நண்பர்களே,
வணக்கம்! "பு பா மான், ஜியூ பா டிங்''! இன்னா மேன் - ஆரம்பமே ஒரு மார்க்கமா கீதே? என்று புருவங்களை உசத்துகிறீர்களா? மேற்படி வரி சீன மொழியில் ஒரு பழமொழி! அதாவது- "மெல்ல மெல்ல அடி வைத்து நடப்பதை எண்ணித் தயங்காதே! நடையே போடாமல் ஒற்றை இடத்தில் தேங்கிக் கிடப்பதை எண்ணி மட்டுமே பயம் கொள்!'' என்று பொருளாம் இதற்கு! "ஆஹாங்?'' என்கிறீர்களா? Oh yes- இம்மாதத்தின் V காமிக்ஸ் இதழானது தான் எங்கோ, எப்போதோ படித்த இந்த வரியைத் தேடிப்பிடித்து நினைவுபடுத்திக் கொள்ளத் தூண்டியது!
"வதம் செய்வோம் வேங்கைகளே!'' இம்மாதத்தின் டபுள் V காமிக்ஸ் இதழ்களுள் ஒன்று! நாயக/நாயகியரென்று யாருமில்லாத; கதையே ஹீரோவென்றானதொரு கிராபிக் நாவல்! பொதுவாய் கி.நா.க்கள் என்றாலே heavyweights வெளிவரும் மாதத்தில் அவற்றைக் கண்ணில் காட்டவே மாட்டேன் தான்! சுமோ மல்யுத்த வீரர்கள் கச்சை கட்டிக் கொண்டிருக்கும் போது ஓமகுச்சி நரசிம்மனை உள்ளே புகுத்திய கதையாகிடக் கூடுமே என்ற பயத்தில்! ஆனால், இந்த முறை ஒன்றுக்கு இரண்டாய் ஜாம்பவான்கள் டெக்ஸ் & ஸாகோரின் ரூபத்தில் களம் காணும் போதிலும் இந்த கி.நா.வை கோதாவுக்குள் இறக்கி விடத் தோன்றியது - simply becos இதனில் தென்பட்டதொரு இனம் புரியா வசீகரம் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையிருந்தது! ஆனால், ஜாம்பவான்களையே ஓரமாய்ப் போய் விளையாடச் சொல்விட்டு "வதம் செய்வோம் வேங்கைகளே'' முன்சீட்டைப் பிடுத்திடுமென்றெல்லாம் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை தான்! Of course - இது முதல் வாரம் மட்டுமே! And துவக்க அலசல்களை மட்டும் தான் பார்த்திருக்கிறோம்! இருந்தாலுமே பாராட்டுகளின் அந்த scale - இந்த ஆல்பத்தின் தாக்கத்தை அழகாய் உணர்த்துகின்றன! " சரி, ரைட்டு- இதுக்கும், ஆரம்பத்தில் நீ அலம்பல் விட்ட சீனப் பழமொழிக்கும் இன்னாய்யா சம்மந்தம்?'' என்கிறீர்களா? சொல்கிறேனே!
2026-ன் அட்டவணை கிட்டத்தட்ட ரெடி என்ற நிலை! ஆகஸ்டில் தான் ஐரோப்பியக் கோடை விடுமுறைகள் என்பதால் நமது படைப்பாளிகளில் பலரும் நெடும் லீவில் இருக்க, இறுதி இரண்டு ஆல்பங்களுக்கான ஒப்புதலை மட்டும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்! இந்த இரண்டுமே கிட்டியவுடன் "சுபம்'' சொல்லிவிட்டு அட்டவணையை அச்சுக்கு அனுப்பலாம் தான்! ஒவ்வொரு ஆண்டுமே அட்டவணையினை நான் இறுதி பண்ணும் காகிதத்தின் ஒரு மூலையில் கடைசி நிமிடத்தில் ஏதேதோ காரணங்களால் தேர்வு காணத் தவறிய கதைகளை சின்னதாயொரு லிஸ்ட் போட்டு எழுதி வைத்திருப்பேன்! Maybe இடைப்பட்ட நாட்களில் ஒரு window கிட்டினால் யாரை நுழைப்பதென்ற தடுமாற்றமே வேணாமென்ற நோக்கத்தில்! And இம்முறையும் அதைப் போலவே ஒரு list ஓரமாய் இருந்தது தான்! அவற்றுள் இடம் பிடித்திருந்த ஆல்பங்களோ - ஜாம்பவான் ஹீரோக்களையோ, ஹீரோயின்களையோ கொண்டதாக இருக்கவில்லை! மாறாக- கடைசி ஒரு மாதமாய் நான் உருட்டிப் பிடித்த சில வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட one-shots அவை! ஒரு வேகத்தில் அவற்றையெல்லாம் பரிசீலனைக்கு செம சீரியஸாய் எடுத்துக் கொண்டிருந்தேன் & அவற்றிற்கான விலைகளையும் கணக்கிட்டு மொத்தமாய் பட்ஜெட் போட்டும் பார்த்தேன்! அங்கே அடிச்சது தான் ஜெர்க்! மொத்த சந்தாத் தொகை நாம் விடாப்பிடியாய் தொங்கிக் கொண்டு திரியும் அந்த ஆறாயிரத்தைத் தாண்டிச் சென்றிருந்தது! ஆஹா.. அது தப்பாச்சே?! என்றபடிக்கு எவற்றையெல்லாம் லிஸ்டிருந்து அப்புறப்படுத்தலாமென்று யோசிக்க ஆரம்பித்தேன்!
🕸️ஆங்.. இவரு பெரிய "தலக்கட்டு''! இவருக்குக் கல்தா தந்தா - குரல்வளையில் கடி வாங்க நேரிடும்!
🕸️அச்சச்சோ.. இவரா? இவரு பயங்கரமான ஆளாச்சே?
🕸️ஆத்தீ.. இந்த யீரோயினி இல்லாட்டி தமிழகமே கொந்தளிச்சிடுமே?!
என்று பல சிந்தனைகள் தலைக்குள் ஓட- அந்தக் கத்திரி போடும் லிஸ்டிலிருந்து hero centric கதைகளின் பெரும்பான்மை தப்பிவிட்டன ! And பாவப்பட்ட 'கதையே, ஹீரோ' களங்கள் கீழேயிருந்த அந்த ஒப்புக்குச் சப்பாணி லிஸ்டிற்குக் குடி மாறிச் சென்றிருந்தன! இங்கே தான் உட்புகுகிறது "வதம் செய்வோம் வேங்கைகளே''!!!
பெரிய பெயர்கள் எல்லா நேரங்களிலும் தேவையல்ல! பெரிய பெரிய பில்டப்கள் சதா சமயங்களிலும் ஜெயத்துக்கு உத்தரவாதம் தருபவையல்ல! படைப்பினில் வீரியமிருந்தால், ஜாம்பவான்களையே தண்ணீர் குடிக்கச் செய்யலாமென்று இந்த ஒற்றை ஆல்பம் உணர்த்தியுள்ளது! So "இவுகள்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டோர்; அட்டவணைகளில் நிரந்தரர்கள்!'' என்றிருந்த சில மிதமான performers-களை ஓரம் கட்டவும் செய்யலாம் போலும் ; உலகம் நிச்சயமாய் மாற்றிச் சுழலவெல்லாம் செய்யாது! சரக்கு முறுக்காக இருந்தால் big names-களை சற்றே ஓய்வெடுக்க அனுமதிக்கவும் செய்யலாமென்ற தைரியத்தை எனக்கு "வதம் செய்வோம் வேங்ககைளே'' தந்துள்ளது! So அந்த நாயக பிம்பங்களோடு ஒரே இலக்கில் நிலை கொண்டிருப்பதை இனியும் தொடராமல், நல்ல கதைகளென்று மனதுக்குப்படுபவற்றினை அட்டவணைக்குள் நுழைப்பதில் பிழையில்லை என்ற புரிதலோடு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க நினைக்கிறேன் 2026-ன் அட்டவணையினில்! "பு பா மான்.. ஜியூ பா டிங்..!'' So wish me luck folks!
🗿கிழிஞ்சது! வருஷம் முழுக்க கி.நா.க்களைப் போட்டு இனி முழியாங்கண்ணன் கொலையா கொல்லப் போறானா?
🗿சொந்தக் காசிலே சூனியம் வச்சுக்கலாம்! ஆனா, நம்ம காசிலேல்லே விளையாடப் போறான்?
🗿போச்சா? "அவர்" கிடையாதா? "இவர்" கிடையாதா? உருப்பட்ட மாதிரித் தான்!
🗿ஒரு கதையை ரசிச்சது தப்பாய்யா? அதுக்கோசரம் ஓடற குதிரைகளை.. லாயத்திலே பிடிச்சா அடைப்பே?!
என்று பற்பல சிந்தனைச் சிதறல்கள் ஆங்காங்கே தெறிக்குமென்பதை யூகிக்க முடிகிறது! எனது பதிலோ ரெம்ப சிம்பிள்! சாதித்துக் காட்டிவரும் நாயக/நாயகியர் யாருக்குமே இடமில்லாமலோ ; உரிய மருவாதிகளோ இல்லாது ஒருக்காலும் போகாது! மாறாக, பெருங்காய டப்பிகளை நினைவூட்டும் பார்ட்டிகள் மட்டுமே கொஞ்சமாய், சுழற்சி முறையில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவர் ! அவர்களது ஸ்லாட்களில் மாத்திரமே இந்த "கதைகளே ஹீரோஸ்'' என்றான ஆல்பங்கள் உட்புகக் கூடும்! And மொது - மொதுவென கணிச எண்ணிக்கையிலும் அவை இராது; இரண்டோ- மூன்றோ slots கிட்டினாலே பெரிய பாடு!
So மெது மெதுவாய் அடியெடுத்து, சின்னச் சின்ன மாற்றங்களை நோக்கி மெதுநடை போடலாமா? என்பதே இம்மாத கி.நா.வின் சிலாகிப்புகள் என்னிடம் சொல்லும் சேதி! பார்ப்போமே - இதை நடைமுறை செய்திட முடிகிறதா? என்று ! யார் கண்டது- கடைசி நொடியில் பயம் மேலோங்க "இது எதுக்கு விஷப் பரீட்சை?" என்றபடிக்கே "நாயகரே பலம்''என்று நான் பால் மாறிடவும் வாய்ப்புண்டு தான்! But இந்த நொடிக்கு - சமுராய் பெரியவர் தந்திருந்த கெத்தில் மீசையை லைட்டாக முறுக்கித் திரியத் தோன்றுகிறது!
இம்மாத இளம் டெக்ஸ்+ ஸாகோர்+ சிக் பில் நிச்சயமான breezy reads என்பதால் அவை சீக்கிரமே உங்களது வாசிப்புகளுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுள்ளது! அந்த நம்பிக்கை தரும் தைரியத்தில் பெரிய பில்டப்களின்றி அடுத்த மாதம் காத்துள்ள தீபாவளி மலர் பணிகளுக்குள் மும்முரமாகிடத் தோன்றுகிறது! And காத்துள்ள கலர் டெக்ஸ் அதிரடி- block buster என்பதில் இம்மி கூட சந்தேகமில்லை எனக்கு! அது என்னவோ தெரியலை- சமீப காலங்களில் "தல'' மெக்ஸிக மண்ணை மிதிக்கும் போதெல்லாம் அனல் பறக்கிறது! Mexico Magic ஸ்பெஷலின் இரண்டு ஆல்பங்களும் பட்டையைக் கிளப்பிய அதே பாணியில் தீபாவளி மலரிலும் நம்மவர் மெக்சிகோவில் போட்டுத் தாக்குவது வேற லெவல்! So 336 பக்கங்களா??? என்று துவக்கத்தில் வாயைப் பிளந்தவன்- கதைக்குள் ஐக்கியமான சற்றைக்கெல்லாம் செம குஷியாகிப் போனேன்! தீபாவளிக்கு அற்புதமாய் மெருகூட்ட "தல'' சீக்கிரமே ரெடியாகிடுவார்! இங்கே ஒரே சிக்கல் தீபாவளி அக்டோபரின் மூன்றாம் வாரம் வரை தள்ளிப் போவது தான்! அக்டோபர் ஆரம்பத்திலேயே தீபாவளி இதழ்களை அனுப்பி விட்டால், பண்டிகை நேரத்துக்கு இவை பழசாகியிருக்கும்! So கொஞ்சமே கொஞ்சமாய் அக்டோபர் இதழ்களை லேட்டாய் அனுப்பலாமா? என்ற சிந்தனையும் ஓடுகிறது! What say folks??
அப்புறம் நமது கம்பேக்குக்குப் பின்பான சில out of stock டெக்ஸ் ஆல்பங்களை மறுபதிப்பிட எண்ணி வருகிறோம் - 2026-ன் புத்தகவிழா circuit-க்காக! அவற்றுள் ஒரு பகுதியாய் 'தலையில்லாப் போராளி'' MAXI சைஸில், கலரில் போட்டுத் தாக்கிடலாமா? என்ற திட்டமிடலும் உள்ளது! இது முழுக்கவே நமது இரண்டாவது இன்னிங்ஸின் பின்பான மறுபதிப்புத் திட்டமிடலே! ஆகையால் ரொம்ப முந்தைய டெக்ஸ் சாகஸங்கள் இதனில் இடம்பிடித்திடாது!
அப்புறம் அந்த golden age டெக்ஸ் க்ளாஸிக்ஸ் மறுபதிப்பு(கள்) தெறி கலரில் வரவுள்ளதைப் பற்றியுமே வாகானதொரு வேளையில் திட்டமிடலாம் folks! That again will be for later in 2026!
Bye for now! See you around! Have a wonderful weekend 👍