Powered By Blogger

Tuesday, July 18, 2017

காத்திருக்கும் திருவிழாக்கள் !

நண்பர்களே,

வணக்கம். உற்சாகப் பதிவுகள் ---->> ஹை வோல்டேஜ் பின்னூட்டங்கள் ---->> உபபதிவுகள் என்ற சங்கிலிக் கோர்வையை மீண்டுமொருமுறை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில் உள்ள சந்தோஷமே தனி தான் !! So  இதழ்களில் 400 -ஐத் தொட்ட சூடு தணியும் முன்னரே, பதிவுகளில் 400 -ஐ எட்டிப் பிடிக்க இதோ இன்னுமொரு படி நெருங்குகிறோம் !! இவற்றுள் எவ்வளவு உப்மா பதிவுகள் இருந்தன ? ; எத்தனை நாலு வரிப் பதிவுகள் இருந்தன ? என்பதெல்லாம் சத்தியமாய் நினைவில்லை ; ஆனால் நமது காமிக்ஸ் பயணத்தின் சுவாரஸ்யம் ஒரு விதமெனில், இங்கு நாம் கடந்து வந்திருக்கும் பதிவுகளின் பயணமோ அதற்குத் துளியும் சளைத்ததல்ல என்பேன் ! வண்டி வண்டியாய் எழுதும் போது - எதை / எங்கே / எதற்கு எழுதினேன் ? என்பதெல்லாம் ஒரு blur ஆக மாத்திரமே உள்ளது எனக்குள் !  என்றேனும் ஒரு சாவகாசமான  நாளில் - பதிவுகளே பயணமாய் அமைந்திட்ட நாட்களை அசை போட்டுப் பார்க்கும் ஆசையுண்டு எனக்கு ! 

Moving on,கோவைப் புத்தக விழா இவ்வார இறுதியில் துவங்குகிறது ! நமது ஸ்டால் நம்பர் 202 ! அங்கு 30-ம் தேதி திருவிழா நிறைவுற, கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஈரோடு செல்லவுள்ளனர் நம்மவர்கள் ! So தொடரும் வாரங்கள் நமக்கு ரொம்பவே முக்கியமான நாட்களாக இருந்திடும் ! நமது FB பக்கத்தில் புத்தக விழா சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் சமயம், அவற்றை உங்கள் நட்பு வட்டத்தின் மத்தியில் பரவலாய் பகிர்ந்திடக் கோருகிறேன் ! 
அப்புறம் ஈரோட்டின் "சஸ்பென்ஸ்" இதழ் பற்றிய வானளாவிய யூகங்களைப் பார்த்து லைட்டாக டர்ராகிப் போனேன் !! சென்ற மாதம் சுமார் 825+ பக்கங்கள் ; இம்மாதம் சுமார் 460+ பக்கங்கள் என்ற நிலையில் இன்னுமொரு குண்டோதர இதழைத் தயாரிப்பதற்கான 'தம்' பாக்கெட்டிலும் லேது ; உடலிலும் லேது ! அது மாத்திரமின்றி, ஈரோட்டுக்கான homework செய்திட கொஞ்சமேனும் அவகாசமின்றி, கடைசி நாள் வரைக்கும் பணிகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடப்பின் - அங்கு வந்து'பெப்பெப்பே' என்ற பிழைப்பாகிப் போகும் என்று பட்டது ! So - நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு  ; but ராட்சஸ ரகத்திலல்ல !  

ஈரோட்டு சந்திப்புக்கென சென்ற முறைகள் போலவே அதே LE JARDIN ஹோட்டலின் ஹால் ; இம்முறை அடித்தளத்தில் ! 4 மணி நேர அவகாசம் தந்துள்ளனர் நமக்கு ! அந்த 240 நிமிடங்களை - பூமியைக் காப்பாற்றக்கூடிய எந்தெந்த விஷயங்களின் பொருட்டுச் செலவிடலாமென்ற உங்கள் suggestions வரவேற்கப்படுகின்றன ! Of course - "இரத்தப் படலம்" பற்றிய அலசல் ; அடுத்தாண்டின் TEX 70 தொடர்பான கொண்டாட்டங்கள் நம் அட்டவணையில் முக்கிய இடங்களை பிடித்திடும். அவை தவிர்த்து - வேறென்ன சங்கதிகளை பற்றி பேசிடல் அவசியமென்று சொல்வீர்களோ ? ஒரு 30 நிமிடங்களை உங்கள் நினைவாற்றலுக்கான போட்டிக்கென ஒதுக்கி விட்டுச் சொல்லுங்கள் !! அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? Bye for now guys !!

311 comments:

  1. நான் இரண்டாவது

    ReplyDelete
  2. விஜயன் சார் நான் கிண்டும் உப்புமாவில்
    முந்திரி பாதாம் கொஞ்சம் போட்டுத்தான்
    கிண்டுவேன்

    ReplyDelete
  3. நான் கதவு அருகிலேயே இருப்பேன்
    போட்டி என்றவுடன் வேட்டி பறக்க ஓடி விடுவேன்

    ReplyDelete
    Replies
    1. கவலைப்பபடாதீங்க ஜீ வேட்டி கட்டினா வெற்றி உறுதி ஆமா.

      Delete
    2. பெருமாள் போன வருஷமே நான் வேட்டிதான் கட்டினேன் ஆனால் ஆசிரியரின் அருகில் இருந்தேன் ஆசிரியர் போட்டி என்றவுடன் போச்சுடா கிழிச்சிருச்சி வேட்டி என்று நெஞ்சு தடதடத்தது நல்லவேளை போட்டி நடக்கவில்லை வேட்டி தப்பித்தது

      Delete
    3. பாத்தீங்களா. நான் சொன்னேல்ல. இதெல்லாம் வேட்டியோட மகிமை சார்.

      Delete
    4. @ செந்தில் சத்யா

      :)))))) உங்களுக்குள் புதைந்துபோன நகைச்சுவையுணர்வு மீண்டும் வெளிப்படுவதில் மகிழ்ச்சி!

      @Govindaraj Perumal

      :))))

      Delete
  4. வாவ் அருமை
    காத்திருக்கிறோம் சார் _/|\_
    .

    ReplyDelete
  5. கொலைப் படை இரு வண்ணம்
    யார் அந்த மினி ஸ்பைடர் வண்ணம்
    நீதிக்காவலன் ஸ்பைடர் வண்ணம்
    விண் வெளிப் பிசாசு ..ஒரே இதழாய்
    டொனால்டு குண்டாய்
    விஸ்கி சுஸ்கி கட்டாய்
    வேதாளன்
    டிம்மி ஜெர்ரி
    கராதே டாக்டர்
    பறக்கும் பிசாசு , பிளாக் மெயில் என்கிட்ட இருந்தாலும் நண்பர்களுக்கு இரு வண்ணத் தொகுப்பாய்

    ReplyDelete
  6. ஓவியாவுக்கு ஓட்டுப்போட்டு அவரை ஏன் வின்னராக்க வேண்டுமென அவரது குணநலன்களை ஆராயலாமே..

    -ஓவியா பேரவை, ஈரோடு.

    ஹிஹி!! எப்படியும் இதழ் விமர்சனம், வருங்கால திட்டமிடல் போன்ற விசயங்களில் வீக்கான நான் நீங்கள் பேசுவதை வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன். அதான் இப்படி.. ஹை. ஜாலி!! :-))

    ReplyDelete
    Replies
    1. நானெல்லாம் டெய்லி ஓட்டு போடறேனாக்கும்..ஹிஹி!!

      Delete
    2. ஆதி!
      நீங்க நமீதாவுக்கு ஓட்டு போட்டதா தகவல் வந்துச்சே..!

      Delete
  7. ///அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா///

    இல்லை சார்... அந்த அரை மணி நேரம், நான் சைவ சாப்பாடு சாப்பிட மட்டும் போயிட்டு வந்துடறேன் சார்...

    ReplyDelete
  8. டெக்ஸ் வில்லரின் சட்டை கலர் என்ன
    லேடி S. சிற்க்கு முகத்தில் மச்சம் எங்குள்ளது
    மாடஸ்டி யின் முழு பெயர் என்ன
    சிகுவாகுவா சில்க் எந்த கதையின் நாயகி
    டாக்புல் வகித்து வரும் பதவி எது
    இது போல் கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்
    அதுக்காக டைகர் கடைசியாக எப்போது குளித்தார் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் மிகவும் கஷ்டமான கேள்வியது

    ReplyDelete
    Replies
    1. எங்க தலைவருக்கு எத்தனை பேரு இதையும் சேர்த்துக்குங்க
      அவர்தாங்க XIII

      Delete
  9. ////ஈரோட்டு சந்திப்புக்கென சென்ற முறைகள் போலவே அதே LE JARDIN ஹோட்டலின் ஹால் ; இம்முறை அடித்தளத்தில்////

    என்னைப் போல புதுவரவுகளுக்கு,

    Full Address, Date, Time சொன்னீக்கன்னா உதவியா இருக்கும்???

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் மிதுன் செயலாளரின் நம்பரை வாங்கிக்கொள்ளுங்கள்
      ஈரோடே உங்கள் வசமாகிவிடும்

      Delete
    2. வாட்ஸ் அப்பில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் மிதுன் 9629298300...

      Delete
  10. உத்வேகமான உபயோகமான உணர்வுகளை உரைக்க அழைத்த உப பதிவு சூப்பர் சார்....

    இந்த ஆண்டு செம ஹிட் அடித்த டியூராங்கோ & ₹லேடி Sஇவற்றை ஒரு அரை மணி நேரம் அலசலாம் சார்....

    சூப்பர் 6 சீசன்2வை ஈரோட்டில் பைனலஸ் செய்துட ஒரு அரை மணி நேரம் ஒதுக்கலாம் சார்...

    அடுத்த வரும் ஆண்டின் சந்தா அறிவிப்பை ஈரோட்டில் செய்து அதை 3மணி நேரம்
    சுடச்சுட விவாதிக்கும் காலம் ஒன்றும் வரும்....

    ReplyDelete
  11. Just four hours not enough for our suggestion, clarification, questions and answers and completion. Ok let we will reduce all things within four hours. ANDHA TEX ODA MEBISHTO STORYA MARAUNDHUDANDHINGHA. DON'T FORGET MEBISTO STORY. IT MUST COME ALONG WITH MANDHIRA MANDALAM IN COLOUR WITH HARD BOUND.

    ReplyDelete
  12. ///அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா///--ஹா....ஹா.... கார்ட்டூன் ஏதாவது டயலாக் ரைட்டிங்கா சார்?

    ReplyDelete
  13. கியூபா படலம் :-


    நல்ல நோக்கத்துக்கான போராட்டத்திற்கு ஆயுதம் சேர்க்கவேண்டி தவறான வழிமுறையில் செயல்படும் மாந்த்ரீகன், சிறுவனை கடத்தி பணயக்கைதியாக வைத்துக்கொண்டு, அவனது தந்தையிடம் ஆயுதங்கள் கேட்க, பணயக்கைதியை மீட்கவேண்டி டெக்ஸ்வில்லர் க்யூபாவுக்கு பயணக்கைதியாக (நட்பினால்) செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்.

    கூட்டம் கவனத்தை ஈர்க்கும் என்பதால் பழைய நண்பர் மாண்டலோஸை மட்டும் துணைக்கு அழைத்துச்சென்று மாந்த்ரீகனின் தாவாங்கட்டையை பெயர்த்து சிறுவனை மீட்டு வருகிறார்.
    சாதாரண மசாலாக்கதை போல தோன்றினாலும் சொன்ன விதத்தில் வேறுட்டு நிற்கிறது கியூபா படலம்.
    இந்த கடத்தல் சம்பவத்தோடு பின்னிப்பிணைந்த சமாச்சாரங்களான ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வேண்டி நடக்கும் விடுதலைப்போராட்டமும், அமெரிக்க மெக்ஸிக நாடுகளின் நிலைப்பாடும், அடிமைத்தனமும் அதனை ஆதரிப்போரும் வெறுப்போரும் என ஒரு அட்டகாசமான காக்டெய்ல் விருந்து இந்த கியூபா படலம்..!

    கார்சன் இல்லாத குறையை மாண்டலோஸ் தீர்த்து வைக்கிறார்.
    பாம்பு விடுற மந்திரவாதி, ஊடு பொம்மைகள், பாம்பு நெருப்பை உண்டாக்குவது என பல வித்தைகள் உண்டு.!

    அலமேலுவின் ஆடு போலிஸ் ஸ்டேசனுக்கே போய் கம்ப்ளெயிண்ட் குடுத்தது,
    பாம்பு (நாகராஜன்) ஹீரோயினுக்கு பூ வெச்சி விடுவது,
    அதே பாம்பு டைப்ரைட்டரில் NO17ன்னு டைப் அடிக்கிறது,
    யானை தொப்பி போட்டு பேடு கட்டி கிட்னிகார்டு வெச்சிகிட்டு கிரிக்கெட் விளையாடியது,
    இப்போ லேட்டஸ்டா இரும்பொறை அரசரின் ஆவி லாரி ஓட்டுறது,

    இப்படி எவ்வளவோ பார்த்து உரமேறிப்போயிருக்கும் நமக்கு இந்த மாந்த்ரீக சித்து விளையாட்டுகள் ஜாலியாக ரசிக்கவைக்கவே செய்தன. .!!

    கியூபா படலம் - ஊடு ……டுமீல்…… ஓடு……

    ReplyDelete
    Replies
    1. ///அலமேலுவின் ஆடு போலிஸ் ஸ்டேசனுக்கே போய் கம்ப்ளெயிண்ட் குடுத்தது,
      பாம்பு (நாகராஜன்) ஹீரோயினுக்கு பூ வெச்சி விடுவது,
      அதே பாம்பு டைப்ரைட்டரில் NO17ன்னு டைப் அடிக்கிறது,
      யானை தொப்பி போட்டு பேடு கட்டி கிட்னிகார்டு வெச்சிகிட்டு கிரிக்கெட் விளையாடியது,
      இப்போ லேட்டஸ்டா இரும்பொறை அரசரின் ஆவி லாரி ஓட்டுறது////... ஹா..ஹா.. செம மாம்ஸ்...
      வாரம் ஒரு தடவை 11மணிக்கு பலமாக சிரிச்சு, என் விலாவின் பலத்தை சோதிப்பதே உமக்கு வாடிக்கையா போச்சியா...கலக்கல்...

      Delete
    2. @ KOK

      :D :D :D :D

      செம்ம!

      Delete
  14. ///ஒரு 30 நிமிடங்களை உங்கள் நினைவாற்றலுக்கான போட்டிக்கென ஒதுக்கி விட்டுச் சொல்லுங்கள் !!///

    சார்!
    கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒரே வார்த்தையில் விடையளி.! நாலு வரிக்கு மிகாமல் எழுதுகன்னு ஸ்கூல் பசங்களுக்கு கேக்குற டைப்புல கொஸீன்பேப்பர் ரெடி பண்ணாதிங்க ப்ளீஸ்.!

    பந்தாவா ஒரு கேள்வியை கேட்டு அதுக்கு கிழே பக்காவா நாலு பதில்களை A B C D ன்னு கொடுத்து , சரியான விடையை வட்டமிடுக ன்னு சர்வீஸ் கமிசன் எக்ஸாம் மாதிரி கேள்வித்தாளை தயார் செஞ்சீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் கவுரதையை இருக்கும் சார்.!

    (கண்ணை மூடிகிட்டு நாலுல ஒண்ணை தொடுவது, காசு சுண்டி போட்டு பாக்குறது, இங்கி பிங்கி பாங்கி இப்படி எதுவும் பண்ணாம நல்லா யோசிச்சி பதிலளிப்போம்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு.. ஆனாக்கா.. ஹிஹி)

    ReplyDelete
  15. ///நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு ; but ராட்சஸ ரகத்திலல்ல ! ///---

    1.-------- இதழ் உண்டு...
    2.------- சைஸ் அல்ல...
    3.-------சீசன் 2ல் புதியவர்கள் வந்தால் இன்னும் ------- அதகரிக்கலாம்...
    4.விரைவில் வருகிறது:"......ஸ்பெசல்"...
    ---இவை அனைத்தையும் இணைக்கும் புள்ளி ஒன்றுதான்....

    அந்த சஸ்பென்ஸ் இதழ்:"-----------------)


    ReplyDelete
  16. ஹாய் நண்பர்களே,
    ஒரு வழியாக தளத்துக்குள் வந்துட்டேன்!! Firefox பிரவுசர் மற்றும் AOL ID உதவியால் :)

    இந்த மாதம் குண்டு புக் படித்துவிட்டேன்.. Ranking:
    1.ஜூலியா
    இதுவே இந்த தொடரின் சிறந்த கதை- இதுவரை வந்ததில்! ஜூலியா வேற ஒரு 15 வயசு கம்மியா ;)
    2.டெக்ஸ்
    சும்மா அதிருது..
    3. ராபின்
    நல்ல கதை.. இறுதி twist சர்ப்ரைஸ்!
    4. மாடஸ்டி

    இது தவிர சிக் பில் classics இம் அட்டகாசம்.. ஜான் சில்வர் ok ரகம்!

    இப்போது LADY S படிக்க ஜூட் ;)

    ReplyDelete
    Replies
    1. @Vinesh Erode

      அமர்க்களமான வருகை! வெல்கம்!

      Delete
    2. நல் வரவு நண்பரே.
      நல்ல வேளை ஈரோட்ட பின்னாடி போட்டீங்க.

      Delete
    3. வாங்க சார். வாங்க. இப்பிடி ஒவ்வொருத்தரா என்ட்ரி ஆனாத்தானே நம்ம தளம் இன்னும் பிரகாசமா கலகலப்பா இருக்கும்.

      Delete
  17. அல்லார்க்கும் வண்கம்!

    **** EBF-2017 ****

    ****** லயன்- முத்து காமிக்ஸ் : வாசகர் சந்திப்பு மற்றும் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா ********

    நாள் : 5/8/2017 சனிக்கிழமை
    நேரம் : 10:00 AM to 02:00 PM
    இடம் : Hotel Le-Jardin
    Orchid Hall A/C ( தரைத் தளம்)
    வ.வு.சி பூங்காவுக்கு மிக மிக அருகில் ( தொட்டுவிடும் தூரமே!)
    ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவில்
    ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கூப்பிட முடியாத தொலைவில் ( சுமார் 3 கி.மீ).

    பஸ்ஸில் வரும் நண்பர்கள் - பஸ் ஸ்டாண்டில் இறங்கி சற்றே தலையைத் தூக்கி ஒரு நோட்டம் விட்டாலே 7 மாடிகளைக் கொண்ட லீ-ஜார்டின் ஹோட்டல் கண்ணில்படாமல் போகாது!

    ரயிலில் வரும் நண்பர்கள் - ரயில்நிலையத்திற்கு வெளியே டவுன்பஸ்ஸில் ஏறினால் 15 நிமிடங்களில் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடலாம். பிறகென்ன... மேலே சொன்ன அதே வழிமுறைகள் தான்! ( கால்டாக்ஸி வசதியும் நிறையவே உண்டு. குடும்பத்துடன் வரும் நண்பர்களுக்கு பயன்படலாம்)

    ReplyDelete
    Replies
    1. Orchid Hall : சென்ட்ரலைஸ்டு ஏசி வசதியுடைய இந்த ஹாலில் 120 முதல் 150 பேர் வரை வசதியாக அமரலாம்!

      நமக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் 4 மணி நேரங்களென்றாலும்கூட, சுமார் 3:30 மணி நேரமே நமக்கு முழுமையாகப் பயன்படுத்திடக்கூடிய நேரமாக இருந்திடும்!

      இந்த 3:30 மணி நேரத்தை எப்படிச் செலவிடலாம் என யோசித்தது கீழ்வருமாறு :

      சுமார் 30 நிமிடம் - முன்பதிவு செய்த நண்பர்களுக்கு இரத்தக்கோட்டை புத்தகத்தை எடிட்டர் தன் கையால் வழங்கி - போட்டோவுக்கு போஸ் கொடுத்தல்

      சுமார் 1 மணி நேரம் - எடிட்டரின் உரை ( சிறப்பு அறிவிப்புகள், இரத்தப்படலம், TEX-70 கொண்டாட்டம், இன்னபிற பற்றி எடிட்டர் மனம் திறக்கிறார்)

      சுமார் 1 மணி நேரம் - வாசகர்களின் கேள்விகளுக்கு எடிட்டர் சமூகத்தின் பதில்கள் மற்றும் வாசகர்களின் தனிப்பட்ட கருத்துகள்

      சுமார் 30 நிமிடங்கள் - சூப்பர்-12, லயன் கி.நா-12, மறுபதிப்புகள், புதிய கதைகள் - ஆகியவை பற்றிய கலந்தாய்வு + '2018 கதைகள் - ஒரு முன்னோட்டம்' எடிட்டரின் சிறப்புப் பார்வை!

      சுமார் 30 நிமிடங்கள் : 'தமிழ் காமிக்ஸின் எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜூனியர் எடிட்டர் விக்ரமின் சொற்பொழிவு மற்றும் வாசகர்களின் கருத்துப் பதிவு!

      (மதிப்பிற்குரிய நமது சீனியர் எடிட்டரும் வருகைபுரிந்திடும் பட்சத்தில், மேற்கூறிய ஸ்லாட்களை சற்றே சுருக்கிக்கொண்டு சுமார் 30 நிமிடங்கள் அவருடைய சிறப்புரைக்காக ஒதுக்கிடலாம்)

      பி.கு : போதிய நேரமின்மை காரணமாக எடிட்டர் திட்டமிட்டுள்ள போட்டித் தேர்வை இம்முறையும் காலவரையின்றி ஒத்திவைத்துவிடலாம், ஹிஹி!

      Delete
    2. ////வ.வு.சி பூங்காவுக்கு மிக மிக அருகில்////

      Ok!! Thank you!!

      Delete
    3. Ha ha ha ...அப்போ ஈரோட்டிலிருந்து பார்க கூடிய தொலைவில் கோவயிலிருந்து பார்க்க இயலாத் தொலைவில்...

      Delete
    4. உங்கள் அட்டவணையில் பிழை உள்ளது திரு. ஈவியார்! எப்பேர்ப்பட்ட மீட்டிங்காக இருந்தாலும் காரவடை, ஆனியன்சமோசா, முளகாபஜ்ஜி போன்ற எதிரிகளோடு மோதி நம் வீரத்தை காண்பிக்க ஒரு 15 நிமிடம் ஒதுக்கியாக வேண்டும் என்பது உலக மரபு. அதை மீறிவிட்டீர்கள்! அவ்வ்வ்!! :-)

      Delete
    5. சூப்பர் செயலர்.... செட்யூல் தெரிஞ்சிட்டது...

      வடை, டீலாம் ஊடால அதுவே வரும் ஜி...

      Delete
    6. நண்பர்கள் கூட பாறை மிட்டாய் லாம் தருவாங்க...

      Delete
    7. @ ஆதி

      நான் மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்துமே அப்படியாப்பட்ட மோதல்களுக்கு நடுவேதான் நிகழவிருக்கிறது! எடிட்டரிடம் கேள்வி கேட்கும் வாசகர் ஒருவரின் பேச்சு கிட்டத்தட்ட இப்படி இருக்கும் : "எதித்தர் ஸார்... இதும்பு மதிதன் ஆத்தி மதுபதிப்பு எப்போ வதும்?" :)

      Delete
    8. //எதித்தர் ஸார்... இதும்பு மதிதன் ஆத்தி மதுபதிப்பு எப்போ வதும்?" //

      ஹா...ஹா...ஹா...

      Delete
    9. ஈரோடு விஜய் : அட்டவணையில் "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியெல்லாம் கிடையாதா ? சேந்தம்பட்டிக் குழுவில் 2 கானக் குயில்கள் இருப்பதாகவெல்லாம் கேள்விப்பட்டேனே ? நமது ஸ்டீலும் இப்போது கவிஞர் அவதாரமெல்லாம் எடுத்து விட்ட கையோடு ஒரு அரங்கேற்றல் செய்தது போல் இருக்குமல்லவா ?

      அப்புறம் "இந்த எதிர்காலம்" பற்றிய உரையெல்லாம் ஆற்ற ஜுனியருக்கு இன்னமும் நிறைய அவகாசமும், ஆண்டுகளும் உள்ளன ! 'மைக் மோகன்' அவதாரமெடுக்க 48 வயசிலேயே கையும், காலும் கதகளி ஆடியதெனும் போது, இதனை சீக்கிரம் அந்தப் பொறுப்புகளெல்லாம் ஜுனியருக்கு வேண்டாமே ! தவிர, நான் உளறுவாயன் என்றால் - புள்ளையாண்டான் அடக்கி வாசிப்பதில் நாட்டம் கொண்டவர் ! So எப்போதும் போலவே அவர் உங்களில் ஒருவராகவே தொடருவார் !

      And - நண்பர் ஆதி குறிப்பிடும் முக்கிய இடைவெளிகள் தவறாது தேவை !! எங்கள் சார்பில் அந்த "பன்னூட்டும் படலம்" pending அல்லவா ?

      Delete
    10. சார் பாடகர் விஜய்தான்...வாயசச்சு , இசையமச்சு ..நடிப்பது ஆமா அவரேதான்..இளையராசா கொண்ட... எல பரணி பாஞ்சு வர்ற பூரிக் கட்டைக்கு லாவகமா வளஞ்சு , நெளிஞ்சு , ஒளிஞ்சு த்பிப்பியே ... அதுல அந்த கைய தூக்கி கும்புடுவியே வேணாம்..வேணாம்ணு அத மட்டும் விட்றுல...இல்ல மறக்க மனம் கூடுதில்லயேன்னு நெனச்சன்ன..அப்பிடியே கும்புட்ட கையோட காலை தூக்கிருல...நம்ம ஈவி தகிட தகிட தந்தானா இரத்தபடலம் தந்தானா...ன்னு பாடி காப்பாத்திருவாருல....மறந்துறாதல....

      Delete
    11. "சூப்பர் சிங்கர்" - ஏன் சார் ஏன். நாங்க சந்தோசமா வந்துபோறது பிடிக்கலையா? அது ஏன்கிறேன்!

      Delete
    12. ///அட்டவணையில் "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியெல்லாம் கிடையாதா ? சேந்தம்பட்டிக் குழுவில் 2 கானக் குயில்கள் இருப்பதாகவெல்லாம் கேள்விப்பட்டேனே ?///

      எடிட்டர் சார்...
      எப்படியும் 2 மணிக்குப் பிறகும் கூட்டம் கலையாமத்தான் இருக்கப்போகுது... ஹோட்டல் மேனேஜர் லைட்டா எட்டிப் பார்த்து "இன்னும் ஒருமணி நேரத்துக்கு சேர்த்து பில் போட்டிடவா?"னு கண்ணாலயே கேட்பாரு பாருங்க... அந்த நேரம்பார்த்து இறக்கிவிடணும் நம்ம கானக்குயில்களை! நிமிஷத்துல அந்த இடமே 'கைவிடப்பட்ட சுரங்கம்' மாதிரி ஆகிடும்! அதுக்கு கானக்குயில்கள் 100% கியாரண்டி!

      Delete
    13. பரணியின் பரத நாட்டியமும் சேர்ந்துட்டா மிதி படாம ஓடணுமல்லவா..

      Delete
    14. // சூப்பர்-12, லயன் கி.நா-12, மறுபதிப்புகள், புதிய கதைகள் - ஆகியவை பற்றிய கலந்தாய்வு.//
      இதுக்கு பேர்தான் கேப்பில் கடா வெட்டுவதா ஈ.வி.ஹி,ஹி.

      Delete
  18. 2 முழு டிக்கெட் 2 அரை டிக்கெட் புக் பண்ணிக்குங்க விஜய் சார் கடந்த முறை தவறவிட்டதை இந்த முறை பிடிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. @ palanivel arumugam

      அருமை! வருக வருக!

      Delete
    2. palanivel arumugam : ஹை !!

      Delete
    3. நீங்கள்ளாம் குதிரையிலா வர்ரீங்க???
      சொல்லவேஇல்ல.

      Delete
    4. My bajaj ct100 ல் வந்து கடந்த முறை எடியிடம் நிறைய வாங்கிக்கட்டிக்கொண்டேன்
      இம்முறை பஸ் அல்லது ரயில்பயணம்

      Delete
    5. ஏலே எப்ப பஸ் எல்லாம் வாங்கின? சொல்லவே இல்ல:☺

      Delete
    6. இதெல்லாம் கேக்கணும்ல.... ஆமால ..பஸ்ல இது உங்க சொத்துன்னு எழுதி இருந்தத இப்பதா பாத்தேல மக்கா...நன்றில..இது தெரியாம காசு குடுத்துறுப்பல.. டிரைவர் ஏதாட்டு பேசுனா நேரா உன் மேல....... இல்லல.. உன்கிட்ட கூப்டுட்டு வரேல மக்கா..ஒரு ஆட்டம் ஆடிருல....அவன் ஆடிப் போவான்லல....😊 நல்ல வேள மறந்துருப்பல...நன்றில🙏

      Delete
  19. Wow erode surprise book tebanatly hardcover la varanum sir.....
    My early bird received in book parcel, booking no;15 sir

    ReplyDelete
  20. ////"இரத்தப் படலம் " பற்றிய அலசல்
    ; அடுத்தாண்டின் TEX 70 தொடர்பான
    கொண்டாட்டங்கள் நம் அட்டவணையில்
    முக்கிய இடங்களை பிடித்திடும்.
    அவை தவிர்த்து - வேறென்ன
    சங்கதிகளை பற்றி பேசிடல்
    அவசியமென்று
    சொல்வீர்களோ?////----- இந்த கேள்விக்கு என் புக்ளியூண்டு (நன்றி:செயலர்)நினைவாற்றலில் பொதிந்து இருக்கும் நிகழ்வு+உங்கள் வாக்குறுதியை ஞாபகப் படுத்துகிறேன் சார்...

    *சென்ற 2016ஈரோட்டு விழாவில் நண்பர்களின் கரைபுரண்ட உற்சாகத்தில் இருவேறு விதங்களில் டெக்ஸ் உருவம் பதித்த டீசர்ட்ஸ் அணிந்து இருந்தோம். அது போனெல்லியின் அனுமதி பெறாமல் செய்த உரிமை மீறல் என ஓர் கேள்வியும் அதையொட்டிய விவாதமும் நடந்தது. அந்த விவாதத்தின் போது லேசாக கோடி காட்டிய நீங்கள் அதற்கடுத்த ஞாயிறு பதிவில் தெளிவாக விளக்கி இருந்தீர்கள்.... உங்களின் உற்சாக விளக்கம் கீழே,

    ////""போனெல்லியில் எப்போதுமே
    நமது சன்னமான
    விற்பனைகளையும் ஒரு
    வாஞ்சையோடே அணுகுவார்கள்
    என்பதால் - அவர்களது தலைமகன்
    இங்கு ஈட்டிடும் வெற்றிகளை நான்
    அவ்வப்போது அவர்களோடு பகிர்ந்து
    கொள்வது நடைமுறை ! So
    சமீபத்தைய நமது ஈரோட்டுச் சந்திப்பு
    பற்றியும், நண்பர்களின் அதகள
    உற்சாகத்தையும் பற்றி,
    ஈரோட்டிலிருந்து திரும்பிய
    பின்னே ஏதோவொரு சமயம்
    தெரியப்படுத்தியிருந்தேன் ! சரி,
    தகவல் சொல்லி விட்டோமென்று
    நான் வேலைகளுக்குள் மூழ்கிட-
    பத்தாவது நிமிடமே பதில்
    வந்திருந்தது! “ Wow... great news! Please
    share photos if you have any ” என்று !
    நம்மவர்கள் தான் ஃபோட்டோக்களைப்
    பிரித்து மேய்ந்திருந்தார்களே -
    அதனிலிருந்து ஒரு நாலைந்தை
    அனுப்பி வைத்தேன்
    மறுநொடியே ! அடுத்த பத்தாவது
    நிமிடம் வந்தது இன்னொரு
    மின்னஞ்சல் : “Awesome seeing such
    interest in our creations & Comics in general !
    Mind if we share them on our pages? ”
    என்று !! தலைகால் புரியவில்லை
    எனக்கு - உற்சாகத்தில் ! ஏதோவொரு
    மரியாதைக்காக ஃபோட்டோக்கள்
    கேட்டிருப்பார்கள் ; அதனால்
    அள்ளியடித்து ஒரு கத்தையைத்
    தூக்கி அனுப்புவானேன் ? என்று
    சுருக்கமான எண்ணிக்கையில் தான்
    முதலில் அனுப்பியிருந்தேன் !
    அவர்களது சுவாரஸ்யத்தைப் பார்த்த
    மறுகணமே ஒரு 30 / 35
    ஃபோட்டோக்களைத் தட்டி விட்டேன்!
    அவற்றைப் பார்த்தவுடன் நிஜமாகவே
    திகைத்துப் போய் விட்டார்கள் என்று
    தான் சொல்ல வேண்டும் ! ‘ இது எந்த
    ஊரில் வைத்து நடந்தது ?‘ எந்தத்
    தேதியில் ? ; ‘விருந்தினர்
    யார் ?‘; எவ்வளவு வாசகர்கள்
    வந்திருந்தார்கள் ? மேடையில்
    உன்னருகே அமர்ந்திருப்போர் யார் ?
    ‘புத்தக விழாவில் விற்பனை
    நிறைவாக உள்ளதா?‘ என்று
    சராமாரியாகக் கேள்விகள்
    தொடர்ந்தன ! அவற்றுள் ஒன்று தான்
    நம் நண்பர்களது டி-ஷர்ட்கள் பற்றிய
    கேள்வியும் ! :-))
    கறுப்பு டி-ஷர்ட்; நெஞ்சில்
    டெக்ஸின் முகம் என்ற
    யூனிபார்மில் black cats பாணியில்
    நின்ற நண்பர்கள் ஃபோட்டோவையும்,
    நமது சந்தா டி-ஷர்ட்களை
    அணிந்தவாறு நண்பர்கள் போஸ்
    கொடுத்திருந்த ஃபோட்டோவையும்
    பார்த்து விட்டு- ‘ ஏதேனும் dress code
    மாதிரியா இது ? என்று
    ஆர்வமாய்க் கேட்டிருந்தனர் ! கறுப்பு
    டி-ஷர்ட்கள் நண்பர்கள்
    ஆர்வமிகுதியில் தாமாகவே
    தயாரித்துக் கொண்டது ; இதோ-
    இன்னொரு நண்பர் வட்டம் தாமாகத்
    தயாரித்த வெள்ளையில் TEX உருவம்
    பதிந்த டி-shirt & அந்த சாம்பல்
    வர்ணத்திலானது நமது சந்தா
    அன்பளிப்பு என்பதை விளக்கினேன் !
    ‘ அட... இத்தனை மெனக்கெடலா Tex-ன்
    பொருட்டு? ‘ என்று
    குதூகலித்தவர்களிடம் அன்றைய
    நண்பர்கள் சந்திப்பின் முக்காலே
    மூன்றுவீசப் பொழுது டெக்சைச்
    சுற்றியே தான் சுழன்றடித்ததை
    விளக்கினேன் ! எல்லையில்லாப்
    பூரிப்பு அவர்களுக்கு ! (ஆகஸ்ட்)
    கோடை விடுமுறைகளில் உள்ள
    அவர்களது FB பக்க நிர்வாகி
    பணிக்குத் திரும்பிய பிற்பாடு
    ஃபோட்டோக்களையும்; நிகழ்வின்
    விபரங்களையும் அவரோடு
    பகிர்ந்திடுவதாக உறுதி
    சொல்லினர் ! மனுஷன் மனது
    வைத்தால் நாம் அவர்களது FB
    பக்கத்தில் கலக்கிடும் நாள்
    தொலைவிலில்லை!
    இத்தனையும் அரங்கேறிய
    மறுநாளைக்கு நமது பதிவில் இந்த
    டி-ஷர்ட் சர்ச்சையை எழுப்பியொரு
    காரமான பின்னூட்டத்தைப் பார்த்த
    போது எனக்குத் துளி கூட சங்கடம்
    நேராது போனது ஏனென்பது
    அந்நேரம் நண்பர்களுக்குத்
    தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் !
    படைப்பாளிகளின் கண்களில் பட்டது
    அந்த வெளிப்படையான காமிக்ஸ்
    காதல் தான் என்பதை அங்கேயே,
    அப்போதே போட்டுடைக்க எனக்கு
    ரெண்டு நிமிடங்கள்
    போதுமானதாக இருந்திருக்கும் !
    ஆனால் ஒரு பின்னூட்டக்
    குவியலுக்குள் படைப்பாளிகளின்
    மகிழ்ச்சியைப் பத்தோடு
    பதினொன்றாய் பகிர்ந்து செல்ல
    எனக்கு மனதில்லை என்பதால் அங்கே
    நான் வாய் திறக்கவில்லை!""".////

    *"இந்த குறிப்பிட்ட விவாதத்தின் போது இதுபற்றி தளத்தில் சொல்வதை விட, நேரில் நிதானமாகச் சொல்வது இன்னும் நேர்த்தியானது; அடுத்த சந்திப்பில் மறவாது இதை கேளுங்கள் படைப்பாளிகளின் உற்சாகத்தை பற்றி பகிர்ந்து விடலாம்"- என சொன்னீர்கள் சார். இதைப்பற்றி பகிர ஒரு கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. யப்பா!! என்னாவொரு நினைவாற்றல்!!!!

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : யப்பா....என்னவொரு ஓட்டை வாய் (எனக்கு) !!! யப்பா...என்னவொரு ஞாபக சக்தி (உங்களுக்கு !!)

      Delete
    3. TEX s u per... அப்படியே டெக்ஸ் 70 குறித்து ஏதேனும் அவர்கள் கருத்தயும் வாங்கலாம் சார் 😊

      Delete
    4. நமது ஸ்டீலும் இப்போது கவிஞர் அவதாரமெல்லாம் எடுத்து விட்ட கையோடு ஒரு அரங்கேற்றல் செய்தது போல் இருக்குமல்லவா ?

      Delete
    5. எவ்ளோ பெரீய்ய மாத்ரே.

      Delete
    6. எவ்ளோ பெரீய்ய மாத்ரே.

      Delete
    7. ஸ்டீல் ஜி நம்ம XIII பனியன் அடிப்போமா ?

      Delete
    8. அண்ணாத்தைகளா நீங்கள் பனியன் தான் அடிப்பீக... நம்ம தம்பி ஒருவர் XIIIனு பச்சையே குத்தி உள்ளரு...

      எங்க "ஜேசன் ப்ளை" னு இரண்டு பேரும் பச்சை குத்தி வாங்க பார்ப்போம்...

      Delete
    9. ஜேசன் ஃப்ளை பச்சை குத்துறேன்...ஈரோட்ல சொல்றேன்

      Delete
    10. ஏலே ஸ்டீல் சும்மா சவுண்டுவிடுறதுக்கு முன்னால (எதுனாலும்) அப்பாகிட்ட சொல்லிட்டு செய்யுல.

      Delete
    11. சரில...ீயும் ஈசியா பச்ச குததுவல ஈரோட்ல..ிது ஜேசன் மேல சத்தியம்ல..சத்யம்ல..சத்யம்ல...லலலலலல...

      Delete
    12. கிண்டல் பண்ணாதல..அது விடு பட்ட வார்த்தைகள நிரப்புக இல்லல..நிரப்புல...நிரப்பி புரிஞ்சு படில

      Delete
    13. டெக்ஸ் சூப்பர்.

      Delete
  21. திட்டங்களேடு, facebook live தொடர்பாகவும் நண்பர்கள் சிந்தித்திட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  22. sir,
    enadhu sandha puthagangalai erode book fair ill vaanghi kolgiren.

    ReplyDelete
  23. ஈரோடு புத்தக காட்சியில் அனைவரையும் அமைதியுடன் சந்திக்க ஆசையுடன் காத்திருக்கிறேன் ....:-)

    ReplyDelete
  24. sir,
    enadhu sandha puthagangalai erode book fair ill vaanghi kolgiren.

    ReplyDelete
  25. விடைகொடு ஷானியா....

    *படு அழுத்தமான கதைக்களம்...
    லார்கோ அளவுக்கு சிகையை பிய்த்துக் கொள்ளும் சிக்கல்கள் இல்லாமல் தெளிவான நீரோட்டம் போன்ற கதையோட்டம்...

    *கதைசொல்லும் யுக்தி பல சமயங்களில் மாஸ் ஹிட்டான ஒன்று. நிகழ்காலத்தில் நடுநடுவே கடந்த காலத்தை கலந்து சொல்லும் முறை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. லார்கோ விஞ்ச் பாகம்1& கார்சனின் கடந்த காலம்& கழுகு வேட்டை போன்ற முந்தைய மெகா ஹிட்களில் இந்த யுக்தி அற்புதமாக கையாளப்பட்டு இருக்கும். வெரி ரேர் ஆக வரும் இந்த ப்ளாஷ்பேக்கை பார்த்த உடன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டும் சேர்ந்து கொண்டது. நாயகி வேறு என்னைப் போன்ற யூத்களுக்கு பிடித்த இளவட்டமா, நர்த்தனம் ஆடும் மனசோடு கதைக்குள் சிறகடித்தேன்.

    *ஷானியாவின் அழகில் சொக்கிப்போனேன் என்பதே உண்மை. உடனடியாக ஷானியா மன்றத்தில் ஆயுட்கால மெம்பர் கார்டுக்கு அப்ளை பண்ணியாச்சு. இளம் ஷானியாவின் ப்ளாஷ்பேக் வாழ்க்கை கொஞ்சம் மனசை பிசைந்து விட்டது. மாடஸ்தி ஆட்டம் அநேகமாக குளோஸ். மாடஸ்திக்கு இணையான புத்திசாதுர்யமும் சமயோசித யோசனையும் அதை செயல்படுத்தும் திறனும் ஷானியாவுக்கும் இருக்கிறது. கூடவே அழகில் மாடஸ்தியை விட பலமடங்கு கூடுதலான பொலிவுடன் இருப்பதும் ப்ளசோ ப்ளஸ்கள் ஷானியாவுக்கு...

    *நிறைவான இரண்டு பாகங்களையும் ஒரே ஸ்ட்ரெச்சில் வாசிக்க வைத்து விட்டார் வான் ஹாம்மே. பல இடங்களில் சித்திரமும் கதைக்கு நிகராக ஸ்கோர் செய்துள்ளது. பனிப்போரின் பிரம்மாண்டங்களையும், அப்போதைய சதிகளையும் அட்டகாசமாக விளக்குகிறது. அடுத்தடுத்த பாகங்களை ஆவலடன் எதிர்நோக்கி....

    *பெரிய சைசில் அசத்தலான வண்ணமும்,மாடர்ன் கதைக் களமும் ஷானியாவை இன்னும் ஓரிரு சாகசங்களிலேயே முத்து&லயனின் டாப் லேடி ஹீரோ அந்தஸ்க்கு உயர்த்தும் என்பது திண்ணம்...

    *ஷானியா முத்துவின் மகுடத்தில் மற்றொரு கோஹினூர்...

    ReplyDelete
    Replies
    1. நெசமாத்தான் சொல்ரிங்களா ?

      Delete
    2. நெசம்...மாடஸ்டிய மிஞ்சிறுவார்....லார்கோவும் ..சமனும் மாறு வேடத்துல வந்த போல பலே கதை

      Delete
  26. கோவையில் வாரயிறுதிகளில் ஸ்டாலில் ஆஜர் ஆகி விடுவேன் ஆசிரியரே
    கோவை புத்தக விழா சிறப்பிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. @ கடல்யாழ்

      கோவையில் சிறக்கட்டும் உங்கள் சேவை! என் வாழ்த்துகளும், ஆசிகளும்!

      EBFக்கு அம்மாவையும் கூட்டிவர முயற்சியுங்களேன் சகோ?

      Delete
    2. @ஈரோடு விஜய்
      நன்றி சகோதரரே :) :) :)
      முயற்சிக்கிறேன் சகோதரரே
      இந்த தடவை தங்களுடன் கொஞ்ச நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்

      Delete
    3. உங்களுடன் உரையாடுவதை என் பாக்கியமாக கருதுகிறேன் சகோ! ஆனால் நான் இங்கே செய்யும் அலப்பறைகளை வைத்து நீங்கள் என்னை ஒரு 'வாயாடன்'னு நினைச்சா அது தப்பு! எனக்கு சரியா பேச வராது! புதுசா யார்கிட்டயாவது பேசினா நாக்கு குளற ஆரம்பிச்சுடும்! யாராவது கொஞ்சம் மிரட்டலா பேசிட்டாங்கன்னா அவ்ளோதான் - நாக்கு மேலண்ணத்துல போய் 'ச்ச்சவங்க்'னு ஒட்டிக்கிடும்!

      நீங்க மிரட்டமாட்டீங்க தானே? :)

      Delete
    4. அட என் சகோதரர் என்னை மாதிரியே இருக்குறாரு

      Delete
  27. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்

    சகோதரரே தாங்கள் கோவை புத்தக விழா பக்கம் வர வாய்ப்புள்ளதா???

    ReplyDelete
    Replies
    1. உள்ளூரில் இருக்கும் கோவை விழாவுக்காச்சும் வருவீங்களானு கேளு சகோ...!!!

      Delete
    2. ஞாயிறு மாலை நானும் ஆஜர்...முடிந்தால் மதியமே...வணக்கம் கடல்

      Delete
    3. குறிப்பு ..இந்த கேள்விய கேக்றதுக்கு முந்தியே ...போன தங்கள் கமண்டுக்கு டைப்பிட்டேன்

      Delete
    4. டெக்ஸ் ஈரோட்டுக்கே வருவம்...இது ஜுஜுபி..நீங்கள்ளாம் ஆங்களேன் எங்கூருக்கு

      Delete
    5. வரலாம் தான்,
      4ம் தேதி ம்வெள்ளி மதியம் 3மணி முதல் 6ம் தேதி ஞாயிறு இரவு 10மணி வரை ஈரோட்டில் ஆட்டத்திற்கு பர்மிசன் வாங்கி உள்ளேன் க்ளா... இதற்கு மேலயும் இன்னொரு நாள் பெர்மிசன் கேட்டா, ஈரோடு வரும் போது என்னய
      என்ற மாம்ஸாலயே அடையாளம் கண்டு கொள்ள முடியாது.... ஹி..ஹி..ஹி...

      Delete
    6. அட சும்மா வாங்க...நம்ம சென வ வச்சு பட்டி டிங்கரிங்லா பண்ணி ஈரோட்டுக்கு உங்க உருவத்த மீட்டிருவோம்...சரியா சென ஆனா

      Delete
    7. ஸ்டீல் @ மொதல்ல கோயம்புத்தூர்ல்ல நம்ப ஸ்டாலுக்கு போய்விட்டு வந்து மத்த பேசுல... சும்மா பில்டப் கொடுத்தது எல்லாம் போதும்.

      Delete
    8. //ஸ்டீல் @ மொதல்ல கோயம்புத்தூர்ல்ல நம்ப ஸ்டாலுக்கு போய்விட்டு வந்து மத்த பேசுல... சும்மா பில்டப் கொடுத்தது எல்லாம் போதும்.//

      +9

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நா சத்தம் போட மாட்டேன்..ஆனா திண் பண்டங்கள் வாயில சிக்க சத்தம் போடாததா தால

      Delete
    2. அதுக்கு இப்பவே ப்ராடிக்ஸ் எடுத்துக்கோல்ல மக்கா!

      Delete
  29. விஜயன் சார், LE JARDIN சரியான தேர்வு! ஆனால் இந்த முறை அடித்தளம்... ஏதாவது உள்குத்து இருக்குதா?

    நான்கு மணி நேரம் எல்லாம் எங்களுக்கு ஒரு வினாடிக்கு சமம். கடந்த முறை நீங்கள் இப்படித்தான் ஏதேதோ அஜெண்டா எல்லாம் தயார் பண்ணிகிட்டு வந்தீங்க. ஆனா அதுபடியா நடந்தது, மைக்கை நமது வாசகர் கையில் கொடுத்தவுடன் நேரம் போனதும் தெரியவில்லை உங்கள் அஜெண்டா எங்க போச்சுன்னும் தெரியவில்லை.

    அதனால சும்மா வாங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு போகலாம்.

    அப்பறம் மக்களே வழக்கம் போல, வடை, பஜ்ஜி, கடலை மிட்டாய், (ஆனா அந்த முட்டை மிட்டாய் வேண்டாம், சாரி ரடிஜா), கார சேவு,... எல்லாம் வாங்கிட்டு வாங்க!

    விஜயன் சார், அப்படியே சிவகாசியில் இருந்து விஜயா ஸ்வீட் ஸ்டால் லட்டு வாங்கிட்டு வாங்க (குட் டே பிஸ்கட் எல்லாம் வேண்டாம் :-))

    சரி அஜெண்டா பற்றி கேட்டதால் சொல்லுகிறேன்
    1. இறை வணக்கம்
    2. சீனியர் ஆசிரியர் வரவேற்புரை / சீனியரின் சிறு வயதில் (தாரமங்கலம் சார், நிறைய லைக் எதிர்பார்கிறேன் உங்க கிட்ட இருந்து)
    3. ரத்த கோட்டை புத்தக வெளிஈடு
    4. சிறப்பு விருந்தினர் - காமிக்ஸும் நானும்
    5. ஆசிரியருடன் காமிக்ஸ் காதலர்கள் நீண்ட உரையாடல்
    6. நன்றி நவில்தல் - நம்ப விக்ரம் (அவரு பேச கூச்சபடுவார், அதனால் நன்றி வணக்கம் மட்டும் சொல்லுவார்)

    இறை வணக்கத்திற்கு பின் நடுநடுவே சிறு மற்றும் பெரும் தின் பண்டம்கள் (வாசகர்களால்) வழங்கபடும் (சத்தம் போடாமல் சாப்பிட வேண்டும்)

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்தது: - நான் மட்டும் புத்தக திருவிழாவிற்கு வருகிறேன்!அமைதியாக எல்லோரையம் படம் பிடிக்க!

      Delete
    2. பிளான் பண்ணாம நாங்க எதுலேயும் இறங்க மாட்டோம்ல மக்கா!

      Delete
    3. //இறை வணக்கத்திற்கு பின் நடுநடுவே சிறு மற்றும் பெரும் தின் பண்டம்கள் (வாசகர்களால்) வழங்கபடும் (சத்தம் போடாமல் சாப்பிட வேண்டும்)//

      :D :D :D :D :D

      Delete
    4. சீனியரின் சிறு வயதில்

      #######



      நிறைய லைக்கோ லைக்....:-)

      Delete
  30. விஜயன் சார், இந்த வருட சூப்பர் சிக்ஸ் மெகா ஹிட் அடித்ததற்கு முதன்மையான காரணம் இதுவரை மறுபதிப்பில்வராத absolute கிளாஸ்ஸிக் கதைகளே! இதே பார்முலாவை அடுத்த வருடமும் தொடரவும்.

    ReplyDelete
  31. விடைகொடு ஷானியா

    தமிழில் ஷானியாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஆசிரியரே
    அழகும் அறிவும் கொண்ட திறமையான பெண்
    முதல் பாகம் இறுதியில் படித்த உடன் எங்கு ஷானியாவுக்கு எதாவது கெடுதல் நடந்து விடுமோ
    என்ற தவிப்பில் இரண்டாவது பாகத்தையும் உடனே படித்து முடித்தேன்
    அரசியல் பிரச்சனையில் கடந்த வாழ்க்கையினால் மிரட்ட பட்டாலும் சாமர்த்தியசாலிமாக கையாண்டு விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. ரம்யா @ முதல் விமர்சனம் வாழ்த்துக்கள். அப்படியே இந்த கதை பற்றிய உங்கள் அம்மாவின் விமர்சனத்தையும் எழுதலாமே.

      Delete
    2. கடல் யாழ் தொடரட்டும் உங்கள் விமர்சனம்

      Delete
    3. @ கடல்யாழ்9 : உங்களூரில் popular கேபிள் டி.வி. சேனல்கள் ஏதேனும் இரண்டின் பெயர் & தொலைபேசி நம்பர்களை சேகரித்து அனுப்பிட முடியுமா - ப்ளீஸ் ?

      Delete
  32. விஜயன் சார்,

    புலியின் முத்தான பாய்ச்சல் வழக்கத்தைவிட அதிகமாகிகொண்டே போகிறதோ என்ற சிறு ஐயம் உண்டாகிறது. இத்தனை இதழ்கள் இத்தனை விலையில் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவது என்பது எந்த அளவு எத்தனை வாசகர்களுக்கு முழுமையாக பயனளிக்கும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

    கதையின் களம் எதுவானாலும் சரி, எத்தனை இதழ்களானாலும் சரி, என்ன விலையானாலும் சரி, இன்னும் குண்டான இதழ்கள் எத்தனை ஆயிரம் விலையில் மாதாமாதம் வெளியிட்டாலும் சரி நாங்கள் வாங்க தயாரக இருக்கிறோம் என்று சொல்லும் வாசக நண்பர்களுக்கும், சூப்பர் 6 ஐ 12 ஆக்கவும், இருக்கும் சந்தாக்களுடன் இன்னும் புதிய சந்தாக்களை உருவாக்க சொல்லும் நண்பர்களுக்கும் இந்த பின்னூட்டம் கொஞ்சம் கசப்பாக தோன்றலாம்.

    லயன், முத்து காமிக்ஸ் என்பது வசதிஉள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகிவிடுமோ அல்லது உருவாகிவிட்டதோ என்ற கவலையே இந்த பின்னூட்டத்துக்கு காரணம். நிறைய கதைகள் ஆனால் குறைவான எண்ணிக்கையில் அதிக விலையில் வெளியீடு என்பதற்கும் கொஞ்சம் கதைகள் அதிகமான என்ணிக்கையில் வெளியீடு என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் உணர்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். மேலும் தரம் என்று வருகையில் அதிக விலை என்பது தவிர்க்கமுடியாததும் கூட என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

    அனைத்து இதழ்களையும் படித்துவிடவேண்டும் என்ற வேட்கையோடு, படித்த அனைத்தையும் வாங்கி பத்திரமாக வைத்திருந்து அடுத்த தலைமுறைக்கு சென்றடையவேண்டும் என்ற எண்ணமும் பலருக்கு ஏற்படுவது இயல்பான விஷயம்தானே. ஆனால் இந்த அளவு அதிகமான கதைகள் குறுகிய காலகட்டத்துக்குள் அதிக விலையில் வெளியிடப்படும்போது அனைத்தையும் விலைகொடுத்து வாங்குவது என்பது வாசிப்பு வேட்கையுள்ள ஆனால் வசதிகுறைந்த நிறைய நண்பர்களுக்கு சாத்தியமல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது என்பதுதான் என் கவலை. மாதாமாதம் சராசரியாக 5 புத்தகங்கள் 350 லிருந்து 500 வரை சராசரியாக மொத்த விலை, இதுபோக இடைசெருகலாக சூப்பர்-6, ஸ்பெஷல், கிராபிக்ஸ் நாவல் என்று விஜயன் சார் விட்டேனாபார் என்று வரிந்துகட்டிகொண்டு செயல்படும்போது நிறைய மிடில் க்ளாஸ் வாசகர்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் போய்விடுகிறது.

    என் நண்பர்கள் பலர் 3 அல்லது 5 நபர்கள் என்று கூட்டாக சேர்ந்து மொத்தமாக மாதம் வெளியாகும் அனைத்து இதழ்களை வாங்கி அனைவரும் படித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு இதழை நிரந்தரமாக வைத்துகொள்ளும் பழக்கத்தை சில ஆண்டுகளாக பின்தொடர்கிறார்கள். அனைவருக்கும் அனைத்து இதழ்களையும் சொந்தமாக வீட்டில் வைத்திருக்க ஆசைதான் ஆனால் சூழ்னிலை அவ்வாறு நிறைய பேருக்கு சாதகமாக அமைவதில்லை. இதுதவிற, ஸ்பெஷல், சூப்பர்-6, கிராபிக்ஸ் நாவல் என்று இடைசெறுகலாக பல இதழ்கள் வரும்போது பலர் அவற்றில் பல இதழ்களை வாங்க முடியாமலும் படித்து அனுபவிக்க முடியாமலும் ஏக்கமுறுவதையும் கண்ட அனுபவம் எனக்கு உண்டு. புதிதாக முழுவிலையில் வாங்க இயலாமல் பாதிவிலைக்கு பழயபுத்தக கடையில் கிளரும் பல நண்பர்களை இன்றும் காண்கிறேன்.

    புதிய கதை களம், புதிய நாயக நாயகியர், உலக தரம், மொழிபெயர்ப்பில் மேன்மை, மறுபதிப்பு, வலை தளம், ஆன்லைன் விற்பனை, புத்தக கண்காட்சி, நேர் காணல் என பலவகையில் பரினாம வளர்ச்சி கண்டிருக்கும் லயன் முத்து காமிக்ஸ் புதிதாக பல வசதியான வாசகர்களை ஈர்த்திருக்கும் அதே வேளையில் பல மிடில் க்ளாஸ் பிலோ மிடில் க்ளாஸ் வாசகர்களை ஒருவேளை இழந்திருக்குமோ என்ற ஐயம் விஜயன் சாருக்கு என்றாவது சமீபத்தில் ஏற்பட்டிருக்குமா என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

    நட்சத்திர ஓட்டலுக்கு சென்று பலவித உணவுகளை ஒரே சமயத்தில் டின்னரில் வெளுத்துகட்டுவதற்கும், அதே விலையில் பல நாட்கள் பல சராசரியான உணவகங்களில் பலதர உணவுகளை பல நாட்கள் உண்டு திருப்தி அடைவதற்கும் உள்ள வித்தியாசம் அனைவராலும் உணரகூடியதுதான். குறைந்த கதைகள் நிறைய எண்ணிக்கையில் தரத்திற்கேற்ற விலையில் நீண்ட காலத்துக்கு வெளியாவது தற்போது இருப்பதைவிட நிறைய வாசகர் வட்டத்தை உருவாக்கவும், நிறைய வாசகர்களுக்கு முழு அளவில் பயனளிக்கவும் உதவும் என்பது என் எண்ணம். தற்போதைய சூழ்னிலையில் யாருக்கும் பாதிப்பு இல்லாதவகையிலும் அனைத்து வாசகர்களையும் திருப்திபடுத்தும் வகையிலும் இதை நடமுறையில் சாத்தியமாக்க கீழ்காணும் அட்டவணை (வருடத்துக்கு மொத்தம் 25 இதழ்கள் மொத்தம் ரூபாய் கிட்டதட்ட 2,500 மதிப்பில், சராசரியாக ஒரு இதழ் ரூபாய் 100 க்கு) ஒருவேளை உதவலாம். நிதானமான சீரான தொடர்ச்சியான மெதுவோட்டம் என்றுமே நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு நிறைந்த நல்லதுதானே.

    வலைதளத்தில் நான் உணரும் நிறைய இப்போ ராமசாமி நண்பர்கள் கோபிக்காமல் இருப்பீர்களாக!.

    ReplyDelete
    Replies
    1. யாரும் கோபிக்க மாட்டார்கள் .. சரி அந்த புத்தகங்கள வெளியிடாட்டி மட்டும் யாருக்கும் லாபமா .. புத்தகங்கள் 2500க்கு மட்டும் என்போருக்கும் சாய்ஸ் உண்டே ... ஆனா எல்லாம் வேண்டும் என்போர கட்டுபடுத்துவதால் இல்லாதவர திருப்தி படுத்த முடியும்னு நினைக்கிறீங்களா . நீங்களும் கோபிக்க மாட்டீங்களே !

      Delete
    2. @ ஸ்டீல்

      ///நீங்களும் கோபிக்க மாட்டீங்களே ///

      சே சே! ஏதாவது புரிஞ்சாத்தானே - கோவிச்சுக்கிட? :D :P

      Delete
    3. ////சே சே! ஏதாவது புரிஞ்சாத்தானே - கோவிச்சுக்கிட?////

      😂😂😂😂😂😂

      Delete
    4. @ Priya Alamelu

      🤔🤔🤔🤔🤔🤔

      Delete
    5. இந்த மேரி எழுதுற யாரையோ நான் பார்த்திருக்கேன்

      மலங்க மலங்க முழிக்கும் முழிகள் முப்பது

      Delete
    6. @ priya alamelu

      மனசுல இருந்ததை வெளிப்படையா தயக்கமின்றி சொன்னதற்கு என்னோட பாராட்ட தெரிவிக்கிறேன். பலதரப்பட்ட கருத்துகளுக்கும் மதிப்பு தரும் தளமிது. அதனால உங்க எண்ணத்தை தாராளமாக பதிவிடலாம்.

      அதிக விலையில் அதிகமாக காமிக்ஸ் வருதுன்னு நினைக்கறத விட இந்த வகையிலாவது காமிக்ஸ் வருதேன்னு நினைப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன்.




      Delete
    7. உங்கள் வெளிப்படையான கருத்துகளுக்கு நன்றி. எனது சிந்தனை உங்கள் கருத்துகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது.

      ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரே பதில் அளிப்பார் :-)

      Delete
    8. ///ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரே பதில் அளிப்பார்///---இதற்கு எப்படி ஆசிரியர் சார் பதில் அளிக்க முடியும்...???
      5ஆண்டுகளாக ஸ்டெப் ஸ்டெப்பாக ஏறி இந்த வெளியீட்டு எண்ணிக்கையை எட்டி இருக்கிறோம். இதில் ஏதாவது வேணாம்னா செலக்ட்டிவ்வாக வாங்கி கொள்வதே சிறந்த வழி. இதுவே போதல எனும்போது எண்ணிக்கையில் குறைப்பு என்ற பேச்சு முறையானதல்லவே...!!!

      ஓட்டல்ல சாப்பிட போனால் நமக்கு பிடிச்சதும் கட்டுபடியாகுமான இரண்டு வகைகளை சாப்பிட்டு போவதே சிறந்தது. ஓட்டல்காரங்கிட்ட ஏனுங்க எல்லாரும் எல்லாமும் சாப்பிடனும் 10ரூவாய்ல 1சுவீட்டு; 20ரூவாய்ல ஒரே ஒரு இட்லியோ பூரியோ; 30ரூவாய்ல ஒரே ஒரு ப்ளைன் தோசையோ ரவா தொசையோ மட்டுமே போடுங்க; வர்ரவங்க எல்லாம் தலா ஒரு வகை சாப்பிட்டு விட்டு போவாங்க அப்டீனா அந்த ஓட்டல் காரர் என்ன பண்ண முடியும்???

      பேசுறதுல எதுனா பொருத்தமான யோசனையா பேசனும்;
      இது மாதிரி
      எண்ணிக்கை குறைங்கனு ஒருவர்,
      டெக்ஸ் கதை வேணாம்னு ஒருவர்,
      கார்டூன் வேணாம்னு ஒருவர்,
      கி.நா.வேணாம்னு ஒருவர்,
      ரீபிரிண்ட் வேணாம்னு ஒருவர்,
      ஹார்ட் பைண்ட் வேணாம்னு ஒருவர்,
      கலரே வேணாம்னு ஒருவர்.... இப்படி மீண்டும் பேக் டூ ஸ்கொயர் ஒன்றை யாரும் சிபாரிசு செய்ய வேணாம்னு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே....
      நமக்கு பிடிச்சதை படிப்போம்; பிடிக்காதவற்றை அதை பிடிப்போர் படிக்க வாழ்த்துவோம்....

      Delete
    9. நெத்தியடிடெக்ஸ்.
      காமிக்ஸ்கள் படிக்கும் (தமிழில்) 10-12
      வயதுக்குட்பட்ட குழந்தைகளை தேட வேண்டிய காலம் இது.அதையும் தாண்டி
      படிக்கும் என் போன்ற குழந்தைகளுக்கு
      15-16தான் ஆகிறது(ஹிஹிஹிஹி)
      சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காதீர்கள்.

      Delete
    10. ////நமக்கு பிடிச்சதை படிப்போம்; பிடிக்காதவற்றை அதை பிடிப்போர் படிக்க வாழ்த்துவோம்....///

      சிறப்பான கருத்து.

      Delete
  33. New Regular Cartoon Reprint Special Mega Max.
    Total Cost / Month
    Rs.65~100 Rs.30~60 Rs.150~300Rs.350~500

    Jan 1L 1M 160
    Feb 1L 1M 120
    Mar 1L 1M 120
    Apr 1M 1L 160
    May 1M 1L 360
    Jun 1L 1M 160
    Jul 1L 1M 120
    Aug 1M 1L 1 * 660
    Sep 1M 1L 120
    Oct 1L 1M 160
    Nov 1L 1M 120
    Dec 1L 1M 360
    MAX. TOTAL COST / YEAR 2,620

    Note: * - Only One Either from LION or MUTHU
    Total Books Per Year
    New Regular Cartoon Reprint Special Mega
    5 6 6 5 2 1
    25 Books

    Yearly 25 books for around Rs. 2,500 seems affordable even for
    middle, below middle class friends.

    ReplyDelete
  34. கொஞ்சம் தெளிவாக இங்கே,
    Jan 1L (new), 1M (regular)
    Feb 1L (regular), 1M (cartoon)
    Mar 1L (cartoon), 1M (reprint)
    Apr 1M (new), 1L (reprint)
    May 1M (regular), 1L (special)
    Jun 1L (new), 1M (cartoon)
    Jul 1L (regular), 1M (reprint)
    Aug 1M (new), 1L (cartoon), 1L or M (mega)
    Sep 1M (regular), 1L (reprint)
    Oct 1L (new), 1M (cartoon)
    Nov 1L (regular), 1M (reprint)
    Dec 1L (cartoon), 1M (special)

    ReplyDelete
  35. ஈரோட்டில் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறேன்... சார்...

    ReplyDelete
  36. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!

    LADY S : முதல் கதை முடித்துள்ளேன்..நல்ல அறிமுகம் என தெரிகிறது.. இரண்டாம் கதை படிக்கும் வரையில் சஸ்பென்ஸ் வேறு!!

    சார், Booking no.191, கண்டிப்பாக ஈரோட்டில் தான் பெற்றுகொள்வேன் :)

    ReplyDelete
  37. Mayavi in gorilla samrajyam(colour) book kidaikkuma?

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்ல அடுத்த வருஷத்துக்காவது வாங்கிறலாம்...வர்ரீங்களா

      Delete
  38. //நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு ; but ராட்சஸ ரகத்திலல்ல.//
    சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளும் படங்கள் ஐநூற்று ஐம்பது சார்.

    ReplyDelete
  39. ப்ரியா அலமேலு அஒர்களுக்கு....

    உங்கள் கருத்தை ..,எண்ணத்தை அழகாக தான் சொல்லி உள்ளீர்கள்.இதன் சாதக ,பாதக பலன்கள் ஆசிரியரே அறிவித்து உள்ளார்.மீண்டும் கூட அறிவிக்கலாம் உங்கள் கருத்துக்களுக்காக ...

    உங்கள் எண்ணத்தை தெளிவாக வெளீப்படுத்திய தாங்கள் இறுதியில் தெரிவித்த



    "வலைதளத்தில் நான் உணரும் நிறைய இப்போ ராமசாமி நண்பர்கள் கோபிக்காமல் இருப்பீர்களாக!."


    என்ற வரிகள் அழகாக இல்லையே....உங்கள் எண்ணங்களுடன் ஒத்து வரும் நண்பர்கள் கூட உங்களின் இறுதி வரியால் உங்கள் கருத்துக்களால் எரிச்சலுடன் தாண்டி செல்ல கூடும்.அதுவும் பெண்மனி பெயரில் கருத்தை சொல்லி இருக்கும் தங்களிடம் கடைசி பன்ச்சை யாரும் எதீர்பார்த்திருக்க மாட்டார்கள் .

    இந்த தளத்தில் தாங்கள் உணர்ந்த இப்போ ராமசாமி ,அப்போ கந்தசாமி ,எப்போதும் முனுசாமி என நிறைய பேர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் .நீங்கள் அவர்களை பற்றி விசனபடாமல் உங்கள் எண்ணங்களை( மட்டும் ) அழகாக வெளிப்படுத்த அடிக்கடி வாருங்கள் ..

    ReplyDelete
  40. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்
    // யாரும் கோபிக்க மாட்டார்கள் .. சரி அந்த புத்தகங்கள வெளியிடாட்டி மட்டும் யாருக்கும் லாபமா .. புத்தகங்கள் 2500க்கு மட்டும் என்போருக்கும் சாய்ஸ் உண்டே ... ஆனா எல்லாம் வேண்டும் என்போர கட்டுபடுத்துவதால் இல்லாதவர திருப்தி படுத்த முடியும்னு நினைக்கிறீங்களா . நீங்களும் கோபிக்க மாட்டீங்களே//

    தோழரே, நிச்சயமாக எல்லோராலும் எல்லாவற்றையும் அனுபவித்துவிட முடியாது. அது அவரவரின் தேவைகளையும், வசதி வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும், சூழ்னிலையையும் இன்னும் பல விஷயங்களையும் பொருத்தது. வருடம் 25 இதழ்கள் ரூபாய் 2,500 க்கு கொடுத்தாலும் அதையும் வாங்க இயலாத வாசிப்பு பசி உள்ள பல நண்பர்களை காணமுடியும். இது யதார்த்தம். தவிர்க்கமுடியாதது. விருப்பம் இருந்தாலும் முடிந்ததை வாங்கிகொண்டும், முடியாததை தவிர்த்துகொண்டும்தான் இன்று பலரும் இருக்கிறோம். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல. புத்தகங்களின் எண்ணிக்கையை குறைத்து விற்பனை பிரதிகளை அதிகரிக்க முயற்சி செய்வது பயனீட்டாளர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர வழி அமைக்கலாம் என்பதுதான் என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. நண்பரே சரிதான்..முப்பது வருடங்களுக்கு மேல் நமது நிறுவனம் நடை போட்டுக் கொண்டிருக்கிறது ..நாற்பதாயிரம் ,இருவதாயிரம் என இதழ்கள் விற்ற காலம் மலையேறி விட்டது ...இப்போதய இதழ்கள் ஆயிரக்கணக்கில் , நூற்றுக் கணக்கில் என தவழக் காரணம் வெகு ஜன ரசனையில் நாம் இல்லை ....
      கம் பேக் பின்னர் தரமாக இதழ்கள் குறைந்த அளவில் என்பது ஏற்புடையதாக அமைந்தது . மறு பதிப்பு வேண்டுவோர் முன் பதிவுத் தொகை கூடவில்லை . மேலும் மூன்று வருடமாய் தூங்கும் இதழ்கள் அதிகம் . அதிக அளவில் அச்சிட்டு விற்குமென காத்திருப்பதும் மூட நம்பிக்கை போல ஆகி விட்டது .ஆகவே வேண்டுவோர் வாங்குமளவிற்கு அச்சிட்டு இப்போது வழங்கப் படுகிறது . ஆசிரியரும் ஆட்களை அனுப்பி விற்பனை உயர பாடு பட்டுக் கொண்டுதானிருக்கிறார் . விற்பனை உயரும் வழிகள் இருந்தால் ஆசிரியரும் அஞ்சாமல் செயல் படுத்துவார் ... விரைவில் நல்லது நடக்கும் . விற்பனை உயரும் . அப்போது நிச்சயம் அதிக பிரதிகள் அச்சிடப் படும் . அது வரை இப்போது தேவை என குரல் கொடுப்போருக்காக வரட்டும் ... இல்லையென்றால் இவர்களயும் இழந்து விடும் வாய்ப்பும் அதிகமல்லவா...வாருங்கள் இப்ப கொண்டாடுவோம் .

      Delete
  41. @ரின் டின் கேன்
    //இந்த மேரி எழுதுற யாரையோ நான் பார்த்திருக்கேன்//

    கண்டுபுடிச்சிட்டீங்களா? என் க்ளாஸ்மேட்களுக்கு என் எழுத்து நடை தெரியும். இந்த வலைதளத்தில் எனக்கு தெரிந்து என் க்ளாஸ்மேட் ஒருவன் பின்னூட்டிகொண்டிருக்கிறான். என் பின்னூட்டத்தை பார்த்தவுடன் போனில் என்னை பிராண்டிவிட்டான். “என்ன இப்படி பன்னிபோட்டியே, நாங்கள்லாம் விஜி சார்ட்ட நொம்ப எதிர்பாக்கிறோம், ஐ படத்தில விக்ரம் சொல்லுவாப்பில இல்ல ‘அதுக்கும் மேல’ அதமாரி. அதுக்குள்ள எதுக்கு இப்படின்னு”. சரி விடு பாத்துக்கலாம் ஒன்னும் ஆகாதுன்னு சமாளிச்சேன்

    ReplyDelete
  42. @Parani from Bangalore
    //ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரே பதில் அளிப்பார் :-)//

    தற்போதய சூழ்னிலையில் என் பின்னூட்டத்துக்கு விஜயன் சார் பதில் எழுதியாகவேண்டும் என்பது இல்லை. பலரும் தன் எண்ண்த்தை தெரிவிக்கும் வகையில் நானும் என் எண்ணத்தை விஜயன் சாரிடமும், வலைதள நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் எழுதப்பட்டதுதான் அது

    ReplyDelete
  43. @சேலம் Tex விஜயராகவன்19
    // 5ஆண்டுகளாக ஸ்டெப் ஸ்டெப்பாக ஏறி இந்த வெளியீட்டு எண்ணிக்கையை எட்டி இருக்கிறோம். இதில் ஏதாவது வேணாம்னா செலக்ட்டிவ்வாக வாங்கி கொள்வதே சிறந்த வழி. இதுவே போதல எனும்போது எண்ணிக்கையில் குறைப்பு என்ற பேச்சு முறையானதல்லவே//
    // பேசுறதுல எதுனா பொருத்தமான யோசனையா பேசனும்;//
    // இப்படி மீண்டும் பேக் டூ ஸ்கொயர் ஒன்றை யாரும் சிபாரிசு செய்ய வேணாம்னு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே. நமக்கு பிடிச்சதை படிப்போம்; பிடிக்காதவற்றை அதை பிடிப்போர் படிக்க வாழ்த்துவோம்//
    மறுக்கமுடியாத உண்மைதான். விஜயன் சாரின் அயராத உழைப்பு, தளராத முயற்சி, திட்டமிடும் திறன், இன்னும் பலவும், அத்துடன் உங்களைபோன்ற பல வாசக நண்பர்களின் சளைக்காத ஒத்துழைப்பும் இத்தனை வளர்ச்சிக்கு காரணமென்றால் மிகையாகாது.
    படிக்கட்டில் தரையில் கீழ் படியில் நின்றுகொண்டு மேலே பல படிகளில் நிற்கும் உங்களைபோன்ற பல வாசக நண்பர்களை பார்க்கிறேன். பொருத்தமான முறையில், மேன்மையான வகையில் எழுத முயல்கிறேன் தோழரே. தளத்திற்கு புதிய வரவுதானே, அழுத எழுத சரியாக வந்துவிடும்.
    நாம் பலர் முன்வைக்கும் பல கருத்துக்களில் எதை செயல்படுத்துவது என்பது விஜயன் சாரின் இத்தனை வருட தொழில் அனுபவத்தை பொருத்ததுதானே தோழரே. அதற்காக கருத்துக்களே சொல்லவேண்டாமென்றால் எப்படி? இன்னும் பெரிய குண்டா போடுங்க விஜி சாரே என்று சொல்லும் பல நண்பர்களை போல, கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே என்று சொல்ல விரும்பும் சிலரில் நானும் ஒன்றாக. அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. "He was standing at the wrong place at the wrong time."....இது அடிக்கடி ஐரோப்பிய கால்பந்து உலகில் சொல்லப்படும் ஸ்லாங்.

      உங்கள் கருத்தும் இதே தான்;
      கருத்து சொல்ல யாருக்கும் எப்போதும் உரிமையுண்டு;
      "தவறான சமயத்தில் சொல்லப்பட்ட மிகத் தவறான கருத்து"---உங்களுடையது. நீங்கள் இரண்டு வருடம் தாமதமாக இதை சொல்கிறீர்கள். இதை இங்கேயும் 2015ஈரோட்டு மீட்லயும் தெளிவாக விவாதித்தாச்சு. 50இதழ்கள் எண்ணிக்கை 2016முதல் வேணும் என முடிவானது 2015ஆகஸ்டில். இரண்டு வருடம் முந்தைய அரதப்பழசான விசயம். ஆசிரியர் சாரும் அதையொட்டியே இதழ்கள் எண்ணிக்கையை இப்போதும் கடைபிடித்து வருகிறார். 50ஐ 75ஆக உயர்த்தி கேட்க காமிக்ஸ் உலக நண்பர்கள் ஆவலோடு இருக்கையில் அதில் பாதியாக குறைக்கச் சொல்வது காலத்திற்கு பொருத்தமாகாது. உங்கள் ஒருவருக்காக ஆவலாக இருக்கும் மற்ற பெரும்பாலான நண்பர்களுக்கு தடைபோடுவது சரியானதல்லவே.

      சரியான கருத்தை எப்ப வேணா சொல்லுங்கள்; தவறான கருத்தை எப்ப சொன்னாலும் மறுப்பு சொல்ல சக நண்பர்களுக்கு உரிமை...!!! ஏனெனில் சக நண்பர்களின் உரிமையில் தலையிடும் விதமாக உங்கள் கருத்து அமையும் போது, உங்களுக்கு மறுப்புபோட அவர்களுக்கும் உரிமை வந்துவிடுகிறது; அவ்வளவே...

      Delete
  44. Vijayan sir,

    Please keep on publishing more genre books. I wish to buy and read matured graphic novels, CID Robin stories, Chick Bill stories etc etc..


    I don't like stories like "Bouncer", so I won't buy it.
    But we have fans for "Bouncer" kind of stories, so please bring Bouncer like stories too.

    Please publish the story you have mentioned in last post too. We need to welcome that kind of stories.

    Excerpt from your last post on that:

    //சில காலம் முன்பொரு கதை படித்தேன் – ரொம்பவே casual ஆன சித்திரங்களோடு! ஒரு சிறு நகரில் வசிக்கும் ஆசாமி பணி நிமித்தம் பெரியதொரு நகருக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறான்! வாழ்க்கையின் ஒரு மத்திய பகுதியினில் ஏதோவொரு ஆர்வத்தில் உந்தப்பட்டு தன் சொந்த ஊருக்கான ரயிலில் ஏறியமர்ந்து அங்கே போய் இறங்குகிறான்! சின்ன வயதில் தான் குடியிருந்த வீட்டுப் பக்கமாய்; அப்பாவோடு போய் ஏததோ வாங்கித் தின்ற கடைத்தெரு பக்கமாய்; நண்பர்களோடு ஓடியாடிய பார்க்குகள் பக்கமாய் ; தனிமையில் கழித்த சில ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்கள் பக்கமாய் என்று மௌனமாய் நடைபோடும் மனுஷன், திரும்பவும் ரயிலேறி – பெருநகரத்துக்குத் திரும்புகிறான்! மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் (??!) முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது! இதுவுமே உலகரங்கில் ஒரு அழகான காமிக்ஸ் ஆல்பமாக வலம் சர சாத்தியமாகிறது! //

    Regards,
    Mahesh

    ReplyDelete
  45. @Paranitharan K20
    // "வலைதளத்தில் நான் உணரும் நிறைய இப்போ ராமசாமி நண்பர்கள் கோபிக்காமல் இருப்பீர்களாக!." என்ற வரிகள் அழகாக இல்லையே....உங்கள் எண்ணங்களுடன் ஒத்து வரும் நண்பர்கள் கூட உங்களின் இறுதி வரியால் உங்கள் கருத்துக்களால் எரிச்சலுடன் தாண்டி செல்ல கூடும்//
    தவறாக புரிந்துகொள்ளும் அளவுக்கு என் வரிகள் இருந்ததை இனிவரும் பின்னூட்டங்களில் திருத்திகொள்கிறேன் தோழரே. நான் சொல்லவந்தது, கருத்துகள் கோரிக்கைகள் பின்னூட்டமிட்டுவிட்டு அடுத்த இதழிலேயே, வெளியீட்டிலேயே அது நடந்துவிடவேண்டுமென்று எதிர்பார்க்கும் அல்லது நடந்துவிடுமோ என்று கலவரப்படும் ஆர்வகோளாரான சில நண்பர்களை குறிப்பிட்டதுதான். ஒரு படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி அப்படிப்பட்ட கேரக்டரில் நடித்திருப்பார். அவர் பெயரே அதில் இப்போ ராமசாமி தான். இப்போ இப்போ இப்போ நடக்கணும் என்று வசனம் பேசுவார். அதை நினைத்து எழுதியதுதான் தோழரே. மற்றபடி யாரையும் கேலிசெய்யும் நோக்கத்தில் அல்ல. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லிங்கோ!!!

    ReplyDelete
  46. @ Govindaraj Perumal19
    //மனசுல இருந்ததை வெளிப்படையா தயக்கமின்றி சொன்னதற்கு என்னோட பாராட்ட தெரிவிக்கிறேன். பலதரப்பட்ட கருத்துகளுக்கும் மதிப்பு தரும் தளமிது. அதனால உங்க எண்ணத்தை தாராளமாக பதிவிடலாம்.
    அதிக விலையில் அதிகமாக காமிக்ஸ் வருதுன்னு நினைக்கறத விட இந்த வகையிலாவது காமிக்ஸ் வருதேன்னு நினைப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன்//

    ஆதரவுக்கு நன்றி தோழரே. நிச்சயமாக நல்லதுதான். இத்தனை வெரைட்டீஸ் தமிழில் வருவது பலவிதங்களில் நல்லதுதான். ஆனால் அனைத்தையும் ஒரே சமயத்தில் வாங்க பலருக்கும் பட்ஜெட் இடிக்குதே!!! என்ன செய்ய??? அதான் ஏதோ தோனுனதை சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
  47. நண்பரே, உங்கள் கருத்து சரியானதே! ஆனால் Audi Car showroomல் நாம் என்றைக்காவது சென்று குறைந்த விலையில் Car கிடைக்குமா என்று கேட்போமா? பல வருட போராட்டங்கள், இடையூறுகள் பலவற்றைக்கடந்து எடிட்டர் கடந்த 2 அல்லது 3 வருடங்களாக ஒரு புதிய வாயாபார யுக்தியில் புத்தகங்களை வெளியிடுகிறார். மேலும் அந்த முறையில் அவரால் மாதம் தவறாமலும் புத்தகங்களை வெளியிட முடிகிறது. 30,000 மற்றும் 40,000 புத்தகங்கள் விற்பனையான போது உள்ள வாசகர்கள் இன்றும் இருந்தால் (நானே எனது கல்லூரி நாட்களில் காமிக்ஸ் படிப்பது நிறுத்திவிட்டார். ஏன் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. மறுபடியும் 2007ல் ஒரு கடையில் தற்செயலாக பார்த்த போதுதான் மீண்டும் எனது காமிக்ஸ் வாசிப்பை தொடர்ந்தான்) நீங்கள் கூறுவது போல் குறைந்த விலையில் புத்தகங்கள்சாத்தியமே. ஆனால் இன்றைய நிலை உங்களுக்கு 'இரத்தக் கோட்டை' முன்பதிவு எண்ணிக்கையை பார்த்தாலே நன்றாக தெரியும். இன்றைய நிலையில் இந்த தளத்தில் பலரும் 2,000 ருபாய்க்கு காமிக்ஸ் வந்தால் கூட வாங்க தயாராக உள்ளனர் ஆனால் 10,000 ரூபாய் (?????) என்றால் எத்தனை பேர் அந்த காமக்ஸ் புத்தகத்தை வாங்குவார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களால் முடிந்தால் ஒரு சிறுவர் நூலகத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியோடு நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த நூலக சந்தாதாரர்கள் மூலம் நீங்கள் நமது காமிக்ஸ்களை ஒவ்வொரு மாதமும் வாங்கலாம். மேலும் நூலக புத்தகம் என்பதால் மீண்டும் நூலகத்திற்கு புத்தகம் வந்துவிடும் எனவே புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நண்பர் சொந்தம் கொண்டாடுவது என்பதும் நின்றுவிடும். புத்தகங்கள் நிறைய சேர்ந்தால் அதை உங்கள் நூலக வாசகர்களிடையே ஏலம் விட்டு நூலக நிதியும் திரட்டலாம்.

    ReplyDelete
    Replies
    1. ///நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களால் முடிந்தால் ஒரு சிறுவர் நூலகத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியோடு நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த நூலக சந்தாதாரர்கள் மூலம் நீங்கள் நமது காமிக்ஸ்களை ஒவ்வொரு மாதமும் வாங்கலாம். மேலும் நூலக புத்தகம் என்பதால் மீண்டும் நூலகத்திற்கு புத்தகம் வந்துவிடும் எனவே புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நண்பர் சொந்தம் கொண்டாடுவது என்பதும் நின்றுவிடும். புத்தகங்கள் நிறைய சேர்ந்தால் அதை உங்கள் நூலக வாசகர்களிடையே ஏலம் விட்டு நூலக நிதியும் திரட்டலாம்.////

      மிகச் சிறந்த யோசனை!

      Delete
    2. ////மிகச் சிறந்த யோசனை////

      மீ டூ... 🤔🤔🤔

      Delete
    3. Priya Alamelu : நிறைய அலசி முடித்த தலைப்பிது ; so மறுபடியும் இதனுள் நான் தலைநுழைப்பது மறுஒலிபரப்பாகவே அமைந்திடும் !

      Simple ஆக ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லி விடுகிறேனே..? நமது இதழ்களுக்கு என்றைக்குமே ஒரு timeline கிடையாதென்பதால், அவற்றை என்றைக்கு, எப்போது வாசித்தாலும் எவ்வித சிக்கல்களும் கிடையாது ! இன்றைக்கு சகல இதழ்களையும் வாங்கிட வசதிப்படா நண்பர்களும் கூட, தத்தம் சவுகர்யங்களுக்கேற்ப பின்னாட்களில் இதழ்களை வாங்கிக் கொள்ளுமளவுக்கு நமது கிட்டங்கிகள் நிறைந்தே உள்ளன ! குறிப்பிட்ட Limited Editions நீங்கலாக மற்றவை எல்லாமே always in stock ! அதனால் நாம் வெளியிடும் அதே மாதங்களில் தானென்றில்லாது, நிதானமாய், வசதிப்படும் தருணங்களில் வாங்கிட வழிகள் நிறையவே உள்ளன !

      அட ...worst case scenario - உங்கள் கண்ணோட்டத்தின்படியே இதழ்கள் சில பட்ஜெட்களில் பெரிய பொத்தல் போடுவதாகவே இருப்பினும், ஏதேதோ விலைவாசிகளுக்கு முணுமுணுப்பின்றி தலையாட்டிவிட்டுச் செல்லும் நாம், வாசிப்புக்கென கூடுதலானதொரு பட்ஜெட்டை ஒதுக்க முயல்வோமே ? இரண்டு மணி நேரத் திரைப்படத்துக்கும், பாப்கார்னுக்கும் ஐநூறைத் தூக்கி நீட்டத் தயங்கா நாட்களில், காலத்துக்கும் பத்திரப்படுத்தக்கூடிய புத்தகங்களுக்கு கொஞ்சமாய் சிரமம் மேற்கொள்வது அசாத்தியம் தானா ?

      நாம் உருவாக்கித் தரும் வாசிப்புப் பழக்கமும், நாம் விட்டுச் செல்லும் புத்தகங்களும் (காமிக்ஸ் மட்டும் தான் என்றில்லை !!) நம் அடுத்த தலைமுறைக்கு இன்று சேர்க்கும் சொத்துக்கள் தானே ? சேர்க்க முனைவது ஒரு ஸ்திரமான சொத்தென்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் - சிரமம் மங்கித் தெரியலாம் ; ஆர்வம் மேலோங்கிடலாம் !

      Delete
    4. சாா்,
      நானெல்லாம் கோவையில் இருந்தபோது வீதிவீதியாக பழைய காமிக்ஸ் புத்தகங்களை தேடியலைந்த காலம் உண்டு!!

      எனக்கு பிடித்த கதைகளை 2,3 பிரதிகள் என கொஞ்சம் கொஞ்சமாக சேகாிக்கத் தொடங்கியிருக்கிறேன்!!

      நிச்சயமாக பிற்காலத்தில் இவை சொத்துக்கள் தான் என்பது என் எண்ணம்!!

      பழைய நாணயங்கள், வாகனங்கள் போல எதிா்காலத்தில், மாறிவரும் டிஜிட்டல் யுகத்தில் காமிக்ஸ் பேப்பா் புக்களுக்கும் மிகப்பொிய மாா்க்கட் இருக்கும் என்றே நினைக்கிறேன்..

      Delete
    5. ///நாம் உருவாக்கித் தரும் வாசிப்புப் பழக்கமும், நாம் விட்டுச் செல்லும் புத்தகங்களும் (காமிக்ஸ் மட்டும் தான் என்றில்லை !!) நம் அடுத்த தலைமுறைக்கு இன்று சேர்க்கும் சொத்துக்கள் தானே ? சேர்க்க முனைவது ஒரு ஸ்திரமான சொத்தென்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் - சிரமம் மங்கித் தெரியலாம் ; ஆர்வம் மேலோங்கிடலாம் !///

      தெளிவாக சொன்னீர்கள் சார்.

      Delete
    6. லக்கி ஸ்பெசல் 2013

      பொடியன் பில்லி + வெஸ்டா்ன் சா்க்கஸ்

      புக் எனக்குத் தேவை!!

      லக்கியின் புத்தகங்கள் எதனையும் தவறவிட விரும்புவதில்லை!!

      ஒருத்தா் விற்பனைக்குத் தயாராக உள்ளாா்!!

      விலை ரூ.2000

      எனக்கு அது தவறாகத் தொன்றவில்லை!!

      கலைப் படைப்புகள் என்றால் அப்படித்தான் இருக்கும்!!

      Delete
    7. யாருங்க அந்த புண்ணியவான்???

      Delete
    8. திரு.மிதுன்
      உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறுது நண்பரே.நமதான தேவைதான் விலையை தீர்மானிக்கும்.நீங்கள் குறிப்பிட்டுள்ள கதைகள் சேகரிப்புகளின் உச்சம்.வேற்று மொழிகளில் இக்கதைகள் கிடைக்கப் பெற்றால் வாங்கிக் கொள்ளவும்(இறக்குமதி செய்யப்பட்ட cine ).மொழி மிகப்பெரிய பிரச்சனை அல்ல.இதன் தமிழாக்கம் என்னிடம் உள்ளது. அதை நகல் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பெட்ரமாக்ஸ் லைட்டேதா வேணும்னா,தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டசாமின்னு உறுதியாக இருந்தால் பதிவிடுங்கள் தொடர்பு எண் தருகிறேன். குறைந்த விலைக்கு நல்ல நிலையில் உள்ள புத்தகமாக வாங்கிக்கொள்ளலாம்.பழகுவதற்கும் இனிமையான நண்பர்.

      Delete
    9. Sri Ram : ஆனாலும் நம் தானைத் தலைவர், கவுண்டரின் தாக்கம் நம்மிடமெல்லாம் எத்தனை ஆழமாய்ப் பதிந்துள்ளதென்பதைப் பார்க்கும் போது I am very happy !!

      Delete
    10. என்றென்றுமே அவர்தானுங்களே காமெடி கிங்.திரைத்துறையினுடைய மாய வெளிச்சத்தில் புத்திய மழுங்கடிச்சிக்காத அறிவாளி.எந்த அரசியல் கருத்தையும் அனைவரும் இரசிக்கும் விதமா நையான்டி செய்யும் உன்னதமான கலைஞன்.

      Delete
  48. @Priya Alamelu அவர்களே
    உங்கள் கருத்துக்கு எதிரான கருத்தாக எண்ணவேண்டாம் என கூறிக் கொண்டு என்னுடைய கருத்தினை பதிவிடுகிறேன்.
    தற்போதுள்ள இதழ்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டால் விற்பனை அதிகரிக்கும், மனம் இருந்தும் வாங்க பணம் இல்லாமல் தவிக்கும் வாசகர்களையும் பாதிக்காது என்பது உங்களுடைய பதிவுகளின் நோக்கம் என கருதுகிறேன். நான் புரிந்து கொண்டது சரிதானே?
    ஒரு சின்ன சந்தேகம். காய்கறி வாங்க கடைக்கு செல்கிறோம். நம்மால் அங்குள்ள காய்கறிகள் அத்தனையையும் வாங்க இயலாதுதான். நாம் என்ன செய்கிறோம்? நமக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொண்டுவந்து விடுகிறோம். அதற்காக கடைக்காரரிடம் " எதற்கு இத்தனை விதமான காய்கறிகள்? நாங்கள் எப்படி வாங்க முடியும்?" எனக் கேள்வியெழுப்பினால் அதில் நியாயம் இருக்க முடியுமா? பதிலுக்கு "காமிக்ஸூம் காய்கறியும் ஒன்றா?" என்ற கேள்வி உங்களிடமிருந்து வர வாய்ப்புள்ளது. அதனால் அதற்கும் முன் கூட்டியே பதிலளித்துவிடுகிறேன். காமிக்ஸூம், காய்கறியும் ஒன்றல்லதான். ஆனால் இங்குள்ள (ஏறக்குறைய) அனைவருக்கும் காய்கறியைவிட காமிக்ஸே உயர்ந்தது என்ற நினைப்பில் வாழ்பவர்கள்தான்.ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பொறுத்துக் கொள்வர்.ஆனால் ஒருமாதம் காமிக்ஸ் இல்லையெனில் பதறி துடித்துப்போய்விடும் நெஞ்சங்கள்தான் இங்கு வந்து உலவுகின்றன.காய்கறி உதாரணம் உங்களுக்கு சற்றே எரிச்சலூட்டினால் அதற்கு பதிலாக திரைப்படங்களைகூட உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு சாரார் அனைத்து படங்களையும் பார்ப்பவர்கள். ஒரு சாரார் எல்லா படங்களையும் ஆசையிருந்தாலும் தனக்கு கட்டுப்படியாகாது என்ற பட்சத்தில் செலக்டிவான படங்களை மட்டும் பார்த்துக் கொண்டுபோய்விடுவதில்லையா? நம்மிடம் பணம் இல்லையென்கிற காரணத்தால் படம் எடுப்பதையே குறைக்கச் சொல்வது நியாயமாக இருக்கமுடியுமா? பல காமிக்ஸ் தோழர்களின் நீண்ட நாள் கனவுதான் நமது எடிட்டர்மூலம் இப்போது நிறைவேறிக் கொண்டுள்ளது. இன்னும் அதிகம் கிடைக்காதா எனக்கேட்பவர் மத்தியில் உள்ளதையே குறைக்கச்சொல்வது சரியா? என்னைப்பற்றியே ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். எனக்கு மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்த இடத்தில் ஊதியமும் இல்லாமல் அது சம்மந்தமான வழக்கையும் நடத்திக்கொண்டு இதற்கிடையே உடல்நலமும் பாதிக்கப்பட்டு சிகிட்சைக்கு பல ஆயிரங்கள் செலவழித்து தற்போது மாத்திரை செலவு மட்டும் மாதம் மூவாயிரத்துக்கு மேல் செலவழித்துக் கொண்டுள்ளேன். இந்த சூழ்நிலையில் இரத்தக்கோட்டை அறிவிப்பு வந்தது. கையில் மிகவும் பணத்தட்டுப்பாடு.200 முன்பதிவுக்குள் வரமுயற்சி செய்து தட்டுத்தடுமாறி முன்பதிவு 200 ஐ தொடும் சமயம் முன்பதிவு செய்துவிட்டேன். எப்படி தெரியுமா? ஒரு வாரத்திற்கான மாத்திரைகளை வாங்குவதை நிறுத்தி அந்த முன்பதிவு தொகையை செலுத்தினேன். ஒரு வாரம் மாத்திரைகளை நிறுத்தியதால் எனக்குள் பெரிய பாதிப்பை காண முடியவில்லை. ஆனால் முன் பதிவு தொகையை செலுத்தாமல் போயிருந்தால் மிகமிக காயப்பட்டு மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பேன்.இதனை சொல்லக்காரணம்"வாழ்க்கையில் எல்லார்க்கும் எல்லாமுமே கிடைத்து விடாது.ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற வேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கவேண்டும். எனது பதிவின் நோக்கம் தங்களை காயப்படுத்துவதல்ல. இறுதியாக---" ஒவ்வொரு மாதமும் கூரியர் பெட்டியின் கனம் கூடினாலே மனம் குதூகலமாகிவிடும். கனம் குறைந்திருந்தால் மனம் சற்றே சோர்வாக மாறிவிடும். இன்றைய எண்ணிக்கைக்கே இந்த கதியென்றால் புத்தகத்தின் எண்ணிக்கை குறைந்தால்....?அதற்கு பதில் என்னிடமில்லை!!"

    ReplyDelete
  49. //ல காமிக்ஸ் தோழர்களின் நீண்ட நாள் கனவுதான் நமது எடிட்டர்மூலம் இப்போது நிறைவேறிக் கொண்டுள்ளது. இன்னும் அதிகம் கிடைக்காதா எனக்கேட்பவர் மத்தியில்//
    //ஒவ்வொரு மாதமும் கூரியர் பெட்டியின் கனம் கூடினாலே மனம் குதூகலமாகிவிடும். கனம் குறைந்திருந்தால் மனம் சற்றே சோர்வாக மாறிவிடும். இன்றைய எண்ணிக்கைக்கே இந்த கதியென்றால் புத்தகத்தின் எண்ணிக்கை குறைந்தால்....?//
    +1111111111111

    ReplyDelete
  50. ப்ராகாஷ் பப்ளிசர்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்களே .
    நீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கிங்கன்னு தெரிஞ்சுக்குலாமா ஆசானே?
    நீங்கபாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு வருசம் ஐம்பது அறுவது காமிக்ஸ் போட்டுக்கிட்டுபோனா எங்களை மாதிரி செராக்ஸ் வியாபாரிகள் எப்படி பொழைப்பு நடத்துவோமின்னு யோசிக்கவேணாமா ஆசானே?
    நீங்க காமிக்ஸ் போடுவதை நிறுத்தினாலோ குறைச்சாலோதானே நாங்க எங்க வேபாரத்தை சிறப்பா நடாத்த முடியும்.
    படாதபாடுபட்டு பழங்காமிக்சை சேத்து வெச்சி நாலுகாசு பாக்கலாமேன்னு ஆசையா இருந்தா நீங்கபாட்டுக்கு புதுசுபுதுசா அள்ளிவிட்டுகிட்டே இருக்கிங்களே ஆசானே? படிக்கிற மக்க நூறு ரூபாக்கு உங்ககிட்ட வாங்குவாங்களா இல்லே ஆயிரம் ரூபாக்கு எங்ககிட்ட வாங்குவாங்களா? இப்படி எங்க பொழப்புல மண்ணள்ளி போடுவதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம் ஆசானே? இதுவும் போறாதுன்னு பழய காமிக்சையும் மறுபதிப்புங்குற பேருல ஐம்பது ரூபாக்கு போட்டுர்ரிங்க. காமிக்ஸ் படிக்க விரும்புறவன் உங்ககிட்ட ஐம்பது ரூபாக்கு வாங்குவானா இல்லே எங்ககிட்ட ஆயுரத்துஅய்நூறு ரூபாக்கு வாங்குவானா? நாங்க சம்பாரிக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டுன மாதிரி வேலைபாத்தா எப்படி ஆசானே?
    லிமிட்டேடு எடிசன் அப்படின்னு சொல்லி காமிக்ஸ் போடுறிங்க. ஆயிரம் காப்பீதான்னூ சொல்றிங்க. அதைநம்பி நாங்களும் கடனவுடன வாங்கி அய்நூறு காப்பீய வாங்கி பாதுகாப்பா வெச்சிக்கிறோம். ஒரு வருசம் கழிஞ்சு கொள்ளைலாபத்துக்கு விக்கலாமேன்னு ஆசையா இருக்கிறொம். ஆனா நீங்க என்ன பண்றிங்க மேலமேல பிரிண்டடிச்சு அதே வெலைக்கு விக்கிறிங்க. இப்படி பண்ணா நாங்க எப்படி சம்பாதிக்கிறது?
    நீங்க உடனடியா எண்ணிக்கைய குறைச்சே தீரவேணும். இல்லைன்னா எங்களுக்கு இந்த நாட்டைவிட்டு போறத தவிர வேறவழியே இல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஆனா இப்டி பதுக்குறவங்களுக்கு பின்னால விக்க வாய்ப்பிருக்குன்னு நம்புறீங்களா....ஆர்வலர் எல்லாரும் உடனே வாங்கி விடுவது நிச்சயம்...இனி தெரிஞ்சி வரப்போறவங்க விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுதான இருப்பாங்க

      Delete
    2. உங்கள் ஏக்கத்துக்கான 'டுவிட்டர் பதிவு':

      ஊழல் மலி உலகத்தில்
      சித்திரக்கதை என்ன சீர் என்ன?
      அச்சடித்து விற்குமாசான் விலை கூட்ட யோசிக்க
      அதையடிச்ச ஈயடிச்சான்
      உயரேறிப்பறக்குது.
      மிச்சமுள்ள எழுத்தெல்லாம்
      வற்றிப்போன நிலை வந்தால்
      சித்திரக்கதைக் கொப்ப என்ன வரும்?

      -நான் :-)

      Delete
  51. @ ALL : நண்பர்களே, சகோதரியின் அபிப்பிராயத்திற்கு பதில் சொல்லி விட்ட கையோடு ஜூலை அலசல் & ஆகஸ்ட் எதிர்நோக்கலுக்குத் திரும்பிடுவோமே ?

    நிறையத் தடவைகள் தாண்டிச் சென்றுவிட்ட சமாச்சாரங்களுக்குள் மீண்டும் தலைநுழைக்கும் பொருட்டு தடம் விலக வேண்டாமே - ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. சார் இப வ ஜனவரிக்குத் தர முடியுமா....முன் பதிவ ஆகஸ்ட்லயே துவக்கிறலாமே...

      Delete
    2. //நிறையத் தடவைகள் தாண்டிச் சென்றுவிட்ட சமாச்சாரங்களுக்குள் மீண்டும் தலைநுழைக்கும் பொருட்டு தடம் விலக வேண்டாமே//---+100

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்நண்பரே , "இரத்தப் படலம்" என்பதை டைப் அடிக்கவே சோம்பலுற்று "இ.ப.' என்றடிக்கும் நாளில் சற்றேற 1000 பக்கங்களது பணியினை தத்கலில் நாங்கள் செயலாற்றிட எதிர்பாப்பது நடைமுறை சாத்தியம் தானா ?

      Delete
    4. சரி... சரி. அழாதீங்க ஸ்டீல் சார். சொன்னா கேளுங்க கண்ணை துடைங்க. EBFல் இந்த பஞ்சாயத்தை பைசல் பண்ணிடுவோம் கவலைப்படாதீங்க. வெற்றி நமதே.

      Delete
  52. கலைச்சேவை??? புரிவோரும்
    பொது வாழ்வில் நுழைபவர்தாம்.
    சுட்டுரையில் கவியெழுதி;
    வலைத்தளத்தில் கதைத்திருந்து
    அரிதாரம் பூச்சொழுகும்,அவதார
    நடிப்பெல்லாம்
    அரியணைக்கு ஆகாது,அஃதுனக்கு
    ஏலாது.
    தலை கொண்ட மனிதருக்குள்
    தலைவன் ஒருவன் வரும் நாளில்!!!
    கார் சூழ்ந்த மேகங்கள்
    ஒளி பொருந்தி வரும் நாளில்!!!
    பார் காணும், அப்போழ்தில்
    எம் தலைவன் யாமறிவோம்!!!
    போர் வரும் தேதியுரைப்போம்
    உரமும்,திறமுமிருந்தால்
    களம் காண வருவீரோ
    கற்பனையின் அற்பங்களே!!!.

    ReplyDelete
  53. கலைச்சேவை??? புரிவோரும்
    பொது வாழ்வில் நுழைபவர்தாம்.
    சுட்டுரையில் கவியெழுதி;
    வலைத்தளத்தில் கதைத்திருந்து
    அரிதாரம் பூச்சொழுகும்,அவதார
    நடிப்பெல்லாம்
    அரியணைக்கு ஆகாது,அஃதுனக்கு
    ஏலாது.
    தலை கொண்ட மனிதருக்குள்
    தலைவன் ஒருவன் வரும் நாளில்!!!
    கார் சூழ்ந்த மேகங்கள்
    ஒளி பொருந்தி வரும் நாளில்!!!
    பார் காணும், அப்போழ்தில்
    எம் தலைவன் யாமறிவோம்!!!
    போர் வரும் தேதியுரைப்போம்
    உரமும்,திறமுமிருந்தால்
    களம் காண வருவீரோ
    கற்பனையின் அற்பங்களே!!!.

    ReplyDelete
  54. @ கோவை நண்பர்களே : உங்களூரில் popular கேபிள் டி.வி. சேனல்கள் ஏதேனும் இரண்டின் பெயர் & தொலைபேசி நம்பர்களை சேகரித்து அனுப்பிட முடியுமா - ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் அவர்களுக்கு
      நான் கோவைக்கும்,திருப்பூருக்கும் இடைப்பட்ட எல்லைக்கோட்டில் ஓர் ஒடுங்கிய(அழகான)கிராமத்தில் வாழும் சாமான்யன்.அதனால் உங்களுக்கு மனமிருந்தும் உதவ முடியாத சூழல்.

      Delete
    2. சார் கேபிள் நண்பர விசாரிச்சேன் ..பாலிமர் என சொன்னான் ..இன்னுமொரு சேனலும் கேட்டிருக்கேன்...போன் நம்பர அவன் அனுப்புனதும் தரேன்

      Delete
    3. நண்பரே புத்தகத் திருவிழாக்கு வருவீர்களா

      Delete
  55. சிக்பில் ஸ்பெசல்:-

    *இந்தாண்டின் டாப்3 ல் வரும் வாய்ப்பு சர்வ நிச்சயம்.

    மீதி படிச்சிட்டு சொல்றேன்...
    (ஆளாலுக்கு கையில் எடுத்த கல்லெலாம் கீழே போட்ருங்க...ப்ளீஸ்!)

    ReplyDelete