நண்பர்களே,
வணக்கம். கால்பந்து ஜூரம் அனலாய் அடிக்கும் ஐரோப்பாவில் இந்த வாரயிறுதியினை ஒப்பேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் ! நமது மிஷினரி இறக்குமதிப் பிரிவின் சார்பில் இந்தப் பயணம் ஒரு வாரத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் ! ஆனால் ஒரு டஜன் இதழ்கள் / நண்பர்கள் சந்திப்பு / புத்தக விழா ஏற்பாடுகள் என அத்தனையும் அந்தரத்தில் தொங்கி நின்ற தருணம் எனக்கு மூட்டையைக் கட்டவே ரசிக்கவில்லை ! ஆண்டவனும் ஒரு காமிக்ஸ் காதலர் என்பதில் ஐயமில்லை என்பதால் - எனது வேலையை இந்த வாரம் வரை ஜவ்விழுக்க சாத்தியமாக்கித் தந்துவிட்டார் ! And அந்தப் புண்ணியத்தில் நமது கோமானின் வேட்டை நகரில் நேற்றைய பொழுதையும், டெக்சின் தாய்வீட்டில் இன்றைய நாளையும் கடத்திக் கொண்டுள்ளேன் ! கோடையின் வரவும், வாரயிறுதியின் முதல் நாளும் ; யூரோ கோப்பை புட்பால் போட்டிகளும் கைக்கோர்த்து நிற்க - ஊரே திருவிழா கோலம் பூண்டு நிற்க -எனக்கோ மண்டைக்குள் "பதிவு போட்டாகணுமே கோப்பால் !" என்ற குடைச்சல் ! So மிலான் நகரின் மையத்தில் எழுந்து வரும் பரபரப்பின் ஓசைகளை காதுக்குள் போட்டுக்கொள்ளாமல் சிக்கியதொரு காகிதக் கத்தையில் எழுதிட மிலானின் அசாத்தியமான தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் ! பதிவின் சாரம் தெற்கே புறப்பட்டு, கிழக்கே பயணமாகி , வடக்குப் பக்கமாய்ப் போய் ; மேற்கே U-டர்ன் அடிக்கும் விதமாய் இருப்பின், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்களேன் - இந்த ஒருமுறை மட்டும் !
First things first !! இன்னமும் ஒரே நாள் மீதமிருக்கும் BAPASI சென்னைப் புத்தக விழா நம்மைப் பொறுத்தவரை கடவுளின் கொடையே !! வழக்கமான ஜனவரியின் விற்பனை எண்ணிக்கையினைத் தொடும் சாத்தியங்கள் துளியும் இல்லையெனினும், ஆண்டின் மையப் பகுதியில் கடுமையான வைட்டமின் "ப" தட்டுப்பாட்டில் தடுமாறி வரும் நமக்கு - இங்கே கிட்டியுள்ள decent விற்பனையானது அடுத்த மூன்று மாதங்களைக் கடந்து செல்லும் வலுவை நல்கியுள்ளது ! தொடரும் மாதங்களில் நெய்வேலி ; ஈரோடு & மதுரை விழாக்களும் நமக்கு வாயில்களைத் திறந்திடும் பட்சங்களில் - டிசம்பரைத் தொட்டு விடுவோம் - புத்தூர் மாவுக்கட்டுப் போடும் அவசியங்களின்றி ! விற்பனை ஒருபக்கமெனில் - சென்னையில் எப்போதுமே மீடியாவின் பார்வைகளில் நாம் விழும் சாத்தியங்களும் அதிகம் ! இம்முறையும் TV சேனல்கள் ; தினமலர் ; இந்தியன் எக்ஸ்பிரஸ் ; ஹிந்து உள்ளிட்ட நாளிதழ்கள் நம் பக்கம் நிறையவே ஆர்வத்தைக் காட்டின ! இதுதவிர இன்னும் சில சுவாரஸ்யமான மனிதர்களும் நமது ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தனர் ! அதனில் ஒரு சந்திப்பு கொஞ்சமாய் பலன் தந்திடும் பட்சத்தில் - நமது சிக்கல்களில் ஒரு பகுதி தீர்ந்திடவும் வாய்ப்புள்ளது ! அது நிஜமாகிடும் பொழுது நிச்சயமாய் உங்களுக்குத் தெரிவிப்பேன் ! Last but not the least - அடைமழையோ ; அனலடிக்கும் பகல் பொழுதுகளின் வெப்பங்களோ ; ஜூன் மாதத்தின் பிடுங்கல்களோ - நிஜமான புத்தகக் காதலர்களுக்கு ஒரு பொருட்டே ஆகாது என்பதை அழுத்தமாய்ப் பதிவு செய்துள்ள தலைநகரின் பிரஜைகளுக்கு நமது வணக்கங்கள் உரித்தாகட்டும் ! And தேர்தல் முடிந்த பின்னே இருந்த சொற்ப அவகாசத்தில் விழாவுக்கென அற்புதமாய் ஏற்பாடுகள் செய்ததுக்கும் சரி ; மழை கொட்டித் தீர்த்த நாளின் இரவிலும், தொடர்ந்த பொழுதின் காலையிலும் அசாத்திய ஈடுபாடு காட்டியமைக்கும் சரி - BAPASI -யின்குழுவிற்கு hats off !!ஒவ்வொரு ஸ்டாலின் உரிமையாளர்களுக்கும் கலையில் போன் செய்து, உடனே ஸ்டாலுக்கு வரச் சொல்லித் தகவல் தந்தது மட்டுமன்றி, இரவு முழுவதும் இருளினுள் தட்டுத் தடுமாறிக் கொண்டே இயன்ற அத்தனையும் செய்துள்ளனர் - ஒவ்வொரு ஸ்டாலிலும் உள்ள புத்தகங்கள் நனைந்து போகாதிருக்க ! Awesome !!
"என் பெயர் டைகர்"-ன் hype-லும் ; முத்து மினி இதழ்களின் மறுவருகையின்பொருட்டும், திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளாய் இம்மாதத்து ரெகுலர் இதழ்கள் தத்தளிக்குமோ என்ற சிறு பயம் என்னுள் இருந்தது ! அதிலும், டெக்ஸ் மறுபதிப்பு நீங்கலாய் - பாக்கி இதழ்களில் எல்லாமே சராசரியான நாயக / நாயகிய / நாலு காலார் ஆதிக்கம் தான் என்ற பொழுது எனது கலக்கத்திற்கொரு முகாந்திரமில்லாதில்லை ! ஆனால் அவற்றிற்குக் கிட்டியுள்ள பரவலான thumbs up சந்தோஷம் தருகிறது !
COMANCHE - எப்போதும் போலவே சித்திரங்களில் வாங்கிடும் ++++++ மார்க்குகள் - கதையின் (-) (-) (-) களை தனது தோளில் சுமந்து செல்வது புரிகிறது ! "பேசியே பிராணனை வாங்குகிறார்கள்" என்ற விமர்சனம் இந்தக் கதைக்கு சற்றே தூக்கலாய் பதிவாகியுள்ளதையும் கவனிக்கவே செய்தேன் ! In fact எழுதும் போதே "பேச்சைக் குறைங்கடா !" என்று அந்தக் கும்பலிடம் சொல்ல வேண்டும் போலவே தோன்றியது ! Maybe ஆங்காங்கே வசனத்தில் கொஞ்சம் கத்திரி போட்டு - சற்றே crisp ஆக்கிடுவோமா ? என்று கூட நினைத்தேன் ! ஆனால் - 'கதாசிரியரின் கடின உழைப்பை நீ என்னமாய் கபளீகரம் செய்யப் போச்சு ?" என்றொரு புது Surf Exel படலத்துக்கு நாமே தடம் போடுவானேன் ? என்று அந்த ஆசையை ஓரம்கட்டி விட்டேன் ! 15 ஆல்பம்கள் கொண்ட தொடரின் மையத்தில் தற்போது நிற்கிறோம் - 8 இதழ்களை வெளியிட்டுள்ள நிலையில் ! பாக்கி 7 கதைகளை இதே போல் ஆண்டுக்கு 2 இதழ்கள் என இன்னமுமொரு 3 ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லலாம் ! Or maybe ப்ளூகோட்களுக்கு செய்ததைப் போல - ஒரு சின்ன பிரேக் தந்து விட்டு அதன் மறுவருஷம் கேரட் மண்டையரை மறுபடியும் துவங்கிடலாமா ? (ப்ளூகோட் கதைகள் எல்லாமே one shots எனும் போது - பிரேக் விழுந்தாலும் தொடரவில் பெரியதொரு பாதிப்பு இராது தான் !) ஆனால் COMANCHE விஷயத்தில் நிலவரம் அவ்விதம் கிடையாதெனும் பொழுது - ப்ரேக் விடுவதில் எனக்கு உடன்பாடில்லை தான் ; but still - உங்கள் அபிப்பிராயங்களையும் தெரிந்து கொள்வது நலமே என்று பட்டது ! What say all ?
சந்தேகமின்றி ஜூலியா ஜூனின் ஒரு வெற்றிக் கதை ! "வள வள வென்று போனது ; ஆக்ஷன் இல்லை !" என்ற ரீதியிலான விமர்சனங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாய்ப் பார்க்க இயன்றது தானெனினும் - இது போன்ற இயல்பான, வித்தியாசமான கதைகளை ஆண்டுக்கு ஒருமுறை கூட வெளியிட வேண்டாமென்ற சிந்தனையில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது ! திரும்பின திசையெல்லாம் தொப்பிவாலாக்களும், தோட்டவாலாக்களுமே ராஜ்ஜியம் செய்வது தொடரின் - சலிப்பு நேர்வதைத் தவிர்க்க இயலாது தானே ? So ஜூலியா is here to stay !
நிஜத்தைச் சொல்வதானால் - இம்மாதப் பட்டியலில் நமது "4 கால் ; 1 வால் ரின் டின்பார்ட்டி" உங்களிடம் டின் வாங்கிடுவாரோ என்ற பயம் என்னுள் இருந்தது ! பெரியதொரு கதை கிடையாதெனும் பொழுது - வசனங்களிலும், சித்திர ஜாலங்களிலுமே தலைதப்பித்தாக வேண்டுமென்பதைப் படைப்பாளிகள் அழகாய்ப் புரிந்து வைத்திருந்ததால் இதனை நீங்கள் எவ்விதம் எடுத்துக்கொள்வீர்களோ என்ற சிறு அச்சம் ! ஆனால் ஜாலியான நமது கலாரசிகனை நீங்களும் ஜாலியாய் ஏற்றுக் கொண்டு விட்டதில் எனக்கு ஜாலியோ ஜாலி ! Phew !!
And விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு லெவெலில் வீற்றிருக்கும் இரவுக் கழுகாரின் ஒரு classic வண்ண மறுபதிப்பெனும் பொழுது - no surprises at all !! "பழிவாங்கும் புயல்" நம் கையிருப்பில் 6 மாதங்களைத் தாண்டாது என்பது நிச்சயம் !! A crackerjack !!
முத்து மினி மறுபதிப்புகளும் decent ஆன வரவேற்பைப் பெற்றுள்ளதைப் பார்க்க மகிழ்வாக உள்ளது ! உள்ளூர் ஆக்கங்களே என்றாலும், தரமானவை எனும் பொழுது அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதில் மன நிறைவாய் உணர்கிறோம் ! இந்த "குட்டி விலை / சிம்பிள் format" என்ற தடம் வரும் நாட்களில் நிறையவே பரிசோதனை முயற்சிகளுக்கு பயன்படக் கூடுமென்றே தோன்றுகிறது ! இந்த 6 பிரதிகளையும் பார்த்த நாள் முதலாகவே தலைக்குள் சுழலும் சக்கரங்கள் உருப்படியாய் ஒரு பலனை அறிவிக்கும் பொழுது - நிச்சயமாய் அதனைப் பகிர்ந்து கொள்வேன் உங்களோடு !!
And finally to the man of the moment : டைகர் !! கூரியர் குளறுபடிகள் ; ஏகப்பட்ட சின்ன இதழ்களோடு வந்திருக்கும் பெரிய இதழ் ; விடுமுறைகள் இல்லா மாதம் - என்ற சிலபல காரணங்களால் "என் பெயர் புலிக்குள்" உங்களில் பலரும் முழுவதுமாய்ப் புகுந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரிகிறது ! "அட்டைப்படம் அழகு ; black & white பதிப்பு அழகு "என்ற ஆரம்ப கட்ட எண்ணச் சிதறல்களைத் தாண்டி - கதை பற்றி ; இதழ் பற்றி உங்களது பதிவுகளைக் காண ஆவல் ! Maybe இந்த ஞாயிறை அதற்கெனச் செலவிடலாமா ?
Looking ahead - lion ஆண்டுமலருக்கென ஒரு 3-in -one பிரான்கோ-பெல்ஜிய நாயகர்களின் தொகுப்பு தயாராகி,அதன் பக்கங்கள் என் மேஜையில் ஒரு பகுதியும், இங்கே எனது பெட்டிக்குள் மீதமும் கிடக்கின்றன ! இந்த ஞாயிறை ரோஜரோடு செலவிடப் போகிறேனா ? - பார்த்தாக வேண்டும் ! ஆண்டுமலர் என்ற topic-ல் உள்ள இந்தத் தருணத்தில் - எனக்குள் ரொம்ப நாளாகவே ஒரு சின்னக் கேள்வி ! ஒவ்வொரு ஆண்டும் சத்துக்கு ஏற்றார் போல ஏதோ ஒரு "ஆண்டுமலர்" இதழை நமது லயனில் வழக்கமாக்கியுள்ளோம் ! ஆனால் முத்து காமிக்ஸில் நான் பொறுப்பேற்றுக் கொண்ட புதுசில் - (1988 ? 1989 ?) ஆண்டுமலர் என்று வெளியிட்டதன்பின்னே ஏனோ அந்த முயற்சி தொடரவில்லை! And உண்ணும் விரதம், சைக்கிள் மறியல் , கண்ணாடியை முறைத்துப் பார்த்தல் என்ற ரீதியில் உக்கிரமான கொரில்லா யுக்திகளை அறிந்து வைத்திருக்கும் "போ.கு" இதுபற்றி பெரியதொரு கொட்டாவியைக் கூட விட்டிருக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சர்யமே ! காத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ?
ABSOLUTE CLASSICS பற்றிய updates : "மின்னும் மரணம்" வண்ணத் தொகுப்புக்கான முன்பதிவுக்குப் பிற்பாடாய் இது போன்றதொரு அட்டகாச முன்பதிவினை இப்பொழுது தான் பார்க்க சாத்தியமாகியுள்ளது என்று சொல்லலாம் ! முன்பதிவின் எண்ணிக்கை அதற்குள் 100-ஐத் தாண்டி விட்டதென்றே நினைக்கிறேன் ! So நமது இலக்கைத் தொட ரொம்பவெல்லாம் காத்திருக்கத் தேவையிராது என்றே படுகிறது ! இங்கே சின்னச் சின்னதாய் சில விளக்கங்களைச் சொல்லிட நேரம் எடுத்துக் கொள்கிறேனே :
" 2 கதைகள் ; hardcover பைண்டிங் ; விலை ரூ.200" என்ற template தான் இந்த வண்ண ABSOLUTE CLASSICS இதழ்களின் பின்னணியாக இருக்குமென்று சென்ற பதிவிலேயே விளக்கமாய் எழுதியிருந்தேன். நண்பர்களுள் சிலர், "hardcover வேண்டாம் - விலை ரூ.150 என்று வையுங்களேன்" என்றும், இன்னும் சிலரோ - "hardcover வேண்டாம் - 3 கதைகள் போட்டு, விலையை ரூ.200 என்றே நிர்ணயம் பண்ணுங்களேன்" என்றும் எழுதியுள்ளனர் ! விலையைக் குறைப்பதோ - அதே விலையில் பக்ககளைக் கூட்டுவதோ in effect ஒரே விளைவுகளைச் சார்ந்த தீர்மானங்களே என்பதால் 2 வினவல்களுக்கே ஒரே பதிலே சொல்லிட அவசியமாகிறது ! வெறும் 1000-1200 என்ற printrun களில் செயல்படும் வேளையில் நமக்கு தலை தப்பிப்பதே பெரும் விஷயம் என்றாகிறது ! இன்னும் சொல்லப் போனால் - பிராசஸிங் & அச்சுப் பணிகளில் சிவகாசி ஸ்டைல் அந்தர்பல்டிக்கள் நிறையவே அடிக்க முடிவதால் தான் இந்த முயற்சி சாத்தியம் என்றாகிறது ! பெருநகர அச்சக கட்டணங்களையோ ; நிர்வாகச் செலவுகளையோ நாம் கணக்கிட்டால் அம்பேல் தான் ! So விலை குறைப்பு / பக்க இணைப்பு இரண்டுக்கும் தற்போதைய சொற்பமான பிரிண்ட் ரன்னில் வாய்ப்பில்லை நண்பர்களே ! And "இந்த இதழ்களுக்கு hardcover ஏனோ ?" என்ற கேள்வியினை கொண்டுள்ளோர்க்கும் பதில் சொல்லிய புண்ணியம் எனதாகட்டுமே ? நமது இதழ்களின் பல பரிணாம மாற்றங்களை / ஏற்றங்களை / இறக்கங்களை அருகிலிருந்து கவனித்து வரும் உங்களுக்கு இதன் பின்னணிக் கதைகள் தெளிவாய்த் தெரிந்திருக்கும் என்பதால் எங்கள் பிழைப்பு லேசாகிறது ! ஆனால் இந்தக் கருத்துப்பரிமற்றங்களுக்கு அப்பால் உள்ள நண்பர்கள் ; புத்தக விழாக்களில் நமது ஸ்டாலில் புத்தகங்களை வாங்கிட முனையும் casual readers போன்றோருக்கு ஒரு regular இதழுக்கும், அடுத்த limited edition இதழுக்குமான வேற்றுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா ? So ரூ.65 என்ற விலையில் ஒரு லக்கி லூக் ரெகுலர் இதழையும் , வரக்கூடிய ABSOLUTE CLASSICS-ன் 2 லக்கி லூக் கதைகள் அடங்கிய தொகுப்பினை ரூ.200 என்ற விலையிலும் பார்க்க நேரிட்டால் குழம்பிடுவது இயல்பு தானே ? So இந்த hardcover வடிவமானது - ABSOLUTE CLASSICS இதழ்கள் ஒருவித பிரத்யேக சேகரிப்பின் பிரதிநிதகள் என்பதை வேற்றுமைப்படுத்திக் காட்டும் பொருட்டே ! ஆகையினால் அதனிலும் மாற்றம் இராது guys !
பேசிக்கொண்டே பொழுதைக் கரைக்காமல் - உங்கள் முன்பதிவின் வேகங்களுக்கு ஈடுதரும் விதமாய் நாமும் செயலில் இறங்கினால் சாலச் சிறந்தது என்று மனதுக்குப் படுவதால் - முதல் இதழான லக்கி digest -க்கு மட்டும் இன்றே கதைத் தேர்வுகளை இறுதி செய்துவிடுவோமே ? சவ சவ என்ற நிதானக் காத்திருப்புகளுக்கு அவசியமின்றி - ABS CLASS இதழ்கள் வெளிச்சத்தைப் பார்த்திடத் தொடங்கினால் அதுவே கூட முன்பதிவுகளின் துரிதத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைத்தேன் ! So கீழ்க்கண்ட 3 கதைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வோமா - "கோச் வண்டியின் கதை" யோடு சவாரி செய்திட ?
1.ஜெஸ்ஸி ஜேம்ஸ்
2.தாயில்லாமல் டால்டனில்லை
3.கௌபாய் எக்ஸ்பிரஸ்
இன்றே இதுபற்றிய தீர்மானம் ஆயின், வண்ண டிஜிட்டல் பைல்களுக்கு சுடச் சுட நாளையே ஆர்டர் பண்ணிவிடலாம் ! நிழலை விடவும் வேகமாய்ச் சுடும் கௌபாய் சமாச்சாரத்தில் - நாமும் அந்த வேகத்தைக் காட்டுவோமா ? உங்கள் தேர்வுகளை மேற்படி 3 கதைகளுக்குள் மாத்திரமே வரையறை செய்திடக் கோருகிறேன் folks !!
"எல்லாம் சரிதான்....ஆனால் நான் எதிரார்த்த மறுபதிப்புகள் இது இல்லையே !!" என்ற ஆதங்கம் தெரிவித்துள்ள நண்பர்களுக்கு : எனது தெளிவான பதில் சென்ற பதிவிலேயே உள்ளது ! ஆதரவும், விற்பனையும் கிட்டிடும் பட்சத்தில் இந்த ABS CLASS சுற்றுக்கள் ரெகுலராகத் தொடரும் - இயன்ற கதைகளோடு ! புழக்கத்திலேயே இல்லாத கதைகளோ, வாசக ஆதரவின் மீட்டரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாத நாயகர்களோ உங்கள் தேர்வுகளை இருப்பின் - sorry guys !!
இறுதியாய் - "பொன்முட்டை...பிரியாணி...அஞ்சப்பர்..." என்ற ரீதியில் அபிப்பிராயம் கொண்டுள்ள நண்பர்களுக்கு : என்றைக்கோ ப்ளஸ் ஒன்னில் படித்த எகனாமிக்ஸ் பாடத்தை எடுத்து விட இதனை ஒரு குறும் வாய்ப்பாக எடுத்துக்எ கொள்கிறேன் ! எப்போதுமே சந்தை வணிகத்தில் ஒரு பொருளின் விலையும் சரி, அதன் உற்பத்தியும் சரி - நிர்ணயம் காண்பது டிமாண்டின் அடிப்படையிலேயே ! இங்கே தற்போது அரங்கேறி வருவதும் அதுவே !ஒரு சொற்பமான வாசகர்களுக்கு மாத்திரமே இந்த மறுபதிப்புகளில் ஆர்வமெனில் அதற்கேற்ப விலையும் சரி ; எண்ணிக்கையும் சரி நிர்ணயித்து செயல்பட முனைந்துள்ளோம் ! அள்ளி அடித்து இதனிலும் ஏராளமாய் பிரதிகளை அச்சிட்டு கடைகளில் குவித்தால் - நெடும் ஓட்டத்தின் பொழுது நமக்கே அதுவொரு இடராய் உருப்பெற்றிடலாம் தான் ! ஆனால் இப்போதோ - இதுவொரு on demand முயற்சி மட்டுமே ! உங்களுள் ஆர்வம் தொடரும் நாள் வரைத் தொடரும் இதுவும் !! அந்த ஆர்வம் வற்றிய நாளில் அரவமின்றி ஆறடிப் பள்ளத்துக்குள் தஞ்சம் கண்டுவிடும் ! So இப்போதைக்கு - let the show begin !!
கிளம்பும் முன்பாய் ஒரு சின்ன போட்டி !! இன்று மதியம் இங்கே மிலானின் மைய வீதியொன்றில் எடுத்த போட்டோ இது !!
நம்மாட்கள் இங்கேயும் கலக்குவது சுற்றுமுற்றும் நிற்போரின் முகங்களில் தெரியும் மிரட்சியிலேயே புரியும் !! அந்தரத்தில் ஆரோகணம் செய்திடும் இந்த ஆரஞ்ச் ஆசாமிக்கு நமது காமிக்ஸ் தொடர்பாய் ஏதேனும் நயமானதொரு caption எழுதுங்களேன் ?! வெற்றி காண்போருக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஈடாய் எங்கள் நகர மைசூர்பாகு அரை கிலோ பரிசு !! இன்றைய பொழுது மட்டுமே போட்டிக்கான அவகாசம் ! See you around all ! Bye for now !
அதிதிதிதிதிதி காலைப் பொழுதில் வந்துள்ளது பதிவு. இனிய வணக்கம்.
ReplyDeleteSuper I am also in top 3
ReplyDelete//ஏதேனும் நயமானதொரு caption எழுதுங்களேன் ?!//
ReplyDeleteகடைசியாய் நடத்திய போட்டிக்கு வெற்றியாளர் அறிவிக்கப்படவில்லை என நினைக்கிறேன்!
"கோச் வண்டியின் கதை" யோடு சவாரி செய்திட-
ReplyDelete1.ஜெஸ்ஸி ஜேம்ஸ்!
(3 க்குள்தான் தேர்வு என்பதால்!)
+1 my choice too
DeleteJesse James
+ 10000
DeleteJesse James
ஆண்டு மலர் நல்ல குண்டு மலராக மாடஸ்டியின் வண்ணக் கதையுடன் வந்தால் மகிழ்ச்சியே
ReplyDeleteகோச் வண்டியில ஜெஸ்ஸி ஜேம்ஸை ஏத்துங்க சார்
ReplyDeleteஅன்புள்ள விஜயன் சார்
ReplyDeleteகிளாஸிக்ஸ் மற்றும் MMS க்கு முன்பதிவு செய்தாகி விட்டது. இந்த திட்டம் மெகா வெற்றி அடைய வாழ்த்துகள். ஒரு வேண்டுகோள். இதற்கு பிறகு வரும் கிளாஸ்ஸிக்ஸ் இதழ்கள் குறைந்தது 200 பக்கம் (4X48) இருக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. 96 பக்க இதழ்கள் தடிமன் குறைவாக ஹார்ட்பவுண்ட் அட்டையுடன் இருப்பது எப்படி இருக்கும் என்று ரியவில்லை. ஒரு சிலருக்கு பின்வரும் கோரிக்கை அபத்தமாக தெரிய வாய்ப்புள்ளது. இருந்தாலும் கேட்டு விடுகிறேன். எங்கள் புகைப்படம் வரும் டெக்ஸ் கிளாசிக் இதழில் முடிந்தால் உங்கள் மற்றும் சீனியர் எடிட்டரின் ஆட்டோகிராப்பையும் போட்டு எங்களுக்கு அனுப்புங்களேன். புத்தக விழாவிற்கு வர முடியாத எங்களுக்கெல்லாம் இது ஒரு நல்ல கிப்ட்டாக இருக்கும்.
பிறகு அடுத்த வருடத்தில் இளம் டைகரின் மீதமுள்ள அனைத்து கதைகளையும், ஒரு விரிவான முன் கதை சுருக்கத்துடன், ஒரே சிறப்பிதழாக போட்டு கஸ்டம் பிரிண்டில் போட்டு முடித்து விடலாமே. கொஞ்ச நாளைக்கு இந்த டைகர் ரசிகர்களின் தொல்லை இல்லாமல் இருக்கும் :)
@மாயாவி..
நீங்கள் புத்தகங்களை எப்படி பாதுகாக்கிறீர்கள்? அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன். மிகவும் உதவியாய் இருக்கும்.
கமான்சேவுக்கு பிரேக் வேணாம் சார். புழுதி பறக்க தோட்டா பாயும் கதையினை ஆறப் போடாமல் இரண்டு கமான்சே ஸ்பெஷல் போட்டு முடிங்க எடி சார்
ReplyDelete+1
Delete+1
Delete+1
Delete//கமான்சேவுக்கு பிரேக் வேணாம் சார்//
Delete+1
May finish camanse at one stroke ( combo) ( Muthu 45th annual digest?)
Deletehi , i am in top ten list .
ReplyDeleteDear Edi,
ReplyDeleteFinally received Tiger Special... and I must say the production quality is indeed top notch. And I agree that the Hard Bounds add a premium look to Special editions... and no two thoughts on implementing that on collectors limited editions.
My choice oh Lucky selection: Jesse James.
Bon Voyage !!
12th
ReplyDeleteகோச் வண்டியில ஜெஸ்ஸி ஜேம்ஸை ஏத்துங்க சார்
ReplyDeleteஆண்டு மலர் நல்ல குண்டு மலராக மாடஸ்டியின் வண்ணக் கதையுடன் வந்தால் மகிழ்ச்சியே
ReplyDelete2nd
ReplyDeleteஇனிய விடுமுறை தின வணக்கம் நண்பர்களே . சென்னை புத்தக திருவிழா விற்பனை நல்ல நிலையில் இருந்தது என்பது மகிழ்ச்சியான செய்தியே . கிளாசிக் முன்பதிவும் சிறப்பான துவக்கம் என்பதும் மகிழ்ச்சி .
ReplyDeleteமுதல் 10 க்குள் வந்திட்டேனா ??
Deleteநாமெல்லாம் கடேசி பெஞ்சு ... பத்துக்குள்ளே ஆசைபடலாமா...
Deleteஹா ஹா, சரவணன் ஜி செமையா சொன்னிங்க.
Delete//புகைப்படம் வரும் டெக்ஸ் கிளாசிக் இதழில் முடிந்தால் உங்கள் மற்றும் சீனியர் எடிட்டரின் ஆட்டோகிராப்பையும் போட்டு எங்களுக்கு அனுப்புங்களேன். புத்தக விழாவிற்கு வர முடியாத எங்களுக்கெல்லாம் இது ஒரு நல்ல கிப்ட்டாக இருக்கும்.//
ReplyDelete+10000
நல்ல யோசனை
Delete+1௦௦௦௦
ஜெஸ்ஸி ஜேம்ஸ் is my choice.
ReplyDelete20-20
ReplyDeleteகாத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ? ////கண்டிப்பாக செய்யலாம் சார் . இதை நாம் நிச்சயமாக கொண்டாட வேண்டிய தருணம் . எங்களுக்கு நினைவு இன்றி போனது . இதை இப்பொழுதே தலீவர் கவனத்திற்கு கொண்டு சென்று தனியாக ஒரு போராட்டம் செய்ய வலியுறுத்தி விடுகிறேன் .
ReplyDeleteமுத்து 45 ஆண்டு மலராக அந்த ரானா.பானா வந்தால் ஆஹா. அற்புதம்.் அனைவருக்கும காலை வணக்கங்கள் நண்பர்களே
Delete//காத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ? ////கண்டிப்பாக செய்யலாம் சார் //
Deleteமுத்து ஆண்டுமலர் கண்டிப்பாக வேண்டும்
Present Sir
ReplyDeleteமுதல் முறையாக தமிழ் பதிவு. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteM.V சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஆளயே காணமே ...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் mv
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் MV Sir
DeleteMv Sir பிறந்த நாள் வழ்த்துகள்
DeleteM.V சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் ....!
Deleteஅடடே m.v. happy bday 100+ ஆண்டு காமிக்ஸ்உடன் வாழ்க
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள் M.V sir! :)
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ம.வெ சார்.!!!!....
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... M.V sir!!!
Deleteஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் M.V. சார் :-):-):-)
DeleteABS இதழ்கள் ஆருக்கு மூன்று அல்லது நான்கு TeX ஆக இருந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteகாத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ? ////கண்டிப்பாக செய்யலாம் சார் .lion comics texபோல் முத்துவுக்கு ஒரு புதிய cowboy கொண்டு வந்தால் என்ன?
ReplyDeleteஜெஸ்ஸி சார்
ReplyDeleteஎனது தேர்வு கௌபாய் எக்ள்பிரள்....
ReplyDeleteசார் நம்மூரை கேளியாய் பார்த்து எழுதுவதாய் , நம்மூர் பத்திரிக்கைகள் கேளி செய்து எழுதியதை ...அவர்கள் வியப்பதாய் காட்டியுள்ள முதல் நம்மூர் ஆள் நீங்கள்தாம் .. அதிலும் பறந்து கொண்டிருக்கும் நம்மூர் ஆள் முகத்தில்தான் என்ன ஒரு உற்ச்சாகம் .சாதிச்சுட்டடா கைப்பிள்ளே ...ஆசாமி பாக்தாத்தயே மிஞ்சிட்டாரே ...அறிவியல் விளக்கம் ப்ளீஸ் செனா அனா
ReplyDeleteஇது எல்லோரும் அறிந்ததுதானே ஸ்டீல்.....!!!!!
Deleteகேப்ஷன் எழுதும் சுவாரஸ்யத்தை- இது பற்றி கூறினால் அது – குறைக்குமோ என தயக்கம் இன்னும் இருக்கிறது....
Fox tv-ல் secrets of magic revealed என்னும் தொடரில் இது பற்றி புட்டு புட்டு வைக்கிறார்கள்.....
மேலாடை அணியாது வெறும் சார்ட்ஸ்-உடன் அந்த கம்பியை பிடிக்காமல் அந்தரத்தில் மிதக்க சொன்னால் அது அவரால் இயலாது.....
கீழே உள்ள ஸ்டாண்டு..அதில் நீண்டு காணப்படும் கழி , அந்த கழியிலிருந்து வரும் கம்பி அதை தாங்கும் இருக்கை ( கம்பியும் இருக்கையும் தொள தொள ஆடைகளால் மூடப்பட்டுள்ளன......)
இதுவே இந்த இலூஷனின் அடிப்படை.....
இயற்கையான பௌதீக விதிகளை மீறும் எதையும் நாம் ஏற்று கொள்ள முடியாதுதானே......
ஆனால் பாருங்கள்.....ரத்த படலம் வண்ணத்தில் வெளியிட போவதாக எடிட்டர் ஒருநாள் அறிவிக்கும்போது ஆகாயத்தில் பறப்பதாக நாம் உணர்வோமே அந்த உணர்வுகளுக்கு இயற்பியல் விதிகள் ஒரு பொருட்டல்ல..:)
ஆஹா நன்றி செனா ஆனா . கலக்குறீங்க . நம்ம ூர் வீதிகளுக்கு இவர் வந்தால் நோண்டிப் பார்த்து விடுவார்கள் என்றே அவர் அங்க போயிட்டார் போலும்
Delete///கீழே உள்ள ஸ்டாண்டு..அதில் நீண்டு காணப்படும் கழி , அந்த கழியிலிருந்து வரும் கம்பி அதை தாங்கும் இருக்கை ( கம்பியும் இருக்கையும் தொள தொள ஆடைகளால் மூடப்பட்டுள்ளன......)
Deleteஇதுவே இந்த இலூஷனின் அடிப்படை.....///
ஆமீர்கானின் PK படத்தில் இந்த Method ஐ ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள்.!
@ செனா அனா
Deleteசூப்பர் விளக்கம்! குறிப்பாய் அந்த கடைசி வரி செமயோ செம!
எந்த கேப்ஷனும் எழுதாமலேயே உங்களுக்கு அரை கிலோ மைசூர்பா கொடுக்கலாம்.
அந்த அரைக்கிலோவை ஈரோட்டு அனுப்பி வைக்க நீங்க எடிட்டருக்கு கோரிக்கையும் வைக்கலாம்!
பெருந்தன்மையான மனிதர்களுக்கு இதெல்லாம் ஜகஜம்! :D
Caption போட்டிக்கு...
ReplyDeleteஇந்திய கௌபாய்....!!!
சார் ஆறு அதிரடிக் கதைகள்..வழவழப்பான கண்ணாடி அட்டை ...ஆறும் கருப்பு வெள்ளயில் ...ஹார்டு பௌண்டு அட்டையில் ...
ReplyDelete+1
DeleteSanday இனிய காலை வணக்கம்
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ReplyDelete
ReplyDelete**** அரைக் கிலோ மைசூர்பா'காண்டி ****
"ஆம்! அது நான் தான்! அங்கே மண்டையில் மரத்தோடு காமிக்ஸ் சேவையாற்றிய நான்... இங்கே இத்தாலியில் 'மிஸ்டர் கொண்டை மண்டை' என்ற பெயரில் எனது ஆன்மீக சேவைகளைத் செய்துவருகிறேன்!"
லக்கி லூக் க்ளாஸிக்ஸிற்கு ஜெஸ்ஸி ஜேம்ஸையே தேர்வு செய்யலாம் சார்....! கிடைத்தற்கரிய இதழ் என்பதோடு கதையின் ஆரம்ப பக்கங்களில் லக்கி & ஜாலி ஜம்பரின் அட்டகாசமான அறிமுகப்படலமும் இருக்கும். ஆகவே கோச் வண்டியோடு ஜெஸ்ஸியையும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்......!!!
ReplyDelete♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
GOOD DAY I AM NEW ENTRY
ReplyDeleteஇந்த குட்டி தம்பி தங்க கம்பி உங்களை லயன் முத்துவிக்கு வறவேற்கிறான்
DeleteWelcome home
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteAbsolute classicsல் Hard cover -ன் அவசியம் ஏன்? என்ற கேள்விக்கு அழகான விளக்கமளித்திருக்கிறீர்கள்! சூப்பர்!!
"கோச் வண்டியின் கதை"யோடு பயணம் செய்ய ஏற்றவர் .ஜெஸ்ஸி ஜேம்ஸ் தான்! முத்து 45வது ஆண்டு மலர் நல்ல யோசனை!
ReplyDeleteகமான்சே தொடருக்கு இடைவெளி விடவேண்டாம் சார்...! கமான்சே மட்டுமின்றி லார்கோ ஷெல்டன் மாதிரி சில ஆல்பங்களே மீதமிருக்கும் தொடர்களை விரைந்து முடித்துவிட்டு புது வரவுகளை களம் இறக்குங்கள் சார்...!!!
ReplyDeleteபேட் மேன் கதைகளை நம் ஜோதிக்குள் ஐக்கியமாக்கிட தாங்கள் எடுத்துவரும் முயற்சி எந்த நிலையில் உள்ளது..? அடுத்த வருடம் எதிர்பார்க்கலாமா....?
😝😎🙅🙌🙋😍😱🌻🌸🍀🌹🌼🍂🌾🌿🍁☀🌈🌽🌾🌿
கோச் வண்டியில் ஜெஸ்ஸி ஜேம்ஸை யே ஏற்றிவிடுங்கள் சார்.!
ReplyDeleteகமான்சேவுக்கு ப்ரேக் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.
முத்து 45 ஆவது ஆண்டு மலருக்கு NBS மாதிரி ஒரு முயற்சி செய்யலாம் சார். ஆனால் லார்கோ, பிலி (டைகர்) போன்ற தொடர்கதைகளை தவிர்த்துவிட்டு முழுவண்ணத்தில் முயற்ச்சிக்கலாமே சார்.!!!
So far " Jesse James " is leading the pole followed by cowboy express.
ReplyDeleteComanche series can continue with 1 book per year
* Poll :)
Deleteசிவகாசி மைசூர்பாகுக்கு :-
ReplyDeleteஒருவர் : யாருப்பா இந்த சாமியாரு? இங்க வந்து எதுக்கு இப்படி வித்தை காட்டிட்டு இருக்காரு?
இன்னொருவர். : அவரு சாமியார் இல்லப்பா. அவரு பேரு ஸ்டீல்க்ளா பொன்ராஜ். ரத்தப்படலம் வண்ண மறுபதிப்பு கேட்டு போராடிட்டு இருக்காரு. எடிட்டர் நம்ம ஊருக்கு வரப்போற சேதிய எப்படியோ தெரிஞ்சிகிட்டு , அவரோட பார்வையில படுற மாதிரி இங்க வந்து கடும்தவம் புரிந்து எடிட்டரோட மனசை கரைக்க முயற்சி செஞ்சிட்டு இருக்காரு.!!!
க்கும்! ஸ்டீல்-க்ளா இங்கஙனக்குள்ள இருக்கும் சென்னைக்கே வரமாட்டேன்றாராம்... இதுல எடிட்டர் பார்வையில பட இத்தாலி போயி போராட்டம் நடத்துராராக்கும்?!
Deleteஎப்புடியோ கண்டுபிடிச்சுட்டீங்ஙளே ...ஹஹஹா..
Deleteஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
ReplyDeleteமுத்து 45க்கு லாா்கோ,டைகா் வேண்டாம் அதற்கு பதில் முத்து லயன் முத்த நயகா்கள்க்கு வய்ப்பு தரலாம் (எ.கா, ரோஜா்,மேஜிக் மான்டிரேக்,ஜான் சில்வா்,ரிப்போா்டா் ஜானி,டையாபாலிக்,மாடஸ்டி,bruno brazil+கன்டிப்பாக டெக்ஸ்
ReplyDeleteநீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் லயன் காமிக்ஸ் ஹீரோ, ஹீரோயின்கள். அதிலும் மாடஸ்டி மற்றும் டெக்ஸ். அதனால் முத்து விற்கு உரிய முத்துக்களை மட்டுமே முத்து ஸ்பெஷலில் வரவேண்டும் என்பதே எமது விருப்பம்.
Deleteகாமன்சேவிக்கு இடைவேலை வேண்டாம் இதை லாா்கோவை,ஷெல்டனையும் முடித்து விட்டு அப்புறம் பேட்மேன் etc.....இறக்கிவிடாலாம்
ReplyDeleteABS என்னுடைய budgetடை தன்டி போய்விட்டது so..............என்ன பன்னுவது வறும் regular புக்கை வங்கவே தின்டடுகிறது என் அதிஸ்டம் மாத மாதம் டெக்ஸ் திறுவதில்லை
ReplyDeleteடெக்ஸ் டக்கேன்று திற்ந்துவிடும் நான் எனக்கொறு புக்கை வைதிறுக்கசொல்வேன் பிறகு என் நண்பன் தான் எனக்கு வங்கிவறுவான்
Delete"கோச் வண்டியின் கதை" யோடு சவாரி செய்திட? MY CHOICE "தாயில்லாமல் டால்டனில்லை"
ReplyDelete"*கோச் வண்டியின் கதை*" யோடு எது வந்தாலும் ஓ.கே that's yours இந்த முன்று கதையுமே நனறக தான் இறுக்கவேங்டும் அதனால் தான் இடையில் எத்தை கதை வந்தாலும் இந்த முன்று உங்கள் நினைவில் இறுக்கிறாது so abs போறு அனைது நயகா்களுக்கும் ஒரே பதில் that's your but neat and fresh கதையாக இறுக்க வேண்டும்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம். முத்து 45வது ஆண்டு மலர் Nbs போன்று இருக்க வேண்டும். பழிக்கு வாங்கும் புயல் அருமை.என் பெயர் டைகர் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தில் கிட்டத்தட்ட 30 பக்கங்கள் இல்லை. மடிவு தெரியாமல் இரு நாட்களாக தூக்கம் இல்லை. காமான்சேவும் அருமை.
ReplyDeleteHi 🙋 friends
ReplyDeleteHi 🙋 vijayan sir
I will send my absolute classics subscription amount in few days.
My selection would be : Jessy James and maa Dalton
Commanche is one of my favourite.Pl don't give any break.instead,we can finish the remaining album in one shot. Pl consider
Happy Sunday.bye 🙋
முத்து 44காம் ஆண்டு வாள்த்துக்ள்
ReplyDeleteமுத்து மினி:-*
ReplyDeleteவாயு வேக வாசு
நல்ல கதை அந்த சிறுவனின் நம்பிக்கை என்னை வியாக பெயா்கள் லோகல் formatடில் இறுந்தாலும் கதை சூப்பா்
ReplyDelete****** மைசூர்பா'காண்டி! *******
"சூப்பர்-ஹீரோ பயிற்சியின் முதல் கட்டமே இப்படி அந்தரத்தில் மிதக்கறது தான்! அடுத்தகட்டமாத்தான் முதுகுல சிலிண்டர் வச்சிக்கிறதா... உள்ளாடையை பேண்டுக்கு மேல போட்டுக்கறதா... இதெல்லாம் முடிவு பண்ணணும்!"
என் பெயர் டைகர் புத்தகத்தில் பக்கங்கள் மட்டும் கறையவில்லை. நிறைய பக்கங்கள் மடங்கி இருந்தது. இது தங்கள் கவணத்திற்காக மட்டுமே குறை கூறும் நோக்கமில்லை. இதுபோல் ஏற்கனவே லயன் 250 இதழிலும் பக்கங்கள் இல்லாமல் இருந்தது ஆனால் மடிவை படிக்க மடிந்தது எனவே அப்போது கேட்கவில்லை. ஆனால் தற்போது கடைசி பாகம் முழுவதும் படிக்க மடியவில்லை
ReplyDeleteஎனக்கு உட்பட பலருக்கு என் பெயர் டைகர் colour இதழில் கடைசி சில பக்கங்கள் missing! நான் நமது அலுவலக emailக்கு snap shotsடன் mail அனுப்பியுள்ளேன். Defective book திரும்ப தங்கள் அலுவலத்திற்கு அனுப்ப வேண்டுமா? இது போன்ற collectors editionல் இது போல் தவறுகள் நேராமல் பார்த்து கொள்ளவும்!
ReplyDeleteகதை அறுமையான கதை என் புக்கில்குட சில பக்கள் எழத்துக்கள் சேரியாக தேறியவில்லை ஆனால் எனக்கு இது பிரியாகவே வந்தது அதனால் இதை பேரிதுபடுத்தவில்லை ஆனால் புக் முன்பதிவு செய்து வாங்கும் நண்பா்கள் எப்படி எற்றுகொள்வாா்கள்(நண்பா்களின் அக்காரைகாகவே)
DeleteHi, I too need the office . editor's email ID.Would you mind sharing it,pls
Deleteஎனக்கு உட்பட பலருக்கு என் பெயர் டைகர் colour இதழில் கடைசி சில பக்கங்கள் missing! நான் நமது அலுவலக emailக்கு snap shotsடன் mail அனுப்பியுள்ளேன். Defective book திரும்ப தங்கள் அலுவலத்திற்கு அனுப்ப வேண்டுமா? இது போன்ற collectors editionல் வரும் காலங்களில் இது போல் தவறுகள் நேராமல் பார்த்து கொள்ளவும்!
ReplyDeleteமாடஸ்டி ப்ளைசியின் மாம்ஸான மடிப்பாக்கம் வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு மனங்கணிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
ReplyDeleteஇவண் :-
மாடஸ்டி மாமியார் சங்க தலைவன்.!
கிட்... !!! ஆயிரம் விழுந்து விழுந்து சிரிக்கும் படங்கள் ...
DeleteDear editor sir and friends Good Morning
ReplyDeleteIn Abs is it possible to put all six in a single bound volume
கௌபாய் எக்ஸ்பிரஸ் எனது சாய்ஸ்.
ReplyDeleteகாமான்சே தொடரவேண்டும்
ரத்தக் கோட்டை ஸ்பெஷல் போட்டு tiger முடித்து விடுங்கள் சார். அப்புறம் tex மட்டுமே தனி காட்டு ராஜா.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் வாழ்க பல்லாண்டு வளர்க அவர் தொண்டு
ReplyDeleteகோச் வண்டியின் கதையோடு ஜெஸ்ஸி ஜேம்ஸை இணைத்து விடுங்கள் சார்
ReplyDelete45 வது ஆண்டு மலர் அசத்துங்க சார்
ReplyDeleteகண்டிப்பாக ரிப்போர்ட்டர் ஜானி இருக்கட்டும்
// கண்டிப்பாக ரிப்போர்ட்டர் ஜானி இருக்கட்டும்.//
Deleteஆம் கண்டிப்பாக வேண்டும்.
கமான்சே'க்கு ப்ரேக் என்ற பேச்சுக்கே இடமில்லை! மீதமிருக்கும் பாகங்கள் ஒரே புத்தகமாக வந்தால் மகிழ்ச்சியே!
ReplyDelete+12345
Deleteகாமன்சே இரசனைக்குரிய தொடர் எனவே அதை தள்ளி போடுவதை பற்றி யோசிக்க கூட வேண்டாம் ஆசிரியரே.
Deleteசார் சென்னை புத்தக விழாவின் அனுபவங்களை பகிர வில்லையே ஏன் சார்
ReplyDeleteபழி வாங்கும் புயல் என்றுமே
ReplyDeleteஅசத்தல் தான் இராணுவத்தை பல கூறாக்கும் டெக்ஸில் வியூகங்கள் செம்ம
+1
Delete93rd
ReplyDeleteசென்னையில் ஒரு காமிக்ஸ் மழைக்காலம்:-நண்பர்களுடன்., புத்தகவிழாவிற்கு பயணம்,. கல்லூரிகால சுற்றுலாவை நினைவுபடுத்தியது.பாலுக்கு பூனை காவல் போல கடலை மிட்டாயை பாதுகாக்கும் பொறுப்பை ஈரோடு விஜய் ஏற்று கொண்டார். சென்னை வந்து சேரும் வரை ரயிலின் இரைச்சலோடு., விஜய்யின் பர்த்திலிருந்து கடக்முடக் சத்தமும் சேர்ந்துகொண்டது:-).என்பெயர் டைகரை விஜயன் சார் வெளியிட்டு, காமிக்ஸை பற்றி இரண்டு மணி நேரம் பேசியது எல்லோரையும் கவர்ந்தாலும், கடைசியாக ஐந்து நிமிடங்கள் விஜயன்சாரின் தந்தை ஆற்றிய நிறைவுரை., மறக்கமுடியாதது.நிறைவுரை ஆற்றியபோது அவர்முகத்தில் தென்பட்டது, மகிழ்ச்சியா, பெருமிதமா, எழுத்தில் வடிக்க இயலவில்லை. தான் எட்டடி பாய்ந்தாலும், தன் தனயன் பதினாறு அடிகளல்ல,பலநூறு அடிகள் தாண்டியதை எண்ணிய பெருமிதமா,கண்டிப்பாக அந்த முகத்தில் தென்பட்ட உணர்ச்சிகளை என்னால் எழுத்தில் வடிக்கமுடியவில்லை.மேலும் அவர் தன்னுடைய விசிட்டிங்கார்டுகளை மேஜையின் மீது வைத்து காமிக்ஸ் அன்பர்கள் அதனை எடுத்துகொள்ளலாம், என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாமென சொன்னபோது, எனக்கு மகிழ்ச்சியும், அதே நேரத்தில் காமிக்ஸ் மாபியாக்கள் அவரை தொந்தரவு செய்யகூடாதே என்ற பயமும் ஏற்பட்டது.அன்று மாலையே,சென்னை புத்தக விழா அரங்கிற்கு வெளியே விஜயன் சாரோடு ஒரு மினிமீட்.பல கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்து கொண்டிருக்க, எங்களை கடந்து சென்ற அனேகருக்கு, அவர் யாருங்க சினி ஆக்டரா, எதுக்கு இவ்வளவுகூட்டம் என்ற ரேஞ்சிலே சில கேள்விகள் எழ, அதை ஈரோடு விஜயிடமும், என்னிடமும் கேட்க, நாங்களிருவரும், லயன் காமிக்ஸ் எடிட்டர் விஜயன் என்ற ரீதியிலே பதில்சொல்ல, அவர்களும், ஓஓஓ,காமிக்ஸ் படிக்கிற சின்ன பசங்களா நீங்க என்ற ரீதியிலே கடந்து சென்றனர்.ஒரு நிமிடம், எனக்கு சினி ஆக்டர் கமல் மாறுவேடத்தில் வந்துள்ளார் என பரபரப்பை கூட்டலாமென கூட தோன்றியது. சொன்னாலும் நம்பிவிடுவார்கள்தான், ஆனால், பெண்கள் கூட்டத்திலிருந்து விஜயன் சாரை மீட்பது பெரும்பாடாகிவிடுமென்று தோன்றியதால், அந்த விபரீத எண்ணத்தை அழிரப்பர் கொண்டு அழித்துவிட்டேன்.:-)புத்தகவிழாவை நாங்கள் சிறப்பிக்கவில்லை.புத்தகவிழாதான் எங்களை பல்வேறு புத்தகங்களை கொடுத்து சிறப்பித்தது. அடுத்து கைக்கெட்டும் தூரத்தில் ஈரோடு புத்தகவிழா. நாங்கள் ரெடி.
ReplyDeleteடாக்டர் சார் ...அருமை....;-)
Delete@ சுந்தர்
Deleteஹா ஹா! அந்த கமலஹாசன் விசயததை நீங்க செயல்படுத்தியிருக்கலாம்! :D
மருத்துவரே அருமை.
Deleteநகைச்சுவை இழையோட ஒரு அருமையான விஷயத்தை விவரித்து சொன்னால் அதை படிக்கும் சுகமே தனி.....
Deleteசெம.......சுந்தர் சார்....!!!!
ஏகப்பட்ட தடவை செத்து அசலாய் செத்து பிழைக்கும் டைகர்...இந்தக் கதையில் எத்தனை முறை செத்தார் என்று போட்டியே வைத்திருக்கலாம் ..ஆனால் 5 பாகத்தையும் ஒட்டுமொத்தமாகப் போட்டதால் நாம் பிழைத்தோம். பிளாஷ் பேக் பாணியில் டைகர் கதை ஆரம்பித்து நிறைய பில்டப்புகளோடு வரும் ஜெரோனிமா வுடனான சந்திப்பு ..கதை எழுத அரைகண்டத்தை கடந்து வரும் எழுத்தாளர் கேம்பெல் ..அவருடைய அசிஸ்டன்ட் பில்லி
ReplyDeleteஇருவரின் படிப்படியான வன் மேற்கின் பரிணாம பாதிப்புக்கள் ..சதா குடித்துக் கொண்டும் சூதாடிக்கொண்டும் இடையிடையே எமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டும் இருக்கும் ஹீரோ ...பாடகி டோரி ..பச்சைக்கிளி டாலி..வழக்கமான வில்லன் குரூப் ஆனால் டைகர் ஹீரோவாய் அதிரடி ஆக்சன் காட்டி அசத்துவார் என்கிற எதிர்பார்ப்போடு படிக்க வேண்டாம்...நிறைய கதை மாந்தர்கள்...டூம்ஸ்டன் ...அந்நாளைய வன் மேற்கின் கலாச்சாரத்தை அச்சு அசலாய் அற்புதமாய் கொண்டு வந்திருக்கும் நிறைவான கதை ..இரண்டாவது முறையும் படித்தால் மட்டுமே பெயர்களை ஞாபகம் வைக்க முடியும் ....நெடு நாள் நினைவில் தங்கி இருப்பார் என் பெயர் டைகர் ...அருமை..அருமை ..வாழ்த்துக்கள் சார் ..டைகர் இழந்த பெருமையை மீட்டு எடுத்து விட்டார் .
மிக அருமையான எளிய விமர்சனம்..
Delete@ வெட்டுக்கிளி
Deleteமுதல்முறை படித்த இத்தனை கேரக்டர்களின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறதே உங்களால்!!!
எடிட்டர் வைத்த பரிட்சைக்கு சரியான ஆள் நீங்கதான்! :)
விஜயன்:-தலீவரே, கீழே இறங்கி வாங்க.இனிமே கிராபிக் நாவல் எல்லாம் போடமாட்டேன்.கிராபிக் நாவலுக்கு பயந்து சாமியாரா போயிட்டீங்களே.
ReplyDeleteபரணி:- மனதிற்குள்,அடச்சே, தலீவரேன்னு சொன்னவுடனே, திரும்பி பார்த்திட்டனே,இவ்வளவு கஷ்டபட்டு சாமியார் வேஷம் கட்டி மண்டை மேல இருக்கிற கொண்டையை மறைக்காம விட்டிட்டேனே.
ReplyDelete//அந்தரத்தில் ஆரோகணம் செய்திடும் இந்த ஆரஞ்ச் ஆசாமிக்கு நமது காமிக்ஸ் தொடர்பாய் ஏதேனும் நயமானதொரு caption எழுதுங்களேன் ?!//
சார், சென்ற முறை கஷ்டப்பட்டு நாங்கள் எழுதிய கேப்ஷனுக்கு முடிவை இன்னமும் அறிவிக்கவில்லையே ?
எங்களை வைச்சி காமெடி கீமடி ஏதாச்சும் செய்யறீங்களா ஆ ஆ ஆ சார் ?
இங்கே கிட்டியுள்ள decent விற்பனையானது அடுத்த மூன்று மாதங்களைக் கடந்து செல்லும் வலுவை நல்கியுள்ளது
ReplyDelete#######
மகிழ்ச்சி சார் ...ஆண்டவனுக்கு நன்றி ....
***********
லக்கிலூக் மறுபதிப்பில் மூன்று கதைகளுமே சிறப்பானவை என்பதாலும் ..கைவசம் உள்ளவை என்பதாலும் எனக்கு அதில் எது வந்தாலும் முழு திருப்தி சார் ....
************
முத்து 45 வது ஆண்டுமலர் ...
ஆஹா ...எப்படி நண்பர்கள் மறந்தார்களோ தெரியவில்லை ..நல்ல வேளை நீங்களாக நினைவு படுத்தினீர்களே நன்றி சார் ..கண்டிப்பாக அந்த இதழ் மெகா ட்ரீம் ஸ்பெஷல் போல கொண்டு வாருங்கள் ..அது வண்ணத்தில் இருந்தாலும் சரி ..கருப்பு வெள்ளையாக இருந்தாலும் சரி ..ஆனால் அனைத்தும் ஒன் ஷாட் கதையாகவும்..கதம்ப கதைகளாகவும் இருந்தால் நலம் ..மேலும் அதில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவர்கள் டைகர் .. ...லார்கோ ...மற்றும் தொடர் நாயகர்கள் ...அடுத்த வருட ஆரம்பமே ஒரு மெகா ஸ்பெஷலாக ஆரம்பிப்பது சிறப்பு தான் சார் ..
கமான்சேவை ....காத்திருக்க வைக்க வேண்டாம் சார் ...தொடரட்டும் ....
ReplyDeleteமடிப்பாக்கம் மாடஸ்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள் ...;-)
ReplyDelete@எடிட்டர் :
ReplyDeleteஎன் பெயர் டைகர் B/W பதிப்பில்,
120-125,
130-131,
139-140,
151-174,
178-180,
195-206,
250-252
இந்த 52 பக்கங்கள் மட்டும் ஏன் greyscale செய்யப்பட்டது ? GIRAUD போன்ற ஒரு ஓவியரின் படங்களுக்கு இது மாதிரியான extra fitting வேலைகள் தேவையற்றது. பார்பதற்கும் நன்றாக இல்லை.
@ பிரசன்னா MR
Deleteகடந்த பதிவிலேயே உங்க இந்த கமெண்ட்ஸை படிச்சேன்..என்னிடம் இருந்த BW பிரதியை நண்பருக்கு கொடுத்திட்டதால என்னவென பார்க்கமுடியலை. வேறு ஒரு நண்பரிடமிருந்து நேற்று பார்த்தேன்..! நீங்கள் குறிப்பிடும் பக்கங்கள் தான் என்னை பொறுத்தவரையில் அருமையாக உள்ளன, காரணம் முப்பது வருடங்களுக்கு முன் வந்த கோடைமலரில் ஜான்மாஸ்டர் & துப்பறியும் கம்பியூட்டர் ஜானி இந்த இரண்டு கதைகள் மட்டுமே கிரே ஸ்கேல் செய்து..அதாவது கலர் பக்கத்தை அப்படியே தரமாக
BW ல் காப்பி எடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி.!
அதன்பின்பாக அப்படி எதுவும் வரவேயில்லை...அப்படி வரவில்லையே என்ற ஏக்கம் இன்றும்கூட பசுமை. இதைதான் எடிட்டர் சில பதிவுகளுக்கு முன் சொல்லியிருந்தார்...பார்க்க கிழே.
//இத்தனை காலமாய் நாம் கருப்பு-வெள்ளையில் வெளியிட்டு வந்த இதழ்கள் எல்லாவற்றின் ஒரிஜினல் வார்ப்புகளும் வண்ணமே எனினும், அவற்றை ஒற்றைக் கலரில் நாம் தயார் செய்தபொழுதுபெரியதொரு வேறுபாடு தோன்றிடவில்லை தான் ; ஆனால் முதல்முறையாக "என் பெயர் டைகர்' இதழின் கருப்பு நிற டிஜிட்டல் பைல்களை மாத்திரம் அச்சுக்குக் கொணர்ந்து பார்த்த பொழுது - செம மொக்கையாய்த் தோன்றியது !! வர்ணச் சேர்க்கைகளுக்குத் தோதுவாய், இக்கதையினில் backgrounds சகலமும்வெள்ளையாய் உருவாக்கப்பட்டிருப்பதால் - contrast எதுவுமே கண்ணில் தட்டுப்படவில்லை ! குச்சுக் குச்சியாய் கதை மாந்தர்கள் அத்தனை
பேரும் வெள்ளைச் சட்டைகளை மாட்டிக் கொண்டு, வெள்ளை வெளேர் குதிரைகளில் தொற்றிக் கொண்டு - உஜ்ஜாலா வெண்மை வீதிகளில் உலாற்றிக் கொண்டு, பளிச்சிடும் வெண்மை வில்லன்களோடு மோதுவதைப் போல தோன்றியது கொஞ்சமும் சுகப்படவில்லை !! கதையின் பல பகுதிகள் இரவில் ; இருளில் நடக்கும் விதமாய் அமைக்கப்பட்டிருந்தாலும் - black & white -ல் பார்க்கும் போது - சுட்டெரிக்கும் பகல் வெயிலின் clear skies -ன் கீழே நடப்பது போல் காட்சி தந்தது ! அப்புறம் photoshop
சகாயத்தோடு பக்கங்கள் அனைத்தையும் grey scale -ல் தயார் செய்து பார்வையிட்ட பொழுது இது கூட ஒரு வித்தியாசமான பாணியில் இருப்பதாய் தோன்றியது ! நேற்றிரவு நான் வழக்கமாய்ப் பதிவு எழுதும் வேளைதனில் இந்த grey scale பாணியின் அச்சு வெள்ளோட்டத்தை நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதாலேயே இந்தப் பதிவு அதிகாலைத் தயாரிப்புக்கென ஒத்தி வைக்க வேண்டிப் போனது ! So சற்றே அடர் பின்னணிகளோடு இந்தக் கருப்பு-வெள்ளைப் பதிப்பு வெளியாகிடும் என்பதை உங்கள் கவனங்களுக்குக் கொண்டு வந்து விடுகிறேனே ! And இந்த பாணி சோபிக்க வேண்டுமெனும் பொருட்டு - 'பளிச்' வெள்ளை பேப்பரைப்
பயன்படுத்தியுள்ளோம் ! இந்த கருப்பு-வெள்ளைப் பதிப்பை செவ்வாயன்று அச்சிட்டு முடித்துப் பார்க்க நாங்களுமே ஆவலாய்க் காத்துள்ளோம் ! வண்டி வண்டியாய் இத்துறையில் அனுபவம் இருப்பினும், ஒவ்வொரு இதழுமே ஏதோ ஒரு விதத்தில், ஏதோவொரு சமாச்சாரத்தைக் கற்றுத் தரும் ஆசானாய் அமைவது தான் எங்கள்
கால்கள் தரையில் பதிந்து நிற்க உதவிடும் காரணிகளோ - என்னமோ !! //
அப்படிமுயற்சித்த பக்கங்களே நீங்கள் குறிப்பிடும் பக்கங்கள்,அதில் எந்த எஸ்ராப்பிட்டிங்கும் கிடையாது. நீங்கள் குறிப்பிட்ட பக்கங்கள் படி முழுதும் வந்திருந்தால்...கலரில் படித்தபோது கிடைத்த சந்தோஷத்தில், அனுபவத்தில் பாதியாவது கிடைத்திருக்கும்...ஏனோ சில பக்கங்கள் மட்டுமே அப்படி வந்துள்ளது. நான் வண்ணத்தில் எப்படி ரசித்தேன், BW-ல் படிப்பவர்கள் எதை தவறவிட்டார்கள் என்ற விவரம் பின்னால் விவரிக்கிறேன்..!
கா.தீ.அ.ஆ.கூட்டம் -5
ReplyDelete"ஸார்...நான் என் பெயர் டைகர் BW தான் புக் பண்ணினேன்,ஆசிரியர் எனக்கு கலர் பதிப்பு மேடையில கொடுத்திருக்கார்...வீட்டுக்கு BW புக் கூரியரில் வந்திருக்காம்...இந்த கலர்பதிப்புக்கு நான் பணம் தரலைன்னா ஆசிரியருக்கு 450/- நஷ்டமாகுமே. நானும் இந்த திடீர் செலவை எதிர்பார்க்கலை...இப்ப என்ன ஸார் பண்ணுறது...?"
"ஓஓஒ...அப்படியா..ஒன்னு நீங்க இந்த கலர் காப்பியை தேவையான வேறு நண்பருக்கு வித்து பணத்தை எடிட்டரிடம் ஒப்பைடைச்சிடலாம். ஆனா நீங்க அப்படி செய்யமுடியாது, அதுசரி உங்களுக்கு கலர்பதிப்புமேல ஆசைஇருக்கா..?
"என்ன ஸார் இப்படி கேட்டுடிங்க...? ஆசை இல்லாம இருக்குமா..! பணபற்றாக்குறைதான் தடை....ஆமா நான் ஏன் இதை விற்கமுடியாது..?"
"இது அவர் மேடையில பரிசா கொடுத்த புக், இதை விற்கிறது நாகரிகமா..? உங்களுக்கு வேண்டாம்ன்னா நீங்க நம்ம குழுவுல இருக்கிற, வாங்க தடுமாருற நண்பருக்கு இதை பரிசா கொடுக்கலாம்ங்கிறதுதான் எனக்கு தெரிஞ்ச நாகரிகம்..."
நீண்ட நிமிடங்களுக்கு பின்...
"ஸார்..ஸார்...நான் இந்த கலர் பதிப்பை யாருக்கு தரணும்னு முடிவுபண்ணிடேன் ஸார்...எனக்கு தெரிஞ்ச நண்பர்கள்ல ஒருத்தருக்கு இதை கொடுத்தா சரியா இருக்கும்...அது..அது...நான் தான் ஸார்...இந்த தொகைக்கு வாங்க தடுமாறும் அந்த நபர் நான்தான்..நானேதான்.."
நீண்ட நேரம் தடுமாற்றத்துடன் தாழ்ந்தே இருந்த தலையை உயர்த்தி...சட்டென்று மேஜையின் மேல் இருந்த 'என்பெயர் டைகர்' வண்ணபதிப்பை வாரியெடுத்து, நெஞ்சோடு அனைத்து 'நானே..நானே..எனக்கே..எனக்கே..' என தொடர்ந்து முனுமுனுத்தார்..!
நெகிழ்ந்து முனுமுனுத்த அந்த வெள்ளை மனிதர் யார் என வீடியோவில் பார்க்க....இங்கே'கிளிக்'
[மேற்கண்ட உரையாடலை எட்ட நின்று ரசித்தவன் மட்டுமே]
மாயாவி ஜி அருமை அசத்திறிங்க போங்க.
Delete@ மாயாவி
Deleteநண்பர்களுக்கு கடலை மிட்டாய் வழங்குவதில் பிஸியாக இருந்ததால் சீனியர் எடிட்டரின் உரையை கொஞ்சம் மிஸ் பண்ணியிருந்தேன். உங்களுடைய YouTube uploads அந்தக் குறையைப் போக்கிவிட்டது! நன்றி நன்றி நன்றி! _/\_
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் MV சார்!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் MV சார்!!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் MV சார்!!
Deleteசாமி அந்தரத்திலேதொங்குறாரே கடவுளைப் பார்க்கவா?
ReplyDeleteஇல்லே ..காசைப்பார்க்க ...
சார் லார்கோ , ஷெல்டனை அடுத்த வருடமே ஓய்த்திடுங்கள் .கமான்சேவுக்கு ஒரு இடம் போதும் . புதிய நாயகர்களை கொண்டு வாஉங்கள் அடுத்த வருடமும் z இல்லை எனில் ..
ReplyDelete//காத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ? //
ReplyDeleteநிச்சயமாக சார். ஆனால், முத்து காமிக்ஸ் ஹீரோ, ஹீரோயின்களையோ அல்லது முத்துவிற்கு என்று புதிய அறிமுகங்களையோ கொண்டுவாருங்கள். 'இவரைப் போட்டல் வரவேற்பு அதிகமாயிருக்கும்' என்ற எண்ணத்தில் லயன், திகில் நாயகர்களை நுழைத்துவிடாதீர்கள். ப்ளீஸ்!
Podiyan : கதை(கள்) ரெடி சார் ; பணிகள் ஓசையின்றி நடந்து வருகின்றன என்பதை உரக்கச் சொல்லி விடுகிறேன்!
Deleteஅப்புறம் இவரொரு புதுவரவு என்பதும் கொசுறுச் சேதி !
கேப்சன் போட்டிக்கு... முதன் முறையாக..
ReplyDeleteமாடஸ்டி புக் வேணும்கிறதுக்காக ஆகாசத்திலெல்லாம் தவம் இருக்கேன்... பார்த்து பண்ணுங்க எடி சார்... இப்போதைக்கு மிலன்ல .. அப்புறம் சிவகாசி வரையிலும் இப்படியே வர வெச்சுராதீங்க... முடில..
///"பழிவாங்கும் புயல்" நம் கையிருப்பில் 6 மாதங்களைத் தாண்டாது என்பது நிச்சயம் !! A crackerjack !!///
ReplyDeleteபடிக்கும்போதே உற்சாகம் பீறிடுது போங்க! தல தலதான்!
ஆம் கண்டிப்பாக உற்சாகமான தகவல் தான்.
DeleteErode VIJAY : மகளிரணியின் ஆதர்ஷ நாயகராய் கூட இரவுக் கழுகாருக்கொரு பரிமாணம் இருப்பதை இந்தாண்டு உணர்ந்து கொண்டிருக்கிறோம் !
Deleteஎப்போதுமே ஆன்லைன் விற்பனையின் ஒரு கணிசமான பங்கு லக்கி லூக் + TEX -க்குத் தான் !
// காத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ?//
ReplyDeleteஅருமை ஆசிரியரே NBS ஐ விட அசத்தலான ஒரு சிறப்பிதழை எதிர்பார்க்கிறோம்.
ATR நண்பரை எங்கே காணோம் ?
ReplyDeleteநலமாக இருக்கிறாரா ? பிரச்சினைகள் அனைத்தும் நல்லவிதமாக முடிந்து போனதா ?
CBFன் போது அனைத்து நண்பர்களாலும் எதிர்பார்க்கப்பட்டவர்களில் ATRம் ஒருவர்! ஆனால் அவர் வரவில்லை! :(
Deleteசெல்லமாய் ரெண்டு குட்டு வாங்கவாவது அவர் வந்திருக்கலாம். நம் நண்பர்கள் வேற இதுக்காகவே பெரிய பெரிய மோதிரம் எல்லாம் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க! :P
ATR சாயலில் ஒருத்தர விழாவில பார்த்தானே. குரூப் போட்டோல கூட இருக்காரு. நல்ல வேளை நான் அவசர பட்டு கொட்டு வெக்கல 😁
Deleteஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு தோழர் திரு. M.V. அவர்களை அவரும் அவரது குடும்பத்தாரும் இன்றுபோல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகிறேன். நண்பர்களே உண்மையில் உங்களையெல்லாம் புத்தக திருவிழாவில் சந்திக்க ஆவல் அதிகமாக இருந்தாலும் மனதில் சற்று என்பதைவிட அதிகமாகவே தயக்கம். வந்தால் நம்முடன் யாராவது பேசுவார்களா? மாட்டார்களா? அல்லது ஒருவேளை அது உங்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே காரணம். அதனால்தான் வர இயலவில்லை. ஆனால் நேரில் வராவிட்டாலும் நண்பர்களின் விழா பற்றிய உடனடி பதிவுகள் அந்த குறையை போக்கிவிட்டது. நன்றி நண்பர்களே. ஆனால் ஒரே ஒரு குறை. உங்களில் யாராவது ஒருவர் அந்த "கோவில்பட்டி கடலைமிட்டாயுடன் ஒரு செல்ஃபி" போட்டிருக்கலாம். அது எந்த வடிவத்தில் இருக்குமென்று இறுதிவரை சஸ்பென்சாகவே போய்விட்டது. எனக்கு இப்போது எந்த பிரச்னையும் இல்லை. அதிகார மமதையில் ஆட்டம் போட்டவர்கள் இன்று சமாதான தூது விட்டுக் கொண்டு உள்ளனர். எனது பிரச்னைகள் தீர்ந்தாலும் நமது blog பக்கம் வர தயக்கமாக இருந்தது. நாம் சந்திக்கும் வாய்ப்பென்று ஒன்று அமையுமானால் உண்மையில் ஆளுக்கு ஒரு கொட்டு மட்டும் கண்டிப்பாக வாங்கிக்கொள்கிறேன். கொட்டியவர்கள் மறுபடி வரிசையில் திரும்ப வர வேண்டாமென்ற வேண்டுகோளுடன்!!
Deletecaption 1
ReplyDeleteஎடிட்டர் : தாங்ஸ்பா சாமியாரே.. உங்க தயவாலே இன்னிக்குள்ள லோடுமோரு ஆயிடும் :))
சாமியார் : அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் எடிட்டர் சார், இரத்தப் படலம் கலரில் எப்ப வரும்னு சொல்லிட்டுப் போங்க :((
காலை வணக்கங்கள்!
ReplyDeleteசார் தோர்கள் விற்பனையில் வரவேற்பு நன்றாக ிருந்தால் அந்த முத்து விழா மலரை தோர்களுக்கு ஒதுக்கலாமே
ReplyDelete// ABS CLASS இதழ்கள் வெளிச்சத்தைப் பார்த்திடத் தொடங்கினால் அதுவே கூட முன்பதிவுகளின் துரிதத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைத்தேன் ! So கீழ்க்கண்ட 3 கதைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வோமா - "கோச் வண்டியின் கதை" யோடு சவாரி செய்திட ? //
ReplyDeleteநல்ல இதழ் எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே,பெரும்பான்மை நண்பர்களின் விருப்பத்தை செயல்படுத்துங்கள்.ஏனெனில் பழைய இதழ்கள் அவ்வளவாக இல்லாததால் இந்த முடிவு.
கமான்சே தொடரலாம்.
ReplyDeleteலக்கிலூக் மறுபதிப்பில் நான் விரும்புவது - ஜெஸ்ஸி ஜேம்ஸ்.
என் பெயர் டைகரில் டைகர் வெகுநேரம் கழித்து பாயத் தொடங்கும் போது பக்கம் தொலைஞ்சு போச்சு.வெதனையில் நின்று போன நிமிடங்கள்
ReplyDeleteravanan iniyan : Sorry sir ; நாளையே மாற்றுப் பிரதி அனுப்பிடச் சொல்லிடுகிறேன் ! உங்கள் பதிவு எந்தப் பெயரில் இருந்தது ?
Deleteலக்கிலூக் மறுபதிப்புக்கு என்னுடைய தேர்வு - "தாயில்லாமல் டால்டன் இல்லை". நான் மிகவும் ரசித்த லக்கி கதைகளுள் ஒன்று!
ReplyDeleteErode VIJAY : இப்போதைய நிலவரப்படி நீங்கள் மைனாரிட்டி !
Deleteகாலை வணக்கம் அனைவருக்கும். முத்து ஆண்டு மலரை மிகவும் எதிர்பார்த்திருக்கும் டிடெக்டிவ் ஸ்பெஷல் ஆக வெளியிடுவது, எல்லா முத்து நாயகர்களுக்கும் மரியாதை செய்தது போலிருக்கும் சார்.
ReplyDeleteஎனக்கென்னமோ அந்த ஆரஞ்சு சட்டை ஆசாமி, இளவரசி ரசிகர் மன்ற உறுப்பினர் மாதிரி தெரிகிறது. இளவரசியை கலரில் கேட்டு போராட்டம் பண்றாரு போல.
saravanan srinivasan : ஆரஞ்சு சட்டை ஆசாமி இங்குள்ள இளம் பெண்களைக் கூப்பிட்டு செல்பி எடுத்துக்கச் சொல்லிக் கேட்பதைப் பார்க்கும் பொழுது மனுஷன் நிச்சயம் ஒரு இளவரசி ரசிகன் தான்என்று தோன்றுகிறது !
Deleteவணக்கம் சார் ...
ReplyDeleteவணக்கம் நட்பூஸ் ...
அதற்குள் 140கமெண்ட்டா...
இரவு 12.30க்கு வந்த இங்கிலாந்து -ரஷ்யா யுரோப்பிய கப் ஆட்டத்தை பார்த்து கொண்டே இருந்தேன் ,படு ரகளையான ஆட்டம்.2.15க்கு ஆட்டம் முடியும் வரை பதிவு வர்ல ,காலை கண்விழித்து பார்த்தால் 2.40க்கு பதிவு வந்துள்ளது,சஸ்ட் மிஸ்...
ஆசிரியர் சார் @ மறுபதிப்பை பொறுத்து லயன் காமிக்ஸ் முதல் 1டூ100...
முத்து காமிக்ஸ் முதல் 1டூ 100...(இவைகள் தானே அதிக டிமாண்ட் )
மினிலயன் எதுவும் ...
திகில் எதுவும் ...என போடுங்க சார்...
இந்த லக்கி லூக்குல 3பொடியன் (நம்ம பொடியனார் அல்ல)
1.லயன் சூப்பர் ஸ்பெசல்-அதிரடி பொடியன்
2.பயங்கர பொடியன்-மினிலயன் 25
3.அதிரடி பொடியன்2-மினிலயன் 35...
இவற்றில் 1மட்டுமே மறுபதிப்பு ஆகியுள்ளது. மற்ற இருகதைகள் எப்போது ???
இவற்றை படித்துள்ள நண்பர்கள், இவற்றை பற்றி சுருக்கமாக கூற முடியுமா ???
1ம்,3ம் என்னிடம் உள்ளது...
Delete2என்ன??.. கொஞ்சம் குழப்புதே..
மாயாசார் @இங்கே க்களில் 2ன் அட்டைய போடுங்க சார்...
அடுத்த செட்டில் abs கருப்பு வெள்ளயில் அந்த டிடெக்டிவ் ஸ்பெசல் போல
Delete@ FRIENDS : முத்து காமிக்ஸ் முதல் நூறின் break -up கீழ்க்கண்டவாறு :
Deleteமும்மூர்த்திகள் - 37 கதைகள்
ரிப் கிர்பி - 11 கதைகள்
சார்லி - 7 கதைகள்
காரிகன் - 14 கதைகள்
விங் கமாண்டர் ஜார்ஜ் - 4 கதைகள்
வேதாளன் - 12 கதைகள்
மாண்ட்ரேக் - 6 கதைகள்
சிஸ்கோ கிட் ; கில்டெர் ; பென் ; மாடஸ்டி என பாக்கி 9 இடங்களை பிடிக்கிறார்கள் !
இதனில் முதல் 37 மும்மூர்த்தி சாகசங்களும் மறுபதிப்பில் நிச்சயம் வந்திடும்.
எஞ்சி நிற்பதில் ரிப் கிர்பி ; சார்லி ; ஜார்ஜ் ; காரிகன் ஆகியோரது select இதழ்கள் சிறப்பானவைகளே - but அந்நாட்களது நமது nostalgia எனும் மெருகின்றி இவர்களது புதுக் கதைகளை ரசிக்க எத்தனை பேர் இன்றைக்கு ரெடி சார் ?
Of course வேதாளன் கதைகள் ஒரு விதிவிலக்கு !
"இல்லாததொன்றின் மீதான மோகம் ; பழமை சார்ந்த மென்னினைவுகள்" என்பதைத் தாண்டி - இன்றைக்கு நாம் மறுபதிப்பிடும் கதைகளில் - புதுயுக வாசகர்களையும் கவர்ந்திட ஏதேனும் இருக்க வேண்டுமென்பதே எனது வேட்கை !
நிச்சயமாய் வரும் காலங்களில் ரோஜா மாளிகை இரகசியங்களும், பேய் தீவு ரகசியங்களும் வெளியிடலாம் தான் - ஆனால் அவை வரத் துவங்கிய சற்றைக்கெல்லாம் இன்றைய ஸ்பைடர்களும் , மும்மூர்த்திகளும் துரிதமாய் உற்பத்தி செய்து தரும் கொட்டாவிகளும் தொடர்ந்திடும் அபாயம் உண்டென்பதை நினைவூட்டும் கடமையும் எனக்குள்ளது !
@ சங்கீதா @ சேலம் டெக்ஸ்
Delete//மாயாசார் @இங்கே க்களில் 2ன் அட்டைய போடுங்க சார்...//
//@மாயாவி..
நீங்கள் புத்தகங்களை எப்படி பாதுகாக்கிறீர்கள்? அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன். மிகவும் உதவியாய் இருக்கும்.//
அதிரடி பொடியன் ஒரு பகுதி மட்டுமே..பயங்கர பொடியன்-I பயங்கர பொடியன்-II என்றே வந்துள்ளது, லயன்மினி 35 வது புத்தக அட்டைபடத்தில் தவறாக அதிரடிபொடியன் என மாறி பிரசுரம் ஆகியிருக்கும்...உள்பக்கத்தை பார்த்தால் பயங்கர பொடியன்-II இருப்பது உங்களுக்கு தெரிந்துவிடும் விஜயராகவன்..!
சங்கீதா...புத்தகங்களை எப்படி பாதுகாக்கிறேன் என்பதைவிட..எப்படி அழகுபார்க்கிறேன் என்பதாக கேட்டால் பதில் இப்போதைக்கு பார்க்க...இங்கே'கிளிக்'
விஜயராகவன் நீங்கள் கேட்ட அட்டைபடமும் அதில் உள்ளது..!
ஒரு நாள் உங்க காமிக்ஸ் கலக்சனை பார்த்தே ஆகணும்...
DeleteHAPPY BIRTH DAY M.V.SIR
ReplyDelete🌾 🌼 🌹 🌺 🌿 🌈 ☀👑 🙌 🙋 😹 😸👌👌👍☝
இன்று பிறந்த நாளா MV சார்...
Deleteஉங்களை சென்னையில் சந்தித்து பேசியது பெருமகிழ்ச்சி..
நீங்கள் லட்டு வாங்கி தராமல். அல்வா கொடுத்த காரணத்தால் ,என்று லட்டு வாங்கி தருகிறீர்களோ அன்று வாழ்த்துக்கள் சொல்கிறேன்.அதுவரை வாழ்த்து ஒத்தி வைக்கப்படுகிறது...
அன்பு ஆசிரியரே...!
ReplyDeleteஇம்மாத இதழ்களில் டைகர் சிறந்த படைப்பாக வந்துள்ளது.அட்டைப்படம் முதல் ஒவ்வொரு பக்கமும் மிகவும் ரசித்தேன்.மிக மிக துல்லியமான பிரின்ட்.நன்றி!!!!
அப்புறம் இரண்டாவது இடம் முத்து மினி தோற்றத்திற்கும் ,தயாரிப்புக்கும்....
கைக்கு அடக்கமாக மிக அழகான சைஸில் ஒவ்வொன்றும் பாதுகாக்க வேண்டிய தரம்.முன்பே அனைத்து மறுபதிப்புகளுக்கும் இதே வழிமுறை கையாண்ட வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்திருந்தேன்.இந்த தோற்றம் எப்படி உள்ளது என்று மற்ற நண்பர்களின் கருத்தை கேட்டு இதையே தொடர வேண்டுகிறேன்.முந்தைய மறுபதிப்புகள் சுத்தமாக தொடாமல் வைத்துவிடுவது வாடிக்கையாக உள்ளது.
இம்முறை மாற்றியுள்ளீர்கள்.
இன்னொரு கோரிக்கை....(ஏற்கனவே சொன்னது தான்) அனைத்து காமிக்ஸ் கம்பெனிகள் என்றோ காணாமல் போயும் நாம் இத்தனை காலம் தாக்கு பிடித்ததற்கு முதற்முழு காரணம் தங்களின் எழுத்தாற்றலும்,வசீகரமும் தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.....!!!!
இந்த விவகாரத்தில் எவரும் சமரசம் செய்ய தயாராகமாட்டார்கள்.மற்றவர்களின் எழுத்தாற்றல் நன்றாயிருப்பினும் ,நான் காத்திருப்பது தங்களின் ஆக்கங்ககளுகாகத்தான்...
தங்களின் பார்வையில் எப்படியோ,என்னைப.பொறுத்தவரை இது ஒரு விஷப்பரீட்சை.இப்போது வரும் புது இதழ்களில் எதில் இந்த பரீட்சை வைத்துள்ளீர்களோ என்ற எண்ணத்துடனே கையில் எடுக்கிறேன்...
இது நமக்கு ஒரு Set Back....!!!
+1111111111111111111111111111111111111111
Delete+1
DeleteAHMEDBASHA TK : நிறைய பேசியிருக்கிறோம் சார் - மொழிநடையில் புது ரத்தம் புகுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ! அதிலும் இதழ்களின் எண்ணிக்கைகளைக் கூட்ட நேரிடும் தருணங்களில் ஒரே டீம் தொடர்ச்சியாய் பணியாற்ற வேண்டிவரும் பொழுது எழும் நோவுகள் ஓராயிரம் !
Deleteஇப்போதைக்கு எப்படி எப்படியோ பல்டி அடித்து சமாளித்து வருகிறேன் என்றாலும் - காத்திருக்கும் காலங்களில் இந்த சூப்பர்மேன் அவதாரத்தை எவ்வளவு தூரம் தக்க வைக்க முடியுமோ - தெரியவில்லையே ! And மார்க்கண்டேய வரம் நிச்சயம் நமக்கில்லை எனும் பொழுது ஒரு replacement காலத்தின் கட்டாயமே !
இந்தாண்டினில் வேறெந்த "பரீட்சைகளும்" காத்திருக்கவில்லை என்பதால் தைரியமாய் இதழ்களைக் கையில் தூக்கிடலாம் !
இன்றைய தினமலர் 13ம் பக்கத்தில்
ReplyDeleteமாயாவியின் நாசஅலைகள்
விமர்சனம் வெளியாகியுள்ளது.
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
durai kvg : E-paper லிங்க் இருப்பின் தாருங்களேன் சார் - படித்துப் பார்க்கலாம் !
Deleteசொல்லப் போனால் - லார்கோவின் "கடன் தீர்க்கும் நேரமிது" இதழை விமர்சிக்கக் கோரியிருந்தோம் - ஸ்டாலுக்கு அவர்களது ரிப்போர்டர் வந்திருந்த வேளையில் ! But "மாயாவி" என்ற மாயாஜாலமே மீடியாவின் செல்லப்பிள்ளை !
என் பெயர் டைகர் வெற்றியா தோல்வியா என கேட்டால் வெற்றிதான்.அதற்கு ஒரே காரணம் முழு ஆல்பமாக வெளியிட்டதுதான் பிரித்து வெளியிட்டிருந்தால் கண்டிப்பாக தோல்வி அடைந்திருக்கும்
ReplyDeleteAuditor Raja : இதனைப் பிரித்துப் போடக் கூடாதென்று நான் பிடிவாதமாய் தீர்மானித்தது கதையின் பாங்கின் பொருட்டே ! பாகம் பாகமாய் இதனை வெளியிட்டிருந்தால் ட்சி-நா-பா வின் மூக்கைப்போலாகியிருக்கும் எனது மூக்கும் !
Deleteடைகர் புக் குவாலிட்டி அட்டகாசம் சார். ரொம்ப மெனக்கெட்டு இருக்குறீர்கள் என்பது கண்கூடாகவே தெரிகிறது. உங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் சார்.
ReplyDeleteஎன்னுடைய சாய்ஸ் :-
கோச் வண்டியின் கதை + ஜெஸ்ஸி ஜேம்ஸ்
Giridharan V : நிறையப் பேரின் உழைப்பு - ஆத்மார்த்தமாய் ஒன்றிணையும் பொழுது results நிறைவாய் அமைந்து விடுகிறது ! கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் !
DeleteMy choice also with JJ .. Jesssy James
ReplyDeleteஅந்தரத்திலே தொங்குற சாமி ..சிங்கத்தின் சிறுவயதில் புத்தகமா வருமான்னு உங்க ஞா னதிருஸ்டியிலே பார்த்து சொல்லுங்க
ReplyDeleteகண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் என்னோட காலை நாஸ்ட்டா வுக்கே வழியைக் காணோமே பக்தா ..
VETTUKILI VEERAIYAN : அந்த சாமி என்னத்தே கன்னையாவின் சீடராம்....!!
Deleteவரூம்ம்ம்...ஆனா வராது ... என்னத்தே வந்து...என்னத்தே படிச்சி ...
Deleteசிவகாசி மைசூர்பாகுக்கு :-
ReplyDeleteஅட! இவரத் தெரியலையா.? இவுருதாம்பா கேப்டன் டைகரு. அந்த சில்க்கு புள்ள கல்யாணம் பண்ணிக்கலாமின்னு கூட்டிட்டு வந்து, இவுரு வெச்சிருந்த பணத்தையெல்லாம் லவட்டிகிட்டு ராவோடராவா அண்ணனை அனாதையா வுட்டுட்டு எஸ் ஆயிடிச்சி. இப்போ அண்ணன் திரும்ப அரிசோனா போறதுக்காக வித்தை காட்டி காசு சேத்துட்டு இருக்காரு. நீயும் ஒரு ரெண்டு சென்ட் போட்டுவுடுப்பா, டைகரு ஊர் போய் சேரட்டும் பாவம்.!!!
KiD ஆர்டின் KannaN : உருட்டுக்கட்டைகள் கொள்முதலுக்கு ரம்மி XIII கிளம்பியிருப்பதாகக் கேள்விப்பட்டேன் !
Deleteசார் ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பதால் ....நாமும் steelல் தொங்கிய steal😌
ReplyDeleteஇனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
அடியேனின் தேர்வு - "தாயில்லாமல் டால்டன் இல்லை".
ReplyDeleteஇந்த வார விகடனில் முகமது அலி பற்றிய கட்டுரை இரும்புக்கை மாயாவி என்ற பெயரில் வெளியாகி உள்ளது
ReplyDeletesaravanan srinivasan : "காமிக்ஸ் என்றால் மாயாவி - மாயாவி என்றால் சூப்பர் ஹீரோ" என்ற பிம்பமே இன்னமும் நிறைய மனங்களில் பதிந்துள்ளது நிதர்சனம் !
Deleteசார் இரும்புக்கை மாயாவி எனும் பெயரில் டாடாவின் வாழ்க்கையும் கண்ணதாசனில் வந்தது
Deleteமுத்து 45 ஆண்டு மலர் கதம்ப குண்டாக எதிர்பார்க்கிறேன் மேலும் பழைய ஹிரோக்கள்.வேதாளர்+ரிப் கெர்பி + மான்ட்ரேக் + காரிகன் மற்றும் புதிய கெளபாய் சேர்ந்து கலரோ +கருப்பு வெள்ளையோ ஹார்டு பவுன்டு அட்டையில் ₹ 600 விலையில் கொடுக்கவும் நன்றி
ReplyDeleteAnandappane Karaikal : Whoa...whoa....கற்பனைக் குதிரைகளைக் கொஞ்சமே கொஞ்சமாய் கட்டுக்குள் வைத்திருப்போமே சார் ? மாண்ட்ரேக் & ரிப் கிர்பி கதைகளைப் போட்டு அறுநூறு ரூபாய்க்கு இதழை வெளியிட்டால் நிலவரம் கலவரமாகிப் போகும் ! புதுயுகக் கதைகள் பக்கமாய் நம் பார்வைகளும், ரசனைகளும் திரும்பி இருக்கா நாட்களிலேயே இந்த 2 நாயகர்களும் செம slow sellers ! இன்றைய சூழலில் சொல்லவும் வேண்டுமா ? நிதானமாய்க் கையாளப்பட வேண்டிய ஹீரோக்கள் இந்த இருவருமே !
Deleteஆண்டுமலர் முழுவண்ணத்தில் இருகட்டும்...
ReplyDeleteமாடஸ்டியின் முழுவண்ண கனத 2 இடம்பெறட்டும் சார்.....
yazhisai selva : முதலில் ஒரு இதழ் வண்ணத்தில் வெளியாகட்டும் சார் ; அதற்கான வரவேற்பைப் பார்ப்போம்..
Deleteமேற்கொண்டு வண்ண இதழ்கள் பற்றி அப்புறமாய் யோசிப்பதே பொருத்தமாக இருக்கும் ! விற்பனையில் அசகாய சூரத்தனங்களை இளவரசி இன்னமும் நடத்திக் காட்டியிருக்கவில்லை என்பது தான் யதார்த்தம் !
என் பெயர் டைகர்...
ReplyDeleteமுதல் பார்வையில் கருப்பு வெள்ளை - கலர் இரண்டு புத்தகங்களுமே அட்டகாசமாய் தோன்றியது. படிப்பதற்கு கருப்பு வெள்ளையை தேர்வு செய்து கொண்டு படிக்கத்துவங்கியதும் தான் உரைத்தது - இந்தப் புத்தகம் கருப்பு வெள்ளையில் வந்திருக்கவே கூடாது என்று!
வெவ்வேறு களங்களில் கதை பயணிக்கும்போது, அதனைப் புரிந்து கொண்டு படிக்க கருப்பு வெள்ளை உதவி செய்யவில்லை. தயாரிப்பு நிலையில் இருக்கும் போதே எடிட்டருக்கு இது புரிந்து தான் இருக்கும். அப்போதே அவர் நிர்த்தாட்சண்யமாய் கருப்பு வெள்ளை புத்தகம் கிடையாது என்று அறிவித்திருந்திருக்கலாம்.
மற்றபடிக்கு, கதை மிகவும் அட்டகாசமாய் இருக்கிறது. திரும்பத் திரும்ப படிக்கும் காமிக்ஸ்கள் பட்டியலில் இதுவும் ஒன்று.
கருப்பு வெள்ளையில் வந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
S.V.VENKATESH : ரசனை சார்ந்த விஷயங்களில் ஒரு sweeping statement எப்போதுமே பொருந்திடாது சார் ! இதே black & white இதழானது வண்ணத்தைவிடவும் பிரமாதம் என்ற நண்பர்களின் அபிப்பிராயங்களை என்னவென்பது ? இரண்டும் வெவ்வேறு ரகங்கள் ; விலைகள் எனும் பொழுது "இது வந்திருக்கவே கூடாது" என்ற கருத்து நிச்சயம் நிறைய உடன்பாட்டைப் பெற்றிடாது ! And இரண்டையுமே வாங்கிட வேண்டுமென்ற நிர்பந்தம் நிச்சயமாய் இல்லை தானே ?
DeleteAnd உங்களுக்கொரு விஷயம் தெரியுமோ ? ஆண்டின் 365 நாட்களிலும் நான் எடிட்டிங் செய்வது black & white பிரிண்ட் அவுட்களில் தான் - அவை வண்ண இதழ்களாக இருப்பினும் !!அச்சுக்குச் செல்லும் கடைசி நிமிடம் வரையிலும் பணியின் அத்தனை நிலைகளிலும் புழங்குவது B & W பக்கங்களே ! So அவற்றை ஆதாரமாய்க் கொண்டு - 9 மாதங்களுக்கு முன்பான அறிவிப்புகளையும், முன்பதிவுகளையும் காற்றில் பறக்க விட சாத்தியமாகும் என்று எண்ணத் தோன்றுகிறதா ?
நண்பர்களே!
ReplyDeleteஅடியேனும் பயணத்தில்,
குஜராத் மாநிலம் ஜாம்நகர் நோக்கி,
ஜூலியாவும் டைகரும் துணைக்கு
My choice Jesse James
ReplyDeleteகமான்சே தள்ளிப்போட வேண்டாம். இரண்டிரண்டு கதைகளாக விரைந்து முடிப்பதே சிறப்பு.
ReplyDeleteஜூலி, ரிண்டினின் வெற்றியும், டெக்ஸின் விற்பனை வேகமும் மகிழ்ச்சி.
முத்து ஆண்டுமலருக்கு பச்சைக்கொடி. கொஞ்சம் குண்டாக பார்த்துக்கொள்ளவும்.
அப்சலூட் கிளாசிக்ஸ், தங்கள் விளக்கம் ஏற்புடையது எனினும், எனக்கும் கூட ஹார்ட்கவரில் நாட்டமில்லை. பதிலாக ரெண்டு பக்கமாக இருந்தாலும் பக்க அதிகரிப்புக்கோ, ரெண்டு ரூபாயாக இருந்தாலும் விலை குறைப்புக்கோதான் என் ஓட்டு! LMS, மி.ம, எ.பெ.டை போன்ற சிறப்பிதழ்கள், குண்டு இதழ்களுக்கு மட்டும்தான் ஹார்ட்கவர் சிறப்பு.
லக்கி கிளாசிக்கில் ஜெஸ்ஸிக்கு என் ஓட்டு. (வழக்கமா கதைத் தேர்வில் கருத்துச் சொல்வதில்லையே, இதென்ன புதுசா?.. ஹிஹி.. அந்த ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு..)
ஆதி தாமிரா : அட...ஒரு கதைத் தேர்வுக்கு இப்படியும் கூட ஒரு காரணமா ?
Delete//முத்து ஆண்டுமலருக்கு பச்சைக்கொடி. கொஞ்சம் குண்டாக பார்த்துக்கொள்ளவும்.//
Delete+1
இன்று மதியம் அலுவலகத்தில் தனியே ..தன்னந்தனியே என மாலை வரை இருக்கும் சூழல் ...துணைக்கு என் பெயர் டைகர் இருக்க கவலை படேல்....கறுப்பு வெள்ளை இதழ் எனது மனதை முதலாக கவர்ந்து இருப்பதால் கறுப்பு வெள்ளையில் தான் டைகரை ரசிக்க போகிறேன் ...படித்து விட்டு வருகிறேன் சார் ..;-)
ReplyDelete**************
Paranitharan K : ஒரே ஒரு தலீவர் வரர்..ஒரே ஒரு தலீவர் வரார்...!
DeleteDear sir,
ReplyDeleteMany more happy returns of the day...
Why don't Editor's Birth day Special, the next year?
Muthu 45, if planned like NBS, would be wonderful.
Srinivas Nagarajsethupathi : சார்...காமிக்சுக்குப் பிறந்தநாள் எனில் அதுவொரு கொண்டாட்டம் ! நமக்கெல்லாம் பிறந்தநாள் எனில் - "கழுதை வயசாகுதே !" என்ற திண்டாட்டம் !
DeleteSo முந்தையது வரும் வேளையில் விசாலமான இதழ்களோடு உங்களை வாசிக்கச் செய்வதும் ; பிந்தையது வரும் வேளையில் அமைதியாய் அடக்கி வாசிப்பதும் நடைமுறை !!
டியர் எடி சார் நம் காமிக்ஸ் வானிலே முத்துவில்டைகரும் லையனில் தலையும் சூரிய சந்திரர்களாய் ஔிவீச மின்னும் நட்சத்திரங்களாய் முத்துமினிகள் மின்னிட வானவில் தாேரணமாய் கமான்சே பட்டையை கிளப்பிட ரின் டின்கேன் பாேல தாவிக் குதித்து ABS ஐ பிடிக்க வைத்த எடிக்கு நன்றி
ReplyDeleteSir, இந்த கதைகளையும் consider செய்யுங்களேன்.
ReplyDelete1. மனதில் உறுதி வேண்டும்
2. ஜேன் இருக்க பயமேன்.
Otherwise, Jesse James is my choice.
சாமி இப்படி உட்கார்ந்தா சொர்க்கத்தை பார்க்க முடியுமா?
ReplyDeleteஎதிர்த்த வீட்டு பாத்ரூமைப் பார்க்க முடியுது
LOL !!
Delete