Powered By Blogger

Monday, July 24, 2017

கனவுகள் - நேற்றும் ..நாளையும் ...!

நண்பர்களே,

வணக்கம். பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய்ப் புது வரவுகளை பற்றித் தகவல்கள் போட்டு விட்டு, கடைசிப் பாராவில் XIII பற்றி நாலே வரி  எழுதினாலுமே - மனுஷன் முண்டியடித்துக் கொண்டு வெளிச்ச வட்டத்தை ஆக்கிரமிப்பது ஒரே நாளில் 340 + பின்னூட்டங்கள் என்ற அலையிலேயே அப்பட்டமாகிறது ! இதே வேகமும், எழுச்சியும், "இரத்தப் படலம்" முன்பதிவினில் தொடர்ந்திடும் பட்சத்தில் - ஒரு landmark தருணம் நமக்குக் காத்திருக்குமென்பது உறுதி ! But first things first ! "படலம்" பற்றிய அக்கறைக்கு முன்பாக "கோட்டை" மீதான கரிசனமே முக்கியம் என்ற சூழலில் நாமுள்ளோம் இப்போது ! இன்னமுமே "இரத்தக் கோட்டை" The Collection இதழினை முன்பதிவு செய்திருக்கா பட்சத்தில் - why not give it a try today folks ? வண்ணத்தில் அட்டகாசமாய் வந்துள்ளது இதழ் & அட்டைப்படமுமே பிரமாதமாய் வந்துள்ளது ! 

சென்றாண்டின் உங்கள் கனவை நனவாக்கி விட்டோம் ; அடுத்த கனவுக்குள் ஆழ்ந்திடும் முன்பாக இந்த நொடியில் திளைத்திடுவோமே முதலில் ?

Please note : "இரத்தக் கோட்டை" இதழினை கடைகளிலோ ; புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருந்தாலோ - இதழின் விலை ரூ.575 என்பதை மறந்து விடாதீர்கள் ! முன்பதிவுகளுக்கு மட்டுமே சலுகை விலைகள் ! And ஆன்லைன் முன்பதிவு இம்மாத இறுதி வரைக்குமே தொடர்ந்திடும் சலுகை விலைகளில் !


310 comments:

  1. இரத்தக்கோட்டை உட்பக்க படங்களும், வண்ணங்களும் இதயத்துடிப்பை எகிறச்செய்கின்றன. சூப்பர்.

    ReplyDelete
  2. முந்தீட்டீங்களே நண்பரே!!

    👏👏👏

    ReplyDelete
  3. விஜயன் சார், ரத்த கோட்டை வண்ணத்தில் வந்த கதையா, இல்லை கருப்பு வண்ண கதைக்கு நாம் வண்ணம் கொடுகிறோமா?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புகள் எல்லாமே வண்ணத்திலானவைகளே ! நாம் தான் வசதிகளுக்கேற்ப கலரிலும், கறுப்பு-வெள்ளையிலும் மாற்றி மாற்றி வெளியிட்டு வந்திருக்கிறோம் !

      Delete
  4. Royal Flush: (in poker) a straight flush including ace, king, queen, jack, and ten all in the same suit, which is the hand of the highest possible value when wild cards are not in use.

    ReplyDelete
    Replies
    1. Royal Flush: In image :-)
      https://www.google.co.in/search?q=royal+flush&tbm=isch&imgil=qZZ4WfiBz7nn9M%253A%253BIkp1q2S8Y-5RsM%253Bhttp%25253A%25252F%25252Fdonatetosaveapet.org%25252Fproduct%25252F25000%25252F&source=iu&pf=m&fir=qZZ4WfiBz7nn9M%253A%252CIkp1q2S8Y-5RsM%252C_&usg=__T2JwtQhqO1BgHYYnd4zmK2qghJ0%3D&biw=1600&bih=1070&ved=0ahUKEwjVkoXRvaHVAhXEbSYKHYAyBFoQyjcIVQ&ei=NK11WdWoCsTbmQGA5ZDQBQ#imgrc=qZZ4WfiBz7nn9M:

      Delete
    2. அடேங்கப்பா பெரிய சூதாட்ட காரவங்களா இருக்காங்கள்ல....

      Delete
  5. Wild West Forever "இரத்தக் கோட்டை" னு தானே முன்பு சொல்லிவந்தோம் எடிட் சார் அப்பிடியே maintain செய்யலாமே :)

    ReplyDelete
  6. இரத்தக்கோட்டை ப்ரீவியூ பக்கங்கள் பிரமாதமாக உள்ளன.

    ஆகஸ்ட் கேப்டன் டைகரின் மாதமாக இருக்கப் போவது உறுதி.
    இன்னும் ஆங்காங்கே எட்டி நின்று ரசிக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்து களத்தில் இறங்கினால் ஈரோடு அதகளமாகி விடும்.

    ம்...கிளப்புங்கள். ஆரவார வெடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ?

    ReplyDelete
    Replies
    1. அனேகமா ரத்தக்கோட்டையை பத்தி டெக்ஸ்விஜய், செனா அனா, இன்னும் பல நணபர்கள் வித விதமா ப்ரிவியூ எழுதுனா முன்பதிவு அதிகமாகுமோ?🤔🤔🤔

      Delete
    2. நல்ல அகுடியா மஹிஜி. ஆனால் டைகரின் தீவிர அபிமான நண்பர்கள்,

      புனித சாத்தான்ஜி,
      ரம்மி தம்பி,
      மாயாசார்,
      திருப்பூர் ப்ளூ,
      கணேஷ் தம்பி,
      மாப்பு ஜெயகுமார்,
      மற்றும் பெயர் விட்டுப்போன டைகரின் தூண்கள்(மன்னிச்சூ)
      எழுதினால் தானே சரியா வரும். டைகரோட விசிறிகள் எழுதும்போது ஒரு வித உணர்ச்சி பெருக்கோட ரசிக்கும் விதமாக இருக்கும்...

      நாம எழுதி வாங்குலாம்னு இருக்கவங்களும் பணத்தை உள்ளே வைத்து கொண்டால்...ஹி...ஹி...

      Delete
    3. கீழே போய் பாருங்க. தலைவர் கலக்கி இருக்கிறார். அவரு என்ன டைகர்ர் ரசிகரா? நீகளும் தான் நல்ல கதைக்கெல்லாம் விமர்சனம் சூப்பரா எழுதுவீங்களே? உங்க ஸ்டைல்ல ஒன்னை போட்டு பட்டையை கிளப்புங்க.

      Delete
    4. ///நல்ல கதைக்கெல்லாம் விமர்சனம் சூப்பரா எழுதுவீங்களே?///---நிச்சயமாக ஜி. ஆனால் அந்த நீங்கள் சொன்ன நல்ல கதைக்கு எங்கே போவது...!!!(சும்மா ஜோக் தான் ஜி)

      நாளை மதியத்திற்குள் டைகர் தங்கங்கள் களம் இறக்கவில்லை எனில் அப்புறம் இருக்கு கச்சேரி....நேரா போய் அரிசோனாவின் நவஜோ கோட்டையில் தண்டு இறங்குறோம். ஆர்ப்பாட்டமான ப்ரிவியூ தர்றோம். டைகருக்கு மாலை போடல, மருவாத தர்லனு கோபிக்கப்படாது சாமிகளா...!!!

      Delete
  7. டியர் எடிட்டர்

    இரத்தக் கோட்டை கலரில் பார்பதற்கு அருமையாகவும், ஆர்வமாகவும் இர்ந்தாலும், இன்னும் புக்கிங் 400 கூட தாண்டவில்லை என்று சென்ற பதிவில் உஙகளின் பதிலை படித்ததிலிருந்து நாம் எவ்வளவு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறோம் என்பதை நினைத்து கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அதே சமயம் இலாப நோக்கமின்றி காமிக்ஸ் காதலால் தாங்கள் எங்களுக்காக-இந்த சிரிய வாசகர் வட்டத்திற்காக விடாப்பிடியாக தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் வெளியிடுகிறீர்கள் என்றால் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் அடுத்த ஆண்டு புத்தகங்களின் என்னிக்கையை குறைத்து அதற்கேற்றார்போல் சந்தா தொகயையும் குறைத்து, ஆண்டின் நடு நடுவே ஸ்பெஷல் எடிஷனில் புத்தக வெளியீடுகளை வைத்துக்கொண்டால் வாசகர்க்ளின் என்னிக்கையும், விற்பனையும் கூடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது ! தவறிருந்தால் நன்பர்கள் மன்னிக்கவும் இது என்னோட கருத்து மட்டுமே ஆசிரியரும் மற்றவர்களும் எனது கருத்துடன் உடன்படவேண்டும் என்பதில்லை, நன்றி !

    ReplyDelete
  8. ஆஹா சொல்ல மறந்துவிட்டேன், என்னோட இரத்தக் கோட்டை இதழை ஈரோட்டில் பெற்றுக்கொள்கிறேன் சார் ! வழக்கம்போல நன்பர்கள் சூழ வருகிறேன் !

    ReplyDelete
  9. Replies
    1. சிவா ஈரோடு வரவு உண்டா

      Delete
  10. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  11. // வண்ணத்தில் அட்டகாசமாய் வந்துள்ளது இதழ் & அட்டைப்படமுமே பிரமாதமாய் வந்துள்ளது !//
    உண்மை,கலரிங் அசத்தலாக உள்ளது, புத்தக திருவிழா விற்பனையிலும் அசத்தும் என்று நம்பலாம்.

    ReplyDelete
  12. மதிய வணக்கங்கள் :)

    ReplyDelete
  13. // சென்றாண்டின் உங்கள் கனவை நனவாக்கி விட்டோம் ; அடுத்த கனவுக்குள் ஆழ்ந்திடும் முன்பாக இந்த நொடியில் திளைத்திடுவோமே முதலில் ? //

    அப்பட்டமான உண்மை சார் _/|\_
    .


    ReplyDelete
  14. ரம்யா கேப்ஷன் முயற்சி அருமை
    நல்ல தொடக்கம்
    நீங்களும் ஸ்டீலும் பிரமாதப்படுத்தி விட்டீர்கள் ஈரோட்டில் நானும் நண்பர்களும் முயற்ச்சிக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. அப்போ பரிசு கிடைக்கிற அளவுக்கு இல்லை
      நன்றி தோழரே
      ம்ம்ம்ம்ம் ....பரிசை வெல்ல இன்னும் முயற்சி செய்கிறேன்

      Delete
    2. விடா முயற்சி
      நிச்சய வெற்றி
      தோழியே

      Delete
  15. Replies
    1. Test ஓவர். உங்களை பற்றி சொல்லலாமே.

      Delete
  16. சும்மா தங்கம் மாதிரி ஜொலிக்குது

    ReplyDelete
  17. இரத்தக்கோட்டை உட்பக்க படங்களும், வண்ணங்களும் இதயத்துடிப்பை எகிறச்செய்கின்றன. சூப்பர்.

    ReplyDelete
  18. ரத்த கோட்டை ....அசத்தல் கோட்டை ....;

    ReplyDelete
  19. விஜயன் சார் இரத்தக்கோட்டை நான் முன்
    பதிவு செய்திருந்தாலும் இரண்டாவதாக
    ஈரோட்டில் பணம் செலுத்தி உங்கள்
    கையால் வாங்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  20. அலுவலகத்தில் கொஞ்சம் பிஸியான வேலை, அதனால் இங்கே புத்தக விழா பற்றி பதிவிட முடியவில்லை

    உண்மையில் ஸ்டீல் தான் ஞாயிறு அன்று கலக்கி விட்டார்
    காமிக்ஸ் கதைகளை பற்றி பேசி பேசி மக்களை கவர்ந்து ராக்குகளில் இருந்த புத்தங்களை காலியாகும்படி செய்து விட்டார்

    ReplyDelete
    Replies
    1. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்
      உண்மை தான் சொல்லி இருக்கிறேன் சகோதரரே

      Delete
    2. நல்ல பொய்யோ உண்மையோ சந்தோசம்.

      Delete
  21. கோவை புத்தகவிழாவில் நம் காமிக்ஸ்களின் வரவேற்பு பற்றி சற்று விரிவாக கூறினால் தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ள என் போன்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @AT Rajan
      கொஞ்சம் அவகாசம் தாருங்கள் சகோதரரே
      நாளை பெரிதாக விரிவாக கமெண்ட்ஸ் இடுகிறேன்

      Delete
    2. நன்றி திரு.ஸ்டீல், சகோ.கடல்.இருவருக்கும். தங்களுடைய வேலைகள் பாதிக்காமல் ஓய்வாக இருக்கையில் பதிவிடுங்கள்.
      அப்புறம் கடல் நீங்கள் " வடை மாதிரி" ஒன்றை தந்ததாகவும் அது நன்றாக இருந்ததாகவும் ஸ்டீல் பதிவிட்டிருந்தார்.அதைப்பற்றியும் மறக்காமல் பதிவிடுங்கள்.

      Delete
  22. போட்டிக்காண்டி
    கேப்டன் டைகர்: நாமதான் கலருக்கு மாறி ரொம்ப நாளைச்சுல
    அப்புறம் ஏன் இங்கே கருப்பு வெள்ளையில காட்சி தரோம்

    ஜிம்மி : உடைந்த வாய்னு இவனுக்கு பெயரை வைச்சு இருக்குனும் நாம ஷானியக்கோட டூயட் பாடிட்டு இருக்கும் போது தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருக்கான்

    ரெட் உல்லி: கருப்போ வெள்ளையோ, மச்சக்கன்னி ஷானியாவோட நம்ம கனவு கலரலுதான்

    ReplyDelete
    Replies
    1. அடேடே!
      போற போக்க பார்த்தா மாடஸ்டி மகளிர் அணி தலைவி சானியா மகளிர் அணி தலைவி ஆயிடுவாங்க போல ;-)

      Delete
    2. ரம்யா வட மாதிரி எதோ ஸ்டீலுக்கு கொடுத்திங்களாமே எனக்கும் ஈரோடு வரும் போது தருவிங்களா

      Delete
  23. வண்ண கோட்டை....


    கேப்டன் டைகர் ...அவரின் ஆரம்ப கால வெற்றிகள் அசாத்தியமானவை..அந்த தொடர் வெற்றிகள் அப்போதைய கெளபாய் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் அவர்களையே அசைத்து விடுமோ என்று டெக்ஸ் ரசிகர்களே அசந்த நேரம் அது...தங்க கல்லறை என இருபாக கதையாகட்டும் ...நீநீண்ண்ட தொடரான மின்னும் மரணம் ஆகட்டும் ..நான்கு ,ஐந்து பாகமான இரத்த கோட்டை ஆகட்டும் ..,அல்லது ஒரே சிறு சாகஸமான தோட்டா தலைநகரம் ஆகட்டும் டைகர் ரசிகர்களை மட்டுமல்ல டெக்ஸ் ரசிகர்கள் ,ஏன் கெளபாய் ரசிகர்களையே கட்டி போட்டு கொள்ளை கொண்ட இதழ்கள்..

    கேப்டன் டைகரின் அதற்கு பின் களம் கண்ட சாகஸங்கள் மிக நீண்ட தொடரின் காரணமாகவோ ,கால இடைவெளியின் தாக்கமோ அல்லது வரலாற்று பிண்ணணியை மட்டுமே அதிகமாக கொண்ட காரணத்தினாலோ அவரின் வேகம் மட்டுப்பட்டு விட்டது அனைவரும் உணர்ந்த ஒன்றே ..ஆனால் அதன் காரணமாக டைகரின் ஆரம்ப கால வெற்றி படைப்புகள் கண்டிப்பாக மறக்க படாது.டைகர் என்ற நாயகருக்காக மட்டும் பார்க்காமல் போனால் கூட அவரின் முக்கனி படைப்புகள் என்பது கூட அல்ல ..கெளபாய் களத்தின் முக்கனிகள் ,மூன்று முத்துகள் என்று பின் வருபவை பற்றி சொல்லாம் எனில் கண்டிப்பாக அது தங்க கல்லறை ,மின்னும் மரணம் என்ற வரிசையில் இரத்த கோட்டை இதழும் கண்டிப்பாக இடம் பெறும் .

    முக்கனிகளில் இரண்டை வண்ணத்தில் ரசித்தாயிற்று ஒரே இதழாக ...மீதம் ஒரு கனியை மட்டும் விட்டுவிடுவானேன் .அதனையும் வண்ணத்தில் ரசித்து விடுவோமே என்ற பல நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க அடுத்த மாதம் வெளிவர போகும் " இரத்த கோட்டை " வண்ண இதழ் வண்ண கோட்டையாக தரத்திலும் ..விலையிலும் அசத்தலாக கண்ணை கவருவது மேற்கண்ட ஒரு பக்கத்திலியே தெரிந்து விட்டது .

    " ஓரு குண்டு பானைக்கு ஒரு பக்கம் பதம் " என்பது போல இதுவரை இரத்த கோட்டை இதழை படிக்காதவர்களுக்கு அட்டகாச கடா விருந்து ...ஏற்கனவே படித்தவர்களுக்கோ திருப்தியான திருமண விருந்து ...


    விருந்தை தவற விடாதீர்கள் நண்பர்களே ...

    ReplyDelete
    Replies
    1. தலைவரே...👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

      Delete
    2. தலைவரே சொல்லிட்டாரு. இனி பட்டய கெளப்ப வேண்டியதுதான்.

      Delete
    3. தளபதியோட பெருமையையும் தல ரசிகர்களே வந்து முன்மொழிவது சிறப்புதான்,
      அதுக்காக தளபதி ரசிகர்கள் அமைதி காக்காமல் அவர்களும் களத்தில் இறங்க வேண்டும்,அப்போதுதான் ஆட்டம் களை கட்டும்.

      Delete
  24. இன்று பச்சை மற்றும் சிவப்பு முன் பதிவு செய்து வி டு கி ரே ன் சார்.

    ReplyDelete
  25. கும்புட்டுக்கறேனுங்கோவ்

    ReplyDelete
  26. டெக்ஸ் ரசிக சொந்தங்களே ஆளாலுக்கு ஸ்பெசல் அள்றாங்களேனு கவலை வேணாம்...நாமும் தக்க தருணத்தில் வேண்டியதை தேட்டை போடலாம்...

    இதோ என்ன வேணும்னு அப்டியே ஓசனை
    உடுங்க...

    இரத்தகோட்டை-2017ஆகஸ்டில்,
    இரத்தபடலம்---2018ஆகஸ்டில்....

    அடுத்து என்ன? அட டெக்ஸ் கதைகளில் இந்த "இரத்த " எனும் ஆரம்பிக்கும் கதைகளான,

    "இரத்த முத்திரை-120பேஜ்...
    இரத்த வெறியர்கள்-112பேஜ்...
    இரத்த நகரம்-155பேஜ்..."

    -----இந்த மூன்று மாஸ் ஹிட் கதைகள் கொண்ட 400பக்க மினி குண்டு வித் ஹார்ட் பைண்டிங்ல ரெட்ஹாட் ஸ்பெசல் என போடலாமே...ஹி...ஹி..சும்மா தெறிக்குமே😎😎😎💪💪💪


    முதல்ல "இரத்த" காம்பினேசன்,
    இப்ப "வேட்டை "காம்பினேசன்...

    "கழுகு வேட்டை-181பேஜ்...
    சாத்தான் வேட்டை-231பேஜ்..
    ஓநாய் வேட்டை-220பேஜ்.."
    ....இந்த வேட்டைகள் 3ம் இணைந்த மினி குண்டு புக்630 பக்கங்களில் சும்மா மற்றொரு லயன்300மாதிரி ஜொலிக்குமே...
    😄😄😄😄😄

    அடுத்து பில்லி சூன்ய "மசாலா ஸ்பெசல்",

    "சைத்தான் சாம்ராஜ்யம்-128பேஜ்..
    மந்திர மண்டலம்-186பேஜ்..
    இருளின் மைந்தர்கள்-216பேஜ்..

    ---இந்த 3மந்திர தந்திர சாகசங்கள் இணைந்த மாயாஜால ஸ்பெசல் 550பக்கங்களில் மந்திர வித்தை காட்டுமே...😋😋😋

    அடுத்து சிலீரென இதயத்தை சில்லிட வைக்கும் த்ரில்லர் ஸ்பெசல்,

    "தலை வாங்கு குரங்கு-97பேஜ்..
    மரணமுள்-120பேஜ்..
    நள்ளிரவு வேட்டை-137பேஜ்..
    பாலைவனப் பரலோகம்-126பேஜ்.."

    ----இந்த 4 திடுக்கிடும் த்ரில்லர்கள் 480பக்கங்களில் கதை வேகத்திலும் சஸ்பென்ஸ்ஸிலும் லப் டப்பை எகிறச்செய்யுமே...😨😨😨😨

    இவற்றில் எவற்றை டெக்ஸின் 70ம் ஆண்டு கொண்டாட்டத்தில் களம் இறக்கினாலும் ஓகே தானே...💃💃💃💃

    ReplyDelete
    Replies
    1. பாஸு! சும்மா காமெடியா சொன்னா......
      புதுசு இல்லாதவங்க..... நம்மள வச்சு யாருமே புது கதை எழுத மாட்டங்களானு ஏங்கறவங்க பழசை தூசு தட்றாங்க !
      நம்ம தான்.....அள்ள அள்ள குறையாத அமிர்தமடா அது ன்ற மாதிரி ஏகப்பட்டது ஸ்டாக் வச்சிருக்கோமே....
      ஒரு மூணு நாலு புது கதை குண்டு புக் கலர்ல போட்டு தாக்குனா எப்படி இருக்கும்!

      Delete
    2. வாவ் கேட்கும் போதே அள்ளு தெறிக்குதே டெக்ஸ்.இதில் எந்த ஸ்பெஷல் போட்டாலும் ஓகே தான்.வருடம் ஒன்றாக களம் இறக்கினாலும் நான்கு வருடங்கள் ஆகி விடுமே.

      Delete
    3. சரவணாரே நானும் நண்பர்களும் உங்களுடைய சிரித்த முகத்தை ரொம்பவும் மிஸ் பன்னுறோம்
      2018 EBF ல் சந்திப்போம்

      Delete
    4. அதோடு பவள சிலை மர்மம் சேர்த்துக் கொள்ளு ஙல் டெக்ஸ்.

      Delete
    5. ///ஒரு மூணு நாலு புது கதை குண்டு புக் கலர்ல போட்டு தாக்குனா எப்படி இருக்கும்!///---பாஸூ@ டாப்பாத்தான் இருக்கும்... நாமலும் கேட்டு வைப்போமே.. நீங்கள் சொன்ன மாதிரி புதிய செட் ஒன்று கலரில் போட, ஏற்கெனவே டெக்ஸ் 70ம் ஆண்டுக்கு ஆசிரியர் சார் மைண்ட்ல வைத்து இருப்பார். மறுபதிப்புல மினி கருப்பு வெள்ளை குண்டு ஏதும் போடலாம்னு ஓரு எண்ணம் இருந்ததெனல் அவருக்கு ஐடியா தரவே இந்த காம்பினேசன்ஸ்.

      Delete
    6. @சேலம் Tex விஜயராகவன்
      சூப்பர் பாஸ்!
      ஒன்னு ரெண்டை ஈரோட்டில் confirm பண்ணிவிடுங்க பாஸ்!

      @செந்தில் சத்யா
      மீண்டும் மீண்டும் நன்றிகள் பாஸ்!

      Delete
    7. ரூம் போட்டு யோசிப்பிங்களோ.எப்படியோ நீங்கள் சொன்ன புக் எல்லாம் வந்தால் கொண்டாட்டம் தான் நமக்கெல்லாம்.

      Delete
    8. ஆம் saran selvi சார்.நானும் ஒ௫ தல ரசிகன் என்ற முறையில் ஆமோதிக்கின்றேன்
      .

      Delete
  27. சூப்பரோ சூப்பர் சார்.
    மட்டும் நிகழ்ந்தால் நான் மூணாவது காம்பினேஷனை சூஸ் செய்கிறேன்.

    ReplyDelete
  28. இரத்தக் கோட்டை க்ளைமாக்ஸ்ஸில் தன் உடன் பிறவா செவ்விந்திய சகோதரன் க்ரோ வை கொன்ற ஒற்றைக்கண் குவானாவை ஒற்றைக்கொற்றை சவாலில் பழி தீர்க்க டைகர் தயாராவார்.
    ஒரு கொடரி மட்டுமே ஆயுதம். கொடரியில் டைகருக்கு துளியும் பரிச்சயமில்லை.
    பதற்றமடைந்த ஜிம்மி 'தம்பி வீணாக உயிரை விட்டுடாதே. கொடரியை கையாள உனக்கு தெரியாது' அலறுவார்.

    அப்போது டைகர் 'உண்மைதான் ஜிம்மி. எனக்கு கொடரியில் பயிற்சி கிடையாதுதான். ஆனால் அதைக் கற்றுக்கொள்ள இதுதான் சரியான வாய்ப்பு' என்பார்.

    இதுதான் கேப்டன் டைகரின் ஒரிஜினால்டி என்றே நினைக்கிறேன்.

    தங்கக்கல்லறையை முதன் முதலாக படிக்கும்போது பாலைவனம் என்பதை உண்மையில் உணர்ந்தேன்.
    பள்ளியில் வெறுமனே படித்ததற்கும் நிஜ பாலைனத்துக்கும் உள்ள வேறுபாடு புரிந்தது.
    அதன் ஈவிரக்கமற்றற தன்மையும், கொடூர குணமும் வெளிச்சமானது.

    லக்னரின் குள்ளநரித்தனத்தால் சுரங்கத்தினுள் சிக்கி உயிரைக் கெட்டியாகப் பிடித்து புழுதியும் இருளும் சூழ இன்ச் இன்சாக முன்னேறி வெளியேறியதும், லொக் லொக் இருமியது டைகரா? நானா? என குழம்பினேன்.

    அப்படி டைகரோடு சேர்ந்தே பாலைவனத்தில் அல்லாடிய உணர்வைக் கொடுத்தது.

    ReplyDelete
  29. டைகரின் வீரீய கதைகளில்
    இரத்தக் கோட்டை மூன்றாவது இடத்தை பிடிக்கும் முன் பதிவுகள் கூடினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  30. கொடுரவனத்தில் டெக்ஸ் விட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பாதிக்கே மேல் கதைகள் உள்ளன... இவைகள் லேட்டஸ்ட் மற்றும் மறுபதிப்புக்கு உகந்தவைகள் நிறைய இருப்பதால் இந்த சீரயஸ்களை வெயிட்டிங் லிஸ்ட்ல போட்டேன்... வெளியீடு எண் 150க்கு முன் வந்தவை ஒவ்வொன்றும் டாப்+ நீண்டகாலம் முன்பு வந்தவைகள். முதலில் இந்த சூப்பர் டூப்பர் ஹிட்களை முன்வைப்போம் நண்பரே...
      நீங்கள் மேலே சொல்லியுள்ள பவளசிலை மர்மம் மற்றும், பழிக்குப் பழி& இரும்புக் குதிரையின் பாதையில், வைக்கிங் தீவு மர்மம், எமனுடன் ஒரு யுத்தம், அதிரடி கனவாய், மெக்ஸகோ படலம், மரணதூதன்& எல்லையில் ஒரு யுத்தம், பறக்கும் பலூனில் டெக்ஸ் போன்றவை தனித்தனி ஸ்டைலானவை; காம்பினேசன் க்கு செட் ஆகாதவை. இவைகளில் இருந்து "மரணத்தின் நிறம் பச்சை "போல சஸ்பென்சாக வண்ண மறுபதிப்புகளில் இடம் பெறக்கூடும்.

      Delete
  31. நன்றி டெக்ஸ் அவர்களே உங்கள் வாக்கு பலிக்கட்டும் .

    ReplyDelete
  32. டெக்ஸ் பட்ரி EV அவர்கள் எதுவும் இதுவரை சொல்லக் காணோம். ஏன் சார்.?

    ReplyDelete
  33. காணவில்லை!!!!?????
    மாயாவி
    எம்.வி
    ஆதி
    பொடியன்
    இராவணன் இனியன்
    மற்றும் பலர். வாருங்கள் நண்பர்கலெ.

    ReplyDelete
  34. ***** EBF 2016 - பங்குகொண்ட நண்பர்களின் கருத்துப் பதிவுகள் ******


    #####Erode Vinesh7 August 2016 at 10:18:00 GMT+5:30
    முதல் முறையாக காமிக்ஸ் கலந்துரையாடலுக்கு வந்திருந்தேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வலைத்தள நண்பர்களை நேரில் இப்போது தான் பார்த்தேன். நண்பர்களின் உபசரிப்பும் அந்த சூழலும் இன்னும் கண்முன் ற்கிறது. இன்று காலை நமது ஸ்டாலில் சந்திப்போம். நன்றி! மகிழ்ச்சி!!#####

    ******
    கடல்யாழ்97 August 2016 at 10:20:00 GMT+5:30
    தங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி ஆசிரியரே :)))))))))
    பூமியில் கால்கள் இருந்தாலும் ஆகாயத்தில் மனம் பறந்து கொண்டு இருந்தது
    நான் அவ்வளவாக பேசு வில்லை, பயமோ கோச்சோமோ இல்லை , சந்தோஷத்தில் வார்த்தைகள் வர வில்லை
    நம்மளுடைய வெகு நாள் கனவு, எதிர் பார்ப்பு எல்லாம் இன்று நிறைவேறி உள்ளது
    அதை என்னால் அப்போது வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை

    அனைத்து சகோதரர்களும் ஏற்று கொள்வார்களா
    என்ற தயக்கம் கொஞ்சம் இருந்தது
    ஆனால் அனைவரும் மிக நன்றாக பேசினார்கள், காமிக்ஸ் சொந்தமாய் என்னையும் எனது தோழியும் பார்த்தார்கள்,
    சொந்தங்களை திருவிழாவில் சந்திக்கும் சந்தோசம் ஏற்பட்டது , பல நாட்கள் பழகிய அன்பு இருந்தது
    ***********

    ######
    சிம்பா7 August 2016 at 10:22:00 GMT+5:30
    Good morning Editor.

    Really it was an awesome feeling to be with such a huge gathering. The thing is room was small. If it were to be an outdoor gathering then it might have turned to be an unmatched event. Hope in future shall plan for an outdoor gathering without time limits..

    Hats off for the preparation done by our friends..
    ########

    - தொடர்கிறது -

    ReplyDelete
    Replies
    1. ///
      Senthil Sathya7 August 2016 at 10:04:00 GMT+5:30
      ஈரோட்டில் நேற்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியை தவிர்த்து வேறொன்றும் இல்லை
      ///

      ///
      leom7 August 2016 at 10:22:00 GMT+5:30
      வணக்கம் எடி் சார்... நேற்றைய தினம் அருமையான தினம்... பல நண்பர்களின் ரசனையையும் , கதைகளப்பற்றிய genre விருப்பங்களையும் அறியமுடிந்த்து. Especially இளம் வாசகர்களின் green manor, sci-fi, apocalypse genre க்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.
      ////


      ///selvam abirami7 August 2016 at 10:42:00 GMT+5:30
      உற்சாகம் கொப்பளிக்கும் சூழல்....


      அருமை....அருமை.....


      இளம் காமிரேடுகள் பங்கேற்பு பற்றி படிக்கும்போதே மகிழ்வு பீறிடுகிறது...

      பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப் குரூப்களிலும் வெளியாகி கொண்டிருக்கும் வீடியோக்கள்,போட்டோக்கள் கொண்டாட்ட தருணங்களை புலப்படுத்தி கொண்டுதான் இருக்கின்றன....

      அறிவிப்புகள் ,நிகழ்வுகள் குறித்து உங்கள்,நண்பர்களின் அப்டேட்டுகள் குறித்த எதிர்பார்ப்புகளுடன்........!!!!!
      //////


      ////Podiyan7 August 2016 at 10:45:00 GMT+5:30
      To: Editor,

      இங்கே அதகள மோதல்கள் நடக்கும்போதும், எதிர்பார்த்த சில கதைகள் வரவேற்புப் பெறாதபோதும், சில முயற்சிகள் சுவரிலடித்த பந்துகளாய் திரும்பிவரும்போதும், இன்னும் சில சந்தர்ப்பங்களிலும் - மிகுந்த வேதனையோடு நீங்கள் சில பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டிருக்கிறீர்கள்.

      அப்போதெல்லாம் - உங்களை உற்சாகமூட்ட நண்பர்கள் ஆறுதல் வார்த்தைகளையும், நம்பிக்கை கருத்துக்களையும் பதிவிடுவார்கள்.

      சில புதிய முயற்சிகளை, புதிய ஜோனர்களின் பக்கமான நகர்வுகளை மேற்கொள்ளச் சொல்லி நாம் கோரும்போதெல்லாம், அது தொடர்பான எதிர் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களது தயக்கங்களையும் வெளிப்படையாகவே பேசியுள்ளீர்கள்.

      ஆனால், இனி அவை எவற்றுக்குமே அவசியம் இராது என்பதை ஈரோடு - விழா தெளிவாக்கிவிட்டது.
      /////

      Delete
    2. ////
      Manikandan.N7 August 2016 at 11:18:00 GMT+5:30
      மூன்று தலைமுறை காமிக்ஸ் எடிட்டர்களையும், சீனியர் எடிட்டரின் துணைவியார் அவர்களையும் ஒரே நேரத்தில் சந்தித்தும், வாழ்த்துக்கள் பெற்றதும் மகிழ்ச்சி.தமிழகம் முழுவதும்,பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டுவாழ் வாசகர்களை சந்தித்தது மகிழ்ச்சி. நிறைய பேரிடம் அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை.இந்த நிகழ்ச்சி நடத்தியதற்கு காமிக்ஸ் குடும்பத்தின் சார்பில் நன்றி.வாழ்த்துக்கள் .////

      /////
      senthilwest2000@ Karumandabam Senthil7 August 2016 at 11:20:00 GMT+5:30
      நேற்றைய தினம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிய நாள்!நேற்றைய தின மகிழ்ச்சி தினத்தை வழங்கிய எடிடருக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாயாவி சிவா நன்றி கலந்த வாழ்த்துக்கள்////

      //////
      AT Rajan7 August 2016 at 12:56:00 GMT+5:30
      வணக்கம் நண்பர்களே!!
      சற்று நீண்ண்ண்ட...இடைவெளி!!!
      அந்த வருத்தத்தை இன்றைய ஆசிரியர் பதிவு கொஞ்சமாக நீக்கியதில் மகிழ்ச்சி.பதிவுகளால் பழக்கப்பட்ட உறவுகளை நிஜத்தில், நேரில் சந்தித்த நிகழ்வுகளை பார்க்கையில் நாமும் ஈரோட்டில் பிறந்திருக்கக்கூடாதா என்ற வருத்தம் மேலோங்குகிறது. உறவுகள் யார் யார் என பெயர் தெரியாவிட்டாலும் கண்ணில் மின்னும் அந்த சந்தோஷம் ஒன்று போதுமே. காமிக்ஸ் என்ற மந்திரச்சொல் நம் அனைவருக்குள்ளும் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை.////

      ///
      Aslam Basha7 August 2016 at 13:33:00 GMT+5:30
      அடுத்த முறை நானும் கொள்ள இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
      ////

      ///
      Senthil Sathya7 August 2016 at 18:02:00 GMT+5:30
      நேற்று ஈரோட்டில் மகிழ்ச்சி கூட்டத்தில் பங்கு பெற்றதில் வயதில் மிக சிறியவரான எங்கள் வாழும் வள்ளல் சிபிஜீ அவர்களின் புதல்வி தயக்கம் இல்லாமல் மிகச் சரளமாக பேசி எங்கள் எல்லோரையும் அசத்தினார் காமிக்ஸ் வருங்காலம் வாழ்க
      ////

      ////
      parimel7 August 2016 at 20:35:00 GMT+5:30

      ஈரோடு நிகழ்சி சிறப்பாக அமைந்துள்ளது. குடும்பத்தினருடன் ஆசிரியர் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது. V.விக்ரம் அரவிந்த் திருமண விழாவில் நாங்களும் குடும்பத்தோடு கலந்து கொள்ள ஆவல்.
      ///


      ////
      VETTUKILI VEERAIYAN7 August 2016 at 21:44:00 GMT+5:30
      நேரில் கலந்து கொள்ள இயலவில்லை எனினும் பார்க்க படிக்க மகிழ்ச்சி ..ரத்தக்கோட்டை வண்ணத்தில் வருவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ..இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்க வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றியோ நன்றி
      ////

      Delete
    3. ////
      Saran Selvi7 August 2016 at 22:07:00 GMT+5:30
      என் வாழ்க்கையில் சில சந்தோஷ நாட்களை தவறவிட்டு இருக்கிறேன் (மகனின் பிறந்த நாள், திருமண நாள்)இந்த பதிவை படித்து, படம் பார்த்த பின் அப்படி ஒரு தவிப்பு.
      /////

      ////
      Arivarasu @ Ravi7 August 2016 at 23:15:00 GMT+5:30
      இரு தினங்களின் நண்பர்களின் சந்திப்பு தேனும்,தினை மாவும் கலந்து உண்ட உண்ர்வை ஏற்படுத்தியது.
      அறிமுகமான காமிக்ஸ் அறிமுகமில்லா நல் உள்ளங்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி.
      ////

      ////
      SIV8 August 2016 at 15:25:00 GMT+5:30
      ரயில் டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்து, அலுவலக சூழ்நிலையில் காரணமாக வர முடியாமல் போய்விட்டது. missed it very badly.. :(
      இப்போதைக்கு புகைப்படங்கள் பார்த்து திருப்தி அடைய வேண்டியது தான்
      ////

      ///
      Saravanan R8 August 2016 at 16:43:00 GMT+5:30
      ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்த நம்ம விஜயன் பாஸ், நம்ம சீனியர் எடிட்டர், ஜூனியர் எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ! திருப்தி! ஆத்ம திருப்தி!

      மற்றபடி நம்ம எடிட்டர் பாஸ் சொன்ன மாதிரி யாரையும் புதுசா பாக்கிற பீல் இல்ல...
      ஏதோ ரொம்ப நாளா பார்த்து பழகுன மாதிரிதான் இருந்தது !
      ////

      ////
      udhay9 August 2016 at 02:09:00 GMT+5:30
      நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

      பரபரக்கும் சென்னையை விட ஈரோட்டில் நண்பர்கள் குழுமிய காமிக்ஸ் மாநாடு படு சுவாரஸ்யமாக இருக்கும் போலிக்கிறதே...
      நீதிக்காவலன் ஸ்பைடர் கதையில் வரும் அடியாள் ஒருவன் பேசும் வசனம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
      "உள்ளே எவனேவனோ (மன்னிக்கவும்) ஜாலியா அனுபவிக்கிறான், நமக்குத்தான் கொடுத்து வைக்கல... ச்சே...!"

      அடுத்த முறையாவது காமிக்ஸ் மாநாட்டில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால்... முயற்சிக்க வேண்டும்.
      /////


      ////
      P.SATHEESH9 August 2016 at 04:24:00 GMT+5:30
      முதன் முறையாக இந்த வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி.அதுபோல் நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..இரண்டே நாளில் இரத்தபடலம் முழுவதையும் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளை பார்த்தேன். நன்றி டெக்ஸ் சம்பத்.

      ஈரோட்டில் கலந்துக் கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அன்பான வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

      Rtn.சதீஸ் பெரியசாமி
      தலைவர்,2014-15,
      ஈரோடு வடக்கு ரோட்டரி சங்கம்.////

      ////
      rajasekaran vedeha9 August 2016 at 13:36:00 GMT+5:30
      நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட ஒரு வார ஓயாத அலைச்சலுக்குப்பின் இன்றுதான் இயல்புநிலைக்கு திரும்ப முடிந்தது. போகமுடியாத என நினைத்தத ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு இந்த முறை எப்படியாவது கலந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தில் (கேரளா ஆரியங்காவு போய்விட்டு S வளைவு போக்குவரத்து நெரிசலில் சிக்கி கோவில்பட்டி வீடுவந்து சேரும்போது வெள்ளிக்கிழமை இரவு 12 மணி. படுத்தால் தூங்கிவிடுவோமோ என்று சேரில் அமர்ந்தே இரண்டுமணிநேர ஓய்வுக்குப்பிறகு 2 மணிக்கு கிளம்பி மதியம் 11.45மணியளவில் விழா அரங்கத்திற்கு வந்துசேர்ந்தேன். அரங்க வாசலிலேயே அன்பு நண்பர்கள் பாபு, சிவகுமார், குமார், சம்பத் சாரின் அறிமுகங்களோடு அன்பு நண்பர் சிவகுமார் டெக்ஸ் டீ சர்ட்டை கொடுத்து அதை அணிந்துகொண்டுதான் உள்ளே வரவேண்டும் என்ற அன்புக்கட்டளையிட மெதுவாக அரங்கத்தில் நுழைந்தேன். அரங்கமே உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்து. பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பல நண்பர்களை நேரில் பார்த்து அறிமுகம்செய்து அவர்களின் சந்தோசத்தில் கலந்துகொள்ள எனக்கும் வாய்ப்புகிடைத்தது. நிச்சயமாக இப்படி ஒரு நிகழ்வை நான் எதிர்பார்க்கவில்லை. எடிட்டர் சாரிடம் கேட்கவேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேள்விகளை கொண்டுவந்திருந்தாலும் அத்தனைபெரிய அரங்கில் அவ்வளவு நண்பர்கள் மத்தியில் என்னை அறிமுகம்செய்துகொள்ளவே திக்கி தினறிவிட்டேன். நிச்சயம் அடுத்தமுறை நிறைய பயிற்சி எடுத்துவந்தாவது பேசவேண்டும் என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அனைத்து நண்பர்களையும் சந்தித்தாலும் யாரிடமும் நீண்டநேரம்பேபேசிமகிழ நேரமில்லாமல் போனது ஒரு பெரிய குறையே. மதியம் விழா முடிந்ததும் அன்பு நண்பர் சந்தனகுமார் அவர்கள் மதியஉணவுக்கு அன்புடன் அழைக்க எந்த ஒரு நண்பரிடமும் விடைபெற்று கிளம்பமுடியவில்லை. நண்பர்கள் மன்னிக்க. சாப்பாடுமுடிந்து புத்தக அரங்கில் சில புத்தகங்கள் வாங்கிக்கொண்டு மாலை 3 மணியளவில் ஊருக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். மறக்கமுடியாத பல நினைவுகளையும் நண்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பளித்தத ஆசியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.
      ////

      Delete
    4. சூப்பர் ஈவி... படிக்க படிக்க வரலாமா வேணாமா என தயங்கி கொண்டு உள்ள நண்பர்களும் துள்ளிக்கொண்டு வந்து சேர்வார்கள்... தொடருங்கள்👌👌👌👌👏👏👏👏👏👏👏

      Delete
    5. செயலாளரே செம்ம
      டெக்ஸ் விஜயராகவன் சொல்வது போல்
      தயக்கமுள்ள நண்பர்களும் கடைசி கட்ட முயற்சியாக வருவதற்கு முயல்வார்கள்

      Delete
    6. மிக நிதானமாக யோசித்து கொஞ்சம் கொஞ்சமாக அங்கிங்கு சென்று சேகரித்த தகவல் மிக மிக மிக அற்புதம் நண்பர் விஜய் அவர்களே

      Delete
  35. ////

    Saravanan R11 August 2016 at 16:39:00 GMT+5:30
    அட! இதை யாரும் போட்ட மாதிரி தெரியலையே !
    சரி! நம்ம போடுவோம் !

    ஈரோடு மாநாட்டு துளிகள் : Part One

    # விழாவில் நம்ம எடிட்டர் பாஸ்க்கு அப்புறமா அதிக நண்பர்களால் தேட பட்டவர்….. நண்பர்கள் மத்தியில் மாயஆத்மா என்று அன்போடு அழைக்கப்படும் நம்ம நண்பர் மாயாவி சிவா சார் தான்! நெறய பேர் atleast தூரத்தில் இருந்தாவது ஓ அவர்தான் மாயாவி சிவா வானு கேட்டுக்கிட்டதை பார்க்க முடிஞ்சது ! சூப்பர் சிவா சார் !

    # நம்ம பரணி from பெங்களூரு சார் அண்ட் மாயாவி சிவா சார் ரொம்ப கவனமா ஒரு நிகழ்வயும் விடாம பதிவு பண்ணதுக்கு ஒரு hats ஆப்!
    (சாரி பரணி சார்! இது தெரியாம வாங்க உட்காரலாம்னு உங்க கவனத்தை திசை திருப்பிட இருந்தேன் ;-)

    # ஜூனியர் எடிட்டர் போட்டோவில ரொம்ப அமைதியா தெரியர்னு பார்த்தா....நேர்ல இன்னும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கார் ! (என்னை போல் ஒருவன்(ர்) :))
    நம்ம விஷன் 2025 சமயம் ஒரு 5000 மக்கள் கொண்ட வாசகர் கூட்டத்தை கடக்கும் போது நிச்சயம் மேடை ஏற தயார் ஆயிருவார்னு நெனைக்காரன்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விக்ரம்!

    # நான் உட்பட அதிகம் பேர் கேட்ட கேள்வி "எங்கே நம்ம செயலாளர் ?". அதனால் அவர் என்ட்ரி ஆகும் போது பலத்த கை தட்டல் !
    அவரும் எம் ஜி யார் மாதிரி சும்மா தக தக னு மின்ர ஒரு என்ட்ரி கொடுத்தார் !
    (நம்ம செயலர் mind வாய்ஸ்:
    ஹலோ.... நானே நடக்க முடியாம நடந்து வரேன்! நீங்க என்னடானா எம் ஜி யார் னு சொல்றீங்க !
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ஏற்கனவே ஒடம்பு ரணகளமாய் கெடக்கு !)
    ஈரோடு விஜய் உண்மையாகவே ஒரு go to guy அப்படிங்கறது அங்க நின்ன அஞ்சு நிமிசத்துல புரிந்தது !
    (சாரி விஜய் ! எனக்கு கெளம்பர வேல இல்லன்னா நானே உங்களக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன் )

    # தலீவர்!
    ஹலோ ! உண்மையை சொல்லுங்க ! இவுரு தான் நம்ம எடிட்டர் பாஸ்அ கலங்கடிக்கற வரா ?
    ஏப்பா!
    நிஜமாத்தான் சொல்றீங்களா?
    இவரு வீட்டு முன்னாலயா….
    நம்ம பேப்பர் மில் தொழிலாளர்கள் எல்லாம் "இவரு இவளோ வேகமா எழுதுனா...நாங்க எத்தனை ஷிப்ட் தான் கண் முழுச்சு விடாம வேல பாக்க முடியும்?
    நாங்க வீட்டிற்கு போவ தெப்போ ?
    எங்க புள்ள குட்டிங்களா பார்ப்பது எப்போ?"னு
    போராட்டம் பன்றாங்க!
    ஏப்பா! நல்லா பார்த்தீங்களா ! இவருதானா ?
    இவரு இவ்ளோவ் அமைதியா இருகாரேய்னு
    எல்லாரும் கசமுசா கசமுசான்னு சந்தேகமா பேசிக்கிட்டதை பார்க்க முடிந்தது !



    ReplyDelete
    Replies
    1. Saravanan R11 August 2016 at 17:25:00 GMT+5:30
      ஈரோடு மாநாட்டு துளிகள் : Part Two

      # அப்புறம்... நான் பார்த்தவரைக்கும் தலீவரும் செயலரும் அதிகம் பேசிகிட்டதா தெரியல !
      ஒரு வேளை...பதுங்கு குழி இருட்டுல அடிக்கடி சந்திச்சு...நேர்ல அடையாளம் தெரியலஓ என்னமோ !

      # தலீவர்! செயலாளர் பெயர் காரணம் என்னனு நண்பர் வினேஷ் கேட்டப்போ…. "ஹ்ம்ம்...தெரியலையேப்பா...!"
      னு பரிதாபமா முழிச்சேன் !
      யாரவது எங்க அறிவு கண்ண தெறந்து வைக்கணும் !


      # பக்கதுல ஒரு அன்பர் நம்ம தளத்துல பிரபலமான ஒரு நண்பர் இந்த கூட்டத்துல எங்க இருக்கார்னு கேட்டார்.

      நான் அவர்கிட்ட, "நீங்க எழுந்து நின்னு "TEX " அப்படினு சத்தமா சொல்லுங்க....!
      கூட்டத்துல எந்த நண்பர் முதல்ல கை தட்ட ஆரம்பிச்சு கடைசியா கை தட்ரத நிறுத்தவர் தான் நம் அன்புக்கும் மரியாதைக்கும் ஒரு நண்பர் " சேலம் tex விஜயராகவன் " !
      அநேகமா அவரு தட்டுனா தட்ல கை வீங்கி மதிய உணவு ஸ்பூன் ல தான் சாப்பிட்டு இருப்பார்னு நெனைக்கிறேன் ;-)

      # இதே மாதிரி ஒரு technique பயன்படுத்தி நான் இன்னொரு நண்பரை தேடினேன் ?
      கொஞ்சம் சன்னமான குரல்ல......
      "மாடஸ்டி வாழ்க !
      மாடஸ்டி க்கு ஏன் தனி சந்தா கேக்க மாட்டிங்கறாங்க ?
      ஹ்ம்ம்....மாடஸ்டி ஒட அருமை தெரியாம இருக்காங்களே !"
      அப்டினு பேசி பார்த்தேன் !
      ஊஹூம்! ஆனா....அங்க இருந்த நண்பர் வெங்கடேஸ்வரன் சார் கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் இல்ல.....
      சரி....இது நம்ம MV சார் இல்ல போலன்னு confirm பண்ணிக்கிட்டேன் !


      # இந்த நேரத்துல...
      நம்ம கடல் யாழ் சகோ நம் தோழி விஷ்ணு பிரியாவிற்கு "தல டெக்ஸ்" புக் தான் முதல்ல அறிமுகம் செய்ததாகவும் அவங்களும் தல fan ஆயிட்டாங்கனு சொன்னாங்க !
      நான் ஒரு நிமிஷம்....ஒரு வேளை அவங்க நம்ம தங்க தலைவி மாடஸ்டி புக் கொடுத்து இருந்தால் என்ன ஆயிருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்....
      என்ன ஆயிருக்க போகுது....
      தோழி இனிமே மங்கா சாப்பிட மாட்டேன்....ஆனா மாடஸ்டி இல்லாம சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிருப்பாங்க...!
      நமக்கும் கோவைல ஒரு M V மேடம் கெடச்சிருப்பாங்க....ஹ்ம்ம்...ஜஸ்ட் மிஸ் !

      Delete
    2. Saravanan R11 August 2016 at 17:37:00 GMT+5:30
      ஈரோடு மாநாட்டு துளிகள் : Part Three

      # அப்புறம் நம்ம விஜயன் பாஸ் எல்லா நண்பர்களோட கோரிக்கைகளையும் சமாளிச்ச விதமே அலாதி !
      நம்ம மாநாட்டு சவுண்ட்டை mute பண்ணி பார்த்தா....
      ஏதோ அரசியல் கட்சி தொகுதி பங்கீடு போலவும்....
      நம்ம எடிட்டர் பாஸ் எல்லாருக்கும் இதயத்துல கண்டிப்பா இடமுண்டுனு சொல்லற மாதிரியும்தான் caption போட வேண்டி இருக்கும் ;-)

      # on serious note:
      நம்ம நண்பர்கள் கிராபிக் நாவல் அதிகம் பண்ணலாம்னு கேட்டதுக்கு எடிட்டர் ஒரு புத்தக குவியல்ல எது செலக்ட் பண்ணறாங்கனு விளக்கினார் !
      என்ன கேட்டா....
      மாதம் ஐந்து புக் படிக்கும் நம் நண்பர்களுக்கு ஒரு கிராபிக் நாவல் இனிக்கும் !
      ஆனா....ஒன்னு ரெண்டு புக் படிக்கும் நண்பர்களுக்கு?
      இதுவும் சினிமா மாதிரிதான்....
      நெறய படம் பாக்கறவங்க எல்லா படமும் பார்ப்பாங்க...
      ஆனா என்னைக்காவது பார்க்கறவங்க...ஒரு காமெடி அல்லது action படத்தைதான் விரும்புவார்கள் !
      ஏன்னா...பெரும்பாலும் நம் மக்கள் “நம்மளே நம்ம கஷ்டத்தை மறக்க சினிமா போறோம்! படத்துலயும் நம்மள பார்த்து ‘ஏப்பா! ரயில்லா..... இல்ல கயிறானு..!" கேட்டா கடுப்பு ஆகத்தானா செய்யும் !

      # நெறய நண்பரகள் நாங்க blog பக்கம் வர மாட்டோம் !
      ஆனா FB ல இருக்கோம் அப்டினாங்க? ஏன் அப்டி?
      நம்ம எடிட்டர் பாஸ் FB , Whtsapp ல இருக்காரா என்ன?


      # நம்ம MV சார் அண்ட் செல்வம் அபிராமி சார் பார்க்க முடிச்சுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் !
      அவங்க வந்தா....MV சார... மாடஸ்டி பத்தி இளம் வாசகர் களுக்கு ஒரு அறிமுகம் செய்ய சொல்லி இருக்கலாம் !
      நம்ம தளத்தின் "சுஜாதா" செல்வம் அபிராமி சார....மாடஸ்டி & கார்வின் இருந்ததுக்கான சாத்திய கூறுகள் இருக்கா?
      இருந்து இருந்தால் அவங்க சென்னை பக்கம் வந்துருபங்களானு பேச சொல்லி கேட்டிருக்கலாம் !
      (என்ன ஒன்னு ...காமெடியா சொன்னா.... ரெண்டு மணிக்கு ஹோட்டல் காரங்க வந்து..... என்னோமோ புக் வெளிடுனு சொல்லிட்டு இப்படி மொத்தமா தூங்கி கிட்டு இருக்காங்கனு....கதவ தட்டி இருப்பாங்க !)

      Delete
    3. Saravanan R11 August 2016 at 17:50:00 GMT+5:30
      ஈரோடு மாநாட்டு துளிகள் : Final

      # ஆங்காங்கே டைகர் Tex சலசலப்புகள் காண பட்டது !
      இந்த ஜாலி சண்டை "தல" " தளபதி" பெயர் வச்சதுக்கு அப்புறமா ஜாஸ்தி ஆயிடுச்சா ?
      இல்ல முன்னால இருந்ததா? யாரவது சொல்லுங்க பாஸ் !

      #on lighter note
      # Tex டைகர்க்கு இணையானவர் இல்லை !
      ஆமப்பா ! யார் இல்லனா?
      இப்போதான் நீங்க தெளிவா பேசறீங்க!
      ஏப்பா... மாசம் ஒரு blockbuster குடுக்கற தல எங்க?
      Life timla எண்ணி மூனே ஹிட் குடுத்த டைகர் எங்க?
      இப்போ கூட என்ன வச்சு கதை எழுதுங்க, கதை எழுதுங்கனு நம்ம டைகர் அங்க கன்சாஸ், மிஸோரி பக்கமா சுத்திகிட்டு இருக்கிறதா சொல்றாங்க...
      யாரோ ஒரு ஆசிரியர் மட்டும் "ஒரு history கதை இருக்கு...அதுல உன்னையும் சேத்துகரேன்! ஆனா ஹீரோ ஆசை எல்லாம் கூடாது? சரியா?" னு சொல்லி இருக்கிறதா தகவல் !
      இதை பத்தி நம்ம தல Tex கிட்ட கேட்டா, "எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை! ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்!
      வேண்ணா....அந்த டைகர்ரா நண்பனா இருந்துட்டு போக சொல்லுங்க"ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டேய் இருக்காரு !

      # தல fans காமெடி பண்றங்கனு சொன்னாலும் பரவாயில்லை....
      சரி எவ்ளோவோ பண்ணிட்டோம்!
      இன்னும் என்ன பண்ணலாம் !
      பேசாம நம்ம ஏன் நம்ம தலைக்கு ஒரு சிலை வைக்க கூடாது?
      அட ஈரோடு இல்ல சிவகாசில வச்சு....
      நம்ம இத்தாலி ஆசிரியர்களை கூப்பிட்டு திறக்க சொல்வோம் !
      (copyright issue வர கூடாது பாருங்க)
      இனி இத்தாலி tourist எல்லாம் நம்மூருக்கு வராம போக மாட்டாங்க பாருங்க!

      நன்றி நண்பர்களே!

      Delete
    4. Vijayan11 August 2016 at 18:46:00 GMT+5:30
      R.Saravanan : ஒரு உள்ளத்தின் கதவுகளை சன்னமாய்த் திறந்து - அதன் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் ரசித்து ஆராய்ந்த உணர்வே மேலிடுகிறது உங்கள் தொடர் பின்னூட்டங்களை படித்த பொழுது !!

      அன்றைக்கு அந்த அறைக்குள் காலையில் நான் கால்பதித்த பொழுது எனக்குள் இருந்தது ஒரேயொரு பிரார்த்தனையே !! "ஆண்டவா...இன்று இங்கு வரவிருக்கும் நண்பர்கள் - இங்கிருந்து புறப்படும் தருணத்தில் நட்புச் சங்கிலியில் ஒரு பிடியாவது கூடுதல் பிடிமானத்தோடு கிளம்பிடச் செய்யுங்களேன் !" என்பது தான் ! அது நிஜமாகியதை உங்கள் ஒவ்வொருவரின் பதிவுகளிலும் பார்க்க முடிகின்ற பொழுது மனம் நிறைகிறது சந்தோஷத்தில் !

      இந்த நட்புக்களே நம் ஆயுட்கால சாதனை என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது !

      Delete
    5. @ஈரோடு விஜய்
      அடேடே! சூப்பர் செயலரே!
      ஹ்ம்ம்...இனிய நினைவுகள்!
      கூடிய சீக்கிரம் வைக்கிறோம்... தலக்கு சில வைக்கிறோம் ;-)

      Delete
  36. August release enna enna comics vara pooguthu friends

    ReplyDelete
    Replies
    1. இரத்த கோட்டை-5பாக டைகர் சாகசம்(ஸ்பெசல் புக்கிங்)

      ஒரு காகிதத்தை தேடி-செல்டன்

      இது கொலையுதிர் காலம்-டைலன் டாக்

      மரணத்தின் நிறம் பச்சை-டெக்ஸ்.

      சர்ப்ரைஸ் இதழ்-...........சன்னமாக( வழக்கமான சந்தாக்களில் கார்டூன் ஸ்கிப் ஆவதால் ஏதாவது ஒரு கார்டூன் நாயகரது இதழாக இருக்க வாய்ப்பு 50%)

      Delete
    2. ஹலோ,

      கடந்த பதிவிலேயே சொன்னோம்ல!!

      "நண்பனுக்கு நாலிகால்"
      சிக்பில் & கோ

      இதுதான் விடாதே பிடிங்கறது!!

      Delete
    3. ஏன் சுஸ்கி-விஸ்கியாவோ,
      அலிபாபாவோ, அங்கிள் ஸ்ரூஜ்ஜாவோ, ஷெர்லக் ஹோம்ஸ் ஆகவோ,இருக்க கூடாதான்னேன்...

      லக்கியும், உட் சிடி பார்டிகளும் தாராளமாக வந்து கொண்டு தானே இருக்காங்க...😋😋😋😋

      Delete
    4. சிக்பில் கிளாசிக் வந்த கையோட
      விடாதே-பிடி

      இன்னொரு சிக்பில் & கோ!னு ஆசிாியரே சொல்லீட்டாரே நட்பு!!

      சிக்பில் கிளாசிக் புக்கிலேயே வருகிறதுனு present tense ல போட்டிருக்காரு பாருங்க நண்பரே!!

      Delete
    5. ஆகான்... நான் சின்னக் குழந்தையா இருக்கச்ச வந்த "வருகிறது"-அதாவது present tense ,விளம்பரங்கள் இன்னும் டஜன் கணக்கில் பாக்கியுள்ளன நண்பரே...

      சமீபத்திய(2011ல் விளம்பரப்படுத்த பட்ட) "XIII ஒரு புலனாய்வு இரு பத்திரிகையாளர்களின் பார்வையில்"- என்ற விளம்பரம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி....அப்டியே உப்புமா ஆகிட்டு😎😎😎 அதனால்...வெயிட்டிங் கேம் ஈஸ் கோயிங் டூ கன்டினியூஊஊஊஊஊ....

      Delete
    6. ஹாஹாஹா😁😁😁

      என்ன பெட் டெக்ஸ் விஜய்??👍👍👍

      Delete
    7. விடாதே-பிடின்னு அந்த படத்தில் கிட்ஆா்டின் மாட்டை புடிச்சு இழுத்துட்டு இருக்காா் பாருங்க!!

      இன்னும் சந்தேகமா???

      Delete
    8. ///என்ன பெட் டெக்ஸ் விஜய்??///---பெட் கட்ட நாம என்றுமே தயங்கதில்லையே நண்பரே. ஆட்டம்னா எனக்கும் உசுரு.

      ரூபாய்1000ம் பெட்டுங்க...டீல்...

      Delete
    9. ரூவாயெல்லாம் வேண்டாம் நண்பரே!!

      சிக்பில் புக்கா இருந்தால், நீங்க எனக்கு கிப்ட் பண்ணீருங்க!

      வேறயா இருந்தால் நான் உங்களுக்கு கிப்ட் பண்ணீடரேன்!!

      ஞாபகாா்த்த இருக்கும்ல!!

      டீல் OK வா??

      (எப்படியும் நான் தான் ஜெயிக்கப் போறேன்!! 😁😁😁)

      Delete
    10. டீஈஈஈல்ல்ல்ல்...(அப்பாடி ஒரு நல்ல கிஃப்ட்டை அடைய போகும் சந்தோசம் இருக்கே, அதும் பெட்ல செயித்து, நண்பர்கள் கைதட்டலுக்கு இடையே வாங்கும் போது...)

      Delete
  37. ////
    AT Rajan12 August 2016 at 09:40:00 GMT+5:30
    "ஈரோடு புத்தக விழா" நம்மில் பலரது வாய்ப்பூட்டினை திறந்திருக்கிறது. பலரது மௌனத்தை கலைத்திருக்கிறது.பலரிடம் இருந்த இடைவெளியை நீக்கியிருக்கிறது.
    "ஹைக்கூ "கவிதையை போல் குட்டியாக பதிவிட்டு வந்த தோழர்கள்கூட மதிப்பிற்குரிய சாண்டில்யனைப் போல வார்த்தைகளின் சித்து விளையாட்டால் அங்கு போகாதவர்களையும் போய்வந்த உணர்வினை உண்டாக்குகிறார்கள். ஒருவேளை "இரும்புக்கை மாயாவியின் உடலில் இருந்து அடுத்தவர் மீது பாயும் மின்சாரம் போல் சலிக்காத எழுத்துக்கு சொந்தக்காரரான நம் ஆசிரியரிடமிருந்து தோழர்கள் மீது பாய்ந்த எழுத்தெனும் மின்சாரத்தின் வல்லமையோ? "
    புத்தகவிழாவை வெறுமனே காசு பார்க்கும் விழாவாக நினைக்காமல் அனைவருக்கும் "இது நமது இல்லத்து விழா" என்ற நினைப்பை ஊட்டிய ஆசிரியருக்கும் அவருக்கு தோள் கொடுத்த தோழர்கள் சகோதரிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    வேறெந்த ஒரு பதிப்பாளருக்கு இம்மாதிரியான எண்ணம் உதிக்கும்?? வாசகர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையே மாயத்திரை தொங்கும். ஆசிரியர்கள் எங்கோ வானத்திலிருந்து வந்தவர்களைப்போல் தங்களை சுற்றி மாயவேலி அமைத்து இருப்பர்.முகத்தை காட்டக்கூட மனம் வராது.நமக்கோ அப்படியே நேரெதிர். நம்மில் ஒருவராக ஆசிரியர்.இதில் இன்னுமொரு அதிசயம்!! எடிட்டரது தாய் தந்தை இருவருக்கும் இதே எண்ணம் வந்ததைத்தான் நம்ப முடியவில்லை!! அதே ஈடுபாட்டுடன் அவர்களும் வந்தது நிஜமாகவே நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்பதைதாண்டி வேறொன்றும் கூற இயலவில்லை."காசு கொடுத்து வந்த கூட்டமல்ல இது.தானாக வந்த கூட்டம்" இந்த வார்த்தை நம் விழாவுக்கு வந்த தோழர்களுக்குத்தான் மிக மிகப் பொருந்தும் சார். "லட்சம் வாசகர்களை அடைவது சாதனையல்ல.ஆயிரம் அன்புள்ளங்களை அடைவதுதான் சாதனை."நீங்கள் சாதித்திருக்கிறீரகள். இன்னும் சாதிப்பீர்கள் சார். "உங்கள் தந்தையார் துவக்கிய காமிக்ஸ் என்ற மாரத்தான் ஓட்டம் நீங்கள் உங்களது வாரிசுகள் என்று பலதலைமுறைகளை தாண்டி தொடரத்தான் போகிறது." எதிர்காலத்துக்கான வாழ்த்துக்களை நிகழ்காலத்திலேயே சொல்லிவிடுகிறேன். வாழ்க.

    /////

    ReplyDelete
  38. ////
    V Karthikeyan13 August 2016 at 17:48:00 GMT+5:30
    Special thanks to MayaviSiva, ParaniFromBangalore and another friend with yellow shirt - They did complete coverage, hats off to you guys.

    Photo Captions were awesome.


    V Karthikeyan11 August 2016 at 00:31:00 GMT+5:30
    இந்த முறை ஈரோடு காமிக்ஸ் திருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    சனி அன்றே கிளம்பவேண்டி இருந்ததால் அணைத்து நண்பர்களுடனும் உரையாட வாய்ப்பில்லாமல் போனது வருத்தமே. பரணியுடன் (Parani from Bangalore) மட்டும் சிறிது நேரம் பேச முடிந்தது.

    At least சில நண்பர்களுக்கு ஹாய் சொல்ல முடிந்தது
    ஈரோடு விஜய்
    Tex விஜயராகவன்
    மாயாவி சிவா
    France Hassan
    மயிலை ராஜா
    சங்கர் (?)

    அந்த இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை, மிக சுவாரசியமாக சென்றது. எடிட்டோருக்கு நன்றிகள் இந்த காமிக்ஸ் get together organize செய்ததிற்கு.

    புத்தக திருவிழா நான் எதிர்பார்ததை விட சிரியதே, நம்ம காமிக்ஸ் ஸ்டாலில் உற்சாக விற்பனையை பார்த்ததில் ஒரு ஆனந்தம்.

    ////

    ReplyDelete
  39. ///Shinesmile Foundation11 August 2016 at 22:01:00 GMT+5:30
    அடுத்தமுறை நானும் போட்டோ எடுக்க எண்ணியுள்ளேன். நான் டெக்ஸ் மற்றும் மாயாவியுடன் மட்டுமே போட்டோ எடுத்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.
    அதோடு ஈரோட்டில் மதிய உணவை நான் பஸ் Staண்ட் எதிர்புறம் உள்ள ஹோட்டலில் தனியாய் அம்ர்ந்து உண்ணும் சூழல் ஏற்பட்டதால் இலையில் அன்னம் இருந்தும் லயன் நண்பர்கள் அருகில் உடன் இல்லாததால் உண்ணாமல் எழுந்து ஊருக்கு கிளம்பி விட்டேன். இருப்பினும் குடும்ப விழாவில் கலந்து கொண்டது மனதில் நீங்கா நினைவில் உள்ளது.///


    ////
    Sankar C14 August 2016 at 03:30:00 GMT+5:30
    இத்தாலிக்கு மிக அருகில் இருந்தும் (தற்போது இருப்பது மான்செஸ்டர், UK) ஜூலை மற்றும் ஆகஸ்ட் இதழ்கள் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. நண்பர்களின் உற்சாகத்தை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் நிகழ்வுகளை பதிவிட்ட ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் எனது நன்றி. உங்கள் பதிவுகள் நேரில் பார்த்த உணர்வை தந்தது. நமது சிறு வட்டம் உலக அளவில் பரவுவது மிக்க மகிழ்ச்சி. உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
    /////

    ////
    ஜேடர்பாளையம் சரவணகுமார்14 August 2016 at 07:15:00 GMT+5:30
    அன்பு நண்பர்களுக்கும்,ஆசிரியர் அவர்களுக்கும் காலை வணக்கம்.வாரம் ஒன்று கடந்திருந்தாலும்...., ஈரோடு விழாவில் நண்பர்களை சந்தித்த அந்த உன்னத நிமிடங்களின் தித்திப்பு இன்னும் கரையாமல்..., சுவை குன்றாமல்..., மனதில் பரவசமாய் அப்படியே நிறைந்திருக்கிறது.இப்படியோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும் மிகுந்த நன்றி..!
    /////


    ///
    Parani from Bangalore14 August 2016 at 08:13:00 GMT+5:30
    ஈரோடு புத்தக திருவிழா: விமர்சனம்: - Part 1
    • புத்தக விழா அரங்கத்தில் நுழைவதற்கு முன்பே, டெக்ஸ் விஜயராகவன், கிட் ஆர்ட்டின் கண்ணன், சுசீந்தரன், பெங்களூர் கணேஷ் குமார் போன்ற நண்பர்களை சந்தித்து விட்டேன்.

    • அரங்கத்தில் நுழைவதற்கு முன்பே மாயாவி சிவாவை சந்தித்து விட்டேன்.

    • காலையில் அரங்கத்தில் நுழைந்த போது மணி 10.15, சுமார் 10 பேர் இருந்தார்கள். அவர்கள் பிரசன்னா, எழுத்தாளர் திரு. சொக்கன், திருப்பூர் நாகராஜன், செந்தில் சத்யா, கரூர் குணா, கரூர் சரவணன், மகேந்திரன் பரமசிவம், நல்ல பிசாசு (சோமசுந்தரம்)

    • திரு. சொக்கன் அவர்களுடன் பேசினேன், மிக பெரிய எழுத்தாளர் மிகவும் எளிதாக பழகினார்.

    • சிறிது நேரத்தில் ஆசிரியர் உள்ளே நுழைந்து அனைவரிடம் குசலம் விசாரித்தார்.

    • அடுத்து சில நேரத்தில் அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்தது; இந்த நேரத்தில் மேலும் பல புதிய மற்றும் பழைய நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்து கொண்டேன்.

    • நிகழ்சிகள் ஆரம்பித்தவுடன் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் பேசுவதை video recording செய்ய ஆரம்பித்து விட்டேன்; இதனால் என்னால் மேலும் பல நண்பர்களை சந்தித்து பேசமுடியவில்லை என்பது வேறு விஷயம்.

    • ஈரோடு விஜய் உடல்நலம் சரியில்லை என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் காமிக்ஸ் நண்பர்களை காண ஆவலுடன் வந்து இருந்தார், மிகவும் இளைத்து இருந்தார்.

    • சரவணன் R: எப்போதும் சந்தோசம்! உங்கள் முகத்தில் உள்ள சிரிப்பு தான் சார்! இதுதான் நீங்கள் caption போட்டியில் வெற்றிபெற காரணம்!

    • கலந்துரையாடல் நடந்து கொண்டு இருந்த போதே, காபி, வடை, முறுக்கு, பிஸ்கட், கம்மர்கட்டு, சுத்தி வைத்து உடைக்க முடியாத உருண்டை (ரடிஜா அடிக்க வராதிங்க), பால்கோவா,... எல்லா பலகாரமும் கிடைத்தது. திருமண விழாக்களில் கூட இது போன்று கொடுப்பது இல்லை. வாழ்க காமிக்ஸ் காதல்.
    /////

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore14 August 2016 at 08:15:00 GMT+5:30
      ஈரோடு புத்தக திருவிழா: விமர்சனம்: - Part 2

      • இளையர்கள் அதிகம் வந்து இருந்தார்கள். அவர்கள் பேச்சில் புரிந்து கொண்டது, ஆசிரியர் தற்போது செல்லும் பாதை சரியானது. அவர்கள் புதிதாக நிறைய கதைகள் எதிர்பார்கிறார்கள். இன்றைய இளையர்களை கவர புதிய மற்றும் வித்தியாசமான கதைகள் தேவை; அதற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், அதே நேரம் அவை விற்பனையில் வெற்றி பெற வேண்டும்.

      • அறிவரசு தனது நிமிட நேர தியானத்தை மீண்டும் ஒருமுறை செய்து காண்பித்தார்.
      • ஒரு நண்பர் காமிக்ஸ் என்று எழுதி கொடுத்தால் போதும் படிப்பேன் என்றார் (என்னை போன்றவர்)

      • இன்னும் ஒரு நண்பர் சாப்பிடும்போது தனக்கு காமிக்ஸ் கண்டிப்பாக தேவை என்று குறிபிட்டார்.

      • இளையர் ஒருவர் தனக்கு காமிக்ஸ் அறிமுகம் ஆனது தனது ஓவிய ஆசிரியர் மூலம் என்று தனது ஆசிரியரை பற்றி பெருமை போங்க பேசினார். கண்ணா நீயும் ஓவியம் வரைவதாக சொன்னாய், அதனை நமது ஆசிரியருக்கு அனுப்பலாமே? நமது புத்தகம்களில் வாசகர் கைவண்ணம் என்று அவர் அதனை பிரசுரிக்க செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

      • மற்றும் ஒரு நண்பரோ, காமிக்சை அவருக்கு அறிமுகபடுத்தி வைத்தது தனது தந்தை எனவும். ஒவ்வொரு மாதமும் காமிக்ஸ் வருவது தனது இறந்து போன தந்தையை காமிக்ஸ் வடிவில் பார்ப்பது போலவும் சொன்னது மனதை வருடியது.

      • கிடைத்த சிறு இடைவெளியில் ஏற்கனவே அறிமுகமான டெக்ஸ் சம்பத், சங்கர், வினோஜ், விஜய், கடல்யாழ் ரம்யா, விஸ்ணு பிரியா, ஓவியர் சாரதி மற்றும் அவரது நண்பர்கள், முதலை பட்டாளம் கலீல், சத்யா, அறிவரசு (ரவி), ஷாலும், மற்றும் புதிய நண்பர்கள் சிவா, இமானுவேல், திருநாவுக்கரசு, சுந்தர் சரவணகுமார், ஜகதீஷ், சரவணன், ரடிஜா இன்னும் இரண்டு அயல்நாட்டு நண்பர்களை சந்தித்து பேசினேன்.

      • நண்பர் ரடிஜா எனக்கு, பிரான்ஸ் மொழியில் உள்ள இரண்டு தோர்கல் புத்தகம்களை கொடுத்து தனது அன்பை வெளிபடுத்தினார். மீண்டும் ஒருமுறை நன்றி.

      • ராஜசேகர் வந்து இருந்த அனைவர்க்கும், ஒரு சிறிய பாக்கெட்டில் கடலை, தேன், கம்மர் கட்டு மிட்டாய் மற்றும் கொஞ்சம் கார சேவு என்று பார்சல் செய்து கொடுத்து இருந்தார். இது விலை மதிப்பு இல்லாதது... உங்கள் காமிக்ஸ் நேசம் சிலிர்க்க செய்கிறது.

      • சிவா மற்றும் இம்மானுவேல் என்ற நண்பர்கள் டெக்ஸ் படம் போட்ட T-Shirt பல நண்பர்களுக்கு கொடுத்து தங்களின் காமிக்ஸ் காதலை வெளிபடுத்தினார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் முதல் முறையாக இந்த சந்திப்பு வருகிறார்கள், காமிக்ஸ் பல வருடமாக படிகிறார்கள், நமது ப்ளாக் ரெகுலராக வரும் மௌன பார்வையாளர்கள். சார் இதனை பேர் வருவார்கள் என தெரியாது சார், தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள் சார்; அடுத்த முறை இன்னும் அதிகம் தயார் செய்து அனைவர்க்கும் கொடுப்போம் என்பது கண்களில் நீரை வர வளைத்து; அவர்களின் இந்த எண்ணம் மிகவும் பாராட்டுக்குரியது. T-Shirt quality அமேசிங்! அடுத்தமுறை எனக்கு ஒன்று வேண்டும் விலை என்ன என சொல்லவும்.

      Delete
    2. ஈரோடு புத்தக திருவிழா: விமர்சனம்: - Part 3 - End

      • ரத்த படலம் வெளி இட ஆசிரியர் தயாராக உள்ளார். 18 பாகம்கள் ஒரே இதழாக வெளி இடுவது மிகவும் கடினம், புத்தகம் ரொம்பவும் தடிமனாக இருக்கும் கையில் வைத்து படிக்க மிகவும் சிரமாக இருக்கும். Praticala யோசித்து பார்த்தால் அவர் சொல்ல்வது மிகவும் சரியே. அதே நேரம் அவர் 2 புத்தகம்களாக ஓவ்வொரு புத்தகமும் 9 பாகம்கள் கொண்டு, அல்லது 3 புத்தகம்களாக ஓவ்வொரு புத்தகமும் 6 பாகம்கள் கொண்டு தயாரிக்க தயார் என்றார். நாம் தான் நமது முடிவை சொல்ல வேண்டும். என்னை பொருத்தவரை 3 புத்தகம்களாக ஓவ்வொரு புத்தகமும் 6 பாகம்கள் கொண்டு வருவது. முதல் புத்தகத்தை அடுத்த வருடம், மீதம் உள்ள 2 புத்தகம்களை அடுத்து அடுத்த வருடம்களில் வெளி இடலாம்.

      • ரத்த கோட்டை அடுத்த வருடம் நமக்கு கிடைக்க உள்ளது.

      • Detective ஸ்பெஷல் பிரசன்னா கேட்டார், மனதில் வைத்து கொள்கிறேன் என்று சொல்லி உள்ளார்.

      • நமது ஆசிரியர் தனது தாய் மற்றும் தந்தையுடன் இந்த முறை வருகை தந்தது ஆனந்த அதிர்ச்சி!

      • நமது மூத்த ஆசிரியர் சொன்னது: இந்த காமிக்ஸ் உலகிற்கு எனது சரியான படைப்பு என்றால் ஒரு சிறந்த எடிட்டராக விஜயனை உங்களுக்கு கொடுத்தது. உண்மை நூற்றிக்கு நூறு.

      • மாலை நேரத்தில் ஈரோடு நண்பர்களுடன் டீ குடித்து மனம் விட்டு பேசியது. ஆமா என்ன பேசினோம் ? :-)

      • மாலை நேரத்தில் ஆசிரியரிடம் மரத்தடி உரையாடல், வழக்கம் போல் அவர் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததை video recording செய்து கொண்டு இருந்தேன்

      • ரடிஜா பிரான்ஸ் சென்று செட்டிலான கதையை (வரலாறு?) கேட்டு ரசித்தேன்.
      • மகேந்திரன் (மகி), இது போன்று நண்பர்கள் சந்திப்பு அடுத்து எனக்கு கிடைக்குமா என தெரியவில்லை; அதனால் இந்த முறை இதனை நழுவ விடாமல் கலந்து கொண்டேன். மிகவும் சந்தோஷபட்டார். மிகவும் எளிமையான நண்பர்.

      • இரவு கலீல், மாயாவி சிவா, மகேந்திரன். ரடிஜா போன்ற நண்பர்களுடன் ஜூனியர் குப்பனாவில் உணவு அருந்தியது. என்ன பில்ல ஜாஸ்தி போட்டுடாங்க. சாப்பிட்டுவிட்டு கை கழுவி வருவதற்குள் பில் செய்த புண்ணியவானுக்கு நன்றி.

      • மாயாவி சிவா வழகம் போல் கடமை வீரன் கந்தசாமியாக வலம் வந்தார். அவருடன் இரவு 10.45 USB Card Reader வாங்க கடை கடையாக ஏறி இறங்கிய பின் விடை கொடுத்து பெங்களூர் கிளம்பினேன்.

      அனைத்து தரப்பு நண்பர்களும் மிகவும் பணிவுடம், அன்புடன் பேசினார்கள். இந்த பந்தம் என்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      கோரிக்கை: இந்த முறை இந்த அளவு கூட்டம் எதிர்பாராதது, அடுத்தமுறை இன்னும் பெரிய முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கில் அமைக்கவும்.

      Delete
  40. இன்னும் பதினோரு நாட்களே உள்ளது நண்பர்களே நமது சந்திப்பிற்கு!இத்தருணம் சிறுவயதில் தீபாவளியை எதிர்நோக்கி காத்திருந்ததை நினைவு படுத்துகிறது்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க நம்ப வீட்டு திருவிழாற்கு வாங்க என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

      Delete
    2. அலோ பூபதி உள்ளூர்காரர், அவரு 30நிமிடத்தில் அரங்குக்கு வந்துடுவார். நீங்கள் பெங்களூரில் இருந்து 5மணி நேரம் வருனும். அவரை வரவேற்கிறீங்களோ!!!...
      ஆர்வத்துல ஈவியையும் வரவேற்பிங்க போல...ஹி..ஹி..

      Delete
    3. பரணி சார் நமக்கும் முன்பே ஈரோடு வந்துவிடுவேன் என மறைமுகமாக தெரிவிக்கிறார்!

      Delete
  41. இந்த மாத புத்தகங்கள் என்று கிடைக்கும்

    ReplyDelete
  42. ஈரோட்டிற்கு வர இயலாதவர்களுக்கு சர்ப்ரைஸ் புக் எப்படி கிடைக்கும்?

    ReplyDelete
  43. இரத்தக் கோட்டை முன்பதிவு செய்துவிட்டேன், இரத்தப்படலம் முன்பதிவு தொடங்கினால் உடனே முன்பதிவு செய்ய நான்ரெடி......
    ஆவலாக உள்ளேன் சார்.....

    ReplyDelete
  44. What a august surprise!!

    விடாதே-பிடி!!

    Friend க்கு 4 கால் 🐂🐂🐂

    (Surprise னா சொல்லக்கூடாது)

    புத்திக்கு தொியுது!!
    கைக்கு தொியமாட்டேங்குதே!!

    ReplyDelete
  45. ***** EBF-2016 பற்றி எடிட்டரின் எண்ணச் சிதறல்கள் - ஒரு ஃப்ளாஷ்பேக் - அவருடைய 'ஈரோட்டில் குற்றாலம்' பதிவிலிருந்து! *******

    ///நல்ல நாளில் 10 நண்பர்கள் ஒன்று திரண்டாலே அந்த இடம் அதகளமாகிடும் ; 100 பேர் குழுமிடும் பட்சத்தில் அந்த அதிர்வு எவ்விதமிருக்குமென்று விவரிக்கவும் வேண்டுமா ? ஒன்று மட்டும் நிச்சயம் - அந்த அறைக்கு நேற்று இரும்புக்கை மாயாவி என்ட்ரி தந்திருந்தால் - எந்த மின்சார துவாரத்துக்குள்ளும் விரல் திணிக்கும் அவசியமே இல்லாது - அரூபமாகிப் போயிருப்பார் ! நண்பர்களிடையே ஜுரமாய் பாய்ந்து கொண்டிருந்த உற்சாகத்தின் வோல்டேஜ் அத்தனை ஜாஸ்தி ! ///

    ////சொக்கன் சாரிலிருந்து துவங்கி அனைவருமே ஒரு சின்ன சுய அறிமுகம் செய்து கொள்ளும் விதமாய் மைக்கை ரவுண்டில் விட்டோம் ! மெலிதான தயக்கத்தோடு ஆரம்பித்த நண்பர்கள் நொடிக்கு நொடி உற்சாகம் கொப்பளிக்க தம்மை அறிமுகம் செய்து கொண்டதோடு - தங்கள் ஆர்வங்கள் ; ஆசைகள் ; எதிர்பார்ப்புகள் என்று குற்றாலமாய்க் கொட்டத் துவங்கினார்கள் !////


    //////நண்பர் திருப்பூர் சிபிஜியின் புதல்வி நிகிதா லேசான தயக்கத்தோடு மைக்கைக் கையில் வாங்கிய பின்னே பேசிய அழகினை அரங்கமே ரசித்துப் பாராட்டியது ! நண்பர் கரூர் குணாவின் ஜுனியரும் மைக்கில் பேச - முதல்முறையாக நம் நண்பர்களுள் ஒரு இளம் தலைமுறையின் வருகையை உணர முடிந்தது ! திருப்பூரிலிருந்தும், தாராபுரத்திலிருந்தும் ஒரு இளைஞர் படையும் வந்திருந்தது - காமிக்ஸ் என்பது நம் நாட்களோடு காலாவதியாகிப் போகும் சமாச்சாரமல்ல என்பதை உணர்த்துவதை போல ! //////


    /////3 மணி நேரங்களை ஒப்பேற்றுவது எவ்விதமோ என்று தயங்கியதெல்லாம் அபத்தமென்று புரிந்தது மணி இரண்டான போது ! நண்பர்களுக்கென நான் தயார் செய்து கொண்டு வந்திருந்த "பரீட்சைப் பேப்பரை" வெளியே எடுக்கக் கூட அவகாசமின்றி கலைப் பொழுது பறந்தோடிப் போயிருந்தது !! அடித்துத் தாக்கிய போட்டோ படலம் துவங்கிட - யார் யாரது கேமராக்கள் எந்தத் திசையிலிருந்து பளீரிடுகின்றன என்பதே தெரியா விதமாய் கலக்கித் தள்ளிட - இரண்டரை மணிக்கு அரங்கிலிருந்து வெளியேறிய பொழுது யாருக்குமே கிளம்ப மனமில்லை என்பது புரிந்தது ! ஒரு அசாத்தியக் காலைப் பொழுது கற்பனை செய்திரா ஒரு வெற்றியோடு நிறைவான மகிழ்ச்சி எனக்குள் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது ! நண்பர்கள் ஒட்டு மொத்தமாய்க் குழுமி அதகளம் செய்து விட்ட சந்தோஷம் ஒருபுறமெனில் - வரும் நாட்களில் இத்தகைய சந்திப்புகள் மேலும் மேலும் high voltage சமாச்சாரங்களாகிடும் வாய்ப்புகளுக்கு இதுவொரு ஆரம்பப் புள்ளியே என்ற புரிதலும் ஜிவ்வென்ற உற்சாகத்தை ஊட்டியது !////

    ReplyDelete
    Replies
    1. தேர்ந்த பத்திரிகையாளருக்கே உரிய எழுத்து நடை.இன்னும் அந்த வெற்றிடத்தில் எத்தகைய திறமையெல்லாம் ஒளிந்துள்ளதோ.இறைவா!!!.
      ஈ.வி தொடரந்து எழுதுங்கள்.மிகவும் இரசிக்கும்படி உள்ளது.

      Delete
    2. @ Sri Ram

      ///தேர்ந்த பத்திரிகையாளருக்கே உரிய எழுத்து நடை///

      ஹிஹி! அவர் ஏற்கனவே தேர்ந்த பத்திரிக்கையாளர் தான். தன் அலட்டல் இல்லாத, ஃப்ரண்ட்லியான எழுத்துக்களால் நம் அனைவரையும் வசியப்படுத்தியிருக்கும் எடிட்டரின் சென்றவருடப் பதிவின் ஒரு பகுதிதான் அது! :)

      Delete

  46. இரத்த கோட்டை:-

    *"காமிக்ஸ்னா டெக்ஸ்; டெக்ஸ்னா காமிக்ஸ் "
    ----இதாங்க என் காமிக்ஸ் டெபனீசன். சின்ன குழந்தைல முறையாக காமிக்ஸ் படிக்கலாம் வர்லீங்க நானு. 15வயசில் திடீரென இந்த காமிக்ஸ் பக்கம் ஒதுங்கின ஆளு நானு. அப்படி டெக்ஸ்க்காக லயன் காமிக்ஸ்ஸை மட்டும் தேடி தேடி படித்து வந்த காலம் 1990களின் இறுதி. அப்ப நானு ஓசி வாங்கும் மூத்த நண்பர்கள் ஏன்டா தம்பி இதை பாரு முத்து நல்லா இருக்கும்டாம்பாங்க. டெக்ஸ்ம் வந்திருக்காண்ணே? என கேட்டா போதும், ஏதோ எக்ஸிபிசன்ல தொலைஞ்ச பய மாதிரி பார்ப்பாய்ங்க. அப்படியே எதையாவது சமாளித்து லயன் காமிக்ஸ்களை படிக்க அள்ளிட்டு வந்துடுவேன். அப்டியே போகைல, கடேசியா கடைல வாங்குற டைமும் வந்தது. அப்பத்தான் ஒரு தடவை முத்து காமிக்ஸ்ல கேப்டன் டைகர் தோன்றும் "தங்க கல்லறை" னு ஒரு புக் தொங்கிட்டு இருந்தது.

    *கேப்டன், மேஜர், கர்னல்(சுபாவின் ரானுவ நாவல் கதைகள் படிக்கும்போது மனசில ஒரு சிலிர்ப்பு ஓடும்) னா ஒரு மரியாதை மனசில். இந்த கேப்டன் டைகரும் படிக்காமலே ஒரு மதிப்பை பெற்றாரு என் மனசில். ஆனால் விலை ரூபாய் 7, எக்ஸ்ட்ராவா இரண்டு தபா மளிகை கடைக்கு போயிக்கலாம்னு சமாதானமாகி(எல்லோரும் மளிகை கடைக்கு போயிருப்பீங்க அதனால் அந்த ரகசியம் நாம அறிஞ்சது தானே), வாங்கிட்டு போனால் டெக்ஸ்க்கு சவால் உடுறாரு கேப்டனு. சும்மா மெரண்டு போயிட்டேன். ஆனால் வந்ததே உலக கடுப்பு "தொடரும்" னு போட்டா,.... (இப்பவா இருந்தா ஆசிரியர் சாரோட நிலைமை...ஹி..ஹி...). அடுத்த மாசமே இதன் க்ளைமாக்ஸ் படிக்கவும் இந்த கேப்டன் பய நம்ம செகண்ட் பேவரைட் ஆயிட்டாரு. பலமுறை படித்த புத்தகங்கள்ல அதுவும் ஒன்னு.

    *டைகரின் அடுத்த கதை இரும்புக்கை எத்தன்(முத்து250) வரவும் செம எதிர்பார்ப்பு. ஆனால் 2பாகத்தோட நிறுத்திபுட்டு மின்னும் மரணம்னு ஒன்ன கையில் எடுத்துபுட்டார் சார்.(குறுக்கால அந்த 2வது பாகத்தை ஆசிரியர் சார் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்"னு புரோட்டோ போடவும், பதிலுக்கு நம்ம ஆளுங்க அவரை கொத்து புரோட்டோ போட்டாங்க- அது தனி கதை). அட அதைத்தான் முழுசா போட்டாரா, அதுவும் இல்லை. அதை அந்தரத்தில் விட்டுட்டு அடுத்ததை ஆரம்பிச்சுட்டார். (இப்படி பிச்சி பிச்சி கொத்து புரோட்டா போடவும் அந்த டைகர் பயலால டெக்ஸ்க்கு சமமான சரியான போட்டியை தரமுடியல, அதில் எனக்கு ஒருவித குரூர திருப்தி)

    *அப்படி புதுசா ஆரம்பித்சதுதான் டன்ட ட ட டன் டட டைன் " இரத்த கோட்டை, இரத்த கோட்டை.... இரத்த கோட்டை ". முதல்லயே அறிவிச்சிட்டாரு, "மற்ற தொடர்கள் போல அந்தரத்தில் தொங்காது தொடர்ந்து போட்டு முடிக்கப்படும்னு". ஒருவித நிம்மதி கலந்த ஆர்வத்தோடு இந்த தொடரை நண்பர்கள் அனுகினார்கள். இதுவரை வந்த தொடர்களில் டைகரு கொஞ்சம் நல்லா பர்சனால்டியா இருப்பாரு. இதில் கொஞ்சம் இளவட்டம், ஆனா கதை பட்டாசு சரம்.

    ReplyDelete
    Replies
    1. *ஆட்டத்தின் மையம், அதான் பேர்லயே இருக்கே கோட்டைனு. இது அரிசோனாவில் உள்ள "நவஜோ கோட்டை" தான். ஆரம்பம் முதலே படு சுவாரஸ்சமான செம ஸ்பீடான கதையோட்டம். டைகர் அறிமுக காட்சியிலேயே பட்டையை கிளப்பிடுவாரு. சும்மா 5பாகத்திலும் மனுசன் ஓடு ஓடுனு ஓடி நினைச்சதை சாதிக்க துடியாய் துடிப்பாரு.

      *செவ்விந்தியர்களுக்கும் ரானுவத்துக்கும் நடக்கும் போராட்டாங்கள் எப்பவுமே கண்ணுக்கு செம விருந்து போடுபவை. இதில் இன்னும் ஒரு படி மேலே அடுத்து என்ன? அடுத்து என்ன? என எதிர்பார்ப்பு பக்கத்துக்கு பக்கம், பாகத்துக்கு பாகம் ஏகத்துக்கும் அதிகரித்து கொண்டே இருக்கும்.

      * கேரக்டர்கள் ஒவ்வொன்றும் அப்டியே ரியாலிட்டில ஜொலிப்பாங்க. அட டா , கலர்ல இன்னும் அம்சமா இருப்பாளே அந்த கர்னலின் பொண்ணு, நேர்மையான தீர்வு காண துடிக்கும் கர்னல்; எப்படியாவது தான் பேர் வாங்கனும்னு ஆட்டத்தை மாற்றி தன்வசப்படுத்தும் பாஸ்கம்; பாஸ்கமை விஞ்சும் கொடூரன் ஒற்றைக் கண் குவானா; நேர்மையின் சிகரம் செவ்விந்திய குரோ; அந்த டெப்டேசன்ல வரும் லெப்டினன்ட் & டைகர் இருவரும் மாறி மாறி உயிரை பணயம் வைத்து செய்யும் சாகசங்கள் ஒவ்வொன்றும் லப்டப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்பவை.

      *டைகருக்கு உதவும் கிழட்டு ஜிம்மி, டைகரை நம்பும் கோஸைஸ்& டைகரின் முயற்சிகளை முறியடுக்க படாதபாடு படும் குவானாவின் நரித்தந்திரங்கள். டைகரின் சமயோசித உத்திகள்லாம் உச்சத்தில் இருக்கும் இந்த தொடர் முழுதும். இறுதி பாகத்தை முடிக்கும் வரை எந்த வேலையும் ஓடாது. அவ்வளவு ஆர்ப்பாட்டமான தொடர். நம்மை கட்டிப்போடும் மற்றொரு கேரக்டர் மெக்ஸிகன் பின்டோ.

      *இந்த இரத்த கோட்டை தொடருக்கு இடையேயும் ஊடால ஒரு மாதம் ஒரு கதையை விட்டு தன் வேலையை அப்போதும் செவ்வனே செய்தார் நம் அன்பின் ஆசிரியர் சார். இப்போது ஓரே மூச்சில் படிக்கவுள்ள நண்பர்கள் கூடுதல் அதிர்ஷ்டசாலிகள். இரத்த கோட்டை தொடரும், அதை அடுத்து வந்த மின்னும் மரணம் தொடரின் க்ளைமாக்ஸ் "புயல் தேடிய புதையலும்" சேர்த்து ஈட்டிய பிரம்மாண்டமான வெற்றிகள் தமிழ் காமிக்ஸின் டாப் கெளபாய் அந்தஸ்த்தை சிறிது காலம் டெக்ஸிடம் இருந்து பறித்து டைகரிடம் தந்தன. அத்தகைய புகழ் வாய்ந்த இரத்த கோட்டையை நீங்கள் புக்கிங் செய்திட்டீர்களா நண்பர்களே....!!!!

      Delete
    2. @ டெக்ஸ்

      செம்ம!!!

      Delete
    3. நல்ல விமர்சனம்.

      Delete
    4. பத்தாது சார். பத்தாது.
      I want more emotion.

      Delete
    5. அட்டகாசமான தொடக்கம் கொடுத்து மிகத்திறமையாக முடித்துள்ளீர்கள்.டெக்ஸ் விஜய் ஒரு கதைய விமர்சனம் செய்தால் எந்த Level ல இருக்கும்னு தெரியும்.டைகர் கதைக்கு விமர்சனம்கறது வேற Level.

      Delete
    6. அட்டகாசமான தொடக்கம் கொடுத்து மிகத்திறமையாக முடித்துள்ளீர்கள்.டெக்ஸ் விஜய் ஒரு கதைய விமர்சனம் செய்தால் எந்த Level ல இருக்கும்னு தெரியும்.டைகர் கதைக்கு விமர்சனம்கறது வேற Level.

      Delete
  47. கேப்ஷன் 1

    டைகர் : காதல்ங்குறது செடியில பூக்குற பூ மாதிரி. ஒருதடவை பூத்து உதிர்ந்துடுச்சின்னா மறுபடி பூக்காது.

    ஜிம்மி : சில்க்கு பின்னாடி திரியாதடான்னு சொன்னேனே கேட்டியா !? இப்ப கிறுக்கு புடிச்சி தத்துவமா பேசிட்டு இருக்கியே டைகரு.!

    ரெட் : டைகர் மூஞ்சியப் பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது ஹி ஹி! . சிரிச்சா அடிப்பானோன்னு பயமா இருக்கு..!

    ReplyDelete
    Replies
    1. பதிவு முடிஞ்சாலும் கேப்சன் இன்னும் முடியலையோ?!?

      Delete
  48. கேப்ஷன் 2

    டைகர் : கைவசம் இருந்த நாலு நல்ல கதைகளும் ஆகஸ்டு ரத்தக்கோட்டையோட முடிஞ்சிப்போச்சி. இனிமே அந்த இளமைத்தொடரை வெச்சிதான் காலத்தை தள்ளியாகணும்.! ஏற்கனவே அங்கே பட்ஜெட், இடப்பற்றாக்குறைன்னு ஏகப்பட்ட பிரச்சினை ஓடிட்டு இருக்கு. இந்த லட்சணத்துல ஜிஎஸ்டி வேற வந்து பயமுறுத்துது. ஹூம்..! போறபோக்கைப் பாத்தா அடுத்த வருசம் நமக்கு இதயத்துல மட்டும்தான் இடம் கிடைக்கப்போகுதுன்னு நல்லா தெரியுது ஜிம்மி.!

    ஜிம்மி : டைகருக்கு நல்ல கதை தீர்ந்து போனாலும் நமக்கு "சரக்கு " தீராம கிடைக்கப்போறது உறுதி. அதுக்கு ஜிஎஸ்டியும் கிடையாதாமாம். என்ஜாய்டா ஜிம்மி.!

    ரெட் : கேப்டன் பிரின்ஸ் மாதிரி நாமளும் ஒரு போட்டை வாங்கி ராஜாளி ன்னு பேரு வெச்சிகிட்டு கடல்ல சுத்தி வந்தோம்னா, புது ஜோனர்னு ஏமாந்துபோய் ஒரு ஸ்லாட் குடுத்துட மாட்டாங்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ///கேப்டன் பிரின்ஸ் மாதிரி நாமளும் ஒரு போட்டை வாங்கி ராஜாளி ன்னு பேரு வெச்சிகிட்டு கடல்ல சுத்தி வந்தோம்னா, புது ஜோனர்னு ஏமாந்துபோய் ஒரு ஸ்லாட் குடுத்துட மாட்டாங்களா என்ன?///

      :)))))

      Delete
  49. "இரத்தக் கோட்டை" is one of the best stories I have ever read.
    I am eagerly waiting to read it in color in Tamil.

    ReplyDelete
  50. திரு.ஈ.வி. கடந்தகால பதிவுகளை அகழ்வாராய்ச்சி பண்ணி பதிவிட்டிருக்கும் உங்களது மெனக்கெடலுக்கு ஓராயிரம் நன்றிகள்.
    திருவிழாவிற்கு ஒருமுறைகூடவந்ததில்லை.
    தோழர்கள் மற்றும் சகோதரிகளை சந்தித்ததில்லை.
    நீங்கள் பழைய நினைவுகளை பதிவிடுகையில் உள்ளுக்குள் சந்தோஷம் ஊற்றெடுப்பதற்கு பதிலாய் எதையோ இழந்தது போன்று இதயம் பாரமாவது எனக்கு மட்டும்தானா? கோபம், சோகம் எதையும் மறைக்கத்தெரியாத மனிதனாக வளர்ந்துவிட்ட எனக்கு உமது பதிவுகள் இனம் தெரியாத சோகத்தை பிரசவிப்பது சத்தியமான நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை நினைப்பதே அலாதியான சுகம்தானே நண்பரே,மேலும் இதில் ஒரு உத்தியும் உள்ளது இந்நினைவுச் சுவடுகளை பார்த்தாவது,அச்சுவட்டில் தன் தடம் இம்முறையாவது பதியட்டும் என்று ஆர்வத்துடன் நிறைய பேர் இவ்வருட நிகழ்வில் வந்து சங்கமிக்க வாய்ப்புண்டே.

      Delete
    2. திரு.ATR

      பெருமைக்காகவோ, உங்களை மேலும் சோகப்படுத்தவோ சொல்லப்பட்டதல்ல பின்வரும் என் கூற்று! அது சந்தோச எண்ணங்களின் ஊற்று!

      இதுவரையிலும் EBF கொண்டாட்டத்தைத் தவறவிட்டவர்கள், காமிக்ஸ் என்ற மந்திரச்சொல்லின் உச்சபச்ச அதிர்வுகளை உணராதவர்களே!

      ஒரு பகல்பொழுது முழுக்க நண்பர்களுடனும், இதமான தென்றல் தலைகோதிச் செல்லும் மாலைநேரத்தில் - மரத்தடியிலோ, வெட்ட வெளியிலோ எடிட்டருடனான ஒரு காமிக்ஸ் அரட்டையிலும் பங்குகொண்டவர்களால் மட்டுமே முழுமையாய் உணரமுடியும் - அந்த உற்சாக அதிர்வுகள் தரும் இன்பத்தை!

      உங்கள் உடல்நிலை ஒத்துழைக்குமானால் இம்முறை(யாவது) EBFக்கு வாருங்கள் சார்! வரவேற்று உபசரிக்க நண்பர்கள் பலரும் அன்போடு காத்திருப்போம்!

      Delete
    3. //இதுவரையிலும் EBF கொண்டாட்டத்தைத் தவறவிட்டவர்கள், காமிக்ஸ் என்ற மந்திரச்சொல்லின் உச்சபச்ச அதிர்வுகளை உணராதவர்களே!////+111111

      Delete
  51. ஈரோடு ஈரோடு ஈரோடுன் னு
    சும்மா சும்மா சொல்லிட்டே இருக்காங்க
    போய் தா பாப்பமேன்னு இருக்கேன்

    காற்றில் கரைந்த கப்பல்களில் ஆரம்பித்த பந்தம்
    இன்னமும் விடவில்லை
    விட்டு விடுதலையாகவும் முடியவில்லை
    Lady s வரை தொடர்கிறது
    ஒரு உண்மை ?
    இது ஒரு வகை போதை
    30 31 தேதி யாயிட்டாலே போதும்
    மந்திரிச்சிவிட்ட மாதிரி கொரியர் ஆபீஸ் போய்ட்டு போய்ட்டு வரும் வண்டி
    காலைல ஆபீஸ் போயி மாலை பல பல மன அழுத்தங்களோடு வீட்டுக்குள் நுழைந்தாலோ வீட்டு அழுத்தங்கள்

    இடையில் சொந்தங்களின் மனஸ்தாபங்கள்
    குழந்தைகள் வளரும் போது கூடவே போட்டி போட்டு நம் மனம் வளர்க்கும் மன வள கவலைகள்
    வெள்ள நிவாரண நிதிகளை போல நம்மை எதிர்(ரி) நோக்கும் சகோதரிகள்

    உள்ளீடற்ற இவ்வாழ்வில்
    தள்ளிவிட முடியாத
    சந்தர்ப்ப வாத நோய் ஜாலங்கள்

    எல்லாவற்றுக்கும் முற்றும் போட வைக்கும்
    நம் காமிக்ஸ் இதழ்கள்

    எல்லாம் இத(ய)மாக
    குடந்தை ஜனா

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தமான உண்மை.

      Delete
    2. அருமை நண்பரே!! 👏👏👏

      Delete
    3. வாங்க J .
      ஜே ஜே னு ஐக்கியமாகலாம்

      Delete
    4. J-வந்துட்டாரு, K- எங்கப்பா...

      Delete
    5. அழகான எழுத்துநடை!

      EBFல் உங்களைச் சந்திக்கக் காத்திருப்போம் ஜனா அவர்களே!

      Delete
    6. சூப்பர் ஜனா சார்!

      Delete
  52. மீண்டும் கேப்சன் போட்டிகாண்டி,(2)
    A:என்னோட மறுபதிப்பான இரத்தக் கோட்டை முன்பதிவுக்கு ஆளுங்க முண்டியடிக்க ஏதாவது யோசனை சொல்லுங்க நண்பர்களே?
    B:அட போய்யா,இன்னிக்கு உற்சாக பானத்துக்கு யாராவது ஸ்பான்சர் கிடைப்பாங்களான்னு நான் கவலைப்பட்டுகிட்டு இருக்கேன்.
    C:பாவம் நம்ம டைகரு ரிட்டையர்மெண்ட் காலம் வந்துடுச்சின்னு புரியாம புலம்பிகிட்டு இருக்காரு.

    ReplyDelete
  53. மீண்டும் கேப்சன் போட்டிகாண்டி,(3)
    A:இந்த வருஷம் நம்ம சாகஸமான இரத்தக் கோட்டை விற்பனை தூள் பறக்க நாம இரத்தம் சிந்தி உழைக்க தயாரா இருக்கனும் நண்பர்களே.
    B:வந்தோமா,சரக்கை உள்ள வுட்டோமான்னு இல்லாம.வயசான காலத்துல என்னைய ஏண்டா தொந்தரவு பண்றிங்க.
    C:யோவ் அப்ரஸண்டிகளா அதுக்கெல்லாம் ஆல்ரெடி அங்க ஆளுங்க இருக்காங்கய்யா.

    ReplyDelete
  54. இரத்தக் கோட்டை என்று கடைகளில் கிடைக்கும்?. இரத்தப் படலம்_ஒன்றா இரண்டா மூன்றா எப்படி வரப் போகின்றது? சஸ்பென்ஸ் தாங்க முடியலைடா சாமி?!"

    ReplyDelete
  55. சாதனை .வாரா வாரம் பதிவு உப பதிவு என்று தளம் களை கட்டுகின்றது.மகிழ்ச்சி.

    ReplyDelete
  56. நண்பர் மாடஸ்டி வெங்கடேசன் அவர்கள் 'சிறையில் ஒரு சிட்டுக்குருவி' வெளியாகி சக்கைப்போடு போடும் நிலையிலும் இங்கே தலைகாட்டாதது நண்பர்கள் பலருக்கும் கேள்விக்குறிகளை எழுப்பிட, அவரிடமே விசாரித்ததில் - கடந்தமாதத்தில் தன் தந்தையை இழந்து, அந்தத் துயரத்தில் இருந்திருக்கிறார் ( மிகவும் வருந்துகிறோம் MV அவர்களே!)

    துயரத்திலிருந்து மீண்டெழ அவரை EBFக்கு அழைத்திருக்கிறேன்!

    வாருங்கள் நண்பரே... இழந்த உற்சாகத்தை இந்தப் பயணம் உங்களுக்கு மீட்டுத்தரும்!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வருத்தங்களும் MV sir.
      தயவுசெய்து ஈரோடு வாருங்கள், இந்த துயரத்தில் இருந்து ஓரளவு மீள இந்த பயணம் உதவும்.

      Delete
    2. உங்களுடைய துக்கத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன் MV சார்.

      Delete
    3. M V sir,உங்களுடைய துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றேரம்.

      Delete
    4. ஆழ்ந்த வருத்தங்கள் MV சார்!
      நம்ம ஈவி பாஸ் சொல்ற மாதிரி EBF போக முடியுமா பாருங்க சார் !
      கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!

      Delete
    5. M.V. அவர்களே
      தங்கள் தந்தையாரின் இழப்பு பேரிழப்புதான்.
      ஆனால்
      இயற்கை தன் கடமையை செய்கிறது.
      நாமும் நம் கடமையை செய்யவேண்டாமா?
      எனவே
      மறுபடி புத்துணர்ச்சியுடன் மீண்டு(ம்) இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிட வேண்டுகிறேன்.
      அப்படியே நமது blog பக்கமும் கவனத்தை செலுத்துங்கள். சொல்வது எளிது. செயல்படுத்துவது கடினம் தான்.
      இருந்தாலும் தோழர்களின் அரவணைப்பு விரைவில் உங்களது கவலைகளை மறக்கவைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை மறக்கவேண்டாம்.

      Delete
    6. என்னுடைய வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே,விரைவில் மீண்டு வாருங்கள்.

      Delete
    7. மிகவும் வருத்தமடைகிறேன் M.V. சார்
      எல்லா சூழ்நிலைகளுக்கும் மாடஸ்டியின் கதைகளிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டாக கூறி சூழ்நிலைகளை சமாளித்ததாக சொல்வீர்கள் இந்த ஈடு சொல்ல முடியாத இழப்பிற்க்கும் மாடஸ்டியின் இழப்புகளை சமாளிக்கும் திறனை மனதினில் நினைத்து மீண்டு வாருங்கள் M.V.சார்

      Delete
    8. எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் மடிப்பாக்கம் சார்....தாங்கள் இந்த வேதனையில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் ..

      Delete
    9. ஆழ்ந்த வருத்தங்கள் மடிப்பாக்கம் சகோதரரே...தாங்கள் வேதனையிலிருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் வர வேண்டி கொள்கிறேன்

      Delete
    10. ஆழ்ந்த அனுதாபங்கள் MV சார் வேதனையில் இருந்து மீண்டு வர ஆண்டவனனிடம் பிரார்த்திக்கிறேன்!

      Delete
    11. வருத்தம் தோய்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும் மவெ சார்!

      Delete
    12. ஆழ்ந்த அனுதாபங்கள் MV சார். காலம் உங்கள் கவலையை ஆற்றட்டும்.! ஆறுதல் கூற வார்த்தையில்லை நண்பரே! மீண்டு வாருங்கள்!

      Delete
    13. திரு.M.V அவர்களுக்கு இத்தளம் வாயிலாக உங்களுடைய துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் நண்பரே.காலம் இந்த வேதனையில் இருந்து தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் மீட்டுத் தரும்.வருத்தம் நிறைந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.வேதனையை வென்று ஆறுதல் கொள் மனமே.

      Delete
    14. திரு.M.V அவர்களுக்கு இத்தளம் வாயிலாக உங்களுடைய துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம் நண்பரே.காலம் இந்த வேதனையில் இருந்து தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் மீட்டுத் தரும்.வருத்தம் நிறைந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.வேதனையை வென்று ஆறுதல் கொள் மனமே.

      Delete
  57. கேப்ஷன்.

    டைகர் : வர வர நிலமை படு மோசமாயிட்டே வருதே. டைம் சரியில்லேன்னு அந்த மலயாள பகவதி சொன்னாருன்னு நானும் மூணு வேளை குளிக்கிறேன். ஆறு வேளை சாமி கும்பிடுறேன். மாரியம்மன் கோயில் தாயத்தை கட்டிருக்கேன். அப்பவும் வேலைக்காகலையே. எடிட்டர் வேற 400முன்பதிவு வர்றதுக்கே மூச்சு திணறுதுங்கறாரு. இந்த சங்கதி டெக்ஸ் பயலுக்கு தெரிஞ்சாக்கா காது வரைக்கும் சிரிப்பானே. வந்தவரை வாழ வைக்கும் ஈரோடு அப்டீங்கறாங்க. ஈரோட்ல ஏதாச்சும் விடிவு காலம வருதான்னு பாக்கலாம்.

    ஜிம்மி : நேத்துதான் அடிச்சிபுடிச்சி அரிஸோனா பக்கத்துல பார்மேனா செலக்ட் ஆனேன். இந்த டைகர் பய ஈரோடு போனாக்கா A/c. பார்ல வேல கெடைக்கும். சம்பளம் போக டெய்லி தொண்டையை நனைக்க ஒரு பாட்டில் ப்ரீயா கெடைக்கும் ஆசையா வந்தாக்க. இவன் ஈரோட்டுக்கு கெளம்பற மாரி தெர்லயே.

    ரெட் : கடவுள் படைச்சதில மோசமான விசயம் ரெண்டு. ஒண்ணு ஒடைஞ்ச மூக்கு. இன்னொன்னு வழுக்க மண்டை. நீங்கெல்லாம் நல்ல்லா வருவீங்கடா.

    ReplyDelete
    Replies
    1. @ Govindaraj Perumal

      செம! செம! :))))

      Delete
    2. சக மனிதனைப் பாராட்டவும் ஒரு பெருந்தன்மை வேண்டும்.
      அது உங்களிடத்தில் ஏகமா இருப்பதாலேயே இந்த தளத்தில் அனைவருக்கும் பிடித்தமானவராக உள்ளீர்கள்

      Delete
    3. சூப்பர் நண்பரே கோவிந்த்...

      இந்த கேப்சனை போன பதிவுல போடுங்க, அங்கே தானே போட்டி நடக்குது...

      Delete
    4. செமயா எழுதுறீங்க சகோதரரே

      Delete
    5. சகோதரர் செமையாக எழுதுவது உண்மைதான் சகோ.
      ஆனால்
      நீங்களும், ஸ்டீலும் கோவை புத்தக கண்காட்சி பற்றிய தொகுப்பை எழுதக் காணோமே!
      மறக்காமல் ஸ்டீலுக்கு கொடுத்த அந்த வடை மாதிரியான ஒன்றைப்பற்றியும் நன்றாக ருசியாக பதிவிடுங்கள்.sorry வடையை பற்றி எழுதியதும் ருசியான என்று பதிவிட்டுவிட்டேன்.
      ருசியாக என்பதை விளக்கமாக என்று திருத்திக்கொள்ளுங்கள் சகோ.

      Delete
    6. @AT Rajan
      காலையிலிருந்து அதை தான் எடிட் செய்து கொண்டு இருக்கிறேன் சகோதரரே
      அவ்வப்போது மீட்டிங் வைச்சுருங்கோ
      அப்புறம் வேலையை கவனிக்க குறைந்த நேரமே உள்ளது சகோதரரே
      நாளை காலை பதிவு செய்து விடுகிறேன் சகோதரரே :)

      Delete
    7. @ Govindaraj Perumal

      ///
      இந்த தளத்தில் அனைவருக்கும் பிடித்தமானவராக உள்ளீர்கள்////

      பெருமை பெருமையாவும், மகிழ்ச்சி மகிழ்ச்சியாவும் வர்து! :)

      நண்பர்கள் காட்டும் இந்த நேசத்தையே வாழ்க்கையில் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்!

      கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு இப்படியொரு மாபெரும் நட்புவட்டம் அமையுமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை!

      காமிக்ஸ் தந்த கொடையல்லவோ?! :)

      Delete
    8. Sorry கடல் உங்களது வேலை நேரத்தில் நான் வேறு இடையூறு பண்ணிவிட்டேன்.முதலில் உங்களது வேலைதான் முக்கியம். இங்கு பதிவிடுவது அப்புறம்.
      நேரம் கிடைக்கையில் பதிவிடுங்கள்.அது போதும்.

      Delete
    9. ///கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு இப்படியொரு மாபெரும் நட்புவட்டம் அமையுமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை!////---யெஸ்& நம் எல்லோருக்கும் அப்படித்தானே...

      என்னைப்பொறுத்து இது ஆசிரியர் சார் தந்த கொடை என்பேன். 25வருடங்களாக காமிக்ஸ் படிக்கிறோம்; சிலர் 40வருடங்களுக்கு மேலாக. ஆசிரியர் சார் முதன் முதலில் வாசகர்களை சந்திக்க களம் இறங்கியதை அடுத்தே இந்த நட்பு வட்டங்களும் அமைந்தன. இல்லையெனில் தளத்தில் இன்றுவரை வெறும் பெயர்களாக மாத்திரமே நாம் ஒருவரை ஒருவர் அறிவோம்....

      Delete
  58. ஒவ்வொ௫ பதிவுக்கும் தலைப்புகளை கச்சிதமாக அமைக்கின்றீர்களே,எப்படி சார்?.

    ReplyDelete
    Replies
    1. குறிப்பாக, இப்போதைய சூழ்நிலைகளுக்கு இந்தத் தலைப்பு 100% பொருந்திப் போகிறது!

      Delete
  59. ஈரோடு 2016விழாவில் கலந்து கொண்டு நானும் செமயாக என்சாய் செய்தேன் நண்பர்களே...
    அந்த உற்சாக சூழலும் அது தரும் எனர்ஜி லெவலும் அங்கே இருந்தால் தான் உணரமுடியும். ஆகவே அனைவரும் வாரீர்;ஆனந்தம் அடைவீர். 2016ஈரோடு என் பார்வையில்(மறுஒளிபரப்பு...புதிய நண்பர்களுக்காக...., பழைய நண்பர்களும் கூட படிக்கலாம்)....

    ////சேலம் Tex விஜயராகவன்8 August 2016 at 13:16:00 GMT+5:30
    சனிக்கிழமை ஈரோடு மீட்டிங்ல சில எதிர்பாராத ஆச்சர்ய நிகழ்வுகள்....

    *சில நாட்களுக்கு முன் ஆசிரியர் ஒரு சர்ப்ரைஸ் வி.ஐ.பி. நம் விழாவிற்கு வர இருக்கிறார் என அறிவித்து இருந்தார், நண்பர்களும் பலவேறு கணிப்புகளை சொல்லி இருந்தனர். யார் அவர்?? என நானும் யோசித்து கொண்டே சென்றேன். நண்பர்களை வரவேற்ற வண்ணம் மீட்டிங் ஹால் உள்ளே சென்று மேடையருகே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த தம்பதியினர் இருவரை பார்த்த உடன் தான் என் மூளையில் மின்னல் வெட்டியது. அந்த சஸ்பென்ஸ் வி.ஐ.பி. நம் ஆசிரியர் அவர்களின் தாயார் என அந்த கணம் தெரிந்தது. ஆசிரியரின் மேல் நான் வைத்து இருக்கும் மரியாதை இன்னும் ஒருபடி கூடிவிட்டது நண்பர்களே....

    ---- இந்த உலகத்தை நம் ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தி அதில் ஜீவித்திருக்கும் வாய்ப்பை அளித்த அவரவர் தாயாரை விடவும் இந்த உலகத்தில் பெரிய வி.ஐ.பி. உண்டா நண்பர்களே??????.....

    *நண்பர்களால் நிரம்பி வழிந்தும், நண்பர்கள் உற்சாகத்துடனும் ஆசிரியரிடம் உரிமையுடனும், தோழமையுடனும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டும் மீட்டிங் நடந்து கொண்டு இருந்ததையும், ஆசிரியரின் தாயார் திகைப்புடன் கவனித்து கொண்டே இருந்தார்கள்....தன் மகன் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியிட்டு வருவதும் , அவ்வப்போது மீட்டிங் என போவதும் அவருக்கு வழக்கமாக இருந்தாலும் , மீட்டிங் என்றவுடன் ஏதோ ஒரு கம்பெனி மீட்டிங் போல பேசுவாங்க என பார்த்திருந்த அவருக்கு........
    ------ நண்பர்கள் ஆரவாரத்துடன் இங்கே அங்கே வளைய வந்து ஒவ்வொன்றும் செய்வதும், நண்பர்களுக்குள் நிகழ்ந்த ஆரப்பாட்ட உரையாடல்கள், உற்சாக ஆரவாரங்கள், ஆசிரியருடன் ஒவ்வொரு காமிக்ஸ் ஹூரோ பற்றியும் தத்தம் பழைய நினைவுகளை ஆர்வம் பொங்க விவரித்ததையும் , புத்தகங்கள் வாங்கிய நினைவுகளை பகிர்ந்த்ததையும், பார்த்து முதலில் திகைப்பு கூடிக்கொண்டே போனது.

    * இந்த காமிக்ஸ் என்னும் சுவையை நமக்கு தந்ததுடன் மற்றவர்களுக்கு கிடைக்காத பல்வேறு வகையான காமிக்ஸ் ஹீரோக்களை அளித்ததற்கும் , வாழ்வை அர்த்தம் ஆக்கியதற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆசிரியருக்கு நண்பர்கள் வாரியிறைத்தது கண்ட அவரது திகைப்பு , பெருமிதமாக மாறியது. ஆசிரியருக்கு சிறுவயதில் சாப்பாடு ஊட்டும்போது அந்த ஒரே மான்டரேக் கதையை பல நூறு முறைகள் சொல்லி அவரை வளர்த்த நிகழ்வுகளை , சகோ கடல்யாழிடம் பெருமிதம் பொங்க தாயார் அவர்கள் விவரித்து கொண்டு இருந்ததை, நண்பர்களை வரவேற்றுக்கொண்டே அவ்வப்போது நானும் கவனித்து கொண்டே வந்தேன். விழா முடிந்து ஆசிரியரின் தாயாருடன் பேசும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ஆசரியர் மேல் நாம் வைத்திருக்கும் அன்புகலந்த மரியாதை கண்டு திக்குமுக்காடி போய்விட்டதாக தெரிவித்தார்கள்.
    தன் மகனை பெற்றதற்காக "ஈன்ற பொழுதில் அடையாத ஆனந்தத்தை இப்போது அடைந்து விட்டதாகவும் , அந்த குழந்தை விஜயன் மேல் அவர் காட்டிய அன்புக்கு , இப்போது ஆசிரியர்மேல் நாம் அனைவரும் பொழியும் அன்பு மழை சற்றும் சளைத்ததல்ல என நா தழுதழுக்க தெரிவித்தார்கள். இந்த நம்முடைய அன்பும் அரவணைப்பும் ஆசிரியர் மேல் மென்மேலும் தொடரவேணும் என கண்ணில் நீர் மழ்க தாயார் அவர்கள் கேட்டு கொண்டார்கள். அவரின் கரத்தை பற்றிக்கொண்டு இதை இன்னும் சிறப்பாக செய்வோம் அம்மா என நான் சொன்னபோது , எதற்கும் அசறா இந்த இரும்புநகர் கழுகானின் இரும்பு இதயமும் உருகி , கண்களில் கண்ணீராக பெருக்கெடுத்தது என நான் சொல்லவும் வேண்டுமோ நண்பர்களே......

    தொடரும்...////....

    ReplyDelete
    Replies
    1. @ டெக்ஸ் விஜய்

      நண்பர்களுக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ள சற்றே இடைவெளிவிட்டு, நானே உங்களுடைய அனுபவங்களை இங்கே காப்பி-பேஸ்ட் செய்யத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் என்ன அவசரம்னேன்?!

      சரி, இதன் மற்ற பாகங்களையும் நீங்களே பேஸ்டிடுங்கோ!

      Delete
    2. ஓவ்... ஆசிரியர் சாரோட பதிவின் கடேசி பகுதியை போட்டு அவர் நன்றி சொன்னதை போட்டீங்களா, சரிதான் பின்னூட்ட குவியலில் என்னோட அனுபவங்கள் அகப்படலயோ என நினைத்து என்னோட மெயில் பாக்ஸில் சேமித்து வைத்து இருந்ததை காப்பி ஆத்திட்டேன்... துளியூண்டு பால் ச்சே அவசரம் கலந்திடிச்சோ...
      மற்ற பகுதிகளை தேடி எடுத்திருப்பீர்கள்.. ஓகே..... ஒரு விசயத்தை ஒருவர் தொடங்கினால் அவரே முடிக்கனும் என்பதே நமது மரபு. ஓவர் டு யூ செயலரே...

      கடைசியாக உங்களின் நன்றி அறிவிப்பையும் போட மறக்காதீர்கள்...

      Delete
  60. ஏன் தளம் இவ்வளவு அமைதியாக இ௫க்கிறது?ஏன்பா ஏன்?

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் ஒரு பிராது கொடுங்களே.. தீர்ப்பு சொல்ல தலீவரும், ஜூரிகளாக பொருளர், செயலர், மஹிஜி, பாஸூ & ATR sir போன்ற நண்பர்கள் இருக்க, வாதாட என்னைப்போன்ற இளவட்டங்கள் நான், எங்க மாம்ஸ்,மிதுன், பரணி,க்ளா, ஸ்ரீராம்& கோவிந்த் மற்றும் பலர் இருக்கோம்....

      Delete
    2. தளம் அமைதியாக இருக்கிறதா?
      தோழரே இன்னும் சில நாட்களில் வீசப்போகும் "ஈரோடு புத்தக விழா" என்னும் புயலுக்கு முன்பான அமைதிதான் இது.
      "அந்தப் புயல்" இருப்பதையெல்லாம் இழக்க வைக்கும்.
      இந்தப்புயல்( ஈரோடு புத்தக விழா) பிரிந்து இருப்போரையெல்லாம் இணைக்க வைக்கும்.

      Delete
  61. நம்ம மாத்தியோசி மாயாவிகாரு தன்னோட மாத்தியோசிக்கள வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் மாத்தி மாத்தி போடுறாரு, இங்க ஏன் போடுறதில்ல.

    ReplyDelete
    Replies
    1. நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!

      மழை தொடங்குகிறது...மாத்தியோசி-158

      "யாரேனும் ஒரே ஒருவர் உங்கள் மாத்தியோசி கேட்கும்வரையில் கொஞ்சம் மூட்டையை கட்டிவைக்கிறீங்களா மலைவாசியே..." என்கிற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் இன்றுடன் முடிவடைகிறது.!

      கேட்டவர் கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) என்பது ஆச்சரியம் மட்டுமல்ல, நான் விலைக்கு வாங்கமுடியாத நபர் என்பது ஜென்டில்மேனும் மறுக்கமுடியாத ஒன்று.!

      நன்றிகள்பல ஷல்லூம் ஃபெர்னாண்டஸ்.!!

      Delete
    2. வெல்கம்பேக் மாயாசார்...

      உங்கள் க்ளிக்குகள் இல்லாமல் ஏதோஒன்று குறைவாகவே இருந்தது. அந்த குறையும் இன்று நிறைவானது.....
      மற்றொரு வேண்டுகோள், இந்த மாத்தியோசி இங்கே கடைசியாக கட் ஆனதில் இருந்து நேற்றுவரை போட்டவற்றை, இங்கே மட்டுமே வருகை புரியும் நண்பர்களுக்காக ஓரே க்ளிக்ல போடுங்கள்... கொஞ்சம் சிரமமான பணி தான், நேரம் ஒதுக்கி செய்யுங்கள் சார்...

      இங்கே க்ளிக் போடாத உங்களின் விரத தினங்களில் என்னுடைய சில விமர்சனங்கள் "க்ளிக்" இல்லாமல் முழுமையடையவில்லை என்பதே உண்மை...

      Delete
    3. வணக்கம் மாயாவி சார்,தங்கள் வ௫கை நல் வரவாகுக
      .!!!!!!!!!!

      Delete
  62. முதலில் கோட்டையை பிடிப்போம் பிறகு படலத்தில் ஆழ்வோம்!

    ReplyDelete
  63. Early Bird Badge எப்போது கிடைக்கும் சார் ?

    ReplyDelete
    Replies
    1. Late-டா கிடைக்காதவரைக்கும் சரிதான்! ;)

      Delete

  64. சென்ற வருட EBFன் மொத்த நிகழ்வுகளையும் ஃபோட்டோக்களாக எடுத்ததோடல்லாமல், மிக அழகாக அதை தன் பிரத்யேக பாணியில் பதிவேற்றியிருந்தார் - நமது நண்பர் மாயாவி சிவா! அந்த உற்சாக தருணங்களை (மீண்டும்) கண்டு மகிழ -
    "இங்கே க்ளிக்குங்க பாஸு!"

    ReplyDelete