Powered By Blogger

Monday, August 15, 2016

ஒரு விடுமுறைநாள் hello !

நண்பர்களே,

வணக்கமும்....சுதந்திர தின வாழ்த்துக்களும் ! வரிசையாய் 3 நாட்கள் லீவு அமைவதெல்லாம் ஷெரீப் டாக்புல்லின் தலையில் முடி முளைப்பதை விடவும் அபூர்வம் என்பதால் - கிடைத்துள்ள இந்த பிரேக்கை  ஆளுக்கொருவிதமாய் ஜமாய்த்து வருவீர்களென்பது நிச்சயம். Enjoy !! தலைமாட்டிற்கருகே கொஞ்சம் காமிக்ஸை அடுக்கிக் கொண்டு இதில் கொஞ்சம்...அதில் மிச்சம் என சாவகாசமாகப் புரட்டிக் கொண்டிருப்பின் - நீங்கள் தனியாக இல்லை சாமியோவ் ! சமீபத்து இதழ்களை அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றுக்குள் பார்வைகளை ஓடவிட்டுக் கொண்டே - 2017-ன் அட்டவணை பற்றியும் மெதுமெதுவாய் யோசிக்க இன்றைய பொழுது உபயோகப்படுகிறது எனக்கும் ! 2017-ன் ப்ளூபிரிண்ட் ஓரிரு மாதங்கள் முன்பாகவே ஒரு rough shape  பெற்றிருக்க, நியாயப்படி இந்நேரம் final touches தந்து கொண்டிருக்க வேண்டும் நாம் ! ஆனால் சமீப மாதங்களது விற்பனைக் காற்றுகள் வீசும் திசை சற்றே குழப்பத்தைக் கொணர்ந்துள்ளது ! பற்றாக்குறைக்கு ஈரோடு விழாவிலுமே அதே trend தொடர்வதாய் நம்மவர்கள் சொல்ல - கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் எடுத்துக் கொண்டு கதைத் தேர்வுகளை மீண்டுமொருமுறை முறைத்து முறைத்துப் பார்க்க வேண்டியுள்ளது ! 

ஆண்டின் விற்பனைகளை   மூன்று + 1/2 compartment-களாகப் பார்த்திடுகிறோம் - இப்போதெல்லாம் ! 

முதலும், பிரதானமானதும் : சந்தா முன்பதிவுகள் ! 

இரண்டாவது - ரொக்கமோ ; கடனோ - ஏதோவொரு வடிவில் நடந்திடும் ஏஜெண்ட்கள் சேல்ஸ் !

மூன்றாவது : சென்னை + ஈரோடு + (சென்றாண்டு முதலாய் )மதுரை + திருப்பூர் & maybe வேறேதேனும் சிறுநகர புத்தக விழா விற்பனைகள் ! 

இது தவிர்த்து - ஒரு முழு compartment என்று சொல்ல முடியாவிடினும் - at least பாதிக்குத் தகுதி பெற்றிடும் ஆன்லைன் விற்பனைகள் !

இந்த மூன்றரை விற்பனை வாய்ப்புகளுள்ளும் சேதாரம் இன்றிப் பாஸாகும் நாயகர்கள் யாரென்பது நமக்கு மனப்பாடமாய்த் தெரியும் ; so அதையே சொல்லி போர் அடிக்கப் போவதில்லை ! மாறாக - ஒவ்வொரு விற்பனைப் பிரிவின் பிரேத்யேகத்தன்மையைப் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்திடுகிறேனே ! 

முதல் பிரிவானது தான்- நமது சகலவித முயற்சிகளையும் முழுமனதாக ஆதரித்து, நிறை குறைகளை சுட்டிக் காட்டும் ஒன்று ! So மாயாவி முதல், மார்ட்டின் வரை இங்கே புதுமாப்பிள்ளைக்குரிய மரியாதையினை ஈட்டி வருகின்றனர் ! No problems whatsoever in here !!

பிரிவு நம்பர் 2-ல் கொஞ்சம் pick & choose தலைக்காட்டுகிறது ! அந்தந்த ஏரியாக்களில் கடைகளில் வாங்குவோரிடம் ஒரு buying pattern உள்ளது  போல்படுகிறது ! "கார்ட்டூன் மட்டும்"  ; " டெக்ஸ் மட்டும் " ; "மறுபதிப்பு மட்டும்" என்று ஏதேனும் சில அளவுகோல்களைக் கொண்டிருப்பதால் - அவர்களது முன்தீர்மானிக்கப்பட்ட சாய்ஸ்கள் நீங்கலாக மற்ற இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை ஜாஸ்தி ஓட விடுவதில்லை என்று புரிகிறது. அம்மாத இதழினுள் ஏதேனும் "பிரமாதம் " என்று இங்கோ ; FB-யிலோ விமர்சிக்கப்பட்டால் மட்டும் அந்த நேரம், அந்த புக்கைக் கூடுதலாய் வாங்கிடுகிறார்கள். நமது வலைப்பதிவில் இவர்கள் அனைவரும் active பங்கெடுக்கிறார்களோ - இல்லையோ ; வரிவிடாது  படிக்கவும், இங்குள்ள நடப்புகளை உள்வாங்கிக்கொள்ளவும் தவறுவதில்லை ! நம் ஏஜெண்ட்கள் ஒருத்தர் பாக்கியின்றிச் சொல்லும் ஒரே விஷயம் : "நெட்டில் நீங்க எழுதிட்டா மறுநாள் எங்களது கடை போன்கள் பிஸியாகிடும் " என்பதே !! So உங்கள் சிந்தனைப் பந்தல்கள் ; கதை விமர்சனங்கள் ; ஊக்கங்கள் எப்போதையும்விட இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றிடுகின்றன guys !!! 

விற்பனைப் பிரிவு # 3 - அதாவது புத்தகவிழா சேல்ஸ் மாத்திரம் எந்தவொரு கட்டுக்குள்ளும் அடைபடாது - எப்போதுமே ஊருக்கு ஊர் ; வேளைக்கு வேளை மாறுபடும் ! சென்னை - சகலத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரசனை கொண்டிருக்கும் ; ஈரோடு - ஒரு லெவல் குறைவாய் - கார்ட்டூன்களுக்கு கூடுதல் ஆதரவு தரும்விதமாய் ! சென்றாண்டில் மதுரையிலோ - லார்கோவும், டெக்ஸும் ஹிட்ஸ் ! ஆக - ஒரு பரவலான ; சகலத்தையும் பரிசீலிக்கும் வித விற்பனைகளை புத்தக விழாக்களில் பார்த்திட இயலும் - அதாவது இப்போது வரையிலும் ! ஈரோட்டில் இம்முறை நமக்கு கிட்டியுள்ளது கொஞ்சம் குழப்பமான செய்திகளே  - because விற்பனை நம்பர்கள் மோசமில்லை எனினும் - பரவலான விற்பனையின்றி - குறிப்பிட்ட ரகங்களிலேயே சேல்ஸ் நிலைகொண்டிருந்துள்ளது ! ஒற்றை நிகழ்வினைக்கொண்டு ஒரு தடாலடித்  தீர்ப்பெழுதப் போவதில்லை நாம் - ஆனால் கமான்சே ; பவுன்சர் ; ஷெல்டன் ; ரோஜர் ; மாடஸ்டி ; ஜானி ஆகியோரின் ஈரோட்டு விற்பனை நம்பர்கள் ஒற்றை  இலக்கத்தில் உள்ளதுதான் லேசாக நெருடுகிறது ! மறுபதிப்புகள் எல்லாமுமே விற்பனையாகியுள்ளன ; டெக்ஸ் சொல்லவே வேண்டாம் !! So கணிக்க இயலா விற்பனைப் பிரிவு இந்த # 3 !! 

இறுதிப் பிரிவானது தான் ரொம்பவே volatile ஆனதும் கூட ! இங்கு எல்லாமும் விற்கும் ; சமயத்துக்கு எதுவும் விற்காதும் போகும் ! புதிதாய் ஆன்லைனில் நம்மைக்    காணநேரிடும் நண்பர்கள் பட்டையைக் கிளப்பி பத்தாயிரத்துக்கு ஆர்டர் செய்வதும் உண்டு ; ஒரேயொரு மாயாவி பிரதியினை வாங்குவதும் உண்டு ! ஆனால் நமது பதிவுகளில்  அரங்கேறும் விவாதங்களும், விமர்சனங்களும் நேரடியாய் பிரதிபலிப்பது ஆன்லைன் தடத்தில் தானென்பேன் ! இம்மாத ஈரோட்டில் இத்தாலி + மார்ட்டின் + பென்னி இதழ்கள் வாங்கியுள்ள பாராட்டுக்கள் அப்படியே அங்கே விற்பனைகளாய் உருமாற்றம் கண்டுள்ளன ! ஏப்ரல் முதல் தொய்வாகவே காட்சிதந்த நமது ஆன்லைன் தளம் கடந்த ஒரு வாரத்தில் அக்னிப் பிழம்பாய்க் காட்சி தருகிறது - thanks to you guys !! விமர்சனங்களோ ; இல்லையோ - ரெகுலராய் மாதாமாதம் எல்லா இதழ்களையும் ஆன்லைனில் வாங்கிடுவோரும் நிறையவே உண்டு ; but நம் பதிவுகளின் தட்ப வெப்பநிலைக்கேற்ப இதழ்கள் வாங்கிடுவோரின் எண்ணிக்கையும்  அதிகமென்பேன் ! 

ஆக இந்த 3+1/2 விற்பனை வாயில்களுக்குள்ளும் நெருடல்களின்றிப் புகுந்திட யார் யார் சரிப்படுவார்கள் என்ற ஆராய்ச்சியினை புதிதாயொருமுறை துவக்கியுள்ளேன் ! ஆனால் இந்த விடுமுறை தினத்தின் சேதி அதுவல்ல !! நமக்கு ஒரு அற்புதமான விற்பனை பிரதிநிதியாய்ச் செயல்பட்டுவரும் உங்கள் உற்சாகங்களும், உத்வேகமுடனான விமர்சனங்களும் மாதாமாதம் தொடர்ந்திடும் பட்சத்தில் - விளிம்பு நிலையில் நிற்கும் சிலபல வாசகர்கள் சந்தோஷமாய் இதழ்களை  வாங்கும் தீர்மானத்தினுள் குதித்திடுவர் ! இம்மாத மார்ட்டின் ஒரு கிளாசிக் example !! வீறு கொண்டு இதனை அலசி ஆராய்ந்து சிலாகித்திட நீங்கள் முனைந்திருக்கா பட்சத்தில் - 'ஆ...மார்ட்டினா ?' என்ற தயக்கத்தோடே நிறைய பேர் விலகிப் போயிருக்கக் கூடும் ! இப்போதோ - மார்டினுக்குக் கூடுதல் slot தருவது பற்றிச் சிந்திக்கும் லெவலில் நிற்கிறோம் ! பென்னியும் கூட உங்கள் அரவணைப்பில் இத்தனை அன்பைப் பெற்றிராது போயிருந்தால் - ஓரஞ்சாரத்தில் ஓடும் ஒரு துக்கடா பார்ட்டியாகிப் போயிருக்கக்கூடும் ! ஆனால் இன்றோ பொடியன் நம்மிடையே ஒரு நிரந்தரனாகிடும் நிலையைத் தொட்டிருக்கிறான் ! உங்கள் எண்ணங்களின், எழுத்துக்களின் ஆற்றலின் வெளிப்பாடே இது guys ! You have the power to Make or Break !!! 

தொடர்ந்து எழுதுங்கள்..இங்கோ..வேறெங்கோ ! என்னைத் தலையில் தட்டி வைக்கும் நோக்கமிருப்பினும்கூட - கதைகளுக்கென  கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டுத் தான் தொடருங்களேன் உங்கள் இலட்சியத்தில்  ?! மாதந்தோறும் நான் இங்கேயேதானிருப்பேன் - உங்களுக்கு தோசை வார்க்கும் முதுகோடு ; ஆனால் அந்தந்த மாதத்து இதழ்களுக்கும் கவனம் தர உங்கள் நேரங்களை ஒதுக்கினீர்களெனில் - காமிக்ஸ் எனும் செடிக்கு உங்களது சிறுபங்களிப்பைச் செய்த சந்தோஷம் உங்களதாகுமல்லவா ?   உங்களுக்குப் பிடிக்காதே போகும் கதைகளாயிருப்பினும் கூட  - அவற்றுக்குத் தரும் சலவையின் வீரியத்தை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளின், தட்டுத் தடுமாறியேனும் அவை கரைசேர்ந்துவிடும் ! ஒரு இதழினைக் கல்லறைக்கு அனுப்பித்தான் உங்களது நகைச்சுவையுணர்வுகளை சகாக்களுக்குப் பறைசாற்றிட வேண்டுமென்பதில்லையே ; likes சேகரித்தாக வேண்டுமென்பதில்லையே ??! அதற்காக குறைபாடுகளை சுட்டிக் காட்ட வேண்டாமென்று சொல்லவில்லை ! தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டியது சர்வ காலமும் அவசியமே ! விமர்சிக்கும் போது அதனில் தட்டுப்படும் சிற்சிறு பாசிட்டிவ்களையும் இணைத்துக் கொள்ளுங்களேன் என்பது தான் எனது வேண்டுகோள் !

உங்கள் உரிமை.....உங்கள் குரல்....ஆக்கபூர்வமாய்த் தொடர்ந்திடுங்களேன் guys !!! சந்தோஷத்தையும், உற்சாகத்தையும், அந்த feel good factor -ஐயும் இன்று போல் என்றும் தொடரச் செய்யுங்கள் ப்ளீஸ் ! அதனை பிராணவாயுவாகக் கருதிடுவோர் என்னைவிடவும்  நிறைய பேர் அரூபமாய் உள்ளனர் நம்மைச்  சுற்றிலும்  !!  Bye for now !! 

P.S : மீண்டுமொரு நெய் மைஸூர்பாகு டப்பா வென்றிடவொரு வாய்ப்பு guys - இதற்கொரு caption ப்ளீஸ் ? 

317 comments:

  1. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  2. பூமிக்குள் ஒரு பிரளயம்: 6.5/10
    magic-wind: எனக்கு மிகவும் பிடித்த நாயகன் என்பதால் மிகவும் எதிர்பார்த்த கதை இது. வித்தியாசமான கதை, சில எதிர்பாரத திருபம்கள், குழம்பம் இல்லாமல் நேர்கோட்டில் பயணிக்கும் கதை.

    மொழிபெயர்ப்பு ஏனோ தானோ என இருந்தது, ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து போல் இருந்தது, உங்களில் இடுபாடான மொழிபெயர்ப்பு இதில் மிஸ்ஸிங். அடுத்து வரும் கதைகளில் இதனை கவனத்தில் கொள்ளவும்.

    இந்த கதையின் மொழிபெயர்ப்பில் கொஞ்சம் செலுத்தி இருந்தால் இந்தக்கதை சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்து இருக்கும்.

    ReplyDelete
  3. Replies
    1. @ 'கேப்ஷன்' சரவணன்

      ஆங்! வந்துட்டீங்களா? சரி, உங்க முகவரிய எடிட்டருக்கு மெயில் பண்ணிடுங்க!:P

      Delete
    2. அசால்ட்டா இருந்து விடாதீர்கள் சரவணன் பாஸ்...
      நம்ம நண்பர்களும் வெளுத்து வாங்குவாங்க...
      போன ஒலிம்பிக்கில் 6பதக்கங்கள் வாங்கிய நம்மவர்கள், இம்முறை 10வது நிச்சயம் என கொஞ்சம் அசால்டாக ரியோ போய் இதுவரை மண்ணை கவ்வ மட்டுமே செய்துள்ளார்கள். பட்டியலில் ஆவது இடம் கிடைக்குமா என இப்போது ரசிகர்கள் ஏங்க தொடங்கி விட்டனர்.
      எனவே இம்முறை இங்கும் போட்டி பலமாக இருக்கும் என நினைக்கிறேன்....

      Delete
  4. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Replies
    1. PfB, எடிட்டரின் பதிவை முழுசா படிச்சீங்களா?!!

      Delete
    2. கற்பூரம்'க நீங்க!:)

      Delete
    3. ரொம்ப புகழாதிங்க!

      Delete
  6. வணக்கம் சார்...
    வணக்கம் நட்பூஸ்...

    திருமலை திருப்பதியில் நடைப்பயணத்தில் மலையேறி, முடி காணிக்கை அளித்து,திவ்யதரிசனம் செய்து, இந்த ஆண்டு போல காமிக்ஸ் மழை பொழிய ஏழுமலையானின் அருள் வேண்டியும்,
    நண்பர்கள் நலமாகவும், நம்மை காமிக்ஸ் கனவுலகில் சஞ்சரிக்க வைத்துள்ள நம் அன்பின் ஆசிரியர் நலமாகவும் , நம் நண்பர்கள் ஒற்றுமை பல்கி பெருகவும் திருவேங்கடனின் அருள வேண்டி கொண்டேன் நண்பர்களே....

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. லட்டு எங்க ஜி! லட்ட கண்ணுல காண்பிச்சாதான் நீங்க திருப்பதி போனத நம்புவோம் :-)

      Delete
    2. ஹா...ஹா...புரோபைல் பிக்சர்ல பாருங்கள் பரணிஜி...
      வரலாறு காணாத கூட்டம், 300 ரூபாய்டிக்கெட்ல வந்த லட்டு மட்டும் தான் ஜி,எக்ஸ்ட்ரா லட்டுக்கு கோவிலை சுற்றி 1கிலோ மீட்டருக்கு கியூ...நடைப்பயணத்தில் டயர்டாகிட்டதால் அந்த பக்கமே போகல, அடுத்த ஆண்டு ஜூலை இறுதியிலேயே போய் வந்து , ஈரோடு விழாவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவேன் என உறுதி கூறுகிறேன்...

      Delete
  7. ஓகே சார் ....இனி யார் என்ன சொன்னாலும் அனைத்து இதழ்களின் விமர்சனமும் படித்தவுடன் இங்கே படை எடுப்பேன் ...அதிகம் கதை போக்கை ..முடிவை சொல்லாமல் .....

    ReplyDelete
  8. சரவணன் சார் கேப்ஷன் போட்டியில் தாங்கள் வென்றதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ...:-)))

    ReplyDelete
  9. விஜயன் சார், விற்பனையில் அதிகம் சோபிக்காத நாயகர்களின் கதைகளை வரும் காலம்களில் குறைந்த அளவு பிரிண்ட் செய்தால் தலை தப்பிக்க வாய்ப்புகள் உண்டா?

    ReplyDelete
  10. ////ஒரு இதழினைக் கல்லறைக்கு அனுப்பித்தான் உங்களது நகைச்சுவையுணர்வுகளை சகாக்களுக்குப் பறைசாற்றிட வேண்டுமென்பதில்லையே ; likes சேகரித்தாக வேண்டுமென்பதில்லையே ??! ///

    உண்மைதான் எடிட்டர் சார்! எங்களின் விமர்சனத்திற்கும் இப்படியொரு முகமிருப்பதை இன்றுதான் வீரியத்தோடு தெரிந்துகொண்டோம்! இனிமேல் எச்சரிக்கையாய் இருப்போம்!
    ஆனால், மேற்கூறிய உங்களது சொல்லாடல் சற்றே பதற வைத்துவிட்டது உண்மை!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : விமர்சனங்கள் பாராட்டுக்களாய் மாத்திரமே இருக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை நண்பரே...!

      கமான்சே தொடரினை எடுத்துக் கொள்ளுங்களேன் ..... ! பிரான்க்கோ-பெல்ஜியக் கௌபாய்க் கதைகளுக்கொரு landmark-ஆக இதனை உலகெங்கும் பார்த்திடுகிறார்கள் ! நாமும் பரவலாய் ரசிக்கிறோம்தான் ; ஆனால் சற்றே மேலோட்டமான வாசிப்பே போதுமென்று கருதும் நண்பர்கள் - "மொக்கை ; பேசியே கொல்றானுங்க" என்ற ரீதியில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இட்டுச் செல்லும் கமெண்ட்ஸ் அந்தத் தொடரையே ஒரு மூலைக்கு அனுப்பி வைத்துவிடும் சங்கடத்தை முன்னிறுத்திடும் போலுள்ளது !

      இதுவரையிலுமுள்ள அத்தனை COMANCHE இதழ்களும் நம்மிடம் ஸ்டாக்கில் உள்ளன ; ஆனால் ஈரோட்டில் இதுவரையிலும் 2 அல்லது 3 பிரதிகள் மாத்திரமே விற்றுள்ளன எனும் போது அந்தச் சிற்சிறு நெகட்டிவ் பகிர்தல்களின் reach சற்றே ஜாஸ்தி என்பதையும் புரிந்து கொள்ளமுடியும் !

      அந்த முதல் நொடியில் தோன்றும் ஒரு கமெண்ட் ஒரு instantaneous reaction -ஆகக் கூட இருந்திடலாம் ; மறுவாசிப்பின் போது நமக்கே அது ரசிக்கவும் ஆரம்பித்திடலாம் ! ஆனால் அந்த முதல் கருத்து ஏற்படுத்தியிருக்கக் கூடிய சேதத்தைச் செப்பனிட பின்னே செல்ல யாருக்கும் நேரமோ, மெனக்கெடலோ இருக்கப் போவதில்லையே ? நான் சொல்ல வந்தது அதைத் தான் ! எழுதும் வேகத்தில், எழுத்தினில் சற்றே வேகம் கூடிப் போயிருப்பின் - மன்னிப்புகள் guys ! யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கமல்ல என்னது !

      Delete
    2. ///யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கமல்ல என்னது !///

      எங்களுக்கு அது நன்றாகவே தெரியும் எடிட்டர் சார்! ஆனால் உங்கள் எழுத்தின் வேகம் இந்த அளவுக்கு இருப்பின், உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தின்/இழப்பின் சதவீதம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நினைக்கும்போதுதான் அந்த 'பதறல்' எனக்கு ஏற்பட்டது!

      மன்னிப்புகள் - அவசியமில்லை எடிட்டர் சார்! பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகப் படித்த நண்பர்களுடனான தொடர்புகூட மாதங்களில்/வருடங்களில் என்றிருக்க, ஏறத்தாழ 'தினமும்' எங்களது எண்ணங்களில்/எழுத்துகளில் நிறைந்து கிடக்கும் உங்களை நாங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறோம்! ( அந்த ஃபெவிக்கால் பெரியசாமியிடம் மட்டும்தான் இன்னும் சரிவரப் பழகவில்லை ஹிஹி)

      Delete
    3. That's too bad .. இப்போது வந்துகொண்டிருக்கும் பிரான்கோ-பெல்ஜிய தொடர்களில் இரண்டாம் இடம் வகிப்பது COMANCHE - சந்தேகமில்லாமல் ! சில இடங்களில் பத்தி வசனங்கள் இருந்தாலும் சித்திரங்களின் வீர்யம் அவற்றை சற்றே மட்டுப்படுத்துவதை கண்டுள்ளேன் - விரைவில் எல்லா பாகங்களையும் படித்து விட்டு ஒரு பட்டா பட்டி பதிவு போட்டுடலாம் - எல்லா இடங்களிலும் !

      Delete
    4. //ஏறத்தாழ 'தினமும்' எங்களது எண்ணங்களில்/எழுத்துகளில் நிறைந்து கிடக்கும் உங்களை நாங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறோம்! ( அந்த ஃபெவிக்கால் பெரியசாமியிடம் மட்டும்தான் இன்னும் சரிவரப் பழகவில்லை ஹிஹி)//

      அருமை விஜய்.

      Delete
  11. எடிட்டருக்கு மாலை வணக்கங்கள்.. மார்ட்டின் முக்கியத்துவம் பெற்றதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வரவு நல்வரவு ஆகட்டும்!

      Delete
  12. வணக்கம் மக்கழே...

    ReplyDelete
  13. Caption:
    "புஜ்ஜிமா காமிக்ஸ் வாங்க போகலாம் எந்திரிங்க"
    "அதுக்கு ஏன்டா உன் வாய் ஜலத்தால் குளிப்பாட்டுற??"

    ReplyDelete
  14. 1-டேய் தம்பி! என்னைய கேனையன், கிறுக்கன் னு சொல்லி எல்லாரும் நக்கல் பன்னிங்களே,இப்ப ஐயாவோட ரேஞ்சே வேற தெரியுமா? எனக்கு "ரின் டின் கேன்" னு பேர் எல்லாம் வெச்சி எங்கேயோ ஒரு மூலைல இருக்கிற தமிழ்நாட்டுல என்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுறாங்க,அது உனக்கு தெரியுமா?

    2-டேய் கிறுக்குப்பயலே அவங்க உன்னைய தலையில தூக்கிவைத்து கொண்டாடுறதே, உன்னோட கிறுக்குத்தனத்தை பார்த்துத்தான்டா...அவங்களுக்கு எப்போதுமே உன்னைய மாதிரி கோமாளிகளையும், கிருக்கன்களையும் தான் ரொம்ப புடிக்குமாம்...இத கூட சரியா புரிஞ்சிக்காம இங்க வந்து ஓவரா சீன் போடுற..உன்ன மென்டல்னு கூப்பிடுறதுல தப்பே இல்லடா அரைலூசுப் பையலே.......

    ReplyDelete
  15. டியர் எடி&காமிக்ஸ் பிரண்ட்ஸ்.
    Newshunt app மூலம் உலாவும் போது ராஜேந்திரகுமாரின் பழைய நாவல்கள் விற்பனையாவதை கண்டு ஒன்றை விலை கொடுத்து டவுன்லோட் செய்தேன்.அருமையான தரம்.நமது காமிக்ஸ் பழைய இதழ்களும் இப்படி கிடைக்காதா என்ற ஆசையே இந்த பின்னூட்டம். விருப்பமுள்ளவர்கள் விளக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. COMICSPRIYAN@SALEM.AMARNATH : இங்கு உருவாக்கப்படும் படைப்புகள் சார் அவை ; so ஆன்லைன் பதிப்புகளாக்கிட கதாசிரியரின் ஒப்புதல் இருந்தால் மட்டும் போதும். நம் சமாச்சாரங்கள் அவ்விதமல்ல - எக்கச்சக்கமான நபர்கள் சம்பந்தப்பட்டுள்ள சர்வதேச ஆக்கங்கள் ! So அவற்றை ஆன்லைன் பதிப்புகளாக்குவது இடியாப்பச் சிக்கல் !

      Delete
  16. ///! ஒரு இதழினைக் கல்லறைக்கு அனுப்பித்தான் உங்களது நகைச்சுவையுணர்வுகளை சகாக்களுக்குப் பறைசாற்றிட வேண்டுமென்பதில்லையே ; likes சேகரித்தாக வேண்டுமென்பதில்லையே ??! ///


    இனிமேல் திருப்தியளிக்காத கதைகளை விமர்சிப்பதை, அவை கணிசமாக கரையேறிய பிறகு வைத்துக்கொள்கிறோம் சார். (இப்போதே அப்படித்தான் பல மாதங்களாக கட்டுப்பாட்டுடன் கமெண்ட்டுகிறோம்)!!

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ.....அப்புறம் இது முழுக்க முழுக்க ஜால்றா கச்சேரியாக மாறிவிடும் ! தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டியது சர்வ காலமும் அவசியமே ! விமர்சிக்கும் போது அதனில் தட்டுப்படும் சிற்சிறு பாசிட்டிவ்களையும் இணைத்துக் கொள்ளுங்களேன் என்பது தான் எனது வேண்டுகோள் !

      LADY SPITFIRE பிடிக்கவில்லை என்றீர்கள் ; இன்னமும் 3 கதைகளுக்கு உரிமைகள் வாங்கி விட்டிருப்பினும் ஓசையின்றி அவற்றை ஓரம்கட்டி விட்டேன் ! "விடுதலையே உன் விலை என்ன ?" கதையிலும் அதே கதைதான் ! And அவற்றை ஒதுக்க நேர்ந்ததில் எனக்கு நிஜமாய் வருத்தமில்லை becos - அவற்றின் வேகம் பற்றாதென்பது எனக்கு இதழின் தயாரிப்பின் போதே புரிந்தது. உங்களின் ஊர்ஜிதங்களும் ஒன்று சேர்ந்திட - அவற்றை தயக்கமின்றி கடாசி விட்டேன் ! ஆனால் கமான்சே ; மார்ட்டின் (இதுவரை) போன்ற தொடர்களை சுற்றிய நெகட்டிவ் வளையங்கள் தொடர்ந்திட இடம்தர வேண்டாமே என்பது மட்டுமே எனது வேண்டுகோள் !

      Delete
    2. ஆனால் - தற்கொரு சுவாரஸ்யமான flipside -ம் உண்டு ! மறுபதிப்புகளை வாரு வாரென்று வாரும் முதல் ஆசாமி நான் தான் ; ஆனால் அவற்றின் விற்பனையில் விறுவிறுப்பு கூடியுள்ளது தான் அதிசயத்தின் உச்சம் !! திரு திருவென்று விழிக்கத் தான் தோன்றுகிறது சில நேரங்களில் !! Phew !

      Delete
    3. ஆமா .. ஆமா .. அப்புறம் என்னை மாதிரி ஆசாமிகளிடம் பட்டம் வாங்க வேண்டி வரும் - ஹி ஹி !!

      Delete
    4. தவறாக எண்ன வேண்டாம் ஆசிரியரே...
      என்னுடைய முதல் விருப்பம் மறு பதிப்புகளே...

      மறு பதிப்புகளுக்கு நீங்கள் நிறைய விளக்கங்கள் கொடுத்திருப்பதால் அதைப்பற்றி யோசித்ததில்லை..

      என்னுடைய ஆசை மறுபதிப்புக்கு தனி சந்தா அறிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்
      (குறிப்பாக இது வரை வெளியிடாத கதைகளெனில் எ கா #முத்து மினி வகையறா)

      அதேபோல் நமது புத்தகங்களில் நண்பர்களது விமர்சனங்களில் பயங்கர மொக்கை என்று எவ்வளவுதான் போட்டிருந்தாலும் நான் அணைத்து புத்தகங்களையும் வாங்கி கொண்டேதான் இருந்தேன்...
      ஏனெனில் அவ்வளவும் காமிக்ஸின் மேல் சொல்லெனா காதல்....

      Delete
    5. /// ஆனால் கமான்சே ; மார்ட்டின் (இதுவரை) போன்ற தொடர்களை சுற்றிய நெகட்டிவ் வளையங்கள் தொடர்ந்திட இடம்தர வேண்டாமே என்பது மட்டுமே எனது வேண்டுகோள் !///

      ஹைய்யா!
      நான் அவன் இல்லை
      நான் அவன் இல்லை.

      கமான்சே தொடருக்கு நான் ரசிகன். ஒவ்வொரு கமான்சே ஆல்பம் வரும்போதும் ஓநாய் கணவாயை கலரில் கேட்டு அடம்பிடிப்பதில் அடியேன்தான் முதல் நபர்.!
      மார்டின் கதைகளும் எனக்கு ரொம்பவும் பிடித்தவையே. மார்டினுக்கு கூடுதல் இடம் ஒதுக்கும் முடிவுக்கு பலத்த கரகோசத்தோடு வரவேற்பு அளிக்கிறேன்.!

      Delete
    6. Kannan Anna எனக்கு ஒரு டவுட் ???
      கமான்சே கதைகளில் எல்லாம் ரெட் டஸ்ட் தான் ஹிீரோ

      கமான்சேவுக்கு வேலையே இல்ல...
      அப்புறம் ஏன் கமான்சே சாகசம்னு சொல்றாங்க ???

      Delete
    7. // ஆனால் கமான்சே ; மார்ட்டின் (இதுவரை) போன்ற தொடர்களை சுற்றிய நெகட்டிவ் வளையங்கள் தொடர்ந்திட இடம்தர வேண்டாமே என்பது மட்டுமே எனது வேண்டுகோள் ! //

      @Vijayan Sir,

      ஒ.சி.சு வெளிவந்த சமயத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட வகைக்கதைகளை / களங்களை போட்டுத்தாக்கும் வழக்கம் Blog'ல் பெருகிவிட்டது, வலுவாகவும் உள்ளது.

      ஒரு கதை வெளிவரும் சமயத்தில அது வெகுவான எண்ணிக்கையில் வாசகர்களை அஜீரணப்படுத்தும்போது, அந்த ஒரேவொரு கதை மட்டும் வாசகர்களால் கேலிக்குள்ளாக்கப்படுவது இயல்புதான். ஆனால் தொடரும் மாதங்களில் / வருடங்களில் கதைக்கு சம்பந்தமில்லாத சம்பாஷனைகளிலும் "Just" காமெடிக்காக அந்தவகைக் கதைக்களங்களே கையாளப்படும்போது---

      ---you/we have to think about what kind of cult / culture formed here:

      1) There is no respect for the creator, that's ok upto certain extent - as readers.
      2) There is no room for co-readers who are willing to share positive thoughts about a story / series.
      3) Such readers indirectly assured for template denial comments as a consequence of just sharing a positive / welcoming words for certain story types. As examples, we all know what it is and we know who will deny what kind of story. This is unhealthy - just not because of possible harms on sales for the publisher, but twisting the reading habits of entire group of readers.

      If someone says the word "Graphic Novel" in the comment section. The reaction in the year
      2012 - What is it?
      2013 - Lets search about it
      2014 - These are mostly confusing, but I try
      2015 - he he!
      2016 - haha hoho

      The reactions pointed in the years 2015 and 2016 were not a reaction about the story or genre but points the nature / cult of participants in the blog. As a blog writer, you could have avoided this kind of end for the set of words "Graphic Novel" but what was done was really done.

      Delete
    8. ///கமான்சேவுக்கு வேலையே இல்ல...
      அப்புறம் ஏன் கமான்சே சாகசம்னு சொல்றாங்க ???///

      சிவா,
      யாரோ பாட்டெழுதி, யாரோ மெட்டமைச்சி, யாரோ பாடி ஹிட்டாகும் பாடல்களை,

      நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர் பாடல் என்று சொல்வதில்லையா!!? அதுபோலத்தான் இதுவும்.

      (சின்னதாய் ஒரு ரகசியம் சிவா. உங்களுக்கு ஏதோ ஒருமாதிரி விளக்கம் சொல்லிட்டாலும், நீங்க கேட்ட அதே டவுட்டு எனக்கும் உண்டு.)

      Delete
  17. சிறு பிள்ளை தனமாக எழுதும் எங்கள் விமர்சனம் கூட ( அனைவரையும் அல்ல நண்பர்களே ...என்னை போல ...) இதழ்களின் வெற்றி ..தோல்வியை நிர்ணியிக்கும் சக்தி உள்ளது உண்மையிலேயே ஆச்சர்யமான ஒன்றே......


    ReplyDelete
    Replies
    1. இது முன்பே எனக்குத் தெரியம் தலீவரே

      Delete
    2. Paranitharan K ; தலீவரே.....'டப்' பென்று புரியும் விதமாய் ஒரு உதாரணம் சொல்லட்டுமா ? அந்தச் சிகப்பு நுண்ணுயிர்களை நியூயார்க்கின் நீர்நிலைகளில் ஐசக் இணைத்து விடுவது ஒரு குட்டியான நிகழ்வு தானே ? ஆனால் நாட்கள் நகரும் பொழுது - நகரின் குடிநீர் முழுவதுமே இரத்தத் சிவப்பாகிட்டது தானே ?

      சந்தோஷமும்..கோபமும்..வருத்தமும் அதே போலத் தான் ; நம்மிடமிருந்து புறப்படும் வேளையில் சன்னமாய் இருந்திடலாம் ; ஆனால் பௌர்ணமி இரவுக் கடல் அலையாய் வழியில் வீரியம் ஏற்றிக் கொண்டிடுவது வழக்கமே !

      Delete
    3. அட....எடிட்டரின் உவமையை பாருங்களேன்...செம...

      நீங்கள் மட்டும் எடிட்டராய் இல்லாது வாசகராய் மார்ட்டினுக்கு விமர்சனம் எழுதியிருப்பின் மார்ட்டின் காமிக்ஸ் மட்டுமல்லாது மார்ட்டின் கொசுவிரட்டியும் சேர்த்து அதிகமாய் விற்று இருக்கும்...:-)

      Delete
  18. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. கேப்சன். ரிடிகே:"ஹைய்யா நமக்கும் ஒரு ஜோடி சிக்கிருச்சு"
    பூனை:"டேய் விட்றா என்னைய ஏற்க்கனவே ஈ.வி என்னை வச்சிருக்காருடா(புரொபைலா)"

    ReplyDelete
  20. நேற்று ஸ்டாலுக்கு சென்றபோது
    புத்தகங்கள் வாங்க வந்த (நீண்ட நெடுநாள்) வாசகர்கள் / குடும்பதலைவிகள் கூறிய கருத்துக்களை கேட்டேள்

    அதை இங்கு வெளியிடலாமா?
    பப்ளிக்கா சொல்ல கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது

    ஆசிரியர் இங்கே சொல்கின்ற விஷயத்துக்கு ஒத்து போகிற விஷயங்கள் அது

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்க அண்ணா..

      Delete
    2. விஜயன் சாரோட பதில் தேவை சகோ

      நான் எதேச்சை யாக சொல்லப்போய் என் முதுகில டின்னு கட்டிடுவாங்க

      ஸோ ஐயாம் வெய்டிங்

      Delete
    3. Tex Sampath : விடுங்க சம்பத்.....என்னவாக இருக்குமென்று யூகிக்க சிரமமில்லை எனக்கு ! விற்பனையில் சுணக்கம் காணும் நாயகர்கள் மீதான விமர்சனங்கள் நண்பர்கள் தம் மீதானதாகக் கருதவும் வாய்ப்புள்ளது !! நான் எழுதியுள்ளதே ஓவர்டோஸ் ; இதற்கு மேலும் வேண்டாமே !

      Delete
  21. விமர்சனம் என்பது பிடித்த காமிக்ஸ் ஹீரோ என்ற அடிப்படையில் இல்லாமல் பொதுவான கருத்தாய் இருந்தாலே போதும். கமான்செ முதல் தொடர் பிடிக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் தொடரையும் அதே எண்ணத்தில் அணுகும்போது நல்ல கதையாக இருந்தாலும் பிடிக்காமல் போக வாய்ப்புகள் உண்டு..

    ReplyDelete
  22. அதிகபடியாக டெக்ஸ் வெளியிட்டு விட்டீர்கள்,மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. Aslam Basha : இன்றைக்கு டெக்ஸும், மாயாவியும் குடும்பத் தலைவர்கள் மாதிரி சார் ! அவர்கள் களமிறங்கினால்தான் மற்றவர்கள் பிழைப்பு ஓடும் ! வார்னிஷ் அடிக்கா நிஜமிது !

      Delete
  23. ஆசிரியருக்கும் மற்றும் நண்பர்களுக்கும்
    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரசான்ந்த் காா்த்திக்...

      Delete
  24. சார் பெரும்பாலும் நமது கதைகள் அமேரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகியவற்றையே கதைகளமாக கொண்டுள்ளனவே!! எப்போதாவது லார்கொ போன்றவர்கள் பர்மா,வெனிஸ் என சென்று வருகிறார்கள். இப்போது வரும் ஜெரேமியா கூட எதிர்கால அமெரிக்காதான். இது குறித்து தங்கள் கருத்து என்னவோ சார்??

    ReplyDelete
  25. இங்கு உள்ள விமர்சனஙகளை FB ல் ஷேர் பண்ணினால் அதிகம் பேரிடம் ரீச் ஆகும். முன்னர் FB யை வெறுத்தவர்களில் நானும் ஒருவன்

    ReplyDelete
  26. கணவாய்க கொள்ளையர் ரத்த வெறியர்கள் போன்ற கதைகளை மறுபதிப்பக வெளியிடலாமே

    ReplyDelete
  27. இனி எல்லாம் மாரணமே (என்ன இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா விமர்சனம் :-))

    Another breezy read .. மிகவும் கவர்ந்து விட்டது .. நண்பர்கள் சொன்னது போல மார்டினுக்கு இன்னொரு ஸ்லாட் கொடுக்கலாம் .. instead of 3 smurfs !

    சற்றே பெரிய கதை என்றாலும் விறுவிறு .. இறுதியில் தமிழ் பட கிளைமாக்ஸ் எதிர்பாராதது :-)

    ReplyDelete
  28. டியர் எடிட்டர் (ஹி ! ஹி !!),

    இவ்வளவு நல்ல கதைகளுக்கு (மார்டின் போன்றவைகளுக்கு) மரணம், காட்டேரி என்று டைட்டில் வைப்பதை சற்றே மாற்றி நல்ல தலைப்புக்களாக வைக்கலாமே .. online விற்பனைகளுக்கு அதுவும் உதவக்கூடுமே .. சிறு வயதில் உங்கள் வெளியீடுகள் பலவற்றை ஒளிந்து, மறைத்து வைத்துப் படிக்க இது ஒரு பெரிய காரணம் .. அப்பா, அம்மா பார்த்தால் பின்னி விடுவார்கள் அப்போதெல்லாம் .. பலமுறை சொன்னதுதான் .. மறுபடியும் நீங்க இப்போ அதிகாரப்பூர்வமாய் முதுகை கொடுத்திருப்பதால் :-p :-p :-p

    /* மாதந்தோறும் நான் இங்கேயேதானிருப்பேன் - உங்களுக்கு தோசை வார்க்கும் முதுகோடு */

    ReplyDelete
    Replies
    1. Raghavan : Point taken !

      நடுவில் விடுபட்டுப்போன - கதைக்கு இன்னொரு பெயர் வைக்கும் படலத்தைத் தொடருவோமே ? இம்மாதக கதைகளுக்கு உங்கள் கைவண்ணங்களைக் காட்டுங்களேன் ?

      Delete
  29. எனக்க பிடித்த எதார்தமான cow boy தொடர் Comanche....அதிக வரவேற்பு பெற்றிடாத்து பற்ருறி வருத்தமே்.... Magic wind கதை அருமை. ஒரு சூப்பரான fantasy கதை. போ வின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது். Mormon களை பற்றித் தெரிந்துகொள்ள இந்த கதை உதவியது.

    Nick rider ராபின் கதை அட்டகாசம்தான்....சித்திர தரமும் நன்றாக உள்ளது.....

    மற்றவைகளை இனிதான் படிக்க வேண்டும்....

    ReplyDelete
  30. சார் நீங்கள் கோவை வருவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. Krishna VV : இப்போதைக்கு திட்டமில்லை ; but பார்ப்போமே !!

      Delete
  31. எனது வேண்டுகோள்கள் மீண்டும் ஒருமுறை,

    டெக்ஸ் மேக்ஸி ஹார்ட்பவுன்ட் அட்டையுடன் கதைகள்.
    மர்லின் மன்றோ ராபின் துப்பறியும் கதை.

    ReplyDelete
  32. மார்ட்டினுக்கு அதிக வாய்ப்பளிப்பதற்கு நன்றி Sir. கட்டத்துக்குள் வட்டம் கதையை சமீபத்தில் மறுபடியும் வாசித்தேன். அருமையான fast paced கதை. மார்ட்டின் series ல் உள்ள அனைத்து கதைகளையும் வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  33. அன்பு எடிட்டர், சற்றும் மிகை இல்லாமல் எதார்த்தத்தை பதிவு செய்துள்ளீர்கள்.

    கமான்சே எப்பொழுது தமது முன்னாள் முதலாளியிடம் இருந்து வெளியேறினாரோ , அது முதல் வந்த கதைகள் சற்று தொய்வு என்பதே எனது எண்ணமாக இருந்தது. ஆனால் நெஞ்சில் ஒரு நட்சத்திரம் கதை , அதற்கு மாறாக மீண்டும் Back on Track .

    மறுபதிப்புகளை பொறுத்தவரை , அது முத்து காமிக்ஸ் என்கிற மந்திர சொல், மாறுபாடில்லாத விலை, ஒரே அளவு , பால்ய நினைவுகளை மீட்டெடுக்கும் நாயகர்கள் என்பதால் தொடர்ந்து ஒரு சீரான விற்பனை காண்கிறது போலும்.

    நமக்கு விருந்து என்றவுடன் நினைவுக்கு வருவது பிரியாணி. அதனை போல மசாலா கலவையுடன் நச்சின்னு கதை அமைந்தால் அது ஹிட். 600 புத்தகங்களை கடந்தாலும் கூட டெஸ் கதைகள் அந்த டெம்ப்லேட் யுக்தியை விடாமல் தொடர்ந்து வருவது அதன் வெற்றிக்கு மாபெரும் காரணம் என்று சொல்லலாம். இதன் கார்ட்டூன் வடிவம் லக்கி . ஆக விற்பனையும் அவ்வாறே.

    இப்பொழுது தோர்கல், ஷெல்டன், லார்கோ நாயகர்களின் கதைகள் எவ்விதத்திலும் குறைவில்லை. எனது யுகம் எதிர்காலத்தில் இந்நாயகர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்று.

    இந்த மாதம் வரை வந்த புத்தகங்களின் எனது டாப் தேர்வு என்றால், அது ஜூலியாவின் நின்று போன நிமிடங்கள் என்பது தான். She has her great innings ahead .

    பௌன்சர் கதைகளை பொறுத்தவரை அதன் மிக பெரிய எதிரி வேறு யாரும் அல்ல , நீங்கள் மட்டுமே. வன்முறை அதிகம் என்று ஒவ்வொரு முறையும் சொல்லி சொல்லி அந்த கதை வரிசையினை அடல்ட் ஒன்லி ரகத்தில் சேர்த்து விட்டீர்கள். சிங்கம் என்றால் சாத்வீகமா இருக்க கூடாது. சிங்கம் சிங்கமாக தான் இருக்கணும்.நான் மிகவும் ரசித்து படித்த கதைகளில் பௌன்சர் கதைகள் அனைத்தும் அடக்கம்.

    எதிர்பாரா விருந்தாக அமைந்தது இந்த மாத மார்ட்டின் கதை. ஆக இங்கு முழுமையான சொதப்பல் என்று எதையும் கை காட்டிட இயலாது.

    விற்பனை நோக்கில் பார்த்தால், பிரியாணியும் , தலைவாழை இலை விருந்துக்கு பிறகு தான் பிட்ஸ்சா, பர்கர் எல்லாம்.

    சிறுக சிறுக ஹார்ட் கவர் தலை காட்டும் இந்நேரத்தில், ஒரு பக்கா டெம்ப்லேட் உருவாக்கி (ஜிகினா வேலை) அது கொஞ்ச காலமாவது மாறாமல் தொடர்ந்தால் புத்தக திருவிழாக்களில் புது விற்பனை காண வாய்ப்பு உள்ளது. (முக்கியமா அந்த ஸ்டாண்டை மாத்துங்க ப்ளீஸ். முகப்பக்கம் நேராக தெரியும் வகையில் , நிமிர்த்தி அடுக்கிட ஸ்டான்ட் உடனடி தேவை.)

    மற்றபடி வெளியிடப்படும் புத்தகங்களின் முதல் வாசகரும், முதல் விமர்சகரும் தாங்களே.

    Most of the comments published here are almost the reflection of urs....

    ReplyDelete
    Replies
    1. சிம்பா : //அந்த ஸ்டாண்டை மாத்துங்க ப்ளீஸ். முகப்பக்கம் நேராக தெரியும் வகையில் , நிமிர்த்தி அடுக்கிட ஸ்டான்ட் உடனடி தேவை//

      +1

      Delete
  34. எடி சார் வணக்கம்.
    உங்களது திடீர் பதிவு அடிவயிற்றில் பகீரென பதட்டத்தை உண்டாக்குகிறது.
    ஒரு புத்தகத்தை சந்தைக்கு கொண்டுவர நீங்கள் படும்பாடும் அந்த புத்தகம் விற்பனையாகவில்லை என்ற போது உங்களது மனம் என்ன நிலையில் இருக்கும் என புரிகிறது.
    எங்களூரில் முன்பு ஹோட்டல்களில் "குறைகளை எங்களிடம் கூறுங்கள். நிறைகளை நண்பர்களிடம் கூறுங்கள்" என்ற வாசகத்தை காணலாம்.
    இது நமது காமிக்ஸூக்கும் பொருந்தும் எனபுரிகிறது.நாங்கள் ஒரு கதையை சுலபமாக போட்டுத்தாக்கும் செயல் உங்களது விற்பனைக்கு வேட்டு வைக்கும் செயலாக மாறுகிறது எனும்போது இனி எனக்கு குறையென தெரிவதை பொதுவில் பகிரப்போவதில்லை.அதற்காக ஜால்ராவையும் தட்டப் போவதில்லை.அந்த கதையில் எனக்கு பிடித்த நிறைகளை மட்டுமே பட்டியலிடுவேன். குறையென தெரிவதை ஜனவரிக்கு முன் நான் செய்துவந்ததை போல தனியே உங்களிடம் முறையிட்டுக் கொள்வேன். இந்த எழுபதாவது சுதந்திர தினத்தில் இதை ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன். இந்த விடுமுறை நாளில்கூட ஜாலியாக பொழுதைகழிக்க முடியாமல் நீங்கள் இருப்பதை ஒட்டு மொத்த காமிக்ஸூக்கே உண்டான சங்கடமாக எண்ணத் தோன்றுகிறது. முன்பெல்லாம் அரிதாக காமிக்ஸ் கிடைத்ததால் அதில் இருந்த நிறைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. ஆனால் இன்றோ சற்று அதிகமாக கிடைப்பதால் சிறு குறைகள்கூட பெரிதாக விமர்சிக்கப்படுகிறது. அட்டைப் படத்தில் ஆரம்பித்து புத்தகத்தின் தாள்களை குறை சொல்வது, ஓவியங்கள் சரியில்லை, வண்ணசேர்க்கை சரியில்லை, கதையும் சரியில்லை என்று ஒவ்வொரு வரியாக உங்களுக்கு நாங்கள் வைத்த வேட்டு புரிகிறது சார். இன்னும்கூட சற்று முன்னால் உங்களது நிலையை தெரிவித்து இருந்தால் தோழர்களின் நிலைப்பாடு மாறியிருக்கும்.இங்கு வரும் ஒவ்வொரு தோழர்களும் உங்களது வெற்றியை தமது வெற்றியாக பார்ப்பவர்களே. உங்களது சங்கடத்தை எண்ணி சந்தோஷப் படுபவர் யாருமில்லை.
    "எங்களுக்காக நீங்கள்
    உங்களுக்காக நாங்கள்". இந்த வார்த்தை இனி பதிவிடும் ஒவ்வொரு முறையும் எனக்கு மறக்காது சார்.

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : //குறைகளை எங்களிடம் கூறுங்கள். நிறைகளை நண்பர்களிடம் கூறுங்கள்"//

      +101

      Delete
    2. //அட்டைப் படத்தில் ஆரம்பித்து புத்தகத்தின் தாள்களை குறை சொல்வது, ஓவியங்கள் சரியில்லை, வண்ணசேர்க்கை சரியில்லை, கதையும் சரியில்லை என்று ஒவ்வொரு வரியாக உங்களுக்கு நாங்கள் வைத்த வேட்டு புரிகிறது சார். இன்னும்கூட சற்று முன்னால் உங்களது நிலையை தெரிவித்து இருந்தால் தோழர்களின் நிலைப்பாடு மாறியிருக்கும்.இங்கு வரும் ஒவ்வொரு தோழர்களும் உங்களது வெற்றியை தமது வெற்றியாக பார்ப்பவர்களே. உங்களது சங்கடத்தை எண்ணி சந்தோஷப் படுபவர் யாருமில்லை.
      "எங்களுக்காக நீங்கள்
      உங்களுக்காக நாங்கள்".//
      +1

      Delete
  35. கிட் ஆர்டின் & டெக்ஸ் மாமா.!

    நீங்கள் இருவரும் இனிவரும் காலங்களில் குமாரி மாடஸ்டியை மானே தேனே .என்றுதான் அழைக்கனும்.இல்லாட்டி அடுத்த வருடம் எடிட்டர் மனதில் மட்டுமே மாடஸ்டிக்கு இடம் என்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.!

    (எனக்கு பிரச்சினை இல்லை. மற்ற பல ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குதான் பிரச்சினை.!என்னிடம் இருக்கும் இளவரசி கதைகளை வைத்து என் ஆயுசு முழுதும் ஓட்டிக்கொள்வேன்.!என்ன ?சிறிய எழத்துக்கள் தெரிந்து தொலையமாட்டேன் என்கிறது.ஒரு பெரிய லென்ஸ் கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொள்ளவேண்டியதுதான்..!ஹும் ! என்னமோ போடா மாதவா.!)

    ReplyDelete
    Replies
    1. //(எனக்கு பிரச்சினை இல்லை. மற்ற பல ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குதான் பிரச்சினை.!//

      MV sir... எங்க இருக்காங்க அந்த பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள்? 🤔🤔🤔அப்படி இருந்தா நமக்கு பிரச்னையே இல்லை. விற்பனையானாலே ஆசிரியர் நிறய ஸ்லாட் கொடுப்பாரே...

      Delete
    2. ஙேஙேஙே...
      என்னது மாடஸ்டிக்கு 1000 கணக்கில் ரசிகர்களா !!!

      Delete
    3. மாடஸ்டி ரசிகர்களில் நம்ம MV sir முந்நூறு +நூறு பேருக்கு சமம்.
      நம்ம இனியன் சார் இருநூறு + இருநூரு பேருக்கு சமம்.
      அப்புறம் மீதம் இருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் நூறுபேருக்கு சமம். கூட்டிக் கழிச்சுப்பாத்தா கணக்கு ஏகப்பட்ட ஆயிரத்தில் போய் நிக்காதா என்ன? :-)

      Delete
    4. மஹி ஜி,ஹா,ஹா,ஹா செம

      Delete
    5. பழைய ரசிகர்கள் மாடஸ்டிக்கு அதிகம்பேர் உள்ளார்கள்.இதை மறுக்க முடியாது.ஒரு காலத்தில் எல்லா ஹீரோக்கள் கதைகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் மாடஸ்டியே முதல் இடத்தை பிடித்தார்.


      முன்பு கூட்டணியில் ஸ்கோர் செய்து பழகிய மாடஸ்டி ,தற்போது சயேட்சையாக வந்து சிரமப்படுகிறார் போலும்.! பக்கங்கள் குறைவு புது வாசகர்களை கவர்வதில் ஒரு குறையாக இருக்கலாம்.! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது புது வாசகர்களுக்கு தெரியாதல்லவா.???

      Delete
  36. August review:
    Tex - பாதி கதைக்கு மேல் ஒரே இடத்தில், அவ்வளவாக ஆர்வத்தை தூண்டா சம்பவங்கள், அழுத்தமான காரணம் இல்லா செவ்ந்தியர்களின் தாக்குதல் என பல விஷயங்கலால் இக்கதை எனக்கு ஏமாற்றமே

    ராபின்-நிறைவான கதை. ஆனாலும் வழக்கமான பாணியிலான ராபின் கதைகளுக்காக வெயிட்டிங்

    மேஜிக் விண்ட்- ஓக்கே ரகம்

    டைலன் டாக்- என்னை பொறுத்த வரை ஈரோட்டில் இத்தாலி இதழின் சூப்பர் ஹிட் இந்த கதை தான். திகில், கொஞ்சம் காமெடி, கிரைம் என ஒரு பக்கா கலவை

    ReplyDelete
    Replies
    1. SIV : எனக்குமே டைலன் டாக் பிடித்திருந்தது ; அந்த கிளைமாக்ஸ் பிரமாதம் என்று நினைக்கத் தோன்றியது ! லாஜிக் குறைச்சலே - ஆனால் DD கதைவரிசையில் லாஜிக் தேடுவதிலேயே லாஜிக் இல்லை தானே !!

      Delete
  37. நண்பர்களுக்கு நல்ல கதை தொடரில் சில இடங்களில் நெகடிவ் அதிகம் இருந்தாலும் நாம் சொல்லும் ப்ளஸ் பாயிண்ட்கள் விற்பனைக்கு உதவும் என்பது எனது எண்ணம்.(கபாலி படம் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் ரஜினி படம் என்றாலே மசாலா தான்.15,20 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற படங்களில் நடித்து இருந்தால் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமோ?ஆனால் கபாலி கிடைக்கும் விளம்பரம் box office hitவசூல் சாதனைஎன்று பார்க்கும்போது தூங்கவனம் சாதனை படைத்துயிருக்க வேண்டாமா!நம் நாட்டு மக்கள் நல்லதுக்கு எப்போதுமே சத்ரு தான் .வெறும் விளம்பரத்துல் வாழ்பவர்கள.அது சினிமா,அரசியல்,புத்தகம் எதுவாக இருந்தாலும் விளம்பரம், விமர்சனம் இது தான் நிதர்சனம்.ஆதலால் விமர்சனம் நெற்றியில் அடித்தார் போல் இல்லாமல் இருந்தால் காமிக்ஸ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது எனது கருத்து. நன்றி

    ReplyDelete
    Replies
    1. Saran Selvi : மாறும் காலகட்டங்கள் நண்பரே ; நாமும் இயன்றளவு மாறிக் கொள்ள நினைத்தாலும் சிற்சிறு இடறல்கள் தொடரவே செய்கின்றன !

      Delete
  38. 'நகரத்தை நரகமாக்கிடு' - இது இம்மாத மார்ட்டின் கதைக்கு என் மாத்தியோசி தலைப்பு!

    P.S: 'இனியெல்லாம் மரணமே' என்ற தலைப்பும் எனக்குப் பிடித்தே இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஒரிஜினலின் பெயர் "10 வாதைகள்" !

      பெயர் கொஞ்சம் சரித்திர பாடத்தின் தலைப்பைப் போல் இருப்பதாய்த் தோன்றியதால் - இது போன்றதொரு செம ஸ்பீடான கதைக்கு முற்றிலும் வேறு மாதிரியொரு feel தரச் செய்ய ஒட்டு மொத்தமாய் மாற்றினேன் !

      Delete
    2. 1. VIRATTUM VAATHAIGAL
      2. THAMBI UDAYAAN (slightly offbeat)

      Delete
    3. Raghavan : "THAMBI UDAYAAN" would be a giveaway !

      Delete
  39. இம்முறை ஈரோடு மீட்டிங்கில் அனைவரும் மைக் பிடித்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும் சிலர் அதிலிருந்து தப்பி விட்டனர். (அடுத்தமுறை சிக்க வைத்துவிட வேண்டும்)
    ஈரோட்டுத் திருவிழாவின் அடுத்தொரு ஜாலிப் பகிர்வைக்காண இங்கிட்டு அமுக்குங்கோ !

    ReplyDelete
    Replies
    1. Kid u missed Cibi. He was running all over the place to avoid mic 😉

      Delete
    2. சிம்பா @
      சிபியை பேசவைத்து விட்டோமே!
      ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்ல ஒளிஞ்ச கதை ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே, அதுமாதிரி, என்னோட பக்கத்துல வந்து பதுங்கியிருந்தாரு. தூக்கி நிறுத்தி மைக்கை கையில குடுத்துட்டோமில்ல :-)

      (சிபிஜியை எப்படியாவது பேசவைத்தே ஆகவேண்டும் என கட்டளையிட்டதே அவருடைய புதல்விதான்.)

      Delete
  40. டியர் விஜயன் சார்,

    2014 & 15 களில் நடந்த புக் பேர்களில்
    புத்தகங்கள் குறைவாகவும் ,

    புத்தகங்ககள் வாங்க / பார்வையிட வாசகர்கள் வரும்போது தெளிவான முறையில் புத்தகங்கள் தேர்ந்தெடுக்க வசதியாய் இருந்தது
    விற்பனையும் நன்றாக இருந்தது
    ஆனால்
    இம்முறை அதிக புத்தகங்கள்!! ஆனால் சின்ன இடம்? வருபவர்கள் எந்த கதை & எது எது தொடர்ககதை என்பது புரியாமலும், தேர்ந்தெடுக்க முடியாமல் சரியான கைடு இல்லாமலும் போனதே விற்பனை சிறப்பாக இல்லாததற்க்கு காரணம் (இது நான் ஸ்டாலில் இருந்தபோது வந்தவர்கள் புலம்பியபடி சென்றார்கள்)

    தி ஹிந்து ம சில விளம்பரங்களை பார்த்து மறுபடியும் காமிக்ஸ் வருகிறதே என்று தேடி வந்தவர்களும் இதில் அடக்கம்

    புத்தகங்களை பற்றி எடுத்துக்கூற யாராவது ஒருவர் இருந்தால் நன்மை பயக்கும்

    அடுத்த முறை நமக்கு இரண்டு ஸ்டால்களாக இருக்கும்படி செய்யவும்

    குடும்பத் தலைமைகள்
    விலைகளை பற்றி மட்டும் யோசிக்கின்றனர் 20 டூ 50 மட்டும் எதிர்பார்க்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் : * விற்பனை சிறப்பாக இல்லாததற்க்கு இதுவும் காரணம் *

      Delete
    2. Tex Sampath : டபுள் ஸ்டால் எடுத்தால் வசதிதான் ! ஆனால் செலவு ஒருபக்கமிருக்க - அரங்கினுள் டபுள் ஸ்டால்களின் எண்ணிக்கைகளும் குறைவே எனும் போது - ஸ்டால் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற ரிஸ்க் எடுக்கவும் பயம் ! நமது தற்போதைய நிலைமை - சிங்கிள் ஸ்டாலுக்கு கையிருப்பு கொஞ்சம் கூடுதல் ; ஆனால் டபுள் ஸ்டால் நிறைவாய்த் தோற்றம் தருமளவுக்கு டைட்டில்ஸ் பற்றாது !

      ரூ.20-ரூ.50 விலைகளுக்குள் அடக்கிட வேண்டுமெனில் - கலருக்கு கொஞ்சம் பின்சீட்டும் ; black & white -க்கு முன்சீட்டும் தந்தாக வேண்டும் ! அது அரசனை நம்பி, புருஷனைக் கைவிட்ட கதையாகிடக் கூடாதில்லயா ?

      And இருக்கவே இருக்கிறார்கள் நமது கலைச் சேவையாளர்கள் ! நாம் கருப்பு-வெள்ளையில் எதையேனும் போட்டு விட்டால் - "இதே கதை கலரில் ரொம்பவே சல்லிசாய் தயார்" என்று தங்கள் லட்சியப் பயணத்தை உடனே துவங்கிடத் துடிப்பாய்க் காத்திருப்பார்கள் !

      Delete
    3. குற்றம் பார்க்கின் ,மற்றும் த.இ.போராளி கலரில் டைப் செட்டிங் கலரில் நடந்து வருதங்கோ

      Delete
    4. ரின் டின் கேன் : அவை தயாராகி விற்பனைக்கும் வரும் பட்சத்தில் - ஒரு பிரதியினை வாங்குங்கள் ; அந்தப் பணப் பரிவர்த்தனை விபரத்தோடு தாருங்கள் - ஆன செலவுகள் + பத்தாயிரம் ரூபாய் சன்மானம் தர நான் வாக்குத் தருகிறேன் !

      Delete
    5. // வருபவர்கள் எந்த கதை & எது எது தொடர்ககதை என்பது புரியாமலும், தேர்ந்தெடுக்க முடியாமல் சரியான கைடு இல்லாமலும் போனதே விற்பனை சிறப்பாக இல்லாததற்க்கு
      இதுவும் ஒரு காரணம்

      தி ஹிந்து ம சில விளம்பரங்களை பார்த்து மறுபடியும் காமிக்ஸ் வருகிறதே என்று தேடி வந்தவர்களும் இதில் அடக்கம் //



      // புத்தகங்களை பற்றி எடுத்துக்கூற யாராவது ஒருவர் இருந்தால் நன்மை பயக்கும் //

      ????

      Delete
    6. // புத்தகங்களை பற்றி எடுத்துக்கூற யாராவது ஒருவர் இருந்தால் நன்மை பயக்கும்//

      டியர் எடிட்டர்,

      இதுவும் ஏற்கனவே விவாதித்தோம் .. காமிக்ஸ் அறிந்த ஒருவர் ஸ்டாலில் தேவை .. முக்கிய நகரங்களிலாவது - எனவே சென்னை, ஈரோடு, மதுரை போன்ற இடங்களில் நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் லீவு போட்டுவிட்டு ... yes there are other pressures .. அப்புறம் பின்னட்டையில் சுண்டி ஈர்க்கும் ஒரு சிறுகுறிப்பு போடவும் - பாக்ஸில் ...

      Delete
    7. //அப்புறம் பின்னட்டையில் சுண்டி ஈர்க்கும் ஒரு சிறுகுறிப்பு போடவும் - பாக்ஸில் ...//
      +1

      Delete
    8. Regarding 20-50:

      டியர் எடிட்டர்,

      There is a real point about general public notion of how much a book can be priced. Look at popular selling books - their price (within 20 bucks) and their paper quality (yuck).

      நாம் அந்த 1.5 மார்க்கெட்டுக்கு வழவழா ஆர்ட் பேப்பரும், மற்ற நேரடி மற்றும் ஏஜென்ட் விற்பனைகளுக்கு அந்த லயன் மினி பேப்பரில் வந்த quality தாள்களிலும் அச்சிட முடிந்தால் - 20 டு 50 may still be possible.

      அவ்வாறு லயன் மினி quality கட்டுப்படியாகாதெனில் இன்னும் கொஞ்சம் lower quality ஆனால் முழு வண்ணத்தில். இங்கே மக்கள் சீப்பாய் கிடைப்பதை பல ஐட்டங்கள் வாங்குவது நிதர்சனம் சார் .. எனவே சந்தாதாரர் மற்றும் online order க்கு ஒரு quality - நேரடி விற்பனைக்கு சற்றே விலை மலிவான quality முயன்றிடுங்கள் .. செண்டிமெண்ட் .. பிடிவாதம் எல்லாம் வேண்டாம் சாரே - ஒரு மாதம் முயற்சி செய்து பாருங்களேன் - popular titles வரும் மாதம் !


      Delete
    9. லயன் மினி quality கட்டுப்படியாகாதெனில் இன்னும் கொஞ்சம் lower quality ஆனால் முழு வண்ணத்தில். இங்கே மக்கள் சீப்பாய் கிடைப்பதை பல ஐட்டங்கள் வாங்குவது நிதர்சனம் சார் .. எனவே சந்தாதாரர் மற்றும் online order க்கு ஒரு quality - நேரடி விற்பனைக்கு சற்றே விலை மலிவான quality முயன்றிடுங்கள் .. செண்டிமெண்ட் .. பிடிவாதம் எல்லாம் வேண்டாம் சாரே - ஒரு மாதம் முயற்சி செய்து பாருங்களேன் - popular titles வரும் மாதம் !

      + 2

      Delete
  41. REPOST:

    பௌன்சர்:

    Humanoids இன் அசாத்ய wild west கதை. அவர்கள் wild என்ற வார்த்தைக்கு நிஜ அர்த்தம் புரியவைக்க வன்மேற்கின் இருண்ட பக்கத்தை அப்பட்டமாக, Boucqன் அசாத்திய சித்திரங்களின் துணையோடும், Jodorowskyயின் அருமையாக கதைபடுதும் ஆற்றலையும் கலந்து வெளிப்படுத்தி வடிதிருகின்றனர்.

    பாசம் மிகு மகனாக, காதலின் வலிஉணர்ந்தவனாக காட்டப்படும் நாயகன் ஒரு பரிதபதிற்குரியதும் குருரம் நிறைந்ததுமான வாழ்கைசூழல் சக்கரத்தின் மையமாகிறான். அவன் வீழ்ந்த கையை வீசும்போது உணர்ந்திருக்க கூடும் வன்மேற்கில் வன்முறைக்கு பதில், வன்முறை தான் என. அதில் தனக்காக இல்லாவிடினும் சர்ந்தவற்காக வன்முறையை வாழ்க்கையாக தரிகிறான். ஒரு கையை இழந்த தருவாயிலும் குருதி சிதறும் அதிரடி நிரம்பிய வன்மேற்கை எதிர்கொள்ள நம்பிக்கை அவனுக்கு கைகொடுக்கிறது, மனிதம் இல்லா வாழ்க்கைமுறை கொண்டு மனிதம் காண்கிறான் Bouncer ஆகிறான்.

    இக்கதை பாசம், காதல், பலவிதகாதல், சோகம், துன்பம், மகிழ்ச்சி, வேட்கை, வெறுப்பு, விடுதலை, போராட்டம் என பல பரிமாணத்தையும் உள்ளடக்கிய ஒரு ஆக்ரோஷ action pack என்றல் மிகையில்லை.

    ஒரிஜினல் புத்தகத்தை படித்த/பார்த்த பலரும் இதை தமிழ்படுத்துவது சாத்தியமா ? cultural gap என்ற மலையை கடக்குமா? என்ற வினாவை எழுப்ப தவறவில்லை. உலக காமிக்ஸ் Criticsகளால் மிகவும் பாராட்ட பெற்ற இந்த காமிக்ஸ் தொகுப்பை முன் குறிப்பிட்ட மலையையும் கடந்து மொழிபெயர்ப்பு சாதனைபடைத்து இருக்கிறீர்கள்.

    Western காமிக்ஸ் பெரும்பான்மையாக கொண்ட நமது வெளியீட்டில் இந்த தொகுப்பு ஒரு மாறுபட்ட சித்திர, கதை ரசனைக்கு கொண்டுசெல்லும். இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்பது எனது அவா.

    ReplyDelete
  42. N TNKS A TON FOR WISHES IT MEANT A WORLD TO ME GUYS!

    ReplyDelete
  43. ANOTHER REPOST

    my experience with Green manor:
    I am force to give a day gap between each small story in Green manor, I am simply dazzled by the body language captured by the artist in Green manor, above the dark story lines there is a positive vibe from the doctor which is icing of it. My father OLD lion fan become back to comics fan after reading Green Manor, I thank Lion brand for giving that Book in Tamil,

    I will cherish that book!

    ReplyDelete
    Replies
    1. ///My father OLD lion fan become back to comics fan after reading Green Manor, I thank Lion brand for giving that Book in Tamil //

      சூப்பர்!!
      கிரீன் மேனர் கதைகளைப் போன்ற வீரியமான படைப்புகள் ரொம்பவே அபூர்வம்!! நாளை இக்கதைகளை ஒரு மறுவாசிப்புக்கு உட்படுத்த எண்ணியிருக்கிறேன்!

      Delete
    2. க்ரீன் மேனர் இதழ்களை இன்றைக்குப் பகலில் பார்த்துக் கொண்டிருந்தேன் ; நிறைய மலரும் நினைவுகள் !

      "சிங்கத்தின் பல் போன வயதில் " எட்டிப் பிடிக்கும் வேளையில் - இதற்கொரு 2 / 3 அத்தியாயங்கள் உறுதி !

      Delete
    3. Means for abt 20/25 years no worries... 😂😂😂

      Delete
  44. இன்னொன்ரை கவனிக்க தவற விடட்டெரிகல் சிர் அது budjet.நான் TeX largo xiii மற்றும் மார்ட்டின் மட்டுமே வாந்குகிரென். காரணம் நிதி நிலை!

    ReplyDelete
  45. மாத்தி யோசி தலைப்புகள் :

    காலை எழுந்தவுடன் கொலை -
    பொருளை வாங்குங்க போட்டுத்தள்ளுங்க.

    காற்றில் கரைந்த காதலி -
    முகூர்த்தத்துக்கு நாழியாய்டுத்து.

    ரெட் டாக்சி -
    வாடகை மோட்டார் வஞ்சகம்.


    ReplyDelete
    Replies
    1. பூமிக்ககுள் ஒரு பிரளயம்..??

      Delete
    2. ஏங்க? ஏங்க இப்படி?

      'உச்சி முடி நட்டுகிச்சி ' ன்னு சொல்ல ஆசையா இருந்தாலும் சொல்லவே மாட்டேனே!!

      Delete
  46. காவல் கழுகு கலரில் ப்ரமாதம்.அதுபோல் தலை இல்லாத போராளி வந்தால் சூ ப்பர்

    ReplyDelete
    Replies
    1. Sridhar : முறையாய் வெளிவந்து ; முறையாய் எல்லோருக்கும் கிடைப்பின் நன்றாகத் தானிருக்கும் !

      ஆனால் அதற்கான பட்ஜெட் எல்லோரிடமும் கிடையாது என்பதால் - "உயிர்ப்பிக்கிறோம் - கலைச் சேவை செய்கிறோம்" என்று கிளம்பிடும் அபத்தங்கள் மட்டுமே இதனில் கல்லா காட்டும் வாய்ப்புகள் பிரகாசம் ! தயை கூர்ந்து இது போன்ற நடைமுறைக்கு சாத்தியங்களற்ற முயற்சிகள் பற்றிப் பேசி - சும்மா இருப்போருக்கும் இதுபற்றிய ஆர்வம் / ஏக்கம் உண்டாகச் செய்ய வேண்டாமே !

      இங்கே இவ்விதம் மூட்டப்படும் அபிலாஷைகளில் குளிர் காய்வது யாரென்பது எல்லோருக்கும் தெரியும் ! இனியும் இந்தத் தளமும், காமிக்ஸ் சேகரிப்பின் ஆர்வத்தில் உந்தப்படும் வாசகர்களும் - சிலபல நமைச்சல்களுக்கு பலியாடுகளாகிட இங்கே துவக்கம் தர அனுமதிப்பதாகயில்லை ! ப்ளீஸ் - புரிந்து கொள்ளுங்கள் !

      Delete
    2. Sorry sir.நான் இங்கு அந்தக் கேடுகெட்ட கிரே marketஎ குறிப்பிடவில்லை.எனது ஊர் கும்பகோணம். நாங்கள் உண்ட வீட்டிர்க்கு துரோகம் செய்வதில்லை.

      Delete
    3. You tube I'll பார்த்தவட்ரை குறிப்பிட்டு இருந்தேன்.sorry sir.

      Delete
    4. சார்...நான் நேரடியாய் சொல்லும் தொனியில் இதனைப் பதிவு செய்திடவே இல்லை ; ஆகையால் உங்களைக் குறிபார்த்த பின்னூட்டம் போல் காட்சி தந்திருந்தால் really really sorry ! பொதுவாய்ச் சொன்ன விஷயமது !

      ஏற்கனவே பட்ஜெட் தடுமாற்றத்தில் நண்பர்களில் பலர் இருக்கும் போது - தலையில்லாத் போராளி போன்ற மெகா புக்கை வண்ணத்தில் செய்வதாயின் நானூறு, ஐநூறு என்று விலை எகிறிவிடும் ! Moreover அது மூன்றே மாதங்களுக்கு முன்பாய் வெளியான இதழ் தான் எனும் பொழுது - way too early to even dream about it ! இவ்விதம் சிறு பொறியாய்க் கிளம்பும் வாசகர்களின் ஆர்வங்களில் குளிர் காயும் வசதியினை க்ரே ஆசாமிகளுக்கு நாமாகவே தெரியாத்தனமாய் இனியும் வளர்த்து விட வேண்டாமே என்ற ரீதியில்தான் சொன்னேன்சார் !

      Delete
  47. Dear Editor,

    Nice post to discuss about customer reviews and its benefits in business (especially with new/unknown comics series).

    With the advent of internet and online mode of marketing, customer reviews have large benefits to harvest. If you take Amazon as example, for every product or a book, always have customer reviews, which are available for years. Reviews may be good/bad/ugly/subjective, but it is always good for business. It will certainly help the new readers to understand more about the product, than just a product description from the publisher like you.

    If you can enhance your online site, and if every individual book have its own customer review areas it will be great thing to do. The current blog replies from readers may be have week of shelf-life, but if you try to collect these replies specific to individual books and then have this in your own site. It will have a longer self-life and more helpful for your business.

    This will certainly more helpful on your new plans (example: Z subscription).

    Thanks
    Rama

    ReplyDelete
    Replies
    1. Perhaps....but our circle is a smaller one....a single person in a vengeful mood by coming in different ids can sabotage an issue .....that's the only drawback...

      Delete
    2. +1. Its a very good idea.

      Editor can validate the review and then allow the valid ones. That is, if any negative review is purposely logged then editor can remove those reviews.

      Delete
    3. @ Selvam Abirami, what if Edi gives a user name to each of the subscribers and a few of them write a honest review - that can be a point to consider?

      Delete
    4. By general principle on a sales platform editor/ publisher/even platform administrator should not interfere with reviews...

      It's against the freewill of a reviewer..

      No moderation/deletion/ can be attempted..

      Anybody who attempts such things will be tarnished as manipulator to create false image of the given product....

      Credibility depends much on non intervention of Comments/reviews...

      Otherwise the section as a whole will be negatively criticized..:-)

      Delete
    5. Selvam Abirami: There is no 100% freedom in everything. When there is more freedom, there comes more self responsibility.


      Delete
  48. ரின்டின் கேன் : அடா அடா. ! இவ்வளவு அழகா புசுபுசுன்னு ஒரு பூனைக்குட்டியை இதுவரைக்கும் நான் பார்த்ததேயில்லே. அதுவும் இந்த சிரிச்ச முகத்தை இன்னிக்கு பூராவும் பாத்துட்டே இருக்கலாம்னு தோணுதே!

    பூனை : யோவ்! சும்மா இருய்யா! நான் முயல் கூட்டத்தைச் சேர்ந்தவன். பூனை மாதிரி இருக்கேன்னுதான் பஞ்சாயத்து வெச்சி எங்கப்பாவை கண்டுபிடிச்சி கூட்டிவரச்சொல்லி விரட்டிவிட்டுட்டாங்க.

    ReplyDelete
  49. ரின்டின் கேன் : பாக்கறதுக்கு கரடிக்குட்டியாட்டமா இருக்கு. இன்னொரு பக்கம் பாத்தா கன்னுகுட்டி மாதிரியும் தெரியுது. என்ன வகையான ஜந்து இது?

    பூனை : இப்படி கிறுக்குத்தனமா பேசியே ஹீரோவாயிட்டே. லக்கி லூக் கதைகள்லே உனக்கொரு வேஷம் குடுத்த மாதிரி, என்னையும் சிக்பில் கதைகள்லே சேத்து விட்ருந்தாங்கன்னா, இந்நேரத்துக்கு நானும் சோலோ ஹீரோவா ஆயிருப்பேன். ம்ம்ம். . . என் வாழ்க்கையில விளக்கேத்த யாரு இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. @ RTC

      ரொம்ப அழகா கவிதை எழுதியிருக்கீங்க! :P

      Delete
  50. எடிட்டர் மற்றும் தோழர்கள்
    அனைவருக்கும் வணக்கம்.
    எடிட்டர் சார் ஒரு சிறிய வேண்டுகோள். அனைத்து கதைகளையும் ஒரே எண்ணிக்கையில் அச்சிட்டு பின் அவை உங்களது கிட்டங்கியில் தேங்கி நிற்பதென்பது தொடர் நிகழ்வாகி விட்டது.
    இதனில் கொஞ்சமேனும் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம் எனப் படுகிறது. சந்தாவை தவிர்த்து புத்தகத்திருவிழாக்களில் மற்றும் கடைகளிலும் நல்ல விற்பனையைக் காணும் புத்தகங்களை மட்டும் அதிகம் பிரதிகள் அச்சிடுங்கள்.
    நல்ல கதைகளாக இருப்பினும் விற்பனையில் சாதிக்கும் உத்தரவாதமல்லாத கதைகளையும், புது முயற்சிகளையும் limited edition ஆக கொண்டு வந்து தேவையான அளவு பிரதிகளை அச்சிட்டால்(இதனால் புத்தக விலை சற்று கூடத்தான் செய்யும்.பரவாயில்லை)
    சந்தாவில் வாங்கும் வாசகர்கள் இரண்டையும் வாங்கி விடப் போகிறோம். கடைகளிலும் புத்தகவிழாக்களிலும் அதிகம் விற்கும் கதைகள் ஒரு பக்கம் ரெகுலராக விற்பனையாகும்.limited edition ஆக கொண்டுவந்த கதைகளும் உங்கள் கையை கடிக்கப்போவதில்லை.
    இது தற்போது திரைத்துறையில் நடக்கும் நிகழ்வை போன்றதுதான்.பெரிய நட்சத்திரங்கள் படத்துக்கு செலவும் அதிகம். ரிலீசாகும் தியேட்டர்களும் அதிகம்.ஆனால் நல்ல கதையாக இருந்தாலும் வெற்றிக்கு உத்தரவாதமில்லை என்ற படங்களுக்கு பட்ஜெட்டும் கம்மி. ரிலீசாகும் தியேட்டர்களும் கம்மி. இந்த கணக்கை போட்டுத்தான் இன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. நாமும் இதே ஃபார்முலாவில் அதிகம் விற்பனையாகும் கதைகளுக்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சிட்டும், நல்ல கதையாக இருப்பினும் விற்பனைக்கு உத்திரவாதமல்லாத கதைகளுக்கும், புது முயற்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் மட்டும் அச்சிடலாமே. இதனால் எல்லாவித கதைகளையும் நேசிக்கும் எங்களுக்கும் தொடர்ந்து எல்லா கதைகளும் கிடைக்கும். தேர்ந்தெடுத்து வாங்குபவர்கள் அவர்கள் போக்கில் வாங்கிக்கொள்வர்.உங்களுக்கும் நட்டம் குறைய வாய்ப்புள்ளது. இல்லையேல் "ஜெயிக்கிற குதிரையில் மட்டும் பணம் கட்டு" என்ற நிலை வந்துவிடும். எங்களுக்கும் பலவித களங்களையும் காணும் வாய்ப்பும் போய்விடும். இது ஒரு கோரிக்கை மட்டுமே. முடிவெடுக்கும் உரிமை உங்கள் கையில் .

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : //சந்தாவை தவிர்த்து புத்தகத்திருவிழாக்களில் மற்றும் கடைகளிலும் நல்ல விற்பனையைக் காணும் புத்தகங்களை மட்டும் அதிகம் பிரதிகள் அச்சிடுங்கள். //

      ஏற்கனவே அதற்கொரு தொடக்கம் கொடுத்தாகிவிட்டது சார் - 2017-ன் திட்டமிடலில் !

      ஒருவிதத்தில் இந்த சமீப நாட்களது அனுபவங்கள் எல்லாமே நன்மைக்கே என்பேன் ! 2017-குள்ளும் தற்போதைய அதே பார்முலாவோடு களமிறங்கியிருப்பின் ஷெரீபிடம் உதைவாங்கிய ஆர்டினின் பிட்டம் போலாகியிருக்கும் நம் நிலைமையும் !

      Delete
    2. திரு. A.T.R

      அருமையாக யோசித்து எழுதியிருக்கிறீர்கள்! எடிட்டரின் இப்போதைய பிரச்சினைக்கு இது எளிமையான தீர்வாக இருக்கக்கூடும் தான்! உங்களுடைய கருத்தில் எனக்கு சம்மதமே! எடிட்டருக்கு நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த விலை உயர்வை நானும் உவகையோடு ஏற்றுக்கொள்வேன்! ஆனால் இது குறித்து மற்ற நண்பர்களின் கருத்தும், எடிட்டரின் கருத்தும் எப்படியிருக்கும் என கணிக்க இயலவில்லை!

      Delete
    3. @ திரு விஜயன்

      //ஏற்கனவே அதற்கொரு தொடக்கம் கொடுத்தாகிவிட்டது சார் - 2017-ன் திட்டமிடலில் !///

      சின்ன திருத்தம்,புதிய திட்டத்தின் துவக்கமா.... 2016-வரும் தீபாவளிக்கு நம்ம ராம்மையா மூன்று பாகங்கள் ஹாட்பவுண்டு அட்டையில் வரும்ன்னு அறிவிச்சதை நினைவுட்டிகிறேன் ஸார்..!

      இத்தாலிகாரு...சிவாஜின்னு ஒரு புதுநடிகர் 'பராசக்தி' படத்துல நல்ல நடிச்சி, வசனம் பேசியிருக்காரு..பாருங்களேன்.. கிற ரேஞ்சுக்கு இருக்கே உங்க பாராட்டு.. :D

      Delete
    4. Erode VIJAY : ஆடி மாதங்கள் எப்போதுமே அச்சகங்களுக்குக் கொஞ்சம் காற்றாடும் வேளைகள். So சும்மா இருக்கும் பணியாளர்களை கிட்டங்கியை ஒதுக்கச் சொல்லி இருந்தேன். இதனை டைப் செய்யும் சில நிமிடங்களுக்கு முன்பாய் அந்தப் பக்கமாய் எட்டிப் பார்த்து வந்தவன் - "சந்திரமுகி" படத்தில் வேட்டையபுரம் அரண்மனைக்குப் போய்விட்டுத் திரும்பிய வடிவேல் பாணியில் தான் இருக்கிறேன் - இருக்கும் ஒன்றிரண்டு முடிகளும் நட்டுக் குத்தலாய் நிற்க !!! எங்கே ஆரம்பம் ; எங்கே முடிவென்று தெரியாத அளவுக்கு கடந்த 3+ ஆண்டுகளின் இதழ்கள் குவிந்து கிடக்கின்றன !

      அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையை கணிசமாக 2017-க்கு குறைக்காதுபோயின் - தாக்குப் பிடிக்க நிச்சயமாய் வழியிராது ! And அதன் பலனாய் விலையேற்றம் தவிர்க்க இயலாது போகும்தான். So விமர்சனங்களோ ; வேறெதுவோ - இதனில் ஒரு பொருட்டாக இருக்க நான் அனுமதித்தால் சொந்தக் காசில் சூப்பர் சூன்யம் வைத்துக் கொண்ட கதையாகிப் போகும் !

      Delete
    5. mayavi.siva : குறைவான பிரிண்ட்ரன் கொண்டே திட்டமிடப்பட்ட ABS CLASSICS பற்றி பெரியதொரு கவலைகளில்லை !

      நான் 2017-ன் திட்டமிடலில் என்று குறிப்பிடுவது ரெகுலர் இதழ்களின் அச்சுப் பிரதிகளின் எண்ணிக்கை ; விலை சார்ந்த தீர்மானங்கள் பற்றி !

      Delete
    6. திரு.மாயாவி சிவா நீங்கள் சொல்வது வருடத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வரும் ப்ரின்ட் ரன் குறைவாக உள்ள புத்தகத்தை பற்றி.
      நான் சொல்லவந்தது ஒவ்வொரு மாதமும் வரும் புத்தகத்துக்கானது. குறைவான ப்ரின்ட் ரன் உள்ள புத்தக சந்தாவையே ஆண்டு முழுமைக்கும் தனித்தடமாகவும் ஆசியரின் வெற்றி பெறும் லிஸ்டில் உள்ளவர்களுக்கு ஆண்டு சந்தா ஒரு பக்கமும், வெளியிடுவதையே குறிப்பிட்டேன்.விலை அதிகம் என் நினைப்பவர்கள் அந்த சந்தா பக்கமே வரவாய்ப்பில்லையே.
      தேவையான பிரதிகளை மட்டுமே அச்சிடப் போகிறார். இதனால் குடோனில் தேக்கமடையும் வாய்ப்பு குறைவல்லவா? இந்த முறையை இது வரை செயல் படுத்திய மாதிரி என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நீங்கள் வழக்கமாக உள்ள பழைய நடைமுறை என்கிறீர்கள். உங்களுக்கு இதுவரை அப்படி செய்த்தற்கான நிகழ்வுகள் இருந்தால் கூறுங்கள்.அப்புறம் சிவாஜி புதுநடிகரா, அல்லது சிவாஜிராவ் என்றால் யார் என்பன போன்ற ஆராய்ச்சியில் இறங்குவோம்.
      இது எனக்கு தோன்றிய தவறான யோசனையாக கூட இருக்கலாம்.ஆசிரியரின் சங்கடம் தீர நீங்கள் உங்களது யோசனையை முன் வைக்கலாமே.அப்போது நான்
      T.R.மகாலிங்கம் என்ற புதிய பாடகர் நன்றாக பாடுகிறார் என்றெல்லாம் பதிவிடமாட்டேன்.
      மேலும் நாம் என்ன கருத்தை முன்வைத்தாலும் அனைத்தையும் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர் அவர்.

      Delete
  51. திரு விஜயன் @ நண்பர்களுக்கு காலை வணக்கங்கள்..!

    இந்த பதிவின் எதிரொளி...

    தொடர்ந்து படிப்பவர்கள்,வாங்குபவர்கள் தான் இங்கு வரும் பார்வையிடும் நண்பர்கள்...
    அவர்களுக்கும் எடிட்டருக்கும் கதைசொல்லி வெளியுலகிற்கு பெரியதாக ஆகபோவது எதுவுமில்லை' என ஒரு கருத்து இதன் முன்வைக்கப்பட்டது. அட ஆமாமில்ல என சின்ன உறுத்தல் அன்று எனக்கு தோன்றத்தான் செய்தது, இந்த பதிவின் தாக்கம் அந்த கருத்தை சூறாவளியாக்கி விட்டது. இனி கதை பற்றிய விமர்சனம் இங்கிடுவதை இரண்டாமிடத்திற்கு வைத்துவிட்டு, முதல் விமர்சனம் வெளியுலகின் பார்வைக்கு என மாத்தியோசித்து முதல் அடியை எடுத்துவைக்கிறேன்..!

    வெளியுலகில்...

    //இந்த பூமியில் அசுரவளர்ச்சி கண்டு...பூண்டோடு அழிந்துவிட்ட ஒரு படுபிரம்மாண்டமாக நாகரிகம் எகிப்த்.! அந்த சாம்ராஜ்யம் கட்டபட்டது முழுக்க முழுக்க அடிமைகளால்; நானுறு வருட அந்த அடிமைசாம்ராஜ்யத்தை பத்து வாரங்களில் பத்து சாபங்கள் மூலமாக அழிக்கபட்டதாக பைபிள் கூறுகிறது..!
    மதங்கள் வலிமையான காலத்தில் விஞ்ஞானம் விளக்கம் பெரும் பாவங்களாக தடுக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டன. பூமி தட்டையல்ல உருண்டை, சூரியனை தான் பூமி சுற்றுகிறது என துவங்கி...மதங்கள் முரட்டுத்தனமாய் விஞ்ஞானத்தை எதிர்த்தது நமக்கு தெரிந்ததே.
    போலீஸ் மகன் போக்கியாவதும்,வாத்தியார் மகன் அயோக்கியன் ஆவதும், அரசியல்வாதி மகன் நாட்டுக்கு உழைப்பதுமான கதைகள் நமக்கு தெரியும்.
    மதத்தின் மேல் அதீதபற்றுக்கொண்ட ஒருவரின் மகன் விஞ்ஞானம் பேசினால்...?
    மதக்கோட்பாடும் விஞ்ஞானமும் கைகோர்த்தால்..?
    அந்த பத்து சாபங்கள் விஞ்ஞான ரீதியில் மீண்டும் ஏவப்பட்டால்..?
    அரசும் மக்களும் எப்படி நடுநடுங்கி போய் சிக்கிதவிப்பார்கள் என்பதை அட்டகாசமாய் கதைகருவாக்கி 200 பக்கங்களில் கலக்கியுள்ளார் கதாசிரியர் மொராள்ஸ் இந்த மாத முத்துகாமிக்ஸில்....

    கதை: மர்மமனிதன் மார்ட்டினின் 'இனி எல்லாமே மரணமே..!'//

    ReplyDelete
    Replies
    1. இது... ஒரு மாதிரி... வித்தியாசமான விமர்சனம் தான்! வெளியுலக விமர்சனம், உள் உலக விமர்சனம், ரெண்டுக்கும் நடுவாலே ஒரு அந்திமண்டல விமர்சனம்னு போட்டுத் தாக்க என் வாழ்த்துகள் மாயாவிகாரு! :)

      Delete
  52. மார்ட்டின் கதைகள் அனைத்துமே சூப்பர். XIII க்கு பிறகு எனக்கு பிடித்த ஹீரோ.

    ReplyDelete
  53. மணிரத்னம் , செல்வராகவன் கமல் படங்கள் புரியலை என்பர். மார்ட்டின் பிடிக்காதோர்.

    ReplyDelete
  54. ஈரோட்டில் இத்தாலி!

    காலை எழுந்தவுடன் கொலை!

    மனதில் நின்ற கிளைமாக்ஸ் - Dyaln Dog! அட்டகாசம் செய்து விட்டார்... ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்த முழுமையான உணர்வை கொடுத்த கதை இது!

    அதிலும் Dylan பேசும் டயலாக் "சூப்பரு"

    மேஜிக் விண்ட் : மேஜிக் செய்ய தவறவில்லை என்பது உண்மை!

    CID ராபின் - காதலிக்கான போராட்டத்தை கச்சிதமாக நடத்துகிறார்! நண்பர்கள் இருப்பதன் அவசியத்தை இந்த பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது!

    Tex : சொல்வதற்க்கு புதிதாக வார்த்தைகள் வேண்டுமோ!

    சுட்டி பென்னி: "பயில்வான்" தான்! மனமார வளர வாழ்த்துகிறேன்... சிரித்தேன் ரசித்தேன்!

    Martin : இனிமேல் "மார்ட்டின்" கதைகளை கடைசியாஜ் படிக்க மாட்டேன் என்பது சத்தியம்!

    ReplyDelete
  55. கிளாசிக்: என்றும், என்றென்றும் ஹீரோவே

    ReplyDelete
  56. Caption

    1. ரின் டின் கேன்: வாவ் இதான் சிறுத்தையா?
    பூனை: மரியாதையா ஓடிப்போயிடு. அடிச்சா இருக்குற கொஞ்சம் மூளையும் மூக்கு வழியா வந்திடும்
    ரின் டின் கேன்: ரொம்ப பாசமான சிறுத்தை போல.

    2. ரின் டின் கேன்: அய்யயோ, யாரோ ஜோ டால்டனை காண்டாமிருகம் ஆக்கிட்டாங்க.
    பூனை: ஒரே வசனத்துல ரெண்டு தடவ முட்டாள்னு நிரூபிக்கிறான் பாரு.

    3. ரின் டின் கேன்: ஜோ மாமா வாங்கித் தந்த தலைகாணி புசு புசுனு நல்லா இருக்கே? இது என்ன தலகாணிக்குள்ள குச்சி வச்சிருக்காங்க.
    பூனை: ஒழுங்கா போறியா, இல்ல காதுல இந்த குச்சிய விட்டு ஆட்டவா?

    4. ரிண்டின் கேன்: இவரு பாக்க ரொம்ப புத்திசாலியா இருக்காரு. இவரு நம்ம பாஸ் ஆக சம்மதிப்பாரா?
    பூனை: மைன்ட் வாய்ஸ் (ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ வந்து என்னென்னமோ வித்தியாசமா பினாத்துறானே) ஓடிப் போயிடு. சூசூ

    ReplyDelete
  57. ஆசிரியரே புத்தக திருவிழாவில் புத்தகங்களை விளக்கம் தந்து விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் இதனை நானும் செயலாளரும் சென்னை புத்தக திருவிழாவில் கண்கூடாக பார்த்தோம் அதற்கு உள்ளூர் நண்பர்கள் உதவி செய்தால் நலம் இனிமேல் சென்னை புத்தக திருவிழாவில் என்னால் முடிந்த அளவு பங்கு பெற்று விற்பனை அளவை சற்று உயர்த்த முடியுமா என முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : ஏற்கனவே இதுபற்றி பேசியுள்ளோம் ; ஆனால் நடைமுறைக்கு கொணர்வதில் வெற்றியில்லை !
      இதோ - கோவையில் இதனை செயல்படுத்திப் பார்ப்போமா ?

      வாரநாட்களில் மாலை 5 முதலேதான் கூட்டம் வருகின்றது; so வாரநாட்களில் 5-9 மணிக்கும் ; வாரயிறுதிகளில் நண்பகல் 12 முதல் இரவு 9 வரையிலும் உள்ளூர் நண்பர்கள் ஸ்டாலில் புது வாசகர்களுக்கு ஒத்தாசையாக இருக்கச் சம்மதமெனில் நம் அன்போடு சின்னதொரு தொகையொன்றை தரத் தயார் .

      பில் போட ; பேக்கிங் செய்ய நம்மவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ; so அதன் பொருட்டு எவ்வித உதவிகளும் நண்பர்கள் செய்திடும் அவசியங்கள் இராது ! புது வாசகர்களுக்கு அவர்களது தேவைகளுக்கேற்ப கதைகளை பரிந்துரை செய்தாலே போதுமானது ! வாரநாட்களின் மாலை நேரத்து ஒத்தாசைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.300 & வாரயிறுதிக்கு நாளொன்றுக்கு ரூ.600 என்ற சன்னமான தொகைகளை நான் முன்மொழியலாமா ? ஆர்வமிருப்பின் நமக்கொரு மின்னஞ்சல் தட்டிவிட்டால் போதும் !

      தொகைகள் சொற்பமே என்பதை அறிவேன் ; தயை கூர்ந்து அதன் பொருட்டு நையாண்டிகள் வேண்டாமே - ப்ளீஸ் !

      Delete
    2. //புது வாசகர்களுக்கு அவர்களது தேவைகளுக்கேற்ப கதைகளை பரிந்துரை செய்தாலே போதுமானது ! வாரநாட்களின் மாலை நேரத்து ஒத்தாசைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.300 & வாரயிறுதிக்கு நாளொன்றுக்கு ரூ.600 என்ற சன்னமான தொகைகளை நான் முன்மொழியலாமா ?///

      வாவ்! கரும்பு தின்னக் கூலியும் கிடைக்கும்போது நையாண்டியாவது??!!

      தேவையுள்ள நண்பர்கள் இதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு அடுத்த வருட சந்தாவை முழுவதுமாகச் செலுத்திவிடலாமே?

      சூப்பர்ல? :)

      Delete
  58. கனவாயின் கதை : ஒரு வீரவாளின் கதை
    காலை எழுந்தவுடன் கொலை: ஆயுதங்களின் ஆட்சி
    காற்றில் கரைந்த காதலி: நடுவுல கொஞ்சம் மணமகளை கணோம்
    பூமிக்குள் ஒரு பிரளயம்: பூமிக்கடியில் எமன்

    ReplyDelete
  59. எடிட்டர் சார்,

    கிட்டங்கியில் மலையாய்க் குவிந்துகிடக்கும் 3 வருடத்திய புத்தகங்கள் - கவலையளிக்கிறது! நம்மிடம் 'தற்சமயம் கைவசமுள்ள பிரதிகள்' பட்டியலின்மீது பார்வையை ஓடவிட்டத்தில் உங்கள் கவலையின் அர்த்தம் புரிகிறது! 3 வருடங்களுக்கு முன்பு வெளியான All New Special உள்ளிட்ட பல அற்புதமான கதைகளைக் கொண்ட புத்தகங்கள் கூட இன்னும் அந்தப் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருவது நிஜமாகவே கொடுமை தான்!

    ப்ரின்ட்ரன்னைக் குறைத்து விலைகளை ஏற்றவேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்குமாயின், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே! இது குறித்து நீங்கள் (வழக்கம் போலவே) வசைகளைச் சந்திக்கவேண்டியிருந்தாலும், முடங்கிக் கிடக்கும் பல லட்சம் மதிப்பிலான உங்களது முதலீடுகளை மீட்டெடுக்க வேண்டிய ஒரு சங்கடமான சூழலில் நீங்கள் இருப்பதையும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு வந்த சில செய்திகள் ஆனித்தரமாய் சொல்லுகின்றன!
    'எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி' என்ற கேப்ஷனை இவ்வாண்டின் தாரகமந்திரமாக நீங்கள் செயல்படுத்திவரினும், அடுத்த வருடத்தில் 'எங்கள் எடிட்டரின் முகத்திலும் மகிழ்ச்சி' என்ற கேப்ஷனை வாசகர்களாகிய நாங்கள் தாரகமந்திரமாக்கிக் கொள்கிறோமே? இதன்பொருட்டு சற்றே விலையுயர்வுகளைச் சகித்துக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருப்போம்!
    "ஆப்பரேஷன் காலி கிட்டங்கி"க்கு ஒரு வரைவுத் திட்டத்தை ஏற்படுத்துங்கள் - ஜமாய்த்து விடலாம்!

    ReplyDelete
    Replies
    1. நீண்டநெடு நாட்களாகக் கிட்டங்கியில் தேங்கிக் கிடக்கும் புத்தகங்களுக்கு மட்டும் 20% தள்ளுபடி கொடுத்து புத்தகத் திருவிழாக்களில் விற்க சாத்தியமுள்ளதா எடிட்டர் சார்! ஸ்டாலில் ஒரு குறிப்பிட்ட மேஜையை ஒதுக்கி 'Discount 20%' என்று ஒரு போர்டை வைத்துவிட்டால் இது கொஞ்சமாவது பலனளிக்குமில்லையா? உங்களுக்கு இதில் இழப்புத் தான் என்றாலும், நமது "ஆப்பரேசன் - காலி கிட்டங்கி"க்கு இது உதவியாக இருக்குமில்லையா?

      கிட்டத்தட்ட இதே போன்ற தள்ளுபடிகளை நமது ஆன்லைன் வர்த்தகத்திலும் குறிப்பிட்ட புத்தகங்களுக்கு 10 அல்லது 20 சதவீத தள்ளுபடியை அறிமுகம் செய்தால் பலனளிக்காதா?

      Delete
    2. + 100 Starting coimbatore book fair .. can also include collections in this -

      Thorgal Collection
      Bouncer Collection
      Wayne Sheldon Collection

      Each at 20% discount .. may be 15% is what you would give to agents and 5% is a bite but can trim some 'tummy' via this as E V says!

      Delete
    3. Erode VIJAY & Raghavan : கோவைக்கு ஏற்கனவே அந்த additional டிஸ்கவுண்ட் புக்ஸ் ஏற்பாடுகள் செய்தாச்சு ! அதுமட்டுமன்றி ஆன்லைனில் இதற்கென சில ஏற்பாடுகளும் செய்யச் சொல்லி ஜுனியர் எடிட்டரிடம் சொல்லியுள்ளேன் !!

      கும்பகர்ணத் தூக்கம் போடும் இதழ்கள் எங்கெங்கோ வாசிப்புக்கு உதவினால் நிச்சயம் மகிழ்ச்சியே !!

      Delete
    4. மகிழ்ச்சி எடிட்டர் சார்!

      க்ரீன்மேனர் போன்ற கதைகள் இதுபோன்ற கணிசமான தள்ளுபடி விலையில் ஒரு தகுதியான நபரிடம் சென்றடையுமானால், அக்கதைகள் கொடுக்கும் பிரம்மிக்க வைக்கும் அனுபவத்துக்கு நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைப்போவது நிச்சயம்!

      Delete
    5. @Vijay: It might be bitter, but instead of raising rates, can limit books for certain period of time.

      Delete
    6. @ சிம்பா

      வேளை நெருங்கிடுச்சு... நீங்க ஏகத்துக்கும் டென்ஷனாக வேண்டிய வேளை நெருங்கிடுச்சு... :D

      'புத்தகங்களின் எண்ணிக்கையை சில காலத்துக்கு குறைச்சுக்கலாமே?'ன்ற உங்களோட கருத்து ஒரு பக்கம் சரின்னு பட்டாலும், இப்போ இருக்கும் 'மாசத்துக்கு 4 புத்தகங்கள்'ன்றதும் சரியான அளவாத்தானே இருக்கு?

      இரண்டுக்கும் பாதகமில்லாம, எடிட்டருக்கும் நஷ்டமில்லாம - புதுசா ஏதாச்சும் ஐடியா கிடைச்சா தேவலைன்னு தோணுது!

      Delete
    7. Vijay Hard bound book like Erodil Italy , with same genre, one every month limiting the annual subscription below 2500 rs with affordable book prints. Might reduce the inflow capital and also might give way for selling the old stocks. This is just for one year a trial. Also note I'm not on with absolute classic reprints... 😂

      Delete
    8. Giving 20% reduction to old stocks might even create a negative view for annual subscribers. This might even reduce annual subscription... there is a lot to think.

      But accepting reality at right time might reduce the capital crunch situation.

      Delete
    9. 'ஈரோட்டில் இத்தாலி' மாதிரி மாசம் ஒன்னு கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்! வேணுமின்னா ஒவ்வொரு மாசமும் வேறவேற ஊர்ப்பெயர்களை வச்சுக்கலாம்! கோவையில் இத்தாலி, கும்பகோணத்தில் இத்தாலி, கும்மிடிப்பூண்டியில் இத்தாலி - இப்படி! ;)

      Delete
    10. சிம்பா

      Book fair always gives a 10% reduction - additional 10% considering the current situation is more welcome for subscribers may be - than increasing future subscription rates to achieve the same purpose - just a thought !

      Subscription is more fore making your copy reach you on a particular month than any other reason ..

      Delete
  60. செய்தி : கிட்டங்கியைப் பார்வையிட்ட எடிட்டர் தேங்கிக் கிடந்த புத்தகங்களைக் கண்டு பலத்த அதிர்ச்சிக்குள்ளானார்!

    கேப்ஷ௬ன் : ( ச்சும்மா ஜாலிக்காண்டி)

    ரின்-டின்-கேன் : தோஸ்த்! மூனு நாளா உன்னைக் காணலியே? எங்கே போயிருந்த?

    சர்ஃப்-ரீஃபில்பேக்-பாக்ஸ் : ந்தா.. பொறத்தண்டை இருக்குதே கிட்டங்கி, அதுல எலி பிடிச்சுட்டு வரலாம்னு பூந்தேன்! புக்கு..புக்கு..எங்கே திரும்பினாலும் கட்டுகட்டா புக்கு! மூனு நாளா வெளியே வர வழி தெரியாம சுத்தி சுத்தி வந்துகினிருந்தேன்! சித்தே முன்னாடிதான் ஆந்தைக் கண்ணோட ஒருத்தர் ஆளுங்க சகிதம் வந்து என்னைக் காப்பாத்தினாரு. நல்ல மனுஷன்தான், ஆனா அரையிருட்டுல அவரு கண்ணைப் பார்த்தப்போ அப்படியே என்ர வாலு வானத்தை நோக்கி நட்டுக்கிச்சு தோஸ்த்! பிடிச்சேன் பாரு ஓட்டம்... அப்புறம் பசில மயங்கி இங்கே கவுந்துட்டேன் போலிருக்கு! சொம்மா ஜொள்ளுவுட்டுகினே நிக்காம பக்கத்துக்கடைக்குப் போய் ஒரு பன்னும் டீயும் வாங்கிக்கினு வா தோஸ்த்!

    ReplyDelete
  61. சுட்டி பயில்வான் பென்னி.

    உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் மகனுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலில் ஏற்படுத்திய நமது காமிக்ஸ் இதழ் இதுதான். லக்கி லூக், க்ளிப்டன், ப்ளூ கோட்ஸ் - இவையெல்லாம் வரலாற்றுப்பின்னனியில் இருப்பதால், அந்தக்கதைக்களத்தில் நம் குழந்தைகள் தம்மைப்பொருத்திக்கொள்ள சற்றே சிரமப்படலாம். ஸ்மர்ஃப்ஸ் கதைத்தொடரில் அவர்கள் பேசும் மொழியில் உள்ள மெலிதான நகைச்சுவையைத் தவிர, குழத்தைகளுக்கான விஷயம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

    பென்னியின் கதை அப்படியல்ல. அதிகம் குழப்பாத, தெளிவான அதே சமயம் விறுவிறுப்பான கதையமைப்பு. குழந்தைகளைக் கண்டிப்பாக கவரும். இந்த தொடரில் இனி வரும் கதைகளும் இப்படியே இருந்தால் நல்லது.

    குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக அவர்களின் மனம்கவர்ந்த ஆதர்ச நாயகனாக உருவெடுக்கும் தகுதிகள் அனைத்தும் உள்ள ஒரு கதாபாத்திரம், சுட்டி பயில்வான் பென்னி.

    கார்ட்டூன் வரிசையில் நானுமே எதிர்பாரத்துக் காத்திருந்தது இது போன்ற கதைகளுக்காகத்தான்.

    ReplyDelete
    Replies
    1. +1
      தெளிவான கருத்துகள்!

      ஸ்மர்ஃப் பற்றிய கருத்துக்கு மட்டும் -1.

      Delete
    2. புதுவை செந்தில் : +1
      தெளிவான கருத்துகள்!

      ஸ்மர்ஃப் பற்றிய கருத்துக்கு மட்டும் -1

      Me too !!

      Delete
    3. Smurfs will be the future of Lion Cartoon Collection.

      Delete
  62. விஜயன் சார்..

    ஒரு யோசனை.

    ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் அனுப்பிய பின், விமர்சனங்களுக்கு என்றே தனியாக ஒரு பதிவிட்டால் என்ன? அந்தப் பதிவில் அந்தந்த மாத இதழ்கள் பற்றிய விமர்சனங்களும் அது சம்மந்தமான விவாதங்கள் மட்டுமே இடம் பெறட்டுமே. "காமிக்ஸ் விமர்சனம் - செப்டம்பர் 2016" என்பது போல தலைப்பிடலாம்.

    நமது காமிக்ஸ் இதழ்களின் விமர்சனம் தேடி வருபவர்களுக்கு இது எளிதாக இருக்கும் இல்லையா? உங்களுக்குமே கூட நூற்றுக்கணக்கான கமெண்டுகளுக்கு இடையே புகுந்து இதழ்களைப்பற்றிய கருத்துக்களை தேடும் சிரமம் இருக்காது.

    ReplyDelete
  63. எனக்க பிடித்த எதார்தமான cow boy தொடர் Comanche....அதிக வரவேற்பு பெற்றிடாத்து பற்ருறி வருத்தமே்.... Magic wind கதை அருமை. ஒரு சூப்பரான fantasy கதை. போ வின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது். Mormon களை பற்றித் தெரிந்துகொள்ள இந்த கதை உதவியது.

    Nick rider ராபின் கதை அட்டகாசம்தான்....சித்திர தரமும் நன்றாக உள்ளது.....

    மற்றவைகளை இனிதான் படிக்க வேண்டும்....

    ReplyDelete
  64. @ ஜூனியர் எடிட்டர்

    மர்மமனிதன் மார்டினின் 'இனி எல்லாமே மரணம்' ஆன்லைன் ஸ்டோரில் சேர்த்தால் பரவாயில்லை.

    அதேபோல் ALL BOOKS கிளிக் செய்தால் error 404 என வருகிறது, கைவசம் உள்ள பட்டியலை புத்தகத்தில் பார்ப்பதை விட அட்டைபடங்களுடன் மொத்தமாக பார்ப்பது புதியவர்களுக்கு எவ்வளவுகொண்டாடமான விசிட் தெரியுமா..!!! ப்ளிஸ் அப்டேட்..!

    ReplyDelete
    Replies
    1. http://lioncomics.in/marma-manidhan-martin/199-ini-ellam-maraname.html - மர்மமனிதன் மார்டினின் 'இனி எல்லாமே மரணம் !

      http://lioncomics.in/49-all-available-comics

      Delete
    2. @ திரு விஜயன்

      முதல் லிங்க் டபுள் ஒகே.. :)))

      அந்த all comics லிங்கில்ஆறு புத்தகங்கள்மட்டுமே வருவதுதான் சிக்கல்...கடந்த பத்து நாட்களாகவே அந்த அழங்கார அணிவகுப்பு மிஸ்ஸிங் ஸார்..! "நூறு புக்ஸ் இருக்கும்ன்னு சொன்னிங்களே..? ஆறு மட்டும் தான் தெரியுது..." என ஆர்வமாய் கேட்க்கும் புதியவர்களுக்கு அந்த பட்டியல் அணிவகுப்பு அவசியம் சார்..கொஞ்சம் சரி பாருங்களேன்..! :(

      Delete
  65. நண்பர்களே எனக்கொரு டவுட்..

    மர்மமனிதன் மார்டின் கனவுவின் குழந்தையில் கடைசியில்...
    20 ஆண்டு இடைவெளிக்குபின் அந்த கடவுளர்கள் மீண்டும் பூமியில் கால் பதித்தனர்...
    கூடி நின்ற அபோரிஜின்கள் சட்டென்று மண்டியிட்டு மரியாதை செலுத்தியனர்..வரையில் ஓகே...கடைசி படத்தில் ..பாலைவன மணலை அக்கறையோடு சேகரிக்க தொடங்கியது...

    இந்த வரிக்கும் மறைமுக அர்த்தம்தான் என்ன..??????????????????????? வெகுநாளாகவே இந்த புதிருக்கு விடை கிடைக்காமல் அப்படியே அந்திமண்டலத்தில் நிற்கிறது...யாராவது சரியான விளக்கம் ப்ளிஸ்..!

    ReplyDelete
    Replies
    1. @ மாயாவிகாரு

      படிச்சுப் பல மாசங்களாயிடுச்சு. ஆனால் ஞாபகத்தில் இருக்கிறதை வச்சு சொல்ல முயற்சிக்கிறேன்.

      * அந்தப் பாலைவன மணல்ல ஏலியன்ஸ் உயிர்வாழத் தேவையான அத்தியாவசியப் பொருள் ஏதோ ஒன்னு இருக்கு. அவங்க இங்கேர்ந்து சேகரிச்சு எடுத்துட்டுப் போகும் அந்தப் பாலைவன மணலுக்கு அவங்க ஊர்ல வேலிடிட்டி - சரியா 20 வருடங்கள்! ( 20 வருடங்கள்ன்றது நம்ம ஊர் கணக்கு! அவங்க ஊர் காலண்டருல அது ஒரு வருடம்னு நினைக்கிறேன்). சரியா 20 வருடங்களுக்கு ஒரு தபா ( வேலிடிட்டி எக்ஸ்டென்ஷ௬னுக்காண்டி) இந்த மண்ணைக் கலெக்ட் பண்ணிட்டுப் போறது அவங்களோட பாரம்பரியம்- சம்பிரதாயம்!

      * இந்த 20 வருட கால இடைவெளியை தங்கள் உள்ளுணர்வில் கொண்டுள்ள அபோரிஜின்கள், அந்த ஏலியன்ஸ் அண்ணாச்சிகளை வரவேற்க டாண்'னு சரியான நேரத்துக்கு ஆஜராயிடுறாங்க , அவ்ளோதான்!

      ( என்னுடைய ஞாபக சக்தியில் எனக்கு அவ்வளவா நம்பிக்கை கிடையாதுன்றதை நண்பர்கள் புரிஞ்சுக்கணும். ஹிஹி)

      Delete
    2. மாயாவிஜி.....இதுகுறித்து நீங்கள் கேள்வி கேட்டு அதற்கான எனது ஹேஷ்யங்களை பதிவிட்டுள்ளேன்

      மறுபடியும் உங்கள் நினைவிற்கு.....கீழே வருகிறது....

      பின்னாடியே சிம்பா வந்து அண்ணாத்தே !!! அடுத்த இதழில் ஆராம்பிச்சுருவீங்கன்னு பாத்தேன்....

      பேக் இஷ்யூக்கு போயீட்டீங்களான்னு கலாய்ப்பார்....:-)



      மாயாவிஜி.....................எனக்கு தோன்றியவரை கனவின் குழந்தைகள் கதையில்
      அயல்கிரகவாசிகள் 20 ஆண்டுகளுக்கு ஏன் பாலைவன மணல் எடுக்க வேண்டும்?
      பதில்
      தேவை என்பதாகத்தான் இருக்க முடியும்.................
      பூமியின் மணல் என்பது
      பாறைகளின் தேய்மானத்தால் மட்டுமே உருவாகிறது....
      கடல் படுகை......(கடலுக்கு அடியிலும் மலைகள் உண்டு)
      ஆற்று படுகை(உருட்டி வரும் பாறை துண்டுகள்)
      எரிமலை படுகை...........
      பாலைவன மணல் அங்கு உருவானதல்ல.மேற்கூறிய இடங்களில் இருந்து காற்றினால் கொண்டு வரப்பட்டவை....
      மணல் சிலிக்கா(குவார்ட்ஸ்), மேக்னடைட்,இல்மனைட் உட்பட எண்ணற்ற தனிமங்கள், சேர்மங்கள்,ஐசோடோப்புகள் உள்ளடக்கியது......

      தங்கள் கிரகத்தில் விரைவில் தீர்ந்துபோகும் நிலையில் உள்ள ஆனால் மிகவும் அத்தியாவசியமான தனிமம் அல்லது சேர்மத்தின் மூல அணுபொருளை அங்கு கண்டுபிடித்து இருக்கலாம்.......

      இதே மூலபொருளை பிரபஞ்ச வெளியில் தேடும் பணியில் அயல்கிரகவாசிகளின் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுஇருக்கலாம்...


      ஏன் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை?????

      இதற்கான பதில் இரண்டு....
      1. அவர்கள் தேடும் சேர்மத்தின் half life……………..
      Self decay மூலம் அழியும் ஒரு இயற்கை சேர்மம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேறு தனிமம் அல்லது சேர்மம் என மாற கூடும்.

      உதாரணமாக

      உரேனியம் 238 காரீயம் 206 ஆக மாற 2.5 மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும்.

      இதனிடையே சுமார் 15 நிலையான தனிமங்கள், எண்ணற்ற நிலையற்ற தனிமங்கள் உருவாகின்றன...

      இதில் நமக்கு அறிமுகமான ரேடியம், ரேடான் காஸ் அடங்கும்.

      ரேடியம் ரேடான் காஸ் ஆக மாற 1600 ஆண்டுகள் பிடிக்கும்...


      நிலையற்ற சில தனிமங்களின் half life நானோ செகண்டுகளில் இருக்குமாயின் அந்த கால கட்டத்தில் அவை வேறு ஒரு தனிமம் என மாற கூடும்......

      இதில் எந்த வகை தனிமம் அயல்கிரகவாசிகளுக்கு தேவை என்பது பொறுத்து சிக்கல் அவர்களுக்கு அதிகமாகும்.....

      பூமியின் சூழ்நிலையில் அன்ஸ்டேபிலாக இருக்கும் தனிமம் அவர்கள் கிரகத்தில் நிலைதன்மையுடன் இருக்கலாம்......

      இயற்கை சேர்மங்களில் இருந்து செயற்கை தனிமமும் நாம் particle accelerator மூலம் நாம் பெறுகிறோம்......
      உரேனியத்தில்(238) இருந்து.........>>>> ப்ளுடோனியம்

      தோரியத்தில் இருந்து.........>>>> உரேனியம் 235

      ரூபிடியத்தில் இருந்து.........>>>> ஸ்ரோன்ஷியம்



      இதுபோன்ற முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு இருக்கலாம்.....

      அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடையும்போது அவர்கள் வருவது நின்று போக கூடும்............................


      அவர்கள் தேடும் தனிமத்தின் half life இருபது ஆண்டுகள் என்ற கால கட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்......

      2. இருபது ஆண்டுகள் என்பது நமக்கு....................
      அவர்களுக்கு???????????????????

      அவர்கள் வாழும் சூரிய குடும்பத்தின் தூரம், அவர்கள் கிரகம் தன்னை தானே சுழன்று கொள்ள எடுத்து கொள்ளும் நேரம் ,அவர்கள் பறக்கும் தட்டின் வேகம் ஆகியவற்றை பொறுத்து
      அவர்கள் அவர்கள் கணக்கில் வாரா வாரம் கூட எடிட்டர் பதிவு போல வந்து போகலாம்....
      அல்லது அவர்கள் கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட வந்து போகலாம்....



      Delete
    3. சாதா காமிக்ஸுக்கும், கி.நா'வுக்கும் வித்தியாசம் அறியாதவர்கள் முறையே என்னுடைய, செனா-அனாவுடைய விளக்கங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்!

      பி.கு : கி.நா தான் சூப்பர்! :)

      Delete
    4. @ இத்தாலிகாரு

      உங்க சாதா காமிக்ஸ் விளக்கம் 4/10

      @ செல்வம் அபிராமி

      உங்கள் விளக்கம் போலவே கரூர்காரு குட்டியா ஒரு விளக்கம் சொன்னார் //ஆஸ்திரேலியாவில் யுரேனியம், ப்ளுட்டோனியம் போன்ற கதிரியக்க தாது பொருட்கள் மணலில் கலந்து இருக்கின்றன.. அவற்றை வெளிகிரக வாசிகள் ஆராய்ந்து எதற்கோ may be எரிபொருளாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.. அதை சேகரிக்கவே இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்திருக்கலாம்...///

      உங்களுக்கு 8/10

      ஆனாலும் ஒரு சின்ன உறுத்தல் இருந்துட்டே இருக்கு...அந்த மணல் புதிரின் பின்னால் என்னமோ ஒரு செய்திக்காகவே ஆசிரியர் அப்படி முடித்துள்ளார் என பட்சி சொல்லுது ! ஆனாலும் உங்கள் உடனடி விளக்கங்கள் அடுத்த வேலையை பார்க்க ரொம்பவே போதுமானவை, விளக்கங்கள் சொன்ன உங்களுக்கு நன்றிகள்பல !

      முடிவில் ஒரு துவக்கம்...
      அந்த வரிகள் சரியான மொழிபெயர்ப்பு தானே எடிட்டர் ???? (கண்சிமிட்டும் பொடியன் பென்னி படம் ஒன்று )

      Delete
    5. ///உங்க சாதா காமிக்ஸ் விளக்கம் 4/10
      ///

      இஸ்கூல் காலத்துலேர்ந்து இப்போ வரைக்கும் 'பார்டர் பாஸ்' பண்ணியே நம்ம பொழப்பு ஓடுது! :P

      Delete
    6. Selvam sir I forget the story on discussion created by Maayavi. But I will never forget the explanation given by u. 😂😂

      Uranium
      Plutonium
      Rubidium

      😉 Nice

      Delete
    7. But the fact Australian soil has huge mineral capacity. Selvam sir I really loved this explanation. 😃

      Delete
    8. அருமையான விளக்கம் செனா அனா ஜி...
      இதுமாதிரி பொறுமையாக என் கெமிஸ்ட்ரி வாத்தியார் பாடம் எடுத்து இருந்தால், +2 ல் 193யோடு நில்லாமல் 200வாங்கி இருப்பேனே...

      Delete
  66. கடிவாளம் காலம்
    ****************


    புதிய நடத்தை விதிகளுக்கு தப்பித்து " தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். " என்று நாக்கு தொங்கிப்போய் இங்கு வந்தால் ,எடிட்டர் மூக்கனாங் கயிறு மாட்டி விடப்பார்க்கிறார்.!அட சாமி எங்கு போனாலும் கடிவாளம் வரவேற்க்கிறது.இத்தளத்திற்கு வரும் முன்னர் எடிட்டருக்கு கதையை படித்தவுடன் மனதில் தோன்றியவைகளை "ரா " வாக எழதிவிடுவேன்.அதே பழக்கம் இங்கு தொடர்வது எவ்வளவு தவறு என்பது புரிகிறது.!மேடையில் மைக் கிடைத்தால் கண்டபடி உளருவது எவ்வளவு தவறு என்பதை உணருகிறேன்.நாசூக்காக எழதுவது என்பது என் இயல்புக்கு ஒத்துப்போகாது என்று நினைக்கிறேன்.இனி எடிட்டருக்கு ஈ மெயிலில் கருத்துகளை தெரிவித்துக்கொள்வது அல்லது நம்ம தலைவர் மாதிரி ஒரு குயர் பேப்பர் வாங்கி கடிதம் எழதி தள்ளுவதே சாலச்சிறந்தது.என்று நினைக்கின்றேன்.!.


    ஆனாலும் , பிடித்த ஹீரோக்களையும் கதைகளையும் தலையில் தூக்கி வைத்து கரகம் ஆடும்போதும்.சரி., பிடிக்காத ஹீரோவையும் கதைகளையும் காலில் போட்டு முச்சந்தில் போட்டு மிதிமிதியென்று மிதிப்பதில் உள்ள ஆனந்தமே தனி.ஹும் ! என்னமோ போடா மாதவா.!!!(கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே என்றும் நிலையானது.)

    ReplyDelete
    Replies
    1. @ M.V

      ஹா ஹா! என்னவொரு ரசணையான புலம்பல்! :D

      Delete
    2. ஹா ஹா! என்னவொரு ரசணையான புலம்பல்! :D

      Delete
    3. // பிடித்த ஹீரோக்களையும் கதைகளையும் தலையில் தூக்கி வைத்து கரகம் ஆடும்போதும்.சரி., பிடிக்காத ஹீரோவையும் கதைகளையும் காலில் போட்டு முச்சந்தில் போட்டு மிதிமிதியென்று மிதிப்பதில் உள்ள ஆனந்தமே தனி.ஹும் ///....அதே அதே சபாபதே....
      இனி நம்ம தலையோட விமர்சனம் மட்டுமே நமக்கு போதும்...

      Delete