நண்பர்களே,
வணக்கம். பரபரப்பான சென்னைப் புத்தக விழாவினில் நண்பர்களோடு அட்டகாசச் சந்திப்பு ; அழகான விற்பனைகள்; பொங்கல் விடுமுறைகள் ; தொடரும் மாதத்துப் புது இதழ்களுக்கான பணிகள் ; புதிது புதிதான படைப்பாளிகளுடன் தொடர்புகள் என கடந்த 7 தினங்களும் நம் கோலிவுட்டின் ஒரு கனவுக் காட்சி போல் கட்டவிழ்ந்தன ! (என்ன ஒரே வித்தியாசம் - மரத்தைச் சுற்றி நான் டான்ஸ் ஆடும் போது, என்னோடு சேர்ந்து கொள்வது கார்சனும், ஜிம்மியும் ; சைமனும் தானே தவிர - ஹன்சிகாவோ ; சமந்தாவோ அல்ல !) சொல்லப் போனால் - கடந்த 7 தினங்கள் மட்டுமே என்றில்லாமல் ஆண்டுகள் மூன்றாய் நம் இதழ்களின் அட்டவணையிலும் சரி ; இங்கு இந்த வலைப்பூவிலும் சரி - அரங்கேறி வரும் நிகழ்வுகளின் சகலமும் கூட ஒரு High Definition அற்புதக் கனவாய்த் தான் எனக்குத் தோற்றம் தருகின்றது ! 'இனி இழக்க என்னவுள்ளது ?'' என்ற mindset-ல் ஜனித்த நமது மறுவருகை - பத்திரிகை உலகை புரட்டிப் போடும் பிரம்மாண்டமாய் இல்லாது போனாலும், அது நாள் வரை நாம் பழகிப் போயிருந்த காமிக்ஸ் இலக்கணங்களை லேசாக மாற்றி எழுதும் விதமாய் அமைந்துள்ளது நிஜம் என்று சொல்லலாம் தானே ?! அந்த மாற்றம் நிகழ்வதன் மையப் பின்னணி இந்த வலைப்பக்கமும், இங்கே சங்கமிக்கும் உங்கள் சகலரின் positive energy-ம் தான் என்பதை எந்த மேடை கிடைத்தாலும் என் வெண்கலத் தொண்டையில் சொல்லத் தயங்க மாட்டேன் நான் ! 'போடறான்டா டேய்..! பயல் வகையாய் சோப் போடறான் !' என இதுவொரு முகஸ்துதிப் படலமாய் ஒரு குட்டியான சதவிகிதத்தினருக்குத் தோற்றம் தரக்கூடும் என்பதை நான் உணராது இல்லை ; ஆனால் end of the day நான் சொல்வதன் நிஜம் புரியாது போகாது என்ற நம்பிக்கையுள்ளது நிறையவே ! ஒரு "இரத்தப் படலம்" முழுத் தொகுப்பினை எடிட்டிங் செய்ய மட்டுமே மூன்றரை மாதங்கள் எடுத்துக் கொண்ட எனக்கு - இன்று மாதம்தோறும் ஏதாவதொரு 'கடவாய்க்குள் கட்டைவிரல் படலம்' சாத்தியமாகிறது என்றால் - அதன் பின்னணியில் நிச்சயமாய் நான் அமர்ந்திருக்கக்கூடிய போதி மரங்களோ ; திடீர் சூப்பர் சக்திகளை நல்கக் கூடிய பாஷாணங்களோ காரணமாகிடாது ! எத்தனை கரணமடித்தாலும் அதனை ரசிப்பதற்கும், கரணம் தப்ப நேரிட்டால் என்னைத் தாங்கிப் பிடிக்கவும் நீங்கள் சதா சர்வ காலமும் காத்திருக்கிறீர்கள் என்ற புரிதலே இன்றைய மாற்றங்களுக்குப் பின்புலம் எனும் போது - no amount of thanks can ever be enough !!
குற்றால அருவி போல் ஆர்ப்பரிக்கும் சமூக வலைத்தளக் குரல்களின் இன்றைய உலகினில் - '200' எனும் ஒரு குட்டியான மைல்கல்லின் நிஜப் பரிமாணம் எத்தகையதோ - நானறியேன் ! ஆனால் "காமிக்ஸ் காதல்" மாத்திரமே நம் ஒற்றை agenda என்றான பின்னே, இத்தனை காலமாய் ; இத்தனை பதிவுகளாய் அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், சமயத்தில் எனக்கே ரீங்காரமடிக்கும் என் எழுத்துக்களில் இன்னமும் சுவாரஸ்யம் கண்டு வருவதும் சுலபமான சமாச்சாரங்கள் அல்ல என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமே இருக்க இயலாது ! இப்போதெல்லாம் ஒவ்வொரு பதிவையும் உங்களின் அதகளப் பங்களிப்புகளால் ஒரு திருவிழாவாக்கும் அந்தப் பாணியின் பலனாய் பதிவுகளை உருவாக்கும் வேலைகளை / வேளைகளை ஒரு சிரமமாய்க் கருதவே தோன்றுவதில்லை ! எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல - காமிக்ஸ் வாசிப்பு ; ரசனைகள் ; மாற்றங்கள்; பரிமாற்றங்கள் என்பதையெல்லாம் தாண்டி இங்கு உதயமாகிடும் புதுப் புது நட்புகளை நேரில் தரிசித்திட இயலும் போது ஒரு தட்டு நிறைய வறுத்த கறியைப் பார்க்கும் கார்சனைப் போல ஏகாந்தமாய் உணர்கிறேன் !! எங்கெங்கோ நிலைகொண்டிருக்கும் நம் வாசகக் குடும்பத்தை ஒரெட்டு நெருங்கி வரச் செய்ததே இந்த வலைப்பக்கத்தின் நிஜ சாதனை என்பதில் நிச்சயம் நமக்குப் பெருமிதமே ! Thanks for being such awesome comics lovers & such wonderful people !!!!
"சரி...'200' -ஐ எட்டியாச்சு ; விஷயம் / விசேஷம் என்னவோ ? " என்ற உங்களின் எண்ணவோட்டம் உரக்கவே எட்டுகிறது என் செவிகளை !! Truth to tell - உங்களில் பலரும், இந்த இருநூறாவது பதிவு எதைப் பற்றியதாக இருந்திடும் என்பதை யூகித்து இருப்பது நிச்சயம் ! ஒரு நம்பருக்கான பதிலாய் இன்னொரு நம்பரை நோக்கி விரலைக் காட்டி விட்டால் இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேறிடாதா ? So - 200 ? என்ற கேள்விக்கு - 350 !! என்பதையே பதிலாக்குகிறேன் ! நான் குறிப்பிடுவது இந்தாண்டின் பிற்பகுதியில் வரக்காத்திருக்கும் முத்து காமிக்ஸின் 350-வது இதழைப் பற்றித் தான் என்பதைப் புரிந்திருப்பீர்கள் ! நாம் தற்போதிருப்பது இதழ் நம்பர் 337-ல் தான் எனினும், இந்தாண்டில் (மும்மூர்த்திகளின்) மறுபதிப்புகள் கணிசமானதொரு எண்ணிக்கைக்கு வித்திடவிருப்பதால் - 350-ஐ எட்டிப் பிடிக்க கஷ்டம் ஏதும் இருந்திடப் போவதில்லை தான் ! So லயனின் 250-வது இதழும் ; முத்துவின் 350-வது இதழும் ஒரே ஆண்டினில் அரங்கேறும் சந்தோஷங்கள் காத்துள்ளன 2015-ல் !
லயன் # 250-ல் 'தல' அதகளம் செய்யவுள்ள போது - முத்து # 350-ல் யாருடைய 'ரவுசு' காத்திருக்குமென்று நான் சொல்லவும் தான் வேண்டுமா - என்ன ?!! Oh yes.... நம் அபிமானத் 'தளபதி' - முற்றிலும் புதியதொரு கதைபாணியில் கலக்கக் காத்திருக்கும் - "என் பெயர் டைகர் !" முத்துவின் 350-வது இதழாக அதிரடி செய்யக் காத்துள்ளது ! கேப்டன் டைகரின் கதைவரிசைகளில் 4 தனித்தனிப் பாணிகள் உண்டென்பதை இணையப் பரிச்சயம் அதிகமிலா நண்பர்களின் பொருட்டு சொல்லுவது அவசியமாகிறது !
Before I sign off : சில சந்தோஷச் சேதிகள் :
- நாம் தற்சமயம் வெளியிட்டு வருவன - டைகரின் இளம் வயது சாகசங்கள் தாங்கிய : YOUNG BLUEBERRY தொடர் !
- 'தங்கக் கல்லறை' ; 'மின்னும் மரணம்' உட்பட - டைகரின் கிளாசிக் சாகசங்களைக் கொண்டவை - LT .BLUEBERRY தொடர் !
- LMS இதழில் துவங்கிய ஓவியர் வான்சின் சித்திரங்கள் தாங்கிய (மினி) தொடரானது MARSHALL BLUEBERRY !
இந்த மூன்றைத் தவிர - MISTER BLUEBERRY என்ற நான்காவது கதை வரிசையொன்றும் உள்ளது ! அதனில் மொத்தம் 5 ஆல்பம்கள் உள்ளன ! இவை அனைத்துமே - டைகர் கதைகளின் ஓவியரான Jean Moebius Giraud-ன் solo கைவண்ணங்கள் ! கதை + சித்திரங்கள் - என இரண்டுமே அவரது பொறுப்பில் இருந்திட 1995-2005 என்றதொரு 10 ஆண்டுக் காலகட்டத்தினில் இந்த 5 ஆல்பம்களும் தயாராகின ! மொத்தம் 252 பக்கங்களை ஆக்கிரமிக்கின்ற இந்த Mr .BLUEBERRY 'ஏக் தம்மில்' வெளியாகப் போவதே நமது முத்துவின் இதழ் # 350 !! முழு வண்ணத்தில் - வழக்கமான பெரிய சைசில் - hardcover பைண்டிங்கோடு வரக்காத்திருக்கும் இந்த இதழுக்கு அவகாசம் நிறையவே உள்ளதால் இப்போதைக்கு அறிவிப்போடு நிறுத்திக் கொண்டு - முன்பதிவுகளை இதழின் வெளியீட்டுக்கு 90 நாட்களுக்கு முன்பாய்த் துவக்கிடுவோம் ! ஏற்கனவே சென்ற பதிவில் நான் கோடிட்டிருந்த "கார்ட்டூன் ஸ்பெஷல்" இதழும் கூட சந்தாவிற்கு சம்பந்தமிலா புது வரவு என்பதால் கா.ஸ்பெ + மு.கா.350 ஆகிய இரு இதழ்களுக்குமாய் சேர்த்து புக்கிங் செய்யும் எற்பாடைச் செய்யலாம் !
"என் பெயர் டைகர்" கதைகள் நானே இன்னமும் படித்திராதவை என்பதால் அவற்றின் ஆழங்களைப் பற்றியோ ; சுவாரஸ்யங்களைப் பற்றியோ சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்பதே நிஜம் ! ஆனால் 'மின்னும் மரணங்களையும்' ; தங்கக் கல்லறைகளையும்' அளவுகோல்களாக வைத்திராது இவற்றை நாம் படிக்க நேரிட்டால் நிச்சயமாய் தூள் கிளப்பும் என்பதில் எனக்கு ஐயமில்லை ! டின்டினின் கர்த்தாவான ஹெர்ஜுக்கு அடுத்தபடியாக பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளுள் சிலாகிக்கப்படும் ஜிரௌவின் ஆற்றல்களில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாதென்பதால் முழுக்க முழுக்க அவரது கைவண்ணத்தில் உருவான இந்தத் தொடர் சோடை போகாது என்பது உறுதி ! இந்தக் கதைவரிசையோடு எனக்கொரு சிறு personal அனுபவம் கூட உள்ளது ! 1995-ன் இறுதிகளில் இதன் முதல் ஆல்பம் பிரான்சில் வெளியான சமயம், பாரிசின் முக்கிய வீதிகளுள் ஒன்றான Champs d ' Elysee -ல் உள்ள FNAC என்றதொரு பிரம்மாண்டமான புத்தகக்கடைக்கு ஜிரௌ அவர்கள் வருவதாக இருந்தார் - முதல் நாள் விற்பனையின் போது ஆட்டோகிராப் போட்டுத் தரும் பொருட்டு ! நான் பாரிஸ் செல்லும் போதெல்லாம் அந்தக் கடைக்குப் போவது வாடிக்கை என்ற முறையில் அன்றைய தினம் தற்செயலாக அங்குதானிருந்தேன் - பராக்குப் பார்த்துக் கொண்டு ! மக்கள் பொறுமையாய், லைனில் நிற்பதைக் கவனித்த போது 'ஹ்ஹ்ம்ம்ம்...' என்ற பெருமூச்சு மட்டுமே வெளியானது என்னிடம் ! அவர் வரும் வரைக் காத்திருக்க எனக்கு அவகாசமில்லை என்பதால் வேடிக்கை பார்த்து விட்டு நடையைக் கட்டினேன் ! நேரம் இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் ஒரு ஆல்பத்தை வாங்கிக் கொண்டு நானும் கூட்டத்தில் ஐக்கியமாகி இருப்பேன் ! (அவர் ஏதேனும் பிரெஞ்சில் பேசி இருந்தால் - பெ..பெ..பெ.. தான் பதிலாகிப் போயிருக்கும் என்பது வேறு கதை !) இதோ அந்த 5 ஆல்பங்களின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் :
இந்தக் கதைவரிசையை ஒரே இதழாய் வெளியிடுவதற்கும் காரணமுண்டு ! துவக்க சாகசங்களைத் தாண்டிய பின்னாட்களது டைகர் ஆல்பம்களில் ஒரே கருவானது கதை to கதை தொடர்வதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது ! So ஆண்டுக்கு 2 அல்லது மூன்று கதைகள் என நம் வழக்க பாணியில் வெளியிடும் போது கதைகளின் continuity விடுபட்டுப் போவதால் - கதைகளின் வேகம் சற்றே மட்டுப்பட்டுத் தெரிகிறது ! ஆனால் இது போல் ஒரே stretch -ல் வெளியிட்டு விட்டால் நிச்சயமாய் அந்த சிக்கல் எழாது என்ற மகா சிந்தனை சமீப மழை நாளொன்றில் என் மண்டைக்குள் உதித்ததால் அன்றே உதயமானது "எ.பெ.டை" !!
மார்ச் மாதம் மார்ஷல் டைகரின் பாக்கி நிற்கும் இரு கதைகள் (வேங்கைக்கு முடிவுரையா ? & ரணகள ராஜ்ஜியம்)வெளியாவதோடு அந்தக் கதைவரிசை முற்றுப் பெறும் !
ஏப்ரலில் - மின்னும் மரணம் - The Complete Saga வாயிலாக அதன் இறுதிப் பாகமான "கானலாய் ஒரு காதல்" வெளியாகும் சமயம் LT .BLUEBERRY தொடரும் நிறைவு பெற்றிருக்கும் !
முத்து 350 இதழின் வருகையினைத் தொடர்ந்து MISTER BLUBERRY தொடரானது துவக்கத்தையும், முற்றுபுள்ளியையும் ஒரே தருணத்தில் கண்டிருக்கும் !
எஞ்சி நிற்கும் YOUNG BLUEBERRY தொடரினில் இது வரை 20 ஆல்பம்கள் வெளியாகியுள்ளன ; நாமோ பாகம் 9-ல் தற்சமயம் நிற்கிறோம் ! பாக்கியுள்ள 11 பாகங்களையும் கூட அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் இதே டெம்போவில் வெளியிட்டு விட்டால் டைகரின் தொடரில் சகலத்தையும் போட்டு முடித்திருப்போம் !! பாருங்களேன் இந்தாண்டில் காத்திருக்கும் டைகர் மெனுவை :

- மார்ஷல் டைகர்- 2 கதைகள் - 90 pages
- மி.ம.-11கதைகள் - 536 pages
- என் பெயர் டைகர் - 5 கதைகள் - 252 pages
ஆக மொத்தம் - 878 பக்கங்களில் - 18 கதைகள் !!!
லேட்டாக வந்தாலும் அதகள லேட்டஸ்ட் தான் 'தளபதி'யின் பாணியோ ?!! Let's celebrate guys !! ஸ்டார்ட் the மியூசிக் !!
Moving on, ஏப்ரலில் காத்திருக்கும் "மின்னும் மரணம்" இதழின் ரிலீசோடு - லயனின் இதழ் # 250-ஐக் கூட வெளியிட்டிடலாம் என்ற எண்ணம் கொஞ்சமாய் என் மனதில் ஓடியது ! ஆனால் ஒரே வேளையில் இரு பெருந்தலைகளும் வெளியாகும் தருணமெனில் - ஒளிவட்டம் பகிரப்படும் என்பதும் புரிகிறது ! நான்கு இலக்க விலையினில் ஒரு தமிழ் காமிக்ஸ் வெளியாகும் முதல் சந்தர்ப்பத்தையும் ; தளபதியின் moment under the sun -ஐயும் வேறு எந்த விஷயத்தாலும் மட்டுப்படுத்திட வேண்டாமெனத் தீர்மானித்தேன் ! தவிரவும், இரு மெகா இதழ்களையும் ஒரே சமயத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டால் டிரௌசர் சந்தேகத்துக்கு இடமின்றிக் கிழிந்தே போகும் என்பதையும் உணர்ந்தேன் ! So - ஏப்ரலில் சென்னையில் நடக்கவிருக்கும் "சென்னைப் புத்தக சங்கமம்" விழா வேளையில் இந்த ரிலீசை வைத்துக் கொள்வோமா ? What say folks ?
தற்போது நடந்து வரும் சென்னைப் புத்தக விழாவில் நமக்கு highlight என்று நான் சொல்ல விரும்புவது ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்று விஷயங்களை ! பௌன்சரின் வெளியீடு ; ஒரு சர்ச்சைக்குரிய கதைத்தொடரின் ஆரம்பம் என முதல் highlight நாம் அனைவருமே எதிர்பார்த்ததே !
Highlight # 2 என்று சொல்ல வேண்டியது இந்தாண்டில் நம் ஸ்டாலில் மகளிரணியின் அற்புத உத்வேகமே !! பொறுமையாய் இதழ்களைப் புரட்டியதோடு - கை பிடித்து அழைத்து வந்திருந்த தத்தம் குட்டீஸ்களுக்கு புத்தகங்களை அள்ளியது பரவசம் தந்த காட்சி ! ஒரு இல்லத்தலைவி காமிக்ஸ் ஈடுபாட்டோடு இருப்பின், நமக்கு இன்னொரு தலைமுறை புது வாசகர்கள் நிச்சயம் அன்றோ ?
Highlight # 3 - மின்சார ஓட்டைகளைத் தேடி விரல் சொறுகும் நம் எவர்க்ரீன் இரும்புக்கை மாயாவியின் அதகள விற்பனை !!! இன்றைய இரவு வரையிலும் "நயாகராவில் மாயாவி" மாத்திரமே கிட்டத்தட்ட 1700 பிரதிகள் விற்பனையாகி எங்களை வாய் பிளக்கச் செய்துள்ளன ! "கிராபிக் நாவல் ; அடுத்த தலைமுறை ரசனை ; பௌன்சர் ; வாசிப்புக் களங்கள் விஸ்தீரணம் காண வேண்டும்" என்றெல்லாம் நான் ஒரு பக்கமாய் ஓலைப்பாயில் சுசு பெய்யும் நாய்க்குட்டியைப் போல 'தம்' கட்டி தொண்டை நரம்பு புடைக்க சப்தம் எழுப்பிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கமோ நம் பணியாளர்கள் மும்முரமாய் தினமும் சிவகாசியில் இருந்து வந்து சேரும் மாயாவி கட்டுக்களை இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் ! இன்று மாலை புத்தக விழாவிற்குச் சென்ற போது வடிவேலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற சங்கிலி முருகன் பாணியில் - "நான் சரியா தானே பேசறேன் ?" என்று அக்கம்பக்கமெல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளத் தோன்றியது ! Phew...!! இந்த விற்பனையை எக்கச்சக்கமான வாசகர்களின் பால்யங்களின் சுகமான நினைவூட்டலாய் பார்த்துக் கொள்வதா ? அல்லது "மாயாவி" எனும் அந்த மாயச் சொல்லின் அசாத்திய ஈர்ப்பாய்ப் பார்ப்பதா ? சத்தியமாய் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை !
பரீட்சைக்குப் படிப்பவனைப் போல ராவெல்லாம் கண் முழித்திருந்து ஒரு வண்டிப் புதுக் கதைகளை வாசித்து ; அவற்றிலிருந்து ஒன்றோ-இரண்டோ தேறும் என்ற தீர்மானத்தோடு 'லோ-லோ'வென்று நாயாய்ப் பேயாய் ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் அலைந்து அவற்றிற்கு உரிமைகளை வாங்கி ; மொங்கு-மொங்கென்று விடிய விடிய அவற்றை மொழிபெயர்த்து ; ஓராயிரம் நகாசு வேலைகளையும் செய்து இதழை வெளியிட்டுவிட்டு ; அதனை போணி பண்ணும் பொருட்டு திரும்பவும் 'தம்' கட்டி எழுத்துக்களை ஒன்றிணைக்க - சில சமயங்களில் வெற்றி-சில தருணங்களில் தோல்வி என்பதே யதார்த்தமாய் இருக்கும் வேளையில் -
நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் காபி சாப்பிடச் சென்ற நாட்களைச் சார்ந்த மனுஷன் ஒருத்தர் - விறுவிறு நடை போட்டு வந்து ஆஜராகி - 'அதே பெயர் ; அதே மொழிநடை ; அதே கதை ; அதே filler pages ; முடிந்தால் அதே அட்டைப்படமும் போதும் !' என்ற பார்முலாவோடு - கண்ணில்படும் இதர போட்டியாளர்களை ஒருவர் பாக்கியின்றி துண்டைக் காணோம்..துணியைக் காணோம் என்று ஓடச் செய்து விட்டு - என்னைப் பார்த்து 'பிம்பிலிக்கா..பிலாக்கி..!!' என்று நக்கலாயும் சிரித்தால் - 'ஞே' என்று திகைப்பதைத் தாண்டி என் முட்டைக்கண்கள் தான் என்ன செய்திட முடியும் ?! Take a bow - man with the steel claw !! Stunning show !!!
முகம் நிறைய வழியும் அசடைத் துடைத்துக் கொண்டே சென்னை விழாவின் போட்டோ படலத்தைத் தொடர்கிறேன் !!

![]() |
| போராட்டக் குழுத் தலைவருடன் ரகசிய உடன்படிக்கை ?? |
![]() |
| "டயபாலிக்" சண்முகசுந்தரம் அவர்தம் துணைவியோடு..! |
![]() |
| 78 இவரது birth certificate சொல்லும் வயது ! 18 நம் கணிப்பு ! |
Before I sign off : சில சந்தோஷச் சேதிகள் :
- LMS இன்னமும் 50 பிரதிகள் மட்டுமே கையிருப்பு என்ற நிலையைத் தொட்டு விட்டோம் !!
- "பூத வேட்டை" முழுவதுமாய்க் காலி ! "சிகப்பாய் ஒரு சொப்பனம்" ரொம்பக் குறைவான கையிருப்பு நிலையில்..!
- இம்மாத டயபாலிக் இதழில் 55 பிரதிகள் இத்தாலியப் பயணம் மேற்கொள்கின்றன - அவர்களது ரசிகர் மன்றத்திற்கு !
- இரு வாரங்களுக்கு முன்பாய் அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைகழகத்தைச் சார்ந்த இரு மூத்த புரபசர்கள் நம்மை சந்திக்க சிவகாசி வருகை தந்திருந்தனர் ! அவர்களது வளாகத்தில் உள்ள நூலகத்தில் - உலகின் மிகப் பிரம்மாண்டமான காமிக்ஸ் சேகரிப்புகளில் ஒன்று உள்ளதாம் ! "ஆசிய துணைக்கண்டத்தின் காமிக்ஸ் வெளியீடுகள்" பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் - தமிழில் உள்ள இதழ்களைப் பற்றி ஆய்வு செய்திடவும், அவர்களது லைப்ரரிக்கு அவற்றை சேகரிக்கவும் நம்மை சந்தித்திருந்தனர் ! ஆய்வுக் கட்டுரையை உருவாக்கும் மூத்த புரபசர் Dr.ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் தமிழர் என்ற வகையில் நமக்குக் கூடுதல் பெருமை ; ஏராளமான தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டார் ! அவரும் நம் வலைப்பூவை சமயம் கிட்டும் போதெல்லாம் வாசிப்பவர் என்பதைக் கேட்ட போது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றியது !! We are indeed honored Sir!! எல்லாவற்றையும் விட அவர்களுக்கு நமது ஓவியர் மாலையப்பனின் எண்ணற்ற அட்டைப்பட டிசைன்கள் பிரமிப்பின் உச்சத்தைத் தந்தது என்றே சொல்லலாம் ! பகல் பொழுது முழுவதையும் நம் அலுவலகத்தில் செலவிட்டவர்கள் புறப்படும் வேளை வந்த போது நம் இதழ்களின் கையிருப்பு அனைத்திலும் ஒன்றை - மாலையப்பனின் ஒரிஜினல் சித்திரங்களில் ஒரு சிறு கத்தையோடு சேர்த்து pack செய்து கொடுத்த போது அவர்கள் முகங்களில் தாண்டவமாடிய சந்தோஷத்துக்கு நிச்சயம் விலையே கிடையாது ! Michigan பல்கலை நூலகத்தில் நம் இதழ்களும், அங்கேயே உள்ள காமிக்ஸ் மியூசியத்தினில் மாலையப்பனின் ஓவியங்களும் பெருமையோடு அமரப் போகின்றன guys !! கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த கௌரவத்தை நமக்கு நல்கியுள்ள Dr.ஸ்வர்ணவேல் அவர்களுக்கும், Dr.சிதார்த் சந்திரா அவர்களுக்கும் நம் நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக!
கூட்டாய் நாமெல்லாம் வடம் பிடித்து இழுக்கும் இந்தத் தேர் மெள்ள மெள்ளவேனும் ஒரு சந்தோஷமான பாதையில் பயணம் செய்வது ஆண்டவனின் கருணையே ! அந்த நன்றியோடு தூங்கப் புறப்படுகிறேன் guys !! Take care !!