Powered By Blogger

Saturday, April 23, 2016

பதில் என்ன பௌன்சருக்கு ?



நண்பர்களே,
           
வணக்கம். வாரயிறுதி புலர்ந்து விட்டதென்பதை இப்போதெல்லாம் காலெண்டர் சொல்கிறதோ, இல்லையோ - தலைக்குள் பதுங்கிக் கிடக்கும் ‘வலைப்பதிவு அலாரம்‘ சத்தமாய் பிரகடனம் செய்து விடுகிறது! சனிக்கிழமைகள் காலைகளில் கண்ணைத் திறக்கும் சமயமே – ‘ஹை.... இன்றைக்குப் புதுசாய் என்ன எழுதுவதாம்?‘ என்ற ‘ரோசனையும்‘ புலர்ந்து விடுகிறது! மே மாதத்து இதழ்கள் பற்றிய preview-கள் இப்போது வரை ‘கோஷாப் பெண்களைப்‘ போல திரைமறைவிலேயே இருந்து வருவதால் – அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே இவ்வாரக் quota என்று தீர்மானித்தேன்! So here goes!

பாலைவனத்தில் பணயக் கைதி“ ஷெல்டனின் இன்னுமொரு one-shot என்பதைப் போன வாரம் சொல்லியிருந்தேன். இதோ- அந்த ஆல்பத்தின் அட்டைப்படம் – ஒரிஜினலின் வார்ப்பிலேயே! பின்னணி வர்ணங்களை மட்டுமே லேசாய் மேம்படுத்தியுள்ளோம் என்பதை அசல் + நகல் என இரண்டையும் ஒருசேரப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள்! And பணிகள் சகலமும் முடிந்து அச்சு வேலைகள் தற்சமயம் நடந்து வருகின்றன...!

And இதோ- இம்மாதத்து “ரேஞ்சர் quota“ வின் அட்டைப்படமும், உட்பக்கப் preview –ம்! 
இதுவும் கூட ஒரு ‘டெக்ஸ்‘ original சித்திரத்தின் உல்டாவே ; ஆனால் முழுவதுமாய் நமது ஓவியரைக் கொண்டு வரைந்து, பின்னணியில் பொன்னனைக் கொண்டு வர்ணம் ஏற்றியுள்ளோம்! (Background-ல் போஸ் கொடுக்கும் நாலுகாலார் கதையில் இடம்பிடிக்கப் போவதில்லை; ஒரிஜினல் டிராயிங்கில் இருந்த ஈயை அப்படியே அடித்து விட்டிருக்கிறோம்!!) “டாக்டர் டெக்ஸ்“ – ஒரு 110 பக்க டெக்ஸ் சாகஸமே எனும் விதத்தில் இந்த வருடத்தின் மிகச் சிக்கனமான கதையிது என்று சொல்லலாம்! ஆனால் ஆண்டு பிறந்த முதல் 120 நாட்களுக்குள்ளாகவே 1030 பக்கங்களை இரவுக்கழுகார் & கோ.விற்கென ஒதுக்கியான பின்பு  – இந்தப் ‘பத்தியச் சாப்பாடு‘ தவறில்லை என்றே  நினைத்தேன்! And இந்த இதழின் கதைக்களமும் ரொம்பவே மாறுபட்ட ரகம் ; துளி கூட முந்தைய சாகஸங்களின் நினைவூட்டல்களாய் அமைந்திடாது என்பது உறுதி! இந்த இதழில் இன்னுமொரு ஸ்பெஷல் சமாச்சாரமும் உண்டு; அது என்னவென்பதை தொடரும் வாரங்களது பதிவினில் எழுதிடுவேன்!

சந்தா C சார்பாய் சகலர் வதனங்களிலும் ஒரு அகலமான புன்னகையைக் கொணரும் பொறுப்பைக் கையிலெடுத்து நிற்பவர்களோ நமது நீலக்குட்டி மனுஷர்கள்! “தேவதையைக் கண்டேன் என ஒரு கிராமமே காதலில் விழுந்து கசிந்துருகும் SMURFS கலாட்டாவே இம்மாதத்து highlight என்று தைரியமாகச் சொல்லலாம்! 
பொம்மை போன்று முகங்கள் கொண்ட சுண்டுவிரல் மனுஷர்கள்; அத்தனை பேரும் ஒரே மாதிரியாய் காட்சி தரும் கதையமைப்பு – ஆனாலும் இது அத்தனையையும் மீறி ஒரு உயிரோட்டமான சித்திர அதகளத்தை உருவாக்க இதன் படைப்பாளிகளுக்கு எப்படித் தான் சாத்தியமாகிறதோ- நானறியேன்! சீனியர் ஸ்மர்ஃப் & ஜீனியஸ்  ஸ்பமர்ஃப் தவிர மற்ற நீலப் பொடியர்கள் அத்தனை பேரும் அதே சைஸ்; அதே உடல் / முக அமைப்புகள் கொண்டவர்கள் !! ஆனால் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட குணாதிசயம்! இதை சித்திரங்களில் highlight செய்வது மட்டுமன்றி, கதை நெடுகிலும் ஒரு துளிகூட அயர்வு எட்டிப்பார்க்க இடம் தராமல் கொண்டு செல்வதென்பது எத்தனை அசகாய ஆற்றல்? சென்றாண்டு பெல்ஜியத்தில் இவர்களது அலுவலகத்திற்குச் சென்ற போது basement-ல் இருந்த SMURF ஸ்டூடியோவிற்கும் இட்டுச் சென்றனர் ! சமீபமாய் வெளிவந்துள்ள புதிய ஸ்மர்ஃப் ஆல்பத்தின் பணிகளில் ஓவியர் ஜெரோயென் மும்முரமாக இருந்த போதிலும், ரொம்ப ஜாலியாகப் பேசினார் மனுஷன்! அவர் கண்களில் கொப்பளித்த உற்சாகமும், குறும்பும் ஸ்மர்ஃப்களாக உருமாறுவதை அவரருகே அமர்ந்து ஒருசில நிமிடங்கள் ரசித்திட முடிந்தது! புதுக் கதையின் தயாரிப்புப் பற்றிய விஷயங்கள் துளிகூட வெளியே கசிவதை அவர்கள் விரும்புவதில்லை என்பதால் நான் செல்போனில் போட்டோ எடுக்கக் கோரிக்கை வைத்திடவில்லை ! 

இந்த நீலக்குட்டி மனிதர்களின் பின்னணியில் பிரவாகமெடுக்கும் கற்பனை வளத்தின் வலிமையையும், கதைநெடுகிலும் நிலவிடும் சந்தோஷச் சூழல்களை ரசித்திடவும் வயது வரம்புகள் உலகெங்கும் கிடையாதென்பதை ‘பளிச்‘சென்று புரிந்து கொள்ள முடிகிறது! “தேவதையைக் கண்டேன்“!7 முதல் 77 வரை‘ என்ற நமது tagline-க்கு சத்தியமாய் நியாயம் செய்திடும் ஆல்பம்! தற்போது இவர்களது ஆல்பம் நம் அச்சகத்தில் ஜரூராய் பிரிண்ட் ஆகி வருவதால் - ப்ளூ ink கணிசமாகவே ஆர்டர் செய்துள்ளோம் ! All is Blue !! 
 Last of the lot – மறுபதிப்புப் பிரதிநிதியாய் ஸ்டெல்லாவின் முதலாளி – “சதிகாரர் சங்கம்“ வாயிலாக தலைகாட்டுகிறார்! சகோதரி கடல்யாழ் இந்த இதழின் proof-reading செய்துள்ளது ஒரு பக்கமெனில் – நண்பர் பொடியன் உருவாக்கியுள்ளதொரு அட்டைடிசைன் இதோ! 
ஏகப்பட்ட காலத்திற்கு முன்பாய் வெளியான கதையென்பதால் எனக்கு மேலோட்டமாய் மட்டுமே கதை நினைவிலிருந்தது ! ஆனால் இப்போது முழுசுமாய் படிக்கும் போது – காலச்சக்கரத்தின் சுழற்சியில் இது போன்ற சாகஸங்கள் படும் பாட்டை நினைத்து மண்டையைச் சொறிந்திடத்தான் முடிகிறது! “கிண்டி போலாம்... ரைட்...!“ என்று ஒரு நிமிஷமும்; மறுநொடி... “இல்லே.... வேண்டாம்... வேண்டாம்... பெசண்ட் நகர் சலோ“ என்றும்; “ஐயோ... அங்கேயும் வேணாம் – ஆவடிக்குப் போலாம்!“ என்று சொன்னால் உள்ளுர் டாக்ஸி டிரைவரே கீழ்ப்பாக்கத்திற்கு வண்டியை செலுத்துவது நி்ச்சயம்! ஆனால் நம்மவர் ஜானி நீரோவோ – “ஸ்வீடன் போலாம்; அப்புறம் அமெரிக்கா; அப்புறம் ஜப்பான்“ என்று டவுண்பஸ் ஷண்டிங் அடிப்பதையெல்லாம் படிக்கும் சமயம் 'திரு திரு'வென்று விழிக்கத் தோன்றுகிறது ! பாவம் ஸ்டெல்லா.... இவருக்கு டிக்கெட் போட்டே ஓய்ந்து போயிருப்பது உறுதி! 40+ ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் செம fresh ஆகத் தோன்றிய இக்கதைகள் – காலத்தின் மாற்றங்களுக்கு ஈடுதர இயலாது தடுமாறுவது புரிகிறது! இங்கே தான் நமது குதிரைவாலாக்கள் score செய்கிறார்கள் என்பேன்! கதைக்களமே ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பான வன்மேற்கெனும் போது – அதனை என்றைக்குப் படித்தாலும் பெரியதொரு பிசிறடிக்கப் போவதில்லை தானே? Maybe இன்றைக்கு ஜானி நீரோவும், லாரன்ஸும் படும் அவஸ்தைகளை முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பாய் லார்கோக்களும், ஷெல்டன்களும் மறுபதிப்பாகிடும் பட்சத்தில் சந்திப்பார்களோ- என்னவோ? கருணை காட்டா முதலாளி – இந்தக் காலச் சக்கரங்களைச் சுழலச் செய்பவர்!!!!

மே மாதத்து preview-களை 'ஏக் தம்மில்' பார்த்து விட்ட திருப்தியில் அடுத்த topic பக்கமாய் வண்டியைத் திருப்புவோமா? ஜுன் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னைத் தீவுத் திடலில் நடைபெறவுள்ள புத்தக விழாவினில் பங்கேற்க ஆர்வமாய் விண்ணப்பித்துள்ளோம்! நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் ஜுன் 3 & 4 தேதிகளில் (சனி & ஞாயிறு) சென்னையில் ‘டெண்ட்‘ அடிப்பதென்று எண்ணியுள்ளேன்! “என் பெயர் டைகர்“; முத்து மினி காமிக்ஸ் ரிலீஸ் என 2 வாகான வாய்ப்புகள் அமைந்துள்ளதால்- நண்பர்கள் சந்திப்பை அதனோடு இணைத்திடுவது சிறப்பாக இருக்குமென்று தோன்றியது! உள்ளுர் நண்பர்கள் + வெளியூர் நண்பர்கள் என அனைவரும் ஆஜராகிட இயன்றால் சூப்பராக இருக்கும் என்பதால் – the welcome mat is out folks!! Please do visit all !! தொடரும் நாட்களில், நமக்கு ஸ்டால் கிடைப்பது உறுதியான பின்பாய், "எங்கே? எப்போது?" என்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ளலாம்! So- ஜுன் துவக்கத்தினில் சென்னைப் பயணத்திற்கென உங்கள் விசா விண்ணப்பங்களை உங்கள் இல்லத்துத் தூதரகத்தில் இப்போதே சமர்ப்பிக்கலாமே?!!

போனவாரப் பதிவினில் – காத்திருக்கும் “இரு மில்லியன் ஹிட்ஸ்“ ஸ்பெஷலுக்கு உங்களது தேர்வுகள் / அபிப்பிராயங்கள் பற்றிக் கோரியிருந்ததற்கும், ஆன்லைன் voting-க்கும் – “தோர்கல்“ தான் எங்கள் வேட்பாளரென்று ஏகோபித்த குரல்கள்!! இந்த fantasy நாயகருக்கு நம்மிடையே துளிர்விட்டுள்ள ரசனை நிஜமாக ஆச்சர்யமூட்டுகிறது! Again – ‘7 முதல் 77 வரை‘ எல்லோருக்குமே ஏற்ற கதைகளிவை என்பது இவற்றின் வெற்றியின் ரகசியமோ? Anyways – MMS இதழில் (MILLION & MORE SPECIAL) இடம்பிடிக்கவிருக்கும் நாயகரின் தேர்வு – வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்த பிற்பாடு இறுதி செய்யப்படுமென்பதால் we will wait a wee bit more! எது எப்படியாயினும் இந்தாண்டின் இரண்டாம் பாகத்தில் தோர்கல் நிச்சயமுண்டு என்ற உறுதியைத் தர முடியும் என்னால்!

 And இங்கே உங்களிடம் நான் கேட்க விரும்பும் இன்னுமொரு கேள்வியுள்ளது! 2015-ன் ஒரு highlight பௌன்சரின் வரவே என்று சொல்லலாம்! ஆல்பம்கள் 1-7 வரை போன வருடம் வெளியிட்டிருந்தோம். “அவற்றின் தொடர்ச்சி எப்போது?“ என்று நண்பர்கள் அவ்வப்போது வினாக்கள் எழுப்பி வருவது தொடர்ந்து வருகிறது! ஆல்பம் 8 & 9 ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் – புதியதொரு ஆல்பமும் சீக்கிரமே வெளிவரக் காத்துள்ளது! So - இந்தாண்டின் பிற்பகுதியினில் நாம் இதுவரைப் படித்திரா 3 ஆல்பங்கள் பௌன்சர் தொடரினில் இருந்திடும்! 
இந்த ஒற்றைக்கையாரின் சாகஸங்கள் எப்போதுமே பிடரியில் அடிக்கும் ரகங்கள் என்பதில் ஒளிவில்லை! இவரது கதைகள் வெளியான தருணங்களில் ஏகமாய் விவாதங்களும் நம்மிடையே எழுந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை! இந்நிலையில் ஆல்பம் 8 & 9 இணைந்த சாகஸமானது வழக்கத்தை விடவும் சிலபல படிகள் கூடுதலாய் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களோடு ரவுண்ட் கட்டி அடித்திடும் விதமாய் உள்ளது ! சித்திரங்களை ரொம்பவே கத்திரி போட இங்கே வாய்ப்புகள் குறைச்சல் எனும் போது- இவற்றினுள் நாம் கால்பதிக்கும் பட்சத்தில் என்பாடு திண்டாட்டமோ திண்டாட்டம் தான்! இவற்றை ‘சிவனே‘ என்று ஓரம்கட்டி விடலாம் என்று தான் நான் இதற்கென பெரிதாய் மெனக்கெடாது இருந்து வந்தேன்! But புதியதொரு ஆல்பமும் தயாராகி வரும் நிலையில் – “ஆல்பம் 8 & 9 எப்போது போட உத்தேசம்?“ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் படைப்பாளிகள்! முதல் 7 கதைகள் Humanoids பதிப்பகத்திலும்; பாக்கிக் கதைகள் Glenat எனும் இன்னுமொரு பதிப்பக ஜாம்பவானிடமும் உள்ளதென்ற போதிலும் – இருவருமே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்! So பௌன்சர் தொடர்பாய் நம் பக்கம் வீசப்பட்டுள்ள இந்தக் கேள்வி பௌன்சரை எவ்விதம் ஆடலாமென்று நீங்கள் தான் சொல்லுங்களேன்? நல்லபிள்ளையாய் குனிந்து கொண்டு பந்து விக்கெட்-கீப்பரைச் சென்றடைய அனுமதிப்போமா? அல்லது ‘ஒரு கை பார்த்து விடுவோம்‘ என்று hook பண்ண முயற்சிப்பதா? Hook செய்ய முயற்சித்தால் சில்லுமூக்கில் தக்காளிச்சட்னிக்கும் வாய்ப்புண்டு;! பவுண்டரி லைனில் ‘கேட்ச்‘ பிடிக்கப்படும் வாய்ப்புமுண்டு ; சிக்ஸருக்குப் போகும் வாய்ப்புமுண்டு என்பதும் புரிகிறது! What say folks?
பதிவை நிறைவு செய்யும் முன்பாகச் சின்னதாயொரு interlude!  இந்த வாரத்தின் ஒரு நாளில் நமக்கு வந்திட்ட மின்னஞ்சல் இது! நமது நலம் நாடும் ஏராளமான நண்பர்களுள் இவரும் ஒருவர் என்ற அறிமுகம் போதும்! படித்துப் பாருங்களேன்!
--------------------------------------------------------------------------------------------------------------------------
டியர் விஜயன் சார்,

இது உங்கள் தனிப்பட்ட விஷயம். இதில் கருத்து சொல்ல வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன், இருந்தாலும் ஒரு சின்ன ஆற்றாமைதான். தவறாகக் கொள்ளவேண்டாம்.

தங்களது வெற்றிக்குத் தங்களுடைய வெளிப்படையான தன்மைதான் காரணம் என்றும், அதுவே தங்களது பலம் என்றும் நான் நினைக்கிறேன். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே சில தருணங்களில் பலவீனமாகவும் அமைந்திடுகிறதோ என்று நினைக்கிறேன். இந்த வார டாப்பிக், பேஸ்புக்கிலும், வாட்சப் உரையாடல்களிலும் கிண்டலுக்கு ஆளாகி நிற்கிறது.

விலையேற்றம் என்பது எந்த தொழிலுக்குமே, பல்வேறு காரணிகளால் தவிர்க்க இயலாத ஒன்று. சில தவிர்த்து, அதையெல்லாவற்றையுமே வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக்கொண்டிருக்க அவசியமில்லை என்பது என் எண்ணம். ஒரு வெளியாளாக தங்கள் பிரச்சினையைப் நான் படித்தால், குடோன் இடப்பற்றாக்குறைதான் பிரச்சினை எனில், குடோனை விரிவாக்கம் செய்வதுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும் என்று சொல்வேன். அதோடு விற்பனை குறைவு, விற்பனை வேகக்குறைவு, அதிக பிரிண்ட் ரன் இது போல ஏதோ ஒன்று அல்லது பல காரணங்கள்தான் சிக்கலுக்குக் காரணமே தவிர குடோன் அளவு காரணமா என்பதை தாங்கள்தான் விளக்க வேண்டும்.

இதுபோன்ற அவசியப்படுகின்ற பொழுதுகளில் சத்தமில்லாமல், நியாயமான விலையுயர்வை செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான் சிறப்பாக இருக்கும்... என்பது என் கருத்து!! :-))))
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஓசையின்றி இதற்குப் பதில் போட்டுவிட்டு நான் நடையைக் கட்டியிருக்கலாம் தான் ; ஆனால் நண்பரைப் போலவே உங்களுள் இன்னும் வேறு சிலரும் இருக்கக்கூடுமென்பதால் எல்லோருக்குமாய் பதில் தந்தது போலிருக்குமேயென்று நினைத்தேன்! So அந்த மின்னஞ்சலை இங்கே வெளியிடும் உரிமையை எடுத்துக் கொண்டேன்! கூடவே எனது பதிலும் : 

Yes – of course! வெளிப்பார்வைக்கு “கிட்டங்கியில் இடமில்லை என்பதால் விலையேற்றம் செய்ய வேண்டி வரும்!“ என்ற போன வாரத்து statement சிலபல பரிகாசங்களை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை தான்! மேலோட்டமாய்ப் பார்த்தால் ; நமது பயணத்தின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்திடாது பார்த்தால் – எனது பதிவு அபத்தமாகக் கூடத் தெரியலாம்! ஆனால் அதன் பின்னணி யதார்த்தத்தைப் புரிந்திடுவதில் பெரிய சிரமம் இருந்திடாது என்ற தைரியத்தில் தான் போன வாரம் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்! 

சரி, ஒரு கிட்டங்கியைப் புதுசாய் பிடித்து விடலாம் தான்; அதில் சிக்கலில்லை! ஆனால் மாதம் பத்தாயிரம் வாடகைக்குக் குறைச்சலாய், பத்திரமான; கரையான் தொல்லைகள் இல்லாப் புதியதொரு குடவுனைப் பிடிக்க சாத்தியமாகாது! And 6 மாத அட்வான்ஸ்; அங்கே புத்தகங்களைப் பத்திரமாய் அடுக்கிட குறைந்த பட்சம் 30 ராக்குகள் ; அந்த இடத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க CC டி.வி. ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தமாய் ஒரு இலட்சம் முடக்கியாக வேண்டும்! “அட... அதையும் கூட செய்தே விடுவோம் சார்! நடைமுறையில் வேறு சிரமங்கள் இல்லாதபட்சத்தில் அதற்கு நாங்கள் ஓ.கே. தான்! என்றே நான் தீர்மானிப்பதாகவே வைத்துக் கொள்ளுங்களேன் – அதன்பின் தொடரும் நடைமுறைகள் என்னவாக இருக்குமென்றும் நான் சொல்கிறேன்! தினமும் வரும் ஆன்லைன் ஆர்டர்களுக்கும் சரி; ஏஜெண்ட்களின் ஆர்டர்களுக்கும் சரி – பழசு + புதுசு என்று விதவிதமான combination களில் புத்தகங்களைத் தேடிப் பிடித்து despatch செய்து வருகிறார்கள் நமது அலுவலகப் பெண்கள்! தற்போது சகலமும் எங்களது இடத்திலேயே எனும்போது பெரிய சிரமங்களின்றி வேலைகள் நடந்து வருகின்றன! இனி Godown 1; Godown 2 என்றிருப்பின் இங்கும் அங்குமாய் ஷண்டிங் அடித்திட நிச்சயமாய் கூடுதலாய் (wo)man power தேவையாகிடும்! சரி, அதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன் – இதிலுள்ள இன்னொரு சிக்கலைப் பற்றி பரிகாச ஆர்வலர்கள் அறிவார்களா – என்ன? ஒவ்வொரு ஆண்டின் annual stock taking-ன் போதும் குறைந்தபட்சம் 8% சேதாரம் இல்லாது போகவே போகாது! புத்தக விழாக்களுக்கு நாங்கள் அனுப்பும் பிரதிகள்; அங்கே விற்பனையாகின்றவை ; திரும்ப எடுத்துவருபவை ; அதே போல ஏஜெண்டுகளுக்கு அனுப்பும் பிரதிகள்; கடன் வசூலிக்க இயலாது போகும் தருணங்களில் அங்கிருந்து திரும்ப எடுத்து வரும் unsold பிரதிகள் – என சகலத்தையும் "உள்ளே-வெளியே" என்ட்ரி போட்டு அடிக்கும் அந்தர்பல்டிகளில் ஏற்படும் சேதாரமாய் அதைக் கருதுவது தவிர நமக்கு வேறு மார்க்கம் கிடையாது! ஒரு MNC ரேஞ்சுக்கு ஸ்டாக் maintenance ; godown keeper என்றெல்லாம் நமது operations இருந்திடுவதில்லை என்பதை இங்கே நான் சொல்லத் தான் வேண்டும் ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நேரும் திருட்டுக்கள் , பில்லிங்கில் நேரும் தவறுகள், இழப்புகளை மட்டுப்படுத்திட ஆனமட்டிலும் முயற்சிக்கத்தான் செய்கிறோம் ! இந்த சென்னைவிழாவிற்கு - லேப்டாப் ; barcode scanner என்ற ஏற்பாடுகள் செய்துவருகிறோம் ! இந்நிலையில் 2 தனித்தனிக் கிட்டங்கிகள் என்றாகிடும் பட்சத்தில் இது போன்ற நடைமுறை நஷ்டங்களைச் சமாளிப்பது எத்தனை சிரமம் என்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா- என்ன? 20,000 -30,000 என பிரதிகள் குவிந்து கிடக்குமொரு கிட்டங்கியில் நாம் நித்தமும் போய் எண்ணிப் பார்க்க இயலாதெனும் போது - சகலமும் நமது கைகளுக்குள் இருத்தலே தேவலை என நான் எண்ணுவது தவறாகுமா ? அடுத்த ஓராண்டுக்குள் நமது அலுவலகத்திலேயே ஒரு மாடி கட்டும் திட்டமிடல் உள்ளது ; அது நனவாகும் வேளை இந்த storage பிரச்சனை தீர்வு கண்டிருக்கும் ! And “கிடைச்சது கிட்டங்கி!“ என்று அதனை ரொப்பிக் கொண்டே சென்றால் அதனுள் புதைந்திடும் முதலீட்டின் கதி என்னவாகும் ? என்ற long term கேள்விக்கே நான் வரவில்லை இப்போதுவரையிலும் ! 

டாலர் மதிப்பு கூடி விட்டது... யூரோ மதிப்புக் கூடி விட்டது; பேப்பர் விலை கூடி விட்டது... சம்பளங்கள் கூடி விட்டன‘ என்று மாமூலாய் காரணங்களைச் சொல்லி விட்டு விலையேற்றம் செய்திட நான் நினைத்திருக்கும் பட்சத்தில்  அதற்கு நிச்சயமாய் பெரியதொரு மாற்றுக் கருத்து இருந்திடாது தான்! ஆனால் எனது இன்றைய தலையாய சிரமமே இடநெருக்கடியும்; அவை சார்ந்து வரும் நிர்வாகக் சிரமங்களுமே எனும் போது அதனை எழுதிட நான் தயக்கம் காட்ட அவசியமேது? Of course – வெளிப்படையாய் இருப்பதில் சகாயங்களுமுண்டு; சிரமங்களுமுண்டு என்பதை அறியாதவனல்ல நான்! நீண்ட நாள் கடைமூடி விட்டு மறுபடியும் கடை திறக்கும்போது “Comeback ஸ்பெஷல்“ என்று பெயரிடுவதே தவறென்று நண்பர்கள் அந்நாட்களில் சொன்னது நினைவுள்ளது! ஆனால் உள்ளதை உள்ளபடிக்குச் சொல்வதில் தவறென்ன ?என்றுதான் நான் நினைத்தேன்! இன்றைக்கும் போலியாய் சிலபல சாக்குபோக்குகளை நோக்கி விரல் நீட்டுவதைவிட நிஜத்தை பதிவிடுவதில் தவறிருப்பதாய் எனக்குத் தோன்றிடவில்லை ! Moreover இன்றைக்குப் பதிவிட்டு விட்டு, நாளைக் காலையே விலையேற்றம் செய்திடுவதாகவும் நாம் இல்லையே ?  இந்தாண்டின்  பாக்கி 7 மாதங்களையும்  அதே விலைகளில் தானே தொடரவிருக்கிறோம் ? இந்த அவகாசத்தினுள் நமது விற்பனைகளைத் துரிதப்படுத்த இயலாது போனால் ; ஆண்டின் இறுதியில் நமது கிட்டங்கி வாய்விட்டு அழும் நிலையில் இருந்தால் மாத்திரமே 2017-ல் விலையேற்றத்தை அமல் செய்ய வேண்டி வரும் என்று தானே சொல்லியிருந்தேன் ? யதார்த்தம் இதுதான் எனும் போது இதனில்  பரிகசிக்க விஷயமிருப்பதாய் சில நண்பர்களுக்குத் தோன்றும் பட்சத்தில் அவர்களது நகைச்சுவை உணர்வுகள் overdrive -ல் உள்ளதென்று புன்னைகைப்பதைத் தவிர, நான் செய்திடக்கூடியது வேறென்னவாக இருக்க முடியும் ? 

32 ஆண்டுகளாய் பழகிப் போனதொரு சுபாவத்தை – சிலபல நையாண்டிகளுக்காய் மாற்றிக் கொள்ளும் அவசியம் இருப்பதாய் நான் எண்ணிடவில்லை சார்  ! விமர்சனங்கள்; பகடிகள்; எள்ளல்கள் எல்லாமே  இன்றைக்கு a way of life என்றான பின்னே – அதையெண்ணி தூக்கத்தைத் தொலைப்பானேன்? எல்லாவற்றிற்கும் மேலாய் பரிகாசம் செய்திடுவோர் எவருமே நம் சிரமங்களை அறியாதோரே அல்ல என்பது தான் beauty! இந்தத் துறையின் சிறுவட்டம் பற்றியோ; இதனில் தாக்குப்பிடிப்பதன் சிரமங்கள் பற்றியோ; நமது நோக்கங்களில் நேர்மை பற்றியோ நிச்சயமாய் அவர்களுக்கும் தெரியும் தான்! ஆனால் ஜாலியான கலாய்ப்புகளுக்கு யாருமே விதிவிலக்கல்ல என்றான பின்னே நம் தலையும் அவ்வப்போது உருண்டிடுவது just one of those things!

On a lighter note – இந்தாண்டின் நமது இலட்சியமே – “ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை“ என்பது தானே? நமது இதழ்களைப் படிக்கும் முன்பாகவே இவ்விதமாய் சிலபல (பரிகாசப்) புன்னகைகளும் உற்பத்தியாகும் பட்சத்தில் அதையெண்ணி நானும் சந்தோஷப்படுவதுதானே முறையாக இருக்கும்? Maybe அவ்வப்போது என் பொருட்டு சாத்தியமாகும் இந்தக் கேளிக்கைகளுக்கொரு சந்தாவை நிர்ணயித்து விடலாமோ? ‘சந்தா ப‘ ??!! Any takers? :-) :-)

மீண்டும் சந்திப்போம் folks! அது வரை – have an awesome time!

P.S.: டி-ஷர்ட் அளவுகள் இன்னமும் சுமார் 300 நண்பர்கள் சொல்லாதுள்ளனர்! அடுத்த சில நாட்களில் கிடைக்காத பட்சத்தில் சைஸ் ‘L’ என்று எடுத்துக் கொள்வோம்! Please do mail us !!

Sunday, April 17, 2016

ஒரு கதை (பி)(ப)டிக்கும் திருவிழா !

நண்பர்களே,
            
வணக்கம். தலைதெறிக்கும் வேகத்தில் என் வண்டி பறந்து கொண்டிருக்கிறது........! திடீரென்று குறுக்கே பாய்கிறது 3 தும்பிக்கைகள் கொண்டதொரு யானை மாதிரியான சிகப்பு நிற விலங்கு! அப்படியே அந்தர்பல்டி அடித்த கையோடு வண்டியை ‘U’ டர்ன் அடித்தால் ஒரு காது மட்டும் கொண்டதொரு வெயிட்டான மொட்டைத் தலையன் எனக்கு வழியை மறித்துக் கொண்டு நிற்கிறான்! என்னிடமுள்ள துப்பாக்கியை உருவி ‘பட் பட்‘ என்று சுட்டால் பயல் சுக்குநூறாகிப் போகிறான்! பீதியில் பிடரி மயிர்கள் எழுந்து நிற்க நான் ஓட்டமெடுத்தால் – ஹெல்மெட் அணிந்ததொரு மண்டையோட்டு ஆசாமி, கூரிய, நீள நகங்களோடு என்னை முறைத்துக் கொண்டு நிற்கிறான்! இறால் மீன் வடிவத்தில் ஒரு விண்கலம் அவனுக்குப் பக்கத்தில் ‘பார்க்கிங்‘ செய்யப்பட்டிருக்க – அதற்குள் பதுங்கிட வேக வேகமாய் முயற்சிக்கிறேன் ; ஆனால் திடீரென்று அதன் அலாரம் "ற்ற்ர்ரிங்க்க்க்க்க்" என்று கூப்பாடு போடத் தொடங்குகிறது ! வேர்த்து விறுவிறுத்துப் போய் நிற்கிறேன் நான்,,,,,,! நெற்றியை பதட்டத்தோடு தேய்த்தால் கையில் படுவது எனது வியர்வை ! 

‘படக்‘கென்று எழுந்து உட்காரும் போது என் தலைமாட்டிலுள்ள செல்போன் ‘ட்ரிங்ங்ங்‘ என்று ராகம் பாடிக் கொண்டிருக்கிறது! மின்வெட்டு காரணமாய் வீடே நிசப்தமாயிருக்க – இத்தனை நேரம் நான் கண்டது எல்லாமே ஒரு multicolor கனவு தான் என்பது மெதுமெதுவாய் புரிகிறது! என்னோடே சேர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்த லேப்டாப்பைத் தட்டியெழுப்பினால் – முந்தைய இரவு நான் படித்துக் கொண்டிருந்த சில பல கதைகளின் டிஜிட்டல் ஃபைல்கள் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டுகின்றன! ‘ஆகா... புதுசாய் கதை தேடுகிறேன் பேர்வழி‘ – என்ற வேகத்தில் நேற்றிரவு படித்த science-fiction கதைகள் தான் தூக்கத்திலும் என்னைப் பிறாண்டி எடுத்துள்ளன என்பது புரிகிறது! மெதுமெதுவாய் காலையும், பிரக்ஞையும் புலர – என் முகத்திலும் ஒரு இளிப்பு மலர்கிறது! ஒவ்வொரு வருஷமும் எனக்குக் கிட்டிடும் ஒரு பிரத்யேகக் ‘காமிக்ஸ் வாசிப்புத் திருவிழா‘ இம்முறை சற்று சீக்கிரமே துவங்கி விட்ட சந்தோஷத்தின் பலன் தான் அந்த இளிப்பு!

வழக்கமாய் ஆகஸ்டில் இந்தத் தேடல்களைத் துவக்கி, ஆகஸ்ட் & செப்டம்பரில் சிக்கிய கதைகளையெல்லாம் வாசிப்பது வழக்கம். ஆனால் இம்முறையோ சகலத்திலும் சற்றே வேகம் என்பதால் – காத்திருக்கும் காலங்களுக்கான புதுத் தேடல்களையும் சீக்கிரமே தொடங்கி விட்டோம் ! And எனது நாற்காலியை ஆக்கிரமிக்க ஆண்டில் அற்புதமான காலகட்டமே இது தான்! ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு batch இதழ்களைத் தயாரிப்பதெல்லாம் ஜாலியான, சலிப்புத்தரா பணிகளே; ஆனால் இந்தக் கதைத் தேடல்கள் பருவமானது – இரண்டு கைகளிலும் 2 குல்ஃபி ஐஸ்களை ஒரு நல்ல வெயில் நாளில் வைத்துக் கொண்டு – எதை முதலில் ருசிப்பது? என்ற சந்தோஷக் குழப்பத்திற்குள் ஆழ்வதற்குச் சமானமானது! 

Of course – நான் படிப்பதில் 5% கூட நடைமுறைக்கு வந்திடுமா என்பது ஐயமே; இறுதியில், உறுதியாகிடப் போகும்  நமது அட்டவணையில் - சிலபல அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களைப் போல், ‘லார்கோ; ஷெல்டன்; டெக்ஸ்; லக்கி; சிக்பில்; மார்டின் etc. etc.‘ என மூத்த நாயகர்களே உறுதிபட முதலில் இடம் பிடிக்கவும் போகிறார்கள் தான் ! ஆனால் என்றோவொரு தூரத்துப் பொழுதிலாவது முயற்சித்துப் பார்க்க புத்தம் புது genre-களை; கதைகளைத் ; தொடர்களைப் பரிசீலிப்பது ஒரு பரவசமான அனுபவமே! படைப்பாளிகளின் டிஜிட்டல் ஃபைல்களை நிர்வகிக்கும் பிரெஞ்சுப் பெண்மணி, ஆண்டின் இந்த சீஸன் வந்து விட்டாலே நம்மைக் கண்டால் குளிர் காய்ச்சலில் படுத்துவிடக் கூடிய நிலையில் தானிருப்பார்! இன்டர்நெட்டை உருட்டோ உருட்டென்று உருட்டி, ‘இந்த வருஷத்தில் வெளியான இந்தக் கதையின் ஃபைல் ப்ளீஸ்... அந்த மாமங்கத்தில் பிரசுரமான தொடரின் மாதிரி ப்ளீஸ் !‘ என்று அவர் குடலை அலசிடும் பணி தான் முதல் கட்டம்! அவரும் சளைக்காமல் ‘டொய்ங்... டொய்ங்‘ என டிஜிட்டல் ஃபைல்களை மின்னஞ்சலில் தட்டி விட- Operation கு.அ.வின் இரண்டாம் கட்டம் துவங்கிடும் - ஜூனியர் எடிட்டரின்  முயற்சிளால் நமக்குக் கிட்டியிருக்கும் ஒரு பிரஞ்சு காமிக்ஸ் ஆர்வலரின் கதவைத் தட்டுவது மூலமாக! இவரொரு பெல்ஜியப் பொதுநூலகத்தின் 40 ஆண்டு அனுபவம் கொண்ட தலைமை நிர்வாகி; எந்தவொரு காமிக்ஸ் தொடர் பற்றிய அபிப்பிராயக் கோரலை முன்வைத்தாலும் – இரண்டே நாட்களில் அதனைத் தேடிப் பிடித்து, படித்து, அதன் கதைச்சுருக்கம் + அவரது பார்வையில் சாதக / பாதகங்கள் என சகலத்தையும் போட்டுத் தாக்கி விடுவார்! So நமக்கு எந்தத் தொடரில் ஆர்வமுள்ளதோ – அதற்கான review-களை வரவழைப்பதோடு step 2 நிறைவாகிடும்! மூன்றாவது step – அந்த review ஐ ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பிரெஞ்சின் ஒரிஜினல் பக்கங்களை கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டே கதையோட்டத்தை மெதுமெதுவாய் புரிந்து கொள்ள முயற்சிப்பது! ‘ஓஹோ... இந்தப் புள்ள தான் இந்தக் கதையில் மையமோ...? அட... ஆமா... அந்த சிப்பாய்க்கு அடைக்கலம் தரும் சீன் வருதே... சரி... சரி... க்ளைமேக்சில் அதிரடியாய் என்ட்ரி தரும் தடிப்பயல் இவன் தானோ? என்று யானையைத் தடவிப் பார்க்கும் பணியை ராவும், பகலும் செய்திடுவேன்! சில அதிர்ஷ்ட வேளைகளில் அந்தத் தொடர் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஆங்கிலத்தில் எப்போதாவது வெளியாகியிருக்கும் பட்சத்தில், படைப்பாளிகளே அந்தப் பதிப்பின் ஆங்கில pdf ஃபைல்களை அனுப்பி வைத்து என் கேசத்தைக் கொஞ்சமாய் காப்பாற்றிட உதவிடுவார்கள்! ஆங்கிலப் பக்கங்களை ‘கட கட‘ வென்று பிரிண்ட் அவுட் போட்டு, ஸ்பைரலும் போட்டு வாங்கிப் படித்துப் பார்ப்பது சுலபமாகயிருக்கும்! So ஏதோவொரு விதத்தில் கதைகளை உருட்டோ உருட்டென்று உருட்டி முடித்திடும் போது, சில பல நவரச பாவங்கள் முகத்தில் தாண்டவமாடுவதுண்டு! ‘ஓப்பனிங்லாம் நல்லாத்தானிருக்கு... ஆனாக்கா பின்னே சொதப்புதே!‘ என்ற குழப்பம்; ‘ஐயே... இந்த அடல்ட்ஸ் ஒன்லி ரகங்கள் கத்திரிக்கு அப்பாற்பட்ட விஷயம்; வேலைக்கே ஆகாதுடோய்!‘ என்ற மோன நிலை; ‘ஆகா... இதைத் தமிழாக்கத்தில் சேதாரமின்றிக் கரை சேர்க்க முடியுமா?‘ என்ற மௌன மலைப்பு ; ‘ஹைய்... இதை நம்ம தலீவரும், மடிப்பாக்கத்தாரும்... மக்கன் பேடாக்காரரும் படிக்க நேரிட்டால் என்ன ரியாக்ஷன் காட்டுவார்கள்?‘ என்ற கற்பனைக் குஷி ; ‘அடடா... ஏற்கனவே இதே genre-க்கென கதைகள் நமது அட்டவணையில் இடம் பிடித்திருக்க, புதுசாய் இதை நுழைக்க இடமில்லையே?! என்ற ஆதங்கம் – என டிசைன் டிசைனாய் சிந்தனைகள் தலைக்குள் சடுகுடு ஆடிடும்!

ஆனால் நான் shortlist செய்திடும் கதைகளும், தொடர்களும் ஒரு பிரத்யேக folder -ல் தஞ்சம் காண்பதுண்டு! ஒரு இடைவெளிக்குப் பின்னே புதிதாய் ஏதேனும் முயற்சிக்கும் தருணம் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் அந்த folder-க்குள் ஐக்கியமாகிடுவது எனது ஆதர்ஷப் பொழுதுபோக்கு! தற்போது அதனில் இடம்பிடித்திருப்பவை ஏகப்பட்ட புதுப்புதுத் தொடர்கள்; கதை பாணிகளின் பிரதிநிதிகள்! The Incal; Metabarons போன்ற டாப் science fiction கதைகள்; Fantasy கதைகள்; வன்மையான களத்திலும் மென்மையான உணர்வுகள் கொண்ட ரொமான்ஸ் கதைகள்; புத்தம்புதிய கௌபாய் கதைகள் (!!!); ஹாரர் கதைகள்; சமகால உலக நிகழ்வுகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர்கள்; ஒரேவிதக் கதைக்கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு சங்கிலித்தொடர் கதைகள் என்று எக்கசக்க சமாச்சாரங்கள் உள்ளன அந்த folder –ல்! ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?‘ ; ‘சந்தா Z-ஐ இறக்கி விடலாமே?‘ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ், கோவில் திருவிழாக்களின் லவுட் ஸ்பீக்கர்களை விடவும் சத்தமாய் ஒலிப்பது கேட்கிறது! And தரையிலேயே நிலைகொண்டிருக்கும் கட்டைவிரல் கூட ‘நான் ரெடி... ரெடி...‘ என்று கூவுவதும் கேட்கிறது..................!

அதே சமயம் சில நடைமுறைச் சிக்கல்களும் நம் முன்னே புஜங்களை மடக்கிக் காட்டி வருவதால் கொஞ்சம் நிதானத்தை நாட வேண்டி வருகிறது! இது பழைய பல்லவியே தான் என்றாலும், இம்முறை நிலைமை கவனத்தைக் கோரும் நிலையைத் தொட்டு நிற்பதால் அதைக் கொஞ்சம் விபரமாய் சொல்லிட நினைக்கிறேன் ! நமது டைட்டில்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே போக- இடநெருக்கடியில் நமது கிட்டங்கி தடுமாறும் தருணமிது! மாதம்தோறும் ஒவ்வொரு இதழிலும் நாம் அச்சிடுவது 100 பிரதிகள் எனில்  -அந்தந்த மாதங்களில் சந்தா...ஆன்லைனில்...கடைகளில்...முகவர்கள் வாயிலாக - என நாம் விற்பது 40 பிரதிகளே ! பாக்கி 60 பிரதிகள் நம் கையில் ஸ்டாக்காகத் தான் துயில்பயில்கின்றன ! இவற்றுள் ஒரு சொற்ப அளவிலான வெளியீடுகள் குறைந்த பட்சம் பன்னிரண்டு மாதங்ககளிலும், மீதம் சுமார் 36 மாதங்களிலும்  தான் காலியாகின்றன ! So மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் போது – நமது கிட்டங்கிவாசிகளின் ஜனத்தொகை, முயல்களின் இனப்பெருக்கத்தை விடவும் வேகமாய் கூடி வருவது கண்கூடு! அவற்றைச் சுமக்கும் வலு நமக்கிருக்கிறதா- இல்லையா? என்பதெல்லாம் அடுத்த பட்சச் சிந்தனைகள்; தற்சமயத் தள்ளாட்டமெல்லாமே – இட நெருக்கடி சார்ந்ததே! இதற்கொரு உருப்படியான தீர்வை நான் நிர்ணயிக்காது – புதுசு புதுசாய் இதழ்களைக் களமிறக்கிச் செல்வது குடாக்குத்தனம் என்பதால் சந்தா Z-ஐ தற்காலிகமாய் hold-ல் போட்டு வைத்துள்ளேன்!

And நமது விற்பனை பாணிகள் இதே போல் தொடரும் பட்சத்தில் இந்த இடப் பிரச்சனை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தலைதூக்கிக்கொண்டே செல்லும் என்பதும் புரிவதால் – நமக்கிருக்கும் ஒரே தீர்வு – print run-ஐக் கணிசமாய் குறைப்பதே என்பது நிதர்சனமாய் புரிகிறது! 40 தான் மாதந்தோறும் விற்குமெனில் அச்சிடுவதை 60-ல் நிறுத்திக் கொண்டால் அது பரணிலும்; பணத்திலும் படுத்தி எடுக்காதல்லவா? குட்டிகளை வயிற்றிலேயே சுமந்து திரியும் கங்காரூவைப் போலச் சுற்றித் திரிவதை சிறுகச் சிறுக மாற்றிட நமக்கு சாத்தியமானால் – இரண்டு, மூன்று வருட ஸ்டாக் என்ற நோவுகள் நம்மைப் பீடிக்காது! நிஜத்தைச் சொல்வதானால் கீழ்க்கண்ட நால்வரே நமது life savers!

- லக்கி லூக்
- டெக்ஸ் வில்லர்
- இரும்புக்கை மாயாவி
- டேஞ்சர் டயபாலிக்

வெளியான 12 மாதங்களுக்குள் ஸ்டாக் தீர்ந்து போவது இந்த 4 நாயகர்களின் இதழ்கள் மட்டுமே - இதுவரையிலாவது ! லார்கோ; ஷெல்டன்; XIII உள்பட பாக்கி டாப் நாயகர்கள் கூட ஆரம்ப ஆரவாரத்துக்குப் பின்பாய் சற்றே slow தான் விற்பனையில்! So இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களில் நமது விற்பனை எண்ணிக்கையை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிடச் செய்திட முயற்சிப்போம்! இப்போது கூட பிரபல சூப்பர் மார்கெட் சங்கிலி ஒன்றில் நமது இதழ்களை ரெகுலராய் – நேரடியாய் விநியோகம் செய்திட முயற்சித்து வருகிறோம். இதற்கென பிரத்யேகமாய் புத்தக ராக்குகள் செய்தெல்லாம் தயாராகி வருகிறோம்! அவர்களின் இறுதி ஒப்புதல் மட்டும் கிட்டிவிட்டால் - அந்தச் சங்கிலிகள் சகலத்திலும் நமது பிரத்யேக புத்தக ராக் நின்றிடும் - நமது இதழ்களைத் தாங்கிக் கொண்டு ! இது வெற்றியாகிடும் பட்சத்தில் நிச்சயமாய் நமது visibility நிறையவும்; விற்பனைகள் கொஞ்சமேனும் கூடிடுமென்று ஆர்வமாய் எதிர்பார்க்கிறோம்! So 2016-ன் இறுதிக்குள் நமது விற்பனைமுகம் ஏற்றம் கண்டிடும் பட்சத்தில் இதே printrun-ல் தொடர்ந்திடலாம்! அது சிரமமாகிடும் பட்சத்தில் – அச்சின் எண்ணிக்கையில் கத்திரி தவிர்க்க இயலாததாகிப் போய் விடும்!

And printrun தென்னையில் தேள் கொட்டினால் – விலையென்ற பனைமரத்தில் நெரி கட்டும் தானே?! தற்போதைய ரூ.65/- விலைகளைக் குறைந்தபட்சமாய் ரூ.75-க்குக் கொண்டு செல்ல அவசியமாகிடும்! ‘அய்ய்...ஜூப்பர் !!... அங்கே சுத்தி... இங்கே சுத்தி – கடைசியில் விலையிலே கைவைக்கிற திட்டத்துக்குத் தான் இத்தனை பில்டப்பா ?‘ என்று நிச்சயமாய் சிலபல வாட்சப் பரிமாற்றங்களை இது கொண்டு வருமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை ; ஆனால் அடுத்த முறை சிவகாசி வரும் நண்பர்கள் நமது குடவுனை ஒரே ஒரு முறை பார்வையிட்டால் என் சிந்தனைகளின் வ(லி)ழித்தடம் என்னவென்பது நிச்சயமாய்ப் புரியும் ! So இது தான் இன்றைய யதார்த்தம்!

ஆனால் இதற்காக நம் கால்களுக்கு நாமே, ஒரேயடியாகக் கட்டுக்கள் போட்டுக் கொள்வதோ; இந்த வட்டமே போதுமென்று நமக்கு நாமே சிந்தனைச் சிக்கனத்தை விதைத்துக் கொள்ளவோ போவதில்லை ! அழகாய் – வண்ணத்தில் மறுபதிப்புக் காண ஒரு வண்டி absolute classics ஒரு பக்கம் காத்திருக்க ; அட்டகாசமாய் களம் காணக்கூடிய புது genre-கள் இன்னொரு பக்கம் என்று லைனில் நிற்க – இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சின்னதொரு ஐடியா எனக்குள்ளே துளிர்விட்டுள்ளது! அதனை நமது அடுத்த சந்திப்பின் போது விளக்கிடக் காத்துள்ளேன்! அந்த எண்ணமானது உங்களது thumbs up-களைப் பெற்றிடும் பட்சத்தில் – ரகளைகளைத் துவங்கிடலாம்! சந்தா Z கானல்நீராகிடாது என்பது உறுதி ! 

அதற்கு முன்பாக – ரொம்பச் சீக்கிரமே காத்திருக்கும் இன்னொரு மைல்கல்லைச் சிலாகிக்கவும் தயாராகிடுவோமா? Oh yes – அடுத்த நான்கோ-ஐந்தோ மாதங்களில் நமது ‘Two Million Hits’ தருணம் புலர்ந்து விடும் எனும் போது – அதற்கென எனக்குள் மேலோட்டமாய் சில சிந்தனைகள் ஓடிய வண்ணமுள்ளன! சென்ற முறையைப் போலவே இப்போதும் ஒரு ஸ்பெஷல் இதழ் தயாரிப்பதாயின் - கீழ்க்கண்டவையே எனது choices ஆக இருந்திடும் :
  • புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)?
  • ஒரு மெல்லிய ரோமான்ஸ் ஸ்பெஷல்?
  • லக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest?
  • ஒன் ஷாட் கிராபிக் நாவல்?
  • புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்?
  • தோர்கல் ஸ்பெஷல்?

உங்கள் ஓட்டுக்கள் எந்தத் தேர்வுக்கு இருந்திடுமென்று அறிய ஆவல் guys! 2 மில்லியன் ஹிட்சில் ஒரு அரை மில்லியனுக்காவது உபயதாரரான ஸ்டீல்க்ளா – "இரத்தப்படலப் புரட்சிப் பாடலையும்" ; இளவரசியணி – ‘வண்ணத்தில் அம்மணி‘ என்ற கானத்தையும் எடுத்து விடப் போவது நிச்சயம்; ஆனால் sorry – மேலே நான் கொடுத்துள்ள question paper-லிருந்து மட்டுமே பதில்களைத் தேர்வு செய்தாக வேண்டும் என்பது தான் நமது விதிமுறை! So வினாத்தாளைத் தாண்டிய பதில்கள் வேண்டாமே- ப்ளீஸ்?! இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதாயின் - what would be your choice ?

இனி மே மாதத்து இதழ்கள் மீதான பார்வைகளைப் பதிக்க ஆரம்பிப்போமா ? “பாலைவனத்தில் பிணைக்கைதி“ இந்தாண்டில் இரண்டாவது one-shot ஷெல்டன் சாகஸம்! And- கதாசிரியர் வான் ஹாம்மே மீண்டும் பொறுப்பேற்ற பிற்பாடு உருவான இரண்டாவது கதையும் கூட இது! எப்போதும் போலப் பட்டாசாய் பரபரக்கும் ஷெல்டனின் ஒரு உட்பக்கப் preview இதோ! எப்போதும் போலவே ஓவியர் க்ரிஸ்டியன் டினாயெர் டிரக்குகளையும் வண்டிகளையும் தூள் கிளப்புவதை இம்முறையும் பார்த்திடலாம்! மனுஷனின் 4 சக்கரக் காதல் அட்டகாசமாய்த் தொடர்கிறது!
And ஷெல்டனின் பட்டாசுக்கு இதமான மாற்றாய் நமது blue brigade இன்னொரு பக்கம் அணி திரண்டு வருகிறது! போன மாதம் இந்த ஸ்மர்ஃப் கதையின் பணிகளின் புண்ணியத்தில் எனது நாட்கள் ஜிலீரென்று இருந்தனவென்றால் இம்மாதம் திருவாளர் ரின்டின்கேனார் எனக்குச் சிரிப்புத் துணையாக நின்று வருகிறார்! ஷப்பா... அடிக்கும் வெயிலுக்கு நமது கார்ட்டூன் ஆசாமிகள் மட்டும் இல்லையெனில் – வடிவேல் பாஷையில் சொல்வதானால் ‘கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும்‘ போல் படுகிறது! ‘சாப்பாடே ஜென்ப சாபல்யத்திற்கு வழி!‘ என்று வலம் வரும் ரி.டி.கே. அடிக்கும் கூத்துக்கள் என் ஞாயிறுக்கு சுகமான துணை! உங்களின் ஞாயிறுகளுக்கு நமது MILLION & MORE Hits ஸ்பெஷல் பற்றிய சிந்தனைகள் துணையிருந்தால் அட்டகாசமாகயிருக்கும்! So சிந்தனைகளை சிறகடிக்க அனுமதியுங்களேன் folks! மீண்டும் சந்திப்போம்! அது வரை have a lovely Sunday & a great week ahead!

P.S : சந்தா நண்பர்களுள் இன்னமும் 60% தங்கள் T-ஷர்ட் அளவுகளைச் சொல்லவில்லை - அவசரமாய் இந்த விபரம்  தேவை ப்ளீஸ் !!!! 
தயை கூர்ந்து இங்கே அதனைக் குறிப்பிடாது - ஒரு மின்னஞ்சல் தட்டி விடக் கோருகிறேன் ! 
                               எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி
     பிரவீணா & பிரதிக்ஷா - நண்பர் திருச்செல்வம் பிரபானந்தின் புதல்வியர் ! 


                                                              SuryanTex Suresh Chand


                                                          VS பிரபுவின் புதல்வி ! 
                                                              சத்யா, காங்கேயம் 


                                                             Abhisheg Gnanasekaram


                                                 Baskaran.Hari .Srithika. Bangalore


                                         Rex Kuppusamy, Andaman


                                            Jr.Joseph Jayachandran

Sunday, April 10, 2016

இது கூட்டணிகளின் சீசன் !

நண்பர்களே,
            
வணக்கம். இவையெல்லாமே தென்மாவட்டங்களுக்கு மாத்திரமே சொந்தமா? என்று தெரியவில்லை – ஆனால் ஒவ்வொரு ஏப்ரலின் ஆரம்ப / இரண்டாவது வாரயிறுதிகள் இங்கு ஒவ்வொரு ஊரிலும் “பங்குனிப் பொங்கல்” திருவிழாக்களாகக் களைகட்டுவது இன்னமும் தொடர்கிறது! ஊரும், மக்களும் விழாக்கோலம் பூணும் போது – மண்டையைப் பிளக்கும் வெயில் கூட ஒரு விஷயமாகவே தெரிவதில்லை! திரும்பிய திசையெல்லாம் கலர் கலராய் சீரியல் செட் தோரணங்கள்; ராட்டினங்கள்; குச்சி ஐஸ் வண்டிகள் என கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மினுமினுப்பதை ரசிப்பதே ஒரு அழகான அனுபவம் என்பேன்! அதிலும் நமது அலுவலகம் இருப்பது அம்மன் கோவிலிலிருந்து கூப்பிடு தூரத்தில் எனும் போது – அந்த ஆரவாரம் நம்மையும் ஒட்டிக் கொள்வதில் வியப்பில்லை! ஞாயிறு தொடங்கி, திங்கள் & செவ்வாய் நம் அலுவலகத்திற்கு விடுமுறைகள் என்பதால் ஒரு வண்டி வேலைகளை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டு என் மேஜையை நிரப்பிப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

     மே மாதப் பணிகள் Almost Done என்ற நிலை! நரைமுடி ஷெல்டன் எடிட்டிங்கில் உள்ளார்! நமது நீலச் சுள்ளான் ஸ்மர்ப்ஃப்களோ முற்றிலுமாய் நிறைவு பெற்று – சீக்கிரமே அச்சுக்குச் செல்லக் காத்துள்ளனர்! Black & white வரிசையில் ஆண்டின் முதல் 110 பக்க டெக்ஸ் சாகஸமோ – மொழிபெயர்ப்பின் finetuning கட்டத்திலுள்ளது! இந்த விடுமுறை நாட்களில் அதனை நிறைவு செய்துவிட்டால், நம்மவர்கள் “டாக்டர் டெக்ஸ்” டைப்செட்டிங் பணிகளை மூன்றே நாட்களில் சாத்தி விடுவார்களென்பது உறுதி! இன்னொரு b&w இதழான “சதிகாரர் சங்கம்” இறுதிக்கட்டங்களில் உள்ளது – proof reading பணி மாத்திரமே பாக்கி என்ற நிலையில்! அது மட்டுமன்றி – முத்து மினி காமிக்ஸின் முதல் 3 இதழ்களும் proof reading-ன் பொருட்டு தயாராகக் காத்துள்ளன ! So இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின், கைதூக்கிடலாம்! But please note – குறைந்த பட்சம் மூன்று முறைகளாவது திரும்பத் திரும்ப அதே  பக்கங்களைப் படித்திட / பிழைகளைத் திருத்திட பொறுமை ரொம்பவே அவசியம் என்பதை நினைவூட்டுகிறேன்! நிச்சயமாய் ஒரே வாசிப்பில் சகலத்தையும் சரிபார்த்திடல் next to impossible!

     ஏப்ரல் இதழ்கள் பற்றிய Surf Excel சலவைகள் இன்னமும் நிறைவு பெற்றிரா நிலையில் மே மாதத்தின் மீது பார்வைகளை ரொம்பப் பதிக்க வேண்டாமே என்ற மகா சிந்தனையில் மே மாதத்து அட்டைப்படங்களை ; preview-களை அடுத்த ஞாயிறுக்கு வைத்துக் கொள்வோமென்று நினைத்தேன்! So- இந்த வாரத்துப் பதிவு ஏப்ரலின் 3 இதழ்கள் பற்றிய அலசலுக்கும், அவை மூன்றிற்குமிடையே நிலவும் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை மீது பார்வைகளைப் பதியச் செய்வதற்காகவும் மாத்திரமே! ஞாயிறு காலை சற்றே சாவகாசமாய் 11 மணி முதல் – மதியம் 1 மணி வரை இங்கே ஆஜராகினால் லார்கோவையும், இரவுக்கழுகாரையும், உட்சிட்டி ஆசாமிகளையும் பிரித்து மேய்ந்து விடலாம்! நீங்கள் ரெடியெனில்- நானும்!

     Without a doubt – ஏப்ரலின் அதிரடி “தலையில்லாப் போராளி” தான் என்றாலும் – சிறுகச் சிறுக ‘லார்கோ மேஜிக்‘கும் முன்னணிக்கு வருவதை உணர முடிகிறது! அந்தச் சித்திர அற்புதம், vibrant வர்ணங்களோடு கைசேர்க்கும் போது – பலனாகிடும் விருந்து எத்தனை சுவையானது என்பதை ”கடன் தீர்க்கும் நேரமிது” நிரூபித்துள்ளது! லார்கோவுக்கும், டெக்ஸுக்கும் மத்தியில் இம்முறை அழுத்தமாய் ஒரு ஒற்றுமை கண்ணில்பட்டது! அது தான் இருவருக்கும் இம்முறை சுற்றியிருந்துள்ள பக்கவாத்தியக் கோஷ்டி! லார்கோவின் சாகஸத்திலும் சரி, டெக்ஸின் அதிரடியிலும் சரி – இம்முறை அவரவரது முழு டீமும் கதை நெடுகிலும் active ஆக இடம்பிடித்துள்ளதைக் கவனித்தீர்களா? சல்லிவனில் தொடங்கி; நிர்வாகி கோக்ரென்; தோஸ்த் சைமன்; (லேடி) இன்ஸ்பெக்டர் மர்ஜானா; காரியதரிசி பென்னிவின்கில் ; பைலட் சில்க்கி என்று அத்தனை பேரும் ஆங்காங்கே தம் வேலைகளைச் செய்து வர, லார்கோவின் அதிரடிகள் வழக்கத்தை விட வீரியமாய் தோன்றியதாய் எனக்குத் தோன்றியது! அதே போல – டெக்ஸுடன், வெள்ளிமுடியார்; கிட்; டைகர் ஜாக் மட்டுமன்றி விஞ்ஞானி மோரிஸ்கோ & யூசெபியோவும் இணைந்திருக்க – கதை முழுவதிலும் ஒரு கல்யாண வீட்டுக் கலகலப்பு நிலவியது போல் பட்டது! சுடுகாடும், சவங்களும், தலையில்லாப் பிண்டங்களும் நிறைந்ததொரு கதையில் ‘கல்யாணவீட்டுக்‘ களையா? என்று நீங்கள் புருவத்தை உயர்த்திடலாம்! ஆனால் நான் mean பண்ணியதோ- கதை நெடுகிலும் ரேஞ்சர் டீமின் total presence இருந்த ஆரவாரமான கோணத்தில் தான்!

     Which brings us to the question – ‘சோலோ‘வாய் துவம்ஸம் செய்திடும் நாயகர்களை விடவும் heroes கூட்டமாய் பவனி வரும் கதைத் தொடர்கள் ஹிட்டடிக்கும் வாய்ப்புகள் அதிகமா ? என்பதே! அமெரிக்க காமிக்ஸ் மார்கெட்டில் போல சூப்பர் ஹீரோக்கள் மெகாக் கூட்டணிகள் அமைத்து ஒட்டுமொத்தமாய் ஒரே கதைக்குள் சாகஸம் செய்வதெல்லாம் நமக்கு ஒத்து வராது! ஆனால் ஹீரோவுக்கு ஒத்துக்குழல் ஊதிட தாட்டியமாய் பலர் வருகை தரும் போது- more the merrier என்று நாம் ஜாலியாய் ரசிக்கிறோம்! கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் – ‘ஜோடி‘ சேரும் நாயகர்களின் பட்டியல் கொஞ்சம் நீளம் தான் என்பது புரியும்!
  • ஸ்பைடருக்கொரு ஆர்டினி
  • ரிப் கிர்பிக்கொரு பட்லர் டெஸ்மாண்ட்
  • கேப்டன் டைகருக்கொரு ஜிம்மி
  • லார்கோவிற்கொரு சைமன்
  • லியனார்டோவுக்கொரு ஆல் லெகை!
  • டைலன் டாக்கிற்கொரு க்ரௌச்சோ
  • கேப்டன் பிரின்ஸிற்கொரு பார்னே!
  • ஜில் ஜோர்டனுக்கொரு அசிஸ்டெண்ட்! ((அட..பெயர் ஞாபகத்துக்கு வராது சண்டித்தனம் செய்கிறது!!)
  • சிக்பில் & குள்ளனுக்கு – ஷெரீப் & ஆர்டின்

     துணை தேடும் நாயகர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போவது நிச்சயம் – நமது முந்தைய வெளியீடுகளை இன்னும் பொறுமையாய் புரட்டினால்! CID லாரன்ஸுக்கு – ஜுடோ டேவிட்டையோ, ஜானி நீரோவுக்கு – ஸ்டெல்லாவையோ துணை என்று சொல்வது பொருத்தமாகாது என்பேன் – becos அடிப்படையிலேயே அந்த டீமே ஒரு கூட்டணி தான்! And ஒருத்தருக்குள்ள முக்கியத்துவம் அடுத்தவருக்கும் உண்டு தான்! ஆனால் மேற்கண்ட நமது பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆசாமிகள் சம பலத்தவர்களல்ல என்று சொல்லலாம்! சீரியஸான கேப்டன் பிரின்ஸை விட “தண்ணி வண்டி பார்னே” ஆற்றலில் ஒரு மாற்று குறைவு தான்- ஆனால் கதைக்களத்தின் இறுக்கத்தை சற்றே மட்டுப்படுத்திட இது போன்ற sidekicks ரொம்பவே தேவை தான்!
     நமது இரவுக் கழுகாரின் சகாவான வெள்ளிமுடியாரை sidekick என்று மட்டம் தட்டிவிட முடியாது / கூடாது தான்! ஆற்றலில், வேகத்தில், விவேகத்தில், வீரத்தில், ஒழுக்கத்தில், நட்பில், பரந்த சிந்தனையில் நமது ஆட்டுத்தாடிவாலா யாருக்கும் சளைத்தவரில்லை! அதே போல வெளித் தோற்றத்துக்கு ‘பெருசு‘; கிழ நண்பா‘; ‘கிழட்டு ஒட்டகமே‘ என்றெல்லாம் வாருவது டெக்ஸுக்குப் பொழுது போக்காக இருந்தாலும் – கார்சனை விட்டுக் கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார் என்பது அந்த நட்பின் உறுதியைப் பார்க்கும் போது புரிந்திடும்! ‘டெக்ஸ் வில்லர்‘ என்ற பெயரோடு மெய்யாகவே அந்நாளைய வன்மேற்கில் யாரும் குப்பையோ ; தோட்டாவோ கொட்டியதாகத் தெரியவில்லை; ஆனால் “கிட் கார்சன்” என்று நிஜமாகவே ஒரு ஆசாமி இருந்திருப்பதாக வரலாறும்; விக்கிபீடியாவும் சொல்கின்றன! 1809 முதல் 1868 வரை வாழ்ந்தவர் - ஒரு வேட்டையனாக, கானக கைடாக; செவ்விந்திய ஏஜெண்டாக; அமெரிக்க இராணுவ அதிகாரியாகப் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார்! எனினும் இவர் பெயரளவிற்கு மாத்திரமே நமது வெள்ளிமுடியாருக்கு நெருங்கியவர் என்று சொல்லலாம் ! கதையின் போக்கில்- ஒரிஜினல் கார்சனின் வாழ்க்கைக்கும், நமது வறுத்த கறிப் பிரியரின் character-க்கும் துளி கூட சம்பந்தம் கண்டிட இயலாது! 
இவர் தான் அந்த ஒரிஜினல் கிட் கார்சன் ! 
டெக்ஸின் ஒரு கணிசமான சாகஸங்களின் எண்ணிக்கை வரைக்கும் கார்சனும் ஒரு சீரியஸான ஆசாமியே! எப்போதாவது திருவாய் மலர்ந்து வறண்டதொரு நையாண்டியை உதிர்ப்பதைத் தாண்டி, பாக்கி நேரங்களிலெல்லாம் வின்செஸ்டரை முழக்குவதே இவரது முக்கிய வேலையாக இருந்து வந்தது! பின்நாட்களில், டெக்ஸின் தலைமைப் பொறுப்பை மௌரோ போசெல்லி ஏற்றுக் கொள்ளத் துவங்கியது முதலாய் – கார்சனுக்குச் சன்னமாதொரு ஜாலியான சாயம் பூசப்பட்டதென்று சொல்லலாம்! குறிப்பிட்டதொரு காலகட்டம் வரையிலும் தலைவரின் படங்களில் ஆக்ஷன் மசாலாக்கள் பெரும்பாலும் இடம்பிடித்தது போலவும்; பின்நாட்களில் காமெடி ஆசாமிகளின் ஒத்தாசையோடு தலைவரே நம்மைக் கிச்சுக்கிச்சு மூட்டியதும் தான் டெக்ஸுக்கு நல்கப்பட்ட treatment-ஐ நினைத்துப் பார்க்கும் போது ஞாபகம் வரும் எனக்கு! ‘சிகப்பாய் ஒரு சொப்பனம்‘ வாயிலாக டெக்ஸின் இரண்டாவது இன்னிங்சை 2013-ல் நாம் துவங்கிய சமயம் தான் இதனை சீரியஸாக(!!) நடைமுறைப்படுத்தத் தோன்றியது எனக்கு! வழக்கம் போல சீரியஸான பாணியிலேயே அந்தக் கதையின் தமிழாக்கத்தை கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க – ஒரு சாவகாசமான டிசம்பர் ஞாயிறு பிற்பகலில் மேஜராய் ஒரு பட்டி-டிங்கரிங் பார்க்க ஆரம்பித்தது நினைவில் உள்ளது! ஒரிஜினலிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்துத் தெளிவாய் படித்த போது – ஒரிஜினலில் மெலிதாய் இழையோடும் humor தட்டுப்பட்டது! சரி, அதனை ஏன் விட்டு வைப்பானேன் ? என்று அந்தக் கதையின் பெரும்பான்மையான டெக்ஸ்-கார்சன் interaction பகுதிகளை முற்றிலுமாய் மாற்றியமைத்தேன்! அந்த பாணி உங்களின் பாராட்டுக்களை ஏகமாகவே பெற்றுத் தந்ததால் தொடரும் நாட்களில் கார்சனின் banter-க்கு சற்றே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினேன்! தொடர்ந்திட்ட “பூத வேட்டை”யில் அதிக வாய்ப்புகள் இல்லாது போயினும், “நிலவொளியில் ஒரு நரபலி” யினை எழுதியதே நான்தான் என்பதால் துவக்கத்திலிருந்தே ஒரு light vein-ஐ தளமாக்கிட முயற்சித்திருந்தது நினைவுள்ளது! கார்சனை ஜாலியாக்கும் அதே மூச்சில், டெக்ஸின் வசனங்களில் அழுத்தமும், வீரியமும் அதிகமாக்குதல் பக்கமாகவும் கவனத்தைத் தந்தாக வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன்! இரவுக்கழுகார் ஒரு larger than life நாயகர் என்பதால் “ஓங்கியடிச்சா ஒன்னரை டன்” என்ற ரீதியில் மசாலாப்பூச்சோடு இவருக்கான நடையின் பாணி இல்லாவிட்டாலும் வழக்கமான பாணியிலிருந்து ஒரு படி உயரே இருந்தால் ரசிக்கும் விதமாகயிருக்குமென்று நினைத்தேன்! So 2013 முதற்கொண்டே இரவுக்கழுகாரின் கதைகளில் டயலாக்குகளுக்கு ஏகமாய் கவனம் தர அவசியமானது! இந்தாண்டின் கதைகளுள் மார்ச் & ஏப்ரல் சாகஸங்களில் full team ஆஜரானதைத் தொடர்ந்து – கதைகளிலும் ஒரு துள்ளல் இருந்ததாகத் தோன்றியது எனக்கு! 

So இந்த ஞாயிறுக்கான உங்கள் கேள்வி # 1 இது தான்:டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்? கேள்வி # 2: கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா? போனெல்லியில் அவர்களது ‘டெக்ஸ் டீமோடு‘ பேசக் கிடைத்த சொற்ப அவகாசத்தின் போது நான் கேட்டதெல்லாம் இது தான்: ‘கார்சனுக்குக் கால்கட்டு போடும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?‘ என்பதே! பேனாவால் பேசுவதையே அதிகம் விரும்பும் போசெல்லி மந்தகாசமாய் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார்! இதே போன்றதொரு நாயகர் மட்டும் நம்மூரில், நம் மசாலாத்தோய்ந்த கைகளில் சிக்கியிருந்தால் இந்நேரத்த்துக்கு ‘பகல் ஆந்தையார்‘ என்றதொரு அடைமொழியோடு கார்சனைத் தனித்தடத்தில் இறக்கி விட்டு ‘சும்மா அதிர‘ விட்டிருக்க மாட்டோமா? என்று நினைத்துக் கொண்டேன்!

     லார்கோவின் சாகஸங்களிலுமே சைமனின் வருகை எப்போதுமே ஒரு welcome relief என்று சொல்லலாம்! நியூயார்க்கின் மையத்தில் குடல் வாய்க்கு வரும் வேகத்தில் மோட்டார் பைக்கில் பல்லியைப் போல் தொற்றிக் கொண்டு திரிவதில் ஆகட்டும்; ‘சைமன் குட்டிப்பா‘வாக சுற்றி வரும் திரை நாயகன் அவதாரத்திலாகட்டும்; லிட்டர் லிட்டராய் ஜொள்ளை ஆம்ஸ்டர்டாமின் வீதிகளில் தெளித்துச் செல்லும் casanova ரூபங்களிலாகட்டும் – சைமன் வரும் கட்டங்களிலெல்லாம் voltage கூடுவது நிஜம் தானே? கோடீஸ்வரக் கோமானுக்கு தோஸ்தாக, ஒரு பிக்பாக்கெட் பக்கிரி என்பது கதாசிரியர் வான் ஹாம்மேவின் கற்பனை ஜாலவித்தையென்றால் – ஒரு சொங்கியான தோற்றத்தைத் தந்து அவன் மீது ஒரு விசித்திர வாஞ்சையை நாமெல்லாம் விதைக்கச் செய்யும் புண்ணியம் ஓவியர் பிலிப் ப்ரான்கைச் சாருமல்லவா? உயிரையே பணயம் வைத்து, நண்பனை மீட்கும் முயற்சியில் தன் சகலத்தையும் இழக்கத் துணிவது தான் லார்கோவின் கதாப்பாத்திரத்தின் வலிமை எனும்போது – அந்த நட்புக்கு அருகதையானவனாய் தனது “கோக்குமாக்கு பாணியிலேயே” சைமன் சுற்றித் திரிவது தான் highlight! ‘ஆ... நண்பா! என்னைக் காப்பாற்றி விட்டாயே... உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?‘ என்றெல்லாம் சைமனை வசனம் பேசச் செய்திருந்தால் இந்தக் கதாப்பாத்திரத்தை நாம் மறுமுறை திரும்பிப் பார்த்திருக்க மாட்டோம்! ஆனால் அந்த இக்கட்டுகளிலும் தெனாவட்டாய், நக்கலாய் பேசும் பாணி தானே சைமனின் அடையாளமே? ‘ஆதலினால் அதகளம் செய்வீர்‘ நட்பின் வலிமைக்கொரு மைல்கல் இதழ் என்று சொன்னால் மிகையாகாது! இங்கே தான் இவ்வாரத்தின் கேள்வி # 3 உங்களுக்கு : லார்கோ-சைமன் கூட்டணியில் இதுவரையிலான டாப் சாகஸம் எதுவென்று சொல்வீர்கள்?

     ஏப்ரலின் புது வரவுகளின் மூன்றாவது ஆல்பம் கூட இந்தக் கூட்டணிப் படலத்திற்கொரு extension எனலாம்! ஆரஞ்சு நிற மண்டையைப் படிய வாரி விட்டு வருவதும், கட்டம் போட்ட மஞ்சள் சொக்காயை தெருமுனை லாண்டிரியில் அயர்ன் பண்ணிப்போட்டு வருவதையும் மாத்திரமே கடமையாகக் கொண்ட சிக் பில்தான் அத்தொடரின் நாயகர் என்று சொன்னால் அவரது பாட்டி கூட ‘கெக்கே பிக்கே‘ என்று பல்லைக் காட்டி விடும் ! ஷெரீப் டாக்புல்லும்; அம்மாஞ்சி ஆர்டினும் இல்லாது போனால் இந்தத் தொடரே என்றைக்கோ காலாவதியாகியிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேது? ஒரிஜினல் கவுண்டர் + செந்தில் ஜோடி என்று இந்த நீதிக்காவலர்களைக் கைகாட்டினால் பொருத்தமாக இருக்குமல்லவா? சமீப ஆண்டுகளில் – இன்னும் குறிப்பாய் சொல்வதானால் ஏப்ரல் 2013 முதல் இந்த ஜோடிகளின் வசனநடைகளுள் இயன்றளவிற்கு நகைச்சுவைத் தூவலை ஜாஸ்தியாக்கிடலாம் என்பதை நான் தீர்மானித்தது “ஒரு கழுதையின் கதை”யிலிருந்தே! அழகி லானாவை மணமுடிக்க ஆர்டினும், மொட்டை பாஸ் டாக்புல்லும் அடிக்கும் லூட்டிகள் வகையான களமாக அமைந்த போது – என் வேலை சுலபமாகிப் போனது! இம்மாதம் கூட ஷெரீப்பும், ஆர்டினும் பேசிக் கொள்ளும் பகுதிகளை எழுதுவது ஒரு சூப்பர் ஜாலி அனுபவமாய் அமைந்திருந்தது! So கூட்டணியில் கரை சேரும் கட்சியெனில் அதில் பிரதானம் சிக் பில் கட்சிதான் என்று சொல்லலாம்! அந்நாட்களது சிக்பில் கதைகளைப் புரட்ட எப்போதாவது நேரம் கிடைக்கும் போது – அவற்றின் நகைச்சுவை quotient-ஐ இன்னமும் சிறப்பாக்கியிருக்கலாமோ என்று தோன்றும் ! நேரம் கிடைத்தால் மறுபதிப்புகளில் அதனைச் செய்திடலாம் என்றும் தோன்றும்.....but அந்த ‘நேரம்‘ தான் கடைகளில் வாங்கிடவே முடியாததொரு பொருளாகவே தொடர்கிறது! தற்போது பணியாற்றி வரும் ‘நிழல் 1... நிஜம் 2‘ கதையினில் கொஞ்சமாய் மாற்றங்கள் செய்ய விழைந்திடுகிறேன்!

     So இந்தக் கூட்டணி சீஸனில் நமது ஏப்ரல் கூட்டணிகள் பற்றிப் பார்த்த திருப்தியோடு புறப்படுகிறேன்! சந்தர்ப்பம் கிடைக்கும் இன்னொரு ஞாயிறின் போது – இன்னும் மீதமிருக்கும் கூட்டணி பார்டிகளைப் பற்றிப் பேசுவோமா?! குறிப்பாக மாடஸ்டி & கார்வின் கூட்டைப் பற்றி! ஒரு சன்னமான அணி இப்போதே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் ‘ஜிவ் ‘லென்று பேரணியைத் துவக்கியிருப்பது நிச்சயம் – மஞ்சள் கொடியை ஏந்திப் பிடித்தவாறே! அந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இப்போதே மனத்திரையில் ரசித்தபடிக்கே விடைபெறுகிறேன் all! See you around soon! Bye for now!

P.S : SELFIE with TEXதொடரட்டுமே !! மேற்கொண்டு வந்துள்ள செல்பிக்களை காலையில் upload செய்து விடுவேன் !! 

அப்புறம் சென்ற Caption writing போட்டிக்கான பரிசைப் பரணிலிருந்து தேடித் பிடித்து விட்டபடியால் இந்த வாரத்தில் - ஈரோடு நோக்கிப் பாய்ந்திடுவார் ஹெலிகாரில் !! அந்த சந்தோஷத்தோடு - இதோ இவ்வாரப் போட்டி !! 

Saturday, April 02, 2016

The TEX EXPRESS !

நண்பர்களே,
            
வணக்கம். சில நேரங்களில் மிகச் சுலபமான தீர்மானங்களே- மிகவும் கடினமானவைகள் என்பதை சிறுகச் சிறுகப் புரிந்து வருகிறேன்! ‘அட... தெளிவாய்க் குழப்புகிறானே?‘ என்று யோசிக்கிறீர்களா ? – எல்லாமே நமது இரவுக் கழுகாரின் உபயமே! ஏப்ரல் முதல் தேதியன்று கூரியர் பார்சல்கள் உங்கள் கதவுகளைத் தட்டுமென்பது உறுதியான கணமே எனக்குள் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொண்டது! ஏழு கழுதை வயதாகி விட்டது தான்; ‘கெட்-அப்‘களை கமல் மாற்றுவதைப் போல் நமது இதழ்களின் சைஸ்களை நான் திருக்கி விளையாடுவதும் சகஜமே என்பதில் இரகசியமே கிடையாது தான் ; டெக்ஸ் & கோ.வின் மிரட்டலான இந்த மெகா அதிரடியில் நாம் வாய் பிளந்து நிற்கவிருப்பது நிச்சயம் என்பதிலும் ஐயமிருக்கவில்லை - ஆனால் எல்லாவற்றிற்கும் பின்பாய் 30+ ஆண்டுகளுக்கு முன்பானதொரு மனநிலையில் உலாற்றித் திரிந்தேன்! அன்றைய நாட்களில் இன்டர்நெட்டும் கிடையாது; செல்போனும் கிடையாது; வலைப்பதிவுகளோ - வாசக சந்திப்புகளுக்கு சந்தர்ப்பங்களோ கிடையாது! So- ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்துக் கடிதப்போக்குவரத்தின் அளவே அம்மாத இதழின் வெற்றி / மித வெற்றி / தோல்விகளின் அளவீடுகளாக இருந்திடும்! காலை 11 மணிக்குத்தான் சிவகாசி மெயின் போஸ்ட் ஆபீஸில் தபால்களைப் பிரித்து நமது தபால் பெட்டியில் போடுவார்கள்! பதினொன்றேகால் சுமாருக்கு நமது ஆபீஸ்பாய் கையில் ஒரு பையோடு ஆபீஸுக்குள் நுழையும் போது நான் சுவாரஸ்யமே காட்டிக் கொள்ளாதது போல மூஞ்சை வைத்துக் கொண்டு – "ஆங்... தபால் வந்திடுச்சாப்பா? சரி... சரி... மேஜையில் வச்சிட்டு போய் ஒரு டீ குடிச்சிட்டு வா!" என்று அனுப்பி வைப்பேன்! அவன் தலை அந்தப் பக்கம் மறைந்த மறுகணம் காய்ஞ்ச மாடு பாய்வது போல அந்தத் தபால்களைப் பரபரவென்று துளாவத் தொடங்கி விடுவேன்! ‘ஹை... திண்டுக்கல் கவரா? உள்ளே ரூ.1200/- க்கு டிடி இருக்கும்!; அடடே... சேலம் கவரும் இருக்கா? – இன்னிக்குக் காலைப் பொழுது நரி முகத்திலே தான் முழிச்சிருக்கோம்‘; ‘ஹைய்யோ... திருச்சி ஏஜெண்ட் கூட தபால் போட்டிருக்கிறார்!‘ என்று கவரை வைத்தே உள்ளேயுள்ள தொகைகளை யூகித்து விடுவேன்! எப்போதாவது – டிராப்டுக்குப் பதிலாக முந்தைய மாதங்களது வி்ற்பனையாகாப் பிரதிகளை நமக்குத் திருப்பியனுப்பிய லாரி ரசீதுகளும் கவரினுள் இருந்து எனக்கு செம ‘பல்பு‘ நல்கிடுவதும் நடக்கும் தான்! ஆனால் சராசரியாக மாதத்தின் முதல் வாரத்தில் நம் கதவைத் தட்டும் ஏஜெண்ட்களின் கவர்களும்; பின்தொடரும் உங்கள் பாராட்டுப் போஸ்ட்-கார்டுகளுமே எனக்கான அம்மாதத்து ரிப்போர்ட் கார்ட் எனலாம்! ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்திலிருந்த சமயங்களில் ‘ட்ரிங்... ட்ரிங்‘ என்று தெருவில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டால் கூட – ‘ஆங்... நாகர்கோவிலுக்கு இன்னொரு 50 காப்பி போடுங்கப்பா!‘ என்று எழுந்து உட்கார்ந்துவிடுவேன் - becos தபால் போட்டு மறு ஆர்டர்களுக்காகக் காத்திருக்க விரும்பாத ஏஜெண்ட்கள் ஃபோன் போட்டு- ‘உடனே அனுப்புங்க சார்!‘ என்று நச்சரிப்பதும் முதல் வாரத்தில் நம் கூர்மண்டையர் கதைகளுக்கு மட்டுமே நடந்திடுவதுண்டு ! So ஸ்பைடர் இதழ்கள் வெளியாகும் மாதங்களில் - "போன் அடிக்குதா ?" என்ற குறுகுறுப் பார்வையோடு மேஜையிலே ‘தேமே‘ என்று தூங்கிக் கிடக்கும் அந்தக் காலத்துக் கறுப்புப்புராதனத்தை பார்த்துக் கொண்டேயிருந்த நாட்களும் உண்டு! அதே கூத்துத் தான் இந்த வெள்ளிக்கிழமை பகலில் இங்கே நமது வலைப்பதிவிலும் ! ‘அட... கூரியர் கிடைச்சிடுச்சா...? யார்-யார் என்ன அபிப்பிராயப்படுகிறார்கள்?‘ என்று நோட்டமிடுவதை ஓரிரு மணி நேரங்களுக்கு ஒருமுறை செய்து கொண்டிருந்ததேன் ! சிறுகச் சிறுக உங்கள் உற்சாகப் பின்னூட்டங்கள் பதிவாகத் தொடங்கிய போது வறுத்தகறியைக் கண்ட கார்சனானேன் !! என்னதான் ஒரு விஷயத்தின் பலன் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் கூட, அது நம் கண்முன்னே  மெய்யாகும் தருணங்களில் உள்ளே பளிச்சிடும் சன்னமான மின்னலுக்கு வோல்டேஜ் அதிகமென்பதை மீண்டுமொருமுறை  உணர்ந்தேன்!

பெரிய சைஸ் ஒரு novelty என்பது ஒருபுறமிருக்க – இதற்கென நாம் தேர்வு செய்திருந்த கதை தான் highlight என்பதை – சித்திரங்களை சிலாகிக்கும் உங்களது பின்னூட்டங்களைப் படித்த போது ஊர்ஜிதம் செய்து கொண்டேன்! நிஜத்தைச் சொல்வதானால் – ‘சட்டத்தின் சவக்குழி‘ தான் இந்த மெகா சைஸிற்கென முதலில் தேர்வான கதை! சென்றாண்டின் ஈரோட்டுத் திருவிழாவுக்கு நான் கிளம்பிய சமயமே அதன் பணிகளும் துவங்கியிருந்தன! So- ஒரு மெகா சைஸில் ஒரு MAXI டெக்ஸ் என்பது தான் எனது ஒரிஜினல் திட்டமிடல்! ஆனால் இதழின் விலை எகிறிக் கொண்டே போவதும்; சந்தாத் தொகையினை கட்டுக்குள் கொணரும் அவசியமும் தலையெடுத்தபோது – எங்கெங்கே செலவினங்களுக்கு ஒரு முடிவெட்டுத் திருவிழா நடத்த முடியுமென்ற யோசனையில் ஆழ்ந்தேன்! அப்போது தலையில்லாப் போராளியும்; சிவிடெல்லியின் சித்திரங்களும் (என்) தலைக்குள் அணிவகுக்க – ‘டப்‘பென்று உல்டாவாக்கினேன் கதைகளின் slot களை – நூறு ரூபாய் மிச்சம் பிடிக்க! இந்த அட்டகாசச் சித்திரங்களைப் பெரிய சைஸில் பார்க்க முடிந்தால் – அதகளமே பலனாகும் என்று அக்டோபர் 2015-ல் எனக்குள் சொன்ன பட்சி – இத்தனை காலமாய் வாய்மூடிக் கிடந்தது தான் மெகா அதிசயமே! நிறைய ஞாயிறுகளில் ஒரு வேகத்தில் ஓ.வா.உ.நா. துள்ளிக் குதித்து விடுவாரோ என்ற பயமிருக்கும் – ஆனால் ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற தண்டவாளம் நிச்சயமான பிற்பாடு இது போன்ற சிற்சிறு ஆச்சர்யங்களைத் தக்க வைப்பது சுவாரஸ்யத்தைத் தொடரச் செய்ய உதவிடும் என்று நினைத்தேன்! So வாய் நிறைய கணிசமாய் பெவிகாலை பூசிக் கொண்டேன்!
‘எல்லாம் சரி தான் – பதிவின் ஆரம்ப வரிகளுக்கு அர்த்தமென்ன?‘ பழநியில் ஆரம்பித்து பாரிஸ் வரைக்கும் பயணம் போயாச்சா?‘ என்று நெளியத் தோன்றுகிறதா? Very Simple! ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற அட்டவணையை 2014-ன் ஒரு மத்தியப் பகுதியிலேயே நான் லேசாகப் பரிசீலிக்கத் தான் செய்தேன்- ஆனால் ‘பௌன்சர்‘; ‘தோர்கல்‘; கிராபிக் நாவல்கள் வழித்தடமென்பது override செய்து போனதால் ஓசையின்றி ஜகா வாங்கி விட்டேன்! இம்முறை கூட உங்களில் பெரும்பகுதியினர் டெக்ஸுக்கு ‘ஜே‘ போட்ட போதிலும் என் மண்டைக்குள் – ‘இது சரிப்படுமா? பொன் முட்டையிடும் வாத்தை அஞ்சப்பர் ஹோட்டல் ஐட்டமாக்கிடுவோமோ?‘ என்ற பயம் நிறையவே இருந்தது! ஆனால் ஒரு வழியாக ‘டெக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ தண்டவாளமேறி – ஆண்டின் முதல் 4 மாதங்களிலும் விதவிதமான கதைகளோடு அழகழகாய் வெற்றி கண்டான பின்னே – காத்திருக்கும் மே & ஜுன் சாகஸங்களும் variety-ல் சற்றும் சளைத்தவையில்லை என்பதையும் பார்க்க முடிகின்ற போது – ‘இதுக்குத் தானா இத்தனை யோசனை சாமி?‘ என்று என்னையே கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது! 

Early days yet – இன்னும் மூன்றில் இரு பங்குத் தூரம் பாக்கியுள்ளது தான்; ஆகையால் இப்போதே “வெற்றி! இமாலய வெற்றி!“ என்று போஸ்டர் அடிப்பது பேமானித்தனம் என்பதும் புரிகிறது; ஆனால் ‘தல‘யின் ஒவ்வொரு தாண்டவமும் உங்களிடையே உருவாக்கும் எனர்ஜியை என்னால் நன்றாகவே உணர முடிகிறது! அதிலும் கடந்த பதிவில் நண்பர் M.H.மொஹிதீனின் பின்னூட்டம் ரொம்பவே சுவாரஸ்யமானது என்பேன் – simply becos டெக்ஸின் ஜுவாலைக்கு முன்பாக லார்கோவே பின்வாங்க வேண்டிவருமென்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். Make no mistake - இன்றைய ரசனைகளின் பிரதிபலிப்புக் கதைகளுள் லார்கோ தான் நமது டாப் ஸ்டார் ! And ‘கடன் தீர்க்கும் நேரமிது‘ ஒரு அக்மார்க் லார்கோ சாகஸம்! Hi-tech கதை; ரம்யமான சித்திரங்கள்; பளீரிடும் வர்ணக் கலவை; அழகான பிரிண்டிங் என சிலாகிக்க நிறைய விஷயங்களைத் தன்னுள் கொண்டது! ஆண்டின் அட்டவணையில் லார்கோ இடம்பிடிக்கும் தருணங்கள் எல்லாமே ரொம்பவே விசேஷமானவைகள் என்பதில் நம்மிடையே பேதங்ககளும் கிடையாது! ஆனால் இத்தனையும் இருந்தும் டெக்ஸின் விஸ்வரூபத்தின் முன்னே புதுயுகத்தின் டாப் ஸ்டார் லார்கோவே டெபாஸிட் காலியாவதைப் பார்த்தால் – மிரட்சியாகத் தானிருக்கிறது! இந்த ஆர்ப்பரிப்புகள் தீவிர டெக்ஸ் ரசிகர்கள் சிலரது ஆர்வங்களின் வெளிப்பாடுகளே என்ற ரீதியில் லைட்டாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை – வெள்ளி & சனிக்கிழமைகளில் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது!! கடந்த 2 நாட்களில் “தலையில்லாப் போராளி“ மட்டுமன்றி – ‘தல‘யின் சகல சாகஸங்களும் ‘ஏக் தம்மில்‘ பார்சலாகி வருகின்றன நமது ஆன்லைன் ஸ்டோரில் ! Facebook-ல் சிறிது சிறிதாய் நமது பக்கத்தின் reach கூடி வருவது காரணமா? ; நண்பர்களுக்கு நீங்கள் செய்திடும் சிபாரிசுகள் காரணமா? ; அல்லது புத்தக விழாப் பரிச்சயங்கள் தொடர்கின்றனவா? என்று pinpoint செய்திடத் தெரியவில்லை எனக்கு! ஆனால் இந்த 2 நாட்களது ஆன்லைன் வேகம் மூச்சிரைக்கச் செய்வது நிஜம் – thanks to டெக்ஸ் & கோ!

And இதில் மிகப் பெரிய வேடிக்கையே – இம்மாத இதழ்களின் எந்தக் கதைக்குள்ளும்; யாருமே புகுந்திருப்பதாகத் தெரியக்கூடவில்லை! இதழின் தோற்றமும், இரவுக் கழுகாரின் கம்பீரமும், சித்திரங்களின் அசாத்தியமுமே இத்தனை தீப்பறக்கச் செய்துள்ளதெனும் போது - அனலடிக்கச் செய்யும் அந்தக் கதையை நீங்கள் ரசிக்கத் தொடங்கும் போது வாணவேடிக்கைகள் சர்வ நிச்சயம் என்றும்படுகிறது! இது தான் “டெக்ஸ் வில்லர்“ என்ற பெயரின் பின்னே புதைந்துள்ள மாயாஜாலம் என்பேன்! 

“சீக்கிரமே சீஸன் ஆரம்பித்து விட்டதோ?“ என்று கேட்கத் தூண்டும் வகையில் என் கடைவாய்க் குற்றாலம் ஆர்ப்பரிப்பது கொஞ்சம் ஓவராய் நண்பர்களுள் ஒரு சாராருக்குத் தோன்றிடலாம் என்பதும் எனக்குப் புரியாதில்லை! இன்னும் பரவலாய் பகிரப்பட வேண்டிய ஒளிவட்டம் ஒரு மஞ்சள் சட்டைக்காரரைத் தாண்டி வேறெங்கும் நகர மறுப்பதில் அவர்களுக்கு ஒரு வித அயர்வு தோன்றிடலாம் தான்! But trust me all – இதுவொரு சுலபமான வெற்றியே அல்ல, becos – இவை சுலபான நாட்களே அல்ல! Comeback ஸ்பெஷல் என்று திரும்பவும் நாம் கடைவிரித்த போது – ‘நீங்க வந்தா மட்டும் போதும்!‘ என்று சிகப்புக் கம்பளத்தை விரித்தீர்கள் – அதன் லாஜிக் புரிந்தது! லார்கோ; டபுள் த்ரில்; தங்கக் கல்லறை; ஷெல்டன் என்று வரிசையாக வர்ணத்தில் விருந்துகள் பரிமாறப்பட்டபோது உங்கள் உத்வேகம் உயரே சென்றதும் புரிந்தது ! NBS; LMS : லயன் 250; MC 350 என்று ஏதேதோ மைல்கல் moments வந்தன – ஆனந்தித்தோம் ; அதனையும் புரிந்திட சிரமம் இருக்கவில்லை! ஆனால் தாண்ட வேண்டிய உயரங்களை சிறுகச் சிறுக நாமே உயர்த்திச் செல்லும் போது – நமது எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நம்மையறியாது விண்ணைத்தொட்டு நிற்பதும் ஒரு அறிவிக்கப்படா சங்கதி தானே?! 'அட... ஆயிரம் ரூபாய் பார்த்தாச்சு......ஆண்டுக்கு 50 இதழ்கள் என்பதெல்லாம் ஜுஜீப்பி என்றாகி விட்டது...‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; ‘பௌன்சர்‘ போன்ற heavyweight தொடர்களைகட கூட ஊதித்தள்ளியாச்சு ! What next ?' என்ற லெவலுக்கு வந்தமர்ந்துள்ளது உங்களது ரசனைகள்! ஒரு மெகா ட்ரீம் ஸ்பெஷலைப் போட நான் அந்தக் காலத்தில் அடித்த அந்தர்பல்டிகளும், அந்த ஒற்றை இதழை சிலாகிக்க நீங்கள் தொடர்ச்சியாய் மெனக்கெட்ட சிலபல ஆண்டுகளையும் லேசாக இப்போதைய மனக்கண்ணிற்குக் கொண்டு வந்துதான் பாருங்களேன்? எத்தனை பெரிய கொம்பனின் ஆல்பமாகயிருந்தாலும் முப்பதே நாட்களுக்குள் படித்து; ரசித்து; ஜீரணித்து; ஏப்பமும் விட்டு விட்டு – ‘இவ்ளோ தானா ?‘ என்று அனாசயமாய் நீங்கள் கேள்வி கேட்கும் தருணமிது! So- இந்தச் சூழலில் உங்கள் ஆர்வங்களை / உத்வேகங்களை இத்தனை வீரியமாய் தூண்டிடும் ஆற்றல் ஒரு ஹீரோவுக்கு இருப்பது சுலப விஷயமே அல்ல guys ! அந்த ஆற்றல்  ‘டெக்ஸ்‘க்கு மாத்திரமே உள்ளதென்பதை ஒரு neutral பார்வையாளர் கூட உணர்ந்திட முடியும் எனும் போது - "இவன் டைகருக்கு விரோதி!" என்ற ரீதியிலான சாத்துகளுக்கு அவசியமிராது தானே? ஒரு டெக்ஸ் ரசிகனாய் மட்டுமே இதை நான் எழுதிடவில்லை ; எவ்விதச் சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் – ஒரு பதிப்பகத்தின் நிர்வாகியாய் பார்க்கும் போதும் எனக்குள் தோன்றும் சிந்தனைகளையே இங்கே எழுத்துக்களாக்கியுள்ளேன்!

இங்கே தான் என்றில்லை; “டெக்ஸ்“ என்ற பெயர் அழுத்தமாய் உச்சரிக்கப்படும் எந்தவொரு தேசத்து காமிக்ஸ் மார்க்கெட்டிலும் – அவர் ஆலமரமாய் வேர்கொண்டு நிற்பதைப் பார்த்திட முடிகிறது ; வெறித்தனமான ரசிகர் பட்டாளம் திரண்டு நிற்பதையும் ரசித்திட முடிகிறது! இதோ – 50 ஆண்டுகளாய் பிரேசிலில் வெளியாகியுள்ள 600+ Tex ஆல்பங்களின் ஒரு சின்னத் தொகுப்பு !

போர்சுகலில்; நார்வேயில்; ஸ்பெயினில்; பின்லாந்தில்; குரோவேஷியாவில்; துருக்கியில்; சமீபமாய் ஹாலந்தில்; ஜெர்மனியில் டெக்ஸ் சகாப்தம் என நம்மை விடப் பன்மடங்கு ஆரவாரத்தோடு தொடர்கிறதெனும் பொழுது – இந்த மஞ்சள் சட்டைக்காரரின் வெற்றி ஒரு fluke கிடையவே கிடையதாதென்றாகிறது! 

நான் போனெல்லியில் அவர்களது CEO-வை பார்க்கும் போதெல்லாம் கேட்கும் முதல் கேள்வியே – "தலைவர் எப்படியிருக்கிறார்?" என்பதே! அது குழுமத்தின் தலைவரான அவரை நலம் விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா? ; போனெல்லியின் ‘தலை‘வரான டெக்சை விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா? என்பதை நானறியேன் – ஆனால் அவரது பதில் ‘Tex is great & we are good too!’ என்ற ரீதியிலேயே இருந்திடும்! ஒரு மாதாந்திர இதழ்; ஒரு மாதாந்திர மறுபதிப்பு; அவ்வப்போது (புது) கலர் பதிப்புகள்; ஆறு மாதங்களுக்கொருமுறை டெக்ஸ் கிராபிக் நாவல் (!!) என்று பாப்கார்ன் கொறிப்பது போல கதைகளை அவர்கள் தொடர்ச்சியாய் உற்பத்தி செய்வது ஒரு அசாத்திய அதிசயமெனில் – அத்தனையையும் அசராமல் வாங்கிப் படித்து, ரசித்திடும் இத்தாலிய ரசிகர்களை நினைத்தாலும் மலைப்பாகவுள்ளது! அதிலும் அந்த மாதாந்திரப் புது இதழ்கள் நெருக்கி 2 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன எனும் போது – இந்த மாயாஜாலத்தை விளக்கிட வழியில்லை! இதில் MAXI Tex; Tex Almanac என்ற சைக்கிள் கேப் சேர்க்கைகளை நான் சேர்த்திடக்கூட இல்லை! ஒன்று மட்டும் நிச்சயம் – சந்திர மண்டலத்திலேயே பிளாட் போட்டு, வீடு கட்டும் ஒரு நாள் புலர்ந்தால் கூட, அங்கேயும் இந்தக் குதிரை வீரரின் கதைகள் ஏதேனும் ஒரு மொழியில் ரவுண்டடித்துக் கொண்டேயிருக்கும் போலும்! இதர ரசனைகள் சகலத்திலும் நவீனங்கள்; மாற்றங்கள்; முன்னேற்றங்கள் என்று புகுந்தாலும் – குளிக்காத ஒரு ரேஞ்சர் கும்பலை ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பானதொரு கரடுமுரடான பின்னணியில் ரசிக்கும் ஆசை மட்டும் நம்முள் மங்கிடவே செய்யாது போலும்!
சரி, இதற்கும் மேலே இந்த ‘இ.க.பு.‘வைத் தொடர்ந்தால் உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி கசியக் கூடுமென்பதால் கடையை மூடி விடுகிறேன்! கிளம்பும் முன்பாக – சின்னதாகவொரு கேள்விப் பட்டியல் மாத்திரமே:

1. ஜனவரி to  ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்?
2. ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please?
3.    மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?
4. ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?
இந்தக் கேள்விகளுக்கு இது ரொம்பவே early days ஆகத் தோன்றிடலாம் தான்; ஆனால் டெக்ஸ் எக்ஸ்பிரஸின் வேகத்துக்குக் கொஞ்சமேனும் நாமும் ஈடு கொடுத்திட வேண்டாமா? இந்தாண்டின் இறுதிவரைக்குமான சகல சாகஸங்களின் ஆங்கில மொழியாக்கங்கள் தயாராகி விட்டன! அவற்றை அவ்வப்போது நாம் தமிழ்ப்படுத்தும் வேலைகள் மட்டுமே பாக்கி! So நமது French & Italian மொழிபெயர்ப்பாளர்களை 2017-ன் களத்திற்கு இப்போதே இறக்கி விடும் அவசியம் தலைதூக்குகிறது! லக்கி லூக்; லார்கோ; ப்ளுகோட்ஸ் போன்ற தொடர்கள் ஆங்கிலத்திலேயே இருந்திடுவதால் – அவை நீங்கலான மற்ற தொடர்களுள் நமது கதைத் தேடல்களை இப்போதே தொடங்கியாக வேண்டும்! So அவசியமாகிடும் மாற்றங்கள் பற்றிச் சின்னதாய் இப்போதே கோடுகள் போட்டீர்களெனில் தொடரும் ஆண்டுக்கான ரோடுகளைப் போடும் சிந்தனைக்குள் லயித்திட  இப்போதே தயாராகத் தொடங்கிவிடுவோம்! Of course – இன்னமும் நடப்பாண்டின் நாயக / நாயகியர் பலர் களமிறங்க அவகாசமுள்ளது & இப்போதே 2017-ன் அட்டவணையைப் பற்றிய சிந்தனைகள் ரொம்பவே premature ஆக இருந்திடும் என்பதை நான் அறியாதில்லை! இது நமது ரொம்ப ரொம்ப முதல்நிலைச் சிந்தனைகள் மாத்திரமே! ஆகையால் உங்களின் பொதுவான அபிப்பிராயங்கள் பற்றி மேலோட்டமாய் பதிவிட்டாலுமே கூடப் போதும்!

இப்போதைக்கு ஒளிவட்டம் ஏப்ரலின் இதழ்கள் மீதே லயித்திருப்பதைத் தான் நானும் விரும்பிடுவேன்! மீண்டும் சந்திப்போம்! அது வரை – enjoy the action & keep writing! See you around soon !

SELFIE WITH TEX#

நண்பர்களே,

வணக்கம். ரெகுலர் பதிவிலேயே உங்கள் போடோக்களையும் கோவிந்தா போடாது - அதற்கென ஒரு பக்கத்தை தயார் செய்தாலென்னவென்று தோன்றியது ! Keep them coming folks !! பதிவு வழக்கம் போல் பிசாசு உலா வரும் வேளையினில் !!
Tirupur Blueberry & Junior
R.Senthil Kumar
Salem 'Tex' Vijaraghavan & Junior
Junior N.Shanmugham
Ram Kumar
T .ஆர்த்தி, புதுவை.
Salem Elamaran
                      Junior Mayavi.Siva - BS.ஜெயந்தர்
                                   Yuva Kannan

                                        தலீவரின் selfies x 3 !! 




                                அறிவரசு (எ) ரவி 
                                    A.T.Rajendran, Cuddalore



                                         ஆதி தாமிரா & ஜூனியர் 
                                 Dr.Saravanan & Junior !


                                                    Wow !!



     
                                Senthil Sathya & kutties !


                                 Junior Ravanan Iniyan !!


                                Shelton Gabriel Verner !!!!

                                     L.Jayaraman Jr.


                                       G.Ramkumar


                                                                                           Giri & junior !!
                            ஆதவன் வித் TEX !!! (Jr.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.)


                                                              Jr.Dr.Sundar Salem !!


                                                                                              Avinashi Suresh

                                                                              Mayiladuthurai Raja (Postal Phoenix)

                                                                                           Kovai "steelclaw" Ponraj

                                                            Dasu Bala @ D.Suresh, Pondy & kutties !!


                                                              Selvakumar, Nagapattinam
                                                                  (Yazhisai Selva)


                                                             Palanivel...Varsha...Harini !!


                                                                C.Sankar, Hyderabad


                                                                 Babu Blizy & friends
                                                                       Tiruppur Kumar

                                                                            Madusudanan Junior Kid Ordinn
பாகுபலி போசில் !!!

                                                  சேலம் ஓவியஆசிரியர் ராஜாராம்


                                                    நாங்களும்  போடுவோம்லே....!


                             அடடே...அடடடே...!! FEBI FERNANDES from நாகர்கோவில் 


                                                               N.Senthil Kumar


                                                              Diabolik Akhil !!!!!!



                                    G.nandha kishor-Guna karur-G.srinithi



                                          Santhanakumar Ganesan & Family !!
                                யாரிந்தத் தலையிலா செல்பிகாரரோ ?
                                                            cutie(Saru) - Satishkumar S 



                                இத்தாலிக்காரரரின் இளவல் - ரம்யா விஜய் - ஈரோடு ! 


                                                           Jr.Jeyakumar, Mecheri


                                                                      Salem Susee 


                                                                       Rajasekar Vedeha


                                                                     Tex Sampath


                                                                        Diya Arun Prasad


                                                       Senior Srirangam Sivakumar !!!!!  Wow !!!!


                                             ஜேடர்பாளையம் சரவணகுமார்&ஹரிகிருஷ்ணா



                                                                          Junior T.K.Ahmed Basha


                                                              ஜேடர்பாளையம் பூபாலன்


                                                                                      டெக்ஸ் சரணமாசனா !!


                                                                                  Gayatri & Manoj -  Jrs of Erode Stalinji


                                                                         Manthira Lakshmi - D/o.Punitha Saathaanji !

                                                                           Nikitha Prabakaran - D/o. Cibiji !