Powered By Blogger

Monday, August 20, 2018

நண்பர்களே,

வணக்கம். எதிர்பார்த்தது போலவே  - நேற்றைய பதிவு நிறையவே extreme reaction-களை கொணர்ந்துள்ளது !! "மறுபதிப்பில் கை வைத்தால் - கபர்தார் !!" என்ற குரல் சின்னதொரு அணியிடமிருந்து ஒலிப்பதை கவனிக்கும் சமயமே  - புதுசை நாடிய தேடல்களில் ஆர்வம் கூடி வருவதையும் புரிந்து கொள்ள முடிகிறது !! So அட்டவணையினை இறுதி செய்யும் முன்பாய் இயன்ற மட்டிலும் 360 டிகிரிக்கு யோசிக்க முற்படுவேன் !

"நீ 360 டிகிரிக்கு யோசிப்பியோ ; டிகிரி காப்பி போடுவியோ   - அது உன்பாடு !! நான்பாட்டுக்குப் போய்க்கினே இருப்பேன் !!" என்று சொல்லும் ஒரு மனுஷன் மாத்திரம் இல்லையெனில் - என் பாடு பணாலாகிப் போயிருக்கும் !! And  இதோ - செப்டெம்பரில், முழு வண்ணத்தில் மினுமினுக்கக் காத்திருக்கும் ஒரு மறுபதிப்பு சாகஸத்தின் பிரிவியூ !! "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுபதிப்புப் பட்டியலுள் இரண்டாண்டுகளுக்கு முன்னமே ஈரோட்டில் இடம்பிடித்திருக்க -  சித்தே சீக்கிரமாகவே உங்களை சந்திக்க இதோவொரு வாய்ப்பு ! அட்டைப்படம் - ஒரிஜினலின் வார்ப்பே ; நம் ஓவியரின் கைவண்ணத்தில் !! And அந்த எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் ஆக்கம் !! இந்த அதிரடி சாகசத்தை இதுவரையிலும் படித்திரா வாசகராய் நீங்களிருப்பின் - ஒரு ஜுராசிக் பார்க் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி நிச்சயம் என்பேன் ! ஏற்கனவே படித்திருக்கக்கூடியவராய் இருந்தாலும், இந்த முழுவண்ண ஆல்பம் ஒரு அதிரடி அனுபவத்துக்கு பஞ்சம் வைக்காது ! Not too long a wait now !!
Bye now...see you around !!

231 comments:

  1. பழைய பாணியில் அதேசமயம் ஒரு காமிக்ஸ் புத்தகத்திற்கு பொருத்தமான அட்டைப்படம். நமது பத்து ரூபாய் புத்தகம் அட்டைப் படங்களை ஞாபகப்படுத்துகிறது !

    ReplyDelete
  2. Replies
    1. நானும் உள்ளேன் ஐயா...

      Delete
  3. இதுவரை வந்த டெக்ஸ் அட்டைபடங்களில் இந்த அட்டைபடத்திலுள்ள டெக்ஸ்ஸே கலக்கலாக இளமையாக இருக்கிறார் .. 😍😍😍

    மற்றபடி
    சைத்தான் சாம்ராஜ்யத்தை கலரில் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் .. 😱😱

    ( சிறு வயதில் அட்டை + முன் / பின்இரண்டு பக்கம் இல்லாமல் கதையை படித்து விட்டு லயன் வரிசையில் இக்கதை பெயர் தேடி அலுத்து போய் .. இது ஏதோ வேற காமிக்ஸ் என்று நினைத்தேன் . பிற்பாடுதான் தெரிந்தது. நான் கூட திகில்ன்னா பேய் கதைகளின் சங்கமம் என்று தான் நினைத்திருந்தேன். எடி இதில் வந்து இடைச்சொருகலாக டெக்ஸ்ஸை சொருகிவிடுவார்ன்னு யார் கண்டது !!?? )

    ReplyDelete
  4. பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு...

    ஆறு..!

    அறுசுவை காமிக்ஸ் படலம் இங்கு..!

    ReplyDelete
  5. அடேங்கப்பா டெக்ஸ் டைனோசர் வாயை குறிவைத்து சுட்டால் செத்து போய் விடும் என்பதை தெரிந்து கொண்டு கண்ணா பின்னான்னு சுடுறத பார்த்தால் எனக்கு பயந்து பயந்து வருகிறது.

    ReplyDelete
  6. ஹையா , பெயரே இல்லாம ஒரு சூப்

    ReplyDelete
  7. முதல் முறையாக சைத்தான் சாம்ராஜ்யத்தை (கலரில்) படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. மும்மூரத்திகளின் கதையில் லாஜிக் இல்லை என்று கூறுவது எனக்கு என்னவோ சுத்த அபத்தமாக படுகிறது.

    பவளசிலை மர்மத்தில் தலா ஒரு வின்ஸ்டர் மட்டுமே வைத்து கொண்டு கார்சனும் , டெக்ஸ்ஸூம் ஒரு செவ்விந்திய படையையே சுட்டு தள்ளிடுவாங்க. அத்தைனை பேரும் சாக பிறந்தவகன்னே வைச்சுகிட்டாலும், அத்தனை பேரையும் சுட அவர்களுக்கு தோட்ட எப்படி கிடைத்தது(தோட்ட தீர தீர காக்க துக்கிட்டு வந்து குடுத்துச்சோ).இதுல டெக்ஸ் சுத்தாத பூவையா மும்மூர்த்திகள் சுத்த போராங்க.

    விற்பனை இல்லையெனில் நிறுத்தி விடலாம். எனக்கு மும்மூர்த்திகள் மீது நாட்டம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சைத்தான் சாம்ராஜ்யம் படிக்கலியே.. தலைவன் ஸ்பைடரின் சிரசாசன மெஜேஜுக்கு சவால் விடும் கதை..

      Delete
  9. விருது பெற்ற கார்த்திகை பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எடிட்டர் சார்,
    கலர் இரத்தப்படலம் மறு பதிப்பு வாங்காதவர்களுக்கு புலன் விசாரணை இதழ் கிடைக்காதா சார். கடையில் கிடைக்கவில்லை. B/W இரத்தப்படலம் வைத்துள்ளேன். சந்தாவில் உள்ளேன். என்னைப் போன்றவர்கள் புலன் விசாரணை படிக்கவே இயலாதா சார். மறு பதிப்பு இரண்டு பிரதிகள் வாங்கிய நண்பர்கள் விலைக்கு தந்து உதவ இயலுமா? நன்றி. Contact: jramnet@gmail.com and 9894489816

    ReplyDelete
  11. எடிட்டர் சார்,
    கலர் இரத்தப்படலம் மறு பதிப்பு வாங்காதவர்களுக்கு புலன் விசாரணை இதழ் கிடைக்காதா சார். கடையில் கிடைக்கவில்லை. B/W இரத்தப்படலம் வைத்துள்ளேன். சந்தாவில் உள்ளேன். என்னைப் போன்றவர்கள் புலன் விசாரணை படிக்கவே இயலாதா சார். மறு பதிப்பு இரண்டு பிரதிகள் வாங்கிய நண்பர்கள் விலைக்கு தந்து உதவ இயலுமா? நன்றி. Contact: jramnet@gmail.com and 9894489816

    ReplyDelete
  12. கிராபிக் நாவல் பொறுத்த வரையில் சென்ற வருட தேர்வுகள் சிறப்பு. முதல் வருடம் கொஞ்சம் சருக்கினாலும் போன வருடம் ஈடுசெய்துவிட்டீர்கள். ஆகையால் அது போலவே இவ்வருடம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம். கண்டிப்பாக அண்டர்டேக்கர் போன்ற கதைகளும் தேவை.

    ReplyDelete
  13. // So அட்டவணையினை இறுதி செய்யும் முன்பாய் இயன்ற மட்டிலும் 360 டிகிரிக்கு யோசிக்க முற்படுவேன் ! //
    எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஆகச் சிறந்த செயலை படைத்தவனாலும் நிகழ்த்த முடியாது சார்,ஆனமட்டிலும் எங்கள் எதிர்பார்ப்புக்கு நீங்கள் நியாயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது,அப்படியே இல்லாமல் எமது எதிர்பார்ப்புக்கு சற்றே முன்பின் இருந்தாலும் அதற்கும் ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றே நம்புகிறேன்.நீங்கள் நம்பிக்கையோடு நடத்துங்கள் சார்.......,

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தம்பி ரெங்கராஜ்,

      நீ எழுதியிருக்கும் விதம் கவலையளிக்கிறது! இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஈரோடு புத்தகத் திருவிழாவில் உனக்கு காமிக்ஸ் அறிமுகமாகியிருக்கிறதென்பதை கடந்த பதிவில் உன்னுடைய/உன் நண்பன் அகிலுடைய கமெண்ட்டைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்! அதற்குள் இதைப் போன்ற ஒரு கமெண்ட் உன்னிடமிருந்து வந்திருப்பது சற்றே வருத்தம் கலந்த அதிர்ச்சியளிக்கிறது! 'அகில் என் நண்பன்' என்று அடிக்கடி எழுதினாயே, அந்த நண்பனிடம் புத்தகங்களை வாங்கி விரும்பியதைப் படிக்கலாமே? நான் அகிலிடம் உனக்காகப் பரிந்துரை செய்கிறேன்!
      தொடர்ந்து படித்து உன் ஆர்வத்தை வளர்த்துக் கொள்! நீ தகுதியானவன் என்றால் நீ கேட்பது தானே தேடிவரும்!

      Delete
    3. அகிலை , இம்முறை ஈரோட்டில் சந்தித்தபோது,
      கலக்சன்ல இத்தோடு 153 புத்தகங்கள் வாங்கி சேர்தாச்சுனு சொன்னாரு....!!

      அதையெல்லாம் அகில்ட்ட இருந்து இரவல் வாங்கி படிங்க தம்பி. அதையெல்லாம் படிக்கவே 2வருடம் ஆகுமே ரங்கராஜ்...!!


      Delete
  15. டைனோசர் மட்டும்தான் ஒரு டைப்பா இருக்கு.. மத்தபடி எல்லாம் ஓகே.. முதல் தடவையா கழுகும் டைனோசரும் மோதும் கதை படிக்க போறன்..

    ReplyDelete
    Replies
    1. டைனோசார் பழய படம் பார்த்த எஃபக்ட தரும்! அதும் அட்டகாசமாயே இருக்கும்.

      Delete
  16. 'சைத்தான் சாம்ராஜ்யம்' அட்டைப்படம் பின்னிப் பெடலெடுக்கிறது! அட்டைப் படமே வாங்கும் ஆவலைத் தூண்டி சீக்கிரமே மொத்த புத்தகங்களும் காலியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

    சித்திரங்களும், வண்ணக்கலவைகளும், ஜூராசிக் பார்க் ரக கதையமைப்பும் - இன்னொரு 'ப.சி.ம' வெற்றியைத் தரயிருப்பதாக ஒரு பிராணி ஆரூடம் சொல்கிறது!

    ReplyDelete
  17. கருணை நிரம்பி வழியும் கனிவான கண்கள்!!
    முத்துக்களை அடுக்கிவைத்தாற்போல் அழகான பல் வரிசை... கவர்ந்திழுக்கும் காந்தப் புன்னகை!

    அந்த அட்டைப் பட விலங்கு!

    ReplyDelete
    Replies
    1. இப்ப டைனோசர்களை எல்லாம் பூனையார் ரசிக்க தொடங்கிற்றார். குதற வரும் புலியினையும் இப்படித்தான் ரசிப்பார் போலும்.

      Delete
    2. இந்த்ப்புறா (?)ஆடவேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும்.

      Delete
    3. இந்த்ப்புறா (?)ஆடவேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும்.

      Delete
  18. சை.சா செம நைசா சும்மா அள்ளுது.
    மிட்டாய் 🍭 கலை ஜவ்வு 🍭 கலர் கலக்குது.

    ReplyDelete
  19. பச்சைக் கலரு ஜிங்குசா 'னு மின்னுது.
    டெக்ஸ்&கோ வும் செக்கச்செவேனு டாலடிக்கிறார்கள்.

    ReplyDelete
  20. சார்,

    மறுபதிப்பு தடத்தில் இரும்புதலையாரை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  21. அட்டை அமர்க்களம் சார்...!!!

    செம டார்க்...சூப்பர்.
    அப்பலாம் 🚲ல போகும் போதே, கடையில் புது புக் தொங்குவது தூரத்திலேயே தெரிய வருவது இதுபோன்ற அட்டைகளின் உபயம் தான்...!!!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே அதுபோல சில சமயத்தில் நிறைய ஏமாந்த்ததும் உண்டு.

      Delete
  22. கதையும் செம ரகளையாத்தான் இருக்கும்;

    பவளச்சிலை பார்த்துட்டே வயிறு எரியும் சிலர்,இதையும் பார்த்தா என்ன ஆவாங்களோ???

    செமி சைக்கோ, முழுசா மாறாம இருந்தா சரித்தான்...!!!

    ReplyDelete
  23. மங்குனினு சரியாத்தான் சொல்லி இருக்கேன்...!!!

    சந்தா அறிவிச்ச போது, சொன்ன "மங்குனியை"---வாபஸ் வாங்கிட்டேன். அது ரொம்பத்தப்பு...

    டபுள் மங்குனினு சொல்லி இருக்கனும்...!!!

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ இனி வரும் அனைத்துமாதங்களிலும் டெக்ஸ் அதகளம்தான் ஜமாய்ங்க STV ஜி

      Delete
    2. தேங்யூ பழனிவேல்...!!!
      ஆனா, ஏற்கெனவே அப்படித்தானே இருக்கு, 2,3வருசமா???

      Delete
    3. வண்ண மறுபதிப்பும் புதுசுமா ஒரே கொண்டாட்டம்தானா

      Delete
    4. பழனிவேல் @
      ஒரு ஒற்றுமை பாருங்களேன்,
      இரத்தப்படலம் தொகுப்புல இருக்கும் பாகங்கள்-18.
      டெக்ஸ் இதழ்களும் இந்த ஆண்டு-18.

      2018=ஜேசனுக்கும் டெக்ஸ்க்கும் தான்...!!!

      Delete
    5. 18ஐ சுருக்கினால் -9
      ஒவ்வொரு சந்தாவில் இதழ்கள்-9...!

      Delete
  24. அட்டையில் அந்த பாம்புமுத்திரை அருமை

    ReplyDelete
    Replies
    1. கதையிலும் ஒரு பாம்பு வருகிறது... தென்னை மரத்தின் உயரத்தில்!!

      Delete
  25. புலன் விசாரனை!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பா போயிகிட்டிருக்கு நண்பரே...!

      Delete
    2. அதான் வந்துட்டதே!!!

      இனி,

      ஜோன்ஸ்ம்,பெலிசிட்டியும், ஐரினாவும் தான் நம்ம கோஷங்கள்...!!!

      Delete
    3. நண்பர்களுக்கு வேண்டுகோள் புலன்விசாரணை பற்றிய உங்கள் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்க்கிறேன்

      Delete
    4. மார்த்தா,ஜோனதன் ப்ளை, கால்வின் வாக்ஸ்,ஆலன் ஸ்மித்தும் சேர்த்துக்கலாம் ஆசிரியர் மனது வைத்தால் ஆண்டுக்கு ஒரு டபுள் ஆல்பம்.

      Delete
    5. //மார்த்தா,ஜோனதன் ப்ளை, கால்வின் வாக்ஸ்,ஆலன் ஸ்மித்தும் சேர்த்துக்கலாம் ஆசிரியர் மனது வைத்தால் ஆண்டுக்கு ஒரு டபுள் ஆல்பம்.//ஒரே புக்கா! இப காலியானதும்! முன் பதிவு எண்ணிக்கை தேவையை தொட்டா இப போலவே கலக்கலா விடச் சொல்லி ஆசிரியர கேட்டா என்ன!

      Delete
  26. sivakumar siva20 August 2018 at 13:10:00 GMT+5:30
    இரத்த படலம் முழு தொடரை பற்றி
    சிறு விளக்கம் தேவை...


    16 ஆம் பாகம் வரை ஜேஸன் பிளை தான் யாரென்று அடையாளத்தை தேடுகிறார் ..

    அவர் தந்தை ஷான் மல்வே விளக்கம் கூறிய பிறகு இடைப்பட்ட ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என அவர் தேடல் தொடங்குகிறது..

    17 ஆம் பாகத்தில் ஓ நீல் என்ற கெல்லி பிரையனுடன் நட்பு மற்றும் மீதி ஆறு ஆண்டுகள் கியூபா சென்று புரட்சி படையில் பங்கேற்றது போன்ற தகவல்கள் விளக்கமாக வருகிறது...

    பின்பு 18 ஆம் பாகத்தில் பத்திரிகையாளார் டான்னி யால் xiii புலனாய்வு செய்த புத்தகத்திலும் மற்றும் வழக்கின் முழு விசாரணையிலும் xiii ன் கடந்த காலம் அத்தனையும் விளக்கி கதையை முடித்திருக்கிறார்கள்...

    நிற்க...

    எனது கேள்வி என்னவெனில் 16 ஆம் பாகம் வரை தான் யார் தன்னுடைய அடையாளம் என்ன என்று xiii தேடுவதாக கதாபாத்திரம் வழியே கதை செல்லும்..

    ஆனால் 17 ஆம் பாகத்தில் ஓ நீல் தன்னுடைய வரலாற்றையும் ஜேஸனை சந்தித்தையும் பின் ஓ நீல் சுட்டு கொல்லப்படும் வரையிலும் நடந்த ஓநீல் சொல்வதாக கதை செல்லும்..

    அப்படி என்றால் நடந்த சம்பவங்களை ஜேஸன் ராலண்டாக மாறும் வரை தானே அவருக்கு நினைவில் இருந்து இருக்க வேண்டும்...

    ஏனெனில் ஷான் மல்வே யை துப்பாக்கி முனையில் எதிரிகள் மிரட்டி ஜேஸனை ஓ நீல்தான் என்று கூறிய நிகழ்வுக்கு பின் தந்தையை சந்திக்கும் ஜேஸன் அப்போதும் தந்தை சொன்னதை நம்பாதவராகவே இருக்கிறார்....

    அப்படியிருக்க
    விசாரணை நடத்தப்படும் போதும் டான்னி யின் புத்தகத்தில் உள்ளதை அப்படியே நம்பி ஜியார்டினோவை கேள்வி கேட்பதுபோல் கதையை கொண்டு சென்றிருப்பார்கள்...

    ஒரு பத்திரிகையாளாரின் புலனாய்வு என்றாலும் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே எழுதி அதை ஜேஸன் நம்பி
    திருப்தி அடைந்தவர்போல் கதையை முடித்திருப்பது சற்றே குழப்பமாக உள்ளது..

    Reply

    sivakumar siva20 August 2018 at 16:04:00 GMT+5:30
    ஜேஸன் ஆறு ஆண்டு கால கட்டத்தில் என்ன செய்தார் என்று எப்படி தெரிந்து கொண்டார் ??
    கியூபா விற்கு செல்ல காரணம் என்னவென்று எப்படி தெரிந்தது ??
    ஜெஸிக்காவும் ஜியார்டினோவும்தான் உண்மை தெரிந்த ஆட்கள் ..
    ஜெஸிக்கா தான் ஜேஸனிடம் உண்மையை மறைத்து குழப்பி விட்டாளே ??

    Reply

    sivakumar siva20 August 2018 at 16:05:00 GMT+5:30
    அதுவுமில்லாமல் 17 பாகத்தில் நமக்குத்தான் ( படிப்பவர்களுக்குத்தான் ) என்ன நடந்தது என்று தெரியுமேயொழிய ஜேஸனுக்கல்ல..
    ஜெஸிக்காவிடம் விசாரணையில் இருவரில் யார் கியூபா சென்றார் என்று கேட்கும் போது புத்தகங்கத்தில் விளக்கம் உள்ளது என்கிறாள்..

    ஜேஸனை ஜரீஷ் க்கு அனுப்பி அவர் யார் என கண்டு பிடிக்க இன்னும் ஒரு இரண்டு பாகம் வச்சிருக்கலாம்...
    சட்டென விளக்கம் கொடுத்து கதைய முடிச்ச மாதிரி இருக்கு...

    Reply

    அன்பின் சிவா, வணக்கம்.

    நல்ல சந்தேகங்கள்.. ஆனாலும் இந்த எளனியிலே தண்ணியே வரலியே என்ற சந்தேக தொனி எழாமல் இல்லை்
    எப்படி பணமதிப்பிழப்பின் மூலம் கறுப்பு பணத்தை ஒழித்த பிறகம் ரெய்டு நடந்து கொண்ட இருக்கிறதோ.. அது போல் இதவும் தவிர்க்க மடியாதொன்று.. இரத்தப்படலம் எனும் காவியத்தக்கு,புலன்விசாரனை ஒரு என்சைக்ளோபிடியா என்று பிடிவாதமாக அதை இலவசமாக கொடக்க வைத்தும் இரத்தப்படலத்திலிருந்து இவ்விதம் சந்தகேம் கேட்பது ஏனோ??
    பி.கு.
    மேலே சல எழுத்து பிழிகளை காண்பீர்களானல் அது உங்களன் தவறல்ல... என்னடைய எழுத்து நடைய அப்படித்தான்.. ஒரு டிரட்மார்க போல..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அந்த ஓநீல் சொல்லும் கதை ஜெசிக்கா சுட்ட டைரி சொல்லும் கதை

      Delete
    2. தான் ஓநீல் என நம்பாதவராகவே இருக்கும் ஜேசன்...... சரிதான்! ஒவ்வொரு பேரிலும் குழப்பத்துடன் சந்தேகமாய் தேடிச் சென்று கொண்டிருக்கிறார். இது நிச்சயமய் நாமாக இருக்க இயலாது என அவர் மனது சொல்லி இருப்பதாய் கதை நகர்வதாயும் கொள்ளலாமே?

      Delete
    3. இதில் பல கேள்விகள பத்திரிக்கையாளரின் புலன் விசாரணைய நம்பித்தான் ஆக வேண்டும் என்றே கதை கட்டியிருக்கிறார் ஆசிரியர். அதற்கு முக்கியக் காரணம் புலன் விசாரணைக்கெனவே இரு பாக புத்தகமெனில் ,அதற்கு ஆசிரியர் தரும் முக்கியத்துவத்த நாம் இங்கே உணர வேண்டும் .கதையின் போக்கோ , முடிவோ ஒன்றுமறியா ஜேசனுக்கோ, நமக்கோ விளக்கமளிக்கும் பத்திரிக்கையாளர்களே ஹீரோக்கள் எனும் போது அதத்தான் ஜேசனும் , நாமும் நம்பனுமென்றே அழுத்தமாய் ஜியார்டினோ நோக்கி நகரும் அந்த கடைசி பாகம்! ? இனி வரும் பாகங்கள் ஜேசன் நினைவு பெற்று இத மாற்றி எழுதவும் வாய்ப்பிருக்கலாம், பத்திரிக்கையளர்கள் திரட்டிய தகவலில் திசை திரும்பப்பட்டிருந்தால்!?

      Delete
    4. புலன் விசாரணைய ஆசிரியரோ, கருணையானந்தம் அவர்களோ கையில் எடுத்திருந்தால் இன்னும் காலம் நீடித்திருக்கும் புத்தகம் வெளி வர ,அவர்களுக்கு தற்போது ஏகப்பட்ட கதைகள மொழி பெயர்க்கும் பணி இருப்பதால். நமக்கு வாய்த்த அதிர்ஷ்டம் நண்பர்கள் கார்த்திகை பாண்டியனும் ,ஜேவும் வாய்த்தது . குறுகிய காலத்தில் பல வேளைகளை விட்டே இதனில் மூழ்கி முத்தெடுத்திருக்க வேண்டும் .

      Delete
    5. பார்வையற்ற ஹட்டாவேவும் ஜேசன் குரல அடையாளம் கண்டதால் மக்லேன் குடும்பம்தான் என உறுதியாக உள்ளான்.

      Delete
    6. ரம்மி நான் ரத்த படலம் 18 பாகம் வண்ணத்தில் படித்து முடித்து விட்டு எனக்கு புரியாததையும் தெரியாததையும் தான் கேள்வியாய் கேட்டேனே தவிர யாருடைய சார்பாகவும் கேள்வி கேட்க வேண்டிய அவசிமில்லை ..
      அதே போல் உங்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால் நேருக்கு நேராக மோதவே தெரியாது போலிருக்கு..
      எனக்கு அந்த தில்லு இருக்கு ..
      நான் சொல்றேன் நேருக்கு நேரா மோத தெரியாத கோழை நீங்க..
      அப்படி தில்லு உள்ள ஆளா இருந்தா உங்களுக்கு யார் கூட பிரச்சினையோ போய் அவங்க கூட ஒரண்ட இழுத்துக்கிடுங்க..
      இத்தனை பேர் அவ்வளவு ஏன் ஆசிரியர் உட்பட என்னுடைய சந்தேகத்திற்கு விடை தர முன் வராத போது உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ..
      அப்படி அக்கறை உள்ள ஆளாக இருந்தால் எனக்கு கதையை பற்றி விளக்கம் கொடுக்க வேண்டியதுதானே தேவையில்லாமல் சம்பந்தமில்லாமலும் பேசுவானேன்..
      இனி என் சம்பந்தப்பட்ட எந்த கேள்விக்கோ கருத்துக்கோ உங்களிடமிருந்து எனக்கு பதில் தேவையில்லை..
      அதுக்கும் மேல என்கிட்ட வம்பு இழுக்க நினைச்சா இது பொது தளம் ல்லாம் பாக்க மாட்டேன் மரியாதை கெட்டுடும் இது எச்சரிக்கை..

      Delete
    7. நன்றி ஸ்டில் க்ளா அண்ணா...
      நான் இன்னும் புலன் விசாரணை இதழை படிக்காததாலேயே இந்த கேள்விகளை கேட்டிருந்தேன்...
      உங்கள் பதில் எனக்கு போதுமானது..
      அந்த அதிகப்பிரசங்கியின் பதிலுக்கும் இந்த பதிலுக்கும் உள்ள வேறுபாட்டை கவனியுங்கள்..

      Delete
    8. கிளா@

      ///இனி வரும் பாகங்கள் ஜேசன் நினைவு பெற்று இத மாற்றி எழுதவும் வாய்ப்பிருக்கலாம், பத்திரிக்கையளர்கள் திரட்டிய தகவலில் திசை திரும்பப்பட்டிருந்தால்!?////---- இதென்ன குழப்பமான பதில்.

      "இரத்தப்படலத்திற்கு தெளிவுரை, பதவுரை, விளக்கவுரை &என்சைக்ளோபீடியா (நன்றி: ரம்மி)தான் புலன் விசாரணை"----அப்டீனு சொல்லித்தியானே புலன் விசாரணை வாங்கப்பட்டது(அது ஏற்படுத்திய ரணங்கள் கூட இன்னும் ஆறலயே கடவுளே)...!!!

      இப்ப அப்படி மகிமை வாய்ந்த பு.வி.ல் உள்ள பத்திரிகையாளர்கள் திரட்டிய கருத்துக்கள் , ஜேசன் பிளையை திசை திருப்பும் வகையில் தான் இருக்கும் என சொல்றீங்க.

      ஆக, இவ்வளவு தானா,பு.வி.யின் நம்பத்தன்மை???
      வெறும் திசைதிருப்பும் அளவுக்கு தான் அது படைக்கப்பட்டுள்ளதா???
      அதில் சொல்லப்பட்டவை உண்மை இல்லையா??
      அப்ப பு.வி. எதற்காக???

      ஜேசன் யார்? என்ற ஜீவாதார கேள்விக்கே பு.வி.ல் பதில் இல்லை. திசை திருப்பும் வகையில் தான் இருக்கு எனில், இத்தனை பாடும் அரத்தமற்றதாகிறதே....!!

      Delete
    9. சிவா,,,புவி இல்லாமலே இவை தெளிவாகும். நான் எதுவுமே புவியில் இருந்து சொல்லவில்லை .இன்னும் படிக்கும் போது புரியும் .மறுமுறை படிக்க படிக்க கேள்விகளை எழுப்பும், பதிலும் கிடைக்கும் .ஆசிரியர் கூறியத போல கதைகளின் சுருக்கம்தான் அது .நினைவில் கொள்ள இயலாத நண்பர்களுக்கு வரப்பிராதம் புவி. புவிய படிங்க, இன்னும் பிரம்மிப்பு நிச்சயம் .

      Delete
    10. ஹஹஹா,,,,சரி டெக்ஸ் ஜேசன் ஆர்னு உங்களுக்கு தெரியுமா ?

      Delete
    11. அதப்போல ஸ்பின் ஆஃப் கதைகள நீடிக்க புவி நிச்சயம் தேவை, ,,,அந்தப்பார்வையில் வருங்கால கதை சொல்லிகள் நீடிக்க விரும்பினால் . புதிய கதைல ந்த இறந்து போனதா வாலி சொல்ற டாக்டர் வருவாறே. இந்தக்கதை கிநாதானே. உங்களை குழப்பவும் செய்யும்,,,,

      Delete
    12. //இதென்ன குழப்பமான பதில். //நான் ஆசிரியர் இல்லயே. இந்தக் கதையோட சுவாரஷ்யமே குழப்பம்தானே !?அட ! குழப்பபிதாலதான இக்கதயே எதிர்பார்ப்ப கூட்டியது ? இன்னும் எப்டியெல்லாம் போகுமோ. சரி புவி படிச்சாச்சா டெக்ஸ்...?

      Delete
    13. பு.வி. படிக்காமலே எனக்கு கதை நல்லா புரிந்து இருக்கே!

      தட் ஈஸ் ஒய், ஐ யாம் ஸ்கோரிங் 18/18 இன் த கான்டெக்ஸ்ட்....!!!

      சோ, நானும் உங்கள் கட்சிதான் க்ளா...!!!

      பு.வி. இல்லாமலே இதெல்லாம் தெளிவாகும்.

      என்றாவது ஒரு பனிகொட்டும் தூரத்து நாளில், பு.வி படிக்கலாம்னு இருக்கேன்; நம்ம படைப்பாளிகள் J ji & ,கா.பா. இருவரின் உழைப்புக்காக....!!!!

      Delete
    14. சரி XIIIயார்னு கண்டு பிடிச்சிட்டீங்களா புலன்விசாரணை இல்லாமலே!?

      Delete
  27. சைத்தான் சாம்ராஜ்யம் அட்டைப்படம் மிக அருமை கலரிங்கில் பவளச்சிலை மர்மம் போலிருந்தால் டபுள் ட்ரீட்

    ReplyDelete
  28. சைத்தான் சாம்ராஜ்யம் இனை முன்பு படித்த ஞாபகம் இல்லை. அட்டை படம் அள்ளுது.

    ReplyDelete
  29. ரத்தப் படலம் கலர் இன்று பதிவுதபாலில் வந்து கிடைத்தது. படபடப்புடனும் எதிர்பார்ப்புடனும் , பாய்ந்து போய், பார்சலை பிரித்தேன். சான்ஸே இல்லை சார். பிரமிப்பு. சூப்பர். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கின்றீர்கள். புலன்விசாரணையும் கூடவே. உங்களுக்கும் உங்கள் ரீமுக்கும் இத்தனை பெரிய கடின உழைப்புக்கு தலைவணங்குகின்றேன். கலர், படங்கள், அட்டைப்படங்கள் , ஜிகினா வேலைகள் பிரமிக்க தக்கவை. இரத்தப் படலம் தொகுப்பை கறுப்பு & வெள்ளையில் பார்த்ததே ஒரு சாதனை. அதையே கலரில் கையில் ஏந்தும்போது , இனம்புரியாத ஒரு புல்லரிப்பு. வானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்.
    கோடி நன்றிகள். எங்கள் கனவை இவ்வளவு அழகுடன் கூடிய நனவாக்கிய உங்களுக்கு ஸ்பெஷலாக காலம் எல்லாம் நன்றிகள் சொல்லி கொண்டேயிருப்பேன்.

    ReplyDelete
  30. சார் அட்டை, எழுத்துரு அனைத்தும் அட்டகாசம் . பின்னிப் பெடலெடுக்குது வண்ணமயம் அட்டையெங்கும். சிறு வயதில் நான் படியா ஒரே கதை. திகில் துக்கடாக்களை ஒதுக்கியதால் இது வந்ததே தெரியாதென நினைக்கிறேன். லயனில் விற்பனையாகிறது விளம்பரத்த பாத்து கடைகள்ல தேடுனா கெடைக்கல .ஆனா அப்ப வந்த லயன் கதைகளில் கார்சனக் காணோம், சைத்தான் சாம்ராஜ்யத்ல கொன்னுட்டீங்களோ என அஞ்சியது நினைத்ததும் நினைவில். சமீபத்துல ஐந்து வருடங்களுக்கு முன் கிடைத்தது, முன் சில பக்கங்கள் சித்திரங்கள் தெளிவில்லாமல், ஜுராசிக் வண்ண உலகில் உலாவ ஆவலுடன் காத்திருக்கிறேன் .காற்று நுழையாத இடமுண்டு;டெக்ஸ் நுழையாத உலகம்தான் ஏதோ!

    ReplyDelete
    Replies
    1. எழுத்துருக்கு ஸ்பெசல் நன்றிகள தெரிவியுங்கள் ஓவியரிடம் எனது சார்பாயும்

      Delete
    2. அந்த சமயம்/வயதில் திகிலில் பேட்மேன் தவிர யாரயும் பிடிக்கல .... பணத்தட்டுப்பாடும் ஒரு காரணம், ஏகப்பட்ட கதைகள் வந்ததே, மாயாஜாலக் கதைகள் கூட,,,,கற்பனை சிறகை விரிக்க வைத்த காலமது!

      Delete
    3. //காற்று நுழையாத இடமுண்டு;டெக்ஸ் நுழையாத உலகம்தான் ஏதோ!//

      Yes,ஆமாம்,அதே அதே.

      Delete
  31. மீள் பதிவு.

    மெல்ல திறந்தது கதவு.

    முடிஞ்ச வரை இந்த கதையின் விவாதங்களை தாண்டி சென்றது நல்லதாப் போச்சு. மார்ட்டினின் கதைகளில் சற்றே நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்த இந்த கதை எனக்கு இதற்கு முன் வந்த இரண்டு மார்ட்டின் கதைகளை விட பிடித்திருக்கு.

    கிட்டதட்ட ஒன்னரை மணி நேரம் ஒரு மனச்சிதைவு நோயாளியின் எண்ணங்களில் பயணம் செய்து வந்த மாதிரி ஒரு உணர்வு.

    பெரும்பங்கு ஓவியங்களும் கதை சொல்லப்பட்டவிதமும் டார்க்காக ஒரு க்ரீப்பி உணர்வை தரும் வண்ணமே இருந்தது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மொழி பெயர்ப்பையும். இதற்கு மேல் எளிதாக புரியும் வண்ணம் இதை மொழி பெயர்க்க முடியுமான்னு தெரியலை. கதையோடு ஒட்டி கதையின் உணர்வுகளை அற்புதமாக கடத்திய மொழி பெயர்ப்பாளருக்கும் பாராட்டுகள்.

    9.5/10

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் மஹி ஜி எனக்கும் மெல்ல திறந்தது கதவு ரொம்பவே பிடித்திருந்தது

      Delete
  32. கனவுகளின் கதையிது...
    சிக்சர் அடித்த இன்னொரு கி. நா. டார்ககான க்ரைம் ஸ்டோரி. கதையின் ஆரம்பத்தில் தோன்றாத பச்சாதபம் போக போக கதை நாயகி மேல் தோன்றுகிறது. பெட்ஸி மற்றும் சாம் மேலும். அனைத்து போர்களிலும் அப்பாவிகளே முதல் பலி. பணம் சேர்க்க வேண்டும் மற்றும்எ காமம் என்னும் போரில் தங்கள் குழந்தைகளின எதிர்காலத்தை பலியிடும் தந்தைகள்.

    கடைசி வரை சஸ்பென்ஸை காத்ததில் கதாசிரியர் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளார். முடிவு எனக்கு புரியவில்லை. க்ளைமாக்ஸில் வரும் கனவில்யாரோ ஒருவர் இறந்திருக்கிறார்கள். அதனால் தான் அந்தக் கனவு. அப்படி என்றால் கடைசி பிரேமில் கத்தியுடன் தோன்றுவது யார்? கனவின் பகுதியா அல்லது ஷேனனை காக்க கொலை செய்த அவளுடைய சகோதரனா அல்லது ஷேனனை கொல்ல வந்த சகோதரனின் காதலியா?

    ReplyDelete
    Replies
    1. அந்த கதை வந்த மாதம் தொவையோ தொவைனு தொவைச்சி தொங்கப் போட்டாங்க...!!!

      அது யார்னும் அப்போது சொல்லிட்டாங்கனு நினைக்கிறேன். அந்த மாத பதிவுகளில் தேடனும் ஜி.

      Delete
  33. அட்டை படம் கண்ணை பறிகிறது

    ReplyDelete

  34. சார்,

    சைத்தான் சாம்ராஜ்யம் சந்தாவில் சேர்ந்தா, இல்லை தனியாக வாங்க வேண்டுமா, நான் அனைத்து சந்தாவும் செலுத்தியுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. கவலை வேணாம் நண்பரே!

      அது சந்தாDக்கு உரியது.

      அடுத்த வாரம்லாம் , சைத்தான் சாம்ராஜ்யம்ல நீங்களும், நண்பர்களோடு உலவலாம்.

      Delete
    2. தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
    3. என்ன!!!! சந்தா D வருதா. ஐயோ.... அட்டை படத்தில் இருக்கும் டைனோசர் கடிச்சு குதற போறது என்னைய தானா?

      Delete
    4. அதுவொரு சோப்ளாங்கி டைனோசர்! எந்த வேலையையும் உருப்படியா செய்யறதில்லே!

      Delete
  35. வர போகுது சைத்தான் சாம்ராஜ்யம் ..

    அள்ள போகுது டெக்ஸ் சாம்ராஜ்யம்..!

    ReplyDelete
  36. ரத்தப்படலம் இரண்டாவது புத்தகத்தில் ஏதோஅச்சுப்பிழை இருப்பதாக சென்ற பதிவில் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் என்ன பிழை என்று தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் சொன்னால் என்னுடைய புத்தகத்தை சரிபார்க்க வசதியாக இருக்கும். மற்ற பல வேலைகளால் நான் இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை.

    - சங்கர்

    ReplyDelete
  37. சித்தம் சாத்தானுக்கு சொந்தம்.
    செம கதை. சரியான டைட்டில். அருமையான மொழி பெயர்ப்பு. இந்தக்கதையா அல்லது முடிவிலா இரவா? எது நம்பர் 1 அப்படின்னு முடிவு செய்ய இயலவில்லை. இப்படி சூப்பரான கதைகளை படித்த பிறகு 2018 ல கி. நா. சந்தா இல்லாம போனது பெரிய இழப்பா தோணுது.
    9.5/10

    ReplyDelete
    Replies
    1. ///இப்படி சூப்பரான கதைகளை படித்த பிறகு 2018 ல கி. நா. சந்தா இல்லாம போனது பெரிய இழப்பா தோணுது. ///

      அதே! அதே!

      Delete
    2. மஹி ஜி@ அதையேன் கேட்கிறீர்கள், அந்த சோகத்தை வடிக்க வார்த்தைகளே இல்லை.

      எனினும் இரத்தப்படலம் தொகுப்பு, அதைக் கொஞ்சம் குறைத்தது என்பதென்னவோ நிசமான நிசம்தான்.

      இதுமாதிரி, தோர்கல்.., 2015ல் நல்லா பிக்அப் ஆகி டாப்புல வந்த தோர்கல், 2016ல் இடம் கிடைக்காம மிஸ்ஸிங் ஆன போதும் இதே மாதிரி வருத்தம் எழுந்தது.

      கி.நா. சந்தா லாஞ்ச் பண்ண முடியாத போனபோது இடம் இழந்த தோர்கல், 2017ல் மெயின சந்தாவில் இடம் பிடித்தப் பின் தான் நிம்மதியாச்சுது.

      இனி தோர்கல் அடுத்த ஆண்டில் இன்னும் எதிர்பார்ப்பை வலுக்கச் செய்கிறார்.

      லார்கோவின் இடத்தை பிடிப்பார் னு நம்புகிறேன்.

      Delete
    3. ///இப்படி சூப்பரான கதைகளை படித்த பிறகு 2018 ல கி. நா. சந்தா இல்லாம போனது பெரிய இழப்பா தோணுது. ///
      உண்மையாகவே பெரிய இழப்புதான்.

      Delete
  38. டிராகன் நகரம்.

    இந்தக்கதையை சம்மர் லீவுகளில் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. மரணத்தை....(முதல்கதையை) லாங் ஜம்ப செய்து நேராக டிராகன் நகரம் பக்கத்துக்கு சென்றதால் முதல் 20-30 பக்கங்கள் புதிது போலவும் மீதப் பக்கங்கள பழையது போன்றும் தோற்றமளிக்கும். சரியான மாஸ் மசாலா பொழுதுபோக்குக் கதை. பல வருடங்களுக்கு பிறகு கலரில் வாசிக்கவும் அற்புதமாக இருந்தது. கலரிங் தரம் என அனைத்தும் மகிழ்ச்சியே.
    9/10

    ReplyDelete
  39. டிராகன் நகரம் தான் மிஸ் ஆகி விட்டது. இதை விடேன். அட்டை படம் கலக்கல். டெக்ஸின் பூ சுற்றல் கதை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இப்பொழுது அந்த ஜானரில் எதுவும் வருவது இல்லை.

    ஐ அம் வைட்டிங்

    ReplyDelete
    Replies
    1. blog ரீமேக் சூப்பர்

      Delete
    2. செம விருந்து வெயிட்டிங்....!!!

      Delete
    3. ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை.. வேறென்ன??

      Delete
    4. ஓய் .. டெக்சு.. டிராகன் நகரம் உம்ம மறுபதிப்பு லிஸ்ட்டிலியே கெடையாது தானே.. அது ஒரு மொக்கை கதையின்னு உம்ம கையாலியே எழுதினீங்க.. அந்த போட்டோ போட்ட புத்தகம் நல்ல வேளை டெக்சு கதையிலே வரலை..

      Delete
    5. தவறான புரிதல் ஓய் கும்மி ச்சே ரம்மி!

      கும்...ணங்..சத்..தாகாவே கதை முழுதும் இருக்கும் என்றே சொல்ல வந்தேன்.

      டெக்ஸ் கதையானாலும் அவற்றில் உள்ள நெளிவு சுளிவுகளை ஒப்புக் கொள்வோம் அய்யா நாங்கள்.

      எங்களது ஒப்புமை இல்லாத ஒன்றே என எப்போதும் சாதிக்க முற்படோம்.

      இப்போ டெக்ஸ் ஆதிக்க காலம்...!!!
      குரு திசை நடக்குது!

      நேற்று அது இரும்புக்கையாரிடம் இருந்தது...!!!

      நாளை அது யாரோவாக இருக்கலாம். அப்படி வரும் வேளையில் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வோம்.

      நாங்கள் பிடிஞ்ச முயலுக்கு இரண்டரை கால்தான்னு நிரூபிக்க முயல மாட்டோம்.

      Delete
  40. "கிடைக்காதிருந்தவரை அலையடித்த ஆர்வமானது சரளமாய்க் கிடைக்க துவங்கிய பின்பாக வடியத்துவங்கி விட்டதா?"
    மும்மூர்த்திகள் சம்பந்தமாய் ஆசிரியர் சென்ற பதிவில் எழுப்பிய வினாவுக்கு எனது எண்ணம்.மும்மூர்த்திகள் மீதான காதல் அப்படியேதான்சார் உள்ளது. ஆனால் பல கதைகள் அணிவகுத்து நின்றபோதும் பலமுறை மறுபதிப்பான கதைகளே தொடர்ந்து வந்த காரணத்தால் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது உச்சத்தில் உள்ள நாயகர்களின் கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பு செய்கையில் பலவிவாதங்களுக்கு பின்னரே தேர்வு செய்யப்படுகிறது. அதன் வெற்றியும் உறுதி செய்யப்படுகிறது.தற்போது வண்ணத்தில் மறுபதிப்பு கண்ட எந்த நாயகரின் கதைகளாக இருப்பினும் வெற்றி பெற்ற காரணத்திற்காக அந்த கதையையே நாலாவது முறையோ ஐந்தாவது முறையோ மறுபதிப்பு செய்தால் தொடர்ந்து அந்த வெற்றி கிடைக்குமா? நிச்சயமாக படுதோல்விதான் கிடைக்கும்.ஆனால் அப்போது அந்த கதையின் நாயகர்மீது நாம் கொண்ட மையல் போய்விட்டது என்பதாக பொருள் கொள்ளலாமா? அனைவரின் பதிலும் எவ்வளவோ நல்ல கதைகள் பாக்கியிருக்க வெளிவந்த கதையையே தொடர்ந்து மறுபதிப்பு செய்த காரணத்தால்தான் இந்த வீழ்ச்சி என்ற காரணம் மட்டுமே முன் வைக்கப்படும்.நாயகரை குறை சொல்ல மாட்டோம்.மும்மூர்த்திகள் விஷயத்திலும் இதே காரணம்தான் இருக்கமுடியும் என்பது என் கருத்து. நயாகராவில் மாயாவி தூள் கிளப்பியதை உங்களால் மறுக்க இயலாது.காரணம் அந்த கதை தங்களால் மீண்டும் மீண்டும் மறுபதிப்பு செய்த கதைகளின் பட்டியலில் வராத காரணத்தால்தான் அந்த வெற்றி சாத்தியமானது. அந்த சமயத்தில் நானும் தோழர்கள் சிலரும் மும்மூர்த்திகளின் மறுபதிப்பு காணாத கதைகளை பட்டியலிட்டபோது தங்களின் பதில் "அவசரம் வேண்டாம்.ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதே!" ஆனால் நடந்ததென்னவோ பலமுறை மறுபதிப்பு கண்ட கதைகள் தான் வெளியாகின.கிடைக்காத கதைகளை தேடுவது எல்லோரின் இயல்புதானே.உதாரணத்திற்கு எழுபதுகளில் வண்ணத்தில் வெளியான கொரில்லா சாம்ராஜ்யம்,யார் அந்த மாயாவி, கொலைகார குள்ளநரி போன்ற கதைகளும் கறுப்பு வெள்ளையில் வெளியான கண்ணீர் தீவில் மாயாவி,இரும்புக்கை மாயாவி,பாதாள நகரம் போன்ற அரிதான கதைகளை தேர்வு செய்திருக்கலாம்.லாரன்ஸ் டேவிட் கதைகளில்கூட ஃபார்முலா திருடர்கள்,காணாமல்போன கடல்,ஃபார்முலா X13, போன்ற கதைகள்,ஜானி கதைகளில் கடத்தல் முதலைகள்,ஜானி IN ஜப்பான், ஜானி IN லண்டன் போன்ற நல்ல கதைகள் உள்ளன.இவைகள் உதாரணத்திற்கு மட்டுமே. மும்மூர்த்திகள் இல்லாது சார்லியின் சிறை மீட்டிய சித்திரக் கதை, கடத்தல் ரகசியம், குரங்கு தேடிய கொள்ளையர் புதையல், காரிகன் கதைகளில் வைரஸ் X13, மடாலய மர்மம், கடலில் தூங்கிய பூதம், பனித்தீவின் தேவதைகள்,பில்லி சூனியமா பித்தலாட்டமா,தீ விபத்தில் திரைப்படச் சுருள், ஜார்ஜ் கதைகளில் நெப்போலியன் பொக்கிஷம்,ஒற்றன் வெள்ளை நரி என்று கிடைப்பதற்கு அரிதான கதைகளை ஆரம்பத்திலிருந்தே கொண்டு வந்திருந்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இது எனது எண்ணம் மட்டுமே.மற்றபடி பழைய நாயகர்களுக்காக ரிவர்ஸ் கியர் போடலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பது தங்கள் உரிமை.

    ReplyDelete
    Replies
    1. திரு. ATR சார்,

      இரத்தப் படலம் புத்தகம் வாங்கிவிட்டீர்களா?!!

      Delete
    2. நன்றாக யோசித்துள்ளீர்கள்.

      Delete
    3. வாங்கியாச்சு விஜய் வாங்கியாச்சு!
      எங்கே வாங்க முடியாமல் போய்விடுமோ என்று கொஞ்சம் டென்ஷனாயிட்டேன்.
      ஆனால்
      நம் அலுவலக சகோதரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சிறு தாமதம்கூட இல்லாமல் நல்ல முறையில் அனுப்பி வைத்தனர். எத்தனைமுறை நச்சரித்தாலும் பொறுமையுடன் பதிலளித்து தங்கள் கடமையை செய்யும் அவர்களையும் தளத்தில் விமர்சனத்துக்கு உள்ளாக்கியதில்தான் சற்றே மனவருத்தம்.

      Delete
    4. ////நம் அலுவலக சகோதரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சிறு தாமதம்கூட இல்லாமல் நல்ல முறையில் அனுப்பி வைத்தனர். எத்தனைமுறை நச்சரித்தாலும் பொறுமையுடன் பதிலளித்து தங்கள் கடமையை செய்யும் அவர்களையும் ///

      உண்மைதான் திரு.ATR சார்!! நம் நண்பர்களின் சரமாரியான கேள்விக்கணைகளால் பயங்கர டென்ஷன் ஆனாலும் கூட, அதைத் துளிகூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் "சொல்லுங்க சார்" என்று கூலாய் பதிலளிப்பார்கள்!

      அவங்களுக்குப் பதிலா அந்த இடத்துல பசங்க யாராது இருந்திருந்தா, நாம ஃபோன் பண்ணும்போது ஜேன் உபயோகப்படுத்தும் 'மங்களகரமான' வார்த்தைகளைத் தான் அதிகம் கேட்கவேண்டியதிருந்திருக்கும்!

      Delete
    5. நிச்சயமாக திரு.விஜய்.
      நம் ஆசிரியரைப் போலவே அவருக்கு பக்க பலமாக இருப்பவர்களும் நிதானத்துடன் நம் நச்சரிப்புகளையெல்லாம் தாங்கி செயல்படுவது ஒரு வரம்தான்.
      சந்தா தொகையை செலுத்திவிடுவதால் நம் விமர்சனங்களை அவர்கள்மேல் வைப்பது சரியாகபடவில்லை. தவறுதல் மனித இயல்புதானே? மாத இறுதியில் அவர்களுக்கு புத்தகங்களை அனுப்ப உண்டாகும் அவசரத்தில் எப்போதாவது தவறுகள் அவர்களையறியாமலேயே நடப்பதை பெரிது படுத்தி காயப்படுத்துவதை தவிர்ப்பது நலமென நினைக்கிறேன்.நம் காமிக்‌ஸ் பசியை தீர்த்து வைக்க உதவுபவர்களில் அவர்களுக்கும் பங்கு உண்டல்லவா? அதை மனதில் வைத்து நம் பஞ்சாயத்துக்களையெல்லாம் ஆசிரியரிடம் மட்டுமே வைத்துக் கொள்வது நலமென நினைக்கிறேன்.
      நம் காமிக்ஸ் ஆர்வம் குறையாமல் இருப்பதால்தான் இன்றும் காமிக்ஸ் நம்மிடையே வாழ்கிறது.அந்த ஆர்வத்தின் காரணமாகவே புத்தகம் கிடைக்க தாமதமானால் அந்த ஏமாற்றம் கோபமாக மாறுகிறது. ஆர்வத்தை குறைக்காமல் கோபத்தை மட்டும் குறைத்தாலே போதும்.யாருக்கும் சங்கடமில்லை.

      Delete
    6. ////நம் காமிக்ஸ் ஆர்வம் குறையாமல் இருப்பதால்தான் இன்றும் காமிக்ஸ் நம்மிடையே வாழ்கிறது.அந்த ஆர்வத்தின் காரணமாகவே புத்தகம் கிடைக்க தாமதமானால் அந்த ஏமாற்றம் கோபமாக மாறுகிறது. ஆர்வத்தை குறைக்காமல் கோபத்தை மட்டும் குறைத்தாலே போதும்.யாருக்கும் சங்கடமில்லை.////

      அருமை அருமை, திரு.ATR சார்!!

      Delete
    7. // சார்லியின் சிறை மீட்டிய சித்திரக் கதை, கடத்தல் ரகசியம், குரங்கு தேடிய கொள்ளையர் புதையல், காரிகன் கதைகளில் வைரஸ் X13, மடாலய மர்மம், பனித்தீவின் தேவதைகள்,பில்லி சூனியமா பித்தலாட்டமா,தீ விபத்தில் திரைப்படச் சுருள், ஜார்ஜ் கதைகளில் நெப்போலியன் பொக்கிஷம்,ஒற்றன் வெள்ளை நரி //

      +1
      படித்தது இல்லை. ஆசிரியர் இதனை மறுபதிப்பாக கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.

      Delete
    8. திரு.பரணி சார்
      வைரஸ் X என்பதை நான் தவறாக X13 என்று பதிவிட்டுவிட்டேன்.காரிகன் ரொம்பவும் ஸ்டைலான தோற்றத்தில் பைக்கில் வில்லனுடமிருந்து வைரஸ் X கிருமியை கைப்பற்ற சாகஸம் புரியும் கதையிது.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை.பழமை நெடி என்றெல்லாம் அதிகமாய் புலம்பும் அவசியமில்லா கதை. அன்று பாக்கெட் சைஸில் வெளிவந்த இந்த கதை தற்போதைய முத்து காமிக்ஸ் சைஸில் வந்திருந்தால் புத்தக விழாக்களில் விற்பனை பட்டையை கிளப்பியிருக்கும்.இன்றும் பலர் தேடும் கதை இது.

      Delete
    9. // வைரஸ் X கிருமியை கைப்பற்ற சாகஸம் புரியும் கதையிது.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை.பழமை நெடி என்றெல்லாம் அதிகமாய் புலம்பும் அவசியமில்லா கதை. அன்று பாக்கெட் சைஸில் வெளிவந்த இந்த கதை தற்போதைய முத்து காமிக்ஸ் சைஸில் வந்திருந்தால் புத்தக விழாக்களில் விற்பனை பட்டையை கிளப்பியிருக்கும்.இன்றும் பலர் தேடும் கதை இது.//

      நானும் இதனை தேடுகிறேன். ஆசிரியர் மனது வைக்கலாம் ஆனால் இதுவரை அவர் மனது வைக்கவில்லையே என்பது கஷ்டமாக உள்ளது.

      Delete
  41. ரெகுலர் 36, தனி சந்தா 6 மற்றும் சிறப்பு வெளியீடுகள். கூட்டினால 36-க்கும் மேலாக வருகிறது. எனவே 48 என்பது பெரிய எண்ணிக்கையில்லை. எப்படியிருந்தாலும் மாதந்தோறும் புத்தகங்கள் வரவேண்டும். இந்தமாதம் ஏமாற்றியதை போல் அடுத்த வருடம் ஏமாற்ற வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. // 48 என்பது பெரிய எண்ணிக்கையில்லை. எப்படியிருந்தாலும் மாதந்தோறும் புத்தகங்கள் வரவேண்டும். //
      +1

      Delete

  42. ஆகா! படித்த கதைகள் மறுபதிப்பாக
    வரப்போகிறதா?


    கழுகுவேட்டை,
    பழிக்குப்பழி,
    இரத்த முத்திரை,
    மரணமுள்,
    நள்ளிரவு வேட்டை,
    இரத்த நகரம்,
    மெக்சிக்கோ படலம்,
    எல்லையில் ஒரு யுத்தம்,
    சிவப்பாய் ஒரு சிலுவை,

    பிரமாதம்தான்!!!

    ReplyDelete
    Replies
    1. மூன்று மூன்றாக ஒரே தொகுப்பாக கலரில் சென்னையில் ஒன்று,
      கோடையில் ஒன்று,
      ஈரோட்டில் ஒன்றுனு கொடுத்த கொளுத்தும் தான் சார்...!!!

      Delete
    2. யார் சார் படிப்பது??

      Delete
    3. நாங்கள் கொஞ்சம் பேர் இல்லை, நிறைய பேர் காத்திருக்கோம் சார், படிக்க மட்டுமல்லாமல்...
      கொண்டாடவும்...!

      Delete
  43. விரட்டும் விதி உட்பட மூன்று டெக்ஸ் மினி சாகஸங்களின் தொகுப்பின் அட்டைப்படம் அட்டகாசமாய் மின்னுகிறது.வழக்கம் போல் சமீபத்தில் படித்த கதையாக இருப்பினும் புது இதழாக மீண்டும் கைகளில் கிடைக்கும் பொழுது படித்தே ஆக வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினால் செயலரின் அன்பு பரிசாக கிடைத்த இந்த டெக்ஸ் மினி சாகஸ தொகுப்பையும் மீண்டும் படிக்க நேர்ந்தது. கதைகளை பற்றி சொல்ல தேவையில்லை ஏற்கனவே மூன்று கதைகளும் பட்டையை கிளப்பியது தெரிந்தது தான் .சந்தாவில் இல்லா நண்பர்கள் இத்தொகுப்பை முதன்முறையாக வாங்கி படிக்கும் பொழுது அசர போகிறார்கள் என்பது உண்மை.புத்தக காட்சி அன்று முதல் நாளிலிருந்தே இந்த தொகுப்பு ஈரோட்டில் விற்பனைக்கு வந்து இருந்தால் விற்பனையில் பட்டாசு கிளப்பி இருக்கும்.ஆனால் முதல் நாளிலிருந்து விற்பனைக்கு வராத துடன் அவ்விதழை பற்றி பலமான அறிவிப்பு ஏதும் இல்லாது போனது பலருக்கு இந்த அழகான தொகுப்பை பற்றி அறிந்தார்களா இல்லையா என்றே என தெரியவில்லை..

    இது போன்ற டெக்ஸ் மினி சாகஸ இதழ்கள் மூன்று ,நான்கு கதைகளோடு அடிக்கடி தொடர்ந்தால் சுவையாக இருக்கும் .ஆசிரியர் ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.. இப்போ நான் கூட நீங்கள் அன்புப் பரிசாய் கொடுத்த திகில் வெளியீடான 'சாவோடு சூதாட்டம்' படிச்சுக்கிட்டிருக்கேன்... ப்பா!! கொத்துக் கொத்தாய் கருப்புக் கிழவி கதைகள்!!
      பேய்-பிசாசுகளை வச்சே கதையும், கருத்துக்களையும் சொல்ல நம்ம ப்ளாக் பாட்டீம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது!!
      ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் பாட்டீம்மாவுக்கு பக்கத்தில் உங்கள் முகமே தெரிகிறது தலீவரே! ( எல்லாம் ஒரு நன்றியுணர்வு தான்) சோடிப் பொருத்தமும் சூப்பர்!!

      நன்றி தலீவரே!!

      Delete
    2. செயலரு பாராட்டுறாரா இல்லை ஓட்றாரான்னு தெரியலை...

      பரவால எதுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லி வச்சுரலாம்..

      நன்றி செயலரே..)

      Delete
    3. // விரட்டும் விதி உட்பட மூன்று டெக்ஸ் மினி சாகஸங்களின் தொகுப்பின் அட்டைப்படம் அட்டகாசமாய் மின்னுகிறது. //
      உண்மை தலைவரே,மூன்று மினி டெக்ஸும் மூன்று மினி ஆட்டோபாம்கள் என்றாலும் பொருத்தமே,மூன்றும் வெவ்வேறு வெரைட்டியை கொண்டவை,டெக்ஸ் கதைகள் நீண்ட சாகஸத்தில்தான் சாதிக்கும் என்ற எண்ணங்களை உடைத்து மினி காம்போவிலும் அசத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

      Delete
    4. டெக்ஸ் ரசிகர் வரைந்த அட்டைபடத்தை மட்டும் அடுத்த மாத இதழ்களுடன் ஆசிரியர் வழங்கினால் மிகவும் சந்தோஷம்.
      டெக்ஸ் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி.அதனுடன் கூடவே மினி டெக்ஸ் கதைகளை இந்த அட்டை படத்துடன் பைண்டிங் செய்து கொள்ள உதவும்!

      Delete
    5. ///செயலரு பாராட்டுறாரா இல்லை ஓட்றாரான்னு தெரியலை...///

      பாட்டீமா பக்கத்துல நீங்க தெரியுறிங்கன்னு உங்களை பாராட்டுறாரு. ...

      உங்க பக்கத்துல பாட்டீமா தெரியுறாங்கன்னு பாட்டீமவை ஓட்டுறாரு ....

      தெளிவாயிடுச்சா தலீவரே..!?

      Delete
  44. அட்டைப்படம் ஜோராக மின்னுகிறது
    அட்டைபடமே அனைவரையும் வாங்கத்துண்டும்
    வரும் நாட்களில் இது போன்ற சிறப்பான அட்டைபடதை தயாரிக்கும் படி கெட்டுக்கொள்கிறேன்<3

    ReplyDelete
  45. சில படைப்புகள் வெளீவரும்போது போதிய வரவேற்ப்பின்றி மங்கிப் போகின்றன. காலமாற்றத்தில் அவை உண்டாக்கும் பாதிப்பு, காலம் கடந்து அதை கொண்டாட வைக்கின்றன.அப்படியொருகதைதான் பின்னே கூறப் போவது .

    முதல் பத்து பக்கத்தைத்தாண்டுவதற்கு மூன்று நாட்கள் சிரமமாக இருந்தது. 'பூசணிக் காய்களின் விகாரமான இளிப்புக்குப் 'பின் நான் முழுதாகவே ஐக்கியமானேன். அதன் தாக்கம் என்னை இரவில் தூங்க விடமாட்டேங்கிறது.

    என்றோ நடந்த கொடுமைக்கு மௌன சாட்சியாக உள்ளுக்குள் வெதும்பி ,கோழையாகவே வாழும் ஒருவனது மனக் குமுறல்கள் ,சிறு நிகழ்வின் மூலம் பீறிட்டெழும் இரத்தக் களரிகளாக உறுமாறுகின்றன.

    ஒரு அட்டகாசமான திகில் கதையை நேரடியாக பார்த்த உணர்வு.

    த்ரில்லர் கதைகளுக்கே உரிய அத்தனை அம்சங்களும் அட்சரசுத்தமாக பொருந்திய அமைப்பு.

    கதை மாந்தர்கள் அத்தனை பேர் மீதும்
    சந்தேகத்தை விதைத்து, கடைசி பக்கம் வரை சஸ்பென்ஸ் மற்றும் திகிலை குறையாமல் சென்ற பாணி.

    காதல், காமம், துரோகம், கடமை, நட்பு, பாசம், துவேசம், மனப்பிறழ்வு,ஆற்றாமை என சகலமும் சரமாறியாக அரங்கேறும் நிகழ்வுகள்.


    சுருக்கமாகச் சொன்னால் இரவுகளில் அப்பியிருக்கும் இருளின் தாண்டவம்.

    "இரவே..இருளே..கொல்லாதே..!"

    ReplyDelete
    Replies
    1. அருமையா எழுதியிருக்கீங்க GP!

      நான் முதல் முறை படித்தபோதே மூச்சை இழுத்துப் பிடிக்கவைத்த கி.நா அது!

      Delete
    2. சூப்பர் GP.
      இவையெல்லாம் காலம் கடந்தும் பேச வைக்கும் கதைகள்!!

      Delete
    3. சூப்பர் கோவிந்த்.

      Delete
  46. நான் நினைக்கிறேன் இது போல பழையக்காப்பிய டெக்ேகே ரேஷன் பன்னுவது புதிது ேபால தான் இருக்கிற து ெடக்ஸ் ேவாட வில்லரின் ைடைனோசரை முறியடிக்கும்காட்சி அட்டகாசம் முழு வண்ணத்தில் ரசிப்பேதேL படிப்பது மீண்டும் ஆர்வத்ைத தூண்டுகிற துஇதை அட்டையே பறைசாற்றுகிறது அட்டையின்மேல்படம் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. கண்ணு.. நீ தங்க தலைவன் டைகர் கதைகளை படி..

      Delete
    2. வாழ்கையில் உருப்படணும்னா நீ டெக்ஸ் கதைகளைப் படி கண்ணு!

      Delete
    3. டேய்,,..
      நீ டையபாலிக் கதையை படி
      அது தா thrillingஆ இருக்கும்

      Delete
  47. புலன் விசாரணை !!! 👏👏👏

    ReplyDelete
  48. டைனோசர் vs டெக்ஸ் - டைனோசர் குழந்தைகளுக்கு பிடித்து அதனை வைத்து குழந்தைகளுக்கு இந்த கதையை சொல்ல போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. படம் காட்டுங்க - கதையை அவங்களே சொல்லுவாங்க! :)

      Delete
    2. @ஈரோடு விஜய்
      எப்படி அண்ணா இப்படி எல்லாம் யோசிகிரிக

      Delete
    3. கடந்த இரண்டு மாதங்களாக குழந்தைகளுக்கு சொல்லுகிற மாதிரி கார்டூன் கதைகள் எதுவும் வரவில்லை எனவே இந்த முடிவு.

      Delete
    4. ///கடந்த இரண்டு மாதங்களாக குழந்தைகளுக்கு சொல்லுகிற மாதிரி கார்டூன் கதைகள் எதுவும் வரவில்லை ///

      கார்டூன்லாம் பெரியவங்க சமாச்சாரம்ங்க! நீங்க குழந்தைகளுக்கு கி.நா அல்லது டெக்ஸ் கதைகளைக் கொடுங்க!

      Delete
    5. கார்டூன்லாம் பெரியவங்க சமாச்சாரம்ங்க! நீங்க குழந்தைகளுக்கு கி.நா அல்லது டெக்ஸ் கதைகளைக் கொடுங்ககார்டூன்லாம் பெரியவங்க சமாச்சாரம்ங்க! நீங்க குழந்தைகளுக்கு கி.நா அல்லது டெக்ஸ் கதைகளைக் கொடுங்க!!//
      உங்க வயதுக்கு நீங்க லக்கி,ஸ்மர்ப்ஸ்,மதி மந்திரி தான் படிக்க வேண்டும்
      எங்க வயதுக்கு நாங்க
      மார்ட்டின்,ஜேசன்,ரோஜர் போன்ற கதைகள் தான் படிப்போம்
      Hehe

      Delete
  49. ganesh kv20 August 2018 at 08:40:00 GMT+5:30
    மண்ணில் துயிலும் நட்சத்திரம்
    மூன்றாவது படத்தில் புகைப்படக்காரர்
    ஒரு பிலிம் ரோல் பத்தாது என்கிறார்.
    பிலிம் ரோல் வந்த காலமா அது?
    துணிபோட்டு மூடி படம் எடுக்கும்
    கேமராவில் தனித்தனியாக பிலிம்
    போடும் வசதிதான் இருந்தது.
    அதாவது ஒரே பிலிம் ஒரேஒரு போட்டாதான்
    அதையும் டெவலப் செய்து பார்த்தபின்தான்
    காயா பழமா என்று தெரியும்.

    இன்னும் பதில் வரலையே? மிதுன்?
    👀👀
    காலைவணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு பதில்கூற திரு.செனா அனா அவர்கள்தான் முன்வர வேண்டும்.
      எனக்கும் கூட இந்த சந்தேகம் லேசாய் எழுந்தது.
      ஆனால்
      சிகப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்!! என்ற காமெடியைபோல 'இது சரியாகத்தான் இருக்கும் போல' என்று இருந்து விட்டேன்.

      Delete
    2. கணேஷ் எளிமையான பதிலு,,,,இத வரஞ்சது அன்னிக்கில்லேங்கோ, நேத்தக்கி,,,,

      Delete
    3. இணைய கதவுகளை அல்ல சாளரத்தினை திறந்தாலே விடைத்தென்றல் வீசுவதால் வாளாவிருந்தேன் .
      டெக்ஸ் கதை என்பதால் கதை நிகழும் காலம் 1890 –களில் எனில் பிலிம் ரோல் வந்துவிட்டது .
      1888 –ல் ஈஸ்ட்மென் செல்லுலாய்ட் பிலிம் ரோலை கண்டுபிடித்துவிட்டார் .புழக்கத்துக்கும் வந்துவிட்டது.
      1890 –களில் படத்தில் வரும் டிரைபோட் –க்கு அவசியம் இல்லை எனினும் கதையில் காட்டப்பட்டுள்ள லேண்ட்ஸ்கேப் புகைப்படங்களுக்கு அது அவசியம் அப்போது .
      படத்தில் காட்டப்பட்டுள்ள ஷட்டர் ஸ்பீட் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பினும் புறத்தே இருந்து வரும் பிரகாசமான சூரிய ஒளி படமெடுப்பவரின் பார்வையை கூச செய்யும் என்பதால் மூடிக்கொள்ள துணி தேவைப்படுகிறது.
      வசனத்தில் பிலிம்ரோல் தீர்ந்துபோய்விடும்போல் உள்ளதே என புகைப்படக்காரர் கவலைப்படுகிறார் .அடுத்த ரோல் மாற்றி கொள்ளவேண்டியதுதானே என்றால் அது இயலாது .
      1௦௦ எக்ஸ்போஷருக்கு தேவையான கேமிராவோடு ப்ரீலோடட் பிலிம்ரோல் இருக்கும் ..அது முடிந்தவுடன்
      கேமிராவை கம்பெனியிடம் கொடுத்துவிடவேண்டும் ..அதை அவர்கள் டெவலப் செய்து நம்மிடம் தருவார்கள் ..மறுபடியும் 1௦௦ எக்ஸ்போஷருக்கு தேவையான பிலிம்ரோல்-ஐ ப்ரீலோட் செய்து கேமிராவை நமுக்கு தருவார்கள் ...
      தனி பேப்பர் பிலிம் போடும்படி கோடக் செய்ததாக தெரியவில்லை ..
      ஆனால் பிலிமுக்கு முன்னர் கொல்லோடியன் ,சில்வர் அயோடைடு பிளேட்டுகள் முதலில் தனியாக பின்னர் அடுத்து அடுத்து மாற்றிக் கொள்ளும் வண்ணம் பயன்படுத்தப்பட்டன .
      பிலிம்ரோலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கோடக் 2012- ல் மஞ்சள் நோட்டிஸ் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது வருத்தமளிக்கும் விஷயமே ..
      பிளேட்டோ,பிலிம்ரோலோ,டிஜிட்டலோ எதில் எடுத்து என்ன என் முகத்தை அப்படியேதான் காட்டுகிறது .

      Delete
    4. ////பிளேட்டோ,பிலிம்ரோலோ,டிஜிட்டலோ எதில் எடுத்து என்ன என் முகத்தை அப்படியேதான் காட்டுகிறது .////

      எதுக்கும் ஒருதபா ஒரு ஓவியரை வச்சு ட்ரை பண்ணிப் பாருங்களேன் செனாஅனா ஜி?
      ஓவியருக்கு ஒன்னுகிடக்க ஒன்னு நேர்ந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம்தான்... ஆனா அதெல்லாம் பார்த்தா நமக்கு வேலையாகுமா?! வேணுமின்னா, வரலாறு படிக்காத ஒரு நல்ல டாக்டரைக் கூடவே வச்சிக்கிட்டு வரையச் சொல்லுங்க அவரை!

      (என்னதான் நீங்க சுயஎள்ளிக்கிட்டாலும், நாங்களும் விடாம வளைச்சு வளைச்சு வந்து எள்ளுவோமில்ல?
      ஹிஹி!டச் விட்டுடக்கூடாது பாருங்க!)

      Delete
    5. //ஓவியருக்கு ஒன்னுகிடக்க ஒன்னு நேர்ந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம்தான்...//


      ஹா...ஹா...ஹா...இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஈவி கையால கிண்டல் குட்டு வாங்கினா அது ஒரு தனி சுகம்தான் ...:)

      Delete
    6. இணைய கதவுகளை அல்ல சாளரத்தினை திறந்தாலே விடைத்தென்றல் வீசுவதால் வாளாவிருந்தேன் .
      டெக்ஸ் கதை என்பதால் கதை நிகழும் காலம் 1890 –களில் எனில் பிலிம் ரோல் வந்துவிட்டது .
      1888 –ல் ஈஸ்ட்மென் செல்லுலாய்ட் பிலிம் ரோலை கண்டுபிடித்துவிட்டார் .புழக்கத்துக்கும் வந்துவிட்டது.
      1890 –களில் படத்தில் வரும் டிரைபோட் –க்கு அவசியம் இல்லை எனினும் கதையில் காட்டப்பட்டுள்ள லேண்ட்ஸ்கேப் புகைப்படங்களுக்கு அது அவசியம் அப்போது .
      படத்தில் காட்டப்பட்டுள்ள ஷட்டர் ஸ்பீட் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பினும் புறத்தே இருந்து வரும் பிரகாசமான சூரிய ஒளி படமெடுப்பவரின் பார்வையை கூச செய்யும் என்பதால் மூடிக்கொள்ள துணி தேவைப்படுகிறது.
      வசனத்தில் பிலிம்ரோல் தீர்ந்துபோய்விடும்போல் உள்ளதே என புகைப்படக்காரர் கவலைப்படுகிறார் .அடுத்த ரோல் மாற்றி கொள்ளவேண்டியதுதானே என்றால் அது இயலாது .
      1௦௦ எக்ஸ்போஷருக்கு தேவையான கேமிராவோடு ப்ரீலோடட் பிலிம்ரோல் இருக்கும் ..அது முடிந்தவுடன்
      கேமிராவை கம்பெனியிடம் கொடுத்துவிடவேண்டும் ..அதை அவர்கள் டெவலப் செய்து நம்மிடம் தருவார்கள் ..மறுபடியும் 1௦௦ எக்ஸ்போஷருக்கு தேவையான பிலிம்ரோல்-ஐ ப்ரீலோட் செய்து கேமிராவை நமுக்கு தருவார்கள் ...
      தனி பேப்பர் பிலிம் போடும்படி கோடக் செய்ததாக தெரியவில்லை ..
      ஆனால் பிலிமுக்கு முன்னர் கொல்லோடியன் ,சில்வர் அயோடைடு பிளேட்டுகள் முதலில் தனியாக பின்னர் அடுத்து அடுத்து மாற்றிக் கொள்ளும் வண்ணம் பயன்படுத்தப்பட்டன .
      பிலிம்ரோலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கோடக் 2012- ல் மஞ்சள் நோட்டிஸ் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது வருத்தமளிக்கும் விஷயமே ..
      பிளேட்டோ,பிலிம்ரோலோ,டிஜிட்டலோ எதில் எடுத்து என்ன என் முகத்தை அப்படியேதான் காட்டுகிறது .

      முதல்வன் ரகுவரன் பானி.. பிலிம் ரோலு , கேமரா இதெல்லாம் வேண்ணடா.. ஆஹ்ஹ்ஹ்ஹா..
      தங்க தலைவனா.. இல்ல டெக்சா சொல்லுங்க..

      Delete
    7. 2016முதல் மாதந்தோறும் டெக்ஸ் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆவது, உரைக்கும் உண்மையே உமது கேள்விக்கு விடையாகும் ரம்மி!

      Delete
  50. எல்லாம் ரைட்டு!

    ஆனாக்கா கடேசிலயும் அந்த XIII யாருனு கன்பாா்மா சொல்லலியே!!

    ReplyDelete
    Replies
    1. நல்லா பாருங்க , மல்வே மகன்தான், ,,தெளிவா இருக்கே

      Delete
    2. "என்சைக்ளோபீடியா"----ல் இல்லையா??? அட டா...!

      சரி விடுங்க. ஜேசனே நினைவு பெற்று, என்சைக்ளோபீடியா வை மாற்றி எழதுவாரு. அப்ப தெரிஞ்சிக்கிடலாம்....!!!!

      என்சைக்ளோபீடியா தான் திசை திருப்பும் முயற்சியாமே....!!!
      சோ சேட்!

      Delete
    3. புலன் விசாரணையோட கடைசி பக்கத்தில 'அவன் யார் 'ங்கிற கேள்வியோட முடிஞ்சிருக்கும்.அது ஒரு பத்திரிக்கையாளனுடைய பார்வையில்.

      ஆனால் நாம் படிச்சது 'வான் ஹேமே 'வின் பார்வையில்.

      அதனால ஜேஸன் மக்லேன் மேலே எனக்கு கொஞ்சமும் ஐயமில்லை.

      Delete
    4. எல்லா கதைக்கும் விளக்கம் சொல்லும் மிதுனருக்கே இப்படினா...???

      Delete
  51. மறுபதிப்பு வந்தே ஆகணும் ....அக்காங் ......
    அவ்ளோ தான் சார்

    ReplyDelete
    Replies
    1. ////மறுபதிப்பு கண்ட கதைகள் தான் வெளியாகின.கிடைக்காத கதைகளை தேடுவது எல்லோரின் இயல்புதானே.உதாரணத்திற்கு எழுபதுகளில் வண்ணத்தில் வெளியான கொரில்லா சாம்ராஜ்யம்,யார் அந்த மாயாவி, கொலைகார குள்ளநரி போன்ற கதைகளும் கறுப்பு வெள்ளையில் வெளியான கண்ணீர் தீவில் மாயாவி,இரும்புக்கை மாயாவி,பாதாள நகரம் போன்ற அரிதான கதைகளை தேர்வு செய்திருக்கலாம்.லாரன்ஸ் டேவிட் கதைகளில்கூட ஃபார்முலா திருடர்கள்,காணாமல்போன கடல்,ஃபார்முலா X13, போன்ற கதைகள்,ஜானி கதைகளில் கடத்தல் முதலைகள்,ஜானி IN ஜப்பான், ஜானி IN லண்டன் போன்ற நல்ல கதைகள் உள்ளன.இவைகள் உதாரணத்திற்கு மட்டுமே. மும்மூர்த்திகள் இல்லாது சார்லியின் சிறை மீட்டிய சித்திரக் கதை, கடத்தல் ரகசியம், குரங்கு தேடிய கொள்ளையர் புதையல், காரிகன் கதைகளில் வைரஸ் X13, மடாலய மர்மம், கடலில் தூங்கிய பூதம், பனித்தீவின் தேவதைகள்,பில்லி சூனியமா பித்தலாட்டமா,தீ விபத்தில் திரைப்படச் சுருள், ஜார்ஜ் கதைகளில் நெப்போலியன் பொக்கிஷம்,ஒற்றன் வெள்ளை நரி என்று கிடைப்பதற்கு அரிதான கதைகளை ஆரம்பத்திலிருந்தே கொண்டு வந்திருந்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை./////



      copy paste ......


      வழி மொழிகிறேன்

      Delete
  52. நான் ரெங்கு நண்பன்

    ReplyDelete
  53. இரவுக் கழுகின் நிழலில்!!!

    டெக்ஸே இல்லாமல் ஒரு டெக்ஸ் கதை!

    கி.நா. பாணியில் டெக்ஸ் கதை!!

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ்கதைகளிலே ரொம்பவே மாறுபட்ட களம்.110 பக்க கதைக்கு உண்டான சரக்கு 30 பக்கங்கள்ல அடைஞ்சிருக்கு. நார்மலான பகக்கத்தில் வெளிவந்திருந்தால், அதனோட எபக்ட் இன்னும் தூக்கலாக அமைந்திருக்கும்.

      Delete
    2. இருக்கும் நிச்சயமாக , தேடி தரனும் சார்.

      Delete
  54. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  55. எடிட்டர் சார்...!

    ரிப்போர்ட்டர் ஜானி மறுபதிப்பு போடுறதுதான் போடுறிங்க ..ரெண்டுகதைகளா சேர்த்து லக்கி சிக்பில் க்ளாசிக்ஸ் மாதிரி போட்டுட்டிங்கன்னா பட்டாசா இருக்குமே.!?


    ஹார்டுபவுண்ட் இல்லேன்னாக்கூட பரவாயில்லை.!

    எப்பவாச்சும்தான் ஜானியை நினைச்சேப் பாக்குறோம் ...அதை கொஞ்சம் க்ராண்டா நினைச்சுப்பாத்தா நல்லாருக்கும்னு ஒரு ஆசைதான் ..ஹிஹி...!!

    ReplyDelete
    Replies
    1. யாமும் அவ்வாறே கோருகிறோம் சார்..:-)

      Delete
    2. // ரெண்டுகதைகளா சேர்த்து லக்கி சிக்பில் க்ளாசிக்ஸ் மாதிரி போட்டுட்டிங்கன்னா பட்டாசா இருக்குமே.!? //
      அதே,அதே கண்ணரே எனது கருத்தும் அதே,அதே.
      // ஹார்டுபவுண்ட் இல்லேன்னாக்கூட பரவாயில்லை.! //
      ஆசிரியரே ஹார்டு பவுண்ட் போடறேன்னு சொன்னாகூட நீங்க மாத்தி யோசிக்க வெச்சிருவிங்க போல,
      அதெல்லாம் கிடையாது மறுபதிப்பு + ரெண்டு கதைன்னாவே ஹார்டுபவுண்ட் தானாம்,இது சிவகாசிக்காரரோட வேண்டுதலாம்.இல்லேன்னா சாமி கண்ணை குத்திருமாம்.

      Delete
    3. ஹார்ட் பவுண்ட்னா அது லக்கி, சிக்கி, டெக்ஸ் க்கு தான் நல்லாயிருக்கும் என்பது எ.க...!

      புதுசுனா தோர்கல்& டியூராங்கோ க்கு நல்லாயிருக்கு.



      பிரின்ஸ் க்கு கூட எடுபடல...!!!

      ஜானிக்கும் அதே தான்...!!!

      Delete
    4. ////ஹார்ட் பவுண்ட்னா அது லக்கி, சிக்கி, டெக்ஸ் க்கு தான் நல்லாயிருக்கும் என்பது எ.க...!////

      ஹாா்டு பவுண்ட் ஸ்பெசலிஸ்ட் "தளபதி"ய மறந்துட்டீங்களே!!

      இதுல அதுனா உள்குத்து இருக்கா??!!

      Delete
    5. ///ஹாா்டு பவுண்ட் ஸ்பெசலிஸ்ட் "தளபதி"ய மறந்துட்டீங்களே!!///

      இஸ்ஸுபைடருக்கு கூட ஒருதபா ஹார்டுபவுண்டு வந்துச்சே ..அதையும் மறந்துட்டாரு ..நல்லா கேளுங்க மிதுன் ..!

      Delete
    6. ///ஆசிரியரே ஹார்டு பவுண்ட் போடறேன்னு சொன்னாகூட நீங்க மாத்தி யோசிக்க வெச்சிருவிங்க போல,///

      டீலிங் பேசறச்சே நம்ம சைடுலயும் கொஞ்சம் இறங்கிப்போறதுதானே நியாயம் ரவி ..! :-)

      Delete
    7. இஸ்பைடரு, ஸைபராகி ரொம்ப நாள் ஆவுதே சார்ஸ்....!!!

      இரத்தப்படலம் கலக்டர் ஸ்பெசல் எதில் பிடிக்குதோ இல்லையோ, "லயன்-முத்து வெளியீடுகளில் அதிகவிலை"---என்ற அம்சம்தான் ரொம்ப பிடிக்குது...!!!

      இப்ப ஆரும் அதுக்கு சொந்தம் கொண்டாட முடியாதுள்ள....!!!

      இனிஒரு ஹார்டு பவுண்ட்லாம் நீங்க சொல்ற பார்டிக்கு வாய்க்குமானா அது சந்தேகம் தான்...!!!

      Delete
    8. Hard cove ஜானி
      ரொம்பவும் சிறப்பாக இருக்கும்
      +11111

      Delete
    9. // டீலிங் பேசறச்சே நம்ம சைடுலயும் கொஞ்சம் இறங்கிப்போறதுதானே நியாயம் ரவி //
      ஆனாலும் உங்க டீலிங் பிடிச்சிருக்குபா.இனி சார்தான் மனசு வைக்கணும்.

      Delete
  56. டெக்ஸ்
    சாகஸம் வளர நானும் அதற்க்கு உதவிட எப்ேபாதும் தொடர விரும்பி கிேறேன் டெக் ஸ்புதிய . புக்ைக அவ லுடன் இருக்கிறேன்

    ReplyDelete
  57. இலங்கையின் உன்னத எழுத்தாளர்களுல் ஒருவரான அ.செ.மு 1943- ல் எழுதிய மாடு சிரித்தது கதைத்தொகுப்பில் உள்ள பழையதும் புதியதும் என்ற இச்சிறுகதையில் வரும் வரிகள் ம.ப -கி.நா என்னும் ஆசிரியரின் பதிவு தலைப்புக்கு எவ்வளவு பொருத்தமான வகையில் உள்ளன.

    மாட்டுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் கார்த்திகேசு மலையாளத்தானின் மோட்டார் கார் வருகையால் பாதிக்கப்பட பின் இரண்டாம் உலகப்போர் நிகழ்வால் எரிபொருள் தட்டுப்பாட்டால் மோட்டார் கார் தடுமாற மீள்வாழ்வு தற்காலிகமாக பெறும் கார்த்திகேசு வின் பழைய நினைவு புலம்பல் வரிகள்


    காவோலை விழுந்தால்தானே குருத்தோலை வளரமுடியும்...

    முந்திவந்த மாட்டின் செவியை பிந்தி வந்த கொம்பு மறைத்த கதையாகிவிட்டது...

    நெப்போலியன் பொக்கிஷம், திக்கு தெரியாத காட்டில் ,சி.மீ.சி.கதை போன்றவை காவோலைகளாக மாறிவிட்டன போலும் ...

    கார்திகேசுவின் நெடுமூச்சை விட பெரிதாக ஒரு ஏக்கப் பெருமூச்சு...

    ReplyDelete
    Replies
    1. விற்பனையும் ஒரு காரணம் ,,,, ஆசிரியர் இவ்வளவு குறைந்த விலையில் தரமாய் தந்தும் தேவைப்படுவோர் குறைவே ,,,,வேண்டும் நண்பர்கள் குவிந்து கேளுங்கள் ,,,ஆயிரம் பிரதிகளாவது விற்றால் ,அதற்கான விலையில் ஆசிரியர் தர வாய்ப்பு உருவாகலாம் ,,,ஓரே வழி இப போல முன் பதிவு, ,,,அதற்கான பிரதிகளின் எண்ணிக்கை

      Delete
    2. //1


      Vijayan20 August 2018 at 18:49:00 GMT+5:30
      மேஜிக் விண்ட்
      கமான்சே
      ஜூலியா
      டைலன் டாக்
      ஜெரெமியா
      லியனார்டோ தாத்தா

      இவர்களை எல்லாமே கொஞ்சமே கொஞ்சமாய் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் சத்யா ! இவர்களது கதைகள் யாருக்குமே பிடிக்கவில்லை ; ஒட்டு மொத்தமாய் புறக்கணித்தார்கள் என்று சொல்லப் போகிறீர்களா ?

      மேற்படிப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாயக / நாயகிக்கும் நிச்சயமாய் இங்கே ஒரு ரசிக வட்டம் உண்டு ! ஆனால் நடந்தது என்ன ? நாளாசரியாய் இவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் சுமத்தப்பட்டன ; இவர்களது ஆல்பங்கள் என்றாலே ஒரு வித அயர்ச்சி எழுந்தது ; விற்பனைப் பக்கத்திலும் கூட பெரிதாய் தாக்கங்கள் ஏற்படவில்லை ! So வேறு வழியின்றி மூட்டை கட்டினோம் ! அப்போது இவர்களது ரசிகர்களாக இருந்த நண்பர்கள் என்ன செய்தார்கள் ? விற்பனைப் புள்ளியில் சோபிக்கவில்லையெனில் கல்தா தவிர்க்க இயலாததே என்பதை புரிந்து ஏற்றுக் கொண்டார்கள் !!

      இப்போது நடந்து வருவதைக் கவனியுங்கள் :

      நீலப் பொடியர்கள்
      க்ளிப்டன்
      ரின்டின் கேன்
      மதியிலா மந்திரி

      கார்ட்டூன் ஜானரில் இவர்கள் ஒவ்வொருவரும் உலகளாவிய ஜாம்பவான்கள் ; ஆனால் நம்மில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ! So தொடரும் ஆண்டில் இவர்களுள் பலரும் danger zone -ல் இருக்கப் போவது சர்வ நிச்சயம் ! இத்தனைக்கும் புத்தக விழா விற்பனைகளில் இவர்கள் டீசெண்டாகவே வண்டியோட்டி வரும் பாத்திரங்கள் !! இவர்களில் யாருக்கேனும் சீட்டுக் கிழிக்கப்படும் போதும் அவர்களது அபிமானிகள் புரிந்து கொள்ளத் தான் போகிறார்கள் !

      ஆனால் -

      நடப்புக் கதைகளில் யார் வந்தாலும் கவலையில்லை ; யார் போனாலும் கவலையில்லை - நான் அரை டிராயர் போட்ட வயதில் படித்தவர்களை மட்டும் சாஸ்வதமாய் தொடர அனுமதிக்க வேண்டும் ; விற்காது போனாலும் பரவாயில்லை - அவர்களை ஓரம் கட்டினால் எனக்குப் பொறுக்காது என்பதில் உள்ள லாஜிக்கை எனக்குப் புரியும் விதமாய்க்கொஞ்சம் சொல்லுங்களேன் - கேட்டுக் கொள்கிறேன் ?! மூன்றரை ஆண்டுகளாய் வண்டியை இழுத்துப் பிடித்து ஓட்டிய போது ; விற்பனைகளில் சுணக்கமில்லை என்றவரையிலும் - நான் புகார் சொல்லிக் கேட்டீர்களா ? இனியும் இழுக்க 'தம்' இல்லை எனும் நிலை எட்டும் போதும், "நான் பார்க்காததை பார்க்கவுள்ள வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறாய் நீ!" என்று கண் சிவப்பது என்ன மாதிரியான reaction என்று புரியலை !!

      சரி, க்ரே மார்க்கெட்டை ஒழித்து விட்டோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் ; அதன் பொருட்டு நான் தந்துள்ள விலை என்னவென்பது எத்தனை தூரத்துக்கு உங்கள் சிந்தனைகளை எட்டியதென்று தெரியவில்லையே ?! கிட்டங்கியில் ஏற்றி வைத்திருக்கும் புக்குகளை காலி செய்ய இன்றிலிருந்து எத்தனை ஆண்டுகள் ஆகுமென்ற ஆரூடம் சொல்ல நமக்கேது ஆற்றல் சத்யா ?

      "எனக்குப் பிடித்ததில் கை வைத்தால் எனக்கு அறவே பிடிக்காது" - என்று ஒவ்வொருவரும் கிளம்பினால், என்னவாகுமென்று சொல்லட்டுமா ? வெறும் 100 பிரதி சர்குலேஷனோடே, ஒரு 40 கதை வரிசைகளை ஆண்டொன்றுக்கு நாம் திட்டமிட வேண்டும் ; இன்றைக்குள்ளதை விட தோராயமான 8 பங்கு விலைகளோடு ! "ஆஹ்..இது நான் ஆராதித்த ஆறாம் வகுப்பில் படித்த காரிகன்" ; "ஏழாவதில் எட்டு தபா வாசித்த ஸ்பைடர் இதோ !!" என்று அந்தக் குட்டி வட்டத்துக்குள் குதூகலித்துக் கொள்ளலாம் ; எனக்கும் ஸ்டாக் ஏற்றுகிறோமென்ற நோவு இராது ! அது தான் தீர்வென்றால் நிச்சயமாய் எனக்குச் சிரமங்கள் கிடையாது !//கேப்பமா

      Delete
    3. ஸ்டீல்! என்னுடையது கோப பெருமூச்சு அல்ல!

      ஆசிரியரின் நிலைமையை புரிந்து கொண்டதால் வந்த ஏக்கப் பெருமூச்சு..

      Delete
    4. //முதலாமவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும், ஈரோட்டுப் புத்தக விழாத் தலைவருமான திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களே ! 2013-ல் நம்மிடமிருந்த சொற்பமான title கையிருப்பைப் பார்த்தவர் – “சீக்கிரமே உங்களது புத்தக எண்ணிக்கைகளைப் பன்மடங்காக்க முயற்சிக்கா விட்டால் – வரும் ஆண்டுகளில் ஈரோட்டுப் புத்தக விழாவின் கதவுகள் உங்களுக்குத் திறப்பது கடினமே!” //

      மாட்டு வண்டியை மறுபதிப்பு கதைகளாகவும் கிநாவை மோட்டார் வண்டியாகவும் ஸ்டாலின் குணசேகரன் சாரை இரண்டாம் உலக போராகவும் எரிபொருள் தட்டுப்பாட்டை டைட்டில் தட்டுப்பாடாகவும் கார்த்திகேசுவை மறுபதிப்பு விரும்பிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள கதைவரிகள் உருவகப்படுத்த முயல்வதை கண்டு கொண்டு இருந்து இருப்பீர்கள்...

      மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை..

      எடிட்டரை சிரமத்துக்கு ஆளாக்குவதல்ல பெரும்பாலோரை போல எனது எண்ணமும்.

      Delete
    5. ///என்னுடையது கோப பெருமூச்சு அல்ல!

      ஆசிரியரின் நிலைமையை புரிந்து கொண்டதால் வந்த ஏக்கப் பெருமூச்சு..///

      லேட்டஸ்ட் ட்ரெண்டு தெரியாத அப்பாவியா இருக்கீங்களே செனா அனா ..!!

      அது விக்காதுன்னு தெரிஞ்சாலும் அடமா கேக்கணும்., எடிட்டர் அதிலிருக்கும் சிரமங்களை பட்டியலிட்டாலும், நீங்க ஒத்துக்கக்கூடாது., தர்ணா பண்ணனும்., இனிமே ப்ளாக் வரமாட்டேன்னு சொல்லணும்., மௌணப்பார்வையாளர் ஆயிடுவேன்னு மிரட்டணும்., காமிக்ஸ் படிக்கிறதுலருந்து விலகிடுவேன்னு பயமுறுத்தனும் ..!!
      அப்பத்தானே நீங்களும் ரவுடியா ஃபார்ம் ஆக முடியும். அதைவிட்டுட்டு.......ஹிஹி..!!

      Delete
    6. இதுதான் கண்ணன் குசும்பா???
      ஹிஹிஹி......!!!

      Delete
    7. கண்ணா @ நம்ப செல்வம் அபிராமி அவர் ஊர்ப் பக்கம் மிகப் பெரிய ரௌடி. கொஞ்சம் ஜாக்கிரதை இருங்க.

      Delete
    8. // கேப்பமா // நான் ரெடி.‌இது போன்ற கிளாசிக் கதைகளை ஆசிரியருக்கு சொல்லும் விலையில் வாங்க நான் தயார்.

      Delete
    9. ///செல்வம் அபிராமி அவர் ஊர்ப் பக்கம் மிகப் பெரிய ரௌடி. கொஞ்சம் ஜாக்கிரதை இருங்க.///

      மருவும் கிருதாவும் இல்லாம நான் அந்தப்பக்கம் போகவே மாட்டேன் ..எச்சரிக்கைக்கு நன்றி பரணி ..!


      ஆமா ...ஜாம் பஜார் ஜக்குவுக்கும் நம்ம செனா அனாவுக்கும் நிறைய்ய ஒற்றுமைகள் இருக்குன்னு நாசாவுல பேசிக்கிட்டாங்களே ..உண்மையா பரணி ..!?

      Delete
  58. அயா்லாந்துப் படலம் ஆரம்பம்!!!

    ReplyDelete
    Replies
    1. மிதுன், ,,,கூர்ந்து, ரசிச்சு படிங்க ,,,கதையை வளவளன்னு இழுத்திருக்லாம்,,,,ஆனா அது அட்டகாசமா இருக்கும்,,,,சில பதில்களும் கிடைக்கும், ,,,,கதைகளில் கரையும் உங்களுக்கு நான் இத சொல்வது அதிகம்தான்,,,,இருந்தாலும் கதய ஜவ்வா இழுக்குறான்னு நினைக்கும் நண்பர்களுக்காக

      Delete
    2. இன்னுமொரு லெவல் அட்டகாசம் ஆரம்பம்

      Delete