Powered By Blogger

Tuesday, August 07, 2018

ஒரு அசைபோடும் படலம்....!

நண்பர்களே,

வணக்கம். இன்னும் 50+ நாட்களில் "டைனமைட் ஸ்பெஷல்" எனும் ஒரு அதிரடி இதழ் மாத்திரம் முறைப்பாய் நின்று கொண்டிருக்கவில்லையெனில்   - இந்நேரத்துக்கு ஒரு பூப்போட்ட சட்டையை மாட்டிக் கொண்டு "கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு !!" என்று  நானும் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பேன் ! இந்தாண்டின் துவக்கம் முதலே "இரத்தப் படலம்" எனும் சிறு துடிப்பு உள்ளுக்குள் டிக் டிக்கென்று ஒடத் துவங்கியிருந்தது ! ஏப்ரல் முதலே அது 'டாங்...டாங்..' என்று கோவில் மணியாட்டம் தலைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது ! And கடைசி ஒரு மாதத்தில் தீயணைப்புத் துறையின் "டங்கா...டங்கா...டங்கா..." அவசர மணியாக உருமாறிப் போயிருந்தது ! அதிலும் 3 + 1 (பு.வி.) புத்தகங்களும் தயாராகி மூடாக்குக்குள் பதுங்கி கிடக்க, அந்த slipcase மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வர வேண்டியிருக்க, அதன் பொருட்டு நேர்ந்த நோவுகளே ஒரு கிளைக்கதை ரேஞ்சுக்கு இருந்தன  ! 

முதலில் ஒரு மாதிரி போட்டுத் தந்து, அதற்கொரு ரேட்டும் சொல்லியிருந்தார்கள் & அது ஓ.கே என்று சொல்லி விட்டிருந்தோம்  ! அதன் மத்தியில் நாம் இதழ்களின் முன் & பின் அட்டைகளின் பருமனை அதிகம் பண்ணத் தீர்மானித்திருக்க, 3 புக்குகளும் ஒன்றிணைந்த விஸ்தீரணம் அதிகமாகிப் போயிற்று ! பலன் ? அந்த சிகப்பு slipcase-ன் உள்ளளவும் இத்தனியூண்டு பெரிதாக்க வேண்டிப் போனது ! So மறுக்கா இன்னொரு சேம்பிள் போட்டு அனுப்பப் கோரினால் - இம்முறை வந்ததோ கொஞ்சம் மெலிசான தயாரிப்பு !! "என்ன கொடுமைடா சாமி....? உள்ளட்டையினை நாம  புஷ்டியாக்கினால், வெளிப்பெட்டியை  இவர்கள் இளைக்கச் செய்துவிட்டார்களே ?!!" என்று கடுப்பாகிப் போனது !! "என்னம்மா...இப்டி பண்ணுறீங்களேமா ?" என்று அவசரம் அவசரமாய் அவர்களிடம் கேட்டால் - "ஓ....கொஞ்சம் குளறுபடி ஆகிப்போச்சுங்க சார் ; அடுத்தவாட்டி இந்த மாதிரி பிராபளம் வர்ரானில்லே !!" என்றபடிக்கு இன்னொரு மாதிரி செய்து அனுப்பினார்கள் - சரியான அளவில் ; கனத்தில் !! ஆனால் இம்முறையோ கனத்தில் மாத்திரமன்றி விலையிலும் புஷ்டி ஏறிப் போயிருந்தது !! "அய்யா...சாமி..தெய்வமே... யோகராஜா....முதல்லே பேசுன ரேட்டே போட்டுக் கொடுங்கய்யா ; இதுக்கு மேலே தாங்காது !!" என்று கூத்தாடி சம்மதிக்க வைப்பதற்குள் நம் XIII புதுசாய் இன்னொரு அவதாரே எடுத்து முடித்திருக்கக்க்கூடும் ! வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார்கள் ; ஆனால் பட்டுவாடா செய்ய அவர்கள் சொன்ன deadline கிறுகிறுக்கச் செய்தது !! "ஆகஸ்ட் 15 க்கு முன்னே நிச்சயம் ரெடி பண்ணிடலாம் !!" என்று சாவகாசமாய்ச் சொல்ல, மொத்தத்துக்குக் கடுப்பாகிப் போனது ! வேலையைத் தட்டிக் கழிக்கும் பொருட்டு புருடா விடுகிறார்கள் என்பது போல் எனக்கு மனதுக்குப்பட - "நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம் !!" என்றபடிக்கு ஆர்டரை கான்செல் செய்து விட்டு எங்கேனும் ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்திட வாய்ப்புள்ளதா  ? என்று பாயைப் பிறாண்ட  ஆரம்பித்தேன் ! 

"சரி...டப்பாவே வேண்டாம் ; அதற்குப் பதிலாய் மெகா போஸ்டர் ஒன்றை அச்சிட்டு இதழ்களோடு தந்துவிடலாம் ;  ஏற்கனவே புலன்விசாரணையும் இலவசமாய் வழங்கும் சூழலும் உள்ளதே ; ஒரு மாதிரியாகச் சப்பைக் கட்டு கட்டிக் கொள்ளலாம்" என்றுபட்டது !! ஆனால் கனவுகளில் கலர் கலராய் ; ரகம் ரகமாய் ; தினுசு தினுசாய் துடைப்பங்கள் அணிவகுக்கத் துவங்க - பதட்டத்தில் இங்கும் அங்கும் வலை வீசத் துவங்கினேன் !! கொடுமையிலும் கொடுமை -  அப்போது தான் உள்ளூரிலேயே, அதுவும்  நமக்கு ரொம்பவே தெரிந்த ஒருவரே, கடந்த 6 மாதங்களாய் இது போன்ற முரட்டு டப்பிக்களை செய்யும் தொழிலில் இருப்பதாய்த் தெரிய வந்தது ! அதற்கான மிஷினை வாங்கிப் போட்டு - இந்த மாதிரியான ஆர்டர்களை எடுத்துச் செய்து வருவதாய்க் கேள்விப்பட்டேன் ! "ஆண்டவா..இது தெரியாமல் எங்கெங்கோ அலைந்து பல்ப் வாங்கித் திரிந்தோமே  !!" என்று நொந்து கொண்டே, ஒரே பாய்ச்சலாய் அவர் மேலே விழுந்து பிடுங்கிப்.. பிறாண்டி... டப்பாக்களை செய்ய ஆர்டர் தந்தோம் !! கடைசி நிமிடத்துக் கூத்தென்றாலுமே, நம் அவசரத்தைப் புரிந்து கொண்டு - "இந்த வேலைக்கான சரக்கு என்கிட்டே ஸ்டாக்  இல்லை ! அட்டைக்கு ஆர்டர் போட்டு விடுகிறேன் ; ஒரே  வாரத்தில் வந்து விடும் ; வந்தவுடன் 2 தவணைகளில் செய்து கொடுத்துவிடுகிறேன் !" என்று வாக்குத் தந்தார் ! And சொன்னபடிக்கே வியாழன் மதியம் 200 பெட்டிகளும், வெள்ளி  மாலையில் மீதியையும் சப்ளை செய்து விட்டார் !! இதில்  கொடுமையின் உச்சம் - இங்கே உள்ளூரில் விலையும் சகாயம் !! தரமும் A -1 !! 

வியாழன் மதியம் முதலே நம் ஆபீசே யுத்தகளம் போலாகி விட்டது !! பேக்கிங் பணிகளை இம்முறை நம் அலுவலக பெண்பிள்ளைகள் அத்தனை பேருமே ஒட்டுமொத்தமாய் இணைந்து செய்து தள்ளினார்கள் ! 2 நாட்களுக்கு டிசைனிங் ; DTP ; அக்கவுண்ட்ஸ் என சகலத்துக்கும் லீவு விட்டுவிட்டு, ஆளாளுக்கு கத்திரிக்கோல் & பிரவுண் டேப் என்று ஒரே பிசி !! இதற்கு மத்தியில் ஈரோட்டுக்குப் புறப்படும் என் அவசரத்தை வெளிக்காட்டி அவர்களை டென்க்ஷன் கொள்ளச் செய்ய வேண்டாமென்று ரொம்பவே கூலாக இருப்பது போல் நடித்துக் கொண்டு திரிய - உள்ளுக்குள்ளோ ஒரு டஜன் மிக்சிக்கள் ஒரே நேரத்தில் ஓடுவது போல் ஒரே கலக்கல் ! சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் வெள்ளி காலையிலேயே வண்டியில் ஈரோட்டுக்கு கிளம்புவதாக திட்டம் ; ஆனால் இங்கே பேக்கிங் பணிகளை விரட்ட முடியவில்லை என்பதால் அவர்களை மதியம் வரை காத்திருக்கச் செய்தேன் !! இதற்கு மத்தியிலோ - "ஹல்லோவ்....இது பிரபா ஒயின்சா ? "இ.ப". கடை எப்போ திறப்பீங்க ?" என்ற நண்பர்களின் கேள்விகளோடு போன் கிணுகிணுத்துக் கொண்டே இருக்க - காலை முழுக்க  எல்லோருக்குமே வியர்த்துக் கொட்டிவிட்டது ! 

ஒரு மாதிரியாய் வண்டியில் முன்பதிவு புக்குகளோடு சீனியர் எடிட்டர் கிளம்ப - லேசாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் ! அதற்கு மத்தியில் ஈரோட்டுக்கு ஸ்டால் அமைக்கும் பொருட்டு கிளம்பிப் போயிருந்தவர்களோ - "இங்கே லாரியைக் காணோம் !! பண்டல்கள் இன்னும் வந்த பாட்டைக் காணோம் !!"என்று பாட்டுப் பாடிக் கொண்டேயிருந்தனர் ! "மைதீன்... இங்கேயிருக்கும் லாரி ஷெட்டுக்குப் போய்ப் பாரு !!" என்று நான் கூக்குரலிட - அந்தப் பஞ்சாயத்து அடுத்த  2 மணி நேரத்துக்கு பிராணனை வாங்கியது ! ஒரு மாதிரியாய் சிவகாசி புத்தக பண்டல்கள் அங்கே பட்டுவாடா ஆகிட -  ஏழரை # 101 அடுத்தகணமே துவங்கியது !!  கோவைப் புத்தக விழாவிலிருந்து நேரடியாய் ஈரோட்டுக்கு புக் செய்திருந்த புத்தக ரேக்குகள் 4 நாட்களாகியும்  அங்கே சென்றடையக் காணோம் !! மேற்கொண்டு ஒரு 'காச்..மூச்" படலத்துக்குப் பிற்பாடு அதுவும் தீர்வு காண,ஒரு வழியாய் மாலை ரயிலைப் பிடிக்க நானும், ஜூனியரும் புறப்பட்ட தருணத்தில் எனது நாக்கு ரயில்வே பிளாட்பாரத்தைச் சுத்தம் செய்யாத குறை தான் ! நள்ளிரவுக்கு கிட்டே மஞ்சள் நகரில் இறங்கிய போது - பசி ஒரு பக்கம் ; பயம் இன்னொரு பக்கம் ! 

பொழுது விடிந்தால் ஒரு மெகா பரீட்சைக்கு மார்க் போடும் ஆற்றலாளர்கள் அதே ஹோட்டலின் அரங்கில் குழுமப் போவது நிச்சயம் எனும் போது ராவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை ! Oh yes - இதழ்களின் தயாரிப்பு ; அட்டைப்படங்கள் ; slipcase ; புலன் விசாரணை - என எல்லாமே பதம் பொருந்திய அதிரசங்களாய்க் காட்சி தந்தன தான் ; நிச்சயமாய் நீங்கள் ரசிப்பீர்களென்று நம்பிக்கை நிறையவே இருக்கவும் செய்தது தான் ! ஆனால் இருளில், தனிமையில், சலனமுற்றுக் கிடைக்கும் மண்டைக்கு - எதையேனும் கற்பனையாய் நினைத்து வைத்து - ஒரு லிட்டர் மனப் பிராந்தியை ஓடச் செய்வது ஓடச் செய்வது என்ன ரகத்து phobia-வோ தெரியலை ; (நிச்சயமாய் நம் பொருளாளர்ஜி அது பற்றி விளக்குவார் !!) ஆனால் அபத்தக் காரணங்களை தானாய் உற்பத்தி செய்து ; அவற்றின் பலனாய் நம்மையே பயமுறுத்தி, ஒரு வித இனம்புரியா த்ரில்லை நாளங்களில் ஓடச் செய்யும் வேலையை அன்றிரவு கச்சிதமாய் எனது தலை செய்து வந்தது !! சனி காலையில் வெளிச்சத்தை ; சகஜ உலகை ; நார்மலான சமாச்சாரங்களை ; அந்த இட்லிக்களை ; பூரிக்களைப் பார்த்த பின்னேயே ஒரு மாதிரியாய் நார்மலுக்குத் திரும்பியது !! And அரங்கில் உங்கள் ஒவ்வொருவரின் மலர்ந்த முகங்களையும் பார்த்த பின்னரே மெது மெதுவாய் பிராணன் கூட்டுக்குத் திரும்பியது !!
இப்போது யோசிக்கையில் - "லூஸுப் பயலே ! இத்தனை பதட்டம் என்னத்துக்காம்  ?" என்று என்னையே என் தலை கேள்வி கேட்கிறது !! பதிலின்றி 'பே' என்று நின்றாலும் - பதிலென்னவென்று தெரியாதில்லை தானே ?! இப்போதெல்லாம் நம்மால் சஞ்சீவி மலையைக் கூட அலேக்காய்த் தூக்கிட முடியும் என்றும் ; கடலைக் கூட கடப்பாரை நீச்சலில் கடந்து விடமுடியுமென்றும், நம்பிக்கையை உள்ளுக்குள் நீங்கள் வளர்த்து வைத்துள்ளீர்கள் !! ஒவ்வொரு மெகா கோரிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் -  "இதுவெல்லாம் இவனுக்குச் சாத்தியம் தானா ?" என்ற கேள்வி இப்போதெல்லாம் உங்களுள் துளியும் நஹி ! ஆனால் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூரில் ஒரு வாடகை சைக்கிளை எடுக்கும் அளவுக்கு கூட நம்பிக்கையை விதைத்திரா ஒரு முட்டைக் கண்ணன் தான் அடியேன் என்பதை நீங்கள் மறந்திருப்பினும், நான் மறந்திடவில்லை !  இன்றைய இந்த newfound எதிர்பார்ப்புகளின் பளுவைத் தூக்கித் திரியும் ஆற்றல் இந்த குருவிக்கு தொடர்ச்சியாய் வேண்டுமே தெய்வமே !! என்பதே தற்போதைய பயங்களின் முகாந்திரம் !!

இந்தப் போட்டியில் நாம் தாவித் தாண்ட வேண்டிய உயரத்தை சற்றே உசத்தி விட்டு, maybe அதனை வெற்றியோடு தாண்டியும் இருக்கலாம் தான் ! ஆனால் அதன் பொருட்டு மமதை கொள்வதை விடவும், உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு அங்குலமுமே இனி தொடரும் ஒவ்வொரு போட்டியிலுமே நாம் தாண்ட வேண்டிய குறைந்த பட்சமாகிப் போகுமே என்ற டரியலே மேலோங்குகிறது !! And இதோ - அடுத்த பணிக்குள்ளே தலை நுழைக்கத் துவங்கியாச்சு !! And முந்தய மேட்சில் சதமடித்திருந்தாலும் அடுத்ததைத் துவக்கும் போது எப்போதும் போல் பூஜ்யத்திலிருந்தே துவங்குகிறோம் என்ற புரிதலோடே !!

உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys ; உங்களின் அடுத்த சந்தோஷத் தருணத்துக்கான களம் தேடி நாங்கள் வழக்கம் போல் வலை வீசத் துவங்குகிறோம் !! Thank you for the awesomely uplifting days !! Bye for now !!











228 comments:

  1. Replies
    1. போன பதிவில் போட்டது...தொடர்ச்சியின் பொருட்டு...


      ரத்தப் படலம். நண்பர் ராஜசேகர் அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகு ஆசிரியர் பட்டியலில் எடுத்து வாசித்த முதல் பெயர். பரபரப்பாக போய் இரண்டு குண்டு புத்தக பார்சல்களையும் பெற்றுக் கொண்டு என் சீட்டுக்கு வந்தேன்.
      வந்து ஒரு பார்சலை பிரித்து பார்க்க நண்பர் ஹசன் அதைப்பார்க்க கேட்க அவருக்கு குடுத்தேன். அவரிடம் இருந்த இன்னொருவர் வாங்க அப்படியே பின்னாடி பல கை மாறி விட்டது. தனது காதலியை மற்றவர் சைட்டடித்தால் எப்படி கோபமும் பொறாமையும் வருமோ அது போல் ஒரு உணர்வு.
      யோவ்ஹசன் புக்கை வாங்கிக் குடுய்யா என அவரும்உ டனே அதை வாங்கி என்னிடம் குடுத்து விட்டார். நானும் யாரும் கேட்டால் மறுக்க முடியாது என்பதால் டபக்கென்று பேக்கில் வைத்து விட்டேன். ஏன்னா நிறய பேரு அவங்க காதலிக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.
      பிறகு புத்தகத்தை தங்கியிருந்த அறைக்கு எடுத்து வந்து நான், சிபிஜி மற்றும் டாக்டர் சுந்தர் என அனைவரும் ஸ்லிப் கேஸில் இருந்து, அட்டை, பிரிண்டிங், மேக்கிங் என ரசித்து விவாதித்தோம்.
      ஸ்லிப் கேஸ் பற்றி அய்யா சுரேஸ் சந்த் “இன்னும் இருபது வருசத்துக்கு தாங்கும்னு” சொன்னது தான்ஹை லைட்.
      சின்னதா திருஷ்டி பொட்டு ராவல் னு ஸ்லிப் கேஸ்ல ப்ரிண்ட் ஆகி இருந்தது. ஒரு வேளை புலன் விசாரணை அட்டைப்படத்துல போட வேண்டியதை ஸ்லிப் கேசுக்கு போட்டுட்டாங்களான்னு தெர்ல.
      உலகத் தரம். ரொம்ப சிம்பிள். இதே மாதிரி ஒரு ப்ரெஞ்சு கலெக்சன் ஒன்னை நண்பர் பழனிவேலுக்கு வாங்கி வந்தேன். அதன் விலை, மேக்கிங் மற்றும் தரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தாலே நம்ம லெவல் என்னன்னு புரியும்.
      மிகுந்த சந்தோசம் ஆசிரியர் சார். உங்க மெனக்கெடல் வீணாகவில்லை. It is worthier than every penny and waiting we spent on this book.

      புலன் விசாரணை: யுத்தத்தினால் வெற்றி, சத்தத்தினால் வெற்றின்னு்சொல்லிக் கொள்ளலாம் சிலர். என்னைப் பொறுத்தவரை இது ஆசிரியரின் பெருந்தன்மையின் வெற்றி. இது குறைந்த பட்ச நேர்மையும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமிருப்பவர்களால் எளிதாக உணர முடியும். என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் வாசகர்களை திருப்திப்படுத்துகிறேன் என்று பின்னோக்கி வளைவதை விட்டொழித்தால் சந்தோசப்படுவேன்.

      இன்னும் இருக்கு...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. என்னுடைய பயண திட்டமிடல்கள் பெரும்பாலும் வெகு முன்னதாக திட்டமிடப்படும். உதாரணமாக எந்தத் தேதியிலிருந்து எந்தத்தேதி வரை இந்திய மண்ணில் இருப்பேன் என்பது ஒரு வருடம் முன்பேயும் டிக்கெட்டுகள் 9மாதம் முன்பும் உறுதிப்படுத்தப்படும்.
      இது பயண செலவுகளை குறைப்பதற்கு நன்கு உதவும்.

      இதை ஏன் சொல்கிறேன்னா சனி மதியம் ஆசிரியர் நிகழ்ச்சி முழுதுமாக முடியும்முன்னே கிளம்ப வேண்டிய சூழ்நிலை. ஆசிரியர் மதிய உணவு திட்டங்களை எல்லாம் அறிவிக்கும் முன்னே எடுத்தது. சாப்பிடற விசயத்தில கொடுத்த வாக்கைத் திரும்ப பெறும் விசயம் இல்லை என்பதால் ஆசிரியர் கேள்வித் தாள் தரப் போறார்னு தெரிந்ததுமே பட்டென்று apparate ஆகி விட்டோம். தமிழ்ல சொல்லனும்னா அபீட்டூ...

      அடுத்த தடவை முதல் சனிக்கிழமையை மொத்தமாக ஆசிரியருக்கு என ஒதுக்கி விட வேண்டியது தான். அது தான் பயணத்தின் நோக்கத்தை முழுமை அடைய செய்யும் என்பதால்.

      மதியம் திட்டமிட்டபடி மதிய உணவை முடித்து வந்த பிறகு தான் நான், டாக்டர் சுந்தர் மற்றும
      திருப்பூர் சிபிஜி உட்கார்ந்து புத்தகங்களை அலசி ஆராய்ந்தோம். அங்கே அலசி ஆராய்நத பிறகு இன்னும் புத்தகங்களை கையால் கூட தொட இயலவில்லை. ரொம்ப பிசி. இரத்தப்படலத்தை படிப்பது என்பது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது மட்டும் தான் முடியும். தொடர்ச்சியாக நான்கு நாட்களாவது விடுமுறை வேண்டும். ரத்தப்படலத்தில் முழுமையாக முக்கி எழ. ஏற்கனவே கிட்டத்தட்ட 15 மாத புத்தகங்களை ஒரு வாரம் முன்பு தான் கைப்பற்றினேன். அவற்றை படித்து விமர்சனம் எழுதவே முன்னுரிமை. என்னது MGR செத்துட்டாராங்கற மாதிரியான பழய கதைகளின் விமர்சனங்களை இங்கு பதிவு செய்வேன். பழய கதைகளைப் பற்றிய எனது பார்வையாக இருந்தாலும் ஆசிரியரின் உழைப்புக்கு நான்செய்யும் சிறு மரியாதை.

      பிறகு மாலை சந்திப்பு. ஸ்டாலில் போய்ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்த பிறகு ஆசிரியர் மரத்தடியில் இருக்கிறார் என பகை சமிஞை வர அங்கே சென்றோம். அங்கே எங்களுக்காக காத்திருந்தது பெவிகோல் பெரியசாமி. சரியான திட்டமிடல்களின் முன் ஏதோ சொல்லி அதன் பொருட்டு பல தடவை வாங்கிய அனுபவமோ என்னவோ கொரில்லா க்ளூ போட்டு ஒட்டியது போல் வாயை எதற்கும் திறக்க மாட்டேன்னுட்டார்.

      என்னுடைய கோரிக்கையாய் வைத்தது மீதமிருக்கும்யங் ப்ளூபெர்ரியின் கதைகளை ஒரு இரண்டு அல்லது மூன்று ஆல்பமாய் போட்டு முடித்து விடுவது. அதன் சிக்கல்களை விவரித்து ஆசிரியர் கூறினார். ஆனால் இதை என்றேனும் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது

      சந்தா தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சில பல காரணங்களுக்காக அது சரியான முடிவே என்னும் போதினும் என்னைப் போன்ற குண்டு புக்கு ரசிகர்களுக்கு அது பேரிடியே. 😩😩😩😩

      Delete
    4. இன்னும் இருக்கு.

      Delete
    5. //இதே மாதிரி ஒரு ப்ரெஞ்சு கலெக்சன் ஒன்னை நண்பர் பழனிவேலுக்கு வாங்கி வந்தேன். அதன் விலை, மேக்கிங் மற்றும் தரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தாலே நம்ம லெவல் என்னன்னு புரியும்.//
      நிச்சயமா நண்பரே உலகத்தரம் இல்ல அதுக்கும் மேல....!

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. உலகெங்கும் வெளிவந்த XIII ன் முதல்பாகங்களை சேகரிக்கும் எண்ணத்தை எட்டிப்பிடிக்க உதவிய நண்பர்கள் பிரசன்னா கலீல் மகேந்திரன் ரா.தி.முருகன் அனைவருக்கும் நன்றிகள் மட்டும் சொன்னால் மிகையாகாது. இதுவரை சுமார் 15 முதல்பாக இதழை பிடித்துள்ளேன் இன்னும் தொடரும்......!

      Delete
    8. // சில பல காரணங்களுக்காக அது சரியான முடிவே என்னும் போதினும் என்னைப் போன்ற குண்டு புக்கு ரசிகர்களுக்கு அது பேரிடியே.//
      இந்த எண்ணம் எனக்கும் உண்டு மஹி.எனினும் ஆசிரியர் இதை பரிசீலிப்பார் என்று நம்புவோமாக.

      Delete
    9. ///சந்தா தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சில பல காரணங்களுக்காக அது சரியான முடிவே என்னும் போதினும் என்னைப் போன்ற குண்டு புக்கு ரசிகர்களுக்கு அது பேரிடியே. 😩😩😩😩////-----

      ஹா...ஹா...கூல்டவுன் மஹிஜி& ஃப்ரெண்ட்ஸ்.
      எனக்கு அந்த பயமேயில்லை.

      ஆண்டுக்கு இத்தனை குண்டு புக்குகள் என்பது இனிமேல் உறுதியான சமாச்சாரம்.

      இயர் ஒப்பனிங் சென்னை ரிலீஸ்,
      கோடைமலர்,
      ஆண்டுமலர்,
      தீபாவளிமலர்,
      ஈரோடுரிலீஸ்,

      -----இந்த மினிமம் எண்ணிக்கை இனி தவிர்க்க முடியாதது. எண்ணிக்கை ஒன்று குறையலாம்.

      4சந்தாக்களில் தலா ஒரு குண்டு புக்வந்தாலே 4உறுதி.

      3மாதத்திற்கு ஒரு வெயிட்டான பார்சல் நிச்சயமாக இருக்கும்.

      350,400,450,5000என்ற மைல்கல் இதழ்கள் இருக்கு...!! இவற்றை மைல்கல் இதழ்களோடு மெர்ஜ்ம் பண்ணிக்கிடலாம்.

      மில்லியன் ஹிட்கள் என்ற ஜாக்பாட் இருக்கு...!!!

      இதை எல்லாவற்றையும் தாண்டி புத்தகவிழாக்களில் வாசகர்கள் ஆவலோடு அள்ளுவது குண்டு புக்குகளே...குண்டு புக்குகளே...!!!

      இதை ஸ்டாலில் கொஞ்சம் நேரம் செலவிட்டு பார்த்தால் உணரலாம்...

      லயன்-முத்துவும், குண்டு புக்குகளும் பிரிக்க முடியாதவை...!!!பீ ஹேப்பி&என்சாய்...!!!

      வானமே இனி எல்லை....

      Delete
    10. // புலன் விசாரணை: யுத்தத்தினால் வெற்றி, சத்தத்தினால் வெற்றின்னு்சொல்லிக் கொள்ளலாம் சிலர். என்னைப் பொறுத்தவரை இது ஆசிரியரின் பெருந்தன்மையின் வெற்றி. இது குறைந்த பட்ச நேர்மையும் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் பக்குவமிருப்பவர்களால் எளிதாக உணர முடியும்.//

      Well said JI!

      +1

      Delete
    11. திரு. ஸ்டாலின் சார். கடந்த இரண்டு வருடங்களா வாய்ஸ் நோட்டின் முலமாகவும் வாட்ஸ்அப் க்ரூப் மூலமாகவும் சர்வாதிகாரி அய்யாவுடன் பழக்கம். வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கும் அளவுக்கு நன்றாகத் தெரியும். மிக எளிமையான மனிதர். செயல் வீரர். லீ ஜார்டினில் மீட்டிங் அறை ஒதுக்குவது முதல் ஈபுவியில் ஸ்டால் கிடைப்பது மற்றும் இன்ன பிற பிண்ணனி வேலைகளை திறம்பட செயல்படுத்திக் காட்டியவர்.

      ஸ்டாலின் சாரை 2016 ன் போதே சந்திக்க வேண்டியது. அப்பொழுது அவர் ஈரோட்டில் இல்லாத காரணத்தால் சந்திக்க இயலாமல் போயிற்று. நேரமின்மை காரணமாக அவர் தளத்துக்கெல்லாம் வருவதில்லை.

      ஞாயிறு காலை அவர் வீட்டில சைவ விருந்து. ஆசிரியரும் வருவார். விடியக் காலை வரை நண்பரகளுடன் பாட்டுக்கச்சேரி, அரட்டைக் கச்சேரி மற்றும் இன்ன பிற சண்டைக்காட்சிகள் நிறைந்த குடும்ப காவியத்தை கண்டு களித்திருந்ததால் போனது லேட்டு. சீனியர எடிட்டர், ஆசிரியர் மற்றும் கருணையானந்தன் சாரும வந்திருந்தனர். நான் செல்லும் போது ஸ்டாலின் சார் இல்லை. அவருடய அம்மா எங்களை வரவேற்க அவருடைய மகள் எங்களுக்கு பரிமாறினார். சிறு வயதிலேயே விருந்தோம்பல் கற்பிக்கப்பட்டிருப்பது மிகுந்த சந்தோசம். இதை நானும் செய்யனும்.

      மெனுவை டீட்டெய்ல்டா சொல்லி ராகவன் சாரிடம் மொத்து வாங்குவதற்கு பதிலாக அடுத்த விசயத்திற்கு போய் விடுகிறேன். ஆசிரியர் மொத்து வாங்குவதை பார்ப்பதை விட அலாதி சுகமானது அவர் பேசுவது கேட்டு பார்த்து ரசிப்பது. இதை விளக்கமா ஆதி சொல்லிருக்கிறார். இரண்டு முறை நேரில் சந்தித்தும் எனக்கு இன்னும் ஆசிரியரிடம் சரளமாக பேசக் கூச்சம். என்னை விட கூச்ச சுபாவ ஹசனோ அன்று சரளமாக கேள்விக் கணைகளால் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார். பிறகு ஸ்டாலின் சார் வர சாப்பீட்டீங்களா என்றார். என்னது மறுபடியும் முதல்ல இருந்தா என்றபடி அவருடன் சிறிது நேரம் பேசி அனைவருடனும்போட்டோக்கள் எடுத்து முடித்துக் கொண்டு அன்றைய பொழுது இனிதே நிறைவுற்றது.

      Delete
    12. இந்த நிகழ்ச்சிகளின் போது பெங்களூர்பரணி அவர்களை குடும்பத்துடன் சந்தித்தது, டெக்ஸ் விஜயராகவனை குடும்பத்தாருடன் சந்தித்தது போன்ற பல மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள்.

      சனி முழுதும் விழாக்கூடத்தில் இருக்க வேண்டும் என்றதிட்டத்துடன் இனி வர வேண்டும். தொடர்பிலிருக்கும் நிறய நண்பர்களை நேரில் சந்திக்க முடியாமல் போய் விட்டது. அடுத்த வருட திட்டத்தில் இதை சரி செய்து விட வேண்டியது தான். டெக்ஸ் சம்பத் இதை காமெடியா என்னிடம் “முன்னாடி உக்காந்து ஆசிரியர் பேசறதையே வாயை தொறந்து பாத்திட்டு இருந்தா பின்னாடி யார் இருக்காங்கன்னு தெரியாது” என்று ஜாலியாக கூறினார். அவ்வளவு சுவராஸ்யமா பேசி நண்பர்களை சந்திக்க விடாம பண்ணிய ஆசிரியரை அவர் மேல் பஞ்சாயத்து இல்லாத மழை நாள் ஒன்றில் மொத்த காரணமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் 😜.

      கே வி அண்ணா. அவர், ர. ப. காதலர்பழனி வேல் சார் எல்லாரையும் ஹாலில் பார்தது ஹலோ சொன்னதோடு சரி. கேவி கூட எனக்கு போனில் நல்ல பரிட்சயம் உண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் போனில் பேசுவோம். அவர் ஞாயிறும் அங்கிருந்தது எனக்குத் தெரியாது. அவர்போன் செய்து நாங்கள் எங்கிருக்கிறோம் என விசாரித்து சற்றே கடுமையான மதிய வெயிலிலும் பழனி மற்றும் பிரசன்னாவுடன் வந்தவர், என்றும் பாதுகாக்க வேண்டிய ஒரு மசால் தோசையை அறையில் இருந்த அனைவர் கையிலும் திணித்தார். உட்கார்ந்து அரைமணி நேரம் மாங்கா அடித்தோம்.

      கேவி காண முடியாத யுனிகான். மெட்ரோ நகரத்தின்வெள்ளந்தி மனிதர்களில் ஒருவர்.

      அப்புறம் சேந்தம்பட்டியான்ஸ். I just love you nasty & dangerous fellows 😜.

      இத்தனை நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் குடுத்த ஈபுவி காமிக்ஸ் திருவிழா பல்லாண்டு காலம் தொடர வேண்டும். இம்மாதிரியான ஒரு நட்பு குழு உருவாக பாதி காரணம் ஆசிரியர். மீதி காரணம் அவர் வெளியிட்ட காமிக்ஸ்கள். அப்படின்னா முழு முதல்மொத்த காரணமும் அவர்தான். இந்த ஜோதியை அணையாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையே.

      ஆசிரியரின் குழு மிக சிறியது. இந்த மாதிரியான மிக சிறிய பணிக்குழுவையும் சிறிய வாசகர் கூட்டத்தையும் கொண்ட பத்திரிக்கையை நடத்துவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. அதுவும் தினம் மாறி வரும் பண மதிப்பு, பேப்பர் விலை என நிறய variables கொண்ட வியாபாரம் இது. நமது காமிக்ஸ் காதல் ஆசிரியரை உற்சாகப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அவற்றிற்கு காரணம் இருக்கும் அதை ஆசிரியர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் அவர் பார்வைக்கு கொண்டு வந்து விட்டு அவரை அரவணைத்து செல்வோமே.

      இன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு.

      Delete
    13. எழுத்துநடைல பின்றீங்க MP அவர்களே!!

      குறிப்பா,
      ////ஒரு மசால் தோசையை அறையில் இருந்த அனைவர் கையிலும் திணித்தார். உட்கார்ந்து அரைமணி நேரம் மாங்கா அடித்தோம். ///

      ஹா ஹா ஹா!! :))))))))

      குலுங்கி குலிங்கி சிரிச்சதுல கட்டில்லேர்ந்து கீழே விழுந்துட்டேன்!

      Delete
    14. எதிர் ரூம்ல தான இருந்தேன் எனக்கு மசால் தோசை வாடையே வரலயே MP

      Delete
    15. இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கா.....ஙே.....
      இவ்வளவு நாள் இருந்தா மசால் தோசை கெட்டு போயிருக்குமே.....
      ஃபிரீசர்ல வச்சிருக்கீங்களா என்ன..

      Delete
    16. J நான் விழாஹாலிலேயே உங்களுக்கு
      மசால் தோசை கொடுத்தேன்.
      இன்னுமா பிரிக்கலே.
      நிச்சயம் ஊசிப்போகாது.

      Delete
    17. ஹா...ஹா.... மசால் தோசை; செம மஹி ஜி. அசத்தலான விவரிப்பு. சும்மா பேச்சை அப்படியே போட்டு பின்னி பெடல் எடுத்துட்டீங்க...👏👌👏👌👏👌👏

      கணேஷ் கே.வி.@ மசால் தோசைக்கு ஒரு தேங்ஸ் சார். என் பையன் அடுத்த நாளே லஞ்ச் கொண்டு போயிட்டான். நல்ல கிஃப்ட். நைஸ் ஐடியா.

      Delete
  2. Great editor sir,that RATHAPADALAM released second was fantastic moment all of us. You and your mission done a great job .It should be Continued future also Once again I personally thanks for your hard work in RATHAPADALAM SPECIAL BOOK.

    ReplyDelete
  3. காலத்திற்க்கும் நிலைத்துநிற்க்கும் காலத்தால் அழியாத ஒரு அற்புத காவியத்தையும் சற்றும் எதிர்பாராத புலன்விசாரணை இந்த தொகுப்பு இதை இந்த உலகதரத்தில் கொடுத்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி.
    மீண்டும் ஒருமுறை காமிக்ஸ் உலகில் தான் ஒரு பிக்பாஸ் என்பதை நிருபித்துள்ளார்
    கூடிய விரைவில் அதாவது ஜனவரிக்குமுன் அனைத்தையும் விற்றுத்தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவேன்

    ReplyDelete
    Replies
    1. பு.வி. சர்ப்ரைஸ் க்கு, இதை செய்து முடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை பழனி. இதில் உங்களோடு எல்லோரும் கைகோர்க்கிறோம்.

      எல்லா வாட்ஸ்அப் குழுக்கள், காமிக்ஸ் அல்லாத பிற குழுக்கள்,

      முகநூல் குழுக்கள் என எல்லா இடத்திலும் இந்த மெகா இதழைப் பற்றிய மினி விளம்பரத்தை பகிருங்கள்.

      Delete
    2. நிச்சயமா இப்போதே 5 புக் wanted list ல் இருக்கு ஆனா ஈரோட்டில் இன்னும் ஸ்டாக் வராமல் நண்பர்கள் தவிப்பு

      Delete
  4. பரபரப்பான பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே ....👍👌

      Delete
  5. புத்தகத் திருவிழாவில் எடுத்த வீடியோகள் எல்லாம் இங்கு upload செய்துவிட்டேன் நண்பர்களே!

    https://www.youtube.com/channel/UCUN-0QBGhRdlLuMuX6RcCqQ

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் காத்திருந்தேன் நன்றி நண்பரே....!

      Delete
    2. எப்போதும் போல அட்டகாசப்படுத்தி விட்டீர்கள் பரணி....பாராட்டுக்கள்& நன்றிகள்.

      சனிக்கிழமை மாலை 4மணிக்குப்பிறகு நடப்புகளை, உங்கள் &J jiயின்வீடியோ பதிவகளில் கண்டறிந்தேன். அதற்கு ஒரு ஸ்பெசல் நன்றிகள்👏👏👏👏💐💐💐💐

      Delete
  6. சீனியர் எடிட்டர் அய்யா,கருணையானந்தம் ஐயா,ஜூனியர் எடிட்டர், அனைத்து நண்பர்களையும் சந்தித்தது மறக்க இயலாதருணம், நண்பர் மகேந்திரன் அவர்கள் கேட்டதை தர இயலவில்லை
    முன்பின் அறியாத ஒருவருக்கு அவர்கேட்டதை வாங்கிவரும் எண்ணம் நிச்சயம் காமிக்ஸை படிப்பவரைத்தவிர யாருக்கும் வராது.

    ReplyDelete
    Replies
    1. டீயும் தேங்காய் பன்னும் தானே!!! அடுத்த ஈபுவி யில் வாங்கித் தரலாம் பழனி சார். கண்டிப்பாக இருவருக்கும் நேரம் இருக்கும்.

      Delete
    2. நிச்சயமா நண்பரே....காத்திருக்கிறேன்...!

      Delete
  7. ஆசிரியர் கேட்ட முதல் கேள்வி குழந்தைகள் எங்கே....? யாருக்குவரும் இந்த அக்கறை....? நிச்சயம் எனது நன்றிகள் கோடி...!

    ReplyDelete
  8. (கடந்த பதிவிலிருந்து ஒரு மீள் பின்னூட்டம் - இப்பதிவிலுள்ள படங்களின் பொருட்டு)


    ***** யூனிஃபார்ம் ட்ரெஸ் ******

    இம்முறை ஈரோட்டு விழாவில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விசயம் - நண்பர்கள் கே.வி.கணேஷ், மது பிரெசன்னா, திருப்பூர் குமார், செந்தில் சத்யா, பழனிவேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் அணிந்துவந்த டீ-ஷர்ட்!! இரத்தப்படலத்தின் நாயகனையும், XIII குறியீடையும் தாங்கித் தயாரிக்கப்பட்டிருந்த கறுப்புநிற டீ-ஷர்ட்டும், அதற்குப் பொருத்தமான படு ஸ்டைலான XIII குறியீடு தாங்கிய pendantம் - அபாரமான உருவாக்கங்கள்!!

    இது போதாதென்று, XIII குறியீட்டுடன் லஞ்ச் பேக், விசிட்டிங் கார்டுகள் என்று அசத்தியிருந்தார்கள்!!

    இலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவுக்கு வெயிட் லிஃப்டிங் பயிற்சியின்போது முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில வாரங்களாக ட்ரீட்மென்ட்டில் இருந்தாலும்கூட, நண்பர்களைக் காணும் பொருட்டும், இரத்தப்படல வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டும் முதல்முறையாக ஈரோடு வந்திருந்தார். இடுப்பில் சுற்றப்பட்ட crepe பேன்டேஜ் சகிதம் வலிகளைப் பொறுத்துக்கொண்டு இரண்டுநாட்களும் ஈரோட்டிலேயே தங்கியிருந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியப்பட வைத்திடும் நிகழ்வு! வாழ்க அவரது இரத்தப்படலக் காதல்!!

    நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை மிகுந்த சிரமத்துக்குப் பின் தேடியலைந்து வந்து, நண்பர்கள் அனைவருக்கும் அன்புப் பரிசாக XIII முத்திரையுடன் லஞ்ச் பேக்கும், திருக்குறள் புத்தகமும் பரிசளித்துச் சென்ற Mr.உற்சாகம் (எ) கே.வி.கணேஷ் காட்டும் அன்பும், நட்பும் எல்லையில்லாதவை!

    இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் நான் ரத்த படலம் முன்பதிவு செய்யவில்லை. ஸ்டாலில் கிடைக்கிறதா. இப்போது வாங்கினால் புலன் விசாரணை இணைந்து கிடைக்குமா. விலை என்ன.

      Delete
    2. // இலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவுக்கு வெயிட் லிஃப்டிங் பயிற்சியின்போது முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில வாரங்களாக ட்ரீட்மென்ட்டில் இருந்தாலும்கூட, நண்பர்களைக் காணும் பொருட்டும், இரத்தப்படல வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டும் முதல்முறையாக ஈரோடு வந்திருந்தார். இடுப்பில் சுற்றப்பட்ட crepe பேன்டேஜ் சகிதம் வலிகளைப் பொறுத்துக்கொண்டு இரண்டுநாட்களும் ஈரோட்டிலேயே தங்கியிருந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியப்பட வைத்திடும் நிகழ்வு! வாழ்க அவரது இரத்தப்படலக் காதல்!! //

      +1

      Delete
    3. @Trichy vijay

      இன்று மாலையில் நம் ஸ்டாலுக்குச் செல்வேன்! விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்!

      Delete
  9. ஹாய் சார் புத்தகம் கைக்கு கிடைத்து விட்டது, புத்தகத்தின் அட்டகாசமான மேக்கிங் புத்தகம் லேட்டாக கிடைத்ததை மறக்கடித்துவிட்டது. இந்த மாதிரியான மேக்கிங் வேறு எதாவது பப்ளீஸர் செய்து இருப்பார்களோ என்பது சந்தேகம்தான். உங்கள் உங்களது டீமின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரு புலன் விசாரணை இல்லாது இருந்து இருந்தால் இந்த புத்தகம் முழுமை அடைந்து இருக்குமா என்பது சந்தேகமே. புலன் விசாரணைக்காக மெனக்கெட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த புத்தகத்தை கையில் எடுத்த போது ஒரு 20,25 வருடம் பின்னோக்கி போகின்ற மனநிலை ஏற்பட்டது. அட்டை படங்கள் மட்டுமே நேற்றிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். வித்தியாசமான வித விதமான டிசைன் மற்றும் Font வடிவமைப்பு கிறங்கடிக்கிறது, என் நண்பர் புத்தக வடிவமைப்பை பார்த்த பிரமிப்பில் ,இன்ப அதிர்ச்சியில் தலை சுற்றி ரூமை பூட்டி கொண்டு ரொம்ப நேரம் உட்க்கார்ந்து இருந்ததாக சொன்னார் :).
    மூன்று தனி தனி புத்தகங்களாக வந்தது சிறப்பு, படிக்க ஏதுவாக இருக்கும். மின்னும் மரணம் புத்தக எடை காரணமாக இன்னும் படிக்கவில்லை.
    ஸ்லிப் கேஸ் டிசைன் அருமை.
    ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை தவிர்த்து இருக்கலாம்.
    மொத்தத்தில் 10/10. பட்டாசு ....

    ReplyDelete
  10. // And அரங்கில் உங்கள் ஒவ்வொருவரின் மலர்ந்த முகங்களையும் பார்த்த பின்னரே மெது மெதுவாய் பிராணன் கூட்டுக்குத் திரும்பியது !! //
    தரத்திற்காகவும்,சரியான முறையில் இதழை ஒப்படைக்க வேண்டும் என்ற
    உங்களின் மெனக்கெடல் வியப்பையும்,மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.அதேநேரத்தில் இவ்வளவு சிரமங்களையும்,அழுத்தத்தையும் ஒரே நேரத்தில் இழுத்துப் போட்டு கொள்ள வேண்டாமே சார்,
    உங்கள் உடல்நலன் உங்களுக்கு மிக முக்கியம்,அதேபோல் நீங்கள் எங்களுக்கு மிக முக்கியம்.இனி வரும் காலங்களில் இதை பரிசீலியுங்கள் சார்.
    மேலும் இந்த மெனக்கெடலையும்,உழைப்பையும் பார்த்தாவது தேவையற்ற கணைகள் உங்கள் மீது வீசப்படுவது குறையும் என்று நம்புகிறேன்.
    மிகப்பெரிய ஒரு பணியை சிறப்பாக முடித்ததற்கு எமது வாழ்த்துகளும்,வந்தனங்களும் சார்.

    ReplyDelete
    Replies
    1. PFB உங்களோட சரியா பேச வாய்ப்பு கிடைக்கல,அடுத்த முறையாவது அந்த சந்தர்ப்பம் அமையும் என்று நம்புகிறேன்.

      Delete
    2. நண்பர் ஸ்டீல் அவர்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருப்பார்.

      Delete
  11. தன்னை தானே தேடி அலையும் மனிதரின் நிழலாக நான் செல்ல இருப்பதால் ...


    அடுத்த பதிவில் ...:-)

    ReplyDelete
  12. சார் இப போலவே விறுவிறு,,,சுவாரஷ்யம்,,,நல்ல வேள போஸ்டர தரல,,,,தந்தாலும் இப முன்னால அது சந்தோசத்த கூட்டியிருக்கும்,,,,இந்த டப்பியின் வசீகரம் இருந்திருக்குமா,,,,ஆனா சந்தோசம் இருக்கத்தானே செய்யும், ,,,இந்த டப்பிய பாக்லன்னாலும்,,,ஐயோ எனக்கே புரிலயே,,,சந்தோசம் சார்,,,தினமும் டப்பிய பார்த்து சுற்றி சுற்றி புளகாங்கிதம் அடைகையில், ,,இந்த பதிவு உற்சாகத்த கூட்டும்,,,,சார் இபன்னாலே எதயும் தாங்கிடலாம், கடந்திடலாம்தானே,,,,இப புத்தகம் குறித்து நீஈஈஈஈஈஈளமாய் நீஈஈஈஈஈஈஈஈலமாய் விரைவில்

    ReplyDelete
  13. //உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys//

    புத்தகத்தை அனுப்பினால் தானே சார் கொண்டாட முடியும். புத்தகம் திங்கள்கிழமை வந்துவிடும் என்று நீங்கள் சொன்னதை நம்பி, அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கொண்டு வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். வழக்கமாக 1 மணிக்கு முன்பாக வந்துவிடும், ஆனால் நேற்று வரவில்லை. அதன் பிறகு, 2 மணியளவில் லயன் ஆபீஸ்க்கு போன் செய்து கேட்டால், "சரிபார்த்துவிட்டு கூப்பிடுகிறோம்" என்றார்கள் ஆனால் கூப்பிடவில்லை, நானும் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தேன், ஆனால் எப்போது எல்லாம் அட்டென்ட் செய்கிறார்களோ அப்போது எல்லாம், அதே பதில் தான் கிட்டியது.

    தொடர்ந்து 7 முறை போன் செய்து அலுத்து போய், கடைசியாக மாலை 6 மணிக்கு போன் செய்தபோதும் அதே பதில் தான், so லைனில் காத்திருக்கிறேன் சரிபார்த்து சொல்லுங்கள் என்று சொன்ன பிறகு, 15 நிமிட காத்திருப்புக்கு பிறகு புத்தகத்தை இன்று அனுப்பிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள்..

    என்ன சொல்வது என்று தெரியவில்லை..ஆசிரியர் இதை எல்லாம் கவனிக்கின்றாரா என்று தெரியவில்லை...புத்தகமே கிடைக்காமல் எப்படி சந்தோஷத்தை கொண்டாட முடியும் என்று புரியவில்லை...அல்லது அவர் "புத்தகம் கிடைத்தவர்கள் சந்தோசம் மட்டும் எனக்கும் போதும்" என்று நினைத்து இதை சொன்னாரா என்றும் தெரியவில்லை...

    எது எப்படியோ, புத்தகத்தை அனுப்பாமல் விட்டுவிட்டார்கள்..பாவம் அவர்களும் மனிதர்கள் தானே...

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete


  15. Mahesh5 August 2018 at 23:30:00 GMT+5:30
    @ விஜயன் சார்,

    இன்று நம் முந்தைய வெளியீடுகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். அதில் லயன் 250வது மலர் தென்பட்டது. 680 பக்கங்களில் முழு வண்ணத்தில் டெக்ஸ் கதைகள் உள்ளன, தற்பொழுது dynamite special இல் 777 பக்கங்கள் colour+ B/W.

    ஒரு 1000 பக்கங்கள் இருந்திருந்தால் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    It may be to late. But I just shared my thoughts. If possible please add a extra story in b/w to make it a one time special as tribute to 70 years of tex.

    ReplyDelete
  16. ஆசிரியரின் உழைப்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது

    ReplyDelete
  17. இரத்தபடலம் புத்தகம் பெற்றுக்கொண்டேன் ..புத்தகத்தின் ஆக்கம் அருமை,அற்புதம் என சொற்களில் அடக்கமுடியாது.அதையும் தாண்டி புனிதமானது.இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என எண்ணிய அந்த உயர்ந்த உள்ளம் பாராட்டபட வேண்டும். புலன்விசாரணை பார்க்க பார்க்க பரவசம்..கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது..

    ReplyDelete
    Replies
    1. ///கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது..///👌👌👌👌👌

      அருமை யாக சொன்னீர்கள் சார்...

      +1000000000000000....

      Delete
    2. // கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது.. //

      Well said!

      Delete
    3. // கொடுத்த பணம் பெரிதல்ல..அளித்த மனம் மிக மிக பெரிது..//
      உண்மைதான் சார்.

      Delete
  18. சீனியர் எடிட்டர்: ரத்த படலம் புத்தகம் எல்லோரும் பெற்று கொண்டு வந்த போது அதனை அமைதியாக ரசித்த சீனியர் எடிட்டர்! நமது ஸ்டீல் கிளாவ் புத்தகத்தை வாங்கி மேடையில் சீனியர் எடிட்டர் அருகில் வைத்து பிரித்து கொண்டு இருந்தார். ஸ்டீல் கிளாவ் ஒவ்வொரு புத்தகத்தையும் ரசிக்க, நமது சீனியர் எடிட்டரும் அவருடன் ஒரு குழந்தை போல் அவைகளை ரசித்த விதம், அவர் கண்களில் தென்பட்ட சந்தோசம், சிறு குழந்தை புதிதாக ஒரு விசயத்தை பார்க்கும் ஆர்வத்தில் அவைகளை கண்டது! மறக்க முடியாது!

    ReplyDelete
  19. இலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவை முதல் முறையாக சந்தித்தேன்! ஆனால் மிகவும் இயல்பாக பல நாள் பழக்கம் போல் பேசினார்! அவரின் காமிக்ஸ் காதல் அவரை கடல் கடந்து இங்கு வர செய்தது ஆச்சரியமான விஷயம்! அடுத்து அடுத்து வேலைகள் இருந்ததால் அவரிடம் அதிக நேரம் பேச முடியவில்லை! சாரி நண்பரே!

    ReplyDelete
  20. அன்புள்ள விஜயன் சாருக்கு,
    நேற்று 2 மணிக்கே கொரியர் பார்சல் - வந்திருந்தும் - மதியShift யில் இருந்ததால் - (பக்கத்து வீட்டில் வாங்கிகி வைத்திருந்தார்கள் - நண்பர் X 111 மாதிரி நேற்று தான் என் பெயரைத் தெரிந்து கொண்டார்கள்) இரவு 10.30 மணிக்குகு தான் பார்சலை பிரிந்து பார்க்க முடிந்தது.
    ப்பா ...iஉங்களை பாராட்டி எழுதுவதா இல்லை திட்டி எழுதுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை - (தனியா ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து விட்டு கும்மு கும்முன்னு கும்முறேன்... | )
    இப்ப அதுக்கு நேரமில்லை...

    ReplyDelete
  21. இளம் வாசகர் அகில் மற்றும் அவரது அண்ணனை விழாவில் சந்தித்தேன்! ஆசிரியர் அருகில் இருவரும் அமர்ந்து ID கார்டு எழுதி கொண்டு இருந்த ஆசிரியருக்கு உதவி கொண்டு இருந்தார்கள்! விழாவிற்கு வந்தவுடன் நமது விழா நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்கு உரியது!

    அண்ணன் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்பதாகவும் அவரும் நமது காமிக்ஸ் புத்தகம் படிப்பவர் எனவும் சொன்னான்!

    அகில் காமிக்ஸ் படி, அதே நேரம் படிப்பில் கவனம் செலுத்தி உனது அண்ணன் போல் நல்ல வேலைக்கு வர வேண்டும் என எனது எண்ணத்தை சொல்லிவிட்டு வந்தேன்!

    ReplyDelete
  22. பிரசன்னா கார்த்திக் கரூர்:- மற்றும் ஒரு இளவாசகர்: விழாவில் அவருடன் அறிமுகம் செய்து கொண்டேன்! அதிகம் பேச முடியவில்லை! ஆனால் புத்தக திருவிழா வாட்ஸ்up குழுவில் இவர் போட்ட மீம்ஸ் எல்லாம் டாப் கிளாஸ்! அருமை! இவருக்கு காமெடி / நகைச்சுவை இயல்பாக வருகிறது!

    அடுத்து ஏதாவது ஒரு கார்டூன் கதைகளுக்கு இவரை மொழி பெயர்க்க செய்ய சொல்லி பார்க்கலாம்!

    பின் அவருடன் வாட்ஸ்up மூலம் தொடர்பு கொண்ட போது தான், இவர் ஒரு காலேஜ் assistant professor என தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  23. இரத்தப்படலம் முன்பதிவு செய்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டு புத்தகத்தை ஈரோடு புத்தக விழாவில் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு எதற்காக?இதை நம்பி தகவல் தெரிவித்து விட்டு புத்தக விழாவிற்கு நேரில் சென்றால் அங்கே இருந்த நிர்வாகி பணம் குடுத்தால் மட்டுமே புத்தகம் கிடைக்கும் இது ஆசிரியரின் கண்டிப்பான உத்தரவு என்று கூறி புத்தகத்தை தர மறுத்துவிட்டார்.உடனே சிவகாசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டேன் அதற்கு அவர்கள் அவரது பிரதி ஈரோடு புத்தக விழாவிற்கு அனுப்பப்பட்டுவிட்டது அதை நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று புத்தக விழா நிர்வாகியிடம் போனில் சொல்லிய பிறகும் அவர் தர மறுத்துவிட்டார்.மேலும் கைவசம் மூன்று பிரதிகள் இருந்தபோதும் ஒன்றை என் கண்ணெதிரிலேயே விற்பனையும் செய்துவிட்டார்.மீதமுள்ள இரண்டு பிரதிகளில் ஏதாவது ஒன்றை கொடுங்கள் என்று கேட்டபோது அதற்கும் நேற்று இரவே பணம் கொடுத்து விட்டார்கள் அதை பெற்றுக் கொள்ள இன்று மதியம் வருவார்கள் என்று கூறிவிட்டார்.(ஒருவேளை
    இரவு பணத்தைக் கொடுத்து விட்டு புத்தகத்தை எடுத்துச் செல்ல அடுத்த நாள் லாரியை எடுத்துக் கொண்டு வருவாா்களோ?)அப்பொழுது இரண்டு மாதத்துக்கு முன் பணத்தை கட்டிவிட்டு 10 நாட்களுக்கு முன் தகவல் தெரிவித்து விட்டு வேலையை விட்டு விட்டு 50 கிலோமீட்டர் பயணம் செய்து வந்த நான் ...? இறுதியாக புத்தகத்தைக் கொரியரில்தான் அனுப்புவோம் என்று கூறி அனுப்பி விட்டனர்.புத்தக விழாவில் தருவதற்காக அனுப்பப்பட்ட பிரதிகளை கொடுப்பதில் என்ன சிரமம்?இதில் நான் மிகவும் வருத்தப்பட்ட விஷயம் என்னவென்றால் அந்த நிர்வாகி நேரடியாக ஆசிரியரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் மறுத்துவிட்டார் என்பதே.

    ReplyDelete
    Replies
    1. சார்...சின்னதொரு திருத்தம் !! புத்தகங்களை ஈரோட்டில் சனிக்கிழமை காலையில் புத்தக ரிலீஸின் போது பெற்றுக் கொள்ளலாமென்று அறிவித்திருந்தோமே தவிர, புத்தக விழா நடைபெறும் 14 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாமென்று அல்ல !! அங்குள்ள ஒன்பதுக்கு ஒன்பது ஸ்டாலுக்குள் நாங்கள் ஊரிலிருந்து கொண்டு வரும் ரெகுலர் புத்தகங்களை பத்திரப்படுத்தவே இடம் போதாதெனும் போது - மூன்று கிலோ எடையிலான இந்தப் பிரதிகளில் முன்பதிவுகளையும் சேமித்து வைக்க சாத்தியம் தான் ஆகுமா ?

      ஈரோட்டில் சனிக்கிழமை பெற்றுக் கொள்ளுங்களென்று அறிவித்து 82 பிரதிகளை எடுத்து வந்தோம் - உங்களதையும் சேர்த்து ! அன்று முழுமைக்கும் அந்தப் பட்டியலிலிருந்த மூவர் வரவில்லை - நீங்கள் உட்பட ! So அந்த மூவருக்கும் திங்கட்கிழமை சிவகாசியிலிருந்து கூரியரில் அனுப்பச் சொல்லி தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் நீங்களோ திங்கட்கிழமை ஸ்டாலில் புக்கைக் கோரி வருவீர்களென்று நாங்கள் தெரிந்து கொள்வது எவ்விதமோ ?

      திங்கட்கிழமை புத்தக விழாவில் விற்பனை செய்ய வெறும் 7 பிரதிகள் மாத்திரமே அங்கே கைவசம் வைத்திருந்தனர் & அதற்கென ஆளாளுக்கு வரிசை கட்டிக் கொண்டிருந்தனர்.ஆனால் , லேட்டாக வந்தாலுமே ஈரோட்டில் தான் எனக்கு புக் வேண்டுமென்று நீங்களும் ஸ்டாலில் நின்றபடிக்கு வற்புறுத்தினால் அங்கிருப்பவர் தான் என்ன செய்வார் ? போன் அடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் அதற்குப் பதில் சொல்லும் நிலையில் இருக்க சாத்தியமாகிடும் தானா ? இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் போது நான் அன்றைக்கு எங்கள் வாங்கி மேனேஜருடனுனான மீட்டிங்கில் அமர்ந்திருந்தேன் ! என்ன மாதிரியான பதிலை நான் அங்கிருந்து சொல்லியிருக்க முடியுமோ சார் ?

      உங்கள் வருத்தம் புரிகிறது ; ஆனால் சனிக்கிழமை பெற்றுக் கொள்ள வேண்டியதை எல்லோரையும் போல் அன்றைக்கே பெற்றிருந்தால் இந்த வருத்தத்துக்கே அவசியம் இருந்திராதே ?

      Delete
    2. // So அந்த மூவருக்கும் திங்கட்கிழமை சிவகாசியிலிருந்து கூரியரில் அனுப்பச் சொல்லி தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் நீங்களோ திங்கட்கிழமை ஸ்டாலில் புக்கைக் கோரி வருவீர்களென்று நாங்கள் தெரிந்து கொள்வது எவ்விதமோ ? //
      புரிந்து கொள்ளுங்கள் நண்பரே,,,,புத்தகத்த கையில் ஏந்திய பின்னர் உங்கள் கைகளில் ஏறும் உற்சாகம், உங்க உள்ளத்தயிம் நிறைக்கட்டும்

      Delete
    3. கூரியர்களில் அல்லாது, ஈரோட்டில் "இ.ப." பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தயை கூர்ந்து ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடணும் - ப்ளீஸ் ! இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில் உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் ! உங்கள் புக்கிங் நம்பர் ; அல்லது பெயர் & முகவரி அவசியமாகிடும் folks !!
      இதில் எந்த இடத்தில் சனிக்கிழமை மட்டுமே புத்தகம் கிடைக்கும் என்று இருக்கிறது?மேலும் இதற்கு முன் மின்னும் மரணம் புத்தகத்தையும் இதே போல் தகவல் தெரிவித்து விட்டு நான் ஸ்டாலில்தான் பெற்றுக் கொண்டேன்.அல்லது நான் தகவல் தெரிவிக்கும் போதாவது ஈரோட்டில் சனிக்கிழமை அன்று மட்டுமே புத்தகம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கலாம்

      Delete
    4. இதை இவ்வளவு தூரம் நான் எழுதுவதற்குக் காரணம் நான் ஸ்டாலுக்கு சென்றபோது அங்கே நிர்வாகியை தவிர வேறு யாருமில்லை அப்பொழுது ஸ்டாலில் மூன்று பிரதிகள் இருந்தது. அதற்குப் பிறகு அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு அவர்கள் புத்தகத்தை தந்து விடுமாறு கூறியும் அடுத்து அவர் உங்களை தொடர்பு கொண்ட பின்னர்தான் ஒரேடியாக தர மறுத்துவிட்டார்.

      Delete
    5. ayya sun அவர்களின் தவறை (ஆசிரியரின் கண்ணோட்டத்தில்) உடனே சுட்டிக்காட்டும் ஆசிரியர், அலுவலகத்தில் நடந்த தவறை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ? 9-aug-2017 அன்றே முன்பதிவு செய்தும், எனக்கு இன்னும் புத்தகம் அனுப்பாதது ஏனோ? நேற்று(திங்கள்கிழமை) பல follow-up கு பிறகு, "சனிக்கிழமை அன்று miss ஆகிவிட்டது, ஆகையால் கண்டிப்பாக இன்று(திங்கள்கிழமை) அனுப்பிவிடுகிறோம்" என்று லயன் அலுவலகத்தில் உறுதி அளித்தார்கள். ஆனால் இன்று போன் பண்ணி, "இன்று தான் அனுப்ப போகிறோம், உங்களுக்கு நாளை(புதன்கிழமை) கிடைத்துவிடும்" என்கிறார்கள். ஒருமுறை தவறலாம் ஆனால்....

      நான் புதுவை முகவரிடம் வாங்கி இருந்தாலே, எனக்கு ஞாயிறு அன்றே புத்தகம் கிடைத்து இருக்கும் ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு பதிவு செய்தும், இன்னும் புலம்பி கொண்டும், காத்திருந்து ஏமாற்றத்தோடு இந்த உன்னதமான சந்தோஷ தருணத்தை அனுபவிக்க முடியாமல் அல்லாடி கொண்டு இருக்கின்றேன்.

      ஒரு மைல் கல் இதழின் சந்தோஷத்தை, அனைவரின் கூடவும் பகிர்ந்து அனுபவிக்க முடியாத மிக பெரிய கஷ்டத்தை ஆசிரியர் உண்டு பண்ணிவிட்டார்.

      ayya sun தவறை சுட்டி கட்டுவதில் முனைப்பு காட்டும் ஆசிரியர், என் குறையை நிவர்த்தி செய்வதில் ஏன் முனைப்பு காட்டவில்லை. அவரின் உழைப்பில், உருவாக்கத்தில் வெளியிடும் ஒரு மைல் கல் புத்தகத்தின் output ஐ நேரில் பார்த்து ரசிக்க நினைக்கும் அவர், என் போன்றவர்கள் அந்த சந்தோஷத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருத்திவிட்டாரா?

      எடிட்டர் சார், நாங்களும் மனிதர்கள் தான் சார்... எங்களின் உணர்வுகளையும் சிறிதேனும் கருத்தில் கொள்ளுங்கள் ஆசிரியர் அவர்களே.. மனம் வெறுத்து விட்டது சார்

      இந்த ப்ளோகில் இதுவே என் இறுதி பின்னூட்டம்..நன்றி

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. I also experienced the same when NBS was released sir. But ....ஆசிரியர், என் குறையை நிவர்த்தி செய்வதில் ஏன் முனைப்பு காட்டவில்லை. அவரின் உழைப்பில், உருவாக்கத்தில் வெளியிடும் ஒரு மைல் கல் புத்தகத்தின் output ஐ நேரில் பார்த்து ரசிக்க நினைக்கும் அவர், என் போன்றவர்கள் அந்த சந்தோஷத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருத்திவிட்டாரா?....I don't think our editor deserves this accusation. As we all know he does his best to please us. But such things must have happened out of his knowledge.

      Delete
  24. ஜெயகுமார் அறந்தாங்கி: இவர் தானாகவே வந்து தன்னை அறிமுக படுத்தினார்! நானும் அவரிடம் என்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டேன்! மிகவும் அமைதியாக பேசும் மனிதர், தீராத காமிக்ஸ் ஆர்வம் அவரை இந்த விழாவிற்கு இழுத்து வந்து இருக்கிறது!

    ReplyDelete
  25. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். பிற்காலத்தில், வாழ்வின் மறக்க முடியாத நாட்களை என்றேனும் ஒரு நாள் அமர்ந்து பட்டியலிட்டேன் என்றால், நிச்சயம் இரத்தப்படலம் வெளியீட்டு விழா நாளுக்கும் அதில் இடமிருக்கும். 2010-ல் கறுப்பு வெள்ளை புத்தகத்துக்காக கொட்டும் மழையில் சிவகாசிக்கு பைக்கில் வந்தது நினைவை விட்டு என்றும் அகலாது, அது எனக்கான காமிக்ஸ் கம்-பேக். பிறகு 2012ன் நமது மறுவருகை தொடங்கியபோது பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமிருக்கவில்லை. ஆனால் மெல்ல மெல்ல சூழ்நிலை மாறி மின்னும் மரணம் என்னும் உச்சத்தை நாம் தொட்டபோது இதற்கு மேல் ஏதும் செய்து விட முடியாது என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டிய அற்புதமாக இரத்தப்படலம் வெளியாகியுள்ளது. உள்ளே கூடத் திறந்து பார்க்க முடியாதவனாக, புத்தகங்களின் அட்டைகளில் லயித்துக் கிடக்கிறேன். craftwork-ன் உச்சம் இந்த அட்டைகள், மிகக்குறிப்பாக இரண்டாம் பாகத்தின் அட்டைப்படம். எதிர்பாராத ஆச்சரியம், புலன் விசாரணை. மேடையில் வைத்துப் பாராட்டி, நண்பர்களனைவரின் கைத்தட்டல்களில் நனைந்து.. ஒரு அற்புதமான தினத்தைச் சாத்தியமாக்கிய உங்களுக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும். மதியத்துக்கு மேல் தமிழினி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் நிறைய நேரம் செலவழிக்க முடியாமல் போனது மட்டுமே சிறு குறை என்னளவில். அடுத்த முறை ஒரு நாள் முழுக்க நண்பர்களோடே செலவிட வேண்டும், பார்க்கலாம். மீண்டுமொரு முறை, மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல..

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களது பங்களிப்புகளைத்தான் படிக்கிறேன்,,,,அருமை,,,துவக்கம் ஈர்த்து விட்டால் பின் கடப்பது சாதரணம்,,,,,நீங்க, ஜே, ஆசிரியர் மூவரின் பக்கபலமும் இப இரசிகனான என்னை இரசிக்க வைத்து கொண்டிருக்கிறது,,,வரலாறே ஆனாலும் உங்கள் தமிழ் இரத்தப்படல இரசிகனை நெஞ்சார படிக்கச் செய்யுது,,,,ஆசிரியர் தம் வேளைப்பளுவை குறைத்ததுடன், அவர் வழக்கமாய் தாங்கி/தாண்டி வரும் சோதனையை சாதனையாயும் மாற்றியுள்ளதே,,,,அபாரம்

      Delete
    2. ////அடுத்த முறை ஒரு நாள் முழுக்க நண்பர்களோடே செலவிட வேண்டும், பார்க்கலாம்.////

      கண்டிப்பாக சாா்!

      Delete
    3. ஏம்பா
      சொல்லாம கொள்ளாம ஜூட் விட்டீங்க.

      மதியம் தேடி அலுத்துட்டேன்.

      எடிட்டரோட செக்க ஃபிரேம் பண்ணியாச்சு

      Delete
    4. அம்பின் ஜெ சார்,

      மாலை மூன்று மணிக்கு தமிழினி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீடு. க.மோகனரங்கன் மொழிபெயர்த்த “குரங்கு வளர்க்கும் பெண்” தொகுப்பை நான் அறிமுகப்படுத்திப் பேசினேன். ஆகவே உடனே கிளம்பிப் போக வேண்டிய சூழல். அடுத்தடுத்த வெளியீடுகள் - நிகழ்வுகள். நடுவில் சாயங்காலம் ஏழு மணி போல நம் மரத்தடிக் கூட்டத்தில் சிறிது நேரம் தலைகாட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அடுத்த முறை வேறேதும் பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் ஒருநாள் முழுக்க காமிக்ஸ் உள்ளங்களோடு செலவிட ஆசை. நம்புவோம். மீண்டும் நிச்சயம் சந்தித்து உரையாடுவோம்.

      பிரியமுடன்,
      கா.பா

      Delete
  26. ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள்.
    இந்த தவறுக்கு நானே பொறுப்பு என்பதால் தயக்கத்துடனே இக்கோரிக்கையை வைக்கிறேன்.
    கடந்த பல மாதங்களாக இரத்த படல முன்பதிவு இருந்து வந்தாலும் நான் முன் பதிவு இரண்டு தவணைகளாக செய்திருக்கலாம்தான்.ஆனால் அப்படி முன்பதிவு செய்தபின் புத்தகவிழாவில் கலந்து கொள்ள வருவதில் தடங்கல்கள் ஏதேனும் நேரும்போது சரி நாம்தான் முன் பதிவு செய்து விட்டோமே. அடுத்த ஆண்டு புத்தகவிழா வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம் என்று ஒருவித சமாதானம் எனக்குள் ஏற்பட்டு அமைதியாக இருந்து விடுவேன்.ஆனால் இந்த முறை முன் பதிவு செய்யாவிட்டால்தான் புத்தகம் வாங்குவதற்காகவாச்சும் கண்டிப்பாக போக வேண்டிய சூழல் உண்டாகும்.நேரிலே போய் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.ஆனால் நேற்று அங்கு வந்தபின்தான் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகம் கொண்டு வந்திருப்பது தெரிந்தது. எக்ஸ்ட்ராவாக புத்தகங்கள் இருக்கும் என்று நம்பினேன்.அது இல்லையென்றவுடன் அதிர்ச்சியில் ஸ்டீல்க்ளாவிடம் கேட்டபோது அவர் இங்கு மட்டுமல்ல.ஸ்டாலில்கூட புத்தகம் இல்லை.ஆசிரியர் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகம் கொண்டு வந்துள்ளார். அலுவலகத்தில் எக்ஸ்ட்ராவாக புத்தகம் இருந்தால்தான் கிடைக்கும் என்ற வெடிகுண்டை வீசியவுடன் என்ன செய்வதென புரியவில்லை. அங்கு வந்தவர்களில் நான் மட்டுமே புத்தகம் இல்லாமல் திரும்பியிருப்பேன் போலிருக்கிறது.எனவே ஆசிரியர் அவர்கள் தயவு செய்து ஒரு செட் புத்தகம் இருந்தால் அதனை வழங்க முடியுமா என்று தெரிவியுங்கள் Please.
    எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால் மெர்கண்டைல் வங்கி கணக்கில் உடனே செலுத்திவிடுகிறேன்.புத்தகவிழாவில் நேரில் கேட்க தயக்கமாக இருந்ததால் இங்கு கேட்கிறேன்.தவறாக எண்ணவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தாமதபடுத்தமல் ஆஃபீசுக்கு ஃபோன் செய்யவும்,,,

      Delete
  27. சென்ற பதிவிலேயே இதை கேட்டிருந்தேன்
    எடிட்டர் சார்.மறுபடி கேட்பதால் தவறாக எண்ண வேண்டாம்.அலுவலகத்திற்கு ஃபோன் பண்ணி கேட்கலாம்தான். ஆனால் ஏற்கனவே நண்பர் ஒருவருக்கு நீங்கள் பதிலளிக்கையில் அச்சிட்டத்தே 800 பிரதிகள்தான். 500 முன்பதிவு போக ஏஜண்ட்களின் ஆர்டரை பொறுத்தே மீதமுள்ளதை கூற முடியும் என்று கூறியிருந்தீர்கள். அதனால் அலுவலகத்தில் இரத்தப்படலம் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டால் வேறு வழியில்லையே என்பதால்தான் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.ஒரு செட் ஸ்லிப் கேஸூடன் இரத்தப்படலம் இதழ் கிடைக்குமா சார்?
    முன் பதிவு விலையை விட புத்தக விலை தற்போது அதிகமாக அதிகமாக உள்ளதால் இப்போது ஒரு பிரதிக்கு கூரியரில்பெற எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்.10% discount கிடைக்குமா சார்?
    நேரமிருக்கையில் பதிலளியுங்கள் சார். Please.

    ReplyDelete
  28. //உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys ; உங்களின் அடுத்த சந்தோஷத் தருணத்துக்கான களம் தேடி நாங்கள் வழக்கம் போல் வலை வீசத் துவங்குகிறோம்//

    நம்முடைய XIII வெற்றி சார்......!
    வலையில ஸ்பின்ஆப் மாட்டுனா am very happy sir

    ReplyDelete
    Replies
    1. மார்த்தா , ஆலன் ஜனவரிக்கு உறுதின்னு பட்சி சொல்லுதே நண்பா

      Delete
    2. ஏப்பா இருவரும் புதையல்ல முழ்கி மூழ்கி எழாம என்னய்யா செய்யறீங்க...!!!

      அண்டர்டேக்கர் வந்தபோதில மிதுன் என்ன செஞ்சாரோ அதே மாதிரி செய்ங்கப்பா...

      பனியன் போட்ட அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் சவால்...!!!

      அண்டர்டேக்கர் ஐ விட பரபரப்பில் ஒரு படியாச்சும் முந்தனும்...கமான்.கமான்..!
      ஸ்டார்ட் மியீசிக்.

      Delete
    3. இதுக்கு மேலயுமா முந்தனும்,,,,டெக்ஸ் புலன் விசாரணய படிங்கப்பு,,,,அடுத்த மொறயும் பதினெட்டு வாங்கணுமல்ல,,,வரலாறுன்னாலும் சுவாரஷ்யம் ஏராளம்

      Delete
    4. கெளபாய் கதைகளுக்கு அடுத்த, ரியாலிட்டி கதைகளான XIII, லார்க் எல்லாம் பலமுறை வாசிக்க பிடிக்கும்.


      தகவல்கள்... மேலும் தகவல்கள்.... மேலும் மேலும் தகவல்கள் என இருக்கும் பு.வி. லாம் முழுமையாக ஞாபகம் வைப்பதுலாம் என்னால் முடியாது...!!!

      மறுபடியும் 18/18லாம் வேணாம் சாமி...!!!

      நீங்களும், பழனியும் பாஸானாத்தான் ஸ்பின்ஆப் னு சொல்லி இருக்கார்.

      இருவரும் நல்லா படிங்கப்பா...

      ஒட்டுமொத்த ஸ்பின் ஆப் ரசிகர்கர்களுக்கும் ஆப்பு வெச்சுடுமா, பாஸ் பண்ணிடுங்கப்பா...!!!

      அந்த ஐரினா, பெலிஸிட்டி யோட ஸ்பின் ஆப்புக்கு ஏதாச்சும் ஆச்சு இரண்டு பேரும் மாட்னீங்க,இப்பமே சொல்லிட்டன்,ஆமா...!!!

      Delete
    5. பரிட்சைக்கு நான் ரெடி... STV sir.

      Delete
    6. அப்பாடி பெலிஸிடி ரெடி... நல்லது பழனி.

      ஸ்டீலு@ மைக்க பயப்படுத்தறது மறந்துட்டு,பட்டுனு பரீட்சையில் பாசாகுற வழியை பாருங்க. ஐரினாவுக்கு ஏதாச்சும் ஆச்சு...???

      ஜோன்ஸ்க்கு யார்யா பரீட்சை எழுதறீங்க???

      Delete
  29. ஹிஹி.. ஒரு விசயம் உறுதி!

    முன்பு கருப்பு-வெள்ளையில் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் வெளியானபோது பல மாதங்கள் குடோனில் தேங்கிக் கிடந்து - ஒருவழியாகக் காலியான பின்னே - அதன்பின்னே அதன் அருமை புரிந்து -அதை வலைவீசித் தேடியலைந்து - சிலர் 5000, 10,000 கொடுத்தெல்லாம் கூட வாங்கி - பலர் அதுவும் கிடைக்காமல் (அ) அவ்வளவு விலை கொடுத்து வாங்க மனமில்லாமல் - 'வண்ணத்தில் என்றாவது ஒருநாள் வெளியாகும்-அப்போது வாங்கிக்கொள்ளலாம்' என காத்திருந்த கதையெல்லாம் நாம் பலப்பல வருடங்களாக அறிந்த ஒன்றே!!

    அந்த வரலாறு மீண்டும் திரும்பும்போல தெரிகிறது! அதுவும் வெகு சீக்கிரமே!

    இப்போது அச்சிடப்பட்டிருக்கும் புத்தகங்களோ மிகக் குறைவு! ஆனால் டிமான்ட் ரொம்பவே அதிகம்!! ஏதோ சில காரணங்களால் முன்பதிவு செய்ய முடியாமல் போனவர்கள் - அட்லீஸ்ட் - இந்தக் கணத்திலாவது உஷாராகவில்லையென்றால் - திரும்பவிருக்கும் வரலாற்றில் அவர்களும் இடம் கிடைக்கப்போவது போவது உறுதி!

    ஹிஹி!! உஷாரா இருந்துக்கங்கப்பு... சொல்லிப்புட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. அதும் புத்தகம் வேண்டாம் என்றவர்கள் புத்தகத்த பார்த்த பின் மனம் மாறியவர்கள் அதிகம்,,,இரண்டு பேர் எப்படியும் வாங்கணும்னு சென்றுள்ளனர்,,,,இதில் ஃபிரென்சு தேச சேகரிப்பாளர்களும் வியந்து போய் வாங்க கொடி பிடித்தால்,,,

      Delete
    2. //அந்த வரலாறு மீண்டும் திரும்பும்போல தெரிகிறது! அதுவும் வெகு சீக்கிரமே!//
      அப்படி நடக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம் ஈ.வி.

      Delete
    3. திரு.ஈ.வி.
      நீங்கள் வேறு வயிற்றில் புளியை கரைக்கிறீர்கள்.
      சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டவன் மாதிரி தவித்துக் கொண்டிருக்கிறேன்.
      எப்படியும் ஈரோடு தரிசனத்தை மிஸ் பண்ணக்கூடாது இந்த முறை என்று மனதில் திட்டமிட்டு நான் புக் பண்ணாமல் இருந்தால்தான் கட்டாயமாக போக வேண்டிய நிர்பந்தம் எனக்கு உண்டாகும் என்று தவறாக யோசித்து புத்தகம் கிடைக்காமல் ஏமாற்றமுடன் வந்து மூன்று நாளாக பைத்தியம் பிடித்தார்போன்று இருக்கிறேன்.
      நம்பினால் நம்புங்கள் ஏமாற்றத்தில் ஜூரமே வந்து விட்டது. புத்தகம் கண்ணில் படாமல் இருந்தால் கூட இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்காது.
      நடந்த தவறுக்கு நானே பொறுப்பு என்றாலும் ஜீரணிக்க முடியவில்லை.

      Delete
    4. வந்த சில மணி நேரங்களில் எட்டு ரத்தப்படலம் காலியாம். கடை நாளை விடுமுறை.

      ATR சார். சற்றே தாமதமானாலும்கண்டிப்பாக உங்களுக்கும்்கிடைக்கும். நிதானமாக வியாழக்கிழமை பணம் கட்டி பிறகு ஆபிசுக்கு மெயில் தட்டி விடுங்கள். எப்படியும் ஜனவரி புத்தக விழா வரை ஸ்டாக் இருக்கும்.

      Delete
    5. ///எப்படியும் ஜனவரி புத்தக விழா வரை ஸ்டாக் இருக்கும்.///

      ஹோ ஹோ ஹோ!! அதற்கான வாய்ப்பெல்லாம் மிகமிகக் குறைவு!

      Delete
    6. M.P.சார்
      எவ்வளவு பணம் கட்ட வேண்டுமென்பது தெரியவில்லை சார்.
      இன்று மதியத்திற்கு மேல் மூன்று முறை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டேன் சார். லைன் பிசியாகவே உள்ளது.புத்தகம் கேட்டு விசாரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது.

      Delete
    7. ATR,

      Rupees 2675 to be transferred to SUNSHINE LIBRARY account and e-mail to be sent. They mail the next day promptly.

      Delete
  30. அந்த வரலாறு மீண்டும் திரும்பும்போல தெரிகிறது! அதுவும் வெகு சீக்கிரமே!//


    மறுகருத்தே இல்லை ஈவி ஜி

    ReplyDelete
  31. அட்டைப் பெட்டியும் ,மூன்று புத்தகங்களின் வடிவமைப்பும் ,அழகியல் நேர்த்தியும் என்னை மிகவும் இம்சிக்கின்றன.

    ஒவ்வொரு முறையும் படிக்க எத்தனிக்கும் போது அட்டைப் பபடத்தைத் தாண்டி செல்ல மனசே இல்லை.

    மூன்று புத்தகத்தில் உள்ள 'இரத்தப் படலம் ' எழுத்துக்கள் மூன்று வெவ்வேறு வண்ணம், எழுத்துரு, டிசைன் என கலர்புல்லாக வரவேற்கிறது.

    மேல் முனையில் படைப்பாளிகளை உரிய முறையில் கௌரவித்தது இன்னும் அழகு
    .
    மூன்று அட்டைப்படத்திலும் முதல் இடத்தைப் பிடித்தது இரண்டாவதே.சொல்லி சிலாகிக்க ஆயிரம் விசயங்கள் நுணுக்கமாகவே கொட்டிக் கிடக்கிறது.அதில் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால் "வாவ்..."அதைத் தாண்டி வேறு வார்த்தை வரவில்லை.

    2350ல் ஒரு காமிக்ஸா? ச்சீ எனக்கு இந்தப் பழம் புளிக்கும் என்றவர்கள் கூட 'எனக்கு இந்தப் பபழம் கிடைக்குமோ 'என வேண்டுவது ஆசிரியரின் உழைப்புக்குண்டான வெகுமதியாகவே நினைக்கிறேன்.

    பஞ்சாயத்தைக் கிளப்பிய புலன் விசாரணையை இலவசமாக பல்லக்கிலே கொண்டு வந்து, அனைவரின் வாயெல்லாம் பல்லாக மாற்றியது ஆசிரியரின் பரந்த மனதைக் காட்டியது.

    இறுதியாக ஒன்று ,

    இது மைல் வெளியீடு அல்ல ,அதையும் தாண்டி பிரம்மாண்டம் ஆனது.

    இன்னும் சில நாட்களில் பயங்கர அலசலுக்கு உட்படப் போகிறது இ.ப.அதனால

    'பத்திரமா பாத்துக்குங்க '

    ReplyDelete
  32. நான் ஈரோட்டு புத்தக விழாவிற்கு வருவேன் என்று கூறி இருந்தேன தவிர நான் இரத்த படலம் புத்தக விழாவில் பெற்று கொள்கிறேன் என்று தளத்திலும் கூற வில்லை தனியாக மெயிலும் பன்னவில்லை.
    ஆனால் புத்தகம் வரவில்லை ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் புத்தக விழாவில் வாங்க வில்லை அதனால் இன்று கூரியரில் அனுப்புகிறோம் என்று பதில் வந்தது.

    நான் புத்தக விழாவில் வாங்காததற்கு காரணம் என் அலுவலகத்தில் இரத்த படலம் வரும் பொழுது அதை அப்படியே பிரித்து "பத்திங்களா காமிக்ஸ் எப்படி தங்கமா ஜொலிக்குதுன்னு" பெருமையடித்து கொள்ள.

    பெருமையடித்துகொள்ள இன்னமும் ஓரிநாள் காக்க வேண்டும். பொறுமையே இல்லாதவனிடம் இப்படி பொருமையை சோதிக்கிறிங்களே. நியாயமா????

    ReplyDelete
  33. முத்திரையை பார்த்து பேய் அறைந்தால் போல் அனைவரும் சிலையாவது ஏன்?.

    அவர்களின் முகபாவனை வைத்துதான் நான் அவர் யூதர் என்று உறுதி செய்தேன்.//

    ஆன்டெரர் யூதர் என்பதற்கு அவர்கள் ஏன் அஞ்சல் வேண்டும்?

    தவிர ஒரு யூதனின் இயல்பான குணாதிசயங்கள் ,வாழ்வியல் முறைகள் கிஞ்சித்தும் ஆன்டெரரிடம் இல்லை..

    கண்டிப்பாக அவர் யூதர் இல்லை...


    Ganeshkumar Kumar7 August 2018 at 16:23:00 GMT+5:30
    காரல் மாக்ஸ் யூதர் ஆனால் யூத இனத்திற்கு முற்றிலும் ஏதிரான மூலதனத்தை ஏழுதியவர்.

    //கண்டிப்பாக யூதர் இல்லை//

    யூதராக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இதுதானே நீஜங்களின் நிசப்தத்தின் ஸ்பெஷல்.கதை தெளிந்த ஓடை போல் இருந்தாலும் காட்ற்று வெள்ளம் போல் சிக்கல் நிறைந்தது.

    என்னதான் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் சொல்லி கொண்டாலும் ,நாஜி களின் ஆக்ரமிப்பு போது அவர்கள் யூத நண்பர்களை காட்டிக் கொடுத்தவர்கள் கொடுத்தவர்கள். அனால் அதை நீ குற்றம் செய்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் யூதன் ஒருவனை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
    யூத குடும்பத்தை காட்டிக் கொடுத்தற்காக யாரலும் அவர்களை குற்றம் சுமத்த முடியாது.
    ஆனாலும் அவர்களின் மனசாட்சி ஏதோ ஒரு பக்கம் அவர்களை குற்றவாளி ஆக்குகிறது. ஏதார்த்தம் அவர்களை குற்றமற்வர்கள் என்று நீருபிக்க நடைமுறையில் தூண்டுகிறது.

    இது தான் நான் புரிந்து கொண்டது.

    ReplyDelete
    Replies
    1. ////காரல் மாக்ஸ் யூதர் ஆனால் யூத இனத்திற்கு முற்றிலும் ஏதிரான மூலதனத்தை ஏழுதியவர்./////
      சொல்ல வந்தது சரி கணேஷ்குமார் சார் ! ஆனால் உதாரணம் தவறு
      கார்ல் மார்க்ஸ் யூத வம்ச வழியை சேர்ந்தவர்தான் ....
      போலந்து தவிர இதர ஐரோப்பிய தேசங்கள் அனைத்தும் இரண்டாம் உலக போருக்கு முன்பாகவே யூதர்களை வெகுவாக ஒடுக்கி வந்தன..(JEWISH EMANCIPATION).
      இக்காரணத்தினால் மார்க்ஸ் –ன் தந்தை மார்க்ஸ் பிறக்கும் முன்னரே கிறிஸ்தவ மதத்தை தழுவி ஹெர்ஷல் என்ற தனது பெயரின் முதல் பகுதியினை ஹெய்ன்ரிச் என ஜெர்மானிய பெயராக மாற்றி கொண்டார் ..
      பிரஷ்ய ஏவாஞ்சலிக்கல் சர்ச்சில் மொத்த மார்க்ஸ் –ன் குடும்பமே பின்னர் ஞான ஸ்நானம் எடுத்து கொண்டது .டச்சு யூத பெண்மணியான மார்க்ஸ் –ன் அன்னை உட்பட .

      மார்க்ஸ் –ன் திருமணம் நடைபெற்றது ஒரு ப்ராட்டஸ்டன்ட் சர்ச்சில் ..
      மார்க்ஸ் ஒருபோதும் ஒரு யூதராக வளர்க்கப்படவில்லை

      ஒரு கிறிஸ்தவராகவே வளர்க்கப்பட்டார் .

      தாஸ் கேபிட்டல் எழுதும்போது அவர் ஹீஜிலியன் தத்துவ கொள்கை பிடிப்புடையவராய் இருந்தார்

      Delete
    2. ///என்னதான் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் சொல்லி கொண்டாலும் ,நாஜி களின் ஆக்ரமிப்பு போது அவர்கள் யூத நண்பர்களை காட்டிக் கொடுத்தவர்கள் கொடுத்தவர்கள். அனால் அதை நீ குற்றம் செய்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் யூதன் ஒருவனை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.////

      கிறிஸ்தவரல்லாத யாரை பார்த்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் ...
      தான் ஒரு யூதன் என தன்னை பிரகடனப் படுத்தி கொள்ளும் நிலை எந்த ஒரு யூதருக்கும் அக்காலகட்டத்தில் இல்லை குறிப்பாக கதை நிகழும் பகுதியில் .
      யூதர்கள் கிப்பா அணிந்து தலையை மறைக்கவே விரும்புவார்கள் .
      தலையில் யூத சின்னத்தை(உங்கள் கூற்றுப்படி ) வரைய முற்படும் யூதன் யூத பழக்கங்களை பின்பற்றவே முயல்வான் ..
      பிறப்பால் ஒரு யூதன் யூதனாக முடியாது ...யூத மத சடங்குகளை அனுசரிப்பவனே யூதனாக ஏற்று கொள்ளப்படுவான்...
      கிறிஸ்தவர்களை விட உயர்ந்தவர்கள் என செல்டிக் பிரிவினர் எண்ணிக்கொள்ள இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள் என பேகன்கள் கருதி இருந்த காலம் அது

      Delete
    3. பிரகடனப் படுத்தி கொள்ளும் நிலை எந்த ஒரு யூதருக்கும் அக்காலகட்டத்தில் இல்லை குறிப்பாக கதை நிகழும் பகுதியில் ///

      யூதர்களை பற்றி எழுத ஆரம்பித்தால் இந்த பிளக் போதாது.
      நி.நி நிறைய விஷயங்கள் --லாம் தான். ஆனால் இதுதான் சரி என்பதற்கு ஏற்றவாறு கதை போக்கு அமைக்கபடவில்லை. எல்லாம் எண்ணங்களின் பிரவாகம் தான்.

      Delete
    4. //இதுதான் சரி என்பதற்கு ஏற்றவாறு கதை போக்கு அமைக்கபடவில்லை. எல்லாம் எண்ணங்களின் பிரவாகம் தான்.//

      மெத்த சரி கணேஷ்குமார் சார்...

      ஒரு சக வாசகனாய் கதையை பற்றி உங்களுடன் உரையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி...

      நி.நி..ஒரு அற்புத படைப்பு..

      Delete
    5. எனக்கு இக்கதையை படிக்க துவங்கிய போதே எப்படி ஒரு ஐரோப்பியன் இவ்விதம் ஜென் குருக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ முடிந்திருந்திக்கிறது என்ற பிரமிப்பு தொடா்ந்து இருந்து கொண்டே இருந்தது!

      ஏனென்றால் மேற்கித்திய கலாச்சாரத்திற்கும், கிழக்கத்திய கலச்சாரத்திற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு!

      ஆண்டெராின் முகத் தோற்றம் என்னளவில் ஒரு சீனரைப் போலதான் உள்ளது!

      மேலும் அவரது வாழ்க்கை சம்பவங்களை குறைந்தபட்சம் 10 ஜென் கதைகளோடாவது பொருத்திப் பாா்க்க முடியும்!

      (அவா் வெறும் கலை பொருட்கள் சேகாிப்பாளா் என்று மட்டுமே பாா்ப்பது இக்கதையின் ஆழத்தையே குறைத்துவிடும்!)

      அவா் சீனரா? யூதரா? அல்லது வேறு ஐரோப்பிய இனத்தவரா? என்பதிலே குழப்பம் இருந்தாலுங்கூட,

      அவரது வாழ்க்கைப்பாடு முற்றிலும் ஜென்னோடு பொருந்திப் போவதாகவே இருக்கிறது! கூடவே ஜென்னும், சூபியும் வேறானத்தல்ல! ஒரே மாதிாியான தன்மையுடையவை தான்!! பல ஜென், சூபி ஞானியாின் வாழ்க்கை சம்பவங்களும் பொருந்திப் போவதை நடைமுறையில் காண முடியும்! இதற்கு இணையத்தில் தேடி விடை காண்பது சிரமம்!!

      இதற்கெல்லாம் விடையாகத் தான் அக்கதையில் வரும் புத்தாின் படத்தை காண்கிறேன்!!

      முடிவாக ஆண்டெரா் எந்த நாட்டைச் சாா்ந்தவா் என்பதைவிட, அவருக்கும் ஜென்னுக்கும் உள்ள தொடா்பைப் புாிந்து கொள்ள முயல்வதே சிறப்பானதாய் இருக்கும் என்பதே என் எண்ணம்!

      Delete
    6. //இதுதான் சரி என்பதற்கு ஏற்றவாறு கதை போக்கு அமைக்கபடவில்லை. எல்லாம் எண்ணங்களின் பிரவாகம் தான்.//

      ////நி.நி..ஒரு அற்புத படைப்பு..////

      +111

      நூறு சதவீதம் சாி!!

      Delete
    7. மிதுன் மற்றும் செல்வம் அபிராமியும் ஆழமான ,அழுத்தமுள்ள விவாதத்தில் எனக்கும் மகிழ்ச்சியே.

      ///நி.நி..ஒரு அற்புத படைப்பு..//

      நுறுசதவீதம் சரி.

      Delete
    8. மீண்டும் படிக்கிறேன்,,,உங்க கோணத்தில், ,,ஏதாச்சும் எனக்குன்னு தெர்தா பாப்பம்,,,

      Delete
    9. அருமையான அலசல் நண்பர்களே!

      மூன்றாம் முறை படிக்கும் ஆசையை கிளறிட்டீங்க, மார்கழியில் பார்த்து கொள்ளலாம்.

      ஆசிரியர் சார்@ நி.நி. பாகம் 2ஐ அக்டோபரில் அறிவிக்கும் 2019கி.நா. சந்தாவில் அவசியம் அறிவிக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் சார்.

      Delete
  34. மாபெரும் தலைவரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஸ்டால்கள் அனைத்தும் உடனே முடப்பட்டுவிட்டன. நாளையும் விற்பனை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!!

    ReplyDelete
  35. தமிழின தலைவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
    Replies
    1. முத்தமிழறிஞா் கலைஞாின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

      Delete
  36. @ திருச்சி விஜய்

    உங்கள் கேள்விக்கான பதில்! தற்போது இ.ப நமது ஸ்டாலில் இருபதுக்கும் குறைவான எண்ணிக்கையில் ஸ்டாக் இருக்கிறது. கலைஞரின் மறைவையொட்டி நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது!

    புத்தகத்தின் விலை ரூ.2675
    டிஸ்கவுண்டு போக ரூ.2408

    ReplyDelete
    Replies
    1. மெகா ட்ரீம் ஸ்பெஷலுக்குப் பின்னே திடீரென டிமாண்டுக்கு உள்ளான இரத்தப் படலம் மட்டுமே.

      எனவே பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம் என காத்திருக்கும் நண்பர்கள், மேலும் தாமதிக்காமல் ஒரு மைல்கல் இதழை மிஸ் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும்.

      Delete
    2. + courier charges: if someone collects for you and sending to you.

      Delete
  37. இந்த மாத இதழ்கள் என்னவாயிற்று என் அறிய ஆவல்?

    ReplyDelete
  38. அட்டைப்ப்படல அலசல்

    உள்பக்கங்களில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான ஒரிஜினல் ராப்பர்கள் மேலும் அழகானவை. ஒவ்வொரு புத்தகத்தின் பின்புறத்திலும் அந்த புத்தகத்தின் ஆறு கதைகளின் ராப்பர்களையும் அச்சிட்டிருப்பது அடடா !!!

    முன்னே B/Wல் வெளிவந்த. இரத்தப்படல ராப்பரைப் பயன் படுத்தாமல், வேறு ராப்பரைப் (அதுவும் ஒரிஜினல்தான்) பயன்படுத்தியிருப்பது , புது வகையான 'லுக் ' ஏற்படுத்தி, ஏற்கனவே படித்த கதைதானே என்ற எண்ணம் வராமல், அமைத்தது தனிச்சிறப்பு.

    அத்தனை ராப்பரிலும் என்னை மிகவும் வசியம் செய்தது, ஜேஸன் ப்ளை படலத்தின் ராப்பரே. 'ஜுடித் 'ன் மயக்கும் கண்களோடு, ஆளைச் சுண்டியிழுக்கும் பார்வையோடு, ப்ப்பா அந்தப் பார்வையை என்னால் தவிர்க்கவே முடியவில்லை . அந்த மெல்லிய ஒற்றைப் புன்னகையின் முன்னே மோனோலிசா தோற்றுவிட்டார் போங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டாளா. கைகாரி தான்.

      Delete
  39. குறை காண நினைத்தால் நிறை காண முடியாது,,,,நிறைகளும் குறைகளாகி வருத்தும்,,,,சந்தோசம் முக்கியமா,,,கொண்டாட வேண்டிய சந்தோசத்த வருத்தமாக்கி கொள்ளனுமா,,,,,சத்தமில்லஆம சாதனை படைத்தவரை குற்றவாளியாக காட்டியே தீருவேன்னு கிளம்பினா எப்படி,,,,நல்லவங்கள கடவுள் சோதிப்பாங்களோ இல்லயோ நாம சோதிக்கிறோம்,,,,பார் என்னாலதான்னு மார் தட்டறோம்,,,,அவர் ஒன்றுமறியாதவர் போல நம்மை கேட்டா , பார்ரா தம்பி உனக்கு ஒன்னும் தோனல, என்னாலதான் இந்த வெற்றின்னு அறிவுரை சொல்றோம்,,,,அட வரும் அவ்ளோதான்னு சொன்னா போதுமோன்னு யாராச்சும் கேட்டா,,,,எங்க செல்லத்த நாங்க அடிப்போம் ,கொஞ்சுவோம், ,,ஏன்னா இவரு நல்லவருங்கறோம் ,,,அதனாலதா இங்க கேக்கறோம்குறோம்,,,விஜய் சேதுபதி சொல்றார் ஒரு பேட்டில ,,,ஆமா நா கெட்டவன்தா அப்டின்னு சொல்லு,,,நல்லது செஞ்ச உன்ன தப்பா காட்டணும்னியே கேட்டா நா கெட்டவன்தானன்னு போய்ட்டே இருக்கலாமே,,,,சத்தம் , வெற்று கூச்சல் போடுபவர்கள நம்பும் உலகம் சதுதமில்லாம சாதனை செய்பவர்களை ஏளனப்படுத்த முயல்வதே உலக தர்மமா,,,அட இருவதாயிரம் மதிப்ப இரண்டாயிர சொச்சமா தந்த ஒருவர குத்தி கொடஞ்சே பாக்கனுமா,,,,அடப்போங்கயா நீங்களும்,நியாயங்களும்

    ReplyDelete
  40. தெய்வங்களா ஏன் வயித்துல புளிய கரைக்கிறிங்க. நான் நாளைக்கே இ ப ஆர்டர் பண்ணிடறேன்

    ReplyDelete
    Replies
    1. 🤣😜. ஆசிரியரே மறுக்கா இன்னொரு பெரிய குண்ணண்ட்ட்ட்டு ஸ்பெசல் போட்டு தெறிக்க விடலாமங்கற மாதிரி இருக்கனும். மீதி 250 ல எனக்குத் தெரிஞ்சு பண்டல் (20 புக்கு) வந்த ஒருமணி நேரத்துல எட்டு புக்கு காலி. கடைகளை மூட வேண்டிய அவசரம் இருந்ததால் எட்டு தான் போச்சு. யார் புக்கை பாத்தாலும் Love at first sight quality ல புக் இருக்கு. இன்னும் பதிவு பண்ணாத நண்பர்கள் பெட்டர் hurry.

      Delete
  41. 1.Pulanvisaranai contains more than 100 spinoffs and anthology series ....little vague but very interesting and informative which leads clear so many doubts of xiii mystery...deserved work of karthikai pondiyan sir ,Jonathan sir and our Vijaya sir ...hard work sir...thanks a lot for pulanvisaranai ....

    2.production value of xiii

    Slip case___heavy and protective for long period

    Wrappers_each unique and enriched ...awesome ...with elucidate 4 original wrappers ...unique titles emposed
    with golden inks(different pattern and colour)
    3.please try it plastic slipcase in future ..it may be economic but more durability

    Total marks :1000/100

    Warning:::don't miss it

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற மௌனப் பார்வையாளர்களின் கருத்துகள் மிகவும் முக்கியம் சார். தொடர்ந்து பதிவிடுங்கள்.

      Delete
  42. இரத்தப் படலம் 1 - 6 முடிச்சாச்சு!

    நாளை 2வது புக்கை முடிச்சுடலாம்னு இருக்கேன்!

    ReplyDelete
  43. 122வது. அதிகமாக எதிர்பார்த்த நேரத்தில் தொலைபேசி சதி பண்ணி விட்டது. மன்னிச்சூ.

    ReplyDelete
  44. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,என்னுடைய,வியாபாரத்தில்
    தவிற்க முடியாத பல காரணங்களாலும்,நஷ்டங்களினால் 22 ஆண்டுகளாக நான் தொடர்ந்து நடத்தி வந்த எனது வியாபார ஸ்தாபணத்தை.தொடர்ந்து நடத்த முடியாமல், மூடிவிட்டேன்.இதனால்
    என்னால் இ.ப, முன்பதிவு செய்ய இயலவில்லை.
    சென்ற Jul-23,காமிக்ஸ் அலுவலகத்திற்கு ,இ.ப.முன்பதிவுக்கான முழு தொகையினை ₹.2350.எனது சிரமத்திற்கு இடையிலும் ரெடி செய்து,தங்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பாக தங்கள் அலுவலகத்தில் பேசிய போது, இப்போது Free booking முடிந்து விட்டது.இப்பொழுது இ.ப.விலை அதிகம் என்றும் ,என்னிடம் தெரிவித்தார்கள்,நானும் எனது நிலையை விளக்கி கூறி தயவு செய்து இதை ஆசிரியரிடம் தெரிவித்து,எனக்கு சாதகமான பதிலை கொடுங்கள் என்றேன்.
    ஆசிரியர் அவர்கள் வெளி ஊர் சென்று உள்ளார், வியாழன் அன்று வருவர் ,இவரிடம் கேட்டு சொல்கிறோம் என்றார்கள்.
    வியாழன் அன்றும் நான் போன் செய்த போதும் எனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
    எனக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது.
    எப்படியும் இ.ப.வாங்கியே தீரவேண்டும் .என்ற ஆவலுடன், பல சிரமங்களுக்கிடையே, நேற்றுதான்,
    ₹.2675+100=2775,காமிக்ஸ் வங்கி கணக்கில் பணம் செலுத்தி எனது இ.ப.உறுதி செய்துள்ளேன். ஆனால் எனக்கு தற்சமயம், ஈரோடு புத்தக விழாவில் இ.ப.10% டிஸ்கவுன்ட் போக இ.ப.வின் விலை ₹.2408 தான். அது எனக்கு முன்பே தெரிந்து இருந்தால், ஈரோடில் உள்ள எனது நண்பர்களின் மூலமாகவே இதனை வாங்கி இருப்பேன்.எனக்கு 10% டிஸ்கவுன்ட் +பேக்கிங் அட்டை பெட்டி + கூரியர் செலவு சேர்த்தால் கூட,2408+150=2558.மட்டுமே வந்து இருக்கும்.நான் இதனை கூற எனக்கே தயக்கமாக இருக்கிறது.எனக்கு, என் கஷ்ட சூழலில் தான் இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது.
    எது எப்படியோ, என்னால் வாங்கவே முடியாது என்று இருந்த இ.ப.வை,என் பல சிரமங்களுகிடையில் புக்கிக் செய்துள்ளது
    எனக்கு மனம் நிறைவாக உள்ளது.எனது இ.ப.வுக்காக நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @Suresh suriya

      உங்களது தற்போதைய நிலை வருத்தமளிக்கிறது.
      இவ்வளவு சிரமத்தினிடையேவும் இ.ப'வுக்கு பணம் கட்டியிருக்கும் உங்கள் காமிக்ஸ் காதலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

      7598325050 என்ற எண்ணில் என்னைத் தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்?

      Delete
    2. Ev, நீங்க அற்புதமான மனிதர்,,,வணங்குகிறேன்

      Delete
    3. @ஸ்டீல்

      ம்ஹூம்!! உண்மையான அற்புத மனிதர்களின் நேசம் கிடைக்கப்பெற்றவன் நான் - அவ்வளவே!!

      Delete
    4. திரு ஈரோடு விஜய், அவர்களுக்கு தங்களின் கனிவான, அன்பான்த வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்களை பிறிதோர் நாளில் நான் உறுதியாக தங்களை தொடர்பு கொள்கிறேன்.
      தங்களுடைய ஆறுதலான வார்த்தைகள் என் மனதினை மிகவும் நெகிழ வைத்தது.
      தங்களை போன்ற உண்மையான அன்பு கொண்டோரின் தொடர்பு எனக்கு கிடைப்பதற்கு நான் பெருமை கொள்கிறேன்.
      நன்றிகள் பல.

      Delete
  45. புலன் விசாரணை அருமையாக போய்க் கொண்டிருக்கிறது,,,,இதோ ஃபெலிசிடியிலிருந்து,,,,கெட்டவர்கள்தான் வாழ்வியல் நெறிகள சொல்லித் தருகிறார்கள் பாசாங்கில்லாமல் யதார்ந்தத்தயுமே ! ஃபெலிசிடி , "வாழ்க்கையில் பெஸ்ட் எப்போதுமே சல்லிசாய் கிடைப்பதில்லை டியர்!" ...."வெளித் தோற்றத்தை நம்பியே வாழ்க்கைச் சக்கரம் பூமியெங்கும் சுழல்கிறது மாட்! அலசி ஆராய ஒவ்வொருவரும் தீர்மானித்து விட்டால் பிழைப்பு ஓடாது! "

    ReplyDelete
    Replies
    1. என்னது நேரா பெலிஸிட்டியா...?

      Delete
  46. Ratha padalam-Great work by our editor.Hats off to u sir.

    ReplyDelete
  47. சந்தோசம் .வார்த்தைகளால் சொல்லமுடியாத சந்தோசம் .மூன்று வண்ணப்புத்தகங்களையும் கையில் ஏந்தி.எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் புலன்விசாரணையும் கிடைத்திருக்கும்போது ஆசிரியர் இருக்கும் திக்கு நோக்கி ஒரு கும்பிடு போடத் தோன்றுகிறது .கலக்கலான புத்தகத்திருவிழாவின் போட்டோக்களும் வீடியோக்களும் ஆனந்தத்தை ரெட்டிப்பு ஆக்குகின்றன .அயராத உழைப்பைநல்கிய அனை த்து நண்பர்களையும் மனமார வாழ்த்துகின்றேன் .

    ReplyDelete
  48. டியர் எடிட்டர்

    மரண முள் உட்பட்ட மறுபதிப்பு வெளிவரா கிளாசிக் கதைகள் இணைத்து ஒரு கலர் tex குண்டு புக் அடுத்த EBFக்கு வந்தால் சூப்பர் !

    Tex Full Color Classic Omnibus

    ReplyDelete
    Replies
    1. கேட்கும்போதே இனிமையா இருக்கே,நடைமுறையில் சாத்தியமானால் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.

      Delete
    2. அடுத்த 5ஆண்டுகள் பெரிய ரீப்பிரிண்ட் கிடையாது;
      சந்தா Dல் வரும் ரீப்பிரிண்ட்ஸ் தான் என தெரிவித்து உள்ளார்.

      ஸ்டாக்கில் உள்ள மின்னும் மரணமும், இப்போதைய கலர் இரத்தப்படலமும் தீர்ந்து போனால், அடுத்து தானாகவே டெக்ஸ் கிளாசிக் ரீஈஈஈஈஈஈஈபிரிண்ட் கிட்டும். "பொறுமை" யாக காத்து இருக்கனும்.
      அநேகமாக 2020ல் டெக்ஸ் குண்ட்ட்ட்ட்ட்டு கலர் கிடைக்கலாம்....!!!

      Delete
  49. ஈரோடு புத்தக விழா நடைபெறும் காலம்வரை அலுவலகத்தில் புத்தகம் வாங்குபவர்களுக்கும் 10% டிஸ்கவுன்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    அலுவலகத்தில் வாங்குபவர்களுக்கு ரு.2775.(கூரியர் செலவு சேர்த்து)
    ஈரோடு புத்தகவிழாவில் அதே புத்தகம் ரூ.2408 என்பது கொஞ்சம் சங்கடமாக உள்ளது.கிட்டத்தட்ட ரூ.400 வரை அதிகமாக கொடுக்க வேண்டி வருவது எல்லோருக்கும் சாத்தியப்படுமா?

    ReplyDelete
    Replies
    1. திரு ATR சார்...

      ///ஈரோடு புத்தகவிழாவில் அதே புத்தகம் ரூ.2408 என்பது கொஞ்சம் சங்கடமாக உள்ளது.கிட்டத்தட்ட ரூ.400 வரை அதிகமாக கொடுக்க வேண்டி வருவது எல்லோருக்கும் சாத்தியப்படுமா?////

      உங்கள் கேள்வியில்/சங்கடத்தில் லாஜிக் இல்லை! வெளியூரிலிருந்து ஈரோட்டுக்கு வந்து புத்தகம் வாங்கிச் செல்பவர்களுக்கு பஸ் செலவு, சாப்பாட்டுச் செலவு, இன்னபிற செலவுகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரே மதிப்பில் வந்துவிடாதா?

      கடந்த வருடம் ஆகஸ்ட்டில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் முன்பதிவுக்கான காலமாக நிர்ணயித்து, அவ்வப்போது முன்பதிவு செய்யாத நண்பர்கள் விரைவாகச் செய்துவிடுங்களேன் என்று கோரிக்கையும் வைத்து....

      கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்று தெரிந்தே கூட, முன்பதிவுக்கான முயற்சியில் இறங்காதிருந்தவர்கள் பலர்! பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிலரும், 'வரட்டும் பார்த்துக்கலாம்' என்று சிலரும் - முன்பதிவு செய்யாமல் விட்டிருக்கிறார்கள்!

      'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்'

      எட்டுமாத கால அவகாசத்தில் தேமே என்றிருந்துவிட்டு இப்போது சங்கடப்படுவதில் பிரயோஜனமே இல்லையே?



      Delete
    2. திரு.ஈ.வி.
      புத்தக விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென்றே முன் பணம் கட்டாமல் உங்கள் வார்த்தைப்படி 'தேமே' என்றிருந்தேன்..மின்னும் மரணம் கூட ஒரே நேரத்தில் சந்தா கட்டியவர்களுக்கும் புத்தகவிழாவில் வாங்குபவர்க்கும் கிடைத்தது என்று கேள்விபட்டிருந்தேன்.அந்த நம்பிக்கைதான் இரத்தப் படலத்துக்கும் கொண்டிருந்தேன்.
      என்னுடைய பொருளாதார சூழ்நிலை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும்.மற்றபடி உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

      Delete
    3. ATR ராஜேந்திரன் ,ஈ வி அமைதி பெற வேண்டுகிறேன்.

      காமிக்ஸ் நேசம் மட்டுமே நமக்கு வாழ்க்கையில் மிச்சம்.

      பொறுப்போம்.
      பொறுத்துக் காப்போம்.
      பொறுத்துக் காத்திருப்போம்.

      Delete
    4. சினிமா போலீஸூ மாதிரி கடேசில வந்து 'சட்டம் தன் கடமையைச் செய்யும்'னு டயலாக் விட்டா எப்படிங்க J ji?!! :D ;)

      Delete
    5. அப்படியே சிரிக்க வைக்கவாவது முடியும்ல.

      கடந்த மூன்று நாட்களாக வேலைபளு அதிகம் சார்.எதுவும் பார்க்க முடியவில்லை.

      Delete
  50. திரு.ஈ.வி
    சொல்லவிடுபட்ட ஒரு விஷயம்.நீங்களெல்லாம் ஈரோட்டுக்கு அருகில் இருக்கிறீர்கள். முன்பதிவு செய்து எப்படியாகிலும் விழாவிற்கு வந்துவிடலாம். எனக்கு அந்த வாய்ப்பில்லையே.தூரம் ஒரு பிரச்னையே இல்லையென்றாலும் என்னால் வாசகர் சந்திப்புக்கு போக சூழ்நிலை அனுமதிக்குமா என்ற கேள்விக் குறியுடன் அலைவதால்தான் தேமே என்று இருந்து விட்டேன்.
    வாசகர் சந்திப்பில் வாங்கினால் ஒரு சாதனை புத்தகத்தில் நம் எடிட்டருடைய கையொப்பம், அய்யா சீனியர் எடிட்டரின் கையொப்பம் எல்லாமே கிடைக்கும் என்றுதான் நானும் உங்கள் வார்த்தைப்படி பஸ் செலவு, அந்த செலவு, இந்த செலவு எல்லாம் செய்து கொண்டு வந்தேன்.கையொப்பம் வாங்குவதெல்லாம் கனவாகிப்போனதன் வலி எனக்கு மட்டுமே தெரியும்.
    மறுபடியும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///என்னால் வாசகர் சந்திப்புக்கு போக சூழ்நிலை அனுமதிக்குமா என்ற கேள்விக் குறியுடன் அலைவதால்தான் தேமே என்று இருந்து விட்டேன்.///


      ////திரு.ஈ.வி.
      புத்தக விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென்றே முன் பணம் கட்டாமல் உங்கள் வார்த்தைப்படி 'தேமே' என்றிருந்தேன்..////

      துளியூண்டு இடைவெளியில் எத்தனை முரணான பதில்கள்!!

      உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது ATR சார்!! உங்கள் சங்கடங்கள் விரைவில் விலக உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்!

      Delete
  51. திரு.ஈ.வி
    நல்லவேளை நீங்கள் பதிவிட்டீர்கள்.
    நேற்று இரவு முதல் நான் நினைத்துக் கொண்டிருந்தது அலுவலகத்தில் புத்தகம் கேட்டு பார்ப்பது.அங்கு இல்லையென்று கூறிவிட்டால் ஈ.வி.யிடம் செல்ஃபோன் எண்ணை கொடுத்து உங்கள் வங்கி கணக்கில் கூரியர் செலவுடன் பணம் செலுத்திவிடுகிறேன். ஒரு புத்தகம் வாங்கி அனுப்ப முடியுமா எனக் கேட்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்.அதுகூட திருச்சி விஜய் உங்களிடம் புத்தக விழாவில் புத்தக இருப்பைபற்றி கேட்டபோதுதான் உருவான எண்ணம்.அதனை ரப்பர் போட்டு அழித்து விடுகிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @ திரு. ATR

      குறைந்தபட்சம் தினமும் மூன்றுபேரிடமிருந்தாவது "உங்கள் அக்கெளண்ட்டு பணம் அனுப்பிவிடுகிறேன்! எனக்கு இ.ப ஒன்று புத்திகத்திருவிழாவில் வாங்கி அனுப்பமுடியுமா?" என்ற விசாரிப்புகள் வந்தவண்ணமே உள்ளன!

      அனைவருக்கும் உதவி செய்திடும் எண்ணமிருந்தாலும் - எனக்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் என் ஜாகை இப்போது ஈரோட்டில் இல்லை!

      இரண்டுநாட்களுக்கு ஒருமுறையே மாலை வேளைகளில் EBF பக்கம் எட்டிப்பார்த்திட இயலும். கிடைக்கும் அந்த இரண்டு/மூன்று மணி நேரங்களை ஸ்டாலில் விற்பனைக்கு உதவிடவும், ஸ்டாலுக்கு வரும் புதிய காமிக்ஸ் வாசகர்களை இனங்கண்டு அவர்களை நம் வட்டத்துக்குள் இழுத்திடவுமே ஆசைப்படுகிறேனே அன்றி, தடித்தடியான இ.ப'களை சுமந்துகொண்டு, கொரியர் டப்பாக்களையோ, கொரியர் அலுவலகங்களையோ தேடித் திரிவதை அல்ல!

      ஒருவேளை நம் அலுவலகத்தில் ஸ்டாக் தீர்ந்துவிட்டது - இனி EBFல் மட்டுமே கிடைக்கும் - என்ற நிலை வருமாயின் நிச்சயம் நண்பர்களுக்காக மெனக்கெட தயாராக இருப்பேன்!

      மதிப்பிற்குரிய மூத்தவாசகரான உங்களுக்காக சற்று கூடுதலாகக் கூட மெனக்கெடுவேன்!

      Delete
    2. ஈவி நல்லத சொன்னா யாரும் ஏற்றுக் கொள்வதில்லை,,,விடுங்க

      Delete
    3. அலுவலகத்தில் ஸ்டாக் உள்ளது

      Delete
  52. @ EV

    Bro, please cool down.

    People wants to get book at discounted price rather than booking earlier, you can't help them all.

    ReplyDelete
  53. சென்ற ebfல் எனக்கு ஈ.வி அவர்கள் ம.நி.ப மற்றும் கர்னல் ஆமோஸ் நான் கேட்டவுடன் வாங்கி வைத்து எனக்கு அனுப்பினார். அதை பேக்கிங் செய்து கூரியர் ஆபிஸ் சென்று எவ்வளவு சிரமம் நடைமுறையில் மிகவும் சிரமம். எப்போதும் அவரிடம் எதிர் பார்ப்பது தவறு.
    அதை போல நமது டெக்ஸ் விஜய் இவரும் ஒரு டெக்ஸ் இதழை கஷ்ட்டபட்டு தேடி அதை அன்பளிப்பாக கொடுத்து அதாவது கூரியரில் மிக சிரமபட்டு அனுப்பி வைத்தார்.
    ஈ.வி எனக்கு அனுப்பிய புத்தகத்தில் டெக்ஸ் புக்கை அன்பளிப்பாக கொடுத்து விட்டார்.
    இ.ப என்னால் அவ்வளவு பணம் திரட்ட முடியவில்லை எங்கள் ஊர் முகவரிடம் முன் பதிவு செய்தேன்.அட்வான்ஸ் பணமாக 500 கொடுத்தேன் வாங்க மறுத்து விட்டார் அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம் புக் வந்ததும் கொடுத்தால் போதும் என்றார் இருப்பினும் இரண்டு தவனையாக 1000 கொடுத்து எனது இ.ப வை உறுதி செய்து கொண்டேன்.
    இதை எதற்கு இங்கு குரிப்பிடுகிறென் என்றால் ஒருவரிடம் தொடர்ந்து உதவி கேட்பது யாசகம் பெற்றது போலாகிவிடும்.

    ReplyDelete
  54. டெ.வி. ஈ.வி மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பாரபட்சம் பார்க்காதவர்கள்.
    ஹி ஹி அதுபோல முகதாட்சண்யமும் பார்க்க மாட்டார்கள். போலேர் பதில் தான்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு இருவரும் அடிமை தான் ஜி.

      வம்புக்கு "மரியாதை" செய்வதிலும் வஞ்சனை வைப்பதில்லை எந்நாளும்...!!!

      Delete
  55. சார் இரத்தப்படலம் அட்டைபடங்கள் review:-
    *மிகவும் கவனமாக நேர்த்தியாக செய்யப்பட்ட அட்டைபடம்
    *#3புக்கில் என்னடா அட்டை திரும்பி இருக்கு என்று ஒரு கணம் பயந்துவிட்டேன் பாட் படு சூப்பர்
    *புலன்விசாரனை பார்பதற்கு தக தகவென்று இருந்தது
    *பொட்டி அமைப்பு அட்டகாசம்





    ஆனால் இன்னும் படிக்க அரம்பிக்கவில்லை
    இப்போது தான் லாா்கோவின்
    வேட்டை நகரம் வேனிஸ் படித்து முடித்தேன்
    மிகவும் சூப்பர்.....
    ஷான் வான் ூஹாமேவை பாராட்ட வார்த்தைகளே இல்லை.....

    ReplyDelete
  56. புலன் விசாரணை எனும் அற்புதம் பல செய்திகளை தந்து கொண்டிருக்கிறது, ,,, கதைச் சுருக்கமாயும் உள்ளது,,,,,பக்கம்71ல் ஜூவான் பெரோல்டாவில் சிறு நெருடல்,,,

    ReplyDelete
  57. நான் பண நெருக்கடி காரணமாக இ ப முன் பணம் கட்ட இயலவில்லை.இப்போது இதழ் சக்கைப் போடு போடுவது சந்தோசம் தருகிறது.இதழைக் காண மனம் ஆவல் கொள்கிறது ,ஆனால் அதற்கு இன்னும் சிறிது நாள் ஆகும்.அக்டோபர் இறுதியில் தான் தீபாவளி போனஸ் கிடைக்கும்.அதில் தான் இரத்தப் படலம் வாங்கவேண்டும்.அதுவரை இதழ் இருக்குமா? போடா துரதிர்ஷ்ட சரவணா?

    ReplyDelete
  58. இரத்தப்படலம் ...

    போதும் போதும் என்றளவிற்கு ரசித்து ,ரசித்து பார்த்த பிறகு கதைக்குள் நுழைய ஆரம்பித்தால் தானே இந்த இதழுக்கு செய்யும் மரியாதை என்று மனதில் நிழலாட முதல் தொகுப்பை எடுத்தேன். ஏற்கனவே படித்த கதை தானே நினைவில் நிற்கும் கதை தானே என்று தான் முதலில் ஆரம்பிக்கும் பொழுது தோன்றியது.ஆனால் ஆரம்பமும் முடிவும் மட்டுமே இன்னமும் நினைவில் நிற்க இரு பக்கங்களை தாண்டியவுடன் புதிதாய் பதிமூன்றின் உலகிற்குள் பரபரவென நுழைய வைத்தது.நேற்றைய முன்தினம் மூன்று பாகம் நேற்று மூன்று பாகம் என முதல் தொகுப்பை முடித்து விட்டேன்.முதல் முறை கறுப்புவெள்ளையில் படித்த பொழுது எந்த வித த்ரில்லருடன் படிக்க முடிந்ததோ அதே த்ரி்ல்லர் இம்முறையும் .கொஞ்சம் கூட குறைவில்லா அதே பரபர ,விறுவிறு பயணம் அதுவும் வண்ணத்தில் இன்னும் கூடுதலாகவே.முதல் தொகுப்பை கையில் வைத்திருக்கும் நேரம் நோ அலைபேசி ,நோ தொலைகாட்சி.அரை நாள் தொலைவிற்கு பிறகு இனி இரண்டாம் தொகுப்பில் ஆலனுடன் ,இல்லை ஷெல்டனுடன் ,இல்லை இல்லை ராலாண்ட்டுடன் நோ ஜேஸன் ப்ளையுடன் ஸ்ஸ்...அப்பா வேண்டாம் பொதுவாக பதிமூன்று என்றே வைத்து கொள்கிறேன் பதிமூன்றுடன் அதே போல் பயணமாக போகிறேன்.முதல் தொகுப்பிற்கு ஒரு பவுன் பரிசு ஆசிரியருக்கு.


    இந்த சமயத்தில் இன்னொன்றை கண்டிப்பாக சொல்ல வேண்டும்.இந்த மாதம் ஆசிரியர் வேறு இதழ்களை வெளியிடாமல் இருந்ததிற்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.காரணம் வேறு இதழ்கள் ஏதாவது வந்து இருப்பின் இரத்த படல இதழ் ஏற்கனவே படிக்கப்பட்ட இதழ் என்பதால் இதழ் தரத்தினை ரசிப்பதோடு நின்று கொண்டு படிக்காத புது இதழ்களுக்கே முன்னுரிமை கொடுத்து இருப்பார்கள் பல நண்பர்கள் .இவ்வளவு விலையில் இந்த இதழை வாங்கி அதை அருந்தாமல் இருந்தால் அது பாவமன்றோ.வேறு இதழ்கள் ஆசரியர் வெளியிடாத காரணத்தால் இம்மாதம் நண்பர்கள் இரத்த படலத்திற்குள் தான் நுழைவர்.முழு கவனமும் இரத்த படல தொகுப்பிற்குள் தான் நண்பர்கள் கவனம் இருக்கும்.இது உண்மையானதற்கு ஆசிரியருக்கு முதலில் நன்றிகள்.

    முக்கியமான மற்றொன்று....இரத்தபடல இதழை பொறுத்தவரை படித்த இதழ் ,கறுப்பு வெள்ளையில் இருக்கும் இதழ் என்பதால் நான் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தேன்.ஆனால் அன்புள்ள அநாமதேயர் அன்புள்ளத்தால் தான் இந்த வண்ண பதிமூன்றுடன் எனது பயணம் தொடங்கியுள்ளது .இந்த சமயத்தில் அவருக்கு எனது மனம் கனிந்த நன்றிகளை ஆனந்த பெருக்குடன் தெரிவித்து கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நானும் ரெண்டு பாகமும், ஆவணத் தொகுப்பு 8வரையும்,,,எப்ப படிச்சாலும் பிரம்ம்ம்,,,மிப்பே

      Delete
    2. கருப்பு, வெள்ளைல சில காட்சிகள் தெரியல,,,யப்பா

      Delete
    3. இரண்டாம் தொகுப்பின் அட்டைக்கே நம்ம சைடில் இருந்து ஒரு பவுன் மோதிரம் போடுறோமாக்கும்...!!!

      Delete
    4. அசத்தலான ஸ்லிப் கேஸுக்கு சங்கத்தின் சார்பில் 10 பவுனில் ஒரு மோதிரமும், செயினும் போட்டு அழகோ அழகு பாக்குறோமாக்கும்!!

      Delete
    5. பு.வி.யின் வித்தியாசமான வழவழப்பான அட்டைக்கு ஒரு வெள்ளி பிரேஸ்லட் சிவகாசி சிங்கத்துக்கு பார்சல்....!!!!

      ஆனா, புக்ஸ் கைக்கு வந்தவுடன் சலபன் பேப்பரில் அட்டைபோடும் நான் இந்த பு.வி.க்கு அட்டை போடுவதற்குள் திண்டாடிப் போனேன்.
      இப்படி மடக்குனா அப்படி வளையுது. அப்படி மடக்குனா இப்படி வளையுது.
      இது சரிவராதுனு முதலில் போட்ட அட்டையை பிச்சிட்டு, ஒருபக்கமா இருந்து செல்லோ டேப் ஒட்டிக் கொண்டே வந்தேன். நச்சுனு அட்டை செட்டாகிட்டு. யாருகிட்ட, 20வருசமா பேக்கிங் பண்றம்;நம்மகிட்டயா...!!!

      Delete
    6. உங்களோட பேக்கிங் மகிமை எனக்கு நன்றாக தெரியும்.
      அனுபவ பட்டதால் சொல்கிறேன்.

      Delete
  59. இரத்தம் super editor sir..... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வடிவமைப்பதில், slipcase, designing, publishing .எல்லாமவற்றையும்விட புலன்..விசாரனை
    அதை எப்படி சொல்வது. ...அது ஒரு dictionary
    என்று அழைக்கலாம்....என்று நினைக்கின்றேன். இரத்த படலம் ஒரு
    கிராபிக் நாவலின் வாசிப்பிற்கு இந்த பு.வி.அகராதி அவசியம் என்று கருதுகிறேன்.

    கதாசிரியர் படைப்புத்திறனுக்கு, character isationக்கு , வேன் ஹாம்உண்மையிலேயே நம்மை பிரம்மிக்க வைக்கிறார்....

    சந்தேகமின்றி நம் காலத்தின் மாபெரும், மிகச்சிறந்த கதாசிரியர் அவர்தான்.

    அதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய
    உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென தெரியவில்லை.....

    ReplyDelete
  60. என் மகளை அமெரிக்காவிற்கு வழியனுப்பி வைப்பதற்காக சென்னை சென்றிருந்த நான் இன்று தான் ஊர் திரும்பினேன்.வந்தவுடன் முதல் வேலையாக கீழ் வீட்டில் வாங்கி வைத்திருந்த கூரியர் பார்சலை கைப்பற்றி விட்டேன்.ஸ்லிப் கேஸ் மேல் ராவல் என்று இருந்ததன் மேல் நாவல் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது ஆச்சரியம். இரண்டாம் பாகத்தில் 6-12 என்றும் மூன்றாம் பாகத்தில் 14-19 என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது குழப்பம்.மற்றபடி just a glance பார்த்ததில் simply super. Deep reading இனிமேல் தான்.

    ReplyDelete
    Replies
    1. 13-ஆம் பாகம் தான் "புலன் விசாரனை" !!!

      Delete
    2. அடேங்கப்பா என்ன ஒரு கூர்மையான பார்வை ..ii
      ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் இதை வைத்து சில பல கேள்விகளை கேட்டுவிட்டேனே
      ஆனாலும், பரவாயில்லை. இ ரன்டாவது புத்தகத்திலும், மூன்றாவது புத் தகத்திலும் ஏன்ஹாட் லைன் எழுதவில்லை?.. மூன்று புத்தகத்துக்கும் தனித்தனி வெளியீடு எண் கொடுத்திருப்பதால் அந்தபுத்தகங்களிலும் அவர் எழுத்து இருக்க வேண்டாமா?..
      எனவே, தப்பு அவருது தான்..iii இல்லையா?...

      Delete
  61. I agreed.இப்போதுதான் உட்கார்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்க்கிறேன்.புலன் விசாரணை பின் அட்டையில் volume 13 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறாக பதிவிட்டதர்க்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  62. I agreed.இப்போதுதான் உட்கார்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்க்கிறேன்.புலன் விசாரணை பின் அட்டையில் volume 13 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறாக பதிவிட்டதர்க்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  63. இதழ் கைக்கு வந்த பிறகு தான் கச்சேரி.

    ReplyDelete
  64. எனக்கு Sunday தான் கிடைக்குமாம்.

    ReplyDelete
    Replies
    1. புதையல் வேட்டை காத்திருக்கு, என்சாய் ஜி!

      Delete
  65. இன்று சுமார் 6.30 மணியளவில் நம் ஸ்டாலுக்குச் சென்றேன்.இன்முகத்துடன் வரவேற்ற அண்ணாச்சியுடன் கொஞ்சம் பேசினேன்.

    'முன்ன மாதிரி ஈரோடு இல்லையேப்பா ' என்றார் கொஞ்சம் வருத்தத்துடன்.

    'கவலைப்பபடாதீங்க அண்ணாச்சி வெள்ளி, சனி, ஞாயிறு பட்டையக்கிளப்பப்போகுதுபாருங்கள் 'என்றேன்.

    7.30
    வரையான ஸ்டால் நிலவரத்தைக் கவனிக்கும் போது ஒரு விசயம் நன்றாகத் தெரிகிறது.பொடுசுகளின் உற்சாகம்தான் அது.

    'ஐ! டெக்ஸ் வில்லர் உற்சாகமாகதுள்ளிய சிறுவன்,சுற்றியும் பார்த்து விட்டு 'ரின் டின் கேனு 'டன் கிளம்பினான்.

    தன் ஐந்து வயது பையனுக்காக 'ஸ்மர்ப்பை ' தேர்ந்தெடுத்த ஒரு தந்தை.

    வேதாளரின் ரசிகை ஒருவர் தனது மகனுக்கு, கிட் ஆர்டினை கொடுத்தார்.

    தன் தாயுடன் வந்திருந்த இன்னொரு பொடியன் செலக்ட்செய்தது 'ப்ளூ கோட்ஸ் 'ன் இரண்டு சாகஸங்கள்.

    7.30மணிக்குப் பின்னே கள நிலவரம் சுறுசுறுப்பானது திருப்பூரிலிருந்து ஒரு நண்பர் ஏகப்பபட்ட டெக்ஸுடன் இரத்தப் பபடலத்தையும் அள்ளினார்.

    அவரது பேரைக் கேட்ட அண்ணாச்சி 'அட நம்ம பழைய சந்தாதார் ' சிலாகிக்க, அண்ணாச்சியின் ஞாபகசக்தியை எண்ணி நண்பர் பரவசமாக அந்த இடம் குதூகலமானது.

    இடையே ஸ்டாலுக்குள் கூட்டம் சேர்ந்தது. வருவோர் எல்லாம் காமிக்ஸுடனே வெளியே வர மிகவும் திருப்தியாக இருந்தது.

    LIC ல் பணிபுரியும் ஜெகதீஷ் என்ற நண்பர் வர, சிறிது நேரத்திலே ஸ்டாலின் சார் அவர்களும் வந்து சேர்ந்தார்.

    எஎட்டு மாயாவி கதைகளையும் கையில் வைத்துக் கொண்டு வேற மாயாவி கதைகள்இல்லையா என ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியது ஹை லைட்.!!

    ஏகப்பட்ட டெக்ஸ் மற்றும் மாயாவி, ஸ்பைடர் கதைகள்.

    நிதானமாவே லக்கி, ஸ்மர்ப், ரின்டின், ப்ளூகோட்ஸ்

    பிரின்ஸ், மார்டின் ,பொறுமையாகவும்

    இரண்டு இரத்தப்படலங்கள் மற்றும் கலர்டெக்ஸ் தொகுப்பு பரபரப்பாகவும் விற்பனையாயின.

    ReplyDelete
  66. செப்டம்பர் இதழ்கள் என்னென்ன நண்பர்களே...?

    ReplyDelete
  67. சார் Tex#70 என்ற டைனமைட் ஸ்பெசல் ஐ மதுரை புத்தக திருவிழாவில் வெளியிடலாமே.

    ReplyDelete
  68. ### Srithar Chockkappa10 August 2018 at 11:29:00 GMT+5:30
    சார் Tex#70 என்ற டைனமைட் ஸ்பெசல் ஐ மதுரை புத்தக திருவிழாவில் வெளியிடலாமே.###

    ஆசிரியர் மனது வைத்தால்

    ReplyDelete
    Replies
    1. +1111111111111111111111111111111

      Delete
    2. நான் மனது வைப்பதெல்லாம் அப்புறமாய்.....ஸ்டால் தர அமைப்பாளர்கள் முதலில் சம்மதிதாக வேண்டும் சார் ! அப்புறமாய் 'தல' பிறந்தநாள் செப்டெம்பர் 30 ; so "டைனமைட் ஸ்பெஷல் " உங்களை எட்டிப்பிடிக்கவிருக்கும் தேதியும் அதுவே !!

      ஆனால் மதுரை விழா துவங்குவது இம்மாதக கடைசிலேயே....!

      Delete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி தான் சார் ; ஆனால் புக் தயாராக வேண்டாமா ?

      Delete
  70. சார் இரத்தப்படலம் 200 க்குள் முன் பதிவு பண்ணியவர்களுக்கு பேட்ஜ் தருவதாக சொல்லி இருந்தீர்கள், புலன் விசாரணைக்க்காக அந்த ஐடியாவை கேன்சல் செய்து விட்டீர்களா?. I am asking this just for curiosity.

    ReplyDelete