Sunday, July 02, 2017

ஜல்தியாய் ஒரு உப பதிவு !

நண்பர்களே,

வணக்கம். ஒரு பின்னிரவுப் பதிவுக்கு, மறு நாள் மாலையே ஒரு உபபதிவு அவசியமாகி இருப்பதே - நம்மில் ஊற்றெடுக்கும் காமிக்ஸ் உத்வேகத்தைப் பறைசாற்றுகிறது ! நேற்றும், இன்றுமாய் நமது தளத்தின் பார்வைகள் எண்ணிக்கை 4500+ !!!! Variety is the spice of life என்று படித்திருப்போம் ; ஆனால் அதன் கண்கூடான நடைமுறைப்படுத்தலை இன்றைய பொழுது தரிசிக்க முடிந்தது - உங்கள் எண்ண சிதறல்களில் ! 

காலம் காலமாய், வண்டி வண்டியாய் நாயக / நாயகியரை நமது அணிவகுப்பிற்குக் கொண்டு வந்ததன் பலனை தெறிக்கும் உங்களின் உற்சாகங்களில் இன்று பார்க்க முடிகிறது ! வேதாளர் ; ஆர்ச்சி...நார்மன்..மிஸ்டர் ஜெட்...ஜான் மாஸ்டர்..; கறுப்புக் கிழவி ; இரட்டை வேட்டையர் ; மாடஸ்டி ; என்று ஆளாளுக்கு அனல் பறக்கச் செய்யும் பொழுது எழும் அதிர்வலைகள்  - எங்களது ஓயாத்  தேடல்களுக்கு றெக்கைகள் தந்திடும் ஆற்றல் கொண்டுள்ளன !! 

இந்தப் பயணத்தின் பெட்ரோலும் நீங்களே ; GPS -ம் நீங்களே ! So ஜமாயுங்கள் !! Bye for now !!


நெய்வேலியில் நடந்து வரும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் 116 ! Please visit us !!

268 comments:

 1. ஆனாலும் இவ்வளவு ஸ்பீட் கூடாது சார்

  ReplyDelete
 2. மாடஸ்டி சூப்பர்..ஸ்மர்ஃப் அதுக்கும் மேல..சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ////ஸ்மர்ஃப் அதுக்கும் மேல..சூப்பரோ சூப்பர்////

   இது OK !!

   Delete
  2. மாடஸ்டியே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் தவறு செய்கிறார்கள். பிளைஸியே இவர்களை மன்னியும்

   Delete
  3. சூப்பா்!! ஸ்மா்ர்பா பொடிஞ்சீங்க

   மாடஸ்டி ஆண்ட்டி ஃபேன்!!

   Delete
 3. இது மாதிரி ஞாயிற்று கிழமையே பதிவு போட்ட ஞாபகம் உண்ட தோழர்களே ?

  ReplyDelete
 4. மெயின் பதிவு போட்டு ஒருநாள்கூட ஆகாத நிலையிலேயே 300+ கமெண்டுகளைக்கடந்து இன்னொரு உப-பதிவு போடவேண்டிய நிலை ஏற்படுவதெல்லாம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!! பழைய வெளியீடுகளைப்பற்றிப் பதிவு வரும்போதெல்லாம் எங்கிருந்துதான் நண்பர்களுக்கு இப்படியொரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறதோ கடவுளே...?!!

  செமைங்க!

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள் இன்னும் 1985 தாண்டவில்லை என்பதற்க்கு முந்தைய பதிவு ஒரு உதாரணம் அண்ணா

   எனக்கு இப்ப 7+ வயசாகிடுச்சின்னா பார்த்துக்கங்களேன் விஜி ன்னா

   Delete
  2. ///எனக்கு இப்ப 7+ வயசாகிடுச்சின்னா பார்த்துக்கங்களேன் விஜி ன்னா//

   ஏதோவொரு நம்பருக்குப் பதிலா '+'னு டைப்பாகிடுச்சு பாருங்க சம்பத்தண்ணா! :P

   Delete
  3. (என் மைண்ட் வாய்ஸ்) அட்ரா சக்கை விஜி(நான் தான்) பயலே...!!!
   இவிங்கெலாம் 1980களில் பெரும்பாலும் காமிக்ஸ் படித்தவர்களே 7+தான் எனில்...1990ல் வந்த நீயெல்லாம் பல்லே வராத பச்சிளம் பாலகனேஏஏஏஏ.....

   எல்லா அண்ணாஸ்க்கும் வணக்கங்க...!!!

   Delete
  4. அந்த குழந்தையே நீங்கதானா??!

   Delete
  5. விஜயராகவன் & சம்பத் அண்ணா @ நம்பிட்டோம். Continue பண்ணுங்க... :-)

   Delete
 5. (நான் கேட்டது
  சட்டித்தலையன்
  இரட்டை வேட்டையர்
  மாடஸ்டி மட்டும் 4+5+6 )

  1 + 2 +3 ஆல்ரெடி நீங்க சொல்லிட்டீங்களே

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலியில் சென்னை அடுத்து காமிக்ஸ் அதிகம் விற்பனை ஆகும் என்பது எனது கணிப்பு.

   Delete
  2. உங்கள் கணிப்பு நிஜமானால் மகிழ்ச்சியே! முதன்முறையாக நாம் பங்கேற்கிறோம் என்பதால் விற்பனையும், வரவேற்பும் எப்படியிருக்குமோ என்ற ஆர்வம் எழுகிறது! அங்கேயிருக்கும் நண்பர்கள் யாராவது நிலைமையை விளக்கினால் நன்றாக இருக்கும்!

   Delete
  3. முதல் நாள் முதல் ஆளாய் போனேன் நண்பரே. இரண்டு நாள் கழித்து கள நிலவரம் சொல்கிறேன்

   Delete
 7. அநேகமாக ஈரோட்டு திருவிழாவில் ஒரு பூலிங் பூத் ஏற்பாடு செய்யும் நிலைமை வரலாம்.. எனவே நல்ல கெடா விருந்து தருபவர்களுக்கே என் ஓட்டு...

  சீக்கிரம் முடிவு பண்ணி வேட்ப்பாளர்களை நிறுத்துங்கப்பா....

  ReplyDelete
 8. ஒரே நாளில் இன்னொரு பதிவா சூப்பர்

  ReplyDelete
 9. Replies
  1. பந்து மேல போச்சு நீங்க அதை பிடிக்க போனிங்க கால் தடுக்கி விழுந்திங்க பின் மண்டையில அடி பட்டிருக்கும்

   Delete
  2. என்ன ஆச்சா அதுதான் எனக்கும் புரியல? கொஞ்சம் நேரம் முன்னாடி 287 கமென்ட் ன்னு பிளாக்ல பார்த்துட்டு சரி wife பேசிட்டு வந்து மிச்சம் இருக்கும் 13 எதாவது நாமே comment, replay போட்டு 300 கொண்டு வந்துடலாம்னு நினைச்சேன். மேலிடத்துக்கு கிட்ட அரை மணி பேசிட்டு வந்து பார்த்தா அடுத்த பதிவு.
   ஏம்பா அரை மணி நேரத்துல ஜம்பது comment டா போடுவிங்க...

   Delete
  3. கணேஷ் @ மேலிடத்தில் இரண்டு நாள் பேசிவிட்டு வந்தால் இப்படிதான். சும்மா அரைமணி நேரம் என்று காமெடி செய்யக்கூடாது. ஆமா சொல்லிபுட்டேன்.

   Delete
  4. ////மேலிடத்துக்கு கிட்ட அரை மணி பேசிட்டு வந்து பார்த்தா///

   மேற்கண்ட கருத்து பொய்யாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்!

   காரணம்: கல்யாணத்திற்குப் பிறகு எந்தக் கணவனும் மனைவியிடம் தொடர்ந்து அரை மணி நேரம் பேசுவதில்லை! மாறாக, பேசுவது மனைவியாகவும்; கேட்பது கணவனாகவும் இருக்கக்கூடும். இங்கே 'பேசுவது' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஏசுவது' என மாற்றிப்படித்தாலும் அது சரியான பொருளையே தரும்!

   இப்படிக்கி,
   அனுபவஸ்தன்

   Delete
  5. ///கல்யாணத்துக்குப் பிறகு எந்தக் கணவனும் மனைவியிடம் தொடர்ந்து அரை மணி நேரம் பேசுவதில்லை!///
   "ஏன் பேசுவதில்லை.. வீரத்தமிழன் நான் தினமும் பேசுகிறேனே சார். உதாரணத்துக்கு நேற்றைய தினத்தையே எடுத்துக் கொள்வோம்!(தினமும் இதே கதைதான் என்பது வேறு விஷயம்!)
   காலை ஐந்து மணிக்கு கண்விழித்து காஃபி போட்டு எடுத்துக் கொண்டுபோய் எழுப்பி பேச ஆரம்பித்தால் காலை எட்டு மணிவரைக்கும் பேசுவேனாக்கும்!!
   " காலை டிஃபன் என்ன செய்ய? தோசையா,இட்லியா? தொட்டுக்கொள்ள சாம்பார் மட்டும் போதுமா? சட்னியும் வேண்டுமா? மதியம் என்ன சமைக்க. வெஜ்ஜா நான்வெஜ்ஜா?
   வெஜ்ஜென்றால் என்ன சமைக்கலாம்? நான்வெஜ் என்றால் மீனா,கோழியா,ஆடா என்ன வேண்டும் சொல்லம்மா? அப்புறம் துவைக்க உன் துணிகளை எடுத்து வை என்று தைரியமாக மிரட்டவும் செய்வேன்.பின்பு வீட்டைப்பெறுக்க ஆரம்பித்தால் இன்னும் தைரியமாக பேசுவேன். பெறுக்கும்பொது இப்படி குறுக்கும்,நெடுக்கும் நடந்தால் ஒரு மனிதன் எப்படி ஒழுங்காக பெருக்க முடியும்.கால் வலிக்கப்போகிறது. பெறுக்கி முடிக்கும் வரை ஒரு ஓரமாக உட்காரம்மா. நடந்து நடந்து கால் வலிக்கப் போகிறது என்று அதட்டவும் செய்வேண்.
   இப்படியே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேசும் வீரத்தமிழன் நானிருக்க அரைமணி நேரம்கூட பேசுவதில்லை என்கிறீர்களே? இது நியாயமா?
   இப்படிக்கி,
   மானஸ்தன்.

   Delete
  6. A.T.Rajan.
   என்ன ஒரு அசுரத்தனமான எழுத்து நடை.....சும்மா அதிருதுல.....☺😊😊😊☺.

   Delete
  7. Sri Ram சார்
   எழுத்து நடை அதிருகிறதா?!?!?
   நன்றாக உற்று கவனியுங்கள் சார். மேலே( கொஞ்சமாய் குறிப்பிட்ட பணிகளைதவிர வாசல் பெறுக்கி தண்ணீர் தெளித்து கோலம்போடுவது, க்ரைண்டரில் மாவு அரைப்பது, கடைக்கு போவது, நான் குளிக்க மறந்தாலும் வீட்டிலுள்ள நாய்க்குட்டியை குளிப்பாட்டுவது, தோட்டத்தில் நான் உரம்போட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்தாலும் மனசாட்சியே இல்லாமல் பிடிவாதமாய் வளராமல் முறைத்துக்கொண்டு நிற்கும் செடிகளைவிட்டுவிட்டு நாம் சீண்டவே இல்லாவிட்டாலும் செழித்து வளரும் தேவையில்லா செடிகளை பிடுங்கி எறிவது......இப்படியே பட்டியல் நீண்ண்ண்டு கொண்டே போகும்)குறிப்பிட்ட பணிகளை இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து செய்வதால் எனது எலும்புகள் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலையும் சத்தம்தான் அது.
   அந்த சத்தம்தான் உங்களுக்கு அதிருவது மாதிரி தெரிந்திருக்கிறது!!!
   என்ன ஸ்டீல் சார் நான் சொல்வது சரிதானே?

   Delete
  8. A.T Rajan ;
   சார் வாக்கப்பட்டு போற இடத்தில எல்லா கணவான்களும் எதிர் கொள்ளக் கூடிய மிகச் சாதரண சங்கதிகள்தானே இவையனத்தும்.இது தொடர்பா ஒரு முறை என் மனைவியோட காரசாரமான விவாதத்தில் ""அடியே""ன்னு ஒரே அதட்டல்.விழுந்துச்சு மொத தடவையா நாயடி,பேயடி.அதற்கு பிறகான புரிதல்களுக்குப் பின் மனைவி எது சொன்னாலும் ""சரிங்,சரிங்""னு மரியாதையா பேசிக்கிறோம்.அவங்களும் அப்படித்தான எங்க வீட்டு பெரியவங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி என்னைய கண்கலங்காம நடத்தராங்க.குடும்பம் ஒரு கதம்பம்.

   Delete
 10. நெய்வேலியில் நமது புத்தக விழா சிறக்க வாழ்த்துக்கள் சாா்..

  ReplyDelete
 11. நமது ஸ்டாலில் ஜூலை இதழ்கள் எந்தநாளில் விற்கபடும்

  ReplyDelete
 12. நெய்வேலிக்கு தங்கள் விஜயம் உண்டா சார்?
  அங்கு நமது காமிக்ஸ்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது சார்.

  ReplyDelete
 13. விஜயன் சார், நேற்றைய மற்றும் இன்றைய உங்கள் பதிவுகளில் பதிவின் நேரம் இல்லை. இதனை சரி செய்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 14. கருர்கார் மோடியின் அடுத்த குறி
  ஆடுதான் ஆடுதான் ஆடுதான்.

  ReplyDelete
 15. இப்படியே போனால் நீங்கள் தினம் ஒரு பதிவு போடவேண்டிவரும் போலிருக்கே சார்.
  அதுகூட நல்லாத்தான் இருக்கும் போலிருக்கே!!
  முன்பெல்லாம் வானொலியில் திரு்.தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் தினம் ஒரு தகவல் என்று நல்ல கருத்துக்களை குட்டிக்கதைகள் மூலம் சொல்லி வருவார்.
  அதுபோல தினம் ஒரு பதிவு என்று நீங்கள் பதிவிடும் காலம் தொலைவிலில்லை என்று தெரிகிறது.
  அதற்கான அறிகுறிதான் ஒரே நாளில் இரு பதிவுகள் போலிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நான் வாரம் ரெண்டு பதிவுதானே
   கேட்டேன்.😃😃☺☺☺☺☺☺☺

   Delete
 16. இனிய இரவு வணக்கம்

  ReplyDelete
 17. ஆனாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஓடரது இல்லையின்னா
  பறக்கிறது நீஞ்சறது தாவுறது ஏதோ ஓன்னு கிடைக்கும்.
  அதில் கழுகு ஃபிரையும் உண்டு.

  ReplyDelete
 18. அதுக்குள்ளேயே இன்னொரு உப பதிவா ? அட்ரா சக்க அட்ரா சக்க .

  ReplyDelete
 19. நண்பா்களே!!

  2012 ரீ-எண்ட்ரிக்குப் பிறகு

  லக்கிலூக்கின்
  1. பரலோகத்திற்கொரு பாலம்.
  2. டால்டன் நகரம்
  3. ஜேன் இருக்க பயமேன்?!
  4. MA DALTON

  இவையெல்லாம் வெளியிடப் பட்டனவா??

  ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

  ReplyDelete
  Replies
  1. இல்லை மிதுன்...

   2012க்குப் பிறகு மறுபதிப்பான வண்ண லக்கி கதைகள் 5...

   2013ஜூன்..மறுபதிப்பு2-சன்சைன் லைப்ரரி-லக்கி ஸ்பெசல்
   1.சூப்பர் சர்க்கஸ்
   2.பொடியன் பில்லி

   2013டிசம்பரில் மறுபதிப்பு 5- லக்கி&சிக்பில் ஸ்பெசல்
   3.புரட்சித்தீ

   2016டிசம்பரில்... சூப்பர்6ல்1..
   லக்கி ஸ்பெசல்..

   4.ஜெஸ்ஸி ஜேம்ஸ்
   5.ஒரு கோச் வண்டியின் கதை

   இந்த 5மட்டுமே மறுபதிப்பான வண்ண லக்கி கதைகள். சொல்லப்போனால் வண்ண மறுபதிப்பில் அதிக இடங்கள் கிடைத்தது லக்கிக்கே...

   Delete
  2. டெக்ஸ் விஜய் அவர்களே!.
   லயன் நியு லுக் ஸ்பெசலில் வந்த கதைகள் என்ன?
   வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் ஒன் ஷாட் ஆல்பமா?
   வேங்கைக்கு முடிவுரையா?வேங்கையின் சீற்றம் எந்த கதை சங்கிலியின் தொடர்கள்.
   நான் 2014 லிருந்து தான் காமிக்ஸ் வாங்குகிறேன்.
   மீள் வருகைக்குப் பிறகான கதைகளில் கூட சில இதழ்கள் கிடைக்கப் பெறாமல் உள்ளது.
   தங்களால் முடிந்தால் பதிவிடவும்.

   Delete
  3. நண்பர்களுக்கு முடிந்தளவு தகவல்களை தருவதை விட வேறு குஷியான வேலை ஏது நண்பரே ஸ்ரீராம்...!!!இதோ..

   1.நியூ லுக் ஸ்பெசல்... லக்கி ஸ்பெசல்-28வது லயன் ஆண்டுமலர்...பனியில் ஒரு கண்ணாமூச்சி& வானவில்லைத் தேடி-என இரு லக்கி கதைகள் இடம் பெற்றது.

   இந்த நியூ லுக் ஸ்பெசலே போராட்ட குழு, சேந்தம்பட்டி குழு என பலவற்றிற்கு துவக்கப்புள்ளி. இதில் இடம்பெற்றிருந்த நண்பர் புனித சாத்தானின் போனுக்கு ஏதோ ஒரு ஞாயிறு நான் கூப்பிட வாராந்திர மினி மீட்ல இருந்த நண்பர்கள் ஸ்டாலின் ஜி, சத்தான்ஜி,ஆடிட்டர் ராஜா சார்& மோஸ்ட் இம்பார்ட்டன்லி நம்ம ஈரோடு விஜய் என 4வரிடமும் முதன் முறையாக பேசினேன். அதுவரை தளத்தில் பெயர்கள் மட்டுமே அறிந்த நண்பர்களோடு பேசுவது எத்தனை மகிழ்ச்சியான விசயம் நண்பர்களே...
   தொடர்ந்த ஈரோடு காமிக்ஸ் மீட்டிங்ல தலீவர் மற்றும் பல நண்பர்களை நேரில் சந்திக்க அன்று தொடங்கி இன்று தோடருது இந்த உற்சாக "ஆட்டம்"....

   2.வைல்ட் வெஸ்ட் ஸ்பெசல்...2012செப்டம்பர்..
   இளம் டைகர் தொடரின்4வது சாகசம்(முதல் 3ம் "இளமையில் கொல்"என்ற பெயரில் ஏற்கனவே வந்திட்டது) மரண நகரம் மிசெளரி&
   லயனின் முதல் கி.நா. எமனின் திசை மேற்கு- 2ம் இடம்பெற்றது.

   இந்த புத்தகத்தை முதன் முதலாக ஆசிரியர் சார் கையால் பெங்களூரு காமிக்கானில் பெற்று கொண்ட தருணம் தி பெஸ்ட் மொமண்ட் எனக்கு..
   இளம் டைகர் தொடரின் மீள்தொடக்கம் பெற்றதும் இந்த இதழில் இருந்து தான்...
   வரிசையாக கதைகளை ஞாபகப்படுத்தி கொண்டு கதை வரிசையை போடுகிறேன்...

   Delete
  4. நியூ லுக் ஸ்பெஷல

   1.பனியில் ஒரு கண்ணாமூச்சி.
   2.ஒரு வானவில்லை தேடி.

   Wild west special

   1.எமனின் திசை மேற்கு.
   2.மரண நகரம் மிசௌரி. (டைகர்)இதன் அடுத்த கதை NBSல் வந்த கான்சாஸ் கொடூரன். தொடரும் கதையே 'வேங்கையின் சீற்றம்'. அதுவே அட்லாண்டில் ஆக்ரோசமாக புறப்பட்டு அந்தரத்தில் நிற்கிறது.

   லயன் மேக்னம் ஸ்பெஷலில் வந்த கேப்டன் டைகரின,மார்ஷல் டைகர் தொடரின் அடுத்த பாகமே 'வேங்கைக்கு முடிவுரையா?'

   விஜயராகவன் சார் ஈரோடு விழா ஏற்பாடுகள்ல பிஸியா இருப்பீங்கன்னு நினைச்சேன்.ஆனா இப்படி புயல் வேகத்துல வருவீங்கனு எதிர்பாக்கல.


   Delete
  5. ஆடி மாதம் நெருங்கிட்டது கோவிந்த்+ எதற்கு எந்த வரி இன்னும் தெரியல.
   வியாபாரம் நஹி...இனிமே நிறைய நேரம் இருக்கும்.

   ஈரோடு விழா ஏற்பாடுகளை வழக்கம் போல நம் நண்பர் ஈ.வி. (2013ல் இருந்து இந்தப் பணிகளை தம் வீட்டு விசேசம் போல உற்சாகத்துடன் செயல்படுபவர் தான் நம் செயலர்.) கவனித்துக் கொண்டுள்ளார்.நாங்கள் எல்லோரும் வழக்கமாக அவரோடு இணைந்திருப்போம்.சென்றாண்டு அவர் உடல் நல குறைவால் சிரமப்பட்டிருந்ததால் அவரின் பணிகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.இம்முறை வழக்கம் போல நண்பர் புயல் வேகத்தில் களம் இறங்கிவிட்டார். இம்முறையும் உற்சாகமான விழாவாக இருக்கப்போவது உறுதி...

   Delete
  6. கலப்படமில்லா உண்மை.

   ஈ.வி சார் Hats off.

   பொன்னாடை போர்த்தும் படம் ஒன்று.

   Delete
  7. டெக்ஸ் விஜய்,கோவிந்த் ராஜ்,
   உங்கள் வார்த்தைகளில் தெறித்து சிதறும் எல்லையில்லா காமிக்ஸ்ன் மீதான நேசமும்,அடிநாதமாக இழையோடும் நட்பின் மீதான அன்பும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.புரிதல்கள் உள்ளத்தில் எத்தகைய நெகிழ்ச்சியான மாற்றங்களை துளிர் விடச் செய்யும் என்பதை வாழ்வில் மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.நேசம் நிறைந்த நன்றிகள்.
   இளமையில் கொல்+மரண நகரம் மிசவுரி+எமனின் திசை மேற்கு+கான்சாஸ் கொடூரன்+வேங்கையின் சீற்றம்+அடலாண்டாவில் ஆக்ரோசம்........
   இவை அனைத்து கதை சங்கிலியும் ஒற்றை பாக மெகா கதையின், கதைத் தொடர்கள் என்பது புரிகிறது.
   இவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒற்றை இதழாக வாசிக்கும் பொழுதொன்று புலரும்,நாளொன்றுக்காக காத்திருக்க வேண்டும் என்பதும் புரிகிறது.

   Delete
  8. டைகர் கதை தொடர்கள் 1963ல் முதன் முறையாக வெளியிடப்பட்டன. இதில் இதுவரை 28கதைகள் இடம்பெற்று உள்ளன.இவை அனைத்தும் தமிழில் வந்துவிட்டன.

   1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக கதை
   6.தோட்டா தலைநகரம்-சிங்கிள் சாட்
   7,8,9&10=இரும்புக்கை எத்தன்-4பாக கதை
   11&12=தங்க கல்லறை-இருபாக கதை
   13to23=மின்னும் மரணம்-11பாக கதை
   24,25,26,27&28=என் பெயர் டைகர்-5பாக கதை

   இத்தொடர் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து டைகரின் இளவயது நடப்புகளை கொண்ட யங்டைகர் சீரியஸ் 1989ல் வெளியிடப்பட்டது. அதில் இதுவரை 21கதைகள் வந்துள்ளன. தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக கதைகளாக வெளிவந்துள்ளன. இன்னமும் 12பாக்கியுள்ளன.

   இளம்டைகர்...

   1,2&3=இளமையில் கொல்-3பாக கதை.
   4.மரணநகரம் மிசெளரி(வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்sep2012)
   5.கான்சாஸ் கொடூரன்(முத்துNBS jan2013) -4&5இரு பாக சாகசம்.
   6.இருளில் ஒரு இரும்புக்குதிரை(முத்து NBS jan2013)
   7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர் 2013)-6&7-இருபாக சாகசம்.
   8.அட்லான்டா ஆக்ரோசம்
   9.உதிரத்தின்விலை...8&9 ஒரே இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக சாகசம்.

   டைகரின் முன்கதை கொண்டு இளம்டைகர் உருவாக்கப்பட்டது போல பின்கதைக்கு ஏதும் உண்டா என்றால் அதற்கும் "ஆம்" என்பதே பதில். சீக்வலாக மார்சல் டைகர் என்ற 3பாக டைகர் சாகசமும் வந்துள்ளது.

   தமிழில்...2014ஆகஸ்டில் லயன் மேக்னம் ஸ்பெசலில் வந்த முதல் பாகம்+2015மார்ச்சில் வந்த வேங்கைக்கு முடிவுரையா"ல் இரண்டு பாகம் என 3ம் வந்துவிட்டன.

   அவ்வப்போது இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் னு கொத்து புரோட்டா போட்டதால் இந்த கன்பியூசன்.

   Delete
  9. ஸ்ரீ@ அந்த வைல்டு வெஸ்ட் ஸ்பெசலில் இடம்பெற்ற மற்றொரு கதையான "எமனின் திசை மேற்கு" -சிங்கிள் சாட் கி.நா.மட்டுமே. அதற்கும் இந்த பரோட்டா வகைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

   Delete
  10. @ Govindaraj Perumal

   விஜயராகவன் என்னைப்பத்தி கொஞ்சம் அதிகப்படியாச் சொல்லிப்புட்டாருங்க. இவரு இப்படித்தான் திடீர்னு கழுத்து நோகற அளவுக்கு மெடல் போடுவாருங்க... அப்புறம் திடீர்னு சைக்கிள் பெடலை புடுங்கி சாத்திப்புடுவாருங்க ( பாட்ஷா'வுல ரஜினி போர்வெல் பம்ப்பை பிடுங்கி வீசுவாருங்களே... அப்படி!). மெடல், பெடல் - ரெண்டையுமே பெரிசா எடுத்துக்கக்கூடாதுங்க. இல்லேன்னா மண்டை வீங்கிப்புடுமுங்க.

   ஹிஹி! EBFல எல்லாரும் பார்க்கும்போது ஓடிஓடி வேலை செய்யுறாப்ல ச்சும்மா அப்படியே ஆக்டிங் உடுவேணுங்க. அதையப்போயி நம்பிட்டாங்க பாருங்க. ஒரே தமாசுங்க!

   இந்தத் தபா நீங்க வருவீங்கதானே?

   Delete
  11. ///மெடல், பெடல் - ரெண்டையுமே பெரிசா எடுத்துக்கக்கூடாதுங்க. இல்லேன்னா மண்டை வீங்கிப்புடுமுங்க///---ஹா...ஹா..
   செம விஜய்... சிரிச்சி மாளல...

   2012ஈரோடு காமிக்ஸ் மீட்,
   2013,2014,2015,2016ஈரோடு விழாக்கள், 2015சென்னை பெளன்சர் விழா, 2015சென்னை மின்னும் மரண வெளியீட்டு விழா, 2016சென்னை புத்தகவிழா, 2014சேலம் புத்தகவிழா என அனைத்திலும் நான் கலந்து கொண்டுள்ளேன். அனைத்திலும் ஈ.வி.யும் பங்கு கொண்டுள்ளார். நான் அநேகமாக எந்தப் பணியையும் செய்தது கிடையாது. ஆசிரியர் சாரோடு பேசுவது, நண்பர்களோடு அரட்டை, ஆட்டம் ,கொண்டாட்டம்னு ஓட்டி விடுவதே என் வாடிக்கை.

   அனைத்து ஈரோடு விழாக்களிலும் முன்னணியில் இருந்து அனைத்து பணிகளையும் அந்தந்த நேரத்தில் செய்வதில் நம் நண்பர் ஈ.வி. கெட்டிக்காரர். கண்ணால் கண்டதை சொல்ல எனக்கு தயக்கம் கிடையாது ஒருபோதும்.

   வெளியூர் நண்பர்களுக்கு புத்தக காட்சியை அடைவதில் துவங்கி,சிவகாசி பணியாளர்கள் கிளம்பும் வரை அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு, ஒவ்வொரு ஈரோடு விழாவையும் சக்சஸ் ஆக்குவதில் மிக முக்கிய பங்கு செயலருக்கு உண்டு என்பதை இம்முறை நேரில் வந்தால் நீங்களும் காணலாம் கோவிந்த்.

   2013முதல் அனைத்து போட்டோக்களும் என்னிடம் உள்ளது.நீங்கள் காண விரும்பினால் என் வாட்ஸ்அப்பில் 9629298300 ஒரு ஹாய் போடுங்கள்.

   Delete
  12. ///மெடல், பெடல் - ரெண்டையுமே பெரிசா எடுத்துக்கக்கூடாதுங்க. இல்லேன்னா மண்டை வீங்கிப்புடுமுங்க. ///

   அதே அதே ஈ வி..!!!

   That's why u r my குருநாயர்..! :-)

   Delete
 20. ஆண்டவா ஒரு பதிவை படிச்சி யோசிச்சி லிஸ்டை ரெடி செய்யறதுக்குள்ள இன்னொரு பதிவா?

  பேசாமல் 80's நாயகர்களை புதிய பழைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு இதழை வெளியிட்டால் என்ன?
  பில்லர் பேஜ்களுக்கு விச்சுகிச்சு. குண்டன்பில்லி
  கருப்புக்கிழவி சிறுகதைகளோடு வெளியிடலாமே.

  ReplyDelete
  Replies
  1. எமனின் திசை மேற்கு மாபெரும் வெற்றி பெற்ற..ஓவியத்தாலும் , கதயாலும் அசத்திய வான்ஹாம்மேவின் அற்புத படைப்பு மட்டுமின்றி ...முதல் கிநா கூட..

   Delete
  2. ///எமனின் திசை மேற்கு மாபெரும் வெற்றி பெற்ற..ஓவியத்தாலும் , கதயாலும் அசத்திய வான்ஹாம்மேவின் அற்புத படைப்பு மட்டுமின்றி ...முதல் கிநா கூட..///

   இல்லை ஸ்டீல்,
   எனக்கு தெரிந்து முதல் ஒன்ஷாட் கிநா இரத்தபூமி தான்.!
   பஞ்சத்தால் இடம்பெயரும் குழுவும், வழிகாட்டியான மாக்கும், அந்த புரொபஷரும், தங்கம் எடுக்கும் சம்பவங்களும் இன்னும் பளிச்சென்று நினைவில்.. . .!!

   Delete
  3. ஓ ! ஆனா இப கூட கிநாதானே கிட்...ஆசிரியர் கிநா என அறிவித்த முதல் இதழ் என வைப்போம் ..

   Delete
  4. உண்மை கிட் மாம்ஸ்...
   லயனின் முதல்
   ஒன் சாட் கி.நா. அந்த "இரத்த பூமி"-தான்...
   அதற்கு நான் விமர்சனம் எழுதி, அது அடுத்த இதழில் இடம்பெற்றது. அந்த மாக் தான் ஹீரோ... ஆனால் நிஜ ஹூரோ அந்த பஞ்சப்பராரியான பாவப்பட்ட செவ்விந்திய இளைஞனே...
   மனதை சோகமாக கவ்வும் உருக்கமான கி.நா.
   அந்த வயதில் அதன் தாக்கம் நமக்கு முழுதும் உணர பக்குவம் இல்லை என நினைக்கிறேன். வண்ண மறுபதிப்புக்கு ஏற்ற அற்புதமான கதையோட்டத்தோடு அமைந்த இயற்கையை காட்டும் வன்மேற்கின் இரக்கமற்ற வன்களங்களை கொண்டது.

   Delete
  5. ///வண்ண மறுபதிப்புக்கு ஏற்ற அற்புதமான கதையோட்டத்தோடு அமைந்த இயற்கையை காட்டும் வன்மேற்கின் இரக்கமற்ற வன்களங்களை கொண்டது.///

   அப்போ ரீப்ரிண்ட் கேட்டு போராட்டத்தை ஆரம்பிச்சிடலாமா??

   Delete
  6. தலீவரைக் கூப்பிடுங்க, சாமியானாவை (திடீர் பந்தல்) நட்டு விடலாம். மொளகா பஜ்ஜி வேறு ரெடியா இருக்கும் போல...

   Delete
  7. எப்பப் பாத்தாலும் மொளகா பஜ்ஜியா.. ஒரு மாற்றத்துக்கு சிக்கன் பக்கோடா ஏற்பாடு பண்ணலாமுல்லே..

   Delete
  8. சிக்கன் பக்கோடா வாங்கலாம் தான் சார், சங்கத்தின் நிதி நிலையை கருத்தில் கொள்ளனும் அல்லவா...!!!
   மேலும் இப்போதையை சூழலில் பழைய சிக்கன் பக்கோடா விலைக்கு, மொளகா பஜ்ஜியாச்சும் கிடைக்குமா??? நம்ம பொருளர் ஜி என்னா முடிவு செய்யறார் என்பதே பிரதானம் அல்லவா???

   Delete
 21. சார் , நீங்கள் வெளியிட்டுள்ள கதைகள் எல்லாமே வராதா என நாங்கள் ஏங்கி இருக்கும் இதழ்கள் . விசிலடித்து வரவேற்கிறேன் சார் . 100% பழசுக்கே எனது முழு ஓட்டு . ஆர்ச்சியினையும் , கருப்பு கிழவியின் கதைகளினையும் கொஞ்சம் கருத்தினில் எடுத்து கொள்ளுங்கள் சார் .

  ReplyDelete
 22. கொலைப்படை, ரோஜர் மற்றும் பிற என எந்தவொரு இதழையும் மறுபதிப்பாக போடுவது வரவேற்கத்தக்கது.. 👍👍

  ReplyDelete
 23. சார்,
  1985 வருடத்திய சூப்பர் ஹிட் கதையான ஸ்பைடரின் மிக அரிதான A4 சைஸ் கொலைப்படை நல்ல அச்சு தரத்தில் மீண்டும் வருமாயின் மிக்க மகிழ்ச்சி தான்.கூடவே இன்னும் மூன்று மெகா சைஸ் கதைகள் (இதுவரை மறுபதிப்பாகாத நீதிக்காவலன் ஸ்பைடர் கதை must) சேர்ந்து ஹார்ட் பவுண்ட் கவரோடு வந்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. விண்வெளி பிசாசு-வை சேர்த்துக் கொள்ளுங்கள்.

   Delete
  2. விண்வெளிப் பிசாசு ஆசிரியரிடம் நான் ஈரோட்டில் வைத்த கோரிக்கை பார்ப்போமே ஆசிரியரின் கடைக் கண் பார்வை நம் மீது விழுகிறதா என்று

   Delete
 24. நிலக்கரி நகரத்தில் மஞ்சள் நகரம் போல வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..:-)

  ReplyDelete
 25. வணக்கம் எடிட்டர் சார்....!

  ரோஜரின் மர்மக்கத்தி அருமையான தேர்வு.அதனுடன் இரத்த தீவு அல்லது நடக்கும் சிலை மர்மம் கதையும் சேர்ந்து வந்தால் அட்டகாசமாக இருக்கும்.

  தானைத்தலைவனின் கொலைப்படை...! பெரிய சைஸில்..முழுவண்ணத்தில்...! ஆஹா...! சூப்பர்.நிச்சயம் பட்டையை கிளப்பும்.

  சுஸ்கி விஸ்கி ....நண்பர்களின் பலநாள் எதிர்பார்ப்பு.மழலைத்தனமாக இருக்குமா...? இருக்கட்டுமே...! ஸ்மர்ஃபையும்,பென்னியையும் கொண்டாடும் கூட்டம்தானே இது...! சுஸ்கி விஸ்கியை மட்டும் கை விட்டு விடுவார்களா என்ன...?

  மின்னல் படை ஓ.கே.சார்ஜண்ட் தாமஸ் படித்ததில்லை.முயற்சித்துப்பார்க்கலாம்.

  சாவதற்கு நேரமில்லை,வைரவேட்டை இரண்டுமே மிகச்சுமாராகத்தான் இருந்தன.சைமன் களமிறங்குகிறாரென்றால் புதிய கதைகளை வெளியிடலாம்.

  கொரில்லா சாம்ராஜ்யம், யார் அந்த மாயாவி .., இரண்டுமே படித்ததில்லை.எது வந்தாலும் ஓ.கே.


  சூப்பர் சிக்ஸில் இளவரசி இல்லாதது பெருங்குறை.பழிவாங்கும் புயல் முழுவண்ணத்தில் பாக்கெட் சைஸில் வெளியிடுவதாக உறுதியளித்திருந்தீர்களே...! சைமனுக்கு மாற்றாக மாடஸ்டியை களமிறக்கினால் மகிழ்ச்சி.


  ReplyDelete
  Replies
  1. சரவணகுமார் ஜி
   ஆசிரியரின் அறிவிப்பு உங்களையும் நம் தளத்திற்க்கு வர வழைத்து விட்டது

   Delete
 26. We need all suski wiski stories in single hard bound cover book, in color , I expect all mini, junior , thigil reprints in colour,

  ReplyDelete
 27. 1௦௦ சதவிதம் பழைய காமிக்ஸ் ரிப்ரின்ட் மட்டுமே வரட்டும்....

  புது ஹீரோ பயலுவ க்யு வில நிக்கட்டும்.....

  எங்களுக்கும் வயசாவுதுல்ல......

  சீக்கிரம் வரட்டும் சார்.....

  எங்களுக்கும் வயசாவுதுல்ல......
  எங்களுக்கும் வயசாவுதுல்ல......
  எங்களுக்கும் வயசாவுதுல்ல......
  எங்களுக்கும் வயசாவுதுல்ல......சார்

  ReplyDelete
  Replies
  1. ///எங்களுக்கும் வயசாவுதுல்ல......
   எங்களுக்கும் வயசாவுதுல்ல......
   எங்களுக்கும் வயசாவுதுல்ல......
   எங்களுக்கும் வயசாவுதுல்ல......சார்.///

   அதையேதான் மந்திரியாரே நானும் சொல்கிறேன். .! பழசு பழசுன்னு படிச்சதையே படிச்சிட்டு இருந்தா, புதுசை எல்லாம் பாக்கவே முடியாம போயிடுமே..??

   அங்கே இன்னும் எத்தனை ரத்தப்படலம், மின்னும் மரணம், ட்யூராங்கோ, அண்டர்டேக்கர் எல்லாம் கொட்டிகிடக்கோ தெரியலை. ., நாம திரும்ப திரும்ப ரோஜர், சைமன், காரிகன்னே சுத்திட்டு இருக்கோமே..! :-)

   Delete
  2. முதல் காதலே சுகம் .........
   சரி தானே ......


   எப்பா மக்கா
   நான் காமிக்ஸ் காதலை சொன்னேன்

   Delete
  3. ///ரத்தப்படலம்////....இனி ''ரத்தம் வரும் படலம் தான்'' ........ஹா ஹா ஹோ ஹோ ..

   புதுசெல்லாம் தனி வரிசை .....

   அதுவும் வேணும்

   இதுவும் வேணும்

   Delete
 28. யுத்த கதைகளில் எனக்கு பிடித்தவை2
  1.உலகப்போரில் ஆர்ச்சி
  2.எமனுக்கு எமன்-சார்ஜன்ட் தாமஸ்

  ஆர்ச்சி கதை:- 2ம்உலகப்போரின் ஏதோ ஒரு கட்டத்தில் காலப்பயணத்தில் களமிறங்கும் ஆர்ச்சி குழுவினர் சாகசம் புய்ப கூடையாக இருந்தாலும் ரசிக்கும் படி இருக்கும். அந்த போக்கர் விமானங்கள், ஆர்ச்சியின் அட்டகசங்கள் என மசாலா தூக்கலா இருக்கும். அந்த கற்பனைக்கே ஒரு ஸ்பெசல் கைதட்டல்.

  எமனுக்கு எமன்-...

  அப்படியே நேர் எதிர் துருவம். மிக மிக சீரியஸ் உலகப்போர் காட்சிகள். ஒவ்வொரு முறை தாமஸ் அணியினர் சிக்கலில் மாட்டும் போதும், சமயோசிமான யுக்தி+ துணிச்சல் மூலம் தப்புவதோடு மட்டுமல்லாமல் ஏதாவது சாதிப்பது என அட்டகாசமான அசத்தல் சாகசம்.

  தாமஸை மற்ற சோல்சர்கள் காப்பாற்றும் காட்சியிலும் அதே சீரியஸ் ரகத்தோடு சோல்ஜர்களை தாமஸ் திட்டுவது கதையின் போக்குக்கு உதாரணம். அப்போதும் உங்களை பத்திரமாக மீட்டுச்செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என தாமஸ் சொல்லும் காட்சியில் ஆங்கில படையின் கட்டுக்கோப்பு, தலைமைப்பண்பு,
  வழிநடத்தும் பொறுப்புணர்வு இவைகள் விளங்கும்.

  டயலாக்கும் செம மேட்சிங்காக எழுதியிருப்பார் ஆசிரியர் சார். அந்த ஹிராடோட்ஸ் என்ற வீரன் இறந்துபோகும் காட்சியின் வர்ணனை அட்டகாஷ்...

  இவைகளைப்போன்ற நையான்டி கதைகளோ, சீரியஸ் ஆக்சன்களோ கவனமாக தேர்வானால் யுத்த கதைகளும் இங்கே வெற்றிபெற தடையேதுமில்லை.

  ReplyDelete
 29. சார்ஜன்ட் தாமஸின் இன்னொரு கதை பெயர் ஞாபகம் இல்லை வில்லனுக்கு சிறு குண்டூசி விழுந்தாலும் சத்தம் பெரியதாக கேட்கும் அப்போ குண்டு வெடிக்கும் சத்தம் எப்படி இருக்கும் இதற்க்கு காரணமான தாமஸை வில்லன் பழி தீர்க்க முயலுவான் தாமஸ் அந்த வெறியனிடமிருந்து தப்பிப்பதுதான் கதை செம கதை அதே போல் தொடருமானால் நன்று

  ReplyDelete
 30. எடிட்டர் சார்
  உங்கள் மேஜையில் நீண்ட காலமாக துயிலும் எங்களின் பால்ய கால நாயகர்களை துயிலெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது சார். பழைய நாயகர்களுக்கென்றே ஒரு தனி பட்டாளமே காத்துக்கிடக்கிறோம் சார். முத்து மினி காமிக்ஸ் போல மலிவுப் பதிப்பில் தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளும் ஃபார்முலாவிலேயே செட் செட்டாகவோ அல்லது ஒரே குண்டு புத்தகமாகவோ வெளியிடலாமே சார். இது ஒரு வேண்டுகோள்தான் .
  உங்கள் மேஜையும் காலியாச்சு.
  எங்கள் கோரிக்கையும் நிறைவேறியாச்சு என்ற சந்தோஷம் இப்போதே ஆவலை அதிகப்படுத்துகிறது சார். என்னதான் புதுப்புது சொந்தங்கள் கிடைத்தாலும் தாத்தா,பாட்டி, மாமா,அத்தை, சித்தப்பா,பெரியப்பா போன்ற உறவுக்கார்ர்கள் சார் அவர்கள். மலிவுப் பதிப்பாக வெளியிட்டால் புத்தகவிழாக்களில் வாங்குவோருக்கும் பெரிய சிரமம் இருக்காது சார்.
  இதனை இன்று பதிவிடக்காரணமே நேற்று நடந்த சம்பவமும் ஒரு காரணம் சார். மாலைமதி AFI காமிக்ஸ் எழுபதுகளில் எழுபத்தைந்து பைசாவுக்கு வெளி வந்த காரிகன் கதை மரணவலையும், ரிப்கிர்பியின் நாலு கால் போக்கிரி, கிஸ்கோ கிட்டின் ஒற்றைக்கண்ணாடி என்ற மூன்று கதைகளும் எங்கள் ஊர் பழைய பேப்பர்கடையில் ஆயிரம் ருபாய்க்கு விலை போனது. வாங்கியது ஒரு மகளிர் கல்லூரி பெண் விரிவுரையாளர். ஏறக்குறைய என் வயதுடையவர்.அவரிடம் "இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறீர்களே. இதைவிட குறைவான விலையில் வண்ணத்தில் பெரிய சைஸில் முத்து மற்றும் லயன் காமிக்ஸூம் கிடைக்கிறதே தெரியுமா மேடம்" என்றதற்கு பதிலுக்கு அவர்கள்" தெரியும் சார். எங்கள் குடும்பத்தில் எல்லாருமே காமிக்ஸ் படிப்பவர்கள். புதிய கதைகளை எப்போது வேண்டுமானால் வாங்கிக் கொள்வோம். ஆனால் இந்த மாதிரியான பழைய புத்தகங்களை எங்கு வாங்க முடியும்..?" என எதிர் கேள்வி கேட்க அதற்கு மேல் என்னிடம் வார்த்தைகளில்லை. பழைய கதைகளை கேட்க இது மட்டுமே காரணமில்லை. என் போன்ற பலரின் விருப்பமும் ஒரு காரணம். உங்களுக்கு முடியும்போது பரிசீலியுங்கள் சார்.

  ReplyDelete
 31. சின்ன வயசிலே ரத்த வெறியர்களின் ஒரு கிழிந்து போன பேப்பரை வைத்துக் கொண்டு இது என்ன புக் என்ன புக் என்று அலைந்து தேடி ரொம்ப நாள் கழித்து தான் அதன் முழுக் கதையையும் படித்தேன் இப்போது அந்த புக் என்னிடம் இல்லை என்பது வேறு விஷயம்

  ReplyDelete
 32. SIR I KINDLY REQUEST TO YOU THAT CLASSIC BOOKS LIKE PAATHAALA NAGARAM,KAATRIL KARAINTHA KAPPALGAL,NADUNIDI KALVAN,KOLAIKAARA KALAIGNAN,MARMATHEEVIL MAAYAVI,VINNIL MARAINTHA VIMAANANGAL,KADATHAL RAGASIYAM ,GORILLA SAMRAJYAM,VAIREX X,MICRO ALAIVARISAI,JOHNNY IN JAPAN,IRUMBUKAI MAAYAVI ETC AS SOON AS POSSIBLE

  ReplyDelete
 33. மெயின் பதிவை இப்போதுதான் படித்தேன். அப்படியே கமென்ட் செக்ஷனுக்குள்ளும் புகுந்தேன். முந்நூறு+ கமென்டுகள்.. முடிந்தது என் கதை.

  எப்படித்தான் இந்தக்கருத்துகளைச் சலித்தெடுத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வரப்போகிறீர்களோ தெரியவில்லை. பெரும்பாடுதான்.

  எனக்கெல்லாம் இந்த விஷயத்தில் கருத்தே இல்லை, முன்னதாக கொஞ்சம் புரியவில்லை என்றும் சொல்லலாம். நீங்கள் கேட்ட முன்மொழிவுகள் இணைதடமான நடப்பு சூப்பர் 6 முடிந்த பிறகு, அதேபோலொரு சூப்பர் 6ஐ தொடரலாம் எனில், அதற்கானதா அல்லது சந்தா டி, ரீபிரின்டுகளுக்கான 2018க்கா என்றொரு சந்தேகம் எனக்கு. 2017 இறுதியில் சந்தா டியின் இப்போதைய நாயகர்களின் கதைக் கையிருப்பு குறைந்திருக்குமா/ முடிந்திருக்குமா/அல்லது மேலும் சில ஆண்டுகள் தொடருமா? குறைந்திருக்கும் எனில் சற்று மகிழ்ச்சி, விரைவில் முடிந்துவிடுமல்லவா! முடிந்திருக்கும் எனில் மெத்த மகிழ்ச்சி. அந்த இடத்தில் முன்னர் புகழ்பெற்ற வேறு சில கதைகளைக் காணலாம், அல்லது அதை விடுத்து புதிய கதைகள்/ஜெனர்களை முயற்சிக்க சந்தா ஈக்கு சற்று இடம் கிடைக்கும். இல்லை அதுவே இன்னும் சிலபல ஆண்டுகளுக்கு இருக்கிறது, இது சூப்பர் 6க்கான இடத்தில் மேலும் பல தூக்க மாத்திரைகளின் தயாரிப்பு எனில் நான் அம்பேல்!! சந்தா டி நாஸ்டால்ஜிக்+சேகரிப்பு எனும் காரணத்துக்காகத்தான் வாங்கிவருகிறேன். ஏற்கனவே அது போதும், 2018ல் அதைத் தவிர்க்கலாம் என்றும் ஒரு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு. பழைய கதைகள், மறுபதிப்பு என்றெல்லாம் சந்தா ஈயின் விரிவாக்கத்துக்கு ஆபத்து விளைவிக்கும் சந்தா டி மற்றும் சூப்பர் 6களுக்கு என் ஆதரவு இனி கிடையாது. அவ்வளவுதான் என் கருத்து!!

  சந்தா ஏ: வழக்கமான/புதிய‌ நாயகர்கள்
  சந்தா பி: டெக்ஸ்
  சந்தா சி: கார்டூன்ஸ்
  சந்தா இ: கிராபிக் நாவல்

  இவ்வளவுதான் என் தேர்வு. இதுவே தெளிவாகத்தான் உள்ளது. சந்தா டி, ரீபிரின்ட் ஏகோபித்த நண்பர்களின் தேர்வு அதை தவிர்க்க இயலாது, இருக்கட்டும். மற்றபடி இணைதடம், சிறப்புத் தடம் எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். புதிய புதிய முயற்சிகளை சந்தா ஏ அல்லது இயில் கதைத்தன்மைக்கேற்ப பொருத்திக்கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு ஒரு திட்டம் என்பது நல்லது. இதழ்களின் எண்ணிக்கையை அதிகமோ குறைவோ முன்னரே இறுதிசெய்யலாம். கதைத்தேர்வை, இடம்பெயர்வை உங்கள் முடிவில் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை வருடத்துவக்கத்தில் நண்பர்களுக்கு பொருளாதார சுமையாக அமையக்கூடுமெனில் 2 அல்லது 3 சந்தாக்களின் துவக்கம் ஜ‌னவரியாகவும், மற்ற சந்தாக்களின் துவக்கம் ஜூலையாகவும் அமைக்கலாம். இதெல்லாம் எ.எ.க! தான்.

  இனி.. Just for fun!!

  எனக்கு ஏற்கனவே கொஞ்சம் ஞாபகமறதி உண்டு. இதில் மெயின் சந்தாக்கள் பலவிதம், ஊடாக இந்த சூப்பர்6க்கு எப்போ சந்தா கட்டினேன் என தெரியவில்லை, அவ்வப்போது சிறப்பிதழ்களுக்கு சிறப்பு சந்தா.. ஒரே குழப்ப்ப்ப்மாக இருக்கிறது. இந்த இரத்தக்கோட்டைக்கு சந்தா கட்டிவிட்டேனா என்று கூட தெரியவில்லை. 2018ல் இதற்கொரு தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். ஏதோ டெக்ஸ் புக்கில் நம் போட்டோ அச்சிடுவதாக சொல்லப்பட்டதே.. போட்டோ அனுப்ப இறுதி நாள் எது? (புக்கு ஏற்கனவே வந்துவிட்டது என என் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டுவிடாதீர்கள்.. @ஈவி!!) இரத்தக்குட்டை, மரணக்கோட்டை, இரத்தமூட்டை, மரணமுட்டை, டிராகன்கோட்டை, கழுகுமலைம‌ரணம் இப்படியாக என் கனவில் வரும் காமிக்ஸ்களே குழம்பிப்போய் கிடக்கிறது.. :‍)))))))))))

  ReplyDelete
  Replies
  1. எனது இந்த ஐடியாவில், சூப்பர் 6 இல்லாவிட்டால் இதழ்களின் எண்ணிக்கை குறைவாகிடுமே எனும் கவலையெழ வாய்ப்பு உள்ளது. இதழ்கள் குறையலாம், கதைகள் குறையத்தேவையில்லை. சந்தா ஏ, மற்றும் இயில் அவ்வப்போது குண்டுகளைக் காணும் வாய்ப்பு அதிகரிக்குமல்லவா?

   Delete
  2. // ஏதோ டெக்ஸ் புக்கில் நம் போட்டோ அச்சிடுவதாக சொல்லப்பட்டதே.. போட்டோ அனுப்ப இறுதி நாள் எது? //

   30 - JUNE -2017 :-)

   Delete
  3. @ ஆதி

   நானும் இதுவரைக்கும் போட்டோ அனுப்பலைங்க!

   ஒரேஏஏஏ குழப்பம்! தனியா அப்படியே ஒரு ரொமான்ட்டிக் லுக்கு விடறாப்ல ஒரு போட்டோவா... அல்லது, பேமிலியோட இருக்காப்ல ஒரு போட்டோவா ( இந்த போட்டோவுல நரசிம்மராவ் மாதிரிதான் இருப்பேன்)... அல்லது, நண்பர்களோட எடுத்துக்கிட்ட போட்டோவா... அல்லது, எடிட்டர் சமூகத்துடன் எடுத்துக்கிட்ட போட்டோவா... எதை அனுப்பறதுன்னு ஒரேஏஏஏ குழப்ப்ப்பமா இருக்குங்க!

   பேசாம ஒரு மியாக்குட்டியின் படத்தை அனுப்பிவச்சுடலாம்னு இருக்கேன்! :)

   Delete
  4. ///எதை அனுப்பறதுன்னு ஒரேஏஏஏ குழப்ப்ப்பமா இருக்குங்க!//

   அமலா பால் கூட எடுத்துகிட்ட செல்பியில ரொம்ப நல்லா இருந்தீங்களே....அந்த போட்டோவ அனுப்பி வச்சுடலாமே...;-)

   Delete
  5. ///அமலா பால் கூட எடுத்துகிட்ட செல்பியில ரொம்ப நல்லா இருந்தீங்களே....அந்த போட்டோவ அனுப்பி வச்சுடலாமே...;-)///


   ஓஹோ.. .!!

   இப்ப புரியுது.. சில விசயங்கள்.!!:-)

   Delete
  6. @ செனாஅனா

   ////அமலா பால் கூட எடுத்துகிட்ட செல்பியில ரொம்ப நல்லா இருந்தீங்களே....அந்த போட்டோவ அனுப்பி வச்சுடலாமே////

   அதைத்தான் நான் முன்பே நினைத்தேன்! ஆனால் யாரும் நம்பமாட்டார்களே? 'அட இது கிராபிக்ஸ் வேலைப்பா'னு சொல்லி சீண்டுவாங்களே?!! அப்புறம் எனக்குக் கோவம் வரும்... EBFல அமலா பாலை நேர்ல கொண்டுவந்து நிறுத்துவேன்... அப்புறம் ட்ராஃபிக் பிரச்சினை, மீடியாக்களின் துரத்தல், சட்ட-ஒழுங்குப் பிரச்சினைனு ஈரோடே ஸ்தம்பிச்சுப் போகும் - இதெல்லாம் தேவையா, சொல்லுங்க?

   ஆகவே, அமலா பாலை யாரென்றே தெரியாத ஈவியாகவே இனியும் என்னை அடையாளப்படுத்திக்கொண்டு, சூடான ஆவின் பாலில் ரவுண்டு பன்னை தொட்டுச் சாப்பிடும் ஒரு சாமானியனாக தொடரவே எப்போதும் விரும்புகிறேன்!

   தயவுசெய்து, மேற்கொண்டு என்னை கட்டாயப் படுத்தாதீர்கள். ப்ப்ளீஷ்!!

   Delete
  7. @ஈவி...ஹா..ஹா..ஹா.

   Delete
  8. வேண்டாம் செயலாளரே அமலா பாலுடன் நீங்கள் எடுத்த செல்பி வெளியே வந்தால் உங்கள் வீட்டீல் உங்களுக்கு இறுதிப் பால் உறுதியாகி விடும்

   Delete
  9. //சந்தா ஏ: வழக்கமான/புதிய‌ நாயகர்கள்
   சந்தா பி: டெக்ஸ்
   சந்தா சி: கார்டூன்ஸ்
   சந்தா இ: கிராபிக் நாவல்///

   சூப்பா் சாா் 👌👌👌

   Delete
  10. @ செந்தில் சத்யா

   ///உங்கள் வீட்டீல் உங்களுக்கு இறுதிப் பால் உறுதியாகி விடும் ///

   :D

   ரவுண்டு பன்னும் உறுதிதானே?

   Delete
  11. எந்தப்பாலாயிருந்தாலும், ரவுண்டு பன்னும் முக்கியம்யா உமக்கு! தேங்காப்பூ நிறைய வைச்சதுன்னா எனக்கும் ரெண்டு சேத்து வாங்கிவையும்யா!! :-)))))

   Delete
 34. ஒரு குட்டி வேண்டுகோள். 2018 ரீபிரின்டுகளில் ஒரே ஒரு கதையாவது ஆர்ச்சி கதையை வெளியிடவும். எனது நாஸ்டால்ஜி ஆர்ச்சியிடம்தான் இருக்கிறது. நான் அந்த சிறிய வயதில் நம் இதழ்களில் மொத்தமே 10 கதைகள் படித்திருந்தாலே அதிகம்தான். மாயாவி, டெக்ஸ் போன்ற முகங்கள் சற்றே ஞாபகம் இருந்தாலும்.. முதலில் படித்ததும், ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் படித்ததும், சற்றே ஸ்ட்ராங்காக நினைவில் நிற்பதும் என்னைப்பொறுத்தவரை ஆர்ச்சிதான்! ஆகவே, இப்போது அது தூக்கமாத்திரையாக இருக்குமோ எனும் சந்தேகம் இருந்தாலும் கூட ஓரிரு இதழ்களை வாசிக்க ஆவலாகத்தான் இருக்கிறது. (எப்படியும் ரீபிரின்ட் இருக்கத்தான் போகிறது. நடுத்துண்டு நமக்கு என அமர்ந்துவிட்டேன் நண்பர்களே!. ஹிஹி!!)

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஆதி தாமிரா
   நீங்களும் நம்ம (ஆர்ச்சி)கட்சி தானா

   Delete
  2. ஆர்ச்சி வரட்டும் ......டும்

   Delete
  3. ஆர்ச்சி வரட்டும் ......டும்
   வரும் வரை....
   சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்...


   (அப்புறம் எங்கிட்டு சாகறது ....ஹி ஹி )

   Delete
  4. ஸ்பைடர் பட்டைய கிளப்பும்போது ஆர்ச்சியும் விற்பனையில் சாதிக்கும்னு நம்பலாம். எனவே ஆர்ச்சி வரட்டும் சந்தா D யில். .!!

   Delete
  5. கிட் நீங்களா இப்படி
   இனிய மாற்றம் போன வருடம் ஈரோட்டில் ஆசிரியரிடம் நான் ஆர்ச்சியை கேட்டு அவரை தொந்திரவு செய்யும் போது நீங்கள் வேண்டாம் செந்தில் ஆர்ச்சி ரொம்பவும் கடியாக இருக்கும் என்று மறுத்த கிட் இப்போது என் கட்சியிலா இத நம்பவே முடியலயே இதில் எதாவது உள் குத்து உண்டா

   Delete
  6. ஸ்பைடரே வரும்போது ஆர்ச்சியும் வந்துட்டு போகட்டுமே செந்தில் ஹிஹி..!! :-)

   தவிரவும், பலமான வரவேற்பும் பெரிய ரசிகர் பட்டாளமும் ஆர்ச்சீக்கு இருப்பதையும் மறுக்க முடியாதே..!

   Delete
  7. //ஸ்பைடரே வரும்போது ஆர்ச்சியும் வந்துட்டு போகட்டுமே செந்தில் ஹிஹி..!! :-)//
   க்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 35. //2013ஜூன்..மறுபதிப்பு2-சன்சைன் லைப்ரரி-லக்கி ஸ்பெசல்
  1.சூப்பர் சர்க்கஸ்
  2.பொடியன் பில்லி//

  யாாிடமாவது இந்த புக் இரு பிரதிகள் இருக்குமாயின், ஒன்றை விலைக்குத் தர முடியுமா???

  ReplyDelete
 36. திரு.மிதுன்
  2014 க்குப்பிறகுதான் தொடர்ச்சியாக காமிக்ஸ் வாங்குகிறேன்.தேடியலைந்து சேகரித்ததில் ஓரளவு நிறைவான சேகரிப்புகள் கை வசம் உள்ளது.2007 ல் பல்வேறு சூழ்நிலைகளால் எதிர்பாராத விதமாக ஒட்டு மொத்த புத்தக களஞ்சியத்தையும் இழக்க நேர்ந்தது. முத்து, லயன்,இந்திரஜால்,மேகலா என பல நிறுவனங்களின் வெளியீடுகளை உள்ளடக்கிய மொத்த காமிக்ஸ்களின் இன்றைய சந்தை மதிப்பை கணக்கிட இயலாது.கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிரமம் பாராமல் முயன்றால் பழைய காமிக்ஸ் இதழ்கள் கிடைத்து வந்தது. இப்போது அது சாத்தியமில்லை.
  கனவில் கூட கற்பனை செய்ய முடியாத நிழல் உலக காமிக்ஸ் சந்தை தமிழகத்தில் உள்ளது.ஸ்டாக் மார்க்கெட் ,க்ரே மார்க்கெட் என மிகப்பெரிய குழுவாக இயங்கும் சில கூட்டணியினரின் இலக்கு காமிக்ஸ் ஆர்வத்தை பணமாக மாற்றுவதே.
  50 பைசா மதிப்புள்ள ஐந்து ராணி (பழைய)காமிக்ஸ்களை செட்டாக ப்ரிண்ட் செய்து மிகக் குறைந்த விலைக்கு( 2000 )தரக்கூடிய சேவை உள்ளங்களும் உள்ளது.முத்து மற்றும் லயன் காமிக்ஸ்ன் தேவையை அனைவரும் அறிந்ததே.
  இது யாருடைய தலைமையுல் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றியதல்ல இந்த பதிவு.
  நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களின் விலை தலா ₹100 ஆக இருந்தால், இதன் மதிப்பில் குறைந்தது நீங்கள் 10 மடங்கு விலை கொடுக்க வேண்டும்(தலா ஒன்றுக்கு ₹1000 லிருந்து₹1500 வரை).
  இந்த முயற்சியை கூடுமான வரை அனைவரும் தவிர்ப்பதே நலம்.
  படிப்பதற்கு தேவையென்றால் எத்தகைய எதிர்பார்ப்புகளுமின்றி நண்பர்களுக்கு தருவதில் பேரானந்தமே.அதில் ஒரு சிக்கல் என்ன வெனில் லக்கி ஸ்பெசலை உங்களுக்கு தருவதென்றால் அதனோடு புரட்சி தீ யும் பைண்ட் செய்யப்பட்டு புத்தகம் மதிப்பு கூட்டப்பட்டிருக்கும்.
  புத்தகங்களை எந்த வித சேதமும் இன்றி உரியவரிடம் திருப்பித் தருவது சற்று சவாலான காரியம்.
  ₹500 மதிப்பிலான ஒரு புத்தகத்தை நண்பனுக்கு அன்பளிப்பாக தருவதும்,₹10 மதிப்பிலான காமிக்ஸ் புத்தகத்தை நண்பனுக்கு வாசிக்க தந்து தவறவிடும் ஏமாற்றமும் மிகப்பெரியதாக இருக்கும். இத்தகைய சங்கடங்களை ஒரு முறை ஏற்படுத்தியவனாக அறிந்துள்ளேன்.

  ReplyDelete
 37. திரு.மிதுன்
  2014 க்குப்பிறகுதான் தொடர்ச்சியாக காமிக்ஸ் வாங்குகிறேன்.தேடியலைந்து சேகரித்ததில் ஓரளவு நிறைவான சேகரிப்புகள் கை வசம் உள்ளது.2007 ல் பல்வேறு சூழ்நிலைகளால் எதிர்பாராத விதமாக ஒட்டு மொத்த புத்தக களஞ்சியத்தையும் இழக்க நேர்ந்தது. முத்து, லயன்,இந்திரஜால்,மேகலா என பல நிறுவனங்களின் வெளியீடுகளை உள்ளடக்கிய மொத்த காமிக்ஸ்களின் இன்றைய சந்தை மதிப்பை கணக்கிட இயலாது.கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிரமம் பாராமல் முயன்றால் பழைய காமிக்ஸ் இதழ்கள் கிடைத்து வந்தது. இப்போது அது சாத்தியமில்லை.
  கனவில் கூட கற்பனை செய்ய முடியாத நிழல் உலக காமிக்ஸ் சந்தை தமிழகத்தில் உள்ளது.ஸ்டாக் மார்க்கெட் ,க்ரே மார்க்கெட் என மிகப்பெரிய குழுவாக இயங்கும் சில கூட்டணியினரின் இலக்கு காமிக்ஸ் ஆர்வத்தை பணமாக மாற்றுவதே.
  50 பைசா மதிப்புள்ள ஐந்து ராணி (பழைய)காமிக்ஸ்களை செட்டாக ப்ரிண்ட் செய்து மிகக் குறைந்த விலைக்கு( 2000 )தரக்கூடிய சேவை உள்ளங்களும் உள்ளது.முத்து மற்றும் லயன் காமிக்ஸ்ன் தேவையை அனைவரும் அறிந்ததே.
  இது யாருடைய தலைமையுல் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றியதல்ல இந்த பதிவு.
  நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களின் விலை தலா ₹100 ஆக இருந்தால், இதன் மதிப்பில் குறைந்தது நீங்கள் 10 மடங்கு விலை கொடுக்க வேண்டும்(தலா ஒன்றுக்கு ₹1000 லிருந்து₹1500 வரை).
  இந்த முயற்சியை கூடுமான வரை அனைவரும் தவிர்ப்பதே நலம்.
  படிப்பதற்கு தேவையென்றால் எத்தகைய எதிர்பார்ப்புகளுமின்றி நண்பர்களுக்கு தருவதில் பேரானந்தமே.அதில் ஒரு சிக்கல் என்ன வெனில் லக்கி ஸ்பெசலை உங்களுக்கு தருவதென்றால் அதனோடு புரட்சி தீ யும் பைண்ட் செய்யப்பட்டு புத்தகம் மதிப்பு கூட்டப்பட்டிருக்கும்.
  புத்தகங்களை எந்த வித சேதமும் இன்றி உரியவரிடம் திருப்பித் தருவது சற்று சவாலான காரியம்.
  ₹500 மதிப்பிலான ஒரு புத்தகத்தை நண்பனுக்கு அன்பளிப்பாக தருவதும்,₹10 மதிப்பிலான காமிக்ஸ் புத்தகத்தை நண்பனுக்கு வாசிக்க தந்து தவறவிடும் ஏமாற்றமும் மிகப்பெரியதாக இருக்கும். இத்தகைய சங்கடங்களை ஒரு முறை ஏற்படுத்தியவனாக அறிந்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ////இந்த முயற்சியை கூடுமான வரை அனைவரும் தவிர்ப்பதே நலம்.////

   நன்றி நண்பரே!!

   Delete
  2. பேசாம CINE BOOK ஆங்கிலப் புத்தகங்களுக்கு தாவி விடுவதே நலம் என நினைக்கிறேன்!!

   தகவல்களுக்கு நன்றி நண்பா் SRIRAM

   Delete
  3. திரு மிதுன்;
   காமிக்ஸை பொறுத்த மட்டிலும் புதிய பரிமாணங்களை நோக்கி மெதுவாகவாவது நகர்வதே சிறந்தது.நவீன அறிவியல் பெருக்கங்களின் துணையோடு புதிய படைபாளிகளின் அசாதாரனமான ஆற்றல் வாய்ந்த படைப்புகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.புதிய பரிமாணத்தில் கதைகளை புனைவது,கதையை நகர்த்தி செல்லும் புதுமையான யுக்திகள்,படைப்புகளில் இழையோடும் திறமைகளையும் உணர்ந்து கொள்ளத்தான்வேண்டும்.ஓவியங்களில் பரிணமித்துள்ள காட்சிப் படுத்தும் திறன்,வண்ணச்சேர்கை இவற்றை உணர்ந்து ஏற்றுக் கொள்வதே சிறப்பு.
   இரும்புக் கை மாயாவி,ஜானி நீரோ,லாரன்ஸ்-டேவிட்,ஸ்பைடர்,ஆர்ச்சி,வேதாளர்,மாடஸ்தி, போன்ற பெயர்களை நினைக்கும் போதே மனம் நடுங்குகிறது.இவை அனைத்துமே சமகாலத்துக்கு ஏற்புடைய வகையில்தரமான படைப்புகள்தான்.இவற்றில் சில என்றென்றும் வாசிப்புக்கு உகந்ததாகவும் இருக்கும்.
   சில வெளியீடுகளை தவிர்க்கவும் செய்கிறேன். தவிர்க்க முடியாத சூழலில்தான் இவற்றை வாங்க வேண்டியுள்ளது. பழையனவற்றின் மீதும் தீராத தாகத்துடன் இருக்கும் காமிக்ஸ் நேசகர்களையும் கருத்தில் கொண்டே அதற்கும் கொடி பிடிக்க வேண்டும். இரசனைகள் மாறுபட்டிருப்பினும் இதற்குள் துடிக்கும் காமிக்ஸ்ன் மீதான நேசம் அனைவருக்கும் ஒன்றே.
   பழையனவற்றிற்கென தனிச் சந்தாவில் மூன்று அல்லது நான்கு கதைகளை இணைத்த இதழாக(இதுவரை பதியப்படாத கதைகளாக) வெளியிடுவது சிறந்தது. யாருக்கும் ஏமாற்றம் அற்ற வகையில் குறைந்த பதிப்பாக முன்பதிவுகளுக்கு வழங்களாம்.
   இவற்றை அணுகுவதில் எத்தகைய கருத்து கணிப்பும் தேவையில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
   சூப்பர் 6 சந்தாவில் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ்,டெக்ஸ்,ஜெரேமெயா,ஜானி இவர்களை தவிர்காமல் இருப்பது நலம்.ஒரு நல்ல சந்தா தடம் சிதைந்து போகுமாயின் சிறிதளவு வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்வது.

   Delete
  4. திரு மிதுன்;
   காமிக்ஸை பொறுத்த மட்டிலும் புதிய பரிமாணங்களை நோக்கி மெதுவாகவாவது நகர்வதே சிறந்தது.நவீன அறிவியல் பெருக்கங்களின் துணையோடு புதிய படைபாளிகளின் அசாதாரனமான ஆற்றல் வாய்ந்த படைப்புகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.புதிய பரிமாணத்தில் கதைகளை புனைவது,கதையை நகர்த்தி செல்லும் புதுமையான யுக்திகள்,படைப்புகளில் இழையோடும் திறமைகளையும் உணர்ந்து கொள்ளத்தான்வேண்டும்.ஓவியங்களில் பரிணமித்துள்ள காட்சிப் படுத்தும் திறன்,வண்ணச்சேர்கை இவற்றை உணர்ந்து ஏற்றுக் கொள்வதே சிறப்பு.
   இரும்புக் கை மாயாவி,ஜானி நீரோ,லாரன்ஸ்-டேவிட்,ஸ்பைடர்,ஆர்ச்சி,வேதாளர்,மாடஸ்தி, போன்ற பெயர்களை நினைக்கும் போதே மனம் நடுங்குகிறது.இவை அனைத்துமே சமகாலத்துக்கு ஏற்புடைய வகையில்தரமான படைப்புகள்தான்.இவற்றில் சில என்றென்றும் வாசிப்புக்கு உகந்ததாகவும் இருக்கும்.
   சில வெளியீடுகளை தவிர்க்கவும் செய்கிறேன். தவிர்க்க முடியாத சூழலில்தான் இவற்றை வாங்க வேண்டியுள்ளது. பழையனவற்றின் மீதும் தீராத தாகத்துடன் இருக்கும் காமிக்ஸ் நேசகர்களையும் கருத்தில் கொண்டே அதற்கும் கொடி பிடிக்க வேண்டும். இரசனைகள் மாறுபட்டிருப்பினும் இதற்குள் துடிக்கும் காமிக்ஸ்ன் மீதான நேசம் அனைவருக்கும் ஒன்றே.
   பழையனவற்றிற்கென தனிச் சந்தாவில் மூன்று அல்லது நான்கு கதைகளை இணைத்த இதழாக(இதுவரை பதியப்படாத கதைகளாக) வெளியிடுவது சிறந்தது. யாருக்கும் ஏமாற்றம் அற்ற வகையில் குறைந்த பதிப்பாக முன்பதிவுகளுக்கு வழங்களாம்.
   இவற்றை அணுகுவதில் எத்தகைய கருத்து கணிப்பும் தேவையில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
   சூப்பர் 6 சந்தாவில் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ்,டெக்ஸ்,ஜெரேமெயா,ஜானி இவர்களை தவிர்காமல் இருப்பது நலம்.ஒரு நல்ல சந்தா தடம் சிதைந்து போகுமாயின் சிறிதளவு வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்வது.

   Delete
  5. ///சூப்பர் 6 சந்தாவில் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ்,டெக்ஸ்,ஜெரேமெயா,ஜானி இவர்களை தவிர்காமல் இருப்பது நலம்.ஒரு நல்ல சந்தா தடம் சிதைந்து போகுமாயின் சிறிதளவு வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்வது.///

   வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்???

   மிகச்சாி நண்பரே!!

   Delete
 38. ///சூப்பர் 6 சந்தாவில் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ்,டெக்ஸ்,ஜெரேமெயா,ஜானி இவர்களை தவிர்காமல் இருப்பது நலம்.ஒரு நல்ல சந்தா தடம் சிதைந்து போகுமாயின் சிறிதளவு வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்வது.///

  +999 999 999

  ReplyDelete
 39. ///சூப்பர் 6 சந்தாவில் லக்கி,சிக்பில்,ப்ரின்ஸ்,டெக்ஸ்,ஜெரேமெயா,ஜானி இவர்களை தவிர்காமல் இருப்பது நலம்.ஒரு நல்ல சந்தா தடம் சிதைந்து போகுமாயின் சிறிதளவு வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்வது.///

  +999 999 999

  ReplyDelete
 40. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரூர்சரவணர் ஜி..!
  லெக்பீஸும் சிக்கன் லாலிபாப்பும் என்றென்றும் குறையாமல் கிடைக்க வாழ்த்துகள் 💐💐💐

  ReplyDelete
 41. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரூர்சரவணர் ஜி..!
  லெக்பீஸும் சிக்கன் லாலிபாப்பும் என்றென்றும் குறையாமல் கிடைக்க வாழ்த்துகள் 💐💐💐

  ReplyDelete
 42. இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் கரூர் சரவணன் அவர்களுக்கு ஈனாவினாவின் இனிய வாழ்த்துகள்!

  ReplyDelete
 43. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரூர்சரவணர் சார்..!
  லெக்பீஸும் சிக்கன் லாலிபாப்பும் என்றென்றும் குறையாமல் கிடைக்க வாழ்த்துகள்🍗🍗🍗🍗🎂🎂🎂🎂

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல திரு சேலம் டெக்ஸ்...

   Delete
 44. ஆசிரியர் அவர்களுக்கு,
  எனக்கு லயன் நியு லுக் ஸ்பெசலில் வெளி வந்த லக்கி லூக் கதைகள் தேவை படுகிறது. நண்பர் மிதுனுக்கு லக்கி ஸ்பெசலில் வெளிவந்த கதைகள் தேவைப்படுகிறது. இன்னும் பலதரப்பட்ட நண்பர்களுக்கும் பல்வேறு விதமான தேடல்கள் நிறைந்திருக்கும்.
  நமக்கான காமிக்ஸ் தளத்தை உருவாக்கியது போல்,நமக்கான காமிக்ஸ் சந்தையையும் நாமே அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
  வாசகர் வட்டத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, கதைகளுக்கான மறுபதிப்புகளுக்கு வாசகர்களிடம் வரவேற்பு கோரலாம்.நிர்ணயித்த அளவீடுகளை எட்டும் போது ,முன்பதிவுகளுக்கு சந்தா முறையில் வெளியிடலாம்.
  உதாரணத்திற்கு நியு லுக் ஸ்பெஷலில் வந்த கதைகளுக்கான மறுபதிப்புக்கு வாசகர்களிடம் வரவேற்பு கோரி,நிர்ணயித்த பதிப்பு எண்ணிக்கை 100 புத்தகங்களாக நிர்ணயித்த அளவீடுகளை எட்டும் போது முன்பதிவுகளுக்கென வெளியிடலாம்.விலை சற்றே கூடுதலாக அமையும் என்பது அனைவரும் உணர்ந்த ஒன்றே.
  இது இதழியல் துறையில் சாத்தியப்படுமா என்பது புரியவில்லை.

  ReplyDelete
 45. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  கருர் சரவணன்.

  ReplyDelete
 46. கரூர் சரவணன் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்ககள்.

  ஈரோடு வர்றப்ப பர்ஸ மறக்காம எடுத்திட்டு வந்திடுங்க.

  ReplyDelete
 47. ஆசிரியர் அவர்களுக்கு,
  எனக்கு லயன் நியு லுக் ஸ்பெசலில் வெளி வந்த லக்கி லூக் கதைகள் தேவை படுகிறது. நண்பர் மிதுனுக்கு லக்கி ஸ்பெசலில் வெளிவந்த கதைகள் தேவைப்படுகிறது. இன்னும் பலதரப்பட்ட நண்பர்களுக்கும் பல்வேறு விதமான தேடல்கள் நிறைந்திருக்கும்.
  நமக்கான காமிக்ஸ் தளத்தை உருவாக்கியது போல்,நமக்கான காமிக்ஸ் சந்தையையும் நாமே அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
  வாசகர் வட்டத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, கதைகளுக்கான மறுபதிப்புகளுக்கு வாசகர்களிடம் வரவேற்பு கோரலாம்.நிர்ணயித்த அளவீடுகளை எட்டும் போது ,முன்பதிவுகளுக்கு சந்தா முறையில் வெளியிடலாம்.
  உதாரணத்திற்கு நியு லுக் ஸ்பெஷலில் வந்த கதைகளுக்கான மறுபதிப்புக்கு வாசகர்களிடம் வரவேற்பு கோரி,நிர்ணயித்த பதிப்பு எண்ணிக்கை 100 புத்தகங்களாக நிர்ணயித்த அளவீடுகளை எட்டும் போது முன்பதிவுகளுக்கென வெளியிடலாம்.விலை சற்றே கூடுதலாக அமையும் என்பது அனைவரும் உணர்ந்த ஒன்றே.
  இது இதழியல் துறையில் சாத்தியப்படுமா என்பது புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. Sri Ram : நண்பரே.....சேகரிப்பென்பதுமே ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு ! மும்பையின் ஒடுங்கிய வீதிகளிலுள்ள லெண்டிங் லைப்ரரிக்கள் ; கல்கத்தாவின் சந்துக்களின் பழைய புத்தகக் கடைகள் ; சென்னையின் ரோட்டோரக் கடைகள் ; ஏன் -
   பாரிசில் கூட பழைய காமிக்ஸ் விற்பனை செய்திடும் அங்காடி -
   என்று போகும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு வேட்டைக் களம் அமைத்திட நடையாய் நடப்பதும் காமிக்ஸ் சார்ந்த நினைவுகளின் ஒரு அங்கம் எனக்கு ! ஜெயமோ-இல்லையோ ; முயற்சித்துப் பாருங்களேன் ஆர்வமாய் ?

   ஐம்பது, நூறு பிரதிகளுக்கெல்லாம் மறுபதிப்பென்பது துளியும் சாத்தியமற்றதொரு விஷயம் சார் !

   Delete
  2. ////ஜெயமோ-இல்லையோ ; முயற்சித்துப் பாருங்களேன் ஆர்வமாய் ? ////

   கண்டிப்பாக சாா்!!

   Delete
 48. கரூர் சரவணாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  என்றும் போல் இன்றும் மகிழ்வுடன் வாழ எனது வேண்டுதல்கள் சார்...:-)

  ReplyDelete
  Replies
  1. தோழர் திரு.கரூர் சரவணன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
   தாங்கள் என்றென்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

   Delete
  2. கரூர் சரவணன் ஜி,
   மன நிறைவான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
   ஏ.... யாருப்பா அங்க...அந்த பிறந்த நாள் வாழ்த்து பாட்ட ஒளிபரப்புங்க.வாழ்த்துப் பாட்டு.
   இப்பிடித்தா என்னோட பிறந்த நாளுக்கு வாழ்த்தி பாட்டு ஒளிபரப்புறேனுட்ட்ட்டு """ஏன் பிறந்தாய் மகனே!;ஏன் பிறந்தாயோ!""னு நண்பர்கள் எல்லாம் ஒரு பாட்டப்போட்டு உற்சாகப்படுத்தினார்கள்.
   Delete
  3. கரூர் சரவணன் ஜி,
   மன நிறைவான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
   ஏ.... யாருப்பா அங்க...அந்த பிறந்த நாள் வாழ்த்து பாட்ட ஒளிபரப்புங்க.வாழ்த்துப் பாட்டு.
   இப்பிடித்தா என்னோட பிறந்த நாளுக்கு வாழ்த்தி பாட்டு ஒளிபரப்புறேனுட்ட்ட்டு """ஏன் பிறந்தாய் மகனே!;ஏன் பிறந்தாயோ!""னு நண்பர்கள் எல்லாம் ஒரு பாட்டப்போட்டு உற்சாகப்படுத்தினார்கள்.
   Delete
  4. ///பாட்டு ஒளிபரப்புறேனுட்ட்ட்டு """ஏன் பிறந்தாய் மகனே!;ஏன் பிறந்தாயோ!""னு நண்பர்கள் எல்லாம் ஒரு பாட்டப்போட்டு உற்சாகப்படுத்தினார்கள்///


   உங்க நண்பர்கள் நல்லா வெவரமாத்தான் கேட்டிருக்காங்கன்னு தோனுது! :D

   Delete
 49. எங்களின் நிரந்திர எம்.எல்.ஏ. கரூராருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 50. ///அதற்கு நான் விமர்சனம் எழுதி, அது அடுத்த இதழில் இடம்பெற்றது. அந்த மாக் தான் ஹீரோ... ஆனால் நிஜ ஹூரோ அந்த பஞ்சப்பராரியான பாவப்பட்ட செவ்விந்திய இளைஞனே...
  மனதை சோகமாக கவ்வும் உருக்கமான கி.நா. ///

  சான்ஸே இல்ல சார்.
  கண்ணன் சார் இரத்தபூமியை சுட்டியபோது மணி 6.49.நீங்க கமெண்ட் போடுறப்ப மணி 7.07.

  இடைப்பட்ட 15நிமிஷத்துல அந்த கதைய படிச்சிருக்க முடியாது.
  என்றோ ஒரு மாமாங்கத்தில் வெளியானது. அதை தேடி எடுக்கவே எப்படியும் அரைமணி நேரம் ஆகும்.புக்க எடுத்து படிச்சிருக்க மாட்டீங்க.

  அப்படின்னா அந்தக்கதை அட்சரசுத்தமாக
  எண்ணத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
  இதிலிருந்து நீங்கள்
  கூர்மையான வாசிப்பு உடையவர் என்பது புலனாகிறது.

  அந்த கால கட்டத்தில கிராபிக் நாவல் கிராப்பில்லா நாவல் என்ற வேறுபாடே கிடையாது.
  இதன் மறுபதிப்பு வருமென்றால் என் ஓட்டு B/W க்கே.

  ReplyDelete
  Replies
  1. சேச்சே அப்டியெல்லாம் இல்லை நண்பரே கோவிந்த். வழக்கமாக டெக்ஸ் கதைகள் தான் அப்படி மனிதில் ஊன்றிப்போகும். இந்த கதையும் அப்படி அமைந்தது அதன் வலிமைக்கு சான்று.

   இரத்த பூமி வெளிவந்தது ஆகஸ்டு2000ல் லயனின் 16வது ஆண்டுமலரும் கூட. அப்போது எனக்கு வயது24.அந்த இளம் வயதில் கதையை முழுமையாக உள்வாங்கி இருக்க முடியாது என்பதே உண்மை.பிற்பாடு அமெரிக்க வரலாறு படித்த போது அந்த கதையின் முழு பரிணாமும் ஓரளவு விளங்கியது.

   அந்த செவ்விந்திய மக்களை "கிழங்கு தோண்டிகள்"-என வெள்ளயர்கள் கேவலப்படுத்துவர்.
   மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகள் வீரமாக வேட்டையாடி வாழ்ந்து வந்ததையும், வெள்ளையர்களின் அமெரிக்கா முழுதும் அவர்களுக்கே வேணும் என்ற பேராசையும் அது ஏற்படுத்திய விளைவுகளையும் அறிந்த பின் உண்மையிலேயே அது கொஞ்சம் மனசை பிசையும் கட்டம்தான்...

   Delete
  2. ////பிற்பாடு அமெரிக்க வரலாறு படித்த போது அந்த கதையின் முழு பரிணாமும் ஓரளவு விளங்கியது.////

   👏👏👏

   காமிக்ஸ்கள் வெறும் பொழுதுபோக்கிகளாக மட்டும் இல்லாமல் நம் அறிவை வளா்த்துக் கொள்ள உதவும் ஊக்கு சக்திகளாகவும் உள்ளன.

   இல்லையா நண்பரே!!

   Delete
 51. நாளை குண்டு குண்டா புத்தகம் வர போறதை நினைச்சாலே மனதில் ஒரு இனம் புரியா ஆனந்தம்.....


  ReplyDelete
  Replies
  1. அதுல கிட் ஆர்டின் 3 கதையோட ஹார்டு கவா்லங்கிரப்போ சந்தோசம் ரட்டிப்பாவதை வாா்த்தைகளால் சொல்ல முடியாது!!

   Delete
  2. அதற்கு பெயர்தான் குண்டலினி கிளம்புதல் தலீவரே...

   Delete
  3. //குண்டலினி கிளம்புதல் தலீவரே...//

   😂😂😂🤔🤔🤔😂😂😂

   Delete
  4. டெக்ஸ்....:-))))


   ஆனா குண்டலினி கிளம்பிறாச்சா ன்னு உறுதியாக தெரியமாட்டேங்கதே ..:-(

   Delete
  5. நாளை புத்தகங்கள் கிடைக்காது

   Delete
  6. Jegang Atq : நாங்கள் அனுப்பி விட்டோம் சார் ; மற்றபடிக்கு
   உங்கள் பாணியில் ஆரூடமெல்லாம் சொல்லத் தெரியவில்லையே !

   Delete

  7. //நாங்கள் அனுப்பி விட்டோம் சார் ; //

   ஆஹா..அப்டி போடுங்க..

   Delete
  8. ///நாங்கள் அனுப்பி விட்டோம் சார்.///

   அப்பாடா..! இப்போதான் ரீலீஃபா இருக்கு. .!! நம்ம தல ஆர்டினோட மூணு அதிரடிகள் ஒன்றாய் வரும்போதா தாமதமாகணும்னு சொல்லி ஸ்டேட்லருந்து சென்டர் வரைக்கும் கருவிகிட்டே இருந்தேன்..! இப்போ நிம்தியாயிருக்கு..:):):):)

   Delete
  9. புத்தகம் அனுப்பப்பட்டிருப்பின் மிகவும் சந்தோசமே!.
   நான் ஒன்றும் ஆரூடம் கூறவில்லை. தாங்கள் புத்தகம் அனுப்பியவுடன் ஒரு பதிவு போடுவீர்கள். அது இல்லாததினால். அவ்வாறு தெரிவித்தேன். அதில் ஒன்றும் தவறில்லையே!

   Delete
  10. புத்தகங்கள் நாளை கிடைக்க போகிறது
   ஹைய்யா ஜாலி எகிறி குதிக்கும் படங்கள் நூறு

   Delete
  11. 3கதைகளா எப்படியும் ஒரு 10குத்தாவது எங்காளு ஷெரீப் டாக்புல் தருவாரு கிட் ஆர்டினுக்கு....அப்படியே அந்த அந்தரத்தில் சுழன்று வுழச் சொல்லோ ஆனந்தமா இருக்கும்...

   அட டா கியூபாவை படிப்பதா, இந்த பஞ்சர் படலத்தை ரசிப்பதா...!!! கியூபாவுல கிடைச்சவனுக்கெலாம் பஞ்சர் ஆவும், இங்கே ஒரே மூக்குத்தான்... கியூபாவுக்கே போவோம்...😋

   Delete
  12. @ Jegang Atq

   அச்சச்சோ!!" 'செவ்வாய் மாலையன்று புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்'னு ஞாயிறு பதிவிலேயே எடிட்டர் எழுதியிருந்தாரே.. கவனிக்கலையா நீங்க?!!

   சரி விடுங்க!

   அப்புறம்... ஒரு டவுட்டுங்க! 'சரியான ஆதாரங்களில்லாம ஒரு விசயத்தைப் பற்றி தவறான தகவல் சொல்றது தவறு'ன்ற மாதிரி ஏதாவது ஒரு குறள்ல வள்ளுவர் எதனாச்சும் சொல்லியிருக்காருங்களா சார்? அதிகாரம் கூட 'புறங்கூறாமை'னு நினைக்கிறேன்.. சரிதானே?

   Delete
 52. இம்மாத இதழ்கள் தாமதமாக வருகின்றன ...
  இதழ்களை காண இதயம் ஏங்குகிறது ...
  இத்தருணத்தில் –முத்தொள்ளாயிரத்தில் எதேச்சையாக படித்த பாடல் நினைவுக்கு வருகிறது ...
  கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
  தண்டப் படுவ தடமென்தோள் –கண்டாய்
  உலாஅ மறுகில் உறையூர் வளவற்
  கெலாஅ முறைகிடந்த வாறு ..
  அப்பெண் சோழ மன்னன் உலா வருவதை பார்த்தாள்; மனதை பறிகொடுத்தாள்..அவனை மறுபடியும் பார்க்க ஏங்குகிறாள்....
  அதை எப்படி சொல்கிறாள் ????
  உன்னை பார்த்தது என் கண்கள் ....
  உன் நெஞ்சோடு கலந்து மகிழ்ந்தது என் நெஞ்சம் ....
  இப்போது உன்னை காண முடியவில்லை ...ஆனால் அதற்கான தண்டனை அனுபவிப்பது என் மெல்லிய தோள்கள் ..அவை மேலும் மெலிந்து காப்பும் வளையல்களும் கழன்று போகின்றன ...
  தவறு செய்தது கண்களும் ,நெஞ்சமும் ..தண்டனை தோள்களுக்கா????
  சோழ வளவனின் நாட்டில் நீதி இப்படியாக முறை தவறுகிறது என புலம்புகிறாள் ...
  ஒரு எளிய காமிக்ஸ் வாசகனின் –நம்மை போல் –புலம்பல் எவ்வாறு இருக்க கூடும் ??

  கண்டன உண்கண் களிப்புற்றது எம்நெஞ்சம்
  தண்டப் படுவதெம் கால்கள் .கண்டீர்
  அளவிலா நூல்வழங்குஎம் விஜய!
  தளர் வுற்றதும் நீதி ..

  காமிக்ஸை பார்ப்பது எம் கண்கள் .
  படித்து களிப்புறுவது எங்கள் நெஞ்சம் ...
  வர தாமதமானாலோ கூரியர் ஆபிஸ்க்கு போன் செய்து அதில் திருப்தி அடையாமல் வாசலுக்கும் அறைக்கும் நடந்து திரிவது கால்கள் ..வாசலில் நின்று காத்து இருப்பது பல கால்கள் ...
  கூரியர் ஆபிஸ்க்கு விரைந்து செல்வதோ பற்பல கால்கள் ..
  கண்டது கண்கள் .இன்புறுவது இதயம் ..வலி மட்டும் கால்களுக்கா ????
  அளவிட இயலா தரத்தில் பல நூல்களை வழங்கும் காமிக்ஸ் அரசே !!
  (இம்மாதம்) உங்கள் நீதி தவறி விட்டது ...
  ;-)


  ReplyDelete
  Replies
  1. ////கண்டன உண்கண் களிப்புற்றது எம்நெஞ்சம்
   தண்டப் படுவதெம் கால்கள் .கண்டீர்
   அளவிலா நூல்வழங்குஎம் விஜய!
   தளர் வுற்றதும் நீதி .. ////

   👌👌👌

   உண்கண்-ஆ அல்லது உன்கண்ஆ??

   வேறு பொருள் ஏதேனும் உள்ளதா??

   Delete
  2. @மிதுன்,

   உண்கண் - விழுங்கும் கண்கள்

   @ஈவி, கண்ணன்,

   செல்வம் சார் முத்தொள்ளாயிரத்திலிருந்து கவிதையெல்லாம் எடுத்து விட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார். ஏன், நாம் கூட்டாக படித்த இருவத்தொம்பதாயிரம், நாப்பத்தெட்டாயிரத்திலிருந்தெல்லாம் எடுத்துவிட்டு அவரை அசர வைக்கக்கூடாது? :-)))))))))))

   Delete
  3. ///உண்கண் - விழுங்கும் கண்கள்///

   அருமை !!

   விழுங்குகின்ற உன் கண்கள்
   கண்டது என்னை!!

   ஆனால் களிப்புற்றதோ என் நெஞ்சம்!!

   அருமை அருமை (அடுக்குத்தொடா்)

   ஏதோ நமக்கு தெரிஞ்ச இலக்கணக் குறிப்பு

   Delete
  4. எடிட்டர் சாருக்கு ஒரு விண்ணப்பம் :-

   ஆகஸ்டு மாத சர்ப்ரைஸா தமிழ் அகராதி ஒண்ணு கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும் சார். .!! :-)

   Delete
  5. ///நாம் கூட்டாக படித்த இருவத்தொம்பதாயிரம், நாப்பத்தெட்டாயிரத்திலிருந்தெல்லாம் எடுத்துவிட்டு அவரை அசர வைக்கக்கூடாது? :-)))))))))))///

   முத்தொள்ளாயிரம் - மூணு × தொள்ளாயிரம் = இருபத்தேழாயிரம்

   (நம்ம கணக்கு மட்டும் பண்ணிடுவோம் ஆதி) :-)

   Delete
  6. அதுல பாருங்க ஆதி அவர்களே.. தமிழ் செய்யுள்ல நான் படிச்சதெல்லாம் அகநானூறும், திருக்குறல்ல கடேசி பாலும்தான்! க்ளாஸுல வேற எது நடத்தினாலும் நான் முழிச்சிக்கிட்டிருந்ததா சரித்திரமே இல்லை!

   @ செனாஅனா
   ///
   எதேச்சையாக படித்த பாடல் நினைவுக்கு வருகிறது
   ///

   நீங்க எதேச்சையா படிச்சதே இந்த அளவுக்குன்னா... எக்கச்சக்கமா படிச்சதெல்லாம்...?!!

   பெரிய மண்டையைக் கொடுத்த ஆண்டவன் எனக்கு உள்ளே தக்கணூண்டு மட்டும் வச்சு ஓரவஞ்சனை பண்ணிப்புட்டான்!

   Delete
  7. ///கடேசி பாலும்தான்//

   அட...இங்கேயேயும் "பாலா?":-)

   Delete
  8. ஈ.வி;
   ""தக்கணூண்டு""ஆவது இருக்குதேனு சந்தோசப்படுங்க.இங்குட்டு சுத்தமா ஒண்ணுமே இல்லாம படைச்சுப்புட்டானே.

   Delete
  9. @ Sri Ram

   அடேஏஏஏயப்பா!! 'வெற்றிடத்திற்கே' கி.நா'க்களை புரட்டிப்போட்டு ஆராயும் வல்லமையா?!!!

   இப்பத்தான் புரியுது - எங்கிட்டேயிருக்கும் அந்த 'தக்கணூண்டும்' மண்டைக்குள்ளே முளைத்த மரு போலிருக்கிறது!

   Delete
 53. சென்னையில் புத்தக கண்காட்சி வரும் ஜூலை 21 முதல் 31 வரை....முடிந்தால் கலந்து கொள்ளவும்...

  ReplyDelete
 54. எப்போ எங்கே எந்த இடத்தில்?????

  ReplyDelete
 55. வீணாக உங்களுடய சக்தியயும் , நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள்...அந்த மூன்று நீசர்களுக்கும் ஏற்கனவே அங்கே நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது ..அவர்களை தாமதமின்றி எப்படி அங்கே அனுப்பி வைப்பது என்று எனக்குத் தெரியும் ....பிராத்தனை எதும் அவர்கள காப்பாற்ற முடியாது..நான் டெக்ஸ் வில்லர் ஆணையிட்டுக் கூறுகிறேன் ...எனத் திமிராய் சத்தமிடும் டெக்ஸ் வழக்கம் போல சாகசத்தில் குறயில்லாமல் ...நாம ஹீரோயிசம்னா இதான் என ஏங்க வைத்தபடி பயணிக்கிறது கதை ...அருமை சார் வேண்டியது கிடைக்கிறது டெக்சில்...அநீதி கண்டு ஆண்டவனுக்கே சவால் விடும் டெக்ஸ் காட்சிகளாலும் , ஓவியங்களாலும் ,ஒரு படி மேல் டெக்ஸ் கதைகளில் .செம சார்...
  92ம் பக்க முதல் கட்டத்தில் நிலவொளியில் நண்பர்கள் ஊரை விட்டு வெளியேறும் முதல் கட்டம் அந்த கட்டத்திற்கு மட்டும் வண்ணம் பூசியிருந்தால் அற்புதமாயிருக்குமே என்ற எண்ணத்தை விதைக்க..177ல் பரந்த ஆறு....வண்ணம் நல்லாயிருக்கும் இது போன்ற கட்டங்களுக்கு மட்டும் வண்ணம் பூசினால் கருப்பு வெள்ளை நடுவே பிரம்மிப்பாய் , சந்தோசமாய் தோன்றலாமோ..நாம் சர்வ ஜாக்கிரதயா அடி எடுத்து வைப்போம் நண்பா , அதே சமயம் நாம் துரிதமாகவும் செயல் பட வேண்டியிருக்கிறது...ஸாண்டியாகோ அவர்கள் பிடியில் இருக்கிறான்.....ரபோல் , அப்பெண் சென்ற தடத்தில் விரைந்து கொண்டிருக்கிறான்..அவரவர் விதிப்படி நடக்கட்டும் என நாம் ஓய்ந்து கிடக்க முடியுமா என டெக்ஸ் கேட்க , நிச்சயம் முடியாதுதான் என கார்சன் உரைக்க...வ்வளவு கச்சிதமா , உறுதியா , தீர்க்கமா முடிவெடுக்கிறார்கள்...இதான் இவர்கள் உயிரோடிருக்கும் காரணமும் , தயங்காம வெற்றி வருவதன் ரகசியமும்..படைப்பாளரின் எண்ணத்த கச்சிதமா செதுக்கிய மொழி பெயர்ப்பு ஆங்காங்கே விரவிக் கிடப்பத ரசிக்கலாம் ரசித்து படித்தால் .சாண்டியாகோதான் காலவெரா என்பது அதிர்ச்சி..ரபேலை தன்னை விட உயர்வாய் கூறுவத என்ன சொல்ல...என திகைத்த படி தொடர்கிறேன் ....காலவெரா கோழயா...இது வரை படித்தவரை அவர் மேல் ஒரு பிரம்மிப்பும் , வழியில் கைக்கொண்ட சாகசமும் மதிப்பை கூட்டியபடியால் , கோழை என நம்பலை...தொடர்ந்தால் காலவெராதான் தந்தை என அதிர்ச்சி ...கதையை ,வசனங்கள் பேசினாலும் ..அடுத்தடுத்த கட்டங்களும் பேசுவது அருமை...விடு பட்ட கார்சன் வேங்கயாய் பாய்வது வசனங்களாலும் , காட்சிகளாலும் அதகளம்...மாண்டாலெஸ் ,எருது டயாப்லோ, என்ரிக்யூ ,மாண்டாயோ சகோதரர்கள் , கொள்ளயர் தலைவன் ப்ளாக் ஜாக் ,டோனிடோ , ஸாரிடா என சிறுக வரும்பாத்திரங்களும் ,கதை நெடுக வரும் பாத்திரங்களும் மதை விட்டு அகலாமல் அற்புதமாக படைத்தது அருமை ..சார் , கார்சனின் கடந்த காலம் போல இது எனக்கு ...தலைவன் ஒரு சகாப்தத்திற்காக காத்திருக்கிறேன் .....புத்தகங்க கிளம்பியாச்சா...?

  ReplyDelete
  Replies
  1. Super sir.உங்களை போல் நானும் மிக ரசிதேன். நன்றி. என் எண்ணங்களை பிரதிபலித்தது. நன்றி.

   Delete
  2. ஸ்டீல்!!! கலக்கிப்புட்டீங்க!!

   Delete
 56. ஆனா ஒன்று மட்டும் உறுதி கார்சனும் டெக்ஸும் பிரிந்து வேட்டயாடக் கிளம்பினால் கதை அதகளம்தான் இது வரை.....

  ReplyDelete
 57. கரூராருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்ததுகளும் ...

  ReplyDelete
 58. இனிய நண்பர் கரூர் சரவணன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 59. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரூர் சரவணன் ஜி,வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 60. நண்பர் கரூர் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 61. சரவணன் சார் : நலமோடும், வளமோடும் வாழ்க்கை தொடர்ந்திட எங்களது உளமார்ந்த வாழ்த்துக்களும் !! Have a great birthday !

  ReplyDelete
 62. எடிட்டர் சார்
  கூரியர் பெட்டிகள் புறப்பட்டாச்சா?
  உங்களது பதிலுக்கு காத்திருக்கிறோம்.Please...

  ReplyDelete
  Replies
  1. Jagath Kumar
   கொஞ்சம் மேலே போய் பாருங்கள் சார்.ஆசிரியர் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.

   Delete
 63. எடிட்டர் சார்
  "அனுப்பிவிட்டோம்" என்று மேலே உள்ள உங்கள் பதிவை பார்க்காமல் உங்களிடம் கேள்வியை கேட்டுவிட்டேன். தவறு என்னுடையதுதான். என் கேள்வியை பொருட்படுத்த வேண்டாம் சார்.

  ReplyDelete
 64. கரூராரை தளத்தின் பக்கம் கானோமே பிரியாணி விருந்தில் பிஸியாக இருக்கிறாரா

  ReplyDelete
 65. சிக்கன் பிரியரும் , அப்படியே எப்பவாவது காமிக்ஸ் பிரியருமான கரூர் சரவணனுக்கு மனமினிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.

  ReplyDelete