Powered By Blogger

Saturday, May 28, 2016

நான் இங்கே ஒரே பிசி !

நண்பர்களே,

தானைத் தலைவர் கவுண்டர் மாடுலேஷனில் இந்தப் பதிவின் தலைப்பை வாசிக்கக் கோரிக் கொண்டே ஒரு வணக்கத்தையும் போட்டு வைக்கிறேனே இந்த சனி மாலையில்  !.  ஒரு ரயில் வண்டி தடதடப்பதன் பின்னால் தான் சின்னதும், பெரிதுமாய் எத்தனை எத்தனை பாகங்கள்... நுணுக்கங்கள்... செயல்பாடுகள்? அத்தனையும் ஏக கதியில் அட்சர சுத்தமாய் செயலாற்றும் போது எத்தனை பெரிய சுமையையும் பிரமாதமாய் இழுத்துச் செல்கிறதல்லவா அந்த எஞ்சின்? அந்த எஞ்சினுக்குள் குந்திக் கொண்டு ஜன்னல் வழியாக ஸ்டைலாக மண்டையை நீட்டியபடியே போஸ் கொடுக்கும் அதிர்ஷ்டம் எனதாக இருக்கும் இந்த வேளையில்- சத்தமின்றி- பின்னணியில் இந்தச் சவாரியைச் சாத்தியமாக்குபவர்களது பட்டியல் தான் எத்தனை நீளம் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது- திடீரென!

உலகின் ஏதோவொரு மூலையில் உள்ள சில பல படைப்பாளிகளின் பெருந்தன்மை காரணமாய் நமக்கு எட்டும் தூரத்தில் அவர்களது கதைகள் நிலைகொள்வதோடு ஆரம்பிக்கிறது நம் படலம்! கிட்டிய கதைகளை மொழிபெயர்த்துத் தரும் உள்நாட்டு/வெளிநாட்டு ஆர்வலர்கள்; நமது கருணையானந்தம் அவர்கள்; பின்னே DTP-ல் அயராது பணி செய்யும் நம் டீம்; அப்புறமாய் அக்னிக்குண்டம் போலத் தகிக்கும் அச்சுக் கூடத்தில் பணியாற்றும் திறமைசாலிகள்; எந்த ராத்திரி போய்க் கதவைத் தட்டினாலும் சளைக்காது உழைக்கும் நமது பைண்டிங் நண்பர்; மொத்தமாய் வந்திறங்கும் பிரதிகளை உங்களுக்கு டெஸ்பாட்ச் செய்வது மட்டுமன்றி, தொடரும் ஒரு வாரத்துக்கு அனுதினமும் ஆளுக்கு 100 போன்களாவது பேசிடும் ஸ்டெல்லா & வாசுகி என்று நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல்! ஓவியங்கள் தீட்டிடும் மாலையப்பன் ஒரு பக்கமும், வண்ணத்தில் மெருகூட்டும் பொன்னன் இன்னொரு புறமும் இருக்க- ஒட்டுமொத்தமாய் அத்தனை புள்ளிகளையும் ஒருங்கிணைத்திடும் மைதீன்! Phew... இம்மாதம் போலான களேபரத் தருணங்களில் தான் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறது! +2 படித்து முடித்துள்ள மகனைக் கல்லூரியில் சேர்க்க முனையும் முயற்சிகளால் நமது தயாரிப்பு வேலைகள் தாமதமாகிடக் கூடாதேயென்று முடிந்த குட்டிக்கரணங்களையெல்லாம் அடித்த மைதீன்; தந்தையை விபத்தொன்றில் பறிகொடுத்தும் இரண்டாம் நாளே பணிகளைக் கவனித்திட விரைந்து திரும்பிய பைண்டிங் நண்பர்; தினமும் ஒரு நூறு தடவைகள் corrections போடச் செய்து ஜீவனை நான் வாங்கினாலும் துளி கூட முகம் சுளிக்காது பணியாற்றிய நமது DTP பெண்கள்; தொடர்ச்சியாய் இரவு 1 மணி வரை வேலை என்றாலும்- கொட்டாவிகளை ஓரம்கட்டி விட்டு ஓடியாடிய அச்சுப் பணியாளர்கள்- இத்தனை பேர்களது வியர்வைகள் மட்டும் பின்னணியில் இல்லாது போனால் நான் கன்னத்தில் மரு ஒட்டிக் கொண்டு ஓடிஷா பக்கமாய்த் தற்காலிக தேசாந்திரம் போயிருக்கத் தான் வேண்டும்!

சனிக்கிழமை மாலை வரை கமான்சே & ஜுலியாவின் அச்சுப் பணிகள் அரங்கேறி வர- வீடு திரும்பும் வேளையில் ஒரு சுகமான அயர்ச்சி என்னுள்! “மின்னும் மரணம்”; “XIII– இரத்தப் படலம் முழுத் தொகுப்பு” என இதற்கு முன்பாய் நம்மைத் துவைத்துத் தொங்கப் போட்ட பணிகள் நினைவுக்கு வந்தாலும்- இம்முறையிலான சவாலோ ரொம்ப ரொம்ப மாறுபட்டது! ஒற்றை இதழை- அது எத்தனை குண்டாக இருந்தாலும் manage செய்வதென்பது ஓரளவிற்கு சமாளித்திடக் கூடிய சமாச்சாரமே என்பேன்! ஆனால் இம்முறையோ சிறிதும்- பெரிதுமாய்; ஒல்லியும்-குண்டுமாய்; கலரிலும்-காக்காய் நிறத்திலுமாய் ஒரு டஜன் இதழ்கள் எனும் போது அலாவுதீன் விளக்கிலிருந்து வெளிப்படும் பூதத்தைப் போல நொடிக்கொரு புதுப்பணி தலைதூக்கிக் கொண்டேயிருக்கும்!

திணறத் திணற; கதறக் கதற கசரத்து வாங்கியது அட்டைப்படங்களது பணிகளே என்பேன்! ஏதோ நம் சேகரிப்பில் முந்நாட்களது பெயிண்டிங்களில் கரையான்கள் பசியாறாது கருணை காட்டியிருந்ததால் முத்து மினி காமிக்ஸிற்கு 4 ஒரிஜினல் ராப்பர்கள் தேறி விட்டன! இன்னொன்றை நண்பர் பொடியன் வரைந்து தந்திட- ஆறாவது இதழுக்கும் ரொம்ப மெனக்கெடாது ஒரு ராப்பரை டிசைன் செய்து விட்டோம்! ஆனால்-தலைநோவு துவங்கியது பாக்கி ஆறு இதழ்களின் அட்டைப்படங்களில் தான்! நம் நண்பர்களில் சிலர் அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க ஆர்வம் காட்டிய போது- ‘ஹை... தலை தப்பிச்சுடும் போல் தெரிகிறதே...!‘ என்று ‘குஷியாய் “என் பெயர் டைகர் கவர் டிசைன்களின் ஒரிஜினல்களிலிருந்து; ரின் டின் கேன் & கமான்சே ஒரிஜினல்கள் வரையிலும் அனுப்பியிருந்தேன்! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நமது குடல் உருவல்களுக்கு ஈடு தர நேரமின்றி- நண்பர்கள் யாரும் பணிகளைப் பூர்த்தி செய்திடவில்லை என்ற போது old blind lady- open the door! என்று நமது ஓவியரையும், பொன்னனையும்தான் தாமதமாய் நாட வேண்டியதானது! மைதீன் பயன்படுத்தும் செருப்புகள் எந்தக் கம்பெனியோ தெரியாது- ஆனால் அவை செம உறுதியானவை என்பதை மட்டும் கடந்த 20 நாள் டிசைனிங் மேளாவின் மூலம் நான் அறிந்தும், புரிந்தும் கொண்டேன்!

உப்ப்ப்ப்... டைகரின் வண்ண இதழுக்கான ராப்பர் டிசைன்கள்; b&w பதிப்பிற்கு கொஞ்சமாகவேணும் மாற்றத்தோடு வேறு டிசைன் என்று ஆரம்பித்த மண்டகப்படி தொடர்ந்தது solid ஆக இரு முழு வாரங்களுக்கு! "இதைக் கூட்டு... அதைக் குறை... இதைப் பச்சையாக்கு... அதைப் பஞ்சு மிட்டாய் கலராக்கு...! இது பெருசாய் வேணும்... அது சன்னமாய் வேணும்..”!" என்று அடித்த கூத்துக்கள் ஒருவழியாய் (எனக்குத்) திருப்தியானதொரு ராப்பரை கண்ணில் காட்டிய போது மே 20-ம் தேதி ஆகிவிட்டிருந்தது! அதன் பின்பு பாக்கி டிசைன்களுக்குள் நுழைந்தோம்- எல்லாவற்றிற்குமே ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்திக் கொண்டு; நகாசு வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி! இதோ- அந்த last gasp பணிகளின் பலனாகியுள்ள அட்டைப்படங்களின் preview!

கமான்சே தொடரில் ஓவியர் ஹெர்மனுக்கு ரொம்பவே அற்புதமான ஈடுபாடு இருந்துள்ளதென்றே சொல்லியாக வேண்டும்! இத்தொடரின் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் பார்த்திடும் போது- மலைப்பாக உள்ளது! And அவற்றை enhance செய்திட நாம் ரொம்பவெல்லாம் மெனக்கெடாமலே அழகான பலன்கள் கிட்டுவதாய் எனக்குத் தோன்றியது! நடுங்கச் செய்யும் குளிரில் பயணிக்கும் இந்தக் கதையின் mood-ஐ செமையாய் இந்த ராப்பர் capture செய்துள்ளது என்று எனக்குத் தோன்றியது! உங்கள் மதிப்பெண்கள் என்னவோ folks?
And ஒரிஜினல் ராப்பரே தான், ஜுலியாவின் "நின்று போன நிமிடங்கள்" சாகஸத்திற்கும்! அந்த டிசைன் மட்டுமென்றில்லாது- கதையின் முழுமையுமே அசாத்திய த்ரில் நிறைந்ததொரு அனுபவமென்று சொல்வேன்! இளவரசியைப் போல காங்காவோல் களவாணிப் பயல்களை இந்த அம்மணி சாத்துவதுமில்லை; லேடி ஜேம்ஸ்பாண்ட் பாணியில் slam-bang என்று ஆக்ஷனில் இறங்குவதும் கிடையாது! ஆனால் ஜுன் மாதத்து ஒரு மந்தை இதழ்களுள் ஜுலியா ‘ஸ்கோர்‘ செய்யாது போனால் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன்! சமீப நாட்களில் நான் ரசித்துப் பணியாற்றிய கதைகள் நிறையவே உண்டு- ஸ்மர்ஃப்ஸ்; க்ளிப்டன்; லக்கி லூக்; ரின் டின் கேன் என்று! அந்தப் பட்டியலில் “நி.போ.நி” க்கு நிச்சயம் ஒரு பிரதான இடமுண்டு என்பதில் எனக்குச் சந்தேகமில்லை! And ரொம்பவே இயல்பானதொரு கதைக்கு ரொம்பவே down to earth மொழிநடையைக் கையாண்டு பார்த்திருக்கிறேன்! கதையும், நடையும், ஜுலியாவும் உங்கள் அளவுகோல்களில் பெற்றிடப் போகும் மதிப்பெண்கள் எத்தனை என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருப்பது ஜுனின் ஒரு மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்! Fingers crossed!

And இதோ- நமது நாலுகால் ஞானசூன்யத்தின் அட்டைப்படமும் கூட! மாமூலான பாணிகளிலிருந்து கொஞ்சமே கொஞ்சமாய் மாறி அட்டைப்படத்தில் வேறுபாடு காட்டிட பொன்னன் செய்திருக்கும் முயற்சியிது! எனக்கு ‘சூப்பர்‘ என்று பட்டது- உங்களை எவ்விதம் impress செய்கிறதோ; அறிந்திட ஆவல்!

Last but not the least - "பழி வாங்கும் புயல்" அட்டைப்படத்தில் minimal திருத்தங்களைச் செய்து அதனையும் அச்சுக்குச் சேர்த்து முடிப்பதற்குள் எனது முடிதிருத்தும் நண்பருக்கு இம்மாத வியாபாரம் பணாலாகிப் போய் விட்டதென்றே சொல்வேன்! அவரது கடைப்பக்கமாய் தலை காட்டாமலே இங்கே சிரம்- IPL மைதானம் போலாகி விட்டது!

சரி, 12 ராப்பர்களும் ரெடி என்று குட்டி மூச்சு விட்டால்- "அட்டை உட்பக்கம் என்ன மேட்டர்?" ; "கதைகளில் filler pages?" ; "ஹாட்லைன் வரணுமே...?" ; "தோட்டா டைம் இல்லாமல் வேலை நிற்கிறது" ; "என் பெயர் டைகரின்‘ இதழைத் திறந்தவுடன் காட்சி தரும் (முன்&பின்) doublespread பக்கங்களுக்கு எதைப் போடுவதோ? " ; "விளம்பரங்களுக்கு எந்தப் பக்கங்களிலிருந்து படங்கள் ?"  ; "ஜுலியாவின் இறுதி வடிவத்தை இன்னும் முடிக்கலியே...?" ; "டெக்ஸ் வில்லருக்கு பேப்பர் பற்றவில்லை..." ; முத்து மினி காமிக்ஸ் இதழ்களுக்கு barcode?" என்று ஓராயிரம் தொங்கல்கள்! சத்தமின்றி ஜுனியர் எடிட்டர் நிர்வாகப் பணிகளை; அச்சு மேற்பார்வைகளை; புத்தக விழாவிற்கான பேக்கிங் ஏற்பாடுகளை பார்த்துக் கொள்ளாது போயிருந்தால்- இந்நேரத்திற்கு நான் ஏதாவது புளிய மரத்தில் தலைகீழாய் தொங்கிக் கொண்டு ‘சட்டி சுட்டதடா‘ என்று பாடிக் கொண்டிருந்திருப்பேன்!

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கமான்சே அச்சாகி விட்டால் - ஒட்டு மொத்தப் பிரிண்டிங் பணிகளும் நிறைவுற்றிருக்கும் ! இனி பைண்டிங்கிலிருந்து வரவழைத்து- ரெகுலர் இதழ்களை ஜுன் 1-ம் தேதியும்; “என் பெயர் டைகர் + “முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ஜுன் 3-ம் தேதி கூரியரில் அனுப்பிட உள்ளோம்! ஜுன் 4 முதல் சென்னைப் புத்தக விழாவில் நமது ஸ்டாலில் இவை எல்லாமே கிடைத்திடும்! தொடரும் அடுத்த சில நாட்களுக்கு நம்மவர்கள் பம்பரமாய் சுழன்று வரப்போவதை ‘பராக்குப் பார்க்கும் பணி மாத்திரமே எனக்கு எனும் போது- பீட்சாவைப் பார்த்த மறுநொடியில் கார்பீல்டின் முகத்தில் விரிவது போலொரு அகலமான புன்னகை! And- இனி ‘சலோ சென்னை‘ தான் அடுத்த இலக்கு எனும் போது இப்போதே உள்ளுக்குள் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிட்டன - "நண்பர்களது கேள்விகள்; கோரிக்கைகள் என்னவாகயிருக்கும்?" ; அவற்றைச் சமாளிக்கும்  பல்டிப் பயிற்சியை எந்த தேசத்தில் கற்றிடலாம் ? என்று! சென்றாண்டின் (ஏப்ரல்) புத்தக சங்கமத்தின் போது- அழகான தனியரங்கம் புத்தக விழாவினுள்ளேயே இருந்தபடியால் நமது மின்னும் மரணம் கச்சேரியை அங்கேயே வைத்துக் கொள்ள சாத்தியமானது! ஆனால் இதுவோ BAPASI-ன் விழா என்பதோடு- 670 ஸ்டால்கள் கொண்ட பெரும் அரங்கு என்பதால் நாமங்கே அடக்கியே வாசித்தாக வேண்டுமென்பது அவசியம்!

வெளியூர்களிலிருந்து 4 & 5 தேதிகளில் சென்னைக்குப் பயணமாகவுள்ள நண்பர்களின் எண்ணிக்கையும்; சிங்காரச் சென்னையின் நண்பர்களுள் சனிக்கிழமையின் அவகாசத்தை நமக்கென ஒதுக்கிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் தெரிந்திடுமேயானால்- நாம் எங்கே ? எப்போது ? சந்திக்கலாமென்பது பற்றித் திட்டமிட இயலும்! ஈரோட்டுப் புத்தக விழாவின் வாசலிலேயே ஹோட்டலும், ஒரு மினி அரங்கும் இருந்ததால் சுலபமாகிப் போனது நம் சந்திப்பு! ஆனால் சென்னை மாநகரில் அந்த வசதி நஹி எனும் போது- திட்டமிட உங்கள் inputs உதவிடுமே? அவகாசம் அதிகமில்லை என்பதால் லக்கியின் தோட்டாவைப் போல் துரிதமாய் நாம் செயல்பட்டாக வேண்டிய தருணமிது folks! காத்துள்ளோம்- காதுகளைத் திறந்து கொண்டே!!

And இதோ - "என் பெயர் டைகர்' முன்பதிவுப் பட்டியல்கள் - முழுவதுமாய் ! உங்கள் பெயர் விடுபட்டுப் போயிருப்பின் - உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ?


தொடர்வது BLACK & WHITE பதிப்பின் முன்பதிவுப் பட்டியல் :

மீண்டும் சந்திப்போம் all! Have a lovely weekend!

204 comments:

  1. அதிசயமாக 2 வந்துள்ளேன்

    ReplyDelete
  2. வணக்கம் சார் ....
    படித்து விட்டு வருகிறேன் ....

    ReplyDelete
  3. வணக்கம் சார் படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. படித்துவிட்டு ஒரு தபா கூட வந்தாமாதிரி தெரியலயே ஸ்ரீதர் அவர்களே... இன்னிக்காச்சும் வாங்க! :P

      Delete
    2. பதிவை படிச்சு ,கருத்து யோசித்து ,டைப் அடிச்சி முடிச்சு ,,ப்ப்ளிஷ் கொடுக்கலாம்னு அவர் பார்க்கும் போது அடுத்த பதிவு வந்துடுதாமா...
      பிறகு ,
      வழக்கம் போல "படித்துவிட்டு வருகிறேன் சார் "....
      ஒரு வருசமா இதே கேம் தான் ஓடுது போல....

      Delete
    3. ///வணக்கம் சார் படித்து விட்டு வருகிறேன்.///

      ஒருவேளை படிச்சிட்டு சிவகாசிக்கே கிளம்பிட்டாரோ என்னவோ?!

      படித்துவிட்டு வருகிறேன்னா அதானே அர்த்தம்!!!!

      Delete
    4. கிட்ஆர்ட்டின்

      Lol :D


      Delete
  4. (வாவ்! Surf rice பதிவு)


    உள்ளேன் ஐயா!! !

    ReplyDelete
  5. வணக்கம் ஆசிரியர் &நண்பர்களே.

    ReplyDelete
  6. ஆசிரியர் சார் @ இந்த வாரம் பூராவும் ஒலிம்பிக்ல வரும் அனைத்து ஜிம்னாஸ்டிக்ஸ் பல்டிகளையும் நீங்கள் & உங்கள் அணியினர் அடித்து இருப்பீர்கள் போல....ஹா...ஹா....
    உங்கள் கூத்துக்கள் படிக்க சிரப்பை வரவழைத்தாலும், பின்னணியில் உள்ள உங்கள் காமிக்ஸ் காதல் வியக்க வைக்கிறது சார்...
    குறித்த நேரத்தில் தவறாமலும் தரமாகவும் தரவேண்டும் என்ற உங்கள் அணியின் உழைப்புக்கு ஒரு ராணுவ சல்யூட் மற்றும் பாராட்டுகள் சார்....

    ReplyDelete
    Replies
    1. ரின் டின் , கண்ணு இந்த மாதம் நீ ரன்னர் அப் டூ சேம்பியன் (சேம்பியன் -டெக்ஸ் தான்னு அட்டையை பாரத்த உடன் தெரிஞ்சி போச்சி ) ஆக வருவாயா ???...
      ஜூலியா இருப்பதால் ,கடேசி இடம் உனக்கு கிடைக்காது...

      Delete
  7. என் பெயர் இரண்டிலும் விடுபட்டுள்ளது,நாளை காலை மின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///என் பெயர் இரண்டிலும் விடுபட்டுள்ளது,நாளை காலை மின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன்.///

      நாளைக் காலையில் போஸ்ட் ஆபீஸ் திறந்த பின்னாடிதான் மின்னஞ்சலை அனுப்பமுடியுமா ரவி?!!?

      சரிசரி! முதல் ஆளாப் போய் அனுப்பிடுங்க!! :-)

      Delete
    2. என் பேரு வந்திடுத்தே

      Delete
    3. Arivarasu @ Ravi : E-mail please !!

      Delete
  8. புத்தகங்கள் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள் சார்

    ReplyDelete
    Replies
    1. Anandappane karaikal : நன்றிகள் சார் !

      Delete
  9. ஆங்! செவ்விந்தியர்களை பின்னணியில் விளையாடவிட்டதையடுத்து 'பழிவாங்கும் புயல்' என்ற தலைப்புக்கேற்ப அட்டைப்படத்தில் ஒரு பரபரப்பு வந்துவிட்டிருக்கிறது! பேஷ் பேஷ்!!

    ஜூலியாவின் அட்டைப்படம் பார்க்கும்போதே கிறுகிறுக்குது! அவன் ஏன் இப்படியொரு தற்கொலை முடிவுக்கு வந்தான்னு தெரியலையே... ஜூலியா அவன்ட்ட propose பண்ணியிருப்பாளோ?! :P

    ரின்டின்கேன்+ஐ அட்டைப்படத்தில் 'நாலுகால் ஞானசூனியம்' என்று விழித்திருப்பதை கடுமையாகக் கண்டிக்கிறேன்! அவன் ஒரு நாலுகால் மேதை என்பதை அவனை நன்கறிந்த கலாரசிகர்கள் மட்டுமே அறிவர்! :(

    'கமான்சே' அட்டைப்படம் - கோடை வெப்பத்தைப் போக்கவந்து ஜிலுஜிலு! ஹெர்மனின் அட்டைப்படம் சோடை போய்விடுமா என்ன?!! செம!! செம!!

    ReplyDelete
    Replies
    1. ///ரின்டின்கேன்+ஐ அட்டைப்படத்தில் 'நாலுகால் ஞானசூனியம்' என்று விழித்திருப்பதை கடுமையாகக் கண்டிக்கிறேன்! அவன் ஒரு நாலுகால் மேதை என்பதை அவனை நன்கறிந்த கலாரசிகர்கள் மட்டுமே அறிவர்! :(///

      யாமறிவோம் குருநாயரே!

      நம்மைப்போல் மேதைகள் பலரும் இவ்வுண்மையை அறிவர்.!

      Delete
    2. இவிங்க ஏன் நம்மள திட்டுறாங்க

      Delete
  10. அனைத்து .....அட்டை படங்களும் அழகோ அழகு சார் ....


    உங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் எங்களது மாபெரும் நன்றியையும் தெரிவித்து விடுங்கள் சார் ....

    ReplyDelete
  11. ஜூலியா அட்டை படம் நிரம்ப பிடித்துள்ளது சார் ....பார்ககலாம் கதையில் எப்படி என்று ....இந்த முறை முதலில் படிக்க போவது ஜூலியா தான் என முடிவெடுத்து உள்ளேன் ...;-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே...அடுத்த வாரத்திற்குள் நீங்கள் ஜூலியா நற்பணி மன்றத் தலைவராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் !

      Delete
  12. ஜுலியா அட்டைப்படம்தான் இந்த வருடத்தில் இதுவரை வந்ததிலேயே டாப்பாக தோன்றுகிறது. சூப்பரான டாப் ஆங்கிளில் வரையப்ட்டிருக்கிறது.

    அடுத்து நம்ம தல ரின்டின்கேன்.
    லக்கிலூக் நிழலை விட வேகமாக சுடுவார். அது அவருடைய தனித்துவம் என்றால்,

    நிழலில் சரியாகவும் நிஜத்தில் சொதப்பலாகவும் சாகசம் செய்வதே ரின்டின் கேனின் தனித்துவம் என்பதை பின்னட்டையில் ஓவியர் சூப்பராக வரைந்திருக்கிறார்.

    டெக்ஸ் எப்பவும் போல. (விமர்சனத்துக்கு அப்பால பூட்டாரு) .

    கமான்சே அட்டைப்படம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. கொஞ்சமாவது வெயில் கொடுமை இதனால் குறையும் என்று தோன்றுகிது.!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : இந்தாண்டின் அடுத்த லக்கி லூக்கின் சாகசத்தில் நம்மாள் ரி.டி.கே.ஒரு முக்கிய அங்கம் ! ஆங்காங்கே வந்து சரவெடி கொளுத்திப் போட்டுப் போவார் பாருங்களேன் !

      Delete
  13. /// old blind lady- open the door! ///

    ஹாஹாஹா!!!

    செம்ம சார்.!!!

    தமிழ்ல இருந்து இங்க்லீசுக்கு!!!

    ஹாஹாஹா!!!

    ReplyDelete
  14. /// ஆனால் இதுவோ BAPASI-ன் விழா என்பதோடு- 670 ஸ்டால்கள் கொண்ட பெரும் அரங்கு என்பதால் நாமங்கே அடக்கியே வாசித்தாக வேண்டுமென்பது அவசியம்.///

    ரொம்ப ஸ்ட்ரிட்டான கம்பேனியா இருக்குமோ!?!? :-)


    ஹூம்ம் !! தவிலைத் துணி சுத்தி வீட்டிலேயே வெச்சிட்டுதான் வரணும் போல!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : ஏதோ நாமும், நண்பர்களும் அடக்கி வாசித்து வருவதால் book fair circuit -ல் நம்மை தலைநுழைக்க அனுமதிக்கின்றனர் !! அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள மாத்திரமே இந்த முன்ஜாக்கிரதை !

      Delete
    2. நிச்சயமாக தக்க வைத்துக்கொள்வோம் சார்.!!

      கரகாட்டத்தை மெரீனாவில் வைத்துக்கொண்டால் போச்சு!! :-)

      Delete
  15. அட்டை படங்கள் எல்லாமே அருமையாக வந்துள்ளன ஸார். இவ்வளவு கடின உழைப்பை நல்கிய உங்களுக்கும் உங்கள் ரீமுக்கும் வாழ்த்துக்கள் ஸார். குறிப்பாக மைதீன் ஸாருக்கும், பைண்டிங் பணியாளருக்கும் ஒரு ராயல் சலூட். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : அவர்கள் சார்பில் நன்றிகள் சார் ! :-) :-)

      Delete
  16. ரின் ரின் கேனுடைய அட்டை படம் ஒரிஜினலை விட நன்றாக வந்துள்ளதாய் எனக்கு படுகிறது.

    ReplyDelete
  17. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  18. சார் அட்டகாசம் . நான் இதை நெல்லையிலிருந்து கோவை திரும்பும் பேருந்தில் இருந்து எழுதுகிறேன்...நாங்களும் பயணத்தின் போது எழுதுவோம்ல...சார் வழக்கம் போலவே எனது எண்ணமும்...அட்டை படங்கள் ஒவ்வொரு மாதமும் இந்த மாதம்தானே பெஸ்ட் எனும் எண்ணத்தை விதைக்கத் தவறவில்லை...பொன்னனிடம் எனது சந்தோசத்தையும் பகிர்ந்திடுங்களேன்...அதிலும் நமது மேம்படுத்தப் பட்ட கமான்சே தூள் கிளப்புகிறார்...இப்போதே ஒரு உண்மையை ஓங்கி உரைத்திடுகிறேன்...தங்களது மொழி பெயர்ப்பில் கமான்சே தூள்...ஜூலியா அட்டைப் படம் இன்னும் அசத்த...தங்கள் மாற்றப்பட்ட மொழி நடை பட்டய கிளப்பப் போவது உறுதி ....ரின் டின் கேன் இன்னும் அசத்த ...ிருப்பினும் நேரில் பார்த்த பின் கூறுவதே சரி எனப் பட்டதால் மதிப்பென் பின்னர்....மேலும் மேம் படுத்தப்பட்ட டெக்ஸ் இன்னும் தூள்...உண்மயச் சொன்னா அட்டைப் படங்கள் ஒன்றை ஒன்று விஞ்சுவதால் எது பெஸ்ட் என சத்தியமா தெரியலை...சார் அனைத்துத் தொழிலாளத் தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் எனது நன்றிகளயும் சேர்த்திடுங்கள் ...அதிலும் படித்துக் கொண்டிருக்கும் போதே என்னைத் துள்ள வைத்த சந்தோசமான விஷயம்...நேற்று நான் தங்கள் புதிய பதிவில் நான் கோரிக்கை வைக்கனும்னு நினைத்தது....ஆச்சரியம் சார் எங்களுக்கு எது தேவை என ுங்கள் மனதில் இரண்டாம்முறை ஓடுவது .ரெகுலர் இதழ்களை தனியாக முன்னரே அனுப்ப சொல்லனும்னு நெனச்சா , நீங்க செஞ்சுட்டீங்க....அதான் நானும் கதைகள் சூப்பர்னு நீங்க நெனச்சீங்க...நானும் படிக்குறதுக்கு முன்னாடியே சொல்லிட்டேன் சார்....ஸ்டீல் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி...ரெம்ப ரொம்ப சந்தோசம் சார்...இரண்டு டைகரயும் வாங்குவோர் எனத் தனியாக போட்டிருக்கலாம் ...இவர்கள் எய்த புத்தகம் என்றாலும் வாங்கலாம்....டைகர் அட்டய கண்ணுல காட்டலயே...

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ரெண்டு மைல் நீளத்துக்கு வாக்கியங்களை அமைப்பதில் என்னைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறீர்கள் நண்பரே ! :-)

      Delete
    2. இவருக்கு தூரத்தில ரண்டு மயில் தெரியுதாமே,

      நம்ம கண்ல படமாட்டேங்குது,

      அந்த சூப் குடிச்சப்புறம் கண்ல ஏதோ பிரச்சினை

      Delete
  19. அனைவருக்கும் வணக்கம். கடின உழைப்பிற்கு நல்ல பலன் அட்டை படங்கள் அருமை. சென்னை புத்தக விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : நன்றிகள் சார் !

      Delete
  20. //வெளியூர்களிலிருந்து 4 & 5 தேதிகளில் சென்னைக்குப் பயணமாகவுள்ள நண்பர்களின் எண்ணிக்கையும்; சிங்காரச் சென்னையின் நண்பர்களுள் சனிக்கிழமையின் அவகாசத்தை நமக்கென ஒதுக்கிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் தெரிந்திடுமேயானால்- நாம் எங்கே ? எப்போது ? சந்திக்கலாமென்பது பற்றித் திட்டமிட இயலும்! //

    டியர் விஜயன் சார்,

    பெருன்பான்மையான நண்பர்களுக்கு சனிக்கிழமை என்பதை விட அடுத்த நாள் Sunday என்பதே வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே வாய்ப்பு இருப்பின் சந்திப்பை Sunday அன்று முயற்சிக்கலாமே ?

    திருப்பூர் ப்ளுபெர்ரி (அ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //நண்பர்களுக்கு சனிக்கிழமை என்பதை விட அடுத்த நாள் Sunday என்பதே வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.//

      Open to both options !! நண்பர்களுக்கு வசதி எதுவோ - அது நமக்கும் வசதியே !

      Delete
  21. முன்பு கூறியது போல நுங்கம்பாக்கம் த்ரீ எலிபன்ட்ஸ் கடையில் (பழைய நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்) முயற்சிக்கலாமே சார் ....

    ReplyDelete
    Replies
    1. சார் ,

      நுங்கம்பாக்கம் புதிர் குகை மாதிரி சார்.எது ஒன்வே எது டபுள்வே என்று கண்டுபிடிப்பதற்குள் நாக்கார் தரையில் நாட்டியமாடி விடுவார்.! பரிச்சியம் இல்லாத சென்னைவாசிகளுக்கே முழி பிதுங்கிடும்.! வெளியூர் காரர்களுக்கு மர்ம மனிதன் மார்டினின் காதலிதான் உதவிசெய்யனும்.

      Delete
    2. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : வெளியூர் நண்பர்களுக்கு ஒ.கே. என்றால் நமக்கு நிச்சயம் ஒ.கே. தான் சார் !

      உள்ளூர் நண்பர்கள் வேறு options ஏதேனும் முன்மொழிந்தால் இன்னும் உதவியாக இருந்திடும் !

      Delete
    3. //சென்னைவாசிகளுக்கே முழி பிதுங்கிடும்.! வெளியூர் காரர்களுக்கு மர்ம மனிதன் மார்டினின் காதலிதான் உதவிசெய்யனும்.///--ஹா...ஹா...
      MV sir,எங்களை நீங்கள் பிக்அப் பண்ணிக்க மாட்டீங்க ???...

      Delete
    4. ஹிஹிஹி......நானே பலமுறை குழம்பியுள்ளேன்.!

      Delete
  22. Eagerly waiting for the feast...:-) Thank you Chef and the entire crew for grouping all the varieties of European culinary 💂

    ReplyDelete
  23. சேந்தம்பட்டி குழு நண்பர்கள் 15பேர் மொத்தமாக வருகிறோம் சார்.சனிக்கிழமை &ஞாயிறு இரு நாட்களும் சென்னை விழாதான் பிரதாண புரோகிராம் சார். சந்திப்புக்கு அதிக அளவில் நண்பர்கள் வர ஞாயிறு தான் சாத்தியம் சார் . ஞாயிறன்று சந்திப்பை வையுங்கள் சார் ,இடம் லோக்கல் நண்பர்கள் அதிகம் பேர் சிபாரிசு செய்வது.

    ReplyDelete
    Replies
    1. சேந்தம்பட்டி குழுன்னா??? ஓவர் ஆட்டமோ ????????????

      Delete
    2. க்கும் ...நீங்க வேற,
      விழாவுக்கு வர்ரதுக்கு அவுங்கவுக வீட்டம்மாகிட்ட பெர்மிசன் வாங்குறதுக்குள்ளயே டப்பா டான்ஸ் ஆடிடுது...
      இதுல நாங்க ஆடிட்டாலும்....

      Delete
  24. என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி வெளியீட்டு விழா மாதிரி ஏதும் உள்ளதா சார் அல்லது சாதாரணமாக விற்பனைக்கு அவைகள் வந்து விடுமா ???
    சென்ற சென்னை சந்திப்பில் திகில் அறிவிப்பு வந்தது ,இப்போது அதுமாதிரி என்ன ???...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : கூடிடக் கூடிய நண்பர்களின் எண்ணிகையைத் தெரிந்து கொண்டால் ஏதேனும் திட்டமிட முடியும் நண்பரே...!

      Three Elephants ஸ்டோரிலோ ; வேறெங்குமோ - உரிய ஏற்பாடுகள் செய்திட அந்தத் தகவல் அத்தியாவசியமல்லவா ?

      Delete
    2. எங்கள் சேந்தம்பட்டி குழு சார்பில் 15பேர் உறுதி சார்....

      Delete
    3. வெள்ளிக்கிழமை இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ல கிளம்பி,சனிக்கிழமை காலை 5மணிக்கு சென்ட்ரல்....
      பிறகு நீங்கள் எங்கே வரச்சொன்னாலும் வீ ஆர் ரெடி சார்...

      Delete
  25. சென்னை விழாவிற்கு என்றே அறிவிக்கப்பட்ட டீ சர்ட் 1ம் தேதி பார்சலில் அனுப்ப படுமா சார் ???
    3ம் தேதி பார்சலில் எனில் 4ம் தேதியோ ,5ம் தேதியோ தான் வந்து சேரும். ஆனால் 3ம் தேதி இரவில் சென்னைக்கு கிளம்பும் எங்களை போன்றோருக்கு டீ சர்ட் கிடைக்காது சார்.

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கும்......... ஆனா

      Delete
    2. கெடச்சா டீ சர்ட்...
      இல்லீனா காபி சர்ட்...ஹி...ஹி...

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் : கவலையே வேண்டாம்...!

      Delete
  26. கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்!எங்களுக்கு ஜூன் 1அன்று புத்தகங்கள் கிடைத்திடுமா சார் ?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : //ரெகுலர் இதழ்களை ஜுன் 1-ம் தேதியும்; “என் பெயர் டைகர் + “முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ஜுன் 3-ம் தேதி கூரியரில் அனுப்பிட உள்ளோம்!//

      Delete
  27. கலர் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை சார்

    ReplyDelete
  28. ///மாமூலான பாணிகளிலிருந்து கொஞ்சமே கொஞ்சமாய் மாறி அட்டைப்படத்தில் வேறுபாடு காட்டிட பொன்னன் செய்திருக்கும் முயற்சியிது! எனக்கு ‘சூப்பர்‘ என்று பட்டது- உங்களை எவ்விதம் impress செய்கிறதோ; அறிந்திட ஆவல்!////

    உண்மைதான் எடிட்டர் சார்! ரின்டின்கேனின் ஒரிஜினல் அட்டைப்படத்தோடு ஒப்பிட்டால் பொன்னரின் மெளஸ்வண்ணத்தில் அந்தப் பாலைவனப் பின்னணி மிக இயல்பாய், அழகாய், பொருத்தமாய் உருவெடுத்திருக்கிறது! பொன்னரின் திறமையும், ஈடுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாய் எனக்குத் தோன்றுவது நிஜமெனில், எதிர்காலத்தில் இன்னும் பல ரம்மியமான படைப்புகள் அவரிடமிருந்து கிடைக்கப்போவது உறுதி!

    வெல்டன் பொன்னன் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. ///வெல்டன் பொன்னன் அவர்களே!///

      + (999+999) ×(999+999) + (999×999) +(999×999)

      Delete
    2. Erode VIJAY : நமது பொன்னன் ஒரு அற்புதத் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை ! எனது ஒரே சந்தேகம் BATA செருப்புக் கம்பெனிக்கும் - இவருக்கும் நல்லதொரு புரிதல் உண்டோ என்பது மாத்திரமே !

      Delete
  29. அட்டைப்படங்களில் முதல் மதிப்பெண் ஜூலியா அட்டைபடம் பெறுகிறது கதையும் ஏமாற்றது என நம்புகிறேன்!

    ReplyDelete
  30. அட்டைப்படங்களில் இரண்டாம் இடத்தில் comanche முன்றாம் இடத்தில டெக்ஸ் !

    ReplyDelete
    Replies

    1. புத்தகம் கையில் வந்த பிறகு வெண்கலமும் தங்கமாக மாறலாமே, செந்தில் ஜி...

      Delete
  31. 4 அட்டைகளும் அருமையாக உள்ளன. கமான்சே முன்னட்டை மிக அருமை! பிரியமுடன் ஒரு பிணைக்கைதி டிசைன் முயற்சி அழகாக உள்ளது. முன்னட்டையின் பின்னணியில் இன்னும் கொஞ்சம் பளிச் சென இருக்கும்படி மஞ்சள் அல்லது பச்சை பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. "என் பெயர் டைகர்" ன் இறுதிவடிவ அட்டையை கண்ணில் காட்டவில்லையே சார்?

    ReplyDelete
    Replies
    1. ///முத்து மினி காமிக்ஸிற்கு 4 ஒரிஜினல் ராப்பர்கள் தேறி விட்டன! இன்னொன்றை நண்பர் பொடியன் வரைந்து தந்திட- ///

      வாழ்த்துகள் பொடியன் சார். உங்களின் தொடர் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.!!!

      Delete
    2. நன்றி நண்பரே!
      வடிவேலுவுக்கு அடித்தவர்கள் களைத்து ஓடிப் போனதுபோல... அட்டைப்பட வேலை ஏதாவது தருவதற்கு இப்போது எடிட்டர் ரொம்பவே பயப்படுகிறார் - மாற்றம் சொல்லிச் சொல்லி - எப்படியோ அல்லல் பட்டு டிசைனை வாங்கியே பயந்துபோயிருப்பார் போல... :-P

      Delete
    3. வாழ்த்துக்கள் பொடியன் சாரே.!

      Delete
  32. ஜூலியாவின் அட்டைப்படத்தை வைத்துப் பார்க்கும்போது புத்தகத்தின் உயரம் கொஞ்சம் கூடியதாகத் தெரிகிறது எனக்குமட்டும்தானா? என்ன ஸ்பெஷல்??

    ReplyDelete
    Replies
    1. Podiyan : Top angle என்பது தான் ஸ்பெஷல் !

      Delete
  33. சார், வணக்கம். எ.பெ.டை முன் பதிவு புத்தகத்தை சென்னையில் வாங்கி கொள்ள விரும்புகிறேன். முடியுமென்றால் , விவரங்களை அனுப்புகிறேன் சார்.

    ReplyDelete
  34. உள்ளூர் க.குழு சார்பில் சேர்ந்தம்பட்டி குழுவை வரவேற்கிறேன்.எங்கள் குழுவிலும் தோராயமாக 15 பேர் இருக்கலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இருகரம் கூப்பி வரவேற்க்கிறேன்.!

      _________/|\_______!

      Delete
  35. எடிட்டர் சார்.!

    இந்த மாதம் கைநிறைய இதழ்கள் ! ரொம்ப சந்தோஷம் சார்.!

    ReplyDelete
  36. ஸ்டாலின் எண் சொல்லவே இல்லே?

    ReplyDelete
  37. நேற்று அரிதாய் கிடைத்த ஓய்வுப்பொழுதை பரண் உருட்டும் படலமாக செலவழித்தேன்.பரண் உருட்டுவதே மிகப் பெரும் சுகானுபவம் என்றால்,அரியதோர் புத்தகம் கண்ணில் பட்டால் எப்படி இருக்கும்..? அந்த அரய புத்தகம் டிடெக்டிவ் சார்லியின் சாகஸம்.கதை பெயர் தெரியவில்லை. முதல் எட்டு பக்கங்களை காணோம்.
    கதை :-
    ஜான் பெல்,அலைஸ் தம்பதியினர் கேப்டன் ஸ்டார்ச்சிடமிருந்து, டிக்கா எனும் தீவை பெரும் தொகை கொடுத்து வாங்குகினறனர்.ஆளரவமற்ற அமைதியான அந்த தீவில் சந்தோஷமாய் வாழ நினைக்கிறார்கள்.ஆனால் அதன் டிசைன்,டிசைனாக ஏகப்பட்ட புது மாதிரியான தொால்லைகளுக்கு ஆளாகிறார்கள்.வீட்டினுள்,பாம்புகள்,காட்டுப்பன்றிகள்,வௌவால்கள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.எப்படி நிம்மதியாக வாழ்வது...? மிரண்டு போகும் ஜான் பெல் தன் நண்பர் சார்லிக்கு அழைப்பு விடுக்கிறார்.சார்லி களத்தில் இறங்கிய பின்னும், நீச்சல் குளத்தில் ஆக்டோபஸ், சுறா மீன் என பிராணிகளின் தொல்லைகள் தொடர்கின்றன.பலனாய்வில் தீவிரமாக இறங்கும் சார்லி,சில பல ஆக்ஷன்களுப்பிறகு, அத்தனை பிரச்சினைகளுக்குமான காரணங்களையும்,காரணகர்த்தாவையும் கண்டுபிடிக்கிறார்.
    மிக எளிமையான கதை.எளிமையான ஓவியங்கள் என்று இப்போது படிக்கும் போது கூட பரவசப்படுத்துகிறது.

    இந்தக்கதையின் பெயர் என்ன என்று தெரிந்த நண்பர்கள் சொல்லுங்களேன்....!

    ReplyDelete
    Replies
    1. என் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு சார்லியின் புத்தகம் இது....!

      Delete
    2. ஜேடர்பாளையம் சரவணகுமார் : பேய்த் தீவு இரகசியம் ?

      Delete
    3. ஜேடர்பாளையம் சரவணகுமார் : எனக்கும் ரொம்பவே பிடித்த கதையது !!

      Delete
    4. பேய்த்தீவில் நாங்கள் நுழைவதெப்போ சார் ???

      Delete
    5. சேலம் டெக்ஸ் @ மும்மூர்த்திகளின் ரவுண்ட் முடிந்த பின்னே நம்மை பேய்த்தீவுக்கு அழைத்துச் செல்வார் என நினைக்கிறேன்....!!??

      Delete
  38. ஆசிரியரே இவ்வளவு பண்ண நீங்க மாப்பிள்ளை (டைகர்) பேனர கண்ணுல காட்டலையே. கொஞ்சம் வருத்தமாத்தேன் இருக்கு :-/

    ReplyDelete
    Replies
    1. ASR SIVA : சிறப்பு வெளியீடுகளின் அட்டைப்பட முதல் பார்வை எப்போதுமே இதழ் வெளியாகும் காலையினில் தானே ?

      Delete
  39. சார்!! என் பெயர் டைகர்ரும் முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களும் சேலம் நேசன் புத்தக நிலையத்தில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : நண்பரே, இரு ஸ்பெஷல் பதிப்புகளுமே முன்பணம் அனுப்பி ஆர்டர் செய்திடும் முகவர்களுக்கு மாத்திரமே ! "என் பெயர் டைகர் " ஆர்டர் செய்துள்ளனர் ; முத்து மினி நிலவரம் தெரியவில்லை !

      Delete
  40. காலை வணக்கம் அனைவருக்கும். எடி சார், என் முன் பதிவு எண் .கலர் 161, bw. 55. விழாவில் உங்கள் கையெழுத்துடன் வாங்கி கொள்ள முடிந்தால் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. saravanan srinivasan : ஏற்பாடு செய்து விடுவோம் நண்பரே !

      @ ALL : உங்களது "என் பெயர் டைகர்" பிரதிகளை சென்னையில் பெற்றுக் கொள்ள விரும்பிடும் பட்சத்தில் வரும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பை நமக்குத் தெளிவானதொரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன் - ப்ளீஸ் !

      இங்கே பதிவிடுவதை நான் கவனிக்காது போய் விட்டால் சிக்கல் என்பதால் - உங்கள் புக்கிங் நம்பரோடு ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் !

      Delete
    2. சார், மெயில் அனுப்பி விட்டேன். 11 புத்தகங்களை சாத்தியமாக்கிய உங்கள் குழுவின் உழைப்பிற்கு என் பாராட்டுகள். சீனியர் எடிட்டர் கையால் முத்து மினி இதழ்களை பெற ஆவலாக உள்ளேன்

      Delete
  41. Vijayan sir, convey my thanks to our team.
    Cover rating:
    1. Juilua
    2. Comanche
    3. Tex
    4. Rin tin - original looks better.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க
      மாத்தி பேச யாருமில.லைனு நெனச.சேன்

      Delete
  42. Vijayan sir, about meeting place:
    1. We should find a place close to book fair, if three elephant is near (walkable) we can meet there.
    2. Else if there any place near canteen or open space (car parking) in book fair we can go there.
    3. Better to arrange the meeting on Sunday.
    4. If there is any near by hotel with room, we can have lunch meeting there.

    ReplyDelete
    Replies
    1. 3 elephants 5 kms from.book fair

      Delete
    2. Parani from Bangalore : நடக்கும் தொலைவில் இருப்பது பீச் தான் சார் !! பாக்கி எல்லாமே இரண்டு-மூன்று கி.மீ. தொலைவினில் !

      Delete
    3. பீச்லயே மீட்டுவோம் சார் ...
      காலாற மணலில் நடக்கலாம் ..
      காலை தண்ணீரில் நனைக்கலாம் ..
      சுண்டல் ,நண்டு வருவல் சாப்பிடலாம்

      Delete
  43. @ ALL : @ ALL : உங்களது "என் பெயர் டைகர்" பிரதிகளை சென்னையில் பெற்றுக் கொள்ள விரும்பிடும் பட்சத்தில் வரும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பை நமக்குத் தெளிவானதொரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன் - ப்ளீஸ் !

    இங்கே பதிவிடுவதை நான் கவனிக்காது போய் விட்டால் சிக்கல் என்பதால் - உங்கள் புக்கிங் நம்பரோடு ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் !

    ReplyDelete
  44. இனிய காலை வணக்கம் சார்.. பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது.. நன்றி..

    ReplyDelete
  45. சார்...
    ஆகையால் வரும் வாரம் 'தலைப்பாகட்டி பிரியாணி' காத்திருக்கு... எங்களுக்கு..

    ReplyDelete
    Replies
    1. நான் 'bundle of காமிக்ஸ்' ஐ சொன்னேன்.... :)

      Delete
  46. கலர் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை சார்

    ReplyDelete
  47. ஆசிரியருக்கும் மற்றும் நண்பர்களுக்கும்
    இனிய காலை வணக்கம்.
    அடுத்த ஞாயிறு சந்திப்போம்

    ReplyDelete
  48. காலை வணக்கம் அனைவருக்கும். எடி சார், என் முன் பதிவு எண் .கலர் 161, bw. 55. விழாவில் உங்கள் கையெழுத்துடன் வாங்கி கொள்ள முடிந்தால் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  49. உள்ளூர் க.குழு சார்பில் சேர்ந்தம்பட்டி குழுவை வரவேற்கிறேன்.எங்கள் குழுவிலும் தோராயமாக 15 பேர் இருக்கலாம் சார்.

    ReplyDelete
  50. ///// டியர் எடிட்டர் /////
    நான் போன வாரம்தான் தங்கள் அலுவலகத்தில் என் பெயர் டைகர், வருட சந்தா இரண்டையும் கட்டினேன். முத்து மினி சந்தாவுடன் வந்துவிடுமா? அல்லது அதற்கு தனியாக பணம் கட்ட வேண்டுமா? தங்கள் அலுவலகத்தில் முத்து மினி பற்றி யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே டவுட் தான்

      Delete
    2. எனக்கும் அதே டவுட் தான்

      Delete
    3. நண்பர்களே முத்து மினி , என் பெயர் டைகர் இரண்டுமே சந்தாவில் இல்லை . எனவே தனியாகத்தான் வாங்கணும். டைகரின் மாபெரும் ரசிகர் நீண்ட நாள் கழித்து வந்துள்ளார் ..தொடர்க...தாமதமான சந்தா எனினும் சரியான நேரத்தில் இணைந்துள்ளார் ...

      Delete
  51. சார் ஒன்றாம் தேதியே புத்தகத்த அனுப்புவீங்களா அல்லது மே 31ல் அனுப்புவீங்களா...புத்தகங்கள் தயாராகி விட்டதால் ஒன்றாம் தேதியே நாங்க படிக்கோணும்.என்ன செய்வீங்களோ , செய்ய மாட்டீங்களோ அது தெரியாது..டான்னு ஒன்னாம் தேதி..

    ReplyDelete
  52. 'என் பெயர் டைகர்' டைகர் அட்டை படம் design செய்ய எனக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை. நான்'ஆர்டினின் ஆயுதம்'
    காலதாமதமாக அனுப்பியது தவறுதான். ஆனால் அதற்கான காரணத்தை mail முலம் உங்களுக்கு தெரிவித்தேனே?. மேலும் cartoon அட்டை படம் வரைவதில் எனக்கு நாட்டம் அவ்வளவு இல்லை. ஆனால் realistic டைகர் படம் வரைய என் ஓய்வு நேரத்தையும் செலவு செய்திருப்பேன். இப்படி என்னை ஏமாற்றி விட்டிர்களே....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரியாததல்ல நண்பரே! அவர்களும் மிகுந்த நேர நெருக்கடிக்குள்தான் செயல்படுகிறார்கள். ஆர்வத்தோடு கை தூக்குபவர்களும் அவரவர் நேரப் பிரச்சனைக்குள் இருப்பதால் இந்த கூட்டு பெரும்பாலும் தம்ப்ஸ் டவுன் ஆகிவிடுகிறது. நிச்சயம் உங்கள் திறமைக்கு நம் காமிக்ஸ்களிலும் இடம் கிடைக்கும். கோபத்தை விடுங்கள். உங்கள் அழகிய வேலைப்பாட்டை ரசிக்க நாமெல்லாம் காத்திருக்கிறோம்!!!

      Delete
    2. Ganeshkumar Kumar : வார்த்தைப் பிரயோகங்களின் பொருட்டு இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டால் மகிழ்வேன் சார் !

      ஒவ்வொரு நண்பருக்கும் ஒவ்வொரு டிசைனுக்கான வாய்ப்பெனும் பொழுது உங்களுக்கு அனுப்பப்பட்டது ஆர்டினின் கவர் ! அதனில் நேர்ந்த புரிதலின் குறைபாடுகள் & தாமதங்கள் பற்றி நீங்களும்-நானும் அறிவோம். இது தான் நிலவரம் எனும் பொழுது டைகரின் கவர் வரைவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமென்பது எனக்கு எவ்விதம் தெரிந்திருக்கும் ? இதில் உங்களை "ஏமாற்ற" முகாந்திரம் எங்கிருந்து எழுகிறதோ - தெரியலியே ??

      ஒரு டிசைனில் எத்தனை / எத்தனை திருத்தங்கள் கோருகிறோம் ; எத்தனை அவகாசம் அதன் பொருட்டு செலவாகிடுகிறது என்பதை முழுமையைப் பணியாற்றும் பொழுது தான் உணர்ந்திட இயலும். நண்பர்கள் ஆர்வத்தினில் செய்திடும் பணிகளை நான் ஓயாது நொட்டை-நொசுக்கு சொல்லிக் கொண்டே செல்வது போல் தோன்றிட வாய்ப்புகள் ஏராளம் ! அதுவும் இது போன்ற முக்கிய இதழ்களின் பணிகளில் நாங்கள் செய்திடும் அந்தர் பல்டிகள் ஆண்டவனுக்கே வெளிச்சம் ! அதனை நண்பர்களிடமும் நான் எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் தானா ?

      ஓவியத்திலும், டிசைனிங்கிலும் ஆர்வம் கொண்ட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு அட்டைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் - "இதனை என்னால் நிச்சயம் இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்க முடியும் !" என்று எண்ணத் தோன்றுவது உறுதி ! எழுத்தில் ஆர்வம் கொண்டோர்க்கு - மொழிபெயர்ப்பிலும் இதுவே தான் நிலை என்பதில் சந்தேகமில்லை எனக்கு ! And for sure - அந்த நம்பிக்கைகளில் நிறையவே நிஜமும் இருக்கலாம் தான் ! ஆனால் நடைமுறை சாத்தியங்களும் இங்கே ஒரு முக்கிய விஷயம் ஆகிடாதா ?

      நம்மில் பலருக்கும் இந்தக் கைவண்ணங்கள் ஒரு பொழுது போக்கு ; ஆனால் எங்களின் பொழுதுகளே இவற்றோடு தான் எனும் பொழுது - எங்களால் செலவிட சாத்தியமாகும் நேரங்களை - உங்களிடம் நான் எதிர்பார்த்தல் சரியாகுமா சார் ?

      Delete
    3. என்னுடைய கோபத்தின் வெளிப்பாடு இல்லை இது. எமற்றத்தின் வெளிபடுதான். நான் இருப்பது அனிமடிஒம் துறை. ஒரு அட்டை படம் எனக்கு வரைவது எங்களுக்கு வேலை. ஆசிரியர் நல்லாயில்லை என்று சொன்னால் எனக்கு கோபம் வராது. கோடி கொடியாக செலவு செய்து இரவு பகலாக வேலை செய்த ப்ராஜெக்ட் மண்ணை கவ்வுவதும். லோ பட்ஜென்ட் ப்ராஜெக்ட் ஹிட் அடிப்பதும் கடந்த 10 வ௫டமாக பார்த்து கொண்டு இ௫க்கிறேன். .அதன் சாதக பாதகம் பாத்தி ஒரளவு நன்றாக தெரியும். இனிமேல் டைகர் காமிக்ஸ் வ௫ம என்று தெரியாது. ஒரு நல்ல சான்ஸ் நிறைய வரும். ஆனல் டைகர் இனிமேல வருவர?. நான் இழந்தது ஒரு சகாப்தத்தை. வாரவாரம் ப்ளாக் பர்க்கிறேன். ஆசிரியரிடம் நான் design செய்கிறேன் என்று கேடக்காமல் விட்டது என் தவறுதன்.

      Delete
    4. ///ஆசிரியரிடம் நான் design செய்கிறேன் என்று கேடக்காமல் விட்டது என் தவறுதன் ///

      :(

      ஹூம்!

      Delete
  53. எடி சார், எங்களுக்கு பிடிச்ச கதைகளை தயார் பண்ணியே மிகுந்த களைப்படைந்திருப்பீர்கள். உங்க ஆத்ம திருப்திக்காக உங்களுக்கு பிடித்த கதைகளை RELAX SPEcIAL என்ற பெயரில் ஒரு குண்டு புக் வெளியிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. இராவணன் சார்.!

      அருமையான ஐடியா.! ஆனால் அது என்னவோ பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் யுக்தி மாதிரியே தோன்றுவது எனக்கு மட்டும்தானா ?

      Delete
    2. @ ராவணன் இனியன்

      ஹாஹா! Relax spl - செம ஐடியா!

      Delete
    3. ஆசிரியருக்கு பிடித்த கதையில் மாடஸ்டியும் ஒன்று என்பதில் இரகசியம் ஏதும் இல்லையே M. V. சார்

      Delete
    4. ராவணன் சார்...!
      மாடஸ்டின்னா சரி..., ஆனா கி.நா.பாணியிலான உலக யுத்த பிண்ணனி கொண்ட கதைகளும் எடிட்டருக்கு ரொம்பப்பிடிக்குமே...? அத நெனச்சாதான்.....??!!

      Delete
  54. Hi 🙋 friends
    Hi vijayan sir 🙋

    Hats off to ur team for their hard work & co-operation. give them a reward if possible as they surely deserve it.👍

    All cover pages are simply awesome,especially the improved version of Tex suits remarkably well.kudos to our senior artist & DTP designer👌👍
    12 issues in a single month is surely a NEVER BEFORE RECORD BREAK.my hearty wishes to succeed in every aspect u step in.
    We r all with u vijayan sir.keep going......

    🙋👋 bye 😊

    ReplyDelete
  55. செந்தில் சத்யா ,சென்னை @

    நண்பரே இங்கே விவாதங்கள் பல சமயத்தில் காரசாரமான முறையில் இருக்கும் . சிலசமயங்களில் ஏதாவதொரு நண்பருக்கு மனச்சோர்வு +சங்கடங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதது .அதற்காக நம்முடைய நெஞ்சுக்கு நெருக்கமான காமிக்ஸ் +நண்பர்களை விட்டு விலகி இருக்கும் நிலை சரியல்ல நண்பரே.எப்போதும் போல உற்சாகத்துடன் இங்கே பங்கு பெறுங்கள் . உங்கள் ஊரில் புத்தக காட்சி ,ஓடோடி வாருங்கள் தளத்திற்கும் ,நேரிலே கலந்துரையாடலில் கலந்து கொள்ளவும்.....

    ReplyDelete
    Replies
    1. ஆம் செந்தில் சத்யா சார்.! நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.! நேரில் நண்பர்களை சந்திக்கும்போது.! நாம் சண்டையிட்டது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக வும் அதே சமயம் நம் கோபம் கொண்டதற்காக கூனி குறுவுவோம் பாருங்கள் .........வாங்க நண்பரே .மரு ஒட்டிக்கொண்டு மாறுவேடத்தில் கூட வாருங்கள்.இதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாத நிறைய உணர்வுகளை கொடுக்கும்.!

      Delete
    2. டெக்ஸ் விஜய் +1
      M.V +1
      ஸ்டீல் +1

      @ செந்தில் சத்யா

      சேந்தம்பட்டிக் குழுவினரை வரவேற்க CBFல் இன்முகத்தோடு காத்திருப்பீர்கள் என நம்புகிறேன்....

      Delete
    3. ///சேந்தம்பட்டிக் குழுவினரை வரவேற்க CBFல் இன்முகத்தோடு காத்திருப்பீர்கள் என நம்புகிறேன்...///

      இன்றே இன்முகத்தோடுதான் காட்சிய்ளித்தார். சென்னையில் நிச்சயம் நம்மை நல்ல முறையில் "கவனிப்பார் " என்ற நம்பிக்கை இருக்கிறது!!!


      ////டெக்ஸ் விஜய் +1
      M.V +1
      ஸ்டீல் +1////

      +1 @ செந்தில் சத்யா.

      Delete
    4. 400 கி.மீ கடந்து கம்பீரமாய் சென்னையில் இறங்கும் நண்பர்களை வருக.! வருக.! என்றுவரவேற்கிறோம்.! இதற்கு காரணமாகிய சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.!

      Delete
  56. இந்த
    பேக் ஐடி சேலம் முரட்டு கடா ரசிகர்
    பேக்லயே சுத்துதே, ஒரு வேளை இந்த
    பேக் ஐடியின்
    ஃப்ரண்ட் ஐடி சேலம் கடா ரசிகரின்
    ஃபரண்டோட ஐடி யாக இருக்புமோ.

    இத நாம கேட்டா ஞான சூன்யம்பாங்க

    ReplyDelete
    Replies
    1. மற்ற நண்பர்கள் இவர்களை அவ்வளவு எளிதில் கண்டு கொள்வது இல்லை போல,அதான் நம்மை டார்கெட் பண்ணி படக்குனு பேமஸ் ஆகிட பார்க்குறாங்க...
      சரி நம்மை நம்பி வந்துடறாங்களேன்னு நானும் அந்த புதிய நண்பர்களை ஏமாற்றுவது இல்லை. அதான் தொழில் ரகசியம்.

      Delete
  57. மதில் மேல் பூனையாக உள்ளது என் நிலை என்ன கொடுமை சார் இது

    ReplyDelete
    Replies
    1. நீங்க மதில்மேல் மட்டும் தான் அப்படியா?! நானெல்லாம் எப்பயுமே! :)

      Delete
    2. நாமெல்லாம் மதில் மேல் பூனை மட்டன் பிரியாணியா ???
      சிக்கென் பிரியாணியா ???---என ஆர்டர் சொல்லும் போது மட்டுமே....
      சில சமயத்தில் ரின் டின் மாதிரி அன்பர்கள் சொன்னால் குழப்பமே கிடையாது , இதுல ஒண்ணு அதுல ஒண்ணு கூடவே சோடா ஒண்ணு..
      ஹி...ஹி...

      Delete
    3. ஸ்பெஷல் சூப் சாப்டறேளா மிஸ்டர் பூனைக்குட்டி

      Delete

  58. மறுபடியும் சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம்.

    மறுபடியும் சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. __/\__ மீண்டும் உங்களைச் சந்திக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது Parimel sir!

      Delete
  59. சார் நண்பர் பரணியை இல்லத்தோருடன் சந்தித்தேன் . தோர்கள் இதழை வெகுவாய் ரசிக்கும் அவர் துணைவியார் எப்போது வருமென கேட்டார் ...புத்தகம் வரும் வரை பரணிதான் சமையலாம்..பாவம் அவர் நிலை...மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் ( அவரது சமையலை அல்ல என்பது தங்களுக்கும் தெரியும்தானே ) பரணி படும் வேதனை தீர ...நாளை நண்பர்கள் முன்னிலையில் zக்கு ஒப்புதல் அளிக்கும் போது முதலில் தோர்களை கத்தையாய் வெளியிடுவதை அறிவித்திடுங்கள்...
    மன்னிச்சுக்கங்க நண்பா...உண்மைய உள்ள படியே வெளியிடும் வேளை வந்துருச்சு... சார் என் நண்பன் கண்ணுல ிருந்து ஒரு துளி நீர் வந்தாலும் அது வெங்காயம் நறுக்குறதுனால இருக்கக் கூடாது இனிமேல்...சீக்கிரமாய் போர்க்கால நடவடிக்கை போல செயல் பட்டு நண்பன் வதையை தடுக்குமாறு கண்ணீர் வேண்டுகோள் விடுக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சார் இந்தப் பதிவின் தலைப்பைக் கூட நான்ஒரே பசி என ாசிரியர் ஏன் வைத்தார் என கேட்டதை பரிதாமாய் பார்த்த படி விடை கொடுத்தேன்

      Delete
    2. நல்லா வருவயா. ஊர் பக்கம் வரும் போது சொல்லுங்க ச்பெசல் பிரியாணி தயார் செய்து விடுவோம்.




      Delete
    3. ரெண்டு மில்லியன் hitsலயும் தொர்தல் தான் வரனும் என்று என் வீட்டில் சொன்னத ஏழுத மறந்து போன மாதிரி தெரிகிறது.

      Delete
    4. ///சார் என் நண்பன் கண்ணுல ிருந்து ஒரு துளி நீர் வந்தாலும் அது வெங்காயம் நறுக்குறதுனால இருக்கக் கூடாது ///

      :D

      Delete
    5. சார் இன்னும் பரணியின் சமையல் குரல் தங்கள் நாசியை தாக்கவில்லையே என்பது வருத்தமாகத்தானிருக்கிறது . பாருங்கள் பரணி வெக்கத்த விட்டு கிளருவதை ....சாரி கதறுவதை...தொர்கள் என்பது அவர் ஊர் பக்கம் அவர் செய்யும் சமையலின் ஏதோ வகை போல ...அதை தோர்கள் என்றே படிக்க...சாரி நண்பா தங்கள் அனுமதியின்றி ப்ரூஃப் ரீடிங் செய்தமைக்கு ....எப்பூடி...சார் இரு நாள் சமையலறை விடுப்பை எடுத்த களிப்பில் சென்னையை எட்டிப் பார்க்க அப்பாவி பூனையார் அவர்தம் இல்லத்தரசிக்கு தந்த இதழ் சூ ஹீ ஸ்...அவர் அதில் மதி மயங்கிப் படித்த போது இவர் சாமர்த்தியமாய் விடுப்பு வாங்கிட்டார்....ஆனா அத படிச்சதும் அதிர்ச்சில மயங்கிட்டார்னு சமாளிக்கப் பார்ப்பார்...நம்பீராதீங்க அத்தனையும் டூப்பு...அவரிடமிருந்து sinsters seven என ொரு விண்ணப்பம் வரலாம்... வழக்கம் போல சமையலில் ஒரு வகை அது எனக் கூறி அவர் வாயை அடைச்சுராதீங்க....மீதி பதினான்கு நண்பர்களின் வேண்டுகோள்களை நினைத்தால் கலக்கமாகத்தானிருக்கிறது .....சாரி சந்தோசமாகத்தானிருக்கிறது ....தலீவர் கிநா கேட்டு சுனாமியை மீண்டும் தூண்டினால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள் ...

      Delete
    6. வாழ்க்கையே சமையல் களம் ;
      தின்றுதான் தீர்க்கணும் ;
      சமையல் களம் மாறலாம் ;
      சமையல் ஆள் மாறுமோ என கொள்கை பாடலுடன் வரும் அணியினரை சந்தொசம் காணவும் ,அவர்தம் பணியில் மாற்றம் வழங்கவும் ஆசிரியர் ஆவன செய்வார் என ெதிர்பார்ப்பில் இரத்தப் படலத்தில் மூழ்கிய நான்

      Delete
  60. நண்பர்களே, சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் ஆசிரியரும், மற்ற நண்பர்களும் விழாவிற்கு வரவிருப்பதால், முக்கிய புத்தக வெளியீடு நாள் மற்றும் நேரம் தெரிவிக்கப்பட்டால் என்னைப்போன்ற உள்ளூர் வாசகர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும்

    ReplyDelete
  61. விஜயன் சார்,

    நம்ம வான் ஹாம்மேவோட lady S தமிழ்ல வர வாய்பிருக்கா??

    ReplyDelete
  62. இந்த மாதம் காமிக்ஸ் திருவிழா தல தளபதி திருவிழா தான் :) ...... காத்திருக்கிறேன் Edit sir!

    ReplyDelete
  63. ஆசிரியருக்கு,
    என் பெயர் டைகர் கலர் பதிவு 16 வது எண்ணாக பதிவு செய்திருக்கிறேன்.
    சைன் ஸ்மைல் பவுண்டேசன் எண்பதற்கு பதிலாக சைன் இஸ்மாயில் என்று பதிவிட்டிருக்கிறார்கள். அலுவலகத்திற்கு தகவல் தந்தும் திருத்தப்படவில்லை.
    சார்,
    எனது பெயரை சரி செய்ய முடியுமா,

    ReplyDelete
    Replies
    1. Shinesmile Foundation : தவறுக்கு சாரி சார்...! ஆனால் நான் இங்கே copy -paste செய்துள்ளது ஆரம்பத்துப் பதிவில் டைப் செய்யப்பட்டிருந்த அதே பக்கங்களை. So பின்னாட்களில் செய்யப்பட்டிருந்த பிழைத்திருத்தங்கள் இதனில் reflect ஆகாது போயிருக்கலாம். உங்கள் பிரதி சரியான பெயரில் உங்களை வந்தடையும்..!

      Delete
  64. கூட்டுல:ஹையா... நான் சென்னைக்கு போறேன்......... நான் சென்னைக்கு போறேன்....

    வீட்டுல :ஒழுங்கா வீட்ல இருக்கிறியா இல்ல ....ஊர்ல இருந்து எங்கம்மாவ.... வரசொல்லட்டுமா..

    கூட்டுல:சென்னையா....??? உன் அன்னையா ...???

    ஹூம்......... குயில புடிச்சு கூண்டில் அடச்சு கூவ சொல்லுற உலகம்

    வீட்டுல :''அது ''......

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே , வெள்ளைச்சாமி மாதிரி (வொய்ட்ரைஸ் வெள்ளைச்சாமி இல்லை.)வளைச்சி வளைச்சி பாடிட்டே இருங்க.(ஆனா சத்தமா பாடோணும். ஊர்க்காரங்களே கூண்டை உடைச்சி உங்களை சென்னைக்கு அனுப்பி வெச்சிடுவாங்க.!

      எப்பூடி!!!

      Delete
  65. மடிப்பாக்கம் மற்றும் சேலம் டெக்ஸ் ஆகியோர்களோடு சேர்ந்து மற்ற வாசகர்கள் அனைவரையும் புத்தக கண்காட்சியில் இந்த முறையாவது சந்தித்து பேசலாம் என்றிருந்தேன்.அடுத்த புத்தக கண்காட்சி எங்கிறிப்பினும் தவறாது கலந்து கொள்வேன்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த விழா ஈரோடு நண்பரே....

      ஆகஸ்டு 5முதல் 13வரை விழா தேதி உறுதியாகிட்டு...

      வழக்கம் போல முதல் சனி,ஞாயிறு ஆசிரியர் வருவார் என நினைக்கிறேன் ...
      ஈரோட்டில் இத்தாலி "-என்ற இதழ் ஆகஸ்ட் 6சனிக்கிழமை வெளியிடப்படலாம்.ஞாயிறு 7ல் நண்பர்கள் சந்திப்பு நடத்தப்படலாம்...
      நீங்கள் லீவுக்கு அப்ளை பண்ணிவிடுங்கள் ,ஈரோட்டில் சந்திப்போம்...

      Delete
    2. நண்பரே.....
      ஈரோடு புத்தக கண்காச்சி ஆகஸ்ட் 5 முதல் 16 வரை

      Delete
    3. தேங்ஸ் அகிக்....முடியும் தேதியில் லைட்டா கன்பியூசன்...

      Delete
    4. Don't கன்பியூசன்.....

      Delete
  66. இந்த சனி,ஞாயிறு விடுமுறை கிடைக்காததால், அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு, எனக்கு கிட்டவில்லை

    ReplyDelete
  67. ஆசிரியருக்கு,
    மிகவும் நன்றி சார்.
    தங்களது இந்த உடனடி பதிலுக்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,அதோடு ஜீன் மாத 12 இதழ்களையும் கைகளில் ஏந்தி உவகை கொள்ள காத்திருக்கிறேறேன்.இதோடு மேலும் பல சாதனைகள் செய்ய உங்களையும், உங்கள் குழுவையும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  68. என் பெயர் டைகர் மற்றும் முத்து மினி ---- முன் பதிவு செய்யாத வாசகர்கள் , சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க இயலுமா ?

    ReplyDelete
    Replies
    1. Got a mail from Lion`s office stating that it will be available in CBF2016 !!
      Thanks
      ~Jp

      Delete
    2. இது நம்ம ஜூனியர் எடிட்டரின் வேலையாத்தான் இருக்கும்!

      தட்ஸ குட் ஜோப் ஜூ.எ!

      Delete
  69. அனைவறும் ஜூலியாவின் அட்டைபடத்துக்கு பால் அபிசேகம் பன்னத குரைதான் ஜூலியாவின் original அட்டைபடம் அவ்ளோ சூப்பா் என்றால் ஜூலியாவின் அனைத்து அட்டையும் பாாக்க வேன்டாமா
    ஜூலியாவின் அனைத்து அட்டையும் பாா்க்க
    Google சென்று all books of julia comics என்று search செய்யவும் அதில் julia (volumn)-comicvine என்று இறுக்கும் அதில் சென்றால் ஜூலியாவின் அட்டை பாா்களம்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த ஜூலியா சாகசம் வருவதற்குள் அனைத்தும் பார்த்து வைத்து விடுகிறேன்...
      அட்லீஸ்ட் மாடஸ்தி ரசிகர் மன்றத்துக்கு போட்டியாக ஜூலியா உயிர் ரசிகர்கள் சங்கம் ஆரம்பிப்போம் ....
      இளைஞர் அணி போஸ்ட்டிங் உங்களுக்கு தான் அகிக் ....
      கிட் அங்கிள் @ மூத்தோர் சங்கம் நிச்சயமாக உங்களது தான்....

      Delete
    2. O.k நாம் ஜூலியா மன்றம் ஆரம்பிப்போம் உடல் மன்னுக்கு உய்ர் ஜூலியாவிக்கு

      Delete
    3. ///கிட் அங்கிள் @ மூத்தோர் சங்கம் நிச்சயமாக உங்களது தான்...///

      யோசிச்சு பேசுங்க அங்கிள். (ரெண்டு நாளைக்கு முந்திதான் டை அடிச்சி யூத் ஆனேன்)

      Delete
    4. ஜூலியா LKG மாணவர்கள் ரசிகர் மன்ற...,.அய்யய்யோ ஸ்கூல் தொறந்துடிச்சு அங்கிள்,...பாய் அங்கிள்

      Delete
    5. ///ravanan iniyan30 May 2016 at 22:50:00 GMT+5:30
      ஜூலியா LKG மாணவர்கள் ரசிகர் மன்ற...,.அய்யய்யோ ஸ்கூல் தொறந்துடிச்சு.///

      இந்த டைம்ல ஸ்கூலா??

      ஓஹோ.! புரிஞ்சிடுச்சி!!


      முதியோர் கல்வியில நீங்க LKG படிக்கப்போறிங்க! சரிதானே சார்.?!

      :D (எதுக்கும் போட்டு வெச்சிடுவோமே)

      Delete
  70. நண்பர்களே நாளை நம்மைத் தேடி புத்தகங்கள் கிளம்பிடும்...ஆஹா...காத்திருக்க ேலவில்லை..என்னமோ தெரில ......நீண்ட நாள்கள் கழித்து பெறுவதைப் போலுணர்வு...சகோ கடல்யாழக் காணலியே

    ReplyDelete
  71. நல்லவேளையா டீ சர்ட்டை அனுப்பிவைப்பதாக சார் சொல்லிவிட்டார்.
    இல்லேன்னா, மீட்டுக்கு பேண்ட் மட்டும் போட்டுகிட்டு போலாம்னு ஒரு யோசனை வெச்சிருந்தேன். :-)
    (ஓ மை காட்) :))

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா எடிட்டர் 'சந்தாதாரர்களுக்கு மான் மார்க் லுங்கிகள் வழங்கப்படும்'னு அறிவிக்கலை! :P

      இப்பத்தான் நிஜமான 'ஓ மை காட்!' :D

      Delete
    2. பேண்ட் மட்டுமா? அப்ப கண்டிப்பாக ஓ மை காட் தான்,ஹி,ஹி.

      Delete