ஒரு மார்க்கமான தலைப்பாக இருக்குதே என்று சிந்திக்கும் நண்பர்களுக்கு: No fears ...read on please !
வெளிநாடுகளுக்குப் பயணம் ஆகும் போது, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஆங்காங்கே உள்ள காமிக்ஸ் கடைகளுக்குச் செல்வது என்பது சுவாரஸ்யமான விஷயம் எனக்கு..! But கொஞ்ச காலமாய் அதற்கு அவ்வளவாய் வாய்ப்புகள் அமைந்திடவில்லை. So சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது தேடித் பிடித்து பெரியதொரு காமிக்ஸ் shop -க்குப் போயிருந்தேன் ...!
"கிழிஞ்சது கிருஷ்ணகிரி ... இன்னொரு அமெரிக்க புராணமா..?" என்று தலையைச் சொரியும் ; புருவங்களை உயர்த்தும் நண்பர்களுக்கு ஆறுதலான சேதி...! இது முழுக்க முழுக்க காமிக்ஸ் பற்றிய பதிவு மட்டுமே !!
ரொம்ப காலமாய் எனக்குள் உள்ள கேள்வி இது...! (அது என்னவென்று கேட்கிறீர்களா....? இந்தப் பதிவின் இறுதி வரைப் பொறுமையாய் படித்திட்டால் தெரிந்திடும் !)
காமிக்ஸ் எனும் ரசனைக்குப் பல முகங்கள் உள்ளன ... ! நமது ரசனை என்பது ரொம்பத் தெளிவு :
1 நமது முதல் எதிர்பார்ப்பு - ஸ்பஷ்டமான ; தெளிவான கதையோட்டம். அவ்வப்போது XIII ; மர்ம மனிதன் மார்டின் போன்ற தொடர்களுக்கு வேண்டுமானால் இந்தக் condition தளர்த்திக்கலாம் !
2 .வலுவான ஒரு ஹீரோ / ஹீரோயின் ! சில சமயம் "வலுவான" என்னும் இடத்தில "ப்ரியம் காட்டக் கூடிய " ஆசாமிகளுக்கும் இடம் உண்டு தான் ! உதாரணம் : அடிபட்டு..உதைபட்டு..சராசரி மனுஷனாய் காட்டிலும் மேட்டிலும் உலவும் நமது கேப்டன் Tiger!
3 தரமான சித்திரங்கள்..artwork ....! (இதுக்கும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை...கேப்டன் பிரின்ஸ் கதைகளை மறக்க முடியுமா !!)
4 ஓரளவுக்காச்சும் logic !! (கரண்டில் கை விட்டு மாயமாய் மறையும் மாயாவி கதைகளையும் ; spider கதைகளையும் அடுத்த இதழாக வெளியிடவிருக்கும் நேரத்தில் லாஜிக் பற்றிப் பேசுரதுலாம் ரொம்ப ஓவர் என்ற உங்கள் mind voice எனக்குக் கேட்காமல் இல்லை !!)
மேற்சொன்ன எந்த ஒரு விஷயத்திலும் அடங்கிடாமல் ...எந்த ஒரு விதத்திலும் நம் ரசனைக்கு ஒத்துப் போகாத ஓராயிரம் காமிக்ஸ்களை அந்த அமெரிக்கப் புத்தகக் கடையில் பார்த்த போது பேந்தப் பேந்த முழிக்க மட்டுமே தோன்றியது எனக்கு .
"அந்த man "...."இந்த man " என்று எக்கச்சக்கமாய் சூப்பர் ஹீரோ தொடர்கள் ! அட்டகாசமான அட்டைப்படங்கள்....அமர்க்களமான விளம்பரங்கள்..promotions ...நல்ல artwork ..!ஆனால் ரெண்டு பக்கத்தைத் தாண்டி மூன்றாவது பக்கத்துக்குப் போவதற்குள் ஏதோ போன வாரத்தில் செய்த போண்டாவை சாப்பிட முயற்சிப்பது போன்ற உணர்வைத் தடுத்திட முடியவில்லை !
அந்த கணத்தில் 1990 களில் BATMAN கதைகளை நாம் வெளியிட்ட சமயம் கூட...ஒரு இதழுக்கான கதையைத் தேர்வு செய்திட நான் எத்தனை DC Comics இதழ்களைப் புரட்டி இருப்பேன் என்பது என் மண்டைக்குள் flashback ஆக ஓடியது ! சாம்பிள்கள் எத்தனை கேட்டாலும் முகம் சுளிக்காமல் அனுப்பிட்ட DC காமிக்ஸ்-ன் archives இன்-சார்ஜ் Mrs .Phillis Hume -க்கும் மானசீகமாய் ஒரு நன்றியும் சொல்லத் தோன்றியது ! கிட்டத்தட்ட 50 கதைகளைப் படித்து..அதிலிருந்து ஒன்றைத் தேற்றி..அதிலும் லேசு பாசாக எடிட்டிங் செய்து தான் வெளியிடுவோம். ("சிரித்துக் கொல்ல வேண்டும்" - ஒரு அற்புதமான விதிவிலக்கு!!)
பிற காமிக்ஸ் படைப்புகளை மட்டம் தட்டிடுவதோ ..நமது ரசனைகளை உயர்த்திப் பிடிப்பதோ எனது நோக்கமே அல்ல..நம்மால் ஏன் ஒரு வட்டத்தைத் தாண்டி பலதரப்பட்ட ரசனையினை அரவணைத்திட முடியவில்லை என்பதே என் மண்டைக்குள் ஓடிய கேள்வி !
இந்த சமாச்சாரத்தை..இந்தக் கேள்வியினை இப்போது எழுப்பிட வேண்டிய அவசியம் என்னவென்று தோன்றலாம் உங்களுக்கு...! காரணம் இல்லாமல் இல்லை...!
சமீபத்திய நமது ComeBack ஸ்பெஷல் இதழில் முழு வண்ணத்தில் அட்டகாசமாய் வந்திருந்த லக்கி லூக் கதைக்கு வந்திருந்த சில விமர்சனங்கள் eyeopener ரகம் என்றே சொல்ல வேண்டும். "அற்புதமாய் வண்ணத்தில் வந்திருந்தாலும், இதுவரை வந்ததிலேயே படு மட்டமான லக்கி லூக் கதை இது தான்" என்று எழுதி இருந்தார்கள் நம் நண்பர்கள்.
லக்கி லூக் தொடர்களில் மிக சமீபத்திய ஆக்கம் "ஒற்றர்கள் ஓராயிரம்" என்ற பெயரில் நாம் வெளியிட்ட இந்தக் கதை ! இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்த போதே இது "ஆஹா .ஓஹோ" ரகமல்ல என்பது தெரிந்தது. But still "சொதப்பல்..படு மட்டம்" என்று மார்க் வாங்கும் அளவுக்குப் போகும் என்பது நான் எதிர்ப்பார்த்திடா சமாசாரம். Maybe வண்ணத்திலும், தரமான அச்சிலும் நானும் மயங்கிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அனால், நமது வாசகர்களோ எப்போதும் போலவே படு உஷார்!!
இத்தனை நுணுக்கமாய் நமது ரசனை இருப்பது ஒரு பக்கம் சந்தோஷமாய் உள்ளபோதிலும் ...மறுபக்கம் நமது discerning taste இன்னும் நிறைய விதமான காமிக்ஸ்களை ; மாறுபட்ட கதைகளை ...ரசனைகளை பரிச்சயப்படுத்திக் கொள்ளத் தடையாக இருக்குமோ என்றும் எண்ணம் எழாமல் இல்லை !
ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில்..ஐரோப்பாவில் Thorgal எனும் ஒரு பிரெஞ்சுத் தொடர் ரொம்பவே பிரசித்தம். ஒவ்வொரு இதழும் ஆறு லட்சம் பிரதிகள் அச்சாகும் என்று அதன் publisher சொன்ன போது நான் "ஞே" என்று தான் முழித்தேன்..ஏனெனில் அது ஒரு வித science -fiction ; history ; மாயாஜாலம் கலந்த கலவை...நமக்குப் பொருந்தாத கதைகள் லிஸ்டில் அதற்கும் நான் இடம் கொடுத்துள்ளேன்.
பிரசித்தி பெற்ற எழுத்தாளர் Van Hamme-ன் படைப்பு இந்த Thorgal என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் ! அங்கே பெரும் வெற்றி பெற்ற ; ஆனால் நம் வழக்கமான ரசனைக்கு அப்பாற்பட்ட ; இன்னும் நாம் எட்டிப் பிடிக்கா கதைகள்..தொடர்கள் ஏராளம் உண்டு !
அந்த அமெரிக்க புத்தகக் கடலில் மண்டையை சொறிந்து கொண்டு நின்ற கணத்தில் என்னுள் இந்த சிந்தனைகள் எழுந்தன !
கௌபாய் ; detective ; கார்ட்டூன் ரசனைகளைத் தாண்டி நமது எல்லைகளை விரிக்கும் முயற்சிக்குப் பிள்ளையார் சுழி போடும் சமயம் எப்போதென்ற கேள்வி தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கேள்வி !
Give it some thought guys !!