Powered By Blogger

Friday, February 08, 2013

ஆதலினால் அசடு வழிவீர் !நண்பர்களே,

வணக்கம். கடந்த பதிவின் பின்னூட்டக் குவியலினுள் நண்பர் ஈரோடு விஜய் எழுப்பியிருந்த கேள்விகள் சமீபமாய் என் தலைக்குள் ஒலித்துக் கொண்டே இருந்த சில சங்கதிகளின் எதிரொலி என்று தான் சொல்லிட வேண்டும் ! So-அவற்றிற்கான பதில்களையே இப்போதொரு  பதிவாக்கியுள்ளேன் ! இது நிறைய மாறுபட்ட reactions-ஐக் கொணரவிருக்கும் பதிவு என்பதை அறிவேன் ; but இது இனியும் தள்ளிப் போடும் சங்கதியல்ல என்பதே நிஜம் ! 


சில கேள்விகளும், விடை தேடும் மனமும்...

1. CC பற்றிய ஆசிரியரின் தற்போதைய நிலைப்பாடு என்ன?


2. ஏற்கனவே அறிவித்த CC டைஜெஸ்டுகள் அறிவித்தபடியே வெளிவருமா அல்லது மாற்றம் இருக்குமா?


3. ஹிட் கொடுத்த கதைகளின் வண்ண மறுபதிப்புகளுக்கான கதைத் தேர்வு எப்போது அறிவிக்கப்படும்?

7. ஆசிரியரின் பதிவிற்குப் பின்பாவது CCக்கான சந்தா எண்ணிக்கையில் முன்னேற்றமிருக்கிறதா இல்லையா?


கேள்விகள் நான்கென்ற போதிலும்  பதில் கிட்டத்தட்டப் பொதுவானது என்பதால், here goes :  'பளிச்' என்று பதில் சொல்வதாக இருப்பின், CC பற்றிய எனது தற்சமய நிலைப்பாடு - தர்மசங்கடம் மாத்திரமே !  புதிய இதழ்களுக்கான வரவேற்பை விட இந்த golden oldies -க்கு பட்டையைக் கிளப்பிடும் ஆதரவிருக்கும் என்றே இதனை அறிவித்த சமயம் நான் எதிர்பார்த்திருந்தேன்.'இந்த selections -க்குப் பதிலாக  டெக்ஸ் வில்லர் ; பிரின்ஸ் ; லக்கி போன்ற புராதன நெடியற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே..' என அப்போதே இங்கு பதிவுகள் பல எழுந்திருந்த போதிலும் - நான் அவற்றை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே நிஜம்.  நம் துவக்க காலத்து சூப்பர் ஸ்டார்களுக்காக  அப்போது ஒலித்து வந்த உரத்த குரல்கள் - இந்த CC டைஜஸ்ட்களை ஒரு சுலபமான வெற்றியாக்கிடும் என்று ஒரு வித மிதப்பினில் இருந்தேன் என்று கூட சொல்லிடலாம் ! ஆனால் இப்போது நடந்தேறி வருவதோ எங்கள் எதிர்பார்ப்புகள் ரொம்பவே off  target என்று சொல்லிடும் சங்கதிகள்.  

பொழுதுகள் பல கடந்த பின்னே ஒரு ஓய்வான மழைக்கால மதியத்தில் நம் துவக்க காலத்து ஜாம்பவான்களுக்கு இருந்திட்ட ஆதரவைப் பற்றி சிந்தித்தால் - 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலுக்கு  முன்' ;  'சூ.ஹீ.சூ.ஸ்'க்குப் பின்' என்றொரு மெல்லிய கோட்டின் தாக்கத்தை உணர்ந்திடல் சாத்தியமாகும் என்று தோன்றுகிறது. அது வரை சூப்பர் ஹீரோக்களின் தளரா ரசிகர்களாய் இருந்திட்ட பலரும் கூட - திகட்டத் திகட்ட அந்த மாயாவி + ஸ்பைடர் அதி நீளக் கதைகளைப் படித்த பின்னே ஒரு வித ஆயாசம் மேலோங்கி சற்றே பின்வாங்கியது போல் படுகின்றது. இடைப்பட்ட நாட்களில் லார்கொ ; டைகர் ; கிராபிக் நாவல் ;NBS -ன் glitzy அறிமுகங்கள் என்று நம் ரசனைகளும் வேறொரு தளத்திற்கு நகன்று விட்டதே இப்போது CC -க்கு கொட்டாவி விடும் ரக வரவேற்பு கிட்டியுள்ளதற்குக் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது !இந்த CC டைஜஸ்ட்களை சென்னைப் புத்தகத் திருவிழாவிற்குத் தயார் செய்திட இயன்றிருந்தால் ஓரளவிற்காவது விற்பனை ஆகி இருந்திருக்கும் ; ஆனால் டிசம்பரின் மின்வெட்டுச் சூழ்நிலையும் ; பைண்டிங்கில் நேர்ந்திட்ட சுணக்கங்களும் அதை இயலாக் காரியம் ஆக்கி விட்டது.இன்றுள்ள மித வரவேற்புச் சூழ்நிலையில் - கைவசம் உள்ள 172  CC சந்தாக்களுக்கான பிரதிகளை (!!!) அனுப்பி முடித்து விட்டால் - ஒன்றும் இரண்டுமாய் தினசரி வந்திடும் E -Bay விற்பனையினைத் தாண்டி நாம் நம்பிக்கையோடு  எதிர்பார்க்கக் கூடியது அடுத்த Comic Con & 2014-ன் சென்னை புத்தக விழாக்களே ! (அதிலும் இந்தாண்டு நம் மீது தாளா இறுக்கத்திலிருந்த புத்தக விழாவின் ஒரு சில நிர்வாகிகள் அடுத்த முறை நமக்கொரு தனி ஸ்டால் தந்திட சம்மதிப்பார்களா என்பதே சந்தேகமாய் உள்ளது ஒரு தனிக் கதை !) கொஞ்சமாய் இதழ்களை வாங்கிடும் நம் விற்பனையாளர்கள் கூட இப்போதெல்லாம் 
ரொம்பவே hi -tech ஆகி விட்டார்கள் ! வண்ண இதழ்கள் - ரூ.100 என்ற  பார்முலா செட் ஆகி விட்டது ; தயவு செய்து மாற்றாதீர்கள்  ! என்பது அவர்களது feedback.

தமிழகத்தினில் அரங்கேறும் அத்தனை புத்தக விழாக்களிலும் பங்கேற்று விற்பனை செய்திடச் சொல்லி நண்பர் குபேரன் அவர்கள்
 உணர்ச்சிகரமாக சொல்லி இருந்த அறிவுரை  அழகானதே - ஆனால் சென்னைக்கு அப்பாற்பட்ட இதர நகர புத்தக விழாக்களின் விற்பனை வரவு செலவுகள் நண்பருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ! சினிமாவில்  நாயகர்கள் சொல்லிடும் புள்ளி விபர பாணியினில் எடுத்து விடுவதாக இருப்பின் :  சென்ற மாதம் சென்னையினில் பத்து நாட்கள் நடந்திட்ட விழாவிற்கு நமக்கு ஆகிட்ட மொத்தச் செலவு - ரூ.61565. (ஸ்டால் வாடகை ரூ.25,000 + மேஜை, நாற்காலி ; புத்தக ஷெல்ப்களுக்கான வாடகை ரூ.8250 இதனில் அடக்கம்) இங்கு நமக்குக் கிட்டிய விற்பனை ஐந்து லட்சத்திற்கு சற்றே அதிகம் ! கடந்தாண்டு மதுரையினில் இதே நீளத்திற்கு நடைபெற்றிட்ட புத்தக விழாவின் நம் மொத்த விற்பனைத் தொகை எவ்வளவு தெரியுமா ? ரூ.6000-க்கு சற்றே குறைவு ! ஈரோடு கொஞ்சம்  தேவலாம் - அங்குள்ள நம் நண்பர்கள் குழாமின் தளரா முயற்சிகளின் பலனாக ரூ.18,000 !இது யாரையும் குறை காணுமொரு முயற்சியோ ; இதர நகரங்களின் புத்தக விழாக்களை மட்டம் தட்டிடும் நோக்கம் கொண்டதோ அல்ல !  சென்னையின் ஜனத் திரளும், ஆர்வமும், வாங்கும் திறனும் தமிழகத்தினில் வேறெங்கும் சாத்தியமாவதில்லை என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிட மாத்திரமே!ஸ்டால் வாடகைகள் தவிர, பாக்கி அத்தனை செலவினங்களிலும் சென்னையும், இதர நகரத்து விழாக்களும் ஒன்றுக்கொன்று அதிக வேறுபாடு கொண்டவை அல்ல ! ஆனால் விற்பனையில் ஒன்றுக்கொன்று துளியும் தொடர்பில்லா  துருவங்கள் ! ஐந்து லட்ச விற்பனைக்கு ரூ.61,000 செலவென்பதெ ஒரு மிகப் பெரிய தொகை எனும் போது,  அதனில் இருபதில் ஒரு பங்கு கூட விற்றிட சாத்தியமில்லா ஒரு முயற்சியினில் ஒவ்வொரு மாதமும் ஊர் ஊராய்  நாம் ஈடுபட்டிட நிச்சயம் குபேர பகவானின் சகாயம் தேவை அன்றோ ?!  

வெற்றியையோ, லாபத்தையோ ஈட்டித் தரா முயற்சியாய் இருந்திட்டால் கூட  ;  மிகுதியான வாசகர்களிடம் சென்றடைந்தது என்ற குறைந்த பட்ச திருப்தியைத் தந்தாலாவது ஒரு ஆக்கத்தின் பின்னுள்ள உழைப்பிற்கு சின்னதாய் ஒரு அர்த்தம் இருந்திடுமே ?! தற்சமயம் காற்றாடும் எங்கள்  CC சந்தா நோட் அந்த குறைந்த பட்ச உத்திரவாதத்தைக் கூடத் தரும் நிலையில் இல்லை என்பதே நிஜம் ! இந்த சூழ்நிலையின் தர்மசங்கடம் நான் இது வரை உணர்ந்திராதொரு விஷயம் !  200 பிரதிகளின் தற்போதைய விற்பனைக்காக லட்சங்களில் பணத்தை முடக்குவதெனும் போது - விசாலமற்ற நமது பர்ஸ் மூச்சிரைப்பதை உணர முடிகின்றது! அதே சமயம் கொடுத்த வாக்குறுதிக்கு இப்படியொரு சோதனையா என்ற சிந்தனையும் மண்டைக்குள் சங்கடத்தை உருவாக்குகிறது ! சமீபத்திய தங்கக் கல்லறையும் மறுபதிப்பே...ஆனால் அதற்கு எழுந்த ஆவலும், எதிர்பார்ப்பும் எத்தனை அசாத்தியம் என்பதை நாம் அறிவோமே ! (சென்னையில் கூட விற்பனை எண்ணிக்கையில் முன்னணி இது தான் ! ) கதையின் அற்புத தரத்தைத் தாண்டி இதன் வெற்றிக்குக் காரணமென்று பார்த்திட்டால் - 1.வண்ணம்+ தரம் ; 2.இது வரை மறுபதிப்பே ஆகிடாதொரு கதை என்ற சங்கதி 3.தற்போதும் ஓடிடும் ஒரு சம காலத் தொடர் இது என்ற plus point! தொடரவிருக்கும் டைகரின் பரலோகப் பாதையின் வண்ண மறுபதிப்பிற்கும் - அதே உற்சாகம் & வெற்றி கிட்டிடும் என்பதை 'அந்த CC இதழை மாத்திரம் தருவித்திட  எவ்வளவு பணம் அனுப்பிடத் தேவை ?' என்று வினவி 
இப்போதே வந்திடும் கடிதங்களும் ; மின்னஞ்சல்களும் சொல்கின்றன :-(  இது தான் இன்றைய ; இப்போதைய சூழ்நிலை !! இப்போதெல்லாம் தினந்தோறும் நாங்கள் பார்த்திடும் மந்திர எண் 1320 ! இது லயன்-முத்து காமிக்ஸுக்கு மட்டுமான சந்தாத் தொகை என்பதில் ரகசியம் ஏதுமில்லையே?! வங்கி மூலமும், இதர மார்க்கங்கள் வாயிலாகவும் புது இதழ்களுக்குத் திரண்டிடும் சந்தாத் தொகைகள் எங்கள் முயற்சிகளுக்கு உத்வேகத்தைத் தந்திடும் அதே கணத்தில் - CC கொட்டாவி விடுகின்றதே என்ற ஆதங்கம் எழுந்திடுவதைத் தவிர்த்திட இயலவில்லை ! 

BN USA;KUBERAN போன்ற பழமை நேசிக்கும் நண்பர்களுக்கு எனது விளக்கங்கள் எரிச்சலையும், ஏமாற்றத்தையும் தான் தந்திடும் என்பதை நானறிவேன்! "நீங்கள் சந்தா கட்டாவிட்டால் நான் இதழ்களை வெளியிட மாட்டேன்" என்று blackmail செய்வது போன்றதொரு தோற்றத்தையும் கூட இந்த சூழ்நிலை தர வல்லது எனும் போது, சொல்லவும் இயலா ; மெல்லவும் இயலா லஜ்ஜை எனக்குள் ! NBS வெளியான பின்னே ;  சகஜ வாழ்க்கைக்குக் திரும்பிடும் வேளையினில்  CC -க்கான சந்தா வேகம் 'பிக்கப்' ஆகிடுமென்ற நம்பிக்கை என்னை ஒரு மாத காலம் மௌனமாய் ; பொறுமையாய் காத்திருக்கச் செய்தது ! ஆனால் இப்போதெல்லாம் நாட்கள் துவங்கி முடிவது 1320-ல் மட்டுமே என்பது ஒரு வித routine ஆகிப் போய் விட்ட பின்னே என் அவஸ்தையின் பரிமாணத்தை உங்களிடம் பகிர்ந்திடும் நேரம் வந்து விட்டதாய் தோன்றியது. வண்ணத்தில் என்ன வெளியிட்டாலும் அவை அழகாய் ஒரு வரவேற்பைப் பெற்றிடும் என்பது மாத்திரம் இப்போது தெளிவாய்த் தெரிவதால் CC -ல் '70களின் black & white நாயகர்களுக்குப் பதிலாய் - '80களில் அசத்திய லயன் ; திகில் & மினி லயனின் டாப் கதைகளை வண்ண மறுபதிப்புகளாய் கொணர்வது இந்த இக்கட்டிற்கு தீர்வாக இருக்குமென்று நினைக்கத் தோன்றுகிறது. இதோ - 2013-ல் CC -க்கு நாம் முயற்சிக்கக் கூடியதொரு முழு வண்ணப்  பட்டியல் :

1.டைகர் ஸ்பெஷல்- (பரலோகப் பாதை & இரும்புக்கை எத்தன்) - ரூ.100
2.பிரின்ஸ் ஸ்பெஷல்- (நரகத்தின் எல்லையில்+பற்றி எறியும் பாலைவனம் ) - ரூ.100
3.லக்கி ஸ்பெஷல்  - (சூப்பர் சர்க்கஸ்  & பொடியன் பில்லி)  ரூ.100
4.ஜானி ஸ்பெஷல் - (ஊடு சூன்யம் & சைத்தான் வீடு) - ரூ.100
5.ரத்தப் படலம் ஸ்பெஷல் - (பார்ட் 1 & 2) - ரூ.100 
இவற்றை அவ்வப்போது வெளியாகும் புது இதழ்களோடு இணைத்து அனுப்பிடும் போது கூரியர் செலவுகளில் பணம் மிச்சப்படுத்திட இயலும். உங்களுக்கும் அவ்வப்போது  கூடுதலாய் ஒரு 'பளிச்' வண்ண இதழ் கிட்டிடும் போது, சுவாரஸ்யத்திற்குக் குறைவிராதே ?! What say folks ?  

தவறானதொரு கணிப்பின் பலனாய் இன்று முகம் முழுக்க அசடு வழிய உங்கள் முன்னே  நிற்கிறேன் என்பதை மறுக்கவோ ; மறைக்கவோ நான் விழையவில்லை ! ஏமாற்றம் பொங்கிடும் பட்சங்களில் நண்பர்கள் சிலர் என் தலையில் குட்டு வைப்பார்கள் என்பதோ ; பரிகாசத்திற்கு ஆளாவேன் என்பதோ நான் அறியாததும் அல்ல ! எப்போதும் போல் இப்போதும் யதார்த்தத்தை   உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்ற ஒரு திருப்தி போதும் ! Over to you guys now ! தொடரும் சென்னைப் புத்தகத் திருவிழாக்களின் போது, சந்தாக்களுக்கு அவசியமின்றி casual ஆக மாயாவி ; ஸ்பைடர் & இதர '70 s நாயகர்களின் மறுபதிப்புகளை வெளியிடுவதென்பது யாருக்கும் சிரமமில்லா தீர்வாக இருக்குமெனில் அதனை நிச்சயம் பரிசீலிப்போம் என்பது கொசுறுச் சேதி !          

========================================================================

4. சமீபத்திய வெளிநாட்டுப் பயணத்தில் ஆசிரியர் அள்ளிவந்த கதைகள் எவை? 

ஏற்கனவே 2013-க்கான முழுப் பட்டியலையும் போட்டு உடைத்து விட்டதில் சுவாரஸ்யம் குன்றி விட்டதாக நண்பர்கள் பலர் அபிப்ராயப்பட்டிருந்தனர் ! இப்போதே அடுத்த பட்டியலையும் open செய்து விட்டால் - த்ரில் இருந்திடாதே ! Wait n' Watch guys !  

========================================================================

5. +6 பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?

ஓசையின்றிப் பணிகள் நடந்தேறி வருகின்றன என்பதை மாத்திரம் இப்போது சொல்கிறேன் ! +6 முழுக்க முழுக்க இத்தாலிய ஆக்ரமிப்பாய் இருந்திடும் என்பது கொசுறுச் சேதி ! 

============================================================================================

6.  மதியில்லா மந்திரிக்கான வாசகர் மொழிபெயர்ப்பு என்னவாயிற்று?

இன்று கூரியர் மூலம் அனுப்பப்படுகிறது ! அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்திடும் வண்ணம் நீங்கள் செயல்பட்டிட வேண்டும் ! So get cracking guys ! 

=============================================================================================

8. மார்ச் மாத லார்கோ ஸ்பெஷலுக்குப் பெயர் தெரிவு செய்யப்பட்டதா இல்லையா?

இது வரை வந்திட்ட பெயர் தேர்வுகளில் அத்தனை 'பளிச்' ரகத்தில் எதுவும் இல்லை என்பதால் - "லார்கோ Action ஸ்பெஷல் " என்றே இந்த இதழ் வெளி வந்திடும். ராப்பர்கள் இன்று அச்சாகின்றன என்பது கொசுறுச் சேதி ! 

=============================================================================================

9. NBS ஆரவாரமான வெற்றிக்குப் பின் ஆசிரியடரித்தும், வாசகர்களிடத்தும் சற்றே உற்சாகக் குறைவு (மந்த நிலை) ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுவது உண்மையா, இல்லையா?

புயலுக்குப் பின் வந்திடும் ஒரு  அமைதி ! என்னைப் பொறுத்த வரை நான் சற்றே மௌனமாய் இருந்திட்டதற்குக் காரணங்கள் ரொம்பவே சிம்பிள் ! லக்கி லூக்கின் இறுதிக் கட்டப் பணிகள் நேரத்தை கொஞ்சம் எடுத்துக் கொண்டன என்றால், லார்கோவின் மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்தேறிடும் போது மெய்யாகவே வேறு எதிலும் கவனம் செலுத்திடுவது சாத்தியமாவதில்லை என்பது தான் இன்னொரு காரணம் ! வழக்கம் போல் இம்முறையும் ரொம்பவே complex ஆனதொரு கதைக் கரு ....லார்கோ மட்டுமல்லாமல் சைமனுக்கும் கதையினில் பிரமாதமாய் பங்கு என்பதால் உரையாடல்களில் ஒரு கத்தி முனை விறுவிறுப்பைக் கொணர்வதற்குள் நாக்குத் தொங்கிப் போகின்றது ! அதற்கு மத்தியினில் CC பற்றிய இந்த இக்கட்டும் தலைக்குள் குடைந்து கொண்டே இருந்ததால் - இயல்பாய் இருந்திடல் சிரமமாகியது ! (கழுகுக் கண் தான் விஜய் !! )

========================================================================

10. ஏப்ரல் முதல் தேதியில் வரவிருக்கும் பரலோகப்பாதை + இரும்புக்கை எத்தன் வண்ணமறுபதிப்புக்கு தனியே ஒரு சந்தா கட்ட வேண்டியதிருக்குமா?

Of course not ! 

==================================================
பத்துக்கேள்விகளுக்கும் விடையளிப்பவருக்கு ஸ்டீல் க்ளாவுடன் ஒரு பைக் சவாரி இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்! :) - 

அந்த பைக் பின்சீட்டை காலியாய் வைத்திருங்கள் ஸ்டீல் க்ளா ! எனக்குத் தான் அந்த சவாரி கிட்டியுள்ளது - ஈரோடு விஜய் புண்ணியத்தில் !

Thanks guys & Catch you soon ! Take Care !

520 comments:

 1. To: Editor,
  எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாய் ஒரு பதிவா? தமிழக அரசியல் தலைவர் ஒருவர் 'கேள்வி-பதில்' பாணியில் தனது அறிக்கைகளை வெளியிடுவதுபோலவே இருக்கு LoL !!! -

  நன்றி. எங்களது பல தலைக்குடைச்சல்களுக்கு விடை கிடைத்ததுபோல இருக்கிறது.

  ReplyDelete
 2. Podiyan : ஆஹா....எங்கேயோ கோர்த்து விடுவது போல் இருக்கிறதே ?!

  உங்களின் ஒரு ஆதங்கத்துக்குக் கூட இதில் மருந்திருக்கும் என்று நினைத்தேன் ; ஒரே அளவு ; விலைகள் எனும் போது அனுப்பிடும் செலவுகள் ஒன்றுக்கொன்று மாறுபடாதே ! உங்களின் விற்பனை விலைகளும் சீராய் இருந்திடுவது சாத்தியமாகும் !

  ReplyDelete
  Replies
  1. // ஆஹா....எங்கேயோ கோர்த்து விடுவது போல் இருக்கிறதே ?! //
   சேச்சே- அப்படியெல்லாம் செய்வோமா?

   //ஒரே அளவு ; விலைகள் எனும் போது அனுப்பிடும் செலவுகள் ஒன்றுக்கொன்று மாறுபடாதே !//

   ஆமாம்; ஆமாம்! மற்ற வேலைகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு முழுநேர காமிக்ஸ் கடை ஒன்றை ஆரம்பிக்கலாமா என்று தோன்றுகிறது - உங்கள் அறிவிப்புக்களைப் பார்க்கும்போது!!

   Delete
 3. //1.டைகர் ஸ்பெஷல்- (பரலோகப் பாதை & இரும்புக்கை எத்தன்) - ரூ.100
  2.பிரின்ஸ் ஸ்பெஷல்- (நரகத்தின் எல்லையில்+பற்றி எறியும் பாலைவனம் ) - ரூ.100
  3.லக்கி ஸ்பெஷல் - (சூப்பர் சர்க்கஸ் & பொடியன் பில்லி) ரூ.100
  4.ஜானி ஸ்பெஷல் - (ஊடு சூன்யம் & சைத்தான் வீடு) - ரூ.100
  5.ரத்தப் படலம் ஸ்பெஷல் - (பார்ட் 1 & 2) - ரூ.100 //

  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பொடியா? என்று என்மனம் துள்ளோ துள்ளென்று துள்ளுகிறது ஐயா!

  ReplyDelete
 4. தெரிவுகள் அருமை சார்.நான் முதன் முதலாக படித்த லயன் காமிக்ஸ்களில் ஓன்று ஒரு அற்புதமான பிரின்ஸ் கதை.இந்த பாடுபடுவதற்கு ஹெலிகோப்டேரில் சென்று மீட்டிருகலாமே என பின் யாரோ விமர்சித்ததை மறக்காமல் மனதில் பதிய வைத்த அந்த மறந்த கதை இங்கு பிரின்ஸ் ஸ்பெசலில் உள்ளது போல் ஒரு உள்ளுணர்வு.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிடுவது 'பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா' என்று நினைக்கிறேன் நண்பரே.

   Delete
  2. ஆம்,ஆபிரிக்கா சம்பத்தபட்ட கதை என்பதாக தான் ஜாபகம்,உறுதியாக நினைவில்லை,நன்றி நண்பரே.

   Delete
 5. பொடியன் பில்லி? -'பயங்கரப் பொடியன்'தானே?

  ReplyDelete
  Replies
  1. பொடியன் சார்,
   பொடியன் பில்லி - பயங்கரப் பொடியனே தான். லயனின் தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் வந்த ஒரு சூப்பர் கதை. லுக்கி லுக் கதைகளிலேயே அதிகம் சிரிப்பை வரவழைத்த கதைகளில் ஒன்று.

   Delete
 6. எடிட்டர் சார்,
  எல்லோரையும் எப்போதும் திருப்தி படுத்துவதென்பது சற்றே சிரமமான காரியம்.
  யதார்த்த நிலையை, உண்மையை நீங்கள் விளக்கிவிட்டபோது அசடு வழிய தேவையே இல்லை. மாறாக இப்போது அறிவித்திருக்கும் கதைகளுக்கு பலரும் துள்ளிக் குதிப்பார்கள். எல்லாமே சூப்பர் ஹிட் கதைகள்.
  உங்களின் இந்த முடிவு நிச்சயம் பலராலும் வரவேற்கப்படும்.

  ReplyDelete
  Replies
  1. Radja from France : நண்பர்களின் பெருந்தன்மையினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது வசதிக்காக நான் வளைத்துக் கொண்டதாக நேர்ந்திடல் ஆகாதே என்பதே என் உளைச்சலுக்குப் பிரதான காரணம் ! புரிதலுக்கு நன்றிகள் !

   அப்புறம் ஒரு பதிவின் துவக்கத்தில் ஒரு பின்னூட்டம் இடுவதைத் தாண்டியும் உங்களது பங்களிப்புகள் இடம்பெற்றிட்டால் மகிழ்ச்சியே !

   Delete
 7. We are with you..... please do whatever is feasible.....

  ReplyDelete
 8. டியர் எடிட்டர்,

  உண்மையில், எனது பத்துக்கேள்விகளுக்கான பதில்கள் உங்களிடமிருந்து கிடைக்கும் என்ற எந்தவொரு பெரிய எதிர்பார்புமின்றிதான் கேட்டிருந்தேன். ஆனால், இப்படி ஒரு தனிப் பதிவாகவே பதில் சொல்வீர்கள் என்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று! எதிர்பாரா இன்ப அதிர்ச்சி!! நன்றிகள் சார்!

  தற்போது கைவிடப்பட்ட CCகளுக்கான கதைத்தேர்வு BN USA, குபேரன் போன்றவர்களுக்கு ஏமாற்றமளித்திடும் சங்கதிதான் என்றாலும், நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ உங்களைக் கஷ்டப்படுத்திடும் எந்த ஒரு காரணியையும் நாங்கள் எப்போதும் வலியுறுத்த மாட்டோம்!

  வெளிப்படையாக புத்தகக் கண்காட்சிகளின் விற்பனை விபரங்களையும், சந்தா எண்ணிக்கைகள் பற்றியும் கூட இங்கே நீங்கள் பகிர்ந்து கொண்டிருப்பது, எங்களை வெறுமனே வாசகர்களாக மட்டும் கருதிடாமல் அதையும் தாண்டிய ஒரு பிணைப்பைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! மீண்டும் நன்றிகள் சார்!

  வண்ண மறுபதிப்புகள் பற்றிய அட்டகாச அறிவிப்பு உற்சாகத்தைப் பீரிடச் செய்திருக்கிறது! இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்! அத்தனையும் அட்டகாசத் தேர்வுகள்!!

  +6 பணிகள் சத்தமின்றி அரங்கேறிவருவது உற்சாகத்தைப் பலமடங்காக்குகிறது! இரண்டு மாதங்களுக்கொருமுறை வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிள்களும், சூடான டீயும்(துளியூண்டு பால் சேர்த்து) இனி நம் நண்பர்கள் தயார் நிலையில் வைக்கவேண்டியதிருக்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : உங்களது கேள்விகள் நம்மில் பலரின் சிந்தைகளிலும் நிழலாடிய விஷயங்களே என்பது இப்போது வரை இங்கே எழுந்துள்ள சந்தோஷக் குரல்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன ! நியாயமாய் நானாகத் தெரிவித்திருக்க வேண்டிய சில சங்கதிகளை சுலபமாய்ப் பகிர்ந்திட உங்களின் கேள்விகள் ஒரு வாகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது எனது நல்ல நேரமே !

   மலை போல் குவிந்து கிடக்கும் முந்தையப் பின்னூட்டங்களின் "load more " அவஸ்தைக்குள்ளே பத்தோடு பதினொன்றாக இந்தப் பதில்களைப் பதிவு செய்திட மனம் ஒப்பவில்லை ! ஆதலினால் இங்கு அசடு வழிந்தேன்..!

   Delete
 9. Sir,

  I have two questions for you for a long time.

  1. Do you remember Comics Express? (where you decided to print 4 pages of 4 stories in the middle of every book). I think it started and stopped some 10 years back. I'm concerned about the Tex Viller story in that. I remember the story line, but not the name of the story. Is it "Thigil Nagaril Tex" or something. The first 4 pages were so enticing that I read every hotline and trailers expecting that story. Can you give an update?

  2. What is the problem in printing continuous stories in consecutive months. We have a Tiger story running around for 10 years and hope to end of tunnel this summer. Another story started last year, next story in NBS and so on. Is it that you do not have that stories or there is some other idea behind not printing them continuously?

  After questions, compliments for NBS. One word "Awesome"...

  I cheked online and knew it arrived at local post office. But my post wont come on Saturday if there is blizzard except for Urgent deliveries. It was a snowy morning and I went to post office as early as 8:00AM to pick it up and Post office opens at 9:00. Postmaster gave a strange look at me. He told it isn't thanksgiving and we don't have stamps on sale :-) I received it on 1/26 and finished reading it in 16 hours. My pick on that book would be Largo Winch and Wayne Shelton. I have already read all 5 parts of Wayne in English, but this is sweet experience traveling with him in the truck to Istanbul talking in Tamil... WoW

  Good to see all the hands that work in bringing colorful comics in our hands. Thank you from the depth of my heart.

  Prem,
  Minneapolis

  ReplyDelete
  Replies
  1. Prem : Of course I remember "Comics Express" - although with not so fond memories :-) Honestly "Thigil Nagaril Tex" isn't a story dramatically different from the normal TEX story lines - but I can plan it for 2014 ! No worries..!

   No problems whatsoever in printing continuous stories in consecutive months ; it's just that we do not wish to diminish a hero's appeal with back to back releases.The pending installment of Tiger's "Irulil Oru Irumbuk Kuthirai" will of course be out in the next few months.

   Delete
 10. Roll no.15 ! பள்ளி இறுதி தேர்வுக்கு கூட இப்படி செய்ததாக ஞாபகம் இல்லை! விடிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படித்துக் கொண்டிருக்கிறன்! நன்றி விஜயன் சார்!

  ReplyDelete
 11. எடிட்டர் சார்,

  // அந்த பைக் பின் சீட்டைக் காலியாக வைத்திருங்கள் ஸ்டீல் க்ளா! எனக்குத்தான் அந்த சவாரி கிட்டியுள்ளது//

  அடக்கடவுளே!

  ஸ்டீல்-க்ளா தனது பல்சர் பைக்கைச் செலுத்தும் வேகத்தைப் பற்றித் தெரிந்த யாரும் இப்படியொரு ரிஸ்க் எடுக்கத் துணியமாட்டார்கள்! (பார்க்க: நண்பர் ஈரோடு ஸ்டாலினின் லேட்டஸ்ட் வலைப் பதிவு 'ஸ்டீல் க்ளாவுன் ஒரு மரண சர்க்கஸ்')

  இப்படியா வலியப் போய் மாட்டுவது?!! :)

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : இரத்தப் படலம் வண்ண இதழ்களை வெளியிட நான் முழுசாய் வேண்டும் என்பதற்காகவாவது நண்பர் என்னைப் பத்திரமாய் வீடு கொணர்ந்து சேர்த்து விட மாட்டாரா - என்ன :-)

   Delete
  2. சார்,என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்,தொடர்ந்து தங்களது அற்புத வெளியீடுகளை ,வாழ்வில் உண்மையான சந்தோசம் தரும் வெளியீடுகளை தொடர்ந்து தர தங்களுக்கும் ,அதனை படிக்க ,ரசிக்க ,அனுபவிக்க ஆண்டவன் வாசக நண்பர்களுக்கும் நீண்ட ஆயுளும் தருவது உறுதி ....தாங்கள் விரும்பினால் சிவகாசி வந்தே அடுத்த புத்தக திருவிழாவிற்கு தங்களை அழைத்து செல்ல நான் தயார்,யாருக்கு கிடைக்கும் அந்த பாக்கியம் !

   Delete
  3. யார் அந்த அதிர்ஷ்டசாலி வேற யாரு நம்ப ஸ்டீல் க்ளா தான்...

   Delete
 12. Erode விஜய் க்கு இப்பொழுது சுக்கிரதசை போலும்! கொஸ்டின் பேப்பர் அவுட்டாகி, அதுவும் அவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது! பதில் தெரியாததால் ஆசிரியரிடமே கேட்டு விட்டார்! வாழ்த்துக்கள் விஜய்! அதிர்ஷ்டம் உங்கள் கதவை மட்டும் தட்டிக் கொண்டே இருக்கிறது, கதவை திறந்தே வையுங்கள் விஜய்! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி கைநாட்டு நண்பரே!

   எனக்கு சுக்கிரதிசையில் எல்லாம் நம்பிக்கை இல்லை; ஆனால் ஈரோட்டிலிருந்து சிவகாசி அமைந்திருக்கும் தென்கிழக்குத் திசையின்மேல் நிறையவே நம்பிக்கை உண்டு! :)

   Delete
  2. சூப்பர் ! என்னவோ போங்க, VIJAY for VICTORY !
   அப்படித்தான் உங்கள் பெயரை படிக்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுகிறது !

   Delete
 13. *//கொஞ்சமாய் இதழ்களை வாங்கிடும் நம் விற்பனையாளர்கள் கூட இப்போதெல்லாம் ரொம்பவே hi -tech ஆகி விட்டார்கள் ! வண்ண இதழ்கள் - ரூ.100 என்ற பார்முலா செட் ஆகி விட்டது ; தயவு செய்து மாற்றாதீர்கள் ! என்பது அவர்களது feedback//*

  என்னுடைய ஆசையும் அதுவே!
  தயவு செய்து மாற்றி விடாதீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. கைநாட்டு கத்துகுட்டி : அருப்புக்கோட்டை போன்ற மித அளவு நகர ஏஜென்ட் NBS -ல் 40 பிரதிகள் வாங்கிட்டார் என்பதே highlight !

   Delete
  2. NBS விலை 400 என்பதால் ஏஜென்ட்கள் குறைவான எண்ணிக்கையில் வாங்கியிருக்கலாம்! அதுவே விலை 100 ஆகவும், முழு வண்ண இதழாகவும் இருக்கும் பட்சத்தில் அதிக எண்ணிக்கை நிச்சயமாக எதிர்பார்க்க கூடியதே ! 2013 அதுபோன்ற ஒரு சந்தோஷ அனுபவத்தை தங்களுக்கு நிச்சயமாக தந்திடும் ! Advance வாழ்த்துக்கள் ஸார் !

   Delete
  3. இது வரை சந்தோசத்தை தந்ததென்றால்,இனி பிரம்மாதமான லாபத்தையும் தரட்டும் இந்த ஆண்டு !

   Delete
  4. Super Sir. And also can you list the place where books are selling through agents...It will be good,so we can tell our friends where these books can be get?

   Delete
 14. வருங்கால ஸ்பெஷல்களில் டைகர் குறித்து ஒரு வேண்டுகோள் ,NBS மூலம் சந்தேகமே இல்லாமல் Action இலாகாவில் போக்கிரிபய லார்கோவும்,அங்கிள் வாய்னும் [ தலா 2 சாகசங்களுடன் ?] ஸ்பெஷல்களில் இடம்பிடிக்கும் வாரிசு உரிமையை வரி கட்டாது எமக்கு தண்ணி[ஆக்சன்] காட்டி பெற்று விட்டனர்.

  டெக்ஸ் இல்லை என்ற குறையே தெரியவில்லை.ஆனால் என்னவோ மிஸ்ஸிங் ஆன மாதிரி டைகர் நிலை தான் பரிதாபமாக உள்ளதை NBS இல் கான்சாஸ்கொடூரன் கதையில் உணரமுடிந்தது.நல்ல கதை எனினும் நிஜ கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டபோது டைகருக்கு மட்டும் முதன் முதலாக ஓவர்டோஸ் ஆகியது போல் தெரிகிறது.3 பாக இளமையில் கொல் போல் ஒரு ஆரம்பம் மற்றும் ஒரு முடிவு என டைகர் கதைகள் பலஹீரோ ஸ்பெஷல்களில் வந்தால் Action இலாகாவில் பாவபட்ட அந்த அழுக்குமனுசனுக்கும் சேர்த்து "சபாஷ் சரியான போட்டி" என கைதட்டலாம்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப லேட்டாக NBS பற்றி கூற காரணம் வீட்டில் உள்ளோராலும் அயல்வீட்டு குடும்பத்தாலும் 2 நாளாக புரட்டியெடுகபட்ட NBS படிக்கும் வாய்ப்பு சாயங்காலம் முதல் தான் கிடைத்தது.படிக்க ஆரம்பித்த பின் நித்திரை என்ன கொட்டாவி கூட வரவில்லை.பின் அட்டையில் உள்ள முறைத்தபடி உள்ள கரியமுடி நபர் யார் என தெரியவில்லை என்பதை தவிர குறை ஏதும் தெரியவில்லை.ஓகே என்றாலும் சவுக்குக்கு பதில் டைகர் ஒரு சுலோக அட்டையில் அல்லது ஒரு பலூனில் 40 தாவது ஆண்டு மலர் என பொறிகபட்டு பிடித்தபடி இருந்தால் கொஞ்சம் ரியாலிஸ்டிகாய் இருந்திருக்கும் என்பது என் கருத்து.

   Delete
  2. Abisheg : போட்டி தானே ஒரு மனிதனை இன்னும் உயரங்களுக்குச் செலுத்திடும் சங்கதி ? மே மாத "இரத்தத் தடத்தின் " மூலம் டைகர் இழந்ததை மீட்டிடுவதைப் பார்க்கப் போகிறீர்கள் !

   Delete
  3. அதில் சந்தேகமே இல்லை சார்,கான்சாஸ் போல் நிஜசம்பவத்தை focus பண்ணிய கதையில் பங்கம் ஏற்படாதிருக்க எந்த பிரபலமும் guest star போல்,பலரில் ஒருவராக வருவது வழமை தானே.எனினும் மரண நகரம் மிசௌரியுடன் சேர்ந்து ஒன்றாய் வந்திருந்தால் டெக்சின் இரத்தவெறியர் போல் இருந்திருக்கும்.

   அதிரடியாக ஒன்றுக்கு ஐந்து சூப்பர்ஸ்டார்கள் லார்கோ,ஷெல்டன்,டைகர்,டெக்ஸ்,லக்கி மற்றும் XIII[?] போல் பல ultimate,Action,power starகள் அவரவர் பாணியில் கலக்கபோவது மகிழ்ச்சி.புதிய முயற்சிகள் மேலதிக பூஸ்ட் தருகின்றது.இப்படி லயன்,முத்து ,CC தொடர்ந்து வர எந்த ஒரு ஹீரோவையும் கைவிட தயார்.XIII னால் லார்கோ,ஷெல்டன் வருகை போன்று தியாகமும் இன்னொரு வெற்றியைதரும்[என் கருத்து].NBSக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சார்.

   Delete
 15. '80களில் அசத்திய லயன் ; திகில் & மினி லயனின் டாப் கதைகளை வண்ண மறுபதிப்புகளாய் கொணர்வது இந்த இக்கட்டிற்கு தீர்வாக இருக்குமென்று நினைக்கத் தோன்றுகிறது. இதோ - 2013-ல் CC -க்கு நாம் முயற்சிக்கக் கூடியதொரு முழு வண்ணப் பட்டியல்//*

  படிக்கும் போதே இனிக்கிறது!
  நினைக்கும் போதே மனம் துள்ளல் போடுகிறது!
  இன்றைக்கான கனவை தாண்டிவிட்ட இந்த விடிகாலை கற்பனையில் மிதக்கிறது!

  ReplyDelete
 16. 1.டைகர் ஸ்பெஷல்- (பரலோகப் பாதை & இரும்புக்கை எத்தன்) - ரூ.100
  2.பிரின்ஸ் ஸ்பெஷல்- (நரகத்தின் எல்லையில்+பற்றி எறியும் பாலைவனம் ) - ரூ.100
  3.லக்கி ஸ்பெஷல் - (சூப்பர் சர்க்கஸ் & பொடியன் பில்லி) ரூ.100
  4.ஜானி ஸ்பெஷல் - (ஊடு சூன்யம் & சைத்தான் வீடு) - ரூ.100
  5.ரத்தப் படலம் ஸ்பெஷல் - (பார்ட் 1 & 2) - ரூ.100//

  2013 ல் CC -க்கு இதைவிட எங்களுக்கு, வேறு என்ன வேண்டும்?

  ReplyDelete
 17. 60.000 செலவா?
  [ தொம்ம்ம்ம்! ]
  ( மயக்கம்... )

  ReplyDelete
  Replies
  1. Msakrates : புத்தகங்களை சிவகாசியிலிருந்து சென்னைக்கு அனுப்பிடுவதும் ; அங்கே அவற்றை சேகரித்து ஸ்டாலுக்குக் கொண்டு செல்வதும் பெரிய செலவுகள் என்றால், நம் பணியாளர்கள் 12 நாட்கள் தங்கி இருந்த ஹோட்டல் செலவுகள் ; சாப்பாட்டுச் செலவுகள் இத்யாதி..இத்யாதி என்று பட்டியலின் நீளம் ஜாஸ்தியே ! சென்ற வாரம் தான் கணக்குகளை சரி பார்த்தேன் என்பதால் துல்லியமாக புள்ளி விபரங்களை எடுத்து விடுவது சாத்தியமாகிற்று !

   Delete
  2. அடே ஜால்ரா பாய் ........தலைக்கே தல சுத்துதுடா.......எனக்கும்.... தல(அப்பிடி ஒன்னு இருக்கா என்ன ) சுத்துதுடா.......

   Delete
 18. வண்ண மறுபதிப்புகள் நிச்சயம் வெற்றி பெறும் சார்!

  ஜானியின் "இரத்தக்காட்டேரி மர்மம்" ஒரு கோல்டன் கிளாஸிக்!
  *ஊடு சூன்யத்திற்குப் பதில் அதை வெளியிட இயலுமா?

  ReplyDelete
 19. Hello Vijayan Sir,

  I think the color reprints are really good and we would request many of them as possible.

  Something not related to the discussion.....

  I am trying to reach your office for few weeks over phone to check on some of the issues in 2012 that i missed to get.

  Call gets connected but nothing i could hear from the other end.

  Not sure if the phone is faulty. I hope you could check.

  Do we need to depend on ebay only for buying our comics or you still continue to send if money is sent over MO after discussion with your staff?

  Please clarify.

  Regards
  Vijay

  ReplyDelete
  Replies
  1. Vijay Kumaran : Of course we ship books too ; E-Bay is for readers who do not wish to be hassled with Money Orders & Demand Drafts.

   As for the phone problem - I am not too sure about it. We get close to a 120 calls each normal day. If you still can't get through - please mail us your phone number and I will have our people contact you. Thanks.

   Delete
 20. முதலில் நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்! மணி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளித்திருக்கிறது என்பதை இப்போதாவது நம்புகிறீர்களா? கரடி கந்தசாமியும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடித் தரும்!!! :) :) :)

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்து நண்பர் ஸ்டீல் க்ளாவிற்கு!!! உங்கள் விடாமுயற்சி, வண்ண இரத்தப்படல வெற்றி!!! :)

   Delete
  2. ஹ ஹா ஹா ஹா.... இல்லை நண்பரே,கண்டிப்பாக ஆசிரியர் அந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பார் நான் கேட்கா விடினும் ....அனைத்து வாசக நண்பர்களின் கனவு மட்டுமின்றி ,ஆசிரியர் அடிக்கடி கூறுவது போல அவருக்குள் ஒளிந்துள்ள வாசகரும்,வாசக விமர்சகரும் தூங்கி விட மாட்டாரே ....கனவுகளுக்கு நிறமில்லை என்பார்கள்,நமக்கோ கனவுகள் வண்ண மாயம் என்பது உறுதி ....நாம் மட்டுமே வாழ்கிறோம் என்பது போல ஒரு எண்ணம் இந்த ஒரு வருட காலமாய் எனக்குள் ,அதற்க்கு உறுதுணை ஆசிரியரும் ,நம்மை போன்ற அந்த முகம் தெரியாத நண்பர்களும்....

   Delete
  3. @ஸ்டீல் க்ளா:
   நண்பரே, உங்களுடைய அடுத்த முயற்சி "டெக்ஸ் வண்ணப் பதிப்பில் வேண்டும்" என்பதாக இருக்கட்டும்! விடாதீர்கள் அவரை, உங்கள் பைக்கில் வைத்து பயம் காட்டி - டெக்ஸ் வண்ணத்தில் வர வழி செய்யுங்கள்! :) :) :)

   Delete
  4. @ கார்த்திக்

   வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்!

   என் profile id யிலிருக்கும் கரடிக்கு 'கந்தசாமி' என்ற பெயர்சூட்டியதற்கே என் ராசி ஏகத்துக்கும் எகிரியிருக்கிறதென்றால்...
   profile idல் கரடி கந்தசாமியை தூக்கிவிட்டு என்னுடைய படத்தைப் போட்டுவிடுகிறேன்; நீங்களும் 'முனுசாமி, மயில்சாமி' போன்ற அழகான பெயரினை எனக்குச் சூட்டிடும்பட்சத்தில் over nightல் நான் லார்கோ ரேஞ்சுக்குப் புகழ்பெற்றுவிடுவேன். சைமனாக நம்ம ஜான் சைமனையே நியமிச்சுடலாம். அட்டகாசமாயிருக்கும்ல?!

   அப்புறமென்ன, 'கான்க்ரீட் ரோடு ஈரோடு', 'கெளுத்தி மீனோடு சடுகுடு', 'வீதியில் விளையாடுவேன்' - அப்படீன்னு ஆக்சன்ல இறங்கி அதகளம் பண்ணிடலாம் பாருங்க! :)

   Delete
  5. ha ha timing jokesla namba Vijaya adichukka mudiyathuppa...

   Delete
  6. Erode VIJAY : வீதியில் விளையாடுவேன்' - அட..இது கூட நல்ல டைட்டில் ஆகத் தோணுதே !!

   Delete
  7. @ ஈரோடு விஜய், இன்னும் கொஞ்சம் காமிக் டைட்டில்ஸ் :

   ரோட்டில் ஒரு ரணகளம், ரத்த ரோடு, நடுரோட்டில் ஒரு ரத்தக்களறி, மரண ரோடு, கருப்பாய் ஒரு தார் ரோடு, சிகப்பாய் ஒரு செம்மண் ரோடு, பச்சை ரோடு மர்மம் ... :-)

   Delete
  8. //ரத்த ரோடு, நடுரோட்டில் ஒரு ரத்தக்களறி//
   @ராகவன்:
   பெயர் சூட்டும் கமிட்டி போர்டு மெம்பரா நீங்க?! ;) ஏங்க இப்படி இரத்தக்களறியா டைட்டில் வெக்குறீங்க? :)

   //'கான்க்ரீட் ரோடு ஈரோடு', 'கெளுத்தி மீனோடு சடுகுடு', 'வீதியில் விளையாடுவேன்'//
   @ஈரோடு விஜய்:
   நாங்களும் குதிப்போம்ல டைட்டில் கோதாவுல! :)
   மஞ்சளாய் ஒரு மண் ரோடு!
   கெண்டை மீனோடு சண்டை!
   ஆபிஸில் அடி உதை! :) :) :)

   Delete
  9. @ Comic lover

   // கருப்பாய் ஒரு தார் ரோடு,சிகப்பாய் ஒரு செம்மண் ரோடு //

   ஹா! ஹா! தூள்! :D

   @ Karthik

   // கெண்டை மீனுடன் சண்டை, ஆபீசில் அடி உதை//

   ஹா! ஹா! i like it! :)

   @ editor

   நோட் பண்ணுங்க சார்! நோட் பண்ணுங்க சார்! :)

   Delete
 21. ஆகா...கதை selection நன்றாக உள்ளது முன்பு வண்ண இதழ்களுடன் திகில் கதைகள் வெளியிட்டது போல், இங்கு அறிவித்த CC உடன் வேறேனும் B & W பழைய கதைகளை புகுத்த முடியுமா? அனைவரையும் திருப்தி படுத்த அது உதவக்கூடும்.
  Tex இன் கதைகளை CC இல் எதிர்பார்க்கலாமா? பெரிய size இல் TEX ஐ பார்க்க ஆவலாக உள்ளது.
  இரத்தபடலம் மறுபதிப்பு கேட்டவர்களுக்கு (நானும் தான்) ரொம்ப சந்தோசமா இருக்கும். இரத்தபடலம் இதழுக்கு மட்டும் filler pages ஐ குறைத்து (கதையை மட்டும்) வெளியிட்டால் collection ஆக சேர்த்துவைக்க உதவும்.

  ReplyDelete
  Replies
  1. niru : டெக்ஸ் வில்லருக்குப் புது இதழ்கள் ; +6-ல் slot என்று இந்தாண்டு நிறையவே வாய்ப்புகள் இருப்பதால் - அவரை 2013-ன் CC -ல் எதிர்பார்த்திடல் சிரமம். Maybe 2014....

   Delete
  2. நன்றி விஜயன் சார் உங்களின் பதிலுக்கு. Tex இன் 600 கதைகள் வெளியிடாது இருக்கும் பொது பழைய கதைகள் மறுபதிப்பு கஷ்டம் தான். ஆனாலும் வருடத்துக்கு ஒரு கதை யாவது (Tex இன் சூப்பர் ஹிட் கதை எதாவது) மறுபதிப்பு செய்தால் நண்பர்கள் வரவேற்பார்கள் என்றே நம்புகிறேன்.

   "இங்கு அறிவித்த CC உடன் வேறேனும் B & W பழைய கதைகளை (ரிப் கிர்பி / சார்லி போன்றவர்களின்) புகுத்த முடியுமா? அனைவரையும் திருப்தி படுத்த அது உதவக்கூடும்." இது சாத்தியமா என்று தெரிவியுங்களேன் please.

   Delete
  3. niru : ரிப் கிர்பி / சார்லி போன்றவர்களின் B & W பழைய கதைகளின் format மாறுபட்டது. அவற்றை வண்ண இதழ்களோடு இணைப்பது சிரமம் மாத்திரமல்ல - திரும்பவும் reverse கியர் போடுவதற்கு சமானம் ஆகிடாதா ?

   Delete
 22. பழைய நாயகர்களின் கதைகளை குறைந்த அளவுதான் படித்துள்ளேன். படிக்காத கதைகள் சிசில் இருந்தாலும், அவைகள் இன்றைய நாளில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. புதிய தேர்வு நன்றாக உள்ளது. நன்றி!!!!!

  ReplyDelete
  Replies
  1. Ramesh : மாற்றங்கள் மாத்திரமே மாறாதவை போலும் ! நம் ரசனைகளும் அதில் சேர்த்தி !

   Delete
 23. நண்பர் ஸ்டீல் க்ளாவிற்கு வாழ்த்துச்சொல்ல காரணங்கள் இரண்டு:

  1.  இரத்தப்படலம் - வண்ணத்தில்! உங்கள் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

  2. ஒருத்தர் சிக்கியிருக்கார் (உங்கள் பைக்கின் பின் சீட்டில் அமர; சிவகாசியிலிருந்து!)

  :D

  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா ஹா ஹா.... இல்லை நண்பரே,கண்டிப்பாக ஆசிரியர் அந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பார் நான் கேட்கா விடினும் ....அனைத்து வாசக நண்பர்களின் கனவு மட்டுமின்றி ,ஆசிரியர் அடிக்கடி கூறுவது போல அவருக்குள் ஒளிந்துள்ள வாசகரும்,வாசக விமர்சகரும் தூங்கி விட மாட்டாரே ....
   அதற்க்கொக்கொரு வாய்ப்பிருந்தால் அதனை பெற்றுதந்த தங்களுக்கும்,ஸ்டாலினுக்கும் நன்றிகள்...

   Delete
 24. அட்டகாசமான அறிவிப்பு சார், ஆதலினால் அதிக சந்தா வெல்வீர்! :)

  முதலில் ஒரு கேள்வி! ஐந்து இதழ்களை மட்டும்தானே அறிவித்துள்ளீர்கள், ஆறாவது இதழ் எங்கே?! :)

  //அப்புறம்...நான் என்றைக்குமே ஒரு சிறந்த வியாபாரியாக இருந்திடப் போவதில்லை - at least நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை ! :-)//
  //சிறந்த வியாபாரி இந்நேரத்திற்கு சூ.ஹீ.சூ.Spl -2 க்கு ரவுண்ட் கட்டி இருப்பார் ! //
  //Digest இதழ்களின் விற்பனையே அவற்றின் ஆயுளைத் தீர்மானிக்கும். பார்க்கலாமே..!//

  SHSS குறித்த எனது எண்ணங்களை இங்கு பதிவு செய்த போது நீங்கள் கூறிய வார்த்தைகளை நிரூபித்து விட்டீர்கள்! அவற்றின் விற்பனை அல்ல, குறைந்த சந்தாக்களே தீர்மானித்து விட்டது புராதன நெடி அடிக்கும் கதைகளின் ஆயுளை! அந்த 172-இல் இரட்டை சந்தாக்கள் செலுத்திய நண்பர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் உண்மை நிலவரம் அதை விட குறைவாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை! ஆனால் இந்த க்ளுகோஸ் அறிவிப்புக்குப் பிறகு புதிய சந்தாக்கள் குவியும் என்பதிலும் சற்றும் ஐயம் இல்லை! SHSS பதிவைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட தொடர் மன உளைச்சலை, உங்களின் இந்த அறிவிப்பு சமன் செய்து விட்டது!

  இந்த +6 ரீபிரிண்ட்களையும் லயன் / முத்து காமிக்ஸ் பெயர்களின் கீழ் கொணர்ந்தால் என்ன? (தங்கக் கல்லறை ரீபிரிண்ட் முத்து காமிக்ஸில் வந்தது போல!). சந்தாக்களை எளிதாக நிர்வகிக்க இது உதவுமே?! புத்தகக் கண்காட்சி சமயங்களில் மட்டும் வெளிவரப்போகும் புராதன நாயகர்களுக்கு வேண்டுமானால் CC ப்ராண்டை பயன்படுத்தலாமே?

  இந்த அறிவிப்பில் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் உங்களுடைய புகழ் பெற்ற கங்னம் ஸ்டைலை பயன்படுத்தாமல், ஒவ்வொரு நாயகர்களுக்கும் தனிதனி ஸ்பெஷல்களை அறிவித்ததே!!! :) :)

  "டைகர் டைஜெஸ்ட் 01", "டைகர் டைஜெஸ்ட் 02", "லக்கி டைஜெஸ்ட் 01" and so on..... - இந்தப் பாணியில் பெயரிட்டால் அவற்றை பின்னாளில் நினைவு கூற வசதியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்!

  ReplyDelete
  Replies
  1. பதிவை மீண்டும் கவனமாக படித்ததில் தெரிந்தது:
   ஆறாவது இதழ் - டைகரின் பரலோகப் பாதை! :)

   Delete
  2. Karthik I think it is only 5 books .

   டைகர் ஸ்பெஷல்- (பரலோகப் பாதை & இரும்புக்கை எத்தன்) - ரூ.100

   Delete
  3. @Arun Prasad:
   Thanks for the clarification!!! It indeed is very confusing!!! :(

   So here is what I understood as far as the different brands & their pricing goes!

   -> 12 * ₹100 Muthu / Lion regular issues - subscription amount is ₹1320
   -> 6 * ₹50 Muthu / Lion additional +6 issues with mostly B&W unpublished stories of Tex, Martin, Diabolik etc. - No separate subscription for this - Buy as they come! - Approximately ₹450 including courier charges)
   -> 5 * ₹100 Comic Classics - subscription amount is ₹540

   A total of 23 books! And if we take NBS in to the count, it will be 24 issues @ ₹2850/- for this year alone! And I am not sure if that includes "All New Special" @ ₹200

   Delete
 25. Karthik Somalinga : பிள்ளையார் சுழி போட்டிடுவதற்கே திணறிடும் என்ற சூழ்நிலை நான் நிச்சயம் எதிர்பார்த்திரா நிகழ்வு ! வந்துள்ள 172 சந்தாக்களிலும் நீங்கள் குறிப்பிடுவது போல் இரட்டைச் சந்தாக்களும் சேர்த்தி ! பழையனவற்றிற்கு விடை தந்திடும் நேரம் வந்தே விட்டது என்று எனக்கு உணர்த்தியது இந்த விபரங்களே !

  ReplyDelete
 26. எடிட்டர் சார்,

  பத்தோடு பன்னிரண்டாக கீழ்வரும் இரு கேள்விகளுக்கும் பதிலளித்தால் கிட்டத்தட்ட ஒரு நிறைவு கிடைத்துவிடுமே!

  11.  நம்முடைய மற்றொரு உற்சாக அடையாளமான 'தீபாவளி மலர்' ஒரு சிறப்பிதழாக இந்த வருடமாவது வெளிவருமா?

  12. டெக்ஸைச் சிறப்பிக்கும் வகையில் அவரது 50 வது இதழ் சற்றே பிரம்மாண்டமாய் அமைந்திடுமா? (வண்ணத்தில் - அல்லது- 240×2 ஒரே புத்தகமாக கருப்பு-வெள்ளையில்)

  ReplyDelete
  Replies
  1. அதாவது நமது 6+ கதை துவக்கமே டெக்ஸ்ன் 50வது இதழ் ,ஆகவே இதன் வெளியீடும் பிரம்மாண்டமாய் இருந்தால் நலம் ..பெரிய சைசில் ,பளபளக்கும் வண்ண பக்கங்களால் கொடியசைத்து துவங்கலாமே நீண்ட நெடும் பயணத்திற்கு முன்னோடியாக ,தொடரும் கதைகள் கருப்பு வெள்ளையில் இருக்கட்டுமே ...

   Delete
  2. Erode VIJAY : ஏற்கனவே நான் சொல்லிய காரணமே தான் விஜய்...!

   நிர்ணயிக்கப்பட்ட சந்தாத் தொகைக்குள்ளே சவாரி செய்திடும் கட்டாயம் இருந்திடும் போது, ரைட்லே இண்டிகேட்டரைப் போட்டுட்டு, லெப்ட்-லே கையைக் காட்டி விட்டு நேராய்ப் போகும் சுதந்திரம் (!!) குறைந்திடுகிறது ! எனினும் இன்னமும் தீபாவளிக்கு நாட்கள் நிறைய உள்ளனவே...பார்ப்போமே !

   டெக்ஸ் வில்லரின் இதழ் # 50 -க்கு அது சாத்தியப்படுகின்றதோ இல்லையோ ; 2014-ன் முதல் இதழ் ஒரு 360 பக்க டெக்ஸ் மெகா சாகசம் !

   Delete
  3. // 360 பக்க டெக்ஸ் மெகா சாகசம்//

   சூப்பர் சார்!

   Delete
  4. Super...Super... இத இத தான் எதிர்பர்த்தோம்...2014 opening super....

   Delete
 27. இந்த அறிவிப்பு அருமை சார்.. cc களில் மும் மூர்த்திகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவது கண்டிப்பாக நல்லது தான். ஆனால் இந்த லிஸ்டில் இரத்தப்படலம் வேண்டுமா? இப்போதுதானே சார் ஜம்போ ஸ்பெஷல் லில் படித்தோம். அதுவும் இல்லாமல் சில வருடங்களுக்கு முன் தான் ஐஸ் பெர்க் காமிக்ஸ் லிலும் இதே கதைகளைப் படித்தோம். கிட்டத்தட்ட 90% வாசகர்களிடம் இந்த கதை இருக்கும் என்பது உறுதி. இரத்தப்படலத்தை வேறு ரொம்ப வருடங்களுக்கு முன் வந்த கதைகள் கொண்டு replace செய்திடலாமே pls. பேட்மேன், முதலை பட்டாளம் போன்றவர்கள் என் சாய்ஸ்.

  ரிப் கெர்பி, சார்லி போன்றவர்கள் cc களில் தலைகாட்டுவார்கள் என்று ஆர்வமுடன் இருந்தேன். இப்போது அவர்களின் கதி என்ன?. இந்த எளிமையான் நாயகர்களையும் ஆட்டத்தில் சேர்த்து கொல்லாம் சார்.. பாவம்..

  அப்புறம், மொழிபெயர்ப்பு பழையது தானே?

  ReplyDelete
  Replies
  1. இரத்தப்படலம் வேண்டாம் என்று சொல்வதற்கு ஸ்டீல் க்ளா நண்பர் மட்டும் கோபித்து கொள்ளாமல் இருக்க வேண்டும்

   Delete
  2. SIV : நண்பர் XIII -ஐ வண்ணத்தில் ரசிப்பதும் அழகானதொரு அனுபவமாய் இருந்திடும் ! ஆண்டொன்றுக்கு 2 பாகங்கள் மறுபதிப்பென்றாலே தொடர் நிறைவுற இன்னும் ஒன்பது ஆண்டுகள் பிடிக்கும் எனும் போது இடையினில் நுழைந்திடும் புது வாசக நண்பர்களுக்கும் XIII -ஐ பரிச்சயம் செய்து கொள்ளவொரு வாய்ப்புக் கிட்டிடும் அல்லவா ?

   Delete
  3. விஜயன் ஸார் !
   அடுத்த வருடம் நிறைவு பெறுவதற்குள் ஸ்பெஷல் பதிப்பாக
   XIII ன் அனைத்து பாகத்தையும் வண்ணத்தில் தந்து விடுங்கள்!

   Delete
  4. //இடையினில் நுழைந்திடும் புது வாசக நண்பர்களுக்கும் XIII -ஐ பரிச்சயம் செய்து கொள்ளவொரு வாய்ப்புக் கிட்டிடும் அல்லவா ? //
   உண்மை,அதே போல நாம் வண்னத்தில் ரசிக்கலாமே !மேலும் இது வந்தவுடன் விற்பனை நிஜத்தை அறிவிக்கும் !தங்க கல்லறை கூட பெரும் வெற்றி பெற்றதே !
   புதிய மொழிய பெயர்ப்பு என்னதான் சிறந்ததெனினும் நம் மனமும் ஏற்று கொள்ளாது ,பில்லா கூட இதற்க்கு உதாரணமே !பழையதை ஒப்பிடும் பொது எப்போதுமே ஒரிஜினளுக்கு மதிப்பு அதிகம்,கடந்த காலங்கலாலுமே !

   Delete
  5. வண்ணத்தில் மறுபதிப்புகள் ; +6 முயற்சி ; வழக்கமான லயன்-முத்து புது இதழ்களின் தயாரிப்பு எனும் போது - கிட்டிடும் அவகாசம் அதிகம் கிடையாது. So புதுக் கதைகள் நீங்கலாக இதர முயற்சிகள் அத்தனைக்கும் ஒரிஜினல் மொழிபெயர்ப்பே !

   Delete
  6. இனிமேலும் ரத்தபடலம் வேண்டாம் என்று கூறினால் அடி தான் கிடைக்கும் போல.. அந்த அளவு ரத்தபடலம் ஆதரவு குரல்கள். என் ஆதங்கம் என்னவென்றால் மிகச் சமீபத்தில் படித்த ஒரு கதையை வண்ணத்திற்காக மீண்டும் படிக்க வேண்டியது வருகிறதே என்றுதான். anyway நானும் ரத்தப்படலம் வண்ணத்தில் படிக்கும் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள வேண்டியது தான்.

   பழைய மொழிபெயர்ப்பு தான் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

   page fillers ஆக ரிப் கெர்பி, சார்லி போன்றவர்களை பயன் படுத்திக்கொல்லாமே..

   Delete
  7. @ Coimbatore Steel claw : தங்க கல்லறை was successful because it came around 1996 . So the chance of people having is less . But XIII was published around 2008 .Hence majority of people will be having it . Editor can publish this XIII series in color during the book fair time .By doing like this , interested people can purchase it . Please don't include this book alone in the cc subscription list . It is kind of forcibly to buy these book by including in cc list for 2013

   Delete
  8. Agreeing with siv completely on this

   Delete
 28. இரத்தப்படலம் பற்றிய நண்பர் SIVயின் மேற்சொன்ன கருத்தில் உண்மை இருக்கிறது!

  ReplyDelete
 29. 5.ரத்தப் படலம் ஸ்பெஷல் - (பார்ட் 1 & 2) - ரூ.100

  புதிய தரத்தில் மயக்கும் வண்ணத்தில்
  தயாரித்திட, விற்பனையில் வெற்றியும் பெற்றிட
  இதைவிட வேறு ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்திடாது !

  இரத்தப்படலம் இதுபோல் இரண்டிரண்டாக மொத்தம்
  10 புத்தகங்களுக்கு, எல்லாவற்றையும் கடந்த என் முழுமையான
  ஆதரவு என்றும் உண்டு! ஸார், தயவுசெய்து பின்வாங்கிவிடாதீர்கள் !

  ReplyDelete
 30. நண்பர்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் விதமாக உள்ளது உங்கள் பதிவு.
  எங்கள் பலரது மனதில் சில நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கேள்விகளுக்கான விடைகள் தெரிந்து இப்பொழுது மனம் திருப்தி அடைகிறது,

  நன்றிகள் விஜய்.

  //தொடரும் சென்னைப் புத்தகத் திருவிழாக்களின் போது, சந்தாக்களுக்கு அவசியமின்றி casual ஆக மாயாவி ; ஸ்பைடர் & இதர '70 s நாயகர்களின் மறுபதிப்புகளை வெளியிடுவதென்பது யாருக்கும் சிரமமில்லா தீர்வாக இருக்குமெனில் அதனை நிச்சயம் பரிசீலிப்போம் என்பது கொசுறுச் சேதி !//

  இதனை நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.அப்பொழுது பிளான் செய்திருந்த டைஜெஸ்டுகள் கொண்டுவருவதன் மூலம் பழைய நாயகர்கள் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

  வண்ண மறுபதிப்புகளுக்கு கதை தேர்வுகள் நன்றாக இருக்கின்றன.

  சார் டெக்ஸ் கலரில் கிடையாது என்ற உங்கள் உறுதியை சற்றே தளர்திக்கொளுங்கள் சார்.
  கலரில் பார்த்தபின் மீண்டும் கருப்பு வெள்ளையில் படிக்க பிடிக்காது என்ற உங்கள் வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  ReplyDelete

 31. அட்டகாசமான அறிவிப்பு சார் ,அனைத்து நண்பர்களின் சந்தேகங்களையும் தெளிவாக தீர்த்து வைத்து விட்டீர்கள் தயக்கமின்றி !விஜய் சரியான கேள்விகளை எழுப்பி ஆசிரியரின் மனம் திறக்க உதவியதற்கு நன்றிகளும் ;பாராட்டுகளும்!
  இந்த அற்புதமான cc கதைவரிசைகளை இருமாதத்திற்க்கொரு முறை வெளியிடலாம்,ஒன்றாக கொரியரில் அனுப்பி கொரியர் செலவை குறைக்க தாங்கள் எடுத்துள்ள முயற்ச்சிகளுக்கு நன்றிகள் பல....
  யாரும் மறுப்பு சொல்ல இயலாத அற்புதமான தேர்வுகள் அதற்கொரு பெரிய நன்றி...
  உண்மையாக 2013 குறித்த எதிர்பார்ப்புகளும் இந்த தங்களது முன்னோட்டங்களால் அந்த எதிர் பார்ப்பின் சந்தோசத்தை கூட்டினாலும்,பரபரப்பை குறைத்து விட்டது !
  இந்த மாதத்தை எதிர் பார்ப்பில்,சந்தோஷ எதிர்பார்ப்பில் உழல வைத்திருந்தால் ,அடுத்த மாதம் சைமன் ,லார்கோ என கூறியதுடன்,உரையாடல்கள் மேல் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளீர்கள்,என்றால் இந்த வருடத்தின் மேல் எதிர்பார்ப்போ பன்மடங்கு கூடி விட்டது cc குறித்த தங்களது முடிவுகளுடன் அற்புதமாய் ,அழகாய் கலந்து விட்ட இரத்த படலம் குறித்த அறிவிப்பும்

  காமிக்ஸ் என்ற அந்த கனவுகளை மடை திறந்த வெள்ளம் என ஆர்பரிக்கும் நமது அன்பர்களின் சந்தா உயர்ந்து வருவது,nbs வெற்றி ஆகியவை 1980 களை தூக்கி சாப்பிட போவது உண்மை ,உறுதி,நிச்சயம்..ஒரே இழப்பு பால்ய காலங்கள் திரும்ப வராது ..ஆனால் அந்த நினைவுகளை மீட்டேடுக்கலாமே நமது வாழ்க்கை பயணத்தோடு தொடர்ந்திடும் லயன் மூலமாய்


  cc கருப்பு வெள்ளை குறித்த முடிவுகளும் சரியே ,தற்போதைய டெக்ஸ் தரத்தில் வெளியிட்டால் தாங்கள் அறிவித்த பக்கங்களின் எண்ணிக்கை குறையும் அல்லது விலை அதிகரிக்குமே எனவும் நினைத்தேன் ,அனைத்தையும் இந்த முடிவு கேட்டு எதிர்பார்ப்பில் இருந்த நண்பர்கள் சந்தா தொகை கட்டாமல் இருந்த நண்பர்கள் கட்டியோ அல்லது புத்தக திருவிழாவிற்க்கோ தயாராகட்டும்!
  ஆதலினால் அசடுவழிய வேண்டாமே ....
  ஆதலினால் அதகளம் செய்தீர்கள் ,செய்வீர்கள் !

  ReplyDelete
 32. அப்படின 2013 ல
  NBS + SOS +11 இதழ்கள் - லயன் / முத்து வில்
  6 CC கலர் இல்
  கரெக்டா?
  6 X cc சந்தா எவ்வளவு? Rs .900?

  அப்பறம்
  +6 என்ன ? எப்ப வரும்? சந்தா எவ்வளவு?

  ReplyDelete
  Replies
  1. Vijay S : CC x 5 issues x Rs.100 each. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.540 மாத்திரமே இதற்கான சந்தாத் தொகை ! கூரியர் செலவுகளைப் பகிர்வு முறையில் மட்டுப்படுத்திடும் திட்டம் !

   +6க்கு சந்தா அவசியமில்லை. Buy them as they come என்ற policy தான் !

   Delete
 33. விஜயன் சார்!

  முதலில், ஒரு ரீ ரீப்ரின்ட் கேள்வி!: :)
  தங்கக் கல்லறை ரீபிரின்ட் முத்து காமிக்ஸில் வெளிவந்தது போல, இந்த +6 ரீபிரிண்ட்களையும் லயன் / முத்து காமிக்ஸ் பெயர்களின் கீழ் கொணர்ந்தால் என்ன? தனித் தனி சந்தா கட்டுவதில் எங்களுக்கு எழும் குழப்பங்கள் இதனால் தீருமே? ரீப்ரின்ட் ஸ்பெஷல் அல்லது டைஜெஸ்ட் இதழ்களுக்கு வரிசை எண் வழங்கும் எண்ணம் உள்ளதுதானே? (டைகர் ஸ்பெஷல் / டைஜெஸ்ட் 01, 02, 03 and so on)

  அப்புறம் ஒரு 100 ரூபாய் கேள்வி!
  //வண்ண இதழ்கள் - ரூ.100 என்ற பார்முலா செட் ஆகி விட்டது ; தயவு செய்து மாற்றாதீர்கள்//
  அப்படியானால் டேஞ்சர் டயபாலிக், டெக்ஸ், மார்டின் போன்றவர்களின் கதி என்ன? அவர்களும் இனி நூறு ருபாய் விலையில் வருவார்களா (இரண்டிரண்டு கதைகளுடன்)?!

  ReplyDelete
 34. நண்பர் விஜய் முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ...

  டியர் எடிட்டர் சார்,

  "மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது" - உங்களது புதிய அறிவிப்பு, பழைய cc களை தூக்கி சாப்பிட்டு விட்டது. பொடியன் பில்லி நான் சிறுவனாக இருந்த பொழுது படித்தது (இன்னும் பசுமையாக நினைவில் இருப்பதும்)

  ஸ்டீல் கிளா: உங்க பைக் உங்களை விட ரொம்ப பாப்புலர் ஆகி விட்டது :)

  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
  Replies
  1. ரசிக்க வைத்த பொடியன் பில்லியும்(பயங்கர பொடியனும் ),முதலில் முழு வண்ணத்தில் வந்த சூப்பர் சர்க்கஸ் புதிய பரிணாமத்தை முதன் முதலில் காட்டிய இதழல்லவா !மலைத்த ரசித்தது,எதிர்பார்த்தது ஏராளம் !

   Delete
 35. Karthik Somalinga ://அப்படியானால் டேஞ்சர் டயபாலிக், டெக்ஸ், மார்டின் போன்றவர்களின் கதி என்ன? அவர்களும் இனி நூறு ருபாய் விலையில் வருவார்களா (இரண்டிரண்டு கதைகளுடன்)?!//

  டெக்ஸ் வில்லர் & டயபாலிக் ஒரே நாட்டின் தயாரிப்புகள் என்ற போதிலும் வெவ்வேறு போட்டி நிறுவனங்களின் படைப்புகள். So - அவற்றை ஒருங்கிணைத்து ஒரே இதழ் ஆக்கிடுவதில் அவர்களுக்குச் சம்மதம் கிடையாது.

  இப்போதெல்லாம் ஒரு இதழின் அச்சு துவங்கும் முன்னே அந்த இதழின் digital files களை -Pdf format-ல் படைப்பாளிகளுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிடுவது அவசியமாகிப் போய் விட்டது. "சிகப்பாய் ஒரு சொப்பனம் " இதழில் வந்திருந்த லார்கோவின் விளம்பரத்தைக் கூட மாற்றி - அங்கே இன்னொரு டெக்சின் விளம்பரத்தை இடம் பெறச் செய்திட இயலுமா என்று கோரினார்கள் ! So - டெக்ஸ் & டயபாலிக் இணைந்து வந்திடும் ஜூன் மாதம் இரு தனித் தனி இதழ்களே !

  தனித் தனிச் சந்தா என்ற track உருவானதே புதிதும் ; மறுபதிப்புகளும் துளி சம்பந்தமுமின்றி தத்தம் தடங்களில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில். So குறைந்த பட்சம் 2013-க்காவது இந்த முறையே தொடரும். அப்புறம் "தங்கக் கல்லறை" ஒரிஜினலாகவே முத்துவின் வெளியீடு என்பதால் மறுபதிப்பின் போதும் அதே brand-ல் வெளியானது. தற்போது திகில் & லயனில் வந்திட்ட கதைகளும் மறுபதிப்புப் பட்டியலில் இடம் பிடிப்பதால் - மொத்தமாய் CC -க்குக் கொண்டு செல்வதே சுலபம் என்று நினைத்தேன் !

  ReplyDelete
  Replies
  1. //அவற்றை ஒருங்கிணைத்து ஒரே இதழ் ஆக்கிடுவதில் அவர்களுக்குச் சம்மதம் கிடையாது//
   எங்களில் பலருக்கும் அதில் சம்மதம் கிடையவே கிடையாது! :) :) :) நான் கேட்டது ஒரே நாயகர்களின் இரண்டு கதைகள் இணைந்து 100 விலையில் வருமா என்ற அர்த்தத்தில்! :) (உதாரணத்திற்கு டெக்ஸின் இரண்டு கதைகள் 2*240=480 பக்கங்களுடன், 100 விலையில்!).

   //தனித் தனிச் சந்தா என்ற track உருவானதே புதிதும் ; மறுபதிப்புகளும் துளி சம்பந்தமுமின்றி தத்தம் தடங்களில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில்//
   பெயர்கள் மாறி மாறி வருவது மிகவும் குழப்பத்தை தருவதாலேயே அந்தக் கேள்வி! தெளிவுபடுத்தியதிற்கு நன்றி சார்!

   Delete
 36. To; Editor,

  நண்பர் SIV இன் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதே! அதிகாலையில் பதிவைப் படித்ததிலிருந்து மண்டைக்குள் பம்பரமாய் சுழன்ற எண்ணம் இது.

  இன்று காலையில் இப்படியொரு கருத்தை பதிவுசெய்துவிடவேண்டும் என்று தளத்துக்கு வரும்போது நண்பர் SIV ஏற்கனவே பதிந்துவிட்டிருந்தார். ஓரளவு அண்மையில் படித்த இதழ்தானே அது? ஆனால், வான்சின் ஓவியங்களை வர்ணத்தில் பார்த்திடுவது என்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்கப்போகிறது. அதையும்விட, அந்த மெகா இதழுக்கு ஆசிரியர் செலவிட்ட நேரம், பணம், உழைப்பு - இவற்றுக்கான பெறுமதியை ஓரளவுக்கேனும் சரிசெய்திட - இந்த வர்ண இதழ் உதவிடும் என்று நினைக்கிறேன் (மொழிபெயர்ப்பு வேலை இல்லாததால்).

  அதுமட்டுமல்லாமல், முழு வர்ணத்தில் வெளியிடலாம் என்று ரிவர்ஸ் கியரில் போய்ப்பார்த்தால் - சிக்குபவர்கள் ஒரு சில நாயகர்களே!

  நமது இதழ்களில் வந்தவர்கள் பெரும்பாலும் ஒரிஜினலே - கறுப்பு-வெள்ளை (அல்லது, Flat Colour Format இல் நிறந்தீட்டப்பட்ட)கதைகள் எனும்போது நமக்கான வட்டம் மிகச் சிறியதாகவே இருக்கும் யதார்த்தம் புரிகிறது.

  ஆனாலும், முதலைப் பட்டாளம், ரோஜர், சிக்பில் போன்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

  அதேபோல - கறுப்பு வெள்ளையில் வந்த காரிகன், ஸ்பைடர், மின்னல்படை, அதிரடிப்படை, சார்லி போன்றவர்களது கதைகளை - இப்போதைய ஃபோர்மட்டிற்கு மாற்றி, வர்ணம் கொடுத்து (இதில் படைப்பாளிகளின் தரப்பு சிக்கல்கள் இல்லாவிட்டால்) வெளியிட்டால் - வரவேற்பு பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. Podiyan : கறுப்பு வெள்ளையினில் வந்த கதைகளை அளவுகளில் திருத்தம் செய்து ; பின்னர் நாமாக வர்ணங்கள் சேர்த்து ; டைப்செட் செய்து பின்னர் வெளியிடுவது நிச்சயம் நேரத்தைக் கபளீகரம் செய்திடும் முயற்சி.

   தவிரவும் ஒரிஜினலாகவே black & white -க்கு உருவாக்கப்பட்ட கதைகளின் சித்திரங்களின் பெரும்பான்மைகளில் dark contrasts & solids நிறையவே இருந்திடும் ! So என்ன தான் அவ்விதக் கதைகளுக்கு நாம் வர்ணங்கள் ஊட்டினாலும் அவை ஒரு கில் ஜோர்டானின் வண்ணங்களைப் போலவோ ; லக்கி லூக்கின் வண்ணங்களைப் போலவோ மிளிரும் வாய்ப்புகள் குறைவே.

   எல்லாவற்றையும் விடப் பிரதானமானதொரு காரணமும் உள்ளது ! ஒரிஜினல்களில் பணி புரியும் கலரிங் ஓவியரின் பங்களிப்பை நாம் ஒரு போதும் அதிகம் சிலாகிப்பதில்லை ! ஓசையின்றிப் பின்னணியினில் தூண்களாய் நின்றிடும் லெட்டெரிங்க் & கலரிங் ஓவியர்களின் கைவண்ணத்தை நாம் இங்கு கொணர்வது அத்தனை சுலபமல்ல ! So - புலியைப் பார்த்து நாமாய் கோடு போட்டுக் கொண்ட கதையாகிடும் ஆபத்தும் இந்த முயற்சியினில் உண்டு !

   Delete
  2. அது உண்மைதான்! ஆனால், ஒண்றிரண்டு பக்கங்களில் வந்த நமது விச்சு - கிச்சு, பூசணித்தலை டைகர், குண்டன் பில்லி போன்றவர்களை வர்ணத்துக்கு மாற்றி முயற்சிக்கலாமே? இப்போது வரும் வர்ண இதழ்களில் Fillerகளாக அவை இடம்பிடித்தால்.....

   Delete
  3. Podiyan : பூசணித் தலை டைகர் & இரத்த வெறியன் ஹாகர் - வண்ணத்தில் வருகிறார்கள் - லக்கி லூக் துவக்கமாய் !

   Delete
  4. To: Editor,

   இந்த இருவரும் ஏற்கனவே ஒண்றிரண்டு பின்னட்டைகளில் கலரில் வந்திருந்தாலும், அது உங்களது Manual Colour Separation உத்தியில் வந்ததாய் நினைவு!

   Delete
  5. Podiyan : நாம் வெளியிடுவது இந்த ஸ்ட்ரிப்களின் Sunday tabloid ஆக்கங்களை ! அவை அனைத்துமே ஞாயிறு தினசரிகளுக்காக வண்ணத்தில் தயாரிக்கப்படுபவை என்பதால் அவற்றிற்கும் டிஜிட்டல் files நமக்கு வந்திடும் !

   Delete
  6. good to see பூசணித் தலை டைகர் back in our comics . Also please bring " சிரிப்பின் நிறம் சிகப்பு " strips also . Does any body knows original name for this சிரிப்பின் நிறம் சிகப்பு" Strip

   Delete
 37. டியர் எடிட்டர்ஜீ !!!
  காமிக்ஸ் க்ளாசிக்சை அபார்ஷன் செய்தது சரியான நடவடிக்கையே!!!தற்போதய முழுவண்ண பாணிக்கு விரோதமான எந்த புதிய முயற்சியும் வாசகர்களின் வரவேற்ப்பை பெறாது என்ற பாடத்தை இதிலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொண்டுள்ளோம்.லக்கி ஸ்பெசலில் பொடியன் பில்லிக்கு பதிலாக "புரட்சி தீ" அல்லது "பூம் பூம் படலம்" அடியேனின் சாய்ஸ் !!!

  ReplyDelete
 38. saint satan : சாத்தான்ஜி ..."புரட்சித் தீ" என் மகனின் தேர்வும் கூட ; ஆனால் பில்லி முந்திக் கொண்டிட ஒரு காரணம் உள்ளது !

  1987 தீபாவளி மலரில் வெளி வந்த இக்கதை இன்று கிடைப்பது அரிதிலும் அரிது. (அதற்காக "புரட்சித் தீ" சுலபமாய்க் கிட்டிடும் என்று சொல்லிடவில்லை) 1990-வாக்கிலேயே இந்த தீபாவளி மலருக்கு ரூ.2000 கொடுத்து வாங்கியதொரு நண்பரை எனக்குத் தெரியும். So - ரொம்பவே rare ஆன அந்த தீபாவளி இதழின் ஒரு அங்கத்தை முன்னுரிமையில் முதலில் நுழைத்துள்ளேன் !

  ReplyDelete
  Replies
  1. இரத்தப்படலம் வேண்டாம்.அதற்கு பதிலாக "புரட்சி தீ" மற்றும் "பூம் பூம் படலம்" இணைந்து ஒரு லக்கி ஸ்பெஷல்2

   Delete
 39. Dear Vijayan,

  Its nice to hear color re-prints are going to be published, nice selection of stories, but at the same time i am little bit sad that i am going to miss the digest re-prints as promised by you sir. Paying another Rs.540 for color re-print is no big deal, please try to publish those golden heroes stories as promised.

  let it be 1 or 172 try to keep up the promise, you can always sell those books in comic-con or 2014 chennai book fair. you had stocks for the last 15 years of books published earlier. A year of stock for the digest books is not far.

  I hope you understand how it feels when you pay for something you like but get some other things in return.

  ReplyDelete
  Replies
  1. //when you pay for something you like but get some other things in return//

   m..m...

   Delete
  2. All the subscriptions for cc are purely based on the digest ads. Hence for one last time you can publish those books as promised . It is not fair to sell a product by showing something and selling something else . I am not trying to heart you feelings . Hope you can understand sir.Just one last go at this digest books as promised

   Delete
  3. @Vijayan Sir,
   I too agree with above comments.

   Pls give some more time(say till Feb End or so) to wait and see how many more CC subscriptions are coming in. If they are also not upto the mark(not sure what is the number you are looking at), then it can be cancelled.

   We are ready to pay extra 540rs for the above color reprints you have announced now.

   Please think about it sir.

   Delete
 40. டியர் ஸ்டீல் முதலில் எங்களுக்கு பைக்கில் 8 போட்டு காட்டுங்கள் அதில் நாங்கள் திருப்தி அடைந்தால் பின்பு 14 போட்டு காட்டுங்கள்............ பிறகு தான் ஆசிரியரை பில்லியனில் உக்கார வைத்து நகர் வலம் வரலாம்.....

  MANDHIRI WANTS TO BE STRICT AND ADHERENT TO THE RULES OF THE REGULATION OF THE ROAD AND ALL THE TRAFFIC REGULATION OF THE INNOCENT PEDESTRIAN OF THE SIVAKASI INTERNATIONAL CITY OF COMICS OF THE TAMILNADU AMENDMENT ACT OF INDIA
  .sssssss அப்படா .....! (எத்தனை OF THE ).............விஜயன் பாதுகாப்பு கழகம்

  .........இந்திய வரலாற்றில் முதன் முறையாக மந்திரி ஒரு ஆக்க பூர்வமான PLAN போட்டு உள்ளார்

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அந்த பொறுப்புணர்வு அதிகம் மந்திரியாரே !

   Delete
  2. ஹா! ஹா!ஹா! கலக்கல்! :)

   Delete
  3. ha ha....எங்க officer strictuu...very strictuuu...

   Delete
  4. வாய்விட்டு சிரித்தமைக்கு நன்றி நண்பர்களே

   Delete
 41. டியர் சார்......... மேலும் கலர் கிளாச்சிக் புக்குகளுக்கு எவ்வளவு தினார் அனுப்பனும். ஏற்கனவே 540 தினார் அனுப்பியாச்சு

  ReplyDelete
  Replies
  1. madhiyilla mandhiri : ஜால்ரா பாயோடு அரட்டைக் கச்சேரி நடத்தினால் மட்டும் போதுமானது...மேற்கொண்டு தினார்களுக்கோ ; வெள்ளிகளுக்கோ வேலையில்லை !

   Delete
 42. Very good choice of books for Comics Classics 2.0. Bringing old hero books to chennai book fare is also nice idea - pls implement. Thanks.

  ReplyDelete
  Replies
  1. ஆம்...அவர்களை கை விடவில்லை,மீதம் உள்ள நண்பர்களின் கையில் உள்ளது அவர்களது வரவும் ,வெற்றியும் ....வலைதலத்திர்கப்பாற்பட்ட நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் ஆசிரியர் இது குறித்த அறிவிப்பை இந்த மாத இதழிலும் வெளியிட்டால் சந்தாக்கள் குவியும் !கருப்பு வெள்ளை குறித்த வாசகர்கள் எண்ணங்களும் சரியாய் புலப்படும் !

   Delete
  2. உருப்படியான ஆலோசனை, ஸ்டீல் க்ளா!

   Delete
 43. தங்களின் இந்த அறிவிப்புக்கு நான் சொல்ல எதுவும் இல்லை! தங்களிடம் நான் அதிகம் எதிர்பார்ப்பும் வைப்பது கிடையாது! என்னை பொறுத்தவரை மாதம் தவறாமல் நமது காமிக்ஸ் வந்தால் போதும். இன்னும் வெளிவராத "spider", "archie", "larance-david", "jhony nero" கதைகள் இருக்கிறதா, அப்படி இருந்தால் அவைகளை அவ்வப்போது 'CC' வெளியட வாய்புகள் உண்டா?

  பொடியன் பில்லி -> இதை நீங்கள் பயங்கர பொடியன் என்ற பெயரில் வெளி வந்ததாக எண்ணம்!

  இன்று கூரியர் மூலம் அனுப்பப்படுகிறது ! அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்திடும் வண்ணம் நீங்கள் செயல்பட்டிட வேண்டும் ! So get cracking guys ! ---> ஒரு வாரத்துக்குள் இதனை செய்வது கடினம், கூரியர் மட்டும் சென்றுவர குறைதத்து 5 நாட்கள் ஆகும்.

  வாசகர் மொழி பெயர்ப்பு பற்றி பலர் முந்தைய பதிவுகளில் கேள்வி எழுப்பி இருந்தார்கள், அவைகளுக்கு பதில் கூறினால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. அவற்றில் சில::::

   Comic Lover (a) சென்னை ராகவன் @
   பங்கு பெற்ற சிலர் ஒரு ஆர்வக்கோளாறினால் வலையேற்றம் செய்துவிட்டால் - இப்போது கூட அல்ல - ஒரு இரண்டு வருடம் கழிந்தே என்று கொண்டிடுங்களேன் - அப்போது pirated comic publishers / SCANLATION bloggers கூற்று இப்படியும் இருந்திடலாமே: "லயன் காமிக்ஸ் வலையேற்றினால் வாசகர்கள் சரி, நாங்கள் செய்தால் தவறா?" என்று கேட்டுவிட்டால் - முறையாக செயல்படும் நமது குழுவினர்ற்கும் சேர்ந்தல்லவா அவப்பெயர் வந்திடும்?!!

   ப்ரூனோ ப்ரேசில் @
   நண்பர்கள் கூறுவது போல், நிறைய பேர் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது. உங்கள் நிறுவனத்தின் சிறப்பான மொழி பெயர்ப்பை வைத்துதான். அந்த சிறப்பை பல பேரிடம் கொடுத்து வீணாக்க வேண்டாமே.கபிஷ்,பரட்டைத்தலை ராஜா,குண்டன் பில்லி,விச்சு கிச்சு போன்றவற்றில் வேண்டுமாணால் முதலில் முயற்சிக்கலாம்.

   COMICSPRIYAN @
   ராஜின் பயம் எனக்கும் உள்ளது. அது தவிர டம்மி ஐடியுடன் வந்து பைலை பெற்று விட்டு அதை வெப்சைட்டில் பதிவேற்றி விடுவார்களோ என்றும் பயமாக இருக்கிறது. உதயன், காமிக்லவர் போன்றவர்கள் விளக்கமளித்தால் தேவலை.

   RAj Muthu Kumar @
   கடைசில நான் மொழி பெயர்த்தது தான் கரெக்டுன்னு ஆளாளுக்கு கோடி பிடிக்க போறாங்க. சப்போர்ட் பண்ண ஆளுக்கொரு கும்பல் சேரப் போகுது. பேக் ஐடில வந்து ஆளாளுக்கு அதகளம் பண்ண போறாங்க. அதுதான் பயமாக இருக்குது.


   Parani from Bangalore @
   நமது வாசகர் மதி இல்லா மந்திரி கதையை மொழி பெயர்க அனுப்பிய கதைகளை, வாசகர் தனது வலை தளத்தில வெளிட வாய்புகள் அதிகம்!! அதனை எப்படி தடுக்க முடியும்? இது போன்றவற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்திர்களா? இப்படி கதைகளை வெளிடுவதால், அசல் (original) உரிமையாளர் ஏதும் கூற மாட்டாரா? நீங்கள் கண்டிப்பாக இது பற்றி யோசித்து இருப்பீர்கள் என நம்புகிறன்!!

   Delete
  2. Parani from Bangalore : Parani from Bangalore : ரொம்பவே சுலபம் நண்பரே....ஒரு காமிக்ஸ் கதையின் சில பக்கங்களை தத்தம் வலைப்பூக்களில் எவரேனும் upload செய்திட நினைத்திட்டால் அதற்கு நமது மொழிபெயர்ச்சி முயற்சிக்கான black & white ஜெராக்ஸ் பிரதிகளைப் பயன்படுத்தித் தான் ஆகிட வேண்டுமென்ற அவசியம் கிடையாதே ?! இப்போது தான் அத்தனை முன்னணிக் கதைகளும் ஆங்காங்கே வெவ்வேறு மொழித் தளங்களில் டிஜிட்டல் files ஆகவே கிட்டுகின்றதே !

   தவிரவும் இது ஜாலியானதொரு முயற்சியே...! இதனை அக்கு வேறு ; ஆணி வேறாய் அலசி ஆராய்ந்து நாம் சாதிக்கப் போவது என்ன ?

   என்னைப் பொருத்த வரை நம் வாசகர்கள் அனைவரும் ஒரே ரகம் - காமிக்ஸ் எனும் சுவையை உண்மையாய் நேசிக்கும் நெஞ்சங்கள். ஆங்காங்கே கருத்தில் வேறுபாடுகளோ ; எழுத்தில் பரிகாசங்களையோ கொண்டவர்களை ஒரு விதமாகவும், மற்றவர்களை இன்னொரு விதமாகவும் பார்த்திடுவது நமக்கு அழகல்லவே ! So - நம் வாசகர்கள் தவறாய் ஏதும் செய்திட மாட்டார்கள் என்று நம்பிக்கையினில் இது நடந்தேறுகிறது !

   நல்லதை நினைப்போம் ; நல்லதே நடக்கும் என்று நம்புவோம் !

   Delete
  3. நன்றி!

   இவைகளுக்கும் பதில் கூறினால் மிகவும் சந்தோசபடுவேன்!!

   இன்னும் வெளிவராத "spider", "archie", "larance-david", "jhony nero" கதைகள் இருக்கிறதா, அப்படி இருந்தால் அவைகளை அவ்வப்போது 'CC' வெளியட வாய்புகள் உண்டா?

   Delete
 44. +6 கதையில் இத்தாலி ஆக்கிரமிப்பு நம்ப டெக்ஸ் தானே sir....சில டெக்ஸ் கதைகளை CC ல் வெளியிடவும்...பல பழைய கதைகளை இன்னும் படிக்க வில்லை...

  ReplyDelete
  Replies
  1. tex kit : இத்தாலியில் டெக்ஸ் வில்லரைத் தாண்டியும் நாயகர்கள் நிறையவே உள்ளனரே ! So அந்த +6 முழுமையாய் வில்லர் ஆதிக்கப் பிராந்தியம அல்லவே !

   Delete
  2. It is going to be Texviller ,Martin and danger diabolik i think

   Delete
 45. எல்லா CC யும் கலர் தான் என்றால் டெக்ஸ்யும் கலர் தானே வருவார்...டெக்ஸ் CC ஆதரவு கொடுங்கள்

  ReplyDelete
 46. Vijayan @@ நல்லதை நினைப்போம் ; நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

  உண்மை! மறுக்க முடியாத உண்மை!!

  ReplyDelete
 47. புதிய அறிவிப்புக்களுக்கு நன்றி. நமது real classic hits பலவும் தெரிவு செய்துள்ளீர்கள். காத்திருக்கிறோம். மாதங்கள் சொல்லிவிட்டால் இன்னுமே மகிழ்வாகிடும். சொல்வீர்களா? வாய்க்குள் விரல் ஒன்றும் நமக்குப் புதிதல்லவே ? :-)

  ReplyDelete
 48. VADHYARE! IDHU IDHATHAAN KETTEN THALA, SOKKU THALA, 1000 MARUPADHIPPU PARTHA MAYAAVI INNORUDHABA MARUPADHIPPA-NNU ROMBA BORINGA FEEL PANNEN, NALLA VELA THADAA POTTUTTINGA.THANKS DHORA.

  APPALA NAMMA LUCKY LOOKLA "PURATCHI THEE" CAPTAIN PRINCE "SAITHAN THURAIMUGAM" REPORTER JOHNY IN "RATHA KATTERI MARMAM" ENGA EVERGREEN SUPER STAR SPIDER IN "SAITHAN VIGNANI" "VINVELI PISASU" "DR.TUCKER" "SADURANGA VERIYAN" MATRUM PALA,,IDHU ELLAM RE-PRINT KANDIPPA VONUM.. VONUM AAMA CHOLLITTEN. APPURAM NEENGA VAZHINJATHA FEEL PANNA VANAM THALA, IDHU ELLAM ENGA NALLADHUKKU THANE SEIREENGA...FEEL AVADHA DHORA..THANKS VADHYARE!

  ReplyDelete
 49. அட்டகாசமான செய்தி. எனினும் உங்கள் பழைய அறிவிப்பில் Mini lion digest மற்றும் Detective digest மிகவும் எதிர்பார்த்தேன் . இந்த இரண்டு digest-களை மட்டும் +2வாக வெளியிடலாமே

  ReplyDelete
 50. One of the few disappointed fans with this news . But that doesn't means i am against this . At least you can replace ரத்தப் படலம் ஸ்பெஷல் - (பார்ட் 1 & 2) - ரூ.100 with Detective digest and any other digest mentioned in the original plan .By this way it will be solace for fans like me .
  ரத்தப் படலம் ஸ்பெஷல் : I reckon nearly 75 % of comics fans have this in complete book .I am not sure how many of us will be interested to buy this just for the sake of color . It will be last choice for them even if they are going to buy . Please do re consider in printing this book alone .

  ReplyDelete
 51. // (அடடா....வாய்க்குள்ளே கால் கட்டை விரலை விடுவதில் தான் எத்தனை சுகம் !!)// ஆசிரியர் அவர்களே நிலைமை இப்படியே சென்றால் , கோகுல் சாண்டல் பவுடர் அடுத்த விளம்பர மாடல் நீங்கள் தான்.

  மீண்டும் கிட்டங்கியை நிரப்பிடும் உங்களது எண்ணம் மிகவும் தைரியமான மற்றும் வரவேற்க்கப்படும் முடிவே. எதிர்வரும் புத்தக கண்காட்சி மற்றும் நமது புதிய வாசகர்களை நோக்கி உங்களது பயணம் இருப்பது தெரிகிறது. அவ்வாறு மறுபதிப்புகளில் கவனம் செலுத்திடும் பொழுது சற்று கூடுதல் தொலைநோக்கு பார்வையில் (நமது முந்தைய சிறிய பார்மட் இன்று out of fashion) செயல்படுவதால் , சற்று கூடுதல் உற்சாகமுடன் செயல் படலாம்.

  நான் சந்தா தொகை அனுப்பிய சமயம் கூடுதலாக ஒரு தொகையையும் சேர்த்து அனுப்பினேன். அது classic இதழ்களுக்கு தனி சந்தாவாக இல்லமால் , தேவையான பிரதிகளை மட்டும் வாங்கும் எண்ணத்துடனே. மறுபதிப்பினில் நமது லயன் பழைய இதழ்கள் தனியாக டைஜெஸ்ட் அமைக்க முடிந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  எனவே நான் தங்களிடம் வைக்கும் கோரிக்கை , மறுபதிப்பு பணிகளில் // தவிரவும் இதன் தயாரிப்பினில் மேற்பார்வை என்பதைத் தாண்டி எனக்கு பெரிதாய் கம்பு சுற்றும் வேலை ஏதும் கிடையாதென்பதால்//தாங்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்தி , புதிய யுக்திகளுடன் ஒரு வடிவமைப்பினை உருவாக்கிட வேண்டும். இவையெல்லாம் ஆலோசனைகள் அல்ல, அதற்கு எனக்கு வயதும் இல்லை.. எல்லாம் எனது ஆசைகளே.

  ReplyDelete
  Replies
  1. அடுத்து கொரியர் பற்றி. தாங்கள் முடிந்தால் 123 courier அலுவலகத்தில் ஒரு bargain செய்து பார்க்கலாம். அங்கு ST கொரியர் காட்டிலும் மிகவும் குறித்த விலைக்கு நம்மால் முடித்திட இயலும்.

   அல்லது இன்னனும் நம்முடன் கைகோர்த்து பயணிக்கும் நம்பகமிகு பழைய முகவர்களை தூசி தட்டி, ஒவ்வொரு ஊருக்கும் மொத்தமாக புத்தகத்தை பண்டில் செய்து ஆம்னி பஸ் மூலமாக அவரிடம் அனுப்பி , சந்தா அனுப்பிய நண்பர்கள் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வழிவகை செய்யலாம் . இது சரியாக நடந்தால், கொரியர் செலவு பெரும்பகுதி மிச்சப்படும்.

   Delete
  2. மேலே உள்ள இரண்டு பின்னூட்டங்களும் தங்களது சென்ற பதிவினில் நான் எழுதியது. இதனை இங்கே இட காரணம் , இன்று தாங்கள் பதிவிட்டதை நான் வரவேற்கிறேன். இப்பதிவின் மூலம் , கதை தேர்வுகள் ஆட்டகாசம் , except இரத்தப்படலம் . கதைகள் தொடராக வருவது சின்ன நெருடல் . மேலும் அக்கதை சமீப நாட்களில் வந்தது. இன்று வரை எனது மேசையின் மேலே உள்ளது.... But Sir , I am not against that selection . வாய்ப்பு இருந்தால் மாற்றுக்கதை கொடுக்கலாம் .

   இனி மறுபதிப்பின் ஆறு புத்தகங்களுக்கும் எந்த வித குழப்பமும் இல்லாமல் , முழு தொகையையும் அனுப்புவதில் எனக்கு சிக்கல் இல்லை.

   புத்தக விலை ஒன்று , அதே போல் size ஒன்று போல் அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சி.


   Delete
 52. மிக மிக முக்கியம் விற்பனையாளர் கேட்டு கொண்டது போல 100 ரூபாய் ஃபார்மேட்டை மாற்ற வேண்டாம் ccயிலும் ,தற்போதைய வழக்கமான புதிய வெளியீடுகளிலும் ......

  ReplyDelete
 53. Happy to see "Bayangara Podiyan" in the list. Lost this wonderfull book in my childhood and still feeling for it....

  ReplyDelete
 54. டியர் எடிட்டர்,

  சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த சோறும் எப்போழுதும் கூட வராது. வாழ்வில் ஏற்படும் அனுபவங்களே சிறந்த பாடத்தை தரும் என்பதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது.

  உங்களது “என் வழி தனி வழி” பதிவை கண்ட பிறகு, மனக் குமுறலுடன் வாதிட்டு, ஒரு பெரும் பின்னூட்டத்தை அந்த பதிவிற்கு இட்டேன். வழக்கம் போல அது 5000 வார்த்தைகளுக்கு மேலே சென்றுவிட்டதால் அந்த பின்னூட்டத்தை அப்லோட் செய்ய முடியாமல், பின் எடிட் செய்தும் பின்னூட்டமிட முடியவில்லை. பின் அந்த பின்னூட்டத்தினால் உங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டு, நமது நட்புக்கு பங்கம் வருமோ என்று நினைத்து அந்த பின்னூட்டதை தவிர்த்து விட்டேன். தவிர்த்ததற்கு மற்றோரு காரணம், பழைய கதைகளை மறுபதிப்பிட கோரும் நண்பர்களின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்பதும்.

  உங்களிடம் சில கோரிக்கைகள்;
  1. புதிய சைஸ், வண்ணம், 100 ரூபாய் விலை என்று நன்றாகத்தானே சென்று கொண்டிருக்கிறது, இப்போழுது 50 ரூபாய் விலையில் சிறிய சைஸ் கருப்பு வெள்ளை புத்தகங்கள் அவசியமா? Come Back Special சைஸ்ஸும், விலையும் மாற்றாமல் இருக்க வேண்டும். அளவில் சிறிய சைஸ் புத்தகங்கள் என்பது ஒரு ஸ்டெப் பின்னால் என்பது எனது கருத்து.

  2. CC-க்கான இப்போதய உங்கள் தேர்வுகள் மன நிறைவை தந்தாலும், மறுபதிப்பு என்னும் விஷயத்தில் இருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். புதிதாக போடுவதற்கு எவ்வளவு காமிக்ஸ்கள் இருக்கின்றன. அவற்றை வெளியிடுங்கள், நிச்சயம் சந்தா எண்ணிக்கை கூடும்.

  3. என்னைப் பொறுத்தவரை முத்து லயனுடன் சேர்த்து CC-க்கும் சந்தா செலுத்தி இருக்கின்றேன். உங்களது CC-க்கான பழைய (இதற்கு முந்தய) லிஸ்ட் எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்த விஷயம். பாலகனாய் இருந்த போதிலிருந்து, இரும்புக் கை மாயாவியின் முதல் வெளியிட்டிலிருந்து படித்து வளர்ந்தவன் ஆனால் இன்றுவரை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் கதைகளை பாதிக்கு மேல் நான் படிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

  4. CC-க்கான 172 சந்தாக்களில் அனைத்துமே அதன் மறுபதிப்புகளை மட்டுமே விரும்பி செலுத்தப்பட்டதாக நிச்சயம் இருக்காது. என்னைப் பொறுத்தவரை, நீங்கள் இன்னுமொரு மறுபதிப்பு சந்தா வேண்டும் என்றாலும் அதிலும் நான் நிச்சயம் இணைந்துதான் இருப்பேன்!. ஏனெனில் காமிக்ஸ் போதை தலைக்கேறிவிட்டது. இனி மாற்றிக் கொள்ள முடியாது.

  முடிவாக, வண்ணத்தில், விலையில், சைஸில் மாற்றமில்லாமல் இருந்தால் நமது காமிக்ஸ்களின் வெற்றி நடை நிச்சயம் தொடரும்.

  ReplyDelete
  Replies
  1. //காமிக்ஸ் போதை தலைக்கேறிவிட்டது. இனி மாற்றிக் கொள்ள முடியாது.//
   தங்கள் வரவு நல்வரவாகுக !

   Delete
  2. // காமிக்ஸ் போதை தலைக்கேறிவிட்டது. இனி மாற்றிக்கொள்ள முடியாது//

   நச், பளிச், செம, தூள், வாவ், கலக்கல் வசனம்! :)

   Delete
 55. இரத்தப்படலம் வேண்டாம்.அதற்கு பதிலாக பிரின்ஸ்,ஜானி மற்றும் மினி லயன் கதைகளை மட்டும் வெளியிடவும்

  ReplyDelete
  Replies
  1. இரத்த படலம் கலரில் பார்க்க ஆர்வம் இருந்தாலும் பிரின்ஸ், ஜானி, tiger விட ஆர்வம் சற்றே குறைவாகவே உள்ளது. எது எப்படியோ CC 2013 வந்தால் போதும்.

   Delete
  2. இரத்தப்படலம் வேண்டாம்.மினி லயன் கதைகளை மட்டும் வெளியிடவும்!!!

   Delete
 56. பிரின்சின் கதைக்கு அட்டைப்படமாக இதனையே தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன்,அமர்களமாய் இருக்கும் !

  ReplyDelete
 57. One more drawbacks of இரத்தப்படலம் release is that it will create a mind set in people mind whenever there is release of big special like NBS ,இரத்தப்படலம் etc people will not prepay the amount to register it . As you are creating a chance of re release for hit books like இரத்தப்படலம் etc .The no of pre booking will come down dramatically for forth coming special issues

  ReplyDelete
 58. சார் நீங்க எங்கயோ போயிடீங்க. பிடியுங்கள் சந்தாவை. ரூ 540 தானே. CC க்கு சந்தா கட்ட வேண்டாம் என்று இருந்தேன். உங்கள் அறிவிப்பை பார்த்தவுடன் அடுத்த மாதம் முதல் வேலை சந்தா அனுப்புவதுதான்.

  சிலருக்கு மனக் கஷ்ட்டம் என்றாலும் feasibility இல்லாத விஷயத்தை கட்டிக் கொண்டு அழ தேவை இல்லை. நம் நிறுவனத்திற்கும் அது நல்லது இல்லை. நல்ல முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

  @Erode விஜய் : பிடியுங்கள் பாராட்டுக்களை. தருமி மாதிரி கேள்விகளை கேட்டு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்களை ஏற்றிய பெருமை உங்களையே சாருவதாக. கரடி முடி அதிர்ஷ்டம் என்பார்கள். கரடியையே வைத்திருந்தால் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம். உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான் என்பதுதான் ஆனந்தமே.  @கோவை ஸ்டீல் க்ளா : போன பதிவில் கூட கிருஷ்ணா வா வே ரத்தப் படலம் குறித்த உங்கள் நம்பிக்கையை பாராட்டி இருந்தார். மனம் போல் வாழ்வு மாதிரி நீங்கள் நினைத்த படியே ரத்தபடலம் வண்ணத்தில் கிடைத்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எல்லோரின் எண்ணங்களின் சக்தியே அது !மேலும் சில நண்பர்கள் எதிர்க்கிறார்கள்,அவர்கள் கருத்தில் நியாயம் இருக்கலாம்,ஆனால் புத்தகம் கையில் கிடைத்தவுடன் எண்ணம் மாறி விடும் !அதிலும் ஓவியங்களை நுணுக்கமாக ரசிக்கும் ,ரசிகரான உங்களுக்கு சொல்ல வேண்டாமே !

   Delete
  2. மேலும் எதிர்க்கும் நண்பர்களுக்கு வான்சின் வர்ணஜாலத்தினை பார்த்த பின்னர் எதிர்க்கும் வார்த்தைகள் வருகிறதா பார்ப்போம் !

   Delete
  3. @ ராஜ் முத்துக் குமார்

   நன்றிகளைப் பிடித்துக் கொண்டேன்! எல்லாம் கரடி கந்தசாமியின் மகிமை!

   கன்னத்தில் போட்டுக்கோங்க! :)

   Delete
 59. இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பில் இருக்கும் ஒரே ஒரு சங்கடம் இதுதான்:- இப்படி ஆண்டுக்கு இரண்டு இரண்டு பாகங்களாக ரீப்ரின்ட் செய்தால், முழுவதையும் ரீப்ரின்ட் செய்து முடிக்க குறைந்தது பத்து வருடங்கள் ஆகும்! ஹாஹாஹாவ்... (கொட்டாவி!)

  அதுவும் மிக சமீபத்தில் 18 பாகங்கள் தனியே வந்து விட்டதால் அவசரப் படாமல், ஓரிரு வருடங்கள் கழித்து NBS போல் தடித் தடியாக இரண்டே இரண்டு மெகா வண்ணப் புத்தகங்களாக வெளியிட்டு ஜோலியை முடித்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் லைட்டாக எழவே செய்கிறது! :)

  ஸ்டீல் க்ளா பைக்கை கோபமாக உதைக்கும் சத்தம் கேட்கிறது!!! :)

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே முதல் இரண்டு பாகம் வரட்டும் ,அதன் வெற்றியை பொறுத்து ஆசிரியரை நிர்பந்திப்போம் ,கோப பட்டு என்ன பயன் !

   Delete
  2. நீங்கள் பைண்டு செய்து கொள்ளுங்கள் கார்த்திக் :) :) :)

   Delete
  3. பார்ட் பார்ட்டா போட்டா வருஷக்கணக்குல ஆகுமேன்னுதான் அப்படி சொன்னேன்! இல்லைன்னா இப்படி பண்ணலாமே?! Asterix / Tintin Full Collection மாதிரி தனித்தனி புக்ஸ் ஒரே bundle ஆக போடலாம்! :) ஆனா அதுக்கு ஒண்ணும் அவசரம் இல்ல! கொஞ்சம் வருஷம் போகட்டும்!

   http://www.asterix.com/edition/la-grande-collection/images/frise.jpg

   Delete
  4. Vijayan Sir,

   திடீரென்று இது ஞாபகத்திற்கு வருகிறது!! Asterix / Tintin லயனில் வரும் என்று நீங்கள் சொன்னதாக ஒரு நினைவு!!! அதைப்பற்றி இப்போது நீங்கள் எதுவும் பேசுவது இல்லையே?! :)

   Delete
  5. Karthik,

   Editor had replied in the interview to Rafiq - Asterix and Tintin publishers are looking at a larger market (distribution) even to discuss about rights. At our current subscriber strengths Editor feels it is a long time before we can approach them again.

   Delete
 60. விஜயன் சார் தங்களை விக்கிரமாதித்தனுக்கு இணையாக ஒப்பிடலாம் ஏனென்றால் அவர் தன்னுடைய முயற்சியில் சிறிதும் மனம் தளராதவர் நீங்களும் அதுபோல காமிக்ஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் CC இதழ்களுக்கு ஒரு புதிய பாதையை
  வகுத்துள்ளீர்கள் ( மனம் தளராமல் நாயகர்களை அளவுகளை விலைகளை என பலவற்றை )

  சந்தேகமே இல்லாமல் இது மிக சிறந்த தேர்வுகள் ( ரத்தபடலம் தவிர்த்து)நண்பர் ஸ்டீல் கிளா மன்னிக்கவும் :))

  நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளும் பழைய சிறந்த கதைகளை கலரில் உயர்ந்த தரத்தில் பார்க்க வேண்டும் என்பதே இதில் மாற்று கருத்து இல்லை

  முன்பு நீங்கள் வெளியிட்ட digest 1 2 3 இக்கு பதிலாக இப்பொழுதைய தேர்வுகள் பெரும்பாலான வர்கள் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

  தொடருங்கள் உங்கள் சிங்க நடையை என்றும் நாங்கள் உங்களுடன் :))
  .

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நீங்கள் கேட்பது

   You too Brutus என்று கேட்பது போல உள்ளது ( முன்பே மன்னிப்பு கேட்டுவிட்டேனே நண்பரே )

   ஆனால் விஜயகாந்த் போல தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ..... அப்படீன்னு சொல்லிடாதீங்கோ

   இனிமேல் கோவை பக்கம் வந்தால் உங்கள் வண்டியின் பின்னால் உட்கார்ந்து வருவதை தவிர்த்துவிடுவேன் ;-)
   .

   Delete
 61. மினி லயன் கதைகளை மிகவும் எதிர்பார்க்கிறேன். SHSSக்கு முன் பின் மாற்றம் என்பது முழுக்க உண்மை. ரத்தப்படலம் வேண்டாம் என்பது என் எண்ணம். மேலும் லக்கியின் புரட்சித்தீ , பூம் பூம் படலம் மற்றும் சுஸ்கி விஸ்கி கதைகளை வெளியிடலாம்

  ReplyDelete
 62. சுஸ்கி & விஸ்கி யில் டெக்ஸ் போல ஏகப்பட்ட கதைகள் வந்துள்ளது அவற்றையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே சார் :))
  .

  ReplyDelete
 63. // ஏமாற்றம் பொங்கிடும் பட்சங்களில் நண்பர்கள் சிலர் என் தலையில் குட்டு வைப்பார்கள் என்பதோ ; பரிகாசத்திற்கு ஆளாவேன் என்பதோ நான் அறியாததும் அல்ல ! எப்போதும் போல் இப்போதும் யதார்த்தத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்ற ஒரு திருப்தி போதும் //

  கடமையை செய்யுங்கள் நான் உங்களோடு இருப்பேன் - (சத்தியமா நான் சொல்லலீங்கோவ் )பகவத் கீதா வாக்கியம்

  எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் அனைவருக்கும் மதிப்பளித்து செயல்படும் உங்கள் பரந்த மனதுக்கு இனி எல்லாம் ஜெயமே :))
  .

  ReplyDelete
 64. ஒரு தனி மனிதருக்காக ஒரு காமிக்ஸ் ரீப்ரின்ட் இப்போதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் தினமும் பத்து முறை கேட்டதை தவிர இந்த வலைதளத்தில் யாரும் XIII கேட்ட மாதிரி தெரியவில்லை.

  ஒரு சிலர் கேட்டார்கள், ஆனால் அவர்கள் மற்ற நண்பர்களிடமிருந்து அதனை பெற்றுக்கொண்டபின்னர் மீண்டும் அதனைப்பற்றி கேட்கவில்லை. தொலைபேசியில் உங்களை தொடர்புகொண்டு பேசியவர்கள் ஒரு முறைக்கு மேல் கேட்டார்களா என்பதை நீங்கள்தான் அறிவீர்கள்.

  நான் கொடுத்த சந்தா அறிவித்த கதைகளுக்குதானே தவிர நீங்கள் இப்போது அறிவித்த பட்டியலுக்கு அல்ல. அதற்காக நான் பணத்தை திரும்பக்கேட்கப்போவதில்லை. நீங்கள் என்ன போட்டாலும் வாங்கப்போகிறேன், ஆனால் ஒரு சிலவற்றை(XIII) படிக்கப்போவதில்லை. waste of money. அவ்வளவுதான்.

  நீங்கள் கொடுத்துள்ள மற்ற இதழ்கள் ஓகே தான்.

  2014-இல் முன்கூட்டியே புத்தக பட்டியலை வெளியிடாமல் இருப்பது நல்லது. மாதம் ஒரு முறை மாறும்போது முன்கூட்டியே பட்டியல் போட்டு என்ன பயன். இப்போதுகூட 2013-இல் வரும் என வெளியிட்டுள்ள இதழ்கள் வருமா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

  சென்ற பதிவில் கேட்ட கேள்வி மீண்டும் இங்கே:

  NBS இதழின் வெளியீட்டு எண் என்ன? 319 அல்லது 320?

  நீங்கள் NBS இல் வெளியிட்டுள்ள பட்டியலின் படி :

  314 என் பெயர் லார்கோ
  315 சிகப்புக்கன்னி மர்மம்
  316 தற்செயலாய் ஒரு தற்கொலை
  317 தங்கக்கல்லரை
  318 மரணத்தின் நிசப்தம்
  319 முத்துகாமிக்ஸ் 40வது ஆண்டு மலர்

  அப்படியென்றால் 316க்கும் 317க்கும் நடுவில் வந்த Wild West ஸ்பெஷல் எண் என்ன? என்னுடைய பட்டியலில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் விளக்குங்களேன்?

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ஒரு சிலவற்றை(XIII) படிக்கப்போவதில்லை. waste of money. அவ்வளவுதான்.

   >> I agree with this! I have the individuals copies of this stories and complete set also! So still thinking why do we need to reprint XIII stories since it was released twice. Vijayan sir do you think it will make real profit?

   Delete
  2. சரியாகச் சொன்னீர்கள்

   Dear Editor,

   While we understand your concern about less subscription for CC, அதுவும் மற்ற CC digest பற்றி அறிவித்த பின், அதையெல்லாம் மாற்றிவிட்டு. இப்போது எதற்கு இரத்தப்படலம்?

   Delete
 65. // 6. மதியில்லா மந்திரிக்கான வாசகர் மொழிபெயர்ப்பு என்னவாயிற்று?

  இன்று கூரியர் மூலம் அனுப்பப்படுகிறது ! அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்திடும் வண்ணம் நீங்கள் செயல்பட்டிட வேண்டும் ! So get cracking guys ! //

  ஆகக் கூடி இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது மாண்புமிகு மதியில்லா மந்திரி அடுத்த மாதம் தான் வருவார் ;-)
  .

  ReplyDelete
 66. ஈரோடு விஜய் சார் கேள்விகளால் நமக்கு ஒரு மிகப்பெரிய நன்மை நடந்திருக்கிறது

  நன்றி நண்பரே தொடருங்கள் உங்கள் கேள்வி மழைகளை :))

  (march 18 - அப்படியே இந்த ஒரு கேள்விக்கும் பதிலை வாங்கிவிடுங்களேன் )
  .

  ReplyDelete
  Replies
  1. @ சிபி

   // தொடருங்கள் உங்கள் கேள்வி மழைகளை //

   இன்னிக்கு ஏதோ க்ளிக் ஆகியிருக்கு அவ்வளவுதான்! :)

   ('சார்' 'மோர்' எல்லாம் எதற்கு சிபி சார்? 'விஜய்' போதுமே!) :)

   Delete
 67. எடி சார் ரத்தப்படலத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு வேறு கதைகளை போடலாமே.......?

  ReplyDelete
 68. டியர் எடிட்,

  ஒரு வழியாக கலர் CC என்ற பெரும்பான்மை வாசகர்களின் மொத்த குரலை, அதிகாரபூர்வமாக உறுதி செய்திருப்பதற்கு பாராட்டுகளை வாங்கி கொள்ளுங்கள். இதன் மூலம் மாயாவி, ஆர்ச்சி, ஜானி நீரோ போன்ற கிளாசிக் கதைகளின் ஆர்வலர்கள் கோபம் கொள்ளலாம், என்றாலும் எண்ணிக்கையில் அவர்கள் வெகு சிலரே என்பதை சந்தா முன்பதிவு மூலம் தங்களுக்கு புரிந்ததில் மகிழ்ச்சி.

  முன்பு நான் கூறியது போல, கண்காட்சி நெருங்கும்போது இவற்றை தனியாக வெளியிட்டு அதற்கான வரவேற்பை நுகர்ந்தபின், சந்தாவில் இவற்றை இணைக்கலாமா அது தனி சந்தாவாக அவற்றை வெளியிடலாமா என்பதை நீங்களே முடிவு செய்து செய்யலாம்.

  இப்போது கூட, தனிபட்ட கதாநாயகர்களை கொண்டு கலர் கிளாசிக்ஸ் அறிவித்ததோடு கூடவே, தனி தனி கதைகளாக வண்ணத்திலோ, இல்லை இரு வண்ணத்தேர்விலோ வெளியானவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கலாம் என்பது என் எண்ணம்.

  இவற்றில் நான் பார்க்க விரும்பாதது, கிளாசிக்ஸ் தலையணை சைஸ் புத்தகம் என்ற பெயரில், 200 ரூபாய் 400 ரூபாய் என்ற தொகுப்புகளை தான். சொல்ல போனால் 100 ரூபாய் தொகுப்புகளை விட, 50 ரூபாய் தனி தனி இதழ்களாக வெளிவந்தால், கிளாசிக் இதழ்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வகையில் தனி தனி இதழ்களாக ஒரிஜினலில் வெளியானவற்றை அதே பாணியில், நமது ஆர்டிஸ்டின் அட்டை மெருகோடு பார்க்க முடியும்.

  100 ரூபாய் தொகுப்புகளே கிளாசிக்ஸிற்கு சரியான தேர்வாக இருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு லார்கோ ஷெல்டன் போன்ற கதைகள் இரு பாக தொகுப்புகளாக வெளியிடுவது சரியாக இருக்கும், அதன் கதை களம் அப்படி வடிவமைக்கபட்டிருப்பதால். ஆனால் XIII தொகுப்புகள் இரு பாகம் ஒன்றாக வந்தாலும், அது ஒரு முடிவை நெருங்க போவதில்லை என்பதால், அவற்றை ஒன்றே கொண்டு வர தேவை இருப்பதாக தெரியவில்லை.

  மாறாக கிளாசிக்கள் என்றால் அது 50 ரூபாய் இதழ்கள் என்றும், புதியவைகள் என்றால் அது 100 ரூபாய் தொகுப்புகள், அல்லது 50 ரூபாய் கலர் வெள்ளை கதைகள் என்று ஒரு முறையாக நாம் செல்ல முடியும். குண்டு ஸ்பெஷல் இதழ்கள் நமது தனி ஸ்டைல் என்று நீங்க கருத்திட்டு விட்டதால், முக்கியமான மைல்கல்களில் அப்படி தடி புத்தகங்கள் வருடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் வெளியிட்டு கொள்ளலாம்.

  மற்றபடி டைகர், பிரின்ஸ், லக்கி, ஜானி, ரத்தபடலம் கிளாசிக் கதைகளை நானும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன். தனி தனி புத்தகளாக :)

  ReplyDelete
  Replies
  1. ஒரு திருத்தம்:

   சென்ற பதிவில் 200, 400 ரூபாய் ஸ்பெஷல்கள் பற்றிய தங்கள் பதிலை பார்த்தேன். உண்மையில் நான் கேட்டது XIII லார்கோ போன்ற இதழ்களில் ஒரே தொகுப்பை அல்ல... அதற்கு பதிலாக, நான் வேண்டியது, அக்கதைகள் தனி தனி இதழ்களாக மட்டும் வெளிவர வேண்டும் என்பதே.

   200, 400 ரூபாய் ஸ்பெஷல்களில் பெரும்பாலும், தனி தனி கதைகளான டெக்ஸ், சிக் பில், லக்கி போன்றோர்களை மட்டும் வெளியிடலாம். தொடர் கதைகள் தனி தனி புத்தகங்களாக வந்தால் சுபம்.

   Delete
 69. @ Erode Vijay,

  இன்னும் ஒரு இருவது கேள்விங்க இருக்குது. அனுப்பிடறேன் உங்களுக்கு. இங்கே கேட்கவும்!

  ReplyDelete
  Replies
  1. @ Comic lover

   ஏங்க, நான் 'இங்கே கேள்விகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கப்படும்'னு போர்டு ஏதாவது வச்சிருக்கேனா?! :)

   Delete
  2. Ha Ha !! மொத்தமாகவும் சில்லறையாகவும் - 10+2 கேட்டிருக்கிறீர்களே? பதிலும் கிடைத்துவிட்டதே :) :)

   Delete


  3. @ Erode VIJAY நீங்கள் தான் அந்த தருமியோ .........................எத்தனை கேள்வி .......?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 70. நெத்தி அடி சார். நேற்று இரவுதான் nbs படித்து முடித்தேன். அந்த பரவசவதிலிருந்து மீளும் முன் இன்றையப் பதிவு BULLS EYE அடித்துள்ளது. மீண்டும் ஒரு முறை 2012ஐ விட அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளீர்கள். வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.. நன்றி அன்பு ஆசிரியரே...

  ReplyDelete
 71. டியர் சார்,
  நீங்கள் இன்று சிறிது உற்சாகமாக பதில் அளிப்பதால், இதற்கு விடை கிடைக்குமா –
  அக்டோபர் மாதம் வந்தவை - சில விடை தெரியா கேள்விகள் !

  1. லயன் காமிக்ஸின் முதல் மறுபதிப்பு எது ?
  2. ஆர்ச்சிக்குப் போட்டியாய் லயனில் வந்திட்ட "இரும்பு ஹீரோ" யார் ?
  3. ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோக்களில் யாரேனும் 3 பேரை லிஸ்ட் பண்ணுங்களேன் ?
  4. ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் ?
  5. லயனில் இது வரை அதிகமான கதைகளில் தலைகாட்டியுள்ள ஹீரோ யாரோ ?
  6. கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது ?
  7. லயனில் இது வரை மொத்தம் எத்தனை "ஸ்பெஷல்" இதழ்கள் வந்துள்ளன ?
  8. லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது ?
  9. "கபாலர் கழகம்" இதழின் நாயகர் யார் ?
  10. லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு ! அதென்ன ?

  ReplyDelete
 72. நான் ஸ்பைடர் விசிறி, ஸ்பைடர் CC இல்லை என்பது வருத்தமளித்தாலும் தங்களின் இந்த புது வண்ண இதழ்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.

  ஒரு சிறிய மாற்றம் இன்னும் நன்றாக இருக்கும்
  XIII இப்போது வேண்டாமே

  இங்கு இருக்கும் பெரும்பாலான வாசகர்கள் ஆங்கில புத்தகங்கள் வாங்குவதால் XIII புத்தகங்களை cinebook கலரில் வாங்கிருப்பர்கள், தமிழில் வண்ணத்திற்காக மட்டும் வாங்குபவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள், இதற்கு பதில் சிக் பில், சுஸ்கி விஸ்கி, ஹேர்லுக் சோமஸ் போன்று வண்ணத்தில் பார்க்க வாய்ப்பே இல்லாதவர்களை போடலாமே

  ReplyDelete
 73. ஜானி கதைகளில் ஊடு சூன்யம் மிக சிறந்த தேர்வு, நான் படித்ததில் இடியாப்ப சிக்கல் மிக குறைந்த action thrillar கதை இது.

  ReplyDelete
 74. டியர் எடிட்டர், உங்களின் இந்த அதீத காமிக்ஸ் ஆர்வமே இந்த அசடு!!!(நாங்கள் அப்படி நினைக்கவில்லை! A bit exaggerated ) வழியும் நிலைக்கு முக்கிய காரணம் .Actually we don't mind such situation as long as we are getting regular issues from Lion/Muthu issues.
  மாதம் 1தேதியில் லயன்இல் ஒரு புதிய சாகசம் ...15 இல் முத்துவில் ஒரு புதிய சாகசம் ....இரண்டும் 100 ருபாய் format இல்
  என்ற schedule க்கு முதலில் வர நாம் முயற்சி செய்யலாமே ...??இதில் நாம் முழு முயற்சி எடுத்து வெற்றிகண்டபின்பு மறுபதிப்பில் நமது வாசகர் விருப்பத்தை நிறைவேற்றுவதே நன்றாக படுகிறது . புதிய வெளியீடுகளை compromise செய்வதாய் இருந்தால் மறுபதிப்பே வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.( இருந்தாலும் cc க்கு அறிவிப்பு வந்தவுடனேயே முதல் ஆளாகா சந்தா கட்டிவிட்டது வேறு விஷயம்! : ) )

  இப்போதய சூழ்நிலை தொடரும் பட்சத்தில் என்னடைய ஓட்டு ஸ்டீல் க்ளா வின் XIII க்கே...!

  ReplyDelete
 75. என் கருத்து ! என் உரிமை !

  ஆதரவா ! எதிர்ப்பா ! கவலையில்லை !
  நீயா ! நானா ! எவரும் ஜெயிக்கவில்லை !
  வெற்றியா ! தோல்வியா ! யாரும் அறியவில்லை !

  ஆதலினால் ஆதரவு XIII ! 13 ! பதின்மூன்று ! THIRTEEN !

  ReplyDelete
 76. ஏன்பா இந்த மாயாவி ஸ்பைடர் ஆர்ச்சி எல்லாரும் எந்த முதியோர் இல்லதுல இருக்காங்க ......அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ?

  ReplyDelete
 77. அன்புள்ள எடிட்டர்,

  இந்த அறிவிப்பு மிகவும் மிகிழ்ச்சியளிக்கிறது என்று முன்பே ஒரு பின்நூட்டதினில் தெரிவித்திருந்தேன். ஆனால் தமிழ் காமிக்ஸ் மற்றும் பரணி சொல்வது போல:

  - XII விரைவில் வராது என்று நீங்கள் கூறியதால் நண்பர் மூலம் ராட்சச ஸ்பெஷல் பெற்றுக்கொண்டு படித்தும் விட்டேன்
  - முன்பு வெளிவந்த தனி இதழ்களில் பலவும் படித்திருக்கிறேன் அல்லது கண்காட்சியில் bundle உள்ளே இருந்தது
  - இப்போது மூன்றாவது முறையாக தமிழில் கலரில் வரும் XIII இதழை மட்டும் சந்தாவில் சேர்க்காமல் ஒரு தனி இதழாய் வெளியிட்டால் நன்றாகப் படும் என்று தோன்றுகிறது.
  -சந்தாவிற்கு வேறு ஏதாவது இரு புத்தகங்கள் வைத்துக்கொள்ளலாம்
  - XII வேண்டுபவர்கள் ஈ-பே மூலமோ அல்லது தனிதொகை செலுத்தியோ பெற்றுக்கொள்ளலாமே

  சந்தாவில் தான் சேரும் என்று நீங்கள் முடிவெடுத்தாலும் வாங்கத்தான் போகிறேன் - ஒரு அன்பளிப்பாய் நண்பருக்கு கொடுக்க முடியும் - என்றாலும் if there is a chance to release it as a special issue every year it would be welcome too!

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள எடிட்டர்,

   தாங்கள் நடத்திட்ட வலைத்தேர்விலும் XIII கடைசியாக இடம் பெற்று 12% தான் வாக்குகள் பிடித்தது என்பதையும் சிந்திக்க வேண்டும் - hence unless there is a reason that XIII reprint will not be profitable as an individual special issue, based on polls, you may opt for doing it as a special issue away from subscription.

   Delete
  2. நான் இதை வழிமொழிகிறேன் ... தயவுசெய்து இரத்தபடலத்தை Special Issue-வாக வெளியிடவும். முன்பதிவில் சேர்க்காமல்

   Delete
 78. டியர் சார்..
  அமர்க்களமான மறுபதிப்பு லிஸ்ட்.ஐ தேர்வு செய்துள்ளீர்கள். பலரை மகிழ்ச்சியிலும். பலரை திகைப்பிலும் ஆழ்த்தக்கூடும். அனைத்து தேர்வும் சரிதான். ஆனால்? இரத்தப்படலம் வண்ண முயற்ச்சி நல்ல முயற்ச்சிதான் இருந்தும். இந்த கதையை 1986 ல் தொடங்கி 2010 ல் தான் நிறைவு செய்தீர்கள். மீண்டும் இதையும் அப்படியே இழுக்க வேண்டுமா? அதை விட வருடத்திற்கு ஒரு 13 டைஜைஸ்ட்னு ஐந்து கதைகள் ஒரே இதழாக வெளியிட்டால் நான்கு வருடத்திலே முடித்து விடலாம். புதிதாய் படிப்பவர்களுக்கும் ஒரு ஆயாசத்தை தராமல் இருக்கும். அப்புறம் மும்மூர்த்திகளுக்கு தனித்தனி டைஜிஸ்டாக வெளியிடாமல். மூவரையும் ஒரே இதழில் வருடத்திற்கு ஒரு இதழ் என்று வெளியிட்டு மும்மூர்த்தி ரசிகர்களை திருப்தி படுத்தலாமே. தற்போது இவர்களை வேண்டாம் என்று சொல்லும் நண்பர்கள் கூட நிச்சயம் வாங்குவார்கள். தாங்கள் முன்பு அறிவித்த டிடெக்டிவ் ஸ்பெஷலை இந்த வருடத்தில் முதலில் வெளியிட்டு பாருங்கள். இதன் விற்பனையை பார்த்து விட்டு, பிறகு உங்கள் இஷ்டம் போல் முடிவெடுங்கள்.1.வைரஸ்-x 2.கடத்தல் ரகசியம் 3.புதையல் வேட்டை 4. நெப்போலியன் பொக்கிஷம் என தேர்வு செய்து வெளியிடலாமே? சார்.

  ReplyDelete
  Replies
  1. // .. மும்மூர்த்திகளுக்கு தனித்தனி டைஜிஸ்டாக வெளியிடாமல். மூவரையும் ஒரே இதழில் வருடத்திற்கு ஒரு இதழ் என்று வெளியிட்டு மும்மூர்த்தி ரசிகர்களை திருப்தி படுத்தலாமே... //

   முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ள என்னைப் போன்ற வாசகர்களுக்கு சிறிதளவு ஆறுதலளிக்கும் ஆலோசனை ...

   Delete
  2. பழைய ஸ்பைடர் கதைகளை டைஜெஸ்ட் வடிவில் எதிர்நோக்கியிருந்தேன். ஏமாற்றம் தான்! ஆனால் புதிய கிளாச்சிக் தேர்வுகள் சம்மதமே - XIII தவிர!

   Delete
 79. டியர் எடிட்டர்ஜீ !!!
  காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்பில் ரத்த படலத்தை இணைத்ததில் பெரும்பாலோருக்கு உடன்பாடு இல்லை என்பது மேலே இடம்பெற்றிருக்கும் பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது.
  அடியேனுக்கும் கூட இதில் உடன்பாடில்லை.இவ்விஷயத்தில் நண்பர் கார்த்திக் சோமலிங்கா அவர்களின் கருத்துக்களை முழுமனதாக ஏற்கிறேன்.
  ///அதுவும் மிக சமீபத்தில் 18 பாகங்கள் தனியே வந்து விட்டதால் அவசரப் படாமல், ஓரிரு வருடங்கள் கழித்து NBS போல் தடித் தடியாக இரண்டே இரண்டு மெகா வண்ணப் புத்தகங்களாக வெளியிட்டு ஜோலியை முடித்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் லைட்டாக எழவே செய்கிறது! :)///
  அவருக்காவது லைட்டாக எழ செய்கிறது.அடியேனுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்காக எழுகிறது.
  ///ஸ்டீல் க்ளா பைக்கை கோபமாக உதைக்கும் சத்தம் கேட்கிறது!!! :)///
  அவர் நம்மை உதைக்காமல் இருந்தால் சரி!!!ஹிஹி!!!:):):):):)

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்கள் பக்கம் புனிதர்ஜி !! ஸ்டீல் க்ளா இந்த ஒரு முறை மன்னிப்பாராக!

   எனக்கும் ரெண்டு omnibus volumes சரி எனப்படுகிறது - சில வருடங்களுக்கு பின்!

   Delete
  2. @சாத்தான்ஜி:
   //அவருக்காவது லைட்டாக எழ செய்கிறது.அடியேனுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்காக எழுகிறது.//
   ஹா ஹா ஹா, எண்ணம்... எண்ணம்...! ;)

   ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள நண்பர் ஸ்டீல் க்ளா, முகமூடி ஜீவா மாதிரி கத்திக்கொண்டே பைக் ஓட்டுவாரோ?! :)

   Delete
  3. I second this suggestion to not to include "இரத்தப்படலம்" in CC subscription

   Delete
 80. டியர் எடிட்டர்ஜீ !!!
  ரத்த படலத்திற்கு பதிலாக கருப்பு வெள்ளையில் வெளிவந்த சிக்பில் கதைகளை வண்ணத்தில் வெளியிடலாமே?
  அடியேனின் தனிப்பட்ட கருத்து;லக்கி லூக் கதைகளை விட சிக்பில் கதைகளில் காமெடி சற்று தூக்கலாக சொல்லபோனால் விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக இருக்கிறது.
  கொஞ்சம் சிக்பில்லையும் கவனியுங்கள் ஸார் !!!

  ReplyDelete
  Replies
  1. சிக்-பில் வண்ண மறுபதிப்பை வரவேற்கிறேன்

   Delete
 81. I am highly disappointed about this announcement about Comics Classics title change :(

  But, I do understand Editor's concern about less subscription.

  Dear Editor, Request you to not include "இரத்தப்படலம்" with CC subscription. Please release it as a separate/special issue

  ReplyDelete
 82. Since i am an big fan of Mayaavi, Lawrence&david and Jonney nero, i was forced to write a big letter to you like that. Nothing personal against you.I will try to write more letters in future also - because i am also part of your successful career. I am also equally concern about you & prakash publishers because without Muthu & Lion comics, i would not have become a comics lover (rani comics comes after that only).That's sure.
  Revised list of CC is good except Ratha padalam because if you start publishing two stories at a time, it will take 9 years to complete. So Chik bill digest is very much appreciated (Recent "Kambalathil kalatta in NBS is high class & one have to continuously laugh and enjoy throughout the story. In color it is really enjoyable). So pl remove ratha padalam & include chik bill.
  Last thing - Top three will be in next year chennai book fair. This year i could not be able to come because i am out of station. If Mayaavi, lawrence& david and jonner nero stories will be part in next year's book fair stall, i will definitely not go out of station even if it is emergency. Rather i will come to fair, try to buy atleast 4 to 5 stes and i will give one set to my uncle (who introduced comics to me thro' top 3 heros) & my three brothers who are equally crazy about comics & top 3 heros.
  Thanks & thats all in this post. Good bye

  ReplyDelete
 83. விஜயன் சார்,

  CC சந்தா விஷயத்தில் நீங்கள் செய்த திடீர் மாற்றம் குறித்து நண்பர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடத்தைக் களைய ஒரு ஐடியா கைவசம் இருக்கிறது, சரிப்படுமா பாருங்களேன்?! :)

  பழைய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் அறிவிப்பின் பேரில் கட்டிய ₹540-ஐ, இந்த புதிய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பட்டியலுக்கு சந்தாவாக பயன்படுத்தப் போவதாய் அறிவித்ததால்தானே பலரும் ஆட்சேபிக்கிறார்கள்?

  அதற்கு பதிலாக இத்தொகையை, நீங்கள் ஏற்கனவே அறிவித்த லயன் / முத்து +6 இதழ்களுக்கும் (6*₹50=300), "All New Special" ₹200 விலையில் வரப்போவதால் சந்தாவில் விழுந்த 100 ரூபாய் வேறுபாட்டை சரி செய்வதற்கும் பயன்படுத்தினால் என்ன? இவை க்ளாசிக்ஸ் இதழ்கள் இல்லை என்பதால் எப்படியும் நண்பர்கள் வாங்க விரும்புவார்களே?!

  ReplyDelete
  Replies
  1. @Karthik

   Looks a good Idea to me .. but comics classics needs subscription to be sustainable minimum guarantee. Plus six is targeted at different sales group I think. Let's see what Editor says.

   Delete