நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு மாதமும் ஒரு 6 மணி நேர அவகாசத்திற்கு எங்களது அலுவலகமே ஒரு மினி கோயம்பேடாய் உருமாற்றம் காண்பது வழக்கம். பைண்டிங்கிலிருந்து சுடச்சுட அம்மாதத்து இதழ்களுள் ஏதோவொன்று (கடைசி நிமிடத்தில்) வந்து இறங்கிக் கொண்டிருக்கும் ! இன்னொரு பக்கமோ பிரவுண் டப்பாக்களில் உங்கள் முகவரிகளை ஒட்டிவிட்டு, “இது DTDC; இல்லையில்லை... ST கூரியர்.....ஊஹூம்.....Proffessional !” என்று நம்மாட்கள் பரமபதம் ஆடிக் கொண்டிருப்பார்கள்! இன்னொரு பக்கமோ பேக்கிங் பணியாளர்கள் புத்தகங்களை டப்பாவுக்குள் திணித்து விட்டு ‘சர்ர்... சர்...‘ என்று பிரவுன்டேப் ரோல்களைக் கொண்டு பிளாஸ்திரி கட்டுப் போட்டுக் கொண்டிருப்பார்கள் மும்முரமாய்! அவ்வப்போது நடக்கும் இந்தப் பரபரப்பை எட்டிப் பார்க்க நான் வெளியே வர நினைத்தால்- பாக்கெட்களின் அணிவகுப்புகளின் மத்தியில் நெளிந்து, வளைந்து தான் கால் வைத்தாக வேண்டும்! செல்போன்களும், லேண்ட் லைன்களும் ஏக நேரத்தில் குரல்வளையை நெரித்தது போல் அலறிக் கொண்டிருக்க ஆளுக்கொன்றாய் ஸ்டெல்லாவும், வாசுகியும்- ஒரே மாதிரியான கேள்விகளுக்கு, ஒரே மாதிரியான பதில்களைச் சளைக்காது சொல்லிக் கொண்டிருப்பார்கள் ! மைதீனோ- தயாராகவுள்ள பாக்கெட்களைக் கூரியருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்க கடிகாரம் ‘மதியம் 3‘ என்பதை சுட்டிக் காட்டி நிற்கும் ! ஒரு மாதிரியாய் அத்தனைச் சந்தா இதழ்களும் புறப்பட்டிருக்கும் போது சூரியன் மேற்கில் ஓய்வெடுக்கத் தயாராகிக் கொண்டிருப்பார் ! துடைத்துப் போட்டது போல ஆபீஸே சுத்தமாய்க் காட்சி தர, போன்கள் மாத்திரம் துளியும் ஓயாது கிணுகிணுத்துக் கொண்டேயிருக்கும் ! தயாரிப்புப் பணிகள் உச்சத்தில் இருக்கும் வேளைகளில் கூட நான் ஊர் சுற்ற மூட்டைகளைக் கட்டத் தயங்கியிருக்க மாட்டேன் ; ஆனால் இந்த டெஸ்பாட்ச் தினத்தை மாத்திரம் ‘மிஸ்‘ பண்ண மனது கேட்காது ! 30 நாட்களின் எங்களது ஒட்டுமொத்த உழைப்பும் உங்களைத் தேடிப் புறப்படும் அந்தச் சில மணி நேரங்கள் எனக்கு ரொம்பவே precious ஆகத் தோன்றிடும் ! இதழ்கள் அழகாய் அமைந்திருந்தாலும் சரி; சுமாராகவே வந்திருந்தாலும் சரி- ஒட்டுமொத்தமாய் அவை ship ஆகும் போது ஒரு சன்னமான திருப்தி எழுவது கடந்த 4 ஆண்டுகளாய்த் தொடர்கிறது ! And இந்த மாதம் அந்தத் தாக்கம் ஒரு லெவல் அதிகம் என்றே சொல்வேன்- simply becos இது நமது ஈரோட்டின் திருவிழாத் தருணமல்லவா?
ஓவர் பில்டப்களின்றி- இதோ நமது ‘ஈரோட்டில் இத்தாலி‘ இதழின் அட்டைப்பட முதல் பார்வை ! 4 நாயகர்கள் கொண்டதொரு combo இதழென்றால்கூட எப்போதும் நமக்கு முதன்மையான இரவுக் கழுகாரே முன்னட்டையில் இடம் பிடிக்கிறார்! இது நமது ஓவியர் + டிசைனரின் கூட்டணியில் உருவான டிசைனே !
வழக்கம் போலவே ஸ்பெஷல் இதழ்களின் ராப்பர்களை மெருகூட்டிக் காட்டிட ஏராளமான ஜிகினா வேலைகள் செய்திருப்பதை இதழைக் கையில் தாங்கிப் பிடிக்கும் சமயம் உணர்ந்திட முடியும் ! ஒரு வித்தியாசமான கோணத்தில்; வித்தியாசமான வண்ணச் சேர்க்கையில் நம்மவர் அழகாய்க் காட்சி தருவதாய் எனக்குத் தோன்றியது ! அந்த எண்ணம் உங்களுக்கும் தோன்றிடும் பட்சத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவேன் ! Hard cover-ல் அடக்கமாய், புரட்டப் புரட்ட வண்ணச் சுரங்கமாய் கண்ணைப் பறிக்கும் பக்கங்களுள் - டைலன் டாக்கின் சாகஸம் தான் அசாத்திய துல்லியம் என்பேன் ! டைலன் டாக்கை கலரில்லாது b&w-ல் போட்டாலே போதுமென்று நான் நினைத்து வந்தாலும், இது வண்ணத்தில் வந்தே தீர வேண்டுமென்று ஜுனியர் எடிட்டர் கொடி பிடிப்பதன் காரணத்தை இந்த முறை நன்றாகவே உணர முடிந்தது! Stunning coloring!
மேஜிக் விண்ட் கூட இம்முறை கலரில் கலக்கிட, ராபின் & டெக்ஸ் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? இந்த இதழினை புரட்டும் போதே நான் ‘பீலா புண்ணியகோடி‘ அவதாரமெடுக்கவில்லை என்பது நிச்சயம் புரியும் ! And இதோ - உட்பக்கங்களுள் ஒவ்வொரு கதைக்கான அட்டைப்படமும் கூட! சுற்றிலும் வெள்ளை பார்டரின்றி இவை இம்முறை original அட்டைப்படங்கள் போலவே அமைந்திருப்பதைக் காணப் போகிறீர்கள் !
ரொம்பவே ரசித்தோமிந்த இதழின் பணிகளை! எங்களது அதே உற்சாகம் உங்களைத் தொற்றிக் கொள்ளும் யோகம் கிட்டின் - would be a job well done !
And இதோ- இம்மாத இதர இதழ்களின் அட்டைப்படங்களும் உங்கள் பார்வைக்காக ! ‘சுட்டி பயில்வான் பென்னி‘ சத்தமில்லாது சாதிப்பாரென்று இந்தக் கதையினில் பணியாற்றும் போது எனக்குப்பட்டது ! கார்ட்டூன் கதைவரிசைகளில் நாம் இதுவரை சந்தித்துள்ள பரதரப்பட்ட ஹீரோக்களுள் ‘பென்னி‘ போன்றதொரு character-ஐப் பார்த்திருக்க மாட்டோமென்றே எனக்குத் தோன்றுகிறது ! பக்கத்துக்குப் பக்கம் வெடிச் சிரிப்புகள் என்ற பாணி கிடையாது இந்தத் தொடருக்கு ! மாறாக ஒரு நார்மலான குட்டிப் பையனை, அசாதாரண ஆற்றலோடு, everyday சூழல்களில் உலவச் செய்வது தான் இங்கே கதைக்களம். நம்மையும் அறியாது அந்த அரை நிஜாரின் உலகத்தோடு ஒன்றிப் போய்விடச் செய்வது தான் இதன் speciality ! இங்கேயும் அட்டகாச கலரிங் என்பதால் புரட்டப் புரட்ட வர்ணங்கள் நம்மை மெஸ்மரிசம் செய்வதை உணரலாம் ! பென்னிக்கு உங்கள் மதிப்பெண்கள் என்னவென்று அறிவது ஆகஸ்டின் பிரதான எதிர்பார்ப்புகளுள் ஒன்று ! So மறவாமல் இந்தக் கதைக்கு நேரமெடுத்துக் கொள்ளுங்களேன் folks?
இங்கே சின்னதொரு குளறுபடி நேர்ந்துள்ளதை ஆன மட்டும் சரி செய்ய முனைந்துள்ளோம் ! சிலபல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தக் கதையினை வெளியிடும் பொருட்டு அட்டைப்படமெல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம் ! தற்போது மாதந்தோறும் 4 டிசைன்கள் உருவாக்க வேண்டிய நெருக்கடிக்குள் உலாற்றும் வேலைதனில் - இது ஏற்கனவே தயாராகவுள்ள பெயிண்டிங் என்ற போது ‘போட்டுத் தாக்கு‘ என்று நொடிப்பொழுதில் ஓ.கே. சொல்லி விட்டேன்! ராப்பரும் அச்சாகி விட்டது ! போன பதிவில் சொல்லியிருந்தது போல இந்தக் கதையின் தமிழாக்கத்தை நம் டீமின் புதியவரொருவர் செய்திருந்தார். அதனைச் செப்பனிட நான் உள்ளே நுழைந்த போது முழுமையாய் மாற்றம் செய்திடும் அவசியம் புலர்ந்தது - and தட்டுத் தடுமாறி அதைச் செய்தும் விட்டேன் ! ஆனால் ஒரு வாரப் பொழுதை இந்த மார்ட்டின் சாகஸத்தோடு செலவிட்ட போது தான் சின்னதாகவொரு நெருடல் எனக்குள் ! இது நாள் வரையிலான மார்டின் கதைகளின் உட்பக்கச் சித்திரங்கள் எல்லாமே ‘கொச முசா‘ பாணியில் இருப்பது வழக்கம் ! So அவற்றின் அட்டைப்படங்களிலும் அவர் கொஞ்சம் ‘அப்படி-இப்படி‘ தோற்றமளித்தால் பெரிதாய் நான் கண்டுகொண்டிருக்க மாட்டேன்! ஆனால் இம்முறையோ கதையின் artwork ‘ஏ-ஒன்‘ ரகம் என்பதோடு- மார்ட்டினின் கதாப்பாத்திரமுமே சற்றே refined ஆக, அமைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றியது ! ஒருவார அவகாசத்தை அழகான newlook மார்ட்டினோடு செலவிட்டான பின்னே - நம் ஓவியர் போட்டிருந்த பெயிண்டிங்கிலிருந்த மார்ட்டினோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கே கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது ! அட்டையில் உள்ள நாயகரை ஒரு படித்துறைப் பாண்டி போலப் பார்த்து விட்டு படு சீரியஸான கதைக்குள் நுழைவோர்க்கு நிச்சயமாய் நெருடல் தோன்றலாமென்ற எண்ணம் வலுத்த போது - இந்த இதழுக்கொரு சன்னமான dust jacket போட்டு விடும் ஐடியா தோன்றியது ! மறுகணமே இந்த ஆல்பத்தின் ஒரிஜினல் டிசைனை ராவோடு ராவாக அச்சிட்டு, லேமினேஷனும் செய்து dust jacket போல மாட்டியும் விட்டுள்ளோம் ! ‘Amateurish’ என்றும் இதைப் பார்த்திடலாம்; ‘அட... தேவலையே!‘ என்றும் பார்த்திடலாம் ! எவ்விதம் பார்த்தாலும்- இயன்றதைச் செய்தோமே என்ற நிம்மதியும்; வரும் நாட்களில் அட்டைப்பட முகங்கள் மீதான கூடுதல் கவனம் தேவையென்ற ஞானமும் எனக்குள் ! இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நொடியிலேயே நமது ஓவியர் ஊரிலிருந்து வந்திருக்கிறார் – 2 டெக்ஸ் வில்லர் டிசைன்களோடு ! பிடரியில் அறையும் அழகு இரண்டுமே ! இந்தாண்டின் டாப் டெக்ஸ் ராப்பர்களுள் இவை இடம் பிடிக்காது போயின் ரொம்பவே ஆச்சர்யப்படுவேன் ! இரவுக் கழுகாரென்றால் நம் ஓவியருக்கும் கூடாவொரு கூடுதல் வாஞ்சை போலும் !!
Finally- இதோ “திகிலூட்டும் நிமிடங்கள்” மறுபதிப்பின் அட்டைப்படமும் கூட!
C.I.D. லாரன்ஸ் & டேவிட் சாகஸமான இந்த இதழுக்கு, அதன் ஒரிஜினல் Fleetway டிசைனையே நமது ஓவியரைக் கொண்டு புதிதாக வரைந்துள்ளோம் ! So சமீபத்திய மறுபதிப்பு ராப்பர்களுள் இது ‘நிரம்பத் தேவலாம்‘ என்ற ரகமாயிருக்கும் ! கதை - நாம் ஏற்கனவே ஒரு டஜன் முறைகள் படித்தது தான் எனும் பொழுது அதற்கொரு preview தேவையில்லை தானே ? And இக்கதையின் proof-reading பணியினைக் கூட அநாமதேயமாய் இருந்திட விரும்புமொரு வாசக நண்பரே செய்துள்ளார்!
C.I.D. லாரன்ஸ் & டேவிட் சாகஸமான இந்த இதழுக்கு, அதன் ஒரிஜினல் Fleetway டிசைனையே நமது ஓவியரைக் கொண்டு புதிதாக வரைந்துள்ளோம் ! So சமீபத்திய மறுபதிப்பு ராப்பர்களுள் இது ‘நிரம்பத் தேவலாம்‘ என்ற ரகமாயிருக்கும் ! கதை - நாம் ஏற்கனவே ஒரு டஜன் முறைகள் படித்தது தான் எனும் பொழுது அதற்கொரு preview தேவையில்லை தானே ? And இக்கதையின் proof-reading பணியினைக் கூட அநாமதேயமாய் இருந்திட விரும்புமொரு வாசக நண்பரே செய்துள்ளார்!
ஈரோட்டுக்கு இத்தாலியே வந்தான பின்னே நாம் மாத்திரம் வேறெங்கோ இருந்தென்ன லாபம் ? சனிக்கிழமை காலையில் (6th.august'16) நண்பர்களை சந்திக்கும் உற்சாகத்தோடு ஈரோட்டின் LE JARDIN ஹோட்டலில் 11 மணிக்குத் தயாராகக் காத்திருப்போம் ! சமீபமாய் இங்கே வெளியான பட்டியலின்படி நண்பர்கள் குழுமும் பட்சத்தில் ஒரு சுவாரஸ்யமான காலைப்பொழுது காத்துள்ளது நிச்சயம் ! வழக்கம்போல மைக்கைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, புளித்த மாவையே மறு அரவை போட்டு உங்களைத் தாக்கும் எண்ணமில்லை எனக்கு இம்முறை ! வாரா வாரம் பதிவுகளில் பேசி வருகிறேன் ; ஒரு குண்டூசி வாங்கியது முதல், குண்டன் பில்லி கதை வாங்கியது வரை உங்களிடம் ஒப்பித்தும் வருகிறேன் எனும் போது - என் குரல் எனக்கே 'தாங்கலைடா சாமி!' என்ற நிலையினை எட்டியுள்ளது ! So ஒரு ஆறுதலான மாறுதலுக்கு இம்முறை உங்களை பேசச்செய்து நான் ரசிக்கும் ஆர்வத்தில் உள்ளேன் ! இது உங்கள் குரல்கள் ஒலிக்கும் வேளை ! So ஜாலியாக, உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திடலாம் ! And yes - போட்டியும் உண்டு ; உடனடிப் பரிசோடும் ! So தயாராய் வந்திடுங்கள் folks !!!
More than anything else- வெறும் ஐ.டி.களாகவே உள்ள உறவுமுறைகள் நேரடிச் சந்திப்பில் வலுவான நட்புகளாய் உருமாறும் சாத்தியங்கள் பிரகாசம் என்பதால் - இது போன்ற தருணங்களை ரொம்பவே precious ஆகக் கருதுகிறேன் ! இன்றைக்கு இதழ் # 279; நாளை 280 என்று வெளியீடுகள் வரலாம் - போகலாம்; ஆனால் உதயமாகும் நட்புச்சங்கிலியானது அம்மன் TRY கம்பிகளைப் போன்றதல்லவா ? ஈரோட்டுக்கு வாங்களேன் !! சந்தோஷமாய் சந்திப்போம் ! God be with us !!
P.S : புத்தக விழாவின் போது கூடுதலாய் ஒரு இதழ் உண்டென்று சொன்னது நினைவிருக்கலாம் ! இதோ அது !!
First
ReplyDeletefirst time first
ReplyDeleteaahh Largo also..total 5 booksaaa
ReplyDeleteஅட்டைகள் பிரமாதம்...
ReplyDeleteடஸ்ட் கவர் முயற்சிக்கு பாராட்டுகள் சார்..
லார்கோ....இனிய அதிர்ச்சி....
அட்டகாசம்....
//டஸ்ட் கவர் முயற்சிக்கு பாராட்டுகள் சார்..//
Delete+1
Thank You so much Editor Sir, Happy August
ReplyDeleteWarm welcome.
Deleteஅருமை அருமை.
ReplyDeleteSuper sir Welcome to erode .Erode is waiting for the comics god father
ReplyDeleteநாக்கில் ஜலம் ஊறும் படங்கள் நூறு.ஹி,ஹி..
ReplyDeleteஎல்லா அட்டைப் படங்களும் அசத்தல்,கண்ணைப் பறிக்கின்றன.
ReplyDeleteகண்டிப்பாக வந்திடிடலாம் சார்
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் நண்பர்களே!!!
வாவ்....லார்கோ...சர்ப்ரைஸ் :-)
ReplyDeleteஈரோட்டில் நாளை நண்பர்களையும், தங்களையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன் சார்:-)
15th
ReplyDeleteWarm welcome.
Deleteஎன்னது லார்கோவா .....வாரே வாவ் ...அடி தூள் ....
ReplyDeleteநாளை தங்களையும் ...நண்பர்களையும் காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் சார்.....:-)
அய்யோ...ஆவ்வ்வ்வ்...அம்ம்ம்மா....நெஞ்செல்லாம் ஜில்ல்லுன்னு ஆவுதே....
ReplyDeleteஇத்தனை அட்டைபடம் பார்த்தும் மூச்சுமுட்டுதே....ஸ்ஸ்ஸ்ஸ்...கொஞ்சம் காத்தோட்டமான வெத்துவெளியில என்னை தூக்கி காடசுங்களே...
ஒரே கலர்மயமாய் கண்ணு கூசுதே....திரும்ப எனக்கு கண்ணு ஒழுங்கா தெரியுமா..??????????? பெவிக்கால் பெரியசாமி இத்தனையும் எப்படித்தான் ஒத்தை மனுஷனா மயக்கம் போடாத பண்ணி கமுக்கமா இருக்கிங்களோ...முருகா...பொட்டியோட பத்திரமாக பட்டாசுபுரி விஜயேந்திரனை மஞ்சள்நகருக்கு கொண்டுவந்து சேர்த்திடுப்பா என்னப்பன்முருகா..!
அங்க இத்தனையும் பார்த்தும் மயக்கம்போட்டு விழாம இருக்க நான் மந்திரிச்சி ஒரு தாயத்து கட்டிட்டு வந்துடறேன்...அவுக்..அவுக்..தண்ணி..தண்ணி...
உள்ளேன் அய்யா!!!
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் அணியின் கடின உழைப்புக்கும் ஒரு Royal Salute
ReplyDeleteசார்,
ReplyDeleteஇந்த மாதத்தின் அனைத்து இதழ்களின் அட்டைப்படமும் கலக்குகின்றன. அடர்வர்ணத்தில் சற்றே தூக்கல்.
இந்த முறை நான் மிகவும் எதிர்பார்ப்பது 'அசால்ட்' பென்னியைதான். 'தம்மாத்தூண்டு' இருந்துக்கொண்டு ஒரு சூப்பர்மேனை போன்ற ஆற்றலை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவாரோ என்ற எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி நிற்கிறது.
//புத்தக விழாவின் போது கூடுதலாய் ஒரு இதழ் உண்டென்று சொன்னது நினைவிருக்கலாம் ! இதோ அது //
அது மறுபதிப்பு இதழ் தான் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் சமீபத்தில் வந்தொரு இதழுக்கு பதிலாக வேறு ஏதாவதொரு பழைய இதழ் ஒன்றை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கலாமே?. (சமீபத்தில் வெளியேறிய 'ரோஜரின்' இதழுக்கு மாற்றாக, அவரின் ஏதாவதொரு ஹிட் இதழை போட்டிருக்கலாமோ.?!)
ஆசிரியரே அட்டைப்படங்கள் அனைத்தும் அருமை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தாலும் குறைகள் கண்டு பிடிக்க முடியாது அதுவும் டெக்ஸ் அட்டை பட்டையை கிளப்புகிறது
ReplyDeleteநாளை ஈரோட்டில் ஈடு இனையில்லாத ஆனந்தம்
ReplyDeleteமகிழ்ச்சி
சஸ்பென்ஸ் இதழ் செம சூப்பர் சார்
ReplyDeleteஈரோட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு எதாவது உண்டா சார் தயவு செய்து பதில் சொல்லுங்கள்
ReplyDeleteWow Largo...
ReplyDeleteMy cells are agitated to start to Erode in this moment itself...well done Edi Sir and Team.
Deleteஞாயிறு நண்பர்களை சந்திக்க ஆவலுடன் ...
ReplyDeleteஆசிரியர் சார் ...நீங்கள் பேசுவதை ஆவலுடன் ஆனந்தமாக கேட்டு ரசிக்க நாங்கள் தயார் ...ஆனால் நாங்கள் பேசுவதை கேட்பது யார் என தெரியவில்லையே ...
ReplyDeleteஆஹா! ம.ம. மார்டின், சித்திரங்கள் பட்டையை கிளப்புதே. வழக்கமா பட்டாப்பட்டி மாதிரி கோடுகோடா தெரியும் மார்டின் சித்திரங்களை இப்படி பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் குசியாகவும் இருக்கிறது.
ReplyDeleteஅட்டைப்படங்ளை பொறுத்தவரை முன்னதின் பின்னட்டையும், பின்னதின் முன்னட்டையும் குளிர்ச்சியாக தெரிகின்றன.!
ஸ்டார்ட் மியூசிக்.
Deleteஈரோட்டில் சரவெடி ஆரம்பம்....
ReplyDeleteஅட்னட படம் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது....
நெஞ்சம் எல்லாம் சித்திரக்கதை மனழ.....
வாவ்...உப்பதிவே நீஈஈஈண்ட பதிவு இம்முறை...ஈரோடுனாலே ஸ்பெசல் தானே என உற்சாகத்துடன் நீங்கள் உழைப்பது புரிகிறது சார்...
ReplyDeleteஅட்டைப்படங்களே அசாத்திய மிளிரலோடு காட்சியளிக்கின்றன, உங்கள் அணியினருக்கு பாராட்டுகள் சார்...
ஈரோட்டில் இத்தாலி "-இதழின் முதுகைப் பார்த்தாலே கணம் புலப்படுகிறது சார், இந்த மாதிரி குண்ண்ண்ட்ட்டு பசங்களை பார்த்தாலே நெஞ்சம் உற்சாக விசிலடிக்கிறது, மூளை நியூரான்கள் அனகத்திலும் சந்தோச மின்சாரம் ஊர்வலம் போகிறது சார்...
நேரிலே இருந்து உங்கள் பேக்கிங் டே பணிகளை பார்த்தது போன்ற வர்ணனை பிரமாதம் சார்...
நண்பர்களை சந்திக்கும் வேளை நெருங்க நெருங்க கைவிரல்களில் ஒரு மெல்லிய சந்தோச நடுக்கம் பரவுகிறது, கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...
ReplyDeleteகான்கிரீட் கானகம் ந்யூயார்க். THANKS SIR!!
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் PLEASE SIR!!
NBSல் வந்த லார்கோ சாகசம் தனியாக வருவது சூப்பர் நியூஸ் சார்....
ReplyDeleteஎன்னிடம் உள்ள இரண்டாவது nbsஐ பிரித்து லார்கோ சாகசத்தை மட்டுமே தனியாக எடுத்து மற்ற பாகங்கள் உடன் சேர்த்து...செட்டாக 3, 3பாகமாக பைண்டிங் செய்ய இது உதவும்..
அவ்வப்போது லார்கோ படிக்கும்போது அந்த தடித்த nbsஐ தூக்கி புரட்ட தேவையில்லை...
அட்டைப்படங்களும்,எடிட்டரின்( தங்களின் )பதிவும் அருமை . ஈரோட்டில் சந்திப்போம் சார்.மகிழ்ச்சி.எங்களுக்கு மாதம் தோறும் சலிப்பின்றி புத்தகங்களை அனுப்பும் தங்கள் அலுவலக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.
ReplyDeleteSuperb quality and you are really committed to give very good experience to your comics family
ReplyDeleteKeep going sir
@Sai
DeleteDragon ball z மீது என்னை போலவே இடுபடோ
Warm welcome Sai.
DeleteThank you friend
Deleteசார் முதலில் லார்கோ.....சத்தியமா நெனச்சுக் கூட பாக்கல....அட்டகாசம்....நீங்க நண்பரின் லக்கி லூக்க கொன்றவன் கேள்விக்கு பார்ப்போம்னு போட்டத பாத்து இந்த இதழ் அதான்னு நெனச்சேன்..சத்தியமா எனது எண்ணங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது .எதிர்பாரா இன்ப அதிர்ச்சி ...மகிழ்ச்சி....யாரும் யூகித்து கூட இருக்க மாட்டார்கள்னு நெனக்கிறேன் ..மகிழ்ச்சி
ReplyDeleteஎன்னாது கான்கிரீட் கானகமா..
DeleteSuper😏
Delete:D seriously its long time request from most of friends who dont have NBS. sure it will attract most of new readers. me happy !
Delete:):):):):D
சார் அட்டைப் படங்கள் ...உள்ளட்டை என ொன்றை ஒன்று விஞ்சுகின்றன .அருமை...மீண்டும் ஒரு அற்புத பதிவு .பென்னி அட்டை இதுவரை வராதது போல உள்ளது . பின்னட்டைகள் சுண்டி இழுக்கின்றன .படித்த படி வந்தால் லார்கோ அட்டை அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டதே...வாவ்....
ReplyDeleteGlad to see Largo again.!! When will we receive all issues? Sir
ReplyDelete41வது
ReplyDeleteJason Bourne காண சென்று கொண்டு இருக்கிறேன் நாளை நேரில் சந்திப்போம்
ReplyDeleteநாளை சந்திப்போம்....
ReplyDeleteஎன்னப்பா இது சிறுவயதில் .....தீபாவளி முதல் நாள் ....ஏங்கி திரிவதை போல நாளை ஆசிரியரையும் ..நண்பர்களையும் ..இதழ்களையும் சந்திக்க இன்று ஏதும் புரியாமலே திரிகிறேனே .....
ReplyDeleteஅட்டை படங்களும் உட்பக்கங்களும் சூப்பரோ சூப்பர். லார்கோவின் இதழ் உண்மையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சி சார். ஈரோடில் ஒரு காமிக்ஸ் அடை மழைதான். உங்களுக்கும் உங்கள் ரீமுக்கும் இத்தனை கடின உழைப்பிற்கு ஒரு ராயல் சலூட் சார். ஐயோ சொக்கா! இதழ்கள் எப்போது வந்து கிடைக்கும் என்று தடதடக்கும் இதயத்தோடு காக்க வைத்து விட்டீர்களே.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteI too echo the same.
Deleteசார் லாரன்ஸ் டேவிட் படு அசத்தலாய் தெரிவது எனக்கு மட்டும்தானா...
ReplyDeleteEnakum than steel. Very good cover.
Deleteசாா்,
ReplyDeleteஅட்டைபடங்கள் அனைத்தும் அறுமை ஆனால் பண பற்றாகுறை என் பக்கிட்டை கைவைகிறது
This comment has been removed by the author.
Deleteஅட்டை படங்கள் கண்ணை பறிக்கின்றன :)
ReplyDeleteI got into the train to erode now. See you all tomorrow.
ReplyDeleteAm Waiting Parani nna
DeleteSure. Thx.
DeleteVijayan sir, if a book having more than one story please mention in the cover, like 2 in 1 or 4 in 1; also on the side cover. That justifies price for book like this for new buyers.
ReplyDeleteOne and only
Deleteவணக்கம் எடிட்டர் சார்...!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....!
Benny book cover picture is going to attract many school kids.
ReplyDeleteமணி இரவு11...இன்னும் 12மணி நேரமே இருக்கு...11.56ஒன்லி....
ReplyDeleteOnleee.??
ReplyDeleteநான் சந்தாவில் உள்ளேன் எனக்கு
ReplyDeleteலார்கோ உண்டா அல்லது தனியாக
பணம் கொடுத்து வாங்க வேண்டுமா?
ஈரோடு புத்தக விழாவில் நமது புத்தகங்கள் அமோக விற்பனை கண்டிட
ஆண்டவனை வேண்டுகிறேன்.
என்னுடைய ரயில் தாமதமாக சென்டிரலுக்கு வருகிறது. அகால வேளை காத்திருப்பில் பதிவை படித்து விட்டேன் .. நன்றி:- தெற்கு ரயில்வே அதிவேக இலவச இணைய தொடர்பு
ReplyDeleteமறக்க இயலா ஒரு கொண்டாட்டத்தின் பொருட்டு இன்று மஞ்சள் மாநகருக்கு வருகைபுரியும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் __/\__
ReplyDeleteநிறைய புத்தகங்கள், பேனர்கள், கேள்வித்தாள்கள் (ம்க்கும்!), சிறப்பு அறிவிப்புகள் ( எனக்கென்னவோ ரத்தப்படலம் வண்ணத்தில் வரப்போகுதுன்னு தோனுது), பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்துகொண்டு மஞ்சள் மாநகருக்கு ஏற்கனவே வந்துவிட்ட எடிட்டர் சமூகத்தை தருக தருக என ( நிறைய காமிக்ஸ் தருவாங்க இல்லையா; அதான்!) வரவேற்கிறேன்... _/\_
இன்னும் சில மணித்துளிகளில் நாம் ஆவலோடு எதிர்பார்த்த 'ஈரோட்டில் ஒரு உற்சாகக் கொண்டாட்டம்' நிகழ்ச்சி இனிதே துவங்கவிருப்பதால்... ஆங்காங்கே கூடிஇருக்கும் பெரியோர்களும் தாய்மார்களும் விழாப் பந்தலுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
ஆஹா....
DeleteNBSல் வந்த லார்கோ சாகசம் தனியாக வருவது சூப்பர் நியூஸ் சார்....
ReplyDeleteஎன்னிடம் உள்ள இரண்டாவது nbsஐ பிரித்து லார்கோ சாகசத்தை மட்டுமே தனியாக எடுத்து மற்ற பாகங்கள் உடன் சேர்த்து...செட்டாக 3, 3பாகமாக பைண்டிங் செய்ய இது உதவும்..
அவ்வப்போது லார்கோ படிக்கும்போது அந்த தடித்த nbsஐ தூக்கி புரட்ட தேவையில்லை...
நேற்றிரவு தங்குவதற்கு சிறப்பாக உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி
ReplyDeleteநண்பர்களின் உற்சாகக் கூடலில், ஒளிப்படங்களையும், காணொளிகளையும் எடுத்திடவும், பதிவிடவும் - அவ்வப்போதான சுவாரஸ்ய கணங்களையும், ஆசிரியரது - புதிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களையும் - மறந்திடாமல் பகிர்ந்திடவும் - கடல் கடந்திருக்கும் நண்பர்களது சார்பில் கோரிக்கை விடப்படுகிறது!
ReplyDeleteSure.
Deleteபார்சல வாங்கியாச்
ReplyDeleteநானும் வாங்கியாச்சே
Deletesuper color kalavai!erodil italy siraka valthugal!
ReplyDeleteசார் ஈரோட்டில் இத்தாலி எதச் சொல்ல ...எத விட ....அட்டை பட வரலாற்றில் மைல் கல்...சும்மா சில்வர்ல தக தகக்குதே...
ReplyDeleteகெரகம்!! வாழ்க்கையிலேயே மொத தடவ ஈரோட்ல பொறந்திருக்கலாம்னு பீல் இப்ப பண்ணறேன் . இந்த பதிப்புகள் எல்லாம் எப்ப ஆன்லைன்ல வரும்னு தெரியலையே ...கைக்கு வந்து சேர வரைக்கும் தூக்கம் கூட வராதே...இப்படி புலம்ப விட்டாங்களே.
ReplyDeleteஅய்யா சொரிமுத்து அய்யனாரே உம்புள்ளய காப்பாத்துப்பா ...
ஈரோடே வந்துட்டே இருக்கேன்
ReplyDeleteநண்பர்களின் ஆரவாரக் கொண்டாட்டங்களோடு நமது காமிக்ஸ் ஸ்டால் வெற்றிக்கொடி நாட்டிடவாழ்த்துக்கள்
ReplyDeleteமார்டினின் அட்டைபடம் 1 வதா இல்லை 2 வதா? இரண்டுமே நன்றாக வந்துள்ளதாய் எனக்கு தோன்றுகிறது. "திகிலூட்டும் நிமிடங்கள்" எனது பால்ய கால வாசிப்பு இதழ்களில் முக்கியமான ஒன்று. மறுபடி வாசிக்க மனம் பரபரக்கிறது.
ReplyDeleteஈரோடு வரலாற்று நிகழ்ச்சியையும் ஆசிரியரின் புதிய அறிவிப்புகளையும் முக்கிய பல கணங்களையும் புகைப்படங்களாயும் காணொளிகளாயும் உடனுக்குடன் பதிவு செய்யும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அவற்றை பார்த்தாவது நானும் கலந்தது போல கொஞ்சமாவது உணரலாம். அதுதான் நண்பர்களே!
ReplyDeleteநானும்் வரேன்் கொஞசம்் தாமதமாக
ReplyDeleteஅனைத்து இதழ்களின் அட்டைப்படமும் அருமை சார்.
ReplyDeleteசட்டை இல்லாத டெக்ஸ் wrapper அமர்க்களம்.
Next year rath's kottai - tiger is coming. Our editor agreed for this story; 5 stories in one book.
ReplyDeleteSuper parani
Deleteஈரோட்டில் இத்தாலி"-வெளியீட்டு விழா மீட்டிங் 112நண்பர்களுடன் பிரமாண்டமாக நடந்தது...
ReplyDeleteமூத்த ஆசிரியர், ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திரு N.சொக்கன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி விழா தொடங்கி வைக்கப் பட்டது...
மீட்டிங் ஹால் நண்பர்களால் நிரம்பி வழிந்தது என்றே செல்லலாம்....
நண்பர்கள் அறிமுகம் மற்றும் அவரவர் சொந்தமாக கேள்விகள் கேட்பது என 1.45மணி வரை நடைபெற்றது....
முக்கிய அறிவிப்புகள்...
இரத்தகோட்டை தொகுப்பு ஒரே இதழாக 2017ல்...தோட்டா தலைநகரம் இணைந்து 6பாக மெகா இதழாக....
2017ல் தாக்கப்போகும் மகா குண்டுகள்...
1.முத்து 45ம் ஆண்டுமலர்
2.முத்து இதழ்400
3.லயன் இதழ்300
யாருடைய இடையூறும் இன்றி நண்பர்கள் என்ன தேவையோ அதை அவரவரே கேட்டு விட்டனர்...
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர் மட்டுமே இதுபோன்ற விழாக்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என தவறாக சுட்ட முகாந்திரம் ஏதும் இல்லை...
....மாலை புத்தக விழா அரங்கில் ஆசிரியர் சந்திப்புக்கு...
I'M SO HAPPY.!!!!
Delete@ ஜெகத்குமார்
Deleteநீங்கள் வருவீர்களென்று எதிர்பார்த்திருந்தேனே...?
@ Erode VIJAY
Deleteவரவேண்டும் என்றுதான் போன மாதம் வரை நினைத்திருந்தேன் சார்... வரமுடியாமல் போனதற்கு 2 காரணங்கள். ஒன்று 2014-இல் நான் அங்கே வந்தபோது பயன்படுத்திய வீல்சேர் இப்போது மோசமான நிலையில் இருக்கிறது. அதை தள்ளிக்கொண்டு ஈரோடு ஜங்க்ஷனில் இருந்து VOC பார்க் வரை வருவது கஷ்டம். வந்தாலும் நிறைய புத்தகங்கள் வாங்கி சுமந்துக் கொண்டு திரும்ப ஜங்க்ஷன் வரை செல்வது கஷ்டம். அட! அந்த வீல்சேரை ஆட்டோவில் போட்டு போய்விடலாம் என நினைத்தேன். ஆனால், அதுக்கூட முடியாமல் போனதற்கு 2'வது காரணம், நான் வேலை பார்க்கும் கடையில் எனக்கு அடுத்து 2nd SHIFT'இல் வேலை பார்க்கும் பையன் வேலையிலிருந்து நின்றுவிட்டான். பில் போட தெரிந்த வேறு ஆள் இல்லாததால் லீவு கிடைக்கவில்லை. கடந்த 2 வருடங்கள் வந்தும், விஜயன் சாரை பார்க்க முடியவில்லை. இந்த வருடமாவது அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அடுத்த வருடம் கண்டிப்பாக வருவேன்.
//
Delete1.முத்து 45ம் ஆண்டுமலர்
2.முத்து இதழ்400
3.லயன் இதழ்300//
:)
//இரத்தகோட்டை தொகுப்பு ஒரே இதழாக 2017ல்...//
:):):):):):):)
Thanks for info TEX sir.
டெக்ஸ் விஜய் அண்ணா கொஞ்சம் வாயத்திறங்க சக்கரை மூட்டையக் கொட்டனும் நன்றி.அனைவருக்கும். ரத்தக்கோட்டை 2017 யா எப்பப்பா வரும்2017
ReplyDeleteErode book fair il
DeleteDear Editor.... Received the books today... Fantasssssstic look.... This year so far is very good. Hope to see lot of new comics series with our old reprints. Really nice... Thank you
ReplyDeleteரத்தகோடைரத்தகோடை.........
ReplyDeleteErode book fair post எப்ப சார்?
ReplyDeleteநேரில் சந்தித்துக்கொண்ட போதும் உங்களிடம் ஓரிரு வார்த்தைகள் கூட பேச இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் செந்தில் அவர்களே! :(
Delete***** சுட்டி பயில்வான் பென்னி *******
ReplyDelete***** Spoiler alert : கதை தக்கணூன்டு விவரிக்கப்பட்டிருக்கிறது *****
இதுவரை நாம் கண்ட சூப்பர் ஹீரோக்களுக்கே சவால்விடும்(!!) அற்புதத் திறமையை தன்னுள் கொண்ட சுட்டிப் பயல் பென்னி ஒரு திருட்டுக் கும்பலிடமிருந்து நகரத்தைக் காப்பாற்றுவதே கதையின் ஒன்-லைன்!
ஒரு சராசரி சிறுவனாக இருக்க முடியவில்லையே என ஏங்கும் ஆரம்பப் பக்கங்களிலேயே பச்சக் என்று மனதுக்குள் ஒட்டிக்கொள்கிறான் நம் சுட்டி பயில்வான்! தொடரும் பக்கங்களில் கதையோடு கூட நகரும் இவனது சாகஸங்கள் + குறும்புகளால் பக்கத்திற்குப் பக்கம் ரசிக்க வைக்கிறான்! குறிப்பாக, கடத்தல் கும்பலுடன் ஒரு பார்க்கில் அவன் செய்யும் குறும்பான சாகஸங்கள் படு ஜாலியான 'கெக்கபிக்கே' ரகம்!
குட்டியான தீவில் வாழும் ஒற்றை மனிதனும், அவனது வியாக்கியானங்களும் - அழகு!
பெரியவர்களுக்கும் பிடிக்குமென்றாலும், சிறுவர்களுக்கு 'சோட்டா பீம்' ரேஞ்சுக்கு இந்தச் சுட்டி பயில்வானையும் பிடித்திட அதிக வாய்ப்பிருக்கிறது!
எனது ரேட்டிங் : 8.5/1010
எங்க வீட்டு வாண்டுகளும் ரசித்தன .. பென்னி ஒரு good addition ! கதை சொல்ல ஏதுவான காமிக்ஸ்
Deleteas usual courier not received have to wait for monday... one suggestion sir if courier sends on monday or tuesday we may get it next or next next day...
ReplyDelete'ஈரோட்டில் இத்தாலி' புத்தகம் - கொள்ளை அழகு! (நண்பர்களில் பலரும் இதன் வடிவமைப்பை பார்த்து இதே போல கூறியதைக் கேட்கமுடிந்தது).
ReplyDeleteமுன்னட்டையில் டெக்ஸ் ஒரு வித்தியாசமான லைட்டிங்கில் முகத்தை இறுக்கமாகக் காட்டி பிரம்மிக்க வைக்க; பின்புலத்தில் ஒரு நிலா தன் மஞ்சள் கதிர்களை நம் மஞ்சள்சட்டைக் காரரின்மீது படரவிட்டிருப்பது - ரசணை !
முன்னட்டையும் சரி; பின்னட்டையும் சரி - எடிட்டர் கூறியதுபோல ஏகப்பட்ட ஜிகினா வேலைகள் செய்யப்பட்டிருப்பதை சற்றே உற்று கவனித்தால் புரிந்துகொள்ளலாம் ( அட்டையை சற்று சாய்வாக வைத்துப் பார்த்தால்தான் இது கண்ணுக்குப் புலனாகும்). குறிப்பாக, 'ஈரோட்டில் இத்தாலி' என்ற தலைப்பில் மிளிரும் அந்த வெள்ளி எழுத்துக்களும், சற்றே சாய் கோணத்தில் அவை தரும் வண்ண மாற்றங்களும் - செம செம!
மேலோட்டமாகப் புரட்டியதில், ஒவ்வொரு கதைக்குமான ஒரிஜினல் அட்டைப்படங்கள் பிரம்மிக்க வைத்திடும் அழகு!
மேஜிக்விண்ட் தவிர மற்ற கதைகளின் வண்ணங்கள் பளிச் பளிச்!
/* முன்னட்டையில் டெக்ஸ் */ - அது டெக்ஸ் அவர்களின் தாத்தா :-)
Deleteவிஜய் இன்னும் கொஞ்சம் மனதால் உற்றுக் கவனித்தால் அந்த டெக்ஸ் இரவுக்கழுகு என சித்திர வடிவில் , நிறச் சேர்க்கையில் , பின்னனி நிலவில் சொல்லாமல் சொல்லி இருப்பது தெரிய வரும் ...கவிதையாய் அட்டை வடிவமைப்பு . அந்த அடர் கரு நீலம் தாங்கி வந்த எழுத்து மனதை வசீகரிக்கிறது ...
Deleteமுதல் பக்கம் அந்த நிறத் தாள் பழமையின் வாசனையை கண்களால் நுகரச் செய்வதை கவனித்தீர்களா...
Deleteராகவரே,
Deleteஅப்படியே ஈரோட்டுப் பக்கமா வந்திருந்தீங்கன்னா நக்கலும், நையாண்டியுமா ஜமாய்ச்சுருக்கலாமில்ல?
//முதல் பக்கம் அந்த நிறத் தாள் பழமையின் வாசனையை கண்களால் நுகரச் செய்வதை கவனித்தீர்களா...//
Deleteகண்களால் நுகர்வதெல்லாம் எனக்கு பழக்கமில்லை ஸ்டீல்! ஒருவேளை... பக்கத்து ஊர்ல இருந்துக்கிட்டே இரண்டுமூன்று வருடங்கள் EBF பக்கமே எட்டிப் பார்க்காதவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட சக்தி கிடைக்குதோ என்னமோ?!!
பழகிப் பாக்கணும் விஜய்.....அந்த புலன் உங்களுக்கு இல்லாமலா....அடுத்த வாய்ப்பு வராமலா போகும்.....ஊம்....அழுதுறுவன்....விட்டுடுங்க...
Deleteமானிடோ விஜய்க்கு அருள்வாயாக...கண் சக்தி மேலும் கூட....அசரீ..." எனக்கு விட அதிகம்பா....எனக்கு அவர அருளச் செய் "......கடவுளே....கடவுளே..
Deleteஈரோட்டில் இத்தாலி பதிவில் பார்க்கும்போதே ஏற்படும் அதிர்வு அதை நேரில் அனுபவிப்பவர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது.anyway எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஈரோ.இத்தாலி புக் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த photo வை பார்த்து விட்டு அய்யோ. சொக்கா என்றுநினைக்க தோன்றியது வேறு என்ன சொல்ல??.
ஒரு கதைக்கு 2 அட்டைகளா ?ஒவ்வொரு கதைக்கும் நீங்கள் எடுக்கும் அர்ப்பணிப்பு அய்யோ .👏👏👏👏
ஆசிரியர் அவர்களுக்கு ஈரோட்டில் வெளியிடப்போகும் question paperயை இங்கேயும் கொஞ்சம் பதிவு இறக்கம் செய்தால் நாங்களும் பதில் சொல்ல தயார்.
ReplyDeleteஈரோட்டில் இத்தாலி பதிவில் பார்க்கும்போதே ஏற்படும் அதிர்வு அதை நேரில் அனுபவிப்பவர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது.anyway எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஈரோ.இத்தாலி புக் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த photo வை பார்த்து விட்டு அய்யோ. சொக்கா என்றுநினைக்க தோன்றியது வேறு என்ன சொல்ல??.
ஒரு கதைக்கு 2 அட்டைகளா ?ஒவ்வொரு கதைக்கும் நீங்கள் எடுக்கும் அர்ப்பணிப்பு அய்யோ .👏👏👏👏
Friends, my day started with comics family at 10 in the morning and was with them till 10.30 might. The 12 hrs went like a min. Enjoyed a lot. Thanks erode for giving this nice experience. Starting back to Bangalore.
ReplyDelete2017-we will be having "thikill", it may be a separate santha.
ReplyDeleteSuper
Delete:)
DeleteThanks Parani, i am waiting to see full announcement details
@ ALL : நண்பர்களே, இமைகளை மூடினால் உங்களின் மலர்ந்த முகங்களும், தூங்க முயற்சித்தால் இன்று முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருந்த TEX என்ற வார்த்தையும் தான் ரீங்காரமிடுகிறது மண்டைக்குள் ! ஒரு அசாத்திய நாளின் முழுமையினையும் அசை போடக் கூடத் தெம்பில்லை - simply becos நாளின் துவக்கம் எது ? முடிவு எது ? என்ற கோடுகளெல்லாம் ஒரே கலங்கலாக உள்ளன எனக்குள் ! சயன லோகத்தினுள் சிலமணி நேரங்களை செலவிட்டான பிறகாவது மண்டை தெளிகிறதா ? என்று பார்த்திட வேண்டும் ! காலையில் 9 மணிக்கு சந்திக்கிறேன் ! அதன் மத்தியில் இன்றைக்குப் போட்டுத் தாக்கிய போட்டோக்களை எனக்கு அனுப்பிடுங்களேன் - ஞாயிறை ஒரு pictorial ஆக்கிட ? Good night !
ReplyDeleteமகிழ்ச்சி
DeleteRummi +1
Delete:)
DeleteHappy friendshipday friends
ReplyDeleteகான்க்ரீட் கானகம் நியூயார்க் !-
ReplyDelete:):):)
நன்றிகள் பலகோடி EDIT SIR!
😊
Deleteஇ ப என்ன தான் சொன்னார் ஸ்டீல் ?
Deleteவராது...ஆனா வரும்னாராம்
Delete:)
Delete:)இறுதி பாகத்தை சேர்த்து ஒரு பெரிய குண்டு ஒன்று போடசொல்லலாமா ?
Deleteராபின் கலரிங் பட்டாசு!!
ReplyDeleteடைலனும் டெக்சும் அட்டகாசம்.!
மேசிக்கு அண்ணாச்சி. . .யும் பரவாயில்லை.
ஈரோட்டில் இத்தாலி . . சூப்பரப்பு சார்!!
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeleteNew post ....
ReplyDeleteNew post
ReplyDelete