Powered By Blogger

Thursday, June 02, 2016

ஜூனின் சூரர்கள் !

ஹலோ...ஹலோ...மைக் டெஸ்டிங்.....! கடலைமிட்டாய்க் காவியமாய் சென்ற பதிவு அமைந்திட - ஜூன் மாதப் புது இதழ்கள் பற்றி யாருக்குமே ஞாபகமின்றிப் போய் விட்டது !! ஜூலியாவும், ரின்டின்னும், ரெட் டஸ்டும், இரவுக் கழுகாரோடு உங்கள் இல்லங்களை எட்டிப் பிடித்து விட்டார்களா ? நேற்றைக்கே கூரியர்கள் அனைத்தும் சீக்கிரமாகவே கிளம்பி விட்டதால் - இந்நேரம் நிச்சயம் பட்டுவாடாக்கள் ஆகியிருக்க வேண்டும் !

இந்தப் பகுதியினை இம்மாத ரெகுலர் இதழ்களின் பொருட்டு பயன்படுத்திக் கொள்வோமே நண்பர்களே ?! 
P.S : சென்னையில் என் பெயர் டைகர் இதழினைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து மிகக் குறைவான மின்னஞ்சல்களே வந்துள்ளன இது வரையிலும் ! LAST CHANCE !! இன்றைக்கு இரவுக்குள் ஒரு மெயில் தட்டி விட்டால் பிரதிகள் சென்னை வந்தடையும் ; இல்லையேல் கூரியர்களின் உங்களின் இல்லங்களுக்கே பயணமாகிடும் guys !

180 comments:

  1. கடலைமிட்டாய் is the strength of my energy......................

    ReplyDelete
  2. என்னே கடலை மிட்டாய்க்கு வந்த சோதனை ..;-))

    ReplyDelete
  3. சார் அட்டைப்படங்கள் அனைத்யதும் தூள்... அதிலும் கமான்சே சான்சே இல்லை
    2.டெக்ஸ்
    3.ரின்டின்
    4.ஜூலியா
    தல தளபதி புக் மார்க் கலக்கல்

    ReplyDelete
  4. எனக்கு புத்தகம் வந்து விட்டதாக தகவல் ..ஆனால் இன்று மாலை ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு தாரமங்கலம் செல்ல இரவு பத்தை தாண்டி விடும் சார் ...கொரியர் திறந்து இருக்க வேண்டும் என வேண்டி கொண்டே இருக்கிறேன் ....;-)

    ReplyDelete
  5. பலரிடமும் வந்த தகவல் இந்த முறை டெக்ஸ் மறுபதிப்பு சித்திரங்கள் கலக்கல் ...என்று

    ..எனக்கு அந்த திருப்தியே போதும் சார் ..;-)

    ReplyDelete

  6. உள்ளேன் ஐயா!!!

    பார்ஷல் பத்து மணிக்கே வந்திடுச்சே!!!:)

    ReplyDelete
  7. புத்தகங்கள் கைப்பற்றியாகிட்டது சார்...

    அருமையான உழைப்பு ஒவ்வொரு புத்தகத்திலும் தெரிகிறது.

    அட்டைப்படங்கள் நேரிலே இன்னும் அருமை..

    கமான்சே அட்டைக்கே முதலிடம்,டெக்ஸ் அட்டைப்படம் 2ம் இடம்தான் ,கதையில் இம்முறை மீண்டும் தங்கத்தை தட்டிவிடுவார்...மற்ற இரண்டும் 3ம் இடத்தை பிடிக்கின்றன...
    முதல் புரட்டலில் அனைத்து வண்ண புத்தகங்களும் அருமை...

    ReplyDelete
  8. First look ல்
    பழி வாங்கும் புயல் - செம்ம
    கமான்சே - சூப்பரப்பு
    ஜூலியா - அடடே அடடே


    &

    ரின்டின் கேன் - வர்ரே வாஹ்!!!!


    (இன்னொரு பெரிய நிம்மதி தூக்க மாத்திரை எதுவும் இந்த மாதம் கிடையாது)
    (சும்மா டமாசு. யாரும் கோச்சுகாதீக அப்பு!) :-)

    ReplyDelete
    Replies
    1. இன்னும் dp மாற்றாததேனோ குழந்தை மன கண்ணா

      Delete
  9. Sorry dp மாத்தாம கமெண்டிட்டேன்.!!!

    ReplyDelete
    Replies
    1. ஹையா நம்பள்கு ஜோடி வந்தாச்சு

      Delete
    2. கிட்டும்,ரின் டினும் ஒரே ஆள் என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா

      Delete
    3. சல்லூம் @கிட் வேறு,ரின் டின் வேறு....
      உறுதியாக எங்களின் கண்ணால பார்த்தோம் ...சென்ற ஞாயிறு கிட் வீட்டில் நடந்த கறி விருந்தில் பல மணி நேரம் கிட் எங்களோடு இருந்தார் ,அவர் போன் எங்களிடம் இருந்தது.அப்போது கூட நண்பர் ரின் டின் பதிவிட்டார்..சோ ,ஆணித்தரமாக இருவரும் வேறு வேறு ஐடிதான் ...

      Delete
    4. ஷல்லூம் @
      ஆஹா! அண்ணணுக்கு என்னா அறிவு!?!?!

      என்னையும் சந்தேகப்பட்டுட்டாங்க. நல்லாப் பாத்துக்குங்க நானும் பெரிய ஆளுதான். நானும் பெரிய ஆளுதான் :-)

      நல்லாப் பாருங்க ரெண்டு dp யிலயும் பெரிய வித்தியாசம் இருக்கு. ரின்டின் வேறுவேறு திசையில் நடக்கிறது. இதைவிட பெரிய ஆதாரப் வேண்டுமா என்ன?

      Delete
  10. இம்முறை கமான்சே ஓவியங்கள் +வர்ணம் சான்சே இல்லை...டாப் டக்கர் சார் ...

    19ம் பக்கத்தில் இரு மலைகளை நேரில் பார்ப்பது போன்றே பிரமிப்பு...

    மலையின் குதிரை தடம்,ஓவியத்தின் உச்சம்...எதிர் மலையின் தோற்றம் என்ன ஆழமான ஓவியம்...

    34ம் பக்கம் ஒற்றை மரத்தின் வர்ண ஜாலங்களை தவற விடாதீர்கள் நண்பர்களே...மேலும் பல ஓவியங்கள் இம்முறை கண்ணை பறிக்கின்றன...
    கமான்சே உடன் கடும் போட்டி உண்டு டெக்சுக்கு என்பது பட்டவர்தனமாக புலனாகிறது...

    ReplyDelete
  11. In CBF 2016, we are expecting the following announcement from our Editor - XIII in Color by 2017.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பிரியமுடன் பிணைக்கைதியில் வாசகர் கடிதம் இரண்டாவதன் மூலம் கோடு போட்டுட்டார்...அவர அசய விடாம பாத்துக்குறது உங்கள் விருப்பங்களின் கரங்களில்

      Delete
  12. சார் டெக்ஸ் பின்னட்டை கலக்கல் ..மூன்று முழு வண்ணக்கட்டங்கள்.....வழக்கம் போல ூதா நிறம் மனதைக் கொள்ளை கொண்டன. மின்னலின் மைந்தனின் பவாபு இரண்டுமாதங்களுக்கு முன் பழைய புத்தகக் கடையில் முன் பின் அட்டயோடு கிடைக்க ....சும்மா பத்து பக்கங்களை மட்டும புரட்டினேன்..வண்ணத்தில் படிக்க ுள்ளதால் ஆவலை கட்டுப் படுத்திக் கொண்டு தள்ளி விட்டேன் ...அப்படியே பக்கங்களை புரட்டினால் மனதை வருடும் வண்ணத்தில் பக்கங்கள் சிலிர்க்கின்றன. இதுவரை வந்த டைக்ஸ் கதைகளை விட அதிக அற்புதமான வண்ணங்களில் தவழ்வதாக மனதிற்குப் படுகிறதே . அருமை சார் . ஒரே குறை திறந்ததும் கதை தொடர்வது .விலய கட்டுக்குள் வைக்க நீங்கள் அடிக்கும் பல்டி புரிந்தாலும் , ஏதாவது செய்யுங்கள் சார் என கேட்குதே மனது .

    ReplyDelete
  13. ஒரே குறை.................not yet seen the books.

    ReplyDelete
  14. புத்தகங்களை காலை 9.30 மணிக்கே பெற்றாகி விட்டது,அனைத்தும் அசத்தல், அடுத்த வெளியீடுகள்,ஆசிரியரின் டைம்லைன் மட்டும்தான் படிச்சிருக்கேன்.மத்ததெல்லாம் இனிதான்.

    ReplyDelete
  15. சார் கமான்சே பச்சைவண்ண முதல் பக்கம் தூள் . ஐ , எனது விமர்சனமும் ...சார் என்ன வருகிறதா ....இரத்தப் படலம் அப்ப அடுத்த மாதம் கிடையாதா .

    ReplyDelete
    Replies
    1. Steel, I requested for the complete XIII collection in colour.

      Delete
    2. விட்றாதீங்க...கெட்டியா பிடிங்க ...ாசிரியர் அடுத்த வருடம் கண்டிப்பா தந்தே ஆகணும் ..நாமளும் எவ்விலை கொடுத்தேணும் வாங்கியே தீரணும் காமிக்ஸ் காவியத்த..பொக்கிசத்த ...கனவ... இழந்த நெனவ...நிறத்த

      Delete
    3. :)

      +1

      இரத்தப் படலம் COMPLETE COLLECTION (IN TWO VOLUME) HD COLORல் அடுத்த மாதம் கிடையாதா Edit sir?

      Delete
  16. பி.பி .கை ஹாட் லைன் வடிவமைப்பு அட்டகாசம் ...வண்ணக்கலவைகளள் ஹாட் லைனில் கூட தூள் கிளப்புதே..வண்ணங்கள்தாம் எவ்வளவு அழகு .
    நண்பர்களே இரண்டாவது வாசகர் கடிதத்த பாருங்கள் ....அடுத்த வருடம் இரத்தப் படலம் வருவத யாராலும்..மன்னிச்சுக்கங்க ..ஹி...ஹி..ஹி....எவராலும் ஏன் டைகராலும் தடுக்க முடியாது ...சாரி சார் அட்வென்சரில் ஏதும் போடலியே ...அப்ப அதுல ிரத்தப்படல ிறுதி இதழ்தானே .இமயத்தில் மாயாவி இன்னும் படித்ததில்லை என நினைக்கிறேன்...சிக் பில் ஆஹா மாதம் தோறும் அடுத்தமாதத்த ேக்கத்தோட பாக்க வச்சுடுறீங்களே . இனி இரண்டு நாட்கள் படித்துக் கொண்டே தவிக்கணுமே ....டைகரும் , மு மி யும் வந்த பின்தானே நிம்மதி வசப்படுங்றதே பாழும் மனது .

    ReplyDelete
  17. #எடிட்டரின்_ஒரு_பிடிவாதப்படலம்

    (இப்படி பிடிவாதமாய் நம் வாசகர்களுக்கென்றே டெக்ஸ் ன் முதல்கதை ரீபிரிண்டை கலரில் தயாரித்திருப்பது அருமை / கா.க.காலம் இதில் சேராது )

    வாவ்...!!
    வாவ்...!!
    நாம் எதிர்பார்த்த படி
    மிகவும் அருமையாக வந்துள்ளார்
    இம்மாத
    டெக்ஸ் கலர் " #பழிவாங்கும்_புயல் "

    அட்டை யில் உள்ள டெக்ஸ் ஐ ஒரே மாதிரியான தோற்றத்தில் நாம் பார்த்துப் பார்த்து சலித்திருந்தாலும்!!
    இக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல இருப்பது நன்று..

    இதுபோன்ற தோற்றம் எவ்வளவு பேர்க்குப் பிடிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வியே !!

    ஒரு பக்கத்திற்கு ஆறு கட்டங்களாக (சில பக்கங்களை தவிர்த்து) இருப்பதும் படிக்க கூடுதலான ஒரு சிறப்பு..
    இது வரை கலரில் வந்த டெக்ஸ் கதைகளிலிலே
    இது டாலடிக்கின்றது
    (மஞ்சள் ப்ளு கலரில் ஸ்பெஷலாக காட்சியளிக்கிறார் தல)

    ஏற்கனவே அதிக முறைகள் நான் இக்கதையினை படித்திருப்பதால் மறுபடியும் கலரில் படிக்க அதே ஆவலைத்தான் தூண்டுகிறது.

    வசனங்களும் சரியான அளவிலேயே பலூனில் அமைக்கப்பட்டிருக்கிறது
    #முக்கியமான வசனங்கள் பெரியதாய் போல்ட் செய்திருப்பதும் நன்றாக உள்ளது..
    மேலும் ஒரு சில பக்கங்களில் வசனங்கள் ஒன்று போல் அல்லாமல் வகைவகையாய் சிறிதும்பெரிதுமாய் இருப்பது பொருத்தமில்லாமல் உள்ளது

    (பின்னட்டை இந்த பகுதி மட்டும் கருப்பு வெள்ளை)

    #சென்னை_புக்பேரில்_அதகளம்_செய்திடுவார்_டெக்ஸ்_வில்லர்

    நம் எதிர்பார்ப்பினை மிகவும் அழகாக அருமையாக பூர்த்தி செய்திருக்கிறார்
    #எடிட்டர்_விஜயன்_சார்

    #உங்களுக்கு_ஒரு_ராயல்_சல்யூட்

    ReplyDelete
  18. ரின் டின் கேன்
    இம்மாதம் நல்ல ஸ்கோரில் செஞ்சுரி
    அடித்திருக்கிறது

    வசனங்கள் செம்மை
    ஒரு பார்ட்ஐ படித்து ரித்து முடிப்பதற்க்குள் அடுத்த பாக்ஸ்ஸில் அடுத்த சரவெடி

    சிரித்து சிரித்து மா(ள)ய முடியவில்லை

    முதல் பார்ட்டில் பேய் முழி முழித்த ரின்டின்
    இரண்டாவதில் சிக்ஸர் அடித்துள்ளது

    (ஈரோடு பூனையார் பேந்த பேந்த முழிக்கும்படங்கள் ஐந்து)

    டெக்ஸ் 9/10
    ரின்டின் 9/10

    ReplyDelete
  19. Friends, someone please guide me to type in Tamil.

    ReplyDelete
    Replies
    1. மொபைல் யூஸ் பண்றீங்கன்னா

      எழுத்தாணி அல்லது செல்லினம் ஆப்ஸ் இன்ஸ்டால் பண்ணிக்கங்க

      Delete
  20. @ ALL : நண்பர்களே : சென்னையில் என் பெயர் டைகர் இதழினைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து மிகக் குறைவான மின்னஞ்சல்களே வந்துள்ளன இது வரையிலும் ! LAST CHANCE !! இன்றைக்கு இரவுக்குள் ஒரு மெயில் தட்டி விட்டால் பிரதிகள் சென்னை வந்தடையும் ; இல்லையேல் கூரியர்களின் உங்களின் இல்லங்களுக்கே பயணமாகிடும் !

    ReplyDelete
  21. பழிவாங்கும் புயல் @

    பல யுகங்களாக வண்ணத்தில் இதைப்பார்ப்போமா என்ற ஏக்கத்தை இன்று போக்கி விட்டீர்கள் ,அதற்கு மிகப்பெரிய நன்றிகள் சார்....

    இம்முறை அட்டைப்படம் மற்றும் புத்தக பேனல்கள் அமைப்பு ,வண்ணச்சேர்க்கை என அனைத்திலும் கா.க.காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை சரிக்கட்டி விட்டீர்கள்,பெரிய சபாஷ் உங்கள் அணிக்கு சார்....

    புத்தக வண்ணத்தில் இம்முறை அதீத கவனத்துடன் வேலை பார்த்துள்ளீர்கள் என்பது பக்கங்களை புரட்டும் போது புலனாகிறது சார்.
    கவர்ந்த அம்சங்கள்-
    அட்டைப்படம்
    அத்தியாயங்களில் தலைப்பு
    பின்னணி நீல வர்ணங்கள்
    பாலைவன காட்சிகளின் நேர்த்தி
    இருளின் நிழல்கள்
    ராணுவ வீரர்கள் உடைகள் பல வித சூழலில்
    ஓவியங்களில் தெளிவான வண்ணக்கலவை (லயன்250போலவே )...
    சில பல இடங்களில் சூழ்நிலை வர்ணனை என,

    இன்னும் நிறைய நிறைய ....

    குறை...

    கிளைமாக்சின் இறுதி பக்கம் கருப்பு வெள்ளையில் ,உள் அட்டையில் இறுதி பேனல்கள் ஓகே.ஆனால் அதையும் வண்ணத்தில் பிரிண்ட் பண்ணாதது ஏனோ???இது உங்களுக்கு தெரியாமல் நடந்ததா சார் ???

    ReplyDelete
  22. இன்று மதியம் 3 மணிக்குத்தான் கூரியர்
    வந்தது. இரவு8-30அளவில்தான் படிக்க
    முடியும்.ST courier ரொம்ப ஸ்லோ.

    ReplyDelete
  23. ஹைய்யா! புத்தகங்களை வாங்கிட்டேன்... ரொம்ப நாளைக்குப் அப்புறம், அனுப்பி வைத்த அடுத்த நாளே! God is செம!
    ட்ராக்கிங் ஐடி கொடுத்து உதவிய நம் அலுவலக சகோக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. TEX Book Mark is FANTASTIC and one uncle is there in Tiger Book Mark.

    ReplyDelete
  25. எனக்கு இன்னும் வரவில்லை :(

    ReplyDelete
  26. நண்பர்களே

    சென்னை புத்தக கண்காட்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் _/\_

    ReplyDelete

  27. என்னத்தைச் சொல்ல?

    வழக்கத்தைவிடவும் இந்தமுறை கொரியர் கவரை வாங்கும்போது அப்படியொரு பதட்டம்! காரணம் - என்னை பல வருடங்களாகக் கருப்பு வெள்ளையில் பிரம்மிக்கச் செய்திருந்த 'பழிவாங்கும் புயல்' - இப்போது டாலடிக்கும் வண்ணத்தில்... என் பல வருடக் கனவு!
    அட்டையில் இறுக்கமான முகத்துடன் டெக்ஸ் வீற்றிருக்க, உட்புறப் பக்கங்களை அவசர அவசரமாகப் புரட்டியபோது ஆச்சர்யப்பட்டுப் போனேன்!! '20 வருடங்களுக்கு முந்திய சித்திரங்கள்தானே.. கொஞ்சம் எசகுபிசகாய்தான் இருக்கும்' என்று உள்ளுக்குள் நினைத்திருந்தேனோ என்னவோ? ... ஆனால் பக்கங்களைப் புரட்டியதும் காணக்கிடைத்த Clarityயில் துள்ளிக்குதிக்காத குறைதான்!

    என் பிரியமான கதையை இனி அணு அணுவாய்... ரசித்து ரசித்துப் படிக்க வேண்டும்...

    எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை எடிட்டர் சார்! மனது நிரம்பியிருக்கிறது! _/\_ _/\_

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : கார்சனின் கடந்த காலத்தில் நேர்ந்த பிழைகளை சரி செய்ய நமக்கொரு வாய்ப்பல்லவா இது ? அதனால் தான் இயன்றதைச் செய்ய முனைந்தோம் !

      Delete
  28. Dear Editor

    Received the books.

    The printing quality is awesome this month. Thanks a lot.

    Comanche arts UNBELIEVABLE.

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : நன்றிகள் சார் ! இப்போதெல்லாம் பிரிண்டிங் மேற்பார்வைப் பொறுப்பை ஜூனியர் எடிட்டர் ஏற்றுக்கொள்கிறார் என்பதால் என் பிழைப்பு கொஞ்சம் இலகுவாகிறது !

      Delete
  29. வெற்றி வெற்றி வெற்றி ....
    கோவில்பட்டி கடலை மிட்டாய் பார்சலை கைப்பற்றி ஆகிவிட்டது. மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.நாளை இரவு நம்முடன் பயணித்து சனிக்கிழமை ஆசிரியர் கையால் நண்பர்களுக்கு அளிக்கப்படும்..டும்..டும்..
    கோவில்பட்டி நண்பர் ராஜசேகரன் அன்புக்கு இந்த காமிக்ஸ் நாடே அடிமை...

    ReplyDelete
    Replies
    1. சூப்பரப்பு!!!!

      அப்புறம், நாம ட்ரெய்ன்ல சாப்பிடுவதற்கு தனியா ஒரு பார்ஷல் இருக்குன்னு சொல்லி இருந்திங்களே?! அதைப்பற்றி ஒண்ணுமே சொல்லயே?!

      நான் ஒண்ணும் எனக்காக கேட்கலை. நண்பர்களுக்காகத்தான்.!

      நம்புங்க!!!

      Delete
    2. விஜயராகவன் சார் நீங்க கொடுக்கற பில்டப்ப பார்த்தா கடலை மிட்டாய் கண்டெய்னர் ல வரும் போல இருக்கே.? ? :D

      Delete
    3. காமிக்ஸ் உலகமே என்று சொல்லுங்கள்!

      Delete
    4. ஆசிரியருக்கு அந்த சிரமம் தரவேண்டாம் நண்பரே. அவர் கையால் பொக்கிஷங்களை மட்டுமே பெறவேண்டும். (கூலிங் கிளாஸ் மாட்டி இரும்புக்குதிரையில் நம்ம ஆசிரியர் போறத பாத்திருக்கீங்களா? நான் அடிக்கடி பார்ப்பேன்)

      Delete
  30. This is an extra work to wait for the mails who would like to receive the books. Dear EDI do not give the option to choose... its just a waste of time... proceed on with ur regular agenda

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிம்பா ,நலமா பார்த்து ஒரு வருடமே ஆகப்போவுது....

      புத்தக விழாக்களில் இம்மாதிரியான ஸ்பெசல் இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
      மின்னும் மரணம் 1000....
      என் பெயர் டைகர் 450....
      இனிமேல் தொடர இருப்பது
      இரத்த கோட்டை 450...
      இரத்த படலம் 2400...
      டெக்ஸ் டைஜஸ்ட் 500...
      இப்படி விலைகளில் முன்பதிவு செய்துவிட்டு ,விழாவில் ஆசிரியர் மற்றும் மூத்த ஆசிரியர் அய்யா அவர்கள் கையால் வாங்க விரும்பும் நண்பர்கள் என்ன செய்ய நண்பரே ???...
      புத்தகம் வீட்டுக்கு வந்த பிறகு அதை எடுத்து கொண்டு விழாவுக்கு ஓட முடியுமா ???...
      அல்லது இவ்வளவு விலையில் இன்னொரு காப்பி தான் வாங்க முடியுமா ???...
      முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கு செய்யும் இந்த வேலை நிச்சயமாக ஆசிரியருக்கு சங்கடத்தை தராது நண்பரே...இந்த நண்பர்கள் விழாவில் பெற ஆசிரியர் செய்யும் இந்த வேலை வீணானது கிடையாது நண்பரே,மிக மிக அத்தியாவசியமானது மற்றும் உபயோகமானது.....

      Delete
  31. இம்மாத இதழ்கள் கைக்கு வந்துவிட்டன. பார்க்க மனநிறைவு! இனிதான் படிக்க வேண்டும். அதுவும் ரிண்டினின் ரசிகன் நான், பழிவாங்கும் புயலைப் பற்றி நண்பர்கள் ஹைப் அதிகமிருப்பதால் வாசிக்க ஆவல் கொண்டுள்ளேன். எல்லாவற்றையும் விட சனிக்கிழமை ‘டைகரை’க் காணவிருக்கும் ஆவலைத்தான் அடக்கமுடியவில்லை. என் சந்தா இதழ்களை கூரியரில் பெற்றுக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். புக்பேரில் புத்தகத்தைப் பார்த்துவிடலாமே, அது போதும்! :-)))

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எந்தப் புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை எனினும் என் பையன், ரிண்டின் அட்டையைப் பார்த்துவிட்டு, ‘பாருங்கப்பா இந்த நாய் திருடனைப்போய் கொஞ்சிகிட்டு இருக்கு’ என மிகச்சரியாக கமெண்ட் அடித்தான். கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்ட் என்பது இதுதான் போலும், ஆச்சரியமாக இருந்தது.

      Delete
    2. ஆதி தாமிரா : குட்டீஸ்களின் அந்த uncomplicated சிந்தனைபாணி சில சமயங்களில் நம்மை விடப் பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தவை போலும் !!

      Delete
  32. திருச்சி நண்பர்களுக்கு புத்தகங்கள் கிடைத்துவிட்டதா? எனக்கு இந்த முறை தாமதபடுத்தி விட்டார்களா ST கொரியர்? :(

    ReplyDelete
  33. I received the books.
    My rating
    Tex Willer Picture 8/10 Story 10/10
    Comanche Picture 10/10 Story 10/10
    Rin tin Picture 10/10 Story 10/10 (Super comedy)
    Julia Picture 6/10 Story 8/10

    I read all books today itself.

    ReplyDelete
    Replies
    1. Senthilnathan Krishnan : 38/40 !!! That's a lot !!

      Delete
  34. பிரியமுடன் ஒரு பிணைக்கைதி :-

    ஹாஹாஹா!!!😂😂😂

    வசனங்கள் வெடிச்சிரிப்பு ரகம் 👌🏻👌🏻😂


    பாப்லோவின் ஒவ்வொரு ஐடியாவும் வார்டன் அதனை செயல்படுத்தும் விதங்களும் குபீர் சிரிப்பை வரவழைத்தன. 😂😂😂

    பாப்லோவ் - பால்கோவா
    புஜ்ஜிமா - பஜ்ஜிமாவு
    இவை ரின்டின்னின் பகுத்தறிவை பறைசாற்றுகின்றன. 😇😇

    ரின்டின்கேனின் சூரத்தனங்களும், புத்திசாலித்தனமும்??? நகைச்சுவையின் சிகரங்கள் 😛😛.

    எடிட்டர் சார்,
    தயவு செய்து வருடம் ஒருமுறையாவது ரின்டின் கேனின் சாகசங்களை நாங்கள் ரசிக்க வழிசெய்யுங்கள்!!! 🙏🏻🙏🏻🙏🏻😃

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN ://வருடம் ஒருமுறையாவது ரின்டின் கேனின் சாகசங்களை நாங்கள் ரசிக்க வழிசெய்யுங்கள்!!! //

      பெரும்பான்மையின் ரசனைகளுக்கு ரி.டி.கே.உகந்து நிற்பின் - நிச்சயமாய் நமது 4 கால் சிந்தனையாளரின் இடத்தை என்னால் மறுக்க இயலாது !

      Delete
  35. ஜூன் திருவிழாவில் நேரடியாக கலந்து கொள்ள இயலாவிடினும் இருந்த இடத்தில் இருந்து கொண்டாடுகிறேன் ஜூன் ரெகுலர் இதழ்களுடனும் ஸ்பெஷல் இதழ்களுடனும். நேரிடையாக கலந்து கொள்ளும் நண்பர்கள் வைபவத்தை உடனுக்குடன் youtube ,whatsapp facebook வாயிலாக வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன்!

    ReplyDelete
  36. தப்புக்கும் மேலான தப்பு!
    "பழி வாங்கும் புயல் இதழ்:-காமிக்ஸ் டைம் முன் அட்டையில் வந்தது அநியாயம் என்றால் கதையின் இறுதிப் பக்கம் பின் அட்டையில் வந்தது அதை விட அநியாயம்!"
    இனிமேல் இப்படி பண்ணாதீர்கள் Please!

    ReplyDelete
    Replies
    1. Blizy Babu : "தோட்டா டைம்" முன்னட்டை உட்பக்கத்தில் வெளியாவது இது முதல்முறை அல்லவே ?! "தலையில்லாப் போராளியை" புரட்டித் தான் பாருங்களேன் ? எழுத வேறு இடமே இல்லையெனும் போது, கிடைத்த இடத்தில் எழுதுவதில் தவறு உள்ளதாய் நான் நினைக்கவில்லை !

      சில தருணங்களில் வேறு மார்க்கங்களே இல்லாது போகும் போது சில தீர்மானங்கள் அவசியமாகிப் போகின்றன !

      Delete
  37. கமான்சே: இதுவரை வந்துள்ள இந்த வருடத்தின் அட்டைப்படங்களில் one of the top ராப்பர் என்றால் மிகையில்லை! அடர்ந்த வண்ண மெருகூட்டலால், அப்படியே சும்மா டாலடிக்கிறது. ஆனால், அந்த குதிரையின் பிம்பம் நிழலுருவமாக காட்டப்பட்டுள்ளது (ஒரிஜினலில் இல்லாத) ஒரு சின்ன நெருடல். பனிப்பொழிவின் போது நிழல் படிய வாய்ப்பேது...? உள்ளே, சித்திரங்களும், அதற்கு சேர்க்கப்பட்ட கண்களை உறுத்தாத அடர்ந்த வர்ணக்கலவையும் அட்டகாசம்., இதன் ஒட்டு மொத்த 15 பாகங்களையும் வெளியிட்டு முடித்தப் பின், நாம் இதன் முழுத் தொகுப்பையும் மறுபதிப்பாக வெளி வருவதற்கு கோரி நிற்கப் போவது நிச்சயம்?

    டெக்ஸ்: டெக்ஸ் ன் one of the smash hit வர்ணத்தில் மறுபதிப்பாக 2-வது இதழ். 1965-ல் படைக்கப்பட்ட இதழாக இருந்தாலும், சமீபத்திய வர்ணகலவையில் அட்டகாசமாக இருக்கிறது. டெக்ஸ் ன் Early Days படைபென்பதால், டெக்ஸ் படு இளமையாக தோன்றுகிறார். ஆனால், கடைசிப் பக்கம் வண்ணத்தில் இல்லாமல் பின்னட்டையின் உள்ளே B/W அச்சிட்டுள்ளது கொஞ்சம் ஓவர். (இன்னும் ஒரே ஒருப் பக்கம் சேர்த்தால் என்னப்பா என்று சிம்பிளாய் கேள்விக் கேட்டாலும், Professional லாக சிலபல பதில்கள் இருக்குமென்பது மறுப்பதற்கில்லை. ஆனால். கடந்த மாதம் Smurfs இதழில் கூடுதலாக 16 பக்கங்கள் எவ்விதம் சாத்தியமானதோ என்று சிந்தனைகள் சிதறடிக்கின்றன...!)

    ரின்டின்கேன்: சித்திரங்களும், வர்ணக்கலவைகளையும் பார்த்தவுடனே இந்த இதழ் மீது ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. ரின்டின்கேன் என்னதான் வாலாட்டினாலும் வருடத்திற்கு ஒரு ஸ்லாட் தான் எனும் போது, அதை தக்கவைக்குமா என்று பார்க்க வேண்டும்? Let wait and see, after reading.

    ஜூலியா : அட்டைப்படம் சிம்ப்ளி breath taking. கடலின் அலைகள் எப்படி ஓயாதோ.. அதைப்போன்று நிமிடங்களும் நிற்பதில்லை...! ஆனால், இந்த ‘நின்றுப் போன நிமிடங்கள்’ டைட்டிலே கதையின் மீது ஒருவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இந்த மாதத்தின் B/W மறுபதிப்பை டெக்ஸ் வண்ணத்தில் குத்தகைக்கு எடுத்து விட்டபடியால், ரெகுலர் இதழில் B/W கோட்டாவில் ஜூலியா. என்னதான், வண்ணயிதழ்கள் அழகு என்றாலும், B/W உள்ள கவர்ச்சியே தனிதான். முதல் இரண்டுப் பக்கத்தில் உள்ள பலூன் ஃபான்ட் அழகாக உள்ளது!, அதையே முழுமையாக பயன் படுத்தியிருக்கலாமே...? Female Lead என்று இங்கே கோலோச்சும் மாடஸ்டிக்கு இவர் tough கொடுப்பாரா..? இல்லை, அவருக்கே கல்தா கொடுப்பாரா..? இல்லை, தானே VRS வாங்குவாரா ...? என்ற எதிர்பார்ப்பின் நடுவில் ஜூலியா...?

    ReplyDelete
    Replies
    1. @ மொய்தீன் MH

      புத்தகங்களை கையில் பெற்றதும் பெற்ற உணர்வை,பார்த்த பார்வையை அருமையாக வரிசைபடுத்தியுள்ளிர்கள்..! ஜூலியா முடித்துவிட்டு நின்றுபோய் நிற்கிறேன் நான்..! நாளை விழாவிற்கு வந்துவிடுங்கள்..!!!

      Delete
    2. MH Mohideen : சார்..பனிமண்டலங்களில் வெப்பம் தான் இராதே தவிர, கதிரவனும், அதன் வெளிச்சமும் இருக்கும்தானே ? வெளிச்சம் இருக்கும் பொழுது நிழலும் சாத்தியம் அல்லவா ?

      டெக்ஸ் வில்லரில் அந்தக் கடைசி ஒற்றைப் பக்கத்தின் பொருட்டு உட்பக்க எண்ணிக்கையினைக் கூட்டுவதாயின் குறைந்த பட்சம் 16 பக்கங்களை அதிகரித்தாக வேண்டும். இதற்கென எகிறும் செலவு ஒருபக்கமிருக்க, எஞ்சிடும் 15 பக்கங்களுக்கும் filler pages தயார் செய்வதற்குள் நாக்குத் தொங்கிப் போய் விடும் - இந்த மாதத்துக் கத்தி மேல் நடக்கும் deadline -லும் தாமதம் நேர்ந்திருக்கும் !

      Delete
  38. @போராட்ட குழு , சனி அன்று மூன்று யானைகளில் சந்திக்கலாமா அல்லது புக் ஸ்டால்லில் சந்திக்கலாமா?
    நேரில் சந்திக்க ஆசை..

    ReplyDelete
    Replies
    1. @ சத்யா

      கடை சாவியே கரகாட்ட கோஷ்டி கையில் தான் உள்ளது. சரவெடி சந்திப்பு நிச்சயம்..!

      Delete
  39. Since all my friends are telling Excellent, Wonderful, Gorgeous, Stunning, Elegant, Tremendous, Marvelous, Spectacular, Dazzling, Amazing, Marvelous, Fabulous, Exquisite, Mind-blowing, etc., etc., about this month books, I too have no other option.

    But, the last page of Tex…………………………………………

    ReplyDelete
    Replies
    1. @ செந்தில் விநாயகம்

      வரும்போது கடந்தமுறை தூக்கிபிடிச்ச 'தில் இருந்தால் திகில் உண்டு..!' போஸ்டரை கொண்டுட்டு வந்துடுங்க.!

      Delete
    2. mayavi.siva: 'ரத்தம் இருந்தால் தான் ரத்தப்படலம்ன்னு', எடிட்டர் சொல்லிடிவாருன்னு பயம்மா இருக்கு.

      Delete
    3. Senthil Vinayagam : நண்பர்கள் சிலாகிப்பதால் நீங்களும் அதனையே வழிமொழியும் அவசியம் கிடையாதே ! பிடிக்காது போயிருந்தால் அதனையும் தயங்காது சொல்லலாம் !

      Delete
    4. Editor Sir, not just because of my friends I have made the above statement.
      Truly telling, சும்மா தெறிக்க விட்டுட்டீங்க!!!

      Delete
  40. சார்.!! "என் பெயர் டைகர்" ஒரு பிரதியை சேலம் நேசன் புத்தக நிலையத்திற்கு அனுப்பி வையுங்கள். நான் பெற்று கொள்கிறேன். பேங்கும், போஸ்ட் ஆபீசூம் இயங்கும் நேரம் நான் வேலையில் இருப்பதால் பணம் அனுப்ப இயலவில்லை. எனது ட்யூடீ 6 மணிக்கு முடிஞ்ததும் நேசன் புத்தக நிலயத்தில் மட்டுமே என்னால் புத்தகம் பெற்று கொள்ள முடியும். அதனால், ஒரு பிரதியை சேலம் நேசன் புத்தக நிலையத்திற்கு அனுப்பி வையுங்கள். PLEASE.!! ---from, jagath kumar, salem.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே 6 முத்து mini comics'ஸும் அனுப்புங்கள் . plsssss.!!!

      Delete
    2. Jagath Kumar : நண்பரே...நீங்கள் குறிப்பிடுவது தேசன் புத்தக நிலையத்தினையா ??

      "தேசன்" தானெனில் அவர்கள் ஏற்கனவே "என் பெயர் டைகர்" கலர் & black & white பிரதிகளுக்கு ஆர்டர் செய்து விட்டார்கள் !

      Delete
  41. ஆசிரியர் அனைத்து இதழ்களும் கிடைக்க பெற்றன் ....நான்கு இதழ்களின் அட்டை படங்களும் செம அழகு ....டெக்ஸ் இதழின் அட்டை படத்தை இங்கே கண்டதை விட புத்தகத்தில் இன்னும் அழகு ...ரின்டின் ..ஜூலியா ...அட்டை படங்களும் அதே போல் என்றால் கமான்சே சான்சே இல்லை ...அவ்வளவு அருமை சார் ..

    அதே போல் இந்த முறை டெக்ஸ் ன் மறுபதிப்பு இதழான பழிவாங்கும் புயல் உட்பக்க வண்ண சித்தரங்கள் ...ஆஹா ..ஆஹா ...இதற்கு முன் வந்த டெக்ஸின் மறுபதிப்பு இதழ்கள் முழு திருப்தி தர வில்லை என்பதே உண்மை ...அனைத்திற்கும் சேர்த்தி இந்த மறுபதிப்பு தரம் அசத்தி விட்டது ...

    அடுத்தது சொன்னது போல முதல் இதழாக ஜீலியாவை படித்தாகி விட்டது சார் ...

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ...சிம்ப்ளி சூப்பர் ...

    உண்மையில் ஜீலியா இப்படி கலக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை ..தனது இறுதி காலத்தை தேர்ந்நதெடுத்த ஒருவனின் பிண்ணனியை அழகாக கோர்ந்தெடுத்து ..அந்த கடின சூழலிலும் கீழே நிற்கும மனிதர்களின் எண்ணவோட்டங்கள் ...மேலே அறையில் அந்த காவலரின் சலிப்பு ..போலி .பாதிரியாரின் ஆர்வம் என பாத்திர படைப்புகள் புன்னகைக்க வைக்கிறது...இறுதியில் நாயகன் (?) தனது முடிவை மாற்றி கொண்டு கீழே வரும் பொழுது உண்மையிலேயே மனதை மகிழ செய்தது ....ஆனால் சில வினாடிகளிலியே அந்த திடீர் திருப்பம் மனதை கனக்க செய்தது ..மனதில் கனத்தை ஏற்றினாலும் ஜீலியா மனதில் நின்று விட்டார் ...

    அழகான கதை ...அருமையான மொழி பெயர்ப்பு....அட்டகாசமான கருப்பு வெள்ளை சித்தரிங்கள் ..என .ஜீலியாவுடன் கதை முடியும் வரை அவருடன் அவரை போலவே பரபரவென அவருடன் பயணித்தது மறக்க முடியா அனுபவம் ....

    உண்மையில் இன்னும் விரிவாக நின்று போன நிமிடங்களை பற்றி எழுத ஆசை ..ஆனால் பலரும் இன்னும் புத்தகத்தை படிக்காத சூழலில் விமர்சனத்தை விரிவாக எழுதி நண்பர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதால் ...இதற்கு மேல் எழுத மனம் வரவில்லை சார் ....

    ஐ லவ் ஜீலியா ....மீண்டும் காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. ///ஐ லவ் ஜீலியா ....மீண்டும் காத்திருக்கிறேன் ...////

      த..தலீவரே!!!!!!!! :O

      Delete

  42. ***** பிரியமுடன் ஒரு பிணைக்கைதி *******

    பத்தாயிரம் டாலர் பணம் கேட்டு நம் செல்ல புஜ்ஜிமா ரின்டின்கேன் ஜெயிலிலிருந்து கடத்தப்பட, தொடரும் பக்கங்களில் கடத்தப்பட்ட ரின்டின்கேனும்; அதை மீட்கும் நடவடிக்கையில் ஜெயில் அதிகாரிகளும் செய்யும் கோணங்கித்தனங்களே வயிறைப் பதம் பார்க்கும் மீதிக் கதை!

    இப்படி லட்டு மாதிரியான ( அல்லது கடலை மிட்டாய் மாதிரியான ஹிஹி) ஒரு கதை கிடைத்தால் படைப்பாளிகள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? ச்சும்மா ரணகளப்படுத்தியிருக்கிறார்கள்!

    முதல் பக்கத்திலிருந்தே தொடங்கும் காமெடித் தோரணம் கடைசிப் பக்க- கடைசி பேனல் வரை நீண்டுகொண்டேஏஏஏ இருக்கிறது! ரின்டின்கேனின் கோணங்கித்தனமான சேஷ்டைகளே சிரிப்புக்கு கியாரண்டி எனும்போது, கூடவே அதீத humor sense உடன் ரசித்து ரசித்து எழுதப்பட்ட வசனங்களும் சேர்ந்துகொண்டால்...? குலுங்கி குலுங்கி சிரித்ததில் குறைந்தபட்சம் எனக்கு ஆயிரம் கலோரிகளாவது கரைந்துபோயிருக்கும் என்பது உறுதி! :)

    முதல் சாகஸமான 'அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே'யில் நம்மில் ஒருபாதியினரிடம் மட்டுமே தம்ஸ்-அப் வாங்கியிருந்த ரி-டி-கே, இந்த இரண்டாவது சாகஸத்தின் மூலம் மீதமுள்ளவர்களின் மனங்களிலும் இடம் பிடிப்பான் என்று நம்புவோமாக!

    எனது ரேட்டிங் : 9 / 10

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பஜ்ஜிமாவு ....சாரி...சாரி....புஜ்ஜிமா சுவையாய் அமைந்து போனதில் மெய்யான மகிழ்ச்சியே !

      ஆயிரம் கலோரி கரைந்து போச்சா ? அச்சச்சோ...அவசரமாய்க் "கோ.க.மி. சிகிச்சை " மேற்கொண்டாக வேணும் போல் தெரிகிறதே !!

      Delete
  43. ஆசிரியர் அனைத்து இதழ்களும் கிடைக்க பெற்றன் ....நான்கு இதழ்களின் அட்டை படங்களும் செம அழகு ....டெக்ஸ் இதழின் அட்டை படத்தை இங்கே கண்டதை விட புத்தகத்தில் இன்னும் அழகு ...ரின்டின் ..ஜூலியா ...அட்டை படங்களும் அதே போல் என்றால் கமான்சே சான்சே இல்லை ...அவ்வளவு அருமை சார் ..

    அதே போல் இந்த முறை டெக்ஸ் ன் மறுபதிப்பு இதழான பழிவாங்கும் புயல் உட்பக்க வண்ண சித்தரங்கள் ...ஆஹா ..ஆஹா ...இதற்கு முன் வந்த டெக்ஸின் மறுபதிப்பு இதழ்கள் முழு திருப்தி தர வில்லை என்பதே உண்மை ...அனைத்திற்கும் சேர்த்தி இந்த மறுபதிப்பு தரம் அசத்தி விட்டது ...

    அடுத்தது சொன்னது போல முதல் இதழாக ஜீலியாவை படித்தாகி விட்டது சார் ...

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ...சிம்ப்ளி சூப்பர் ...

    உண்மையில் ஜீலியா இப்படி கலக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை ..தனது இறுதி காலத்தை தேர்ந்நதெடுத்த ஒருவனின் பிண்ணனியை அழகாக கோர்ந்தெடுத்து ..அந்த கடின சூழலிலும் கீழே நிற்கும மனிதர்களின் எண்ணவோட்டங்கள் ...மேலே அறையில் அந்த காவலரின் சலிப்பு ..போலி .பாதிரியாரின் ஆர்வம் என பாத்திர படைப்புகள் புன்னகைக்க வைக்கிறது...இறுதியில் நாயகன் (?) தனது முடிவை மாற்றி கொண்டு கீழே வரும் பொழுது உண்மையிலேயே மனதை மகிழ செய்தது ....ஆனால் சில வினாடிகளிலியே அந்த திடீர் திருப்பம் மனதை கனக்க செய்தது ..மனதில் கனத்தை ஏற்றினாலும் ஜீலியா மனதில் நின்று விட்டார் ...

    அழகான கதை ...அருமையான மொழி பெயர்ப்பு....அட்டகாசமான கருப்பு வெள்ளை சித்தரிங்கள் ..என .ஜீலியாவுடன் கதை முடியும் வரை அவருடன் அவரை போலவே பரபரவென அவருடன் பயணித்தது மறக்க முடியா அனுபவம் ....

    உண்மையில் இன்னும் விரிவாக நின்று போன நிமிடங்களை பற்றி எழுத ஆசை ..ஆனால் பலரும் இன்னும் புத்தகத்தை படிக்காத சூழலில் விமர்சனத்தை விரிவாக எழுதி நண்பர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதால் ...இதற்கு மேல் எழுத மனம் வரவில்லை சார் ....

    ஐ லவ் ஜீலியா ....மீண்டும் காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : 'இதுவொரு நிச்சய ஹிட் !' என்ற நம்பிக்கையை பணியாற்றும் சமயங்களிலேயே சில கதைகள் நமக்குத் தந்து விடும் ! "நின்று போன நிமிடங்கள்" அந்த ரகத்தில் ஒன்று !

      அப்புறம் "அகில உலக ஜூலியா நற்பணி மன்றத் தலீவர்" பதவிக்கு முதலாவதாய்த் துண்டு போட்டு வைத்திருக்கும் போராட்டக் குழுத் தலைவருக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

      Delete
    2. Paranitharan K : And இன்னொரு விஷயம் - ஜூலியாவின் இந்தக் கதையின் பின்னணியில் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணம் உள்ளது ! இந்த இதழினைத் தேர்வு செய்தது ஜூ.எ. தான் !

      Delete
    3. எடிட்டர் சார், அப்படியே நம்ம ஜூனியர் எடிட்டர்கிட்ட நம்ம இரத்தப்படலம் கலரில் என்பதையும் கொஞ்சம் தேர்வு பண்ண சொல்லலாமே.

      Delete
    4. //முதல் இதழாக ஜீலியாவை படித்தாகி விட்டது சார் ...

      ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ...சிம்ப்ளி சூப்பர் ...//
      +1

      Delete
  44. செயலாளர் அவர்களே ...மனதை கனக்க செய்தாலும் ஆசிரியர் சொன்னது போல ஜூலியா மனதில் நின்று விட்டார் ..

    என்ன செய்யலாம் ...?

    ReplyDelete
  45. அந்த டிராகன் நகரம் ரீப்ரின்ட் கேட்டு ஆசிரியரடம் வலியுறுத்த கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வரும் சார்! கவலைபடாதிங்க!

      Delete
    2. ஓட்டெடுப்பில் 2ம் இடம் பிடித்து அடுத்த ஆண்டு மறுபதிப்பு உரிமையை ஏற்கனவே ட்ராகன் நகரம் "-பெற்று விட்டது நண்பரே சரண்...அடுத்த ஆண்டு ட்ராகன் நகரில் நீங்கள் பிரவேசிப்பது உறுதி...

      Delete
  46. நண்பர்களுக்கும் ஆசிரியர்க்கும் வணக்கம் சென்னை புததக கண்கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. //
    புத்தத்திருவிழாவில் காமிக்ஸ் விற்பது புத்தகத்திருவிழாவிற்கே அவமானம் என்ற சாரு நிவேதிதாவின் கருத்துக்கு என்னுடைய கடும் கண்டணத்தை தெரிவிக்கிறேன். நீங்கல்லாம் இலக்கியம் அப்டின்னு வாய்கிழிய பேசி அதில என்ன சொல்றீங்க.எழுதுற உங்களுக்கும் புரியமாட்டேங்குது. படிக்கிற எங்களுக்கும் ஒரு மண்ணும் வெளங்க மாட்டேங்குது. //புத்தகத்திருவிழாவிற்கு செல்லும் நண்பர்களே காமிக்ஸ் காதலர்களின் சார்பில் திரு.சாரு நிவேதிதாவிற்கு தற்கால இலக்கியத்திற்கு கொஞ்சமும் இளைத்ததல்ல காமிக்ஸ் என்பதை புரிய வையுங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. நண்பரே... புகை சமிக்ஞைகளில் செய்திப் பரிமாற்றம் நிகழ்வதை நாம் டெக்ஸ் கதைகளில் பார்த்திருப்போம் ! நீங்கள் குறிப்பிடும் விஷயத்தினில் கூட கறுப்பான, அடர்த்தியான புகை சமிக்ஞைகள் தான் தென்படுகின்றன - and இவை சொல்லும் சேதி என்னவென்று தான் அப்பட்டமாய்ப் புரிகிறதே ! இவற்றை சீரியசாய் எடுப்பானேன் ?

      Delete
    2. எரியும் குப்பை மேட்டு புகைக்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம் நண்பர்களே. மூக்கை பிடித்துத் கொண்டு கடந்து செல்லுங்கள்

      Delete
  48. விஜயன் சார்,

    Van Hamme வோட Lady S தமிழில் வர வாய்ப்பிருக்கா சார்.

    ReplyDelete
    Replies
    1. Karthikeyan L : வேளை அமையும் பொழுது நிச்சயம் யோசிப்போம் !

      Delete
    2. நன்றி விஜயன் சார்...

      Delete
  49. சென்னைப் புத்தகக்காட்சியை ஒட்டி, ஷ்ருதி டிவி எனும் ஒரு மைக்குக்கு முன்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதா சில அரிய கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார். அதன் கருத்துச்சுருக்கம் இதுதான்..
    “ஊராடா இது, புத்தகக் காட்சியாடா இது.? இலக்கியப் புத்தகமே விக்க மாட்டேங்குது. புத்தகக்காட்சின்னா 90% இலக்கியப் புத்தகம் இருக்க வேண்டாமா? ஊரு உலகத்துல அப்படித்தானே இருக்குது? இங்க 10% கூட இல்லயே.. எங்க பாத்தாலும் சமையல், கோலம், ஆன்மீகம், அகராதி, காமிக்ஸ் புத்தகமா இருக்குது.. இது புத்தகக் காட்சிக்கே அவமானம்!”
    வாசிப்பின் ஒரு கிளைதான் இலக்கியம், அதையும் தாண்டி கலை, பொருளாதாரம், தொழில், தொழில்நுட்பம், நிலவியல், உயிரியல் என வாசகன் உய்த்துணர, கற்க ஆயிரம் வேண்டும். வாசிப்பே அருகிப்போயுள்ள நம் சூழலில், இருக்கும் கொஞ்ச வாசகர்களையும் இலக்கியப் பூச்சாண்டி காண்பித்து மிரட்டும் வேலைதான் இது. மேலும் காமிக்ஸ் புத்தகங்கள் குறித்த அவர் கருத்து அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.
    புனைவு, ஓவியம், வரலாறு, சினிமா என பல்கலைகளின் சங்கமமே காமிக்ஸ் என்பது தமிழின் ஒரு மூத்த எழுத்தாளருக்குக் கூட தெரியவில்லை என்பதுதான் அவரது (மேலும் பலரது) லட்சணத்தைப் பறைசாற்றும் விஷயமாக இருக்கிறது. மேலும், சொல்லகராதி என்பது இலக்கியத்துக்கு வந்த இழுக்கு என்பதாக கருதுகிறார் போலிருக்கிறது. கோலம், சமையல் போன்றவை நுண்ணுணர்வைப் போற்றும் கலைகளாக அவருக்குத் தெரியவில்லை. கேவலம் ஆன்மீகப் புத்தகங்களோடு ஒப்பிட்டு காமிக்ஸ் புத்தகங்களை தரம் தாழ்த்தியிருப்பது சற்றும் ஏற்கவியலாத ஒன்று!
    என்ன பேசப்போகிறோம் என்பதைச் சற்றும் யோசிக்காத, முன்தயாரிப்பில்லாத பேட்டியைப் போல்தான் அது தோன்றுகிறது. இடையிடையே சம்பந்தமில்லாத விஷயங்களையும் தொட்டுச்செல்கிறார். சாட்சிக்குப் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் வேறு. மைக்கைக் கண்டதும், எடுத்தோம் கவிழ்த்தோம் என உளறிவைப்பதை சாருவும் செய்கிறார் என்பதுதான் இதில் எரிச்சலூட்டும் செய்தி. அல்லது வேண்டுமென்றே பரபரப்புக்காக கையைப் பிடித்து இழுத்தாரா என்பதை அவரே விளக்கினாலும் தேவலை!

    // பேஸ்புக்கில் சாருவுக்கான எனது கண்டனம்!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : "இமைகளை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாகிப் போய் விடவேண்டும் ; அவ்விதம் இருளாத உலகம் உருப்படுமா ? "என்ற சிந்தைகளை நோக்கிப் புன்னகைப்பதைத் தவிர்த்து வேறென்ன செய்வது சார் ?

      ஆளுக்கொரு அபிப்பிராயம் ; இது அவரது ! அவ்வளவே..!

      Delete
    2. @ ஆதி தாமிரா

      ஏற்கனவே சருநிவேதாவுக்கும் நம்ம சேந்தம்பட்டி கரகாட்ட குழுவுக்கும் ஒரு வாய்க்கால் தகராறு கடந்த ஈரோடு திருவிழாவில போச்சி...இப்ப ஒட்டுமொத்தமா காமிக்ஸ்,ஓவியக்கலை, சமையல்கலையை சீண்டி ஒரு பேட்டியா..!

      அவர் எதிர்ல கிடைச்சா...திருவிழாவுல நேரடியா கண்டனத்தை தெரிவிக்கிறேன்..!

      Delete
    3. some one parcel ஒரு சிப்பாயின் சுவடுகளில்...! to him. he should know what is comics.

      Delete
    4. @ ஆதி தாமிரா and mayavi. Siva+111

      Delete
    5. /* கேவலம் ஆன்மீகப் புத்தகங்களோடு ஒப்பிட்டு காமிக்ஸ் புத்தகங்களை தரம் தாழ்த்தியிருப்பது சற்றும் ஏற்கவியலாத ஒன்று! */

      டியர் எடிட்டர் & ஆதி தாமிரா,

      இந்த கருத்தும் கூட ஏற்க இயலாத ஒன்றே - ஆன்மிகப் புத்தகங்கள் என்றால் கேவலமா? இப்படிச் சொன்னால் அல்லது அதனை ஏற்றால் அப்புறம் உங்களுக்கும் சாருவுக்கும் என்ன வித்யாசம். ஆன்மிகம், சமையல், காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாமே பிடித்த பலர் இங்கு இருக்கக்கூடுமே. மெய்யான ஆன்மிக தேடலுக்கு துணை செய்யும் புத்தகமும் கேவலமான காமிக்ஸ் புத்தகங்களும் வருவது உண்டே!

      Strongly condemn the bias !

      Delete

    6. // கேவலம் ஆன்மீகப் புத்தகங்களோடு ஒப்பிட்டு காமிக்ஸ் புத்தகங்களை தரம் தாழ்த்தியிருப்பது சற்றும் ஏற்கவியலாத ஒன்று! //

      "முண்டம்"

      போன்ற ஒரு கருத்து. காமிக்ஸ் என்ன அவ்வளவு உன்னதமான விஷயமா ?!

      Delete
    7. @ராகவன்

      நானொரு கடவுள் மறுப்பு கொள்கையுடையவன். ஆகவே என் கருத்தில் வாபஸ் என்பதில்லை. அதற்காக என் கருத்துக்கும், நண்பர் சாருவின் கருத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை எனில் அது உங்கள் பிரச்சினை. நன்றி! :-)

      Delete
    8. @ஆதி

      உங்கள் கொள்கைக்கு ஒவ்வாதவைகள் கேவலம் என்னும் மனநிலை என்னவென்பது - எனிலும் அதுவும் உங்கள் பிரச்சினை - நன்றி ! :-)

      Delete
    9. @ ஆதி தாமிரா & Raghavan : கொஞ்சமல்ல......நிறையவே இறைநம்பிக்கை எனக்குண்டு என்பதால் I will agree to disagree strongly on this with ஆதி ! ஆன்மீக நூல்கள் படித்ததில்லை என்றாலும் அவற்றின் மீது நிச்சயமாய் நிறைய மரியாதையுண்டு !

      Delete
    10. @எடிட்டர்,

      காலங்காலமாய் ஒரு இறை மறுப்பாளனாக நான் பெற்றதை விடவும், இழந்தவை அதிகம். ஒரு சிறுபான்மையினத்தின் (இறைமறுப்பைக் குறிக்கிறேன்) சோகம் அது. என் கருத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு, போலவே என் கருத்தைப்பகிரவும் எனக்கு இடமுண்டு என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். அந்த பகிர்வு என் முகநூல் பக்கத்துக்காக எழுதப்பட்டது. பொருள் சார்ந்து இங்கே பகிரப்பட்டது, அவ்வளவுதான். வேறு உள்நோக்கமில்லை. இந்தத் தளம் என் கொள்கைப்பரப்புக்கான இடமில்லை என்பதை உணர்ந்தேயிருக்கிறேன். நன்றி!

      (இதிலொரு நகை என்னவெனில், நானும், சாருவும் இந்தக்கூற்றில் ஒத்துப்போகிறோம் என்பதுதான். :-))) )

      Delete
    11. ஆதி தாமிரா,
      உங்களது இறை மறுப்பை நான் உளமாற மதிக்கிறேன். அதே வேளையில் உங்களோடு பயணிக்கும் எங்களது உணர்வுகளை எள்ளி நகையாக நீங்கள் விரும்புகிறீர்களா. உங்களது சகிப்புதன்மையை நீங்கள் குறைத்தா எடைபோடுகிறீர்கள்.உங்களது இறை மறுப்பு மதிப்பை காட்டிலும் நாங்கள் தாழ்ந்தவர்களா.எங்களது இறை உணர்வு மதிப்பீடுகளை ,எங்களது தோழமை உணர்வுகளுக்காக சகித்து கொள்ள மாட்டீர்களா.உங்களது அன்புக்கு பாத்திரம் இல்லாதவர்களா நாங்கள்.

      Delete
    12. @shinesmile

      //உங்களது இறை மறுப்பு மதிப்பை காட்டிலும் நாங்கள் தாழ்ந்தவர்களா// நிச்சயமாக இல்லை.

      இறை இல்லையென்பதை விட இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான்.

      இறையை விட மனிதர்கள் எனக்கு முக்கியம். ஆனாலும் என் வீட்டுக்குள்ளாவது என்னை என் விருப்புப்படி இருக்கவிடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்!

      Delete
    13. @shinesmile

      //உங்களது இறை மறுப்பு மதிப்பை காட்டிலும் நாங்கள் தாழ்ந்தவர்களா// நிச்சயமாக இல்லை.

      இறை இல்லையென்பதை விட இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான்.

      இறையை விட மனிதர்கள் எனக்கு முக்கியம். ஆனாலும் என் வீட்டுக்குள்ளாவது என்னை என் விருப்புப்படி இருக்கவிடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்!

      Delete
    14. ஆதி தாமிரா,
      உங்களது இறை மறுப்பை நான் உளமாற மதிக்கிறேன். அதே வேளையில் உங்களோடு பயணிக்கும் எங்களது உணர்வுகளை எள்ளி நகையாக நீங்கள் விரும்புகிறீர்களா. உங்களது சகிப்புதன்மையை நீங்கள் குறைத்தா எடைபோடுகிறீர்கள்.உங்களது இறை மறுப்பு மதிப்பை காட்டிலும் நாங்கள் தாழ்ந்தவர்களா.எங்களது இறை உணர்வு மதிப்பீடுகளை ,எங்களது தோழமை உணர்வுகளுக்காக சகித்து கொள்ள மாட்டீர்களா.உங்களது அன்புக்கு பாத்திரம் இல்லாதவர்களா நாங்கள்.

      Delete
  50. Sir எனக்கு இதுவரை புத்தகங்கள் வந்து சேர வில்லை .ஆபிசில் கேட்டால் முறையான பதில் இல்லை.புத்தகங்கள் அனுப்பிய நம்பர் இது வரை தரவில்லை .

    ReplyDelete
    Replies
    1. Ranjith Ranjith : உங்கள் சந்தா எண் ப்ளீஸ் ?

      Delete
  51. இங்கு சேந்தம்பட்டி குழு ஏற்பாடு செய்யும் பயண முறைகளைப் பார்த்து, நானும் அவர்களோடு CBF க்கு பயணம் செய்ய மனம் விரும்புகிறது.

    எடிட்டர் சார்,

    இந்தாண்டு முதலே பிரிண்டிங் தரத்தை உயரே உயரே கொண்டு செல்கிறீர்கள். கடைசியாக நான் படித்த டாக்டர் டெக்ஸ் ன் பிரிண்டிங் தரம் அற்புதம். இத்தாலியில் கூட ஒருவித மஞ்சள் கலந்த தாளில் தான் Maxi Format டெக்ஸ் கதைகளைப் பார்த்தேன். அனால் நம்முடையோதோ சும்மா பளிச் பளிச் என்று கண்களை கவர்கிறது.

    சென்னை புத்தக கண்காட்சியில் வெற்றி பெற வாழ்த்துகள். நிச்சயம் ஈரோடு புத்தக கண்காட்சியில் சந்திப்போம்

    ReplyDelete
  52. சார் முதலில் ஜூலியாவை படிக்கலாம் என இருந்தேன் . எப்போதும் அனைத்து கதைகளின் இரு பக்கங்களை படிக்கும் நான் டெக்ஸ மட்டும் ஒரு இருவது பக்கத்த புரட்ட ிதமான வண்ணங்கள் , ஊதாவும் , மஞ்சளும் மெஸ்மரிக்கச் செய்ய டெக்ஸின் ஆளுமையும் , கதையின் ஓட்டமும் பக்கங்களை தள்ளச் செய்ய ....ஸ்மர்ஃப் வில்லாவில் நுழைந்து விட்டோமா எனுமளவிற்க்கு வண்ணங்கள் ஒட்டிக் கொண்டன .இரவில் வீரர்களோடு நாமே போவது போல நிலவினடியில் ஓவியங்கள் அடடா...அதிலும் டெக்ஸ் அதிகாரிய புratடும் இடமும் ,பாப் வில்லோ பேரைக் கேட்டு இறங்கும் இடமும் ,ஷெரீஃபோடு வரும் போது இடது கையால் சுட்டபடி பாய்வதும் , பணிபுரியப் போவது எனக்கல்ல சத்தியத்துக்கு...இராணுவத்தில் முட்டாள்தனமான உத்தரவு என்று ஏதுமில்லை எனும் இராணுவ அதிகாரிகளை மதிக்கும் வீரர்களும்....கர்னல் மிதப்பில் தோற்றுக் கொண்டிருக்கும் போது ,செவ்விந்தியரை மட்டமாய் மதிப்பிட்டு பேசுவதும் அதற்க்கு சாதகமாய் வீரர்கள் பேசும் உரைகளும் எதார்த்தமான தேர்வுகள் .மகா பாரதத்தில் கண்ணன் போல டெக்ஸ் . டெக்ஸ் இருக்குமிடம் ஜெயிக்கும்...அதை விட ொரு படி மேலாய் இரத்தமின்றி ஜெயிக்கிறார் .கிட்டும் ,டைகரும் டெக்ஸுக்கு இனணயாய் கலக்குகிறார்கள்....கார்சன் நண்பனைக்காக்க விரைவதும் , வருந்தித் திரும்புவதும் ,பின்னர் வெற்றிச் செய்தியை எடுத்துக் கொண்டு உடனே டெக்ஸிடம் விரைவதும் நட்பென்றால் கார்சன் என்று அர்த்தப் படுத்துகின்றன் ..உரையாடல்கள் ,தனியே புலம்பல்கள் நச் .அந்த இருவரும் செவ்விந்தியர்கள் கையால் கொல்லப் படாததை கண்டால் கடவுள் இல்லையோ என ெனக்குத் தோன்றினால்...கடவுள் செயல் என தலைவர் நினைக்கிறார்..ஒடுக்கப் பட்டவர்கள் என்னதான் செய்ய ஏலும் பாவம் .அதிலும் அரசியல்வாதிகள் என்றும் ,எங்கும் இப்படித்தான்...போலும் ...நம்மில் டெக்ஸ் இல்லாததால்....இதனை படிக்கவாவது முடியுதே...அதே பெரிய வரம்தானோ.

    ReplyDelete
    Replies
    1. அதும் ஒன்றரை வயதான ெனது தங்கை மகள் புத்தகத்தை அடம்பிடித்து வாங்கி வைத்துக் கொண்டு ரசிக்க..கிழித்து விடாதே என கெஞ்சிக் கொண்டே நான் பார்க்க.....கு என மழலையில் ஏதோ கத்தியபடி சொல்ல முயற்ச்சிக்க ..அவள் வண்ணப்பக்கங்கில் லயிப்பது போலப் பட ..அட்டய மட்டும் கால் மணி நேரத்துக்கும் மேலாய் பார்த்து ஏதோ எனக்கு சொல்ல முயன்று ...புரியாமலோ ,தெரியாமலோ நானோ , அவளோ தோற்றுக் கொண்டிருக்க ....சன்னமாய் வாங்கிப் படித்து முடித்தேன்..வண்ணத்திற்க்கு யாவரும் அடிமை....அந்த பதிமூன்று..

      Delete
    2. அது சரி... உங்களை முன்பு போல அடிக்கடி காண முடியலியே சதீஷ் !

      Delete
  53. சாா் ஈரோடு செல்வம் புக் ஸ்டால்ல "என் பெயா் டைகா்" ஆடா் கேட்டாங்கள

    ReplyDelete
    Replies
    1. daibolik akkik : அகில்......உங்களுக்கென ஒரு செட் முத்து மினி காமிக்ஸ் & வண்ண "என் பெயர் டைகர்" வழங்கிடக் கோரி இரு வெவ்வேறு நண்பர்கள் நமக்குத் தகவல் சொல்லியுள்ளனர் ! உங்கள் இல்லம் தேடி அவை வந்து சேரும் !! உங்கள் முகவரியினை மட்டும் நமக்கொரு மின்னஞ்சலில் அனுப்பி விடுங்களேன் ?

      Delete
  54. சாா் நான் இன்னும் புக் வாங்கவில்லை திங்கள் அன்று டெக்ஸ் மற்றும் வங்கி வறுவன் என் பெஸ்ட் நண்பன் அவன் bluecoats fan bluecoatsக்கும் fans இறுக்கங்க

    ReplyDelete
  55. சார் நான் என்னிடம் இருப்பதால் டிராகன் நகரம் , மரண முள் , கழுகு வேட்டை , பவளச் சிலை மர்மம் ,... போன்றவற்றுக்குப் பதில் இல்லாத பழிக்கு பழி , பழி வாங்கும் பாவை போன்ற ிதழ்கள் முதலில் வந்தால் நன்றாயிருக்குமே என சுயநலமாய் யோசித்தேன் .இப்ப ெந்த க் கத வந்தாலும் பரவாயில்லை எனநினைக்கிறேன் .வண்ணம் அட்டகாசமாய் உள்ள கதைகள முதலில் வெளியிடலாமே சார்

    ReplyDelete
  56. கடைசி வரை போராடியும்,அலுவலக வேலை,சொந்த வேலை எதுவும் முடியவில்லை. உடல்நிலையும் சரியில்லை. எனவே வரவும் முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சிக்கிரம் குனமடைது வாறுங்கள்

      Delete
  57. சார் என் பெயர் டைகர் , முத்து மினிய அனுப்பியாச்சா...நாளய வேலையே அதனை கைப் பற்றுவது மட்டும்தான் .

    ReplyDelete
  58. சார் ஏற்கனவேஅடுத்த ாண்டு டெக்ஸ் மறுபதிப்புக் கோட்டா தயார் என சொன்னீர்கள்..அது பவளச் சிலை மர்மம்தானே

    ReplyDelete
  59. சேந்தம் பட்டி நண்பர்கள் குழு கிளம்பத் துவங்கியாச்சா ...ஈவி கோபம் வேண்டாம் ...அடுத்த முறை நான் வர ியலும் சூழலை உருவாக்கி வருவேன் ....வென்று வாருங்கள் நண்பர்களே..

    ReplyDelete
  60. And இன்னொரு விஷயம் - ஜூலியாவின் இந்தக் கதையின் பின்னணியில் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணம் உள்ளது ! இந்த இதழினைத் தேர்வு செய்தது ஜூ.எ. தான் !


    ##$####

    வாவ் ..சூப்பர் சார் ...ஜூனியர் எடி விரைவில் பட்டைய கிளப்புவார் என்பது இதன்மூலம் புரிபடுகிறது ..;-)

    ReplyDelete
  61. சென்னையில் என் பெயர் டைகர் இதழினைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து மிகக் குறைவான மின்னஞ்சல்களே வந்துள்ளன இது வரையிலும் ! LAST CHANCE !! இன்றைக்கு இரவுக்குள் ஒரு மெயில் தட்டி விட்டால் பிரதிகள் சென்னை வந்தடையும் ;////
    நானும் போனில் மின்னஞ்சலை ஆன் செய்தேனா அப்புறம் வேகமாகதட்டிவிட்டேனா அப்புறம் போன் தூரமாக சென்று விழுந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar:

      //நானும் போனில் மின்னஞ்சலை ஆன் செய்தேனா அப்புறம் வேகமாகதட்டிவிட்டேனா அப்புறம் போன் தூரமாக சென்று விழுந்துவிட்டது//

      ஹா.. ஹா.. Jaya Kumar செம செம !!

      Delete
  62. சென்னை நோக்கி பயணிக்கும்,ஜோதியில் ஐக்கியமாகவிருக்கும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் இனிமையான அனுபவம் பெற அன்பு வாழ்த்துகள்!!!!!!


    வாசக கலந்துரையாடல் நெஞ்சினிக்க நிகழவும் முன்னெப்போதும் விட விற்பனை கூடவும் மூன்று சிங்கங்களுக்கும் வாழ்த்துகள்...!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹோ....கிஈஈஈஈஈஈளம்பியாச்ச்ச்சச்ச்ச்சி.......! [செவிந்தியர்கள் சொல்லும் அதே..ஹோ..தான்]

      Delete
    2. //சென்னை நோக்கி பயணிக்கும்,ஜோதியில் ஐக்கியமாகவிருக்கும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் இனிமையான அனுபவம் பெற அன்பு வாழ்த்துகள்!!!!!!


      வாசக கலந்துரையாடல் நெஞ்சினிக்க நிகழவும் முன்னெப்போதும் விட விற்பனை கூடவும் மூன்று சிங்கங்களுக்கும் வாழ்த்துகள்...!!!!!!//

      +1

      Delete
  63. desperate to see Tiger front cover Edit sir hoping for one special post from you tomorrow with special books!

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : கனவுகள் மெய்ப்படும் நண்பரே ! சீக்கிரமே !!

      Delete
  64. சென்னையில் நமது சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நழ்வாழ்த்துக்கள்.உங்களுக்கு இருக்கும் ஓர் கடமை என்னவெனில் அங்கு நடக்கும் விசயங்களை, விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள எங்களுக்கு, அதன் Live Program telecast செய்வதே உங்கள் பணி.நாங்கள் உங்களை தொந்தரவு செய்யவில்லை என்று நம்புகிறோம்

    ReplyDelete
  65. சென்னை செல்லும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தவிர்க்க இயலா காரணங்களால் என்னால் வரஇயலவில்லை நட்புகளே.
    ஈரோட்டில் அதை ஈடுகட்டிவிடுகிறேன்.
    புத்,திருவிழா கலகலக்க எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  66. நான் இப்போது சென்னைக்கு மிக அருகில்

    ReplyDelete
  67. ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே

    ReplyDelete
  68. எனக்கு புக் குடுக்க சொன்ன என் அனபாா்ந்த நண்பா் யாா் அவா்களுக்கு நன்றி

    ReplyDelete
  69. சாா்,
    நான் மின்அஞ்சல் use பன்னுவதில்லை
    என் முகவாி இதோ
    K.சுப்பிரமணியம்
    S/o கறுப்பன கவுன்டா்
    குன்னாங்காட்டு வலசு
    60,வேலம்பளையம்(po)
    மொடக்குறிச்சி(via)
    ஈரோடு 638 104

    Address:-
    K.subramaniam
    S/o karupana koundar
    60,velampalayam(po)
    Modakkurichi(via)
    Erode - 638 104
    Phone number 8903132348
    அப்புறம் சாா் நான் போன வறுடம் டையபாலிக்கின் குற்றத் திறுவிழா கேட்டு m.o அனுப்பி இறுந்தேன் இன்னும் வீடு வந்து சேரவில்லை அதையும் இதனுடன் சோ்த்து அனுப்பவும் please

    ReplyDelete
  70. சார் ஜூலியாவின் கதையை படித்து விட்டேன் .குற்றவாளியா என கண்டு பிடிப்பதை விடுத்து குற்றத்திற்கான காரணத்தை தேடும் ஜூலியா அற்புதமான.. எங்களை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தும் புது வரவு . அற்புதமானநகர்த்தல்களால் புத்தகத்தை தொடர்ந்து படிக்க வைக்க ...கூடவே கார்வின் போல ொருவர் அலட்டலில்லா ஜூலியா எனினும் மாடஸ்டியை ஒப்பிட செய்கிறார் . இவர் வேற அவர் வேற எனினும் தைரியத்தில் இவரும் சளைத்தவரல்ல . சாது மிரண்டால்...எனும் படியாய் மகளை தனது வழியில் விலக்க ாசைப்படும் டான் அங்கே தோற்க்க காரணம் இளக்கமாய் நினைத்தது என காட்டி உள்ளார் .மொழி பெயர்ப்பு உரையாடல்கள் பக்க பலம் .மக்கள் எதயும் கொண்டாட நினைப்பர்...கடைசியில் வாழ நினைக்கும் போது பயந்து சாகும் பரிதாபத்திற்குரிய கொலையாளி சாதாரண நாகரீக உலகை நினைக்க வைப்பதுடன் டெக்ஸா ...அது யாருப்பாஎன கேட்க வைக்கிறார் . அருமை சார் உளவியல் பாடங்களுக்குநன்றிகள் ஆசிரியரே....

    ReplyDelete
    Replies
    1. அதும் இவ்வருடம் டெக்ஸ் , கமான்சே ,ஜூலியா என ஒரே தந்தை பாசம்தான் இல்லயா ஜூனியரே

      Delete
  71. பழிவாங்கும் புயல்...

    பாராட்டும் வகையில் இருக்கிறது தரம். படித்தவர்கள் - பார்த்தவர்கள் அனைவரும் அதனை குறிப்பிட்டார்கள். ஆனால் எவரும் கதையைப் பற்றி விமர்சிக்கவில்லை. என்னை (மட்டும்) பொருத்தவரை, இது டெக்ஸ்வில்லர் கதையே இல்லை. வழக்கமாய் டெக்ஸ் என்ன செய்யவார்? தப்பு செய்த இரண்டு வில்லன்களையும் நேரடியாகப் போய் - அவர்கள் எவ்வளவு தான் ஆள்பலத்தோடு இருந்தாலும் - துவைத்தெடுத்து நீதியை நிலைநாட்டி வருவார்.

    ஆனால், இங்கே என்னடாவென்றால், நாட்டாமை எனக்கு ஒரு நியாயம் சொல்லு என்று அரசாங்கத்திடம் மனுப்போட்டுக் கொண்டு இருக்கிறார். வில்லன் கோஷ்டியை விட்டு விட்டு மிலிட்டிரிக்காரர்களை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். (அதாவது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கிறாராம்...)

    சரி கடைசியிலாவது வில்லன்களை இவர் தண்டிக்கிறாரா என்று பார்த்தால்... அதுவுமில்லை. இவர் கும்பல் கூட்டிக் கொண்டு போய் சேர்வதற்குள் அவன்களே மண்டையைப் போட்டுவிடுகிறான்கள்.

    எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... இந்தக் கதையின் பிளாட்பார்ம் டைகர் கதையினுடையது போல் படுகிறது.

    மற்றபடி நமது ஆசிரியர் மற்றும் அவரது குழுவினரின் அபாரமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    இங்கே நமது ஆசிரியரின் தலைப்பு வைக்கும் தீர்க்க தரிசன ஆற்றலுக்கு ஒரு தனிமரியாதை காட்ட வேண்டும்.

    உருவாகும் இடத்தை விட்டு விட்டு, சம்பந்தமில்லாத இடத்தில் தன் பலத்தை காட்டும் புயலின் தன்மையை மனதில் கொண்டு பழிவாங்கும் புயல் என்று பெயர் வைத்திருக்கிறார் (அந்தக் காலத்திலேயே...)

    (ரிசர்வ்டு - டிராகன் நகரம் விமர்சனம்)

    ReplyDelete
    Replies
    1. என்னை (மட்டும்) பொருத்தவரை, இது டெக்ஸ்வில்லர் கதையே இல்லை. வழக்கமாய் டெக்ஸ் என்ன செய்யவார்? தப்பு செய்த இரண்டு வில்லன்களையும் நேரடியாகப் போய் - அவர்கள் எவ்வளவு தான் ஆள்பலத்தோடு இருந்தாலும் - துவைத்தெடுத்து நீதியை நிலைநாட்டி வருவார்.

      ஆனால், இங்கே என்னடாவென்றால், நாட்டாமை எனக்கு ஒரு நியாயம் சொல்லு என்று அரசாங்கத்திடம் மனுப்போட்டுக் கொண்டு இருக்கிறார். வில்லன் கோஷ்டியை விட்டு விட்டு மிலிட்டிரிக்காரர்களை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். (அதாவது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கிறாராம்

      மன்னிக்கவும் SVV சார்............
      டெக்ஸ் கதைகள் அனைத்தையும் நீங்கள் பைனாகுலர் பார்வையில் பார்க்கிறீர்கள்.....
      இக்கதை சராசரி கதை அல்ல.....
      டெக்ஸ் அவ்விதம் நடந்து கொள்ள ஏற்புடைய காரணங்கள் உண்டு....
      அரிசோனாவுக்கும் நியூ மெக்ஸிகோவுக்கும் முதன்முதலில் ரயில் ஓடுவதாக கதை துவங்குகிறது......எனவே கதையின் காலகட்டம் 1888-1900 என துல்லியமாக நிர்ணயிக்கலாம்.......
      இதற்கு முன்பாகசுமார்இருபதுவருடங்களாகசெவ்விந்தியர்களுக்கும்
      வெள்ளையர்களுக்கும் இடையே நிலவி வந்த கடும் மரண போராட்டம் குறித்த வரலாறு குறித்து பார்வையை திருப்பினால் டெக்ஸ் நடந்து கொண்டது பற்றி யார் மனதிலும் ஐயம் எழாது.......
      இரு தரப்பிலும் அப்பாவிகள் ரத்தம் பலமுறை சிந்தப்பட்டது..........
      பலமுறை மிகவும் கொடூரமான முறையில் அப்பாவிகள் இருதரப்பிலும் பலியாகினர்.

      1857…..செப்டம்பர்......கலிபோர்னியா பகுதியிலிருந்து ஆர்கன்சாஸ்,மிஸ்ஸெளரி பகுதியில் குடியேற வந்த பாஞ்சர் குழுவினர் சால்ட் லேக் சிட்டி அருகே முகாம் அமைத்தபோது அக்குடியேற்றத்தை தடுக்க விரும்பி அவர்களை மர்மன் மற்றும் பையூட் செவ்விந்தியர்கள் முற்றுகையிட்டனர்,,,,,
      பாஞ்சர் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தபோது பாஞ்சர் குழுவினர் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். பெண்கள் ,குழந்தைகள் உட்பட சுமார் 150 பேர் பலியாகினர்......

      1862….ஆகஸ்ட் ......மின்னசோட்டா பகுதியில் குடியேறி இருந்த1000 வெள்ளையர்களை சியோக்ஸ் பிரிவினர் கொன்று குவித்தனர்.(பின்னர் இவர்கள் அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பெரும்பான்மையோர் தூக்கிலிடப்பட்டனர்)

      1864……ஜூன் ....கொலராடோ பண்ணையாளர் நாதன் ஹன்கேட் அவரது மனைவி,இரு சிறு குழந்தைகள் சிவிங்க்டன் பகுதியில் செவ்விந்தியர்களால் கொல்லப்பட்டனர்....
      இதற்கு பழி வாங்கும் வண்ணம் நவம்பர் மாதம் கொலராடோ மூன்றாவது ராணுவ குதிரை பிரிவு கர்னல் ஜான் சிவிங்க்டன் தலைமையில் அரபாஹோ கிராமத்தில் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தினர்....அங்கிருந்தோர் செயன்ணீ,அரபாஹோ பிரிவு செவ்விந்தியர்கள்.
      123 பேர் கொல்லப்பட்டனர்...அதில் 11௦ பேர் பெண்கள், குழந்தைகள்.
      பாலியல் தாக்குதல், இறந்தவர்களின் உடல் பாகங்களை கொய்வது, கைக்குழந்தைகளை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு பயன்படுத்துவது போன்ற அலங்கோலங்கள் நிகழ்த்த பெற்றன.

      இறந்தவர்களின் உடல் பாகங்களை மாலையாக அணிந்தும் குதிரை சேணமாகயும் மாற்றியும் இப்பிரிவினர் ஊர்வலமாக லியோன் கோட்டையை அடைந்தனர்.
      (இதற்கு பின்னர் காங்கிரஸ் அளித்த தண்டனை கர்னல் ஜான் அப்பகுதியை விட்டு விலக வேண்டும் என்பதும்அப்பகுதி கவர்னர் பதவி விட்டு விலக வேண்டும் என்பதுமேயாகும்......டென்வர் பகுதியை நோக்கி அந்த ராணுவ பிரிவினர் செவ்விந்திய உடல் பாகங்களை கையால் வீசியபடி ஆரவாரமாக செல்லாமல் இருந்து இருந்தால்
      இந்த விசாரணையும் தண்டனையும் கிடைத்து இருக்காது.....)

      இவை மிக சில உதாரணங்களே......

      பொதுவான அப்போதைய மன நிலை இதுதான்.....

      செவ்விந்தியரும், வெள்ளையரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டால் அது தற்காப்புக்குக்காகத்தான் இருக்கும் என இரு தரிப்பினரும் நினைத்தனர்....
      இதை அறிந்து பின்னர் கதையை படித்தால் எல்லாம் விளங்கும்......
      இதே காலகட்டத்தில் நமது கதையை போலவே அமைதி உடன்படிக்கை நிலவி வந்த காலத்தில் டெக்சாஸ் பகுதியில் ஒரு குதிரை பந்தயத்தின் போது வாய் சண்டையில் நவஹோ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர்கள் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை......

      ////////வழக்கமாய் டெக்ஸ் என்ன செய்யவார்? தப்பு செய்த இரண்டு வில்லன்களையும் நேரடியாகப் போய் - அவர்கள் எவ்வளவு தான் ஆள்பலத்தோடு இருந்தாலும் - துவைத்தெடுத்து நீதியை நிலைநாட்டி வருவார்.

      ஆனால், இங்கே என்னடாவென்றால், நாட்டாமை எனக்கு ஒரு நியாயம் சொல்லு என்று அரசாங்கத்திடம் மனுப்போட்டுக் கொண்டு இருக்கிறார். வில்லன் கோஷ்டியை விட்டு விட்டு மிலிட்டிரிக்காரர்களை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். (அதாவது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கிறாராம்...)///////
      இதற்கு 1871 டெக்சாஸ் ரிச்சர்ட்சன் கோட்டையில் நிகழ பெற்ற சம்பவம் விளக்கம் கொடுக்கும்...
      தொடரும்....

      Delete
    2. @செ.அ,

      கிளாசிக் ரிப்ளை! கதைப்பின்னணிக் குறிப்புகளை இது போல அடிக்கடி விவரியுங்களேன்! (தேடிப்படிக்க சோம்பல்தான், யாராவது இப்படி அழகுத் தமிழில் எழுதிட்டால் படித்திட கசக்குமா?)

      Delete
    3. Super super ..
      செனா அனா ஜி...தொடருங்கள்..விரைவாக..
      நண்பர் s.v.v.ன் சந்தேகம் எனக்கும் 1994லே எழுந்தது.ஆனால் யாரை கேட்க ?எங்கே கேட்க?...அனைத்தும் இப்போது கூடி வர உங்கள் விளக்கத்திற்கு பிறகு இந்த கதையை படித்தால் புதிய கோணத்தில் இருந்து அனுகலாம் ...வாவ்...இந்த வாய்ப்புகளை அளித்த அன்பின் உறைவிடம் ஆசிரியர் அவர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியைத் தெரிவிக்கிறேன் .

      Delete
    4. ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி !!!!!!!!
      1871 மே மாதம் கோச் வண்டி ஓட்டுனர்களை கொலை செய்த குற்றத்திற்காக கியோவா பிரிவு தலைவர்களான சாடான்டாவும் பிக் ட்ரீயும் ஜூலை மாதம் கைது செய்ய படுகிறார்கள்.
      இவர்கள் குற்றம் டெக்சாஸ் ரிச்சர்ட்சன் கோட்டையருகே கோர்ட்டில் உறுதி செய்யபடுகிறது.
      ஆனால் கோர்ட்டில் சாடான்டாவின் முழக்கம் இதுதான்...

      என்னை விடுவித்தால் டெஹான்னா பகுதியிலிருந்து என் வீரர்களை அழைத்து வெளி சென்றுவிடுவேன்.....அல்லையேல் இப்பகுதி புல்வெளி அனைத்திலும் போர்த்தீ கொழுந்து விட்டு எரியும்....

      கோர்ட் இதனை மதிக்காது இருவருக்கும் மரண தண்டனை வழங்கியது......

      ஆனால் டெக்சாஸ் கவர்னர் போர் விளைவுகளை எண்ணி இருவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.....

      மக்கள் மனதினை விட்டு இச்சம்பவம் அகன்ற சில காலத்தில் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டனர்....................

      கோர்ட் விதிக்கும் தண்டனையை குறைக்கவோ,மாற்றியமைக்கவோ கவர்னருக்கு அதிகாரமுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


      இங்குதான் டெக்சுக்கு முதல் சிக்கல் துவங்குகிறது....

      பார்லோவும் சாமும் கொள்ளைகாரர்களோ,ஆயுத கடத்தல்காரர்களோ,போக்கிரிகளோ அல்ல.

      பிராந்திய ராணுவ முகாமுக்கு இறைச்சி விநியோகிப்பவர்கள்....பொதுமக்களுக்கு இடையூறு செய்பர்கள் அல்ல......தங்கள் வழியில் குறுக்கிடாதவரை............

      ஷெரீப் நியாயவாதியாக இருப்பினும் பார்லோவும் சாமும் நடத்திய செவ்விந்திய கொலைகள் அவரது அதிகார எல்லைக்கு அப்பால் நடந்தவை.....

      எனவே அவர் அதை பற்றி விசாரிக்க இயலாதவராய் இருக்க கூடும்....
      அப்படியே அவர் பரலோ , ஸாம் மீது குற்றம் சுமத்தினாலும் இறைச்சி விநியோகம் மூலம் கர்னல் ஸ்டீவர்ட் உடன் நட்புறவு கொண்டிருக்கும் அவர்கள் இருவரும் கவர்னருக்கு கர்னல் மூலம் அனுப்பப்படும் அறிக்கை தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதை அறிவார்கள்....
      செவ்விந்தியர்கள் மீதான வெள்ளையர் தாக்குதல் போன்ற சென்சிடிவான விஷயங்களில் ஷெரீப் அறிக்கையை விட சம்பவ இடத்தில் இருந்தகர்னல் அறிக்கையை அவர் பெரிதாக எடுத்து கொள்வார் என்பதில் ஐயமில்லை....

      உண்மையில் டெக்ஸ் கர்னல் அலுவலகம் வரும்போது இது ஏற்கனவே நடந்து விட்டது...

      ஒரு மாகாணத்தின் சட்ட பரிபாலனையில் உச்ச அதிகாரம் பெற்ற கவர்னரின் கடிதம் இவ்விவகாரத்தில் தமக்கு சாதகமாகயில்லை என்பதை உணர்ந்தபிறகே கவர்னருக்கும் மேலாக அதிகாரத்தில் மேற்பட்டவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல முயல்கிறார்.


      .....

      Delete
    5. பார்லோ, ஸாம் இருவரின் அராஜக செயலுக்கு செவ்விந்திய சிறுவர்களின் எதிர்வினை சரியானதாக இல்லை.....
      தனது நண்பன் சுடபட்டபின் பின்வாங்காது அவனை காப்பாற்ற முயலாது ஓடும் ரயிலின் உள்ளிருப்போர் மீது அம்பு தொடுத்தது அனுபவமின்மையே......

      இதில் அப்பாவியான கேப்டன் தோளில் அம்பு பாய்ந்திருப்பது- அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாவிடினும்-டெக்ஸ் தரப்புக்கு பாதகமான அம்சமே.....

      கோர்ட்டுக்கு எடுத்து சென்று இருப்பினும் யார் முதலில் தாக்குதல் தொடுத்து இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பலனை பிளாய்டு போன்ற வெள்ளையர் சாட்சி எதிராக இருப்பினும் பார்லோ ஸாம் பெற்று இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.....

      பார்லோ ஸாம் இருவரையும் டெக்ஸ் அவர்களின் ஆள்பலத்தை முறியடித்து துவைத்து எடுப்பதால் என்ன பலன்?
      அவர்களை கொன்றால் சட்டத்தின் பார்வையில் அவர் கொலையாளியாகவே கருதபடுவார்.......
      நவஹோ தலைவராக இருப்பதால் ரேஞ்சர் வில்லையை அணிய முடியாத நெருக்கடி....

      ராணுவ கோட்டையை எரிப்பது, ராணுவ வீரர்களை பிணையாளிகளாக கொள்வது மூலம் மேல்மட்ட தலைவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.....

      எல்லாவற்றுக்கும் மேலாக பிளாய்டின் பத்திரிக்கையாளர் என்ற வலிமையை பயன்படுத்துவதுதான் முத்தாய்ப்பு......
      இவ்வளவு செய்தும் டெக்ஸின் முயற்சி வெற்றி அடைந்திருக்குமா என்றால் அது சந்தேகமே....

      பார்லோ, ஸாம் இருவரும் பிளாய்டை சுட்டு டெக்சுக்கு பெரும் உதவி செய்கின்றனர்....
      இதற்காகவே ஷெரீப் அவர்களை கைது செய்ய முனைகிறார்.....செவ்விந்தியர்களை
      கொன்றதற்காக அல்ல.......

      பார்லோ ஸாம் இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டு கொள்வதே நல்ல முடிவு.....

      Delete
    6. ஷெரீப் முன்னிலையில் அவர்கள் இருவரும் சரண் அடைய முடிவு செய்து இருப்பின் டெக்ஸ் ஒன்றும் செய்ய இயலாது,....பின்னர் அவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வெளிவர முயற்சி செய்வர்.....

      தாக்குதல் நடத்தி இருந்தாலோ ஷெரீப் அவர்களை காயபடுத்தி கைது செய்ய முயன்று இருப்பார்......

      எல்லாம் சுகமே..................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


      பின் இணைப்பு : 1

      டெக்ஸ் கர்னல் ஸ்டீவர்ட்டை அலைய விடும்போது இப்படி நடக்குமா???? இவ்வளவு மோசமாகவா ஒரு ராணுவ அதிகாரி முடிவெடுப்பார் என்றுதானே நினைக்கிறோம்

      கர்னல் காரிங்டன் பில் கார்னே கோட்டையை நிர்மாணிக்க லகோட்டா செவ்விந்தியர்களின் மிக சிறந்த வேட்டை இடத்தை தேர்ந்தெடுக்க வெகுண்ட லகோட்டா, செயன்நீக்கள்,அரபாஹோக்கள், க்ரோ குழுவினர் ஒருங்குஇணைந்து வியூகம் வகுத்தனர்...
      கேப்டன் பெட்டர்மேனை கோட்டையை விட்டு வெளி கொணர, அந்த வலிமை வாய்ந்த குதிரை படையை வீழ்த்த அவர்கள் வகுத்த decoy groups, traps அனைத்தும் நம் டெக்ஸ் போலவேதான்...நிஜம்தான்
      கிரேசி ஹார்ஸ் அங்கம் வகித்த இந்த செவ்விந்திய குழு அக்குதிரை படையை முற்றிலும் நிர்மூலம் செய்தது.....
      கேப்டன் பெட்டர்மேன் தங்கள் புதிய ரிபீட் பயர் ரைபிள்கள் மீது வைத்த அதீத நம்பிக்கை பொய்த்தது.....
      Battle of hundred slain என்றும் fetterman massacre என்றும் அழைக்கபடுகிறது.... .
      பின் இணைப்பு 2
      உருவாகும் இடத்தை விட்டு விட்டு, சம்பந்தமில்லாத இடத்தில் தன் பலத்தை காட்டும் புயலின் தன்மையை மனதில் கொண்டு பழிவாங்கும் புயல் என்று பெயர் வைத்திருக்கிறார் (அந்தக் காலத்திலேயே...)
      உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் தன் பலத்தை காட்டுபவர்களை

      மனைவி என்றும் அழைப்பதுண்டு............:-)






      Delete
    7. அருமையான விளக்கம் செனா அனா ஜி..
      நீங்கள் குறிப்பிட்ட வாறு கவர்னர்பதிலை கர்னல் வாங்கி வைத்து கொண்டு ,டெக்ஸிடம் மிக அலட்சியமாக பேச அந்த நொடியில் தான் புயல் மையம் கொள்கிறது.
      இப்போது நீங்கள் டெக்னிக்கல் ஆக அந்த கால சட்ட சூழ்நிலை களை விளக்கிய பின்பே டெக்ஸ் செய்யும் இந்த தந்திர யுத்த பின்னணி முழுவதும் 22வருடங்களுக்கு பிறகு புரிகிறது. சூப்பர் ஜி...
      தொடர்ந்து 5நிமிடங்கள் கைதட்டி கொண்டே விசில் அடிக்கும் படங்கள்..
      ......

      Delete
    8. /// உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் தன் பலத்தை காட்டுபவர்களை
      மனைவி என்றும் அழைப்பதுண்டு............:-) ///

      செனா அனா! இதைப்படிச்சதும் கண்ணுல ஜலம் அருவியா கொட்டிடுத்து.!!!

      இன்னும் பழி வாங்கும் புயல் படிக்கவில்லை. ஜூலியாக்கு அப்புறம் படிக்கலாம்னு இருந்தேன். இப்போ முத்துமினி, "என் பெயர்" டைகர் (இதைக் கேட்டதும் சில நண்பர்களுக்கு குறிப்பாக சனி இரவு உடனிருந்த நண்பர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வரலாம்) எல்லாம் கிடைத்திருப்பதால் இப்போதைக்கு எதைத் தொடங்குவது என்ற குழப்பமான சூழல் நிலவுகிறது.
      செனா அனா வின் பதிவைப் படித்தபின் முதலில் ப.வா. புயலையே எடுக்க வேண்டும் என்ற அவா என்னுள்ளத்தை உந்தித் தள்ளுகிறது.!!!

      Delete
    9. செனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான ஒப்பீடுகள்...கதய படிக்காம விமர்சனங்கள தாண்டும் நண்பர்களும் இதன kathaya padicha pinnaபடிக்கணும் ...ஆசிரியர் விமர்சனத்துக்குன்னு மாதம் தோறும் ஒதுக்கினால் பலரும் கதய படிச்ச பின்னர் இது போல சுவாரஷ்யமா பங்கு பெற ஏலும் . லோடு மோர் பிரச்சனயும் பாதிக்காது .இந்த வருடம் முழுதும் சோடை போகா கதைகள படச்சதால புத்தகங்கள தேர்ந்தெடுத்து வாங்கும் நண்பர்களயும் அத்தன கதைகளயும் வாங்கிப் படிக்க வைக்கும் ..இதற்கு பதிலளிக்க வைத்த sv அவர்களுக்கும் நன்றிகள்....

      Delete
    10. செனா அனா அவர்களே,
      அப்படியே எங்கள பத்தியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை..?

      Delete
  72. செ.அ. சார்... சும்மா பின்றீங்களே....

    தொடருங்கள்.... காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  73. /// உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் தன் பலத்தை காட்டுபவர்களை
    மனைவி என்றும் அழைப்பதுண்டு............:-) ///

    ஹா... ஹா... ஹா... சூப்பர் சார்.

    நீங்கள் சொன்ன அத்தனை காரணங்களும் ஏற்றுக்கொள்கிறேன் சார்.

    அதனால்தான் நினைக்கிறேன் இந்தக் கதையில் டெக்ஸ்வில்லருக்குப் பதிலாக டைகர் இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று...

    ReplyDelete
    Replies
    1. //அதனால்தான் நினைக்கிறேன் இந்தக் கதையில் டெக்ஸ்வில்லருக்குப் பதிலாக டைகர் இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று...//

      உண்மை உண்மை ....!

      ஆனா டெக்ஸ்ம் ரேஞ்சார் தானுங்களே பரவாயில்லை, இருந்துட்டு போகட்டும் விட்டுகொடுபோம் VENKATESHH sir :)

      Delete
  74. சார் கமான்சே அருமை . கமான்சேவ மிரிந்து டஸ்ட் வந்தது சென்ற கதயில் பிடிக்கவில்லை...படிக்க படிக்க டங்கன் குடும்பம் அட்டகாசம்...இந்தக் கதயில கமான்சேவ தேடி போறது பிடிக்கல ...கதயும் பக்கங்கங்கள புரட்ட ெதிர்பார்ப்பில்லாம விறுவிறுப்பா போகுது ..சென்ற கதயில ிருந்த ெதிர்பார்ப்ப தக்க வச்சுக்க முடியலன்னாலும் ... ஓவியங்களும் ...விறுவிறுப்பும் கதய இரசிக்க வைக்கத் தவறலை ..

    ReplyDelete
  75. நின்று போன நிமிடங்கள் :-

    டாக்டர் ஜூலியா கெண்டல்!, சூப்பர் க்ரிமினாலஜிஸ்ட் மேடம் நீங்க.!

    குறுகிய நேரத்தில் விசாரணயை முடித்து, தெரிந்த விசயங்களை வைத்தே, இப்படித்தான் நடந்திருக்கக் கூடும் என்று அனுமானித்து டேவ் மோரனை சமாதனப்படுத்துவதில் ஜூலியாவின் கேரக்டர் என்னவென்பதை நமக்குத் தெளிவாக தெரிவிக்கிறார் கதாசிரியர்.!

    எளவரசிக்கு கார்வின் அங்கிள் மாதிரி, ஜூலிக்கும் ஒரு லியோ இருக்கிறாப்பல .. (ஆனால் அங்கிளை விட இந்த ஆசாமி கொஞ்சம் பரவாயில்லைன்னுதான் சொல்லோணும்.)
    வெறுமனே கதைநெடுக ஜூலியாவை புகழ்ந்து கொண்டிராமல் ஈக்கோலாக ஹெல்ப் செய்யுறாப்பல.!

    க்ளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கக்கூடுமென்று முன்கூட்டியே யூகிக்க முடிந்தது. ஆனாலுமே கடைசிப் பக்ககங்கள் டச்சிங்காக இருந்தன என்பதையும் மறுப்பதற்க்கில்லை.
    மாபியா மலேச்சிக் குடும்பத்தாரின் விவகாரங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியிருக்கலாம். (விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் கூட்டும் பொருட்டு) .

    டேவ் மோரனுடன் நின்று கொண்டு அந்த அப்ரசெண்டி ஃபாதர் பிரச்சாரம் செய்யும் இடத்தில்,
    "யோவ் டேவு, அந்தாளை புடிச்சி கீழத் தள்ளுய்யா " என்று கூப்பாடு போடவேண்டுமென நமக்கே தோணும்.

    விண்வெளியில் ஒரு விபரீதமும் நல்ல கதைதான். எனினும் நின்று போன நிமிடங்கள் அதைவிட ஒருபடி மேலே நிற்கிறது.

    ஒரேயொரு குறை. சித்திரங்கள். முந்தைய கதையில் தெளிவாக அழகாக இருந்த சித்திரங்கள், இக்கதையில் அள்ளித்தெளித்த கோலமாய் சற்றே கீச்சலாக ஒழுங்கின்றி தெரிகின்றன. முந்தைய கதையில் (ஓரளவிற்க்கு) அழகாகத் தெரிந்த ஜூலியா இப்போது ரொம்பவும் தொங்கல்போல் காட்சியளிக்கிறார்.

    ஆனால் கதையின் வேகத்தில் சித்திரத்தின் நிலை கண்டுகொள்ளப்படாமலேயே கடந்து செல்லப்படுகிறது.!

    ஜூலியா - சபாஷ் அம்மிணி!!!

    ReplyDelete
    Replies
    1. ஜூஜூஜ்ஜிலிப்பா டக்கரான சுண்டல் சாப்ட்றாங்களா..?
      எனக்கு....????

      Delete
  76. நெஞ்சில் ஒரு நட்சத்திரம் :-

    இத்தொடரின் நாயகர் ஓவியர் ஹெர்மன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.
    அழகான முறையில் அகோரமான முகங்களையும் அற்புதமான முறையில் சுற்றுப்புறங்களையும் அநாய்சயமாக வரைந்து தள்ளியிருக்கிறார். இக்கதைத் தொடரில் வரும் மங்கையர் மட்டும் எழிலான முகத்துடன் காட்சியளிக்கின்றனர். மாறாக ஆடவர்கள். . . அய்யகோ!!! (இவனுக ஹேர்ஸ்டைல்ஸ் இருக்கே. .. அடா .!. அடா.! . .)

    48 பக்கக் கதையில் கடைசி நாலே பக்கங்களில் ரூக்மாண்ஸ் கும்பலை கொன்று குவிக்கிறார்கள். (பாக்கி பக்கங்களில் பேசிப்பேசியே நம்மை. . . .)

    அவ்வளவு பெரிய கும்பலை ஆறே பேர் கொண்ட சிறிய குழு முறியடிப்பதை இன்னும் விளக்கமாகவும் கூடுதல் சுவாரசியத்துடனும் சொல்லியிருந்தால் இக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்.!

    க்ளைமாக்ஸ் வரையிலும் போரடிக்காமல் கொண்டு செல்வதில் சித்திரங்களின் பங்கு கணிசமானது.
    கான்சோ மற்றும் மார்க் ஆஃப் மூன் இடையே நடக்கும் தகராறு, அதில் ரெட் டஸ்டின் தலையீடு என இடையிலும் சில சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன.!

    ரெட் டஸ்ட் , மீண்டும் 666 பண்ணைக்கே வந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை இக்கதையின் இறுதிக்கட்ட வசனங்கள் பறைசாற்றுகின்றன.!

    கமான்சே - மோசமில்லை, கரையேறிவிடுவாள்.

    ReplyDelete
  77. சார் பிரியமுடன் பினைக்கைதி படித்து விட்டேன் ..அட்டகாசமான நகர்த்தல்களும் ...அற்புதமான நகைச்சுவை இழையோடும் உரயாடல்களும் பக்கங்கள கடந்த நினைவே இல்லாமல் வாசிக்க செய்தன . அருமை சார் ..ரின் டின் நம்முடன் உலவட்டும்

    ReplyDelete