்று கேட்டு தொந்தரவு பண்ணமாட்டேன்!

    ஏன்னா, ஸ்டீல் க்ளா மாதிரியே நானும் திருந்திட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ha ha ..
      விஜய் நீங்க கேட்காம இருந்தா அசிரியருக்கு தூக்கம் வராமா போய்டும்..விஜய் ஏதோ பெருசா எதிர் பார்க்கிறார் போல என்று...

      // 'லயன் 30வது ஆண்டு மலர் ஒவ்வொரு வருஷமும் வேண்டும்//
      ஒரு தடவை தானே 30 வருடம் வரும் ஒவ்வொரு வருசமும் வராதே..அப்போ நமா ஒரு தடவை தானே கேட்க முடியும்.

      Delete
    2. நானும் .
      இரண்டு வருடங்களுக்கு முன் 10 ரூபாய் காமிக்ஸ் கிடைக்க பெற 3,4 மாதம் காத்திருந்த காலம் மறைந்து இப்போது ஒரே மாதத்தில் 100 விலையில் இரண்டு புத்தகம் வருவது மிகுந்த மகிழ்ச்சி .இத்துனை சிரமத்திலும் ஆசிரியர் தவறாமல் மாதாம் மாதம் புத்தகம் வெளி இடுவதற்கு அவருக்கு ஒரு ராயல் சல்யூட் .இனி உங்களை கஷ்ட படுத்த மாட்டோம் சார் .

      (ஆனாலும் வருடம் ஒரு அந்த 400 விலையில் ஒரு புத்தகம் .....)
      உங்களை திருத்த முடியாதுப்பா.... :-)

      Delete
    3. @ tex kit

      அப்படீன்னா அவரையும் (ஸ்டீல் க்ளா) கேட்க ஆரம்பிக்கச் சொல்லுங்க; நானும் கேட்க ஆரம்பிக்கிறேன்! :)

      Delete
    4. நிச்சயமாய் கேட்பேன் நண்பரே நமது சந்தா எண்ணிக்கை 2000த்தை நெருங்கும் போது !
      ஆசிரியர் என்னதான் சிறந்ததாய் தந்தாலும் நமக்கு வேண்டியது நாம் வாய் திறந்து கேட்டால்தான் கிடைக்கும் !ஆனால் சரியான வாய்ப்பு உள்ள போது !

      Delete
    5. Hi...hi....I want more in the rain....

      Delete
  43. ஆசிரியர் அவர்களுக்கு......

    நான்கு என்ன ? ஒரே மாதத்தில் பத்து புத்தகங்கள் வெளியிட்டாலும் வாங்க தயார்......ஆனால் டெலிவரியில் சற்று கவன செலுத்துங்கள் சார்.........இந்தமுறை கூரியர்காரப்புண்ணியவான்கள் [ எஸ்.டி ] என்னை மண்டை காயவைத்துவிட்டார்கள்..... நான் வீட்டில் இருக்கும்போதே [ டெலிவரி பாய் வீட்டில் விஷேசமாம் ] என் பார்சலை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.....பின்பு ஸ்டெல்லா அவர்களின் ஆலோசனையின்படி புரொபஷனல் கூரியருக்கான கூடுதல்தொகையை செலுத்தி , ஒருவார தாமதத்திற்குப்பின் இதழ்கள் கிடைக்கப்பெற்றேன்.......கிட்டத்தட்ட நூறு ஃபோன்கால்களுக்கு மேல் செய்திருப்பேன்......[ ஃபோன் பில் நிச்சயம் புத்தகங்களின் மதிப்பை விட அதிகம் இருக்கும் ]அந்த ஒருவார மன உளைச்சலை மதிப்பிடவே முடியாது......... எல்லாவற்றையும் காமிக்ஸ் மீது உள்ள காதலால் தாங்கிக்கொள்கிறோம்.......இருப்பினும் ஒவ்வொருமுறையும் இதுபோல் சிரமப்படமுடியாது......எனவே உங்கள் மேலான கவனத்தை டெலிவரி பக்கமும் சற்று திருப்புங்கள் சார்.........

    ReplyDelete
  44. புதிய அறிவிப்புகள் அபாரம். பெங்களூரு COMIC CON 2013 ஆசிரியர் உற்சாகத்துடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்துவருவது மகிழ்சி அளிக்கிறது. இதுபோன்ற அறிவிப்புகளைதான் அவரிடம் எதிர்பார்கிறோம். கடந்த இதழில் ஹாட் லைன் இல்லாதது வருத்தம். அதனிலும் கொடும்மை அந்த முதல் பக்க இடத்தை மியாவிக்கு கொடுத்தது. இதுவரை மியாவி சொல்லும்படியாக இல்லை. மொத்தத்தில் ...............

    ............மியாவி ........ ஒரு .................கொட்டாவி!

    ReplyDelete
  45. Comic Con India @ Facebook!
    FYI Plz.

    https://www.facebook.com/ComicConIndia

    ReplyDelete
  46. எங்க வீட்டு அம்மணியிடம் சொல்லி விட்டேன்.. comic con ஜுன் 1 அன்று என்று..வேறு எதுவும் program இல்லாமல் பார்த்து கொள்ளும்படியும்...

    ReplyDelete
    Replies
    1. கொடுத்த வைத்த மனிதர் ..:)

      Delete
  47. இருளின் ஒரு இரும்புகுதிரை முதல் பாகமா இல்லை இதற்கு முன் வேற ஏதாவது உள்ளதா..
    கடைசி பாகம் NBS advertisementல் வந்துள்ளது...(வெளியிட்டு தேதி தெரியாமல்).

    அதை போல கான்ஸாஸ் கொடூரன் இன்னமும் எத்தனை பாகங்கள் உள்ளன..சேர்த்து ஒரே இதழாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. இரும்புக்குதிரை ---------- பாகங்கள் நண்பரே ,முதல் பாகம் மட்டுமே வந்துள்ளது !

      Delete
  48. சுட்டி லுக்கி தானே +6 advt..(1st & 2nd )பண்ணியது...
    வேறு ஏதாவது என்றால் என்னவாக இருக்கும்...
    Tex 50 இதழும் கிடையாது...என்னவாக இருக்கும்...
    ஒன்னுமெ புரியலையே...

    ReplyDelete
  49. இந்த 4 புத்தகங்கள் நல்லபடியாக தயராக...Power Cut ஆகாமல் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  50. காமிக் கான் வருபவர்கள் யாராவது வீடியோ எடுத்து போட்டால் ஆஹா...ஸ்டீல் க்ளா என்ற வாசகர் xiii வேண்டும் என்ற வார்த்தை என் காதில் தேனாய் வந்து பாய்கிறது xiii மட்டும் கலரில் வந்தால் அடடா....யஹூஊ ......

    ReplyDelete
  51. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..நானும் வர்றேன் பெங்களுரு ............ஆனால் மாறுவேஷத்தில் ............

    ReplyDelete
  52. எடிட்டர் சொல்லிய கணக்கு வழக்கை பார்த்தால் தலை சுத்துது. அய்யா நீங்கள் போடறதை நாங்க சாப்படறோம்..சீ ஈ...படிக்கறோம்

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. சிக் பில் புத்தகத்தை தனியாகவும் ஷெல்டனை தனியாகவும் இரண்டு புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கலாம் ஒன்றாக வெளியிட்டு வீட்டில் தேவையே இல்லாமல் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துவிட்டது. வீட்டில் வைத்துகொண்டு இப்படி அசிங்கமான புத்தகங்களை வீட்டில் வச்சுகிட்டிருக்கீங்களே உங்களுக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா என்று கேட்டு ஒரே சண்டை. ஒரு நிமிடம் என்னசெய்வது என்றே எனக்கு தெரியவில்லை. ஆத்திரத்தில் காமிக்ஸ் புத்தகத்தையெல்லாம் கிழித்து போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது பல்லைகடித்துகொண்டு அமைதியாக இருந்தேன். சரி இனிமேல் இதுபோல் புத்தகம் வாங்கவில்லை என்று சொல்லி சமாதனம் செய்தேன் . முத்தகாட்சிகளை எடிட் செய்யுங்கள் என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஒரு கை ஓசை கேட்கவே கேட்காது ( முன்பே எடிட்டரிடம் இதையெல்லாம் எடிட் செய்யுங்கள் சொல்லிவிட்டேன். கதைக்கு தேவை என்று சொல்லிவிட்டார். இது அவர் புத்தகம் அவர் வெளியிடுகிறார் நானென்ன சொல்ல..).நீங்கள் கூட நினைப்பீர்கள் எந்த காலத்தில் இருக்கீங்க இதெல்லாம் பெரியவிஷயமா என்ன முத்தகாட்சிதானே என்று நினைக்கலாம்... இருந்துவிட்டு போகட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை தனித்தனி புத்தகமாக இருந்தால் தேவையான புத்தகத்தை மட்டும் நான் வாங்குவேன் இல்லையா? மேலும் நான் மாதம் மாதம் 50 காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி நண்பர்களுக்கு விற்பனை செய்கிறேன் இதை தொழிலாக செய்யவில்லை காமிக்ஸ் மேலுள்ள பற்றுக்காக மட்டுமே. அத்தனை புத்தகங்களையும் டோர் டெலிவரி செய்கிறேன். என் கமிக்ஸ்க்காக நான் இதை செய்கிறேன். இதெல்லாம் தேவையா என என் வீட்டிலும் கேட்பார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் காமிக்ஸை நான் எவ்வளவு விரும்புகிறேன் என்பது எனக்குதான் தெரியும். காமிக்ஸ் ரசனையைப்பற்றி என்னைபோலுள்ள ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள். அப்படி புத்தகம் வாங்குபவர்களில் ஒரு குடும்பத்தலைவியும் உண்டு. இந்த மாத ஷெல்டன் புத்தகத்தை திருப்பி பார்த்துவிட்டு 'இந்தமாதிரி புத்தகமெல்லாம் வேண்டாம் என்றவர் சிக் பில்லை பார்த்துவிட்டு அட இதெல்லாம் இருக்கா என்றவர் என்னங்க சிக் பில்லும் இதில் இருக்கே என்று வருத்தப்பட்டுவிட்டு புத்தகத்தை வாங்க மறுத்துவிட்டார். மன வேதனையுடன் டெக்ஸ் விஜயராகவனிடம் நடந்ததை சொன்னேன். அதற்கு அவர் சிக் பில்லை மட்டும் பாதி கிழித்து கொடுக்கவேண்டியதுதானே என்றார். எனக்கு சிரிப்புதான் வந்தது. சொன்ன அவரும்கூட தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கலாம் என்றார். இரண்டு நாட்கள் நான் பட்ட வேதனைகள் அதிகம் காமிக்ஸை ஒழித்து வைக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன் . இந்த கதை வேண்டும் இந்த கதை வேண்டாம் இதை எடிட் செய்யுங்கள் இதை எடிட் செய்ய வேண்டாம் என்று நான் இனி சொல்லப்போவதில்லை இஷ்டப்பட்டால் வாங்குகிறேன் இல்லாவிடில் வாங்காமல் விட்டுவிடுகிறேன் அவ்வளவுதான். இனிமேல் நான் இங்கு எதையும் எழுதப்போவதில்லை இதுவே நான் எழுதும் கடைசி பின்னூட்டம். என்றாவது ஒரு நாள் நான் சொல்வதுதான் சரி என்று படும். காமிக்ஸ் ரசிகர்கள் படித்துவிட்டு மறந்துவிடுங்கள் ( என்னையும் சேர்த்தே ) விமர்சனம் வேண்டாம் ப்ளீஸ்...பை

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, உங்கள் வீட்டில் காமிக்ஸைத் தவிர வேறு எந்த புத்தகமும் வாங்க மாட்டீர்கள் போலும்...'மறந்து விடுங்கள்' என்று கூறிவிட்டு மீண்டும் அதே பதிவை திரும்பவும் இடுவது எதற்காகவோ? ஆசிரியருக்கு ஆலோசனை கூறுங்கள்.ஆனால் அச்சுறுத்த எண்ணாதீர்கள்.

      Delete
    2. டியர் கர்ணன்ஜி!

      * முத்தக்காட்சிகள் உங்கள் குடும்பத்திற்கு ஒத்துவராதபட்சத்தில்,
      (1) ஷெல்டன் மற்றும் லார்கோ புத்தகங்களை அலுவலத்திலேயே வைத்துப் பாதுகாக்கலாம். அல்லது
      (2) அடிப்படையில் ஓவியரான உங்களிடம் ஒரு தூரிகையும், கொஞ்சம் கருப்பு மையும் இல்லாமலிருக்காதே?!

      * உங்கள் வீட்டுச் சூழல் நியாயமானதாக இருக்கலாம்; அதற்காக 'இதுவே என் கடைசிப் பின்னூட்டம்' என்பதெல்லாம் அநியாயமாகவும் இருக்கலாம்!

      * இணையத்தில் கிடைக்கும் இதே ஷெல்டன் கதையின் ஆங்கில cbr பக்கங்களை உங்கள் மனைவியிடம் ஒரு ஒப்பீடுக்காகவாவது காட்டி, நமது காமிக்ஸில் அவை எவ்வளவு கண்ணியமாக்கப் பட்டிருக்கின்றன என்பதை உணர்த்துங்கள். உங்கள் துணைவியார் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்!

      * ஒரு சந்தேகம்... உங்கள் வீட்டில் கேபிள் கனெக்சன் உண்டா? குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தியை வீட்டில் வைத்திருப்பீர்களா?

      * இன்னுமொரு சந்தேகம்... அதீதக் காமிக்ஸ் காதலரான நீங்கள், இப்படியொரு இறுக்கமான முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் மனைவியிடம் நீங்கள் வாங்கியது வெறும் திட்டு மட்டும்தானா? ;)

      * ஒரு வேண்டுகோள்! பல வருடங்களுக்குப் பிறகு நமது காமிக்ஸ் இப்போது வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், ராமனுக்கு அணில்பிள்ளை உதவியதைப் போன்றாவது நம் எடிட்டருக்கு நாம் துணை நிற்க வேண்டாமா? சில அற்ப, நம்மால் சமாளிக்கக்கூடிய காரணங்களுக்காக கோபம் கொண்டு விலகி நிற்பது எவ்வகையில் நியாயமாகும்?

      மீண்டும் உங்களை இங்கு காண ஆவலாய் இருக்குறேன் நண்பரே!

      Delete
    3. நண்பர்களே முந்தைய பதிவில் உள்ள கமெண்ட்கள் (என்னுடையதும் சேர்த்துதான்) டெலிட் செய்யப்பட்டுவிட்டன. ஆதலால்தான் திரும்ப போட்டேன். அச்சுறுத்தலா ஹா ஹா ஹா .......வேடிக்கையான பேச்சு. நண்பர் ராஜா பாபுவுக்கு ஏன் இப்படி தோன்றுகிறதோ தெரியவில்லை. கேள்விகேட்க எனக்கு உரிமையில்லையா? இந்த தளத்தில் காமிக்ஸ் வளச்சிக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் நான் மாதம் மாதம் புத்தகத்தை வாங்கி டோர் டெலிவரி செய்கிறேன். நீங்கள் கமிஷனுக்குத்தான் வாங்குகிறீர்கள் என்று சொன்னால் லார்கோவில் 3 புத்தகம் நின்று விட்டது நான் அதைப்பற்றி சொன்னேனா? முன் பணம் கட்டிதான் புத்தகமே வாங்கமுடியும் கடன் கிடையாது தெரியுமா? டைகர் புத்தகம் 28 புத்தகம் வாங்கினேன் அனைத்தும் விற்றுவிட்டன. திரும்பவும் கேட்கிறார்கள். ஷெல்டன் 18 வாங்கினேன் 4 புத்தகத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள் வழிய கேட்டாலும் வேண்டாம் என்றுவிட்டார்கள். அய்யய்யோ நின்றுவிட்டதே என்று புலம்பினேனா சி.ஒ.சொ. 3வது முறையாக வாங்கி விற்றிருக்கிறேன். யோசித்து பாருங்கள். கடைசியாக என்னுடைய கோரிக்கை பிரித்து போடுங்கள் என்றுதான் முடித்திருக்கிறேன் நன்றாக படித்து பாருங்கள் . ஆசிரியர் பதில் சொல்லாமல் டெலிட் செய்வதில் நியாயம் இல்லையே. டெலிட் செய்யாமல் இருந்தால் திரும்ப போட்டிருக்கமாட்டேன் படிக்காத வாசகர்கள் உள்ளனர் அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே. நான் நழுவி ஓடுவதாக சொல்கிறார்கள். நமது வலைதளத்தில் இதற்கு முன்னால் எத்தனை பேர் எழுதிக்கொண்டு இருந்தார்கள் தெரியுமா? அவர்களெல்லாம் எங்கே? ஒரு விஷயத்தை முன்னால் வைத்தால் தேவையே இல்லாமல் வார்த்தைகளை வீசுகிறார்கள் நமக்கேன் வம்பு என்று ஓடிவிடுகிறார்கள். இந்நிலை மாறி தீர்வு கிடைத்தால் யாரும் போகமாட்டார்கள். ஒரு வாசகன் என்ன சொல்லவருகிறான் என்பதை தெரிந்துகொண்டு பதிலால் திருப்தி அளிக்கும் விதத்தில் வாயை அடைக்கலாம். பகிர்ந்து கொள்ளலாம் சண்டை கூடாது. விஜய் நியாயமாக எனக்கு பதில் எழுதியிருக்கிறார் நன்றி.
      திரும்பவும் நான் கூறுவது லார்கோ, ஷேல்டனுடன் வேறு கதைகளோடு வெளியிடாமல் தனியாக வெளியிடவும் அதே போல் தொடராக வெளியிடுவது தவிர்க்கவும். எனக்கு பதில் கிடைத்தால் இருப்பேன் இல்லாவிடில் சென்றுவிடுவேன்.

      Delete


    4. நீங்கள் மேலே கூறியவை உங்களை பொறுத்தவரை நியாயமாக இருக்கலாம் ! !

      //ஆத்திரத்தில் காமிக்ஸ் புத்தகத்தையெல்லாம் கிழித்து போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது பல்லைகடித்துகொண்டு அமைதியாக இருந்தேன்.//

      அந்த அளவிற்கு கோபம் வருமளவிற்கு இதில் என்ன உண்டு என்பது புரியவில்லை !ஷேல்டனும் ,லார்கோவும் இப்படி பட்டவை என்பது தங்களுக்கு தெரியுமே !ஆசிரியரின் முன்னுரை இதுதானே !மேலும் அவர் நீக்கிய சமாச்சாரங்களும் தெரியும் !இது ஒரு யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதை என்பதும் உணர வேண்டும் !மனிதனின் என்ன ஓட்டங்களை ,ஆசாபாசங்களை ஷெல்டன் கூறுவதும் கூட மனதின் எண்ணங்களும்,ஏக்கங்கலுமே !முகமூடியை கழற்றி விட்டு ஷெல்டன் பேசுவார் !அதனை நீங்கள் வாங்காமல் இருந்திருக்கலாமே !கத்தரி போட்டுதானே புத்தகம் வருகிறது !நமது தேவை என்ன என்று முதலில் தெரிய வேண்டும் !உங்களுக்கு ஒரே தீர்வு, வீட்டில் இப்படி ஆத்திரத்தை கிளப்பும் அளவு எதிர்ப்பு உண்டா ,அந்த கதைகளை தவிருங்கள் !உங்களுக்கு விஷமாய் தெரியும்(உங்களுக்கு என்று மட்டுமே சேர்த்துள்ளேன் ) ஒரு கதையோடு மறு கதை கலந்து விட்டது அது அமிர்தமே என்றாலும் அதனை தவிர்ப்பீர்களா அல்லது .....டிவி ல் வரும் ஒரு காட்ச்சிக்காக சேனலை மாற்றுவீர்களா தூக்கி போட்டு உடைப்பீர்களா ?
      மேலும் பல இடங்களில் கத்தரி போட பட்டே வருகிறது என்பதனையும் உணர வேண்டும் !இன்று நமது வெளியீடுகளில் டாப் ஸ்டார்கள் இவர்கள் என்பதனையும் உணருங்கள் !

      Delete
    5. //ஆயினும், இந்தத் தளத்தில் வந்து இப்படி எழுதுவது சரியல்ல. எங்கள் அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் நிச்சயம் தெரிவிக்கலாம். ஆனால், ஏதோ அந்தக் கதைகள் வாங்கிப் படிக்கவேகூடாத கதைகள் என்கிற ஒரு கருத்தை இங்கே விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. //
      நண்பரின் இதே கேள்வியே எனது மனதிலும் ஓடி கொண்டிருக்கிறது !

      Delete
    6. //ஆத்திரத்தில் காமிக்ஸ் புத்தகத்தையெல்லாம் கிழித்து போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது பல்லைகடித்துகொண்டு அமைதியாக இருந்தேன்.//

      இந்த உங்களது எண்ணத்தாலே நான் பதில் கூற நேர்ந்தது !இல்லையெனில் எதிர்க்காமல் தாண்டி சென்றிருப்பேன் !

      //முத்தகாட்சிகளை எடிட் செய்யுங்கள் என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஒரு கை ஓசை கேட்கவே கேட்காது//

      இது தங்களுக்கும் தெரிந்துள்ளது !மேலும் விற்பனைக்காக கண்ட பலான சமாச்சாரங்களை இங்கே எற்றுமளவிற்க்கு தரம் குறைந்தும் விடவில்லை ,....      Delete
    7. ஓரிருவருக்காக புத்தகம் வெளியிடவும் இயலாது ,பலர் விரும்பும் கதைகளை தூக்கவும் இயலாது !விற்பனை ஒன்றே நிர்ணயிக்கும் நமது விருப்பங்களை !

      Delete
    8. //நமது வலைதளத்தில் இதற்கு முன்னால் எத்தனை பேர் எழுதிக்கொண்டு இருந்தார்கள் தெரியுமா? அவர்களெல்லாம் எங்கே? ஒரு விஷயத்தை முன்னால் வைத்தால் தேவையே இல்லாமல் வார்த்தைகளை வீசுகிறார்கள் நமக்கேன் வம்பு என்று ஓடிவிடுகிறார்கள்.//

      அப்படி நியாயமாய் வெளியேறியவர்களை கூறுங்கள் ....

      Delete
    9. பழைய ஹீரோக்கள் மேல் அதிக நேசிப்பு கொண்ட சில நண்பர்கள் ....ஆசிரியர் காரணம் கூறி விட்டார் அவர்களும் உணர்ந்தே இருப்பார்கள்,மேலும் தங்களுக்குள்ளே அடித்து கொண்ட சில நண்பர்கள் ,ஆசிரியர் புத்தகம் வெளியிடும் முன்னர் ஆயிரம்,இரண்டாயிரம் ரூபாய்க்காக வெளியிட்டு சம்பாதித்த நபர்கள் இப்போது சம்பாதிக்க இயலாமல் பழி போடும் சிலர் என விலகி சென்றிருக்கலாம் ....நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை ....இப்போது எல்லாம் சரியாகி இருக்கலாம் ...உண்மையான வாசக நண்பர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள் ,சில மன கசப்புகள் இருக்கலாம் ,...தங்கள் எண்ணங்களை ஆசிரியருக்கு தனி பட்ட முறையில் தெரிவித்தும் ,தங்களது ப்ளாகுகளில் எழுதி கொண்டும்தான் இருக்கிறார்கள் !

      Delete
    10. இதற்குதான் பெரியவர்களுக்கு மட்டுமே,வயது வந்தோர் ,18க்கு மேல் என புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என சில நண்பர்கள் கேட்டதும் நினைவில் இருக்கலாம் ,அதில் ஒரு நண்பர் இந்த வாக்கியங்கள் தாங்கி வந்தால் நான் வாங்கவே மாட்டேன் என கூறியதும் நினைவில் இருக்கும் ....அதுதான் இங்கே யதார்த்தமான உண்மை ...குமுதம் ,ஆனந்த விகடன் போன்ற பல ஏன் அனைத்து புத்தகங்களிலுமே பாலகுமாரன்,சாண்டில்யன் ....போன்றோரின் கதைகள் வருகின்றன ,நிச்சயமாக இவற்றில் வரும் சில வாசகங்களுக்காக அவர்கள் வயது வந்தோர் படிக்க என புத்தகத்தின் முன்னட்டையில் முத்திரை குத்தினால் எத்தனை பேர் வாங்குவர் என்பதனையும் சிந்திக்க வேண்டும் ...

      Delete
    11. அனைத்துக்கும் மேல் யதார்த்தம் என்பதை உணர வேண்டும் இங்கே !

      Delete
    12. நன்கு காமிக்ஸ் சுவைதனை உணர்ந்த நாமே காமிக்ஸ் என்றால் ஏதோ சிறுவர்க்கு மட்டுமே எனும் மன நிலை நமக்கே தொடர்ந்தால் அல்லது சின்ன யதார்த்தமான சம்பவங்களுக்காக ....இன்றைய உலகை வெறுத்தால்

      Delete
    13. //ஆயினும், இந்தத் தளத்தில் வந்து இப்படி எழுதுவது சரியல்ல. எங்கள் அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் நிச்சயம் தெரிவிக்கலாம். ஆனால், ஏதோ அந்தக் கதைகள் வாங்கிப் படிக்கவேகூடாத கதைகள் என்கிற ஒரு கருத்தை இங்கே விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. //
      நண்பரின் இதே கேள்வியே எனது மனதிலும் ஓடி கொண்டிருக்கிறது !

      Delete
    14. //ஆசிரியர் பதில் சொல்லாமல் டெலிட் செய்வதில் நியாயம் இல்லையே. டெலிட் செய்யாமல் இருந்தால் திரும்ப போட்டிருக்கமாட்டேன் படிக்காத வாசகர்கள் உள்ளனர் அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே. நான் நழுவி ஓடுவதாக சொல்கிறார்கள்.//
      நன்றாக பாருங்கள் ஆசிரியர் delete செய்யவில்லை !

      Delete
    15. ஷெல்டன் கதைகள் நிச்சயமாக சிக் பில்லுடன் வந்தால்தான் விற்றாக வேண்டும் என்பது இல்லை ! !

      Delete
    16. டைகரின் ஹிட்டுக்கு காரணம் அற்புதமான ,நாம் பார்த்தறியாத கௌவ்பாய் உலகம் !இப்போது வந்துள்ள ஷேல்டனும் சளைத்தவரல்ல ,இதுவரை வந்துள்ள கதைகளை கருதும் போது!

      Delete
    17. நான் காமிக்ஸ் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யவில்லை - உறவினர்கள்,அக்கம்பக்கத்தினருக்கு நமது கலர்புல் காமிக்ஸ்களை இரவல் கொடுத்து படிக்க அன்புக் கட்டளை இடுவதைத் தவிர…! எனக்கு நம்பிக்கை உள்ளது - நம் ஆசிரியர் தற்போது செல்லும் பாதை மிகச் சரியான வெற்றிப்பாதை என்று…

      Delete
    18. Karnan L : தலையும் புரியாத, வாலும் புரிபடாததொரு பதிவு என்றே சொல்லிடுவேன்...! உங்களின் எந்தப் பதிவுகளை நான் எப்போது delete செய்தேன் - நீங்கள் இத்தனை விசனப்பட ? மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ளும் உறுதியும் ; விமர்சனங்களில் உள்ள நியாயங்களை உள்வாங்கிக் கொள்ளும் மனப்பாங்கும் என்னிடம் இருக்கும் வரை கொல்லைப்புற வாசலை நாடும் அவசியம் நிச்சயம் நேராது !

      ஷெல்டன் கதைகளின் மீது அபிப்ராயங்களைத் தெரிவிப்பது உங்களின் சுதந்திரம் ; ஆனால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைத்துக்குமே நான் செவி சாய்த்தாக வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிச்சயம் நடவாத சங்கதி. முத்தக் காட்சியினை இருந்திட அனுமதித்தது சரியா, தவறா என்ற பட்டிமன்றம் நடத்துவதை விட - நான் சொல்லிக் கொள்ள விரும்பும் விஷயம் ஒன்றே :

      சொல்ல வரும் விஷயத்தின்பால் உங்களின் உறுதி அசைக்க முடியாததாய் இருக்கும் பட்சத்தில் - " எனக்கு பதில் கிடைத்தால் இருப்பேன் இல்லாவிடில் சென்றுவிடுவேன்" என்ற பாணியிலான கொக்கிகளுக்கு அவசியம் நேர்ந்திடாது.

      நான் நினைவூட்ட விரும்புவது ஒன்றை மாத்திரமே ! இங்கு நாம் கூடுவது காமிக்ஸ் எனும் நேசத்தின் மீதுள்ள ஈர்ப்பெனும் ஒரே காரணத்தினால் ! இங்கு நாம் வருகை தருவதும், பதிவுகள் இடுவதும், கருத்துப் பரிமாற்றம் செய்வதும் பிரதானமாய் நம் சந்தோஷங்களுக்கே !

      Delete
    19. Dear Karnan,

      சென்ற பதிவின் உங்களது பின்னூட்டம் அப்படியே இருக்கிறது நண்பரே. Delete செய்யப்பட்டது என்ற அவசரப் பிரகடனம் ஏன்? 'Load more' செய்து பார்த்தீர்களா?

      காமெடி மற்றும் action கதைகள் தனித்து வர வேண்டும் என்றும், ஒவ்வொரு brand-இலும் அதற்கு உரிய ஹீரோக்களின் கதைகள் வர வேண்டும் என்றும் - தொடர்களில்லாமல் சேர்ந்து வர வேண்டும் என்றும் சில சமயங்கள் நயமாகவும், சில சமயங்கள் கார சாரமாகவும், சில சமயங்கள் காட்டுத்தனமாகவும் (!) பதிவிடுபவர்களில் அடியேனும் ஒருவனே. ஆனாலும் என் கமெண்ட்கள் delete செய்யப்பட்டதில்லை. பல கருத்துக்கள் உள்வாங்கப் பட்டிருகிறது - பல நண்பர்களும் சேர்ந்து சொல்லிய பொது - இதுவே நிஜம்.

      பொறுமை கொள்ளுங்கள் கர்ணன். விற்பனை வேலைகளை வேண்டுமானால் கொஞ்சம் படித்த பின் செய்யுங்கள் அல்லது சிறிது காலம் நிறுத்திப் பாருங்கள். மொத்தமாக குற்றம் சொல்லாதீர்கள் ப்ரதர் !

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete

  55. தமிழ் காமிக்ஸ் குடும்பம் என்ற உணர்வோடு ராணி காமிக்ஸ் நடத்திய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

    ReplyDelete
  56. நகைச்சுவைக் கதைகளையும் இப்படியான ஆக்ஷன் கதைகளையும் தனித்தனியே வெளியிடவேண்டும் என்பது பல காலமாக நானும் முன்வைத்துவரும் ஒரு கோரிக்கைதான். இப்போது மொத்தம் 4 பிராண்ட்கள் பாவனையில் இருப்பதால் இந்த காமிக்ஸ்சுக்கு இந்த கதாநாயகர்கள் என்று வகுத்துக்கொண்டுவிடுவதும் சுலபம்.

    இப்படி தேர்ந்து வாங்கும் நிலை வந்தால் விற்பனையில் சில இதழ்கள் சரிவைச் சந்திக்கநேரிடும் என்பது யதார்த்தம். ஒருவேளை, நிலை மாறி, ஷெல்டன் போன்றவர்களது கதைகள் விற்பனையில் பிய்த்து உதறவும் கூடும். முடிவு ஆசிரியர் கையிலேயே உள்ளது.

    ஆயினும், இந்தத் தளத்தில் வந்து இப்படி எழுதுவது சரியல்ல. எங்கள் அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் நிச்சயம் தெரிவிக்கலாம். ஆனால், ஏதோ அந்தக் கதைகள் வாங்கிப் படிக்கவேகூடாத கதைகள் என்கிற ஒரு கருத்தை இங்கே விதைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

    அதிலும், பல மாதங்களுக்கு முன்னைய திட்டமிடல் சாத்தியமாகிவிட்டபின்னர் அது சுலபமே. ஷெல்டன் 2 பாகங்கள் என்று தீர்மானித்து, ஒன்று முடிந்து அடுத்தது தொடர்கிறது என்பதை அறிந்து சட்டென்று சிக்பில் நுழைந்ததால் வந்த சிக்கல் இது. குறை கூறும் முன் நாங்கள் அவதானமாக நடந்துகொள்ளலாமே? காமிக்ஸ்ஐ அப்படியே மூலத்தை சிதைக்காமல் தாருங்கள் என்று ஒரு சாராரும், வெட்டி கொத்தி தாருங்கள் என்று இன்னொரு சாராரும் நடத்தும் இழுபறியில் ஆசிரியர் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார் என்று நம்புவோம்.

    ஆனால், கருத்தை சொல்லிவிட்டு - விவாதம் வேண்டாம் என்று தப்பிக்க நினைப்பது, குற்றத்தை எம் பக்கமும் வைத்திருக்கும் நெஞ்சு குறுகுறுப்பதால் வருவது!

    ReplyDelete
  57. ராணி காமிக்ஸ் இல் ஆரம்ப நாட்களில் வந்த ஜேம்ஸ்பாண்ட் கதைகளையும் கார்த் கதைகளையும் பார்த்தால் எவ்வளவு வெளிப்படையான படங்கள் இருந்தன என்பது தெரியும். அதுவும் 20 - 15 வருடங்களுக்கு முன்பு. அதை ஆவலோடு படித்தவர்கள் இன்று பிளேட்டை மாற்றுகிறார்கள்.

    ReplyDelete
  58. மொழிபெயர்ப்பில் தவிர்க்க வேண்டிய வார்த்தைகளை எவ்வளவு தணிக்கை செய்கிறார்கள் என்பதை ஆங்கிலக் கதையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். எடுத்ததெற்கெல்லாம் என்று திட்டும் ஆங்கில பிரயோகங்களை அப்படியே பிரசுரித்தால் நிலைமை என்னாகும். ஆசிரியரும் பிள்ளை பெற்றவர்தான். அவருக்கும் பெண் உறவுகள் உண்டுதான். அவரது அலுவலகத்திலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள்தான். நமது காமிக்ஸ்களுக்குப் பல பெண் வாசகர்களும் இருக்கிறார்கள்தான். காமிக்ஸ் வாசிக்கும் அத்தனை வாசகர் வீட்டிலும் பெண்கள் இல்லாமலா இருக்கிறார்கள்? எமக்கு பொருத்தமில்லாததை ஒதுக்குவதும், தவிர்ப்பதும் நமது கையில் இருக்கிறது. 'திகில்' என்ற பெயருக்காகவே, அது பெரியவர் படிக்கும் கதை என்று திகில் காமிக்ஸ்களை வாங்கித் தர மறுத்த பெற்றோர் பலரை எனக்குத் தெரியும். சரியாக கதைகளையும் கதாநாயகர்களையும் டிவைட் செய்ய - இதற்குமேலும் ஆசிரியர் தாமதிக்கமாட்டார் என்று நம்புவோம்.

    ReplyDelete
  59. //நண்பர்களே முந்தைய பதிவில் உள்ள கமெண்ட்கள் (என்னுடையதும் சேர்த்துதான்) டெலிட் செய்யப்பட்டுவிட்டன. ஆதலால்தான் திரும்ப போட்டேன்.//

    http://lion-muthucomics.blogspot.com/2013/04/blog-post_7.html
    இந்தப் பதிவில் நீங்கள் இட்ட கமெண்ட்கள் அப்படியே உள்ளன. வீண் பழி சுமத்துவது கூடாது நண்பரே. ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

    //டைகர் புத்தகம் 28 புத்தகம் வாங்கினேன் அனைத்தும் விற்றுவிட்டன.//
    ரூபா 20 படி அதிலேயே ரூபா 560 கிடைத்துவிடும் கமிஷனாக.

    வீட்டில் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதைவிட, புத்தகம் மீந்துபோகிறது, கையை கடிக்கிறது என்பதே உங்களது பிரச்சனை என்று எண்ணுகிறேன்.

    புத்தகம் ஒன்று வெளிவந்ததும், அது எப்படிப்பட்ட கதை, விற்பனையாகுமா? என்று புத்தகம் சந்தாவில் பெற்று படித்துவிடும் நண்பர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டு அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்குங்கள். இதுவே உங்கள் பிரச்சனைக்குரிய சொல்யூஷன்.

    அதைவிட்டு, வீட்டில் சண்டை உடைந்தது மண்டை, ஆசிரியர் கமெண்ட்களை அழிக்கிறார் என்று 'சும்மா' கதைவிடத் தேவையில்லை.

    உங்கள் வார்த்தையில் உள்ள 'உண்மை', "ஆசிரியர் கமெண்ட்டை அழித்துவிட்டார்" என்ற குற்றச்சாட்டிலேயே 'தெளிவாக புரிந்துவிட்டது'.

    நானும் பல விடயங்களை சுட்டிக்காட்டுபவன்தான். இங்கிருக்கும் பலரும் தமது கமெண்ட்களில் காரசாரமாய் பதிவிடுபவர்கள்தான். ஆசிரியரிடம் கேட்கும் கேள்விக்கு வேறு யாரேனும் பதிலளித்தால் கோபப்படுபவன்தான். ஆனால், நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை ஒரு வாசகனாய் ஏற்கமுடியவில்லை.

    இனியாவது உண்மையைச் சொல்லுங்கள்... வீட்டில்தான் பிரச்சனையா? பாக்கெட்டிலா?


    ReplyDelete
  60. To: Editor,

    சார், லயன் காமிக்ஸ்இல் ஆங்கிலத்தில் கலரில் A4 அளவில் வந்த இதழ் எது? (ஒரு இடத்தில் நடக்கும் போட்டிக்கான விடையை தேடி மண்டை காய்ந்துவிட்டது. அதுதான் சப்ஜெக்ட்டுக்கு உரியவரிடமே கேட்கிறேன்.))

    ReplyDelete
    Replies
    1. 'Remi - the nobody's boy' was one of the A4 size books published by Muthu Comics. I am not sure if that was the ONLY.

      Delete
    2. Podiyan : ஆங்கிலத்தில் Pushpa Chithra Katha என்றொரு இதழ் வண்ணத்தில் வெளியிட்டோம் ! 1994-வாக்கில் வந்த இதழ் இது என்று ஞாபகம் !

      Delete
    3. Podiyan : எக்கச்சக்கமாய் திரும்பி வந்த unsold பிரதிகள் பல ஆண்டுகள் எங்கள் கிட்டங்கியை ரொப்பிய பெருமைக்குச் சொந்தம் கொண்டாடும் இதழ் கூட PCK ...!

      Delete
    4. ஓ... நாடோடி ரெமியும் அப்படி திரும்பியதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்று அந்தப் புத்தகங்கள் இருந்தால், அவற்றின் மதிப்பே தனி, இல்லையா சார்? ஆனால், அவற்றை அவ்வாறு வருடங்களுக்கு சேமித்து வைப்பது அவற்றின் விலையை அதிகரித்து விற்றாலே தவிர நஷ்டத்தையே தரும் என்று நினைக்கிறேன்.

      பராமரிப்பு, சேமிப்பிடம், சேதம் என்று பார்த்தால் குறித்த காலத்தின் பின் அவற்றை பழைய பேப்பருக்கு போட்டுவிடுவதே நல்லது என்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும்.

      இப்போது நீங்கள் உங்கள் கைவசமிருந்து விற்கும் ரூபா 5,6,10 விலை இதழ்களின் மதிப்பு குறைந்தது ரூபா 25, 35, 50 ஆவது இருக்கும் என்பது என் எண்ணம். அப்படியொரு திட்டத்தை நீங்கள் மனதில் கொண்டு செயற்பட்டால் என்ன?

      இப்போது பதிப்பிக்கும் ரூபா 100 இதழ்களின் மதிப்பு இன்னும் இரு வருடங்களில் ரூபா 200க்கு குறையாமலிருக்கும். இப்போதே கம்பேக் ஸ்பெஷல் இதழ் ஒன்று ப்ளாக்கில் போகும் விலையைக் கேட்டால் தலை சுற்றும்.

      எப்படியாவது விற்றுவிட்டால் பரவாயில்லை என்ற மனநிலையிலிருந்து விலகி, மீந்து கிடக்கும் இதழ்களையும் முறைப்படுத்தி குறித்த காலத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கலாம். முதல் வாரம் வந்த பத்திரிகை ஒன்றை ஏதாவது தேவைக்காக பத்திரிகை நிறுவனத்துக்குச் சென்று வாங்குவதானால் எக்ஸ்ட்ரா கட்டணம் செலுத்தவேண்டும் என்பதுபோல....

      Delete
    5. Podiyan : நீங்கள் சொல்வது போல கையிருப்புப் பிரதிகளின் விலைகளைக் கூட்டி விற்றிட ஏனோ மனம் ஒப்பவில்லை...நாம் தயாரித்த ஒரு பொருளுக்கு நாமே புதிதாய் ஒரு விலை நிர்ணயம் செய்வது சரியான முன்னுதாரணமாய்ப் படவில்லை எனக்கு.

      நாளை எங்கேனும் விற்பனையாளர்களும் இவ்விதம் விலைகளைத் தாமாகக் கூட்டிட அது ஒரு மறைமுக அங்கீகாரத்தைத் தந்தது போலாகிடும் அல்லவா ?

      தவிர, பரவலாய் வாசகர்களைச் சென்றடைய வேண்டுமென்ற அவாவே குறைவான விலைகளை நிர்ணயம் செய்ததன் பின்னணி...இப்போது மார்கெட் மாறி விட்டதென்றாலும் நாமே நம் ஒரிஜினல் சிந்தனைக்கு எதிராய் செயல்படுவதில் ஒரு முரண் இருந்திடும் என்று நெருடுகிறது !

      Delete
    6. அது உண்மைதான்.

      ஆனால், நான் குறிப்பிடுவது, ஒரு கால இடைவெளியின் பின் விலையை அதிகரிக்குமாறு அல்ல.

      தபாலில் அனுப்புவதானால் ப்ளஸ் இவ்வளவு அனுப்புங்கள் என்று முன்னைய இதழ்களை விற்பனை செய்வதுபோல, ஒரு வருடமோ இரண்டு வருடமோ ஆகும்போது விலை ப்ளஸ் பராமரிப்பு செலவு போல ஒரு வழிமுறையை குறிப்பிடலாம். இதன்மூலம் புத்தகங்களை சிறப்பாக பாதுகாக்கவேண்டிய அவசியமும் உங்களுக்கு ஏற்படும்.

      இப்போதுபோல ஒரு மாதமானாலே தூசிபடிந்து, தண்ணீரில் நனைந்து ( :-) )இதழ்கள் பழுதடையாமல் பாதுகாக்கலாம்.

      Delete
    7. இப்போது பாதுகாப்பதை விட உடனடியாக விற்பனை ஆக வேண்டுமென்பதே சரி !முதலீடு அதிகம் என்பதால் அதிக புத்தகங்களை ஸ்டாக் செய்ய இயலுமா என தெரியவில்லை !ஆனால் ஒன்று இந்த வருட காமிக்கான் தெளிவு படுத்த உதவலாம் !

      Delete
  61. அய்யா பொடியரே புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு எழுதவேண்டாம். உங்கள் கணக்குப்படி பார்த்தால் 560 எனக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்கிறீர்கள் அப்படி பார்த்தால் 4 புத்தகம் நின்றால் 320 ரூபாய் உள் அடக்கம் ஆகும் மீதி 240 ரூபாய் எனக்கு லாபம் தானே உங்கள் கணக்கு என் பையையும் கடிக்காது கையையும் கடிக்காது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பெண்களிடம் அந்த புத்தகத்தை படிக்க கொடுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உண்மையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள். நான் என்ன தொழில் செய்கிறேன் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த புத்தகத்தை விற்றுத்தான் எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது என் நிலமையில்லை . ஆரம்பம் முதலே நான் ஆபாசத்தை வீடு வரைக்கும் காமிக்ஸ் மூலமாக கொண்டு வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக நின்றவன். நீங்கள் வேண்டுமானால் வெளிநாட்டு கலாசாரத்தை மதிக்கலாம் நான் தமிழனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். நான் கேட்பது ஒன்றே ஒன்று தான் உண்மையிலேயே என் கோரிக்கை ஷெல்டன், லார்கோ தனியாக வெளியிடவேண்டும் அதனோடு வேறு எந்த கதைகளையுமே வெளியிடக்கூடாது. அவரவர்க்கு பிடித்ததை அவரவர் வாங்கலாமே. இது உங்களுக்காக எழுதப்பட்ட பின்னூட்டமல்ல நீங்கள் பதில் சொல்ல ஆசிரியருக்காக எழுதப்பட்டது. நான் உங்களிடம் கேட்கவே இல்லையே ...மேலும் இது உங்கள் தளமல்ல.

    ReplyDelete
    Replies
    1. Karnan L : கருத்து பேதம் தலைதூக்கும் முதல் நொடியில் "தமிழன்" என்ற அடையாளங்கள் தலைதூக்கிடுவது அவசியம் தானா ? தமிழ் படிக்கும் அனைவரும் ஓர் குடும்பமே !

      Delete
    2. ஆசிரியர் அவர்களே கலாச்சாரத்திற்கு பெயர் எடுத்தவன் தமிழன் அதனால் தான் அப்படி சொன்னேன் தவறாக இருப்பின் திருத்திக்கொள்கிறேன்

      Delete
    3. உண்மை பிற தாய் மொழி கொண்ட தமிழ் படிக்கும் பல நண்பர்கள் இங்கு உண்டு !ஒவொருவருக்கும் தங்கள் கலாச்சாரங்கள் மேல் நம்பிக்கை உண்டு !யாதும் ஊரே யாவரும் கேளிர் !காமிக்ஸ் என்பது நமது கலாச்சாரமாய் இருக்கட்டும் !பல புராதான கோவில்களின் சிலைகள் கூட நம்மை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காதே உங்களது எண்ணம் சரியென்றால் ......

      Delete
    4. தீயதும் நல்லதும் நாம் சொல்லி தருவதிலும் உண்டு !கௌ பாய் கதைகளை படித்தவுடன் துப்பாக்கி தூக்கி கொண்டோ அல்லது ஸ்பைடரை படித்தவுடன் திருடுவதில் த்ரில் உண்டு என்றோ நாம் சென்று விடவில்லையே .....பகுத்தறியும் குணம் அனைவருக்கும் இருக்கும் !கையில் கொடுத்தவுடன் யாரும் பாதை மாற இயலாது ....

      Delete
    5. Karnan L : திரும்பவும் ஒரு பொதுப்படையான பதிவு உள்ளங்களைப் புண் செய்வதைத் தாண்டி சாதிக்கப் போவது எதுவும் இல்லை ! எனினும் அது உங்கள் சிந்தை எனும் போது அதன் மீது தர்க்கம் செய்ய நாங்கள் யார் ?

      Delete
    6. சரி எப்படியோ வெளியிடுங்கள் பிடித்தால் வாங்குகிறேன் இல்லாவிடில் விட்டுவிடுகிறேன் நானும் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

      Delete
    7. //உள்ளங்களைப் புண் செய்வதைத் தாண்டி சாதிக்கப் போவது எதுவும் இல்லை !//
      நமது சந்தோசங்களுக்கு இந்த கதைகளும் காரணமென்றே இனம்,மதம் ,மொழி கடந்த நண்பர்கள் இங்கே உள்ளனர் !அவர்களுக்கேன்றும் ஒரு கலாச்சாரம் இருக்கும் ,மேலை நாட்டவர்கள் கூட தவறுகளையும் ஏற்று கொள்வதில்லை ! மானம் ,அவமானம் என்பது அனைவருக்கும் உண்டு எந்த இனமாக இருந்தாலும் !

      Delete
    8. எப்படியோ வெளியிடுங்கள் என்றால் .....நமது சொல்லில் எப்போதும் கவனம் வேண்டும் நண்பரே !இங்கே ஒன்றும் எப்படியும் வெளியிடவில்லை !

      Delete
    9. திரை படங்களில் நடிகைகள் கூடாதென்றும்,பெண்களை வெளியே அனுப்ப கூடாதென்றும் இருந்த பல கால கட்டங்களை கடந்து வந்துள்ளோம் .....இவற்றை அப்படியே உங்களால் கடை பிடிக்க முடியுமா இப்போதும் !கலாச்சாரம் என்று...

      Delete
    10. //சரி எப்படியோ வெளியிடுங்கள் பிடித்தால் வாங்குகிறேன் இல்லாவிடில் விட்டுவிடுகிறேன்//

      எப்படியோ வெளியிடுங்கள் என்றால்...? ஏதோ காமிக்ஸ் பற்றிய அறிவே இல்லாத ஒருவரைப் பார்த்து சொல்வது போல இருக்கிறதே? அவர் என்ன கசாப்பு கடையா நடத்துகிறார்? தலைமுறை தலைமுறையாக காமிக்ஸ் என்றும் அசாத்திய விடயத்தை சாத்தியமாக்கிக் கொண்டிருப்பவரை பார்த்து இப்படிச் சொல்ல எங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நரியும் திராட்சைப் பழமும் கதையே ஞாபகம் வருகிறது.....

      Delete
  62. காமிக் கான் திருவிழாவை ஒட்டி 4 நாட்கள் பெங்களுரு குடும்பத்துடன் வர டிக்கெட் போட்டாச்சு. [பின்ன தனியா நான் மட்டும் போறேன்னா 'டின்னு' கட்டிடுவாங்கல்ல ;)]

    ReplyDelete
    Replies
    1. Comic Lover (a) சென்னை ராகவன் : COMIC CON -க்கும் குடும்பத்தோடு வரும் திட்டமா ? அல்லது தற்காலிக bachelor ஆகிடுவீர்களா அவ்விரு நாட்களில் :-) ?

      Delete
    2. அங்கே எனது தம்பி குடும்பத்துடன் அவர்கள் நேரம் செலவிடும்போது நான் கொஞ்சம் கம்பி நீட்டிவிட்டு கோரமங்களா வரும் உத்தேசம் - நான் காமிக்ஸ் கொள்ளை அடித்திடுவதை நேரில் காட்ட தெம்பு இல்லை சாமி !!

      Delete
  63. இவர் ஏன் இப்படி கோபமாக பதிவிடுகிறார் என்ற பாய்ண்ட் தெரிந்ததும் இப்போது எம்மீது பாய்கிறார். முதலில் பின்னூட்டம் அழிக்கப்பட்டது என்று மிகத் தவறான கருத்தை இட்டதற்கு ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். அடுத்தது - இது சுதந்திரமான தளம். யாரும் தமது சொந்தக் கருத்துக்களை பதியலாம். தவறென்று நினைத்தால் சுட்டிக்காட்டலாம். அதை கண்காணித்து நீக்குவதும் தொடர அனுமதிப்பதும் தளத்தின் சொந்தக் காரரான ஆசிரியரின் உரிமை.

    ReplyDelete
  64. நாங்களொன்றும் ஆங்கில மோகத்துக்கு அடிமையாகிவிடவில்லை. பெண்கள் பெண்கள் என்கிறீர்களே, இன்று அவர்கள் எத்தனை துறையில் எங்கேயோ போய்விட்டார்கள். அவர்களுக்கு தெரியாத விடயங்களையா இந்த காமிக்ஸ் இல் வரும் சில கட்டங்கள் காண்பிக்கப்போகிறது? உங்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்படுத்தும் ஒரு விடயத்தை நீங்கள் தவிர்ப்பது உங்கள் சுதந்திரம். ஏதோ ஒருவருக்குமே ஏற்றதல்ல என்ற ரீதியில் கருத்திடுவது மிகத்தவறானது.

    எங்கள் வீட்டிலும் என் தாயார், மனைவி, அயல்வீட்டு நண்பர் நண்பிகள் எல்லோருமே படிக்கிறார்கள். யாரும் தவறான கண்ணோட்டத்தில் இதுவரை அவற்றை கருதியதுமில்லை கருத்துச் சொன்னதுமில்லை.

    ReplyDelete
  65. சினிமா பாடல், படம், குமுதம் போன்ற சஞ்சிகைகள் தொடர்பாக இங்கே நண்பர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

    சும்மா... காமிக்ஸ் புத்தகத்தை காமிக்ஸ் புத்தகமாகப் பார்க்கவேண்டும். பாடப்புத்தகம் மாதிரி இந்தக் கட்டுக்கோப்புக்குள் வரவேண்டும் என்று யாரும் சட்டம்போடக்கூடாது.

    பிற்போக்குத் தனங்கள் பாதுகாப்பானவை அல்ல. அவைதான் அபாயமானவை.

    மெல்ல மெல்ல விடயங்கள் அறியப்படும்போது அவை யாரையும் பாதிக்காது. திடீரென்று ஓர்நாள் எல்லைகள் உடையும்போது விபரீதம் ஏற்படும். இன்று நடக்கும் துஷ்பிரயோகங்கள் அறியாமையைப் பயன்படுத்தி நடப்பவையே!

    ReplyDelete
  66. அரசியல்வாதிகள் போல 'தமிழன்' என்ற பதத்தை எதற்கெடுத்தாலும் தூக்கிப்பிடிக்காதீர்கள். தமிழனின் கலாசார வளர்ச்சிபற்றி தெரிந்தவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். போய் உங்கள் ஊர் கோவில் கோபுரங்களிலும், ரதங்களிலும் இருக்கும் சிற்பங்களைப் பாருங்கள். இன்று நாம் எவ்வளவு பிற்போக்காக, அறிவிலிகளாக இருக்கிறோம் என்பது புரியும். எதற்கெடுத்தாலும் தமிழன், தமிழன்.... எங்கள் மூதாதையர் தந்த அந்த அடையாளத்துக்கு இன்று நாம் யாருமே விசுவாசமாக இல்லை. அதைவிட கொடுமை இப்படி எதற்கெடுத்தாலும் 'தமிழன் தமிழன்' என்று கூவுவது.

    ReplyDelete
  67. steel glaw அர்த்தத்தை அனர்த்தம் ஆக்குகிறீர்கள் சேர்த்தோ பிரித்தோ வெளியிடுங்கள் என்பதுதான் நான் சொன்னதற்கு அர்த்தம். பிரச்னையை பெரிது படுத்த முயல்கிறீர்கள் . அதே போல் என்னுடைய சிஸ்டத்தில் loadmore ஆகாமல் இருந்ததினால் வந்த தவறு என்பதை பிறகு தான் நான் புரிந்துகொண்டேன் அதனால் நான் ஆசிரியரிடம் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். மீண்டும் மீண்டும் என்னை பற்றி லென்ஸ் வைத்து தேட முயலாதீர்கள் steel galw

    ReplyDelete
    Replies
    1. இவற்றில் எங்கும் நான் பிரச்சினைகளை பெரிது படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை !உங்கள் கேள்விகளுக்கு பொதுவான பதில் இருக்கும் !எங்கே எனது கேள்விகளில் தவறு என காட்டுங்கள் சரி செய்து கொள்கிறேன் !

      Delete
    2. நீங்கள் முதலில் பதிவு போட்ட பொது யாரும் கண்டு கொள்ளவில்லை !கடந்துதான் சென்றோம் ,நீங்கள் மீண்டும் கொண்டு வந்து load more பிரச்சனையால் உணராமல் பதிவிட்டதால் பெரிதாகி விட்டதை உணருங்கள் !தவறு செய்வது மனித இயற்கை ,தவறை உணர்ந்த பின்னர் நிச்சயமாக நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்கவும் தேவை இல்லை !அனைத்து கேள்விகளுக்கும் ஆசிரியர் பதில் சொல்வது சில வேளைகளில் தர்ம சங்கடத்தை அளிக்கும்,தன்னை தானே புகழ்வது போல இருக்கும் ,அது போன்ற சமயங்களில் உண்மைதனை உணர்த்த கலந்துரையாட சில நண்பர்கள் வருவோம்,எதிர்ப்பிருந்தாலும் எண்ணங்களை பதிவிட தடை ஏதும் இல்லை !

      Delete
  68. என்னதான் நடக்கிறது இங்கே...நண்பர் கர்ணன் என்னதான் கேட்கிறார் பிரித்து வெளியிடுங்கள் என்கிறார் எதை பிரிக்கிரதம்.

    ReplyDelete
  69. புது கதாநாயகர்களை விட டைகர்தான் பெஸ்ட் மின்னும் மரணம் 10 பார்ட் அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க அப்படியிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Ravi Krishnan : டைகருக்குச் சவால் விட ஒரு கௌபாய் தொடர் இல்லது போனால், போட்டியில்லா தேர்தல் போல் ஆகிடாதா ? விரைவிலேயே அதற்கொரு ஏற்பாடு செய்வோமா ?

      Delete
    2. நிச்சயமாய். அதற்காகத்தானே காத்திருக்கிறோம்.

      Delete
    3. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....தலைவா அடிதூள் ...கெளப்புங்க ....விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..........

      Delete
    4. அப்படியே டெக்ஸுக்கு போட்டியாவும் ஒரு கெளபாயைக் களமிறக்குங்கள் சார்! நான் தயார் செய்து வைத்திருக்கும் வறுத்த கறியையும், வேகவைத்த ஆப்பிள்களையும் அந்தப் புது கெளபாயாவது சாப்பிட்டுவிட்டு மாடு மேய்க்கப் போகட்டும்! :)

      Delete
    5. சார்,

      உண்மையாகவே டைகர் போட்டியாக இன்னொருவர் என்பது வரவேர்க்ககூடிய விசயமே ... ஆனால் மின்னும் மரணம் கலர் ரீ-பிரிண்ட் என்பது அதைவிட முக்கியம் ...

      2014 - சென்னை புத்தக திருவிழாவில் 'மின்னும் மரணம்' ஸ்பெஷல் தான் ஸ்பெஷல் சார் :)

      Delete
  70. dear vijayan sir ,அடுத்து வரும் டெக்ஸ் கதை ,டெக்ஸ் வரிசையில் எத்தனாவது கதை ? லயன் ல் வந்த டெக்ஸ் 50 யை தாண்டி விட்டதா ?
    ஜூன் ல் காமிக் கான் ல் 4 புத்தகங்கள் release என்று சொல்லி இருந்தீர்கள் ! மே மாதம் அறிவித்த புத்தகங்கள் வருமா ? இல்லை அதனையும் சேர்த்துதான் ஜூன் ல் release செய் கிறீர்களா ?

    ReplyDelete
  71. விஜயன் சார், நண்பர் கர்ணன் பதிவில் ரசித்தது, ஷெல்டன் மற்றும் லார்கோ கதைகளை தனித்தனியாக வெளியிட கேட்டு கொண்டது!! இந்த கதைகளை சிறுவர்கள் விரும்பி படிக்கும் கதைகளுடன் இணைக்காமல் வெளிவிட்டால் நமக்கு இன்னும் அதிகமான இளம் வயது வாசகர்கள் கிடைப்பார்கள்! ஆசிரியர் இதனை பரிசீலனை செய்யவும்.

    ReplyDelete
  72. இந்த பதிவிற்கு "கோடையின் கொடை " என பெயரிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சினிபூக்ஸ் வருகை நமக்கு ஒரு பெரிய விளம்பரமே.. புத்தக திருவிழாவின் பொழுது variety to choose (அதுவும் புதிய வெளியீடுகள்) நல்ல ஒரு விற்பனை தந்திரமே.. அத்துடன் கூடுதல் வாசகர்கள் அமைய அது வழிவகுக்கும். All the Best Sir .

    நான் இங்கு சொல்ல வந்த விஷயம், இந்த முறை கிட் ஆர்ட்டின் , டாக் புல் அதகளப்படுத்தி விட்டார்கள். இன்று வரை மூன்று நான்கு முறை படித்து விட்டேன்.

    இங்கு வந்து , நண்பர்களின் பின்னூட்டங்களை படித்த பிறகு , ஒரு விஷயம் சொல்ல தோன்றியது... எங்கள் இல்லத்தில் நமது லயன் & முத்து வெளியீடுகளை படிப்பதில் முதல் நபர் & முதல் வாசகி எனது அன்னையே...

    ReplyDelete
  73. நண்பர் கர்ணனின் பதிவை படித்தபிறகு நானும் இதை ஆமோதிக்கிறேன் தலீவா....யோசிச்சு பாருங்க பாஸ். தனியா போட்டா நெறைய இளம் வாசகரை அள்ளலாம். நம்ம ஓட்டு தனியா புக் போடவே.

    ReplyDelete
  74. "ஒரு காமிக்ஸ் பயணத்தில் "........baraniwithcomics.blogspot.com.

    ReplyDelete
  75. நண்பர்கள் எனது blogai அடிக்கடி இங்கே விளம்பரபடுத்து வதாக தவறாக நினைக்கவேண்டாம் .காமிக்ஸ் பதிவிற்கு மட்டுமே அதுவும் ஒரு பதிவிற்கு ஒரு முறை மட்டுமே இங்கே ஒரு சிறு விளம்பரம் .சாரி .(ஆசிரியர் மன்னிப்பாராக )

    ReplyDelete
  76. தலை வலி ''பொறுக்க'' முடியலடா ஜால்ரா பாய்.............
    ஜால்ரா பாய் : கீழ கிடக்குற தலை வலிய நீங்க ஏன் ''பொரூக்குறீங்க'' பாஸ்............
    மந்திரி: நற நற........ நற நற....... நற நற........... நற நற நற.......ஜவலோசஸ்கி பவலோஸ்கி பிச்ஜோஸ்கி எரிச்சலோஸ்கி காஸ்பெரஸ்கி (ரஷ்யன் மொழி திட்டுக்கள் )..........

    ReplyDelete
  77. ஒவ்வொரு பதிவிலும் இது மாதிரி பதிவிற்கு சம்பந்தமே இல்லாததொரு பிரச்னை கிளம்பி விடுகிறது..
    செம entertainment போங்க.. நானும் ஒரு வாரம் அடிபட்டவன் தான் கர்ணன் சார்...
    BUT he has a point.. காமெடி & த்ரிலர் தனி தனியாக வெளியிடுவது, is better than current format.

    Continuation from my previous comment :
    இந்த வாட்டியும் எடிட்டர் ஐ comiccon இல் பார்க்க முடியாமல் போகும் சாத்தியகூறுகள் உதயமாகின்றன என் வீட்டில்...
    சார், இந்த Blondie டைப் காமிக்ஸ் (family காமெடி ) இருந்தா கண்டுபிடிச்சு வெளியிடுங்க.. மனைவியால் நொந்த கணவர்கள்னு பேர்வசுக்கலாம்.

    ReplyDelete
  78. Be careful.... நான் என்ன சொன்னேன்...

    ReplyDelete
  79. எடிட்டர் சார்,

    நான் என்னுடைய சந்தாவினை கேன்சல் செய்துவிடலாம் என்று இருக்கிறேன். உடனடியாக நீங்கள் உங்களது பார்சல் கொரியர் டெலிவரி முறையினை மாற்றாவிடில் கண்டிப்பாக நான் என்னுடைய சந்தாவினை கேன்சல் செய்து விடுவேன். ஏனென்றால் கலாச்சாரத்திற்கு பெயர் எடுத்தவன் தமிழன் அதனால் தான் அப்படி சொன்னேன் தவறாக இருப்பின் திருத்திக்கொள்கிறேன்.

    நான் இங்கே என்னுடைய சந்தாவினை மட்டும் சொல்லவில்லை. என்னுடன் மொத்தம் ஐந்து சந்தா கேன்சல் ஆகிவிடும். ஆகையால் உடனடியாக உங்கள் கொரியர் டெலிவரி முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள். நான் ஒரு தமிழன் என்பதை மறந்து விட வேண்டாம்.

    ஃபுரபெஷனல் கொரியர் கம்பெனியின் டெலிவரி இனிமேல் எனக்கு வேண்டாம்.

    நேற்று என்னுடைய சந்தா (மொத்தம் ஐந்து சந்தா, மறுபடியும் சொல்லி விடுகிறேன் - இந்த ஐந்து சந்தாக்கள் என்பதை அடிக்கடி சொல்லி உங்களை கருப்பு மெயில் செய்யும் எண்ணம் எனக்கில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்) கொரியரை கொண்டு வந்த நபர், என்னுடைய சந்தா புத்தகத்தினை தரும்போது அதற்க்கு மேலே "சௌத் ஸ்கோப்" என்கிற சினிமா பத்திரிக்கையை வைத்துக்கொண்டு இருந்தார். அதை என்னுடைய மனைவி பார்த்துவிட்டு இது போன்ற அசிங்கமான புத்தகங்களின் மீதுதானா உங்களது லயன் காமிக்ஸ் கொரியர் டெலிவரி கை எழுத்து வாங்கவேண்டும்? என்று என்னை கேள்வியால் அசிங்கப்படுத்தி விட்டார். உண்மையிலேயே கேட்கிறேன் - கலாசாரத்திற்கு பேர் போன நம்முடைய நாட்டில் இதுபோன்ற அசிங்கமான புத்தகங்களை ஏன் அந்த கொரியர் டெலிவரி செய்பவர் கொண்டுவரவேண்டும்? இனிமேல் இதுபோன்ற புத்தகங்கள் அவரிடம் இருந்தால் அவர் எனக்கு கொரியர் டெலிவரி செய்யவேண்டாம்.உங்களால் வீட்டில் தேவையே இல்லாமல் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துவிட்டது. வீட்டில் பெண்களை வைத்துகொண்டு இப்படி அசிங்கமான புத்தகங்களை வீட்டில் வச்சுகிட்டிருக்கீங்களே உங்களுக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா என்று கேட்டு ஒரே சண்டை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆத்திரத்தில் காமிக்ஸ் புத்தகத்தையெல்லாம் கிழித்து போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது பல்லைகடித்துகொண்டு அமைதியாக இருந்தேன். சரி இனிமேல் இதுபோல் புத்தகம் வாங்கவில்லை என்று சொல்லி சமாதனம் செய்தேன்.

    இரண்டாவதாக, வீட்டில் நான் இல்லாதபோது எதற்கு இந்த கொரியர் டெலிவரி ஆட்கள் வரவேண்டும்? நீங்கள் இனிமேல் கொரியர் அனுப்பும்போது நான் வீட்டில் இருக்கும்போது மட்டுமே கொரியர் டெலிவரி செய்யவேண்டும் என்று சொல்லிவிடுங்கள் - எங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள், அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அப்படி நான் வீட்டில் இல்லாதபோது கொரியர் டெலிவரி செய்வதாக இருந்தால் என்னுடைய சந்தாவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். எங்கள் வீட்டு பெண்கள் கலாச்சரத்திற்கு பெயர் போனவர்கள்.

    அப்படி முடியாது என்றால் எங்கள் வீட்டிற்கு கொரியர் டெலிவரி செய்யும்போது பெண்கள் வந்து டெலிவரி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். அதுவும் அவர்கள் வெறும் லயன் காமிக்ஸ் மாத்திரமே அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். வேறு எதாவது ஆபாசமான புத்தகங்கள் வைத்து இருந்தால் (அவர்களது பையை சோதனை போடுவேன்) நான் என்னுடைய ஐந்து சந்தாவினையும் கேன்சல் செய்துவிடுகிறேன். இதனை உங்களை அச்சுறுத்தும் விதத்தில் நான் சொல்லவில்லை.

    அப்படி எங்கள் வீட்டிற்கு காமிக்ஸ் கொரியர் டெலிவரி செய்ய வரும் பெண்கள் கண்டிப்பாக குடும்ப பாங்கான உடை உடுத்தியே வரவேண்டும். அவர்கள் டிவி பார்க்க கூடாது, பத்திரிக்கைகள் பார்க்கவே கூடாது, செய்தித்தாள் என்றால் என்ன என்று கேட்பவர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக மஞ்சள் பூசி, நெற்றியில் குங்கும போட்டு வைத்திருக்க வேண்டும். காயத்ரி மந்திரம் சொல்லவேண்டும். சமைக்க தெரிந்து இருக்க வேண்டும். கர்நாடக சங்கீதம் தெரிந்து இருத்தல் நலம். முக்கியமாக அவர்கள் தமிழ் மீடியம் படித்தவர்களாக இருந்து, கும்ப லக்னத்தில் பிறந்து இருக்க வேண்டும். அப்போது தன நான் அந்த காமிக்ஸ் புத்தகங்களை கோரியல் முறையில் வாங்குவேன். இல்லை என்றால் அவற்றை கேன்சல் செய்துவிடுவேன். சரி எப்படியோ வெளியிடுங்கள் பிடித்தால் வாங்குகிறேன் இல்லாவிடில் விட்டுவிடுகிறேன், என்னுடைய ஐந்து சந்தாவையும்.

    ReplyDelete
  80. மேலே உள்ளதை படிக்க ஆரம்பிச்சபோது 'இது என்னப்பா இது புது பிரச்சினையா இருக்கு' ன்னு நெனச்சேன்! ஆனா, செம காமெடி!

    கண்டிப்பா ரூம் போட்டுத்தான் யோசிச்சிருக்காங்க! :)

    ReplyDelete
    Replies
    1. செம காமெடிதான் ... looking at the way the Tamil prose is written I guess we can tell this is a regular reader / critic :-) :-)

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete