ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா...!
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு மந்திரி..!
ஒரே ஒரு ராஜாவுக்கும் ஒரே ஒரு பிள்ளை..!
அந்தப் பிள்ளையோடு துணைக்கிருப்பதோ செவ்வேங்கை !
நண்பர்களே, வணக்கம். பாட்டோடு (!!!) துவங்கும் பதிவென்ற போதே எழும் கேள்விக்குறிகள் , முதல் வரியைப் பார்த்த மறுகணமே இது யாரைப் பற்றிய பதிவென்பதை உணர்ந்து ஸ்மைலிக்களாய் மாறி இருப்பது நிச்சயம் ! ஐம்பதைத் தொடும் ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டைக்காரர் ; தோற்றத்தில் அறுபதையும், மனதில் இருபதையும் பிரதிபலிக்கும் ஒரு ஆட்டுத்தாடிக்காரர் ; என்றும் பதினாறாய் வலம் வரும் ஒரு இளம் வேங்கை ; வேங்கையின் பெயரையே தன பெயராகவும் கொண்டதொரு சிகப்பு ஆசாமி ! இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகின் அதிரடி மன்னர்களாய் உலவிடுவது இந்த நால்வர் அணியே என்றால் அது நிச்சயமாய் வெறும் சிலாகிப்பல்ல ! 'டல்லடித்துப் போய் கிடக்கும் சமயங்களில் டெக்சின் கதையைப் படித்தால் பேட்டரி ரீ-சார்ஜ் ஆன உணர்வு எழுந்திடத் தவறியதே இல்லை !" என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டும் ; அந்த டஜனின் அங்கத்தினர் சகலரும் 35+ வயதினர் ! ஒவ்வொரு புத்தக விழாவினிலும் நம் விற்பனையில் முதலிடப் போட்டி இருப்பது சுட்டி லக்கிக்கும் - இந்த இரவுக் கழுகின் அதகளக் குழுவுக்குமிடையே தான் !
2014-ன் இது வரையிலான நமது bestseller எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் - "கார்சனின் கடந்த காலம்" என்று !! வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க - இந்த டெக்ஸ் வண்ண bonanza இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து repeat ஆர்டர்கள் தந்து வருகின்றனர் ; multiple பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் ! இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் ! சென்றாண்டின் டெக்ஸ் தீபாவளி மலர் நம் கைவசம் ஸ்டாக்கில் இருந்தது நான்கோ ஐந்து மாதங்கள் மட்டுமே ; "நிலவொளியில் ஒரு நரபலி" காலி ; "சிகப்பாய் ஒரு சொப்பனம்" கடைசி 150 பிரதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது ; மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது ! 2012-ல் துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்க்சில் இதுவரையிலான வசூல் ராஜா ; பாக்ஸ் ஆபீஸ் கிங் சந்தேகமின்றி இந்த இத்தாலிக்காரர் தான் என்பதை கொண்டாடவே டிசம்பரில் THE KING SPECIAL !! நண்பர்களில் ஒரு பகுதியினர் இது 'டெக்ஸ்' சாகசம் தான் என்று யூகித்திருந்த போதிலும் பலருக்கு இதுவுமொரு கிராபிக் நாவலாய்க் கண்டு இருந்துவிடுமோ என்ற லேசான பீதி இருப்பதை அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களும், கடிதங்களும் சொல்லி வந்தன ! நவம்பரின் லார்கோ இதழில் - "கிங்" யாரென்ற இரகசியம் (!!!) உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தோஷமான வரவேற்புகள் !! இதோ - டெக்ஸ் 330 பக்க மெகா சாகசமான "வல்லவர்கள் வீழ்வதில்லை" கதையின் சில டீசர் பக்கங்கள் !
2014-ன் இது வரையிலான நமது bestseller எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் - "கார்சனின் கடந்த காலம்" என்று !! வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க - இந்த டெக்ஸ் வண்ண bonanza இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து repeat ஆர்டர்கள் தந்து வருகின்றனர் ; multiple பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் ! இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் ! சென்றாண்டின் டெக்ஸ் தீபாவளி மலர் நம் கைவசம் ஸ்டாக்கில் இருந்தது நான்கோ ஐந்து மாதங்கள் மட்டுமே ; "நிலவொளியில் ஒரு நரபலி" காலி ; "சிகப்பாய் ஒரு சொப்பனம்" கடைசி 150 பிரதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது ; மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது ! 2012-ல் துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்க்சில் இதுவரையிலான வசூல் ராஜா ; பாக்ஸ் ஆபீஸ் கிங் சந்தேகமின்றி இந்த இத்தாலிக்காரர் தான் என்பதை கொண்டாடவே டிசம்பரில் THE KING SPECIAL !! நண்பர்களில் ஒரு பகுதியினர் இது 'டெக்ஸ்' சாகசம் தான் என்று யூகித்திருந்த போதிலும் பலருக்கு இதுவுமொரு கிராபிக் நாவலாய்க் கண்டு இருந்துவிடுமோ என்ற லேசான பீதி இருப்பதை அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களும், கடிதங்களும் சொல்லி வந்தன ! நவம்பரின் லார்கோ இதழில் - "கிங்" யாரென்ற இரகசியம் (!!!) உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தோஷமான வரவேற்புகள் !! இதோ - டெக்ஸ் 330 பக்க மெகா சாகசமான "வல்லவர்கள் வீழ்வதில்லை" கதையின் சில டீசர் பக்கங்கள் !
ஒவ்வொரு புதிய கதையின் அறிமுகப்படலத்தின் போதும் இதைச் சொல்லுவது வாடிக்கை தான் என்றாலும் - தேய்ந்த அதே பாட்டைத் திரும்பவும் ஒருவாட்டி பாடிக் கொள்ள உங்களின் அனுமதி தேவை ! "இது ரொம்பவே வித்தியாசமானதொரு டெக்ஸ் சாகசம் !" வழக்கம் போல நான்காவது பக்கத்தில் ஒரு சில்லுமூக்கு ; இருபதாவது பக்கத்தில் ரெண்டு மண்டைகள் என்று உடைபடும் மாமூலான பாணியினை இம்முறை எதிர்பார்க்காதீர்கள் ! கதை நிகழ்வது முழுக்கவே மெக்சிகோ மண்ணில் ; அங்கு அரங்கேறிய உள்நாட்டுப் போர் ; விடுதலைப் போராட்டம் ; வரலாற்று நிகழ்வுகள் என கதையோடு சகலமும் வெகு இயல்பாய்க் கோர்க்கப்பட்டிருப்பதை "வ.வீ"-ல் பார்த்திடப் போகிறீர்கள் ! ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ; ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது ! பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் & குழு இம்முறை அழகாய்க் காட்சி தர - இதுவொரு visual feast-ம் கூட !
சித்திரங்கள் என்ற topic -ல் உள்ள போதே குறிப்பிட்டாக வேண்டிய விஷயமிது ! இது வரைக்கும் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு சித்திரம் வரைந்துள்ள ஓவியர்களின் எண்ணிக்கை 40-ஐத் தொடும் !! 66 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் ஒரு தொடர் என்ற போதிலும் அதனில் இத்தனை பெரிய ஓவியப் பட்டாளம் பணியாற்றத் தேவைப்பட்டதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ! ஆரம்ப நாட்களில் கதாசிரியர் பொனெல்லியும் ; ஓவியர் காலெப்பினியும் மட்டுமே இத்தொடரில் பணியாற்றி வந்தனர் ! பின்னாட்களில் டெக்சின் பிரசித்தம் கூடக் கூட ; அவரின் புதுக் கதைகளின் தேவைகளும் கூடக் கூட - ஓவியர்கள் + கதாசிரியர்கள் அணியின் பலம் சட சடவென்று அதிகமாகத் துவங்கியது ! கொஞ்ச காலம் முன்பாய் நான் பொனெல்லி அலுவலகத்திற்குச் சென்றிருந்த பொழுது கூட இது பற்றிய பேச்சு எழுந்தது ; இத்தனை பேர் படம் வரையும் போது டெக்சின் முகம் தினுசு தினுசாய் மாறிடுகிறதே ? என்று கேட்டேன் ! 'என்ன செய்வது ? இன்றைக்கும் புது டெக்ஸ் கதைகளுக்கென ஒரு ஓயா தேடல் இங்கு தொடர்ந்திடுகிறது ; அதற்குத் தீனி போட ஒரு mass production line இல்லாது போனால் வேலைக்கு ஆகாது !' என்று பதில் சொன்னார்கள் ! 'சரி, ஒரே சமயத்தில் இத்தனை டீம்கள் புதுப் படைப்புகளில் பணியாற்றும் போது ஒரே விதமான plot -ஐ வெவ்வேறு குழுக்கள் கையாளும் ஆபத்தும் இருக்குமல்லவா ? ' என்றும் கேட்டேன் ! '650 கதைகளை நெருங்கும் ஒரு தொடரில் இன்னும் புதிதாய்...இது வரை முயற்சித்திராத பாணியாய்த் தேடித் பிடிக்க வேண்டுமென்ற வேட்கை எங்களின் டீம்களிடையே ஒரு நெருப்பாய் தகிப்பது உண்டு ! So இத்தனை காலம் ஆன பின்னும் கூட, புதுசு புதுசாய் டெக்சுக்குக் களங்கள் உருவாக்குவது சாத்தியமாகிறது !' என்று சொன்னார்கள் ! அப்போது பூம் பூம் மாடு போல் மண்டையை ஆட்டி வைத்தாலும் கூட, அன்று மாலை ரூமில் இருந்த போது இது பற்றி அசை போட்டேன் தலைக்குள் ! இது வரை நாம் வெளியுட்டுள்ள டெக்ஸ் கதைகளின் பட்டியலை எப்போதோ நண்பர் ஈரோடு ஸ்டாலின் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தது நினைவுக்கு வர, அதனைத் தேடித் பிடித்தேன் ! அத்தனை கதைகளின் கருக்களும் எனக்கு நினைவுக்கு வந்தன என்று பீலா விட மாட்டேன் ; ஆனால் கதைகளின் ரேன்ஜ் பிரமிக்கச் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாய் உணர முடிந்தது !
மன வியாதியின் விளைவாய் இரவுகளில் தலை சீவும் (சீப்பைக் கொண்டு அல்ல!!) குரங்கில் துவங்கி ; மறந்து போனதொரு சுரங்கத்தினில் வசிக்கும் வேற்று கிரகப் பிறவியில் தொடர்ந்து ; பூமியின் ஒரு ஆளரவமற்ற கோடியில் ஜீவித்து வரும் டைனோசார்கள் கொண்ட சைத்தான் சாம்ராஜ்யங்களை சித்தரித்து ; பேங்க் கொள்ளையர்கள் ; ஆயுதக் கடத்தல்காரகள் ; செவ்விந்தியப் புரட்சியாளர்கள் ; புதையல் வேட்டையர்கள் ; அராஜக சாம்ராஜ்யங்கள் என நாம் பார்த்துள்ள அதிரடிகள் தான் எத்தனை !! ஒரு கௌபாய் உலகம் பறந்து விரிந்த மண்டலம் தான் எனினும், அதனில் சாத்தியமாகக் கூடிய கதைக் களங்கள் - ஒரு கேப்டன் பிரின்சின் அளவிற்கோ ; ஒரு மர்ம மனிதன் மார்டினின் அளவிற்கோ ; உலகம் சுற்றும் ஒரு லார்கோவின் வீச்சுக்கோ இருக்க வாய்ப்பில்லை தான் ! ஆனால் அதனையும் லாவகமாய்க் கையாண்டு இத்தனை வருஷங்களாய் ; இத்தனை கதைகளில் ஒரு தேசத்தை மட்டுமன்றி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் தீரா ரசிகர்களை உருவாக்கி, கட்டுண்டு வைத்திருப்பது ஒரு அசாத்திய சாதனை தானே ?! அந்த சாதனையாளரை நம் மத்தியில் கொஞ்சமாகவேனும் சிலாகிப்போமே என்ற சிந்தனையில் உதித்தது தான் THE KING SPECIAL !!
கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் !! கிட்டத்தட்ட 8300 பக்கங்களை இந்நேரம் நாம் கடந்திருக்க மாட்டோமா - இரவுக் கழுகாரோடு ?!! ஒற்றை நாயகராய் நமது இதழ்களில் இத்தனை பக்கங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள ஆசாமி இவரைத் தாண்டி வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது - WOW ! என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது !! இந்தப் பட்டியலில் உள்ள சகலக் கதைகளையும் படித்துள்ளோர் நிச்சயம் நிறைய பேர் இருப்பார்கள் எனும் போது - இன்று வரையிலான முழுப் பட்டியலையும் கருத்தில் கொண்டு - best ever டெக்ஸ் கதை எதுவென்று தெர்ந்தெடுப்போமா ?
Moving on from Tex, சில சந்தோஷ செய்திகளின் பகிர்வுகள் ! 2014-ல் இது வரையிலான நமது பொனெல்லி வெளியீடுகள் அனைத்திலும் அவர்களுக்கு அமோக சந்தோஷம் ! வண்ணமயமான அட்டைப்படங்களில் துவங்கி நமது இதழ்களின் சைஸ் ; பைண்டிங் ; இணையத்தில் நாம் செய்யும் சிலாகிப்புகள் என சகலமும் அவர்களுக்கு வித்தியாசமாய்த் தோன்றுகின்றன ! தவிரவும் அவ்வப்போது நம்மிடம் புத்தகங்களை வாங்கும் இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களும் நம் இதழ்களுக்கு thumbs up தந்து வர - தமிழ் அவர்களின் பிரியமான மொழியாக மாறி வருகிறது ! 2015-ல் துவங்கி நாம் வெளியிடும் ஒவ்வொரு இதழிலும் 20 பிரதிகள் வீதம் பொனெல்லி கோரியுள்ளது -உலகெங்கும் உள்ள அவர்களது கதைகளை வெளியிடும் பதிப்பகங்களுக்கு இதனை ஒரு மாதிரியாய்க் காட்டிட ! 20 பிரதிகளை DHL கூரியரில் தருவிக்கவே சில ஆயிரங்கள் செலவாகும் என்றாலும் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை !! உலகில் அவர்கள் கதைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலையும் ; பதிப்பகங்களின் பெயர்களையும் வாசிக்கும் போதே எனக்கு அவர்கள் ஒவ்வொருவரது ஆற்றல்களும் புலனாகிறது ! அந்தப் பட்டியலில் துக்கடா நாம் தான் என்பதில் ஐயமே கிடையாது ; ஆனால் அவர்களுள் நாமொரு standout ஆக தெரியக் காரணமே - வாசகர்களாய் நாம் காட்டும் உற்சாகமும், அந்த எல்லைகளில்லா காமிக்ஸ் காதலும் தான் என்று நினைக்கிறேன் ! நாம் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளக் கூடியதொரு தருணம் இது folks !
தூக்கிய காலரை அவ்விதமே தொடரச் செய்ய இன்னுமொரு காரணமும் கூட ! இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் ! அவர்களுக்கு நமது "OPERATION சூறாவளி" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் ; லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் !! இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ! ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் - இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது !! We just need to keep at it !
சந்தோஷ சேதி # 3 : அவ்வப்போது நமக்கு அட்டைப்படங்களைப் போட்டுத் தர ஒரு ஐரோப்பிய ஓவியரோடு பேசி வருகிறோம் ! கட்டணங்கள் நம்மூர் நிலவரங்களை விட அதிகமே எனினும், முயற்சித்துப் பார்க்கத் தீர்மானித்துள்ளோம் ! தற்சமயம் ஒரு trial முயற்சி தொடங்கியுள்ளது ; அவரது ஸ்டைல் நமக்கு ஒத்துப் போகும் பட்சத்தில் நமக்கு அதிர்ஷ்டமே ! Fingers crossed!
And சேதி # 4 : புதிய பதிப்பகங்களோடு நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் 2 கனிந்துள்ளன !! புதிய கதைகள் ; புதிய பாணிகள் இவை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ! இவற்றை எப்படி - எங்கு - எப்போது புகுத்துவது என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி ! ஏற்கனவே 46 இதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2015-ஐ வாத்து பிரியாணியாக்க மனதில்லை என்பதால் நாளைக்கே புது அறிவிப்புகளை நான் களம் காணச் செய்யப் போவதில்லை அசட்டுத்தனமாய் ! காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ! ஏனோ தெரியவில்லை - 'வச்சாக் குடுமி..அடிச்சா மொட்டை !!' என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது !! :-)
அப்புறம், அவ்வப்போது நமக்கு நம் படைப்பாளிகளின் மார்கெட்களிலிருந்து கிட்டும் புள்ளி விபரங்கள் ரமணா ஸ்டைலில் !
- சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை : 5519 !! கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் !!
- இவற்றுள் 1500+ கதைகள் 'மங்கா' காமிக்ஸ் படைப்புகளே !!
- லார்கோவின் விற்பனை அரை மில்லியனுக்கு (500,000) கொஞ்சமே கொஞ்சம் கம்மி !!
- தோர்கல் - 250,000+ பிரதிகள் விற்பனை காண்கிறது !
- டின்டின் கதைகள் விடாப்பிடியாய் இன்னமும் ஐரோப்பாவின் டாப் காமிக்ஸ் தொடரென்ற இடத்தைப் பிடித்த வண்ணம் உள்ளது !
- ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று !
- கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் !
- காமிக்ஸ் பற்றிய சேதிகளையும், படைப்பாளிகளின் பேட்டிகளையும் தாங்கி வரும் பிரத்யேக பத்திரிகைகள் 60-க்கும் அதிகம் உள்ளன பிரெஞ்சில் !! (அவற்றின் ஆயுட்காலங்கள் மாறுபடுவது வேறு விஷயம் !!)
- சீனாவும், ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் !! ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் !
- நமது இரவுக்கழுகாருக்கென கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு Android App உள்ளது தெரியுமோ? https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_bacigalupo_andrea88.TexApp&hl=en
- சென்ற வாரம் வெளியான டெக்ஸ் சாகசம் # 649 !! அறுநூற்றி ஐம்பது என்ற இலக்கைத் தொட சொற்ப இடைவெளியே காத்துள்ளது !! இதோ அதன் ராப்பர் :
மீண்டும் சந்திப்போம் ; அது வரை - have a lovely sunday & a great week ahead ! Bye for now!








































சார் ரொம்ப நீநீநீளமா தொடர வேண்டாம் சார்.!
பயம்மா இருக்கு.!!
க்ரைம் த்ரில்லர்., ரொம்ப gap விட்டா புஸ்ஸுன்னு போயிடும்.!
அடுத்தடுத்து போட்டு முடிச்சிட்டா நல்லாருக்கும் சார்.!//