நண்பர்களே,
வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் காமிக்ஸ் பணிகளைக் கொஞ்சம் லாத்தலாய் செய்து முடிக்க முடிந்தது ! ஆனால் அதிசயத்தில் அதிசயமாய் – ஆடி மாதத்தில் மற்ற பணிகளும் லேசாய்ச் சுறுசுறுப்பாகிட; இரத்தப் படல ரிலீசும் நெருங்கிட, ஆந்தை விழிகள் – கோட்டானின் விழிகளாகிடாத குறை தான்! பயணம்… அப்புறமாய் இன்னும் கொஞ்சம் பயணம்… என்ற கூத்துக்கு மத்தியில் நமது காமிக்ஸ் திட்டமிடல்களுக்கு நேரம் ஒதுக்கத் திண்டாட்டமோ திண்டாட்டம் தான் ! ஆனால் இருக்கவே இருக்கிறதே – ரயில் நிலையங்களிலும்; விமான நிலையங்களிலும் ‘தேவுடா‘ காக்கும் தருணங்கள்!! ஆங்காங்கே காத்துக் கிடக்கும் சமயங்களில் தலைக்குள் நர்த்தனமாடி வந்தது முழுக்கவே ஈரோட்டுப் புத்தக விழாவுக்கான சிந்தனைகளும், 2019-ன் அட்டவணை பற்றிய இங்க்கி-பிங்க்கி-பாங்க்கிகளும் தான்!
கையில் ஒரு கோடு போட்ட நோட்… விரல்களில் ஒரு பேனா… வதனத்திலோ தாமஸ் ஆல்வா எடிசனுக்கே சவால் விடும் “ரோசனை” ரேகைகள்! எதையாவது பரபரவென எழுத வேண்டியது ; ஈயென்று முகம் முழுக்க மறுகணம் ஒரு புன்னகை நிழலாட வேண்டியது ; பேப்பரையே உற்றுப் பார்க்கும் மூன்றாவது நிமிடத்தில் உச்சா போகாத உராங்குட்டான் போல முகம் இறுக்கமாக – பரபரவென எழுதியதை – சரசரவென அடித்து வைப்பது ; அப்புறம் அதையே முறைத்துப் பார்ப்பது - என்று சிக்கிய காத்திருப்புகளையெல்லாம் சமீப நாட்களில் நான் செலவிட்டு வந்துள்ள விதம் இதுவே !! தூரத்திலிருந்து பார்க்கும் போது – ஏதோ ரிலையன்ஸ் குழுமத்தின் வரவு-செலவு கணக்குப் போடும் அம்பானி ரேஞ்சுக்குத் தோன்றியிருக்கும் ; ஆனால் இங்கே அமர்ந்திருப்பதோ “ரின்டின் கேன் உள்ளேயா ?”; “கமான்சே வெளியேவோ?” என்ற குழப்பத்திலிருக்கும் பேமானி மாத்திரமே என்பது எனக்குத் தானே தெரியும் ?! ஆண்டுக்கொருமுறை தொடரும் இந்த routine ; ஆண்டுக்கொருமுறை அதையே சொல்லி வைத்து உங்களை பிளேடு போடுவதுமே அந்த routine-ன் ஒரு அங்கமாகிப் போய் விட்டது !
கார்ட்டூன் சந்தாக்கள்; அப்புறம் ஆக்ஷன் ஜானர்கள் பற்றிய உங்களது எண்ணங்களைத் தெரிந்து கொண்ட பிற்பாடு – காத்துக் கிடப்பதோ நம் ஜீவிதத்துக்கு ஆதாரமாயிருக்கும் Black & White சந்தா பற்றிய அலசல் தானே ? இன்னும் சரியாகச் சொல்வதானால் – ‘டெக்ஸ் சந்தா‘ பற்றி!
A word of caution : “ச்சை… மஞ்சள் சட்டை போட்ட தொப்பிக்கார்களையே எனக்குப் புடிக்காது” என்று பழிப்புப் காட்டும் ஸ்மர்ஃபாகவோ ; "இத்தாலிக்கார் ஓவரோ-ஓவர்டோஸ்” என்று கருதும் அணியினராகவோ நீங்களிருப்பின் – நேராக இந்தப் பதிவின் வால்பகுதியில் உள்ள ஈரோடு updates-க்குள் புகுந்திடல் நலமென்பேன்! வீணாய் உங்களது எரிச்சல்களை சம்பாதித்த புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாமே ! என்ற ஆசையில் எழுந்திடும் வேண்டுகோள் தான் இது!
ஆண்டுக்கு மூன்றோ – நான்கோ டெக்ஸ் கதைகளே என்ற வேகத்தில் ஆண்டாண்டு காலமாய் வண்டி ஓடிக் கொண்டிருக்க – நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாக “More of டெக்ஸ் ப்ளீஸ்!!” என்ற வேண்டுகோள் உரக்க ஒலிக்கத் துவங்கியது நாம் அறிந்ததே! இதுவரையிலும் வேறு எந்த நாயகருக்குமே இது போலொரு பிரத்யேகத் தடம் பற்றி நாம் யோசித்தது கூடக் கிடையாதென்பதால் எனக்குள் உங்கள் கோரிக்கை பெரியதொரு தாக்கத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தவில்லை என்பது தான் நிஜம்! ஆனால் நாட்களின் ஓட்டத்தோடு உங்களது கோரஸும் வலுத்த போது என்னால் தொடர்ந்து பிள்ளையாராய் மௌனம் சாதித்திட இயலவில்லை! ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பிற்பாடே “சந்தா டெக்ஸ்”-க்கு தலையசைத்தேன்! தொடர்ந்தது என்னவென்பதை நான் சொல்லவும் வேண்டுமா – என்ன ?!
பட்டாசாய் பொரிந்த “சட்டத்துக்கொரு சவக்குழி” ஆரம்பித்து வைத்த ஊர்வலம் சீக்கிரமே பேரணியாகியதைப் பார்த்த போது வாத்து மடையன் போலத் தான் உணர்ந்தேன் நான்! “இந்த மாதிரியானதொரு பந்தயக் குதிரையை களத்தில் இறக்கி விடாமல் மடியில் கட்டித் திரிந்தாயாக்கும் – இத்தனை காலமாய்?” என்று எனக்குள்ளிருந்த ஜீனியஸ் ஸ்மர்ஃப் விரலை ஆட்டி, ஆட்டித் திட்டித் தீர்த்தது! சிங்கிள் ஆல்பங்களோ; டபுள்களோ; Black & வைட்டோ; வண்ணமோ; சின்ன சைஸோ; மெகா சைஸோ – எல்லா பாணிகளிலுமே நமது டெக்சாஸ்கார் (ம.ப. சார் அல்ல!!) அதகளம் செய்வதைத் தொடர்ந்த மாதங்களும், ஆண்டுகளும் எனக்குக் காட்டியுள்ளன ! புத்தக விழாக்களிலும் சரி, ஆன்லைன் விற்பனைகளிலும் சரி, மறுபதிப்புகள் தூள் கிளப்பி வந்தது “டெக்ஸ் சந்தா” துவக்கம் காண்பதற்கு ஓராண்டு முன்பான தருணம் என்றொரு ஞாபகம் எனக்கு! சிறுகச் சிறுக – இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும், சின்னக் கழுகாரும், மாதம்தோறும் நம் இல்லங்கள் தேடி வரும் routine பரிச்சயமாகிப் போக, பிரிட்டிஷ்கார்கள் பின்சீட்டுக்குச் செல்லும் சம்பவம் நிகழத் துவங்கியது.
இது நிச்சயமாய் மறுபதிப்புகளை மட்டம் தட்டும் முயற்சியே அல்ல ; கடந்த 3+ ஆண்டுகளாய் நாமிங்கே பணியாளர்களுக்குப் பொரிகடலைக்குப் பதிலாய் சம்பளமென்று ஒன்றைத் தந்திட முடிந்துள்ளதெனில் – அது முழுக்க முழுக்க மும்மூர்த்திகளின் விற்பனைகளின் புண்ணியத்திலேயே ! ஆயுசுக்கும் இந்த Fleetway நால்வருக்கும் நாம் ஒரு அசாத்திய நன்றிக்கடன் பட்டிருப்போமென்பது நிச்சயம் ! ஆனால் இன்றைக்கு அந்த trend தானாய்ப் பின்வாங்குவது கண்ணில் படுகிறது – டெக்ஸின் மவுசு கூடிடும் யதார்த்தத்தோடு! கிட்டத்தட்ட தினம்தோறும் ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கையிலான மறுபதிப்புகள் ஆன்லைனில் விற்பனையாகிடுவதுண்டு – ஆறு மாதங்கள் முன்பு வரையிலும்! ஆனால் இப்போதோ நிலவரம் தலைகீழ்! மாதத்தில் யாராவது ஒருத்தரோ, இருவரோ மும்மூர்த்திகளை நாடினாலே அது நமது யோக தினமென்று எடுத்துக் கொள்கிறோம்! Of course – மறுபதிப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட காலியாகும் நிலைக்கு அருகிலுள்ளன என்பதால் இந்தக் குப்புறப் பாயும் விற்பனைப் போக்கை எண்ணி ரொம்பவும் தூக்கத்தைத் தொலைக்க அவசியப்படவில்லை! அதே வேளையில் கார்ட்டூன்களும், டெக்ஸும், அந்தப் பள்ளத்தை ரொப்பி உதவிடுவதால் – ஆபீஸில் லாந்தர் விளக்குகளைத் தேடிடாது – கரெண்ட் பில்களுக்குப் பணம் கட்டும் அளவுக்குத் தேறி விடுகிறோம்! So – இந்தப் பின்னணியில் நான் முன்வைக்கப் போகும் கேள்விகளானவை செம குடாக்குத்தனமானதாய் காட்சி தருமென்பது எனக்கே புரிகிறது! But – ஒவ்வொரு ஆண்டுமே உங்களது நாடிகளை லேட்டஸ்டாய் ஒரு தபா பிடித்துப் பார்ப்பது உத்தமமென்று – உள்ளே குடியிருக்கும் டாக்டர் ஸ்மர்ஃப் சொல்வதால் இதோ எனது கேள்விகள்!

Once again - “ஓவர்டோஸ்” அணியினர் மன்னிச்சூ… இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் பதிவிடத் தேவை இராது!
1. ஆண்டொன்றுக்கு டெக்ஸுக்கென ஒதுக்கும் ஸ்லாட்களின் நம்பருக்கு எது கச்சிதமென்பீர்கள்? (சந்தாப் பிரிவின் தற்போதைய maximum எண்ணிக்கையே தலா 9 இதழ்கள் தான் என்பதை மறந்திட வேண்டாமே ?!)
6 8 9
2. ஆண்டொன்றுக்கு சிங்கிள் TEX ஆல்பங்கள் எத்தனை? டபுள் TEX ஆல்பங்கள் எத்தனை ?
3. மெ-கா-ாா- சாகஸங்களாய் மஞ்சள் சட்டைக்காரர் இதுவரையிலும் தலைகாட்டியுள்ள (ட்ரிபிள்) ஆல்பங்கள் – அதாவது - 330 பக்கக் கதைகள் பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் ப்ளீஸ்?
4. கதைத் தேர்வில் நேரும் பிழைகளுக்குப் பொறுப்பு என்னதே! But still – கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்துள்ள டெக்ஸ் சாகஸங்களுள் "ஹிட் – சொதப்பல் ratio" என்னவென்பீர்கள்?
80% - 20% 70% - 30% 60% - 40%
5. Looking ahead – இந்த “நடுக்கூடத்தில் நாலு சாத்து; முன்வாசலில் மூணு குத்து!” என்ற அதிரடி பாணி நமக்குச் சலித்திடக் கூடுமென்பீர்களா? அல்லது – சில சமாச்சாரங்கள் சலிப்புகளுக்கு அப்பாற்பட்டவைகளா?
6. TEX கலர் மறுபதிப்புகள்: இவை மெய்யாலுமே மறுவாசிப்புக்கும்; ரசனைகளுக்கும் நியாயம் செய்கின்றனவா folks? அல்லது இவை சேகரிப்புகளுக்கு மாத்திரமேவா?
பந்தியில் முக்காலே மூணு வீசம் இடத்தை ரேஞ்சர் அணி ஆக்ரமித்துக் கொள்ளும் போது - எஞ்சியிருக்கும் போனெல்லி b&w நாயக / நாயகியரைப் பற்றிக் கேட்க சொற்பமான வினாக்களே எஞ்சியிருக்கின்றன :
7. மர்ம மனிதன் மார்ட்டின் : சந்தேகமின்றி இவரொரு தனிப்பட்ட லெவலில் உலாற்றும் நாயகரே !! எந்தவொரு மாமூலான template -களுக்குள்ளேயும் இவரது கதைகளை அடைக்க முடியாதென்பது திண்ணம் ! சமீபத்தைய "மெல்லத் திறந்தது கதவு" ஏற்படுத்திய தாக்கங்களின் இரு பரிமாணங்களையும் கருத்தில் நிறுத்தி தீர்ப்புச் சொல்வதாயின் - ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என்பது ஓ.கே.என்பீர்களா guys ?
8. C.I.D ராபின் சார்ந்தும் அதே கேள்வியே !! "அக்மார்க் டிடெக்டிவ்" என்ற அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இவருக்கு - ஆண்டுக்கொரு வாய்ப்பு என்பது பொருத்தமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?
9. அப்புறம் கல்தா கண்டுள்ளவர்கள் மூவர் :
மேஜிக் விண்ட்
டைலன் டாக்
ஜூலியா
இவர்களுள் யாரேனும் ஒருவர் மறுவருகைக்கு அருகதையுள்ளவர்களெனில் யாருக்கு வோட்டுப் போடுவீர்கள் ? யாருக்கு வேட்டு வைப்பீர்கள் ? Curious to know .....!!
புறப்படும் முன்பாய் ஈரோடு புத்தக விழா & "இரத்தப் படலம்" ரிலீஸ் சார்ந்த updates :
1 . ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 58 ....! ஆகஸ்ட் 4 துவங்கி, ஆகஸ்ட் 15 வரை புத்தக விழா V.O.C பூங்காவில் நடைபெறுகிறது !! As always - we would love to see you there !!
2 . ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் "இரத்தப் படலம்" ரிலீஸ் & வாசக சந்திப்பு என்ற agenda விற்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்போம் ! தங்களது முன்பதிவுப் பிரதிகளை ஈரோட்டில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள், தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடக் கோருகிறேன் !! Most important please !!
3 .அரங்கில் ஏற்பாடு ; ரவுண்ட் பன்; சதுர பன் கொள்முதல் ; மதிய போஜன ஏற்பாடு என்பனவற்றையெல்லாம் பிசகின்றிச் செய்திட, வருகை தர உத்தேசித்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை தெரிந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும் ! முதல் வருடம் மதிய உணவின் போது நேர்ந்தது போலான தாமதங்கள் இனியொருமுறை வேண்டாமே என்பதால் முன்கூட்டியே உணவுக்கான திட்டமிடலை சரிவரச் செய்திட விழைகிறோம் ! சிரமம் பாராது "உள்ளேன் நைனா !" என்று கைதூக்கி விட்டால் சிக்கல் தீர்ந்திடுமே ?!!