Powered By Blogger

Sunday, April 17, 2016

ஒரு கதை (பி)(ப)டிக்கும் திருவிழா !

நண்பர்களே,
            
வணக்கம். தலைதெறிக்கும் வேகத்தில் என் வண்டி பறந்து கொண்டிருக்கிறது........! திடீரென்று குறுக்கே பாய்கிறது 3 தும்பிக்கைகள் கொண்டதொரு யானை மாதிரியான சிகப்பு நிற விலங்கு! அப்படியே அந்தர்பல்டி அடித்த கையோடு வண்டியை ‘U’ டர்ன் அடித்தால் ஒரு காது மட்டும் கொண்டதொரு வெயிட்டான மொட்டைத் தலையன் எனக்கு வழியை மறித்துக் கொண்டு நிற்கிறான்! என்னிடமுள்ள துப்பாக்கியை உருவி ‘பட் பட்‘ என்று சுட்டால் பயல் சுக்குநூறாகிப் போகிறான்! பீதியில் பிடரி மயிர்கள் எழுந்து நிற்க நான் ஓட்டமெடுத்தால் – ஹெல்மெட் அணிந்ததொரு மண்டையோட்டு ஆசாமி, கூரிய, நீள நகங்களோடு என்னை முறைத்துக் கொண்டு நிற்கிறான்! இறால் மீன் வடிவத்தில் ஒரு விண்கலம் அவனுக்குப் பக்கத்தில் ‘பார்க்கிங்‘ செய்யப்பட்டிருக்க – அதற்குள் பதுங்கிட வேக வேகமாய் முயற்சிக்கிறேன் ; ஆனால் திடீரென்று அதன் அலாரம் "ற்ற்ர்ரிங்க்க்க்க்க்" என்று கூப்பாடு போடத் தொடங்குகிறது ! வேர்த்து விறுவிறுத்துப் போய் நிற்கிறேன் நான்,,,,,,! நெற்றியை பதட்டத்தோடு தேய்த்தால் கையில் படுவது எனது வியர்வை ! 

‘படக்‘கென்று எழுந்து உட்காரும் போது என் தலைமாட்டிலுள்ள செல்போன் ‘ட்ரிங்ங்ங்‘ என்று ராகம் பாடிக் கொண்டிருக்கிறது! மின்வெட்டு காரணமாய் வீடே நிசப்தமாயிருக்க – இத்தனை நேரம் நான் கண்டது எல்லாமே ஒரு multicolor கனவு தான் என்பது மெதுமெதுவாய் புரிகிறது! என்னோடே சேர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்த லேப்டாப்பைத் தட்டியெழுப்பினால் – முந்தைய இரவு நான் படித்துக் கொண்டிருந்த சில பல கதைகளின் டிஜிட்டல் ஃபைல்கள் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டுகின்றன! ‘ஆகா... புதுசாய் கதை தேடுகிறேன் பேர்வழி‘ – என்ற வேகத்தில் நேற்றிரவு படித்த science-fiction கதைகள் தான் தூக்கத்திலும் என்னைப் பிறாண்டி எடுத்துள்ளன என்பது புரிகிறது! மெதுமெதுவாய் காலையும், பிரக்ஞையும் புலர – என் முகத்திலும் ஒரு இளிப்பு மலர்கிறது! ஒவ்வொரு வருஷமும் எனக்குக் கிட்டிடும் ஒரு பிரத்யேகக் ‘காமிக்ஸ் வாசிப்புத் திருவிழா‘ இம்முறை சற்று சீக்கிரமே துவங்கி விட்ட சந்தோஷத்தின் பலன் தான் அந்த இளிப்பு!

வழக்கமாய் ஆகஸ்டில் இந்தத் தேடல்களைத் துவக்கி, ஆகஸ்ட் & செப்டம்பரில் சிக்கிய கதைகளையெல்லாம் வாசிப்பது வழக்கம். ஆனால் இம்முறையோ சகலத்திலும் சற்றே வேகம் என்பதால் – காத்திருக்கும் காலங்களுக்கான புதுத் தேடல்களையும் சீக்கிரமே தொடங்கி விட்டோம் ! And எனது நாற்காலியை ஆக்கிரமிக்க ஆண்டில் அற்புதமான காலகட்டமே இது தான்! ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு batch இதழ்களைத் தயாரிப்பதெல்லாம் ஜாலியான, சலிப்புத்தரா பணிகளே; ஆனால் இந்தக் கதைத் தேடல்கள் பருவமானது – இரண்டு கைகளிலும் 2 குல்ஃபி ஐஸ்களை ஒரு நல்ல வெயில் நாளில் வைத்துக் கொண்டு – எதை முதலில் ருசிப்பது? என்ற சந்தோஷக் குழப்பத்திற்குள் ஆழ்வதற்குச் சமானமானது! 

Of course – நான் படிப்பதில் 5% கூட நடைமுறைக்கு வந்திடுமா என்பது ஐயமே; இறுதியில், உறுதியாகிடப் போகும்  நமது அட்டவணையில் - சிலபல அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களைப் போல், ‘லார்கோ; ஷெல்டன்; டெக்ஸ்; லக்கி; சிக்பில்; மார்டின் etc. etc.‘ என மூத்த நாயகர்களே உறுதிபட முதலில் இடம் பிடிக்கவும் போகிறார்கள் தான் ! ஆனால் என்றோவொரு தூரத்துப் பொழுதிலாவது முயற்சித்துப் பார்க்க புத்தம் புது genre-களை; கதைகளைத் ; தொடர்களைப் பரிசீலிப்பது ஒரு பரவசமான அனுபவமே! படைப்பாளிகளின் டிஜிட்டல் ஃபைல்களை நிர்வகிக்கும் பிரெஞ்சுப் பெண்மணி, ஆண்டின் இந்த சீஸன் வந்து விட்டாலே நம்மைக் கண்டால் குளிர் காய்ச்சலில் படுத்துவிடக் கூடிய நிலையில் தானிருப்பார்! இன்டர்நெட்டை உருட்டோ உருட்டென்று உருட்டி, ‘இந்த வருஷத்தில் வெளியான இந்தக் கதையின் ஃபைல் ப்ளீஸ்... அந்த மாமங்கத்தில் பிரசுரமான தொடரின் மாதிரி ப்ளீஸ் !‘ என்று அவர் குடலை அலசிடும் பணி தான் முதல் கட்டம்! அவரும் சளைக்காமல் ‘டொய்ங்... டொய்ங்‘ என டிஜிட்டல் ஃபைல்களை மின்னஞ்சலில் தட்டி விட- Operation கு.அ.வின் இரண்டாம் கட்டம் துவங்கிடும் - ஜூனியர் எடிட்டரின்  முயற்சிளால் நமக்குக் கிட்டியிருக்கும் ஒரு பிரஞ்சு காமிக்ஸ் ஆர்வலரின் கதவைத் தட்டுவது மூலமாக! இவரொரு பெல்ஜியப் பொதுநூலகத்தின் 40 ஆண்டு அனுபவம் கொண்ட தலைமை நிர்வாகி; எந்தவொரு காமிக்ஸ் தொடர் பற்றிய அபிப்பிராயக் கோரலை முன்வைத்தாலும் – இரண்டே நாட்களில் அதனைத் தேடிப் பிடித்து, படித்து, அதன் கதைச்சுருக்கம் + அவரது பார்வையில் சாதக / பாதகங்கள் என சகலத்தையும் போட்டுத் தாக்கி விடுவார்! So நமக்கு எந்தத் தொடரில் ஆர்வமுள்ளதோ – அதற்கான review-களை வரவழைப்பதோடு step 2 நிறைவாகிடும்! மூன்றாவது step – அந்த review ஐ ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பிரெஞ்சின் ஒரிஜினல் பக்கங்களை கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டே கதையோட்டத்தை மெதுமெதுவாய் புரிந்து கொள்ள முயற்சிப்பது! ‘ஓஹோ... இந்தப் புள்ள தான் இந்தக் கதையில் மையமோ...? அட... ஆமா... அந்த சிப்பாய்க்கு அடைக்கலம் தரும் சீன் வருதே... சரி... சரி... க்ளைமேக்சில் அதிரடியாய் என்ட்ரி தரும் தடிப்பயல் இவன் தானோ? என்று யானையைத் தடவிப் பார்க்கும் பணியை ராவும், பகலும் செய்திடுவேன்! சில அதிர்ஷ்ட வேளைகளில் அந்தத் தொடர் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஆங்கிலத்தில் எப்போதாவது வெளியாகியிருக்கும் பட்சத்தில், படைப்பாளிகளே அந்தப் பதிப்பின் ஆங்கில pdf ஃபைல்களை அனுப்பி வைத்து என் கேசத்தைக் கொஞ்சமாய் காப்பாற்றிட உதவிடுவார்கள்! ஆங்கிலப் பக்கங்களை ‘கட கட‘ வென்று பிரிண்ட் அவுட் போட்டு, ஸ்பைரலும் போட்டு வாங்கிப் படித்துப் பார்ப்பது சுலபமாகயிருக்கும்! So ஏதோவொரு விதத்தில் கதைகளை உருட்டோ உருட்டென்று உருட்டி முடித்திடும் போது, சில பல நவரச பாவங்கள் முகத்தில் தாண்டவமாடுவதுண்டு! ‘ஓப்பனிங்லாம் நல்லாத்தானிருக்கு... ஆனாக்கா பின்னே சொதப்புதே!‘ என்ற குழப்பம்; ‘ஐயே... இந்த அடல்ட்ஸ் ஒன்லி ரகங்கள் கத்திரிக்கு அப்பாற்பட்ட விஷயம்; வேலைக்கே ஆகாதுடோய்!‘ என்ற மோன நிலை; ‘ஆகா... இதைத் தமிழாக்கத்தில் சேதாரமின்றிக் கரை சேர்க்க முடியுமா?‘ என்ற மௌன மலைப்பு ; ‘ஹைய்... இதை நம்ம தலீவரும், மடிப்பாக்கத்தாரும்... மக்கன் பேடாக்காரரும் படிக்க நேரிட்டால் என்ன ரியாக்ஷன் காட்டுவார்கள்?‘ என்ற கற்பனைக் குஷி ; ‘அடடா... ஏற்கனவே இதே genre-க்கென கதைகள் நமது அட்டவணையில் இடம் பிடித்திருக்க, புதுசாய் இதை நுழைக்க இடமில்லையே?! என்ற ஆதங்கம் – என டிசைன் டிசைனாய் சிந்தனைகள் தலைக்குள் சடுகுடு ஆடிடும்!

ஆனால் நான் shortlist செய்திடும் கதைகளும், தொடர்களும் ஒரு பிரத்யேக folder -ல் தஞ்சம் காண்பதுண்டு! ஒரு இடைவெளிக்குப் பின்னே புதிதாய் ஏதேனும் முயற்சிக்கும் தருணம் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் அந்த folder-க்குள் ஐக்கியமாகிடுவது எனது ஆதர்ஷப் பொழுதுபோக்கு! தற்போது அதனில் இடம்பிடித்திருப்பவை ஏகப்பட்ட புதுப்புதுத் தொடர்கள்; கதை பாணிகளின் பிரதிநிதிகள்! The Incal; Metabarons போன்ற டாப் science fiction கதைகள்; Fantasy கதைகள்; வன்மையான களத்திலும் மென்மையான உணர்வுகள் கொண்ட ரொமான்ஸ் கதைகள்; புத்தம்புதிய கௌபாய் கதைகள் (!!!); ஹாரர் கதைகள்; சமகால உலக நிகழ்வுகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர்கள்; ஒரேவிதக் கதைக்கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு சங்கிலித்தொடர் கதைகள் என்று எக்கசக்க சமாச்சாரங்கள் உள்ளன அந்த folder –ல்! ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?‘ ; ‘சந்தா Z-ஐ இறக்கி விடலாமே?‘ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ், கோவில் திருவிழாக்களின் லவுட் ஸ்பீக்கர்களை விடவும் சத்தமாய் ஒலிப்பது கேட்கிறது! And தரையிலேயே நிலைகொண்டிருக்கும் கட்டைவிரல் கூட ‘நான் ரெடி... ரெடி...‘ என்று கூவுவதும் கேட்கிறது..................!

அதே சமயம் சில நடைமுறைச் சிக்கல்களும் நம் முன்னே புஜங்களை மடக்கிக் காட்டி வருவதால் கொஞ்சம் நிதானத்தை நாட வேண்டி வருகிறது! இது பழைய பல்லவியே தான் என்றாலும், இம்முறை நிலைமை கவனத்தைக் கோரும் நிலையைத் தொட்டு நிற்பதால் அதைக் கொஞ்சம் விபரமாய் சொல்லிட நினைக்கிறேன் ! நமது டைட்டில்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே போக- இடநெருக்கடியில் நமது கிட்டங்கி தடுமாறும் தருணமிது! மாதம்தோறும் ஒவ்வொரு இதழிலும் நாம் அச்சிடுவது 100 பிரதிகள் எனில்  -அந்தந்த மாதங்களில் சந்தா...ஆன்லைனில்...கடைகளில்...முகவர்கள் வாயிலாக - என நாம் விற்பது 40 பிரதிகளே ! பாக்கி 60 பிரதிகள் நம் கையில் ஸ்டாக்காகத் தான் துயில்பயில்கின்றன ! இவற்றுள் ஒரு சொற்ப அளவிலான வெளியீடுகள் குறைந்த பட்சம் பன்னிரண்டு மாதங்ககளிலும், மீதம் சுமார் 36 மாதங்களிலும்  தான் காலியாகின்றன ! So மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் போது – நமது கிட்டங்கிவாசிகளின் ஜனத்தொகை, முயல்களின் இனப்பெருக்கத்தை விடவும் வேகமாய் கூடி வருவது கண்கூடு! அவற்றைச் சுமக்கும் வலு நமக்கிருக்கிறதா- இல்லையா? என்பதெல்லாம் அடுத்த பட்சச் சிந்தனைகள்; தற்சமயத் தள்ளாட்டமெல்லாமே – இட நெருக்கடி சார்ந்ததே! இதற்கொரு உருப்படியான தீர்வை நான் நிர்ணயிக்காது – புதுசு புதுசாய் இதழ்களைக் களமிறக்கிச் செல்வது குடாக்குத்தனம் என்பதால் சந்தா Z-ஐ தற்காலிகமாய் hold-ல் போட்டு வைத்துள்ளேன்!

And நமது விற்பனை பாணிகள் இதே போல் தொடரும் பட்சத்தில் இந்த இடப் பிரச்சனை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தலைதூக்கிக்கொண்டே செல்லும் என்பதும் புரிவதால் – நமக்கிருக்கும் ஒரே தீர்வு – print run-ஐக் கணிசமாய் குறைப்பதே என்பது நிதர்சனமாய் புரிகிறது! 40 தான் மாதந்தோறும் விற்குமெனில் அச்சிடுவதை 60-ல் நிறுத்திக் கொண்டால் அது பரணிலும்; பணத்திலும் படுத்தி எடுக்காதல்லவா? குட்டிகளை வயிற்றிலேயே சுமந்து திரியும் கங்காரூவைப் போலச் சுற்றித் திரிவதை சிறுகச் சிறுக மாற்றிட நமக்கு சாத்தியமானால் – இரண்டு, மூன்று வருட ஸ்டாக் என்ற நோவுகள் நம்மைப் பீடிக்காது! நிஜத்தைச் சொல்வதானால் கீழ்க்கண்ட நால்வரே நமது life savers!

- லக்கி லூக்
- டெக்ஸ் வில்லர்
- இரும்புக்கை மாயாவி
- டேஞ்சர் டயபாலிக்

வெளியான 12 மாதங்களுக்குள் ஸ்டாக் தீர்ந்து போவது இந்த 4 நாயகர்களின் இதழ்கள் மட்டுமே - இதுவரையிலாவது ! லார்கோ; ஷெல்டன்; XIII உள்பட பாக்கி டாப் நாயகர்கள் கூட ஆரம்ப ஆரவாரத்துக்குப் பின்பாய் சற்றே slow தான் விற்பனையில்! So இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களில் நமது விற்பனை எண்ணிக்கையை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிடச் செய்திட முயற்சிப்போம்! இப்போது கூட பிரபல சூப்பர் மார்கெட் சங்கிலி ஒன்றில் நமது இதழ்களை ரெகுலராய் – நேரடியாய் விநியோகம் செய்திட முயற்சித்து வருகிறோம். இதற்கென பிரத்யேகமாய் புத்தக ராக்குகள் செய்தெல்லாம் தயாராகி வருகிறோம்! அவர்களின் இறுதி ஒப்புதல் மட்டும் கிட்டிவிட்டால் - அந்தச் சங்கிலிகள் சகலத்திலும் நமது பிரத்யேக புத்தக ராக் நின்றிடும் - நமது இதழ்களைத் தாங்கிக் கொண்டு ! இது வெற்றியாகிடும் பட்சத்தில் நிச்சயமாய் நமது visibility நிறையவும்; விற்பனைகள் கொஞ்சமேனும் கூடிடுமென்று ஆர்வமாய் எதிர்பார்க்கிறோம்! So 2016-ன் இறுதிக்குள் நமது விற்பனைமுகம் ஏற்றம் கண்டிடும் பட்சத்தில் இதே printrun-ல் தொடர்ந்திடலாம்! அது சிரமமாகிடும் பட்சத்தில் – அச்சின் எண்ணிக்கையில் கத்திரி தவிர்க்க இயலாததாகிப் போய் விடும்!

And printrun தென்னையில் தேள் கொட்டினால் – விலையென்ற பனைமரத்தில் நெரி கட்டும் தானே?! தற்போதைய ரூ.65/- விலைகளைக் குறைந்தபட்சமாய் ரூ.75-க்குக் கொண்டு செல்ல அவசியமாகிடும்! ‘அய்ய்...ஜூப்பர் !!... அங்கே சுத்தி... இங்கே சுத்தி – கடைசியில் விலையிலே கைவைக்கிற திட்டத்துக்குத் தான் இத்தனை பில்டப்பா ?‘ என்று நிச்சயமாய் சிலபல வாட்சப் பரிமாற்றங்களை இது கொண்டு வருமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை ; ஆனால் அடுத்த முறை சிவகாசி வரும் நண்பர்கள் நமது குடவுனை ஒரே ஒரு முறை பார்வையிட்டால் என் சிந்தனைகளின் வ(லி)ழித்தடம் என்னவென்பது நிச்சயமாய்ப் புரியும் ! So இது தான் இன்றைய யதார்த்தம்!

ஆனால் இதற்காக நம் கால்களுக்கு நாமே, ஒரேயடியாகக் கட்டுக்கள் போட்டுக் கொள்வதோ; இந்த வட்டமே போதுமென்று நமக்கு நாமே சிந்தனைச் சிக்கனத்தை விதைத்துக் கொள்ளவோ போவதில்லை ! அழகாய் – வண்ணத்தில் மறுபதிப்புக் காண ஒரு வண்டி absolute classics ஒரு பக்கம் காத்திருக்க ; அட்டகாசமாய் களம் காணக்கூடிய புது genre-கள் இன்னொரு பக்கம் என்று லைனில் நிற்க – இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சின்னதொரு ஐடியா எனக்குள்ளே துளிர்விட்டுள்ளது! அதனை நமது அடுத்த சந்திப்பின் போது விளக்கிடக் காத்துள்ளேன்! அந்த எண்ணமானது உங்களது thumbs up-களைப் பெற்றிடும் பட்சத்தில் – ரகளைகளைத் துவங்கிடலாம்! சந்தா Z கானல்நீராகிடாது என்பது உறுதி ! 

அதற்கு முன்பாக – ரொம்பச் சீக்கிரமே காத்திருக்கும் இன்னொரு மைல்கல்லைச் சிலாகிக்கவும் தயாராகிடுவோமா? Oh yes – அடுத்த நான்கோ-ஐந்தோ மாதங்களில் நமது ‘Two Million Hits’ தருணம் புலர்ந்து விடும் எனும் போது – அதற்கென எனக்குள் மேலோட்டமாய் சில சிந்தனைகள் ஓடிய வண்ணமுள்ளன! சென்ற முறையைப் போலவே இப்போதும் ஒரு ஸ்பெஷல் இதழ் தயாரிப்பதாயின் - கீழ்க்கண்டவையே எனது choices ஆக இருந்திடும் :
  • புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)?
  • ஒரு மெல்லிய ரோமான்ஸ் ஸ்பெஷல்?
  • லக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest?
  • ஒன் ஷாட் கிராபிக் நாவல்?
  • புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்?
  • தோர்கல் ஸ்பெஷல்?

உங்கள் ஓட்டுக்கள் எந்தத் தேர்வுக்கு இருந்திடுமென்று அறிய ஆவல் guys! 2 மில்லியன் ஹிட்சில் ஒரு அரை மில்லியனுக்காவது உபயதாரரான ஸ்டீல்க்ளா – "இரத்தப்படலப் புரட்சிப் பாடலையும்" ; இளவரசியணி – ‘வண்ணத்தில் அம்மணி‘ என்ற கானத்தையும் எடுத்து விடப் போவது நிச்சயம்; ஆனால் sorry – மேலே நான் கொடுத்துள்ள question paper-லிருந்து மட்டுமே பதில்களைத் தேர்வு செய்தாக வேண்டும் என்பது தான் நமது விதிமுறை! So வினாத்தாளைத் தாண்டிய பதில்கள் வேண்டாமே- ப்ளீஸ்?! இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதாயின் - what would be your choice ?

இனி மே மாதத்து இதழ்கள் மீதான பார்வைகளைப் பதிக்க ஆரம்பிப்போமா ? “பாலைவனத்தில் பிணைக்கைதி“ இந்தாண்டில் இரண்டாவது one-shot ஷெல்டன் சாகஸம்! And- கதாசிரியர் வான் ஹாம்மே மீண்டும் பொறுப்பேற்ற பிற்பாடு உருவான இரண்டாவது கதையும் கூட இது! எப்போதும் போலப் பட்டாசாய் பரபரக்கும் ஷெல்டனின் ஒரு உட்பக்கப் preview இதோ! எப்போதும் போலவே ஓவியர் க்ரிஸ்டியன் டினாயெர் டிரக்குகளையும் வண்டிகளையும் தூள் கிளப்புவதை இம்முறையும் பார்த்திடலாம்! மனுஷனின் 4 சக்கரக் காதல் அட்டகாசமாய்த் தொடர்கிறது!
And ஷெல்டனின் பட்டாசுக்கு இதமான மாற்றாய் நமது blue brigade இன்னொரு பக்கம் அணி திரண்டு வருகிறது! போன மாதம் இந்த ஸ்மர்ஃப் கதையின் பணிகளின் புண்ணியத்தில் எனது நாட்கள் ஜிலீரென்று இருந்தனவென்றால் இம்மாதம் திருவாளர் ரின்டின்கேனார் எனக்குச் சிரிப்புத் துணையாக நின்று வருகிறார்! ஷப்பா... அடிக்கும் வெயிலுக்கு நமது கார்ட்டூன் ஆசாமிகள் மட்டும் இல்லையெனில் – வடிவேல் பாஷையில் சொல்வதானால் ‘கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும்‘ போல் படுகிறது! ‘சாப்பாடே ஜென்ப சாபல்யத்திற்கு வழி!‘ என்று வலம் வரும் ரி.டி.கே. அடிக்கும் கூத்துக்கள் என் ஞாயிறுக்கு சுகமான துணை! உங்களின் ஞாயிறுகளுக்கு நமது MILLION & MORE Hits ஸ்பெஷல் பற்றிய சிந்தனைகள் துணையிருந்தால் அட்டகாசமாகயிருக்கும்! So சிந்தனைகளை சிறகடிக்க அனுமதியுங்களேன் folks! மீண்டும் சந்திப்போம்! அது வரை have a lovely Sunday & a great week ahead!

P.S : சந்தா நண்பர்களுள் இன்னமும் 60% தங்கள் T-ஷர்ட் அளவுகளைச் சொல்லவில்லை - அவசரமாய் இந்த விபரம்  தேவை ப்ளீஸ் !!!! 
தயை கூர்ந்து இங்கே அதனைக் குறிப்பிடாது - ஒரு மின்னஞ்சல் தட்டி விடக் கோருகிறேன் ! 
                               எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி
     பிரவீணா & பிரதிக்ஷா - நண்பர் திருச்செல்வம் பிரபானந்தின் புதல்வியர் ! 


                                                              SuryanTex Suresh Chand


                                                          VS பிரபுவின் புதல்வி ! 
                                                              சத்யா, காங்கேயம் 


                                                             Abhisheg Gnanasekaram


                                                 Baskaran.Hari .Srithika. Bangalore


                                         Rex Kuppusamy, Andaman


                                            Jr.Joseph Jayachandran

350 comments:

  1. I AM 3rd. Good morning to all & good morning to ed

    ReplyDelete
  2. வணக்கம் எடிட்டர் சார்....!
    வணக்கம் நண்பர்களே....!

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. மீண்டும் Top 10 ல்

    ReplyDelete
  5. புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)?
    டெக்ஸ் டைகர் களை பார்த்து சில சமயம் சலிப்பு தட்டுபேது புதியதாய் ஒரு கௌபாய் இருந்தா நல்லா இருக்கும்னு மனசு கேக்கும்
    இப்போ உங்களையும் கேக்க வச்சிடுக்கு
    புதிய கௌபாய் ஸ்பெசலுக்கு முழு ஆதரவு ஆசிரியரைய்யா

    ஒரு மெல்லிய ரோமான்ஸ் ஸ்பெஷல்?
    ஏற்கனவே ரொமான்ஸௌ பார்தாச்சே
    இது வேணாம் ஆசிரியரே இவை பரண்பார்க்கும் படலமாகிடபோகுது

    லக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest?
    ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என் குழந்தைகளுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் மிக சந்தோசத்தைக் கொடுக்கும்

    ஒன் ஷாட் கிராபிக் நாவல்?
    வேண்டாமே மறுபடியுமொரு விசப்பரிட்சை

    புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்?
    வெளியிடலாம்
    குறைந்த விலையில்
    பள்ளி சிறுவர்களை நிச்சயம் ஈர்க்கும்

    தோர்கல் ஸ்பெஷல்
    எப்போ போடபோறிங்ங்க ஆவலோடு காத்திருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. புதிய கெளபாய் இப்படி ஒன்று உண்டல்லவா...வந்தா நல்லா இருக்குமோ

      Delete
  6. அனைவருக்கும் வணக்கம். ஸ்பெஷல் இதழ் புதுகௌபாய் இதழாக வெளியிடலாம். Print runல் விலை சற்று கூடினாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  7. ஸ்பெஷல் இதழ் குண்டு புத்தமாக வந்தால் மிக்க மகிழ்வோம்

    ReplyDelete
  8. அடடே...அடடே...அடடே...!
    மூத்த நாயகர்களின் முதல் நிலை வரிசைப்பட்டியலில் மார்ட்டினும் இடம் பிடித்திருக்கிறாரா...?

    சூப்பரான செய்தியாச்சே இது...!

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம். ஸ்பெஷல் இதழ் புதுகௌபாய் இதழாக வெளியிடலாம். Print runல் விலை சற்று கூடினாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  10. ஒரு மெல்லிய ரோமான்ஸ் ஸ்பெஷல்
    ஒன் ஷாட் கிராபிக் நாவல்
    புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்

    ReplyDelete
  11. \\ஒரு மெல்லிய ரொமான்ஸ் ஸ்பெஷல் //

    கி.நா.என்ற பெயரைக்கேட்டாலும் எழும் பீதியானது,இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்து வருகிறது.இந்த நிலைமையில் புதுசாய் இன்னுமொரு பீதியைக்கிளப்புகிறீர்களே....?

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : நமது commercial வட்டத்தைத் தாண்டிக் கிடக்கும் புதையல்களைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கிறேன் ! நீங்கள் என்னவெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்களென்று நான் இந்தத் தருணத்தில் பட்டியலிட முனைந்தால் இந்த இரவு பற்றாது !

      ஒரு வேளை புலராது போகாது - நாம் அனைவருமே ஒன்றாய் இணைந்து புது ரசனைகளையும் ரசிப்பதற்கு !

      Delete
    2. பாஸு!
      புதுசா மெதுவா பழக ரெகுலர் இதழ் ஓகே !

      ஸ்பெஷல்ல வேண்டாம் பரிசோதனை என்பது என் தாழ்மையான கருத்து!

      Delete
  12. 2 மில்லியன் ஹிட்சில் மாடஸ்டிக்கு 33 பக்கங்களாவது ஒதுக்க கூடாதா? சபையில் இருந்து ஒரு வாரம் வெளிநடப்பு செய்வதற்காக சங்கத்தை கூட்டி ஆலோசிக்கப் படும்.இந்த முக்கியமான நீகழ்வில் மாடஸ்டியின் பங்கும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ravanan iniyan : அளவில்...கதையமைப்பில், சித்திர பாணிகளில், வர்ணமின்மையில் - இளவரசியார் ரெகுலர் கதை பாணிகளிலிருந்து நிறையவே முரண்பட்டு நிற்கிறார் எனும் போது கூட்டணிகள் சாத்தியமாகாதே ! And அது என்ன 33 பக்கக் கணக்கு ?

      Delete
    2. கூட்டி கழிச்சு பாருங்க சார்... கணக்கு சரியா வரும்...

      Delete
    3. 33% மகளீர்களுக்கான தமிழக அரசின் இட ஒதுக்கீடு சார்.!

      Delete
  13. சந்தா Z hold-ல் உள்ளபடியால் Two million hits-க்கு என் தேர்வு தோர்கல்...தோர்கல்...தோர்கல் மட்டும்தான். அதுதான் நியாயமும் கூட...!
    வண்ணத்தில் மாடஸ்டி டைஜஸ்ட் கேட்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்...!அதற்க்குத்தான் வழியே இல்லாது செய்துவிட்டீர்களே...?

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : //வண்ணத்தில் மாடஸ்டி டைஜஸ்ட் கேட்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்...!அதற்க்குத்தான் வழியே இல்லாது செய்துவிட்டீர்களே...?//

      காதோரம் நிறைய தக்காளிச் சட்னியைப் பார்த்த அனுபவம் நண்பரே ? !

      Delete
    2. ஜேடர்பாளையத்தாரே !

      நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.!

      Delete
    3. //காதோரம் நிறைய தக்காளிச் சட்னியைப் பார்த்த அனுபவம் நண்பரே ? ! //

      உங்களுக்குமா ஆசிரியரே

      Delete
  14. My vote for: புதியதொரு கௌபாய் ஸ்பஷல்!

    ReplyDelete
  15. வணக்கம் சார் வணக்கம் நண்பர்களே....
    நள்ளிரவு நாயகர்கள் அனைவரும் ஆஜரா ???

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : ஒரு ரவுண்ட் தூங்கி விட்டு ப்ரெஷாக எழுந்து வந்துள்ளது போல் தோன்றுகிறதே ?!

      Delete
    2. ஒரு ரவுண்ட் தூங்குவதா ...சான்சே இல்லை சார் ...அடிக்கிற 106டிகிரி அணலில் நள்ளிரவு வரை எலக்சன் செய்திகள் , விடிகாலை 3மணிக்கு தான் காற்று கொஞ்சம் குளிர ஆரம்பிக்கும் போது சற்றே கண்ணயர இயலும் சார் ...

      மரங்கள் வெட்டிதள்ளியதற்கும் ,ப்ளாஸ்டிக் உபயோகித்து புவியை சூடேற்றிய குற்றத்திற்காகவும்,அதீத AC களை போட்டு ஓசோனில் ஓட்டை போட்டதற்கும்,பக்கத்து ரூமுக்கு போக கூட வண்டியை உபயோகித்து கார்பன் மொனாக்சைடை அதீதமான அளவில் வெளியிட்டதற்காகவும்....இன்னும் பலபடித்தான பொறுப்பற்ற தனத்துக்கும் உண்டான விலையை இப்போதே கொடுக்க துவங்கி விட்டோம் போல சார் ....

      இப்போதெல்லாம் மறுவாசிப்பு ஒன்றே நிஜ ஆந்தையார் அலறும் வரை துணை சார் ...

      Delete
  16. தோர்கல் ஸ்பெஷல்!!!!!!!

    ReplyDelete
  17. மகளிர் இடஒதுக்கீடு 33% சார்

    ReplyDelete
    Replies
    1. ravanan iniyan : இதயத்தில் இடம் கொடுத்தால் போச்சு !

      Delete
    2. ஐயையோ சார்...!
      தயவு செய்து அப்படி மட்டும் சொல்லாதீங்க...? வருஷத்துக்கு ஒன்னோ, ரெண்டோவாவது கொடுங்க..?
      (அடக்கடவுளே...! இளவரசிய வண்ணத்துல கேட்டா,முதலுக்கே மோசமாய்டும் போலிருக்கே..?)

      Delete
  18. எடிட்டர் சார்....!
    விற்பனை முனையில் சாதித்த நால்வருள் டயபாலிக்கும் ஒருவர் எனும் போது,அவருக்கு வாய்ப்புகள் வழங்காது ஓரம் கட்டியது ஏனோ...?

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : Simple.....! நிறையப் பேர் வாங்கிச் சென்றதால் கிட்டங்கிகள் காலியாகின...! வாங்கிச் சென்றவர்களுள் நிறையப் பேர் கழுவிக் கழுவி ஊற்றியதால் அட்டவணையிலிருந்து அவரே காலியாகி விட்டார் !

      Delete
    2. ஹ்ம்ம்...! இனி டயபாலிக்கதைகளை படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் போலிருக்கே...?

      Delete
    3. மதுவிலக்கு நாட்டுக்கு அவசியம் ...
      டயபாலிக் விலக்கு லயனுக்கு அத்தியாவசியம்...

      Delete
    4. சேலம் டெக்ஸ் :டயபாலிக்கின் முதல் இரண்டு கதைகள் சிறப்பாகவே இருந்தன.அவற்றின் சித்திரங்களும்,கதை சொன்ன விதமும் கொஞ்சம் புதுமையாகத்தான் இருந்தன.ஆனால் நித்தமும் குற்றம் கதைதான் படுத்திவிட்டது.டயபாலிக்கின் மேலிருந்த அபிமானம் கரைந்து போய்விட்டது....!

      Delete
    5. // நித்தமும் குற்றமும் கதைதான். //


      உண்மைதான் சார்.!அருமையான ஓவியங்கள் என்று தரமான விஷயங்கள் நிறைய இருந்தும்.நல்ல கான்ஷெப்ட் இல்லாததால் குப்பையில் எறியவேண்டிய கதையாகிவிட்டது.!

      Delete
    6. நல்லவர்களயும் போட்டுத்தள்ளும் டயபாலிக்கால் வந்ததே...
      சார் கிங் கதய சொல்லிடலாமே.....

      Delete
    7. Steel claw உங்க idea super,,,
      என்னல் எற்று கோள்ள முடியவில்லை டயபாலிக் ரசிகனக
      3)கதையும்மே எனக்கு பிடித்திறுந்தது முக்கியமாக operation சூறவளி இன்பேக்டா்கே help செய்யும் கதை நிறைய twist நிறைந்த கதை so plese chance அடுத்த year

      Delete
    8. எனக்கும் கதை பிடித்தது நண்பரே....நமது ஆட்கள் அதிகம் மனிதாபிமானத்தை எதிர் பார்ப்பவர்களே கதையிலாவது..அதான் பிரச்சினயே..கடசியா வந்த கத வராதிருந்தால் டயபாலிக் சக்கரமும் நம்மோட உருண்டிருக்கும்...அதிலும் நினைத்து பார்த்து கதய நகர்த்தி செல்லும் டயபாலிக்கும் ..ஓவியமும் அடடா...இப்போது ஆசிரியர் கதை புதயலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதால் நல்லதே விளைவதால் இது இழப்பாக படவில்லை...தொட்டதெல்லாம் தங்கமாகும் போது தங்கமே மறந்து விட்டது..

      Delete
  19. எடிட்டர் பாஸு,

    இருக்கற இட நெருக்கடில கைய கடிக்காம இருக்க இந்த ரெண்டுல ஒன்னுதான் safe bet நு எனக்கு படுது!

    புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்?
    அல்லது
    புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)?

    ReplyDelete
    Replies
    1. எஸ் பாஸ்!
      நானும் நம்ம ஈரோடு விஜய் மாதிரி தான்
      மறு வாசிப்புக்கு first சாய்ஸ் :

      1) கார்ட்டூன் ஸ்பெஷல்
      2) தல

      சோ work out ஆகும்னு நெனைக்கறேன் :-)

      Delete
  20. இதுவும் முயற்சிக்காலம்!

    லக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest?

    ஆனா பெரும்பாலான நண்பர்கள் கிட்ட இது இருக்க கூடிய சாத்தியகூறுகள் அதிகம் !

    ReplyDelete
  21. விழித்திருந்து நீங்கள் பதிலளிக்கும் உற்சாகத்தைப் பார்த்தால், புதிதாக எக்கச்சக்க கதைகளை படித்து, பிடித்து வைத்திருப்பதாக தெரிகிறதே சார்?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : குறைந்த பட்சமாய் ஒரு 10 படங்கள் எடுக்க தற்போது என்னிடம் கதை ரெடி என்று சொல்வேன் !! பணம் போட நண்பர்களுள் யாரேனும் தயாராக இருந்தால் - ஷூட்டிங் கிளம்பிவிடலாம் !!

      ஹீரோவாக நடிக்க யாரெல்லாம் ரெடி ?

      Delete
    2. நம் பிளாக்கின் ஆணழகன் பூனையார் நிக்கோலா பின்னே போய்வுட்டதால் ,இங்கி பிங்கி பாங்கி போட்டு விடலாம் சார் ....

      Delete
    3. எடி சார் எங்களை வச்சு காமடி கீமடி பண்ணலையே.

      Delete
    4. மாடஸ்டி படம் எடுத்தால் கார்வின் ஆக நடிக்க நான் ரெடி சார் .

      Delete
  22. எடிட்டர் சார்...!
    தங்களின் புதுக்கதைத்தேடல்கள் கௌ பாய்,கார்ட்டூன்,ரொமான்ஸ்(??!!),சமகால ஆக்ஷன் கதைகள்,சைன்ஸ் ஃபிக்ஷன் என பல திசைகளில் றெக்கை கட்டி பறப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.ஆனால் களமிறக்கும்போது நாம் இதுவரை கையாளாத சைன்ஸ ஃபிக்ஷன் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே...! கௌ பாய்,கார்ட்டூன் எல்லாம் ஏற்கனவே நாமறிந்த சுவைகள்தானே..?
    புதுசாய் களமிறங்குவது புத்தம்புது தினுசாய் இருந்தால் அட்டகாசமாய் இருக்குமில்லையா....?

    ReplyDelete
  23. வலைப்பதிவினூடாகவே, வழமையான நாயகர்களுக்கான கதைகள் தொடர்பான கருத்தாடல்கள் மட்டுமல்லாமல், புதிய அறிமுகங்களுக்கான தேடல்கள் தொடர்பாகவும் அதிகளவில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அவை கதைத்தேர்வுகளில் உங்களுக்கு உதவியுமிருக்கலாம். எனவே, வலைப்பதிவு hitsக்கு நியாயம் செய்ய வேண்டுமெனில், புதியதொரு கதைத்தேர்வே பொருத்தமாக இருக்கும். ரீ பிரிண்ட்களோ, ஏற்கனவே நமது காமிக்ஸ்களில் வெளியாகிவரும் தொடர்கள் வேண்டாமே?

    ReplyDelete
  24. முதல் வீட்டு ஓட்டு: புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)?

    புதிய வீட்டு ஓட்டு :தோர்கல் ஸ்பெசல் ...(ஆரிசியாவை பார்க்கலனா இந்த துர்முகி ஆண்டு சாபல்யம் அடையாது சார் )

    ReplyDelete
  25. எனது விருப்பம் புதிய கௌபாய் ஸ்பெஷல் இல்லையெனில் சுஸ்கி விஸ்கி மீள்வரவு

    ReplyDelete
  26. தோர்கல் ஸ்பெஷல் என் தேர்வு

    ReplyDelete
  27. புதிய கெளபாய் கதைகள்...!
    இதுவரை வந்த கெளபாய் கதைகள் அனைத்துமே சோடை போனதில்லை..
    ஆகவே..,வரவேற்கிறேன்..!
    (பெளன்சா் போன்றதொரு தொடா் உள்ளதென்று சொல்வலியிருந்தீா்களே...??!!)

    ReplyDelete
  28. ரொமான்ஸ்....??????!!!!
    ம்ஹூம்!

    ReplyDelete
  29. லக்கியின் மறுபதிப்பு...!
    (ஏற்கெனவே வந்து கொண்டு தானே இருக்கிறது..அவ்வப்போது..!!)

    ReplyDelete
  30. காலை வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  31. Godowni konjam virivu paduthi kondu nadaimurai paduthungal sir.eppothum jaikra kuthirai meethuthan panthayam kattanum.antha kuthirai thala than pathukonga aama.

    ReplyDelete
  32. கிராபிக் நாவல்!!
    ஹாரா்,அமானுஷ்யம்...இப்படி இருக்கலாம்! மீண்டும் திகில் காமிக்ஸை மறு பிரவேசம் செய்தது போலவும் இருக்கும்..!

    ReplyDelete
  33. பதிய காா்ட்டூன்கள்..!
    அருமை..! ஆனால் அவைகள் முழுக்க,முழுக்க குழந்தைகளை கவரும் விதமாக இருத்தல் நலம்! லக்கி லூக், ஸ்மா்ப்ஸ்,ரின் டின் கேன் தவிர குழந்தைகளைக் கவரும் காா்ட்டூன் தொடா்கள் நம்மில் இல்லை என்பதே உண்மை!
    (வால்ட்டிஷ்னியின் பாத்திரங்கள் நம்மோடு கை குலுக்க வாய்ப்பிருக்கிறதா சாா்..!!

    ReplyDelete
  34. தோா்கல்..!
    கேள்வி நேரப் பட்டியலில் தோா்கலை சோ்த்ததே மாபெரும் தவறு..!இதிலே தோா்கல் வேண்டுமா என்றொரு கேள்வி வேறு..!! சீக்கிரம் போட்டுத் தாக்குங்க...!!

    ReplyDelete
  35. விலையேற்றம்...!!
    தவிா்க்க முடியாதது தான்..! ஆனால் இந்த நிலை மாற விற்பனை உச்சத்தைத் தொட வேண்டும்..! தொட இறையை இறைஞ்சுவோம்..!!

    ReplyDelete
  36. காலை வணக்கம் நண்பர்களே!

    அதிகாலை கண்விழித்து
    அரைத் தூக்கத்தில் பதிவைப் படித்து
    அப்படியே கண்மூடி
    ஆதவன் சுடும்வரைஆவென்று தூங்கிப்போகும்
    அனுபவமே அலாதியானது தான்!
    அடடே... ஆச்சர்யக்குறி!

    Zzzzz...

    ReplyDelete
    Replies
    1. அரைத்தூக்கத்துலயே இவ்ளோ அருமையா கவிதை பாடுறீங்களே....?
      தூக்கம் தெளிஞ்ச பின்னாடி காவியமே பாடுவீங்க போல...!
      ம்ம்...கலக்குங்க..!

      Delete
    2. @ JSK

      /// அரைத் தூக்கத்துலயே இவ்வளவு அருமையா கவிதை பாடுறீங்களே....?///

      இதென்ன பிரமாதம்! இங்கே ஒருத்தர் அரைத் தூக்கத்துல ஒரு பதிவே போட்டுருக்காராம்... :D

      Delete
  37. சிந்தனைகளின் வ(லி)ழித்தடம்..!!!
    வலிக்கிறது சாா்!! எத்தனை யோசிப்பிற்குப் பின்பு இந்த வாா்த்தைப் பிரயோகம் நிகழ்ந்திருக்கும்..!இதுவும் கடந்து போகட்டும்!

    ReplyDelete
  38. நீண்ட நாட்களுக்குப் பின்பு,உட் சிடியின் நாயகா்கள் கலக்கி விட்டாா்கள்!! வாசிப்புக்கு நடு,நடுவே என்னையும் அறியாமல் வாய் விட்டுச் சிாித்து விட்டேன்! சூப்பா்!!

    ReplyDelete
  39. சைமனோடு சோ்த்து நம்மையும் ஆங்காங்கே 'ஙே' என விழிக்க வைக்கிறாா் கதாசிாியா்..!
    சில்க்கியின் உபயத்தால்..!

    ReplyDelete
  40. இரும்புக் கையாாின் நாச அலைகள்!
    ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையமைப்பு..,சோடை போகவில்லை!

    ReplyDelete
    Replies
    1. குணா சார் ஆர்ச்சி படம் அசத்துகிறது

      Delete
    2. செந்தில் சத்யா..! அந்நாளைய எனது கனவுக் கண்ணன் ஸ்பைடா் மட்டுமல்ல, இந்தச் சட்டித் தலையனும் கூட!!

      Delete
  41. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  42. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் விடுமுறை நாள் வணக்கங்கள்

    ReplyDelete
  43. சந்தா z தற்போதைக்கு சாத்தியமில்லை எனும்போது MILLION & MORE Hits ஸ்பெஷல்க்கு எனது தேர்வு தோர்கல் ஸ்பெஷல் மட்டுமே !

    ReplyDelete
  44. எனது ஓட்டு லக்கி லூக்குக்கே

    ReplyDelete
  45. தங்கள் கனவையே ஒரு காமிக்ஸ் ஆக்கி "கனவே விளையாடதே" என்று வெளியிட்டுவிடுங்கள் எடிட்டர் சார் !

    ReplyDelete
  46. Dear sir it's pretty good to hear from you and I support for thorgal special. He deserves a chance sir. Please

    ReplyDelete
  47. 2 மில்லியன் ஹிட்சுக்கு புதிய கௌபாய் ஸ்பெசல் + லக்கி லூக் திரட்டு...

    ReplyDelete
  48. அன்பு ஆசிரியருக்கு, தரமான கதைகள் மீதான தங்கள் தாகம் அமுத சுரபிக்கு ஒப்பானது. எனது தேர்வாக தோர்கல் ஸ்பெஷல் மற்றும் புதிய கௌபாய் கதைகள் லக்கி லூக் மறுபதிப்பு. நன்றி.

    ReplyDelete
  49. 2 மிலியன் ஹிட்ஸ்க்கு என்னுடைய ஓட்டு புதிய கௌபாய் லக்கிலூக் புதிய கார்ட்டூன் களுக்கு. தோர்கலை தனியாக காண ஆசை . மில்லியன் ஹிட்ஸில் தோர்கல் கலந்து வருவதில் விருப்பமில்லை சார்.

    ReplyDelete
  50. எடிட்டர் சார்...!
    திரும்பிய திசையெல்லாம் தொப்பிவாலாக்கள் என்று நீங்களே அவ்வப்போது கூறி வருகிறீர்கள்.(கௌ பாய் கதைகள் எப்போதுமே அலுப்பதில்லை) இந்த நிலையில் மறுபடியும் ஒரு புதுத் தொடரா..? ஒன்று செய்யலாம்.சில ஆல்பங்களே மீதமிருக்கும் டைகர், கமான்சே கதைகளை விரைவில் வெளியிட்டு முடித்த பின்பு புது கௌ பாய்களை களம் இறக்கலாம்....!

    ReplyDelete
  51. தோர்கல் ஸ்பெஷல் நன்றாக இருக்கும் சார்.!

    காரணம்,

    " பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் " என்பது போல் கி.நா.ரசிகர்களை திருப்தி படுத்தியமாதிரியும் ஆச்சு.ஒரு சூப்பர் கதையை படிச்ச மாதிரியும் ஆச்சு.!

    ###இஸட் சந்தாவில் தோர்கலை எதிர்பார்த்து கடுப்பாய் இருக்கும் தோர்கல் ரசிகர்கள் சந்தோசப்படுவார்கள்.


    நமது ப்ளாக்கின் நடுநிலையாளர்கள் மகேந்திரன் பரமேஸ்வரன் சார்,செல்வம் அபிராமி சார் போன்றவர்கள் தோர்கல் கதை இனி வரும் தொடர்கள் பிரமாதமாக இருக்கும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.!

    எனவே..என் ஓட்டு தோர்கலுக்கே.!

    ReplyDelete
  52. 40% விற்பனைக்கு முதலில் முன்னேற்றம் வேண்டும். உண்மை. ஆனால் இது தெரிந்தும் ஏன் அதிகம் பிரின்டிங் செய்கிறீர்கள். பிரின்டிங் செய்யும் அளவை குறைக்க வேண்டும். புத்தகம் விலை உயர்வை நாங்கள் மகிழ்சியாக ஏற்போம்.

    ReplyDelete
  53. என் ஓட்டு தோர்கலுக்கே.!

    ReplyDelete
  54. நல்லா யோசுச்சுப் பார்த்துட்டேன். ஒரு மெல்லிய... சரி வாணாம். இங்கே முக்கால்வாசி பேருக்கு அடிதடி ரகளை தான் பிடிச்சிருக்கு. இங்கே 'மெல்லிய' எல்லாம் சரிப்படாது! அதனால என் வோட்டு நமது Life saversல் ஒருவரான லக்கிலூக்கின் பழைய இதழ்களுக்கே!

    ஒரே ஒரு மார்க் வித்தியாசத்தில் அடுத்த இடத்தில் தோர்கலும், புதிய கெளபாயும் உள்ளனர்!

    கி.நா - தனி ட்ராக்கில் (Z) பயணம் செய்வதையே பலரும் விரும்புவதால் எல்லோரும் கொண்டாட வேண்டிய ஒரு சிறப்பிதழுக்கு இதை எனது தேர்வாகக் கருதமுடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. To: Erode VIJAY : நண்பரே! முன்னைய இதழ்களின் ரீ-பிரிண்ட் என்பது எப்படியோ நிச்சயம் நடக்கத்தான் போகிறது. எனவே, அதை எடிட்டருடைய பொறுப்பில் விட்டுவிடுவோம். தோர்கலையும் அவரால் அம்போவென்று விட்டுவிட முடியாது. கொண்டுவந்தேயாகவேண்டும்! சந்தா z இப்போதைக்கு இல்லையென்பது தெளிவாகவே எடியின் பதிவிலிருந்து புரிகிறது. எனவே, 'கோல்' அடிக்கும் வாய்ப்பை நமக்கு எடி தந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏன் நாம் புதியதொரு கதைக்களத்தை கொண்டுவர பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை புரிந்து ஏனை ஆப்சன்களில் ஏதாவது ஒன்றுக்கு போராட்டக்குழு தனது கவனத்தை திருப்பவேண்டுமென்று போராட்டக்குழுவின் ரசிகர்கள் சார்பில் கோரிக்கை விடப்படுகிறது. ப்ளீஸ்...!!!!

      Delete
    2. @ பொடியன்

      கிட்டங்கியில் மேலும் புத்தகங்கள் தேங்கிவிடக்கூடாதே என்ற எண்ணமே Life saver லக்கியை தேர்ந்தெடுக்கக் காரணம்.
      'கிட்டங்கி மேலங்கி பத்தியெல்லாம் உங்களுக்கென்ன கவலை, உங்க விருப்பத்தை மட்டும் சொல்லுங்க பாஸு'னு யாராவது என்னிடம் தனியே கேட்டால் என் தேர்வு வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட கி.நா'களையே! :)

      Delete
  55. Lucky Luke New story plus old luke classics
    Or
    New cartoon mix

    ReplyDelete
  56. ஒரு மெல்லிய ரொமான்ஸ் ஷ்பெசல்?
    ஒன் ஷாட் கிராபிக் நாவல்?

    ரொமான்ஸ் நம்முடைய காமிக்ஸ் ரசனைக்கு ஒத்துப்போகுமா என்பது சந்தேகமே சார். ஆக்ஷனுடன் த்ரில்லிங்குடன் ரொமான்ஸ் கலந்து வந்தால் வெற்றி பெறும். ரொமான்ஸ் மட்டுமே இருக்கும் என்றால் சலிப்பு ஏற்படலாம்.
    கிராபிக் நாவல்ஸ் க்கு always welcome. ரெண்டு பாகம் மூன்று பாகம் ஏன் நான்கைந்து பாகங்கள் கொண்ட கதைகளை கூட ஒரே புக்காக வெளிவிடுங்கள் சார். முதலில் எதிர்ப்பு இருப்பதுபோல தெரிந்தாலும் வெற்றி உறுதி.

    ReplyDelete
    Replies
    1. Calamity Jane : செயலாளருக்கு ஆதரவாய் மகளிரணியாவது களமிறங்குமென்று பார்த்தால் - அதுவும் நடக்கும் வழியைக் காணோமே !!

      Delete
  57. சார் படிக்க படிக்க z பற்றிய ெண்ணத்தை விதைத்து ...நாங்க கேக்கலாம்னு நினைக்கறதுக்குள்ள பொறுமை எனும் முகசாயத்த z talk கொண்டே பூசிட்டீங்களே....

    நமது சக்கரம் சுழல போதுமான ெண்ணிக்கை போதும் .ஆரோக்கியமாய் சுழல ென சேர்த்துக் கொள்ளவும் .

    சார் மில்லியன் ஹிட்ஸில் முதலிடம் தோர்கள் நண்பர் பரணிக்காக சும்மா 500 விலயில் 8 பாகங்கள் ஹார்டு பெளண்டில் ...பலர் மகிழ...
    லக்கி என்றால் புதிய கதைகளை சிலாகித்தீர்களே அவை வரட்டுமே...
    காதல் கதைகள் எப்படி இருக்கும் என்ற ாவலும் உந்தித் தள்ளுதே.......
    கிராஃபிக்கில் மரணம் மறந்த மனிதர்கள் வான் ஹாம்மேக்கு வாய்ப்புண்டா...
    சார் பொறுமயின் சிகரம் xiii ஐ படித்து விட்டு பொறுமயாக ில்லா விட்டால் எப்படி..எனது பொறுமை அடுத்த வார பதிவு வரை தொடரும்...

    டிரக்கின் காதல் முதல் ஷெல்டன் கதய நினைவு படுத்தி விட்டது.....ஆகா...
    பொடியர்கள் அட்டய காட்டுவீங்கன்னு பாத்தா உங்க ுற்ச்சாகத் தேடல் அத விட சிறப்பாக சந்தோசத்த தந்து விட்டது....zஐ ம் வெய்ட்டிங்....

    ReplyDelete
    Replies
    1. சார் பேசாம மில்லியன் ஹிட்சில் நீங்க சொன்ன அனைத்து கதைகளும் வந்தா புதிய கெளபாயயும் பார்ப்போம்ல..

      Delete
    2. //.zஐ ம் வெய்ட்டிங்....//

      +1
      me too ஸ்டீல் !

      Delete
  58. Vijayan sir, One and only choice!!
    'Two Million Hits’ - தோர்கல் ஸ்பெஷல்

    But it should have minimum of 200 Pages!!

    ReplyDelete
    Replies
    1. தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்..தோர்கல்.. இது தவிர ஏதும் இல்லை.

      Delete
    2. //But it should have minimum of 200 Pages!!///---
      200பக்கத்துக்கு ஆரிசியா + சாவி காப்பாளினி ,ஆஹா பட்டைய கிளப்புமே....

      Delete
  59. ஓஓஓஓஓஓஓஓ....................
    டேஞ்சர் டயபாலிக் massssss தான் இப்போதைக்கு என் சந்தோசத்துக்கு அளவிள்ளை rocketஎடுத்துட்டு sun போய் one round அடுசுட்டு வறனும் i am very happy சூப்பா் டயபாலிக் அனைவரையும் murder செய்கிறாா் உங்களை save செய்கிறாா் நிங்கள் டேஞ்டா்க்கு thanks சொல்ல வேன்டும்

    ReplyDelete
  60. தலையில்லா போராளி -
    தலையில்லாமல் ஒரு மனிதன் எப்படி குதிரையில் பயணிக்க முடியும் என்ற இரகசியத்தை தெரிந்து கொள்ள எனது துணைவியார் இந்த கதையின் கடைசி 50 பக்கம்களை படித்து. இதுதான் அவர் வாசித்த முதல் டெக்ஸ் கதை.

    எனது மகள் இந்த புத்தகம் வந்தவுடன் அட்டை படத்தை பார்த்தவுடன் கேட்ட கேள்விகள்.. தலையில்லாமல் எப்படி பார்க்க முடியும்.. இது போல் நிஜமாக உண்டா, எங்க இருக்காங்க, ....
    படித்து முடித்தபின் உனக்கு சொல்கிறேன் என்றேன். நேற்றுதான் இதனை படித்து முடித்தேன், இன்று அவளின் சந்தேகம்களை தீர்க்கவேண்டும் :-)

    ஒரு வித்தியாசமான கதை. கதாசிரியர் தலை இல்லாமல் ஒரு கதாபத்திரத்தை உருவாக்கி, அது எப்படி சாத்தியம் என்பதை எல்லோரும் ஏற்று கொள்ளும்படி சொல்லிருப்பது பாராட்டுக்குரியது.
    இந்த கதையில் வரும் அனைவரையும்/அனைத்தையும் அழகாக வரைத ஓவியருக்கு எனது பாராட்டுகள்; முக்கியமாக நுணுக்கமான விசயம்களை கூட தெளிவாக வரைந்துள்ளார் (டைகர் ஒரு கையில் அடிபட்டபின் துப்பாக்கி சண்டையின் போது அவர் துப்பாக்கியை கையாளும் விதம்).

    டெக்ஸ் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை :-( இந்த முறை கிட்டும் நமது டெக்ஸ் போன்று சவடால் வசனம் பேசியது நன்றாக இல்லை :-( ஒரு அருமையான கதை கரு இருந்தும் வழக்கமான டெக்ஸ் கதையில் இருக்கும் விறுவிறுப்பு/வேகம் இந்த கதையில் இல்லை என்பது மிக பெரிய மைனஸ்.

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற பெரிய அளவிலான கதை புத்ககம்களுக்கு Hard Bound அட்டை கொடுத்தால் புத்தகத்தின் பக்கம்கள் மடங்காமல் இருக்கும்.

      Delete
  61. புதிய கெளபாய் ஸ்பேசல்? வேன்டாம் அடுத்த வறுடம் பாா்த்து கொள்ளலாம்
    ரோமேஸ்??? நல்ல கதை இறுந்தால்??????
    லக்கி ஓ.கே
    கிறப்பிக் வேண்டாம்!!!!!!!
    தோர்கல் கொஞ்சம் போறுமை ஆண்டின் கடைசி பாதியல் வரட்டும்
    எனவே புதிய காா்டுன் come means happy

    ReplyDelete
  62. விஜயன் சார்,
    டெக்ஸ்சால் கார்சன் இல்லாமல் சாகசம் செய்ய முடியுமா என்று டெக்ஸ்ஸிடம் ஒருமுறை கேட்டு சொல்லுங்க.

    டெக்ஸ்ஸுக்கு சுடுவதை தவிர தெரிந்த 2 விசயம்கள் ஒன்று எப்போது பார்த்தாலும் எதிரிகளிடம் சவடால் பேசுவது இரண்டு கார்சனை கிண்டலடிப்பது. அதனால் இவரால் பேசாமலும் சுடாமலும் இருக்க முடியாது என்பதால் இவருக்கு கார்சன் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக போரடிக்கும்.

    ReplyDelete
  63. டெக்ஸ் கதையில் ரசிப்பது - கார்சனின் முறுக்கு மீசை மற்றும் அழகான அந்த குறுந்தாடி; ரொம்ப stylish-சான ஆள் இவர். இவர் போன்று stylish-சான வேறு கதாபாத்திரம் நமது காமிக்ஸில் இல்லை!!

    டைகர் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும் போது (Winchester rifle) துப்பாக்கியை பிடித்து இருக்கும் அழகு, ஒரு கைகுழந்தையை கையில் பவ்யமாக தூக்கி இருப்பது போல் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இறுகிது நிறைய அழகு
      1)டயபாலிக் கத்தி விசும் அழகு
      2ாிப்போடா் ஜானின் துப்பாியும் அழகு
      3)bluecoat செய்யும் comedy அழகு
      4)செல்டன்னின் துப்பாக்கி அழகு
      5)magic wind தேடல் அழகு
      6)ரோஜா்ன் சகசம் அழகு
      7)bruno brazil hair style அழகு
      8)பிரின்ஸ்ன் நல்ல நேர்மை அழகு
      9)13ன் தொடா் கதை அழகு
      10)தோர்கல்லே சித்திறம் அழகு
      11)ம.மனிதன்னின் மா்மம் அழகு
      12)gil ஜாா்டன்னின் colour comedy அழகு
      13)இறும்பு கைன் கை அழகு
      14)ஸ்பைடா்dress,gun அழகு
      15)ஜானி நீரோவின் cooling glass அழகு

      Delete
    2. லார்கோவின் பாய்ச்சல் (அழகு கத்தி) அழகஉ என சொல்வத மறந்துட்டீங்களே

      Delete
    3. 16. மாடஸ்டிக்கு ஃபேஸ் அழகு
      17. டெக்ஸுக்கு புக் சைஸ் அழகு
      18. லார்கோவுக்கு கிஸ் அழகு
      19. பெளன்ஸருக்கு ஹான்ட்ஸ் அழகு
      20. ஆர்ச்சிக்கு eyes அழகு
      21. அகிக் எழுதும் தமிழ் அழகு

      Delete
    4. 16. மாடஸ்டிக்கு ஃபேஸ் அழகு
      17. டெக்ஸுக்கு புக் சைஸ் அழகு
      18. லார்கோவுக்கு கிஸ் அழகு
      19. பெளன்ஸருக்கு ஹான்ட்ஸ் அழகு
      20. ஆர்ச்சிக்கு eyes அழகு
      21. அகிக் எழுதும் தமிழ் அழகு

      Delete
    5. @ ALL : எதில் உடன்பாடோ இல்லையோ - அகிலின் தமிழின் அழகின் மீது உடன்பாடே எனக்கு !

      அது பிழையின்றி அமைந்திடும் பட்சத்தில் அழகோ-அழகு என்பதையும் சொல்லலாம்தானே ?

      Delete
  64. //நான் படிப்பதில் 5% கூட நடைமுறைக்கு வந்திடுமா என்பது ஐயமே;//
    //என்றோவொரு தூரத்துப் பொழுதிலாவது முயற்சித்துப் பார்க்க புத்தம் புது genre-களை; கதைகளைத் ; தொடர்களைப் பரிசீலிப்பது ஒரு பரவசமான அனுபவமே! //

    //ஏகப்பட்ட புதுப்புதுத் தொடர்கள்; கதை பாணிகளின் பிரதிநிதிகள்! The Incal; Metabarons போன்ற டாப் science fiction கதைகள்; Fantasy கதைகள்; வன்மையான களத்திலும் மென்மையான உணர்வுகள் கொண்ட ரொமான்ஸ் கதைகள்; புத்தம்புதிய கௌபாய் கதைகள் (!!!); ஹாரர் கதைகள்; சமகால உலக நிகழ்வுகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர்கள்; ஒரேவிதக் கதைக்கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு சங்கிலித்தொடர் கதைகள் என்று எக்கசக்க சமாச்சாரங்கள் உள்ளன அந்த folder –ல்! ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?‘ ; ‘சந்தா Z-ஐ இறக்கி விடலாமே?‘//
    //‘சந்தா Z-on hold //
    -
    :| huumm...!

    //ஒன் ஷாட் கிராபிக் நாவல்?// yes ஒன் ஷாட் கிராபிக் நாவல் for sure Edit sir!

    ReplyDelete
    Replies
    1. மில்லியன் ஹிட்ஸில் - கேப்டன் பிரின்ஸ் தொகுப்பு ஒன்று வரும் என்று என்றோ கூறிய நியாபகம் அதை களம் காண செய்யலாம் எடிட் !

      Delete
    2. ஆமா..ஆமா... ஈரோடில்

      Delete
    3. @ FRIENDS : அது பிரின்ஸ் digest என்றில்லாது - பிரின்ஸ் + ஜானி + ரோஜர் என்ற பிரான்கோ-பெல்ஜிய ஆரம்ப நாயகர்களின் தொகுப்பாய் ; ஜூலையில் வருகிறதே !

      இனி வரவிருக்கும் மறுபதிப்பு ABSOLUTE CLASSICS பட்டியலில் லக்கி digest போலவே பிரின்ஸ் digest நிச்சயமாய் இடம்பெறும் !

      Delete
    4. அப்படியே மாடஸ்டி CoL0UR DIGEST ம் வரும்னு ஒரு தபா அந்த மாடஸ்டி மாமியார் காதில் விழறா மாதிரி சொல்லுங்க சார்

      Delete
  65. Attention Please!
    போராட்டக்குழு நண்பர்கள் அனைவருக்குமான பகிரங்கக் கோரிக்கை!
    லக்கி உட்பட முன்னைய இதழ்களின் ரீ-பிரிண்ட் என்பது எப்படியோ நிச்சயம் நடக்கத்தான் போகிறது. எனவே, அதை எடிட்டருடைய பொறுப்பில் விட்டுவிடுவோம். தோர்கலையும் அவரால் அம்போவென்று விட்டுவிட முடியாது. கொண்டுவந்தேயாகவேண்டும்!

    சந்தா z இப்போதைக்கு இல்லையென்பது தெளிவாகவே எடியின் பதிவிலிருந்து புரிகிறது.

    எனவே, 'கோல்' அடிக்கும் வாய்ப்பை நமக்கு எடி தந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏன் நாம் புதியதொரு கதைக்களத்தை கொண்டுவர பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை புரிந்து ஏனைய ஆப்சன்களில் ஏதாவது ஒன்றுக்கு போராட்டக்குழு தனது கவனத்தை திருப்பவேண்டுமென்று போராட்டக்குழுவின் ரசிகர்கள் சார்பில் கோரிக்கை விடப்படுகிறது. ப்ளீஸ்...!!!!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : உங்கள் கோரிக்கையைக் கேட்ட மறுநொடி - போராட்டக் குழு தலைதெறிக்க எங்கோ ஓடுவது போல் தெரிகிறதே - அது எனக்கு மட்டும் தானா ?

      Delete
    2. சார், போராட்டக் குழு நம்மை விரட்டிய காலம் போய் நாம் போராட்டக் குழுவை விரட்டக்கூடியதொரு காலம் வந்துவிட்டதா? அதுவும் நன்மைக்குத்தானே... விடாமல் துரத்துவோம்... கட்டிப்பிடித்து காலில் விழுந்து கதறுவோம்.... ஆதரவு தருமாறு....

      Delete
  66. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார் :)
    இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

    ReplyDelete
  67. நண்பர்கள் ஜெயகாந்தன் , பிரபானந்த் புதல்விகள்(நீங்களும் இருந்திருக்கலாம்) , சூர்யன் டெக்ஸ் , சத்யா , அபிஷேக் ,ஜெயச்சந்திரன் ஜூனியர் , மற்றும் பரிச்சயமாகா நண்பர்கள் ,இல்லத்தோர சந்தித்ததில் சந்தோசம்...இன்னும்...

    ReplyDelete
  68. அன்பு ஆசிரியரே...!
    கிட்டங்கியில் நம் இதழ்களின் தேக்கம் வருத்தமடைய செய்கிறது.என்ன சொல்வது என்று புரியவில்லை....!

    அப்புறம் மில்லியன் ஹிட்ஸ்.......!

    போன மில்லியன் ஹிட்ஸ் மறக்க முடியாத Terror ஆக அமைந்த்து .மீண்டும் ஒரு கிராபிக் நாவலாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்...!
    நண்பர்கள் பலரின் வேண்டுகோளின்படி தோர்கல் ஸ்பெஷல் ஒரு அருமையான சாய்ஸ் ....!
    Hard Bound அட்டையாகவும் அமைந்தால் நிச்சயம் SMASH HIT ஆகும்....!
    இரண்டாம் சாய்ஸ்....!புதிய கெளபாய் ஸ்பெஷல் .
    எது எப்படியோ,நமக்கு சுக்கிர திசை தான்.

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : நண்பரே...ரசனைகளில் பல படிகள் உள்ளன ! வெறித்தனமாய் 30 ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் ரசித்த ஸ்பைடரின் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்களேன் ? அதே காலகட்டத்தின் ஓட்டத்தில் XIII போன்றதொரு மாஸ் ஹிட் தொடரின் நிலையைக் கூட கருத்தில் கொண்டு பாருங்களேன் - இன்று எஞ்சியிருப்பது எத்தனை சதவிகித சுவாரஸ்யம் என்று ?

      சிறுகச் சிறுகவாவது வாசிப்பில் ஒரு variety கொண்டு வந்துதான் பார்ப்போமே ? கையில் எடுக்கும் முன்பே "இது அந்நிய சமாச்சாரம்" என்ற உணர்வு நிச்சயமாய் சந்தோஷ வாசிப்புக்குத் துணை செய்யாது ! உங்களுக்குப் பிடிக்காதவற்றை உங்கள் தலையில் கட்டுவதில் எனக்கு இஷ்டமுமில்லை ; அவ்விதத் திணிப்புத் திட்டமிடல்கள் ஏதும் இருந்திடவும் போவதில்லை ! ஆனால் இந்த எறும்பு நம்பிக்கையோடு ஊர்ந்து ஊர்ந்து செல்வதை நிறுத்திடாது ! என்றேனும் ஒருநாள் எல்லோருமாய் புதுவரவுகளையும் வரவேற்போம் என்ற நம்பிக்கையோடு !

      Delete
    2. //ஆனால் இந்த எறும்பு நம்பிக்கையோடு ஊர்ந்து ஊர்ந்து செல்வதை நிறுத்திடாது ! என்றேனும் ஒருநாள் எல்லோருமாய் புதுவரவுகளையும் வரவேற்போம் என்ற நம்பிக்கையோடு !//
      அருமையாக சொன்னீர்கள் சார். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நம்பிக்கையோடு நாங்கள் காத்திருப்போம்!

      Delete
  69. //science fiction கதைகள்; Fantasy கதைகள்; வன்மையான களத்திலும் மென்மையான உணர்வுகள் கொண்ட ரொமான்ஸ் கதைகள்; புத்தம்புதிய கௌபாய் கதைகள் (!!!); ஹாரர் கதைகள்; சமகால உலக நிகழ்வுகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர்கள்; ஒரேவிதக் கதைக்கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு சங்கிலித்தொடர் கதைகள் என்று எக்கசக்க சமாச்சாரங்கள் உள்ளன //

    சார் நிஜமாகவே இப்படி ஒரு கதை குவியலைதான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம். புதையலை தேடி போவது, அம்மானுஷ்யம் உதரணத்திற்கு மார்ட்டின் கதைகள், ஹாரர் , பாண்டஸி, கார்ட்டூன் இவையெல்லாம் காமிக்ஸ் புத்தகத்திற்கு சரியான கதை கருக்கள்,எல்லோரையும் படிக்க தூண்ட கூடியது. நாவல் ரக லார்கோ எல்லாம் சலிக்க ஆரம்பித்து விட்டது என்பதுதான் உண்மை :(.

    புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல் - என்னுடைய Choice..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் AHMEDBASHA TK கூறுவதை போல தோர்கல் ஸ்பெஷல் கூட ஒரு அருமையான சாய்ஸ் :)

      Delete
    2. Giridharan V : லார்கோ சலிப்பூட்டுவதாய் பட்டால் நீங்களிருப்பது நிச்சயமாய் மைனாரிட்டி கட்சியில் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ! Anyways தொடரில் எஞ்சியிருப்பது இன்னும் இரண்டே ஆல்பங்களே !

      Delete
  70. முதலில் விரைவில் தொட இருக்கும் டூ மில்லியன் ஹிட்ஸ் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் சார் ..கோவை ஸ்டில் நண்பருக்கு அப்படியே ஒரு ஸ்பெஷல் நன்றி ..;-)மில்லியன் ஹிட் ஸ்பெஷலை கண்டிப்பாக குண்டு இதழாக கொண்டு வாருங்கள் சார் ..சாதா இதழாக வெளியிட்டால் அது டூ மில்லியனுக்கு நாம் செய்யும் அவமதிப்பாக மாறி விடும் என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் சார் ..எனவே இதழில் வரும் கதைகள் நான்கு ..ஐந்து ..கதைகள் அல்லது ஒரே கதையாக இருப்பின் நீஈஈஈஈஈஈஈஈள மான கதை களமாக உள்ளவற்றை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன் ..அடுத்து நீங்கள் குறிப்பிட்டு உள்ள சாய்ஸில் எனது சாய்ஸ் ....

    லக்கியின் மறுபதிப்பு ....ஒரு ஸ்பெஷல் இதழ் சி /பலரிடம் இருக்கும் இதழாக இருக்க வேண்டாமே சார் ..புதுகதையாக இருப்பின் மட்டுமே ஸ்பெஷலாக அது மனதிற்கு தோன்றும் சார் ..எனவே லக்கியை தள்ளி வைக்கலாம் சார் ..

    ரெமான்ஸ் கதைகள் # இந்த சாய்ஸ் எங்கள் செயலாளர் பலத்த ஆதரவு கொடுப்பார் என்பது யாவரும் அறிந்ததே ..ஆனால் உங்கள் வழியில் நானே அவருக்கு நண்டுவறுவலோ ..ஆமை இடும் குட்டி முட்டையோ போட்டு அவரை அமைதியுற செய்கிறேன் சார் ..மேலும் நமது காமிக்ஸ் இதழ்களை என்னை போல பல சிறுவர்களும் படிப்பதால் ரொமான்ஸ் போக்கு எங்களுக்கு புரிபடாமல் போகலாம் ..அதற்கு மேலும் புத்தக காட்சி சமயத்தில் புது அறிமுக சிறுவர்கள் குண்டா ஸ்பெஷல் புக்கா இருக்கே என நினைத்து முதன் முறையாக அந்த இதழை வாங்கி படித்து விட்டு என்னது ஆக்‌ஷனும் இல்லை ..துப்பறியவும் இல்லை ..காமெடியும் இல்லை ..இதற்கு வீட்டிலியே தொலைகாட்சியில் காதலுக்கு மரியாதை படத்தை பார்த்திருக்கலாமே என நினைப்பதுடன் காமிக்ஸ் என்றால் இது தான் போல என நினைத்து அந்த சிறுவர்கள் இனி காமிக்ஸ் இதழ்களை தவிர்க்க நினைப்பதை நாம் தவிர்த்து விடலாமே சார் ..எனவே ரொமாண்டிக் ஹீஹீ என்பதுடன் திருப்தி பட்டு கொள்ளலாம் என்பது என்னை போன்ற சிறுவர்களின் கோரிக்கை சார் ..

    ஒன் ஷாட் கிராபிக்ஸ் நாவல் #வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் .....ஈக்க்க்க்க்க்க்க்க ....ஒன்றுமில்லை சார் ..ஆர்ட்டினின் ஆயுதத்தை விட பயங்கரமான அவல குரல்கள் போராட்ட குழுவில் பலமாக இருக்கிறது சார் ...இந்த சாய்ஸை கேட்டு ...எனவே ....எனவே ....

    தோர்கல் ...#பலமாகவே ஆதரிக்க தோன்றுகிறது ..தோர்கலை மிகவும் ரசிக்கிறேன் ..ஆனால் உங்கள் கூற்றுப்படி இட நெருக்கடி ..விற்பனை தாமதம் என நிலவும் சூழலால் தோர்கலை மனமில்லாமல் தவிர்க்க சொல்கிறது மனம் ...

    புது கார்ட்டூன் நாயகர்கள் ...பலமாகவே வழி மொழியலாம் தான் ..ஆனால் டூ மில்லியன் என்ற சிறப்புக்கு நகைச்சுவை ஈடு கொடுக்க முடியுமா ...கொடுத்தாலும் டூ மில்லியனுக்கு அது சிறப்பு சேர்க்குமா ...எனவே ....எனவே ...மீதி இருக்கும் ஒரு சாய்ஸ் புது கெளபாய் ...ஒரு அதிரிபுதிரி மில்லியனுக்கு சிறப்பும் ..பெருமையும் அதிரி புதிரி சாகஸமாக கொடுக்க முடிவது ஒரு கெளபாய் நாயகரால் மட்டுமே முடியும் சார் ..எனவே எனது ஓட்டு புது கெளபாய் நாயகரே என்பதை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் தெரிவித்து கொள்கிறேன் சார் ..

    ReplyDelete
    Replies
    1. //அதிரி புதிரி சாகஸமாக கொடுக்க முடிவது ஒரு கெளபாய் நாயகரால் மட்டுமே முடியும் சார்//
      +99999999999999999999999999999

      Delete
    2. Paranitharan K //.அதற்கு மேலும் புத்தக காட்சி சமயத்தில் புது அறிமுக சிறுவர்கள் குண்டா ஸ்பெஷல் புக்கா இருக்கே என நினைத்து முதன் முறையாக அந்த இதழை வாங்கி படித்து விட்டு என்னது ஆக்‌ஷனும் இல்லை ..துப்பறியவும் இல்லை ..காமெடியும் இல்லை ..இதற்கு வீட்டிலியே தொலைகாட்சியில் காதலுக்கு மரியாதை படத்தை பார்த்திருக்கலாமே என நினைப்பதுடன் காமிக்ஸ் என்றால் இது தான் போல என நினைத்து அந்த சிறுவர்கள் இனி காமிக்ஸ் இதழ்களை தவிர்க்க நினைப்பதை நாம் தவிர்த்து விடலாமே சார் //

      ஆத்தாடி....ஒரே வரி இத்தனை நீளமா ? தலீவருக்கு ஜில்லுன்னு ஒரு ஜோடா சொல்லுங்களேன் !!

      Delete
  71. விஜயன் சார்,

    Two Million Hits - பற்றிய இந்த கேள்விக்கு முன் நீங்கள் z-சந்தா பற்றி தெளிவுபடுத்தினால் இந்த "Two Million Hits" க்கு யாரை தேர்வு செய்வது நண்பர்களுக்கு எளிதாக இருக்கும். நான்கு மாதம்கள் ஆகியும் இன்றுவரை z-சந்தா பற்றிய தெளிவான பதில் உங்களிடம் இல்லை. நமது மீள்வரவிக்கு பிறகு இந்த அளவு நீங்கள் குழப்பியது இல்லை. மேலும் தோர்கலை இந்த லிஸ்டில் சேர்த்து உள்ளது நீங்கள் z-சந்தா கானல் நீராக்கி விடும் எண்ணத்தில் இருப்பது போன்ற அச்சத்தை தருகிறது. இதனை வைத்து பார்க்கும் போது z-சந்தா இந்த வருடம் வருவதற்காக வாய்ப்புகள் வெறும் 10% என்று என்ன தோன்றுகிறது.

    அடுத்த வாரம் சொல்ல உள்ள z-சந்தா விசயத்தை இந்த வாரம் சொன்னால் Two Million Hits தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.

    Two Million Hits நான் தோர்கல் என்று கேட்க காரணம் மேலே உள்ளதே!

    தோர்கல் எப்படியும் கண்டிப்பாக வரும் இந்த வருடம் வரும் என்று ரசிகர் கண்மணிகளுக்கு உத்திரவாதம் கொடுத்தால் Two Million Hitsக்கு எனது தேர்வு புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்; ஏன் என்றால் தற்போது கார்ட்டூன் நாயகர்களின் கதைகள் குறைவு.. இது முலம் புதிய கார்ட்டூன் நாயகர்களை நமது ரெகுலர் ஸ்லாட்டில் கொண்டு வரமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பதிவை மீண்டுமொருமுறை படித்திடக் கோருகிறேன் - குழப்பம் எனக்கில்லை என்பது புரிந்திடலாம் ! சந்தா Z தாமதம் ஆகிடும் காரணங்களை இதைவிடவும் தெளிவாக விளக்க எனக்குத் தெரியவில்லையே ?

      Delete
    2. Z தாமதம் ஆகிடும் காரணங்கள் புரிகிறது ஆனால் அது வருமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை!!

      Delete
    3. மறுபடியும் பதிவைப் படிக்கத்தான் சொல்லுவேன் நண்பரே...சகலத்தையும் தெள்ளத் தெளிவாய் சொல்லியுள்ளேன் !

      Delete
  72. புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)?
    Naaaaa

    ஒரு மெல்லிய ரோமான்ஸ் ஸ்பெஷல்?
    Hmmmm... not now

    லக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest?
    Nope

    ஒன் ஷாட் கிராபிக் நாவல்?
    Yesssssssssss.....somethin cooooooool

    புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்?
    Good Choice

    தோர்கல் ஸ்பெஷல்?
    Yesssssssssss <3

    ReplyDelete
    Replies
    1. கடல்யாழ்9 : ஏதேனும் ஒரு பதில் தான் allowed !! ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களுக்கு இடமில்லையே !!

      Delete
    2. @Vijayan Sir

      புது கார்ட்டூன் நாயகர்
      ஒன் ஷாட் கிராபிக் நாவல்
      தோர்கல்
      மூன்றில் எது வந்தாலும் எனக்கு ஓகே சார்

      Delete
  73. """"வேங்கையின் விஸ்வரூபம் """

    டைகர் அபிமானிகளே@

    சென்றாண்டின் இந்தநாள் தலைநகரில் தளபதிவிழா...

    மறக்க இயலா நிகழ்வாகவும் , முத்து காமிக்ஸ்ன் தி பெஸ்ட் இதழ் வெளிவந்த தருணமாகவும் அமைந்தது . சற்று மீண்டு பார்க்கிறேன் .

    //////மின்னும் மரணம் - இந்த ஒரு சொல் செய்த மாயம்
    தான் என்ன?.
    *இந்த மின்னும் மரணம் வெளியீட்டு விழாவுக்கு செல்ல நாங்கள் ப்ளான் போட்டது கடந்த வருட நவம்பர்லயே சார். வழக்கமாக ஈரோடு விழா , ஜனவரியில் சென்னை விழாவுக்கு வர ஒப்புக்கொள்ளும் நண்பர்களில் சிலர் இறுதி நேரத்தில் கழண்டு
    கொள்வார்கள். ஆனால் தளபதியின் ராசியோ என்னவோ பெயர் கொடுத்த 15பேருமே முதல்நாள் ட்ரெயின் ஏற ,மாயாவி சார் ஆபீஸில் ஆஜர். ஆகாக காக ..... என கொஞ்சம் பொறாமை எனக்கு .
    *10மணி ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல வரிசையாக 15டிக்கெட் நமக்கு . அடுத்த 2மணி நேரத்துக்கு நாம் குடுத்த அலப்பறையில் நமக்கு இருபக்கமும் இருந்த மக்கள் இஞ்சி தின்ற மங்கீஸ் ஆயினர் . காலியான பால்கோவா மற்ற இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகள்
    பார்த்து, TTR தலை கையில் பஞ்ச் வாங்கிய வில்லன் அடியாள் போல 3ஏ நொடியில் நழுவினார் .
    *இம்முறையும் இரவு ஆந்தை வேலையே நான் பார்க்க சென்ட்ரல் வந்து , ராயப்பேட்டைக்கு டவுன் பஸ்சில் வந்து புத்தக விழா அரங்குக்கு எதிரில் இறங்கி ,சென்னை நண்பர் ப்ளூபெர்ரியின் சகாயத்தில் நாங்கள் தங்கபோகும் ரூமுக்கு ஒரு ஆட்டோகாரன்ட்ட
    வழிகேட்டா, அந்த ஆளு ஆட்டோவுல ஏறாத ஆத்திரத்தில் ஆயிரம் விளக்கு பக்கம் கையை காண்பித்து விட்டான். ஒரு கி. மீ. நடந்த பிறகும் ப்ளூ ஜி சொன்ன ஒரு அடையாளத்தில் ஒரு தெருவும் இல்லை . பிறகு தான் விசயம் புரிந்தது , அவர் அனுப்பிய மேப்பை தூக்க கலக்கத்தில்
    தலைகீழாக பார்த்து உள்ளோம் என்று . ஒருவழியாக ரூம் சென்று கொஞ்ச நேரம் தூங்கலாம்னா அங்கேயே கிட் ஆர்டினார் தவில் வாசிக்க மீண்டும் கச்சேரி களைகட்டியது.
    * கச்சேரியின் முத்தாய்ப்பாக பாடகர்கள் விஜய்யும் ,கிட் ஆர்டின்னும் ஆளுக்கொரு பாடல்பாடி அசத்தி விட்டனர் . முன்னவர் ஒரு அருமையான மெலடி சாங்கு . பின்னவர் அவர்
    ஸ்டைலில் செப்புக்குடம் தூக்கி செல்லும் செல்லம்மா .......என்று ஒரு குத்து குத்த லைட்டா ஒரு உற்சாக ஆரவாரம் வெடித்தது .
    ஒரு ரவுண்ட் நாக் அவுட் போட கடைசி வரை போரடிய தளபதியின் தீவிர வாசகர் , டைகரை போலவே கடைசியாக 2அதிதீவிர டெக்ஸ் ரசிகர்களிடம் மண்ணை கவ்வி, மின்னும் மரணம் கடைசி பேனல் டைகரை போல குதிரையில் குளிக்க கிளம்பினார் . ஜெயித்த தங்கத்தை இருவரும் பங்கிட்டு கொண்ட பின் , அனைவரும் குசியாக வறுத்த கறி சாப்பிட கிளம்பினோம்.
    * காலை 10மணிக்கு அரங்கம் சென்று மரத்தடியில் ஒரு குரூப்பும் பந்தலடியில் ஒரு குரூப்பும் இருந்த நண்பர்கள் உடன் நாங்களும் ஐக்கியமானோம். விழா நிகழ்வுகளை நண்பர்கள் மற்றும் ஆசிரியர் ஏற்கனவே விவரித்து விட்டார்கள் . தனிப்பட்ட முறையில் இதழை பார்த்து ஆனந்த ஆச்சரியத்தில் மூழ்கி
    போனேன் . உண்மையாகவே டெக்ஸ் கதைகள் கையில் ஏந்திய போது கிடைத்த மகிழ்ச்சியைவிட பலமடங்கு அதிகம்
    திக்குமுக்காடிபோனேன். அன்றைய விழா நாயகன் நிச்சயமாக டைகரா , விஜயன் சாரா என்று என்னால் பிரித்து உணர இயலவில்லை நண்பர்களே.
    * அய்யா திருசெளந்திரபாண்டியன்
    அவர்களுடன் ஒரு கால்மணி நேரம்
    உரையாடியது அன்றைய தினத்தில் ஹைலைட், அய்யா அவர்கள் இப்போது நாம் ஒவ்வொரு ஹீராவிடமும் காட்டும் ஈர்ப்பு கண்டு வியந்து
    போனதாக தெரிவித்தார்கள். ஆளாளுக்கு ஒன்னரை டன் தங்கத்தை சுமந்துகொண்டு
    சென்னையை விட்டு சிறகடித்தோம்.////

    ReplyDelete
    Replies
    1. நினைவோ ஒரு பறவை....
      விரிக்கும் அதன் சிறகை....!

      Delete
    2. //நினைவோ ஒரு பறவை....
      விரிக்கும் அதன் சிறகை//

      பாத்தீங்களா மக்களே? நேற்றைய கிசுகிசு... இந்தக் கவிதை... ஒரு வளரும் கவிஞர்...

      சரிதானே? சரிதானே? :D

      Delete
  74. திரு விஜயன் அவர்களுக்கு காலை வணக்கங்கள்..!

    உங்களுக்கு ஒருநாள் இரவில் வந்த மாயாஜாலமும் சைன்ஸ் பிக்சனும் கலந்து வந்த கனவை...

    வசதியும் வாய்ப்பும் உள்ளது தலையங்கத்தில் பகிர்ந்துவிடிர்கள். குறைந்தது ஆயிரம்பேர் கனவில் பலநாட்கள், மாதங்கள் தொடர்ந்து வரும் மாயாஉலக கனவை, நிஜத்தில் பார்க்க ஏங்கும் பலஆயிரக்கணக்கான கனவுகளின் ஒட்டுமொத்த ஏக்கத்தை சொல்லும் [உங்களுக்கு உரக்க சொல்லும்] வாய்ப்பும் வசதியும் ஏது..? உங்களுக்கு கேட்டிருந்தால் ஓட்டெடுப்பு வந்திருக்குமா என்ன..!!!

    டமால்,டுமில்,சதக்,டிஷ்யும்,டும்,படார் என இரைச்சலாக... சட்டையும் ஜீன்ஸும், துப்பாக்கியும் குதிரையும், கத்தியும் கம்பியூட்டரும், வெடிகுண்டும் காரும்,மர்மமும் திகிலும்,கலாட்டாவும் காமெடியும், மிஷின்கன்னும் விமானங்களும் என வகைவகையான சாகசங்களை வரிசையாய் படிக்க, அணிவகுப்புக்கு இந்த வருடம் பஞ்சமில்லைதான்..!

    ஆனால் மாயாஜால உலகில் நுழைய...?????

    ஒரு மைல்கல் நாளை கொண்டாடும் விதத்தில், மாயஉலக வாசலை திறக்கும் சாவியை தரும் [தோர்கல் டைஜஸ்ட்] அறிவிப்பை விட வேறென்ன ஈடாகும் விஜயன் அவர்களே...!!!

    ReplyDelete
    Replies
    1. mayavi.siva : .தோர்கல் நம் திட்டமிடலில் எப்போதுமே ஒரு இன்றியமையா அங்கமாய் இருந்திடுவார் என்பதால் கவலை தேவையில்லையே...! தொடரும் 2 பாகங்களுக்கான மொழிபெயர்ப்பு கூட தயார் !

      Delete
    2. @ திரு விஜயன்

      தோர்கல் திட்டமிடலில் ஒரு முக்கியஅங்கம் என தெளிவுபடுத்தியதற்கு நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள்பல ஸார்..! அப்படியே இந்த வருடம் என்று ? எப்போது ? எப்படி ? எந்த வடிவில் நம் கைகளுக்கு கிடைக்கும்ன்னு [லைட்டாவாவது] சொல்லிட்டா...பலரின் ஏக்கத்திற்கு ஒரு முடிவு கிடைச்சிடுமே..!

      Delete
  75. இட நெருக்கடி ..விற்பனை தாமதம் போன்ற காரணங்களால் பிரின்ட் ரன்னை குறைத்து சிறிது விலையை அதிகரிப்பது நல்ல ஐடியா தான் சார் ....நினைவு தெரிந்த நாளில் இருந்து நாம் மகிழ்ச்சியுற செயல்படுத்திய பொழுது போக்குகள் இப்போது மறைந்து விட்டது ..அது சைக்கிள் டயரை வைத்து வீதியை சுற்றியது ஆகட்டும்...கோழி குண்டை சரியாக அடித்து பாக்கெட் நிறைய கோலிகுண்டை நிறைத்து சலங் சலங் என்று சத்ததுடன் பெருமிதமாக வீடு சென்றதாகட்டும் ...பம்பரத்தை சுற்ற தெரியாமல் பல முறை சுற்றி முதன் முறையாக பலமாக சுற்றியதும் ..அதனை பார்த்து ஆராவாரத்துடன் கத்தியதும் ...சினிமா பிச்சரை வைத்து நாங்களே சுவற்றில் சினிமா ஓட்டியதும் ...ஆண் பெண் பேதமில்லாமல் கண்ணாமூச்சி ரே ரே என விளையாடி திரிந்ததும் இப்போது கனவாகவே போய் விட்டது என்பதோடு இந்த தலைமுறை சிறார்களே அது தெரியாமல் இருப்பது தான் இப்போதைய நிஜம் சார் ...இப்படி அனைத்தும் கனவாகவே போய் விட்ட சூழலில் அன்று முதல் இன்று வரை ஏன் இனியும் மறவாமல் ..ரசிக்க வைப்பதும் ..தொடர்ந்து அதற்காக காத்து கிடப்பதும் தங்கள் காமிக்ஸ் இதழ் ஒன்று தான் சார் ...இந்த சுகத்திற்காக இந்த சிறிய விலையேற்றத்தை பொறுத்து கொள்ள மாட்டோமா சார் ...நீங்கள் பயமின்றி அடித்து ஆடுங்கள் ...நாங்கள் துனை நிற்கிறோம் ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : அந்த கண்ணாமூச்சி சமாச்சாரம் பத்தி சொல்லவேயில்லையே தலீவரே !!

      Delete
    2. அது ஒரு அழகிய நிலாக் காலம்...கனவுகள் தினம் தினம்உலாப் போகும்...ஆனால் அந்த அற்புத கனவுலகில் இன்றும் லயன்

      Delete
  76. விஜயன் சார், மறுபதிப்பு கதைகளுக்கு proof reading செய்ய விருப்பம் தெரிவித்து அது பற்றிய தகவல் ஏதும் எனக்கு இன்னும் வரவில்லை.

    ReplyDelete
  77. Two Million Hits - ஈரோடு புத்தக திருவிழாவில் வெளிவர வேண்டும் என்பது எனது ஆவல், ஈரோடுதான் மிக சரியான இடம்!!

    ReplyDelete
  78. My choice horror and scientific stories only

    ReplyDelete
  79. Two Million Hits - ஏற்கனவே நமது காமிக்ஸில் கௌபாய் அதிகம் எனவே புதிய கௌபாய் ஸ்பெஷல் இங்கு தேவையில்லாத ஒரு choice.

    ReplyDelete
  80. 2 மில்லியன் ஹிட்சுக்கு புதிய கௌபாய் ஸ்பெசல் + லக்கி லூக் திரட்டு...

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லையே - நமது அட்டவணையிலாவது ! ஒன்றுக்கொன்று சம்பந்தமிலா படைப்பாளிகளின் கதைகளை ஒரே குடைக்குள் இணைக்க இப்போதெல்லாம் அனுமதியில்லை !

      Delete
  81. டியர் எடிட்டர்

    1. Sure Shot ஆல்பம்களுக்கு தற்போதைய print runம் மற்றைய இதழ்களுக்கு குறைந்த print runம் செய்யலாம்.
    2. அடிக்கடி கூறி வருவது போல மாதம் நான்கு இதழ்கள் + ஸ்பெஷல் இதழ்கள் + சந்தா Z என்பது overdose. இவ்வளவு எண்ணிக்கையில் வரும் புத்தகங்கள் கிட்டங்கியை நிரப்புவது புரியாத புதிர் அல்ல.

    மறுபதிப்புக்கள் வந்தே ஆக வேண்டும் என்பதால் (நான் கூறுவது பகுத்தறிவு வளர்க்கும் மாயாவி ஸ்பைடர் இத்யாதி :-p) மறுபதிப்பு track தவிர இரெண்டே track - ஒரு ரெகுலர் 12 issues track (9 tex 3 others) + ஒரு 6 + 6 track - கார்டூன் ப்ளஸ் ஹிட் நாயகர்கள் - ஆக மொத்தம் 36 புத்தகங்கள் என்ற நிலைப்பாடு எடுப்பின் பிரிண்ட் ரன் குறையாமல் உங்களால் வண்டி ஓட்ட முடியுமே. 4 * 12 is the money killer.

    உதாரணமாக ஏற்கனவே 100+ டைட்டில்கள் இருக்கும் உங்களிடம் அடுத்த வருடம் 150 (48+ 2 ஸ்பெஷல் இதழ்கள்) இருக்கும். இவை விற்பனையாக சராசரியாய் 2 வருடங்கள் பிடிக்கும் எனும் போது உங்கள் நிதி நிலைமை, கடன் சுமை ஆகியவை பற்றி எண்ணிப் பார்க்கவும் ப்ளீஸ். அடுத்த வருட இறுதியில் 150 என்பது 200 ஆகும் - வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு !!

    எனவே 3 * 12 + 2 குண்டு என்பதே அனைவருக்கும் பயனான தேர்வு!

    ReplyDelete
    Replies
    1. And my choice is Thorgal digest - 4 in 1 !

      Delete
    2. Raghavan : நமது தற்போதைய மூத்த குடிமக்களின் மறுபதிப்புத் தண்டவாளம் தான் எனது சிக்கலே !! நண்பர்களின் தொடர் கோரிக்கைகளை ஒரு கட்டத்தில் நிராகரிக்க இயலா நிலையில் தான் அதனுள் கால்பதிப்பது என்று தீர்மானித்தேன் ! இன்றைக்கு விற்பனையில் மாயாவி + லாரன்ஸ் are doing o.k ; இதர இருவரும் தள்ளாட்டக் கேஸ்களே ! இன்னும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமாவது இந்தத் தடத்தைத் தொடர்ந்து விட்டால் தப்பித்து விடுவேன் !

      ஆண்டுக்கு இந்தப் 12 இல்லா பட்சத்தில் ஓவர்டோஸ் feeling எழுந்திட வாய்ப்புகள் குறைவு என்பேன் !! ஹ்ம்ம்ம்ம்.....பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளும் வேட்கையின்(!!!) பக்க விளைவுகள் !!

      Delete

  82. // புத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)
    லக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest?
    புது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்?
    தோர்கல் ஸ்பெஷல்? // இந்த நான்கில் எதுவென்றாலும் எனக்கு ஒகே.

    ReplyDelete
  83. //அந்தந்த மாதங்களில் சந்தா...ஆன்லைனில்...கடைகளில்...முகவர்கள் வாயிலாக - என நாம் விற்பது 40 பிரதிகளே ! பாக்கி 60 பிரதிகள் நம் கையில் ஸ்டாக்காகத் தான் துயில்பயில்கின்றன ! இவற்றுள் ஒரு சொற்ப அளவிலான வெளியீடுகள் குறைந்த பட்சம் பன்னிரண்டு மாதங்ககளிலும், மீதம் சுமார் 36 மாதங்களிலும் தான் காலியாகின்றன ! So மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் போது – நமது கிட்டங்கிவாசிகளின் ஜனத்தொகை, முயல்களின் இனப்பெருக்கத்தை விடவும் வேகமாய் கூடி வருவது கண்கூடு! அவற்றைச் சுமக்கும் வலு நமக்கிருக்கிறதா- இல்லையா? என்பதெல்லாம் அடுத்த பட்சச் சிந்தனைகள்; //

    மாதந்தோறும் 4 தனித்தனி இதழ்கள் எனும்போது தேங்கும் இதழ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வது தெரிகிறது. அப்படியானால், பதிப்பாளர்களின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஏன் சில கதைகளை ஒன்றாக்கி ஒரே ஸ்பெஷல் இதழாக வெளியிடக்கூடாது? அதிலும், தோர்கல், வெய்ன் ஷெல்ட்டன், லார்கோ, கமான்சே போன்ற தொடர்களை 4 கதைகளை ஒன்றாக்கி ஒரு மாத வெளியீடாக்கினால் அந்த மாதத்துக்குரிய 4 கதைகளையும் வெளிட்டாயிற்று, விற்பனையும் சிக்கலின்றி அமையும். நமக்கும் கா........த்...திருந்து கதைகளின் தொடர்ச்சியை படிக்கும் ஏக்கமும் குறையும்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : இங்கே சிக்கல் உள்ளதே வாங்குவோரின் எண்ணிக்கையில் தானே ? ஒற்றை புக்காய்ப் போட்டாலும் சரி, தனித்தனியாய்ப் போட்டாலும் சரி - வாங்கப் போவோரின் எண்ணிக்கை அதுவே தான் எனில் - வித்தியாசம் எவ்விதம் இருந்திடும் சார் ?

      Delete
    2. இந்த ஐடியா நல்லா இருக்கே.

      Delete
  84. கௌபாய் கதைகள் நம் ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. மேலும் நமது டாப் ஸ்டார் Tex கூட ஒரு கௌபாய்தான் . ராணி காமிக்ஸ் முதல் 100 இதழ்களுள் வந்த கௌபாய் கதைகள் இன்றைக்கும் நம்மை மெய்மறக்க செய்யும் என்பதுதான் உண்மை. புதிய கௌபாய் தொடர் என்றால் நமது லயனுக்கு புதியவரா இல்லை நமது தமிழ் காமிக்ஸ்க்கே புதியவரா. எதுவாக இருந்தாலும் ஓகே. புதிய கௌபாய் ஸ்பெஷல்க்குதான் என்னுடைய ஓட்டு .

    ReplyDelete
    Replies
    1. Trichy Vijay : ஆசியத் துணைக்கண்டத்துக்கே புதியவர் !

      Delete
    2. அட்டகாசம் சார்

      Delete
    3. /ஆசியத் துனைக்கண்டத்துக்கே புதியவர் !//

      அப்புறம் என்ன சார்? அவர்தான் நமக்கு வேண்டும்!! வேண்டும்!!!

      Delete
    4. //ஆசியத் துனைக்கண்டத்துக்கே புதியவர் !//

      யாராக இருக்கும்....curious

      Delete
  85. சந்தா z தள்ளிப்போவது வருத்தமே,விற்பனை விரிவான அளவில் உயர என்னென்ன வழிகள் உள்ளனவோ அவை அனைத்தையும் யோசித்தாக வேண்டும்.

    ReplyDelete
  86. // And printrun தென்னையில் தேள் கொட்டினால் – விலையென்ற பனைமரத்தில் நெரி கட்டும் தானே?! தற்போதைய ரூ.65/- விலைகளைக் குறைந்தபட்சமாய் ரூ.75-க்குக் கொண்டு செல்ல அவசியமாகிடும்!//
    பட்ஜெட் எகிரும்போல தெரியுதே,இதர செலவினங்களை வேறு வழியில் கட்டுபடுத்தி தான் ஆக வேண்டும்போல.

    ReplyDelete
  87. சந்தா z தள்ளிப்போவது சந்தோஷமே. சார் தமிழ் காமிக்ஸ் உலகத்துக்கு தனி காட்டு ராஜா நீங்கள் மட்டும்தான். அகல கால் வைக்காமல் மெதுவாகவே செல்லலாம். அதிக காமிக்ஸ் ஒருவேளை திகட்ட ஆரம்பித்தால் நஷ்டம் நம்ம எடிக்கு மட்டுமல்ல நமக்கும்தான்

    ReplyDelete
    Replies
    1. Trichy Vijay : எது சரியான அளவென்பதை நிர்ணயிப்பதே சவாலான சமாச்சாரம் ! சிலருக்கு full meals + ஒரு ரஸ்தாளி + ஒரு பீடா போட்டாலும் அவ்வளவாய்த் திருப்தி எழாது ; இன்னும் சிலருக்கு ரெண்டு சப்பாத்தியிலேயே "எவ்வ்வ்வ்வ்' என்று ஏப்பம் வந்து விடும் ! So அனைவரின் தேவைகளையும் ஓரளவுக்கேனும் புரிந்து செயல்படும் தருணமிது ! உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் இங்கு நான் கேட்கப் பிரியப்படுவது முக்கியமாய் இதன் பொருட்டே !!

      Delete