நண்பர்களே,
வணக்கம். "என் பெயர் டைகர்" ; முத்து மினி காமிக்ஸ் ; சென்னைப் புத்தக விழா...அப்புறம் தேசாந்திரம் என்று ஜாலியாய் நாட்கள் காணாது போயிருக்க - ஜூலை இதழ்களின் deadline-க்கு ரொம்பவே ஆபத்தான உரசலில் நிற்பதை இந்த வாரம் உணர்த்துகிறது !! So ஞாயிறு முதலே ரோஜரோடும் ; பிரின்ஸோடும் ; இடியாப்ப ஸ்பெஷலிஸ்ட் ஜானியோடும் மல்யுத்தம் ஆரம்பமாகி விட்டது ! தவிர இந்த வார இறுதியில் வேறொரு திக்கில் பயணமொன்று காத்திருப்பது போல் தோன்றுவதால் டாக்புல்லை பார்த்த ஆர்டின் போல் கை கால் உதறலோடு வேலைகளுக்குள் தலைபுதைத்துக் கிடக்கிறேன் ! So கடந்த பதிவின் முழுமையையும் படித்து விட்ட போதிலும், பதிலிட அவகாசமில்லை ! Sorry guys !!
அப்புறம் 400-ஐத் தொடக்க காத்திருக்கும் பின்னூட்ட எண்ணிக்கைக்குள் navigate செய்வது கேச எழிலுக்கு ஒத்தாசை செய்வதாய் தெரியக் காணோம் என்பதால் - இதோ பதிவின் பாகம் 2 என்ற ஏற்பாடு ! இனி வரும் நாட்களில் - ஞாயிறு & திங்களிலேயே பின்னூட்ட எண்ணிக்கை 300-ஐ தொட்டு விட்டால் - ஒரு உப பதிவை உபத்திரவ நிவாரணியாய் களமிறக்கிவிட எண்ணியுள்ளேன் !
சனியிரவு புதிய பதிவோடு சந்திக்கிறேன் folks !! Bye until then !
Original Fleetway Cover ; First look....still to be finetuned... |
"தவிர இந்த வார இறுதியில் வேறொரு திக்கில் பயணமொன்று காத்திருப்பது போல் தோன்றுவதால் "
ReplyDeleteOOH
மாயாவி அறுமை
ReplyDeleteஜூலை புக் லேட்டாகுமோ??
:)
ReplyDelete4 தூள்
ReplyDeleteBro நான் 2
DeleteSathish 1st😊
Deleteசாா் ஞாயிறு அன்று லைட்ட காமிக்ஸ் தேடலில் இறுந்தேன் அப்போது என் கண்ணில் பட்ட சில பிரன்கோ-பிள்ஜிய காமிக்ஸ் இதோ
ReplyDelete#bobo
#barelli
#alpha
#aldebaran
இதில் bobo,barelli காா்ட்டூன் வடிவக்திலும்
Alpha,aldebaranஆக்சன் போன்று தோற்றம் அளிகிறது
சார் அட்டகாசம் .தலைப்பின் எழுத்துரு டாப் டக்கர்
ReplyDeleteஞாயிறு அன்று அனைத்து அட்சைபடமும் பா்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
ReplyDeleteஅனைத்து அட்டையும் நன்றாக வறும்படி பாா்த்துகோள்ளவும் முக்கியமாக ரோஜா் மஞ்சள் நிழல் அட்டை சுமாா் தான் அதேபோல் கதையும் எனக்கு பிடித்த இரோவுக்கு இப்படி பட்ட நிலாமையா vrs வேண்டம்
First time with in 10
ReplyDelete@coolguy warm welcome to blog
Deleteடயபாலிக் அகிக் Sunday 19 th அன்று டயபாலிக் வேண்டுவோர் + 1 வேண்டாதோர் - 1 என்று ஓட்டெடுப்பை துவக்கிவிட்டு ஆளையே காணோமே! டயபாலிக் போல அடிக்கடி உருவத்தை மாற்றுவதுண்டோ?
Deleteசார் அட்டைபடம் தற்போதுதான் பார்த்தத போலிருக்கிறது . பின்னட்டை இதம் .மாயாவியின் இரும்புக்கரம் எனக்குத் தெரிந்த வரை முதன் முதலில் பாலிஸ் செய்து தலைப்பில் தகதகப்பது தூள் ...இரத்தப்படல அட்டய காணமே . சார் அடுத்த மாதம் உண்டா ?
ReplyDelete//.இரத்தப்படல அட்டய காணமே . சார் அடுத்த மாதம் உண்டா ?///---மறதி மன்னர் செப்டம்பர் மாதம் தான் வர்ரார் என்ற அறிவிப்பை பாரக்கலியா கிளா ???...
Deleteஅடுத்த மாதம் ஆண்டு மலர் ...
ஆகஸ்டில் ஈரோட்டில் இத்தாலி ...
இயற்கையான ஸ்லாட் செப்டம்பர் தானே XIII க்கு....
நண்பரே ஜூன் பதினான்கு அன்று ஒரிஜினல் வர இருந்ததால் , ஏற்கனவே ஜூனில் 4ம் தேதி வெளியிட இருந்த ஆசிரியர் ஜூலைக்கு தள்ளி வைத்தாரே . ஆனா செப்டம்பர் அறிவிப்பை நான் பார்க்கவில்லை போலும் .....😡
Deleteசான்றோர் நிறைந்த சபைக்கு சாமான்யனின் வணக்கங்கள்!!!
ReplyDeleteவிவேகம் நிறைந்தோர் சபைக்கு விவசாயின் வணக்கம்பா
Deleteஅறிவாளிகள் நிறைந்த சபைக்கு அடியேனின் வணக்கங்கள்.
Deleteபெரியவர்கள் அமர்ந்திருக்கும் இச்சபையில் இந்த சிறுவனின் வணக்கங்கள் ....
Delete(....க்கும் ...இப்படியே போய்டடு இருந்தா பதிவுக்கு முந்நூறு கமெண்ட் முதல் நாளே வந்து விடும் ..அப்பறமா ஆசரியர் தினம் ஒரு பதிவு தான் ....;-))
அந்த குழந்தையே நீங்க தானா பரணி.
Deleteயாருப்பா அந்த சான்றோர்?
Deleteஅந்த குழந்தையே நீங்க தானா பரணி.
Delete//யாருப்பா அந்த சான்றோர்? ///
Deleteஎன்ன இப்புடி கேட்டுப்புட்டீங்க ரவி அவர்களே? புஸிகேட்டின் புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராகப் போட்டுக்கொண்டு இங்கேயே சுற்றிச்சுற்றி வரும் யாராவது ஒருவராக இருக்கலாமில்லையா? ஹிஹி!
அறிவாளிகள் நிறைந்த சபைக்கு அடியேனின் வணக்கங்கள்.
Deleteஅய்யய்யோ அறிவாளிகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோமே ?!
Deleteங்ஙே!!!
Deleteஏஞ்சாமிகளா இப்புடி கொலைவெறி புடிச்சி அலையுறிங்க!!!
பூனையாரே புரியுது,புரியுது.
DeleteHmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm :D
Deleteபோதும் வேண்டாம் விட்டுடுங்க வலிக்கிது. அப்புறம் அழுதிடுவேன்.
DeleteGood Eve :)
ReplyDeleteஇமயத்தில் மாயாவி-யின் பின்னட்டையை கறுப்பு வெள்ளையில் தவிக்க விடாமல் வர்ணமயமாக்கியிருக்கலாமே, சார்?
ReplyDeleteஜூலை இதழுக்கு ஆவலுடன்
ReplyDeleteமிக மிக ஆவலுடன்.
Deleteரொம்ப ஆவலுடன் ஏனென்றால் ஜீலை மாதம் என் பிறந்தநாள் அந்த மாதம் வரும் புத்தகங்கள் ஆசிரியர் எனக்கு அனுப்பிய விலை மதிப்பில்லா அன்பளிப்பாக எனக்கு தோன்றும் இதே போல்தான் ஒரு ஜீலையில் இரத்தப் படலம் கலெக்டர் ஸ்பெஷல் வெளியிட்டார் என நினைக்கிறேன்
Deleteஆசிரியரே ஜீலை மாதம் புத்தகங்களுடன் டீசர்ட் அனுப்புவீர்களா அனுப்பினால் என் பிறந்த நாளன்று அனிந்து மகிழ்வேன் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா
Deleteவாரம் இரு பதிவுகள் மிகவும் வரவேற்கத்தக்கது நன்றிகள் ஆசிரியரே
Deleteசெய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?♡♡♡♡♡♡
Deleteஎடிட்டர் மற்றும் தோழர்களுக்கு மாலை வணக்கம்.
ReplyDeleteஇமயத்தில் மாயாவி அட்டைப்படம் சூப்பர் சார். வாரம் இரண்டு பதிவு!! சூப்பர். இரண்டு மூன்றாகி அப்புறம் தினம் ஒரு பதிவு!!! அந்த நாள் விரைவில் வரவேண்டும் சார்!! பக்கம் பக்கமாக எழுத வேண்டாம். ஒரு நான்கு வரிகூட போதும் சார்.
ReplyDeleteதினம் ஒரு பதிவு போட்டால் அப்புறம் புத்தகங்கள் மெதுவாத்தான் கிடைக்கும் பரவாயில்லையா?
Deleteநமது ஆசிரியருக்கு இன்னொரு பெயர் இருக்கு! ( இந்த வார்த்தையை G.V. பிரகாஷ் போல தலையை ஒரு பக்கம் வலிப்பு வந்தவரை போல் இழுத்து இழுத்து படிக்கவும்) சினிமா டைட்டில் போல!! அந்த பெயர் வாயு வேக விஜயன். வாயு வேகத்தில் வேலை பார்த்து புத்தகங்களை ரெடி பண்ணிவிடுவார். ஆனால் இந்த கூரியர் காரங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கு! அது குளறுபடி கூரியர். அவர்கள்தான் பண்ணும் சேட்டைகளால்தான் புத்தகம் லேட்டாகி விடுகிறது.
Deleteமாலை வணக்கம்
ReplyDeleteஇமயத்தில் மாயாவி யின் அட்டைபடம் கலக்கல் ..ஒரிஜினல் அட்டையே இம்முறை களம் காண்பதில் மகிழ்ச்சி சார் ..;-)
ReplyDeleteஅதே அதே.
Delete'இமயத்தில் மாயாவி' - டைட்டிலுக்கு மேலே டாலடிக்கும் அந்த கலர்ஃபுல் இரும்புக்கை ரொம்பவே இம்ப்ரஸ் செய்கிறது! ( மொத்த அட்டைப் படத்திலும் இதையே பெரிதாகக் காட்டியிருந்தாலும் செமயாக இருந்திருக்கும்)
ReplyDeleteஇரும்புக்கையை மாட்டிக்கிட்டு யாரோ ஒருத்தர் மாயாவியின் முகத்தில் குத்துவிடுறாப்ல இருக்கே... ;)
அதுக்கு பேர்தான் கும்மாங்குத்தோ?
Deleteவாரம் இரண்டு பதிவா ஆஹா இன்ப அதிர்ச்சி.
ReplyDeleteஎடிட்டர் மற்றும் தோழர்களுக்கு மாலை வணக்கம்.
ReplyDeleteஅடடே அதுக்குள்ளே இன்னொரு பதிவா?
ReplyDelete39வது
ReplyDeleteஅட்டை படம் நன்றாக உள்ளது ஸார். வாழ்த்துக்கள் . உப பதிவு என்றாலும் வாரம் இரண்டு பதிவுகள். கரும்பு தின்ன கசக்குமா என்ன. சூப்பர்.
ReplyDeleteஇமயத்தில் மாயாவி பின்னட்டையில டைகர் எதுக்கு நிக்கிறாரு????
ReplyDeleteகெஸ்ட் ரோல் பண்ணியிருப்பாரோ??!!!
கண்ணன் ஹா,,ஹா செம.
Deleteஜூலை எப்போதும் ஏங்க வைக்கும் மாதம் .ஆண்டு மலர் எப்போதும் ஏதாவது ஆச்சரியத்தை அளிக்க தவறியதில்லை..இம்முறை என்ன??என்ன ??என்ன???..
ReplyDeleteஆவலுடன் அனைவரும்.
Deleteஅனைவருக்கும் அவலா.....??
Deleteஅவலரசு அவர்களே..!!
Hi....!
ReplyDelete🌼 🌺 🍁 🌹 🌾 🌿
Nice cover
ReplyDeleteமாயாவியை மாயாவியே குத்துவிடுவதுபோல் ஒரே மாதிரியான முகத்தோற்றம்
ReplyDeleteஅருமை எடி சார்
Test
ReplyDeleteஎன் பெயர் டைகர் சூப்பருக்கும் கீழே சுமாருக்கும் மேலே மொக்கை என்று சில நண்பர்கள் பயமுறுத்திய்து போல் இல்லாமல் முதல் வாசிப்பில் நன்றாகவே இருந்தது ஆணால் அடுத்த முறை படிக்கும் ஆவலை தூண்டவில்லை
ReplyDeleteஎப்படியோ டைகர் இந்த தடவை பாஸ் மார்க்கை தாண்டி வந்துடுவார் போல?!
Deleteஎப்படியோ டைகர் இந்த தடவை பாஸ் மார்க்கை தாண்டி வந்துடுவார் போல?!
Deleteஇமயத்தில் மாயாவி யின் அட்டைபடம் கலக்கல் ..ஒரிஜினல் அட்டையே இம்முறை களம் காண்பதில் மகிழ்ச்சி சார் ..;-)
ReplyDeleteஇமயத்தில் மாயாவி நான் இதுவரை படித்து இல்லை! ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்!!
ReplyDelete😊
Deleteபரணி சார் ₹50 செலவில் இமயத்துக்கே உங்களை கலக்கலான சித்திரங்களுடன் அழைத்து செல்லவிருக்கும் கதை. எச்சரிக்கை!! படிக்கும் போது கம்பளி கோட்டுடனும் (குளிரால் நடுங்காமல் இருக்க) அடிக்கடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டும் படியுங்கள். திடீரென பனிமலையில் வாழும் மனிதர்கள் உங்கள் மீது பாய்ந்து விடப்போகிறார்கள்.
ReplyDeleteI am waiting :-)
Deleteமாலை வணக்கம்
ReplyDeleteமாலை வணக்கம்
ReplyDeleteமுன் அட்டை கலக்கல். பின் அட்டையில் "மே 1967 இங்கிலாந்தில் (வெளியான / வெளிவந்த ) The Forbidden territory" என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteஆங்! அதே!
Deleteஎதே?!
Deleteமகிழ்ச்சி
ReplyDeleteஇமயத்தில் மாயாவி படிக்காத கதை so warm welcome Steel Claw!
ReplyDeleteமுன் எச்சரிக்கை ....
ReplyDeleteஇது பழைய பழைய இதழை படித்த பொழுது அப்போது தெரிவிக்க முடியாத கருத்தை இப்போது தெரிவிக்கும் கருத்து ..எனவே வைய வேண்டாம் என வேண்டி கொண்டு
சென்ற நாட்களில் சிறுது ஓய்வு கிடைக்கும் நேரங்களில் இனி தொலைகாட்சி ..கைபேசியை அனைத்து விட்டு கைவசமுள்ள பழைய காமிக்ஸ் இதழ்களை படிக்கலாம் என முடிவெடுத்ததால் பழைய இதழ்களை படிக்க இதழ்களை புரட்டினேன் ...எப்பொழுதும் போல முதலில் சிக்கியவர் டெக்ஸ் வில்லர் தான் ....இதழ் மரண முள் ....இந்த இதழ் வெளிவந்த சமயம் டெக்ஸின் அதிரடி முத்திரைகள் எதுவும் காணாமல் சுமாரான இதழாக தோன்றிய கதை இது ...எனவே இந்த இதழையை மறுவாசிப்புக்கு தேர்ந்தெடுத்தேன் ...மிகவும் ரசிக்க வைத்தது ...இம்மாத பழிவாங்கும் புயல் போலவே எதிரிகளை துப்பாக்கியால் சந்திக்கும் வழமையான டெக்ஸ் காணாது போலவே இந்த இதழிலும் ....அருமையாக இருந்தது ...
அடுத்த நாள் அடுத்து கைக்கு சிக்கியவர் இளவரசியார் ....ஆவியின் பாதையில் மூலம் ..உண்மையில் மாடஸ்தி வில்லி இருவரையும் விரும்பாதவர்கள் இப்பொழுது இந்த கதையை படித்தால் ரசிக்க ஆரம்பித்து விடுவர் ...மாடஸ்தி ..கெளபாய் களத்தில் என்பதே வித்தியாச படுத்தி விடுகிறதே ...அன்னி எனபவர் இவர்களையும் காப்பாற்ற தன்னால் சமாளிக்க முடியாது நீங்கள் செல்லலாம் எனும் பொழுது மாடஸ்தியும் ..வில்லியும் தங்கள் திறமையை காட்டும் செயல் திறனை பார்த்து வியப்பது அன்னி மட்டுமல்ல படிப்பவரும் தான் ...அதே போல இளவரசி அலைபேசியில் அழைத்தவுடன் அன்றே அவளை காண வரும் கோடீஸ்வர நண்பர் ....என்னால் உங்களை போல சாகஸம் செய்ய முடியாதப்பா என குன்றின் மேல் இருந்து குரல் இடுவது ....கடைசியில் அன்னி வில்லியை அப்பாவை போல என சொல்லி கலங்கடித்ததை நினைத்து வெறுப்பது ...எதிரிகளை சமாளிக்கும் சமயத்திலேயே வழக்கம் போல உரையாற்றி கொண்டு இருப்பது என கலக்கி எடுக்கிறார்கள் ..மாடஸ்தி கதையில் ஷெரிப் வருவது இதில் மட்டுமே ;-)...மாடஸ்தியை விரும்பாத நண்பர்களே ஒரு முறை இந்த கதையை வாசித்து பாருங்களேன் ...;-)
Deleteதோழரே பழைய இதழ்கள் அனைத்தையும் ஒரே நாளில் இழந்த எனக்கு இது போன்ற பதிவுகள்தான் அந்த இனிய நினைவுகளை திரும்ப கொண்டு வருகிறது. இப்படி நேரம் கிடைக்கையில் பழைய கதைகளை பற்றிய பதிவுகள் தந்தால் நன்றாக இருக்கும்.நன்றிநன்றி மரணமுள் மற்றும் ஆவியின் பாதையில் பற்றிய பதிவுக்கு.
@ ATR
Deleteஇந்த மாதம் மட்டும் பனிரெண்டு புத்தங்கள் வந்துள்ளன.நிறைய உள்-வெளி விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் நீங்கள்... வெளிவந்துள்ள பனிரெண்டு காமிக்ஸில் ஒன்றையேனும் படித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து நம்மை அசத்தலாமே..!
தலீவரே,
Delete'ஆவியின் பாதையில்' - என்னிடம் இல்லை! யாராச்சும் கேப்ஷன் போட்டி கீட்டி வச்சாகன்னா பங்கேற்கத் தயாராக இருக்கிறேன்! ;)
ஏடிஆர் சார் கண்டிப்பாக ....காரணம் பழைய நாட்களை போல இனி தினம் ஒரு காமிக்ஸ் படிப்பதாக சபதம் ஏற்றுள்ளேன் ....
Deleteஆனால் பதிவிடுவது ஆசிரியர் பதிவிற்கு சில நாட்கள் கழித்து ப்ளாக் அமைதியாக இருக்கும் சமயத்தில் மட்டும் பதிவிடுகிறேன் ..இல்லையெனில் பதிவு திசை மாறி சென்று விடும் ...;-)
செயலாளர் அவர்களே ..இதற்கு தான் சேந்தம்பட்டி வாட்ஸ்அப் பில் சேர வேண்டுவது ....நீங்கள் தான் வாட்ஸ்அப் என்றால் அலர்ஜி என்று தள்ளியே நிற்கிறீர்கள் ..முதல் போல வாரம் ஒரு காமிக்ஸ் பரிசு என போட்டி வைக்கா விட்டாலும் இரு மாதத்திற்கு ஒரு காமிக்ஸ் பரிசு போட்டி நடந்தேறுகிறது ...நீங்கள் வந்தால் அந்த இதழையே பரிசு போட்டிக்கு தயாராக வைக்கலாம் ..;-)
Deleteதிரு.மாயாவி சிவா புத்தகங்களை வாங்கி வைத்த நான் உண்மையை சொல்லவேண்டுமானால் இன்னும் எதையும் முழுவதுமாய் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. சில காரணங்களுக்காக அலைந்து கொண்டு இருப்பதால் புத்தகங்களில் கவனம் செலுத்த இயலவில்லை.நேரம் கிடைக்கையில் புரட்டி பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சாதாரண வார மாத இதழ்களாக இருந்தால் கையேந்தி பவனில் உணவருந்துவதை போல் செய்துவிடலாம். நம்முடையது அப்படியில்லையே. நிறுத்தி நிதானமாக அனுபவித்து கதை மாந்தர்களுடன் நாமும் வாழ்ந்த அனுபவத்தை பெறவேண்டுமல்லவா? போகிற போக்கில் படிப்பது நமது காமிக்ஸூக்கு செய்யும் துரோகமாக எனக்கு தெரிவதால் அந்த காலத்திலிருந்து அதற்கென நேரம் ஒதுக்குவதை கடமையாகவே கொண்டுள்ளேன்.இப்போது அதற்கான நேரம் கிடைக்கவில்லை.கையில் tab இருப்பதால் நமது blog பக்கம் அடிக்கடி எட்டி பார்த்துக் கொண்டு உள்ளேன்.அதனால் உங்களது கோரிக்கையை உடனே நிறைவேற்ற இயலவில்லை. மன்னிக்கவும்.
Deleteபதுங்கு குழி பரணி அவர்கள்
Delete'ஆவின் பாலில்' எதையோ சாப்டுட்டு என்னமோ சொல்றாரு.....
///மாடஸ்தியை விரும்பாத நண்பர்களே ஒரு முறை இந்த கதையை வாசித்து பாருங்களேன் ...;-)///
Deleteஅதெல்லாம் படிச்சாச்சி தலீவரே!
ஆவியன் பாதையில் மட்டுமல்ல பூமிக்கொரு ப்ளாக்மெயில் கூட படிச்சிருக்கோம். அம்புட்டு எதுக்கு இரத்தச் சிலையே படிச்சிருக்கோம்.
ஆனாலும் மாடஸ்டி கதைக்கு பாராட்டு தெரிவிக்க மாட்டோம். (வேண்ணா மாடஸ்டிக்கு மட்டும்) :-)
மாலை வணக்கங்கள்..!
ReplyDeleteஒரு பயணம்,ஒரு விழா,ஒரு மீட்டிங் என வரும்போது அதை முன்நின்று அரவணைத்து செல்வது மட்டுமல்ல...கைப்பணம் போட்டு செலவு செய்து உணவு,தங்கல்,போக்குவரத்து என சகலசெலவுகளையும் செய்து நண்பர்களிடம் கணக்கு சொல்லி அருமையாக வரவுசெலவு செய்ய ஒரு அன்பான பொருளாலர் வேண்டும்..!
அப்படி ஒரு பொறுப்பை நம் காமிக்ஸ்குடும்பத்தில் முன்நின்று செய்துவரும் அருமை நண்பர் 'அமுல் பேபி' என செல்லமாக அழைக்கப்படும் 'சுசிந்தர் குமார்' அவர்களால் தான் இந்த சேந்தபட்டி குழு என பொறாமையுடன் அழைக்கப்படும் நண்பர்கள் வட்டம்... ஒரு குடும்பமாக சேர்ந்திருப்பது போல வெளிபார்வைக்கு தெரிகிறதுன்னு சொன்னா அது மிகை கிடையாது..!
நண்பர் சுசிந்தருக்கு இங்கு நன்றிகள் சொல்வதுடன் அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால்..அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் சொல்லிகொள்கிறேன்..! இங்கே'கிளிக்'
[ கா.தீ.அ.ஆ.கூட்டம் -14 ]
உற்சாகத்தின் உரைவிடமாம், நேசத்தின் பிறப்பிடமாம் அன்பு நண்பர் சுசீ அவர்களுக்கு இனிய பி.நா வாழ்த்துகள்!!
Delete( நன்றி : மாயாவி)
அமுல் பேபி சுசீ @
Deleteஆப்பீ பர்த்து டே டூ யூ!
ஆப்பீ பர்த்து டே டே டூ யூ!!
ஆப்பீ பர்த்து டே டே டே டூ யூ!!!
குருநாயரே! உமது பாட்டில் (வாழ்த்தில் ) பிழையிருக்கிறது!
Delete///உற்சாகத்தின் உரைவிடமாம்.///
உற்சாகத்தின் உறைவிடமாம் என்று இருக்க வேண்டும்.!
இப்படிக்கு
இங்க்லீஷ்க்காரன்.! :-)
ஊஊஊஊ! நன்றி கிட்ஆர்ட்டின் அவர்களே!
Deleteசமீப காலமாய் நம்ம ஸ்டீல்க்ளா, மாயாவி ஆகியோரின் கமெண்ட்டுகளை அதிகம் படிப்பதால் வந்த வீணை! ;)
@ இanத்தாலியரே
Deleteநான் வார்த்தைகளுக்கு மத்தியில் எங்கோ ஒரு பிழை செய்பவன்...ஆனாக்க...ஸ்டீல்..பிழைகளுக்கு மத்தியில் கொஞ்சம் எழுதறவர்..! அவருக்குன்னு தனி மொழிபெயர்ப்பாளரை எடி வெச்சிருகிறதா ஒரு சேதியும் இருக்கு...அவரு எங்கே..? நான் எங்கே..? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
மாயாவிஜி,ஈ.விஐய்ஜி மற்றும் மேச்சேரி கிட் மாம்ஸ் அவர்களுக்கும் நன்றிகள்/\/\/\
Deleteமாயாவிஜி,ஈ.விஐய்ஜி மற்றும் மேச்சேரி கிட் மாம்ஸ் அவர்களுக்கும் நன்றிகள்/\/\/\
Deleteசங்கத்தின் புதிய பொருளாளர் செனா அனா அவர்களின் நிதி-நிர்வாகத் திறமையை நாம் இதுவரை கண்டதில்லை! அவ்வளவு ஏன்... அவரையே இதுவரை யாரும் கண்டதில்லை! :P
Deleteநிலைமை இவ்வாறிருக்க, CBF பயணத்துக்கான பொருளாளர் பதவியை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டதோடு, அதை திறம்பட செய்துமுடித்த சேலம் சுசீ அவர்களுக்கு நன்றி நிறைந்த வாழ்த்துகளை மாயாவியோடு இணைந்து நானும் இங்கே சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! __/\__
///@ இanத்தாலியரே
Deleteநான் வார்த்தைகளுக்கு மத்தியில் எங்கோ ஒரு பிழை செய்பவன்...////
க்ம்கும்!
@ இத்தாலி விஜய்
Deleteநீங்க //இanத்தாலியரே// இதுக்கு என்ன கமெண்ட் போடுவிங்கன்னு ஒரு கெஸ் வெச்சிருந்தேன்... ஆனா நீங்க அந்த சான்ஸை தவறவிட்டுட்டிங்க, அதை கரெக்டா போட்டிருந்தா...எடிட்டர்...'கொள்' சிரிச்சிட்டே கோதாவுல இறங்கியிருப்பார்...வட போச்சே...உஸ்ஸ்ஸ்...!
///
Deleteநீங்க //இanத்தாலியரே// இதுக்கு என்ன கமெண்ட் போடுவிங்கன்னு ஒரு கெஸ் வெச்சிருந்தேன்... ஆனா நீங்க அந்த சான்ஸை தவறவிட்டுட்டிங்க///
முன்னே மாதிரி இப்பல்லாம் மண்டை வேலை செய்யறதில்லை மாயாவி அவர்களே! டைகர் கதைகளைப் படிச்சதால் வந்த வினைனு நினைக்கிறேன்...!
நீங்களே சொல்லிடுங்களேன்... எடிட்டர் ஏன் அப்படி "கொள்" சிரிச்சு கோதாவுல இறங்கணும்?!!
@இத்தாலியாரே
Deleteஐய்ய்ய்..அஸ்குபுஸ்கு...நான் மாட்டேன்..ஹீ..ஹீ..!
இட்லிகாரரே அதிகம் படித்தால் வீணை வருமோ
Delete"இ" க்கு பதிலா,"ஆ"போட்டுக்க சொல்றிங்களா மாயாவி ஜி?
Deleteசுந்தர் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...நண்பர்களே பிழையாய் பார்ப்பவர்களுக்கு மத்தியில் எழுதுவதால் பிழையாய் தெரிவதால் பிழையில்லாமல் இனி எழுதுவேன் என தன்னைத் தேடும் தலைவன் மேல் அ...சத்தியம் செய்கிறேன் .
Deleteதிரு.சுசிந்தர் குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநன்றி ATR சார்/\/\
Deleteஅருமை நண்பர் சுசி & பேபி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுரட்டு உடம்பு காரர்....
ReplyDeleteகுழந்தை மனது காரர் ....
முதல் பார்வையிலேயே சொந்தம் ஆகும் சொந்த காரர் ...
திரு சுசீந்தர் அவர்களுக்கு போராட்ட குழுவின் சார்பாக
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
@திரு சுசீந்தர்
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரரே :)
நன்றி சகோ!!!!/\/\
Deleteநன்றி போ.கு தலைவர் அவர்களே!!!!
ReplyDeleteநன்றி போ.கு தலைவர் அவர்களே!!!!
ReplyDeleteநண்பர் சுசீ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி திருச்செல்வம் அவர்களே!!!/\/\
ReplyDelete? ? ? ? ? ? ? ? ? ? ? :- (ஒரு க்ளாசிக் கதை)
ReplyDeleteஅன்று :
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பெரும்வீரன் (மாவீரன்னா வேறு அரசர் நினைவுக்கு வருவதால்) போர்களில் பல வெற்றி பெற்றிருந்தாலும், அந்த குறிப்பிட்ட நாட்டுடன் நடந்த போரில் தோல்வியுற்று பின்வாங்குகிறான். அப்படி பின் வாங்குகையில் அங்கே கொள்ளையிட்ட (வேறு வார்த்தை கிடைக்கவில்லை) செல்வத்தை அங்கேயே ஒளித்து வைத்துவிட்டு வந்துவிடுகிறான்.
இன்று :
அந்த புதையல் பற்றிய ரகசியமும், அது இருக்கக்கூடிய இடமும் ஒரேயொரு நபருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது.
புதையலை எடுக்க வேண்டுமெனில் அந்த நாட்டிற்கு சென்று அவர்களின் கண்களை மண்ணைத்தூவி எடுத்து வர வேண்டும் என்ற நிலை.
அந்த நபருக்கு மட்டுமே புதையல் ரகசியம் தெரியும் என்பது, புதையல் இருக்கும் நாட்டு அரசாங்கத்திற்கும் தெரியும்.
அந்த நபர், அந்த போரைப் பற்றி சினிமா எடுக்க வேண்டும். உங்கள் நாட்டிற்குள் வர அனுமதி வேண்டுமென விசா கேட்கிறார்.
புதையலை எடுக்கவே அந்த நபர் வருகிறார் என்பது அந்நாட்டு அரசுக்கு நன்றாகவே தெரியுமாதலால், அவரை கண்காணித்து, புதையலை எடுத்ததும் பறித்துக்கொள்ள ஒரு பெரிய அரசுப் படையே காத்திருக்கிறது.
அந்த நபரை கூடவே இருந்து கண்காணித்து, நடவடிக்கைகளை அவ்வபோது தெரிவித்து புதையலை பறிக்கும் பொருட்டு, அவருக்கு உதவியாளர் என்ற போர்வையில் ஒரு பெண்ணையும் நியமிக்கிறது.
அந்நாட்டு அரசுக்கு தாம் புதையல் எடுக்கத்தான் வருகிறோம் என்று தெரியும் என்பதும் தாம் மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுவோம் என்பதும் அந்த நபருக்கு தெரியும்.
இருந்தும் சவாலாக எடுத்துக்கொண்டு ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பர் இருவரை மட்டுமே உடன் அழைத்துச் சென்று ஒரு பெரிய நாட்டுக்கே அல்வா கொடுத்துவிட்டு (ஓரளவு லாஜிக்குடன்) புதையலுடன் வெற்றிகரமாக திரும்புகிறார் அந்த நபர்.!!!
இந்த கதையின் பெயர், ஹீரோ, பெரும்வீரர், அந்த நாடு, அந்த போர், அந்தப் பெண் உளவாளி புதையலை அள்ளிக் கொண்டு வரும் முறை ஆகியவற்றை கண்டறியும் பொறுப்பை நண்பர்களிடமே விட்டுவிடுகிறேன்.!!!
விங் கமாண்டர் ஜார்ஜ் கலக்கிய " நெப்போலியன் பொக்கிஷம்" தானே தோழரே அந்தக்கதை. முத்து காமிக்ஸ் பெரிய சைஸிலிருந்து சிறிய சைஸூக்கு மாறிய பின்னர் வந்த கதை அல்லவா? இதே போல்"ஒற்றன் வெள்ளை நரி" கூட ஜார்ஜ் இடம் பெற்ற சூப்பரான கதையல்லவா?
ReplyDeleteஅதேதான் தோழர் AT R அவர்களே!
Delete👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ ATR
Deleteஉங்களுக்கு அபாரமான நியாபகசக்தி..ஸுப்பர்..!
மீதியை நான் தொடர்கிறேன்...
அந்த படத்தயாரிப்பாளர் பெயர்-டான்ஸா
அந்த உளவாளி பெண்-நீனா
இந்த ஸாகசம் நடக்கும் நாடு-ரஷ்யா
பொக்கிஷம் கொண்டு வரும் வழி-விமானத்தின் இறக்கையில் ஒரு ரகசிய அறை
ATR ஒரு சின்ன தகவல் இந்த 'நெப்போலியன் பொக்கிஷம்' பக்கெட் சைஸ்தான்..ஆரம்பத்தில் வந்த பாக்கெட் சைஸில் இந்த புக்தான் கொஞ்சம் சின்னதாக வந்த ஒரே புக்.!உங்கள் நினைவை கிளற கிளிக் தேவை எனில் போட்டுவிடலாம்..!
///'நெப்போலியன் பொக்கிஷம்' பக்கெட் சைஸ்தான்..///
Deleteரொம்ப சின்ன்ன்ன பொக்கிஷம் போலிருக்கே... :D
@ இத்தாலி விஜய்
Deleteநெப்போலியன் உயரத்துக்கு அது பெரிசு...ஹாஹாஹா...!
This comment has been removed by the author.
Delete///'நெப்போலியன் பொக்கிஷம்' பக்கெட் சைஸ்தான்..///
Deleteரொம்ப சின்ன்ன்ன பொக்கிஷம் போலிருக்கே... :D///
குருநாயரே!! ஹாஹாஹாஹா!!
மாயாவியை கலாய்க்க நாம் சிரமப்பட்டு யோசிக்க வேண்டிய தேவையே இல்லை. அவராகவே எடுத்துக்கொடுப்பார். ஹாஹாஹா!!!
மாயாத்மா,
விமானத்தின் இறக்கையில் இருக்கும் ரிசர்வ் பெட்ரோல் டேங்க் (ரகசிய அறை) .
ஜார்ஜ் நண்பரின் பெயர் ஸ்நாப் ஹண்டர்.
புதையலை எடுக்கும் முறையும் கைப்பற்றும் முறையும் செம்ம த்ரில்லிங்கானவை .!!!
111th
ReplyDeleteநண்பர்களுக்கு_ஒரு_வருத்தமான_செய்தி
ReplyDelete# சங்கி_ஓம்_இறப்பு.....
கடந்த சிலமாதங்களுக்கு முன் தன் தாய்
இறந்ததிலிருந்து தனிமையாகவே இருந்த
நமது காமிக்ஸ் நண்பர் திரு. Sangi Om இன்று
அதிகாலை 4 மணியளவில் அவர் வீடு அருகில்
உள்ள ரயில்வே ட்ராக்கில் நண்பருடன்
பேசிக்கொண்டு சென்றவர் திடீரென ரயில்
முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
அவரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை
பிரார்திக்கின்றேன்....
என்னுடை ஆள்நரத வறுத்தங்கள் ஏன் கடவுளே
Deleteதோழர் திரு.SangiSangi Om அவரது மரணத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteசெய்தி கேட்டு மனம் பதைக்கிறது. இப்படியொரு முடிவுக்கு அவர் வர, எவ்வளவு மனப்பாரம் இருந்திருக்கவேண்டும்..... ? ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். :-(
Deleteஅதிர்ச்சியளிக்கும் தகவல்! :( :( :( :(
Deleteநண்பரின் ஆன்மா அமைதி பெறட்டும் :( :( :( :(
ஆழ்ந்த வருத்தங்கள்.
DeleteRip :(
Deleteஅதிர்ச்சியான செய்தி, வருத்தத்தை தருகிறது :(
Deleteசகோதரரின் ஆன்மாவிற்கு அமைதி கிடைக்க வேண்டி கொள்கிறேன்
ஐயோ....கடவுளே....!!!!
Deleteவேதனை அளிக்கும் துக்கச்செய்தி...
Deleteதாயின் மறைவும் தாங்க இயலா துயரமும் அவரை இப்படி தற்கொலை செய்ய தூண்டியது போலும். அதிர்ச்சியான மரணம்.
நம் நண்பர்கள் எல்லாரும் திட சித்தம் உள்ளவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்.
வேதனை அளிக்கும் துக்கச்செய்தி...
Deleteதாயின் மறைவும் தாங்க இயலா துயரமும் அவரை இப்படி தற்கொலை செய்ய தூண்டியது போலும். அதிர்ச்சியான மரணம்.
நம் நண்பர்கள் எல்லாரும் திட சித்தம் உள்ளவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்.
தோழர் மரணத்திற்கு நம் அனைத்து தோழர்களும் அவரவர் இருக்குமிடத்திலிருந்து ஒரு ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.
ReplyDeleteநண்பர் shangi om திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. நண்பரின் ஆன்மா சாந்தி அடைவதாக. RIP 😞😞😞
ReplyDeleteRest in peace .
ReplyDeleteகாமிக்ஸ் அன்பர் sangi mangi om மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
ReplyDelete@ ALL : நண்பர்களே, வேதாளங்கள் உலாவும் வேளையில் தான் புதுப் பதிவு தயாராகும் என்பதால் - சீக்கிரமாய்க் காலையில் எழுந்து படியுங்களேன் ?
ReplyDeleteஹாவ்வ்வ்....நான் அப்படியெல்லாம் உலாவதில்லையே...ஹாவ்வ்வ்...(கொட்டாவி)...குட்நைட்.!
Deleteநண்பர் ஓம் சங்கரின் பிரிவு அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய பெரும்பாலான டெக்ஸ் சேகரிப்பு அவர் மூலமாகவே நிறைவேறியது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்
ReplyDeleteஎடி சார் உங்க பதிவு வரும்வரை வேதாளங்களோடு
ReplyDeleteபேசி டைம்பாஸ் பண்ணிக்கிட்டிருக்கோம் சார்
முகமறியாதவர் எனினும் காமிக் அன்பர் என்ற அளவில் திரு.சங்கிஓம் அவர்களின் அகால மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteஎன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
😢
Deleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!!
ReplyDelete