நண்பர்களே,
வணக்கம். வாட்சப் என்றொரு சமாச்சாரம் மாத்திரம் நடைமுறையில் இல்லாது போயிருந்தால் - நிறைய புறாக்கள் தான் வளர்த்திருக்க வேண்டும் - எடிட்டிங் பணிகள் முடிந்த பக்கங்களை கால்களில் சுமந்து ஊருக்கு எடுத்துச் செல்ல !! கௌபாய் தேசத்தில் சின்னதொரு பணி என்பதால் இங்கே பயணம் ! இங்கிருந்தவாக்கில் நமது டாப் கௌபாயின் "குற்றம் பார்க்கின்"இதழின் final version -ஐத் திருத்தி அனுப்புவது கூட வாழ்க்கையின் ஆச்சர்யங்களுள் ஒன்று போலும் ! அதிலும் 'ஆவென்று' இங்குள்ள இன்டர்நெட் வேகங்களைப் பொறாமையாய்ப் பார்க்கும் போது - இந்தச் சேதிப் பரிமாற்ற வேகத்துக்காகவாவது இங்கே குடிபெயர்ந்து விடலாம் என்று தோன்றுகிறது ! குதிரைகளின் முதுகுகளில் கடுதாசிகளை சுமந்து போன "போனி எக்ஸ்பிரஸ்" மண்ணில் தான் என்னவொரு மாற்றம் !! Phew !!
வண்ண இதழ்கள் சகலமும் ஊரில் அச்சு முடிந்த நிலையில் - கருப்பு-வெள்ளை இதழ்கள் மட்டுமே பாக்கி ! அவையும் அடுத்த ஒரு நாளுக்குள் அச்சாகி - மொத்தமாய் திங்களன்று கூரியரில் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம் - உங்கள் டி-ஷர்ட்களுடன் ! இதுவரையிலும் அளவு தந்திருக்கா நண்பர்கள் இனி கொடுத்து பிரயோஜனம் ஏதும் இருக்கப் போவதில்லை ; பொதுவாய் ஆர்டர் செய்துள்ள L சைஸ் தான் அனுப்பிட இயலும். இந்தாண்டில் முதன்முறையாக மாதத்தின் முதல் தேதியைத் தவற விடுவதில் ரொம்பவே சங்கடம் எனக்கு ; ஆனால் பெட்டியை - பெட்டி, படுக்கையோடு இந்த இதழுக்கும் ஐக்கியம் ஆக்கிடுவதில் தாமதம் நேர்ந்து விட்டது ! Sorry all !!
கொரில்லா சாம்ராஜ்ஜியம் இதழுக்குப் பதிலாய் இடம்பிடிக்கும் "இமயத்தில் மாயாவி" இதழிலும் குரங்கு ஜாடையில் மனிதர்கள் உலா வருகின்றனர் ! ரொம்ப காலம் கழித்து இந்தக் கதையினை வாசிக்க இப்போது தான் வாய்ப்புக்கு கிட்டியது என்பதால் - ஆங்காங்கே பீறிடும் கெக்கே பிக்கே க்களை அடக்கிக் கொண்டே எடிட்டிங் (?!!) செய்து முடித்தேன் ! மாயாவி ஒரு எவர்க்ரீன் நாயகரே என்பதில் என் கையிலுள்ள விற்பனைப் புள்ளிவிபரங்கள் மாற்றுக கருத்துக்களுக்கு இடம் தராது தான் ; ஆனால் இந்தத் தலைமுறையின் பிரதிநிதிகளுக்கு இக்கதைகள் எவ்விதம் தோன்றுகின்றன ? என்றொரு நிஜமான curiosity எனக்குள் !! இங்குள்ள இளம் வாசக / வாசகியர் - இந்தக் கதைகளை எவ்விதம் பார்க்கிறீர்கள் என்று கொஞ்சமாய் விளக்கலாமே ?
ஞாயிறு சந்திப்போம் - புதியதொரு பதிவோடு ! அதுவரை bye !
மீ அகைன்?
ReplyDeleteஎன்ன தலைவரே வேற வேலையே இல்லையா first வந்து இருக்கிறீர்கள் all the best
Deleteஎன்ன தலைவரே வேற வேலையே இல்லையா first வந்து இருக்கிறீர்கள் all the best
Delete@ saran
Deleteஅப்ப ஒலிம்பிக்ல ஃபர்ஸ்டு வர்றவன், யுனிவர்ஸிடில ஃபர்ஸ்ட் வர்றவன் - இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லைனு அர்த்தமா? ;)
அப்புறம்... நான் 'தலீவர்' இல்லீங்கோ! அதுமாதிரி மண்டைய மண்டைய ஆட்டும் பதவிக்கு இங்கே வேறொருத்தர் இருக்காருங்கோ! :D
ஆனா தலைவர் ஆவருதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு...
Deleteஹிக்! :O
Deleteஅர்ர்ர்... அர்ர்ர்...
பார்டா இந்த புலிக்குட்டிய
ReplyDeleteமீ ஃபாலோயிங்!!!
ReplyDeleteபூனக்குட்டி,நாய்க்குட்டி,கிட்டுக்குட்டி எல்லாம் வரிசயா வருதே.....
ReplyDeleteடெக்ஸ் குட்டியும் (?) வந்துட்டேன் அய்யா...
Deleteயாருப்பா இங்க நாய்குட்டி
Deleteஎல்லா குட்டிகளும் சிங்க குட்டியின் எழுத்துக்கு அடிமை தான்.
Deleteஎல்லா குட்டிகளும் சிங்க குட்டியின் எழுத்துக்கு அடிமை தான்.
Delete+1
Deleteசொக்ஜி @ +1000
Deleteஉள்ளேன் ஐயா..! [Courtesy:கோடையிடியார்]
ReplyDeleteதோ இன்னொருத்தரும்
Deleteநானுமா???
ReplyDelete///பெட்டியை - பெட்டி, படுக்கையோடு இந்த இதழுக்கும் ஐக்கியம் ஆக்கிடுவதில் தாமதம் நேர்ந்து விட்டது .///
ReplyDeleteஅய்யகோ! என் செய்வேன்!! நான் என் செய்வேன்!!!
என்னருமை பெட்டிதனை கண்குளிரக் காண்பதற்கே இன்னும் ஐந்து முறை சூர்யோதயங்கள் ஏற்படும் வரையிலும் காத்திருக்கச் செய்துவிட்டனரே!!
"பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேரி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாவும்
தூது செல்லக் காணேன் "
பெட்டி டார்லிங்!
"கண்கள் இரண்டும் என்று உன்னைக்கண்டு பேசுமோ? "
ஊட்டுகாரம்மாவுக்கு நீங்க கவித எழுதுதுறது தெரியுமா.. இல்ல நாங்க புறா மூலமா தகவல் தெரிவிச்சர்லாமா...
Deleteஎப்படி மாமி இப்படியெல்லாம் அழுவ முடியுது
Deleteஐயோ ராமா.... என்னை ஏன் இந்த மாதிரி நல்லவங்க கிட்டே சேர்த்து விட்டே...
Deleteகரூர்கார்!!!
Deleteகிர்ர்ர்ர்ர் . . . .!!!
ஹாஹாஹா! என்னா ஒரு ஏக்கம்!! :))))
Deleteநானும் லைட்ட்டா...
கடுவன் பூனை இங்கே
கருவாடு அங்கே
(பெட்டியை) காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே... ;)
///எப்படி மாமி இப்படியெல்லாம் அழுவ முடியுது.///
Deleteமாமியா?????
அரே ரின் டின்,
நிம்பள் ஷ்யூரா நம்பள்க்கு குளோஸ் தோஸ்தாத்தான் இருக்கோணும்.!
நம்பள் ஜிகிடி தோஸ்த் மாத்திரம்தா நம்பள்கி பேரை மாமி சொல்றான்.!
அய்யா சாமி ரின் டின்னு , யார் முதுகில் டின்னு கட்டிட ஆசை உமக்கு ????
Deleteநானு... நானும் வந்துட்டேன்...
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கம்.
ReplyDelete///இங்குள்ள இன்டர்நெட் வேகங்களைப் பொறாமையாய்ப் பார்க்கும் போது - இந்தச் சேதிப் பரிமாற்ற வேகத்துக்காகவாவது இங்கே குடிபெயர்ந்து விடலாம் என்று தோன்றுகிறது ! ///
ReplyDeleteஅப்படிக் கிப்படி அங்கேயே போய்டாதீங்க எடிட்டர் சார்... அப்புறம் 'சூ.ஹீ.சூ.ஸ்' படிச்சுட்டு நாங்களெல்லாம் பிராணனை விட வேண்டியதுதான்! :P
மீள் கமெண்ட்ஸ்....
ReplyDeleteலயன் காமிக்ஸ் ஆண்டுமலர்....
நல்ல கதைகள் கோடைமலர் மற்றும் தீபாவளி மலரில் வெளிவர ஆண்டுமலர்கள் எப்போதும் ஓரளவே எதிர்பார்ப்பை கிளரும். ஓரிரு சமயம் பட்டாசான ஆண்டுமலர்களும் வந்ததுண்டு. எனக்கு தெரிந்த வரை ஆண்டுமலர்களை இணைத்து உள்ளேன். விட்டு போனால் சேருங்கள் , தவறாக சேர்த்து இருந்தால் விட்டு விடுங்கள்.
இவற்றில் அவரவர் டாப்3 என்ன?? முடிந்தால் காரணம் + அவற்றை வாங்கிய சுவையான சம்பவங்கள் , இப்படி .......ஆசிரியரின் கேள்விக்கான உங்கள் பதில்களை இந்த ஆண்டு மலர் வரும்வரை தொடரலாமே நண்பர்களே....
1.சைத்தான் விஞ்ஞானி
2.பவளசிலை மர்மம்
3.அதிரடிப்படை
4.கானகத்தில் கண்ணாமூச்சி
5.நடுக்கடலில் அடிமைகள்
6.எமனுடன் ஒரு யுத்தம்
7.மர்ம முகமூடி
8.மின்னலோடு ஒரு மோதல்
9.கானகக் கோட்டை
10.பூம் பூம் படலம்
11.இரத்த படலம் 6ம்பாகம்
12.பேங்க் கொள்ளை
13.கானகத்தில் கலவரம்
14.தலைவாங்கும் தேசம்
15.இரத்த பூமி
16.மெக்சிகோ படலம்
17.பரலோகத்திற்கு ஒரு பாலம்
19.மாண்டவன் மீண்டான்
20.லயன் நியூ லுக் ஸ்பெசல்-2லக்கி கதைகள்
21.ஆல் நியூ ஸ்பெசல்-ANS-க்ரீன்மேனர்
22.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS
23.தி லயன் 250-3டெக்ஸ் கதைகள்...
தி பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட்ஸ்... இதுவரை வந்த லயன் ஆண்டு மலர்களில் தி பெஸ்ட் - இத்தாலியின் ஐஸ்கிரீம்+பெல்ஜியம் சாக்கொலேட் என இரண்டு புத்தகங்களாக வெளிவந்த Lion Magnum Special-LMS தான்.லயனின் 30வது ஆண்டுமலராக 2014ல் வெளிவந்த இதற்கு இணையாக மற்றொரு ஆண்டு மலர் இதுவரை இல்லை. 2015ன் ஆண்டுமலர் தி லயன் 250 இதற்கு ஓரளவு டஃப் கொடுத்தது. இந்த ஆண்டு இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் 32வது ஆண்டுமலர் ஏக எதிர்பார்ப்பை கிளரிவிட்டுள்ளது,காரணம் பெட்டி பார்னோவ்ஸ்கி.......
Deleteஇன்னாது பெட்டியோட பார்ல விஸ்க்கியா!
Delete///இன்னாது பெட்டியோட பார்ல விஸ்க்கியா!///
Deleteஅது அப்படியில்லை கேன் டின் ரின்.!
பெட்டியில பாரு நோ விஸ்கி!
இப்படி நல்லவிதமா எடுத்துக்கணும்.!
ரின் டின் சார் நீங்கள் எந்த ஊர் கார்???
Deleteசரி கிட்டு மாமி
Deleteபெட்டியோட பார்ல விஸ்கி நஹி; பார்வையில் விஸ்கி பாரலே உந்தி...
Deleteநமக்கு டால்டா டின் சகோதர்ர்கறின் ஊருதாங்கோ
Delete@ டெக்ஸ் விஜய்
Deleteஆண்டு மலர் லிஸ்ட் - சூப்பர் முயற்சி!!
செலக்ட் பண்றதுதான் ரொம்ப சிரமமாயிருக்கு!
///ஆண்டு மலர் லிஸ்ட் - சூப்பர் முயற்சி!!///
Delete+1
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
எனக்கென்னமோ ரிடிகே சேலம்,ஈரோடு,ஏற்காடு,மேச்சேரி பக்கமா சுத்தி வருவதாக தோணுது
Deleteகி.கி. ஜாம் வாங்க குஜராத்துக்கு ஜாலியா டிரைவரோடு போயிட்டு நாறோயில் வந்தாச்சா
Deleteநல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Deleteநல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Deleteஅப்படியே மெக்சிகோ எல்லை வரை சென்று சூப்பர் ஸஸ்டின் மலைத் தொடரின் அழகை பார்த்து விட்டு வந்த கையோடு போர்ட் நவஹோவை ( இந்த தடவை உச்சரிப்பு பிழை இல்லைன்னு நினைக்கிறேன்) கண்ணில் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteஅப்படியே பெலிசிட்டி ,இரியானா,,ஜோன்ஸ் இவர்கள் கதைகளையும் கண்ணில் காட்டி விடுங்கள் சார்.ஜென்ம சாபல்யம் அடைந்து விடுவோம்....
ReplyDeleteடெக்ஸ் இருளின் மைந்தர்களும் கோடை மலர் தான்
Deleteஆம் ,பட்டாசான கோடைமலர் அது.கோடைமலர்கள் எப்போதும் ஹிட் அடிக்க தவறுவதில்லையே.ஆண்டு மலர்கள் தான் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.கோடைமலர்கள் பற்றி வரும்போது இருளின் மைந்தர்கள் நிறைய பேரின் டாப் தேர்வில் இடம்பிடிக்கும்.இப்போது ஆண்டுமலர் நேரம்....வெயிட்டிங் ஃபார் பர்னோவ்ஸ்கிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...
DeleteShinsmile@ நண்பரே இந்த புரோபைல் போட்டோவில் லயனின் தி பெஸ்ட் 30வது ஆண்டுமலர் LMS ஐ. ஆசிரியர் திரு விஜயன் சாரிடமிருந்து ,2014ஈரோடு விழாவில் பெறுகிறேன்....
Deleteகிர்ர்ர்ர்ர்... வட போச்சே.
ReplyDeleteமாடஸ்டி கலர்ல வந்தப் பிறகு பொட்டி எப்படி பெட்டிய தூக்கிட்டு ஓடும் பாருங்க
ReplyDeleteமுதலில் அத்தைக்கி மீசை வளரட்டும் சுவாமி...
Deleteஹெஹ் ஹெஹ் ஹெஹ் ஹே!!! (மாந்த்ரீகர் கிண்டலாக சிரிக்கிறார்)
Deleteநன்றி :- ஒரு கோச் வண்டியின் கதை.
என்ன இருந்தாலும் பெட்டிக்கு வளர்ந்த மீசை மாதிரி மாடஸ்டிக்கு வராதுதான்
Deleteravanan iniyan அண்ணா!
Deleteசரியாக சொன்னீர்கள்.
மாடஸ்டிக்கு பெட்டி போட்டியா ?
Delete" என்ன கொடுமை சார் "
1) ஊர் குருவி பருந்தாகாது .!
2) புலியை பார்த்து பூனை சூடு போட்ட மாதிரி!
கர் கர் கர்...................!
தாமதம் ஆவலை கூட்டுகிறது.
ReplyDeleteதாமதம் ஆவலை கூட்டுகிறது.
ReplyDelete//இங்குள்ள இளம் வாசக / வாசகியர் - இந்தக் கதைகளை எவ்விதம் பார்க்கிறீர்கள் என்று கொஞ்சமாய் விளக்கலாமே ? ///
ReplyDeleteஇக்கதைகள் பற்றிய என்னுடைய கருத்து என்னவென்றால்... (இந்த கேள்விக்கு பதில் சொல்லலேன்னா அப்புறம் நாம 'யூத்து' இல்லேன்னு ஆகிடும்... அதனால எசகுபிசகா எதையாவது சொல்லி வைப்போம்.. ஆனா இந்த நேரம் பார்த்து கருந்துச் சொல்ல வரமாட்டேங்குதே.. ச்சோஓஓ)
//இங்குள்ள இளம் வாசக / வாசகியர் - இந்தக் கதைகளை எவ்விதம் பார்க்கிறீர்கள் என்று கொஞ்சமாய் விளக்கலாமே ? //
Deleteமாயாவி மாமா கதைகள் நன்றாகவே ரசிக்க முடிகிறது.
லாரன்ஸ் டேவிட் சாகசங்களூம் பரவாயில்லை.
ஜானி நீரோ ஸ்டெல்லா கதைகள் சுமாரா இருக்கு.
ஸ்பைடர், காதுல பூ ரகம் என்றாலும் ஏதோ படிக்க முடிகிறது.
பின் குறிப்பு :-
நாங்களும் யூத்துதேன்!!!
43வது
ReplyDeleteபெட்டியை காண ஆவலாக காத்திருக்கிறேன் இரத்தப் படலம் எப்போதுமே ஸ்பெஷல்தான்
ReplyDeleteபெட்டியை காண ஆவலாக காத்திருக்கிறேன் இரத்தப் படலம் எப்போதுமே ஸ்பெஷல்தான்
ReplyDelete48th
ReplyDeleteசார் செவ்வாய்க்காகவும் , ஞாயிறு tex அட்டைக்காகவும் காத்திருக்கிறேன்
ReplyDeleteதாமதமெனினும் இம்மாதம் மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் ,பெட்டியின் கதைப் பொட்டி ,டெக்ஸின் குற்றம் பார்க்கின் ...பிரின்சின் எப்படி இனணந்தார்கள் கதைகள் மற்றும் இண்டர்போலில் அப்படி என்ன செய்தார் கதைகள் , ஜானியின் கடைசி கதை அசுரப் பாய்ச்சலில் வந்தது போல இக்கதையும் விறுவிறுப்பாய் தந்தையின் கேசை தனயன தொடர்வதாய் தாங்கள் கூறியபடி தூள் கிளப்ப போவதால் மற்றும் புதிய மொழி பெயர்ப்பில் நி.ஒ .நி.ஒ .கிட் ...மேலும் தொடர்ந்து காமெடியில் கலக்கி வரும் புத்தம் புதிய கிட்டும் ....எனக்கு வரப் போகும் பனியனும் கலந்து ஏக எதிர்பார்ப்பை கிளறிவிட்டது .
ReplyDeleteகாரிகன் கூட ithu pola தந்தயின் கேசை தொடரும் அட்டகாசமான கதையை இருமாதங்களுக்கு முன்படித்தேன் ...மாயாவியின் கதையை தாங்கள் சந்தோசமாக படித்ததை ..தங்கள் சிரிப்பு காட்டி விட்ட படியால் நானும் சிரிப்போட காத்திருக்கிறேன் .
Deleteபிணம் காத்த புதையல்... My all time favorite
Deleteஉண்மய சொன்னா இந்த கநையின் வருகைக்கு பின் வந்த நமது லயனின் கதைகள் பல சுமாராகவே பட்டன ெனக்கு . இந்தக் கதை அன்று எனக்குப் பிடிக்கவில்லை . ஆனா இன்றுபடிக்கையில் அடடா...அட்டகாசம் . அன்று ரசிக்காததற்கு காரணம் வயது ...ஆர்ச்சி , ஸ்பைடராய் இருந்திருக்கலாம் .நமது லயன் வெளியீடுகள் எதுவும் சோடை போகாதென்பதற்க்கு இன்னொரு உதாரணம் ....சூஹீஸ் லில் ஸ்பைடர் கதை படித்த போது சுத்தமாய் பிடிக்கவில்லை ..ஆனால் இரண்டு மாதங்களுக்கு பின்னர் படித்த போது அடடா அட்டகாசம் என தோன்றியது .....முதல் வாசிப்பில் சுமாராய் ...கவனிக்க மொககை அல்ல ...தோன்றிய சிப்பாயின் சுவடுகள் ,இரவே இருளே கொல்லாதே ...மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல் ஆகியன மறு வாசிப்பில் ஏன் என தேடலில் படிக்கும் போது அட்டகாசமாய் தோன்றியது . ஆனால் நான் வெகுவாய் எதிர் பார்க்கும் மயன் ,எகிப்து ,அஸ்டெக் நாகரிக கதைகளை ரோஜரின் கையில் மம்மி ,மயன் ..என கிடைத்தும் சுவாரஷ்யமில்லை என ஆசிரியர் கைவிட்டதால் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டேன் . சார் இந்த நாகரிகம் சார்ந்த புதை பொருள் கதைகளில் சுவாரஷ்யமானவற்றை நெட்டின் உதவிய்டன் தோண்டி எடுங்கள் .கிநாக்களில் அவை இருந்தால் கூடுதல் சந்தோசம் .
Deleteசட்டென நினைவுக்கு வரவில்லை ..மிஹிட்ஸ்..ஸ்பெசல் தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல .
Deleteஅதும் டெக்ஸ் சென்ற மாதத்துக்கு முன் சிறிய கதையும் , சென்ற மாதம் பழைய கதையும் என்பதால் இம்மாதம் அதிக பக்கங்களில் வரும் டெக்ஸுக்காக தீராத் தாகத்துடன் காத்திருக்கிறேன் .
ReplyDeleteஇம்மாத டெக்ஸ் கதையும் 100 பக்கமே...
Deleteஆஹா...அப்ப டாக்டர் டெக்ஸ் போல பட்டய கிளப்புனா சரி
Deleteமாடஸ்டியின் சிறுவயதில் நடந்த விசயம்களை கொண்டு வந்த ஒரு கதையை நெடும்காலம் முன்பு படித்ததாக ஞாபகம், ஏதோ ஒரு நாட்டின் எல்லையை முள் வேலி அடியில் தவழ்ந்து தவழ்ந்து கடப்பது போல் ஞாபகம் உள்ளது. எந்தகதை என சொல்ல முடியுமா? அது மாடஸ்டியின் கதைதான் என உறுதிபடுத்தினால் அதனை ABC-யில் மறுபதிப்பாக தரமுடியுமா விஜயன் சார்?
ReplyDeleteலயனின் முதல் இதழ் அது....
Deleteலயனின் முதல் இதழ் அது....
Deleteஇல்லை நண்பா அது பழி வாங்கும் புயல் என்று ஞாபகம் பாக்கெட் சைஸில் இன்னொரு கதையுடன் வந்தது
Deleteஇல்லை நண்பா அது பழி வாங்கும் புயல் என்று ஞாபகம் பாக்கெட் சைஸில் இன்னொரு கதையுடன் வந்தது
Deleteமாடஸ்டி ரசிகர்கள் இது என்ன கதை என சொல்ல முடியுமா?
Deleteபரணி சார்.!
Deleteஅந்த கதையின் பெயர் " பழிவாங்கும் புயல் "
அந்த கதை சூப்பர் டூப்பர் கதை !
மாடஸ்டியின் இளம் பருவத்தில் நடந்த சோகத்தில் ஆரமிக்கும். இந்த இளம் பருவத்தில் நடந்த முன் கதை சுருக்கம் படிக்கா விட்டால் மாடஸ்டி கதையை முழுமையாக ரசிக்க முடியாது.!
இந்த கதையில் கேப்ரியல் அட்டகாசமான வில்லன். குட்டையான உருவமும் ஒரு கால் ஊனமுற்று சொட்டைத் தலையுடன் கூடிய பயங்கரமான வில்லன். இவரின் குறைகளை மனதில் கொண்டே நமது இளவரசி கடைசிவரை நேரடி மோதலை தவிர்த்துக்கொண்டே வருவார்.
மாடஸ்டியை கொன்று விட்டார்கள் என்று கார்வினை நம்பவைத்தவுடன் கார்வின் போடும் வெறியாட்டம் ஹாலிவுட் கிளைமாக்ஸை தோற்க்கடிக்கும் . அப்படியொரு ஆக்ஷன்.சீட் நுனியில் ஹாலிவுட் ஆக்ஷன் படம் பார்க்கும் திருப்தி.
மாடஸ்டி கார்வின் நட்பு க்கு இந்த கதை ஒரு மணி மகுடம்.!
வசனங்கள் அருமையாக இருக்கும்.! இந்த கதையின் கேரக்டர்கள் அனைத்தும் தத்ரூபமாக உருவகப்படுத்தி இருப்பார்கள்.!
வில்லன் கேப்ரியல். கேரக்டரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கேப்ரியல் அவரது வாட்ட சாட்டமான மெய்காப்பாளர் மத்தியில் யானை கூட்டத்தில் நரி வருவது போல் இருக்கும்.உலகத்தை அடக்கி ஆள தோற்றமோ உயரமோ அவசியமில்லை அறிவும் மனவலிமையும் போதும் என்பது போல் இவரது கேரக்டர் இருக்கும்.!
போதைப்பொருள் ஆசாமிகளை தவிர மற்ற கொடூரமான வில்வன் களை கூட மன்னித்துவிடும் நம் இளவரசி ஒரு மாற்று திறனாளியை அழிக்காமல் விடுவது ஒன்றும் அதிசியம் இல்லைதான்.!
கோடு போட சொன்னா ரோடே போட்ட உங்களுக்கு நன்றி கதை முழுதும் படித்த திருப்தி மீண்டும் நன்றி நண்பரே
Deleteகோடு போட சொன்னா ரோடே போட்ட உங்களுக்கு நன்றி கதை முழுதும் படித்த திருப்தி மீண்டும் நன்றி நண்பரே
Deleteலயன் காமிக்ஸ்க்கு நெஞ்சம் கனிந்த இனிப்பான 32வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....
ReplyDelete50வது,100வது,500வது,1000வது....பிறந்த நாள் என லயன் ராஜநடை போட வாழ்த்துக்கள்.
இந்த 32ஆண்டுகளாக லயனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...
இனிவரும் ஆண்டுகளில் முன்பை விட இன்னும் உற்சாகத்துடன் பணி செய்யும் வல்லமையை அருள எல்லாம் வல்லவரை வணங்குகிறேன்....
சிங்கக்குட்டி ராஜநடை போட மேற்கூறிய வாழ்த்துகளை நானும் அப்படியே வழிமொழிகிறேன்...
Deleteஹாப்பி பர்த் டே சிங்கக்குட்டி!
ஹாப்பி பர்த் டே சிங்கக்குட்டி!
Deleteஎன் உயிர் லயன் காமிக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் காமிக்ஸ் மழை பொழிந்திட ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
ReplyDeleteR
ReplyDelete// இந்தக் கதைகளை எவ்விதம் பார்க்கிறீர்கள் என்று கொஞ்சமாய் விளக்கலாமே ? //
ReplyDeleteமனிதனை மிஞ்சிய சக்திகள் எதுவும் இல்லை. ஒரு மனிதனைப்போல, மனிதனாகவே வந்து, மனிதனுக்குள் இருக்கும் அசாத்ததியமான திறமைகளை, தோல்விகளை, வேதனைகளை, சாதனைகளை வெளிப்படுத்தும் டைகர், டெக்ஸ், XIII, லார்கோ, ஷெல்டன், பௌன்ஸர், கமான்சே கதைகளே என் ரசனையை பூர்த்தி செய்கின்றன.
சூப்பர் 😊
Deleteஅருமை ஜெகத்...
Delete'ஓவரா காதுல பூச்சுற்றும் சூப்பர் ஹீரோ கதைகளை நான் அவ்வளவா ரசிப்பதில்லை' அப்படீன்றதை என்ன அழகா சொல்லிட்டீங்க ஜெகத்குமார்!
Deleteஎன்னியமாதிரியே நீங்களும் ஒரு படா யூத்துத்தான்னு நிரூபிச்சிட்டீங்க! :P
ஜெகத் குமார் & ஈரோடு விஜய் ! அடடே! நீங்கள் யூத் என்று தெரிந்து கொண்டோம் ,அண்ணா !.
Deleteமும்மூர்த்திகளை ரசிக்கும் நாங்கள் பள்ளி மாணவர்கள்.!அண்ணா !
ஆண்டு மலரும் அதனுடன் இணைந்து வரும் மலர்களும் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருகை புரியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ....
ReplyDeleteஉள்ளேன் ஐயா தங்களின் பதிவுக்காதான் காத்திருந்தோம் தலையின் அட்டைபடம் வரும் என்று எதிர்பார்த்தேன்
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை evergreen superster tex மட்டும் தான் மாயாவியின் புக்கை எல்லாம் வாங்கி வைப்பதோடு சரி any time படிக்ககூடியது tex tex tex
ReplyDeleteஇனிய (32nd) பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDelete🙌🙌🙌
ReplyDeleteவாலிப சிங்கத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
ReplyDelete🎁🎁🎁
🎂🎂🎂
🎉🎉🎉
சிங்கத்திற்கு 32 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசேலம் Tex விஜயராகவன் @ இதுவரை வந்த ஆண்டு மலர்கள் பற்றிய உங்கள் தகவல்கள் சிறப்பு. நன்றி!
ReplyDeleteஒவ்வொரு ஆண்டு மலர் பற்றியும் ஒரு 4லைன்ஸ் எழுதலாம்னு பார்த்தேன். ஒரு வாரமாக முயன்றும் ,எல்லா ஆண்டுமலர்களும் காமிக்ஸ் வேட்டையாடிய 1995டூ2000ல் படித்து இருந்தாலும்கூட சில இதழ்களின் கதைகள் ஞாபகம் வரவில்லை.சரி அடுத்த ஆண்டு தகவல்கள் திரட்டி கொண்டு எழுதலாம்னு விட்டு விட்டேன். சரின்னு கடைசியாக ஆண்டுமலர் பற்றிய லிஸ்டாவது போடலாம்னு என் பழைய டைரியை புரட்டி இந்த தகவல்கள் போட்டுள்ளேன்.யாராவது சீனியர் நண்பர்கள் இதை திருத்தம் செய்தால் மகிழ்வேன்.
Deleteசிங்கத்திற்கும் ,எனது 32வருட தோழனுக்கும் , பிரம்பில்லா ஆசிரியருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...நாளை இரவு என்ன கவிதையெல்லாம் கண்ணில் காட்டப் போகிறாரோ .....
ReplyDeleteவரக், வரக், வரக
ReplyDeleteவணக்கம் தோழர்களே
வாய்யா வாயாடி ரின்னு , இன்னிக்கு ஆருக்கு டின்னு..????
Deleteலயன் காமிக்ஸ்க்கு என் மனங் கனிந்த 32வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். சிங்கத்துக்கு அதற்குள்ளே 32 வயதாகி விட்டதா ? அட்டே! தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் பணி. அப்போதுதானே பக்கத்து இலைக்கு பாயாசம் போல நாமும் புதுப்புது காமிக்ஸ் ரசனைகளை எல்லாம் பருகலாம்.
ReplyDeleteஇன்று எனக்கும் பதிவு தபாலில் படப்பெட்டி வந்து கிடைத்து விட்டது. நண்பர்களின் விமர்சனங்கள் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. பரபரப்புடன் "என்பெயர் டைகர், 6 முத்து மினி லயன், அதிஷ்டம்தரும் அண்ணாத்தே", "பழி வாங்கும் புயல்", வண்ண மறுபதிப்பு என்பவற்றை படிக்கப் போகிறேன்.
ReplyDeleteஎன்சாய் திருச்செல்வம் சார்...
Deleteஎன் பெயர் டைகர்- முதலில் படியுங்கள் ,முதல் இரண்டு பாகங்கள் முடிவில் சூடேறும் கதைக்களம் கடைசி3 பாகங்களில் அனல் பறக்கும்...
நன்றிகள் நண்பரே. நீங்கள்கூறியபடியே ரசித்தபடி படித்துக்கொண்டிருக்கிறேன்.
Delete@ கிறுக்கன்
ReplyDelete(இதை 'தேவர் மகன்' ஸ்டைலில் படிக்காமல் 'ஜெயம் ரவி' ஸ்டைலில் படிக்கவும் )
//எனக்கென்னமோ ரிடிகே சேலம்,ஈரோடு,ஏற்காடு,மேச்சேரி பக்கமா சுத்தி வருவதாக தோணுது//
ஏற்காட்டில் என்னை தவிர வேறுயாரும் இந்த தளத்தில் வரும் காமிக்ஸ்வாசகர்கள் இல்லை, நாலுகால் மூகமுடிக்கு சொந்தகாரனாக நான் இருக்கலாம் என்ற உங்கள் சந்தேக மனநோய் பிதற்றல் ரசிக்கும்படியாக இல்லை.
நினைக்கற நல்லதை சொல்லவே இங்க நேரம் பத்தலை ! இதுல நாய் வேஷம் போட்டு நான் ஏன் வாலை ஆட்டிட்டு எல்லோர் காலுக்கு அடியிலையும் சுத்தனும்...??? சந்தேகப்படுவதில் நீங்கள் ரொம்பவே புகழ்பெற்றவரா இருக்கலாம், மருந்தே இல்லாத சந்தேக நோயை மனசுபுராவும் வெச்சிக்கிட்டு நீங்கவேண்ணா கிறுக்கனாட்டம் ஜம்முன்னு வலம்வரலாம்.! ஆனால் உங்கள் நிலை எனக்கு சகிக்கலை, உங்கள் மனவியாதியை சகிச்சிகிட்டு நான் ஏன் உங்களோட இனி பழக வேண்டும்கிற கேள்வியை கேக்காம கம்முன்னு இருக்கமுடியலை..! :(
* நீங்க என்ன ரகளை செஞ்ச்சிங்களோ..? அதை சகிக்கமுடியாமல் உங்கள் வாழ்க்கை பற்றி கிண்டலடித்த போலி ID நீங்கள்தானே..? என என்னிடம் நாகரீகமில்லாமல்,சம்மந்தமேயில்லாமல் கேட்டபோது... இதுஎன்ன வகை நட்பு என கேள்வி எழுந்தது.!
* குடும்பம் போல இருந்த 'வாட்ஸ் ஆப்'குரூப்பில் நான் வேண்டியத்தில்லை 'மாயாவி சிவா ஒரு பச்சோந்தி' என குடிபோதையில் சொன்னபோது [அன்று முதல் இதுவரையில் wahtsapp பக்கம் வரவேயில்லை] இந்த நட்பு தேவையா என்ற கேள்வி எழுந்தது.!
* எடிட்டரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய காரணத்தால்...கிரேமார்கெட் கும்பலில் முக்கிய அங்கத்தினர் என சொன்னபோது...இது நிச்சயம் கூடா நட்பு என தோன்றியது.!
* இன்று நாய் வேஷம் போட்டு வலம்வரும் மூகமுடி என சந்தேக கேள்வியை மீண்டும்என்மீது எழுப்பியவிதம்... நிச்சயம் விரல் நீட்டி கண்டிக்கவேண்டிய நபர் நீங்கள் என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.! இந்த எல்லையை தாண்டுவது உங்களுக்கு இனி அழகல்ல.!
இதெற்கெல்லாம் வருத்தம் தெரிவிக்காமல்,போட்ட கமெண்டை நீக்காமல்,இனி குடிபோதையில் எழுதுவதை விட்டுட்டு...நல்ல மனநல டாக்டரை பாருங்க.!
உங்கள் தொடர்பு இந்த அளவில் போதும்,போன் செய்து ராமாயணம் பேச வேண்டாம் நன்றி..!
ஹை நான் 100 வது.! எப்பூடி ???
ReplyDeleteஎங்கள் இளவரசி குத்து விளக்கு ஏற்றி வைத்த ( ஆரம்பித்து வைத்த ) லயனுக்கு 32 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .!
ReplyDelete" எல்லாப் புகழும் எங்கள் இளவரசிக்கே ! "
\\ எல்லாப் புகழும் எங்கள் இளவரசிக்கே ! //
Deleteசூப்பரா சொன்னீங்க சார்...!
எல்லா புகழும் இளவரசிக்கே
Deleteஉண்மை நண்பர்களே மகிழ்ச்சி
waiting for Tuesday delivery!
ReplyDelete32 வது பிறந்த நாள். வாழ்த்துகள் என் லயனுக்கு இது மென்மேலும் வளர்ந்து 50 ஆண்டுமலர். யாருமே நினைத்துப்பார்க்காத அளவுக்கு விஹ்வரூபம் எடுக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்
ReplyDeleteHappy birthday சிங்கம்!
ReplyDelete@ ALL : அடடே....நம் சிங்கதுரைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களா ? நன்றிகள் சொன்ன கையோடு - எனது வாழ்த்துக்களையும் சொல்லி விடுகிறேனே..!! சன்னமாகவேணும் எனக்கொரு முகவரி தந்த தோழன் அல்லவா ?
ReplyDeleteDear Edi on this memorable occasion just give us a special edition like Lion 250...
Delete@ ALL : தொடரும் 24 மணி நேரங்களுக்கு வீடு திரும்பும் பயணம் காத்துள்ளதால் - புதுப் பதிவினை ஞாயிறு காலையில் வைத்துக் கொள்வோம் guys ... !
ReplyDeleteசனியிரவை இத்தாலி vs ஜெர்மனி (football) மாட்சில் செலவிடுவது நிச்சயம் சுவாரஸ்யம் தருமென்று நினைக்கிறேன் !
எங்கள் சுவாரஸ்யமே உங்கள் பதிவு தானே
ReplyDeleteஎங்கள் சுவாரஸ்யமே உங்கள் பதிவு தானே
ReplyDeleteவணக்கம்
ReplyDelete"பர்னோவ்ஸ்கி"கோடங்கி@ நாளைய பதிவு லயனின் 32ஆண்டகால மலரும் நினைவு பதிவாக இருக்கும் என நான் சொல்கிறேன். உம்ம கணிப்பு என்ன சொல்லுது????....
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDelete