Powered By Blogger

Saturday, June 04, 2016

புலி வந்தே விட்டது...!

நண்பர்களே,

வணக்கம். நீண்டதொரு காத்திருப்புக்கு எங்களது நன்றிகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்களேன்...! எப்போதென்றே மறந்து போய்விட்ட சென்றாண்டின் ஒரு தருணத்தில் நாம் அறிவித்த "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழ் இன்று (சனிக்கிழமை) காலை உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிடும் !! வண்ணத்திலும், black & white -லும் ஒரே இதழினை ; ஒரே சமயத்தினில் நாம் வெளியிடுவது இதுவே முதல்முறை என்ற வகையில் இதுவொரு குட்டியான லேண்ட்மார்க் என்று சொல்லலாம் ! And கௌபாய் காமிக்ஸ் உலகின் ஒரு மறக்க இயலா நாயகரின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் இதழ் என்ற வகையிலும் இதுவொரு special moment !! Without much ado - இதோ இதழின் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைகளுக்கு !



இந்த இதழின் தயாரிப்பினைத் தொடங்கும் முன்பாகவே படைப்பாளிகளிடமிருந்து நமக்கிடப்பட்டிருந்த ஒரே கோரிக்கை - "இயன்றவரையிலும் ஒரிஜினல் அட்டைப்படங்களையே பயன்படுத்துங்கள்" என்பதே  ! இந்தத் தொடரின் துவக்க சாகசத்தின் அட்டையினில் டைகரின் முகம் செம அட்டகாசமாய் இருப்பதைத் தாண்டி, பாக்கி 4 ராப்பர்களுமே அத்தனை ரம்யமில்லை எனும் பொழுது நமக்கிருந்த options ரொம்பவே சொற்பமாகிப் போயின ! சரி - ஒரிஜினல்களையே பயன்படுத்திடுவது என்றான பின்னே, ஒட்டுமொத்தமாய் எல்லா டிசைன்களையுமே ஒன்றிணைத்து விட்டால் என்னவென்று தோன்றியது !  அதன் பலனே நமது பின்னட்டையில் பொன்னன் செய்துள்ள collage ! ஒரு மறந்து போன யுகத்தின் பிரதிநிதியாய் வெளியாகும் WILD WEST COLLECTION-ன் அட்டைப்படம் 'சிங்கு சாங்' வர்ணச் சேர்க்கையில் இருப்பது நன்றாகயிராதென்பதால் சற்றே அடர் வர்ணப் பின்னணியினில் டிசைனைத் திட்டமிட்டோம் ! உங்களுக்குப் பிடித்திருப்பின், பாராட்டுக்களை பொன்னனுக்குச் சொல்லுங்கள் ! And முதல்முறையாக அட்டையினில் ஹோலோக்ராபிக் லேமினேஷன் செய்துள்ளோம் - ஒரு மாறுபட்ட effect கிட்டும் பொருட்டு ! இதழைக் கையில் ஏந்தும் தருணம் மனநிறைவாய் உணர்ந்தீர்களெனில் அதுவே எங்கள் டீமின் மகிழ்ச்சியான தருணமாகிடும் !  And இங்கே சின்னதாயொரு நினைவூட்டலும் / முன்ஜாக்கிரதையும் கூட :

"மின்னும் மரணத்தையும்", பக்கங்கள் கூடுதலான LMS இதழ்களையும் தூக்கிப் பழகிய உங்கள் கைகளுக்கு 260 பக்கங்களேயான இந்த இதழ் பஞ்சாய்த் தோன்றிடலாம் ; ஆகையால் 'தம்' பிடிக்காது இதழினைத் தூக்க முற்பட்டால் நிச்சயம் எமாற்றமிராது ! 

இதழைப் பற்றி ஒரு சின்ன preview-ம் இங்கே : கேப்டன் டைகரின் வெற்றி கண்ட பல கதைகளிலும் பயன்படுத்தப்பட்டிருந்த கதைக்கருக்கள் - வன்மேற்கின் நிஜ நிகழ்வுகளின் மீதான கதாசிரியரின் புனைவுகளே! ஆனால் இம்முறையோ கதாசிரியர் அவதாரமெடுத்திருக்கும் ஓவியர் ஜிரௌ - வன்மேற்கின்   ஒரு படு முக்கியமான நிகழ்வினுள் டைகரை இணைத்தொரு கதையினை உருவாக்கியுள்ளார் ! இந்தக் கதையின் பின்னணி ஒரு நிஜ நகரம் ; கதையில் உலவிடும் அத்தனை மாந்தர்களுமே (டைகரைத் தவிர்த்து) அந்நாட்களில் நிஜமாய் வாழ்ந்தவர்கள் !  கதையின் மையம் சுழல்வது - ஒரு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற துப்பாக்கி மோதலினைச் சுற்றி ! இங்கே டைகர் மட்டுமே கற்பனைக் கதாப்பாத்திரம் ! So ஒரு இயல்பான நாயகரை ஒரு நிஜ வாழ்வுச் சூழலுக்குள் உலவச் செய்திருப்பதே "MISTER BLUEBERRY " தொடரின் தனித்தன்மை ! இந்தப் பின்னணிகளை சற்றே சுலபமாய்ப் புரியச் செய்திடும் பொருட்டு - "வரலாற்றின் சில சிகப்புக் பக்கங்கள்" என்ற தலைப்பில் - நிறைய நிஜ போட்டோக்களுடன், குறிப்புகளுடன் 4 பக்கங்களை பயன்படுத்தியுள்ளேன் ! அவற்றைப் படித்தான பின்பு ; அந்த போட்டோக்களில் மிடுக்காய்த் தோன்றும் அந்நாட்களது மனிதர்களை உங்கள் மனதுகளில் பதிவு செய்து கொண்டான பிறகு கதைக்குள் புகுந்தால் ஒரு கூடுதல் ஈர்ப்பு கிட்டும் என்பது என் எண்ணம் ! So ஒரு வித்தியாசமான real life + காமிக்ஸ்   அனுபவத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் ! வழக்கமான காமிக்ஸ் டைம் + கொஞ்சமே கொஞ்சமாய் filler pages நீங்கலாய் இந்த இதழினில் வேறு பக்க நிரப்பிகள் கிடையாது ! பெயருக்கேற்றதொரு கம்பீரம் இதழினில் இருக்கட்டுமே என்பதால் வேறு பக்கமாய்க் கவனங்களைத் திசைதிருப்ப எத்தனிக்கவில்லை ! Hope you will understand folks !



இந்த இதழோடு எனக்குள்ள சின்னதொரு பரிச்சயம் பற்றி ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேனா - தெரியவில்லை ! (அது சரி..ஒரு இடம் - இரண்டு இடம் என்றில்லாது சிக்கின சந்தில் எல்லாம் எழுதித் தள்ளினால் எப்படி ஞாபகம் இருக்கும் ? என்று என் மைண்ட்வாய்ஸே கேட்கிறது !) 1995-ல் நான் பாரிசின் முக்கிய வீதியிலுள்ளதொரு புத்தகக் கடையில் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நாளில் தான் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் ரிலீஸ் ஆகியிருந்தது ! ஒரிஜினல் கதாசிரியர் சார்லியரின் மரணத்தைத் தொடர்ந்து நித்திரையில் ஆழ்ந்துகிடந்த டைகர் தொடருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்ததால் - தடபுடலாய் விளம்பரங்கள் என்பதோடு - முதல் நாள் ; முதல் பிரதியினில் கதாசிரியர் ஜிரௌ ஆட்டோகிராப் போடுவார் என்றும் ஏற்பாடாகி இருந்தது ! அந்நாட்களில் BLUEBERRY என்ற பெயர், கொசா-முசா artwork கொண்டதொரு கௌபாய்த் தொடர் என்று மட்டுமே எனக்குள் பதிவாகியிருந்தபடியால் - நான் பெரிதாய் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை ! 26 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதே இதழை வண்ணத்தில் இவ்விதம் வெளியிடுவோம் என்பதையோ ; "டைகர்" என்ற பெயர் நம்முள் இத்தனை பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதையோ அன்றைக்கு நான் யூகித்திருக்க வாய்ப்பிருந்திருப்பின் நானும் வரிசையில் நின்று ஜிரௌ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கியிருப்பேன் ! எத்தனை பெரியதொரு வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் !!! Anyways - இன்று நாம் செய்துள்ள இந்த முயற்சியை அவர் விண்ணிலிருந்து பார்த்திடுவார் என்ற நம்பிக்கையோடு மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! ஒரு மகா படைப்பாளிக்கு இந்த இதழ் நமது சின்னஞ்சிறு சமர்ப்பணமாகட்டும் ! Happy Reading all !! 

இன்று பகலில் சென்னையில் இந்த இதழினையும், முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ரிலீஸ் செய்த கையோடு நமது ஸ்டாலில் விற்பனையும் துவக்கிடுவோம் ! சென்னையில் நீங்கள் இருப்பின், we would love to see you!! 

அப்புறம் - ஒரே நேரத்தில் ஜூன் மாதத்து ரெகுலர் இதழ்களும், டைகரின் இந்த ஸ்பெஷல் இதழும் வெளியாகியுள்ள சூழலில் - ஒவ்வொன்றின் விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவுகளிலேயே தொடர்ந்திடுவோமா ? So "ஜூனின் சூரர்கள்" பதிவினில் - ஜூன் விமர்சனங்களையும் ; இந்தப் பதிவினடியில் "எ.பெ.டை" விமர்சனங்களையும் கொண்டு செல்வோமே ? இரண்டிலுமே நான் பார்வைகளை ஓட விடுவேன் ; நீங்களுமே இரண்டையுமே தொடர்ந்திடலாமே ? Bye for now all !

95 comments:

  1. வேட்டைக்கு வந்த முதல் ஆளு!

    ReplyDelete
  2. நான் இரண்டாவது

    ReplyDelete
  3. நாளை நிச்சயம் நமது அன்பிர்க்குரிய
    ஆசிரியரையும் நமது நண்பர்களையும்
    சந்திக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. மன்னிக்கவும்.ஞாயிறு காலை.
    11-12.

    ReplyDelete
  5. அட்டை சூப்பர் சார்

    ReplyDelete
  6. கலர் புக் அட்டையை விட B & W புக் அட்டை நல்லாயிருக்கு சார் (பத்த வைச்சாச்சு)

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவே கலரைவிட B&W த்தான் அட்டகாசமாய் வந்துள்ளது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. அட்டை படங்கள் இரண்டுமே சூப்பர் !முன்பே பதிவு வந்து விட்டது . உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் மனமார்ந்த நன்றிகள் சார் !

    ReplyDelete
  8. திருச்செல்வம் நீங்க 4வது. வாசகர் வரிசையில்

    ReplyDelete
  9. மிக்க நன்றிகள் நண்பரே !

    ReplyDelete
  10. எடிட்டர் சார்,

    எனக்கு கலர் பிரதியின் அட்டைப் படம் தான் டாப்பாக இருப்பதாக தெரிகிறது :-))

    ReplyDelete
  11. அட்டை அமைப்பு அருமை. பொன்னன் அவர்கள் தனது முயற்சியில் சிறப்பாகவே செயற்பட்டுள்ளார். வாழ்த்துக்கள் உங்கள் அணியினருக்கு.

    ReplyDelete
  12. //இந்த இதழோடு எனக்குள்ள சின்னதொரு பரிச்சயம் பற்றி ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேனா - தெரியவில்லை ! // ஏற்கனவே அந்த அனுபவம், தவறவிட்ட சந்தர்ப்பம் என்பவற்றை பகிர்ந்துள்ளீர்கள் சார்.

    ReplyDelete
  13. ஆமாம் எடிட்டர் சார் . கதாசிரியர் ஜிரௌ அவர்கள் fnac இற்கு முதல் ஆல்பத்தில் கையெழுத்து போட வர உள்ளது பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் குறிபிட்டு இருந்தீர்கள் சார் ! இந்த landmark இதழ் அவருக்கே சமர்ப்பணம் !

    ReplyDelete
  14. நள்ளிரவு வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே...

    புலியும் வந்துவிட்டது ,சென்னையும் வந்துட்டது. சேந்தம்பட்டி நண்பர்களை ராணுவ பாதுகாப்புடன் அழைத்து வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ்ம் சென்னை சென்ரல் நுழைவாயில் க்கு அருகே வந்து விட்டது.வணக்கம் சென்னை......

    ReplyDelete
  15. சார் அட்டைப் படங்கள் அட்டகாசம் . அதும் பின்னட்டை அனைத்து அட்டைகளும் இனயணைத்த முயற்ச்சி வெகு அற்புதம் .பொன்னன் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் .பின்னட்டைக்கு மட்டும் மஞ்சள் பூசாமல் அதே வண்ணங்களை உபயோகித்திருந்தாலோ , பின்னணியில் வெள்ளை நிறப் படுத்தி இருந்தாலோ இன்னும் எடுப்பாக ிருந்திருக்கும் . வண்ண பக்கங்கள் அருமை .முதலில் தாங்கள் போட்ட அட்டையை என்னால் மறக்க ியலவில்லை . அதனை உள் பக்கத்தில் போட்டிருக்கலாம் . வாய்ப்பிருப்பின் வரும் காலங்களில் அதனை உபயோகப் படுத்தவும் சார் .ஹோலோகிராம் அட்டய காண பேராவலுடன் கனவுலகில் சஞ்சரிக்கப் போகிறேன் . அதற்க்கு ஆகும் அதிக விலையை கண்டு கொள்ளாமல் சொல்லாமல் முயற்ச்சித்த தங்கள் இந்த செயல் தங்களை குற்றம் சோல்ல காத்திருக்கும் நண்பர்களது வாயை அடைப்பது நிச்சயம் . சார் நமது காமிக்ஸ் விற்பனை மேம்படுவது நிச்சயம் . இதற்க்கே இப்படி எனில் வரவுள்ள இரத்தப்படல அட்டையில் என்னவொரு பிரம்மாதமெல்லாம் காத்துள்ளதோ .வெளியீட்டாளர்களே வியக்கும் வண்ணம் அந்த அட்டைப்படம் இருக்கப் போவதுறுதி .அந்த அட்டை இப்போதே கூட தயாரோ !ஹிஹிஹி....முகமெல்லாம் பல்லாய் சில படங்கள் .😊😊☺☺☺

    ReplyDelete
  16. அட்டைப் படங்கள் அசத்துகின்றன.

    ReplyDelete
  17. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  18. அட்டைப்படம் அட்டகாசம்.

    ReplyDelete
  19. இனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே :)
    இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

    சென்னை சென்று நம் ஸ்டாலில் கலக்க இருக்கும் சேந்தம்பட்டி குழுவிற்கு
    நன்றாக ஆட்டம் போட்டு எங்களுக்கு அப்டேட் செவீர்கலாக

    நம் ஸ்டால் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
    குட்டிஸ் கள், பெரியோர்கள் , இளவயது புத்தக ஆர்வாளர்கள் நம் காமிக்ஸ் பக்கம் தங்களது பார்வை திரும்பிட வேண்டும் என்று பிராதர்னை செய்கிறேன்

    அப்புறம் கடலை மிட்டாய் சகோதரர்களே , அப்பிடியே கோவைக்கும் கொஞ்சம் கடலை மிட்டாய் அனுப்பி வைபீர்கலாக ;)

    ReplyDelete
  20. வாழ்த்துகள்!!! அட்டை படம் அருமை!!! ஹோலோக்ராபிக் அட்டை படம், இதை தான் எதிர் பார்த்தேன், கண்டிப்பாக இது பலரை கவர்ந்து நமது ஸ்டால் பக்கம் இழுக்கும்!! நமது புத்தக விழா சிறப்பிக்க வாழ்த்துகள்!!

    ReplyDelete
  21. இந்த மாதம் வெளி வந்த அனைத்து காமிக்ஸ் புத்தகத்திற்கும் கடுமையான சுழலிலும் , மிக சிறப்பாக செயலாற்றிய நம் லியன் முத்து அலுவலுகர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் :)

    Thank you Dear Comics team and kudos to U guys :)

    காமிக்ஸ் காதலால் மிகுந்து சிரமம் எடுத்து கொண்டு எங்கள் பொருட்டும் அதிக நேரம் உழைத்து blog பக்கம் அதிகம் வராமல் எங்களை கஷ்டப்பட்டு பிரிந்து இருந்த ஆசிரியர்க்கு எனது நன்றிகள் :)
    Do take care of ur health sir

    காமிக்ஸ் காதலர்களையும் , தங்களது நண்பர்களை சந்திக்க உள்ளீர்கள் சார்
    Enjoy Sir the book fair sir....have fun :)

    ReplyDelete
  22. சென்னையில் விடியத் தொடங்கிடுத்து.!!!

    ReplyDelete
  23. புத்தகங்கள் கைப்பற்றியாகிட்டது (என் பெயர் டைகர்)

    ReplyDelete
  24. @விஜயன் பாஸ் !
    சென்னை புத்தக விழா மிக பெரிய வெற்றி திருவிழாவாக வாழ்த்துக்கள் !
    @ஆல் நண் பாஸ்!
    கலந்து கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  25. சேந்தம்பட்டி குழு நம்பள கண்டுக்கிடாததால ரயில. பின்னாடியே ஓடி சென்னைக்கு வந்திட்டேன்.
    யாராவது புக் பேருக்கு வழி சொல்லுங்கப்பு

    ReplyDelete
  26. van hammes மரணம் மறந்த மனிதர்கள் ,
    அந்த கிரேக்க ிளவரசி சிறுவர் கதைகள்
    ஓவியர் செல்லம் வரைந்து தருவதாக கூறிய கதைகள் ,
    இவை குறித்து ஆசிரியரின் பதில்களையும் வாங்குங்கள் நண்பர்களே .

    ReplyDelete
  27. அட்டைபடம் பிரமாதம்! விற்பனையில் வெற்றியடைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. இன்றைய மற்றும் நாளைய நாட்களில் லயன் காமிக்ஸ் சந்திப்பில் பங்கு கொள்ள இருக்கும் வாசகர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
    அதோடு சிறந்த விற்பனையை காணவும்,புதிய வாசகர்கள் இந்த புத்தக கண்காட்சி மூலம் உருவாகவும் லயன் காமிக்ஸை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete

  29. ஆஹா!! ஹாலோகிராம் எஃபெக்ட்டில் அட்டைப் படமா?!! அப்படியானால் புத்தகத்தை நேரில் பார்த்த பிறகு கருத்துச் சொல்வதே சரியாக இருக்குமென்று தோன்றுகிறது!

    இன்றைய 11 மணி சந்திப்புக்காக ஆவலோடு வெயிட்டிங்....

    ReplyDelete

  30. சென்னை வந்திறங்கிய சேந்தம்பட்டி குழுவினரைக் காண கல்லூரிப் பெண்கள் போட்டா போட்டி!

    செல்ஃபி எடுத்துக்கொள்ள முண்டியத்ததால் போக்குவரத்து பாதிப்பு!

    சென்னையில் பரபரப்பு! :P

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள ஆரம்பிச்சிடீங்கலா :P

      Delete
    2. ககளப்பட்டி கறுப்பு மிட்டாய்தானே கொண்டு வந்தீக,எப்போ ஜிலேபி கொண்டு வந்தீக, அத எடுக்க பொண்ணுக ஏன் பட்டாபட்டில வர்றாங்க.

      புரியாமல் முழிக்கும் படங்கள் 299

      Delete
    3. ///அத எடுக்க பொண்ணுக ஏன் பட்டாபட்டில வர்றாங்க///

      ஹாஹாஹா! LOL

      Delete
    4. இன்னுமா இந்த ஊரு நம்ம சேந்தம்பட்டி குழுவின் மேல் கிரேஸா இருக்கு ??

      Delete
  31. சாா் அடுத்த வறுடம் வறவுல்ல டெக்ஸ் மறுபதிப்பு எது
    டிரகன் நகரம் தானே?!

    ReplyDelete
  32. சாா் ரிப்போட்டா் ஜானி கதைகளை மறுபதிப்பு செயலாமே (எ.கா)குற்ற வறுசம் 2000,விசிதிர நண்பன் போன்றவற்றை

    ReplyDelete
  33. என் பெயர் டைகர் இரண்டும்
    முத்துமினி ஆறும்
    வந்து சேர்ந்து விட்டது எடி சார்

    முத்துமினி பழைய புத்தகங்களை விட கொஞ்சம் பெரிய சைஸ்ஸில் அட்டகாசமாய் உள்ளது
    பிரிண்டிங் தரம் மிகவும் அருமையோ அருமை

    கலர் டைகரைவிட B&W மிகவும் அருமையாய் உள்ளது

    CBF க்கு வந்துள்ள சேந்தம்பட்டி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    என்ன
    சௌந்திரபாண்டியன் ஐயா வின் பொற்கரங்களால் வாங்கவேண்டிய புத்தகங்கள் கொரியரில் வாங்குபடியாகிவிட்டது


    எடிட்டர்ரிடம் இரத்தக்கோட்டை கலர் மறுபதிப்பு வேண்டுகோளை கேட்டு நேரில் வற்புருத்துங்கள் தோழர்ஸ்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை கடந்து சென்றேன் புத்தகம் குறித்து இருந்ததால்...இனி நாளைதானோ என்பதால் இதன் மூலம் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் . ஜூலியாவை படிக்க வேண்டியதுதான் .

      Delete
  34. PUTHAGA THIRUVIZHAVIL THANGAL PANI SIRAKA VALTHUKKAL.

    ReplyDelete
  35. புத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸ் ஸ்டால் வெற்றியடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. சார் காலையில் ஒரு மணி நேரம் கலெக்சன் செண்டரில் காத்ததுதான் மிச்சம் .ட்ரேக்கிங் நம்பருக்காக வெய்ட்டிங் .

    ReplyDelete
  37. எடிட்டருக்கும்,நண்பர்களுக்கும் வணக்கங்கள்.
    டைகரின் அட்டைப்படம் நன்றாக உள்ளது.டைகர் புகழை தமிழ்நாடு கொண்டுவந்த நமது காமிஸ்க்கு ஒரு சல்யூட்.டைகரின் படைப்பாளி திரு ஜிரௌ அவருக்கு(இல்லாவிட்டாலும்)இருசல்யூட்.

    ReplyDelete
  38. சார் முத்து மினி மட்டும் வந்திருக்கு ..எபெடை மிஸ்ஸிங்

    ReplyDelete
  39. எங்கப்பா இந்த மூணு யானைங்க ,இங்க மூணு சிங்கங்கள தான் நிக்குது

    ReplyDelete
  40. எடிட்டரிடமிருந்து ஒரு நீண்ட பதிவு இன்று வெளியாக இருக்கிறது! புதிய அறிவிப்புகளோடு கூடிய ஒரு அலசல் பதிவாக இது இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

    ReplyDelete
    Replies
    1. அங்கிருந்து கிளம்பியாச்சா எல்லாரும்?

      Delete
    2. மீட் ஓவர் ராக்ஜி ....
      மாலை 6மணிக்கு பேர் வருகிறார் ஆசிரியர் சார்...
      நாங்களும் 6மணிக்கு வருகிறோம்,நீங்கள் எப்போது???

      Delete
    3. //புதிய அறிவிப்புகளோடு கூடிய ஒரு அலசல் பதிவாக இது இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!//

      waiting ...

      just in case any grand announcement from edit do post it EV&friends.

      Delete
  41. Just received En Peter TIGER BOOKS. Going to ride a time travel back to Wild west!!!!

    Btw, one query to Editor sir: I did not receive the TShirt.but, received both editions of TIGER spl & all muthu mini books. Would it be sent separately later?

    ReplyDelete
  42. தானைத்தலைவன் டைகரின் வெளியீட்டுவிழா வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். டைகரின் அட்டைப்படங்கள் செம்ம கலக்கல் சார். தாங்களுக்கும் நமது அணிக்கும் நன்றிகள் சார். மூத்த ஆசிரியரின் கையால் புத்தகங்களைப் பெறப்போகும் சேந்தம்பட்டி குழு அண்ணண்களுக்கு பொறாமையுடன் கூடிய வாழ்த்துக்கள். (வீட்டுக்கு போன்பண்ணி கேக்கனும் புத்தகமெல்லாம் வாங்கியாச்சானு)

    ReplyDelete
  43. ஐயையோ ஐயையோ 2டே மார்க்குல பரிசு போச்சே

    பிரசன்ன சாத்தான் வாழ்க

    ReplyDelete
  44. ஆஹா அறிவிப்புகள் அனைத்தும் அருமை

    ஆனாக்கா நம்பள் கதை எதுவும் காணோம்

    ReplyDelete
  45. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)))

    ReplyDelete
  46. திருச்செல்வம் நீங்க 4வது. வாசகர் வரிசையில்

    ReplyDelete
  47. பதிவு,தகவல்கள்,அட்டைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன.மீண்டும் ஒருமுறை கேப்டன் டைகர் கதைகள் தொகுப்பாக வரவாய்ப்பில்லை என்பதே சிறு கவலை.

    ReplyDelete
  48. சார் ஒரு வழியா புலி வந்துருச்சாம் . வண்ணத்தில் ..வீட்டுக்குப் போய் மாலை பார்க்கனும் ..கருப்பு வெள்ளை நாளைதான் கிட்டும் போல .

    ReplyDelete
  49. செனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான ஒப்பீடுகள்...கதய படிக்காம விமர்சனங்கள தாண்டும் நண்பர்களும் இதன kathaya padicha pinnaபடிக்கணும் ...ஆசிரியர் விமர்சனத்துக்குன்னு மாதம் தோறும் ஒதுக்கினால் பலரும் கதய படிச்ச பின்னர் இது போல சுவாரஷ்யமா பங்கு பெற ஏலும் . லோடு மோர் பிரச்சனயும் பாதிக்காது .இந்த வருடம் முழுதும் சோடை போகா கதைகள படச்சதால புத்தகங்கள தேர்ந்தெடுத்து வாங்கும் நண்பர்களயும் அத்தன கதைகளயும் வாங்கிப் படிக்க வைக்கும் ..இதற்கு பதிலளிக்க வைத்த sv அவர்களுக்கும் நன்றிகள்....

    ReplyDelete
  50. இன்று வரை என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி கிடைக்கவில்லை. Office phone பண்ணியும் tracking no. பெறமுடியவில்லை. என் பெயர் டைகர் booking no.TSC 10, முத்து மினி BOOKING NO. MM2

    ReplyDelete
  51. சார் வாயு வேக வாசு சோடை போனதில்...படகு வீடு மர்மம் படித்தேன் ....அருமையான கதை ...வாண்டு மாமா பங்களாதேஷ் போரை குறித்து ஒரு கதை புனைந்திருப்பார்....அத போல சிறிய கதை என்றாலும் அட்டகாசமாயிருந்நது .அன்று கிடைத்திருந்தால்.....

    ReplyDelete
  52. சார் டைகர் கருப்பு வெள்ளை இன்றுதான் கிடைத்தது . பாக்ச திறந்ததும் திகைப்பு ..அடடா மறந்து போய் வண்ணத்தில் அனுப்பிட்டாங்களோ ...கருப்பு , வெள்ளயும் ஹார்டு பௌன்டில் என ிதுவரை என் மூளையில் பதியாததே ....சார் கருப்பு வெள்ளை அட்டை அதனை விட ொரு படி மேல் ...அதில் பின்னட்டயில் மஞ்சளை தவிர்த்து கருமையை ஏற்றி இருந்தால் இன்னும் அட்டகாசமாயிருந்திருக்கும் ...அருமை சார் ..முதல் கருப்பு வெள்ளை ஹார்டு பைண்ட்...இதப் போல நம்ம sinnsters 7ம் வரட்டும் சார்

    ReplyDelete
  53. சார்!!!! என் பெயர் டைகர் வண்ணத்தை விட கருப்பு வெள்ளை அட்டை மிக பிரமாதம்......


    படிக்க துவங்கியாகிவிட்டது...........


    கருப்பு வெள்ளையில்தான் படிக்கிறேன்..........


    முதல் அத்தியாயத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.........எனவே மிகவும் குறைவான வேகத்தில்தான் படிக்க முடிகிறது.......


    76 பக்கங்கள் மட்டுமே இதுவரை படிக்க முடிந்தது......


    படித்தவரை கதையோட்டம் அற்புதம்.........


    அவசரமாக படிக்க இயலாத கதை இதுவரையில்.......





    ReplyDelete
  54. சார் நம்ம செனா ஆனா சொன்னதப் போல முதல் நான்கு பக்கங்கள் சுவாரஸ்யமின்றி செல்ல .... மீண்டும் மீண்டும் நான்கு முறை படித்து மேற்கொண்டு தொடர .....நமது வரலாற்றுப் பக்கங்களில் பங்கு பெற்ற கௌபாய ஷெரீஃப் கைது செய்யும் கட்டத்திலிஉந்து சுவாரஷ்யமாய் நகருது கதை ...வெளியில் செல்லாட்டி இன்றே முடித்ததும் பகிர்கிறேன் .20ம் பக்கத்தில் ஓர் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளும் முன் எல்லா கோணங்களிலும் சிந்தித்து பார்ப்பது அவசியம் என டைகர் கூறத் துவங்கியதும் அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது என ுணரத் துவங்கிட்டேன் ...

    ReplyDelete

  55. j
    சார் டைகர் சான்சே இல்லை . என்னவொரு அழுத்தம் தரித்த அற்புதமான கதை . நூறு பக்கங்களை இரண்டு பாகங்களை கடந்து விட்டேன் . அந்த அனுபவத்தை சத்தியமாக வார்த்தைகளில் வடிக்க ஏலாது . என்னுள் எதையோ தூண்டி விட்ட ஜிராட் இப்போது தெய்வமாகி விட்ட நிலையில் படைத்த போது நிஜமாய் தெய்வம்தான் . ுற்ச்சாகமின்றி கசகசவென துவங்கிய பக்கங்கள் மனது லயிக்காமல் திரும்ப திரும்ப சில முறை அந்தத் துவக்க பக்கங்களை புரட்ட வைக்க கதையோ பலவித ுணர்வுகளை காட்டிய படி பயணிக்க அவர்களோடு வாழ்ந்த ுணர்வு எனக்குள் .முதல் பாகம் முழுதும் ஷெரீஃப்களின் ஆளுமை அதகளப் படுத்தினால் ,இரண்டாம் பாகத்தை டைகர் கையிலெடுக்க பத்திரிக்கையாளர் நிலைதான் என்னுள்ளும் ..அடுத்து என்ன ெனும் ஆவலை கட்டுப் படுத்நத முடியவில்லை .இருந்தாலும் நாளை வரை அந்த பரபரப்பு இருக்கட்டுமே . அதிலும் படுக்கயில் டைகர் படுத்துக் கெண்டு சொல்லும் கோலம் என்னவோ பண்ணுது சார் .வெற்றியாளர்களை கூட முடக்கிப் போடுமா யுத்தம் .என்ன கொடுமை சார் .ஆனால் டைகர் கதைகள் நிறய வேண்டும் என்ற பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டார் தெய்வ ாசிரியர் .அதிலும் அட்டகாசமான வில்லங்க கௌபாய்களும் ,கூடி நின்று மிரட்டும் சட்டத்தின் பாதுகாவலர்கறும் சான்சே இல்ல சார் .செதுக்கி இருக்கிறார் தன் இறுதிப் படைப்பென ுணர்ந்தோ உணராமலோ அனைத்துப் பாத்திரங்களயும் . சில பக்கங்களே வரும் பாத்திரங்கும் மனதை விட்டு அகலாதது ஆசிரியரின் வெற்றி ..இது மின்னும் மரணத்திற்க்கு சற்றும் சளைக்கா காவியம் .
    இரு வண்ணங்கறில் புத்தகத்தை அற்புதமாக அட்டை முதல் ,அரிய பிரிண்டிங் தரத்தில் ,கதையை அப்படியே டைகர் கூறுவது போல திரிக்காமல் அற்புத நடையில் தந்த தங்களை கொண்டாடாமல் இருக்க முடியுமா .சூப்பர் சார் டைகரோடு உலவும் பிரம்மையை வழங்கியதற்க்கு வழக்கத்தை விட மேலான நன்றிகற் .என்ன ென்னவோ சொல்லத் தோணுது .முடியல சார் .அற்புதம் .

    ReplyDelete
  56. ர் இதப் போல சிறந்த கதைகள தயவு செய்து ஒளித்து வைக்காதீர்கள் தயக்கம் கொண்டு .
    டைகர் படுத்துக் கொண்டே ஜெயித்து விட்டார் ...படுத்த படி அவர் சொல்லும் உருக்கமும் , படுக்கை நிலை ஓவியமும் எந்த கடினமான ிதயத்தயும் பிழிந்தெடுத்து விடும் ..நான் மட்டும் என்ன விதிவிலக்கா என அனைவரும் சொல்வதுடன் கிட்டங்கியில் இது இல்லயா என ேங்கும் நிலை வரும் கூடிய விரைவில் பாருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட..ஒளித்து வைக்க இதுவென்ன வேறு மாதிரியான புத்தகமா - என்ன ?

      இப்போது வரைக்கும் நான் ஒளித்து வைக்க அவசியப்பட்டது ஸ்பைடரின்அந்த SINISTER 7 கதையை மட்டுமே !!

      Delete
    2. சார் மொழி பெயர்த்த பின் பத்திரமாக ஒளிச்சு வக்க எங்கூட்லயும் ஓரிடம் உண்டு

      Delete
  57. சார் நான்கு பாகங்கள் முடித்து விட்டேன் ...நான்காம் பாக ிரவு ....அப்பப்பா அஆங்காங்கே டைகர் , அந்த இளம் ஜோடி , அந்த வில்லன்களோடு அலைக்களிக்கப்பட்ட உணர்வு என்னுள்ளே ....அந்த பயங்கரமான இரவு என வர்ணிப்பார்களே அதன் சாட்சியாய் நானும் உலவியத போல ுணர்வு என்னுள்ளும் ...அதகளமான நகர்த்தல்கள் சார் ....இரவின் பரபரப்பில் டூம்ஸ்டோன் ...சொர்க்க பூமி ..அங்கே விளையாடுவது வெட்டியானின் அஸிஸ்டென்ட் என்று சொல்லி முடிக்க டோரி கெலை ....காதலரின் சொர்க்கம் ...இவைகளை கடந்து கொண்டே டைகருடன் விரைகிறேன் ....அதும் டைகரும் எதிராலியும் ஒரே புள்ளியில் குறி வைக்கும் அந்த ஓவியம்...நானும் இப்ப உறங்க போகிறேன்..முந்தய கதைகளில் சிறைக்கு சென்று மீண்ட டைகர் ..இந்த கதையில் செத்து செத்து விளையாடுறார் ...அட்டகாசம் சார் ...தன்னையறியாமலே ஷெரீஃப்களை மறைந்திருந்து தாக்கத் திட்டமிட்ட விரியன்களை அழித்தார் எனும் நினைவோட தூங்கச் செல்கிறேன் .....கனவில் ஒரு முறை முன்னரே ஓகேகார்லுக்குள் நுழைகிறேன்....

    ReplyDelete
  58. சார் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்அற்புதம் அற்புதம் அற்புதம்இதத் தவிர ிந்தக் கதைக்கு நான் எது எழுதினாலும் அபத்தமே ..கதயில் நுழயும் போதெல்லாம் என்னை ஒவ்வொரு பக்கமும் படிக்கும் போது உறையச் செய்தே தாண்டுகிறேன் .டெக்ஸா யாருப்பா அது என தனது இயல்பான நடயால் எனது முகத்தில் குத்துகளை விடுகிறார் டைகர் ....அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சைமன் எப்போதும் மறக்க ியலாதவறாகி விட்டார் எனது மனதில் ..அந்த அளவிற்க்கு பிற ேர்ப்களை விட பதியக் காரணம் , இரன்டாம் பாக இறுதியில் க்ளாண்டன் ஒரு தொடக்கம் கொடேன் ப்ளீஸ் என ரவு்ண்டு கட்டுவாறே அந்த நக்கலான வினவலும் ..பொருத்தமான முக பாவனைகளும் மனதில் அப்படியே பதிந்திட்டதுதான் காரணமா ..ஜிராடயும்..தகுந்த மொழி பெயர்ப்பயும் இணைத்த ....அந்த கொடுப்பிணையை என்ன சொல்ல.....நிச்சயமாய் வரம் வாங்கி வந்துள்ளோம் நண்பர்களே .சார் பின்னர் ஏர்ப் குழுவினர் பரிதாபமாய் அலைய ....கவன ீர்ப்பை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார் நம்ம டைகர் ..மதி நுட்பம் திட்டமிடல் என அந்த விறகு சேகரிக்கச் செல்லுமிடமாகட்டும் ...அங்கே அவர் எச்சரிப்பதும் ..அத மீறி அவதிப்படும் அதிகாரி மேல் கோபம் கோள்ளாது ,அடுத்த கனமே மின்னல் வேகத்தில் செயல் பட்டு தங்கள் அணியை காக்கும் திட்டமும் அடடா...அங்கே தனது கண் முன்னே தனது காதலி கொல்லப்பட காரணம் செயல் படாமல் பேசிக்கொண்டிருந்தது காரணம் என பத்திரிக்கயாளர் முன் தன்னை நொந்து கொண்ட டைகர் ....பின்னர் தற்காலத்தில் அந்த கொலைகாரனை கொல்லும் போது பேசாமல் சுடும் காட்சி கவிதை எனில்....அங்கே மூன்று துப்பாக்கிகளும் ஏக கணத்தில் முழங்குவது ஓவியரின் திறமை ...ஜிராடை என்ன சொல்லி பாராட்டிட முடியும் என்ற திகைப்பே மாறி வரும் கட்டங்களில் டக்கென மாறும் காலகட்டங்கள் போல பலதும் பேச வைக்கிறது .அந்த இறைவன் பெயரால் இன ஒழிப்பை முன் வைப்பதை எதிர்க்கும் டைகரும ..அது தொடர்பாக பின் வரும் நகர்த்தல்களும் பல விமர்சனங்களை முன் வைத்திருக்கும் ...நேர்மயின் அவதாரமாக கதாசிரியர் காட்ச்சி தருகிறார் . காமிக்ஸ் எனும் உலகில் இந்தக் கதை மூலம் ஜிராடு , டைகர் ,விஜயன் ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டிருக்கும் .. சார் படிக்கும் ஒருவரை அழாய் ,நிறைவாய் விமர்சிக்கத் தூண்டுவது ஒரு சிறந்த பணைப்பால் மட்டுமே முடியும் . அந்த வகயில் படைப்பாளிகள் விஜயன் மற்றும் ஜிராடை மிஞ்ச யாரால் முடியும் . அந்த வகையில் சிறந்த படைப்புகளை தேடி எடுத்து வரும் உங்களை மிஞ்ச .........சார் வண்ணத்தில் ரசித்த நான்இனி காத்திருக்கும் கருப்பு வெள்ளையில் படித்த பின் பொறுமயா எழுதினால் ஒரு புத்தகம போட வேண்டி இருக்கும்.. அவ்வளவு விசயங்கறெ சுவாரஷ்யமாய் உளர உள்ளன . அதும் டைகர் பணமெல்லாம் இழந்த போதும் கொலைகாரனைத் தேடி செல்வதும் ....கடைசியில் பணம் போச்சு என்ற நிலையில் டைகழ் என்றால் யாரேன கூறும் அந்த வசனங்களும் வாழ்க்கை குறித்த புரிதல்களை புரியாதவர்க்கும் ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை .சார் நமது பழயவாசகர்கள் மீண்டும் வந்தாலோ அல்லது புதிய வாசகர்கள் அதிகரித்து 5000 என்ற அளவில் உயர்ந்தாலோ அடுத்த வருடமே அந்த எண்ணிக்கை உயர்ந்தாலோ காலம் பார்க்காது அதிரடி மறுபதிப்பாய் வர வேண்டிய ிதழ் இது என்பதில் நிச்சயமாய் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது .

    ReplyDelete
  59. spoiler alert------------------------

    என் பெயர் டைகர்

    முதலில் மொழிபெயர்பு- கூடியவரை அளவாக கதைக்கு tempo தேவையகும்போது வேண்டிய ஏற்ற இரக்க பாவங்களுடன் அட்டகாசமாக மொழிபெயர்த்திருக்கிறார்யார் அது என ஒரு'குறிப்பை ஓரமாக print செய்திருக்கலாம். சிவப்புப் பக்கங்கள் கதையுடன் ஒன்றிசெல்ல உதவியது. மொழிபெயர்புக்கு 9/10 என்பது எனது பார்வை.

    கதை - சில மாதங்களாக "நேர்கோட்டுகதை" என்ற tagline print ஆகாத குறையாக ஆசிரியரின் விளக்ககுறிப்புடன் வெளியான கதைகளின் மத்தியில், இது மாற்றமாக பயங்கர pulse உள்ள கதை. கதை பல கதைகளின் எதார்த்த சங்கமம்ஆகா படைக்கப்பட்டிருகிறது. சுவாரசியமான கட்டத்தில் ஒரு கதைக்கு break கொடுத்து மற்றொரு கதைக்கு full steam இல் ரயிலை செலுத்துகிறார் moebius, அந்த வேகத்திலும் ஒரு தெளிவு, தண்டவாளம் மாறினாலும் வேகம் மாறவில்லை.

    டைகர், ஜெரோனிமோ, கேம்ப்பெல், ஏர்ப் brothers, க்ளான்டன் family மற்றும் ஸ்ட்ராபீல்டு என ஒருவண்டி மூலகதாபாத்திரங்களிடமிருந்து கதை அவர்களை சுற்றிவரும் டாம்மி, பில்லி, Mis யங்கர், ரிங்கோ மற்றும் டோரி என கிளை கதாபாத்திரங்கள்கையிற்கு shuttle ஆகா செல்கிறது. கதை ஒரு roller coaster rideஆகா சென்றாலும் நேர்த்தியாக புரியும்படி செல்கிறது. அனைத்து characterகளும் கதையில் எதாவது ஒரு impact ஏற்படுத்துகின்றனர். அந்த OK Corralளை கனத்த விசிலுடன் கடந்த போதும்கூட கதைவண்டி வேகம் குறையாமல், அமானுஷ்ய சைகோ வேட்டைஆகா உருமாறுவது அருமை. ஜெரோனிமோ கதை அக்மார்க் அதிரடி டைகரை மனம் நிறைய தந்தது கடைசியில் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லி மௌனராகமக ஒரு வெறுமையை விட்டு சென்றார் ஜெரோனிமோ. மொத்தத்தில் காத்திருந்த டைகர் ரசிகர்களுக்கு வன்மேற்கு காமிக்ஸ் பயணம்.

    சித்திரம் - Giraud சித்திர அதகளம் புரிந்திருக்கிறார், நமது பதிப்பில் வந்த புத்தகங்களில் என் பெயர் டைகர் என் பார்வையில் பல நுணுக்கமான வேலைபடான படைப்பு . இந்த page turner கதையை இத்தகைய சித்திர தரத்துடன் தருவது உச்சகட்ட teasing. பக்கத்தை வேகமாக புரட்டவும் முடியவில்லை புரட்டாமலும் இருக்கமுடியவில்லை. சித்திரம் ஒவ்வொன்றும் மேற்குலக கலாச்சாரத்தை கண்முன் காட்டுகிறது. உதாரணமாக பக்கம் 25இல் முதல் சித்திரம் Tombstoneஇன் ஒரு வீதியின் night view, wild westஐ உயிர்ப்புடன் மனகண்ணில் நிறுத்துகிறது, Giraud இந்த தொகுப்பை சித்திர செழுமையாக கொடுத்திருக்கிறார்.

    எனக்கு என் பெயர் டைகர் முழுதிருப்தி.... Apachesஇல் Giraud காட்டியிருக்கும் கைவண்ணத்தை பார்க்க ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. @ sathiskumar S

      கதையையும், ஓவியங்களையும் எத்தனை ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்பது ஈடுபாட்டுடன் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது!

      செம! செம! :)

      Delete
    2. அருமை...அருமை....சதீஷ்....

      Delete
    3. :)

      Thanks EV, History Doctor.......

      Delete