Powered By Blogger

Saturday, August 25, 2018

Life after இ.ப....& Life before டை.ஸ்பெ..!

நண்பர்களே,

வணக்கம். சில தருணங்களில், இதர பணிகளின் தீவிரத்திலோ ; அல்லது ஏதேனும் சொந்த ஜோலிகளின் மும்முரத்திலோ, காமிக்ஸ் பக்கமாய் ஒரு நாலைந்து நாட்களுக்குத் தலையே வைக்க நேரமின்றிப் போய் விடுவதுண்டு ! ஆனால் வாரயிறுதி .......  பதிவிற்கெனத் தயாராக வேண்டிய சமயம்  - என்று புலர்ந்திடும் வேளையில், திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்  போல மலங்க மலங்க விழித்துக் கொண்டே தான் கம்பியூட்டரின் முன்னே அமர வேண்டி வரும் ! இடைப்பட்ட நாட்கள் நாலோ-ஐந்தோ தான் என்றாலும், ஏதோ ஒரு யுகத்து இடைவெளி விழுந்துள்ள உணர்வு தலைதூக்கிட  - பின்னூட்டங்களை பயபக்தியோடு படித்து வைப்பேன் - புதுசாய் பதிவுக்கு மாவு பினையத்  துவங்கும் முன்பாக !! இந்த வாரமும் நிலவரம் அதுவே !! "இரத்தப் படலம்"....TEX கலர் தொகுப்பு ; கூப்பிடு தொலைவிலிருக்கும் செப்டெம்பர் இதழ்கள் என சகலமும் தற்காலிகமாய் மண்டையின் பின்சீட்டுக்குச் சென்றிருக்க - இப்போது தான் மறுபடியும் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்திற்கு மாற்றம் செய்து வருகிறேன் !! வழக்கம் போல பாப்பநாயக்கன்பட்டியில் ஆரம்பித்து - U-டர்ன் அடித்து பிலடெல்பியாவுக்கு வண்டியைத் திருப்புவதற்குப் பதிலாய் இம்முறை - காத்திருக்கும் புது இதழ்களின் preview படலத்தினுள் புகுந்து விடுகிறேனே?!  

"இரத்தப் படலம்" !!! ஒற்றை மாதம் முழுசுக்கும்  தனது மெகா துண்டை விரித்து வைத்திருக்க - தொடரும் மாதத்தின் நார்மலான இதழ்களின் பணிகளுக்குள் புகுவது ஒரு தினுசான அனுபவமாகவே இருக்கிறது !! Maybe in some ways - இது போன்ற "பெரும் எதிர்பார்ப்பு" இதழ்கள் நம்மிடமிருந்து அவசியத்துக்கும் அதிகமாகவே சக்தியை உறிஞ்சிடுகின்றனவோ - என்னவோ  - எஞ்சி  நிற்கும் இதழ்களை அணுகும் போதே ஒருவிதமான flat feeling தான் மேலோங்குகிறது !! பற்றாக்குறைக்கு அடுத்த மாதமே அடுத்த 'பீம்பாய்' இதழ் - டைனமைட் ஸ்பெஷல் ரூபத்தில் காத்திருக்க - ரெகுலர் இதழ்களையெல்லாம் பார்த்து  - ''தம்பி....அப்டி ஓரமாய் போயி விளையாடுங்கப்பா !!" என்று சொல்லவே தோன்றுகிறது !! Of course - ஒவ்வொரு இதழும் நமக்கொரு புதுத் துவக்கம் ; புதுச் சவால் தான் எனும் போது - ஒவ்வொரு பிள்ளையார் சுழியிலும் - நமது பாட்டெரிகள் முழு சார்ஜில் இருந்திடல் அவசியமென்று எண்ணுபவன் நான் !! ஆனால் இருக்கும் மின்சாரத்தை முழுசும், இந்த 2 மெகா இதழ்களே  உறிஞ்சிய பின்பாய் - அரை பாய்ண்ட்டில் மட்டுமே சார்ஜ் இருப்பது போலவே தோன்றுகிறது !! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும்  ஏற்படுத்திடும் எதிர்பார்ப்புகளின் பலனிது என்பது புரிகிறது !!

இந்தப் பின்னணியே - இம்முறை ஈரோட்டில் நான் பிடிவாதமாய் பெவிகால் பெரியசாமியாய் வலம் வந்ததன் காரணம் !! "குண்டு புக் ; மெகா புக் ; அத்திரி பாட்சா ஸ்பெஷல் ; குப்புற பல்டி ஸ்பெஷல் " என்று மறுக்கா கால்களை அ-க-ல-மா-ய் விரித்துக் கொண்டு, அப்புறமாய்த் திரு-திருவென்று முழிக்க வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை தான் இம்முறை வீட்டிலிருந்து நான் பேக் செய்திருந்த முதல் வஸ்து ! ஒற்றை மாத இடைவெளியில் டைனமைட்....அதன் மறு மாதம் 2019-ன் அட்டவணை என மேற்கொண்டும் இரு முரட்டுக் குதிரைகள் காத்து நிற்க - அவற்றை சவாரி செய்திடும் முன்பாய் அடுத்த பயணம் பற்றி யோசிப்பானேன் ? என்று அந்தத் தருணத்தில் பட்டது !! ஆனால் தட்டுத் தடுமாறி - "டைனமைட்" பணிகள் + அக்டொபரின் ரெகுலர் பணிகள் என தொடரும் வாரத்தினில் என்னளவுக்கு முடித்து விட்டேனென்றால் - ஒரு சிகப்பு கோட்டைப் போட்டுக் கொண்டு, தம்மாத்துண்டு பிரீஃப் கேஸையும் தூக்கிக் கொண்டு - "புதிய வானம்-----வா-ன-ம்ம்ம்ம்......புதிய பூமி..." என்று கிளம்பிடுவேன் !! So அதற்கு முன்பாய் here come the september previews :

ஜம்போவின் புக் # 2 தான் - இம்மாதத்தின் கார்ட்டூன் கோட்டாவின் பிரதிநிதி !! And துவக்கத்திலேயே நினைவூட்டி விடுகிறேன் guys - இது லயன் - முத்து ரெகுலர் சந்தாவின் அங்கமே அல்ல !! So ஜம்போவுக்கு சந்தா செலுத்தியிருந்தால் மாத்திரமே - இம்மாதத்து கூரியரில் இந்த இதழ் இடம்பிடித்திடும் !! விளம்பரங்களை மட்டுமே பார்த்து விட்டு - "எனக்கு எப்படி அந்த புக் அனுப்பாமப் போச்சு ?" என்று நெற்றிக்கண் திறந்திடல் வேண்டாமே - ப்ளீஸ் !! And ஜம்போவுக்கு சந்தா செலுத்திய போதே - "இது வேண்டாமே" என்று opt செய்திருந்தோருக்கு இந்த இதழ் அனுப்பிடப்படாது !! ஷப்பா....மூச்சு வாங்குது சாமி !! 

ஹெர்லக் ஷோம்ஸ் : ஒரு 90 வயதுப் பிதாமகரின் படைப்பே இந்த உட்டாலக்கடி டிடெக்டிவ் !! இவர் நமக்குப் புதியவர் அல்லர் ; லயனில் ; மினிலயனில் - '90s களில் இவரைச் சந்திக்க நமக்கு சொற்பமாய் வாய்ப்புகள் கிட்டியுள்ளன ! So ஒரு 20 + ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பாய் தலை காட்டும் ஆசாமியை நமது சமீபத்தைய வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் கம்மி !  இருப்பினும், அமர கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோல்ம்ஸின் பகடியே இந்த நாயகர் என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லையே !! ஹெர்லக் & அவரது தோஸ்தான டாக்டர் வேஸ்ட்சன்(all good doctors மன்னிச்சூ !!) மர்மங்களைத் துப்புத் துலக்கும் பாணிகள் அலாதி ! நொடியில் ஏதேதோ வேஷங்களைப் போடும் ஆற்றல் ; தப்பான இடத்தில் சரியான வேளையில் இருக்கும் ஆற்றல் என்று இவர்களுக்குக் கைவந்த கலைகள் ஏராளம் ! கொஞ்சம் அட்வென்ச்சர் ; கொஞ்சம் சிரிப்பு ; கொஞ்சம் பகடி - என்ற கலவையே "ஒரு குரங்கு சேட்டை / வேட்டை " ! பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் சிரிப்பு என்றெல்லாம் எதிர்பார்த்திடாது - ஒரு ஜாலியான மூடில் இந்த ஆல்பத்தைக் கையில் எடுத்தால் - நிச்சயம் ஏமாற்றமிராது என்பேன் ! And வீட்டிலுள்ள 10 வயது & thereabouts குழந்தைகளுக்குக் கதைசொல்லவும் இந்த இதழ் செமையாக அமைந்திடும் என்பேன் ! இதோ அதன் அட்டைப்படம் : 
ஒரிஜினல் டிசைன் ; லேசாய் நாம் கூட்டல்கள், கழித்தல்கள் செய்து வழங்கியுள்ளோம்  !! வழக்கமான அடர் வர்ணங்களின்றி, இம்முறை வெள்ளை & மஞ்சள் combo !! And கதையின் தலைப்பின் எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணமே !! தொடர்வது உட்பக்கத்து preview : தெளிவான சித்திர பாணி ; கண்ணை உறுத்தா வர்ண சேர்க்கை - என பார்த்தவுடன் ரசிக்க இங்கே சமாச்சாரங்கள் உள்ளன ! அச்சிலும் அழகாய் அமைந்திருக்க - this looks a cool album !! சீக்கிரமே உங்கள் கைகளில் !! 
வண்ணத்திலிருந்து ஒரே தாவாய் black & white பக்கமாய் பயணித்தால் - இளவரசியின் சோலோ சாகசம் காத்துள்ளது !! "ஒரு விடுமுறை வில்லங்கம்" என்பதே இந்த ஆல்பத்தின் டைட்டில் ! ஒரிஜினலாக C.I.D ராபின் சகிதம் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்று வந்திருக்க வேண்டிய கதையிது ! ஆனால் அடுத்த 4 மாதங்களை நகற்றிட போதுமான எண்ணிக்கையில் இதழ்கள் மீதமில்லை என்பதால் - ராபினைத் தனியாகவும், மாடஸ்டியைத் தனியாகவும் களமிறக்க வேண்டிப் போயுள்ளது !! So "சிங்கம் சிங்கிளாத் தான் வரும் !!" போன்ற தமிழர்களின் எவெரெடி,காவிய வரிகளை இப்போதைக்கு வரவழைத்துக் கொள்ளலாம் என்பேன் !! இதோ - அட்டைப்பட preview : 
இந்த அட்டைப்படத்தின் பின்னேயொரு துக்கடா சேதியும் உண்டு !! நம் ஓவியருக்கு எப்போதுமே ஸ்பைடர் ; ஆர்ச்சி போன்ற டெர்ரர் முகங்கள் செமையாக சோபித்திடும்  ; ஆனால் மாடஸ்டி ; ஜானி நீரோ ; மாயாவி - போன்ற ரம்ய முகங்கள் எனில் 50 - 50 தான் ! விதிவிலக்காக டெக்ஸ் வில்லரின் பெரும்பான்மை கவர்களில் முகங்கள் ஓ.கே. ஆகிவிடுவதுண்டு !! சிலபல மாதங்களுக்கு முன்பாய் மாடஸ்டியின் அட்டைப்படத்தைப் போடச் சொல்லிய சமயமே எனக்குள் லேசாய்த் தயக்கம் தான் ! இருந்தாலும், newspaper strip feature ஆன மாடஸ்டி கதைகளுக்கு ஒரிஜினல் அட்டைப்படங்கள் என எதுவும் கிடையாதெனும் போது - நாமாய்த் தயாரிக்கும் அவசியம் தவிர்க்க இயலாததொன்று ! So ஒரு மாதிரியையும் எடுத்துக் கொடுத்து டிசைனும் போட்டு வாங்கி ; ஓரளவுக்கு ஓ.கே. என்றும் தீர்மானித்து விட்டேன் !!

போன மாதமோ, எப்போதோ - ஒரு பதிவினில் - 'மாடஸ்டியின் ஆல்பம் சிங்கிளாய் வருகிறது " என்று நான் எழுதியிருக்க - இளவரசி முன்னேற்றக கழகத்தின் தலைவர் அதை வரவேற்ற கையோடு - "அட்டைப்படம் தீயா இருக்கோணும் : பார்த்தாக்கா கண்ணிலே காதல் மிளிரோணும் ; நாங்க பாத்துப் பாத்து கிறங்கி போகோணும் " என்று கோரிக்கை விடுத்திருந்தார் !! நான்பாட்டுக்கு அட்டைப்படத்தை ஓ.கே. சொல்லிவிட்டு எங்கோ தேசாந்திரம் போய்விட்டிருந்தேன் !! இந்தப் பின்னூட்டத்தைப் படித்த கையோடு - அன்றிரவு நமது ஓவியரின்  அட்டைப்பட டிசைனை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தேன் ; உட்கார்த்திப் பார்த்தேன் ; ஓடவிட்டுப் பார்த்தேன் !! ஆனால் எப்படிப் பார்த்தாலும் அங்கே காதல் மிளிரக் காணோம் ! அட...நம் தானைத் தலைவரின் "ரொமான்டிக் லுக்" ரேஞ்சுக்கு வேண்டாமய்யா ; at least ஒரு உள்ளூர் நெஞ்சை உருக்கும் அளவிலாவது காதல் சொட்ட வாய்ப்புள்ளதா ? என்று பார்க்கப் பார்க்க, எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது !! நானிருந்த தேசத்தில் அப்போது குளிர்காலம் என்றாலும், எனக்கோ வியர்க்கத் துவங்கிவிட்டது - இந்த ராப்பரை நீங்கள் எப்படியெல்லாம் "வச்சு செய்வீர்களென்று" யோசித்துப் பார்க்கையில் ! அடித்துப் -பிடித்து மைதீனுக்கு போன் அடித்தேன் ; "முன்னாடி இருக்கதை தூக்கிப் பின்னாடி போட்டுடு !!" என்று !!  பின்னட்டைக்கென நாம் தயாரித்திருந்த டிசைனாவது ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில், இளவரசியின் எழிலுக்கு நியாயம் செய்வதாய்த் தோன்றியது ! So முன்னும், பின்னும் இடமாறிப் போயின - ஒரு காதல் கவிதையைக் கண்ணாலேயே நீங்கள் வாசிக்க ஏதுவாய் !! And உட்பக்கக் கதையையும் வாசிக்க உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திட - இதோ ஒரு preview பக்கம் !!  
"ஐயோ....அய்யய்யோ...கத்திரி போடுறீங்களே இளவரசி கதைக்கு !!" என்று வேர்க்க, விறுவிறுக்க என்னிடம் பதைபதைப்பு காட்டிய நண்பர்களுக்கு இந்தவாட்டி கொஞ்சம் நெஞ்சங்கள் குளிர்ந்திட வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! Anyways - கத்திரிகளோ ; காஜா போடும் மிஷின்களோ ஒரு கதையின் வெற்றியைத் தீர்மானிக்கப் போவதில்லை என்பதால் - இளவரசியின் merit -ல் மாத்திரமே வண்டி ஓடிட வேண்டுமென்பது அப்பட்டம் ! And இம்முறை கூட்டணியின்றி, தனித்தே தேர்தலைச் சந்திக்கிறார் எனும் பொழுது - ஜெயமோ - வேறென்னமோ - சகலத்துக்கும் அவரே பொறுப்பேற்றிடும் சூழல் !! Fingers  crossed big time - இளவரசிக்காகவும்...அவரது கழகக் கண்மணிகளுக்காகவும் !!!

ஆக இந்த 2 இதழ்களின் preview சகிதம் செப்டெம்பரின் கோட்டா பூர்த்தி காண்கிறது ! சகல இதழ்களும் அச்சாகி விட்டன என்பதால் - தொடரும் நாட்களில் பைண்டிங் முடிந்த கையோடு டெஸ்பாட்ச் துவங்கிடும் ! So "இடைப்பட்ட ஒரு மாதத்துக்கு நார்மல் இதழ்களைக் காணோமே !" என்று கவலைப்பட்ட நண்பர்கள் சீக்கிரமே புன்னகைக்கலாம் ! And இந்த மாதத்து 4 இதழ் கூட்டணியில் 'தல'யின் "சைத்தான் சாம்ராஜ்யம்" நீங்கலாய் starpower கொண்ட இதழ்கள் குறைச்சலே என்றாலும், இம்முறை வெவ்வேறு காரணங்களுக்காக நாங்கள் இவற்றின் ரிஸல்ட்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம் ! முக்கியமாய் டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது ! 

Moving on - மதுரைப் புத்தக விழா ஆகஸ்ட் 31 -ம் தேதி தமுக்கம் மைதானத்தில் துவங்கிடவுள்ளது ! And அங்கே நமது ஸ்டால் நம்பர் 172 ! வழக்கம் போல் அண்ணாச்சி அங்கிருப்பார் - நமது இதழ்களுடன் ! Please do drop in folks !!இதோ ஸ்டால்களின்  லே-அவுட் : 
அப்புறம் சென்னையின் பீனிக்ஸ் மாலில் புதிதாயொரு காமிக்-கான் போன்ற முயற்சி அரங்கேறவிருப்பதாய் தகவல் வந்துள்ளது ! காமிக்-கான் நிர்வாகிகள் சிங்காரச் சென்னைக்கு thumbs up தரத் தயங்கிவரும் வேளையில் இந்தப் புதிய முயற்சி ANIMECON வெற்றி ஈட்டினால் நலமே !! We'll wish them the best !!
டைனமைட்டின் பணிகளைத் தீயாய்ப் பார்த்திட வேண்டியிருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys !! Have a beautiful weekend !! Bye for now !! 

234 comments:

  1. Good evening sir.படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எந்த பள்ளிக்கூடத்தில் படிக்க போறீங்க? 🤔

      Delete
  2. யாரைய்ம் கானோம் ஒரு வேளை தூங்கீருப்பாங்களோ?

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்ல, விடுங்க , ஒண்ணுலேர்ந்து பத்து வரைக்கும் உங்களோடதுதான்.விளையாடுங்க.

      Delete
    2. பரவாயில்ல, விடுங்க , ஒண்ணுலேர்ந்து பத்து வரைக்கும் உங்களோடதுதான்.விளையாடுங்க.

      Delete
  3. மாடஸ்டி அட்டைகள் - முன்பின்னாய் மாற்றிவிட்டீர்கள் போல...

    ReplyDelete
  4. வணக்கம் சார்....
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...!

    ReplyDelete
  5. ஜம்போ அட்டை படம் வித்தியாசமான முயற்சி நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா
      ஜம்போவே ஒரு வித்தியாசமான முயற்சி என்னும் போது அட்டைப்படம் வித்தியாசமாக இருப்பது தப்பில்லையே?!!!

      Delete
  6. மாடஸ்டி அட்டைப்படம் குறித்து எடுத்த முடிவு சரியானது எடிட்டர் சார்!

    ReplyDelete
  7. மாடஸ்டி கதையின் டீசர் பக்கம் நன்றாக உள்ளது. கழுகுமலை கோட்டை போல் இருக்கும் எனத் தெரிகிறது. படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    முன் அட்டைப்படம் சூப்பர்.

    அப்பறம் பின் அட்டையில் அந்த கார்வின் தம்பி ஏன் அப்படி தூங்குகிறார். வீட்டில் போய் தூங்கச் சொல்லுங்க. கார்வின் தம்பியை தான்டிப் பெண்மணி புதுசா இருக்கே. லேடி பில்லாவா?

    ReplyDelete
  8. ஜூனியர் லயனில் வந்த ஷெர்லாக் கதையை படித்தது இல்லை. இவரை முதல் முறையாக படிக்க ஆர்வத்துடன் உள்ளேன்.

    ReplyDelete
  9. ANIMECON Chennai. Super sir. நாம் இதில் பங்கு பெறுவதற்கு வாய்ப்புகள் ஏதும் உண்டா விஜயன் சார்.?

    ReplyDelete
  10. சார் ஷெர்லக் புதுமயான அட்டைப்படம், காட்டிய வண்ணமயஒரு பக்கம் தூள். மாடஸ்டி முன்னட்டை அட்டகாசம், தூள். பின்னட்டையும் பரவால்லை .

    ReplyDelete
    Replies
    1. ஷெருலக் அட்டய நேரில் காண. ஆவல், சிப்பாயின் சுவடுகள் இதே வண்ணம்தானே,,,

      Delete
  11. வணக்கம் சார்,

    Dynamite special இல் எதாவுது surprise special இருக்கா.

    ReplyDelete
  12. வாவ் வாவ் வாவ் ..

    பின்னட்டையில் இளவரசி செம்ம ஷோக்கா இருக்காங்கோ ..

    இளமை (ததும்பும்) இளவரசியை காண கண்கள் கோடியானாலும் போதாது ..

    ������

    ReplyDelete
    Replies
    1. மீன்ஸ் இது இளவரசி தானா ? அல்லது மேக்கப் போட்டிருக்கீங்களோ ன்னு ஒரு டவுட் டும் கூடவே

      Delete
  13. Dear Editor,

    Do you plan a one day visit to Madurai stall at least given it is so close to Sivakasi? Do let us know.

    ReplyDelete
  14. அட்டையில் இளவரசியின் வசீகரம் அள்ளுகிறது ஆசிரியரே

    ReplyDelete
  15. இளவரசினாலே அழகிதான் அதிலென்ன டவுட்டு....

    ReplyDelete
  16. அனைத்து செப்டம்பர் இதழ்களும் மனதை அள்ளுகின்றன.
    இளவரசியின் முன் அட்டை வெகு கச்சிதம்.
    ஜம்போ இரண்டாம் இதழ் வெகு வெகு அழகாக மிளிர்கின்றன.
    கம் செப்டம்பர்..!

    ReplyDelete
  17. ஏதோ இப்பதான் சார்
    இளவரசியை படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கு
    இளவரசி அட்டைப்படம் இந்த முறை சூப்பர் அது தான் காரணம்

    ReplyDelete
  18. ///டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது ! ///

    ஆஹா!!

    ReplyDelete
  19. ஷெர்லாக் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது. நமது காமிக்ஸில் வேறு எந்த அட்டைப்படமும் இது போல் உட்பக்கத்தை அட்டைபடமாக வந்தது இல்லை! எனக்கு பிடித்து இருக்கிறது.

    ReplyDelete
  20. இதை சொல்றனேன்னு ஆசிரியர் தப்பா நினைக்க கூடாது. பேசாம பின் அட்டையை தூக்கிட்டு வெறும் வெள்ளை படமா போட்ருங்க.
    எலிமன்டரி ஸ்குல் பையன் வரைஞ்ச மாதிரி இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வரைந்த மாதிரி இருக்கின்றது என்று சொல்ல வர்ரீங்களா ஜி.

      Delete
    2. பின்னட்டைப் படம் இளவரசியை டீன்ஏஜில் பார்த்ததைப் போல அழகாக இருக்கிறது. கழுத்து - கொஞ்சம் குட்டையாகத் தெரிவதும், வலதுகால் ஷூவின் கோணம் சற்றே மாறியிருப்பதையும் தாண்டி வேறு குறைகள் எதுவுமில்லை!!

      கணேஷ்குமாரின் ஊரில் அவ்வளவு ஆற்றல் வாய்ந்த எலிமன்ட்ரி ஸ்கூல் பையன்கள் நிறைந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது!!

      Delete
    3. மாடஸ்டி பின்னட்டைப்படம் சுமார்தான் .. ஆனால் நமது மருவரவுக்குப் பின் வந்த மாடஸ்டி அட்டைகள் அனைத்துமே சுமார்தான், கதைகளும் காமா சோமாதான் (மறுபதிப்பு கழுகு மலைக் கோட்டை தவிர) என்னும்போது பெரிதாக ஒரு எதிர்பார்ப்பும் இல்லை !

      Delete
    4. //கணேஷ் குமார் ஊரில்//
      ஊரில் இல்லை ஈ.வி அலுவலகத்தில் நிறைய திறைமைசாலிகள் உள்ளனர். அட்டைபடம் வரைய குறைந்தபட்சம் 25000 ரூபாய் வாங்குவார்கள் (ஒரு பக்கத்திற்கு).

      \\நீங்கள் வரைந்தது மாதிரி\\
      கண்டிப்பா இவ்வளவு மோசமா வரையமாட்டேன்.

      படம் வரையும் முன் layout எனப்டும் கோனம் மற்றும் காட்சி அமைப்புதான் முக்கியம்.
      பெரும்பாலன அட்டை படங்களில் ஓரே ஒரு நபர்தான் உள்ளனர் ஏன்?.
      ஏனென்றால் இரண்டு நபர்கள் உள்ளவாறு layout அமைப்பது கடினம். மேலும் இரண்டு நபர்களை வரைந்து எதற்க்கு சிரமபட வேண்டும்.

      அட்டை படம் வரைபவர்களுக்கு சில அடிப்படை அனடாமி விஷயங்கள் தெரிய வேண்டும்.
      மடஸ்டியின் பலமே உயரம்தான், இப்படி குட்டை கத்திரியாக வரைவது?

      அட்டை படத்தில் உள்ள மாடஸ்டீயின் இடுப்பை சற்று வளைவுகளோடு
      குறைத்தால் என்ன குடியா முழ்கிவிடும்.

      ரியலிட்டி ஓவியம் கை இடுப்பை தொடும் அளவுக்குதான் இருக்க வேண்டும். ஆனால் மேலே அட்டைபடத்தில் நேராக மாடஸ்டீயை நிற்க வைத்தால் கை முழங்கலை கை தொடும். பார்க்க ஏலியன் மாதிரி தெரியும்.
      அட்டைபடம் one of the selling point. இவ்வளவு மோசமான அட்டை படம் போட்டால் எப்படி?.
      நாம் தரத்தை எட்டி விட்டோம். இனிமேல் அந்த தரம் குறையுமாறு அட்டைபடம் வெளியிட்டால் நான் குறைதான் சொல்வேன். இலவசமாக சந்தா வாங்குபவர்களுக்கு மட்டும் தான் குறை நிறை சொல்ல உரிமை உண்டா? ஏன் சந்தா கட்டுபவர்களுக்கு அந்த உரிமை கிடையாதா?.

      அட்டைபடத்தில் கழுத்துக்கும் கொஞ்சமாவது இடைவெளி வேண்டாமா? செக்ஸியா வரையுரேன்னு குளறுபடி பன்னி வச்சிருக்கார்.
      அட்டை படத்துல பிரச்சினை இருந்தால் சொல்லலாம். அட்டை படமே பிரச்சினைன்னா எப்படி?

      Delete
    5. // இலவசமாக சந்தா வாங்குபவர்களுக்கு மட்டும் தான் குறை நிறை சொல்ல உரிமை உண்டா? ஏன் சந்தா கட்டுபவர்களுக்கு அந்த உரிமை கிடையாதா? //
      குறை,நிறை சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது சார்,நான்,நீங்கள் உட்பட,ஆனாலும் மேற்கூறிய வாதம் தேவையில்லாத வாதமாக தோன்றுகிறதே சார்.இது உரிய பதிலாக தெரியவில்லையே,மற்றபடி நீங்கள் சொன்ன மற்ற பாயிண்டுகள் ஏற்புடையதாக இருக்கலாம்.

      Delete
    6. ///ரியலிட்டி ஓவியம் கை இடுப்பை தொடும் அளவுக்குதான் இருக்க வேண்டும். ஆனால் மேலே அட்டைபடத்தில் நேராக மாடஸ்டீயை நிற்க வைத்தால் கை முழங்கலை கை தொடும்////

      தவறான புரிதல்! கையை தொங்கப் போட்ட நிலையில் விரல்கள் இடுப்புக்குக் கீழே & முட்டிக்கு மேலே (அதாவது தொடைப் பகுதியில்) இருக்க வேண்டும்!

      அதன்படி பார்த்தால் (குட்டையான கழுத்து, உயரம் குறைவு தவிர) இங்கே நம் ஓவியர் மாடஸ்டியின் கையை வரைந்திருப்பதில் குறை சொல்லும்படியான அளவீடுகள் எதுவும் இல்லை!

      தவிர, ஓவியம் சிறப்பாக இல்லையென்று எடிட்டருக்கே தோன்றியதால்தானே அதை பின்னட்டைக்கு மாற்றியிருக்கிறார்? அப்புறமும் ஏன்...??!!

      Delete
    7. \\இலவசமாக சந்தா வாங்குபவர்களுக்கு மட்டும் தான் குறை நிறை சொல்ல உரிமை உண்டா? ஏன் சந்தா கட்டுபவர்களுக்கு அந்த உரிமை கிடையாதா?.\\
      மேலே கூறிய வாசகங்கள் கயப்படுத்தும் என்று தெரிந்தே போட்டுவிட்டேன்.

      நம் காமிக்ஸின் தரத்தை குறைக்கும் ஒரு அட்டைபடத்துக்கு தேவையில்லாமல் பாராட்டுவதால் வந்த கோபம்.

      காயப்படுத்தும் வகையில் கூறிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன்.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. இடுப்பு ,பெல்விஸ் எனப்படும் கிழ் தொடையும் சேர்ந்த பகுதிதான். அதாவது இடுப்போடு சேர்ந்த பகுதிதான் தொடை.

      நான் senior Rigging artist. என்னுடைய பனியே கனிப்பொறியில் உருவாக்கபடும் மனிதர்கள் மற்றும் உயிரனங்களுக்கு எலும்புகள் மற்றும் சதைகள் உருவாக்கி அவற்றை நடமாடும்படி செய்வதுதான்.
      பின் அட்டையில் போடுவதற்கு கூட தேவையான தரம் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

      Delete
    10. வாசகர்களுக்கு இந்த அட்டைபடம் நன்றாக இல்லை என்று பார்த்த உடன் சொல்லி வடுவார்கள். ஆனால் எதனால் என்று அவர்களுக்கு தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

      ஆனால் அட்டை படம் வரைபவருக்கு குறைந்த பட்சம் அனடாமி தெரிய வேண்டும். நான் கூறிய point கள் அடிப்படை அனடாமி விஷயங்கள். இதுதவிர layout, blocking , camera proportion , focal length என்று ஆரம்பித்தால் உங்களுக்கு போர் அடித்துவிடும்.
      ஆனால் உலக தரம் வாய்ந்த ஓவியர்களுக்கு இவையனைத்தும் தெரிந்திருக்கும்.

      Delete
    11. அடடே,சுவாரஸ்யமான விவாதமா இருக்கே.

      Delete
    12. // காயப்படுத்தும் வகையில் கூறிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன்.//
      புரிதலுக்கு நன்றிகள் சார்,மற்றபடி மன்னிப்பு எல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தை.

      Delete
    13. கொஞ்சம் லேட்டான entry ; ஆனாலும் அத்தியாவசியமான தகவலோடு !!

      ஓவிய நுணுக்கங்களுக்கும் நமக்கும் தூரம் ஜாஸ்தி & இன்றைய technical சமாச்சாரங்களும் நம் field அல்ல ! So தெரியாததொரு துறையில் பீட்டர் விடும் துணிவெல்லாம் நமக்கு லேது !

      But தெரிந்த ஒரேயொரு சமாச்சாரம் - இந்த மாடஸ்டி ஓவியத்தின் sketch / angle / presentation என்று எதுவுமே நமது ஆக்கமல்ல !! மாடஸ்டியின் ஒரு அமெரிக்க காமிக்ஸ் பதிப்புக்கென 2001 -ல் அங்கே உருவாக்கப்பட்ட டிசைனின் அச்சு அசல்த் தழுவலிது ! முகம் மாத்திரமே அவர்களது டிசைனில் தட்டையாகத் தெரிய - நமது ஓவியர் இயன்ற மாற்றத்தைச் செய்திட முனைந்துள்ளார் ! பாக்கி உடற்கூறுகள் சகலமுமே ஈயடிச்சான் காப்பி ! நேரம் கிடைக்கும் போது கூகுளில் தேடிப் பாருங்கள் - அந்த ஒரிஜினல் டிசைன் கண்ணில்படாது போகாது ! Maybe அங்குள்ள,அப்போதைய ஓவியரும் முறையான ஒவியப் பாடங்களை படித்து வரா சாமான்யராய் இருந்திருப்பாரோ - என்னவோ !!

      Delete
    14. //நான் senior Rigging artist. என்னுடைய பனியே கனிப்பொறியில் உருவாக்கபடும் மனிதர்கள் மற்றும் உயிரனங்களுக்கு எலும்புகள் மற்றும் சதைகள் உருவாக்கி அவற்றை நடமாடும்படி செய்வதுதான்.
      பின் அட்டையில் போடுவதற்கு கூட தேவையான தரம் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்//

      நிரம்ப ஈடுபாடுடன் கூடிய வேலை செய்கிறீர்கள் ஜி வாழ்த்துகள்.

      Delete
    15. @ Ganeshkumar : அப்புறம் இத்தனை ஆர்ப்பரிக்க இங்கே முகாந்திரங்கள் இருப்பதாய் எனக்குத் தெரியக் காணோம் !! சுமாராய்த் தெரிவதால் தானே, அதனை பின்னட்டைக்குக் கொண்டு சென்று விட்டேன் ?! அதன்பின்னேயும் ."குட்டையாய் வரைந்து விட்டார் - செக்சியாய் வரைந்து விட்டாரென்று" கொந்தளிப்பானேன் ? நீங்கள் பிறக்கும் முன்பே தூரிகையைக் கையிலெடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் நம் ஓவியர் ! So நீங்கள் முறைப்படிக் கற்றுத் தேர்ந்து வந்திருக்கக்கூடிய சமாச்சாரங்களெல்லாம் அவருக்கு greek & latin தான் ! ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் / முன்னேற்றங்கள் நடைமுறை காணும் போது அதன் வல்லுனர்களின் பார்வைகளில் முந்தைய தலைமுறைக்காரர்கள் - கற்றுக்குட்டிகளாய்த் தெரியலாம் தான் ! ஆனால் அந்தப் பார்வைகளோடு கொஞ்சம் புரிதலும், பரிவும் இருப்பின் தவறாகிடாது !

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. இளவரசி இளவரசியோட பாட்டி மாதிரி இருந்தால் கூட பரவாயில்லை, இளவரசி மாதிரியே இல்லாத மிகவும் சுமாரான ஓவியத்தை போட்டால் ஆர்பரிக்காமல் எப்படி இருக்க முடியும்.

      இளவரசிய google ல் profile picture ஆ வைத்துள்ள இளவரசியின் முரட்டு பக்தன் நான். எனக்கு கொந்தலிக்க முழு உரிமையும் இருக்கு.

      அடுத்த ஆண்டு இளவரசி(அட்டை படத்தை மாற்ற அனுமதி இருக்கும் பட்சத்தில்) காமிக்ஸ் அட்டைபடம் என் நண்பர்களை வரைய சொல்கிறேன். இளவரசி நிஜ இளவரசி மாதிரி சும்மா ஜொலிப்பார்கள் பாருங்கள்.

      (Rigging துறை அனடாமி மற்றும் tecnic சாரந்த துறை என்பதால் என்னுடைய வரையும் திறமை மங்கிவிட்டது. என் நண்பர்களிடம் இருந்து ஒன்றிரெண்டு அட்டை படம் நட்புகாக என்னால் வாங்க முடியும்).

      Delete
    18. \\மாடஸ்டியின் ஒரு அமெரிக்க காமிக்ஸ் பதிப்புக்கென 2001 -ல் அங்கே உருவாக்கப்பட்ட டிசைனின்\\
      இந்த செய்தி எனக்கு ஆச்சிரியமாக உள்ளது. 1980 களில் வந்த டைகர் கதைகளில் அட்டைபடம் அருமையாக உள்ள போது, 2001 ல் இளவரசியை இப்படி வரைந்துள்ளனரே.

      மேலும் சீனியர் ஓவியர்களை குறை சொல்வது எனது நோக்கம் இல்லை. ஆனால் இன்றைய போட்டி நிறைந்த சந்தையில் தரமான அட்டைபடம் கொடுக்கும் நிலையில் நாம் உள்ளோம். ஆட்டத்தில் அட்டைபடம் தவிர்க்க முடியாத சங்கதி. என்ன செய்வது.

      Delete
    19. கணேஷ் @

      // (Rigging துறை அனடாமி மற்றும் tecnic சாரந்த துறை என்பதால் என்னுடைய வரையும் திறமை மங்கிவிட்டது. என் நண்பர்களிடம் இருந்து ஒன்றிரெண்டு அட்டை படம் நட்புகாக என்னால் வாங்க முடியும்). //

      இதனை இன்னும் இரண்டு மாதங்களில் அல்லது இந்த வருட இறுதிக்குள் நீங்கள் நடத்தி காட்டினால் சந்தோஷப்படுவோம்.

      Delete
  21. இளவரசியை பாத்து தான் எத்துனை நாளாயிற்று..!

    பெரும்பாலும் அட்டையில் சோபிக்கா விட்டாலும் கதையில் மனதை கவரும் இளவரசி இந்த முறை அட்டையிலும் கவர சொல்லவும் வேண்டுமா...

    அழகான இரு நண்பர்களின் சாகஸத்தை வெகு ஆவலுடன் சந்திக்க காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  22. நாயகர் ட்ரெண்ட் இம்முறை எத்துனை சதவீதம் பிடிக்க காத்திருக்கிறார்..

    நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..!

    ReplyDelete
  23. இரத்த படலம் இன்னொன்று வங்கலாம் என்று இருக்கிறேன்.
    புதிதாக இரத்த படலம் இதழ் வாங்குபவர்கள்
    அனைவரும் வாங்கி விட்டார்களா? அன்லைனில் ஆர்டர் செய்யலாமா?

    ReplyDelete
  24. // ஆனால் அடுத்த 4 மாதங்களை நகற்றிட போதுமான எண்ணிக்கையில் இதழ்கள் மீதமில்லை என்பதால் //
    என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete
    Replies
    1. பேசாம நாலு மாசம் ரெஸ்ட் எடுங்க எடிட்டர் சாப்.இல்லைன ஸ்பெஷல் ரீபிரிண்ட் கதைகள் போட்டு தாக்குங்க.

      Delete
    2. //பேசாம நாலு மாசம் ரெஸ்ட் எடுங்க//

      ஹை !!

      Delete
  25. // நாங்கள் இவற்றின் ரிஸல்ட்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம் ! முக்கியமாய் டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது ! //
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்.

    ReplyDelete
  26. ஜம்போ 2 அட்டைப்படம் வித்தியாசமாகவும்,கண்களுக்கு உறுத்தாத வகையிலும் அழகாக அமைந்துள்ளது."ஒரு குரங்கு சேட்டை / வேட்டை" க்காக ஆவலுடன்.

    ReplyDelete
  27. // தொடரும் நாட்களில் பைண்டிங் முடிந்த கையோடு டெஸ்பாட்ச் துவங்கிடும் ! //
    ஒரு வேண்டுகோள்,
    வார இறுதியை காமிக்ஸ் வாசிப்பில் திளைக்க செய்ய வெள்ளிக்கிழமைக்குள் எங்கள் கைகளுக்கு கிடைக்குமாறு ஆவண செய்யுங்கள் சார்,

    ReplyDelete
  28. வாவ்...மாடெஸ்டி.....

    ReplyDelete
  29. // ஒற்றை மாத இடைவெளியில் டைனமைட்....அதன் மறு மாதம் 2019-ன் அட்டவணை என மேற்கொண்டும் இரு முரட்டுக் குதிரைகள் காத்து நிற்க //
    வாவ்,அக்டோபரில் அட்டவணை,ம் நிறைய சர்ப்ரைஸ்களை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் சார்,டெக்ஸ் 70 ஸ்பெஷல் வரும்போதே சந்தா அட்டவணையும் வந்தா இன்னும் நல்லாத்தான் இருக்கும்.ஆசை யாரை விட்டது ஹிஹிஹி.....!!!

    ReplyDelete
  30. மாடஸ்தி கொஞ்சம் கவருராங்க,
    வசீகரமான கண்கள்...!!!

    பின்னாடி அம்மாடியோவ்...!!!

    ReplyDelete
  31. ஷெர்லக் அட்டை அள்ளுது;

    பார்த்த உடன் பிடிக்கும் படி அமைந்துள்ளது. இம்மாதம் இதுவரையில் வந்துள்ள 4அட்டைகளில் டாப்.

    ஜம்போவின் இதழ்கள் வித்தியாசமான அம்சங்களுடன் தொடரும் என்றீர்கள். அது அட்டையிலேயே தெரிகிறது.

    ஜம்போ Vs சைத்தான்... ஷோவாக இருக்கும்...!!!

    ReplyDelete
  32. ///ஒரிஜினலாக C.I.D ராபின் சகிதம் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்று வந்திருக்க வேண்டிய கதையிது ! ஆனால் அடுத்த 4 மாதங்களை நகற்றிட போதுமான எண்ணிக்கையில் இதழ்கள் மீதமில்லை என்பதால்---////

    4சந்தாவிலும் தலா 9புத்தகங்கள்.
    36எனும்போது மாதம் 3,3ஆக கிள்ளி தந்திருந்தா சரியாக வந்திருக்கும்.
    துவக்கத்தில் 4,4 ஆக அள்ளி தரவும் இந்த தட்டுப்பாடு....

    நல்லவேளை ஜம்போ இருக்கு, இல்லீனா அம்போ தான்...!!!

    அள்ளி அள்ளித் தரணும் என்ற தங்களது மனதிற்கு ஏற்ப 48வருமாறு எண்ணிக்கை அமைய எல்லாம் க்ளிக் ஆகணும்...!!!

    ReplyDelete
  33. //தல'யின் "சைத்தான் சாம்ராஜ்யம்" நீங்கலாய் starpower கொண்ட இதழ்கள் குறைச்சலே என்றாலும், இம்முறை வெவ்வேறு காரணங்களுக்காக நாங்கள் இவற்றின் ரிஸல்ட்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம் ! முக்கியமாய் டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது !///----

    தல வித்தியாசமான கதையோடு களம் இறங்குறார். இந்த ஸ்டைல் எல்லோரையும் கவரும் என நினைக்கிறேன். வழக்கமான பாலைவனம் போன்றவற்றில் இருந்து விலகி கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சை பசலில் நடப்பது ப்ளஸ்...!!

    ட்ரெண்ட்டின் ட்ரெண்ட் என்ன ஆகுதுனு பார்க்க ரெம்பவே ஆவல்...!!!

    நீங்கள் சொல்வது இன்னும் எதிர்பார்ப்பை வலுக்கச் செய்கிறது.

    ReplyDelete
  34. //// மதுரைப் புத்தக விழா ஆகஸ்ட் 31 -ம் தேதி தமுக்கம் மைதானத்தில் துவங்கிடவுள்ளது ! And அங்கே நமது ஸ்டால் நம்பர் 172 ! வழக்கம் போல் அண்ணாச்சி அங்கிருப்பார் - நமது இதழ்களுடன் ! Please do drop in folks///

    ---மதுரை விழாவில் வெற்றிபெற வாழ்த்துகள் சார். அன்னை மீனாட்சியம்மன் அருளால் நல்லபடியாக நடக்கும்.💐💐💐💐💐

    ReplyDelete
  35. வாவ், மாடஸ்டியின் முன் அட்டை டிசைன் பிரமாதம். உட்பக்க சித்திரங்களும் தெளிவாக இருப்பது ஆறுதல். பின் அடிக்காமல் பைண்டிங்கோடு வெளியிடுங்கள் சார். முன் அட்டைக்கு திருஷ்டி பரிகாரம் பின் அட்டை.

    வரும் மாதம் வெரைடிக்கும் போட்டிக்கும் பஞ்சமில்லை.

    ReplyDelete
  36. // டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது !//

    ஏற்கனவே கதையின் பெயருக்கு ஒரு சிறிய ஆராய்ச்சி நமது தளத்தில் நடந்து முடிந்து விட்டது. உபயம் நமது செல்வம் அபிராமி.

    மேலும் சில பல பெரிய ஆராய்ச்சிகள் புத்தகம் கைக்கு வந்தபின் தொடரும் என நம்புவோமாக.

    ReplyDelete
  37. இரத்த படலம்: என்னிடம் கருப்பு வெள்ளை தொகுப்பு உள்ளது ஆனால் அதனை முழுமையாக படித்த ஞாபகம் இல்லை.

    இந்த வண்ணத் தொகுப்பை படிக்க ஆரம்பித்து விட்டேன். இதுவரை 8 பாகங்கள் படித்து முடித்து விட்டேன். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அருமை. இது போன்று குழப்பமான கதை களங்களை ஒரே தொகுப்பாக படிப்பதே ஆனந்தம், என்னை போன்ற மறதிகார்களுக்கு டவுட் வந்தால் பின் பக்கங்கள் சென்று படித்து டவுட்டை சரி செய்து விடலாம்.

    புத்தக வடிவமைப்பு மற்றும் அச்சின் தரம் நம்மை புதிய உயரத்திற்கு எடுத்து சென்று உள்ளது. உங்கள் உழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு மீண்டும் ஒரு முறை எழுந்து நின்று கைதட்டி வாழ்த்துகிறேன்.

    ஆங்காங்கே தென்படும் மிகச்சில வார்த்தை பிழைகள் மிக சிறிய குறையாகத் தெரிகிறது.

    ReplyDelete
  38. காலை வணக்கம் ஆசிரியரே நண்பர்களே
    டைனமைட்டில் சவாரி செய்து
    எதிரிகளை
    டைனமைட்டால் சிதறடித்து
    வில்லன்களை தன்
    டைனமைட் குத்துக்களால் வீழ்த்தும்
    அல்டிமேட் தலைவனின்
    டைனமைட் ஸ்பெஷலை தரிசிக்க
    இன்னும் ஒரு மாதமா????

    ReplyDelete
  39. ஹெர்லக் ஷோம்ஸ் - ஏற்கனவே வெளிவந்து படித்தகதை என்று நினைக்கிறேன்(மறு பதிப்பா?).


    இளவரசி-ஐ பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளவைக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு இருக்கும்.

    ReplyDelete
  40. இம்முறை Tex அதகள மறுபதிப்பு மற்றும் ஹெர்லாக் ஷோம்ஸ்க்காக waiting .. மற்றவை இரண்டும் சாய்ஸில் விட்டுவிட்டேன் :-)

    ReplyDelete

  41. ///"குண்டு புக் ; மெகா புக் ; அத்திரி பாட்சா ஸ்பெஷல் ; குப்புற பல்டி ஸ்பெஷல் " என்று மறுக்கா கால்களை அ-க-ல-மா-ய் விரித்துக் கொண்டு, அப்புறமாய்த் திரு-திருவென்று முழிக்க வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை தான் இம்முறை வீட்டிலிருந்து நான் பேக் செய்திருந்த முதல் வந்து///-----

    ----2019சந்தாவின் எல்லா பிரிவுகள் பற்றியும் அலசிவிட்டதால், அடுத்த ஆண்டு இவற்றின் ஊடே இடம்பிடிக்கும் குண்டுபுக் ஸ்பெசல்கள் பற்றிய தங்களது சிந்தனையாகவே இதனை பார்க்கிறேன் சார்.

    *3மிலியன் ஹிட் சென்னை விழா சமயத்தில் என ஏற்கெனவே அறிவித்து விட்டீர்கள்.

    *கோடைமலர், ஆண்டுமலர், ஈரோட்டு ஸ்பெசல், தீபாவளிமலர் என இருந்தாலும் அவ்வப்போது வரும்250, 300, 350, 400போன்ற மைல்கள் இதழ்களையும் நாம் தரிசித்து மகிழ்ந்தே வருகிறோம்.

    *அட்டவணை பேச்சு இருக்கும் போதே துண்டுபோட்டு இடம்பிடித்துவிடுவது நலம் என்பது அனுபவபாடம்.

    ReplyDelete
  42. ஆசிரியர் சார்@

    2018முடியும் போது தங்களது ஒட்டுமொத்த வெளியீடுகள்,

    லயன்-346
    முத்து-427
    திகில்-61
    மினிலயன்-40
    முத்துமினி-8
    ஜூனியர் லயன்-4
    சன்ஷைன் லைப்ரரி-15
    லயன் கிராஃபிக் நாவல்-5
    திகில் லைப்ரரி-2
    காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-27
    முத்து வாரமலர்-22
    டிங்டாங்-1
    ஜம்போ-6

    மொத்தம்-964...

    ஆக, நாங்கள் கேட்க வருவது- ஆம் , அதே தான் சார்.

    லயன்-முத்து நிறுவனத்தின் த கிரேட்,

    """""""1000""""

    -----வது இதழ்.

    அது வரப்போகும் ஆண்டு அடுத்த ஆண்டு என்பது உறுதியான பின்னே,

    1000ம் பக்கத்தில் ஒரு

    "செலபரேசன் ஸ்பெசல் "


    லயன்-முத்து 1000வாலா...!!!

    கொண்டாட்டத்திற்கு நிச்சயமாக வேணும்!


    *சென்ற ஆண்டு அக்டோபரில் இப்படி லயன்-முத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த இதழ்கள் எண்ணிக்கை நம்ம நண்பர்கள் & மூத்த காமிக்ஸ் கலக்டர்கள் திரு சுரேஷ் சந்த் சார், ஸ்டாலின் ஜி, கலீல் ஜி, சிபிஜி, ஜானி ஜி & பல நண்பர்களிடமும் தகவல்களை கேட்டு கேட்டு லிஸ்ட் எடுத்துள்ளேன். அவர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    *சென்றாண்டு பிரகாஷ் பப்ளிஷர்ஸ் எத்தனை வெளியீடுகள் ரிலீஸ் செய்துள்ளார்கள் என்ற கேள்வியை கேட்டு, இப்படி ஒரு பட்டியல் தயாரிக்க துவக்கப்புள்ளி வைத்த நண்பர் மகேஷ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

    *இந்த எண்ணிக்கை வாட்ஸ்அப், பேஸ்புக் என எல்லா இடங்களிலும் அப்போதே வெளியிடப்பட்டு நண்பர்களின் அபிப்ராயங்கள், திருத்தங்கள் கோரப்பட்டது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கை என்றே எடுத்து கொள்ளலாம். இறுதியாக நண்பர்கள் யாரும் மேலதிக விபரங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    *"லயன் மினி" & "ஜாலி டைம்ஸ்"- போன்ற வெளியீடு எண் இல்லாதவை & முற்றிலும் இலவச இணைப்புகள் கணக்கில் வராது என்பதே பெரும்பாலான நண்பர்கள் அபிப்ராயம். அதையே பாலோ செய்துள்ளேன். மாற்றங்கள் நண்பர்களின் அபிப்ராயத்தை பொறுத்து.

    *இந்தப் பட்டியல் 100%முழுமையானது என செல்ல மாட்டேன். 99% தகவல்களை கவர் செய்துள்ளேன்; எண்ணிக்கை ஒன்றிரண்டு மாறினாலும் 1000வது இதழ் 2019ல் தான். இன்னும் ஏதாவது விட்டுப்போயிருந்து எண்ணிக்கை கூடினாலும் சந்தோசம், 1000வது இதழ் என்ற மந்திர எண்ணை, எதிர்பார்ப்பதை விட ஓரிரு தினங்கள் முன்னதாகவே நாம் அடைந்து விடுவோம்.


    *46 ஆண்டுகளின் எண்ணிக்கையை ஆவணப்படுத்தலில் 100%சரியாக செயல்பட இயலாது; எனவே ஒரு குறிப்பிட்ட இதழை 1000வது இதழ்னு சொல்ல முடியாவிட்டாலும் கூட 1000வது இதழ் கிராஸ் ஆவது அடுத்த ஆண்டு தான்.

    *நீங்கள் அடுத்த ஆண்டில் எப்பவேணா "1000 செலிபரேஷன் ஸ்பெசல்" போடலாம் சார்.. இறுதி முடிவு தாங்கள் சொல்வதே.

    *இன்றைய வாசிப்புத்துறை இருக்கும் நெருக்கடியை சமாளித்து,
    நெஞ்சுக்கு நெருக்கமானது என்ற ஒரே காரணத்திற்காக ஆயிரம் தடைகள் வந்தாலும் சமாளித்து கொண்டு, தங்களது பயணத்தில், நீங்கள் எட்டியிருக்கும் சாதனைக்கு முதல் வாழ்த்துகள் சார்💐💐💐💐💐💐💐💐💐💐💐

    *ஆயிரம் வெளியீடுகள் என்பது இன்றைய சூழலில் மகத்தான சாதனை.
    வேறெந்த காமிக்ஸ் பதிப்பகமும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய சிகரத்தில் கால்வைத்துள்ளீர்கள்.👏👏👏👏👏👏
    சிகரங்கள் அடுத்தடுத்த உயரங்களை எட்ட கடவுள் ஆசிர்வாசத்தை வேண்டுகிறேன் சார்🙏🙏🙏🙏🙏

    --------சேலம் டெக்ஸ் விஜயராகவன் வித் அறிவரசு (எ) ரவி.


    ReplyDelete
    Replies
    1. வாவ். அருமையான புள்ளி விவரங்கள். வாழ்த்துக்கள் விஜயராகவன்.

      விஜயன் சார், 1000 என்பது நமது காமிக்ஸ் வரலாற்றில் கொண்டாடப் படவேண்டியது. மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம் மற்றும் மகத்தான சாதனை. இது நமது காமிக்ஸ் வரலாற்றில் மைல்கல்.வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் புத்தகங்கள் வெளியீட வாழ்த்துக்கள்.

      Delete
    2. அருமையான தகவல் திரட்டு, TVR!!

      கொண்டாடி குதூகலிக்க இன்னுமொரு சிறப்பான தருணம்!

      மெனக்கெடலுக்கும், அளித்த விதத்திற்கும் - அழகான பூங்கொத்து உங்களுக்கு!!

      Delete
    3. விஜயராகவன் @
      // *இன்றைய வாசிப்புத்துறை இருக்கும் நெருக்கடியை சமாளித்து,
      நெஞ்சுக்கு நெருக்கமானது என்ற ஒரே காரணத்திற்காக ஆயிரம் தடைகள் வந்தாலும் சமாளித்து கொண்டு, தங்களது பயணத்தில், நீங்கள் எட்டியிருக்கும் சாதனைக்கு முதல் வாழ்த்துகள் சார்💐💐💐💐💐💐💐💐💐💐💐 //

      அற்புதமாக எழுதி உள்ளீர்கள். இதயத்தில் உள்ளதை அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

      Delete
    4. சூப்பருய்யா மாம்ஸ் ..!!


      ///நீங்கள் அடுத்த ஆண்டில் எப்பவேணா "1000 செலிபரேஷன் ஸ்பெசல்" போடலாம் சார்..///


      கண்ணை மூடிக்கிட்டு கன்னாபின்னான்னு வழிமொழியிறேன் ..!

      அது ஒரு கதம்ப ஸ்பெசலா அமைஞ்சிட்டா இன்னும் அட்டகாசமான கொண்டாட்டமா இருக்குமே ..!

      நம்முடைய ஹிட் நாயகர்கள் அனைவரும், கௌபாய், காமெடி, கிநா, டிடெக்டிவ்னு சகல ஜானர்களும் கலந்துகட்டி அடிச்சா செம்மயா இருக்குமே ...!!

      கொஞ்சம் மனசுவைங்க சார்..!!

      Delete
    5. அட்றா சக்கை...!!

      ஆயிரம் பக்கங்களில் இதழ் வந்தா அஞ்சு கோடி காமிக்ஸ் வெளியிட்ட அபூர்வ நாயகன் அப்படின்னு புதுசா எழுதலாமே..

      Delete
    6. // *நீங்கள் அடுத்த ஆண்டில் எப்பவேணா "1000 செலிபரேஷன் ஸ்பெசல்" போடலாம் சார்.. இறுதி முடிவு தாங்கள் சொல்வதே. //
      கண்ணை மூடிக்கிட்டு கன்னாபின்னான்னு வழிமொழியிறேன் ..!

      அது ஒரு கதம்ப ஸ்பெசலா அமைஞ்சிட்டா இன்னும் அட்டகாசமான கொண்டாட்டமா இருக்குமே ..!

      நம்முடைய ஹிட் நாயகர்கள் அனைவரும், கௌபாய், காமெடி, கிநா, டிடெக்டிவ்னு சகல ஜானர்களும் கலந்துகட்டி அடிச்சா செம்மயா இருக்குமே ...!!

      கொஞ்சம் மனசுவைங்க சார்..!!
      -தாங்க்ஸ் கி(அ)ட்டாரே.

      Delete
    7. வாவ்...அட்டகாசமான தகவல..அட்டகாச முறையில் எண்ணங்கள் ..

      இதற்கே ஒரு " குண்டு புக்கு " பாரசல் போடலாமே சார்..:-)

      Delete
    8. // *ஆயிரம் வெளியீடுகள் என்பது இன்றைய சூழலில் மகத்தான சாதனை.
      வேறெந்த காமிக்ஸ் பதிப்பகமும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய சிகரத்தில் கால்வைத்துள்ளீர்கள். //
      +11111111111111111111111111111

      Delete
    9. // சேலம் டெக்ஸ் விஜயராகவன் வித் அறிவரசு (எ) ரவி.//
      உழைப்பு உங்களுடையது ஆகவே,அனைத்து பாராட்டுகளும் உங்களுடையதே.எனினும்,நண்பர்களின் பெயரை நினைவு கூர்ந்ததற்கு நன்றிகள் பல.

      Delete
    10. நன்றி STV சார்,

      1000 இதழ்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல, மூன்று தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரு இமாலய சாதனை, அடுத்த ஈரோடு திருவிழாவில் ஒரு மெகா இதழோடு கொண்டாட வேண்டிய நிகழ்வு, ஆசிரியர் அவர்கள் மறுக்காமல் ஒரு special edition விரைவில் அறிவிக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      நண்பர்கள் அனைவரும் ஒரே குரலில் ஆசிரியர் கவனத்திற்கு எடுத்து செல்வோம்.

      Delete
    11. கிட் மாம்ஸ் & பேபி மாம்ஸ் & தலீவர்& செயலர்& பொருளாளர் ஜி& பரணி & மகேஷ்&அசோக் ஜி@ பாராட்டுக்கு நன்றிகள் நண்பர்களே!
      மனதிற்குள் வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள்.
      உங்களின் உற்சாகமான ஊக்கப்படுத்தலே எனக்கு உற்சாக டானிக்...!!!

      எப்போதும் எனக்கு உற்சாகம் தரும் மஹிஜிக்கும் ஒரு ஸ்பெசல் நன்றி!

      கடேசி கட்டத்தில் நான் சோர்ந்து இருந்தபோது ஊக்கப்படுத்திய ரவிக்கு ஒரு ஸ்பெசல் தேங்ஸ். அவரின் உற்சாகப்படுத்தல் இல்லைனா பட்டியல் முழுமை செய்திருக்க முடியாது. உங்கள் பங்கும் கணிசமாக இருக்கு ரவி.

      நம்முடைய வரம் இந்த தருணத்தை லைவாக பார்த்து அனுபவித்து கொண்டாட முடிவது.

      வழக்கம் போல ஆசிரியர் சாரின் முயற்சியில் பின்நிற்போம் நண்பர்களே...!!!

      Delete
    12. பொருளர் ஜி@ தங்களின் அந்த "ஐந்து கோடி காமிக்ஸ் அபூர்வ நாயகன்" கட்டுரையை உடனடியாக காண ஆவல்...!!!

      Delete
    13. வாவ்!1000வது இதழ் அறிவிக்கப்போகும் எடிட்டருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

      Delete
    14. ஆயிரம் இதழ் கொண்டாட்டம் ஆகஸ்டிலா? மறுபடியும் ஈரோட்டுக்கு வர வைச்சுடுவாங்க போல இருக்கே...

      Delete
    15. எப்புடி சாமீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

      எப்படியோ நமக்கு குண்டு புக்கு வந்தா சரி

      வேண்டும் வேண்டும் 1000 பக்கத்தில் 1000மாவது இதழ் வேண்டும்

      போராடுவோம் போராடுவோம்

      புத்தகம் கிடைக்கும் வரை போராடுவோம்


      ( பின் குறிப்பு : முத்துவில் 4 இதழ்கள்(ரீப்ரின்ட் ) வெளியீடு எண்கள் இல்லாமல் வந்திருக்கின்றது )
      .

      Delete
    16. // ஆயிரம் இதழ் கொண்டாட்டம் ஆகஸ்டிலா? மறுபடியும் ஈரோட்டுக்கு வர வைச்சுடுவாங்க போல இருக்கே... //

      வேற வழி
      வந்தே ஆகணும்
      .

      Delete
    17. @ M.P : சார்...அடிக்கடி ஈரோட்டின் பேரைச் சொல்லி டூர் புரோகிராம் போட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் !! வேண்டுமானால் "கருங்கல்பாளையம் போறேன்...பள்ளிப்பாளையம் போறேன் !" என்று சொல்லிப் பாருங்களேன் !!

      Delete
    18. சிபிஜி @
      ///
      ( பின் குறிப்பு : முத்துவில் 4 இதழ்கள்(ரீப்ரின்ட் ) வெளியீடு எண்கள் இல்லாமல் வந்திருக்கின்றது )///---சூப்பரு...!!

      964+4=968...!!இப்படியே சேர்ந்தா 1000 நியூ இயர்லயே வந்துடும் போல....!!!!

      Delete
    19. Tex விஜயராகவன் & friends : ரூம் போட்டே தான் யோசித்திருப்பீர்கள் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது !! வாழ்த்துக்கள் & கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகளும் !!

      கொஞ்ச காலம் முன்பாய் "காமிக்ஸ் பாஸ்போர்ட்" என்றதொரு இலவச இணைப்பை வழங்கிய சமயமே எல்லா வெளியீடுகளின் எண்ணிக்கையினையும் ஒரு பொழுது போகா நாளில் போட்டுப் பார்த்தேன் ! ஆனால் நான் அந்தக் கணக்குகளை அணுகிய விதம் சற்றே மாறுபட்டது ! முத்து காமிக்ஸின் பொறுப்பு என் கைக்கு வந்தது "கடல் பூதம்" இதழ் துவக்கமே ! அது முத்துவின் இதழ் நம்பர் 167 என்று நினைக்கிறேன் ! So நியாயமாய்ப் பார்த்தால் அதற்கு முன்பான 166 இதழ்கள் +வாரமலர் இதழ்கள் என சகலமுமே எனக்கு முந்தைய அணிகளின் உழைப்பின் பலன்களே ! அதையும் எனது பட்டியலோடு கோர்த்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை ! அவை நீங்கலாய் நான் மாத்திரமே அடித்த பல்டிகளை மட்டும் கணக்கில் எடுத்தால் சுமார் 760 இதழ்களைத் தொட்டிருப்போம் என்று நினைக்கிறேன் தற்சமயமாய் ! தொடரும் அடுத்த சிலபல ஆண்டுகளுக்கு உழைத்திடும் ஆற்றலை ஆண்டவன் கொடையாக அருள்வாரின் - இன்னொரு 5 ஆண்டுப் பொழுதில் அந்த நான்கு இலக்கத்தை தொட்டு விடும் சாத்தியமுண்டு என்பேன் !! If & when we get there - we will celebrate it for sure guys !!

      அட - காரணங்களுக்கா பஞ்சம் - நமக்கொரு புது குண்டு புக்கை முன்மொழிய ? ஒன்றுமே சிக்காவிட்டால் - "JUST LIKE THAT Special" என்றொன்றை அறிவித்தால்ப் போச்சு !!

      Delete
    20. செம்ம ஜீ. மூளைக்காரர் நீங்கள். 1000 ஆர்ட் பேப்பர் கலர் பக்கங்கள்.
      விலை தள்ளுபடி போக ₹2500. சும்மா நச்சுன்னு நாலு கதைகள் . எடி‌ மனது வைத்தால் எதுவும் சாத்தியமே.

      அன்புடன்

      ஐ.வி.சுந்தரவரதன்
      சின்ன காஞ்சிபுரம்
      7667291648.

      Delete
    21. அப்போ வரிசை எண்.777 ஸபெஷல் ஒண்ணு போடாலேமே.

      Delete
    22. ஆசிரியர் சார்@ தங்களது தலைமையிலான அணியின் தயாரிப்புகளை மாத்திரமே கணக்கில் கொண்டு, 1000ஐ நோக்கிப் பயணிக்கும் தங்களது பயணத்தில் நாங்களும் உற்சாகத்தோடு பயணிப்போம் சார்.

      தங்களுக்கு முன்பு இருந்த அணியினரின் தயாரிப்புகளை தங்களது கணக்கில் கொண்டு வரத்தயங்கும் மென்மையான மனது புரிந்து கொள்ள முடிகிறது.

      காத்திருப்போம் சார், தங்களின் 1000வது படைப்பிற்கு...; பயணிப்போம் அதை நோக்கி தங்களோடே...!!!

      Delete
    23. //ஈரோட்டின் பேரைச் சொல்லி டூர் புரோகிராம் போட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் !! //

      அதுக்கு வாய்பபே இல்லீங் சார். இந்த தடவை திருப்பூர்க்கு குடும்பத்தோட சிபி வீட்டுக்குப் போய் கரூர் சரவணன், ப்ளூ மற்றும் ரம்மியின் குடும்பத்தினரோடு ஒரு நாள் இருந்தோம். திருமணத்தின் போதே இவனுக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் இந்த பொம்மை புக்கு படிக்கிறது தான் அம்மா சொல்லிட்டாங்க. அதனால என்னை எப்பவோ காமிக்ஸ் புக்கு விசயத்துல தண்ணி தொளிச்சுட்டுட்டாங்க.

      Delete
    24. Mahendran Paramasivam @

      // அதுக்கு வாய்பபே இல்லீங் சார். இந்த தடவை திருப்பூர்க்கு குடும்பத்தோட சிபி வீட்டுக்குப் போய் கரூர் சரவணன், ப்ளூ மற்றும் ரம்மியின் குடும்பத்தினரோடு ஒரு நாள் இருந்தோம் //

      Lucky Guy!

      Delete
    25. குடும்பத்தோட கொண்டாட்டமே எங்களுக்கு பொம்மபுக்தானே .எது எப்படியோ 1000 ஸ்பெசல் போட்டே ஆகனும்

      Delete
    26. @பரணி. ஒரு மழைக்கால ஞாயிறு காலைல சில மணி நேரங்களை கோவைக்கவி கூட செலவழித்தேன். டைப் பண்றதை விட வேகமா பேசறாரு மற்றும் வண்டி ஓட்டறாரு. அருமையான மணித்துளிகள். இந்த தடவை ஈரோடு மட்டுமல்லாமல் வெளிலயும் காமிக்ஸ் நண்பர்கள் கூட கனெக்ட் பண்ண முடிந்தது சந்தோசமே. ஆனால் உள்ளூரிலேயே நிறய காமிக்ஸ் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு மற்றும் வரும் கதைகளை உடனுக்குடன் படிக்க வாய்ப்புள்ள நீங்க எல்லாரும் தான் செம லக்கி.

      Delete
    27. // ஒரு மழைக்கால ஞாயிறு காலைல சில மணி நேரங்களை கோவைக்கவி கூட செலவழித்தேன். டைப் பண்றதை விட வேகமா பேசறாரு மற்றும் வண்டி ஓட்டறாரு. அருமையான மணித்துளிகள். இந்த தடவை ஈரோடு மட்டுமல்லாமல் வெளிலயும் காமிக்ஸ் நண்பர்கள் கூட கனெக்ட் பண்ண முடிந்தது சந்தோசமே. //

      Super! nice to know this!

      Delete
  43. 1000 ஆவது இதழை ஒரு பெரிய டைகர் குண்டு இதழாக வெளியிட ஆவன செய்யுமாறு எடிட்டரை வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  44. இ ப ஒரு மெகா வெற்றி. இதே போன்று வருடத்திற்கு ஒரு மெகா இதழ் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நானெல்லாம் அரை டிராயர் பாலகனாய் இருந்த ஒரு யுகத்தினில் "ரசகுல்லா" என்பதெல்லாம் கனவுகளில் மாத்திரமே வந்து போகுமாறு பதார்த்தம் ! மதுரை ஆர்ய பவன் ; சென்னை ; கோவை போன்ற பெரு நகரின் உயர்தர ஹோட்டல்களில் மட்டுமே இவை கிடைக்கும் ; எங்களது சிறு நகரில் நோ சான்ஸ் !! கல்கத்தாவுக்கு எப்போதேனும் தந்தை பணி நிமித்தம் சென்று வந்தாரெனில் - அங்கே பிரசித்தி பெற்ற KC Dass ரசகுல்லா டின்களில் ஒன்றிரண்டை வாங்கி வருவார் ! அதனை இரும்புப் பெட்டிக்குள் வைக்காத குறையாகப் பத்திரப்படுத்தி, ரசித்து ருசிப்பது அந்நாட்களது ரம்ய நினைவுகளுள் ஒன்று !

      நாட்கள் ஓட, ஓட - உணவுக் கலாச்சாரங்கள் விரிவாக்கம் காண துவங்க, இப்போதெல்லாம் எங்களூரின் லாலா கடை முதல், தம்மாத்துண்டு ஸ்வீட் ஸ்டால் வரையிலும் அந்த வெள்ளைச் சொர்க்கலோகம் கிடைக்கிறது ! ஆனால் இப்போதோ அந்நாட்களது தீராக் காதல் மட்டும் காணவே காணோம் !!

      என்றோ அரிதாய்க் கிடைக்கும் வரையிலும் தான் சார் சில பிரேத்யேகங்களுக்கு மவுசு !! அடிக்கடி கிட்டிடும் பட்சத்தில் அல்ல !

      Delete
  45. டியர் எடிட்,

    செப்டம்பர் இதழ்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வித ரசனைக்கு ஏதுவாக அமைந்து போனது நிறைவாக தெரிகிறது.

    நினைவுகளை கொண்டாட = சைத்தான் சாம்ராஜ்யம்
    கலக்கல் காமடிக்கு = மீள் வருகை தரும், எனது மினி லயன் நினைவுகளிள் தங்கி ஹோம்ஸ்
    புதிய பரிணாமத்திற்கு = வித்தியாச நாயகர் ட்ரெண்ட்
    கிளாசிக் டச்சுக்கு = மாடஸ்தி

    அதிலும் சமீப கால மாடஸ்தி இதழ்களுக்கான நமது ஓவியரின் அட்டை முயற்சிகளில், மிக சிறந்த ஆக்கமாக இதை கொள்ள வேண்டும்.. வழக்கமாக கோட்டை விடும் உடலளவு விகிதங்கள் இதில் கச்சிதமாக வந்திருப்பதாக எனக்கு படுகிறது.... அதை முன்னட்டையிலேயே அலங்கரித்திருக்கலாம்....

    அனிமே கானுக்கு நமக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை... மங்கா அடிப்படையிலான கோட்டோவிய பாணிக்கே அங்கே மவுசு... நமது ரசனைக்கு நேர் எதிர் துருவம்.

    ReplyDelete
    Replies
    1. //வழக்கமாக கோட்டை விடும் உடலளவு விகிதங்கள் இதில் கச்சிதமாக வந்திருப்பதாக எனக்கு படுகிறது.... அதை முன்னட்டையிலேயே அலங்கரித்திருக்கலாம்.... //

      ஹை !!!

      Delete
  46. இரத்த படலம்: அத்தியாயம் 10 இப்போது தான் படித்து முடித்தேன். மல்வே தான் இந்த அத்தியாயத்தில் ஹீரோ என சொல்லலாம். அதுவும் கோர்ட்டில் வாதாடும் இடம் அவரின் கம்பீரமான தோற்றம் உடல் மொழி ஆகியவற்றை ஒவியர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் 479 பக்கத்தில் கடைசி படத்திற்கு முந்தைய படத்தில் வரும் வசனம் அவரது உடல் மொழியை மிகவும் ரசித்தேன். கண்களில் நீர். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அதேபோல் பக்கம் 467ல் வரும் காட்சிகளையும் ரசித்தேன். அதில் மக்லேன் பேசும் வசனம் என்னமோ செய்தது " எனக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் பேயாடு போராடும் திராணி இருக்கிறது... என் உயிரே போவதானாலும் அந்தப் போராட்டம் நடந்தேயாக வேண்டும்."

      Delete
    2. உண்மை...

      பல பல இடங்களில் நாயகனை விட பலர் ரசிக்கவும் ,கலங்கவும், பெருமித படவும் வைத்தனர்..

      Delete
    3. \\அதேபோல் பக்கம் 467ல் வரும் காட்சிகளையும் ரசித்தேன். அதில் மக்லேன் பேசும் வசனம் என்னமோ செய்தது " எனக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் பேயாடு போராடும் திராணி இருக்கிறது... என் உயிரே போவதானாலும் அந்தப் போராட்டம் நடந்தேயாக வேண்டும்."\\

      நானும் நேற்று தான் இந்த பாகத்தை படித்தேன், என் நெஞ்சை தொட்ட வரிகள், அதற்கு அடுத்த frame இல் ஜோன்ஸ்-ன் reaction அருமையாக வரயப்பட்டிருக்கும்.

      Delete
    4. மகேஷ்
      // அதற்கு அடுத்த frame இல் ஜோன்ஸ்-ன் reaction அருமையாக வரயப்பட்டிருக்கும்//
      அடுத்து இதனைத் தான் எழுத நினைத்தேன். நீங்கள் செய்து விட்டீர்கள். மனதை ஈரமாக்கிய படம் அது.

      Delete
    5. வாசிக்க ; சிலாகிக்க என கதாசிரியரும் ; ஓவியரும் போட்டி போட்டுக் கொண்டு இந்தத் தொடரின் முழுமையிலும் ஆங்காங்கே நிறைய சமாச்சாரங்களை தூவிச் சென்றிருப்பது கண்கூடு !!

      On a lighter note :

      இந்த 3 கிலோ இதழை ஒரே புக்காகியிருப்பின் நிலவரம் எவ்விதமிருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன் !! அதைத் தூக்கவே ஒரு ஆள் போட்டிருக்க வேண்டி வந்திருக்கும் ; படிப்பதற்கெல்லாம் எங்கே சாத்தியப்பட்டிருக்குமோ ?!! ஷப்பாடி !!!

      Delete
    6. விஜயன் சார், மூன்று புத்தகங்களாக கொடுத்தது மிகவும் சரியான முடிவு.யதார்த்தமாக சிந்தித்து நடைமுறைக்கு எது சரிபடும் என்ற உங்கள் முடிவு பாராட்டுக்கு உரியது.

      Delete
  47. Hi all☺
    Sherlock Holmes trailer page looks funny and I would like to buy it through online once it is listed
    Have a funny days all 😊

    ReplyDelete
    Replies
    1. Will be listed in the coming week...

      Delete
    2. வரும் 31ஆம் தேதி இந்த புத்தகம் மற்றும் செப்டம்பர் மாத புத்தகங்கள் கிடைக்குமா????

      Delete
  48. ஷெர்லக் அட்டைப்படம் மிக நன்று..:-)

    ReplyDelete
  49. கோலக்கிளி என் சோலைக்கிளி
    ============================

    சோலைக்கிளியின் பார்வை
    சொக்கவைக்கிது
    அதன் ஆழம் பார்க்கத்தான்
    மாமன் மனம் ஏங்குது......

    அடியே
    அத்தை பெத்த ரத்தினமே
    எனை ஆளவந்த
    சித்தரமே
    செல்லமயிலே
    சொல்லாமல் கொள்ளுதடி
    சிருங்காரம் பெற்றெடுத்த
    செண்பகமே.....

    பாதையோ வில்லங்கம்
    பாவைதான் காரணம்.....
    💋யாழிசை செல்வா💋
    26/08/2018

    ReplyDelete
    Replies
    1. அருமையான செய்யுள்!
      ஆழ்ந்த விளக்கங்கள் அதனுள்!!

      ///சிருங்காரம் பெற்றெடுத்த
      செண்பகமே.....///

      அவங்கப்பா பேரு 'சிங்காரம்' போலிருக்கு!

      Delete
    2. ///அவங்கப்பா பேரு 'சிங்காரம்' போலிருக்கு!///

      அவங்கப்பா கெடக்குறாரு டப்பா ...அந்த மாடஸ்டிபுள்ள பேரை செண்பகமே ன்னு குறிப்பிட்டுருப்பதை கவனிங்க குருநாயரே ..!

      நம்ம ஊரு பாட்டுக்காரரின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் படி செண்பகம் என்பது பசுமாட்டின் பெயர் ..அதாவது மாட்டின் பெயர் ..அதாவது மாடு ...

      இங்கே மாடஸ்டி என்பதை பிரிச்சி மாடு ஏஸ் டீ ன்னு வெச்சுக்குவோம் ..அதாவது டீ போட தேவையான முக்கியமான ஒன்றை தருவது மாடு ..இல்லையா ..!? சரி ...அது இப்போதைக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.!

      முதல் வார்த்தையை மட்டும் எடுத்துக்கோங்க ..மாடு ..நம்மூர் செண்பகம் ...லிங் புரியுதோ ..!?

      அதேதான் ...செண்பகமே செண்பகமே ...!! :-)

      Delete
    3. ஆளாளுக்கு பின்னட்டையை பார்த்தவுடனே செண்பமே, செண்பகமேனு பாட்டு படிக்கறது நல்லாயில்ல ஆமா...!!!

      Delete
    4. மன்னரின் ஐயப்பாட்டை நீக்கும் அற்புதமான செய்யுள் இயற்றிய தருமிக்கு என் வந்தனங்கள்.(பொன் தனம் கொடுக்கும் அளவிற்கு நான் பாண்டிய மன்னன் இல்லை.மன்னிக்கவும்)

      Delete
    5. மன்னரின் ஐயப்பாட்டை நீக்கும் அற்புதமான செய்யுள் இயற்றிய தருமிக்கு என் வந்தனங்கள்.(பொன் தனம் கொடுக்கும் அளவிற்கு நான் பாண்டிய மன்னன் இல்லை.மன்னிக்கவும்)

      Delete
  50. // இம்முறை ஈரோட்டில் நான் பிடிவாதமாய் பெவிகால் பெரியசாமியாய் வலம் வந்ததன் காரணம் !! "குண்டு புக் ; மெகா புக் ; அத்திரி பாட்சா ஸ்பெஷல் ; குப்புற பல்டி ஸ்பெஷல் " என்று மறுக்கா கால்களை அ-க-ல-மா-ய் விரித்துக் கொண்டு, அப்புறமாய்த் திரு-திருவென்று முழிக்க வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை தான் இம்முறை வீட்டிலிருந்து நான் பேக் செய்திருந்த முதல் வஸ்து ! //

    கட்ட விரலை வாயில் வைப்பது நமக்கெல்லாம் பழசு தானுங்களே சார்
    தெகிரியமா வந்து இப்ப இப்ப எல்லாம் குண்டு புக்கு போட போறேன்னு தயங்காம சொல்லுங்க பாஸ் _/|\_
    .

    ReplyDelete
  51. // இளவரசியின் சோலோ சாகசம் காத்துள்ளது !! "ஒரு விடுமுறை வில்லங்கம்" என்பதே இந்த ஆல்பத்தின் டைட்டில் ! ஒரிஜினலாக C.I.D ராபின் சகிதம் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்று வந்திருக்க வேண்டிய கதையிது ! ஆனால் அடுத்த 4 மாதங்களை நகற்றிட போதுமான எண்ணிக்கையில் இதழ்கள் மீதமில்லை என்பதால் - ராபினைத் தனியாகவும், மாடஸ்டியைத் தனியாகவும் களமிறக்க வேண்டிப் போயுள்ளது !! So "சிங்கம் சிங்கிளாத் தான் வரும் !!" போன்ற தமிழர்களின் எவெரெடி,காவிய வரிகளை இப்போதைக்கு வரவழைத்துக் கொள்ளலாம் என்பேன் !! //

    என்னடா இது மாடஸ்டிக்கு வந்த சோதனை
    .

    ReplyDelete
    Replies
    1. சோதனையா ? சாதனையா ? ஒரே வாரத்தில் பதில் தெரிந்திருக்குமே !!

      Delete
  52. // ஐயோ....அய்யய்யோ...கத்திரி போடுறீங்களே இளவரசி கதைக்கு !!" என்று வேர்க்க, விறுவிறுக்க என்னிடம் பதைபதைப்பு காட்டிய நண்பர்களுக்கு இந்தவாட்டி கொஞ்சம் நெஞ்சங்கள் குளிர்ந்திட வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! //

    ஆஹான்
    அலோ லேடி எச்சு இப்ப இப்ப வா பாக்கலாம்
    .

    ReplyDelete
    Replies
    1. ///ஆஹான்
      அலோ லேடி எச்சு இப்ப இப்ப வா பாக்கலாம் ///


      உங்க கலையார்வம் நல்லாப் புரியுது சித்தரே ..!

      Delete
    2. சித்தமெல்லாம் லேடி எச்சு மயமே...!!!

      Delete
    3. அடேடேடே...ஒரு மகா கலையார்வக் கூட்டமே தயாராக நிற்பது போல் தெரிகிறதே !!!

      Delete
    4. ////அடேடேடே...ஒரு மகா கலையார்வக் கூட்டமே தயாராக நிற்பது போல் தெரிகிறதே !!!////

      அதையேன் கேக்கறீங்க சாா்!? நாம ஏதாவது உணா்ச்சி வசமா சொல்லி, எக்கு தப்பா மாட்டிக்க கூடாதேனு பல்லை கடிச்சுட்டு இருக்கேன்!

      ஆனாக்கா மாடஸ்டி ஆண்டி இதுல மாடஸ்டி அக்காவா மாறி, சோக்கா தான் இருக்காங்க!!

      நம்மலுக்கும் கொஞ்சம் கலையாா்வம் உண்டுங்கோ!!

      Delete
  53. ரத்தப்படலம் 2nd வால்யும் ,12 ஆவ்து பாகம்,578 ஆம் பக்கம் கிம் காரிங்டன் மரணம் வசனங்கள் இல்லாத கண்ணீர் கா(ஓ)வியம்.வான்ஸின் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இந்த அத்தியாயத்தை படிக்க ஆரம்பிக்கவில்லை. இன்று முடிந்தால் படித்து முடித்துவிட வேண்டும்.

      Delete
  54. இரத்த படலம் : அத்தியாயம் 11:
    இந்த கதையின் முக்கியமான xiii பற்றிய மற்றும் அவரின் முன்னோர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் மரியாவின் பூமியில் நடக்கும் புரட்சி போராட்டம் அமர்க்களம். இந்த ஃப்ளாஷ் பேக் கொஞ்சம் போரடித்தது (வரலாற்றில் எனக்கு ஆர்வம் கம்மி). இன்னும் ஒரு காரணம் பல பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய இருந்தது.

    ஃப்ளாஷ் பேக் மற்றும் நிகழ்கால யுத்தம் இரண்டையும் கலந்து போரடிக்காமல் கதையை அமைந்த காதாசிரியருக்கு பாராட்டுக்கள்.

    இந்த கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது; அது மல்வேயோ அல்லது மரியாவோ அல்லது ஜோன்ஸ்ஸோ அல்லது பாதரோ. தலைவணங்குகிறேன் கதாசிரியரே. இதனை படமாக யாராவது எடுத்தால் மல்வே பாத்திரமாக நடிக்க எனக்கு ஆசை;சென்டிமேட் மற்றும் பழிவாங்கும் நோக்குடன் அலையும் மனிதர்.

    ReplyDelete
    Replies
    1. ////(வரலாற்றில் எனக்கு ஆர்வம் கம்மி).////

      என்ன கொடுமை சாா்??!!

      Delete
  55. இரத்தப்படலம் இன்று தான் அரம்பித்தேன் அதற்குள்ளாக 3வது பாகம்(மென்டல் hospitalல இருக்கேன்)
    ரொம்பவும் மர்மமாக கதை நகர்கிறது
    கதை செல்லும் பானி அருமை
    (பக்கதுலையை பேப்பர்,பேனா வைத்து கொண்டு படிக்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. // (பக்கதுலையை பேப்பர்,பேனா வைத்து கொண்டு படிக்கிறேன்) //

      நான் பள்ளியில் படிக்கும் போது புரியாத பாடங்களை இப்படி நோட்ஸ் எடுத்து படிப்பேன்.

      Delete
  56. நல்லா பார்த்து கொள்ளுங்கள் நண்பர்களே:-

    கதையை பற்றி விவாதித்து துவைத்து காய போட்டு இருக்கிறோம்.

    ஏன் கதையின் தலைப்பை கூட விவாதித்து இருக்கிறோம்.

    என்ன சொல்ல வருகிறேன் என்றால் அட்டை படத்தில் விவாதம் நடந்தது அல்லது நடந்து கொண்டு இருப்பது எங்கள் இளவரசிக்குதான். புத்தகம் வரும் முன்பே இவ்வளவு விவாதம் எனில் வந்த பின்னர் சொல்லத் தேவையில்லை. இது எங்கள் இளவரசியின் கதை இந்த முறை செம ஹிட் தான் என்பதை பட்சி சொல்லுகிறது.

    ReplyDelete
  57. //அட - காரணங்களுக்கா பஞ்சம் - நமக்கொரு புது குண்டு புக்கை முன்மொழிய ? ஒன்றுமே சிக்காவிட்டால் - "JUST LIKE THAT Special" என்றொன்றை அறிவித்தால்ப் போச்சு !!//

    பேஷ், பேஷ் அப்படியே அறிவிச்சிடுங்க சார்.

    \\முத்து காமிக்ஸின் பொறுப்பு என் கைக்கு வந்தது "கடல் பூதம்" இதழ் துவக்கமே ! அது முத்துவின் இதழ் நம்பர் 167 என்று நினைக்கிறேன் ! So நியாயமாய்ப் பார்த்தால் அதற்கு முன்பான 166 இதழ்கள் +வாரமலர் இதழ்கள் என சகலமுமே எனக்கு முந்தைய அணிகளின் உழைப்பின் பலன்களே ! அதையும் எனது பட்டியலோடு கோர்த்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை !//

    உங்களுடைய இந்த கருத்து எனக்கும் ஒப்பவில்லை சார், இதை ஒரு இரு தலைமுறையின் தொடர் வெற்றி, பிரகாஷ் publisher-ன் வெற்றி. கண்டிப்பாக இந்த பயணத்தை தொடங்கிய உங்கள் தந்தையை கௌரவிக்க ஒரு விழா எடுத்தே ஆக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. // இதை ஒரு இரு தலைமுறையின் தொடர் வெற்றி, பிரகாஷ் publisher-ன் வெற்றி. கண்டிப்பாக இந்த பயணத்தை தொடங்கிய உங்கள் தந்தையை கௌரவிக்க ஒரு விழா எடுத்தே ஆக வேண்டும்.//
      மகேஷ் சார்,சூப்பரான ஒரு பாயிண்டை எடுத்து கொடுத்திங்க,வேண்டும்,வேண்டும் 1000 ஸ்பெஷல் வேண்டும்.

      Delete
    3. பிரகாஷ் publisher-ன் வெற்றி. /////கண்டிப்பாக இந்த பயணத்தை தொடங்கிய உங்கள் தந்தையை கௌரவிக்க ஒரு விழா எடுத்தே ஆக வேண்டும்.//

      +1

      Delete
  58. ////இந்த மாடஸ்டி ஓவியத்தின் sketch / angle / presentation என்று எதுவுமே நமது ஆக்கமல்ல !! மாடஸ்டியின் ஒரு அமெரிக்க காமிக்ஸ் பதிப்புக்கென 2001 -ல் அங்கே உருவாக்கப்பட்ட டிசைனின் அச்சு அசல்த் தழுவலிது ! முகம் மாத்திரமே அவர்களது டிசைனில் தட்டையாகத் தெரிய - நமது ஓவியர் இயன்ற மாற்றத்தைச் செய்திட முனைந்துள்ளார் ! பாக்கி உடற்கூறுகள் சகலமுமே ஈயடிச்சான் காப்பி ! நேரம் கிடைக்கும் போது கூகுளில் தேடிப் பாருங்கள் - அந்த ஒரிஜினல் டிசைன் கண்ணில்படாது போகாது ! Maybe அங்குள்ள,அப்போதைய ஓவியரும் முறையான ஒவியப் பாடங்களை படித்து வரா சாமான்யராய் இருந்திருப்பாரோ - என்னவோ !!////

    இப்பதிவு வெளியான அரைமணி நேரத்திற்குள்ளாகவே இணையத்தில் மாடஸ்தி "அக்கா" வின் இதே பின்னட்டைப் படத்தை கூகுள் ஆண்டவா் கண்ணில் காட்டினாா்!!

    கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம் தான் இதற்கும் ஒாிஜனலுக்கும்!!

    ஆனாக்கா வண்ணத்தில் தான் வித்தியாசம் தான் மலையளவு?!

    ஒாிஜனலில் இளம்மஞ்சள் வண்ணத்தில் ஆடைகளைப் பாா்த்ததாக ஞாபகம்!!?

    ஆனால் நமது அட்டைப்படத்தில் சிகப்பு செக்காயும், ஊதா டிரவுசருமாய் காட்சியளிக்கிறது!

    கூகளில் வந்த ஒாிஜனலைக் காட்டிலும், நம்ம அட்டைபடமே தூக்கலாய் இருந்ததால் இதனையே டவுன்லோடு செய்தேன்!!

    ஹிஹி! ஆனாலும் நாங்கெல்லாம்
    "லேடி S" அணி தானாக்கும்!!

    😋😋😋

    ReplyDelete
    Replies
    1. Modesty Blaise LIVE BAIT னு அடிச்சாவே கூகுள் ஆண்டவா் ஒாிஜனலை காட்டுறாரே!!

      என்ன இங்கிலீஸ்காரங்க கொஞ்சம் டொக்கா வரைஞ்சிருக்காங்க!? (முகத்தை சொன்னேங்க)

      நம்மவா் கொஞ்சம் புஷ்டியா வரைஞ்சிருக்காங்க!

      வரைகலையாகப் பாா்க்கும் போது குறைபாடுகள் இருந்தாலும் ஒாிஜனலைக் காட்டிலும் இதுவே பெட்டருனு எனக்கு தோன்றது!!

      Delete
    2. ஒரிஜினல் மாடஸ்டி அட்டைப்படத்திற்கு "இங்கே க்ளிக்குங்க பாஸு"

      முகம், வலதுகால் ஷூ, கார்வினின் சில அங்கங்கள் தவிர கிட்டத்தட்ட ஒரிஜினல் போலவே நமது ஓவியராலும் வரையப்பட்டுள்ளது!!

      Delete
    3. படத்தை "இங்கே க்ளிக்குங்ர பாஸூ" போடர டெக்னிக்க எனக்கும் கொஞ்சம் சொல்லதாங்க பாஸூ!!??

      Delete
    4. ஒரிஜினல் படத்தை வெளியிட்டு உண்மை என்ன வென விளங்க வைத்தமைக்கு பாராட்டுகள்💐💐💐💐மற்றும் வாழ்த்துகள் செயலரே!

      விசயம் தெரியாத நண்பர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்னா, பாவம் கள்ளம் கபடம் அற்ற மனசு; காமிக்ஸ் காதலில் அதீத ஆர்வம் என எடுத்து கொள்ளலாம்.

      ஆனா,
      மெத்தப்படித்த,
      தனித்த திறமைவாய்ந்த,
      பன்னாட்டு நிறுவனத்தில் பொறுப்பான வேலையில் உள்ள,
      ஏழெட்டு மாஸ்டர் டிகிரிகிகளை தோளில் தொங்கவிட்டுள்ள
      முன்மாதி்ரியாக இருக்கவேண்டிய,
      தெரியாத விசயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டிய நபர்களே,
      பொய்யான குற்றச்சாட்டு வைத்தால் யார்தான் என்ன செய்யமுடியும்.

      தீரவிசாரிக்காமல், எடுத்தேன்-கவிழ்த்தேன்னு கேள்வி கேட்கும் நபருக்கெலாம் எப்படி பொறுப்பான வேலை கொடுத்தாங்களோ தெரியலயே! அந்த கம்பெனி பாவம்...

      இப்ப உண்மை தெறிந்தபிறகு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அந்த, எல்லாவற்றிலும் கரைகண்ட நபர்.

      Delete
    5. பொதுவெளியில் ஒரு விசயத்தை
      தீர்மானமாக சொல்லும் முன்னர், அதுவும் தான் பிறக்கும் முன்னரே தொழிலில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் முன்னர் விசாலமாக விசாரித்து அறிந்து கொண்டு இருக்க வேண்டும்.

      நெட்டும் கம்பியூட்டரும் யாரோ கம்பெனி காரங்க கொடுத்தது இருக்குனு,எதையும் விசாரித்து பார்க்காம எப்படி இப்படி பொது வெளியில் பேசமுடிகிறது.

      சரியான விசயத்தை சொல்லவே பலதடவை யோசிக்கும் நண்பர்களுக்கு மத்தியில், தவறான விசயத்தை தூக்கிட்டு வந்து கூச்சமே இல்லாமல் எப்படித்தான் பேசமுடிகிறதோ????

      இப்ப அந்த ஒரிஜினல் ஓவியம் வரைந்த கம்பெனியிடம் போய் இந்த அரைகுறை நபர் தன்னுடைய புத்திசாலித்தனமான பாடங்களை எடுப்பாரா???

      எடுத்தாலும் எடுப்பார் அவருக்கு தான் எதுவும் கிடையாதே. இந்த "நிறைகுடம்"-அங்கே போய் கேட்கும், ஆனா அந்த கம்பெனிகாரங்க தான், "தலைக்கு மேல கறுப்பா இருக்குமே ஆங் அதுல சீப்பு போட்டு கூட வாருவமே" அதுல கூட சட்டை செய்ய மாட்டாங்க...!!!


      Delete
    6. கிளிக்கிட்டேன் ஈவி

      Delete
    7. @ TVR

      நாமும் சிலபல முறை சொல்லிப்பார்த்துட்டோம்... ம்ஹூம்!!

      குறைகளைச் சொல்ல வேண்டாம்னு யாரும் சொல்லலை! உண்மையில் அது நல்ல விசயமும்கூட! ஆனால் மரியாதைக்குரியவங்களை மட்டம் தட்டுறமாதிரி பேசறதுதான் வருத்தமா இருக்கு!

      என்னிக்காச்சும் திருந்துவார்னு நம்பிக்கையோட காத்திருப்போம்!

      @ மிதுன்

      கூகுள்காரவுக கி்ட்டே கேட்டீங்கன்னா கூடை கூடையா கொட்டுவாய்ங்களே?!!

      Delete
    8. @EV. இன்னுமா நம்பிட்டு்இருக்கீங்க. அடக் கடவுளே...

      Delete
    9. @ MP

      ஓவர் நைட்ல உடம்புல ஒரு வேதி வினை நடந்து, காலையில் எழுந்திருக்கும்போது ஒரு புத்தம் புது மனிதனாக எழ இக்ளியூண்டு வாய்ப்பிருக்கிறது தானே? :)

      அப்படிக் கிப்படி ஏதாச்சும் நடந்தா...

      * டெக்ஸ் புத்தகங்களை கட்டியணைத்து உம்மா கொடுக்க வாய்ப்பிருக்கு..
      * பிழையில்லாம கமெண்ட் போட வாய்ப்பிருக்கு..
      * 'இவ்வளவு அழகாய் வரையப்பட்ட ஓவியத்தை ஏன் பின் அட்டையில் போட்டீங்க?'ன்னு எடிட்டர்ட்ட கேட்க வாய்ப்பிருக்கு!
      * 'டெக்ஸ் ரசிகனுங்க ரொம்ப சமர்த்துப்பா'னு பாராட்ட வாய்ப்பிருக்கு!
      * 'இந்த வருசம் மாதிரியே அடுத்த வருசமும் சந்தாதாரர்களுக்கு கலர்-டெக்ஸ் இலவசமா கொடுக்கணும் எடிட்டர் சார்'னு கேட்டு வைக்க வாய்ப்பிருக்கு...
      * 'EBF வாசகர் சந்திப்பு நடந்துக்கிட்டிருக்கும்போது மீட்டிங் ஹாலுக்குள்ள வராம, வீராப்பா வெளியே சுத்திக்கிட்டிருந்தது தப்புத்தான்'னு உணர வாய்ப்பிருக்கு!

      நம்பிக்கைதானே எல்லாம்!! :)

      Delete
    10. @ஈவி. சரி..சரி...இந்த அக்கப் போர்ல தவறா சொல்லப்பட்ட இன்னும்சில விசயங்களை சரிப்படுத்திடலாம். மட ஸ்டியோட உயரம் 5 அடி 6 அங்குலம். மேலை நாடுகளோட ஸ்டாண்டர்டு படி இது நல்ல உயரம் கிடையாது. வெயிட்டு 120 பவுண்டாம்.

      அப்புறம் அந்த அட்டைப்படத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அளந்து பாத்தேன். கையி டெபைனைட்டா முழங்காலுக்கு மேலேயே முடிஞ்சுடுது. ஒரு வேளை எலிமெண்டரி ஸ்கூல் ல நான் ஸ்கேல் சரியா யூஸ் பண்ணக் கத்துக்காதது கூட காரணமா இருக்கலாம்.

      அப்புறம் ஒரு இடத்துல நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணலை. எங்கன்னு கண்டு பிடிங்க பாக்கலாம்?

      Delete
    11. @ MP - ///ஒரு இடத்துல நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணலை///.


      உண்மையல்ல!

      Delete
    12. புத்திசாலிகள் நிறைந்த உலகமிது!

      Delete
    13. ////ஒரு வேளை எலிமெண்டரி ஸ்கூல் ல நான் ஸ்கேல் சரியா யூஸ் பண்ணக் கத்துக்காதது கூட காரணமா இருக்கலாம். ////

      :))))))))))) செம!

      Delete
    14. அய்யா! கண்டுபிடிச்சுட்டேன்!!

      ///மட ஸ்டியோட///

      Delete
  59. Vijayan sir,
    Happy to know about Comiccon in Pheoenix mall. If you are coming to Chennai to participate in this, I will also come there to meet you.
    Regards,
    Mahesh

    ReplyDelete
  60. இரத்த படலம் முழுத்தொகுப்பு:
    நமது பலரின் மெகா கனவை இவ்வளவு விரைவில் எடிட்டர் நிறைவேற்றுவார் என நான் (ம்) நினைத்து பார்க்கவில்லை.

    சுமார் 4-5 மாதங்களுக்கான கதைகளை ஒரே மாதம் சுவைக்க கொடுத்த எடிட்டர் மற்றும் அலுவலக நண்பர்களின் உழைப்புக்கு சிரம் தாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது ஆதங்கம்: இவ்வளவு பெரிய கதை தொகுப்பைப் பற்றிய இங்கு விமர்சனங்கள் எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நம்மால் ஒவ்வொரு அத்தியாயத்தை பற்றி விமர்சனம் எழுத முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் விமர்சனம் செய்யலாமே. இது நமது முகத்தில் தெரியும் சந்தோசமே மூலதனம் என ஓடும் எடிட்டருக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருந்து மேலும் அவர் பல காமிக்ஸ் புதையலை நமக்கு தேடித்தர உதவுமே. அதேநேரம் இது நமது எடிட்டருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

    இது போக நமது காமிக்ஸ் நண்பர்கள் இருவர் (கார்த்திகை பாண்டியன் மற்றும் ஜனார்த்தனன்) புலன் விசாரணை மொழிபெயர்ப்பு செய்து சில நண்பர்களின் ஆசையை நிறைவேற்ற முக்கிய காரணமாக அமைந்து உள்ளனர். இவர்களும் நமது விமர்சனங்களை ஆர்வமாக எதிர்நோக்கி இருப்பார்கள். உங்களின் விமர்சனங்கள் எதிர்காலத்தில் அவர்களை இன்னும் ஆர்வத்துடன் பணியாற்ற செய்ய உதவும் அதேபோல் மேலும் பல புதிய நண்பர்களை இது போன்ற மொழிப் பெயர்ப்பு பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு செய்ய உதவும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பரணி,

      XIII விமா்சிக்க, ரசிக்க, சிலாகிக்க பல விஷயங்கள் உள்ளன! புக்கை கைப்பற்றிய நாளிலிருந்து 18 பாகத்தை முழுமையாக நேற்றுதான் படித்து முடித்தேன்!

      இன்னும் பலா் பாதி கிணத்தையே தாண்டலை போலிருக்கே!!

      சிலா் ஆரம்பிக்கவே இல்லை போலும்!

      மேலும் இது மறு மறுபதிப்பு என்னும் போது விசா்சனங்கள் உடனே கிட்டாது!!

      புதுசா படிக்கும் நாம தான் சிலபல சந்தேகங்களையும், விமா்சனங்களையும், கிளப்பிவிடணும்??!!

      வேணா ஒன்னு செய்வோம்? பள்ளிக்கூட துணைப்பாடத்தில் கேட்கப்படும் கேள்வி போல,
      100+ கதாபாத்திரங்களை கொண்ட கதையில் நும் மனதை கவா்ந்த கதை மாந்தா் பற்றி ஒருபக்க அளவில் கட்டுரை வரையாவிட்டாலும், சிலபல பத்திகளிலாவது குட்டுரை வரையலாமே!!

      என் மனதை கவா்ந்த கதைமாந்தா்
      "கா்னல் ஆமோஸ்"

      பி.கு. XIII ய தவிர 100+ல்

      Delete
    2. மூன்று புத்தகங்களை முழுமையாக படித்து முடிக்கவில்லை என்றாலும்
      இதுவரை படித்த அத்தியாயங்களை மட்டுமாவது விமர்சனம் எழுதலாமே நண்பர்களே.

      அதேநேரம் இரத்த படலம் ஏற்கனவே படித்த நண்பர்கள் புலன் விசாரணை பற்றிய விமர்சனங்களை எழுதலாமே?🤔

      Delete
    3. ///இரத்த படலம் ஏற்கனவே படித்த நண்பர்கள் புலன் விசாரணை பற்றிய விமர்சனங்களை எழுதலாமே?///

      படிச்சா தானே எழுதுவாங்க??!!

      Delete
    4. நேற்றில் இருந்து நான்கு முறை புலன் விசாரணை படித்து முடிக்க முயற்சிக்கிறேன், ஒரு பாகம் முடிப்பதற்குள் தூக்கம் வந்துவிடுகிறது. இதுவரை 5 பாகங்கள் முடித்துலேன். மீதம் படிப்பதற்கு ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கிறேன்.

      இதை மொழி பெயர்த்த நண்பர்களுக்கு ஒரு hatsoff.

      Delete
    5. யாருக்காவது இரவில் தூக்கம் வரவில்லையெனில் கண்டிப்பாக இந்த பாகத்தை படிக்க முயற்சிக்கவும். உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.

      Delete
    6. எனக்கெல்லாம் டெக்ஸ் கருப்பு/வெள்ளை கதைகளை கையில் எடுத்தவுடனே தூக்கம் பீறிட்டு வருவதை யாராலும் தடுக்க முடியாதுன்னா பாருங்களேன்!??

      Delete
    7. //எனக்கெல்லாம் டெக்ஸ் கருப்பு/வெள்ளை கதைகளை கையில் எடுத்தவுடனே தூக்கம் பீறிட்டு வருவதை யாராலும் தடுக்க முடியாதுன்னா பாருங்களேன்!??//

      - மிதுன்



      //யாருக்காவது இரவில் தூக்கம் வரவில்லையெனில் கண்டிப்பாக இந்த பாகத்தை படிக்க முயற்சிக்கவும். உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.//

      - புலன்விசாரணை பற்றி மகேஷ்


      ஸ்பைடர் கதைகள் தூக்க மாத்திரை

      -ஆதி தாமிரா

      நிஜங்களின் நிசப்தம் ஆழ்துயிலில் ஆழ்த்துகிறது.

      - நிறைய பேர்

      எடிட்டர் மேல டிரக் கண்ட்ரோலர் கிட்ட கம்ப்ளெயின்ட் கொடுக்க வேண்டியதுதான்.

      மருத்துவர் பரிந்துரை இல்லாமலே இவ்ளோ தூக்க மாத்திரை சப்ளை பண்றாரு..:-)

      Delete
    8. ///மருத்துவர் பரிந்துரை இல்லாமலே இவ்ளோ தூக்க மாத்திரை சப்ளை பண்றாரு..:-)///

      ஹாஹாஹா

      Delete
    9. // மருத்துவர் பரிந்துரை இல்லாமலே இவ்ளோ தூக்க மாத்திரை சப்ளை பண்றாரு..:-) //

      :-) I have not realized all these days! even many of my school and college subjects are like this! what to do?

      Delete
    10. @ செனாஅனா

      :))))))))

      ////மருத்துவர் பரிந்துரை இல்லாமலே இவ்ளோ தூக்க மாத்திரை சப்ளை பண்றாரு..:-)///

      அப்படிப் பார்த்தா அன்னிக்கே எங்க கெமிஸ்ட்ரி வாத்தியாரைக் கைது பண்ணியிருக்கணும்!!
      ஒருதபா, அந்த வாத்தியார் தூங்கிக்கிட்டிருந்த எங்களை எழுப்பி "தம்பிகளா.. நீங்க தூங்கறதுகூட பரவாயில்லை.. ஆனா குறட்டை விடறதெல்லாம் ரொம்ப ஓவர்"ன்னார்!!

      நான் குறட்டை விடுவேன் என்பதை முதன்முதலாகத் தெரிந்துகொண்ட நாள் அது!

      Delete
  61. ரத்தப்படலம் 2nd வால்யும் ,12 ஆவ்து பாகம்,578 ஆம் பக்கம் கிம் காரிங்டன் மரணம் வசனங்கள் இல்லாத கண்ணீர் கா(ஓ)வியம்.வான்ஸின் அற்புதம்.

    ReplyDelete
  62. எத்தனை முறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்க திகட்டவில்லை அதுவும் வண்ணத்தில் .

    ReplyDelete
  63. எல்லாரும் குரை ெசால்லா கூடாது படத்தை பார்த்து நம்மால முடிஞவரை க்கும் ஒரு அட்டைையை எடுத்து முதல படம் வரை ங்க அப்பறம் குனர ெசொல்லங்க முதல படத்தை பார்கதி (ங்க கதையை பார்ங்க நன் பர்ங்களே என்னுடைய நல் வnழ் த்துகள் அகில் இரத்த ' படலததை படித்து முடிக்க

    ReplyDelete
  64. இரத்தப் படலம் மறு வாசிப்பு ஆரம்பம்!!

    😁😁😁

    ReplyDelete
    Replies
    1. ஹம் கொடுத்து வைத்தவர் நீர்.

      Delete
  65. எடிட்டர் சாப்,

    அந்த டெக்ஸ் வில்லரின் மெபிஸ்டோ மாயாஜாலக் கதையை போட்டு தாக்குங்க. ரொம்ப நாளா கேட்டு கொண்டே இருக்கிறோம். பெரிய மனசு வெச்சி போடுங்க, உங்களுக்கு புண்ணியாம போகும்.

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. Dear Editor,

    would like to know why I have still not received my August issue. Whom should I contact to get this sorted?

    Thanks

    ReplyDelete
    Replies
    1. As repeatedly informed, August is a month with just the Ratha Padalam Special books ; no regular releases sir....

      Delete
  68. விஜயன் சார்,
    // பிரகாஷ் publisher-ன் வெற்றி. கண்டிப்பாக இந்த பயணத்தை தொடங்கிய உங்கள் தந்தையை கௌரவிக்க ஒரு விழா எடுத்தே ஆக வேண்டும்.//

    ஆயிரம் காமிக்ஸ் தந்த குடும்பம். இதற்கு ஒரு விழா கண்டிப்பாக வேண்டும்.

    ReplyDelete