நண்பர்களே,
வணக்கம். தொடரும் மாதத்து அட்டவணையில் :"ஜூன் ரிலீஸ் - 4 இதழ்கள் " என்று பதித்ததைத் தொடர்ந்து வேலைப் பளு பன்மடங்கு கூடிப் போனதால் இங்கு செலவிட நான் ஒதுக்கும் நேரம் வெகுவாய்க் குறைந்து போய் விட்டது ! பற்றாக்குறைக்கு தினம் ஒரு தினுசாய் படுத்தி எடுக்கும் இந்த மின்வெட்டு -'30 நாட்களில் முற்றும் துறந்த முனிவர் ஆவது எப்படி?' என்று பாடம் நடத்தாத குறை தான் ! 'லொடக் -லொடக்' என்ற ஓசையோடு கையை ஆட்டும் மின்விசிறி ஒரு பக்கம்;"'வுய்ய்...வுய்ய்"என்று அவ்வப்போது விசிலடிக்கும் இன்வெர்டர் மறு பக்கமென நித்தமும் நம் பொறுமைக்கு நிறைய பரீட்சைகள் அரங்கேறுகின்றன!
புலம்பல்களை மூட்டை கட்டி விட்டு மே மாதப் புது வெளியீடைப் பற்றிய preview வேலையைத் துவக்கிடலாமென்று நினைக்கிறேன் ! ஆண்டாண்டுகளாய் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கேப்டன் டைகர் சாகசத்திற்கு 'சுப மங்களம்' போட்டிடும் நேரம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே ."இரும்புக்கை எத்தன்" + "பரலோகப் பாதை"யில் துவங்கியதொரு adventure இம்மாத "இரத்தத் தடம்" + "தலை கேட்ட தங்கத் தலையன்" அத்தியாயங்களோடு நிறைவாகிறது. இதோ இதழுக்கான அட்டைப்படம் :
கடைசி நிமிடத்தில் அச்சு இயந்திரப் பழுது என்ற தலைவலியும் தொற்றிக் கொள்ள, ஒரு வழியாய் அதனையும் நிவர்த்தி செய்து அச்சுப் பணிகளை முடித்து பைண்டிங் வேலைகளைத் துவக்குகிறோம் ! திங்கள் மாலை கூரியருக்குப் பிரதிகள் புறப்படும் சாத்தியங்கள் 90% ! We will give it our best shot folks !
ஒரிஜினலாக இக்கதைக்கு வரையப்பட்ட அதே சித்திரத்தை பின்னணி வண்ணக் கலவையில் மாத்திரம் மாற்றங்களோடு பயன்படுத்தியுள்ளோம். ஆகையால் இம்மாதம் நமது ஓவியருக்கு வேலை இல்லை ! ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக, ஜூன் மாதத்து இதழ்களுக்குப் பட்டையைக் கிளப்பியுள்ளார் மாலையப்பன் ! Just wait n' see.....!
ஒரிஜினல் அட்டை |
இம்மாத இதழைப் பொறுத்த வரை - ஒரு அக்மார்க் டைகர் சாகசம் என்பதைத் தாண்டி பெரிதாய் நான் சொல்லிட அவசியமிராது என்பதே எனது கணிப்பு. கதை முழுக்க ஜிம்மியும், ரெட்டும் இணைந்திருப்பது ; துவக்கம் முதல் இறுதி வரை பட்டாசாய்ப் பொறியும் action கதைக் களம் ; "உடைந்த மூக்கர்" என்ற அடைமொழியோடு எப்போதும் போல் ஓராயிரம் இன்னல்களைச் சமாளிக்கும் டைகரின் மதியூகம் என இந்த அத்தியாயங்களில் நிரம்ப highlights உண்டு ! இதோ உங்கள் பார்வைக்கு ஒரு சில பக்கங்கள் :
சென்ற இதழில் காமிக்ஸ் டைம் / ஹாட்லைன் பகுதிக்கு நான் அல்வா கொடுத்ததை "அப்பாடா நிம்மதி" என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஒரு பகுதியெனில் ; "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேள்வி எழுப்பியோர் இன்னொரு அணி. Anyways - இந்த இதழில் வழக்கம் போல காமிக்ஸ் டைம் ; "சிங்கத்தின் சிறுவயதில்" ; "சிங்கத்தின் சிறுவலையில் " பகுதிகள் அனைத்தும் இடம் பிடித்துள்ளன. (இத்தனை பக்கங்களை வீணடித்ததற்குப் பதிலாக இன்னொரு குட்டிக் கதையை இணைத்திருக்கலாமே என்று அபிப்ராயப்படப் போகும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதையும் அனுபவம் உணர்த்திடாதில்லை :-) ) குட்டிக் கதைகள் எனும் போது - இந்த இதழில் filler pages பணியினைச் செய்திடக் காத்திருக்கும் புதியவரையும் முறைப்படி அறிமுகம் செய்திடுவது அவசியம் ! பல மாதங்களுக்கு முன்னால் விளம்பரங்களில் இங்கு தலை காட்டிய "ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் " இந்த இதழில் ஒரு 7 பக்க சாகசத்தோடு (!!) அறிமுகமாகிறார். பிரசித்தி பெற்ற ஷெர்லாக் ஹோம்சை கலாட்டா செய்திடும் பாணியில் வந்துள்ள பல காமிக்ஸ் தொடர்களில் இதுவும் ஒன்று. பிரான்சில் உருவாக்கப்பட்டு, அப்புறம் ஜெர்மனியிலும் நல்ல வரவேற்புப் பெற்ற இந்தத் தொடர் முதன்முறையாக தமிழுக்கு வருகை புரிகிறது. சில சிற்சிறு கதைகள் என்ற அறிமுகத்தின் பின்னே சில முழு நீளக் கதைகளும் கொண்ட தொடர் இது. உங்களின் response எவ்விதமிருக்கப் போகிறது என்பதை தொடரும் மாதங்களில் கணித்த பின்னே - நம்மிடையே இந்தப் புது வரவின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம் !

Moving on, சில குட்டியான சேதிகள்...! இவ்வாண்டு ஜனவரியில் வெளியான நமது NEVER BEFORE SPECIAL -ன் கையிருப்பு கடைசி 100 பிரதிகளுக்கு வந்து விட்டது ! உற்சாகமான முன்பதிவு 40% + சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனை 25% + தொடர்ச்சியாக இணையத்திலும் ; (தைரியமான) விற்பனையாள நண்பர்கள் சிலரின் சகாயத்திலும் மீதம் என்பது தான் இந்த இதழின் sales breakup ! அச்சிட்டது ஒரு modest எண்ணிக்கை தான் என்ற போதிலும், இத்தனை விலை கூடிய இதழை 4 மாத அவகாசத்திற்குள் விற்றுத் தீர்ப்பது என்பது எங்களைப் பொருத்த வரை ஒரு பெரும் சாதனையே !Thanks guys -thanks a ton!! எஞ்சி இருக்கும் NBS இதழ்களும், பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு - fresh ஆக தோற்றம் தரவிருக்கும் "இரத்தப் படலம்-1-18"முழுத் தொகுப்பின் ஒரு 7 அல்லது 8 இதழ்களும் வரவிற்கும் COMIC CON -ல் விற்பனைக்குக் கிடைக்கும். இத்தனை mammoth ஆன இதழ்களை இப்போதைக்குள் மறுபதிப்பு செய்திடல் சாத்தியமாகாது என்பதால், இது வரை இவற்றை வாங்கி இருக்காத நண்பர்களுக்கு இது ஒரு last chance !
அப்புறம் ஜூனியர் எடிட்டரின் பங்களிப்பு குறித்து நண்பர்கள் பலர் தத்தம் சிந்தனைகளை ஆங்காங்கே தெரியப்படுத்தி இருந்தனர். தற்போது behind the scenes எனக்கு ஆங்காங்கே உதவி வரும் ஜூனியர், 'எனது பிள்ளை ' என்ற அடையாளத்தைத் தாண்டி இத்துறைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்திடலே பிரதானம் என்பது எனது அபிப்ராயம் ! அந்தத் திறமைகளை அவன் உள்வாங்கிவிட்ட நம்பிக்கை எனக்கு வரும் நாளில் - திரைக்குப் பின்னே தொடர்ந்திட அவசியமிராது ! அது வரை எனது "உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" பாணி தொடரும் :-) Catch you soon guys ! Take care !