நண்பர்களே,
வணக்கம். காட்சி # 1 : நடுக்கூடத்தில் ஊஞ்சல்! புஷ்டியானதொரு செந்தில் சம்மணமிட்டு அந்த ஊஞ்சல் மேல்! அவர் முன்னாலோ ஒரு முக்கால் கிளாஸ் டீ! செந்திலாரின் முகத்திலோ தீவிர சிந்தனை ரேகைகள்! டீயை ஒரு நொடி உற்றுப் பார்க்க...மறு நொடி மோட்டு வளையை நோக்கிப் பார்வைகளை ஓட விட... தொடர்கிறது காட்சி ! காட்சி # 2 : நள்ளிரவைத் தாண்டிய ராப்பொழுது! சுமாரான புஷ்டியில் ஒரு ஆந்தைவிழியன் மாடிக்குப் போகும் ஏணிப்படிகளில்! ஆ.வி.யின் முன்னேயோ ஒரு கத்தைக் காகிதங்கள்! ”2018” என்று போட்டு என்னமோ கீச்சலாய் எழுதியிருக்கும் தாள்களை, கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் கோணங்களிலெல்லாம் டிசைன் டிசைனாய் முறைத்துப் பார்க்க... அப்புறமாய் விட்டத்தை விட்டேந்தியாய் ரசிக்க... ”ஊஹும்...!” என்று மண்டையை ஆட்டிவிட்டு, பரபரவென்று அந்தக் காகிதத்தின் மேலே எதையோ அடித்துத் திருத்தி எழுத, ஆந்தைகளே அடங்கும் நேரம் வரைக்கும் தொடர்கிறது காட்சி!
முந்தையது ‘ஜென்டில்மேன்‘ திரைப்படத்திலிருந்து நமது ஆதர்ஷ கவுண்டரும், செந்திலும் பின்னியெடுத்த காமெடிக் காட்சியின் இரவல் எனில் – பிந்தையது கடந்த சில பின்னிரவுகளில் எங்கள் வீட்டில் அரங்கேறி வரும் காட்சி! As usual – it’s “that” time of the year guys! 2018-ன் அட்டவணைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் தான் வீட்டின் மூலை முடுக்குகளிலும், ரயில் நிலைய பெஞ்சுகளிலும், சிக்கும் பேப்பர்களையெல்லாம் எதையாவது எழுதி பார்ப்பதில் செலவிட்டு, அப்புறம் பந்து பந்தாய்ப் அவற்றைக் கசக்கித் தூக்கியெறிந்து புதுசு புதுசாய் "கூட்டணிக் கோட்பாடுகளை" முயற்சித்து வருகிறேன்! தலீவருக்குப் போட்டியாக பேப்பரைச் செலவிடும் இந்தப் பொழுதுகளின் முடிவில் கையிலொரு திட்டமிடல், இறுதியாக, அழகாய் தயாராக நின்ற போது நமது லியனார்டோ தாத்தாவின் முகத்தில் தெரியும் ஒளிவட்டம் மிளிர்வது போலொரு பீலிங் உள்ளுக்குள்! Of course – இது ரொம்பவே சீக்கிரம் அந்த அட்டவணையை உங்களோடு பகிர்ந்து கொள்ளவதற்கு ; ஆனால் நிச்சயமாய் 2018-ன் timetable ஒவ்வொரு ரசனை அணிக்கும் முகத்திலொரு புன்னகையை மலரச் செய்யுமென்ற நம்பிக்கை நிரம்பி வழிகிறது எனக்குள்! கொஞ்சமே கொஞ்சமான இறுதி டிங்கரிங்குகள் மட்டும் செய்திடுவதற்கு உங்களது அபிப்பிராயங்களை இரவல் வாங்கிடுவது நலமென்று நினைத்தேன்! So அதுவே இந்த ஞாயிறின் படலம்!
* நடப்பாண்டின் சந்தா A-வின் ஹைலைட்களே சிலபல புதுவரவுகள் தானென்பதில் நிச்சயம் சந்தேகம் லேது! ட்யுராங்கோ; Lady S என்ற இரு புத்தம்புது இறக்குமதிகள் + ‘ஜேசன் ப்ரைஸ்‘ எனும் சற்றே புது வரவு (இவரது துவக்க சாகஸம் 2016-ல் அல்லவா?) இணைந்திட்ட போது சந்தா A-வின் மெருகு ஒரு படி தூக்கலாய் எனக்குத் தோன்றியது! Of course – பழைய பரீட்சைப் பேப்பர்களை வாங்கி பைண்டிங் செய்து, அதன் மீது ‘லயன் காமிக்ஸ்‘ என்று போட்டு வைத்தாலே அதை எனக்கு ரசிக்கத் தோன்றும் தான்; எந்தக் காக்காய் தன் குஞ்சை ‘கறுப்பா‘ என்று முத்திரை குத்தியிருக்கிறது? ஆகையால் என் பார்வையைத் தாண்டியதொரு கருத்துப் பகிரலும் இங்கு பிரயோஜனப்படுமென்று நினைத்தேன்! My question is: ஏற்கனவே ஒரு மினி கல்யாண வீட்டுப் பந்தி அளவிற்கு நாயகர்களும், நாயகியரும் நம் அணிவகுப்பில் முண்டிக் கொண்டு நிற்கும் போது – மேற்கொண்டு புது நாயக / நாயகியருக்கு சொற்ப காலத்திற்காவது no entry போடல் அவசியம் என்பீர்களா? அல்லது புதுசுகளே சுவாரஸ்யங்களை எகிறச் செய்திடும் காரணிகள் என்று கைதூக்குவீர்களா? நிதானமாய் சிந்தித்து உங்கள் பதில்கள் ப்ளீஸ்?
* ‘ஜேசன் ப்ரைஸ்‘ - வந்தார் ; வென்றார்! காதில் கொஞ்சமல்ல, ஒரு லோடு மலர்களை பட்டுவாடா செய்து விட்டுப் போயிருந்தாலுமே, இவர் எழுப்பிய தாக்கத்தின் அதிர்வலைகள் சமீப நாட்களுள் ஒரு செம ஸ்பெஷல் ரகமென்பேன்! அவரது கதைத் தொடரில், அந்த 3 ஆல்பங்களைத் தாண்டி புதுசாய் சரக்கு ஏதும் கிடையாதென்பதால் – அவரது தொகுதியில் ஆட்டோமேடிக்காக இடைத்தேர்தல் நடத்தும் அத்தியாவசியம் எழுகிறது! ஏற்கனவே கரை வேட்டி கட்டி நம்மோடு கைகோர்த்து உலவி வரும் நாயகர் யாரையேனும் இந்தக் காலி slot-க்குப் பரிந்துரைப்பீர்களா? அல்லது கட்டாயமாய் இன்னொரு புது வரவுக்கேவா ? புது வரவே என்றால் – தரமான நாயகர் யாராக இருந்தாலும் ஓ.கே. தானா? அல்லது அந்த fantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே இடம்பிடித்தல் தேவலாம் என்பீர்களா? A straight swap (or) anything that’s good ?
* சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ? Please : ”வேதாளர்”; ”ரிப் கிர்பி”; ”காரிகன்” போன்ற பதில்கள் தற்போதைக்கு பாடத்திட்டத்திலேயே கிடையாது! அதனால் பார்வைகளை / சிந்தனைகளை கொஞ்சம் விசாலமாய் வீசியொரு சுவாரஸ்யமான பதில் தந்திடுங்களேன் – ப்ளீஸ்?
* சந்தா B: காத்திருப்பது Tex-ன் 70-வது ஆண்டு என்பதால் இதற்கென கௌபாய் ஆர்வலர்களிடம் நிறைய யோசனைகள் இருக்கலாம் தான்! காத்திருக்கும் ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது இது பற்றிப் பேசிடலாம் என்பதால் இப்போதைக்கு அந்தக் கேள்வியை மனதுக்குள் மாத்திரம் அசைபோடச் சொல்லி கோரிக்கையை முன்வைக்கிறேன் guys! ‘ஆயிரம் ரூபாய்க்கு ஒரே புக்; ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்‘ என்ற ரீதியிலான டெரர் பரிந்துரைகளின்றி – யதார்த்தத்தை ஒட்டிய திட்டமிடல்கள் பக்கமாய் சிந்தனைக் குதிரைகளை அனுப்புவோமே?
* சந்தா C – எனது favorite சந்தா ரகம் இதுவே என்பதில் சந்தேகமில்லை! ஆனால் இன்னமுமே இதுவொரு சகல தரப்பின் thumbsup பெற்ற universal ரசனையாக உருப்பெற்றிருக்கவில்லை தான்! So 2018-ல் சந்தா C வழமை போலத் தொடரும் ; ஆனால் கட்டாயச் சந்தாவாக இருந்திடாது! பிடித்தாலும், பிடிக்காது போனாலும் – கார்ட்டூன் சந்தாக்கள் உங்கள் தேர்வுதனில் நிச்சயம் இடம்பிடித்திடும் என நடப்பாண்டில் கண்டிப்புக் காட்டியதால் ஒரு முப்பது – நாற்பது சந்தாக்கள் miss ஆகியிருக்கக் கூடும் என்பது புரிகிறது ! அதே பிழையை இம்முறையும் செய்திட வேண்டாமென்று தீர்மானித்துள்ளேன்! ‘படித்தால் மகிழ்வோம்; பிடித்துப் படித்தால் ரொம்பவே மகிழ்வோம்; ஆனால் திணிக்க மாட்டோம்‘ என்பதே இனி நம் சிந்தனையாக இருந்திடும்! இந்தக் கார்ட்டூன் சந்தாவில் எனக்கான கேள்விகள் சில on the fence பார்ட்டிகள் சார்ந்தது!
* முதல் கேள்வி : நீலப் பொடியர்கள் ஸ்மர்ஃப்ஸ் சார்ந்தது! “அற்புதமானதொரு படைப்பு; எனக்குமே அப்படியொரு அழகான உலகிற்குள் போய் வந்த உணர்வு ஒவ்வொரு ஸ்மர்ஃப் கதையிலும் கிடைக்கிறது!” என்று சொல்லியுள்ள நண்பர்கள் கணிசம். அதே மூச்சில் – “ஏனோ சொல்லத் தெரியவில்லை; ஆனால் என்னால் இந்தத் தொடரோடு ஒன்றிட முடியவில்லையே?” என்ற மண்டைச் சொரிதல் சகித சம்பாஷணைகளுக்கும் நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்! கார்ட்டூன் சந்தாவின் ஒவ்வொரு பக்கமுமே உங்களுக்குப் பிசிறில்லா மகிழ்வைத் தந்திட வேண்டுமென விரும்புபவன் நான்; So அந்தச் சந்தாவில் இப்போதொரு முக்கிய அங்கமாய் இருந்து வரும் இந்தப் பொடியர் பட்டாளத்தைத் தொடரும் நாட்களில் நாம் எவ்விதம் கையாள்வது என்பதிலொரு ஊர்ஜிதம் இருந்தால் நல்லதென்று நினைக்கிறேன்! பொடியர்கள் – இதே போல தொடரலாமா? அல்லது சற்றே slot-களைக் குறைவு பண்ணிட அவசியமாகுமா?
* உப கேள்வி # 2 : மேலேயுள்ள வரிகளை அட்சர சுத்தமாய் நகல் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீலப்பொடியர்கள் “ஸ்மர்ஃப்” என்ற இடத்தில் “ரின்டின்கேன்” என்று மட்டும் மாற்றிக் கொள்ளுங்களேன்? இந்த 4 கால் ஞானசூன்யம் பலருக்கு வெல்லம் கலந்த செல்லம்; சிலருக்கு ‘ஙே‘ ரகம் என்பது இந்தாண்டினில் நமக்கு வந்துள்ள விமர்சனங்களும், மின்னஞ்சல்களும் சொல்லும் சேதி ! ஒரு இலக்கில்லாது slapstick காமெடி போல் இந்தத் தொடருள்ளது என்பதே இது தொடர்பாய் வந்துள்ள புகார்களின் சாராம்சம் ! "நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ;அடுத்த தலைமுறைக்கு" என நான் நிறைய பில்டப் தரலாம் தான் ; ஆனால் நாளின் இறுதியில், காசு போட்டுப் புத்தகம் வாங்கும் நபருக்கு அந்தப் படைப்பு ஒரு நிறைவைத் தந்தாகவும் வேண்டும் தானே ? So – அந்த மாமூலான ஒற்றை slot-ல் இந்த நாலுகால் நாயகன் தொடர்வது பற்றிய உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்?
* சந்தா D பற்றிப் புதிதாய் என்ன கேட்கப் போகிறேன் - இந்த பால்யத்து நினைவுச் சின்னங்கள் சற்றே சுவாரஸ்யமாகத் தொடர்ந்திட ஏதாவது உபாயங்கள் மனதில் உள்ளனவா என்பதைத் தாண்டி ? சில காலமாகவே என் மனதில் இருப்பது - மும்மூர்த்திகள் கதைகளுக்கு fresh ஆகவொரு மொழியாக்கத்தை வழங்குவதே - என்பதில் ரகசியமில்லை தான் ! நண்பர்கள் அணி பொறுப்பேற்றுக் கொள்வதாயிருப்பின் I am game for it ! ஆனால் “முதல் தமிழ் மாநாடு நடந்த வருஷத்தில், நான் வாசித்த மும்மூர்த்திகளின் கதையினில் முனையளவு மாற்றம் இருந்தாலுமே முகச்சுளிப்பே மிஞ்சும்” என்றொரு நிலை அதற்கு பலனாகிடக் கூடாதென்பதே எனது அவா! அந்நாட்களது கதைகளுள் ஆரம்பத்து batch-ன் தமிழாக்கம் – அப்புசாமித் தாத்தாவைச் சீடை சாப்பிடச் சொன்னது போன்ற சங்கடத்தை இன்றைக்கு ஏற்படுத்துவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! “Nostalgia” என்றதொரு கூலிங் கிளாஸ் மட்டும் இல்லாமல் இன்றைய ரசனை அளவுகோல்களில், அன்றைய வரிகளை ஆழத்தியெடுத்தால் – விளைவுகள் செம ரகளையாக இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை! எனது கவலையெல்லாம் அந்தக் கண்ணாடி இல்லாது முதல் தடவையாக இந்தக் கதைகளை வாசிக்கும் ஒரு இன்றைய யுகத்து வாசகர் – ”இதென்னடா சாமி பாணி?” என்று மிரண்டு விடக் கூடாதென்பதே! ”சிறைப்பறவைகள்”; ”தங்கவிரல் மர்மம்” போன்ற 1975 / 76 + ஆண்டுகளில் வெளிவந்த கதைகளுள் நமது கருணையானந்தம் அவர்களின் பணிகளும் ஒரு அங்கம் வகிப்பதால் அவற்றை நோண்டிப் பார்க்க அவசியமிராது! அவற்றிற்கு முன்பான ஆண்டுகளில் வெளிவந்த சுமாரான எழுத்து நடைகளை செப்பனிட முனைவோமா ? What say guys? புதிதாய் ஒரு நடையை 2018-க்கு நடைமுறையாக்கிப் பார்க்கலாமா? ‘Yes’ எனில் அந்தப் பொறுப்பை ஏற்க யாரெல்லாம் தயார் என்றும் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ்?
சந்தா E முளைத்தே மூன்று இலைகள் இன்னமும் விட்டிருக்கவில்லை என்பதாலும்; “சூப்பர் 6” பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து முடித்தும் விட்டோம் என்பதாலும் – அந்த 2 பிரிவுகள் பற்றிய வினாக்கள் ஏதுமிருக்கப் போவதில்லை! - at least for now ! ஆகையால் current affairs பக்கமாய் பார்வைகளைத் திருப்பிடலாம்! ஆகஸ்டின் இதழ்களுள் கலரில் ரகளை பண்ணக் காத்திருக்கும் இறுதி இதழ் பற்றிய அறிமுகம் இனி !
டைலன் டாக்கின் ”இது கொலையுதிர் காலம்” தான் உங்களை சந்தா B-ன் சார்பாய் இம்மாதம் சந்திக்கவிருக்கும் இதழ்! And இதோ – அதன் அட்டைப்பட முதல் பார்வை!
ஒரிஜினலே செம டெரராய் அமைந்திடும் போது அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்கும் அவசியமே எழாது போய்விடுகிறது! So முன் + பின் அட்டைகளுமே ஒரிஜினல்களின் உபயமே! And உட்பக்கங்களும் நமது இந்தக் கறுப்பு + சிகப்பு உடுப்புக்காரரின் சாகஸத்தில் ஜகஜ்ஜோதியாக டாலடிக்கின்றன! வழக்கமாய் டைலன் கதைகளில் பத்தி பத்தியாய் பேசும் sequences நிறைய இருந்திடும்; ஆனால் இம்முறையோ ஆரம்ப பக்கத்தில் தொட்டுப் பார்க்கும் டாப் கியர் கடைசிப் பக்கம் வரையிலும் இம்மி கீழறங்குவதாகயில்லை! தலைதெறிக்கும் (மெய்யாலுமே தலைகள் தெறிக்கின்றன சாமி – கதையினில்!!) வேகத்திலான இந்த சாகஸத்தின் பின்னணியில் ஒரு சின்ன குளறுபடியின் கதையும் உள்ளது! சென்றாண்டு நாம் வெளியிட்ட டைலன் டாக் சாகஸத்தின் பெயர் KILLERS என்று பொருள்படும். இப்போது வெளியாகவுள்ள “இது கொலையுதிர் காலம்” – ”KILLER” என்று பொருள் தரக்கூடிய தலைப்பைக் கொண்டது. 2015 -ன் இறுதியினில் நான் ஆர்டர் செய்ய நினைத்திருந்தது “KILLERS” என்ற (சென்றாண்டின்) சாகஸத்தையே! ஆனால் அனுப்பிய மின்னஞ்சலில் ஒரு ‘S’-ஐ விழுங்கி விட்டேன் போலும் – ‘KILLER’ என்ற இப்போதைய கதையின் டிஜிட்டல் .ஃபைல்களைத் தூக்கி அனுப்பி விட்டார்கள்! எங்களிடம் மொழிபெயர்க்கப்பட்டிருந்த கதை வேறு; வந்திருக்கும் ஃபைல்கள் வேறாக உள்ளதே என்று மண்டையைச் சொரிந்து கொண்டே ஆராய்ச்சி செய்த போது தான் விபரம் புரிந்தது. So கில்லர்ஸ் & கில்லர் அடுத்தடுத்த “டை.டா.” சாகஸங்களாகிப் போன கதையிது தான்! And அதற்குள்ளாகவே இத்தாலியிலிருந்து “டை.டா” ரசிகர்களிடமிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கி விட்டன இம்மாத வெளியீட்டுக்கு!
புது இதழ்கள் மூன்றும் திங்கள் இரவு தயாராகி விடும்; செவ்வாய் காலையில் (August 1) உங்களைத் தேடிப் புறப்படும்! ”டைலன் டாக்” இதழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கடைசி நிமிட ரிப்பேர் பணித் தாமதமே இந்த ஒற்றை நாள் தாமதத்துக்குப் பொறுப்பு! புதியதொரு மொழிபெயர்ப்பாளர் இதனில் பணி செய்திருந்தார் & வழக்கம் போல துவக்கத்தில் நெருடல்கள் தோன்றிடவில்லை என்பதால் இதனில் ரொம்ப பேன் பார்க்கத் தேவைப்படாது என்ற நம்பிக்கையில் “இரத்தக் கோட்டை” பணிகளுக்குள் ஆழ்ந்திருந்தேன்! ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக “இது கொலையுதிர் காலம்” பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது – குண்டும், குழியுமான சாலையில் சவாரி போனது போல் தோன்றியது. இங்கே திருத்தம்; அங்கே ரிப்பேர் என்று ஆரம்பிக்க – ‘முழுசாய் மாற்றி எழுதிப் போவது இதை விட சுலபம்‘ என்று ஒரு கட்டத்தில் மனதுக்குப் பட, வெள்ளியிரவு தான் அது சார்ந்த பணி நிறைவுற்றன! ‘விடாதே... போட்டுத் தாக்கு‘ என்று நேற்று பிராசஸிங் & அச்சு வேலைகளை செய்யத் தொடங்கினோம். இந்தப் பதிவை நான் டைப் செய்யும் சனி நள்ளிரவுக்கு ஆபீசில் டைலன் டாக் அச்சுப் பணிகள் பரபரப்பாய் ஓடியவண்ணம் உள்ளன ! So செவ்வாய் காலை உங்கள் கூரியர்கள் ‘ஸ்லிம் சிம்ரனாய்‘ இங்கிருந்து புறப்படும் – EARLY BIRD பேட்ஜ்களையும் சுமந்து கொண்டு!
No சிம்ரன் ; only புஷ்டிகா !! - என்ற கோஷத்தோடு இந்தக் கவர்களை உசிலைமணியாய் பரிணாம வளர்ச்சி கொண்டு பார்த்திட விரும்பும் பட்சத்தில், வாரயிறுதி வரைக் காத்திருந்து “இரத்தக் கோட்டை” இதழையும் இந்தக் கூரியருக்குள் நுழைத்திடல் வேண்டும் ! அவ்விதம் திட்டமிடுவதாயின், வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) பார்சல்கள் புறப்பட்டாக வேண்டும் ! எவ்விதம் செய்யலாமென்று தீர்மானிப்பது உங்கள் choice folks!
அப்புறம் பணிகள் முடிந்த கையோடு - "சலோ ஈரோடு" என்ற ஏற்பாடுகளுக்குள் தலைநுழைக்கக் காத்திருக்கிறேன் ! As usual - அதே பரபரப்பு உங்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை எண்ணி ! அதே வேளையில், உங்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏதோ விதங்களில் நியாயம் செய்திட வேண்டுமே என்ற ஆதங்கமும் !! அடுத்த ஒரு வாரத்துக்கு மட்டுமாவது கால் சராய்க்கு மேலாக ஜட்டியையும். ; மேஜை விரிப்பை முதுகிலும் கட்டிக்க கொள்ள முடிந்தால் தேவலாம் என்று பட்டது !! மீண்டும் சந்திப்போம்! அது வரை have an awesome Sunday!
P.S : கோவை புத்தக விழாவின் கடைசி நாளின்று !!நமது ஸ்டால் நம்பர் 202 க்கு மறவாது ஒரு விசிட் அடித்திடலாமே ?
1st?
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
Delete👏👏👏
Deleteபாராட்டியதற்கு நன்றி நண்பர்களே!
Delete@ Boopathi Tiruchengode
Deleteஇதே மாதிரி EBFக்கும் மொதோ ஆளா வந்துசேரணும். சரிதானுங்களே?
சரிதான் ஜி!
Deleteசரி தோழரே
Deleteதிருசெங்குடி எங்கே உள்ளது. நான் அறியாத ஊராக இருக்கிறது.
அது திருச்செங்கோடு தோழரே! ஈரோட்டிலிருந்து 20 வது கி.மீ-ல் நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது.
Deleteபூபதி @ என்னாது சாத்தான் ஜியா :-)
Delete2 nd
ReplyDeleteHi..
ReplyDeleteEnter your comment...4வது
ReplyDeleteOn the way to EPF
ReplyDeleteEPF னா என்னப்பா மீனிங் ?
Deleteசந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால்....
ReplyDeleteSci - Fi !!!
////Sci - Fi !!!////
Deleteமீ டூ....
+1111
Delete+1 sir
DeleteI am 5 th hi
ReplyDeletePirates??
ReplyDeleteஈரோடு Plan என்ன. தகவலுக்கு யாரை தொடர்பு கொள்ள. I am on the way...
ReplyDelete4வது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதம்பி சிவா,
ReplyDeleteஈரோட்டில் தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்.
சந்திப்பாேம் அண்ணா.
Deleteஆங்..
Deleteதம்பி சிவா ங்க
போன வருஷம் மாதிரியே இந்த வருஷம் (பாதுகாப்பாக) வச்சிருந்து எல்லார்க்கும் செய்வீங்களா ?
இந்த வருஷம் ஈரோட்டு மாநாட்டுக்கு எதில எப்படி வரீங்க.?
🙄🙄🙄🚍🚍🚍
Deleteகிளாசிக்-ல் கேப்டன் பிரின்ஸ் 2018 உண்டு அல்லவா. அதில் மீதம் இருப்பதோ 4 கதைகள் தான் வண்ணத்தில். ஆசிரியர் அதை நிறைவு செய்வார் என நம்புகிறேன்.
ReplyDelete+111111111
Delete+1234567890
Delete👋👋👋.
ReplyDeleteI am 6th .நடுநிசி வணக்கம்.
ReplyDeleteஹைய்யா!!! 2018க்கான அட்டவணை - EBFலயே ரெடியாகிடும்போல இருக்கே...!!
ReplyDeleteஅட்டவணை எல்லாம் தீபாவளிக்கு தான் நண்பரே..ஹூம்ம்மம்😝😝😝😝
Deleteசெந்தில் & ஆந்தை விழியாரை போலேவே நானும் இரவு 11 மணிக்கு உத்திரத்தையும் தரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteசந்தா 2018 எப்படி அமைந்தால் சூப்பராக இருக்கும் என்று யோசிக்கிறேன்.குறைந்த பட்சம் 1 வாரத்திற்குள் தெளிவாகி விடும் என்று நினைக்கிறேன். நன்றி
சந்தா A ல் புதிதாக sci - fi கதைகளை முயற்சிக்கலாம். உதாரணம் - ஆல்டபரான்.
ReplyDeleteசந்தா C - ஒற்றை ஸ்லாட்களில் தொடரலாம்.
1000 - 2000 இதழ்கள் இல்லைன்னாலும் ஒரு 500-600 ரூபாய்க்கு தலைவர் tex willer a எதிர்பார்க்கலாமா சார், அடுத்த வருடம் ஒரு landmark வருடமாக அமைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஅதுவுமில்லாமல் tiger க்கு 1000 ரூபாயில் புத்தகம் வெளியிட்டு உள்ளீர்கள் எங்கள் தலைக்கு எதற்கு இந்த ஒர வஞ்சனை.
Deleteஆம்.70 இதழ் கண்டிப்பாக குண்டாகத் தான் வேண்டும்.
Deleteடெக்ஸ்-ன் புதிய கதைகளையே தண்டியாக வெளியிடலாம். கலர் புதிய கதைகள் என்றால் ₹ 300.00/- உள்ளாக. Block+white என்றால் ₹ 500.00/-
Deleteமற்றபடி ஆண்டுக்கு 10 ஒகே, அதோடு தீபாவளி தண்டி புக்.
Ok ok.
மறு பதிப்புகள் நண்பர்களுக்காக.
2018க்கு டெக்ஸ் புது கதைகளுக்காக ₹ 1000.00 பட்ஜெட் , இம்புட்டுதா கட்டுபுடி ஆகும். மறு பதிப்பு நண்பர்களுக்காக.
Deleteஆயிரம் ரூ விலையில் கண்டிப்பாக குண்டு டெக்ஸ் இதழ் வேண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டும்.
Delete23rd
ReplyDeleteநீலபொடியர்கள் ..?
ReplyDeleteநான் இவர்களை கண்டதும் காத தூரம் ஓடி கொண்டே இருக்கிறேன்.எங்கள் லைப்ரேரியில் அவை புத்தம் புதிதாகவே இருக்கின்றன.
Children அதிகம் விரும்பி படிப்பவை.
1. டெக்ஸ் 75/100
2. லக்கி 100/100
3. சிக்புல் 64/100
4. க்ளிம்டன் 65/100
5. ரின்டின் 82/100
6. பென்னி 78/100
7. சோல்ஜர்ஸ் 58/100
8. நீலப்பொடியர்கள் 13/100
இது வரை படித்த comics Students எண்ணிக்கை.
// 2. லக்கி 100/100 //
Delete👏👏👏👍👍👍 Good News
// 8. நீலப்பொடியர்கள் 13/100 //
🤔🤔🤔👎👎👎 Bad News
என்னைப் பொருத்தவரை லக்கிலூக், சிக்பில்க்கு பிறகு ஸ்மா்ப்ஸ் தான் சூப்பா் ஹிட்!!
ஆனா பாருங்க நிஜக் குழந்தைகளுக்கு எப்படியோ, இந்த வளா்ந்த குழந்தைக்கு "காமிக்ஸ்னாவே காா்ட்டூன் தான்" மத்த கதைகளெல்லாம் தமாஸா இருக்கு???!!!
😁😁😁
நாம இன்னும் குழந்தைகளாவே இருக்கிறோம் மோமன்ட் மிதுன் .
Deleteநமக்கும் குழந்தைகளுண்டு என்பதை ஏற்க மறுக்கிறீர்கள்.
ஸ்மர்ப்ஸ் க்கு அதிகபட்சம் 40/100 தரலாம்
I love Smurfs so much sir....
DeleteThis comment has been removed by the author.
DeleteA.கண்டிப்பாக புது கதாநாயகர்க்கு ஒதுக்கலாம்.B.டெக்ஸ் 70 வது ஆண்டை முன்னிட்டு "லயன் 250" போல ஒ௫ குண்டு இதழ் வந்தே ஆகணும், இல்லை என்றால் மெரினாவில் போராட்டம் நடத்த நேரிடும். C.கண்டிப்பாக ஊதாப் பொடியர்களுக்கு இரண்டு இடம் தந்தேயாகணும்.இதெல்லாம் எங்கள் அன்பான வேண்டுகோள்கள்,ஏதோ பார்த்துச் செய்யுங்கள் சார்.புண்ணியமாப் போகும்.
ReplyDelete////கண்டிப்பாக ஊதாப் பொடியர்களுக்கு இரண்டு இடம் தந்தேயாகணும்.இதெல்லாம் எங்கள் அன்பான வேண்டுகோள்கள்,ஏதோ பார்த்துச் செய்யுங்கள் சார்.புண்ணியமாப் போகும்////
Delete+1111111
டைலன் டாக் அட்டைப் படமும்-முன்னோட்டமும் இப்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.
ReplyDelete#ஏற்கனவே ஒரு மினி கல்யாண வீட்டுப் பந்தி அளவிற்கு நாயகர்களும், நாயகியரும் நம் அணிவகுப்பில் முண்டிக் கொண்டு நிற்கும் போது – மேற்கொண்டு புது நாயக / நாயகியருக்கு சொற்ப காலத்திற்காவது no entry போடல் அவசியம் என்பீர்களா?#
ReplyDeleteடெக்ஸ் வில்லர்,லார்கோ வின்ச்,கமான்சே,டைலன் டாக்,மார்டின்,ட்யுரான்ங்கோ,Lady S,தோர்கல் இவர்களின் புதிய கதைகள் மற்றும் டெக்ஸ் வில்லர்,XIII-ன் இரத்தப்படலம்,டைகரின் தோட்டா தலைநகரம்(ம)இளமையில் கொல்,கேப்டன் ப்ரின்ஸ்-ன் எஞ்சிய கதைகள் முதலான மறுபதிப்புகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கவும்.
#சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ?#
Valérian and Laureline அப்புறம் Enki Bilal-ன் Nikopol Trilogy,Exterminator 17 etc.,
#Tex-ன் 70-வது ஆண்டு என்பதால் இதற்கென கௌபாய் ஆர்வலர்களிடம் நிறைய யோசனைகள் இருக்கலாம் தான்! காத்திருக்கும் ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது இது பற்றிப் பேசிடலாம்#
டெக்ஸ் சம்பந்தமாக மட்டும் என்றில்லாமல் வாசக சந்திப்பின் போது நண்பர்கள் தங்களிடம் வேறு கோரிக்கைகளும் வைக்கலாம்.எனவே வாசக சந்திப்பிற்கு பிறகு 2018-ன் பட்டியலை இறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
#கார்ட்டூன் சந்தாக்கள் உங்கள் தேர்வுதனில் நிச்சயம் இடம்பிடித்திடும் என நடப்பாண்டில் கண்டிப்புக் காட்டியதால் ஒரு முப்பது – நாற்பது சந்தாக்கள் miss ஆகியிருக்கக் கூடும் என்பது புரிகிறது.#
உண்மை சார்!சந்தா A + B மட்டும் இல்லையென்றதால் சேலம் தேசன் புக் ஷாப்பிலோ அல்லது ஈரோடு பேருந்து நிலைய புத்தக கடைக்கோ சென்று வாங்கிக்கொள்கிறேன்.
#செவ்வாய் காலை உங்கள் கூரியர்கள் ‘ஸ்லிம் சிம்ரனாய்‘ இங்கிருந்து புறப்படும் – EARLY BIRD பேட்ஜ்களையும் சுமந்து கொண்டு!#
சார்!எனது “இரத்தக் கோட்டை” முன்பதிவு எண்.98.ஈரோட்டில் நேரில் பெற்றுக்கொள்கிறேன்.சந்தாவில் இல்லாததால் பேட்ஜ்-ம் நேரில் வழங்கப்படுமா?
அனைவருக்கும் வணக்கம்
ReplyDelete#சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ?#
ReplyDeleteகார்த்(Garth)-ஐ கூட முயற்சிக்கலாம் சார்!Sci - Fi மற்றும் Time Travel சாகசங்கள்.தற்போது Daily Mirror(British newspaper)-ல் வண்ணத்தில் மறுபதிப்பாக வந்துகொண்டிருக்கிறது.
@ Boopathi Tiruchengode
Deleteஉங்கள் ரசணையும், தேடலும் ஆச்சரியப்படுத்துகிறது நண்பரே!
@ஈரோடு விஜய்
Deletehttps://www.facebook.com/garthcomicstrip/
மேலே உள்ள Facebook பக்கத்திற்கு சென்று பாருங்கள் நண்பரே!
சந்தா A வில் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா
ReplyDeleteஇடம் பெற்றால் நலம்
ஜேசனுக்கு பதில் வரும் நாயகர் அதிரடி நாயகராக வேண்டும்
Delete''நீலப்பொடியர்கள் “ஸ்மர்ஃப்” '' - அவர்கள் எங்கள் மனதுக்கு பெரும் ரிலாக்ஸ் தருகிறார்கள்.அவர்கள் தொடரட்டும் அப்படியே!
ReplyDeleteபொடியன் சாா்!
Deleteநானும் உண்டு உங்கள் காா்ட்டூன் கூட்டணியில்!!
+ 11111111
+1111111111
Deleteமீ டூ!
ஆமாம்.நானுந்தேங்கோ!!
Deleteஸ்மர்ஃப்ஸ்@ 90/100மார்க்ஸ்... கற்பனையின் அசாத்தியம் அந்த தொடர். அந்த சின்னஞ்சிறு உலகில் ஒன்றிட வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் மனம் இலகுவாகி பஞ்சு போல பறக்கும். "நான்"-என்ற நிலை மறந்து கொஞ்ச நேரமாவது எங்கோ கனவில் சஞ்சாரிக்கலாம்.
Deleteஸ்மர்ஃப்ம் ஐஸ்ஏஜ் படங்களும் என்னுடைய ஆல் டைம் பேவரைட். ஐஸ் ஏஜ் படங்கள் எப்போதும் என் மொபைலில் இருக்கும். ஏதாவது டென்சன்னா ஒரு 10நிமிடங்கள் பார்த்தால் போதும் மனசை மாற்றி விடும் அந்த முந்தரி வாண்டு...
+12345....
Deleteஸ்மர்ஃப்ஸ்-ஐ
Deleteலிமிடேட் எடிசனிலோ (Or) கிளாசிக்ஸிலோ 2 Slot கொண்ட ஓர் இதழாக வெளியிடலாம்.
///கிளாசிக்ஸிலோ 2 Slot கொண்ட ஓர் இதழாக வெளியிடலாம்.///
Deleteசூப்பா் சாா்!!
"//கார்ட்டூன் சந்தாக்கள் உங்கள் தேர்வுதனில் நிச்சயம் இடம்பிடித்திடும் என நடப்பாண்டில் கண்டிப்புக் காட்டியதால் ஒரு முப்பது – நாற்பது சந்தாக்கள் miss ஆகியிருக்கக் கூடும் என்பது புரிகிறது ! அதே பிழையை இம்முறையும் செய்திட வேண்டாமென்று தீர்மானித்துள்ளேன்"//
ReplyDeleteநல்ல முடிவு. நன்றி சார். லக்கி கதைகளைத் தவிர மற்றவைகளில் ஏனோ மனம் ஒன்ற மறுக்கிறது. வயது காரணமாக இருக்கலாம். சந்தாவில் C யை விட்டு விட்டு லக்கி வரும் போது வேறு வழிகளில் வாங்கிக் கொள்கிறேன்.
+1111
Deleteஆரம்ப காட்சியை படிச்சப்ப நாம தெரியாத்தனமா வெள்ளிக் கிளம ராமசாமி ஊட்ல புகுந்திட்டமோன்னு தோணிடுத்து
ReplyDelete47
ReplyDelete47லயும் நீ எளமயா தெரியிரல
DeleteHa ha ha
Deleteகாலங்கார்த்தாலயே காமிடில பின்றப்பு :)
லக்கிலூக் !!!
ReplyDelete1. பூம்பூம் படலம்
இரு பெரும் போட்டிக் கம்பெனிகளில் யாா் பொியவா் என்று தனது பங்குதாரா்களுக்கு நிரூபிக்க வேண்டியும், எதிாியை ஒழித்துவிட்டால் தொழிலிலே கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற பணத்தாசையும் மேலோங்கிட, தனது பங்குதாரா்களை தற்காத்து கொள்ள எப்படிப்பட்ட தரங்கெட்ட வேலையையும் செய்ய கம்பெனி நிா்வாகம் தயங்காது?? என்பதை பகடியும், நையாண்டியும் கலந்து உணா்த்த விரும்புவதே கதையின் மையம்!!
உண்மையில் சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு இக்கதையை படித்தபோது, ஜாலி ஜம்பரும், டால்டன் கோஷ்டியும், அமைதியைத் தேடி கடைசிவரை அமைதி இழந்த அந்த ரயில்வே காரரும், சவப்பெட்டியோடு வரும் வெட்டியானும் நம் மனதிலே பதிந்த அளவிற்கு கதையின் பின்புலம் பதிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!
ஒரு புத்தகம் ஒவ்வொரு காலகட்டத்தில் படித்கும்போதும் ஒவ்வொரு விசயத்தைச் சொல்லும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேண்டியதில்லை!!
புத்தகம் ஒன்றுதான், நாம் மாறிவிட்டோம். இப்போது முற்றிலும் வேறு சங்கதிகள் தான் கண்ணுக்குத் தொிகின்றன!!
யாா் கண்டது?? இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தப் புத்தகங்களைப் படித்தால், இன்னும் அற்புத தத்துவக் கருத்துக்களைக் கூட சொல்லுமோ?? என்னவோ??
இதை வெறும் காா்ட்டூன் என்று பாா்த்தால், அந்தக் கண்களுக்கு டால்டனும், ஜாலி ஜம்பரும் தான் தொியும்!!
அதற்குப் பின் உள்ள, கதையை இயக்கும், நூலிழை போன்ற, கதையின் கருவான அந்த வாழ்வியல் தத்துவ சமாச்சாரத்தை இழந்து விடுவோம்!!
அந்த வகையில் ஒவ்வொரு லக்கியின் கதையுமே மிக அற்புதமாக, கவனமாக செதுக்கப்பட்டுள்ளது என்பதே என் எண்ணம்!!
ஒருமுறை மகாபலிபுரம் சென்றுவந்த என் நண்பரிடம் எப்படி இருந்தது? என்று கேட்டேன்!! அவா் "அங்கென்ன வெறும் கல்லுதான் இருக்குது" என்றாா்.
அவாிடம் நாம் சிற்பத்தைப் பற்றி எவ்விதம் விளக்குவது??
அவருக்கு அதிலே துளி ஆா்வமும் இல்லை!!
லக்கி அல்லாத எல்லா காா்ட்டூன்களையும், இவ்விதம் சோ்க்க முடியாது தான்!!
ஆனால் ரின்டின்கேனும், ஸ்மா்ப்ஸ்க்கும் கூட லக்கிலூக் ரகம் தான்!!
சிக்பில், மதியில்லா மந்திாி இரண்டும் ரகமே வேறு!! Fully Fun!! அவ்வளவுதான்!! ஆனால் அது கொடுக்கும் சிலாகிப்பு அலாதியானது!! வேறோன்றும் அதற்கு முன்பாக நிற்க முடியாது!! நாம் எல்லாவற்றிலும் மாய்ந்து மாய்ந்து தத்துவங்களைத் தேட வேண்டியதில்லை!!
லக்கியின் கதைகளில் இயல்பாகவே அது உண்டு!! அதுபோல சுட்டிப்பயல் பென்னியும் ஒரு குழந்தைத் தனத்தோடான தத்துவ போதனைக் கதையாகவே உள்ளது??
மீசைக்காரா், தாத்தா லியனாா்டோ, புளூகோட்
இதெல்லாம் லிக்கி பாணியிலும் அல்லாது, சிக்பில் பாணியிலும் அல்லாது ஏதோ காா்ட்டூன் அவ்வளவுதான் என்றே எனக்குத் தோன்றுகிறது!!
🎶🎶 "தனிமையே என் துணைவன்" 🎶🎶
////இதை வெறும் காா்ட்டூன் என்று பாா்த்தால், அந்தக் கண்களுக்கு டால்டனும், ஜாலி ஜம்பரும் தான் தொியும்!!
Deleteஅதற்குப் பின் உள்ள, கதையை இயக்கும், நூலிழை போன்ற, கதையின் கருவான அந்த வாழ்வியல் தத்துவ சமாச்சாரத்தை இழந்து விடுவோம்!!
அந்த வகையில் ஒவ்வொரு லக்கியின் கதையுமே மிக அற்புதமாக, கவனமாக செதுக்கப்பட்டுள்ளது என்பதே என் எண்ணம்!!////
உண்மை + அருமை!
////ஒருமுறை மகாபலிபுரம் சென்றுவந்த என் நண்பரிடம் எப்படி இருந்தது? என்று கேட்டேன்!! அவா் "அங்கென்ன வெறும் கல்லுதான் இருக்குது" என்றாா்.
அவாிடம் நாம் சிற்பத்தைப் பற்றி எவ்விதம் விளக்குவது??
////
'கார்ட்டூனில் இரசிக்கும்படி அப்படி என்ன இருக்கு?' என்று கேட்பவர்களை மேற்கூறிய உங்கள் நண்பரோடு ஒப்பிடலாம்!
மிதுன் -அ௫மை,நன்று.நன்றி.உணர்வுப் பூர்வமான,உள்ளப்பூர்வமான பதிவு.
Deleteஇந்த ஆந்த விழி ஆபீசர் தர்றது என்னவோ ஒரு பிளேட் ஒல்லி எலும்பு. அதையும் கொடுக்கணுமா வேண்டாமான்னு கேக்க ஆரம்பிச்சுட்டாரே
ReplyDeleteகண்ணிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டும் படங்கள் பல
+111111
Delete@ ரின் டின் கேன்
Deleteவாயிலிருந்துதான் அருவியாக் கொட்டிக்கிட்டிருந்துச்சு... இப்ப கண்ணிலிருந்துமா?!!
EBF-ல் சர்ப்ரைஸ் புக்?
ReplyDeleteடெக்ஸ் வில்லர் வ ருடம் முழுதும் வேண்டும். ச ந்தா B ம ட்டும் அ அப்படியே வேண்டும்.
ReplyDeleteப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்...
Deleteமாசம் ஒன்னுங்க அது எப்படி வந்தாலும் சரிதானுங்...
டெக்ஸ் கிளாசிக் தனியாக ஒரு த ட ம்.
ReplyDeleteஇது 70ம் ஆண்டு கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும்.
DeleteTEX 70 special oru gundu அல்லது பல்வேறு டெக்ஸ் கிளாசிக் மற்றும் புது சாகசம்.
ReplyDeleteகற்காலத்திலேயே சுற்றிவராமல் ஆகாயத்தினையும் ஆராயலாம்.
ReplyDelete(SCI-FI)-- ???????
Science fiction : x men ,batman,
Deleteநன்றி!!! வருகைத்தருமா என்பதற்காக கேள்விகுறி போட்டிருந்தேன். ப்ளாஸ் கார்டன் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Deleteநம் கால் பதிந்து இருக்கும் மண் தானே நிரந்தரம்.
Deleteஅப்படியென்றால் கடல்¸ பாலைவனம்¸ வனாந்திரம் மற்றும் மந்திர மண்டலம் ஆகியவற்றில் சஞ்சரிப்பது ஏனாம்? பெரும்பாலும் இறந்த காலத்தில் கதைகள் உள்ளன¸ எதிர் கால கதைகளும் தரலாம்.
Deleteசந்தாA.லர்கோ,லேடி S,xiii, m a r t in,D u r a n g o,xiii spin off, Ro bin ,m o d e s t y,
ReplyDeleteலைடனின் அட்டை முன் -பின் படங்கள் டெரர் ஆகவும் அருமையாகவும் உள்ளது . சந்தா A இல் sci -Fi இனை முயட்சித்து பார்க்கலாமே என்பது எனது தாழ்மையான கருத்து . சந்தா B இனில் தலையின் 70 வது பிறந்த நாளினை முன்னிட்டு , இது வரை வராத தலையின் சாகசங்களில் முக்கியமான சிலவற்றினை "தலையிலாபோராளி " சைஸுக்கு முயற்சித்து பார்க்கலாமே சார் .
ReplyDeleteசந்தா C யினில் ஸ்மர்ப் இனையோ நாலுகால் ஞான சூனியதுக்கோ கல்தா கொடுத்து விடாதீர்கள் சார் . ப்ளீஸ். இன்னும் அதிகப்படுத்த முடியுமானால் செய்யுங்கள் சார் .
அ௫மை.கை தட்டும் படங்கள் பத்தாயிரம்.நன்றி சார்
Delete.
///தலையின் 70 வது பிறந்த நாளினை முன்னிட்டு , இது வரை வராத தலையின் சாகசங்களில் முக்கியமான சிலவற்றினை "தலையிலாபோராளி " சைஸுக்கு முயற்சித்து....///+10000000000000000000000000000000000....
Deleteசந்தா C யில் நீல பொடியர்களுக்கு ஒரு இடம் போதும். ரின் டீன் கேன் - வேண்டவே வேண்டாம்
ReplyDeleteசந்தா Cல் நீலபோடியர்களுக்கு கல்தா கொடுத்துவிடலாம் ரின்டின்கேன் தொடரலாம் ! சந்தா Aல் புது நாயகர் அல்லது ஒரு slot கொடுக்கலாம்,
ReplyDelete///சந்தா C யினில் ஸ்மர்ப் இனையோ நாலுகால் ஞான சூனியதுக்கோ கல்தா கொடுத்து விடாதீர்கள் சார் . ப்ளீஸ். இன்னும் அதிகப்படுத்த முடியுமானால் செய்யுங்கள் சார் .///
ReplyDelete///சந்தா C யில் நீல பொடியர்களுக்கு ஒரு இடம் போதும். ரின் டீன் கேன் - வேண்டவே வேண்டாம்.///
///சந்தா Cல் நீலபோடியர்களுக்கு கல்தா கொடுத்துவிடலாம் ரின்டின்கேன் தொடரலாம் ! சந்தா Aல் புது நாயகர் அல்லது ஒரு slot கொடுக்கலாம்,///
நம்ம எடிட்டரோட நிலமையை நினைச்சுப் பாத்தா.. . ஹாஹாஹா..!! :-)
அதே!!!அதே!!!.நல்ல வேளை நான் பொம்மை புக்குக்கு எடிட்டராகுல.தப்பிச்சம்பா!.
Deleteநல்லவேளை சிக்பில் & லக்கி வேணாம்ன்னு யாரும் சொல்லலை!!
Deleteஅதுவரை தப்பிச்சோம்!!
ஹாய்
ReplyDelete///சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ///
ReplyDeleteJean Giraudன் Buffalo bill
அல்லது Johnathan cartland
Delete(யூ ட்யூபில் இவற்றின் (Buffalo bill& Johnathan) ப்ரமோ வீடீயோக்கள் கிடைத்தன. ட்ராயிங்கும் சரி, ஒற்றைப்பக்க டீசர்களும் சரி மெர்சலாக்குகின்றன.!
///Jean Giraudன் Buffalo bill///
DeleteBuffalo bill க்கு தமிழ் பெயர் 'எருமை ஏகாம்பரம்'னு வச்சா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்!
அப்போ Johnathan cartlandக்கு குதிரைவண்டி குருவன் னு வெச்சிடுவோமா குருநாயரே!!
Deleteசந்தா -c ல் லக்கி, சிக் பில் & Co தவிர வேறு கதைகள் எதுவும் வேண்டாம் முடியல. அந்த அளவுக்கு கொடுமையா இருக்கு. அது போல சந்தா -D தெளிவான சித்திரமாக இருந்தால் மட்டும் தொடரலாம்.இப்படியே தான் தொடரும் என்றால் சந்தா -D வேன்டாம். டாக்டர் டக்கர், இமயத்தில் மாயாவி இந்த இரண்டு மட்டுமே பழைய கதைகளை படித்த திருப்தி. மற்ற B&W சந்தா -D புத்தகங்களை என்னத்த சொல்ல.
ReplyDeletePlease don't reboot Fleetway super series again
ReplyDeleteடைலன்டாக் அட்டைப் படம் அருமை!! கீழிருந்து மேல் நோக்கி வரையப்பட்டிருக்கும் விதம் அந்த கடிகாரத்தின் (பிக்பென்?) பிரம்மாண்டத்தைக் காட்டும் வகையில் செமயாக இருக்கிறது!
ReplyDeleteHi!
ReplyDelete1. //புது வரவே என்றால் – தரமான நாயகர் யாராக இருந்தாலும் ஓ.கே. தானா? அல்லது அந்த fantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே இடம்பிடித்தல் தேவலாம் என்பீர்களா?//
ReplyDeletefantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக, அந்த வேறொரு fantasy சுப்பையாவே இடம்பிடிக்கட்டும்.
2. //பொடியர்கள் – இதே போல தொடரலாமா? அல்லது சற்றே slot-களைக் குறைவு பண்ணிட அவசியமாகுமா? //
பொடியர்கள் – இதேபோல் தொடரட்டும்.
3. //So – அந்த மாமூலான ஒற்றை slot-ல் இந்த நாலுகால் நாயகன் தொடர்வது பற்றிய உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்?//
தயவுசெய்து, இந்த நாலுகால் நாயகனுக்கு கல்தா கொடுத்துவிடாதீர்கள். ரின்-டின்-கேன் தொடரட்டும். ரின்-டின்-கேனுக்கு double slot கொடுத்தால் நன்றாக இருக்கும்.
2 & 3
Delete+ 1111111
// So செவ்வாய் காலை உங்கள் கூரியர்கள் ‘ஸ்லிம் சிம்ரனாய்‘ இங்கிருந்து புறப்படும் – EARLY BIRD பேட்ஜ்களையும் சுமந்து கொண்டு! //
ReplyDeleteசெவ்வாய்க்கிழமையே அனுப்புங்க சார்.
+2222
Delete// புது வரவே என்றால் – தரமான நாயகர் யாராக இருந்தாலும் ஓ.கே. தானா? //
ReplyDeleteஅந்த (ஜெ)ராமையாவ தூக்கி SLOT-A வில் போட்டுடுங்க சார்,சூப்பர்-6 ல் முன்பு சொன்ன மூன்று புதிய வரவுகளில் எதை ஒரே தொகுப்பா போட முடியுமோ அதில் ஒன்றை எடுத்து போட்டுடுங்க சார்.
ஜெரெமயாவை ஜேசன்ப்ரைஸ் இடத்துக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு, சூப்பர் சிக்ஸில் லாங் ஜான் சில்வர் நாலு பாகங்களையும் ஒரே புக்கா போட்டிடலாம் சார்.
Deleteமுடிந்தால் பராகுடா ஆறு பாகங்களையும் ஒரே குண்டா போட்டுத் தள்ளிடலாம் என்பது என் கருத்து. !
ஏனெனில் ஒரு புது ஜோனரை படிக்கத் தொடங்கும்போது முழுக்கதையாய் இருந்தால்தான் சுகப்படும். மாறாக வருடம் ஒரு பாகமோ இரு பாகமோ என்று கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் அந்த புது ஜோனரின் தாக்கம் சரிவர போய்ச் சேரும் வாய்ப்பு குறைவாகிவிடுமென்று தோன்றுகிறது. .!
KiD ஆர்டின் KannaN- வெல்டன் சார்.fantastic idea.கை தட்டும் படங்கள் பத்தாயிரம்
Delete.
ஒரே இதழ் போட்டு முடிக்கலாம்,வெரைட்டி மிஸ் ஆகும்.சூப்பர்4ஆக ஆகிடும்.
Deleteஆனால் 6பாகத்தையும் ஒரே புக்கா போடும் அளவுக்கு பாராகுடா"- ஒர்த்தா என்ற கேள்வியும் எழுமே???
அதே சமயம் 3வித ஹீரோஸ் தரும்போது ஒன்று பிடிக்கலனா கூட மற்ற இரண்டும் ஆறுதல் தரும். ஒட்டுமொத்தமாக ஒரே ஆளை போட்டு பிடிக்கலனா..........போச்... சூப்பர் 6ன் அசாத்திய வெற்றியை கேள்விக்குறியாக்கிடும் அபாயம் இருப்பதால் , ஐ ஆம் கோ ஃபார் 3ஹீரோஸ்X2கதைகள் பார்முலா...
///ஐ ஆம் கோ ஃபார் 3ஹீரோஸ்X2கதைகள் பார்முலா.///
Deleteட்யூராங்கோ வின் வெற்றிக்கும் தோர்கலின் ஆரம்ப தோல்விக்கும் என்ன காரணம்னு நினைக்கிறிங்க?
// ஏனெனில் ஒரு புது ஜோனரை படிக்கத் தொடங்கும்போது முழுக்கதையாய் இருந்தால்தான் சுகப்படும்.//
Deleteயோசிக்க வைக்கும் விஷயம்.
ஜம்போ ஷ்பெசலுக்கு முன்னும் பின்னும் ரத்தப்படலத்தின் தாக்கம் எப்படியிருந்ததுன்னு நினைக்கிறிங்க?
Delete///ஒரே இதழ் போட்டு முடிக்கலாம்,வெரைட்டி மிஸ் ஆகும்.சூப்பர்4ஆக ஆகிடும்.
Deleteஆனால் 6பாகத்தையும் ஒரே புக்கா போடும் அளவுக்கு பாராகுடா"- ஒர்த்தா என்ற கேள்வியும் எழுமே???///
சூப்பர் 6 ல் ஒரு ஸ்லாட்டுக்குதான் இந்த முழுக்கதை கோரிக்கை. பாக்கி 5 ம் அப்படியே இருக்கட்டும். பரகுடா வொர்த்தா இல்லையான்னு இப்பவே எப்படி சொல்லமுடியும். ட்யூராங்கோ நாலு பாகம் சேர்ந்து பெரிதாக வந்தபோது எந்த நம்பிக்கையில் வாங்கினோமோ அதே நம்பிக்கையில் வாங்குவோம். அதாவது எடிட்டர் அவர்களின் செலக்ஷன் மீதான நம்பிக்கை..!
நம்பிக்கை அதானே வாழ்க்கை .!!
இரண்டு ரவிகளும் சேர்ந்து சரியான பாயிண்ட்டை எடுத்து வைத்து விட்டீர்கள்.
Delete//நம்பிக்கை அதானே வாழ்க்கை .!!/---சூப்பர்.
//ட்யூராங்கோ நாலு பாகம் சேர்ந்து பெரிதாக வந்தபோது எந்த நம்பிக்கையில் வாங்கினோமோ அதே நம்பிக்கையில் வாங்குவோம்....///--- உண்மை, டியூராங்கோ வெற்றியும், ஜம்போ ஸ்பெசலின் தாக்கமும் குறிப்பிடத்தக்கவை.
முழுத் தொடரும் இருந்தால் படிப்பதற்கே ஒரு கூடுதல் சுவாரஸ்யம் வரும். யெஸ்...
தோர்கலின் ஆரம்ப சொதப்பலுக்கு தனத்தனியாக பிச்சி போட்டதே காரணம்.
எனவே பாரகூடாவோ, லாங் சில்வரோ, அல்லது சிலீரென உறைய வைக்கும் த்ரில்லரோ,
அலை அலையாய் தாலாட்டும் ரொமாண்டிக் சஸ்பென்ஸோ ஒற்றையாய் ஒரே பாகமாக வரட்டும் சார்...
என்னது ராமையா A சந்தாவிலா.
Deleteபடிச்சு முடிச்ச கதையையே ஜீரணிக்க முடியலை.
அய்யா ஜெரேமியா உங்களுக்கான Slot (limited Edition) தான்.
ஆம் நண்பரே!ஜெரேமியா 1980-களில் வந்திருந்தால் டைகரை போல,பிரின்ஸை போல இப்போது வண்ணமறுபதிப்பு வேண்டும் என கேட்டிருப்போமோ?
Delete// முழுத் தொடரும் இருந்தால் படிப்பதற்கே ஒரு கூடுதல் சுவாரஸ்யம் வரும்.//
Delete+11111
// So – அந்த மாமூலான ஒற்றை slot-ல் இந்த நாலுகால் நாயகன் தொடர்வது பற்றிய உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்? //
ReplyDeleteமாத்தியே ஆகணும்னு நீங்க நினைச்சா ரின்டின் கேனை மாற்றலாம் சார்,எனக்கு அது ஓகே தான் ஆனாலும் முழுமையான நிறைவு இல்லை.
90th
ReplyDelete//‘ஆயிரம் ரூபாய்க்கு ஒரே புக்; ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்‘ என்ற ரீதியிலான டெரர் பரிந்துரைகளின்றி – யதார்த்தத்தை ஒட்டிய திட்டமிடல்கள் பக்கமாய் சிந்தனைக் குதிரைகளை அனுப்புவோமே?//
ReplyDeleteஆயிரம் ரூபாய்க்கு டெக்ஸ் ஸ்பெஷலை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் சார்,70 வது ஆண்டில் இந்த ஸ்பெஷல் கவனிப்பு கூட இல்லேன்னா எப்படி?
எவ்வளவு விலையில் போட்டாலும் டெக்ஸ் விற்பனையில் தூள் செய்வார்,புதிய ஸ்பெஷல் கதைகளை தேர்வு செய்து போடலாம்,சம்மர் ஸ்பெஷலாகவோ,ஆண்டு மலராகவோ வெளியிடலாம்,இந்த வாய்ப்பு இனி கிடைப்பது அரிது.
+0997654321
Delete///ஆயிரம் ரூபாய்க்கு டெக்ஸ் ஸ்பெஷலை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் சார்,70 வது ஆண்டில் இந்த ஸ்பெஷல் கவனிப்பு கூட இல்லேன்னா எப்படி?///-அதானே?????
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUpdated :)
DeleteHi Sir,
சந்தா Dயை பெரும்பான்மையான வாசகர்கள் வெறுப்பதற்கு காரணம்
1) அட்டராக்சன் இல்லாத புத்தக வடிவமைப்பு
2) கையில் எடுக்கும்போது Xerox போட்ட புத்தகத்தை கையில் வைத்திருக்கும் மாதிரி ஒரு பீலிங்
தீர்வு:-
12 புத்தகங்கள் தனி தனியாக போடுவதற்க்கு பதிலாக நான்கு புத்தகங்கள் ஒரே ஹார்ட் பைண்டிங்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 4 விதமான கலர் ரேப்பரோடு 250 ரூபாயில் வந்தால் பட்டையை கிளப்பும், இப்பொழுது வரும் சூப்பர் 6 புத்தகங்கள் அதற்க்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.
இப்பொழுது வருகின்ற மாதிரியே அடுத்த வருடமும் என்றால் சத்தியமாக பத்தோடு பதினொண்றுதான். ஒரு கிளாசிக் புத்தகத்தை மறுபடியும் பிரிண்ட் பண்ணும் போது புத்தக கலைக்டர்களை மனதில் வைத்து கொண்டு செய்யும் போது அந்த புத்தகத்தின் மதிப்பு பல மடங்கு உயரும் இல்லை என்றால் பழைய புத்தக கடையில்தான் இந்த புத்தகங்களை அதிகம் பார்க்க வேண்டி இருக்கும்.
Thanks ..
கிரி @ நம்மை போன்ற சிலருக்கு உங்கள் யோசனை நன்றாக இருக்கும். ஆனால் மறுபதிப்பு பல கடைகளில் மற்றும் புத்தகத் திருவிழாவில் விற்பனையில் பட்டையைகிளப்பக் காரணம் அதன் விலை. உங்கள் எண்ணப்படி முயற்சித்தால் அது குறைந்த வாசகர்களை மட்டுமே சென்றடையும்.
Deleteகிரி அருமை..ஆனா பரணி சொல்றதுலயும் விசயமில்லாதில்லை....
Delete// ஆனால் மறுபதிப்பு பல கடைகளில் மற்றும் புத்தகத் திருவிழாவில் விற்பனையில் பட்டையைகிளப்பக் காரணம் அதன் விலை.//
Deleteஉண்மை.
மறு பதிப்பு ஆட்டையில் நான் இல்லவே இல்லை. இந்த மாதம் தான் ஜான் சில்வர் வாங்கினேன். முதல் கதை சூப்பர்.
Deleteஅந்த இரண்டாவது கதை உண்மையில் ஜான் சில்வர் தானா?
அதோடு சித்திரம் நன்றாய் இல்லை.
அனைவருக்கும் காலை வணக்கம்.
ReplyDeleteடெக்ஸ் 70-- ஆண்டுமலர் 7கதைகள்
700+பக்கங்கள் 700/-விலையில் வந்தால்
சொக்கா ஆயிரம் பொன்னும் எனக்கே.
WITH HARDBOUND.
சார், ஏழு கதைகள் கூட வேண்டாம்.நச்சென்று நாலு கதைகள் போடலாம்.மூன்று புதிய கதைகள்+க்ளாசிக் மறு பதிப்பு ஒன்று.அனைத்தும் வண்ணத்திலும் ஹார்ட் பைண்டிங்கிலும் கண்டிப்பாக வர வேண்டும்.அப்படி வந்தால் தான் டெகஸ் என்ற நாயகர்க்கு 70வது ஆண்டிற்க்கு நியாயம் செய்தாற் போலி௫க்கும். வாழ்க டெக்ஸ்!! வளர்க அவரது புகழ்.
Delete// டெக்ஸ் 70-- ஆண்டுமலர் 7கதைகள்
Delete700+பக்கங்கள் 700/-விலையில் வந்தால்.//
+11111
// அனைத்தும் வண்ணத்திலும் ஹார்ட் பைண்டிங்கிலும் கண்டிப்பாக வர வேண்டும்.அப்படி வந்தால் தான் டெக்ஸ் என்ற நாயகர்க்கு 70 வது ஆண்டிற்க்கு நியாயம் செய்தாற் போலி௫க்கும்.//
Delete+11111
///முடிவில் கையிலொரு திட்டமிடல், இறுதியாக, அழகாய் தயாராக நின்ற போது நமது லியனார்டோ தாத்தாவின் முகத்தில் தெரியும் ஒளிவட்டம் மிளிர்வது போலொரு பீலிங் உள்ளுக்குள்! Of course – இது ரொம்பவே சீக்கிரம் அந்த அட்டவணையை உங்களோடு பகிர்ந்து கொள்ளவதற்கு ; ஆனால் நிச்சயமாய் 2018-ன் timetable ஒவ்வொரு ரசனை அணிக்கும் முகத்திலொரு புன்னகையை மலரச் செய்யுமென்ற நம்பிக்கை நிரம்பி வழிகிறது எனக்குள்!////----ஹீர்ரார்ரராஆஆஆ.... ரொம்ப நாளாகவே நிறைய நண்பர்கள் கேட்டு கொண்டபடி ஈரோட்டில் அடுத்த ஆண்டின் அட்டவணை, கிரேட் ஒர்க் சார்.... மார்வலஸ் நியூஸ், பட்டி டிங்கரிங் பார்க்கும் படலம் அன்று; ஒத்திகை பார்க்கும் படலம் இன்று- என்னையே கிள்ளிப் பார்த்து கொள்கிறேன் சார்...
ReplyDeleteவிஜயன் சார், எனக்கு எல்லா புத்தகங்களையும் ஒன்றாக அனுப்பி வைக்கவும். மூன்று நாட்கள் தாமதம் பெரிய விஷயம் இல்லை. அதற்காக இரண்டு கொரியர் என்பது தேவையில்லை நம்மை போன்ற சிறிய குழுவிற்கு.எனவே ஒரே பார்சலாக எனக்கு அனுப்பிவைக்க வேணடுகிறேன்.
ReplyDeleteஅ௫மை பரணி சார்.
Delete👌 ல
Deleteநாங்கூட எல்லாத்தயும் ஈரோட்லயே வாங்கிக்கிறேன்..
Deleteபல வருடங்கள் புத்தகம் என்று வரும் என்று காத்திருந்த காலத்தை விட மாதம் நான்கு புத்தகங்கள் வரும் இன்றைய காமிக்ஸ் பொற்காலத்தில் மூன்று நாட்கள் காத்திருந்து புத்தகம்களை கையில் ஏந்தி படிக்க ஆர்வத்துடன் உள்ளேன்.
DeleteVijayan, My suggestion for "Subscription A" is Genetiks by Jean-Michel Ponzio and Richard Marazano.
ReplyDeleteReason is only first part is available in English. 3 part stories. Sci-fi comics. Panels are awesome.
Deleteசர்ப்ரைஸ் இதழ் என்ன என்று சிறிது கோடி காட்டலாமே?
ReplyDeleteவிஜயன் சார், எனக்கு ஸ்மர்ப் வருடத்திற்கு ஒரு புத்தகம் கண்டிப்பாக வேண்டும்.
ReplyDeleteஅதே போல எனக்கு வருடத்திற்கு ஒரு டின் டின் புத்தகமும் கண்டிப்பாக வேண்டும்.
இது எனது கோரிக்கை மட்டுமல்ல எனது குடும்பத்தின் கோரிக்கை. தயவுசெய்து இதனை மனதில் வைத்து கொண்டு அடுத்த வருட புத்தகம்களை திட்டமிட்டு இவைகளை எங்கள் கைகளில் தவழ விடுங்கள்.
Parani சார்,
Deleteரின் டின் அல்லது டின் டின் வேண்டுமா
////எனக்கு ஸ்மர்ப் வருடத்திற்கு ஒரு புத்தகம் கண்டிப்பாக வேண்டும். //
Delete2 வேண்டும்
பூரிக்கட்டைய ஒளிச்சு வச்சிட்டோம்கிறதிமிறு தெரிதுல...நல்லா யோசிச்சு கேளுல...
Deleteசாரி ரின் டின் தான் வேண்டும்.
Delete
ReplyDelete///புதுசுகளே சுவாரஸ்யங்களை எகிறச் செய்திடும் காரணிகள் என்று கைதூக்குவீர்களா?///
----புதுசு கண்ணா புதுசுக்கே எனது ஓட்டு, புதுசே எதிர்பார்ப்புகளை எகிறிச் செய்கின்றன...
/// fantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே இடம்பிடித்தல் தேவலாம் என்பீர்களா? ///
-----ஃபேன்டசிக்கு தோர்கலே போதும் சார், ப்ரைஸின் இடத்தையும் தோர்கலுக்கே ஒதுக்கவும். ஏகப்பட்ட பாகங்கள் பின்தங்கி இருப்பதால் மொத்தமாக இந்த எக்ஸ்ட்ரா நம்பர் தோர்கலுக்கு அவசியம் சார்.
* சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார்
----ஐரோப்பிய மன்னர்கள் கால தொடர்கள் ஏதாவது முயற்சிக்கலாம் சார்.
சந்தா B: காத்திருப்பது Tex-ன் 70-வது ஆண்டு
-----ஈரோடு வரை பாஸ் போட்டு விட்டீர்கள்.
சந்தா C- கார்டூன்கள்:-
ஸ்மர்ஃப்- 2இடங்கள் தாராளமாக ஒதுக்கலாம் சார்.
ரின்டின்-ஒரு இடத்தை வாயில்லா ஜீவனிடம் இருந்து பறிக்க வேணாமே. நாம வாழ்க்கையில் எவ்வளவோ செலவு செய்யறோம்; அத்தனையும் உபயோகமானதாவா இருக்கு?. ..
சந்தாD:-
என்னவேனா மாற்றங்கள் செய்யலாம் சார். சுவை கூட்டுமெனில் நடையை மாற்ற தடையதுமில்லை.
////ஸ்மர்ஃப்- 2இடங்கள் தாராளமாக ஒதுக்கலாம் சார்.
Deleteரின்டின்-ஒரு இடத்தை வாயில்லா ஜீவனிடம் இருந்து பறிக்க வேணாமே////
+111111
ஆமா தோர்கள நெறய அள்ளி விடுங்கள்..
Deleteஆசிரியருக்கு வணக்கம் .
ReplyDeleteஎனக்கான ***இரத்தகோட்டை*** புக்கை ஈரோடு புத்த கண்காட்சியில் பெற்றுக்கொள்கிறேன்
எனது புக்கிங் எண் 120
சக்திவேல் ஈரோடு....
வழக்கம்போல கேள்வியா போட்டு தாக்கிட்டீங்க ஆசிரியரே. இதுவரைக்கும் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாமலே காலம் தள்ளியாச்சு. 40 வயசான என்ன? இப்பவாவது பதில் சொல்லுவோமே..
ReplyDelete1. முதல்ல ஜேஸன் பிரைஸ்க்கு மாற்று பத்தி கேட்டிருந்தீங்க. என்னை பொறுத்தவரை புதுசா யாரையாவது அறிமுகப்படுத்தினா நல்லது. வேறு யாருக்காவது ஸ்லாட் போட்டாலும் ஓகே. ஆனா கவ் பாய்ஸ விட்டுடலாமே? புதுசா ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரியான டிடெக்டிவ் கதைகள், இல்லைனா நீங்க சொன்ன அந்த கடல் சாகசங்கள்?
2. கார்ட்டூன்கள் எல்லாமே நல்லாதான் இருந்தது. ஸ்மர்ப்ஸ் ரொம்பவே ரசிக்கும்படியா என்கேஜிங்கா இருந்தது. அதனால் அதை தொடரலாம்னு நினைக்கிறேன்.
ரிண்டின்கேன் பத்தி எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஒரு கதை நல்லா இருந்தா இன்னொன்னு மண்டை காய வைக்குது. அதனால அந்த நாலு கால் நண்பருக்கு இந்த வருஷம் நோ சொல்லலாம்
அப்புறம் நீங்க கேக்காமலே வாலண்டரியா கார்ட்டூன்ஸ் பத்தி ஒரு கருத்து. மத்த எல்லா கார்ட்டூன்ஸை ரசிச்சாலும் புளு கோட்ஸ மட்டும் ரசிக்க முடியலை (சமீபத்தில் வந்த அவங்க முதல் கதையை தவிர). அந்த உள்நாட்டு யுத்தகளத்துக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லைங்கிறது ஒரு காரணமா, இல்லை சிரிப்பு ரொம்ப குறைவா இருக்கிறது ஒரு காரணமானு சொல்லத் தெரியல. பட் மத்த கார்ட்டூன்களுடன் ஒன்றிய மாதிரி அவங்களோட ஒன்ற முடியலை.
சந்தா D பத்தி - நான் சின்ன பயலா இருந்தபோது மும்மூர்த்திகளோட கதை மட்டும் இல்லாம வேறு பல ஒன் ஷாட் கதைகளையும் ரசிச்சிருக்கேன். ஆனா என் ஞாபக மறதி காரணமா எந்தப் பெயரும் ஞாபகம் இல்லை. அந்த மாதிரியான கதைகளையும் மறுபதிப்பு செஞ்சா நல்லா இருக்கும். கருப்பு கிழவி கதைகளுக்கு இதில இடம் தரமுடியாதா? அப்புறம் மொழிபெயர்ப்புகளை மாற்றுவது நல்ல ஐடியாவா தெரியுது. கண்டிப்பாக செய்யலாம். நானும் இதில் உதவ தயாரா இருக்கேன். நீங்க ஒரு சாம்பிள் கொடுத்தா நான் மொழிபெயர்ப்பு முயற்சி செய்யறேன். அப்புறம் நீங்க முடிவு செஞ்சிக்கலாம்.
////ஸ்மர்ப்ஸ் ரொம்பவே ரசிக்கும்படியா என்கேஜிங்கா இருந்தது. அதனால் அதை தொடரலாம்னு நினைக்கிறேன். ///
Deleteவாழ்த்துகள் வழிப்போக்கரே!!!
மீ..டூ..
கார்ட்டூன் வரிசை படி நீங்கள் சொல்வது உண்மை தான் சார் ..எனக்கு தெரிந்த சில நண்பர்கள் அதன் காரணமாகவே சென்ற முறை சந்தாவில் இணையாமல் புத்தக்கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ இந்த முறை வாங்கி கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்கள் .ஆனாலும் அனைத்து கார்ட்டூனையும் வெறுக்காமல் சிலவற்றை மட்டும் தள்ளி வைக்கறார்கள் .அதில் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு நாயகர்கள் தான் அடக்கம் என்பது உண்மை.அதே சமயம் எனது கருத்து நீல பொடியர்கள் ஆரம்பத்தில் அலற வைத்தாலும் அதன் பிறகு ஓகே ரகத்தில் வந்து விட்டார்கள் .வரலாம் அளவாக என்பது என் நிலைப்பாடு ...ஆனால் ரின்டின் கேனை பொறுத்தவரை இன்னும் மனதினுள் ஒன்றாமல் தான் அது பாட்டுக்கு திரிகிறது .( செயலர் ,ரவிகண்ணர்,மிதுன் அவர்கள் மன்னிக்க ..)..அதே போலவே லியோ தாத்தாவும் ..அதே சமயம் புதிய வரவான பென்னியோ லக்கி,சிக்பில் போல பட்டையை கிளப்புகிறார்.பென்னிக்கு லக்கி சிக்பில் போல கூடுதலாக கூட இடம் கொடுக்கலாம் என்பது என் கருத்து மட்டுமே சார் ..:-)
ReplyDeleteஎடிட்டர் சார் நீங்க எந்த சந்தாவிலும் எந்த கதைய வேணா போடுங்க நான் வாங்குறேன்.ஒரு ஆல்பத்துல மூன்று அல்லது நான்கு கதைகள் உருப்படியா இருந்தாலே போதுமானது.வெளியிடர எல்லா கதைகளுமே வெற்றி கதைகளாகவே இருக்க சாத்தியப்படாது.சந்தா D மட்டும் நீங்க எலவசமாவே குடுத்தாலும் படிக்க விருப்பமில்லை.ஸ்மர்ப் மாதிரியான கதைகள் இரசிக்கும் விதமாக இல்லாமல் இருக்க காரணம் அது அசையும் படங்களாக இல்லை என்பதுதான்.ஸ்மர்ப்,சுட்டி பயில்வான்,லியர்னர்டோ இவைஅனைத்துமே அசையும் படங்களாக இருந்து திறமையான கார்டூன் உருவாக்கங்களாக இருந்தால் மெய்மறந்து இரசிக்க முடியும்.வெறும் ஓவியங்களில் கதை படிக்கும் போது கற்பனை ஆற்றலில் உள்ள குறைபாடே இது வரவேற்பு பெற தவறியதன் காரணமாக இருக்கும்.
ReplyDeleteசார் அட்டைபடம் அருமை...தலையுதிர் காலம் போல தெரிதே...ஆஹா அப்ப பார்சல் இரண்டாம் தேதியே..சூப்பர்...புது வரவுகள் தொடரட்டும்...ஸ்மர்ஃப்ஸ் நாலு காலனை விட அட்டகாசம்..ஏற்கனவே குறைவுதான்...ஜேசன் போல கதைகள் அகப்பட்டால் கண்ணுல காட்டுங்க... ஏற்கனவே கோடிட்டு காட்டிய கதைகள தொடருங்க....சூப்பர் 12ம் ,கிரா 12ம் அடுத்த வருட அட்டவணையில் இருந்தா ஹேப்பி அண்ணாச்சி....
ReplyDeleteமாத்தியோசி-161
ReplyDeleteஹலோ மாயாவி சாா்!
Deleteவணக்கம்!!
Present Sir
ReplyDeleteஸ்மர்ஃப் ஒரு இடம் ரின்டின்கேன் ஒரு இடம் இருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். ஏதேனும் ஒன்றை குறைத்தே ஆகவேண்டுமெனில் சந்தா C யில் வராமல் சந்தா A or B யில் வரும் மாடஸ்டி கார்ட்டூன்களை குறைக்கலாம்.! :-)
ReplyDeleteகார்டூன்களோடு ஃபில்லர் பேஜ்களை ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்.
Delete////மாடஸ்டி கார்ட்டூன்களை குறைக்கலாம்.!////
Deleteஐயோ ஐயோ!!!
😂😂😂😂
// ஏதேனும் ஒன்றை குறைத்தே ஆகவேண்டுமெனில் சந்தா C யில் வராமல் சந்தா A or B யில் வரும் மாடஸ்டி கார்ட்டூன்களை குறைக்கலாம்.! :-)//
Deleteஹா,ஹா,ஹா,செம பஞ்ச்.
// கார்டூன்களோடு ஃபில்லர் பேஜ்களை ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர். //
Deleteஹி,ஹி,ஹி.
சந்தா எ - ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே வேண்டும். அல்லது டைலன் டாக், தோர்கல், இவருக்கு மாற்றாக இன்னும் அதிக இடம் கொடுக்கலாம்.
ReplyDeleteசந்தா B: வழக்கம் போல டெக்ஸ் வில்லர் தனி பாதை வந்து கொண்டே இருக்கட்டும். இந்த வருஷத்திற்கு தி லயன் 250 இல் வந்தது போல 3 அல்லது 4 கலர் கதைகள் இணைத்து ஒரு குண்டு புக்.
கதை தேர்வு இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும்
1 டெக்ஸ் வில்லரின் தனி கதை
2 ஒரு விட்டலாச்சாரியா பாணி கதை
3 டெக்ஸ் வில்லரின் அணைத்து நண்பர்களும் இணைந்த சாகசம்
சந்தா சி - இது வரை ஸ்மர்ஃப்ஸ் ஒரு இதழ் கூட படித்தது இல்லை. ரின்டின்கேன் அந்த இடத்தில போட்டால் நன்றாக இருக்கும்
சந்தா டி - நான் முத்து காமிக்சோடு வளர்ந்தவன். எத்தனையோ மும்மூர்த்தி கதைகள் தொலைந்து போய் விட்டன. அதனால் இப்பொழுது கலெக்ட் செய்து வருகிறேன். இருந்தாலும் ஜானி நீரோ போதும். போர் அடிக்கிறது. அவர் இடத்தில அதிகமாக மாயாவியை இறக்கவும். மாயாவி அந்த காலத்து கதை என்பது நம்ப முடியவில்லை. இப்பொழுது படிக்கும் புது ஜெனெரேஷனும் ரசிப்பார்கள்.
டைலன் டாக் அட்டை அள்ளுகிறது
இப்பொழுது இந்த வாரம் படித்த கதைகள்
ஓல்ட்:
மரணத்தின் முகம் - ஜெஸ் லாங் சாகசம். காணாமல் போகும் சிறுவர்களை கண்டு பிடிக்கும் சாகசம் - சுமார்
கூடவே விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசம் - நன்று
புதுசு:
மின்னும் மரணம் - இதை புதுசு என்று சொல்ல முடியாது தான். ஆனால் இவ்வளவு பெரிய தலையணை புத்தகத்தை அதுவும் கலரில் படிப்பது ஒரு அலாதியான உணர்வு கொடுக்கிறது. அதுவும் எனக்கு கதை சுத்தமாக மறந்து போனதால் புது கதை போல் ரசித்து படிக்கிறேன். இதுவரை செம விறுவிறுப்பு. இதை ஒரு டிவி சீரீஸ் ஆக எடுத்தால் பட்டையை கிளப்பும்
///சந்தா B: வழக்கம் போல டெக்ஸ் வில்லர் தனி பாதை வந்து கொண்டே இருக்கட்டும். இந்த வருஷத்திற்கு தி லயன் 250 இல் வந்தது போல 3 அல்லது 4 கலர் கதைகள் இணைத்து ஒரு குண்டு புக்.
Deleteகதை தேர்வு இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும்
1 டெக்ஸ் வில்லரின் தனி கதை
2 ஒரு விட்டலாச்சாரியா பாணி கதை
3 டெக்ஸ் வில்லரின் அணைத்து நண்பர்களும் இணைந்த சாகசம்///---+1000
டெக்ஸ் குண்டு புக்!!
Delete+1111111
+1111111
Delete////சந்தா சி - இது வரை ஸ்மர்ஃப்ஸ் ஒரு இதழ் கூட படித்தது இல்லை////
Deleteபடிச்சுப் பாத்துட்டு கருத்து சொல்லலாமே சாா்???
ஸ்மர்ஃப்ஸ் குழந்தைகளுக்கானது என்ற ஒரு எண்ணம். அது மட்டும் இல்லாமல் நான் ஸ்மர்ஃப்ஸ் இரண்டு படம் பார்த்து இருக்கிறேன். ரொம்பவும் குழந்தைத்தனமாக உள்ளது.
Deleteprabhu_A&B&D +++++++++++++++++++ C ----
ReplyDeleteஅடியேன் எதை போட்டாலும் வாங்குவோர் சங்கம்
ReplyDeleteO Super!!
Deleteஅடியேனும் எதைப் போட்டாலும் வாங்குவோர் சங்க உறுப்பினர் தான்.ஜெய் காமிக்ஸ்.
Deleteஎனக்கு முதல் பகுதி 1-ந்தேதியே அனுப்பப்படட்டும். இரத்தக் கோட்டையினை பின்னர் அனுப்பலாம். காமிக்ஸ் படிக்காமல் ரொம்ப நாட்கள் வீனாகிவிட்டது.
ReplyDeleteஈரோடு புத்தக திருவிழாவிற்கு என்னை அன்புடன் அழைத்த சகோதரர்களிடம் வர இயலாமைக்கு மன்னிப்பை வேண்டிக் கொள்கிறேன். ஆகஸ்ட் 4 அன்று சென்னை உயர்நீதி மன்றம் செல்லவேண்டிய சூழ்நிலை.
ReplyDeleteவழக்கறிஞரிடம் எவ்வளவு எடுத்துக்கூறியும் கட்டாயம் போய்த்தானாக வேண்டும் என்று கூறியபின் இதற்கு மேல் வாக்குவாதம் செய்வதில் அர்த்தமில்லை என விட்டுவிட்டேன். என்னை விழாவிற்கு தொலைபேசியில் அன்புடன் அழைத்த அன்பு சகோதரரிடம் என்னால் இயல்பாக பேசக்கூட முடியவில்லை. ஏனெனில் அவரின் அழைப்பு வந்தபோது வழக்கறிஞர் வீட்டில் அமர்ந்திருந்தேன். 5 ம் தேதி ஈரோடு பயணத்தை முன்னிட்டு அவரிடம் வேறு சாக்கு சொல்லி சென்னைக்கு 4 ம் தேதி வர இயலாது எனகூறிக் கொண்டிருந்த சமயம் தொலைபேசி அழைப்பு.வாழ்க்கையில் முதல்முறை அவரிடம் பேசுகிறேன். ஆனால் அதனைக்கூட இயல்பாக பேச முடியாமல் கண்ணும், மனமும் கலங்க வாயில் வார்த்தை வராமல் பேசவேண்டியதாகிவிட்டது.
இத்தனை அன்பான அழைப்புக்கு மரியாதை அளிக்கத்தெரியாத தலைக்கனம் பிடித்த மனிதனல்ல நான். என்னுடைய சங்கடத்தை அன்பு சகோதரர் புரிந்து கொண்டு எப்போதும் போல் என்னிடம் அன்பாக இருப்பார் என நம்புகிறேன். ஈரோடு விழாவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரத்தக்கோட்டைக்கு ₹ 500 மட்டுமே செலுத்தியிருந்தேன்.இப்போது அந்த பயணம் கேள்விக்குறியாகிவிட்டதால் வீட்டிலேயே பெற்றுக் கொள்ள மறுபடி கூரியர் செலவையும் செலுத்தியுள்ளேன்.
4 ம் தேதி
முற்பகல் என்னுடைய வேலை முடிந்துவிட்டால் கூட அங்கிருந்து நேரே ஈரோடு பயணம்தான்.ஆனால் மாலைவரை வேலை இழுத்துவிட்டால் வருவது சந்தேகம்தான்.
புத்தக திருவிழாவும், தோழர்கள் சந்திப்பும் இனிமையாக அமைய என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
எவனோ எதையோ செய்துவிட்டு போகிறான். எனக்கென்ன என்றிருந்திருந்தால் இன்று எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு தவறை தட்டிக்கேட்டதே தவறு என என்னைச் சேர்ந்தவர்களே என்னை இன்றும் குறைகூறி வருவதால் என்மீதே எனக்கு கோபம் அதிகமாகி வருகிறது. அது சற்றே தணிந்தபின் நமது blog பக்கம் வருவேன்.அதுவரை ஒரு சிறிய இடைவெளி.என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட தோழர்களுக்கு நன்றி. வணக்கம்.
மின்னும் மரணம் இந்த வாரம் பத்து புத்தகங்கள் மேல் விற்பனை செய்துள்ளார்கள்..ஆகவே குண்டு புத்தகங்கள் நிச்சயம் விற்பதால் ஒரே இரத்தப்படலம்...
ReplyDeleteஎல வந்துட்டல....
ReplyDeleteபரணி சகோதரரிடம் ஸ்டீலை இன்னும் காணமே சொல்லாமனு நினைத்து உடனே வந்து விட்டார் ஸ்டீல் சகோதரர்
ReplyDelete300-ஆவது இதழை இப்போதுதான் படித்து முடித்தேன். மாடஸ்தியின் கதை மட்டும்தான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது. இது இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அந்த விஷயத்தில் அது ஏமாற்றாமல் அப்படியே அமைந்துவிட்டது (ரொம்ப தேங்க்ஸ் ஸார்!). டெக்ஸ்சின் கதை அபாரமாக இருக்குமென்று எதிர்பார்த்தேன், சொதப்பிவிட்டது. ஜூலியாவின் கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். கதையின் முக்கால்பாகம் விறுவிறுப்பாக இருந்தும், கடைசி கால்பாக கதையும், முடிவும் ஒரு சமூக நாவல் போல அமைந்துவிட்டது. சி.ஐ.டி ராபினின் கதை சுமாராக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அந்த கதைதான் சூப்பராக இருந்தது. LADY S-ஐ இனிமேல் தான் படிக்க போகிறேன்.
ReplyDelete######======#######
ReplyDeleteDear Editor
- Please give atleast one slot for Rin-Tin-Can such a different story line with dog as hero.
- Please send August books in a SINGLE box on 5th August
இந்த ஆண்டு கோவையில் விற்பனை நிலவரம் என்ன? எந்த எந்த கதைகள் அதிகம் விற்பனை ஆயின?
ReplyDeleteசா்ப்ரைஸ் விசிட் என்பது எல்லா துறைகளிலுமே உண்டு!!
ReplyDeleteதிடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி, சா்ப்ரைஸ் விசிட் அடிக்கும்போதும் அந்த அமைப்பானது ஒழுங்காகவும், நோ்த்தியோடும் செயல்படும் என்றால் அது உண்மையிலேயே அது சிறந்த அமைப்பு தான்!!
ஒரு கம்பெனியோ, ஒரு அமைப்போ அல்லது எந்தவொரு துறையோ தொடா்ந்து நோ்த்தியோடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் எந்தவொரு சா்ப்ரைஸ் விசிட்டுக்கும் கவலைப் பட வேண்டியதில்லை!!
உதாரணமாக நாம் பள்ளியில் படிக்கும் போது வாத்தியாா் வகுப்பரையில் இருந்தால் அமைதியாக இருப்பதும், அவா் போன பிறகு காட்டுக் கூச்சல் போடுவதும் உலகப் பொது தானே!!
குறிப்பிட்ட அமைப்பு எந்த அளவிற்கு நோ்த்தியோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும் என்பது சரியோ, அதுபோல ஒருபோதும் அந்த விசிட்டிங் அதிகாாி நோ்த்தியோடும், ஒழுக்கதோடும், ஒரு Unique ஆகவும் செயல்படக் கூடாது என்பதும் சாியே?
அவாிடம் ஒரு ஒழுங்கு இருந்தால், இந்த நேரத்தில் இதைத்தான் செய்வாா் என்பது முன்னமே தொிந்துவிட்டால், சா்ப்ரைஸாக கண்காணிக்கும் பொறுப்பெல்லாம் அவருக்கு ஒத்துவராது!!
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்ற பெருந்தகையின் கூற்றுக்கிணங்க,
எங்கள் பகுதியில் ஒரு பழமொழி உண்டு.
வேலை செய்றவனுக்கு வேலை கொடு; வெட்டி பயலுக்குப் பொறுப்பைக் கொடு! என்பாா்கள்.
வெட்டிப் பயலுக்குத் தான் எல்லா தில்லாலங்கிடி வேலைகளும் தொியும்!!
அவா்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் வேலை எந்தப் பிரச்சனையும் இல்லாமல்
வேலை முடியும்!!
நோ்த்தியான, ஒழுக்கமான, ஒருவருக்கு பொறுப்பைக் கொடுத்தால், அதுவும் தில்லாலங்கிடிப் பயலுகளை மேய்க்கும் பொறுப்பைக் கொடுத்தால், அவரை கோமாளி, கோணாங்கியாகவே மாற்றிவிடும் இந்த உலகம்!!!
இனி கதைக்கு வருவோம் !!
தன்னைத்தான் இந்த கிரகத்தின் பிரதிநிதி என்றும், பாதுகாவலன் என்றும், பெரும் செல்வ சீமான் என்றும், தனது தேசத்தின் நிா்வாக அமைப்பே உலகம் போற்றும் உன்னத அமைப்பு என்றும் ஒரு நாடு எண்ணிக் கொண்டிருந்ததாம்!!
அந்த தேசத்தில் தவறு செய்தவா்களை தப்பிக்கவே முடியாது எனும்படியான சிறை அமைப்பு இருந்ததாம்!!
அந்த சிறையை கவனிக்க, மேற்பாா்வையிட ஒரு கண்ணியமான சிறைத்துறை அதிகாாி இருந்தாராம்!!
அவா் மாதம் தவறாமல் மாதத்தின் முதல் திங்கட்கிழமை சா்ப்ரைஸ் விசிட் அடிப்பாராம்!!
சா்ப்ரைஸ் விசிட்டை யாராவது ஒரே நாளில் செய்வாா்களா??
இதுபோல உலகின் உன்னதமான நாடு என்று சொல்லிக்கொள்ளும் அந்த நாட்டில் ஒரு சிறைச்சாலையில் நடந்த கோக்குமாக்கு கோமாளித்தனங்களை ஒரு கோமாளி நாயை கதாநாயகனாக வைத்து கதாசிாியா் தனக்கே உாிய நையாண்டியோடு சொல்லியிருக்கும் கதை தான் "தடைபல தகா்த்தெழு"
கதைக்களம் என்னவோ அந்த ஒரு தேசத்தைக் களமாகக் கொண்டு பகடி செய்வதாக இருந்தாலும், அது உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய கதையாகவே உள்ளது!!
நான் இதுவரை சொன்னதெல்லாம் கதையின் முதல் பக்கத்தில் நான் உணா்ந்த விசயங்கள் தாம்!
முதல்பக்கத்தைப் படித்தபோதே சிாிப்பை அடக்க முடியாமல், முற்றிலுமாக அனுபவித்துச் சி்ாித்து முடித்தான பிறகு, அரைமணி நேரம் கழித்தே தொடா்ந்து படிக்கலானேன்!!
ஜேசன் பிரைஸ் , போன்ற genre நிச்சயம் தேவை தான் . ஆனால் அவர் இல்லையென்றாலும் , மர்ம மனிதன் மார்ட்டின் அல்லது டயலன் டாக் , ரெடியாக உள்ளனர் , அந்த இடத்தை நிரப்ப. So ஒரு புது வரவு , any genre ஓகே என்று நினைக்கிறேன். விக்ரம் -வேதா,மாநகரம் படத்தை ரசிக்கக்கூடிய நாம் கொஞ்சம் சந்தா - A வில் ஒரு புது விதமான, வித்தியாசமான story-telling -ஐ try செய்யலாமே..
ReplyDeleteFrankly , இது வரை நான் Smurfs/ரின்-டின் -கேன் , முதல் கதையை தாண்டி படித்ததில்லை. ஏனோ, பென்னி, காமெடி கர்னல் அளவிற்கு மனதை தொடவில்லை.I would vote for kammi-fying தி ப்ரிண்ட்ஸ்.
சந்தா - D , Same as கார்ட்டூன் series. ஒரு வாட்டி படிக்கலாம்.இன்றும் பழைய முத்து ஒகே, ஆனால் ஸ்பைடர், ஆர்ச்சி கதைகள் எல்லாம் முடியலை சார்!!!
ஸ்மார்ப், ரின்டின்கேன் இரண்டும் சுத்த வேஸ்ட் அதற்கு பதில் வேற கதை வெளியிடலாம் சார்
ReplyDelete+1111
Delete"தல" டெக்ஸ் 70ஆணடு முன்னிட்டு ரூ.1000/= விலையில் மெகா சைசில் வெளியிடவும்.....
ReplyDeleteசந்தா ஏ வில் புதிய கெளபாய் நாயகரை களம்காண வேணும்....
+9500828550
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஜான் சில்வர் @ ஆகாய கல்லறை சுமாரான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது, இந்த புத்தகம் வரும் நாட்களை எண்ணியது என்னமோ உண்மை.
இதில் வந்த இரண்டாம் கதையை இன்னும் படிக்கவில்லை, அது ஏனோ படிக்கும் ஆர்வத்தை இந்த கதையோ அல்லது சித்திரமோ எனக்கு ஏற்படுத்தவில்லை.
கடந்த வருடம் நமது காமிகஸில் வந்த இவரது கதைக்கு நண்பர் ஒருவர் சொன்ன விலை ஆயிரம். உங்களின் புண்ணியத்தில் இதனை வாசிக்க முடிந்தது. கோடி நன்றிகள்.
அடுத்த வருடம் இவருக்கு வாய்ப்புகள் தேவையில்லை.
சிறையில் ஒரு சிட்டுக்குருவி - வழக்கம் போல ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு இளவரசி உதவும் கதை. இளவரசியின் நெட்வொர்க் மற்றும் கார்வின உதவியுடன் வில்லனை வெற்றி பெறுவதை விறுவிறுப்பாக சொன்ன விதம் கதையின் வெற்றியை உறுதிபடுத்திவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு இளவரசியின் காங்கோ வீச்சை ரசிக்க செய்தது.
ReplyDeleteஇந்த மாத பெண் புலிகள் வரிசையில் இளவரசிக்கு இரண்டாம் இடம். ஜூலியாவை இன்னும் படிக்கவில்லை, அதன் பிறகு இந்த வரிசை மாறினாலும் மாறலாம் :-).
அடுத்த வருடம் இளவரசி கதையுடன், இளவரசியின் சிறுவயது கதையை மறுபதிப்பு கதையையும் இணைத்து இரண்டு கதைகளாக எங்களுக்கு கொடுக்க வேண்டுகிறேன்.
ப்ளூ கோட் எனக்கு மிகவும் பிடித்த கதை தொடர். கிட் & டாக் புல் ஒரு கவுண்டமணி செந்தில் ஜோடி என்றால் இவர்கள் அடிக்கும் லூட்டிகளையும் இந்த வரிசையில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம். இவர்களின் கதை ராணுவ அரசியலை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவையுடன் வருது சிறப்பு.
ReplyDeleteஇவர்கள் தொடரவேண்டும். ஆவண செய்யுங்கள்.
ஆம்.கண்டிப்பாகத் தொடர வேண்டும்.
Deleteஇன்று ஆசிரியரைக் காணாமே?
ReplyDeletesaravanan : "டாக்டர் SMURF " கூட இன்றைய பகல் பொழுது ஓடி விட்டது மாத்திரமன்றி - 2018 அட்டவணையினை உங்களின் இன்றைய கருத்துக்களுக்கேற்ப லேசாய் tweak செய்ய முடிகிறதா என்று பார்க்க வேண்டி மறுபடியும் டீ கிளாஸை முறைக்கும் செந்தில் அவதாருக்குள் புகுந்திட வேண்டிப் போனது !
Deleteவிஜயன் சார், அடுத்த வருடம் முதல் காமெடி சந்தா தேவையானவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையில் எதற்காக ஸ்மர்ப்ருடத்திற்கு மற்றும் ரின் டின் விவாதம், இது தேவையில்லாதது. காமெடி கதை ரசிகர்கள் அனைவரும் தற்போது வரும் கதைகள் அனைத்தும் அடுத்த வருடமும் தேவை.
ReplyDeleteகாமெடி கதையை ரசிக்க முடியாதவர்கள் இந்த வருடம் சில கதைகள் பிடிக்கவில்லை அடுத்த வருடம் இன்னும் சில கதைகள் பிடிக்கவில்லை என்பார்கள் இப்படியே போனால் சில வருடங்கள் கழித்து காமெடி கதைகளே எங்களுக்கும் வளரும் தலைமுறைக்கும் காமெடி கதைகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் எனக்கு வருகிறது.
காமெடி கதைகள் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும், முடிவு உங்கள் கையில்.