Powered By Blogger

Saturday, July 15, 2017

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.....!

நண்பர்களே,
         
வணக்கம். நமது வரலாற்றை (?!!) என்றைக்கேனும் எழுதிப் பார்ப்பதாயின் “க.பே.ஸ்.மு”; “க.பே.ஸ்.பி” என்று 2 பிரிவாகப் பிரிக்கலாமென்று ஆய்வாளர்கள் சொல்லவிருப்பது உறுதி! அத்தகைய “க.பே.ஸ்.பி” காலகட்டத்தில் ஏகமாய் பாடங்கள் படிக்க சாத்தியமாகியுள்ளது! அவற்றுள் முக்கியமானதொன்றை சமீபமாய் மீண்டும் ஒரு தபா உணர்ந்து புரிந்து கொள்ளும் அனுபவம் கிட்டியது உங்கள் புண்ணியத்தில்! “இப்படித் தான்; அப்படித் தான் என்று எதன் மீதுமொரு கல்லில் வடித்த தீர்மானத்தை எடுத்தல் சரிப்படாதுடா அம்பி!” என்பதே அந்தப் பாடம்! And அதை மறுக்கா எனக்கு நீங்கள் நினைவூட்டியது நமது சூப்பர் 6 இதழ்கள் பற்றி சமீபமாய் நான் எழுதிய பதிவுதனில்!

நடப்பாண்டில் சூப்பர் 6 பட்டையைக் கிளப்பி வருவது பற்றியும்; தொடரும் காலங்களில் இதற்கொரு “சீசன் 2” தருவதாயின் என்ன செய்யலாமென்ற உரத்த சிந்தனைகளை அந்தப் பதிவில் செய்திருந்தேன்! பழைய இதழ்களை மெருகூட்டி மறுபதிப்பிடலெனில் எந்தெந்தக் கூட்டணிகள் / நாயக அணிவகுப்புகள் சாத்தியமென்பதற்கொரு கோடிட்டுக் காட்ட யத்தனித்திருந்தேன் அந்தப் பதிவில்! படித்த மறுகணமே உங்கள் உற்சாகங்கள் டாப் கியரை எட்ட – ஞாயிறின் முக்கால் பகுதிக்குள்ளாகவே உங்களது பின்னூட்டத் தாண்டவங்கள் 335ஐ எட்டிப் பிடிக்க, அன்றே ஒரு உப பதிவும் தட்டி விடும் வரலாற்று அவசியம் அரங்கேறியது! மறுமுனையில் குந்தியிருந்தவனுக்கோ புன்னகை மன்னன் கமலஹாசனைத் தூக்கிச் சாப்பிடும் விதமாய் சிரிப்பும் அழுகையும், கலந்த ரியாக்ஷன்கள் தடதடத்து வந்தன! சிரிப்பு – for obvious reasons! நடப்பாண்டின் மறுபதிப்புகள் வெற்றி நடை போட, அதனைத் தொடர்ந்திடுவதில் நீங்கள் காட்டிய உத்வேகம் முகமெலாம் சந்தோஷத்துக்கு வித்திட்டதில் வியப்பில்லை! ஆனால்- எனது அன்றைய பதிவில் இரண்டாவது தவணையைக் களமிறக்கிட இக்ளியூண்டு (!!) வாய்ப்பு கூடக் கிட்டாது போய் விட்டதே என்பதில் தான் கவலை மேகங்கள்!

பழசைக் கொண்டொரு “சூப்பர் 6 – சீஸன் 2” உருவாக்குவதாயின் – இவையே menu! அதே போல புதுசைக் கொண்டொரு புது சீஸனைத் துவக்குவதாயின் எந்தெந்த புதுவரவுகளையெல்லாம் இறக்குமதி  செய்யலாமென்று உங்கள் முன்னொரு டிரெய்லர் ஓட்ட நினைத்திருந்தேன்! இந்தப் புதுப்பட டிரெய்லரே – அன்றைய பதிவின் part 2 ஆக இருந்திருக்க வேண்டியது! ஆனால் போட்டியே இல்லாது லக்கி லூக்கும், சிக் பில்லும் தேர்தல்களில் ஜெயம் கண்டு, ஆர்டின் பயல் அமெரிக்க ஜனாதிபதியாகிடும் அட்டகாசமும் சாத்தியமாகி நின்ற போது – ‘நான் சரியாத் தான் யோசிச்சிட்டிருக்கேனா?‘ என்று பஞ்சாயத்துக்கு வந்த சங்கிலி முருகன் போல மண்டையைச் சொரியத் தொடங்கினேன். இருந்தாலும் ரூமெல்லாம் போட்டு யோசித்து, டெம்போவெல்லாம் வைத்துக் கடத்தித் தயார் செய்த திட்டத்தின் ஒரு சன்னமான முன்னோட்டத்தையாவது உங்களுக்குக் காட்டாது போனால் பின்நாட்களில் முருங்கை மரத்துக்கும், ஆலமரத்துக்கும் தாவித் திரியும் தலையெழுத்து உறுதியாகிப் போகும் என்று பட்டது! So அன்றைய பதிவின் பின்னணிச் சிந்தனையின் பாகம் 2 தான் இவ்வாரத்துக்கு!

ஆண்டின் ஒவ்வொரு ஆகஸ்டுமே எனக்குக் கொத்துக் கொத்தாய் கேசம் காணாது போகும் பருவம்!! (நிறைய ஆகஸ்ட்களைப் பார்த்து விட்டேன் தான்!!!) அந்த மாதம் தான் காத்திருக்கும் புத்தாண்டின் அட்டவணையின் பொருட்டு புதுசு புதுசாய் கதைகளையும், தொடர்களையும் தேடிப் பிடித்து அலசிடும் தருணமாகயிருப்பது வழக்கம். "அதைப் போடுவோமா? இதைப் போடுவோமா?" என்றெல்லாம் மகா சிந்தனைகளுக்குள் லயித்தான பின்பு – “ஆங்... லார்கோ தவிர்க்க முடியாது; ஷெல்டன் வேணும்; ம்ம்ம்... தோர்கல் போடாட்டி பூரிக்கட்டை விற்பனைகள் சூடு பிடிக்கும்... ‘தல‘ இல்லாட்டி கதை கந்தல்... லக்கி லூக்? மூச்ச்ச்... யோசிக்கவே இடம் கிடையாது!” என்ற ரீதியில் ஒரு safe ஆன பட்டியலைப் போட்டுஅடங்கி விடுவேன்! ஆனால் இடைப்பட்ட நாட்களில், “ஒட்டு மொத்தமாய்ப் பழைய குப்பன்களையும் சுப்பன்களையும் ஒரு வருஷத்துக்காவது உறைநிலையில் இருக்கப் பண்ணி விட்டு, ஒரேயொரு ஆண்டுக்காவது all new வரவுகள் என்று திட்டமிடலாமா ?" என்ற நமைச்சல் எடுக்கத் தான் செய்யும்! ஆனால் விஷப் பரீட்சைகள் உங்களது முகச் சுளிப்புகளையும், சில பல வியாபார இழப்புகளையும் உருவாக்கி விடுமோ என்ற பீதியில் அடக்கி வாசித்திடுவேன்! அது போன்ற அடக்கி  வாசிக்கும் அத்தியாயங்களின் போது - "என்றைக்கேனும் இவர்களைக் களமிறக்காது விட்டேனா பார்?!” என்ற வைராக்கியமும் தலைகாட்டாது போகாது – ஒரு சில நாயகர்கள் / தொடர்கள் குறித்து!

அந்த வரிசையில் ஒரு முக்கிய இடம் பிடித்து நிற்கும் தொடர் பற்றி இப்போது! என்ன தான் ரசனைகளில் முன்னேறி விட்டோம்; பனை மரத்தில் ஏறி விட்டோமென்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், உலக அரங்கில் நமது ரசனைகள் சற்றே குறுகிய வட்டத்துக்குள் அடங்கிக் கிடக்கும் நிஜத்தை மறுப்பதற்கில்லை! ஓவராய் காதுல பூ சுற்றாத மிதமான சூப்பர் ஹீரோக்கள்; டிடெக்டிவ் நாயகர்கள்; adventure ஹீரோக்கள்; கௌபாய்ஸ்; தெளிவான கதையம்சம் கொண்ட கார்ட்டூன்கள்; அப்புறம் கொஞ்சம் திகில் சார்ந்த கதைகள் என்பதே நமது மெனு! எப்போதாவது எட்டிப் பார்க்கும் யுத்தக் கதைகளும், கிராபிக் நாவல்களும் நமது மேஜையை நிரப்பும் சைடு டிஷ்கள்! ஆனால் உலகரங்கிலோ இன்னதான் என்றில்லாது – சகல உணர்வுகளுக்கும் சித்திரக் கதைகளில் ஒரு வடிகால் தேடுவது சகஜம்!

சில காலம் முன்பொரு கதை படித்தேன் – ரொம்பவே casual ஆன சித்திரங்களோடு! ஒரு சிறு நகரில் வசிக்கும் ஆசாமி பணி நிமித்தம் பெரியதொரு நகருக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறான்! வாழ்க்கையின் ஒரு மத்திய பகுதியினில் ஏதோவொரு ஆர்வத்தில் உந்தப்பட்டு தன் சொந்த ஊருக்கான ரயிலில் ஏறியமர்ந்து அங்கே போய் இறங்குகிறான்! சின்ன வயதில் தான் குடியிருந்த வீட்டுப் பக்கமாய்; அப்பாவோடு போய் ஏததோ வாங்கித் தின்ற கடைத்தெரு பக்கமாய்; நண்பர்களோடு ஓடியாடிய பார்க்குகள் பக்கமாய் ;  தனிமையில் கழித்த சில ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்கள் பக்கமாய் என்று மௌனமாய் நடைபோடும் மனுஷன், திரும்பவும் ரயிலேறி – பெருநகரத்துக்குத் திரும்புகிறான்! மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் (??!) முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது! இதுவுமே உலகரங்கில் ஒரு அழகான காமிக்ஸ் ஆல்பமாக வலம் சர சாத்தியமாகிறது! So இது போன்ற அளவுகோல்களுக்கு முன்பாக நமது தற்போதைய வாசிப்புக்களங்கள் ரொம்பவே ஜனரஞ்சகமான ரகம் தான் என்பதில் சந்தேகமேது? அதற்காக நமது ரசனைகளை மட்டம் தட்டுவதோ; ஒரே நாளில் கிராபிக் நாவல்களை ஒட்டு மொத்தமாய் நாம் (சு)வாசிக்கத் தொடங்கினால் தான் ஷேமம் காண்போம் என்றெல்லாம் நான் சொல்ல முனைந்திடவில்லை! நாம் இன்னமுமே எட்டிப் பார்த்திராக் களங்கள் / genre-கள் ஏகம் காத்துள்ளன என்று சுட்டிக் காட்டுவது மாத்திரமே எனது குறிக்கோள்!

அவற்றுள் ஒன்று தான் பரந்து, விரிந்த சமுத்திரங்கள் சார்ந்த காமிக்ஸ் தொடர்கள்! கடலோடு நமக்குப் பரிச்சயம் இல்லாதில்லை தான்! கேப்டன் பிரின்ஸின் துணையோடு கப்பல் பயணங்களை நாம் ரசித்துள்ளோம் ! ஆனால் அவருமே ஒரு இன்டர்போல் அதிகாரியாய் இருந்து விட்டு அப்புறமாய் கேப்டனாகப் புரமோஷன் கண்டவரெனும் போது, கதைகளில் சாகஸம் + குற்றம் புரிவோரை விரட்டிப் பிடிக்கும் பாணி மேலோங்கியிருந்ததில் வியப்பில்லை! ஆனால் நான் தற்போது குறிப்பிடுவதோ சமுத்திரங்களை மட்டுமே சாம்ராஜ்யங்களாய்க் கொண்டிருந்த அந்நாட்களது கரடு முரடான மனிதர்களை! இன்றைக்குப் போல கடல்களில் பாதுகாப்பு; வான்வெளிப் பாதுகாப்பு என்றெல்லாம் சாத்தியப்பட்டிருக்கா பழைய நாட்களில் வணிகக் கப்பல்களை; பயணியர் கப்பல்களை வழிமறித்துத் தேட்டை போடும் கடற்கொள்ளையர்கள் நிறையவே இருந்து வந்தனர்! அவர்களைப் பின்புலங்களாக்கி பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகில் நிறையவே கதைகள் / தொடர்கள் ஹிட்டடித்து உள்ளன! ரொம்ப காலமாகவே அவற்றுள் ஏதேனுமொன்றை நம் கரைகள் பக்கமாய் நகர்த்தி வர வேண்டுமென்பது எனது ஆசை! ”குடிக்கவே தண்ணி இல்லாத பயலுவோ... உனக்கு கடற்கொள்ளையர்கள் கேக்குதோ?” என்று நம்மை வழிநடத்தும் பெரும் தேவன் மனிடோ நினைத்தாரோ என்னவோ - தெரியவில்லை; இது வரைக்கும் வாகானதொரு வாய்ப்பு கிட்டவில்லை! என் மண்டைக்குள் மட்டுமாவது கப்பல் ஓட்டிக் கொண்டிருக்கும் தொடர்கள் 3 உள்ளன!

அதில் மூத்தது Bruce Hawker என்ற நாயகரின் கதை வரிசை! மொத்தம் ஏழே ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை நான் முதன் முதலில் வாய் பார்த்தது 1985-ல்! ஓவியர் வில்லியம் வான்ஸ் இதற்கான சித்திரங்களைத் தீட்டியிருக்க, பிராங்க்பர்டில் இந்தத் தொடருக்கான விளம்பரமெல்லாம் தடபுடலாய் செய்து வைத்திருந்தனர்! ப்ரூஸ் என்ற இளம் கப்பற்படை அதிகாரியின் அனுபவங்கள்; போராட்டங்கள்; கடற்கொள்ளையர்களுடனான மோதல்கள் என்று ஓடும் தொடரிது என்பதைப் பின்நாட்களில் தெரிந்து கொண்டேன்! சித்திரங்கள் மட்டுமல்ல, கதையுமே வில்லியம் வான்ஸின் கைவண்ணமே என்பதும் தெரிய வந்த போது, இந்தத் தொடர் மேல் இன்னமுமே மையல் கூடிப் போனது எனக்கு! ஆனால் துப்பாக்கி ஏந்தும் டிடெக்டிவ்களோ; மிதமான சூப்பர் நாயகர்களோ அல்லாத தொடர்களுக்குள் புகுந்திட ‘தில்‘ இல்லாத நாட்களவை என்பதால் பராக்குப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வேன்! நம்மிடம் இவற்றின் முதல் 5 ஆல்பங்கள் உண்டு; ஒவ்வொரு ஆகஸ்டிலும் அவற்றைப் புரட்டுவதிலேயே கொஞ்சமாய் விரல் ரேகைகளைத் தேய்த்துக் கொள்வது வழக்கம். ஆல்பம் 4 முதலாய் கதைப் பொறுப்பு  (ரிப்போர்டர் ஜானி புகழ்) Andre Paul Duchateau என்பதால் கதையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிராது என்பது என் எண்ணம்; ஆனால் ஏழே கதைகள் 11 ஆண்டுகளில் என்ற நிலையில் இந்தத் தொடர் முற்றுப்புள்ளி கண்டது ஏனோ? என்ற சிறு நெருடலும் உண்டு உள்ளுக்குள்!

மண்டைக்குள் சுக்கான் விரித்துப் பாய்மரம் ஓட்டும் அடுத்த தொடரானது LONG JOHN SILVER! “Treasure Island” கதையினை பள்ளிக்கூடத்திலோ; லைப்ரரியிலோ படித்திருக்கக் கூடிய எல்லோருக்குமே LONG JOHN SILVER என்ற பெயர் புதிதாக இராது தான்! அதில் வரும் அந்தக் கடற் கொள்ளையனின் கதி என்னவாகி இருக்குமோ? என்ற கேள்விக்குறியினைக் கையில் எடுத்துக் கொண்டு கதாசிரியர் சேவியர் டோரிசன் (!!!) புறப்படுகிறார் - ஒரு அட்டகாசமான 4 பாகக் கதையினை உருவாக்கிட! ஒரு டெரரான கதைத் தொடருக்கு இன்னமும் கொஞ்சம் சிறப்பான ஓவியர் பணி செய்திருக்கலாமோ? என்ற சின்ன குறைபாட்டைத் தவிர்த்து வேறெந்தச் சலனமும் நேராது, தடதடக்கும் இந்த 4 பாகத் தொடர் – கடலில் கோலோச்சி வந்த கொலைவெறிக்கு அஞ்சாத மனிதர்களின் பக்கமாய் வெளிச்சத்தைத் திருப்புகிறது! CINE BOOK புண்ணியத்தில் ஆங்கிலத்திலும் வெளிவந்து ஹிட்டடித்த இந்தத் தொடர் எனது “விட்டேனா பார்” பட்டியலில் தொடர்ந்து வருகிறது!


அந்தப் பட்டியலில் அடுத்து வருவது அதகள சித்திரங்களோடு வாய்பிளக்கச் செய்து வரும் “பராகுடா” தொடரே! ஆறு ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடருக்கு ஓவியர் ஜெரெமி போட்டுள்ள சித்திரங்கள் ஒரு massive highlight. ஒரு அட்டகாசமான சினிமா எடுக்கக் கூடியதொரு கதைக்கருவோடு பயணிக்கும் இந்தத் தொடரில் கொஞ்சமே கொஞ்சமாய் நிர்வாணம்; காதல் காட்சிகளென்றும் உண்டு தான்! ஆனால் முறையாக எடிட்டிங் மட்டும் செய்து இந்தக் கடற்கொள்ளையர் அணியை நம்மிடையே களமிறக்கினால் தண்ணீர் பஞ்சமே கூட ஒரு தடையாக இராதென்றே சொல்வேன்! சில பல செயலாளர்கள் உருவாக்கக் கூடிய ஜொள் ஜலப் பிரவாகத்தில் கப்பல்கள் அட்டகாசமாய் பயணம் செய்து விடுமென்பேன்! வண்ணத்தில் மட்டுமன்றி, இந்தத் தொடரின் டிராயிங்குகளை நான் b & w லும் பார்த்து மிரண்டே போனேன்! பாருங்களேன் ஒரு சித்திரத் திருவிழாவை!


முக்கிய குறிப்பு : இது சீசன் 2 -வில் முயற்சிக்கக் கூடிய இதழ்களுள்  ஒரேயொரு slot-க்கான தேர்வுகள் மட்டுமே  ! இன்னும் வெவ்வேறு genre-களில், வெவ்வேறு கதைத் தொடர்கள் waiting - இன்னொரு வாரத்துப் பதிவில் தலை காட்டும் பொருட்டு ! 

So சூப்பர் 6 - Season 2 எனும் இணைதடத்தில் நம்மள் கி ஆதர்ஷ அங்கிள்ஸ் சவாரி செய்வதைத் தாண்டியும் பார்வைகளை லயிக்க அனுமதிக்கலாமெனில் மேற்கண்ட மூன்றில் ஒன்றை இறக்குமதி செய்யலாம். ‘நஹி... நஹி... பழசே இப்போதைக்குப் பொன்!‘ என்று நீங்கள் கருதினால் – இருக்கவே இருக்கு அடுத்தாண்டின் ஆகஸ்ட்! So பந்து நம்மள் கோர்ட்டிலிருந்து – நிம்மள் பக்கம் இப்போது வர்றான்! அதை இன்னா பண்றதுன்னு நிம்மள் சொல்றான்; வழுக்கையன் கேட்கிறான்! டீக் ஹை?

அப்புறம் ஆகஸ்ட் எனும் அடுத்த இலக்கு வைகை எக்ஸ்பிரஸ் போல விரைந்து நெருங்குவது புரிகிறது! இம்மாதம் b & w இதழ்களே கிடையாது; சகலமுமே கலர் என்பது highlight! And பல மாதங்கள் கழித்து வண்ணத்தில் தலைகாட்டும் டைலன் டாக்கும், டெக்ஸ் வில்லரின் மறுபதிப்பும் – அந்த மீடியம் சைஸில் விருந்து பரிமாற உள்ளனர்! “மரணத்தின் நிறம் பச்சை” சுமார் 30 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பாவதால் – நம்மில் பலருக்கும் இதுவொரு புது வாசிப்பனுபவமாகவே இருந்திடும் என்று தோன்றுகிறது! இதோ – அந்த க்ளாசிக் சாகஸத்தின் தற்போதைய அட்டைப்படத்தின் preview!


போனெல்லியின் ஒரிஜினல் டிசைனின் ஈயடிச்சான் காப்பியிது – நமது ஓவியரின் கைவண்ணத்தில்! And உட்பக்கங்களும் வண்ணத்தில் சும்மா கலக்குகின்றது! மாதம்தோறும் அந்தப் பெரிய சைஸில் பிரான்கோ- பெல்ஜியக் கதைகளை வண்ணத்தில் படித்துப் பழகி விட்டு, இந்த மீடியம் சைஸ் ரொம்பவே handy ஆகப் படுகிறது என்பேன்! பார்க்கலாம் – உங்களுக்கும் அவ்விதமே தென்படுகிறதாவென்று !

அப்புறம் – ஈரோட்டில் “இரத்தக் கோட்டை” project வேக வேகமாய் ஓடி வருகிறது! நேரில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் – சிரமம் பாராது இங்கே கைதூக்கிக் காட்டினாலோ; ஒரு மின்னஞ்சல் மூலம் 25/07/2017-க்கு முன்பாக உறுதி செய்தாலோ, உங்கள் பிரதிகளை ஈரோட்டுக்கு நாங்கள் எடுத்து வர வசதியாக இருக்கும்! So- please do let us know!

அப்புறம் அந்த Early Bird badges தயாராகி வருகின்றன! இவற்றுள் உங்கள் சாய்ஸ் எதுவோ guys?





மீண்டும் சந்திப்போம்! Have a lovely weekend ! Bye for now!

319 comments:

  1. வாவ் Saturday surprise பதிவு!

    ReplyDelete
  2. நான் ஈரோடு வருகிறேன். இரத்தக்கோட்டையை நண்பர்களோடு இணைந்து வாங்கிக் கொள்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகைப் பாண்டியன் : சூப்பர் சார் !

      Delete
  3. பர்ரகுடாவின் ஓவியங்கள் அட்டகாசமாக இருக்கின்றன. அந்தத் தொடரைக் களமிறக்கலாம் எடிட்டர் சார்.

    ReplyDelete
  4. எதிர்பாராத பதிவு.எடிட்டருக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. Govindaraj Perumal : நன்றிகளுக்கேது அவசியம் சார் ? வாரயிறுதிகள் என்னையும் இங்கே இழுத்து வந்து விடுவது வாடிக்கை தானே ?

      Delete
  5. சாா்,

    கடற்கொள்ளையா்களுக்கு ட்ரிப்பிள் ok!!!

    ReplyDelete
  6. படிச்சு முடிச்சு பத்துக்குள்ளயும் வந்தாச்சு..!

    ReplyDelete
  7. Surprise but sweet article, regular sunday article venum sir,

    ReplyDelete
    Replies
    1. ganesh kumar ganeshkumar : நம்மவர்கள் நாளை இந்தக் கோடு மேலே ரோடு போடுவார்கள் பாருங்களேன் - அதிலேயே sunday செமையாய் ஓடி விடும் !

      Delete
  8. அனைத்து கதைகளும் அருமையாக உள்ளன. அது மட்டும் இல்லாமல் 5-6 பாகங்களோட முடியும் கதைகள் என்பதால் நாம் அனைத்து கதைகளையும் முயற்சிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Mahesh : கண்ணா....மூணு லட்டும் தின்ன ஆசையா moment #

      Delete
    2. சார் மூனு லட்டும் வேணும்...ஈரோட்டுக்கு குண்டு புக் ஒன்ன சர்ப்ரைசா தருவதா அறிவிச்சீங்களே...அதுக்கு கடல் தளபதிய கொடுத்தா முத்து நானூறின் கொண்டாட்டமாயிருக்குமே....இந்த சர்ப்ரைச எதிர்பாராம ஏழு புத்தகத்த ஒத்தயா ஆகஸ்டுக்கு தந்து சர்ப்ரைஸ் தந்தா அதான் உண்மையான சர்ப்ரைஸ் .

      Delete
    3. அருமையான யோசனை ஸ்டீல் சார்,ஆனால் ஆசிரியரின் பதில் "பிம்பிலிக்கி பிளாக்கி"☺

      Delete
  9. வாவ்...சஸ்பென்ஸ் முன் மாலைப்பதிவு...சூப்பர் சார்...படித்துவிட்டு வருகிறேன்...

    ReplyDelete
  10. என்னோட சாய்ஸ் "பராகுடா" 6 ஆல்பமும் ஒரே இதழாக 2018 சென்னை புக்ஃபேர் அல்லது 2018 'கோடைமலர்'!

    ReplyDelete
  11. ப்ரூஸ் ஜே.ஹாக்கர் என்
    கணினியில் வேற்று மொழியில் பல ஆண்டுகளாகத் துயில் பயின்று வரும் கதைத் தொடர் சார். லாங் ஜான் சில்வரும்தான். இருவருக்கும் வாய்ப்பளிக்கலாம். பாரகுடா அட்டகாசமான கதை. ஆனால் முன்னிரண்டு வரிசைக்கே முன்னுரிமை ஓட்டு.

    ReplyDelete
    Replies
    1. John Simon C : பார்ப்போமே - நண்பர்களின் அபிப்பிராயங்கள் என்ன சொல்கின்றனவென்று ?!

      Delete
  12. ////போட்டியே இல்லாது லக்கி லூக்கும், சிக் பில்லும் தேர்தல்களில் ஜெயம் கண்டு, ஆர்டின் பயல் அமெரிக்க ஜனாதிபதியாகிடும் அட்டகாசமும் சாத்தியமாகி நின்ற போது ////

    சாா், அப்போ அடுத்த சூப்பா் 6ல் லக்கியும், சிக்பில்லும் உண்டா??!!

    ReplyDelete
    Replies
    1. Mithun Chakravarthi : Sir....அந்த ஆல மரத்தடி சங்கிலி முருகன் moment #

      Delete
    2. சாா்,

      சங்கிலி முருகன்லாம் ok!!

      ஆனாக்க, சத்தியமா நீங்க என்ன சொல்ல வா்றீங்கன்னு புாியலே!!

      அய்யய்யோ!!

      லக்கியும், சிக்பில்லும் உண்டுதானே??

      யாா்னா கேட்டு சொல்லுங்கப்பா!!

      Delete
    3. இவங்க ரெண்டு பேருமே தொங்கல்ல ன்னு எடி சொல்லுறார் மிதுன்

      அப்ப இவங்க ரெண்டு பேரும் இல்லையா மிதுன் ;) ;)

      Delete
    4. வேற வழியே இல்லை!!

      போராடுவோம்! போராடுவோம்!!
      இறுதிவரை போராடுவோம்!!!

      Delete
  13. "சூப்பர் " தடத்தின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கடந்த பதிவுகளில் குரல்கள் எழும்பியிருந்தனவே சார்!

    எனக்கு புதியவை எல்லாம் வேண்டும் -உடனே வேண்டும் - என்ற பேராசை பீறிட்டு எழுகிறது...

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : சார்...அதற்கு "சூப்பர் ஆற்றல்" என்ற வரமும் வேண்டுமே நமது டீமுக்கு ?!!

      Delete
    2. ///
      எனக்கு புதியவை எல்லாம் வேண்டும் -உடனே வேண்டும் - என்ற பேராசை பீறிட்டு எழுகிறது...///


      இங்கே கரைபுரண்டு ஓடுகிறது..!!:-)

      Delete
    3. இங்கே கடலலை போல ஆர்பரிக்கிறது

      Delete
  14. பாரகுடா மிரட்டலான கதை தொடர் முழு தொகுப்பாக வெளியிடுங்கள் சாா்..

    ReplyDelete
  15. கோட்டையை ஈரோட்டில் பெறுவதற்கென்றே 500மட்டுமே கட்டியவர்களும் உறுதி செய்யணுமா சார்???


    Super6ல் இரண்டு பார்ட்கள் ஒன்று பழசு மற்றது பதுசு எனில் என் வாக்கை பதிவு செய்கிறேன் சார்...
    ஒரேயொரு சூப்பர்6தான் எனில் ஐ ஆம் வெரி சார் , ஓல்டு ஈஸ் கோல்டு...
    புதிய முயற்சிகள் சந்தாAலும் கி.நா.விலும் மட்டுமே 2018லும் என்பதே என் விருப்பம் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் //கோட்டையை ஈரோட்டில் பெறுவதற்கென்றே 500மட்டுமே கட்டியவர்களும் உறுதி செய்யணுமா சார்???//

      முன்பதிவுகள் சில பல மாதங்களுக்கு முன்பானவைகளல்லவா ? பயணத் திட்டத்தில் மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்புகள் இருந்திடக் கூடும் தானே சார் ?

      Delete
    2. ஓகே சார்...

      டெக்ஸ் பெயரில் இருக்கும் மாநிலமாம் டெக்ஸாஸில் இருக்கும் அருமை நண்பர் மஹிஜி, அன்பு மழையில் நனையவிட்டு ஏர்லி பேட்ஜ் அணியில் என்னையும் இணைய வைத்த புக்கிங் எண்: 51ஐயும்;
      என் வீட்டருகே வசிக்கும் என் அருமை நண்பருக்காக அவரின் செலவில் என் பெயரில் செலுத்தி செய்த புக்கிங் எண்:88ஐயும் ஈரோட்டு திருவிழாவில் நண்பர்களின் கரகோசங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் இடையே பெற்றுக் கொள்கிறேன் சார்...

      Delete
    3. தல டெக்ஸ்ஸூ விஜி ண்ணா நாளை என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் மொபைல் எண் சுவிட்ச் ஆப். !!!,,

      Delete
  16. Early bird முதலில் உள்ள பேட்ஜ் - எனது சாய்ஸ்... க்யூட்

    ReplyDelete
    Replies
    1. மீ டூஊஊஊஊஊ சார்...
      அந்த முதல் பாட்ச் அப்டியே அள்ளுது...

      Delete
    2. நாலாவதில் இருக்கும் தெனாவெட்டு லுக் எப்படி இருக்கு.. நான்தான் first வந்துட்ட்டேன்னு சொல்லற மாதிரியே இருக்குள்ள ....

      Delete
  17. மரணத்தின் நிறம் பச்சை முதல் முறையாக படிக்கவிருக்கின்றேன்
    வண்ணத்தில் வருவதால் ஆவல் அதிகரித்துள்ளது..

    ReplyDelete
    Replies
    1. மெரண்டு போய்டுவிங்க

      எதுக்கும் முனிஸ்வரன் கோவில்ல சீட் போட்டு வச்சிடுங்க
      அவசரத்திற்க்கு உதவும்

      ;) ;)

      Delete
  18. ///அந்த Early Bird badges தயாராகி வருகின்றன! இவற்றுள் உங்கள் சாய்ஸ் எதுவோ guys?///

    நம்பர் 4 செம்ம கெத்தா இருக்கு சார்.!

    ReplyDelete
  19. இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  20. இதழ்கள் வெளி வருமோ என்ற காலம் போய் பீனிக்ஸ் பறவை யாக மாறி போய் நமது வாசகர்கள் ஆதரவுடன் வெற்றி நடை போடும் எடிட்டர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. /// இந்தத் தொடரில் கொஞ்சமே கொஞ்சமாய் நிர்வாணம்; காதல் காட்சிகளென்றும் உண்டு தான்! ஆனால் முறையாக எடிட்டிங் மட்டும் செய்து இந்தக் கடற்கொள்ளையர் அணியை நம்மிடையே களமிறக்கினால் தண்ணீர் பஞ்சமே கூட ஒரு தடையாக இராதென்றே சொல்வேன்!///

    இம்மூன்றில் பராகுடாவுடன் மட்டும் லேசான பரிச்சயம் உண்டு சார்.! (மிக லேசான :-))
    நீங்கள் குறிப்பிடும் காட்சிகள் அந்த பெண்களை அடிமை சந்தையில் விற்கும் இடம் என்று நினைக்கிறேன்.!!

    (ஒரு சிறிய சங்கடமான காட்சியும் இருக்குமென்று ஞாபகம் சார். அதை டோட்டலாக எடிட் செய்துவிட்டாலும் நல்லதே சார்.)

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா இது!!

      கதை வா்ரதுக்கு முன்னாடியே சென்சாா் போடரது!!

      Delete
    2. ///கதை வா்ரதுக்கு முன்னாடியே சென்சாா் போடரது!!///

      நான்தான் மிக லேசான பரிச்சயம்னு சொன்னேனே நண்பரே!
      சங்கடமான சமாச்சாரம் சிறுமி ஒருத்தியை அடிமைச் சந்தையில் விற்கும் முறை..!
      இதுல கவனிக்க வேண்டிய அம்சம் அது இந்தக் கதையில்தானான்னு கூட எனக்கு உறுதியாத் தெரியாது.!

      Delete
  22. First &last batch is super sir.I support barracuda &Bruce hedger 🙌👏👏

    ReplyDelete
  23. எங்களுக்கு பாலைவனத்தின் மீதுள்ள இனம்புரியாத ஈர்ப்பைப் போலவே கடல் பயணங்களின் மீதும் உள்ளது; காடு மலைகளின் மீதும் காதல் உள்ளது! உங்களுக்கு சரின்னு படறதைப் போட்டுத்தாக்குங்க எடிட்டர் சார்! இன்னும் பலப்பல ஆகஸ்டுகள் வந்துக்கிட்டுதான் இருக்கும்! ஆனா, அதுக்காண்டியெல்லாம் வெயிட் பண்ணாம படப்படன்னு ஆகவேண்டியதைப் பாருங்க சார்! வில்லியம் வான்ஸின் கைவண்ணத்தில் கடல்வெளிகளை ரசிப்பது அருமையாக இருந்திடும்!

    'பராகுடா' சித்திரங்கள் ஸ்தம்பிக்க வைக்குது! என்னாவொரு ஓவியம்!! என்னாவொரு கலரிங்!!! ப்பா!!!

    ReplyDelete
    Replies
    1. அப்ப பாரகுடா கன்பார்ம்மு

      Delete
    2. ஒ அப்படியா!!

      அப்போ இவா்கிட்டையும் கேப்போம்!!

      ஐயா,

      சூப்பா் 6ல லக்கியும், சிக்பில்லும் உண்டுதானே!!

      Delete
    3. இல்லைன்னு பட்சி சொல்லுது மிதுன்

      Delete
    4. விஜய் யதார்த்தத்தை அழகாய்ச் சொன்னீர்கள்...

      Delete
  24. உள்ளேன் ஐயாவெல்லாம் போகட்டும்!!

    சிக்பில் சூப்பா் 6ல் உள்ளாரா? இல்லையா??

    ReplyDelete
  25. ///மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் (??!) முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது! ///


    கிட்டத்தட்ட மலையாளப் படங்கள் போல (கன்ட்ரோல் குருநாயரே! அது இல்லை) யதார்த்தமான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் இல்லாத இது போன்ற கதைகளையும் தமிழில் படிக்க ஆசையாய் இருக்கு சார்.!
    இதெல்லாம் எப்போது சாத்தியப்படுமோ !? இறைவா..கடைக்ககண் காட்டியரு வேண்டும்..!!

    ReplyDelete
    Replies
    1. மலையாளப் படங்கள் சாாி!!

      எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாத மலையாளப் படங்கள்னா ok!!

      Delete
  26. ஆறில் மூன்று க்ளாசிக்ஸ் மற்ற மூன்று புதுசு கண்ணா புதுசு ன்னு போடலாமே சார்!

    ReplyDelete
  27. // இம்மாதம் b & w இதழ்களே கிடையாது; சகலமுமே கலர் என்பது highlight!//
    அப்ப சர்ப்ரைஸ் இதழும் கலர்லயா சார்,ஹைய்யா சூப்பர்.
    கை தட்டும் படங்கள் நூறு.

    ReplyDelete
    Replies
    1. அ௫மை.கை தட்டும் படங்கள் ஆயிரம்.

      Delete
    2. சர்ப்ரைஸ் இதழ் சந்தாவில் சேராதே ரவி, அது கலரிலும் இருக்கலாம்; கருப்பு வெள்ளையிலும் இருக்கலாம்; இரண்டும் இணைந்த கலவையாக கூட இருக்கலாம் அல்லவா... இப்ப உதாரணத்துக்கு இரண்டு டெக்ஸ் கதைகள் அதில் இடம்பெற்று ஒன்று கலரிலும் மற்றது கருப்பு வெள்ளையும்ல இருக்கலாம்.ஹி...ஹி...

      Delete
    3. ஒருவேளை யங் சூப்பா் வெட்டியான் அண்டா்டேக்கராகவும் இருக்கலாம்!!

      Delete
    4. வண்ணத்தில் ஒன்றும்,க & வெ யில் ஒன்றும் வந்தால் மிக்க மகிழ்ச்சிதான் டெக்ஸ், ரெண்டு லட்டு தின்ன யாருக்குத்தான் விருப்பமிருக்காது?!ஹி,ஹி.

      Delete
  28. சார் நீங்கள் குறிப்பிட்ட மூன்று கடல் சார்ந்த கதைகளும் நன்றாகவே உள்ளன.இ௫ந்தாலும் வான்ஸ் க்கு முதலிடம் தரலாம் . மற்ற இரண்டு கதைத் தொடர்களை அடுத்த ஆண்டு தரலாம்.ப்ரின்ஸ் தவிர கடல் சார்ந்த கதைக் களன்கள் நம்மிடையே இல்லாதது பெ௫ங்குறை.உங்களின் பதிவு இந்த நாளை எனக்கு இனிமையாக்கும்,அதற்கு நன்றிகள் சார்

    ReplyDelete
  29. Early Bird முதல் மற்றும் மூன்றாம் ஸ்டில்கள் ஓகே சார்.

    ReplyDelete
  30. ///சிக்பில் சூப்பா் 6ல் உள்ளாரா? இல்லையா??///

    எங்கூரு கருப்புசாமி கோயில் பூசாரி இந்நேரத்துக்கு தூங்கியிருப்பாருங்க..!!
    காத்தால வரைக்கும் டைம் குடுத்தீங்கன்னா ஓடீப்போய் சோழி போட்டு பாத்துட்டு,, அப்படியே பக்கத்துல ஒரு மந்திரவாதி இருக்காப்புல, அவராண்டப் போய் வெத்தலையில மை தடவி பாத்துட்டு இரணடு பேரோட பதிலும் ஒரே மாதிரியிருந்தா ஓடிவந்து சொல்லிடுறேனே..! :-)

    இது சும்மா தமாசுக்கு மிதுன் அவர்களே!!
    சீரியஸா சொல்லணும்னா உங்களுக்கு இருப்பதைவிட இரண்டு மடங்கு ஆர்வம் எனக்கும் இந்தக் கேள்வியில் இருக்கிறது. ! ஆனால் ஆகஸ்டு வரை எடிட்டரிடம் இருந்து பதில் வாங்க முடியாது நண்பரே. .!

    என்னுடைய நம்பிக்கை லக்கி, சிக்பில், டெக்ஸ் மூவரும் அடுத்த சூப்பர் 6 லும் இடம் பிடிப்பார்கள் என்பதே..!!

    நம்பிக்கை.. . அதானே எல்லாம்..!

    ReplyDelete
  31. 'மரணத்தின் நிறம் பச்சை' அட்டைப்படம் - மிரட்டல் ரகம்! இதே வண்ண அடர்த்தி - பிரின்ட்டிங்கிலும் வந்துவிட்டால் - செமயாக இருக்கும்!

    ReplyDelete
  32. அருமையான கதை வரிசையை ஏன் சார் குருகிய வட்டத்தில் அடைக்கிரீர்கள் சந்தா A வில் தொடரவே எனது விருப்பம்

    ReplyDelete
  33. ஈரோட்டுல நம்ம படல அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்க்கும் படலப்பார்ட்டிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆம்.ஆவலோடு எதிர்பரக்கும் படங்கள் ஆயிரம்.

      Delete
    2. சரவணன் ஈரோடு வருவிங்களா

      Delete
  34. எங்கள் தலை TEX இன் "மரணத்தின் நிறம் பச்சை"அட்டைப் படமும் உள்பக்க டீச௫ம் மனதை அள்ளுது. இதழைக் காணும் நாளே எனக்குத் தி௫நாள். ஆகஸ்ட் மாதம் தலையும் தளபதியும் ஒன்றாக வ௫வதும்,அதிலும் இரண்டுமே காவியங்கள் என்பதும் எங்கள் இதயத் துடிப்பை எகிறச் செய்கின்றன.

    ReplyDelete
  35. விஜயன் சார், சூப்பர் 6: எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை. பழைய கிளாசிக் கதைகள் மட்டும்தான் வேண்டும். அதிகபட்சமாக ஒரு புதிய கதை மட்டும் வரட்டும். தயவு செய்து 50 - 50 என முடிவு செய்யாதீர்கள். பிளீஸ். புரிந்துகொள்ளுங்கள்.

    புதிய கதைகள் / முயற்சிகள் தனியாக வேறு ஒரு தனி சூப்பர் 6ல் வரட்டும்.:-)

    ReplyDelete
    Replies
    1. அந்த பழைய கிளாாாாசிக்ல லக்கியும், சிக்பில்லும் உண்டு தானுங்களே!!

      எதுக்கும் இவருகிட்டயும் கேட்டு வைப்போம்!!

      Delete
    2. இதே ரேஞ்சுல போச்சுன்னா பால்காரர் பேப்பர்காரர்னு எல்லார்கிட்டயும் கேட்டு வைக்கப் போறிங்கன்னு தோணுது..!
      இவுங்களோட நிறுத்திகிட்டா பரவாயில்லை,
      தகவல் அறியும் உரிமைச் சடட்டத்துல கேட்டு வெச்சுடப்போறிங்க..! டிப்பார்ட்மெண்டே குழம்பி போயிடும்.!

      Delete
    3. லக்கி & சிக்பில் இணைந்து ஒரு குண்டு புத்தகம் கண்டிப்பாக உண்டு:-).

      Delete
    4. ////லக்கி & சிக்பில் இணைந்து ஒரு குண்டு////

      ஏ சூப்பா் சூப்பா் சூப்பா்!!!

      Delete
  36. Early bird:- 4. சிங்கம் போல் கம்பீரமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என்னை மாதிாி ஆளுங்களுக்குன்னு "லேட் போ்ட்" கெடையாதுங்களா???

      Delete
    2. லேட் பேர்ட் - முனியாண்டி விலாஸ்களில் கிடைக்குமே..!

      லேட் பேர்டுன்னா வேற அர்த்தம் ஆயிடுதே சாரே..!? :-)

      Delete
    3. அய்யய்யோ!!

      அப்டியா???

      Delete
  37. /// இது சீசன் 2 -வில் முயற்சிக்கக் கூடிய இதழ்களுள் ஒரேயொரு slot-க்கான தேர்வுகள் மட்டுமே ! இன்னும் வெவ்வேறு genre-களில், வெவ்வேறு கதைத் தொடர்கள் waiting - இன்னொரு வாரத்துப் பதிவில் தலை காட்டும் பொருட்டு ! ///

    வாவ் ! அட்டேகாஷ் அட்டேகாஷ்..!!

    ஒரேயொரு ஸ்லாட் எனும் போது என்னுடைய ஓட்டு பராகுடாவுக்கே.! ப்ரூஷ் ஜே ஹாக்கர் வந்தாலும் பெருமகிழ்ச்சி.!

    ஈரோட்டில் அறிவிப்புகளுக்கு பஞ்சமிராது போல தெரிகிறதே சார்.!
    எங்களுக்கும் கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது..!

    (எல்லாத்தையும் மறக்காம எழுதி வெச்சிக்கிடோணும்!)

    ReplyDelete
  38. மரணத்தின் நிறம் பச்சை அட்டைப்படம் சூப்பர். ட்ராகன் நகரமும் சேர்ந்து கொள்வதால் டெக்ஸ் வில்லரின் விசிறிகளான எங்களுக்கு டபுள் டமாஹாதான் ஆகஸ்டில்..!!

    ReplyDelete
    Replies
    1. ட்ராகன் நகரம் தான் சா்ப்ரைஸ் புக்கா??!!

      Delete
    2. இல்லை தனியா எதுனா இருக்கா?

      ட்ராரன் நகரம் சூப்பா் 6 தானே??

      Delete
    3. without மாந்தரிகம்னா நாங்களும் டெக்ஸ் ரசிகா்தான்!!

      Delete
    4. சும்மா போட்டு வாங்குறதுதான் மிதுன்.!! :-)

      ட்ராகன் நகரத்துக்கு வாய்ப்பு கம்மிதான்.! ஆனா ஆகஸ்டு ஐஸ்க்ரீம் மெபிஸ்டோ Vs டெக்ஸ் வில்லரின் மிகப் பிரமாண்டமான அந்தக் கதையாத்தேன் இருக்கும்னு பஜ்ஜி சமோசா எல்லாமே சொல்லுது..!

      Delete
    5. சமோசா சொல்லுதா??

      😂😂😂😂

      Delete
    6. ///without மாந்தரிகம்னா நாங்களும் டெக்ஸ் ரசிகா்தான்!!///

      இருளின் மைந்தர்கள், மந்திர மண்டலம் எல்லாம் படிச்சிப் பாருங்க. எண்ணத்தை மாத்திக்குவிங்க. மாந்த்ரீகம் மத்தவங்க (வில்லன் குரூப்பு ) செஞ்சாலும் தல செய்யுற ஒரே மந்திரவித்தை தோட்டா தோரணம் மட்டுமே. ! ஆகவே மூடநம்பிக்கைன்னு ஒதுக்க வேண்டாமே.! தவிரவும் எல்லாம் கற்பனைதானே, ஆகையால் ரசிக்கத் தயக்கம் ஏனோ நண்பரே.!

      Delete
    7. டெக்ஸ்க்குன்னு ஒரு டேம்ப்லட் இருக்குன்னு நான் பதிவிட்டா,

      உடனே ஆசிாியா் இத்தாலியிலேயே அதை ரசிக்கரக்குன்னு ஒரு கூட்டம் இருக்குன்னு பதிவிடுவாரு!!

      ஆனா பாருங்க, இந்த மரமண்டை டெக்ஸ்க்குன்னு ஒரு உருவத்தை கொடுத்து வைச்சிருச்சே!!!

      Delete
    8. மரமண்டையா????
      மிஸ்டர் மரமண்டையா????!!???
      நீங்கதானா அது!!!!!????

      வெல்கம் பேக் நண்பரே. .!!:-)

      Delete
    9. ஓவ் அப்படியா விசயம்...

      வார்ம் வெல்கம் "மரமண்டை" அல்லது "மிஸ்டர் மரமண்டை'🌷🌷🌷🌷🎄🎄🎄🎄🎄

      Delete
    10. "எவன் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறானோ, அவன் ஆண்டவரால் உயா்த்தப் படுவான்"னு பைபிள்ல வா்ரதா அண்டா்டேக்கா் சொல்லியிருக்காரு!!

      Delete
    11. ங்ஙே!!!

      காமெடி பண்ணா சிரிக்கணும் சாரே! பதிலுக்கு தத்துவம் சொல்லி டர்ராக்க கூடாது..! :-)

      Delete
    12. ஆ ஜோக்கு ஜோக்கு ஜோக்கு!!!

      Delete
  39. டியர் எடிட்டர்

    Long John Silver அல்லது Barracuda அனைத்து பாகங்களையும் ஒரே குண்டு புக்காக ஜனவரி 2018க்கு போடவும். இப்டி சூப்பர் sixல பிரிச்சு பிரிச்சு போடாதீங்க. Thorgal மாட்டிக்கொண்டு முழிப்பது போதுமே !

    சூப்பர் sixக்கு இரண்டு ஆல்பங்கள் கொண்ட பழைய கதைகளே பெட்டெர் !

    ReplyDelete
    Replies
    1. ///Long John Silver அல்லது Barracuda அனைத்து பாகங்களையும் ஒரே குண்டு புக்காக ஜனவரி 2018க்கு போடவும்.///

      இதுவும் நல்லாத்தான் இருக்கும்

      +1

      Delete
  40. சாமி ஒரு டவூட்? இந்த மரணத்தின் நிறம் பச்சை பல வருடங்கள் முன்னால் வந்த டெக்ஸ் கதையின் வண்ண மறுபதிப்பு தானுங்களா?

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் அட்டைபடத்தை கூர்ந்து பார்த்தேன், வண்ண மறுபதிப்புதான்.

      அப்புறம் கதையின் பெயரில் பச்சை வருகிறது என்பதற்காக பச்சை வண்ணத்தில் எழுதி இருப்பது நன்றாக இல்லை; ரொம்ப பழைய ஸ்டைல். அதேநேரம் கதை தலைப்பின் பெயரை வேறு ஸ்டைலில் எழுதினால் நன்றாக இருக்கும்.

      Delete
  41. நடுநிசி வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  42. எர்லி பேர்டு பேட்ஜ்
    முதலாவது இல்லையெனில் மூன்றாவது

    ReplyDelete
  43. காலை வணக்கங்கள்
    கப்பல்கள் மூன்றும் நன்று

    ReplyDelete
  44. பராகுடா சித்திரங்கள் வாய் பிளக்க வைக்கிறது. கடல் புறா காலம் தொட்டே நான் கடல்புற ரசிகன் என்பதால் மூன்று தொடர்களுமே சந்தா sea என்று வந்தால் கூட சந்தோசமே..

    ReplyDelete
    Replies
    1. ///மூன்று தொடர்களுமே சந்தா sea என்று வந்தால் கூட சந்தோசமே..///

      ரம்மி :):):):)

      இனிமே சந்தா A B Cல்லாம் வேணாம் சார்.!
      சந்தா CITY
      சந்தா FOREST
      சந்தா DESERT
      சந்தா NATTUPPURAM
      சந்தா MIXING (அந்த மிக்ஸிங் இல்லே., கிராமம் டவுனு காடு மலை பாலை ன்னு கலந்துகட்டி வரும் கதைகள்னு அர்த்தம் எடுத்துக்கணும்)
      சந்தா JOLLU (lady s வகையறாக்களுக்கு)

      இப்படி போட்டு தாக்கிடுவோம் சார்.!! :-)

      Delete
    2. ////சந்தா JOLLU (lady s வகையறாக்களுக்கு////

      இந்த சந்தா எப்போ வருதுன்னு சொன்னீங்கன்னா??

      என்னைய மாதிாி யூத்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்!!

      Delete
    3. ///என்னைய மாதிாி யூத்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்!!///

      இந்தமாதிரி காமெடி பண்ண சத்தியமா என்னால முடியாதுங்க.!

      Delete
    4. ///என்னைய மாதிாி யூத்களுக்கு !!////---அறிமுகத்துல யாரோ செவன் கழுதை வயசாகுதுனு சொன்னாங்களேஏஏஏ...!!!

      Delete
    5. அது வேற வாய்!!!

      இது யூஉஉஉஉ...த் வாய்!!!

      Delete
    6. Rummi XIII : போகிற போக்கில் இங்கிலீஷில் எழுத்துக்கள் பற்றாது போலும் - நம் சந்தாக்களுக்கு வைத்திட !!

      Delete
  45. அன்பு எடிட்டர்,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் இரத்த க்கோட்டை இதழை ஈரோட்டில் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete
  46. நானும் ஈரோட்டிலேயே பெ. கொ. கிறேன்

    I am waiting for EBF!!

    ReplyDelete
  47. அப்புறம் இந்த இரத்தப்படலம் 18 பாா்ட்டையும் ஈரோடுலயே பெற்றுக் கொள்கிறேன்!!

    😇😇😇😂😂😂😇😇😇

    ReplyDelete
  48. EARLY BIRD.....
    என்னுடைய விருப்பம்.
    2. தலை துண்டிக்கப் பட்ட பறவை போல் காட்சியளிக்கிறது--- வேண்டாம்!!
    3. " தலை பெருத்து" தலைக் கனம் பிடித்த பறவை போல் இருப்பதால்---- அதுவும் வேண்டாம்!!
    4 மற்றும் 5. WWF மற்றும் பௌன்சர்களைப் போலவும், " தில்" இருப்பவர்கள் வாங்க(டா) மோதிப் பார்த்து விடலாம் என்று சவால் விட்டுக் கொண்டு இருப்பதைப் போல போஸ் கொடுப்பதால் ----- அதுவும் வேண்டாம்!!!!
    1. நாம் எவ்வளவு பிரச்னைகள் நம்மை சூழ்ந்து நின்றாலும் blog பக்கம் வரும் போதும், மாதா மாதம் பொக்கிஷங்கள் நம்மை வந்து சேரும் போதும் எவ்வளவு சந்தோஷமாய் காட்சியளிப்போமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் எவ்வளவு பூரிப்புடன் உல்லாசமாய் அழகாய் தானும் சந்தோஷப் பட்டு அடுத்தவரையும் சந்தோஷப்படுத்தும் நீங்கள்( எங்கள் எடிட்டர்)திரு.ஈ.வி, திரு டெக்ஸ் விஜய், திரு.செனா அனா திரு.கிட் ஆர்டின், திரு.தலீவர் இவர்களையெல்லாம் மனக் கண்ணில் கொண்டு வருவதால்--- முதலுக்கே என் ஓட்டு!!!!

    ReplyDelete
    Replies
    1. திரு. AT Rajan...
      நன்றிகள் சார்! _/\_

      மற்றவர்களைப் பாராட்டிடவும் ஒரு மனது வேண்டும்!

      Delete
    2. நன்றிகள்ATRSir..பெரிய தலைகள் கூட இந்த குட்டிப் பையனுக்கும் ஒரு இடம் தந்து அழகு பார்க்கும் உங்கள் அன்பான நல்ல மனசுக்கு ஒரு ஸ்பெசல் வணக்கம் சார்...
      ஈரோடு வரும் பயண திட்டம் ஏதும் உள்ளதாங் சார்???

      Delete
    3. ஏடிஆர் சார்.....கடைசி பாராவில் நண்பர்களின் வரிசைபட்டியலில் எனது பெயரை இணைக்கும் அளவிற்கு நான் வொர்த் இல்லை என்றாலும் ...


      எனது மனம் கனிந்த நன்றிகள் சார்....

      உண்மையில் நண்பர்களின் இப்போதைய விமர்சனங்களை ,கருத்துக்களை தங்களுடையதும் உட்பட காணும் பொழுது சட்டசபையில் வருகை பதிவிட்டில் கையொப்பம் இட்டு திரும்பி சென்று விடும் அரசியல்வாதிகளை போல நானும் இருக்க வேண்டுமோ என அச்சப்படுவது உண்மை.....


      ( பாருங்க ....இதுக்கு எவ்வளவு கைதட்டல் சத்தம் ...:-(

      Delete
    4. AT Rajan : "நீங்க என்ன bird ஆண்னே?"

      "சச்சின்" விஜய் மாடுலேஷனில், ஈரோட்டில் வைத்து தலீவரிடம் யாரேனும் கேட்டால் தலீவரின் பதில் என்னவாக இருக்குமோ என்று யோசித்துப் பார்க்கிறேன்!

      Delete
  49. காலை வணக்கம் நண்பர்களே.
    சூப்பர் 6 வேண்டாம்
    சூப்பரோ சூப்பர் 12 தான் வேண்டும்.

    ReplyDelete

  50. ஒரேயொரு ஸ்லாட் எனும் போது என்னுடைய ஓட்டும் பராகுடாவுக்கே.!

    எனது புத்தகங்களை EBF ல் வாங்கி கொள்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன் சார் !

      முழுக்கவே புது இதழ்களடங்கியதொரு SUPER 6 மெனுவினில் இந்த கடல் சார்ந்த கதை genre க்கு ஒரேயொரு slot வழங்கலாம் ; and அந்த ஒற்றை slot க்காக Bruce hawker ; Long john Silver & Barracuda மதியினில் போட்டியிருக்கலாம் என்றே நான் சொல்ல வந்தேன் !

      இது தவிர romance ; thrillers etc etc என்று இன்னமும் கதை ரகங்கள் சாத்தியமே என்பதே நான் சொல்ல நினைத்த சமாச்சாரம் !

      Delete
  51. Palasil TEX , LUCKY , KIT ORDIN irukatum sir ... Meedhi moondrum pudu kadhaigalai try pannalam sir ...

    ReplyDelete
  52. சூப்பர் 6 – சீஸன் 2 க்கு 6 புதிய கதைகள் 6 பழைய கதைகள் என பிரித்து கொள்ளுங்கள் சார், இப்பொழுது வரும் குவாலிட்டியில் பழைய கிளாசிக் கதைகள் கண்டிப்பாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம். புது கதைகளுக்கென மெயின் ட்ராக்கிலேயே ஸ்லாட் ஒதுக்குங்கள். சூப்பர் 6 கிளாசிக் கதைகளுக்கென்றே வைத்து கொண்டு பயணித்தால் நிச்சயம் அடுத்த ஆண்டு நமக்கு அருமையான பயணம் நிச்சயம். சூப்பர் 6 இதழ்கள் இப்போ ஹிட் அடித்து கொண்டு இருக்கும் போது எதற்கு இந்த தேவை இல்லா குழப்பம் சார் ?..
    I like the 4th Badge :)

    ReplyDelete
    Replies
    1. எனது எண்ணமும் இதுவே.

      Delete
    2. @ Friends above : ஒரு முயற்சியில் கொஞ்சமாய்ப் புதுமை இருக்கும் போது அதன் மீது நமக்கேற்படும் ஈர்ப்புக்கு வோல்டேஜ் ஜாஸ்தி நண்பர்களே ! இந்தாண்டின் ABSOLUTE CLASSICS அறிவிக்கப்பட்ட சமயம் , உங்களுக்கு இந்த இதழ்களின் வடிவமைப்பு பற்றியொரு முன்னோட்டம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனும் பொழுது - இதழ்களை பார்த்த நொடியில் அந்த "WOW !!" factor தலைதூக்கி நின்றதில் ஆச்சர்யமில்லை ! கதைகள் எல்லாமே மறுபதிப்புகளே என்ற போது அதனில் இருக்க சாத்தியமாகா novelty-ஐ இதழின் தயாரிப்பில் செய்திட முனைந்தோம் !

      ஆனால் அடுத்த முறை, இதே format-ல் மறுபதிப்புகளே தொடர்ந்திடும் பட்சத்தில் அந்த ஆச்சர்யங்கள் எழ வாய்ப்புகள் குறைவே எனும் பொழுது, இன்றைய அதே தாக்கம் தொடருமா ? என்பதே எனது சந்தேகம் !

      Delete
    3. ///அதே தாக்கம் தொடருமா ? என்பதே எனது சந்தேகம்///---நிச்சயமாக தொடரும் சார்...இப்போ நாங்கெலாம் ருசி கண்ட பூனைகள்...

      அப்சலூட் க்ளாசிக் ன உடனே பழையன கண்ணில் வந்து போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது சார்.

      முழுக்க முழுக்க புதிய கதைகளுக்கு A,B,C & கி.நா. என 4வகை சந்தா இருக்கே சார்...
      சந்தாDயும் சந்தா சூப்பர்6ம் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, பழைய இதழ்களை காண...

      மேலும் ஏற்கனவே ஒரு நண்பர் சொன்ன மாதிரி ஜேசன் பிரைஸ் இடமும், ஜேசன் ஃப்ளை இடமும் காலியாகப் போகுதே சார்... அங்கே இந்த கடலு, கப்பலு போன்றவற்றை வைத்து கொள்ளலாம் சார்...

      Delete
  53. முதல் பறவை யே முத்தாய் இருக்கிறது ...

    எனது புத்தகத்தை ஈ ரோட்டில் வாங்கிக் கொள்கிறேன் சார்

    பரகுடா வந்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : Thumbs up படங்கள் ஒரு டஜன் !

      Delete
  54. வாழ்க்கையின் ஒரு மத்திய பகுதியினில் ஏதோவொரு ஆர்வத்தில் உந்தப்பட்டு தன் சொந்த ஊருக்கான ரயிலில் ஏறியமர்ந்து அங்கே போய் இறங்குகிறான்! சின்ன வயதில் தான் குடியிருந்த வீட்டுப் பக்கமாய்; அப்பாவோடு போய் ஏததோ வாங்கித் தின்ற கடைத்தெரு பக்கமாய்; நண்பர்களோடு ஓடியாடிய பார்க்குகள் பக்கமாய் ; தனிமையில் கழித்த சில ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்கள் பக்கமாய் என்று மௌனமாய் நடைபோடும் மனுஷன், திரும்பவும் ரயிலேறி – பெருநகரத்துக்குத் திரும்புகிறான்! மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் (??!) முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது!


    #########


    மற்ற கதைகள் எப்படியோ ...ஆனால் மேற்குறிப்பிட்ட இந்த கதை வெளிவருமாயின் * எனக்கு* மிக மிக பிடித்த கதையாக இது அமையும் என்பது மட்டும் உறுதி சார்...ஏனெனில் இது எனது நடைமுறை அனுபவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.இப்பொழுது வரை அலுவலகம் விட்டால் வீடு ..வீட்டை விட்டால் அலுவலகம் என்பதை தாண்டி ( நமது புத்தக காட்சி...மற்றும் சேந்தம்பட்டி நண்பர்களின் திடீர் காமிக்ஸ் சந்திப்பு மட்டும் விதிவிலக்கு.இதிலும் இல்லத்தில் ' நான் ஆபிஸ் போயிட்டு வரேன்மா " அப்படின்னு சொல்லிட்டு அலுவலகம் சென்று வருவது போலவே அதே நேரம் சென்று சந்திப்பில் கலந்து கொண்டு வழக்கமான நேரத்திலியே இல்லம் திரும்புவது வேறு கதை .." ) பலவருடமாக நான் தனியே செல்லும் சுற்றுலா தான் இந்த கதை...



    நான் பிறந்து வளர்ந்தது கோவை.இப்பொழுது வரை திருமணத்திற்கு முன்னர் இருமாதம் ஒரு முறை..திருமணத்திற்கு பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை என விடிகாலையில் சேலத்தில் இருந்து கோவை சென்று இரவு வரை நாங்கள் குடியிருந்த இல்லம்..நான் படித்த பள்ளி ..,சனி.,ஞாயிறு எனில் கிரிக்கெட் மட்டையை எடுத்து சென்று விளையாடிய வ. உ .சி .மைதானம்,அண்ணா சாலை ..மேம்பாலம்...தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள கேஜி திரை அரங்கம் ( பிறந்தது வரை பத்தாவது வரை அங்கேயே இருந்தாலும் அந்த திரைஅரங்கில் ஒரு முறை கூட படம் பார்த்தது கிடையாது.சென்ற ஓரே ஒரு தடவையும் ஹவுஸ்புல் ஆகி திரும்பியது ஒரு தனி நினைவு கதை..)..குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்று கொண்ட ரேஸ்கோர்ஸ் சாலை ,ஜீடி நாயுடு பங்களா, அதன் அருகே வழக்கமாக சிகிச்சை பார்க்கும் போலீஸ் ஹாஸ்பிட்டல் ,முக்கியமாக ஜங்ஷன் அருகே வரிசையாக இருக்கும் பழைய தள்ளுவண்டி புத்தக கடை என காலை முதல் மாலை வரை தன்னந் தனியே நடந்து,நடந்து சுற்றி கொண்டே இரவு பேருந்தில் வீடு திரும்பி வருகிறேன் இன்னமும். ஒவ்வொரு முறை செல்லும் பொழுது எனது கோவையின் மாற்றம் அது வளர்ச்சியாகவே இருப்பினும் நான் சுற்றி இருந்த இடங்களை அந்த சமயம் பார்க்கும் பொழுது பழைய நினைவுகளில் மலர்ந்து மனது கனத்து கண்களில் தன்னால் கண்ணீர் தளும்புவது இது வரை மாறவில்லை..


    காலத்தின் கொடையில் தவிர்க்க முடியா சூழலில் ஒரிஜினல் "கிராபிக் நாவல் " வரிசை என தாங்கள் கொண்டு வரும் பொழுது மேற்குறிப்பிட்ட இந்த கதையை நினைவில் வைத்து இருங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான நினைவோட்டம் பரணி.

      Delete
    2. தலைவரே நெஞ்சில் நிற்க்கும்
      ஆட்டோ கிராப்

      Delete
    3. செம தலீவரே...
      ஆனால் பழைய காதல் பற்றிய ஒரு வார்த்தையும் காணோமே???...

      Delete
    4. ///நான் சுற்றி இருந்த இடங்களை அந்த சமயம் பார்க்கும் பொழுது பழைய நினைவுகளில் மலர்ந்து மனது கனத்து கண்களில் தன்னால் கண்ணீர் தளும்புவது இது வரை மாறவில்லை..///

      'ம்'மினு ஒரு வார்த்தை சொல்லுங்க தலீவரே... உங்களை அழ வைக்கிற அந்த இடங்களையெல்லாம் வெடி வச்சு தகர்த்துப்புடலாம் தகர்த்து! உர்ர்ர்... உர்ர்ர்.. க்ரா...

      Delete
  55. முதல் பறவை .....



    அழகு......

    ReplyDelete
    Replies
    1. விஜயராகவன் சார். மேலே உள்ள உங்க கேள்விக்கு பதிலை தலைவர் குறிப்பால் அழகாக உணர்த்துகிறார் பாருங்களேன்.

      Delete
    2. பதில் ரெடியாகிட்டு இருக்கும் போல தெரியுதே...

      Delete
    3. Paranitharan K : தலீவரே..... உங்களது மலரும் நினைவுகளைப் படித்து ; உங்களுக்குள் இன்னமும் உறையும் அந்தக் குட்டிப் பையனை நினைத்து ; பெரிய ஊரிலிருந்து சின்ன ஊருக்கு மாறிப் போக நேர்ந்த விதியின் சூழ்ச்சியை நினைத்து ; இந்த கிராபிக் நாவலை நாம் வெளியிட்டால் நீங்களும், நமது MV சாரும், பாட்ஷா சாரும் வெவ்வேறு காரணங்களுக்காய்த் தேம்பித் தேம்பி அழப் போவதை நினைத்து ; தொடர்ந்து ஒரு குயர் ITC நோட்டில் நமக்கு வரக்கூடிய உங்களின் கடிதக் கணையை நினைத்து- இப்போதே எனக்கு கண்ணீர் முட்டுகிறது !!

      Delete
  56. என்னுடைய முகம் தெரியா காமிக்ஸ் நண்பர்
    அன்புடன் எனக்களித்த இரத்தக்கோட்டை சந்தா எண் 147. அதனை சந்தோஷத்துடன் மிக சந்தோஷத்துடன் ஈரோட்டில் நண்பர்கள் மத்தியில் வாங்கிக்கொள்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : ஜூப்பர் !

      Delete
  57. இதோ இந்த அலைகள் போல ஆள வேண்டும் ... மூன்று வானமும் வேண்டும்....சார் வான்சின் இக்கதை குறித்து இரத்தப்படலத்தில் ஏற்கனவே எழுதிய போதிலிருந்தே எப்படா கடல் கதை வருமென ஏங்கிக் கிடந்தேன்....பராகுடாவும் அள்ளுதே .....ஞாபகம் வருதே சார்ந்த கதைகள் எப்பவும் சுவாரஷ்யம் தர வல்லதே . அதும் ஹிட்டடித்த கதை எனும் போது தாமதிக்காதீர்கள்...விரைந்து ஆவன செய்யலாமே . முதலில் சீசன் இரண்டில் வான்சின் ப்ரூசை ஏழே கதை என்பதால் ஒரே பாகமாயோ அல்லது இரு பாகமாயோ விட்டால் அகமகிழ்வேன் ----இனி மேலும் தாமதிக்க ஏலாது ...ஆசய மீண்டும் அணை கட்ட ஏலாதளவிற்கு தூண்டி விட்டு விட்டு மீண்டும் காயப் போட்டு விடாதீர்கள் சார் ...யோசிக்காமல்....தயங்காமல் ...வெளிப்படுத்துங்கள் ..டெக்ஸ் அட்டைப்படம் பிரித்து மேய்கிறது ..பின்னட்டயிலும் வண்ணமயபக்கங்கள் எழிலுற அமைந்து அதகளம் காட்டி அழகூட்டுவது அழகோ அழகு ...இந்த வாரம் கூடுதல் மகியழ்ச்சிய்ய்ய்ய்...

    ReplyDelete
  58. அந்த கழுகு பேட்ஜ் அழகு....காட்டரசன் கோட்டைக்கு வானரசன் அழகு சேர்க்கட்டுமே .

    ReplyDelete
    Replies
    1. ஏலே என்ன டி ஆர் படம் ஏதும் பார்த்தியா? காட்டரசன் நாட்டரசன் என ரைமிங்கா எழுதுர

      Delete
  59. Super sixல் பழைய சூப்பர் ஹிட் கதைகளுக்கே ஆதரவு தருகிறேன்.

    புது ஸ்லாட்டை வில்லியம் வான்ஸ்க்கே வழங்கலாம்.

    ReplyDelete
  60. //So சூப்பர் 6 - Season 2 எனும் இணைதடத்தில் நம்மள் கி ஆதர்ஷ அங்கிள்ஸ் சவாரி செய்வதைத் தாண்டியும் பார்வைகளை லயிக்க அனுமதிக்கலாமெனில் மேற்கண்ட மூன்றில் ஒன்றை இறக்குமதி செய்யலாம்.//
    யோசனை ஒன்று- ஒரு வேண்டுகோள் சார், புதிய வரவுகளை தாரளமாக வரவேற்கலாம்,அதே நேரத்தில் மறுபதிப்புகளுக்கும் பங்கம் வரக் கூடாது,எனவே +6 ல் சிக்பில்,லக்கி லூக்,டெக்ஸ்,ஜெரோமியா,ரோஜர் ஆகிய ஐந்தும் உறுதி செய்யப்பட்டவை.இதனுடன் ரிப்போர்ட்டர் ஜானி அல்லது பிரின்ஸ் கதை ஒன்றை இணைத்து (ரிப்போர்ட்டர் ஜானி இருந்தால் நலம்) வழக்கம்போல் +6 ஆக்கி விடலாம்,
    கூடவே துணைக்கு புதிய வரவில் ஒன்றை இணைத்து (ஒரே தொகுப்பாக)+7 என்று வெளியிடலாமே,
    யோசனை இரண்டு- வழக்கமான +6 உடன் புதிய மூன்று சாகசங்களையும் இணைத்து +9 என்ற எண்ணிக்கையில் வெளியிடலாம்.
    யோசனை மூன்று- புதிய வரவில் ஏதேனும் ஒரு தொகுப்பை முழுமையாக சந்தா A தடத்தில் இணைத்து விடலாம்,(ஜேசன் ப்ரைஸ் முடிந்து விட்டதை கணக்கில் கொண்டு)
    முடிந்த வரை கிளாசிக் மறுபதிப்புகளில் கைவைக்காமல் பார்த்துக் கொண்டால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. //யோசனை இரண்டு- வழக்கமான +6 உடன் புதிய மூன்று சாகசங்களையும் இணைத்து +9 என்ற எண்ணிக்கையில் வெளியிடலாம்.//
      +1

      Delete

    2. //யோசனை இரண்டு- வழக்கமான +6 உடன் புதிய மூன்று சாகசங்களையும் இணைத்து +9 என்ற எண்ணிக்கையில் வெளியிடலாம்.//
      +1

      +12னு வந்தாலும் சந்தோசமே! 6 பழசி, 6 புதுசி!

      Delete
    3. பஞ்ச் ரெண்டு பஞ்சர் பத்து...

      அஞ்சி பழசு...
      அஞ்சி புதுசு...



      Delete
    4. @ Friends above : சிவகாசியிலொரு சங்கிலி முருகன் + "காதல்" பரத் 'ங்கேங்கேங்கே' moment# !!

      Delete
  61. டியர் விஜயன்சார் என்னுடைய இரத்த கோட்டை பிரதியை EBF ல் வாங்கி கொள்கிறேன். நன்றிங். மேலும் EBF ல் ரோஜரின் சாகச ஸ்பெசலான மர்மகத்தியும் இரத்ததீவும், சர்ப்ரைஸ் புக்காக கொண்டு வருவதாக நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரியானதே என்பதை சொல்லிகொண்டு .........

    ReplyDelete
    Replies
    1. /// EBF ல் ரோஜரின் சாகச ஸ்பெசலான மர்மகத்தியும் இரத்ததீவும், சர்ப்ரைஸ் புக்காக கொண்டு வருவதாக நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரியானதே என்பதை சொல்லிகொண்டு .........///---,அய்யா அது வருகிறது விளம்பரம் தானே... போன ஆயிரத்தாண்டில் இப்படி வந்த விளம்பரங்கள் கூட நிறைய இருக்கேஏஏஏஏ....

      Delete
    2. Dr.Sundar,Salem. : எந்த EBF-க்கென்று சொல்லவில்லை பார்த்தீர்களா ?

      Delete
  62. நான் பழைய இதழ்களும் புது இதழ்களும் முறையே மாறி மாறி படித்து வருகிறேன். அந்த முறையில், இந்த வாரம் படித்த

    பழையது:

    1 வேங்கை வேட்டை - ரிப் கிர்பி சாகசம் - கதை சாதாரண கதை என்றாலும், சித்திரங்கள் எப்பொழுதும் போல பளிச்.

    2 விசித்திர ஜோடி - இது ஒரு மினி லயன் இதழ். இதில் கதம்பம் போல பல கதைகள் இருந்தன. ஒன்று இரண்டு நன்றாக இருந்தது. ஆனால் எதுவும் மனதில் நிற்க வில்லை..இதனால் தானோ மினி லயன் ஹிட் அடிக்க வில்லை.

    3 பாதாள பாசறை - மாண்டரேக் கதை. ஒரு மாயாஜால மன்னனின் கதையில் ஒரு மருந்து அளவுக்கு கூட மாயாஜாலமே இல்லாத கதை. சித்திரம் பழைய பாணி. எனக்கு இது அவ்வளவாக பிடிக்கவில்லை.

    புதியது:

    1 டூயூரங்கோ - கடைசியில் கடந்த இரண்டு வாரங்களாக படித்து முடித்தேன். வாவ். இது தான் ஆச்சு அசலாக வந்த முதல் வெஸ்டர்ன் கதை என்பேன். ஒரு கிளின்ட் ஈஸ்ட்வுட் படத்தில் வருவது போல இருக்கும் கேரக்டர்.

    மக்கள் கவனித்தார்களோ இல்லையோ 127 பக்கத்தில் கூட்டமாக இருக்கும் மக்களின் நடுவில் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஒரு குதிரையின் மேலே அமர்ந்து இருக்கும் காட்சி இருந்தது.

    விஜயன் சாருக்கு நன்றி. எனக்கு இன்னொரு கௌ பாய் கதை என்றவுடன், ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைத்தேன். ஆனால் டூயூரங்கோவிருக்கு நான் பேன் ஆகி விட்டேன்.

    மற்றும் இந்த வார ஆசிரியரின் கேள்விக்கு, எனக்கு இந்த வரிசையில் எப்பொழுது சாத்தியப்படுமா அப்பொழுது கண்டிப்பாக ரிலீஸ் செயுங்கள்

    1 Barracuda
    2 Long John Silver

    ReplyDelete
    Replies
    1. Prabhu : ட்யுராங்கோ வெளியான தருணம் நண்பர்கள் இங்கு செய்த அலசல்களும் கதைக்கு இணையான சுவாரஸ்யம் தந்ததை மறக்க இயலாது ! நேரம் கிட்டும் போது அந்தப் பதிவுகளைப் புரட்டிப் பாருங்களேன் நண்பரே ?

      Delete
  63. இரத்த கோட்டை முன் பதிவு செய்து விட்டதாக தவறாக எண்ணி இருந்தேன். இப்போது முன் பதிவு செய்தால் late bird badge கிடைக்குமா ஆசிரியர் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. முன் பதிவு செய்ய பணம் அனுப்பியாச்சு சார். மறக்காமல் late bird badge புத்தகத்துடன் அனுப்பிடுங்க.

      Delete
    2. Mahesh : "Late Bird" என்றால் வேறு மாதிரியும் அர்த்தமாகிப் போய் விடும் ; so இம்முறை தவற விட்டதை அடுத்த முன்பதிவினில் பிடித்திட்டால் போச்சு !

      Delete
  64. எடிட்டர் சார் என்னுடைய இரத்தக் கோட்டை பிரதியை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன்...
    புக்கிங் எண் : 13
    பெயர் : N.சண்முகம்
    ஊர் : திருச்செங்கோடு

    ReplyDelete
  65. க்யூபா பொக்கிஷ படல சிறப்புக்கள்:-

    *அமானுஷ்ய மாந்த்ரீகம்:-

    சில நண்பர்களுக்கு இந்த கதையில் மாந்த்ரீகம் இல்லாமல் இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என தோணலாம். மாந்த்ரீகமே இக்கதையின் துவக்கத்திற்கு லாஜிக் படி கட்சிதமாக பொருந்தும். ஊடூ "வாங்கா" வுக்கு மட்டுமே தன் எஜமான விசுவாசத்தை விட்டுத்தரும் எடீனை வேறு எவ்விதம் பயமுறுத்தி சிறுவனின் கடத்தலை நடத்தியிருக்க இயலும்!!!. புரட்சியாளர்கள் போர்வையில் ஸ்பானியர்கள் சிறுவனை கடத்தி, பழியை மாம்பீஸ்கள் மீது போட்டு அமெரிக்காவின் உதவி புரட்சிக்கு கிடைக்காமல் செய்வதெலாம் "கொக்கு தலை வெண்ணை" யாகத்தான் முடியும்.

    *ஓவிய உச்சங்கள்:-

    வித்தியாசமான தோற்றத்தில் வரையப்பட்டு இருந்தாலும் டெக்ஸின் முகம் பவளசிலை மர்மம், மரணமுள், தலையில்லாப் போராளி க்கு இணையான வசீகரத்துடனே இருந்தது. 117ம் பக்க முதல் பேனல் டெக்ஸ் சிறப்பான உதாரணம். பல இடங்களிலும் இதேபோல பொலிவான டெக்ஸ் வதனங்கள் தீட்டப்பட்டுள்ளன. 102ம் பக்க ஹவானா இரவுக்காட்சி, 124பக்க மரங்களின் நடுவே ரயிலின் அழகிய தோற்றம், 160ம் பக்க சாலைப் பாதுகாப்பு டவர், 171ல் அகழி காட்சி & கதை நெடுகிலும் நீயூஆர்லியன்ஸ் சதுப்புநிலம்- கியூபா இயற்கை காட்சிகள் அசத்தலாக வரையப்பட்டு இருக்கும்.

    அமெரிக்கர்களின் கெத்து:-

    *என்னதான் வியாபாரி வேடத்தில் போனாலும் டெக்ஸ் தன் வட அமெரிக்க கெத்தை ஒரு இடத்திலும் குறைத்து கொள்ளவில்லை. ஸ்பானிய லெப்டினன்ட் கோபப்படும் போது "அந்த ரோசம் இருக்க வேண்டியது தான்" என நக்கலாக தன் கெத்தை வெளிப்படுத்துவார். எவ்வித காம்ப்ரமைசும் இல்லாமல் டெக்ஸை படைத்த படைப்பாளியும், இங்கே அதை விட எடுப்பாக லயலாக் எழுதிய ஆசிரியர் சாரும் போட்டி போட்டு திறமையை வெளிப்படுத்தும் இடம். வழக்கம்போல ஆசிரியர் சார் ஒரு படி முந்தியே இருப்பது கண்கூடு.

    மண்டாலஸின் விடுமுறை:-

    *சிகுவாகுவாவில் பல முக்கிய பணிகள் இருந்தும் கியூபாவில் ஒரு சிறுவன் பொருட்டு கணிசமான நாட்களை பழைய நட்புக்காக செலவிடும் மண்டாலஸின் பாத்திரம் கதைக்கு வலுவான ஒன்று. இந்த கியூப "விடுமுறை" இன்னும் கூடுதல் நாட்களுக்கு நீடிக்க வேணுமே என பிரார்த்திக்கும் கவர்னர் மண்டாலஸிடம் வெகுஜன வாழ்க்கைக்கு ஏங்கும் சராசரி பிரஜையை உணரலாம்.

    வெள்ள மனம் நல்ல குணம்:-

    *ஹவானாவில் இருந்து டெக்ஸும் மண்டாலஸும்
    தப்பிசெல்லும் ரயில் நடுவழியே வாலண்டியர் படையால் மடக்கப்படுகிறது. கார்சனின் கடந்த காலத்தில் டக்ஸன் ரயிலில் ப்ரடி டோப்ஸை கார்சன் போட்டுத்தள்ளியதும், "இரும்புக்குதிரையின் பாதையிலே"யில்(லயன்100) சதர்ன் பசிபிக் ரயில்வே கம்பெனி பணத்தை கொள்ளை அடிக்க முயலும் போக்கிரிகளை டெக்ஸ் தனியாகப் போட்டுத்தள்ளியதும், கூட்டாகச் சேர்த்து கியூபாவில் டெக்ஸ் & மண்டாலஸ்க்கு பெட்டிக்குள் பொங்கலாக விதி முடிவை வகுத்து விட்டதோ என ஒரு கணம் தோன்றும். புரட்சியாளர்களுக்கு உதவ சர்க்கரை பாலீஸ் மெசின் பாகங்களோடு கலந்து தனித்தனியாக பிரிக்கப்பட்ட 100துப்பாக்கிகளை டெக்ஸ் அணி டோலாரஸ் கப்பலில் கொண்டு வந்திருக்கும். அந்த நல்ல செய்கையே இம்முறை அதே புரட்சியாளர்கள் வாயிலாக இவர்கள் காப்பாற்றப்படுவார்கள். நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என உணர்த்தும் தத்துவ முக்கியார்த்த கட்டம் அது.

    ReplyDelete
    Replies
    1. விதிவலியது...!!!:-

      *என்னதான் மாந்த்ரீகம் செய்து எகத்தாளமாக திரிந்தாலும் அவர்களும் சராசரி மனிதர்கள்தானே...!!! வட அரிசோனா முழுதும் ரத்த ஆறு ஓட வைக்க முயலும் ஹீவால்பை மாந்த்ரீகன் மனிடாரி தன் கனவில் தன்னை ஒரு பெரிய கழுகு தூக்கி செல்வதாக சொப்பனம் காண்பான். இங்கே ராயாடோவும் தன்னை ஒரு வெள்ளை கழுகு தூக்கி செல்ல இருப்பதாக தன் தீர்க்க தரிசனத்தில் உணருவான். தங்களின் காரியங்களுக்கு தாங்களே பொறுப்பேற்க வேணும் என இருவரின் முடிவை விதி பூடகமாக அறிவிப்பதன் மூலம் உணர்த்துவது விதி வலியது என்பதே...!!!

      தியாக சிகரங்கள்:-

      *நிலச்சுவான்தாராக இருக்கும் ரபேல் தன் துனைவி அலிஸியா இருக்கும் வரை தன் பிரம்மாண்டமான பண்ணையில் அடிமைமுறையை விட்டுத்தர மறுக்கிறார். அவளின் மறைவிற்கு பின் மனமாற்றம் அடைந்து தன் அடிமைகளுக்கு சுதந்திரம் தருவதோடு விடுதலை போராட்ட புரட்சியிலும் ஈடுபடுகிறார். உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதன் தன் வசதிகளை துறந்து போராட்ட தியாகியாக மாறுவது சாதாரண நிகழ்வல்லவே... இதுபோன்ற தன்னலம் அற்ற அசாதாரணமான மனிதர்களாலேயே பல விடுதலை போராட்டங்கள் வெற்றியடைந்தது உலகெங்கும் வரலாறு.

      * புரட்சி, விடுதலை போராட்டம் பற்றிய சொற்பமாக நான் படித்தவற்றுள் இந்த ரபேலின் தியாகம் என்னைப் பொறுத்து 3ம் இடம் பெறுகிறது. 2ம் இடத்தில் ராகுல சாங்கிருத்யாயன் அவர்களின் "வால்கா முதல் கங்கை வரை" நூலில் 19ம் பகுதியில் வரும் இந்திய அரசாங்க பணியில் இருக்கும் மேல்தட்டு சபதர், (ரொம்ப காலம் முன்பு படித்தது என்பதால் பெயர் தவறாக இருக்கலாம்) தன் உடமைகள் அனைத்தும் விற்று விட்டு தன் பணியையும் விட்டு விலகி சுதந்திர போராட்டத்தில் கலந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவார். அவரின் தியாகம் திகைக்க வைத்து விடும்.

      * தி பெஸ்ட் ஆஃப் தி ஆல் நம் தமிழ் அய்யா கல்கி அவர்களின் சாகித்ய அகாடமி பெற்ற அற்புத படைப்பான "அலை ஓசை"யின் ராகவன் பாத்திரம். இந்திய பிரிவினை கலகத்தில் நடக்கும் கதைஇது. அழகியான தாரணியை ராகவன் விரும்புகிறான். ஒரு கட்டத்தில் நாயகன் சூர்யாவும் அவளை விரும்புவான். கதை ஓட்டத்தில் பல திருப்பங்களுக்கு பிறகு தாரணி வெடி விபத்தில் சிக்கி கண் இழந்து, கை உடைந்து, பற்களை இழந்து அகோர உருவமாக காட்சியளிப்பாள்.
      அப்போதும் அவளை மணந்து கொள்ளும் ராகவனின் தியாக உள்ளம் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்து விடும். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் 2யும் தாண்டி இதற்கு உயரியவிருது கிடைத்திருப்பதே இந்த படைப்பின் சிறப்பை உணர்த்தும்.

      ......பலவிதங்களில் உயர்ந்து நிற்கும் க்யூபா படலம் என்னைப் பொறுத்து லயன் காமிக்ஸின் சிறந்த படைப்புகளில் ஒன்றே.......!!!!

      Delete
    2. மீஇஇஇஇ....த்ரிஇஇஇஇ.....

      வாங்கா?? மாங்கா?? சாங்கா??

      Delete
    3. என்றைக்கேனும் ஒருநாள் டெக்ஸ் கதாசிரியர் மௌரோ போசெல்லியை நம்மூருக்கு வரவழைத்தால் மெர்செலாகிப் போவார் நம் உத்வேகங்களைப் பார்த்தால் !! Phew !!

      Delete
    4. டெக்ஸ் விஜய் @ பின்னியிருக்கீங்க....கதையை எவ்வளவு அனுபவிச்சு எழுதி இருக்கீங்கன்னு நல்லாவே புரியுது ...செம ..செம ...

      Delete
  66. சிங்கம் களமிரங்கிட்டாரு எல்லாரும் ஓடியாங்கா........

    ReplyDelete
  67. அனைவருக்கும் எனது வணக்கம்.

    ReplyDelete