Powered By Blogger

Sunday, May 15, 2016

நித்தமும் ஒரு பாடம் !

நண்பர்களே,

வணக்கம். ஜூன் மாதச் சென்னைப் புத்தக விழாவினில் நமக்கு இடம் கிடைக்குமோ - கிடைக்காதோ ; இங்கே ஒரு மாட்டுவண்டிப் பொதிப் பிரதிகள் தயாராகி வருகின்றன ! "தங்கத் தலைவனின்" வண்ண ஸ்பெஷல் சும்மா தக தகக்க அச்சாகி விட்டது - கடைசிப் 16 பக்கங்கள் நீங்கலாக ! அந்தக் குறைபடிப் பக்கங்களினில் குவிந்துவரும் உங்கள் "கௌபாய் காதல் காரணங்கள் " பற்றிய  ஆக்கங்களை நுழைப்பிக்கும் பணிகள் நடந்தேறி வருகின்றன! So அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் நிறைவேறி விட்டால் -  பைண்டிங் பணிகள் தான் பாக்கி !  மறு பக்கமோ - black & white பதிப்பின் பணிகள் - நமது ஜனநாயகக் கடமைகள் பூர்த்தியான மறுதினம் அச்சு செல்லக் காத்துள்ளன !And முதன்முறையாக - black  + white  (!!) + grey tones என்ற கலவையினில் இதனை நீங்கள் ரசித்திடப் போகிறீர்கள் ! 

இத்தனை காலமாய் நாம் கருப்பு-வெள்ளையில் வெளியிட்டு வந்த இதழ்கள் எல்லாவற்றின் ஒரிஜினல் வார்ப்புகளும் வண்ணமே எனினும், அவற்றை ஒற்றைக் கலரில் நாம் தயார் செய்த பொழுது பெரியதொரு வேறுபாடு தோன்றிடவில்லை தான் ; ஆனால் முதல்முறையாக "என் பெயர் டைகர்' இதழின் கருப்பு நிற டிஜிட்டல் பைல்களை மாத்திரம் அச்சுக்குக் கொணர்ந்து பார்த்த பொழுது - செம மொக்கையாய்த் தோன்றியது !! வர்ணச் சேர்க்கைகளுக்குத் தோதுவாய், இக்கதையினில்  backgrounds சகலமும் வெள்ளையாய் உருவாக்கப்பட்டிருப்பதால் - contrast எதுவுமே கண்ணில் தட்டுப்படவில்லை ! குச்சுக் குச்சியாய் கதை மாந்தர்கள் அத்தனை பேரும் வெள்ளைச் சட்டைகளை மாட்டிக் கொண்டு, வெள்ளை வெளேர் குதிரைகளில் தொற்றிக் கொண்டு - உஜ்ஜாலா வெண்மை  வீதிகளில் உலாற்றிக் கொண்டு, பளிச்சிடும் வெண்மை வில்லன்களோடு மோதுவதைப் போல தோன்றியது கொஞ்சமும் சுகப்படவில்லை !! கதையின் பல பகுதிகள் இரவில் ; இருளில் நடக்கும் விதமாய் அமைக்கப்பட்டிருந்தாலும் - black & white -ல் பார்க்கும் போது - சுட்டெரிக்கும் பகல் வெயிலின் clear skies -ன் கீழே நடப்பது போல் காட்சி தந்தது ! அப்புறம் photoshop சகாயத்தோடு பக்கங்கள் அனைத்தையும் grey scale -ல் தயார் செய்து பார்வையிட்ட பொழுது இது கூட ஒரு வித்தியாசமான பாணியில் இருப்பதாய் தோன்றியது ! நேற்றிரவு நான் வழக்கமாய்ப் பதிவு எழுதும் வேளைதனில் இந்த grey scale பாணியின் அச்சு வெள்ளோட்டத்தை நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதாலேயே இந்தப் பதிவு அதிகாலைத் தயாரிப்புக்கென ஒத்தி வைக்க வேண்டிப் போனது ! So சற்றே அடர் பின்னணிகளோடு இந்தக் கருப்பு-வெள்ளைப் பதிப்பு வெளியாகிடும் என்பதை உங்கள் கவனங்களுக்குக் கொண்டு வந்து விடுகிறேனே ! And இந்த பாணி சோபிக்க வேண்டுமெனும் பொருட்டு - 'பளிச்' வெள்ளை பேப்பரைப் பயன்படுத்தியுள்ளோம் ! இந்த கருப்பு-வெள்ளைப் பதிப்பை செவ்வாயன்று அச்சிட்டு முடித்துப் பார்க்க நாங்களுமே ஆவலாய்க் காத்துள்ளோம் ! வண்டி வண்டியாய் இத்துறையில் அனுபவம் இருப்பினும், ஒவ்வொரு இதழுமே ஏதோ ஒரு விதத்தில், ஏதோவொரு சமாச்சாரத்தைக் கற்றுத் தரும் ஆசானாய் அமைவது தான் எங்கள் கால்கள் தரையில் பதிந்து நிற்க உதவிடும் காரணிகளோ - என்னமோ !! This has been no different !! 
ஸ்பெஷல் இதழின் வண்ண அச்சு முடிந்து விட்டபடியால் - அடுத்ததாய்  திருமிகு. ரின்டின் அவர்கள் தயாராய்க் காத்துள்ளார் - அச்சு இயந்திரத்துக்குள் குதித்திட ! இம்முறை ரொம்பக் குட்டியானதொரு கதை knot மட்டுமே ; பாக்கி எல்லாமே ரின்டினாரின் கோணங்கித்தனங்களைச் சுற்றிய லூட்டிகளே என்பதால் - இதனை எழுதிட பெரிதாய் சிரமங்களே தோன்றிடவில்லை !! Should be a very breezy read too ! அதற்கு நேர் மாறாய் கமான்சே & ஜூலியா கதைகளில் அழுத்தமான கதைக்களங்கள் + ஸ்கிரிப்ட் ! அவற்றின் எடிட்டிங் வேலைகள் தான் எனக்கு இன்றைக்கும், நாளைக்கும் துணை !! Hopefully அந்தப் பணிகளை என்னால் துரிதமாய் பூர்த்தி செய்திட முடிந்திடும் பட்சத்தில், தொடரும் வாரத்திலேயே இதன் அச்சும் நிறைவு கண்டிடவேண்டும் !! Fingers seriously crossed !!

இவற்றை முடித்து விட்டால் - அப்புறம் ஐயா குஷாலாகி விடுவார் - becos காத்திருக்கும் இதர 7 இதழ்களுமே - only மறுபதிப்ஸ் !! இரவுக் கழுகாரின் "பழி வாங்கும் புயல்" அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பா நண்பரொருவரின் கைகளில் தற்போதுள்ளது - proof reading -ன் பொருட்டு ! அவர் அதனை முடித்து அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஒப்படைத்து விட்டால் - ஒரு டெம்போ நிறைய மஞ்சள் மைக்கு ஆர்டர் செய்துவிட்டு - பிரிண்டிங் பணிகளுக்குள் குதித்து விடுவோம் -  மஞ்சள்சட்டை மாவீரரின் கலர் பதிப்பின் பொருட்டு ! பொதுவாய் எனக்கு நமது முந்தைய இதழ்களின் கதைகள் ரொம்பவெல்லாம் மண்டையில் தங்குவதில்லை என்பதால் இந்த சாகசம் லேசு பாசாய் மட்டுமே ஞாபகத்தில் நின்றது ! But மேலோட்டமாய் டைப்செட் செய்யப்பட பக்கங்களைப் புரட்டிய சமயம் - வெள்ளமாய் பழைய நினைவுகள் கரைபுரண்டோடிடன ! இந்தக் கதை 1970-களில் ஆங்கிலத்தில் வெளியானதொன்று என்பதால்- எனது பால்யத்துக் collection -ல் இடம் பிடித்திருந்தது என்று ஞாபகம் ! அந்நாட்களில் டெக்ஸ் வில்லரின் ஏதோவொரு கதையைத் தூக்கித் தலைமாட்டில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறு காலையும், சீக்கிரம் சீக்கிரம் எழுந்து வாசி-வாசி என்று வாசிப்பது எனது வாடிக்கை ! "டிராகன் நகரம்"  ; "சைத்தான் சாம்ராஜ்யம்" "தலைவாங்கிக் குரங்கு" இத்யாதிகளை விரல் தேயுமளவிற்கு ஞாயிறுகளில் புரட்டித் தள்ளியதெல்லாம் இந்த ஏழு கழுதைப்  பிராயத்து ஞாயிறு அதிகாலையின் நினைவினில் நடைபோடுகிறது !! அந்நாட்களில் என்னுள் "தல" ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கு நமக்கொரு பொதுவானதொரு அடையாளம் என்பது எனக்கு எல்லையிலா சந்தோஷம் நல்கிடும் ஒரு விஷயம் ! ஆங்கிலத்தில் பின்னியெடுக்கும் மொழிபெயர்ப்போடு வெளியிட்ட Topsellers பதிப்பகத்திற்கும், அதனை எனக்குக் கண்ணில் காட்டிய என் தந்தைக்கும் தான் நன்றி சொல்லியாக வேண்டும் ! Maybe அந்நாட்களில் டெக்சை நான் கண்ணில் பார்த்திராவிடின் - காமிக்ஸ் வெளியிடும் வேளை(லை) வந்த பொழுது - எனது கவனம் பிரிட்டிஷ் துப்பறிவாளர்களையும் ; சூப்பர் ஹீரோக்களையும் தாண்டி ரொம்பச் சென்றிராதோ - என்னமோ ?!  யோசித்துப் பாருங்களேன் - இன்னமும் அண்டா-குண்டாக்களை உருட்டி - சட்டித்தலையன் அர்ச்சியையும் ; கூர்மண்டையரையும் ; இன்னபிற fleetway பரிவாரங்களைக் கொண்டு உங்களைத் தாக்கிக் கொண்டிருந்தேனெனில் - author ஆதியெல்லாம் ஆட்டோ பிடித்தே ராஜஸ்தான் பக்கமாய் புறப்பட்டிருக்க மாட்டாரா ? நமது கோவைக்கார ஸ்டீல்க்ளா மட்டும் இந்நேரத்துக்கு ஒரு நாலைந்து மில்லியன் ஹிட்ஸ் அடிக்கச் செய்திருக்க மாட்டாரா - நம் வலைப்பதிவினை ?!!  நானும் சும்மா - "பூம்...கும்....ச்ச்ச்ச்ச்ச்....ற்ற்ர்ர்ர்ர்.." என்று frame -க்கு frame டிராக்டர் ஒட்டியே பிழைப்பு நடத்தியிருக்க மாட்டேனா - ஒரு கைதேர்ந்த விவசாயியைப் போல !! Just miss!!!

முதல்முறையாய் இக்கதையைப் படிக்கவிருக்கும் நண்பர்களை இரவுக் கழுகாரின் இந்த வண்ண மறுபதிப்பு மிரளச் செய்யப் போவது உறுதி !  அட்டகாசமான கதை + வண்ணம் என்ற combo அதகளம் செய்யவிருப்பது நிச்சயம் ! ABSOLUTE CLASSICS வாயிலாய் இனி களம் காணவிருக்கும் டெக்ஸ் மறுபதிப்புகள் சகலமுமே வண்ணத்தில் மாத்திரமே என்பதால் - colorful days ahead indeed ! 'இரவுக் கழுகின்' மறுபதிப்பு ஒரு பக்கமெனில், முத்து மினி காமிக்ஸின் 6 இதழ்களின் பணிகள் இன்னொருபக்கம் ! இவை எல்லாமே - கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு மப்டியில் உலவிடப் பிரியம் காட்டியுள்ள நமது சில பல புது proof reader களின் உபயத்தில் அச்சு செல்லத் தயாராய் உள்ளன ! So அவற்றையும் ஒட்டு மொத்தமாய் அச்சிட்டு விட்டு, நமது பைண்டிங் நண்பரை ஒரு கேஸ் பன்னீர் சோடா சகிதம் சென்று நலம் விசாரிக்க நம்மாட்களை அனுப்பிட வேண்டி வரும் ! ரெகுலர் இதழ்கள் 4 + 1 கலர் edition + 1 Black & white edition + 6 முத்து மினி இதழ்கள் = 12 புக்ஸ் in total எனும் பொழுது அவரைத் தெளிய வைத்துத் தெளிய வைத்து சாத்திக் கொண்டே இருக்க வேண்டி வரும் - அடுத்த 10 நாட்களுக்கு ! காத்திருக்கும்  நம் குடல் உருவல்களைத் தாங்கி நிற்கும் ஆற்றலை அந்த மனுஷனுக்குக் கொடுத்திட கடவுளைத் தான் வேண்டிக் கொள்கிறேன் !! Phew !!மந்தி வேலைகள் நமக்குப் புதிதல்ல தான் ; ஆனால் இம்முறை ஒரு டஜன் இதழ்கள் - அடுத்த 15 நாட்களுக்குள் என்பது ரொம்பவே வயிற்றைக் கலக்கத் தான் செய்கிறது !! புனித தேவன் மனிடோ தான் என் மண்டையைக் காத்தருள வேண்டும் !! 

இந்தக் கூத்தின் நடுவே சென்ற வாரத்தின் ஒரு நாள் - நமது இதழ்களின் விற்பனைகளின் பொருட்டு ஒரு முக்கிய அங்காடிச் சங்கிலியின் கொள்முதல் அதிகாரியைச் சந்திக்கும் பொருட்டு கொங்கு மண்டலப் பயணம் மேற்கொண்டேன் ! 

"சார்...சிவகாசியிலிருந்து வந்திருக்கேன்...உங்களை 11 மணிவாக்கில் உங்கள் ஆபீசில் பார்க்கலாமா ? காமிக்ஸ் புக் விற்பனை விஷயமாய் ஏற்கனவே உங்கள் பிரிவில் பேசியிருந்தோம் அல்லவா - அது சம்பந்தமாய்..."

"சரி...வாங்க...ஆபீசில் தான் இருப்பேன்"

11 மணி...!! லக்கி லூக் ; லார்கோ ; டெக்ஸ் வில்லர் ; மதியில்லா மந்திரி...மாடஸ்டி...மாயாவி....என்று கலர் கலராய் - சைஸ் சைசாய் இதழ்களோடு அவர முன்னே ஆஜராகிறேன் ! போர் அடித்துப் போனதொரு பார்வையோடு என் முன்னே அமர்ந்திருப்பவர் நான் நீட்டும் இதழ்களை இப்படியும், அப்படியுமாய்ப் புரட்டுகிறார்...!

"எப்டி ..கிலோ ரேட்டா ?" 

"புரியலை ....என்ன கேட்குறீங்க ?"

"இல்லே..இதெல்லாம் கிலோ என்ன ரேட்னு சப்ளை பண்ணுவீங்கே ?"

"கிலோ ரேட்டா ?? ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை உண்டு சார் ; இது அறுபது ரூபாய்...அது ஐம்பது...! அந்த விலைகளில் இருந்து 25% discount தருகிறோம் ! "

"ஓஹோ.."

"இதைப் படிக்க நிச்சயம் ஒரு வாசகர் வட்டம் உண்டு சார் ; சின்ன அளவிலே ஆரம்பத்திலே முயற்சி பண்ணிப் பாருங்களேன் - சரியா வந்தா அப்புறம் படிப்படியாக் கூட்டிக்கலாம் !"

"இதெல்லாம் இந்த விலைகளுக்கு விக்காது சார்.... கிலோ ரேட்டுக்கு வாங்க முடியும்னு நினைச்சிட்டு தான் உங்களை வரச் சொன்னேன் !"

"சார்..இது எல்லாமே foreign கதைகள் ; உரிமைகள் வாங்கி தமிழில் போடுறோம் ! அறுபது ரூபாய்க்கு நாங்க போடும் தமிழ் பதிப்போட இங்கிலீஷ் ஆக்கம் 400 ரூபாய் விலை !! பிளாட்பாரத்திலே போட்டு விற்கும் கோல புத்தகங்கள் மாதிரியான சஸ்தாத் தயாரிப்புகளும் கிடையாது ! அவ்வளவும்   ஆர்ட் பேப்பர் - பாருங்களேன் !"

"இல்லீங்கே...ஏற்கனவே புஸ்தகம்லாம் விக்குறதே குறைஞ்சிட்டு இருக்கு ....அதனால அந்த செக்ஷனையே படிப் படியா குறைக்கப் போறோம் ! இதை வேற அங்கே அடுக்கி வைச்சு என்ன பண்ண போறோம் ?"

கையில் அவர் புரட்டிக் கொண்டிருக்கும் லக்கியின் ஒற்றைப் பக்கத்தில் கூட அவர் கண்கள் பதியக் காணோம் என்பது புரிகிறது !

"ஏய்...அந்த சீவக்காய் பாக்கெட் சாம்பிள் வாங்கிட்டு வந்தியா ? அருகிலிருக்கும் பணியாளிடம் கேள்வி பறக்கிறது !

"சரி சார்....நான் கிளம்பறேன் !" 

"சரி..எதுவொன்னு வேணும்னா அப்புறமா சொல்லி அனுப்புறோம்"

படியிறங்கிக் கீழே செல்லும் போது எனக்குக் கோபம் கூட வரவில்லை ! கோபமும் ஒருவிதத்தில் ஒரு வித energy -ன் வெளிப்பாடே எனும் போது - இந்த மனுஷன் அதற்குக் கூட அருகதையானவராக எனக்குத் தெரியவில்லை ! இத்தனை பெரியதொரு அங்காடியின் கொள்முதல் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசாமிக்கு காமிக்ஸ் ஞானம் இருத்தல் அவசியமில்லைதான் ; ஆனால் சந்தையில் கூறு வைத்து விற்கப்படும் கத்திரிக்காய்க்கும் ; AC -ல் வைத்து விற்க வேண்டிய broccoli-க்கும் வேற்றுமை காணத் தெரியாது போயின் அது நம் தவறல்ல என்று நினைத்துக் கொண்டே நடையைக் கட்டினேன் ! நாம் கட்டித் தழுவி நிற்கும் ஒரு அழகான ரசனைக்கு அதன் சுவாச அனுபவமில்லா மாந்தர்களின் நிலைப்பாடு இது தானோ ? என்ற சிந்தனையைத் தவிர அந்நேரம் எனக்கு வேறெதுவும் தோன்றிடவில்லை !  உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த ஜூனியரை சற்றே கூல் பண்ணிவிட்டு கிளம்பினேன்..! முன்பெல்லாம் இத்தகைய நயமான பிலிப்ஸ் பல்ப் வாங்க நேரிட்டால் உள்ளுக்குள் ஆற்றமாட்டாமையும், எரிச்சலும் பொங்கிடுவது வழக்கம் ! ஆனால் இந்த மனுஷனின் அறியாமையும் ; ஏளனமும் அவர் மீது எனக்கொரு பரிதாபத்தையே ஏற்படுத்தின ! அது சிறியதொரு உலகமாயே  இருப்பினும் கூட, ஒரு அசுவாரஸ்யப்  பூனை கண்ணை மூடிக் கொள்வது போலப் பாசாங்கு செய்வதால் இருள் சூழ்ந்து கொள்வதாய் நாம் கருதிடத் தேவையில்லை என்பதில் எனக்கு ஐயமில்லை !

அங்கிருந்து கிளம்பி விட்டு - அந்நகரில் உள்ள நமது விற்பனையாளர்களை சந்திக்கச் சென்றேன் - நமது மார்கெட்டிங் மேனேஜருடன் ! அருகருகே தான் ஒவ்வொரு கடையும் என்பதால் வரிசையாய் ஒவ்வொருவரையும் சந்திக்க முடிந்தது ! சொல்லி வைத்தாற்போல எல்லோருமே சொன்ன ஒரே விஷயம் - "ரெகுலரா வாங்குறவங்க போன் பண்ணிக் கேட்டுட்டு கரெக்டா வந்திடுறாங்க சார் ! நீங்க நெட்லே போட்டுட்டா அன்னிக்கே போன் பண்ணிடுறாங்க  !" "புதுசா பாக்குறவங்க - இதுலாம் இன்னமுமா வருதுன்னு ?சந்தோஷப்படுறாங்க சார் !"அங்கே காதில் பாய்ந்த ஈயத்துக்கு மாற்றாய் இது இதமான சங்கீதமாய் எனக்குத் தோன்றியது ! 

ஒவ்வொரு கடையிலும் ஐந்தைந்து நிமிடங்கள் இருந்துவிட்டுப்  புறப்பட்ட போது - நமது முன்னாள் முகவரொருவர் நமது இதழ்களை மீண்டும் தன் கடையில் விற்பனை செய்ய விரும்புவதாய் நம்மவர் சொல்ல - சரி, வந்தமட்டிற்கு ஒரு எட்டு அவரையும் பார்த்து விட்டுப் போய் விடலாமே என்று நடந்தேன் ! அவர் நமது முத்து காமிக்ஸின் முன்னாள் முகவர் ; பெயரளவிற்கு மாத்திரமே எனக்குப் பரிச்சயம் ! நமது லயன் இதழ்களை விற்பனை செய்தவர் வேறொருவர் ! இருப்பினும், ரொம்பவே அன்பாய், மரியாதையாய் பேசியவர் - தானும் அந்நாட்களது காமிக்ஸ் ரசிகன் என்பதையும் ; மாயாவி ; பெய்ரூட்டில் ஜானி ; லாரன்ஸ் டேவிட் என்று மலரும் நினைவுகளுக்குள் ஏகமாய்ப் புகுந்துவிட்டார் ! கடையில் வியாபாரம் பிசியாக நடந்து கொண்டிருப்பினும், என்னுடன் பேசுவதில் காட்டிய சுவாரஸ்யத்தை சிறிதும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை  ! பழமைக்குள் லயிக்கும் சுகானுபவத்தை நாமேன் கெடுப்பானேன் ? என்று நான் அவரது சிலாகிப்புகளை ஜாலியாய் ரசித்துக் கொண்டிருந்தேன் !   நமது பட்டியலைக் கையில் கொடுத்து விட்டு, "ஆரம்பத்தில் விலைகுறைவான இதழ்களை மட்டுமே தேர்வு செய்து விற்றுப் பாருங்கள் சார் ; அப்புறம் கொஞ்சம் பிக் அப் ஆகி விட்டால் கூடுதலாய் முயற்சிக்கலாம் !" என்று சொன்னேன் ! ஒ.கே. என்று சொன்னவர் தந்த முதல் ஆர்டர் - முழுக்க முழுக்க நமது மும்மூர்த்திகள் + கூர்மண்டையரின் மறுபதிப்புகளுக்கு மட்டுமே !! ஏஜெண்ட் விற்பனைகளில் இத்தகையதொரு தனித் தண்டவாளம் ஓடி வருவதை கடந்தாண்டு முதலாகவே பார்த்து வரும் எனக்கு இதனில் பெரியதொரு ஆச்சர்யம் இருக்கவில்லை ! லார்கோவாது...டெக்ஸ் வில்லராவது - மாயாவி இருக்க பயமேன் ? என்பதே ஏகப்பட்ட கடைக்காரர்களின் தாரக மந்திரம் ! So இதுவும் ஒரு விற்பனையே என்ற தலையாட்டலோடு ஜூனியரோடு ரூமுக்குத் திரும்பினேன் - காமிக்ஸ் எனும் ரசனைக்கு ஒரே நாளில் கிட்டிய மூவித அனுபவங்களோடு !! படிக்கிறோம் - நித்தமும் ஒரு பாடம் ! 

Before I sign off - சில ஜாலியான updates :

  • ஒரு திகுடுமுகுடான பட்ஜெட்டில் ஐரோப்பாவில் 2017-ல் ஒரு sci -fi  காமிக்ஸ் கதை திரைப்படமாகிடவுள்ளதாம் ! அதனையொட்டி அந்தத் தொடருக்கு மெருகூட்டி மறுபதிப்புகள் ; promotionsஇத்யாதி என படைப்பாளிகள் தயாராகி வருகிறார்கள் ! Sci -fi க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்ப்போமா ? எல்லாவற்றையும் சந்தா X Y Z என்று கொண்டு செல்வதிலும் எனக்கு பூரணம் உடன்பாடில்லைதான் ; ஒரு புது ரசனையை நாமே ஓரங்கட்டி அறிமுகம் செய்திடும் பட்சத்தில் அது சவலைப் பிள்ளையாகவே தொடர்ந்திடுமோ என்ற பயம் எழுகிறது ! What say all ?
  • ஜூலையின் ஆண்டுமலரினில் பிரின்ஸ் + ரிப்போர்டர் ஜானி + ரோஜர் என்ற combo வை ஒரே இதழாய் ஒன்றிணைத்து வெளியிட சம்மதம் வாங்கி விட்டோம் ! So நமது பெல்ஜிய backbench boys ஒன்றாய் களமிறங்கப் போவது நம் இதழ்களில் முதன்முறையாக !!
  • ஜூன் 10-ல் தான் இரத்தப் படலம் ஒரிஜினல் பிரெஞ்சு இதழே வெளியாகிறது ! So அவர்களுக்கு முன்பாய் ஜூன் 1-ம் தேதியே நண்பர் XIII -ஐ களமிறக்குவது அபத்தமாயிருக்கும் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்! 
  • காந்தக் கண்ணழகி பெட்டி பார்னோவ்ஸ்கி-யின் பிரெஞ்சு ஆல்பம் இன்னொரு சுற்று அங்கே அச்சாகிறதாம் !! நாமும் அந்தக் கூட்டத்தில் இணைந்து கொடி பிடிப்போமா  ? 
  • லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ரூ பகுதியாய் - "லக்கியைப் போட்டுத் தள்ளியது யார் ?" என்றதொரு கிராபிக் நாவல் (!!!) தயாராகி அழகாய் விற்பனையாகி வருகிறதாம் !! கி.நா. ஜோதிக்கு லக்கியை தீப்பந்தம் ஏந்தச் செய்யலாமா ? உங்கள் எண்ணங்கள் பிளீஸ் ?
  • மும்மூர்த்திகளின் காதல் நம்மில் ஒருசாராருக்கு மாத்திரமன்றி - அக்கட தேசத்திலும் அதன் மீதான பிரேமம் இன்னும் சிலருள் விடாப்பிடியாய்த் தொடர்வது உண்டு ! என்றோ ஒரு மாமாங்கத்தில் நாம் மலையாளத்தில் வெளியிட்ட பாம்புத் தீவு ("சர்ப்பத் தீவு " in malayalam ) & FLIGHT 731 இதழ்கள் மீது தீராக் காதல் கொண்ட வாசகரொருவர் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி எழுதுவதை ஒரு hobby யாகக் கொண்டவர் ! இதோ சமீபமாய் மாத்ருபூமி செய்தித்தாளிலும், இன்னொரு வார இதழிலும் து தொடர்பை வெளியாகியுள்ள கட்டுரைகள் !! குருவயூரப்பா !!!  விடாப்பிடியான ஆர்வத்துக்கு நன்றிகள் திரு.நாராயண் இராதாகிருஷ்ணன் சார் !! 


மீண்டும் சந்திப்போம் folks...! Have a great Sunday !! And நாளைக்கு வாக்குப் பதிவு செய்ய மறந்திடாதீர்கள் !! Bye for now !!

360 comments:

  1. Replies
    1. 3பேருமே 9.11வா....போட்டோ ஃப்னிஷ்ல லெக் பீஸை தட்டிட்டு போன ரின் டின்க்கு ஒரு செல்ல முதுகு தடவல்...

      Delete
  2. ஆசிரியருக்கு இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்..

    ReplyDelete
  4. வணக்கம் பாஷா பாய் ....அந்த பெரிய பாதுஷா ரெடியா ???

    ReplyDelete
  5. காலை வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  6. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. It's so good to hear from you sir. Looking forward for this June. What not you are providing us. I'm so happy sir.

    ReplyDelete
  8. தங்க தலைவனுக்காக waiting! Grey shades இனிவரும் அனைத்து b&w இதழ்களிலும் எதிர்பார்க்கலாமா சார் ? தவறாமல் அனைவரும் வாக்களியுங்கள்!

    ReplyDelete
  9. என்பெயர் டைகர் எப்போ வருது ஆசிரியரய்யா

    ReplyDelete
  10. இந்தமாச மொத்த புக்கும் எவ்வளவு விலை வரும்

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் 1200 வரும்...

      Delete
    2. மொத்தம் 1200 வரும்...

      Delete
  11. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  12. // அட்டகாசமான கதை + வண்ணம் என்ற combo அதகளம் செய்யவிருப்பது நிச்சயம் ! ABSOLUTE CLASSICS வாயிலாய் இனி களம் காணவிருக்கும் டெக்ஸ் மறுபதிப்புகள் சகலமுமே வண்ணத்தில் மாத்திரமே என்பதால் - colorful days ahead indeed///---
    ஆஹா கலர் கனவுலகில் பாய்ந்து பறந்து செல்லும் இனிய சஞ்சாரத்துக்கு இப்பவே ரெடியாகி கொள்கிறேன் சார்.இன்று 3வேளையும் சாப்பாடே வேணாம்,இந்த 3வரிகளை மாறி மாறி படித்தே பசியாறிடுவேன்....

    ReplyDelete
  13. சார், வணக்கம். நமது காமிக்ஸ் விற்பனை மீண்டும் முகவர்கள் வாயிலாக சூடு பிடித்து வருவது "மகிழ்ச்சி " சார். லயன் மினியை புரட்டியதில், எழுந்த கேள்வி, மறுபடியும் எப்ப வரும் சார். அதுவும் அந்த "ஒற்றைக்கண் மர்மத்தை " வண்ணத்தில் தொடராக போட்டீங்கன்னா, வாழ்ககைல ஒரு வட்டத்தை பூர்த்தி செய்தவனாவேன்.

    மாயாவிஜீ, ATR சார், நீங்க ரெண்டு பேரும் மெளன பார்வையாளராக இந்நேரம் இங்க வந்துருப்பீங்க. சீக்கிரமே பதிவ போட்டு தாக்குங்க சார். இந்த தளம் எல்லாருக்கும் பொதுவானது

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்களே. உண்மையில் மௌனப் பார்வையாளனாகத்தான் இருந்தேன். என்னால் இனியும் தோழர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான். ஆனால் தோழர்கள் முன்னால் என் எண்ணம் தவிடுபொடியாகி விடுகிறதே!

      Delete
    2. வாழ்நாளில் முதன் முறையாக ஒரே மாதத்தில்
      12 காமிக்ஸ்கள். இந்த நிகழ்வு இனி எப்போது மறுபடி நிகழும் என தெரியாத சூழ்நிலையில் இந்த காமிக்ஸ் திருவிழா கொண்டாட்டத்துக்கு முழுமுதல் காரணமான நமது ஆசிரியரை கொண்டாட வேண்டிய நேரத்தில் (சொந்த பிரசனையாவது மண்ணாங்கட்டியாவது!) ஒதுங்கியிருப்பது நியாயமில்லை எனத்தோன்றியதாலும் மறுபடி வந்துவிட்டேன். விரைவில் வாத்தியங்களை எடுத்து போட்டுதாக்கி விடுவோம் தோழர்களே.அதிலும் டெக்ஸின் பழிவாங்கும் புயலின் வேகம் எல்லா சோகங்களையும் புரட்டிப்போடவல்லது.துணைக்கு டைகர் வேறு. இதைவிட ஒரு சந்தோஷ தருணம் இனி வருமா?

      Delete
    3. திரு.சரவணன் ஸ்ரீனிவாசன், திரு.ஸ்டீல் க்ளா நன்றி உங்களுக்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்காக. உங்களது வார்த்தையை அலட்சியம் பண்ணும் துணிவு எனக்கில்லாததால் இன்று தலை காட்டினேன். அடிக்கடி இங்கு நான் வருவது எனக்கே தயக்கமாக உள்ளது. மீண்டும் அடுத்த ஆசிரியர் பதிவு அன்றைக்கு சந்திப்போம்.
      நன்றி தோழர்களே..

      Delete
  14. சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் நமது இதழ்களில் வரவேண்டும் என்பதே என் விருப்பம்.போனெல்லி குழுமத்தின் நாதன் நெவர் கூட சயின்ஸ் ஃபிக்ஷன் ரகம்தான் என நண்பர் ஒருவர் கூறினார்.அது நமக்கு ஏற்ற கதைத்தொடர்தானா...? நம் காமிக்ஸகளில் வர வாய்ப்பிருக்கிறதா...?

    ReplyDelete
  15. சார் உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாசிக்க என்பதுகளிலேயே வாழ்வது போல ஒரு எண்ணம் ...அடுத்த மாத ிதழ்கள் குறித்த தங்களது அழகுறும் பதிவு அன்றய கோடை மலர் ,தீபாவளி மலர் ஆகிய ிதழ்களுக்கு காத்திருந்த பிரம்மயை ஏற்படுத்தியது ஆச்சரியமே..காமிக்ஸ் காதல் உயர ஹாட் லைனே துணை என்பதில் மிகையில்லையே....

    ReplyDelete
  16. சார் நெட் இல்லாததால் பதிவிடவில்லை ...அதனால் இப்ப....சார் ஜானி நீரோ அட்டகாசம் . முன்பு என்பதுகளில் மறுபதிப்பில் படித்ததில் அந்த விளையாடும் நால்வர் ,ஸ்டெல்லாவின் டிரான்சிஸ்டர் , சமயலறை மேல் வெப்பத்தால் மூக்கை நுழைத்து நிற்கும் ராக்கெட் கடைசி பகுதிகள் மட்டுமே , அதுவும் படித்த பின்னரே நினைவில் மீண்டன . ென்ன ொரு விறு விறுப்பு . அப்போது பாக்கட் சைசில் வாசித்ததை இப்போது தெளிவாய் வாசிக்கிறேன் . அற்புதமான ிக்கதை சிறு வயது வாசகர்களயும் கவர்வது நிச்சயம் . இந்த மாத பமூன்று பிற கதைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல இக்கதை ....இனி ஆயிரம் + பக்கங்களுக்காக ஐ ஏம் வெய்ட்டிங் ...13 வர்ராக , வண்ண டெக்ஸ் வர்ராக ,பார்த்தே இராத முத்து மினி வர்ராக , டைகரும் வர்ராக ...ஆஹா

    ReplyDelete
  17. சார் டைகருக்காக காத்திருக்கும் கனத்தில் ...இங்கே தீட்டிய வண்ணத்தில் கதிரைக்கு பிரேக் போடும் டெக்ஸ் ஈர்க்கிறார்....பதிமூன்று இல்லாவிட்டாலும் சென்ற ிதழில் பெரிதும் ஈர்த்த கமான்சே அதே போல கலக்குவார்...ஆனால் சுடச் சுட ...வரலாறு ...சரி ஒரு இருவது நாள்தானே...
    சொல்லப்போனா பெட்டிய முதல் சுற்றில் பார்க்க கடுப்பாக ிருந்ததென்றால் மிகையில்லை.....ஆனால் தற்போதய சுற்றில் அதாவது அம்பின் பாதையில் படிக்க ின்னும் வரமாட்டாரா என ஏங்க வைத்திட்டார்....பெட்டியின் வாழ்க்கை பொட்டிய சீக்கிரம் திறந்திடு சீசே...மும்மூர்த்திகள் ,இஉ வல்லவர்கள் ...என்ன சொல்ல ..சொல்ல சொல்ல ினிக்குதடா...

    ReplyDelete
  18. சார் எங்க வீட்டுக்கும் வந்திருக்கலாமே ....அந்த லக்கி கதய சீக்கிரம் zல காட்டுங்க . சென்ற வாரமே கௌபாய் காதல் குறித்து எழுதிட்டேன் .. நண்பர்களும் எனது எண்ணத்தை போலவே பதிவிட்டுள்ளனர் ...இருந்தாலும் proof reading பார்த்து அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
  19. @ Editor:

    Regarding grayscaling En peyar Tiger.

    If it isn't too late, please don't tinker with the lines, sir. That is the essence of giving a print run in black and white: to highlight the drawings in the way the artist originally intended and drew it. If the artist had wanted to put shadows, he himself would have put it! Lower half panel of first page in Minnum Maranam is a good example (readers who have the original Mega Special from 1997 can see it.)

    I'm saying this in because grayscaling that slightly artificial work will be glaring, clear line art (or as you call it "kuchi kuchi kathai maanthargal") will be swallowed by gray shades.

    The sample page you posted here looks fine to me. Isn't this how we have always seen comics before we started to colour? (sirayil oru puyal, thisai thirumbiya thotta, puyal thediya puthayal, etc.. ellaamae indrum nandraagavae irukirathu.)

    We have seen full Ratha padalam in B/W which looked fine. Do please consider and give us the best looking edition sir.

    ReplyDelete
  20. நிச்சயம் நண்பரே..!
    ரம்ஜான. நோன்பு ஆரம்பித்துவிடும் நேரம் அது என்பதால் பயண திட்டமிடல் குழப்பிவருகிறது.
    எப்படியாவது வந்துவிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  21. Grey color vandal sir.nanbar peasants nan metal ninithathai ketullar.our vellai b&w dummy.puriavillai.eppothumpol regular b&a irukkatum sir.

    ReplyDelete
  22. இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் கடித ஏவுகணை மன்னன் போ.கு.த.& சேந்தம்பட்டி குழுக்களின்
    தாரை தலிவர் அவர்களை வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்

    இன்று போல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கத் தலீவருக்கு செயலாளரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

      'நித்தமும் ஒரு பாடம்' என்ற இப்பதிவினை தலீவரின் பிறந்தநாள் பரிசாய் பிரகடனம் செய்கிறேன்!

      உங்கள் தலைமையில் நடத்திமுடிக்கவேண்டிய போராட்டங்கள் ஓராயிரம் உள்ளன தலீவரே! இன்னும் பல நூறு பி.நா கண்டு அவற்றையெல்லாம் செய்துமுடிக்கும் வல்லமை கிடைக்க மனிடோ புனித தெய்வத்தை இறைஞ்சுகிறேன்... _/\_

      Delete
    2. ஆப்பீ பருத்து டே தலீவரே!!!

      Delete
    3. வாழ்த்துகளுக்கு நன்றிகள் டெக்ஸ் ....செயலாளர் ..கண்ணன் ...அவர்களே ....;-)

      Delete
    4. தலைவரே.!

      பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.!


      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.!!!

      __________/|\_________!

      Delete
    5. வாழ்த்துகளுக்கு நன்றி மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ..மற்றும் கோவை ஸ்டில் ஜீ ...;-)

      Delete
  23. இனிய காலை வணக்கங்கள் விஜயன் சார் :)
    இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

    ReplyDelete
  24. தலீவரே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி தோழமையே ...;-)

      Delete
    2. மறக்கலீங்க ....ஆஹா ..விட மாட்டாங்க போல ....

      Delete
    3. சகோதரரே இது பிறந்த நாளுக்கு தர வேண்டிய கல்கோனா

      Delete
    4. ஙே இல்லை சகோதரரே கல்கோனா..... :D

      Delete
  25. கொங்கு மண்டலம் வந்து விட்டு ஒரு வார்த்தை சொல்ல வில்லை சார் :(
    அதுவும் நம்ம வீடு நம்ம காமிக்ஸ் விற்பனை செய்யும் கடைகளுக்கு மிக அருகில் தான்

    ReplyDelete
  26. அனைவருக்கும் இனிய ஞாயிறு தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  27. அனைவரும் வாக்களிப்போம்

    ReplyDelete
  28. விஜயன் சார், அது என்ன சார் கிலோ என்ன விலை? பஸ் மற்றும் ட்ரெயினில் பயணம் செய்யும் போது வரும் புத்தகம்கள் கிலோ கணக்கு முறையில் வாங்கி வந்து ஒரு புத்தகம் இந்த விலை என சொல்லி விற்பார்களா?

    ReplyDelete
  29. சார், இன்றைக்கும் லயன் கோடை மலர்கள், நமது வாசகர்களிடையே சூப்பர் ஹிட் என்ற நிலையில் ஆண்டு தோறும் ஒரு கோடை மலரை வெளியிடலாமே

    ReplyDelete
  30. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ இந்த மாத இறுதியில் கோவை வருகிறேன், 26-29. முடிந்தால் ஏதாவது ஒருநாள் நாம் இஷா அல்லது கோவை பஸ்டாண்டில் சந்திப்போம். கடந்த இரண்டு வருடமாக எனக்கு தருவதாக சொன்ன புத்தகம்களை இந்த முறை மறக்காமல் கொடுக்கவும் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நீங்க எனக்குத் தருவதா வாக்களித்த அன்றைய இருவண்ண ,பெரிய சிறப்பு மலர நினைவு படுத்தும் நேரம் கனிந்து விட்டது...காத்திருக்கிறேன்

      Delete
  31. விஜயன் சார், வரும் மாதம் 12 புத்தகம்கள் என்பது மிக பெரிய சாதனை என்னை பொருத்தவரை; நமது கம்-பாக் முதல் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய மைல்கல் புதிய உயரம் என நமது சாதனை தொடருகிறது. சீராக செல்லும் ரயில் மலைப்பாதையில் ஏறும் போது கிடைக்கும் அந்த திரில் அனுபவதிருக்கு ஈடானது இது போன்ற புதிய முயற்சிகள்/அதிக புத்தகம்கள்.

    அனைத்து புத்தகம்கள் நீங்கள் திட்டமிட்டபடி ரெடியாகவும் நமக்கு சென்னையில் ஸ்டால் கிடைத்து நமது கோடோவனில் உள்ள அனைத்து புத்தகம்கள் காலியாகும் படியான விற்பனை நடைபெற வேண்டும் என மனதார வேண்டுகிறேன்.

    நீங்கள் சொன்னது போல் இது போன்ற சில விசயம்கள் உங்களுக்கு புதிய உத்வேகத்தை தருகிறது என்பது உண்மை.

    ReplyDelete
  32. //முதல்முறையாய் இக்கதையைப் படிக்கவிருக்கும் நண்பர்களை இரவுக் கழுகாரின் இந்த வண்ண மறுபதிப்பு மிரளச் செய்யப் போவது உறுதி ! அட்டகாசமான கதை + வண்ணம் என்ற combo அதகளம் செய்யவிருப்பது நிச்சயம்////---- வெயிட்டிங் ஈகர்லி சார் ..கருப்பு வெள்ளையில் அதிக முறை படித்த இதழ் இதுதான்...அந்த செவ்விந்திய சிறுவர்கள் ரயிலோடு போட்டி போடும் காட்சி , டெக்ஸ் கயிறு கட்டி கர்னல் ஸ்டீவர்ட் டின் குதிரைகளை சாய்க்கும் காட்சி , பாலைவன இரவு யுத்தங்கள் , கோட்டைகளை கொளுத்தும் இடங்கள் , தங்கள் குடியிருப்புகளை செவ்விந்தியர் எரிக்கும் இடங்கள் ,கார்சனோடு டெக்ஸ் உரசும் காட்சிகள் வண்ணத்தில் எப்படி ஜொலிக்கும் என்ற ஆவலை கிளப்பி விட்டது சார் ...
    அந்த புரூஃப் ரீடருக்கும் கலர் பதிப்பா தந்து உள்ளீர்கள் சார் ? அவரு போன் நம்மர் தருவீர்களா சார் ???

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே தாங்கள் ஒரு பயங்கரமான Tex Fan என்று புரிகிறது :)
      என்னோவொரு வர்ணிப்பு..kudos

      Delete
    2. நன்றி சகோ , இந்த லிங்கில் விமர்சனத்தை படித்து விட்டு இந்த வார்த்தையை மீண்டும் சொல்லுங்கள் சகோ,டபுள் சந்தோஷம் ....
      http://salemtex.blogspot.in/2015/07/250.html?m=1
      இரும்புநகர் இரவுக்கழுகு: தி பெஸ்ட் ஆஃப் டெக்ஸ்

      Delete
    3. மிக மிக அருமையான அலசல்கள்
      எழுத்து நடை பிடித்திருகிறது சகோதரரே
      தாங்களும், கிட் ஆர்டின் சகோதரரும் மிகுந்த ரசிப்புடன் விமர்சனம் செய்து இருகிறீர்கள் :)

      Delete
    4. புல்லரிச்சு போச்சு சகோதரரே :)

      Delete
    5. மீண்டும் நன்றிகள் சகோ,இந்த கதையை படிக்கும் யாருக்கும் தன்னம்பிக்கை சற்றே அதிகரிப்பது உறுதி....

      Delete
    6. கடல் யாழ்.!

      நமது டெக்ஸ்விஜயராகவன்.! டெக்ஸ் வில்லரின் தீவிர முரட்டு பக்தர்.! டெக்ஸ் தனி சந்தா வந்ததும் சாந்த சொரூபி ஆகிவிட்டார்.!

      Delete
    7. டெக்ஸ்விஜயராகவன் சகோதரரை சாந்த சொரூபியாக்கிய ஆசிரியருக்கு நன்றி :)

      Delete
  33. மலைப்பான விஷயங்கள் மலையேறித்தான் போய் விட்டன..!
    காமிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு உலக சாதனையாகத்தான் பார்க்கப்படும்..!
    ஒரு மாதத்தின் பன்னிரண்டு இதழ்கள்...!!
    வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு இதழ்களுக்கே தடுமாறிக் கொண்டிருந்த நாம் இன்று ஒரே மாதத்தில் ஒரு டஜன் இதழ்களோடு...! வருடத்தின் மொத்த இதழ்களும் ஒற்றை மாதத்தில்....!!!
    பன்னிரண்டுகளும் கரங்களில் தவழ விட்டு அழகு பார்க்கும் அந்நாளை நினைக்கும் போது...,
    மடிப்பாக்கத்தார் சொன்னது போல அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கிறது சார்!
    'புதுமை வல்லோன்' விஜயனாருக்கு வந்தனங்கள்!

    ReplyDelete
  34. மலைப்பான விஷயங்கள் மலையேறித்தான் போய் விட்டன..!
    காமிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு உலக சாதனையாகத்தான் பார்க்கப்படும்..!
    ஒரு மாதத்தின் பன்னிரண்டு இதழ்கள்...!!
    வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு இதழ்களுக்கே தடுமாறிக் கொண்டிருந்த நாம் இன்று ஒரே மாதத்தில் ஒரு டஜன் இதழ்களோடு...! வருடத்தின் மொத்த இதழ்களும் ஒற்றை மாதத்தில்....!!!
    பன்னிரண்டுகளும் கரங்களில் தவழ விட்டு அழகு பார்க்கும் அந்நாளை நினைக்கும் போது...,
    மடிப்பாக்கத்தார் சொன்னது போல அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கிறது சார்!
    'புதுமை வல்லோன்' விஜயனாருக்கு வந்தனங்கள்!

    ReplyDelete
  35. இன்று பிறந்த நாள் காணும் தலைவர் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டுகள் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ப்ரபானந்த் சார் ..;-)

      Delete
  36. ஆசிரியர் இன்று காலை ஒன்பது மணி அளவில் தான் பதிவு என்றதாலும் ..9 மணிக்கு பிறகு அலுவலகத்தில் பிஸியான காரணத்தாலும் இம்முறை மதியம் தாம் பதிவையே படிக்க முடிந்தது ....நானே அறியாத / மறந்து போன பிறந்த நாளை காமிக்ஸ் நண்பர்கள் நினைவு கூர்ந்து வாழ்த்தியதிற்கு நன்றி நண்பர்களே ....;-)

    ReplyDelete
  37. என்ன இன்னிக்கு தளம் அமைதியாக இருக்கிறது ..;-(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தலீவரே....ரொம்பவும் அமைதியாக தெரிகிறது
      கலகலப்புக்கு என்ன செய்யலாம் சகோதரரே

      Delete
    2. தலீவரே உண்மையை சொல்லுங்க , ரகசியமாக எல்லாருக்கும் பிறந்த நாள் லஞ்ச் ட்ரீட் குடுத்து உங்கள் வீட்டில் அமுக்கி விட்டிர்களா

      Delete
    3. ஹாஹா ...ம.அ.தலைவியே ...நண்பர்கள் சொல்லி தான் எனக்கே பிறந்த நாள் தெரிகிறது ...அதனால் எனக்கு யாராவது ட்ரிட் கொடுத்தால் ஓகே ...;-)

      Delete
    4. தலீவரே அந்த சிக்கன் பெப்பர் ஃபரை அட்டகாசம், ஏஏவ்வ்....சேந்தம்பட்டி நண்பர்களுக்கு நீங்கள் வருடந்தோறும் தரும் பிரத்தியேக பர்த்டே லஞ்ச் எப்போதும் அசத்தல் தான்....

      Delete
    5. தலீவரே...
      :'( :'( :'( :'( :'(
      எனக்கு ஒரு கல்கோனா கூட வர வில்லை
      ஆனால் ஒரு விருந்தே வைத்து உள்ளீர்கள்

      Delete
    6. க்கும் ...ஏப்பா டெக்ஸ் ...எனக்கே தெரியாம என் பேர்ல யார்ப்பா பார்ட்டி வச்சது ...அவர் நல்லாருக்கட்டும் ....ஆனா கடைசில பில்லை என் கிட்ட கொண்டு வந்து குண்டை போட்றாதீங்க ...;-(

      மகளிர் அணி தலைவி அவர்களே ...சங்கத்துகுள்ள குண்டை போடறதுக்கு டெக்ஸ் மும்மரமா இருக்கார் போல ..ஏமாந்துறாதீங்க ...நானே ஆபிசுல உக்காந்துட்டு அழுதுட்டு இருக்கேன் ...நீங்க வேற ...;-)

      Delete
  38. சார் ..என் பெயர் டைகர் கருப்பு வெள்ளைல நான் பதிவு செய்திருந்தேன் ....ஆனா கருப்பையே காணோமே ....;-(

    பேசாம கலர்லேயே பதிவு பண்ணியிருப்பேனே ....;-)

    ReplyDelete
  39. என்னவாயிற்று இன்று :(
    பிரச்சாராம் முடிந்து அமைதி காக்கும் தேர்தல் பாட்டு வண்டி மாதிரி தளம் அமைதியாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இத்தளம் எடிட்டரின் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! இங்கு வருகை புரிபவர்களும் அப்படியே!

      எனக்கென்னவோ பாதிபேர் அந்தக் கொங்குமண்டல அங்காடியின் கொள்முதல் அதிகாரியை நலம் விசாரிக்கக் கிளம்பியிருப்பாங்களோன்னு தோனுது! ;)

      Delete
    2. அவர்களுக்கு எல்லாம் விருந்து குடுக்கிறேன் என்று சொல்லி விடுங்கள் சகோதரரே :)
      கொங்குக்கு வந்து விட்டு நம்ம வாத்தியார் மாதிரி சொல்லாம போக வேண்டாம் என்று சொல்லி கொள்கிறேன் :)

      Delete
    3. ////எனக்கென்னவோ பாதிபேர் அந்தக் கொங்குமண்டல அங்காடியின் கொள்முதல் அதிகாரியை நலம் விசாரிக்கக் கிளம்பியிருப்பாங்களோன்னு தோனுது! ;)////


      ROFL...

      Delete
    4. //கொள் முதல் அதிகாரி //

      எடைக்கு கேட்ட அ(ச) திகாரன் கர்ர்ர்...கதையை படித்தபின் மைக்கேல்மதனகாமராஜன் படத்தில் சமையல் கார கமலிடம் குஷ்பூ அரிசியில் ஓவியம் வரைந்து கொடுத்த கதைதான் ஞாபகம் வந்தது.!

      Delete
  40. //முதல்முறையாய் இக்கதையைப் படிக்கவிருக்கும் நண்பர்களை இரவுக் கழுகாரின் இந்த வண்ண மறுபதிப்பு மிரளச் செய்யப் போவது உறுதி ! அட்டகாசமான கதை + வண்ணம் என்ற combo அதகளம் செய்யவிருப்பது நிச்சயம் ! ///

    நான் 30 தபா படிச்சிருக்கேன்... ஒவ்வொரு தபாவும் மொதோ தபா தான்! :)

    ஒவ்வொரு மொதோ தபா படிக்கறச்சேயும் கலர்லே படிச்சா எப்படியிருக்கும்னு கனவு கண்டிருக்கேன். பலிக்கறா மாதிரி கனவுதான் அதுன்னு அந்தப் பிஞ்சு வயசுல தெரியல.

    கனவு நனவாகி இப்போ கலர்ல மொதோ தபா படிக்கப்போறேன். நெனச்சாலே என்னன்னவோ ஆகுது. ஒடம்புக்குள்ளாற ஜிவ்வுனு ஏதோ ஓடுது!

    நீ கலக்கு தல!

    ReplyDelete
    Replies
    1. பழி வாங்கும் புயல் எனக்கு மொத வாசிப்பே சகோதரரே :)
      கலர் கனவுகளுடன் வெய்டிங் :)

      Delete
    2. என் கண்ணில் படாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.(லயன் காமிக்ஸில் 12 புத்தகங்கள் என் கண்ணில் கூட படாதவை.! அவைகளில் இதுவும் ஒன்று.!!!

      Delete
  41. ///ரெகுலர் இதழ்கள் 4 + 1 கலர் edition + 1 Black
    & white edition + 6 முத்து மினி இதழ்கள் = 12 புக்ஸ்
    in total///---ஜூன் மாத இதழ்கள் எண்ணிக்கை ,ஒரு சந்தா அளவிற்கு முன்னேற்றம் ..."மாற்றம் முன்னேற்றம் "--தமிழ் காமிக்ஸ் க்கே இனி பொருந்தும் ...
    வருடத்திற்கு 12 வழக்கம் போய் இனி மாதா மாதம் 12 புத்தகங்கள் வெளிவர வாழ்த்துக்கள் சார் ...

    ReplyDelete
  42. அந்நாட்களில் என்னுள் "தல" ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கு நமக்கொரு பொதுவானதொரு அடையாளம் என்பது எனக்கு எல்லையிலா சந்தோஷம் நல்கிடும் ஒரு விஷயம் ! ///
    பழி வாங்கும் புயல் 92 அல்லது 93.ல் வந்தபோது நானும் கிட்ஆர்டினும் வாங்கி படித்தோம் ஒரே புக்காக.அப்போதே கிட் தொலைத்துவிட்டார் அதன்பிறகு அதை பார்க்கவில்லை கதை சுத்தமாக மறந்து விட்டது.ஆனால் அந்த நினைவுகளின் தாக்கம் மறக்கவில்லை.அதை இப்போது படிக்கும்போது பழையதாக இருந்தாலும் புதியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. //புக்கை கிட் தொலைத்துவிட்டார்//--ஜேகே என்னயா சொல்றீங்க ,லேசா எனக்கு மயக்கம் வர்ர மாதிரி இருக்கு...

      Delete
    2. டெக்ஸ் ஜி இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தொலைந்த புக்கால் உங்களுக்கு எப்படி மயக்கம் வரும்?

      Delete
    3. புக்கை படிக்க கொடுத்தா கிட் தொலைச்சிடுவார்னு தானே சொன்னீங்க ஜேகே ???...

      ஆமா டெக்ஸ்ஜி,நான் சொன்னதற்கு அதான் அர்த்தம்...

      அப்ப எனக்கு லேசா மயக்கம் வரும்தான்,அது அப்டிதான்...

      Delete
    4. ஹாஹா .....ஐயோ ஐயோ ....பாவம் டெக்ஸ் நீங்க ....என்னமோ போங்க ...;-)

      Delete
    5. ///
      அப்ப எனக்கு லேசா மயக்கம் வரும்தான்,அது அப்டிதான்...///

      மாம்ஸூ!
      அது சோடாவுக்கான மயக்கம்னா ஏமாந்து போயிடுவிங்க. கார்ப்ரேசன் தண்ணியத்தான் பிடிச்சு கொடுப்போம். அதனால நீங்களா எழுந்திடுறது பெட்டர். :-)

      பின் (முக்கிய) குறிப்பு.
      பழி வாங்கும் புயல், ஸ்கூல் படிக்கும்போது வாங்கியது. அப்போ பாக்கெட் மணியெல்லாம் கிடைக்காது. மளிகை கடைக்கு போய்ட்டு வரச்சொல்லி காசு கொடுத்தா ஒரு ரூபா ரெண்டு ரூபா விலை அதிகமா சொல்லி (உழைத்து) சேகரித்த பணத்தில்தான் காமிக்ஸ் வாங்குவோம். வீட்டிற்கு தெரியாமல் பத்திரப்படுத்த வேண்டிய கட்டாயத்தால் அந்த காலகட்டத்தில் நான் தொலைத்த பல இதழ்களில் இதுவும் ஒன்று.
      அந்த புக்கிற்கு நானும் ஜெயக்குமாரும் கோ ஓணர்ஸ்.
      நாங்க, எங்களுக்கு சொந்தமான பொருளை மட்டுமே கேர்லெஸ் ஆக ஹேண்டில் செய்வோம். இரவல் பொருட்களை கண்ணுக்கு மேலாக காப்பதில் டாக்ரேட் வாங்கியிருக்கோம்.

      எனவே,

      நோ மயக்கம்ஸ்!!!! :-)

      Delete
    6. /////மளிகை கடைக்கு போய்ட்டு வரச்சொல்லி காசு கொடுத்தா ஒரு ரூபா ரெண்டு ரூபா விலை அதிகமா சொல்லி (உழைத்து) சேகரித்த பணத்தில்தான் காமிக்ஸ் வாங்குவோம். //...


      :-))))

      Delete
    7. நாங்க நான் வெஜ்ல உழைத்தது (?)தான் அதிகம், சிக்கன் 2கிலோ வாங்க சொன்னா ஒண்ணே முக்கா கிலோ தான் வாங்குவோம்.இதுல மீன் வாங்கும் வாரம் தான் , எனக்கு கொள்ளை பிரியம் ,அரைக்கிலோ வரை அப்பவே உழைப்போம்...ஹி..ஹி...
      இன்னும் தக்காளி ,வெங்ககாயங்கள் தான் நமக்கு பணம் கொழிக்கும் அட்சய பாத்திரங்கள் ...

      Delete
  43. //நமது பைண்டிங் நண்பரை
    ஒரு கேஸ் பன்னீர் சோடா சகிதம் சென்று நலம்
    விசாரிக்க நம்மாட்களை அனுப்பிட வேண்டி
    வரும் !.அவரைத் தெளிய
    வைத்துத் தெளிய வைத்து சாத்திக்
    கொண்டே இருக்க வேண்டி வரும் - அடுத்த 10
    நாட்களுக்கு !///---ஆசிரியர் சார் ஹா..ஹா..நல்லா விசாரிங்க சார் , நல்லா. நீங்கள் நல்லா விசாரிக்க விசாரிக்க தான், எங்கள் விசாரணை லேசா இருக்கும் சார் ....

    ReplyDelete
  44. எடி ஸார் நேரமே இல்லை என்று கூறிவிட்டு இவ்ளோ நீள பதிவை போட்டுத்தள்ளிவிட்டீர் சூப்பர்.
    இம்மாதம் 12 புத்தக தாயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நமது தலைவரின் சார்பாக ஜண்டுபா(ல்)ம் அளிக்கப்படும் ஹி ஹி

    ReplyDelete
  45. விண்வெளி கதையை பொறுத்த வரை இந்திரஜால் ...ராணியில் ...மேகலாவில் படித்து வெறுத்தது தான் அதிகம் சார் ...அதன் காரணமாகவே சயின்ஸ் ...விண்வெளி என்றாலே அலர்ஜி ஆகிறது ....நமது இதழில் இதுவரை விண்வெளி கதை படித்ததில்லை ...நமது மொழி பெயர்ப்பில் சிறப்பாக அமையலாம் தான் ...எனவே ஒரே ஒரு ட்ரையலர் வெளியிட்டு பார்க்கலாம் சார் ...சிறப்பாக இருப்பின் தொடரலாம் ..

    ReplyDelete
    Replies
    1. தலைவரே.!

      விண்வெளிக்கதைகள் எனக்கும் அலர்ஜியோ அலர்ஜி.!( இது என் கடமை.என் உரிமை.! என்ற முறையில் எனது தனிப்பட்ட கருத்து.!)

      பூமிக்கொரு பிளாக்மெயில் மாடஸ்டி கதையை வாங்கிவிட்டு நிறையநாள் படிக்காமல் வைத்திருந்தேன்.! இருந்தாலும் மாடஸ்டி கதையில் கப்ஸா கண்றாவியெல்லாம் இருக்காது என்று துணிந்து படித்தேன்.பிறகுதான் அட்டகாசமான கதை என்று தெரிந்தது.!

      Delete
    2. மடிப்பாக்கம் சார் ...உங்கள் கடமையும் உரிமையும் அனைத்தும் என கடமையிலும் உரிமையிலும் ஒத்து போய் விடுகிறது ...;-)

      Delete
  46. அரையாண்டு முடிவில் முழு ஆண்டுக்கான புத்தகங்கள் கைகளில் ஏந்த இருக்கிறது ...உங்களுக்கும் ...உங்கள் பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் சார் ...;-)

    ReplyDelete
  47. லக்கிலூக் .....கிராபிக்ஸ் ...


    கிராபிக்ஸ் ....லக்கி லூக் .....


    லக்கி கிராபிக்ஸ் ....கிராபிக்ஸ் லக்கி ...


    கிராபிக்ஸ் லூக் .....லூக் கிராபிக்ஸ் ...


    லக்கிராகிபிக்ஸ் லூக் ....



    ஹீம் ...எப்படி படித்தாலும் குயப்பமா இருக்கே ...லக்கி கிராபிக்ஸ் ல வர்றாரா ....கிராபிக்ஸ்ல லக்கி வர்றாரா ....

    ஒண்ணுமே புரியலையே ....;-)

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைல மொதோ தபா லக்கிலூக் கதையே புரியாமப் போய்டுமோன்னு தலீவருக்கு பயம் வந்துடுச்சு போல! :P

      Delete
    2. ஹாஹா ....பயமா கீது செயலாலரே ....

      Delete
    3. ஆசிரியருடைய லக்கி லுக் கிராபிக்ஸ் suggestion இப்பிடி ஆகும்னு எதிர் பார்கல
      :D :D :D :D :D

      Delete
    4. ஆனா ..லக்கி கைவிட மாட்டார்ன்னு பலமாகவே நம்புறேன் ....;--)

      Delete
    5. ////லக்கிலூக் .....கிராபிக்ஸ் ...


      கிராபிக்ஸ் ....லக்கி லூக் .....


      லக்கி கிராபிக்ஸ் ....கிராபிக்ஸ் லக்கி ...


      கிராபிக்ஸ் லூக் .....லூக் கிராபிக்ஸ் ...


      லக்கிராகிபிக்ஸ் லூக் ..../////



      :-)))))

      Delete
    6. தலைவரே.!

      இன்றைய தலைமுறையினரு கி.நா.விண்வெளிக்கதைகள் ரசிப்பதைக் கண்டும் , அதேவேளையில் நம்மைப் போன்றவர்கள் இந்த கதைகளை பார்த்து பின்னங்கால் பிடறி அடிக்க தெறித்து ஓடுவதை நினைத்தும் ,இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு காமிக்ஸ் ரசனையை எடிட்டர் மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் தூக்கத்தில் திடுக்கிட்டு அடிக்கடி எழவதுண்டு.! ஆனால் மும்மூர்த்தி கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டும் அவைகள் ரவுண்டு கட்டி அடிப்பதை பார்த்து அப்பாடா நமக்கு ஆபத்து வெகுதொலைவில் இருப்பதாக மனம் திருப்தி அடைகிறது..!.!

      Delete
  48. இப்ப எனக்கு என்ன ஒரு வருத்தம்ன்னா ...ஆசிரியர் அனைத்து புத்தகங்களையும் சென்னை புத்தக காட்சி அன்று தான் சந்தா நண்பர்களுக்கும் அனுப்ப போகிறார்.....நான் தபாலை பாக்குறதா ....சென்னையை பாக்கிறதா ....தபாலை வாங்கிட்டு சென்னைக்கு பறக்குறதா ...சென்னைக்கு வந்துட்டு தபாலை பறிக்கறதா ....

    லக்கி கிராபிக்ஸ்ல வர்ற அறிவிப்பை பார்த்தவுடன் எல்லாமே குயப்பமா வருதே ...

    ReplyDelete
    Replies
    1. கவலை நீங்குக தல,புத்தக காட்சி 1ம் தேதியே ,என் பெயர் டவுசரை தவிர மற்றவை விற்பதற்கு வந்து விடும் னு நினைக்கிறேன் ....
      ரெகுலர் சந்தா +மினி வழக்கம் போல 1ம் தேதிகளில் கிடைத்து விடும்.
      என் பெயர் டைகரை ஆசிரியர் கையால் சென்னையில் பெற்று கொள்ளலாம் ...

      Delete
  49. தோழர் K.பரணிதரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் இன்று போல் என்றும் இனிதாக வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஏடிஆர் சார் ...;-))

      Delete
  50. கேரளாவிலுள்ள செய்தி இதழ்களில் நம்ம காமிக்ஸ் பற்றிய விமர்சனங்களும் ரசிப்பும் வெளியாகி உள்ளது மகிழ்ச்சி குடுகிறது ஆசிரியரே :)
    காமிக்ஸ் காதல் வாழ்க

    ReplyDelete
  51. மாடஸ்டி பற்றி பேச்சு இல்லை என்றால் இந்த பக்கம் வர மாட்டிங்கள சகோதரரே

    ReplyDelete
  52. விஜயன் சார்.., cinebook வெளியிடும் Yakari தொடர் ஆங்கிலத்தில் படித்தேன்.. மிக அருமையாக உள்ளது.. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும்.. உரிமை வாங்கி தமிழில் வெளியிடலாமே..

    ReplyDelete
  53. விஜயன் சார்.., cinebook வெளியிடும் Yakari தொடர் ஆங்கிலத்தில் படித்தேன்.. மிக அருமையாக உள்ளது.. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும்.. உரிமை வாங்கி தமிழில் வெளியிடலாமே..

    ReplyDelete
  54. என் பெயர் டைகரை ஆசிரியர் கையால் சென்னையில் பெற்று கொள்ளலாம்..

    #####

    டெக்ஸ் அது இனிமை என்றாலும் சந்தா கட்டி ஆகி விட்டதே ....மேலும் போன முறையே சந்தா நண்பர்கள் பலர் ஆசிரியர் இடம் நேரில் பெற்று கொள்ள ஆசைப்பட்டு நேரிலும் வாங்கி கொள்ள ...ஆசிரியர் அலுவலகத்தில் இருந்து கொரியரிலும் பலருக்கு அனுப்பி விட ..வாங்கிய பிரதியை நண்பர்கள் திரும்ப அனுபவும் சிரம பட நேர்ந்ததே ....எனவே சந்தா கட்டாத நண்பர்கள் நேரிலும் ...சந்தா கட்டிய நண்பர்கள் (கூடுதல் பிரதி தேவைபடதோர் ) கொரியரிலும் வாங்கி கொள்வதே நமக்கும் ...ஆசிரியருக்கும் சரியாக இருக்கும் ..;-)

    ReplyDelete
    Replies
    1. அனுபவும் /அனுப்பவும் ....

      தேவைபடதோர் /தேவைப்படாதோர்

      எனவும் படிக்கவும் ..;-)

      Delete
    2. அப்படி ஒன்றும் சிரமம் ஆகலயே !...மேலும் என்ன ப்ளானிங் என ஆசிரியர் சார் சொல்லட்டும் ....ஆனால் என் பெயர் டைகரு ,எக்ஸ்ட்ரா காப்பி வாங்குவதெல்லாம் ஆகாது....

      Delete
    3. நம்ப நண்பர் ரம்மியே அது போல இரண்டு பிரதிகள் வாங்கி ...பிறகு திருப்பி அனுப்புவதற்கு நேரமில்லாமல் அடுத்த புத்தக காட்சியில் ஆசிரியரிடம் நேரில் கொடுத்தாரே ...அப்படி பட்ட சிரமங்கள் எதற்கு ...?என்பதே என் கேள்வி டெக்ஸ் ..;-)

      Delete
    4. ஓகே தல, கடைசி நேரத்தில் முடிவு செய்யலாம்

      Delete
  55. இன்றைய பதிவில் நண்பர்கள் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கான காரணம் நாளை வாக்களிக்க நண்பர்கள் அவரவர் சொந்த இடத்திற்கு பயணம் செய்யும் மும்மரத்தில் இருப்பர் போல ....;-)

    ReplyDelete
  56. ஈரோடு போராட்டக்குழு, சேலம் கரகாட்டக்குழுவைத் தொடர்ந்து கோவையில் இரகசிய கூலிப்படை ஒன்றும் நேற்றிரவு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நமது புலனாய்வுச் செய்தியாளர் கூறியதாவது:-

    முறுக்கிய மீசை, ஒட்டப்பட்ட மரு சகிதமாக வியாபாரிகள் போன்ற மாறுவேடத்தில், நமது கூலிப்படை உறுப்பினர்கள் கோவை ஸ்டீல்க்ளா தலைமையில் ஆறுபேர் கோவை அங்காடி ஒன்றுக்குச் சென்று, அங்காடி அதிபரை அவர் அறையிலேயே முற்றுகையிட்டனர்.

    அறிமுகமெல்லாம் முடிந்தபின்னர்..

    அங்காடி அதிபர்: நீங்க சீயக்காய் வியாபாரி இல்லையா? பாக்கெட் என்ன விலைக்கு தருவீங்க சார்..?

    ஈ.வி: கிலோவா? ஹிஹிஹி! சீயக்காயை கிலோவுலல்லாம் வாங்க முடியாது.. சிட்டிகை கணக்குலதான் தருவோம். ஒவ்வொரு சிட்டிகையா விரல்ல எடுத்து நீங்கதான் அளந்து வாங்கிக்கணும். உங்களுக்கு எத்தனாயிரம் சிட்டிகை சீயக்காய் தேவைப்படும்னு சொல்லிட்டீங்கன்னா அனுப்ப வசதியா இருக்கும்.

    அ.அ(அதிச்சியை அடக்கிக்கொண்டு): சார்.. நீங்க உடைச்சகடலைதானே.. மூட்டை என்ன விலைன்னு..?

    செ.அ: மூட்டையா.. உடைச்சகடலைல்லாம் எண்ணிதான் வாங்கிட்டுப் போகணும்.. எத்தனை லட்சம் வேணும்னு சொல்லுங்க முதல்ல!

    அ.அ(தலைசுற்றலைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்): சார் நீங்க? நல்லெண்ணைதானே.. லிட்டர் என்ன விலைன்னு சொல்லிட்டா தேவலை..

    ஆதி: சேச்சே.. நல்லெண்ணெய்லாம் ஸ்பூன் கணக்குதான் சார். எத்தனை ஸ்பூன் வேணும்னு சீக்கிரம் சொல்லுங்க.. லாரிக்கு சொல்லணும். அளந்து பாக்க எப்ப வர்றீங்க?

    அ.அ(கொஞ்சம் ஆசுவாசமடைந்து): குங்குமப்பூ வியாபாரிதானே நீங்க? கிராம் என்ன விலைனு சொல்லமுடியுமா?

    ம.வி: குங்குமப்பூ கிராமிலேயா? பிச்சு பிச்சு! நாங்க லாரிகணக்குலதான் தருவோம். ஒரு லாரி நாலு கோடி ரூவாதான். வெளிய நாலைஞ்சு லாரி நிக்குது. எத்தனை லாரி வேணும்னு சொல்லும்யா சீக்கிரம்!

    அ.அ மயக்கம்போட்டு விடுகிறார். சேலம் டெக்ஸ், ரம்மி ஆகியோர் சுற்றி நின்று பன்னீர் சோடா அடித்து அவரை எழுப்புகின்றனர்.

    கி.ஆ: இதுவரை நடந்தது பெரிசில்லீங்க.. இனிதான் உமக்கு இருக்கு. இப்ப பாரு.. அண்ணே வாங்கண்ணே. உங்க கையால இவருக்கு தண்டனை குடுங்க!

    எல்லோரும் அவரை சேரோடு இருத்திப் பிடித்துக்கொள்ள, முதலில் ATR வருகிறார்.

    ATR: நான் ஒரு மிகப்பெரிய குற்றத்தைச் செய்யப்போகிறேன். எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஐயா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க..

    என்று சொல்லிவிட்டு அ.அ தொடையில் நன்றாக சிவக்கும்படி கிள்ளிவைத்து விடுகிறார். கிள்ளிவிட்டதும் அ.அ ஊரே கேட்கும்படி அலற நம் குழு அனைவரும் வீரப்பா போல சிரிக்கின்றனர். ATR மட்டும் பாவம் செய்துவிட்டதைப்போல சோகத்தில் மூழ்குகிறார். கதை இன்னும் முடியவில்லை. எல்லோரும் அ.அவை விடுவித்தபின்பும் அவரால் சேரை விட்டு எழமுடியாதபடி பாதி மயக்கத்தில் கிடக்கிறார். எல்லோரும் வரிசையில் நிற்க சில்லவுட்டில் தலீவர் அங்கே தோன்றுகிறார்.

    எந்தப்பொருளை எந்த அளவைகளின்படி வாங்கக்கூடாது என்பது பற்றி ஒரு குயர் பேப்பரில் எழுதப்பட்ட நீள் கடிதத்தை வாசிக்கத்துவங்குகிறார். நல்ல வேளையாக நம் குழு அனைவரும் காதில் பஞ்சை வைத்துக்கொள்கிறார். வாசிப்பு முடிய காலை விடிந்துவிடுகிறது. வாசிப்பை முடித்துவிட்டு எல்லோரும் குங்குமப்பூ ஏற்றிவந்த லாரியில் ஏறி தப்பிவிடுகின்றனர். அ.அவின் நிலை என்னவாயிற்று என்பது நாளை காலை பேப்பரைப் பார்த்தால்தான் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி, சந்தடி சாக்குல ATR-அ வெச்சி காமடி பண்ணிட்டீங்களே. இப்ப அந்த மனுஷன் மறுபடியும் feel ஆக போறாரு.

      Delete
    2. ஹா ஹா ஹா!! :))))))))

      ஆதி! செம! செம!!

      குறிப்பா, ATRன் சோகமும், தலீவரின் 1 குயர் நோட்டும்!! ஹாஹாஹா! :))))))))))))

      Delete
    3. இதுல எனக்கு ஒரு ரோலும் இல்லையா

      பூஊஊஊவ்வ்வ்.. பூஊஊஊஊவ்வ்வ்....

      Delete
    4. ஏனப்பா ரின் டின் நாலஞ்சு வருசமா உழைத்து இந்த வேசத்தை வாங்கியுள்ளோம்....நாலஞ்சு பதிவா வந்துட்டே வேசம் வேணும்னா அது பேராசையா இல்லியா ...

      Delete
    5. ஆதி சார்.!

      அருமை.! அருமை.!நல்ல டைமிங்,கற்பனை வளம்.!

      Delete
    6. எங்க இளவரசியை பார்த்துமா அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டார்.??? என்ன கொடுமை சார்.!

      Delete
    7. ஆத்தூர் ஆதி

      எனக்கு ரோல் தராத்தை வன்மையாக வாலாட்டி கண்டிக்கறேன்

      Delete
    8. பாச்சான் உருண்டைய ஒவ்வொரு பாச்சானுக்கும் குடுத்து பாத்து வாங்க சொன்னனே...நம்ம சகோ கடல் யாழ் மல்லிகைப் பூவ கையில கையில எடுத்து ...எப்புடி அரிசி மல்லிகை பூவாட்டம் இருக்கான்னு பாத்துக்க சொல்லி மிரட்டுனத விட்டுட்டீங்கள..

      Delete
    9. திரு.சரவணன் சீனிவாசன் ஆதி என்னை கிண்டல் பண்ணுவதால் "மறுபடி அந்த மனுஷன் feel ஆக போறாரு! " எதற்கு இந்த வசனம்? எதற்காக நான் feel ஆகனும்? இதென்ன கிண்டல் இதைப் போல பலமடங்கு கிண்டல்களை உங்கள் வயதில் நானும் செய்திருக்கிறேன். உங்களது கிண்டலின் எல்லை இணையம் வரை மட்டுமே இல்லையா? எங்களுக்கோ நடுவீதியில் சட்டையை பிடித்து அடித்துக் கொள்ளும் வரை போயுள்ளது.வெறும் A.T.R. என்பதைவிட அதனுடன் ஆதி அவருக்கு பிடித்த கெட்ட வார்த்தைகளை சேர்த்துக் கொண்டால் இன்னும் பலரை சந்தோஷப் படுத்தி அவரும் சந்தோஷமடையலாமே.

      Delete
    10. ஏனப்பா ரின் டின் நாலஞ்சு வருசமா உழைத்து இந்த வேசத்தை வாங்கியுள்ளோம்....நாலஞ்சு பதிவா வந்துட்டே வேசம் வேணும்னா அது பேராசையா இல்லியா ...

      Delete
    11. Very good athi sir
      Always keeping things lighter make this blog super

      Delete
  57. ROFL

    //எந்தப்பொருளை எந்த அளவைகளின்படி வாங்கக்கூடாது என்பது பற்றி ஒரு குயர் பேப்பரில் எழுதப்பட்ட நீள் கடிதத்தை வாசிக்கத்துவங்குகிறார். நல்ல வேளையாக நம் குழு அனைவரும் காதில் பஞ்சை வைத்துக்கொள்கிறார்.//

    தலீவரே...semma

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்....நண்பரே ஆதி. சிரித்து சிரித்து வயிறே வலி...சென்னையில் ஒரு பவன்டோ வாங்கி தந்து பரிகாரம் செய்து விடுங்கள் ....

      Delete
    2. பவண்டோவில் பலகாரமா?
      நேக்கு ஒண்ணு

      வாயில் ஜலம் ஒழுக்கும் படங்கள 11

      Delete
    3. //சிரித்து சிரித்து வயிறே வலி//

      +9

      Delete
    4. ஒருவனை ஒருவன் கிண்டல் என நினைத்து பிதற்றுவதை ரசிக்க இத்தனை பேரா? வயிறு வலிக்கும் அளவிற்கு இதில் என்ன அப்படி ஒரு நகைச்சுவை? ஒரு வேளை சொன்னவன் நமக்கு வேண்டியவன், அவன் குறிப்பிட்டவன் நமக்கு வேண்டாதவன் என்பதன் வெளிப்பாடா? என்னை சம்மந்த படுத்தியதால் எனக்குள் இந்த கேள்வி எழவில்லை. உங்களிடத்தில் நானிருந்தால் எனது கண்டனத்தை பதிவு செய்திருப்பேன். அடுத்தவன் பெயரை உன் சௌகரியத்திற்கு பயன் படுத்தும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது என்று.

      Delete
    5. //ஒருவனை ஒருவன் கிண்டல் என நினைத்து பிதற்றுவதை ரசிக்க இத்தனை பேரா? வயிறு வலிக்கும் அளவிற்கு இதில் என்ன அப்படி ஒரு நகைச்சுவை? ஒரு வேளை சொன்னவன் நமக்கு வேண்டியவன், அவன் குறிப்பிட்டவன் நமக்கு வேண்டாதவன் என்பதன் வெளிப்பாடா?//

      ஷேம் ஷேம் பப்பி ஷேம் நண்பர்களே ;((

      Delete
    6. ஆதியின் ஜாலியான கற்பனைக்கு உயர்திரு.ATR அவர்களின் ரெஸ்பான்ஸ் அதிர்ச்சியளிக்கிறது!

      எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

      :( :( :( :( :(

      Delete
    7. எனக்கொண்ணும் தெரியாதுங்க. நான் வெளியூரு.!!!

      Delete
    8. //பொழுதுக்கும் உங்களோட புலம்பல்களை பார்த்து கொண்டும் ,படித்து கொண்டும் இருக்கனும்னு எங்களுக்கு என்னா தலை எழுத்தா????...

      நகைச்சுவை யாத்தான் பேச உங்களுக்கு வராது ,நண்பர்கள் யாராவது நகைச்சுவை சொன்னால் அதை ரசிக்க வேணாமே ,அட்லீஸ்ட் குறை சொல்லாமலாவது இருங்கள்...

      வயிறு வலி வரும் அளவுக்கு இதில் நகைச்சுவை இல்லாமல் வேறென்ன வெங்காயமா உள்ளது???//

      அட என்னா ஒரு தோழமை உணர்வு ? காமிக்ஸ்னா காமிக்ஸ் தான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு டோய் ;(

      Delete
    9. @சேலம் டெக்ஸ்,
      மாற்றுக்கருத்தையும் சாத்வீகமாக தெரிவிக்கலாமே! அல்லது அதற்காகவே காத்திருக்கும் நண்பர்களுக்கு நாமே வாய்ப்பளித்தது போலாகிவிடும்!

      Delete
    10. ஆம் டெக்ஸ் சார்.! பொதுவாக இது யார் மனத்தையோ , தனி மனிதனை இழிவுசெய்வதாகவோ தேன்றியதாக தெரியவில்லை.!இருந்தாலும் மன்னிப்பு கேட்டுவிட்டு , தாண்டி போயிடலாம் சார். எங்கடா புகையுது பெட்ரோலை ஊத்தலாம் என்று பெட்ரோல் டின்னுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு வாய்ப்பு தரவேண்டாமே.! இதற்கு அருமையான வழி.கண்டுகொள்ளாமல் தாண்டி செல்வதே.!இனி மேல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.. கலகலப்பான கல்யாணத்தில் ரகளை நடந்தமாதிரி ஆகிவிட்டது.!

      Delete
  58. மேலே உள்ள டெக்ஸ் கலர் பக்கம் பழி வாங்கும் புயலில் உள்ளதா நண்பர்களே

    ReplyDelete
  59. ஜூலையின் ஆண்டு மலர் வெளி வர இருப்பது எனக்கு தலை கால் புரியாத மகிழ்ச்சி ஸார். ஒரே மாத்த்தில் 12 இதழ்கள் வெளி இருப்பது ஒரு சாதனை ஸார். Sci-fi இதழை வெளியிட்டு ஒரு முன்னோட்டம் பார்க்கலாமே. பெட்டியின் இதழ்
    இங்கு மறுபதிப்பு காண உள்ளதால் நாமும் ஒரு முறை சான்ஸ் வழங்கி பார்க்க கூடாது?

    ReplyDelete
  60. // ஜூலையின் ஆண்டுமலரினில் பிரின்ஸ் + ரிப்போர்டர் ஜானி + ரோஜர் என்ற combo வை ஒரே இதழாய் ஒன்றிணைத்து வெளியிட சம்மதம் வாங்கி விட்டோம் ! So நமது பெல்ஜிய backbench boys ஒன்றாய் களமிறங்கப் போவது நம் இதழ்களில் முதன்முறையாக !! //

    Highlight of this Year, after long time we are going to see these characters in a single book.

    ReplyDelete
  61. // லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ரூ பகுதியாய் - "லக்கியைப் போட்டுத் தள்ளியது யார் ?" என்றதொரு கிராபிக் நாவல் (!!!) தயாராகி அழகாய் விற்பனையாகி வருகிறதாம் !! கி.நா. ஜோதிக்கு லக்கியை தீப்பந்தம் ஏந்தச் செய்யலாமா ? உங்கள் எண்ணங்கள் பிளீஸ் ? //

    கார்டூன் பானி ஓவியம் இருந்தால் மட்டுமே முயற்ச்சிக்கவும், லக்கி லுக்கை கார்டூன் வடிவத்தில் பார்த்துவிட்டு இப்பொது வேற ஓவிய பாணியில் பார்க்க முடியாது

    ReplyDelete
  62. // காந்தக் கண்ணழகி பெட்டி பார்னோவ்ஸ்கி-யின் பிரெஞ்சு ஆல்பம் இன்னொரு சுற்று அங்கே அச்சாகிறதாம் !! நாமும் அந்தக் கூட்டத்தில் இணைந்து கொடி பிடிப்போமா ? //
    கதை நன்றாக இருந்தால் முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  63. // Sci -fi க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்ப்போமா ? //
    Sci -fi கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :(

    ReplyDelete
  64. // "இல்லே..இதெல்லாம் கிலோ என்ன ரேட்னு சப்ளை பண்ணுவீங்கே ?" //
    ஒரு அங்காடி வைத்து நடத்துபவருக்கு இது கூட தெரியாதா சார், ஆனந்த விகடனிடம் இப்படி கேப்பாரா ? எனகென்னமோ விலையை குறைத்து அவர் அதிக லாபம் பார்பதற்காக அப்படி நடந்து கொண்டிருபாரோ

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகேயன் சார் ..அது உண்மையாக இருப்பினும் கமிஷன் அதிக படுத்தி கேக்கலாம் ...கிலோ கணக்கில் கேட்பது என்பது .....;-((

      Delete
    2. அதைதான் நானும் சொல்லவந்தேன் தல, கமிஷன் வேனும்முனா கேக்க வேண்டியதுதானே - அதை விட்டுபுட்டு இப்படி பேசிவிட்டாரே என்பதுதான் என் ஆதங்கமும்.

      Delete
    3. //அதைதான் நானும் சொல்லவந்தேன் தல, கமிஷன் வேனும்முனா கேக்க வேண்டியதுதானே//

      எப்படிப்பட்ட வார்த்தை இது ? இப்படி எல்லாம் எழுதலாமா என்பதை செனாஅனா விளக்கலாமே ? plz...

      Delete
  65. XIII இன் Return to the greenfalls இப்பொழுதுதான் ஆங்கிலத்தில் படித்து முடித்தேன் . யாராவது இதற்கு அடுத்த படைப்பு தமிழில் ஏற்கனவே வந்துவிட்டதா என்று சொல்லவும்.
    XIII கடைசி பாகம் Legacy of Jason McClane ஜூன் மாதமே வந்தால் ஒன்றும் மோசம் போய்விடாது அய்யா .

    லக்கி லுக் 70 கண்டிப்பாக தமிழில் வேண்டும் . இல்லையென்றால் cinebookக்காக தேவுடு காக்க வேண்டி இருக்கும் .

    ReplyDelete
  66. மக்களுக்கு தெரிந்து இருப்பினும் . XIIIஇன் முகப்புத்தக இணைப்பு - https://www.facebook.com/XIII.BD
    மற்றும் இணையதளம் http://www.treize.com/

    ReplyDelete
  67. ஆதி சார் ....செம ...செம .....படிக்க ..படிக்க சிரிப்பு தாங்க முடிய வில்லை ....நல்ல கற்பனை வளம் ....;-)))

    ReplyDelete
  68. மக்கழே!

    போனோமா... கையிலே மை வாங்கினோமா... ஓட்டுப் போட்டோமா... திரும்பி வந்தோமான்னு இருக்கணும் நீங்க! ballot sheetஐ விரிச்சுப் பார்த்தாக்கூட ஏதோ காமிக்ஸ் பக்கம் மாதிரிதான் இருக்கும். உடனே'சேகரிப்புல வச்சிக்கிடுவோம்'னு நினைச்சுக்கிட்டு பாக்கெட்ல வச்சுகிட்டு வந்துடாதீங்க!

    போனா தபா ஓட்டுப் போட்டப்ப எனக்கு தோனினதைத் தான் சொல்றேன்! அனுபவஸ்தவங்ய்க சொன்னா கேட்டுக்கணும் சாமி! ;)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா. ...;-)

      என்ன காலையிலேயே எல்லோரும் சிரிக்க வச்சுட்டு இருக்காங்க ...ரொம்ப சந்தோசமா இருக்காங்க போல மக்கள் எல்லாம் ...;-)

      Delete
    2. அனுபவஸ்தவங்ய்க// பிரித்துப் பொருள் கூறவும்! :-))))))

      Delete
    3. அனு + பவுசு + தவம் + இங்க

      அதாகப்பட்டது, அனு எனப்படும் யுவதி பவுசாக தவம் புரியும் இடம் இங்குதான் என்று பொருள். !!!

      Delete
  69. Author ஆட்டோ ஆதி அவர்களே,

    ஹிஹிஹி!!! :):):)

    ReplyDelete
  70. அப்புறம் ஏடிஆர் சார் ...நோ ...டென்சன் ..ரிலாக்ஸ் .....ப்ளீஸ் ....இங்கே பாதி நண்பர்கள் மேல் யாரும் யாரையுமே நேரில் பார்த்தது கிடையாது ....இங்கே பங்கு கொள்வதன் மூலம் தன்னால் காமிக்ஸ் நண்பர்கள் மனதால் நெருங்கி விட்டார்கள் ...அந்த நட்பின் அடிப்படையில் ஜாலியாக கலாய்ப்பதை தவறாக நினைக்க வேண்டாம் ...உங்கள் தோள் மேல் கை போட்டு பேசும் நண்பர்கள் ஒன்று கூடி கலந்துரையாடும் போது ஒருவருக்கொருவர் ஜாலியாக சீண்டி கொள்வதில்லையா ....அப்போது நாம் கோபித்தா கொள்கிறோம் ....அது போல இங்கே நமது நண்பர்கள் நெருங்கி விட்டார்கள் ...நீங்கள் தள்ளி தள்ளி போய் விடுகிறீர்களே ....வழக்கம் போல வாருங்கள் சார் ....இங்கே கூடும் பொழுது நண்பர்கள் யாவரும் பதினாறு வயதை தாண்டி போவதில்லை ....நீங்களும் அவ்வாறே வாருங்கள் ....நோ....டென்சன் ....கூல் ....;-))

    ReplyDelete
    Replies
    1. //இங்கே கூடும் பொழுது நண்பர்கள் யாவரும் பதினாறு வயதை தாண்டி போவதில்லை ....நீங்களும் அவ்வாறே வாருங்கள் ....நோ....டென்சன் ....கூல் ....;-))//

      ஐயா சாமி , காலையிலேயே அரசியல்வாதி போல சீன் போடாதீரும்..

      16 வயதினிலே" சப்பானி தான் ஞாபகத்தில் வராரூ ;-)))

      Delete
    2. அப்படியா பப்பி ....உமக்கு 61 வயது என அறியாமல் போனதற்கு மன்னிக்க ....இன்னும் விளக்க ஆசை ...ஆனால் ஆசிரியரிடம் கலகத்தை விதைக்க என்றே வரும் முகமூடி பப்பி களிடம் இனி விவாதிக்க மாட்டோம் ...என உறுதி கூறியுள்ளதால் நாலு கால் பாய்ச்சலில் இந்த இடத்தில் இருந்து ஜம்ப் செய்து கொள்கிறேன் ...பப்பி கடியில் இருந்து தப்பிக்க ...;-)

      Delete
    3. பரணி அருமையாக சொன்னீர்கள் ....நண்பர் atr அவர்களே நண்பர்கள மட்டுமே கலாய்க்க முடியும்...கேலி என்பது வேற வகை...நீங்க தயவு செய்து இங்க உள்ளவங்கள நண்பனா ஏத்துக்கங்க

      Delete
  71. @ATR, உங்களை மீண்டும் வந்து பதிவிடுங்கள் என்று அழைத்த நண்பர்களுள் நானும் ஒருவன். சக நண்பர்கள் என்ற முறையில் கூறிய சாதாரண வார்த்தைகள்தான் அவை. நீங்க இவ்வளவு sensitive னு தெரியாது சார்

    ReplyDelete
  72. நண்பர்களே, கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் இன்னொரு குட்டிக் கலகத்துக்கு காரணமாகிவிட்டேன் போலிருக்கிறதே.. அது சரி, நமக்கும் வேறு எப்படித்தான் பொழுது போகிறதாம்? குறைவோ, அதிகமோ வயதில் மிக அதிக வித்தியாசம் கொண்டோரிடம் (அறிமுகம் இல்லாதோரிடம்) விளையாட்டு வைத்துக்கொள்வதில்லை. இங்கு தவறிவிட்டேன் போலிருக்கிறது. என் விளையாட்டுக்கான கமெண்டுகளில் ஒன்றைக் கவனிக்கலாம். ரிண்டின்கேன் எனக்கு ஏன் ஒரு பாத்திரம் இந்த கதையில் இல்லை என்று உரிமையோடு கேட்கிறார். அதற்கு டெக்ஸ் விஜயராகவன், நீண்ட நாட்கள் இத்தளத்தில் பங்குகொண்டு நட்பையும், ஜாலியான மனநிலையையும் பகிர்ந்துகொண்டவர்களுக்கே இடம் கிடைத்திருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். அது சரிதான். நான் கதையில் குறிப்பிட்டிருந்த ஒருவரையும் இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஈவியைத் தவிர வேறு யாரிடமும் போனில் கூட உரையாடியதில்லை. மடிப்பாக்கம் என்பதால் விஜயராகவனை அருகில்தானே ஒரு முறை சென்று பார்த்துவர வேண்டுமென்று இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன், செய்ததில்லை. உரிமையெல்லாம் ஒரு மனப்பழக்கத்தில் வருவதுதான். ATRஐ அதில் இணைத்துக்கொண்டது, மற்றவர்களைப் போலவே அவரையும் உரிமையோடு நண்பராக கருதியதால்தான். அவர் மிக விரும்பும் இத்தளத்தில், இன்னும் உரிமையோடும், கலகலப்பாகவும் வலம் வரட்டுமே எனும் எண்ணத்தால்தான். மற்றபடி வேறெந்த உள்நோக்கமும் அதில் இல்லை. இதில் நண்பருக்கும் வருத்தம் நேர்ந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். இனி, நேரடியாகவோ மறைபொருளாகவோ தங்களைப் பற்றி கருத்திடமாட்டேன் ATR, என்னை நம்பலாம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விஜயராகவன்/வெங்கடேசன் பெயர்க்குழப்பத்தில் மாற்றி மாற்றி உபயோகிக்கிறேன் போலிருக்கிறது. நிச்சயமாய் நண்பரே.. இம்முறையாவது அனைவரையும் சந்திக்கலாம்! மாதக்கணக்கில் சென்னை அலுவலகத்தில்தான் ஈ ஓட்டிக்கொண்டிருப்பேன். நமக்கென்று ஏதாவது வரும்போதுதான் சைட் ஒர்க்கும் வந்து சேர்கிறது.. என்ன செய்வது? எந்த நேரத்தில் ராஜஸ்தான் என்று ஆசிரியர் குறிப்பிட்டாரோ.. ராஜஸ்தானில் ஒரு வேலை கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் இங்கே சென்னையில் இருக்க, நான் மட்டும் புத்தகவிழாவின் போது அங்கே ஒட்டகம் மேய்த்துக்கொண்டிருக்காமலிருக்க வேண்டும்! புனித மனிடோ தெய்வம்தான் துணை நிற்கவேண்டும்! :-))))

      Delete
    2. நண்பர்கள் ஆதி தாமிராவும் சேலம் விஜயராகவனும் பெரும் பிழை இழைத்துள்ளார்கள்...
      மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் சார் பெயரை முறையே விஜயராகவன் என்றும் வெங்கடேசன் என்றும் அழைத்துள்ளார்கள்...
      இது தளத்துக்கு ஏற்பட்ட “” நாமகரண தோஷம்’’’’ ஆகும்.
      இதற்கு பரிகாரம் உள்ளது.....

      ஆதி தாமிரா ஒரு சில்ட் பீரையும், டெக்ஸ்ஜி தன்னுடைய டிராகன் நகரம் புக்கையும் அரியலூர் பக்கமுள்ள ஒரு காமிக்ஸ் ரசிகனுக்கு தானம் செய்தால் தோஷ நிவர்த்தி ஏற்படும்....:D

      Delete
    3. ஹலோ...ஹலோ ...லைனே சரியாக இல்லையே...செனா அனா ஜி,ட்ரேட் மார்க் டைமிங் ஜோக் போட்டுள்ளார்னு நினைக்கிறேன்...

      Delete
    4. ஏற்கனவே டாஸ்மாக்கை மூடிவிட்டார்கள். அடுத்த சில நாட்களில் நிரந்தரமாக வேறுமூடப்படும் போலத்தெரிகிறது.. பீருக்கே வழியிருக்காது.. அப்பால சில் பீருக்கு எங்கே போறது? வெறும் கருவேப்பிலை போட்ட மோருதான் வாங்கித் தருவேன். ஒழுங்காக சென்னை புக் பேருக்கு வந்து சேருங்களய்யா!

      Delete
  73. போலவே, நல்ல விஷயங்கள் மனதில் நிற்பதைப்போல கசப்பான விஷயங்கள் மனதில் நிற்பதில்லை எனக்கு. நல்லதுதான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதற்கு முன்பும் கூட இங்கு ஓரிருவரிடம் மனக்கசப்பு நேர்ந்திருக்கிறது. ஆனால் யார் மீது எதற்காக என்பதும் கூட ஞாபகமில்லை. ஒருமுறை பரணி என்று குறிப்பிட்டு ஒருவரிடம் கருத்துமோதலிட்டது நினைவிருக்கிறது. இப்போது மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு உரிமையாக நானும் கலாய்க்கும் தலீவர் பரணீதரனா, இல்லை பரணி ப்ரம் பெங்களூரா, இல்லை வேறு யாருமா என்று கூட தெரியவில்லை. ஏற்கனவே நமக்குள்ள வாய்க்காத்தகராறு இருக்கு, இதுல என்னைக் கலாய்க்க வேற வந்துட்டியானு யாரும் சண்டைக்கு வந்துடுவாங்களோனு லைட்டா உள்ளுக்குள்ள ஒரு சம்சயம் அவ்வப்போது தோன்றுவதுண்டு.. ஹிஹி!!

    ReplyDelete
  74. தோழர் ஆதிதாமிரா உங்களது கதையில் உள் நோக்கமில்லை என்பதற்கு எனது நன்றிகள். டெக்ஸ் கதையை மொழி பெயர்க்கும் வல்லமை பொருந்திய நீங்கள் சிறு விஷயத்தை கவனிக்க மறந்து விட்டீர்களே. ஒரு குழுவாக இணைந்து பதிவிடுகிறீர்கள். அதில் உங்களுடனே இணைந்து பதிவிடும் ஒருவர் இந்த கதையில் எனக்கு ஏதும் பங்கில்லையா எனக்கேட்பதற்கும் தனியே ஒரு ஓரமாக பதிவிடும் என் தலையை உருட்டி (உங்களுக்கு உள் நோக்கம் இல்லை என்பதால் உங்களை சேர்க்கவில்லை)அதில் மற்றவர் ஆனந்தபடும்போது நான் எனக்கு கதையில் பங்கு கிடைத்ததற்காக ஆனந்த படமுடியுமா? கீழே உள்ள வரிகளை படித்து சிலர் ஆனந்தமடையலாம்.பரவாயில்லை. "எள்ளலும் சிரிப்புதால் இகழ்ச்சியும் சிரிப்பால் வெளிப்படும்.". "காலில்லாதவன் குறையை சொன்னாலும் சிரிப்பார்கள். அதுவும் காமெடிதான். காலில்லாதவன் கண்கள் குளமாகுமே அப்போது அது காமெடி இல்லை." இன்னுமொன்றையும் குறிப்பிடவேண்டும் நண்பரே. தோழர் மாயாவி சிவா எடிட்டரை தவறாக புரிந்து குற்றம் சாட்டியபோது இத்தளத்தில் நெடுநாளாய் உலா வரும் அவரின் நண்பர்கள் தொடர்ந்து அவருக்கு கண்டனம் தெரிவிக்க நான் மட்டுமே அவரிடம் "அனைவரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆசிரியர் மேல் எந்த தவறும் இல்லை. சற்று யோசியுங்கள் மாயாவி சார்" என பதிவிட்டேன். ஏனென்றால் நண்பர் தவறு செய்கையில் அதற்கு தீர்வு தண்டனைதான் என்பதைவிட அவர் புண்படாமல் சுட்டிக்காட்டுவதே உண்மையான நட்பு என்று உணர்ந்தவன் நான். நான் என் இத்தளத்தில் புலம்பல்களை பதிவிட்டபோது அது தவறு என்பதை சுட்டிக்காட்ட மனதில்லாதவர்கள் தேவைப்படும் போது என் தவறையே அவர்களது ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள்கூட நேற்று இத்தளம் ஏன் கலகலப்பு இல்லாமல் இருக்கிறது என்ற வினா எழுந்தவுடன் அதற்கு விடையாகவே என் கதையை தந்திருக்கிறீர்கள். அதுதானே நிஜம். பரவாயில்லை நண்பரே தொடர்ந்து இதே போல கதைகளை உருவாக்குங்கள். ஆனால் முடிந்தால் உங்கள் குழுவுடன் என்னையும் இணைத்து கொள்ளுங்கள். இத்தளத்தில் எனக்கு என்ன எல்லோரும் விரோதிகளா? அப்படி ஒரு எண்ணம் இருக்கிறவர்கள்தான் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்துகிடக்கிறார்கள். இப்போதுகூட கதையை உருவாக்கிய நீங்கள் என் மனதில் ஒன்றுமில்லை எனகூறுகிறீர்கள். ஆனால் கைகொட்டி சிரித்தவர்கள்கோபப்படுகிறார்கள்!!

    ReplyDelete