Powered By Blogger

Wednesday, August 10, 2016

ஒரு உற்சாக உ.ப!!

நண்பர்களே,

வணக்கம். ஈரோட்டுக்கு இத்தாலியும் குற்றாலமும் ஒன்றன்பின் ஒன்றாய் விசிட் அடித்ததன் தாக்கத்திலிருந்து நீங்கள் மீண்டு விட்டீர்களோ - இல்லையோ - நானின்னும் வெளிவந்தபாடில்லை ! பற்றாக்குறைக்கு தொண்டையில் கிச்சு-கிச்சு என்ற ஆரம்பத்தோடு திருவாளர் 'ஜல்ப்பும்' கைகோர்த்துக் கொள்ள - ஒரு பூனையாரின் பாணியில் நானும் மல்லாக்கப்படுத்துக் கொண்டே லேப்டாப்பில் உள்ள உங்களது போட்டோக்களை பார்த்துக் கொண்டே பொழுதைக் கழித்தும் ; களித்தும் வருகிறேன் ! என்ன ஒரே வித்தியாசம் - இங்கே ஆப்பிள் ஜூஸ் ; ஆரஞ்சு ஜூஸ் என்பதற்குப் பதிலாக - சுக்கு காப்பியும் ; கஷாயமும் தலைமாட்டில் !! போட்டோக்களை பார்க்கப் பார்க்க - "ஐயோடா சாமி...இந்த நண்பரைக் கவனிக்க முடியாது போனதே ; அவரோடு பேச இயலாது போனதே !" என்ற ஆதங்கங்கள் சரமாரியாக தலைதூக்குகின்றன !! அடுத்தமுறை இன்னும் சற்றே பெரியதொரு இடத்தில அணிசேரும் வாய்ப்புக் கிட்டின் - வாசலில் நின்றே வருகை தரும் ஒவ்வொரு நண்பரின் கையையும் குலுக்கிய தீருவது என்று நினைத்துக் கொண்டேன் ! நேரம் ஓடிய சுவடே தெரியாது போனதால் விழாவின் முடிவின் போதாவது அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் வழி இன்றிப் போனது ! So அத்தனை தூரம் வந்திருந்தும், நம்மால் அவர்களைச் சரியாய் வரவேற்க இயலாது போனதுதான் நெருடலை தந்தது ! And இறுதியிலான அந்த க்ரூப் போட்டோ செஷன் னின் போது நமது சிறப்பு விருந்தினர் சொக்கன் சாரையும் இணைத்துக் கொள்ள முடியாது போனதும் ஒரு வருத்தமே ! அடுத்தமுறை இரு தவறுகளையுமே சரி செய்திட இயன்றதைச் செய்வோம் ! 

உப பதிவு என்பதால் இங்கேயே நீட்டி முளக்காது - இம்மாத இதழ்கள் பற்றிய விமர்சனம் மீதாய்ப் பார்வைகளை ஓடிஏ விடுகிறேன் - சுருக்கமாய் ! இம்முறை அதனிலொரு welcome மாற்றத்தைக் கவனிக்கிறேன் ! ஒவ்வொருமுறையும் இதழ்கள் கிட்டிய பின்னே - சக நண்பர்களுக்கும் புக் கிடைத்து அவர்கள் வாசிக்கும்வரையிலும் விமர்சனங்கள் பதிவிடாது மௌனம் காத்து வந்தீர்கள் ! அதுவே முதல் வாரத்தைக் கபளீகரம் செய்திடும் போது - இதழ்களும் கொஞ்சம் பழசாகிப் போய் விட்டதொரு உணர்வு தலைதூக்க - மேலோட்டமான அலசல்கள் மட்டுமே நடைபெறுவது சமீபத்து வாடிக்கையாக இருந்து வந்துள்ளது ! ஆனால் இம்முறையோ - "கதையும் விவரிக்கப்பட்டுள்ளது" என்ற spoiler alert சகிதம் விமர்சனங்கள் சுடச் சுடப் பதிவாவது பிரமாதமாக உள்ளது ! "நன்கு ; சுமார் ; மொக்கை" என ரேட்டிங் ஏதுவாயிருப்பினும், அதனைச் சுடச் சுட ரசிக்கும் போது - அதுவரை புத்தகங்களை மேஜைகளில் துயில் பயிலச் செய்திருக்கக் கூடிய நண்பர்களும்  அவசரம் அவசரமாய் வாசிக்கவொரு தூண்டுதலை தந்தது போலிருக்குமல்லவா ? And  இதன் இன்னொரு பரிமாணம் நமக்கு உதவுவது - ஆன்லைன் விற்பனைகளில் ! சாவகாசமாய் வாங்கி கொள்வோமே என்றிருக்கக் கூடிய வாசகர்கள்கூட இம்முறை நமது ஆன்லைன் ஸ்டோரைச் சுறுசுறுப்பாய் அணுகுவதை பார்த்திட முடிகிறது ! So - "ஸ்பாய்லர் அலெர்ட்" சகிதம் கதைகளின் கிளைமாக்ஸை விவரிக்கா விதமாய் உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன் !

இம்மாத ஆரம்பத்து அதிரடி ஈரோட்டில் இத்தாலி என்றாலும் -  பென்னியும், மார்ட்டினும் பின்னிப் பெடல் எடுப்பதை புரிய முடிகிறது ! மகிழ்ச்சி !!!!  Carry on guys - மாலையில் சந்திக்கிறேன் ! Bye for now !












384 comments:

  1. வணக்கம் எடி சார்

    ReplyDelete
  2. //"நன்கு ; சுமார் ; மொக்கை" என ரேட்டிங் ஏதுவாயிருப்பினும், அதனைச் சுடச் சுட ரசிக்கும் போது - அதுவரை புத்தகங்களை மேஜைகளில் துயில் பயிலச் செய்திருக்கக் கூடிய நண்பர்களும் அவசரம் அவசரமாய் வாசிக்கவொரு தூண்டுதலை தந்தது போலிருக்குமல்லவா ?//

    :)

    ReplyDelete
  3. டெக்ஸ் பென்னியும் படித்தாகிவிட்டது

    மற்ற கதைகள் வெய்டிங்கில்

    அடுத்தவாரம்தான் முடியும் போல தெரிகிறது

    ReplyDelete
  4. //So அத்தனை தூரம் வந்திருந்தும், நம்மால் அவர்களைச் சரியாய் வரவேற்க இயலாது போனதுதான் நெருடலை தந்தது ! And இறுதியிலான அந்த க்ரூப் போட்டோ செஷன் னின் போது நமது சிறப்பு விருந்தினர் சொக்கன் சாரையும் இணைத்துக் கொள்ள முடியாது போனதும் ஒரு வருத்தமே ! அடுத்தமுறை இரு தவறுகளையுமே சரி செய்திட இயன்றதைச் செய்வோம் ! //

    எஸ்...அதை எப்படி தவறவிட்டேன்னு புரியலை..30 30 போராக மூன்று குருப் போட்டோ எடுக்கவேண்டியது...போயே போச்சி...ம்ம்ம்...அடுத்தமுறை நிகழ்ச்சிநிரல் எழுதிவெச்சி பெரிய ஹாலில் விளையாடுவோம் ஸார்..!

    ReplyDelete
    Replies
    1. //அடுத்தமுறை இன்னும் சற்றே பெரியதொரு இடத்தில அணிசேரும் வாய்ப்புக் கிட்டின் -//

      சில வாய்ப்பை நாம் தான் உருவாக்கவேண்டும்..!

      Delete
    2. //சில வாய்ப்பை நாம் தான் உருவாக்கவேண்டும்..!//...+1

      Delete
    3. புத்தக அரங்கின் வாசலில் இருப்பதே இந்த 120கொள்ளும் அரங்கின் மிகப்பெரும் ப்ளஸ் பாயிண்ட்...
      தனித்த இடத்தில் வைத்து, அங்கே இருந்து மீண்டும் புத்தக காட்சி அரங்குக்கு வருவதற்கு சிரமங்கள் இருக்க கூடாது.
      மீட் முடிஞ்ச அடுத்த 2வது நிமிடம் ,நம் ஸ்டாலுக்கு போகும் வசதி இதில் உள்ளதை கருத்தில் கொள்ளனும் சார்..

      Delete
    4. அண்டர்கிரவுண்ட்டில் இதைவிட சற்று பெரிய ஹால் இருக்காம்...பார்போம்..இன்னும் 350 நாள் இருக்கில்ல... ;)

      Delete
    5. ங்ஙே! குரூப் போட்டோவா எப்போ எடுத்தாங்க. ., எனக்குத் தெரியவே தெரியாதே!! இப்படி அநியாயமா ஒரு பச்சப்புள்ளய ஏமாத்திட்டிங்களே??

      Delete
  5. வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்களே,

    ReplyDelete
  6. பென்னி படித்துகொண்டு இருக்கிறேன் சார் ! நாங்களும் இன்னும் ஈரோடு குற்றாலத்தில் இருந்து மீள முடியவில்லை ஆகவே பணியும் சற்று மெதுவாகவே செல்கிறது!

    ReplyDelete
  7. ஆசிரியர் &குழுவிற்கும் மாலை நேர வணக்கம்.எதற்கும் வருந்த வேண்டாம் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை எல்லோரையும் வரவேற்றால் சுபகாரியம் ஆவது எப்படி? நீங்கள் தான் அங்கு மாப்பிள்ளை 😄😄😄😄

    ReplyDelete
    Replies
    1. @ Saran Selvi

      நீங்க ரொம்பவே அட்வான்ஸ்...வரபோற மாலைக்கு இப்பவே வணக்கம் சொல்லிட்டிங்க.. ;)

      Delete
  8. ஸ்மர்ஃப்ஸ் கரைக்க முடியாத சில "கல் மனங்களை " கூட பென்னி கரைத்திருப்பதை கடந்த சில நாட்களாய் கண்கூடாய் காணமுடிந்தது சார்.!

    ரெண்டு பக்கத்துக்கு மேல் ஸ்மர்ஃப்ஸை புரட்ட முடியலைபா, என்று சொல்லியிருந்த சில நண்பர்கள் பென்னியை ரொம்பவும் சிலாகித்து இருக்கிறார்கள்.!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : நிஜத்தைச் சொல்வதாயின் - இது எனக்கொரு வியப்பூட்டும் விஷயமே !

      பென்னி OVERALL செல்லப் பிள்ளை ஆகியுள்ளது நிச்சயமாயொரு lovely surprise !!

      Delete
  9. நான் இன்னும் இம்மாத வெளியீடுகளில் ஒன்று கூட படிக்கவில்லை.
    பென்னி என்வீட்டு சுட்டிப் புயல்களின் கைகளில் இருக்கிறான்.
    முதலில் இன்றிரவு மார்டினிடமிருந்து தொடங்கலாமென்று ஒரு அவா.
    ஈரோட்டில் இத்தாலியை எடுத்தால் அட்டையைப் பார்ப்பதிலேயே பொழுது போய்விடுகிறது. (கொஞ்சம் சுமாரான அட்டையாக போடுங்க சார். அப்போதுதான் சீக்கிரம் உள்ளே போய் கதையை படிக்க முடியும்.) :-)

    ReplyDelete
    Replies
    1. அக்டோபரின் தீவாளி ஸ்பெசல் சர்வமும் நானே-யின் அட்டைப்படம் வரும் நாளை எண்ணி இப்பவே ஆர்வம் லைட்டா எட்டி பார்க்கிறது...

      Delete
    2. //கொஞ்சம் சுமாரான அட்டையாக போடுங்க சார். அப்போதுதான் சீக்கிரம் உள்ளே போய் கதையை படிக்க முடியும்..///
      :D
      இவருக்கு மட்டும் அட்டையே இல்லாம அனுப்புங்க எடிட்டர் சார்! ;)

      Delete
  10. 'இனியெல்லாம் மரணமே' - பொருத்தமான தலைப்பு என்பதோடு, அந்த டஸ்ட்-கவரும் மிகப் பொருத்தம் என்பது கதையை முழுவதுமாய் படித்தபிறகே உணரமுடிகிறது. அந்த உள்(பழைய) அட்டையும் அழகுதான் என்றாலும்கூட, அப்படியொரு ஹை-டெக் கதைக்கு 'ய்யே' தான்!

    எடிட்டரின் இறுதிநேர முடிவு அழகாய் பலனளித்திருக்கிறது! நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
  11. அந்த கேள்வித்தாள்களையெல்லாம் கிழிச்சுப் போட்டுட்டீங்களா எடிட்டர் சார்?
    நான் காலேஜ்ல படிச்ச காலத்துல ( இப்பத்தான் ஒரு ரெண்டு
    மூனு வருசம் முன்னாடி) எக்ஸாம் ஹாலை விட்டு வெளியேறினதுமே கேள்வித்தாளை நான் கிழிச்சுப் போட்டுடுவேன்; நான் பதில் எழுதின பேப்பரை வாத்தியார் கிழிச்சுப் போட்டுடுவாங்க. ஒருத்தருக்கொருத்தர் அப்படியொரு உதவி!

    அடுத்தமுறையும் எக்ஜாம் இருக்குமா ஸார்? :P

    ReplyDelete
    Replies
    1. பூனையாரே ஹா,ஹா.
      சரி உடம்பு எப்படி இருக்கு நண்பரே இப்ப பரவாயில்லையா?

      Delete
    2. கடந்தமாதத்தோடு ஒப்பிடும்போது நன்றாகவே தேறியிருக்கிறேன் என்றாலும், முழுதாய் தேற இன்னும் சில வாரங்கள் ஆகக்கூடும் ரவி சார்!
      ஆபீஸ் பிக்கல்ஸ்-பிடுங்கல்ஸ் இல்லாமல் மல்லக்கப்படுத்தபடியே நம் இதழ்களை சாவகாசமாகப் படித்திடவும், நண்பர்களோடு ஃபோனில் உரையாடவும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதால் பூனையார் இதை என்ஜாய் செய்கிறார் என்றே சொல்லவேண்டும்!

      நீதி : நோய் நல்லது! ;)

      Delete
    3. ஆனால், விடுப்பில் இருந்தும்கூட நமது ஸ்டாலுக்குச் சென்று விற்பனைக்கு ஏதும் உதவிட முடியவில்லையே என்பதில் கொஞ்சம் வருத்தமே! :(

      Delete
    4. நியாயமான கவலைதான்.

      Delete
    5. Erode VIJAY : கேள்விகள் பத்திரமாய் உள்ளன ! விடாது கறுப்பு !

      Delete
    6. ஏன் சார்... ஏன்...

      Delete
  12. ஙே
    இம்முறை எக்ஸாம் நடந்துச்சா ஈ.வி ?

    லேட்டா வந்ததால தெரியலை

    ReplyDelete
    Replies
    1. எக்ஸாம் எதுவும் இல்லைனு தெரிஞ்சுதுக்கப்புறம் தானே நான் ஹாலுக்குள்ளயே வந்தேன்? ;)

      மாங்கு மாங்குனு பிட் எழுதிட்டு வந்தவங்களுக்குத்தான் புஸ்ஸுனு போயிருக்கும்! :P

      Delete
    2. 'நயாகராவில் மாயாவி" ஒரிஜினல் புக்கைப் பரிசாய்க் கொண்டுவந்திருந்தேன் !! ; நோ எக்ஸாம் ; நோ பரிசு !

      Delete
    3. அப்பாடி தப்பிச்சேன் எடி சார்

      Delete
    4. வடை போச்சே :(
      ஆனா கண்டிப்பாக எக்ஸாம் பாஸ் செய்திருக்க மாட்டேன்
      அடுத்த தடவை சந்திப்பில் எக்ஸாம் வையுங்கள் சார்
      பாஸாகி பரிசை வாங்கி கொள்கிறேன் :D

      Delete
  13. இனி எல்லாம் மரணமே ஒரே வீச்சில் படித்துவிட்டேன்.. ஒரு படம் பார்த்து முடித்த எண்ணம். காலையிலிருந்து ஈரோட்டில் இத்தாலி போய்க்கொண்டிருக்கிறது.. முடித்துவிட்டு வருகிறேன்..

    ReplyDelete
  14. Super six சந்தா கட்டியாச்சு சார்.டெக்ஸ் புக்கில் போட்டோவிற்கு பதில் மாடஸ்டியின் கழுகு மலைக் கோட்டையில் மாதம் ஒரு வாசகரில் என் புகைப்படம் போடமுடியுமா சார்?இது ஒரு வேண்டுகோள்தான் சார்.உங்கள் முடிவு எதானாலும் ஏற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ravanan iniyan : Sorry....சாத்தியப்படாது சார் !

      Delete
    2. நன்றி சார்.என்றேனும் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

      Delete
  15. 35வது. படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  16. WARNING !!!!!! ALERT….!!!!! SPOILERS…..!!!!!!!!!
    மார்ட்டின்.....இனி எல்லாம் மரணமே.....
    அலசல்.......
    கதையின் உட்கரு அற்புதமே.....அதைப் பற்றிய விளக்கங்கள், சில பக்கங்களில் இருக்கும் அடிப்படை அறிவியல் பிழைகள் பற்றியதே இது....
    அதற்குமுன்
    கிங்க்ஸ் ஜேம்ஸ் வெர்ஷனில்
    யாத்ராகமம்
    அதிகாரம் 7 வசனம் 17 ல் துவங்கி
    அதிகாரம் 12 முழுமையாக படித்துவிடுவது நல்லது.

    (KINGS JAMES BIBLE VERSION …FROM CHAPTER 7 VERSE 17 TO CHAPTER 12)
    எகிப்தின் 1௦ வாதைகளாக உள்ளவை படிக்க எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன....சாராம்சம் மட்டும்
    இதனை படிக்காமல் போனால் பக்கம் 1௦௦-1௦1 புரிந்து கொள்வது கடினம்..(என் வரையிலாவது).அப்பக்கத்தில் சொல்லாடல் பிழை இருப்பதாக என் எண்ணம்...அதை பின்னர் விவரிக்கிறேன்......

    கீழே உள்ளது கிறிஸ்துவ நண்பர்களுக்கு மிகவும் பரிச்சயமானது எனினும் மற்ற நண்பர்கள் ஒரு சிலருக்காக......பக்கம் 13-ல் மொழிபெயர்ப்பில் உள்ள சிறு பிழையும் அடிப்படை நுண்ணுயிரியல் பிழையும் விரைவில்....

    1…20. கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

    (5. கர்த்தர் நதியை அடித்து ஏழு நாள் ஆயிற்று.)
    2. 6. அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.


    3. 17. அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையிலிருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசமெங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.


    4. 24. அப்படியே கர்த்தர் செய்தார்; மகாதிரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
    5. 6. மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
    6. 10. அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
    7. 23. அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
    b) 25. எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
    31. அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று
    32. கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.

    8. 14. வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.
    9. 22. மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று
    10. 29. நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.



    430 ஆண்டுகளாக எகிப்து மன்னன் பார்வோன் கீழ் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை தனது மக்களாக சுவீகரித்து யகோவா தேவன் அந்த அடிமை தளையிளிருந்து விடுவிக்க செய்த அற்புதங்களே இவை.....

    ReplyDelete
    Replies
    1. படிக்கும்போதே பயந்து பயந்து வருது செனா அனா அவர்களே! கடவுள்கூட ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அடிமைகளை விடுவிச்சுருக்கார்னும் புரியுது!

      Delete
    2. @ all : இரு பதிவுகளுக்கு முன்பாய் - மார்டினின் இந்தக் கதையோடு நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சமயமே -இதனை நண்பர் செனா. அனா. எழுதியிருப்பின் சிறப்பாக இருக்குமென்று நான் குறிப்பிட்டிருந்ததை எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியவில்லை ! அந்த பைபிளின் வரிகளை எழுத ரொம்பவே சிரமப்பட்டேன் & போதிய அவகாசம் இல்லாது போனதால் அதனை சரி பார்த்து வாங்கிடவும் இயலவில்லை !

      பொருளில் பிழை ஏதேனும் இருப்பின் - முன்கூட்டிய APOLOGIES !!

      Delete
    3. உடம்பு சரியில்லாம மல்லக்கப் படுத்துக்கிடக்கிறவங்களை பயமுறுத்தறதே இந்த செனா அனாவுக்கு வேலையாப் போச்சு! சுக்குக்காப்பி, கஷாயத்தோட ரெண்டு ரவுண்டு வேப்பிலையும் அடிக்கணும் போலிருக்கே... :p

      Delete
    4. புரிந்து கொள்ள சற்றே கடினமான விஷயம்தான் போல.

      Delete
    5. @ எடிட்டர் சார் !!!! உங்கள் மொழிபெயர்ப்பில் யாதொரு குறையும் இல்லை சார்.....மூலத்தில் கதாசிரியரே அடிப்படை தகவல்களில் மட்டும் செய்த பிழைகளை இங்கு குறிப்பிடவிருக்கிறேன்.....

      இவை கதைபோக்கினில் , கதையின் ஆதார சம்பவங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவன அல்ல.....

      ஆயினும் மாணவர்களும் இருக்கும் இத்தளத்தில் தவறான தகவல்கள் காமிக்ஸ் மூலம் தரப்பட கூடாதே என்பதே என் எண்ணம்.....

      Delete
    6. // ஆயினும் மாணவர்களும் இருக்கும் இத்தளத்தில் தவறான தகவல்கள் காமிக்ஸ் மூலம் தரப்பட கூடாதே என்பதே என் எண்ணம் //

      நல்லது செல்வம் அபிராமி அண்ணே
      அவர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

      Delete
  17. அனைவருக்கும் மாலை வணக்கம். ஆசிரியருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில்கூட ஒரு உப பதிவு.
    சூப்பர்!! நம் ஆசிரியருக்கு "ஜல்ப்" பிடித்த காரணம் ஈரோடு புத்தக விழா சந்திப்பின் போது கொட்டித்தீர்த்த நமது தோழர்களின் அன்பு மழையில் நனைந்ததுதான்!!
    அடுத்த சந்திப்பின்போது ஒரு குடையுடனோ அல்லது ரெயின் கோட் அணிந்து கொண்டோ வாருங்கள் சார். வரும் காலங்களில் காமிக்ஸ் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் போவது உறுதி.அதேபோல புத்தகவிழா சந்திப்பில் தோழர்களின் எண்ணிக்கை கடல் அலையென திரளப்போவதும் உறுதி.

    ReplyDelete
  18. சளி பிடித்தால் மருந்து மாத்திரைகளை எல்லாம் நம்பாதீங்க.. நைட் தூங்க போகும்போது 100 கிராம் சில்லி சிக்கன் சாப்பிட்டு உடனே படுத்து தூங்கிவிடுங்கள். அடுத்த நாள் காலையில் சளி இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு இட்லியும், கெட்டிச் சட்னியும் சரிப்படாதா ஜகத்குமார் அவர்களே? ;)

      Delete
    2. Agreed Jagath Kumar brother

      @Erode Vijay
      Nope
      Pepper சிக்கன் சாப்பிடுங்க சகோதரரே சூப்பரா வேலை செய்யும்
      எனக்கு சளி பிடித்து எதுவுமே வேலை செய்யிலினா அதான் மருந்து :P

      Delete
    3. அடடே....இங்கேயே இத்தனை மருத்துவர்களா ? கரூர் ராஜா சார் ; செனா. அனா சார் ; சிதம்பரம் ஸ்ரீகணேஷ் சார் ; சேலம் சுந்தர் சார் & many more dignified medical practioners here :

      சில்லி சிக்கனோ ; பெப்பர் சிக்கனோ நம் சுவாசமண்டலத்து நோய்த் தொற்றை தீர்க்கும் வலிமை கொண்டனவா ? அவை antibiotic குடும்பத்தைச் சேர்ந்தவையா ?

      ஈரோடு விஜய் சார்பாய் எனது வினவலிது ! கொஞ்சம் தீர்த்து வையுங்களேன் ?

      Delete
    4. ஈரோடு டாக்டரின் பதில்கள்:
      ///சில்லி சிக்கனோ ; பெப்பர் சிக்கனோ நம் சுவாசமண்டலத்து நோய்த் தொற்றை தீர்க்கும் வலிமை கொண்டனவா ?///

      சாதாரண சிக்கனுக்கு அந்த சக்தி கிடையாதுதான்! ஆனால் மரபணு மாற்றப்பட்ட சிக்கன் வகையறாக்களுக்கு நோய் தீர்க்கும் அசாத்திய ஆற்றல் இருப்பது உண்மையே! இந்த சிக்கன்கள் அவை முட்டையிலிருந்து வெளிப்பட்ட 7 நாட்களுக்குள் நம்மால் விழுங்கப்பட வேண்டும்; இல்லையெனில், ஏழாவது நாளில் அது சாதா சிக்கனாக மாறிவிடும்!

      ///அவை antibiotic குடும்பத்தைச் சேர்ந்தவையா ? ///

      இல்லை! உலகில் உள்ள எல்லா சிக்கன்களும் பறவை குடும்பத்தைச் சேர்ந்தவையே!

      :P

      Delete
    5. எனக்கு இந்த ANTIBIOTIC SCIENCE எல்லாம் தெரியாது சார். 15 வருஷங்களுக்கு முன்னால என் தாத்தா எனக்கு சொன்னது: ஜலதோஷம் பிடிச்சா கிருமிகள் மூளையைத்தான் தாக்கும். மூளை போராடி போராடி அந்த கிருமிகளை கழிவாக மூக்கு வழியாக அனுப்பிக்கொண்டே இருக்கும். ஜலதோஷம் பிடிக்கும்போது சிக்கன் சாப்பிடணும். சிக்கன் ரத்தத்துக்கு சூட்டை குடுக்கும். சூடான ரத்த ஓட்டம் மூளையை தொட்டு கிருமிகளை அழிக்கும். தூங்கி எழுந்தால் மூளை பலம் பெரும். சளி இருக்காது' என் தாத்தா சொன்ன இதைத்தான் 15 வருஷமா நான் கடைப்பிடிக்கிறேன்.

      இன்னொன்று கூட என் தாத்தா சொன்னார். மாமிசங்களிலேயே ஒடம்புக்கு அதிகமா சூட்டை கொடுப்பது எருமை மாடு கறி தான். அதை சாப்பிட்டு பழகிய ஒருத்தர்க்கு எப்பேர்ப்பட்ட குளிரையும் அவங்க உடம்பு தாங்கிக் கொள்ளும். நான் எருமை மாட்டு கறியெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனா அது உண்மைன்னு கௌபாய் காமிக்ஸ் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன். 300 வருஷங்களுக்கு முந்தைய அமெரிக்காவில் வெட்டவெளிகளில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் காட்டெருமையை வேட்டையாடி தானே சாப்பிட்டு வந்தாங்க...

      Delete
  19. டியர் எடி,

    நண்பர் ஜான் சைமன் ஜி அவர்களின் சார்பாக ஒரே ஒரு கேள்வி: இன்றுடன் பத்தாம் தேதி ஆகிறது. மதுரைக்கு புத்தகம் வந்து 3 நாட்கள் ஆகிறதாம். ஆனால், நீங்கள் அடிக்கடி, ஒப்பிட முடியாத வியாபார நகரமென்று சொல்லும் சென்னைக்கு இன்னமும் புத்தகம் வந்து சேரவில்லை.

    சென்ற மாதமே புத்தகங்கள் வந்து தீர்ந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இம்மாதம் இன்னமும் புத்தகம் வரவில்லை. என்ன நடக்கிறது?

    1. இது எடிட்டருக்கான கேள்வி. எடிட்டருக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றினால், அவர் சொல்லட்டும். இல்லையேல், வினாடி வினா நிகழ்ச்சியில் சொல்வதைப்போல அவர் பாஸ் என்று சொல்லி விடட்டும். பிரச்சனை இல்லை. இங்கே பழைய மரமண்டை ஆட்கள், இப்போதைய ஐடியில் வந்து வரிந்து கட்டி பதிலளிக்க வேண்டாம்.

    2. இரண்டாவது குறிப்பு எதுவும் இல்லை.

    ReplyDelete
  20. டியர் அருண்,

    நண்பர் ஜான் சைமன் ஜி ஏற்கனவே கேள்வி கேட்டு பதிலும் பெற்று விட்டதால் - புதிதாய்ச் சொல்ல என்னிடம் ஏதுமில்லையே !

    ReplyDelete
    Replies
    1. நமது உறவுகளின் பாலங்கள் கட்டப்படுவது மிகவும்மெலிதான நரம்புகளின் மீதன்றி, உறுதியான இரும்புக் கயிற்றால் அல்லவே என்பதை உணரும் வேலையில், கதிரவனின் பொற் கிரகணங்கள் நம்மீது விழுந்து இருளில் இருக்கும் அந்த அறியாமை என்னும் நிழலை போக்கிட உதவுவதோடில்லாமல், நமக்கான அந்த அக இருளையும் போக்கி, ம்னதிற்கும், வாழ்வுக்கும் ஒளியைத் தருவதுதானே வாழ்க்கையின் நிஜமான அக உள்ளொளி தரிசனம்?

      in short, அந்த பதில் என்ன என்பதை இங்கே சொல்லலாமே?

      Delete
    2. என் சார்பில் proxy பதில்கள் இங்குள்ளோரிடமிருந்து வருவது பிடிக்கா விஷயம் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது ! அதே அளவுகோல் proxy கேள்விகளுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே ?

      Delete
    3. proxy பதில்கள் ஏன் வேண்டாம் என்றால், ஒவ்வொருவரும் அவரவர்களின் புரிதலில், இல்லாத விஷயங்களை கட்டு கட்டி சொல்வார்கள். ஆனால், from the horses mouth, கேட்டால்தானே சரியான பதில் கிடைக்கும்? இந்த சென்னையில் புத்தகம் கிடைக்காத காரணம் என்ன என்று கேட்டால். வாசக அன்பர்களுக்கு என்ன தெரியும்? ஆனால், அதன் நிஜமான பின்னணி உங்களுக்குத்தானே தெரியும்? அதை நீங்கள் சொல்வதுதானே முறை? அபப்டி இருக்க, இங்கே இந்தக் கேள்விக்கு proxy பதில் வேண்டாம் என்று சொல்லியதில் என்ன தவறு?

      பை தி வே, கடைசி வரைக்கும் நீங்கள் சென்னைக்கு ஏன் புத்தகம் இன்னமும் வரவில்லை என்பதை இன்னமும் சொல்லவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன் யுவர் ஆனர்.

      Delete
    4. Arun SowmyaNarayan : மை லார்டு - ஒரு வியாபாரப் பரிவர்த்தனையில் தொய்வு ஏற்படின் அதன் காரணம் என்னவாக இருக்குமென்று யூகிப்பது அத்தனை கஷ்டமா - என்ன ?

      கடை renovation நடந்து வருவதாலும் ; மதுரையில் இன்னுமொரு கடை திறக்கும் பணியில் இருப்பதாலும் ; அவரது தாயாருக்கு மருத்துவப் பராமரிப்புத் தேவைப்பட்டதாலும் - ஓரிரு மாதங்களாய் தொய்வு நேர்ந்துள்ளது !

      அவரொரு குடும்ப நண்பர் என்ற முறையில் அவரின் இடர்களை பற்றி நான் விலாவாரியாக அறிவிக்கும் அவசியம் உள்ளதாய் நினைக்கவில்லை !

      Delete
  21. ஆங், அந்த மறந்து போன இரண்டாவது குறிப்பு இதோ.

    இதுவும் எடிக்கான கேள்வியே:

    1. டெக்ஸ் வில்லர் என்பது போனெல்லி குழுமத்தின் பிராண்ட். அதை புத்தக வடிவில் தமிழில் வெளியிடும் உரிமை மட்டும்தானே உங்களுக்கு உள்ளது? இந்த merchandising உரிமை எதுவும் கிடையாது அல்லவா?

    2. யாராவது உரிமை இல்லாமல், அவர்களாக புத்தகம் அடித்து வெளியிடுகிறார்கள் என்று உங்களுக்கு தகவல் வந்தால், உடனே காப்பி ரைட்ஸ் பற்றி பக்கம் பக்கமாக எழுதி, உருக்கமாக பழைய கதைகளைச் சொல்லி, அவர்களை வன்மையாக கண்டிக்கும் நீங்கள், டெக்ஸ் வில்லர் என்ற பிராண்டைத் தாங்கிய டீ ஷர்ட்டுடன் பலர் நீங்கள் அதிகார பூர்வமாக நடத்தும் காமிக்ஸ் சந்திப்பிற்கு வந்ததைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? அது ஏன்? அது மட்டுமல்ல, அவர்கள் அந்த அதிகார பூர்வமில்லாத கள்ள டீ ஷர்ட் அணிந்து வந்த நிகழ்வை பெருமையுடன் உங்கள் தளத்திலேயே போட்டோ வேறு போட்டுக்கொள்கிறீர்களே? அது எப்படி ஐயா நியாயம் ஆகும்? இது copy rights violation தானே?

    சமீபத்திய ஐரோப்பிய நாட்டு காப்பிரைட் சட்டங்களின் ஷரத்துகளின் படி, இப்படி ஒரு முறைகேடு நடக்கிறது என்றால், அதைப்பற்றி அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர் என்ற முறையில் தகவல் சொல்ல வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்? அது உங்களுக்கே மறந்து விட்டதா என்ன?

    ஆக, உங்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் ஒரு செயல் நடந்தால், அது (மட்டும் தான்) சட்டப்படி குற்றம். உங்களுக்கு சம்பந்தமில்லாத, ஆனால் உங்கள் பொறுப்பின் கீழ் வரும் ஒரு காபிரைட் முறைகேடு நடந்தால், அதை நீங்கள் போட்டோ எடுத்து உங்கள் பிளாகில் பெருமையாக போடுவீர்கள். அவர்களோடு நிறு போட்டோவிற்கு போஸ் கூட கொடுக்கலாம் (https://lion-muthucomics.blogspot.in/2016/08/blog-post_7.html) அப்படித்தானே?

    ReplyDelete
    Replies
    1. Arun SowmnyaNarayan : யோசியுங்கள் அருண்....இன்னும் நிறைய கேள்விகள் தோன்றுவது போலவே அவற்றிற்கான பதில்களும் தோன்றும் !

      Delete
    2. ஆனால், நிஜத்தின் மீதான பிம்பங்களின் நிழல் விலகும்போது அவற்றுக்கான எண்ணக் குவியல்களை நமது சஞ்சலப்படும் மனது விலகி வைக்க நினைத்தாலும், அதனுடனான உறவு விலகுவதில்லை என்பதுதானே மானுடவியலின் விளக்க முடியாத உண்மை?

      in short, இது பதில் அல்லவே?

      Delete
    3. இரு கேள்விகளிலுமே பதிலும் உள்ள போது - அதனை எடுத்துச் சொல்ல நானெதற்கோ ?

      Delete
    4. வாழ்க்கை நமக்கு விதிக்கும் பல போலியான பிம்பங்களை கட்டுடைப்பு செய்யும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை நமக்கு போதிக்கும் அதே ஆசான், பல சமயங்களில் உன்மையை த்ளிவாக எடுத்துச் சொல்வதில் திகைப்பூட்டும் மர்மங்களை மறைப்பதன் பின்னணி என்ன? என்பதை அறியாத மனிதர்களும் உளரோ? அதை அறிந்திட விரும்புவதின் வேகம்தான் என்னவோ?

      in short, இப்படி காபிரைட் வயலேஷன் செய்வதை நீங்கள் “பன்னீர்” தெளித்து வரவேற்கிறீர்கள் தானே ஜி?

      Delete
    5. Arun Sowmyanarayan : நிறைய பார்த்து விட்டோம் அருண் ; நிறைய படித்து விட்டோம் ; தாண்டி விட்டோம் ! எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்தக் கேள்விகள் இங்கு முன்வைக்கப்படும் என்பதையும் உணர்ந்து விட்டோம் ! இது அத்தகைய இன்னுமொரு வேளை - அவ்வளவே !

      என்னைப் பற்றிய அவரவரின் புரிதல்கள் அவரவரது உரிமைகள் ; நயமானதோ ; நயமற்றதோ - அதனை மாற்றிடவோ ; செப்பனிடவோ முயற்சிப்பானேன் ? என்றும் என்றைக்கோ ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டேன் !

      So என் கட்டுப்பாட்டில் இல்லா விஷயங்களை எண்ணி என் அமைதியை தொலைப்பதற்குப் பதிலாய் - என்னால் செய்யக்கூடியவற்றுள் கவனத்தைத் தந்து நகர்கிறேன் !

      Delete
    6. ஆங்....சொல்ல மறந்து விட்டேனே .....நமது ஈரோட்டுச் சந்திப்பின் போட்டோக்கள் ஏற்கனவே போனெல்லியுடன் நாம் பகிர்ந்துள்ளோம் ! இங்குள்ள TEX உற்சாகத்தை விலாவாரியாய்க் கேட்டுது தெரிந்தும் கொண்டுள்ளனர் !

      Delete
    7. let me be very honest with you, sir.

      சில கேள்விகளுக்கு இப்படி இலை மறைவு, காய் மறைவாகப் பதில் சொல்வதன் பின்னணி எனக்கு சுத்தமாக புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. You need to call a spade a spade.

      இது உங்களைப் பற்றிய எனது புரிதல் தான். ஆனால், அந்தப் புரிதல் சரியாக இருக்கும்போது அதை நீங்கள் மாற்ற இயலாது. ஆனால், அது தவறாக இருக்கும்போது அதை புரியவைக்க வேண்டியது உங்கள் கடமைதானே? மேலும் நான் கேட்டிருப்பது இதுவரையில் நீங்கள் பதில் சொல்லி, சொல்லி சலித்துப் போன கேள்விகள் அல்லவே? மிகவும் புதியதொரு விஷயம். ஆகவே உங்கள் விளக்கம் எனக்கு தேவை (of course, பதிலளிக்காமல் skip செய்வது உங்கள் உரிமை).

      ஆனால், அப்படி நீங்கள் பதிலளிக்காமல் போனால், ஒரு கருத்தாக்கம் எழும். அதை நீங்கள் தடுக்கவே இயலாது.

      அதாவது, உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அஞ்சலில் தகவல் தெரிவித்து, அது உங்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களாக இருந்தால், அவர்களை நோக்கிய உங்கள் கோபமான வெளிப்பாடு அடுத்த பதிவில் வரும். ஆனால், அதுவே இதுபோன்ற கேள்விகள் எழும்போது, அதற்கு கொள்கைரீதியிலான, நேரடியான பதில்கள் வராது.

      மேலே இருப்பது கொஞ்சம் முரட்டுதனமான scaleலில் இருந்தாலும், தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இந்த நிலைப்பாட்டையே அளிக்கிறது. you have to digest some hard facts.

      Delete
    8. //ஆங்....சொல்ல மறந்து விட்டேனே .....நமது ஈரோட்டுச் சந்திப்பின் போட்டோக்கள் ஏற்கனவே போனெல்லியுடன் நாம் பகிர்ந்துள்ளோம் ! இங்குள்ள TEX உற்சாகத்தை விலாவாரியாய்க் கேட்டுது தெரிந்தும் கொண்டுள்ளனர் !//

      இதற்கு இது பதில் அல்லவே? நான் கேட்டது மிகவும் சிம்பிளான இரண்டு கேள்விகள்:

      1. merchandising rights
      2. T Shirts with Tex logo / image printed and prominently used in Official Meet of Lion Comics.

      Delete
    9. அவை hard facts -ஆ ? நான் அவற்றைப் புரிந்திட வேண்டுமா ? உங்கள் புரிதல்களை மாற்றிடும் அவசியமுள்ளதா எனக்கு ? என்ற தீர்மானங்களை நானே செய்து கொள்கிறேனே ?

      And விவாத மேடைகளெல்லாம் இங்கே எழப் போவதில்லை - simply because "சிவாஜி செத்து விட்டாரா ? " என்ற அறியாமையில் காலமாய் உழன்று வந்தவன் நானே தவிர - இங்குள்ளோர் அல்ல ! So we will choose to just walk on...!

      கஷ்டப்பட்டு என்னிடம் பதில் வாங்க முனைந்திடும் நேரத்துக்கு கேள்வியினை எழுப்பக் கோரியவரிடமே எனது பதிலும் என்னவாக இருந்ததோ ? என்று கேட்டு விடலாமே ?

      Delete
    10. சிம்பிளான பதில் அருண் : போனெல்லியிடமிருந்து இது தொடர்பான பதிலை இங்கே வெளியிட்டால் விஷயம் புரிந்து விடும். And அதனைச் செயல்படுத்திட எனக்கு 2 நொடிகளே தேவை ! ஆனால் அது எனக்கும் எனது principal -க்கும் இடையிலானதொரு சேதி பரிமாற்றம் என்பதால் - அது private ஆகவே இருந்திடும் !

      Thanks in advance for understanding !

      Delete
    11. அடப்போங்க சார்,

      புரியவே இல்லை, இதில் //Thanks in advance for understanding !// வேறு. இதுக்கு நீங்க பதில் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.

      இருந்தாலும், இங்கே ஒரு கேள்வியை கேட்டுத்தான் வைப்போம் (பதில் வரவில்லையென்றாலு, situationனின் கனத்தை lighter toneக்கு மாற்ற உதவட்டுமே?)

      //ஆனால் அது எனக்கும் எனது principal -க்கும் இடையிலானதொரு சேதி பரிமாற்றம் என்பதா// principle ஆ? இல்லை, உங்கள் கல்லூரி principalஆ?

      Delete
    12. சத்தியமாய் இதுவும் lighter தொனி மாற்றத்துக்கே அருண் :

      PRINCIPAL : noun
      1.the most important or senior person in an organization or group.
      Example : "a design consultancy whose principal is based in San Francisco "

      synonyms:boss, chief, chief executive (officer), CEO, chairman, chairwoman, managing director, MD, president, director, manager, employer, head, leader, ruler, controller;

      ஷப்பா...கூகுள் வாழ்க !!

      Delete
  22. இனி எல்லாம் மார்ட்டினே ......

    சத்தியமாக சொல்கிறேன் சார் ...விவரிக்க வார்த்தைகளே இல்லை ....

    நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்னமும் உறையும் அந்த அன்பின் ஏக்கம் பாவப்பட்ட ஜோனாவிடமும் அதீதிமாய் குடியிருந்தது தான் இத்தனை வெறி தாண்டவங்களுக்கும் தூண்டுகோள் ....

    என்ற வரிகளை கண்டவுடன் இந்த கதையின் வில்லனாக பார்க்க பட்ட ஜோனா எனது கண்களுக்கு நாயகனாக தான் அவதானித்தான் ..

    அறிவியல் புனை கதையா ...துப்பறியும் கதையா ...வழக்கமான் மார்ட்டினின் குளறுபடி பயணங்களா இது எந்த வகை என்று சொல்ல தெரியவில்லை சார் ....ஆனால்

    அன்புக்கும் ..அரவனைப்புக்கும் ஏங்காதோர் எவருமுண்டோ இந்த பூமியில் ...

    என்று முடித்தவுடன் ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே அமர்ந்து விட கண்ணில் சில கண்ணீர் துளிகள் ....இரத்த படலம் படித்து முடித்தவுடன் ஒரு வித மன சந்தோசமா அல்லது இனம்புரியா பாரமா என்று தெரியாமல் விழுந்த அதே கண்ணீர் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்பொழுது ....இது மார்ட்டின் கதையில் நிகழும் என்று சத்தியமாக என்னால் இன்னமும் நம்பமுடிய வில்லை....வேறு மொழிகளில் எனக்கு புலமை கிடையாது தான் ...ஆனால் அப்படி இருந்தாலும் சொல்கிறேன் இந்த சாகஸத்திற்கு உங்கள் மொழிபெயர்ப்பின் உயிரோட்டம் வேறு எதிலும் கிடைத்திருக்காது சார் ..

    அட்டைபடங்கள் சுமாராக தோன்றியதால் ஒரு டஸ்ட் கவர் என புதிதாக நுழைத்துள்ளேன் என்று தாங்கள் அறிவித்த பொழுது உங்கள் அலுவலக ஊழியர்கள் நினைத்தார்களோ இல்லையோ உண்மையை சொல்கிறேன் நான் மனதினுள் நினைத்தேன் ..இது தேவையில்லாத வீண் வேலை ...வீண் செலவு ..வீண் கால விரயம் ...வீண் பணி சுமை எதற்கு ஆசிரியருக்கும் இது தண்ட செலவுதானே...அதுவும் மார்டின் இதழுக்கு ஏன் இப்படி என...

    கதையை படித்து முடித்தவுடன் தான் தெரிகிறது சார் ..இது நீங்கள் கதையாசிரியருக்கும் ...ஓவியருக்கும் செய்த மிகப் பெரிய மரியாதை என்று .....

    ஆனால் ஒன்று மட்டும் இந்த மாதம் உறுதி சார் ...ஏதாவது கதம்ப சிறப்பிதழ்கள் வெளிவந்து அதனுடன் தனியாக வேறு இதழ்கள் வந்தாலும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் ....ஆனால் இந்த முறை இந்த மார்ட்டின் சாகஸத்திற்கு ஈரோட்டில் இத்தாலி இதழ் பின் தங்கி விட்டது என்பது எனதளவில் உறுதி சார் ....

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : மார்ட்டினை ரசிக்கும் அளவுக்குத் தலீவர் வளர்ந்துவிட்டாரா ? Awesome !!

      Delete
    2. சார் மார்டினை எதிர்கால புனைகதை ..கிராபிக் நாவல் வரிசையில் எல்லாம் சேர்க்க மாட்டேன் சார் ...பேழையில் ஒரு வாழ் சாகஸம் படித்ததில் இருந்தே நானும் மார்ட்டின் ரசிகனே...:-)

      Delete
  23. படித்த வரையில் கனாவாயின் கதை அருமை பென்னியும் அருமை

    ReplyDelete
  24. கையில் வலி அதிகமானதால் மற்ற கதைகளின் விமர்சனம் அப்புறமாக

    ReplyDelete
  25. சார் நீங்கள் வெற்றி பெற்று வருகிறீர்கள்.....மாயப் போர் முடிவடையப் போகிறது . புல்லுறுவிகள் நீரின்றி திகைப்பது கண்கூடு.....காலத்தின் முன்னே நண்பர்கள் துணையுடன் ......கடந்து வருவதன் வெளிப்பாடு.....முட்டி , மோதி அடங்கட்டும்....தாண்டிச் செல்லும் வல்லமை வந்தே விட்டது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாட்டோம்னு செயல்படும் நண்பர்கள் துணை இருக்கும் போது ...இதெல்லாம் வரமோ

      Delete
    2. எதற்க்காக இவை என்றும் அவர்கள் அறிவார்கள் அல்லவா.....

      Delete
    3. ஹஹஹா...எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்து விட்டால் வாழ்வின் சுவாரஷ்யம் கெட்டுவிடும்....அந்த கேள்விகளின் விடை தேடி ஆனந்தப் படுவோமே....

      Delete
    4. ஹஹஹா...கையில் வெண்ணய வச்சுட்டே நெய்க்கு அலைவது எப்படி....ஒரு அதிரடிப் பாடம்

      Delete
    5. பரணி ஒரு சிறிய திருத்தம் வில்லனாகவே காட்ட முயன்றவர்கள்

      Delete
    6. வாழ்வில் எல்லாமே புரிந்து விடாதே......காலம் கடந்த பின் புரியுமோ.....ஓரிரு நாட்கள சொன்னேன்

      Delete
    7. திரு. ஸ்டீல் க்ளா ஏதாவது வேண்டுதலா? வரிசையாக உங்கள் பதிவு.....!!
      என்னமோ சொல்கிறீர்கள்.ஆனால் என்ன சொல்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை.
      கொஞ்சம் புரியும் படிதான் சொல்லுங்களேன்.
      எனக்கு மண்டையில் மசாலா கம்மி(அதுதான் ஊருக்கே தெரியுமே என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது)

      Delete
    8. ஸ்டீல் & all : .....வேண்டாமே புகையும் கனல்....! தாண்டிச் செல்வோமே சகஜமாய் !

      Delete
    9. சார் என் பதிவில் தவறிருந்தால் மன்னியுங்கள். எந்த உள்ளர்த்தம் இல்லாமல் வந்த பதிவு அது. தவறென்றால் உடனே சுட்டிக் காட்டுங்கள் சார். உடனே திருத்திக் கொள்வேன்.

      Delete
    10. AT Rajan : பொதுவாய் நான் வைத்த கோரிக்கையே அன்றி - உங்களை நோக்கியதல்ல சார் ! கனலை ்அப்போதே மட்டுப்படுத்தி விட்டால் எல்லோருக்கும் நல்லதல்லவா ?

      Delete
    11. உங்களது வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மை சார். சென்ற மாதம் என்னால் எழுந்த கனலை எண்ணி இன்று வரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன் சார். இனி எக்காலத்திலும் அம்மாதிரியான கனல்கள் என்னால் எழாது என்று உறுதியாக கூறுகிறேன் சார்.

      Delete
  26. என்னடா இது....ஈரோடு திருவிழா முடிஞ்சி மூனு நாளாச்சே,ஒண்ணும் பரபரப்பா நடக்கலையேன்னு நினைத்தேன்...நடந்திடுச்சி....நடத்திட்டாங்க...இனி அடுத்த மாதம் புத்தகம் வரும்வரைக்கும் நல்லா பொழுதுபோகும்....கோடான கோடி நன்றி ஏசப்பா...கோடான கோடி நன்றி...:):):):)

    ReplyDelete
    Replies
    1. kannan s : Not at all நண்பரே ! சுவாரஸ்யமான பரிமாற்றம் ! இத்தனை நேரத்தை ஒருவர் செலவிடுவதென்பது தினசரி நிகழ்வல்ல தானே ?

      Delete
    2. யுவா ஹா,ஹா,ஹா,அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.

      Delete
    3. யுவா உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது கொஞ்சம் லேட் ....மகிழ்ச்சிக்கு முன் தான் எப்பொழுதும். நடக்கும் ..இந்த முறை மகிழ்ச்சிக்கு பின் ...;-)

      Delete
  27. @ ALL : நண்பர்களே, ஒரு சின்ன உதவி : TEX போஸ்டர் மையமாய்த் தெரியும் விதமாய் உள்ள போட்டோக்கள் சிலவற்றை உயர் resolution -ல் அனுப்புங்களேன் ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் உள்ளது 13 மெகா பிக்க்ஷல்
      அஅதை அனுப்பவா எடி சார்

      Delete
    2. Tex Sampath : சகலமும் வேண்டாம் ; தேர்ந்தெடுத்த சில ! And வாட்சப்பில் வேண்டாமே - ப்ளீஸ் !

      Delete
  28. ஒரு கணவாயின் கதை ..டெக்ஸ் .வழக்கமான டமால் டுமீல் பாணியில் இருந்து விலகி,வீரத்தை மதிப்பதே உண்மையான வீரத்திற்கு அழகு என்கிற கோட்பாட்டை நோக்கிப் பயணிக்கும் கதை.வெள்ளிகைப்பிடி போட்ட பளபளக்கும் வாள் .லெப்டினென்ட் பியூ டா ன்வில்....குளோரியட்டா கணவாய்..ஜான்சன் பண்ணை..அமெரிக்க உள்நாட்டுப் போர் ..எதிரிகளையும் நண்பர்களாக்கும் சூழ்நிலை டெக்ஸ் வீர தீர செயல்களை டான் வில்லுக்கு வி ட்டுக் கொடுத்துவிட்டு பெருந்தன்மையுடன் பின்னணியில் நின்று கொள்ள தலையின் ரசிகர்களாகிய நாமும் அந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு கதை போக்கிலேயே ஒன்றி விடுகிறோம்.பிளாஷ் பேக் முடிவடையும் போது கதையும் முடிவடைகிறது.விரைவிலேயே உள்நாட்டுப் போர் கதை ஒன்றில் டெக்ஸ் டைகர் இணைந்து சாகசம் நடத்தும் காலம் வரத்தான் போகிறது

    ReplyDelete
  29. @ ALL AGAIN : இன்னுமொரு MASSIVE விஷயம் (அங்கீகாரம் என்றும் சொல்லலாமோ ?) பற்றி ஈரோட்டில் வாய் திறக்க எண்ணியிருந்தேன் ; ஆனால் நேரமில்லாது போய் விட்டது !

    கொஞ்சம் ஸ்பெஷல் ஆக இன்னொரு வேளை மலரும் போது வாயின் மீதுள்ள பெவிகால் பூச்சைக் கழுவிடுகிறேனே !

    ReplyDelete
    Replies
    1. Massive Matter????? Editor, sounds interesting

      Delete
    2. ஆகஸ்டு 15சுதந்திர தின ஸ்பெசல் பதிவுல போட்டு தாக்குங்கள் சார்...

      Delete
    3. இப்படி அரைகுறையா எதையாவது சொல்லி நம்ம மண்டைய காயவைக்கிறது உங்க வழக்கமா போச்சு சாா்.

      Delete
    4. வாயின் மீதுள்ள பெவிகால் பூச்சை நீக்கி விட்டு சுக்கு கஷாயத்தை குடித்துவிட்டு அப்படியே அது என்ன விஷயம் என்று ஒரு சின்ன கோடு போடுங்கள் சார். நாங்கள் ரோடு போட்டுக் கொள்கிறோம்.
      "அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே" வடிவேல் ஜோக்கைப் போல் விஷயத்தை சொல்லாமல் இப்படி எதையாவது சஸ்பென்சாக சொல்லி எங்கள் மண்டையை (சொரிந்து சொரிந்து)ரணகளமாக ஆக்க வைப்பதே வழக்கமாகி விட்டது சார் உங்களுக்கு.

      Delete
    5. ஆஹா ...இன்னொரு இன்ப அதிர்ச்சியா ....அடுத்த பதிவில் சார் ...ப்ளீஸ் ....

      Delete
    6. :):):)
      ஆஹா எடிட் இப்படியெல்லாம் தவிக்கவிடறீங்களே

      Delete
    7. @ FRIENDS : ஒரு பதிவில் தாண்டிச் செல்லும் சேதியாய்ச் சத்தியமாய் இதனைப் பார்க்க இயலாது ! அதற்கென வாகாய் ஒரு தருணத்தை எதிர்நோக்குவோம் ! அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் ! இன்று இங்கே எழுப்பப்பட்ட சில வினாக்களுக்கான பதிலின் ஒரு பகுதியும் அதனுள் புதைந்து கிடைப்பதாலேயே - என் பெவிகாலைத் தாண்டி லேசாய் வாயைத் திறந்து தொலைத்தேன் ! Sorry about that !!

      இரகசியம் கேட்கத் துடிப்பது போலவே - இரகசியத்தைச் சொல்லாது இருப்பதும் ஒருவிதப் பிடிவாதத் தவமே !

      Delete
    8. //ஒரு பதிவில் தாண்டிச் செல்லும் சேதியாய்ச் சத்தியமாய் இதனைப் பார்க்க இயலாது ! அதற்கென வாகாய் ஒரு தருணத்தை எதிர்நோக்குவோம் !//

      ahem...!

      waiting edit.

      Delete
    9. // இரகசியம் கேட்கத் துடிப்பது போலவே - இரகசியத்தைச் சொல்லாது இருப்பதும் ஒருவிதப் பிடிவாதத் தவமே //

      வெய்ட்டறோம் சார்

      Delete
    10. ரகசியத்தை நான் ஊகித்து விட்டேன் நண்பர்களே....
      அது...
      அது...
      அது...

      மிக நீஈஈஈஈஈஈண்ண்ண்ண்ட்ட நாள் நம்முடைய கோரிக்கை தான் அது.

      டெக்ஸ் வில்லர் காலண்டர், டீசர்ட் கேட்டோம் அல்லவா...!!!!

      மற்ற நாடுகளில் இதற்கான கட்டணம் மிக மிக அதிகம் என ஆசிரியர் தெரிவித்து இருந்தார். இப்போது...
      நம் கூட்டம் சிறியதாக இருந்தாலும் நம் டெக்ஸ் காதல் மவுன்ட் எவரெஸ்ட் உயரம் என இப்போது போனெல்லி நிறுவனம் தெரிந்து கொண்டு இருப்பார்கள் உறுதியாக....

      வெரி வெரி வெரி ஸ்பெசல் எக்ஸப்சனல் ஆக நமக்கு டெக்ஸ் காலண்டர் , டீசர்ட், கீசயின் என அடித்து கொள்ள அனுமதி தந்து இருப்பார்கள்...
      இது ஒரு பதிவில சொல்லும் விசயம் கிடையாதே, நம் ஆசிரியரின் பல்லாண்டு முயற்சி எப்படி பலித்தது என அவர் வாயால் சொல்ல கேட்பது தான் அதற்கு ஞாயம் செய்யும் செயல். ஏனெனில் இது நம் காமிக்ஸ் வளர்ச்சியில் மிக மிக முக்கியமான மைல் கல்.
      இந்த விசயத்தில் என் லயன் சென்சுரி ஸ்பெசலை பந்தயம் வைக்க நான் தயார்...

      Delete
    11. ///
      கொஞ்சம் ஸ்பெஷல் ஆக இன்னொரு வேளை மலரும் போது வாயின் மீதுள்ள பெவிகால் பூச்சைக் கழுவிடுகிறேனே !
      ///

      ///
      கொஞ்சம் ஸ்பெஷல் ஆக இன்னொரு வேளை
      ///

      ///
      கொஞ்சம் ஸ்பெஷல் ஆக
      ///

      ///
      கொஞ்சம்
      ///

      யோசியுங்கள் நண்பர்களே யோசியுங்கள்... கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு ஸ்பெஷ௬ல் வேளையை யோசித்துச் சொல்வது அவ்வளவு கஷ்டமா நமக்கு?

      எதுவுமே மாட்டலைன்னா சொல்லுங்க, நம்ம தலீவருக்கு ரெண்டாங் கல்யாணம்னு அறிவிச்சுடலாம்! ( இதைப் படிச்சவுடனே தலீவரின் முகத்தில் வெட்கத்தைப் பார்க்கணுமே...!) :P

      Delete
    12. @சேலம் Tex விஜயராகவன்
      சஸ்பென்ஸ் போட்டு உடைக்கிறீங்க (நிஜமாவா சகோதரரே)

      இதை எல்லாம் முன் கூட்டியே சொல்லிடீங்கன்னா திரில்லர் போய் விடும் (நன்றிகள் பல)

      Delete
    13. புது கதை PERMISSION கிடைத்ததோனு நினைச்சேன் ...! LETS WAIT AND SEE.

      Delete
  30. Martin art looks handsome. The story too quiet awesome.

    ReplyDelete
    Replies
    1. சிம்பா : கடைசி வரிசையில் அமர்ந்திருந்தீர்கள் ; அப்புறம் காணாது போய் விட்டீர்களே சார் !

      Delete
    2. ஹி ஹி ஹி ... சார் எதோ ஒரு தைரியத்தில் உள்ள வந்துட்டேன். மைக் கையில் வரும்போதே எனக்கு பியூஸ் போய்டுச்சு... அப்புறம் பரீட்சை வேற சொன்னீங்களா , அதான் சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகிட்டேன்..

      Delete
  31. ஈரோட்டில் இத்தாலியை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விட முடியுமா?உண்மையிலேயே குண்டு புக் என்றதும் மகிழ்ச்சி ஆனால் டைலன் டாக்கும் மேஜிக் விண்டும் சேர்ந்து ஒரே புத்தகத்திற்குள் என்றதும் ஆசிரியரின் வியாபார தந்திரம் என்றே நினைத்தேன்.அவ்வளவு தூரம் இரண்டு கதைகள் மீதும் எனக்கு அவ நம்பிக்கை..ஆனால் இந்த முறை என்னுடைய வோட்டு நூத்துக்கு நூறு டைலன் டாக் கதைக்குத்தான் ..இந்த மாதிரி கதைகளை ஏன் முதலிலேயே போடவில்லை?அற்புதமான கதை..கிரௌச்சோ வின் நகைச்சுவை குறிப்பாக 254ம் பக்கத்தில் இப்போதே சுட்டுக்கொள்ளலாமா அல்லது எம கண்டம் முடிந்த பிறகு நம்மை நாமே சுட்டுக் கொள்ளலாமா ஏன்னு கேட்கும் இடத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது ..ஒரு இடத்தில் கூட தொய்வு என்பதே இல்லை சூப்பர் செலக்சன் சார்..

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : க்ரௌவுச்சோ வழக்கமாய் போடும் மொக்கை - மரண ரகம் என்பது நாமறிந்தது ! ஆனால் இம்முறை அவனும் கதை முழுக்க சீரியஸாய்ப் பயணப்பித்தால் - அவனின் கடிகளை சற்றே மட்டுப்படுத்திட நினைத்தேன் ! Glad it worked !

      Delete
  32. மேஜிக் விண்ட் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார் ..புல்வெளிப் பூக்கள் என்கிற பெயர் தாங்கிய இலஞ் சிட்டுப் பாடகிகள் குழு..மோர்மன்கள் குடியிருப்பு நோக்கிய பயணம் இடையில் செவ்விந்தியத் தாக்குதல் .ஹீரோவும்,நண்பனும் உதவ மர்மமான பயங்கர பிராணி ஒன்றின் அட்டகாசத் தாக்குதல்.ஒன்றிரண்டு கிளுகிளுப்பு சம்பவங்கள் ..மேஜிக் விண்ட் பயங்கர மிருகத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை குழப்பம் இல்லாமல் அட்டகாசமாய் சொன்ன கதை ..டைலன் டாக் போட்டியில் முந் திக் கொள்ளாமல் இருந்திரு ந்தால் மேஜிக் விண்ட் முத்லிடத்தைப் பிடித்திருப்பார் .ராபின் கதை ஒரு வள வளா பேச்சுக்கள் நிரம்பிய திருஸ்டிப் பொட்டு ..அவ்வளவு பயங்கரத் திட்டம் போடும் வில்லன் ..ரஸ் மோர் மலையில் செதுக்கப்பட்டுள்ள பிரசிடென்ட்களின் முகச்சி லையை வெடி வைத்து தகர்ப்பதே திட்டம் என்னும் போ து கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போல் தேவையே இல்லாமல் ராபினின் பகையைத்தே டிக் கொள்வானா ?கதை சுமாருக்கு மேலே சூப்பருக்கு கீழே .மொத்தத்தில் கபாலி படம் பார்த்த உணர்வு ..

    ReplyDelete
  33. //private ஆகவே இருந்திடும///--அது உங்கள் நிறுவன உள்விவகாரங்கள் சார்.
    ஆனால்,
    நண்பர்கள் செய்த இந்த விவகாரம் உங்களுக்கு ஏதும் இடையூறை கிளப்பி விட்டதா என அறிந்து கொள்ள எங்களுக்கு தடை ஒன்றும் இல்லையே சார்..அந்த போட்டோக்களை பார்க்கும்போது எங்களுக்கு மனசு உறுத்துமே, ஆசிரியருக்கு நம் ஆர்வத்தால் சங்கடம் ஏதும் எதிர்கொள்ள வேண்டியதாகிற்றா என...
    ஆம் , இல்லை என ஒற்றை வார்த்தை பதில் போதும் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : Not at all ! அடுத்த சந்திப்பின் போது மறவாது என் வாயைக் கிளறுங்கள் ; நிதானமாய்ச் சொல்கிறேன் ! நேரில் உரையாடும் நேர்த்தியே தனி தானே ?

      Delete
    2. // அந்த போட்டோக்களை பார்க்கும்போது எங்களுக்கு மனசு உறுத்துமே, ஆசிரியருக்கு நம் ஆர்வத்தால் சங்கடம் ஏதும் எதிர்கொள்ள வேண்டியதாகிற்றா //

      + 1

      Delete
    3. நிச்சயமாக சார்...
      சுவாரஸ்யமான விசயமாக இருக்க போகிறது இது என்பதில் துளியும் ஐயமில்லை சார்...
      மனதில் எழுதி விட்டேன், தலீவருக்கு நோட்டு, எனக்கு மனசு...

      Delete
  34. மறக்க முடியா மர்ம மனிதன் மார்ட்டின் ..ஐசக்..சாரா..எகிப்தின் பத்து சாபங்கள்.ஒரு பாவமும் அறியாத பாமர மக்கள்.. அறிவாளிகள் அவமானப் படுத்தப்பட்டால் அவதரிப்பார் ஜோனா ..பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு அளவு கடந்தால் அமிர்தமும் நஞ்சாம் ..இங்கே அளவு கடந்த விஞ்ஞான அறிவு அழிவுப் பாதைக்கு இ ட்டு செல்லும் அவலம் மனிதாபிமானமே இறுதியில் வெல்லும் என்பதைக் காட்டும் கதை.சூப்பர்
    சுட்டிப் பையன் பென்னி வருகைக்கு நன்றி அடுத்த சாகசத்தில் சந்திக்கலாம்

    ReplyDelete
  35. சார் அனைத்து இதழ்களும் படித்து ஆயிற்று ...ஈரோட்டில் ஒரு அன்பு நண்பர் சொன்னது போல நாலே நாள்ல ( அதுவும் குண்டு புக்கா இருந்தும் ) எல்லாம் முடிந்து விட்டது ....


    இனி என்ன செய்ய....:-(

    ReplyDelete
  36. குண்டு இத்தாலியில் டைலன் டாக் முதலிடத்தை பிடிக்கிறார் ...அட்டகாசமான வர்ண சேர்க்கை ....பரபரப்பான திரைக்கதை என படு வேகமாக செல்கிறார் ....முழு திருப்தி


    இரண்டாம். இடத்தை பிடிப்பவர் மேஜிக் வின்ட்...மனதை கவர்ந்த படைப்பு ....தயங்காமல் இவரை தொடரலாம் சார் ...

    மூன்றாம் இடத்தை பிடிப்பவர் ராபின் ....காதலியை கடத்திய விசயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருக்க ராபின் பாடுபட அவரின் உயரிதிகாரிகள் அக்குவேறு ஆணிவேறாய் ராபினுக்கே தகவல் கொடுக்க...அவர்களும் விசயத்தை மறைக்க நினைக்க ..அவர்களின் மேலதிகாரிகளும் விசயத்தை பட பட என தெரிவிக்க என ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு....:-)

    டெக்ஸ் .....

    கார்ஸன் அவர் மகன் இருவரும் கெளரவ வேடத்தில் கலக்க தென் அமெரிக்கா ..வட அமெரிக்கா உள்நாட்டு போர் என ஒரு டைகர் கதைக்கு உண்டான சாகஸத்தில் டெக்ஸ் இதில் ...:-)

    இது ப்ளஸ்சா ...மைனசா என்பது அவரவர் விருப்பத்தின் படி ....என்னை பொறுத்த வரை கணவாயின் கதை கடுகு தான் காரமும் கொஞ்சம் குறைவு தான் ...:-)

    ReplyDelete
  37. We believe in U Sir :)

    ஊருக்கு வந்த சேர்ந்த பிறகு அம்மா இங்கு எப்போது புக் வரும்னு கொஞ்சம் தோய்ந்த குரலில் கேட்டார்
    நான் சொன்னேன் கவலை படாதீங்க , ஆசிரியர் புக் தந்துள்ளார் , கட்டணத்தை கோவையில் வழக்கமாக வாங்கும் புக் ஸ்டாலில் கொடுத்துக்கு சொன்னார் என்று
    அம்மா ஆச்சிரியத்திலும் சந்தோசத்துக்குலும் ஆட்பட்டாங்க

    ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. கடல்யாழ்9 : வெறும் ஐ.டி.-க்களாக உலவும் வரையறைகளைத் தாண்டி - நேரடி அறிமுகங்கள் சாத்தியமாகும் போது நம்பிக்கையும் ஒரு மாற்று தூக்கலாகிப் போவது இயல்புதானே ரம்யா ? அம்மாவுக்கொரு "hi " சொல்லுங்கள் நம் சார்பில் !

      Delete
    2. @Vijayan
      உள்ளே வந்ததும் சகோதரர் மாயாவி சிவா அவர்கள் என்னை தங்களிடம் அறிமுகப்படுத்தியதும்
      தாங்கள் என்னிடம் பேசினீர்கள் , அப்போது என் மண்டையில் ஓடியது
      நாம ரொம்ப நாளாக சந்திக்கும்னு ஆவலில் எதிர்பார்ப்பில் இருந்த ஆசிரியர் நம்மிடம் பேசுகிறார் நம்ம கிட்ட பேசுகிறார், நம்ம கிட்ட தான் பேசுகிறார் .....
      எவ்வளவு நன்றாக் நம்மிடம் பேசுகிறார் , ரொம்ப நாளாக பழகுனா சொந்தம் போலவே பேசுகிறார்.........Awesome
      அப்போது என்னால் புன்னைகை ஒன்றை மட்டுமே பதிலாக தர முடிந்தது

      தங்களை பற்றி தெரிந்ததால் இருந்து ரொம்ப வருடங்களாக தங்களை சந்திக்கும் வேண்டும் என்ற கனவு உருவாகியது
      நெடு நாள் கனவு அன்று நிறைவேறியத்தில் ஆனந்தம் பல :)))))))))))

      Delete
    3. @Vijayan Sir
      எல்லாரும் உங்களை கேட்டாங்க சொன்னதும்
      அம்மா கொஞ்சம் வருத்தம் ஆகி போய் விட்டது
      வேலை இருந்ததால் வர இயல வில்லை என்றார்
      கண்டிப்பாக அடுத்த தடவை வர முயற்சிக்கிறேன் என்று கூறினார் :)

      Delete
    4. அட்டகாசம் எடிட்டர் சார்!

      Delete
    5. கடல்யாழ்9 : ரம்யா...! "எடிட்டர்" என்ற குல்லாயை நான் larger than life ஆக எடுத்துக் கொள்ளின் - அதுவொரு சுமையாகிப் போய் விடும் ! தள்ளாட்டமும் தலைகாட்டி விடும் ! மேனேஜர் ; கேஷியர் ; பிரிண்டர் என்ற ரீதியில் இதுவுமொரு பதவி மட்டுமே என்று நினைக்கத் தொடங்கினால் - எல்லாமே இலகுவாய்த் தெரியும் ! சில வருடங்களுக்கு முன்பே இதனைப் புரிந்து கொண்டேன் - so சகஜமாய்ப் பேசிட முடிகிறது ! உள்ளுக்குள் லைட்டாய் பேஸ்மெண்ட் நடனம் ஆடுவது உண்டுதான் ; but - வெளியில் காட்டிக் கொள்வதில்லை !

      Delete
  38. நான் வார இறுதியில் தான் புக்ஸ் பக்கம் செல்வேன்
    இந்த தடவை படித்து விட்டு கமெண்ட்ஸ் போடுறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. THUMBS UP படங்கள் நிறைய !

      Delete
  39. சேலம் தல
    எனக்கென்னவோ அதில் சிக்கல் இருந்திருந்தால் ஆசிரியர் உடனடியாக தெரிவித்திருப்பார் என்றே தோன்றுகிறது. பணம் பார்க்கும் நோக்கத்தோடு உழைப்பை உறிஞ்சும் திருடர்களுக்கும் மற்றும் அன்பு மிகுதியில் தனக்கு பிடித்த ஹீரோவை இதயத்தில் சும்ப்பதோடு சட்டையிலும் ஒட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கும் விதயாசம் தெரியாதவர்களா படைப்பாளிகள்?

    ReplyDelete
    Replies
    1. Mahendran Paramasivam : Oh wow !!

      Delete
    2. //இதயத்தில் சும்ப்பதோடு சட்டையிலும் ஒட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கும் விதயாசம் தெரியாதவர்களா படைப்பாளிகள்?///
      உண்மை மஹி ஜி...😁😁😁

      Delete
    3. // அன்பு மிகுதியில் தனக்கு பிடித்த ஹீரோவை இதயத்தில் சும்ப்பதோடு சட்டையிலும் ஒட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கும் //

      செம்ம M V ஜி

      Delete
    4. மகேந்திரன் சார்.!

      "ஒரு வார்த்தை சொன்னாலும் திருவாசகம் சார்.! "

      Delete
    5. Sorry

      திருத்தம் M P JI

      Delete
    6. // பணம் பார்க்கும் நோக்கத்தோடு உழைப்பை உறிஞ்சும் திருடர்களுக்கும் மற்றும் அன்பு மிகுதியில் தனக்கு பிடித்த ஹீரோவை இதயத்தில் சும்ப்பதோடு சட்டையிலும் ஒட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கும் விதயாசம் தெரியாதவர்களா படைப்பாளிகள்//

      WELL SAID MP SIR!

      Delete
    7. // பணம் பார்க்கும் நோக்கத்தோடு உழைப்பை உறிஞ்சும் திருடர்களுக்கும் மற்றும் அன்பு மிகுதியில் தனக்கு பிடித்த ஹீரோவை இதயத்தில் சும்ப்பதோடு சட்டையிலும் ஒட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கும் விதயாசம் தெரியாதவர்களா படைப்பாளிகள்//


      அருமையா...அட்டகாசமாய் சொன்னீர்கள் மஹி ஜி....சூப்பர் ...

      Delete
  40. #ஈரோடு_புத்தகத்_திருவிழா_(1)

    கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒருவிதமான பரபரப்பு தொற்றிவிட்டது..

    எப்போதடா ஈரோடு செல்வோம் நண்பர்களை, எடிட்டரை பார்ப்போம் என்று !

    அந்த ஒரு வாரமும் புதியதாய் ஏதாவது செய்யலாம் ! என்ன செய்யலாம் ? என்று யோசனைகள் , குழப்பங்கள் வேறு அப்போது எதிர்பாராத விதமாய் உதவிக்கு வந்தார்கள் Tiruppur Kumar & Sivakumar Siva இவர்களின் ஆலோசனைப்படி ஆளுக்கு ஒருவிதமாய் செய்வதென்று முடிவுசெய்யப்பட்டு அவர்களிருவரும் ஒருவர் பனியனும்,
    ஒருவர் டீ-சர்ட் செய்வதாகவும்,
    நான் டேக் & ஸ்டிக்கர் அடிக்கலாம் என்றும் முடிவெடுத்துக்கொண்டோம்
    ( இதில் Ryo Quest என்கிற கடல் யாழ் - ன் + Mayavi Siva அண்ணணின் உதவிகளும் உண்டு )

    06-08-2016 சனி அன்று அதிகாலையிலேயே இம்மாதத்திற்க்கான எனக்கான புத்தகங்களை கொரியர் ஆபீஸில் பெற்றுக்கொண்டு ஸ்டிக்கர் கடைக்குச் சென்றால் செம ஷாக்
    அங்கே...
    கடை பூட்டியிருந்தது
    முந்தின இரவு 8 மணிக்கு மனுசன் சத்தியம் செய்து விட்டு போயிருந்தானே !! இன்னும் காணோமே என்ன பண்ணலாம் என பதற்றத்துடன் யோசித்துக் கொண்டிருந்தபோது
    உதவிக்கு வந்தார் Sivakumar siva. தன் கம்பனியில் இரவு வேலையை முடித்துக்கொண்டு
    அவ்வழியே வந்தவர் என்னைப்பார்த்ததும் வண்டியை ம என்னையும் ஓரம் கட்டினார். கடை பூட்டியிருந்த விபரத்தை நான் அவரிடம் சொல்ல அவர் தனக்கு கடைக்காரரைத் தெரியுமென்றும் அவர் வீட்டிற்கு கூட்டிச் சென்றார். அங்கே அப்பொழுதுதான் கடைகாரர் தூங்கி எழுந்திருப்பார் போலிருக்கிறது ( கடைக்காரர் நேற்றிரவு சத்தியம் செய்தபோதே உஷாராய் இருந்திருக்கவேண்டும் என்று உறைத்தது #உபயம்_TN_Tasmac )

    அவரை ரெடி செய்து கடைக்கு கூட்டி வந்து இதர வேலைகளை முடித்து டெக்ஸ் ஸ்டிக்கர் ம அட்டைகளை கையில் வாங்கியபோது தாங்கொண்ணா சந்தோசம் என்னுள்ளே. :) அப்போதே மணி 09.45 ஆகியிருந்தது
    அவசரமாய் ரெடியாகி கிளம்பும்போது 10.25 வழியில் சிவக்குமாரும் அவர் நண்பர் இம்மானுவேல் குமாரும் என்னோடு இணைந்து கொண்டனர்

    நேரத்திற்க்குள் மீட்டிங்கை அட்டண்ட் செய்திடவேண்டும் என்ற ஆர்வத்தில் எனது குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தினேன்
    பெருமாநல்லூர் அருகே ஒரு வாகனத்தை ஓவர்டேக் செய்யும் போது பார்த்தால் எங்கள் வாகனத்தின் எதிரில் டிப்பர் லாரி.
    இன்னிக்கு சங்குதான் தானடி என நினைத்து பயத்தில் உறைந்த மறுவினாடி சுதாரித்து காரை இடதுபுறம் திருப்பியதில் காரின் வலது கண்ணாடி மிரர் மட்டும் லாரியோடு போனது நன்மைக்கே...

    சிறிது நேர ஆசுவாசத்திற்க்குப் பின் கிளம்பும்போது ஒரு போன்கால் நான் மாடஸ்டி பிளைசி பேசுகிறேன் என்று கோவைபாபு கால் செய்தார். அவரையும் விஜயமங்கலம் டோல்கேட்டில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஈரோட்டை நோக்கி விரைந்தோம்..
    ஈரோட்டைத் தொடுவதற்க்குள் மீட்டிங் ஹாலுக்கு வந்து காத்திருந்த நட்புகளின் அழைப்புமணிகள் எங்களுக்கு வர ஆரம்பித்தது.
    எங்க இருக்கீங்க என்று கோபத்துடனும் !!, பாசத்துடனும் !!, அனுதாபத்துடனும் !!.!! கேள்விக்கணைகளாக தொடுத்தனர். அவர்களுக்கு பதில் சொல்லி நேரமானதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஈரோட்டில் இத்தாலியை நோக்கி விரைந்தோம் :) :)

    Erode
    லீ ஜார்தேன் ( என்றால் பூங்கா என்று அர்த்தமாம் ) ஓட்டலை சென்றடைந்ததும் நான் இதுவரை நேரில் பார்க்காத முதல் நட்பு காத்திருந்தார்
    அவர்...........

    ReplyDelete
    Replies
    1. ....சீக்கிரம் தொடரட்டும்.
      டெக்ஸ் கதைகள் அனைத்தும் சேர்க்க நானே உங்களுக்கு தூண்டுதல் என இருநாள் முன்பு தெரிவித்தீர்கள் சம்பத். ரொம்பவே சந்தோசம்...
      இப்போது இந்த விழா விவரிப்புக்கும் என நீங்கள் சொல்லாமலே புரிகிறது...
      தொடர்ந்து கலக்குங்கள்...

      Delete
    2. தொடர நேரமின்மையே காரணம் தல

      ஈரோட்டில் இருந்த அந்த இரண்டு நாட்களும் (மாதத்தின் தொடக்க நாட்களாய் அமைந்த காரணத்தால்)
      எனக்கு கடுமையான வேலைப்பளு

      ஆசுவாசப்படுத்த ஒதுக்கும் நேரங்களில் தொடர்கிறேன்

      தல எவ்வழியோ நானும் அவ்வழி

      Delete
    3. 11 மணி வாக்கில் ப்ளாக் வந்த போது ஏதோ பேச்சு வார்த்தை போய்கிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு, கொஞ்சம் கவலை பட்டேன்
      சகோதரர்கள் ரொம்ப பாசமலர்களாக ஆயிட்டிங்க போல :)

      Delete
    4. அதெல்லாம் , அவ்வப்போது நடக்கும் சகோ...கவலை வேணாம்...

      Delete
    5. சம்பத் அருமை தொடருங்கள்

      Delete
  41. சகோதரரே கண்டிப்பாக எனது வோட்டு பூனை சின்னதுக்கே

    தங்கள் உடல் நலம் எவ்வாறு உள்ளது
    உடல் நலத்தை நன்றாக கவனிக்கவும்
    தங்கள் முகத்தில் எப்பொழுதும் தென்படும் உற்சாகம் குறைந்து காணப்பட்டது :(

    பூனைகள் பிடித்திருக்கா :)))))))))))

    ReplyDelete
    Replies
    1. @ கடல்யாழ்

      உடலின் வேதனைகள் சற்று முகத்திலும் பிரதிபலித்ததால் சற்றே உற்சாகக் குறைவு போல் இருந்திருக்கும்! தற்போது தேறி வருகிறேன்! கனிவான விசாரிப்புகளுக்கு நன்றி சகோ!

      பூனைகள் தற்போது மாயாவியின் மண்டையோட்டு குகைக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் என்னை வந்தடைந்து வாஞ்சையுடன் காலை உரசும்!

      உங்கள் அன்புக்கு நன்றி சகோ! என்ன தவம் செய்தனை... :)

      Delete
    2. :)))))))))))
      மகிழ்ச்சி சகோதரரே :)

      Delete
    3. உள்ளே வந்து கொஞ்ச நேரத்தில் தங்களை காணாது சகோதரர் சேலம் Tex விஜயராகவன் அவர்களிடம் விசாரித்தேன் எங்கே சகோதரர் ஈரோடு விஜய் என்று
      தாங்கள் வந்து கொண்டு இருப்பதாக சொன்னார்
      அப்புறம் கவனித்தீர்களா , நமது சேலம் Tex விஜயராகவன் சகோதரர் சூப்பரான கலரில் சட்டை அணிந்திருந்தார் :D

      Delete
    4. அறைக்கு வெளிச்சமே அவரது சட்டையிலிருந்துதானே வந்தது, சகோ? ;)

      Delete
  42. மாா்டின்:
    கணவில் கூட நனைக்க முடியதஅலவுக்கு கதை எகிப்த் மீது கடவுள் சபம் வட்டது போன்ற வசயங்கள் நன்றக இறுந்தன

    மோத்ததில் மர்ம மனிதன் மாா்டின்
    மயகாரன்

    (+) ஓவியம்
    (+)கதை

    (-)கதைகளம் தான்
    எதற்க்கு என்றால் இப்போது புத்தக விழாவில் புது வாசகா்கள் இதை பாா்த்து வகினாா்கள் என்றால் அதை படித்துவிட்டு கதை புரியாமல் தடுமறுவாா்கள் புரிந்து கொள்ள இரண்டு மட்டம் படிக்கவேண்டும் அது அவா்கள்ளுக்கு வேறுப்பை உண்டாக்கும்

    ReplyDelete
    Replies
    1. சாாி அது "நனைக" இல்லை "நினைக்க"

      Delete
    2. வணக்கம் சகோதரரே, நலமா
      தங்களின் ஞாயிறு காமிக்ஸ் மீட்டிங் எப்பிடி இருந்தது
      ஞாயிறு அன்று வர முடிய வில்லை
      தங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தமே

      Delete
  43. தொடரும் எனது பதிவுகளை ஸ்பாயிலர் அலர்ட்டுடன் இருப்பதாக கருத வேண்டுகிறேன்..............................................

    “”””சையனோபாக்டீரியா என்பது சிவப்பு நிறமான கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி வகையை சேர்ந்த ஒரு பாசி இனம்.வழக்கமாக அவற்றின் இனப்பெருக்கம் மைட்டாசிஸ் என்னும் முறைப்படி நடக்கும்.அதாவது ஒவ்வொரு உயிரியும் இரண்டாக பிளந்து தனித்தனி உயிரிகளாக மாறும்.....’’’

    இது பக்கம் 13 –ல் உள்ள வரிகள்................................
    இதில் உள்ள அனைத்து தகவல்களும் தவறு............................
    /////சையனோபாக்டீரியா என்பது சிவப்பு நிறமான//////
    தவறு................................. சையனோ (cyano) என்ற வார்த்தைக்கு ஊதா அல்லது நீலம் என்ற பொருள்.......சாதாரண மனிதர்களால் இவை நீல- பச்சை பாசி (blue –green algae) என்றே அழைக்கபடுகின்றன....பெரும்பாலானவை நீல பச்சை வண்ணங்களை உடையவை...சிவப்பு நிறம் உடையவையும் உண்டு ....அவை சொற்பமே.....ஒட்டுமொத்தமாக சையனோபாக்டீரியா சிவப்பு நிறம் என அழையாமல் குறிப்பிட்ட இனத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு இருக்க வேண்டும்.{...இதை ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்பதற்கான விளக்கம் பின்னால் வரும்......................}

    உதாரணமாக........................................
    செங்கடல் என்ற பெயர் வர பல காரணங்கள் இருந்தபோதிலும்அதன் ஒரு காரணமான கடல் நீர் சிவப்பாக சில நேரம் சில இடங்களில் காட்சியளிக்க காரணம்
    TRICHODESMIUM ERYTHRAEYUM என்ற சையனோபாக்டீரியா......

    2. /////நுண்ணுயிரி வகையை சேர்ந்த ஒரு பாசி இனம்/////
    அல்லவே அல்ல........பெயரில் பாக்டீரியா என வைத்து கொண்டு அது எப்படி ‘’பாசி’’ யாக இருக்க முடியும்???????
    சையனோபாக்டீரியா ஒரு உண்மையான பாக்டீரியா.....ஒரு செல் உயிரி...
    PROKARYOTES வகையை சேர்ந்தது....
    பாசி என்பது பல செல் உயிரி.....EUKARYOTES வகையை சேர்ந்தது…

    (பாசிகளுக்கும் இதர தாவரங்களுக்கும் உள்ள வித்தியாசம் திசுக்கள் வளர்ச்சி என்பதே...(TISSUE DIFFERENTIATION)…அதாவது தண்டு, கிளை ,வேர் போன்றவை) .
    சாதாரண மானிடர்கள்(LAYMEN) நீல பச்சை பாசி என அழைப்பதை வைத்து ஒரு பாக்டீரியாவை பாசி என அழைப்பது முரண்......


    3. /////வழக்கமாக அவற்றின் இனப்பெருக்கம் மைட்டாசிஸ் என்னும் முறைப்படி நடக்கும்.///////
    ஒரு தவறு அடுத்த தவறுக்கு வித்திடுகிறது.........
    சையனோபாக்டீரியா PROKARYOTES வகையை சேர்ந்தது....என சொன்னேன்
    PROKARYOTES ----- மைட்டாசிஸ் முறையில் ஒருபோதும் இனப்பெருக்கம் செய்வதில்லை....vegetative reproduction -ன் ஒருவகையான BINARY FISSION மூலமாக மட்டுமே இனவிருத்தி அடையும்
    இரண்டிலுமே ஒரு செல் இரண்டாகத்தான் பிரிகிறது...
    ஆனால் BINARY FISSION ஓர் ஆதிநிலை செல் பிரிதல் நிகழ்வு...
    PROKARYOTES-க்கு நியூக்ளியஸ் கிடையாது.....உள்ளிருக்கும் குரோமேட்டின் இழைகள் இரட்டிப்பாகி செல் பிரியும் ..அவ்வளவே...
    மைட்டாசிஸ்-நிகழ்வில் நியூக்ளியஸ் உள்ளிருக்கும் குரோமசோம்கள் இரட்டிப்பாகி ஸ்பின்டில் பைபர்களால் இழுக்கப்பட்டு பின் பிரியும்
    இப்படி இழுக்கப்படும்போது குரோமசோம்கள் வளைந்த நூல் போல் காட்சியளிப்பதால்தான் mitosis என்ற பெயரே இடப்பட்டது...கிரேக்க மூலத்தில் இச்சொல்லுக்கு warp thread எனப்பொருள்.......
    இது ஒரு உயர்நிலை செல் பிரிதல் நிகழ்வு.........................................

    தொடரும்..................................................

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை சகோதரர் Selvam Abirami வரல
      வந்திருந்தா 11 மணியிலிருந்து 2 மணி வரை இவரே பேசி இருப்பாரு
      நான் வணக்கம் கூட சொல்லி இருக்க முடியாது :P

      Delete
    2. தலீவர் & செயலாளர் : பதுங்கு குழியில் ஒரு ஓரமாய் ஒண்டிக் கொள்ள இடமிருக்கா ? :-) :-)

      Delete
    3. ஹா....ஹா...
      நல்லவேளை , +2ல் பயாலாஜி படித்ததால் இப்போது செனா அனா ஜியின் விளக்கங்கள் எளிதாக புரிகிறது...
      இல்லீனா பதுங்கு குழிக்கு என் டோக்கன் நம்பர் 4ஆகி இருக்கும்...
      அருமையான பதிவுகள், தொடருங்கள் செனா அனா ஜி...அப்போது விட்டுப்போன 22மதிப்பெண்களை இப்போது ஈடுகட்டி விடுகிறேன்...

      Delete
    4. எடிட்டர் சார், எனக்கென்னமோ நம்ம செனா அனாவிற்கும், அந்தக் கதையில வர்ற ஐசக் வகையறாக்களும் ஏதோ சம்மந்தம் இருக்கிறா மாதிரியே இருக்கு! :p

      Delete
    5. @ all......:)))

      கடல் யாழ்@ நேரில் பேசும்போது இரண்டு வார்த்தை பேசவே எனக்கு நாக்கு குளறும்...

      @ ஈவி...lol....:)

      Delete
    6. //Vijayan10 August 2016 at 16:50:00 GMT+5:30
      @ all : இரு பதிவுகளுக்கு முன்பாய் - மார்டினின் இந்தக் கதையோடு நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சமயமே -இதனை நண்பர் செனா. அனா. எழுதியிருப்பின் சிறப்பாக இருக்குமென்று நான் குறிப்பிட்டிருந்ததை எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியவில்லை !//

      தங்களின் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தாள் , மார்ட்டின் புத்தகத்தில் புதிரான விளக்கங்களுக்காக,கூடுதலாக இன்னொரு முப்பது பக்கங்கள் தேவை பட்டிருக்கும். பிறகு அந்த விளக்கங்களுக்கு , விளக்கம் தேடி ..... ஹ்ம்ம் ஓ மை கடவுளே....

      ஆமாம் வாதைகள் பத்து தானே... இன்னொன்னு எதுனாச்சும் விட்டுப்போச்சா....

      Delete
    7. @ சிம்பா

      ///ஆமாம் வாதைகள் பத்து தானே... இன்னொன்னு எதுனாச்சும் விட்டுப்போச்சா....///

      விட்டுப் போன வாதைதான் மேலே (செனா அனா மூலமா) கமெண்ட்டா வந்திருக்கு! :P

      Delete
    8. ////ஆமாம் வாதைகள் பத்து தானே... இன்னொன்னு எதுனாச்சும் விட்டுப்போச்சா....///

      விட்டுப் போன வாதைதான் மேலே (செனா அனா மூலமா) கமெண்ட்டா வந்திருக்கு! :P


      ஹா....ஹா...ஹா....செம....enjoyed it......:)

      Delete
    9. //தலீவர் & செயலாளர் : பதுங்கு குழியில் ஒரு ஓரமாய் ஒண்டிக் கொள்ள இடமிருக்கா ?//

      ;D ;P

      டாக்டர் சார் எடிட் ஐயே பதுங்கசெய்த பதிவு!

      Delete
  44. இனி எல்லாம் மரணமே செம்ம சென்ற கதை யான கனவின் குழந்தைகளில் சற்று சோதித்த மார்ட்டின் இம்முறை அசத்தி விட்டார்

    ReplyDelete
  45. மாதம்தோறும் புத்தகத்தாலும் வாராவாரம்
    பதிவுகளாளும் நம்மை மகிழ்ச்சிக்கடலில்
    ஆழ்த்தும் ஆசிரியரை வருத்தம் அடைய செய்ய வேண்டாம் அருண்சௌமி.
    அரசு பதிவு செய்து நியாயமான விலையில்
    உலகத்தரமான கதைகளை நமக்காக வழங்கி
    வருகிறார். இந்த வருடத்தின் சூப்பர் கதை
    மார்ட்டின் என்பது எனது கருத்து

    ReplyDelete
  46. ஈரோட்டில் இத்தாலியில் முதலில் படித்தது
    1. நம்ம சுட்டி பென்னி - Very light read - Tex Sampath சொன்னது போல் அந்த தீவில் நாமும் மாட்டிக்க கூடாதா என்று மனம் ஏங்குகிறது.
    2. Dylan Dog - Simply Super - அதுவும் கிளைமாக்ஸ் எதிர்பாராதது. இந்த கதையின் மூலம் விட்ட இடத்தை Dylan பிடித்து விடுவார்.

    அடுத்து மார்ட்டின்.....

    ReplyDelete
  47. இந்த முறை ஈரோடு காமிக்ஸ் திருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    சனி அன்றே கிளம்பவேண்டி இருந்ததால் அணைத்து நண்பர்களுடனும் உரையாட வாய்ப்பில்லாமல் போனது வருத்தமே. பரணியுடன் (Parani from Bangalore) மட்டும் சிறிது நேரம் பேச முடிந்தது.

    At least சில நண்பர்களுக்கு ஹாய் சொல்ல முடிந்தது
    ஈரோடு விஜய்
    Tex விஜயராகவன்
    மாயாவி சிவா
    France Hassan
    மயிலை ராஜா
    சங்கர் (?)

    அந்த இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை, மிக சுவாரசியமாக சென்றது. எடிட்டோருக்கு நன்றிகள் இந்த காமிக்ஸ் get together organize செய்ததிற்கு.

    புத்தக திருவிழா நான் எதிர்பார்ததை விட சிரியதே, நம்ம காமிக்ஸ் ஸ்டாலில் உற்சாக விற்பனையை பார்த்ததில் ஒரு ஆனந்தம்.

    ReplyDelete
    Replies
    1. @ V. Karthikeyan

      உங்களிடம் ஒரு 'ஹாய்'யை தாண்டி அதிகம் பேசமுடியாதது எனக்கும் வருத்தமே!

      கி.பி 2018ல் இது 'வார விழா'வாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது! :)

      Delete
  48. அன்புள்ள ஆசிரியருக்கும், மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள் பல. இன்னும் ஊருக்கு ேபாய் சேராததால், நி றைய எழுத ஆசைப்பட்டும் முடியவில்லை. மன்னிக்கவும். ஆனால் உங்கள் அன்பு மழை வாழ்வில் என்றும் மறக்க முடியாதது.

    ReplyDelete
    Replies
    1. இம்முறை ரொம்ப, ரொம்ப, ரொம்ப உற்சாகமாக இருந்தீர்கள் ஹசன் ஜி! ( போனமுறை ஃபேமிலியோட வந்திருந்தீங்க)

      மகிழ்ச்சி! :)

      Delete
    2. தங்ளை நேரில் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஹசன் ஜி

      Delete
  49. வாதைகள் தொடர்கின்றன.....சுருக்கமாக....:)

    2.பக்கம் 79-ல் கார்டியோபல்மோனரி பைலேரியாசிஸ் விலங்குகளில் ஈக்கள் மூலமாக பைலேரியாசிஸ் மனிதர்களில் ஒட்டுண்ணிகள் மூலமாக பரவுவதாக உள்ளது.....
    தவறு ....இரண்டிற்கும் காரணம் ஒட்டுண்ணிகள்தான்....
    இரண்டுமே கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவ இயலும்..

    ReplyDelete
  50. பக்கம் 101
    அனிமோபிலஸ் கிருமிகள் என்ற சொல்லாக்கம் இடம் பெற்றுள்ளது....
    நான் தேடியவரையில் அனிமோபிலஸ் என்ற பதம் தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கான ( anemophilous,hydrophilous,zoodoidophilous) மூன்று வழிகளில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது
    இது இந்த ஒரு செயலுக்கான பிரத்தியேக உபயோகத்திற்கான சொல்லாக தெரிகிறது.....
    இந்த பக்கத்தின் உரையாடல்கள் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை.....சம்பவம் என்னதென்று புரிகிறது....

    ReplyDelete
  51. பக்கம் 13-ல் ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பில் சிறு பிழை உள்ளது....ஆனால் அதற்கான விளக்கம் மிக நெடியது.

    எனவே அதனை விட்டு விடுகிறேன்.....( நிம்மதி பெருமூச்சு விடலாம்)

    கதை நெடுகிலும் கதாசிரியரின் கற்பனையும் யதார்த்தமும் கலந்த சிந்தனை போக்கினை எண்ணி வியக்காமல்
    இருக்கமுடியவில்லை...அவற்றை இங்கு சொல்ல விரும்பினாலும்நீண்டதொரு பதிவாக இது மாறிவிட கூடும்....

    ReplyDelete
    Replies
    1. @ செனா அனா

      மேற்கண்ட உங்க விளக்கங்களையெல்லாம் முக்கி-முனகி படிச்சதுக்கப்புறம், நீங்க ஒரு கதை எழுதினா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்தேன்... பயங்கரம்!!! காலங்காத்தால வியர்த்துக் கொட்டிடுச்சு எனக்கு!! :O

      Delete
    2. ஒரு கதை எழுதி உங்க ஈமெயிலுக்கு அனுப்ப போறேன்....

      வேணான்னா....

      ரட்ஜாகிட்ட வாங்கின லயன் MDS -ஐ இந்த பக்கம் தள்ளுங்க...:)

      Delete
  52. EV ஜீ ... மேலே உள்ளது போல கேள்விகளுக்கு வேணும்னா அவர் கிட்ட பதில் இருக்கலாம்... ஆனால் காரை வச்சிருந்த சொப்பன சுந்தரியை... போன்ற கேள்விகளை தொடுத்து அடுத்த சந்திப்பின் போது நண்பர் செனா. அனாவை செயல் இழக்க செய்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா....ஹா...ஹா....சிம்பா..

      இது நியாயமா?? வேலை செஞ்சுட்டு இருக்கும்போது இப்படி சிரிக்க வைக்கிறீங்களே....ROFL...

      Delete
    2. ஹா....ஹா...ஹா....சிம்பா..

      இது நியாயமா?? வேலை செய்யாம இருக்கும்போது இப்படி சிரிக்க வைக்கிறீங்களே....ROFL...

      Delete
    3. ஈவி@...

      மல்லாக்க படுத்துகிட்டு அப்பப்ப ஆப்பிள் ஜூஸ் குடிக்கிறதுக்கு பேரு வேலையா????

      :)

      Delete