நண்பர்களே,
வணக்கம். எதிர்பார்த்தபடியே ஞாயிறின் பதிவு ஏகமாய் எண்ணச் சிதறல்களைக் கொண்டு வந்திருந்ததில் மகிழ்ச்சியெனில் - அவை எல்லாமே பாசிட்டிவ் ரகத்திலிருந்தது டபுள் மகிழ்ச்சி ! அது மாத்திரமின்றி - மொசைக் தளத்தில் டிசைன் பதிப்பது போல - சில யதார்த்தப் பதிவுகளின் மூலமாய் நாம் செல்ல வேண்டிய திசையின் இலக்கைச் சுட்டிக் காட்டுமொரு சாத்தியம் பிறந்திருப்பதிலும் மகிழ்ச்சி ! தொடரும் பதிவில் அது பற்றி கொஞ்சம் விரிவாய் எழுதிடுக்கிறேன் !
இப்போதைக்கு சற்றே இலகுவான topic பக்கமாய் நம் இவ்வாரத்தைய கவனத்தைத் திருப்புவோமே ? இந்தாண்டின் இறுதி குவாட்டருக்கெனக் (!!) காத்திருக்கும் கார்ட்டூன் இதழ்களில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் ! 2 SMURFS + 1 லக்கி லூக் + 1 லியனார்டோ என்பதே அந்த காம்போ ! SMURFS பற்றியும், லக்கி பற்றியும் எக்கச்சக்கமாய்ப் பேசி விட்டோம் என்பதால் அங்கே சிக்கல்களில்லை! ஆனால் நமது தாடிக்காரத் தாத்தா லேசாய் மறக்கப்பட்டு விட்டதொரு ஜீவனாகிப் போனது போலொரு உணர்வு எனக்கு ! "விடிய விடிய விஞ்ஞானி" வெளியானது 4 கார்ட்டூன் இதழ்களுக்கு மத்தியினில் எனும் பொழுது ஒளி வட்டம் ஏகமாய்ப் பகிரப்பட்டது என்று சொல்லலாம் ! அதிலும் "7 நாட்களில் எமலோகம்" வாயிலாய் காரட்மீசை கிளிப்டன் அடித்த சிக்ஸரில் லியனார்டோ ஓரம் கட்டப் பட்டுவிட்டாரோ - என்னவோ ? அதுமட்டுமன்றி - ஒரு முழுநீளக் கதையாகயிராது - சிற்சிறு gags-களின் தொகுப்பாய் அமைந்திருந்ததிலும் நம்மவர்களில் ஒருசாராருக்குத் திருப்தி குறைவென்று தோன்றியது !
எது எப்படியோ - "விடிய விடிய விஞ்ஞானி" இதழினை இன்றைக்கொரு மறுவாசிப்புப் போட்டுத் தான் பாருங்களேன் ? ரின்டின் கேன் இரண்டாம் இன்னிங்சில் சாதித்துக் காட்டியது போல் லியனார்டோவும் மறுமுறை ஒரு மாயம் செய்திட இன்றைய உங்களது review-க்கள் உதவிடலாம் தானே ? "ஜீனியஸ் உறங்குவதில்லை" இந்தாண்டின் தீபாவளி (நவம்பர்) வெளியீடு ! (நம்மிடையிலான) தாத்தாவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யவிருக்கும் இதழும் கூட ! So இந்த நாயகர் தேறுவாரா ? மாட்டாரா ? என்பதற்கொரு கோடி காட்டுங்களேன் -தொடரும் நாட்களில் ? சில வயசறியா தாத்தாக்கள் தாதாக்களாகி உலவிடும் வேளையில் - இந்த மெய்யான தாத்தாக்கு இன்னொரு lifeline உண்டா ?
Bye for now all !
Ullen.
ReplyDeleteLoved the Leonardo thatha... Please continue Editor sir...
ReplyDelete+++++1 sir
Delete+1
Delete" என்னவோ போடா! வாழ்க்கை முழுக்க அறிவு ஜீவியாவே தான் இருக்கணும்னு எழுதியிருந்தா நீ என்னதான் பண்ணுவியாம்" என்ற ரேஞ்சுக்கு லியனார்டோ தாத்தா அடிக்கடி தன்னைப் பற்றி பெருமை பேசிக்கொள்வது கெக்கபிக்கே அழகு! :))))
ReplyDelete"வேற வழியே இல்லைடா ஆல்.. எப்படிப் பார்த்தாலும் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஜீனியஸ் நான்தான்னு ஒத்துக்கிடத்தான் வேண்டியிருக்கு"
Delete:))))
தாத்தா என்னளவில் கிச்சுகிச்சு மூட்டும் ரகம்.
Deleteடாப் 10 ல்
ReplyDeleteதாத்தாவின் தலையெழுத்து என்றவுடன் நம் தாதாக்களை பற்றிய update என்றுதான் நினைத்தேன்.
ReplyDeleteமாயாவியின் கொலைகார குள்ளநரி மறுபதிப்பு வாய்ப்பு உண்டா சார். இதுவரை மறுபதிப்பு காணாத ஒரு கிளாசிக் அது.
ReplyDeleteதாத்தா வில்லங்கமாய் ஏதாவது சொல்லும்போதெல்லாம் ஆல்லெகை வாசகர்களை நோக்கி இடுக்கிப்போன கண்களுடன் ஒரு பரிதாபப் பார்வை பார்ப்பது கெக்கேபிக்கே அழகு! :))))
ReplyDeleteHave a Good day friends and editor sir
ReplyDeleteபுது அட்டவணையில் யார் என்று தெரியும் வரை தலைக்குள் ஒரே குடைச்சல்.
ReplyDeleteதாத்தாவும், அவருடைய அல்லகையும் அடிக்கும் லூட்டிகள் போதாதுன்னு கூடவே ஒரு மியாவும்,எலியும் தனியா ஒரு ட்ராக்கில் கிச்சு மூட்டுவதும் ஒரு ஹிஹிஹி அழகு! ( நம்ம காமிக் லவருக்கும் இது ரொம்பப் பிடிக்குமாம்)
ReplyDeleteகுருநாயரே,
Deleteரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போலிருக்கே.! நிறைய படிச்சிருக்கிங்களே.! :-)
i am also innnn top 10
ReplyDeleteதாத்தா கதை நன்றாகத்தான் இருந்தது.!ஒரே ஒரு குறை தன் அசிஸ்டெண்டை கொடுமைப் படுத்தி பாடாய் படுத்துவது மட்டுமே ஒரு உறுத்தலாக இருந்தது.,அது கவுண்டமணி செந்தில் உதை அளவு க்கு மீடியமாய் இருந்தால் அட்டகாசமாய் இருக்கும்.!
ReplyDeleteஉலகிலேயே முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட ட்ராஃபிக் சிக்னல், ஃபீடிங் பாட்டில், ரிமோட் கண்ட்ரோல், 3D TV,சீட்டாட்டம், அலாரம் அடிக்கும் கடிகாரம்,மைக்-ஸ்பீக்கர்ஸ், பெர்முடாஸ் என தாத்தாவின் அத்தனை கண்டுபிடிப்புகளும் செம லூட்டியான வசனங்களோடு இணைந்து வயிறைப் பதம் பார்க்கிறது!
ReplyDeleteஐ லவ் யூ தாத்தா!
நான் மிகவும் ரசித்த, தாத்தாவின் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்று - உலகின் முதல் ட்ராஃபிக் ஃபைன்! ஆல்லெகைக்கு அவர் ஃபைன் போடும் அழகே அழகு! :))))
Deleteவாங்க தாத்தா. வணக்கம்
ReplyDelete2017 புக் லிஸ்ட் எப்போ சார் ?
ReplyDeleteஅடடே! லார்கோ புத்தகங்களுக்கும் தள்ளுபடியா?!! காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் காட்டில் மழை!!
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும் சார்
ReplyDeleteகோவையில் தாங்கள் ஸ்டால் போட்டது மிக நன்று சார்
நெறைய வாசகர்கள் முத்து காமிக்ஸ் இன்னும் வருகிறதா என்று கேட்டனர்
சனி ஞாயிறு கூட்டம், நிறைய காமிக்ஸ் வாசகர்களை சந்திக்க முடிந்தது
நாங்கள் சிறு வயதில் நிறைய படித்திருக்கிறோம்
90 பைசாவிற்கு அப்போ வந்தது
பத்து பத்து பைசாவாக சேர்த்து வீட்டுக்கு தெரியாமல் வாங்குவோம் என்றனர்
அவர்கள் முதலில் உதிர்த்த வார்த்தைகள் "இரும்புக்கை மாயாவி" மற்றும் வேதாளர்
நாங்கள் சிறு வயதில் காமிக்ஸ் படித்து தான் தமிழ் கற்று கொண்டோம் என்று கூறியர்களில் பாதி பேர் தங்கள் பசங்களுக்கு இதை படிப்பா என்று மாயாவியை தான் வாங்கி கொடுத்தனர்
நம்மிடம் வரும் புதிய காமிக்ஸில் சிறியவர்களுக்கு என்று இருப்பதை முயற்சி செய்ய கூறினால், முதலில் இத படிக்கட்டும் ,இது புடிச்சுருந்த அவங்க தன்னால காமிக்ஸ் பக்கம் வருவாங்க என்றனர்
வேதாளர் வேண்டும் என்று கேட்டவர்கள் 35 வயதில் இருந்து 60 வயது இருக்கும் வாசகர்கள்
ஒரு வாசகரிடம் ஆங்கிலத்தில் இன்னும் வருகிறது என்றேன்
இல்லை எனக்கு தமிழில் தான் வேண்டும் என்றார்
பெரியவர்கள் சிறுவயது குழந்தைகளாய் மாறினார்
kudos Ramya ....!
Delete//வேதாளர் வேண்டும் என்று கேட்டவர்கள் 35 வயதில் இருந்து 60 வயது இருக்கும் வாசகர்கள்//
food for thoughts ?
//அவர்கள் முதலில் உதிர்த்த வார்த்தைகள் "இரும்புக்கை மாயாவி" மற்றும் வேதாளர்//
:)looks like வேதாளர் on the way for 2017
அருமையான விவரிப்பு சகோ! உங்களுடைய இந்த களப்பணி நிச்சயம் நல்லதொரு பலன் கொடுக்கும்! மகிழ்ச்சி சகோ! :)
Deleteஉங்களது சேவை காமிக்ஸுக்கு தேவை.
Deleteகுட் ஜாப் சகோ...
Deleteகீப் இட் அப்...
@Satishkumar S
Deleteகொஞ்சம் வாசகர்களிடம் வேதாளர் அடுத்த வருடம் வரலாம் , சில பேரிடம் அடுத்த வருடம் வருவார் :D :D :D,
சில பேரிடம் வேதாளர் வந்தால் வாங்குவீர்களா என்று கேட்டேன்,
வாங்குவோம் என்று கூறினார்
@Vijayan
மன்னிக்கவும் ஆசிரியரே, அவர்களுடைய குழந்தை முகத்தை பார்த்து வராது என்ற சொல்ல மனம் வர வில்லை
@Erode VIJAY
@Arivarasu @ Ravi
@சேலம் Tex விஜயராகவன்
நன்றி சகோதரர்களே
நான் செய்தது சின்ன விஷயம் தான்
நம் காமிக்ஸ் நண்பர்கள் பலர் சத்தம் இல்லமால் நெறைய சேவை செய்து கொண்டு இருக்கீர்கள் என்பது எனக்கு தெரியும்
அதற்கு முன்பு இதெல்லாம் சாதாரணம் :)
கடல்யாழ்9 : //அவர்களுடைய குழந்தை முகத்தை பார்த்து வராது என்ற சொல்ல மனம் வர வில்லை //
Deleteவராதென்றெல்லாம் இல்லையே ; so நீங்கள் கொடுத்த வாக்குறுதி பொய்யாகாதே !!
நிறைய இதழ்களை வேதாளருக்கு ஒதுக்க - நிறைய பேர் இசைவு தெரிவித்தால், நிறைய முயற்சி செய்து அவரை நம்கரைகளுக்கு மீண்டும் ஒதுங்கச் செய்யலாம் தான் ! ஆனால் இல்லாத ஒன்றைத் தேடியோடும் மோகமாய் இதுவும் அமைந்திடாதிருந்தால் சரிதான் !
"கிடைக்கிறது சுலபமாய்" - என்றானபின்னே சில மவுசுகள் மாயமாகிப் போவது தான் சங்கடமே !
//
Delete"கிடைக்கிறது சுலபமாய்" - என்றானபின்னே சில மவுசுகள் மாயமாகிப் போவது தான் சங்கடமே !///
உண்மை உண்மை! :(
சத்தியமான உண்மை ஆசிரியரே
Delete2017 அட்டவணை முடிவு ஆவதற்குள்
Deleteவேதாளர் கதைகள் பற்றி ஒரு முடிவுக்கு வந்தால் Ok தான்.
வேதாளருக்கு நிறைய இதழ்கள் ஒதுக்க இங்கு
நிறைய பேருக்கு சம்மதம்தான்.
"யாரோ ஒரு சிலர் எதிர்க்கலாம்!"
2017 ல் வேதாளரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!
அருமை கடல்யாழ்9 ...
Delete+1
DeleteSir start an opinion poll for Vedhaler.
Delete//2017 ல் வேதாளரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!//
Delete+1
+1
Deleteஅனைவருக்கும் வணக்கம்.எடிட்டர்சார்.தாத்தாவுக்கென தனி பதிவு!! முழுநீளக் கதையாயிருந்தால் தாத்தாவுக்கு "கை" கொடுக்கலாம் சார்!
ReplyDeleteமறுபடி சின்ன சின்ன கதையாயிருந்தால்....?
தாத்தாவுக்கு "கல்தா"தான் கொடுக்க வேண்டும் சார்.
அதென்னமோ சின்ன சின்ன கதைகள் Snacks சாப்பிட்ட மாதிரியான உணர்வையே தருகிறது சார்.
முழுநீள கதையென்றால்தான் Full Meals சாப்பிட்ட திருப்தியை தருகிறது.(கேப்டன் ப்ரின்ஸ் கூட சின்ன சின்ன கதைகளாக வந்த போது இதே எண்ணம்தான் ஏற்பட்டது சார்.)
அவ்வப்போது ஸ்நாக்ஸும் தேவைதானே நண்பரே.
DeleteArivarasu @ Ravi : +1
Deleteநண்பரே ஸ்நாக்ஸ் என்பது அவ்வப்போது தேவையான ஒன்று என்பது உங்கள் கருத்து.
Deleteபசிக்கு ஸ்நாக்ஸ் தீர்வாகாது என்பது என் எண்ணம்.
ஸ்நாக்ஸை காலை மதியம் இரவு உணவுக்கு பதிலாக சாப்பிட்டால் பசி தீருமா நண்பரே.இடைப்பட்ட நேரத்தில் கொரிக்க மட்டுமே பயன் படும்.அதேபோல இந்த துண்டு கதைகள் முழுநீளக்கதைக்குப்பின் உள்ள பக்கங்களை நிரப்பும் போது ஒன்றும் தெரியவில்லை. அதுவேதான் முழுவதும் என்றால் "ஜீரணிக்க" கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அவரவர் கருத்தை ஆசிரியர் கேட்கிறார். இது எனது கருத்து.அவ்வளவுதான். இதை வைத்து ஆசிரியர் எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை.
எனக்கு திருப்தியில்லை என்பதற்காக நான் வாங்காமல் இருக்கப் போவதுமில்லை.
உண்மை AT Rajan,
Deleteஇது போன்ற துக்கடா கதைகள் கொண்ட புக் என்றும் Hit ஆகாது. குடோனில் வேன்டுமானால் Store ஆகலாம்.இப்படி போன்ற தொகுப்பை நான் விரும்புவதே இல்லை. இந்த இடத்தை வேறு ஒரு ஹீரோவுக்கு வழங்கலாம். இந்த Slot இடம் பெறுவதற்கு பலர் இருக்கிறார்கள். லியனார்டோ மற்றும் ஸ்மர்ஃப்ஸ் இவர்களுக்கு கல்தா குடுப்பதே நல்லது. ஆசிரியர் இதை உணர்ந்தால் சரி.குழந்தைகள்,பள்ளி மாணவர்களை இது ஈர்த்தால் தப்பி பிழைக்கும். இல்லையென்றால் டாட்டா Bye bye என்று சொல்லி வேறு ஒருவருக்கு இந்த இடங்களை வழங்கலாம்.முழு நீள கதைகளே என்றும் மனம் கவர்பவை.இப்படி சிறு கதைகளில் வென்றது எது என்றால் அது கீரீன் மேனர் மட்டுமே.
+10000
DeleteSorry sir... -1
DeleteAT Rajan / Shinesmile Foundation @
Delete-100000000000000
நமது வாசிப்பில் இது ஒரு புது ரகம், இதற்கு நன்மை பழகி கொண்டால் இதில் ரசிக்க நிறைய விசயம்கள் உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
Parani+1
Delete
Delete@ஸ்டீல். நண்பரே நம்ம எடிட்டர் அவர்கள் லியர்னாடோ தாத்தாவுக்கு அடுத்து "எலிசபெத் பாட்டியின் வேட்டை" என்றோ அல்லது அவரே கதையெழுதி படம் வரைந்து "கண்ணாம்பாள் பாட்டியின் சாகஸங்கள்"என்றோ வெளியிட்டால் அதையும் நான் வாங்கத்தான் போகிறேன்.உங்கள் ஊரில் புத்தக விழா நடந்த போது எங்கே போனீர்கள்? அங்கு நமது ஸ்டாலுக்குள் இருந்து உங்கள் வாதத் திறமையால் ஒரு பத்து சந்தா அல்லது ஒரு நூறு புத்தகம் விற்பதற்காவது உதவியிருக்கலாமே! உங்களூர்காரர் தனியே ஸ்டாலில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாரே.நீங்கள் அங்கு தலையே காட்டவில்லை என்று கேள்விபட்டேன்.
இது நியாயமா? உங்களூர் புத்தகவிழாவில் இப வெளியீட்டுவிழா என்றால் பறந்து வந்திருக்கமாட்டீர்கள்????
பரணி Sir,
Deleteநான் இவைகளை விரும்பவில்லை.ஆனால் இந்த புத்தகங்களை எங்களிடம் வரும் மாணவர்களிடம் வாசிப்பு திறனை உருவாக்க,இந்த கதைகளை படிப்பதை கட்டாயம் ஆக்கியிருக்கிறேன்.அது 3 பக்கம் என்கிற வகையில் படித்து விடுகிறார்கள். இது எனக்கு போதுமான விசயமாய் இருக்கிறது. இந்த திறன் அவர்களிடம் உருவானதும் அவர்கள் லக்கி,வுட்சிட்டி,டின் என்று முழு நீள கதைக்கு தாவி விடுகிறார்கள். காலம் தனக்கான பதிலை தானே எடுத்துக்கொள்ளும். உங்களுக்கு இவை பிடித்திருந்தால் எனக்கு சந்தோசம் தானே.
Atr😢
Delete///விடிய விடிய விஞ்ஞானி" வெளியானது 4 கார்ட்டூன் இதழ்களுக்கு மத்தியினில் எனும் பொழுது ஒளி வட்டம் ஏகமாய்ப் பகிரப்பட்டது என்று சொல்லலாம் ! அதிலும் "7 நாட்களில் எமலோகம்" வாயிலாய் காரட்மீசை கிளிப்டன் அடித்த சிக்ஸரில் லியனார்டோ ஓரம் கட்டப் பட்டுவிட்டாரோ - என்னவோ ? ///
ReplyDeleteஎனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது எடிட்டர் சார்! 'குட்டிக்குட்டி கதைகள்'ன்றதும் ஒரு காரணம்! நம்மில் பெரும்பாலானவர்களின் ரசணை முழுநீளக் கதைகளோடே ஒன்றிப் போயிருக்கிறது! இது மாறணும். இல்லேன்னா லியனார்டோ தாத்தா மாதிரி பல நல்ல படைப்புகளை ரசிக்கும் வாய்ப்பை நமக்கே தெரியாம இழந்திடுவோம்!
முதல் ரவுண்டில் ரின்டின்கேனை ரசிக்காத பலரும் இரண்டாவது ரவுண்டில் அவனைத் தூக்கி வச்சுக் கொஞ்சின மாதிரியே இந்தத் தாத்தாவும் இரண்டாவது ரவுண்டிலிருந்து பிக்அப் ஆவர்னு நினைக்கிறேன்!
நம்மளை பொறுத்தவரை எந்த காமிக்ஸ் போட்டாலும் வாங்குவோர் சங்கம் ஆதலால் எந்த கவலையும் இல்லை.
Deleteஎல்லா காமிக்ஸும் படிங்க சந்தோசமா இருங்க.
சரி படிங்க தம்பி.
Deleteமுன்பு துக்கடா கதைகள் எனக்கும் பிடித்ததில்லை.....ஸ்மர்ஃப் வருகைக்கு பின்னர் ,அதன் ரேஞ்சே வேற....ிந்த மாதம் ஸ்மர்ஃப் மாதம்....அதிலும் மறுவாசிப்பிற்கு கொரிக்க ிந்தக் கதைகளே உகந்தவை..என்னடா பண்ணன்னு போரடிச்சு உக்காந்திருப்போமே அப்ப வாசியுங்கள் இந்தக் கதைகளின் ஆழமும் ,அருமையும் புரியும்.....தாத்தா முதலில் விட மறுவாசிப்பில் அட்டகாசம்...நம்பிப் படிங்க ..சந்தோசமா போங்க
Deleteஸ்டீல்,
Deleteசிறு கதைகளின் தொகுப்பை (குழந்தைகளுக்கானது)
நான் படிப்பதே இல்லை.ஆனால் எங்கள் மையத்திற்கு வரும் பள்ளி மாணவ,மாணவிகள் அதை படிக்கிறார்கள்.வாசிப்பை பிள்ளைகள் மத்தியில் கொண்டு வருவதற்காய் இந்த சிறு கதை தொகுப்பை வாசிப்பது கட்டாயம் ஆக்கியிருக்கிறோம்.
//நம்மில் பெரும்பாலானவர்களின் ரசணை முழுநீளக் கதைகளோடே ஒன்றிப் போயிருக்கிறது! இது மாறணும். இல்லேன்னா லியனார்டோ தாத்தா மாதிரி பல நல்ல படைப்புகளை ரசிக்கும் வாய்ப்பை நமக்கே தெரியாம இழந்திடுவோம்! //
Delete+1
அருமை சைன்...அத மறுவாசிப்பு செய்து பாருங்கள்....அக்கடான்னு இருக்கும் நேரம்...
Deleteசார் லார்கோவுக்கு தள்ளுபடி வேண்டாமே
ReplyDeleteசனி ஞாயிறு-களில் லார்கோ கதைகள் விற்றது என்னமோ கொஞ்சமே
ஆனால் லார்கோவின் அருமை நம்மளுக்கு தெரியும்
Jean Van Hamme படைத்த கதாபாத்திரம்
//சனி ஞாயிறு-களில் லார்கோ கதைகள் விற்றது என்னமோ கொஞ்சமே
Deleteஆனால் லார்கோவின் அருமை நம்மளுக்கு தெரியும் //
I like him. we have to make new readers start reading this.
லார்கோவுக்கு தள்ளுபடி ஆச்சிரியம் அளிக்கிறது.
Deleteலார்கோவின் ஏதாவதொரு பாகத்தை வாங்கி தலை எது, வால் எது என்று புரியாமல் நிற்பதைக் காட்டிலும் இதுபோன்ற Bundle offer நன்மையே விளைவிக்கும் - விற்பவருக்கும்; வாங்குபவருக்கும்!
Deleteலார்கோவின் அருமையை தமிழிலோ, ஆங்கிலத்திலோ எற்கனவே உணர்ந்தவர்கள் நம் ஸ்டால் பக்கம் ஒதுங்க நேரிட்டால், அவர்களுக்கு இந்தத் தள்ளுபடி நிச்சயம் ஒரு ஜாக்பாட் தான்!
ஒரு வாசகர் மனோஜ் அண்ணாவிடம் லார்கோ கதைகள் எதன் பின்பு எது என்று கேட்டார்
Deleteஅண்ணா என்னை அழைத்து உதவ கூறினார்
அவ்வாசகர் என்னை ஒரு Stall Volunteer, இப்பெண்ணுக்கு என்ன தெரியும் என்று நினைத்து என்னிடம் கேட்க விருப்பப்படவில்லை
நான் அவரிடம் நான் ஒரு காமிக்ஸ் வாசகர், இக்கதைகள் அனைத்தயும் படித்து உள்ளேன்
நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று கூறி லார்கோ கதைகளை வரிசைப்படுத்தி குடுத்தேன்
மகிழ்ச்சியுடன் லார்கோ கதைகளை வாங்கி சென்றார்
+11111
Delete@ ALL : லார்கோவுக்குத் தள்ளுபடியின் அவசியம் ஆச்சர்யமே - எனக்கும் கூட ! ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா ?
Delete"ஆதலினால் அதகளம் செய்வீர்"...."துரத்தும் தலைவிதி" ; "வேட்டைநகரம் வெனிஸ்" மூன்றுமே வெளியானது2 ஆண்டுகளுக்கு முன்பாய் ! இன்னமும் அவை கணிசமாய்க் கையிருப்பில் உள்ளன !
பொதுவாய் இப்போதெல்லாம் இந்த டபுள் இதழ்களின் விற்பனையினில் விறுவிறுப்பு குறைவே !
கடல்யாழ்9 : Cool job சகோ !!
Delete//பொதுவாய் இப்போதெல்லாம் இந்த டபுள் இதழ்களின் விற்பனையினில் விறுவிறுப்பு குறைவே///--- so sad sir...
Deleteலார்கோவுக்கே இந்த நிலையா????...
///பொதுவாய் இப்போதெல்லாம் இந்த டபுள் இதழ்களின் விற்பனையினில் விறுவிறுப்பு குறைவே !///
Deleteசங்கடமான தகவல் சார்.!
குண்டு புக் கனவுகள் கனவாகவே போய்விடுமோ! (சோகப் பின்னனி இசையில் ஒரு கன்னத்தில் கைவைத்தபடி குளத்தில் கல் எறியும் படம் ஒன்று.) (இந்த விளக்கத்துக்கு போட்டோவே போட்டிருக்கலாம் :):))
லார்கோவின் நிலை உண்மையிலேயே கவலையளிக்கிறது
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteலார்கோ இதன் மூலமாவது பிறரை வாங்க வைத்தால் நிச்சயம் காமிக்ஸ் அருமையை அவர்கள் உணரலாம்...கடல் அதகளம் செய்கிறீர் சகோ...அட்டகாசம்
Delete"முழு நீள சித்திரக்கதை"
ReplyDeleteஇந்த மந்திர வார்த்தை மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது சார்
ஹாஹாஹா! கவனிச்சீங்களா எடிட்டர் சார்? 'முழுநீள சித்திரக்கதை'னு அட்டையில் போட்டு போட்டு எங்களைக் குட்டிக் கதைகளின் விரோதியாக்கினதே நீங்களும், உங்க டாடியும் தானே? எங்களை நீங்கள் வளர்த்த விதம் அப்படி! அதற்கு நாங்கள் என்ன செய்வதாம்! ;)
Deleteஅட...அதன் நதிமூலம் FLEETWAY -ன் இதழ்களில் ஷாமியோவ் !
Deleteஅவர்களது மாயாவி ; லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ கதைகளின் அட்டைகளில் கீழ்ப்பக்கமாய் ஒரு பட்டையில் இது போலொரு வாசகமிருப்பது வழக்கம் ! அதன் உல்டா தான் நமது வரிகள் !
"FLEETWAY " அட்டைப்பட வாசகம்
Delete"132 PAGES OF ACTION PICTURES"
என்றிருப்பதை தமிழில் அழகாக "முழு நீளச் சித்திரக்கதை" என்று தலைப்பிட்டு மனதில் நிரந்தரமாக குடியேற்றி விட்டார் நம் மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் அவர்கள
இப்படிதாய்யா எங்கள கிறுக்கு பிடிச்ச பயபுள்ளையா மாத்தி புட்டீக."முழு நீள சித்திர கதை" என்பது சிறு வயது முதல் மறக்க முடியாத ஒன்று.
Deleteலியனார்டோ : he is good, subtle comedy. Side line tom and Jerry like track was fun to notice, its crazy mohan style of bundled and compressed heavy comedy pack. some time have to re-read it to enjoy it to the fullest.
ReplyDeleteOnce a year is correct slot for லியனார்டோ. what about movement of Madhiyilla Mandiri, Edit sir?
DeleteSatishkumar S : // some time have to re-read it to enjoy it to the fullest.//
Deleteசில சமயங்களில் இந்த அவசியம் தான் நம்மில் சிலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறதோ - என்னவோ தெரியவில்லை ! முதல் வாசிப்பிலேயே 100% கவர்ந்திடாது போயின் அந்த நாயகர் ஓரம்கட்டப்படுகிறார் போலும் !
இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. லார்கோவே சந்தையில் தடுமாறும் போது இவர்கள் எம்மாத்திரம்.லார்கோ கூட Limited run னினால் வலம் வந்து விடுவார்.ஆனால் இவர்கள் கஸ்டம் தான்.குழந்தைகள்,பள்ளி மாணவர்கள் மார்க்கெட்டை நாம் பிடித்தால் நலம்.
Deleteகாமிக்ஸ் உலகிற்கு புதியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு படிக்கும் பழக்கம் உருவாக்க நம் காமிக்ஸ் ஸ்டால் பக்கம் வந்தனர்
ReplyDeleteஅவர்கள் ஸ்மர்ப், முத்து மினி , கர்னல் கிளிப்டன், சுட்டி பயில்வான் பென்னி காட்டினேன்
சிறுவர்களில் சிலர் கலர் புத்தகம் இருக்குதா என்று கேட்டு வாங்கினார்
ஒரு சிறுவன் சனி அன்று நம் ஸ்டாலில் 1000 ரூபாய் க்கு காமிக்ஸ் தன் தந்தை உடைய உதவியுடன் வாங்கினார்
அச்சிறுவனின் தந்தை எது வெண்டோமோ எடுத்துக்கோ என்றார் ,என்னிடம் அச்சிறுவன் எடுக்கும் கதைகள் நன்றாக இருக்குமா என்று தந்தை கேட்டு கொண்டே இருந்தார்
அச்சிறுவன் மிகுந்து ஆர்வத்துடன் நம் காமிக்ஸ்யை வாங்கும் போது, சிறு வயதில் நம் அப்பாவும் இப்பிடி இருந்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்குமே என்று தோன்றியது
ஒரு சிறுவன் கலரில் எந்த புத்தகத்தை காட்டினாலும் சூப்பர் சூப்பர் என்று சொல்லி கொண்டிருந்தார்
அச்சிறுவனின் அம்மா சண்டை கதையை குடுக்காதீர்கள், வீட்டிலும் சண்டை தான் போடுகின்றனர் , காமெடி கதையை குடுங்கள் என்று கூறினார்
அதற்கு சற்று முன்னர் தான் அப்பயனின் கையில் டெக்சின் "நிலவொளியில் ஒரு நரபலி" கதையை கலருல இருக்கிற தலயை பாரு என்றேன், அவர் எங்கள் தல என்றேன்
அச்சிறுவனின் பயனின் கையில் இருக்கும் தலைப்பை பார்த்ததும் வேண்டாம் அவரின் அம்மா என்று கூறி விட்டார்
உடனே நான் Smurf, கர்னல் கிளிப்டன், சுட்டி பயில்வான் பென்னியை எடுத்து குடுத்தேன்
பயனுக்கு வாங்கி தந்தனர், நல்ல வேல திட்டு கிடைக்கல, தப்பிச்சோம் என்று நினைத்து கொண்டேன்
ஒரு பெண்மணி தன பெண் குழந்தைக்கு அம்மா சின்ன வயசில் இதை படித்து தான் வளர்ந்தேன் என்ற சொல்ல கேட்க இனிமையாக இருந்தது
அப்பெண்மணி சிக் பில் லை வாங்கி அம்மாவுக்கு ரொம்ப பிடித்த கதா பாத்திரம் என்று கூறி தன் வாங்கியும் குடுத்தார்
ஒரு தந்தை இதை பாணியில் தன் மகனுக்கு காமிக்ஸ் வாங்கிட்டு போனார்
பெற்றோர்கள் நம்ம ஸ்டாலை பார்த்து நான் சின்ன வயதில் படித்தது என்று தங்கள் பிள்ளைகளிடம் பெருமையுடன் கூறி இரண்டு அல்லது மூன்று காமிக்ஸ் வாங்கி கொடுத்தனர்
//சிறுவர்களில் சிலர் கலர் புத்தகம் இருக்குதா என்று கேட்டு வாங்கினார்
Deleteஒரு சிறுவன் சனி அன்று நம் ஸ்டாலில் 1000 ரூபாய் க்கு காமிக்ஸ் தன் தந்தை உடைய உதவியுடன் வாங்கினார்
அச்சிறுவனின் தந்தை எது வெண்டோமோ எடுத்துக்கோ என்றார் ,என்னிடம் அச்சிறுவன் எடுக்கும் கதைகள் நன்றாக இருக்குமா என்று தந்தை கேட்டு கொண்டே இருந்தார்
//
:)
//உடனே நான் Smurf, கர்னல் கிளிப்டன், சுட்டி பயில்வான் பென்னியை எடுத்து குடுத்தேன் //
:)
//அப்பெண்மணி சிக் பில் லை வாங்கி அம்மாவுக்கு ரொம்ப பிடித்த கதா பாத்திரம் என்று கூறி தன் வாங்கியும் குடுத்தார் //
:)
//பெற்றோர்கள் நம்ம ஸ்டாலை பார்த்து நான் சின்ன வயதில் படித்தது என்று தங்கள் பிள்ளைகளிடம் பெருமையுடன் கூறி இரண்டு அல்லது மூன்று காமிக்ஸ் வாங்கி கொடுத்தனர் //
:)
sago good job!!!!! for 2017 Belgium Coimbatore for sure as steel said.
அருமை,அருமை.
Deleteகடல்யாழ்9 : இதுநாள்வரையிலும் பேச்சளவிலேயே நின்றிருந்ததொரு முயற்சிக்குச் செயல்வடிவம் கொடுக்க முதல் ஆளாய் கைதூக்கி நின்றுள்ளீர்கள் ரம்யா ! நன்றிகள் பல !!
Deleteதொடரும் வாரயிறுதிக்கு any volunteers folks ?
சூப்பர்.! இன்னும் !இன்னும் !............
Deleteஅட்டகாசம் சகோ! குடும்பத்துடன் பலர் வந்திருந்து தம் பிள்ளைகளுக்கு காமிக்ஸ் வாங்கிக் கொடுப்பது மகிழ்ச்சியான செய்தி!சென்னையில் இது நிறையவே நடக்கிறதென்றாலும், கோவையிலும் இது சூடுபிடித்திருப்பது அங்கே இன்னும் பல இளைய தலைமுறை காமிக்ஸ் வாசகர்களை உருவாக்கித் தரும்!
Deleteஅங்கே வரும் பெற்றோர்களிடம் அழுத்தமாகச் சொல்லுங்கள் - "
காமிக்ஸ் வாசிப்பு உங்கள் பிள்ளைகளின் imagination , creativityஐ ஏகத்துக்கும் அதிகரிக்கும் என்பதோடு தமிழ் மொழியை அழகாக கற்கவும் உதவும்" என்று! ( தமிழ்மொழி பற்றிப் பேசும்போது ஸ்டீல்க்ளா அருகில் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும்!) ;)
@Editor
DeleteWhy not you sir ? (No offense meant)
கடல்யாழ் @ உங்களின் வழக்கமான அலுவலக பணியையும் கவனித்து அதே நேரம் நமது காமிக்ஸ் ஸ்டால்லில் களப்பணியாற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்!
Deleteகடல் நானும் இல்லயே என மெய்யான வருத்தத்தை ஏற்படச் செய்து விட்டீர்கள் ..சூப்பர்....சதீஷ் all +++....வஜய் ஒரே விஷயம் -1
Delete/// சில வயசறியா தாத்தாக்கள் தாதாக்களாகி உலவிடும் வேளையில் ///
ReplyDeletehmmm...!!??
Tex????
Deleteநான் நம்ம தலீவரோட தலைவரோன்னு நினைச்சுட்டேன்.!
Delete(ஓடீர்ர்ர்ரா கைப்புள்ள!!)
ஹிஹிஹி!!!
ஈரோட்டில் ஒரு இத்தாலி நேற்றுதான் படித்து முடித்தேன்.
ReplyDeleteஒவ்வொரு முறையும் கூரியரை வாங்கியவுடனே புத்தகங்களை பார்த்தது பரவசமாகி விடுவேன். இந்த முறை புத்தகங்களை பார்த்தும் அதாவது ஈரோட்டில் இத்தாலி கூட மனதில் ஒட்டவில்லை.!ஏனென்றால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னே ஈரோடு விஜய் போனில் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்த வண்ணம் இருந்தது.அதாவது இந்த முறை ஈரோடு திருவிழா இதுவரை இல்லாத அளவுக்கு பெருமை வாய்ந்த விழாவாக இருக்கப்போகிறது.100 பேருக்கு மேற்பட்ட நண்பர்கள் வரப்போகிறார்கல்.வெளி நாட்டு நண்பர்கள் நிறையப்பேர் இதற்காகவே இந்தியா வருகிறார்கள்.அவர்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.இனி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.!.கடல் யாழ் போன்ற வாசகிகளும் வருகிறார்கள் மிஸ் பண்ணிடாதீங்க! என்று ஆவலை தூண்டி விட்டார்.அதனால் சனிக்கிழமை இரவு முழுக்க மிஸ் பண்ணிவிட்டோமே என்று மனம் கனத்துபோய் புத்தகத்தில் மனம் லயக்கவில்லை.!
சில நாள் கழித்து ஈரோட்டில் இத்தாலியை பார்த்தபோது அசந்து விட்டேன்.அவ்வளவு அழகு நேர்த்தி.
முன்பெல்லாம் எல்லா ஸ்பெஷல் களிலும் மாடஸ்டி வந்து ஒரு கலக்கு கலக்குவார்.!பாயசம் இல்லாத விருந்தா? மாடஸ்டி இல்லாத லயன் ஸ்பெஷலா .? என்று இருந்த காலம் மலையேறிப்போய்விட்டது.!இது என்பிஎஸ் வரை வந்தது.யார் கண் பட்டுதோ தெரியவில்லை.இல்லை மேஜிக் விண்ட்டும் டைலன் டாக்கும் சூனியம் வைத்துவிட்டார்களோ தெரியவில்லை.எல்லாம் போச்சு.!ஹும் ! என்னமோ போடா மாதவா.!
டெக்ஸ் வில்ர் கதை ஆரம்பத்தில் கார்சன் ,டைகர் , கிட் என்று கலகலப்பாய் அரமித்து ப்ளாஷ்பேக் கதையாகிவிட்டது.கதை பரவாயில்லை போர் அடிக்காமல் விறுவிறுப்பாகத்தான் இருந்தது.
மேஜிக் விண்ட் வழக்கம்போல் படுவிறுவிறுப்பு.ஓவியங்கள் அருமை.! கலகலப்புக்கும் பஞ்சமில்லை.!
டைலன் டாக்.
அந்தி மண்டல கதையை படித்தபின் ,டைலன் டாக் என்றாலே குமட்டிக்கொண்டு வருகிறது.வாராதோ ஒரு விடியல் கர்கர்கர்........... அந்த மைண்ட் செட்டில் இதை கடைசியாக போனப்போகுது என்று படித்தேன்.கலை நயமிக்க ஓவியங்கள் ,அமானுஷ்யத்துடன் கலந்த விஞ்ஞானம் படிக்க சுவராஸ்யமாகவே இருந்தது.டைலன் டாக்கை ரசித்த முதல் கதை இதுதான்.ஆரம்ப பக்கங்களில் ஓவியங்கள் மூச்சடைக்க செய்கின்றன.அது மாதிரியான கதைகள் தொடர்ந்து வந்தால் சூப்பராக இருக்கும்.!
ராபின் கதை இத்துடன் கதம், கதம் என்றதும் மனம் கனத்துப்போய்விட்டது.கலர்சேர்க்கை அற்புதம்.!கதையும் நல்ல விறுவிறுப்பு.!
ஈரோட்டு இத்தாலி க்கு ஒரே ஒரு குறை மாடஸ்டி இல்லாததுதான்.மாடஸ்டி போனெல்லி குடும்பத்து (குழுமத்தின்) பெண்ணாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் மாட்டுப்பெண்ணாக ஏத்துக்கிட்டு ஒரு இடம் கொடுத்தால் ,குறைஞ்ச போய்விடுவீங்க.?
M.V : மாட்டுப் பையன்களே அவர்களிடம் ஏகமாய் இருக்கிறார்கள் சார் ; அதனால் மாட்டுப் பெண்ணுக்கு அவசியமில்லையோ - என்னவோ ?
DeleteM.V அவர்களே... 'வாராதோ ஓர் விடியலே' கதை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?!!!!!! ஆச்சர்யம் தான்!! நம் வாசக நண்பர்கள் பலரையும் உருக வைத்த அற்புதமான கதையாயிற்றே அது?!!!!
Delete@Madipakkam Venkateswaran
Deleteசகோதரரே இரண்டு மாடஸ்டி ரசிகர்களை சந்தித்தேன்...good time it was
அவர்கள் பற்றி நாளை பதிவு இடுகிறேன்
இரவு வணக்கம் சகோதரரே
ஆகா! :-))))
Deleteபோச்சுடா மாதவா...
Deleteஇன்று ஒரு நிமிடம் கூட நம்ம MV sir தூங்க மாட்டாரு...
கடல் என்ன MV சாரை புல்லரிக்க வச்சிடீங்க. எங்கள எல்லா பிரிச்சு மேய்வாரே.
Deleteகடல்,
Deleteதங்களது பதிலுக்கு வேலை பளு காரணமாய் உடன் பதில் பதிவு செய்து விட்டேன். எனக்கு இருந்த சங்கடத்தையும் களைந்து விட்டீர்கள். உங்களது நட்புக்காய் நன்றி. நானும் மதுரை மற்றும் இராமநாதபுரத்தில் நமது லயன் காமிக்ஸ்காய் சேவை செய்ய காத்திருக்கிறேன்.
ஞாயிறு அன்று திருப்பூர் Gang வந்தனர்
ReplyDeleteSuryan Tex Suresh Chand அவர்களை சந்திக்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி :)
ஞாயிறு மதியம் அவர் இருந்ததில் ரொம்ப அருமையாக போய் விட்டது
இரு 50 வயதை கடந்த குழந்தைகள் வந்தனர்
என்னிடம் அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது, இங்க பாருங்க சார் ,இவரும் உங்களை போன்றவர் தான் என்றேன்
அவர்களில் ஒருவர் இன்னும் காமிக்ஸ் வாங்குபவர், தன்னிடம் இல்லாத காமிக்ஸ்யை தன செல்ல மகனுக்கும், தனக்கும் வாங்கி கொண்டு இருந்தார்
அவருடைய மனைவி குறை சொல்லாமல் தன கணவரது சின்ன வயது கதைகளை புன்னைகைத்து படியே ரசித்து கொண்டு இருந்தார்
இன்னொருவர் மாயாவி போல் எதுவும் வராது என்று கூறி மாயாவி மட்டும் வாங்கினார், அவரை நானும் மாயாவியில் தொடங்கி டெக்ஸ் கதைகளை படித்து கொண்டுஇருக்கிறேன் என்று கூறி
டெக்ஸ் கதைகளை வாங்கி வைத்து விட்டார் Suresh Sir
அப்புறம் மூவரும் சேர்ந்து பள்ளிக்கூட பசங்க மாதிரி காமிக்ஸ் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க :)
//அப்புறம் மூவரும் சேர்ந்து பள்ளிக்கூட பசங்க மாதிரி காமிக்ஸ் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க :)///----காமிக்ஸ் படிச்சா எப்பவும் ஸ்கூல் பசங்க தான் சகோ...
Deleteநம்ம சூரியன் சார் இருந்தாலே கலகலப்ப்பு நிச்சயம்...
மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்
ReplyDeletePOSTAL PHOENIX : சார்...தபால் தந்தித் துறையில் பணியாற்றுவதன் அடையாளமாய் தந்தி போன்ற சுருக்கமான வாசகமா ?!!
Deleteமயிலையார் சுருக்கமா சொன்னாலும் நறுக்னு சொல்லுவார்.
Deleteஈரோட்டில் இத்தாலி
ReplyDeleteநம் காமிக்ஸ் ஸ்டால் பக்கம் சும்மா ஒரு விசிட் அடித்தவர்கள்
அதென்ன ஈரோட்டில் இத்தாலி , curiosity ஒற்றி கொண்டது
எங்க ஈரோடு புத்தக விழாவினில் இத்தாலியை கொண்டு வந்தோம், ஆகையால் இப்பெயர் என்றேன்
சில பேர் என்னமா யோசிக்கிறாங்க , பாரேன் புதுசா என்னமோ முயற்சி செய்து இருக்காங்க என்றனர்
ஒரு கல்லூரி gang வந்தது அவர்களில் ஒருவர் காமிக்ஸ் படிப்பவர் மிற்றவர்கள் தமிழ் எழுத்து கூடி படித்தனர்
அவர்களிடம் டெக்ஸ் try செய்து பாருங்க என்றேன்
டாக்டர் டெக்ஸ் குடுத்து படித்தது பார்க்க சொன்னேன்
படிக்க ஆரம்பித்தார் , நான் சிரிக்க ஆர்மபித்து விட்டேன்
டாமல் டுமீல் ஆஆஆஆஆ
டாமல் டுமீல் ஆஆஆஆஆ
டாமல் டுமீல் ஆஆஆஆஆ
தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல எடுத்து குடுத்தேன்
நம் ஆசிரியர் எழுதி இருந்த அறிமுகத்தை படித்தார், கதை சுவாரியாசமாக உள்ளது
ஆனால் நமக்கு தமிழ் எழுத்து கூட்டி தான் வரும் என்று கூறி விட்டார்
நம் காமிக்ஸ் வாசகர் மட்டும் அப்புறம் வந்து பார்க்கிறேன், இவர்களோடு இருந்தால் வாங்க முடியாது என்று கூறி சென்று விட்டார்
ஒரு கல்லூரி மாணவர் டெக்ஸ் பற்றி நெறைய கேள்வி பட்டிருக்கிறேன்
அதான் இந்த பக்கம் வந்தேன் என்று கூறினார், வாங்கி படிக்கலாமே என்று கூறினேன்
காமிக்ஸ் படிக்கிற வயது எல்லாம் தாண்டி விட்டேன் என்றார்
நான் கல்லூரி முடித்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன் , இன்னும் காமிக்ஸ் படிக்கிறேன், என்னை போன்று ஒரு காமிக்ஸ் கூட்டமே உள்ளது என்றேன்
சரி பிறகு வந்து பார்க்கிறேன் என்றார்
இரண்டு பெண்கள் வந்தனர்
ஒருவர் தன தந்தை மாயாவி பற்றி அடிக்கடி பேசுவார் என்று கூறி தன தந்தைக்கு மாயாவி புத்தகத்தை வாங்கினார்
இரண்டு பெண்கள் வந்தனர்
ஒருவர் தன் தந்தை மாயாவி பற்றி அடிக்கடி பேசுவார் என்று கூறி தன் தந்தைக்கு மாயாவி புத்தகத்தை வாங்கினார்...so touching
சில குழந்தைகள் தமிழ் காமிக்ஸில் ஆர்வம் காட்ட வில்லை
ஒரு தந்தை தன மகனிடம் தமிழ் படிடா, அது உன் தாய் மொழி , நான் இந்த காமிக்ஸ் படித்து தான் தமிழ் படிக்க கற்று கொண்டோம் என்றார்,
அதற்கு அச்சிறுவன் எனக்கு இதெல்லாம் வேண்டாம் ஆங்கிலம் தான் வேண்டும் என்றான்
சுவாரஸ்யமான சம்பவங்கள் - சுவாரஸ்யமான முறையில்! :)
Deleteபாராட்டுக்குரிய பணி சகோ கடல்யாழ்.!
Deleteவாழ்த்துகள்!!!
எனக்கும் இப்படி இரும்புக்கையாரின் புராணம் கேட்கும் வாய்ப்பு 2014 நவம்பர் 9ம் தேதி ஞாயிறு வாய்த்தது சகோ...
Deleteஅன்று உங்களை போல சேலம் விழாவில் நாள் முழுக்க நான் இருந்தேன், நண்பர்களும் தான்...
அன்று வந்த பெரும்பாலோர் இரும்புக்கை மாயாவி,
இரும்புக்கை மாயாவு,
.
.
.
என அவரின் அருமை பெருமைகளாகவே சொல்ல, என்னடா டெக்ஸ் பற்றி ஒருவரும் பேசலயே என ஏக கடுப்புடன் கேட்டு கொண்டு இருந்தேன்..
நல்லவேளையாக மதியம் பிரியாணியும்,தந்தூரி சிக்கனும் சேலம் நண்பர் ஒருவர் வாங்கி தர,
கடுப்பு சற்றே குறையத் தொடங்கியது....
செண்னையில் எனக்கும் இப்படி அனுபவம் வாய்த்தது தலைவர் ஸ்பைடரின் சாகசங்களை ஒரு வயதான நண்பர் மணிக்கனக்காக என்னுடன் பகிர்ந்து கொண்டார்
Deleteகடல் யதார்த்தமான அழகான பதிவு...சூப்பர்
DeleteMagizchi
ReplyDeleteஎன்ன ஆச்சரியம் நேற்று இரவு தான் எப்போதும் டெக்ஸ் படிக்கும் நான் ஒரு change க்கு தாத்தா வாலாவை 3 வது முறை வாசிப்புக்கு எடுத்தேன்.
ReplyDeleteஇது போன்ற கதைகளை அப்போப்ப கொஞ்சம் கண்ணில் காட்டுங்கள்.நன்றி
//இது போன்ற கதைகளை அப்போப்ப கொஞ்சம் கண்ணில் காட்டுங்கள்.நன்றி//
Delete+1
///விடிய விடிய விஞ்ஞானி" வெளியானது 4 கார்ட்டூன் இதழ்களுக்கு மத்தியினில் எனும் பொழுது ஒளி வட்டம் ஏகமாய்ப் பகிரப்பட்டது என்று சொல்லலாம் ! அதிலும் "7 நாட்களில் எமலோகம்" வாயிலாய் காரட்மீசை கிளிப்டன் அடித்த சிக்ஸரில் லியனார்டோ ஓரம் கட்டப் பட்டுவிட்டாரோ - என்னவோ ? அதுமட்டுமன்றி - ஒரு முழுநீளக் கதையாகயிராது - சிற்சிறு gags-களின் தொகுப்பாய் அமைந்திருந்ததிலும் நம்மவர்களில் ஒருசாராருக்குத் திருப்தி குறைவென்று தோன்றியது !///
ReplyDeleteஇருக்கலாம் சார்.!
கப்கேக் க்ளிப்டனின் ஏழுநாட்களில் எமலோகம் ஒரு அட்டகாச காமெடித் த்ரில்லர்.
புதியவரவான ஸ்மர்ஃப்ஸ் மேல் இருந்த ஆர்வம். மற்றும் வருடத்தின் ஒரே சிக்பில் கதை மீதும் இருந்த எதிர்பார்ப்பு போன்றவற்றால் தாத்தாவ்ஸ் மீதான கவனம் கொஞ்சம் ஏனோதானோ என்றே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், என் நினைவுப்பேழையில் (அடா அடா!) அப்போதே தாத்தாவ்ஸ்க்கு நல்ல வரவேற்பு இருந்ததாகத்தான் ஞாபகம்.
மதியில்லா மந்திரியின் சிறுகதை தொகுப்பும், தாத்தாவ்ஸின் கண்டுபிடிப்புகளின் தொகுப்பும் வருடம் குறைந்தபட்சம் ஒவ்வொன்று வெளிவரவேண்டும் என்பது என்னுடைய ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே!
எனக்கு தாத்தாவ்ஸோட கண்டுபிடிப்புகளிலேயே ரொம்பவும் பிடித்தது அந்த உலகின் முதல் 3D டீவிதான்.
ReplyDelete3D யில் டீவியில் வரும் கேரக்டர்கள் வீடுமுழுதும் அடிக்கும லூட்டிகள் செம்ம சிரிப்பு. அத்தோடு கதவை தட்டிவிட்டு உள்ளே வரும் டீவி கேரக்டர்கள், வீட்டிலுள்ள பொருட்களின் பின்னால் மறைந்துகொண்டு துப்பாக்கிச்சண்டை போடும் கேரக்டர்கள் என அந்த சிறுகதை முழுக்கவே சிரிப்பு மேளாதான்.!!!
இப்போது, இந்த பதிவில் சார் போட்டிருக்கும் போட்டோவில் உள்ள ஒற்றைப்பக்க கதையில் கூட அந்த பூனையும் எலியும் செய்யும் வேலையைப் பாருங்களேன். ஹாஹா.!!தாத்தாவ்ஸ் இதுவரை கவரவில்லையெனில் இனிமேல் நிச்சயம் உங்களை கவர்ந்துவிடுவார்.!
எனக்கு சின்னக் கதைகள்தான் இன்றுவரை ஃபேவரிட் என்பதால் க்ளிப்டனைப் படிப்பதற்கு பலமாதங்கள் (!!) முன்னதாகவே தாத்தாவை படித்திருந்தேன். நைஸ் எண்டர்டெய்னர், ஆனால் பொதுவாக சொல்வதென்றால் ரொம்ப டீடெய்ல்டான, டீப்பான காமெடிகளைவிட மேலோட்டமான வாசிப்பிலேயே சிரிக்கவைக்கும் காமெடி சிறுகதைகள்தான் தற்காலத்தில் ஹிட் அடிக்க இயலும்.
ReplyDeleteபரட்டைத்தலை ராஜா டைஜஸ்ட்டுக்கு வாய்ப்பு உண்டா சார்? ;)
/* பரட்டைத்தலை ராஜா டைஜஸ்ட்டுக்கு வாய்ப்பு உண்டா சார்? ;) */
Deleteஎன்னடா யாரும் ரொம்ப நாளா கேக்கலியேன்னு பார்த்தேன் .. ;-)
சிறு வயதில் படித்ததை நினைவுக்கு கொண்டு வந்தீர்கள்.அந்த வயதில் நான் ரசித்த கதாபாத்திரங்களில் அதுவும் ஒன்று. இதற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் தங்களுக்கு.
Delete/// ரின்டின் கேன் இரண்டாம் இன்னிங்சில் சாதித்துக் காட்டியது போல் ///
ReplyDeleteநான் ஆச்சர்யப்படும் விசயங்களுள் இதுவும் ஒன்று.
சொல்லப்போனால் பிரியமுடன் ஒரு பிணைக்கைதியைவிட அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே பலமடங்கு காமெடியான கதை. காமெடி வசனங்களில் இல்லையென்பதால் அ.த. அண்ணாத்தே சோபிக்கவில்லை போலும். மாறாக பி.ஒ.பிணைக்கைதியில் சிரிக்கவைத்ததில் வசனங்களே பெரும்பங்கு வகித்தன.
காமிக்ஸ் என்றாலே படக்கதைதானே? படங்களை கூர்ந்து கவனிக்காமல் வசனங்களை மட்டுமே வேகமாக படித்துச் செல்லும் போது இப்படி பல interesting ஆன சங்கதிகளை நம்மில் பலர் (அல்லது சிலர் ) தவறவிட்டு விடுகிறோம் நண்பர்களே!
ஆள் பாதி ஆடை பாதி, என்பது காமிக்ஸ் ஐ மட்டும் விட்டு விடுமா மாமா???...
Deleteஇம்மாத டெக்ஸ் கதை சற்றே தள்ளாட்டம் போட்டதே காரணம் என்ன???..
வழக்கமான தெறி டயலாக் இம்முறை மிஸ்ஸிங்...
தலையே என்றால்கூட எல்ல அம்சங்களும் பக்காவாக இருக்க வேணும் என எதிர்பார்ப்பது தவறில்லையே...!!!!
கண்டிப்பாக தாத்தா எல்லோரையும் கவர்வார்
ReplyDelete90 வது
ReplyDeleteகார்டூன்களில் லக்கி,சிக்பில்,லியனார்டு,ஸ்மார்ப்,கிளிப்டன்,பில்லி,ப்ளூ கோட்ஸ்,ரின்டின் கேன்+++ இத்தனை பேர் அசத்துகிறார்கள்.அம்மா ரேஞ்சுக்கு சோலோவாக கோலாச்சிய கார்டூன் கிங் லக்கியின் ஆதிக்கம் தான் சத்தியமூர்த்தி பவனில் தலைவராக இருப்பவர் நிலை போல் ஆகிவிட்டதே :)
ReplyDeleteஅன்புள்ள எடி சார்,வேட்டை நகரம் வெனிஸ் மிஸ் பண்ணிய விடயம் வேறு ஓர் உதாரணத்துக்கு மட்டுமே கூறினேன் .தங்கள் மற்றும் அனுப்பும் நண்பர்கள் மீது எந்த தவறும் இல்லை,சில காரணங்களால் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ள பணக்கஷ்டநிலையால் யாழில் தொடர்ந்து வாங்குவோர்க்கே அனுப்பப்படுகின்றது.
ReplyDeleteஅப்படி வந்த ஒரு செட் புத்தகங்களில் இதை தனி ஒன்று தானே என்று முன்னாள் விற்பனையாளர் வேறு யாருக்கோ அதை மட்டும் கொடுத்துவிட்டு அந்த புக்கே இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.சில மாதம் கழித்தும் இன்னுமா வரவில்லை என்று விசாரித்தபோதே உண்மை தெரிந்தது.
பலரும் படித்து விமர்சிக்கும் ஒரு முக்கிய காமிக்ஸ் மிஸ் பண்ணும் ஒருவருக்கு எழும் மனநிலைக்கு மட்டுமே சொந்த அனுபவத்தில் இருந்து உதாரணமாக கூறினேன்.நன்றி சார் :)
லார்கோ தேக்கம் அடைந்திருப்பது குறித்து வருத்தமே ! விறுவிறு action மற்றும் நிஜத்தை ஒட்டிய ஓவியங்கள் ... may be pricing is an issue.
ReplyDelete@ editor,
சில மாதங்களுக்கு முன்னர் TV advertisement வந்ததே - பத்து செகண்ட் ஸ்லாட் - அது போல லார்கோ மற்றும் BOUNCER மட்டும் முன்னிலைப்படுத்தி teaserகள் செய்து ஒளிபரப்பினால்? (with a super-crip into about each ...).
100நாட் அவுட்....
ReplyDelete// லார்கோ விற்பனை //
ReplyDelete// பொதுவாய் இப்போதெல்லாம் இந்த டபுள் இதழ்களின் விற்பனையினில் விறுவிறுப்பு குறைவே ! //
லார்கோ தேக்கமடைவதற்கு டபுள் வால்யூம் சைஸ் தவிர வேறொரு காரணத்துக்கும் இடமுண்டு. ஏற்கெனவே ஒரு வால்யூமைப் படித்தவர்களோ அல்லது இதுவரையில் படிக்காவிட்டாலும்கூட கண்காட்சிகளில் கையிலெடுத்துப் புரட்டிப் பார்ப்பவர்களோ - அடல்ட் சித்திரங்கள் தூக்கலாக இருப்பதை ஒரு தடையாக உணரக்கூடும்.
சென்சார் எவ்வளவுதான் செய்திருந்தாலும் மனத்தடைக்கு வித்திடும் கட்டங்கள் அனைத்தையும் தவிர்ப்பது சாத்தியமில்லை. வாசிப்பவர்கள் வயதில் பெரியவர்களாக இருக்கலாம், ஆனால் வீட்டில் வாசிக்கும்போது நமது இயல்பான காலாச்சாரப் பார்வை தயக்கத்தையே உண்டுபண்ணும். சொல்லப்போனால் கண்காட்சியில் நமக்குத்தொடர்பில்லாத புத்தகத்தைப் பரட்டிப்பாரத்துவிட்டோமோ என்று யோசிக்கவைக்கும் நிலையில்தான் லார்கோவின் சில கட்டங்கள் உள்ளன.
உண்மை சார். நானுமே என் மகள் காமிக்ஸ் விளையாட்டு விளையாட அடிக்கடி கூப்பிடுவதால் லார்கோ, வெய்ன், பெளன்சர் இவர்களையெல்லாம் தனி அட்டைப்பெட்டியில் சீல் வைத்துவிட்டேன். மேலும் சென்ற பதிவில் நண்பர் ஒருவர் கூறியதுபோல் உயர்ந்த ரக பேப்பரில் மட்டுமே என்றில்லாமல் சாதாரண பேப்பரில் விலை குறைவாக கொடுக்கும்பட்சத்தில் நிறைய பெற்றோர் குழந்தைகளுக்கு நிச்சயம் காமிக்ஸ் மேல் ஆர்வத்தை ஏற்படுத்துவார்கள். நிச்சயம் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும், நம்மில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் காமிக்ஸ் இருக்கவேண்டும். விலை காரணமாக ஒதுங்கிச்செல்லும் சூழ்நிலையை மாற்ற வேண்டும். நம் இளைய சமுதாயத்தின் எதிர்கால நிலைமையை கணக்கில் கொண்டு ஆசியர் அவர்கள் மனம் வைக்கவேண்டும். மேலும் ஒரு சின்ன வேண்டுகோள். சித்திரங்கள் அருமை என்பதற்காக மட்டுமே சராசரிக்கும் கீழான கதைக்களங்களைக் கொண்ட தொடர்களுக்கு ஆண்டுக்கு பல வாய்ப்புகள் கொடுத்து வருகிறீர். எவ்வளவோ வித்தியாசமான, அருமையான கதைகள் இருக்க அவற்றை முயற்சிக்கலாமே. மேலும் அந்த தொடர் கண்டிப்பாக வேண்டுமென்பவர்களுக்கு மட்டும் நான்கைந்து பாகங்களை இணைத்து Limited edition ஆக கொடுக்கலாமே சார். கூறியதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும். நன்றி சார்.
Deleterajasekaran vedeha : //சித்திரங்கள் அருமை என்பதற்காக மட்டுமே சராசரிக்கும் கீழான கதைக்களங்களைக் கொண்ட தொடர்களுக்கு ஆண்டுக்கு பல வாய்ப்புகள் கொடுத்து வருகிறீர். //
Deleteஅவை எவை என்றும் சொன்னீர்களானால் வசதியாக இருக்குமே ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//நம் இளைய சமுதாயத்தின் எதிர்கால நிலைமையை கணக்கில் கொண்டு ஆசியர் அவர்கள் மனம் வைக்கவேண்டும்//
சார்...இன்றைய விலைவாசிகளில், தற்போதைய சர்குலேஷனில் - கடவுளால் மாத்திரமே இதைவிடக் குறைந்த விலைகளில் வெளியிட இயலும் ! நான் நிச்சயமாய் ஒரு சாமான்ய மனிதனே என்பதால் நான் மனசு வைத்து ஆகப் போவது எதுவுமில்லை ! தவிர, "சாதா தாள் - ஆர்ட் பேப்பர்" என்ற காரணங்களினால் ஒரு மாபெரும் விலைகுறைப்புக்கு சத்தியமாய் சாத்தியங்களில்லை ! சாதா தாளின் தற்போதைய விலை டன் ஒன்றுக்கு ரூ.63,000 !!! So இந்த விஷயத்தில் சரியான புரிதலின்றி பதிவிட வேண்டாமே - ப்ளீஸ் !
எடிட்டர் சார்,
Deleteநண்பர்களில் சிலர் நீங்கள் ஏற்கனவே பலமுறை விளக்கிய விசயங்களையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அதே கேள்வியை/குற்றச்சாட்டை முன்னிறுத்துவதும் இங்கே ரெகுலராக நடக்கும் ஒன்றே! இதை அவர்களுடைய தவறாகவும் கருத முடியாது - அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்! ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகவாவது புரிந்துகொள்வார்கள்; என்னைப் போல; இங்கு ரெகுலராக வரும் நண்பர்களில் பலரைப் போல!
பல பிரம்மப்பிரயத்தனங்களுக்கு நடுவே, தூக்கங்களைத் தொலைத்து இரவுபகலாகத் திட்டமிட்டு, பல்வேறு கோணங்களிலும் யோசித்து ஒருவழியாக ஒரு சந்தா திட்டத்தை விரைவில் வெளியிடவிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற 'விலைகளைக் குறைத்து எதிர்கால சந்ததிக்கு உதவலாமே?' வகை வினவல்கள் நிச்சயம் உங்களுக்கு ஒருவகை ஏமாற்றத்தை/ எரிச்சலை உண்டாக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்!
ஆனால் இதுபோன்ற எத்தனையோ விசயங்களைக் கடந்துவந்துவிட்ட அனுபவச்சாலியான உங்களிடமிருந்து வந்த அந்த கடைசி வரி கொஞ்சம் சென்ஸிட்டிவானது! சம்மந்தப்பட்ட நபரை மட்டுமன்றி மற்றவர்களையும் கூட அந்த வரி புருவங்களை உயர்த்த வைக்கும்!
நீதி : சில சமயங்களில் கடைசி வரி அவசியப்படுவதில்லை!
தாங்கள் வெளிவிடும் கதைகளில் முழுநீள கதைகளைத்தான் மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது. குட்டி குட்டி கதைகளின் தொகுப்பாக வந்தால் அந்த புத்தகத்தை ஒருமுறை மட்டுமே படிக்க முடிகிறது. காரணம் அந்த தொகுப்பில் வந்த கதைகளில் ஒன்று நன்றாக இருக்கும், ஒன்று சுமாராக இருக்கும், ஒன்று நன்றாக இருக்காது. 15 வருடங்களுக்கு முன்பு நான் மதியில்லா மந்திரியின் கதைகளை படித்து விழுந்து விழுந்து சிரித்த்திருக்கிறேன். நிறைய பிடிக்கும் இவருடைய கதைகளை அப்போது. ஆனால் இவ்வருட ஆரம்பத்தில் வந்த "சூ-மந்திரிகாலி" கதையை முதல் தடவை மட்டுமே படித்தேன். இப்போது அந்த புத்தகம் கண்ணில் பட்டாலும் அதை படிக்க தோன்றுவதில்லை. வேறு ஏதாவது முழுநீள கதை புத்தகம் ஒன்று எடுத்து படிக்க உட்கார்ந்துவிடுகிறேன். காரணம் கதை படிக்க உட்கார்ந்தால் 2 மணி நேரத்திற்க்கு த்ரில்லிங்கை மனம் எதிர் பார்க்கிறது. CARTOON SPL'லில் வந்த கர்னல் க்ளிப்டனின் கதையும், MAGNUM SPL'லில் வந்த ரின் டின் கேன் கதையும் 2 மணி நேரத்திற்க்கு த்ரில்லிங்காக இருந்தது. ஆனால் லியனர்டோவின் கதை குட்டி குட்டி கதையாக வந்ததால் 10 நிமிடங்களுக்கு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரசனையில் இருந்தது. பொதுவாகவே டெக்ஸ், லக்கி லூக் உட்பட அனைத்து கதைகளிலும் ஒரு மைனஸ் பாய்ண்ட் இருக்கிறது. 'இந்த கதை இப்படித்தான் இருக்கும், இப்படித்தான் முடியும்' என்று தெரிந்துவிடுவதுதான். கதையோட்டமும், கதை சொல்லப்பட்ட விதமும், வசனங்களும், உணர்ச்சிகரமான ஓவியங்களுமே முழு திருப்தியை கொடுக்கிறது. அந்த தன்மை சிறுகதைகளில் மிகவும் குறைவு. இதை முழுநீள கதைகளில் மட்டுமே ரசிக்க முடியும். சிக்பில் போல, ப்ளூகோட் போல, லக்கி லூக் போல, ரின் டின் கேன் போல லியனர்டோவின் கதையை முழு நீள கதையாக எதிர்ப் பார்க்கிறேன்.
ReplyDelete+55555
Deleteலியனர்டோவின் தாத்தாவின் கதையை வெறும் சிரிப்பு கதையாக பார்க்காமல் ஒரு விஞ்ஜானியாக பார்த்தால் மிகவும் ரசிக்கலாம். 3-4 பக்கத்துக்குள் ஒரு கண்டுபிடிப்பை கொண்டு வந்து அதில் சிரிப்பையும் கலந்து கொடுப்பது சாதாரண விஷயம் இல்லை. இவரின் கடந்த வருட புத்தகத்தில் உள்ள ஓவ்வொரு கண்டுபிடிப்பையும் ரசித்தேன், இது கண்டிப்பாக நமது குழந்தைகளின் அறிவை வளர்க்கும், அவர்களை அதிகம் சிந்திக்க செய்யும். கதாசிரியர் அதிக சிரத்தை எடுத்து உருவாக்கியதற்கு கடந்த வருட புத்தகம் சிறந்த உதாரணம்.
ReplyDeleteநமது காமிக்ஸ்ஸில் வரும் மற்ற கதைகளை விட இதில் அதிக விஷயம் உள்ளது; பிற கதைகளுக்கு கதைகரு இருந்தால் போதும், ஆனால் இதில் ஓவ்வொரு சிறு கதைக்கும் ஆசிரியர் ஒரு கண்டுபிடிப்பை கொண்டுவந்து அதில் காமெடியை கலந்து கொடுக்கவேண்டும் அதே போல் இது போன்ற கதைகள் உருவாக்குவது எளிதல்ல.
இவர் தொடர்ந்து வர வேண்டும். எனது ஆதரவு எப்போதும் உண்டு.
+1
Deletetrue.
இவர் தொடர்ந்து வர வேண்டும். எனது ஆதரவு எப்போதும் உண்டு(me too). Once a year is perfect for such comedy pack is must in sechedule edit sir. it will be cherished by young readers and young parents for sure.
//
Edit:
சில சமயங்களில் இந்த அவசியம் தான் நம்மில் சிலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறதோ - என்னவோ தெரியவில்லை ! முதல் வாசிப்பிலேயே 100% கவர்ந்திடாது போயின் அந்த நாயகர் ஓரம்கட்டப்படுகிறார் போலும் ! //
its good to be complex some times for variety sake, not necessary that every other story to be straight lined, And its defensively not MOKKAI. perfect selection for young ones. once a year is perfect slot edit sir. dont push him off 2017 schedule plz....
///பிற கதைகளுக்கு கதைகரு இருந்தால் போதும், ஆனால் இதில் ஓவ்வொரு சிறு கதைக்கும் ஆசிரியர் ஒரு கண்டுபிடிப்பை கொண்டுவந்து அதில் காமெடியை கலந்து கொடுக்கவேண்டும் அதே போல் இது போன்ற கதைகள் உருவாக்குவது எளிதல்ல. ///
Deleteஉண்மை! உண்மை!
(கை தட்டும் படங்கள் கணக்கின்றி)
பரணி ++++++அதும் இது போன்ற கதைகள் சும்மா இருக்கும் சில குறுகிய நேரங்களை புரட்டிப் பார்க்க உதவும்...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதாத்தா வேண்டாம்
ReplyDeleteஜெகன், அறந்தாங்கி
jegangatq@gmail.com
keep sharing your thoughts Jagang.It will help Edit to know the pulse.
Delete:)
Edit sir: we observe that you are keep conducting survey about best book of month quarter, annual and all.why dont you use that survey results for promoting books. we can put small sticker saying "this is selected as best book of 2015" and we can use "the hindu" comics ratings also to market the book with stickers.
ReplyDelete120th
ReplyDeleteவேதாளர், மினிலயன், டிடெக்டிவ் ஸ்பெசல், ரிப்கெர்பி, மற்றும் பல்வேறு பழைய காம்பினேசன் கேட்கும் நண்பர்கள் @
ReplyDeleteஇந்த பதில் உங்களுக்கு சற்றே வருத்தத்தை கொடுத்தால் , கொஞ்சம் மனம்விட்டு யோசித்து பாருங்கள்...
ஏற்கனவே ஆண்டுக்கு 12மும்மூர்த்திகள் வெளிவருகிறது, பிடிக்கிறதோ பிடிக்கலயோ நிச்சயம் வாங்கும் நபரில் நானும் உண்டு...
இப்போதைய மறுபதிப்பு செட் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முடிந்த பிறகு அடுத்து வேதாளரோ, அல்லது மேற்கண்ட காம்பினேசன்களோ வரப்போகிறது.
மீண்டும் ஒரு புளிசோற்று மூட்டை அவிழ்க்கப்படும்.அடுத்த மற்றொரு மூட்டை....(என்னிடமும் புளிமூட்டைகள் இல்லை, அது வேறு)
இப்படியே போய்க்கொண்டு
இருந்தால் புதிய புதிய வெரைட்டிகளை எப்போது நாம் பார்ப்பது?????...
அந்த வயதில் அவற்றை ரசித்தோம்.
இன்னமும் அவற்றையேதான் ரசிப்போம் என பிடிவாதம் வேணாமே...!!!
இன்னும் நாம் கால்பதிக்காத சந்திரன்கள் எவ்வளவோ உள்ளன!!!...
திரு சுஜாதா சாரின் வார்த்தைகளில் சொல்லனும்னா, "நாம் பீச்ல கிடைக்கும் ஓரிரு கூலாங்கற்களை கண்டெடுத்து மகிழ்கிறோம். எதிரே உண்மை எனும் சமுத்திரம் இன்னமும் ஆராயப்படாமலே உள்ளது "
நாமும்காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து தோராயமாக 20டூ30ஆண்டுகள் கடந்து விட்டது...
இனிமேல் அடுத்த 20ஆண்டுகளாவது புதிய சமையலை உண்ண முயலுவோமே...
முழுக்க முழுக்க புதியன வேணாம் என்றாலும்கூட அட்லீஸ்ட் ஒரு பாதி எண்ணிக்கை புதியனவைகளுக்கு வாசலை திறந்து வைப்போமே...
பாதி பழைய இடத்தில் இருக்கும் நாயகர்களுள் எத்தனை குறைவான இடம் டெக்ஸுக்கு கிடைத்தாலுல் எனக்கு ஓகே.
ஒரு கட்டத்தில் நம்மை நாம் மாற்றி கொள்ள தயாராக இல்லையெனில் காலம் நம்மை மாற்றும், விற்பனை குறைவுக்கு பழைமையில் ஊறிய ரசனை தொடர்வதும் ஒரு காரணமாக இருக்க கூடும் தானே, உடனே மாயாவி பட்டையை கிளப்புது என சொல்ல வேணாம் அது ஒரு ஒற்றை எக்ஸப்சன் மட்டுமே....
இல்லை பழையனவற்றில் இருந்து நான் மாற மாட்டேன் என சொன்னால், ஒரு 12இதழ்களாவது புதிய வெரைட்டிக்கு ஆதரவு தாருங்கள்....
(கோபம் வந்தால் கும்மி எடுங்கள், என் முதுகு ஏற்கனவே பழக்கப்பட்ட ஒன்றுதான்)
///இப்போதைய மறுபதிப்பு செட் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முடிந்த பிறகு அடுத்து வேதாளரோ, அல்லது மேற்கண்ட காம்பினேசன்களோ வரப்போகிறது.
Deleteமீண்டும் ஒரு புளிசோற்று மூட்டை அவிழ்க்கப்படும்.அடுத்த மற்றொரு மூட்டை....(என்னிடமும் புளிமூட்டைகள் இல்லை, அது வேறு)
இப்படியே போய்க்கொண்டு
இருந்தால் புதிய புதிய வெரைட்டிகளை எப்போது நாம் பார்ப்பது?????...
அந்த வயதில் அவற்றை ரசித்தோம்.
இன்னமும் அவற்றையேதான் ரசிப்போம் என பிடிவாதம் வேணாமே...!!!
இன்னும் நாம் கால்பதிக்காத சந்திரன்கள் எவ்வளவோ உள்ளன!!!...
திரு சுஜாதா சாரின் வார்த்தைகளில் சொல்லனும்னா, "நாம் பீச்ல கிடைக்கும் ஓரிரு கூலாங்கற்களை கண்டெடுத்து மகிழ்கிறோம். எதிரே உண்மை எனும் சமுத்திரம் இன்னமும் ஆராயப்படாமலே உள்ளது "///
எண்ணிலடங்கா + கள்!!!
நமது இப்போதைய நிலையில் நம் காமிக்ஸ்களை எந்த விலை கொடுத்தேனும் படிக்கிறோம்.எங்களது
Deleteபள்ளி பருவத்தில் பத்து காசு கிடைப்பது கூட அரிது.அப்போது லெண்டிங் லைப்ரரியில் காமிக்ஸ்
படிக்க பத்து காசு தந்து படிப்போம்.அந்த பத்து காசு கூட கிடைக்க வீட்டில் சொல்லும் எல்லா
வேலைகளையும் செய்தால்தான் கிடைக்கும்.( ஒரு முறை ஒரு மட்டு வண்டி நிறைய வந்த
தென்னை அடி மட்டைகளை மொட்டை மாடியில் கை வலிக்க சுமந்து அடுக்கி வைத்த பின்
கிடைத்தது கூட உண்டு) காமிக்ஸ் படிக்க அப்போதே சொந்த உழைப்பு தேவைப்பட்டது.வாங்க
வேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம்.மாதம் முழுக்க உழைப்பு தேவைப்படும்.மறுவாசிப்பு
என்பது கனவுதான்.இப்போது பணம் இருக்கிறது ..... அப்போது ஒரு வாசிப்பு மட்டுமே செய்த
காமிக்ஸ்? எங்களது உணர்வுகளை தற்போதைய நிலையில் இருந்து யோசிக்க வேண்டாம் என்று
கேட்டுக்கொள்கிறேன்.புதிய வெரைட்டிகளை வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா என்ன?
புதிய வெரைட்டிகளை ரசிக்க மாட்டோம் என்றும் யாரும் கூறவில்லை.எங்களது பழைய
காமிக்ஸ் மறுவாசிப்புக்கு ஒரு தடம் கேட்கிறோம் அவ்வளவுதான்.தவறிருந்தால் mannikkavum
செந்தில் மாதேஷ் சார்@
Deleteகபில்தேவ், கவாஸ்கர் ஆடிய கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்...
ஆனால் இன்று அதே அந்த பழைய ஆட்டத்தின் ஹைலைட்டை பார்த்தால் தமாசா இருக்கு. அன்று 225அடிச்சா வெற்றி உறுதி, இன்று 400அடிச்சாலும் திருப்பி அடித்து விடுவார்கள். இன்றைய ஆட்டத்தை தொடர்வோமே, அன்றைய கிரிக்கெட்ல வேல்டு கப் பைனல் மாதிரி முக்கிய ஆட்டத்தை மட்டும் ரசிப்போமே. எல்லா போட்டிகளும் உட்கார்ந்து பார்த்தோம்னா மேலும் 20ஆண்டு பின் தங்கி விடுவோம்.
இப்போதைய ரியோ ஒலிம்பிக்கில் அப்டேட் ட்ரெயினிங் இல்லாமல் இந்திய அணி தடுமாறிய மாதிரி, அப்டேட் இல்லாமல் நமது காமிக்ஸ் அணியும் திணற வேணாமே...
This comment has been removed by the author.
Delete//விஜயராகவன்//
Delete+1
:)
Edit sir note the points for GN/ new hero slots in 2017.
மாலை வணக்கங்கள் நண்பர்களே..!
ReplyDeleteதிரு விஜயன் அவர்கள் கடந்தபதிவில்...
"குடோன் நிறைய புத்தகங்கள் ஸ்டாக் நிரம்பி கழுத்தை நெரிப்பதால், பிரண்ட் ரன் குறைக்கவா.?[விலை சற்று கூடும்] புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கவா.?[மாதம் நான்கு என்பதை மூன்று என குறைப்பது]
என கேட்ட கேள்விக்கு என் பதில்...
முன் குறிப்பு: ரஜினி சொல்லும் [கற்பனை] குட்டிகதை படித்துவிட்டு என் கருத்துக்கு வாருங்கள்.
ரஜினி குட்டிகதை பக்கம்-1 பார்க்க இங்கே'கிளிக்'
ரஜினி குட்டிகதை பக்கம்-2 பார்க்க இங்கே'கிளிக்'
ரஜினி குட்டிகதை பக்கம்-3 பார்க்க இங்கே'கிளிக்'
ரஜினி குட்டிகதை பக்கம்-4 பார்க்க இங்கே'கிளிக்'
ரஜினி குட்டிகதை பக்கம்-5 பார்க்க இங்கே'கிளிக்'
ஸ்கேன் பண்ணி புக் பிரிண்ட் போடுறது...காபிரைட் இல்லாம புக்ஸை அடிச்சிவிற்பனை செய்யறது...புக்ஸை பதுக்கி வெச்சி அதிக விலைக்கு லாபம் பாக்குறதுன்னு ஆர்வத்தை காசாக்கும் நிகழ்வை பார்க்கும்போது, உங்களுக்கு எப்படி அதெல்லாம் தப்புன்னு படுதோ அதேமாதிரி...
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால புக் அவுட்டாப் ஸ்டாக் ஆகி தீர்ந்துபோய், வாசகர்களிடம் அந்த புக்ஸ் மதிப்பீடு உயருவதை தடுக்கறாப்பல...நீங்க அதிகபுக்ஸ் அடிச்சி,அது விற்காம அதை தள்ளுபடியில் விற்பனைக்கு கொண்டுவந்து சந்தையில் தள்ளுற நிகழ்வை பார்க்கும்போது எங்களுக்கு உங்க செயல் தப்புன்னு படுது..!
தயவுசெஞ்சி ஒரு மாதவிற்பனை எவ்வளவோ அதைவிட ஒரு ஐநூறு காப்பி மட்டும் அதிகமா அடிங்க... அதுக்குண்டா செலவை மட்டும் கணக்கு போட்டு பிரிச்சி வரும் சந்தாவுல கூட்டுங்கன்னும், அந்த ஐநூறும் முடிச்சதும் அதை திரும்பிபார்க்காம அடுத்ததை பாருங்கன்னும், ஒரு வாசகனா எல்லோர் சார்பாவும் கேட்டுகிறேன்.!
நட்புடன்
மாயாவி.சிவா
@ மாயாவிகாரு
Deleteகதையெல்லாம் நல்லாத் தான் சொல்லியிருக்கீங்க. ஆனா கடைசியா நீங்க சொல்லவந்த கருத்துல கோட்டை விட்டுட்டீங்க! எடிட்டரோ அல்லது நண்பர்களோ இதைத் தவறான கோணத்தில் புரிந்துகொள்ளக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். வேறென்ன செய்ய? ;)
@ இத்தாலிகாரு
Deleteதராசு தமாஷா இருக்க கூடாது...என்னை பொறுத்தவரையில் நான் மிக சரியாக சொல்லியுள்ளேன்.மிக எளிதாகவும் கூட..!
இதில் புரிதலில்தவறு என்பது என்ன..? விளக்கம் ப்ளிஸ்...
///
Deleteஸ்கேன் பண்ணி புக் பிரிண்ட் போடுறது...காபிரைட் இல்லாம புக்ஸை அடிச்சிவிற்பனை செய்யறது...புக்ஸை பதுக்கி வெச்சி அதிக விலைக்கு லாபம் பாக்குறதுன்னு ஆர்வத்தை காசாக்கும் நிகழ்வை பார்க்கும்போது, உங்களுக்கு எப்படி அதெல்லாம் தப்புன்னு படுதோ அதேமாதிரி...///
நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்கு இது தேவையில்லாதது (அல்லது) சற்றே அதிகப்படியானது!
///
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால புக் அவுட்டாப் ஸ்டாக் ஆகி தீர்ந்துபோய், வாசகர்களிடம் அந்த புக்ஸ் மதிப்பீடு உயருவதை தடுக்கறாப்பல...நீங்க அதிகபுக்ஸ் அடிச்சி,அது விற்காம அதை தள்ளுபடியில் விற்பனைக்கு கொண்டுவந்து சந்தையில் தள்ளுற நிகழ்வை பார்க்கும்போது எங்களுக்கு உங்க செயல் தப்புன்னு படுது..!///
இதுவும் தேவையில்லாத/ அதிகப்படியான ஒன்றுதான்! உண்மையில், நீங்கள் கடைசியாக சொல்லியிருக்கும் கருத்துக்கு இவ்வரிகள் கொஞ்சம் out of track!
ஒரு விசயத்தை ஆணித் தரமாகச் சொல்வது வேறு; ஆணியடித்துச் சொல்வது வேறு! இல்லீங்களா மாயாவிகாரு? ;)
// எடிட்டரோ அல்லது நண்பர்களோ இதைத் தவறான கோணத்தில் புரிந்துகொள்ளக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். வேறென்ன செய்ய? ;) //
Deleteஊழல் குற்றச்சாட்டோ அல்லது அந்தமாதிரி ஒன்றையோ mayavi. siva ஒரு சீரான இடைவெளியில் பகிராமல் இருந்ததில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். அவர் எந்த நோக்கில் எதை சொன்னாலும் அதனை பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ள நீங்கள் கோரிக்கை வைப்பது ஆச்சரியமாக உள்ளது - இங்கே கமெண்ட்களைப் படிப்பவர்களின் புரிந்துகொள்ளும் தன்மையை கொஞ்சம் மதிக்கவேண்டுகிறேன்.
@mayavi. siva, இந்தமாதிரிப் புகார் (அல்லது) புகார் மாதிரியான (அல்லது) குற்றச்சாட்டு (அல்லது) குற்றச்சாட்டு மாதிரியான (அல்லது) சந்தேகப்பார்வை (அல்லது) மாதிரியான கமெண்டுகளும் அதைத்தொடர்ந்து ஏற்படும் சமாதானங்களையும் பார்த்து சலித்துவிட்டது. ப்ளீஸ்..
ஆங்! மாயாவிகாரு, சொல்ல மறந்துட்டேன்! நீங்கள் கடைசியாக சொல்லியிருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடே! அதற்கு முந்தைய இரண்டு பத்திகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளிலும், அவை சொல்லப்பட்ட விதங்களிலும் மட்டுமே எனது மாற்றுக் கருத்துகள்!
Deleteதிருத்தபட்ட ஒருபகுதி:
Deleteஸ்கேன் பண்ணி புக் பிரிண்ட் போடுறது...காபிரைட் இல்லாம புக்ஸை அடிச்சிவிற்பனை செய்யறது.. புக்ஸை பதுக்கி வெச்சி அதிக விலைக்கு லாபம் பாக்குறதுன்னு ஆர்வத்தை காசாக்கும் நிகழ்வை பார்க்கும்போது, உங்களுக்கு எப்படி அதெல்லாம் மனசு சங்கடத்தை தருதோ அதேமாதிரி...
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால புக் அவுட்டாப் ஸ்டாக் ஆகி தீர்ந்துபோய், நியாயப்படி அந்த அந்த புக்ஸ்க்கு கிடைக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் கிடைக்காதபடி...நீங்க அதிகபுக்ஸ் அடிச்சி,அது விற்காம அதை தள்ளுபடியில் விற்பனைக்கு கொண்டுவந்து சந்தையில் தள்ளுற நிகழ்வை பார்க்கும்போது எங்களுக்கு மனசு சங்கடத்தை தருது ஸார்..!
ஆமுங்கோ .. வேற ஊர்க்கரவுக எது சொன்னாலும் பாசிடிவா எடுக்கோணும்.. ஆனாக்கா மெட்ராஸ் கார பயலுக எல்லாம் ஈகோ புடிச்ச, மரத்தடீல நிக்க கவுரவம் பாக்குற திமிர்ப பிடிச்ச பசங்கோ :-p
Delete@ ALL : அவரவர் பார்வைகளில் அவரவர் கருத்துக்களில் லாஜிக் எப்போதுமே குறைவாக இருப்பதில்லை. இதுவும் அதற்கொரு விதிவிலக்கல்ல தான்.. !!
Delete65 ரூபாய் புக்கினை ரூ.100 என்று விலை நிர்ணயம் செய்துவிட்டால் என் சிரமங்கள் ஒற்றை ராத்திரியில் காணாது போய் விடும் ! ஸ்டாக் குமியாது ; முதலீடு முடங்காது ; வட்டி கட்டும் பேச்சுக்கு இடமே இராது ; குட்டி போட்ட பூனை போல் புத்தகங்களை ஊர் ஊராய்த் தூக்கிக் கொண்டு திரியும் அவசியமே இராது ; புத்தகங்களை எவ்விதம் பத்திரப்படுத்துவது என்று தூக்கத்தைத் தொலைக்கும் சிக்கலிராது ; நாளொன்றுக்கு இதன்பொருட்டு 10 மணி நேரமாவது செலவிட்டுவிட்டு - பிரதிபலனாய் எனக்கொரு சம்பளம் எடுக்கக்கூட வழியில்லையே என்ற சிறு விசனமும் இராது ; ராயல்டி கட்ட படைப்பாளிகளிடம் கடைசி நாள் வரைக்கும் நெளியும் முகாந்திரங்களிராது ; 10% தள்ளுபடியில் 2 ஆண்டுகளுக்கு மேலாய்த் தேங்கி கிடக்கும் இதழ்களை விற்க நினைத்து பல்பு வாங்கும் தருணங்கள் இராது ; "முந்தைய இதழ்களை வாங்கத் தவறிவிட்டோம் - அவற்றுள் சிறந்தவற்றை மறுபதிப்பிடுங்களேன்" என்ற கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கும் தேவையே இராது !
இத்தனை வசதிகளும் என்னை இருகரம் கூப்பி வரவேற்பது ஒரு ஜோடி ஆந்தை விழிகளுக்கு பளீரென்று தெரியும் போதும் அப்பக்கமாய் வண்டியைத் திருப்பத் தயங்குவதன் காரணம் புரிந்திடல் ராக்கெட் விஞ்ஞானம் அல்லதானே ?!
நிறையமுறைகள் சொல்லியதையே மீண்டுமொருமுறை ஒப்பிக்கிறேனே folks...!
ஆளுக்கொரு பிரேக் ; ஆளுக்கொரு கிளட்ச் ; ஆளுக்கொரு ஆக்சிலரேட்டர் தந்திடும் வசதிகொண்ட வாகனமொன்று இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை ! அதுவரையிலும் - தொத்தலோ - வத்தலோ - ஸ்டியரிங் வீலைக் கையில் பிடித்திருக்கும் ஆசாமியின் முயற்சிகள் மீதும், தீர்மானங்கள் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தவிர்த்து வேறு வழி இல்லையே ! அந்த ட்ரைவர் மிகல் ஸ்கியூமாக்கராக இல்லாது போகலாம்தான் - ஆனால் இதுவரைக்கும் விபத்துக்கு உட்படுத்தாதவன் என்ற வகையில் பிழைத்துத் தான் போகட்டுமே ?
// "முந்தைய இதழ்களை வாங்கத் தவறிவிட்டோம் - அவற்றுள் சிறந்தவற்றை மறுபதிப்பிடுங்களேன்" என்ற கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கும் தேவையே இராது ! // இந்த வரிகளின் அர்த்தம் புரியவில்லை...
Delete/// - தொத்தலோ - வத்தலோ - ஸ்டியரிங் வீலைக் கையில் பிடித்திருக்கும் ஆசாமியின் முயற்சிகள் மீதும், தீர்மானங்கள் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தவிர்த்து வேறு வழி இல்லையே ! அந்த ட்ரைவர் மிகல் ஸ்கியூமாக்கராக இல்லாது போகலாம்தான் - ஆனால் இதுவரைக்கும் விபத்துக்கு உட்படுத்தாதவன் என்ற வகையில் பிழைத்துத் தான் போகட்டுமே ?///
Deleteவிபத்து ஏற்பட வாய்ப்பே கிடையாது என்ற நம்பிக்கை நிறையவே இருப்பதால்தான் சார் பின்னால் அமர்ந்திருக்கிறோம்.!
என்றாவது ஒருநாள் மைக்கேல் ஸ்க்யூமேக்கர் ஆகமாட்டீர்களா என்ற நப்பாசையும் நிறையவே உண்டு சார்.! :-)
///
Deleteவிபத்து ஏற்பட வாய்ப்பே கிடையாது என்ற நம்பிக்கை நிறையவே இருப்பதால்தான் சார் பின்னால் அமர்ந்திருக்கிறோம்.!
///
+100000
அந்த ஜன்னலோர கடைசி சீட்டில் நானும்! ( வண்டி - லாரி இல்லைதானே? ;) )
@ பொடியன்
Deleteஅர்த்தம்:
தங்க கல்லறை
என் பெயர் லார்கோ
காங்கிரீட் கானகம்
விபத்து ஏற்பட வாய்ப்பே கிடையாது என்ற நம்பிக்கை நிறையவே இருப்பதால்தான் சார் பின்னால் அமர்ந்திருக்கிறோம்.!
Delete/// வண்டியில் விஜய்க்கு முன் சீட்டில் நானும்!
NO WORRIES EDIT KEEP UP DRIVING...!
Deleteஏற்கனவே Dear Editor...
DeleteDear printer...
Dear Publisher... - இப்படியெல்லாம் எழுதறாய்ங்க
இதோட இப்ப 'Dear Driver'ம் சேர்ந்துக்குமேன்னுதான் கொஞ்சம் கவலையா இருக்கு! ;)
நான் வந்துவிட்டேன்
ReplyDeleteலியாா்ன்டோ கண்டிபாக வேண்டும்
இந்த மாத இதழ்களின் review
டெக்ஸ் சொதப்பல் 3.5/10
பென்னி10/10
மாா்டின் 9/10
லாா்கோ8/10
விண்டு 10/10
டைலன் 10/10
ராபின் 9/10
மறுபதிப்பு10/10
:)
Deleteசார் பச்சையாய் சொல்லுகிறேன்...காமெடி கார்ட்டூன் கதைகளின் மாபெரும் ரசிகன் நான் ..விடிய விடிய விஞ்சானி மீண்டும் மீண்டும் வரட்டும் சார் ..கேட்கவா வேண்டும் ..செல்லப்பா உன்னை புரிஞ்சுக்க இந்த உலகத்திலே ஒரு பய இல்லேடா கோ அகேட் ரா செல்லப்பா ..காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
ReplyDelete///செல்லப்பா உன்னை புரிஞ்சுக்க இந்த உலகத்திலே ஒரு பய இல்லேடா கோ அகேட் ரா செல்லப்பா ///
Deleteலியனார்டோ வேணாம்னு சொல்றவங்க திருந்துற மாதிரி ஓஹோ புரொடெக்சன்ஸ் சார்பா ஒரு கலர் படம் எடுத்து விடுங்களேன் வெட்டுக்கிளியாரே!!! :-)
திரிந்திட்டோமியா.நா படிக்காட்டி கூட சின்ன பசங்கள (My students) இதை படிங்கடா சொல்லி மிரட்டிகிட்டு இருக்கேய்யா. அவுங்களும் படிச்சுக்கிட்டே சிரிச்சுகிட்டு என்னைய பாத்து பல்லை கடிக்கிற சத்தம் கேக்குதுயா. என்னால முடிஞ்சது இதுதான்.ஒருவர் படிப்பதை காட்டிலும் பலர் படிப்பது சிறந்ததாக கருதுகிறேன்.
Deleteசிறுவர்களை வற்புறுத்தி படிக்கச் செய்வது ...அவர்களுக்கு சலிப்பைத் தரலாம்....கார்ட்டூன் தொகுப்பை வைத்து பிடித்ததை படிக்க விட்டு விடுங்கள்....
Deleteஎனக்கு டீவி பார்க்கும் பழக்கம் உண்டு. (வேலையே அதான்னும் வெச்சுக்கலாம்) . அந்த டீவியில எப்போதும் முழுநீள திரைப்படங்களையும் பார்க்கும் வழக்கம் உண்டு. ஆனால் இடையிடையே காமெடி க்ளிப்பிங்ஸ் போடும்போதும் ஆர்வமாக பார்க்கும் பழக்கம் அதிகமாகவே உண்டு.
ReplyDeleteஅதே போல,
காமிக்ஸிலும் முழுநீள கதைகளுக்கு இடையே ஒன்றிரண்டு சிறுகதை தொகுப்புகளும் வருவது வாசிப்பை போரடிக்காமல் வைத்திருக்கும் நல்ல விசயம்தானே?
அதிலும் ம.மந்திரி, லியோ தாத்தாவ்ஸ் மாதிரி சிரிப்புக்கு நூறு சதவீதம் உத்திரவாதமுள்ள சிறுகதை தொகுப்புகள் வருவதால் என்ன குறைந்துவிடப்போகிறது!
தாத்தாவ்ஸ் வருசம் ஒருக்கா வந்தே ஆகோணும் அம்புட்டுதேன்.!
செம கண்ணன்! +10000000000
Delete2017-ல் மார்ட்டின் கதைகளை முழு வண்ணத்தில் கொடுங்கள் சார்?
ReplyDeleteJagath Kumar : Nopes....மார்ட்டின் # 100 தவிர்த்து மற்றவை எல்லாமே கறுப்பு-வெள்ளையே !
Delete😢 😢 😢
Deleteஅந்த மார்ட்டின் #100 லயனில் எப்போது சார்?
Deleteநேற்றிரவு தல'யின் 'நில்-கவனி-சுடு'வை ஒரு மறுவாசிப்பு விட்டேன்! ப்பா! என்னவொரு வாசிப்பு அனுபவம்!! ஸ்டைலான சித்திரங்கள், ஷார்ப்பான வசனங்கள், துல்லியமான புலனாய்வு, அதிரடி ஆக்ஷன் - என அனைத்தும் கலந்த ஒரு நேர்த்தியான படைப்பு!
ReplyDeleteபடித்துமுடித்துப் பல மணி நேரங்களானபோதும், இன்னும் எனக்குள் அந்த அதிர்வுகள்!!
@ ALL : நண்பர்களே....சின்னதொரு வேண்டுகோள் !
ReplyDeleteசந்தாவினை 2 தவணைகளாய்ச் செலுத்தும் வசதியினை பயன்படுத்தியிருந்த நண்பர்களுள் ஒரு 14 பேர் மட்டும் இன்னமும் இரண்டாம் தவணையினைச் செலுத்திடவில்லை ! முறையாகப் பார்த்தால் - ஏப்ரலிலேயே இந்தப் பணம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் !
உங்களது இம்மாத இதழ்கள் இதன் பொருட்டு நம்மிடம் காத்துக் கிடக்கும் ! ப்ளீஸ் - இனியும் தாமதம் வேண்டாமே !
ReplyDeleteTo edit: //65 ரூபாய் புக்கினை ரூ.100 என்று விலை நிர்ணயம் செய்துவிட்டால்// இதை ஏன் இப்பவே வேறு விதத்தில் முயற்சிக்கக் கூடாது? ரூ 100 விலையை நிர்ணயித்துவிட்டு, சந்தா தாரருக்கும், தொடர்ச்சியாக குறித்த அளவில் அனைத்து காமிக்ஸ்களையும் வாங்கிடும் விற்பனையாளர்களுக்கும் மட்டும் ரூ.65 விலையில் கொடுத்திடலாமே? சந்தாதாரருக்கும் தொடர்ச்சியாக ஆதரவளித்திடும் விற்பனையாளர்களுக்கும் என்ன நன்மை என்ற கேள்விக்கு விடை கிடைத்திடும். சந்தா செலுத்தினால் நன்மை உண்டு என புதிய சந்தாதாரரும் இணைய ஊக்குவிக்கும் இல்லையா?
இது பணச்சுமையளவிலோ, தேங்கும் எண்ணிக்கையிலோ உடனே பாரிய மாற்றத்தை தராவிட்டாலும், சந்தா எண்ணிக்கையை அதிகரிக்க நிச்சயம் உதவிடலாம். மேலதிகமாக, டிமாண்ட்டிங் கான்செப்ட் ஒன்றும் உங்கள் கைவசம் வந்திடும்!
DeletePodiyan +1
Deleteதிரு பொடியன் அவர்களின் கருத்துக்கு பெரியதொரு +1.
Delete+1
DeleteAPPDUDI PODU ARUVALA! :)
@ Podiyan & others : சின்னதொரு விஷத்தை மறந்து விடுகிறீர்களே நண்பர்களே...?
Deleteராயல்டி செலுத்தப்படுவது புத்தக விலையின் அடிப்படையிலான கணக்கிடலில் ! ரூ.100 என்று விலை நிர்ணயம் செய்துவிட்டு - அந்த இதழ்களின் முக்காலே மூன்றுவீசத்தை (சந்தா + ரெகுலர் ஏஜென்ட் விற்பனை) அறுபத்திஐந்து ரூபாய்க்கு விற்கும் போது நாம் in effect செலுத்தும் ராயல்ட்டி கழுத்தை நெறிக்கும் அளவிற்குச் சென்றுவிடாதா ?
அதுமட்டுமன்றி புத்தகவிலை ரூ.100 என்று அச்சாகியிருக்கும் பொழுது, அவற்றை நம்மிடமிருந்து ரூ.65 minus கமிஷன் என்ற விலைக்கு வாங்கிடும் (ரெகுலர்) ஏஜெண்ட்கள் ரூ.100 விலைக்கே கடைகளில் விற்க முனைந்தால் அதனைத் தடுக்க முகாந்திரம் தான் ஏது ?
"இப்படி ஒரு விலை ; அப்படியொரு விலை" என்று அச்சிடலாமே ?என்று தோன்றலாம் தான் ; எந்தவொரு படைப்பாளியும் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்களே !
//ராயல்டி செலுத்தப்படுவது புத்தக விலையின் அடிப்படையிலான கணக்கிடலில் ! // இந்த டெக்னிகல் விசயம் நமக்கு தெரியாதது ஸாா்.
Delete
Delete//ராயல்டி செலுத்தப்படுவது புத்தக விலையின் அடிப்படையிலான கணக்கிடலில் ! // அண்மைய சில இதழ்களில் சில விலை மாற்றங்கள் செய்யப்பட்டனவே ஸாா்? மாடஸ்டியின் இதழுக்கு விலைக்குறைப்புகூட நடந்ததே? ஆகவே வாய்ப்பே இல்லை என சொல்லிட இயலாதல்லவா?
// இப்படி ஒரு விலை ; அப்படியொரு விலை" என்று அச்சிடலாமே ?என்று தோன்றலாம் தான் ; எந்தவொரு படைப்பாளியும் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்களே !//
சந்தாதாரருக்கு விலைக்கழிவு / விசேட விலை என்பது - பதிப்பு துறையில் உள்ள நடைமுறைதானே? நீங்களும் முன்னர் நடைமுறையில் வைத்திருந்ததுதானே?
இன்று விடுமுறை ஆதலால் இவ்வருட லயன் காமிக்ஸ் ஆண்டு மலர் (ஜானி, பிரின்ஸ், பெட்டி கதைகள் அடங்கியது) படித்துக்கொண்டிருந்தேன். கதைகள் நன்றாக இருந்தாலும் 200 ரூபாய் விலை கொண்ட இப்புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் அதிகம் நெருடுகின்றன. அதிக விலை மறுபதிப்புக்களும் இப்படித் தொடர்ந்தால் வாசகரால் என்னதான் செய்ய முடியும் :-(
ReplyDeleteசில புத்தகங்களில் பலூன்கள் இடம் பெயர்ந்து வருவதும் திருத்தப்படவேண்டியது.
ஒரு புதிய வாசகர் ஒரு மாத தொகுப்பு வாங்கிவிட்டு அதனில் பிழைகளும் கண்டு, அதிக விலையும் கண்டால் அவரது முடிவு என்நோக்கில் செல்லும்?
Raghavan : நிச்சயம் கவனம் தருவோம் ! தற்போதைய மறுபதிப்புகளிலும் பிழைகள் தெரிகின்றனவா ??
DeleteYet to read the reprints of last few months - am catching up with the new books first - at present lagging 5 new and 6 reprints including the Tex one (half read) .. will let you know soon
Deleteதாத்தாவுக்கு மரியாதை.............................................................
ReplyDeleteகாமிக்ஸ்ம், களிப்பும் ,கற்று தெளிதலும்,,,,,,,,,,,,,,,
காமிக்ஸ் படிப்பது மனதை இலகுவாக்க, பொழுதுபோக்கிற்காக ...இதுவே அதன் முக்கிய நோக்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது....
எல்லா காமிக்ஸ்ம் இவ்வகைதான் அடிப்படையில் .....
அதையும் தாண்டி சில காமிக்ஸ்கள் சில விஷயங்களை நமக்கு சொல்லித்தர அல்லது நினைவூட்டும் வகையில் இருக்கத்தான் செய்கின்றன...
லியனார்டோ என்ற பெயரை முதலில் நாம் படித்தவுடனே மோனாலிசா நம்மில் பெரும்பான்மையோருக்கு ஞாபகம் வந்திருக்க கூடும்.........................
. லியனார்டோ டா வின்சியை தூண்டுதலாக வைத்தே இக்கதைகள் உருவாகி இருக்கும் என்ற எண்ணமும் எழும்.....அது உண்மையும் கூட.....
இந்த வரிசை கதைகள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் நடப்பது போலவே எழுதப்பட்டுள்ளன( 14முதல் 17ம் நூற்றாண்டு வரை)
கதையில் வரும் தாத்தாவை வெறும் கோமாளி தாத்தா என்று கதையை படிக்கும்வரை படித்து ரசித்து சிரித்தபின்னர் பொறுமையாக அவ்விடத்தில்
லியனார்டோ டா வின்சியை பொருத்தி பார்த்து சிந்திக்கலாம்.......
அதற்கு இத்தாலியில் துவங்கி ஐரோப்பா முழுதும் பரவிய மறுமலர்ச்சி காலகட்டம் பற்றிய விவரங்கள் , மனித சரித்திரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வியக்கவைக்கும் சிலமனிதர்களில் ஒருவரான லியனார்டோ டா வின்சி பற்றி அறிய முற்பட வேண்டும்....
நாம் மட்டுமன்றி நமது குழந்தைகளுக்கும் இவர்களை போன்ற மாமனிதர்களை பற்றி அறிய இக்கதைகளை உபயோகப்படுத்தலாம்
எடிட்டரின் வசனங்களை சிறிது மாற்றம் செய்து இக்கதைகளை சிறு நாடகமாக வீட்டு குழந்தைகள்,பக்கத்து வீட்டு குழந்தைகள் வைத்து நடிக்கலாம்....
டாவின்சி பற்றி பேசும்போது மைக்கலேஞ்சலோ,ரபேல் போன்ற அவரின் சமகாலத்திய ஜாம்பவான்களை பற்றியும் சிறிது சிறிதாக சொல்லி கொடுக்கலாம்......
நம்மையும் பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் இம்மனிதர்களிடையே விரவி கிடக்கின்றன.......
இதே கதை தொடரில் பின் வரும் கதையில் கிரேட் ஆல்பர்ட் என்ற பெயரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ம் வருகிறார்.....
சிரிக்க வைத்தே இவரை பற்றி நாமும் அறிந்து குழந்தைகளுக்கும் இம்மாதிரி மோட்டிவேட்டிங் பர்சனாலிடிகளை அறிமுகபடுத்தலாம்......
லியனார்டோ கதைகள் பிடிக்கிறது/ பிடிக்கவில்லை என சொல்வது அவரவர் உரிமை....
உபயோகமான சங்கதிகளும் இக்கதை தொடரை வைத்து பெற முடியும் என்பதனை சுட்டி காட்ட முயல்வதே இப்பதிவின் உள்நோக்கம்......
தாம் வாழ்ந்த காலத்தில் நினைத்து கூட பார்க்க இயலா வருங்காலத்தின் அறிவியல் சிந்தனைகளை ப்ரோடோடைப்பாக எழுதி வைத்தவர் லியனார்டோ....
நமது கதைகளில் அவை செயல்வடிவம் பெற முயற்சிப்பது போல் வருவதை காணலாம்.....
மன்னன் ஒருவன் கைப்பற்றபோகும் பிரதேசத்தின் டெரிடோரியல் மேப்பை முதன்முதலில் உருவாக்கி கொடுத்தவர் லியனார்டோ
அது பற்றிய எண்ணங்களே இல்லாத காலம் அது.............................
ஒரு பல்துறை வித்தகர்..............................
மேலாக்க பாத்தா ...லியனார்டோ
உத்து பாத்தா.......டோர்னாடோ.......
செம!
Delete+1
Delete:)
unorthodox words to describe லியனார்டோ.
simply dashing.
//டாவின்சி பற்றி பேசும்போது மைக்கலேஞ்சலோ,ரபேல் போன்ற அவரின் சமகாலத்திய ஜாம்பவான்களை பற்றியும்//
Delete:) IMPECCABLE HISTORY DOC!
selvam abirami : எப்போதும் போலவே - அதகளம் !!
DeleteSooperrrr selvam abirami
DeleteSO NICE.......
Deleteவேதாளரை கொண்டு வர சந்தர்ப்பம் கிடைத்தால் கலரில் அருமையாக
ReplyDeleteபோடுங்கள் நாங்கள் காத்திருக்கிறேன் நன்றி
+1
Delete+2
Deleteதொடர்ந்து பல வருடம் பழைய இதழ்கள் கைவசம் இருப்பதால்.!,யாருக்கு என்ன சூழ்நிலையோ தெரியாது.! ஆனால் நான் கடந்த வருடம் முதல் ஒரு இதழ் மட்டுமே வாங்குகிறேன்.
ReplyDeleteநான் 2003 ஆண்டு மீள் வருகை முதல் ஒரு இதழை மூன்றுக்கு மேற்பட்டு வாங்குவேன். ஒரு காரணம் முடிந்தவரை புதிய காமிக்ஸ் வாசகர்களை நம் வட்டத்தில் இழுக்க ஓசியில் தாராளமாக கொடுப்பது. "நித்ய கண்டம் பூரண ஆயுசு " என்று தட்டு தடுமாறி சென்று கொண்டிருந்த நமது காமிக்ஸுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம் என்ற எண்ணம்.இரண்டாவது சுய நலம் தமிழ் காமிக்ஸ் இனி வரும் காலங்களில் ஒரு அருங்காட்சிய பொருளாகப் போகிறது.இதை நிறைய சேமித்து வைக்கலாம் என்ற எண்ணம்.காமிக்ஸ் பொற்காலமான 1984 -----1988 வரை கிடைத்த காமிக்ஸையெல்லாம் உதாசீனப்படுத்தியவை எல்லம் தங்கம் போல் மதிப்புயர்ந்து ஏக்கத்தை உண்டு பண்ணியது மனதில் தோன்றியது.!அதுவும் சிவகாசி குடோனை நேரில் பார்த்ததும்.காமிக்ஸ் ஓனர் இனியும் நஷ்டப்பட துணியமாட்டார் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.!
தற்போது மறுபதிப்பில் எடிட்டர் அதிகம் ஆர்வம் காட்டுவதினாலும்..மூன்று வருட இதழ்களும் தாராளமாய் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது என்பதால் ஒன்று மட்டுமே வாங்குகிறேன் .அவைகள் இரவல் போனாலும் தொலைந்தாலும் ஏதாவது ஒரு புத்தக கண்காட்சியில் 10% டிஸ்கவுண்ட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்ற அலட்சியமே காரணம்.!
ஓசியில் வாங்கிய நன்பர்களை காசு கொடுத்து வாங்க சொல்லுங்க சார்
ReplyDelete