நண்பர்களே,
வணக்கம். அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள பொழுதில், நம் பக்கமும் அந்தத் தாக்கம் இல்லாது போனால் சரியாகாது தானே ? அதன் பொருட்டு இங்கேயும் வெப்பமான சில பல பின்னூட்டங்கள் பதிவாகியிருப்பதில் வியப்பேது ?
- இலவச இணைப்பு -
- அதற்கொரு விலை -
- சந்தாதாரர்களுக்கு மட்டுமே -
- சந்தாவுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு-
- நிழல் 1 நிஜம் 2-
என்ற சமாச்சாரங்கள் நிச்சயமாய் இருவித விமர்சனங்களை ஈட்டித் தருமென்பதை நான் முன்கூட்டியே எதிர்பார்த்தேன் தான் எனும் போது இன்றைய உஷ்ணங்கள் எனக்குப் பெரியதொரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திடவில்லை ! நாலரை ஆண்டுகளாய் இங்கேயும், இதர தளங்களிலும் எண்ணற்ற முறைகள் எதெதற்கோ சாத்துக்கள் வாங்கிய முதுகும், மண்டையும், இதைக் கூட யூகித்திராதா போகும் ? தலைக்கு மேலே மெய்யாகவே ஓராயிரம் பக்கங்களின் பணி காத்துக் கிடக்கும் வேளையில் நானிங்கு வரிக்கு வரி பதில்களும், என்தரப்பு விளக்கங்களையும் சமர்ப்பிக்கும் வேலைக்குள்ளே இப்போது இறங்கினால் புது இதழ்கள் கரைசேரப் போவதில்லை என்பதாலும் ; இப்போதைய focus மே மாத இதழ்களின் மீதிருத்தாலே நியாயம் என்பதாலும் சுருக்கமாய் இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் folks !
வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் YIN & YANG இருக்குமென்மதை லார்கோவின் புண்ணியத்தில் தெரிந்து கொண்டோம் ! So நான் நினைத்திருந்தது YIN என்றால் - எதிர்சிந்தனை YANG ! Simple as that ! சந்தாவில் உள்ள நண்பர்களுக்கு டி-ஷர்ட் ; நிழல் 1 ; நிஜம் 2 இதழ் + நியூஸ்பேப்பர் பாணியிலான மேகசின் மாத்திரமே நாம் (இதுவரையிலும்) கூடுதலாய் அறிவித்திருந்த சலுகைகள். அந்த மேகசினை வாசிக்க எண்ணும் சந்தாவில் அல்லாத நண்பர்களின் பொருட்டு அதனை நமது ப்ளாக்கிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளும் வசதி செய்து தரலாம் என்பதே எனது திட்டமிடலாய் இருந்தது ! இதனில் கதைகள் ஏதும் இராதே - so பேப்பராய்ப் படித்தாலும் சரி ; ஆன்லைனில் படித்தாலும் சரி - பெரியதொரு வேறுபாடு தோன்றாதே! என்ற எண்ணமே எனக்குள் இருந்தது ! And இத்தாலியில் போனெல்லி மாதா மாதம் ஒரு மேகசின் இலவசமாய்த் தருவதாயும் ; "அது இப்படியா - துக்கடாவாய் இருக்கும் ?" என்றதொரு கேள்வியையும் பின்னூட்டங்களுக்குள் எங்கோ வாசித்த நினைவுள்ளது ! சிம்பிள் விடை - அது இப்படியே இராது தான் ! Simply becos அது முழுக்க முழுக்கவொரு ஆன்லைன் பத்திரிகை மாத்திரமே ! அவ்வப்போது தயாராகிடும் இதனை விரும்பிடும் வாசகர்கள் டவுன்லோட் செய்து வாசித்துக் கொள்ளலாம் !
தற்போதைய "லயன் மினி" - சமீபமாய் 1988-ன் ஹாலிடே ஸ்பெஷல் இதழைப் புரட்டிக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றிய சன்னமான ஆசையின் பிரதிபலிப்பு மாத்திரமே ! முக்கியமாய் BLACK & WHITE பக்கங்களுக்கு நம்மவர்களின் வர்ணம் சேர்க்கும் பணிகள் எவ்விதம் தேறியுள்ளன என்பதைப் பார்க்கவொரு வாய்ப்பாகவும் இதை நான் நினைத்திருந்தேன். இதனை அச்சில் பார்த்த சீனியர் எடிட்டர் - "அழகாக உள்ளதே ; புத்தக விழாக்களில் வரும் சிறுவர்களுக்கு விற்பனை செய்திட நன்றாக இருக்குமே !" என்று சொன்ன போது - அதுகூட சரியென்றே தோன்றியது. அடுத்த மாதம் முதலாய் சென்னை ; நெய்வேலி ; ஈரோடு ; மதுரை ; கோவை என தொடராய் புத்தக விழா அட்டவணை பிசியாக இருக்கும் சமயத்தில் நம்மிடம் கைவசம் இது போன்ற சின்ன விலையிலான சமாச்சாரங்கள் இருப்பின் நலமே என்று தோன்றியதால் அதற்கொரு விலை நிர்ணயித்து கூடுதலாய் கொஞ்சம் அச்சிட்டோம். ஏஜெண்ட்கள் வழியாக கடைகளில் வாங்கிடும் வாசகர்களுக்கும் இவற்றை அனுப்பிடலாமா? என நம்மவர்கள் இம்மாத despatch-ன் போது கேட்டிட-சில காலம் முன்பாய் நம் அலுவலகம் வந்திருந்த ஒரு 50 வயதுக் கனவான் தான் நினைவுக்கு வந்தார். இருவித வர்ணச் சேர்க்கைகளோடு நாம் எப்போதோ தயாரித்திருந்த புக்மார்க்கைப் பத்திரமாய் வைத்திருந்தவர்-"அந்த இன்னொரு புக்மார்க்கும் இருக்கா சார் ?" என்று கூச்சத்தோடு கேட்டார் ! நமது இதழ்களும் ; இதழ் சார்ந்த சின்னச் சின்னப் பொருட்களும் அந்த அளவுக்கு collector's value கொண்டவை என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போது - "லயன் மினியோ" ; "மேக்சியோ" - அதற்கு restricted access என்றமைப்பதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை ! So "வாங்கிட ஏஜெண்ட்கள் தயாராக இருப்பின் - இதனையும் அனுப்புங்கள்!" என்று சொன்னேன் ! இதனில் ஏதும் கொலை பாதகம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை என்பதால், மீண்டுமொருமுறை இம்முயற்சி தொடரும் பட்சம் - இந்த பாணியே தொடரவும் செய்யும் !
And இந்த துக்கடா இதழையும் சேர்த்து விற்பதில் நாங்கள் பெரியதொரு கோட்டையைக் கட்டிடப் போவதாக எண்ணும் பட்சத்தில் - வெட்கத்தை விட்டு சின்னதொரு stat மட்டும் சொல்கிறேன் ! சென்னை மாநகரில் 5 வெவ்வேறு விற்பனையாளர்கள் சேர்ந்து விற்பனை செய்வது 90 பிரதிகள் மட்டுமே - ஒவ்வொரு ரகத்திலும் ! இந்தத் தொண்ணூறும் கடனுக்குச் சென்றிடும் பிரதிகளே & இதனில் unsold எடுக்கும் கதைகளும் உண்டு ! இது தான் தலைநகரின் விற்பனை சார்ந்த புள்ளிவிபரம் எனும் போது - மாநிலத்தில் நாம் என்ன சூரத்தனம் செய்து கொண்டிருப்போமென்றும் ; இந்த "மினியை" ஒரு வியாபாரப் பொருளாக்குவதால் நாம் நமதாக்கப் போகும் செஞ்சிக்கோட்டைகளோ - மலைக்கோட்டைகளோ எத்தனை விசாலமாய் இருக்கக்கூடுமேன்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் !
சந்தாக்களின் சகாயங்களில் தான் நமது சக்கரங்கள் சுழல்கின்றன என்பதில் நம்மில் என்றைக்குமே ஒளிவு-மறைவு இருந்ததில்லை ! சந்தா செலுத்தக்கூடிய நிலையிலுள்ள நண்பர்களின் பங்களிப்பானது - காமிக்ஸ் எனும் சவலை மழலையைத் தொடர்ந்து ஜீவித்திருக்கச் செய்திடும் பொருட்டே என்பதிலும் எனக்கு மாற்றுச் சிந்தனையில்லை ! உங்களுக்கும் அதனில் நிச்சயம் உடன்பாடிருக்கும் என்ற திட நம்பிக்கையில் தான் நமது நாட்கள் நகன்று வருகின்றன ! அதே சமயம் சந்தா செலுத்தியுள்ள ஒரே காரணத்தால் - இந்த மாதிரியான சின்னச் சின்ன சமாச்சாரங்கள் சக வாசகர்களை எட்டிடுவது முறையாகாது என்ற ரீதியிலான சிந்தனை உங்களுள் 99%-க்கு இராதென்பதிலும் எனக்கு நம்பிக்கையுண்டு !
தனியொருவனின் முடிவே நமது பயணப் பாதை எனும் போது நான் எடுக்கும் தீர்மானங்கள் சரியாகவும் இருக்கலாம் ; இல்லாதும் போகலாம் ! என் ஒருவனின் கைவண்ணமே பெரும்பான்மையான தயாரிப்புகளின் பின்னணி எனும் போது உங்களை வந்து சேரும் இதழ்கள் தரமாகவும் இருந்திடலாம் ; தரமின்றியும் இருந்திடலாம் ! பாதையே விமர்சனத்துக்கு ஆளாகிடும் போதோ ; தரங்களில் குறை காணப்படும் போதோ - அவற்றிற்கொரு தீர்வோ ; பதிலோ தேட நான் முயற்சிப்பது இயல்பு !ஆனால் நானே சரியானவனா ? - சரியில்லாதவனா ? தரமானவனா - தரமில்லாதவனா ? என்ற கேள்விகளுக்கு சத்தியமாய் என்னிடம் பதிலும் கிடையாது ; அதன் பொருட்டொரு தேடலும் கிடையாது ! என்றைக்கோ ஒரு மாமாங்கத்தில் - எனது கேபினில் ஒட்டி வைக்க நண்பரொருவர் தந்த ஸ்டிக்கர் நவீனமாக்கப்பட்டுள்ள என் அறையில் இன்றைக்குக் கிடையாது ;ஆனால் அதன் வாசகம் என்னுள் அகலாது உள்ளது ! So கடமையைச் செய்து கொண்டே எப்போதும் போல் நான் நடை போடுகிறேன் ; படைத்தவர் பலன்களை பார்த்துக் கொள்வாரென்ற நம்பிக்கையோடே ! அந்த பலன்கள் பரிகாசங்களாய் இருப்பினும், உஷ்ண வார்த்தைகளாய் இருப்பினும், ஊழல்வாதி என்ற செல்லப் பெயர்களாய் இருப்பினும் ; பாராட்டுக்களாய் இருப்பினும் - எல்லாமே divine design தானே ?! So தொடர்ந்து நடை போடுவோம் folks !
ஜாலியாய் ஒரு note -ல் பதிவை நிறைவு செய்திடத் தோன்றுவதால் இதோ - "என் பெயர் டைகர்" ராப்பரின் பணிகளின் ஒரு ஆரம்பக் கட்டக் குட்டி preview ! நாங்கள் முயற்சித்த டிசைன்களுள் இதுவும் ஒன்று !
மே மாத இதழ்களைப் பற்றிய விமர்சனங்களை இங்கே தொடர்ந்திடலாமே ? மீண்டும் சந்திப்போம் ! Bye for now !
ஹய்யா ஜாலி நான் தான் முதல். சூப்பர்.
ReplyDelete2
ReplyDeleteஹ ஹ ஹா...டைகர சரியா அட்டல போட்ருக்கீங்க
ReplyDeleteசார் டைகரின் இந்த அட்டயே சூப்பர்...இந்த வண்ணம் இது வர பார்க்காதது போலுள்ளது ...அட்டகாசம்.
Deleteசார் இதுவும் கடந்து போகும் சார். உங்களது சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம். உங்களின் சங்கடம் எங்களின் சங்கடம் சார். நீங்களின்றி இங்கு நாங்கள் இல்லை சார். உண்மையை வெளிச்சம் போட்டு காட்ட அவசியமே இல்லை சார். நாங்களும் நீங்களும் ஒன்றென்று நினைக்கும் போது எதற்கு சார் இந்த விளக்கமெல்லாம். தேவையே இல்லை. நீங்கள் உங்கள் கடமையை கவனமாகத்தான் செய்கிறீர்கள். அதனை நான் குறை கூறினால் தவறு என் கண்ணில்தானே தவிர உங்களிடமில்லை சார். உங்களிடமிருந்து இம்மாதிரி பதிவுகள் வரும் போது என் மனதை வருந்துகிறது சார். தயவுசெய்து இனி தன்னிலை விளக்கம் இல்லாமல் உற்சாகமான பதிவை இடுங்கள் சார். வாரம் முழுவதற்குமான உற்சாகத்தை நாங்களும் உங்களிடமிருந்துதான் பெறுகிறோம் சார்.
ReplyDeleteAT Rajan : சார்..நிஜத்தைச் சொல்வதாயின் - இது தன்னிலை விளக்கமே அல்ல ! சலனங்கள் எனக்குப் புதியவையல்ல என்பதால் இவற்றின் பொருட்டு நான் தூக்கத்தைத் தொலைப்பதெல்லாம் ரொம்பவே ஆரம்ப நாட்களது அனுபவங்கள் ! இன்றைக்கு நான் இவற்றையெல்லாம் சகஜமாய் எடுத்துக் கொண்டாலும் - நண்பர்களுள் சிலர் சங்கடம் கொள்வதை தவிர்க்க வழி தெரியவில்லை எனக்கு ! இப்போது கூட இங்கு பதிவாகியுள்ள விஷயங்களைச் சங்கடத்தோடு சுட்டிக்காட்டி - நண்பர்கள் இருவர் அனுப்பியுள்ள மின்னஞ்சல்களைப் பார்தான பிறகே நான் நமது வலைப்பக்கமாய் ஆஜரானேன் ! இல்லையேல் - "என் பெயர் டைகர்" கடைநிலைப் பணிகளிலிருந்து இங்கு வர எனக்குத் தோன்றியே இராது !
Deleteஇந்த பெருந்தன்மைதான் சார் எங்களையெல்லாம் உங்கள் பின்னே தொடர காரணமாயிருக்கிறது. முள் என்று வந்த பின்பு அது நேற்று குத்தினாலும் வலிக்கும். இன்று குத்தினாலும் வலிக்கத்தானே செய்யும் சார். பழகிவிட்டது என்று சொல்லுங்கள். வலிக்கவே இல்லை என்பது வலியை உள்ளே வைத்து வலிக்காதமாதிரி இருப்பதுதானே உண்மையான உங்களது நிலை. சத்தியமாக என் உள் மனதிலிருந்து கூறுகிறேன் உங்களை ஆசிரியராக அடையப்பெற்றது என்னுடைய அதிர்ஷ்டமே. உங்களிடத்தில் நான் இருந்தால் உங்கள் பெருந்தன்மையில் நூறில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட என்னிடம் இருக்காது. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உங்களின் நடவடிக்கையின் மூலம் எனக்கு விளங்குகிறது சார். நன்றி சார் ஒரு மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதை வாயால் சொல்லாமல் உங்களது செயல்கள் மூலம் காட்டிவருகிறீர்கள்.
Deleteஒரு வழியாய் எடிட்டரின் வாரம் இரு பதிவு. தொடரட்டும். உற்சாகமாய். தொடர்வோம் நாமும் அவர்பின்னே.
ReplyDeleteஎன் பெயர் டைகர் அட்டையை முதலில் பார்த்த பாக்யசாலி நான்!!
ReplyDeleteசார்ஷெல்டன் பின்னிட்டார் ...வான் ஹாம்மே சென்ற கதைக்கு வட்டியும் முதலுமாய் கலக்க , ஓவியரோ அவரயும் விஞ்சிட்டார் வண்ணச் சேர்க்கை ,ஓவியம் மூலமாக...வான் ஹாம்மேவின் கற்பனையயும் மிஞ்சியிருக்குமோ அந்த பாலைவனச் சோலைகள்...ஜெமல்கானை காட்டும் போதெல்லாம் ..அது சூழ் காட்சிகளெல்லாம் ஓவியரின் தூரிகை றெக்கை கட்டி பறக்க வண்ணமயம் பல பக்கங்கள் முழுதும்...உயிர்ப்பான அச்சுத் தரத்திற்க்கு பல கோடி நன்றிகள்.....அந்த குதிரை நீரருந்தும் ஓவியம் ஆஹா...அற்புதமான பாத்திரப் படைப்பு ஜெமல்கான்.....ஆனால் அந்த கடைசி கட்டங்களை தவிர்த்திருக்கலாமோ பள்ளிகளுக்கும் நாம் பயணிப்பதால்....அது இல்லாமல் கதை சுவாரஸ்யம் குறைந்திடாதே...ஆனால் ஒருவேளை இன்றய பரிண/நாம வளர்ச்சியில் இதெல்லாம் சாதாரணமோ....டெக்ஸ் ஓவியங்களுக்கு முதல் சல்யூட்...பல ிடங்களில் தமிழ் பட ஹீரோக்கள் போல விசிலடிக்க வைத்த படியே விறு விறுவென நகருது கத... இயல்பான டாக்டர் சார்ந்த காட்சிகளும் ,உதவியாளருடன் இயல்பாய் நகரும் டெக்ஸும் ....ஒரு வேள ... அதேதான் ..இதும் கிநா வகயறாவா சார் ...கடுகு சிறுத்தாலும் காரம் மிகுதிதான...டெக்ஸிடம் என்ன ெதிர்பார்க்கிறோமோ அனைத்ததும் கிடைத்ததான ுணர்வு..பேச விட்டு அடிப்பதும்..இதயா தேடுகிறாய் என கேட்டபடி வரும் உதவியாளர் கார்சனுக்கு ஈடாக..நக்கலடித்த படி தொடர்ந்து வெளாடும் எங்க டெக்ஸ்..உய்ய்ய்ய்ய்....சார் மொழி உடை அப்பட்டமான மொழி பெயர்ப்பா..அல்லது தங்கள் உபயமா ..சான்ஸே இல்ல ...புல்லரிக்குது ...இதற்குத்தான ஆசப் பட்டோம் டெக்ஸு..எங்க தலயொட ாவர்த்தனம் முழுத் திருப்தி சார்..சரியான வில்லன்கள்..உத்தரவு தல ென புல்லரிக்க கை கொடுக்கும் உதவியாள் டெக்ஸ் துனையாய் தெடரணும் பல கதைகளில் எனும் எண்ணத்தை விதைக்கிறார்..ஒவ்வொரு கட்டமும் சரியானஅசைவுகளால் நகர...நம்ம டிராகன் நகர சூதாடி நிக்சன் நினைவுக்கு வர்ரார்....துப்பாக்கியடன் பாயும் ட்ராக்கர்..திட்டம் தீட்டி கவிழ்க்கும் டெக்ஸ் ஜோடி ஒருவர ொருவர் மிஞ்சுகிறார்கள்....அதும் சரியாக தொடரும் ஓவியங்கள் ஒரு திரைப் படம் பார்த்த ுணர்வைத் தந்ததென்றால் மிகை அல்ல... இயல்பான கதை என நம்ப வைத்த ோவியரும்..அட்டகாசமான மொழி பெயர்ப்பும்.....துடிப்பான சண்டை காட்சிகளும்...கா..க.காலம் , த.வா.கு ,க ..வேட்டை ,டி..நகரம் ,ப.சி .மர்மம் இவற்றயெல்லாம் மிஞ்சிட்டது...எவ்வளவு தைரியமிருந்தால் இந்த கதய படைத்த பின்னும் டைகரா ,டெக்ஸா என கேள்வி எழுப்பி இருப்பீ்கள் ? என் பெயர் டைகர் வரட்டும் என்று வேறு...ஹ ஹஹஹஹஹா...
ReplyDeleteபொடியப் பொடிய பொடியுதடா பொடியா..பொடியெல்லாம் உன் பொடியை..
ReplyDeleteதேவதையை கண்டேன் . ..அருமை ....கார்காமெல் படைப்பு சோடை போக , நல்லவரின் கைப்பட அனைவரின் மனதிலும் ஜில்...பொறாமை இல்லா உலகை பார்க்க பொறாமயாக இருக்கிறது...காரமெல்லால் சாதிக்க முடியாதத , நல்லிதயம் கொண்ட சீனியரால் மாற்றபட்ட ஸ்மர்ஃபி சாதிப்பதுதான் கொடுமை என்றாலும் ....(கத பிற்பாதி பொடியர்கள் லூ்டியும் ,முன் பாதி ஸ்மர்ஃபியின் லூட்டியும் பக்கங்களை நிறுத்தாமல் புரட்ட செய்தன்...இவ்வுலகில் யான் இல்லை...நல்லவர் கை பட்டால் தொட்டதெல்லாம் பொன்..) ஈர்ப்பு தன்மை காருகமெல்லால் தரியலாத போது ..அன்பு கொண்டசீனியரால் அன்பாய் உருவாக்கப் படும்..( தரியலாத =தர+ இயலாத)
ஸ்மர்ஃபி...கடவுள் படைப்பாய் நல்லவர்களை நினைவு படுத்துகிறார்...அட்டகாசம்
1.tex
2.shelton
3.smurfs
1
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட..! ஸ்மர்ப் மூன்றாமிடத்துக்குப் போய் விட்டதா ? ஆஹா !!
Deleteசார் டெக்ஸ் அந்த பேச்சு பேசுன பிறகு டெக்ஸ விட முடியுமா....ஒவ்வொரு பன்சும் நச் சார்...யாழினிது , குளலினிது என்பபர் இந்த டெக்ஸ் பேச்சு கேளாதோர்...ஸ்மர்ஃப்பும் தூள் சார் ..இந்த டெக்ஸ பாத்து எத்தன நாளாச்சு...மூன்று கதைகளும் ஈடிணயற்றவை...
Deleteசார் ஸ்மர்ஃப் இரண்டாம் பாக வண்ணச் சேர்க்கை ஓங்கியடிக்கும் ஊதா ,வெண்மை இதம் ..முன் கத ரகள என்றால் ...பின் கத சோக மயம் ...ஆனால் முயற்ச்சி வெற்றி .....குவிந்து கிடக்கும் புதயல்கள் , ஒரே ரொட்டித் துண்டு ஆஹா....என்ன இருக்குன்னு தெரில ; ஆனா எல்லாமும் இருக்கு ; எல்லாவும் நல்லாவே இருக்கு ....அடுத்த கதய சட்டு புட்டு வையுங்கள்...
Deleteலயன் மினி வண்ணத்தில் எல்லாத்தயும் தூக்கி சாப்பிட ...விச்சுகிச்சு ,ஜோக்கர் ,ஹேஹர்( ஏற்கனவே வந்த கதை) , பில்லி , நல்ல சேதி கெட்ட சேதி கலகலக்க....ாச்சரியம் கருப்பு வெள்ள சிறிய டிரேக் கதயும் சோடை போகவில்லை....அருமை சார்...
வண்ணச்சேர்க்கை நம்மவர்களா....அசத்தல் சார்...அப்ப விண்வெளிப் பிசாசு ,யார் அந்த மினி ஸ்பைடர் வண்ணத்தில்தானே...
ReplyDeleteவிண்ளெிப்பிசாசும், யார் அந்த மினி ஸ்பைடரும் வண்ணத்திலா..? நினைத்தாலே இனிக்குதே..! ஆனா பாருங்க...விண்வெளி பிசாசுன்னு நாம ஆரம்பிச்சாலே....முதல்ல இருந்தான்னு..எடிட்டர் எஸ்கேப் ஆயிடுவார்..!
Delete"யார் அந்த மினி ஸ்பைடர் வண்ணத்தில்" +1
Deleteசார் சிறுவர்கள கவர , அவர்கள் வாங்கும் சக்திக்குட்பட்ட இதப் போன்ற இதழ்கள் நிச்சயம் வேண்டும்...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!!
ReplyDelete(மன்னிக்கவும் சார். ஒரு நியாயமற்ற குற்றச்சாட்டின் பொருட்டு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.)
KiD ஆர்டின் KannaN : டைப் அடிக்க ஆரம்பித்தால் - வாடிப்பட்டியிலிருந்து வெனிஸ் வரைக்கும் விடாப்பிடியாய் நீண்டிடும் வியாதி சார் என் விரல்களுக்கு !! இதற்கு என்ன மருத்துவ விளக்கமென்று நண்பர் செனா.அனா.விடம் என்றைக்கேனும் ஒருநாள் கேட்டுப் பார்க்க வேண்டும் !
Delete:-).
Deleteஎவ்வளவு எழுதினாலும் படிப்பதற்கு அலுப்பு தராத எழுத்துக்களின் சொந்தகாரரின் விரல்களுக்கு இந்த ஒரு வியாதி மட்டும் அதிகரித்து வெனிஸ் வரை அல்லாது வடதுருவம் வரை நீள மாரியம்மன் கோயிலுக்கு கூழ் ஊற்றுவதாக வேண்டி கொள்ள வேண்டும்...:-)
நெஞ்சுக்கினிய நண்பர்கள் மேச்சேரியார்,ஈனா வினா அன்புடனும் உரிமையுடனும் எனை அழைக்கும் செனா அனாவை இன்று எடிட்டரும் அழைத்து விட்டார்....:-)
அடேய் செனா அனா !! என்ன தவம் நீ செய்தனை!!!
செனா அனா!!! :):):)
Delete///எவ்வளவு எழுதினாலும் படிப்பதற்கு அலுப்பு தராத எழுத்துக்களின் சொந்தகாரரின் விரல்களுக்கு இந்த ஒரு வியாதி மட்டும் அதிகரித்து வெனிஸ் வரை அல்லாது வடதுருவம் வரை நீள மாரியம்மன் கோயிலுக்கு கூழ் ஊற்றுவதாக வேண்டி கொள்ள வேண்டும்...:-)///
கூழ் ஊற்ற பேப்பர் கப்ஸை என்னுடைய பங்காக தந்துவிடுகிறேன்.
குருநாயர் அவர் பங்கிற்கு i am very happy ன்னு சந்தனம் பூசிகிட்டு பூ மிதிப்பார் .!!!
குஞ்சானி!!! குஞ்சானி!!!
பாருங்க., இப்ப வந்து, ஏய்யா பூவுல முள்ளு கிள்ளு இருந்து குத்திடாதே? ன்னு கேப்பாரு. :-)
Deleteஅந்த விரல்கள் இன்னும் நீள்ளள்ளள்ளள்ளமாகட்டும்...
Deleteஹேய், Where is பூஸ்?
Deleteகாந்தக் கண்ணழகி என்ர கூடவே இருக்கும்தானே? :D
@செனா அனா :-)
Deleteஅன்புள்ள ஆசிரியர் சார் . தனது இயல்புக்கு மாறாக நம் அருமை நண்பர் ஏதோவொரு கருத்து தெரிவித்தது குறித்து எங்களுக்கும் வருத்தமே . ஆனால் இதனை நீங்கள் ஒரு பொருட்டாக கருதாமல் சகஜமாக எடுத்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது . உங்களுக்கு உள்ள ஆயிரம் ( பக்க காமிக்ஸ் ) வேலைக்கு நடுவில் இதற்கு ஒரு விளக்க பதிவு தேவை இல்லை என்றே நினைக்கிறேன் . உங்கள் கேச அழகின் ரகசியம் இப்பொழுது தானே புரிகிறது .,( உஸ் அப்பாடா . முடியல .எங்கள் மக்கள் இம்சை ,,)
ReplyDeleteஆசிரியரை ஊழல் வாதின்னு அவதூறு பேசிய நண்பர்க்கு எதிராக என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன் ...
ReplyDeleteபிரச்சார கூட்டத்திற்கு போகாதீர் என்றால் கேட்டால் தானே மாம்ஸ் . இப்பொழுது பின்னூட்டம் கூட அரசியல் ஸ்டைலில் இருக்கு ,!!
Delete+1
Deleteயார் அந்த நண்பர்...??
Deleteஇந்தளவு விளக்கங்கள் எந்த ஆசிரியரிடமும்,எந்த பதிப்பகத்திடமும் யாரும் எதிர்பார்க்க முடியாது ஆசிரியரே.
ReplyDeleteபுரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி,
சபை நாகரிகம் கருதி வேறு ஏதும் வார்த்தைகளை உதிர்க்க இயலவில்லை.
+2
Delete+2
Delete+2
Deleteசுசீ, +2 வுல நெறய்ய attempt அடிச்சிருப்பிங்க போலிருக்கே!!!
Deleteஇஸ்ட்ராங் ஃபவுன்டெசன்தான்.!!!
அறிவரசு @ ரவி.!
Delete+1
கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
:-)
சூப்பராச் சொன்னிங்க அறிவரசு ரவி அவர்களே!
Delete+100000
+9
Deleteதங்க தலைவனின் போஸ்டரையே ஒரு வருசம் பார்க்கலாம்... நன்றி சார்..
ReplyDelete+9
DeleteDear Editor,
ReplyDeleteWayne Shelton is the only one that I have read so far. Was typical - and better than last one-shot - breezy read.
Somewhere in the past months I had seen the image of 1987 holiday special and seeing Lion Mini gave the same feelings - love it for just the heck of it - keep this going - it certainly brought a smile to my face - may be Miyavi and some other one pagers fit in here too!
வரக் வரக் வணக்கமுங்கோ
Deleteஎன்னுடைய வரிசையில்..
ReplyDelete1. சதிகாரர் சங்கம்
2. பா.ப.கைதி
3.டாக்டர் டெக்ஸ்
4.ஸ்மர்ப்ஸ்...
எடிட்டர் சார் இம்மாத புத்தகங்கள் அனைத்தும் சூப்பர் சார். சென்ற மாதம் டெக்ஸை பெரிய சைசில் பார்த்து விட்டு இம்மாதம் சிறிய சைஸ்தானே என்று பார்த்தால் அட்டகாசம் சார். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கு இனி இம்மாத டெக்ஸையே உதாரணமாக காட்டலாம். ஒவ்வொரு முறையும் அதே டெக்ஸ் என்றாலும் படிக்கும்போது நம்மையறியாமல் உடல் சிலிர்க்கிறதே! என்ன மாயம் சார் இது? இப்படி ஒரு நாயகனை இனி யாராவது உருவாக்க முடியுமா சார்? ஒவ்வொரு கதையிலும் நம்மை அவருடன் அழைத்து செல்வதை போல் உணர்வு உண்டாவது எனக்கு மட்டும்தானா? பல தலைமுறைகளையும் கடந்து வாழும், வாழப்போகும் நாயகன் அவர். 600க்கு மேற்பட்ட டெக்ஸ் கதைகளை வாசிக்க வாய்ப்பு கிடைக்கப் பெற்ற இத்தாலி ரசிகர்கள் மீது கொஞ்சம் அல்ல நிறையவே பொறாமை வருகிறது. மாதம் தோறும் டெக்ஸ் என்பதிலிருந்து மாதமிருமுறை டெக்ஸ் என மாறும் நிலமை வரும் காலங்களில் வரவேண்டும்.(பேராசையோ?) அத்தனைக்கும் ஆசைப்படு என்று சத்குரு சொன்னதை எனக்கு டெக்ஸ் கதைகளில் மட்டும் பொருத்தி பார்க்க தோன்றுகிறது. அடுத்து பழி வாங்கும் புயல் வண்ணத்தில்....(லார்கோ சைசிலாவது கொடுங்கள் சார்) இம்மாத இதழ்களுடன் கூடிய சர்ப்ரைஸை குட்டீஸ்கள் எனக்கு கொடுக்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் சார். (சிறிய வயதில் ஸ்கூலில் பக்கத்திலிருக்கும் பையனை ஆசிரியரிடம் மாட்டி விடுவதைப் போல் இருக்கிறதா சார்?)இரவு அவர்கள் தூங்கிய பின்னரே என் கைக்கு கிடைத்தது.மாதாமாதம் இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைத்தால் குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்தான் சார். இனி அடுத்த மாதம் காமிக்ஸ் சுனாமியே வரப்போகிறது! நானும் குட்டீஸாக இருந்தால் குத்தாட்டம் போடலாம்.(கால் வேறு அடிபட்டதிலிருந்து 16 வயதினிலே சப்பானியை காப்பியடிக்க வைத்துவிட்டது) எனவே நட்டு கழண்ட நட்டீஸாக இருப்பதால் மனசுக்குள்ளாக குத்தாட்டம் போட்டு வரும் மாத காமிக்ஸ் சுனாமிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஎன் பெயர் டைகர் அட்டை நன்றாக உள்ளது சார். மாற்றி விட வேண்டாம். அப்படியே வேறு அட்டையை முயற்சித்தால் மின்னும் மரணம் போல இந்த அட்டை படத்துக்கு மேலே தனியே போட்டு விடுங்கள்.
ReplyDeleteஏடிஆர் சார்.!
Delete// மிண்ணும் மரணம் போல் மேல் அட்டைப்படம்//
புறாவுக்காக போரா? அக்கப்போரா அல்லவா இருக்கிறது? என்பது மாதிரி இந்த மேல் அட்டைக்கும் அந்த சமயம் ஒரு அக்ப்போர் நடந்தது.எனவே ஆசிரியர் இம்முறை கவனமாக இருப்பார்.!
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
ReplyDeleteஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
49வது
ReplyDeleteஇவரு இன்னும் எத்தனாவது படிக்கிறாருன்னு தெரியலியே
Deleteதனியாக யோசனை செய்யும் படங்கள்
ரின் டின் @ ஹா..ஹா...செம்ம..
Deleteசிரிச்சி சிரிச்சி கடைக்கு வந்த கஸ்டமர் வேறு ஒரு மாதிரி யா பார்க்குறான் ..
ReplyDeleteஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
கற்றவர் கல்லாதோர் முயன்று
மற்றவர் இணைந்தால் உயர்வு
பள்ளியில் படித்தது பிஞ்சில்
பசுமையாய்ப் பதிந்தது நெஞ்சில்
ஒண்ணா யிருக்கக் கற்க வேண்டும்
உண்மையைச் சொன்னால் ஏற்க வேண்டும்
பசுக்களின் சாந்தத் தன்மைகூட
மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும்
தனிப்பட்டுப் போன பசுவை மட்டும்
துணிந்து தாக்கும் குட்டிப் புலியும்
இலகுவாய் உடைபடும் குச்சிகூட
இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும்
ஒடிக்க முயலும் கைகள் தோற்கும்
ஒற்றுமைப் பாடம் வியந்து கற்கும்
ஒரு இறை வணங்கும் ஒரே கொள்கை
பலமுறை சிதைந்து பரிகசிக்குது
இயக்க போதையின் மயக்க நிலையில்
இறந்து போகுமோ சகோதரத்துவம்
தந்தையும் தனையனும் தமக்குள் பகை
தமையனுக்கு தமக்கை திடீர் எதிரி
நண்பனை வெறுத்தல் நவீன நியாயம்
என மாற்றிய போதனை ஒழிக
வாழ்க்கையில் ஒற்றுமை வணக்கத்தில் ஒற்றுமை
வயிற்றுப் பசிக்கும் சேர்ந்துண்ணும் ஒற்றுமை
வாய்த்த செல்வத்தை பகிரும் ஒற்றுமை
வழிகேட்டில் சிக்கி வதைபடுது ஒற்றுமை
வேலியே பயிரை மேய்கிறதிங்கு
வேல்கம்பு வெளி நின்று ரசிக்குதின்று
மதிகெட்ட மாந்தரின் மடைமை கண்டு
விதிகூட கைகொட்டிச் சிரிக்குதந்தோ
ஓரணியில் ஒருகுரலில் ஓங்கியபோதெல்லாம்
ஒன்றுமே உலகம் அறியத் தரவில்லை
சின்னச் சண்டையும் சிற்சில வேற்றுமையும்
சின்னத் திரைகளில் சிரிப்பாய் சிரிக்குதின்று
தலைவர்கள் நம்மை நினைக்க வேண்டும்
தலைக்கணம் தனை துறக்க வேண்டும்
தற்பெருமை என்பதொரு வியாதி யென
தன்னலம் மறந்து சிறக்க வேண்டும்
இம்மையில் மட்டுமல்ல இழிவு
மருமையிலும் தொடரும் துன்பம்
தொன்று தொட்டு கண்ட கனவை
ஒன்று பட்டு வெல்வோம் வாழ்வில்
படித்ததில் பிடித்தது. எழுத்தாக்கம் திரு.சபீர் அவர்கள். எல்லோருக்கும் தேவையான கருத்துக்கள். .திரு.சபீர் அவர்களுக்கு ஓராயிரம் நன்றிகள்.
Delete**** டாக்டர் டெக்ஸ் *****
ReplyDelete(+) சித்திரங்கள்
(+) ஒரு சில 'நச்' வசனங்கள்
(+) டாக்டரின் வியாபார உத்தி
(-) டெக்ஸின் நீளமானதொரு பயணத்தின் நடுவே ஒரு அத்தியாயத்தை மட்டும் தனியே எடுத்து ஒரு புத்தகமாகப் போட்டதைப் போல தலையுமில்லா, வாலுமில்லாக் கதை(?!)
(-) பின்புல விவரிப்புகள் ஏதுமில்லாத, அழுத்தமில்லாத கேரக்டர்கள் - மனதில் பதியவில்லை!
(-) சில இடங்களில் இடம்பெறும் தூய தமிழை இன்னும் கொஞ்சமேனும் தவிர்த்திருக்கலாம்! (குறிப்பாக, கடைந்தெடுத்த அயோக்கியர்கள் பேசும் தூய தமிழ் வசனங்கள் - வாசிப்பு அனுபவத்தை சற்றே நாடக பாணியாக்குகிறது)
(-) கதைநெடுக டெக்ஸுடன் கார்சனும் இருந்திருந்தால் காமெடியாவது சற்று தூக்கலாய் இருந்திருக்கும்... ஹூம்!
(-) கதையில் ஒரு டாக்டர் வருகிறார்தான்; ஆனால் அதற்கும், 'டாக்டர் டெக்ஸ்' என்ற டைட்டிலுக்கும் துளிகூட தொடர்பில்லையே!
ஹீரோ யாராக இருப்பினும் கதைக் களம் சற்றே கனமானதாயிருக்க வேண்டும் - டெக்ஸ் என்ற மந்திரச் சொல்லும் அதற்கு விதிவிலக்கல்ல!
எனது ரேட்டிங் : 6/10
@ விஜய்
Deleteஇதில் டாக்டர் என்று சொல்லிக் கொள்ளும் மெச்பர்சன் ஒரு போலி டாக்டராகவும், அயோக்கிய சிகாமணிகளுக்கு டெக்ஸ் ஒரு டாக்டராக மாறி சுளுக்கெடுப்பதை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது..? இதுதொரு வஞ்சகப் புகழ்ச்சி தலைப்பு.
ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான், மொய்தீன் அவர்களே!
Delete'என் பெயர் டைகர்'க்கு இந்த அட்டைப்படத்தையே பரிந்துரை செய்கிறேன். காரணங்கள் :
ReplyDelete* குழந்தைகள் கதறியழாது
* பெரியவர்களுக்கு தீக்கனவுகள் வராது
* பெண்களுக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புக் குறைவு
* வயதானவர்களுக்கு ஆயுள் கூடும்
:P
Jokes apartment , 'எ.பெ.டை'ன் இரு version களுக்கும் இருவேறு வகையான அட்டைப் படங்களைப் பயன்படுத்தும் உத்தேசமிருக்கிறதா எடிட்டர் சார்? குறைந்தபட்சம் வண்ணச் சேர்க்கைகளிலாவது?
Deleteஎனக்கென்னவோ, டைகரை நீங்கள் கிண்டலாக சீண்டுவதற்காகவே இப்படியொரு அட்டைப்படத்தை எடிட்டர் முயற்சிக்கிறாரோ என்னமோ...? But don't worry, நீங்கள் பரிந்துரைத்தாலும் இல்லாவிட்டாலும் இவையெல்லாம் கரை சேராது.? ஒரு ஸ்பெஷல் இதழின் முன்னட்டையில் டைகரின் பின்னந்தலையும், டைகரே இல்லா பின்னட்டையும் எவ்விதத்திலும் நியாயம் செய்ய போவதில்லை. More rappers to come, I am waiting for the terror one, thats going to be freezed. Hopefully.
Delete:D
Deleteஆனாலும் கொஞ்சம் பயமாத்தானிருக்கு! :P
ஈரோடு விஜய்.!
Deleteநமது வாசக நண்பர்களில் ஒருவர் ஒரு வருடம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறியுள்ளாரே.? அவர் தைரியத்தையும் சகிப்பு தன்மையும் பாராட்டுகிறேன்.!
Erode Vijay sir :):):):):)
Deleteஆனாலும் டைகரை ரொம்பவும் கலாய்க்கிறீர்கள் சார். :P
'தல'ன்னு சொன்னா மட்டும்தான் குதூகலமாகிறார்.
Deleteமற்றபடி தானைத்'தலை'வன்,தங்கத்'தலை'வன்னா ஒரு வழி பண்ணிடுறார் :D
@ Erode VIJAY
Deleteஅவ்ரு நிக்கிற போஸ பார்த்தா....
கடேசியா ஆவியா வந்து பயமுறுத்துவார் போலேயே !
ஐயோ கோ!
சரி கடைசி பூக்னு நெனச்சு மனச திட படுத்திக்க வேண்டியதுதான் :-)
தங்க தலைவனுக்கு என்டே கிடையாதே...
Deleteஇன்னும் யங் தங்க தலைவனிருக்கு...
இரத்தக் கோட்டை முழு வண்ண தொகுப்பு இருக்கு...
'லயன் மினி' - சூப்பர் சர்ப்ரைஸ்! இந்த பெரிய 16 பக்கங்களை அப்படியே இரண்டாக மடித்திருந்தால் 32 பக்கங்களில் ஒரு மினி-லயன் கைக்கு அடக்கமாக, அழகாகத் தவழ்ந்திருக்கும்!
ReplyDeleteஎதிர்பாரா இந்த வெகுமதிக்கு நன்றி எடிட்டர் சார்! __/\__
அதேதான் ஜி..!பெரிய 16பக்கங்களை இரண்டாக மடித்திருந்தால் 32 பக்கங்களில் ஒரு மினி லயன் அழகாய் தவழ்ந்திருக்கும்.(முன்னோட்ட புத்தகம் மாதிரி...)
Deleteஅது என்ன மாயமோ மர்மமோ தெரியலை."! அரசாங்கம் வழங்கும் இலவசத்தை வாங்க வெறிபிடித்து அழையாம் மக்கள் மீது வெறுப்பு வரும்.ஆனால் இலவச இணைப்பை கண்டதும் குழந்தை மாதிரி என்னை அறியாமல் குதூகலித்தேன்.! என்ன இருந்தாலும் நானும் இந்த மண்ணின் மைந்தன்தானே.?
Delete'சதிகாரர் சங்கம்' அட்டைப்படம் நேரில் பார்க்க இன்னும் அடர்த்தியாய், நேர்த்தியாய் - அருமை! ஜானியை வரைந்திருக்கும் விதம் - பொடியன் அவர்கள் முறைப்படி ஓவியம் பயின்றவரல்ல என்று சொன்னால் நம்ப மறுக்கிறது!
ReplyDeleteஆனால், ஸ்டெல்லாவை அடையாளம் தெரியாத அளவுக்கு வரைஞ்சுட்டீங்களே பொடியன் சார்... குறிப்பாக, ஸ்டெல்லாவின் Hair band தானே அந்த அழகுப் பதுமையின் தனிப்பட்ட அடையாளம்... அதைக் காணலையே?
'சதிகாரர் சங்கத்தின்' பின்னட்டையில் ஜானிநீரோ கோணல்மானலாக புல்வெளியில் படுத்துக்கொண்டு வாட்ஸ்அப்பை பார்த்துக்கொண்டிருக்க, அவருக்கு பின்புறமாய் ஸ்டெல்லா ஏன் முகத்தைச் சுளித்துக்கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லையே... :P
Delete//குறிப்பாக ஸ்டெல்லாவின் ஹேர் ஸ்டையில்.//
Deleteஒ! நீங்கள் ஸ்டெல்லா அக்கா காலத்திலே கி.நா.படிக்க பயிற்சி எடுத்து விட்டீர்கள் போலும்.!பேஷ்! பேஷ்!
'தேவதையைக் கண்டேன்' - முன், பின் அட்டைப்படங்கள் ச்சோ க்யூட்! குறிப்பாக, முன்னட்டையில் குட்டியாய் ஒரு ஆர்ட்டினுக்குள் விலையைப் போட்டிருப்பது - ரசணை!
ReplyDeleteவாழ்க வளமுடன் !
ReplyDeleteஅனைவருக்கும் காலை வணக்கம்...!
ReplyDeleteபள்ளி நாட்களில் எனது தமிழ் வாத்தியார்,தமிழ் கட்டுரைகளை திருத்தம் செய்யும்போது பக்கத்தை திருப்பும்போதே பிழைகளை கண்டுபிடித்து விடுவார்.பின்நாட்களில் அவர் அடிக்கடி புலம்புவார்.அதாவது எங்கு சென்றாலும் இந்த பிழைகள் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது.எதையுமே ரசிக்க முடியவில்லை என்பார்.
ReplyDeleteநான் என் தமிழ் ஆசிரியர் போல் கிடையாது .கதையின் ஓட்டத்திம் + சுவராசியத்தில் சிறு பிழைகள் தென்பட்டாலும்,கதையின் வேகத்தில் கண்டுகொள்ளமாட்டேன்.! அதே போல் அட்டை படத்தையும் பொதுவான அழகை மட்டுமே ரசித்து விட்டு சென்றுவிடுவேன்.
ஆனால் நம்முடைய இம்முறை வாசக நண்பர்களே இதழ்களை உருவாக்க உதவி செய்ததை கண்டு அட்டைப்படம் மற்றும் பிழைகளையும் கதையை படித்துக்கொண்டே தேடினேன்.சூப்பர்.! அட்டைப்படத்தின் அழகும் சரி,பிழைகளும் கண்ணில் படாததும் சரி.! சூப்பர்.! வாழ்த்துக்கள்! பொடியன்
& கடல்யாழ்.!
மே மாத இதழ்களில் முதல் இடம் ஷெல்டனுக்கே! Simple and awesome. அடுத்த இடம் டெக்ஸ் க்கு கதை சிறுத்தாலும் காரம் குறையவில்லை. லயன் மினி நல்ல முயற்சி keep it up..
ReplyDeleteசதிகாரர்கள் சங்கம் இது வரை படித்திராத கதை. Transistor repair செய்ய நாடு நாடாக சுற்றுவது தமாஷ். இருப்பினும் கதை இன்றைய காலகட்டத்திலும் பொருத்தமான கதைதான்.
ReplyDeleteஎன் பெயர் டைகர் அட்டை வண்ணசேர்க்கை அருமை
ReplyDeleteஉங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் என்னை போன்றோருக்கு உங்கள் விளக்கங்கள் தேவை இல்லை
ReplyDeleteஎப்போதும் உங்கள் மீதுள்ள மரியாதை மாறது மாறவும் விட மாட்டேன்
என் அம்மா எதாவது குறை கூறினால் கூட அவர்களுக்கு விளக்கம் கூறி விடுவேன்
நான் சந்தா கட்டுவது கிடையாது (not because of postal charges)
அது என்னுடைய நிலைமை
இலவச இணைப்பு கிடைக்க வில்லை என்றாலும் கவலைப்பட போவது இல்லை
I was worried about U Sir, but glad U r doing Fine :) :) :)
///உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் என்னை போன்றோருக்கு உங்கள் விளக்கங்கள் தேவை இல்லை
Deleteஎப்போதும் உங்கள் மீதுள்ள மரியாதை மாறது மாறவும் விட மாட்டேன் ///
+9. செம!
கடல் யாழ் !
Delete+111110000000000000
@கடல்யாழ்9 Super!
Deleteபாத்தீங்களா மாயாவி... நான் சொன்னேன்ல?
ReplyDeleteஏதாச்சும் ஒரு பிரச்சினைய கிளப்பினா எடிட்டர் உடனே ஒரு புதுப் பதிவு போட்ருவார்னு நான் அப்பவே சொன்னேன்ல? :P
சகோதரரே தாங்கள் உன்னதமான உற்ற தோழர் :)
Delete//பாத்தீங்களா மாயாவி... நான் சொன்னேன்ல?
Deleteஏதாச்சும் ஒரு பிரச்சினைய கிளப்பினா எடிட்டர் உடனே ஒரு புதுப் பதிவு போட்ருவார்னு நான் அப்பவே சொன்னேன்ல? :P //
++++11111111111
-3333333333333.....இப்படியே ஒவ்வொரு தடவையும் ஏதாவது சொல்லி சமாளிச்சிடுங்க...அவர் இன்னமும் புதுசு,புதுசா நிறைய பிரச்சினைகள் உண்டாக்கிட்டே இருக்கட்டும்.....
Delete//இன்னமும் புதுசு,புதுசா நிறைய பிரச்சினைகள் உண்டாக்கிட்டே இருக்கட்டும்.//
Deleteசர்ச்சைகள் வந்தால்தானே நண்பரே புதிய சிந்தனைகள் ஊற்றெடுக்கும்!
கடந்த ஓராண்டாக ப்ளாக்கில் அந்த நண்பரின் கமெண்ட்ஸ்களை பாருங்கள் நண்பர்களே....தொடரந்து நம்பிக்கை அற்ற டஸ்கரேஜ் செய்யும் கருத்துக்களை மட்டுமே விதைத்து இருப்பார் ....
Deleteசமீபத்திய உதாரணங்கள் சில என்பெயர் டைகர் புக்கிங் ஆவாது ,ஊற்றிக்கொள்ளும் என்றார்,இப்போது டைகர் வர்ராரு...
சந்தா 50கூட தாண்டாது ,காமிக்ஸ் இந்த ஆண்டு அவ்ளோதான் என ஆருடம் சொன்னார்...தேவையான சந்தாக்களுடன் வெற்றிகரமாக வெளிவருகிறது ....
இன்னும் இதுபோல் சொல்லி கொண்டே போகலாம் ...
இதிலிருந்து நாம் அவரின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம் நட்பூஸ் ...
அட டா சந்தா Z தள்ளி போகிறது ...காரணம் அந்த நண்பர் அதைப்பற்றி ஒன்றும் இங்கே சொல்லாததே. சீக்கிரம் வாருங்கள் நண்பரே சந்தா Zஐ பற்றி ஏதும் உங்கள் திருவாய்மொழி சொன்னீர்கள் என்றால் ,அதுவும் இந்த ஆண்டே எங்களுக்கு கிடைத்து விடும் ....
நேற்று தலைவலி அதனால் இங்கு வர முடிய வில்லை
ReplyDeleteதலைவலி மதியம் மேலும் கூட காரணம் தேவை இல்லாத கமெண்ட்ஸ் களை படித்ததுடன் சுள்ளென்று ஏறி விட்டது
இரவு இதை பற்றியே மனதில் ஓடி கொண்டிருந்தது
ஆசிரியரும், சகோதர்களும் , தோழர்களும் தேவையானதை பேசி விட்டதால் என் சன்னமான எதிர்ப்பை மட்டும் தெரிவிக்கிறேன்
@Mayavi Sir
Hope everything changes in the future
இனிய காலை வணக்கங்கள் ஆசிரியர் சார் :)
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)
அனைவருக்கும் இன்றைய நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
புத்தகங்கள் இன்னும் கைக்கு வர வில்லை
இன்று கிடைத்து விடும் என்று நம்புகிறேன் :)
ச.ச.தில்
Delete93ம் பக்கம் ஒரு பொருட் பிழை...
97ம் பக்கம் ஒரு சொற்பிழை...
குறை கூற சொல்லலை...
நல்ல முயற்சி
நன்றி சகோதரரே
DeleteI like ur love for Captain tiger :)
wov surprise post. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். சார், டாக்டர் டெக்ஸ் புத்தகம் நடுவில் Pin செய்யப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு அவ்வளவாக நன்றாக இல்லை. சதிகாரர்சங்கம் புக்கிற்கு செய்திருப்பது போல் சைடில் Pin செய்து பைண்ட் செய்தால் அழகாக இருக்கும். கூடுதலாக செலவாகும் என்றால் வேண்டாம் சார். ஆனால் சிக்கல் இல்லையென்றால் சிறிய சைசு டெக்ஸ் புக்சுக்கு மறுபதிப்புகள் போல் பைண்டிங் செய்தால் நன்றாக இருக்கும். இது வேண்டுகோள்தான் சார். Please consider it sir.
ReplyDeleteசென்டர் பின் அடித்தால் புக்கின் அழகே கெட்டுப்போகிறது.தயவு செய்து சைடு பின் பைண்டிங்கில் கொடுங்கள்.
Deleteநமது அன்புக்குரிய எடிட்டர் மீது எழுந்த குற்றச்சாட்டை எண்ணி நேற்று முழுவதும் கலங்கிய எனக்கு இன்று காலை கண்விழித்ததும் முற்றிலும் வேறுவிதமான சொந்த பிரச்னைகள் தலை தூக்கிவிட்டன. தோழர்கள் மற்றும் எடிட்டர் அவர்களின் ஆசியுடன் அந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு(ம்) வருவேன் என்ற நம்பிக்கையுடன் வருத்தத்தோடு விடைபெறுகிறேன். வெற்றி கிட்டுமாயின் சீக்கிரமாக வந்து விடுவேன். தோல்விதான் என் நீண்ட கால முயற்சிக்கான பலன் என்றால் இங்கு திரும்ப வராமலே போய்விடும் வாய்ப்பு உள்ளது.இங்கு தெரிந்தோ தெரியாமலோ என்னால் பாதிக்கப் பட்டவர்களிடம் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். முக்கியமாக சகோதரி.கடல் யாழ் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். என் பிரசனையின் வீச்சு அவ்வளவு தீவிரமானது. நமது தளத்தில் என்னுடைய பலநாள் தடுமாற்றத்துக்கும் இந்த பிரச்னைதான் காரணம். திரும்ப இங்கு வருவேனா என்பதற்கு உத்தரவாதமில்லை. கடவுளைவிட மனிதனை நம்புபவன் நான். உங்களது மனதால் என்னை வாழ்த்தினால் கூட போதும். அந்த வாழ்த்தும், சொந்த வாழ்க்கையில் இதுநாள் வரை நான் கடைபிடித்த நேர்மையும் என்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். வணக்கம்.
Deleteபெஸ்ட் ஒப் லக் ATR சார் !
Deleteவெற்றி நிச்சயம் !
@ கலாமிட்டி
Delete+1
@ A.T.R
பிரச்சினைகளிலிருந்து முழுவதுமாய் மீண்டுவர என் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்!
கலங்காதீர்கள் ATR சார் ....
Deleteநீங்கள் எங்களோடு இங்கே நீண்டகாலம் இருப்பது நிச்சயம் ..
விரைந்து இங்கே திரும்ப வருவீராக ...
நிச்சயம் வெற்றியுடன் திரும்ப வரூவீர்கள் ATR சார். இன்னும் இந்த தளத்தை உங்கள் கமெண்ட்டுகளால் நிரப்ப வேண்டிய கடைமை உங்களுக்கு இருப்பதால் விரைவில் வெற்றியுடன் நீங்கள் திரும்பி வர பிரார்த்திக்கிறேன்._/|\_/|\_/|\_
DeleteCome back soon with success..
Delete@ATR Sir
Deleteதாங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் Sir
பிரார்த்தனைகள் கண்டிப்பாக உண்டு
உண்மைக்காக தாங்கள் போராடுவது மிக நன்று
அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம் ATR Sir
மனதால் இனிய நண்பர் Atr அவர்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ....
Deleteஇந்த வருட ஆரம்பத்தில் இருந்தே டெக்ஸ் கதைகள் மலையாளப்படம் போல் ஹீரோயிசம் குறைந்து அது ஒருவகை டேஸ்டாக இருந்தது.! ஆனால் இந்த மாதம்தான் ஒரிஜினல் அக்மார்க் டெக்ஸின் அதிரடியுடன் அமர்களமாக இருந்தது.! கதை நல்ல விறுவிறுப்பு கார்சன் இல்லாத குறையை டாக்டர் நிவர்த்தி செய்துவிட்டார்.! அதிரடி,நகைச்சுவை,சென்டிமெண்ட் என்று கதை சுவராசியமாக இருந்தது.!கௌரவ வேடம் நமது வெள்ளி முடியாருக்கு.!
ReplyDeleteஒவ்வொரு கதையிலும் எடிட்டரின் ஹாட்லைனோ முகவுரை இல்லாமல் கடுப்பை கிளப்பியது.மற்ற இரு புத்தகங்களும் ஆசிரியரின் எழத்துக்கள் இல்லாமல் மேக்கப் இல்லாத நடிகைபோல் சகிக்கவில்லை.தலைவரே!பொறுத்தது போதும்! பொங்கி எழவோம்.! போருக்கு ரெடியாக ஆணையிடுங்கள்.! காத்திருக்கின்றோம்.!
சாா் இன்னும் ஈரோட்டுக்கு இன்னும் புக் வரவில்லை எனக்கு வறுத்தம் அளிகிறது
ReplyDeleteஎடிட்டர் சார்.!
Deleteநம்ம அகில் தம்பிமாதிரி மாணவர்களுக்கு மட்டும் குவாட்டர் சந்தா சலுகை கொடுங்களேன்.!
MV சார் @ மறுபடியும் மொதல்ல இருந்தா ...தொம்...
Delete//நமது இதழ்களும் ; இதழ் சார்ந்த சின்னச் சின்னப் பொருட்களும் அந்த அளவுக்கு collector's value கொண்டவை என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போது - "லயன் மினியோ" ; "மேக்சியோ" - அதற்கு restricted access என்றமைப்பதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை// நன்றி சார்!
ReplyDeleteTo: Editor,
ReplyDeleteஇந்த லயன் - மினியை அரைவாசியாக மடித்தால்... இன்னும் கைக்கடக்கமான அளவில் (A5) கொஞ்சமேனும் மொத்தமான நிலையில் வருமே சார்? முன்பு ஒரு தடவை ஆர்ச்சி பின்னர் மதியில்லா மந்திரி மொழிபெயர்ப்பு போட்டி நேரத்தில் அவரது எக்ஸ்ட்ரா இணைப்பு வந்ததுபோல.... அந்த அளவு எனில் பராமரிப்பதும் பைண்ட் செய்து கொள்வதும் இலகுவாக இருக்குமே?
அவ்வப்போது காரசாரமான பின்னூட்டங்கள் நண்பர்களால் பதியப்படுவதும் அது தொடர்பில் மற்றைய நண்பர்களால் விமர்சனங்கள் எழுதப்படுவதும் ஆசிரியர் ஒரு விசேட பதிவை தருவதும் வழக்கமானவைதானே? பின்னர் ஏன், குறித்த கருத்தினை பதிவிட்டவர்களை தொடர்ந்தும் நோகடிக்கவேண்டும்?? அவரவர் எண்ணத்தை அவரவர் பதிவிட ஆசிரியரே களம் தந்திருக்கிறாரே? கேள்விகளின் தொனியில் சிறிது மாற்றமிருந்திருப்பின் சங்கடங்கள் யாருக்கும் நேர்ந்திராது. எல்லாம் நன்மைக்கே! இரண்டாம்பதிவு இந்த வாரத்தில்!!!
ReplyDelete
ReplyDeleteஅடுத்ததாய் ஒரு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால் எடிட்டர் கொடுக்கும் options என்னவாக இருக்கும்? ஒரு Sample :
'எ.பெ.டை' அட்டைப்படத்தில் தளபதியை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள்?
(a) டைட்-க்ளோஸ்அப்பில் - பயங்கரமாய்
(b) தூ...ரத்தில் ஒரு புள்ளியாய்
(b) ஆணியே புடுங்கவேணாம், அட்டைப்படமே தேவையில்லை. மொட்டையாய் போடுங்க.
:D
@ Erode VIJAY
Deleted ) பெருசா ஒரு ஒடஞ்ச மூக்கு மட்டும் :)!
e) சிகுவாகுவா பெர்ல் படம் மட்டும் (நாங்களும் அட்டைப்படத்தை அஞ்சி வருசம் தொடர்ந்து பாப்போமில்ல.) :-)
Deletef) அந்த தோட்டா தலைநகர ஸ்கூல் மிஸ்சுக்கும் ஒரு இடம் ....
Deleteஇந்த மாத டெக்சு புத்தகத்தில் அந்த நாலு கால் பிராணியின் ஆர்ட் வொர்க் சூப்பர்....
DeleteThis comment has been removed by the author.
DeleteRummi XIII @ நாலு கால் பிராணியின் பக்கத்தில் டெக்ஸ் ஆர்ட் வொர்க் சூப்பர் :-) இப்படியும் யோசிபோம்ல :-)
Deleteவாரம் ரெண்டு பதிவு வேணும்னா என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு :-)
ReplyDeleteசரி jokes apart ,
எடிட்டர் பாஸ்!
நீங்க கண்டிப்பா படிபிங்கனு நம்பிக்கையுடன்,
நீங்க கொஞ்ச நாள் முன்னால சந்தா அதிகரிக்க யோசனை கேட்டிங்க!
நெறைய கருத்துக்கள்....நானும் சில நண்பர்களும் இந்த ஸ்பெஷல் சந்தா புக் (not for sale) பத்தி சொன்னோம் !
அது பெரிய success தருமானு சந்தேகத்தோடு விவாதிச்சோம்!
இப்போ உங்க வரிகளா பார்த்தா....
"சந்தாக்களின் சகாயங்களில் தான் நமது சக்கரங்கள் சுழல்கின்றன என்பதில் நம்மில் என்றைக்குமே ஒளிவு-மறைவு இருந்ததில்லை ! சந்தா செலுத்தக்கூடிய நிலையிலுள்ள நண்பர்களின் பங்களிப்பானது - காமிக்ஸ் எனும் சவலை மழலையைத் தொடர்ந்து ஜீவித்திருக்கச் செய்திடும் பொருட்டே என்பதிலும் எனக்கு மாற்றுச் சிந்தனையில்லை ! "
சந்தா எவ்வளவு முக்கியம்னு மறுபடியும் ஒரு முறை தெள்ள தெளிவா புரியுது !
இப்போ திடீர்னு......
நமக்கு லைட்'எ ஜெர்க் ஆகுது !
கை கால் எல்லாம் காலைல ஆறு மணிக்கே லைட்'ஆ நடுங்க ஆரம்பிக்குது !
வேர்த்து வேர்த்து வர்து!
அப்டினா என்ன அர்த்தம் !
ஐ ஐ ஐயோ !
தப்பா எடுத்துக்காதீங்க :)
ஏன்னா.....
இதெல்லாம் சந்தாக்கு மட்டும் அந்த ஸ்பெஷல் புக்னு சொன்னா......நமக்கு ஒரு புக் மிஸ் ஆகுதேன்னு வர்ற reactions !
வேற ஒன்னும் இல்லிங்கோ :-)
ஒரு ரெண்டு வருஷம் இத follow பண்ணின மூணாவது வருஷம் நாமல்ல 90% பேரு சந்தாவில்ல சேர்ந்துருவோம்னு நெனைகரன்!
ஏன்னா....
மந்தைல 1000 ஆடு இருந்தாலும் அந்த தொலஞ்ச ஒற்றை ஆட்டை தேடித்தான் மனம் பரிதவிக்கும் !
ஐயோ ஸ்பெஷல் புக் மிஸ் ஆகுமேனு நெனைச்சா இப்போவே லைட்'ஆ நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கா :-)
வாங்க நண்பாஸ்!
எல்லாரும் சந்தா கட்டுவோம் !
இங்க இருக்க எல்லா நண்பர்களும் சந்தா கட்டினா....இன்னும் கொஞ்சம் சிரமம் குறையும்னு தெரியுது !
இப்போ புதுசா சந்தா கட்ட யாரு இருகாங்கங்கறது secondary !
நம்மதான் primary !
சோ.....
தப்பா எடுத்துக்காதீங்க !
ஏதோ அடியேனுக்கு தோணுச்சு! சொன்னேன்! அம்புடுதான்!
///
Deleteஒரு ரெண்டு வருஷம் இத follow பண்ணின மூணாவது வருஷம் நாமல்ல 90% பேரு சந்தாவில்ல சேர்ந்துருவோம்னு நெனைகரன்!
ஏன்னா....
மந்தைல 1000 ஆடு இருந்தாலும் அந்த தொலஞ்ச ஒற்றை ஆட்டை தேடித்தான் மனம் பரிதவிக்கும் !
///
+1 செம! செம!
ஏதோ சில காரணங்களால் சந்தா செலுத்தி புத்தகங்களைப் பெறமுடியாத சில தீவிர வாசகர்கள் இதனால் கொஞ்சம் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், சந்தா எண்ணிக்கை அதிகரிக்க இதுவொரு சிறந்த வழிமுறையே எ.எ.கருத்தும்!
சரவணன்@ +2
Deleteநண்பர்களே : சின்னதாய் ஒரு ரகசியத்தையும் இங்கே போட்டுடைக்கிறேனே ? 2014-ன் பிற்பகுதியில் - நாம் புதுச் சந்தாக்கள் கோரிடும் நவம்பர் மாதமது ! சந்தாக்களை ஊக்கப்படுத்திட - சந்தாதாரர்களுக்கு மாத்திரமே இருக்கும் விதமாய் ஒரு evergreen நாயகரின் (புதுக்) கதையை 3 பாகங்களாய்ப் பிரித்து ; இலவச இணைப்பாகத் தந்திடலாமென்ற மகா சிந்தனை எனக்குள் தோன்றியது ! கதையையும் தேடிப் பிடித்து - முதல் 10 பக்கங்களையும் பர பரவென்று எழுதித் தள்ளி விட்டேன் ! அதுவொரு சனிக்கிழமை என்பதால் - மறுநாளைய பதிவில் இதையே highlight செய்வதென்று பதிவையும் செம ஸ்பீடாய் டைப் பண்ணியும் விட்டேன் பகலிலேயே ! ஆனால் எதையுமே spontaneous ஆகச் செய்வதைவிட - ஒரு நாள் அந்த விஷயத்தைத் தலைக்குள் ஊறப்போட்டுவிட்டு - மறு காலையிலும் அது சரியென்று படும் பட்சத்தில் நடைமுறைக்குக் கொணர்வதென்பது கொஞ்ச ஆண்டுகளாய் எனது பழக்கமாக இருந்து வருகிறது ! So பதிவை draft folder -ல் பதுங்கச் செய்துவிட்டு மாமூல் வேலைகளுக்குள் புகுந்தேன்.....
Deleteஅன்றிரவு என்னையும் அறியாது இந்த இலவச இணைப்பைச் சுற்றிச் சுற்றியே சிந்தனைகள் தொட்டுப் பிடித்து விளையாடின ! ஏதோ சில காரணங்களால் சந்தா செலுத்தும் நிலையில் நம் நண்பகளுள் ஒருசாரார் இல்லாத பட்சத்தில் - அதுவே அவர்களைப் பாரபட்சமாய்ப் பார்க்கச் செய்யும் காரணியாக அமைவது நியாயம் தானா ? என்ற கேள்விக்கு என்னிடம் விடை இருக்கவில்லை ! இன்றைக்கு கிரே மார்கெட்டில் ஏலம் போட்டு விலைகளை ஏற்றி கிடைத்தற்கரிய இதழ்களை விற்பதற்கும் ; "சந்தா கட்டுவோருக்கு மாத்திரமே சில goodies" என்று நாம் நிர்ணயம் செய்வதற்கும் பெரியதொரு வேற்றுமை இருக்குமா ? என்றும் என்னால் கணிக்க முடியவில்லை ! So சத்தமில்லாமல் அன்றிரவு வேறொரு விஷயத்தைப் பதிவாக்கி விட்டு அந்த இலவச இணைப்புச் சமாச்சாரத்தை பரண் மேல் போட்டுவிட்டேன் !
மாரத்தான் ஒடுவோர்க்கு நினைவுப் பரிசாய் வழங்கப்படும் டி-ஷர்ட் மதிப்பு வாய்ந்ததே ; ஆனால் அந்த டி-ஷர்ட் மாத்திரமே மாரத்தான் வீரர்களின் குறிக்கோள் ஆகாதில்லையா ? 'நானும் இதனில் பங்கு கொண்டேன் !' என்றதொரு ஆத்மதிருப்தி தானே ஒவ்வொரு மாரத்தனிலும் பங்கேற்கும் எண்ணற்றோரின் driving force ? இங்கு சந்தாக்கள் செலுத்தி நம்மை தொடரச் செய்யும் நண்பர்களுக்கும் - தத்தம் ஆற்றல்களுக்குட்பட்ட விதங்களில் நமது பயணத்தை சாத்தியமாகுகிறோமென்ற சந்தோஷம் தானே பிரதானம் ? தினமொரு கப் காபியின் செலவினை சக நண்பரின் காமிக்ஸ் வாசிப்புகளின் பொருட்டு நாம் செலவழிப்பதாய் நினைத்துக் கொண்டாலே சந்தாக்கள் செலுத்தும் நோக்கம் பூர்த்தி கண்டுவிடாதா ?
தவிர, சந்தா கட்டுவோர் - முழு மாரத்தான் ஒடுவோருக்குச் சமானம் எனில் - அவ்வப்போது இதழ்களைக் கடைகளில் வாங்குவோர் மினி-மாரத்தான் ஒடுபவர்களுக்குச் சமானம் ஆக மாட்டார்களா ? அவர்களும் தினம் தினம் இங்கு நம்மோடு கைகோர்த்து, கருத்தில் கலந்து கொள்ளும் நண்பர்கள் தானே ? ரொம்பச் சின்ன வட்டம் சார் நமது ; இதனுள் பணம் சார்ந்ததொரு விஷயத்தால் பாகுபாடுகளைக் கொணர வேண்டாமே என்று என் மனசு சொல்கிறது !
என்றைக்குமே நல்லதொரு வியாபாரியாய் இல்லாது போனவன் தானே நான் - இன்றைக்குத் திடீரென்று மாறிப் போவேனா - என்ன ?
எடிட்டருக்கு நன்றிகள் ஆயிரம்,சந்தாதாரர்களுக்கு மட்டும் ஒரு இதழ் எனில்,அம்முடிவு கிரே மார்க்கெட் வளரவே உதவி செய்யும்.
Deleteதிரு விஜயன் அவர்களே....
Deleteசந்தா கட்டுவோர் - முழு மாரத்தான் ஒடுவோருக்குச் சமானம் எனில் - அவ்வப்போது இதழ்களைக் கடைகளில் வாங்குவோர் மினி-மாரத்தான் ஒடுபவர்களுக்குச் சமானம் ஆக மாட்டார்களா ? என்பது உண்மையே.!
பின் எப்படி உதித்தது 'விற்பனைக்கல்ல' என்ற அறிவிப்பும்...இவை விற்பனைக்கு வேண்டுமெனில் 15 ரூபாய்க்கு கொடுக்கிறேன் என்ற அழைப்பும்...???
இவரும் சமமே என்றால் 'விற்பனைக்கல்ல' என்ற அறிவிப்புக்கு யாருக்காகவோ...???அதன் பொருள் தான் என்னவோ..???
mayavi.siva : நிதானமாய் யோசியுங்கள் சார்...! நிச்சயம் புரியும் !
Deleteஏன அய்யா மாயாசார் அவர்களே @ அவர் ஆருக்கு வித்து போட்டாரு ??
Deleteகாமிக்ஸ் ன்னா என்னான்னு தெரியாத யாரோ முகம் தெரியா நபர்களுக்கா ????....
சக காமிக்ஸ் நண்பர்களுக்கு தானே !!!...
ஏதோ ஒரு காரணத்தால் சந்தா கட்டாத சக நண்பர்கள் மேல் இம்புட்டு பொறாமையா ????
நீர் ஒரு 4000கட்டி போட்டீர்னனா ,உடனே உங்களுக்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ???....
அந்த இலவச இணைப்பை உங்களுக்கு மட்டுமே தரணுமா ???
கடையில் வாங்குறவங்க உங்களை பார்த்து வழக்கம் போல ஏக்க பெருமூச்சு விடனுமா ???என்ன சாரே ஞாயம் !!!!....
கடையில் வாங்குபவர்களுக்கு சும்மா தர முடியாதல்லவா !!!!....
சந்தா கட்டாதவங்களுக்கும் கிடைத்து விட்டதே என பொறாமை யா????...
இல்லை ஒரு500காப்பிகள் தோராயமாக 7500க்கு வித்து புட்டாரே என தாங்கி கொள்ள இயலவில்லை யா????....
இல்லை காமிக்ஸ் வருவதே பிடிக்கலயா ???....
என்னதான் உங்கள் பிரச்சினை ????..
அப்டியே அந்த சந்தா Zக்கும் கொஞ்சம் கருணை வாய் அருளுங்களேன்.....
டெக்ஸ் விஜயராகவன்.! ஹாஹாஹாஹாஹா......அருமையான நடை தெளிவான கருத்து.!
Deleteஎடிட்டர் பாஸ்!
Deleteஉங்க நல்ல மனசு புரியுது !
ஆனா….
டெய்லி காபி குடிச்சா ஒடம்புக்கு கெடுதி...அங்க பாரு ப்ரீ’அ நீர் மோர் குடுக்கறாங்க!
ரெண்டு டம்ளர் குடுச்சுட்டு வான்னு சொல்ற நம்ப மனசு இருக்கே! அதான் சார் கடவுள் :-)
(சும்மா கிடக்கிற நீர் மோர்க்கே அப்டினா ஸ்பெஷல் புக்கு என்கிற தங்க துகள் கிடச்சா சும்மா விடுவோம்மா! )
சரி இந்த
"வருஷம் ஒரு ஸ்பெஷல் புக்”
கிரே மார்க்கெட்’ல அதிக விலைக்கு போகுமா ?
சோ…
வேணும்னா கிரே மார்க்கெட்’ல கூட வாங்கிக்கலாம் ஆனா சந்தா மட்டும் மூச்னு சொல்ற மனசு இருக்கே அது இன்னொரு கடவுள் :-)
எல்லா கடைலயும் கெடைக்கும்…புக் fare’ல வாங்கிக்கலாம்.....தபால் செலவு இல்லை…நெனைச்சத மட்டும் வாங்கிக்கலாம் …இந்த மனசு atleast சந்தா விசயத்துல திரும்ப நம்ம 2000 ஆம் ஆண்டுக்கு முன்னாடி கொண்டு போய்ருமோன்னு நெனச்சா பயமா இருக்கு!
இப்பவும் செலக்ட்வா புக் வாங்கறது!
ஸ்பெஷல் edition கிடக்கும் போது அதிக சிரத்தை இல்லாம இருக்கறது!
அதுக்கு அப்பறமா நம்ம வாங்காத புக்கு தீர்ந்த பிறகு........
ஐயோ! அம்மான்னு கிரே marklet’ல தேடி அலையறது…..
ஆனா சந்தா மட்டும் கட்டவே மாட்டேனு அடம் பிடிக்கிற அந்த மனசு இருக்கே….
அது கடவுளுக்கெல்லாம் கடவுள் :-)
ஹ்ம்ம்….
எல்லாரும் சமம் தான் !
ஆனா….நம்ம மக்கள் எப்போவமே அழுது கிட்டே முத்திரை குத்தி பழக்க பட்டவங்க !
சோ......நமக்கு லைட்’ஆ வலிச்சா தான் நமக்கு மத்தவங்க படற வலி புரியும்!
வரும் ஆண்டுகள்ளா graph other side எறங்காம இருந்தா சரி பாஸ்!
ஹ்ம்ம்…நாமளும் வலிக்காத மாதிரி எத்தனை வருஷம் பாஸு இருக்க முடியும் !
என்னோவோ ! உங்க விருப்பம் பாஸு !
சரவணன் @
Deleteசூப்பர் +1
சார் சில விஷயங்களில் கசப்பான மருந்தென ௐதுக்கினால் நோயாளி குணமாவதெப்போது....துரோகிகள் அதை நம்பப் போவதில்லை , நண்பர்களுக்கு விளக்கம் தேவையில்லை ...என்ற பொன்மொழிதான் எவ்வளவு உண்மை....கிரஏ மார்கட் வேறு ....நீங்க செய்றது வேற ...குழப்பிக்க வேண்டாமே....சந்தாவ உயர்த்தினால்தான விலய கட்டுக்குள் வைக்க இயலும் ...அப்படி பாருங்களேன் ...பழய நிச்சயம் புத்தகம்தான் வேண்டும் என்போருக்கு என்ன விலயும் சாத்தியம் , கத வேண்டுவோர்க்கு மறுபதிப்புகள் போதும் .சதிகாரர் சங்கம் என்னவொரு அற்புதம்...அந்த முன்று கதைகளுடன் தயக்கமின்றி போராடுமே...சார் கிரே ஓவரா போனா சட்டத்தின் வலிய காட்டுவோம்...இப்ப மறுபதிப்புகளால் அவர்கள் கலகலத்து போனதால்தான் இங்க சில சல சலப்புகள்....நீங்க வியாபாரியா மாறுனாதான் நாங்க இதஏ விலயில வாங்க முடியும்கிறதயும் மனதில் வைங்க...சில நேரங்களில் அவசியமான இழப்புகளும் சுகமே...பிரெய்ன் வாஸ் செய்யபட்டு முன்பு வெளியேறிய சில நண்பர்கள்...பாரு நான் சொன்னதுதான் சரின்னு நி௹பிக்கிறன்னு தன் மனசோடோ ...இல்ல கிரே கூட்ட முன்னிலயிலோ சபதமெடுத்தவறுக்காக டைம் ௐதுக்குவத விடுத்து சந்தா உயர உதவ வாய்ப்புள்ள இந்த விசயத்த கெட்டியா பிடிங்க...இங்க விஷமப் பொடிய தூவ நினச்சவங்க சோர்ந்து போக....
Deleteகாமிக்ஸ் சந்தாவை அதிகரிக்க,சந்தா கட்டுபவர்களுக்கு மட்டுமே மாதாமாதம் காமிக்ஸ் பெற முடியும்,வேறு வழிகளில் அதாவது கடைகளிலோ,புத்தக சந்தைகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்பனை கிடையாது என்று அறிவிக்கலாம்.
ReplyDeleteமேலே உள்ள பதிவு ஒரு பகடியே,நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம்.
Deleteஇந்த மாத இதழின் எனது வரிசை ..
ReplyDeleteஒன்று ....ஷெல்டன் ....
இரண்டு ....டெக்ஸ் .....
மூன்று ....ஜானி நீரோ ...
நான்கு .....ஸமர்ப் ....
முதல் இரண்டு கதைகளை பற்றி போன பதிவிலியே பதிந்து விட்டாலும் ...அரச பரச பழமொழி ஆனாலும் மீண்டுமொரு முறை கடுகு ...காரம் ..போகாது ....என்பதோடு நிறுத்தி கொள்கிறேன் சார் ...
சதிகார்ர் சங்கம் ....எப்போதும் போல ஓகே ...பொடியன் அவர்களுக்கும் ..கடல்யாழ் அவர்களுக்கும் ஒரு மனமார்ந்த பாராட்டுக்கள் ....இந்த் இதழின் குறை என்னவென்றால் சார் இந்த முறை சித்திரங்களின் அச்சு அடுத்த பக்கத்திலும் தெரிகிறது ..அடுத்த இதழில் தவிர்க்க பாருங்கள் ....சார் ...
ஸமர்ப் ....பல மொழிகளில் மாஸ் ஹிட் ...இந்த இதழின் எழுத்தின் வடிவத்தை கூட மாற்ற கூடாது ....வேறு விளம்பரங்கள் கூட இனைக்க கூடாது ....அடேங்கப்பா .....
ஆனால் அதற்கு வொர்த்தா என்றால் பேய்முழி முழிக்க தோன்றுகிறது ....முதன் முறை சிறு சிறு கதை என்பதால் மனதை கவரவில்லை போல ..என நினைத்தேன் ..இப்போது முழுநீள கதை என்றாலும் ..ம் ....பார்க்கலாம் எனது வாரிசுகள் வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு பழகி பார்க்க கொடுத்தால் தான் தெரியும் ...அவர்களையாவது கவர்வாரா என்று ...;-)
தலைவரே....!
Deleteஸ்மர்ஃப் பற்றிய தங்களின் கருத்துகளோடு உடன் படுகிறேன்.
என் தம்பி மகள் மிக விரும்பிப்படிக்கிறாள்.குட்டீஸ்களுக்கான கதைகள்....!
நன்றி தலீவரே :)
Deleteவிஜயன் சார், இந்த மாத கதைகளில் முதலில் படித்து செல்டன் சோ(சா)கசம் :-( கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை, பெரிய துரத்தும் காட்சிகள் இல்லை ஆனால் விறுவிறுப்பாக இருந்தது (காரணம் குறைந்த பக்கம்கள் என நினைக்கிறேன்).
ReplyDelete1.பாலைவனத்தில் எதற்காக இவர் நண்பரின் எதிர்கால மருமகனை புதைமணலில் சிக்க விடுகிறார் ஏற்கனவே வைரம்களை இவர் கைப்பற்றியபின்பும்.
2.அதே போல் முழு வைரம்களையும் திருப்ப சேர்த்து அதிக சம்பளம் வாங்கும் போது, இவர் ஒரு கொடியவனாக தெரிகிறார் (பணத்திற்காக புதைமணலில் ஒருவனை தெரிந்தே சிக்க வைத்தது, டயபாலிகும் இவருக்கும் என்ன வித்தியாசம்)
3. இதுவரை வந்த கதைகளில் இவர் பணத்திற்காக வேலை செய்தாலும் பிற மனிதர்களிடம் ஈவு இரக்கம் காட்டுவார், ஆனால் இந்த கதையில் அப்படி இல்லை.
4. அதிலும் கொடுமை, இவருக்கு இவர் காதலி கொடுக்கும் பிறந்த நாள் பரிசு, அதே போல் இவர் அவரது காதலி கொடுக்கும் பிறந்த நாள் பரிசு ரசிக்கும் படி இல்லை (கொடுமை).
5. இந்த கதையில் வரும் பெண்களின் டிரஸ், நமது ஓவியர் போட்ட டிரஸ் என்று தனியாக தெரிகிறது. வரும் காலம்களில் நமது ஓவியரை ஒரிஜினல் கலரில் டிரஸ் போட சொல்லவும், அப்போதுதான் இயல்பாக தெரியும்.
6. இவரின் கதைகள் இரண்டு பாகமாக இருந்த போது படித்து ரசிக்க நிறைய விசயம்கள் இருந்தன, ஆனால் ஒல்லி பிச்சான் புத்தகமா வரும் போது ரசிக்கும் படி ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் இந்த வருடத்தில் முதல் மொக்கை கதை என்ற விருதை செல்டன் பெறுகிறார்.
பரணி !!!!!
Deleteஎர்னெஸ்ட் கதாபாத்திரத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை..
வசீகரம்,கவர்ச்சி ,இளமை உள்ள எர்னெஸ்ட் அவற்றை முதலீடாக வைத்து பணக்கார இளம் பெண்களை தனது வலையில் விழ வைக்கும் ரகத்தை சேர்ந்தவன்.....
பாலின் கெல்லரை வலையில் வீழ வைத்து அவளை நாடகமாட செய்து அவள் தந்தையிடமிருந்து தனது சுய தேவைக்காக பணம் பறிக்க எண்ணுபவன் எப்படி ஒரு நல்ல ஆண்மகனாக இருக்க முடியும்??
அவன் பாலின் கெல்லரை நேசிக்கவில்லை....அவள் பணத்தை மட்டும்தான்...
அது சரி....டீஜார் அல் எப்னா சோலையில் ஜெமால்கான் குறுக்கிடாவிட்டால் எர்னெஸ்ட் ஷெல்டனை கொன்று இருப்பான்.....அவன் மேல் எப்படி ஷெல்டன் எப்படி கருணை காட்டமுடியும்.....??????
பாலைவன புதைமணலில் எர்னெஸ்ட் சிக்காமல் இருந்துஇருந்தால் எர்னெஸ்ட் அடுத்து கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஷெல்டனை கொலை செய்ய முயன்று இருப்பான்....இதை ஷெல்டன் பாலின் முகத்தை பார்த்து கூறுகிறார்.....அது உண்மையும்தானே....
மரணம் அருகில் இருக்கும் நேரத்திலும் ஷெல்டனை கொல்ல துப்பாக்கி தேடுகிறான் அக்கயவன்.....
வைரங்களை திருப்பி கெல்லர்-இடம் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியமே ஷெல்டனுக்கு இல்லை...
ஏனெனில் ஷெல்டன் தன்னிடம் வைரங்கள் இருப்பதாக பாலின் இடம் கூறவில்லை....
தனது வாக்கை காப்பாற்றுகிறார் ஷெல்டன்.......
தனது ஊதியத்திலிருந்து நான்கு வைரங்களுக்கான தொகையை கழித்தபின்னரே அவற்றை ஜெமால்கானின் நட்புக்காக அளிக்கிறார்...
ஷெல்டனின் நேர்மையை பாராட்டியே ஜெமால்கான் அவற்றை ஷெல்டன்-இடம் திருப்பியளிக்கிறான்.....
ஏன் ஜெமால்கான்-க்கு வைரங்கள் அளிக்கப்படவேண்டும்? இறந்த அவனது வீரர்கள் குடும்பத்திற்கு...
தெரிந்தே எர்னஸ்ட்டை புதைமணலில் சிக்க வைத்ததன் மூலம் தனது உயிரை காப்பாற்றி கொண்டதோடு தன் சிநேகிதனின் மகளை போலி காதலனிடம் இருந்து காப்பாற்றுகிறார்........
பிறந்த நாள் பரிசு......ஹா ஹா சிரித்து விட்டு போக வேண்டியதுதான்
இந்த ஹை வோல்டேஜ் கதை உங்களுக்கு மொக்கை என தோன்றுவது ஆச்சர்யம்தான்.....
selvam abirami @ நன்றி! சில விசயம்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன், நீங்கள் உங்கள் விளக்கம் மூலம் அதை உறுதி படுத்திவிட்டீர்கள்!
Deleteமொக்கை என்பதை வாபஸ் செய்து விட்டு சுமாரான மொக்கை என சொல்லுகிறேன் :-)
This comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார்,
Deleteடாக்டர் டெக்ஸ்: கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது சிறந்த உதாரணம் இந்த கதை. முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு.
சில suggestion:
1. முன் அட்டை சரியாக வெட்டபடவில்லை, ஆங்காங்கே அட்டை பிசிறுதட்டி இருந்தது. இதில் கவனம் செலுத்துவது நலம்.
2. உள்பக்கம்கள் ஒரே அளவில் வெட்டபடவில்லை.
3. நடு பக்கத்தில் பின் அடித்தது நன்றாக இல்லை, அதற்கு பதில் நமது மறுபதிப்பு நாயகர் புத்தகம்களுக்கு பயன்படுத்தும் முறையை கையாளலாம்.
எல்லா கதைகளுக்கும் சரியான தலைப்பு கொடுக்கும் நீங்கள் இந்த கதைக்கு கொடுத்த தலைப்பு கொஞ்சம் கூட ஒட்டவில்லை :-(
விஜயன் சார், உங்களின் சாந்தாதார்களுக்குகாண லைன் மினி Surprise எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அது குறைந்த பக்கம்கள் என்றாலும் அதனால் கிடைத்த சந்தோசம் அளவிட முடியாதது. அதே நேரம் அதன் பின்னால் உள்ள உழைப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteஇது போன்ற Surprise தொடரட்டும். எனது ஆதரவு என்றும் உண்டு.
இன்றைக்குள் 500 கமெண்ட்ஸ் தாண்டி நாளை ஒரு புதிய பதிவு தேவைஎனில் சொல்லுங்கள் இத்தாலியாரே...ஏற்பாடு செஞ்சிடலாம்.
ReplyDeleteஅன்புள்ள பரணிதரரே என் மகனுக்கு நான் புரியவைத்த களம் நிஜம்,நீங்கள் சொல்வது கற்பனை. வாழ்க்கையின் துவக்கம் பிரசவம்...நான் தவறின் துவக்கத்தை பற்றி பேசிதை நீங்கள் வாழ்க்கையின் முடிவான மரணமாக சித்தரித்து உழல்வாதி என திசைதிருப்பியது வருத்தமாக உள்ளது. ஆசிரியரின் கி.நா.வையே கொஞ்ச ரசிக்க தடுமாறும் நீங்கள் என் கி.நா.பதிலை உணர்ச்சிவசப்பட்டு திரு விஜயன் அவர்களை பலமுறை உழல்வாதி என நேரடியாக குறிப்பிட்ட உங்களை நான் கண்டிக்க மனமில்லாமல் தடுமாறுகிறேன்..!
மாயாஜீ ....
Deleteஉங்கள் மகனுக்கு நீங்கள் அறிமுக படுத்திய நிஜத்தில் இது தான் ஊழலுக்கான தொடக்கம் ...என்ற வார்த்தை ...அதுவும் நிஜத்தில் ....
அதன் தாக்கம்...சாராம்சம் ...உண்மையாகவே தங்களுக்கு புரிய வில்லையா ....உண்மையில் அந்த ஒரு வார்த்தைக்கான பதிலே எனது ...கிராபிக்ஸ் நாவல் எனக்கு புரியாமல் போகலாம் மாயாஜீ ....ஆனால் அந்த தவறான வார்த்தை பிரயோகம் ...நேரிடையாக ஆசிரியரை தாக்குவதை இன்னும் நீங்கள் உணராது இருப்பது ....நீங்கள் கிராபிக்ஸ் நாவலை மட்டுமே ஆழமாக படித்து கொண்டு இருக்கிறீர்களோ என எண்ண தோன்றுகிறது ...எந்த வொரு பிரச்சினை கருத்துக்கும் நான் தாண்டி போவதாக ஆசிரியரிடம் உறுதி சொல்லியுள்ளேன் ...அதன் காரணமாகவே இடையில் சில தடங்கல்கள் இங்கே நிகழ்ந்தாலும் தாண்டி சென்றேன் ...ஆனால் நேரிடையாக ஆசிரியரை தாங்கள் தாக்கியதன் காரணமாகவே (அது நிஜமாக இருப்பின் தாண்டி சென்று இருப்பேன் ... )மீண்டும் பதிலுரைக்க ஆரம்பித்தேன் ....ஆனால் இந்த தடை மீறல் உங்களுக்காக போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கும் உண்டு ...
ஆனால் இந்த பதிவிலும் தங்கள் பதில் அந்த கருத்தின் கற்பனையின் உறுதியிலேயே நிற்பதை காணும் போது .....என்ன சொல்வது ஒன்றே தெரியவில்லை ...இந்த பதிவிலும் தாங்கள் கேட்ட அதே வினாவிற்கு ...ஆசிரியரின் இந்த பதிவிலேயே பதில் உள்ளது மாயாஜீ ...நிதானமாக மீண்டும் படித்து பாருங்கள் மாயாஜீ ...என்னால் கிராபிக்ஸ் நாவலின் கதை களத்தை தான் உள்வாங்க முடியவில்லை ..அதை பற்றி நான் கவலைபடவும் போவதில்லை....ஆனால் ...உங்களால் ஆசிரியரின் பதிவியை உள்வாங்க முடியவில்லையே என்ற வருத்தமும்...கவலையும் எனக்கு அதிகமாகவே ஏற்படுகிறது ..;-(
This comment has been removed by the author.
Deleteஏனோ எடிட்டர் நிதானமாக யோசித்து பார்க்க சொல்லியும் ஒன்றும் பிடிபடவில்லை...உங்கள் யதார்த்தமான விளக்கங்கள் பல சமயம் பளிச் விடைகளாக அமைந்துள்ளது.அதே கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்...
Deleteஇவரும் சமமே என்றால் 'விற்பனைக்கல்ல' என்ற அறிவிப்பு யாருக்காகவோ...?? அதன் பொருள் தான் என்னவோ..???
அன்புகூர்ந்து விளக்கமுடியுமா...!!!
விற்பனைக்கல்ல என்ற அறிவுப்பு சந்தா கட்டியவர்களை மாரத்தான் ஓட்ட வீரர்களாகப் பார்த்து, அவர்களுக்கும் தனி கௌரவம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை உதித்ததன் விளைவு.
Deleteபின் அதனை 'சந்தா கட்டாவிட்டால் விலை கொடுத்து வாங்கலாம்' என்று மாற்றியது சந்தா கட்டாதவர்களும் 'மினி மாரத்தான்' ஓடுகிறார்கள் தானே, அவர்கள் மட்டும் இந்த இணைப்பைக் கண்ணிலேயே காட்டாமல் இருக்க என்ன பாவம் செய்தார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு.
மாரத்தான் ஓடுபவர்களுக்கு இலவசம்.
மினி மாரத்தான் ஓடுபவர்கள் காசு கொடுத்து (வழக்கம் போல்) வாங்கலாம்.
mayavi. siva: // இருவரும் சமமே என்றால் 'விற்பனைக்கல்ல' என்ற அறிவிப்பு யாருக்காகவோ...?? அதன் பொருள் தான் என்னவோ..??? //
Delete'விற்பனைக்கல்ல' என்ற விளம்பரம் செய்த பிறகு அதனை விலைக்கு விற்பது விளம்பர வாசகங்களின் நம்பகத்தன்மையை (இனி) நீர்த்துப்போகச் செய்யக்கூடும் என்கிற நோக்கில் பார்த்தால் மாயாவி சிவாவின் கருத்துகள் இப்போது பொருத்தமே.
அதேநேரம் ஊழல் - கீழல் எனும் ரேஞ்சுக்கு கருத்துகள் நீண்டு செல்வது அபத்தமாகத் தோன்றுகிறது. எடிட்டரின் தீர்மானங்கள் சிலநேரங்களில் பல்டியடிப்பது நமது சிறிய வாசகர் வட்டத்தை தன்னால் இயன்ற அளவுக்கு (ஒருநாள் இயலாவிட்டால் இன்னொருநாள்) திருப்திபடுத்தவே என்ற எளிய புரிதல் அவசியம் - குறிப்பாக சந்தா செலுத்துபவர்களுக்கு.
பரணி இயல்பான கருத்து, உண்மையான கருத்து.
Delete+1
மாடஸ்டி பிளைஸி
ReplyDeleteராவணன் சார் !!!!
Deleteமகேந்திரன் பரமசிவம் சார் navajo என்பதை நவஜோ என்றல்லாது நவஹோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என தெரிவித்தபோது ( எடிட்டர் இப்போது நவஹோ என்றுதான் அச்சிடுகிறார்) blaise உச்சரிப்பு என்னவென்று பார்த்தேன்...
BLAISE......ப்ளைஸ்( z in the end)
it's a french name.....american pronunciation is sort of ""blaze""
செல்வம் அபிராமி சார்.!
Deleteஎப்படியோ நம்ம இளவரசி பெயரைச்சொன்னாலே போதும் இன்பதேன் வந்து பாயுது காதினிலே.!
குடோன் நிரம்பி விட்டது என்றவுடன் கப்சிப் ஆகிவிட்டேன். ஏனென்றால் எட்டு வருடங்களுக்கு முன்னால் சிவகாசிக்கு சென்று விற்காத புத்தகங்கள் மலைபோல் குவிந்ததை கண்டு மனம் கனமாகி நொந்தது ஞாபகம் வந்துவிட்டது.
கடவுளின் அருளால் ஜுன் மாதம் குடோன் காலியானால்.......காதில் ரத்தம் வரும் வேலையை மீண்டும் தொடருவேன்.!யார் தடுத்தாலும் கேட்கமாட்டேன்.!
மாடஸ்டி பிளைஸி தான் பிடிச்சிருக்கு :)
Deleteஅடடா... எப்போ பார்த்தாலும் கசமுசானு பிரச்சினை பண்ணிக்கிட்டு... அடுத்த மாதம் இந்நேரத்துக்கெல்லாம் 11 புத்தகங்களை தூக்கமுடியாம தூக்கிட்டு நின்னுக்கிட்டிருப்போமே... CBFல குதூகலிச்சுக்கிட்டிருப்போமே... அங்கே வாங்க எல்லாரும்; எத்தனை விவாதம் வேணாலும் வச்சுக்கிடலாம்.
ReplyDeleteஎன்கிட்டே பன்னு-டீ பரிசுக்குத் தகுதியானவங்க எல்லாரும் மறக்காம அங்கே வந்து கேட்டு வாங்கிக்கோங்க ( எனக்குக் கொஞ்சம் மறதி சாஸ்தி ஹிஹி)
//டீ பன்னுக்கு துதியானவங்க //
Deleteஅதில் அடியேனும் ஒருவன்.!
ஆனால் எனக்கு கொங்கு நாட்டு பன்னும் டீ தான் வேண்டும்.!
வருக்கி என்றால் ஊட்டி
பன்னு என்றால் கொங்கு நாடு.!
புரோட்டா என்றால் மதுரை!
பிரியாணி என்றால் ஆம்பூர்!
//எனக்குக் கொஞ்சம் மறதி சாஸ்தி ஹிஹி//
Deleteஅதானே பார்த்தேன்... எனக்கு நிறைய க்ரிஸ் விட்ட நெய் ரோஸ்ட் வாங்கித் தரேன்னு சொன்னது நியாபகம் இருக்கா.. இல்லை அதுவும் மறந்து போச்சா?
//அடடா... எப்போ பார்த்தாலும் கசமுசானு பிரச்சினை பண்ணிக்கிட்டு... //
Deleteஇங்க ப்ளாக்குல பஞ்சாயத்து வைக்கிற நேரத்துக்கு ஏதாவது ஒரு கதைய படிச்சி ஒரு சூப்பர் தொடர நமக்கு கிடைக்க வச்சுருப்பார். அவரு நேரத்தை எப்படியெல்லாம் வீணாக்க முடியுமோ அதை தெளிவா, நல்லா நாம் செஞ்சுட்டு இருக்கோம் :(
@ M.V
Deleteஅப்படீன்னா உங்களுக்கான பன்னு-டீயை EBF சமயத்தில் வந்து வாங்கிக்கங்க சார்! :)
@ M.P
நெய் ரோஸ்ட்டா? ஹிக்!!!!
@ ஈனா வினா ....
Deleteநான் நீங்கள் நடத்திய பல போட்டிகளில் பங்கு பெற்று இருக்கிறேன்....ஆனால் பரிசு பெற்றதில்லை.
ஆனாலும் CBF-ல் உங்கள் கையால் தேங்காய் பன்னும் டீயும் வாங்கி சாப்பிட ஆசை.....
எனவே இரண்டையும் வாங்கி தரவும்.....
எனினும் போட்டியில் வெற்றி பெறாததால் அதற்கான பணத்தை நான் தந்து விடுவதுதான் நியாயம்..
உங்கள் கையால் தந்ததை சாப்பிட்ட மகிழ்ச்சி ஒன்றே போதும்.....
ஆனாக்கா......ஆனாக்க.........
ஈனா வினா பரிசு வழங்கியதில் பெரும் ஊழல் செய்தார் எனும் கோஷங்கள் எழுமோ என்ற அச்சம் எழாமலில்லை.....
:-)
பாஸு! அவரு உழல் பண்ணிதான் ஈரோடு டு இத்தாலி கெல்லாம் போய்ட்டு வந்தாராமே !
Deleteநெசந்தானுங்களா ;-)
@ செனா அனா
Deleteஹாஹாஹா!
இந்தப் பதிவின் சாராம்சத்தை ஒரு பன்னு-டீயில அடக்கிட்டீங்களே!! செம! :))))
இந்த வறுத்த கறி - குளிர்ந்த ... அதற்கெல்லாம் தகுதியான ஆட்களே இருக்கோமே...
ReplyDelete@ Rummi
Deleteமிஸ்டர்... இது என்னியமாதிரி குழந்தைங்க கமெண்ட்ஸ் போடுற இடம்! :P
Hi,
ReplyDeleteBe in other person' shoes to know their perception(completely)
ReplyDeleteA liberal is a man too broadminded to take his own side in a quarrel.
Robert Frost
சந்தாக்களின் சகாயங்களில் தான் நமது சக்கரங்கள் சுழல்கின்றன என்பதில் நம்மில் என்றைக்குமே ஒளிவு-மறைவு இருந்ததில்லை ! சந்தா செலுத்தக்கூடிய நிலையிலுள்ள நண்பர்களின் பங்களிப்பானது - காமிக்ஸ் எனும் சவலை மழலையைத் தொடர்ந்து ஜீவித்திருக்கச் செய்திடும் பொருட்டே என்பதிலும் எனக்கு மாற்றுச் சிந்தனையில்லை ! உங்களுக்கும் அதனில் நிச்சயம் உடன்பாடிருக்கும் என்ற திட நம்பிக்கையில் தான் நமது நாட்கள் நகன்று வருகின்றன ! அதே சமயம் சந்தா செலுத்தியுள்ள ஒரே காரணத்தால் - இந்த மாதிரியான சின்னச் சின்ன சமாச்சாரங்கள் சக வாசகர்களை எட்டிடுவது முறையாகாது என்ற ரீதியிலான சிந்தனை உங்களுள் 99%-க்கு இராதென்பதிலும் எனக்கு நம்பிக்கையுண்டு !
ReplyDelete#####$$$$#####$
இந்த பத்தி உங்களுக்கு புரியவில்லையா மாயாஜீ ....?
######$$$$$########
நமது இதழ்களும் ; இதழ் சார்ந்த சின்னச் சின்னப் பொருட்களும் அந்த அளவுக்கு collector's value கொண்டவை என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போது - "லயன் மினியோ" ; "மேக்சியோ" - அதற்கு restricted access என்றமைப்பதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை ! So "வாங்கிட ஏஜெண்ட்கள் தயாராக இருப்பின் - இதனையும் அனுப்புங்கள்!" என்று சொன்னேன் ! இதனில் ஏதும் கொலை பாதகம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை என்பதால், மீண்டுமொருமுறை இம்முயற்சி தொடரும் பட்சம் - இந்த பாணியே தொடரவும் செய்யும் !
##############
இந்த வாக்கியங்களும் புரியவில்லையா மாயாஜீ ...?
###$############
ஆசிரியரின் இந்த கிராபிக்ஸ் பதில் விளக்கங்கள் உங்களுக்கு புரியவில்லை என்பதால் இந்த பாமரனின் விளக்கத்தை அளிக்கிறேன் ....நண்பரே ....
அதாவது நமது காமிக்ஸ் புக்கை வாங்கறவங்கோ ....படிக்கறவங்கோ ...கடையில வாங்குறவங்கோ ...சந்தா வாங்குறவங்கோ ...அல்லோருமே எனக்கு சமமே ......ஆனா நமது புக்கு மேடு பள்ளத்துல குதிக்காம இப்போ கொஞ்சம் சீரா தார் ரோட்டுல போற மாதிரி போகிறதுக்கு காரணம் இந்த சந்தா கட்ற ப்ரெண்டுக ...அவங்களை மகிழ்ச்சி படுத்த "விற்பனைகல்ல "லயன் மினி ....அட டா ..சந்தா கட்டாத ஒரே காரணத்தாலே நமக்கு அந்த அழகான லயன் மினி இல்லையே ...கடைல இல்லையே அப்படின்னு ஏங்குற ப்ரெண்டுகளுக்கு ...இல்லைன்னு சொல்லி உன்னை வருத்த பட வைக்கலப்பா ...சின்ன விலைல கடைல வாங்குற மாதிரி செய்றேன் ..வாங்கிங்கோ ....இதாங்க மாயாஜீ மேட்டரு ..இதுல என்ன தப்பு....இப்ப இந்த வருசம் கடைல வாங்குற ப்ரெண்டுகோ ஆஹா ..சந்தா கட்டுனா நிறைய சலுகைக கிடைக்குதே நாம அடுத்த வருசம் சந்தா கட்டுலாம் கொஞ்சம் கூடுதலா சந்து சந்தா ....சந்தா சேந்தா ...இப்போ தார் ரோட்ல போற வண்டி பைபாஸ் ல கூட போகலாம் ...இது தப்பாங்க ....
வாத்தியாருக்கு தன்னோட மாணவர்கள் அல்லோருமே சம்ம் தாங்க ....ஆனா நல்லா படிக்குற பையன் மேலே எப்பவுமே கொஞ்சம் அக்கறை ஜாஸ்தியாக தாங்க இருக்கும் ...அது வாத்தியார் குத்தமில்லேங்க ....
//வாத்தியாருக்கு தன்னோட மாணவர்கள் அல்லோருமே சம்ம் தாங்க ....ஆனா நல்லா படிக்குற பையன் மேலே எப்பவுமே கொஞ்சம் அக்கறை ஜாஸ்தியாக தாங்க இருக்கும் ...அது வாத்தியார் குத்தமில்லேங்க ....//
Delete+9
எந்த மக்கு பயலுக்கு பாடம் புரிஞ்சிருக்கு....மக்கு பயக ,வாத்தியாரை குத்தம் சொல்றது தானே வயக்கம் ...
Deleteதூங்குறவன எழுப்பிடலாம் ,நடிக்கிறவன......????
//இந்த பாமரனின் விளக்கத்தை அளிக்கிறேன் ...//
Deleteதலிவரே... சூப்பர். எனக்கே புரிஞ்சுருச்சு... தெளிவான விளக்கம். இனிமேல் எங்களுக்கு கி.நா.வுக்கு எல்லாம் இந்த மாதிரி ஒரு கைடு எழுதிக் கொடுத்துட்டீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்.. :)
மாயாஜி...
இந்த மாதிரி ஒரு கேள்வி உங்களை மாதிரி நிறைய விஷய ஞானம் உள்ளவரிடமிருந்து, சந்தையின் சவால்கள் புரிந்தவரிடமிருந்து, மற்றும் நிறைய யோசிக்க கூடியவருக்கு வருவது தான் எனக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. அதுவும் ஆசிரியரின் தெளிவான விளக்கத்திற்கும் பிறகு. உங்களுக்கும் தலீவருக்கும் இடையில் நடந்த மின்னும் மரணம் விலை பற்றிய விவாதத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.
நீங்கள் அந்த விலை சரியா தவறா என்று விவாதிப்பதே தவறு என்று அதற்கான காரணங்களை அடுக்கி இருந்தீர்கள். அந்த காரணங்கள் இதற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆனால் நீதி ஒன்றாக இருந்தாலும் நியாயம் ஆள் ஆளுக்கு வேறுபடும். உங்கள் நியாயம் உங்களுக்கு. ஆனால் இது மாதிரி சர்ச்சைக்குரிய விசயமல்லாம் நீங்கள் நேரிடையாக ஆசிரியருக்கு மின் அஞ்சல் மூலமாக கேட்டால் நல்லது என்பது என்னுடைய கருத்து. உங்கள் மேல் இருக்கும் அன்பு மற்றும் மரியாதையின் காரணமாக வேண்டுகோள் ஆகவும் விடுக்கிறேன்.
தூங்கினமாதிரி நடிக்கும் படங்கள 1000000
Deleteதலீவரே! அழகா, தெளிவா விளக்கம் கொடுத்து அசத்திப்புட்டீங்க போங்க! இதைவிடவும் தெளிவா புரியவைக்கவே முடியாது தலீவரே! ( கண்ணுகளில் வேர்க்கும் படங்கள் ஒரு பத்து-பதினஞ்சு!)
Deleteசார் தலீவருக்கு கிநா வேணுமாம்....
Deleteசார் தலீவருக்கு கிநா வேணுமாம்....
Deleteதலீவர் கிநா படிக்க தயார் சார்...
Deleteதலீவரே சரியான,அருமையான,அட்டகாசமான,சூப்பரான விளக்கம் 👌👌👌....ஆனா இது மாதிரி 1000 விளக்கம் நீங்க அளித்தாலும்,மறுபடியும் பிறப்பு,மரணம்,அல்வா,சந்து கடை,பையனுக்கு பாடம்னு ஏதாவது புரியாத மாதிரி அவரே கேள்விய கேட்டுப்புட்டு, அவரே தானா சிரிச்சிக்கிட்டு இருப்பார்...அவர எல்லாம் கண்டுக்காமா வுட்டுடுடனும் தல.அடுத்து அவரோட மொக்கையான கேள்விங்கள யாருமே கண்டுக்காம,அதுக்கு பதில்களும் சொல்லாம விட்டுட்டா அப்பறம் தானா சரியாயுடுவாரு தல...நீங்க பதில் சொல்ல சொல்ல தான் அவர் ஓவரா சீன் போடுறாரு...அவரையெல்லாம் சும்மா விட்டுடுடனும் தல.ஏதாவது கமெண்ட் போட்டாருனா நீங்க அதுக்கு கீழ ஏம்பா யுவா எப்ப நாம நம்ப வீட்டு விருந்து போகலானு அதுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வியா கேளுங்க தல.....(நமக்கு கறி சோறு தான் முக்கியம்).!
Deletecourtesy :- சேந்தம்பட்டி இளம்புயல் யுவா கண்ணன் (பல மெடல் வாங்கியவர்) .
இப்படிக்கு நம்ம வீட்டு விருந்து (அன்லிமிட்) கறிசோத்துக் கூட்டம்.
சேலம் (சேந்தம்பட்டி) கிளை.
+++++++++2
Deleteடாக்டர் டெக்ஸ் :
ReplyDeleteகதாபாத்திரங்கள்: தெற்கு அரிசோனா பள்ளத்தாக்கு வழியாக ஸ்டோன் வில் இடத்திற்கு செல்லும் டெக்ஸ் (அங்கு எதற்கு செல்கிறாரென்று யாரும் கேட்க, ஏன் யோசிக்கக் கூட கூடாது.)
ரட் மற்றும் நிக் போல்டன் சகோதரர்கள். அவர்களுடன் உள்ளூர் ரௌடி ட்ராக்கர் உடன் ஒரு சிறு போக்கிரி கும்பல்.
டாக்டர் மெக்பர்சன் ஸ்டோன் வில் நகரில், மகா ஜனங்களே நாள்பட்ட முதுகுவலி, மூட்டுவலி, தசைப்பிடிப்பு, எழும்புத் தேய்வு போன்ற வியாதிகளிலிருந்து குணமாக்கும் அற்புத மூலிகை வலி நிவாரணி என கூவிக் கூவிக் மக்களிடம் மருந்து விற்கும் ஒரு போலி டாக்டர். இவருடன் பேர்ரி எனும் கூட்டாளி.
ஸ்டோன் வில் நகரின் யூஸ்லெஸ் ஷெரீஃப் (வழக்கம் போல்).
கதை : தெற்கு அரிசோனா பள்ளத்தாக்கில் வரும் ஒரு கோச் வண்டியை ரட் கும்பல் வழிப்பறிக்காக தாக்குகிறது. அப்போது அவ்வழியாக வரும் டெக்ஸ், அந்த ரட் கும்பலோடு மோதலில் இறங்கி கோச் வண்டியில் இருப்பவர்களை காப்பாற்றுகிறார். கயவர்கள் கும்பலில் எல்லோரும் டிக்கெட் வாங்கிக் கொண்டு செல்ல, ரட் மட்டும் குண்டு காயத்துடன் குதிரையில் தப்புகிறான்.
கோச் வண்டியில் இருப்பவர்களை பத்திரமாக ஸ்டோன் வில் நகரில் சேர்த்து விட்டு, இது விஷயமாக உள்ளூர் ஷெரீஃபை சந்திக்கிறார். ஷெரீஃப் வழக்கம் போல் கைவிரிக்க, டெக்ஸ் தன் விசாரணையை ஆரம்பிக்க கோச் வண்டி தாக்குதலுக்கு உண்டான இடத்திற்கு வந்து ஆராய்கிறார். ஸ்டோன் வில்லிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக, டாக்டர் மெக்பர்சன் ஸ்டோன் வில் நகரின் தெருக்கோடியில், மகா ஜனங்களே நாள்பட்ட முதுகுவலி, மூட்டுவலி, தசைப்பிடிப்பு, எழும்புத் தேய்வு போன்ற வியாதிகளிலிருந்து குணமாக்கும் அற்புத மூலிகை வலி நிவாரணி என கூவிக் கூவிக் மக்களிடம் மருந்து விற்பதையும், டாக்டர் உடனிருக்கும் பேர்ரியே மக்களை நம்ப வைப்பதற்காக மருந்து வாங்கி குடித்து விட்டு போலியாக முடமான தன் கால் நன்றாகி விட்டது என்பதை என்ன ஒரு நாடகமென்று மனதில் எண்ணிக்கொண்டு அங்கிருந்து நகருகிறார்.
இதற்கிடையே நிக் போல்டன், படு மோசமாக அடிபட்டிருக்கும் தன் சகோதரன் ரட் போல்டனை காப்பாற்றுவதற்காக தன் கும்பலைக் கொண்டு டாக்டரை கடத்துகிறான், இதை நேரில் பார்த்த பேர்ரி டாக்டரை காப்பாற்ற முடியாமல் ஷெரீப்யிடம் விஷயத்தை சொல்ல வரும் வழியில் கோச் வண்டி தாக்குதல் நடந்த இடத்தில் இருக்கும் டெக்ஸ்யிடம் டாக்டர் கடத்தப்பட்டதைப் பற்றி சொல்கிறார். டெக்ஸும், பேர்ரி இருவரும் போல்டன் சகோதரர்கள் இடத்தை கண்டுப்பிடித்தார்களா...? டாக்டரை காப்பாற்ற முடிந்ததா...? ரட் போல்டன் உயிர் பிழைத்தானா...? நிக் போல்டன் மற்றும் ட்ராட்டர் கயவர்களின் முடிவென்ன....? என்று அதிரடி அக்ஷனோடு சொல்கிறது இந்த டாக்டர் டெக்ஸ்.
இந்தக் கதையில் வரும் டாக்டர் ஒரிஜினலா அல்லது போலியாவென்று சரியாக
சொல்லப்படவில்லை. டாக்டர், ஸ்டோன் வில்லில் நிவாரணியை விற்று விட்டு இடத்தை விட்டு தலைதெறிக்க ஓடுவதும், க்ளைமாக்ஸில் குண்டடிபட்ட தன் நண்பன் பேர்ரியை காப்பாற்றுவதும் முரணாக உள்ளது.
ரொம்ப சிம்பிளான இந்த 110 கதை, ஒரு அதிரடி பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது. சென்ற தலையில்லாப் போராளி முதல் நூறு பக்கங்கள் வளவளவென்று மனோகரா பாணி வசனங்களை கொண்டிருந்தது என்றால், இது அதே பக்கங்களில் ஒரு அதிரடி ஆக்க்ஷன் கதையே சிம்பிள் ஆகவும், க்ரிப்சாகவும் சொல்லி முடித்திருக்கிறார்கள். ஒரு சாதாரணக் கதையை முழு அக்க்ஷனோடு படைத்திட்ட கதாசிரியரும், அதற்கு பக்க பலமாக அட்டகாசமான சித்திரங்களை தந்திட்ட ஓவியரும் (ஜியாகோமோ டானுபியோ – இவருடைய கைவண்ணத்தில் நமக்கிது முதல் கதையென்று நினைக்கிறேன்.) பாராட்டப்பட வேண்டியர்களே. என்ன, டெக்ஸ் தான் ஒருசில இடத்தில் டூப்ளிகேட் டெக்ஸ் போல காட்சியளிக்கிறார். மொத்தத்தில்
டாக்டர் டெக்ஸ்:
(50/- ரூபாயில் ஒரு அட்டகாசமான காமிக்ஸ் வாசிப்பிற்கு உத்தரவாதம்.)
@ MH MOHIDEEN…..
Deleteகதையில் வரும் டாக்டர் போலி என்பது பக்கம் 44-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது....
மெக்பர்சன் ராணுவ டாக்டர் ஒருவரிடம் உதவியாளனாக பணியாற்றியவர்.
இதுபோல் நபர்களை QUACK என அழைப்பர்.....
ராணுவ டாக்டரிடம் அவர் செய்யும் காரியங்களை வைத்து அறிவு பெற்றவர்
அடிப்படை மருத்துவ விஞ்ஞான அறிவு ஏதும் அவரிடம் இல்லை...
பேர்ரி-க்கு அடிபட்டபோது கால் சீழ் பிடித்து இருக்கவேண்டும்....
ரணஜன்னி வந்து விடும் என அஞ்சியோ அல்லது சீழ் மேலும் பரவாமல் இருக்கவோ காலை வெட்டி எடுக்க ராணுவ டாக்டர் பரிந்த்துரைத்து இருக்க வேண்டும்...
இது பேர்ரியின் உயிர் காக்கும் உபாயமாக அவர் கருதி இருக்கலாம்..
ஆனால் மெக்பர்சன் பேர்ரியின் உயிர்தனை பணயம் வைத்து காலை வெட்டி எடுக்காமலே காயத்தினை சரி செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்...
இதனை FLUKE OF QUACKERY எனலாம்.....
இந்தமாதிரி வேறு முயற்சிகளில் அவர் எத்தனையோ பேரின் உயிரை பறித்து இருக்க கூடும்.....
இறுதியில் பேர்ரியினை அவர் மீண்டும் உயிர்ப்பிப்பது குண்டடிப்பட்ட காயங்களை சரி செய்யும் அவரது –ராணுவ டாக்டரின் உதவியாளனாக இருந்து பெற்ற- அனுபவ அறிவின் விளைவு எனத்தான் எண்ண வேண்டும்.
ரட் போல்டனை மெக்பர்சனால் காப்பாற்ற இயலாததன் காரணம் அவன் மிக மோசமாக காயம்பட்டு இருந்ததால் இருக்கலாம்...(டெக்ஸ் சுட்டு யாராவது பிழைக்க முடியுமா என்ன? )
ReplyDeleteதேவதையைக் கண்டேன்
ஸ்மர்ஃப்களின் மேல் காண்டாக இருக்கும் சூன்யகாரன் கார்காமெஸ், அவர்களை கொடூரமான முறையில் பழிதீர்க்க நினைத்து, ஒரு பெண் ஸ்மர்ஃபியைப் உருவாக்கி உயிர்கொடுத்து ஸ்மர்ஃப் வில்லாவுக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே இந்த டார்லிங் ஸ்மர்ஃபி செய்யும் ரகளைகள்- ரகளையாக, ரசிக்கும்படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது!
* 'ஒரு சொட்டு துடுக்குத் தனம்... நிறைய பிடிவாதம்... மூன்று சொட்டு டுபாக்கூர் கண்ணீர்... லைட்டா பொறாமை... நிறைய சமர்த்து... ரெண்டு சொட்டு சந்தேகப் புத்தி...' என்ற விகிதங்களில் சூன்யகாரனால் டார்லிங் ஸ்மர்ஃபி ஆய்வகத்தில் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டிருப்பது ரசணை, ரசணை!
* டார்லிங் ஸ்மர்ஃபி - ச்சோ க்யூட்! சதா காலமும் ஓயாமல் பேசித் தள்ளுவதும், கோக்குமாக்காக எதையாவது செய்வதும் - அழகு அழகு! அவ்வப்போது அவள் சொல்லும் "ஊஊஊ" - அழகு!
* முதல் கதையை விடவும் இதில் ஸ்மர்ஃப் பாஷை மற்றும் பொடி பாஷை மிகச் சரியாக, தேவையான இடங்களில் அழகாககப் பயன்படுத்தப்பட்டுள்ளது! சூப்பர் எடிட்டர் சாரே! வசனங்கள் ரொம்பவே இயல்பாய், பேச்சு நடையிலேயே அமைக்கப்பட்டிருப்பதும் அட்டகாசம்!
* கோர்ட் சீன் - ரகளை!!
* இரண்டாவது கதையான 'பனியும் - பசியும்' செனா அனா சொன்னதுபோல குழந்தைகளுக்குப் படித்துக்காட்ட ஏற்ற குட்டியான, அழகான கதை!
நம் Adult ego இத்யாதிகளை கொஞ்ச நேரமேனும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரு குழந்தையின் மனநிலையில் இந்தக் கதைகளைப் படிப்போமானால் ஒரு அழகான ஸ்மர்ஃப் கிராமத்தில் நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டு வரலாம்!
செம! செம!
என்னுடைய ரேட்டிங் : 10/10
//நம் Adult ego இத்யாதிகளை கொஞ்ச நேரமேனும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரு குழந்தையின் மனநிலையில் இந்தக் கதைகளைப் படிப்போமானால் ஒரு அழகான ஸ்மர்ஃப் கிராமத்தில் நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டு வரலாம்!///...+2...
Deleteபொடி ருசிக்கல என சொல்லும் நண்பர்கள் ,நோட் திஸ் பாயிண்ட் ...பிறகு நீங்களும் பொடிச்சூரில் ஐக்கியம் ஆகலாம் ....
////நம் Adult ego இத்யாதிகளை கொஞ்ச நேரமேனும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரு குழந்தையின் மனநிலையில் இந்தக் கதைகளைப் படிப்போமானால் ஒரு அழகான ஸ்மர்ஃப் கிராமத்தில் நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டு வரலாம்!
Deleteசெம! செம!////
குருநாயரே!
செம! செம!
ரொம்ப நாளைக்கப்புறம் லீவு கிடைச்சதால நானும் என்னுடைய அறவை மில்லை ஆரம்பித்து விட்டேன். :-)
சூப்பர் ப்ரோ !
Deleteரொம்ப யோசிச்சா....asterix கூட குழந்தைங்க சமாச்சாரமா தான் தெரியும் !
தேவதையை கண்டேன்........
Deleteஇது குழந்தைகளுக்கான கதை என சொல்லிவிடமுடியாது....
ஒரு பிராயம் வரை சக பெண் குழந்தைகளின் புற அழகு பற்றி ஆண் குழந்தைகள் யோசிப்பது கூட இல்லை....
இது வளர்ந்த ஆண்களின் சுபாவம்.....
சொல்லபோனால் இக்கதையை ஸ்மார்பி முன்னால் அழுக்காக இருந்ததால் அவளை யாருக்கும் பிடிக்கவில்லை...பின்னர் சீனியர் அவளை சுத்தமாக இருக்க செய்ததால் அவளை எல்லோருக்கும் பிடித்தது என பெண் குழந்தைகளிடம் கதை பெரியவர்கள் சொன்னால் நல்லது....
இல்லாவிடில் புற அழகு இருந்தால்தான் நம்மை அனைவரும் விரும்புவர் என்ற எண்ணம் குழந்தையர் மனதில் உதயமாகும் அபாயம் உண்டு .
பெரியவர்கள் இதனை முழுமையாக ரசிக்கலாம்......
////ரொம்ப யோசிச்சா....asterix கூட குழந்தைங்க சமாச்சாரமா தான் தெரியும் !////
Deleteஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ், எப்படியாச்சும் தமிழ்ல நம்ம லய்ன்ல படிச்சிடணும்னு நானும் பல வருசமா கண்டதை தின்னுகிட்டே உண்ணாவிரதம் இருக்கேன்.!! எப்ப விடிவு காலம் பொறக்குமோ!! தேவுடுக்கே தெலுசு!!!!
அழகன கருத்து பூனையாரே...!
Deleteபொடிசுகளைப் புரிந்து கொள்ள நாமும் பொடியாகித்தான் போக வேண்டும்!
@ செனா அனா
Delete///ஒரு பிராயம் வரை சக பெண் குழந்தைகளின் புற அழகு பற்றி ஆண் குழந்தைகள் யோசிப்பது கூட இல்லை....///
ஒரேடியாக அப்படியெல்லாம் குழந்தைகள் பற்றிச் சொல்லிவிடமுடியாது! நானும் ஒருகாலத்துல குழந்தையா இருந்தவன்தானே?! ஹிஹி! :D
ஹா....ஹா....ஈனா வினா....எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு உண்டோல்லியோ?
Deleteநீங்கள் ரொமான்ஸ் ராசிக்காரர் ஆயிற்றே.....பிருந்தாவனத்தில் பிறந்து இருக்க வேண்டியவர்...........:D
@ FRIENDS : "குட்டீஸ்களுக்குக் கதை சொல்வது" பற்றி இப்போது தான் பின்னூட்டம் ஒன்றைப் போட்டுவிட்டு மேலே ஸ்க்ரோல் செய்தால் இந்த அற்புதக் கருத்துப் பரிமாற்றம் ! கதை கேட்பதும், சொல்வதும் ஒரு அற்புத அனுபவம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் ! நேரம் எடுத்துக் கொள்ள முயற்சியுங்களேன் - இங்குள்ள இளம் பெற்றோர்களே !! நமது அடுத்த தலைமுறை காமிக்ஸ் வட்டத்தை இப்போதே ஊக்குவிக்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் !!
Delete(பின் குறிப்பு : "இளம் பெற்றோர்" என்ற வட்டத்துக்குள் பூனைகள் சேர்த்தியாகுமா - தெரியலியே !!
Erode VIJAY : ஒரு பக்கம் "ஏய்ய்ய்ய்..ஊய்ய்ய்ய்" என்று பஞ்ச டயலாக் விடும் நாயகர்களின் கதைகளுக்கு மத்தியில் SMURFS ; ரின்டின்கேன் போன்ற கதைகளின் மொழிபெயர்ப்பை செய்வது என்ன மாதிரியானதொரு ரம்யம் என்பதை சமீபத்தில் உணர்ந்திட முடிந்தது !! அதிலும் இந்த நீல மனுஷர்களின் கதைகளுக்குப் பேனா பிடிக்கும் போது வாழ்க்கையே அத்தனை இலகுவாய்த் தெரியும் !!
Deleteதேவதையைக் கண்டேன்(காதலில் விழுந்தேன்) :-
ReplyDeleteசின்னவயசுல, இப்பவும் சின்ன வயசுதான். நான் சொல்லவந்தது ரொம்ப சின்ன வயசுல, அதாவுது இஸ்கூல் சேருரதுக்கு முன்னுக்க.
அப்போல்லாம் டெய்லி எங்க பாட்டி கதை சொல்லிதான் என்னை தூங்க வைப்பாங்க.
அவங்க சொல்ற கதைகள்ல சில டெம்ப்ளேட்ஸ் இடம்புடிச்சிருக்கும்.
"மலை மேல ஒரு மந்திரவாதி இருந்தான் "
பனை மர உசரத்துக்கு ஒரு அரக்கன் இருந்தான் "
"அந்த ஆத்துல பெரிய முதலை இருந்துச்சாம் "
இது மாதிரி கிட்டத்தட்ட எல்லா கதைகள்லயும் இடம்பிடிக்கும் சில கேரக்டர்ஸ் இருப்பாங்க.
அதே மாதிரி சித்திரகுள்ளர்கள்னு ஒரு கதை சொல்லுவாங்க. மனுசங்களே போக முடியாத அடர்ந்த காட்டுக்குள்ள சித்திரகுள்ளனுங்க வாழ்ந்தாங்களாம். ஒரு ஏரியோட கரையிலதான் அவங்க ஊரு இருந்துச்சாம். ஏரின்னா நம்ம ஏரிமாதிரி பெரிய ஏரி இல்லை. ஒரே தாண்டுல நம்மாள தாண்ட முடியிற குட்டைதான் அவங்களுக்கு ஏரி. ஏன்னாக்கா, சித்திரகுள்ளனுங்க நம்ம சுண்டுவிரல் சைசுக்குதான் இருப்பாங்க. அவங்க வீடுங்க எல்லாம் கொட்டாங்ககுச்சிய கவுத்து வெச்ச சைசுலதான் இருக்கும். ஒருநாள் பேய் மழை பேஞ்சுதாம், அந்த மழையில சித்திரகுள்ளனுங்களோட ஊரோ அழிஞ்சிடுச்சாம். அவங்க மட்டும் மரப்பொந்துல ஒளிஞ்சி தப்பிச்சிட்டாங்களாம். மழை நின்னதும் சாப்பாட்டுக்கு வழியில்லாம வேற எடத்துக்கு போலாம்னு முடிவு பண்ணி கூட்டமா கெளம்புனாங்களாம். அந்த காட்டுல பனைமர உசரத்துக்கு ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் ஆத்துக்கு அந்தப் பக்கம் இருந்ததனால இவங்களை சாப்பிட முடியாம, சமயம் பாத்து காத்துகிட்டு இருந்தானாம்.,
இப்படி ஆரம்பிக்கிற பாட்டியோட கதைகளின் க்ளைமாக்ஸை ஒருநாள் கூட நான் கேட்டதே கிடையாது. நான் தூங்கற வரைக்கும் ஆறு அரக்கன், பூதம் பூச்சான்டி , மலை மந்திரவாதின்னு கதைய நீட்டிக்கிட்டே இருப்பாங்க. இப்படித்தான் கதையோட்டம் போகும்னு வரைமுறையே கிடையாது. அவங்களோட கற்பனைக்கும் எல்லையே கிடையாது.
நான் தூங்கிட்டா கதை முடிஞ்சிடும். அடுத்த நாள் 'பாட்டி நேத்து அந்த அரக்கன் அப்புறம் எப்படி சித்திர குள்ளனுங்கள சாப்பிட்டான் னு ' கேட்டா,
அதை விடுடா, இன்னிக்கு வேற கதை சொல்றேன்னு புதுக் கதைய தொடங்கிடுவாங்க. ……… .
வெய்ட்! வெய்ட்! இப்போ எதுக்கு காலங்காத்தால இவ்ளோ பெரிய் ஹாக்சா வை வெச்சி கழுத்தறுக்க ஆரம்பிச்சிட்டே ன்னு தானே கேக்குறிங்க. ?!?
சொல்றேன்.! க்ளைமாக்ஸே இல்லாத பாட்டி கதைகளை க்ளைமாக்ஸ்களுடன் ஸ்மர்ஃப்ஸ் வடிவில் காண்கிறேன்.
ஒவ்வொரு முறை ஸ்மர்ப்ஸ் கதை பக்கங்களில் கண் பதிக்கும் போதும் குழந்தையாகி பாட்டியிடம் கதை கேட்கும் உணர்வை அடைகிறேன்.
ஸ்மர்ஃப்ஸை பொறுத்தவரையிலும் எதையாச்சும் எதிர்பார்த்து படிச்சிங்கன்னா ஏமாற்றம்தான் மிஞ்சும்.
கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
கட்டை விரல் சைசில் நீல மனிதர்கள், குடைக்காளானில் வீடுகள், அந்த அணைக்கட்டு, சிற்றோடை, ஸ்மர்ஃப்வில்லா கிராமம் , மினியேச்சர் காட்சி போல அந்த சுற்றுப்புறம். அடா! அடா! அவற்றை நேரில் காணமுடிந்தால் எத்தனை குதூகலமடைவோம். அது சாத்தியமில்லை அல்லவா?!
அந்த சாத்தியத்தை புத்தக வடிவில் நமக்களிப்பது ஸ்மர்ஃப்ஸ் சீரீஸ்.
சிம்ப்பிளா சொல்லோணும்னாக்க,
" ஒண்ணுமே இல்ல ஆனா என்னமோ இருக்கு "
ஐ லவ் திஸ் க்யூட் குட்டீஸ்.!!!
//" ஒண்ணுமே இல்ல ஆனா என்னமோ இருக்கு " ///---இதுதானே டெக்ஸ் பார்முலாவும்... 60வருடமா இதை வைத்து தானே சுவாரஸ்யமான சீரியஸ் ஆக நகர்த்தி வராங்க....
Deleteஆக்சன்னா - டெக்ஸ்...
ஆனந்தம்னா- ஸ்மர்ஃப்ஸ்..
///ஒவ்வொரு முறை ஸ்மர்ப்ஸ் கதை பக்கங்களில் கண் பதிக்கும் போதும் குழந்தையாகி பாட்டியிடம் கதை கேட்கும் உணர்வை அடைகிறேன்.///
Delete+1111111
////கட்டை விரல் சைசில் நீல மனிதர்கள், குடைக்காளானில் வீடுகள், அந்த அணைக்கட்டு, சிற்றோடை, ஸ்மர்ஃப்வில்லா கிராமம் , மினியேச்சர் காட்சி போல அந்த சுற்றுப்புறம். அடா! அடா! அவற்றை நேரில் காணமுடிந்தால் எத்தனை குதூகலமடைவோம். அது சாத்தியமில்லை அல்லவா?!
அந்த சாத்தியத்தை புத்தக வடிவில் நமக்களிப்பது ஸ்மர்ஃப்ஸ் சீரீஸ். ////
+1111111. சூப்பர்!!
KiD ஆர்டின் KannaN : கதை சொல்லிச் சோறு ஊட்டியதும், தூங்கச் செய்ததும் ஒரு தூரத்துக் காலமெனில் - செல்போனில் குத்துப் பாட்டுக்களைப் போட்டு விட்டு - திறந்து கிடக்கும் குட்டி வாய்களுக்குள் cerelac திணிக்கப்படும் தினங்கள் இன்று ! என்றோ ஒரு தொலைதூரத்து நாளில் - இந்த நீலக் குட்டி மனிதர்களையும் ; நமது சுட்டி லக்கிகளையும் ; ரின்டின்கேன்களையும் கதை சொல்லப் பயன்படுத்தி - அடுத்த தலைமுறைக்குச் சோறூட்டும் நிகழ்வுகள் நிஜமாயின் - அதைவிடப் பெரியதொரு சந்தோஷம் இருந்திட முடியுமா-என்ன ?
Deleteசார் தெரியாம இந்த மாத வரிசை தப்பா போயிறிச்சு ....அதனால கோட்டை அழிச்சுட்டு திரும்ப புரோட்டா சாப்பிடறேன் ..ச்சே ..வரிசை படுத்துறேன் ...
ReplyDeleteஒன்று ஷெல்டன் ..
இரண்டு ...டெக்ஸ் ...
மூன்று ....ஜானீ நீரோ ...
நான்கு ....லயன் மினி ...
ஐந்து ....சமர்ப்பு ....;-)
கிராபிக்ஸ் நாவலாவது படிச்சு முடிச்சுட்டு தான் நல்லாலைன்னு சொன்னேன் ..ஆனா ..சமர்ப் இரண்டாவது கதையில பாதியிலேயே நிறுத்த வச்சுட்டாங்க ....
ReplyDeleteசெயலாளரும் ...ரவி கண்ணரும் செய்வினை வச்சுருப்பாங்களோ ....;-(
Paranitharan K : நாங்களெல்லாம் மீண்டும் பால்யத்துக்குத் திரும்புவதாலோ, என்னவோ - நீலப் பொடியர்களை ரசிக்கிறோம் ! பால் மனம் மாறா நீங்களோ - அங்கேயே டேரா போட்டுவிட்டபடியால் - உங்களுக்கு இது பத்தோடு பதினொன்றான குழந்தைச் சமாச்சாரமாய்த் தோணுது போலும் !
Deleteநண்பர்களே...! கடந்து போனவைகள் போனாதாகவே இருக்கட்டும்...! இந்த காமிக்ஸ் என்ற பிரபஞ்ச வெளியிலே கைகோர்த்து பறந்து திரிவோம்! கோர்த்த விரல்கள் பிடி தளறாமல் இறுகப் பற்றிக் கொள்வோம்...! எல்லைகளில்லா காமிக்ஸ் வெளி மண்டலம் நம்மை எதிர் கொண்டு அழைக்கிறது...!
ReplyDeleteஊடல்களும்,
கூடல்களும்,
தேடல்களும்,
சாடல்களும்,
இங்கு அநேகம்...!
இவைகள் அனைத்தையும் தாண்டித் தானே.....,
நமது ஸ்நேகம்...!!
அதிதி காமிக்ஸாந்தே பவ...!!
காமிக்ஸ்தாதா சுகீ பவ..!!
புலவரே...! தங்கள் சித்தம் பலிக்கட்டும்! :)
Deleteஆஹான்!
Deleteகடேசில ஸ்லோகமெல்லாம் சொன்னதால தம்பிய 'பண்டிட் ஜி'ன்னும் சொல்லலாம்....!
Deleteஎன்னது பண்டித ஜவர்ஹலால் நேருவா ......;-)
Delete@ FRIENDS : நண்பரின் சேவைகளை ஸ்மர்பி "கவிதை வரிகளுக்குப்" பயன்படுத்தி இருக்கலாமோ ? ஆஹா...!!
DeleteHai Frnds
ReplyDelete