நண்பர்களே,
வணக்கம். கொஞ்சமே கொஞ்சம் மொக்கையாக இந்த ஆரம்ப வரிகள் தெரியக் கூடுமென்றாலும், சபலத்தை அடக்க முடியவில்லையே ! So, here goes : ("சிங்கம்" சூர்யாவின் மாடுலேஷனை மனதில் இருத்திக் கொண்டே )
"ஷெல்டன் காரிலே போய்ப் பார்த்திருப்பீங்க... விமானத்திலே போய்ப் பார்த்திருப்பீங்க... கப்பல்லே போய்ப் பார்த்திருப்பீங்க ! ஏன்- பாராசூட்லே போறதைக் கூடப் பார்த்திருப்பீங்க!
ஆனால்...
ஷெல்டன் கழுதையிலே போறதைப் பார்த்திருக்கீங்களா? அதுவும் காய்ஞ்ச ரொட்டியைக் கழுதைக்கு முன்னாலே தொங்க விட்டுட்டே, அதைத் தாஜா பண்ணிட்டுப் போறதைப் பார்த்திருக்கீங்களா...? பார்த்திருக்கீங்களா ? "
என்றைக்கேனும் ஒரு நாள்; ஒரேயொரு நாள் – நமது ஆதர்ஷ ஷான் வான் ஹாம்மே, தமிழுக்கென பிரத்யேகமாய் ஸ்கிரிப்ட் எழுத முன்வந்து; ஷெல்டனின் லேட்டஸ்ட் சாகஸத்தை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் அவசியம் மட்டும் எழுந்தால் – சாமி சத்தியமாய் மேற்கண்ட வரிகளைத் தான் எழுதியிருப்பார்! ஆத்தாடியோவ்- வெள்ளியன்று வேய்ன் ஷெல்டனின் “ஒரு காகிதத்தைத் தேடி” இதழின் எடிட்டிங் பணிக்குள் புகுந்த நேரம் எனக்குள் எழும்பிய சிரிப்பலைகளை ஒருவழியாய் இப்போது தான் மட்டுப்படுத்திக் கொள்கிறேன் ! சர்வதேச spy த்ரில்லர்கள்; XIII போன்ற அசாத்தியத் தொடர்படலங்கள்; லார்கோ வின்ச் போன்ற offbeat சாகஸத் தொடர்கள் என்றெல்லாம் அதகளம் செய்திடும் வான் ஹாம்மே ஒரு ஜாலியான தருணத்தில் இந்தக் கதைக்கு plot எழுத அமர்ந்திருப்பார் போலும்! சுலபமானதொரு துவக்கப் புள்ளியை நிர்ணயம் செய்து கொண்ட பிற்பாடு டுரோன்டோ எக்ஸ்பிரசைப் போல கதையைத் துளி பிரேக்குமின்றி நகற்றிச் செல்கிறார், மனுஷன்! அந்தப் பயணத்தின் போது தான் நமது பென்சில் மீசை நாயகருக்குக் கழுதைச் சவாரி; ரொட்டியைத் தந்து நாலுகால் நண்பரை சமனப்படுத்தும் சாகஸம் என்றெல்லாம்! சவாரி கழுதை மீதென்றாலும்- கதையின் வேகமோ ஜெட் வேகம்!
ஷெல்டனின் அறிமுக நாட்கள் இந்தத் தருணத்தில் என் மனதில் நிழலாடுகின்றன! சின்ன வயதிலிருந்தே காமிக்ஸ் நாயகர்கள் என்றால் மீசையில்லா 'மொழுமொழு பார்ட்டிகள்' என்பதான template என் தலைக்குள் குடிகொண்டிருந்தது! நமது மாண்ட்ரேக் நீங்கலாய், கண்ணுக்குத் தென்பட்ட பாக்கி அத்தனை பேருமே அந்த “no மீசை” இலக்கணத்துக்கு சாட்சிகளாக நிற்க – நம்மூர் படைப்புகளான “இன்ஸ்பெக்டர் கருடா” விற்கு மட்டும் மனசு ஒப்புதல் தந்திருந்தது. இந்த சூழலில் 2013-ன் NBS இதழுக்கான திட்டமிடல்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த வேளையது! ஏகமாய்க் கதைகளை அறிவித்து விட்ட போதிலும் எனக்குள் சன்னமாயொரு நெருடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது – நாயகர்களுள் ஒருவித ‘X’ factor குறைகிறதோ என்ற ரீதியில்! “கேப்டன் டைகர்”; சிக் பில்; மாடஸ்டி; லார்கோ என்று பரிச்சயமான முகங்களோடு – ஜில் ஜோர்டன் மட்டுமே புதுவரவாக இருந்தது என்னை சமனப்படுத்தியிருக்கவில்லை! ஜில்லாரின் சித்திர பாணி – கார்ட்டூன் ஸ்டைல் என்பதாலும், ரொம்பவே புராதனம் தட்டுப்படும் படைப்பு என்பதாலும் அவர் மட்டுமே போதுமா – இந்த அசுர (??!!) விலையிலான இதழைக் கரைசேர்க்க என்ற பயம் என்னை அலைக்கழித்தது! தவிர, லார்கோ துவக்கித் தந்திருந்த “நவீன யுகக்கதைகள்” என்ற முன்செல்லும் பாதைக்கு வலுசேர்க்க, லேட்டஸ்டாய் யாரேனும் தோள் தந்தால் தேவலாமே என்று தோன்றியது!
நமது நரைமுடி ரோமியோ வேய்ன் ஷெல்டனை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும் தான்! ஆனால் அந்த மோவாய்க்கு மேலான ‘கம்பிளிப் பூச்சியின்‘ காரணத்தால் – “ஓவியாவுக்குக் கூட ஓட்டுப் போட்டு விடலாம்; இவருக்கு வேண்டாமே?!” என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது! வீட்டிலிருந்தபடிக்கு சாமங்களில் பதிவுகளை டைப்பித்து பழகி வந்த நாட்களவை என்பதால் ஒரு மணி – ரெண்டு மணி என்பதெல்லாம் எனக்கு நண்பகல் போல! புதுசாய் யாரையேனும் தேடிப் பிடிக்க வேண்டுமே (NBS-க்குத் தானுங்கோ!!) என்ற குடைச்சல் வேறு தூங்க விடாது பண்ண, எனது காமிக்ஸ் சேகரிப்பு பீரோவைக் குடைய ஆரம்பித்தேன்! “Les Casseurs” என்றதொரு பிரெஞ்சுத் தொடரின் ஆல்பங்கள் கையில் சிக்கின! அந்தத் தொடரோ ஐரோப்பாவில் மெகா சைஸ் டிரக்குகளை சாலையில் ஓட்டிச் செல்லும் 2 சாகஸ டிரைவர்களின் கதை! அதில் நமக்கு ஜாஸ்தி ஆர்வம் இருக்க முடியாதென்றாலும், கதை நெடுகிலும் தலைகாட்டிய ராட்சஸ சைஸ் ‘பூம்‘ டிரக்குகளின் சித்திரங்கள் சொக்க வைத்தன! ஓவியர் யாரென்று கூகுளில் தேடிப் பார்த்தால் – க்ரிஸ்டியான் டினாயெர் என்று பதில் கிடைத்தது. கூடவே அவர் பணியாற்றியுள்ள இதர தொடர்கள் என்ற தலைப்பில் ‘வேய்ன் ஷெல்டன்‘ என்று பிரதானமாய் எழுதப்பட்டிருந்தது! “ஆகா... இது அவர்லே?” என்றபடிக்கே யோசனையில் லயிக்கத் தொடங்கினேன். என்னிடமிருந்த ஷெல்டனின் முதல் பிரெஞ்சு ஆல்பத்தையும் புரட்டத் தொடங்கிய போது- “வான் ஹாம்மே” என்ற பெயரும் கண்ணில் பட்டது! ஆஹா... ஒரு ஜாம்பவனோடு, ஒரு ஓவிய ஜீனியஸ் கைகோர்த்திருக்கும் போது – மீசையென்ன – ஜடாமுடியே வைத்திருந்தாலும் கதை சோடை போகாதென்று ஞானோதயம் உதித்தது! அப்புறம் நடந்த சமாச்சாரங்கள் தான் நாமறிந்ததாச்சே? NBS என்னும் வண்டி ஜெட் வேகத்தில் கரை தாண்டியது; நம்மையுமே அடுத்ததொரு லெவலுக்கு இழுத்துக் கொண்டே! அந்த வெற்றியில் வேய்னுக்கு எத்தனை சதவிகிதப் பங்குண்டு என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் நிச்சயமாய் நம்மிடையே ஒரு பக்கவான ஆக்ஷன் ஹீரோவாக ஆசாமி ‘செட்‘ ஆகிப் போனது மட்டும் நிச்சயம்! And இதோ எட்டிவிட்டோமே – இந்தத் தொடரின் அந்திமப் பகுதியினை! ஆகஸ்டில் வரவிருக்கும் "ஒரு காகிதத்தைத் தேடி" இந்தத் தொடரில் ஆல்பம் # 11 ! இதற்குப் பின்னே ஒரேயொரு ஆல்பம் எஞ்சியுள்ளது ! இதழின் அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க டீசர் இதோ:
”கழுதைச் சவாரி” தான் இதழின் ஒரிஜினல் அட்டைப்படமுமே என்பதால் அதனையே நாமும் ஏற்றுக் கொண்டோம் – பின்னணிகளில் மட்டுமே மாற்றங்களைச் செய்து கொண்டு! பின்னணிக்கு இம்முறை பயன்படுத்தியுள்ள ஒரு வித Prussian Blue – நமது ராப்பர்களுக்குப் புதுசு என்றே தோன்றியது!
உட்பக்கங்களில் வழக்கம் போலவே அதிரடிச் சித்திரங்கள் + கலரிங் பாணிகள் என்று கண்களுக்கொரு விருந்து காத்துள்ளது! So ”ஒரு காகிதத்தைத் தேடி” – வான் ஹாம்மேவின் மறுபக்கம்! Don’t miss it guys!
அப்புறம் இன்னமுமொரு ‘ஷெல்டன்‘ சேதியும் கூட! இந்தத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்களோ ? என்ற மெலிதான சந்தேகம் எனக்குள்ளிருந்தது! ஆனால் சென்றாண்டின் ஏதோவொரு சமயம் இது பற்றிப் படைப்பாளர்களிடம் கேட்ட போது – கண்சிமிட்டலோடு ‘don’t worry!’ என்று மட்டும் சொல்லி வைத்திருந்தார்கள்! அதற்கென்ன அர்த்தமென்பது தற்சமயம் புரிகிறது – ஆகஸ்டில் காத்திருக்கும் புத்தம் புதிய ஆல்பத்தின் அறிவிப்போடு! So இன்னும் ஒரேயொரு ஷெல்டன் கதை மட்டுமே பாக்கியுள்ளது என்ற நிலை மாறுகிறது! இதோ – காத்திருக்கும் புது ஆல்பத்தின் அட்டைப்படம்!
And புது ஆல்பங்கள் காத்திருப்பது நமது கோடீஸ்வரக் கோமகனின் தொடரிலுமே! வான் ஹாம்மே கதை இலாக்காவிலிருந்து VRS வாங்கியான பின்னே ஓவியரே ஆல்-இன்-ஆல் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு, நாவலாசிரியர் ஒருவரின் ஒத்தாசையோடு தயாரித்துள்ள புது ஆல்பம் வரும் October மாதம் வெளிவரக் காத்துள்ளது! “வான் ஹாம்மே” என்ற மெகா நிழலிலிருந்து வெளிவருவது அத்தனை சுலபமல்ல தான்; ஆனால் ஓவியர் பிலிப் ப்ராங்குமே ஒரு அட்டகாச ஆற்றலாளரே எனும் போது எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன! இரு பாக சாகஸத்தின் முதல் ஆல்பம் இந்தாண்டிலும், இறுதி ஆல்பம் 2018-ன் இறுதியிலும் வெளியாகும்! So நாமதை சுவைபார்க்கும் வாய்ப்பு 2019-ல் தானிருக்கும் என்று நினைக்கிறேன்! இதோ அதன் அறிவிப்பு !
புது வரவுகளின் பட்டியலை இன்னமுமே கொஞ்சம் வாசித்து விடுகிறேனே? நமது ஒல்லிப் பிச்சான் லக்கி லூக்கின் புது ஆல்பம் சமீபமாய் வெளியாகியுள்ளது! ஒரு வெற்றித் தொடர் முற்றுப்புள்ளி காணாது, தொடர் நடை போடுவதில் மகிழ்ச்சியே! பாருங்களேன் அதன் ராப்பரை!
அதே சமயம் – நம்மவர்களை, நம்மவர்களே பகடி செய்திடுமொரு புது ஆல்பமும் களம் காண்கிறது! லக்கி லூக்கின் சொல் பேச்சை ஜாலி ஜம்பர் கேட்க மறுத்தால் கதை என்னாவது? என்ற கேள்வியோடு ஒரு கார்ட்டூனை கார்ட்டூனாக்கும் ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர் பிரெஞ்சில்! பாருங்களேன் இந்தக் கூத்தை! எப்போதாவது ஒரு பொழுது போகா தருணத்தில், இதையும் தமிழாக்க முயற்சிப்போமா guys?
Jolly Jumper Stops Responding !! |
இந்தப் ”பகடி மேட்டர்” புதுசில்லை என்பது கொசுறுச் சேதி! ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை செமையாக வாரி லோம்பா குழுமமே ஒரு இதழொன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது! இதுவரையிலான வெவ்வேறு ஜானி சாகஸங்களிலிருந்தே படங்களை frame by frame இரவலெடுத்துக் கொண்டே ஒரு உட்டாலக்கடி சாகஸத்தை ஒரு முழு ஆல்பமாக்கியுள்ளனர்! இதில் beauty என்னவென்றால், ஆல்பத்தின் ஒவ்வொரு frame சித்திரமுமே, இதற்கு முன்பான 78 ஜானி ஆல்பங்களுக்கு வரையப்பட்ட சித்திரங்களே ! எந்த விதத்திலும் மாற்றி வரையாது, ஆங்காங்கிருந்து அள்ளிக் கொண்டு வந்து David Vandermeulen என்ற கதாசிரியர் ஒரு remix ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் !! என்னவொரு கற்பனை பாருங்களேன் ?!!
அது மட்டுமன்றி New look ரிப்போர்ட்டர் ஜானியின் சாகஸத்தில் ஆல்பம் # 2-ம் சமீபமாய் வெளியாகி தூள் கிளப்பியுள்ளது! ரொம்பவே கட்டுப்பட்டியாய் சுற்றித் திரிந்த நம்மவர் – இந்தப் புது அவதாரில், பட்டப் பகலில் பார்க்கில் "பச்சக்" அடிக்கும் அளவுக்கு வெளுத்து வாங்குகிறார் பாருங்களேன்!
Moving on – ஆகஸ்டின் நமது மையப் பணியான “இரத்தக் கோட்டை” சிறிதும் தாமதமின்றித் தயாராகிட வேண்டுமென்ற வேகத்தில் சாத்தியமான சகல பல்டிகளையும் அடித்து வருகிறோம் ! 'தல' அச்சாகும் வேளைகளில் எங்கும் மஞ்சள் மயமெனில் - "தளபதி" சர்வமும் நீலம் என்கிறார் ! இந்த முழுநீள அதிரடித் தொகுப்பை நண்பர்களின் மூவர் தனித்தனியாய்ப் பிழை திருத்தம் செய்து தந்திருக்க, என் பாடு லேசாகிப் போகுமென்ற மிதப்பிலிருந்தேன் ! ஆனால் கடைசி நேரத்தில், வழக்கம் போலவே மனம் ஒப்பவே இல்லை - நானுமொரு வாசிப்பைப் போடாது பக்கங்களை அச்சுக்கு அனுப்ப ! பலனாக கிட்டத்தட்ட மறந்தே போயிருந்ததொரு கதையினை மீண்டும் வாசித்த திருப்தி கிட்டியது ! Printer's Devils என்றொரு பெயருண்டு - அச்சில் தலைகாட்டும் இந்தப் பிழைகளுக்கு ! எத்தனை லிட்டர் விளக்கெண்ணையை, எத்தனை பேர் கண்ணில் விட்டுக் கொண்டு திருத்தங்களை செய்தாலும், அவ்வளவு பேருக்குமே 'பிம்பிலிக்கா பிலாக்கி' காட்டும் ஆற்றல் இந்தக் குட்டிச் சாத்தான்களுக்குண்டு என்பதை இன்னமுமொருமுறை உணர முடிந்தது ! நண்பர்களின் கண்களுக்கு டிமிக்கி கொடுத்திருந்த, என் ஆந்தை விழிகளுக்குத் தட்டுப்பட்ட பிழைகளுக்கு திருத்தங்களை போட்ட கையோடு (நிச்சயமாய் இது போகவும் சைத்தான்கள் இருப்பது உறுதியே !!) - இறுதி பாகத்தில் கிழவன் ஜிம்மியின் வசனங்களை மாத்திரமே இன்னும் கொஞ்சம் lively ஆக்க முயன்றேன் ! நிச்சயமாய் இந்த இறுதி ஆல்பத்தை மட்டும் மறுக்கா மொழிபெயர்க்க நேரம் இருந்திருப்பின், இன்னமும் கூட மெருகூட்டியிருக்க முடியுமே என்ற ஆதங்கமும் மெலிதாய்த் தலைதூக்கியது ! But எக்ஸ்டரா நம்பர் போட்டு தர்மஅடி வாங்கிய "தங்கக் கல்லறையின்" ஞாபகம் இன்னமுமே மங்காதிருக்க ,வான்டனாய்ப் போய்திரும்பவும் முதுகைப் பழுக்க வைக்க வேண்டாமே என்று தீர்மானித்தேன் !!
ஒரு வழியாய் அச்சுப் பணிகள் நேற்றைக்கு முழுமையாகிட – தங்கத் தலைவன் பைண்டிங் பிரிவுக்குத் தற்காலிகமாய் ஜாகையை மாற்றியுள்ளார்! அட்டைப்பட நகாசு வேலைகளுக்கு இம்முறை கூடுதலாகவே மெனக்கெடல்கள் எடுத்திருப்பதால், அதன் பொருட்டு பொறுமையாய் பணி செய்து வருகிறோம் ! மாதந்தோறும் இது போல ஹார்ட-கவர் இதழ்கள் தொடர்ந்திடும் பட்சத்தில், ஷெரீப் டாக்புல்லுக்குப் போல எனக்குமே முடி வெட்டிக் கொள்ளும் செலவேயிராது என்பது மட்டும் நிச்சயம்! Phew!
And ஆகஸ்டின் ‘சஸ்பென்ஸ்‘ புக் ஃபேர் இதழுக்கான பணிகள் ‘விடாதே-பிடி‘ என்ற ரகத்தில் நடந்து வருகின்றன! ஏற்கனவே சொன்னது போல, இதுவொரு முரட்டு இதழல்ல என்பதால் – நிச்சயம் ஈரோட்டுக்கு முன்பாகவே தயாராகிடும் என்பதில் சந்தேகமில்லை எனக்கு!
எனது பொழுதுகள் தற்போதைக்கு லயித்துக் கிடப்பதோ – our own சஞ்சய் ராமசாமியாரை அடுத்தாண்டு வண்ணத்தில் உலவச் செய்திடும் மார்க்கங்களை அலசுவதில் தான்!
“ஒரே 900 பக்க மெகா இதழ்” என்ற இரத்தப் படலக் கனவை நனவாக்கிப் பார்த்திடும் பொருட்டு ஒரு சாம்பிள் பிரதியைப் போட்டுப் பார்த்தோம் ! And மெர்செலாகிப் போனோம் சாமி - அதன் எடையையும், ஆகிருதியையும் பார்த்து !!
சத்தியமாய் சம்பளத்திற்கு ஆள் போட்டே இந்த இதழைச் சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்பது அப்பட்டமாய்ப் புரிகிறது! மல்லாக்கப் படுத்துக் கொண்டு இதைப் படிக்க யாருக்கேனும் எண்ணமிருந்தால் அதற்கு முன்பாய் தத்தம் இல்லங்களிலிருந்து புத்தூருக்குப் போகும் பஸ்களின் நேரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்த சிந்தனையாக இருக்குமென்பேன்! Still not too late guys – “ஒற்றை இதழ்” என்ற உங்கள் கனவு,சேகரிப்புகளுக்கு மகுடம் சேர்க்கக் கூடுமே தவிர, பயன்பாட்டுக்கு எத்தனை தூரம் சுகப்படுமோ? என்ற கேள்விக்கு பதில் என்னிடம் நஹி ! But பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேண்டுமென்று நீங்கள் தீவிரமாகயிருப்பின், உங்களோடு சேர்ந்து இப்போதே நானும் தண்டால், பஸ்கியெல்லாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டியது தான்! தலீவர் போன்ற 'பிஞ்சு பயில்வான்களுக்கு' இந்த இதழ் வழங்கப்படாதென்றொரு போர்டே வைத்து விடலாம்! So இதற்கான முன்பதிவுப் படிவத்தில், பெயர்; முகவரி; செல் நம்பர் என்பதோடு - எடை; பளு தூக்கும் ஆற்றல் என்ற களங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்! So Last chance all : கோட்டைச்சாமி தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றியே தீர வேண்டுமென்பதில் உறுதியாய் உள்ளீர்களா ? உறுதியானவர்கள் கை தூக்குங்கள் - please ! மிச்ச மீதியை ஈரோட்டில் பேசிக் கொள்ளலாமே !
கோவை புத்தக விழா நேற்றைக்குத் துவங்கியுள்ளது! ஈரோட்டளவிற்கு அங்கு விற்பனை இருந்ததில்லையென்றாலும், இம்முறை துவக்க 2 நாட்களிலேயே ‘அடடே‘ சொல்லும் விதமாய் அட்டகாச response! அடுத்த ஞாயிறு வரை நடைபெறும் விழாவிற்கு அந்தப் பகுதிகளில் உள்ள நண்பர்கள் ஒரு விசிட் அடித்திடலாமே?
புறப்படும் முன்பாய் - மீண்டுமொரு caption contest !! இம்முறையே தளபதியும், அவரது சகாக்களுமே !! வெற்றி பெரும் caption writer-க்கு "இரத்தக் கோட்டை" யின் ஒரிஜினல் பிரெஞ்சு இதழ் பரிசு !!
And ஈரோட்டுக்கு வந்திடவுள்ள நண்பர்கள் இன்னமும் attendance பதியாதிருப்பின், இந்தப் பதிவினில் செய்து கொள்ளலாமே - ப்ளீஸ் ?
SATURDAY 5th.AUGUST'2017 :
சந்திக்கும் இடம் : HOTEL LE JARDIN
VOC பார்க் வாயிலில், பஸ் நிலையத்திலிருந்து நடக்கும் தூரமே !
நேரம் : காலை 10 to மதியம் 2
Please do drop in !!!
ஐ பஸ்ட்டு!
ReplyDelete👏👏👏👏
DeleteNadu rathiri poonaigal ulavum neram😜
Deleteசார் ஒற்றை இதழ் பெருமைக்குப் பயன்படுமே தவிர உபயோகத்துக்குத் தோதுபடாது. மூன்று தொகுப்புகள் என் சாய்ஸ். ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது எனவே உங்க முடிவை தெரிவித்தால் ஓகே சார்தான் என் பதிலாக இருக்கும்.
Deleteஜானி @ செமையா சொன்னீங்க.மற்ற நண்பர்களும் இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டால் சந்தோசம்.
Deleteஜானி ஜி@ சூப்பர்...+10000
Delete// சார் ஒற்றை இதழ் பெருமைக்குப் பயன்படுமே தவிர உபயோகத்துக்குத் தோதுபடாது.//
Delete+11111
Mr.விஜய் முதலாவதாத வந்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@ Saran Selvi
Delete:)
என்னது செயலருக்கு பர்ஸ்ட் வந்த்துக்கு வாழ்த்துக்களா ?
Deleteஎன்ன சார் நீங்க...அவரு ஒவ்வோரு பதிவுக்கும் ஆசிரியர் பதிவு போடறதுக்கு முன்னாடியே
" ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே " அப்படின்னு சொல்லிட்டு தான் தூங்கறாரு...இதுக்கு எல்லாம் நீங்க செயலருக்கு வாழ்த்து சொல்றதுன்னா வாரா வாரம் அவருகிட்ட சொல்லிகிட்டே தான் இருக்கனும் ..:-)
Good morning and happy sunday
ReplyDeleteநாங்க 2.எப்படி...
ReplyDeleteகாமிக்ஸ் காதலர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.. ஈரோட்டுத் திருவிழாவுக்கு இன்னும் பத்தே நாட்கள் உள்ளன..
ReplyDeletefirst time i am sixth
ReplyDeleteசரவணன் இரு பதிவுகளுக்கு முன்பே உங்களிடம் ஈரோட்டுக்கு வருகிறீர்களா என்று கேட்டிருந்தேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மீண்டும் கேட்கிறேன் நண்பரே ஈரோடு வருகிறீர்களா
Deleteமன்னிக்கவும் நண்பரே',2018 இல் கண்டிப்பாக சந்திப்போம்.
Deleteசற்று ஏமாற்றமே நண்பரே
Deletesorry nanpa.leave and finance probalem .intha andu enakku கடுமையான கஷ்டங்கள்.அதில் இ௫ந்து மீண்டு வரவே நாட்கள் சரியாகிவிட்டன.
Deleteநிலைமை புரிகிறது நண்பரே
Deleteதொடர்ந்து நம் தளத்திற்க்கு வருகை புரிந்து கொண்டிருங்கள்
வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDeleteI AM 6TH ,HI FRIENDS. HAVE A COMICS SUNDAY
ReplyDeletegood night sorry good morning friends and edi sir.படிச்சப் புட்டு வர்றோனுங்க!
ReplyDeleteBonjour!!
ReplyDeleteBonne nuit??
விஜயன் சார், இரத்த படலம் பற்றிய எனது கருத்தில் மாற்றம் இல்லை, இரண்டு அல்லது மூன்று புத்தகங்களாக பாக்ஸில் தாருங்கள்.
ReplyDeleteப்ராட்டிகளாக பார்த்தால் ஒரே புத்தகமாக வரும் போது எடை அதிகமாகிவிடும்; கைகளில் வைத்து படிப்பது கடினம். எனவே எனக்கு ஒரே புத்தகமாக வேண்டாம்.
Parani from Bangalore : Options இரண்டே சார் ! ஒரே மெகா இதழாய்....! அல்லது 3 இதழ்கள் - தலா 6 பாகங்களைக் கொண்ட விதமாய் !!
Delete"மெகா இதழ்" உசிலைமணியும், போண்டாமணியும் சேர்ந்த கலவையாய்த் தெரிகிறது !!
3 இதழுக்கு எனது ஒட்டு.
Delete+1111
Delete+12345
Deleteமூன்றே பெஸ்ட்...
Deleteவேற வழி? ஹி,ஹி,ஹி.
Deleteவிஜயன் சார், லக்கி & ஜாலியின் சொல் பேச்சுக்கேளாமை கதை நன்றாக இருந்தால் அடுத்த வருடம் முயற்சிக்கலாமே.
ReplyDeleteParani from Bangalore : இன்னமும் கதையைப் பரிசீலிக்கவில்லை சார் ; so இப்போதைக்கு too early !
DeleteHi...
ReplyDeleteஎன்ன ஆனாலும் சரி படலம் ஒரெ புத்தகமாகத் தான் வந்தாகனும்.
ReplyDeletesaravanan : அழகு மட்டுமே பார்ப்பதாய் இருப்பின் நிச்சயம் சூப்பராக இருக்கும் !!
Deleteசரியாக சொன்னீங்க விஜயன் சார். இதுதான் உண்மை.
Deleteஎனக்கு பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேனும். (ஓரே புக்)
Deleteஒவ்வொரு ஹீரோக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட சந்திப்பை பற்றி சொல்லும் போதெல்லாம் ஓர் உற்சாகம் கரைப் புரண்டு ஓடுவதை தவிர்க்க முடியவில்லை. ..வாவ்..
ReplyDeleteஅந்திம காலம் என்ற வரிதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. கீழே படிக்க படிக்க மனது cool ஆனது.
நல்ல கதாபாத்திரங்களுக்கு அழிவில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகி உள்ளது.tks for information.
எடிட்டர் சார், சர்ப்ரைஸ் இதழ் என்ன என்று சிறிது கோடி காட்டலாமே? மனம் ஆவலாய் கிடந்து துடிக்கின்றது.
ReplyDeleteமானிடோ தெய்வமே !அந்த சஸ்பென்ஸ் இதழ் என்னவென்று அந்த ஓட்டைவாய் உலகநாயகரை சிறிது வாய் திறக்க வைக்கக் கூடாதா????
ReplyDeleteஆசிரியரே என்னுடைய தனிப்பட்ட விருப்பம் இரத்தப்படலம் ஒரே இதழாக வந்தால் சந்தோஷம்
ReplyDelete☝✋
செந்தில் சத்யா : எனக்குமே இந்த விஷயத்தில் எவ்வித பாகுபாடும் கிடையாது ; மறுபதிப்பை நீங்கள் விரும்பும் விதத்தில் உருவாக்குவதோடு என் பொறுப்பு நிறைவுறும் தான் ! ஆனால் நிச்சயமாய் இந்த எடையைத் தூக்கிச் சுமந்து, படிப்பது ; அப்புறமாய்ப் பத்திரப்படுத்துவதென்பதெல்லாம் நடைமுறை சாத்தியம் தானா ? என்பதே எனக்குள்ள கேள்வி சத்யா !
Deleteஎங்களின் திருப்திக்காக நீங்கள் உழைப்பது கண்கூடாக தெரிகிறது ஆசிரியரே ஒரே புத்தகமாக வந்தால்தான் பாதுகாப்பது எளிது நான் மல்லாக்க படுத்துக்கொண்டு படிக்க மாட்டேன் குப்புறப்படுத்துக் கொண்டுதான் படிப்பான் இந்த கோட்டை சாமி
DeleteXIII ஒரே மெகா இதழாய் வேண்டும்
ReplyDeleteஅடுத்த ஆண்டு ஜான் சில்வர் உண்டா சார்?இவரின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்.தயவு செய்து க௫ணை காட்டுங்கள் சார்.
ReplyDeleteஇரத்தப் படலம் கருப்பு வெள்ளையில் வந்தபோதும் மல்லாக்க படுத்து படிக்க முடியாது. அப்படி இருக்க கலரில் கேட்கவா வேண்டும்.
ReplyDeleteஓரே குண்டு புக் என்பது நமது(உங்கள்-எங்கள்) ட்ரீம்.குட்டையை எதுவும் குழப்பி விடாதீர்கள்.
முன்பு சொன்னதுபோல் ஒரே குண்டுபுக் and 3இதழாக இதில் மாற்றம் வேண்டாமே ப்ளீஸ்.
இதுபோன்று பல குண்டு இதழ்கள் வருவதற்கு இதுவே முதல்படி போன்றது.
ஏணியை வானத்தை நோக்கி போடுவோம்...இந்த சிறிய பட்டாளம் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலகம் அறிய செய்வோம்.ஜெய்ஹிந்த்....
சாா்,
ReplyDeleteஇரத்தக் கோட்டை - புக்கிங் நெ.277
ஈரோட்டுல் பெற்றுக் கொள்கிறேன் சாா்!!
வாரே வா
Deleteடான்ஸ் கிங் மிதுன் சக்கரவர்த்தி யை
EBF ல் சந்திக்க போகிறோம் மகிழ்ச்சி நண்பரே
மகிழ்ச்சி!
Deleteநண்பரே, செந்தில் சத்யா!!
Lady=S இந்த மாதம் வந்த புத்தகம்களில் கையில் எடுத்த பின் ஒரே மூச்சில் படித்து முடித்த கதை என்ற பெருமை நமது இந்த அறிமுக நாயகிக்கே.
ReplyDeleteகதையில் பெரிய ஆக்சன் சம்பவம்கள் இல்லை, ஆனால் கதை அமைப்பு விறுவிறுப்பாக படிக்கும் படி இருந்தது.
சித்திரம்கள் மிரட்டுகிறது & என்னை மிகவும் கவர்ந்தது.
கதாசிரியர் நமது இளவரசி ரசிகர் போல் தெரிகிறது, lady-s & ஆன்டன் கதாபாத்திரம் மற்றும் ஆரம்பகால நிகழ்வுகள் இதற்கு உதாரணம்.
அடுத்த கதையை விரைவில் வெளியிட வேண்டும்.
Lady-sக்கு வைர கம்பளம் விரித்து எனது வரவேற்பை தெரிவிக்கிறேன்.
அந்த மச்சத்தைப் பாக்குலியா??
Deleteபெங்களுா்காரூ!!
சொல்ல மறந்த விஷயம்:நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் இணைந்து கதை சொன்ன விதம். அதுவும் கடந்தகால சம்பவம் பற்றி ஆரம்பிக்கும் மற்றும் நிகழ்காலத்திற்கு திரும்புவதற்கு முந்தைய சித்திரத்திற்கு வட்டமுனை உள்ள பாக்ஸில் வரைந்து இருப்பது.
DeleteXIII ஒரே புக்குக்கு ஜே!!!
ReplyDelete👍👍👍
சஸ்பென்ஸ் இதழ் சுஸ்கி விஸ்கி யோ
ReplyDeleteசாா்,
ReplyDeleteENGLISH CINE BOOKS போல
FRENCH புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளனவா??
(குறிப்பாக லக்கிலூக் கதைகள்)
ஷெல்டனின் அட்டைப்படம் அருமை
ReplyDeleteநீல நிற சித்திரங்கள் கண்ணை பறிக்கின்றன
ஒரு வழியாக ஜூலை இதழ்கள் 3 நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தன. சிக் பில் படிக்க ஆரம்பித்தேன்.. அருமையான தரமான படைப்பு. அற்புதம் சார். அதற்குள் ஆகஸ்ட் இதழ்களைப் பற்றிய செய்திகள்... ஹ்ம்ம்... ஈரோடு புத்தக திருவிழாவிற்கு என்னால் வர முடியாது. நண்பர்களே உங்கள் பதிவுகளை மறக்காதீர்கள்.. அதுவே என்னைப்போன்ற தூர தேசத்திலிருப்பவர்களுக்கு உற்சாக டானிக்.. ஜூலை இதழ்களின் தரம் அருமை சார். உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்..
ReplyDeleteஜானி
ReplyDeleteலார்கோ
லக்கிலூக்
ஷெல்டன்
அனைவரும்
தொடர்வது
மகிழ்ச்சியிலும்
மகிழ்ச்சி
அவர்கள்
விற்பனையில்
சாதிப்பது
இன்னும்
மகிழ்ச்சி
+123456789
DeleteXIII ஒரேஏஏஏஏஏஏஏ.புக்
ReplyDeleteஅப்புறம் 6பாகம் 3 புக் இரண்டுமே நம்ம கணக்குல உண்டு எப்போது முன்பதிவு உஉஉஉஉஉஉஉஉஉஉஉ
இரத்தப்படலம் 3 இதழ்களுக்கு எனது ஓட்டு.
ReplyDeleteலக்கி லூக்கே spoof வகை... spoofக்கே spoofஆ.. சீக்கிரம் இதழை பரிசீலித்து வெளியீட்டு தேதியை சொல்லுங்கள் சார்...
ReplyDeleteமீஇஇஇ... டூஉஉஉ...
Deleteஇம்மாம் பெரிய பதிவு. இதைத்தான் எதிர்பார்த்தோம் . சூப்பர் சார் !
ReplyDeleteசிக்பில் க்ளாசிக்:- இந்த புத்தகம் எனக்கு பிடிக்க சில காரணங்கள்.
ReplyDelete* இது வரை படிக்காத கதைகள்.
* தெளிவான ஒரே நேர்கோட்டில் செல்லும் கதை.
* வண்ணத்தில் இரசிக்க செய்யும் சித்திரங்கள்.
* இரண்டு கதைகளிலும் ஆர்டினின் குழந்தை மனம் ரசிக்கும் படி இருந்தது. இரும்பு கௌபாயில் பொம்மை மீது, விண்ணில் ஒரு எலியில் சுன்டெலியுடனான நட்பு.
* அதேநேரத்தில் இந்த கதைகளில் ஆர்டினின் அறிவு ஆனால் மற்றவர்களுக்கு முட்டாள் போல் தெரிவது.
* இரும்பு கௌபாயில் சிரிப்பு கொஞ்சம் அதிகம். விண்ணில் ஒரு எலியில் சிரிப்பு கொஞ்சம் குறைவு. ஆனால் படித்து முடித்த பிறகு மனது சந்தோசமாக இருந்தது.
* மாம்ஸ் என்று வரும் டயலாக் குறிப்பிட்ட அந்த காட்சிக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை.
அ௫மை சரர்
Deleteவி.ஒ.எலி மினிலயன் புக்கை படித்து பாருங்க parani..
Deleteசிரிப்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்..
சி.பி. க்ளாசிக்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சிரிக்க வாய்ப்பு குறைவே..
கொஞ்சம் அந்த சாம்பிள் பிரதியை கண்ணில் காட்டுங்களேன்.
ReplyDeleteநடுநிசி வணக்கம் நண்பர்களே
ReplyDelete1:37:00 பின்இரவு
Deleteஆகஸட் ல் மொத்தம் எத்தனை இதழ்கள் நண்பர்களே?.
ReplyDelete1.இரத்தக்கோட்டை
Delete2.மரணத்தின் நிறம் பச்சை டெக்ஸ்
3.ஒரு காகிதத்தை தேடி ஷெல்டன்
4.டைலன் டாக்
5.?
6.?
மொத்தம் 6 அல்லது 7 புக் உண்டு நம்பிவாங்க சந்தோசமா போங்க...!
saravanan : 4 + 1
Delete///தலீவர் போன்ற 'பிஞ்சு பயில்வான்களுக்கு' இந்த இதழ் வழங்கப்படாதென்றொரு போர்டே வைத்து விடலாம்! So இதற்கான முன்பதிவுப் படிவத்தில், பெயர்; முகவரி; செல் நம்பர் என்பதோடு - எடை; பளு தூக்கும் ஆற்றல் என்ற களங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்! So Last chance all : கோட்டைச்சாமி தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றியே தீர வேண்டுமென்பதில் உறுதியாய் உள்ளீர்களா ?///
ReplyDelete:))))))))
தலைகீழாகத்தான் குதிப்பேன்
ReplyDeleteகொடியில் காயும் பட்டாப்பட்டியை மாட்டிக் கொண்டு, இதோ நானும் மாடி உச்சிக்கு வந்துடுறேன் !!
Delete:-))))
Deleteநமது தலைவர் ,டெக்ஸ் விஜயராகவன் சார், ஈ வி சார்,கி ஆ கண்ணன் சார் மற்றும் பல நண்பர்களைக் காணவில்லையே?
ReplyDeleteஅதிகாலை 2 மணிக்கு 'இவுகள காணோம்... அவுகளக் காணோம்'னு கேட்டு கூச்சல் போடுறதெல்லாம் ரொம்ப ஓவருங்க சரவணன்! :)
Delete:-)))
Delete12.15வரை விழித்து இருந்து தூங்கி எழுந்து பார்த்தா மணி காலை 10, வந்தாச்சு நண்பரே... அனைவருக்கும் ஹேப்பி சன்டே நண்பர்களே...
Deleteஅமாவாசை பார்க்காதவங்களாம் என்னோடு சேர்த்து கொள்ளலாம்....
"பதிவு படிச்சவுடன் பையை எடு"...
///And ஆகஸ்டின் ‘சஸ்பென்ஸ்‘ புக் ஃபேர் இதழுக்கான பணிகள் ‘விடாதே-பிடி‘ என்ற ரகத்தில் நடந்து வருகின்றன///
ReplyDeleteசஸ்பென்ஸ் இதழ் என்னவாக இருக்குமென்பதற்கு எடிட்டராலேயே 'விடாதே-பிடி' என்ற க்ளூ கொடுக்கப்பட்டுள்ளதைப் போல தெரிகிறது. இந்தக் க்ளூவை வைத்து சரியாக யூகிக்கும் நண்பருக்கு ஈவியின் சிறப்புப் பரிசு ஈரோடு விழாவில் காத்திருக்கிறது!
////சிறப்புப் பரிசு////
Deleteஎனக்கு வேண்டாம்??😥😥
சே எனக்கு ஈ.வியின் சிறப்பு பரிசு பிடிக்காதது.
Deleteதுரத்தும் தலைவிதி
Delete😥😥 புடிக்காது ஸ்மா்ப் 😥😥
Deleteஇரத்தக் கோட்டை கலெக்டர் ஸ்பெசல்."""விடாதே பிடி"""னு க்ளூனா அது """தோட்ட தலை நகரம்"""வண்ண மறு பதிப்பாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.ஆக கேப்டன் டைகர் தொடர்கள் முழுவதும் முற்றும்.
Deleteசெயலரிடம் சிறப்பு பரிசை எதிர்பார்க்கவில்லை.
'பரிசு வேணாம்'னு சொல்ற கூட்டத்தை வேற எங்கே பார்க்க முடியும்?!!! உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன் நண்பர்களே... பெருமைப்படுகிறேன்!! பூஊஊவ்வ்...
Deleteபரிசுக்காக போட்டில கலந்துகுறவங்களை பாத்து இருக்கேன்...
Deleteபரிசு கிடைக்காதுன்னு போட்டில கலந்து கொள்ளாமல் இருப்பவர்களையும் பார்த்து இருக்கேன்...
ஆனா உங்க பரிசு வேண்டாம்னு போட்டில பங்கு பெறும் நண்பர்களை நினைக்கும் பொழுது உண்மையிலேயே "ஆ.க ."வருகிறது செயலரே....
எல்லாம் உங்கள் பரிசின் மகிமை...:-)
தலைவரே நமது செயலாளரை ஓரளவுக்காவது புரிந்து வைத்துள்ளோம்.உலகம் முழுவதுமே அரசியல்வாதிகளால் அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகள் காலப்போக்கில் மறந்து விடுவது இயல்பான ஒன்றுதானே.
Delete"விடாதே-பிடி" ஓரு குற்றவாளியும் தப்ப கூடாது என்ற டெக்ஸின் தாரக மந்திரம் போல தெரியுதே...
Deleteஉட் சிடி பார்டிகளையும் ஓரங்கட்ட இயலாது.
ஸ்ரீராம் சார் ..
Delete:-))))
வணக்கம் all.
ReplyDeleteவணக்கம் சார்
Deleteஅதி காலை வணக்கம் நண்பரே;சார் எல்லாம் விளிச் சொல்லாக பயன்படுத்த வேண்டாமே தோழா.
Deleteஅது கண்டிப்பாக டெக்ஸ் இதழாகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் மற்றும் நம் சுற்றங்கலுக்கு இனிய காலை வணக்கம்.
ReplyDeleteஅய்யோ TEXனா ஜுப்ப௫ங்கோ !
Deleteடெக்ஸ் க்யூபா படலமே இன்னும் படிக்கவில்லை, இதில் இன்னும் ரெண்டு டெக்ஸ் எல்லாம் ஓவர்.மிடியல.
Deleteஸ்ரீதர்@ அட்டகாசம்.. ஐ லைக் யுவர் கெஸ்ஸிங்...
Deleteஅட்டை படங்கள் எல்லாமே சூப்பர் . வேய்ன் செல்டனுக்கா இந்த நிலை ? ஹா ஹா ஹா . எதிர்பார்ப்பை தூண்ட , காத்திருக்கிறேன் . வெய்ன் செல்டன் தொடர உள்ளதில், லார்கோ தொடர உள்ளதில் இரட்டிப்பு சந்தோசம் . லக்கி லூக்கின் புது ஆல்பத்தினை தரிசிக்கும் வாய்ப்பு , கிட்டியது . ஜாலி ஜம்பர் ,லக்கி லூக்கின் பேச்சு , கேட்காமல் நடந்தால் ; கேட்கவே , ஆவலாக உள்ளது . விரைவினில் தரிசிக்க வேண்ண்டும் . இரத்த படலம் ஒரே தடவையில் 3 இதழ்களாக வேண்டும் சார்.
ReplyDeleteலார்கோ தொடர்வது மிக அதிக அளவில் யெதிர்பார்பை
ReplyDeleteசார் டெக்ஸ் ?
ReplyDeleteதளத்தில் தளபதி வரும்போது தல சிறப்பு உண்டா இல்லையா ஸார்.
ReplyDeleteSridhar : மரணத்தின் நிறம் பச்சை !
Delete84th
ReplyDeleteadditional book in book fair relaese how to get if others not participated...
ReplyDeleteCBF-
ReplyDeleteநமது ஸ்டால் அட்டகாசம் நண்பர்களே.அழகழகா,கத்தைகத்தையா,மணக்கமணக்க ஜொலிக்கும் வண்ணத்தில் புத்தகங்களை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட பரவசத்துக்கு அளவே இல்லை.
30ம் தேதிக்குள் டிராகன் நகரத்திற்கு போட்டோ அனுப்புங்க என்று சொன்னார் ஒருவேலை அதுவோ அல்லது தோட்டா பறக்கும் தோட்டா தலைநகரம் ?
ReplyDeletepalanivel arumugam : இரண்டுமே கிடையாது ; "டிராகன் நகரம்" வரக் காத்திருப்பது அக்டோபர் மாதமே ! And எப்படியும் வெளியாகிட வேண்டிய அந்த இதழில் surprise என்று என்ன இருக்கப் போகிறது பழனிவேல் ?
Deleteவேய்ன்ஷெல்டன் சாகசங்களில் கதாசிரியரின் பெயர் தியரி கைலெஷீ என்று சில இதழ்களில் உள்ளது.பாலைவனத்தில் பணயக் கைதியில் கதாசிரியர் ஷான்.கதையை படிக்கும் போது அவருடைய தனித்துவமான திறனையும் உணர முடியும்.உண்மையாக வேய்னின் படைப்பாளிகள் யாரென்பதில் குழப்பம் வருகிறது.MBS ல் இடம்பெற்ற வேய்ன் ஷெல்டன் சாகசம் தனி இதழாக பதிக்கப்பட வேண்டும்.
ReplyDeleteSri Ram : ஏற்கனவே இது பற்றி எழுதியுள்ள நினைவுள்ளது !
Deleteஆரம்பித்துத் தந்தவர் வான் ஹாம்மே ; இடையில் வேறு பணிகள் நிமித்தம் இதனிலிருந்து அவர் விலகிக் கொண்ட சமயம் - தியரி கைலேஷு கதாசிரியர் ஆனார். And வான் ஹாம்மே மீண்டும் இதனில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த போது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன !
கேப்ஷன் போட்டியில் வெற்றி பெறும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிடிய காலை வணக்கங்கள் நண்பர்களே...
ReplyDeleteஜூலை மாத இதழ்களின் விமர்சனம்:
Deleteலயன் 300வது இதழ்:
அட்டைப்படம்: சுமார்
முதல் கதை - டெக்ஸ்
சித்திரங்கள் : சுமார்
கதை : சுமார்
ஒரு வரி விமர்சனம்: வழக்கமான கதை...மந்திர தந்திரத்துடன்....!!!!
இரண்டாவது கதை - இராபின்
சித்திரங்கள் : சுமார்
கதை : சுமார்
ஒரு வரி விமர்சனம்: எதிர்பாராத முடிவு... கதையை நகர்த்திய விதம்...கதாசிரியரின் திறமை தெரிகிறது.
மூன்றாவது கதை - மாடஸ்தி
சித்திரங்கள் : சுமார்
கதை : சுமார்
ஒரு வரி விமர்சனம்: ஒரே கருவை வைத்து கொண்டு... வில்லன்களை மட்டும் மாற்றினால்... மாடஸ்தி கதை தயார்...!!!
நான்காவது கதை - ஜுலியா
சித்திரங்கள் : சுமார்
கதை : சுமார்
ஒரு வரி விமர்சனம்: கதையை நகர்த்தி சென்ற விதத்தில்... கதாசிரியர் நம்மை கவர்கிறார்.
உ) லேடி எஸ்
அட்டைப்படம்: அருமை
சித்திரங்கள் : அருமை
கதை : அருமை
ஒரு வரி விமர்சனம்: அடுத்த கதை எப்படி போகும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்...!!!
ங) சில்வர்
அட்டைப்படம்: ஒ கே
சித்திரங்கள் : சுமார்
கதை : ஒ கே
ஒரு வரி விமர்சனம்: மீண்டும் இவர் கதையை படிக்க ஏனோ ஆர்வம் இல்லை.... !!!
சார் ஷெல்டன் அட்டை படம் அருமை.....பின்னட்டயா ஒரிஜினலயும் இணைத்திருக்கலாமோ என கேட்க வைக்கிறது ஒரிஜினல் .ஒரு பக்கம் முழுதும் வானின் நிறமெ வியாபிப்பது அழகு .ஷெல்டன் , லார்கோ, xiii தொடர்கள் தொடர்வது ஹாம்மே பாத்திரங்களுக்கு அழிவில்லை.....ஹாம்மேவின் கற்பனைக்கு கிடைத்த வெற்றி ..என்ன ஒரு பாக்கியம் மனிதருக்கு....சூப்பர் சார்..
Deletexiii அட்டை படம் அருமை.....
ReplyDeleteதல தளபதி மற்றும் நம் நண்பர்களையும் உங்களை சந்திக்க வருகிறேன் ஈரோடு!
ReplyDeleteபோன வருடம் போல் இல்லாமல் முறையாவது நாம் பேசிட நேரமிருக்குமென்று நினைக்கிறேன் தோழர்..
DeleteLady S தமிழுக்கு நல்ல அறிமுகம்,
ReplyDeleteகாலை வணக்கம் விஜயன் சார் & நண்பர்களே _/|\_
ReplyDelete.
// வான் ஹாம்மே ஒரு ஜாலியான தருணத்தில் இந்தக் கதைக்கு plot எழுத அமர்ந்திருப்பார் போலும் //
ReplyDeleteவான் ஹாம்மே ஜாலி மூடுல எழுதினாரோ இல்லையோ, நீங்க ரொம்ப ஜாலி மூடுல இந்த பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கிங்க மட்டும் தெறியுது. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு ! :)
XIII ஒரே புத்தகம் ஆவது வரவேற்கத்தக்கது. சில பல இதழ்கள் (XIII) மட்டுமே வாசிக்க வாய்ப்பு கிட்டியுள்ள என் போன்றோருக்கு ஒரு HIGH VOLTAGE SHOCK. ஒரு சிறிய தெளிவுரை வேண்டுகிறேன். XIII தொடர் முற்றுப் பெற்றுவிட்டதா? Reply please. Iam waiting.......
ReplyDeleteநாயகன் கமல பார்த்து கேட்ட கேள்விக்கான பதில்தான் இதுக்கும்... நீங்க நல்லவரா ? கெட்டவரா ?...
Deleteபழைய xiii முடிந்தது அதனை கருப்பு வெள்ளையில் முழு தொகுப்பாக வெளியிடப்பட்டு பல மாமாங்கம் ஆகிவிட்டது. தற்போது வரவுள்ளது அதன் வண்ணத்தொகுப்பு.
DeleteHai.
ReplyDeleteஇரத்த படலம் ஒரே புத்தகமாக வருவதே எனது விருப்பம் சார்... காரணங்கள்... 1.தமிழ் காமிக்ஸ் சாதனை 2. தொலைந்து போகாது 3. இதழ் விலை குறையக்கூடும்
ReplyDeletekarthic vadugapatty : //இதழ் விலை குறையக்கூடும்//
Deleteதவறான அனுமானம் ! இந்த மெகா இதழின் பைண்டிங் செலவு தலையைக் கிறுகிறுக்கச் செய்யும் ஒரு தொகையாக இருக்கப் போகிறது நிச்சயம் ! இது தற்போதைய பாணியில் கையால் செய்திட இயலாச் சமாச்சாரம் ; முழுக்க முழுக்கவே இயந்திரங்கள் தேவை ! And சில கோடிகள் மதிப்பு கொண்ட இந்த ரக பைண்டிங்இயந்திரங்களை வைத்திருப்போர் புத்தக ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மெகா நிறுவனங்கள் மட்டுமே. அவர்கள் பொதுவாய் சின்ன printrun கொண்ட வெளியாள் வேலைகளை வாங்கிட மாட்டார்கள் ! தெரிந்த நபர்களின் சிபாரிசோடு போய், கையைக் காலைப் பிடித்துத் தான் இந்தப் பணியைச் செய்து வாங்கக் கோரிக்கை வைக்க வேண்டி வரும் !
So நிச்சயமாய் விலைகள் மலிவு என்ற சிந்தை இங்கே பொருந்திடாது !
///தெரிந்த நபர்களின் சிபாரிசோடு போய், கையைக் காலைப் பிடித்துத் தான் இந்தப் பணியைச் செய்து வாங்கக் கோரிக்கை வைக்க வேண்டி வரும் !///---சுத்தம்...
Delete///தவறான அனுமானம் ! இந்த மெகா இதழின் பைண்டிங் செலவு தலையைக் கிறுகிறுக்கச் செய்யும் ஒரு தொகையாக இருக்கப் போகிறது நிச்சயம்///----ஓரே இதழாக தயாரிப்பதில் இந்த சிக்கல் வேறா சார்...
Deleteஅய்யா பெட்ரோமாக்ஸ் பார்ட்டிகளே இந்த பாயிண்ட்டையும் கொஞ்சம் பாருங்கள்...
சேலம் Tex விஜயராகவன் : யதார்த்தத்தைப் பேசும் தருணமல்லவா சார் ?
Deleteமொத்தமே 1000 பிரதிகள் printrun என்று வைத்துக் கொண்டு, அதில் ஒரு பாதி இந்த மெகா இதழ் முன்பதிவு என்றே வைத்துக் கொண்டாலும் - மிஷினில் பைண்டிங் செய்ய அவசியப்படும் இதழ்களின் எண்ணிக்கை வெறும் 500 ஆகத் தானே இருக்கும் ? சில கோடி ரூபாய் விலையில் இந்த பைண்டிங் இயந்திரங்களை வாங்கி வைத்து, சில லட்சம் பைபிள்களை அச்சிட்டு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை - 500 பிரதிகளுக்காக அணுகிடும் சூழலின் சிக்கல் புரியுமென்று நினைக்கிறேன் ! இருந்தாலும், சின்ன இந்த தொழில் நகரில், யாரையாவது கையைக் காலைப் பிடித்து காரியம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தான் !
Tex vijay
Deleteஇரத்தக் கோட்டை, மின்னும் மரணம்,இரத்தப் படலம்,தோட்டா தலைநகரம் அனைத்துமே கறுப்பு-வெள்ளையில் வாசித்த பொக்கிஷங்கள் தான்.வண்ணத்தில் முழுமையான சேகரிப்புதான் கனவு.இரத்தப் படலம் வாசிக்க எளிதாக மூன்று பாகங்கள் அடங்கிய 6 தொகுதிகளாக வந்தாலும்;6 பாகங்கள் அடக்கிய 3 தொகுதிகளாக வந்தாலும் மகிழ்ச்சியே.குண்டாக ஒற்றை இதழ் எனும் போது காலப் போக்கில் கட்டு குழைந்து சிதைந்து போகும் வாய்ப்புகளே அதிகம்.வாசகர்களும்,ஆசிரியர் குழுவும் இந்த சவாலான செயல்திட்டத்தை நோக்கி சில அடிகள் முன் வைத்தால் தடைகள் அனைத்தும் நொடியில் பொடிபடும்.எந்த இலக்கிலிருந்தும் உதவும் நல் உள்ளங்கள் இவற்றின் ஆக்கத்திற்காக எதிர்பார்ப்புகள் இன்றி உதவ விழைவார்கள்.வாசகர்களாகிய நாம் முன்பதிவுகளை தொடங்கி இம்மகத்தான சாதனைக்கு தொடக்கம் அளிப்போம்.சுற்றி நில்லாது பகை;துள்ளி வரும் வேல்!!!.
Tex vijay
Deleteஇரத்தக் கோட்டை, மின்னும் மரணம்,இரத்தப் படலம்,தோட்டா தலைநகரம் அனைத்துமே கறுப்பு-வெள்ளையில் வாசித்த பொக்கிஷங்கள் தான்.வண்ணத்தில் முழுமையான சேகரிப்புதான் கனவு.இரத்தப் படலம் வாசிக்க எளிதாக மூன்று பாகங்கள் அடங்கிய 6 தொகுதிகளாக வந்தாலும்;6 பாகங்கள் அடக்கிய 3 தொகுதிகளாக வந்தாலும் மகிழ்ச்சியே.குண்டாக ஒற்றை இதழ் எனும் போது காலப் போக்கில் கட்டு குழைந்து சிதைந்து போகும் வாய்ப்புகளே அதிகம்.வாசகர்களும்,ஆசிரியர் குழுவும் இந்த சவாலான செயல்திட்டத்தை நோக்கி சில அடிகள் முன் வைத்தால் தடைகள் அனைத்தும் நொடியில் பொடிபடும்.எந்த இலக்கிலிருந்தும் உதவும் நல் உள்ளங்கள் இவற்றின் ஆக்கத்திற்காக எதிர்பார்ப்புகள் இன்றி உதவ விழைவார்கள்.வாசகர்களாகிய நாம் முன்பதிவுகளை தொடங்கி இம்மகத்தான சாதனைக்கு தொடக்கம் அளிப்போம்.சுற்றி நில்லாது பகை;துள்ளி வரும் வேல்!!!.
இரத்தபடலம் 900 பக்கம் வருவதற்கு பதில் 15,20 புது கதைகளை போடலாம் அதுவும் புது புது கதை களங்களோடு. என்னை பொறுத்தவரையில் இது என்னுடைய வீட்டில் ஒரு காட்சி பொருளாகத்தான் இருக்க போகிறது:(
ReplyDeleteகருப்பு வெள்ளையில் மெகா இதழாக வந்ததை மறுபடியும் போடுவதில் சுவாரசியம் இல்லை சார்.Moreover இப்பொழுது வந்த இரத்த படலம் கதைகள் எல்லாம் மிக சுமாரான கதை கள்ங்களை கொண்டவை, யோசித்து முடிவெடுங்கள் சார் ..
DeleteGiridharan V : நிறையப் பேசி, அலசி, விவாதித்த பின்னரே "இரத்தப் படலம்" சார்ந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது நண்பரே ! அதனால் மறுபடியும் துவக்கப் புள்ளிக்கே செல்லும் எண்ணமில்லை !
Deleteதற்போதைய கேள்வி : ஒற்றை மெகா இதழ் ஓ.கே. தானா ? என்பது மாத்திரமே !
இரத்த படலத்தின் மெகா விலையை நினைத்தால் இப்போதே தலை கிர் என்று சுத்துகிறது,ஒரே புத்தகமாக போட்டால் அதை தலையணையாக வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்,மற்றபடி எந்த பயனும் இல்லை,ஒரு இதழ் நமக்கு படிப்பதற்கான செளகர்யத்தை ஏற்படுத்தி தராவிடின் அதன் பேசுபொருள் என்னவாக இருப்பினும் அது ஒரு காட்சி பொருளாகவே இருக்கும்.
Deleteஎன்னைக் கேட்டால் இரத்த படலம் மறுபதிப்பை தள்ளி போட்டாலும் தவறில்லை என்பேன்.இதுவே என் நிலைப்பாடு,ஏனெனில்,அது புதிய வரவுகளையும்,பழைய க்ளாசிக் மறுபதிப்புகளையும் வெகுவாக பாதிக்கும்,இது நிறைய பேரின் கவலை.
அடுத்த வருடம் சந்தா,இ.ப,+6 இவற்றின் மொத்த தொகையை தோரயமாக கணக்கிட்டு பார்த்தால்.ஸ் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.
எனவே,யோசித்து முடிவெடுங்கள்,உங்கள் சூழல் என்னவென்று உங்களுக்குத்தான் தெரியும்,அப்படி போட்டேதான் தீரவேண்டும் எனில் தயவுசெய்து இரண்டு அல்லது மூன்று புத்தகங்களாக போடவும்.
அறிவரசு @ தெளிவான எண்ணம். யதார்த்ததை அழகாக சொல்லி உள்ளீர்கள். எனது எண்ணமும் இதுவே.
Delete2020 தள்ளி போட்டால் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் நம்மை இன்னும் கொஞ்சம் நிலை நிறுத்திக்கொண்டு இருப்போம்.
Deleteஅனைவருக்கும் காலை வணக்கம்
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம் .இரத்தகோட்டை ஈரோடு புத்த கண்காட்சியில் எனக்கான புக்கை பெற்றுக்கொள்கிறேன் எனது புக்கிங் எண் 7 ரா.சரவணன் சென்னிமலை ஈரோடு.....
ReplyDeleteஅனைவருக்கும் காலை வணக்கம்.
ReplyDeleteஇரத்தபடலம் ஒரே புத்தகமாகவும்
6 *3 என மூன்று புத்தகமாகவும் வெளிவர
வேண்டும்.ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு
ஒன்று என்பது போல் இரண்டு விதமாக
வேண்டும்.மேலும் தனி குண்டு சிறப்பு முன் பதிவுக்குமட்டும் என்றும் அறிவிக்கலாம்.பொது விற்பனைக்கு
மூன்று பாக இதழாக அறிவிக்கலாம்.
@ganesh kv
Deleteஅருமை சாரே! இதுதான் என்னோட ஆசையும், எண்ணமும்!
+8888
Deleteமுன்பே வெளியிட்ட மின்னும் மரணமே மீண்டும் படிக்க ஆசை இருந்தும் தூக்க மனமில்லாம் மறுவாசிப்பில் பாக்கி உள்ளது
கரூர் சரவணன் : மின்னும் மரணத்துக்கே இந்தப் பாடா சார் ? இருக்கு வேடிக்கை !!
Delete//முன்பே வெளியிட்ட மின்னும் மரணமே மீண்டும் படிக்க ஆசை இருந்தும் தூக்க மனமில்லாம் மறுவாசிப்பில் பாக்கி உள்ளது.//
Delete+11111
சரவணன் @ சரியாக சொன்னீர்கள். சில நேரம் ஆசை மற்றும் சாதனைகள் என்ற மின்மினி பூச்சிக்காக யதார்த்தத்தை மறந்துவிடுகிறோம்.
Delete+11111
Deleteஇரத்தபடலம் வண்ண வெளியீடு ஒரு
ReplyDeleteதனித்துவம் வாய்ந்த சிறப்பு மலர்.
ஆசைப்படுபவர் தேவைப்படுவர் மட்டும்
தனி முன்பதிவு மூலம் வாங்கிக்கொள்ளளாம். ரெகுலர் சந்தாவில்
வராது.வேண்டியவர் மட்டும் வாங்கலாம்.
மற்றபடி வெளியிட வேண்டாம் என்று
யாரும் சொல்லவேண்டாம்.
121
ReplyDeleteசார் நீங்க ரத்த படலத்தை ஒரே புத்தகமாக போடுவீர்களோ ...மூன்று தொகுப்பாகவே போடுவீர்களோ ...
ReplyDeleteஆனா அடுத்த வருஷம் புது கதைகளை கொண்ட கதம்ப இதழை அப்படி ஓரு " குண்ண்ண்டா " வெளியிடுமாறு பணிவுடன் வேண்டி கொள்கிறேன்...
(சிரமம் எனில் ஒரு பத்து ,இருபது பக்கத்தை குறைச்சுகுங்க சார் )
Paranitharan K : அடடே.... தலீவருக்காக புத்தகத்தைத் தூக்கிப் போக ஆள் போடும் ரேஞ்சுக்கு சங்கத்தின் நிதி நிலைமை தேறி விட்டதா ?
Delete//ஆனா அடுத்த வருஷம் புது கதைகளை கொண்ட கதம்ப இதழை அப்படி ஓரு " குண்ண்ண்டா " வெளியிடுமாறு பணிவுடன் வேண்டி கொள்கிறேன்...//
Delete+11111
நிதி தேறி வருவது சிரமம் சார்....நான் தேறிக்கிறேன் ...அது கொஞ்சம் ஈஸி...கரூர் சரவணார் ஊர்ல ஒரு வாரம் ,மயிலை ராஜா ஊரில் ஒரு வாரம் போய் தங்குனா போதும் ...ரெண்டு புக்கை கூட தூக்கிரலாம் ...:-)
Delete//ஆனா அடுத்த வருஷம் புது கதைகளை கொண்ட கதம்ப இதழை அப்படி ஓரு " குண்ண்ண்டா " வெளியிடுமாறு பணிவுடன் வேண்டி கொள்கிறேன்...///+22222
Deleteஷெல்டன் அட்டைப்படம் இந்தமுறை வித்தியாசமாக கலக்குகிறது சார்...
ReplyDeleteஅதைவிட மீண்டும் ஷெல்டன் ,லார்கோ..லக்கி என்ற செய்தி இன்னும் சந்தோசபடுத்துகிறது...
நீங்கள் சொன்ன அந்த பழைய ஓவியங்களை கொண்டு உருவாக்க பட்ட ரிப்போர்ட்டர் ஜானியின் புதிய சாகஸத்தை கண்டிப்பாக கொண்டு வாருங்கள் சார்...
கண்டிப்பாக வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான அனுபவம் ஆக இருக்கும்..
பரிசு கிடைக்கா விட்டாலும் போட்டிக்காக...:-)
ReplyDeleteடைகர்....
எல்லோரும் தங்க கல்லறை ,மிண்ணும் மரணத்தை தவிர என்ன கிழிச்ச ன்னு கேக்குறாங்க....இன்னொரு அதிரிபுதிரி வெற்றி கொடுக்குற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகர போறதில்லை ஜிம்மி...இது "சில்க் " மேலே சத்தியம் ...
ஜிம்மி......
அப்படின்னா நமக்கு இந்த பனியிலேயே தான் கல்லறையா ....
நண்பன்....
கவலைபடாதே ஜிம்மி....புலி பதுங்குறது பாயறதுக்கு தான்....தங்க கல்லறை மாதிரி இன்னொரு படா பாய்ச்சல் பாஞ்சுட்டு தான் நம்ம கல்லறைக்கு அளவு எடுக்க முடியும்...உன்மேல சத்தியம் பண்ணியிருந்தா கூட நம்ப முடியாது...நம்ம ஆளு பொம்பளை பேர்ல சத்தியம் பண்ணியிருக்காரு...
வருவாரு ...திரும்ப வருவாரு....பத்து வருசத்துக்கு முன்னாடி எப்படி வந்தாரோ அதே மாதிரி திரும்ப வருவாரு...
Rathapatalam(full collection) single book only sir pls. Comics varalaatril miyilgal ithu.....
ReplyDelete+111111
DeleteDear vijayan sir i want rathapadalam into 3 parts only.bcse of weight.i always read the big books in a sleeping position and my stomach take a part of book stand. Rathapadalam big o big book.my stomach paaavam.
ReplyDeleteKid Kannan terror uncle how r u.
சார் எனக்கு கூட இரவு உங்க பதிவ பார்த்ததுமே மூன்றாய் வரட்டும் என ஒரு இரக்கம் வந்தது . நண்பர்கள் பதில்கள பார்த்ததும் நானும் மெஜாரிட்டிக்கே வாய்ப்பளிப்போம்னு இருந்தேன் .இரவு கனவில் இதமாக சரி , சரி ன்னிட்டு ...உங்களிடம் மூன்று புத்தகங்களாய் தலையில்லா போராளி சைசாய்....அதாவது எவ்வகயிலாவது இவ்விதழின் வடிவமைப்பு பிரம்மிக்கத்தக்கதாய் , பிபிரம்மாண்டமாய் வாங்குவதாய் கனவு . எப்டியோ சிறப்பா வந்தா சரின்னு நெனச்சேன் ...ஆனா காலைல நம்ம பரணிப் பயல தவிர பிற நண்பர்கள் பெரும் பாலும் பெரிதாய் கேட்க , நண்பர்களுடன் இணைந்து கோட்டைச் சாமியாய் மாறுவதென முடிவெடுத்து விட்டேன் .சார் இந்த வாய்ப்பு இனி கிடைக்காது . அனைத்து தகுதிகளயும் கொண்ட ஒரே இதழ் இதுதான் ... உங்களயும் பின்னாளில் பார்த்து பார்த்து சந்தோசப் படச் செய்யப் போகும் கனவு இதழ் . இந்தக் கனவு இதழ் எங்களது என படைப்பாளிகளயும் சந்தோசப் படச் செய்து அதனால் தாங்கள் என்றால் நாங்கள் அடையப் போகும் பலன் ஏராளம் ...சார் படைப்பாளிகளே முயற்சிக்காத இந்த முயற்ச்சி சிறிய வட்டத்தின் இராட்சஸ பலத்த வெயிட்டா சொல்வதுடன் , நமது லயனில் இனிமேல் வரப் போவதில்லை உங்க பேரர் காலத்திலும் என நம்ம மகுடத்துல கோகினூராய் ,ஒரே கோகினூறாய் ஜொலிக்கணும்கிறது எங்க ஆசை .குமுதம் என்ன , குங்கமம் என்ன உலக இதழ்களும் நம்ம இதழ , ஏன் படைப்பாளிகளும் எங்க இதழ் என பெருமயாய் சொல்ல வழி வகுப்போம் .சார் எதாவது செஞ்சு நம்மள திரும்பிப் பாக்க வைக்கணும்னு தோணிச்சுண்ணா இத செய்ங்க ப்ளீஸ்...உலகிலேயே இராட்சத காமிக்ஸ் புத்தகம்கிற பேர விட பெரும் பேறு விளம்பரம் கிடைக்க வகை செய்யுங்கள் . எல்லாத்துக்கும் மேல இத விட அனைத்து தகுதிகளும் வாய்ந்த இதழ் வாய்ப்பதரிது ... ஜனவரிக்கே முடியுமான்னு பாருங்க.....அந்த இரத்தப்படல டம்மிய கிரேன் வச்சாவது ஈரோட்டுக்கு கொண்டு வந்துருங்க.. . வாழ்க லயன் ..வளர்க அதன் பலம்..அதில் புகழ்..
ReplyDeleteஏலே உனக்கு நான் ஒருத்தன்தான் எதிர்ப்பு தெரிவித்தது தெரிகிறதா, நல்லா கண்ண தொறந்துபாருல. கண்ணனுக்கு நல்ல டாக்டர பாருல!
Delete////உங்களயும் பின்னாளில் பார்த்து பார்த்து சந்தோசப் படச் செய்யப் போகும் கனவு இதழ்////
Deleteஒரே புக் 👍👍👍
// அந்த இரத்தப்படல டம்மிய கிரேன் வச்சாவது ஈரோட்டுக்கு கொண்டு வந்துருங்க //
Deleteha ha ha!
+1 for single book
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ////உங்களயும் பின்னாளில் பார்த்து பார்த்து சந்தோசப் படச் செய்யப் போகும் கனவு இதழ்////
Deleteநண்பரே : பரோட்டா கடை மாஸ்டர் வீட்டுக்கு நடுச்சாமத்தில் கிளம்பும் போது என்ன சாப்பிடுவாரென்று ஒரு நாள் பாருங்களேன் ? 2 இட்லியும், கெட்டிச் சட்னியுமாக இருக்கும் ! நமக்கெல்லாம் நாவில் ஜலம் ஊறச் செய்யும் சமாச்சாரம், நாள்முழுக்க அதனோடே குடித்தனம் பண்ணுபவருக்கு அதே தாக்கத்தை ஏற்படுத்தாது !
என்னைப் பொறுத்தவரை, அதிகமாய் ரசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட கதைகளைத் தாங்கிய இதழ்களே ஆதர்ஷ இதழ்களாய் என்றைக்குமே மனதில் நின்றிடும் !
Of course சில மைல்கல் இதழ்கள் பீற்றிக் கொள்ள showcase-ல் இடம்பிடித்திடும் தான் ! But அந்த இதழ்கள் வாசகர்களுக்கு 100 % திருப்தியினைத் தந்திருந்தால் மாத்திரமே எனக்கு நினைவில் நிற்கும் இதழாக அமைந்திடும் ! உருமாறிடும் ! அளவோ ; எடையோ ; பருமனோ என்னளவிற்காவது வெற்றியின் அடையாளமாகாது !
1987 -ல் இரண்டு ரூபாய்க்கு வெளியிட்ட வண்ண "சூப்பர் சர்க்கஸ்" இன்னமும் என் நெஞ்சில் அகலா இடம் பிடித்து நிற்கும் இதழ் என்றால் நம்புவீர்களா ?
இன்றைய பதிவு நிறைய செய்திகளை தாங்கி வந்து நிறைவை கொடுத்துள்ளது சார்...
ReplyDeleteமனதை கவர்ந்த நல்ல நாயகர்கள் மீண்டும் தொடர்வது அருமை...
வழக்கமான கெளபாய் கதைகள்+ லார்கோ+ இரத்த படலம் மறுவாசிப்பு செய்ய கூடிய லிஸ்ட்ல உள்ள கதைகள் சார். டெக்ஸ், டைகர், லார்கோ பல தடவைகள் படித்து மகிழும் கதைகள். மின்னும் மரணம் முதல் 3பாகம் அடங்கிய இதழும், க்ளைமாக்ஸ் முத்து300ம் பல தடவை படித்து உள்ளேன்.
ஆனால் ஆனால் ஆனால் இந்த மின்னும் மரணம் முழு தொகுப்பு ஒரே ஒரு தடவையோடு பெட்டிக்குள் ஐக்கியமாயிட்டு, பார்த்தாலே மனசு வலிக்குது சார். ஆசைக்கு ஓரே இதழாக வாங்கி வைத்து என்ன பிரயோசனம், சோ கேஸ் பொம்மை மாதிரி ஆகிட்டு, இப்ப மறுபடியும் பழைய மின்னும் மரண கருப்பு வெள்ளை புத்தகங்களை தேடி எடுத்து வைத்துள்ளேன் இந்த ஆடி மாதத்தில் படிக்க.
இரத்த படலத்திற்கும் அப்படி ஒரு நிலை வேணாம் சார்.
அதிக பணம் கொடுத்து வாங்கி சோ கேசில் வைக்கும் அளவுக்கு உங்கள் உழைப்பு மீண்டும் வீண்டிக்கப்பட கூடாது சார்.
இரத்த படலம் வண்ணத்தில் வந்தே ஆகணும் சார். அதில் மாற்றம் வேணாம். நிச்சயமாக மூன்று புத்தகங்களாக வெளியிட நீங்கள் அறிவிக்க வேண்டுகிறேன் சார்.
என்னுடைய புக்கிங் 3பாகங்கள் கொண்ட இரத்த படலத்திற்கே, ஏனெனில் நான் பலமுறை படிக்க விரும்புகிறேன். பார்த்து மட்டுமே ரசிக்கும் கண்ணாடி பொம்மையாக மற்றொரு இதழும் மாறுவதை துளியும் விரும்பவில்லை சார்.
+11111
Deleteசேலம் Tex விஜயராகவன் @ கை தட்டும் படம்கள் பல நூறு!
Deleteநியாயமா சொல்லுங்க???
Deleteமூன்று பாகமாக போட்டாலும் படிப்பற்கு லகுவாக இருக்கப் போவதில்லை!!
ஆனால் ஒரே பாகம் என்பது இனி எப்போதும் கிடைக்காத வரலாற்றுச் சிறப்பு!!
நமது காமிக்ஸ் வரலாற்றின் "வாழ்நாள் சாதனையாக" கூட இருக்கலாம்???
இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்கு நாமும் கை கொடுப்போமே நண்பா்களே!!
பக்கா நியாயம்;என் பெயர் டைகர் படிப்பதில் சிரமம் ஏதும் இல்லையே!
Deleteசாதனைனு சொல்லி சோதனை வேணாமே!!!
//என்னுடைய புக்கிங் 3பாகங்கள் கொண்ட இரத்த படலத்திற்கே, ஏனெனில் நான் பலமுறை படிக்க விரும்புகிறேன். பார்த்து மட்டுமே ரசிக்கும் கண்ணாடி பொம்மையாக மற்றொரு இதழும் மாறுவதை துளியும் விரும்பவில்லை சார்.//
Deleteஆமோதிக்கிறேன் சார்!என்னுடைய புக்கிங் கூட 3பாகங்கள் கொண்ட இரத்த படலத்திற்கே!
இரத்த படலம் ஒரே பாகமாக அதே மொழி பெயர்ப்பில் மற்றும் சென்சார் இன்றி ஒரிகினலகா அப்படியே வர்ட்டும்.பெரிய சைஸ்.!!!!!!! மெகா ஹிட்!!!!!!!! என் ஆதரவு ஒரே புக் ஒரே முறை வேறு யாரும் எப்போதும் எஙெயும் வெளியிட்ட து இல்லை என்பது போல்.
ReplyDelete+11111
DeleteSuper
DeleteRatha padalam 3 books aaga varuvadu nalla irukum sir .... single book neenga sonna mari padika konjam siramam ...
ReplyDeleteLucky parody and Johnny parody ore book a veliyida mudinchal nammum adhai try pannalam sir ...
new look johnny yum try pannalam sir next year ...
ரத்த படலம்: ஏற்கனவே தனி தனி பாகமாக (வித விதமான வடிவத்தில்) அதன் பின் சில வருடம் கழித்து ஒரே குண்டு புத்தகமாக வந்துவிட்ட ஒரு புத்தகத்தை மீண்டும் மறுபதிப்பு (வண்ணத்தில்) செய்வது அதுவும் ஒரு
ReplyDeleteகொஞ்சமான வாசகர்கள் மட்டும் வாங்க கூடிய மெகா விலையில் & மெகா உழைப்பில் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. இது நமது தலையை நாமே தண்டவாளத்தில் வைப்பது போல் உள்ளது.
மீண்டு வந்து கொண்டிருக்கும் நாம் நமது ஆசிரியரை இது போன்ற மெகா ப்ராஜெக்ட்டில் வேலை செய்ய வைப்பதை விட புதிய கதைகளில் செலவிடவைக்கலாம். இது பற்றி பல முறை அலசி ஆராய்து விட்டது, ஆனால் இன்னும் இதனை புரிந்து கொள்ளாதது கொடுமை.
சாதனை என்று படைக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது, இந்த கதையை குண்டு புத்தகமாக வெளி வந்தால் சாதனை என நினைப்பது என்னை பொறுத்தவரை சோதனை, அது வேதனையாக முடியாமல் இருந்தால் சரி.
இது போன்ற மெகா பட்ஜெட் இதழ் (ஸ்பெஷல்/லிமிடெட் எடிசன்) என்றாலும் எத்தனை பெயரால் வாங்க முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதனையும் நமது கண்முடித்தனமான வெறியால் புரிந்து கொள்ள முடியவில்லை :-(
அதே போல் ஒரே புத்தகமாக வந்தால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை/பிரச்சனைகளை சிறு பிள்ளைகளுக்கு சொல்லுவது போல் எளிதாக விளக்கமாக நமது ஆசிரியர் பலமுறை சொல்லிவிட்டார் அதையும் நாம் புரிந்து கொள்ளவில்லை/முயற்சிக்கவில்லை என்பது மிகவும் வருத்தபட வேண்டிய விஷயம்.
இதை எல்லாம் பார்க்கும் போது நமது மீள்வரவுக்கு முந்தைய கால கட்டத்திற்கு போய்விடுவோமா என அடிக்கடி தோன்றுகிறது.
இதன் காரணம்களால் எனக்கு இந்த குண்டு புத்தகம் தேவையில்லை. ஆனால் சில நண்பர்களில் காமிக்ஸ் காதலுக்கு மரியாதை செய்ய நினைக்கும் ஆசிரியருக்கு துணை நிற்க இந்த புத்தகத்தை வாங்குவேன் என்னால் முடிந்தது இதுதான்.
இந்த புத்தகம் எனக்கு 3 புத்தகமாக மட்டும் வேண்டும்.
குறிப்பு ஆசிரியர் அவர்களுக்கு: என் பெயர் டைகர் கதை போன்று இதையும் இரண்டு விதமாக (குண்டாக ஒன்று & 3 செட் கொண்ட புத்தகமாக ஒன்று என்று) தயவு செய்து வெளி இட வேண்டாம் என இருகரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.
// வாசகர்கள் மட்டும் வாங்க கூடிய மெகா விலையில் & மெகா உழைப்பில் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.//
Delete+111111
பேசாமல் ஈரோட்டில் ஒரு ஓட்டெடுப்பு நடத்திடுவோம்,இ.ப வேணுமா? வேண்டாமா? அடுத்து ஒரே புக்கா? இரண்டு அல்லது மூன்றா?
Delete+123456789
DeletePersonally I have lost interest in XIII after reading it several times in English and Tamil. It would be a waste of time to go for RATHTHA PADALAM. Using the same time and money we could churn out books from hitherto unexplored frontiers !
பலமுறை ஆங்கிலம் மற்றும் தமிழில் படித்த பின்பாக XIII மீதிருந்த தாக்கம் சுத்தமாய் போய்விட்டது. இதை வெளியிடும் நேரத்தில், செலவில் இன்னும் 18 புத்தகங்கள் நாம் காணாதது - வெளியிடலாம். சொன்னால் யார் கேட்கப் போறாங்க :-)
///காதலுக்கு மரியாதை செய்ய நினைக்கும் ஆசிரியருக்கு துணை நிற்க இந்த புத்தகத்தை வாங்குவேன் என்னால் முடிந்தது இதுதான்.
Deleteஇந்த புத்தகம் எனக்கு 3 புத்தகமாக மட்டும் வேண்டும்.///+10000
Parani from Bangalore & Friends : அழகாய்...நயமாய்....முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் ! எந்தவொரு புள்ளியிலும் விவாதத்துக்கு சத்தியமாய் இடம் தரா எண்ணங்கள் ! Bravo !!
Deleteபொதுவாகவே மறுபதிப்புகளில் எனது நிலைப்பாடு என்னவென்பதில் ஒருநாளும் இரகசியம் இருந்ததில்லை ! அது மாயாவியோ ; டைகரோ ; டெக்சோ ; லக்கியோ - அது மறுபதிப்பு என்றாகி விட்டாலே, எனது ஈடுபாடு நிச்சயமாய் ஒரு மாற்று குறைவே ! ஆனால் நண்பர்களின் passion சில தருணங்களில் பிரவாகமெடுப்பதைக் காணும் சமயம் - அந்த ஆர்வத்துக்கு அணை போட மனதில்லாதே என் மனதை நான் மாற்றிக் கொள்கிறேன் !
And இரத்தப் படலத்தின் கதையிலும் நிஜம் இதுவே ! இம்முறையோ இதுவொரு ராட்சஸ ப்ராஜெக்ட் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது ! அதனால் தான் இந்த மறுபதிப்பு தொடர்பாய் சென்றாண்டு அலசல் நிகழ்ந்த வேளையில், திரும்பவுமே உங்கள் முடிவுகளை உறுதி செய்து கொள்ளக் கோரியிருந்தேன்! இது கூட்டாய் இழுத்தால் தவிர எல்லை தாண்டாத தேர் ; so நம்முள் இதனில் ஒரு சமரசம் அவசியம் guys !
Raghavan : //இதை வெளியிடும் நேரத்தில், செலவில் இன்னும் 18 புத்தகங்கள் நாம் காணாதது - வெளியிடலாம்//
DeleteDay 1 முதலாகவே நமது எல்லா மறுபதிப்புக் கோரிக்கைகளுக்குமே எனது முதல் reaction இது தான் சார் ! But சேகரிப்பின் ஆர்வம் ; க்ரே மார்க்கெட்டின் தாக்கம் ; பால்யத்தின் அடையாளங்கள் என்ற காரணங்களால் எழும் உந்துதல்களுக்கு நான் சம்மதம் சொல்லிடும் அவசியம் இன்னொரு பக்கம் நிற்பதே யதார்த்தம் !
Parani from Bangalore : //சாதனை என்று படைக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது //
Deleteசேகரிப்பின் மீதான ஆர்வம் நண்பர்களது சிந்தனைகளை வசப்படுத்துவது புரிகிறது !
சேகரிப்பு என்பதற்காக ஒரு மெகா பட்ஜெட் புத்தகம் இப்போது தேவையா?
Deleteஎப்படியும் அடுத்த வருடம் தளம் முப்பது லட்சம் பார்வைகளை தாண்டி விடும்,அதுக்கு ஒரு ஸ்பெஷல் புக் போட வேண்டும்.மேலும் அடுத்த வருடம் தல டெக்ஸின் 70 தாவது வருடம் வேறு,அதுக்கு ஒரு பெரிய குண்டு ஸ்பெஷல் கண்டிப்பாக வரும்.
ReplyDeleteமொத்தத்தில் அடுத்த வருடம் பெரிய புத்தக வேட்டையும் காத்திருக்கு,பாக்கெட்டுக்கு பெரிய ஓட்டையும் காத்திருக்கு.
ஹி,ஹி,ஹி.
3மில்லியன் க்கு தான் தம்பி ஜெராமையா இருக்கே ரவி...
Deleteஅவருக்கு அந்த இடம் கன்ஃபார்ம்டு. ஜேசன் ப்ரைஸ் கூடாரம் காலி ஆவதால் இவர் அங்கே புரமோட் ஆக கூடும்.
லயன்350+ முத்து 450லாம் 2019ல் தான்...
டெக்ஸ் 70க்கு கலரில் ஒன்று+ கருப்பில் ஒன்று என போட்டுத் தாக்க நிறைய இடம் இருக்கே...
Arivarasu @ Ravi : கவலை வேண்டாம் நண்பரே ! நிச்சயமாய் நிதானமிருக்கும் அட்டவணைகளில் !
Delete// நிச்சயமாய் நிதானமிருக்கும் அட்டவணைகளில் !//
Deleteஅதுதான் சார் என் கவலையே,நிதானம் நல்ல புதிய வரவுகளையும்,நல்ல கிளாசிக் மறுபதிப்புகளையும் பாதித்து விடக் கூடாதே?
// 3மில்லியன் க்கு தான் தம்பி ஜெராமையா இருக்கே ரவி..//
Deleteஅப்ப அது + 6 ல வராதா?
//அப்ப அது + 6 ல வராதா?////---அப்படித்தான் காரண யூகங்கள் சொல்லுது.
Delete+6க்கு லக்கி, உட் சிடி,&டெக்ஸ்+கடலும் கடல் சார்ந்த நெய்தல் திணையும்+ பசலை நோய் கண்ட தலைவி,தலைவன் காதையும்+ சீலீரென்ற த்ரில்லரும் இணைந்த 6வழித்தடம் இருக்க கவலை ஏன்!!!
ஷெல்டன்,லக்கி லூக்,லார்கோ,ஜானி புதிய வரவுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சார்,அனைத்துமே வரவேற்புக்கு உரியவை.
ReplyDeleteஇரத்தப் படலம் ஒரே புக்காக வந்தால் தூக்கிப்படிப்பதில் நிறைய சிரமங்கள் இருக்கும் என்பது உண்மைதான்! 'ஒரு சாதனைக்காண்டி பலரை வேதனைப் படுத்தவேண்டுமா?'என்று நண்பர்கள் கேட்பதிலும் நியாயம் இல்லாமலில்லை!
ReplyDeleteEBFல் இதை ஒரு விவாதப் பொருளாக எடுத்துக்கொண்டோமானால், அரங்கே ஒரு மினி சட்டசபையாக மாறி அல்லோலகல்லோலப் பட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது!
இ.ப - வேணுமா, வேண்டாமான்னு ஒரு பஞ்சாயத்து!
ஒரே புக்கா அல்லது மூனு புக்கான்னு இன்னொரு பஞ்சாயத்து!
4 மணி நேரம் போறாதுன்னு தோனுது! ஒரு நாள் முழுக்க'ன்னு புக் பண்ணிடவா?;)
எடிட்டர் சமூகத்தை நினைச்சா இப்பவே பாவம் பாவமா வருது!
ஈரோடு விஜய் : இரத்தப் படலம் என்றாலே குழப்பம் தானே பூனையாரே ? ஆனானப்பட்ட பதின்மூன்றே விட்டத்தை முறைத்துக் கொண்டு நிற்கும் போது, நானெல்லாம் ஒரு மேட்டரா ? நான் சும்மா பார்த்தாலே முழிப்பது போலிருக்கும் ; இதில் எக்ஸ்டரா நம்பர்லாம் வேணுமாக்கும் ?
DeleteOh yes ....ஈரோட்டில் இதன் பொருட்டு ஒரு சட்டசபைக் கட்சி சாத்தியமே ! But நன்மையே பலனாகும் என்றொரு பட்சி சொல்கிறது ! பார்ப்போமே !
அய்யா சாமி இங்கே நடைபெறும் விவாதமே தேவையற்றது என்னைப் பொறுத்தவரை. ஆசிரியர் 3 புத்தகமாக வருவது நலம் என கோடிட்டு காட்டியதில் அதன்படி செல்லாமல் மீண்டும் இங்கு அவர அபிப்பிராயம் கேட்பது என்னை பொறுத்தவரை தேவையில்லாத ஒன்று.
Deleteஇதில் புத்தக திருவிழாவில் இது பற்றி பேசி என்பது ஒரு நல்ல சந்திப்பை வீணாக்க வேண்டாமே. அப்படி ஒரு எண்ணம் ஆசிரியருக்கு இருந்தால் முன் கூட்டியே சொல்லி விடுங்கள், நான் பெங்களூரில் குடும்பத்துடன் சந்தோசமாக இருந்தது விடுகிறேன்.
// EBFல் இதை ஒரு விவாதப் பொருளாக எடுத்துக்கொண்டோமானால், அரங்கே ஒரு மினி சட்டசபையாக மாறி அல்லோலகல்லோலப் பட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது!
Deleteஇ.ப - வேணுமா, வேண்டாமான்னு ஒரு பஞ்சாயத்து!
ஒரே புக்கா அல்லது மூனு புக்கான்னு இன்னொரு பஞ்சாயத்து!
4 மணி நேரம் போறாதுன்னு தோனுது! ஒரு நாள் முழுக்க'ன்னு புக் பண்ணிடவா?;)
எடிட்டர் சமூகத்தை நினைச்சா இப்பவே பாவம் பாவமா வருது!//
ஈ வி,ஹா,ஹா,ஹா,கற்பனை பண்ணி பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது.
விஜயன் சார், ஒரே புத்தகமாக கேட்பவர்கள் மிகச்சிலரே என்பது கண் கூடாக தெரிகிறது. எனவே இந்த பஞ்சாயத்தை இங்கேயே முடித்துக்கோள்வோமே.
Deleteஈரோட்டில் புதிய விஷயம் கடைகள் பற்றி பேசுவோமே.
திருத்தம்: கடைகள்- கதைகள்
DeleteParani from Bangalore : No worries !! நாம் பேசிட ஏகமாய், உற்சாகமான விஷயங்கள் உள்ளன !
Deleteavaravar viruppam mudivu aasiriyar kaiyil.
Deleteஆசிரியர் சார் , ஒ௫ பணிவான வேண்டுகோள் .ஒ௫ NBS போல, ஒ௫ MAGNUM Splபோல,லயன் 250 போல ஒ௫ மெகா குண்டு இதழை எப்போது தரப் போகின்றீர்கள் சார்?!.இந்த குண்டு இதழ்கள் வ௫கை தந்த போது என் மனம் அடைந்த பரவசத்தை இப்போது நினைத்தாலும் என் உள்ளம் மகிழ்ச்சியாலும்,பரவசத்தாலும் நடு நடுங்குகின்றது. அதிலும் லயன் 250 இதழ் வந்த போது நடந்தது.......... தொட௫ம்.
ReplyDeleteசார்!
ReplyDeleteதிக்கான ஆர்ட் பேப்பரில் அல்லாமல் தரமான மெலிதான பேப்பரில் வெளியிட்டால் இரத்தபடலம் ஒரே புத்தகமாக இருந்தாலும் எடை குறைவாக இருக்கும் என்பது எனது கருத்து.