Powered By Blogger

Sunday, July 09, 2017

ஒரு ஸ்பெஷல் மாதத்தின் மறுபக்கம்...!

நண்பர்களே,

உஷார் : நீஈஈஈளமாய் செல்லும் பதிவிது !! 
வணக்கம். ‘எப்படி இருந்த நான் – இப்டி ஆயிட்டேன்!‘ என்று பீற்றல் தொனியடிக்காதொரு விதமாய்ச் சொல்லி்ப் பாருங்களேன்... அது தான் எனது தற்சமயத்து மைண்ட் வாய்சாக இருந்திடும் ! நான் சொல்ல முனைவது இரு வாரங்களுக்கு முன்பாய் என் வதனமிருந்த லட்சணத்தைப் பற்றியும்  ; குமரிமுத்துவின் ‘யிஹாஹாஹா‘ இளிப்பை imitate செய்யும் பாணியில் தற்போது என் முகரையில் குந்திக் கிடக்கும் புன்னகையைப் பற்றியுமே ! இந்தாண்டின் இறுதியில், அதற்கான சந்தர்ப்பம் அமையும் போது ஜுன் மாதம் நானடித்த பல்டிகளின் பரிமாணங்களைப் பற்றிச் சொல்ல முயற்சிக்கிறேன்! அந்த சமயம் புரிந்திடும் - சில வாரங்களுக்கு முன்பு வரையிலும் சொக்காய் மாட்டிய உராங்குட்டானாய் நான் சுற்றித் திரிந்ததன் பின்னணி! And இன்றைக்கு – இதழ்களை ஒருசேர உங்கள் கைகளில் சேர்ப்பித்தான பின்னே, மின்னல் கீற்றுகளாய் பதிவாகிடும் உங்களின் பாராட்டுக்களை மெதுமெதுவாய் (சு)வாசிக்கும் போது - அந்தச் சிரம நாட்களின் நினைவுகள் எல்லாமே சோப்புக் குமிழிகளாய் கரைந்து போக – சந்தோஷம் மட்டுமே தங்கி நிற்பது புரிகிறது ! அவையடக்கம், ஆட்டுக் குட்டி அடக்கம் என்று சகலத்தையும் சித்தே ஓரம்கட்டி விட்டு – இந்த ஸ்பெஷல் தருணத்தைக் கொஞ்சமே கொஞ்சமாய் உள்வாங்கிக் கொள்ளும் சபலம் அலையடிக்கிறது உள்ளுக்குள்!

பாராட்டுக்களும் புதிதல்ல; பருமனான இதழ்களும் நமக்கு அந்நியமல்ல தான்! ஆனால் இந்தத் தருணம் ஏனோ இதற்கு முன்பான நாட்களை விடவும் ஒரேயொரு படியாவது பிரத்யேகமாய்த் தோன்றுகிறதென்று நானும் மண்டையைச் சொரி்ந்து பார்த்தேன் ! I might be wrong – ஆனால் இந்தப்புள்ளியின் வேர் நிற்பது ஓரிரு மாதங்களுக்கு முன்னர் என்றே என் உள்மனது சொல்கிறது ! 2 ‘மைக்கேல்-மதன-காமராஜன்‘ பாணிக் களவாணிக் கிழவிகளிடம் பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்துப்பட்ட அல்லல்கள் ; பொதுவெளியில் அம்சமாய் நடத்தப்பட்ட “கழுவிக் கழுவிக் காக்காய்க்க்கு ஊற்றும் படலம்” என்று ஏதேதோ அரங்கேறியிருந்த சிரம நாட்களவை ! முந்தையதைத் தாண்டி வரும் பாதைதனில் எனது இத்தனை காலத்து நிழல் தனக்கென ஒரு அடையாளத்தோடு நிஜமாவதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது! பிந்தையதைக் கடக்க முனைந்த வேளைகளிலோ, எதிர்பார்ப்பிலோ, மெய்யான அன்பின் விஸ்வரூபத்தை தரிசிக்கும் வரம் கிட்டியது ! Maybe பேனாவை டிராயரில் போட்டுப் பூட்டி விட்டு, ஓய்வெனும் சொகுசுக்குள் புகுந்திடும் நாளொன்று புலரும் போது, இந்த 2 நிகழ்வுகளுமே என்னையே எத்தனை மாற்றியமைத்து விட்டிருந்தன என்பது முழுசுமாய்ப் புலனாகுமோ – என்னவோ தெரியவில்லை ! பொதுவாய் 30 -கள் ; அதனோடு கூட்டணி போடும் முதல் நரைமுடியின் வருகை; 40கள்... கையோடு கூட்டி வரும் முகச்சுருக்கங்கள்; 50கள்... துணைக்குக் கூடவே வரும் முதுமையின் அறிமுகம் என்பனவெல்லாம் சற்றே டர்ராக்கிடும் சங்கதிகள் தான்! ஆனால் நானோ 50ஐ எட்டித் தொட்ட நாளை எண்ணி சந்தோஷமே கொள்கிறேன் – வாழ்க்கையின் சில அசாத்தியப் பாடங்களை கற்றுணரும் பொழுதாக இது அமைந்துள்ளதை எண்ணி ! 

“ஒரு முடியா இரவு”க்குமே இந்த சந்தோஷத்தில் ஒரு பங்குண்டு என்பேன் ! நிறைய வித்தியாசமான one-shots; கிராபிக் நாவல்கள் என்று ரவுண்ட் கட்டி  அடித்திருக்கிறோம் தான் ! “க்ரீன் மேனர்” போன்ற masterpieces-களுமே நமது வாசிப்புப் பட்டியலில் இருந்துள்ளன தான் ! So இந்த black & white கிராபிக் நாவலைக் களமிறக்கிய போது எனக்குள் கொஞ்சம் கூடப் பதட்டம் இருக்கவில்லை! சித்திரங்கள் விகாரமாகவும்; கதையில் நாயக அந்தஸ்துக்கு ஈ-காக்காய் கூடக் கிடையாதெனினும், இதனை நீங்கள் நிச்சயமாய்த் தூக்கிப் போட்டு உதைக்க மாட்டீர்களென்ற நம்பிக்கை இருந்தது! ரசனை எனும் ஏணியில் நாம் ஒருத்தரையொருத்தர் பற்றிக் கொண்டே ஏறியுள்ள படிகள் நிறையவே என்ற யூகத்தில் பிறந்த தைரியமிது ! அவார்ட் வாங்கப் போகும் கதையெல்லாம் கிடையாது தான் ; சிலருக்குப் படு மொக்கையாகத் தெரிந்திருக்கவும் கூடும்தான் என்பதும் புரியாதில்லை ! ஆனால் இந்தியக்  காமிக்ஸ் உலகில் – ஆங்கிலம் அல்லாததொரு பிராந்திய மொழியினில் இது போன்ற கதையினை பரீட்சார்த்தமாய் என்றில்லாது, ஒரு பிரத்யேக சந்தாவின் அங்கமாகவே களமிறக்கச் சாத்தியப்படக் கூடியது நமது மொழியில் மட்டுமே என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது ! So “ஒரு முடியா இரவு” வெற்றியா - தோல்வியா ? என்ற கேள்வியே எழவில்லை எனக்குள் ! இந்த பாணிக் கதைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதொரு வாசக வட்டம் நம்மது என்பதில் மட்டற்ற கர்வமே மிஞ்சியது ! 

தொடர்ந்தது அதகளம் – “அண்டர்டேக்கர்“ அவதாரில் !! And அதற்கு நீங்கள் தந்த வரவேற்பின் வீரியமானது எங்களது பேட்டரிகள் இரும்புக்கை மாயாவியின் கொள்ளுப்பேரன் வரைக்கும் கரெண்ட் இழுத்துக் கொள்ளும் அளவிற்குத் தேவையான சார்ஜை உள்வாங்கிக் கொள்ளும் விதமாயிருந்தது ! ஒரு நெகடிவ் நாயகன் வெற்றி காண்பது புதிதல்ல தான்; ஆனால் இம்முறை கிட்டிய வெற்றியின் பரிமாணமே முற்றிலும் வேறானது ! சில நாட்களுக்கு முன்பாய் “இவ்வார இதழில் சமீப இதழைப் பற்றிச் சில வரிகள்” என்றதொரு மெசேஜ் வந்திருந்தது எனது மொபைலில் ! அடடே... என்றபடிக்குப் பார்த்தால் “குமுதம்” குழுமத்திலிருந்து !! ஏற்கனவே குங்குமம் இதழினில் 6 பக்கக் கவரேஜ் என்ற கேக்கே – மேஜை மீது கம்பீரமாய் நின்று கொண்டிருக்க, “அண்டர்டேக்கர்” குமுதத்தில் ஈட்டிய கவனத்தை கேக் மீதான செர்ரிப் பழமாய்ப் பார்க்கத் தோன்றியது ! இரு பதிப்புலகப் பெருந்தலைகளுக்குத் தலைவணங்குவோம் !! 
இந்தச் சிற்சிறு சந்தோஷங்கள் சகிதம் நகர்ந்த வண்டி – லயன் # 300 & முத்து # 400 என்ற மைல்கற்களை ஒருங்கே தொடுமொரு சுபயோக சுபதினத்தை எட்டிய போது உள்ளுக்குள் ஒரு இனம்புரியாப் பதட்டம் & பரபரப்பு குடிகொண்டது ! நமது ஸ்க்ரிப்ட்களை ஆண்டவன் தான் எழுதுகிறார் என்பதில் என்றைக்குமே எனக்குச் சந்தேகங்கள் இருந்ததில்லை ; so ஒரு சந்தோஷ மாதத்தை நமக்கு சாத்தியமாக்கிய அவரே நமது பணிச்சுமைகளைச் சமாளிக்கும் சக்தியையும் தந்துவிடுவாரென்ற நம்பிக்கையோடு தான் ஜுன் முழுவதையுமே ஒப்பேற்றினேன் ! 

முதன் முதலாய் பணிகள் நிறைவு கண்டது ‘Lady S’ ஆல்பத்தினில் தான் ! வான் ஹாம்மேவின் படைப்பு எனும் போதே – இதனில் என்ன எதிர்பார்த்திடலாமென்ற எதிர்பார்ப்புகள் ஏகமாய் இருக்குமென்று புரிந்தது ! அதே போலவே கதை நெடுகிலும் "வா.ஹா."வின் முத்திரைகள் இரைந்து கிடக்க, இந்தக் கதை நிச்சயமாய் நம்மை வசீகரிக்கும் என்ற நம்பிக்கை வேரூன்றத் தொடங்கியது...! இவர் மாடஸ்டியும் கிடையாது... ஜுலியாவுமல்ல ; பிரான்கோ-பெல்ஜிய சமுத்திரத்திலிருந்து நம் பக்கமாய் ஒதுங்கியிருக்கும் முதல் (?? வேறு யாரேனும் உண்டா ?) லேடி ஸ்டார் என்ற வகையில் இவருக்கொரு சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைத்திடல் சாத்தியமே என்றுபட்டது! ஆங்கிலத்தில் ஏற்கனவே இவரது கதைகளைப் படித்திருக்கக் கூடிய நண்பர்களுமே நம்மிடையே கணிசமாய் இருக்கக் கூடும் என்பதால் மொழிபெயர்ப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதலாக கவனம் தர விழைந்தோம் ! என்ன – நமது இரவுக் கழுகாருக்குத் தந்திடும் அந்த ‘பன்ச்‘ டயலாக் ட்ரீட்மெண்டோ; கார்டூன்களில் அவசியமாகிடக் கூடிய வார்த்தை விளையாட்டுக்களுக்கோ இங்கே தேவையில்லை என்றமட்டில் – ஒரிஜினலின் வரிகளை இறுகப் பற்றிக்கொண்டு சவாரி செய்தாலே கரை சேர்ந்து விடுவோமென்று பட்டது ! ஒரிஜினலாய் பேனா பிடித்தவர் காமிக்ஸ் உலகப் பெருந்தலை எனும் போது எக்ஸ்ட்ரா நம்பர்களை அவரது ஸ்க்ரிப்ட்களில் போட்டு விஷப்பரீட்சை செய்யும் தில்லும் நமக்கில்லை ! Early days தான்; இன்னமும் உங்களுள் பலர் “விடைகொடு ஷானியா” வுக்கு ஹலோ சொல்லியிருக்க வாய்ப்புகள் குறைச்சலே என்பதும் அப்பட்டமே ! But – அம்மணி சோடை போக மாட்டாரென்ற gut feel மாத்திரம் தங்குகிறது என்னுள் ! Maybe இந்த ஞாயிறை ஷானியாவோடு செலவிடும் திட்டமிருப்பின் தொடரும் நாட்களில் உங்கள் அபிப்பிராயப் பகிர்வுகள் எவ்விதமிருக்குமென அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பேன்!

‘சட்‘ டென்று முடிந்த அடுத்த இதழ் “சில்வர் ஸ்பெஷல்” தான்! மறுபதிப்பு எனும் போதே அதன் பொருட்டு பெரிதாய் மெனக்கெட அவசியமிராது என்பதால் – பாதிக் கிணறை தாண்ட சிரமமே இருக்கவில்லை ! And அதனில் இடம்பிடித்திருந்த புதுக்கதையுமே – நம்மைப் பொறுத்தவரையிலும் அரதப் பழசே ! சுமார் 15 வருடங்களாகவே மேஜைக்குள் குறட்டை விட்டுக் கொண்டிருந்த 3 ஜான் சில்வர் கதைகளுள் இதுவும் ஒன்று! ஏனோ இடைப்பட்ட தருணத்தில் இந்தப் பைலட் தம்பி கொஞ்சம் outdated ஆகத் தோன்றத் துவங்க – காரிகன் & கம்பெனியோடு பரண் வாசம் செய்து கொண்டிருந்தார்! சென்றாண்டின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் – சந்தா D யின் மும்மூர்த்தி ஆதிக்கத்தை லேசாய் மட்டுப்படுத்தும் எண்ணம் தலைதூக்கிய போது இவரது ஞாபகம் வந்தது! And 'இவருக்கும் இத்தனை ரசிகர்களா ?' என்று ஆச்சர்யப்பட வைத்த உங்கள் பின்னூட்டக் கத்தைகள் தொடர்ந்த போது “சில்வர் ஸ்பெஷல்” சிந்தனை உதித்தது! இந்த இதழினை நீங்கள் rate செய்திடுவதைப் பொறுத்து – தொடரும் ஆண்டுகளில் அந்தப் பாக்கி 2 கதைகளைக் கண்ணில் காட்டுவதா? என்று தீர்மானித்தாக வேண்டும். 

And இந்த இதழில் இடம்பிடித்திருந்த இரண்டாம் கதை தொடர்பாய் நண்பர்கள் செந்தில் மாதேஷ் & jegang atq நேற்று இட்டிருந்த பின்னூட்டங்கள் எனக்குப் புரிந்திடவேயில்லை ஆரம்பத்தில்  ! "இது ஜான் சில்வரின் கதையே அல்ல ; ஜான் ஸ்டீலின்சாகசம் ; கதை முடியும் கடைசி 2 பக்கங்கள் மட்டும் வேறொரு ஜான் சில்வர் கதையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன !" என்று அப்புறமாய்க் கொஞ்சம் விளக்கமான பின்னூட்டம் தொடர்ந்த போது தான் - "இது என்னடா புதுக் கூத்து ?" என்று நமது புக்கைக் கையில் எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன் ! நம்மிடமிருந்த அதன் ஆங்கில bromide பக்கங்களையும் மறுபடிக்குப் புரட்டினேன் ! ஸ்பஷ்டமாய் "A John Havoc Casefile" என்று எழுதியிருக்க, இதில் நண்பர்களுக்கு சந்தேகம் எழுவது எவ்விதமென்று யோசிக்க ஆரம்பித்தேன். (John Havoc தான் தமிழில் ஜான் சில்வர் என்று பெயர் மாற்றம் கண்டவர் என்பது புதியவர்களுக்கான கொசுறுச் சேதி !) கூகுள் ஆண்டவர் சகல சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தவர் என்பதால் JOHN HAVOC என்று டைப் அடித்து விட்டு - இந்தக் கதையின் ஆங்கிலப் பெயரையும் (ONE FALSE STEP)சேர்த்தே டைப் செய்தேன் ! கிட்டிய பதில்களை சில நிமிடங்கள் பார்வையிட்ட போதே சகலமும் புரிந்தது !! 

நண்பர்களின் கூற்று நூற்றுக்கு நூறு சரியே ! 

இந்தக் கதை 1957-ல்  ஜான் ஸ்டீலின் சாகசமாகவே ஒரிஜினலாய் வெளிவந்துள்ளது - FLEETWAY-ன் Thriller Library-ல் ! இதோ அதன் ஒரிஜினல் அட்டைப்படம் - கதை பெயரோடு ! 
பின்னாட்களில் ஜான் ஸ்டீல் கதைகள் பரணுக்குச் சென்று விட, TOP SECRET Library என்றதொரு வரிசையில் நம்மவர் John Havoc (என்ற ஜான் சில்வர்)  கதைகள் வெளியாயின ! அதற்குமே 40 ஆல்பங்களோடு மங்களம் பாடப்பட்டது ! இந்நிலையில் 1980-களில் TOP SECRET HOLIDAY SPECIALS என்றதொரு தொகுப்பினை அறிமுகம் செய்து - ஒவ்வொன்றிலும் நான்நான்கு John Havoc (சில்வர்) கதைகளை மறுபதிப்பு செய்திருந்தனர் ! அவ்விதம் 1982 -ல் மறுபதிப்பான தொகுப்பினில் தான் நமது இம்மாத சில்வர் ஸ்பெஷல்லின் 2 கதைகளுமே இடம் பெற்றிருந்தன ! 
அந்த இரண்டாம் கதையை கொஞ்சம் உற்றுப் பார்த்த போதுதான் பகீரென்று உண்மை புலனானது ! John Havoc மறுபதிப்புகள் அடங்கிய அந்த இதழின் தயாரிப்பின் போது - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு அவர்களுக்கு உரிய JH கதைப்பக்கங்கள் கிட்டியிருக்கவில்லை போலும் ! 'டக்' கென்று 1957-ல் வெளியான ஜான் ஸ்டீல் கதையினை எடுத்து, பக்கங்கள் நெடுக "Steel" என்ற பெயர் வரும் இடங்களிலெல்லாம் "Havoc" என்று மட்டும் மாற்றிவிட்டு - அந்தத் தொகுப்பைத் தயாரித்து விட்டிருக்கிறார்கள்! So ஏதோவொரு அவசியம் + அவசரத்தின் பொருட்டு,புராதன "ஸ்டீல்" - லேட்டஸ்ட் "ஹேவக்" ஆக உருமாற்றம் கண்டிருக்கிறார் - - ஆனால் கதை பெயரில் மாற்றமின்றி  ! ஆக "இவரே அவர் ; அவரே இவர் " என்ற நியமனத்தை படைப்பாளிகளே செய்துள்ளனர்! இது எதுவுமே சனிக்கிழமை மாலையின் ஆராய்ச்சி வரைக்கும் நானே அறிந்திருக்கவில்லை ! வித விதமான ஆர்டிஸ்ட்கள் பணியாற்றியிருப்பார்கள் ; so சித்திரபாணிகளில் தெரியும் வேற்றுமைகள் அதன் பொருட்டே இருந்திருக்குமென்று எண்ணியிருந்தேன். இப்போது நிதானமாய் ஆங்கில bromide களைப் பார்க்கும் போது தான் HAVOC என்ற பெயர் எழுதப்பட்டுள்ள சகல இடங்களிலும், ஒரிஜினலிலிருந்து மெலிதான கையெழுத்து வேற்றுமை தட்டுப்படுவதைக் கவனிக்க முடிகிறது ! கடலளவு கதைகள் கொண்டிருந்த FLEETWAY-க்கே இப்படியொரு நெருக்கடியா ? என்றே நினைக்கத் தோன்றியது ! And நம்மவர்கள் அளவுக்கு இங்கிலாந்தின் ரசிகர்களுக்குக் கழுகுக் கண்கள் கிடையாது போலும், என்றும் நினைத்துக் கொண்டேன்  !!

"மறுபதிப்புகளுக்கு மெனக்கெடத் தேவையில்லை !"  என்ற எண்ணம் அபத்தமானதென்று மண்டையில் தட்டிச் சொன்ன இதழ் நமது உட்சிட்டி கூத்துப் பார்ட்டிகளின் “சிக் பில் க்ளாசிக்” தான் ! For starters – மே & ஜுன் மாதங்களில் நமது டிசைனர் பொன்னன் வேறு பல வெளிவேலைகளின் பொருட்டு பிஸியாக இருந்திட – நம் தரப்பில் ஏகமாய் செருப்புத் தேய்மானம் ! எனக்கோ இங்கே பொறுமையெல்லாம் கரைந்து கொண்டிருக்க – நமது DTP அணியைக் கொண்டொரு டிசைன் போடத் தொடங்கியிருந்தேன்! ஆனால் உங்கள் நல்ல காலமோ – எங்கள் நல்ல காலமோ; பொன்னன் பரபரவென்று பணி செய்திட – அட்டைப்படம் செமத்தியாய் ‘செட்‘ ஆகிவிட்டது! கதைகள் இரண்டுமே மறுபதிப்புகள் தானென்ற போதிலும் – “விண்ணில் ஒரு எலி”க்கு முழுசுமாய் புது மொழிநடை தந்தாகும் நெருக்கடியிருந்தது! அங்குதான் அனாமதேயத்தை விரும்பியதொரு நண்பரின் ஒத்தாசை கிட்டியது – முழு நீள ஸ்க்ரிப்டின் வடிவத்தில் ! “பேரெல்லாம் வெளியே தெரிய வேண்டாமே சார்....வாசகர்களுக்குப் பிடிக்காது போய் விட்டால் கோடையிடியாய் மொத்தித் தள்ளி விடும் ஆபத்திருக்குமே!” என்று அவர் சொன்னதால் – அடித்தே கேட்டாலும் அவரது அடையாளத்தை வெளியிடுவதாகயில்லை நான் ! 

என்ன ஒரே சிக்கல் – நண்பர் ரசித்து எழுதியிருந்த ஸ்க்ரிப்டானது நீ-ள-மோ ; நீ-ள-ம் ! அவற்றைக் கத்திரி போடாது அச்சுக்குக் கொண்டு சென்றிருப்பின், நம் உட்சிட்டி ஆசாமிகள் சவாரி செய்த பலூன் தெரிவதற்குப் பதிலாய் வசன பலூன்களே பிரதானமாய்த் தெரிந்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி ‘கச்சக்‘; ‘கச்சக்‘ என்று கத்திரி சுழற்றத் தொடங்கினேன்! ஸ்க்ரிப்டுக்குள் நுழைந்த பிற்பாடு – சொரிந்து பழகிய கையை சும்மாயிருக்கச் சொல்லுவது எத்தனை சிரமம் என்பதை உணர முடிந்தது! “ஹை... இதை இப்படி மாற்றி எழுதலாமோ ? அதை அப்படிக் கொஞ்சம் நோண்டிப் பார்க்கலாமோ ?” என்ற கையரிப்பு கடுமையாகப் போட்டுத் தாக்க – கத்தரியோடு கைவரிசையை நிறுத்திக்கொள்ள படாதபாடு பட்டேன் ! ஒருவழியாய் டயலாக் நீளங்களையும் மட்டுப்படுத்தி விட்டு “ஷப்பாடா” என்று பெருமூச்சு விட்டபடிக்கு நிமிர்ந்தால் மைதீன் ஆஜராகி நின்றான் – “அண்ணாச்சி, இந்தக் கதை பெரிய சைசிலே 30 பக்கங்கள் தான் வந்திருக்குது!” என்றபடிக்கு ! அந்நாட்களில் 30 பக்க ஒரிஜினலை 64 பக்க சின்ன இதழாக வெட்டி ஒட்டியிருக்கிறோம் போலும் என்று புரிந்த போது – குழாய் ஓட்டையை விரலால் அடைத்துக் கொண்டு பொறுமையிழந்து நிற்கும் மைதா மாவு மண்டை ஷெரீப் டாக்புல்லின் அவஸ்தை புரிந்தது எனக்கு ! "ஏற்கனவே லேட்... இன்னமும் லயன் # 300 காத்துக் கிடக்குது; இந்த அழகில் இன்னுமொரு 14 பக்கங்களைத் தேற்றணுமா?! ஆண்டவா!!” என்றபடிக்கே இந்த இதழுக்கான ஒரிஜினல் கலர் file-களுக்குள் தலை நுழைத்த போது 10+4 பக்க சிறுகதைகள் இரண்டு காத்திருப்பது புரிந்தது! அந்நாட்களில் ரூ.2/- விலைக்குள் இதழ்களை அடக்கிடும் கட்டாயம் இருந்ததால் அந்தத் துக்கடாக் கதைகளைக் கடாசிவிட்டு மெயின் ஸ்டோரியை மட்டுமே வாங்கியிருந்திருக்கிறோம் ! ஆனால் இப்போது standard ஆக எல்லா பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பங்களின் 44 அல்லது 46 பக்க சாகசங்களை நாம் கத்திரி போடாது வெளியிடுவதால் - மொத்தமாய் அந்தச் சிறுகதைகளும் சேர்ந்தே வந்திருந்தன !!"ஆஹா..இனிமேல் இதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து வாங்கி  ; அப்புறமாய்த் தமிழாக்கம் செய்து 14 பக்கங்களைக் கரை சேர்ப்பதற்குள் கிழவியே குமரியாகிப் போவாளே !!" என்று சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில் ‘படக்‘கென்று உதித்தது ஞானோதயம் ! காத்திருக்கும் (புது) வெளியீடான “ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்” கதையின் 30 + 14 பக்க மெனு நினைவுக்கு வந்தது ! அந்த இதழின் மெயின் ஸ்டோரி 30 பக்கங்களே என்பதால் – பின்னிருந்த 14 பக்க சிறுகதையை அப்படியே இங்கே இறக்குமதி செய்து விட்டேன்! ஆக “காதலுக்கும் உண்டோ – அடைக்கும் தாழ்?” எனது தலைவலிக்குத் தீர்வாய் அமைந்து போனது ! 

எப்போதுமே கலர் இதழ்களை முதலில் முடித்து விட்டால் – b & w இதழ்களைக் கடைசிநொடியில் கூட முடித்துக் கொள்ளலாம் என்பது தான் கடந்த சில ஆண்டுகளின் பழக்கம் நமக்கு! ஆனால் இம்முறையோ காத்திருப்பது 512 பக்கங்கள் (LION 300) என்ற நினைப்பிலேயே உறக்கம் தொலைந்தது ! எனது முதல் பயம் “க்யூபா படலம்” சார்ந்ததே ! இத்தாலியில் நம்மவரை ஒரு அதிரடி ரேஞ்சராய்ப் பார்த்திடும் மூச்சிலேயே அமானுஷ்யத்தைப் போரிடும் தில்லாலங்கடியாகவும் பார்த்திடுகிறார்கள் ! ஆனால் நமக்கது எத்தனை தூரத்திற்கு இயலுமோ என்ற பயம் நெருடிக் கொண்டேயிருந்தது! Of course – மெபிஸ்டோவை நமக்குத் தெரியும் தான்; அவனோடு டெக்ஸ் மோதிய சாகஸங்களை நாம் செமையாய் ரசித்திருக்கிறோம் தான்! ஆனால் – கடந்த 4 ஆண்டுகளாய் நாம் டெக்ஸ் & கோவிற்குத் தந்து வரும் treatment முழுக்க முழுக்கவே ஒரு அதிரடி ரேஞ்சர் என்ற அந்தஸ்தைச் சுற்றியே எனும் போது – திடுதிடுப்பென மாயாஜாலம்; ஊடூ என்று போகும் கதையோட்டத்தை நீங்கள் எவ்விதம் அணுகுவீர்களோ என்ற கலக்கம் உள்ளே ப்ரேக் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது. பற்றாக்குறைக்கு இது மௌரோ போசெல்லியின் கதை எனும் போது – ஒரு வரலாற்றுக் களம் சிக்கினால் மனுஷன் என்னமாய் பின்னியெடுப்பார் என்பதும் நானறிவேன்! எக்கச்சக்கமாய் நிஜ நிகழ்வுகளை வரலாற்றிலிருந்து இரவல் வாங்கி கதையினை அதைச் சுற்றிப் புனைந்திடுவதில் போசெல்லி நிகரற்றவர் என்பதால் – “க்யூபா படலத்தின்” பொருட்டு நான் கூகுளில் அடித்த தேடல் கூத்துக்கள் ஒரு வண்டி ! ‘ஓவராய் விபரங்களை அள்ளித் தருகிறேன் பேர்வழி‘ என்று வரலாற்றுப் பாடம் போல கதையை நிறம் மாற்றித் தொலைத்து விடக் கூடாதென்ற பயம் ஒரு பக்கம் ; நம்மவர்களின் அலசல் + ஆராய்ச்சி ஆற்றல்களை போன மாதம் கண்கூடாய்ப் பார்த்தான பின்னே மேலோட்டமாய் நுனிப்புல் மேய்ந்தபடிக்கே ஒப்பேற்றவும் பீதி இன்னொரு பக்கம் ! ஜடை போட்டிருக்கோ; கொண்டை போட்டிருக்கோ ; தலையை அவிழ்த்துப் போட்டிருக்கோ – ஒரு அழகான பெண்பிள்ளை அட்டைப்படத்தில் மந்தகாசமாய் சிரித்து நின்றாலே லயித்துப் போய் மரத்தடியில் மட்டையாகிடும் செயலரைப் போல எல்லா வாசகர்களும் இருந்து விட்டால் தான் இத்தனை முன்ஜாக்கிரதைகள் தேவைப்படுமா?? - என்ற எண்ணம் லேசாய் மண்டைக்குள் ஓடிப்பிடித்து விளையாடியது !  ஒருமாதிரியாய் “க்யூபா படலத்தை” முடித்து விட்டு வந்த போது ராபின் த்ரில்லர் ஒரு walk in the park ஆகவே தோன்றியது ! பட படவென்று கதை ஓட... அதற்கு ஈடாய் பக்கங்களும் பறந்திட – இதழின் ஒரு பெரும் பகுதி தயார் என்ற குஷியில் நிமிர்ந்தால் – காத்திருந்தது இம்மாத 3 அழகிகளுள் இருவர்!

மாடஸ்டி எப்போதுமே நமக்கு ‘தோஸ்த்‘ தானே – சுலபமான நேர்கோட்டுக் கதைக்களங்களின் காரணமாய் என்றபடிக்கு “சிறையில் ஒரு சிட்டுக்குருவி” கதையினுள் புகுந்தேன்! நமது கருணையானந்தம் அவர்கள் எழுதியதே என்ற போதிலும் – ஒரிஜினலில் எப்போதுமே விரவிக் கிடக்கும் இங்கிலாந்துக்கே உரித்தான அந்த wry humour தமிழில் குறைவதாய் தோன்றியது ! ஷப்பா.. தேதி 26 !! இன்னமுமொரு திருத்தப்படலமா ?  என்று மேல் வலிக்கத் தொடங்கியது !  தலைக்குள் வால் முளைத்த, ஈட்டி ஏந்திய சாத்தான் ஆஜராகி “லேட்டாகிடுச்சுடா முட்டைக்கண்ணா... அப்படியே அடிச்சி விடு!” என்று கட்டைக் குரலில் பேசியது! ஆனால் மறுபக்கமோ சைதாப்பேட்டை ஆற்றில், தண்ணீர் இருந்த காலத்தில் சலவை செய்த வெள்ளை உடுப்பைக் களவாண்ட கையோடு பாரதிராஜா படத்தில் வரும் தேவைதையொன்று “ஊஹும்... லேட்டானாலும் ஒழுங்காக இதழ் அமைந்தாகணும்டா அம்பி! மெனக்கெட சோம்பேறித்தனப்படாதே!” என்று ஓதிவிட்டுப் போனது! சரி... நமது முதல் நாயகிக்கு 300-வது இதழில் முறையான உபசரிப்பு இல்லாது போயிற்றென்ற வரலாற்றுப் பழி வேண்டாமென்ற தீர்மானத்தில் தொடர்ந்தேன் ராக்கூத்துக்களை ! 

எல்லாம் முடிந்ததுடா சாமி... இனி only ஜுலியா! என்றபடிக்கு குஷாலானேன் ! சென்றாண்டே புது மொழிபெயர்ப்பாளரொருவரின் கைவண்ணத்தில் தயாராகிவிட்டிருந்த ஸ்க்ரிப்டைப் பட்டி பார்க்க அமர்ந்தால் நள்ளிரவில் காலன் வருகிறானோ இல்லியோ ; கொட்டாவி செமத்தியாய் வருமென்று புரிந்தது. ஜுலியா கதைகளில் மெலிதான மனித உணர்வுகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருவதும்; கதையின் ஓட்டத்துக்கு அது சில வேளைகளி்ல் பிரேக் போடுவதும் அப்பட்டமாய்த் தெரிந்திட – மண்டை காய்ந்து போனது ! ஸ்க்ரிப்டை சரி செய்வது பற்றாதென்று – ஸ்பீட் பிரேக்கர்களை சமன் செய்யும் பணிகளுமே பூதாகரமாய் நிற்பது புரிந்தது – மாதயிறுத்திக்கு 3 நாட்களே பாக்கி நின்ற சமயம் ! தொடர்ந்த இரவுகள் கொஞ்சம் கொட்டாவி; கொஞ்சம் குறட்டை; நிறைய பேய்முழி; அதை விட நிறைய எடிட்டிங் என்று கழிந்திட – லயன் # 300 ஒரு வழியாய் 28-ம் தேதிக்கு என் மேஜையினில்  நிறைவுற்றிருந்தது ! அட்டைப்படம் ஏற்கனவே ரெடியாகியிருக்க, பைண்டிங் பிரிவின் கதவை உடைக்கப் புறப்பட்டனர் நம்மவர்கள் ! And you know the rest of the story ! இதழை நிறைவு செய்த கையோடு சட்டி, பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு பயணம் புறப்பட – நேற்றைக்குத் தான் இதழைக் கண்ணில் பார்த்திட முடிந்தது ! அந்த black & white கம்பீரம் அபாரமாய் மிளிர்வதைப் பார்க்க முடிந்த போது – பட்ட சிரமங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை! 

காத்திருக்கும் நாட்களில், விரிவான அலசல்கள் திரைவிரியும் போது – கதைகளின் நிறைகளும், குறைகளும் highlight ஆவதும் நிச்சயம் ! இம்மாதத்து சிக் பில் கிளாஸிக்ஸ் அட்டைப்படமானது ஒருவிதத்தில் எனக்கொரு சேதி சொல்வதாகவே படுகிறது !  ஷெரீப்புக்கு விழும் குத்துக்களும் ஒரு பக்கமிருக்கும் ; டாட்டோவில்லி ஆர்டினுக்குத் தந்திடும் அன்பும் இன்னொரு பக்கமிருக்கும் என்பது புரிகிறது ! சகலத்தின் இறுதியில் – பின்னட்டையில் புன்னகைக்கும் ஆர்டினைப் போல அடியேனும் நிற்கும் பிராப்தம் அமையின் இந்த ஜுன் மாத சர்க்கஸ் வேலைகளின் நோவு மறந்தே போயிருக்கும் ! Fingers crossed! 

Before I sign out, சில updates : 

1.இன்றோடு (9th ஜூலை) நெய்வேலி புத்தக விழா நிறைவுறுகிறது ! மிதமான வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும் ; ஆனால் ஏகமாய் குட்டிப் பட்டாளம் வருகை தந்துள்ளது என்பதொரு hghlight !

2.ஜூலை 21 முதல் ஜூலை 30 வரைக்கும் கோவை மாநகரில் புத்தக விழா CODISSIA அரங்கில் நடைபெறவுள்ளது ! So நமது கேரவன் அடுத்து நிலை கொள்ளப் போவது அங்கு தான் !! சென்றமுறை போலவே இம்முறையும் நமது ஸ்டாலுக்கு வருகை தரக்கூடிய  புது வாசகர்களை guide செய்திட - we would love to have volunteers ! And of course சென்றாண்டு போலவே சிறியதொரு சன்மானமும் இருந்திடும் ! சகோதரி கடல்யாழ் ; ஸ்டீல் & இதர கோவை நண்பர்கள் : எங்கிருந்தாலும் மேடை அழைக்கின்றது உங்களை!! 

3. இருபத்திஐந்து இலட்சப் பார்வைகளை கடந்துள்ளோம் ; இப்போது தான் கவனிக்கிறேன் !! Wow !! Awesome guys !!

4.Oh yes, மறக்கவில்லை தான் !! Erode caption போட்டியின் வெற்றியாளரை மறக்கவில்லை தான் ! இதோ பாருங்களேன் : 

டைகர்:
இன்னாபா க்ரோ கொஞ்சம் கூட யோசிக்காம இப்டி படுகுழில வுழுந்திட்டியே. நானும் டெக்ஸ் அண்ணாத்தே யும் எத்தினி வருஷமா இங்க குப்பை கொட்றோம்.நம்மகிட்ட ஒரு வார்த்தை கேக்கலாமில்ல. ஆரம்பத்துல இப்டிதான் இருக்கும். போகப்போக ரண கொடூரமா இருக்கும்.அப்பால மூக்க பஞ்சராக்குவாங்க.சேத்துல புழுதியில புரண்டு வரணும்.காலி வயத்தோட அலையணும். மாசக்கணக்கா குளிக்காம இருக்கணும்.சாவடி வாங்கணும் ஆனா சாகாம இருக்கணும்.ஹீரோயின்னு ஒருத்திய காட்டுவாங்க ஆனா அவளுக்கு இன்னொருத்தன்தன் ஹீரோவா இருப்பான். இதெல்லாம் தேவையா உனக்கு?.என்ன பிள்ளையோ போ..

டெக்ஸ்:
ஆமாம்பா கரைட்டா சொல்லியிருக்கே டைகர் தம்புடு. நானும் ஒவ்வொரு வில்லனோட சோலிய முடிச்சப்பறம், நம்ம கிட் டுக்கு கண்ணாலம் பண்ணாம்னு பொண்ணு பாக்க கிளம்புலாம்னு இருக்கிறப்பதான் கரைட்டா ரேஞ்சர் ஆபிஸிலிருந்து தந்தி வரும். இல்லாட்டி ரெட்ட வால் குருவிகிட்டேர்ந்து இல்லைனா சீறும் சிங்கம்II கிட்டேர்ந்து புகை சமிக்ஞை வரும்.இதாலே லேட்டாகி லேட்டாகி கிட்'டும் கிட் கார்ஷனாட்டம் ஆயிடுவானோன்னு நெனச்சாதான் கடுப்பாகுது...

கார்சன்:
அட விடுங்கப்பா. இத்தன நாளும் நம்மலால மண்டயபோட்டவங்கள நாமதானே பொதைச்சொம்.இப்பதான் வெட்டியான் இருக்கிறான்ல நமக்கு வேலை மிச்சம்னு சந்தோசப்படுங்கப்பு.
ஏம்பா டைகர் அந்த சில்க் புள்ளையோட அட்ரஸ கொடேன்.ச்சும்மா ஜெனரல் நாலெஞ்சுக்குதான். ஹி..ஹி..ஹி.

க்ரோ:
அய்யோ ராமா! என்ன ஏன் இவங்ககூட கூட்டு சேர வச்சே?.
இவிங்க நல்லவங்ளா? கெட்டவங்களா?
கடவுளே!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
As promised, நண்பருக்கொரு அட்டைப்படப் பெயின்டிங் நமது பரிசாக ஈரோட்டில் வழங்கப்படும் ! சார் : வருகிறீர்கள் தானே ? 
இதற்கு மேல் டைபிடிக்கச் சொன்னால், விரல்கள் எனக்கு விஷம் வைத்து விடக்கூடுமென்பதால் இப்போதைக்கு  விடை பெறுகிறேன் all ! Bye for now ! See you around !! 

336 comments:

  1. உள்ளேன் ஐயா... படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  2. மன்னிக்கவும் 9 வது வருடம் 👣👣👣

    ReplyDelete
  3. Good morning. My 3 year old son liked vinnil oru eli

    ReplyDelete
    Replies
    1. /// My 3 year old son liked vinnil oru eli.///

      ஒரு நாயகன் உதயமாகிறான்(ர்) ..!

      Delete
    2. டெக்ஸ் ரசிகப்படையில் குட்டிப் பையனை சேர்த்தாச்சி....

      Delete
    3. திரு.கோவிந்தராஜ் பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துகள்.
      தொடர்ந்து கலக்குங்கள்.

      Delete
  4. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் நடு ராத்திரி வணக்கம்

    ReplyDelete
  5. Also i remember this book was announced and then cancelled. Isent an email asking for explanation. I gave him rintin can etc. But he says he wants the eli story. Thanks for the family time i had with him. Cheers

    ReplyDelete
  6. Also heared chennai booj fair is ecpected this month. Any plan sir

    ReplyDelete
  7. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  8. அட்டைப்படம் செமத்தியாய் ‘செட்‘ ஆகிவிட்டது! கதைகள் இரண்டுமே மறுபதிப்புகள் தானென்ற போதிலும் – “விண்ணில் ஒரு எலி”க்கு முழுசுமாய் புது மொழிநடை தந்தாகும் // சிக்பில் க்ளாசிக்கில் இடம் பெற்ற மூன்று கதைகளுமே அசத்தல் சார்,மனம் விட்டு சிரிக்க வைத்தது.நல்ல மொழி பெயர்ப்பு,

    ReplyDelete
  9. முன்பு டைப் அடிக்கும் போது 9 வது வருடம் என்பதற்கு பதில் 9 வது நாள் என்று தவறாக டைப் அடித்து விட்டேன்.
    இதுவரை எனக்கு கிடைக்காத இந்த முதல் இடம் என் திருமணம் நாள் பரிசாக நினைக்கிறேன்.
    என் வாழ்வின் முக்கிய நாளில் என்னுடன் சிறுவயதில் இருந்து கைக் கோர்த்து கொண்டு வந்த கொண்டு இஇருக்கும் என் இணைப்பிரியா தோழனுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    I love lion,muthu&prakash&team

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சார்.

      Delete
    2. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

      Delete
    3. வாழ்த்துகள் சரண் சார்

      Delete
    4. @ Saran Selvi

      திருமணநாள் வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    5. வாழ்த்துக்கள் சார்....:-))

      Delete
    6. Thirumananaal Valthukkal Saran Selvi Sagotharare ☺

      Delete
    7. திரு்.சரண் அவர்களே
      இன்னும் 90 வருடங்கள் கழித்தும் இதே முதலிடத்தை பிடித்து உங்களது திருமண நாளை பேரன் பேத்தி மற்றும் ,அவர்களின் வாரிசுகளுடன் இன்று கிடைத்த ஏன் அதைவிட அதிக சந்தோஷத்துடன் கொண்டாட வாழ்த்துகிறேன்.
      வாழ்க வளமுடன்.

      Delete
    8. @ Saran Selvi

      திருமணநாள் வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    9. வாழ்த்துகள் சரண் சார்...

      Delete
    10. @saran selvi ;
      இனிய மண நாள் வாழ்த்துக்கள் தோழா!!!.💐💐💐.

      Delete
    11. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

      Delete
    12. என்னை வாழ்த்திய வாழ்த்தும் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. ..
      இன்றைய எனது மகிழ்ச்சியை தெரியப் படுத்த எண்ணினால் ஒரு பெரிய பதிவே இட வேண்டும். அப்படி ஒரு சந்தோஷம் இந்த 9 வது வருடம் கிடைத்தது.
      காமிக்ஸ் குடும்ப சகோதர,சகோதரிகளுக்கு எனது நன்றிகள் வணக்கம்

      Delete
  10. அங்குதான் அனாமதேயத்தை விரும்பியதொரு நண்பரின் ஒத்தாசை கிட்டியது – முழு நீள ஸ்க்ரிப்டின் வடிவத்தில் ! “பேரெல்லாம் வெளியே தெரிய வேண்டாமே சார்....வாசகர்களுக்குப் பிடிக்காது போய் விட்டால் கோடையிடியாய் மொத்தித் தள்ளி விடும் ஆபத்திருக்குமே!” என்று அவர் சொன்னதால் – அடித்தே கேட்டாலும் அவரது அடையாளத்தை வெளியிடுவதாகயில்லை நான் !//
    அந்த அனாமதேய நண்பருக்கு எனது வாழ்த்துக்கள், நல்ல மொழி நடை.

    ReplyDelete
  11. கேப்சன் போட்டியில் வென்ற நண்பர் கோவிந்தராஜ் பெருமாள் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இம்மாத இதழ்களை பார்க்க இன்னும் 7லிருந்து 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். கதைகளின் பின்புலம் படித்த பிறகு கதைகளை படிக்க ஆவல் அதிகமாக உள்ளது.

    25 லட்சம் பார்வைகள் சிறப்பு மலர் எப்போ சார்? துண்ட போட்டு வைப்போம்...

    ReplyDelete
  13. முதலிரண்டு சாகசங்களில் என்னை கவராத ஜீலியா இம்முறை என்னை கவர்ந்தது மட்டுமல்லாது ஜீலியா வின் அடுத்த கதையும் எதிர் பார்க்க வைத்து விட்டார் முதலிரண்டு கதைகளில் ஒல்லி பிச்சானாக பரிதாபமாக காட்சியளித்த ஜீலியா இந்த முறை தேவதையாக தோற்றமளித்தார் கதையும் எதிர் பாராத திருப்பங்களுடன் பயணித்தது என்ன ஜீலியாவின் கண்ணீரோடு கதை முடிந்தது தான் நெஞ்சை பிசைந்தது

    ReplyDelete
  14. சிச்பில் கதைகள் இரண்டும் இதுவரை படிக்காதவை,நன்றி மறுபதிபிட்டதற்கு!இரும்பு கௌபாய் மிகவும் அருமை. விண்ணில் ஒரு எலி இன்னும் படிக்கவில்லை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  15. கிட் ஆர்ட்டின் கண்ணனுக்கு வாழ்த்துகள்
    கோவிந்த ராஜ் பெருமாளுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. கேப்ஷன் போட்டியில் வெற்றிவாகை சூடியிருக்கும் 'கோவிந்தராஜ் பெருமாள்' அவர்களுக்கு டமால் டுமீல் வாழ்த்துகள்!

    அருமையான, ஹாஸ்யமான எழுத்துநடை உங்களுடையது நண்பரே! இன்னும் பல வெற்றிகளைக் குவித்து, மகிழ்வித்து மகிழக் கடவீர்களாக!


    *****************************

    'விண்ணில் ஒரு எலி'யில் தன் பிரத்யேக கைவரிசையைக் காட்டி பலப்பல கெக்கபிக்கேக்களை 'கோடையிடியாய்' கொட்டிக் கொடுத்திருக்கும்; நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட நாடாவை தனது டவுசருக்கு வெளியே விட்டுத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவிரும்பாதவருமாகிய அந்த அனாமதேய நண்பருக்கும் நமது வாழ்த்துகள்! உங்கள்மீதான எங்களது எதிர்பார்ப்புகள் வீண்போகவில்லை நண்பரே... உண்மையில், எதிர்பார்த்ததைவிடவும் அட்டகாசமாக எழுதி, பின்னிப்பெடலெடுத்திருக்கிறீர்கள்! இதுபோல வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் தொடரட்டும் - உங்கள் காமெடி கலாட்டா!!

    ReplyDelete
    Replies
    1. ///கோடையிடியாய்///

      அடடே !!! அப்படியா விஷயம் ...இன்னும் சிக்பில் படிக்கவில்லை ...இன்று படிப்பதாக உத்தேசம் ...தவில்காரருக்கு வாழ்த்து சொல்வதா அல்லது வார் பிடிக்கிறதான்னு தீர்மானிச்சு புடுவோம் ..:-)

      Delete
    2. குருநாயரே!
      ஹிஹி ஹி ஹிஹி ஹிஹிஹி..!

      செனா அனா!
      நீங்க வார் பிடிச்சாதான் தவிலோட சத்தம் நல்லா வரும்.! :-)

      Delete
    3. /////கோடையிடியாய்///
      யோவ் மாம்ஸ் வாழ்த்துகள்யா...அட்டகாசம்...அற்புதமா கலக்கியிருப்பாய் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை... சூப்பரு...ஆனால் ஒர் வார்த்தை கூட கசிய விடலயே...

      செனா அனா ஜி@தவில்காரர்க்கு ஒரு பொன்னாடையே போட்டு வாழ்த்தி விடலாம். சங்கத்தில் ஏதும் இருக்கா????

      Delete
    4. தேங்க்ஸ் மாம்ஸ் . .!!

      ///ஆனால் ஒர் வார்த்தை கூட கசிய விடலயே...///

      கசியாம இருக்கணும்னுதான் டாக்புல் மாதிரி கையைவெச்சு அடைச்சுகிட்டே இருந்தேன்.! தார் வாங்கப்போன கிட் ஆர்டின் அந்த நன் பின்னாடி போயிட்ட மாதிரி ஆயிடுச்சே மாம்ஸு..! :-)

      Delete
    5. ///சங்கத்தில் ஏதும் இருக்கா????///

      நிறைய கடன் இருக்கு, கட்டமுடியுமான்னு செனா அனா கேட்பாரே!??

      Delete
    6. கிட் ஆர்டின் கண்ணன்;
      வாழ்த்துக்கள் ஜி.
      தூள் கெளப்பிட்டிங்க.

      Delete
    7. Sri Ram @ நன்றி நண்பரே..!!

      Delete
  17. கோவிந்த ராஜ் பெருமாள் @ வாழ்த்துகள் சார் !!!

    ///ஜடை போட்டிருக்கோ; கொண்டை போட்டிருக்கோ ; தலையை அவிழ்த்துப் போட்டிருக்கோ – ஒரு அழகான பெண்பிள்ளை அட்டைப்படத்தில் மந்தகாசமாய் சிரித்து நின்றாலே லயித்துப் போய் மரத்தடியில் மட்டையாகிடும் செயலரைப் போல/////

    ஹா ..ஹா...ஹா......:-))

    ////As promised, நண்பருக்கொரு அட்டைப்படப் பெயின்டிங் நமது பரிசாக ஈரோட்டில் வழங்கப்படும் ! சார் : வருகிறீர்கள் தானே ? ////

    @ கோவிந்தராஜ் பெருமாள் ...சார் !!! சிறையில் ஒரு சிட்டுகுருவி படிச்சிட்டிங்களா ? உஷார் !!! அது உண்மையிலேயே ''பொன்னன் சார் '' வரைந்த அட்டைப்பட ஓவியமா ? அல்லது எடிட்டர் சார் அதை லபக்கிட்டு தானே க்ரேயான்களால் வரைந்த ஓவியத்தை உங்களுக்கு கொடுக்க முயல்கிறாரா என பரிசோதித்து பின் வாங்கவும் ...;-)

    ReplyDelete
    Replies
    1. செனா அனா...

      காலங்காத்தால அப்படியென்ன கெக்கபிக்கே சிரிப்பு வேண்டிக்கிடக்குன்னேன்? :)

      ////@ கோவிந்தராஜ் பெருமாள் ...சார் !!! சிறையில் ஒரு சிட்டுகுருவி படிச்சிட்டிங்களா ? உஷார் !!! அது உண்மையிலேயே ''பொன்னன் சார் '' வரைந்த அட்டைப்பட ஓவியமா ? அல்லது எடிட்டர் சார் அதை லபக்கிட்டு தானே க்ரேயான்களால் வரைந்த ஓவியத்தை உங்களுக்கு கொடுக்க முயல்கிறாரா என பரிசோதித்து பின் வாங்கவும் ..///

      ஹா ஹா ஹா!! செம!!!

      ///பொன்னன் சார் ///

      மாலையப்பர். (தூக்கம் தெளியாம எழுதினா இப்படித்தான் ஆகும்!) ;)

      Delete
    2. \\\\\///பொன்னன் சார் ///

      மாலையப்பர். (தூக்கம் தெளியாம எழுதினா இப்படித்தான் ஆகும்!) ;)///


      அம்மாம்பெரிய ப்ளீட்வே '' ஜான் ஸ்டீலை '' ஜான் சில்வரா (john havoc)

      மாத்தறதச்சே நான் '' மாலையப்பன் சாரை -''பொன்னன்'' சாரா மாத்தப்படதா ??? ஹி ..ஹி...

      Delete
    3. ஹா ஹா ஹா!! செனாஅனாவா கொக்கா!!! :))))

      Delete
  18. கோவிந்ராஜ் சார்....

    வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள் ..:-)


    கோடையிடி கண்ணரே.....

    இப்படி சொல்லாமல் கொள்ளாமல் அசத்தி விட்டீர்களே....

    மனமார்ந்த பாராட்டுக்கள்....:-)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க ஆசிதான் தலீவரே..!

      Delete
  19. ///ஷெரீப்புக்கு விழும் குத்துக்களும் ஒரு பக்கமிருக்கும் ; டாட்டோவில்லி ஆர்டினுக்குத் தந்திடும் அன்பும் இன்னொரு பக்கமிருக்கும் என்பது புரிகிறது ! சகலத்தின் இறுதியில் – பின்னட்டையில் புன்னகைக்கும் ஆர்டினைப் போல அடியேனும் நிற்கும் பிராப்தம் அமையின் இந்த ஜுன் மாத சர்க்கஸ் வேலைகளின் நோவு மறந்தே போயிருக்கும் ///

    என்னாவொரு ஒப்பீடு!!! ரொம்பவே ரசித்தேன் - பின்றீங்க எடிட்டர் சார்!! :))))

    ReplyDelete
  20. ட்டுப்படுவதைக் கவனிக்க முடிகிறது ! கடலளவு கதைகள் கொண்டிருந்த FLEETWAY-க்கே இப்படியொரு நெருக்கடியா ? என்றே நினைக்கத் தோன்றியது !



    ######


    அது எல்லாம் எங்களுக்கு தெரியாது சார்....நீங்க செஞ்சா மட்டும் தான் அது தப்பு.அது ஒரிஜினலாகவே இருந்தாலும் :-)

    ReplyDelete
  21. ஆகாய கல்லறை....

    ஜான் சில்வர் கதைகளில் வழக்கம் போல் தனது பைலட் லைசென்ஸ் இந்த முறையாவது கிடைத்து விடுமா என்ற எதிர்பார்ப்பிலியே ஒவ்வொரு முறையும் துப்பறிவார்..ஆனால் எதனால் இவர் பைலட் லைசென்ஸ் ரத்தானது ..பைலட் ஆக உள்ள இவர் எப்படி உளவாளி போல செயல்படுகிறார் என்று வெகுகாலமாகவே எனது சந்தேகம் மனதில் குடி கொண்டே இருந்தது.ஆனால் இதற்கான காரணத்தை ஆகாய கல்லறை மூலம் பல வருடங்களுக்கு முன்னரே தெளிவு படுத்தி இருந்ததை இப்பொழுது தான் அறிகிறேன் .நீண்ட நாள் சந்தேகத்தை நிவர்த்தி செய்த இந்த காரணத்திற்காகவே இந்த மறுபதிப்பிற்கு ஒரு உம்மா...வழக்கம் போல அல்லாமல் பத்து ரூபாயக்கு இன்னொரு கதையும் வெளியிட்டு அசத்திய பாங்கிற்கு நன்றி சார்...குண்டன் பில்லி எவ்வளவு நாளாயிற்று பார்த்து...நன்று...அடுத்த மறுபதிப்பு மரணத்தின் நிறம் பச்சையா ..அருமை...அந்த கதையை முதல் தடவை படித்த பொழுது (அதுதான் வழக்கமான டெக்ஸ் பாணியில் அல்லாத முறையில் படித்த கதையில் முதல் சாகஸம் )சுமாராக தோன்றியது போல எண்ணம் இருந்தது... பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் மறுவாசிப்பில் பிடித்த கதையாக மாறி போனது.இப்பொழுது மீண்டும் இதனை புது பொலிவுடன் பார்க்க போவதை நினைத்தாலே மகிழ்ச்சியில் திளைக்கிறது மனம்.இந்த முறை (மட்டுமாவது )ஆரம்பித்தில் தாங்கள் வெளியிட்ட அதே அட்டைப்படத்தை கொண்டு வந்தால் மகிழ்ச்சி இன்னும் கூடுதல் ஆகும் சார்.

    ReplyDelete
  22. லயன் 300...

    இப்படி ஓரு "குண்டு " மாதா மாதம் என் மேல் வீச கூடாதா என்று ஆசிரியரை பார்த்து கோபத்துடன் வினவுகறேன்.இதனால் எவ்வளவு பாதிப்பு வந்தாலும் சரி..,கைகள் எவ்வளவு வீங்கினாலும் சரி...எவ்வளவு செலவானாலும் சரி ..நாங்கள் பார்த்து கொள்கறோம் சார் என்று கெஞ்ச தோன்றுகிறது லயன் 33 ஆம் ஆண்டுமலரையும்,300 வது இதழையும் ஒன்று சேர்ந்து கைகளில் ஏந்தி நிற்கும் தருணம்..என்ன தான் வண்ணம் ஓர் அழகு என்றாலும் கறுப்பு வெள்ளை இப்பொழுது எல்லாம் கூடுதல் அழகாக தெரிகிறது எனக்கு.அதிலும் டெக்ஸை பொறுத்த வரை வண்ணத்தை விட கறுப்பு வெள்ளையில் தான் இன்னும் என்னை ஒன்றி போக செய்கிறார்.முழுநீள டெக்ஸ்...,.ராபின்..,இளவரசி...,ஜூலியா அனைவரும் இணைந்து கறுப்பு வெள்ளையில் பட்டையை கிளப்புவது புரட்டி பார்க்கையிலியே புரிகிறது.பளீர் வெள்ளைதாள்..அனைத்து கதை சித்திரங்களின் தரம் என கொள்ளை கொள்கிறது இந்த லயன் 33+300.


    க்யூபா படலம்...

    யாருப்பா அது ..டைகர் கதையில் மட்டும் தான் அடிமைகள்..,சுதந்திரம்..,போர்..வரலாறு ..உண்மை..நிஜ வில்லன் .நம்ப தகுந்த கதை பாங்கு உண்டு...டெக்ஸ் ஓரே கதை ..ஒரே பாணி என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பது...க்யூபா படலத்தை முதலில் படியுங்கள்..பிறகு தன்னால் டெக்ஸ் படலத்தற்கு அடிமையாகுவீர்..இவ்வளவு நீளத்தில் இந்த பாங்கினில் கமர்ஷியல் கலந்து கொஞ்சம் கூட சலிப்பின்றி ஆரம்பித்தில் இருந்து முடியும் வரை கீழே வைக்காமல் படிக்க வைக்கும் ஓரே நாயகன் டெக்ஸ் தானாக தான் இருக்கும்.

    இரண்டு ரிவால்வர்கள் வைத்திருக்கறாயே நீ என்ன கூலிப்படை ஆசாமியா என வினவும் லெப்டினண்ட் க்கு டெக் ஸ் அளிக்கும் பதில் செம..ஓரு வரலாற்று பாணியில் சிறிதளவு ஊடு சூனியம் மாந்தீரகம் என கலந்து கட்டி சாகஸம் செய்தாலும் படிக்க படிக்க பூச்சுற்றல் எண்ணம் கொஞ்சம் கூட எழவில்லை.

    டெக்ஸ் உடன் கிட் ,கார்ஸன்,டைகர் என எவரும் இல்லாவிட்டாலும் இம்முறை அவர் கூடவே பயணிக்கும் மண்டாலெஸ்,டான் ரபேல்,அடிமை அலோன்ஸா என அனைவரும் அந்த குறையை நிவர்த்தி செய்கிறார்கள்..
    மீண்டும் மீண்டும் பட்டையை கிளப்புகிறார் டெக்ஸ்...



    க்யூபா படலம் - காமிக்ஸ் படலம் ...

    ReplyDelete
    Replies
    1. ///க்யூபா படலத்தை முதலில் படியுங்கள்..பிறகு தன்னால் டெக்ஸ் படலத்தற்கு அடிமையாகுவீர்.///

      செம, தலீவரே!!

      Delete
    2. யாருப்பா அது ..டைகர் கதையில் மட்டும் தான் அடிமைகள்..,சுதந்திரம்..,போர்..வரலாறு ..உண்மை..நிஜ வில்லன் .நம்ப தகுந்த கதை பாங்கு உண்டு...டெக்ஸ் ஓரே கதை ..ஒரே பாணி என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பது...க்யூபா படலத்தை முதலில் படியுங்கள்..பிறகு தன்னால் டெக்ஸ் படலத்தற்கு அடிமையாகுவீர்..இவ்வளவு நீளத்தில் இந்த பாங்கினில் கமர்ஷியல் கலந்து கொஞ்சம் கூட சலிப்பின்றி ஆரம்பித்தில் இருந்து முடியும் வரை கீழே வைக்காமல் படிக்க வைக்கும் ஓரே நாயகன் டெக்ஸ் தானாக தான் இருக்கும்.///
      மெக்சிகோவுக்கும் டெக்சால் தான் விடுதலை கிடைத்தது என்பது க்யூபா படலத்தை படித்த பின் தான் புரிந்தது தலைவரே...

      Delete
    3. புரிஞ்சா சரி ரம்மிஜீ நீங்க எல்லா நாட்டு விடுதலைக்கும் இன்குளூடிங் இந்தியா உட்பட டைகர் தான் காரணம் னு நினைச்சுட்டு இருக்கீங்க.....:-))

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. அது மட்டும் இல்லை இந்தியா சுதந்திரம் கிடைச்சது கூட டெக்ஸ் தான் காரணம். இரண்டாவது உலகப்போர் போரில் ஹிட்லரை கொன்னது டெக்ஸ் தான்.
      அவ்வளவு ஏன் மூன்றாவது உலகப்போர் டெக்ஸ் இன்னும் permission குடுக்காதனாலதான் இன்னும் ஆரம்பிக்க வில்லை....

      நான் இன்னும் டெக்ஸ் படிக்க வில்லை. ஆரம்பித்து உடனேயே நாங்கள் எல்லாம் அந்த காலங்களில் ஆரம்பிச்ச உடனே ரொம்ப போர் அடிச்சது . அதான் இன்னும் படிக்க வில்லை.

      Delete
    6. இல்லீங் கணேஷ் சார்....நானும் எங்க ரம்மிஜீ மாதிரி இதற்கெல்லாம் காரணமாக இருப்பவர்...,இருக்க போகிறவர் டைகராக தான் இருப்பார் ன்னு நம்புறேன் ....


      அப்படின்னு எழுதி திரும்ப டெக்ஸ் ,டைகர் பஞ்சாயத்து வந்து நண்பர்களின் மண்டை காயவேண்டாம்ன்னு கம்முன்னு போயிறேன் ...:-)

      Delete
    7. //இப்படி ஓரு "குண்டு " மாதா மாதம் என் மேல் வீச கூடாதா என்று ஆசிரியரை பார்த்து கோபத்துடன் வினவுகறேன்.இதனால் எவ்வளவு பாதிப்பு வந்தாலும் சரி..,கைகள் எவ்வளவு வீங்கினாலும் சரி...எவ்வளவு செலவானாலும் சரி ..நாங்கள் பார்த்து கொள்கறோம் சார் என்று கெஞ்ச தோன்றுகிறது //
      +1

      Delete
    8. @ Ganeshkumar Kumar

      ///அது மட்டும் இல்லை இந்தியா சுதந்திரம் கிடைச்சது கூட டெக்ஸ் தான் காரணம். இரண்டாவது உலகப்போர் போரில் ஹிட்லரை கொன்னது டெக்ஸ் தான்.
      அவ்வளவு ஏன் மூன்றாவது உலகப்போர் டெக்ஸ் இன்னும் permission குடுக்காதனாலதான் இன்னும் ஆரம்பிக்க வில்லை///

      ஹா ஹா ஹா! செம! :))))))

      Delete
    9. சிரிக்காதீங்க செயலரே எனக்கு கோபம் கோபமா வருது...இதே கருத்தில் டெக்ஸ் என வரும் இடத்தில் டைகர் ன்னு போட்டு பாருங்க...இது எல்லாம் மட்டுமல்ல தமிழ் ஈழம் கூட டைகரால் கொண்டு வந்திருக்க முடியும் அதுவே உண்மையிலும் உண்மை...என சீரியஸாக நம்ப சொல்லி இருப்பார்கள்.. ..

      Delete
  23. ///Maybe இந்த ஞாயிறை ஷானியாவோடு செலவிடும் திட்டமிருப்பின் தொடரும் நாட்களில் உங்கள் அபிப்பிராயப் பகிர்வுகள் எவ்விதமிருக்குமென அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பேன்!///

    ஷானியாவுடன் இந்த ஞாயிறு மட்டுமின்றி, வாழ்நாள் முழுக்கச் செலவிட சித்தமாயிருக்கிறேன்! ( யாராவது ஷானியாவிடம் கேட்டுச் சொல்லுங்க ப்ளீஸ்) :P

    நேத்திக்கு லேடி-S படிக்க ஆரம்பிச்சதிலேர்ந்தே இதயம் தாறுமாறா துடிச்சுக்கிட்டு கிடக்கு! கண்ணுக்கீழே உள்ள ஒரு மச்சத்திற்கு - ஒட்டுமொத்த தூக்கத்தையும் கலைக்கும் ஆற்றலிருப்பதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!!

    ஆர்ர்ர்ஹ்ஹியூஊஊஊ!!

    ReplyDelete
    Replies
    1. வாங் கடல்யாழ் சகோ!! 'இவரையெல்லாம் திருத்தவே முடியாது'னு நினைக்கறீங்க அதானே?

      பை த வே, உங்களுக்கு ஷானியாவைத் தெரியுமா? :)

      Delete
    2. உங்க வீட்டம்மாகிட்டயே கேட்டுப் பாருங்களேன்.. அவிங்க ரெண்டு பேரும் க்ளோஸ் க்ளாச்மேட்கள் தானாம்...

      Delete
    3. @Erode Vijay
      Appdiyellam ninaikkavillai sagotharare
      Lady S- yaiyum clean bold seithu vittirgale ninaichen

      Delete
    4. @Karur Saravanan
      Sagotgarare Sollidaathingo appuram erode pakkame vara vida maatar 😀

      Delete
    5. ///கண்ணுக்கீழே உள்ள ஒரு மச்சத்திற்கு///

      ஜெயிச்சுட்டீங்க ஈ.வி.

      யாா் மொதல்ல மச்சத்தைப் பத்தி பதிவிடப் போராங்கன்னு ஆவலோட எதிா்பாத்துட்டு இருந்தேன்!

      நான் மனதிலேயே வைத்திருந்த பந்தயத்தில் ஜெயிச்சுட்டீங்க போங்க!

      Delete
    6. @ கரூர்கார்
      ///உங்க வீட்டம்மாகிட்டயே கேட்டுப் பாருங்களேன்.. அவிங்க ரெண்டு பேரும் க்ளோஸ் க்ளாச்மேட்கள் தானாம்...///

      அடடா.. 'மிஸஸ் ஷானியா ஈனாவினா'னு ஆகியிருக்கவேண்டியது - ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே..!

      @ மிதுன்

      ஹிஹி! பெருமை பெருமையா வருதுங்க! கேப்ஷன் போட்டியிலே ஜெயிச்சப்போக்கூட நான் இம்புட்டு சந்தோசப்பட்டிருப்பேனான்னு தெரியலை!
      அப்புறம்.. இந்த மச்சப்போட்டியில ஜெயிச்சதுக்கு கடுங்காப்பியும், கார பன்னும் வாங்கித்தருவீங்கதானே? ;)

      Delete
    7. கண்டிப்பாக ஈ.வி.!!!

      Delete
  24. Kalai Vanakkangal Aasiriyare ☺
    Kalai Vanakkangal Comics Friends ☺��

    ReplyDelete
  25. Intha Maatham puthangal better vanthu vittana,indruthaan naan vaanga selven
    Puthangal vanthavudan comments kandipaaga Inge undu ☺

    ReplyDelete
  26. ///ஜடை போட்டிருக்கோ; கொண்டை போட்டிருக்கோ ; தலையை அவிழ்த்துப் போட்டிருக்கோ – ஒரு அழகான பெண்பிள்ளை அட்டைப்படத்தில் மந்தகாசமாய் சிரித்து நின்றாலே லயித்துப் போய் மரத்தடியில் மட்டையாகிடும் செயலரைப் போல/////

    என்ன போராட்டக் குழுவிற்க்கு மறுபடியும் வேலையா??
    மீன் கருவாடாகலாம் ஆனால் கருவாடு ஒருபோதும் மீனாக முடியாது என்ற எச்சரிக்கை வாசகத்தை எதிர் கட்சித் தலைவரை நோக்கி சொல்லிடும் அதே வேளையில்..

    ReplyDelete
  27. @Paranitharan
    Thalivare Nalama Ullirgala?
    Ponavaraam thangalukku pathilida mudiyaamal vittathu😁

    ReplyDelete
    Replies
    1. நலமே....சகோ கடல்யாழ்...இந்த முறையும் ஈரோடு வருவீர்கள் அல்லவா...

      Delete
    2. Erode thiruvizhakku Vijayam undu Sagotharare ☺

      Delete
  28. முத்து 400 -லேடி S


    லயன் 300 போல் இல்லாவிட்டாலும் முத்து 400 வை அதில் பாதி அளவிற்காவது கொஞ்சம் பெரியதாக இருந்து இருக்கலாமோ என்று தோன்றினாலும் ஒரே மாதத்தில் மிக பெரிய பட்ஜெட் விற்பனையாளர்களும் ,வாசகர்களும் தாங்குவார்களா என்ற தயக்கம் சிம்பிளாக நானூறை தயாரித்துவிடலாம் என்று முடிவெடுத்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன் சார்.முத்து 400 simple ஆக அமைந்து இருந்தாலும் உள்ளே அதன் படைப்பான lady S.....?



    முதலில் முன் பின் அட்டைப்படத்திலியே லேடி S பளீர் நீல வர்ணத்தில் அட்டகாச படுத்தி உள்ளார்.இந்த முதல் சாகஸம் ஷானியாவின் சாரி சூஸனின் சாரி லேடி S ன் அறிமுக படலம் என்பது புரிபடுகிறது..ஆனால் இந்த அறிமுக படலமே இப்படி அதகளபடுத்தினால் இனிவரும் சாகஸங்கள் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் போக போகிறது என்பதை உணர முடிகிறது. முதல் பாகம் படிக்க படிக்க நாயகியின் வரலாறு சிறிது மாடஸ்தியை ஒத்து இருக்கிறதே என்று நினைத்து கொண்டே வாசித்தால் கதையில் வரும் கதாபாத்தி்ரமும் அதையே சொல்கிறது.கதையின் காலகட்டங்கள் முன் பின் கலந்து கட்டி வந்தாலும் எவ்வித குழப்பமும் இன்றி அட்டகாசமாக பயணிப்பது தங்களின் மொழி ஆக்கத்தால் தான் என்பதும் கண்டிப்பாக உணரமுடிகிறது.லார்கோவின் முதல்பாகம் எப்படி அவர் வரலாற்றை அறிவித்து விட்டு இப்போது வரை கலக்குகறாரோ அதே பாணி இந்த லேடி S லும்.லார்கோ கதையை எப்படி ஆரம்பித்தால் இடையில் வைக்க முடியாதோ அதே நிலை தான் இந்த லேடிக்கும்..உண்மையை சொல்ல போனால் இந்த லேடி மாடஸ்திக்கும் மட்டுமல்ல லார்கோவிற்கே சவால் விடுவார் போல.உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டாரை இறக்குமதி செய்து உள்ளீர்கள்..முத்து நானூறை அதகளமாக சிறப்பிக்க 100% சரியான கதை களத்தை தான் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.எப்படி ஒரு டெக்ஸ்..,லார்கோ.,ஷெல்டன் படித்தவுடன் அவர்களின் அடுத்த சாகஸத்தை உடனே காண துடிக்குமோ அதே மனநிலையை லேடி S தனது முதல் சாகஸத்திலியே தோன்ற வைத்து விட்டார்... சொல்ல போனால் படித்து முடித்து இந்த விமர்சனம் எழுத எழுத இப்பொழுதே இவரை மீண்டும் படிக்க தோன்றுகிறது மனம்..இன்னும் இந்த மாதம் படிக்காத கதையே நான்கு இருக்கிறதடா என்று அறிந்தாலும்.


    ஒன்றே ஒன்று மட்டும் வேண்டி கொள்கிறேன் சார்..அடுத்த வருடம் லேடி S அவர்களுக்கு கூடுதல் இடத்தை ஓதுக்கி வைத்து விடுங்கள் ஆமாம்...அப்படியே "சுடும் பனி " அடுத்த மாதமா அதற்கடுத்த மாதமா என அறிவித்து விட்டீர்கள் எனில் இன்னமும் கூடுதல் மகிழ்ச்சி சார்..

    ReplyDelete
    Replies
    1. Idea 1
      Lady S kku rasigarkalidam irunthu varum vimarsanagalai kondu kovai stalil sales seithu vidalam😎

      Delete
  29. வாழ்த்துக்கள் கோவிந்ராஜ் சார்..


    கோடையிடி ரவி கண்ணரே.....

    மனமார்ந்த பாராட்டுக்கள்...
    💐💐💐

    ReplyDelete
    Replies
    1. “பேரெல்லாம் வெளியே தெரிய வேண்டாமே சார்....வாசகர்களுக்குப் பிடிக்காது போய் விட்டால் கோடையிடியாய் மொத்தித் தள்ளி விடும் ஆபத்திருக்குமே!” என்று அவர் சொன்னதால் – அடித்தே கேட்டாலும் அவரது அடையாளத்தை வெளியிடுவதாகயில்லை.
      //அடடே நீங்கதானா தம்பி அது,நல்ல பண்ணியிருக்கிங்க ,வாழ்த்துக்கள்.தொடர்ந்து பண்ணுங்க தம்பி.

      Delete
    2. சரவணர் & கழுகண்ணே நன்றி நண்பர்களே..!

      Delete
    3. கழுகாரே உங்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

      Delete
    4. எல்லோரையும் போல நானும் ஒரு எளிய வாசகன் அவ்வளவே.

      Delete
    5. க்கும்... எல்லாம் எளியன் எளியன்னு தான் சொல்றாங்க...
      படக்குனு,
      ஒருத்தர் லோகோ போடறாராரு,
      ஒருத்தர் அட்டைப்படம் போடறாரு,
      ஒருத்தர் வசனம் எழுதறாரு,
      ஒருத்தர் மொழி பெயர்க்காரு,
      ஒருத்தர் ஸ்கிரிப்ட் எழுதறாரு...
      ஹூம்...
      எந்தப் பையில் எந்த காமிக்ஸோ...!!!

      எல்லாம் செம பெத்த பார்ட்டிங்க...

      Delete
    6. எல்லாம் செம பெத்த பார்ட்டிங்க..// உங்களையும் சேர்த்து தானே சொல்றிங்க டெக்ஸ்.

      Delete
    7. க்கும்...பெத்த பார்டிகளுக்கு நடுவே 4டெக்ஸ் புக்கை மட்டுமே வைத்து இருக்கும் சொத்த பார்ட்டி நானுங்க...

      Delete
    8. வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்,4 புக்குக்கு மேல் இருந்தா எனக்கு கொடுத்துடுங்க டெக்ஸ்.
      ஹி,ஹி.சும்மா.

      Delete
  30. Ivarudamum Kovaiyil stall romba Magizhchi☺😇
    Irandu sani nayirukalum nammal stallil iruppar😎

    ReplyDelete
  31. @Govindaraj Perumal
    Valthukkal Sagotharare 👌👌👌

    ReplyDelete
  32. //இந்தக் கதை 1957-ல் ஜான் ஸ்டீலின் சாகசமாகவே ஒரிஜினலாய் வெளிவந்துள்ளது - FLEETWAY-ன் Thriller Library-ல் ! இதோ அதன் ஒரிஜினல் அட்டைப்படம் - கதை பெயரோடு ! //

    இந்த கதை கூட தமிழில் ஏற்கனவே வந்துள்ளது. நமது பதிப்பகம் என்றே ஞாபகம்.

    ReplyDelete
  33. @Ravi Kannan
    Aasiriyare ungal adaiyaalathai veliyida villai
    Aana parunga comics nanbargal naanga kandupudichitom
    Awesome job brother👏

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..! நீங்க கண்டுபிடிக்கலைன்னா மாடஸ்டியாலேயே முடியாதே..! :-)

      Delete
  34. காலை வணக்கம் நண்பர்களே.
    விஜயன் சார் Good morning, சந்தா G பற்றி அதான் சார் குண்ண்ண்டு புக்
    பற்றிய அறிவிப்பு எப்போது????????
    ஈ வி உங்கள் கமென்டை உங்கவீட்டம்மா
    படித்துவிட்டதால் கையில் உருட்டுகட்டையுன் (கவனிக்க செம இல்லை) உங்களை தேடிக்கொண்டுஇருக்கிறார்.

    ReplyDelete
  35. Congrates Kannan. U r looking terror. But ur comedy sense awesome.

    ReplyDelete
    Replies
    1. டெர்ரரா???? எல்லோரும் பிஞ்சிமூஞ்சின்னு சொல்றாங்க சார்.! Thank u so much ..!

      Delete
  36. Congrates Kannan. U r looking terror. But ur comedy sense awesome.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தொடர்ந்து பதிவிடும்கள்

      Delete
  37. Govindarajperumal sir congratulations. Saranselvi sir wish you happy wedding anniversary 🎂🍰🌹🌹💐👏👏

    ReplyDelete
  38. " விண்ணில் ஒரு எலி" யை மொழி பெயர்த்த புலி திரு.கிட் ஆர்டின் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    அப்புறம் ஒரு வேண்டுகோள்.
    இம்மாதிரியான பணிகளில் ஈடுபடும் நண்பர்கள் தங்கள் பெயரை வெளியிட தயங்குவது ஏன் என விளங்கவில்லை.
    மற்றவர்கள் செய்யாத, செய்ய நினைக்காத,செய்ய தயங்குகிற வேலைகளை செய்பவர்கள் தங்களது பெயரை தெரிவிக்க தயக்கம் ஏன் என்று தெரியவில்லை.
    சாதனை புரிந்தவர்களை பார்த்து அடுத்தவர் கேலி செய்ய என்ன காரணம் இருக்கப் போகிறது?
    தன்னால் முடியாததை அடுத்தவர் செய்யும் போது அதை வாழ்த்துவதை விட்டுவிட்டு கிண்டலடிப்பதில் என்ன நியாயமிருக்கிறது.
    ஒருவேளை அடக்கத்தின் காரணமாக வெளியிட வேண்டாம் என்ற எண்ணம்தான் காரணமென்றால் அது இன்னும் பல தோழர்களின் ஆர்வத்தை மட்டுப்படுத்தவே செய்யும். நம்மில் ஒருவர் இந்த பணியை செய்திருக்கிறாரென்றால் நாமும் முயற்சிக்கலாமே என்ற உத்வேகம் நம்மில் பலருக்கு வரக்கூடுமல்லவா?
    "என்னென்ன திறமைகள் வெளிச்சத்துக்கு வராமல், அல்லது வரத்தயங்கிக் கொண்டு வீண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ!?"
    காமிக்ஸை உருவாக்கியதில் பங்குகொண்ட ஊர் பேர் தெரியாத அயல்நாட்டவர் பெயரையெல்லாம் தெரிந்து வைத்துள்ள நாம் அந்த காமிக்ஸ்கள் அழகு தமிழில் உருமாறி நம் கையில் தவழுகையில் அந்த பணியில் பங்கு கொண்ட நம்மில் ஒருவரை அதுவும் கிசுகிசு பாணியில் எடிட்டர் சொல்லித் தெரிந்து கொள்வது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
    இனிமேலாவது நம்மவர்களின் பெயரை அவர் செய்த பணியுடன் கதைகளின் முன் பக்கத்தின் ஒரு மூலையிலாவது இடம்பெற செய்யுங்கள் சார்.
    இன்னும் பல ஆண்டுகள் கழித்து அந்த புத்தகத்தை கையிலெடுக்கையில் அந்த கதையுடன் சேர்ந்து அந்த தோழரின் பெயரும் வாழ்ந்து கொண்டிருக்கும். பணியில் சம்மந்தபட்ட தோழர்களும் இந்த இனிய நாட்களை மீண்டும் ஒருமுறை மனதில் ஓட்டிப்பார்க்கலாம்.
    தோழர் ஒருவர் குறிப்பிடுவது போல "வரலாறு முக்கியம் ஆசிரியரே" என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    என்னுடைய வார்த்தைகளில் தவறிருக்குமானால் திருவிளையாடல் தருமி என நினைத்து விட்டுவிடுங்கள்!!.

    ReplyDelete
    Replies
    1. ///" விண்ணில் ஒரு எலி" யை மொழி பெயர்த்த புலி திரு.கிட் ஆர்டின் அவர்களுக்கு வாழ்த்துகள்.///

      Rewrite தான் செய்தேன் சார். மொழிபெயர்ப்பு இல்லை. !
      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ATR சார்.!

      Delete
    2. Rewrite தான் செய்தேன் என்று அடக்கத்துடன் கூறினாலும் பழைய மொழிபெயர்ப்பை இக்காலத்துக்கு தகுந்தபடி மாற்றம் செய்தது படிக்கையில் பழமை நெடிவீசாமல் மணக்க வைத்ததே ஒரு சாதனைதானே என் வாழ்த்துகள் அதற்காகவென வைத்துக்கொள்ளுங்கள்.

      Delete
  39. சிக்பில் க்ளாசிக்ஸ் :-

    புத்தகத்தை கையில் ஏந்திய அந்த நிமிடம் மனதில் உண்டான புளகாங்கிதத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை சார்.!
    ஒரே வார்த்தையில சொல்லணும்னா "பரவசநிலை" ன்னுதான் சொல்லணும்..!

    இரும்புக் கௌபாய் -

    ரோபோ பொம்மை உடைந்ததும், கிட் ஆர்டின் மனமுடைந்து போய் உட்கார்ந்துவிட, சமாதானப்படுத்த டாக்புல் பேசும் வசனங்களும் குழையும் விதமும் செம்ம அழகு. மீண்டும் ஆர்டினுக்கு பொம்மை கிடைத்ததும் நமக்கே கிடைத்தது போல் ஒரு மனநிறைவு உண்டாகிறது (லவ் யூ கிட் ஆர்டின்.) .

    தீயை அணைக்கிறேன் பேர்வழியென்று அந்த வீட்டையே தண்ணீரில் ரொப்பிவிட, போதும் நிறுத்துங்கப்பா, எனக்கு நீச்சல் தெரியாதுன்னு வீட்டுக்காரர் கெஞ்சுவது,

    ஏற்கனவே குடாக்காக
    இருக்கும் ஆர்டினை ஹிப்னாடைஸ் பண்ண புரொபசர் ஜெஸில்லா முயற்சிக்கும் இடங்கள்,

    ஹிப்னாடிச மயக்கத்தில் ஆர்டின், அடிக்கணும் கதவை திறக்கணும்னு வரிசையா கூட இருப்பவங்களையே அடிச்சிட்டு திறக்க கதவில்லாமல் இப்போ நான் எதை திறக்குறதுன்னு தவிப்பது என்று இந்த 48 பக்கங்களில் வாய்விட்டு மனம்விட்டு சிரிக்க நானூறு விசயங்கள் இருக்கின்றன.!

    எனக்குமட்டும் டைம் மிசினோ அல்லது அலாவுதீன் பூதமோ கிடைத்தால் டொய்ங்ன்னு வுட்சிடிக்குப் போய் இந்த அழகிய நண்பர்களுடன் ஐக்கியமாகிவிடுவேன். .!

    இரும்புக் கௌபாய் - இனிப்புக் கௌபாய்

    காதலுக்குமுண்டோ அடைக்குந்தாழ் :-

    பதினாலே பக்கங்கள்தான், ஆனாலும் பட்டாசான காமெடித்தோரணம்.
    நீர்கசிவை அடைக்கவேண்டி தார் வாங்க ஆர்டினை அனுப்பிவிட்டு, இரண்டுமணி நேரமாக ஓட்டையை கையால் அடைத்தபடி காத்திருக்கும் ஷெரீப்பை முதல் பக்கத்தில் பார்த்தபோதே சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. அங்கே நம்மாள் ஆர்டினோ மரத்தடியில் குறட்டை விட்டுக்கொண்டு கடமையாற்றியபடி இருக்கையில், எதேச்சையாக ஒரு "நன்"னுக்கு உதவப்போக, (அந்த நன்னுப் பொண்ணு அழகா இருந்ததும் கிட் ஆர்டினோட உதவும் மனப்பான்மை பன்மடங்காகிவிடுகிறது...சகஜம்தானே..)
    அதனால் ஏற்படும் சிக்கல்களை எப்படி ஆர்டின் அண்ட் கோ சமாளிக்கிறார்கள் என்பதை செம்ம சிரிப்போடு சொல்லியிருக்கிறார்கள்.சொல்லப்போனால் வழக்கத்திற்கு மாறாக இதில் கிட் ஆர்டினோ ஹீரோவாகவும் ஜொலிக்கிறார். .!

    காதலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ் - காமெடிக்கும் உண்டோ காட்ரேஜ் தாழ்..!

    ReplyDelete
    Replies
    1. விண்ணில் ஒரு
      எலி :-
      நீண்ட நாட்களுக்கு முன்னர் படித்திருந்தாலும் கதை ஓரளவு நினைவில் இருந்தது. ஆனால் இப்போது படித்தபோது முற்றிலும் புதியதொரு கதையை படித்த உணர்வே மேலோங்கியது.
      கருப்பு வெள்ளையில் பார்த்த சித்திரங்களை இப்போது அட்டகாசமான வண்ணக்கலவையில் மிகத்தெளிவாக டிஜிட்டலைஸ் பண்ணப்பட்டு பார்த்தபோது மெய்மறந்து போனேன்னு சொல்லலாம்.!
      கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த எலியாரின் முகபாவங்களும், வசனங்களும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன.
      போலவே, திருடன் க்ரேஸி ஜேக் பணத்தை எடுக்க படாதபாடு படும்போது நம்மால் சிரிக்காமல் இருக்கவே முடியாது.!

      அப்புறம் அந்த கனடா போலிஸ் அதிகாரி.., மிகச்சரியாக தவறான நபரை திருடன்னு சொல்லி விரட்டுவது, அந்த வீட்டுக்கார பெரியவர் எல்லோரிடமும் துப்பாக்கியால் பேசுவது என்று திரும்ப திரும்ப படிக்கத்தூண்ட நிறைய காரணிகள் இருக்கின்றன.!
      தன்னுடைய மேதாவிலாசத்தின் மேல் கொண்ட நம்பிக்கையால் கிட் ஆர்டினையும் சேர்த்து பலூனில் சிக்கவைத்துவிட்டு, தரையிறங்க போராடும் டாக்புல் வழக்கத்தைவிட அதிகமாகவே கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
      பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரம் ஏறித்தான் ஆகணும்கிற கதையா, ஷெரீப்போடு சேர்ந்து பலூனில் மாட்டிக்கொள்ளும் கிட் ஆர்டின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரிக்க வைக்கிறார். அதுவும் எலியுடன் நட்பு ஏற்டுத்திக்கொண்டு, பாஸையே பயப்படுத்துவது ஹைலைட்..!

      விண்ணில் ஒரு எலி - சிரித்ததில் வயிறில் வலி

      மொத்தத்தில் சிக்பில் க்ளாசிக்ஸ் இந்த வருடத்தின் ஸ்மாஷ் ஹிட்களில் ஒன்று என்பது உறுதியோ உறுதி..!

      Delete
    2. விண்ணில் ஒரு எலியின் விமர்சனம் நேற்றே டைப் செய்து வைத்துவிட்டேன்.! ஆனால் இப்படி எடிட்டர் சார் கஷ்டமான க்ளூ கொடுப்பார்னு எதிர்பார்க்காததால் விமர்சனம் எழுதியிருந்தேன்.! சரி எழுதியதை ஏன் கைவிடணும்னு சொல்லி அப்படியே போட்டுவிட்டேன்.!ஹிஹி . .! நீங்களும் பெருந்தன்மையா மன்னிச்சு படிச்சிடுங்க நண்பர்களே..!! :-)

      Delete
    3. செல்லாது,செல்லாது.

      Delete
    4. ஈரோட்டில் ட்ரீட்டு அதானே ரவி...

      Delete
    5. அவ்ளோ நாளெல்லாம் வெயிட் பண்ண முடியாது.. இந்த புதன் தாரமங்கலத்தில்..

      Delete
    6. சரவணன் சாரே ஆகஸ்ட் 4ம் தேதி வெள்ளி மதியம்,5ம் தேதி சனி முழுதும் என ஏற்கனவே வீட்டம்மா கைல கால்ல விழுந்து பெர்மிசன் வாங்கி வைத்து உள்ளேன் அய்யா...
      இப்ப மறுபடியும் குறுக்கே புதன்னா என்ன சொல்லி அழ அடச்சே விழ...

      Delete
    7. சரி விடுங்க.. வாய்ப்பு இருந்தால் ஆகஸ்ட் 4ந் தேதி வெள்ளிக்கிழமை மதிய விருந்துக்கு பார்ப்போம்..

      Delete
    8. ஈரோட்டில் ட்ரீட்டு அதானே ரவி...//
      ஹி,ஹி அதேதான் டெக்ஸ்.

      Delete
    9. இப்ப மறுபடியும் குறுக்கே புதன்னா என்ன சொல்லி அழ அடச்சே விழ...// விடுங்க இன்னொரு வாட்டி விழுந்துட்டா போச்சி,அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே.

      Delete
    10. "தீதான் மயிலு கோவால கிருஷ்ணன் கோவால கிருஷ்ணன்னு சொல்ற, ஊருக்குள்ள எல்லாரும் சப்பாணி சப்பாணி ன்னு தான் கூப்பிடுறாங்க"----அப்டீங்கறா மாதிரி நாம தான் இம்புட்டு வார் புடிக்கிறோம், பயபுள்ள கிட் அங்கிள் வந்து ஒரு நடையும் வாசிக்க காணோமே...

      Delete
    11. என்ன வெள்ளிங்கிரீங்க! புதன்கிரீங்க! சாியாச் சொல்லுங்க!
      என்னை மாதிாி புதுவரவுகளுக்கு ஒரே குழப்பமா இருக்கு!!

      நான் வேற கோபியிலிருந்து வர ரொம்ப லேட்டாகுமுல்ல!!

      Delete
  40. விஜயன் சார், எம்மாம் பெரிய மசால் தோசை. ஸ்பெஷல் இதழ்களில் பொருட்டு ஒவ்வொரு முறையும் நீங்கள் வானத்திற்கும் சிவகாசிக்கும் அடிக்கும் பல்டிகள் மிகவும் சுவாரசியமானவை. இந்த முறையும் அதே. நன்றி. அடுத்த மாதம் பல்டிக்கு கருப்பட்டி பனியாரம் சாப்பிட்டு ரெடியாகிகோங்கோ. இது போக ஈரோட்டில் வாசகர் சந்திப்பு வேறு... கேட்ட கேள்வியை சுத்தி சுத்தி கேட்போம்.. ரெடியா இருங்க.

    ReplyDelete
  41. லேடி S :-

    முதலில் கண்களை சுண்டி இழுக்கும் அழகான அந்த ட்ராயிங்கிற்கு பாராட்டுகள்.

    முன்னும் பின்னும் குறுக்கும் நெடுக்குமாய் கதை பயணித்தாலும் துளிகூட குழப்பமில்லாத தெளிவான கதையோட்டம்.

    ஐநா, ஐரோப்பிய கூட்டமைப்பு, நேட்டோ போன்ற சமாச்சாரங்கள் கொஞ்சம் தூரமாய் தெரிந்தாலும் அவற்றை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சம்பவங்கள் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொள்கின்றன.
    ஸ்டூவர்ட் ஒருவரை மயங்கச்செய்து அந்த இடத்திற்கு ஆன்டன் செல்லும் முதல் பக்கத்திலேயே தொடங்கிவிடும் சஸ்பென்ஸ் கடைசி பக்கத்தில் அந்தப்பெரியவர் ஷானியாவுக்கு லேடி S ன்னு பெயர் வைக்கும் வரை கிஞ்சித்தும் குறையாமல் பயணிக்கிறது. (வான் ஹாம்மேன்னா சும்மாவா? )

    இந்த இடத்தில் லேடி Sஐ லேடி லார்கோன்னு தயங்காமல் சொல்லலாம்.

    அப்புறம்.. . . அப்புறம்.. ஷானியுக்சா என்கிற ஷானியா என்கிற சூசன் என்கிற லேடி S க்கு ரசிகர் மன்றம் வைக்கலாம்னு ஒரு தீர்மானம் இருக்கு.! நிர்வாகிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறும். !

    ஷானியுக்சா, ஷானியா பெயர்களில் வரும்போது பரிதாபம் மேலோங்குகிறது.
    லேடி S ஆனபிறகு கம்பீரமும், லேசான மரியாதையும் (பயம்னும் சொல்லலாம்) வருகிறது.

    ஆனால் சில்லறை திருட்டுகளை லாவகமாக செய்யும் அந்த சூசன், தூதரின் வளர்ப்பு மகளான அந்த சூசன், கூரை மீது ஏறி தப்பிக்கும் அந்த சூசன்தான் என்னை பெரிதும் கவர்ந்துவிட்டாள்..! அந்த கண்ணுக்கு கீழே ஒரு மச்சமிருக்கே மச்சம் அடாஅடா..!! நேற்றைய கனவு முழுக்க சூசனே வியாபித்து இருந்தாள்.

    டார்லிங் சூசன்! வெல்கம் டூ அவர் லவ்லி தமிழ்காமிக்ஸ் வேர்ல்டு டியர்..!!

    லேடி S - ப்ப்பியூயூட்டீடீடீ SSS

    ReplyDelete
    Replies
    1. ///ஷானியுக்சா என்கிற ஷானியா என்கிற சூசன் என்கிற லேடி S க்கு ரசிகர் மன்றம் வைக்கலாம்னு ஒரு தீர்மானம் இருக்கு.! நிர்வாகிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறும். ! ///--- ஷானியாவுக்கு மாலை போட்டு கவுரப்படுத்தும் வாய்ப்பை கொடுங்கபா...

      Delete
    2. ஆல் ரெடி வெச்சாச்சி.

      Delete
    3. மச்சத்திற்காகவே மன்றத்தில் இணையும் மதன்!! ச்சீ மிதுன்!!

      பேரே மறந்துருச்சுன்னா பாத்துக்கங்கலேன்!!

      Delete
  42. நம்ம ஆசிரியர் வர வர நம்ப வாசகர்களை நல்லா போட்டு கொடுக்கிறார், பெயரை சொல்ல வேண்டாம் என்று கதறி அழுத பிறகும். கண்ணா கவலைபடவேண்டாம், ஈரோடுட்டுல்ல அவருக்கு லேக் பீஸ் கொடுக்க வேண்டாம்.

    வாழ்த்துக்கள் கண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா..!! எடிட்டர் சாருக்கு ஈரோட்டுல தயிர்சாதம் மட்டுமே கிடைக்கணும்னு கருப்புசாமிக்கு ஒரு லெட்டர் போட்டுவிடுறேன். . .!

      Delete
    2. நல்லா போச்சு, நம்ப ஆசானுக்கு பிடிச்சதே தயிர் சாதம் தான். அதனால் அவர்கிட்டேயே அவருக்கு பிடிக்காதது எது என்று கேட்டு ஆர்டர் பண்ணிவிடலாம். எப்பூடி.

      Delete
    3. அய்யா பரணி தயிர் சாதம்னா, மட்டன் பிரியாணில தயிர் பச்சடி கலந்து சாப்பிடுவோமே அது சாமீஈஈஈஈஈஈஈஈ...

      Delete
  43. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் நண்பரே கோவிந்த்...
    தொடர்ந்து கலக்குங்கள்...

    ReplyDelete
  44. டியர் எடிட்,

    First things First, 300 மற்றும் 400 சிறப்பு மைல்கல்களை, ஒருங்கே ஒரே மாதத்தில் இரு வேவ்வேறு விதமான இதழ்கள் மூலம் சிறப்பித்தற்கு, உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுகளை பெற்றுகொள்ளுங்கள். தயாரிப்பு மற்றும் சிரத்தையில் எந்த குறையும் இல்லாமல் வெளிவந்துள்ளன.

    1. முத்து 400 ஒரு தடிமனான இதழாக வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... முன்பே இதை பற்றி அறிவிப்பு வெளிவந்தபோது அதிருப்தியை பதிவு செய்திருநதாலும், அவற்றிற்கு தாங்கள் பதிலளிக்காததை வைத்தே, முத்துவிற்கு தடிம இதழ்கள் இல்லை என்ற கோட்பாடில் நீங்கள் உறுதியாக இருப்பது ஷ்பஷ்டம் என்றாலும், தொடர்ந்து முத்து வின் லேண்டமார்க் இதழ்கள், சாதாரண அமைப்பிலேயே வெளிவருவதில் வருத்தம் நிறையவே உண்டு.

    2. லயன் 300 இதழ் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையாக வெளிவந்தது.... லயன் மைல்கல் இதழ் சிறிது கூட கலரில் வெளிவராமல் வந்த 90 காலகட்டத்திற்கு பிறகு இதுவே என்று ஞாபகம். தற்போதைய அமைப்பில் கருப்பு வெள்ளை பக்கங்களுடன் கலர் வேலைபாடுகள் சிரமமே என்றாலும், ஆசை யாரை விட்டது...

    3, சிக்பில் ஸ்பெஷல், சூப்பர் 6 வரிசையில் இன்னுமொரு Sixer Hit. இளவயதில் படித்த அந்த மறக்க முடியா இதழ்களை புதிய பரிணாமத்தில், சிறப்பாக நினைவுகூற முடியுமா என்ற நெடுநாள் கனவுகள் தொடர்ந்து சாத்தியமாகி வருவதில் மகிழ்ச்சி. சந்தா கைகெட்டா தொகைக்கு சென்று விடும் என்ற எண்ணம் மற்றும் இல்லையெனில், மாதம் இப்படி ஒரு ஸ்பெஷல் ரீப்ரிண்ட் கேட்கும் நண்பர்கள் வரிசையில் நானும் ஐக்கியமாகி இருப்பேன்.

    4. ஜான் ஹாவக் சிறப்பிதழ் கிளாசிக் புத்தகத்தை பற்றி இணையத்தில் நண்பர்களிடையே எழுந்த விமர்சனங்கள் சற்றே மனதை கலங்கடித்தன. மீண்டும் ஒரு Mixing பாதைக்கு எடி தவறி விட்டாரோ என்று... அதற்கான விளக்கத்தை அளித்து ஐயத்தை போக்கி விட்டீர்கள்.

    வார இறுதி முடிவுற்குள் ஒரு சிறப்பிதழையாவது முடித்து விட எண்ணியுள்ளேன்.... நேரம் ஒன்றே தற்போதைய வில்லன்.

    தொடர்ந்து அசத்துங்கள் !

    ReplyDelete
    Replies
    1. ///முத்து 400 ஒரு தடிமனான இதழாக வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... முன்பே இதை பற்றி அறிவிப்பு வெளிவந்தபோது அதிருப்தியை பதிவு செய்திருநதாலும், அவற்றிற்கு தாங்கள் பதிலளிக்காததை வைத்தே, முத்துவிற்கு தடிம இதழ்கள் இல்லை என்ற கோட்பாடில் நீங்கள் உறுதியாக இருப்பது ஷ்பஷ்டம் என்றாலும், தொடர்ந்து முத்து வின் லேண்டமார்க் இதழ்கள், சாதாரண அமைப்பிலேயே வெளிவருவதில் வருத்தம் நிறையவே உண்டு.///

      +1

      அடுத்த வருடமும் இதே நிலை தொடருமானால் ஒரு பயங்கரப் போராட்டம் அறிவிக்கவேண்டிய நிலை வரக்கூடும்!

      Delete
  45. இந்த மாத அனைத்துமே டாப்,ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக இருந்தது,அனைத்தையும் பாராட்டி எழுதினால் விரல்களின் வீக்கத்திற்கு மருந்து தடவ வேண்டியதுதான்,எனவே சுருக்கமாக.
    1.டெக்ஸ்- சூப்பர்,வ.வீ சாகசத்திற்கு இணையானது.,டான் ரபெல் கதை பாத்திரம் மனதில் நிற்கிறது,வரலாற்று பின்னணியில் டெக்ஸ் அழகாக பொருந்தி போகிறார்,சிறு குறை யாதெனில் ஆங்காங்கே தட்டுப்படும் எழுத்துப் பிழைகள்.
    2.ராபின்-அளவான அதிரடி,இறுதியில் சிறு திருப்புமுனை,தெளிவான கதையோட்டம் இதை வெகுவாக ரசிக்க செய்கிறது,
    3.மாடஸ்டி-இந்த முறை இளவரசி சித்திரத்தில் சோடை போகவில்லை,விறுவிறுப்பான கதைக் களம்,பழகிய நட்புக்காக உதவி செய்ய முடிவெடுக்கும் போக்கு சிறப்பு.
    4.ஜூலியா-தெளிவான சித்திரங்கள்,அதிரடிகள் அதிகமில்லாத,காதல் கண்ணை மறைத்தாலும் காலம் கடந்தாவது நாயகனின் உண்மை சொரூபத்தை கண்டறிவதில் நாயகியின் துப்பறியும் திறன் தேறி விடுகிறது.
    -மொத்தத்தில் லயன் 300 பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
    5.லேடி S-முதல் வாசிப்பிலேயே கவனத்தை ஈர்த்து விட்டார்,தெளிவான சித்திரங்கள் கதைக்கு இன்னும் வலு சேர்க்கிறது,அடுத்த சாகசத்திற்காக ஆவலுடன்.
    6.சிக்பில் கிளாசிக்-மூன்று கதைகளும் ரசிக்கும்படியாக இருந்தது,அனைத்துமே முதல் வாசிப்பு என்பதால் இன்னும் சுவாரசியமாக இருந்தது,மொழிபெயர்ப்பு கதைக்கு கூடுதல் பலம்,குறிப்பாக விண்ணில் ஒரு எலியின் வசன நடைகள் பிரமாதம்,இப்பணியை செய்த கிட ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    சிக்பில்,லக்கி லூக் கிளாசிக் போன்ற கதைகள் ஹாஸ்யங்களின் திறவுகோலாக இருப்பதால் அவை என்றும் தொடர வேண்டும்.
    7.சில்வர் ஸ்பெஷல்-ஆகா,ஓகோ என்று சொல்லமுடியா விட்டாலும்,ஓகே ரகம் தான்,என்னைக் கேட்டால் ஜானி நீரோ கதைகளுக்கு சில்வர் எவ்வளவோ பரவாயில்லை என்பேன்.

    ReplyDelete
    Replies
    1. short & sweet விமர்சனங்கள் ரவி அவர்களே!

      Delete
  46. ///குமுதம்” குழுமத்திலிருந்து !! ஏற்கனவே குங்குமம் இதழினில் 6 பக்கக் கவரேஜ் என்ற கேக்கே – மேஜை மீது கம்பீரமாய் நின்று கொண்டிருக்க, “அண்டர்டேக்கர்” குமுதத்தில் ஈட்டிய கவனத்தை கேக் மீதான செர்ரிப் பழமாய்ப் பார்க்கத் தோன்றியது !///

    வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்ந நன்றிகளை குமுதம், குங்குமம் நிர்வாகத்துக்கு அளிக்கிறோம்.!

    ReplyDelete
  47. வர வர நம்ம எடிட்டர் கொடுக்கிற க்ளூ எல்லாம் பச்சக் ன்னு ஒட்டவே மாட்டேங்குது, இல்லையா கண்ணன்

    ReplyDelete
  48. இந்த மாத இதழ்கள் ரேட்டிங் :
    1.டெக்ஸ் -9.75/10,
    2.சிக்பில் -10/10,
    3.லேடி S -9.50/10,
    4.மாடஸ்டி -9/10,
    5.ராபின் -9/10,
    6.ஜூலியா -9/10,
    7.ஜான் சில்வர்-7/10.

    ReplyDelete
  49. வணக்கம் விஜயன் சார்,

    சமீபத்தில் தான் undertaker, ஜான் சில்வர் மற்றும் tex in கவரி மான்களின் கதைகள் படித்தேன், tex கதைக்கு 9/10 சித்திரம் 10/10, undertaker 10/10 அனைத்திற்கும், ஜான் சில்வர் கதைக்கு 8/10, சித்திரம் சுமார் ரகம் தான். இப்போதெல்லாம் மறுபதிப்பு கதைகளை விட புதிய கதைகள் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2018-இ‌ல் அனைத்து புத்தகங்களுக்கு hardcover எதிர்பார்க்கிறேன். மறுபதிப்பு தடத்தில் புதிய ஆர்ச்சி கதைகளை அச்சிடுகல் சார்.

    ReplyDelete
    Replies
    1. //2018-இ‌ல் அனைத்து புத்தகங்களுக்கு hardcover எதிர்பார்க்கிறேன். மறுபதிப்பு தடத்தில் புதிய ஆர்ச்சி கதைகளை அச்சிடுங்கள்.//
      எல்லாமே ஹார்ட் பவுண்ட் எனில் பட்ஜெட் எகிறிவிடுமே நண்பரே,
      புதிய ஆர்ச்சி கதைகள் தாரளமாக.
      +11111

      Delete
    2. தரம் வேண்டுமெனில் பணம் (சில பல) செலவாகதான் செய்யும் ப்ரோ

      Delete
    3. லேடி S A+++, லார்கோ விட்டு செல்லும் இடத்தை ஐய்யமின்றி பிடிப்பார் என்று நம்புகிறேன்.

      Delete
  50. கோவிந்தோ @ நம்ப வாழ்த்துக்களை பிடிச்சு பத்திரமாக பைய்யில போட்டுக்கோங்கோ.

    ReplyDelete
  51. 1) சிக்பில் ஸ்பெஷல், சூப்பர் 6 வரிசையில் ஒரு அதகளம், அருமையான புத்தக வடிவமைப்பு , அட்டகாசமான 3 கதைகள், கலரில் விளம்பரங்கள் என சிக்ஸர் அடித்து இருக்கிறது. இந்த மாதிரியான புத்தக வடிவமைப்பு மற்றும் அச்சு தரம் மனதை கொள்ளை கொன்று படிக்கும் ஆர்வத்தை நம்முள் ஆழமாக விதைக்கிறது
    2) லயன் 300 முன் அட்டை வடிவமைப்பினை விட பின் அட்டை அதிகம் ஈர்க்கிறது. இதுவரை நமது ஸ்பெஷல் இதழ்கள் எல்லாம் கலரில் மினிமம் 10 பக்கங்களையாவது தாங்கி வரும், ஆனால் இதில் ஒரு பக்கம் கூட கலரில் இல்லை என்பது மிக பெரிய குறையாக தெரிகிறது.
    புத்தக வடிவமைப்பு அருமை.
    3) முத்து 400 லேடி எஸ் பட்டையை கிளப்புகிறார் என்று சொல்ல முடியவிடடாலும் அருமையான கதைக்களம் புத்தகத்தோடு ஒன்ற வைக்கிறது. முத்து 400 இவ்வளவுதானா என்று ஒத்து கொள்ள முடியவில்லை.
    4) ஜான் ஹாவக் கிளாசிக் புத்தகம் அட்டை படம் அருமை. இவரின் சாகசங்கள் எவர் க்ரீன், நிச்சயம் ஒரு பெரிய ரசிகர் படடாளம் இவருக்கு உருவாகலாம். இவரின் சாகசங்களை இன்னும் எதிர் பார்க்கலாமா சார் :)
    மொத்தத்தில் இந்த மாதம் வந்த புத்தகங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன ....

    ReplyDelete
  52. @ திரு விஜயன்

    கிட்டத்தட்ட இரும்புகை மாயாவி போலவே முகதோற்றமும்,வாரியதலைமுடியும் கொண்ட ஜான்சில்வர் என்னைபோன்ற ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு ரொம்பவே பழகின முகம்.!

    நினைவுகள் பிரியும்வரையில் அந்த முகமும், ஓவியமும் மனத்திரையில் அழியும் வாய்ப்பேயில்லை என்பதே நிதர்சனம்.!

    ஜான்சில்வரை பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் கண்டுகொள்ள பெரிதாக கழுகுகண்கள் எல்லாம் தேவையில்லை என்பதே யாதர்த்தம்..!

    படைப்பாளி இந்தமுகத்தை தான் நமக்கு 'ஜான்சில்வர்' என அடையாளம் காட்டியுள்ளனர் என தலைப்பிடுவது வாதத்திற்கு ஏற்புடையாதாக இருக்கலாம்.

    "ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் தெரிந்தமுகம் இங்கில்லை...இது ரசிப்புக்கு ஏற்றதல்ல,சர்ச்சைக்கும்,ஏமாற்றத்திற்குமே வழி.." என உங்களுக்கு மட்டுமல்ல....பார்க்கும் அத்தனை பேருக்குமே உடனே தோன்றும் ஒன்று.!

    மற்றபடிக்கு 60 வருடங்களுக்கு முந்திய படைப்பு,35 வருடங்களுக்கு முந்தைய மறுபதிப்பு தவறை அப்படியே பின்தொடரப்பட்டது என்பது...ம்ம்ம்...

    மொத்தத்தில் வேண்டாவிருப்பாய் ஒரு உளவாளி.! என அட்டையில் உள்ள வாசகத்திற்கு ஏற்பவே உள்ளேயும் உள்ளது என்பதே நம்மவர்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும்..!

    கிளாஸிக் நாயகர்கள் விஷயத்தில் இனி இதுபோன்று தவறுகள் நிகழாமல் இருக்க, சாதாரண கண்களில் பார்க்க வேண்டுகிறேன்..!

    ReplyDelete
  53. @Govindhraj perumal ;
    வாழ்த்துக்கள் சார்;கலக்குங்க.

    ReplyDelete
  54. லயன் 300 & முத்து 400 பார்த்தபோது...

    ஒவ்வொருமுறை வங்கிக்கு செல்ல சிக்னலில் நிற்கும்போதெல்லாம் இந்த வாரம் சுவரில் எழுதப்பட்ட வாசகத்தை கண்கள் தேடும்,அப்படி இந்த வாரம் தென்பட்ட வாசகம்...

    கைத்தட்டல் வாங்க சிங்கம் நடந்துவந்தாலேயே போதும்.! குரங்குதான் குட்டிகரணம் போடவேண்டும்.!!

    உண்மையோ உண்மை.! நல்ல பருமனான அட்டைபெட்டியில் அழகாக கவரில் பேக்செய்யப்பட்டநான்கு விதவிதமான புத்தகங்களின் அணிவகுப்பு....அந்த சிங்கநடை கூட்டணி....

    கைதட்டும் படங்கள் இஷ்டத்துக்கு..!

    ReplyDelete
  55. தன் கண் முன்பே தனது உறவுகள் பலியாகும் கொடுமை வார்த்தைகள் தாண்டிய வலி அது, ஷானியா தாய் தந்தையரை இழந்து தவிக்கும்வேளையில் உதவியாக வந்து உறவாக மலர்ந்த ஆண்டை இழந்து துயரமும் இடம் உணர்வுகளின் ஒய்யாரமாக காட்சி அமைந்துள்ளது.....
    முத்துவின் 400 வது இதழ் ஏமாற்ற வில்லை.... வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  56. ஆன்டனை இழந்து என வாசிக்கவும்....

    ReplyDelete
  57. செவ்விந்தியர் பெருந்தலைவர் கோசைசூக்கும் அமெரிக்க அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் டைகர் ஏற்ப்படுத்தியது என்று நம்புபவர்கள்,அமெரிக்காவின் உள் நாட்டு போரில் வடக்கு வெற்றியடைய டைகர்தான் காரணம் என்று நம்புபவர்கள் டெக்சின் சாகசத்தை மட்டும் கேலி செய்து வருவது விசித்திரமான ஒன்று என்பது எனது கருத்து.டைகரின் கதைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அமைந்து டைகரை ரசிக்க தடையாய் உள்ளன. குறிப்பாக அமெரிக்க நிஜ நாயகர்கள் இவரை நம்பி இருப்பதாக கதைகள் அமைவது நகைப்பிற்க்குரியது.டைகர் கதைகள் மறு வாசிப்புக்கு என்றுமே உகந்தவை அல்ல.ஆனால் சேமிப்புக்காகவே நான் வாங்குகிறேன்.இது எனது தனிப்பட்ட கருத்து .இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் தயவு செய்து கடந்து செல்லவும்.எனெனில் வாதிட்டு சங்கடப்படுத்திக்கொள்ளும் மனநிலை இல்லை இப்போது. தயவு கூர்ந்து. நன்றி

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் மாதேஷ் ஆனால்
      தங்கக் கல்லறை இதில் விதி விலக்கு
      பலமுறை படிக்க வைக்கும் ஆற்றல் கொண்டதொரு இதழ்

      Delete
    2. இது ஒன்று மட்டுமே அப்படிப்பட்ட கதை சத்யா

      Delete
    3. மின்னும் மரணம்

      Delete
    4. செந்தில் மாதேஷ் சார்......அப்பட்டமான உண்மையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்..நாங்கள் டைகர் கதையை பழிக்க வில்லை...ஆனால் சுமாரான டைகர் கதையும் அது நிஜ நிகழ்வு ,இதுதான் வரலாறு எனவே இப்படி தான் இருக்கும் என பாராட்டுபவர்கள்...நம்புபவர்கள் அதே போன்ற கதையில் டெக்ஸ் வந்தால் அதுவும் வெற்றிகரமான சாகஸமாக இருந்தாலும் கூட நாம் வரலாற்றையை புரட்டி பொய்யுரைப்பது போல கிண்டல் அடிப்பது ஏனோ தெரியவில்லை.எந்த டெக்ஸ் சாகஸமும் இது நிஜ வரலாறு என டெக்ஸ் ரசிகர்கள் நம்புவதும் இல்லை...கூறுவதும் இல்லை...கதை பாணி அவ்வாறு உள்ளது என விமர்சித்தாலே சீண்டுவது இந்த பாணியிலும் டெக்ஸ் வெற்றி அடைந்து விடுகிறாரே...நம்ம ஆளால் முடிய வில்லையே என்ற ஆதங்கமே அவ்வாறு பதிய சொல்கிறது என நினைக்கிறேன்...:-)

      மேலும் எந்த டெக்ஸ் ரசிகரும் தங்க கல்லறையையோ ,மிண்ணும் மரணத்தையோ ..இரத்த கோட்டையையோ குறை சொல்ல மாட்டார்கள்....ஆனால் டெக்ஸ் எவ்வளவு நல்ல கதையாக இருப்பினும் ....

      வேண்டாம் விடுங்கள்...:-)

      Delete
    5. தலைவரே அருமையா சொன்னிங்க.

      Delete
    6. சூப்பர் பரணி. ஜான் சில்வர் கதை கள் வந்த காமிக்ஸ் பெயர் என்ன?

      Delete
  58. கிட் ஆர்டின் கண்ணன் ,கிட் ஆர்டினாகவே மாறி எழுதி இருப்பது மிக நன்று .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. இந்த மாத இதழ்களின் மார்க்
    1 . சிக்பில் - 10
    2. லேடி S - 10
    3. டெக்ஸ் - 10
    4. ஜீலியா -10
    5. மாடஸ்டி - 9.5
    6. ராபின் - 9
    7 . ஜான் சில்வர் - 8.5
    மொத்தத்தில் நிறைவான மாதம்
    ஆண்களை கவர்ந்த பெண்களின் மாதம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உழைப்பிற்க்கு 100 சதவிகிதம் பெயர் பெற்றுத் தந்த மாதம்
      ஆக மொத்தம்
      இது சூப்பர் ( ஜொள்ளு ) மாதம்

      Delete
    2. @ செந்தில் சத்யா

      ஆனாலும் இந்தமாசம் நீங்க ரொம்பத்தான் ரொமேன்ட்டிக் மூடுல இருக்கிறாப்ல தெரியுதே... மறுபடியும் மெரினா பக்கம் அனுப்பி வைச்சாத்தான் கொஞ்சம்போல சரிப்படுவீங்க போலிருக்கே... ம்...?

      Delete
    3. செயலரே@ஹா...ஹா... நல்லா மார்க் போட்டது ஒரு குத்தமாங்க...!!!

      Delete
    4. சாரி செயலாளரே நீங்க மெரினா பக்கம் அனுப்புறேன்னு சொன்னது கூட மேக்னா பக்கம் அனுப்புறேன்னு சொல்ற மாதிரி இருக்குது

      Delete
  60. லேடி s அமர்க்களம். வான் ஹாமே வியாபார உலகின் தகிடு தத்தங்களை லார்கோ மூலம் சொன்னார் எனில் இதில் ராஜிய உறவுகள் பற்றி நமக்கு சொல்கிறார். கற்றுக்கொள்ள ஆயத்தம் ஆவோம் நாம்.ஆனாலும் ஈ.வி யின் தைரியம் எனக்கு இல்லாததாலும்,எனது வீட்டுக்காரம்மா என்னை பிட்டத்தில் உதைத்து வெளியே தள்ளுவதை தவிர்க்கவும் அந்த மச்சத்தை பற்றியும் ,அழகை பற்றியும் மனதில் உள்ளதை எழுதாமல் தவிர்க்கும் ......ஒரு அப்பாவி

    ReplyDelete
    Replies
    1. @Senthil Madesh

      :))))))))

      EBFக்கு ரெடியாகிட்டீங்கதானே?

      Delete
    2. கண்டிப்பாக விஜய் .போன முறை உங்களை சந்திக்க முடியாமல் போய் விட்டது.இம்முறை தவறவிட மாட்டேன்

      Delete
    3. வான் ஹாமே வியாபார உலகின் தகிடு தத்தங்களை லார்கோ மூலம் சொன்னார் எனில் இதில் ராஜிய உறவுகள் பற்றி நமக்கு சொல்கிறார்.//
      உண்மை.

      Delete
    4. நேரில் சந்திக்க ஆர்வமாய் உள்ளேன்
      மாதேஷ்

      Delete
    5. நன்றி சத்யா. நாடலும் அதுவே .EPF ல் கண்டிப்பாக சந்திப்போம்.

      Delete
  61. Lady S ;
    ஷான் வான் ஹேமா வின் கை வண்ணத்தில் ஓர் சர்வதேச உளவாளி உலகை வலம் வர தயாராவதை உணர முடிகிறது.ஐரோப்பாவை தலைமையாக கொண்டு உலகை ஆள முடியும் என்பதை மீண்டும் உணர்த்துகிறார் ஷான்.அடுத்தடுத்த பாகங்களை கூடிய விரைவில் வெளியிடலாம்.lady s ன் செயல் திறனும்,மதி யூகமும், 007 பாத்திரப் படைப்புக்கு இணையான ஆற்றலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும்.
    சிக்பில் க்ளாசிக்;
    பொக்கிஷமான மூன்று புதையல்கள்.
    லயன் 300 ;
    ^^^^^இரத்தக் கோட்டை^^^^^ வெளியீட்டுக்கு பின் வாசிப்பதற்காக காத்திருக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. lady s ன் செயல் திறனும்,மதி யூகமும், 007 பாத்திரப் படைப்புக்கு இணையான ஆற்றலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும்.//
      +12345

      Delete
  62. புது கிட் அண்ட் டாக்புல் சாகசமான விண்ணில் ஒரு எலி பத்தி அனைவரும் பேசி கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் போன வாரம் நான் படித்த பழைய உட் சிட்டி கதைகள் பத்தி ஒரு முன்னோட்டம்.


    நீல பேய் மர்மம் - இதில் வைகிங்ஸ் மீண்டும் எழுந்து வருகிறார்கள் ஒரு பனி இரவில், கிட ஆர்டீன் அதில் துலைந்து போக, அவனை தேடி போகிறரது ஷெரிப் அண்ட் கோ. அதன் பிறகு என்ன நடநதது என்பது தான் கதை

    தேவை ஒரு மொட்டை - இதில் எதச்சையாக ஒரு மொட்டை குற்றவாளியை கிட் பிடித்து மீண்டும் அவனை கோட்டை விட்டு விடுகிறான். ஷெரிப் அண்ட் கோ படாத பட்டு அவனை பிடிக்க முயற்சி செய்ய, மீண்டும் எதச்சையாக கிட் அவனை பிடித்து விடுகிறான்.

    இரண்டுமே செம ரகளையான கதைகள்

    ReplyDelete
    Replies
    1. //நீல பேய் மர்மம் // இந்தக் கதைக்காக வந்த விளம்பர டிசைன்களே அட்டகாசமாக இருந்தன! இன்றும் நினைவுகளில் நிழலாடுகிறது!

      Delete
  63. வாழ்த்துக்கள் கண்ணன்
    ரகசியமாய் தவில் வாசிப்பதில் கில்லாடி தான்யா நீர்

    ReplyDelete
  64. ஜான் சில்வரோ
    ஜான் ஸ்டீலோ
    ஜான் தங்கமோ
    ஜான் பித்தளையோ
    என்னை போன்ற பாலகர்களுக்கு எதுவுமே தெரிய மாட்டுது

    ReplyDelete
    Replies
    1. ஜான் சில்வர் கதைகள் மேகலா காமிக்ஸில் வெளி வந்தவைகள் கிடைத்தால் படித்து பாருங்கள்

      Delete
    2. மேகலா ன்னு ஒரு காமிக்ஸ் வந்ததே நீங்கள் சொல்லிதான் தெரிகிறது இதுல ஜான் சில்வர் கதையை எங்கேன்னு தேடுறது

      Delete
    3. ///மேகலா ன்னு ஒரு காமிக்ஸ் வந்ததே நீங்கள் சொல்லிதான் தெரிகிறது இதுல ஜான் சில்வர் கதையை எங்கேன்னு தேடுறது///

      நானும் உங்க கட்சிதான்!!

      நமக்கு தொிஞ்சதெல்லாம் லயன், முத்து!!

      பால்ய வயதுகளில் ராணி காமிக்ஸ்!!
      அம்புலி மாமா!! சிறுவா் மலா்!!

      அவ்லோதான்!!

      Delete
    4. அது மேகலா காமிக்ஸ் இல்லீங்க...:-)

      Delete
    5. மேகலா காமிக்ஸ் வெளியான போது காரிகன், சார்லி (பஸ் சாயர் மேகலாவில் சார்லியின் பெயர்!) இன்னும் வின்வெளிகதைகள் என வெளியானது. நல்ல அட்டைப்படம் தெளிவான படங்கள், எல்லாமிருந்தும் மொழிபெயர்ப்பில் கோட்டைவிட்டதால் வந்த வேகத்திலேயே காணாமல் போனது. மேத்தா காமிக்ஸில்தான் ஜான் சில்வர் கதைகள் வெளியாகின.

      Delete
  65. எடிட்டர் ஐயா ,
    இது தங்களின் 392 வது பதிவு என நினைக்கிறேன், 400 வது பதிவின் சிறப்பு என்னவாயிருக்கும்??
    அப்படியே ஈரோட்டு ஐஸ் க்ரீம் என்னவாயிருக்கும்??.....

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டு ஐஸ்கிரீம்...........தான்னு உலகுக்கே தெரியுமே ஷல் ஜி...
      400வது பதிவு ஆகஸ்ட் 15ல் நடந்து முடிந்த ஈரோடு 2017ஐ பற்றியதாக கூட இருக்கலாம்...!!!

      Delete
    2. // அப்படியே ஈரோட்டு ஐஸ் க்ரீம் என்னவாயிருக்கும்??.....//
      இத்தாலிய ஐஸ்கிரீமுக்காக வெயிட்டிங்.ஐஸ்கிரீம் நல்லது.

      Delete
  66. டெக்ஸ் vs டைகா்

    முன்னவா் ரஜினி; பின்னவா் கமல்!

    ரஜினி நடிப்பிலே தனக்கான பாதையை தொிவு செய்து கொண்டவா்!

    கமல் நடிப்பையே தனது பாதையாக மாற்றிக் கொண்டவா்!

    டெக்ஸ் தனக்கான ஒரு இலக்கணத்தை உண்டாக்கி அதற்குள்ளே வலம் வருபவா்!

    டைகா் எந்தவொரு இலக்கணமும் இன்றி அதை உடைத்தெறிபவா்!

    ஒரு சிறு தோற்ற மாற்றத்தைக் கூட டெக்ஸிடம் காண முடியாது. முகச்சவரம் செய்யாத டெக்ஸை காணவே முடியாது!
    எல்லாவற்றிலும் ஒரே தோற்றம் தான்!!

    டைகா் ஒரு கதையிலேயே ஒன்பது தோற்றத்தில் வருவாா்!! ஒரு அத்தியாயத்தில் இருந்து இன்னொரு அத்தியாயத்தில் நமக்கே அடையாளம் தொியாது!

    விதிமீறல் டெக்ஸிடம் வாய்ப்பே இல்லை!

    விதிமீறல் டைகருக்கு ஒரு பொருட்டே இல்லை!

    டெக்ஸ்க்கான கதைகளம்!

    கதைக்களத்தில் டைகா்!

    இப்படி இருவேறு பாணிகளில் வெற்றிபெற்ற நாயகா்களின் ரசிகா்களில் யாா் சிறந்தவா் என்ற கேள்வி உண்டாவது இயல்புதான்!!

    எம்.ஜி.ஆா் - சிவாஜி
    ரஜினி - கமல்
    அஜித் - விஜய்

    என்று சினிமாவில் இருப்பதைப் போல
    நமது காமிக்ஸ் கதைகளில் டெக்ஸ்-டைகா் இடையே போட்டி இருப்பதைத் தவிா்க்க இயலாதுதான்!

    ஏனென்றால் அந்த இருவிதமான பாணிகளில் ஏதோ ஒன்றின் மேல் சற்று கூடுதலான ஈா்ப்பு நம்மை அறியாமலே உண்டாகிவிடுகிறது.

    அதன்விளைவுதான் அது சாா்பாகவே நம்மை தா்க்கிக்கச் செய்கிறது.

    உண்மையில் இதில் கவனிக்க வேண்டிய வேறோரு விஷயமும் உள்ளது!!

    இத்தாலிய போனேல்லி காமிக்ஸ்கள்!
    பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ்கள்!!

    இத்தாலிய கதைகள் ஒரு நோ்த்தியோடும், பிரேஞ்சு காமிக்ஸ்கள் கொஞ்சம் தறுமாறான போக்குடனுமே கதைகள் அமைக்கப் பட்டிருக்கும்!!

    பொதுவாகவே கலைத்துறை ஒன்றை விரும்புகிறது என்றால் சமூகம் அதற்கு எதிா்திசையிலே உள்ளது என்றே பொருள்!

    எனவே பிரான்ஸிலே கொஞ்சம் நோ்த்தியான சமூகப் பின்புலமும், இத்தாலியிலே கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணான சமூகப்பின்புலமும் இருக்கும் என்பது எனது கணிப்பு!

    எனிவே, முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதே வெற்றி தான் என்னும் பொழுது, அதில் யாா் சிறந்தவா்? என்ற கேள்விக்கு "நாயகன்" பட கமலைப் போல "தொியலைப்பா" என்றுதான் பதில் சொல்ல வேண்டி வரும்.

    (பின்குறிப்பு : மாற்றுக் கருத்துக்கள் தாராளமாக வரவேற்கப் படுகின்றன)

    ReplyDelete
    Replies
    1. @ மிதுன் ...அருமையான கருத்து. டெக்ஸ் MGR போல என்பதே எங்கள் கருத்து.டெக்ஸ் vs டைகர் பஞ்சாயத்துக்கு வர மாட்டேன் எனும் எனது விரதத்தை இன்று கலைக்க வேண்டியதாகிவிட்டது.
      .

      Delete
    2. ஆஹா, அருமை நண்பரே!

      நீங்கள் மேலே பதிவிட வேண்டாம் என்று சொன்னதினாலேயே கீழே பதிவிட வேண்டியதாயிற்று!

      Delete