Saturday, October 10, 2020

பில்டப்பில்லா பில்டப் !

 நண்பர்களே,

வணக்கம். சமீப காலமாய் ‘பில்டப் பரமசிவம்‘ முன்வரிசையில் இடம் பிடித்துக் கொண்டு, எடுக்கும் ஃபோட்டோக்களிலெல்லாமே மண்டையை நீட்டிக் கொண்டிருப்பதாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ! ஆனால் சமீபமாய் திருவாளர் ‘பி.ப.‘ வின் ஆரூடங்களின் பெரும்பான்மை பீலாப்படலங்களாய் இருந்திடவில்லை என்பதை ஒரு சன்னமான திருப்தியோடு திரும்பிப் பார்த்துச் சொல்ல முடிகிறது ! எது எப்படியோ – இந்த நொடியிலும் ஒரு முழு க்ளுகான் D பாக்கெட்டை வாய்க்குள் தட்டிய புத்துணர்ச்சியோடு ஏக் தம்மில் ப்ரெஷ்ஷாய் ஒரு LIC பில்டப்பைச் செய்திடும் ஆர்வம் பொங்குகிறது தான் ! ஆனால் ஓவர் அலம்பல் உடம்புக்கு ஆகாது என்பதாலும், சமீப வாரத்துப் பதிவுகளில் பலவுமே ஆளில்லாக் கடையில் ஆவேசமாய் டீ ஆத்தும் படலங்களாகவே இருந்து வருவதாலும் இந்த தபா உதடுகளிலும், பேனா பிடிக்கும் விரல்களிலும் கொஞ்சமாய் பெவிகாலைப் பூசிக் கொள்ளவிருக்கிறேன் !

மா…துஜே சலாம்...! அன்னையே உனக்கு வணக்கம்..! Ma...I salute thee !!  மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் ஜம்போவின் இந்த லேட்டஸ்ட் ஆல்பத்தைப் பறைசாற்றியாச்சு ! ஜம்போவின் தடத்தில் தலைகாட்டும் ஆல்பங்களில் கணிசமானவை one-shots என்பது நாமறிந்ததே ! In fact இந்த தடத்தை நான் உருவாக்க எண்ணியதே – ரெகுலர் சந்தாவிற்குள் புகுத்தத் தோதுப்படாத இது மாதிரியான “கதையே நாயகன்” பாணியிலான ஆக்கங்களை முயற்சிப்பதற்கே ! So ஒரு ஜேம்ஸ் பாண்டோ ; ஒரு ஹெர்லக் ஷோம்ஸோ ; ஒரு Lone ரேஞ்சரோ தலைகாட்டிடா ஜம்போ ஆல்பங்களில் எப்போதுமே பெரிய hype இருப்பதில்லை ! ஆனால் அந்த மாதங்களிலெல்லாமே இது என்ன மாதிரியான கதைக்களம் ? என்ன எதிர்பார்ப்பது ? என்பது குறித்து லைட்டாகவோ ; பலமாகவோ கோடுகள் வரைந்து விடுவதுண்டு தான் ! So ஒரு “அந்தியின் ஒரு அத்தியாயம்” ஆல்பத்தில் என்ன காத்திருக்கும் ? ஒரு Zaroff ஆல்பத்தில் என்ன வாசிப்பனுபவம் வெயிட்டிங் ? என்று உங்களுக்குத் தெரிந்திராது போகாது !

ஆனால் முதன்முறையாக பில்டப் மீட்டரை பூஜ்யத்திலேயே நிறுத்திக் கொண்டு ; இதுவரையிலான “வருகிறது” விளம்பரங்களில் என்ன தெரிவிக்க முனைந்துள்ளோமோ, அதனோடே ஒரு முற்றுப்புள்ளியை வைத்துக் கொண்டு உங்களை இந்தத் 96 பக்க வண்ண ஆல்பத்தினுள் இட்டுப் போனாலென்ன ? என்ற கோக்குமாக்கான அவா எழுகிறது ! In fact அட்டைப்படத்தைக் கூட இப்போது கண்ணில் காட்டாது, இதழை ஒரு முழுமையான திரைக்குப் பின்னேயே நிலைகொண்டிடச் செய்யத் தீர்மானித்துள்ளேன் ! இந்தப் பதிவை நான் எழுதும் வெள்ளியிரவினில் கூட காலை வரையிலும் இந்த ஆல்பத்தினுள் உலவித் திரிந்த உணர்வுகள் என்னுள் வடிந்திடக் காணோம் ! To keep the reading experience a total novelty - இதழின் முதல் பக்கத்தில் what to expect ? என்ற ரீதியில் நான் எழுதித் தந்து, அச்சுக்குத் தயாராகி நிற்கும் பக்கத்தையுமே சனி காலையில் முதல் வேலையாய்க் கடாசச் சொல்லிட உத்தேசித்துள்ளேன் ! அந்த இடத்தில் முதல் அத்தியாயத்தின் அறிமுகப் பக்கம் மட்டுமே இருந்திடும் !

So எவ்வித preset notions-களும் இல்லாது ; நுழையும் முன்பாகவே – “ஐயே… இது தான் களமா? இது தான் சைஸா ?... இதில் கொத்துக்கறி போட்டுட்டியே… அதில் எக்ஸ்ட்ரரா நம்பர் ஏன் போட்டே?” என்ற சுமைகளின்றி ஒரேயொருவாட்டி take it as it comes என்று (சு)வாசிக்க முயற்சித்துத் தான் பார்ப்போமே ? பல தருணங்களில் விமர்சகக் குல்லாய்களை மாட்டிக் கொள்ள நாம் காட்டும் அவசரங்களில் – படைப்புகளின் கணிசமான நிறைகளைத் தாண்டிப் போய்க் கொண்டே இருப்பதைக் கவனிக்க முடிகிறது ! கதைத் தேர்வுகளின் போது நானுமே இந்தக் குல்லாய்களை மாட்டிட முனைந்திடும் பட்சத்தில், பள பள சிரம் சற்றே ஸ்டைலாகத் தென்படலாம் தான் ; ஆனால் சத்தியமாய் ஒன்றுக்குப் பாதிக் கதைகள் கூடத் தேறிடாது ! So போன வருஷத்தின் ஒரு ரிலாக்ஸ்டானதொரு மழை நாளில் என் கண்ணில்பட்ட இந்த 2 பாக ஆல்பத்தை ; எவ்வித அளவுகோல்களையும் மனதுக்குள் நிறுத்திடாது நான் ‘தேமே‘ என ரசிக்க முயற்சித்த ஆல்பத்தை - நீங்களுமே அதே பாணியில் இந்த தபா முயற்சிக்கப் போகிறீர்கள் ! Maybe அன்று எனக்கு இந்தப் படைப்பினில் தென்பட்டதொரு spark உங்களுக்குமே கண்ணில் படுகிறதா ? என்று தான் பார்ப்போமே என்ற curiosity என்னை ஆட்டிப் படைக்கிறது !

எண்ணூறு, தொள்ளாயிரத்தைத் தொடக்கூடும் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை ! And of course – பணிகளின் மத்தியில் கேட்டால் “துயிலெழுந்த பிசாசு” கூட தெறிக்கும் சாகசமாகவே எனக்குத் தோன்றும் தான்; “வெடிக்க மறந்த வெடிகுண்டு” கூட அண்டசராசரத்தை அசைத்துப் பார்க்கப் போகும் அதகளமாய்த் தென்படும் தான் ! ஆனால் வெகு சொற்ப இதழ்களே – பணிகள் நிறைவுறும் தருணத்தில், மனதுக்குள் – அந்தக் கதை மாந்தர்கட்கு விடைகொடுக்க தடுமாற்றத்தை ஏற்படுத்திடும்  ஆற்றல் கொண்டவையாக இருந்திடுவதுண்டு ! ஒரு வாரமோ, பத்து நாட்களோ அவர்களோடு உலவிய அனுபவங்கள் மனதில் மெல்லியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி, "முற்றும்" போட்ட பின்னேயும் அவர்களோடே பயணிக்கும் பேராசைகளை எழச்செய்வதுண்டு ! "இது வெற்றி கண்டாலும் சரி ; Bata சப்பல்களால் சாத்து வாங்கித் தந்தாலும் சரி – இந்தப் பணியினில் ஈடுபட்டமைக்கான திருப்தியை எதுவும் குலைத்திடாது!” என்ற ஒருவித கர்வம் கலந்த நிறைவைத் தந்திடும் ! “மா..துஜே சலாம்” அந்த “வெகு சொற்ப இதழ்கள்” பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்பது மாத்திரமே இப்போதைக்கான பில்டப் ! சனிக்கிழமை அச்சாகி, திங்களன்று பைண்டிங் புறப்பட்டு, புதனன்று கூரியர் டப்பிகளுக்குள் குடியேறி ; வியாழன்று (15 அக்டோபர்) உங்கள் கைகளிலிருக்க வேண்டுமென்பது இந்த நொடியின் திட்டமிடல் ! Maybe இந்த ஒற்றைமுறை மாத்திரம், நாம் அனைவருமே அக்டோபரின் முதல் (காமிக்ஸ்) வாசிப்புக்கென “மா…துஜே சலாம்” இதழினைத் தேர்வு செய்து, ஏக் தம்மில் அதனை ரசித்திட முற்படுவோமா ? ரிப்போர்டர் ஜானியின் டபுள் ஆல்பம் ; அப்புறம் XIII spin-off என்று போட்டிக்கு வலுவான அக்டோபர் இதழ்கள் உள்ளன தான் ! ஆனால் “மா.து.ச.” இதழை வாசிப்புப் பட்டியலில் முன்னணியில் நிறுத்திட முற்பட்டால், நமது பரஸ்பர ரசனை அளவீடுகளை ஒருசேர பரிசீலித்தது போலிருக்குமல்லவா ? So give it a thought guys?!

நோ பில்டப்” என்பதுமே ஒருவித பில்டப் தான் என்பதை மறுப்பதற்கில்லை தான் ! அதே போல நிறைய எதிர்பார்ப்புகளை எனக்குள் விதைத்திருக்கும் இந்த இதழானது, உங்கள் பார்வைகளில் “காக்கா பிரியாணி”யாய்த் தென்படக்கூடும் வாய்ப்புகளுமே உண்டு என்பதையுமே மறுப்பதற்கில்லை !  ஆனால் ஏற்கனவே சொன்னது போல – இந்த ஒற்றை முயற்சியின் பலன்கள் எவ்விதமிருந்தாலுமே அவை என்னுள் இந்த நொடியில் ஓட்டமெடுத்து வரும் சன்னமான திருப்தியை அசைத்திடாது ! இது வரையிலும் நாம் தலைவைத்துப் படுத்திரா ஒரு புதுப்பின்புலத்தில் ; முற்றிலும் நமக்குப் பரிச்சயமில்லா மனிதர்களோடு பயணிக்கும் ஒரு படைப்பினை உங்கள் முன் கொணர்ந்து நிறுத்திய மகிழ்வே என்மட்டிற்கு ரொம்ப நாட்களுக்கு நீடித்திடும் ! So – வியாழன் / வெள்ளிக்காக வெயிட்டிங்… !! உங்கள் தீர்ப்புகளுக்காக வெயிட்டிங் !

Moving on – போன வாரத்து சிறு முயற்சியான நமது “ஆன்லைன் புத்தக விழா” ஒரு அழகான success என்பதை நான் நன்றிகளோடு சொல்லியாக வேண்டும் ! நமது அலுவலக மாடியில் உள்ள எடிட்டோரியல் அறையினில் ராக்குளை அமைத்து, புக்ஸை அழகாய் அடுக்கி, 2 ஸ்மார்ட் போன்கள் சகிதம் மூன்று பெண்களின் உழைப்பில் ஓட்டமெடுத்த புத்தக விழாவானது காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தையும் சரி, ஞாயிறின் விடுமுறையையும் சரி – அனல் பறக்கும் ஆக்ஷன் தினங்களாக்கியிருந்தது ! "சத்தியமாய் பத்துப் பதினைந்து போன்கால்களுக்கு மேல் இராது ; ஜாலியாய் ஏ.சி.யைப் போட்டபடிக்கு நம்மவர்கள் ஈயோட்டப் போகிறார்கள் !" என்பதே எனது எண்ணமாக இருந்தது! ஆனால் 4 நாட்களினில் சுமார் 150+ நண்பர்கள் ரகளையாய் பங்கேற்று வெரைட்டியாய் இதழ்களை வாங்கியது, இருள்படர்ந்த நடப்பாண்டின் செம bright spot ! மொத்த விற்பனைத் தொகைகள் என்னவென்ற கணக்குகள் ஒருபக்கமிருக்க, ‘பொம்மை புக்‘ ஆர்வங்கள் இன்னமும் alive & kicking என்ற ஊர்ஜிதமும், சோம்பிக் கிடந்த அலுவலகத்தைப் புத்துணர்ச்சியோடு இயங்கச் செய்ததும் இந்த 4 நாட்களின் ஆதாயங்கள் என்பேன் ! Thanks a ton guys for the support !

“இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாமே?” என்று தொடர்ந்த தினங்களில் நண்பர்களின் கோரிக்கைகள் ஒலித்த வண்ணம் உள்ளன தான் ! ஆனால் நடப்பு (புது) இதழ்களின் டெஸ்பாட்ச் ; routine பணிகள் என்பன முன்னுரிமை பெற்றிட வேண்டுமல்லவா ? So கொஞ்ச காலம் ஓடட்டுமே ; இன்னும் ஏதேனும் சுவாரஸ்யமான சர்ப்ரைஸ் இதழ்களைத் திட்டமிட; தயாரித்திட நேரம் எடுத்துக் கொண்டு, வாகானதொரு விடுமுறை வேளையில், புத்தாண்டில் Online Bookfair 2021 என முயற்சிப்போமே !

Further down the road, ஒளிவட்டத்திலிருந்து by now விலகி நின்று வரும் “இரத்தப் படலம் The Collector’s 300” இதழ் பற்றி ! சமீப நாட்களில் கொஞ்சமே கொஞ்சமாய் சுறுசுறுப்பு கண்ணில் பட்டு வருகிறது – முன்பதிவின் இலக்கம் 124-ஐ  தொட்டு நிற்கும் விதமாய் ! And இந்த அக்டோபர் ஒரு XIII spin-off மாதமுமே என்பதால், அதன் புண்ணியத்தில் முன்பதிவு 150-ஐ தொட்டிட சாத்தியமாயின் halfway mark-ஐ தொட்டிருப்போம் ! அக்டோபர் 31 நமது புது சந்தா அட்டவணை அறிவிப்புக்கான பொழுது என்பதால் ‘இ.ப.‘ முன்பதிவுகள் அதற்கு முன்பாய் ஒரு shape-க்கு வந்திருப்பின் நலம் ! இல்லையெனில் ஒட்டுமொத்த திட்டமிடலையுமே ஒத்திப்போடுவதா ? மங்களம் பாடுவதா ? என மறுபரிசீலனை செய்திடல் அவசியமாகிடலாம் ! இருப்பதோ இருபதே நாட்கள் – So கேதர் ஜாதவ் பாணிகள் இனியும் சுகப்படாது என்பது நிதரிசனம் folks ! டாப் கியரைப் போடச் சொல்லப் போகிறீர்களா ? அல்லாங்காட்டி ரிவர்ஸை அமுக்கச் சொல்லப் போகிறீர்களா ? சொல்லுங்கண்ணே… சொல்லுங்க !

NO

NAME

PLACE

1

Mr.K.V.GANESH

CHENNAI

2

Mr.K.PARTHIBAN

TRICHY

3

Mr.V.HARIHARAN

COIMBATORE

4

Mr.S.SENTHIL KUMAR

TIRUPUR

5

Mr.KRISHNA MOORTHY

DHARAPURAM

6

Mr.ARUN KUMAR

NAMAKKAL

7

Mr.ARUN KUMAR

NAMAKKAL

8

Mr.M.BABU MOHAMED ALI

SALEM

9

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

10

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

11

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

12

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

13

Mr.R.GANESH

MADURAI

14

Mr.AUGUSTIN SAINTLYDOSS

HOSUR

15

Mr.A.D.BASKARAN

CHENNAI

16

Mr.SARAVANAN SUNDARAVEL

NOIDA

17

Mr.SARAVANAN VADIVEL

NAGAPATTINAM

18

Mr.MOHAMMED ARAFARTH

MAYILADUTHURAI

19

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

20

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

21

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

22

Mr.SRINIVASARAGHAVAN RAMAN

CHENNAI

23

Mr.PRABHUDASS PALANI

CUDDALORE

24

Mr.MAHENDRAN PARAMASIVAM

COIMBATORE

25

Mr.A.SATHISH KUMAR

VELLORE

26

Mr.PRASANNA SRIDHAR

COIMBATORE

27

Mr.S.S.KARTHIK

BANGALORE

28

Mr.A.PALANIVEL

TRICHY

29

Mr.A.PALANIVEL

TRICHY

30

Mr.RAJ KUMAR SIVANANDI

MADURAI


REFUNDED 

32

Mr.MA.SENTHIL

COIMBATORE

33

Mr.MA.SENTHIL

COIMBATORE

34

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

35

Mr.V.RAJEEV

COIMBATORE

36

Mr.SELVAM ANNAMALAI

ERODE

37

Mr.S.ANANTHA SANKAR

TIRUNELVELI

38

Mr.R.SARAVANAN

ERODE

39

Dr.PRASANNA

SRILANKA

40

Dr.PRASANNA

SRILANKA

41

Dr.PRASANNA

SRILANKA

42

Mr.A.PALANIVEL

TRICHY

43

Mr.M.RAMKUMAR

UNKNOWN

44

Mr.V.V.KRISHNA

CHENNAI

45

Mr.N.SHANMUGAM

TIRUCHENGODE

46

Mr.MOHAMED RAFIQ RAJA

BANGALORE

47

Mr.MANI.MB

CHENNAI

48

Mr.MANI.MB

CHENNAI

49

Mr.MANI.MB

CHENNAI

50

Mr.MANI.MB

CHENNAI

51

Mr.MANI.MB

CHENNAI

52

Mr.SUBRAMANIAN

CHIDAMBARAM

53

Dr.A.K.K.RAJA

KARUR

54

Dr.A.K.K.RAJA

KARUR

55

Dr.A.K.K.RAJA

KARUR

56

Mr.K.V.GANESH

CHENNAI

57

Mr.YOGI SIVAKUMARAN

SRILANKA

58

Mr.SELVAM ANNAMALAI

ERODE

59

Mr.SELVAM ANNAMALAI

ERODE

60

Mr.S.BALA SUBRAMANIYAN

BANGALORE

61

Mr.VIJAY

ERODE

62

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

63

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

64

Mr.SUNDARALINGAM MATHINATH

SRILANKA

65

Mr.R.S.SHARMA

SRILANKA

66

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

67

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

68

Mr.A.S.SOUNDERA RAJ

BANGALORE

69

Mr.MUTHUKUMARAN

TIRUPUR

70

Mr.RAM KUMAR GOPALA KRISHNAN

CHENNAI

71

Mr.JEBARATHINAM ALEXANDER

CHENNAI

72

Mr.D.V.KANNAN

CHENNAI

73

Mr.M.ANANDAPPAN

KARAIKAL

74

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

75

Mr.L.BOOPATHI

CHANDRAPUR

76

Mr.R.GANESH

MADURAI

77

Mr.KUMARESAN PALANIVEL

VIRUDHACHALAM

78

Mr.A.JEGAAN DHARMENRA

SRILANKA

79

Mr.YOGANATHAN

KODUMUDI

80

Mr.M.KARTHIKEYAN

PALAKKAD

81

Mr.KUMAR

SALEM

82

Dr.RAJESH

BANGALORE

83

Dr.RAJESH

BANGALORE

84

Mr.BALAMURUGAN MARUTHAN

TRICHY

85

Mr.IGNATIUS LORAN

KORBA

86

Mr.M.KUMAR

KANCHIPURAM

87

Mr.THIRUCHELVAM PRAPANATH

FRANCE

88

Mr.A.M.CHANDRA KUMAR

TIRUPUR

89

Mr.SIVAKUMAR SUBRAMANIAN

CHENNAI

90

Mr.KARTHIGAI PANDIYAN

COIMBATORE

91

Mr.SURESH KUMAR

MADURAI

92

Mr.MUTHIAH PALANIAPPAN

CHENNAI

93

Mr.K.ELAVARASU

BANGALORE

94

Mr.R.MUJAHIRUDEEN

CHENNAI

95

Mr.PRAKASH BALA

CHENNAI

96

Dr.V.VIKRAM

TRICHY

97

Mr.S.SATHIYA MOORTHY

TIRUPUR

98

Mr.L.BOOPATHI

CHENNAI

99

Mr.MAHESH KUMARSELVARAJ

CHENNAI

100

Mr.SENTHIL SATHYA

CHENNAI

101

Ms.NARMADHA

CHENNAI

102

Mr.DALAXSHAN

SRILANKA

103

Ms.ELEZABETH ANTONY

TRIVENDRUM

104

Mr.BHAVANI SRIDHAR

BANGALORE

105

Mr.P.SARAVANAN

CHINNAMANUR

106

Mr.M.BOOBALACHANDER MANI

CHENNAI

107

Mr.RAJESH RANGANATHAN

CHENNAI

108

Mr.E.R.BHOOPATHY SARGUNAR

CHENNAI

109

Mr.SURESH RANGASAMY

AVINASHI

110

Mr.SURESH RANGASAMY

AVINASHI

111

Mr.N.MANI KANDAN

KULITHALAI

112

Mr.J.SENTHI LKUMAR

CUDDALORE

113

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

114

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

115

Mr.M.VEL

DHARMAPURI

116

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

117

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

118

Mr.M.SELVAM

THIRUVANNAMALAI

119

Mr.B.MANIMARAN

RANIPET

120

Mr.S.MOHAN

NAGAPATTINAM

121

Mr.SARABESAN

CHENNAI

122

Mr.ARULDASS

CHENNAI

123

Mr.M.SELVAKUMAR

PALANI

124

Mrs.TAMILSELVI SARAVANAN

KARAIKAL

காத்திருப்பது தீபாவளி மாதம் என்பதால் ‘தல‘ ஒரு மெகா அவதாரத்துக்குத் தயாராகி வருகிறார் ! And அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க இப்போதிலிருந்தே நானும் தயாராகிட வேண்டுமென்பதால் நடையைக் கட்டுகிறேன் guys ! Have a great weekend ! See you around ! Bye for now !! 

Saturday, October 03, 2020

ஏன்...?

 நண்பர்களே,

வணக்கம். 10 நாட்களாய்ப் பேனா பிடித்து புஜம் கழன்ற காரணத்தால் இந்தப் பதிவை வீடியோப் பதிவாக்கத் தான் காலை வரையில் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கென சீக்கிரம் சீக்கிரமாய் ஆபீஸுக்குப் போய் ; சிரிச்சா மேரி மூஞ்சை வைத்துக் கொண்டிருக்கப் பிரயத்தனங்கள் செய்து ; அப்பாலிக்கா, ‘ஆக…. அது வந்து… என்ன சொல்ல வர்றேன்னா…‘ என்று இழுக்காமல் பேச வேண்டுமே என்ற எண்ணங்களெல்லாம் தலைக்குள் ஓட – அடடே புஜங்கள் வலிக்கக் காணோமே!!

இந்த வாரப் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்குள்ளேயும் ஒரு ”ஏன்?” எழுந்திருக்கலாம் ! (அட எழுந்திருக்காட்டித் தான் விட்டுப்புடுவோமா ? எங்க வாராந்திரக் கோட்டாவைத் தலையிலே கட்டி விடாமல் விடாது கறுப்பு !!) தலைப்பிலுள்ள ”ஏன்"-க்குப் பின்பாய் சிலபல உப ‘ஏன்‘கள் உள்ளதால் – அவற்றை ஒன்றன்பின் ஒன்றாய் முடிச்சவிழ்க்க முயல்கிறேனே - தம்மிருக்கும் வரையிலாவது !

ஏன் # 1: (பு.க.கா)

பொதுவாய் அட்டவணையை உருவாக்கிய பிற்பாடு, எந்த இதழ் – எந்த மாதத்தில் இடம்பிடித்திட வேண்டும் என்பதையெல்லாம் உயர்தர விஞ்ஞான யுக்திகளான ‘இ.பி.பா‘ மார்க்கமாகவே நடைமுறைப்படுத்திடுவதுண்டு ! ஆனால் சமீப ஆண்டுகளில் அது அத்தனை சுலபமாய் இருப்பதில்லை ! 12 ஆக்ஷன் கதைகள் ; 12 TEX ; 12 கார்ட்டூன்கள் என்றிருக்கும் பட்சங்கள் – ”ஆங்… ஆரிசியாவின் ஆத்துக்காரர் இங்கே ; சதுர தாடைக்கார மார்ட்டினும் இங்கே… கொழு கொழு டாக்புல் இங்கே” என்று இன்க்கி-பின்க்கி போட்டிட சாத்தியப்படும். ஆனால் இப்போதெல்லாம் ஆக்ஷனில் 9 கதைகள் ; கார்டூன்களில் 6 ; கி.நா.வில் 6 என்று விதம் விதமான எண்ணிக்கைகள் களமிறங்குவதால், மாதாந்திர அட்டவணையினில் ஒருவித balance கொணர்வது ரொம்பவே சிரமப்படுகிறது ! கார்ட்டூன்களை கனமான மாதங்களில் நுழைக்க முயற்சிப்பது ; ‘தல‘ பெடலெடுக்கும் மாதங்களில் பாக்கி இதழ்களுமே முறுக்காக இருக்கச் செய்ய முயற்சிப்பது ; ‘பிரிவோம்… சந்திப்போம்‘ போன்ற தனித்துத் தெரிய வேண்டிய இதழ்கள் வெளியாகும் மாதங்களில் இதர இதழ்களை சற்றே அடக்கி வாசிக்கச் செய்ய முனைவது ; etc..etc என்று நிறையவே சிந்தனைகள் பின்னணியில் அவசியப்படும் ! ஆனால் இந்த லாக்டௌன்ஸ் ; மார்கெட் மந்தம் என்ற சமாச்சாரங்கள் இடரத் துவங்கியது முதலாய், மாதாந்திர இதழ்களின் மொத்தக் கிரயங்களையே பூதக்கண்ணாடி கொண்டு பார்த்திட வேண்டிதாகி விட்டது ! So விலைகளில் சற்றே நிதானம் ; அப்புறமாய் வாசிப்பினில் diversity என்ற பாணிக்கு மாற வேண்டிப் போனது ! அதுவும் டிசம்பரோடு நிறைவுற வேண்டிய திட்டமிட்ட இதழ்களை மார்ச் வரை நீட்டித்தாக வேண்டுமெனும் போது, கணிசமான இழப்பு – கேச வளத்தில் !! ஒரு மாதிரியாய், மாற்றியமைத்த திட்டமிடலைக் கையில் ஏந்தும் போது, சிலபல சுலபக் களங்கள் நேசமாய் ‘hi’ சொல்வது போலிருந்தது ; சிலபல tough களங்கள் தானைத் தலைவர் கவுண்டரின் ‘ரொமாண்டிக் லுக்‘ விடுவது போலிருந்தது ! சுலபங்களை எல்லாம் ‘வாங்கடா கண்ணுங்களா…‘ என்று அட்டவணையின் ஆரம்ப மாதங்களுக்கு இட்டாந்தேன் ! And 'கன்பர்மாக இவை குறுக்கை கழற்றியே தீரும்‘ என்று தென்பட்ட ஆல்பங்களையெல்லாம் முடிந்தமட்டிற்குத் தள்ளிப் போட்டு வந்தேன் ! ஆனால் ஓடுவதும், ஒளிவதும் Big Boss-களான உங்களிடம் எத்தனை நாளைக்குச் செல்லுபடியாகும் ? So ஒரு வழியாய் அந்த tough மாதங்களும் புலரும் போது ஜிஞ்சர் தின்ற மந்தியாய் உலவிடத் துவங்குவேன் !

அவ்வித மாதமே இந்த அக்டோபரும் ! ஒற்றை ஜானியே பதம் பார்ப்பார் எனும் போது – அவரே டபுள் ஆக்ட் என்றால் கேட்கவா வேண்டும் ? அதிலும் அந்த 2.0 ஜானி பக்க நீளமும் ஜாஸ்தி + கதையுமே செம different ! அதனில் அடித்த கூத்துக்கள் பற்றிப் போன வாரமே எழுதியிருந்தேன் ! எனது அக்டோபர் மொக்கைகளுள் ஒரு பாதி நிறைவுற்றிருந்தாலும் – பீதி மிகுந்த மீதி எதிர்நின்றது - XIII ன் “சதியின் மதி” ரூபத்தில் !

“ஜானியே இடியாப்பம் என்பது தெரிந்திருக்க ; அதே மாதத்தில் இந்த XIII மனுஷனையும் நுழைக்காட்டித் தான் என்ன ?“ என்று தோன்றிடலாம் தான் ! ஆனால் XIII-ன் மொத்தத் தொடரும் சுழல்வதே அமெரிக்க அரசியல் சதுரங்கங்களைச் சுற்றியே எனும் போது – சரியாக 30 நாட்களில் அக்கட தேசத்தில் பிரஸிடெண்ட் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இந்த இதழை அக்டோபரில் place செய்தால் பொருத்தமாக இருக்குமென்று நினைத்தேன் !!



“சதியின் மதி !” 

XIII சதித்திட்டத்தின் சூத்ரதாரி # 2 ஸ்தானத்திலிருக்கும் கால்வின் வாக்ஸ் பற்றிய spin-off! லாக்டௌன்களுக்கெல்லாம் வெகு முன்பாகவே இந்த ஆல்பத்தின் பிரெஞ்சு – இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு நிறைவுற்றிருக்க, ஜனவரியின் கடைசியிலேயே இதனை நமது கருணையானந்தம் அவர்களுக்கும் அனுப்பி இருந்தேன் தமிழாக்கத்தின் பொருட்டு ! அவையெல்லாமே இப்போது சொர்க்கபுரியாய்க் காட்சி தரும் நார்மல் பொழுதுகள் என்பதால், இரண்டு வாரங்களில் தமிழ் ஸ்க்ரிப்டும் டாணென்று வந்து சேர்ந்திருந்தது ! வேறு ஏதோ பணி நிமித்தம் போன் செய்ய நேர்ந்த போது ‘மாமா… சதியின் மதி எப்படியிருக்கு?‘ என்று கேட்டு வைத்திருந்தேன்! ‘ கதை முழுக்கப் பேசிட்டே இருக்காங்கப்பா…‘ என்று மட்டும் சொல்லியிருந்தார் ! பொதுவாய் இது போன்ற spin-off-களில் புதுசாய் ஒரு கதாசிரியரே பணியாற்றுவதால் ஒரிஜினலின் ஆசிரியரின் thought process-களோடு தானும் ஒத்துப் போவதாய்க் காட்டிட ஏகமாய் வசனங்களையும், விளக்கங்களையும் ப்ளாஷ்பேக்களையும் நுழைப்பது தவிர்க்க இயலா நிகழ்வுகளே ! மொட்டைத்தலையன் மங்கூஸைப் போலவொரு டெரர் கதாப்பாத்திரமாய் இருந்தால் மாத்திரமே அவனது ப்ளாஷ்பேக்கில் ஆக்ஷன் ; பரபரப்பு இத்யாதிகளெல்லாம் இடம்பிடித்திடச் சுலபமாய்ச் சாத்தியமாகும் ! So மண்டைக்குள் பெட்டி பார்னோவ்ஸ்கி தானம் தந்திருந்த பல்புகள்; கர்னல் ஆமோஸ் வழங்கியிருந்த குச்சி மிட்டாய்கள் இங்கும் அங்கும் நடமாட, சதியின் மதியோடு அமர்ந்தேன் - ஒரு வாரத்துக்கு முன்பாய் !

பக்க நீளம் இதனிலும் (வழக்கத்தை விட) ஜாஸ்தி என்பது பிரிண்ட் அவுட் கத்தையைக் கையில் ஏந்திய கணமே புரிந்தது. எச்சிலை ‘மடக் மடக்‘கென்று விழுங்கிக் கொண்டே பக்கங்களை மேலோட்டமாய்ப் புரட்டிய போது பிடரியில் அறைந்த சித்திரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தன ! பொதுவாய் ஒரு படைப்பினில் artwork மிரட்டலாக அமைந்து விட்டால், அதனூடே பணியாற்றுவது சற்றே ரம்யமாய் இருந்திடுவதுண்டு ! இங்கு சித்திரங்களும் சரி, வண்ணங்களும் சரி top drawer stuff ! வில்லியம் ஷெரிடனும், வாலி ஷெரிடனும் பிதாமகர் வில்லியம் வான்ஸின் கைவண்ணத்தில் அசத்தியதை விட இதனில் இன்னும் dapper ஆகத் தோன்றியது போலிருந்தது ! ‘ரைட்டு… கதைக்குள் புகுந்தால் தேவலாம் தம்பி!‘ என்றபடிக்கே பக்கங்களைப் புரட்டத் துவங்கினேன் ! திருத்தங்கள் ஏதும் போடாமல் முதல் 10 பக்கங்களை வாசித்து முடித்திருந்த போது இரண்டு விஷயங்கள் தெள்ளத் தெளிவாய்ப் புலப்பட்டன !

1. பொதுவான XIII (or) ஸ்பின்-ஆப் கதைகளிலெல்லாம் பழைய ஆல்பங்களைத் தேடிப் பிடித்து, சம்பவக் கோர்வைகள் பொருந்திப் போகின்றனவா ? இந்த திருட்டுமுழிக்காரனின் பெயரை எப்படி உச்சரித்திருக்கிறோம் ? என்றெல்லாம் cross refer செய்திட வேண்டி வரும் ! ஆனால் இதனில் அத்தகைய நோவுகள் இருந்திடப் போவதில்லை என்பது துவக்கத்திலேயே புரிந்திருந்தது ! கதையோட்டத்தினில் இந்தக் கதாசிரியர் ‘புதுமையைப் புகுத்துகிறேன் பேர்வழி‘ என்று பெருசாய் எதையும் செய்து குழப்பி வைக்கவில்லை ! சொல்லப் போனால் – ‘சொல்வதெல்லாம்ம்ம்ம்ம்ம்ம்  உண்மை‘ என்று மனுஷன் கடைபிடித்திருக்கும் பார்முலாவைக் கண்டு மெய்யாலுமே புன்னகைக்கத் தோன்றியது ! More on that later !

2. பிழைகள் என்று பெருசாய் ஏதுமில்லாவிடிலுமே, இந்த ஆல்பத்துக்கென நமது கருணையானந்தம் அவர்களின் க்ளாசிக் பாணி நிறையவே மாற்றங்களைக் கோரிடும் என்பது புரிந்தது ! தவிர, நிறைய இடங்களில் கதையோட்டத்தினில் இண்டர்நெட் துணையோடு தேடல்களை நடத்தினால் தவிர, யார் பேனாவைப் பிடித்தாலுமே மொக்கை போடுவது தவிர்க்க இயலா சமாச்சாரமாகிடும் என்பதுமே புரிந்தது ! அத்தகைய அலசல்கள் அவசியப்பட்ட இடங்களில்,  அங்கிள் புரிந்தமட்டிற்கு எழுதியிருப்பது invariably தவறான அனுமானங்களாகவே இருப்பதைப் பத்துப் பக்கங்களுக்குள்ளாகவே – உணர முடிந்தது ! So மேஜராய் ஒரு பட்டி-டிங்கெரிங் செயதாலன்றி  spin-offs-க்கு வெற்றிச் சாத்தியங்கள் பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் என்றாகிடும் என்பது  நியான் விளக்குகள்  சிணுங்க சேதி கிட்டியது !

சும்மா நாளைக்கு இத்தகையப் பணியைக் கையில் எடுத்திருந்தால் நிச்சயமாய் ஜவ்வு மிட்டாயாய் இழுத்திருப்பேன் தான் ; ஆனால் அச்சுக்குச் செல்லும் deadlines மிரட்டிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ குடிபுகுந்திடும் உத்வேகங்களானவை தார்குச்சியைக் கொண்டு குத்திக் குத்தியே வேலை வாங்கிடுகின்றன ! And no different this time too…! இரு நாட்களின் சாமக்கூத்துக்கள் நிறைவுற்றிருந்த போது ஒரு new look கால்வின் வாக்ஸின் தமிழ் வார்ப்பு கையிலிருந்தார் & எனது வலது புஜமானது கதறிக் கொண்டிருந்தது ! இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் சனிக்கிழமை காலை வரையிலும் புதுசாய் DTP செய்யப்பட்ட பக்கங்கள் என்னை வந்து சேரவில்லை & அவற்றை நிதானமாய்ப் படித்துப் பார்த்தால் தான் ‘மாற்றி எழுதுகிறேன் சாமி‘ என்று நான் அடித்திருக்கும் கூத்துக்களை எவ்விதம் வந்துள்ளன என்பது புரியும் ! Anyways கதையைப் பற்றியும் பேசாது ஏதேதோ மொக்கை போடுவது, XIII நண்பர்களின் கடுப்பை ஈட்டித் தருமென்பதால் அது பற்றி இனி :

ஒற்றை வரியில் சொல்வதானால், கதாசிரியர் ரொம்ப ரொம்ப safe ஆனதொரு பாதையைத் தேர்வு செய்துள்ளார் என்பேன் ! XIII தொடரின் மையமே அந்த ப்ரெசிடெண்ட் வில்லியம் ஷெரிடன் assassination தான் என்பதை நாமறிவோம் ! And அது 1963-ல் அமெரிக்காவின் டால்லஸ் நகரில் அரங்கேறிய பிரஸிடெண்ட் ஜான்.F கென்னடியின் படுகொலையினை நகலெடுத்து காமிக்ஸினுள் புகுத்திய சம்பவமே என்பதில் no secrets ! “சதியின் மதி”யோ ஒரு படி மேலே போய், அந்நாட்களது அமெரிக்க அரசியல் சூறாவளிகள் பற்றி ; அந்நாட்களது ஹாலிவுட் கனவுக்கன்னி மர்லின் மன்றோ பற்றி ; அவருக்கு பிரஸிடெண்ட் குடும்பத்துடன் இருந்த நெருக்கம் பற்றி ; மர்லினின் மர்மமான “தற்கொலை” மரணம் பற்றி ; தொடர்ந்திட்ட சந்தேகங்கள் பற்றி ; பிரஸிடெண்ட் ஜான் கென்னடியின் assassination பற்றி - என்று almost true to life நிகழ்வுகளோடு அட்சர சுத்தமாய்ப் பயணிக்கிறது ! So நிஜ சம்பவங்களையும், அவை சார்ந்த சில பின்னணிச் சந்தேகங்களையும் மட்டுமே 2 தண்டவாளங்களாக்கிக் கொண்டு, அதன் மேல் இந்த ஆல்பத்தை தடதடக்க விட்டிருக்கிறார் கதாசிரியர் ! As spin-offs go – this one has a crystal clear narrative ! எங்கும் பெரிதாய் நெருடாமல், கதை நடப்பிலும், ப்ளாஷ்பேக்கிலும் செம ஸ்மூத்தாய்ப் பயணிக்கிறது & ஓவியர் தன் பங்குக்குப் போட்டுச் சாத்த, ஒவ்வொரு பக்கமுமே ‘அடடே‘ போட வைக்கிறது ! 

இந்தக் கதையினைப் பூர்த்தி செய்வதற்குள் நான் அமெரிக்க ஹிஸ்டரி, STD ; லோக்கல் கால்  என சகலத்தையும் கரைத்துக் குடிக்காத குறை தான் ! பற்றாக்குறைக்கு ‘கருக்கலைப்பு‘ போலான சமாச்சாரங்களில் அமெரிக்கக் கட்சிகளான டெமக்ரேட்களின் நிலைப்பாடுகள் என்ன ? ரிபப்ளிகன்களின் நிலைப்பாடுகள் என்ன ? கு க்ளக்ஸ் க்ளான் அமைப்போடு யாருக்கு என்ன மாதிரியான உறவு ? யாருக்கு கத்தோலிக்க ஈடுபாடு ? யாருக்கு புராடஸ்டண்ட் நெருக்கம் ? அடிமட்டத்திலிருந்து அமெரிக்கத் தேர்தல் ஏணிகளில் ஏறிப் பயணிப்பது எப்படி ? என்ற ரீதியில் அரசியல் சார்ந்த அலசல்களையுமே தெரிந்து கொள்ள வேண்டியதானது ! For that matter, பேனா பிடித்திட மாத்திரமின்றி ; இந்த ஆல்பத்தைக் கையில் பிடித்திடுவதற்குமே, அமெரிக்க அரசியல் பற்றியொரு சன்னமான புரிதலாவது அவசியமாகிடும் என்பேன் ! So இன்டர்நெட் அலசல்களுக்குப் கொஞ்சமேனும் நேரம் ஒதுக்கினால், அந்நாட்களது நிஜங்களுக்கும், இந்நாட்களது ‘பொம்மை புக்‘ நிழல்களுக்குமிடையேயான தொடர்புகளை இன்னும் பிரமாதமாய் உள்வாங்கிட இயலும் என்றுபடுகிறது ! In fact - “உடல் மண்ணுக்கு; உசிர் XIII-க்கு” என்று அலம்பல் விடும் நம் நண்பர்களுக்குமே கூட இது நிச்சயமாய்ப் பொருந்தும் ! அமெரிக்க 1960-கள் பற்றிய ஞானமும், அமெரிக்கக் கட்சிகளின் சித்தாந்தங்களும் இந்தத் தொடரின் எத்தனை முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை இந்த spin-off ஸ்பஷ்டமாய் உணர்த்திடுகிறது ! So கதையைப் படித்த பிற்பாடு, நெட்டை அலசிட நேரம் ஒதுக்குங்கள் & அதன் பின்பாய் மீண்டும் ஒரு தபா புக்கை வாசியுங்கள் – எல்லாமே வேறொரு லெவலில் காட்சி தரக்கூடும் ! இந்தக் கதையில் பணியாற்றியதால் எனது அமெரிக்க ஞானம் எகிறிவிட்டதென்று நான்  சொல்லப் போவதில்லை ; I just got to imbibe enough to get the job in hand done ! அடுத்த பணிக்குள் புகுந்த அரை அவரில் முந்தையது முழுசும் cache memory–யிலிருந்து காலியாகியிருக்கும் என்பதே எனது வாடிக்கை ! ஆனால் XIII தொடரை தலைமாட்டில் வைத்துத் திரியும் நண்பர்களுக்கு, அந்தப் புரிதல் வேரூன்றியிருப்பின், மேற்கொண்டும் ரம்யமூட்டும் ! Maybe இந்த ஆராய்ச்சிகளெல்லாம் ஏற்கனவே நீங்கள் செய்து முடித்த ஒன்று தானெனில் – kudos guys !  And சமீப பழக்கங்களைப் போலவே,இங்கும் கடைசிப் பக்கத்தில் சில இன்டெர்நெட் தேடல்களுக்கான லிங்குகளைப் பகிர்ந்துள்ளேன் ! Give it a try people & you will not be disappointed !!



Marilyn Monroe

எது எப்படியோ – ஒரு ஸ்பின்-ஆஃப் இத்தனை தெளிவாய் அமைந்திடுவது அத்தி பூத்தாற் போலான நிகழ்வே என்பதும் ; கதையின் ஒரு முக்கிய உருப்படிக்கு அந்தத் தெளிவு வாய்த்து விட்டது அட்டகாசம் என்பதும் இங்கே பதிவிடப்பட வேண்டிய சமாச்சாரம் # 1 ! இதே தெளிவையும், விவேகத்தையும் தொடரின் பூனைக்குட்டிகளுக்கும், ஓரமாய் நின்று வெண்சாமரம் வீசிய மாந்தர்க்கும் எதிர்பார்த்தால், அது தான் சிக்கலின் ஆரம்பம் என்பது  பதிவிடப்பட வேண்டிய சமாச்சாரம் # 2. அதே போல மனுஷனுக்கு வயதாகி வருவதை அழகாய்ச் சுட்டிக்காட்டும் ஆற்றல் இவை போன்ற ஆக்கங்களுக்கு உண்டு என்பதுமே சமாச்சாரம் # 3. இந்த ஆல்பத்தோடு நான் மல்லுக்கட்டியது வெறும் 2 நாட்களாக இருக்கலாம் தான் ; ஆனால் அது கோரிய உழைப்பு எனது தற்போதைய வயசுக்குப் பன்மடங்கு அதிகமாய்த் தோன்றியது நிச்சயமாய் மிகையில்லை ! And இதை நமது கருணையானந்தம் அவர்களிடம் தந்து அவரைப் படுத்தி எடுத்ததை நினைத்தால் இப்போது உதறுகிறது கை + கால் ! கொரோனோவுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பிற்பாடு, ஏதேனும் லேகியம் – லீகியம் பக்கமாய் விஞ்ஞானிகளின் கவனத்தைத் திசைதிருப்ப வாய்ப்பிருப்பின் – மீண்டும் இளமை திரும்ப ஏதாச்சுமொரு மருந்தைக் கண்டுபிடிக்கச் சொல்லிக் கேட்டுப் பார்க்க எண்ணியுள்ளேன் ! ரொம்பலாம் வேணாம் ஒரு 10 வருஷம் ரிவர்ஸ் கியர் போட முடிஞ்சாக்கா அடுத்த spin-off-குத் தெம்பாய்ப் பேனா பிடித்தது போலவும் இருக்கும் ; மண்டையில் glare அடிப்பதும் குறைஞ்சா மாதிரி இருக்கும் ! So எல்லாமே விஞ்ஞானத்தின் கைகளில் தானுள்ளது இனி !! அது வரைக்கும் ஜார்கண்ட் பக்கமாய் பயணம் புறப்பட உத்தேசித்துள்ளேன் ! Phewwwwww !!

ஏன் # 2 (த.வா.கு. ஏன்,,,,?)

சில தருணங்களில் எத்தனை தலைகீழாய் நின்று நீங்கள் தண்ணீர் குடிக்கப் பிரயத்தனங்கள் மேற்கொண்டாலுமே, என் தரப்பில் அரங்கேறிடும் நிகழ்வுகளையோ ; அவை சார்ந்த thought process-களையோ நீங்கள் யூகிக்க வாய்ப்பே லேது ! And த.வா.கு. தற்போதைய இதழின் காரணம் என்ன....? என்ற கேள்விக்கான விடையுமே அதே ரகம் தான் ! 

To cut a long story short :

இந்த MAXI லயன் format ; இதனில் டெக்ஸ் வில்லர் பெரியதொரு பக்க அளவில் – என்ற திட்டமிடல்கள் எல்லாமே இன்னொரு மொழியில் நம் ‘தல‘யைப் பேச வைத்திட நானும், ஜுனியரும் போட்ட திட்டமிடல்களின் பலன்களே ! (அந்த இன்னொரு மொழி இதுவா ? அதுவா? என்ற யூகங்கள் வேண்டாமே ; சத்தியமாய் அதனை யூகிக்க வாய்ப்புகள் பூஜ்யம்) ஒரே சமயத்தில் தமிழிலும், அந்த இன்னொரு மொழியிலும் ஒரே கதையினை ; ஒரே format –ல் வெளியிடுவதாயின் – பிராசஸிங் & அச்சில் ரொம்பவே இலகுவாகி விடும் & செலவுகளும் ஒன்றுக்குப் பாதியாய் பகிரப்படும் என்பது press room basics ! இந்தச் சிந்தனை போன வருஷமே துளிர்விட்டிருந்த போதிலும், 2019-ல் எனக்கு தொடர்கதையாகிட்ட உடல் சார்ந்த உபாதைகளின் உபயத்தால் எல்லாவற்றையும் 2020-ல் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைக்க நேரிட்டது ! But the planning ; the basics were all done early in 2019 ! 

ஒரு பக்காவான முதல் இதழை தமிழிலும், இன்னொரு மொழியிலும் தயாரித்துப் பார்ப்பது ; அந்த மாதிரிகளைக் கொண்டு மார்க்கெட் சர்வே எடுப்பது என்பதே எண்ணவோட்டம் ! டெக்ஸை அறிமுகம் செய்வதெனில் - ஒற்றை ஆல்பத்தில் பூர்த்தியாகக் கூடியதொரு சாகஸம் ; விறுவிறுப்பிற்குப் பஞ்சம் வைத்திடா சாகஸம் - என்று எதைத் தேர்வு செய்யலாமென்ற சிந்தனைக்குள் லயித்த போது எனக்குள் அன்றைக்கு நிழலாடியது “தலைவாங்கிக் குரங்கு” தான் – simply becos 35 ஆண்டுகள் கழிந்த பிறகுமே ‘தல‘ நம் மத்தியில் விஸ்வரூபம் எடுத்து நின்றிடப் பிள்ளையார் சுழி போட்டுத் தந்த இதழே இது தானே ? So புதிதாய் ஒரு துவக்கத்திற்கு சென்டிமெண்டாகவுமே ‘த.வா.கு‘ ஓ.கே. என்று பட்டது ! Thus began the renewed love affair with த.வா.கு.! 

இந்த MAXI format-ஐ தலைக்குள் அசைபோட்டுக் கொண்டேயிருந்த போது – ‘அட… அடுத்த மொழியை அடுத்தாண்டுக்குப் பார்த்துக்குவதெல்லாம் சரி தான்; அது வெளியாகும் வரையிலும் தமிழில் MAXI தொங்கலில் விடுவானேன் ? தமிழ் பதிப்புக்கு அத்தனை காத்திருப்பு தேவையில்லையே ?!‘ என்று தோன்றியது ! So ஏற்கனவே நம்மிடம் மறுபதிப்புக்கென வாங்கி கைவசமிருந்த இதர கலர் கதைகளையும் மாக்ஸி சைசுக்கு மாற்றம் செய்து ஈரோட்டில் வெள்ளோட்டம் பார்த்தோம் ! அந்தச் சூட்டோடு சூடாய் வெளியானவை தான் போன வருஷத்தின் ‘பழி வாங்கும் பாவை‘ & நடப்பாண்டின் துவக்கத்தின்  “இருளின் மைந்தர்கள் – 1 & 2” ! எனது திட்டமிடலின்படி, “த.வா.கு.வை அந்த வேற்று மொழியில் மட்டும் துவக்க இதழாய்க் களமிறக்கி விட்டு, அதன் தமிழ் பதிப்பை சில காலம் அடைகாத்திருந்துவிட்டு அப்புறமாய் இங்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன் ! ஆனால்… ஆனால் நடப்பாண்டில் கொரோனா குறுக்கெலும்பைக் கழற்றி விட – அந்த வேற்று மொழிப் பதிப்பு முயற்சியும் கருவிலேயே காலாவதியாகிப் போனது ! “உள்ளதை ஒழுங்காய்ச் செய்தாலே போதும் ; இந்த விஷப்பரீட்சைகளெல்லாம் இப்போதைக்கு வேணவே வாணாம்டா சாமீ!” என்று புலனாகிட, சகலத்தையும் ஓரமோ ஓரம் கட்டிவிட்டோம் ! 

Formatting பணிகள் முழுவதும் முடிவுற்று, ராயல்டியும் செலுத்தப்பட்ட நிலையில் “த.வா.கு. துயில் பயில்வது நார்மலான நாட்களில், பெரியதொரு சுமையாய்த் தென்பட்டிராது தான் ! ஆனால் இன்றைக்கோ சம்பளங்களை முழுசாய்க் கண்ணில் காட்டவே தட்டுத் தடுமாறும் தருணத்தினில் “த.வா.கு” மாத்திரமன்றி ; இன்னும் இதே போல ஆராமாய் ஓவ்வெடுத்து வரும் கதைகளையும் ஏதேனுமொரு விதத்தில் களமிறக்கி, அரையணா, காலணாவைத் தேற்ற முடிந்தால் தேவலாமே என்று சபலமே மேலோங்கியது ! அதன் தொடர்ச்சியே “த.வா.கு” வினை MAXI சந்தாவில் வெளியிட நான் எண்ணியது ! ஆனால் ‘இது வேண்டாமே?‘ என்ற எண்ணங்கள் உங்கள் மத்தியில் பரவலாய்த் தென்பட்டிட, ரிவர்ஸ் கியர் போட்டு விட்டேன்! And சரியாக அத்தருணத்தில் தான் நமது ‘ஆன்லைன் புத்தக விழா‘ பற்றிய திட்டமிடல் அரங்கேறி வந்தது ! ரைட்டு… சந்தா ரயிலில் தான் ஏற்றி விட முடியலை… குரங்காரை ஷேர் ஆட்டோவிலாவது பயணிக்கச் செய்வோமே என்று நினைத்தேன்! அதன் பலனே “த.வா.கு” முழுவண்ண MAXI - current edition !

And likewise for ரோஜரின் “நேற்றைய நகரம்”‘ !! இதுவுமே சுமார் 4 ஆண்டுகளாய் வெளிச்சத்தைப் பார்க்கக் காத்திருக்கும் சாகசம் எனும் போது, short notice-ல் இதனை புத்தக விழா ஸ்பெஷலாய் இறக்கி விடுவதிலும் சிரமம் இருக்கவில்லை & இதன் விற்பனையின் உபயத்தில் அதனில் பூட்டுண்டு கிடக்கும் ராயல்டி தொகையேனும்  தேறினால் கூட அடுத்தாண்டின் ஏற்பாடுகளுக்கு உதவிடுமே  என்று பட்டது ! அதே சமயம் கலரில் மனுஷனை உலவச் செய்து செலவுகளையும் கூட்டி, விலைகளை ஜாஸ்தியாக்கிட வேண்டாமென்று தோன்றியதால் நேற்றைய நகரம் கருப்பு-வெள்ளை நகரமாகவே உதித்துள்ளது ! 

பொதுவாய் நல்ல திட்டமிடல்களோடே நிதிகளை நான் கையாள்வது வழக்கம் ; so இந்த கொரோனா வில்லங்கங்கள் கூட மாமூலானதொரு தருணத்தில் சமாளிக்க இயலா இக்கட்டாக  நமக்கு உருப்பெற்றிருக்கக்கூடாது தான் ! ஆனால் நம் நேரமோ-என்னவோ ; பிப்ரவரியில் நமது அச்சு இயந்திரத்தினை upgrade செய்யும் நோக்கில் கொள்முதல் ஒன்றை செய்திருந்தோம். கையில் உள்ளதொரு பழசைத் தட்டிவிட்டு, இந்தப் புதுசை உட்புகுத்துவது திட்டம் ! So பெரியதொரு முதலீடின்றி upgradation சாத்தியப்பட்டிருக்கும் என்பதே எனது நினைப்பாக அன்றைய பொழுதினில் இருந்தது !  ஆனால் மார்ச்சில் அத்தனையுமே தலைகீழாகிப் போக - எதையும் யோசிக்கும் அவகாசமே இருந்திடவில்லை - கதவுகளை பூட்டி விட்டு லாக்டவுணுக்குள் தஞ்சம் காணும் அவசரத்தில் ! And இன்றைக்கு கொஞ்சமாய் இறுக்கங்கள் தளர்ந்து விட்டுள்ள போதிலும், பொதுவாக தொழிலில் நிலவிடும் மந்த சூழலில், பழசைச் சீந்தக் கூட நாதியின்றிப் போய் விட்டது ! So, இறக்குமதி செய்து மே மாதம் நம்மை வந்து சேர்ந்த புது மிஷினானது கிட்டங்கியில் கம்பீரமாய்த் துயில் பயின்று வருகிறது - அதனோடே கணிசமான முதலீடையும் துயிலச் செய்தபடிக்கு ! இதனில் மட்டும் ஒரு முரட்டுத் தொகை தங்கியிருக்காது போயிருப்பின், இன்றைய தடுமாற்றங்கள் நிச்சயமாய் நம்மிடம் இருந்திராது ! And எதைத் தின்னால் பித்தம் தெளியுமோ ? என்ற பதைபதைப்பினில் "இரத்தப் படலம்" மறு-மறுக்கா புராஜெக்ட்டினுள்ளும் குதிக்கும் அவசரம் என்னுள் இருந்திராது ! அந்த வறட்சியின்  நீட்சியே இன்றைய த.வா.கு. படலமும் !! Sometimes the roll of the dice works out o.k. ; sometimes it doesn't ! So அவ்வேளைகளில் வியாபாரத்தின் பக்கமாய் சமரசம் செய்து கொள்வது தவிர்க்க இயலாது போகிறது ! So இதுவே “ஏன்” # 2 ன் பின்னணி ! 

அப்புறம் ஏன் # 3 ?? பற்றி எழுதுவதாயின் - அது கேள்வி எண் 1-ன் தொடர்ச்சியாகிடும் ! அது பற்றியும், இந்த ஆன்லைன் புத்தக விழா பற்றியும்,  அடுத்த பதிவினில் folks !!! மிடிலே இதுக்கு மேலே டைப்படிக்க !!  Bye guys !! See you around !! Have a beautiful Sunday !!

நாளை நமது ஆன்லைன் திருவிழாவின் இறுதி நாள் ; give it a try folks - if you haven't done it yet !!

பி.கு. : ஆன்லைன் புத்தக விழாவின் பரபரப்பினில் ஆபீசில் அத்தினி பேரும் பிசி - என்னைத் தவிர ! So சதியின் மதி அட்டைப்படம் + உட்பக்க டிஜிட்டல் கோப்புகளை வாங்கிட நேரமின்றிப் போய் விட்டது ! நாளைக்கு காலையில் கண்ணில் காட்டுகிறேன் folks !!