Powered By Blogger

Sunday, May 08, 2016

திசையெங்கும் காமிக்ஸ்...!

நண்பர்களே,
            
வணக்கம். இந்தாண்டில் முதன்முறையாக ஒளிவட்டத்தின் வெளிச்சத்தைப் பங்குபோடுவதில் இரவுக் கழுகாருக்கொரு போட்டி எழுந்துள்ளதை மே மாத இதழ்களும், அவற்றிற்கான உங்களது விமர்சனங்களும் சுட்டிக் காட்டுகின்றன! இதுவரையிலும் – ‘வந்தார்-வென்றார்‘ என்று கோப்பையை டெக்ஸ் வில்லர் பிடிவாதமாய்ப் பிடித்திருக்க; மீசைக்காரர் ஷெல்டன் இந்தத் தடவை கணிசமானதொரு போட்டியைத் தந்து வருகிறார்! ‘தல‘ ஒரு மினி version-ல் தான் களம் கண்டுள்ளார் என்பதொரு காரணமாக இருந்தாலும்- கூட – ஷெல்டனின் “பாலைவனத்தில் பணயக்கைதி“ கதாசிரியர் வான் ஹாம்மேவின் ஆற்றலுக்கொரு ட்ரைலர் என்று சொல்லலாம்! And மிரளச் செய்யும் ஓவியங்களும் வான் ஹாம்மேவுக்குத் தோள் தரும் போது அந்தக் கதையும்; தொடரும் சூப்பர் ஹிட்டாவதில் வியப்பில்லை! ஷெல்டனின் தொடரில் எஞ்சியிருக்கும் 2 புதுக் கதைகளுமே வான் ஹாம்மே கைவண்ணங்களே & அந்த இரு கதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளும் நம்மிடம் தயாராக உள்ளன என்பதால் சமீபமாய் அவற்றை மேலோட்டமாய் படிக்க முடிந்தது! Trust me folks – இன்னுமிரண்டு லட்சுமி வெடிகள் காத்துள்ளன! துரதிர்ஷ்டமாய் அந்த இரண்டோடு ஷெல்டனுக்கு adieu சொல்லத் தான் வேண்டும் – தொடரே இத்தோடு நிறைவு பெறுவதால்! So இருக்கும் வரையிலும் ஷெல்டனை ரசித்துக் கொள்வோமா?

மே மாத ஸ்பாட்லைட்டை வேறொரு கோணத்தில் பகிர்ந்து கொள்வது நமது நீலப் பொடியர்கள் தான்! லக்கி லூக்; மதியில்லா மந்திரி; ஆர்டின்-டாக்புல் போல நிலையான மத்திய நாயகர்கள் எவருமின்றி இந்த ஸ்மர்ப்ஸ் பொடியர்கள் ஒட்டுமொத்தமாய் வலம் வந்து மகிழ்வூட்டும் பாணி நம்முள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளதாய் நான் நினைத்திடவில்லை! “அட... இது ரொம்பவே குட்டீஸ் சமாச்சாரமே!“ என்று ஒருசாரார் தலையைச் சொரிவது புரியாதில்லை எனக்கு! ஆனால் சற்றே அவகாசம் கொடுத்தால் இந்த ஸ்மர்ப்ஸ் மாயாஜாலத்தினுள் அவர்களும் ஐக்கியமாகிடாது போக மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை எனக்கு!
இம்மாத டெக்ஸ் சாகஸமான “டாக்டர் டெக்ஸ்“ – நீளத்தில் பெரிதில்லை; உலகை உலுக்கும் கதைக்களமும் கொண்டதில்லை என்பதை நாமறிவோம்! ஆனால் அதையும் மீறி- டெக்ஸின் அக்மார்க் அதிரடி ஃபார்முலாவில் படபடவென்று பொரிந்து தள்ளியுள்ள கதையிது என்பதில் சந்தேகமேது? And இந்த இதழுக்கொரு சின்ன speciality உண்டென்று நான் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! அதை அறிவிக்கும் நேரமும் வந்தாயிற்று! வாசக நண்பர்களின் பங்களிப்புகளை அட்டைப்படச் சித்திர அமைப்புகளுக்கும்; proof reading-களுக்கும் கோரியிருந்தது போலவே மொழிபெயர்ப்பின் களத்திற்கும் நாம் கோரியிருந்தது நினைவிருக்கலாம். விண்ணப்பித்திருந்த வெகு சில நண்பர்களுள்- செம ஸ்பீடாய்; செம ஆர்வமாய் பணியை முடித்தனுப்பியவர் ஒருவர்! அவர் மொழிபெயர்த்துள்ள கதை தான் இம்மாத “டாக்டர் டெக்ஸ்”! And அந்த முயற்சிக்குச் சொந்தக்காரர் நண்பர் ஆதி தாமிரா தான்!! எப்போதுமே தனித்துவமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான நண்பர் ஆதி- வாசக மொழிபெயர்ப்பில் உருவான முதல் முழுநீள இதழினில் பங்கெடுத்த பெருமைக்குச்(?!!) சொந்தக்காரர் ஆகிறார் !  அவரது மொழிபெயர்ப்பில் சொற்பமான நோண்டல்களை நான் செய்துள்ளேன்- நாம் பழகிப் போய் விட்ட “டெக்ஸ் பாணி” தொடர்ந்திடும் பொருட்டு ! Given a choice – மாற்றங்களின்றி அவரது ஒரிஜினல் நடையையே 100% பயன்படுத்தியிருக்கலாம் தான்! ஆனால் wholesale மாற்றங்களை ‘ஏக் தம்மில்‘ ஏற்றுக் கொள்ள நாம் தயாராகும் வரை இந்தக் “கூட்டணிப் பேனா” பாணியைத் தொடர்வது தேவலை என்று நினைத்தேன்! Of course- ‘extra நம்பர் போடச் சொல்லிக் கேட்டேனா நான்?‘ என்ற  விமர்சனம் எழக் கூடுமென்பதொ; ‘அவரை எழுதச் சொல்லி விட்டு- அப்புறமாய் அதனுள் மூக்கை நுழைப்பானேன்?‘ என்ற கேள்விகள் உருவாகிடக் கூடுமென்பதொ தெரியாதில்லை! ஆனால் முட்டையையும் உடைக்காமல், ஆம்லெட்டும் போட்டுப் பார்க்கலாமே என்பதே என் அவா! இதன் சாதக-பாதகங்களை வரும் நாட்கள் எனக்கு உணர்த்தும் என்பதில் துளி ஐயமில்லை! நண்பருக்கு நமது சந்தோஷமான வாழ்த்துக்கள்! "ஆட்டோ ஆதி" - இன்று முதல் "author ஆதி" என்று அன்போடு அறியப்படுவாராக !! நீங்களும் வாழ்த்திட நினைத்தால் சென்னையை நோக்கியும்; சாத்துக்களை சமர்ப்பிக்க நினைத்தால் சிவகாசிச் சீமையை நோக்கியும் குறிவைத்திடக் கோருகிறேன்!

தொடரும் காலங்களில் நண்பர்களின் பங்களிப்புகள் இன்னமும் கூடுதலாயிருக்குமொரு சூழல் தவிர்க்க இயலாததாகிடும் என்பதே எனது கணிப்பு! பொதுவாக நமது பணிகளின் சங்கிலித் தொடரில்- பேனா பிடிக்கும் என்னையும் திரு.கருணையானந்தம் அவர்களையும் தவிர்த்து- பாக்கி எல்லோருமே காமிக்ஸ் ஆர்வலர்களல்ல! அவர்கள் அனைவருக்குமே இதுவொரு பணி மாத்திரமே! So சில தருணங்களில் காமிக்ஸ் சார்ந்த உணர்வுகள் கொணரக் கூடிய finer results – நம்மவர்களுக்குச் சாத்தியமாவதில்லை! காமிக்ஸ் வாசிப்பிலும், ரசனைகளிலும் ஊறித் திளைத்த நண்பர்கள் சிறுகச் சிறுக உதவிட வாய்ப்புகள் புலர நாம் அனுமதித்தால் – அதன் பலன் நம் அனைவருக்குமே என்பதில் நான் திட நம்பிக்கை கொண்டிருக்கிறேன்! துவக்கத்தில் மாற்றங்களை ஜீரணிக்க நம்முள் ஒரு சாராருக்குச் சிரமமாகத் தோன்றிடலாம் தான்; ஆனால் பழகப் பழக எல்லாமே சரியாகிடாதா? அதற்காக ஒட்டுமொத்தமாய் நான் எழுதுவதிலிருந்து VRS வாங்கிக் கொள்ளப் போகிறேன் என்றோ; ‘ஓசியில் மாவாட்ட ஆள் தேடுகிறேன்‘ என்றோ அர்த்தம் எடுத்துக் கொள்ளத் தேவையிராது! எழுதாமல் இருந்தால் என் பொழுதுகள் விடிந்திடவும் செய்யாது; (உரிய) சன்மானங்களின்றி நண்பர்களை பணி செய்திட நாம் கோரப் போவதும் கிடையாது! So- இந்தச் சிறு ‘மாற்று சிந்தனை‘ பற்றிய உங்கள் எண்ணங்களை அறிந்திட ஆவலாயிருப்பேன்!

Looking ahead – அடுத்த 4 மாதங்களுக்கு 4 பெருநகரப் புத்தக விழாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன! அங்கெல்லாம் நமக்கு நுழைவு சாத்தியமாயின் இந்தாண்டின் கையிருப்புச் சுமைகளில் ஒரு பகுதியையாவது இறக்கி வைத்த நிம்மதி கிடைக்கும்! நம்பிக்கையோடு விண்ணப்பித்துள்ளோம்! மே 20-ம் தேதிக்கு சென்னையின் நிலவரம் நமக்குத் தெரிந்திடும்! ஸ்டால் உறுதியாயின் ஜுன் 4 & 5 தேதிகளில் உங்களைச் சந்திக்க ஆவலாய்க் காத்திருப்போம்! Absolute Classics பற்றி; தோர்கல் பற்றி; MMS பற்றி ; தொடரும் ஆண்டின் தேர்வுகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை நேரில் தெரிந்து கொள்ள இதனையொரு வாய்ப்பாகப் பார்த்திடுகிறேன்.......! 

என்னதான் பத்தி பத்தியாய் இங்கே நான் எழுதினாலும் கூட; இந்தத் தொலைவிலிருந்து உரையாடும் முறையானது ஒரு சிலருக்கு சஞ்சலங்களைத் தருவதே வழக்கமாகிப் போகிறது என்பது மூடாக்குப் போடா ரகசியம் தானே? சொல்லப்படும் கருத்துக்களுக்கு நான் செவி சாய்க்காது போயின் அது காயங்களை ஏற்படுத்துவதும்; ஏதேனும் எதிர்கருத்துக்கு நான் யதேச்சையாய் உடன்பாடு தெரிவித்தால் அதன் பொருட்டு உஷ்ணங்கள் உருவாவதும் இந்த நாலரை ஆண்டுகளில் எனக்குப் புதிதல்ல தான்! ஆனால் ஒவ்வொரு முறையும் இவை நிகழும் போது நான் இழக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணி சங்கடமான உணர்வுகளைத் தவிர்க்க இயலவில்லை! நானிருப்பது கண்ணாடிக் கூண்டினுள் எனும் போது- உங்களின் சில மனவருத்தங்களின் பின்னணிக் காரணங்களை நான் அறிந்திருந்தாலும் அவை பற்றி எழுதுதல் சாத்தியமாவதில்லை! தவிர, வெப்பத்துக்கு வெப்பமே பதில் என்ற சிந்தனையிலும் உடன்பாடில்லை எனக்கு! வாட்சப்பில் சேதியனுப்பி விட்டு அதற்கு நான் பதில் தராவிட்டால் சங்கடப்படுவது; “இதை இப்படிச் செய்யுங்கள்- விற்பனை கூடும்; அதை அப்படி அமையுங்கள்- சிறப்பாக வரும்” என்ற அறிவுரை மின்னஞ்சல்களை நான் நடைமுறைப்படுத்தாவிட்டால் நெற்றிக்கண் திறப்பதெல்லாம் நமது இந்த இரண்டாவது இன்னிங்ஸின் பிரத்யேக அனுபவங்கள் எனக்கு! நண்பர்களின் நல்லெண்ணங்களைப் புரிந்திடாதோ; அவற்றை உதாசீனப்படுத்தும் எண்ணத்தோடோ செயல்படுவது எனது நோக்கங்களாகாது! ஆனால் ஒரு நாளில் விழித்திருக்கும் அத்தனை மணி நேரங்களும் நானொரு எடிட்டராக வலம் வர வாய்ப்பில்லை என்பதை பல வேளைகளில் நண்பர்கள் புரிந்து கொள்வதில்லை! நாளொன்றுக்கு மிஷினரி தொடர்பான நமது வியாபாரத்தில் 150-க்கும் குறையாத மிஷின்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் உள்நாட்டு / வெளிநாட்டு / வியாபாரிகளிடமிருந்து வந்து குவிந்து கிடக்கும் எனது வாட்சப்பில்! அவற்றைப் பேன் பார்த்துப் பதில் போடுவதிலேயே என் முன்வழுக்கை முன்னேறி விடுகிறது; இதனில் தமிழில் டைப் செய்து நண்பர்கள் அனுப்பும் காமிக்ஸ் சேதிகளுக்கு நானும் போனிலேயே transliteration தளத்தைத் தேடிப் பிடித்து, தமிழில் பதில் டைப் செய்து அனுப்ப ‘தம்‘ திரட்டுவது எஃகணம்? ‘பதிலளிக்க முனைய மாட்டேன்கிறான்; மண்டைக்கனம் கூடிவிட்டது‘ என்பதே மறுகணத்துத் தீர்ப்பாகிப் போகிறது! உங்களை மதிக்காத சிந்தனைகள் ஒரு நாளும் என்னுள் கிடையாது folks; ஆனால் அதே சமயம் நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்திலேயோ; பாணியிலேயோ; ரீதியிலேயோ எனது சிந்தனைகள் இருந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சரி தானா? And வாழ்க்கையே காமிக்ஸ் என்றான பின்னே எனக்கென  ஒவ்வொரு விஷயத்திலும் இருந்திடும் அணுகுமுறையை நான் பின்பற்ற நினைப்பது தவறாகிடுமா ? நிச்சயமாய் யோசனைகள் கேட்பேன் தான் ; ஆனால் பகிரப்படும்  ஒவ்வொரு யோசனையும் நடைமுறை கண்டிடா பட்சத்தில் நானொரு  விரோதியாய் பரிணாம வளர்ச்சி காண்பது தானே நடைமுறையாகி வருகிறது - ஒவ்வொரு வாட்சப்  குழுமத்தின் குமுறல்களிலும் ? 

எது எவ்விதமிருப்பினும்- அவரவர் பார்வைகளில் அவரவர் சிந்தனைகளின் நியாயம் தூக்கலாய் தெரியுமென்பதை நான் மறுப்பதற்கில்லை! நண்பர் மகேந்திரன் பரமசிவம் பதிவிட்டிருந்தது போல - நீதி ஒன்றாய் இருப்பினும், நியாயம் ஆளுக்கு ஆள் மாறுபட்டுத் தெரிந்திடுவது இயல்பே என்பதை ஏற்றுக் கொள்கிறேன்  ! சிவகாசி வெயிலில் உரமேறிய என் சருமத்துக்கு சில காயங்கள் மிகையாய் தெரியாது போகலாம்தான்; ஆனால் நண்பர்களும் மனதளவில் அடைந்திருக்கக்கூடிய காயங்களை அதே பாணியில் சகித்துக் கொண்டு விடுவார்களென நான் எதிர்பார்ப்பது தவறே  ! End of the day- இந்தக் காமிக்ஸ் பயணமும் சரி; இந்த வலைப்பதிவின் படலமும் சரி- சந்தோஷத்தை விதைப்பதையே குறிக்கோளாய் கொண்டதெனும் போது- இடையிடையே நேரும் இது போன்ற சங்கடங்கள்- நோக்கத்தில் தோல்வி கண்டவர்களாக்குகிறது நம்மை! காரணங்கள் எவையாக இருப்பினும் – காயங்களுக்குக் காரணகர்த்தா நானே என்ற முறையில் my sincere apologies folks! ‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை‘ என்பதே நமது தேடல்! அந்தப் புன்னகைகள் தொலைந்து போகத் தெரிந்தோ- தெரியாமலோ நானே காரணியாகப் போகும் வேளையில் மன்னிப்புக் கோருவதில் எனக்குக் கூச்சமில்லை! இப்போதோ - எப்போதோ எனது அஜாக்கிரதைகளால் காயப்பட்ட எல்லா நண்பர்களிடமும் எனது மன்னிப்புகளைச் சொல்லிக் கொள்கிறேனே !  எல்லாம் கடந்த பின்னே சந்தா ABCDEFGH நினைவிருக்காது; இங்கோ-எங்கோ நேர்ந்த உரசல்கள் மறந்திருக்கும்; எப்போதோ யாராலோ ஏற்பட்ட காயங்கள் ஆறிப் போயிருக்கும்! ஆனால் எஞ்சி நிற்கப் போவது காமிக்ஸ் மீதான நேசமும்; இங்கே அறுவடை செய்திருக்கக் கூடிய நட்பும் மாத்திரமே! அதனைத் தொலைத்திடாது தொடர இயன்றால்  நிச்சயம் மகிழ்வேன் ! ஒரேயொரு சன்னமான வேண்டுகோள் மட்டும்  guys! காரணமிருந்தால் உதையுங்கள் - வேண்டாமென்று சொல்லவில்லை ; ஆனால் உதைப்பதற்கென்றே காரணம் தேட வேண்டாமே- ப்ளீஸ்? 

சரி....இந்த சென்டிமெண்ட் படலத்தை ஓரம்கட்டிவிட்டு ஜாலியான விஷயங்கள் பக்கமாய் நம் பார்வைகளைத் திருப்புவோமா ? 

சாத்துக்கள் வாங்கிய நேரம் போக  எஞ்சியிருக்கும் வேளைகளில் புதுசு புதுசாய் கதைகளை ; தொடர்களை வாசிக்க ஆனமட்டிலும் முயற்சித்து வருகிறேன் ! One shot கதைகளாய் சமீபமாய்ப் படித்து வந்ததுள் ஒரு மெல்லிய ரொமான்ஸ் + ஆக்ஷன் கதை கொஞ்சம் வித்தியாசமாய்த் தோன்றியது ! இரண்டாம் உலக யுத்தப் பின்னணி.... நேசநாட்டுப் படைகளின் சிப்பாய் ஒருவன் மரணத்துக்கு 'டேக்கா' கொடுத்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்புகிறான் ! ஆனால் அவனோ மாண்டு விட்டானென்ற நம்பிக்கையில் அவனைச் சுற்றியுள்ள உலகம் சலனமின்றிச் சுழன்று வருகிறது ! மறைவிலிருந்து தனது இறுதி ஊர்வலத்தையே பார்க்கிறான் பயல் ; அழகான தனது காதலி இன்னொருவனுடன் நட்பாய் இருப்பதைப் பார்க்கிறான் ! சுற்றிச் சுழன்று செல்லும் அவனது இந்த அரூப வாழ்க்கையில் - காதலி திரும்பவும் இடம்  பிடித்தாளா ?போட்டியாய்த் தலைதூக்கியிருந்த புதியவன் என்னவானான் ? ஒரு தேசமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் யுத்தப் பின்னணியிலும் - காதல் சாத்தியம்தானா ? அவசியமாகிடும் போது சராசரி மனிதர்கள் எடுக்கக்கூடிய அவதாரங்கள்தான் என்ன ? என்று இந்தக் கதை அழகான சித்திரங்களோடு சொல்கிறது ! யௌவனமான யுவதி ஒருத்தி தான் இந்தக் கதையின் மையப் புள்ளி ! நிஜ வாழ்க்கையில் ஓவியரின் காதலி நிச்சயமாய் ஒரு பேரழகியாய் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் - simply becos கதை நெடுகிலும் ஓவியர் காட்டிடும் மெனக்கெடலில் காதல் கொப்பளிக்கிறது! இங்கே 'டமால்-டுமீல்' என்று சுட்டுச் சுட்டு விளையாடும் குதிரைப்பையன்கள் கிடையாது ; என்னைப் 'பன்ச் டயலாக் பரமசிவம்' அவதாரம் எடுக்கச் செய்யும் கதைக்களமே இல்லை ; மர்மத்தை முடிச்சவிழ்க்கும் டிடெக்டிவ் நாயகர்கள் கிடையாது ; பேய்-பிசாசு-ஆவி-என்ற அமானுஷ்ய ஐட்டங்களும் கிடையாது தான் ! ஆனால் மெல்லிய மனித உணர்வுகள் ; யுத்தம் எனும் கோரம் நிகழும் தருணங்களில் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என சலசலத்துச் செல்லும் ஒரு down to earth கதையிது ! "ஐயகோ..இப்போவரைக்கும் நல்லத் தானே போய்க்கிட்டிருக்கு? மறுபடியும் கி.நா.படலமா ? என சிலபல மிரட்சி தோய்ந்த குரல்கள் இப்போதே ஒலிக்கக்கூடும் என்பதும் அப்பட்டமே ! ஆனால் இந்தக் கதையை நான் 'டிக்' செய்து விட்டேனென்றோ ; இது சீக்கிரமே வந்தே தீருமேன்றோ நான் சொல்ல வரவில்லை ; 'படித்ததில் - பிடித்தது என்ற ரீதியிலான பகிர்தலாய்க் கருதிடுங்களேன் - இப்போதைக்கு ! 

"மாறுபட்ட வாசிப்புகள்" என்ற ரீதியில் இதுவொரு அழகான களமாக இருக்கலாம்தான் ; அல்லது disappointing ஆகவும் அமைந்திடலாம்தான் ! இந்தாண்டின் commercial பார்முலாவுக்குள் புகுந்தான பின்னே - இதுபோன்ற பரீட்சார்த்த முயற்சிகளை நிறையவே தயக்கத்தோடு பார்த்திட நேர்கிறது ! நிஜத்தைச் சொல்வதானால் - சிப்பாயின் சுவடுகளையும் ; கிரீன் மேனர்களையும் வெளியிட்ட 2014-ல் இது என் கண்ணில்  பட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் இந்நேரத்துக்கு அறிவிப்பாய் பொங்கியிருக்கும் ! But மொத்து வாங்கிய முதுகு இப்போதெல்லாம் சற்றே தயங்குகிறது ! Anyways நேரில் சந்திக்கும் அடுத்த தருணத்தில் இது பற்றிப் பேசுவோமே !

எனது வாசிப்புப் படலத்தில் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் one shot கூடச் சிக்கியுள்ளது என்பேன் ! If all goes well - நமது MMS இதழுக்கான கதையே இதுதான் என்று கூடச் சொல்லுவேன் !  ரணகள ஆக்ஷன் ; கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ; ஆழமான mature கதைக்களம் ; மிரட்டலான artwork + வர்ணங்கள் என இதுவொரு அதிரடி package ! கதையை வரவழைத்து - செலவாயினும் பரவாயில்லை - முழுமையாய் மொழிபெயர்த்துத் தாருங்களேன் எனக் கோரியுள்ளேன் ! ஆங்கில ஸ்கிரிப்ட் என் கைக்குக் கிடைத்த ஓரிரு நாட்களுள் இது பற்றியொரு தீர்மானம் எடுத்து விடுவேன் ! தகிக்கச் செய்யும் action thriller ! கதை நமக்கு ஒ.கே. எனில் - அதன் உரிமைகளைப் பெற்றிடுவதில் பெரியதொரு சிரமம் இருந்திடாது தான் !! Fingers crossed !!

வாசிப்பின் இன்னொரு phase-ல் எதிர்காலம் சார்ந்ததொரு கதைத்தொடருக்குள்ளும் மூழ்கிட வாய்ப்புக் கிட்டியது! தொடரின் வெவ்வேறு பாகங்களை வரவழைத்து - கதைச்சுருக்கங்கள் பெற்றுக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிசீலித்து வருகிறேன் ! இதுவரையிலுமான மதிப்பிடலில் எனது கோழிமுட்டைக் கண்கள் அகலமாய் விரிந்து நிற்கின்றன ! அசாத்தியக் கதைப் பின்னணி ; அட்டகாச ஸ்கிரிப்ட் + சித்திரங்கள் என இதுவொரு செம வித்தியாசமான கதைவரிசை என்பதில் துளியும் சந்தேகமில்லை ! கதைக்கு thumbs up தந்துவிட்டால் - அதன்பின்னே உரிமைகளின் பொருட்டு நிறையவே பிரயத்தனங்கள் அவசியமாகிடும் - இந்தப் பதிப்பகத்தோடு நாம் தொடர்பில் இல்லை என்பதால் ! ஆனால் குட்டிக் கரணம் அடித்தாவது உரிமைகளை வாங்கிவிட முடியுமென்ற நம்பிக்கையில் என் தலைக்குள் தறி கேட்டு ஓடும் குதிரைகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்து வருகிறேன் !  
கிடைக்கும் நேரங்களை  நடப்புப் பணிகளின் பொருட்டே முழுவதுமாய் செலவிட மனமின்றி - இங்கும் அங்குமாய் குற்றாலத்துக் குரங்கு போல் தாவி வருகிறேன் ! இருபத்தைந்து கதைகளுக்குள் தலை நுழைத்தால் , அதிர்ஷ்டம் இருப்பின் ஒன்று தேறுகிறது ! So ஒருபக்கம் ரின்டின் பெருந்தகையோடு லூட்டி அடித்துக் கொண்டே ; இன்னொரு பக்கம் டைகரின் அச்சுப் பணிகளை ரசித்துக் கொண்டே ...பிறிதொரு பக்கம் முத்து மினி காமிக்ஸின் மேற்பார்வையில் செலவாகிடும் நேரங்களையும் சிக்கனமாய் அமைத்துக் கொண்டே இந்தத் தேடல்களுக்குள் ஜாலியாய் புகுந்து வருகிறேன் ! தொடரும் 2 நாட்கள் எங்கள் ஊரின் இரண்டாவது அம்மன் திருவிழாவினை முன்னிட்டு விடுமுறைகள் என்பதால் - மேஜை நிறைய print-outs & லேப்டாப் முழுக்க டிஜிட்டல் பைல்களோடு குஜாலாய் குப்பைகொட்டத் தயாராகி வருகிறேன் ! திங்கட்கிழமை நமக்கு விடுமுறை என்பதால் அன்றைக்கு நம் அலுவலகத்தில் போன் எடுக்க ஆளிராது ; so செவ்வாய் வரை பொறுமை ப்ளீஸ் !  

அப்புறம் முத்து மினி காமிக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங் இப்போது தயார் ! முன்பதிவு செய்திட எண்ணும் நண்பர்கள் இங்கே கிளிக் செய்திடலாம் : http://lioncomics.in/all-available-comics/20951-muthu-mini-comics-6-books-advance-booking.html

இன்னொரு குஷியான சேதியும் கூட ! நமது ஆங்கில CINEBOOK காமிக்ஸ் பிரதிகள் சிறுகச் சிறுக வெளிமாநில வாசகர்களை நமக்கு ஈட்டித் தந்து வருகிறது ! அங்கேயும் லக்கி லூக் தான் டாப்பில் உள்ளார் விற்பனையில் !! Followed by BLAKE & MORTIMER !!! லக்கியின் விற்பனையில் ஆச்சர்யமில்லை எனினும், Black & Mortimer are the surprise package !! இங்கே பாருங்களேன் - ஆங்கில காமிக்ஸ் பட்டியலுக்கு : http://comics4all.in/2850-english-comics

மீண்டும் சந்திப்போம் folks !! See you around soon! Bye for now!

P.S : "என் பெயர் டைகர்" இதழினில் 3 பக்கங்கள் காலியாக உள்ளன ; ட்ஷி-ந.பா.வின் பெருமைகளைச் சொல்லும் துணுக்குச் செய்திகளாலோ ; சித்திரங்களாலோ ; உங்கள் விமர்சனங்கலாலோ நிரப்பிடலாம் ! So உங்கள் பங்களிப்புகள் அவசரமாய்க் கோரப்படுகின்றன folks ! உங்கள் முயற்சிகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிடலாமே ?

345 comments:

  1. நான் எத்தனையாவதுன்னு தெரியலை......
    இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்!

    ReplyDelete
  2. இனிய் ஞாயிறு காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே..

    ReplyDelete
  3. படித்து விட்டு வருகிறேன் .

    ReplyDelete
  4. Congrats Aadhi Tahmira ( Author Thamira).

    ReplyDelete
  5. ஞாயிறு காலை வணக்கங்கள் தோழர்களே

    ReplyDelete
  6. ஞாயிறு வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  7. இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்..

    ReplyDelete
  8. Google author ஆதி தாமிரா அவர்களுக்கு தங்கள் மொழிபெயர்ப்பு பணிமேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நண்பர் ஆதி தாமிராவுக்கு என் மனங் கனிந்த வாழ்த்துக்கள் ஸார். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  10. Author Athi @வாழ்த்துக்கள் நண்பரே.....
    Tex author Athi -என்ற பெயரை பெற அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  11. கானல வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. கலர் கனவுலகில் மூழ்க இருக்கும் உங்கள் அணிக்கும் சன்னமான வாழ்த்துக்கள் இனியரே .....

      Delete
    2. தங்களின் ஆதரவுக்கு நன்றி STV யாரே

      Delete
  12. வணக்கம் எடிட்டர் சார்....!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
    Replies
    1. //90 களின் மத்தியிலோ, இறுதியிலோ ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து,இரு பாகங்களுக்கான(கோட் நேம் மின்னல், கானகத்தில் கருப்புத்தங்கம் ) அட்டைப்படங்களும் தயாராகி,மொழி பெயர்ப்பும் முடிந்து, அச்சுக்கு செல்லும் கடைசி தருணத்தில்...., கதை ரொம்பவும் மொக்கையாக எடிட்டருக்குத்தோன்றியதால்....பரணுக்கு அனுப்பப்பட்ட இதழ் இது.மொக்கையான புக் எதுவும் வாசகர்களுக்குப்போய்சேரக்கூடாது என எடிட்டர் முடிவெடுத்த தருணம் அது.ஜெஸ் லாங்கின் ஒரு கதைக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆனால் இன்று.....மொக்கை எனத்தெரிந்தே வெளியிட்டுவிட்டு, மொக்கைக்கொரு மருந்தென இன்னொரு மொக்கையை தரும் காலம் புலர்ந்துள்ளது.90 களின் மத்தியிலோ, இறுதியிலோ ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து,இரு பாகங்களுக்கான(கோட் நேம் மின்னல், கானகத்தில் கருப்புத்தங்கம் ) அட்டைப்படங்களும் தயாராகி,மொழி பெயர்ப்பும் முடிந்து, அச்சுக்கு செல்லும் கடைசி தருணத்தில்...., கதை ரொம்பவும் மொக்கையாக எடிட்டருக்குத்தோன்றியதால்....பரணுக்கு அனுப்பப்பட்ட இதழ் இது.மொக்கையான புக் எதுவும் வாசகர்களுக்குப்போய்சேரக்கூடாது என எடிட்டர் முடிவெடுத்த தருணம் அது.ஜெஸ் லாங்கின் ஒரு கதைக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆனால் இன்று.....மொக்கை எனத்தெரிந்தே வெளியிட்டுவிட்டு, மொக்கைக்கொரு மருந்தென இன்னொரு மொக்கையை தரும் காலம் புலர்ந்துள்ளது.//
      என முகநூலில் எடியை பாராட்டி மூஞ்சி புத்தகத்துல வாழ்த்திவிட்டு இப்போ ஏன் இவரு கோவப்படுறாரு?

      மலங்க மலங்க முழித்துக்காட்டும படங்கள் .
      .
      .
      மிடியல

      Delete
    2. ரின் டின் கேன் : அட..மொக்கைக்கு மருந்தாகப் போவதும் இன்னொரு மொக்கையே என்ற நிலையாகிப் போய்விட்டால் - மூன்றாவதாயொரு மொக்கையை அருமருந்தாய் தராமலா போய் விடுவோம் ?

      Delete
  13. //“அட... இது ரொம்பவே குட்டீஸ் சமாச்சாரமே!“ என்று ஒருசாரார் தலையைச் சொரிவது புரியாதில்லை எனக்கு! ஆனால் சற்றே அவகாசம் கொடுத்தால் இந்த ஸ்மர்ப்ஸ் மாயாஜாலத்தினுள் அவர்களும் ஐக்கியமாகிடாது போக மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை எனக்கு!///----
    ஹி..ஹி...ரொம்பவே சரியாக சொன்னீர்கள் சார் ....
    நான் கூட நிறைய பணிவோடு எங்கள் குரூப்ல உள்ள ,பொடியர்களை ரசிக்க சற்றே சிரமப்பட்டு நின்ற நண்பர்களிடம் இந்த வேண்டுகோளை வைத்து உள்ளேன் சார் ....
    கிட் ஆர்டினார் சொன்ன மாதிரி -"ஒண்ணுமே இல்லை ,ஆனா என்னமோ இருக்கு ஸ்மர்ஃப்பில்". இந்த தத்துவம் (?) வெளிவரும் சமயம் புலப்பட்டு விட்டால் அவர்களும் கூட பொடிச்சூர் எக்ஸ்பிரஸ்ல குதூகலமாகா பயணிக்க முடியும் சார் ....

    ReplyDelete
  14. ஆதி தாமிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. உள்ளேன் ஐயா!

    Author ஆதி அவர்களை வாழ்த்த வதில்லாத காரணத்தால் வணங்கி பெருமையடைகிறேன்.!!!

    ReplyDelete
    Replies
    1. வயதில்லாத காரணத்தால். (ஹிஹி என்னோட கமெண்ட்டுக்கே புரூஃப் பாக்க வேண்டும் போலிருக்கே. கடல் யாழ் சகோ. நோட் இட். :-))

      Delete
    2. நோட்டடு சகோதரரே :)

      Delete
  16. இம காலை வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  17. இனிய காலை வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  18. அடடே! அடடடடே...!! வாழ்த்துகள் ஆட்.. errr... Author ஆதி அவர்களே! எப்படி இப்படியெல்லாம்?!! சொல்லவேயில்ல? வித்தியாசமே கண்டுபிடிக்கமுடியாமல் ஒரு முழுநீளக் கதையை(அதுவும் தல கதையை!) அட்டகாசமாய் மொழிபெயர்த்து அசத்திப்புட்டீங்க போங்க! வாழ்த்துகள்! உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள் நம்பர்-2!
    ஆதிக்கு காமெடி பாணியிலான எழுத்துகள் கைவந்த கலை என்பது ஊரறிந்த ரகசியம்! விரைவிலேயே ஒரு முழுநீளக் காமெடியும் ஆதியின் ட்ரேடுமார்க் நக்கல்ஸ், நையாண்டிகளோடு வெளியாக வேண்டுமென விரும்புகிறேன்! எடிட்டர் மனது வைத்தால் இது விரைவில் சாத்தியமே!

    ஒரு கி.னா'வை நம்ம செனா அனாவும், ஒரு லக்கிலூக்/சிக்பில் கதையை நம்ம கோடையிடி கண்ணனும் மொழிபெயர்க்க வேண்டும். ச்சும்மா பட்டையக் கிளப்பிடுவாங்க பாஸ்!! விரைவிலேயே இதுவும் நிகழ்ந்தேற எனது வேண்டுதல்கள்!!

    ReplyDelete
    Replies
    1. // வித்தியாசமே கண்டுபிடிக்கமுடியாமல் ஒரு முழுநீளக் கதையை(அதுவும் தல கதையை!) அட்டகாசமாய் மொழிபெயர்த்து அசத்திப்புட்டீங்க போங்க! //

      ஆசிரியர் சொல்லாவிடில் இது நமது வாசகரால் மொழி பெயர்க்கபட்டது என்பதை நான் நம்பி இருக்கமாட்டேன். செம!!!!

      Delete
    2. சகோதரரே, சகோதரர் ஆதி "Author" வேலையை எடுத்து கொண்டதால்
      "Web Designer" பணி கண்டிப்பாக உங்களுக்கு தான் :) :D

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Web-designer cum costume designer!! ஹிஹி!

      Delete
    5. வாழ்த்க்கள் ஆதி...

      Delete
    6. //Web-designer cum costume designer!! //
      Costume designer-னை தான் web designer என்று மறைமுகமாக கூறினேன் சகோதரரே
      ஆதி சகோதரருக்கு தெரிந்தால் தட்டி பறித்து விடுவார்

      நமது செயலாளருக்கு இப்பணியினை குடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன் ஆசிரியரே :D

      Delete
    7. உண்மைதான் சார்.!


      ஒரு தொழில்முறை வல்லுனர் போல் அழகாக செய்துள்ளார்.ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாமல் நன்றாக இருந்தது.இதைப் போல் கடல் யாழ்&பொடியன் அவர்களுக்கு சர்பிரைஸ் வைத்து பின்னர் அறிவித்து இருக்கலாம்.! நமது வாசகர்களிடையே இவ்வளவு திறமையா என்று என்னும்போது வியப்பாக உள்ளது.!

      Delete
    8. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

      @M.V,

      ’தொழில்முறை’ என்பதெல்லாம் அதிகம் நண்பரே! நம் சூழல் கருதி, எடிட்டரின் பாணியை ஒட்டி மொழிபெயர்க்கப்பட்டது, கூடவே எடிட்டரின் முழு மேற்பார்வையும், ஒத்துழைப்பும், எக்ஸ்ட்ரா நம்பரும் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அன்புக்கு நன்றி.

      Delete
    9. @ஈவி,

      கார்டூன்கள் மொழிபெயர்ப்பா? சிவகாசிகம் எனும் ஊரில் எல்லாக் கார்டூன் கதைகளையும் ஒரு குகைக்குள் போட்டுக்கொண்டு அதன் வாசலில் பெரிய பூதம் ஒன்று காவல் காக்கிறது. அந்த ஆள்விழுங்கி பூதத்தை மிஞ்சி கதையைக் கைப்பற்ற பூனையிடம் நெஞ்சுரம் உள்ளதா? :-))))

      பை தி வே, அட்டை டிசைனிங், புரூப் ரீடிங், அவ்வளவு ஏன் முழிபெயர்ப்பைக்கூட நீங்க ஏத்துக்குங்க.. டிரெஸ் தைப்பது மட்டும் என் வேலை. எனக்கு தையல் கிளாஸ் போன முன்னனுபவம் வேறு இருக்கிறது.. பாத்துக்குங்க! :-)))

      Delete
    10. @Madipakkam Venkateswaran

      சகோதரரே புரூப் ரீடிங் கடினமான வேலை கிடையாது

      சகோதரர்கள் Podiyan மற்றும் ஆதி தாமிரா அவர்கள் இருவருமே செய்த பணிகள் சுலபமானவை அல்ல

      Delete
  19. ///எனது வாசிப்புப் படலத்தில் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் one shot கூடச் சிக்கியுள்ளது என்பேன் ! If all goes well - நமது MMS இதழுக்கான கதையே இதுதான் என்று கூடச் சொல்லுவேன் ! ரணகள ஆக்ஷன் ; கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ; ஆழமான mature கதைக்களம் ; மிரட்டலான artwork + வர்ணங்கள் என இதுவொரு அதிரடி package ! ///

    ஆஹா.! நல்ல சேதி! நல்ல சேதி! ஷ்பெசல்னா இப்படித்தான் சார் எதிர்பார்க்கிறோம்.!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த வர்ணனைகள் பூராவும் டெக்ஸ் கதைக்கு மாத்திரமே பொருந்தும்....பத்தாயிரம் வாட்ஸ் பல்ப் மூஞ்சியில் எரியும் மொமண்ட் ...

      Delete
  20. அந்த யுத்த யுவதி கதையை களமிறக்குங்கள் சார். நண்பர் ஆதி தாமிராவிற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  21. ///இதுவரையிலுமான மதிப்பிடலில் எனது கோழிமுட்டைக் கண்கள் அகலமாய் விரிந்து நிற்கின்றன ! அசாத்தியக் கதைப் பின்னணி ; அட்டகாச ஸ்கிரிப்ட் + சித்திரங்கள் என இதுவொரு செம வித்தியாசமான கதைவரிசை என்பதில் துளியும் சந்தேகமில்லை !////

    ஆஹா! ஆஹா! அடுத்தடுத்து ஆச்சர்யங்களை அள்ளித் தெளிக்கிறீர்களே சார். சந்தா Z சென்னையில் அறிவிக்கப்பட்டு விடும்னு ஆணித்ததரமான நம்பிக்கை அடியேனின் அகத்தில் துளிர் விடத் தொடங்கிடுத்தூ!!!

    ReplyDelete
  22. அந்த செத்த சிப்பாய் - யுத்த யுவதி கதையை களமிறக்குங்கள் எடிட்டர் சார்! ஒன்லைன் ஸ்டோரியே பட்டையைக் கிளப்புதே!! ப்ளீஸ் ப்ளீஸ்! !

    ReplyDelete
  23. /// மர்மத்தை முடிச்சவிழ்க்கும் டிடெக்டிவ் நாயகர்கள் கிடையாது ; பேய்-பிசாசு-ஆவி-என்ற அமானுஷ்ய ஐட்டங்களும் கிடையாது தான் ! ஆனால் மெல்லிய மனித உணர்வுகள் ; யுத்தம் எனும் கோரம் நிகழும் தருணங்களில் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என சலசலத்துச் செல்லும் ஒரு down to earth கதையிது ///

    சார், வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற கதைகள் வரவேண்டும் சார். வழக்கத்திற்கு மாறுபட்ட கதைக்களங்கள் எப்போதும் முதலில் நெகடிவ் விமர்சனங்கள் பெற்ற பின்னரே வெற்றி பெறுகின்றன என்று தோன்றுகிறது.!!!

    ReplyDelete
    Replies
    1. தாரமங்கலத்தில் யாரோ ஒரு குயர் நோட்டும் பேனாவுமாக டென்சனா ஆபிஸ் கிளம்பியதாக சொன்னாங்க ,கிட் மாமா ...

      Delete
    2. @ FRIENDS : Excuse me...தாரமங்கலத்தில் ஒரு குயர் நோட்டு விற்பனைக்குத் தடை கோர what is the procedure ?

      Delete
  24. என் பெயர் தங்க தலைவனைப் பற்றி இன்னும் விரிவான தகவல்களை எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
    Replies
    1. அதுல விசயம் (தகவல்) இருக்குற மாதிரி இருந்தா சாரே சொல்லியிருப்பாரே ரம்மி?!?!?

      Delete
    2. ஹா..ஹா..துவக்கத்தில் இருந்தே ஆசிரியர் சரியான பில்டப் தராததால் , ஒருவேளை என் பெயர் டவுசரு ச்சே டைகரு ஹிட் அடிக்குமோ !!!!

      Delete
    3. @KiD ஆர்டின் KannaN
      @சேலம் Tex விஜயராகவன்

      Grrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      Delete











    4. ன்











      பெ



















      டை




























      இந்த விரிவு போதுமா
      மிம்ர 31 அ ர்களே

      Delete











    5. ன்











      பெ



















      டை




























      இந்த விரிவு போதுமா
      மிம்ர 31 அ ர்களே

      Delete
  25. சாா் அந்த 3 புதுகதைகளுமே ஒ.கே
    24 படம் பாா்தகுஷியுடன் இந்த புது புத்தகம் பற்றி செய்தி சூப்பா்
    ஜூன் 3,4 என்னள் வறஇயலாது எனக்கு அன்று தான் பள்ளி reopen sorry ஆனால் ஈரோடு புத்தக விழாவில் நான் இறுப்பேன்

    ReplyDelete
  26. வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே..!

    ReplyDelete
    Replies
    1. ///வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே.///

      ஆஹா!! விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் வரலாறு படைத்த "My dear brothers and sisters" போல ஒரு Effect!
      செம!

      உங்ககிட்ட என்னமோ இருக்கு குணா அவர்களே! :)

      Delete
  27. கானல வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. இது மாடஸ்டியின் இனிய கனவு வணக்கங்கள் தானே சகோதரரே :)

      Delete
    2. கலர் கனவாகவே போய் விடாம இருந்தா சரி...

      Delete
    3. கனவுகள் கருப்பு வெள்ளையில் தோன்றாது நண்பரே. இந்த கலர் கனவும் மெய்ப் படும்

      Delete
    4. டெக்ஸ் விஜயராகவன் !

      //கலர் கனவாகவே போய்விடாம இருந்தால் சரி//

      ஹிஹிஹி..........விஜயன் சார் பெயரிலே விஜய் இருப்பதால்......

      " விஜயன் சார் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அவர் பேச்சையே அவர் கேட்கமாட்டார் "

      Delete
    5. @ FRIENDS : இ.மு.க. கட்சியினர் எதிரணியின் பிரச்சாரத்தின் பொருட்டு துளியும் கலங்கிட வேண்டாம் !! இந்த வாக்குறுதி நிஜமாவது நிச்சயம் !!

      Delete
    6. //இ.மு.க. கட்சியினர் எதிரணியின் பிரச்சாரத்தின் பொருட்டு துளியும் கலங்கிட வேண்டாம் !! இந்த வாக்குறுதி நிஜமாவது நிச்சயம் !! //

      Thank You Sir :)

      Delete
    7. கலர் கனவாகவே போய் விடாம இருந்தா சரி...

      Delete
  28. Hi 🙋 friends
    Hi 🙋 vijayan sir

    Congrats Aathi sir.u hav done great job.expecting more translation from u as this will help reduce our editor's burden to some extend

    Editor sir I would ❤ to read that war-field love ❤ story u hav mentioned.

    Just finished reading Smurfs. Excellent translation.i like these cute little blues

    Have nice weekend folks! 👯👋

    ReplyDelete
  29. காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  30. காலை வணக்கம். நண்பர் ஆதி தாமிராவிற்கு பாராட்டுக்கள்! தொடர்ந்து கலக்குங்கள் சகோ!!

    ReplyDelete
  31. துரதிர்ஷ்டமாய் அந்த இரண்டோடு ஷெல்டனுக்கு adieu சொல்லத் தான் வேண்டும் – தொடரே இத்தோடு நிறைவு பெறுவதால்! So இருக்கும் வரையிலும் ஷெல்டனை ரசித்துக் கொள்வோமா?////
    ம்ஊகூம் ஒத்து கொள்ளமாட்டேன்.எடி ஐயா சீக்கிரம் மெயில் கொடுத்து புதிய கதைகளை தயார் செய்ய சொல்லுங்கள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டு சிங்கங்கள் பாய்ந்து விடும் என்றும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  32. //எதிர்காலம் சார்ந்ததொரு கதைத்தொடருக்குள்ளும் மூழ்கிட வாய்ப்புக் கிட்டியது! //
    Cyberpunk தொடரா சார்? அருமையாக இருக்கும். அதில்கூட Bat-Man இருக்கிறார்.

    ReplyDelete
  33. தோட்டா டைம் என்னாச்சு

    ReplyDelete
  34. விஜயன் சார், இந்த குட்டி மனிதர்கள் உலகம் வித்தியாசமானது! ரசிக்க பலவிசயம்கள் இருக்கிறது. தொடரட்டும் இவர்கள் ராஜ்யம்.

    குறை: சில இடம்களில் வசனம்கள் மிகவும் சிறிய எழுத்தில் உள்ளது, இதன் காரணம் குட்டியான இடத்தில் நாம் வசனம்களை அடைக்கும் கட்டாயத்தில் என்பது புரிந்து கொள்கிறேன். முடிந்தால் ஏதாவது செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் குட்டி மனிதர்கள் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

      லார்கோ தொடர்களை office ல் உள்ளவர்களுக்கு இரவலாக படிக்க
      ஓரு நண்பர் படித்து விட்டு இரண்டு லார்கோ கமிக்ஸ் வங்கி விட்டார். புத்தக கன்காட்சில் மிதம் உள்ள அனைத்து லார்கோ தொடரையும் வாங்கி விடுவார் என்று நம்புகிறேன். இன்னொரு நண்பர் முதல் படித்து விட்டு இரண்டாம் பாகம் ஆர்டர் செய்ய முடியாது எனபதால் nbs படிக்க கொடுத்துள்ளேன். உங்களை கேட்காமல் கொடுத்தற்கு மன்னிக்கவும். அடுத்த வாரம் கண்டிப்பாக NBS திருப்பி கொடுத்து விடுகிறேன்.

      (டாக்டர் டெக்ஸ் படிக்க கொடுத்தால்
      அப்புறம் கமிஸ்னாலே காத துரம் ஓடிவ விடுவார்கள்.)

      Delete
    2. Parani from Bangalore : //சில இடம்களில் வசனம்கள் மிகவும் சிறிய எழுத்தில் உள்ளது, இதன் காரணம் குட்டியான இடத்தில் நாம் வசனம்களை அடைக்கும் கட்டாயத்தில் என்பது புரிந்து கொள்கிறேன். முடிந்தால் ஏதாவது செய்யவும்.//

      துரதிர்ஷ்டவசமாய் இதற்கொரு solution இல்லையே சார் ! இந்த இதழுக்கு பலூன்களை துளிகூட மாற்றிடாது தயாரித்ததால் - படைப்பாளிகளிடமிருந்து ஒற்றைத் திருத்தம் கூடயின்றி ஒப்புதல் கிட்டி விட்டது ! வேறு வழி இல்லையே !

      Delete
  35. இனிய காலை வணக்கங்கள் விஜயன் சார் :)
    இனிய கால வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

    ஆதி தாமிரா சகோதரருக்கு பாராட்டுக்கள்
    மிக சிறப்பான பணியினை செய்து உள்ளீர்கள் சகோதரரே

    ReplyDelete
  36. விஜயன் சார்,

    // எனது வாசிப்புப் படலத்தில் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் one shot கூடச் சிக்கியுள்ளது என்பேன் ! If all goes well - நமது MMS இதழுக்கான கதையே இதுதான் என்று கூடச் சொல்லுவேன் ! //

    குரல் வாக்கு எடுப்பு, இணைய தள வாசகர்கள் வாக்கு எடுப்பு, இணைய தளதிற்கு அப்பால் உள்ள வாசகர்களிடம் வாக்கு எடுப்பு என தொடக்கிவிட்டு வேறு ஒரு முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறதே :-(

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே அப்பவே சொன்னம்ல ஆசிரியர் யார் பேச்சையும் கேட்க மாட்டார், அவர் முடிவு எடுக்கிற விதமே வேறனு
      நல்ல கதைகளம் சிக்கி விட்டால் அதை விட மாட்டார் அவ்வளுவு தான்
      நம்மிடம் அதை காண்பித்து கருத்து கேட்டு விட்டு அதை போட்டு விடுவார்

      Delete
    2. Parani from Bangalore : நண்பரே - ஓராண்டுக்கு முன்பான திட்டமிடல்கள் - கல்லில் அறையப்பட்ட எழுத்துக்களைப் போன்றவை ; மாற்றங்களுக்கு உட்படா ! Casual-ஆக எழுந்திடும் MMS போன்ற தருணங்களின் திட்டமிடல்கள் - நமக்குக் கிடைக்கக் கூடிய புது வரவுகளின் கதைத் தரங்களைப் பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டவைகளே ! அழகானதொரு கதை ; அதுவுமொரு ஒன் ஷாட் - எட்டும் தூரத்தில் இருப்பின், அதனை பயன்படுத்திட நினைப்பது தவறாகுமா ? சில விஷயங்களில் சிந்தனைகளில் flexibility அவசியமாகிடலாம் ; இதுவும் maybe அத்தகையதொரு தருணம் ! "யோசனை கேட்டுவிட்டு அப்புறம் கிடப்பில் போட்டு விட்டான் " என்ற பல விசனங்களுக்கு - என் மனதில் ஸ்திரத்தன்மை இல்லாமை காரணமல்ல ; சூழல்களுக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிடத் தேவைப்படும் அவசியமே காரணம் !

      2016-க்கு சுப மங்களம் போடும் முன்பாக உங்கள் கைகளில் தோர்கலை ஒப்படைப்பது என் பொறுப்பு ! கவலையை விடுங்கள் !

      Delete
    3. //"யோசனை கேட்டுவிட்டு அப்புறம் கிடப்பில் போட்டு விட்டான் " என்ற பல விசனங்களுக்கு - என் மனதில் ஸ்திரத்தன்மை இல்லாமை காரணமல்ல ; சூழல்களுக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிடத் தேவைப்படும் அவசியமே காரணம் ! //

      தாங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதில் அர்த்தம் இருக்கும் என்று அறிந்தவர்கள் நாங்கள் சார் :)



      Delete
    4. கடல்யாழ்9 : நன்றி ரம்யா ! எனது முடிவுகள் எல்லாத் தருணங்களிலும் சரியாக இருக்குமென்றில்லை ; so ஏதேனும் நெருடல்கள் தோன்றிடும் வேளைகளில் அது பற்றிச் சுட்டிக் காட்டுவது தவறாகாது !

      Delete
  37. டாக்டர் டெக்ஸ் கதையை மொழி பெயர்த்த ஆதி தாமிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றாக இருந்தது.

    ReplyDelete
  38. ஆதி தாமிரா அவர்களை வாழ்த்த வயதில்லாத்தால் வணங்கும் மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் கூட்டத்துக்கு போகாதிங்கன்னா கேட்ககிறது இல்ல :-)

      Delete
  39. புத்தகத்தில் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக நண்பரது பெயரோடு குறிப்பு ஏதும் இல்லாதது வருத்தமே. ஆயினும், ஆசிரியர் முன்னெச்சரிக்கையாய், முதலிலேயே சொல்லாமல் விட்டதும் சரிதான் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால்.....ஹ்....ம்....

    ReplyDelete
    Replies
    1. ...ஆமாமாம் பொடியனாரே ,அதே தான் ....அவரும் மாத்தி யோசிப்பாருள்ள...

      Delete
    2. @ FRIENDS : இரகசியம் காக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது ; ஆனால் பரிசீலனை துவங்கும் முன்பாகவே தீர்ப்ப்புகள் எழுதப் படக்கூடிய வாய்ப்புகளைத் தவிர்க்கும் பொருட்டே இந்த முன்ஜாக்கிரதை !

      Delete
  40. /////இதுவரையிலுமான மதிப்பிடலில் எனது கோழிமுட்டைக் கண்கள் அகலமாய் விரிந்து நிற்கின்றன ! அசாத்தியக் கதைப் பின்னணி ; அட்டகாச ஸ்கிரிப்ட் + சித்திரங்கள் என இதுவொரு செம வித்தியாசமான கதைவரிசை என்பதில் துளியும் சந்தேகமில்லை !////---செல்டனுக்கு மாற்று கிடைத்து விட்டது போல தெரிகிறதே சார் ....2018ல் இதுபோன்ற வித்தியாசமான தொடர்களை ரசிக்க ரெடியாகிடுவோம் என க்ளாவின் பட்சி சொல்கிறது சார் ....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : இது நீளமானதொரு ஒன் ஷாட் சார் ! தொடரல்ல !

      தொடர்களும் பின்புலத்தில் தயாராகி வருகின்றன !!

      Delete
  41. Dear Aathi Thamira sir,

    ¶€√\¢£[÷𠶩€^π√%#?@ *;<®π√€[₹}

    வாழ்த்துக்கள் சொன்னேங்க. (D)

    ReplyDelete
  42. நண்பர்களின் மொழிபெயர்ப்பு திறைமையை தவிர மற்ற திறமைகளை மட்டும் பயன்படுத்த பாருங்கள் சார் ...காரணம் லயனின் வெற்றிக்கு முழு முதல் காரணம் மொழி பெயர்ப்பு தான் ...என இதற்கு முன் வாசகர்களை மொழி பெயர்ப்பில் தாங்கள் ஈடுபட சொன்ன போது எனது கருத்து சார் இது ...ஆனால் அது மிக பெரிய தவறு என்று நண்பர் ஆதி தாமிரா நிரூபித்து விட்டார்கள் ...நமது நண்பர்கள் அனைத்திலுமே பட்டையை கிளப்புவார்கள் என்பது இதன் மூலம் புரிபடுகிறது ..டாக்டர் டெக்ஸ் கதையை படிக்கும் பொழுது எந்த மாறுபாடும் தெரியவில்லை ...(உங்கள் கைவண்ண திருத்தல் இருந்தாலும் )..ஆதி தாமிரா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...முன் கால பதிவுக்கு மன்னிப்பையும் வேண்டி கொள்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் தலீவரே! விடாப்பிடியா இருந்த நீங்களே மனசை மாத்திக்கிட்டது ஆச்சர்யம்தான்! எங்கே கண்ணீரும் கம்பலையுமா பேனாவைக் கையிலெடுத்திடுவீங்களோன்னு ஒரு பயம் இருந்தது உண்மை!

      இப்ப, கண்ணுகள்ல வேர்த்துடுச்சு போங்க!

      Delete
    2. மேலே நான் படித்தது தலீவரோட கமெண்ட்டுதானா??
      நம்ப முடியவில்லை யில்லை யில்லை!!!

      Delete
    3. இது தலீவரோட மனசாட்சி...

      Delete
    4. அந்த எதிர்ப்பு தெரிவித்தது தாங்கள் தானா தலீவரே
      முன்பு ஒரு முறை வசனங்கள் எழுத ஆசிரியர் கேட்டிருந்த போது,நான் எனது பல்கழைகலக Professor-யை பரிந்துரை செய்து இருந்தேன் (எனது ஆசிரியர் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி உள்ளார், மற்றும் இரும்புக்கை மாயாவி ரசிகை என்பதால் )
      நமது ஆசிரியர் வாசகர்கள் ஒத்து கொள்ள வில்லை அதனால் அம்முடிவை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன் என்று கூறினார். ஆசிரியரின் முடிவை ஒரு மனதாக ஏற்று கொண்டேன்...hmmmm

      கம்மர் கட் , கல்கோனா அப்புறம் சோளம் வாங்கி தந்தால் தான் மனிப்பு ஏற்று கொள்ள படும்
      மகிளரணி தலைவியின் வேண்டுகோள்

      Delete
    5. @பரணீதரன்,

      உங்களிடமிருந்து இந்த மனமாற்றத்தை எதிர்பார்த்திடவில்லை. மிகவும் மகிழ்ச்சி! நன்றி!

      Delete
    6. நண்பர்களே ....எத்தனையோ காமிக்ஸ் இதழ்கள் வெளிவந்து இருந்தாலும் இன்னமும் தடையில்லாது நமது இதழ் வெளி வருவதன் முழு காரணம் நமது மொழி பெயர்ப்பு தான் என்பது மறுக்க முடியாத உண்மை தானே ...அதில் பரீசார்த்த முயற்சி தேவைதானா என்பதே எனது அப்போதைய நிலைப்பாடு ...ஆனால் நமது வழக்கமான மொழி பெயர்ப்புக்கு பங்கம் வராமல் திறமையாகவே நண்பர்கள் மொழி பெயர்க்கும் பொழுது கருத்தை மாற்றி கொள்வதில் தவறு இல்லை தானே ...நல்ல வேளை ஆசிரியர் வெளிவந்தவுடன் அறிவித்தார் ...இல்லையேல் கண்டிப்பாக போராட்டம் நடை பெற்று இருக்கும் ...ஆசிரியர் கூற்று படி மாற்றம் ஒன்றே மாறாதது ...;-)

      மகளிரணி தலைவி கடல்யாழ் அவர்களின் கட்டளைக்கு போராட்ட குழு அடிபணிகிறது ....செயலாளர் அவர்களே ...கமர்கட் ..கல்கோனா என கணக்கில் எழுதி ஒரு இரண்டாயிரத்தை இங்கே தள்ளவும் ...;-)

      Delete
    7. நண்பர் ஆதி தாமிரா அவர்களே ...இதற்கு முதல் காரணம் உங்கள் திறமையே ....லயன் குழம மொழிபெயர்ப்புக்கும் ...உங்கள் மொழிபெயர்ப்புக்கும் வேறுபாடு தெரியாத பொழுது மாற்றம் ...

      மகிழ்ச்சி ....யே ....;-)

      Delete
    8. @ FRIENDS : தலீவர் தபாலாபீஸ் பக்கமாய் டீ குடிக்கப் போனால்கூட ரிக்டர் அளவுகோல்களில் 8.0 சிவகாசியில் பதிவாவது வாடிக்கை ! நேற்றிரவு இந்தப் பதிவை டைப் செய்துமுடித்த முதல்வேலையாய் - மாடியில் படுக்காமல் , கீழ்தளத்தில் - அதுவும் தரையிலேயே படுத்தேன் - பூகம்ப முன்னெச்சரிக்கையில் !

      அடடா !! சிவகாசி பிழைத்தது !! ஆத்தா...மகமாயி !!

      Delete
  43. எனது வாசிப்புப் படலத்தில் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் one shot கூடச் சிக்கியுள்ளது என்பேன் ! If all goes well - நமது MMS இதழுக்கான கதையே இதுதான் என்று கூடச் சொல்லுவேன்


    ####
    சூப்பர் சார் ...ஆனா எம்எம்எஸ் இதழ் மெகா இதழ் தானே சார் ...மில்லியன் குண்டா இருக்கும் சார் ...பாத்துகுங்க ...;-)

    ReplyDelete
  44. ஆனால் எஞ்சி நிற்கப் போவது காமிக்ஸ் மீதான நேசமும்; இங்கே அறுவடை செய்திருக்கக் கூடிய நட்பும் மாத்திரமே! அதனைத் தொலைத்திடாது தொடர இயன்றால் நிச்சயம் மகிழ்வேன்..

    #######

    உண்மை மட்டுமல்ல சார் ...நிஜமான நிதர்சனமும் கூட ....எங்களுக்கு கருத்து வேறுபாடு வரலாம் சார் ...ஆனால் நட்பு வேறுபாடு வராது ....இப்ப கூட பாருங்க நானும் மாயாஜீயும் கருத்து வேறுபாடு விவாதத்தில் பலமாக பங்கு கொண்டாலும் சென்னை வரும் பொழுது தோள் மேல் கை போட்டு கொண்டு சந்தோசமாக வருவோம் சார் ....நாங்களே இப்படி எனில் ஆசிரியர் உங்களை தவறாக நினைப்போமோ சார் ...

    ReplyDelete
  45. எடி சார், புத்தகங்கள் இப்போதுதான் வந்து சேர்ந்தன. லயன் மினி என்னை முத்து காமிக்ஸ் வாரமலர் வாங்கிய காலத்திற்கே இழுத்து சென்றது. பெரிய ஏமாற்றம், சதிகார் சங்கத்துல பேப்பர் தரம் செஞ்ச சதிதான் சார். புத்தகத்த படிக்க முடியுமான்னு தெரியல. collection காக வாங்கி வெச்சிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. நிதானமாய் போன மாதத்துத் தலையில்லாப் போராளி இதழையும் எடுத்து வைத்துக் கொண்டு - சதிகாரர் சங்கம் இதழோடு ஒப்பிடுங்கள் நண்பரே .....சதிகள் ஏதுமில்லை ; saravanan srinivasan : இரண்டுமே ஒரே காகிதம் என்பது புரியும் ! சென்ற மாதம் மொத்தமாய்க் கொள்முதல் செய்திருந்த ஒரே மில்லின் - ஒரே ரகத்தின் - ஒரே lot இதுவும் ! இதுவரை நாம் பயன்படுத்தி வந்த மஞ்சள் shade காகிதத்தின் இடத்தில் இந்தப் பேப்பரைப் பார்க்கும் போது உங்களுக்குத் தோன்றும் பிரமையே இது !

      Delete
    2. சார், ஒரு பக்கத்தை படிக்கும் போது, முதற் பக்கத்தின் ஓவியங்கள் பிண்ணனியில் தெரிவது இடையூறாக இருப்பதையே சுட்டி காட்டினேன் சார். மற்ற புத்தகங்களில் இந்த பிரச்சினை இல்லை சார்

      Delete
  46. சார், எப்படியும் ஒரு மெல்லிய ரொமான்ஸ் 2 மில்லியன் ஹிட்ஸ்க்கு உறுதியாயிடிச்சின்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. saravanan srinivasan : இந்த நொடி வரையிலும் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதே நிஜம் நண்பரே !

      Delete
    2. //மெல்லிய ரெமான்ஸ் கதை//

      உங்கள் பதிவில் கதையை கேட்டபோதே படிக்கவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.!

      ஆனால் அது கி.நா.என்றதும் கொதிக்கும் பாலில் வாய் வைத்த பூனை மாதிரி ஆகிவிட்டேன்.!

      என்னை போன்ற சராசரி வாசகர்களுக்கு லட்டுமாதிரி உள்ள ஷெல்டன் கதையிலே பீஸ் வாங்கினாரா இல்லையா என்றே சரியாக யூகித்து புரியமுடியவில்லை.

      பழைய தமிழ் சினிமா படங்களில் கடைசியில்,வில்லன் மனம்திருந்தி கதாநாயகனுடன் கதாநாயகியை சேர்த்துவைத்து காமெடி நடிகர் சினிமா படத்தின் பெயரைச்சொல் ஜோக் அடித்து எல்லோரும் கலகலவென்று சிரித்து வணக்கம் போர்டு போட்டு என்ட் கொடுத்தால்தான் எங்களுக்கு திருப்தி .!

      என்னைப்போன்ற வாசகர்கள் கணிசமான அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு,நமது மேக்சேரிக்காரர் ஒ.சி.சு.விமர்சனம் போல் கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி விளக்கம் கூறி என்ன கி.நா.போட்டாலும் எனக்கு டபுள் ஒ.கே.

      Delete
    3. Madipakkam Venkateswaran : கோனார் நோட்ஸ் பாணியில் "கி.நா மினி " என்றொரு இணைப்பை போட்டு விட்டால் போச்சு !!

      Delete
    4. நன்றி சார்.!

      காமிக்ஸ் படிப்பது ஆனந்தம் என்றால் ,கி.நா.படித்தால் பேரானந்தம் சார்.! இதை வானமே எங்கள் வீதி.ஒ.சி.படித்ததில் உணர்ந்தேன்.!ஆனால் எனக்கு கோனார் நோட்ஸ் அவசியம்.!

      Delete
  47. சார்,
    'சதிகாரர் சங்கம்' இதழ் அச்சிடப்பட்ட தாளின் தரம் பற்றி பல விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளனவே? அதுபற்றி தாங்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவித்திடவில்லையே?
    அச்சிடப்பட்ட அத்தனை பிரதிகளும் அந்தத் தாளில்தானா? அல்லது சில பிரதிகள் மட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : தலையில்லாப் போராளியும் ; சதிகாரர் சங்கமும் ஒரே காகிதத்தில் அச்சானவை ! அதற்கு எழா விமர்சனம் இதற்கு எழும் போது சற்றே குளறுபடியாய்த் தோன்றவில்லையா ? இந்தாண்டின் துவக்கம் முதலாய் நாம் பயன்படுத்தி வரும் அதே காகித மில்லின் தயாரிப்பு தான் இரண்டுமே ! டன் 59,000 ரூபாய்க்கு வாங்கப்படும் பேப்பரும் தரமற்றதாய்த் தெரிந்தால் - sorry ; can't do too many things about it !

      Delete
    2. இதை பற்றி முன்பே பதிவிட்டு இருந்தேன், இத்தனை மட்டமான காகிதத்தில் கிளாசிக் ரீ பிரிண்ட்கள் வருவதை ஏற்று கொள்ள முடியவில்லை. போட்ட புத்தகங்களையே மறுபடி மறுபடி மறுபடி மறுபடி போட்டு வெருப்பேற்றுவத்ர்ற்கு பதில், இடை இடையே வராத புத்தகங்களில் மறு பதிப்பில் கவனம் செலுத்துங்கள் சார். சற்று சிந்தித்தால் இப்பொழுது வருகிற மறு பதிப்பு படலம் பாதியில் நின்று போனால், எங்களிடம் வந்த புத்தகங்களின் 4 காபிகள்தான் இருக்கும் நிலை ஏற்ப்படும். அடுத்து மறுபதிப்புகளின் அட்டை தரம் படு மோசம். இத்தனை வருடங்களாக இந்த பீல்டில் கொடி கட்டி பறக்கும் உங்களிடம் இருந்து இத்தனை மோசமான அட்டை படங்களை எதிர் பார்க்கவில்லை சார் .

      Delete
    3. அவை மட்டமான காகிதங்கள் இல்லை
      நமது பழைய "Classic Comics-kku பயன்படுத்திய காகிந்தகளை விட பல மடங்கு better

      Delete
    4. Giridharan V : ஒரு விஷயத்தைப் பிடிவாதமாய் நீங்கள் மறப்பது ஏனோ புரியவில்லை ! மறுபதிப்புகளுக்கு உரிமைகள் புதுப்பிப்பு செய்திடும் வேளையில் ஒட்டு மொத்தமாய் அத்தனை கதைகளுக்குமே ; ஒரே நேரத்தில் ராயல்டி செலுத்துவது கட்டாயமாகியுள்ளது என்பதை நான் பல தடவைகள் சொல்லிவிட்டேன் ! 'இது மட்டும் தான் வேண்டும் ; அது வேண்டாமென்று ' தேர்வு செய்யும் நிலையில் நானில்லை எனும் போது - அந்த சலுகையை நான் உங்களுக்குத் தருவது எவ்விதமோ - புரியவில்லையே ! தவிர, ஆண்டின் துவக்கத்திலேயே அந்த வருஷத்து மறுபதிப்புகள் எவை எவை எனத் தெள்ளத் தெளிவாய் அறிவித்துத் தானே சந்தாவே சேகரிக்கிறோம் ? இதனில் உங்களை வெறுப்பேற்றும் படலம் எங்கிருந்து துவக்கம் காண முடியும் ? இதுவரையிலும் மறுபதிப்பு காணா இதழ்களை மட்டுமே ஆரம்ப ஆண்டுகளில் நாம் வெளியிடும் பட்சத்தில் - பின்வரும் ஆண்டுகளின் இதழ்களை சீண்ட யாரிருப்பார் ?

      கொஞ்சமாய் என் பார்வையிலிருந்தும் விஷயங்களை அனுகிடத் தான் முயற்சித்துப் பாருங்களேன் சார் !

      Delete
    5. //தலையில்லாப் போராளியும் ; சதிகாரர் சங்கமும் ஒரே காகிதத்தில் அச்சானவை ! அதற்கு எழா விமர்சனம் இதற்கு எழும் போது சற்றே குளறுபடியாய்த் தோன்றவில்லையா ? இந்தாண்டின் துவக்கம் முதலாய் நாம் பயன்படுத்தி வரும் அதே காகித மில்லின் தயாரிப்பு தான் இரண்டுமே ! //

      இந்த இதழ்கள் இன்னும் எமக்குக் கிட்டவில்லை என்பதால் ஒப்பிடுவது இயலாது சார். ஆனால், 'இராட்சசக் குள்ளன்' போன்ற இதழ்களில் பயன்படுத்தப்பட்டலேசான மஞ்சள் கலந்த தாள்களில்கூட உற்றுப் பார்த்தால் மறுபக்க அச்சுப்பதிப்பு சில இடங்களில் தெரிந்தது. அது தவிர்க்க இயலாத ஒன்று. அந்த நாளைய தாள்களின் தரம் இன்றும் தொடர்வதில்லை என்பது தெரிந்ததே!

      Delete
    6. Podiyan : கொடுமை என்னவென்று சொல்லவா ? ஆண்டாண்டு காலமாய் நாம் பயன்படுத்தி வந்த நியூஸ்பிரிண்ட் காகிதத்தின் பருமன் 45 & 48 gsm ! 2012 முதலே நாம் பயன்படுத்தும் வெள்ளைத் தாளின் பருமனோ 60 gsm !

      45 & 48-ல் லயித்துக் கிடந்த போதெல்லாம் நமக்குத் தட்டுப்பட்டிருக்கா குறைகள் இன்றைக்கு 60-ல் நிற்கும் வேளையில் தெரிகிறதென்றால் என்சொல்வேன் ? ஒரு வேலை தாளே கரேலென்று இருக்கும் போது பின்பக்கம் தெரியாது போனதோ - என்னவோ !

      Delete
  48. மெல்லிய மனித உணர்வுகள் ; யுத்தம் எனும் கோரம் நிகழும் தருணங்களில் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என சலசலத்துச் செல்லும் ஒரு down to earth கதையிது.
    ############
    சார்., பல மாதங்களாக. டமால் டூமீல்களையும் .,மறுபதிப்புகளையுமே பார்த்து பார்த்து பூத்துப் போய்விட்ட கண்களுக்கு கொஞ்சம் மாறுபட்ட களங்களையும் தயவு செய்து காட்டுங்கள் சார். வெற்றி பெறும் கி நா க்கள் எல்லாமே
    ஆரம்பத்தில் எல்லாமே கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு வந்தவைதானே?

    ReplyDelete
    Replies
    1. Calamity Jane : எதிர்ப்புக்கள் எனக்குப் புதிதல்ல ஜேன்...ஆனால் எல்லா நேரங்களிலும் எதிர்ப்போடே பயணம் செய்வது அயர்ச்சியைத் தருகிறது ! இந்தக் கதையை சிறப்பாகப் படைக்க என்ன செய்யலாம் ? என்ற சிந்தனையில் லயிக்க அவகாசம் கிட்டினால் அது ஆக்கபூர்வமாய் இருந்திடும் ; அதே அவகாசத்தை - விமர்சனங்களிலிருந்து இக்கதையைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்ற ரீதியில் சிந்திக்கச் செலவழிக்க நேர்வது தான் இக்கட்டே !

      மாற்றங்களுக்கு இசைவு உள்ளிருந்து வந்தால் என் பணி இலகுவாகிடாதா ?

      Delete
    2. @ எடிட்டர் ...

      சார் ! இது குறித்து முன்பொருமுறை எழுதி இருக்கிறேன்......


      z சந்தாவை இதற்கு உபயோக படுத்துங்கள்......பரீட்சார்த்த களனாக அது இருக்கட்டும்....

      பத்தோடு பதினொன்று என அச்சந்தா இல்லாமல் புதிய முயற்சிகளின் நுழை வாயிலாக இருக்கட்டும்.


      இதன் வரையறைகள் என்ன என்பதை உங்கள் சமரசம் ஏதுமின்றி உள்ளுணர்வுகள் தீர்மானிக்கட்டும்.


      இதற்கான இசைவினை சந்தாதாரர்களிடம் பெறுங்கள்.....



      கண்டிப்பாக ஒரு சாரர் முழுமனதோடு சம்மதம் நல்குவர்.....

      Delete
    3. என் கருத்தும் அதுவே நண்பரே!

      Delete
    4. என் கருத்தும் அதுவே

      Delete
  49. எனது வாசிப்புப் படலத்தில் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் one shot கூடச் சிக்கியுள்ளது என்பேன் ! If all goes well - நமது MMS இதழுக்கான கதையே இதுதான் என்று கூடச் சொல்லுவேன் !
    ###########

    நல்ல முடிவு சார். தோர்கல் வழக்கமான இதழாகவே வரட்டுமே. ஷ்பெசல் இதழ் என்றாலே வித்தியாசங்களையும் புதுமைகளையும் ப்ரம்மாண்டங்களையுமே மனம் எதிர்பார்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல முடிவு சார். தோர்கல் வழக்கமான இதழாகவே வரட்டுமே. ஷ்பெசல் இதழ் என்றாலே வித்தியாசங்களையும் புதுமைகளையும் ப்ரம்மாண்டங்களையுமே மனம் எதிர்பார்க்கிறது. //

      +1

      Delete
  50. மாடஸ்டி கலரில் வரப்போகும் செய்து இன்ப தேனாக பாய்கிறது :)
    வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவு அளித்த சகோதரர் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் :)
    ATR சாரும், சத்யா சாரும் இப்போது இங்கு காணப்பட்ட வில்லை
    இருவருமே சந்தோசபடுவார்கள்

    சகோதரர் இராவணன் இனியன் அவர்களும், சகோதரர் மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் அவர்களும்,
    மற்றும் சகோதரர் JSK அவர்களும் மிக்க மகிழ்ச்சி கடலில் இருப்பிர்கள் :) :) :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயம் தான். மேஜிக் வின்ட் கதைகளை போல் சொதப்பாமல் இருக்க வேண்டும். (B&W இதழ்களை கலரிங் செய்வது சற்று கடிமான பனி)

      Delete
    2. கடல்யாழ்9 : ATR சார் மீண்டும் புத்துணர்ச்சியோடு சீக்கிரமே களம் இறங்குவாரென்று எதிர்பார்ப்போம் !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. மாடஸ்டி கலரில் வரும் வரை மடியில் நெருப்பை கட்டி கொண்டிருப்பது போல் உள்ளது சகோதரி. இங்கு மாடஸ்திக்கு மாமியார்கள் ஏராளம்

      Delete
    5. @இனியன்,

      மாடஸ்திக்கு மாமியார்கள் ஏராளம்// யோவ்.. சத்தமா சிரிச்சிகிட்டிருக்கேன்.. :-)))))))))

      Delete
    6. மாமியார்கள் மட்டுமில்லை ... ஏராளமான ரோமியோக்களும் உண்டு...

      Delete
    7. ravanan iniyan : "இன்றைக்கா ? நாளைக்கா ? என்று அவசரம் காட்டாது பொறுமையாய் இருங்கள் நண்பரே ; அட்டகாசமாய் வர்ணத்தில் இளவரசியை உங்களிடம் ஒப்படைக்க நானாயிற்று !

      Delete
    8. கோடானு கோடி நன்றிகள் சார். ஒரு தவம் போல் காத்திருப்பேன் சார்.

      Delete
    9. //மாமியார்கள் மட்டுமில்லை ... ஏராளமான ரோமியோக்களும் உண்டு...//

      +1

      Delete
    10. நன்றிகள் பல எடிட்டர் சார் :)

      Delete
  51. 90. just missed yesterday checked @ 1:45

    ReplyDelete
  52. அடங் கொக்க மக்கா.......

    கதைக்குள்ள சஸ்பென்ஸ் வைப்பா.....ஸ்கிரிப்ட் எழுதுனவா யாருன்னு கூடவா சஸ்பென்ஸ் வைப்பா.....

    யம தர்மராஜன் கூடவே சண்டை போட்ட ராவணனையே கக்கத்தில் வைத்து கொண்டு கடலை தாண்டிய வாலி மாதிரி முதன்முதலில் டெக்ஸ் கதைக்கே முழு நீள வாசக மொழிபெயர்ப்பினை துரிதமாகவும் வித்தியாசம் கண்டுபிடிக்காத அளவுக்கும் அசால்ட்டாக பணியாற்றிய ஆதி தாமிரா சாருக்கு அசால்ட் ஆதி தாமிரா என்ற பட்டத்தை வழங்கலாம்( எலக்ஷன் டைம் பாருங்கோ)


    ReplyDelete
    Replies
    1. @செ.அ, வாய்ப்பு தருவது என்றானபின், ஏதோ கி.நாவை எதிர்பார்த்துக் கிடந்த எனக்கு, கூரியரில் வந்த டெக்ஸ் கதையைப் பார்த்ததும்.. மயக்கம் போடாத குறைதான். போராடக்குழுத் தலைவர், அஹ்மத் பாஷா போன்ற நண்பர்கள் இன்னும் எத்தனை பேர் இருப்பார்களோ என சற்றே வயிற்றில் புளிகரைத்தது. எப்படியோ அந்தப்புளியை எடிட்டர், ரசமாக்கிவிட்டாரோ.. நான் பிழைத்தேனோ!

      Delete
    2. " சற்றே வயிற்றில் புளிகரைத்தது. எப்படியோ அந்தப்புளியை எடிட்டர், ரசமாக்கிவிட்டாரோ " /// அருமை...

      Delete
    3. @ FRIENDS : புளியை ரசமாக்கிய பெருமை - இரவுக் கழுகாருக்கே என்பேன் !

      எந்த டைரக்டரின் கைவண்ணத்திலும் சூப்பர் ஹிட் material ஆகத் தொடர்ந்திடுவது தானே சூப்பர்ஸ்டாரின் தனித்தன்மை / பெருமை ? டெக்சையும் அந்தப் பட்டியலில் சேர்த்திடலாமென்பேன் !

      Delete
  53. சதிகாரர் சங்கம் காகித தரம் இதை பற்றி முன்பே பதிவிட்டு இருந்தேன், இத்தனை மட்டமான காகிதத்தில் கிளாசிக் ரீ பிரிண்ட்கள் வருவதை ஏற்று கொள்ள முடியவில்லை. போட்ட புத்தகங்களையே மறுபடி மறுபடி மறுபடி மறுபடி போட்டு வெருப்பேற்றுவத்ர்ற்கு பதில், இடை இடையே வராத புத்தகங்களில் மறு பதிப்பில் கவனம் செலுத்துங்கள் சார். சற்று சிந்தித்தால் இப்பொழுது வருகிற மறு பதிப்பு படலம் பாதியில் நின்று போனால், எங்களிடம் வந்த புத்தகங்களின் 4 காபிகள்தான் இருக்கும் நிலை ஏற்ப்படும். அடுத்து மறுபதிப்புகளின் அட்டை தரம் படு மோசம். இத்தனை வருடங்களாக இந்த பீல்டில் கொடி கட்டி பறக்கும் உங்களிடம் இருந்து இத்தனை மோசமான அட்டை படங்களை எதிர் பார்க்கவில்லை சார் .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சதிகார சங்கம் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டி பாருங்கள், பின் பக்க தாளில் பிரிண்ட் ஆகி உள்ள அச்சுஅப்படியே முன் பக்க காகிதத்தில் தெளிவாக தெரிகிறது, இது பிரிண்டிங் Mistakea இல்லை காகித தரத்தில் குளறுபடியா?.

      Delete
    2. gIRIDHARAN v : உங்களது FB DP -ல் நீங்கள் தூக்கிப் பிடித்திருக்கும் தலையில்லாப் போராளியும் இதே காகிதமே என்பதைச் சுட்டிக் காட்ட அனுமதியுங்களேன் நண்பரே ?

      Delete
    3. Then Is it a printing Mistake sir ?

      Delete
    4. Yes, Compared to other reprints, I felt Sathigarar Sangam is below par for the standards of lion muthu, I don't whether editor also feels the same or not ...

      Delete
  54. பழைய புத்தகங்களின் மேல் நாங்கள் இன்னும் காதல் கொண்டு இருப்பது அதன் அட்டை படங்களின் அபார கவர்ச்சிகர ஈர்பினால்தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. Giridharan V : சார்..பழமையைப் போற்றுவோம் - வேண்டாமென்று சொல்லவில்லை ; நானுமே அதன் ஒரு அங்கத்தினனே ! ஆனால் கீழ்க்கண்ட மும்மூர்த்தி இதழ்களின் ஒரிஜினல் ராப்பர்களை சற்றே உங்கள் மனக்கண்ணுக்குக் கொண்டு வாருங்களேன் :

      கொலைகாரக் கலைஞன்
      மலைக்கோட்டை மர்மம்
      மூளைத் திருடர்கள்
      கடத்தல் முதலைகள்
      CID லாரன்ஸ்
      திகிலூட்டும் நிமிடங்கள்
      திசை மாறிய கப்பல்கள்

      இந்த அட்டைப்படங்களையே இன்றைக்கு நாம் பயன்படுத்தி தலைதப்பிக்க இயலுமா ?

      Of course இன்றைய மறுபதிப்புகளுக்கு அட்டைப்படங்களில் இன்னும் நிறைய முன்னேற்றம் தேவை என்பதை மறுக்கப் போவதில்லை நான் ! ஆனால் நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே : அன்றைக்கும் குறைகள் இருந்தன ; ஆனால் நம்மிடம் விமர்சனப் பார்வைகள் இருந்திடவில்லை ! இன்றைக்கோ குறைகளும் உள்ளன ; விமர்சனக் கண்ணோட்டங்களும் உள்ளன ! வேறுபாடு அவ்வளவே !

      Delete
  55. அந்த ஆக்சன் கதைக்கும் ஒரு ஒன் லைன் சொன்னீங்கனா நல்லா இருக்கும்.. ஏன்னா செயலாளர் மாதிரி நமக்கு லவ் சப்ஜெக்ட் செட்டாகாது...நம்மளுக்கு ஆக்சன் தான்..

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : ஒன் லைனுக்கு அவசியமிராது - இதழே வெளிவருவது 90% நிச்சயம் என்பதால் !

      Delete
  56. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  57. அன்பு ஆசிரியரே....!
    உங்கள் எழுத்தாற்றலில் ஏன் லயித்துபோகிறோம் என்பதற்கு இன்றைய பதிவு சிறந்த உதாரணம்.
    முப்பது வருடங்களுக்கு முன் ஆட்டோகிராஃப் கேட்ட என் மனநிலை இன்றளவும் அப்படியே தொடர்கிறது என்றால் அதற்கு முழுகாரணம் நீங்கள் தான்.
    இந்நிலையில் நாம் இருக்க வாசக நண்பர்களின் ஆக்கங்களை (சிறப்பாக இருப்பினும்) என் போன்றவர்கள் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்களோ நான்றியேன்.என்னைப்பொறுத்தவரை விஜயன் என்கிற மந்திர உலகில் சுழல்பவன் நான்.வேறுதும் புரியவோ ரசிக்கோ என்னால் இயலாது.
    நண்பர்ஆதி தாமிரா தவறாக எண்ணக்கடாது.
    அவருக்கு என் வாழ்த்துக்கள்.யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதில் தவறாகக் கொள்ள ஏதுமில்லை, ரசனைகள் தனிமனித விருப்பம் சார்ந்தவை.

      Delete
    2. AHMEDBASHA TK : ஆண்டாண்டு காலமாய் அதே தெருக்கோடி மெஸ் தானே சார் ? ஒரு மாற்றத்துக்காக ஒரு சரவண பவனோ ; தலப்பாக்கட்டியோ ; KFC -யோ போவதில்லையா நாம் ? அதே போல் தானே இந்த முயற்சிகளும் ?

      Delete
    3. என்ன சார் ஒப்பீடு இது? உங்களுக்கே ஓவராத் தெரியல.. :-)))))))

      Delete
  58. எடிட்டர் சார்...மில்லியன் ஹிட்ஸ்க்கு அந்த மெல்லிய யுத்த ரொமான்ஸ் கதையையும், ஒன் ஷாட் ஆக்‌ஷன் கதையையும் ட்ரை பண்ணலாமே சார்...

    நானும் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்க ஆர்வாமாக இருக்கேன் சார்...ஆனால் டெக்ஸைப் படித்த பிறகு மொழிபெயர்ப்பு செய்ய இன்னும் கொஞ்சம் அனுபவம் பெற வேண்டும் போல என யோசிக்க வைத்தது நண்பர் ஆதியின் மொழிபெயர்ப்பு...

    வாழ்த்துக்கள் ஆதி தாமிரா நண்பரே:-)

    ReplyDelete
  59. ஒரு காரெக்டர் நமது பேவரிட் ஆவதற்குள், அது பல பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஆனப்பிறகோ கஷ்டம் நமக்குதான்! பிரிவு!! அதுதான் கேப்டன் டைகர், பிரின்ஸ் போன்றோரைத் தொடர்ந்து ஷெல்டன் கதையிலும் நடக்கப்போகிறது என நினைக்கிறேன்.

    விதவிதமான புதிய கதைகளுக்குள் தங்கள் தேடல் ஆர்வமூட்டுகிறது. ரெகுலர்/ ஆக்‌ஷன் கதைகளையே விரும்பும் நண்பர்கள் கூட இந்த ஐந்து மாத ரெகுலர் சப்ளையில், ஒரு கி.நா வந்தா தேவலையே எனும் சிந்தனைக்குள் ஐக்கியமாகியிருப்பார்கள் என்று மேற்சில கமெண்டுகளைப் பார்க்கையில் தோன்றுகிறது. இதுவும் கூட நன்மைக்கே! (அதுவும் ஒரு கதையில் ஒரு ’யௌவ்வ்வ்வன யுவதி’ வருகிறாள் என்று சொல்லிவிட்டீர்களா.. ஈரோட்டில் ஒரு பூனை பாயைப் பிறாண்டிக்கொண்டிருக்கிறது)

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //அதுவும் ஒரு கதையில் ஒரு ’யௌவ்வ்வ்வன யுவதி’ வருகிறாள் என்று சொல்லிவிட்டீர்களா.. ஈரோட்டில் ஒரு பூனை பாயைப் பிறாண்டிக்கொண்டிருக்கிறது)//

      அட...அட..அட...அந்தச் சித்திரங்கள் தான் என்னவொரு அழகு !! அந்தப் பெண்ணின் சிகைக்கும்.. உடைக்கும்... உருவத்துக்கும் ஓவியர் பக்கத்துக்குப் பக்கம் காட்டியிருக்கும் கவனம் - அய்யய்யய்யையோ !!

      சரக்...சரக்..சரக்...!!

      ஈரோட்டில் ஒரு பாயும்...தாரமங்கலத்தில் இன்னொரு பாயும் கிழிபடும் ஒசைகளோ ?

      Delete
    2. @எடிட்டர்,

      :-)))))))

      (எனக்கென்னவோ யௌவன யுவதிகளின் பற்றாக்குறையினால்தான், இளவரசி நம் நண்பர்களின் இதயங்களில் கோலோச்சுகிறாரோ என்று தோன்றுகிறது.)

      Delete
    3. "இ.....சி." என்ற வார்த்தையை உச்சரித்து விட்டீர்களல்லவா - பாக்தாத்தில் இருந்தால்கூட தலைதெறிக்க நமது MV சார் ஆஜராகி விடுவார் இங்கே ! :-)))

      Delete
    4. ஈரோட்டில் ஒரு பாயும்...தாரமங்கலத்தில் இன்னொரு பாயும் கிழிபடும் ஒசைகளோ ?

      ###$$$##$$

      ஹாஹாஹா .....;-))))

      நீங்க சொன்ன மாதிரி ரெண்டு பாயும் கிழியுது சார் ...ஆனா சவுண்டு தான் வேற வேற மாதிரி வருது ...;-)

      Delete
    5. ஆதி சார் .மாடஸ்தி அதுக்கும் மேலே

      Delete
    6. ஆயிரம் யுவதிகள் அணிவகுத்தாலும் இளவரசியை எங்கள் இதயத்தில் இருந்து எடுக்க முடியாது...

      Delete
    7. மேலே! மேலே!......அதுக்கும்மேல.!

      Delete
  60. டாக்டர் டெக்ஸ்:

    ஆக்கம் எத்தகையதாக இருந்தாலும், அதன் ஆதார நோக்கம் நான்கு பேர் பாராட்டவேண்டும் என்பதாகத்தானே இருக்கமுடியும். இதுவரை பாராட்டிய, இனி பாராட்டப்போகும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பு. உண்மையில் இந்தப் பாராட்டில் பெரும்பகுதி எடிட்டரையே சாரும். அது, எக்ஸ்ட்ரா நம்பர் போட்டதற்காக மட்டுமல்ல, இந்தப் பணியைத் துவக்கும் முன்னமே அவர் என்னைத் தயார் செய்த விதத்துக்கும், தம் நீண்ட அனுபவத்தால் தான் பெற்றிருந்த, சின்னச்சின்ன மொழிபெயர்ப்பு நுணுக்கங்களை ஆர்வத்துடன் கற்றுத்தந்த விதத்துக்கும் சேரவேண்டியது. மற்றபடி எக்ஸ்ட்ரா நம்பர் போட வேண்டியது, ஒரு எடிட்டராக அவரது கடமை மற்றும் உரிமை என நான் நினைக்கிறேன். தொடர்ந்து செனா அனா, கார்த்திக் சோமலிங்கா, பூனையார், கிட் ஆர்டின் கண்ணன் போன்றோர் மொழிபெயர்ப்பில் கலக்கிட வேண்டுமென்பதுதான் என் ஆசை! அதுவும் நாளைக்கே நடந்தால் கூட, முதல் ஆக்கத்தை செய்தவன் எனும் பெருமை எனக்கு மிச்சமிருக்கும். அவ்வகையில் எனது மகிழ்ச்சிக்கு எல்லையேது? ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறேன்.. நம் எடிட்டரின் மொழி சிறப்பானதுதான் எனினும், வெரைட்டி என்பதும் ஓர் இன்றியமையாத கலைத் தேவைதான். இன்றைய வழக்கில், ஆனால் நற்றமிழ் வழக்கு போன்ற நம் எடிட்டரின் நியாயமான விதிகளுக்குட்பட்டு மொழிபெயர்ப்பின் பிற சாத்தியங்களையும் வெற்றிகரமாகச் செய்யமுடியும் என நம்புகிறேன். காலம் அதற்கு வழிவகுக்கும்! ரசனை சார்ந்து இயங்கும் எடிட்டரும் அதற்கான கதவுகளைத் திறப்பார் என்றும் நம்புகிறேன். அவருக்கும் முன்பாக, அத்தகைய முயற்சிகளுக்கு, உறுதுணையாக நம் நண்பர்கள் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் எடிட்டர், அவர் விருப்பங்களுக்கும் முன்னதாக நம் வாசகக் குழும விருப்பங்களுக்கே முன்னுரிமை தந்து வருபவர் என்பதை நாம் பல விஷயங்களிலும் கண்கூடாக கண்டுவருகிறோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பி.கு: ஆமா, அது யாருப்பா.. போற போக்குலே ஆங்காங்கே வாழ்த்த வயதில்லைனு கால்ல விழுந்து வணங்குனது? என்னை என்ன எடிட்டர் மாதிரி நினைச்சீங்களா? நாப்பதைக்கூட இன்னும் தொடலை நான். முப்பத்தொன்பதே முக்காலே முக்காலரைக்கா வயசுதான் ஆவுது. பிச்சி பிச்சி!

      Delete
    2. அந்த வயதிற்க்கும் வாழ்த்த வயதில்லாததால்.... ஆசிரியரை வயதானாவராக சித்தரித்ததை மட்டும் போட்டுக் கொடுத்து கொல்கிறேன்...

      Delete
    3. ஆதி தாமிரா : //என்னை என்ன எடிட்டர் மாதிரி நினைச்சீங்களா? நாப்பதைக்கூட இன்னும் தொடலை நான்//

      சைக்கிள் கேப்பில் கோர்த்து விட்டுப் போகும் author ஆதிக்கு கூடிய விரைவிலேயே ஒரு கூர்மண்டையர் கதையை மொழிபெயர்க்க வாய்ப்புத் தந்து I AM VERY HAPPY என்று கவுண்டர் பாணியில் தெறிக்க விடுகிறேனா-இல்லையா பாருங்கள் !! !!

      Delete
    4. அப்போ கூர்மண்டையரின் புதுக் கதை வரப்போகுதா சார்???
      எந்த பால் போட்டாலும் நாங்கள் ரன் எடுப்போமே...

      Delete
    5. அய்யய்யோ...கூர்மண்டையர் கதை என்றவுடன் ஸ்டீல் பொன்ராஜ் பொங்கப் போகிறாரே !! ஆண்டவா !!

      Delete
    6. (ஸ்பைடர் கதை மொழிபெயர்ப்பு முயற்சி)

      லயன் அலுவலகத்திலிருந்து போன்: மொழிபெயர்ப்புக்கு ஒரு கதை அனுப்பியிருந்தோம். இன்னும் ஒரு பதிலையும் காணோமே.. தாமிரா என்ன செய்கிறார்? போனை வேற எடுக்க மாட்டேங்கிறார்!

      மிஸஸ். தாமிரா: உங்க கூரியரைத் திறந்தாரோ.. இல்லையோ.. படுக்கையில் விழுந்தவர்தான், இன்னும் எழுந்திருக்கவேயில்லைங்க! மயக்கம் மாதிரியும் தெரியலை, தூக்கத்திலேயே கெக்கேபிக்கேனு சிரிச்சிகிட்டு வேற இருக்குறார்!

      லயன் ஆபீஸ்: ங்ஙே!!

      :-)))

      Delete
  61. பொறுமையாக என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி சார் :). உங்கள் கையை பிடித்து கொண்டு வளர்ந்தவர்கள் நாங்கள் சோ எங்களுக்கு விமர்சனம் பண்ணுவதற்க்கும் உரிமை இருக்கிறது :). ஏனென்றால் லயன், முத்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம்:)

    ReplyDelete
    Replies
    1. Giridhaan V : சார் ! பொறுமையாய் எனது விளக்கங்களுக்குச் செவி சாய்த்தமைக்கு நன்றி சொல்ல வேண்டியவன் நான்

      Delete
  62. அடர்ந்ததொரு வனம் அது! ஆற்றல்களுக்கும்,அற்புதங்களுக்கும்,சேட்டைகளுக்கும் பஞ்சமில்லா அழகு பூமியது...!
    மதி நுட்ப தலைவர் ஒருவரின் கட்டுப்பாட்டில் கட்டுக்கோப்பாய் சிருஷ்டிக்கப்பட்ட சிருங்காரச் சோலையது..!
    அமைதியாய் பயணிக்கும் அந்த வாழ்க்கை சக்கரத்தை புரட்டிப் போட வந்ததொரு சூறாவளி!
    ஒரு யுவதி!
    அவள் ஒரு அவதி!
    அந்தக் குடும்பத்தால் கேலிக்கும்,கிண்டலுக்கும்,சீண்டலுக்கும் ஆளாகிறாள்...!
    தலைமையில் இருப்பவர் பரிதாபம் கொண்டு அந்த யுவதியை அழகுப் பதுமை ஆக்குகிறார்!
    அந்த அழகால் அந்த குடும்பம் சின்னாபின்னமாக சிதறடிக்கப்படுகிறது...!
    அதுவரை அவர்களுக்கு பரிச்சயமே இல்லாத,
    கோபங்களும்,
    தாபங்களும்,
    போட்டிகளும்,
    பொறாமைகளும்,
    பொய்யும்,
    புரட்டும்,
    நயவஞ்சகமும்,
    அவர்களுள் அரங்கேற்றம் காண்கின்றன...!
    அந்த அழகான வனமே புதிர்களால் சுற்றப்பட்ட குழப்பங்களின் மொத்த உருவமாகிப் போகிறது...!
    இறுதியில் அந்த யுவதியே அவ்விடம் விட்டு விலகிச் செல்கிறாள்...!
    பிரளயம் நீங்கிய பிரபஞ்சமாய் அந்த அழகு வனம் மீண்டு வருகிறது....!!
    யார் சொன்னது ஸ்மர்ப்கள் சின்னப் புள்ளைங்க சமாச்சாரமென்று....!
    மே மாதத்தின் முதலிடம் நீலப் பொடியர்களுக்கே...!!

    ReplyDelete
    Replies
    1. குணா @
      சூப்பரப்பு!!!

      Delete
    2. அழகான விமர்சனம் ...;-)

      Delete
    3. அந்த மாதிரி ஓரு உலகத்தில் நாம் இருக்க கூடாதா என்று ஏங்க வைக்கும் கதை. அருமையான விமர்சனம்.

      Delete
  63. இரண்டாமிடத்தை மிக வேகமாகத் தட்டிப் பறிக்கிறார் ஷெல்டன்...! வெல்டன்!!
    பரபரப்பிற்கு துளியும் பஞ்சமிராத அக்மார்க் ஆக்ஷ்ன் த்ரில்லர்...!
    விறு விறுப்பான கதைக்களம்...! அட்டகாசம்!

    ReplyDelete
  64. இம்மாதத்தின் மூன்றாமிடத்தில் இரவுக் கழுகார்...!! காரம் சிறுக்கவில்லை தான்...!
    நீண்டதொரு சாகசத்தின் முதல் அத்தியாயத்தை படித்ததொரு உணர்வு!
    ஆனாலும் சோடை போகவில்லை....!

    ReplyDelete
  65. சதிகாரர் சங்கம்!
    நிறைய நண்பர்கள் சொன்னது போல ஒரு பக்கத்தின் அச்சு மறு பக்கம் நிழலாகத் தெரியத்தான் செய்கிறது !
    கவனிக்க வேண்டிய விஷயமே!
    பாம்புத் தீவிலும் இந்தப் பிரச்சனை இருந்தது..!

    ReplyDelete
    Replies
    1. Guna Karur : டாக்டர் டெக்ஸ் கூட அதே காகிதம்தான் நண்பரே ! ஒரேயொரு பின்னூட்டத்துக்கு முன்பு அந்தக் கதையினை review செய்துள்ள போது அங்கே குறையிருப்பதாய் உங்களுக்குத் தோன்றவில்லை தானே ? காகிதமும் ஒன்றே ; அச்சுக்குப் பயன்படுத்திய இன்க்கும் ஒன்றே ; இயந்திரமும் ஒன்றே !

      மாறியிருப்பது - சென்ற மறுபதிப்புக்கு பயனான மஞ்சள் காகிதம் மட்டுமே !

      Delete
    2. பிளஸ் - "இது சுமாரான பேப்பர் !" என ஆங்காங்கே நீங்கள் படித்திருக்கக்கூடிய நண்பர்களின் விமர்சனங்களின் தாக்கமே !

      தொட்டுப் பாருங்கள்...வெளிச்சத்தில் வைத்துப் பாருங்கள் - இம்மாத இதழ்களுள் இரு B &W இதழ்களின் காகிதங்களிலும் துளியும் வேறுபாடு இராதென்பது புலனாகும் !

      Delete
  66. சார் அந்த வண்ண இளவரசி ...இந்த வருடம் தானே ...;-)

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : தலீவரே...பொறுத்தார் நிச்சயம் வண்ணத்தில் இளவரசியை தரிசிப்பர் !!

      Delete
  67. ஆதி தாமிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  68. பா.ப.கைதி :-
    அட்டையின் உள்பக்கம், லயன் 32ஆவது ஆண்டு மலர் விளம்பரம் பார்த்தேன்.

    ஜானியின்

    நேற்றும்... இன்றும்...!

    பிரின்சின்

    நேற்றும்...நாளையும் ...!

    ரோஜரின்

    நேற்றின் நகரம்...!

    என்று அச்சாகியிருக்கிறது.

    லாஜிக்கலா திங்க் பண்ணா, நாளைக்கு அப்புறம் நாளண்ணைக்குன்னுதானே வரணும்.!!! (வெயில் ஜாஸ்தி)

    ஆகவே, அறிஞர்களை கலந்தாலோசித்து ரோஜரின் கதைக்கு

    நாளையும். . . நாளை மறுநாளும் ...! என்று தலைப்பு வைக்கும்படி எடிட்டர் அவர்களை தமிழக லாஜிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.!!!

    இவண் :-

    வெயில் கொடுமையால் அவதியுறும் அதிபுத்திசாலி.!!!

    ReplyDelete
  69. @ ALL : "என் பெயர் டைகர்" இதழினில் 3 பக்கங்கள் காலியாக உள்ளன ; ட்ஷி-ந.பா.வின் பெருமைகளைச் சொல்லும் துணுக்குச் செய்திகளாலோ ; சித்திரங்களாலோ ; உங்கள் விமர்சனங்கலாலோ நிரப்பிடலாம் ! So உங்கள் பங்களிப்புகள் அவசரமாய்க் கோரப்படுகின்றன folks ! உங்கள் முயற்சிகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிடலாமே ?

    ReplyDelete
    Replies
    1. //ட்ஷி-ந.பா.வின் பெருமைகளைச் சொல்லும் துணுக்குச் செய்திகளாலோ///

      துணுக்கு 1 : அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி செவ்விந்தியர்களைப் பொறி வைத்துப் போட்டுத்தள்ளியபோது துணுக்குற்றோம்!

      துணுக்கு 2 : தன் லெஃப்டினன்ட் பதவியைக் காத்துக்கொள்ள மனசாட்சியை அடகுவைத்துவிட்டு ஜெனரல் அலிஸ்டரின் முட்டாள்தனமான ஆணைகளுக்குக் கீழ்படிந்தபோது துணுக்குற்றோம்.

      துணுக்கு 3 : சிகுவாகுவா சில்க்கை இம்ப்ரஸ் செய்திடப் பலவருடங்களுக்குப் பிறகு குளித்து மொழுகி ஒரு கணவானாக மாறி காரியத்தை சாதித்தபோது துணுக்குற்றோம்!

      இப்படிப் பலப்பல துணுக்கு செய்திகள்!

      இந்தத் துணுக்குகள் முதல் பக்கத்தில் இடம்பெறச் செய்ய வேண்டுகிறேன்.

      :D (இந்த ஸ்மைலி மட்டும் இல்லேன்னா என்னோட நிலைமை என்னாகிறது!!)

      Delete