Powered By Blogger

Saturday, October 12, 2024

தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ 2025 !!

நண்பர்களே,

வணக்கம். பண்டிகை நன்னாள் வாழ்த்துக்கள் !! வெல்கம் டு தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ! ஆண்டுக்கொரு தபா அரங்கேறிடும் நமது அட்டவணை மேளாவின் 14-வது வருஷமிது! Oh yes – “கம்பேக் ஷ்பெஷல்” என்றபடிக்கே நமது தெறிக்கும் இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கித் தந்த 2012 ஒரு தூரத்து நினைவாகவே இன்று நிழலாடினாலும், அன்றைக்கு ஆரம்பித்த புது templates இன்று வரை தடதடத்து வருகின்றன...! And அவற்றுள் பிரதானமானது இந்தப் 12 மாதத் திட்டமிடல்களை ‘ஏக்‘ தம்மில் உங்களிடம் சமர்ப்பிக்கும் அதகளம்! So கூப்பிடு தொலைவில் காத்திருக்கும் 2025-க்கென நாம் மனதில் உருவகப்படுத்தியுள்ள பயணப் பாதை பக்கமாய் வெளிச்ச வட்டத்தைத் திருப்பிடலாமா?

உலகமெல்லாம் ஒரு காலெண்டரைப் பின்பற்றி வந்தால் – சீனர்களோ தங்களுக்கென ஒரு தனித்துவமான காலெண்டரை வைத்துக் கொண்டு “இது மொசக்குட்டியின் வருஷம்... இது புலித்தம்பியின் வருஷம்” என்று வண்டியோட்டுவது வாடிக்கை! Crisp reading மாத்திரமே முன்செல்லும் பாதை என்று தீர்மானித்து, நாமுமே நடப்பாண்டு முதலாய்  – முயல்களின் பாணியில் ‘ஜி்ங்-ஜிங்‘கென்று துள்ளிக் குதித்து வருகிறோம்! So காத்திருக்கும் 2025-க்கு அதே crisp வாசிப்புகளை, இன்னமும் தெறி வேகத்தில் தந்திட எண்ணியிருப்பதால் – 2025-ஐ “பந்தயக் குதிரையின் ஆண்டு” என்று நிர்ணயிக்கத் தோன்றியது! So “Year of the Race Horse - 2025” நமக்கென வைத்துக் காத்திருக்கும் விருந்தின் மெனுவைப் பார்க்க வாருங்களேன்!

பட்ஜெட்! கொரோனா தாக்கத்துக்குப் பின்பாகவே ஒவ்வொரு வருட அட்டவணையினைப் போட முனைந்திடும் போவதெல்லாம் விஸ்வரூபமெடுத்து முன்னே நிற்கும் சமாச்சாரம் இதுவே! So இப்போதெல்லாம் அந்த “ஐந்தாயிரத்துச் சொச்சம்” என்ற நம்பரை முதலில் எழுதி வைத்துக் கொண்டு அதற்குள் எவற்றையெல்லாம் நுழைப்பது? எவற்றிற்கெல்லாம் இதயத்தில் மட்டுமே இடம் கொடுப்பது? என்ற ரூட்டில் தான் பயணித்து வருகிறோம்! சொல்லப் போனால் – ரொம்பவே சிடுமூஞ்சி வாத்தியாராட்டம் லைட்டாக சொதப்பும் நாயக / நாயகியரைக் கூட தயவு தாட்சண்யமின்றி ஓரம்கட்ட நேர்வது இந்த அரூபக் கட்டுப்பாடு நமக்கு இருப்பதால் தான்! Oh yes – ரெகுலர் சந்தா அட்டவணைக்கு அப்புறமாய் ”ஆன்லைன் மேளா”; “ஆப்பம் சுடும் பாலா” - என்றெல்லாம் தருணங்களை நாமே உருவாக்கிக் கொண்டு மேற்கொண்டு கணிசமான எண்ணிக்கையிலான புக்ஸைப் போட்டுத் தாக்குவதும் சமீப ஆண்டுகளின் வாடிக்கையாகிப் போச்சு ! But இது குறித்து கொஞ்சம் விசனம் நிலவிடுவதும் தெரிந்த சமாச்சாரமே !! "லயன்-முத்து காமிக்ஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் சகல புக்ஸ்களையும்  வாங்க ஆசை; ஆனால் எண்ணிக்கை சாஸ்தியாவதால் சிரமமாகிறது! இத்தனை பொஸ்தவங்க தேவை தானா?” என்று ஒரு சிறு அணியில் பேசிக் கொள்வது தெரியும் தான்! ஆனால் அவர்கள் அறியாத 2 காரணிகள் பின்னணியில் உள்ளன! And this is something we have discussed before too !

- ஒரு லோடு நாயக / நாயகியரை நமது அணிவகுப்பில் புகுத்தியாச்சு – ரைட்டு! -ஆனால் பட்ஜெட் காரணமாய் அவர்களுக்கான ஸ்லாட்களை குறைத்துக் கொண்டே போகவும் செஞ்சாச்சு – ரைட்டு! 

பச்சே – அந்தந்த தொடர்களுக்கென நாம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களின்படி குறைந்தபட்ச எண்ணிக்கையிலாவது கதைகளை வாங்கிடும் கட்டாயம் நமக்குண்டு! So வாங்குபவற்றை ஏதேனுமொரு தடத்தில் வெளியிட்டுத் தானே தீரணும்!

- And அதை விடவும் பிரதான காரணம் – வருஷா வருஷம் ஏறிக் கொண்டே போகும் நிர்வாகச் செலவினங்கள்! Front desk-ல் இருவர்; அக்கவுண்ட்ஸுக்கு ஒன்று; DTPக்கு இரண்டு; புத்தகவிழாக்களுக்கும், போக்கிங் பணிகளுக்கும் இரண்டு; அப்புறம் மைதீன் என்ற தம்மாத்துண்டு டீமுக்கே ஆண்டொன்றுக்கு ஆகிடும் சம்பளம் + போனஸ் தொகைகள் ஒரு உச்சமெனில், இந்த வரி; அந்த வரி; இந்தக் கட்டணம்; அந்தத் தீர்வைகள் என போட்டுச் சாத்திடும் செலவினங்கள் இன்னொரு பக்கம்! அந்த மொத்த செலவுப் பட்டியலினை வாசித்தேனெனில் நிச்சயம் மிரண்டே போய் விடுவீர்கள் ! ஆண்டுக்கு நாம் வெறும் 25 புக்ஸ் போட்டு விட்டு முடித்துக் கொள்வதாகயிருந்தாலும் இந்தச் செலவுகள் பெருசாய் மட்டுப்படப் போவதில்லை ! So இதை balance செய்திட, ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சமாய் இத்தனை இதழ்களை வெளியிட வேண்டிப் போகிறது ! அல்லது வெளியிடும் இருபதோ, முப்பதோ புக்சினில் 'பச்சக்'கென printrun-ஐ கூட்டிட முடிந்தால் பிரச்னைகள் சகலமும் தீர்ந்து விடும் !  பின்னதுக்கு வழியில்லை என்பதால் – முன்னதே way out!

ரைட்டு... இதுக்கு மேலேயும் ஜிவ்விழுக்காமல் in we go into 2025 !!

1. The ‘தல‘:

2016 முதலாகவே நம்ம இரவுக் கழுகார் & டீம் தான் சந்தாக்களின் முதுகெலும்பாகி நிற்பதை நாமறிவோம். அந்நாட்களில் “ஸ்பைடர் இல்லியா?” என்று ஏஜெண்ட்கள் கேட்ட அதே பாணியில் இப்போதெல்லாம் “இந்த மாசம் டெக்ஸ் இருக்கார் தானே?” என்பது தான் பிரதான கேள்வியாக இருந்து வருகிறது! Of course நம்மவரை பாயசம் கிண்ட சிலபல ஸ்லீப்பர் செல்கள் முனைப்புக் காட்டினாலும் – அந்த மஞ்ச சொக்கா இல்லாங்காட்டி மாதாமாதம் பருப்பு வேகாது என்பதே bottomline!

ஆனால் இங்குமே சின்னதாயொரு ஸ்பீடு-ப்ரேக்கர் எழாதில்லை! மொத்த பட்ஜெட்டை கூட்டிட வழியில்லை எனும் போது, "மாதமொரு டெக்ஸ்" என்ற திட்டமிடலே அதனில் பாதிப் பணத்தை அவசியமாக்கி விடுகின்றது! So மீதமிருக்கக் கூடிய ரெண்டாயிரத்துச் சொச்சத்தைக் கொண்டு பாக்கியுள்ள 20+ நாயகர்களுக்கு நியாயம் செய்வது சிரமமாகிப் போகிறது! So சமீப வருடங்களது வாடிக்கையின்படி, ரெகுலர் சந்தாக்களில் ஒன்பதோ / பத்தோ Tex புக்ஸ் & புத்தக விழா போலான சமயங்களில் ஒன்றிரண்டு extra books என்ற template தான் 2025-ல் கூட! அது மாத்திரமன்றி – தங்க முட்டையே இடும் வாத்தாக இருந்தாலும் கூட நெதத்துக்கு முன்னே நின்று ஒரு குத்தாட்டம் போட்டு வந்தால் அதன் மவுசு ஒரு மிடறுக்கு மட்டுப்பட்டுப் போய்விடுமோ? என்ற பயமும் சேர்ந்து கொள்வதால் 2025-க்கென ஒன்பது டெக்ஸ் ஆல்பங்கள் சந்தாவில் என்பதே planning!

அந்த ஒன்பதுக்குள் இயன்றமட்டுக்கு variety காட்டிடவும் விழைந்திருக்கிறோம்!

- டெக்ஸ் கிராபிக் நாவல் (!!!)

- கலரில் தீபாவளி டெக்ஸ்

- இளம் டெக்ஸ்

- சிங்கிள் ஆல்பம் டெக்ஸ்

- ஸாகாரோடு டெக்ஸ்

- டபுள் ஆல்பம் டெக்ஸ்

என கணிசமான variants வெயிட்டிங்!

அந்த டெக்ஸ் கி.நா. – ப்ராங்கோ-பெல்ஜிய சித்திர பாணியில், லக்கி லூக் சைஸில், கலரில் செம கெத்து காட்டிடுகிறது! 2025-ல் டெக்ஸின் வருகை இந்த இதழோடு தான் துவங்கிடவுள்ளது என்பது கொசுறுச் சேதி!

தீபாவளி மலர் 2025-க்கென காத்திருக்கும் ஆல்பமோ – ஒரு டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பம் – முழு வண்ணத்தில்! ஓவியர் ஜோஸ் ஆர்டிஸ் எப்போதுமே நமக்கொரு செம லக்கியான ஓவியர். அவரது சித்திரங்களுடனான ஆல்பங்கள் அனைத்துமே நம் மத்தியில் செம ஹிட்ஸ்! அந்த சென்டிமெண்ட் இம்முறையும் தொடர்ந்திடும் என்று திடமாய் நம்புகிறேன் – simply becos இந்த சாகஸம் அனல் பறக்கும் டெம்போவில் தடதடக்கிறது!

அப்புறம் நெடு நாட்களுக்குப் பின்பாய் ‘தல‘ தலைநகருக்கு விசிட் அடிக்கும் தெறியுமே காத்துள்ளது! லொங்கு லொங்கென்று அரிஸோனாவிலும், டெக்ஸாசிலும் வலம் வருபவரை கெத்தாக வாஷிங்டனுக்கு இட்டுச் செல்கிறது ஒரு புலனாய்வு! அங்கேயும் போய் பட்டாசு வெடிக்காமல் விடுவாரா – என்ன? தெறி ஸ்பீடு சாகஸம்!

2025-ன் highlightகளுள் ஒன்றாக இருக்கப் போவது டெக்ஸின் “உதிரம் பொழியும் நிலவே” என்றும் சொல்வேன்! 288 பக்க சாகஸம் எனும் போது இங்கே கதைக்களமும் விஸ்தீரமானது; சொல்லியுள்ள விதமும் மெர்சலூட்டுகிறது! அட்டகாசமான ஆக்ஷன்; நெஞ்சைத் தொடும் கதையோடு எனும் போது – இது ஹிட்டாகாது போனால் தான் வியப்படைவேன்!

இளம் டெக்ஸ்- பொறுத்தவரை இந்தவாட்டி நோ கொத்து பரோட்டாஸ்! டிசம்பர் 24‘ல் வரவிருக்கும் சிங்கிள் ஆல்பத்தோடு ஒரு கதை arc முற்றுப் பெற்றிருக்க, அடுத்த கதைச் சுற்று 5 அத்தியாய நீளத்துக்குப் பயணிக்கிறது! And அந்த ஐந்தையுமே ஒருங்கிணைத்து – “லயன் கோடை மலர் ‘25” என்று ரகளையாகக் களமிறக்கிடவுள்ளோம். இந்த 320 பக்க ஆல்பத்தின் முக்கிய அடையாளமே – டெக்ஸ் & கார்சன் முதன் முறையாகக் கைகோர்க்கும் சாகஸம் என்பதே ! Black & White-ல் ஒரு இளம் டெக்ஸ் ஹிட் லோடிங்! 

அப்புறம் இளம் டெக்ஸ் + ஜம்பிங் ‘தல‘ ஸாகோர் இணைந்து களம் காணும் ஒரு 128 பக்க சாகஸமுமே 2025-ன் மெனுவில் உள்ளது! போன முறை போலவே இதிலும் செம அழுத்தமான கதைக்களம் காத்துள்ளது! 

So 'தல' தெறிக்க விடும் 9 ஆல்பங்களின் ads இதோ தொடர்கின்றன !! 



2. The ‘ஒல்லி பிச்சான்‘:

புரட்டாசி பிறந்தால் விரதம் என்பது போல ஜுலை பிறந்தால் இப்போதெல்லாம் ஆஜராகிடுவது நம்ம ஒல்லி பிச்சான் நாயகர் தான்! அதை சென்டிமெண்ட் என்பதா? அல்லது ஒரு டபுள் ஆல்பத்தினை நுழைத்திட வாகான ஸ்லாட் என்பதா? அல்லது ஒரு மைல்கல் தருணத்தின் அனைவரின் முகங்களிலும் ஒரு புன்னகையினை பூக்கச் செய்யும் லக்கி மேஜிக் என்பதா? தெரியலீங்கோ – but நம்ம ஆண்டு மலரும், லக்கி லூக்கும் – பொங்கலும், வடையும் போல; பரோட்டாவும் பாயாவும் போல made for each other என்றாகி விட்டார்கள் ! And இதோ – இப்போதெல்லாம் எடுக்கும் சினிமாக்களின் பாணியில் L.C.41 என்று ஆஜராகிடவுள்ளது லயன் காமிக்ஸின் 41-வது ஆண்டு மலர்!

- And வழக்கம் போலவே இங்கு இரண்டு கதைகள்!

- And வழக்கம் போலவே இரண்டிலும் டால்டன் சகோதரர்களின் லூட்டி பின்னி எடுக்கிறது!

- And இரண்டாவது கதையிலோ – நம்ம நாலு கால் ஞானசூன்ய ரின் டின்கேன் ஒளிவட்டத்தை ‘பச்சக்‘ என்று கவ்விக் கொள்கிறது !

So இந்த L.C.41 – ஆண்டுமலர் தருணத்துக்கு அட்டகாசமாய் மெருகூட்டக் காத்துள்ளது!

3. The இளம் தளபதியார்!

2023-ன் தீபாவளி மலராக இளம் தளபதி டைகரின் ஸ்பெஷல் வெளியானதும் சரி, சிலபல மாதங்களிலேயே அது விற்றுத் தீர்ந்து போனதும் சரி – எனக்கு மறந்திருக்கலாம்! ஆனால் நமது front desk பெண்களுக்கு அது மறப்பதில்லை – simply becos இன்னமும் கூட “தளபதி பெசல் கீதாம்மா?” என்ற வினவல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன! பற்றாக்குறைக்கு – போகும் ஒவ்வொரு புத்தகவிழாவிலுமே “அந்த புக் கொண்டு வரலியா??” என்ற கேள்வியோடு மல்லுக்கட்டும் வாசகர்கள் கணிசம்! So பெரியவரின் கெத்துக்கு சின்னவரால் ஈடு கொடுக்க முடியாது போனாலுமே, கடுகு; காரம் என்ற பழமொழியினை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்!

இதோ – நமது முத்து காமிக்ஸின் மைல்கல் இதழான # 500-ஐ தெறிக்க விட இளம் டைகர் ஒரு டபுள் ஆல்ப சாகஸத்தோடு ரெடியாகி வருகிறார்! “ஒரு கொடூரனும் கடற்கன்னியும்” இந்தத் தொடரின் ஆல்பம்ஸ் # 14 & 15. ஒரு சங்கிலியாய் கதை பின்னணியில் தொடர்ந்து கொண்டே போக, ஆங்காங்கே story arcs துவங்கியும், முடிந்திடவும் செய்கின்றன! இந்த arc இரண்டே ஆல்பங்களில் நிறைவுறுவதால் – “crisp ஆன வாசிப்புக்கு நாங்க கேரண்டி” என்று ப்ரீத்தி மிக்ஸி விளம்பர பாணியில் ஞான் குரல் கொடுக்கும்! ஒரு முக்கிய இதழ் என்பதால் ஹார்ட்கவர் தந்திடத் தீர்மானித்துள்ளோம் – விலையில் ரூ.25 மட்டும் ஜாஸ்தி பண்ணிக் கொண்டு!

And முத்து காமிக்சின் இந்த iconic தருணத்துக்கு, இரும்புக்கை மாயாவிக்கு அடுத்தபடியான top நாயகரான டைகரன்றி வேறு யாரையும் புகுத்திட மனசு ஒப்பவில்லை ! ஜெய் வேங்கையார் !!

4. The டின்டினார்:

2025-ன் மேக்ஸி சைஸிலான மெகா இதழ்களாய் வலம் வரக் காத்திருப்பவை நமது சாகஸ வீரர் டின்டினின் இரு ஆல்பங்களே! சமீபமாய் உங்கள் முன்வைத்த பல வினாக்களில் ”ஆண்டில் எத்தனை டின்டின் இதழ்கள் இருந்தால் தேவலாம்?” என்றதொரு கேள்வியுமே இருந்தது நினைவிருக்கலாம்! “இரண்டு... அல்லது மூன்று” என்பதே பெரும்பாலான நண்பர்களின் அபிப்பிராயமாக இருந்தது! Personally எனக்குமே 3 இதழ்கள் உட்புகுத்த ஆசையிருந்தது தான்! ஆனால் அந்த “பட்ஜெட்” எனும் பகாசுரன் – முன்னே நின்று WWF பார்ட்டியாட்டம் முண்டா தட்டும் போது லைட்டாக ஜகா வாங்கவே வேண்டிப் போகிறது! ஆல்பம் ஒன்றின் விலை ரூ.300 என்பதால் மற்ற ஈரோக்கள் ‘உர்ர்ர்‘ரென முறைப்பது போலவே தெரியவும் செய்கிறது! So எண்பதுகளின் சிகப்பு முக்கோண ஸ்லோகனை கொஞ்சம் இரவல் வாங்கிக் கொண்டு – “இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்” என்று தீர்மானித்தேன் – at least 2025-க்காவது! இரண்டுமே ஒன்-ஷாட்ஸ் & இரண்டுமே டின்டின் தொடரில் டாப் இடங்களைப் பிடிப்பவை!

5. The ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர்:

லார்கோ தொடரின் நடுவாக்கில் பிதாமகர் ஷான் வான் ஹாம் நடையைக் கட்டியிருக்க, தொடரைக் கைவிட மனசின்றி, புதுசாயொரு கதாசிரியரை வளைத்துப் பிடித்து ஓவியர் தொடர்நடை போட்டு வருவதை நாமறிவோம்! இதோ – நடப்பாண்டின் முதல் இதழான “இரவின் எல்லையில்” அந்த புதுக் கூட்டணியின் கைவண்ணமே! ஆனால் “இ.எ.” ஆல்பத்துக்கு முன்னதானதொரு டபுள் ஆல்பம் தான் இந்தப் புதுக் கதாசிரியரின் அறிமுக ஆல்பம்! அதன் கதைக்களம் பங்குச்சந்தை விவகாரங்களில் கணிசமாய் ரவுண்டடித்து வரும் ரகமாக இருந்ததால் – கொரோனா லாக்டௌன் முடிந்த தருணத்தில் அதனுள் புகுந்திட எனக்கு ‘தம்‘ இருந்திருக்கவில்லை! இது பற்றி அப்போதே தெரிவிக்கவும் செய்திருந்தேன்! யாரேனும் பங்குச் சந்தை விவகாரங்களில் அனுபவம் கொண்டவராய் இருந்தால் தான் இந்தக் கதைக்கு நியாயம் செய்திட முடியுமென்ற எனது புலம்பலுக்கு செவி மடுத்தவர் நமது வாசக நண்பர் நாகராஜ சேதுபதி தான்! அந்த லாக்டௌன் நாட்களிலேயே இந்த ஆல்பத்தின் முதல் பாகத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து அனுப்பியிருந்தார்!

நடப்பாண்டில் லார்கோ செம சிலாகிப்புகளுக்கு உட்பட்டதைத் தொடர்ந்து இந்த விட்டுப் போன ஆல்பத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதென தீர்மானித்தோம்! நண்பர் நா.சே. இரண்டாவது பாகத்தையும் மொழிபெயர்த்துத் தந்து விட்டால் என் பாடு சுலபமாகிப் போகும்!

And இந்த ஆல்பத்துக்கு “போர் கண்ட சிங்கம்” என்று பெயரிட்டதன் பின்னே குட்டியாய் ஒரு கதையும் கீது! தோள்பட்டை வலிக்கென வைத்தியம் & பயிற்சி எடுக்க சென்னைக்கும், கோவைக்கும் ஷண்டிங் அடித்துக் கொண்டிருந்த நாட்களின் போது தான் 2025-ன் கதைகளுக்கான பெயர் சூட்டல்கள் ஓடிக் கொண்டிருந்தன! So ரோட்டில் ஒரு குல்ஃபி ஐஸ் வண்டி போவதைப் பார்த்தால் கூட – “சாலையில் ஒரு குல்ஃபி!”; “கொடூர வனத்தில் குல்ஃபி!” என்ற ரேஞ்சுக்கு மனசில் மஹாசிந்தனைகள் துளிர் விடுவது வழக்கம். லார்கோ கதைக்கு வேறு ஏதோவொரு பெயரை சூட்டியிருந்தாலும், அதனில் எனக்குப் பெருசாய் திருப்தி இருக்கவில்லை! ஒரு ஞாயிறு காலையில் பயிற்சிக்கென போயிருந்த போது நானும், மேற்பார்வை செய்திடவொரு ட்ரெய்னர் பையனும் மாத்திரமே இருந்தோம். அந்தப் பையனுக்கு மீஜிக் என்றால் ரொம்பவே இஷ்டம்; அங்கிருக்கும் ஸ்பீக்கரோடு தனது செல்லை கனெக்ட் பண்ணி அலறவிடுவான்! மெய்யாலுமே அது இசை மீதான ஆர்வமா? அல்லாங்காட்டி பெண்டைக் கழற்றும் பயிற்சிகளின் போது நான் அலறுவது வெளியே கேட்கப்படாது என்பதற்கான சூட்சமமா? – ஞான் அறியில்லா! But “விக்ரம்” படத்திலிருந்து பாட்டைப் போட்ட நொடியில் “போர் கண்ட சிங்கம்...யார் கண்டு அஞ்சும் ?” என்று அனிருத் இசையில் bass அதிரச் செய்த போது – நம்ம மண்டைக்குள் பல்ப் பளீரிட்டது! “போர் கண்ட சிங்கம்”!!! லார்கோவை விவரிக்க இதை விட வீரியமானதொரு சொற்றொடர் அமையாதென்று தோன்ற – பயிற்சிக்கென கையில் ஏந்திக் கொண்டிருந்த வெயிட்டை பொத்தென்று கீழே போட்டு விட்டு, செல்லை எடுத்து – எனக்கு நானே இந்த டைட்டிலை மெசேஜ் பண்ணிக் கொண்டேன்! அன்றைய பொழுது பயிற்சி செய்யும் போது "ஈஈஈ" என்று நான் இளிச்சிக்கினே இருந்தேன் என்பது கொசுறுச் சேதி !

So நம்ம ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரை 2025-ல் ரசிப்பதற்கான preview இது!

6. The மீசைக்கார சாகஸக்காரர் – வேய்ன் ஷெல்டன்!

2025-ன் அட்டவணையினை கையிலேந்திய நொடியில் எனக்குள்ளே ஒரு குடாக்குத்தனமான கேள்வி ஓடியது! நம்ம நாயகர்களுள் எத்தினி பேருக்கு மீசை உள்ளதென்ற கேள்வியே அது! புரட்டுறேன்... புரட்டுறேன் அத்தனை பக்கங்களையும் புரட்டறேன் – நம்ம அப்பாஸ் மாதிரியே அம்புட்டு நாயகர்களும் மொழு மொழுவென்ற வதனங்களோடே ஜாகஜம் செய்து வருகிறார்கள்! இரண்டாமிடத்திலுள்ள ஹீரோக்களின் நண்பர்களுக்கு மாத்திரமே மீசை + தாடி போன்ற வஸ்துக்கள் உள்ளதைக் கவனிக்க முடிந்தது!

- கார்சனுக்கு மீசை + ஆட்டுத்தாடி!

- ரிப்போர்ட்டர் ஜானிக்கு முகத்திலிருப்பது புன்னகை மாத்திரமே என்றாக – கரடி மாதிரியான கமிஷனர் போர்டனுக்கு மீசை உண்டு!

- டின்டின் அமுல் பேபியென்றிருக்க, கேப்டன் ஹேடாக் மூக்குக்குக் கீழே புதர் ஒன்றை வைத்திருக்கிறார்! And புரபஸர் கேல்குலஸ் கம்பிளிப் பூச்சியினை வைத்திடுகிறார்!

- சிக்பில் & கிட் ஆர்டின் சேட்டுப் பசங்களாட்டம் திரிய, கபாலத்தில் இல்லாத கேசத்தை மூக்குக்குக் கீழே வளர்த்து வைத்திருக்கிறார் ஷெரீப் டாக்புல்!

- லோன்ஸ்டார் டேங்கோ – “மீசையற்றோர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக” இருக்க, அவரோடு ட்ராவல் செய்திடும் ஆர்ஜென்டின் ex-போலீஸ்காரருக்கு மீசை கீது!

So – இவர்களுக்கெல்லாம் விதிவிலக்காய், “ஹீரோவும் நானே; மீசை வளர்த்தவனும் நானே!” என்று உலா வருவோர் இரண்டே நாயகர்கள் தான்!

- Electric ‘80sல் இடம்பிடித்திடும் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்

&

- ரெகுலர் தடத்தில் அங்கமாகிடும் வேய்ன் ஷெல்டன் தான் அந்த இருவர்!

ஷெல்டனின் தொடரானது 2017-ல் – பதிமூன்று ஆல்பங்களோடு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தது! இங்குமே கதாசிரியர் வான் ஹாம் ஒரு ப்ரேக் நாடியிருந்தார்! And இப்போது தொடருக்குத் திரும்பியிருக்கும் வான் ஹாமின் கைவண்ணத்தில் ஆல்பம் # 14 சில மாதங்களுக்கு முன்பாக ப்ரெஞ்சில் வெளிவந்துள்ளது! விற்பனையில் உச்சங்களைப் பார்த்ததில்லை தான் இந்த மீசைக்கார நாயகர் – yet இவரது சாகஸங்கள் எப்போதுமே முதலுக்கு மோசமில்லா ரகங்களே! So புதுசாய் ஒரு ஷெல்டன் ஆல்பம், அதுவும் வான் ஹாமின் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள சேதி கிட்டிய நொடியில் கூடையைப் போட்டுக் கவிழ்த்தே விட்டோம்!

7. The வேதாள மாயாத்மா!

”கலரிங் சரியில்லே... அதை சிதைச்சுப்புட்டே... இதை வதைச்சுப்புட்டே” என்று கலரில் வெளிவந்திடும் நமது வேதாளர் கதைகளுக்கு அர்ச்சனைகள் கிடைத்து வந்தாலும், நம்ம grey market ஆர்வலர்களின் பிழைப்புகள் கனஜோராய் ஓடிவருவது, உட்டாலக்கடி கலர் வேதாளர் கதைகளைக் கொண்டே என்பதை சமீபமாய் தான் தெரிந்து கொண்டேன் !  In fact 7 புக்ஸை தயார் பண்ணி கையிருப்பில் வைத்துக் கொண்டு, உலவும் ஒரு “ஆர்வலரும்” இருப்பது  என்னைத் தவிர்த்த பலரும் அறிந்த சேதி போலும் ! So நமது கலர் இதழ்களை வாரிடுவதில் ஒரு மறைமுகக் காரணம் இருப்பதும் புரிகிறது! 

நமக்கு தற்போது கலரிங் செய்து வரும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட் பிற மொழிகளில் வெளியாகிடும் வேதாளர் கதைகளுக்கும் பணியாற்றுபவரே! இதோ - நமக்காக செய்து வரும் அவரது பணியினிலிருந்து ஒரு சின்ன சாம்பிள் !! So அவரது கைவண்ணத்திலானதொரு color சாகஸம் + ஒரிஜினல் King Features கலரிங்கிலான கதை என்ற கூட்டணியில் ஒரு ஸ்பெஷல் இதழ் 2025-ல் வெளிவரவுள்ளது. இந்த நடப்பாண்டில் இதுவரை வெளியாகியுள்ள 3 வேதாளர் ஆல்பங்களில் இரண்டு காலி! ஒன்றே ஒன்று தான் கையிருப்பில் உள்ளது! So “விற்பனை” என்ற ஆங்கிளில் டாப் category-ல் தொடர்கிறார் "நடமாடும் மாயாத்மா"! 



8. The சிரிப்பு பார்ட்டீஸ்:

இந்த 2025 – கார்ட்டூன்களுக்கு சற்றே வசந்த காலத்தைக் காட்டவிருப்பதாய் யதார்த்த ஜோதிடர்கள் இல்லாமலே சொல்ல எனக்கு சாத்தியமாகிறது! And அதற்கான பிரதான காரணமாய் நான் பார்த்திடுவது சமீபத்தில் உருவான நமது வாட்சப் கம்யூனிட்டியைத் தான்!

போன மாதம் வெளியான Spoon & White பகடியினை கம்யூனிட்டியில் சிதறல்களாய் மக்கள் ரசிக்கவும், அலசவும் தொடங்க, அது நாள் வரை கர்மசிரத்தையாய் பொட்டிகளை உடைத்து, புக்ஸை வெளியே எடுத்து, பீரோவில் அடைத்தபடிக்கே டப்பி சாத்திக் கிளம்பியோருமே, அதனை வாசிக்க முனைந்ததைப் பார்க்க முடிந்தது! And ஹேய்... ரொம்பச் சீக்கிரமே 2024-ன் ஹிட்களுள் ஒன்றாகிப் போனது அந்த கார்ட்டூன் இதழ்!

அதே போல – சரமாரியான வினாக்கள் / polls-களின் மத்தியில் ப்ளூகோட் பட்டாளத்துக்குக் கிட்டியிருந்த வலுவான ஆதரவும் அவர்களை ரெகுலர் அட்டவணைக்குள் அடிவைக்க அனுமதித்துள்ளது!

So காத்திருக்கும் ஆண்டில் 5 கார்ட்டூன் கதைகள் waitinggggg !

- லக்கி லூக் – 2 கதைகள்

- சிக் பில் – 1 ஆல்பம்

- ஸ்பூன் & ஒயிட் – 1 ஆல்பம்

- ப்ளூகோட் – 1 ஆல்பம்

Of course சிக் பில்லுக்கு ஒரு ஸ்லாட் என்பது மாமூலாகிப் போனதொரு சமாச்சாரம்!

But the real surprise packet is ஸ்பூன் & ஒயிட்! கோக்கு மாக்கான இந்தப் போலீஸ்காரர்கள் நாம் உருவகப்படுத்திடும் Racing Horse ஆண்டுக்கு செம பொருத்தமான தேர்வுகளாய் தென்படுவது மட்டுமன்றி, கார்ட்டூன்கள் மீது ஒரு கரிசனப் பார்வை படரவும் காரணமாகிடக் கூடுமென்று தோன்றுகிறது!உள்ளதைச் சொல்வதானால் – ஏதோவொரு வேகத்தில் இந்தத் தொடருக்கான உரிமைகளை வாங்கி விட்டோம் தான்! ஆனால் கதை வந்தான பின்னே, மொழிபெயர்ப்பும் ஆங்கிலத்தில் ரெடியான பிற்பாடு, லைட்டாக உதறத் தான் செய்தது! But இந்தத் தொடரிலுள்ள இனம் காண இயலா X factor நம்மைக் கரைசேர்த்து விட்டது மட்டுமல்லாது, ”2025-ன் அத்தியாவசியங்கள்” லிஸ்டிலும் இடம்பிடிக்கச் செய்துவிட்டது! புனித மனிடோ தொடரும் ஆல்பங்களிலும் கணிசமான சிரிப்புகளை அருள்வாராக!

9. The சமீபத்தைய சக்ஸஸ் ஸ்டோரி – ரூபின்:

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று படித்துள்ளோம் தான்; ஆனால் “கூடி வாசித்தால் காமிக்ஸுக்கு நன்மை” என்பதை போன மாதம் நிரூபித்த நமது கேரட் கேச அம்மணி ரூபினுக்கு நாம் கணிசமான நன்றிக்கடன் பட்டுள்ளோம்! ஒரு வசீகரமான அட்டைப்படம் + வாட்சப் கம்யூனிட்டியில் சாத்தியப்படும் இயல்பான, சுலப அலசல்கள் – ஒரு ஓரத்தில் நின்று வந்ததொரு நாயகியை ஒளிவட்டத்தின் மையத்துக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் கொண்டவை என்பதை உணர்த்திய உங்களுக்குமே ஸ்பெஷல் தேங்க்ஸ் guys! ”2024ன் நிறைவான ஹிட்களுள் ஒன்று” என்ற மகிழ்ச்சியை ஈட்டியது மட்டுமல்லாது. இதற்கு முன்பான 2 ரூபின் சாகஸங்களைத் தேடிப் படிக்கவும் உந்துகோலாக அமைந்திருந்தது “மங்களமாய் மரணம்! பொதுவாகவே ஒரு புது ஹீரோவோ / ஹீரோயினோ களம் காணும் போது வழக்கத்தைக் காட்டிலும் நம்ம அளவீடுகளை உசத்திப் பிடிப்பது நாமே உணராததொரு அனிச்சைச் செயல்! பழக்கப்பட்ட ரிப்போர்ட்டர் ஜானி நன்றாகவே சொதப்பினாலும் “அட... அடுத்த புக்கிலே பார்த்துப்பார்!” என்று சந்தேகத்தின் பலனை பெரும்தன்மையாய் நாயகருக்குத் தந்திடுவோம்! அதே சமயம் ஒரு புதுவரவான Lady S லைட்டாக தடம் மாறினாலும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி – 'குருத' மேலே ஏற்றிக் கிளப்பி விட்டுவிடுகிறோம்!

So அந்தக் கண்ணோட்டத்தில் டிடெக்டிவ் ரூபினும் அதே போலான இடரை சந்தித்திருந்தார் தான்! முந்தைய 2 கதைகளை அந்நேரமே இதே போலொரு க்ரூப் ஸ்டடியில் (சு)வாசித்திருந்தால் – by now ரூபின் மன்றங்கள் திறந்திருப்போம், மெனுக்களில் இட்லிகளுக்கு "ரூபின் இட்லி" என்று பெயரிட்டிருப்போம் ! ஜம்பிங் ‘தல‘ தனது ட்ரேட்மார்க் பறக்கும் முத்தங்களோடு, ரூபின் ரசிகர்மன்றக் கொ.ப.செ. பொறுப்பினை ஏற்றிருந்திருப்பார்! அந்த மட்டுக்கு third time lucky என்று ரூபின் கரை சேர்ந்து விட்டது மட்டுமன்றி, தொடரும் ஆண்டுகளுக்கான முக்கியஸ்தர்கள் லிஸ்டிலும் இணைந்து கொண்டு விட்டார்!

ஜன்னலோரமாய் மரணம்” – yet another racy க்ரைம் த்ரில்லர்! And உங்களின் வல்லிய சிபாரிசுகள் இல்லாது போயிருந்தால் – இந்த விளிம்புநிலை நாயகி, பரண் பக்கமாய் ப்ளாட் வாங்கியிருக்கக் கூடும்! So thanks folks!

10. The புன்னகைப் பார்ட்டி: ரிப்போர்ட்டர் ஜானி:

இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் அக்டோபரின் இதழ்கள் உங்கள் கைகளை எட்டியிராது! So ஜானியின் “நள்ளிரவின் நாயகன்” ஆல்பம் மீது நீங்களொரு தீர்ப்புச் சொல்லி, அதற்கேற்ப நான் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு லேது! ஆனால் – அச்சாகி வந்த முதல் பிரதியைப் பார்த்த கணத்திலேயே தீர்மானித்தேன் – இந்த மனுஷனின்றி 2025-ன் அட்டவணை சாத்தியமே ஆகிடாதென்று! Simply becos – ஒவ்வொரு பக்கமும் லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங்கில் மிளிர்வது இந்த ஆல்பத்தை முற்றிலுமாய் வேறொரு லெவலுக்கு உசத்தியிருப்பது கண்கூடு! கதை எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்! ராகி இடியாப்பமோ, அரிசி மாவு இடியாப்பமோ, மனுஷன் ஆசை தீர சுட்டுக் கொள்ளட்டும் – ஆனால் அந்தச் சித்தரங்களும், அந்தக் கலரிங்கும் ஒரு கோடி பெறும் என்று தீர்மானித்தேன்!

உங்களிடம் வினாவை முன்வைத்து, ரிப்போர்ட்டர் ஜானி 2.0 வார்ப்பின் லேட்டஸ்ட் ஆல்பத்தைக் களமிறக்க சம்மதமுமே வாங்கியிருந்தேன் தான்! ஆனால் இந்த க்ளாஸிக் ஜானியில் சித்திர ஸ்டைல் + கலரிங் வசீகரத்தை 2.0 தொடரால் கனவிலும் எட்ட முடியாதென்பது புரிவதால் – க்ளாஸிக் ஜானியே மீண்டும் களம் காண்கிறார்! “இதுக்கு எதுக்குலே எங்ககிட்டே ரோசனை கேட்டே?” என்று குமட்டில் குத்த வேணாமே ப்ளீஸ் – இது நமது வசீகரனின் லேட்டஸ்ட் புன்னகையை க்ளாஸிக் பாணியில் தரிசித்து, மயங்கி எடுத்த முடிவு மட்டுமே!

11. The போனெலி பார்ட்டீஸ்:

‘தல‘ ஒன்பது ஸ்லாட்களை ஜோப்பியில் வைத்துக் கொண்டு நகன்ற பிற்பாடு போனெலியின் இதர ஜாம்பவான்களுக்கான இடப் பங்கீடு துவங்கியது!

- ஒற்றை ஸ்லாட்டுக்கு என்றைக்கும் குந்தகமில்லை என்பதே மர்ம மனிதன் மார்ட்டின் மீதான காலம் காலமான தீர்ப்பு! In fact இவர் சர்வ நிச்சயமாய் அதை விடவும் கூடுதல் worth தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை! ஆனால் ஸ்லாட் பற்றாக்குறை & பட்ஜெட் தொக்கடிகள் இவரை சற்றே மட்டுப்படுத்திடுவது தான் யதார்த்தம்! முழு வண்ணத்தில் பிரபல பெர்முடா முக்கோணப் பகுதிக்கு பயணமாகிறார் மார்ட்டின்! ஒரு தெறி – loading!

- மினி சாகஸங்களில் கவனத்தை ஈர்த்த டைலன் டாக் அதற்கான பரிசாக ஒரு முழுநீள சாகஸ ஸ்லாட்டை ஈட்டியுள்ளார் இம்முறை! And இவரது கதைகள் ஹாரர் தேடிடும் புத்தகவிழா வாடிக்கையாளர்களுக்கு உதவிடவும் கூடும் என்பதால் “சட்டைப்பையில் சாவு” எகிறியடிக்கத் தயாராகி வருகிறது! Thriller in black & white !!

- சத்தமின்றி சாதித்து வரும் ஏஜெண்ட் ராபின் முதிர்ந்த 2.0 அவதாரில் அழகான பல கேஸ் ஃபைல்களை நடப்பாண்டில் நமக்குக் காட்டி வருகிறார்! Maybe இந்த mature பாணி கூடுதலாய் நம்மை ஈர்க்கிறதோ – என்னவோ; they have all been well received. காத்திருக்கும் 2025-க்கு ராபினின் டபுள் ஆல்பம் – நெடும் சாகஸத்தோடு வெயிட்டிங்!

- And சமீபமாய் ஆஜராகி, சரசரவென மேலே ஏறும் லாவகத்தைக் கற்று வைத்துள்ள மிஸ்டர் நோவுமே ஒரு டபுள் ஆல்பத்தோடு வெயிட்டிங்! இது லேட்டஸ்ட் கதைவரிசையின் ஒரு படைப்பு என்பதால் சித்திரங்கள் ஒரு மிடறு தூக்கலாய் இருக்கப் போகின்றன!

12. The ஜம்பிங் ‘தல‘:

ஒற்றை முழுநீள b&w சாகஸத்திலேயே தன் மீதான விமர்சனங்கள் சகலத்தையும் தூக்கிக் கடாசிவிட்டுத் துள்ளிக் குதிக்கத் தயாராகிவிட்டிருக்கும் ஸாகோருக்கு இம்முறை இன்னமும் கூடுதல் பக்க நீளம் கொண்டதொரு த்ரில்லர் - ("சிரிக்கும் விசித்திரம்")காத்துள்ளது! இதுவுமே “வஞ்சத்திற்கொரு வரலாறு” இதழைப் போலவே பரபரக்கும் பட்டாசு!

And இளம் டெக்ஸுடன் கரம் கோர்க்கும் வாய்ப்புமே கோடாரி மாயாத்மாவுக்கு உண்டு!

அது மட்டுமன்றி, ஆன்லைன் மேளாவின் தருணத்திலோ, ஏதேனுமொரு புத்தகவிழாச் சமயத்திலோ ஸாகோரின் கலர் சாகஸங்களும் களமிறங்கக் காத்துள்ளன! So 2025 ஸாகோர் பேரவைக்கு செம பிஸியானதொரு ஆண்டாக அமையுமென்று நம்பலாம்! ரெடி தானே செயலாளரே?

13. The புதியவர்கள்:

ஆண்டுதோறும் அட்டவணையில் புதுவரவுகள் இருந்தே தீரணும் என்பது – இந்த வருத்தப்படாத வாலிபனின் பளிங்குக் கபாலத்திற்குள் விடாது குடியிருக்கும் ஒரு சிந்தனை! அந்த நமைச்சல் – லார்கோ போன்ற மாஸ் ஹீரோக்களையும் நம் கண்களில் காட்டியுள்ளது; ஜடாமுடியார் போன்ற தத்தா-புத்தாக்களையும் காட்டியுள்ளது தான்! ஒரு பொழுதுபோகா மழை நாளில், 2012 onwards புது வரவுகள் எத்தினி பேர்? and அவர்களுள் தேறியவர்களின் எண்ணிக்கை என்ன? என்பதை அலசிப் பார்க்க ஆசை!

“புதியன புகுதல்” என்ற அடையாளத்தோடு 2025-க்குள் புகுந்திடவிருக்கும் முதல் நாயகர் ஒரு கௌபாய் ஹீரோவே! மொத்தமே 4 ஆல்பங்கள் தான் இந்த மினி தொடரில்! But கதைக்களமும் சரி, சித்திர பாணியும் சரி, கலரிங்கும் சரி, ஏகத்துக்கு வசீகரிக்கின்றன! And இது போன்ற மினி தொடர்கள் ஒரு விதத்தில் நமக்கும் வசதியே! இரண்டோ – மூன்றோ ஆண்டுகளில் அதனைப் பூர்த்தி செய்திட சாத்தியப்படும்! Of course படைப்பாளிகள் தொடரை நீட்டிக்கத் தீர்மானித்தால் வரவேற்பைப் பொறுத்து நாமும் தீர்மானித்துக் கொள்ளலாம்! இந்த நொடியில் எனது gut feel சொல்லுவது – "குருதியில் பூத்த குறிஞ்சி மலர்" நிச்சயம் நமக்கு ரசிக்கும் என்பதையே! 

புதுசு # 2 – சற்றே வித்தியாசமான வரவு!! மாங்கா ட்ரை பண்ணலியா? மாம்பழம் முயற்சிக்கலியா? என்று அவ்வப்போது சில குரல்கள் நம்மிடையே ஒலிப்பதை நாமறிவோம்! But பல்வேறு காரணங்களின் பொருட்டு அவற்றுள் கால் பதிக்கும் தைரியமோ, ஆற்றலோ இன்று வரையில் கிட்டியபாடில்லை! But மாங்காவுக்காக மாத்திரமே ஜப்பான் போக அவசியமில்லை; அவர்களது ட்ரேட்மார்க் சாமுராய் கதைகள் மங்கா நீளங்களில் அல்லாதுமே சாத்தியமே என்பதை சமீபத்தில் காண நேரிட்டது! இதோ – நம்ம ஜீனியர் எடிட்டரின் தேடலில் கிட்டியுள்ள b&w சித்திர அதகளம் தான் “வதம் செய்வோம் வேங்கைகளே”! தெறிக்க விடும் இந்த ஆக்ஷன் த்ரில்லருக்கு நம் மத்தியில் கிட்டிடும் வரவேற்றைப் பொறுத்து – மேற்கொண்டு தீர்மானிக்கலாமென்று பட்டது! What say folks?

புதுசு # 3 – இன்னுமொரு போனெலி நாயகர்! ஸாகுவாரோ என்பது இவரது பெயர்! நவஹோ செவ்விந்தியர்... அமெரிக்க மிலிட்டரியில் இணைந்து வியட்நாம் யுத்தத்தில் பங்கேற்றவர்... தற்போது அமெரிக்க உளவுத்துறையின் எல்லையோர ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருபவர்! So குதிரைகளில் சவாரி செய்யும் புராதன நவஹோவாக அல்லாது; புது யுகத்து ஆக்ஷன் நாயகராய் பட்டையைக் கிளப்பிடுகிறார் மனுஷன்! Black & White-ல் அந்தப் பரபரப்பான crisp readingக்கு இவர் அட்டகாசமான தேர்வாக அமைவார் என்று தோன்றுகிறது! Fingers crossed!

14. The சிங்கிள் ஆல்பம் ரெகுலர்ஸ்:

- தோர்கல்!

சிங்கிள் ஆல்பத்தோடு ஒரு கதைச்சுற்று நிறைவு காண்பது மாத்திரமன்றி, இங்குமே ஒரு ஜாம்பவானின் விடை கொடுக்கும் படலம் அரங்கேறிடவுள்ளது! Yes – தோர்கல் தொடருக்குப் பிதாமகன் ஷான் வான்ஹாம் எழுதிய கடைசிக் கதை “தந்தைக்கொரு தியாகம்” தான்!

- லோன்ஸ்டார் டேங்கோ!

2022-ல் ஆல்ஃபா; சிஸ்கோ & டேங்கோ – என ஒரே ஆல்பத்தில் மூவர் அறிமுகமாகியிருக்க, டேங்கோ மட்டுமே நமது அளவீடுகளில் சாத்து வாங்காது தப்பி, நம் மத்தியில் ரெகுலராகி விட்டுள்ளார். ஒவ்வொரு ஆல்பமும் அரங்கேறுவது ஒரு புதுத் தென்னமெரிக்க நாட்டில் எனும் போது, மிரட்டலான அந்தச் சித்திரங்களில் இயற்கை எழில்களை ரசிப்பது ரொம்பவே வித்தியாசமான அனுபவமாகிடுகிறது! இதோ – அந்தத் தொடரின் ஐந்தாவது ஆல்பம் – 2025ன் அட்டவணையினை கலர்புல்லாக்கக் காத்துள்ளது!

- XIII மர்மம்:

நமது மறதி நாயகரின் ரெகுலர் தொடரில் தற்சமயத்துக்குப் புதுக் கதைகள் இல்லை என்பதால் – அந்த spin-off வரிசைக்குள் குதித்திட வேண்டும் – 2025-க்கு! And இந்த தபா – சற்றே குஜால்லான பெண்மணி தான் கதையின் நாயகி!

பெலிசிட்டி ப்ரவுண்‘... XIII-ன் யூத்தான சின்னம்மா! தொடரின் இரண்டாவது ஆல்பத்திலேயே அறிமுகமானவர்! So சீனியாரிட்டிப்படி இவருக்கு இப்போது வாய்ப்பு அமைந்துள்ளது! And இதற்கான கதாசிரியர் – டேங்கோ தொடரின் கதாசிரியரான Matz தான்!

XIII எனும் போதே காலம் சென்ற நமது நண்பர் பழனியை நினைவு கூர்ந்திடாது இருக்க இயலாது ; and வழக்கம் போலவே இந்த இதழுமே நண்பரின் நினைவுகூர்தல் படலத்தின் அங்கமாகிடும்!

15. The சந்தா Summary:

- மொத்தம் 32 இதழ்கள்!!

- மொத்தம் 24 நாயகர்கள்!!

- மொத்தம் 19 இதழ்கள் – கலரில்!!

- மொத்தம் 13 இதழ்கள் – b&w-ல்!!

- மொத்தம் 3892 பக்கங்கள்!!

வருஷத்துக்கு எட்டாயிரம், பத்தாயிரம் பக்கங்களென்று போட்டுத் தாக்கியதெல்லாம் இந்த நொடியில் ஒரு தொலைதூர நினைவாய் மாத்திரமே நிழலாடுகிறது! இந்த 3892 பக்கங்களை வாசிக்கவே நம்மில் கணிசமானோருக்கு பிரயத்தனமாய் இருந்திடுமெனும் போது – ரெகுலர் தடத்தில் இதற்கும் மேலாய் சுமையை ஏற்றிக் கொண்டே செல்வது லாஜிக்கலாகத் தென்படவில்லை! நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 10 பக்கங்களாவது வாசிக்க நேரம் ஒதுக்கிடுங்களேன் மக்களே ? ப்ளீஸ் ?

- And போன வருஷத்தைப் போலவே சந்தாத் தொகை ரூ.5750 என்று நிர்ணயித்துள்ளோம் – தமிழகத்துக்கு!

- And இந்த முறை – “முட்டை பரோட்டா சந்தா”; ”முட்டைத் தோசை சந்தா”; ”முட்டை பொடிமாஸ் சந்தா” என்றெல்லாம் குழப்பித் திரியப் போவதில்லை! மாறாக

- ரெகுலர் சந்தா (32 இதழ்கள்)

- Lite சந்தா (18 இதழ்கள்)

என இரண்டே பிரிவுகள் மட்டுமே இருந்திடப் போகின்றன!

- ரெகுலர் தடத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 32 இதழ்ககளும் கொண்டது ஆல்-இன்-ஆல் ரெகுலர் சந்தா ! 

-“எனக்கு ஈயாள் வேணாம் ; ஆ சேட்டன் சுகப்படில்லா; அம்மாச்சி மேல் பிரேமமில்லா” என்று ஒதுக்கிடக்கூடிய நண்பர்களுக்காக குறிப்பிட்ட 18 இதழ்களை மட்டும் தேர்வு செய்து, Lite சந்தாவாக்கியுள்ளோம்... அந்தப் 18 இதழ்களின் லிஸ்ட் இதோ உள்ளது.

- PLEASE NOTE : “எனக்கு இந்த 18 வேணாம்; வேறொரு 18 தான் வேணும்” - என்று குரல் கொடுக்கத் துடிப்போரா நீங்கள்? ஷமிக்கணும் சேட்டா - அதற்கு வாய்ப்பில்லை! It's either this 18 or all or nothing at all ! அதனால் நமது அலுவலகப் பெண்களிடம் இது குறித்து லடாய்கள் வேணாமே ப்ளீஸ்?

- And yes - நீங்கள் தேர்வு செய்திடும் சந்தா; பிரிவு எதுவாகயிருந்தாலும் - அவசியமெனில் சந்தாத் தொகையை 2 தவணைகளில் செலுத்தும் வாய்ப்பும் உண்டு!

So இது தான் 2025-ன் பயணப் பாதை – நமது ரெகுலர் தடத்தில்! இவை தவிர்த்து there will be more books for sure.... ஆனால் எவை? எப்போது? என்பதை தருணத்திற்கேற்ப தீர்மானிப்போமே?!

And இனி தி கிரேட் கிரிகாலன் ஷோவின் “கேள்வியும் ஞானே... பதிலும் ஞானே” பகுதி ஆரம்பிக்கப் போகுது! அல்லாரும் ஒருவாட்டி ஜோரா கைதட்டுங்க ஷாமியோவ்வ்!!

கேள்வி # 1:

- SODA

- சிஸ்கோ

- ஆல்ஃபா

- மேக் & ஜாக்

இந்தத் தலக்கட்டுகள்ளாம் அம்பேல் தானாடா தம்பி? மொத்தமாக ஓரம் கட்டியாச்சா?

இல்லீங்கண்ணா... அடுத்த வருஷம் முதலா ஒரு வித சுழற்சி முறையிலே விடுபடும் நாயகப் பெருமக்கள் தலையைக் காட்டச் செய்வதாக உள்ளோம்! இவர்கௌல்லாம் just like that – உதறிப் போடக்கூடியோர் அல்ல! So இந்த வருஷம் ப்ளூகோட்ஸா? அடுத்த வருஷம் மேக் & ஜாக் – என்கிற மாதிரி இவர்களை உள்ளே புகுத்தும் வழிகளைக் கண்டுபிடித்து விடுவோம்!

கேள்வி # 2 :

கோள்கள் ஒன்பது... சரி... ரைட்டு! ஆனா ‘தல‘ புக்ஸும் ஒன்பதே ஒன்பது தானா? இன்னா மேன் ப்ளான்னிங் இது?

ஏற்கனவே பதிவிலேயே இதை address செய்திருந்தேன் தானல்லோ? பட்ஜெட் ஒரு முக்கிய காரணம்...! அப்பாலிக்கா தலைமகனாகவே இருந்தாலும் அந்த கெத்துக்கு பங்கம் வந்திடலாகாது என்ற ‘டர்ர்ர்‘ இன்னொரு பக்கம்! And நமக்குத்தான் ஏகப்பட்ட சைக்கிள் கேப்கள் உள்ளனவே – ஏதாவது சந்து பொந்துகளுள் புகுந்து இன்னும் ஓரிரு ‘தல‘ சாகஸங்களை நுழைத்து விடமாட்டோமா – என்ன? Rest assured Tex பேரவையினரே !!

So ""மனசு ஒடிஞ்சு போயிட்டேன் ; நீ துரோகம் பண்ணிப்புட்டே ; சாய்ச்சுப்புட்டே ; சிதைச்சுப்புட்டே" என்ற ரீதியில் இதன் பொருட்டு 'தம்' கட்ட வேணாமே - ப்ளீஸ் ? 

கேள்வி # 3:

சந்தா புக்ஸ் எண்ணிக்கை கொஞ்சம் குறைச்சலா இருக்கா மேரி தோணுதே மக்கா? ஓ.கே. தானா?

ரெகுலர் சந்தாத் தடத்தை இப்போது நானோ – நீங்களோ நிர்ணயம் செய்வதில்லீங்க அண்ணாச்சி! ரூ.5750 என்ற நெம்பர் தான் தீர்மானிக்குது !முதல்ல பிள்ளையார் சுழிக்குக் கிட்டக்க ரூ.5750 என்று எழுதிக்கினு தான் பாக்கி வேலைகளை ஆரம்பிக்கவே செய்றோம்! அப்படீங்கிறப்போ புக் எண்ணிக்கையைக் கூடுதல் பண்ணனும்னாக்கா – ஸ்பெஷல் இதழ்களின் விலைகளை கம்மி பண்ணி, அங்கனக்குள்ள கூடுதலா ஒன்னோ, ரெண்டோ பொஸ்தவங்களை நுழைக்கலாம்! உதாரணத்துக்கு டெக்ஸ் தீபாவளி மலரை ரூ.300-ன்னு பிளான் பண்ணினாக்கா – 2 x ரூ.100 புக்ஸ் கூடுதலாய் அந்தக் காசுக்குப் புகுத்த இயலும்! ஆனால் horses for the courses என்று – தருணங்களின் தன்மைகளுக்கேற்பவே ஸ்பெஷல்களின் விலைகளை திட்டமிட்டிருக்கோம்! So இந்த பட்ஜெட் & 32 books என்ற இந்த புத்தக எண்ணிக்கை மதி என்றே தோணுது!

கேள்வி # 4:

தாத்தாஸ் எங்கேடா படுபாவி? காணாமப் போயிட்டாங்களே?

Rest assured folks – ஒரு சிவகாசித் தாத்தா என்னிக்குமே ஒரு தாத்தாஸ் கும்பலுக்கு துரோகம் பண்ண மாட்டான்! ரெகுலர் சந்தாவில் வம்படியாய் பெருசுகளை நான் புகுத்தி விட்டு என்ன தான் மழைக்காலத் தவளை போல தொண்டையை பயன்படுத்தினாலும், ஒரு சிறு அணியினருக்கு இவர்கள் ரசிக்க மாட்டேன்கிறார்கள்! So மருவாதியாய் தாத்தாஸை மே மாத ஆன்லைன் மேளாவுக்கு அனுப்பிடத் தீர்மானித்துள்ளேன்! தாத்தாஸ் தொடரை ‘அம்போ‘வென நடுவழியே கழற்றி விடும் உத்தேசம் நஹி! இது இந்தத் தாத்தாவோட ப்ராமிஸ்!

கேள்வி # 5:

லவ்ஸ் கதை வேணுமா? யுத்தக் கதை வேணாமா? முத்தக் கதை ரசிக்காதா? என்றெல்லாம் கேள்விங்க கேட்டுப்புட்டு அதே புளியோதரை & தயிர் சாதத்தோட கடை விரிச்சிருக்கியே... எங்களைப் பார்த்தா எப்படி கீது?

மன்னிச்சூண்ணா... அந்த வோட்டெடுப்பிலேயே பாதிக்குப் பாதி எதிர்ப்புகள் தலைதூக்கியதை அனைவருமே பார்த்தோம் தானே?! So அவற்றை ஒரு கமர்ஷியலான சந்தாவுக்குள் புகுத்தி விட்டு, தோற்க நாமே களம் ஏற்படுத்தித் தருவதைக் காட்டிலும், கட்டாயங்களற்ற ஆன்லைன் மேளா தருணத்திலோ, புத்தகவிழா தருணத்திலோ களமிறக்கினால் அவை வெற்றி காணும் வாய்ப்புகள் கணிசம் என்று நினைத்தேன்! 

க்ரிக்கெட்டில் India-A டீம் என்று முன்பெல்லாம் அயல்நாடுகளுக்கு டூர் போய் அந்தந்த நாட்டின் A டீம்களோடு ஆடி வருவார்கள்! அதில் சிறப்பாய் ஆடுவோருக்கு இந்தியாவின் மெயின் டீமில் இடம் கிடைப்பதுண்டு! அதே பாணியில் இந்த ரெகுலர் தடம் அல்லாத தருணங்கள் – நமது பரீட்சார்த்த கதைக்களங்களுக்கான சந்தர்ப்பங்களாகிடும் - இனி வரும் காலங்களில்! So புது வரவுகளுக்கு இனிமேல் வெற்றிக்கான களங்களையே கண்ணில் காட்டுவோமே!

கேள்வி # 6:

'இளம் ‘தல‘க்கு 5 அத்தியாயங்கள்! எங்க இளம் தளபதிக்கு ரெண்டே ரெண்டா? உன்னை நாடு கடத்தினா என்ன??

கதைகளின் arcs தான் தீர்மானங்களை என் சார்பில் எடுத்திடுகின்றன எசமான்! இளம் டெக்ஸின் குறிப்பிட்ட arc 320 பக்க நீளம்... so அதை கொத்துக்கறி போட்டுப்புட்டு, மறுக்கா நீங்க முதுகிலே மத்தளம் கொட்ட வேணாமே என்று நினைத்தேன்! அதே நேரம் 'இலன் தளபதி' story arc இரண்டே ஆல்பங்களே !! மற்றபடிக்கு ‘தல‘ கூடவோ; ‘தளபதி‘ கூடவோ நமக்கு வாய்க்கா வரப்புத் தகராறு ஏதும் லேது சேட்டா!

கேள்வி # 7:

- விஷம்

- பயணம்

இரண்டுமே வாக்கெடுப்பில் செம கூடுதல் ஓட்டுகள் பெற்ற ஆல்பங்கள்! இவற்றின் தலையெழுத்துகள் என்னடாப்பா?

- விஷம் – 5 ஆல்பங்கள் கொண்ட நெடும் சாகஸம்! ஒவ்வொரு ஆல்பத்திலும் குறிப்பிட்டதொரு இலட்சியத்தோடு – ஒவ்வொரு திக்கில் புறப்படுகிறாள் நாயகி! So நெடும் கதையாக இருந்தால் கூட ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு episode போலான நிறைவைத் தந்திடும்! ஆண்டின் நடுவாக்கில் – இதற்கொரு முன்பதிவினை அறிவித்து விட்டு, மாதமொரு ஆல்பம் வீதம், அடுத்தடுத்த 5 மாதங்களில் இதனை நிறைவு செய்திடத் திட்டம்! இங்கே 5 ஒரிஜினல் அட்டைப்படங்களும் சாத்தியமாகிடும் & இந்தப் புது அனுபவம் எவ்விதமுள்ளதென்றும் பார்த்திடலாம்! ப்ரான்சில் இந்தத் தொடர் முடிய 5 ஆண்டுகளுக்கு வாசகர்கள் காத்திருந்த போது – நமக்கு 5 மாதங்கள் ஒரு பெரும் இடராகிடக் கூடாது என்பதே எனது நம்பிக்கை!

Of course – “மணந்தால் மகாதேவிக்கு ஒன்னுவிட்ட சித்தி.... படிச்சா ஒரே குண்டு புக்” என்ற சவுண்டுகள் எழும் / எழுந்துள்ளன என்பது நிச்சயம்! ஆனால் கடைசி 2 ஆண்டுகளின் நடப்பைப் பார்க்கும் போது, ஒரு புத்தகத்தின் பருமன் இன்றைக்கெல்லாம் எதிர்மறையான ரியாக்ஷன்களை வாசிப்புக்கு ஈட்டித் தருகின்றனவோ - என்ற சந்தேகம் எழுகிறது ! ஒரு 48 or 52 பக்க ரெகுலர் ஆல்பத்தையாவது அந்த மாதத்திலேயே வாசித்திடும் சாத்தியங்கள் கணிசமாய் உண்டு போலும் ; but ஒரு 250 பக்க குண்டு புக்கைக் கையிலே ஏந்தும் நொடியில் “ஆஆ.... நெருப்புடோவ்!” என்று தலைவர் கவுண்டரைப் போலவே நிறையப் பேர் ஜெர்க் அடித்து, ரிவர்ஸ் கியர் போட்டு வருவது யதார்த்தம்! So ‘ஆந்தைக்கண்ணழகா.....இங்கே பூசு... ஆ... அங்கே பூசு‘ என்று சந்தனம் தடவும் தருணத்தில் நம் மத்தியில் கணிசமானோர் பலமாய் பில்டப்கள் தந்தாலும் – வாசிப்பை ‘ஏக் தம்மில்‘ செய்திடும் mindset குறைந்து வருவது obvious! So இந்த ஒற்றை முறை இந்த தனித்தனி அத்தியாய பாணிக்கு பழகிக் கொண்டோமெனில் இது போன்ற நெடும் கதைகளை தைரியமாய்க் கையாளலாம் - in the future !

- பயணம் – ஒரே முழுநீள கி.நா. என்பதால் அதனைப் பிரித்துப் போட இயலாது! So அது ஆன்லைன் மேளா or புத்தக விழா தருணத்தில் சர்வ நிச்சயமாய் ஆஜராகிடும்! கதையெல்லாம் வந்தாச்சு & மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி! மரண மாஸ் இதழ் இது !!

கேள்வி # 8:

இன்னா மேன் சந்தா Lite??

வேறொண்ணுமில்லீங்கோ; குறிப்பிட்ட, பிரதான நாயகர்களின் புக்ஸ் மட்டுமே எனக்குப் போதும் என்று கருதிடும் சில நண்பர்கள் சந்தா செலுத்தத் தயங்குவது open secret! So அவர்களை சுவாரஸ்யப்படுத்த நம்மாலான சிறு முயற்சி இது! லிஸ்ட்டிலுள்ள 18 பிஸ்தா இதழ்களோடு மட்டுமான சந்தா !

கேள்வி # 9:

ரெகுலர் சந்தாவில் மொத்தமே 32 புக்ஸ் தான்! இது மாசத்துக்கு 3 பொஸ்தவங்களுக்குக் கூட தேறாதேடாப்பா?

No worries சார்வாள்ஸ் & லேடிவாள்ஸ்! ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள Electric ‘80s தடத்தில் ஸ்பைடர் & ஆர்ச்சி 2024-ல் களம் கண்டு முடித்து விடுவார்கள் எனும் போது – அதனில் 4 பெரிய புக்ஸ் பாக்கியிருக்கும்! அந்த 4 + இப்போது அறிவித்துள்ள இந்த ரெகுலர் தடத்தில் 32 =  மொத்தம் 36 புக்ஸ் எனும் போது எல்லா மாதங்களும் தவறாது 3 புத்தகங்கள் வீதம் கூரியர் டப்பிகளில் இருந்திடப் போவது உறுதி!

அட... மூன்று கூட பத்தாதேப்பா!!” என்போருக்காகவே ஸ்பெஷல் தருணங்களில் – ஸ்பெஷல் தடங்கள் வெயிட்டிங்! ஒட்டுமொத்தமாய் இந்தப் பந்தயக் குதிரை ஆண்டின் லட்சியமே – வாசிக்கப்படா இதழ்களின் எண்ணிக்கை 2025-ல் மிகுந்திடாது  பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்! Wish us luck ப்ளீஸ்!

கேள்வி #10:

- பௌன்சர் எங்கே?

- அண்டர்டேக்கர்?

- ஸ்டெர்ன்??

-ப்ருனோ பிரேசில் ??

- பௌன்சர் 2026-ல் folks!

- அண்டர்டேக்கரின் புது ஆல்பத்துக்கான க்ளைமேக்ஸ் ஆல்பம் இன்னமும் தயாராகிடவில்லை! So அதுவுமே 2026-க்குத் தான்!

- ஸ்டெர்னுக்கு சின்னதொரு ப்ரேக்! அவருமே 2026-ல் !

ப்ருனோ பிரேசில் இந்த அக்டோபர் வெளியீடு தான் எனும் போது அதற்கான reactions பார்த்து, அடுத்த அட்டவணைக்குள் நுழைப்பதா ? நஹியா ? என்ற தீர்மானம் எடுக்க அவகாசமில்லை ! அது செம ஹிட் அடித்திருக்கும் சமாச்சாரம் இப்போது தானே தெரிய வந்துள்ளது ?! And இந்தத் தொடரில் எஞ்சியுள்ள இன்னொரு கதையோ டபுள் ஆல்பம். So அது 2026-க்கு வந்திடும் !

கேள்வி # 11:

“ஆட்டைத் தூக்கி குட்டி கூடப் போட்டுப்புட்டே... குட்டியையும் ஆட்டுப் பட்டியிலேயே போட்டுப்புட்டே!! V காமிக்ஸ் சந்தான்னு தனியா இல்லாமே இதிலேயே சேர்ந்து கிடக்குதே? அட – என்றா விளக்கம்?”

அது வந்துங்கண்ணா... கதைத் தேர்வுகள் இவை தான்; வாசிக்கப் போகும் target audience இவர்கள் தான் – என்பதெல்லாம் இப்போது ஸ்பஷ்டமாய் தெளிவான பிற்பாடு ஆடோ, குட்டியோ – மேய்ச்சலுக்கு ஒண்ணாகவே போனால் தப்பில்லேன்னு பட்டதுங்கண்ணா! தவிர V காமிக்ஸ் அரையாண்டுச் சந்தாவென்று ஜுன் மாசம் இன்னொருக்கா நினைவூட்டும் சமயம் சில நண்பர்கள் கடுப்பாகிப் போய் விடுகிறார்கள்! So ஒரே சந்தா; ஒரேவாட்டி திட்டமிடல்!

கேள்வி # 12:

"இது முழுக்க முழுக்கவே ஒரு கமர்ஷியல் சந்தா தானாக்கும் ? - இஸ்பெஷலா ஐட்டங்கள் கிடையாதாக்கும் ?" என்ற மைண்ட்வாய்ஸா ? 

Yes of course, இன்றைக்கு நம்மாட்களை ஒருசேர வாசிப்பினில் இணைத்திட வேண்டுமெனில், பெரும்பான்மையான புக்ஸ், பெரும்பான்மைக்குப் பிடித்தவைகளாகவே இருத்தல் அவசியமாகிறது ! So பரீட்சார்த்த முயற்சிகள் ; கோக்குமாக்கான தடாலடிகள் ; கி,நா.ஸ் இத்யாதிகளெல்லாமே ரெகுலர் தடத்தில் வேணாமே என்று எண்ணினேன் ! ரெகுலர் தடம் தவிர்த்து குறைந்த பட்சமாக நம்மிடம் இன்னொரு 10 புக்ஸுக்காவது ஸ்லாட்ஸ் சாத்தியமே எனும் போது, அவற்றையெல்லாம் அங்கு ஷிப்ட் செய்வதே மதி என்று பட்டது ! So இது உங்களைக் கையைப் பிடித்து இழுத்து வாசிக்க இட்டாருமொரு முயற்சியே பிரதானமாய் !! All the fancy stuff comes after that !!

கேள்வி # 13:

ஷப்பாாாா.... crisp reading; கத்திரிக்காய் reading என்று பில்டப் தந்துப்புட்டு, இந்தப் பதிவை இம்மாம் நீளத்துக்குப் போட்டு உசிரை வாங்கறியே? நியாயமாரே?

இல்லீங்க பாஸு... நமக்கு இந்த அட்டவணை நேரங்களிலே “வாலோநீளோமேனியா” என்று ஒரு தாக்கம் ஏற்பட்டுப்புடும்! பேனாவைத் தூக்கி வீட்டுக்கான பலசரக்கு சிட்டையை எழுதினாக் கூட அது கண்ணால வூட்டு கொள்முதல் லிஸ்ட் மாதிரித் தான் நீண்டுவிடும்! அப்படியிருக்க ஒரு முழு ஆண்டுக்கான திட்டமிடல்கள் பற்றி ;  அவற்றின் பின்னணிச் சிந்தைகள் பற்றி ; ஏன் இருக்கு? ஏன் இல்லை? என்பதெல்லாம் பற்றி எழுத ஆரம்பிக்கும் போது ஆஞ்சநேயர் வால் போல நீண்டிடுவதைத் தவிர்க்க இயலவில்லை!

இம்புட்டு ‘தம்‘ கட்டி நான் எழுதிய பின்னருமே  கூட – “எக்ஸ்க்யூஸ் மீ... வாட் இஸ் தி ப்ரொசிஜர் டு கட்டிங் தி சந்தா?” என்ற நம்மாட்களிடம் மொதல்லேர்ந்து விளக்கம் கேட்கும் படலங்கள் அரங்கேறிடவே செய்யும்! So இதில் நான் மேம்போக்காய் எழுதிவிட்டுக் கிளம்பி விட்டால் நம்மாட்கள் பாடு இன்னமும் கூடுதல் திண்டாட்டமாகிப் போகும்!

More than anything else – சிறுவட்டமே ஆனாலும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் ஒரு சமாச்சாரத்தினை சுவையாய் சமைத்துப் பரிமாறும் பொறுப்பு இந்த ஆந்தையனிடம்  உள்ளது! இயன்றமட்டுக்கு அனைவரும் மனநிறைவு கொள்ளும் விதமாய் செயல்பட்டிருக்கேன் தான் என என்னை நானே தேற்றிக் கொள்ளவும் இந்த வருடாந்திர நெடும் பதிவுப் படலம் அவசியமாகிப் போகிறது - இதை டைப்படித்துத் தரும் நண்பர் அடுத்த 2 வாரங்களுக்கு “காதல்“ பரத் போல மண்டையில் குட்டியபடியே திரியும் ஆபத்து இருந்தாலுமே! So this post is as much for me... as it is for you folks!

So yet another புது வருடத்து திட்டமிடல் எனும் மழலையை உங்களிடம் ஒப்படைக்கத் தயாராகி விட்டோம்! அது நடைபழகவும், ஓடியாடவும், உலகமறியவும், திறன்கள் கற்றறிந்து வெற்றியடையவும் -  எல்லாமுமாய் இருந்திடப் போகும் பொறுப்பு உங்களிடமும், புனித மனிடோவிடமுமே ! எப்போதும் போல “சந்தா“ குழந்தையை வாஞ்சையோடு கொஞ்சி மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, இந்தப் பந்தமும், பயணமும் இடைவெளியின்றித் தொடர, படைத்தவரை வேண்டியபடியே விடைபெறுகிறேன் folks!

ரைட்டு...பரீட்சை எழுதியாச்சு! இனி மார்க் தெரிய வரும் வரைக்கும் ‘திக் திக்‘கென்ற துடிப்போடு காத்திருப்போம்! டெம்போல்லாம் வைச்சு கடத்திட்டு வந்திருக்கோம், ஏதோ பாத்து பண்ணுங்க சாமியோவ்ஸ் ! Bye all... See you around! Have a lovely weekend!! God be with us all! 

அப்புறம் "சந்தாவுக்கே ஒரு LITE version இருக்கச்சே - இம்மாம் நீளப் பதிவுக்கும் ஒரு Lite வேணாமா ?" என்று கார்த்திக்கும், போர் அடிச்சுப் போன மக்களும் கேட்கக் கூடுமென்பதால் - இதோ சித்திரங்களிலேயே இந்த சந்தாவின் story !!

6


மொத்தமே இது தான் மேட்டர் ; இதைத் தான் மேலே ஆத்தோ ஆத்தென்று ஆத்தியுள்ளேன் ! So புய்ப்பமோ, பூவோ - all the same !!

Bye once more !!

P.S : எத்தனை நிமிடங்களாச்சு இதை முழுசாய்ப் படிக்க folks ?

275 comments:

  1. காமிக்ஸ் உறவுகளுக்கு இனிய வணக்கம்...💐🙏💜

    ReplyDelete
  2. Super… first after long time 😀😀😀😀🤩🤩🤩

    ReplyDelete
  3. கோழிக்கோட்டிலிருந்து வணக்கம் சாரே...

    ReplyDelete
    Replies
    1. கோழி எதுக்கு கோடு போடுதாம் ? Geometry student ஆ இருக்குமோ ?

      Delete
    2. வாவ் டைமிங் காமெடி சார்

      Delete
  4. இரவு வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  5. அன்பு வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  6. இனிய இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  7. பத்தாவது பார்டர்ல பாஸு

    ReplyDelete
  8. தாத்தாஸ் காணுமா?
    அப்படியே இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அது தான் நம்ம இருக்கோம்லே ?

      Delete
  9. முழுவது படித்துவிட்டு வருகிறேன் டியர் எடு

    ReplyDelete
  10. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  11. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  12. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  13. எதே அட்டவணை பதிவா???? எண்ட அம்மே நான் காண்பது கனவா நிஜமா???

    ReplyDelete
  14. வந்தாச்சு நெடும் பதிவு. நிதானமாக ஒவ்வொரு வரிகளையும் மெல்ல மெல்ல ரசித்து படிக்கலாம்

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  16. Oh wow....இந்த நொடியில் 197 பேர் இந்தப் பதிவினை வாசித்துக் கொண்டுள்ளனர் !

    ReplyDelete
  17. 🔥🔥🔥🔥🔥🔥🔥👌🏻🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  18. அடடே... அட்டவணை தெறிக்க வுடுதே.. ஏதாச்சும் பண்ணியாவது சந்தா கட்டணுமே.. 🔥🔥🔥🔥

    ReplyDelete
  19. சிஸ்கோ, ஆல்பா, ஸ்டெர்ன், தாத்தாஸ்.. ரெகுலரில் இல்லாதது சந்தா கட்டத் தூண்டுகிறது..

    ReplyDelete
    Replies
    1. பார்வைகள் பலவிதம் சார் 🫡

      Delete
    2. ரசனைகளும் பல விதம்.. 😍😍

      Delete
  20. Vகாமிக்சையும் இந்த அட்டவணையில் இணைத்தது அருமையான திட்டம்.. அதற்கும் தனி சந்தாவா என்ற ஆதங்கம் இனி இல்லை.. 👌🏻👌🏻👌🏻என்னைப் போன்ற பட்ஜெட் பரமசிவங்களுக்கான அட்டகாச அட்டவணை.. 🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
    Replies
    1. வாசிக்கப் போகும் வட்டத்தில் பெரியளவில் மாற்றங்கள் இல்லை எனும் போது அதனையும் இணைப்பதில் சிக்கலேதும் தென்படவில்லை சார்!

      Delete
    2. சூப்பர் சார்.. 🙏🏻🙏🏻

      Delete
  21. 25 நிமிடங்கள் ஆனது முழு பதிவையும் படித்து முடிக்க.

    ReplyDelete
    Replies
    1. 37 ஷீட்களில் எழுதியது சார் 😁

      Delete
    2. வேய்ன் ஷெல்டன் வருகை எதிர்பாராத இன்ப அதிர்ச்சி...

      Delete
  22. ***எத்தனை நிமிடங்களாச்சு இதை முழுசாய்ப் படிக்க folks ?***

    படிச்சிட்டு வந்து சொல்றேன் சார்.

    ReplyDelete
  23. 32 இதழ்கள் என போன சந்தா அட்டவணை, நாயகர்கள் ஆல்பம் என அலசி community இல் போட்டு இருந்தேன்..... exact அதே நம்பர்ஸ் வரும் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை சாரே🙈🫣....அண்டர் டேக்கர் வராதது வருத்தம் என்றாலும் பவுன்சர் ஆவது வெளியிட்டு இருக்கலாம்....ஷெல்டன் வருவது இன்ப அதிர்ச்சி தான் நிச்சயம் அந்த நடுவயது நரைக்கு யான் வெயிட்டிங்😍....புதிய நாயகர்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்....மாங்கா வெளியிடுவதில் சிக்கல்கள் புரிகிறது இருந்தாலும் வேறு வடிவில் வருவது மிகுந்த மகிழ்ச்சி🙏❤️....இளம் டெக்ஸ் கொத்து கொத்தாக வராமல் மொத்தமாக வருவது 💯 சிக்சர்.... சந்தாவில் lite எனும் முயற்சி வாசகர்கள் தமக்கு வேண்டா செட் ஆகா புத்தகம் படிப்பதில் இருந்து தவிர்க்கும் சுதந்திரம் ஏற்பாடு பண்ணியதற்கு நன்றி 🙏.....டெக்ஸ் பல வெரைட்டிகளில் வருவதைக்கண்டு ரம்மி அண்ணன் பூரிப்பதை காண கோடிக்கண்கள் வேண்டும்🤣🤣......நிச்சயம் 2025 மற்றுமொரு மைல்கல்லாக அமைய இறைவனை பிராத்திக்கிறேன்❤️🙏

    ReplyDelete
  24. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  25. படிக்க 20 நிமிடங்கள் ஆனது சார்

    ReplyDelete
    Replies
    1. தெறி ஸ்பீட் ப்ரோ 🔥

      Delete
    2. சீக்கிரம் முதல் 3 கமெண்டுகளில் வருவது தான் ரொம்ப ரேர் சார்....அதுவும் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி 🥰

      Delete
  26. படிக்க 35 நிமிடங்கள் ஆனதுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. பொறுமைக்கு நன்றிகள் சார் 🙏

      Delete
  27. சந்தா பற்றிய பதிவை படிக்க குறைந்தது ஒரு மணி. நேரம். ஆகும் போலிருக்கே?

    ReplyDelete
    Replies
    1. நிதானமா படிப்போம் சார் - நாளைக்கி ஞாயிறு தானே?!

      Delete
  28. 2025ம் ஆண்டுக்கான சந்தா தொகை Rs.5750 செலுத்தியாயிற்று. ஆபிசிற்கும் மெஸேஜ் போட்டுவிட்டேன். எனது ஜனநாயக கடமையை ஆற்றிய மனநிறைவுடன் உறங்கச் செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் 🙏 & gud nite!

      Delete
  29. ஷெல்டன், லார்கோ சூப்பர் சார் அப்படியே லேடி s ம் மறுபடி வர எதுனாவது புது ஸ்லாட் கண்டுபிடிங்க சார்

    ReplyDelete
  30. பதிவு முழுசா படிக்க 48 நிமிடம் ஆச்சுங்க சார்.. 😘🥰

    ReplyDelete
  31. இதழ்கள் தெரிந்து கொள்ள அவசரமாக 15 நிமிடங்களில் படித்துள்ளேனெ, நிதானித்து படிக்க 45 நிமிடங்கள்

    யாருமே கெஸ் பண்ண முடியாத மாதிரி தான் ப்ளான் போட்டு வைச்சிருப்பீங்கன்னு நினைச்சேன், அப்படியே ஆகி விட்டது

    அட்டவணை அருமை
    மறுபடியும் படிக்க போறேன்

    ReplyDelete
  32. 25 நிமிடங்கள். ரெகுலர் சந்தா + V காமிக்ஸ் இரண்டுமே சேர்த்து 32 இதழ்கள் மட்டுமே என்பது மனதை ஒரு மாதிரி பிசைகிறது. Of course 5000+ சந்தா தொகையில் நீங்கள் முடிந்த அளவிற்கு எல்லா ஹீரோக்களையும் வெரைட்டிகளையும் நுழைக்க பட்டிருக்கும் கஷ்டம் ஸ்பஸ்டமாகத் தெரிகிறது. இருக்கவே இருக்கிறது ஆன்லைன் மேளாக்கள். ஜெய் புனித மானிடோ...விட்றா வேகக் குதிரைய..

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றிகள் நண்பரே ; இதுவொரு முக்கிய காலகட்டம்!

      வாசிப்பின் மீது நண்பர்களுக்கு வேகம் குறைந்திடுவதற்கான வாய்ப்புகளை இயன்றமட்டுக்கும் மறுக்கும் சகல முயற்சிகளையும் களமிறக்குவதே need of the hour!

      Delete
  33. Replies
    1. ஜம்பிங் பேரவையில் சேர உங்களுக்கு தகுதி வந்தாச்சு சார் 🥰😘

      Delete
    2. நான் தான் ஏற்கனவே செயலாளர் பதவியில் இருக்கேனே சார்.

      Delete
  34. எனக்கு பதிவை படித்து முடிக்க ஆன நேரம் சரியாக 30 நிமிடங்கள்

    ReplyDelete
  35. அச்சச்சோ இளவரசி இல்லைங்க சார்.ராஜ சேகரன் கரூர்

    ReplyDelete
    Replies
    1. அதான் மின்சார 80 ல வராங்க இல்ல..

      Delete
    2. மின்சார எண்பதுகளில் ஒண்ணுக்கு இரண்டாய் கதைகள் உண்டே சார்!

      Delete
  36. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  37. //வருஷத்துக்கு எட்டாயிரம், பத்தாயிரம் பக்கங்களென்று போட்டுத் தாக்கியதெல்லாம் இந்த நொடியில் ஒரு தொலைதூர நினைவாய் மாத்திரமே நிழலாடுகிறது! // சத்தியமான வார்த்தைகள். 2011 to கோவிட் நமது கோல்டன் இரா... ஒரு அழகான படகுப் பயணம் போல...

    ReplyDelete
    Replies
    1. மாற்றங்களே மாறாதவை சார் ; அதை உணரவும், புரிந்து ஏற்றுக் கொள்ளவும் பக்குவம் அவசியம் நமக்கு!

      நான்பாட்டுக்கு "பழைய நெனப்புடா பேராண்டின்னு" போயிக்கீனே இருந்தால் புளிய மரத்தில் முட்டித் தான் நிற்க வேண்டிப் போகும்!

      Delete
  38. இளம் ‘தல‘க்கு 5 அத்தியாயங்கள்! எங்க இளம் தளபதிக்கு ரெண்டே ரெண்டா? உன்னை நாடு கடத்தினா என்ன??

    ஓகோ.் இப்பிடிதா மின்னும் மரணுத்துக்கு நடந்துச்சுங்களா??

    கோல்டன் செமிட்டிரி என்னாச்சுங்க...?? கேட்க மாட்டோம்ன்னு நெனைச்சுட்டீங்களா??

    ReplyDelete
    Replies
    1. ரெகுலர் தடத்திலே மறுபதிப்புகள் சகலத்துக்கும் சிமெட்ரி தானுங்க - ஆரும் விதிவிலக்கல்ல அதற்கு!

      Delete
  39. "மேஜிக் ஷோ 2025" உண்மையில் மேஜிக் காண அட்டவணைதான் சார் 💪💪💪

    ReplyDelete
    Replies
    1. அப்படியே மேஜிக் வின்ட் குண்டு புக் கேட்டு எடிட்டரை அலற வைப்போமா🫣🤣🤣

      Delete
  40. Over all குமார் ஹேப்பி அண்ணாச்சி....

    ReplyDelete
  41. அதிகாரிக்கெ ஒரு ஒன்பது ஸ்லாட்டை குறைத்திருக்கலாம்..

    ReplyDelete
  42. சார் வணக்கம் 2025 அட்டவணை அருமைங்க.
    அப்படியே முழுசந்தா தொகையும் கட்டியாச்சுங்க.
    இளம் டைகர்,
    ஒரிஜினல் கலரில் வேதாளர் அருமைங்க

    ReplyDelete
  43. "விஷம்" என்ன ஆச்சு

    ReplyDelete
    Replies
    1. படிங்க சார் பதிவை...

      Delete
  44. @Edi Sir.. 🥰😘💐🙏

    2025 Subscription - Regular - First installment paid Sir..👍👍💐😄🙏

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் பேரவைன்னா சும்மாவா? 💪💪🙏🙏

      Delete
    2. என்னுடைய முதல் தவணை சந்தாவும் கட்டியாச்சு

      Delete
    3. ஜம்பிங் பேரவை செயலாளர் வாழ்க.. 🥰😘💐🙏😄

      Delete
  45. O.k.ங்க சார் இந்த அட்டவணை மட்டுமே இந்த நொடி மனதில் இருக்குது. யார் அந்த மினி ஸ்பைடர் வரிசையில் மறுபதிப்புகள் அறிவிப்பதாக ஒரு ஐடியா இருந்ததே . அதுபற்றிய அறிவிப்புகள் பிறகுங்களாங்க சார்

    ReplyDelete
    Replies
    1. இது அது இல்லே சார்.... அது இது இல்லே சார்!

      Delete
  46. Twenty minutes sir. Missing Stern, welcoming Shelton, larco, Young Tiger and new comers Japanese, sakuvara, cow boy.... Nice to see Rubin retained a place...wish you all the best sir...

    ReplyDelete
    Replies
    1. ஸ்டெர்ன் தொடரில் இன்னும் ஒரேயொரு கதை தான் உள்ளது சார்...

      Delete
  47. உறவினர பஸ் ஏத்தி விட பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் டிங்....வீட்டுக்கு போய் படிச்சதும்....செம சார்..‌கோடானு கோடி கைகூப்பல்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியான பஸ்லே தான் ஏத்தி விட்டீங்களா?

      Delete
  48. Terrifc Sandhaa sir !! I am going to go for Sandhaa Lite - rest assured I will be buying all books along with the special orders - just been longing for this ability to choose and buy WHEN I want it - so this is a perfect pitch for me ! Thanks sir !!

    ReplyDelete
    Replies
    1. இயன்றமட்டுக்கு எல்லோரது பார்வைக்கோணங்களில் இருந்தும் சிந்திக்க முயற்சிக்கிறோம் சார்!

      Delete
  49. @Edi சார்..😘🥰

    நெக்ஸ்ட் வேலை.. 👍😘

    2025 சந்தா விவரங்களை தெரிந்த /அறிந்த நண்பர்கள் காதுக்கு கொண்டு சேக்கரதுதான் சார்..👍✊👍

    #ஜெய் ஸாகோர்#🥰😘

    #ஜெய் ஜம்பிங் பேரவை# 😘😘

    ReplyDelete
  50. யங் டெக்ஸை பிரித்து போடாததற்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  51. 20 minutes I took to read the whole thing !

    ReplyDelete
  52. பெலிசிட்டி படையப்பா
    நீலாம்பரியையும் மிஞ்சும் வில்லித்தனம் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  53. அட்டவணை பதிவு எப்பவுமே ஸ்பெஷல்தான் அதனால் மீண்டும் மீண்டும் படித்து ரசித்து கொண்டுடிருக்கிறேன்

    ReplyDelete
  54. ஸார்..!! கமான்சே..?

    ReplyDelete
  55. 2025 லாவது அலிபாபா இடம் பெற்று விடும் என நினைத்தேன் மிஸ்ஸிங்

    ReplyDelete
    Replies
    1. மறுபதிப்புகள் எவையும் இனி ரெகுலர் தடத்தில் இருக்கவே செய்யாது - எத்தனை பெரிய தொடராய் இருந்தாலுமே!

      Delete
  56. கேப் விட்டு கேப் விட்டு படிச்சு முடிச்சாச்சுங்க சார்...

    ReplyDelete
  57. சார் - Felicity 'அப்படியே' வரணும் சொல்லிப்புட்டேன் - ஆங்கிலத்தில் படிச்சாச்சாக்கும் - அதிலேயே சென்சார் உண்டூ ! நீங்கள் பிரென்ச் படங்களை போடவும் - வசனம் வேணும்னா போடுங்க இல்லேன்னா வேணாம் - ஹிஹி !

    ReplyDelete
  58. பதிவை படிக்க ஆரம்பித்து உள்ளேன் சார். Bouncer இன்னும் எத்தனை கதைகள் உள்ளன சார்.

    ReplyDelete
    Replies
    1. போடக்கூடியது ஒண்ணே ஒண்ணு சார்...

      Delete
    2. பழைய ஆசிரியர் மீண்டும் இணைந்த ஒரு புக் மட்டுமே பாக்கி சகோ...

      Delete
    3. சீக்கிரம் போடுங்கள் சார்

      Delete
  59. And when I said Terrifc - I also and more than anything else meant the choice of included characters sir - is gonna be another enteraining and breezy year for sure !!

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பை நேசிக்கச் செய்ய இயன்ற முயற்சிகள் சார்!

      Delete
  60. Super Selection of Titles and New Heros....
    Sir... No information about Graphic Novels..in 2025.. Sir... I expected atleast 3 GNs.. But none this time. What about Kalanin Kaal Thadathil -2? Can we expect this in 2025?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விகள் அனைத்துக்குமே பதிவில் ; படங்களில் பதில்கள் உள்ளன சார்!

      Delete
  61. நவீன வெட்டியான் மற்றும் அண்டர்டேக்கர் கதை 2025 ல இல்லாதது என்னளவில் பெரிய வருத்தம் சார்.

    ReplyDelete
    Replies
    1. அண்டர்டேக்கர் அரை கதை தான் ரெடியாக உள்ளது சார் ; மீத அரை இன்னும் வரையவே இல்லை சார்! பரால்லீங்களா?

      Delete
    2. பதிவை இன்னும் முழுசாய் படிக்கலை ; படங்களைப் பார்த்துட்டே அப்பப்போ கேள்விகளை தொடுக்குறீர்கள் என்பது புரியுது சார்!

      Delete
    3. 2024 அண்டர்டேக்கர் தயாராகி கொண்டு உள்ளார் என்று சொன்னிங்க 2025 இல்லை என்பதே எனது வருத்தம் சார். 2025 இரண்டு வெட்டியான்களையும் மிகவும் எதிர்பார்த்தேன் எனவே அவர்களை பற்றி முதலில் படித்து விட்டு எனது ஆதங்கத்தை எழுதி உள்ளேன் சார்.

      Delete
    4. சட்டியில் இருப்பதைத் தானே சார் - அகப்பையில் நான் எடுக்க முடியும்?!

      Delete
  62. பெரும்பாலும் கவர் செய்துவிட்டீர்கள் சார் முக்கியமானவர்கள் 2026 போவது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது அதை விட அவர்கள் உள்ளே வர யார் வெளியே போவார்கள் என்பது அதைவிட கஷ்டமாக உள்ளது.

    வி காமிக்ஸ் சேர்ந்து ஒரே சந்தா செய்ததற்கு மிக்க நன்றி சார்.

    லைட் சந்தா அனைத்து முக்கிய கதைகளும் இணைந்து நல்ல ஒரு alternative ஆக உள்ளது

    எனக்கு பெர்சனலாக ஸ்பூன் பதில் சோடா இருந்திருக்கலாம் மற்றபடி all ஓகே

    வேதாளர் புது கலர் பார்க்க நன்றாக இருக்கிறது படிக்கவும் ஆவலாக உள்ளேன்.
    விளம்பரத்தில் மட்டும் கொஞ்சம் டார்க்காக இருக்கிறது மாதிரி போல அடர்த்தி கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும் சார்.

    முழு சந்தா கட்டிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. //முக்கியமானவர்கள் 2026 போவது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது//

      யாரந்த முக்கியமானோர் கிருஷ்ணா?

      Delete
    2. Undertaker bouncer stern நமது கமர்ஷியல் வாசிப்பின் நடுவே கொஞ்சம் புத்துணர்சி தருவது இவர்கள் தான் சார் ஆகையால் இவரகளை இவ்வருடம் மிஸ் செய்வேன்

      Delete
    3. // எனக்கு பெர்சனலாக ஸ்பூன் பதில் சோடா இருந்திருக்கலாம் மற்றபடி all ஓகே // எனக்கும்

      Delete
    4. அண்டர்டேக்கர் அரை கதை தான் ரெடியாக உள்ளது ; மீத பாதி இன்னும் வரையவே இல்லை கிருஷ்ணா!

      Delete
    5. காரணங்கள் முழுவதும் படித்தேன் சார் ஜஸ்ட் அவர்களை மிஸ் செய்வதை தெரிவித்தேன் அவ்வளவே

      Delete
  63. டைலர் டாக். 96 பக்கம். இன்ப அதிர்ச்சி.!!!!

    ReplyDelete
  64. Hi Editor sir , I loved the way you planned and you tried to satisfy everyone. I am too happy with all books you mentioned. Thanks for making all these efforts . To me , i loved the Vedhalar story which is in color . I thought Vedhalar stories may not be there as they we were in Electric 80s. my personal thanks on that . you answered all the questions in question and answer section sir. Thanks again for doing this for us sir. I will pay santha in this week

    ReplyDelete
  65. To me it took 40 minutes to complete read the post
    sir. I took some time see every picture and slowly read sir

    ReplyDelete
  66. 2025 அட்டவணை... பயணம் வெற்றி பெற, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  67. இனி ஈரோடு புத்தக திருவிழா இல்லை சேலம் புத்தக திருவிழாவிற்கு வெல்கம்

    ReplyDelete
    Replies
    1. சுழற்சி முறையில் அமைக்க எண்ணிடுகிறோம் ... கோவை... சேலம்.... சென்னை...ஈரோடு என்று...

      Delete
  68. சந்தா தொகை 5750/- செலுத்தியாச்சு...!!!

    ReplyDelete
    Replies
    1. தீபாவளிக்கு முன்பாக சந்தா விபரங்களை வெளியிடுவது இதன் முதல் முறையா...?

      Delete
    2. இல்லை சார்... எப்போதுமே தீபாவளி புக்ஸ் கூட அட்டவணை வரும்... அறிவிப்புப் பதிவு சில வாரங்களுக்கு முன்னே!

      Delete
  69. சரியாக ஒன்றரை மணி நேரம் ஆயிற்று பதிவை படித்து முடிக்க

    ReplyDelete
  70. // வருஷத்துக்கு எட்டாயிரம், பத்தாயிரம் பக்கங்களென்று போட்டுத் தாக்கியதெல்லாம் இந்த நொடியில் ஒரு தொலைதூர நினைவாய் மாத்திரமே நிழலாடுகிறது! இந்த 3892 பக்கங்களை வாசிக்கவே நம்மில் கணிசமானோருக்கு பிரயத்தனமாய் இருந்திடுமெனும் போது – ரெகுலர் தடத்தில் இதற்கும் மேலாய் சுமையை ஏற்றிக் கொண்டே செல்வது லாஜிக்கலாகத் தென்படவில்லை! //

    உண்மையே..!!!
    தற்பொழுது பெரும்பாலான வாசக நண்பர்கள் முதல் வாரத்திற்குள் படித்துவிட்டு விமர்சனம் தெரிவிக்கவும், கருத்து பரிமாற்றத்திற்கும் தயாராகி வந்து விடுகிறார்கள். தேவைப்படும் சமயங்களில் மீள் வாசிப்புக்கும் இலகுவாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நேரமில்லையே சார் அனைவருக்கும் 🤕

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  71. லக்கி ஆண்டு மலர் இரண்டு கதைகளும் ஆர்வத்தை கிளப்புகிறது; இரண்டிலும் டால்டன் சகோதரர்கள் இதில் இரண்டாவது கதையில் நமது ரின் டின் கேன் என்பது கூடுதல் சிறப்பு/சிரிப்பு ☺️

    ReplyDelete
  72. சார் இளம் டுராங்கோ வருவது பற்றி சில வருடங்கள் முன்பு சொன்னீர்கள் சார் அது பற்றி எதுவும் அப்டேட்

    ReplyDelete
    Replies
    1. வரவிருக்கிறார்.... அடுத்த சந்தர்ப்பத்தில் எப்போதென்று சொல்கிறேன்...

      Delete
    2. சூப்பர் சார் காத்திருக்கிறேன்

      Delete
  73. டைகர் கதை இந்த வருடமும் வருவது மகிழ்ச்சி. அதுவும் மீண்டும் ஹார்டுbound இரட்டிப்பு மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  74. // லயன் கோடை மலர் ‘25” என்று ரகளையாகக் களமிறக்கிடவுள்ளோம். இந்த 320 பக்க ஆல்பத்தின் முக்கிய அடையாளமே – டெக்ஸ் & கார்சன் முதன் முறையாகக் கைகோர்க்கும் சாகஸம் என்பதே ! //

    இந்த 2025 அட்டவணையில் மிகப்பெரிய ஹைலைட் இது தான் சார். ஏப்ரல் 2025 விரைவில் வா வா ☺️

    ReplyDelete
  75. Oop.. 40 நிமிடங்கள் ஆகிவிட்டன பதிவை படிப்பதற்கு. ஸ்டெர்ன் இல்லாதது ஆச்சரியம். தாத்தாக்கள் இருந்திருந்தால் ஆச்சரியம். ( உங்களால் என்ன செய்ய முடியும் சார்?) லார்கோ மீண்டும் வருவது குதூகலம்.
    ஷெல்டன் வருவது இன்ப ஆச்சரியம். கார்ட்டூன்கள் ரெகுலர் சந்தாவில் கொஞ்சம் அதிகரித்திருப்பது உற்சாகம். புதிய வரவுகள் படிக்க ஆர்வம்.
    வீ காமிக்ஸ் Merge வியப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டெர்ன் ஒன்றோ, இரண்டோ மாதங்களுக்கு முந்தைய வெளியீடாய் வந்திருப்பின், 2025 க்கான ஸ்லாட் உறுதியாகி இருக்கும் சார்!

      Delete
    2. Dr Selvam has mentioned all the reasons and feelings I had while reading this - that is also why I termed it Terrific !

      Delete
  76. // இளம் டெக்ஸ் + ஜம்பிங் ‘தல‘ ஸாகோர் இணைந்து களம் காணும் ஒரு 128 பக்க சாகஸமுமே 2025-ன் மெனுவில் உள்ளது! போன முறை போலவே இதிலும் செம அழுத்தமான கதைக்களம் காத்துள்ளது! //

    மீண்டும் மீண்டும் மா. மீண்டும் ஒரு அமர்க்களம்😊

    ReplyDelete
  77. " உதிரம் பொழியும் நிலவே” " எப்படி சார் இப்படி வித்தியாசமான தலைப்பை வைக்கிறீர்கள் ☺️

    ReplyDelete
    Replies
    1. க்ரைம் நாவல் தலைப்பு போல 😀

      Delete
    2. ஒற்றை இரவில் அரங்கேறும் மரண தாண்டவத்தின் நீட்சியே கதை சார் ; இப்போது தலைப்பை பொருத்திப் பாருங்கள் - ஈஸியாய் மேட்ச் ஆகும்!

      Delete
    3. அதுவும் முழு நிலா நாளில் நடக்கிறதா சார் 😊

      Delete
  78. அட்டவணையில் இடம் பிடித்த கதைகளும், விலையும்..

    தொடர் வாசகர் வட்டத்தை தாண்டி.. புத்தக விழா வரும் மாணவர் மாணவி வாசகர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் உள்ளது.

    இனி வரும் காலங்களில் அவர்களையும் கணக்கில் சேர்த்து இலக்காக கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  79. Hello Editor Sir, one request from my side - Is there a way to have a paperback variant for hardcover books? Hardcovers looks nice but sometimes it is not convenient for the old hands…..
    Thanks.

    ReplyDelete
  80. 2025 சந்தா என் பார்வையில்

    + பிளஸ்
    1. டெக்ஸ் கதை தேர்வுகள்
    2. No கொத்து புரோட்டா for இளம் டெக்ஸ். முழு குண்டு புத்தகம் வாவ்.
    3. தளபதி டபுள் ஆல்பம் with hardcover
    4. டின் டின்
    5. LC 41 - லக்கி+டால்டன்+ரின்டின்கேன்
    6. ஷெல்டன், டைலன் &
    ப்ளூகோட்ஸ் மீள்வருகை
    7. லார்கோ, தோர்கல், XIII, ஜானி, ஸ்பூன் & white, நோ, ராபின், டேங்கோ, மார்ட்டின், சிக்பில் & ரூபின் retention
    8. V காமிக்ஸை ஒற்றை சந்தாவின் கீழ் கொண்டு வந்தது

    (-) Minus
    1. புதிய வரவுகள் முதல் பார்வையில் பெரிதாக கவரவில்லை. அதிலும் போனெலி & ஜப்பான் வரவுகள் எதிர்பார்ப்பை கிளப்பவிலை

    Request
    கிளாசிக் பார்ட்டிகளுக்கு தனி சந்தா - கிளாசிக் ரசிகர்களுக்காக, Crisp வாசிப்புக்கு மெயின் சந்தா, கிராபிக் நாவல் விரும்பிகளுக்கு இனி இருக்கும் ஒரே வாய்ப்பு புத்தக விழாக்கள் மட்டும் தான். ஆகையால் அங்கேயவது இந்த ஜானருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். காலனின் கால் தடத்தில் அடுத்த பாகம் நிலுவையில் உள்ளது. அதிலிருந்து தொடர்ந்தால் சந்தோஷம்.
    நன்றி







    ReplyDelete
  81. 32 புத்தகங்கள்
    12 மாதங்கள்
    குதிரை ஓட்டம்

    இடையிடையே கொடுத்த வாக்குறுதிகள், நடத்திய வாக்கெடுப்புகள் அத்தனைக்கும் விடைகளை இந்த பதிவில் கொடுத்து விட்டீர்கள்!

    நன்றி!

    மீள்வரவுகளில் சிஸ்கோ மற்றும் ஆல்ஃபாவுக்கு எனது ஓட்டு!

    ReplyDelete
  82. சரியாக ஒன்றரை மணி நேரம் உள்வாங்க...அருமையான தேர்வுகள் சார்...நாளை எனது சந்தோசங்கள் பதிலாய்...மீண்டும் நன்றிகள் சாரீ

    ReplyDelete
  83. காலையில் மொத்தமாக படிச்சு போட்டு கருத்திடுறேன், வாத்தியாரே.

    ரெண்டு மணிக்கு என்னையா ஃபோன குத்திட்டு இருக்கேன்னு அம்மணி திட்றதுக்குள் தூங்க போகணும் ... அட்லீஸ்ட் நடிக்கணும் 🥹

    ReplyDelete
    Replies
    1. பதிவு மட்டும் தான் நாளைக்கு படிச்சிக்கிறேன்னு சொன்னேன் ...

      சந்தா பணத்தை இப்பவே அனுப்பிச்சாச்சு ... 😁

      உங்கள் தேர்வுகளில் மீது எங்களுக்கிருக்கும் நம்பிக்கையாக இதை கூட பண்ணலன்னா எப்படி... ❣️

      Delete
  84. @ரஃபிக் ஜி.. 😘🥰

    You are always rocking.. 💐💐💐

    ReplyDelete
  85. காலை வணக்கம் அன்பு உறவுகளே.. ❤️❤️❤️

    ReplyDelete
  86. 2025 சந்தா முதல் பார்வையில்....
    இளமை எனும் பூங்காற்று!
    போர் கண்ட சிங்கம்!
    சினிமா பாடல்களை நினைவூட்டும் தலைப்புகள்...
    அப்புறம் ஸ்பூன் & ஒயிட்- ன் குத்துங்க எஜமான் குத்துங்க!
    இது ஆபாசமாய் தெரிவது எனக்கு மட்டும்தானா?

    ReplyDelete
  87. FOR ME சிஸ்கோ (அல்லது) சோடா வெள்ளை ஸ்பூன்க்கு பதிலாக இருந்து இருந்தால் perfect சந்தாவாக இருந்து இருக்கும் ..

    LARGO , TIGER , ஷெல்டன் மீண்டும் வருவது மகிழ்ச்சி ..
    OVER ALL A SATISFACTORY சந்தா ..

    ReplyDelete
  88. 2025 சந்தா விவரம்:


    i)2025 - ரெகுலர் சந்தா (32 புத்தகங்கள்)-
    ரூ. 5750/-

    இரண்டு தவணையில் செலுத்தலாம். (முதல் தவணை ரூ.3000...
    இரண்டாவது தவணை ரூ. 2750 மார்ச் 2025 க்குள் செலுத்தவேண்டும்)🥰💐🙏🥰🥰😘😘


    ii)2025 - lite சந்தா
    (18 புத்தகங்கள்)-
    ரூ. 4000/-

    இரண்டு தவணையில் செலுத்தலாம்.

    (முதல் தவணை ரூ.2500...
    இரண்டாவது தவணை ரூ. 1500 -மார்ச் 2025 க்குள் செலுத்தவேண்டும்)🥰💐🙏🥰🥰😘😘

    ReplyDelete
  89. சந்தா கட்டுங்க..😘💐

    ஜாலியா இருங்க நண்பர்களே.. 🙏💐🥰

    ReplyDelete
  90. அருமையான ஆண்டு பட்டியல் எதையும் தவிர்க்க முடியாது போலிருக்கிறது.
    புது வரவுகள் ஆண்டு சந்தாவை ஆண்டு சந்தாவில் இணைந்து கொள்ள தூண்டுகின்றது.
    இம்முறை முழு சந்தாவில் சேர்ந்த முயற்சி செய்கிறேன் சார்.

    ReplyDelete
  91. ஒரே stretch ல படிக்க முடியாத சூழ்நிலை. இப்பத்தான் ஒரு வழியா படிச்சு முடிச்சேன். ரெகுலர் சந்தாவே லைட்டா இருக்கற மாதிரி ஒரு பீலிங். ரெகுலரையும் V யையும் கம்பைன் பண்ணினது வசதி. ஆனா ரெகுலர்ல 30 + V ல 12 கிடைச்சது. Light ஆக இருந்தாலும் Bud Light மாதிரி கவர்ச்சியாத்தான் இருக்கு.

    பட்ஜட் சிரமங்கள் புரிகிறது என்பதால் மன்னிச்சு விட்டுடறோம். ஆபுவி, புத்தக விழா ஸ்பெசல்னு ஸ்பெசலா கவனிச்சுடுங். என்னுடைய சந்தா வழக்கம் போல நண்பர்களோட சேத்தி கட்டிடறேன்.

    கதை தேர்வு, ஹீரோக்கள் வரிசை எல்லாமே பிடிச்சிருக்கு. ஐ யம் ஆப்பி. I will miss some of the heroes. But when the going gets tough, the tough get going.

    ReplyDelete
  92. இளம் டெக்ஸ் எப்பொழுதுமே ஐந்து பாகங்களாகவே தொடரட்டும் சார்.

    ReplyDelete
  93. பதிவை படித்து முடிக்க சரியாக 35 நிமிடங்கள் சார்....

    எப்பொழுதும் அட்டைவனை பதிவு அன்று இந்த நாயகருக்கு பதில் அந்த நாயகர் இருந்து இருக்கலாம் என ஓரிரு இடங்களில் தோன்றும்..ஆனால் இந்த முறை நூறு சதவீதம் எந்தவித மாற்றுக்கருத்துத்தும் மனதளவில் கூட எழவில்லை..அதுவும் லார்கோ..ஷெல்டன்..எதிர்பாரா அதிர்வு..

    அதே போல் வேதாளின் கலரிங் விளம்பரம் அட்டகாஷ் சார்..

    குறைகளே இல்லாத அட்டவனை..வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  94. வணக்கம் சார்
    போன வருடம் போலவே அனைத்து ஹீரோக்களையும் ஒருங்கிணைத்து ஒரு பட்ஜெட் சந்தா வந்துள்ளது அருமை. எனக்கு சிறிது ஏமாற்றம் ,நான் சில மறு பதிப்பு பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

    மறு பதிப்பில் நான் எதிர்பார்த்தவை
    டெக்ஸ் பழைய மறு பதிப்பு,
    கோடை மலர் 85 ,86
    .இரட்டை வேட்டையர்
    ஜான் மாஸ்டர்
    புருனோ பிரேசில்
    ரிப்போட்டர் பழைய கதையில் ஏதாவது ஒன்று.

    ReplyDelete
  95. Big boys 2 கூட எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  96. எடிட்டர் சார்
    32 இதழ்கள் வருடதிற்க்கு - very crisp! Super! அதிலும் including V comics - சூப்பரோ சூப்பர் !!!!

    ReplyDelete
  97. பதிவை இரண்டு தவனைகளில் படித்தேன் (out of station). தோராயமாக 1 மணி நேரம் ஆனது ! Hats off for you detailed post !

    ReplyDelete
  98. சூப்பர் சார்....



    அட்டவணைய படிக்க படிக்க ...வீரா படத்ல கதாநாயகன் ஐ நம்ம நெனச்ச மாதிரியே நடக்குதே...என ஒரு ஃபீலிங்.....

    டெக்ஸ் வழக்கம் போல என நீங்க சொல்ல உதிரம் பொழியும் நிலவே எனும் தலைப்பு மனதைக் கிளர ஆரம்பிக்குது...தலைப்பு எதிர்பார்ப்பை அள்ளித் தூவ கதை இப்படியிருக்குமோன்னு தோண ஆஹா...முதல் கதையா இது வரனுமேன்னு வேண்டித் தொடர....அதுல பாருங்கன்னு பிரேக் வைக்குது டெக்ஸ் கிநா...அப்படி போடு அருவாளன்னு உதிரம் பொழிஞ்ச பெண்ணிடமிருந்து கத்திய பிடுங்கி கிநாவுக்கு தர....கிநான்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமேன்ன மனத வேடிக்கை பாத்த படி...கீழே இறங்க துவக்கம் முதலே ஜெட் வேகந்தான் ...



    நம்ம காலடியில் இல்லோகந்தான்னு வி காமிக்ஸார் சாகோருடன் டெக்சுக்கு இடந்தர அத மிஞ்ச கார்சனும் டெக்சாரும் இணைந்து கலக்கும் முதல் கதைன்னதும் கார்சனின் கடந்த காலம் ஏனோ அநியாயத்துக்கு நினைவிலாட....வண்ணத்ல இல்லன்னாலும் அதே தரத்ல கார்சன் கடந்த காலம் போல பெரிய சைசு ஹார்டு பௌண்டுன்னு படிக்கும் நேரத்த கடத்த...எடிட்டர் குல்லா நமக்காகாதுன்னு கழட்டி வைக்க பிடுங்கன்னு மனப் போராட்டம் தடுமாற ...கோடை கொடை விழா போல கோடை மலரே வருகின்றது ...தீபாவளி மலரும் ஆசிரியர் வர்ணனைகளால் ஈர்க்க.....வித்தியாசமான தேர்வுகள்னு ஆசிரியர் சத்தியம் செய்யவும் வேணுமோன்னு பாய.....


    லக்கி லூக் டால்டனோடும்...அந்த ரின்டினோடும் வெளிப்பட...


    கீழ இறங்கித் தோண்டுனா துவக்கமே புதையல்னா என்ன சொல்ல வாயடைச்சுப் போக கை துடிக்க ஆரம்பிக்க விரல் தாளம் போடுது கீ போர்டில்

    இளம் தளபதியார் கடல் கன்னியோடுன்னு ஈர்க்க...ஹார்டு கவரு....

    டின் டினார் பெருமூச்சு விட வைக்க ஆஸ்ட்ரி....குல்லா குல்லா

    மேகத்திரைய கிழிச்சபடி மழையாவோ கதிரவன் ஒளியாவோ என் கையில் தவளுது லார்கோ...போர் கண்ட சிங்கமாக உங்க வலியோட கர்ஜனைகள் வரிகளில் வேதனை தந்தாலும்...இதுவும் கடந்து போகுன்ன உங்க நகைச்சுவை உற்சாகம் தூண்ட...எங்கடா ஷேர் மார்கெட் அது இதுன்னு விலங்கிட்டு விலக்கிடுவியலோன்ன பயமில்லன்னாலும் மெதுவா வருமோன்னஎனும் சந்தேகத்தை தூக்கிப் போட....




    என்றைக்கோ ஒரு நாள் ஷெல்டன் இருக்குன்னு சொன்னது நினைச்சு குயில் பாடலாம் முகம் காட்டுமா எனும் ஏக்கத்த நீத்து வைக்க நீத்து வைக்க அடுத்த வருடமேன்னு குத்தாட்டம் போட...அட ஆமா மீசையில்லா துணையா இளவரசியை பாக்க...உங்களுக்கெல்லா இளவரசி மாடஸ்டியா பட்டாலும் ...எனக்கு இளவரசி முதல் கதையிலே தங்கள் வாயிலாக அட்டைட்டல் வின்னரான ஷெல்டன் துணையே...


    எல்லாமே டாப்புன்னா டூப்ப தேட முனைய....கிடைக்குமான்னு பாய

    அடங்குடான்னு மனத்தை அடக்குறார் வேதாள மாயாத்மா கலை வளத்தோரையும் போலென்னயுமே


    சிரிப்பு பார்ட்டீஸ் ஆஹா மாட்னியான்னு செல்லப்பா செவப்பா மாற கொம்பு முளைக்க...காக்கா விரட்டி சூலாயுத்த கரம் பிடிக்க

    லக்கி....கிட்...போனா போவுதுன்ன ப்ளூ கோட்ட ஸ்பூன் வொயிட் வெளுக்குது போன முறை அந்த மொட்டை கள வச்சு அதகளபடுத்தியத போல இம்முறை என்னவாருக்குன்னு ஆர்வத்த கிளப்பியது போல...ப்ளூ கோட்டும் மாறும் இச் சிவப்பு ப்ளூகோட்டால் மறைய கொம்புக்கு தெம்பில்லாம போக....

    ReplyDelete
    Replies
    1. செம சார் இனி கண்டிப்பா மொக்கையா ஏதுமகப்படாது ஆழமா போவுதேன்னு ....போக

      அன்னைக்கு வந்து போடு போட்டு சகலநாயகியரயும் ஓரங்கட்டிய ரூபிணி போல நாயகரயும் ஓரங்கட்ட வல்லம படைத்த மெய்யான லேடி பாண்ட்டும்...ஜெர்மனியில் ஜானி எனும் வழக்கம் போல ஜானிக்கென ஈர்ப்பாயமயும் தலைப்பும்


      ...போனல்லி பார்ட்டீஸ் சென்ற முறையே பெர்முடா வில் அடுத்து என நீங்க முடித்த மார்ட்டின்னு ஆஹான்னு விசிலடித்து வைக்க...காலனோட கால்தடத்தில் ...குல்லா குல்லா...டைலன் அடடான்னு ஏக்க பெருமூச்சு நீக்க முதல் முறையா வந்த போது இந்த நாயகர் சுத்தியும் லேசான வண்ணங்களை தன் அடர் சிவப்பாய் ஜொலிக்க வைக்க....இக்கதைகள் படிக்காம சேத்து வச்சி இப்ப எடுத்து படிச்சாலும் உள்ளிழுக்கும் இக்கதைகள விமர்சிக்காமல்தான் இவ்வளோ கேப்...ரூபின் போல அட்டகாச பார்ட்டியான இவர்....சின்னதுன்னாலும் அப்பவே படிச்ச பேய் புகுந்த பள்ளிக்கூடமும் இன்னமும் படிக்காம போர்வைக்குள் சாத்தானும்....குண்டானாலும் ஒல்லின்னாலும் கிரகச் செர்க்கை சரியா அமையலயோன்னு ஜாதகத்து மேல் பழி போட

      வியாரின் கலங்கரை விளக்கங்களான நோ தீபாவளி மலர் டபுள் எஸ்னு சொல்ல வைக்க..அட்டகாச சித்திரம் ஆஹா

      ஜம்பிங் தள நம்ம வில்லன் ஜோக்கர போல தலைப்பிலீர்க்க...இன்னுமுண்டு கலரிலென தனித்தடத்த திறந்து வழி பிறக்க

      புதியவர்கள் எனும் வரிகளில் தான் என்னவோர் வீரியம் வரிகள் புதிதல்ல எனும் போதும்
      புதிய கௌபாய் ட்யூராங்கோவ நினைக்க வைக்க நான்கும் தனியாய் என்பது சிறிய கதை பெரிய கதைன்னெல்லாமில்லன்னு இனி குண்டு புக்க முதல்ல படிங்கன்னு குண்டு புக் கோட்போர் தலைல கொண்டு வைக்க கூவிட....
      அட மங்கா சாமுராய் வியார் கடல்னு உற்சாகத்தை கூட்ட

      சட்டுன்னு ஒரு கணம் திகைக்க வைத்தது என்னோடு வாழ்ந்து வரும் ஏதோ கேள்விப்பட்ட பெயரா தோனிய ஸாகுவேரா ....போராளியாய் ஒடுக்கபட்டோருக்காக ஒடுக்கப்பட்ட பிரதியே தலைவனாக எனும் போதீர்ப்பதிகந்தான்


      அந்த அற்புத உலகில் வான்ஹாம்மேவின் கடைசி கதை தோர்கள் குடும்பத்தோடு உபசரிக்க காத்திருக்க...

      டேங்கோ மின்னலை பாய்ச்ச...
      வராது வந்த நாயகியாய் பெலிசிட்டி பெருசா எதிர்பாக்கலன்னாலும் அவர் கைக்குள்ள போட்ட பெருந்தலைவர்கள் கதையை ஈர்ப்பா நகர்த்தப் போவதென்பத விட விடாப்பிடியாக நீங்க தூக்கி பிடிக்கனும்னா காரணமில்லாம போதாதே....


      ஒரு மழை மேய்ந்து ஓய்ந்தது போல நினைவு...சத்தியமா ஆல்ஃப்பா சிஸ்கோவ மறந்தே போனேன் உங்க வரிகள் தாண்ட இயலாம...அப்பப்ப வரும்னு தங்கள் வார்த்தைகள் பாத்ததுந்தா நினைவே வந்தது ரூட் 99 ...விஷம்னு எல்லா தடமுமே...வேறுவலழியில்லா உங்க மந்திர எண்ணும் புரியுது....வேறு வழியில்லா எனது மந்திர எண்ணும் புரிந்து தெறிக்குது இக்கதைகளுண்டெனும் அறிவிப்பு...குண்டுகள் வேனும்னா உடனே படியுங்கள் ஆசிரியரின் தேடலுக்கு உற்சாகத்தை கூட்டுவோம்னு நண்பர்களோடு சபதமெடுக்கிறேன் .....கீழ சிதறிக்கிடக்கும் பந்துகள் நமது காலடியில் நண்பர்களே...இம்மாதம் போல நண்பர்கள் தொடருற்சாகத்த பாய்ச்ச தீபாவளிக்கு ஸ்பைடருக்காய் காத்திருப்போம்

      Delete
  99. // எத்தனை நிமிடங்களாச்சு இதை முழுசாய்ப் படிக்க folks ? //
    30 நிமிடங்கள் சார்...

    ReplyDelete