நண்பர்களே,
வணக்கம். ரயிலில் ஜன்னலோரமாய் சீட் கிடைத்து, மண்டையில் கேசமென ஒண்ணு இருக்கும் பட்சத்தினில் அதனைப் பரபரவென வருடிப் போகும் குளிர் காற்றை ரசித்த கையோடு, வெளியே பார்வைகளை நீள விட்டால், சின்னச் சின்ன ஊர்கள், ரயில் நிலையங்கள், அழகான வயல்வெளிகள், மலை முகடுகள் என காட்சிகள் மின்னலாய் மாறிக் கொண்டே போவதை காணலாம் ! அதே நிலவரமே - நமது பொம்ம புக் பயணத்திலும் !! வருஷத்தின் முதல் மாசம், முத்து ஆண்டுமலர், சென்னைப் புத்தகவிழா ஸ்பெஷல்ஸ் என ஆரம்பிக்கும் வண்டி, கோடை மலர், குடை பிடிக்கும் மலர், ஆன்லைன் மேளா, ஆப்பக்கடை பாயா, ஈரோடு ஸ்பெஷல், சேலம் ஸ்பெஷல் இத்யாதி..இத்யாதி என ஜாக்கி சான் படங்களின் விறுவிறுப்போடு ஓடிக் கொண்டே இருப்பது வாடிக்கை ! And இதோ - போன வாரம் அட்டவணை 2026 ரகளைகளின் சூடு ஆறும் முன்பாய், அடுத்த மைல்கல் : இந்தாண்டின் தீபாவளி ஸ்பெஷல்ஸ் ரூபத்தினில் !!
நேற்று மதியமே டெக்சின் தெறிக்கும் தீபாவளி மலர் '25 + நம்ம V காமிக்ஸ் தீபாவளி மலர்ஸ் + 2026 அட்டவணை கொண்ட கூரியர்கள் கிளம்பியாச்சு ! So இன்று காலை முதலாய் உங்கள் இல்லக்கதவுகளை டெலிவரி நண்பர்களும், உள்ளக்கதவுகளை போனெல்லியின் நண்பர்களும் தட்டத் தயாராகி வருவார்கள் ! கலரில் 'தல' விடும் வாணவேடிக்கைகள் எங்க ஊரின் aerial shots -க்கு செம tough தரும் ரகமெனில், black & white-ல் ஏஜென்ட் ராபின் வைத்திருக்கும் லக்ஷ்மி வெடி +அணுகுண்டு combo இன்னொரு blockbuster !! கலரில் 336 பக்கங்கள் + b&w-ல் 292 பக்கங்கள் எனும் போது, மெய்யான entertainment இங்கே வெயிட்டிங் !! Happy reading amigos !!
இங்கே சின்னதாயொரு இக்கன்னா இல்லாதில்லை !! ராபினின் 2 புக்ஸ் (ஒண்ணு 98 பக்கங்கள் ; இன்னொண்ணு 192 பக்கங்கள்) ஒரு slipcase-ல் வந்திடுவதாகவே திட்டம். Slipcase மட்டும், புக்ஸ் ரெடியான பின்னே, அவற்றின் இணைந்த பருமனை சரியாகப் பார்த்தான பின்னேயே அளவெடுத்துச் செய்திட வேண்டிய சமாச்சாரம். So போன வாரத்தினில் ராபினின் 2 இதழ்களும் ரெடியான பிற்பாடு, slipcase அளவுகள் சரி பார்த்து, பிரிண்ட் செய்தும் விட்டோம். அதன் அடுத்த கட்டப் பணி - டப்பாக்கள் செய்து தருவோரிடம் ஒப்படைத்து, சரியான சைசில் முதுகுக்கு, தலப்புக்கு, வாய் பகுதிக்கு பன்ச் செய்து, அப்புறமாய் ஒட்டி, slipcase ஆக்குவது ! அங்கே தான் ஏழரை ஆகிப்போச்சு ! ஊரே தீபாவளிப் பட்டாசு டப்பாக்களின் தயாரிப்பில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருப்பதால், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தும், நம்ம slipcase-ஐ வேலைக்கே எடுக்கத் தீரலை அவர்களுக்கு ! Fireworks நிறுவனங்கள் ஆளாளுக்கு ஒரு லட்சம் டப்பிகள், ரெண்டு லட்சம் என ஆர்டர் கொடுத்து விட்டு அங்கேயே தேவுடு காத்து வர, நாம ஒரு ஓரமாய் நின்னபடிக்கே, "அண்ணே....அந்த ஆயிரத்துச்சொச்சம் slipcase" என்று ஈனஸ்வரத்தில் கேட்கும் போது நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேன்கிறார்கள் ! ஒரு மாதிரியாய் கெஞ்சிக் கூத்தாடியான பிற்பாடு, நாளை காலையில் (சனிக்கிழமை) எப்படியேனும் தந்துடறதாய் promise செய்துள்ளனர் ! So அதுவரைக்கும் காத்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்றபடிக்கே slipcase மட்டும் இல்லாது, புக்ஸை நேற்றைக்கு டெஸ்பாட்ச் செய்துள்ளோம் ! Ever so sorry all !!! 🙏🙏🙏விடுபட்டுள்ள ஸ்லிப்கேஸ்களை நவம்பரின் பார்சலில், மிஸ்டர் நோ இதழினை உள்வைத்து அனுப்பிடுகிறோம் folks - ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ் !!
So சின்னதான இந்த திருஷ்டி நீங்கலாய், டப்பிக்குள் காத்திருப்பன அனைத்துமே - அக்மார்க் டைனமைட் என்பேன் !! இந்த தீபாவளியினை போனெல்லியின் பிள்ளைகள் எவ்விதம் colorful ஆக்குகிறார்கள் என்பதை உங்களிடமிருந்து அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருப்போம் !!
And ஸ்க்ரீனில் மட்டுமே நீங்கள் பார்த்திருந்த 2026 அட்டவணை ஒரு 32 பக்க விலையில்லா இணைப்பாய் கையில் ஏந்திப் பார்க்கும் போது இன்னமுமே வீரியமாய் தென்படாது போனால் வியப்படைவேன் ! Looks real neat folks !! அவற்றை நிதானமாய்ப் புரட்டிய கையோடு, 2026-க்கான பயணத்துக்கு உங்களின் சந்தாக்கள் எனும் டிக்கெட்களை துரிதமாகப் போட்டு விடலாமே - ப்ளீஸ் ? Bye all....see you around ! Enjoy the weekend !!
பி.கு. : போன வாரம் எழுதிய பதிவைக் கொண்டே துபாய் வரைக்கும் போகலாம் & இந்த வாரம் உங்கள் கைகளில் சுடச் சுட தீபாவளி மலர்களும் இருக்கும் என்பதால் tomorrow பதிவுக்கடைக்கு லீவு !! "சாம்பலின் சங்கீதம்" கிட்டத்தட்ட பாதியைத் தொடும் தருவாயில் இருப்பதால், ஒரு flow-ல் மீதத்தையும் முடித்திடப் பார்க்கணும் !! So 2 தீபாவளி மலர்களையும் புரட்டிய கையோடு உங்களின் selfies + முதல் அபிப்பிராயங்களை இங்கே பகிர்ந்திடுகிறீர்களா - ப்ளீஸ் ? Blog கொஞ்சம் ஆக்ட்டிவ் ஆக இருந்தது போலிருக்கும் அல்லவா ?
And ஆன்லைன் லிஸ்டிங்ஸ் கூட போட்டாச்சு !! துவக்க 50 ஆர்டர்களுக்கு மட்டும் அனுப்பிட கலரில் 2026-ன் அட்டவணை கையிருப்பு இருக்கும் என்று நினைக்கிறேன் ! So நீங்கள் ஆன்லைனில் வாங்கிடுவோராய் இருந்தால் - please rush !!
Hai
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் மற்றும் நண்பர்களே....
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteHi..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteHi
ReplyDeleteபத்துக்குள்ளயா
ReplyDeleteOh yes
DeleteYes
Deleteஆஹா இன்னொரு லட்டு
ReplyDeleteபத்துக்குள்ள...
ReplyDeleteஅப்போ.. இன்னிக்கித்தான் தீபாவளிங்களா?!!😍😍😍
ReplyDeleteMe 11
ReplyDeleteவந்துட்டேன். Ever so happy to hear read this புத்தகம் கிளம்பி விட்டது பதிவு.
ReplyDeleteஅந்த 300ரூவா வேல்யூக்கு ஒரே ஒரு "டெக்ஸ் வில்லர்"-- புக், பிரத்யேகமாக சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிச்சிருந்தா வரவேற்பு வேறு மாதிரி இருக்கும்... அந்த புக் கடைகளுக்கோ, ஆன்லைன் விற்பனைக்கோ கிடைக்க கூடாது.. ஒன்லி ஃபார் சந்தா2026 னு இருந்து இருந்தா யோசித்து பாருங்க....
ReplyDelete300ரூவாக்கு 2020க்கு முன்பு வெளி வந்த புத்தகங்களை வாங்கி கொள்ளலாம்னு எவர் ஐடியா கொடுத்தது னு தெரியல...🤣🤣🤣🤣🤣🤣
கடவுளே, சந்தாரார்கள்கிட்ட 2012ல இருந்து வந்த புக்ஸ் அனைத்தும் இருக்கும் என்பதை எப்படி மறந்தார்களோ🤭🤭🤭🤭🤭
200ரூவா விலையில் ஒரு டெக்ஸ்&100ரூவா விலையில் ஓரு மாடஸ்தி
ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் சந்தா னா ஒரு 20% சந்தா கூடுவது திண்ணம்.. 80% சந்தாதாரர்கள் அகமகிழ்வர்.
ஆனா 300ரூவாகு்கு தண்ட வுவுச்சர் ,வழக்கொழிந்து போன வேரியன்ட் கவர், புளித்து போன போட்டோ போட்டு தருவது.... எல்லாமே போன நூற்றாண்டு சிந்தனைகள்
Good idea
DeleteGood idea alright... but from whose perspective sir?
Deleteசந்தாவில் இணைய வசதிப்படாதோரைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இல்லாதிருக்கலாம்... But நான்?
எடிட்டர் பார்வைக்கு மேலுள்ள சில கனவுலக கமெண்டுகள்.
ReplyDeleteடாங்க்ஸ் சார் 👍
Deleteசந்தா செலுத்த ஆற்றல் குறைந்தோரையும், எஜெண்ட்களிடமும், ஆன்லைனிலும் வாங்கிடுவோரையும் எண்ணிப் பார்த்தேன் நண்பரே....
Deleteஅவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, சந்தாக்களில் நாம் கல்லா கட்டுவதைக் காட்டிலும், சிலபல "இத்துப் போன "perks போதுமென்று தோன்றியது!
@ஆசிரியர்
Deleteஉங்களுடைய கண்ணோட்டம் தான் சரியானதுங்க சார். அதேபோல் சந்தாவினையும் ஊக்கப்படுத்த நெருடல் இல்லாத ஏதாவது ஒரு வகையை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
///சந்தா செலுத்த ஆற்றல் குறைந்தோரையும், எஜெண்ட்களிடமும், ஆன்லைனிலும் வாங்கிடுவோரையும் எண்ணிப் பார்த்தேன் நண்பரே....
Deleteஅவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, சந்தாக்களில் நாம் கல்லா கட்டுவதைக் காட்டிலும், சிலபல "இத்துப் போன "perks போதுமென்று தோன்றியது!/////
Lion comics@ இத்தனை சிந்தித்த நீங்கள் சந்தாதாரர்கள் யார்னு ஏன் சிந்திக்கல...??? அவர்கள் தான் காமிக் தேரை நகர்த்தும் உந்து சக்திங்கிறீங்க மூச்சுக்கு மூச்சு.... அப்ப அவுங்களை உரிய முறையில் அங்கீகரிப்பது தானே முறை....
சந்தாதாரர் யாருங்க முந்தா நாள் வந்தவனா? ஆஃப் ட்ராயர் போட்டுகிட்டு விஜயன் ங்கிற பெயருக்கு பின்னாடி உள்ளவரு கறுப்பா சிவப்பா? நெட்டையா குட்டையா? னு எதுவும் தெரியாத காலத்தில் இருந்து சந்தா கட்டுறவன்...
கம்பேக்குக்கு பிறகு தம் நிறுவனம் போல நினைத்து சந்தாகட்டி வர்றவன்...
95% பேர் இப்படி தான்.. இவன்கிட்ட 2020க்கு முன்னாடி வந்த புக் இராதா?? இதை போய் தாங்கள் தரும் வவுச்சருக்கு வாங்குவனா??? ஏதாவது பிரயோசணம் உண்டா??
இதற்கு வழக்கம்போல ஒண்ணும் இல்லைனு சொல்லி இருந்தாலும் இவன் சந்தாகட்ட போவதை நிறுத்தபோவதில்லை..
நண்பர் AKK எத்தனை அழுத்தமாக பதிவிட்டார்.. சந்தாதாரர்கள் க்கு எக்ஸ்குளூசிவாக ஏதாவது ஓரு புக் கொடுங்கனு...
ஒண்ணா கொடுத்தா 1980கள்ல இருந்து உங்ககூட கையைபிடிச்சி வர்றவங்களை கொஞ்சம் மாவது மதிச்சி கொடுங்க...
//300ரூவாயை கூட விடுங்க...ஒரு புக் ஒரேஒரு புக் டெக்ஸ் சிங்கிள் ஆல்பம்+ லயனின் முதல் நாயகி மாடஸ்தியோட ஒரு கதை...கொடுத்தா போதும்.. ஆனா இது வேறு எங்கும் எப்போதும் கிடைக்க கூடாது... அதான் சந்தாவுக்கு உண்டான அடையாளம்....//!
//இல்லையா அந்த வவுச்சருக்கு 2026ன் புக் ஃபேர் ஸபெசல்ல எதை வேணும்னாலும் வாங்கிகிடலாம்//-- னு வையுங்க.
இந்த மாதிரி 2020க்கு முன்னாடி வந்த பெளன்சர், தோர்கல், பிபிவி ,இத்தியாதியில இருந்து வாங்குங்கனு சொல்லி டவுசருக்குள்ள ஜட்டி போடாத காலத்தில் இருந்து உங்க கூட வர்றவங்களை சங்கடபடுத்தாதீங்க..🙏
சந்தாவில இன்ன இன்ன புக் போடுவதில் தலையிட்டமா ???! இல்லையே அது எடிட்டர் ஆக எது எதுனு முடிவெடுக்கும் திறமை உங்களிடம் மாத்திரமே உள்ளது.
போலவே இன்ன விலை ஏன்னு கேட்டோமா என்றாவது?? அது ஓரு பதிப்பாளராக தாங்கள் மட்டுமே நிர்ணயிக்க இயலும்.
கிழியானி ஐயா@ நான் இங்க நேரடியாகவே போட்டுள்ளேன்.. உங்களுக்கு காபி,பேஸ்ட் வேலை மிச்சம்.
நன்றி தலைவரே.
Deleteவரிக்கு வரி, காரத்துக்குக் காரம்னு பதில் சொல்ல முடியாதோ, தெரியாதோ இல்லை! But அந்த வயசயெல்லாம் எப்போதோ தாண்டியாச்சு & பொதுவெளியில் உச்சஸ்தாயிகளை தொடும் ஆர்வங்களும் எப்போதோ காணாது போயாச்சு!
Deleteதவிர,ஒற்றைப் பார்வைக் கோணத்துடன் பொரிந்திடுவோருக்கு எனது தர்மசங்கட நிலை புரிந்திருக்கவில்லை எனில் விளக்க முற்படலாம். ஆனால் நிலவரம் அதுவல்ல எனும் போது, வார்த்தைகளை செலவிட்டு ஆகப் போவது என்ன? அவரவர் எண்ணங்களில் அவரவருக்கு திருப்தி!
இதுவும் கடந்து போகும்!
And இனிப்பான விஷயங்கள் நாலோ, எட்டோ இருந்தாலும், காரமான ஒண்ணை மட்டும் தேடிக் கொண்டு வந்து, அது நம்ம கண்ணிலே பட்டதா - இல்லியா? என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முனைப்பாய் விரும்பும் தொண்டர்களுக்குப் பொழுது போக இது உதவிடுமெனில் why grudge that?
Delete.பஞ்சாயத்து முடிஞ்சி....😜😜😜😜😜
Deleteவழக்கம் போல சந்தாகாரனுக்கு இன்னொரு நாமக்கட்டி பார்சல்🤣🤣🤣🤣🤣
ஒரே குழப்பமா இருக்கு.
சரி, அப்டி எல்லாரும் ஒரே தட்டுலனா எதுக்கு "முத்து 50வது ஆண்டு பாக்ஸ்,மாயாவி போஸ்டர் எல்லாம் "சந்தாதாரர்களுக்கு மட்டும், கடைகள்ல வாங்கறவங்களுக்கு இல்லை" னு சொல்லனும்?.
இதுக்கு ஒரு பெரிய கலவரமே ஆச்சே?, அப்ப ஏழை பாளைங்க யாரும் இல்லாம போய்ட்டாங்ளா?.
சந்தா அல்லாதோர் புக்ஸ் வாங்கி அந்த பாக்ஸ்க்காக பெரிய ஏமாற்றமே உண்டாச்சு.
தொண்டரே....புது புக்ஸ் பார்த்தாச்சா?
Deleteஒரு விஷயம் தான் தீரா கேள்வியாய் உள்ளுக்குள் தொடர்கிறது நண்பரே....!இத்தனை எரிச்சலும், கோபமும் உள்ளுக்குள் குமைந்திடும் அளவுக்கு நான் கெடுத்த உங்களது குடி என்னவோ?
Deleteஇருமல் மருந்தில் ஏதேனும் தப்பான கெமிக்கலை கலந்து வைத்து விட்டேனா? அல்லது உங்க அன்னத்தில் மண்ணள்ளிப் போட்டு விட்டேனா? இல்லாவிடின் எங்கேனும் உங்களோடு எனக்கு பாகப் பிரிவினை தகராறு உண்டா?
எனது தீர்மானங்கள் தப்பானவையாகவே இருந்து விட்டாலும், அவை உங்களை கடுப்பேற்றி இருந்தாலும்,இத்தனை வெறுப்புக்கு அதுவொரு முகாந்திரமா? Honestly புரியவில்லை!
Agreeing to disagree என்பது அத்தனை அசாத்தியமா?
@Shankur Giulini
Deleteதாங்கள் உங்க சொந்த கருத்தை பகிருங்கள், சார்
மற்றவர்களுடையதை இங்கு கொண்டு வந்து போடாதீங்க
என் கருத்தும் அதே. விஜயராகவன் சொல்வது போல, சந்தாவினருக்கு 2020க்கு முன் வந்த புத்தகங்கள் தருவது எந்த விதத்தில் நியாயம்? ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் சொல்ல பலர் இருக்கிறார்கள். வாசகர்களுக்குள் புழுங்குவதை சொல்ல நான் இருந்துவிட்டுப் போகிறேன். இதில் வெறுப்பு எங்கிருக்கிறது? நியாயமாக கேள்வி கேட்டால் இப்படி சொல்வது சரியில்லை ஆசிரியரே. விஜி கேட்பது போல பலரும் கீழே கேட்டிருக்கிறார்கள் கொஞ்சம் அதையும் பாருங்கள்.
Deleteகடல்யாழ்9 நீங்க யாருங்க? இந்த வலைப்பூவின் நாட்டாமையா?
// இத்தனை எரிச்சலும், கோபமும் உள்ளுக்குள் குமைந்திடும் அளவுக்கு நான் கெடுத்த உங்களது குடி என்னவோ? //
Deleteசார் தீபாவளி இதழ்கள் தெறிக்கின்றன,அதிலும் டெக்ஸ் கெட்டி அட்டையில் கெத்து காட்டுகிறார்,என்ஜாய் பண்ண வேண்டிய நேரமிது...
விடுங்க ரம்யா... காரண -காரியங்கள் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள் இத்தனை வெறுப்பு குடி கொண்டிருப்பது யாருக்குமே நல்லதாகாது ! குமைந்திடுவதை கொட்டி விடட்டும்!
DeleteThis comment has been removed by the author.
Delete//என்ஜாய் பண்ண வேண்டிய நேரமிது...//
Deleteசார்... நானா மறுக்கிறேன்?
தாராளமாய் சொல்லுங்கள் நண்பரே ; நல்லதிருந்தால் காதில் போட்டுக் கொள்கிறேன் ; ஏற்பில்லையேல் தாண்டிப் போகிறேன்!
Deleteபல்வேறு பார்வைக் கோணங்கள், இன்றைக்கோ, என்றைக்கோ பயன் தரக்கூடிய விஷயங்கள் தான் எனும் போது always happy to lend an ear...!
சிலநாள்களுக்கு முன் பலநாள் வாசகர் திருநாவுக்கரசு கூறிய அருமையான ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் தாங்கள் "வெறுப்பு" என்றே மடைமாற்றம் செய்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் ஆசிரியரே.
DeleteThis comment has been removed by the author.
Deleteநண்பரே, 58 வயதாகிறது எனக்கு! 41 ஆண்டுகளாகிறது இந்தத் துறைக்கு வந்து! ஆனால் அனுதினமும் எதையேனும் படித்துக்கொண்டு இருப்பதாகத் தான் எண்ணி வருகிறேன்.
Deleteஇதோ- இன்று கூட ஒரு டஜன் ஆண்டுகளின் பரிச்சயத்தினை முன்னூறு ரூபாய் சார்ந்ததொரு பொதுவெளி விவாதத்தில் காற்றில் பறக்க விடுதல் செம சுலபமே என்பதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது. So yet another learning curve என்றே மகிழ்கிறேன்!
ஈகோவுக்கும், தன்னம்பிக்கைக்கும் இடைப்பட்ட கோடு சில தருணங்களில் அரூபமாகிடலாம் நண்பரே! அது தான் பல வேளைகளில், என் விஷயத்தில் பலரையும் நெருடுகிறது என்பது obvious! இத்தனை உறுத்தல்களை ஈட்டுவது தான் பலனாகிறது எனில் - நிச்சயமாய் அடக்கி வாசிக்கிறேன் சார்!
@Shankar Giulini
Deleteசகோதரர் விஜயராகவன் இங்கு பேசாமல் இருந்தது நாங்கள் அறிந்ததே
நாங்கள் அவ்வப்போது டிஸ்கஷன் செய்வது வேறு
அவரது கருத்தை சொல்வதற்கு பதில் நீங்களே உங்க கருத்தை போட்டிருக்கலாமே
அடுத்தது இன்னொரு சகோதரரின் கமெண்ட்ஸ்லகாபி பேஸ்ட்
Shankar Sir
நாங்கள் ஆசிரியரிடம் கேட்க வேண்டுமென்றால் எங்கள் வழியில் கேட்டு கொள்கிறோம்
அவரை காயபடுத்தி கேட்க வேண்டிய அவசியம் இல்லை
சகோதரர் விஜயராகவன் டெக்ஸ் பத்தி பதிவிட்ட நீள கமெண்ட்ஸ்களையும் பகிர்ந்து இருக்கலாமே
ஏன் காலையில் மஹேந்திரன் சகோ
300 வவுச்சரை தான் புத்தக விழாவில் வரும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி தர பயன்படுத்துவதாக சொல்லி இருந்தாரே
அதை பகிர்ந்து இருக்கலாமே
//ஏன் காலையில் மஹேந்திரன் சகோ
Delete300 வவுச்சரை தான் புத்தக விழாவில் வரும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி தர பயன்படுத்துவதாக சொல்லி இருந்தாரே
அதை பகிர்ந்து இருக்கலாமே//
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. 💐💐💐
ReplyDeleteவாய்யா வா❤️
Deleteதீபாவளி இதழ்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteஇந்த புக்ஸ் பார்சல்கள் வருவது தெரிந்தாலே..
ReplyDeleteஹையா தீபாவளி வந்திடுச்சே மனசு துள்ளுது..
Me in Sir💐🙏😘🥰
ReplyDeleteசூப்பர் சார்...ஏக எதிர்பார்ப்பு...ஸ்லிப் கேசை அடுத்த மாதமும்...தாமதமின்றி தந்த எண்ணமும்.....நீங்க வேற லெவல் சார்...வார்த்தைகளில்லை ...இதயத்திலிருந்து அருமை
ReplyDelete23 வது
ReplyDelete@Edi Sir😘💐
ReplyDeleteவேதாளரின் *கபாலர் கழகம்*
இன்னும் வாங்கவில்லை சார் 🙏
சேலம் புத்தக விழாவில் எனக்கு ஒரு பிரதி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 💐🙏😘
"கபால வேட்டை" தல..!
Delete##So 2 தீபாவளி மலர்களையும் புரட்டிய கையோடு உங்களின் selfies + முதல் அபிப்பிராயங்களை இங்கே பகிர்ந்திடுகிறீர்களா - ப்ளீஸ் ? Blog கொஞ்சம் ஆக்ட்டிவ் ஆக இருந்தது போலிருக்கும் அல்லவா ? ##
ReplyDeleteவாய்ப்பில்லை சார் 😄😄😘
இங்க blog ல selfie போடற வாய்ப்பில்லையே சார் 🤔🤔🤔
வாட்சப் கம்யூனிட்டி வர்றதுக்கு முன்பான காலகட்டத்துக்கு சுத்தே rewind பண்ணுங்க தல...
DeleteHi
ReplyDeleteஅப்படியே அந்த 32 பக்க "விழா அழைப்பிதழை" pdf ஆ ஷேர் பண்ணீங்கன்னா அதை உற்றார் உறவினருக்கெல்லாம் அனுப்பிடுவோம்
ReplyDeleteஅது தான் வாட்சப் கம்யூனிட்டியில் ஒரு வாரமாய் உள்ளதே சார்?
Delete28th
ReplyDeleteசார், இதுக்காக மெனக்கெட்டு இந்த ஸ்லிப் கேஸ் அடுத்த மாசம் கொடுக்கறது எல்லாம் வேண்டாம் சார். புத்தகங்கள் தானே சார் முக்கியம். இதுவரையில் நான் ஒரு ஸ்லிப் கேஸை கூட வைத்துக் கொண்டதில்லை .(சும்மா தகவலுக்காக)
ReplyDeleteகொடுமை என்னன்னா ஸ்லிப்கேஸ்களை இப்போது டெலிவரி கொடுத்துள்ளார்கள் சார் 🥹🥹
Deleteபரவாயில்லைங்க சார்
Deleteஅடுத்த மாதம் மிஸ்டர் நோ கூட வாங்கிக்கிறோம்
நானும் ஸ்லீப் கேஸை அடுத்த மாதமே வாங்கிக் கொள்கிறேன்.
Deleteதீபாவளி வெடி இன்னிக்கு தான் கிளம்புதுன்னு நினைச்சிகிட்டு இருந்தபோது,நண்பர் போன் செய்து வெடி நேத்தே கிளம்பிருச்சின்னு சொல்ல,நான் அலுவலகத்தில் இருக்கேன் என்ன செய்யன்னு யோசிக்க,திடீர்னு ஒரு யோசனை, வழக்கமாய் வரும் கூரியர் நண்பருக்கு போன் அடிக்க நான் இங்கேதான் பேங்க் டெலிவரியில் எதிரில் இருக்கேன்னு சொல்ல,தோ உடனே வர்றேன்னு சொல்லி கபால்னு பறந்து,கப்புனு வெடியை கைப்பத்தி கொண்டாந்துட்டேன்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDelete🙇🙇🙇
ReplyDeleteFrom :
ReplyDeleteநண்பர் ரகுராமன், சேலம் :
2026 வருட சந்தா vs புத்தக விழா பர்சேஸ் :
நான், அடுத்த 2026 வருட சந்தா கட்டாமல் சேலம் புத்தக விழாவில் அந்த வருடம் அதுவரையில் வந்த புத்தகங்களை மொத்தமாக
சதவீத தள்ளுபடி விலையில் வாங்கும் போது..
லாப வாய்ப்பு (!!?)
வாய்ப்பு-1:
ஜனவரி முதல் டிசம்பர் வரை வந்த ரெகுலர் புத்தகங்கள் + ஆன்லைன் புத்தக விழா ஸ்பெஷல் வெளியீடுகள் + ஈரோடு,கோவை,சேலம்..போன்ற புத்தக விழா ஸ்பெஷல் + கிளாச்சிக் ஸ்பெஷல் + தனித்தட வெளியீடுகள் என மொத்தமும் ரூ.9999/- (கணிப்பாக)
புத்தக விழாவில் வாங்கும் வாங்கும்போது 10% தள்ளுபடி 1000+ ரூ.440/- = ரூ.1440/-லாபம் (!!?) கிடைக்கும். மனக்கணக்கு + காகித கணக்கீடு போடும் போது இனிப்பாக இருக்கிறது.
(ரூ.440/- என்பது, சந்தா தொகை – 2026 வருட அட்டவணை புத்தகங்களின் மொத்த மதிப்பு = ரூ.440/-)
2026 வருட சந்தா VS புத்தக விழா பர்சேஸ்,
புத்தக விழா பர்சேஸ் என முடிவெடுத்தால் எனக்கு 2026 வருட லாபம் ரூ.1440/-
ஆனால்,
அதற்காக தோராயமாக ரூ.9999/- தொகை, பூதம் புதையல் காத்த மாதிரி 12 மாதங்களும் சேமித்து வைத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஒவ்வொரும் மாதமும் வங்கி கடன்கள் டெபிட் ஆன பிறகு 7 ஆம் தேதியே மாத கடைசி ஆகி விடுகிறது. பஞ்சர் ஆன பாக்கெட்டுடன் மாதத்தின் மீதி நாட்கள் ஓடிவிடும் எனக்கு. இந்த லட்சணத்தில் வருடத்தின் மொத்த புத்தகங்களும் சேலம் புத்தக விழாவில் வாங்கும் எனது திட்டம்.. எனது தலையை பெட்ரோல் ஊற்றி கொள்ளிக் கட்டையால் நானே மசாஜ் செய்தது போல இருக்கும்.
லாபம் = கொள்ளிக் கட்டை
வாய்ப்பு-2:
சரி திருப்பூர் , ஈரோடு,சேலம் என மூன்று புத்தக விழாவில் வாங்கினால் கொஞ்சம் சிரமம் குறையுமே என மும்முனை பயண திட்டம்.
சேலம் TO ஈரோடு புத்தக விழா பயணம்,
என்னை விட்டு விட்டு நீ மட்டும் ஈரோடு புத்தக விழா போறியா? நானும் வருவேன்அப்பா, என அடம் பிடிக்கும் கௌசல்யாவை சரிகட்ட ஸ்நாக்ஸ் தொகை குடுத்தால் தான் நான் படி தாண்ட முடியும். நிதர்சனம். ரூ.100/-
வீடு TO பஸ் ஸ்டாண்ட் டூ வீலர் பார்கிங் செலவு ரூ.15/-
பஸ் டிக்கெட் போக,வர ரூ.45+45= 90/-
குறைந்தபட்சம் மதிய உணவு ரூ.90/-
குறைந்தபட்சம் டீ செலவு ரூ.100/- (டீக் கடையை பார்த்தல் நம்ம ஆட்டோ ஓடாது)
மொத்தம் ரூ.395/- தோராயமாக ரூ.500/- செலவு இல்லாமல் பயணம் நிறைவேற்ற இயலாது போல..
ஈரோடு புத்தக விழா பயண செலவு ரூ.500/-
திருப்பூர் புத்தக விழா பயண செலவு ரூ.500/-
உள்ளுராக இருந்தாலும் சேலம் புத்தக விழா பயண செலவு ரூ.300/-
மும்முனை பயண திட்டம் தோராயமாக மொத்தம் செலவு ரூ.1300/-
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1300 = ரூ.140/- OR LESS
வாய்ப்பு-3:
ஈரோடு, திருப்பூர் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டால் புத்தக விழாவில் புத்தகம் பெற்று கொரியர் அனுப்பி வைப்பார்கள் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வந்த புத்தகங்கள் அனைத்தும் அனுப்பி வைக்க..
ஈரோடு, திருப்பூர் TO சேலம் கொரியர் செலவு தோராயமாக ரூ.800-900/-
சேலம் புத்தக விழா பயண செலவு ரூ.300/-
மொத்த செலவு ரூ.1100 -1200/-
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1200 = ரூ.240/- OR LESS
இதற்காக எனக்காக ஈரோடு, திருப்பூர் நண்பர்களின் கொரியர் அனுப்பும் அலைச்சல்,செலவு நண்பர்களுக்கு. (இதில் கொரியர் பார்சலின் புத்தக அட்டை ஓரம் கிழித்த, ஒடிந்த சிக்கல் நண்பர்கள் குழுவில் படித்துள்ளேன்)
லாப முடிவு..
வாய்ப்பு-1:
லாபம்= கொள்ளிக் கட்டை
வாய்ப்பு-2:
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1300 = ரூ.140/- OR LESS
வாய்ப்பு-3:
தோராயமாக மொத்த லாபம் ரூ.1440 – 1200 = ரூ.240/- OR LESS
புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ் எனில் எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு..
Continues....
மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் முதல் 10 தினங்களுக்குள் படித்து விடும் எனக்கு பல இரவு நேர வாசிப்பு மிகப்பெரிய இழப்பு. வாழ்க்கையின் உறுதியான கட்டமைப்புக்குள் கடினமான நிலையில் வேதனையிருந்தும், இறுக்கங்களியிருந்தும் மனதை சமனப்படுத்த காமிக்ஸ் தவிர பெரும்பான்மையான நாட்களில் வேறேதுமில்லை.
Deleteரூ. 0 –240/- இந்த லாப தொகைக்காக எனது பல சந்தோஷ நாள்களை இரவுகளை தொலைக்க நான் தயாராக இல்லை.
ஹாலிவுடில் ஜாலி கதையில் செவ்விந்திய தலைவர், “வேட்டையாடுவோம், பக்கத்து கிராமத்து ஜனங்களுடன் சண்டையிடுவோம், கொலை செய்வோம் என சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்” எனச் சொல்வதைப் போல்..
மாதா மாதம் கொரியர் கிடைத்தவுடன் படித்தோமா, ப்ளாக் மற்றும் நண்பர்கள் குழுவில் அம்மாத விமர்சனங்கள், வரவேற்ப்பு, கேலி கிண்டல் படித்தோமா, ரகளைகளை பார்த்தோமா முடிந்தால் பங்கேற்றோமா என வாழ்க்கை ஓடுகிறது. மாதா மாதம் அம்மாத புத்தகங்களை படிக்காமல் இருந்தால், ப்ளாக், கம்யுனிட்டி மற்றும் நண்பர்கள் குழுவில் எடிட்டர்,நண்பர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள், எதற்கு கைத் தட்டுகிறார்கள், எதற்கு சட்டைகளை கிழித்துக் கொண்டார்கள் எனத் தெரியாமல், மொழி தெரியாத ஹிந்தி படத்தை பாதியிலிருந்து பார்ப்பதை போல் இருக்கும்.
புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ். இது எமக்கு ஒத்துவராது.
புத்தக விழாவில் மட்டும் பர்சேஸ் என்பது புதிய அறிமுக வாசகர்கள், தேர்தெடுத்த புத்தகங்கள் மட்டும் வாசகர்கள், பொருளாதார ரீதியாக நெருக்கடி உள்ள வாசகர்கள், புதியவரை அறிமுகப்படுத்த, நண்பர்கள் உறவினருக்கு பரிசளிக்க வாங்குவோர்க்கு புத்தக விழா ஒரு மிகப்பெரிய வாசல் என்பது சந்தேகத்திக்கு இடமின்றி நிருபணம்.
ஆங்.. என்ன சொல்லவருகிறேன் என்றால்..
2026 வருட சந்தாவில், நவம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ள சேலம் புத்தக விழாவில் சந்தா தொகை கட்டி 2026 வருட சந்தாவில் இணைய உள்ளேன்.
## ரகுராமன், சேலம் ###
அருமை...
DeleteValid facts
Deleteஉண்மைதான் நானும் ஒரு வருடங்கள் கடையில் வாங்கி பார்த்து விட்டுத்தான் சந்தா கட்டவே ஆரம்பித்தேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் கொள்முதல் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் இடையில் வரும் புத்தகங்கள் தவறி விடுகிறது. இதற்காகத்தான் நான் சந்தா கட்டவே ஆரம்பித்தேன்.
Deleteநான் 2020ல் இருந்து தான் சந்தா கட்டுகிறேன். அதற்கு முன் ஒரு வருடங்கள் கடையில் வாங்கினேன். 2012 டு 2019 வரை உள்ள புத்தகங்கள் லிஸ்ட் எனக்கு தெரியாதே. அதாவது கையிருப்பில் என்ன புத்தகங்கள் இருக்கிறது என்கிற லிஸ்ட் எனது whatsapp எண்ணுக்கு அனுப்ப முடியுங்களா சார். எனது வாட்ஸ்அப் எண்ணை உங்கள் கம்யூனிட்டி எண்ணுக்கு அனுப்பி வைக்கிறேன்
ReplyDeleteமெக்ஸிகோவில் ஒரு மாய ரயில் தலைப்பே ஈர்க்குது...
ReplyDeleteகதையைப் படிக்கும் போது தலைப்பின் பொருத்தம் புரியும் சார் !
Deleteஎழுந்து வந்த எதிரி போய்கிட்டு இருக்கு ஓவர்,ஓவர்...
Deleteவேகம் எப்புடி கீது? ஓவர்... ஓவர்...?
Deleteநண்பர் சங்கர் சொல்வது போல் சந்தா தரர்களுக்கு தாங்கள் அறிவித்த பலன்களால் பெரிதான பலன் ஒன்றுமில்லை.
ReplyDeleteஎனவே மாற்று வழி யோசிக்கலாமா?
அங்கேயே நான் தந்துள்ள பதிலையும் படிச்சுக்கோங்க சார் ; அப்புறமாய் "மாற்று வழி" என்னவாக இருக்கக்கூடுமென்று முன்மொழியுங்களேன் - கேட்டுக்கொள்கிறேன் 👍
Deleteசார் நான் தீபாவளிக்கு பின் தான் சந்தா கட்டப் போகிறேன். அப்போது எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு முந்தைய இதழ்களின் இருப்பு பற்றிய விவரங்களை தர முடியுமங்களா சார். ஒருவேளை நான் வாங்காத இதழ்கள் இருப்பு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்தன் கூப்பன் தொகை போக அதிகமாக இருந்தாலும் அதை வாங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்
Deleteஆபீஸில் கேட்டால் அனுப்பி விடுவார்கள் சார்!
Deleteநன்றிங்க சார்
Deleteஅனைவருக்கும்ஹாப்பி தீபாவளி
ReplyDeleteஆமா ஆமா தீபாவளி மலர் கையில் கிடைக்கும் நாள் தானே தீபாவளி. இன்னைக்கு எனக்கு தீபாவளி
Deleteசந்தாவில் இணைய ஊக்கபடுத்தும் விதமாக முந்தி கொடுத்தது போல் டெக்ஸ் 32 பக்க புத்தகம் சந்தாதாரர்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவாக கொடுக்கலாம்... பின்னர் போனமுறை போலவே ஒரு 120 பக்க பேப்பர்பேக்காக புத்தக விழாக்களில் விற்பனைக்கு வைக்கலாம். சந்தா இல்லாதவர்கள் அதை வாங்கிக் கொள்ளலாம்... 32 பக்க சிறு இதழ்கள் சந்தாவில் உள்ளோர்களுக்கான தனிப்பட்ட வெகுமதி...
ReplyDeleteஎனது நட்பு வட்டத்தில், மூன்று பேர் இந்த முறை சந்தாவில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார்கள்...
நம்மை போன்ற சிறு வாசகர் வட்டத்திற்கு சந்தாக்களே முதுகெலும்பு இதயம் எல்லாம்...
இம்முறை நீங்கள் அறிவித்துள்ள கதை சொல்லும் காலெண்டர் என்னளவில் top of the charts. இது போன்ற சிறு சிறு வெகுமதிகளைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்...
அந்த 300 ரூபாய் கூப்பனுக்கு பதில் பழையபடி முன்பு போல 32 பக்கமோ எது வசதியோ சந்தாதாரர்களுக்கு மட்டும் என லேபிலுடன் வெளியிட ஆவண செய்வீர்கள் என்பதே என் நீண்ட நாள் அவா...
சார்.... போனலியின் படைப்புகள் எவற்றையுமே சிங்கிள் புக்ஸாய் போட இப்போதும், இனியும் அனுமதி இல்லை!
Deleteடைலன் டாக் - THE GOOD BAD & UGLY கூட சிறுகதைத் தொகுப்புகளே! But அவற்றை ஒரே புக்காய் போட எண்ணுவதன் காரணம் என்னவாக இருக்கக்கூடும் என யோசித்துப் பாருங்களேன்? இயன்றிருக்கும் பட்சத்தில் அதையெல்லாம் நடைமுறைப்படுத்தாது இருந்திருப்பேனா சார்?
ஈர்க்கும் விதமாய், சின்னச் சின்னதாய் வேறு எதைப் போடலாம்னு சொல்லுங்க - இயன்றால் தாராளமாய் பண்ணிடலாம் !
அந்த ₹300 கூப்பனுக்கு பழைய புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கு பதிலாக நண்பர் STV குறிப்பிட்டது போல், புத்தக விழா புத்தகங்களில் ஏதேனும் வாங்கிக் கொள்வது போல கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
Deleteமுடிவு உங்கள் கையில் சார்.
உசரும் குரல்களுக்கு நிதானம் திரும்பட்டும் சார் - அந்த நாளில் பார்த்துக் கொள்ளலாம்!
Delete